Powered By Blogger

Wednesday, January 03, 2024

டின்டின் தான் வாராரு....!

 நண்பர்களே,

வணக்கம்.நான்கே நாட்களின் இடைவெளியில் ஆபீஸ் மறுக்கா அல்லகோலம் கண்டு நின்றது இன்று பகலில் ! ஜனவரி '24-ன் இதழ்களின் டெஸ்பாட்ச் எப்போதென்று கேட்டிருந்த போது - "லட்சியம் புதன்" என்றிருந்தேன் ! பைண்டிங் நண்பரும் சரி, நம்மாட்களும் சரி, அந்த இலட்சியத்தை நிச்சயமாக்கிட உதவிட, புத்தாண்டின் முதல் மாதத்து ஜாம்பவான் இதழ்கள் இன்று மதியம் கிளம்பியாச்சூ ! And துளி சந்தேகமும் இன்றி, இம்மாதத்து show stealer சர்வ நிச்சயமாய் டின்டின் தான் என்பேன் ! கதைக்குள்ளோ, மொழிபெயர்ப்புக்குள்ளோ புகுந்திடும் முன்பாகவே, இதழின் அமைப்பும், அந்தத் தயாரிப்புத் தரமும் தந்திடவுள்ள impact - தாடைகளில் வேதாளர் பதித்திடும் கபால முத்திரை கும்மாங்குத்தைப் போலிருக்கும்  ! Becos - முடித்து வந்த இதழ்களைப் பார்த்த போது நானே மிரண்டு போய்விட்டேன் !! 

காலங்காலமாய் புத்தகத் தயாரிப்புத் துறையில் கால்பதித்துக் கிடப்போர் என்ற முறையில் - "ஆங்...நாங்க பாக்காததா ?" என்ற ஒரு தெனாவட்டு உள்ளுக்குள் இருப்பதை மறுப்பதற்கில்லை ! ஆனால் டின்டினின் தயாரிப்புக்கென படைப்பாளிகள் போட்டிருந்த ஏகப்பட்ட  கண்டிஷன்கள் நிறையவே மலைக்கச் செய்திருந்தன ! அச்சை விடவும், பைண்டிங்கில் இங்கே 200% நிபுணத்துவம் தேவைப்படும் என்பது புரிந்தது ! And நமக்கு பணி செய்து தரும் பைண்டிங் நிறுவனங்கள், பாதி இயந்திரங்கள் ; பாதி மனித உழைப்பு என்றே செயல்பட்டுவருகின்றன ! ஆனால் டின்டினுக்கு தேவையாகிடும் finishing முழுக்க முழுக்க இயந்திரங்களிலேயே செய்தாலொழிய சாத்தியமாகாது என்பது புரிந்தது ! So முழுக்க முழுக்க புத்தக ஏற்றுமதி மட்டுமே செய்து வரும் ஒரு மெகா குழுமத்திடம் பணிகளை ஒப்படைப்பது என்று தீர்மானித்தோம் ! லட்சங்களில் பணியாற்றிடும் அந்த நிறுவனத்திடம் நமது சுண்டைக்காய் பிரிண்ட்ரன் பற்றிப் பேசவே கூச்சமாக இருந்தது தான் ! But ஒரு பரஸ்பர நண்பர் மூலமாய் பணியினை அவர்களிடம் ஒப்படைத்தோம் ! டிஜிட்டல் கோப்புகளையும், பேப்பரையும் மட்டும் அனுப்புங்கள் - முடித்த புக்ஸை டப்பிகளில் வாங்கிப் போக மட்டுமே நீங்கள் மெனெக்கெட வேண்டியிருக்கும் என்று அவர்கள் சொன்ன போது - 'அடடே...இந்த டீலிங்   கூட நல்லா தான் இருக்கும் போலிருக்கே ?' என்று மனது ஒற்றை நொடிக்கு மகிழ்ந்தது ! மறுநொடிக்கொ அவர்களது பில் தொகை என்னவாக இருக்குமென்ற எஸ்டிமேட் வந்த போது சப்தநாடிகளும் அடங்கிப் போயின ! "ஆங்....நம்ம மாமூலான பைண்டிங்கிலேயே கிட்டக்க நின்னு பாத்து-பாத்து செஞ்சு வாங்கிட்டா போதாதா ?" என்ற கேள்வியோடு உள்ளுக்குள் சபலப் பேய் தறி கெட்டு ஆட்டம் போட்டது ! ஆனால் உடன் வந்திருந்த ஜூனியர் எடிட்டர் - "இந்த ஒருவாட்டி விஷப்பரீட்சை வாணாம் ; கூடுதல் செலவு தான் ; but பார்த்துக் கொள்ளலாமே ?" என்று சொல்ல, நானும் ஒரு மாதிரியாய் ஒத்துக்கொண்டேன் ! தொடர்ந்த 15 நாட்களுக்கு அவர்களிடமிருந்து பேச்சும் லேது-மூச்சும் லேது ! போச்சுடா சாமீ என்றபடிக்கே போன் அடித்தேன் ; பதைபதைப்பை மறைக்க முயன்றபடிக்கே ! ஆனால் இங்கே அடிச்ச லப்பு-டப்பு போனிலேயே கேட்டதோ என்னவோ - "No டென்க்ஷன்ஜி ; சொன்னபடிக்கே டிசம்பர் 31 தேதிக்கு டெலிவரி பண்ணிடுவோம் !" என்றார் அவர்களது MD ! 

தொடர்ந்த நாட்களில் அவர்கள் பணியினைத் துவங்கிய போது கொஞ்சம் கொஞ்சமாய் பராக்குப் பார்க்க ஆரம்பித்தோம் ! And 'இந்தத்துறையில் பழம் தின்னு கொட்டை போட்டுப்புட்டோம்' என்ற மமதைகளை ஒரே நாளில் தீ வைக்கப் பண்ணிவிட்டார்கள் ! ஒவ்வொரு கட்டத்திலும் பணியினை அவர்கள் அணுகிய விதங்களில் ஒரு நூறு பாடம் படிக்க நமக்கு சரக்கிருந்தது ! பிராஸஸிங்கில் துவங்கி, அச்சு ; பைண்டிங் என்று அவர்கள் அடுத்தடுத்து பணிகளில் முழுக்கவே இயந்திரங்களோடு களமிறங்கத் துவங்க - 'ஆவென்று' வாய்பிளந்து நின்றோம் ! சொன்னபடிக்கே ஞாயிறு மாலையில் புக்ஸ் பேக் செய்யப்பட்டு ரெடியாக இருந்தன ! டப்பியை உடைத்து ஒரு புக்கைக் கையில் ஏந்திய போது மேலே, முதல் பத்தியில் நான் சொன்ன 'தாடையிலே வேதாளர் கும்மாங்கும்மு'  feeling பிரவாகமெடுத்தது ! Absolutely brilliant printing & making !! நாளைக்கு மட்டும் கூரியரில் புக்ஸ் உங்களை பத்திரமாக  எட்டிப்பிடித்து விட்டால் - இப்போது நான் விட்டம் வரை விரியும் வியப்போடு செய்திடும் சிலாகிப்பினை நீங்களும் செய்யாது போக மாட்டீர்கள் என்பேன் ! நமது 52 ஆண்டு காலப் பாரம்பரியத்தில் இதுவொரு Awesome உச்சம் என்றால் மிகையாகாது !

ரைட்டு...டின்டின் தயாரிப்புப் புராணம் போதுமெனில் - அதற்கடுத்த நிலை பக்கமாய்ப் போலாமா ? ஞாயிறு அதிகாலை, தூக்கம் பிடித்தும், பிடிக்காமலும் உருண்டு கொண்டிருந்த வேளையில் ஒரு மெகா சிந்தனை தோன்றியது ! அன்றைய ரோசனைகளின் பலனே இதோ - பாருங்களேன் guys :


1990-களில் தினமலர் வாரமலரில் வாசகர்களை ஜாலி டூராய் குற்றாலம் கூட்டிப் போவதும், வாசகர்கள் செம ஹாயாக கொண்டாடுவதும் வருடாந்திர நிகழ்வுகள் ! அதே போல நாமும் எப்போவாச்சும் முயற்சித்தாலென்ன ? என்று யோசிப்பேன் அவ்வப்போது ; அப்பாலிக்கா அடுத்த பணியின் மும்முரத்துக்குள் கவிழ்ந்தடித்துப் படுத்தும் விடுவேன் ! ஆனால் இம்முறை ஒரு சர்வதேச ஜாம்பவான் நம் மத்தியில் கால்பதிக்கும் குதூகலத் தருணத்தில் நண்பர்களில் ஒருவரை இந்த சாகசம் துவங்கிடும் நேபாளத்துக்கே அனுப்பினாலென்ன ? என்று குறுகுறுத்தது ! நமக்குத் தான் மண்டைக்குள் குடைய ஆரம்பித்துவிட்டால் இருப்பு கொள்ளாதே !! So - இதோ, டின்டின் திபெத் நோக்கிப் பயணிப்பதை ரசிக்கும் கையோடு நேபாளம் போக நீங்களும் ரெடியாகிடலாமா ? 

இந்த அறிவிப்பு சார்ந்த உங்களின் reactions என்னவாக இருக்குமென்று அறிந்திட செம ஆவல் ! Sometimes நான் ஜிங்கு ஜிங்கென்று குதித்தபடிக்கே எதையேனும் அறிவிக்கும் தருணங்களில் இங்கு கொட்டாவிகள் திமிறியும் உள்ளன & vice versa too ! ஆகையால் ஓவராய் துள்ளிக்குதிக்க இக்கட முகாந்திரம் உள்ளதா ? அல்லது கொட்டாவிகளே மிகுந்திடப் போகின்றனவா ? என்று சொல்லுங்க பாஸ் ! அப்புறம் அறிவிப்புக்குள் இன்னொரு  அறிவிப்பும் இருப்பதைக் கவனியுங்களேன் !

பாக்கி இதழ்கள் பற்றி நாளை காலை update செய்கிறேன் ! இப்போதைக்கு bye guys ....see you around !



சென்னையில் விழா ஆரம்பிச்சாச்சு & முதல் நாள் மாலையே விற்பனையில் அதிரடிகளும் ஆரம்பம் !! PLEASE DO VISIT US FOLKS !!

289 comments:

  1. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  2. ஆஹா நேபாளம் போக ஒரு நண்பருக்கு வாய்ப்பா? வாரே வா கரும்பு தின்ன கூலியா?

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே....


    வணக்கம் ஆசிரியர் சார்.

    ReplyDelete
  4. Ippave Nepal ungalai anbudan varaverkiradhunnu air hostess solra maadhiri kekkudhe

    ReplyDelete
  5. நாளைக்கு பேசாம ஆபீஸுக்கு மட்டம் போட்டுடலாமா?

    ReplyDelete
  6. அருமையான அறிவிப்பு சார்

    ReplyDelete
  7. சார் நான் முன்பே கேட்டுக் கொண்டது போல டின்டின் புத்தகத்துடன் ஒரு You Tube video போடுங்க பிளீஸ். முடிந்தால் நாளை அல்லது இந்த வார இறுதிக்குள்.

    ReplyDelete
  8. சொக்கா..சொக்கா..😍😘😃

    நேபாளத்துக்கு நானே போகனும்..😃😃

    நான்தான் போகனும்..😃😍😘

    ReplyDelete
    Replies
    1. நீங்கன்னா ஜம்ப்பி ஜம்ப்பியே போயிடுவீங்க சார் !! கம்பெனிக்கு flight செலவு மிச்சம் !!

      Delete
    2. எவரெஸ்ட் உயரத்துக்கு ஜம்பினா பின்னாடி ப்ராப்ளம் ஆகிடுமேங் சார்...🤭

      Delete
  9. ஆஹா டின் டின் கிளம்பிட்டாரா...

    போடு வெடியை..🎆🎇🎆🎆🎇


    டின்டின்னோடு நாளைக்கு போட்டோவுக்கு போஸ் டை அடிச்சி் ரெடியாகணுமே..நேரமே ஒரு 8மணிக்கெலாம் எழுணும்..😎😉

    ReplyDelete
    Replies
    1. கிளம்பிட்டங்க அய்யா கிளம்பிட்டாங்க

      Delete
    2. அட ஆமால்லே ?

      கொஞ்சம் பாத்து அடிங்க சார் ! நான்பாட்டுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னே சட்டிக்குள்ளாற முக்கிப்புட்டேன் மண்டைய....நாலு நாளுக்கு தொப்பி போட்டுட்டே தான் திரிய வேண்டிப்போச்சு !

      Delete
    3. சூப்பர் சார்...😃😍

      Delete
    4. லிப்ஸ் டிக் பச்சை கலர்ல...புக்குக்கு மேட்சா...ராமராஜன் ஜிகுஜிகு பச்சை சட்டையோட ...எம்ஜிஆர் மாதிரி தகதகக்க வாழ்த்துக்கள்...நெனக்கைல எம்ஜிஆரு வாராரேன்னு ஒலிக்குது...கதைகளின் எம்ஜிஆரும் வாசக எம்ஜிஆரும் பராக் பராக்

      Delete
  10. பிப்ரவரி 17 & 18 இன்னுமொரு கொண்டாட்டம் மா சார்

    ReplyDelete
  11. நேபாள மலையோரம்...

    ஒரு பூபாளம் பாடுதடி..

    😍😍😍

    ReplyDelete
  12. எதே அதிர்ஷ்ட குலுக்கலா..??

    ப்ளேன்ல கால் வைச்சா தோசம்னு கிளி ஜோசியரு சொல்லிட்டாரு...

    சோ நமக்கு சிலுக்கு குலுக்கலே போதும்...😜

    ReplyDelete
    Replies
    1. வேணும்னா ரயிலிலேயே நேபாளம் போக ரூட் இருக்கான்னு பாப்போம் சார் !

      Delete
    2. நல்லா கேளுங்க சந்தோசம்னு சொல்லிரு
      பாரு...கேட்ருக்காது...வயசாகிடுச்சுல்ல

      Delete
  13. நேபாளத்துக்கு டூர்...

    சத்தியமா கனவில் கூட எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி ஆச்சரிய அறிவிப்பு சார்...

    ReplyDelete
  14. காமிக்கான் தேதி பெப்ரவரி 17& 18ஆஆஆ...
    ஆஹா நம்ம தங்கை பையன் கல்யாணம் பிப்ரவரி 18& 19.. ஹூகும்.. நோ சான்ஸ் நமக்கு..

    என்ஜாய் பண்ணுங்க மக்கா..💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  15. நாளை காலை, டின் டின் முதல் இதழை கைப்பற்ற போவது நானாக இருக்க விருப்பப்படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இது போல நானும் நிறைய விருப்பப்பட்டு இருக்கேன் ஆனா நடக்குமா?

      Delete
  16. வணக்கம் நண்பர்களே!!

    சூப்பரான அறிவிப்பு சார்!
    நேபாள் போக ஐயாம் ரெடி!!

    ReplyDelete
    Replies
    1. நானே இன்னும் பாக்காத ஊரு சார் ; maybe குலுக்கல்லே கன்னத்திலே மருவோட நானும் கலந்துக்கணும் போலும் !

      Delete
    2. சார் எனக்கு ஒரு வேளை வாய்ப்பு கிடைத்தால் எங்கள உற்சாகப்படுத்தும் உங்களுக்கு பரிசா தந்துடுவேன்...மருவ ஒட்டுவது தவிர்த்து என்ன தேர்ந்தெடுங்க

      Delete
    3. //கிடைத்தால் எங்கள உற்சாகப்படுத்தும் உங்களுக்கு பரிசா தந்துடுவேன்...மருவ ஒட்டுவது தவிர்த்து என்ன தேர்ந்தெடுங்க//


      ஸ்டீல் சகோ செம

      Delete
  17. Niraya book vaanguravangalukku niraya vaaippu irukku. Correct dhaane sir.

    ReplyDelete
    Replies
    1. Of course நண்பரே..ஒரு புக்குக்கு ஒரு கூப்பன் !

      கடைகளில் வாங்கினாலும் சரி, ஆன்லைனில் ஆர்டர் செய்தாலும் சரி, சென்னைப் புத்தக விழாவில் வாங்கினாலும் சரி - ஒவ்வொரு இதழோடும் ஒரு கூப்பன் இருந்திடும் !

      Delete
  18. ஜயிச்சி நேபாளம் போறவங்க, எவரெஸ்ட்லயும் ஏறனும்னு கன்டிசன் இருக்காம்ல...😜😜😜😜

    ReplyDelete
    Replies
    1. தலீவர தனியா நேபாளத்துக்கு அனுப்புனா எப்புடி கீதும் ?

      Delete
    2. டவுசர் கிழிஞ்சுறும் சார்..:-)

      Delete
  19. காமிக்கான் சென்னையில். சூப்பர் news

    ReplyDelete
  20. எடிட்டர் சார் ..
    எனக்கு நேபாள மொழி வராது நேபாளத்தில் எனக்கு மொழிபெயர்ப்பாளர் ஒத்தாசை எதிர்பார்க்கலாமா

    ReplyDelete
    Replies
    1. சேலத்திலிருந்து ஆரு வந்தாலும், வழி காட்ட அந்த ஊரிலே ஒரு தாத்தாவை தான் அனுப்புவாங்கலாம் சார் ! சொல்லுங்க - சொல்லி வைச்சிடுவோம் !

      Delete
    2. யாரு சார்.. அது... கார்த்தி படத்துல வர்ற அந்த "தோ கிலோமீட்டர்" தாத்தாங்களா...😃😃

      Delete
    3. ராசுக்குட்டி...வேறு வழி இல்லை 30 நாட்களில் நேபாளம் மொழி கற்றுக் கொள்வது எப்படி புத்தகத்தை ஒன்று வாங்கி விட வேண்டியது தான்

      Delete
    4. டின்டின் புத்தகத்துடன் 30 நாளில் நேபாளி மொழி கற்கலாம் புத்தகம் இலவச இணைப்பாம்.

      Delete
  21. சென்னை காமிக்கான்" ல நம்ப சிங்கம் கர்ஜிக்கபோகுதுன்ற செய்தி நமக்கெல்லாம் ரொம்ப பெருமைங்க சார்...💐💐❤💛💙💚💜

    ReplyDelete
  22. @all..😍😘

    நேபாளம் போகறதுக்கு பாஸ்போர்ட், விசா எதுவுமே தேவையில்லை..😍😘

    வாக்காளர் அடையாள அட்டை மட்டும் இருந்தால் போதும்..
    👍👌😍

    அதனால எல்லாரும்
    "டின்டின்" வாங்குங்க..🙏

    நேபாளம் போகலாம் வாங்க..🙏🙏💐❤💛💙

    ReplyDelete
  23. ஆரம்பமே மெகா பரிசுப் போட்டியோட... அமர்க்களம்...

    ஜெயிச்சா UKவிலிருந்து டிக்கெட் உண்டா சார்...

    இங்கே கைக்கு வர எத்தனை நாளாகுமோ... தெரியலையே..

    புத்தக விழாவில் விற்பனை சிறக்க நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  24. No Passport & No Visa ..😀😘
    ஐ... ஜாலி..ஜாலி..😍😍😍

    ReplyDelete
  25. டின் டின் திபெத்துக்கும், நாங்க நேபாளத்துக்கும் போக ரெடி...

    ReplyDelete
  26. "திபெத்தில் டின்டின்" படித்த கையோடு அல்லது படிக்க போகும் இடமே திபெத்.
    கேக்கவே தித்திப்பாக இருக்கே.
    கூடவே நீங்களும் இருந்தால் சொர்க்கம் தான்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  27. நல்ல அறிவிப்பு சார். வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  28. நேபாளம் செல்லும் மநண்பருக்குப் அட்வான்ஸ் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  29. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  30. நேபாள பயணம் அருமையான அறிவிப்பு சார்,வெற்றி பெறப் போகும் முன்கூட்டியே வாழ்த்துகள்...
    இந்த யோசனை எழுந்தது எந்தவொரு தருணத்தில் சார் ?!

    ReplyDelete
  31. ஆஹா...செம சார்...முதல் பத்திய பாக்கும் போதே எனக்கு இன்னோர் புக் ஆர்டர் செய்யனும் என்று தோண ....அடுத்த நேபாள டிக்கட் சடுதியாக என புத்தியில் இறக்கியது....ஆனா ஒரு வேளை ஜெயித்து நேபாளம் போக விருப்பமில்லா எனக்கு மாற்றாய் என கேட்கத் தோணியது....பின்னால் தொடர்ந்த உங்க ஆவலான கேள்விகளை மட்டுப்படுத்தி டகூடாதே எனும் பயத்தோடுமே டைப்புகிறேன் மன்னிச்சுக்கோங்க இவ்வாட்டி....குத்தாட்டம் உறுதிடோய்னு பின்னால் போக நாளை காலைன்னு ஒரே போடா போட்டுட்டீங்களே...ஆனா நா வாசித்தது என்னவோ காலைதான்....மீண்டும் டின்டினோடு கனவுக்குள்

    ReplyDelete
  32. பாருங்க சார் அந்த பின்னட்டை எவ்ளோ அழகா வந்திருக்கு...இதே போல நம்ம பிற கதை புத்தக பின்னட்டைகளிலும் அக்கதை மாந்தர்களையும் வெட்டி ஒட்டுனா செமயாருக்காதுm£?....

    ReplyDelete
  33. உண்மையில் ஒரு வாழ்நாள் சாதனை தான் சார். எனக்கும் வாழ்நாள் ஏக்கம் சார். டின்டின் தமிழில் சாத்தியமாக்கிட உதவிய அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  34. இனிய காலை வணக்கங்கள்

    ReplyDelete
  35. தமழில் டின்டின் வர போகிறார் என்று சொல்லி கொண்டே இருந்தோம்
    இன்று (அ) நாளையோ என் கைகளில் தவழ போகிறார்🥳🥳🥳
    சிங்கத்தில் சிறு வயதில் ஒரு தடவை எழுதி இருந்தீங்க ஆசிரியரே, லயன் காமிக்ஸ் ஆரம்ப காலத்தில் டின்டின் தமிழில் வர முயற்சி பண்ணியதை.

    இன்று அதை நனவாக்கி எங்கள் கைகளில் தமிழ் பேசி வலம் வர டின்டினை செய்து உள்ளீர்கள்

    பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஆசிரியரே💐💐💐💐💐

    தமிழில் டின்டின் வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  36. சென்னை காமிக்கான் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி, முடிந்தால் காமிக்கானுக்கு ஒரு விஸிட் செய்ய பார்க்கிறேன்

    வாழ்த்துகள் ஆசிரியரே, மேன்மேலும் கலக்குங்கள் 💐💐💐🥳🥳

    ReplyDelete
    Replies
    1. முதல் முறை காமிக்கான் பயணம் சிறக்க வாழ்த்துகள் கடல்..💐

      Delete
  37. டின்டின்....

    வேதாளர்....

    லார்கோ விஞ்...

    டெக்ஸ்வில்லர்....

    ஆத்தாடி...அம்மாடியோவ்...நினைச்சாவே மலைப்பாக உள்ளது..

    காமிக்ஸ் உலகின் 4சிகரங்கள்.. ஒரே கவரில்...வேறு எந்த நாட்டு காமிக்ஸ் ரசிகனுக்கும் இது சாத்தியமில்லா வெறும் கனவே....

    இதை நனவாக்கிய பிரகாஷ் பப்ளிஷர்க்கும் ஆசிரியர் சாருக்கும் நெஞ்சார்ந்த மகிழ்ச்சிகள்...💐💐💐💐

    ஓரே டீம்ல
    கவாஸ்கர், கிரஹாம் கூச், ரிச்சர்ட்ஸ், ஆலன் பார்டர், 4பேரும் டாப் ஆர்டர்ல பேட்டிங் பண்ண வந்தா மாதிரி உள்ளது.....

    யார் இவுங்களை எதிர்த்து நிற்க??????

    ReplyDelete
    Replies
    1. கூடவே லக்கி லூக்கும் வேறு... உண்மையிலயே வேறு லெவல் தான் சார்...👌👌👌👌👌👌

      இம்மாதம் நம்ம காமிக்ஸ் வாழ்க்கையில் ஒரு உச்சமான நேரம்!!!💞💞💞💞💞💞💞

      Delete
    2. ஜனவரி ஜாம்பவன்கள் ராக்ஸ்

      Delete
    3. ஆமா இந்த சந்தோசத்ல பிற வெளியீடுகள கேப்பதயே மறக்கடிச்சிட்டாரே...
      டெக்ஸ். இல்ல இளம் டெக்ஸ்

      Delete
  38. ////சென்னையில் விழா ஆரம்பிச்சாச்சு & முதல் நாள் மாலையே விற்பனையில் அதிரடிகளும் ஆரம்பம் !! ///

    அற்புதமான நியூஸ்ங் சார்...

    தினம் தினம் இது தொடரட்டும்...


    ReplyDelete
    Replies
    1. (மை மைன்ட் வாய்ஸ்: சும்மாவே கால் கட்டை விரல்ல நமைச்சல் எடுக்கும் இவருக்கு.., சென்னைகாரங்க தாரை தப்பட்டை கிழிய அடிக்கிறாங்க.. என்னென்ன ஆட்டம் உண்டோ???😉😉😉)

      Delete
    2. இந்த வருடம் ரெகார்ட் ப்ரேக் தான்...அவரையே அவரோட வாய்க்குள்ள திணிக்கப் போறாரு பாருங்க

      Delete
  39. நேபாளம் மிக மிக அருமை ஆசிரியரே
    வெற்றி பெற போகும் வாசகருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  40. திருவிளையாடல் தருமி போல

    நேபாளம் நேபாளம் நேபாளம்

    நல்லவேளை பாட்டு எழுத வேண்டியதில்லை
    பெயர் எழுதினால் மட்டும் போதும்

    ReplyDelete
  41. 2 surprises .. comic con and nepal tour .. sema sir .. unexpected ..

    ReplyDelete
  42. டின் டின்... தமிழில் முதல் முறையாக...

    எடிட்டர் சார்...
    என்னுடைய பார்சல் கைப் பற்றி விட்டேன் சார் . மிக்க மிக்க நன்றி.

    டின் டின் புத்தகம் சும்மா பளிங்கு போல... வைரம் போல பள பள வென மின்னுகிறது சார் செமையா இருக்கு சார்..

    சேலத்திற்கு இன்னும் மூன்று பார்சல் கூடுதலாக....
    அச்சச்சோ என்ன சொல்றதுன்னே புரியலையே...

    நன்றி சார் நன்றி நன்றி நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பத்திரமாக வந்ததா சார் ? நேற்றைக்கு அந்த பபுள் பாலிதீன் மட்டுமே நான்காயிரம் ரூபாய்களுக்கு வாங்கினோம் - புக் லேசாகக் கூட மடங்கிடக்கூடாதென்பதற்காக !

      Delete
    2. பேக்கிங் மிக மிக அட்டகாசமாக இருந்தது சார் .
      பார்சல் உள்ளே, ஸ்பெஷல் பேக்கிங் கவருடன் அருமையாக இருந்தது சார் ..

      ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறேன்..

      Delete
    3. தூங்கி எழுந்தவுடன் தயாராகி ஹப்புக்கு ஓடி விட்டேன் சார்...

      பார்சல் அனைத்தும் ஏரியா பிரித்துக் கொண்டிருந்தார்கள், தரவில்லை என்றால், உருண்டு புரண்டு அழுது விடுவானோ என்று பாவம் என கொடுத்து விட்டார்கள் அவர்களுக்கு நன்றி

      Delete
  43. காமிக்ஸ் வாசகர்களில் முதல் பிரதியை கைப்பற்றியது அனேகமாக அடியேனாக இருப்பேன் என நம்புகிறேன்..

    என்ன ஒரு பாக்கியம் !!!

    ReplyDelete
  44. சார் இப்பொழுது தான் பதிவை படிக்கிறேன்...படிக்க படிக்க ஆசரியரே ஆச்சர்யம் பட வைக்கும் ஓர் இதழா என என்னையும் மீண்டும் ஆச்சர்யபடுத்துகிறது..இதழை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்..இப்பொழுது அலிவலகம் வந்தாயிற்று நாளை தான் இல்லம் செல்வேன் .எனவே நாளை முழுவதும் கொண்டாட்டம் தான்...

    ReplyDelete
  45. இதழ் ஆச்சர்யம் என்றால் அடுத்த தாங்கள் அறிவித்த அறிவிப்பு அடேங்கப்பா என உண்மையிலேயே துள்ள வைத்து விட்டது சார்..இப்படி ஓர் அறிவிப்பா அடேங்கப்பா..செம சார்..

    நமது காமிக்ஸ் நண்பர்களால் தான் வெளிமாநிலமான சென்னைக்கே புத்தக விழாவிற்காக முதன்முறையாக பயணம் செய்தேன்..

    இப்பொழுது நமது காமிக்ஸ் மூலமாக வெளிநாடே செல்லும் வாய்ப்பு..நடக்குமா..செம ஆச்சர்யத்துடன் ,செம ஆவலுடன் செம வியப்புடன் காத்து கொண்டே இருக்கிறேன் சார்..

    ஆனா தனியா போகதான் பயமாக்கீது..:-)

    ReplyDelete
    Replies
    1. யோவ் தல, மேலே கமெண்ட்டுல பாருய்யா ஆசிரியர் சார் உம்மை வாரியிருப்பாரு...🤣🤣🤣

      Delete
    2. உண்மைதானுங்களே அய்யா..:-(

      Delete
    3. யோவ் டெக்ஸ்.....நேபாளத்தை விட முக்கியம் ஏரோப்ளேன்ய்யா..இதெல்லாம் வானத்துல அண்ணாந்து பாத்ததுடன் சரி..ஹூம் யாருக்கு அதிர்ஷ்டமோ..:-)

      Delete
    4. யோவ் தல உனக்கே அதிர்ஷ்டம் அடிக்க வாழ்த்துக்கள்யா....💐

      நீ அந்த ஃபளைட்ல எப்படி ரியாக்சன் தர்னு பார்க்கணும்யா😉

      Delete
  46. சென்னை புத்தக விழாவில் நமது காமிக்ஸ்களின் விற்பனைகள் டின்டின்னாரின் உபயத்தில் ஒரு புதிய உச்சம் தொட வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. என்னுடைய வாழ்த்துகளும் சார்..

      Delete
  47. பிறகு விங்கமாண்டர் ஜார்ஜ் இதழை கைப்பற்றி முதல் இரண்டு கதைகளை மட்டும் வாசித்து முடித்தாகி விட்டது ..ஆரம்பமே நெப்போலியன் பொக்கிஷத்துடன் பட்டையை கிளப்புகிறது ..மேலும் அட்டைப்படமும் ,தரமும் மிக மிக சிறப்பு..

    இதழ்கள் முழுதாக வாசிக்காமல் இருக்கும்பொழுதே ( இரண்டு நாட்கள் தான் என்றாலும் ) அடுத்த பார்சல் வருகை என்ற அறிவிப்பு இன்னும் கொண்டாட வைக்கிறது ..

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. ஆசிரியர் சார் @

    டின்டின் & புதிய புத்தகங்களுக்கான ஆன்லைன் லிஸ்ட்டிங் போட்டு விடுங்க...

    டின்டின் க்கு நிறைய பேர் வெயிட்டிங்.

    ReplyDelete
  50. பிரம்மாண்டம் பிரம்மாண்டம் அப்படின்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.. இன்னிக்குதான் அதை நேரிலே பார்த்தேன்....!


    டின் டின்... வாய்யா என் தங்கமே...😍

    ReplyDelete
  51. பீம்சிங் க்கா பேட்டா ராம்சிங் கிட்ட கூர்க்கா ட்ரெஸ்ஸை இரவல் கேட்டிருக்கேன்..!

    நேபாள் கோ ச்சல் தேனா..!

    ReplyDelete
  52. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆனு திறந்த வாய் மூடாம அசர வைத்து விட்டீர்கள் ஆசிரியர் சார்....

    டின்டின்...

    பிரமாண்டமா?னா, ஆமா னு ஒற்றை வார்த்தையில் சொல்லி அடக்கிட இயலாது...

    பார்சலை பிரிச்சி மேலால உள்ள பபுள் பேப்பரை ரீமுவ் பண்ணிட்டு டின்டின் புக்கை பார்த்தா வாயடைச்சி போக வெச்சிட்டது...💕💕💕💕💕💕💕💕💕

    இதழின் கணம், அளவு வசீகரிக்க. அட்டைபடம் கண்ணுக்கு ஜில்..ஜில்....

    நளினமான அட்டையை தாண்டி உள்ளே போகவே மனசு கொஞ்ச நேரம் தடுமாறிட்டது...

    முதல் அட்டையை தாண்டி அடுத்து ஒரு அட்டையானு கை தடவ, அடேய் விஜி அது அட்டை அல்ல தாளின் தடிமன் என மூளை ஒருவாராக உணர்த்தியது...
    ஒவ்வொரு தாளும் அப்படி தான் உள்ளது....யம்மாடிஈஈஈஈஈஈஈஈஈ அடுத்த ஆச்சர்யம்.

    ReplyDelete
    Replies
    1. அட்டைப்பட வெண்பனி பளீரிட மலையேற்ற காட்சி நேபாளத்தில் உள்ள உணர்வை தர அதை அடுத்த உள் பக்கத்தில் சாகஸவீரன் டின்டின் அந்த பான்ட் அட்டகாசம்...

      உள் பக்கத்தின் பின் புறம் தயாரிப்பு விவரங்கள் புத்தகத்தின் தரத்தை பறைசாற்றுகிறது..

      முதல் முறையாக லயன் காமிக்ஸ் ஸில் ISBN...

      அடுத்து தயாரிப்பு பணியில் ஈடுபட்ட அத்தனை பேரின் விவரங்கள், உலகத்தரமான படைப்பை கையில் வைத்து உள்ளோம்னு வீரன்(ரசிகன்) உணர்கிறான்....னு மீம் கிரியேட் டர்ஸ்க்கு கன்டென்ட் தர்றோம்.

      ஒவ்வொரு தாளாக புரட்டி புரட்டி உள்வாங்கி கொண்டு கொஞ்சம் மூச்சி விட்டுக் கொள்ளளாலம்..

      கதை 62+ விவரங்கள் அடக்கிய 2 என 64பக்கங்கள் கொண்ட இந்த புக்கின் விலை 295 மட்டுமே என அடுத்த அதிர்ச்சி காத்துள்ளது..

      Delete
    2. பின்னட்டையில் வரும் ஒரு வரி...

      "அசுரப் பனிமனிதனான யெடியைச் சந்திக்கும் போது...."

      என்பதை வாசிக்கும் போது தோன்றியது...தாங்களும்,

      """"அசுரப் "பணி" மனிதரான எடி...""

      உண்மையிலயே அசுரப் பணிதான் சார்....

      இதழின் ஒவ்வொரு சதுர சென்டி மீட்டரும் உணர்த்துவது இதைதான் சார்..

      Delete
  53. சார் ஞாயிறு காலை ஸ்டாலில் இருப்பீர்களா

    ReplyDelete
    Replies
    1. மாலை 4 to 7 இருப்பேன் கிருஷ்ணா !

      Delete
    2. நன்றி சார் நான் மதியம் மேலே பிளான் செய்து கொள்கிறேன்

      Delete
  54. டின் டின் இதழை ஒரு அரை மணி நேரம் சுவாசித்துட்டு அடுத்த இதழாக கையில் எடுத்தது வேதாளர்....நேர்த்தியான தயாரிப்பு.. கைக்கு அடக்கமான சைசில் வண்ணத்தில் ரொம்பவே கவர்கிறார் இந்த கானக மாயாவி...

    இங்கும் முதல் உள் பக்கத்தில் ஜூனியர் எடி அசத்த..
    உள்பக்கங்கள் பெரிய பேனலாக, என் போன்ற கண்ணாடி அணிந்திருப்போரும் வாசிக்க ஏதுவான பெரிய எழுத்துக்களில் வீரனுக்கு மரணமில்லை கலக்குகிறது..

    66ம் பக்கத்தில் வேதாளர் ரசிகர்களுக்கு விருந்து..💘

    பின்னட்டை முன்னட்டையை விட அசத்தல் ரகம்..

    இனி நானும் வேதாளருக்கு ரசிகனே...😍

    இனி V for We யுடன் V for Vedhalar என்பதே சிறப்பு...
    👌👌👌

    வாழ்த்துகள் விக்ரம் ஜி.

    ReplyDelete
  55. 3வதாக கையில் கிடைத்தது முத்து காமிக்ஸ் 52வது ஆண்டுமலர்...

    லார்கோ விஞ் சின் இரவின் எல்லையில்....

    இங்கு முன்னட்டை வெகு பிரமாதம்...

    3வது பாலும் சிக்ஸர் சார்..

    லார்கோ இதழின் வண்ணச்சேர்க்கை வேறு மாதிரியான பரிணாமத்தில் கலக்குகிறது...

    13, 14ம் பக்கம்லாம் சும்மா ஜிவ்வுனு சொல்ல வாயெடுக்கும் முன்னே ஒவ்வொரு பக்கமும் பட்டாசு கிளப்புகிறது.

    59ம் பக்கம் ப்பா மீண்டும் மூச்சடைக்கும் ஓவியம்..

    62ல அதுக்கு மேல..

    பீரோலுபீரோலு...சிலுவரு பேட்டரி... வடிவேலு மாதிரி..யாகுது...

    போட்டி டின்டின் Vs லார்கோ தான்னு புரிஞ்சிட்டது..


    ReplyDelete
  56. ஹாட்ரிக் பாலுக்கு பிறகு 4வது பாலை ச்சே புக்கை எடுத்தேன்...

    தலை புக்கில் என்ன மிஞ்சியிருக்க போவது னு அசட்டையாக அணுகியது பெரும் பிசகு...

    இங்கும் ஒரு ஆச்சர்யம்..
    வித்தியாசமான இள மஞ்சள் தூக்கலாக இருக்கும் தாளில் ஓவியங்கள் கூடுதலாக பளீர்னு மின்னல் வெட்டை தோற்றுவிக்கிறது..

    செம செம சார்


    இளந்தலைக்கு மட்டுமல்லாமல் ரெகுலர் டெக்ஸ்க்கும் இதே தாளை உபயோகிக்கும் படி அனைத்து டெக்ஸ் ரசிகர்கள் சார்பில் வேண்டுகிறோம் சார்..

    4 சிகரங்களின் 4உச்சமான படைப்புகள்... புத்தாண்டை ஆர்ப்பாட்டமாக தொடக்கி வைக்கின்றன சார்..


    சென்னை விழாவில் 4வரும் பட்டையை கிளப்பினாலும்,

    டாப் ஆஃப் த ஷோ வாக இருக்கப்போவது டின்டின்...டின்டின...டின்டின்னே....

    உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் டின்டின்னை ரசிக்க ஆரம்பிப்போம்

    இன்று பூரா திகட்ட திகட்ட கண்ணால் ரசிப்பது தான்...

    ReplyDelete
    Replies
    1. அட மழை இருட்ல சரியா தெரியல...இப்பதா நானும் பாத்தேன் ...ஆசிரியர் சொன்னத மறந்தே விட்டேன்...செம் சார்

      Delete
  57. திபெத்தில் டின்டின்...

    தமிழில் முதல் முறையாக..

    நானும் முதல்முறையாக தமிழில்...

    இந்த ஆண்டில் சிறந்த நிகழ்வாக இந்த வெளியீடு வெளிச்சம் பரப்பிக் கொண்டிருக்கும்.

    டின் டின் க்கு ஆரவாரமானவரவேற்பு நாம் கொடுக்கலாம் என நினைத்தால், மாறாக டின் டின் மற்றும் கேப்டன் ஹேடாக், நாலு கால் நண்பன் ஸ்நோயி உடன் நமக்கு தான் சூடான மன்னிக்கவும்... கடும் குளிர்க்கு சூடான கதையை, ஒரு அசாத்தியமான வெளியீட்டினை தந்து சாதித்து காட்டிவிட்டார் டின்டின் உடன் இணைந்து நமது எடிட்டர் சார்.

    இனி கதைக்குள்... சுருக்கமாக...

    நேபாளம் நோக்கி செல்லும் விமானம் பனி படர்ந்த உயர்ந்த மலை சிகரங்களில் மோதி விபத்துக்குள்ளாகி விடுகிறது. அதில் பயணம் செய்த சேங் என்ற டின்டின் உடைய நண்பர் என்னவானார் அவருக்கு என்னவாயிற்று ? இறந்துவிட்டாரா ? மீட்கப்பட்டாரா ? என்பது கிளைமாக்ஸ்.

    நண்பருக்கு என்னவாயிற்று என உள் உணர்வு வழிகாட்டுதலுடன் கேப்டன் ஹேடாக் மற்றும் நாலு கால் நண்பன் ஸ்நோயி உடன் நேபாளம் பயணமாகும் சாகசத்தை எவ்வாறு விவரிப்பது.

    நண்பன் சேங் ஐ தேடி புறப்படும் வழி எல்லாம் பயணத்தின் கடுமை தாங்க இயலாமல் ஒவ்வொருவராக விலகி செல்ல செல்ல... உயர்ந்த பனி மலையில், டின் டின் ஒரு அடி கூட பின்னோக்கி வைக்காமல் தொடர்ந்து கொண்டே இருப்பது அபாரமான மன உறுதி தான்.

    கதை நெடுகிலும், தேடுதல் பயணம் வேண்டாம் திரும்பி சென்று விடலாம் என வசனங்கள் டின்டினை சுற்றி துரத்திக் கொண்டே இருக்கும்.அந்த இடங்களில் சரி கதை பாதை மாறிவிடும் என எதிர்பார்த்தால்... இல்லை மாறாக.. சாகச பயணத்தில் டின் டின் மட்டுமல்ல நம்மையும் அவருடன் இழுத்துக் கொண்டே பயணம் ஆகிறார்.

    சாகச பயணத்தின் முழுமையான விவரங்களை காணலாம்.

    திபெத்தில் டின்டின்... இல்...

    ReplyDelete
  58. எடிட்டர் சார்,

    சூப்பர் அறிவிப்பு ! டின்டின் இதழை நேரில் காண ஆவல் !!!!!!

    ReplyDelete
  59. டின் டின் சாகச பயணங்களில்.. டின் டின் மற்றும் நண்பர்கள் மட்டும் பயணம் ஆகுவது போல் இருந்தாலும்..

    உண்மையில் அந்தப் பயணத்தில் கூட இன்னொரு நபரும் பயணம் ஆகிறார் அது வேறு யாரும் இல்லை அந்த சாகச பயணத்தை படிக்கும் வாசகர் தான்.

    அந்தப் பயணத்தை, சாகசத்தை படிக்கும் வாசகரால் மட்டும் தான் அதை உணர முடியும்.

    டின் டின் சாகச கதைகள்,ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் தமிழுக்கு...

    ReplyDelete
  60. புது வருடத்தில் புதிய வரவுகளுக்கு நல்வரவு 😍🥰😘. புதிய அறிவிப்பு களுக்கு ஆசிரியருக்கு நன்றி கள் பல.

    ReplyDelete
  61. நேபாளத்துக்கு டூரா ஆஆஆஆஆ
    ஆனந்தமான அறிவிப்பு
    ஆனால் அதிர்ஷ்டத்துக்கும் நமக்கும் 5000 கிலோ மீட்டர் தூரமாச்சே அதனால் தேர்வாகப்போகிற நண்பருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

    ReplyDelete
  62. பார்சல் கைப்பத்தியாச்...அந்த காற்றுக்குமிழிக்குள் அடைபட்ட ஸ்பைடர் போல அழகாய் டின்டின்

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே ஆங்கில புத்தகங்கள் பார்த்ததால் அதே போல் தெரிந்ததால் பெருசா ஏதும் தோணலை...ஆனா செம பாய்ச்சல் நம்ம லெவல்லுக்குதான்...ஆனா இது நமக்கு பெரிதில்லை தானே...தாள்களில் கனம் மலைக்கதை என்பதாலோ என்னவோ மலைக்க வைக்குது

      Delete
    2. பார்சல தூக்கயில கனம் ஒரு மாதிரியா மலைக்க வைக்க....சாரி திகைக்க வைக்க...ஏதோ மிஸ் ஆன ஃபீலிங்...

      பிம்மாண்டத்த பாக்கைல அந்த ஏக ஏதிர்பார்ப்பிலிருந்த பிரம்மாண்டம் மறந்தது ஆச்சரியந்தா

      Delete
    3. லார்கோ இருக்காரு...டெக்சு இருக்காரு...இந்த அட்டகாச வேதாளர காணமே...ஆசிரியர் வேற வேதாளரின் கும்மாங் குத்துன்னாரு...ஒரு வேளை இதான் அந்த கும்மாங் குத்துதானோ

      ...
      அந்த நாலு பக்க டின் டின் ...விளம்பரம்...டின் டின் டிக்கட் எல்லாமே சூப்பர் சார்

      Delete
    4. ஆஹா....சாரி சார்...5800 தான் அனுப்பியிருந்தேன்...வி காமிக்ஸுக்கு சந்தா கட்டலயாம்...இப்பதான் கட்டினேன்...நாளை தான் வேதாளர்

      Delete
    5. //அந்த காற்றுக்குமிழிக்குள் அடைபட்ட ஸ்பைடர் போல அழகாய் டின்டின்//

      💐💐💐👌👌😊😊

      Delete
    6. //அந்த காற்றுக்குமிழிக்குள் அடைபட்ட ஸ்பைடர் போல அழகாய் டின்டின்//

      யோவ் க்ளா செமயா... நீ ஓரு தேர்ந்த இஸ்படைர் ரசிகன்தான்யா...!!

      மை ஃபேவரைட்& பிடிச்ச ஒன்& ஒன்லி ஸ்பைடர் ஸ்டோரி அதான்யா..

      அந்த கோப்ராவை தானைதலைவன் ஸ்பைடரோட அல்லக்கைகள் ஆர்டினியும் பெல்ஹாமும் அந்த தரையடி ரயில் நிலையத்தில் போட்டு தள்ளவது செமத்தியான கட்டம்...

      இவுங்க இருவரையும் லேசா எடைபோட்டதுக்கு கோப்ரா ஒழிஞ்சி போவான்...!!

      Delete
  63. லார்கோ கண்ணாடி அட்டை கலக்கல் டாப் இதான்....சைமன் குட்டிப்பா...இதா மொதல்ல

    ReplyDelete
  64. TINTIN தமிழ் காமிக்ஸ் உலகின் ஆகச் சிறந்த படைப்பு என்றால் மிகையில்லை சார் ! Just splendid and a proud possession to behold ! Kudos to the entire team Sir ! 

    சொல்லப்போனால் பார்ஸலைப் பிரித்தால் phantom காணோம். ஸ்டெல்லாக்கு phone செய்தால் "5800க்கு V காமிக்ஸ் வராது ஸ்ஸார்" என்றார் ! Universal என்றால் அனைத்தும் என்று தப்பாய் புரிந்ததன் விளைவு ! உள்ளே கிர்ரென்று பொங்கியது - ஆனாக்க டின்டின் மயக்கிவிட்ட படியால் மன்னிச்சு (என்னை நானே சொல்லிக்கிட்டேன் !!) :-) :-)

    ReplyDelete
    Replies
    1. ராகவரே...வொய் க்ரை...ஸேம் பிளட்...630 அ உடனே அனுப்புங்க...நாளை வேதாளம்...இப்பதான் அனுப்பிட்டு இங்க வந்தா...என் தோளில் உங்க கை

      Delete
  65. சார் பாக்கி இதழ்கள் பற்றி காலையில் update செய்யவில்லையே

    ReplyDelete
  66. தீன் த நஹதி மேரா நாம்
    பீம்சிங் பேட்டா கூர்க்கா ராம்...

    (ஒண்ணுமில்ல, நேபாள கூப்பன் அனுப்பிட்டேனாம், குலுக்கல்ல என் பேரு தான் வருமாம், உள்ளூர் பாட்டு தானே அங்கே நாலு நாளைக்கு பாடணும்...ஒரு ட்ரையினிங்கு.....😎)

    ReplyDelete
    Replies
    1. ட்ரெய்னிங் நல்லா போகுது போல சகோ
      பாட்டு நல்லா வருதே

      Delete
  67. Replies
    1. பொஸ்தவங்களே கைக்கு வந்தாச்சே சத்யா !

      Delete
  68. கொரியர் வந்துவிட்டது.
    புத்தகங்கள் பத்திரமாக எங்கள் கைக்கு வந்து சேர்வதற்கான தங்கள் மெனக்கிடல் உண்மையில் அருமை. அதுவும் அட்டைப் பெட்டியின் மேற்புறத்தில் இரண்டு ஓர மடிப்புகளையும் கட் செய்து டின்டின் புத்தகத்தை உள்ளே வைத்து சேதாரமில்லாத வகையில் பேக்கிங் செய்த விதம் அருமை.
    உங்கள் டீமிற்கு எங்கள் பாராட்டுக்கள்.
    டின்டின் மேக்கிங் சூப்பர்.
    லார்கோ ஈர்க்கிறார்.
    வேதாளரை வண்ணத்தில் பார்ப்பது அற்புதம்.
    நீண்ட வருடங்களுக்கு முன்பு இந்திரஜால் காமிக்ஸில் பார்த்தது.
    இளம் டெக்ஸ்ம் தன் பங்குக்கு அழைக்கிறார்.
    உண்மையில்இந்த முதல் வாரமே ஆரவாரம்தான்.

    ReplyDelete
  69. Received the January month books sir. Thank you.

    ReplyDelete
  70. கூரியர் பாக்ஸை மாலை 6 மணிக்கு தான் பிரிக்க முடிந்தது..

    பிரித்ததும் முதலில் எடுத்து படித்தது லார்கோ வின்ச்..

    கதை அட்டகாசம்.. லார்கோ கதைகளுக்கே உரித்தான பரபரப்பான வேகத்துடன் இக்காலத்துக்கு ஏற்றவகையில் உருவாக்கி அடுத்த லார்கோ புத்தகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்..

    ReplyDelete
    Replies
    1. பின்னட்டை கலர் & விண்வெளி டிசைன் அருமை..

      Delete
    2. யாராச்சும் பெங்களூரு / திருப்பத்தூர் (மக்கன் பேடா புகழ்) நண்பர் அஹ்மத் பாஷாவிடம் இந்த லார்கோவை காட்ட முயற்சியுங்களேன் guys ?

      Delete
  71. @ ALL : நேற்றிரவு உங்களது கூரியர்கள் அனைத்தும் கிளம்பிய பிற்பாடு, சீனியர் எடிட்டரிடம் டின்டின் ஒரு பிரதியைக் கொண்டு போய்த் தர விக்ரமும், நானும் போயிருந்தோம் ! மெய்யாலுமே மிரண்டு விட்டார் - டின்டினின் தயாரிப்புத் தரத்தினைக் கண்டு ! "இது எங்கே பண்ணினது ? எப்புடி பண்ணினது ?" என்ற உற்சாகக் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம்.

    And இன்று காலை ஒரு நெடும் வாட்சப் சேதி - "1972-ல் முத்து காமிக்ஸ் முதல் இதழைப் பார்த்ததை விட, 1984-ல் லயனின் முதல் இதழைப் பார்த்ததை விடவும் இன்று எனக்கு கூடுதல் த்ரில்" என்று ....!!

    ReplyDelete
    Replies
    1. @Edi Sir...😍😘

      ஆச்சர்யம் + மகிழ்ச்சி இருக்காதா பின்னே சார்..😃
      அவர் விதைத்த விதை இன்று விருட்சமாகி பலன் தருவதை பார்க்கும்போது
      மனம் மகிழ்ச்சியில் ததும்பும்தானே...😍😘😃

      Delete
    2. வாவ்.... சீனியர் எடிட்டர் சாரையே அசத்திட்டீங்களா செம செம சார்....

      அவரது கூற்று முற்றிலும் உண்மைதான் சார்.

      தயாரிப்பு தரத்தில் டின்டின் வேற மாதிரி தான்..

      இதன் கூட எதையும் ஒப்பிட இயலாது தான்...

      யுவராஜ்னா அந்த 6க்கு 6தான் நினைவு வரும்... இது காமிக்ஸ் உலகின் 6x6...

      This one is the best work of Vijayan sir..

      Delete
    3. செம்ம சார் செம்ம. இந்த புத்தகம் Maxi Size புத்தகங்களுக்கு ஒரு பெஞ்ச் மார்க். எவ்வளவு அழகாக உள்ளது ஒவ்வொரு பக்கமும். I'm delighted Sir.

      Delete
    4. செம செம சார். இதனை விட வேறு என்ன வேண்டும் சார்.

      Delete
  72. Sir chennai book fair eppo sir varuveenga?

    ReplyDelete
    Replies
    1. சிவகாசி டாக்டரின் சென்னை விஜயம் !!

      சந்திக்கும் நேரம் :

      சனி மாலை 4 to 7
      ஞாயிறு மாலை 4 to 7

      Delete
    2. என்னங்க சார் எங்க ஊரு டாக்டர் (?) போல அறிவிப்பு போடறீங்க....🤣😜🤭

      Delete
    3. ரின்டின் கேன் வரேன்னு சொல்லியிருக்கு ஸ்டீல் !

      Delete
    4. // ரின்டின் கேன் //

      ஜாலி

      Delete
  73. சார், அப்படியே மறுபதிப்பு இதழ்கள் பற்றியும், லக்கி மீதி இரண்டு புத்தகங்களை பற்றியும் கொஞ்சம் சொல்ல முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. புக்ஸ் ரெடியாகிட்டே இருக்குதுங்க சார் ; ரெடியான உடனே அறிவிப்போடு ஆஜராவேன் !

      Delete
    2. நன்றி சார். மிக்க நன்றி

      Delete
  74. பார்சல் வந்து விட்டது. ஆனால் டெலிவரி மேன் சொதப்பலினால் நாளை தான் கிடைக்கும். கர்ர்ர்ர்

    ReplyDelete
  75. திபெத்தில் டின் டின் - கடந்த 90 நிமிடங்கள் ஒரே மூச்சில் உட்கார்ந்து படித்து விட்டேன். மொழிபெயர்ப்பு அருமை, கேப்டனுக்கு நீங்கள் எழுதிய ஸ்பெஷல் வசனங்கள் எல்லாம் டாப் , மொத்த கதைக்கும் புதிய மொழிபெயர்பை கொடுத்தது ரசிக்கும் படி இருந்தது. தயாரிப்பு தரம் வேற லெவல் சார் அதுவும் இந்த கதைக்கு உபயோகித்து உள்ள தாள் ஏதோ அட்டையோ என நினைக்க வைத்தது.

    மொத்தத்தில் அற்புதமான இதழ் சார். நன்றி டின் டின்னை தமிழில் கொடுத்ததற்கு சார்.

    இந்திய காமிக்ஸ் வரலாற்றில் புதிய உயரம் இந்த இதழ்.

    கடந்த ஒரு வருடத்தில் வந்த இதழ்களில் புத்தகம் வந்த முதல் நாளே ஒரு புத்தகத்தை முழுமையாக படித்து முடித்தது என்றால் அது இந்த இதழ்தான் சார்.

    ReplyDelete
    Replies
    1. கேப்டன் கோபத்தில் கத்தும் ஒவ்வொரு வசனமும் அருமை வித்தியாசம் சார்.

      Delete
    2. இந்த புத்தகத்தின் எடை குறைந்து 300-400 கிராம் இருக்கும் என நினைக்கிறேன்.

      Delete
  76. Amazing reading experience on beginning of year 2024.

    ReplyDelete
  77. ஆசிரியர் சார்@

    ஒரு வேண்டுகோள்...

    டின்டின், வேதாளார், லார்கோ & டெக்ஸ் என 4 உலகளாவிய டாப் நாயகர்கள் ஒன்றாக வந்துள்ளார்கள். இதைக் கொண்டாட ஒரு YouTube வீடியோ பதிவு உடனடியாக போட்டீங்கனா செமயா இருக்கும் .

    V log பதிவும் போட்டு சில மாதங்கள் ஆகிறதே!

    ReplyDelete