நண்பர்களே,
வணக்கம். ஒரு கோடிச் சூறாவளிகள் சந்து பொந்தெல்லாம் சாத்தியெடுக்க - இது டின்டினின் பிறந்த நாள் # 95 !!
1929 !!
*கையெறிகுண்டுகளையும் , விடுதலை முழக்கங்கள் கொண்ட நோட்டீஸ்களையும் விட்டெறிந்து வெள்ளையர்களால் அமரர் பகத் சிங் கைதான வருடம் !
*தனது சேவைகளைத் துவங்கிட அன்னை தெரசா கொல்கத்தாவுக்கு வருகை தந்த ஆண்டு !
*அமெரிக்கப் பொருளாதாரத்தின் பெரும் வீழ்ச்சி ஆரம்பம் கண்ட வருடம் !
*ஒரு ஜாலியான நாலுகால் நண்பனோடு ஒரு பத்திரிகை நிருபர் ரயில் ஏறிய ஆண்டுமே இது ! And அந்த நிருபரின் பெயர் டின்டின்....அந்த நாய்க்குட்டியின் பெயர் ஸ்நோயி....and அவர்களைப் படைத்த அமர கதாசிரியரின் பெயர் Herge !!
Yes - மிகச் சரியாக 95 ஆண்டுகளுக்கு முன்பான இதே நாளில், The Twentieth Century என்று பொருள்படும் ஒரு பெல்ஜிய நாளேட்டுடன் வழங்கப்பட்ட சிறுவர்களுக்கான இணைப்பொன்றில் தான் நமது ஹீரோ முதன்முதலில் உலகத்தினை சந்தித்தார் ! So இன்றைய தினமே டின்டினின் பிறந்தநாள் !! HERE'S WISHING YOU AND SNOWY A HAPPY 95th TINTIN !!!!! புதிதாய் நம் மத்தியில் ஆஜராகி, புயலாய் நம்மைக் கவர்ந்திருக்கும் இந்த ஜாம்பவானைப் பற்றி ஜாலியான சில தகவல்கள் & ஜாலியான சில கேள்விகள் !!
தொடரின் முதல் ஆல்பம் - "சோவியத் மண்ணில் டின்டின்". இந்த ஆல்பத்தின் முதல் 8 பக்கங்களுக்கு, படிய வாரிய தலையோடு டின்டின் காட்சி தருவார் ! எட்டாம் பக்கத்தின் கடைசி பிரேமில் டாப் இல்லாததொரு காரில் கிளம்பும் டின்டினின் முடி நட்டுக்கா தூக்கிக் கொள்கிறது ! அன்று முதல் அதுவே நம்மாளின் நிரந்தர ஹேர்ஸ்டைல் ஆகிப் போனது !!
Copyright : Herge / Tintinimaginatio - 2024 |
இன்டர்நெட்டோ ; யூடியூபோ அறியாத பல தலைமுறைகளுக்கு டின்டினின் சாகசங்கள் ஒவ்வொன்றுமே ஒரு புவியியல் பாடம் மாதிரி ! சோவியத் ரஷ்யா ; ஆப்ரிக்க காங்கோ ; நேபாளம் ; இந்தியா ; திபெத் ; தென்னமெரிக்கா ; ஸ்காட்லாந்து ; மத்திய கிழக்கு ; எகிப்து ; அமெரிக்கா - என்று வாசகர்களைக் கரம்பற்றி கதாசிரியர் Herge செம டூர் அடித்திருக்கிறார் ஒவ்வொரு ஆல்பத்திலும் ! பற்றாக்குறைக்கு நிலவுக்குமே பயணம் உண்டு !!
ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டராக துவங்கிய டின்டின், பின்னாட்களில் ஒரு explorer ஆக உருமாற்றம் கண்டதற்கொரு சுவாரஸ்யப் பின்னணி உண்டு ! இரண்டாம் உலக யுத்தம் வேரூன்றிட, பெல்ஜியம் நாஜிக்களின் ஆக்கிரமிப்பின் கீழ் இருக்க நேரிட்டது - 1940 முதலாய் ! புது ஆட்சியாளர்கள் விதித்திருந்த கடுமையான கட்டுப்பாடுகளின் மத்தியில், டின்டினை ரிப்போர்ட்டர் ரூபத்தில் உலவிட அனுமதித்து, ஆங்காங்கே உள்ள சமூக சூழல்களை பகடி செய்வதாய் ஏதேனும் எழுதி வைத்தால் தான் கைதாகிடலாம் என்பதை உணர்ந்த Herge - நாயகரை ஒரு களஆய்வாளராய் உருமாற்றம் காணச் செய்தார் !
இங்கிலாந்தின் பின்னணியில் உருவான சாகசமான THE BLACK ISLAND ஒரு வித்தியாசமான ஆல்பம் ! இதனை ஆங்கிலத்தில் வெளியிட வேண்டி இருந்த போது - அங்கே டின்டினை வெளியிட்டுக் கொண்டிருந்த பதிப்பகத்துக்கு நிறைய மனத்தாங்கல் ! நிஜமான இங்கிலாந்தினை கதை பிரதிபலிக்கக் காணோமென்று சொல்லி, மொத்தம் 131 திருத்தங்களை முன்மொழிந்தனர் ! So ஒட்டு மொத்த ஆல்பமுமே முழுக்க மறுபடியும் (திருத்தி) வரையப்பட்டது !
மொத்தம் 24 ஆல்பங்கள் கொண்ட இத்தொடரில் - 3 கதைகள் மாத்திரமே நெடும் சாகசங்கள் ; so 2 ஆல்பங்களில் நிறைவுற்றிடும். பாக்கி 18 சாகசங்களும் one shots ! நாம் அடுத்து வெளியிடவிருப்பவை 124 பக்க நீளத்திலான டபுள் ஆல்பம்ஸ் !
ரைட்டு...இனி நம் மத்தியில் அறிமுக ஆல்பமாய் அதிரடி செய்திருக்கும் "திபெத்தில் டின்டின்" பற்றிப் பார்ப்போமா ? வாசிப்பின் மும்முரத்தில் நம்மில் எத்தனை பேர் தொடரவிருக்கும் பாய்ண்ட்களைக் கவனித்தோமோ - தெரியலை ! But தொடரவுள்ள பத்தியினை வாசிக்கும் போது - 'அட...ஆமால்லே ?' என்ற கூக்குரல் உள்ளுக்குள் ஒலிக்காது போகாதென்பேன் !!
இந்த சாகஸத்தில் வில்லன் என்று யாருமே கிடையாதென்பதை கவனித்தீர்களா folks ? யாருமே தீயவர்களல்ல இங்கே ; விதியின் விளையாட்டாய் நிகழும் விபத்தின் தொடர்ச்சியாய் மீட்புப் பணியில் டின்டின் இறங்கிட, எதிர்ப்படும் ஒவ்வொரு கதை மாந்தனுமே உதவிட தன்னால் ஆனதைச் செய்கிறான் ! And கடத்திப் போயிருக்கும் யெட்டி கூட ஈர மனசுள்ளதொரு விலங்காய் ; பாசத்துக்கு ஏங்கும் பிறவியாய் ; தனிமையை வெறுக்கும் விலங்காகவே சித்தரிக்கப்பட்டுள்ளது ! சேங் கிளம்பிப் போகும் அந்தக் கடைசி பிரேமில் தான் என்னவொரு மென்சோகம் பாருங்களேன் ?!
வணக்கங்கள்
ReplyDeleteஅட டே கடல்... வாழ்த்துகள்.
Deleteநன்றி சகோ 😊
Deleteவாழ்த்துக்கள் ரம்யா
Deleteநன்றி சகோ 😁
DeleteSuper Ramya
Deleteவாழ்த்துக்கள் மேடம்
Deleteவாழ்த்துக்கள் தோழி
Deleteநன்றி தோழரே
Delete@Raghuraman Salem
Deleteநன்றி சார்
@கடலம்மா..😃😃
Deleteவாழ்த்துக்கள் ..💐💐
வணக்கம் நண்பர்களே
ReplyDeleteVANAKKAM
ReplyDelete2ப்பு பாஸ் 😁😁
ReplyDeleteஇனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள் அன்பு நண்பா...
ReplyDelete😍♥️🌹🔥
டின்டின்னுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 💐💐💐🥳🥳
ReplyDeleteஉள்ளேன் ஐய்யா
ReplyDeleteநம்முடன் புதிதாக இணைந்துள்ள டின்டினாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete10க்குள்ளே...
ReplyDeleteஇந்த மகிழ்ச்சியான நாளில், அருமுயற்சி எடுத்து, இந்த புத்தாண்டில் வாசகர்களுக்கு சேர வேண்டும் என
ReplyDeleteதமிழில் வெளியிட்டு நம்மை மகிழ்ச்சிப்படுத்திய உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
லயன் ஆசிரியர் மற்றும் லயன் குழமத்துக்கு நமது மகிழ்வான நன்றியையும்,வாழ்த்துக்களையும் தெரிவிப்போம் நண்பர்களே...
🙏🏻💐💐💓💓💓
HAPPY BIRTHDAY TINTIN !
வந்துட்டேன்.
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteI too here...
ReplyDeleteடின்டின் கதைகளில் எப்பொழுதும் ஸ்நோயி தான் என் FAVOURITE
ReplyDeleteஇந்தக் கதையிலும் விதிவிலக்கல்ல.
மிருக மனதின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு சில பல சொதப்பல்கள் செய்தாலும், தன் எசமானுக்கு ஒரு பிரச்சினை என்றால் உயிரை தரவும் தயங்க மாட்டான். இங்கும் அப்படியே.
அடுத்ததாக யெட்டி... ஏனென்று நீங்களே சொல்லி விட்டீர்கள்.
கதைப்படி டின்டினுக்கு 22 வயதிருக்கும், கேப்டன் ஹெடக்கிற்கு 55 இருக்கலாம்
அனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteடின்டினுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDelete🙏🙏
ReplyDeleteபதிவு அகலத்தில் உள்ளதே. தள்ளித் தள்ளி படிக்க வேண்டி உள்ளது.எனக்கு மட்டுந்தானா?
ReplyDeleteஎனக்குமே சகோ
Deleteயெஸ்...
Deleteகேள்வி # 1
ReplyDeleteபதில்..
கேப்டன் ஹேடாக்... இவரைப் போன்ற சுபாவம் உடைய துணையோ, நட்போ வாழ்க்கையில் கிடைத்தால் எந்த உயரத்தையும் வெற்றிகரமாக தாண்டலாம்
கேப்டனை போன்று ஒரு பாத்திரத்தை வாழ்க்கையில் காண்பது அரிது.
யெட்டி... பரிதாபத்துக்குரிய ஜீவன், வீண் பழியினை வாழ்க்கை முழுவதும் சுமக்கும் ஜீவி.
யெட்டியின் நிலையினை வாழ்க்கையில் பலர் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சுமந்து இருப்பர்.
கதையில் முடிவில் யெட்டி... நண்பர்கள் செல்லும் காட்சியை பார்த்துக் கொண்டே இருக்கும் போது... அதற்கு இருந்த மனநிலையில் தான், வாழ்க்கை பல சமயங்களில் சுமந்து இருப்போம். அங்கு யெட்டியின் கையில் ஏதுமில்லை.
இங்கு நமது கையில் ஏதுமில்லை.
கண்ணுக்கெட்டும் தொலைவில் சந்தோஷம் கையை விட்டு சென்று கொண்டிருக்கும். நம்மால் பிடிக்க இயலாது. யெட்டியின் நிலையில் தான் வாழ்க்கை உள்ளது.
ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளும் யெட்டியின் மனோ பலம் தான் எனக்கு இல்லை...
முக்கியமாக யெட்டியின் வாழ்க்கை ரகசியம்... யெட்டியோடு மறைந்து விடும் வீண்பழியோடு... கொடுமை தான்.... வாழ்க்கையே மிகவும் விசித்திரமானது.
செம்ம நண்பா உண்மையாகவே செம்ம.
Deleteகேள்வி # 2 க்கு..
Deleteடின் டின் வயது 24 - 29
கேப்டன் வயது 44 - 49
🎂🎂Happy Birthday wishes TINTIN dear..😍😘💐💐🎂🎂
ReplyDeleteபொதுவாக கார்டூன் கதைகளிலும் சரி, படங்களிலும் சரி, நான் மிகவும் ரசிப்பது ஹீரோவுடன் வரும் செல்ல பிராணிகளையே.
ReplyDeleteஏனெனில் ஹீரோவுக்கு நிகராக இதன்களின் ரியாக்ஷன் இருக்கும்.
ஹீரோ என்ன செய்கிறானோ அதுக்கு தகுந்தாற்போல் இவைகள் உணர்ச்சிகளை
காண்பிப்பது ரசனைக்குரியது.
இந்த டின்டின் கதையின் முதல் பேனலில் ,
டின்டின் வாக்கிங் போவதை ரசிப்புடன் சொல்ல,கீழே ஸ்நோயி நாக்கை தொங்க விட்டு தன்னுடைய மனதில் சொல்வதை இப்டி போட்டிருப்பார்கள்.
"பொழுது விடிஞ்சு ,பொழுது போறவரை குத்துப்பாறைகளுக்கு நடுவே பூட்ஸ் நடப்பதால அவருக்கு கஷ்டமில்ல. எனக்குதான கஷ்டம்" என.
இதுக்கு அடுத்த பேனலில் நகரத்தை எட்டியவுடன் டின்டின்க்கு முன்னாடி ஸ்நோயி வெகு வேகமாக சென்று வீட்டுக்குள் போகும்.
நாள் பூரா சுத்துனதுக்கு"சட்டுனு சாப்டுட்டு படுக்கனும்" என்பது போல.
இங்கு ஆரம்பிக்கும் இந்த ஸ்நோயியின் அழகான ரியாக்ஷன்,
கேப்டன் மாடு மேல் ஏறிப்போகும் போது,
விமானத்தில் அவசரமாக ஓடும்போது,
பனி மலை பயணத்தில் கேப்டனின் பேக் லிருந்து கீழே சிந்தும் சரக்கை ருசித்து விட்டு தள்ளாடி விழும்போது,
கேப்டன் போதையில் தடுமாறும் போது,
என தொடர்ந்து....
கடைசி பேனலில் சுபம் போடும் முன்
"திபெத்தின் ஞாபகர்த்தமாக இது" என பெரிய எலும்புத் துண்டை தூக்கிக் கொண்டு வரும் வரை ரசிக்க முடிகிறது.
கதையின் சில பேனல்களை தவிர,
மீதி இடங்கள் முழுவதிலும் இந்த ஸ்நோயியின் ஆதிக்கம் உள்ளது.
வெளிநாட்டு கதாசிரியர்கள் ஒரு விலங்குக்கு கூட மனிதர்களின் உணர்வுகளை புகுத்தியிருப்பது பாராட்டுக்குறியது.
டின்டின் கதையை படிப்பவர்கள் நிச்சயம் ஸ்நோயியையும் கவனிக்க வேண்டும்.
2) டின்டின்க்கு 15 வயது இருக்கலாம், கேப்டனின் பேச்சை கவனிக்கும் போது அவருக்கு 50க்கு மேல் இருக்கலாம்.
👌👌👌👍👍
Deleteகதய படிச்ச பிறகு பதிவு படிக்கிறேன் சார்
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஆஜர்
ReplyDelete95 வருடங்களாக பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டின் டின் இன்று தமிழிலும் வந்து நம் அனைவரையும் மெய்மறக்கச் செய்துள்ளார்.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் டின் டின்.
அவரது 100வது வயதிற்குள் அனைத்து கதைகளையும் தமிழில் வெளியிட்டு விடுங்கள் சார்.
எனக்கு பிடித்தது ஸ்னோயி தான். சீரியஸ் இடங்களையும் தனது பாவனைகளால் வசனங்களால் சிரிப்பாக மாற்றுவதால்.
தனியாக வெளிநாட்டிற்கெல்லாம் போவதால் டின் டின் வயது 16க்கு. மேல் இருக்கும். ஹேடக் 50 இருக்கலாம்.
///எனக்கு பிடித்தது ஸ்னோயி தான். சீரியஸ் இடங்களையும் தனது பாவனைகளால் வசனங்களால் சிரிப்பாக மாற்றுவதால்//
Deleteயெஸ்!! கரெக்ட்!!
Jai thorgal
ReplyDeleteஅறிமுக மாதமே பிறந்தநாள் கொண்டாடும் டின்டின்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்💐💐💐💐
ReplyDeleteலயனின் டாப் ஸ்டார்களில் விரைவில் வருவார்னு தெரிகிறது.
2029ல டின்டின்னின் 100வது பிறந்தநாளை கொண்டாட தங்களது டைரிலயில் டேட் ஒதுக்கிடுங்க சார்..
சென்னையில் ஸ்பெசல் ரிலீஸ் வித் டின்டின் பர்த்டே செலிபரேசன் பண்றோம்.....
சூப்பரான ஐடியா இது. 2029 டின்டினின் 100ஆவது பிறந்த நாள் விழா. Let's get ready
Delete1.வரம் வாங்கிய மின்னலார்.
ReplyDeleteடின்டின்னும் நம்பிக்கை இழந்து கிளம்ப தாயாராகும்போது பிரசன்னமாக சேங் இருக்கும் இடத்தை தெரிவித்து மீண்டும் தேடிப்போக வைக்கிறார்.
சேங்கை மீட்டுவருபவர்களை வரவேற்க தலைமை மடாதிபதியையே வருமாறு தூண்டுவதும் மின்னலாரின் பிரசன்ன காட்சியே...
சில வேளைகளில் இதுபோன்ற அதிசய நிகழ்வுகளை ஏற்கத்தான் வேண்டி உள்ளது்
2.டின்டின்னுக்கு 35 முதல் 40வயதிருக்கலாம்
ReplyDeleteSir... naane adhigamaa vayasai sollittenonnu ninaichikittu irundhen.. neenga ennai beat pannitteenga
Deleteஉண்மையில் டின்டின் பத்திரிகை நிரூபர்....அப்படித்தான் பெல்ஜியத்தில் அறிமுகம் ஆனார்னு மேல ஆசிரியர் சார் தெரிவித்து உள்ளார்..
Deleteஅதை வைத்து பார்த்தோம்னா டின்டின் வயசு தோராயமாக 45
கேப்டன் ஹேடாக்கின் வயது 55
15, 20னு குழந்தை புள்ளை வயசுலாம் கிடையாது டின்னாருக்கு...🤭
எப்பா 35 வயசுனா அதுக்கு தகுந்த தோற்றம் இருந்தா சரி,இது விடலை பருவ தோற்றம். அப்ப 15 வயசு சரிதான்.
Delete//இது விடலை பருவ தோற்றம். அப்ப 15 வயசு சரிதான்//
Delete+9
இன்னும் டின் டின் படிக்கவில்லை.
ReplyDeleteசிஸ்கோ - Finished
இளம் டெக்ஸ் - Finished
விங்கமாண்டர் ஜார்ஜ் - 4 Finished and ongoing
Next
டின் டின்
லார்கோ
வேதாளர்
1. எனது பேவரைட் டின் டின் தான். அந்த வெள்ளந்தி முகமும் நடத்தையும் நம் மனதை கவரும்.
ReplyDelete2. டின் டின் வயது 14.
3. கேப்டனுக்கு வயது 55.
👍👍👍
Deleteகேள்வி 1: எனக்கு மிகவும் பிடித்தது ஸ்நோயி தான். லக்கி லூக்குக்கு ஜாலி ஜம்பர் போல டின்டினுக்கு perfect Companion. எனக்கு சிறு வயதில் இருந்தே ஸ்நோயின் சேட்டைகள் ரொம்ப பிடிக்கும். அதும் உங்கள் எழுத்தில் I Loved it.
ReplyDeleteகேள்வி 2: டின்டின் வயது 18-19
கேப்டனின் வயது 45
43
ReplyDelete47th
ReplyDeleteDear விஜயன் sir.. திபெத்தில் டின், டின் நான் இன்னும் படிக்கவில்லை. இந்த வாரம் ஸ்டாலின் சகோவிடம் வாங்குவேன்...அட்டைப்படத்தில்
ReplyDeleteஒரு "பெரிய சந்தேகம்" அதாவது
பனியில் பதிந்துள்ள காலடித்தடம் நேருக்கு நேராய் உள்ளது... மனிதர்களோ, பனி மனிதனோ.. நடக்கும் போது வலது காலுக்கும், இடது காலுக்கும் இடையில் அரை அடி
Gap... இடைவெளி நிச்சயம் இருக்கும்... ஆனால், அட்டையில்
நேராய்... ஒருவேளை பாவப்பட்ட
அந்த பனிமனிதன் அப்படிதான்
நடப்பது போல கதை உருவாக்கினாரோ herge... நான் சொல்ல வருவது உங்களுக்கு
புரியுதுங்களா sir. ❤️
நிச்சயம் நேராக இல்லை நண்பா. கூர்ந்து பாருங்கள். சிறிய இடைவெளி தெரிகிறது. அந்த மனிதன் ஒருவேளை கடும் குளிர் காரணமாகக் காலைச் சற்று ஒடுக்கி வைத்தபடி சென்றிருக்கலாம் அல்லவா?
Delete@ நந்தீஸ் ஜி
Delete///மனிதர்களோ, பனி மனிதனோ.. நடக்கும் போது வலது காலுக்கும், இடது காலுக்கும் இடையில் அரை அடி
Gap... இடைவெளி நிச்சயம் இருக்கும்.///
ஆனாப் பாருங்க ஜி.. fashion tvல ஜீரோ ஸ்லிம் பெண்கள் எல்லோருமே இப்படி நேர் கோட்டிலே cat walk போறதை நாமெல்லாம் மணிக்கணக்கில் ரசிச்சிருப்போமே..
டின்டின் கதையில அப்படி நேர்கோட்டுல (கேட் வாக்) நடந்ததும் ஒரு பனி மனுஷியோ என்னவோ?!! ;)
Vijay @ ROFL
Deleteஅதுக்காகத்தான் நீங்க அங்கே முன்னாடியே போய் பனிமனிதன் மாதிரி குகைல ஒளிஞ்சுக்க பிளான் பண்ணீங்களா ஈ.வி?
Deleteபத்து ஜி..
Deleteஹிஹி! எப்படித்தான் கண்டுபிடிக்கறீங்களோ!! :)
Again ROFL🤣
Deleteவிஜய்.. பனிமனிதன் cat walk நடந்திருக்கலாம் என்கிறீர்கள்... 😄😄😄😄
Deleteஆஹா.. என்ன ஒரு அழகான கற்பனை.. ஆம்,
நானும் பார்த்துள்ளேன் விஜய்.. வயசு புள்ளைங்க
பாதங்களை நேராய் வைத்தே
நடப்பார்கள்... 😄😄❤️👍
This comment has been removed by the author.
ReplyDelete50
ReplyDeleteபிடிச்ச கேரக்டர் - ஹேடாக்
ReplyDeleteடின்டின் வயது 18-20
ஹேடாக் வயது - 40-45
Yes yes yes
Delete😄😄.. எடிட்டர் கவனிக்கவில்லை... பரவாயில்லை மஹி.. நீங்கள் கூட என் சந்தேகம்
Deleteபோக்கலாம்... 😄❤️
பனிமலைகளில் நடக்கும் போது, திடப்பகுதி எங்குள்ளது எனத் தெரியாது.. அதனால் முடிந்தவரை நேராக அடியெடுத்து நடப்பார்கள்.. யெட்டியும் உள்ளுணர்வாள் அப்படித்தான் நடந்திருக்கும்..
Deleteஇருக்கலாம் சகோ... ❤️👍
Deleteவணக்கம்...!
ReplyDeleteTinTin 😆😁😄😃😀🤣😂🥰😍🤩
பிடிச்ச கேரக்டர் - ஹேடாக் ..
ReplyDeleteடின்டின் வயது 18-25..
ஹேடாக் வயது - 40-50 ..
லார்கோ முதல் அத்தியாயம் படித்து முடித்தேன்
ReplyDeleteதெறி ரகம், விறுவிறுப்பு
ஓவியங்கள் செம க்ளாஸ்,
...வீரனுக்கு மரணமில்லை...
ReplyDeleteவிறுவிறுப்பான கதை.
கதை என்னைக் கவர்ந்த அளவிற்கு சித்திரங்களும், வண்ணக்கலவையும் கவரவில்லை. ஏமாற்றமே.
கருப்பு - வெள்ளையிலேயே வந்திருக்கலாமோ என்றும் எண்ண வைக்கிறது.
அடுத்த வேதாளர் கதை வந்தால் தான் தெரியும்.
வேதாளர் வேதாளமாய் ...சிரஞ்சீவியாய் குற்றவாளிகளுக்கு சுளுக்கெடுக்கும் கதை...வெள்ளையா தெரிஞ்சாலும் வண்ணச்சேர்க்கை அற்புதம்
ReplyDeleteகதை துவக்கமே அம்மானுஷ்ய சக்திகளின் ஓட்டத்தால் காரின் ஓட்டம் தடைபட
அங்க வேதாளர் தந்தையார் ஆன்மா உண்மையுனராது சாந்தியடைய....போலீசார் ஆன்மா குற்றவாளி தப்பிட்டானேன்னு சாந்தியடையாது துடிக்க...வேதாளர்
வேலைய காட்ட ..கரன்...அந்த முதியவர்....வேதாளர் லைப்ரரி...அந்த மண்டையோட்டு குத்து
என வேதாளம் கதைல எந்த தேடுவோமோ அவையெல்லாம் காட்டப்பட வேதாளர் சிம்மாசனத்ல அமர்ந்து புரட்டுவாறே அது மட்டும் மிஸ்ஸிங்....கதை நெறி வேகம்...வேதாளம் தவறு உணராமல் போகும் முதல் கதை கூட நான் படித்த வரைல
...
செம சார்...தலைப்பு மே வேதாளனுக்குத்தா மரணமில்லயே
...இதோ டெங்காலிலருந்து திபத்
Semaley. Nandru
Deleteசார் சென்னை எக்ஸ்ப்ரஸ் எல்லா பெட்டிகளயும் ஜாய்ன் பண்ணியாச்சா...கிளம்பிக் தயாரா
ReplyDeleteSir, indru pathivu kilamai sir :-)
ReplyDeleteBy Kumar 😁
Deleteஹிஹிஹி
Delete😂😂😂
Deleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeletePootachu pootachu tunda Pottachu😁
Deleteஇந்த மாதம் சந்தா பட்டியலில் முதலில் தொட்டது
ReplyDeleteகண்ணீருக்கு நேரமில்லை.
மௌனராகம் படத்தில் மெதுவாக நகரும் கதை கார்த்திக் வந்ததும் சுறுசுறு என்று பற்றிக் கொண்டு மீண்டும் மோகனிடம் வரும் பொழுது அமைதியாய் நகரும்.
அது போல சுறுசுறு டெக்ஸ் வந்தால் கதை சுறுசுறு என்றும், சாம் வில்லர் தொன்றும் இடங்கள் அமைதியாகவும் பயணிக்கிறது.
பல கதைகளில் டெக்ஸ்க்கு ஏன் முதல் சந்தேகம் அந்த பகுதியின் ஷெரிப் மீதே விழுகிறது என்பதற்கு இந்த கதையில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
வஞ்சகத்தின் பிடியில் கொல்லப்பட்ட தந்தை மற்றும் தம்பிக்கும் நியாயம் வழங்க பழிவாங்கும் கதை, அதை நேரடியாக சொல்லாமல் கோஸைஸ் (எ) கோச்சீஸ் மற்றும் ஜிம்மியிடம் கதை சொல்லும் படலமாக ஒரு பிளாஷ்பேக் கதையாக நகர்த்தி சென்றது அருமை.
கன்னி கார்சனை நினைவூட்டுகிறார்.
கதையின் தொடர்ச்சி ஆவலுடன் காத்திருக்கிறேன்.
கதை - 9.5/10
ஓவியங்கள் - 9.5/10
மேக்கிங் - 9.5/10
(நூற்றுக் கிழவி எனும் புது வார்த்தையை இன்று கற்றுக் கொண்டேன்.)
Nice review
Deleteஅடுத்ததாக படித்த கதை
ReplyDeleteவீரனுக்கு மரணமில்லை
ஏறக்குறைய இதுவும் ஒரு பழிவாங்கும் கதை தான். தன் தந்தையை சுட்டவனை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் வேதாளர். அமானுஷ்ய கதையாக கொண்டு வந்து, சாட்சியில்லாமல் செய்த குற்றத்திற்கு தண்டனை பெறாத ஒருவனை, நீதியின் முன்பு கொண்டு வந்து நிறுத்தும் கதை.
அதை எப்படி செய்தனர், எவ்வாறு செய்தனர் என்பதில் தான் கதையின் வீரியம் உள்ளது. ஒரு லைட் ரீடிங்குக்கு ஓகே ரகம். ஒரே வருத்தம் இந்த கதைக்கு தொடக்கப்புள்ளி வைத்த லாவோவுக்கு நடந்த விஷயத்தை சொல்வது போல் கதையை முடித்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
கதை - 7.5/10
ஓவியங்கள் - 8.5/10
மேக்கிங் - 9/10
Good
Deleteஇரவின் எல்லையில்
ReplyDeleteபூமியின் எல்லையை தாண்டி செல்ல சிலர் முயற்சிக்க, பூமியை குடைந்து செல்ல சிலர் முயற்சிக்க, இயற்கையை காக்க சிலர் முயற்சிக்க, எக்கு தப்பாய் இதில் மாட்டிக் கொள்ளும் லார்கோ என்ன செய்தார்? எப்படி தப்பித்தார் என்று அதகளமாக சொல்லியிருக்கின்றனர்.
பக்கம் 19ல் உள்ள கட்டிடம் அருமையாக உள்ளது என்று இணையத்தில் தேடி பார்த்தால் nanyang யூனிவெர்சிட்டியில் உள்ள சிங்கப்பூர் ஆர்ட் கல்லூரி என்று அறிந்துக் கொண்டேன்.
டெமெட்ரியா ஏஞ்சலினா ஜோலியை நினைவூட்டுகிறாள்
லாய்ட் மோர்கன் பிரீமேன் னை நினைவூட்டுகிறார்
ஜெரட் எலான் மஸ்க்கை நினைவூட்டுகிறார்
டைசன் டெரி க்ரூஸ்சை நினைவூட்டுகிறார்
27 ஆம் பக்கம் செம ஷீட் என் வேலையை பயல் செத்து விட்டான் ஆட்டோ கரெக்ட் பிரச்சினை என்று நினைக்கிறேன். செம ஷூட் என் வேலையை பயல் செய்து விட்டான் என்று இருந்திருக்க வேண்டும்.
வழக்கமான லார்கோ கதை அல்ல, ஆனால் லார்கோ கதைகளில் உள்ள அத்தனை அம்சங்களும் இதில் உள்ளன.
கதை - 10/10ஓவியங்கள் 10/10மேக்கிங் - 9.5/10
Excellent review
DeleteThank you brother
Deleteசூப்பர் நண்பரே...அந்த கொல்லுமிடந்தா....அவா கொல்ல வருவான்னு கொலையாளிக்கு முன்பே தெரியும் போல....அதாவது துவக்கத்ல கொல்லப்படும் நபரின் காதலி கலந்துக்குறான்னா. ...என யோசித்து செயல்பட்டது நாயகியா....கொலையாளியா எனும் முடிச்சுகளுக்கு நாமே பதிலெடுக்கனும்
Delete84 கொலைப் படை போல பொங்கல் மலர் ஏதும் சர்ப்ரைசா உண்டா...இல்லையான்னு இன்றைய பதிவில் தெரியவருவது போல
Deleteஅருமை சகோ 💐💐💐
Delete1. எல்லோரையும் பிடிக்கிறது - குறிப்பாய் 'ஸ்னோயி'
ReplyDelete2. டின்டின் வயது - 20க்குள்
கேப்டனின் வயது - 50+
எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)
ReplyDelete