நண்பர்களே,
உஷார் : நெடும் பதிவு ahead & நெட் தின்னும் பதிவும் கூட !!!
வணக்கம். ஒரு வசீகரிக்கும் கற்பனைக்கு இன்று வயது 70 ! நிஜத்தைச் சொல்வதானால் நம் வீட்டில் யாருக்கேனும் பிறந்த நாள் என்றால் கூட இத்தனை ஆரவாரமிராது நம்முள் ! ஆனால் எங்கோ ஒரு தூர தேசத்தில், முகமறியா ஒரு மனிதர் உருவாக்கியதொரு காமிக்ஸ் நாயகருக்கு இன்றைக்கு நாமெல்லாம் (at least நம்மில் பெரும்பாலானோர்) வாயெலாம் பல்லாய்த் திரிகிறோமென்பது அந்தக் கற்பனையின் வலிமைக்கொரு testimony ! Hail TEX WILLER & the Bonelli family !! அந்தக் குடும்பத்தின் முனைப்புகள் மட்டும் வேகமெடுத்திருக்காவிடின் இன்றைக்கு நமக்கேது இந்த ரேஞ்சர் அணியின் பரிச்சயம் ?!
இத்தாலியில் கொஞ்ச காலம் முன்பாகவே டெக்ஸின் இந்த மைல்கல் தருண சிலாகிப்புகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டிருக்கிறார்கள் ! இந்த 70 ஆண்டுப் பயணம் சார்ந்த முக்கிய நினைவுகளைத் தாங்கியதொரு கண்காட்சி மிலனில் நடந்து வருகிறது ! ஒரு மொபைல் கண்காட்சியோ இத்தாலியில் தென்கோடியிலிருக்கும் ரோம் நகரத்திலிருந்து – ஒவ்வொரு பெரிய புத்தக ஸ்டோராகப் பார்த்துப் பார்த்துப் பயணித்து வருகிறது – TEX நினைவுகளையும் இதழ்களையும் சுமந்து கொண்டே! தவிர அவர்களது வலைப்பக்கத்தில்; Facebook-ல்; Instagram-ல் என சகல தளங்களிலும் அதகளம் செய்து வருகிறார்கள்! எழுபதுக்கே அந்த ரகளை எனும் போது அடுத்த மேஜர் மைல்கல்லான YEAR 75-க்கு என்னவெலாம் அதிரடிகள் காத்துள்ளனவோ ?! And அவர்கள் அணுகுண்டுகளைக் கொளுத்திப் போடும் வேளையில் நாமும் நம் சத்துக்கேற்றார் போல ஏதாச்சும் சீனி வெடியையாவது தயார் பண்ண வேண்டி வருமன்றோ? So இப்போவே 2023-க்கு துண்டு விரித்து வைக்கணுமோ ? அதுக்கோசரம் தலையை இப்போதே உருட்டத் துவங்கிடணுமோ ?
Back to the present… THE DYNAMITE SPECIAL !
மொக்கை போடாத ஒரு மொக்கை இதழாக இதை அமைத்திட வேண்டுமே என்ற ஆதங்கம் – 2017-ல் துவக்கம் கண்டு விட்டது – நடப்பாண்டின் அட்டவணையை இறுதி செய்த கணமே ! டெக்ஸின் நீ-ள-மா-ன இந்த சாகஸத்தின் முதல் துளிர் என் மண்டைக்குள் விட்டது 2016-ன் ஏதோவொரு பொழுதில் மிலனின் காமிக்ஸ் மியூசியத்தின் இந்த ஒரிஜினல் இத்தாலிய இதழ்களைப் பார்த்த கணத்தில் தான்! பிரான்கோ-பெல்ஜியப் படைப்பாளிகள் சகலருமே ரொம்பவே சீராய், இத்தனை - இத்தனை பக்கங்களில் ஆல்பங்கள்; இத்தனை ஆல்பங்கள் இணைந்ததே ஒரு மினி தொடர் ; இத்தனை சுற்றுகள் கொண்டதே ஒரு நெடுந்தொடர் – என்ற திட்டமிடலில் பக்காவாக இருப்பார்கள் ! So ஒரு புதுக்கதை பற்றியோ ; தொடரின் சுவாரஸ்ய ஆல்பங்களின் விபரங்கள் பற்றியோ தெரிந்து கொள்வது அத்தனை பெரிய பிரயத்தனமாக இருப்பதில்லை ! ஆனால் போனெல்லியில் ; அதுவும் குறிப்பாய் TEX கதைக்குவியலுள் கதையே வேறு !
- இதழ் 130-ல் துவங்கிடும் கதை அந்த இதழில் ஒரு 10 பக்கங்கள் ஓடும்…
- தொடரும் 131-ல் முழுசுமாய் தடதடக்கும்...
- அப்புறம் 132-ல் ஒரு 19 பக்கத்தில் மங்களம் போட்டிருப்பார்கள் !
So ஒரு கதையின் முழுமையையும் கண்டுபிடிக்கவே நெட்டில் உருட்ட வேண்டி வரும் ! அப்புறம் தான் அந்தக் கதை நமக்கு சுகப்படுமா ; சுமார்ப்படுமா ? என்ற அலசல்களெல்லாம் ! ஆனால் இந்தத் தலைநோவுகளுக்கெலாம் அவசியங்களின்றி – லட்டு மாதிரி ஒரிஜினல் இதழ்களையே புரட்ட முடிந்திடும் போது வேலை சுலபமோ சுலபமாகிடும் தானே ? And அது தான் நேர்ந்தது மிலனில் அந்த ஞாயிறின் மதியம் ! ‘தல‘யை கையைக் கட்டி ‘தர தர‘வென இழுத்துப் போகும் அந்த ராப்பரைப் பார்த்த பொழுதே ஜெர்க் அடித்தது – ‘என்னங்கடா பண்ணுறீங்க?‘ என்று ! புரட்டத் தொடங்கினால் கதை ஓடுது… ஓடுது… சன் டி.வி.யின் மெகாத் தொடர் நீளத்துக்கு! ஒரிஜினலான இந்த சாகஸத்தின் black & white படைப்புகளின் பக்க நீளம் 511 ! மிஞ்சிப் போனால் 330 பக்க MAXI டெக்ஸ் கதைகளே நாம் அது வரைக்கும் முயற்சித்திருந்த மெகா கதைகளெனும் போது – இது மெகாவுக்கு மம்மியான இதழாக அமைந்திடக்கூடுமென்று மனதில் பட்டது ! அந்த நொடியில் TEX 70 பற்றிய ஞானமெல்லாம் இருந்திருக்கவில்லை என்பதால் எனது டயரிக் குறிப்புகளில் இந்தக் கதை பற்றிய விபரங்களைக் குறித்துக் கொள்வதோடு நிறுத்திக் கொண்டேன் ! அன்றைக்கே – அங்கேயே உருட்டிய போது நான் எடுத்த notes-களில் தான் DYNAMITE ஸ்பெஷலின் கதை # 2 கூட இடம்பிடித்திருந்தது ! இந்த b&w சாகஸத்தின் நீளமோ 266 பக்கங்கள் ! So இதுவுமே எனது டயரிக்குள் தஞ்சமானதோடு சரி- அப்போதைக்கு!
ஓராண்டு கழிந்த நிலையில் 2017-ன் மத்தியில் – நடப்பாண்டுக்கான அட்டவணைத் தயாரிப்புக்கான வேளை புலர்ந்திருக்கையில் – “TEX 70” காத்துள்ளது என்ற அறிவிப்பு மாதா கோவில் மணியோசையைப் போல நாலாதிக்குகளிலிருந்தும் வந்து சேர்ந்திருந்தது ! So ஒரு அதிரடி ஸ்பெஷல் இதழ் வெளியிட வேண்டி வருமென்ற போதே என் டயரிக் குறிப்புகளைத் தான் புரட்டத் தோன்றியது ! 511 பக்க மெ-காாாாா சாகஸம் என் தலைக்குள் ஜிங்கு ஜிங்கென்று ஆடித் தீர்க்க – அதை வெளியிட “டைனமைட்” ஒரு சூப்பரான களமாகிடக்கூடும் என்ற எண்ணம் வலுவாகத் தொடங்கியது ! அது மட்டுமன்றி – இத்தனை பெரிய கதையை ”முழு வண்ணத்தில்” எனத் திட்டமிட்டால், அது இன்னமும் தெறிக்கச் செய்யுமே என்ற வேகமும் சேர்ந்து கொண்டது ! தொடர்ந்த நாட்களில் நெட்டில் இந்த நெடுங்கதை சார்ந்த விமர்சனங்கள்-அலசல்கள் என்று தேடத் துவங்கினேன் ! இத்தாலிய ரசிகர்கள் ஒட்டு மொத்தமாய் 'ஆஹா...ஓஹோ.." என்று சிலாகித்திருப்பதே சகல இடங்களிலும் கண்ணில் பட்டது ! அப்புறமென்ன ? விக்கிரமாதித்த மன்னரின் தாத்தாவே வந்தாலும் தலைக்குள் குடிகொண்டுவிட்டிருந்த வேதாளத்தை இறக்கிட முடியாதென்ற அளவுக்கு இந்தக் கதையோடு ஒன்றிப் போய் விட்டது மனசு !
அப்புறமும் “We want more எமோஷனல்!” என்று நீங்கள் கேட்பது போலவே எனக்குள் ஒரு பீலிங்கு! சரி… இன்னொரு taut ஆன black & white கதையையும் வால் சேர்த்து விட வேண்டியது தான் என்று தீர்மானித்தேன் ! எது? எது? எது? என்றபடிக்கே டயரியில் விரல்களை ஓடவிட்ட போது “266” என்ற பக்க நம்பரோடு நின்ற “தெற்கே ஒரு தங்கத் தேட்டை” பக்கமாய் ஹால்ட் அடித்தேன் ! இதுவுமே நெட்டில் செமத்தியாக review களை ஈட்டியிருந்தது இத்தாலிய ரசிகர்களிடம் மாத்திரமென்றில்லாது - பிரெஞ்சு வாசகர்களிடமுமே !
511 + 266 = 777 ! என்று ஏதோவொரு கூட்டணிக் கணக்கு தலைக்குள் ஓடிய மறுகணமே – “கண்டேன் மணாளனை; அதாச்சும் மணாளன் நம்பர் 2-ஐ!” என்று குஷியாகி விட்டேன்! (இதில் கொடுமை என்னவென்றால் - black & white கதையினைப் பின்னாளில் வர்ணமூட்டிய வேளையில் ஏதோ காரணத்துக்காக 4 பக்கங்களைக் குறைத்து விட்டனர் !! So வர்ண edition 507 பக்கங்களே !!) 70-வது வருட மலருக்கு ரூ.700 விலையில் 777 பக்க இதழ் என்றால் செமையாகப் பட்டது ! அடுத்த நொடியே – “நைனா… 777 என்பது சாத்தானின் நம்பர் என்பது ஒரு நம்பிக்கை ! So உஷார் !” என்றதொரு குரலும் உள்ளிருந்து கேட்டது ! அட வழக்கம் போல நமது ஹாட்லைன் ; தந்திலைன் ; புறாத்தூதுலைன் என்று எதை எதையாவது எழுதிப் போட்டால் பக்க எண்ணிக்கைகளை ஜாஸ்தியாக்கிடலாமென்ற தைரியம் இருந்ததால் டைனமைட்டின் திட்டமிடல் – சமோசாவுடனும், காபியுடனும் முடியும் பற்பல கூட்டங்களைப் போல என்னுள் இனிதே நிறைவுற்றது ! So பந்தாவாய் 2017-ன் அட்டவணையில் விளம்பரத்தையும் போட்ட கையோடு – மாமூல் பணிகளுக்குள் நுழைந்து விட்டேன்!
அந்த அட்டவணை விளம்பரத்தில் நாம் பயன்படுத்தியிருந்த அந்த டெக்ஸ் & கார்சன் எதிரெதிர் திசைகளில் துப்பாக்கிகளை முழக்கிக் கொண்டிருக்கும் ஸ்டில் ரொம்பவே impressive ஆக இருப்பதாய்த் தோன்றிட – அன்றைக்கே நமது ஓவியரைக் கூப்பிட்டு, அதையே ஒரு பெயிண்டிங்காகவும் போட்டுத் தரச் சொல்லியிருந்தேன்! அவருமே அதைச் சூட்டோடு சூட்டாய்ப் போட்டுக் கொணர – ”ஆங்… இது டைனமைட்டுக்கு” என்றபடிக்கே பத்திரப்படுத்தி விட்டேன்!
இதற்கிடையே சென்றாண்டின் நமது “Early Bird” பேட்ஜ் தயாரிக்க வேண்டியிருந்த போது அதற்கானதொரு படத்தைத் தேடி நெட்டை உருட்டிய சமயம் இன்னொரு ஸ்டில் சிக்கியது ! டெக்ஸ் நிலவொளியில் நடந்து வர, அவரது தலைக்கு மேலாயொரு இரவுக் கழுகு ! பேட்ஜாக அதைச் செய்யச் சொன்ன சமயமே, 'இதுவுமே கூட டைனமைட்டின் அட்டைக்கு நல்லா வருமே?' என்ற எண்ணம் எழுந்தது! மறுக்கா – ஓவியர் – மறுக்கா இன்னொரு TEX ஓவியம் – மறுக்கா உள்ளே வைத்துப் பத்திரப்படுத்துதல் என்ற routine தொடர்ந்திட – “ஒன்றுக்கு இரண்டாய் ராப்பர் டிசைன்கள் ரெடி; So டைனமைட் இதழின் தயாரிப்பு டைமில் அட்டைப்படம் சார்ந்த பிடுங்கல்கள் எழாது !" என்று தைரியமாகத் திரிந்தேன்!
2018-ம் புலர்ந்து – துவக்க மாதங்களும் தடதடத்து, ஒரு மாதிரியாய் ஏப்ரலில் நிலைகொண்ட போது தான் வயிற்றுக்குள் ஒரு இனம்புரியா பீதி படரத் தொடங்கியது ! பந்தாவாய் “இரத்தப் படலம் தொகுப்பு + டைனமைட் ஸ்பெஷல் – என 2 மெகா இதழ்களுமே ஈரோட்டில் ரிலீஸ்!” என்று நான் அறிவித்திருந்தது எத்தனை பெரிய குடாக்குத்தனம் என்ற புரிதல் கொணர்ந்த பீதி அது ! 852 பக்கங்கள் – மூன்று ஆல்பங்களாய் இரத்தப்படலத்துக்கு ; 778 + பக்கங்கள் டைனமைட்டுக்கு எனும் போது – 1620 மொத்தப் பக்கங்கள் ஆகஸ்டுக்கு அவசியமாகிடும் என்ற கணக்கைப் போட்டுப் பார்க்கப் பார்க்க, வியர்க்கத் தொடங்கியது ! And மாமூலான பணிகளுக்கு இடையே இந்த ஸ்பெஷல் இதழ்களும் இணைத்தடத்தில் travel ஆகிட வேண்டியதிருக்கும் எனும் போது – என் முன்னே எஞ்சியிருந்த 4 மாத அவகாசம் செம துக்கடாவாய்த் தோன்றியது! ”மீசையிலே மண் ஒட்டுமே என்று பார்த்தாக்கா – முகரையே இரத்தக்களரியாகிடும் தம்பீ!” என்று லாஜிக் முன்வைத்த எச்சரிக்கையை உதாசீனப்படுத்த இயலவில்லை ! ”ஆங்… ஆகஸ்ட் லட்சியம்; இல்லாங்காட்டி ‘தல‘ பிறந்த நாளுக்கு முன்பாய் நிச்சயம்” என்று டைனமைட்டை அக்டோபருக்கு ஜகா வாங்கியது அதன் பிற்பாடே ! மேற்கொண்டு 2 முழு மாதங்கள் கிடைக்கின்றன என்ற போதே – காற்று வாங்கப் போயிருந்த தைரியமானது வீடு திரும்பியது ! ”முடிச்சுக்கிடலாம்… முடிச்சுக்கிடலாம்!” என்றபடிக்கே நாய் சேகரின் முறைப்போடு ஒரு பஞ்சுமிட்டாய் கோட் போட்டுக் கொண்டு ”இரத்தப் படலத்துக்கும்”; ஈரோட்டுக்கும் தயாராகத் தொடங்கினேன்!
ஆகஸ்டும் புலர்ந்திட… இரத்தப் படலமும் மலர்ந்திட… ஈரோடும் களைகட்டிட – ‘கடவுள் இருக்காரு குமாரு!‘ என்றபடிக்கே ஊர் திரும்பினேன் குஷியாய் ! ஆனால் அப்போதே வேறு மாதிரியான சில பயங்கள் இலவச இணைப்புகளாய் தோளில் தொற்றிக் கொண்டிருந்தன! இரத்தப் படலமும், அதன் making-ம் ஆண்டவன் புண்ணியத்தில் அழகாய் அமைந்து போயிருக்க – தொடரும் ஒவ்வொரு ஸ்பெஷல் இதழுமே இனிமேற்கொண்டு “இ.ப.”வின் அளவுகோல்களோடே எடை போடப்படுமே – அதற்கான தொடர் நியாயங்கள் செய்திட நமக்கு சாத்தியமாகிட வேண்டுமே ?!” என்பது Mr.பயம் # 1 ! அவருக்கு அடுத்தபடியாக நின்ற மிஸ்டர் பயம் # 2 – எனக்குள் குடிபுகுந்திருந்ததொரு சன்னமான flatness !
"வீட்டில் விசேஷம் வருது… சொந்தக்காரர்களுக்குச் சொல்லணும்… சமையலுக்கு ஏற்பாடு பண்ணனும்…துணிமணி வாங்கணும்...வர்றவங்களுக்கு தங்குற ஏற்பாடு செய்யணும் ” என்று அலுத்துக் கொண்டே பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்று வந்திருப்போம் ; பரபரவென சில பல மாதங்கள் அலைந்திருப்போம் ! அந்த முக்கிய நாளும் புலர்ந்து, எல்லாமே அமர்களமாய் நடந்தும் விட்டிருக்கும் ! 'இது சரியாக வருமா ? அதை ஞாபகமாய்ச் செய்திருப்போமா ? இதைக் கோட்டை விட்டிருப்போமோ ?' என்றெல்லாம் அடிமனசுக்குள் பதட்டத்தைக் கிளப்பியிருந்த அத்தனை சமாச்சாரங்களுமே - துளிகூட தலைகாட்டாது - எல்லாமே வழுக்கிக் கொண்டே smooth-ஆக ஓடியிருக்க, சந்தோஷமாய் சொந்த-பந்தகளெல்லாம் விடைபெற்ற பிற்பாடு – “ஷப்பா… எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சிடுத்து!” என்றபடிக்கு காலியான வீட்டின் கூடத்தில் அமர்ந்திருப்போம் ! மனதில் ஒரு திருப்தி வியாபித்திருப்பதை உணரும் நொடியிலேயே ஒரு மெலிதான வெறுமையும் கைகோர்த்திருப்பதைப் புரிந்திட முடியும் ! ”அந்த நாள் வந்தும் விட்டது… போயும் விட்டது !” எனும் போது – வீட்டில் தெரியும் வெறுமை, மனதிலும் பிரதிபலிப்பதை உணர முடியும் ! இனி மறுக்கா இப்படியொரு சந்தோஷம் சாத்தியமாகிடுமோ ? என்ற மௌனமான குழந்தைத்தனமான ஏக்கத்தை சொல்லவும் முடியாது ; விழுங்கவும் தெரியாது – மந்தமானதொரு சிரிப்போடு – all is well என்பதாகச் சுற்றி வருவோமல்லவா ? அதே syndrome தான் எனக்குள்ளும் – இரத்தப் படலம் & ஈரோடு என்ற உச்சங்களின் பிற்பாடு ! சத்தியமாய் இரண்டுமே அத்தனை சிறப்பாய் அமைந்தது எங்களது எந்தவொரு பெரிய திட்டமிடலின் காரணத்தினாலுமல்ல ! எல்லாமே தாமாய் அதனதன் இடங்களில் விழுந்து வைக்க, ஒட்டுமொத்தமாய் முன்னே நின்று கொண்டு ‘ரைட்… ரைட்!' என்று குரல் தருவது மட்டுமே எனது பொறுப்பாக இருந்து வந்தது. So எதிர்பாராது கிடைத்த எக்ஸ்ட்ரா சந்தோஷம் சேர்ந்து கொண்ட போது – ”அடுத்த மெகா இதழும் இதே போல அழகானதாய் அமையாது போயின் ஏமாற்றங்களின் பரிமாணம் கூடிப் போய் விடுமே ?” என்ற பயத்தோடு, எனது இனம்புரியா வெறுமையும் சேர்ந்து கொள்ள, டைனமைட்டுக்கு நிரம்பவே starting troubles !
And எப்போதுமே இது போன்ற 300… 400… 500 பக்கங்களது கதைகளெனில் – ‘மொத்தமாய் பார்த்துக்கலாம்‘ என்றே பொழுதை ஓட்டிவிடுவதில் நான் கில்லாடி! நம்மவர்களும் தடதடவென டைப்செட்டிங் பணிகளை 100-100 பக்கங்களாய் முடித்து, என் மேஜையில் அடுக்கித் தள்ள – ரொம்பச் சீக்கிரமே 800 பக்கக் குவியல் என்னை மிரட்டலாகவே முறைக்கத் துவங்கியது ! ஒரு நெடுங்கதையை எடிட் செய்யும் போது – நீண்ட இடைவெளிகள் இருத்தல் என்றைக்குமே சரிப்படாது ! கதாப்பாத்திரங்களுக்குள்ளேயான பேச்சு முறைகள் ; இந்தாளை ‘வாங்க... போங்க‘ என்று குறிப்பிட்டோமா ? ‘வா-போ‘ என்று எழுதியிருந்தோமா ? போன்ற சங்கதிகள் மறந்து விட்டால் – 'ஏக் தம்'மில் கதை படிக்கும் உங்களுக்குக் கடுப்பாகிப் போகும் ! So தொடர்ச்சி விட்டுப் போகாதிருக்க வேண்டுமெனில், பிட்டத்துக்குக் குளிர பெவிகால் தடவிக் கொண்டாக வேண்டுமென்பது புரிந்தது ! ஆனால் அநியாயத்துக்கு ஆகஸ்டிலும், செப்டம்பரிலும் தான் நமது மற்ற தொழில்களின் நிமித்தம் வேலைகள் சூடுபிடிக்கத் துவங்கின ! உள்ளூரிலும், வெளியூரிலும் சுற்று ; இதர பணிகள் சார்ந்த தேடல்கள் என்று நாட்கள் tight ஆக ஓடிட, “டைனமைட்… டைனமைட்…” என்று துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கைகள் போலான signals மனதில் ஓடிக் கொண்டே இருந்தன!
குட்டி போட்ட பூனை போகுமிடத்துக்கெல்லாம் குட்டிகளையும் கவ்விக் கொண்டே போவது போல, நேரம் கிடைக்கிறதோ – இல்லையோ ; பணியாற்ற முடியுமோ - இல்லையோ ; போகிற ஊருக்கெல்லாம் டைனமைட்டின் பக்கங்களும் என்னோடே பயணமாயின! பெரும்பாலும் இது போன்ற “மொடாங்குப் பணிகளை” வீட்டிலோ – ஆபீஸிலோ வைத்துப் பார்ப்பது தான் தேவலாம் ; On the road இவற்றினுள் புகுவது சுலபமேயல்ல என்பதெல்லாம் தெரிந்திருந்தாலும் – ஆர்வக் கோளாறு எங்கே விட்டு வைக்கிறது ?! பெங்களூருக்கும், சென்னைக்கும், சான் பிரான்சிஸ்கோவுக்கும் ‘தல‘ என்னோடு ‘வித்-அவுட்‘ பயணியாகச் சுற்றி வந்தது தான் மிச்சம் ! இனியும் தாமதித்தால் டைனமைட் மூஞ்சோடு தெறித்து விடும் என்ற நிலை எழுந்த போது வரிந்து கட்டிக் கொண்டு ராக்கூத்துக்களைத் துவங்கினேன் ! வழக்கம் போல கூர்க்காவின் விசில் சத்தமே அடுத்த 10 நாட்களுக்குத் தாலாட்டாகிப் போக – 777+ பக்கங்களும் என் மேஜையிலிருந்து மறுக்கா நமது DTP டீமின் தோளில் தொற்றிக் கொண்டன – திருத்தங்களைச் செய்து ; டமால் – டுமீல்களை இணைத்து ; அச்சுக்குத் தயாராக்கித் தரும் பொருட்டு ! பேப்பர் விலைகள் விண்ணைத் தொடத் துவங்கிய முதல் நாளே, நமது வழக்கமான பேப்பர் சப்ளையரைக் கையைக் காலைப் பிடித்து, பேப்பர் வாங்கிப் போட்டுவிட்டிருந்தபடியால் – சுடச் சுட அச்சும் சுபமாய் முடிந்தது ! And as always ‘தல‘ - மஞ்சள் மையை மட்டும் பாயாசம் குடிப்பது போல உறிஞ்சித் தள்ளியதன் பலனாய் தகதகக்கத் தொடங்கியிருந்தார் ! All is well என்றபடிக்கே – எஞ்சியிருந்த அட்டைப்படப் பணிகள் பக்கமாய் கவனத்தைத் திருப்பினேன் ! கைவசம் ஒன்றல்ல – இரண்டு பெயிண்டிங்குகள் தயார் எனும் போது சும்மா லாத்தலாய் வேலைகள் ஆகிவிடுமென்ற எண்ணத்தில் – உள்ளே துயின்று கொண்டிருந்த 2 படங்களையும் எடுத்து வரச் செய்தேன் !
இரண்டையும் சாவகாசமாய் எடுத்துப் பார்த்தால் – லைட்டாக ‘ஜெர்க்‘ அடித்தது ! டெக்ஸ் & கார்சன் எதிரெதிர் பெயிண்டிங் ஒரிஜினலை அப்பயே ஈயடிச்சான் காப்பியாகப் பிரமாதமாய் அமைந்திருந்த போதிலும் – 2 குறைகள் என் கண்ணுக்கு (தாமதமாய்) தெரிந்தன ! பெயிண்டிங் போடப்பட்டதோ ஓராண்டுக்கு முன்பாக எனும் போது – அப்போதே நமது ஆந்தை விழிகள் கலைக் கண்ணோட்டத்தோடு நோக்கியிருப்பின் – திருத்தங்களைச் சாவகாசமாகச் செய்திருக்க முடிந்திருக்குமே என்று உறைத்தது ! டெக்ஸ் கண்களை இறுக மூடிக் கொண்டு, பட்டாசுச் சத்தத்துக்குப் பயந்து போய் பல்லை இறுக்கிக் கடித்துக் கொண்டு நிற்பது போலப்பட்டது ! அப்புறம் ‘தல‘யின் தலையில் தொப்பியும் நஹி ! இரண்டையுமே அவசரமாய் சரி செய்தாக வேண்டுமே என்று நமது ஓவியரை வரவழைத்து – திருத்தங்கள் குறித்து விளக்கினேன். இப்போதெல்லாமே அவருக்கும் மூப்பின் தாக்கங்கள் தெரியத் துவங்கியிருப்பதால் – இது போன்ற நுணுக்கமான பணிகளைச் செய்திடச் சிரமப்பட்டு வருவதைக் கவனிக்க முடிகிறது ! So கொஞ்சம் தயக்கத்துக்குப் பிற்பாடே - மூடிக் கிடந்த டெக்ஸின் கண்களைத் திறக்கும் முயற்சி துவங்கியது ! முதல் நாளின் பணிகளுக்குப் பின்னே பார்த்தால் – அம்மா கவனிக்காத நேரமாய் அடுப்பங்கரையிலிருந்து தீபாவளிப் பலகாரத்தை ஆட்டையைப் போடும் போது ஒரு திருட்டு முழி முழித்திருப்போமே – அச்சு அசலாய் அதே ஜாடையில் தான் டெக்ஸ் நின்றிருந்தார் ! 'ஊஹும்… இது சரியில்லை; மறுபடியும் திருத்தம் ப்ளீஸ் !' என்று பணிக்க – மறு நாளோ குமரிமுத்துவின் ராஜபார்வையோடு நம்மவர் சுட்டுக் கொண்டிருந்தார் ! ஏற்கனவே அதே நேரத்தில் தான் மாடஸ்டியின் அட்டைப்படப் பஞ்சாயத்தும் இங்கே பதிவில் ஓடிக் கொண்டிருக்க – “ஆத்தாடியோவ்! இந்த அழகில் டெக்ஸை உங்கள் முன்னே நிறுத்தினால் – Ola-வைப் பிடித்து உருட்டுக்கட்டைகளோடு கிளம்பிவிடுவீர்களென்ற பயம் தெறிக்க வைத்தது ! மறுபடியும் திருத்தம் சொன்ன போது ஓவியருக்கே கை உதறத் துவங்கி விட்டது ! சரி, இதற்கு மேலும் பாவப்பட்ட மனுஷனை இம்சிக்க வேண்டாமென்று தோன்ற – எனக்கு நானே சால்ஜாப்பு சொல்லிக் கொண்டேன் ! ”ஆங்… என்னயிருந்தாலும் இந்தப் படத்தை குட்டியாகவேணும் 2018 அட்டவணையில் ஏற்கனவே போட்டு விட்டோம் ! இதையே இப்போது டைனமைட்டின் ராப்பராகவும் போட்டால், ஒரு பழைய feel தான் மேலோங்கும் ! So இந்தப் புளிக்கும் பழம் வேண்டாமே !” என்று நினைத்துக் கொண்டேன்!
பெயிண்டிங் # 2-ஐ கையிலெடுத்துப் பார்த்தால், அதிலுமே லேசாய் டெக்ஸின் கண்கள் இடுங்கிக் கிடப்பது போல் பட்டது ! கன்னங்களும் லேசாய் அதைப்பாய் இருப்பது போலத் தோன்ற – மேலோட்டமாய் மட்டும் அவற்றை சரி செய்யச் சொன்னேன் ! அதைச் செய்தான கையோடு – அட்டைப்படத்துக்கான எழுத்துக்களைப் பதித்து தயாராக்கிப் பார்க்கும் முஸ்தீபுகளில் இறங்கினாம். வழக்கமாய் இது போன்ற ஸ்பெஷல் இதழ்களின் ராப்பர்களை நமது டிசைனர் பொன்னனிடம் ஒப்படைப்பதே வழக்கம் ; ஆனால் இம்முறையோ மனஷன் ஜவ்வாய் இழுத்தடிக்க, உள்ளேயே அடியேனின் மேற்பார்வையில் சிறப்பாய் ஆணிகளைப் பிடுங்கிவிடலாமென தயாரானோம் ! ஆனால் எனக்கும் ; இந்த டிசைனிங் மெருகேற்றல்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்பது இன்னொரு தபா நிரூபணமானது ! ”ஆங்… இங்கே சிவப்பாக்குங்க… அங்கே பச்சையாக்குங்க!” என்று சரமாரியாய் நான் பிராணனை வாங்கிட – பலனாகக் கிட்டிய டிசைன்களைப் பார்க்க எனக்கே சகிக்கவில்லை ! Here's a sample....!
இதற்கே செப்டம்பர் முதல் வாரமாகியிருக்க, உள்ளுக்குள் உடுக்கை அடிக்கத் துவங்கியிருந்தது ! அதற்குள்ளாக பொன்னனும் ஒரு டிசைனை அனுப்பியிருக்க – தேவலாமே?! என்றுபட்டது! அவசரம் அவசரமாய் அதையொரு பிரிண்ட் போட்டுப் பார்த்தால் ‘திரு திரு‘வென முழிக்கத் தான் தோன்றியது ! ராப்பராக்கிப் பார்க்கும் போது ஒரு களையே இல்லாமல் ரொம்பவே மீடியமாய்த் தான் தோன்றியது ! அவசரம் அவசரமாய் பின்னணி கலரை மாற்றிப் பார்ப்போம் ; எழுத்துக்களை அமைக்கும் இடங்களை மாற்றிப் பார்ப்போம் என்று ஏதேதோ செய்தும் பருப்பு வேகக் காணோம் ! இதோ அந்தத் தருணத்து பணிகள் :
மேலோட்டமாய்ப் பார்க்கையில் இவையெல்லாமே மோசமில்லை என்று தோன்றினாலும், அந்தக் காலத்து போட்டோ ஸ்டூடியோக்களின் வாசல்களில் குடையை ஊன்றிக் கொண்டு தாத்தாக்கள் ஸ்டைலாக இது போல் போஸ் கொடுத்து நிற்கும் படங்களை தொங்க விட்டிருப்பதே எனக்கு நினைவுக்கு வந்தது !! குடைக்குப் பதிலாய் இங்கே ரைபிள் !! பதட்டத்தில் உதறத் தொடங்க – அட… இத்தாலியில் ஓவியர் இருக்கிறாரே – அவரை அவசரமாய் ஒரு custom made ராப்பராத் தயாரிக்கச் சொல்லிக் கேட்போமே ! என்றபடிக்கு அவரை நாடினோம் ! அவர் மின்னல் வேகக்காரர் என்பதால் நாலே நாட்களில் ஒரு டிசைனைத் தயாரித்திடக் கூடியவர் என்ற தெம்பு பிறந்தது. கதையிலிருந்து வரும் அந்த கைதுப் படல சித்திரத்தையும் அட்டையில் incorporate செய்து ராப்பர் உருவாக்குமாறு அவருக்கான reference-களை மெயிலில் அனுப்பினோம்! அவரும் பிரமாதமானதொரு பென்சில் ஸ்கெட்சை மறுதினமே தயாராக்கி விட்டார் ! Here it is !!
“சூப்பரப்பு… சூப்பரப்பு” என்று thumbs up தந்திட – தொடர்ந்த மூன்றாவது நாளில் கலர் செய்து டிசைனையும் அனுப்பி விட்டிருந்தார் ! ஆர்வத்தோடு மின்னஞ்சலைத் திறந்தால் – நவீன பாணியிலான கலரிங் செய்திருப்பதைப் பார்த்துப் பேந்தப் பேந்தத் தான் முழிக்க முடிந்தது! ரொம்பவே அடர் வர்ணங்கள் என்றிருக்க – நிச்சயமாய் இதனை முன்னட்டைக்குப் பயன்படுத்த முடியாதென்றேபட்டது !
தலையைப் பிய்க்காத குறையாக அதனிலும் ஏதேனும் வர்ண மாற்றங்கள் செய்த முடிகிறதா ? என்று முயற்சிக்கத் துவங்கினோம் ! ஆனால் இதில் திருத்தங்களை டிஜிட்டலாக் செய்ய முற்படும் நேரத்திற்கு – புதிதாகவே ஒரு டிசைனைப் போட்டு விடலாமே என்றும் ஞானோதயம் உதிக்க – இம்முறை கொஞ்சம் தெளிவான விபரங்களோடு இத்தாலிய ஓவியருக்கு yet another அவசர டிசைனுக்குக் கோரிக்கை வைத்தோம் ! துளி கூடத் தயங்காது அவர் இம்முறையும் மின்னலாய்ச் செயல்பட்டு ஒரு டிசைனைப் பூர்த்தி செய்து அனுப்பினார் ! தனது முந்தைய டிசைனில் நமக்கு அவ்வளவாய் திருப்தி இல்லை என்பதாலேயே அடித்துப் பிடித்து இன்னொரு படம் கோருகிறோம் என்பதைப் புரிந்து கொண்டாரோ என்னவோ – ‘அவசியமாகும் மாற்றங்களைக் குறித்து மின்னஞ்சலில் விளக்குங்கள்; உடனே செய்து தருகிறேன்‘ என்றும் குறிப்பு அனுப்பியிருந்தார் ! நமக்குத் தான் வாலை மட்டுமேனும் உள்ளே விட்டுப் பார்க்கும் அளவுக்குக் கதவு திறந்திருப்பின் – பரங்கிக்காய் மண்டையையே நுழைத்துப் பார்க்கும் பேராசை உண்டாச்சே ?! “இன்ன-இன்ன திருத்தங்கள் பளீஸ்!” என்று கோரினோம் ! அவையும் ஏக் தம்மில் முடிந்து வந்த பிற்பாடு பிரிண்ட் அவுட் போட்டு மேஜையில் போட்டுக் கொண்டேன்.
அந்தக் காலங்களில் டைரக்டர் / நடிகர் விசு அவர்களின் மூத்த சகோதரர் (பெயர் ராஜாமணி என்று நினைக்கிறேன் ) நாடகங்களிலும், அப்புறமாய் விசு அவர்களின் படங்களிலும் மட்டுமே நடிப்பார். ஆந்தை விழிகள்; கழுத்தை வான்கோழி போல ‘திருக்‘ ‘திருக்‘கென்று திருப்பும் mannerism என்று வலம் வருவார்…! அவரைப் போலவே நானும் கழுத்தை இப்டிக்கா… அப்டிக்கா என்று திருப்போ திருப்பென்று திருப்பி டிசைனின் நிறை / குறைகளைப் பரிசீலிக்க முயன்றேன்! நான் அடிக்கும் கூத்துக்களையெல்லாம் கிட்டேயிருந்து பார்த்து வரும் மைதீன் சிரிப்பை எப்படி அடக்குவானோ தெரியாது – ஆனால் புதுசாய் யாரேனும் அன்றைக்கு என்னைப் பார்த்திருந்தால் புள்ளையாண்டான் மோனாலிசா ரேஞ்சுக்கான பெயிண்டிங்குகளை மதிப்பீடு செய்யும் நிபுணர் போலும் என்று நினைத்திருப்பார்கள்! என் முன்னே அப்போதிருந்த படங்கள் இவையே !!
எல்லாம் ஓ.கே. ஆனால் வர்ணங்கள் இன்னும் சித்தே வித்தியாசமாய் இருந்தால் தேவலாமோ ? என்ற எண்ணம் தலைதூக்கியது ! விடாதே… பிடி… என்று பொன்னனை மறுபடியும் கதவைத் தட்டி – கலர் மாற்றம் செய்யக் கோரினோம் !
அன்றிரவு வீட்டுக்குப் போனால் தூக்கமே பிடிக்கவில்லை! தேதி 18 ஆகியிருந்தது ! உட்பக்க அச்சு முடிந்து ; பைண்டிங்கில் ராப்பருக்காக வெயிட்டிங் என்ற நினைப்பு குடைந்து எடுத்தது. நடுராத்திரியில் – ‘ஊஹும்… கலர் மாற்றத்திலும் முழுசாய் திருப்தி ஏற்படாது போனால் – அவசர மாற்றத்துக்கென என்ன செய்வது ?‘ என்ற பயம் தொற்றிக் கொண்டது ! அப்போது தான் டெக்ஸின் தீபாவளி மலருக்கென போட்டிருந்த 2 டிசைன்களுள் ஒன்று நினைவுக்கு வந்தது ! அதில் ஒரு கோடியில் டைகர் ஜாக் செம காண்டாக போஸ் கொடுத்துக் கொண்டிருப்பார் கையிலாரு கத்தியோடு ! அந்த டிசைனை எடுத்துக் கொண்டு; டைகருக்குக் கல்தா தந்து விடலாமென்று ராவில் மகாசிந்தனை எழ – காலையில் முதல் வேலையாக அதை ஸ்கேன் செய்து "டைனமைட்டின் ராப்பர் இது தான் !" என்று சொல்லி வைத்தேன் ! நல்ல நாளைக்கே நமக்கு மறையில் இறுக்கம் கம்மி என்பது தெரிந்தவர்களே நம்மாட்கள் என்பதால் – சத்தமேயின்றி அந்த டிசைனையும் பிராசஸ் செய்தார்கள் ! மாலையப்பனின் அந்த டிசைனுமே Tex-ன் ஒரிஜினல் கவரின் வார்ப்பு என்பதால் ஈயடிச்சான் காப்பியாகவே அமைந்திருந்தது – முகத்தில் மட்டும் லேசான தேஜஸ் குறைந்து ! அதையே முறைத்துப் பார்த்தவனுக்கு ‘பளிச்‘சென்று இத்தாலிய ஓவியரின் முதல் டிசைனின் முகமும் அதே ஆங்கிளில் இருப்பது நினைவுக்கு வந்தது ! So “மாப்பிள்ளை இவர் தான்; ஆனாக்கா அவர் போட்டிருக்கும் சட்டை அவரோடது இல்லை” என்ற கதையாக – இத்தாலிய மண்டையை இந்திய ஓவிய உடலோடு இணைக்கும் ராஜதந்திரத்தைச் செய்து முடித்தோம் ! அப்புறம் அதிலும் டைனமைட் எழுத்துக்களைக் கோர்த்து சின்னச் சின்ன நகாசு வேலைகளை டிசைனர் பொன்னனைக் கொண்டு செய்து முடித்த போது தேதி செப்டம்பர் 21 ! இதோ - அந்த முயற்சியின் பலன்கள் !! முதல் படம் - நம் ஓவியரின் TEX முகத்தோடு ! தொடரும் படம் - இரவல் முகத்தோடு !
அதற்கிடையே செம குளிர்ச்சியாய் ஒரு பிஸ்தா பச்சையோடு பொன்னன் அந்த இரண்டாவது இத்தாலிய ராப்பரையும் மெருகூட்டியிருக்க - நானோ ‘சேது‘ சீயான விக்ரம் பாணியில் தானிருந்தேன்! “ஆங்… இத்தாலிலே மாலையப்பன்; டெக்ஸ் கூட பொன்னன் ; ‘தல‘யோட தலையை காணோம் ? பச்சை தான் எனக்குப் புடிச்ச கலரு” என்று என்னென்னவோ கலவைகள் தலைக்குள் சடுகுடு ஆடின ! இறுதியாக 2 டிசைன்களையுமே பிரிண்ட் போட்டு “மேஜையில் வைத்து ஒப்பிட்ட போது தான் சன்னம் சன்னமாய் பிராணன் திரும்பியது!
இரண்டில் ஒன்று நிச்சயம் தேறிவிடுமென்ற நம்பிக்கை எழுந்த சமயம் தேதியோ Sept 22 ! 'பளிச்' பச்சையில் டெக்ஸ் மந்தகாசமாய் புன்னகைக்கும் ராப்பரா ? அடர் சிகப்பில் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு நிற்கும் ராப்பரா ? என்ற கேள்வி மட்டுமே முன்நின்றது !
பச்சையில் டெக்ஸின் கண்களைப் பார்க்கப் பார்க்க, ஓவியரின் ஆற்றலைக் கண்டு வியக்காதிருக்க முடியவில்லை எனக்கு ! வழக்கமான அடிதடி பாணி டிசைனல்ல என்பது புரிந்தது ; “டைனமைட்“ என்ற அதிர்வேட்டுப் பெயருக்கு ‘தல‘யின் soft still சுகப்படுமா ? என்ற கேள்வியும் இருந்தது தான் ! நீங்களுமே இதை எவ்விதம் எடுத்துக் கொள்வீர்களென்ற பயமும் இருந்தது ! ஆனால் – ஆண்டு # 70 என்னுமொரு முக்கிய தருணத்தில் THE BIG MAN மட்டுமே ஒளிவட்டத்தில் பிரதானமாய் இருந்திட வேண்டுமென்று எனக்குள்பட்டது ! தவிர இதுவரையிலும் நாம் முயற்சித்தே இராத இந்த வர்ணக் கலவையையும் ; டெக்ஸின் வசீகரம் செய்யும் அந்தக் கண்களையும் பார்க்க எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது ! Truth to tell – இது வரையிலும் எந்தவொரு ராப்பரிலும் டெக்ஸை நாம் இத்தனை உயிரோட்டத்தோடு சித்தரித்ததில்லை எனும் போது – இந்த மெகா இதழில் அகஸ்மாத்தாய் கிட்டியிருந்த வாய்ப்பை நழுவ விட மனது ஒப்பவில்லை ! Come what may - சாத்துக்களோ ; ஏச்சுக்களோ – இந்த டெக்ஸ் வசீகரத்துக்காக வாங்கிக் கொள்ளலாமென்று தீர்மானித்த போது தேதி செப்டம்பர் 23 !
பார்சல்களை உங்கள் கைகளில் ஒப்படைக்க நான்கே நாட்கள் பாக்கி என்ற போது – தொடர்ந்த அத்தனை பணிகளுமே மின்னலை நாணம் கொள்ளச் செய்யும் வேகத்தில் அரங்கேறின ! பிராசஸிங்… பிரிண்டிங்… நகாசு வேலைகள்… பைண்டிங் என அத்தனையும் அடுத்த நாலே நாட்களில் தயாராகிட – பேக்கிங் செய்யத் தயாராகயிருந்தார்கள் நம்மாட்கள்!
உப்ப்ப்…Just miss !! என்ற பெருமூச்சோடு மதியம் வீட்டுக்குக் கிளம்பத் தயாரான போது தான் “ஸ்வீட் எடு… கொண்டாடு” என்று உதித்தது மண்டைக்குள் ! "இஷ்டாப்… டப்பாக்களை அடைத்து விடாதீர்கள்… ஒரு சாக்லெட் வைத்தாக வேண்டும் !" என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன். இப்போதெல்லாம் நான் வேட்டியோடு ஆபீஸுக்கு வந்து சேர்ந்து, அதை மடித்துக் கட்டிக் கொண்டு ஒரு குத்தைப் போட்டாலுமே நம்மாட்கள் புருவங்களைக் கூட உயர்த்தப் போவதில்லை! அந்தளவுக்கு அவர்கள் அத்தனை பேருக்குமே எனது குரங்குக் கூத்துக்கள் பரிச்சயமாகிப் போய் விட்டன ! So அவசரம் அவசரமாய் ஒரு சாக்லெட் டப்பாவை வாங்கி வந்து, அவற்றையும் உள்ளே சேர்த்து பேக் செய்யத் தொடங்கினார்கள் ! வீட்டுக்குப் போய் சோற்றில் கைவைத்த நொடியே தலைக்குள் இன்னொரு பீதி அலாரம் அடித்தது ! குண்டு புக்… செம கனம்… சாக்லெட்டை நசுக்கித் தொலைத்து விட்டால் - புக் சகலமும் சாக்லெட் கோட்டிங் போட்டது போலாகி விட்டால், அதைச் சுத்தம் செய்ய சர்ஃப் தேவைப்படுமோ இல்லையோ – என்னைக் குமுறியெடுக்க வண்டி வண்டியாய் சர்ஃப் / ஏரியல் தேவைப்படுமென்று புரிந்தது ! மறுநொடியே ஆபீஸுக்கு ஓடிப் போய் – 'ஒரு கண்ணாடிக் கவருக்குள்ளே சாக்லெட் & card-ஐ வைத்த பிற்பாடு, அப்புறமாய் பேக்கிங் பண்ணுங்க ; சாக்லெட் நசுங்கி பிதுங்கினாலும் கவருக்குள்ளேயே கிடக்கட்டும் ! என்ற மறுகணமே கச்சிதமாய் அந்த சைஸுக்கான பாலிதீன் கவரைப் பிடித்துக் கொணர்ந்தான் மைதீன் ! அதன் பின்னே நடந்ததெல்லாம் தான் உங்களுக்குத் தெரியுமே !!
So thus ends the tale of a cover !! இந்த தபா ராப்பரை உங்கள் கண்ணில் காட்டாதே டகுல்பாஜி வேலைகளோடு நாட்களை நகர்த்தியதன் பின்னணியும் இதுவே ! அது மாத்திரமன்றி – புக்கின் கம்பீரத்தோடு இந்த டிசைன் இணைந்தே உங்களை எட்டிப் பிடித்தால் தேவலாம் என்றும் நினைத்தேன் ! இந்த பாணி ராப்பரில் உங்களுள் நூற்றுக்கு நூறு ஏற்பு இருக்குமென்ற கற்பனையில் நான் மிதந்திடவில்லை ! நிச்சயமாய் ‘ஙே‘ என்ற குரல்களும் இருந்திடத்தான் செய்யுமென்று யூகித்ததால் – முன்கூட்டியே ராப்பரை மட்டுமே இங்கே களமிறக்குவது உசிதமென்று நினைக்கவில்லை !
இப்போதும் – “இத்தனை கூத்தடிச்சு இதைத் தான் தயார் பண்ணினாயாக்கும்?” என்ற சில பல நண்பர்கள் அபிப்ராயப்படப் போவது உறுதி ! "இதுக்குப் பதிலா - அது தேவலாம் ; அதுக்குப் பதிலா மூணாவது பரவால்லே !!" என்ற அபிப்பிராயங்களும் இருக்கக்கூடுமென்றும் புரிகிறது ! ஆனால் அந்தக் கண்களின் வசீகரம் won the day for me என்பதே bottomline !! இந்த உருவாக்கத்தின் பின்னணியை ; இதனை நான் பிடிவாதமாய்த் தேர்வு செய்ததன் காரணத்தையும் சொல்லி விட்டால், என்னளவுக்கு இலகுவாய் உணருவேன் என்பாலேயே இந்த ஒப்பித்தல் படலம் ! தவிர, அந்த முகத்தையும், கண்களையும் தொடர்ந்து பார்த்திடுவோர் லயித்திடாது போக மாட்டார்களென்ற நம்பிக்கையும் என்னுள் ! அந்த எண்ணத்தோடே புறப்படுகிறேன் guys ! மதியிலா மந்திரியாரும், ஜெரெமியாவும் காத்துள்ளனர் எனது வாரயிறுதியை சுவாரஸ்யமாக்கிட !
A small note too before I sign off : இந்த நெடும் பதிவு நிச்சயமாயொரு பீப்பீ smurf-ன் பீற்றல் படலம் அல்ல ! In fact - இத்தனை காலம் குப்பை கொட்டியும் ஒரு முக்கிய இதழின் ராப்பருக்கு இத்தனை அல்லலா ? என்ற கேள்வி எழும் போது நானொரு பேக்கு போல் காட்சி தருவேனென்பதும் புரிகிறது ! But ஒவ்வொரு மாதமும் நாம் அடிக்கும் கூத்துக்களை நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதாலேயே இந்த behind the scenes story !
Bye all! அக்டோபர் இதழ்களை தொடர்ந்து அலசிடுங்களேன் ப்ளீஸ் ! And HAPPY BIRTHDAY TEX ! We love you !
P.S : ஆன்லைனில் அக்டோபர் இதழ்களுக்கு ஆர்டர் செய்திட இங்கே க்ளிக் ப்ளீஸ் : http://lioncomics.in/monthly-packs/539-october-2018-pack.html