நண்பர்களே,
வணக்கம். சிரிக்கிறேன்...... கெக்கே பிக்கேவெனச் சிரிக்கிறேன்....! புதுசாய் என்ன கழன்று போச்சோ.....? என்ற பயமேயின்றிச் சிரிக்கிறேன்! பின்னே என்னங்க- ‘இடுக்கண் வருங்கால் நகுக‘ என்று தெய்வப் புலவரே சொல்லிப் போயிருக்கும் போது நாம் மகிழ்ந்திடாது இருந்தால் எப்படி? இதற்கு மேலொரு பிரளயம் காத்திருக்கக்கூடுமா? என்று உலகமே மலைக்கும் பரிமாணத்தில் நமக்கான இடுக்கண்கள் பிரவாகமெடுக்கும் போது – வேறென்ன செய்வதென்றே தெரியலை – பைத்தியக்காரனாட்டம் சிரிக்க மட்டுமே தோன்றுகிறது !
And கடந்த சில நாட்களில் மெய்யாலுமே நகைக்கவும் ஒன்றல்ல – இரண்டல்ல – மூன்றல்ல… நான்கு சந்தர்ப்பங்கள் அகஸ்மாத்தாய் வாய்த்தன தான் ! So இந்த வாரயிறுதியின் பதிவிற்கு அவற்றையே ஆதாரமாக்கிடலாமா ?
மே இதழ்களை முன்கூட்டியே உங்களிடம் ஒப்படைத்த கையோடு ஜுன் பணிகளுக்குள் தலைநுழைத்தாச்சு ! கொரோனா கட்டுப்பாட்டு முயற்சிகளில் புது அரசும் (எதிர்பார்த்த) லாக்டவுணை அறிவித்திட, ஒரு மாதிரியாய் இதற்குத் தயாராகியிருந்த நமக்கு போனவாட்டி போல பெரும் ஷாக்கெல்லாம் இராதென்றே தோன்றுகிறது ! எது எப்படியோ, இந்தப் 14 நாள் விடுமுறைகளை படுத்துறங்கிக் கழிக்கும் மூடில்லை இம்முறை ! என்னவாகயிருந்தாலுமே நமது சக்கரங்களை ஓய்ந்திடச் செய்ய வேண்டாமே என்றுபட்டது ! "லீவுடோய் ; லாக்டௌன் டோய் !" என்று போன மார்ச்சில் மல்லாந்து படுத்துப் பழகிய பின்னே முந்தைய சுறுசுறுப்பை மீட்டெடுப்பது இன்று வரைக்கும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது ! திரும்பவும் ஒருமுறை சோம்பலை துணையாக்கிடின், ரொம்பவே சிக்கலாக்கிடுமென்ற பயம் தான் ! So பேனாவும் கையுமாய் காலையில் மேஜையில் அமர்ந்த போது, காத்திருந்தது “ஒரு தோழனின் கதை” கிராபிக் நாவல் தான் ! பொதுவாய் பிரெஞ்சிலிருந்தான ஆங்கில மொழிபெயர்ப்பின் ஸ்கிரிப்ட்கள் பீம்பாய்கள் போல செம ஆகிருதியாய் இருப்பது வழக்கம் ! குறைந்த பட்சம் 45 A4 பேப்பர்கள் ; பல சமயங்களில் இன்னமும் ஜாஸ்தி என்றேயிருக்கும்! ஆனால் இம்முறையோ surprise… surprise… சுமார் 82 பக்கங்கள் கொண்ட கதைக்கான பிரெஞ்சு to இங்கிலீஷ் ஸ்கிரிப்டானது வெறும் 16 பக்கங்களில் மட்டுமே இருந்தது ! செம ஜாலியாய் பக்கங்களை புரட்டினால் – போன வருஷமே என்னை இனம்புரியா வகையில் வசியம் செய்த அந்த ஜாலியான சித்திரபாணியில் பக்கங்கள் சொற்பமான வசனங்களோடே ஓட்டமெடுப்பதைக் கவனிக்க முடிந்தது ! “ஜுப்பருடா… ஜுப்பர்… ஜுப்பர்” என்றபடிக்கே வேலையைத் துவக்கிட – முதல் 10 பக்கங்களை முடித்த போது சந்திரமுகியில் பேஸ்தடித்து நிற்கும் வடிவேல் போலாகியிருந்தேன் ! கி.நா.க்களில் பணியாற்றி சின்னதொரு இடைவெளி விழுந்திருந்தது மாத்திரமன்றி, இந்தக் கதையின் ஓட்டமும் ஒரு புதிராகவே காட்சி தந்தது தான் எனது 'வடிவேல் வதன' காரணமாகியிருந்தது ! எங்கே ஆரம்பிக்குது ? எங்கே இட்டுச் செல்கிறது ? என்ன மாதிரியான கதையிது ? என்று எதுவுமே கிரகிக்க முடிந்திருக்கவில்லை ! போன வருஷம் இதைத் தேர்வு செய்த போது நான் எடுத்திருந்த சிறு குறிப்புகளைத் தேடிப்பிடித்து மறுக்கா ‘செக்‘ பண்ணிய போது – அதிலிருந்த கதைச் சுருக்கத்தையும், எனது முதற்பத்துப் பக்க மொழிபெயர்ப்பு அனுபவத்தையும் முடிச்சுப் போடவே முடியலை ! “ரைட்டு… கொரோனா லாக்டவுண் மாசமிது !! ஆகையாலே கி.நா.வை ஒத்திப் போடறோம் மகாசனங்களே!” என்று சொல்லிப்புடலாமா? என்ற யோசனை மெதுமெதுவாய் எட்டிப் பார்க்கத் தொடங்கிருந்தது ! ஆனால் அந்தச் சித்திரங்களும் சரி, கதையின் மையப்புள்ளியான ஒரு 50 வயசு ஆணின் கதாப்பாத்திரமும் சரி, ஏதோ ஒரு விதத்தில் என்னுள்ளே ஸ்னேகத்தை உருவாக்கிட, எப்படியாச்சும் கரைசேர்க்க முயற்சிக்கணுமே என்ற வேகம் எழுந்தது !
ஏற்கனவே நான் சொன்ன விஷயம் தான் – எப்போதுமே பேனா பிடிக்கும் போது கதையை நான் முழுசுமாய்ப் படித்திடுவதே கிடையாது தான் ! சஸ்பென்ஸோடே நானுமே பயணிப்பது தான் எனது சோம்பேறிமாடன் பாணி ! ஆனால் இந்தவாட்டி அந்த ஆங்கில ஸ்க்ரிப்டை முழுசாய்ப் படிச்சிடலாம்; வெறும் 16 பக்கங்கள் தானே?! என்றபடிக்குப் புரட்ட ஆரம்பித்தேன்! 20 நிமிஷங்கள் தாண்டியிராது – ஸ்க்ரிப்டைக் கீழே வைத்து விட்டு சிரித்தேன்… ரசிச்சு, ரசிச்சு சிரிச்சேன்!
நான் சிரிச்சதற்குக் காரணங்கள் 3 ! முதலாவதும், பிரதானமானதும் – கதைக்கோசரம்! In fact இதைக் "கதை" என்பதோ; இப்படியொரு சமாச்சாரத்தை கற்பனையில் உருவகப்படுத்தியவரை "கதாசிரியர்" என்றோ வெறுமனே விளிப்பது தப்பு என்பேன்! ஒரு அசாத்தியக் கற்பனையுடன் திருமணமான 50s ஆண்களின் வாழ்க்கையினை இத்தனை ரசனையாய்ப் பகடி செய்துள்ளவரை இன்னும் ஏதாவதொரு சிறப்பான அடையாளத்தால் சிலாகிப்பதே முறையாகயிருக்கும் ! வீட்டில் பிடுங்கல்… தொழிலில் மந்தம்… பொதுவான சிடுசிடுப்பு – என நம்மில் ஒருவராய்த் திரியும் அதன் மையக் கதை மனிதனிடம் திருமணமான ஆண்களெல்லாமே ஒன்றிப் போக ஏதாவதொரு சமாச்சாரம் இல்லாது போகாது என்றுபட்டது! சொல்ல வந்த விஷயம் அழகான one-liner தான் ! ஆனால் சொன்ன விதமானது, இந்த மண்டை காயச் செய்யும் நாட்களிலும் நகைக்கும் விதமிருந்தது செம ஸ்பெஷல் !
சிரிப்பின் காரணம் # 2 நீங்கள் ! இந்த ஆல்பத்தை ஜுன் மாதம் படித்த பிற்பாடு சித்தே நேரத்துக்கு நீங்கள் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் மலங்க மலங்க முழிக்கப் போகிறீர்கள்.....? கொஞ்ச நேரமான பிற்பாடு – சுதாரிச்சபடியே என்னை, வெளுத்தெடுக்க எங்கெல்லாம் துடைப்பங்களைத் தேடப் போகிறீர்கள் ? என்பதை கற்பனைகளில் உருவகப்படுத்திப் பார்க்க முயன்றேன் – பீரிட்ட சிரிப்பை அடக்க முடியவில்லை ! Of course – ரக ரகமான துடைப்பங்களும், பேட்டா தயாரிப்புகளும் சிவகாசி நோக்கிப் படையெடுக்கும் என்பதில் எனக்கு ஐயமே இல்லை ! FB-யிலும் சரி; உங்களது க்ரூப்களிலும் சரி, கூடுதல் உத்வேகத்தோடு துவைத்தெடுக்கப் போகிறீர்கள் என்பதுமே ஸ்பஷ்டமாகப் புரிகிறது ! ஆனால் வண்ணான்துறையில் காணாமல் போகும் ஜாக்கி ஜட்டிகளுக்குக் கூட சாத்து வாங்கிப் பழக்கப்பட்டவன் – இது மாதிரியானதொரு வித்தியாசமான படைப்பின் பொருட்டு சாத்து வாங்கிடத் தயக்கம் காட்டுவேனா – என்ன?
சிரிப்பின் காரணம் # 3 என்னை நினைத்தே...; எனது பிரசவ கால வைராக்கியங்களை நினைத்தே ! இதோ- 2 நாட்களுக்கு முன்பு வரை “இந்தப் பிரளயக் காலங்களில் no more விஷப்பரீட்சைகள்! எல்லாமே பத்திரமான, உத்தரவாத ஹிட் களங்களை மட்டுமே இனி தேர்வு செய்யணும்” என்று எனக்கு நானே சொல்லியிருந்தேன்! ஆனால் – ஆனால் – இதோ ஒரு உச்சக்கட்ட கோக்குமாக்கு ஆல்பத்தோடு பயணித்த களிப்பில் “கி.நா. காட்டுக்குள்ளாற வண்டியை விடுடா சம்முவம்”! என்று கூவத் தோன்றுகிறதே – அந்த முரணை நினைத்தேன் ; சிரிச்சேன்!
சிரிச்சு முடிச்ச சமயம் புத்துணர்வோடு பேனாவை மறுக்கா பிடிச்சவன் – அடுத்த இரண்டரை மணி நேரங்களில் 82 பக்கங்களையும் போட்டுத் தள்ளியிருந்தேன்! The last time ஒரு கதையை ஒரே நாளில் எழுதியது – க்ளிப்டனின் “7 நாட்களில் எமலோகம்” வெளியான போது தான்! அதற்கு பின்பு இது தான் ஒரே நாள் சலவை என்று நினைக்கிறேன்! இந்தக் கதையில் தூவலாய் 'அடல்ட்ஸ் ஒன்லி' சமாச்சாரங்கள் உள்ளன! ஆனால் கார்ட்டூன் பாணிச் சித்திரங்கள் என்பதால் விரசமே தெரியலை ! தவிர, கதையின் நாயகன் ஒரு 50 வயதினன் எனும் போது அவனை விடலைப்பருவத்துக் கூச்ச நாச்சங்களோடு உலவச் செய்தால் ரொம்பவே பிசிறடிக்குமென்றுபட்டது! ஆகையால் no censors ! And முன்னட்டையிலேயே Recommended for 18+ என்று அச்சிட்டும் விட்டோம்! So “முழியாங்கண்ணனும், கலாச்சாரச் சீரழிவும் : குற்றம்ம்ம்ம்ம் !! நடந்தது என்ன ?” என்று கட்டுரை படைக்கத் துடிக்கும் புரவலர்கள் மன்னிச்சூ! இது கத்திரி போட சுகப்படா ஆல்பம் என்பதை நீங்களும் புரிந்திடுவீர்கள் ! In any case, இதழ் கைக்கு வந்த பிற்பாடு,என்னைச் சாத்தியெடுக்க உங்களுக்குக் கணிசமான இதர சமாச்சாரங்கள் இல்லாது போகாதென்பதால் “Bashing the Baldy” ஆட்டத்தை வேறு ஏதாச்சும் காரணத்தை கையிலெடுத்து, வழமை போல ஜாலியாய் ஆடிடலாம் தான் ! And இதோ - செம மாறுபட்ட பாணியிலான புக் வடிவமைப்பும் ; சித்திர பாணியும் ; கலரிங் ஸ்டைலும் கொண்ட உட்பக்கங்களின் பிரிவியூ !! அட்டைப்படத்தை புக் வெளியாகும் நாளில் பார்த்துக் கொள்வோமே guys !


Moving on, நான் சிரிக்கக் கிட்டிய முகாந்திரம் # 2 ஜுலையில் வரவுள்ள நமது லக்கி லூக் டபுள் ஆல்பம் தந்த அனுபவத்தின் பலன் தான்! அதனில் முதல் கதையான “வால் முளைத்த வாரிசு” இங்கிலீஷில் ரொம்ப ரொம்ப சமீபத்தில் வெளியான கதை ! மேம்போக்காய் மட்டும் அதனைப் புரட்டியிருந்தவன் வியாழன்று நம் கையிலுள்ள Cinebook ஸ்டாக்கிலிருந்து இதை வீட்டுக்கு எடுத்து வந்திருந்தேன் ! “ஒரு தோழனின் கதை” எதிர்பார்த்ததை விட செம சுளுவாய் பணி முடிந்திருக்க, லக்கியை எழுத ஆரம்பிக்கலாமென்று பிள்ளையார் சுழி போட்டேன் ! இரண்டோ-மூன்றோ பக்கங்களைப் புரட்டிய நொடியே அத்தனையையும் தூர வீசிவிட்டு, லக்கியோடும், ரின்டின் கேனோடும், டால்டன்களோடும் அந்த 46 பக்கப் பயணத்தில் ஐக்கியமானேன் ! ஆத்தாடியோவ்... லக்கியின் Golden Age கூட்டணியாக Goscinny + Morris கைவண்ணத்தில் 1973-ல் வெளியான ஆல்பம் என்பதால் கதையோட்டத்திலும் சரி, கதையோடே இழையோடும் நகைச்சுவைகளிலும் சரி- இரு ஜாம்பவான் படைப்பாளிகளும் அதகளம் செய்திருக்கின்றனர்! பக்கத்துக்குப் பக்கம் ரின்டின் கேன் அடிக்கும் லூட்டிகளும், ஆவ்ரெல் டால்டனின் அம்மாஞ்சி அதகளங்களும், கதை நெடுகே பயணிக்கும் சீனர்களும் அடிக்கும் சிரிப்பு சிக்ஸர்கள் ஒவ்வொன்றும் தெறி ரகம் ! பக்கங்களைப் புரட்டப் புரட்ட, என் விரல்களில் நமைச்சல் எடுக்காத குறை தான் – மொழிபெயர்ப்பில் ஸ்கோர் செய்திட எண்ணிலடங்கா வாய்ப்புகள் காத்திருப்பதைக் கண்டு ! நான் என்றைக்குமே கார்ட்டூன் காதலர் கட்சி தான்; ஆனால் இதோ இந்த லக்கியின் அதகளத்தை (சு)வாசித்த பிற்பாடு சொல்கிறேன் – கார்ட்டூன்களை பின்சீட் பயணிகளாய்க் கருதும் நண்பர்கள் சத்தியமாய் வாழ்வின் ஒரு அற்புத வசந்தத்தை சுவாசிக்க மிஸ் பண்ணுகிறார்கள்! Guys – you are missing out on some serious fun !! எது எப்படியோ - ஜுலை மாசமே – நீ வாராய்... விரைந்து வாராய்!!

சிரிப்பின் காரணம் # 3 - இதோ கீழேயுள்ள பக்கங்களைப் பார்த்ததன் பலனாகவே! பொறுமையாய் 2 பக்கங்களையும் கவனியுங்களேன் – ரொம்பவே பரிச்சயமான 2 பாணிகள் இடம் மாறிக் கிடப்பது புரியும் ! விஷயம் இது தான் : ப்ரெஞ்சில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த Pilote எனும் காமிக்ஸ் வாரயிதழில் லக்கி லூக்கின் ஓவிய ஜாம்பவான் மோரிஸும் பணியாற்றி வந்தார் ; கேப்டன் டைகரின் அசாத்தியரான ஜிரௌவும் பணியாற்றி வந்தார் ! லக்கி லூக் தொடரும் பின்னியெடுத்து வந்தது ; கேப்டன் டைகர் (Lt. Blueberry) கதைகளும் உச்ச வரவேற்பைப் பெற்று வந்தன! Pilote இதழின் எடிட்டர் – 2 ஓவியர்களையும் அழைத்து – டைகர் சித்திர பாணியில் லக்கி லூக்கையும்; லக்கி லூக் பாணியில் டைகரையும் வரைந்து தருமாறு கேட்டிருக்கிறார் ! அந்தக் குசும்பின் பலனே இரு ஜாம்பவான்களின் இந்த அட்டகாசங்கள் !!

சிரிப்பின் நான்காம் முகாந்திரம் சற்றே வில்லங்கமானது ; சுஜாதா அவர்களின் மெக்சிகோ சலவைக்காரி ஜோக் போல ! அதைப் பற்றி விலாவரியாக நான் விவரித்தால், "மு.க.கலா.சீ. பார்ட் 2" எழுத நினைப்போருக்கு நானே வாகாக points எடுத்துத் தந்தது போலிருக்கும் ! அதற்கோசரமாய் you’ll owe me one ஆர்வலர்கள்ஸ் ! But இந்தப் பதிவு நீண்டு கொண்டே போவதால் – அதைப் பற்றி இன்னொரு தருணத்தில் !
ரைட்டு... சுற்றியும் பேரழிவும், பிரளயமும் உலுக்கியெடுக்கும் வேளைதனில் நான் பல்லைக் காட்டிய கதைகளை நீட்டித்துப் போக மனசில்லை ! So நடையைக் கட்டலாமென்றுபடுகிறது ! While on the topic of பேரழிவு & பிரளயம் – இந்தத் தலைப்புகள் பற்பல காமிக்ஸ் படைப்பாளிகளின் ஆதர்ஷக் களங்களாக இருப்பது நினைவுக்கு வருகிறது ! ஏதோவொரு காரணத்தின் பொருட்டு பேரழிவு காணும் பூமியில் எஞ்சியிருப்போரின் சவால்கள் தான் ஜெரெமியாவில் துவங்கி ; தற்போதைய “Alone” தொடர் வரையிலும் பின்புலங்கள் !
நம்மிடமும் கொஞ்ச காலமாகவே துயில் பயின்று வரும் ஒரு ஆல்பமானது இந்த பாணியிலானது தான் ! In fact அது உங்களுக்குப் புதிதே அல்ல !
ரொம்ப காலம் முன்னே (late ‘80s ? early 90’s ??) தினமலர் சிறுவர் மலரில் தொடராக “உயிரைத் தேடி” என்ற பெயரில் ஓடிய நெடும் சாகஸமே அது! ஒரு பிரளய உலகினில் எஞ்சியிருக்கும் அணியினரின் அசாத்திய அனுபவங்களை அந்நாட்களில் வாய் பிளந்து படித்தோரில் நானுமே ஒருவன் தான் ; என்ன - இப்போது ரொம்ப சொற்பமே நினைவில் தங்கியுள்ளது ! இது ஒரு classic பிரிட்டிஷ் தயாரிப்பென்பதால் மூக்கைச் சிந்தி, கண்ணீர் விட்டு அழச் செய்யும் முடிவுகளெல்லாம் இராது என்பது மட்டும் ஞாபகத்தில் உள்ளது ! Maybe... just maybe உங்களில் பலரது பால்யங்களது நினைவுகளின் ஒரு அங்கமான இந்தக் கதையை ஒரு 192 பக்க முழுநீள ஆல்பமாக வெளியிட்டால் ரசிக்குமென்று நினைத்தேன் ! So Jose Ortiz அவர்களின் அசாத்தியச் சித்திரங்களுடன் இந்த black & white ஆல்பம் நமது “E-Road ஆன்லைன் புத்தக விழாவின் சிறப்பிதழ் # 1” ஆக ஆகஸ்டின் நடுவினில் வாகானதொரு பொழுதில் வெளிவந்திடும் ! (E-Road பெயர் உபயம்: நண்பர் காமிக்ஸ் லவர்) And இந்த சாகஸத்தின் ஒரிஜினல் கதாசிரியரையே நமக்காக ஒரு சின்ன முகவுரை எழுதக் கோரியுள்ளேன் & அவரும் சம்மதித்துள்ளார் ! So ஒரு முழுநீளக் கதையாய் இந்த இதழ் அழகாய் அசத்திடும் என்று நம்பலாம் !
இங்கே "E-Road" என்ற பெயர் சூட்டலோடு இன்னொரு பெயர் உபயமும் கோரிட உள்ளேன் – உங்கள் அனைவரிடமும் !! “உயிரைத் தேடி” என்ற பெயரில் உங்களுக்கெல்லாம் பரிச்சயமான அந்தக் கதைக்கு நாம் என்ன பெயர் வைக்கலாம் ? Left to me, நான் பாட்டுக்கு "முடிவில் ஒரு ஆரம்பம்..!" என்றோ “காலனோடு கண்ணாமூச்சி” என்றோ ; “ஜீவிக்க விரும்பு” என்றோ ஏதாச்சும் பெயரை வைத்து விடுவேன் ! ஆனால் நெடும் தொடராய் ஓடி, உங்கள் மனங்களில் பதிந்திருக்கக் கூடிய பெயரினை சிதைச்ச பாவத்தையும்; சாபத்தையும் சம்பாதிக்க வேண்டாமே என்று பார்த்தேன்! So "பெயரிடும் படலம்" (if needed) உங்கள் பாடு சாமீஸ் ! What'd be your suggestion(s) ? மேற்படி மூன்றினில் ஏதோவொன்று ஓ.கே.வா ?
Here you go - ஆல்பத்தின் உட்பக்க preview :
And "இதைக் கலரிலே போடலாமே??!! என்ற கொடி பிடித்திட வேண்டாமே ப்ளீஸ்? Simply becos ஓவியர் Jose Ortiz-ன் dark shades நிறைந்த சித்திரங்களுக்கு வண்ணமூட்டுவது சுலபமே அல்ல ! And பக்கத்துக்குப் பக்கம் படைப்பாளிகளிடம் காட்டி, அவர்கள் சொல்லக்கூடிய அத்தனை திருத்தங்களையும் செய்து approval வாங்கிய பிற்பாடே அச்சிட முடியும் ! 188 பக்கங்கள் கொண்ட இந்தக் கதைக்கு நாம் அந்த மெனக்கெடல்களுக்கு தயாராகிட்டாலுமே, ஒரு நெடும் லாக்டௌன் முடிந்து இப்போது தான் மெது மெதுவாய் இயல்புப் பணிகளுக்குத் திரும்பிவரும் படைப்பாளிகள் இந்த வேளையில் அதற்குத் தயாரில்லை ! So ஒரிஜினல்படியே black & white-ல் வெளியிடுவதே படைப்பாளிகளின் பரிந்துரை ! தவிர, இருநூறு ரூபாய்க்கோ ; இருநூற்றி இருபத்திஐந்து ரூபாய்க்கோ முடிய வேண்டியதை 'வண்ணத்தில் போடுகிறேன் பேர்வழி'' என்று ரூ.400 பட்ஜெட்டுக்கு கொண்டு நிறுத்தி வேக்காடு வைக்கவும் இந்த வேளைதனில் மனசு ஒப்பவில்லை ! ஆகையால் Color கோரிக்கை வேணாமே ப்ளீஸ் ?
E-ROAD ஆன்லைன் விழாவினில் நமது "இரத்தப் படலம்" தொகுப்பின் எத்தனையாவதோ ரிலீஸுமே இருந்திடும் ! தற்போதைய முன்பதிவு நம்பர் நிற்பது 247-ல் ! Steady progress !!
And அந்த ஆன்லைன் விழாவின் ஏதேனும் ஒரு தருணத்தில் ZOOM மீட்டிங் ஒன்று போட்டு ஒரு கலந்துரையாடலையும் நடத்திட எண்ணுகிறேன் ! காத்திருக்கும் 2022-க்கும் ; முத்து காமிக்சின் 50-வது ஆண்டு விழாவிற்குமென உங்களின் suggestions எனக்கு நிரம்பவே தேவைப்படும் ! So E-Road நோக்கி இப்போதே சிந்தனைகள் ஓட்டமெடுக்கின்றன ! And சந்தர்ப்பம் வாய்த்தால் ஒரு ஜாலியான புத்தக விழா ஸ்பெஷல் # 2 ஆஜராகிடவும் கூடும் ! Fingers crossed !!
Before I sign out - சின்னதொரு கொசுறு அறிவிப்புமே !
அடுத்த 14 நாட்களுக்கு நமது அலுவலகங்கள் லாக்டௌனில் இருந்திடுமென்றாலும் - இம்முறை பெருசாய் நெருடலில்லை ! கிட்டத்தட்ட கடந்த ஒன்றரை மாதங்களாகவே வீட்டிலிருந்தபடியே பணிசெய்து பழகிப் போய்விட்டதால் என்மட்டுக்கு will be work as usual ! அதே போல நமது DTP அணியினர் ஒவ்வொருவருக்கும் வீட்டுக்கே லேப்டாப்களைத் தந்தனுப்பி ரெகுலராய் பணியாற்றச் சொல்லியுள்ளோம் ! God Willing - 24 மே அன்று நிலவரங்கள் சற்றே நலம் கண்டு, அடைப்பு விலக்கப்படும் பட்சத்தில் - உடனே அச்சுக்குக் கிளம்பிடுவோம் - ஜுனின் சகல வெளியீடுகளோடும் !! இப்போதே கிட்டத்தட்ட 70 சதவிகிதப் பணிகள் over !
இடைப்பட்ட இந்த 15 நாட்களிலும் போன வருஷம் போல மொக்கை மொக்கைப் பதிவுகளையாய்ப் போட்டுத் தாக்காது - தினமும் குட்டிக் குட்டியாய் ஒரு update செய்திட எண்ணியுள்ளேன் ! நமது 2 பாசிட்டிவ் ஜாம்பவான்களான லக்கி லூக் & டெக்ஸ் வில்லர் மட்டுமே இந்த UPDATE 15-ன் நாயகர்களாக இருப்பார்கள் ! இந்தச் சிரம நாட்களில் நாம் தொடர்ந்து தொடர்பிலிருப்பதற்கும் ; நமது ஆதர்ஷ நாயகர்களின் உபயத்தில் சற்றே ரிலாக்ஸ் செய்வதற்கும் இது உதவிட்டால் சூப்பர் !!
And here's UPDATE # 1 :
இரவுக்கழுகாரின் கதைகளின் பின்னணியில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தும் அளவிற்கான creators இருப்பது நாம் தெரிந்த விஷயமே ! எக்கச்சக்க டீம்கள் ஒரே நேரத்தில் டெக்சின் புதுக் கதைகளை உருவாக்கிக் கொண்டேயிருப்பர் ! சில நேரங்களில் - "ஒரே ஹீரோவை இத்தினி பேர் கற்பனைகளில் கையாண்டால் சொதப்பிடாதா ? ஆளாளுக்கு ஒரு விதமாய் நாயகரை இட்டுச் சென்றது போலாகிடாதா ?" என்ற நினைப்பு எழுவதுண்டு தான் ! ஆனால் அதற்கொரு செம பாசிட்டிவ் முகமும் உண்டென்பதை வெகு சமீபமாய் உணர முடிந்தது ! இதோ - கீழுள்ள 2 ராப்பர்களும் டெக்சின் வெகு சமீபப் படைப்புகளின் அட்டைப்படங்கள் ! மாமூலான வன்மேற்கின் சமாச்சாரங்களுக்கொரு மாற்றமாய் இருக்கட்டுமென்று - ஒரு ஜாக்கி சான் பாணியிலான சீனக் கதாப்பாத்திரத்தை Antonio Zamberletti எனும் புதுக் கதாசிரியர் சிருஷ்டித்துள்ளார் பாருங்களேன் !



இவர் போனெல்லியின் இன்னொரு ஹீரோவான ZAGOR-க்கு கதை எழுதுபவர் ; வெகு சொற்பமாகவே டெக்ஸுக்குப் பேனா பிடித்துள்ளார் ! ஆனால் ஆரம்பங்களே புது ரூட்டில் என்பது போல், ஒரு ஷாவோலின் துறவியை கொண்டு இந்த சாகசத்தை உருவாக்கியுள்ளார் ! அதன் பலனாய் நம்மவரும் குங் பூ போட நேருமோ - என்னவோ ? கார்சனை கொஞ்சமாய் கற்பனை செய்து தான் பாருங்களேன் - drunken monkey ஸ்டைலில் நிற்பது போல !! இந்தக் கதையினை வரவழைத்துப் பரிசீலிக்க எண்ணியுள்ளேன் ; புதுமை கதையிலும் தொடர்ந்தால் 2022-ல் இந்த சீனப் பார்ட்டியும் இடம் பிடித்திருப்பார் ! பார்ப்போமே !!
ரொம்ப நாள் கழித்தான ஒரு L.I.C. பதிவை இந்தப் புள்ளியில் நிறைவு செய்த கையோடு, லக்கி லூக் ஆல்பத்தினுள் தாவப் புறப்படுகிறேன் folks! ரின் டின் கேன் வெயிட்டிங் !!
Have a Safe Weekend all! See you around! Bye for now !