நண்பர்களே,
And இதோ- இம்மாதத்து இதழ்களுள் நீங்கள் பார்த்திரா கார்ட்டூன் ஆல்பத்தின் அட்டைப்பட பிரிவியூ !! இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க அட்டைப்படமென்பது கொசுறுத் தகவல் - simply becos இதன் வடிவமைப்புக்கு முழுமையாய் 'அகுடியா' தந்தது அடியேனே !! பொதுவாய் எனக்கும் இந்த art சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களுக்கும், ஏழாம் ; எட்டாம் பொருத்தம் தான் !! டிசைனிங்கின் போது நான் உடனமர்ந்து யோசனை சொல்ல ஆரம்பித்தால் கொஞ்ச நேரத்தில் டிசைனர் சந்நியாசம் வாங்கிட முனைவார் ; அல்லது அந்த டிசைன் - பதம் தப்பிய மைசூர்பாகு போல கேவலமாயிருப்பது வாடிக்கை ! இந்த மேக் & ஜாக் ராப்பரின் first look-ஐ டிசைனிங்கில் கோகிலா கண்ணில் காட்டிய போது ரொம்பவே மிதமாய்த் தான் தென்பட்டது ! பொழுது போகாவொரு நாளோ என்னவோ - அந்த டிசைனை மாற்றியமைக்க யோசனைகளை நான் அள்ளி விட ஆரம்பித்தேன் !! அதிசயத்திலும் அதிசயமாய் - டிசைன் கொஞ்சம் தேறிடும் என்பது போலத் தென்பட - செம குஷியாகிப் போனேன் ! அப்புறமென்ன - 'மஞ்சளே கூட்டு ; சிகப்ப குறை !!' என்று ஏதேதோ கூத்துக்களை அடிக்கச் செய்த பிற்பாடு பார்த்தால் - வாழ்க்கையில் முதல்முறையாக நான் கொடுத்த inputs சகிதம் ஒரு டிசைன் என்னளவுக்கு ஓகேவாகி இருந்தது ! பாருங்களேன் இந்த நவீன பிக்காஸோ ஓவியத்தை !!
வணக்கம். நம்ம கேரட் மீசை கிளிப்டன் ஓட்டும் ஆதிகாலத்து கார் போலத் தான் நமது சின்ன டீமும் ! ஆனால் டாப் கியரைத் தட்டுத் தடுமாறித் தொட்டு விட்டால் அப்புறம் வண்டி பிய்த்துப் பிடுங்கிக் கொண்டு பறக்கத் துவங்கி விடும் ! இந்த வரலாற்று சிறப்புமிக்க தகவலை ரெண்டே முக்கால் டஜனாவது வாட்டியாய் இந்த வாரத்தில் உணர்ந்திட முடிந்தது - அனுபவரீதியாய் !! ஏதேதோ காரணங்களால் பிப்ரவரியில் பணிகள் எனது மேஜையில் ரொம்பவே சுணங்கியிருந்தன ! அதன் பலனாய் பிப்ரவரி இதழ்கள் ரொம்பவே தாமதம் கண்டுவிடுமோ என்று பயம் ஏகமாய் இருந்தது !! ஆனால் எனது பணிகள் நிறைவுற்ற பின்பாய், திருத்தங்கள் போடுவதில் துவங்கி ; ப்ராசஸிங் ; பிரின்டிங் ; பைண்டிங் என அத்தனையுமே சும்மா அசுர வேகம் தான் ! அதிலும் இம்மாதம் சகலமும் வண்ண இதழ்களே ப்ளஸ் இம்முறை ஒரு ஹார்ட்கவர் புக்கும் உண்டெனும் போது- பிரின்டிங் & பைண்டிங்கின் வேலைப்பளுக்கள் செமத்தி !! So இந்த வாரத்தின் முழுமையுமே சிவகாசியை அதிசயமாய் நடுக்கி வரும் இரவுக்குளிருக்குள் பணிகளென்றே கரைந்திருக்க - lo behold - நான்கு இதழ்களும் தயாராகி இன்று காலை (ஜனவரி 31) நம் ஆபீசில் அணிவகுத்து நின்றன !! ஒவ்வொருமுறையும் புது இதழ்கள் முழுமையடைந்து கைக்கு வந்து சேரும் தருணத்தில் "ஹை..ஜாலி !!" என்று மனசு துள்ளும் தான் ; ஆனால் இம்முறையோ நமது டீமின் தடாலடியை எண்ணி அந்தத் துள்ளல் சற்றே தூக்கலாயிருப்பதை உணர முடிந்தது !! So கூரியர்களிலும், பதிவுத் தபால்களிலும் இதழ்கள் கிளம்பியாச்சு ; மாதத்தின் முதல் தேதியன்று உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டிட !! "நேரம் தவறாமை" என்பதை இந்த இரண்டாம் இன்னிங்சில் நாம் எத்தனை சீரியஸாக எடுத்து வருகிறோம் என்று நான் புரிந்திருப்பது அத்தனை பெரியதொரு சமாச்சாரமல்ல !! ஆனால் இதன் பின்னணியில் உள்ள ஒவ்வொருமே ஒவ்வொருவருமே அதனைப் புரிந்திருந்து, அதன் பொருட்டு எடுக்கும் முயற்சிகள் மனதை நிறைக்கின்றது !! Phew !!!
And இதோ- இம்மாதத்து இதழ்களுள் நீங்கள் பார்த்திரா கார்ட்டூன் ஆல்பத்தின் அட்டைப்பட பிரிவியூ !! இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க அட்டைப்படமென்பது கொசுறுத் தகவல் - simply becos இதன் வடிவமைப்புக்கு முழுமையாய் 'அகுடியா' தந்தது அடியேனே !! பொதுவாய் எனக்கும் இந்த art சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களுக்கும், ஏழாம் ; எட்டாம் பொருத்தம் தான் !! டிசைனிங்கின் போது நான் உடனமர்ந்து யோசனை சொல்ல ஆரம்பித்தால் கொஞ்ச நேரத்தில் டிசைனர் சந்நியாசம் வாங்கிட முனைவார் ; அல்லது அந்த டிசைன் - பதம் தப்பிய மைசூர்பாகு போல கேவலமாயிருப்பது வாடிக்கை ! இந்த மேக் & ஜாக் ராப்பரின் first look-ஐ டிசைனிங்கில் கோகிலா கண்ணில் காட்டிய போது ரொம்பவே மிதமாய்த் தான் தென்பட்டது ! பொழுது போகாவொரு நாளோ என்னவோ - அந்த டிசைனை மாற்றியமைக்க யோசனைகளை நான் அள்ளி விட ஆரம்பித்தேன் !! அதிசயத்திலும் அதிசயமாய் - டிசைன் கொஞ்சம் தேறிடும் என்பது போலத் தென்பட - செம குஷியாகிப் போனேன் ! அப்புறமென்ன - 'மஞ்சளே கூட்டு ; சிகப்ப குறை !!' என்று ஏதேதோ கூத்துக்களை அடிக்கச் செய்த பிற்பாடு பார்த்தால் - வாழ்க்கையில் முதல்முறையாக நான் கொடுத்த inputs சகிதம் ஒரு டிசைன் என்னளவுக்கு ஓகேவாகி இருந்தது ! பாருங்களேன் இந்த நவீன பிக்காஸோ ஓவியத்தை !!
கதையைப் பொறுத்த வரை - ஒரேயொரு வேண்டுகோள் guys !! கூரியர் கிடைத்த பிற்பாடு, பிப்ரவரி இதழ்களுள் - இந்த கார்ட்டூன் ஆல்பத்தை உங்களின் முதல் வாசிப்பாக்கிட நேரமெடுத்துக் கொள்ளுங்களேன் - ப்ளீஸ் ? சமீப நாட்களில் நான் இத்தனை ரகளையாய் ரசித்துப் பணியாற்றிய கதை இதுவாகத் தானிருக்கும் என்பேன் !! So எனது ரசனையும், உங்களது ரசனையும் எந்தமட்டிற்கு ஒத்துப் போகின்றதென்பதை அவதானிக்கவும், ஆண்டின் முதல் கார்ட்டூன் இதழுக்கான உங்களின் ஆதரவை கணிக்கவுமே இந்தக் கோரிக்கை !!
And இந்த மாதம் ரிப்போர்ட்டர் ஜானியின் புது template கதையும் உங்கள் கவனங்களை & அபிப்பிராயங்களைக் கோரிடக் காத்துள்ளதென்பதை மறவாதீர்கள் ப்ளீஸ் !! இந்தப் புதிய பாணி சுகமா ? அல்லது முந்தைய இடியாப்பமே தேவலாமா ? என்ற தீர்ப்பெழுத வேண்டிய பொறுப்புண்டு கனம் ஜூரிக்களே !!
And ஜெரெமியா 2 இம்மாத ஜம்போ ரிலீஸ் எனும் போது அந்தத் தொகுப்பின் மீதும், இந்தத் தொடரின் எதிர்காலம் மீதும் தீர்ப்பெழுத வேண்டிய பொறுப்பையும் நான் நினைவூட்ட வேண்டுமா - என்ன ? So இது பிஸியான மாதம் folks - ஜூரிக்களான உங்களுக்கு ! மீண்டும் சந்திப்போம் !! Bye for now !!
பி.கு. திருப்பூரில் துவங்கியுள்ள புத்தக விழாவில் நமது ஸ்டால் நம்பர் 39 ! Please do drop in folks !!
First???
ReplyDeleteஆமாம்.
Deleteமீ ஃபர்ஸ்ட் ஆ!!
ReplyDeleteஇரண்டாவது :-)
Delete;) 🙏
Deleteஹல்லோ!!
ReplyDeleteயாருப்பா அது மைக் டெஸ்டிங் பண்ணுவது?
Deleteஉள்ளேன் ஐயா..!
ReplyDeleteவாவ்
ReplyDeleteசூப்பரு சார்
.
Thank-you sir
ReplyDelete6
ReplyDelete/// So கூரியர்களிலும், பதிவுத் தபால்களிலும் இதழ்கள் கிளம்பியாச்சு ; மாதத்தின் முதல் தேதியன்று உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டிட !! "///
ReplyDeleteஹைய்யா ..
ரிப்போர்ட்டர் ஜானி நாளைக்கு ரிப்போர்ட் குடுக்கப்போறாரு ..!
கண்டிப்பாக பாஸ் பண்ணிடுவாராம்....
DeleteThank-you sir
ReplyDeleteஜானி புது மாற்றத்தை வரவேற்கிறேன். ஆவலுடன் காத்திருக்கிறேன்
ReplyDeleteஜானியின் புது மாற்றத்தை வரவேற்கலாமா ...வேண்டாமா...
Deleteஇதழை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்..:-)
///சமீப நாட்களில் நான் இத்தனை ரகளையாய் ரசித்துப் பணியாற்றிய கதை இதுவாகத் தானிருக்கும் என்பேன் !! ///
ReplyDeleteசொக்கா .. ஹையோ சொக்கா...இப்பவே போய் கூரியர் ஆபீஸ் வாசல்ல படுத்துக்கலாம்னு தோணுதே..!
(ஆனா நம்ம மூஞ்சிய பகல்ல பாத்தாவே கேள்வி கேக்காம சந்தேக கேசுல புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க .! இதுல நைட்டு வேற ... பூட்டு திருட வந்தியாடான்னு காலைப்புடிச்சி தரதரன்னு இழுத்துக்கிட்டு போய் லாடம் கட்டிருவாங்களோன்னு பயந்து வருது. அதனால விடியட்டும்னு காத்துண்டிருக்கேன்.)
ஆவலுடன் வெயிட்டிங் for ஜெரமியா ....
ReplyDelete+1
Deleteஎடிட்டர் சமூகத்தின் டிசைனிங் அகுடியாக்களால் உருவான அட்டைப்படங்களில் - முன்னட்டை 'பர்ர்ரால்லை' ரகம், பின்னட்டை - 'செம்ம' ரகம்! முன்னட்டையில் அந்தக் கருப்பு-சிவப்பு கலர் காம்பினேஷன் கட்சிக் கொடியை ஞாபகப்படுத்துகிறது! (ஒருவேளை.. எடிட்டர் சமூகத்துக்கு அரசியலில் குதிக்கும் ஆசை வந்துவிட்டதோ?!!)
ReplyDeleteகார்டூன்களைக் காணாமல் காய்ந்து போயிருக்கிறோமாதலால், நாங்களுமே மேக் & ஜாக்கைத்தான் முதலில் படிக்க எண்ணியிருக்கிறோம்!
இதழ் தயாரிப்பில் மின்னல் வேகத்தில் இயங்கி, அசுரத்தனமாய் உழைத்து, முதல் தேதிக்கே எங்கள் முகங்களை மலரவைத்துப் பார்த்திடும் நம் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகளும், ஆளுக்கு ஒரு மானசீக சாக்லெடும் வழங்குகின்றேன்!
///இதழ் தயாரிப்பில் மின்னல் வேகத்தில் இயங்கி, அசுரத்தனமாய் உழைத்து, முதல் தேதிக்கே எங்கள் முகங்களை மலரவைத்துப் பார்த்திடும் நம் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகளும், ஆளுக்கு ஒரு மானசீக சாக்லெடும் வழங்குகின்றேன்!///
Deleteநானும் வழங்குகிறேன்..!
(அதே சாக்லேட்டை.!! ;-))
இதழ் தயாரிப்பில் மின்னல் வேகத்தில் இயங்கி, அசுரத்தனமாய் உழைத்து, முதல் தேதிக்கே எங்கள் முகங்களை மலரவைத்துப் பார்த்திடும் நம் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகளபா
Deleteஇதழ் தயாரிப்பில் மின்னல் வேகத்தில் இயங்கி, அசுரத்தனமாய் உழைத்து, முதல் தேதிக்கே எங்கள் முகங்களை மலரவைத்துப் பார்த்திடும் நம் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகளபா
Deleteநமது அலுவலகப் பணியாளர்களின் அபார உழைப்புக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளும் சார்.....
Deleteஇதழ் தயாரிப்பில் மின்னல் வேகத்தில் இயங்கி, அசுரத்தனமாய் உழைத்து, முதல் தேதிக்கே எங்கள் முகங்களை மலரவைத்துப் பார்த்திடும் நம் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகளபா
DeleteWaiting
ReplyDeleteஐயோ எப்ப பொழுது விடியப்போகுதோ
ReplyDeleteகருர் rajasekarN வணக்கம் sir
ReplyDeleteவணக்கம். உங்கள் உடல்நலம் இப்போது எப்படி உள்ளது.
Delete///இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க அட்டைப்படமென்பது கொசுறுத் தகவல் - simply becos இதன் வடிவமைப்புக்கு முழுமையாய் 'அகுடியா' தந்தது அடியேனே !!///
ReplyDeleteYellow Yellow Beauty Fellow அப்படீன்னு மேல்நாட்டு அறிஞர் ஒருத்தர் சொல்லியிருக்காரு.!
உங்களுடைய முதல் அகுடியாவே மங்களகரமாக வந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி சார்.!
இதுவரை அட்டையில் மஞ்சள் தூக்கலாய் அமைந்திருந்த கதைகள் அனைத்துமே சிறப்பான வெற்றிகளைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்திருப்பதாக புள்ளிவிவரமொன்று தெரிவிக்கிறது.!
///Yellow Yellow Beauty Fellow அப்படீன்னு மேல்நாட்டு அறிஞர் ஒருத்தர் சொல்லியிருக்காரு.!
Delete///
அந்தப் பாட்டை நானும் கேட்டிருக்கேன்! ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட அழகான பாடல் அது!!
நெசமாவா..!?
Delete20வது. அட்டைப்படம் அசத்தல்.
ReplyDeleteAM waiting
ReplyDeleteவிஜயன் சார், முன் அட்டடை்படம் சுமார். குறிப்பாக அந்த வண்ணங்களின் தேர்வு.
ReplyDeleteஒரு வேளை புத்தகத்தை நேரில் பார்க்கும் போது அட்டைப்படம் பிடித்தாலும் பிடிக்கலாம்.
விஜயன் சார்,
ReplyDeleteஉங்களுடைய முதல் அகுடியாவே மங்களகரமாக வரவேண்டும் என்ற காரணத்தால் மஞ்சளை அள்ளித் தெளித்தது போல் தெரிகிறது.
வந்தாச்சி.
ReplyDeleteகாலையில.., இயற்கைதானே..!?:-)
Deleteஎனக்கு இயற்கைதான்,உங்களுக்கு செயற்கையா என்னன்னு தெரியலையே,ஹிஹிஹி....
DeleteThe bright cover pictures remind me of BEANO sir
ReplyDelete////சமீப நாட்களில் நான் இத்தனை ரகளையாய் ரசித்துப் பணியாற்றிய கதை இதுவாகத் தானிருக்கும் என்பேன் !!////
ReplyDeleteபெண் வேடமிட்டு ஊரை ஏமாற்றும் கயவர் கும்பல் பற்றிய கதையென்பது அட்டைப்பட டீட்டெய்லு மூலம் தெரியவருகிறது! காமெடிக்கு ஏற்ற களேபரக் கதைக் களம்!
உங்களது ரகளையான எழுத்துகளைப் படித்துத் தொந்தியைக் குலுங்கவைக்க நாங்களுமே ஆவலுடன் வெயிட்டிங் சார்!
ஆத்தாவின் அருள் கிடைக்குமா என்பதே இன்றைய இருபது ரூபாய் கேள்வி!
இதுவும் பழைய பாக்கியிலயே சேர்ந்திடுமா என்பது ஆத்தாவின் 'பதினைஞ்சி லட்ச ரூபா' கேள்வியாம் ..! :-)
Deleteஏற்கனவே கண்டெயினர் நிறைய கூழ் பாக்கியாம்....!
Delete//பெண் வேடமிட்டு ஊரை ஏமாற்றும் கயவர் கும்பல் பற்றிய கதையென்பது அட்டைப்பட டீட்டெய்லு மூலம் தெரியவருகிறது!//
Deleteஹி..ஹி...கதையைப் படித்துப் பாருங்கள் ; அப்புறமாய் உங்கள் யூகத்தை மாற்றிக் கொள்ளலாம் !!
கணக்கு வாத்தியார்
ReplyDeleteமுடிவிலிக்கு ஒரு உதாரணம் சொல் ..
மாணவன்
ஈவி ஆத்தாவுக்கு வைத்திருக்கும் கூழ் பாக்கி
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
தமிழ் வாத்தியார்
இருப்பது போலும் இல்லாது போலும் இருப்பவன் இறைவன் .
இதற்கு ஒரு உதாரணம் சொல் ..
மாணவன் :
பிரகாஷ் பப்ளிஷர்ஸ் ஊழியர்களுக்கு அனுப்ப பட்ட மானசீக சாக்லேட்.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
ஆங்கில வாத்தியார் : ஷெல்லி ,கீட்ஸ்,பைரன் கவிஞர்கள் வரிசையில் இன்னுமொரு பெயர் சொல்
மாணவன் : கண்ணன் சார்!
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
வெல்கம் கார்ட்டூன் !!!!!!!!
ஆசிரியர் : நூறுமுறை படித்தாலும் விளங்கிக்கொள்ள இன்னும் ஏதோ மிச்சமிருக்கும் எனும்படியான புத்தகளில் ஏதாவதொன்றைக் கூறு!
Deleteமாணவன் : 'சிகரங்களின் சாம்ராட்' சார்!
///////////////////////////////////////////////////////
ஆசிரியர் : சர்.சி.வி. ராமன், விஸ்வேஷ்வரய்யா, ராமானுஜன் - இந்த வரிசையில் வந்த தமிழ் ஆராய்ச்சியாளர்களின் பெயர் ஒன்றைக் கூறு!
மாணவன் : செனாஅனா
ஆசிரியர் : தவறான பதில்! மக்குப் பயலே.. நல்லா ரோசனை பண்ணிச் சொல்லுடா!
மாணவன் : ஆங்.. ஈவி சார்.. ஈவி!
ஆசிரியர் : அபாரம்!! மிகமிகச் சரியான பதில்!! நூறு மதிப்பெண்கள்!!
/////////////////////////////
நீதி : அபாரமான பொது அறிவுக்கு - கார்ட்டூன் படியுங்கள்!
செனா அனா ..!
Delete///ஆங்கில வாத்தியார் : ஷெல்லி ,கீட்ஸ்,பைரன் கவிஞர்கள் வரிசையில் இன்னுமொரு பெயர் சொல்
மாணவன் : கண்ணன் சார்!///
என்னையும் மதிச்சி ஒருரூவா ரெண்டூரூவா இல்லே ..ஐநூறுரூவா கேட்டே பாரு ..எங்கியோ போய்ட்டடா ன்னு சொல்லி வடிவேலு ஒருத்தரை கட்டிப்புடிப்பாரே .... வைகைப்புயலின் அந்த நிலையில் இப்போது நான்..! :-)
திருப்பூாில் எங்கே புக்ஃபோ் நடக்குது??
ReplyDeleteAddress please??
This comment has been removed by the author.
DeleteThank you
Deleteபத்மினி கார்டன், காங்கேயம் சாலை, திருப்பூர்
DeleteOur stall number is 25 (பிரகாஷ் பப்ளிஷர்ஸ்), please check
https://bookday.co.in/16th-tiruppur-book-festival-2019/
Stall number : 39
Deleteகார்டூன் போன வருஷம் (2018) வந்தது.அதுக்கப்புறம் இந்த வருஷம் (2019)தான் வருது.அதனால் கார்ட்டூனுக்காக ஆவலுடன் வெய்டிங்.
ReplyDeleteஉண்மையைச் சொல்லணும்னா நெஜமாகவே கார்டூன் படிச்சி மாமாங்கம் ஆன மாதிரியே இருக்கு.அதனாலயே இந்த தடவை முதல் தரிசனம் கார்டூனுக்கே.
சவுண்டே இல்லாம படக்கென கொரியர் தகவல்...
ReplyDeleteசூப்பர் சார்...
இன்றே மாலையில் இதழை காணவும் ,கார்ட்டூன் இதழை ஆசிரியர் சொன்னது போல வாசிக்கவும் ஐயம் வெயிட்டிங்..
குரியர் ஆஃபீசில குப்புற படுத்திருக்கீங்களோ இல்லையோ, இந்த பிளாக்ல எப்பவும் மல்லாக்க படுத்திருக்கீங்கனு தெரியுது. எல்லாருக்கும் பதில் குடுக்கும் விதம் அருமை Kid ஆர்டின் kannan. உங்களை போல மற்றும் சிலரின் கமெண்ட்கள் தான் இந்த blogன் oxygen... keep going.
ReplyDelete@Asok Kumar
Deleteதைரியமாச் சொல்லுங்க அசோக் குமார்.. கிட்ஆர்டின் கண்ணன் உங்களுக்கு ஏதும் ஃபோன் போட்டு மிரட்டினாரா? :D
Asok kumar @
Deleteஉங்களுக்கு நல்ல மனசு சார்.!
மனந்திறந்த வார்த்தைகளுக்கு நன்றி சார்.!
என்னோட குருநாயர் ஈரோடு விஜய் ஏதாச்சும் போன் போட்டு மாத்தி சொல்லச் சொல்லி மிரட்டினாலும் கையூட்டு தருவதாக மயக்கினாலும் ஏமாந்திடாதிங்க.! இதேமாதிரி தைரியமா உண்மையை உரக்கச் சொல்லுங்க ..! :-)
சத்யமேவ ஜெயதே ..!
@Erode Vijay..
Deleteமிரட்டவெல்லாம் செய்யல. உண்மைய சொன்னார் !
Background music...
(பாட்சா பாட்சா பாட்சா....)
:))))
Delete// வாழ்க்கையில் முதல்முறையாக நான் கொடுத்த inputs சகிதம் ஒரு டிசைன் என்னளவுக்கு ஓகேவாகி இருந்தது ! //
ReplyDeleteஅட்டைப்படம் இரசனையாகவே வந்துள்ளது சார்.....
// And இந்த மாதம் ரிப்போர்ட்டர் ஜானியின் புது template கதையும் உங்கள் கவனங்களை & அபிப்பிராயங்களைக் கோரிடக் காத்துள்ளதென்பதை மறவாதீர்கள் ப்ளீஸ் !! //
ReplyDeleteகண்டிப்பாக சார்,ஜானியின் 2.0 வெர்ஷனுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்......
இந்த மாதம் இங்கி,பிங்கி,பாங்கி போடறது சற்றே எளிதுன்னுதான் தோணுது....
ReplyDeleteபாா்சல் வந்தாச்சு!
ReplyDeleteஎப்பவும் போல முன்னுாிமை காா்ட்டூனுக்கே!
வைகிங் தீவு மர்மம் - கலர் கனவுகள்
ReplyDeleteமேக் & ஜாக் - ய்ய்யாயாஹூஹூ
ஜானி 2.0 - அட்றாசக்கை அட்றாசக்கை
ஜெரெமியா - செம்ம மேக்கிங் ..
அப்புறம் ...
Deleteபார்சல்ல சாக்லேட்டை காணோமே சார்.! நேத்து பணியாளர்களுக்கு கொடுக்கிறோம்னு நானும் குருநாயரும் (ஒரு பேச்சுக்கு) சொன்னதால் எடுத்து வெச்சிக்கிட்டீங்களா சார்? :-)
// பார்சல்ல சாக்லேட்டை காணோமே சார்.! நேத்து பணியாளர்களுக்கு கொடுக்கிறோம்னு நானும் குருநாயரும் (ஒரு பேச்சுக்கு) சொன்னதால் எடுத்து வெச்சிக்கிட்டீங்களா சார்? :-) //
Deleteநம்மை எல்லாம் ஆசிரியர் நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கார்!
நாங்களுமே ஒரு (மானசீக) சாக்லெட்டை அனுப்பியிருந்தோமே - பார்க்கலியா ? போச்சு ; அது சுத்தமான காமிக்ஸ் ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும் சாக்லேட் ஆச்சே ?
Deleteஆமாம் சார்.! உள்ளே இருந்ததால் சரியாக கவனிக்காமல் சாக்லேட் இல்லைன்னு சொல்லிட்டேன்.!
Deleteஇப்போதான் கவனிச்சேன்..அடடே அடடே ..சூப்பர் டேஸ்ட்.!
அருமையான சாக்லேட்டுக்கு நன்றி சார்.!
(நான் சுத்தமான காமிக்ஸ் ரசிகன்..ஹிஹி)
ஒவ்வொரு மாதமும் புத்தகங்களோடு இனிப்பையும் அனுப்பிவைக்கும் எடிட்டர் சமூகத்தின் அன்பை என்னவென்பது?!!
Deleteஇம்முறை கொரியர் டப்பாவினுள் மொபைல் ஃபோன் சைஸில் ஒரு சுவிஸ் சாக்லேட் இருக்கக்கண்டேன்! ஆஹா..அருமையான சுவை!! ( மேட் இன் சைனா?)
போச்சு..போச்சு...அது அட்டை டப்பா என்றா நினைத்தீர்கள் ? அது தான் சாக்லெட்டே !! மறுக்கா காமிக்ஸ் தேவன் மனிடோவை வணங்கிவிட்டு டப்பாவைப் பாருங்களேன் - ஏதாச்சும் தெரியுதாவென்று ?!
Deleteகுருநாயரே...நல்லா பாத்தீங்களா.?
Deleteசாக்லேட்டுன்னு நினைச்சி வைகிங்தீவு மர்மத்தை சாப்பிட்ருக்கப் போறிங்க ..!
///மறுக்கா காமிக்ஸ் தேவன் மனிடோவை வணங்கிவிட்டு டப்பாவைப் பாருங்களேன் - ஏதாச்சும் தெரியுதாவென்று ?!///
Deleteரொம்ப நேரமா டப்பாவையே உத்துப் பாத்துட்டு இருக்கிறதை பாத்துட்டு., வீட்ல எல்லோரும் என்னை வித்தியாசமா பயத்தோட பாக்குறாங்கன்னு மட்டும் தெரியுது.!
ஹைய்யா.. புக்கு வந்திடுச்சாம் - வீட்லேர்ந்து ஃபோன்!
ReplyDelete(கணக்கு வச்சுக்கோ தாயி.. பழைய பாக்கி + 1)
நல்லவேளை.நாமளே பரவால்ல போல.எனக்கெல்லாம் வீட்லர்ந்து கரண்டிதான் வரும்.
Deleteசீக்கிரமே 'பத்மநாபன் கரண்டி கடை'னு ஆரம்பிச்சுடுவீங்க போலிருக்கே!! :)
Deleteஅதெல்லாம் இல்லை சார். எல்லாம் ஜென்டில்மேன் (அர்ஜுன் படம் இல்லை) அக்ரிமண்ட் தான். ஒரே கரண்டி தான். அவங்க வீசுவாங்க. நான் கேட்ச் புடிச்சு திரும்ப அவங்ககிட்டயே குடுத்துடணும். அப்படி கடை திறந்தா திறப்பு ( வீசு)விழாவிற்கு தலைமை நீங்கதான்.
Delete//(கணக்கு வச்சுக்கோ தாயி.. பழைய பாக்கி + 1)//
Delete:-))))))
நண்பா்களின் கனிவான கவனத்திற்கு,
ReplyDeleteஜானி 2.0
இது முழுக்கதையையும் அப்படியே திருப்பிச் சொல்லி, சுவாரஸ்யத்தை குன்றிடச் செய்யும் விமா்சனமல்ல!!
கதையை ஆா்வமாய் படிக்கத் தூண்டும் ஒரு ட்ரெய்லா் போல, என்பதால் தாராளமாய் யாவரும் படிக்கலாம்!
சாவகாஸமானதொரு பொழுதில் இக்கதையினை முழுவதுமாக, இடையூறின்றி, படிக்க நோ்ந்தால் ஒரு அருமையான வாசிப்பனுபம் கிட்டிடும் என்பதில் ஐயமில்லை!
ஜானி 2.0
Deleteவழக்கமான ஜானி கதைகளைப் போல் அல்லாத, அலட்டலில்லாத கதை சொல்லும் பாணியும், நோ்த்தியான ஓவியங்களும், வண்ண கலவையும் ஒரே சேர இணைந்து பாாிஸின் தோற்றத்தை அழகாகவே காட்டியிருக்கின்றன! அது நாமும் அங்கே வாழ்வதான பிரமையை உண்டாக்குகிறது!
ஆழமானதொரு கதைக்கரு கதைக்கு கூடுதல் சிறப்பை உண்டாக்கியிருக்கிறது!
மேலும் இக்கதையில் எள்ளல், துள்ளல்,நையாண்டி, பாிவு, காதல், கோபம் என நவரசங்களையும் வசனங்களில் தெறிக்கவிட்டிருக்கிறாா்கள்!
மொழி பெயா்ப்புக்கு சிறப்பு சல்யூட்!!
பக். 38 : 'தனிமையே என் துணைவன்' லக்கி லூக்கிற்கு மட்டுமல்ல.. நிஜ வாழ்விலும் நிறையப் பேருக்குப் பிடித்தமான வாி போலும்!
பக். 41 : பத்திாிக்கையில் வரும் அறிவியல் செய்திகளையெல்லாம் படிப்பதில்லையா? மரத்தடியில் நின்று முத்தமிட்டால் அந்த மரம் பூப்பூக்காது என்று நேற்றைக்கு செய்தியில் போட்டிருந்ததே!
பக். 52 : நிஜங்கள் அணுகுண்டுகளாய் சமூகத்தில் தெறிப்பதெல்லாமே கதைகளிலும், காமிக்ஸ்களிலும், சினிமாக்களிலும் மட்டுமே!
பக். 53 : வஞ்சம் என்பது ஆறிப் போனாலும் சுவையில் குன்றிடா ஒரு பதாா்த்தம்!
எத்தனை வீாியமாய் தண்டனை தந்தாலுமே, பாதிக்கப்பட்டோாின் வலிகளோ.. சேதாரங்களோ மறைந்து போகப் போவதில்லை!
பக். 56 : ஒரு விஷயம் மட்டும் எனக்குப் பிடிப்பதேயில்லை டாக்டா்! அது பிாிவு..! அது மனிதா்களாக இருந்தாலென்ன மாவுக்கட்டாக இருந்தாலென்ன?
எல்லாவற்றிற்கும் மேலாக இறுதிப் பக்க டுவிஷ்ட் சூப்பா்!!😂😂
இத்தகைய வசனங்களால் ஒரு முழுநீள சினிமா பாா்த்த மனநிறைவை ஜானி2.0 உண்டாக்கியிருக்கிறது என்றால் அது மிகையல்ல!
ஜானியின் புது அவதாரம் இந்த அளவுக்கு ரசிக்க வைத்திருப்பது உற்சாகமளிக்கிறது!
Deleteஆனால் நியாயப்படி நீங்கள் கார்ட்டூனைத்தானே முதலில் படித்திருக்கணும்?!!
////நியாயப்படி நீங்கள் கார்ட்டூனைத்தானே முதலில் படித்திருக்கணும்?!!////
Deleteஆமாங்கா ஈவி! காா்ட்டூனுக்கு தான் முதலிடம்! அத படிச்ச கையோட ஜானி 2.0 படிச்சு முடிச்சு, விமா்சனம் எழுதிட்டு, இப்போ தலயோட வைகிங் ஓடிட்டிருக்கு!
அப்பத்தான நாளைக்கு சனி, ஞாயிறை ஜெரமயாவோட கழிக்க முடியும்! போதாக்குறைக்கு பராகுடா வேற ஒரு பாகத்தோட நிக்குது!!
ஜானி 2 .0 கதையினை கிட்டத்தட்ட முழுசுமாய் மாற்றியெழுத அவசியப்பட்ட போது மேலெல்லாம் நோவியது வாஸ்தவமே ! ஆனால் ஒரிஜினலில் கதாசிரியர் வடித்திருந்த ஸ்கிரிப்ட் படிக்கப் படிக்க ஆர்வத்தை உண்டாக்கியது - simply becos தமிழில் எழுதும் போது ஸ்கோர் செய்ய ஏகப்பட்ட இடங்கள் கண்ணில்பட்டன !! அவற்றை அழகாய்ப் பட்டியலிட்டு, சிலாகித்துள்ளமைக்கு நன்றி சார் !!
Deleteசில மெனெக்கெடல்கள் கவனிக்கப்படும் போது அவை சார்ந்த சிரமங்கள் மறந்து போய் விடுகின்றன தான் !!
///
Deleteஆமாங்கா ஈவி! காா்ட்டூனுக்கு தான் முதலிடம்! அத படிச்ச கையோட ஜானி 2.0 படிச்சு முடிச்சு, விமா்சனம் எழுதிட்டு, இப்போ தலயோட வைகிங் ஓடிட்டிருக்கு!///
என்னா ஸ்பீடு.! சூப்பர் மிதுன்..!
இந்த மாதத்து ஜானி 2 .0 தேர்வானதற்கொரு முக்கிய காரணம் நமது (பாரிஸ்) ராட்ஜாவின் பரிந்துரையுமே !
Deleteசார்....உங்கள் சிறிய குழுவினர் அனைவரின் சார்பாக கையை கொடுங்கள்..
ReplyDeleteஅரக்க பரக்க பணி செய்து சரியான நேரத்தில் இதழ்களை வழங்கியதோடு அல்லாமல் செம அட்டகாசமாய் அனைத்து இதழ்களுமே கொண்டு வந்த தங்கள் குழுவினருக்கு முதலில் எங்களது மனமார்ந்த பாராட்டுதல்கள்.
அனைத்து இதழ்களின் அட்டை படமும் பட்டையை கிளப்புகிறது.கார்ட்டூன் இதழான மேக் அன்ட் ஜாக் இதழின் அட்டைப்படம் தளத்தில் பார்க்கும் பொழுது ( எனக்கு ) கொஞ்சம் சுமாராக அமைந்த்து போல ஓர் எண்ணம்.ஆனால் இதழாக கையில் ஏந்திய பின் இந்த இதழின் அட்டைப்படம் மின்னுவதை உணர முடிகிறது.அழகு
டெக்ஸ் அட்டைபடமும்...உட்பக்க சித்திரங்களும் செம...அதுவும் நான் கண்ட வைகிங் தீவு மர்மம் இதழ் பாக்கெட் சைசில் குறைவான பக்கங்களாக படித்த நினைவு.ஆனால் இப்பொழுது இந்த அளவில் இத்தனை பக்கங்கள் நீளும் இதழை பார்த்தவுடன் தெரிகிறது இதுவும் இம்மாம் பெரிய்ய்ய இனிப்பு மாத்திரை என்று...முன்னரை விட இப்பொழுது இந்த இதழை படிக்க இன்னும் ஆர்வம் கூடுகிறது.
ஜானி 2.0 அட்டை படம் சொல்லவே தேவையா என்ன...செம செம பல நிமிடங்கள் உற்று பார்க்க வைத்த அட்டை படம்...என்னை பொறுத்த வரை ஜானி 2.0 வை மிக பெரிய எதிர்பார்ப்பு கண்டிப்பாக எனக்கு இல்லாமல் இருந்தது என்பதே உண்மை .காரணம் பழைய அந்த அழகான ஜானியை மிஸ் செய்கிறீர்களோ் என்பது தான்...ஆனால் இதழை பார்த்ததும் தான் புரிகிறது இது ஒரிஜினல் 2.0 ஜானி என்று..பின்பக்க அட்டைப்படமே எனது சந்தேகத்தை போக்கி விட்டது எனில் உட்பக்க சித்திரங்களின் ஓவிய பாணியும் ...பழைய மாந்தர்களின் அதே முக பாணிகளும் என் மனதில் பாலை வார்த்தன.கதையை படிக்காமலே இப்பொழுது சொல்கிறேன் ஜானி 2.0 வை இரு கை தட்டி வரவேற்கிறேன்.
ஜெராமியா இருபக்க கெட்டி அட்டையில் மயக்கும் அட்டை பட ஓவியங்கள். அட்டைப்படங்களை பார்த்ததும் ஏனோ அப்படியே கேப்டன் பிரின்ஸ் அவர்களின் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை.( இதை சந்தோசமாகவே சொல்கிறேன் என்பது பின்குறிப்பு )
உள்ளே ஆரஞ்சு வண்ணத்தில் தொடக்கம் கண்ட இதழ் முழுவதுமாக புரட்டி பார்க்கும் பொழுது ஓவியங்களும் ,வண்ண கலவைகளும் பட்டாசாய் வெடிக்கின்றன.இவரின் முதல் சாகஸம் எனக்கு சுமாராய் தான் தோன்றியது என்பதை மறுக்கவும் ,மறைக்கவும் இல்லை...இம்முறை பார்வையில் அதகளபடுத்தும் இந்த நாயகர் கதையில் அதகளபடுத்துவாரா ..என நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இந்த இதழை ஒவ்வொரு பக்கமாக ஓவியங்களை ரசித்த பொழுது 24 ம் பக்கத்தில் "பூம் " என்ற வெடியோசை பக்கத்தை பார்த்ததும் அதன் முதல் பக்கத்தையும் ,அந்த பக்கத்தையும் வாசித்து பார்த்தேன். வெடி வெடிக்கும் அந்த இடத்தில் லேட்டஸ்ட் பாணி ,சூப்பர் பாணி என சிலர் கொண்டாடும் அந்த பாணியின் படி " அந்த ஓசையை ம்யூட் செய்தவாறு படித்து ஒத்திகை பார்த்தேன்..ஹீஹீ...என்ன லேட்டஸ்ட் பாணியோ என்று தான் தோன்றியது என்பதும் ஒரு பின்குறிப்பே....
இனி ஆசிரியர் சொன்னபடி
நடனமாடும் கொரில்லாகளுடன் நடமாட செல்வதால்.....
பை பை....மற்றும் குட்நைட்....:-)
ச்சா..ச்சா டான்சா ? குத்தாட்டமா ? என்ன மாதிரியான டான்ஸென்று காலையில் சொல்லுங்க தலீவரே !
Deleteநடனமாடும் கொரில்லக்கள் படித்து விட்டேன்.
ReplyDeleteஐயோ!!!! சிரிப்பு தாங்க முடியல...
ஆசிரியர் சொன்னதுக்கு மேல இருக்கு.
ஓவர் பில்டப் ( என்) உடம்புக்கு ஆகாது என்பது அனுபவப்பாடம் சார் ! So நான் ரசித்தமட்டிற்கு ஒரு கோடிடுவதோடு - மிச்சத்தை உங்கள் பக்கம் விட்டுவிடுவதே சாலச் சிறந்தது என்று நினைத்தேன் !! Glad you liked it - as I did too !!!
Deleteகோயிங் ட்டூ டான்ஸ் வித் கொரில்லாஸ்..!
ReplyDeleteஆடுங்கோ....பேஷா ஆடுங்கோ !! ஆட்டத்தில் தான் இங்கே சிலபல சூட்சமங்களே உள்ளன !!
Deleteசூப்பர் காமெடி சார்.!
Deleteக்ளைமாக்ஸும் நிறைவா இருந்துச்சி.!
புத்தகங்களைக் கைப்பற்றிய பின்னான முதல் பார்வை..,
ReplyDeleteடெக்ஸ் :அட..!
ஜானி :அடடா..!
மேக்&ஜாக் : அடடே..!
ஜெரெமையா :ஆஹா..!
ஹார்ட் பவுண்ட் அட்டைக்கு 50 ரூபாய் அதிகமாக படுகிறது.
ReplyDeleteஎடிட்டர் நினைத்தால் இதை தவிர்க்க முடியும்.
ஹார்ட் கவர் பைண்டிங்கை தவிர்ப்பது தான் எனக்குத்தென்படும் சுலப வழி சார் !
Deleteமற்றபடிக்கு அதை சஸ்தாவாய் பைண்ட் செய்திட வேறு மார்க்கமிருப்பின் தெரிந்து கொள்ள ஆவலாயிருப்பேன் !
அப்புறம் சின்னதாயும் ஒரு கணக்குத் தான் போட்டுப் பாருங்களேன் :
Deleteஒற்றை ஆல்பத்துக்கு விலை ரூ.80 ; ஆக மூன்று பாகங்கள் கொண்ட தொகுப்பின் விலை ரூ.240 - தோரயமாய் ! தற்போது with ஹார்டகவர் விலை ரூ.250 தானெனும் போது வெறும் பத்து ரூபாய் தானே ஜாஸ்தி ?
என்னை பொறுத்தவரை வரை hard cover binding காக 50 ரூபாய் கூட கொடுக்க தயார்.
Deleteசிகரங்களின் சாம்ராட் க்கு HCB இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றம்.
// சிகரங்களின் சாம்ராட் க்கு HCB இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றம்.//
Delete+1
// சிகரங்களின் சாம்ராட் க்கு HCB இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றம்.//
Delete+1
தோர்கல் ஆல்பத்துக்கு ஹார்ட்கவர் இருப்பதாய் நான் அறிவித்திருந்தால் தானே - அது இல்லாது போகும் போது ஏமாற்றம் கொள்வதற்கு ? அட்டவணையில் தெளிவாய் எவை எந்த வடிவத்தில் வரவுள்ளன என்பதை தெரிவித்துள்ளோமே ?
Deleteஇல்லை என்று அட்டவணை யில் சொன்ன போதே ஏமாற்றம் தான்.
Delete///இல்லை என்று அட்டவணை யில் சொன்ன போதே ஏமாற்றம் தான்.///
Delete:)))))
நடனமாடும் கொரில்லாக்கள் ...
ReplyDeleteசிரிச்சி மாளலை ..ஹாஹாஹா..!
ரெண்டு தபா தொடர்ந்து படிச்சிட்டேன் அதாவது சிரிச்சிட்டேன்...!
ச்சா..ச்சா..ச்சா ..:)))))))))))))))))
From Steel claw Coimbatore:
ReplyDeleteசார் அட்டைகள் அனைத்தும் அருமை...ஜானியும் , ஜெரமயாவும் ஒன்றையொன்று விஞ்சுகின்றன இதுவரை வந்ததிலேயே பெஸ்ட் எதுவென போட்டியிடுவதில் . விக்கிரமாதித்தன்தான் வரனும் தீர்ப்பு சொல்ல....உங்க டிசைன் அருமை..வண்ணச்சேர்க்கை ஏனோ பெரிதாய் கவரலை....டெக்சும் மிரட்டல்...உள் பக்க வண்ணங்கள். சும்மா மிரட்டுது...ஜெரமயா ஆரஞ்சு பக்க துவக்கம் இருவண்ண இதழ்கள நினைவுருத்தினா. ...நம்ம ஜானி எதிர்காலத்துக்கு தாவுறார் வண்ணத்தால் லார்கோவ விஞ்சியபடி.
டியர் எடி,
ReplyDeleteபிப்ரவரி இதழ்கள் ஒவ்வொன்றும் ஒருவகை.... வார இறுதிக்கு முன்பாக புத்தகங்கங்களை அனுப்பி வைத்ததற்கு உங்கள் குழவிற்கு நன்றிகள் பல.
அதன் தயவில், தற்போதைய முதல் வரிசை வாசிப்பில்... "மேக் & ஜாக் காமெடி மேளா" !
நீங்கள் கூறியது போல, இது ஒரு வித்தியாசமான கதைகளன் தான்... 20வது நூற்றாண்டுகளின் துவக்கத்தில், அமெரிக்காவில் துவங்கிய பல வித்தியாசமான கலாச்சாரங்களில் ஒன்றான Cross-Dressing'ஐ சுற்றி தங்கள் காமடி தோரணத்தை கட்டி அசத்தியிருக்கிறார்கள், கர்த்தாக்கள்...!
Berck & Cauvin's "Sammy & Jack" series, is here to stay !
கத்தி மேல் நடப்பது போலானதொரு களமல்லவா சார் - படைப்பாளிகள் செம சிரத்தையோடு கையாண்டுள்ளனர் ! ஒவராய் நையாண்டிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்திடாது, crossdessers பக்கத்து யதார்த்தங்களையும் கதையில் விதைத்திருப்பதால் இன்னும் பளிச் என்று தெரிகின்றது !!
Deleteஆண்டின் கார்ட்டூன் கோட்டாவை இப்படியொரு crackerjack நகைச்சுவையோடு துவங்கிட நான் ஆசைப்பட்டது நிஜமாகி வருவதில் மகிழ்ச்சி !!
மேக்&ஜாக்.
ReplyDeleteயப்பா...,
என்னே காமெடி.! என்னே காமெடி..,ரொம்ப நாள் கழிச்சு சிரிச்சு ,சிரிச்சு மனசு லேசானது.
மேக்&ஜாக் ஜோடி ,
அல் கபோன் கோஷ்டி ,பற்றாக்குறைக்கு
எலியட் நெஸ் வகையறாக்கள் என திரும்பிய பக்கமெல்லாம் மரண மாஸ் அலப்பறைகள் .அதிலும் அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அடடா ரகம்.
குடும்ப குத்தாட்டம்,
க்ராஸ்ட்ரெஸ்ஸர்ஸ்
போன்ற அரியவகைச்சொற்களும் இனி இயல்பாகவே புழங்கும்.மேக் ஜாக், கபோன் நம் பிரியத்திற்குரியவர்கள் லிஸ்டில் இணைந்துவிட்டனர்.
சிறப்பான ,தரமான நகைச்சுவைக்கு மேக்& ஜாக் படிங்கோஓஓஓ...!
போன மாசம் கொஞ்சம் வெறுமையாகவும் ,இந்த மாசம் கலகலப்போட சதவீதம் கூடியதற்கும் கார்டூனே முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.கார்டூனுக்கு அனைவரும் கூடுதலாக சப்போர்ட் செய்ய வேண்டும்.
Delete//ரொம்ப நாள் கழிச்சு சிரிச்சு ,சிரிச்சு மனசு லேசானது.//
Deleteஇந்த வரிகளே வெகுமதி சார் - எங்களின் உழைப்புக்கு !!
மனசை இலகுவாக்கிடல் கார்ட்டூன்களுக்கு மாத்திரமே சாத்தியப்படும் அல்லவா ?!!
///போன மாசம் கொஞ்சம் வெறுமையாகவும் ,இந்த மாசம் கலகலப்போட சதவீதம் கூடியதற்கும் கார்டூனே முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.கார்டூனுக்கு அனைவரும் கூடுதலாக சப்போர்ட் செய்ய வேண்டும்.///
Delete+100000000000000
///போன மாசம் கொஞ்சம் வெறுமையாகவும் ,இந்த மாசம் கலகலப்போட சதவீதம் கூடியதற்கும் கார்டூனே முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.கார்டூனுக்கு அனைவரும் கூடுதலாக சப்போர்ட் செய்ய வேண்டும்.///
Delete+ 999 999 999
அன்பின் ஆசிரியருக்கு,
ReplyDeleteவணக்கம். ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நம் தளத்தில் பதிவிடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு வாரமும் கல்லூரி பணிக்காக கான்பூரில் பத்து நாட்களையும் ஓட்டி விட்டு இந்த வாரம் தான் ஊருக்கு வந்தேன். என்னை வரவேற்க நம் புத்தகங்கள் காத்திருந்தன. புத்தகங்களை அனுப்புவதில் நேரந்தவறாமை என்கிற நம்முடைய இந்தப் புதிய (நான்கு வருடமாகத் தொடர்ந்திடும்) அவதாரம் என்றென்றைக்குமாய் நிலைத்திருக்கட்டும்.
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சில தருணங்களை நம் காமிக்ஸ் ஸ்டாலில் செலவிட முடிந்தது. சொல்வதற்கும் நிறைய விசயங்கள் உண்டு. கண்காட்சியை நான்கு நாட்கள் நீட்டிக்கலாம் என்கிற பபாசியின் முடிவு இந்த முறை உண்மையில் பாதகத்தில்தான் முடிந்திருக்கிறது. பொங்கல் விடுமுறைக்கு மக்கள் அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்பி விட்ட சூழலில் கண்காட்சியில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இருக்கவில்லை. கடைசி இரண்டு நாட்கள் மட்டும்தான் சொல்லிக் கொள்ளும்படியான கூட்டம். நம்முடைய ஸ்டாலில் வியாபாரம் ஓரளவு நன்றாகவே நடந்திருக்கும் என நம்புகிறேன். ஒரு நண்பர் காமிக்ஸ் வாங்குவதற்காகவே ஓசூரில் இருந்து வந்திருந்தார், மனைவி மற்றும் பையனோடு. ஒரு லோடு புத்தகங்களை அவர்கள் வாங்கிக் கொண்டு போனார்கள். பையனிடம் பேச்சுக் கொடுத்தேன், யாரை உனக்கு மிகப் பிடிக்கும் என.. சொல்லாமலே பதில் தெரிந்திருக்கும் உங்களுக்கு - டெக்ஸ். அப்பாவிடம் இருந்து காமிக்ஸ் படிக்கும் பழக்கம் மகனுக்கும் வந்திருக்கிறது என்றார் அவனுடைய அம்மா. நிறைவாயிருந்தது. இன்னொரு புறம் - ஒரு அம்மா மகனைத் தமிழ் படிக்க பழக்க வேண்டுமென்பதற்காக நம் காமிக்ஸ் ஸ்டாலுக்கு கூட்டி வந்தார். எனக்குத் தமிழ் வேண்டாம் என ஒரேயடியாக மறுத்தவன் ஒரு கட்டத்தில் அழத் தொடங்கி விட்டான். பிறகு புத்தகங்கள் வாங்காமல் அவனை சமாதானம் செய்து அழைத்துப் போனார் அவனுடைய அம்மா. இதுபோன்ற வெவ்வேறு சூழல்களுக்கு மத்தியில்தான் நம் வண்டி ஓடுகிறது என்பதை நினைக்கும்போது.. உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால்.. phew.
இம்மாத இதழ்களில் டெக்ஸை மட்டும் வாசித்து இருக்கிறேன். இன்ப அதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். வைக்கிங் தீவு மர்மத்தில் உண்மையில் எனக்குப் பெரிதாக ஆர்வம் இருந்திருக்கவில்லை. பவளச்சிலை மர்மம், சைத்தான் சாம்ராஜ்யம் போன்ற புத்தகங்களுக்குப் பிறகுதான் அது மறுபதிப்புக்குத் தேர்வானதால் ஒரு எளிய அதிரடிக் கதையாக இருக்கும் என எண்ணியிருந்தேன். ஆனால் அற்புதமான அரசியலையும் இந்தக் கதை பேசுகிறது. நிகழ்காலத்தை விட்டுப் பல நூற்றாண்டுகள் பின்தங்கியிருந்தாலும் தங்கள் அளவில் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் வைக்கிங்குகள் - அவர்களுக்குள் நவீனமும் நாகரீகமும் உண்டாக்கக்கூடிய சிக்கல்களை இறுதி கட்டத்தில் பேசும் கார்சனும் டெக்ஸும் என மிகப் பிரமாதமான பின்னணியில் எழுதப்பட்டிருக்கும் கதை. வெறுமனே காரணமேயில்லாமல் சுட்டுக் கொண்டிருப்பதை விட எதிரணியில் இருப்பவர்களையும் புரிந்து கொள்ள முயற்சி செய்கிற டெக்ஸ் என்பதே ஒரு அற்புதமான கோணம்தான். மொழிபெயர்ப்பிலும் எடிட்டரின் பணி சற்று தனித்துத் தெரிகிறது. இரண்டு இடங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஒவ்வொரு முறையும் நானிருப்பதால் தப்பித்துக் கொள்கிறாய் என கார்சன் டெக்ஸிடம் எகடாசி பேசும் இடம். அப்புறம் அந்த “வெற்றிகரமான தோல்வி”. மிகவும் ரசித்து வாசிக்கும்படியான புத்தகம். இதுபோன்ற வித்தியாசமான அதேவேளையில் ஜனரஞ்சகமான கதைக்களமும் அமையும்போது டெக்ஸ் அசத்தி விடுகிறார்.
மற்ற புத்தகங்களையும் வாசித்து விட்டு உரையாடலாம். நன்றி.
பிரியமுடன்,
கா.பா.
வெற்றிகரமான தோல்வி " பற்றி அறியாதோர் தமிழகத்தில் ஏது சார் ? So ஜாலியாய் எழுதி வைத்தேன் !
Delete///ஒரு அம்மா மகனைத் தமிழ் படிக்க பழக்க வேண்டுமென்பதற்காக நம் காமிக்ஸ் ஸ்டாலுக்கு கூட்டி வந்தார். எனக்குத் தமிழ் வேண்டாம் என ஒரேயடியாக மறுத்தவன் ஒரு கட்டத்தில் அழத் தொடங்கி விட்டான்.///
Deleteஅன்பின் கா.பா!
அந்தப் பயலை சும்மாவா விட்டீங்க? ஆள் எப்படியிருப்பான்; எந்த இஸ்கூலுன்னு சொல்லுங்க! ஆபீஸுக்கு லீவு போட்டுட்டுப் போயாவது அவனை நறுநறுன்னு கிள்ளிவைக்காம என் மனசு ஆறாது!
இப்படிக்கி,
வம்பின் ஈவி
சூப்பர் நண்பா.
Deleteஈவி..
Deleteகாமிக்ஸ் மக்கள் ஒரு மாதிரின்னா இலக்கிய வாசகர்கள் வேற மாதிரி. புத்தகக் கண்காட்சிகளில் கிடைக்கும் அனுபவங்கள் எல்லாமே வேற லெவல்தான்.
:-)
Dear Editor,
ReplyDeleteHard cover binding is essential - but for the right books - definitely for Thorgal. It could have been avoided for Jeremiah.
நான் முதலில் படித்தது ஜெரேமியா - தாங்க முடியவில்லை. பளிச் என்று கண்ணைப் பறிக்கும் நிறங்கள். தெரியாத இடங்களில் பயணங்கள். எனக்கென்னவோ சுவாரஸ்யமாக இல்லை. முகங்களும் ஒரே போன்றிருப்பதால் ஒரு வெறுமை.
கண்டிப்பாக ஜெரேமியாவுக்கு பதில் ரெண்டு கார்ட்டூன்கள் இறக்கலாம். ஜெரேமியா விலையும் அதிகம் - விலைக்கேற்ற விறுவிறுப்பும் இல்லை. இந்த ஆல்பம் hardcover அல்லாமல் வந்திருக்க வேண்டியது. அடுத்தாண்டு ஜெரேமியா வேண்டாம் சார் - அப்படி வந்தால் optional புக்ககவே வைத்து விடுங்கள் ப்ளீஸ்.
Next read : Sammy and Jack
மேக் & ஜாக்கில் வாசிப்பைத் துவக்கிட்டிருந்தால் பிப்ரவரியே கொஞ்சம் ஜாலியாய்த் தென்பட்டிருக்கக்கூடும் சார் !!
Deleteஜெரெமியா ஹார்ட கவர் என்பது பிரெஞ்சு கலாச்சார மையத்தின் மான்யத்திற்கு மெருகூட்டிக் காட்டிடும் முயற்சி ! பாரிசில் அவரகளது அடுத்த மீட்டிங்கின் போது இந்த இதழும் பரிசீலிக்கப்படும் எனும் போது கொஞ்சமேனும் நமது தரங்கள் விடுதலின்றித் தெரிந்திடல் முக்கியமல்லவா ?
ஜெரெமியா தொடரினைப் பொறுத்தவரை - a simple yes or no தான் இனிமேல் ! 6 ஆல்பங்களை முயற்சித்துள்ள நிலையில் இனியும் மதில் மேல் பூனையாய் தொடர்ந்திட முகாந்திரங்கள் இராது !
So உங்கள் வோட்டுகளே இனி deciding factors !
+1
Delete///கண்டிப்பாக ஜெரேமியாவுக்கு பதில் ரெண்டு கார்ட்டூன்கள் இறக்கலாம் ///
Deleteமூன்று பாகங்களுக்கு மூன்றுன்னு இறக்கினாலும் சந்தோசமே ..!:+)
-1
DeleteSorry.
புத்தகம் வந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் இது போன்ற கமெண்ட் விற்பனையை பாதிக்கும் என்பதை நினைவில் வைத்து பதிவிடுங்களேன்.
அதே நேரம் இந்த கதையை படிக்கலாம் என இருப்பவர்களை இது போன்ற கமெண்ட் கதையை படிக்கும் ஆர்வத்தை குறைக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும் நண்பர்களே.
Deleteநீங்கள் கூறியிருந்தது போல நடனமாடும் கொரிலாக்கள் கதையில் துவங்கினேன் சார்.. ஆரம்பம் நன்றாகவே இருந்தது ஆனால் அதே டெம்ளேட் 3 முறை அமைந்தது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது 3 முறை முடிந்ததும் கதையே முடிந்துவிட்டது.
ReplyDeleteஅடுத்து ஜானி 2.0 வழக்கமான இடியாப்ப சிக்கல் போல இருந்தாலும் கதையை தொடர்வதில் சிரமம் இல்லை, நேர்கோட்டில் பயணம் செய்தது. கொலை அதனை துப்புத்துலக்குவது என்ற பயணம் மிக நன்றாக இருந்தது எனது ஓட்டு ஜானி 2.0 உண்டு மீண்டும் சந்திக்க ஆவலுடன்.
அடுத்து ஜெரோமிய தொட சற்றே தயக்கமாக உள்ளது முயற்சி செய்கிறேன்
அட...தைரியமாய் நுழையுங்கள் சார் ! Jeremiah awaits !!
DeleteSammy and Jack is awesome. Hilarious fare after quite a few serious comics. More comments later.
ReplyDeleteஜாக் அண்ட் மாக் அருமையான கரு. சுவையாக இருந்தது.
ReplyDeleteஅசர வைத்தவர் ஜானி தான். இத்தனை நாளும் அவரை கடைசியாக தான் படிப்பேன். கொஞ்சம் இழுக்கும். பல முறை தூங்கி விடுவேன், ஆனால் கடைசியில் பரபரக்கும், முழித்து மறுபடி முதலில் இருந்து பூரா படிப்பேன். இந்த முறை அட்டைப்படமே ஒஎஉ மாதிரியாக இருந்தது. காட்டமாக உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் "7 முதல் 77 வரை" எனப் போச்சு விட்டு இது என்ன கன்றாவி என. கண்றாவியை நாம் உள்ளே பார்த்துக்கொள்ளலாமே(ஹிஹி) , இது என்ன புதுசா அட்டையில?? கலாசார சீர்கேடு ஆகிடாதோ? சரி படித்துப் பார்ப்போம். எனிவே ஜானி நம்மளோட முப்பது வருஷமா இருக்கான் என ஆரம்பித்தேன். வாவ். சானியா இது. நோ இடியாப்பம், நேர் கொட்டு கதை, ஆனாலும் முடிச்சு உண்டு. செம. அட்டைக்கும் கதைக்கும் தொடர்பு இருந்ததால் எடியை மன்னித்தேன். அட்டைக்கும் கதைக்கும் சம்பந்தம் இது போல வெகு சில இதழ்களுக்கே பொருந்தும். என்னதான் மின்னும் மரணம் அட்டையைப் பற்றி எடிட்டர் மிகப் பயங்கரமாக நாக்கு ஓடிய சிலாகித்திருந்தாலும், இன்னமும் அது டைகரா அல்லது வோல்வரைனா என இன்னமும் சந்தேகம் உண்டு. கதையை நேற்றுடன் எட்டாவது தடவை படித்தேன் என்பது வேறு விஷயம். எனிவே, வெல்கம் போரடிக்காத ஃபன்னி ஜானி 2.0 .
ஜெரமைய, நான் மிகவும் ஆழமாக நேசித்த தொடர். இப்படி சொதப்பி விட்டது கவலையாக இருக்கிறது. அடுத்த மூன்று பாகம் ஏமாற்றாது என நம்புவோம். தயவு செய்து நிறுத்த வேண்டாம். அடுத்த முப்பாகம் பார்ப்போம்.
எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)
ReplyDeleteWalpapers
ReplyDeletefantastic resource!
ReplyDeleteThanks. Wow, that is brilliant and inspiring and informative stuff, all in one place.
Comics