நண்பர்களே,
வணக்கம். ஜனவரியின் இதழ்கள் நேற்றைக்கே இங்கிருந்து சந்தா நண்பர்களைத் தேடித் புறப்பட்டு விட்டன ! And இன்று - ஆன்லைன் விற்பனைக்கும் ரெடியாகி விட்டன ! இதோ - நமது வலைத்தளத்தில் உள்ள லிஸ்டிங்கின் லிங்க் : http://www.lion-muthucomics.com/home/369-january-pack-2019.html
ஆன்லைன் விற்பனைகளை ஏற்கனவேவுள்ள நமது ஸ்டோரான lioncomics.in-லிருந்து சிறுகச் சிறுக, நமது வலைப்பக்கத்திலேயே இதற்கென உள்ள பகுதிக்கு மாற்றம் செய்திட விழைகிறோம் ! So ஆன்லைனில் வாங்கி வரும் நண்பர்கள் தயை கூர்ந்து சிரமம் பாராது, இங்கே பதிவு செய்து கொள்ள நேரமெடுத்துக் கொண்டு, வரும் நாட்களில் இங்கேயே வாங்கிடக் கோருகிறோம் !
Happy shopping & Happier reading !!
இனி இதழ்களின் first look பற்றி எழுதிடவும் ; கதைகளைப் படித்தான பின்னே, அலசல்களை அரங்கேற்றிடவும் நீங்கள் நேரமெடுத்துக் கொள்ள வேண்டியது மட்டும் தான் பாக்கி ! Bye all & See you around !!
P.S : நாயகர் யார் ? தேர்தலுக்கு இந்த பூத்திலும் ஓட்டுக்கள் போடலாம் !!
ஹையா..!
ReplyDeleteபார்சலை பிரிக்க போறேன்.!!
ReplyDeleteமூன்று...
ReplyDeleteமறு பதிவு
ReplyDelete1. சந்தேகமே இல்லாமல் டெக்ஸ் தான்
காரணம் நான் படிக்க ஆரம்பித்த 90 களின் முடிவில் வந்த ஹீரோக்களில் அவர் தான் டாப் மற்றும் அந்த அதிரடி காட்சிகள் அப்படியே ஈர்த்துவிட்டன.. திரைப்படங்கள் பார்த்தால் கூட நடனம் அடுத்து சண்டைக்காட்சிகள் என்று வருகிறதா என்று கணபார்ம் பண்ணிக்கொண்டு பார்த்தகாலங்கள்.
2. டைகர்
முதல் அறிமுகமே அமர்க்களமாக அமைந்தது தான் காரணம். அதுவும் முதல் பாகத்தில் நல்லவன் போல இருந்தவன் தான் கெட்டவன் என்ற திருப்பம் மிகவும் புதியதாக இருந்தது எனக்கு மற்றும் அடுத்து உடனே மின்னும் மரணம் என்ற போது அவரே எனது இரண்டாவது.
3. லக்கி லூக்
ஒல்லி மனிதன் செய்யும் சாகசங்கள் அனைத்துமே அருமை. ஆனால் அவர் 3 ஆம் இடம் பிடிக்க ஜாலி தான் காரணம் ஜாலி இல்லாமல் வெறும் லக்கி வெற்றி பெற முடியாது.
4. ஸ்பைடர்
டெக்ஸ் டைகர் என்று படித்த காலத்தில் தான் பழைய புத்தக கடைகளில் இருந்து மற்ற ஹீரோக்கள் படிக்க ஆரம்பித்தேன் அதில் தனித்து தெரிந்தது ஸ்பைடர் தான் அவரது வெற்றிக்கு மெயின் காரணம் வித்தியாசமான வில்லன்கள் தான்.
5. பிரின்ஸ்
கடல் சாகசங்கள் முதல் முறை படித்த பொழுது புது அனுபவமாக இருந்தது அதுவும் அந்த சதுப்புநிலத்தில் கொசு கடியுடன் வரும்போது ஏதோ நானே அவ்வாறு வருவது போல நினைத்தது உண்டு
6. Xiii
முதல் சாகசம் படித்த பொழுது ஒரு ஆக்சன் திரைப்படம் போல இருந்தது ஆனால் போக போக எங்கெல்லாம் செல்லும் பொழுது ஒரு சலிப்பு ஏற்பட்டது முதலில் ஆனால் மீண்டும் முழுப்புத்தகமாக படித்தபொழுது எழுந்த ஆச்சர்யம் எனக்கு இவரை பிடித்து போனது.
7. மாயாவி
நான் லயனில் ஆரம்பித்து பின்னர் முத்து பக்கம் சென்றவன். லயனில் இருந்த ஒரு பரபர பீலிங் அப்பொழுது முத்துவில் கிடையாது. ஆகையால் மாயாவி பிடிக்கும் ஆனால் ஒரு கிரேஸ் கிடையாது.
8. லார்கோ
கண்டிப்பாக சமீப hitec ஹீரோ தான். அவருடைய பெரிய பிளஸ் அந்த பரபர கதை நகர்தல் தான்.
9. Thorgal
மிகவும் குழப்பமான கதை நகர்தல் ஒவ்வொரு கதைக்கும் மீண்டும் முதலில் இருந்து அனைத்து கதைகளையும் படிக்கவேண்டும்.
10. மார்ட்டின்
எனக்கு நமது நாட்டின் வரலாறு தவிர்த்து மற்ற நாடுகளில் இன்டெரெஸ்ட் கிடையாது மட்டும் சண்டை காட்சிகள் கம்மி ☺️
ஓரே ஓட்டு மட்டுமே என்றாலும் 10 பேரை பற்றியும் சொல்லிய விதம் அட்டகாசம் KVV...
Delete🙏🏻
Delete@Krishna VV
Deleteசெம!
Martin Mystery came as a cartoon in Tamil and it was very funny and good. In that Martin and Diana are brother and sisters.
Deletehttps://en.wikipedia.org/wiki/Martin_Mystery
நன்றிகள் ஈவி.
Deleteஎனது ஒட்டு டெக்ஸ் தான்
ReplyDelete10kulla
ReplyDelete8th ....
ReplyDeleteஓரே ஓட்டு ... அது எங்கள் தங்கத் தலைவனுக்கே..
ReplyDeleteசரியா சொன்னீங்க நாகுஜீ , லட்சம் ஹீரோக்கள் வரலாம் போகலாம்.ஆகச் சிறந்த வனாந்தர மேற்கை நம் கண் முன்னே யதார்த்தமாக காண்பித்த "தங்க கல்லறை" யின் நாயகரே நம்மனைவருக்கும் ஆதர்ஷ நாயகர்!
Deleteநூற்றாண்டின் நாயகன் ..
Deleteலக்கி லூக்
உள்ளேன் அய்யா _/|\_
ReplyDelete.
முதல் புரட்டலில் புத்தகங்கள் அனைத்தும் அழகாக அருமையாக வந்திருக்கிறது சார்
ReplyDeleteஇனிதான் படிக்க வேண்டும்
நன்றி சார்
.
// முதல் புரட்டலில் புத்தகங்கள் அனைத்தும் அழகாக அருமையாக வந்திருக்கிறது சார் //
Deleteஅப்ப இரண்டாவது புரட்டலில்.....
முதல் பார்வையில் புத்தகங்கள் அனைத்தும் அழகாக மற்றும் அருமையாக வந்திருக்கிறது சார்..
ReplyDeleteஇனிதான் படிக்க நேரம் தேட வேண்டும்...
நன்றி சார் _/\_
// இனிதான் படிக்க நேரம் தேட வேண்டும்..//
Deleteஎல்லோரும் படிக்க நல்ல இடத்தை தான் தேடுவாங்க,நீங்க கொஞ்சம் வித்தியாசமா நேரத்தை தேடறிங்களா நாகு ஜி....
துரதிர்ஷ்ட நிஜமன்றோ - இன்றைய வாழ்க்கை ஓட்டத்தில் ?!
DeleteWe are busy not exactly because of work but it was because of TV some 15 yrs ago , now cellphone.
Deleteஇனி மேல் தான் ஆரம்பம்...!
ReplyDeleteBARACUDA AMAZING WRAPPER!
ReplyDeleteFrom Steel claw from Coimbatore
ReplyDeleteபுத்தகக் கொத்து கோவைக்கு வரவில்லை....நாளைக்காக காத்திருக்கிறேன் . சார் பதிவ பாத்துட்டேதான் இருக்கிறேன் . என் கைபேசி பதிவிட ௐத்துழைக்க மாட்டேங்கிறது . சரி செய்த பின் விரைவில் வருகிறேன் . பல விடயங்களில் ௐருவித அயற்ச்சியும் கூட . இரு வாரங்களுக்கு முன்னர் என்னை மீட்டெடுத்தது நமது இதழ்களே..
விரைவில் தாங்களும் ,தங்கள் அலைபேசியும் மின்னலாக மீண்டு எழுந்து வாருங்கள் கோவை கவியே...
Delete////என் கைபேசி பதிவிட ௐத்துழைக்க மாட்டேங்கிறது ///
Deleteபின்னே எத்தனைநாளுக்குத்தான் அதுவும் சகிச்சுக்கிட்டிருக்கும்?
////இரு வாரங்களுக்கு முன்னர் என்னை மீட்டெடுத்தது நமது இதழ்களே..///
Deleteநம்ம புத்தகங்களைக் கொடுத்துதான் சேட்டுகிட்டேர்ந்து உங்களை மீட்டெடுத்தாங்களா?!! :D
Letz hope he will come soon and vote for SteelClaw bro... ;) One man army is hanging with just 2 votes... :(
DeleteMy choice of heroes Captain Tiger, Largo winch, Tex willer,Martin Mystere, Lucky Luke, Chick Bill,XIII,Steel Claw, Spider
ReplyDeleteNot counted - only one vote :-)
DeleteYeah. So it goes to lucky Luke:-)
Delete2019 books are v.attravtive.
ReplyDelete// தேர்தலுக்கு இந்த பூத்திலும் ஓட்டுக்கள் போடலாம் !! //
ReplyDeleteஎத்தினி தபா கேட்டாலும் மர்ம மனிதன் மார்ட்டினுக்கே என் ஓட்டு,அடிச்சி கேட்டாலும்,கெஞ்சிக் கேட்டாலும் மார்ட்டினுக்கே என் ஓட்டு.....
எத்துனை சந்துக்கு கூட்டிட்டு போய் அடிச்சாலும்,என்னை கெட்டவன்னு சொன்னாலும் என் ஓட்டு
Deleteடெக்ஸ் டெக்ஸ் டெக்ஸ்க்கே...
புத்தகங்கள் கிட்டி!! (ஆத்தாவுக்கு டேங்க் யூ)
ReplyDelete* என் ராசிக்கு இம்முறையும் 'Milky bar' வந்திருக்கிறது! பால்மணம் மாறாத பாலகனான எனக்கு இதை அனுப்பியதில் ஆச்சரியமில்லைதான்.. ஹிஹி! (நன்றி எடிட்டர் சார்! சுவீட் எடுக்கறேன் - கடிக்கறேன் - புத்தகங்களைப் படிக்கிறேன் - புத்தாண்டைக் கொண்டாடுறேன்!)
* பராகுடா - முன்/பின் அட்டைப் படங்கள் மிரட்டலாய் இருக்கின்றன! ( ஹார்டு பைன்டாக இருந்திருந்தால் இன்னும் பட்டாசாக இருந்திருக்கும்). சித்திரங்களும், வண்ணக்கலவைகளும் அசத்தலாய் இருக்கின்றன! படிக்கும்போது ஒரு புதுமாதிரி அனுபவம் கிடைக்கப்போவது உறுதி!
* தோர்கலின் 'சிகரங்களின் சாம்ராட்' அட்டைப்படத்தில் அந்தப் பறக்கும் குதிரையே "மாய உலகில் ஒரு பிரம்மிக்கவைக்கும் பயணத்திற்கு உன்னையும் அழைத்துச் செல்கிறேன் வா" என்று சொல்லாமல் சொல்வதைப்போல இருக்கிறது! வான் ஹாம்மின் வழிகாட்டலோடு மீண்டும் ஒரு பரவசம் தரும் வாசிப்பு அனுபவத்திற்கு ஐ யாம் ரெடி!
* 'தல'யின் 'சாத்தானின் சீடர்கள்' - அட்டைப்படம் கொஞ்சம் சுமார் ரகம்தான்! எனினும் கதை பட்டாசாய் இருக்கப்போவது உறுதி என்று பட்சி ஒன்று உரக்கச் சொல்கிறது! பார்ப்போம்!!
* 'புக் மார்க்'கில் தோல்கலின் படம் கம்பீரமாய் புத்தாண்டு வாழ்த்துச் சொல்கிறது! (அந்த கம்பீரத்தில் மயங்கி, பின்பக்கத்தைத் திருப்பாமல் விட்டுவிடாதீர்கள் நண்பர்களே.. எடிட்டரின் ஒரு மினி 'பொழிப்புரை' காத்திருக்கிறது! )
ஹாப்பி ரீடிங் மக்களே! :)
எனக்கு டெக்ஸ் அட்டைப்படம் ரொம்ப பிடிச்சுருக்கு செயலரே..
Deleteகதைகளின் காட்சியோட்ட அட்டைப்படமே இது எனும் போது இன்னும் சிறப்பாக தோன்றுகிறது..:-)
அந்தத் தாவாங்கட்டையை ஒரு தபா பார்த்துட்டுச் சொல்லுங்க தலீவரே., டெக்ஸின் பெரியப்பா மாதிரி இல்லே?!! :D
Deleteதலீவருக்கும், செயலாளருக்குமிடையே கருத்து வேறுபாடாம் ; ஒரு தர்ம யுத்தம் சீக்கிரமே காத்துள்ளதோ ? Breaking news ஏதாச்சும் உண்டோ ?
Delete// டெக்ஸின் பெரியப்பா மாதிரி இல்லே?!! //
Deleteஹாஹாஹா...
பொக்கிஷத்தை கைப்பற்றியாச்சி,
ReplyDeleteமூன்று இதழ்களுமே அருமையான தரத்துடன் அமைந்துள்ளது,அட்டைப் படத்தைப் பொறுத்தவரை பராகுடாதான் டாப்,வேற லெவலில் அமைந்துள்ளது,அந்த கலரிங்கும்,அட்டை வடிவமைப்புமே இதழைப் படிக்க தூண்டுகிறது.
தோர்கலும் சும்மா சொல்லக் கூடாது அட்டைப் படமும் கலக்கல் கதைக் களமும் ஆர்வத்தை தூண்டுகிறது.
டெக்ஸ் சொல்லவெ வேண்டாம்,கலரோ,கருப்பு & வெள்ளையோ எப்படியும் நம்மை கட்டி உள்ளே இழுத்து விடுவார்.
பராகுடாவும்,தோர்கலும் ஹார்ட் பைண்ட் அட்டையில் வந்திருந்தால் முழு மகிழ்ச்சி மனதிற்கு கிட்டியிருக்கும்,இதைப் போன்ற பொக்கிஷ இதழ்கள் ஹார்ட் பைண்டிங் அட்டையில் அமைந்தால் அதைவிட ஆனந்தம் வேறென்ன..என்ன செய்ய,சரியான சூழல் இதற்கு அமையவில்லையே.....அடுத்த வருடமாவது இந்த நிலை மாற வேண்டும்...
மூன்று இதழ்களுமே முதல் தரத்தில் இருப்பதால் எதை படிப்பது என்று சட்டென்று முடிவெடுக்க முடியவில்லை......
நட்சத்திர நாயகன் தோர்கலை பற்றிய சிறுகுறிப்பு சார்ந்த முன்னோட்டம் எதிர்பார்ப்பை கிளப்புகிறது....
Deleteக்கும்...அதான் எனக்கு பயத்தை கிளப்புகிறது..:-))
Deleteபைண்டிங்கில் தெறித்திடும் செலவுகள் ஒருபக்கமெனில், கூடிப் போகும் எடையாயின் பொருட்டு, கூரியரில், ஏர்-மெயிலிலும் பழுத்து விடுகிறது இன்னொரு பெரும் தொகை !! வரும் காலங்களில், முன்பதிவு இதழ்களுக்கு மாத்திரமே ஹார்டகவர் சுகப்படும் போலும் !
DeleteBtw - ஜெரெமியா ஹார்டகவர் !
///Btw - ஜெரெமியா ஹார்டகவர் !///
Deleteஅட்டையே இல்லாம நீங்க அனுப்பி வச்சாலும் எனக்கு துளிகூட கோவம் வராது எடிட்டர் சார்! :P
Even if Jeremiah is not sent I won't be angry at all 😊😊😊😊 He he !!
Delete@Raghavan
Delete:D :D :D
ஈ வி & Ragavan ..
Delete:-)))))))))
ஜெரமயா பாவம்யா...
Deleteஜெரமயா வருவதற்கு முன்பே இது போன்று நெகட்டிவாக (காமெடிக்கு என்றாலும்) எழுதுவதை தவிர்க்கலாமே நண்பர்களே🙏🙏🙏🙏
Delete//Btw - ஜெரெமியா ஹார்டகவர் !//
Deleteசூப்பர். ஆவலுடன் ஜெரெமியா படிக்க காத்திருக்கிறேன்.
இம்முறை JM மெய்யாலுமே கலக்கப் போகிறார் - பாருங்கள் !!
Delete///சூப்பர். ஆவலுடன் ஜெரெமியா படிக்க காத்திருக்கிறேன்.///
Deleteஜெரமயா வருவதற்கு முன்பே இது போன்று பாஸிட்டிவாக (காமெடிக்கு என்றாலும்) எழுதுவதை தவிர்க்கலாமே நண்பர்களே🙏🙏🙏🙏
:)
யாருப்பா அது ...ஊடால வந்து
Deleteஜெரெமயா வருவதையே தவிர்க்கலாமே நண்பர்களேன்னு கும்பிடுறது ....
இதெல்லாம் நல்லால்லை ஆம்மா..! :-)
// ஜெரமயா வருவதற்கு முன்பே இது போன்று நெகட்டிவாக (காமெடிக்கு என்றாலும்) எழுதுவதை தவிர்க்கலாமே நண்பர்களே🙏🙏🙏🙏 //
Deleteசும்மா ஒரு கலாய்த்தல்தானே PFB,நம்ம காமிக்ஸ் காதல்தான் எல்லோரும் அறிந்ததாச்சே....
// Btw - ஜெரெமியா ஹார்டகவர் !//
Deleteஅடடே ஆச்சரியக் குறி.!!!!
பெட்டியை பிரித்து ,கவரை மெதுவாக பிரித்து ஒவ்வொரு இதழாக எடுத்து முதலில் அட்டைப்படங்களை பார்த்து எது முதலிடம் என யோசித்து கொண்டே இருந்தாலும் நன்றாகவே தெரிகிறது மூன்று இதழ்களின் அட்டைப்படமும் ஒன்றுக்கொன்று முந்தாமலும் ,பிந்தாமலும் ஒரே சேர ஓட்டத்தில் ஓடி கொண்டு இருக்கிறது என்பதை.
ReplyDeleteஉட் பக்க அச்சு தரங்களும் ,சித்திர தரங்களும் கண்ணை கவருகிறது.இதழ்களின் தரத்தில் புத்தாண்டின் முதல் மாத ஆரம்ப இதழ்கள் 100 % முழு மதிப்பெண்களை பெற்றுள்ளது என்பது மறுக்க முடியா உண்மை.
என்ன ஒன்று தோர்கலின் வாழ்த்து அட்டையின் பின்புறத்தில் ஆசிரியரின் எச்சரிக்கையை :-) படிக்கும் பொழுது தான் "ஆஹா" நாம் தேர்வில் தேர்வாகிவிடுமோ என்று பயந்து வருகிறது..
எனவே கொஞ்சம் பொறுமையாகவே தேர்வை எழுதலாம் என இருக்கிறேன்.
PS :
பனி காலத்தில் வாரிசுகள் ஸ்வீட் சாப்பிட்டு சலதோசம் பிடிக்க கூடாது என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே எனக்கும் மிகவும் பிடித்த " டைரி மில்க்" சாக்லேட்டை நானே "அமுக்கி விட்டேன் " என்பதையும் உளமாற கூறி கொள்கிறேன்.
///பனி காலத்தில் வாரிசுகள் ஸ்வீட் சாப்பிட்டு சலதோசம் பிடிக்க கூடாது என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே எனக்கும் மிகவும் பிடித்த " டைரி மில்க்" சாக்லேட்டை நானே "அமுக்கி விட்டேன் " என்பதையும் உளமாற கூறி கொள்கிறேன்.///
Deleteநீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சுதான் எதிரணித் தலைவர் அதில் பேதி மாத்திரையை கலந்து விட்டிருக்காராம் தலீவரே!
ஆரம்பிச்சுட்டீங்களா?
டான்னு எட்டு மணிக்கே தூங்குறதெல்லாம் இன்னிக்கு நடக்காதுங்க தலீவரே... நீங்கதான் 'நடந்துக்கிட்டேஏஏஏ' இருக்கவேண்டியதிருக்கே? :D
தலைவரே எத்தனாவது தபா போய்கிட்டு இருக்கு?
Deleteஹி ஹி.
சுவத்திலே போட்டிருக்கக்கூடிய கோடுகளை காலங்கார்த்தாலே எண்ணிப் பாக்கணுமோ ?
Deleteஹா ஹா ஹா!! எடிட்டர் சார்... காலையில் நான் போய் எல்லாக் கோடுகளையும் அழிச்சுட்டு, தலீவரை மறுபடியும் புதுசா போடச் சொல்லாம்னு இருக்கேன்! அப்படியே "தலீவர்ட்ட என் அன்புப் பரிசா இதைக் கொடுத்திடுங்க"ன்னு சொல்லி நீங்க கொடுத்தனுப்பிய 'டெய்ரி மில்க்' சாக்லேட்டையும் அவர்ட்டயே கொடுத்திட்டு வந்துடறேன்!
DeleteL I C யில் பணிபுரியும் குடும்ப நண்பர் ஒருவர் இன்று இல்லத்திற்கு வருகை புரிந்திருந்தார்,காலண்டர் சகிதமாக வந்த அவரிடம் புத்தகங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது பேச்சு காமிக்ஸைப் பற்றி வர,இன்னமுமா அவைகள் எல்லாம் வருகின்றன,அவை எல்லாம் குழந்தைகள் புக்காச்சே..! அதையெல்லாம் படிச்சிகிட்டு இருக்கிங்களா ??? என்று வியப்பும்,சிரிப்புமாய் கேட்க,
ReplyDeleteஉடனே இன்று வந்த தோர்கல்,பராகுடா இதழ்களையும்,முந்தைய ரிப்போர்ட்டர் ஜானி,மர்ம மனிதன் மார்ட்டின் மற்றும் கிராபிக் நாவல்கள் இரண்டு எல்லாவற்றையும் எடுத்துக் காட்டி இதை எல்லாம் நீங்க படித்தாலும் சரி,சும்மா புரட்டிப் பார்த்தாலும் சரி,ஒரு தடவை பார்த்துட்டு உங்களோட முடிவை சொல்லுங்க என்று நான் சிரிக்க...
நாலைந்து இதழ்களைப் புரட்டியவர்,தெரியாம சொல்லிட்டேன் சார்,காமிக்ஸ் பெரியவர்களுக்கானது என்று விளிக்க...
உடனே நான் லக்கி லூக்,சிக்பில் என காமிக்ஸ் வகையறாக்களை காட்ட,அதைப் புரட்டிய நண்பர் ஒத்துக்கறேன் சார்,காமிக்ஸ் எல்லோருக்குமானது தான் என்று வியக்க....
இன்று ஒரு சுவராஸ்யமான நிகழ்வு நடந்தேறியது..
விரைவில் அந்த நண்பர் ஒரு ஓய்வு நாளில் வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார்,நமது காமிக்ஸ் இதழ்களை ஒரு அலசு அலசி விட்டு அவருடைய செல்ல புதல்விக்கு எந்த காமிக்ஸ் வாங்கித் தரலாம் என்று ஒரு முடிவை எடுக்கப் போவதாக கூறிவிட்டு சென்றார்...
"காமிக்ஸ்" என்றவுடனே ஏதேனும் டோரா ; சோட்டா பீம் ரேஞ்சுக்கான புக்குகளை நீங்கள் படித்து வருகிறீர்களென்று அவர் நினைத்திருப்பார் !! "பராகுடா" -வை மட்டும் மனுஷன் படித்திருந்தால் மிராண்டிருக்கக்கூடும் !
Deleteசரி கடைசியா அவர்ட்ட பாலிசி போட்டீங்களா இல்லையா?!! :P
Delete///விரைவில் அந்த நண்பர் ஒரு ஓய்வு நாளில் வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார் ///
Deleteஅமுக்கிப்போடுங்க ..! :-)
Jokes apaet ..
ஒண்ணுரெண்டு டெக்ஸ்வில்லரையும் காட்டுங்க ரவி..! ஜாலியான வாசிப்புக்கு உத்திரவாதம்னு சொல்லி கொடுங்க.!
கார்சனின் கடந்த காலம்.., வல்லவர்கள் வீழ்வதில்லை., சர்வமும் நானே ..போன்றவை நல்ல சாய்ஸ்..!
அதுக்காகத்தானே புத்தகத்தை அவரிடம் காட்டியது
Deleteசூப்பர் அறிவரசு
Delete//கடைசியா அவர்ட்ட பாலிசி போட்டீங்களா இல்லையா?//
Deleteஅவர்கிட்டே தான் சந்தா கொக்கியைப் போட்டாச்சே ?!!
ஜெய் பாகுபலி !!
// அவர்கிட்டே தான் சந்தா கொக்கியைப் போட்டாச்சே ?!! //
Deleteஅதே,அதே சார்.....
// சரி கடைசியா அவர்ட்ட பாலிசி போட்டீங்களா இல்லையா?!! //
Deleteகுடும்ப நண்பராச்சே,விடுவாரா....அதெல்லாம் ஏற்கனவே ஆச்சி....
// ஒண்ணுரெண்டு டெக்ஸ்வில்லரையும் காட்டுங்க ரவி..! //
Deleteகண்டிப்பா கண்ணன்....
என் ஓட்டு எனக்கே
ReplyDeleteசெல்லாத ஓட்டு ..!
Deleteகண்ணா @ ரின் டின் லக்கி லூக் கதையில் வருவதால் இந்த ஓட்டு லக்கி லூக்கையே சாரும். எனவே லக்கி லூக்கிக்கு மற்றும் ஒரு ஓட்டு
Deleteஆமால்ல... சூப்பர் பரணி..!
Deleteநம்ம வேட்பாளர் லக்கி லூக் முதலிடம் பிடிக்க முழுத்தகுதி உடைய்வர்.! ஆனா சில அந்நிய சக்திகளால பின்தங்கி இருக்காரு.!
இப்படி நியாயமா விழுற ஓட்டுகளை நாம கவனமா கவுண்டிங்ல வெச்சிக்கணும்.!
என்னுடைய ஒரே பவர்புல் ஓட்டு டைகருக்கே.
ReplyDeleteஇதுவரை படித்த காமிக்ஸ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தூள்பறத்துகிறது பராகுடா.பக்கத்திற்க்கு பக்கம் திடீர்திருப்பங்கள், திகில், மற்றும் சோகங்கள்.சும்மா பார்க்கலாம் என புரட்டி முழுவதும் முடித்து விட்டுதான் வைத்தேன்.அடுத்த பாகத்திற்காக ஏங்கிங்.
ReplyDeleteநன்றி எடி,ஸார்.
//அடுத்த பாகத்திற்காக ஏங்கிங்.//
Deleteசீக்கிரமே நண்பரே !
முதல் பாகத்தை படிக்காமல் வைத்து ரெண்டையும் சேர்த்துப் படிக்க போகிறேன்.
DeleteFrom Steel claw from Coimbatore
ReplyDeleteசார் புத்தகங்கள பிரித்ததும் வழக்கம் போல வண்ணங்கள பார்த்து பார்த்து.... சாதாரணமா இருக்கும். என நினைத்த படி பாத்தா அட்டைப் படம் இது வேற லெவல்னு மிரளச் செய்ய...அதிலும் ௐரே முகம் மட்டும் அட்டை முழுக்க வியாபித்தால் பெரிதும் கவர்ந்ததில்லை ௐன்று கூட இதுவரை...ஆனா முதன் முறையா பின்னனியில் இருட்டை மட்டும் துணை கொண்டு மிரளச் செய்யும் அட்டை.....இதுவரை வந்த அட்டைகளிலே இதுதான பெஸ்ட் சத்தியமான்னு மிரட்சியுடன் ஓலமிடும் மனதின் பாஷை உங்களை முன்கூட்டியே அடைந்திருக்கும் என உணர்ந்தாலும் எனது எழுத்துகளும் கட்டியம் கூறட்டுமே உறுதி பட...வண்ணம்தானே நாம லார்கோல பாக்காததா என புரட்டுனா ஈஸ்ட்மென்ட் கலர்ல நானும் வேற லெவல்னு கூவ எத்தனை கோடி இன்பம் வைத்தாய் முருகான்னு உங்க திசை நோக்கி கும்பிட துடிக்கும் கரங்களை கட்டுப்படுத்திய படி நம்ம விஜயன் சார்டான்னு டைப்புகிறேன்....பரிணாம வளர்ச்சியோ நம்ம இதழ்களுக்கு...சர்தான்னு தோர்கள புரட்டுனா அந்த சிறுமி வேற ௐரு. லெவல் வண்ண உலகுக்கு கரம் பிடித்து அழைத்துச் செல்கிறாள்...அந்த மரங்களில் படிந்த வண்ணம்தான் எத்தனை அழகு ...அதகளம்தான்....தோர்கள் கார்டும் அசத்த ...டைரி மில்க்காய் ருசிக்கிறது அடுத்த வெளியீடெனும் டெக்சின் வைகிங்தீவு மர்மம் ....அதகளம்...ஒருபடி மேல போயிருக்கோம் சார்...நன்றிகள்🙂🙏🏻
டைப்புவது ஸ்டீலோ ; திருச்செந்தூர் தோழரோ - கமா, புல்ஸ்டாப் இல்லாத அந்த மூச்சிரைக்கும் பாணி அதே ! அதே !!
Deleteவோட்டு போடுவதில் proxy கேள்விப்பட்டிருக்கேன் ; போஸ்டு போடுவதிலும் proxy ஆ ? ஆஹா !! புல்லரிக்கச் செய்கிறது உங்கள் ஆர்வமும், நட்பின் ஆழமும் !!
அப்டியே ஒரு கவிதைய எடுத்துவுட்டாக்கா அதையும் PFB எப்டிக்கா சமாளிக்கிறாருன்னு பாத்துப்புடலாமே !!
பராகுடா சித்திரங்கள் ஆஹா அருமை.
ReplyDeleteபின்குறிப்பு;ஹாட்போர்ட் பைண்டிங் இல்லாததால் மல்லாந்துபடுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்த மாதிரி புக் படிக்கும் சுகமே தனிதான்.ஹாட்கவரா இருந்தால் மிகவும் சிரமாயிருக்கும்(இருநூறு பக்கங்களுக்கு குறைவான கதைக்கு ஹார்ட்பவுண்ட் தேவையற்றது)
நன்றி ஸார்.
தோர்கல் முடித்துவிட்டு வருகிறேன்.
ஹை ! இப்படிக்கூட ஒரு காரணம் சொல்லிடலாமோ நானும் ? நன்றி சார் !!
Delete100 பக்கத்தை விட ஹார்டு பவுன்ட் அட்டை கணம் அதிகமாகத் தெரிவது எனக்கு மட்டும் இல்லை போலிருக்கிறது...
Deleteவிஜயன் சார், புக் மார்க்'கில் தோல்கலின் படம் கம்பீரமாய் புத்தாண்டு வாழ்த்துச் சொல்கிறது! நன்றி. ஆனால் புக் மார்க்'கிக்கு பதில் நூல் ஏன் கடந்த வருடங்களில் இருந்து கொடுப்பது இல்லை?
ReplyDeleteஎனது சாய்ஸ் புக் மார்க் நூல் தான்
Deleteபுக்மார்க் புறப்படுவதே நூலோடே எனும் போது இன்னொரு நூலெதற்கு சார் ?
Delete///ஆனால் புக் மார்க்'கிக்கு பதில் நூல் ஏன் கடந்த வருடங்களில் இருந்து கொடுப்பது இல்லை?////
Delete"அந்தக் காமிக்ஸ் எடிட்டர் அடிக்கடி தன் வாசகர்களிடம் நூல் விட்டுப் பார்க்கிறாராம்"னு யாரும் பேசிடக் கூடாதில்லையா.. அதுக்குத்தான்! :)
நல்லாவே பதில் சொல்கிறீர்கள் :-)
Deleteஆனால் இன்னும் சரியான காரணம் சொல்ல வில்லை.
//புக்மார்க் புறப்படுவதே நூலோடே எனும் போது இன்னொரு நூலெதற்கு சார் ?// semmma sir... :))
Deleteடெக்ஸின் சாத்தானின் சீடர்கள் முதல் நான்கு பக்கங்களை வாசித்தேன்.. மிரட்டுகிறது... முடிந்தால் நாளைக்கே இதனை படித்து முடிக்க வேண்டும்.
ReplyDeleteகார்சனின் கடந்த காலம் யாரிடபமாவது extra copy இருந்தால் விலைக்கு வாங்க ready sir.
ReplyDeleteI will check and let you know!
Deleteநன்றி Parani
Deleteநமக்கு புத்தகம் மகாராஷ்டிரா வந்து சேர இன்னும் 5 நாள் ஆகலாம்... வெயிட்டிங்!
ReplyDeleteசென்னைக்கே இன்னமும் வந்து சேரவில்லை.. என்னவென்று தெரியவில்லை.. சமீப காலமாக கால தாமதம் புத்தகம் வருவதில்...
ReplyDeleteST ? DTDC ?
Deleteஇப்போ தான் வந்துச்சாம்...with DairyMilk!!(@Chennai)nnu சொன்னாங்க...Dont worry bro...hope books are on the wayy...
Deleteபுத்தகம் கிடைச்சிடுச்சு...ST courier sir..
DeleteGot Dairy milk Rajasekaran...
wow...same pinch bro... :) but, வீட்டுக்கு போற வரைக்கும் இருக்குமான்னு தெரில... :(
DeleteDear Editor Sir,
ReplyDeleteI got Jan books. I would like to make strong comment on the Graphic novel. It seems Graphic novel for Adults not for Children. The picture and the words are more adult oriented. I don't prefer children to read or view the picture of Jan graphic novel.
I already sent and email last year for similar issue but you said "send the book back we will repay the amount"
I also raised this concern to your office but still I do see these kind of comics.
If you still wanting to publish these kind of comics, please remove the adult oriented picture and sentence from comics before publishing.
I hope this time you will listen to my comment.
Thanks.
Sir,
DeleteKindly see the statutory information printed on the Back Cover, wherein it is clearly mentioned that this is Recommended for 18+ readers only & for discerning tastes.
And in every single instance that we have advertised this book, we have done our best to state that this is a Graphic Novel for grown-ups. And that is why we have this listed under a separate Subscription type too. Our core audience are 40+ readers & therefore we strive to cater to different genres.
And finally we do not have the permission from the copyright holders to censor pictures as you suggest. So this stays a buy on choice album for sure.
Just for discussion ::
DeleteAdditionally, it would be ridiculous - even if pictures are removed - for kids to be introduced to Barracuda and the likes. Certain things are not for kids. Comics also has many genres and not everything has to be forced upon a kid.
Mature audience can read these kinds of comics / graphic novels - nothing wrong.
I really don't see what is the problem here. I just don't get these books near my kids. They have Smurfs and Benny to enjoy. That's all there is.
Thank you Sir for the clarification. In our family ages from 6 to 60 every one reads the comics. We generally give comics to children to increase their imagination and ideas by seeing or viewing the picture. It also improves the reading(Tamil) capability. Hence I shared my thought.
DeleteI would skip this subscription next year 2020.
I just got the clarification from editor. So no need to have further discussion on this subject.
DeleteThat was not meant as a discussion with you alone :-) (No offense!). Editor and other folks can discuss, right? This is a forum.
Delete//We generally give comics to children to increase their imagination and ideas by seeing or viewing the picture. It also improves the reading(Tamil) capability. Hence I shared my thought. //
DeletePerfectly understandable sir ! It's just that some books like Bouncer & Barracuda are best kept away from children...!
//We generally give comics to children to increase their imagination and ideas by seeing or viewing the picture. It also improves the reading(Tamil) capability //
DeleteGreat news.
எனது மகளுக்கு தமிழ் படிக்க எழுத தெரியாது. கடந்த சில மாதங்களாக கார்டூன் கதைகளின் படங்களை பார்த்து கதையை குத்து மதிப்பாக சொல்கிறாள்.
////எனது மகளுக்கு தமிழ் படிக்க எழுத தெரியாது. கடந்த சில மாதங்களாக கார்டூன் கதைகளின் படங்களை பார்த்து கதையை குத்து மதிப்பாக சொல்கிறாள்.////
Deleteபடம் பார்த்து கதையை குத்திமதிப்பா புரிஞ்சுக்கிடறதைத்தானே நாமும் ஆண்டாண்டு காலமாய் செஞ்சிக்கிட்டிருக்கோம்! :P
படிக்காதவர்களும் படிக்கலாம் :
ReplyDeleteதோர்கல் :
கதை 1 :
தேவதையின் கதை :
முதல் சாகஸ தோர்கல் முதல் இரண்டு பக்கங்களை படிக்கும் பொழுது என்னடா இது ...ஆரம்பத்தில் தோர்கல் சாகஸம் ஆரம்பமான பொழுது சின்னபிள்ளைதனமாக உள்ள கதை போல இருக்கிறதே என்று ஏற்பட்ட எண்ணம் இப்பொழுதும் மனதில் ஏற்படுகிறதே என்ற எண்ணம் தோன்றியது என்னமோ வாஸ்த்தவமே ..ஆனால் மேலும் நகர்வுகள் நகர ,நகர கதை சின்னபுள்ள தனம் அல்ல நாம் தான் சின்ன புள்ளைகள் என்ற எண்ணத்தை விதைத்து ஒரு சிறு வயதில் எப்படி ஆர்வத்துன் கதை கேட்போமா அப்படிப்பட்ட ஆர்வத்தை விதைத்தது இந்த தேவதையின் கதை.இந்த கதையை படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றிய ஒரே எண்ணம் ...சமீப தினங்களாக எனது வாரிசு ஒருவர் ஏதாவது கதை சொல்லுப்பா ..கதை சொல்லுப்பா என்று நச்சரித்து கொண்டு இருக்கும் அவருக்கு இந்த கதையை இதழை கையில் வைத்து கொண்டு ஒவ்வொரு சித்திர பேனலையும் காட்டி கொண்டே கண்டிப்பாக கதை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் .கண்டிப்பாக நமது குழந்தைகள் காமிக்ஸ் படிக்க வேண்டும் ,அவர்களும் நமது ரசனையில் இணைய வேண்டும் என்ற எண்ணம் வைத்திருப்போர் அவர்களுக்கு கண்டிப்பாக சொல்லி காட்டவேண்டிய கதை இந்த "தேவதையின் கதை".
இது குழந்தைகள் கதை அல்ல ...நம்மை குழந்தையாக மாறவைத்த கதை
கதை 3 :
"ஓநாய் குட்டி '
என்னடா கதை இரண்டு பற்றி தெரிவிக்காமல் படக்கென்று மூன்றுக்கு தாவி விட்டானே என்ற நினைப்போர்க்கு சில எச்சரிக்கைகளின் காரணமாக கதை இரண்டை ஆழமாக ,பொறுமையாக படித்து ரசிப்பதற்கு முன் தோர்கலின் இந்த மூன்று சாகஸங்களும் தனி ஒன் ஷாட் கதைகள் தானே என்பதாலும் மூன்றாவது கதைக்கு ஜம்ப் ஆகி விட்டேன்.தோர்கலின் குடும்பத்தில் நாமும் ஒருவனாகி ...இல்லை இல்லை நாமே தோர்கலாகி ஆரிசியா நமது மனைவி ,குழந்தை நமது குழந்தை இவர்களை ,இவர்களின் ஆசையை நாம் நிறைவேற்ற வேண்டுமே ,இவர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமே என்ற பதைபதைப்போடே அந்த தோர்கலின் பயணம் அமைந்தது. இறுதியில் ஐ இன்னொரு குட்டி பாப்பா என்று நம்மை மகிழ்ச்சியில் துள்ள வைத்தது இந்த ஓநாய் சாகஸம் .சித்திரங்களின் அசத்தல் இந்த பயணத்தில் நாமும் ஒருவர் என்ற எண்ணத்தை விதைத்து கொண்டே சென்றது தான் ஓவியரின் பிரம்மாண்ட ஆற்றலை தெரிவிக்கிறது.
ஓநாய் குட்டி சிறுத்தை பாய்ச்சல்
தோர்கல் :
கதை 2 :
"சிகரங்களின் சாம்ராட்"
இந்த கதைக்கான முன்னோட்டம் ஹாட்லைன்,புக் மார்க் பின்பக்கம் என கொஞ்சம் எச்சரிக்கை தொனியின் காரணமாக முதல் முறை படிக்கும் பொழுதே மிக பொறுமையுடன் ,ஆழமாக கூர்ந்து கவனித்து படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைத்த படியே படிக்க நடை போட ஆரம்பித்தேன் இந்த சிகரங்களின் பாதைகளில்.
இறந்த காலம் ,நிகழ்காலம் ,எதிர்காலம் என மாறி ,மாறி கதை யோட்டம் சென்றாலும் கதையின் பக்கங்கள் நகர நகர எந்த குழப்பங்களும் நேராமல் நன்கு புரிந்த படியே ஆச்சர்ய கனவுகளுடனே நானும் பயணத்தேன் என்பது உண்மையே .ஆனால் இறுதி இரு பக்கங்கள் கொஞ்சம் புரிபட வில்லை என்பதும் ,கொஞ்சம் போல் குழப்பத்தை விதைத்தது போல் உணர்ந்த்தும் உண்மை தான் என்பது போல இறுதிபக்கம் "வல்னா " வை கண்டதும் ,வல்னாவின் வழி அனுப்புதலும் மனதில் ஒரு வித பாரத்தை ஏற்படுத்தியதும் உண்மையே.இந்த கடைசி இருபக்கம் என்னால் தெளிவுற முடியாவிட்டாலும் க்ளைமேக்ஸ் ஒரு வித பாரத்தை மனதில் ஏற்றியது ஆச்சர்யமே என்றாலும் அந்த குழப்பங்களும் என் மனதில் ஏற்படாதிருந்தால் இந்த கதையின் தாக்கம் மனதில் எவ்வித ஆழத்தை ஏற்படுத்தி இருக்கும் என்ற எண்ணத்தையும் விதைக்காமல் இல்லை.
ஆனாலும் இந்த நம்ப முடியாத கதையை நம்ப வைக்கும் அளவிற்கு கொண்டு சென்ற பிரமாண்ட ஆற்றலின் பெரும்பங்கு இப் படைப்பின் ஓவியருக்கே சென்று சேர வேண்டும்.
இறுதி படிக்கற்கள் கொஞ்சம் தடுமாற வைத்தாலும் சிகரங்களின் சாம்ராட் -எவரெஸ்ட்
தலீவரே, ரெண்டிலே ஒண்ணு நிஜமா இருக்கணும் :
Deleteநீங்க கிராபிக் நாவல்களிலே ஊறி வேறொரு லெவலுக்குப் போயிட்டிங்க !!
இல்லாங்காட்டி
கதையின் முடிச்சுகள் அனைத்தையும் புரிஞ்சுக்கிட்டதாய் நினைச்சிட்டு இருக்கீங்க !!
சீக்கிரமே கதையிலேர்ந்து ஏகப்பட்ட கேள்விகளை எழுப்புவேன் ; so பதில் சொல்லத் தயாராகிக்கோங்கோ !!
சாதாரண கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல எங்கள் தல அன்புக்குரிய பொருளாளரை பணித்திருக்கிறார்.
Deleteஅதனால்ரொம்ப டப்பான கேள்விகளை மட்டுமே கேட்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
கலக்கறிங்க தலைவரே.....
Deleteசீக்கிரமே கதையிலேர்ந்து ஏகப்பட்ட கேள்விகளை எழுப்புவேன் ; so பதில் சொல்லத் தயாராகிக்கோங்கோ !!
Delete####₹₹₹
ஐயம் வெயிட்டிங்
அப்டீன்னு பந்தாவா சொல்லலாம்னு நினைச்சாலும் கொஞ்சம் பயந்து தான் வருது சார்..
இருந்தாலும் ரெடி ...
67 வது பக்கத்தில் கடைசி பிரேமில் தோர்கல் உத்திரத்தை ஏன் கேள்வி குறியோடு பார்க்கிறார்?(நான் கண்டு பிடித்து விட்டேன்)
Deleteநான் என் வீட்டில் ceiling ஐ நேற்றிலிருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன்:-(
Deleteஎந்த புத்தகத்த முதல்ல படிக்கலாம்..
ReplyDeleteமிங்கி பிங்கி பாங்கி போட்டு பார்க்க வேண்டியது தான்..
தொகுப்பாசிரியர் ஐயன்மீர் : இந்த ரேட்ல போச்சுன்னா நீங்க Tales Of Shirdi Baba, The Syamantaka Gem, Krishna and False Vasudeva, Ganesha, Gopal The Jester என்று தான் வெளியிட வேண்டும் போலிருக்கு :-) உங்க நெலம கொஞ்சம் பாவம் தான் சார் :-D
ReplyDeletewhy பாவம் ? - எதை வெளியிட்டாலும் அடிக்கிறோம் .. வெளியிடலேன்னாலும் அடிக்கிறோம் .. ஸ்டராங் முதுகு ஸங்கர் :-)
Delete//ஸ்டராங் முதுகு ஸங்கர் //
DeleteSMS !! அட !!
அப்புறம் "The Syamantaka Gem" கதை நினைவில்லை ; ஆனால் ஏதோவொரு யுகத்தில் ரொம்பவே ரசித்த கதை என்று அந்தத் தலைப்பு ஞாபகமூட்டுகிறது !! Given a chance - அதை(யும்) நிச்சயம் வெளியிடுவேன் !! :-)
ஹே டண்டனக்கா டன்
ReplyDeleteதோர்கல் படித்து முடித்து விட்டேன். ஓரளவு கதை புரிந்தாலும். இன்னும் ஒரு முறை படிக்க வேண்டும்.
ReplyDeleteமூன்று முக்கிய காதாபாத்திங்கள் மட்டும் மையமாக வைத்து வான் ஹம்மே மிரட்டி உள்ளார்.
நீங்கல்லாம் தேவலாம் சார் ; நான் "சிகரங்களின் சாம்ராட்" கதையை ஆறேழுவாட்டி படிச்சிருப்பேன் !!
DeleteHi editor
ReplyDeleteReceived books
All look great especially barracuda!
Missing the lighter books including cartoons as all books appear heavyweight with regard to content!
Regards
Happy newyear
Arvind
Valid point sir...இம்மாதம் எல்லாமே heavyweights தான்! கார்ட்டூன்கள் எண்ணிக்கை அடி வாங்கும் போதே இத்தகைய மாதங்களைத் தவிர்க்க இயலாதென்பதை நான் அறிந்தேயிருந்தேன் ! வேறு வழியில்லையே...!
Deleteபராகுடயும் முடித்து விட்டேன். Pirates of caribian னை ஞாபகப் படுத்துகிறது.
ReplyDeleteசித்திரங்கள் புகழ வார்த்தைகள் இல்லை. பிரம்மாண்டமாக உள்ளது.
அடுத்து அடுத்து திருப்பம் தான்.
அடிமையாக விற்க்கபட்ட பெண்ணின் பாத்திர படைப்பு அருமை.
இதுவரையில் குறிப்பிட்ட வகையில் இவர்தான் கதாநாயகி அல்லது நாயகன் என்று கணிக்க முடிய வில்லை.
இந்த ஆல்பத்தின் பிரம்மாண்டத்துக்கு அந்த கலரிங் பாணியொரு முக்கிய காரணமென்பேன் சார் !
DeleteBooks are not reached us yet in south chennai. Seems always two days delay for me...
ReplyDeleteIf you recieve via ST Courier, call the office and shift it to DTDC from next month. STC is horrible in certain areas in Chennai.
DeleteSouth Chennai, particularly OMR has very tardy service from almost all couriers ! I have personally seen that happening even with Professional Courier too...! Unfortunate that the IT corridor is so poorly served..!
Deleteஇன்னைக்கும் நஹி அத்தா ஹை :( :( :(
Delete18+ அப்படின்னு போட்டு எங்கைளை adult ஆக்கிட்டு, கூடவே Milky bar சாக்லேட் கொடுத்து கொழந்தப் புள்ள யாவும் ஆக்கிட்டீங்களே.இதுல நாங்க யாரு?
ReplyDeleteAdult-களின் இல்லங்களில் (மெய்யான) குழந்தைப் புள்ளைகள் இருக்குமென்ற நம்பிக்கையிலும் தான் !
Deleteடெக்ஸ்க்கு ஓட்டு போட்டாச்சு, மற்றவர்களையும் வரிசைப்படுத்தி பார்க்கலாமே என்கிற அவா,
ReplyDelete1. டெக்ஸ் வில்லர்
2. XIII
3. லுக்கி லூக்
4. கேப்டன் பிரின்ஸ்
5. ஸ்பைடர்
6. கேப்டன் டைகர்
7. லார்கோ
8. தோர்கல்
9. மார்டின்
10.இரும்புக்கை மாயாவி
சிகரங்களின் சாம்ராட்டை படிச்சு முடிச்ச தோஸ்த்துகளுக்கு ஒரு கேள்வி...
ReplyDeleteகாலப்பிரயாணத்தை நிகழ வைக்கும் செயல் எது? பாம்பு மோதிரம் கையில் இருந்தாலும், தாரமங்கலத்துல இருந்து சங்ககிரிக்கு பஸ் பிடிச்சு போறதுக்கு டிக்கெட் எடுக்கனுங்குற மாதிரி , எந்த செயல் காலப் பிரயாணத்தைத் தூண்டுகிறது?
@ MP
Deleteஅருமையான கேள்வி!! இதைத்தான் நேற்றிரவு ரொம்ப நேரம் யோசித்தும், பக்கங்களைப் புரட்டிப் புரட்டி தெளிவு கிடைக்காமலும் நெளிந்து கொண்டிருந்தேன்!
தோர்கல் காலப்பிரயாணத்துக்கு முன் கண்ணை இறுக்க மூடி திறக்கிறான் (கூரை விழுந்த அதிர்ச்சி, குடும்ப்ததைப் பிரிந்த சோகம், சாக்ஸ் மேல கோபம், முத்தமிட்ட அதிர்ச்சி). ஆனா டாரிக் அந்த மாதிரி எதுவும் இல்லாம டபக் பனில மாயமா மறையறது என்னை குழப்பிடுத்து
Deleteபடங்களையும், நிகழ்வுகளையும் கவனமாய்ப் பாருங்கோ !! ஏகமாய் முடிச்சுகளையும், அவற்றிற்கான பதில்களையும் வான் ஹாம் பனியோடு சேர்த்தே புதைத்து வைத்துள்ளார் !!
DeleteAnd மொத்தம் எத்த்னை point to point காலப்பயண ஷண்டிங் நடைபெறுகிறதென்று கணக்குப் பார்த்தீர்களா ?
///ஏகமாய் முடிச்சுகளையும், அவற்றிற்கான பதில்களையும் வான் ஹாம் பனியோடு சேர்த்தே புதைத்து வைத்துள்ளார் !! ///
Deleteஐய்ய்யோ... யாராச்சும் அதையெல்லாம் தோண்டி வெளியே கொண்டு வாருங்களேன்?
பனியில் புதைந்து கிடைக்கும் முடிச்சுகள் சரி ; பனியிலேயே புதைந்து கிடைக்குமொரு உருவத்தின் கை மட்டும் நீட்டிக் கொண்டிருக்கும் பக்கம் 59 -ன் கடைசி frame -ஐப் பாருங்களேன் ! அதற்கு கதையிலுள்ள சம்பந்தம் என்னவாக இருக்குமென்று ரோசிக்க நேரம் எடுத்துக் கொண்டீர்களா ? பார்க்க பக்கம் 93 -ன் கடைசி frame !
Deleteஆஹா....
Deleteபடிக்கும் போது ஒண்ணுமே தெரியாம பரபரன்னு படிச்சுட்டு ஷெரீப் கேட்ட இந்த ஒரு கேள்விக்கே "ஙே" ன்னு முழிக்க தோணுதே...
இன்னும் ஆசிரியர் வேற கேள்வி கேட்டா...?! :-(
@ எடிட்டர்
Delete////பனியிலேயே புதைந்து கிடைக்குமொரு உருவத்தின் கை மட்டும் நீட்டிக் கொண்டிருக்கும் பக்கம் 59 -ன் கடைசி frame -ஐப் பாருங்களேன் ! அதற்கு கதையிலுள்ள சம்பந்தம் என்னவாக இருக்குமென்று ரோசிக்க நேரம் எடுத்துக் கொண்டீர்களா ?////
சார் பக்கம் 66 ஐ பாருங்கள்.. (கடேசி பேனல்)! தோர்கல் தன் தலையில் கைவைத்தபடி "எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கிறதே!!" என்று புலம்புவதைக் கண்டீர்களா?
அது தோர்கல் அல்ல - நான் தான்!
This comment has been removed by the author.
Deleteபனியில் புதைந்து கிடைக்கும் முடிச்சுகள் சரி ; பனியிலேயே புதைந்து கிடைக்குமொரு உருவத்தின் கை மட்டும் நீட்டிக் கொண்டிருக்கும் பக்கம் 59 -ன் கடைசி frame -ஐப் பாருங்களேன் ! அதற்கு கதையிலுள்ள சம்பந்தம் என்னவாக இருக்குமென்று ரோசிக்க நேரம் எடுத்துக் கொண்டீர்களா ? பார்க்க பக்கம் 93 -ன் கடைசி frame !///
Deleteஇதற்கு பதில் ஓரளவு புரிந்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை விவாதிப்போம்.
சிகரங்களின் சாமராட் கதையின் நீதி:
ReplyDeleteசிக்கன்/மட்டன்/ முயல் கறியை பங்கு தராமல் சாப்பிடுபவர்களை நம்பாதே
** note pad **
ReplyDeleteசிகரங்களின் சாம்ராட் :
1. கதை ஆரம்பிப்பது நிகழ்காலம்னு எடுத்துக்கிடலாம். சரி...
2. மோதிரத்தை கண்டெடுத்ததுக்கப்புறம், குதிரையை விரட்டிப்பிடிக்க யத்தனிக்கும் தோர்கலுக்கும், டோரிக்கிற்கும் முதல் காலப்பயணம் (அவர்கள் அறியாமலேயே) நிகழ்கிறது (பக்கம்62). சரி...
2.1 அந்தக் காலப் பயணத்தில் அங்கேயிருக்கும் வல்னாவின் மூலமாக (10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து குடியேறியதாக)வும், தோர்கலின் கூற்றுப்படி (20 ஆண்டுகளுக்கு முன்பே தன் தந்தை இறந்துவிட்டதாக)யும் கணக்கில் கொண்டால் - அவர்கள் காலப்பயணத்தில் 10 ஆண்டுகள் பின்னோக்கி வந்திருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா? சரி...
3. வல்னா, டோரிக்கிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே தோர்கல் மட்டும் நிகழ்காலத்திற்குத் (அவனையறியாமலேயே) திரும்புகிறான் (பக்கம் 67)! அதாவது, வல்னா,டோரிக் வாழ்ந்த காலகட்டதிலிருந்து 37 ஆண்டுகள் கூடுதலாக! (இதுவே நிகழ்காலம்?!!) சரி...
4. அங்கே சேக்ஸகார்டைச் சந்திக்கிறான் தோர்கல்! அவனுடைய வேண்டுகோளின்படி வல்னாவை மீட்டுவர மீண்டும் 37 வருடங்களுக்கு பின் செல்கிறான் (பக்கம் 76). சரி...
5. அங்கே 6 மாதம் குடித்தனம் நடத்திவிட்டிருக்கும் வல்னா-டோரிக் ஜோடியைச் சந்தித்துப் பேசியபிறகு, வல்னாவுடன் கிளம்பி மீண்டும் சாக்ஸகார்ட்டின் காலத்திற்குப் பயணிக்கிறான்! அதாவது, 37 வருடங்கள் முன்நோக்கி(பக்கம் 82). சரி...
6. மோதிரம் இப்போது வல்னாவின் விரலில்! கிழம் சேக்ஸகார்ட்டுடன் வல்னா மீண்டும் 37 வருடங்கள் பின்னோக்கிப் பயணித்து டோரிக்கை வந்தடைகிறாள் (பக்கம் 85)! அங்கே டோரிக் தன் எதிர்கால உருவமான சாக்ஸகார்ட்டைச் சந்திக்கிறான் - கொல்கிறான்! ( இங்கேதான் குழப்புகிறது - இதுதான் parallel universe கான்செப்ட்டா?!!)
7. சேக்ஸகார்ட்டைக் கொன்ற டோரிக், இத்தனைக்கும் காரணமான தோர்கலை கொல்லும்பொருட்டு - வல்னாவை தோர்கல் சந்திக்கும் காலகட்டத்திற்கு முன்பாகப் பயணிக்கிறான்! அதாவது 37 வருடங்கள் முன்நோக்கி (பக்கம் 90). அதாவது இதுவே உண்மையான நிகழ்காலம் என எடுத்துக்கொள்ளலாம்! சரி...
8. அங்கே வயதான வல்னா, இளமையான டோரிக்கை பனிச்சரிவை ஏற்படுத்திக் கொல்கிறாள்! தோர்கல் தன் பயணத்தைத் தொடருகிறான்! (முற்றும்)
பாயிண்ட் நம்பர் 8 தான் உண்மையான நிகழ்காலமெனில் தோர்கலுக்கு வல்னா-டோரிக் பற்றிய ஞாபகங்கள் இருப்பது எப்படி?!!
இந்தக் காலப்பயணத்தின் எந்தவொரு கட்டத்திலும் தோர்கலுக்கு மட்டும் வயது கூடுவதோ குறைவதோ இல்லை - ஏன்?
எந்தமாதிரியான விசை மோதிரத்தை இயக்கி காலப் பயணத்தை சாத்தியமாக்குகிறது?
இந்த நிகழ்வுகளின் மூலம் கதாசிரியர் நமக்கு உணர்த்தும் சங்கதியென்ன?
Time travel + parallel universe ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள முயற்சித்திருப்பதுதான் இந்தத் துளியூண்டு குழப்பங்களுக்குக் காரணமா?!
சரியான கதை சொல்லி என் குழப்பங்களைப் போக்குவோர்க்கு 10 ரவுண்டு பன்னுகள் கட்டங்காப்பியுடன் பரிசளிக்கப்படும்!
வாங்கோ..வாங்கோ...!! யாம் பெற்ற மண்டை நோவை நீவிரும் பெறத் துவங்கியுள்ளதில் I am very happy !!
Deleteஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு - ஆரம்பப் புள்ளியை THORGAL TIME ZONE 0 என்று குறித்துக் கொள்ளுங்கள் ! அப்பாலிக்கா ஒவ்வொரு பயணத்தினையும் முன்னேயா - பின்னேயா ? என்ற ரீதியில் குறித்துக் கொள்ளுங்கள் ! ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தப் பொதுவான குறியீடுகளின் நிலவரத்தையும், முக்கிய கதை மாந்தர்களின் நிலைகளையும் குறித்துக் கொள்ளுங்கள் !
அப்புறமாய் மாங்கு-மாங்கென்று மண்டையைப் பிறாண்டிப் பாருங்களேன் !
உங்கள் ஐயப்பாடுகளைத் தீர்த்திட தலீவர் பதுங்கு குழியில் காத்திருப்பதையும் மறவாதீர்கள் !!
Deleteஈவி !! மறு மறு மறு வாசிப்புகள் தேவைப்படும் கதையிது..
Deleteஒருமுறை மட்டுமே வாசித்துள்ளேன்..
அனைவரும் பலமுறை வாசிக்க அவகாசம் கொடுத்து எடிட்டர் தனது சிற்றிணைப்பில் கொடுத்துள்ளவாறு 13 - ம் தேதி மண்டையை பிய்த்து கொள்வோமே..:-)
பி.கு: மர்ம கத்தி பொருட்டு இணை பிரபஞ்சங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தது நினைவில் வருகிறது..:)
///ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு - ஆரம்பப் புள்ளியை THORGAL TIME ZONE 0 என்று குறித்துக் கொள்ளுங்கள் ! அப்பாலிக்கா ஒவ்வொரு பயணத்தினையும் முன்னேயா - பின்னேயா ? என்ற ரீதியில் குறித்துக் கொள்ளுங்கள் ! ///
Deleteசார்.. அதைத்தானே நான் மேலே செஞ்சுருக்கேன்?!
////அப்புறமாய் மாங்கு-மாங்கென்று மண்டையைப் பிறாண்டிப் பாருங்களேன் !////
சார்.. அதைத்தானே இப்பவரைக்கும் செஞ்சுக்கிட்டிருக்கேன்?!
ஐயோ...
Deleteதலை சுத்துதே ...அப்படியே கிறுகிறுன்னு வர்ற மாதிரி இருக்கே..
ஆசிரியரே பரவால போல..நீட் வினா தாளை விட டஃப் பா இருக்கே ...
இப்ப திரும்ப கதையை படிக்குறதா இல்ல உனக்கு புரிஞ்ச வரைக்கும் (?) ஓகேடா ஓடிர்றா கைப்புள்ள அப்புடின்னு நடையை கட்றதா..?!
//சார்.. அதைத்தானே இப்பவரைக்கும் செஞ்சுக்கிட்டிருக்கேன்?!./
Delete:-))))
எவ்ளோ விளக்கம் கொடுத்தாலும் நம்ம மண்டைக்கு இதெல்லாம் புரியுமான்னு தெரில..படிக்கும் போது எந்த குழப்பமும் வரலை..கடைசி இரு பக்கங்களில் தவிர..இப்ப என்னடான்னா ..
Deleteம்ஹீம்...ஒரு வாரத்துக்கு இந்த குளிருக்கு பதுங்கு குழி தான் பெட்டரு...
தலீவரை சித்தே புடிச்சு இங்கேயே கட்டி வையுங்களேன் ; நிறைய கேள்விகள் இன்னமும் காத்துள்ளன !!
Delete@செனாஅனா
Delete///13 - ம் தேதி மண்டையை பிய்த்து கொள்வோமே..//
தேதிய கவனிச்சீங்களா? 13!! இந்த நம்பர் ஒரு பிரச்சினைக்கு தீர்வு சொல்லும்றிங்க? ஹிஹி!!
////தலீவரை சித்தே புடிச்சு இங்கேயே கட்டி வையுங்களேன் ; நிறைய கேள்விகள் இன்னமும் காத்துள்ளன !!////
Deleteஎனக்கென்னவோ தலீவர் பதுங்குகுழிக்குள் மண்ணை இழுத்துப் போட்டுக்கிட்டு, மேலே ஒரு சிலுவை நட்டுக்கிடுவார்னு தோனுது! :D
Deleteஆசிரியர் அவர்களுக்கு..
எனக்கு உடல்நிலை சரியில்லா காரணத்தால் இரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கும்படி பணிவன்புடன் வேண்டிகொள்கிறேன்.
அதை விட பெரிய காரணம் நான் இன்னும் வளரவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன் என்பதால் மேலும் ஒரு வாரத்திற்கு இணைந்து விடுப்பு கொடுக்கும்படி தாழ்மையுடன் வேண்டிகொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
மாணவன்..சாரி சின்ன பையன்.
13 ந் தேதி வரை வெயிட் பண்ணுவோம். ஆனா ஈவி மண்டைய பிச்சுக்கற மாதிரி இருக்குறதை நினைச்சுப்பாக்கவே குஜாலா இருக்கிறதால ஈவி க்கு மட்டும்இன்னொரு கேள்வியை கேட்டு வைப்போம்.
Deleteஎன்னகென்னவோ டாரிக், தோர்கல் மொதத் தடவை வரும் போதே டைம் ட்ராவல் பண்ணித்தான் வந்துருக்கான். வெளியில வைச்சுருக்கிற பனிசறுக்கு கட்டையை பாருங்க. அது ப்யூச்சர்ல இருந்து கொண்டு வந்தது.
டாரிக் டைம் லூப்ல மாட்டிட்டு இருக்கான். அதுக்குக் காரணம் கிழ டாரிக்கை அவனே கொன்னது. அது தான் முடிவில்லாத பாம்பு மோதிரத்தின் குறியீடு.
59ஆம் பக்கத்தில் இருக்கும் பனியில் தெரியும் கைகள் உணர்த்துவது என்னன்னா எப்படியும் டாரிக்கின் மரணம் ஏதோ ஒரு வகையில் நடந்து விடுகிறது. எப்படி டைம் ட்ராவல் பண்ணினாலும் சரி.
எனக்கு தோர்கல் கதை புரிந்து விட்டது.வான் ஹாம்மே ஒரு அசாத்திய ஜினியஸ்.
Delete@ SPGK
Deleteஉங்களுக்குக் கதை புரியலேன்னாலும் கூட வான் ஹாம்மே ஒரு அசாத்திய ஜீனியஸ் தானே! :)
This comment has been removed by the author.
Delete@ MP
Deleteஇரண்டு ரவுண்டுதான் படிச்சிருக்கேன் ( தலை கிர்ர்ர்ர்ருனு இருக்கு). இன்னும் இரண்டு ரவுண்டுகளை முடிச்சதுக்கப்புற(மாவது)ம் உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியுதான்னு பார்க்கிறேன்!
இப்படி கேள்விகளுக்கு நடுவிலே மாட்டிக்கிட்டு அல்லாடுறதை விட, பேசாம அந்தப்பய டோரிக் மாதிரி டைம் லூப்லயே மாட்டிக்கிடலாம் - வல்னாவுடன் ஒரு ஆறுமாசம் குடும்பம் நடத்துற பாக்கியமாவது கிடைக்கும்!
//உங்களுக்குக் கதை புரியலேன்னாலும் கூட வான் ஹாம்மே ஒரு அசாத்திய ஜீனியஸ் தானே! :)//
Deleteஇருக்கலாம் ஈ.வி ஆனால் கணக்கு வாத்தியாரை நான் கணக்கு வாத்தியார் சொல்லவில்லை என்றாலும் அவர் கணக்கு வாத்தியார் தான். ஆனால் என்னால் கணக்கு வாத்தியாரை கணக்கு வாத்தியார் என்று தானே சொல்ல முடியும். 😊😊
ரொம்பவே தெறித்த சபலத்தை அடக்கிக் கொண்டு எனது முழுப் பொழிப்புரையையும் புக்கோடு வழங்காது விட்டது எத்தனை உருப்படியான காரியம் என்பது இப்போது புரிகின்றது !! ஒரு skull scratching படலம் நமக்குக் கிட்டாதே போயிருக்கும் !! ஜூனியர்க்கு இங்கொரு thumbs up
Delete@செயலர். உங்க கேள்விகளில் பலவற்றுக்கு விடை இருக்கு. இந்த வாரம் கான்பரன்ஸ் கால் போட்டுடலாம்னா சொல்லுங்க.
Deleteதோர்கலுக்கு வயது கூடாததற்கு காரணம் என்ன?
பதில்: டாரிக் வலேனாவை விட்டு தோர்கலைக் கொல்ல வரும் போது வயது கூடவில்லை. ஏன்? தோர்கலும் வலேனாவும் வரும் போதும் வலேனாவுக்கு வயது கூடவில்லை. ஏன்? வலேனா மட்டும் டாரிக்கிற்கு வயது கூடுவது எப்போது? இதுக்கான விடைய கண்டுபிடிங்க. அப்ப உங்களோட கேள்விக்கு விடை கிடைக்கும்.
போன வருடம் தோர்கல் ஆல்பம் hard Cover அட்டை. இந்த வருடம் சாதா அட்டை ஸ்பைடர் பாக்கெட சைஸ் புத்தகத்துக்கு hard Coverஅட்டை. பராகுடா 3 பாக ஆல்பம் சாதா அட்டை. Consider please.
ReplyDeleteஅட்டவணை பக்கமாயும், அவற்றில் தரப்பட்டுள்ள இதழ்களின் விபரங்கள் மீதும் கவனம் ப்ளீஸ் ! அங்கென்ன promise செய்யப்பட்டுள்ளது - அதுவே நடைமுறையிலும் இருந்திடும் !
Deleteஜனவரி புக்ஸ் ...
ReplyDeleteநேற்று வந்தது. இன்று அனைத்தும் படித்து முடித்தாகிற்று..
டெக்ஸ் எப்போதும் போல் அருமை. வில்லன்களை முறியடிப்பதில் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். அட்டைப்படம் ஆவெரேஜ். ஆனால் டயலாக்ஸ் மிக அருமை. டெக்ஸும் கார்சனும் பேசுவது ஹாஷ்யம் மற்றும் நட்பின் ஆழம். kudos டு எடிட்டர்.
பராகுடா கிராபிக்ஸ் கலக்கல். கதையும் சிறப்பே. இதுவரை காமிக்ஸில் கண்டிராத தளம். (18+ என்பது என்னை பொறுத்த வரை பிரச்சனை இல்லை. ஆனால் சில நண்பர்கள் முகம் சுளிப்பதையும், வாங்குவதை தவிர்ப்பதையும் தடுக்க... அந்த மாதிரி வரும் சில இடங்களில் dialogue பாக்ஸை பெரிதாக போட்டு படத்தை இருட்டடிப்பு செய்யலாமே. just ஒரு கருத்து. அவ்வளவே. practical difficulties எடிட்டருக்கே தெரியும் )
தோர்கல் ... எப்போதும் போல drawings அருமை. குட்டி குட்டி கதைகள். ஒரு நூலில் கோர்த்த முத்துக்கள் போல.
"அப்புறம் லைன் காமிக்ஸ் கடை ஓனரா ? அடுத்த மாத புக்ஸை எப்ப சார் அனுப்புவீங்க ?"
/////அப்புறம் லைன் காமிக்ஸ் கடை ஓனரா ? அடுத்த மாத புக்ஸை எப்ப சார் அனுப்புவீங்க ?"////
Deleteஹா ஹா ஹா! :))))
:-)))
Deleteசாத்தானின் சீடர்கள்...
ReplyDeleteஅடேங்கப்பா....டெக்ஸ்வில்லருடன் மிக நீண்ட பயணத்தில் சாத்தான்களின் சீடர்களின் நகரத்தில் நானுமே குடியிருந்த உணர்வு.கடைசி வரை அடுத்து என்ன நடக்கும் ,அடுத்து என்ன நடக்கும் என்ற பதைபதைப்போடு தான் பயணிக்க முடிந்தது. ஒரு முழு நகரமே டெக்ஸ் ,கார்ஸனுக்கு எதிராக திரள்வது இந்த சாகஸத்தில் தான் முதன்முறை என்றே நினைக்கிறேன்.
அருமை.... இதழ் படித்து முடித்தவுடன் ஒரு த்ரில்லர் படத்தை பார்த்து ரசித்தது போல ஒரு திருப்தி..
மீண்டும் டெக்ஸ் உடன் பயணிக்க ஆவல் உடனிடயாக மனதினுள் எழுகிறது..
எனது மதிப்பெண் சூப்பர்...
13 ம் தேதி பிளாக்கில் விளக்கம் போடுவதாக சொல்லி உள்ளீர்கள். அதற்கு முன் 12 தேதியில் கேள்வி கேட்டு ஒரு டெஸ்ட் வைக்கலாமே.
ReplyDeleteஎங்களுக்கு எவ்வளவு புரிந்து உள்ளது என்பது தோரயமாக புரியும்.
எனக்கு கதை 90% புரிந்து விட்டது. உண்மையில் ஆசிரியர் கேட்ட கேள்விகள் தான் விடைகளை கண்டு பிடிக்க உதவின.
Delete//12 தேதியில் கேள்வி கேட்டு ஒரு டெஸ்ட் வைக்கலாமே.
Deleteஎங்களுக்கு எவ்வளவு புரிந்து உள்ளது என்பது தோரயமாக புரியும்.//
டெஸ்ட் மட்டுமே அடியேன் - கேள்விகளைக் கேட்கும் புலவன் தருமியைப் போல !!
Sir சென்னைக்கு எப்பொழுது வருகை???
ReplyDeleteஇந்த சனி வருகிறீர்களா?
DeleteYes sir...சனி மாலை 7 to 9 !
DeleteSuper sir..
Deleteஈரோடு நண்பர்களின் வருகை இம்முறை இருக்கிறதா?
ReplyDeleteஇப்போதுதான் பார்சல் கிடைச்சது..!
ReplyDeleteசரி இந்த இனிய வைபவத்தை பகிரலாம்னு வந்தா..,
முதல்ல தலைவரு தோர்கலைப் பத்தி சொன்னாரு..!
தாண்டினேன்.
பின்னாடி ,ஈ.வி.யாரு விமர்சனம் கொடுத்தாரு..!
தாண்டினேன்.
நடுவுல செ.அ சாரும் ,எடிட்டர் சாரும் ரெண்டு மூணு விளக்கம் கொடுத்தாங்க..!
தாண்டினேன்.
அப்புறம் MP சாரு லைட்டா சிக்கன் மாறி தொட்டுட்டு போனாரு..!
தாண்டினேன்.
தாண்டினேன்.. தாண்டினேன்..தளத்தின் கடைசிநுனி வரை தாண்டினேன்..அங்கே மேற்க்கொண்டு யாரும் கமெண்ட் ஏதும் போடாததால் ,மூச்சு வாங்கி நிற்க்கிறேன்..!
அப்புறமா படிச்சிட்டு வர்றேன்.
நீங்க தாண்டவேண்டியது இன்னும் நிறைய்ய இருக்குங்க GP! படிச்சுட்டு வாங்க - தாண்டோ தாண்டுன்னு தாண்டலாம்!
Deleteஅன்பின் ஆசிரியருக்கும் காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். புதிய ஆண்டு மூன்று தரமான புத்தகங்களோடு ஜம்மென்று தொடங்கி இருக்கிறது. என்னளவில் முதலிடத்தைப் பெறுவது சந்தேகமில்லாமல் தோர்கலே. மாய மந்திரங்கள் சூழ் உலகில் நிஜம் நீங்கி சில நேரம் உலாவி வரும் சுகமே அலாதியானதொரு அனுபவம்தான். அதுவும் இம்முறை சிகரங்களின் சாம்ராட் புண்ணியத்தில் இரட்டைக் கிறுகிறுப்பும் உத்திரவாதம் ஆகிட தோர்கல் நம் மனதை அள்ளிக் கொள்கிறது. காலப்பயணம் என்பது சற்றே கிருத்துவம் பிடித்த சங்கதி என்பதால் எழுதுபவருக்கு முழு சுதந்திரமும் உண்டு. வான் ஹாம்மேயின் ஜாலம் இந்தக் கதையில் உச்சம் தொட்டிருக்கிறது. கதை தொடங்கும் இடமும் முடியும் இடமும் ஒன்றே என்பதை நினைவில் வைத்துக் கொண்டு வாசித்தால் நிறைய சாத்தியங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும். 13-ம் தேதி அன்று நண்பர்களுக்குள் நடக்கவிருக்கும் விவாதங்களைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன். இந்த மாதத்தின் இரண்டாம் இடம் ஆழ்கடலின் அசுரர்களுக்கு. அவ்வளவாக நமக்குப் பரிச்சயமில்லாத கடற்களம். பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியனில் கூட நகைச்சுவையான கொள்ளைக்காரர்களைப் பார்த்துப் பழகிய மக்களுக்கு செரிமானம் ஆகச் சற்றே சிரமமான களமும் கூட. இதற்கு முன்னால் வெளியான Noir வகைக் கதைகளான ஜேசன் பிரைஸ், பௌன்சர் போன்றவற்றில் ஒரு மையக் கதாபாத்திரத்தோடு நம்மைப் பொருத்திக் கொள்ள முடிந்ததால் அவற்றோடு எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் பாராகுடாவில் அதுபோல குறிப்பிட்டுச் சொல்லும்படி யாருமில்லாத நிலையில் (எமிலியோ?!!) முதலிரண்டு பாகங்கள் சற்றே அந்நியமாகத் தெரிந்தன. ஆனால் மூன்றாம் பாகம் போகும் பாதை அடுத்தடுத்த பாகங்களுக்காகக் காத்திருக்கச் செய்கிறது. அபாரமான சித்திரங்களும் மிகத் துல்லியமான வண்ணச்சேர்க்கைகளும் பராகுடாவின் பெரும்பலம். மூன்றாவதாக டெக்ஸ் வில்லர். அலட்டலில்லாத நேரடியான கதை. எப்போதும் போல டெக்ஸும் கார்சனும் இணைந்து அதகளம் செய்கிறார்கள். மிகுந்த உற்சாகத்தோடு தொடங்கி இருக்கும் இந்த வருடத்தின் காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் வரும் நாட்களில் (அனைத்து புத்தக் கண்காட்சிகளிலும் உட்பட) தடதடத்துப் பறக்கட்டும்.
ReplyDeleteபிரியமுடன்,
கா.பா.
நமக்குப் ) புதிதான பாணிகளுக்குள் தலைநுழைக்கும் போதெல்லாம் ஒருவிதத் த்ரில் ஆட்கொள்வதுண்டு என்னை ! அந்த அனுபவம் இம்முறையும் தொடர்ந்தது - பரக்குடாவின் உபயத்தில் ! கதையின் template தமிழ் சினிமாவினிலிருந்து இரவல் வாங்கப்பட்டது போலத் தோன்றினாலுமே நமது வாசிப்புகளுக்குப் புதிதென்ற திருப்தி !! தொடரும் நாட்களில் இதன்மீதான அலசலினையும் ஆர்வத்தோடு பின்தொடர்ந்திடுவேன் !
Delete////13-ம் தேதி அன்று நண்பர்களுக்குள் நடக்கவிருக்கும் விவாதங்களைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்////
Deleteசட்டையைப் பிஞ்சுக்கிட்டு நாங்க நிக்கிறதை நீங்க வேடிக்கை மட்டும் பாக்கப்போறீங்களாக்கும்?
அதெல்லாம் முடியாது - நீங்களும் வாங்க கா.பா!
LARGO WINCH
ReplyDeleteநீங்க காமிக்ஸுக்கு புதுசுங்களா?!
Delete13ம் தேதிக்காக வெய்டிங்..!
ReplyDeleteஹி ..ஹி ..!
Delete@ ALL :
ReplyDeleteReg THORGAL :
ஒவ்வொரு முக்கிய தருணத்திலும் வசனங்களை ஆழ்ந்து கவனியுங்களேன் - சின்னச் சின்ன துப்புகள் கிடைத்திடக்கூடும் !
நல்லா பெருசாவே துப்பிடுவாங்களோன்னுதான் பயமா இருக்குங் சார்!
Deleteபேசாம வான் ஹாம்மேயின் ஃபோன் நம்பர் இருந்தா கொடுங்களேன்.. நான் அவர்ட்டயே கதையைக் கேட்டுக்கறேன்!
///பேசாம வான் ஹாம்மேயின் ஃபோன் நம்பர் இருந்தா கொடுங்களேன்.. நான் அவர்ட்டயே கதையைக் கேட்டுக்கறேன்!///
Deleteபோன் நம்பரெல்லாம் எதுக்கு சார் ?நீங்க செய்ய வேண்டியது ஒரு பாழடைஞ்ச குடிசையை கண்டுபிடிக்கணும்.அதுல ஒரு உத்திரம் மட்டும் வீக்கா இருக்கானு செக் பண்ணுங்க.அவ்ளோதான்.
இனி நீங்க செய்ய வேண்டியது ,உள்ள போயிட்டு வெளியே வந்தாலே போதும் வான் ஹாமேவை நேரிலேயே சந்திக்கலாம்.
ஒரேயொரு குடிசை.
ReplyDeleteவெறும் மூணு மனிதர்கள்
இதை மட்டும் வச்சுகிட்டு ,காலத்தைக் கொஞ்சூண்டு அப்படி, இப்படி மாத்திப் போட்டு போட்டுத் தாக்கிய வான் ஹாமே வின் மாயாஜாலம் அப்பப்பா...!
நீண்டநாட்களுக்குப் பின் மீண்டும் ,மீண்டும் படிக்கத் தூண்டிய கதை...!
1)வல்னா தன்னுடைய கதையை தோர்கலிடம் கூறும் போது (பக்கம்:65/2) அவள் கைக்குழந்தையாய் இருக்கும் போதே பெற்றோர் இறந்துவிட்டனர் என்கிறாள்.
ReplyDelete(65/4)விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஹரால்டின் மகனின் உயிரைக் பத்து வருடங்களுக்குப் முன்பு வல்னாவின் தந்தை காப்பாற்றியிருப்பதாக கூறிகிறாள் அப்படியானால் வல்னாவிற்க்கு பத்து வயதுதானே ஆகியிருக்க வேண்டும்??
அப்ப வல்னா பொய் சொல்லி இருக்காளோ..
////பாதிக்கப்பட்ட ஹரால்டின் மகனின் உயிரைக் பத்து வருடங்களுக்குப் முன்பு வல்னாவின் தந்தை காப்பாற்றியிருப்பதாக கூறிகிறாள்//
Deleteகாப்பாற்றியது - வல்னாவின் தாத்தா தான்!
This comment has been removed by the author.
Deleteவிஜய் அண்ணா..
Deleteநான் சரியாகத்தான் எழுதி இருக்கேன்..
அவங்க அப்பா காப்பாத்தினதாலதான் தாத்தாவ விடுதலை பண்ணினதா வல்னா சொல்றாங்க..
டோரிக், சேக்ஸகார்டாக மாறுவான் என்று 'தோர்கலை சந்தித்த' பிறகு பிற்காலத்தைய வல்னாவிற்க்கு தெரிகிறது தோர்கல் மேலுள்ள மையலினால் அவரை காப்பாற்ற நிகழ்கால டோரிக்கை பனிச்சரிவு நிகழ்த்தி கொன்று விடுகிறாள் ..
ReplyDeleteஇதற்கிடையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை..
நான் புரிந்து கொண்டது சரிதானா ஆசிரியரே & நண்பர்களே??
மேலோட்டமாக நீங்கள் புரிந்து கொண்டது சரிதான் நண்பரே.
Deleteமேலோட்டம் இல்லைன்னா புல்லாவே புரிஞ்சது ஒரு கோர்வையாவும், விளக்கமாவும் எழுத தெரியல..
DeleteGiridharasudarsan @ can you please send me your address to my mail id? sparani@gmail.com.
ReplyDelete