Powered By Blogger

Tuesday, January 01, 2019

இங்கேயுமொரு இடைத்தேர்தல் !!

நண்பர்களே,

புத்தாண்டு வாழ்த்துக்கள் !! துளிர் விட்டிருக்கும் 2019 நம் அனைவருக்கும் நலமும், வளமும், அழகான காமிக்ஸ்களையும் ஒருசேர அள்ளித் தரும் அட்சயப் பாத்திரமாய் அமைந்திட ஆண்டவனை வேண்டிக்கொள்வோம் !! ஊரெல்லாம் உற்சாகமும், கொண்டாட்டமும் களை கட்டிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் - டிவி-யில் மூழ்கிப் போக ஆர்வம் தோன்றவில்லை & வெட வெடக்கச் செய்யும் இந்த மார்கழிக் குளிர் இரவினில் வெளியே தலைகாட்டவும் தம் இல்லை !! So நமக்குப் பரிச்சயமான ஒரே ஆடுகளத்தினில் ஒரு மினிப்பதிவோடு லைட்டாக ஒரு குத்தைப் போட்டு விட்டுப் புறப்பட்டால் - புத்தாண்டுக்கு செம start ஆக இருக்குமென்று தோன்றியது !! And here I am !!

சமீபமாய் நமது முந்தைய இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது - கண்ணில் பட்டதொரு போட்டி - "நூற்றாண்டின் நாயகன் யார் ?" என்பதே !! 2000 என்ற millenium ஆண்டு புலர்ந்த தருணத்தில் ஒரு பதிமூன்று நாயகர்களின் பெயர்களை பட்டியலிட்டு - அவர்களுள் THE TOP MAN யாரென்றே கேள்வியைக் கேட்டிருந்தேன் ! Of course - ரெகுலராய் நமது இதழ்களைப் படித்து வந்திருக்கக்கூடிய நண்பர்களுக்கு போட்டியும் சரி ; கெலித்த நாயகர் யாரென்பதும் சரி, நிச்சயம் நினைவிருக்கும் !! And இந்த ரீதியிலான கேள்விகளை அவ்வப்போது நான் கேட்டு வருவதும் உண்டு தான் ; simply becos ரசனைகள் எனும் காட்டாறு ஓரிடத்தில் தேங்கி நிற்பதில்லையே ? ஒரு ஸ்பைடர் அறிமுகமான போது மாயாவி மீதான மையல் பின்னே சென்றது ! ஒரு டெக்ஸ் வில்லர் ஆட்டத்தைத் துவக்கிய போது - அதே ஸ்பைடர் one step பின்னே சென்றதும் நிகழ்ந்தது !! XIII களமிறங்க - ஒளிவட்டம் அவரது வசமானது ; அப்புறம் உடைந்த மூக்கர் மீதான நேசம் துளிர் விட்டது ; இத்யாதி...இத்யாதி...!! So நமது ரசனைகள், அகவைகளின் பயணங்களோடு - நமது ஆதர்ஷர்களும் மாறிடுவது இயல்பே என்பதால் தான் அவ்வப்போது உங்களது ஓட்டுக்கள் யாருக்கென்று இடைத்தேர்தலை நடத்தத் தோன்றுகிறது !! இது தம்படி 'சம்திங்' கூட வெட்ட வலுவில்லாத கட்சி என்பதால் - கவர்களை எதிர்பாராது ஓட்டுக்களை பதிவிடுங்களேன் guys - இந்த வருஷப்பிறப்பை சுவாரஸ்யமாக்கிடும் பொருட்டு   !!

இம்முறை நமது லேட்டஸ்ட் நாயகர்களும் தேர்தலில் நிற்கவிருப்பதால் - சமீப வாசகர்களும் தங்கள் தேர்வுகளைப் பதிவிடலாமே ?

As always - இவ்விதப் போட்டிகளின் முதல்பெயர் - "இரும்புக்கை மாயாவி" என்றிருப்பது தவிர்க்க இயலா காலத்தின் கட்டாயம் தான் !! காமிக்ஸ் என்றாலே இன்றைக்கும் "மாயாவியா ?" என்று முகம் மலருவோர் ஓராயிரம் உண்டு என்பதால் - லிஸ்டின் முதல் பெயர் மாயாவியே !!

பட்டியலில் இரண்டாமிடத்தை தனதாக்கிடுவது நமது சிரசாசனப் புகழ் கூர்மண்டை ஸ்பைடர் தான் !! நமது லயன் காமிக்சின் take-off நிகழ்ந்ததே இந்த ஹெலிகார்க்காரரின் புண்ணியத்தில் தான் எனும் போது, இவரை மறத்தல் தெய்வ குற்றத்துக்கு சமானமாகிடக் கூடும் ! At his peak - இவருக்கு நம்மிடையே நிலவிய mania வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ரகம் !!

லிஸ்டில் மூன்றாமிடத்தை நான் தர நினைப்பது நமது evergreen ரேஞ்சுருக்கே !! இரவுக்கு என்றைக்கும் ஒய்வு லேது ; இரவுக்கழுகாருக்கும் தளர்வு லேது ! 1985 -ல் நம்மிடையே அறிமுகமானவர் இத்தனை காலம் கழித்தும் going awesomely strong எனும் போது - Tex Willer இந்தப் பட்டியலில் இடம்பிடித்து நிற்பதில் யாருக்கும் வியப்பிராது !!

# 4 on the list ??? வேறு யாரு ? ஒரு நம்பரைப் பெயரின் பகுதியாய்க்  கொண்டு தமிழ் சினிமாஉலகை ஒரு நாயகி ஆட்சி செய்கிறாரெனில் - ஒரு நம்பரை மாத்திரமே தனது அடையாளமாய்க் கொண்டபடிக்கே காமிக்ஸ் உலகை வசப்படுத்தி நிற்கும் மனுஷன் தான் !! நமது "இரத்தப் படல" நாயகரான XIII கிட்டத்தட்ட டெக்சின் அதே வயதினன் - நம்மிடையிலான அறிமுகத்தைப் பொறுத்தவரையிலும் !! ரேஞ்சர் அக்டோபர் 1985 எனில் - ஞாபகமறதிக்காரர் ஜூன் 1986 !! ஆனால் இன்னமும் வாசகர்களை வசீகரிக்கும் ஒரு இனம்புரியா   ஆற்றலை அவர் தக்க வைத்திருப்பது - அவரது ஆற்றலுக்கொரு பறைசாற்று !!

அட...தாட்டியமான கௌபாய்கள் தானென்றில்லை ;ஒல்லிப் பிச்சான்களுமே உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வித்தையறிந்தவர்களே என்பதை 1987 முதல் இன்று வரை அசாத்தியமாய் நிரூபித்துக் காட்டி வரும் லக்கி லூக் - நமது லிஸ்டில் # 5 !! சிரிப்பிலும் சுவையுண்டு ; கார்டூனிலும் கதையாழம் உண்டு என்று சாதித்துக் காட்டும் இந்த மஞ்சள் சொக்காய் காமெடி நாயகரை தமிழ் காமிக்ஸ் மறக்கத் தான் முடியுமா- என்ன ?

பட்டியலில் 6 - ஒரு உடைந்தமூக்கர் !! வந்தார்....அதகளம் செய்தார்...நம்மை ஒட்டுமொத்தமாய் வென்றார் !! Who else but - the inimitable கேப்டன் டைகர் ?!! "thangak கல்லறையில் " தனது வருகையை அதிரடியாய் அறிவித்தவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தந்தது சகலமும் ஹிட்ஸ் !! கதைகளின் ஆழம் ; சுவாரஸ்யம் ; மனிதனிடமிருந்ததொரு வசீகரம்  நம்மை மெய்ம்மறக்கச் செய்ததை யார்தான் மறக்கவோ / மறுக்கவோ முடியும் ?

லிஸ்டில் # 7 - ஒரு புதுயுக நாயகருக்கு !! கையில் துப்பாக்கி கிடையாது ; சவாரி செய்யக் குதிரையும் கிடையாது ; வார்த்தைகளில் பஞ்ச் டயலாக் தெறிக்கும் அவசியங்கள் நஹி ; டுமீல்/டுமீல் என்ற ஓசைகளுக்கு முகாந்திரங்களும் நஹி ! ஆனால் அந்த செம்பட்டைத் தலை ப்ளூ ஜீன்ஸ் கோடீஸ்வரருக்கு கடந்த 5 ஆண்டுகளும் சொந்தமென்று தைரியமாய்ச் சொல்லலாம் !! Enter லார்கோ வின்ச் ! எதை போலவும் இலா, புதுக் கதைகளோடு நம்மை மயக்கிய ஜாலவித்தைக்காரர் !!

லிஸ்டில் # 8 : மர்ம மனிதன் மார்ட்டின் !! இந்த் தேர்வு பலரது புருவ உயர்த்தல்களை கொணரலாம் தான் ! மொத்தமே 20 கதைகளில் கூடத் தலைகாட்டியிரா ஒரு குழப்ப நாயகரை இந்த all -time பட்டியலில் இணைப்பது நியாயமா ரே ? என்று கேட்கத் தோன்றலாம் தான் !! ஆனால் கதைகள் ஒவ்வொன்றிலும் மார்ட்டின் காட்டும் வேறுபாடுகள் - வேறு எந்தவொரு ஹீரோவுக்கும் சாத்தியமே ஆகிடா சமாச்சாரமன்றோ ? குழப்பமே ஆனாலும், அதனை நாம் ரசிப்பது வாய் பிளந்தன்றோ ? So மார்டினும் உண்டு இந்தப் பட்டியலில் !!

நட்சத்திரங்களின் புதல்வன் ; பிரபஞ்சப் பயணி ; ஆரிசியாவின் ஆத்துக்காரர் ; விண்வெளியின் பிள்ளை - நமது fantasy கதைவரிசைகளின் ஒரே பிரதிநிதி ; மூச்சிரைக்கச் செய்யும் வேகத்தில் நம்மையெல்லாம் கொள்ளை கொண்டு விட்டுள்ள மனுஷன் ...aka தோர்கல் !! மிகக் குறுகியதொரு அவகாசத்தினில் ஒரு மெகா ஸ்டாராகிப் போயிருக்கும் இவரும் இந்தப் போட்டியில் சேர்ந்து  கொள்வது  நியாயம் என்று பட்டது !! So ஒன்பதாம் எண்ணில் தோர்கல் !!

Last in the list - இவரும் ஒரு பரட்டை நாயகரே ! இவருக்கும் வானமே எல்லை !! ஆனால் இவர் சவாரி செய்வது குருதையில் அல்ல ; 'கழுகு' என்ற பெயர் கொண்டதொரு படகினில் ! சமுத்திரங்களே சாம்ராஜ்யமாய்க் கொண்டு - கதைக்கு கதை புதுப் புதுக் களங்களில் சாகசம் செய்து - உலகைச் சுற்றி வரும் கேப்டன் பிரின்ஸ் இந்த சாகச நாயகர்களின் டாப் பட்டியலில் இடம்பிடிக்க எல்லாத் தகுதிகளும் கொண்டவரே என்பது எனது அபிப்பிராயம் !

So மேற்படி 10 நாயகர்களில் உங்களின் ஒற்றை வோட்டு யாருக்கு ? என்பதே இப்போதைய தேடல் !ஆங்...இவரும்...இவரும்..அவரும்... என்ற ரீதியிலான ஓட்டுக்கள் செல்லாது !! ஒரே வோட்டு ; ஒரே தேர்வு !! அது யாரு ? சொல்லுங்கண்ணே - சொல்லுங்க !!

Bye all !! See you around !! Have an Awesome Year ahead !!

P .S : அப்புறம் இந்த லிஸ்டில் "வேதாளன்  ஏன் இல்லை ? " ரிப் கிர்பி ஏன் இல்லை ?" என்ற ரீதியில் சாத்துவதாகயிருப்பின், அதனை இன்னொரு நாளைக்கு ; இன்னொரு வேளைக்கு வைத்துக் கொள்வோமே ? 

அவசரமாய் உங்களில் சிலரிடமிருந்து தகவல் தேவைப்படுகிறது !!

கீழ்க்கண்ட பட்டியலின்படி, நமது வங்கிக் கணக்கினில் தொகைகள் வரவாகியுள்ளன ; ஆனால் அவை குறித்து உடைமையஸ்தர்கள் மின்னஞ்சல்களோ ; தகவல்களோ அனுப்பிடவில்லை ! So அந்தத் தொகைகள் suspense account -ல் தொடர்கின்றன !! உரிய விபரங்களோடு ஒரு மின்னஞ்சலை அனுப்பினால் மட்டுமே, தொகைகளை உரிய சந்தா கணக்குகளில் வரவு செய்து புக்குகள் அனுப்ப முடியும் !! So அவசரம் ப்ளீஸ் !!

5/12/2018 – Rs.4250 (D.Pradeep)
6/12/2018 – Rs.1958
6/12/2018 – Rs.4200 (Arumugam)
11/12/18 – Rs.7130
11/12/2018 – Rs.3000
12/12/2018 – Rs.5999
12/12/2018 – Rs.5000
14/12/2018 – Rs.5000
15/12/2018 – Rs.6000
17/12/2018 – Rs.4500
17/12/2018 – Rs.6000
18/12/2018 – Rs.5000
20/12/2018 – Rs.2000
22/12/2018 – Rs.5000
24/12/2018 – Rs.3000
26/12/2018 – Rs.5000
27/12/2018 – Rs.1000
28/12/2018 – Rs.5000

197 comments:

  1. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. பத்து நிமிஷங்கள் ஆயிடுச்சே!!???

      Delete
    2. இடைத்தேர்தலில் அபேட்சகராக நிற்க மார்டினுக்கு எல்லா தகுதிகளும் உண்டு சார்...

      Delete
  2. விஜயன் சார், சூப்பர் சர்க்கஸ் நேற்று மறுவாசிப்பு செய்தேன். அதில் சர்க்கஸ் ஓனர் பெயர் மோரிஸ் என இருந்தது, அவர்தான் லக்கி லூக்கின் கதாசிரியர் என்று நினைக்கிறேன். அவரின் பெயரை அந்த சர்க்கஸ் முதலாளிக்கு வைத்ததின் பின் ஏதாவது காரணம் உண்டா?

    ReplyDelete
  3. விஜயன் சார், இந்த மாத புத்தகங்கள் என்று எங்களுக்கு கிளம்பும்?

    ReplyDelete

  4. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
  5. ஒரே ஓட்டு மட்டுமே என்பதால்.....

    லக்கி லூக்

    இரண்டாவது ஓட்டு யாருக்குன்னா.....

    அதான் கூடாதுன்னு சொல்லிட்டீங்களே...!:-)

    ReplyDelete
  6. காமிக்ஸ் சர்க்காரில் நம்பள் விஸுவாஸம் என்னைக்குமே பரியேறும் பெருமாளுக்குத்தான்.....

    பேட்ட ராப் ஃபார் டெக்ஸ்....!!!

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் பரிமேலழகர்தாம்...:-)

      பெட்டர்ஹால்ஃபைத்தான் ஒண்ணுக்கு மேல தேர்ந்தெடுக்கக்கூடாதுன்னு சட்டம் போட்டுட்டாங்கன்னா ..மனசுக்கு புடிச்ச காமிக்ஸ் காதலுக்கும் ஒண்ணுக்கு மேல கூடாதுன்னு சட்டம் போட்டு என் கையை கட்டிப்போட்டுட்டாங்களே செனா..!!

      இல்லேன்னா .....:-)

      Delete
    2. //பெட்டர்ஹால்ஃபைத்தான் ஒண்ணுக்கு மேல தேர்ந்தெடுக்கக்கூடாதுன்னு சட்டம் போட்டுட்டாங்கன்னா//

      ஓஹோன்னானாம்...சிலம்பு சுத்தற ஒரு பையன் காதுல இந்த விஷயத்தை காதில போட்டா தெரியும் சேதி...:-)

      Delete
    3. எச்சூஸ் மீ...வாட் இஸ் த புரொசீஜர் ஃபார் ஒரு மாசம் தலைமறைவு..!

      Delete
    4. சிலம்பம் பிடிக்கிற பையனை விட கரண்டி பிடிக்கிற முதலாளிகிட்ட போட்டு குடுப்பதே சிறப்பு.

      Delete
    5. @MP ...உள்காயம்,வெளிகாயம்னா பரவால்ல...

      நீங்க சொல்றது ..நினைக்கவே பயமாயிருக்கு...

      " உயிர் காப்பான் தோழன்"..:-)

      Delete
    6. ///சிலம்பம் பிடிக்கிற பையனை விட கரண்டி பிடிக்கிற முதலாளிகிட்ட போட்டு குடுப்பதே சிறப்பு.///

      எச்சூஸ் மீ...வாட் ஈஸ் த புரொசீஜர் ஃபார் ஒரு வருசம் தலைமறைவு..!!

      ///" உயிர் காப்பான் தோழன்"..:-)///


      இடுக்கண் களைவதாம் நட்பு..!!:-)

      Delete
  7. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே.

      Delete
  8. ஒரு ஓட்டு என்பதனால் " கேப்டன் டைகர்" மட்டுமே....

    ReplyDelete
  9. நான் காமிக்ஸ் படிக்க ஆரம்பிச்சதே 'மின்சார கையன்' மாயாவியால்தான் என் ஓட்டு எப்பவும் அவருக்குதான் ..

    நேற்று,இன்று,நாளைய ஆசிரியர்களுக்கும் & நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. என்னோட ஓட்டு டெக்ஸ் வில்லருக்கே...

    உடல் மண்ணுக்கு... உயிர் தல க்கு...

    ReplyDelete
    Replies
    1. அப்ப ஆவி யாருக்கு மஹி ?!

      Delete
    2. டயானா, ஷானியா, ஜோன்ஸூன்னு நிறய பேருக்கு பிரிச்சுக் குடுத்தாச்சு.

      Delete
  11. ///அப்புறம் இந்த லிஸ்டில் "வேதாளன் ஏன் இல்லை ? " ரிப் கிர்பி ஏன் இல்லை ?" என்ற ரீதியில் சாத்துவதாகயிருப்பின், அதனை இன்னொரு நாளைக்கு ; இன்னொரு வேளைக்கு வைத்துக் கொள்வோமே ? ///

    கிட் ஆர்டின், டாக்புல் ஏன் இல்லை.,
    ரிப்போர்ட்டர் ஜானி ஏன் இல்லை...,
    ஷானியா ..பெட்டி பார்னோவ்ஸ்கி....

    அப்புறம் ...

    யோசிச்சி காலைல வந்து கேட்டுக்கிறேன்..!! :-)

    ReplyDelete
    Replies
    1. ஜூலியாவை கை விட்டுட்டுங்களே கண்ணரே.....!

      Delete
    2. ஹலோ ...என்னங்க ஏதோ அபலைப்பெண்ணை ஏமாத்தி கைவிட்டுட்ட மாதிரி சொல்றிங்க....!

      ஜூலியாவே பாவம் சம்சாரம் அது மின்சாரம் கோதாவரி கணக்கா இருக்கு ...:-)

      Delete
  12. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் வெல்கம் 2019

    ReplyDelete
  14. அல்டிமேட் ஸ்டார் ஸ்பைடர்

    ReplyDelete
  15. என்றென்றும் என் ஓட்டு இரவுக் கழுகாருக்கே.....!!

    ReplyDelete
  16. ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்கள் மற்றும் அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு.

    ReplyDelete
  17. ஆங்ங் லக்கி லூக்... XIII... டைகர்... யாருக்கு ஓட்டு...
    *லக்கி லூக்* is my Choice. மற்ற இருவருக்கும் Luck உதவியின்றி பல சமயங்களில் தப்பித்திருக்க வாய்ப்பு கம்மி
    ஆசிரியரே 33% இட ஒதுக்கீடு இல்லையா? அல்லது Top 10 ஹிரொயினி லிஸ்ட் அப்பாலிக்கா வரும???

    ReplyDelete
  18. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
  19. நம்ம ஒட்டு எப்பவுமே லக்கி தான்

    ReplyDelete
  20. XIII...one and only my favorite and eves green hero.கலையுலகில் புரட்சி நடிகர்.காமிக்ஸ் உலகில் XIII.no other choice.

    ReplyDelete
  21. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. Happy New year...

    Why new ones are missing, I have become fan of Lady S and Trent after Tax willer..

    Please try jumbo volume of Phantom series from 1 to 10 and so on in Jumbo comics, also think of some space fiction stories, I remember reading some in my school days in Raj or diamond...with alien spiders, creatures and also some alien planet stories

    ReplyDelete
  23. கேப்டன் டைகர்!

    ReplyDelete
  24. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  25. நண்பர்கள் அனைவருக்கும் இனியஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. அன்பு எடிட்டருக்கும்,நண்பர்கள் அனைவருக்கும் அலுவலக இணை யர்களுக்கும்,அனைவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  27. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. 🎂🎂🎂 LUCKY LUKE 🎂🎂🎂

    The man who shoots faster than his own shadow 🔫🔫🔫

    காமிக்ஸ்னாவே காா்ட்டூன்!!
    காா்ட்டூன்னாவே லக்கிலூக்!!!

    ReplyDelete
  29. எனக்கு ரஜினியும் பிடிக்கும் கமலும் பிடிக்கும் என்னும்போது யாராவது ஒருவரை சொல்லு என்றால் திணற்ய்வேன். அதுபோலவே இங்கே காமிக்ஸ் என்றாலே டெக்ஸ், கேப்டன் டைகர் இருவருமே பிடிக்கும். இருக்கும் ஒரு ஓட்டும் செல்லா ஓட்டாகிவிடகூடாது என்பதால் மனதை கல்லாக்கி கொண்டு டெக்ஸ். இது போக நல்ல தரமான சுயேட்சைகளான மர்ம மனிதன் மாட்ட்டினும் , ஜூலியாவும் பிடிக்கும். :)

    ReplyDelete
  30. ஒரு ஓட்டு என்பதனால் " கேப்டன் டைகர்" மட்டுமே....

    ReplyDelete
  31. ஒரே ஒரு ஓட்டுன்னா, அது

    லக்கி லூக்க்குத்தான்..

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஆளுக்கு ஒரு ஓட்டுதாங்க தரமுடியும்.....

      Delete
  32. அன்பு சீனியர் எடிட்டருக்கும், எடிட்டருக்கும், ஜூனியர் எடிட்டருக்கும், காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும், அலுவலக இணையர்களுக்கும்,அனைவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்....

    ReplyDelete
  33. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. ஒரே ஒரு ஓட்டுன்னா, அது

    லக்கி லூக்க்குத்தான்

    ReplyDelete
  35. லக்கி லூக்கிற்கே எனது வாக்கு.

    ReplyDelete
  36. என் வாக்கு தல டெக்ஸ் வில்லர்க்கே

    ReplyDelete
  37. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  38. கேப்டன் டைகர். கேப்டன் டைகர். கேப்டன் டைகர்.

    புலன்களுக்கு உட்பட்ட நாற்பரிமாண உலகையும், பரிமாணமற்ற தலைவிதியையும், இருபரிமாணத்திற்குள் அடக்கியதால்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜவேல் மதுரையில் இருந்து மேற்கு சென்ற காமிக்ஸ் காதலரே. நீண்ட இடைவெளிக்கு பிறகு பின்னூட்டம். தொடர்ந்து இங்கு பதிவிடுங்கள்.

      Delete
    2. நன்றி பரணி... சென்ற 2018ன் மத்தியில் என் தந்தையை இரண்டாவது முறையாய் 'தாத்தா' எனும் ப்ரமோஷன் செய்தபின், நான் அவ்வை சண்முகியாய் அவதாரம் எடுக்க வேண்டியதாகிப் போனது. அதிலும் இதழ்கள் வந்து சேர 20 நாட்கள் ஆகின்றன. அதற்கு பின் விமர்சனம் செய்தால் "என்னது காந்தி செத்துட்டாரா" என்பது போல் தோன்றும் என்பதால் நான் ஒரு மௌனச்சாமியாகிப் போகவேண்டியதாக உள்ளது.

      Delete
  39. ஒரே ஒரு ஓட்டு...


    ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்...


    ஒன்லி ஒன்..



    டெக்ஸ் வில்லர்...


    ReplyDelete
  40. இது அநியாயமான தேர்தல்.
    வேறு வழியில்லாதமையால்.. டைகர்!!

    ReplyDelete
  41. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. லாஜிக்கின் நாயகன் டைகருக்கு தான் எனது ஒட்டு.

    ReplyDelete
  43. May each hour, each day, each month be filled with achievements that make your life full of joy. Happy New Year 2019... ������

    Heart for others...
    Vote for the evergreen hero... 'இரும்புக்கை மாயாவி'
    Louis Crandall
    #Class_Forever

    ReplyDelete
  44. அன்றும்
    இன்றும்
    என்றும்,

    அந்தக் காலம்
    இந்தக் காலம்
    எந்தக் காலமும்

    என்னுடைய ஓட்டு ,

    ட்ஷிநாபா என்று செவ்விந்தியர் மொழியிலும் ,உடைந்த மூக்கர் என்று செந்தமிழ் மொழியிலும் ,பரட்டை என்று பேச்சு மொழியிலும் ,டைகர் என்று தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகமான 'கேப்டன் டைகருக்கே..!

    ReplyDelete
    Replies
    1. மைக்கேல் ஸ்டீவன் டொனொவன் என்கிற மைக் எஸ் புளூபெர்ரி என்கிற புளூபெர்ரி

      அப்டிங்கறதையும் சேத்துக்குங்க...

      Delete
  45. தமிழ் காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன் .
    அனைவரும் அனைத்து யோகங்களும் பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் . டெக்ஸ் மட்டுமே !

    ReplyDelete

  46. அன்பு சீனியர் எடிட்டருக்கும், எடிட்டருக்கும், ஜூனியர் எடிட்டருக்கும், காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும், அலுவலக இணையர்களுக்கும்,அனைவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.(நன்றி

    திருப்பூர் புளுபெர்ரி )

    ReplyDelete
    Replies
    1. அன்பு சீனியர் எடிட்டருக்கும், எடிட்டருக்கும், ஜூனியர் எடிட்டருக்கும், காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும், அலுவலக இணையர்களுக்கும்,அனைவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
      (நன்றி திருப்பூர் புளுபெர்ரி )

      Delete
  47. ஒரே ஓட்டு...ம்
    குதிரை பாய்க்கே
    நீங்களே ஊகம் பண்ணிக்குங்க ஹை..

    ReplyDelete
    Replies
    1. ஜெகன் உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

      Delete
    2. குதிரை பாய்க்கே என்பது லக்கி லூக்கையே குறிக்கும் என்பதால் உங்கள் ஓட்டு லக்கி லூக்கிற்கு செல்கிறது யுவர் ஆனர்.

      Delete
    3. '///குதிரை பாய்க்கே என்பது லக்கி லூக்கையே குறிக்கும் என்பதால் உங்கள் ஓட்டு லக்கி லூக்கிற்கு செல்கிறது யுவர் ஆனர்.///

      வாஸஸ்த்தவம்தான் ...

      குதிரைப் பெருசுன்னா டெக்ஸ்வில்லரை குறிக்கும்..

      குதிரை மனுசன்னா டைகரைக் குறிக்கும் ...

      குதிரைபாய்ன்னா லக்கி லூக்தானே..!!:-)

      Delete
  48. எனது ஓட்டு லக்கி லூக்கிற்கே

    ReplyDelete
  49. If it is one vote mine is for Lucky Luke.

    A Happy 2019 to all....

    PS: I am surprised that Lucky Luke is garnering so much single votes. That's the impact Super Circus and Podiyan Billy created way back in 1987 !!!!

    ReplyDelete
    Replies
    1. எனக்குமே வியப்பே !!

      Delete
  50. // So மேற்படி 10 நாயகர்களில் உங்களின் ஒற்றை வோட்டு யாருக்கு ? //
    சந்தேகமே இல்லாமல் மர்ம மனிதன் மார்ட்டின்தான் சார்,ஏன்னா மற்ற நாயகர்கள் ஏதாவது ஒரு வகையில் எப்பவுமே ஸ்பெஷல்,ஆனால் மார்ட்டின் என்னைப் பொறுத்தவரை சம்திங் ஸ்பெஷல்.நல்லவேளை ஜானி இல்லாததால்,இங்கி,பிங்கி,பாங்கி போட்டு பார்க்கும் வேலை மிச்சம்....ஹி,ஹி...

    ReplyDelete
  51. // So மேற்படி 10 நாயகர்களில் உங்களின் ஒற்றை வோட்டு யாருக்கு ? //
    அதிகமா ஓட்டு விழும் நாயகருக்கு ஏதேனும் குண்டு ஸ்பெஷல் போடும் ஐடியா உள்ளதா சார்....ஹி,ஹி,ஹி...எதையாவது கொழுத்தி போடுவோம்...

    ReplyDelete
    Replies
    1. யோசித்துப் பாருங்களேன் சார் - கூர்மண்டையருக்கு பெரும்பான்மை கிட்டி விட்டால் - நமது நிலைமை என்னவாகிடுமென்று ?!!

      Delete
    2. புத்தாண்டும் அதுவுமா பீதிய கிளப்பி விடாதீங்க சார்.

      Delete
  52. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 💐💐💐💐💐.....
    நமது வாசகர்கள். அவர் ,இவர் என்று தங்களுக்கு பிடித்த ஹீரோக்களை சொன்னாலும் இந்த நூற்றாண்டு மட்டுமல்ல எந்த நூற்றாண்டிலும் தங்கக் கீரிடத்தை தாங்க தலயை விட்டால் வேறு யாருமில்லை .
    I LOVE TEX...
    I LOVE TEX...
    I LOVE TEX

    ReplyDelete
  53. NIGHT HAWK க்கு எனது ஓட்டு.

    ReplyDelete
  54. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    எனது ஓட்டு டெக்ஸ் வில்லருக்கே.

    ReplyDelete
  55. எப்போதுமே இரும்புக்கை மாயாவி தான்.

    ReplyDelete
  56. அன்பு சீனியர் எடிட்டருக்கும், எடிட்டருக்கும், ஜூனியர் எடிட்டருக்கும், காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும், அலுவலக இணையர்களுக்கும்,அனைவர்தம் குடும்பத்தினர்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.(நன்றி : ப்ளூ!)

    ReplyDelete
  57. ஆசிரியர், குடும்பத்தினர், அலுவலக பணியாளர்கள், நமது வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
  58. இந்தப் பட்டியலில் நமது வாக்கு - வில்லர், டெக்ஸ் வில்லருக்கே!

    ReplyDelete
  59. என் வோட்டு "டெக்ஸ் வில்லர்"க்கே!

    பேர கேட்டாலே ச்சும்மா அதிரும்ல?

    ReplyDelete
  60. இடைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது யார்?

    பரபரப்பான தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக தங்கள் மாசற்ற வாக்குகளைப் பதிவு செய்து வரலாறு படையுங்கள்.

    ReplyDelete
  61. டெக்ஸ் வில்லருக்கே என் ஓட்டு

    ReplyDelete
  62. ///ஜூலியாவே பாவம் சம்சாரம் அது மின்சாரம் கோதாவரி கணக்கா இருக்கு ...:-)///

    என்ன கோதாவரிய இவ்ளோ சாதாரணமா சொல்லிட்டீங்க.அவுங்க கோட்டை கிழிச்சதுக்கபுறம்தானே கதையே சூடு பிடிக்குது..!

    ReplyDelete
  63. தற்போதைய பொட்டிகள் உடைக்கப்பட்டுள்ளதின் பலனாய் - ஒவ்வொரு வாக்காளரின் வாக்குகளின் நிலவரம் இதோ :

    இரவுக்கழுகார் : 16
    புலிப் பார்ட்டி : 8
    ஒல்லிப் பிச்சான் : 8
    கையிலே இரும்பு : 2
    நம்பரே பெயராய்க் கொண்டவர் : 2
    மார்ட்டின் ; இஸ்பைடர் ; தோர்கல் & லார்கோ - தலா 1

    ஆக போட்டியானது குதிரைக்காரர்களுக்குள் மத்தியில் மட்டுமே என்பது இப்போதைய சூழ்நிலை ! இன்னமும் நிறைய நண்பர்கள் பதிவிட வேண்டியிருப்பதால் - இந்த நிலவரத்தில் மாற்றம் இருந்திடுமா ?

    ReplyDelete
    Replies
    1. // நம்பரே பெயராய்க் கொண்டவர் : 2 )/

      நயன்தாராவா🤔🤔🤔🤔😎

      Delete
    2. // நம்பரே பெயராய்க் கொண்டவர் : 2 )/

      நயன்தாராவா🤔🤔🤔🤔😎?

      இத்தகைய அறிவியல்பூர்வமான வினாக்களுக்குப் 'பச்சக்கென்று' பதில் தந்திடும் அறிஞரொருவர் ஈரோட்டில் வசிப்பதாய்க் கேள்வி சார் !!

      Delete
    3. ///ஒரு நம்பரைப் பெயரின் பகுதியாய்க் கொண்டு தமிழ் சினிமாஉலகை ஒரு நாயகி ஆட்சி செய்கிறாரெனில் ///

      இது நம்ம நயன்தாரா..?

      // நம்பரே பெயராய்க் கொண்டவர் : ///

      இது நம்ம XIII..!

      (சம்பந்தப்பட்ட ஈரோடு அறிஞருக்காக )

      Delete
    4. //
      இத்தகைய அறிவியல்பூர்வமான வினாக்களுக்குப் 'பச்சக்கென்று' பதில் தந்திடும் அறிஞரொருவர் ஈரோட்டில் வசிப்பதாய்க் கேள்வி சார் !!//

      சார் அவருடைய ஜாகையை சேலத்திற்க்கு மாற்றி விட்டார்...

      Delete
    5. வேற வழி இல்லை போல.. கள்ள வோட்டு போட ஆரம்பிக்க வேண்டியது தான்..
      🤷🏻‍♂

      Delete
  64. ஒரே ஒரு ஓட்டா இருந்தாலும் சரி, எத்தனை ஓட்டு போடலாம்னாலும் சரி
    .. நம்ம ஓட்டு எப்பவுமே தங்க தலைவன் டைகராருக்கே...

    ReplyDelete
    Replies
    1. போச்சா - உங்க வோட்டு கூட நம்பர்காரருக்குக் கிடையாதா ?

      Delete
    2. கரெக்டா சொன்னீங்க ரம்மி , ஆயிரம் ஹீரோக்கள் வரலாம் போகலாம்.காலத்தால் அழியாத மாபெரும் காவியமான "மின்னும் மரணம்" நாயகரே
      நமது என்றென்றைக்குமான ஆதர்ஷ ஹீரோ!

      Delete
    3. கரெக்டா சொன்னீங்க ரம்மி & சாத்தான், ஆயிரம் ஹீரோக்கள் வரலாம் போகலாம்.காலத்தால் அழியாத மாபெரும் காவியமான "மின்னும் மரணம்" நாயகரே
      நமது என்றென்றைக்குமான ஆதர்ஷ ஹீரோ

      Delete
    4. கரெக்டா சொன்னீங்க ரம்மி, சாத்தான் & ப்ளூ ஜீ!! ஆயிரம் ஹீரோக்கள் வரலாம் போகலாம்.காலத்தால் அழியாத மாபெரும் காவியமான "பூத வேட்டை" நாயகரே
      நமது என்றென்றைக்குமான ஆதர்ஷ ஹீரோ!!

      ஹிஹி!

      Delete
    5. கரெக்டா சொன்னீங்க ரம்மி, சாத்தான் & பூனை ஜீ!! ஆயிரம் ஹீரோக்கள் வரலாம் போகலாம்.காலத்தால் அழியாத மாபெரும் காவியமான "மின்னும் மரணம்" நாயகரே
      நமது என்றென்றைக்குமான ஆதர்ஷ ஹீரோ!!

      ஹிஹி! ஹிஹி! ஹிஹி!

      Delete
    6. ரம்மி,சாத்ஜி எழுதி இருப்பதையெல்லாம்படிச்சா...காலி பெருங்காய டப்பா...வாசனை தான் பலமாக இருக்கு பாடலே நினைவுக்கு வருது.

      Delete
    7. கரெக்டா சொன்னீங்க ரம்மி & சாத்தான், ஆயிரம் ஹீரோக்கள் வரலாம் போகலாம்.காலத்தால் அழியாத மாபெரும் காவியமான "மின்னும் மரணம்" நாயகரே
      நமது என்றென்றைக்குமான ஆதர்ஷ ஹீரோ

      Delete
    8. கரெக்டா சொன்னீங்க ரம்மி & சாத்தான், ப்ளூ! ஆயிரம் ஹீரோக்கள் வரலாம் போகலாம்.காலத்தால் அழியாத மாபெரும் காவியமான "பூத வேட்டை" நாயகரே
      நமது என்றென்றைக்குமான ஆதர்ஷ ஹீரோ

      Delete
    9. கரெக்டா சொன்னீங்க ரம்மி, சாத்தான் & பூனை ஜீ!! ஆயிரம் ஹீரோக்கள் வரலாம் போகலாம்.காலத்தால் அழியாத மாபெரும் காவியமான "மின்னும் மரணம்" நாயகரே
      நமது என்றென்றைக்குமான ஆதர்ஷ ஹீரோ!!

      Delete
    10. எத்தனை பொய்ப் பிரச்சாரங்கள் செய்தாலும் சரி துண்டு பிரசுரங்கள் விநியோகித்தாலும் சரி ...

      மீன் கருவாடு ஆகலாம் ஆனால்
      கருவாடு மீன் ஆகவே முடியாது ..

      அதனால ...

      லக்கி லூக்

      Delete
  65. நண்பர்களே,

    அவசரமாய் உங்களில் சிலரிடமிருந்து தகவல் தேவைப்படுகிறது !!

    கீழ்க்கண்ட பட்டியலின்படி, நமது வங்கிக் கணக்கினில் தொகைகள் வரவாகியுள்ளன ; ஆனால் அவை குறித்து உடைமையஸ்தர்கள் மின்னஞ்சல்களோ ; தகவல்களோ அனுப்பிடவில்லை ! So அந்தத் தொகைகள் suspense account -ல் தொடர்கின்றன !! உரிய விபரங்களோடு ஒரு மின்னஞ்சலை அனுப்பினால் மட்டுமே, தொகைகளை உரிய சந்தா கணக்குகளில் வரவு செய்து புக்குகள் அனுப்ப முடியும் !! So அவசரம் ப்ளீஸ் !!

    5/12/2018 – Rs.4250 (D.Pradeep)
    6/12/2018 – Rs.1958
    6/12/2018 – Rs.4200 (Arumugam)
    11/12/18 – Rs.7130
    11/12/2018 – Rs.3000
    12/12/2018 – Rs.5999
    12/12/2018 – Rs.5000
    14/12/2018 – Rs.5000
    15/12/2018 – Rs.6000
    17/12/2018 – Rs.4500
    17/12/2018 – Rs.6000
    18/12/2018 – Rs.5000
    20/12/2018 – Rs.2000
    22/12/2018 – Rs.5000
    24/12/2018 – Rs.3000
    26/12/2018 – Rs.5000
    27/12/2018 – Rs.1000
    28/12/2018 – Rs.5000

    ReplyDelete
    Replies
    1. அநாமதேயர் நண்பர்களுக்கு சந்தா கட்டினாரு - சரி...

      இப்ப நண்பர்களே அநாமதேயமா சந்தா கட்ட ஆரம்பிச்சுட்டாங்களே..!!!

      Delete
    2. டியர் சார்,
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் iii..
      17.12.2018 அன்று ரூ 4500 தூ.டி.ஆத்தூர் TMB யின் மூலம் எனது சந்தாவை வரவு வைத்தேன்
      .( கடிதம் எழுதி இருந்தேன். ரூ 4250_ABCD - க்கும் மீதி 25oரூ டெக்ஸ் மினி கலர் இதழ்களுக்கும் என்று.)
      ஒரு வேளை கடிதம் தவறி இருந்தால் மிண்டும் ஒரு கடிதம் முகவரியுடன் எழுதுகிறேன். நன்றி'

      Delete
    3. டியர் சார்,
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் iii..
      17.12.2018 அன்று ரூ 4500 தூ.டி.ஆத்தூர் TMB யின் மூலம் எனது சந்தாவை வரவு வைத்தேன்
      .( கடிதம் எழுதி இருந்தேன். ரூ 4250_ABCD - க்கும் மீதி 25oரூ டெக்ஸ் மினி கலர் இதழ்களுக்கும் என்று.)
      ஒரு வேளை கடிதம் தவறி இருந்தால் மிண்டும் ஒரு கடிதம் முகவரியுடன் எழுதுகிறேன். நன்றி'

      Delete
  66. டெக்ஸ்க்கு என் ஓட்டு!
    அப்படியே லக்கி லூக்க்கு ஒரு கள்ள ஓட்டு!!😉

    ReplyDelete
  67. அன்பு சீனியர் எடிட்டருக்கும், எடிட்டருக்கும், ஜூனியர் எடிட்டருக்கும்,
    காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும்,
    அலுவலக இணையர்களுக்கும்,
    அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் _/|\_

    (நன்றி திருப்பூர் புளுபெர்ரி அண்ணே )

    .

    ReplyDelete
  68. // புத்தாண்டு வாழ்த்துக்கள் !! துளிர் விட்டிருக்கும் 2019 நம் அனைவருக்கும் நலமும், வளமும், அழகான காமிக்ஸ்களையும் ஒருசேர அள்ளித் தரும் அட்சயப் பாத்திரமாய் அமைந்திட ஆண்டவனை வேண்டிக்கொள்வோம் !! //

    மிக்க நன்றி சார்
    அவ்வாறே தங்களுக்கும் உரித்தாகட்டும் சார்
    .

    ReplyDelete
  69. // மர்ம மனிதன் மார்ட்டின் !! இந்த் தேர்வு பலரது புருவ உயர்த்தல்களை கொணரலாம் தான் ! மொத்தமே 20 கதைகளில் கூடத் தலைகாட்டியிரா ஒரு குழப்ப நாயகரை இந்த all -time பட்டியலில் இணைப்பது நியாயமா ரே ? என்று கேட்கத் தோன்றலாம் தான் !! ஆனால் கதைகள் ஒவ்வொன்றிலும் மார்ட்டின் காட்டும் வேறுபாடுகள் - வேறு எந்தவொரு ஹீரோவுக்கும் சாத்தியமே ஆகிடா சமாச்சாரமன்றோ ? //

    நீங்களே இந்தளவுக்கு சொன்னதுக்கு அப்புறமா நாங்க வேற ஏதாச்சும் சொல்லணுமா என்ன சார்

    மார்டினுக்கே எங்களது ஓட்டு சார்

    .

    ReplyDelete
  70. My vote.
    One and only comics super one Tex Willer.

    ReplyDelete
  71. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  72. மேற்படி 10 நாயகர்களில் உங்களின் ஒற்றை வோட்டு யாருக்கு ?

    நம்பர் ஒன் யார் என்பது "தல" "தளபதி" இடையே தான் ..ஒற்றை வோட்டு தான்
    allowed என்பதால் என் வோட்டு தளபதிக்கே .. மின்னும் மரணம், தங்க கல்லறை, ரத்த கோட்டை போன்ற கதைகளால் தளபதிக்கே என் வோட்டு ..

    ReplyDelete
  73. விஜயன் சார்,

    எனது மகனின் ஓட்டு லக்கி லூக்
    எனது மகளின் ஓட்டு லக்கி லூக்

    எனது துணைவியாரின் ஓட்டு லக்கி லூக்

    ReplyDelete
  74. மாதமொரு இதழ் கண்ட டெக்ஸ்சுக்கே எனது வோட்டு. தல போல வருமா :-)

    அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  75. XIII STORIES AND ARTWORK ARE ALWAYS EXTRAORDINARY SIR. NEW SERIES ARTWORK IS EQUALLY GOOD IF NOT BETTER

    ReplyDelete
  76. நம்ம ஒட்டு டெக்ஸ் என்னும் மஞ்சள் சட்டை மாவீரர்க்கே..

    ReplyDelete
  77. தல போல வருமா...டெக்ஸ்...டெக்ஸ்...டெக்ஸ்

    ReplyDelete
  78. பெயரிலையை வச்சு இருக்கேன்..அப்புறம் யாரு...
    டெக்ஸ் தான்

    ReplyDelete
  79. வோட்டு போட சொல்லி இருந்தீதீங்களே ii..
    எனது வோட்டை X 111க்கே அளிக்கிறேன்'
    காரணம்' காமிக்ஸ் ரசனை என்பதே சிறுபிள்ளைத் தனமானது என்பதை மாற்றிக் காட்டிய முதல் ஹீரோ அவர் தான் No x 111

    ReplyDelete
  80. பெண்கள் போட்டியிடாமல் ஒரு தேர்தலா?
    என்ன ஒரு அநியாயம்?..
    யாரங்கே..போடுங்கள் ஒரு hashtag..
    #NoWomenElection

    எங்கள் வோட்டு NOTA வுக்கே...

    (ஹை.. 2019 first controversyய கெளப்பி உட்டுட்டம்ல..;-)

    ReplyDelete
  81. எனது ஓட்டு உடைந்த மூக்காருக்கே

    ReplyDelete
  82. 'மின்னு'வதெல்லாம் பொன்னல்ல!
    தின்னுவதெல்லாம் பன்னல்ல!


    உங்கள் வோட்டு 'டெக்ஸ் வில்லருக்கே'!

    ReplyDelete
  83. ஒரு ஓட்டு என்பதால், அது

    டெக்ஸ் வில்லர்

    என்கின்ற மாஸ் ஹீரோவுக்குதான்.



    ReplyDelete
  84. My vote is for Martin, my daughter's vote is for lucky luke

    ReplyDelete
  85. This comment has been removed by the author.

    ReplyDelete
  86. இந்தியா வல்லரசாகணுமா ....

    லக்கி லூக்குக்கு ஓட்டுப் போடுங்க..

    சரக்கு (மளிகை சாமான்கோ) வீடு தேடி வரணுமா ...

    லக்கி லூக்குக்கே ஓட்டுப் போடுங்க..


    உங்க இல்லத்தரசி உங்க சொல்படி நடக்கணுமா ...

    லக்கி லூக்குக்கு ஓட்டுப் போடுங்க..

    பொன்னுக்கு ஏமாந்தா கௌரவம் ..
    பன்னுக்கு ஏமாந்தா அவமானம் ...

    ஆதரிபப்பீர் லக்கி லூக்கை

    ReplyDelete
  87. பார்சலை வாங்கியாச்சு..
    முதல் பார்வையில்
    பராகுடா முன்&பின் அட்டைபடம் மிரட்டலாய் அட்டகாசமாக உள்ளது

    ReplyDelete
  88. 2019ன் முதல் பொக்கிசத்தைக் கைப்பற்றியாச்சே...!!

    ReplyDelete
    Replies
    1. இந்த தபாவும் பார் ஒன் சாக்லேட்...ஏதாச்சும் குறியீடா இருக்குமோ..ஹிஹி..!?:-)

      Delete
    2. சத்தியமாய் அது நம் வேலை இல்லீங்கோ ; 5 ஸ்டார் ; டெய்ரி மில்க் ; பார் ஒன ; மில்கி பார் என்று கலந்து தான் வாங்கித் தந்திருந்தேன் ! எது-யாருக்கு ? என்பதை பேக்கிங் செய்த பெண்களே தீர்மானித்தனர் !!

      எது எப்படியோ - HAPPY NEW YEAR all !

      Delete
    3. :)))))))

      பராகுடா ..அலைகடலின் அசுரர்கள்..அட்டைப்படமே மிரட்டுது..!
      சிகரங்களின் சாம்ராட் ..தோர்கல்...யப்பா ..செம்ம கலரிங் சார்.!

      அப்புறம் வழக்கம்போல நம்ம எவர்க்ரின் தல வில்லர் ..எப்பவும் டாப் ..!

      Delete
  89. புத்தாண்டுக்கு கூரியர்கள் இங்கே பணியாற்றிக் கொண்டிருந்ததால் நேற்றே புக்கிங் செய்து விட்டோம் guys ! ஆனால் வாங்கி வைத்துக் கொண்ட டப்பிக்களை நேற்றைக்கே அனுப்பிடுவார்களா - அல்லது இங்கேயே தூங்கப் போட்டு விடுவார்களா என்ற சிறு சந்தேகமிருந்தது ! So ஓட்டைவாயை அகலமாய்த் திறந்துவிட்டு, வருஷ ஆரம்பத்திலேயே மொத்து வாங்குவானேன் ? என்ற பயத்தில், அறிவிப்பேதும் செய்திடவில்லை !!

    ReplyDelete
  90. I like to vote for chik bill but they are not in the list so my vote goes to *Captain Prince*

    ReplyDelete
  91. இந்த மாதிரி தேர்தல்களில் டெக்ஸ் வில்லர் பெயரை சேர்ப்பதே தவறு.
    மற்ற எல்லாருக்கும் டெபாசிட் கூட தேறாது. ஏதோ போனா போகுதுனு சிலர் கள்ள வோட்டு, லக்கி லுக் அப்புடி இப்புடின்னு பாவம் பார்த்து போடறாங்க. மத்தபடி "என்றென்றும் டெக்ஸ்" மட்டுமே No.1. :-)
    Wish you happy new year to all...

    ReplyDelete
    Replies
    1. ///இந்த மாதிரி தேர்தல்களில் டெக்ஸ் வில்லர் பெயரை சேர்ப்பதே தவறு.
      மற்ற எல்லாருக்கும் டெபாசிட் கூட தேறாது. ///

      நூற்றுக்கு நூறு சரியான பாயிண்ட்.!

      டெக்ஸ்வில்லர் தான் ஜெயிப்பார்னு நல்லா தெரிஞ்சுமே நானெல்லாம் லக்கி லூக்கிற்கு (அஃப்கோர்ஸ் மை ஃபேவரீட்) வாக்களிச்சுருக்கேன்னா என் மன தைரியத்தை பாராட்டணும்..!

      Delete
    2. எஸ்....

      இந்த நம்பர் ஒன் ,நம்பர் டூ விளையாட்டு எல்லாம் பாப்பா விளையாட்டு..

      இந்த டெக்ஸ் ஒன்லி ஒன் ஸ்பெஷல் டெக்ஸ்..:-)

      Delete
  92. பெட்டி வந்துருச்சுன்னு தகவல் வந்துருச்சு..:-)

    ReplyDelete
  93. ஒரு ஓட்டு
    ஒரே ஓட்டு
    அப்ப அது தலைவர் ஸ்பைடருக்கே

    ReplyDelete
  94. கிட்ஆர்டின் கண்ணன் ...
    நீங்களாவது பரவாயில்லை ...நானெல்லாம் ஸ்பைடர் ஜெயிக்க மாட்டார்னு தெரிஞ்சே ஓட்டு போட்டிருக்கேன் பாருங்க....!

    ReplyDelete
    Replies
    1. JSK ...

      ஹாஹாஹா....!!

      (நானே சொல்லலாம்னு நினைச்சேன்..ஹிஹி)

      Delete
  95. 1. சந்தேகமே இல்லாமல் டெக்ஸ் தான்
    காரணம் நான் படிக்க ஆரம்பித்த 90 களின் முடிவில் வந்த ஹீரோக்களில் அவர் தான் டாப் மற்றும் அந்த அதிரடி காட்சிகள் அப்படியே ஈர்த்துவிட்டன.. திரைப்படங்கள் பார்த்தால் கூட நடனம் அடுத்து சண்டைக்காட்சிகள் என்று வருகிறதா என்று கணபார்ம் பண்ணிக்கொண்டு பார்த்தகாலங்கள்.

    2. டைகர்
    முதல் அறிமுகமே அமர்க்களமாக அமைந்தது தான் காரணம். அதுவும் முதல் பாகத்தில் நல்லவன் போல இருந்தவன் தான் கெட்டவன் என்ற திருப்பம் மிகவும் புதியதாக இருந்தது எனக்கு மற்றும் அடுத்து உடனே மின்னும் மரணம் என்ற போது அவரே எனது இரண்டாவது.

    3. லக்கி லூக்
    ஒல்லி மனிதன் செய்யும் சாகசங்கள் அனைத்துமே அருமை. ஆனால் அவர் 3 ஆம் இடம் பிடிக்க ஜாலி தான் காரணம் ஜாலி இல்லாமல் வெறும் லக்கி வெற்றி பெற முடியாது.

    4. ஸ்பைடர்
    டெக்ஸ் டைகர் என்று படித்த காலத்தில் தான் பழைய புத்தக கடைகளில் இருந்து மற்ற ஹீரோக்கள் படிக்க ஆரம்பித்தேன் அதில் தனித்து தெரிந்தது ஸ்பைடர் தான் அவரது வெற்றிக்கு மெயின் காரணம் வித்தியாசமான வில்லன்கள் தான்.

    5. பிரின்ஸ்
    கடல் சாகசங்கள் முதல் முறை படித்த பொழுது புது அனுபவமாக இருந்தது அதுவும் அந்த சதுப்புநிலத்தில் கொசு கடியுடன் வரும்போது ஏதோ நானே அவ்வாறு வருவது போல நினைத்தது உண்டு

    6. Xiii
    முதல் சாகசம் படித்த பொழுது ஒரு ஆக்சன் திரைப்படம் போல இருந்தது ஆனால் போக போக எங்கெல்லாம் செல்லும் பொழுது ஒரு சலிப்பு ஏற்பட்டது முதலில் ஆனால் மீண்டும் முழுப்புத்தகமாக படித்தபொழுது எழுந்த ஆச்சர்யம் எனக்கு இவரை பிடித்து போனது.

    7. மாயாவி
    நான் லயனில் ஆரம்பித்து பின்னர் முத்து பக்கம் சென்றவன். லயனில் இருந்த ஒரு பரபர பீலிங் அப்பொழுது முத்துவில் கிடையாது. ஆகையால் மாயாவி பிடிக்கும் ஆனால் ஒரு கிரேஸ் கிடையாது.

    8. லார்கோ
    கண்டிப்பாக சமீப hitec ஹீரோ தான். அவருடைய பெரிய பிளஸ் அந்த பரபர கதை நகர்தல் தான்.

    9. Thorgal
    மிகவும் குழப்பமான கதை நகர்தல் ஒவ்வொரு கதைக்கும் மீண்டும் முதலில் இருந்து அனைத்து கதைகளையும் படிக்கவேண்டும்.

    10. மார்ட்டின்
    எனக்கு நமது நாட்டின் வரலாறு தவிர்த்து மற்ற நாடுகளில் இன்டெரெஸ்ட் கிடையாது மட்டும் சண்டை காட்சிகள் கம்மி ☺️

    ReplyDelete
  96. லக்கி லூக் என்கின்ற மாஸ் ஹீரோவுக்குதான்.

    ReplyDelete
  97. My choice of millennial hero. Captain blueberry

    ReplyDelete
  98. எடிட்டரின் புதிய மினி பதிவு ரெடி priyatels!

    ReplyDelete
  99. எனது ஓட்டு இரவு கழுகார் - டெக்ஸ் வில்லருக்கே

    ReplyDelete
  100. This comment has been removed by the author.

    ReplyDelete
  101. தனி ஒருவனாக கௌபாய் தேசம் முழுதும் ஓடாத ஓட்டமெல்லாம் ஓடி படாத அடியெல்லாம் பட்டு காமிக்சிலும் காவியங்கள் படைக்க முடியுமென்பதை உணர்த்திய கேப்டன் டைகருக்கே எனது ஓட்டு.. கேப்டன் டைகர்����

    ReplyDelete