அண்ணோவ்ஸ்,
சௌக்கியமா ? பனியடிக்கிற ராப்பொழுதிலே, ஒரு மங்கி குல்லாவ மாட்டிக்கினு தெருக்கோடிக்குப் போயி பால் பாக்கெட் வாங்கியாறவே மனுஷனுக்கு நாக்கு தள்ளும் ! ஆனா அந்த மகாஜனங்க குளிரும் பாக்காம, மழையும் பாக்காம, ஆரவாரமா நெதமும் போட்டுத் தாக்கிட்டிருக்கதைப் பாக்குறப்போ, புல்வெளியிலே குத்தி நிக்குற கமான்சே ஈட்டியாட்டம் ரோமங்கள்லாம் இங்கன நட்டுக்கினு நிக்குது ! ரெகார்ட் ; சாதனை ; உசரம் ; அது இதுன்னு நெறய பேசலாம் - ஆனா அதை கண்ணில மெய்யாலுமே பாக்குற பீலிங்கே அலாதி தான் ! அந்த சந்தோஷத்தை இந்த ஜனவரி நமக்குக் கண்ணிலே காட்டியிருக்குன்னா - ங்கொக்காமக்கா, அதிர்ஷ்ட தேவதை அம்மணி நெறயவே நம்மகூட லவ்ஸ்லே இருக்குதுன்னு அர்த்தம் ! அதிர்ஷ்ட அக்காவை பாராட்டற கையோட, படைச்சவருக்குமே ஒரு தாங்ஸ் சொல்லிக்கலாமுங்களா ? Thanks God Almighty !!
இன்னாடா மேட்டரு ? என்ற யோசனையா guys ? இங்கிலீஷில் போட்டுத் தாக்குவதுக்கு "பீட்டர்" ன்னு செல்லமாய்ப் பெயரெனில், இந்தக் கச்சா-முச்சா பாணிக்கு என்ன பெயர் வைக்கலாம் ? "டிக்" maybe ?? இப்போது புரிஞ்சிருக்குமே - முதல் பத்தியின் மொக்கை வரிகள் சகலமும் எங்கிருந்து உற்பத்தி ஆகியிருக்குமென்பது ? Yes, you got it right folks - 3 அத்தியாயங்கள் ; 180 பக்கங்கள் என நீண்டு செல்லும் டெட்வுட் டிக்கின் இறுதி ஆல்பத்தின் மொழிபெயர்ப்புக்குள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாய் சுற்றித் திரிவதால், டிக்கைப் போலவே யோசிக்கவும், பேசவும் தான் தோன்றுகிறது ! இந்தக் கறுப்பினக் கௌபாய் நமக்குப் புதியவரே அல்ல தான் ; அவரது கலீஜ் டயலாக் பாணியுமே by now நமக்குப் பரிச்சயப்பட்டது தான் ! ஆனால் ஏஜெண்ட் சிஸ்கோவுக்கும், அதன் பின்பாய் (புது) லார்கோவுக்கும் நாசூக்காய்ப் பேனா பிடித்த கையோடு இந்த கூவம் பார்ட்டிக்கு மொழியாக்கம் செய்வதென்பது வெவ்வேறு துருவங்களில் பயணிக்கும் உணர்வினைத் தந்தது ! கதைக்களமோ டெக்சாசின் அத்துவானம் ; கதைக்காலமோ 1874 ; கதை மாந்தர்களோ கரடிலும், முரடிலும் ஊறிப் போன கடுவன்கள் & நாயகனோ இடியே விழுந்தாலும் அசராத அசாத்தியன் ! முதல் அத்தியாயத்துக்குள் புகுந்திடும் முன்னே மெய்யாலுமே கணிசமான starting trouble எழுந்ததை மறுக்க மாட்டேன் ; ஒரு சின்ன பிரேக்குக்குப் பின்னே எழுத ஆரம்பித்தாலுமே, தாய்ப்பசுவை தேடி ஓடுற கன்றைப் போல ரெகுலரான, சுத்தத் தமிழுக்கே பேனா இழுத்துக் கொண்டு சென்றது ! வம்படியாக யு-டர்ன் போட்டு, அந்த crude வன்மேற்குப் பேச்சுவழக்கு பாணிக்கு மாறிட நிறையவே சண்டித்தனம் செய்தது பேனா ! ஆனால் கதையும், ஆட்டமும் சூடு பிடித்தான பின்னே ஜெட் வேகம் தான் !
"தென்றல் வந்து என்னைக் கொல்லும்" நடப்பாண்டின் முதல் கி.நா. and இதன் கதையினை ஒரு ஐஸ்க்ரீம் குச்சியில் எழுதிமுடித்து விடலாம் தான் ! ஆனால் கதையினைச் சொல்லியுள்ள விதம், கதை மாந்தர்கள் ஒவ்வொருவரையும், தத்தம் பிழைகளோடு காட்சி தரும் சராசரியானவர்களாய்க் காட்டியுள்ள பாணி ; வன்மேற்கில் உயிர் பிழைப்பதென்பது எத்தனை பெரிய பிரயத்தனம் என்பதை பிடரியில் அறையும் வரிகளோடு சொல்லியிருக்கும் ஸ்டைல் தான் இந்த western தொடரை சற்றே வேறுபடுத்திக் காட்டிடுகிறது ! And yes - வசனங்களில் நாசூக்கு ; நயம் என்றெல்லாம் சமரசம் செய்திடாமல் உள்ளதை உள்ளபடிக்கே போட்டுத் தாக்கியுள்ளேன் ! So நீங்கள் sensitive ஆனவராய் இருக்கும் பட்சத்தில், இந்த டெட்வுட் டிக் பயலிடமிருந்து நல்ல தூரத்தில் விலகி இருப்பதே நல்லதென்பேன் ! அப்புறம் இந்தக் கதைக்கு இந்தத் தலைப்பு ஏன் ? என்பதை மூன்றாம் அத்தியாயம் ரொம்பவே ரசனையை சொல்லிடவுள்ளது ! முழுக்க முழுக்க காட்டான்களாய் சுற்றி வரும் கதைக்களத்தில் ஒரேயொரு பளிங்குச் சிலை ஆஜராகிறது - மில்லீ என்ற பெயருடன் !! அவர் centerstage எடுக்கும் போது கதைக்கு ஏறும் கிக் எத்தனை மில்லி என்பதை நீங்க தான் சொல்லணும் guys ! Phew ...இல்லாத கேசத்தை எடிட்டிங்கில் பிய்த்துக் கொள்ளப் போகிறேன் என்பது மட்டும் உறுதி ! டிக் விடைதந்து விட்டு ஒரேடியாய்ப் புறப்படும் last சாகசம் இது என்பது கொசுறுத் தகவல் ! இதோ - இதழின் preview :
ரைட்டு...பிப்ரவரியில் ரகளை செய்யக்காத்துள்ள டிக் ஒருபக்கமிருக்க, "ரெகார்ட்..உச்சம்..உசரம்" என்றெல்லாம் முதல் பத்தியில் குறிப்பிட்டிருந்தேனே - அது பற்றி brief ஆக !!
சென்னைப் புத்தக விழா !! இருபது நாட்களுக்கு முன்வரைக்கும் நகரமே வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த சூழலில், வாசிப்புக்கு முக்கியத்துவம் தந்திட நேரமோ, முனைப்போ, பணமோ இந்தாண்டினில் சென்னை மக்களின் மத்தியில் இருக்குமா ? என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வந்தது ! In fact விழா துவங்கிடுவதற்கு 1 நாள் முன்னே இந்தத்துறையில் பழம் தின்னு கொட்டை போட்டதொரு மூத்த பதிப்பகத்தாரிடம் பேசிக்கொண்டிருந்த போது - "செலவுகளை சுருக்கிக்கோங்க ; வந்ததை வரவுன்னு சந்தோஷமா ஏத்துக்கோங்க ! இவ்ளோ விக்கும் ...அவ்ளோ விக்கும்னு கணக்குலாம் இந்த வருஷம் போட்டுக்காதீங்க !" என்று சொல்லியிருந்தார் ! அது காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது, விழா துவங்கிய முதல் நாளன்று & அந்த மாலையின் விற்பனையும் செம சிக்கனமாய் இருக்க, உள்ளுக்குள் தயாராகிக் கொண்டேன் - ஆங்...மீசையிலே ரொம்பலாம் மண் ஓட்டலை"ன்னு சொல்லிக்க ! எனக்குள் இருந்த பீதிக்குக் காரணமில்லாதில்லை !!
டிசம்பரின் 30 நாட்களிலும், ஜனவரியின் முதல் 7 நாட்களிலுமாய்ச் சேர்த்து, அந்த 38 தினங்களில் நாம் தயாரித்திருந்த இதழ்களின் எண்ணிக்கை - கிறுகிறுக்கப் பண்ணும் 19 !!!
*டிசம்பரின் ரெகுலர் தடம் - 4 இதழ்கள்
*டிசம்பர் இறுதியில் - 2 இதழ்கள் (SISCO & விங்-கமாண்டர் ஜார்ஜ்)
*ஜனவரி ரெகுலர் தடம் - 4 இதழ்கள்
*சென்னை எக்ஸ்பிரஸ் - 9 இதழ்கள் !!
ஆக total = 19 இதழ்கள் !!
கிட்டத்தட்ட 2 நாட்களுக்கு ஒரு புக் என்ற துரிதத்தில் இயங்கியுள்ளது எங்களின் தம்மாத்துண்டு டீம் - "சென்னைப் புத்தக விழா 24" என்ற இலக்கினைக் கொண்டு !! Of course அந்த 9 சென்னை எக்ஸ்பிரஸ் இதழ்களைத் தவிர்த்த மீதமெல்லாமே ரெகுலர் சந்தாக்குளுக்கென எப்படியும் தயாராகி இருக்க வேண்டியவைகளே ! ஆனால் சிக்கல் என்னவெனில், குறுகிய அவகாசத்துக்குள் கணிசமான புக்ஸ் எனும் போது முகவரிகளில் பலர் திணறிடுவர் ! அது மாத்திரமன்றி, ஒவ்வொரு ஜனவரியிலுமே சந்தாச் சேர்க்கை முழுமை கண்டிராது ! So முதல் மாதம் அனுப்பிட நேரும் கூரியர்கள் மாமூலான நம்பரிலிருந்து குறைந்தே இருக்கும். ஜனவரியின் தேதிகள் ஓட ஓட, இதழ்களை வாசித்து விட்டு நீங்கள் அலசல்களைப் போடப் போடத் தான் சந்தாச் சேர்க்கை முழுமை காணும். So அந்த சந்தாவினில் விழும் துண்டை ஈடு செய்திட சென்னைப் புத்தக விழாவினில் விற்பனை நமக்கு நிரம்பவே அத்தியாவசியம் ! So இத்தனை கணக்குகள் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்க, புத்தக விழா துவங்கிய வாரத்தினில் வருண பகவானும் கொஞ்சம் போட்டுப் பார்க்கும் மூடில் இருக்க, முதல் வாரயிறுதிக்கு ஸ்டால் பக்கமாய்ப் போகும் சமயத்தில் வயித்தில் புளி, பருப்பு, பெருங்காயம், என்று தினுசு தினுசாய் கரைத்துக் கொண்டு தானிருந்தது !
ஆனால்....ஆனால்...வெயிலோ, புயலோ,மழையோ - எதுவும் எங்களை அசைச்சுக்காது !! எங்களது வாசிப்பு உத்வேகத்துக்கு இயற்கையின் சலனங்கள் கூட ஒரு தடையாகிடாதென்று - சென்னை மக்கள் பதிவு செய்த statement நமது விற்பனைகளுக்கு அசாத்திய உரமேற்றின ! சனிக்கிழமை நண்பர்களோடு பேசிக்கொண்டே இருந்தாலும், தொய்வின்றித் தொடர்ந்த விற்பனையில் ஒரு கண் இருக்கவே செய்தது ! நமக்குத் தான் அந்தக் கண்ணை நல்லாவே பெருசாய் பகவான் தந்திருக்காரே - அந்த ஒற்றைக் கண் பார்வையிலேயே விற்பனைகளின் அளவினை கணிச்சிட மாட்டோமா - என்ன ? To cut a long story short - அன்று தொடங்கிய சென்னை அதிரடிகள் இதோ இந்தப் 18-வது தினம் வரையிலும் இம்மி கூட வேகம் மட்டுப்படாது, பிரித்து மேய்ந்துள்ளன ! And நமது 12 வருட விற்பனை ரெக்கார்டை நடப்பாண்டினில் நேற்றே தாண்டியாச்சு ! So இந்த ஞாயிறுக்கு விழா நிறைவு காணும் சமயம், ஒரு மெய்மறக்கச் செய்யும் புது விற்பனை அத்தியாயத்தினை சென்னை நண்பர்கள் நமக்காக எழுதியிருப்பார்கள் !! And அதுவும் கிட்டத்தட்ட 1000 ஸ்டால்கள் கொண்டதொரு அசுர அளவிலான விழாவினில் !! Take a massive bow - you incredible people from Chennai !! வாசிப்பின் மீதும், காமிக்ஸ் மீதும், நம் மீதும் நீங்கள் காட்டி வரும் இந்தப் பிரேமத்தினைக் கண்டு மலர் டீச்சரே புல்லரித்துப் போயிருப்பார் !!
எது - எவ்வளவு விற்றுள்ளது ? எதெல்லாம் சென்னையைப் பராக்குப் பார்த்துவிட்டு கோஷாப்பொண்ணாட்டம் வீடு திரும்புகிறது ? என்பதெல்லாம் விழா முடிஞ்ச பிற்பாடு தெரிய வரும். போன வருஷம் போலவே ஒரு ஒட்டுமொத்த ரிப்போர்ட்டை ஜூனியர் எடிட்டர் கையில் தந்து விடும் போது இன்னும் கொஞ்சம் in depth அலசணும் ! இந்த நொடிக்கு புனித மனிடோவின் கருணைக்கு ஒரு நெடுஞ்சாண்கிடை நன்றியை சமர்ப்பணமாக்கி விட்டு நகர்கிறேன் !
சென்னையில் அதிரடி எனில், சிவகாசி அதிகம் பின்தங்கியிருக்கவில்லை - இந்த ஜனவரியில் !! டின்டின் துவக்கித் தந்துள்ள காட்டாற்று வெள்ளத்தினை லார்கோவும், வேதாளரும், இளம் டெக்ஸும் சீராய் வழிநடத்தினர் எனில், "சென்னை எக்ஸ்பிரஸ்" சும்மா அம்புட்டுப் பேரையும் அள்ளித் தூக்கி வெவ்வேறு கோச்களில் அமர்த்தி, 'வந்தே பாரத்' வேகத்தில் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது ! வியாழன் மாலை 7 மணி சுமாருக்கு கூரியர் ஆபிசிலிருந்து வந்திருந்த பையன் ஒரு கோணிச்சாக்கில், எண்ணிலடங்கா டப்பிக்களை நிறைக்க பிரம்மப் பிரயத்தனம் பட்டுக்கொண்டிருப்பதை வீட்டிலிருந்தபடியே CC TV-ல் பார்த்த போது மெய்யாலுமே கொஞ்ச நேரத்துக்கு வேலை எதுவும் ஓடவில்லை !! இந்தச் சின்ன வட்டத்தின் விஸ்வரூபம் எத்தகையது ? என்பதை yet again ; அதுவும் ஆண்டின் துவக்கத்திலேயே பார்க்க முடிந்திருப்பது நாங்கள் வாங்கி வந்த வரமே !! மில்லியன் & more நன்றிகள் folks !!
And உள்ளூர்,வெளியூர் மட்டும் தானா - நாங்க அசலூரும் போவோம்லே ! என்ற டயலாக் ஒன்று தான் குறை !! டின்டின் 3 மெகா பார்சல்கள் ஐரோப்பாவின் வெவ்வேறு இலக்குகள் நோக்கிப் பயணமாகி வருகின்றன ! Phewwwww !!!
இதில் icing on the cake என்னவெனில் - இந்த அதிரடிகளையெல்லாம் செயல்படுத்தி வரும் எங்களது டீமின் strength இம்மியும் கூடவில்லை ; அதே பணியாட்களே இத்தனை அசகாயங்களையும் சாதித்து வருகிறார்கள் ! கால் கட்டைவிரலை கடைவாய்க்குள் திணிக்க நான் முனைவதெல்லாம் எனது டிசைன் ; எனது குசும்பு ! ஆனால் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் தரும் behind the scenes டீமுக்கு இந்த ஆகஸ்டில் ஈரோட்டில் ஒரு ஸ்பெஷல் பாராட்டைப் போட்டால் சூப்பராக இருக்கும் என்று நினைக்கிறேன் ! What say folks ?
அப்புறம் before I sign out - இதோ இன்னும் இரு updates - இரண்டுமே விழாக்கள் சார்ந்தவை !!
*நமது கேரவன் இங்கிருந்து நேராக திருப்பூருக்குப் பயணமாகிறது - அங்குள்ள நண்பர்களைச் சந்திக்க !
Bye all ...have a lovely Sunday !! டின்டின் அடுத்த ஆல்பத்தினுள் புகுந்திட நான் புறப்படுகிறேன் ! See you around !!
வணக்கம் சார்
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே...
Deleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteVanakkam
ReplyDelete4th
ReplyDelete10kulla
ReplyDelete5th
ReplyDelete10 க்குள்ள வந்துட்டேன்..
ReplyDeleteஉள்ளேன் ஐயா!!
ReplyDelete6 மனமே 6. இங்க என்னோட நம்பர் 6!
ReplyDeleteஇல்லீங் 9!
DeleteRendum onnu thaanungale.. thalaikeezha paarththaa😁
Deleteநான்....
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteநானு எத்தினியாவுது சார்..?
ReplyDelete//ஆனால் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் தரும் behind the scenes டீமுக்கு இந்த ஆகஸ்டில் ஈரோட்டில் ஒரு ஸ்பெஷல் பாராட்டைப் போட்டால் சூப்பராக இருக்கும் என்று நினைக்கிறேன் ! What say folks ?///
ReplyDeleteகண்டிப்பாக சார்
ஆஜர்
ReplyDeleteமிக்க அன்புடன் இரவு வணக்கம் நண்பர்களே
ReplyDeleteஇந்த வருடத்தின்
ReplyDeleteமுதல் கி. நா வுக்கு
வெயிட்டிங்,
மறுபடியும்
டின் டின் சூப்பர்
Sir எப்போது
எந்த மாதத்தில் .....?
செபுவியில் நமது வெற்றி மிகுந்த சந்தோசத்தையும் உற்சாகத்தையும் தருகிறது. 2024 ம் காமிக்ஸ் தங்க வருடமாக அமைய புனித மானிடோ அருளட்டும்.
ReplyDeleteமாட்டுப் பொங்கலன்று
ReplyDelete9 மறு பதிப்புகள் சக்கை போடு போட வேதாளர் சுப்ரீம் 60 காலியாகி விட்டார் இன்னொரு நல்ல செய்தி ஈரோட்டில் இத்தாலி லயன் ஸ்டாக்கிலிருந்து பிரியா விடை பெற்று சென்று விட்டது இங்கு அலசியதன் விளைவோ என்னவோ சிக்பில் & கோ டீசன்டான விற்பனையானது டெக்ஸ் வில்லரின் மற்ற இதழ்களும் நல்ல விற்பனை கண்டது புலியாரும் குறிப்பிட தக்க விற்பனையானர்
சந்தோசமான தகவல்கள் செந்தில் சத்யா ஜீ...
Deleteஅருமை தோழரே
Deleteநள்ளிரவு வணக்கம்
ReplyDeleteHi friends
ReplyDeleteதிருப்பூர் வாசக நண்பர்கள் வட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது ❤️🙏
ReplyDeleteவணக்கம் நண்பர்களே...
ReplyDeleteவணக்கம் ஆசிரியர் சார்.
வந்துட்டேன்.
ReplyDeleteஆம் sir... பணியாளர்கள்.. ❤️👍🙏... அவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்.. ❤️👍🙏
ReplyDeleteசூப்பர் சார்....பணியாள நண்பர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்....அப்பம் அடுத்த டின் டின் அடுத்த மாசமேவா
ReplyDeleteஅப்பம் ; புட்டு ; கொழுக்கட்டை - எப்போன்னாலும் சாத்தியமே ஸ்டீல் ; ஆனால் டின்டினுக்கு 6 மாச அவகாசமே குறைச்சல் !
Deleteஅப்ப சென்னை காமிக்கான் ஸ்பெசல் இதழ் உறுதிடோய்
ReplyDeleteவணக்கம் 🙏
ReplyDeleteவந்துட்டேன் !
ReplyDeleteஇந்த ஆகஸ்டில் ஈரோட்டில் ஒரு ஸ்பெஷல் பாராட்டைப் போட்டால் சூப்பராக இருக்கும் என்று நினைக்கிறேன் ! What say folks ?
ReplyDeleteThis one reason is enough for me to attend ebf this year
Super !
DeleteMy pleasure sir
DeleteJai thorgal
ReplyDeleteஆனாக்கா...ஆனாக்கா என்னமோ உறுத்துதுங்களேங்க சார். கிளாசிக் டெக்ஸ் மறுபதிப்பு பத்தின அறிவிப்பு
ReplyDeleteகூட இதுவரை இல்லீங்களேங்க சார்
அதானே,விற்பனை சந்தோஷத்தை முழுமையாக்க கிளாசிக் டெக்ஸ் ஸ்பெஷலை போட்டுத் தாக்குங்க சார்...
Deleteபுரியலியே சார் ? கிளாசிக் டெக்ஸ் மறுப்பதிப்பை அறிவிக்க இப்போது என்ன அவசியம் என்று யூகிக்க முடியலியே ?
Deleteமாயாவியும் ; லக்கி லுக்கும் கையிருப்பில் புக்ஸ் இல்லை என்பதால் அவற்றை மறுபதிப்பிட்டுள்ளோம். டெக்சுக்கு அவ்வித நெருக்கடிகள் தான் கிடையாதே சார் ?
Delete"இரத்த முத்திரை" யை மட்டும் போட்டுத் தாக்கிட்டீங்கனா அப்புறம் எந்த மறுபதிப்பும் கேட்க மாட்டோம்
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeleteMe in..😍😃😘
// தென்றல் வந்து என்னைக் கொல்லும்" நடப்பாண்டின் முதல் கி.நா //
ReplyDeleteடெட் வுட் டிக் போன்ற ராவான ரவுசு பார்ட்டிக்கு இதமான ஒரு தலைப்பு வித்தியாசமான காம்பினேஷன் தான்,புயலும்,பனியும் சேர்ந்தார்போல...
// And நமது 12 வருட விற்பனை ரெக்கார்டை நடப்பாண்டினில் நேற்றே தாண்டியாச்சு ! //
ReplyDeleteஅட்டகாசமான,அருமையான தகவல்...
இனிய காலை வணக்கங்கள்
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDelete//ஆனால் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் தரும் behind the scenes டீமுக்கு இந்த ஆகஸ்டில் ஈரோட்டில் ஒரு ஸ்பெஷல் பாராட்டைப் போட்டால் சூப்பராக இருக்கும் என்று நினைக்கிறேன் ! What say folks ?//
ReplyDeleteநாங்களும் ஒரு பக்கம் போனிலும், வாட்ஸ்அப்பிலும் கேள்விகளாய் அடுக்கும்போதுஎங்களுக்கும் போறுமையாக பதில் சொல்கின்றனர்
நேரில் இதற்கு ஒரு சான்று ஜோதி அக்கா, முக்கியமாய் ஸ்டாலுக்கு வரும் குழந்தைகளை சிறப்பாக கவனிக்கிறார்
காபி இடைவேளை போது கூட நிதானித்து குடிக்காமல் சீக்கிரமாய் குடித்துவிட்டு வரந்து வேலையில் கவனம் செலுத்துகிறார்
சிறப்பான செயல்களை ஆற்றிடும் இவர்களுக்கு மிக சிறப்பாக ஜமாச்சிடுலாம் ஆசிரியரே
Deleteகண்டிப்பாக....
Deleteகண்டிப்பாக.... கண்டிப்பாக.... கண்டிப்பாக.... கண்டிப்பாக.... கண்டிப்பாக....
Deleteடிக்கெட்டை சூப்பர் வித்தியாசமாருக்கு வண்ணங்களும்
ReplyDeleteஅது என்ன டிக்கெட்டுங்க ஸ்டீல் ?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅவர்களை பெருமைப் படுத்தும் விதமாக ஒரு டெக்ஸ் ஸ்பெஷல் வெளியிட்டு அதன் மூலம் வரும் தொகையை பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கலாம்.
ReplyDelete'தி லயன் டீம் ஸ்பெஷல்'
டைட்டில் ok வா எடிட்டர் சார்?
பொன்முடிப்பெல்லாம் வேண்டாம் சார் ; உள்ளுக்குள்ளேயே அதனைப் பார்த்துக் கொள்ளலாம் ! அவர்களின் பணிகளுக்கு ஒரு பொதுவெளிப் பாராட்டே நான் சொல்ல எண்ணியது - moreso லயனின் இந்த 40-ம் ஆண்டுதனில் !
DeleteOkay sir!
DeleteWill try to come to comic on from cbe with my 2 sons on sunday
ReplyDeleteதங்களின் & தங்களது அணியின் உழைப்புக்கு உரிய பலனை சென்னை விழா தந்திருப்பதை தங்களின் உற்சாகம் ஊற்றெடுக்கும் வரிகள் சொல்கிறதுங் சார்...
ReplyDeleteவாழ்த்துகள்...💐💐💐💐💐
அணி லயனிக்கு பாராட்டுகள்🌹🌹🌹🌹🌹🌹
தொடரட்டும் வெற்றிக் கதைகள் அடுத்தடுத்த விழாக்களிலும்....
// தங்களின் & தங்களது அணியின் உழைப்புக்கு உரிய பலனை சென்னை விழா தந்திருப்பதை தங்களின் உற்சாகம் ஊற்றெடுக்கும் வரிகள் சொல்கிறதுங் சார்...
Deleteவாழ்த்துகள்...//
+1
டெட்வுட் சும்மா தெறி சீரியஸ்..பின்னட்டை பிரமாதம் சரா்..சும்மாவே ஆடும் நாயகனுக்கு இம்முறை கூட்டாளி வேறா....களை கட்ட போகுது ரவுசு😉 பர்ஸ்ட் ரீடிங் இதான் பிப்ரவரியில்.....
ReplyDeleteபதிவை படிக்க படிக்க மகிழ்ச்சி ,ஆனந்தம் ,பெருமை.....
ReplyDeleteஅருமை சார்...
ஆமா தல...அலுவலகத்திலும் விற்கனை றைக்கை கட்டுவது ஐசங் ஆன் த கேக்..... நல்ல துவக்கம் 2024க்கு....
Delete// விற்கனை றைக்கை //
DeleteSteel yeluthina mathiri irrukku😊 avani meet pannineengala 🤔
PfB@ ha..ha...
Deleteவாட்ஸ்ஆப்பில ஓரு அலோ போட்டாரு... அதுக்கே இப்படினா...
மீட் பண்ணியிருந்தா ..🤣🤣🤣
Enga aaloda power appadi 🤣
Delete😂😂😂😂😂
Delete
ReplyDeleteஅட டே அடுத்த ஸ்டாப் காமிக்கானா...
என்னாது காமிக்கான் என்ட்ரி 899ரூவாயா....ஙே..ஙே...ஙே.....!
பெங்களூரு காமிக்கானில் 20ரூவாய்க்கு என்ட்ரி டிக்கெட் வாங்கி தங்களை முதல் முறையாக பார்த்தது போன மாசந்தான் நடந்தது போல உள்ளது....அதற்குள் 12ஆண்டுகள் கடந்து போயிட்டது மின்னல் மாதிரி...! பிரமிக்க வைக்கும் 12ஆண்டுகள்....
நேபாள் டூருக்கு குலுக்குவது இருக்கட்டும்.. முதலில் இந்த காமிக்கான் டூருக்கு குலுக்குங்கள் சார்...🤣🤣🤣🤣
என்ட்ரி, போக்குவரத்து, ஸ்டேயிங், ரிஃப்ரெஷ்னு தலைக்கு 4ஆயிரம் , 5ஆயிரம் செலவாகும் போல...ஆங் பேசாம இப்படி பண்ணினா என்ன சார்?? ஒற்றை ஆளை நேபாளை அனுப்புவதற்கு பதில் மொத்தமாக சென்னை காமிக்கானுக்கு அழைத்தால்.....
யார்னே தெரியாத நபர்களுடன் தனியாக நேபாள் போய் விழிப்பதை விட நம்மாட்களுடன் தங்களோடு ஒரு நாளை செலவிட்டா ஜாலியா இருக்குமே....நேபாள பட்ஜெட்டுல 10பேரோ, 15பேரையோ சென்னைக்கு கூட்டி போலாமா!! குலுக்கலை நம்ம ஆபீஸ்ல இந்த வாரத்தில் போட்டு புடலாம் தான்...😉
அபார்ட் ஃப்ரம் ஜோக் ... நேபாள் டூர்க்கு செலக்ட் ஆகப்போகும் நண்பருக்கு முன்கூட்டியே வாழ்த்துகள்..🌹🌹🌹🌹🌹
Good idea
Delete+1111
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete// மகாஜனங்க குளிரும் பாக்காம, மழையும் பாக்காம, ஆரவாரமா நெதமும் போட்டுத் தாக்கிட்டிருக்கதைப் பாக்குறப்போ, புல்வெளியிலே குத்தி நிக்குற கமான்சே ஈட்டியாட்டம் ரோமங்கள்லாம் இங்கன நட்டுக்கினு நிக்குது ! ரெகார்ட் ; சாதனை ; உசரம் ; அது இதுன்னு நெறய பேசலாம் - ஆனா அதை கண்ணில மெய்யாலுமே பாக்குற பீலிங்கே அலாதி தான் ! அந்த சந்தோஷத்தை இந்த ஜனவரி நமக்குக் கண்ணிலே காட்டியிருக்குன்னா - ங்கொக்காமக்கா, அதிர்ஷ்ட தேவதை அம்மணி நெறயவே நம்மகூட லவ்ஸ்லே இருக்குதுன்னு அர்த்தம் ! அதிர்ஷ்ட அக்காவை பாராட்டற கையோட, படைச்சவருக்குமே ஒரு தாங்ஸ் சொல்லிக்கலாமுங்களா ? Thanks God Almighty !! //
ReplyDeleteMakilchi
behind the scenes டீமுக்கு இந்த ஆகஸ்டில் ஈரோட்டில் ஒரு ஸ்பெஷல் பாராட்டைப் போட்டால் சூப்பராக இருக்கும் என்று நினைக்கிறேன் ! What say folks ?
ReplyDeleteஇதை இதைத்தான் எதிர்பார்த்தோம் ஆசிரியரே கண்ணுக்கு தெரியாமல் அசுர உழைப்பை கொட்டும் நம்ம டீமுக்கு உரிய மரியாதையை வழங்கி விடலாம் சார்
மறு யோசனை வேண்டாம் என்கிறேன். செந்தில் சத்யா போல்
Delete+9 தோழரே
Delete// எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் தரும் behind the scenes டீமுக்கு இந்த ஆகஸ்டில் ஈரோட்டில் ஒரு ஸ்பெஷல் பாராட்டைப் போட்டால் சூப்பராக இருக்கும் என்று நினைக்கிறேன் ! What say folks ? //
ReplyDeleteகண்டிப்பாக ஏதாவது சிறப்பாக அவர்களுக்கு செய்ய வேண்டும் சார். நாங்களும் எங்களால் ஆன சிறு பங்களிப்பை உங்களுடன் இணைந்து செய்ய விரும்புகிறோம் சார்.
// அப்பாலிக்கா பிப்ரவரி 17 & 18 (சனி & ஞாயிறு) தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள முதல் COMIC CON விழாவிலும் நாமிருப்போம் ! //
ReplyDeleteவீட்டில் சென்னை புத்தகக் திருவிழா அல்லது காமிக்கான் ஏதாவது ஒன்று மட்டும் செல்ல அனுமதி கிடைத்தது. தற்போது காமிக்கான் நடக்கும் தேதியில் திண்டுக்கல் பக்கம் ஒரு கல்யாண வீடு. எனவே சென்னைக்கு இந்த முறையும் போக முடியாது.
Hi..
ReplyDeleteசார் டெக்ஸ் மறுபதிப்பு லிஸ்ட் பெரிசா இருக்குஅதனால இந்த வேண்டுகோள்ங்க சார்
ReplyDeleteஒரு லிஸ்ட் தயார் பண்ணுங்க - ஆசிரியருக்கு உதவியாக இருக்கும்.
Deleteசென்னை ரெக்கார்ட் பிரேக் செய்ததை படிக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ReplyDelete//டிக் விடைதந்து விட்டு ஒரேடியாய்ப் புறப்படும் last சாகசம் இது என்பது கொசுறுத் தகவல்! //
ReplyDeleteடிக் விடை பெறுவது வருத்தமழித்தாலும் சந்தோசமாக விடையளிக்கிறேன்.
குமுதம், விகடன் போல பல லட்சம் பிரதிகள் விற்றால் எப்படி இருக்கும்?
ReplyDeleteதமிழ்நாடு, இந்தியாவின் காமிக்ஸ் மாநிலமாக மாற வேண்டும்..
ஜெய் லயன்!!!!
Yes Yes🙏🏻
Deleteசிஸ்கோ முடித்து வின் கமாண்டர் ஜார்ஜ் படித்துக் கொண்டுள்ளேன். ஜனவரி இதழ்கள் மற்றும் ஒன்பது மறு மதிப்புகளை நேரம் கிடைக்கும் போதுதான் படிக்க வேண்டும். வின் கமாண்டர் ஜார்ஜை பொறுத்தவரை பென்குயின் படலம் மற்றும் இன்னும் ஒரு கதை ஆக இரண்டு கதைகள் மட்டுமே படித்துள்ளேன். அந்தக் கதைகளின் அளவுகோலை பொறுத்தே நானும் எனது எதிர்பார்ப்பை வைத்திருந்தேன். ஆகவே இதுவரை படித்த கதைகள் அனைத்தும் என்னைப் பொறுத்தவரை ஏமாற்றவில்லை. அருமையாக இருந்தது.
ReplyDeleteசிஸ்கோ கதையும் பட்டாசாக இருந்தது. இந்த வருட சந்தாவில் பணியிட முகவரி கொடுத்து விட்டதால் எனக்கு உடனடியாக பணியிடத்திற்கே டெலிவரி ஆகிவிடும். எனவே பார்சலை கைப்பற்ற இனி தாமதமாகாது.
ReplyDeleteGood good
Deleteஎன்னதான் சென்னை புத்தகவிழா, விற்பனையில் பல சாதனைகள் புரிந்தாலும், ஈரோட்டுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் சென்னைக்கு கிடைப்பதில்லையே..புத்தக வெளியீட்டில் திரும்ப திரும்ப மறுபதிப்பு தான் கிடைக்கிறது
ReplyDeleteசிஸ்கோ - கெட்ட பையன் என இதுவரை நினைத்தவர்களை மனதை கலங்கடித்துவிட்டான் விட்டார் இந்த முறை. சிஸ்கோவின் சகோதரியை கதையில் காண்பித்து கடைசியில் மனதை கனக்க செய்துவிட்டார்; அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
ReplyDelete///நீங்கள் sensitive ஆனவராய் இருக்கும் பட்சத்தில், இந்த டெட்வுட் டிக் பயலிடமிருந்து நல்ல தூரத்தில் விலகி இருப்பதே நல்லதென்பேன் ! ///
ReplyDeleteஆமா...ஆமா...
கிராஃபிக் நாவல் போதும்னு
முடிவெடுத்து, ஒரு நூற்றாண்டு காலம் கடந்தாச்சு...
நமக்கு " டெக்ஸ்" கொடுக்கிற கிக்கே
போதுமானது...
////அன்று தொடங்கிய சென்னை அதிரடிகள் இதோ இந்தப் 18-வது தினம் வரையிலும் இம்மி கூட வேகம் மட்டுப்படாது, பிரித்து மேய்ந்துள்ளன ! And நமது 12 வருட விற்பனை ரெக்கார்டை நடப்பாண்டினில் நேற்றே தாண்டியாச்சு ! So இந்த ஞாயிறுக்கு விழா நிறைவு காணும் சமயம், ஒரு மெய்மறக்கச் செய்யும் புது விற்பனை அத்தியாயத்தினை சென்னை நண்பர்கள் நமக்காக எழுதியிருப்பார்கள் !! ////
ReplyDeleteஇது உண்மையில் ஓர் உற்சாகமான நல்ல சங்கதி சார்..
இதுவே தொடர்கதை ஆகும் பட்சத்தில்,
"தி லயன் ஜேனி " ,
தனது
அடுத்த கட்ட பரிமாணத்திற்கு
நம்மை
அழைத்து செல்லும்.
///இந்தச் சின்ன வட்டத்தின் விஸ்வரூபம் எத்தகையது ? என்பதை yet again ; அதுவும் ஆண்டின் துவக்கத்திலேயே பார்க்க முடிந்திருப்பது நாங்கள் வாங்கி வந்த வரமே !! மில்லியன் & more நன்றிகள் folks !!///
ReplyDeleteஇது பெரிய வட்டமாக, விரிந்து செல்ல செல்ல வேண்டும்.
இன்னும் புதிய புதிய கதைகளையும் படித்து பேரின்பம் அடைய வேண்டும்.
நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் முத்து 50போல மறுபடி ஒரு இண்ட்ரோ ஜூலையில் நமது காமிக்ஸ் இல் வெளியிட்டு விட்டு ,ஆகஸ்டில்மேடையேற்றி கௌரவிக்கலாம் சார். இது எங்கள் வேண்டுகோள்.
ReplyDeleteவீரனுக்கு மரணமில்லை. . .வழக்கமான கிளாசிக்வேதாளர் போல் இல்லாமல் புதுவிதமான கதையமைப்பு. பழைய மொழிநடை துளிகூட வெளிப்படாத அசத்தலான அருமையானமொழிபெயர்ப்பு. v.காமிக்ஸின் மற்றுமொரு ஹிட்.
ReplyDeleteடெக்ஸ்
ReplyDelete1.சகோதரனின் சகாப்தம்
2.கண்ணீருக்கு நேரமில்லை
மேற்கண்ட இரு கதைகளையும் அடுத்தடுத்து படிக்க நேர்ந்தது தற்செயல்தான். ஆனால் கதையோட்டத்தில் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருந்தது ஆச்சர்யமே!
முதல் கதை டெக்ஸ் வில்லரின் இளைய சகோதரன் சாம் வில்லரின் சாகசமாகக் கொள்ளலாம். கதையில் வரும் வசனத்துக்கேற்ப சிங்கக் குடும்பத்தில் பிறந்த எதுவும் பூனையாகாது என்று நிரூபித்து விடுகிறார்.
இரண்டாவது கதைதான் சுவாரஸ்யமே. டெக்ஸ் வில்லர் இளமையில் சட்டத்தால் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக இருந்தார் என்பதை நிறைய கதைகளில் வாசித்திருக்கிறோம். இளம் டெக்ஸ் தொடர்கூட அதையொட்டியே பயணிக்கிறது. அவர் அப்படி தேடப்பட்டு வந்ததன் காரணம் தன் தந்தை மற்றும் சகோதரனின் மரணத்திற்கு பழி தீர்த்துக் கொண்டதுதான் என்பதும் நாம் அறிந்ததே. ஆக ஏற்கனவே நமக்குத் தெரிந்த கதை இங்கே நிகழ்வுகளாக விவரிக்கப் பட்டுள்ளது எனினும் சுவாரஸ்யம் குறையவில்லை. கதையோட்ட வேகமும் டெக்ஸின் ரௌத்திரமும் போட்டி போட்டுக்கொண்டு கதை நெடுக பயணிக்கிறது.
தந்தை கென் வில்லரின் மரணம், வளர்ப்புத்தந்தையாக டெக்ஸ் மதிக்கும் கன்னீபில்லின் இறப்பு, ஒன்றுக் கொன்று மாற்றுக் கருத்துடைய சகோதரர்களிடையே நேரும் பிரிவு, சகோதரனின் படுகொலை, அதையடுத்த டெக்ஸின் பழிதீர்க்கும் படலமென சம்பவங்கள் கொட்டிக் கிடக்கும் கதை நகர்வில் ஒரு சோகமும் உடனிருப்பது அதை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. இச்சுற்றில் இன்னும் அடுத்தடுத்த கதைகள் இருப்பதாகத் தெரிகிறது.
மொத்தத்தில் இந்த இரு கதைகள் டெக்ஸ் வில்லரின் கடந்தகாலத்தைப் பேசுகிறது. வாசிப்புக்கு நல்ல தேர்வாகவும் இருக்கிறது. நண்பர்கள் முயற்சிக்கலாமே...
// “ தென்றல் வந்து என்னைக் கொல்லும்" //
ReplyDeleteWhat a title! Title itself tells the story. Nice title.
ஆமா... "நூறு டிகிரி தென்றல்''- னு ஒரு நாவலுக்கு வைத்து இருந்தது அப்போது கேட்ச்சிங்காக இருந்தது...
Deleteஇப்போது இந்த டைட்டில்....செமயாக அசத்துது..
சூப்பர் பதிவு சார். நம்ம கெட்ட பையன் டெட் வுட் டிக்கின் கடைசி சாகசம். முதல் இரண்டு கதைகளையும் சமீபத்தில் தான் திரும்ப வாசித்தேன். எனவே ரொம்பவே ஆவலுடன் இந்த சாகசத்தை எதிர்பார்க்கிறேன். இதுவும் தாறுமாறாக இருக்கும் என்று சொல்லவேண்டுமா என்ன?
ReplyDeleteசென்னை புத்தக விழாவில் இந்த முறை போன சாதனைகள் எல்லாம் முறியடிக்கப் பட்டு இந்த முறை புதிய சாதனை படைக்கப் பட்டதற்கு வாழ்த்துக்கள். இடையில் அந்த மழை இல்லாமல் இருந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.
Delete// எது - எவ்வளவு விற்றுள்ளது ? எதெல்லாம் சென்னையைப் பராக்குப் பார்த்துவிட்டு கோஷாப்பொண்ணாட்டம் வீடு திரும்புகிறது ? என்பதெல்லாம் விழா முடிஞ்ச பிற்பாடு தெரிய வரும். போன வருஷம் போலவே ஒரு ஒட்டுமொத்த ரிப்போர்ட்டை ஜூனியர் எடிட்டர் கையில் தந்து விடும் போது இன்னும் கொஞ்சம் in depth அலசணும் !// புள்ளி விபர ஸ்மர்ஃப்க்கு வெயிட்டிங்
Delete// And உள்ளூர்,வெளியூர் மட்டும் தானா - நாங்க அசலூரும் போவோம்லே ! என்ற டயலாக் ஒன்று தான் குறை !! டின்டின் 3 மெகா பார்சல்கள் ஐரோப்பாவின் வெவ்வேறு இலக்குகள் நோக்கிப் பயணமாகி வருகின்றன ! Phewwwww !!! // Tintin இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள். ஆரம்பமே அசத்தல் . ஆகஸ்ட் மாத டின்டின்க்கு இப்பொழுது இருந்தே நீங்கள் வேலையை ஆரம்பித்து விட்டது கண்டு மகிழ்ச்சி . நான் ஆகஸ்ட் புத்தக விழாவில் உங்கள் கையில் இருந்து அந்த புத்தகங்களை பெறும் காட்சி இப்போதே கண் முன் தெரிகிறது சார்.
Deleteதிருப்பூர் போக முடியுமா என்று தெரியவில்லை ஆனால் முதல் முறை சென்னை காமிக்கான் வருகிறேன். 18 ஆம் தேதி நடக்கும் குலுக்கலில் வெற்றி பெறப் போகும் அதிர்ஷ்டசாலி யார்?? மற்ற நண்பர்களை போலவே ஆவலுடன் நானும்
Delete// சென்னை காமிக்கான் வருகிறேன். //
DeleteEnjoy Kumar
நெப்போலியன் பொக்கிஷம்: நீண்ட நாட்களாக படிக்க விருப்பியக்கதை, கமாண்டர் ஜார்ஜ் தொகுப்பில் இதனை முதல் கதையாக கொடுத்ததற்கு நன்றி! டான்ஸா பொக்கிஷத்தை எப்படி எடுத்து வரப்போகிறார்கள் என்பது ஜார்ஜை போலவே எனக்கும் ஆவலாக இருந்தது; அதனை எடுக்க டான்ஸா போட்ட திட்டம் மிகவும் அருமை, ரசிக்கும் படி இருந்தது! கிளைமாக்ஸ் செம ட்விஸ்ட். பழைய நெடி கொஞ்சம் கூட இல்லை! வாசிப்பை விறுவிறுப்பாக இருக்கும் வகையில் இருந்தது மொழி பெயர்ப்பு!
ReplyDeleteஇரண்டாவது கதை முதல் கதையின் தொடர்ச்சி, மீட்போர் கழகம் செய்யும் பித்தலாட்டத்தை ஜார்ஜ் முறியடிப்பது செம! இதுவும் நிறைவான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது!
இதற்கு முன்னாள் ஜார்ஜின் சில கதைகளை படித்து இருக்கிறேன், ஆனால் அவரின் ரசிகர் இல்லை; இப்போது நான் இவரின் ரசிகன் ஆகி விட்டேன் :-)
நெப்போலியன் பொக்கிஷம் - பொக்கிஷம்
//இதற்கு முன்னாள் ஜார்ஜின் சில கதைகளை படித்து இருக்கிறேன், ஆனால் அவரின் ரசிகர் இல்லை; இப்போது நான் இவரின் ரசிகன் ஆகி விட்டேன் :-)//
Deleteஅருமை சகோ
// டிசம்பரின் 30 நாட்களிலும், ஜனவரியின் முதல் 7 நாட்களிலுமாய்ச் சேர்த்து, அந்த 38 தினங்களில் நாம் தயாரித்திருந்த இதழ்களின் எண்ணிக்கை - கிறுகிறுக்கப் பண்ணும் 19 !!! //
ReplyDeleteAmazing work 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Very eager to attend comic con in Chennai
ReplyDeleteBut budget is making me to think twice but the goodies which comes along with registration makes it a tempting deal.
காமிக் கான் சென்னையில் லயன் முத்து காமிக்ஸ் புத்தகங்கள் விற்பனைக்கு உண்டா?? உண்டு என்றால் ஸ்டால் நம்பர்??
ReplyDeleteநான் தற்போது விங் கமாண்டர் சார்ஜ் இன் 10 டாலர் நோட்டு படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன் படித்த அத்தனை கதையும் அருமையாக தான் இருந்தது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவிங் கமாண்டர் ஜார்ஜ் கதைகள் படித்தாகிவிட்டது.
ReplyDeleteஅனைத்தும் அருமை.
பொறுக்கி எடுக்கப்பட்ட ரத்தினங்கள். ஒரு கதை கூட படிப்பதில் சலிப்பு ஏற்படவில்லை.
இரும்புக்கை மாயாவி,
ஜானி in ஜப்பான்,
விண்ணில் மறைந்த விமானங்கள், கடத்தல் முதலைகள்.
நான்கும் ஏக் தம்மில் படித்தாகி விட்டது.
கடத்தல் முதலைகள்..
நீண்ட வருடங்களுக்கு முன்பு படித்தது.
மீண்டும் படித்தது ஒரு வித பரவசத்தை ஏற்பத்தியது.
மொட்டைத் தலையுடன் வில்லனாக வரும் ராபின் அசத்தலான கேரக்டர்.
செஸ் காயின்களில் குண்டு வைத்து எதிரிகளை கொல்லும் விதம் அந்த காலத்தில் மிகவும் புதுமையான ஒன்று.
இரும்புக்கை மாயாவி.
முத்து காமிக்ஸின் முதல் இதழ். மாயாவியின் உடலில் மின்சாரம் பாய்ந்ததும் அவர் மறைவது, இரும்புக்கரம் மட்டும் கண்ணுக்கு தெரிவது, இயந்திரமனிதர்கள், வில்லனாக வரும் பால் பிரபுவின் கைத்தடி மூலம் இயக்கப்படுதல் என கதை நகர்வுகள் அற்புதமான ஒன்று. மாயாவியை கட்டி போட்டுவிட்டு கடிகாரத்தின் நகர்வுக்கேற்பகத்தியுடன் நகர்ந்துவரும் வீரன் பொம்மை என எல்லாமே எழுபதுகளில் வாசகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியவை.
மறு பதிப்புககான கதைத்தேர்வுகள் அனைத்தும் அருமை.
பாராட்டுகள் சார்.
பத்து சார் செம்ம செம்ம .
DeleteSuper
Deleteடின்டின் உடன் திபெத் பயணம் இனிதே முடிவடைந்தது...!
ReplyDelete10/10 👍👍👍
Good to hear this
Deleteஜேன் இருக்க பயமேன்..
ReplyDeleteகலக்கலான காமெடி கலாட்டா க்ளாசிக்.
அரக்கன் ஆர்டினி..
இரண்டு காதுகளிலும் சரம் சரமாக (ரசிக்கும்படியான) பூந்தோரணங்கள்.
இருந்தாலும் விண்கலத்தை மோத வைத்து எரிகல்லை திசை மாறிப்போக வைப்பது என்பதெல்லாம் ஓவர் புய்ப்பம்.
பத்து சார் உங்களுக்கு ரசிக்குது எல்லாருக்கும் அதே போல ரசிக்குமா என்பது தான் கேள்வியே.
DeleteThis comment has been removed by the author.
Deleteஉண்மைதான் சார். இருந்தாலும் அந்தக் கால புராண, மாயாஜால படங்களின் சண்டைக் காட்சிகளை இன்றைக்கும் விரும்பி பார்ப்பதில்லையா?
Deleteஅது போல இதுவும் ஒரு வித ரசனை தானே.
திருப்பூர் புத்தக விழா இன்று இனிதே துவங்கியது... இங்கும் இந்த முறை போன வருட விற்பனையை மிஞ்ச எனது வாழ்த்துக்கள்....
ReplyDelete// இங்கும் இந்த முறை போன வருட விற்பனையை மிஞ்ச எனது வாழ்த்துக்கள். //
DeleteYes. +1
எனது வாழ்த்துகளும் கூட.
Deleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteYes 😀
Delete🤫🤫🤫😋😋
Deleteஅட ஆமால்ல
Deleteகண்டிப்பா இன்னிக்கு பதிவுக்கிழமை தான்.
Deleteஆன்லைன் புத்தக விழா, MMOS, S60. இந்த மூனுல ஏதாவது ஒன்றைப் பற்றிய விவரமாவது வரும் என்று ஆவலுடன் எதிர்பாக்கிறோம்.
பதிவுக்கிழமை என்ற வார்த்தையை பார்த்து இன்னைக்கு சனிக்கிழமை இல்லை என்று ஆசிரியர் நினைத்து விட்டு மறந்து போய் பதிவு போடாமல் போய் விட போகிறார்
Deleteஅப்புறம் பெரிய லிஸ்ட் வேற கையில வைச்சிருக்கிங்க
பதிவு வருமானு தெரயல
😉😏
ReplyDeleteநெடிய இடைவெளிக்குப் பின்பு மனதுக்கு ப்ரியமான தளத்தில் தடம் பதிப்பது சுகமாக உள்ளது. அலைபேசி எண், ஈமெயில் பார்ஷியல் ஹைஜாக் (டார்க் வெப் மூலம் )செய்யப்பட்டு பண இழப்புகளைத் தொடர்ந்து வங்கி அக்கவுண்ட்களை லாக் டவுன் செய்யவேண்டிய நெருக்கடி ஏற்பட்டு
தொடர்ந்து இணையம் என்றாலே panic disorder ஏற்பட்டு அப்படியே ஒரு 2012 - க்கு முன் திரும்பி எல்லாமே மனிதர்களூடே நேரடி புழக்கம் மட்டுமே என்றானபோது சமூக உறவுகளின் முக்கியத்துவம் புரிந்தது.ஈரோடு,சென்னை,தற்போது சேலம் என எடிட்டர் சார் வாசகர்கள் மத்தியில் உரையாடுவது எவ்வளவு அவசியமானது எனப் புரிந்தது.
தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான நுரையீரல் அழற்சி ஒரு மாத அளவு மருத்துவ ஓய்வெடுக்க நிர்ப்பந்தித்தபோது இணைய பயம் காரணமும் சேர்ந்து கொள்ள எல்லா பழைய காமிக்ஸ்களையும் மறுவாசிப்பு செய்ய அவகாசம் கிட்டியது. 2013 - க்குப் பின் சந்தாவில் ஜனவரியில் இணைவது இதுவே முதல்முறை.
ஏதாவது குளறுபடிகள் செய்து கலாமிட்டி ஜேன் கணக்காய் மனைவியிடம் திட்டுக்கள் வாங்கி குவிப்பது எனது வழக்கம். ( அட. எல்லார் மாதிரிதாங்க) அரசு பணிகள், தனிப்பட்ட பணிகள் தாண்டி மகளின் உதவியோடு என்னைப் பராமரித்து தாங்கிக் கொண்டபோது மனைவியின் முக்கியத்துவமும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் தெளிவாகப் புரிந்தது. ( டெக்ஸ் பாவம்)
Deleteசொந்த கதைகளைத் தள்ளி,
வேதாளர், விங் கமாண்டர் உட்பட எல்லா கதைகளும் படித்தாகி விட்டது.
புது வருட இதழ்களில்
டின் டின் தயாரிப்பு அபாரம்.
ஓவியர், கதாசிரியர் என இரண்டுமே ஒரு அம்மையப்பர் என வந்திருக்கும் லார்கோ அட்டகாசம்.
க. நேரமில்லை : தெரிந்த கதைதான். முதன்முறையாக வாசிப்பதால் சுகானுபவம்.
வண்ண வேதாளர்: இதமான வாசிப்பு.
இதற்கு முன்பு எடிட்டர் சாரின் பதிவுகளை மட்டும் வாசித்து கடைசி பேனலில் காரவனைப் பார்த்து ஏங்கி மயங்கும் ''ஏட்டி " போல் தவித்து
மறுபடியும் தளத்துக்கு வருவதால் சேங்கை கண்ட டின்டின் போல் மனம் துள்ளிக் குதிக்கிறது.
உடல் நிலை முழுக்க சீர்நிலையை எட்டியபின் இம்சை தரும் எனது நீண்ட விமர்சன பதிவுகள் வரும். விடாது கருப்பு :-)
மேலே உள்ளது அன்புடன் செ னா அனா.
DeleteWarm welcome back Selvam Abirami sir
Deleteஉடல்நிலையை பாத்துக்குங்க செனா அனா. Acute Bronchitis வந்து நான் ஒரு இரண்டு மாதம் மிகுந்த சிரமப்பட்டேன். மற்ற சிக்கல்களிலிருந்து விடுபட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். எங்கே போகலைன்னாலும் ப்ளாக்குக்கு வந்துடுங்க. இங்கே ஆல்வேஸ் ப்ரைட் வெப் தான்.
Delete// உடல் நிலை முழுக்க சீர்நிலையை எட்டியபின் இம்சை தரும் எனது நீண்ட விமர்சன பதிவுகள் வரும். விடாது கருப்பு :-)
Delete//
I pray for your speedy recovery. Get well soon sir.
@ செனா அனா
Deleteநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களுடைய பதிவு மகிழ்ச்சியளிக்கிறது. உடம்பை கவனித்துக் கொள்ளவும். சீக்கிரமே முழுவேகத்தில் மீண்டெழுந்து வந்து உங்களது இ.த.எ.நீ விமர்சனப் பதிவுகளைத் தொடருங்கள். நாங்கள் காத்திருப்போம்.
பி.கு : ஓரிரு மாதங்களுக்கு முன்பு நான் உங்களுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி - நெடுநாட்களுக்குப் பிறகும் படிக்கப்படாமலேயே இருந்த மர்மம் இன்று விலகியது!
நீண்ட நாட்களாக உங்களை காணாத காரணம் இன்று விளங்கியது. Get well soon sir.. சீக்கிரம் திரும்ப வாங்க சார்.
Delete
Delete@all நன்றிகள் பல.
@ஈவி, ஸாரி. பழைய எண்கள் எத்திக்கல் ஹேக்கர் துணையுடன் தற்காலிகமாக செயலிழந்துள்ளன.
சைமன், சில்க்கி துணை இல்லாத
லார்கோ போன்றதொரு நிலை.
இரண்டு மாதம் கழித்து ஹை எண்டு ஆப்பிள் போன் பயன்படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளேன். அப்போது தொடர்பு எண் தருகிறேன்.
நல்வரவு சகோ
Deleteயாருப்பா புது TinTin fan என்று யோசித்தேன். தங்கள் பதிவுகளை கண்டதில் மகிழ்ச்சி
உடல்நலம் நன்றாக தேறி இங்கு வந்து எங்களின் இம்சைகளிளும் கலந்து கொள்ளுங்கள், சகோதரரே
😂😂😂
DeleteWelcome back selvam abirami sir.
DeleteWarm welcome.
Take care of health.
awaiting yr neenda ilakkana ilakkiya pathivugal.
பழைய பன்னீர்செல்வமா வாங்க சார்.
DeleteWelcome back Doctor..
DeleteFor the first time I read Johnny Nero's Kadathal Muthalaikal. Good classic thriller. Only drawback in digital era printing, pictures blur its not clarity like Old days.
ReplyDeleteசெல்வம் அபிராமி மீண்டும் திரும்ப வந்ததில் மகிழ்ச்சி ..
ReplyDeleteLargo winch comeback super! Story and pictures is excellent
ReplyDeleteசெனா வருக வருக
ReplyDeleteவெல்கம் செனா.அனாஜிவாங்க.
ReplyDeleteவாசக சுஜாதாவின் பதிவுகள் எங்களுக்கு எப்பொழுதும் எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதைகள்போல.
சேலம் நண்பர் குமார் சார்பாக இன்று பதிவுக் கிழமை சார்
ReplyDelete🙄🙄🙄🤨🤨
Deleteஇன்றைய மறுவாசிப்பு.
ReplyDelete2013ல் வெளிவந்த கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்.
பற்றி எரியும் பாலைவனம்,
நரகத்தின் எல்லையில்,
முதல் கதையில் பாலைவனத்தில், ப்ரின்ஸும், பார்னேவும் மணல் புயலில் சிக்கி தப்பிக்க போராடும் களம் என்றால், இரண்டாவது கதையில் சதுப்பு நிலக் காட்டில் சிக்கி முதலைகளிடம் இருந்து உயிர் தப்ப போராடும் ஜீவ மரண ஓட்டம்.
இரண்டு கதைகளும் தெறி ரகம்.
அலுப்பு தட்டாத கதைகள்.
ஏக் தம்மில் படித்தாகி விட்டது.
சொல்ல மறந்த கதை..
ReplyDeleteநேற்றைய பகல் பொழுது லக்கிலூக்கின் மீதம் இருந்த இரண்டு மறுபதிப்பு கதைகளுடன் இனிதே கழிந்தது.
காலை உணவுக்குப்பின், மதிய உணவுக்கு முன் என்ற ஷெட்யூலில் இரண்டு புத்தகங்களையும் வாசித்து முடித்தாகி விட்டது.
மேற்கே ஒரு மாமன்னர்,
தலைக்கு ஒரு விலை.
இரண்டு கதைகளும் நான் படித்ததாக நினைவு இல்லை.
இரண்டுமே அருமையான கதைகள்.
எனக்கு தெரிந்து ஒரே மாதத்தில் 3 லக்கிலூக் கதைகள் வருவது இது தான முதல் தடவை என நினைக்கிறேன்.
காணாமல் போன குதிரையை தேடுவதுடன், அதை திருடிச் சென்றதாக குற்றம்சாட்டி உயிருக்கு விலை அறிவிக்கப்பட்ட அபாச்சே செவ்விந்தியனை வெகுமதி வேட்டையனிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய கடமையுடன்
இரண்டு Task ஐயும் போராடி நிறைவேற்றும் லக்கியின் ஜாலியான சாகசம்
தலைக்கு ஒரு விலை.
அருமையான கதை.
அப்பப்பா... மலைப்பாக உள்ளது.
இந்த மாதம் 14 புத்தகங்கள் வெளிவந்து, படித்து முடித்திருக்கிறோம்.
(இது போதாமல் மறுவாசிப்புகள் வேறு)
2024 துவக்கமே அருமையான வாசிப்புகளுடன் துவங்கியுள்ளது
இது இனிதே தொடரட்டும்.
Good
Deleteஇன்றைக்கு பதிவுக்கிழமை ஆசிரியர் சார்.
ReplyDelete🧐🧐🧐
Delete@Edi Sir..😍😘
ReplyDeleteஇந்த ஆண்டு நாமக்கல் புத்தக விழாவில் நமது முத்து காமிக்ஸ் ஸ்டால் இடம் பெறவில்லை.😒
நிறைய சென்ற ஆண்டு அறிமுகமான காமிக்ஸ் நண்பர்கள், பத்திரிகை நண்பர்கள் "ஏன் முத்துகாமிக்ஸ் ஸ்டால் இடம்பெறவில்லை" என்று போன் மூலம் கேட்கிறார்கள்..😒😒
# ஒரு காமிக்ஸ் ரசிகனின் புலம்பல்கள்#
வெல்கம் பேக் செனா அனா அன்ட் லார்கோ...
ReplyDeleteவணக்கம் செனா அனா சார்.
ReplyDeleteசார் இன்றைய பதிவு செமயாருக்குங்குதே பட்சி
ReplyDeleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)
ReplyDelete