நண்பர்களே,
வணக்கம். சென்னையில் புத்தக விழா தடதடத்துக் கொண்டிருக்க, டின்டின் ஊரெல்லாம் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கிறார் ! ஏஜெண்ட்களிடம் வாங்கிடும் நண்பர்களும் ஜனவரியின் 4 இதழ்களையும் ஒருசேர வாஞ்சையாய் வாங்கிக் கொள்ள, கணிசமான ரிப்பீட் ஆர்டர்கள் ! ஆன்லைனிலோ வேறு மாதிரியான தெறி !! லார்கோ புது இதழோடு backissues-க்கும் சேர்த்து ஆர்டர்கள் ; டின்டினில் ரெண்டு ரெண்டு பிரதிகள் ; ரெண்டு ரெண்டு வேதாளர் என்று குமுறி வருகின்றனர் ! அதன் பலனாய் "திபெத்தில் டின்டின்" ஸ்டாக் நிலவரம், திபு திபுவெனக் குறைந்து வருகிறது ! ரொம்ப ரொம்ப காலமாகி விட்டது guys - மாயாவி ; டெக்ஸ் வில்லர் ; டைகர் & XIII ரேஞ்சுக்கான விற்பனையினை, வேறொரு நாயகர் ஈட்டிக் காட்டி ! ஜாம்பவான் - ஜாம்பவான் தான் என்பது yet again நிரூபணம் கண்டுள்ளது ! நமது லயனின் 40-வது ஆண்டினை kickstart செய்திட இதை விடவும் அட்டகாசமானதொரு ஆரம்ப மாதம் அமைந்திருக்க முடியாதென்பேன் ! In hindsight - லார்கோவையும் ஜனவரிக் கூட்டணிக்குள் நுழைத்தது நல்லதாகப் போயிற்று என்பது புரிகிறது ! Phew !!!
நாற்பதைத் தொட்டு நிற்பது நமது லயன் மாத்திரமல்ல, இன்னொரு ஆதர்ஷ நண்பருமே என்பதை நினைவூட்டும் வேளையிது folks ! அவர் யாரென்று பார்ப்பதற்கு முன்பாய் one question : இந்தாண்டில் மிகச் சரியாக 40-ஐ தொட்டு நிற்கும் / தொடப் போகும் நண்பர்கள் எத்தினி பேரோ ? கொஞ்சம் கரம் தூக்குங்கள் ப்ளீஸ் ? அந்த 40's க்ளப்புக்கு இந்தாண்டினில் ஒரு பெசல் ஐட்டம் திட்டமிட்டுளேன் - so சொல்லுங்களேன் ப்ளீஸ் ?
40-ஐ எட்டிப்பிடித்திருக்கும் அந்த இன்னொரு ஆசாமியின் அடையாளமே ஒரு நம்பர் தான் ! Yes - நமது ஞாபக மறதிக்கார XIII தான் 2024-ல் நாற்பதாவது அகவைக்குள் அடியெடுத்து வைக்கும் பிரமுகர் ! 1984-ல் பெல்ஜியத்தில் "கறுப்புக் கதிரவனின் தினம்" என்ற அந்த முதல் ஆல்பம் வெளியாகியிருந்தது - இளைஞர்களான ஷான் வான் ஹாம் + ஓவியர் வில்லியம் வான்ஸ் கூட்டணியில் ! இதோ - பாருங்களேன் 1983-ல் இந்த ஜாம்பவான்களை !!
சமீப ஆண்டுகளில் பிதாமகர் வான் ஹாம் இந்தத் தொடரிலிருந்து சற்றே விலகி இருந்ததை நாமறிவோம் ! ஆனால் ஒரு மைல்கல் ஆண்டினில் அவர் தனது ஆத்ம நண்பனான XIII-ஐ விட்டு தூர விலகி நிற்கத் தான் முடியுமா ? So வரும் 19-ம் தேதிக்கு XIII மர்மம் தொடரினில் ஆல்பம் # 14 வெளியாகிடவுள்ளது - வான் ஹாமின் பங்களிப்புடன் !!
"வான் ஹாம்" என்ற பெயரைக் கேட்டாலே சும்மா அதிருவதால் - இதனை நாம் தமிழில் வெளியிடுவது உறுதி ! Maybe 2025-ன் ஏதேனுமொரு தருணத்தில் ! அதே போல XIII மெயின் தொடரினில் ஆல்பம் # 29 நடப்பாண்டில் அக்டோபர் இறுதியில் பிரெஞ்சில் வெளியாகிறதாம் - which means இந்த 40-ம் ஆண்டில் இது இரண்டாவது ரிலீசாகிடும் பிரெஞ்சில் !
அத்தோட விட்டோமா பார் - என்று மூன்றாவதாகவும் ஒரு ரீலீஸைத் திட்டமிட்டுள்ளனர் அக்கட ! ஏற்கனவே XIII மர்மம் தொடரில் லெப்டினெண்ட் ஜோன்ஸுக்கு ஒரு spin-off இருக்க, தனியாக ஒரு முப்பாக தொடரினையும் ரெடி பண்ணி, அங்கேயும் ஜோன்ஸை மையப்படுத்தியுள்ளனர் ! அதன் முதல் ஆல்பம் ஏற்கனவே வெளியாகியிருக்க, ஆல்பம் # 2 - வரும் ஜுனில் வெளியாகிடவுள்ளது அங்கே ! ஆக இந்த மைல்கல் ஆண்டினில் XIII பிரெஞ்சு ரசிகர்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று லட்டுக்கள் வெயிட்டிங் !
விண்ணிலிருக்கும் நண்பர் பழனி, இந்நேரத்துக்கு பிரெஞ்செல்லாம் படித்திருப்பார் - so சூட்டோடு சூடாய் அவர் ரசிக்கப் போகும் கதைகளை நாமும் அடுத்தாண்டிலாவது ரசிக்க ஏற்பாடுகள் செய்திடலாமா folks ?
Moving on, சென்னைப் புத்தக விழாவுக்கென தயாரான மறுபதிப்புகள் + 1 குட்டி புக் என்ற 9 இதழ் combo இப்போது ரெடி ! நாளை முதல் நமது சென்னை ஸ்டாலில் கிடைக்கும் ! ஏற்கனவே 6 இதழ்கள் அவ்விடம் சென்றிருக்க, பாக்கி மூன்றும் இன்று புறப்பட்டாச்சு ! So சென்னையில் மொத்தமாகவோ, தேவைப்படும் இதழ்களை மட்டுமோ வாங்கிக் கொள்ளலாம் ! And சென்னையில் அல்லாத நண்பர்களுக்கென இதோ இன்னொருமுறை விளம்பரம் :
And இதோ - லக்கி லூக்கின் 3 மறுபதிப்புகளுக்குமான teasers :
ஜேன் இருக்க பயமேன் ? |
தலைக்கு ஒரு விலை ! |
மேற்கே ஒரு மாமன்னர் |
தவிர, இதோ சிறுத்தை மனிதனின் புக் # 2 preview ! சென்னையிலும் சிறுத்தை மனிதன் சீருக்கிறான் தான் ; ஆனால் சிறுநகர புத்தக விழாக்களிலோ அண்ணாத்தையின் ரேஞ்சே வேற ! And வெகு விரைவில் முதல் இதழினை மறுபதிப்பு செய்திட வேண்டியிருக்கும் !
இதுவரைக்குமான சென்னைப் புத்தக விழாவின் விற்பனையில் யார்-யார் என்ன மாதிரி இடம் பிடித்துள்ளனர் ? என்பதை மேலோட்டமாய்ப் பார்த்த போது top of the list இருப்பது டின்டின் தான் ! அவரைத் தொடர்ந்து கார்ட்டூன்கள் செமத்தியாக ஓட்டம் கண்டிருப்பதாய்த் தெரிகிறது இம்முறை ! அந்த 3 மறுபதிப்பு லக்கி லூக் இதழ்களும் சுடச் சுடப் பறந்து வருகின்றன ! இன்னும் ஒரேயொரு கார்ட்டூன் தொடருக்காவது லக்கி அளவிலான அபிமானத்தினை ஈட்டிட இயன்றால் அட்டகாசமாக இருக்கும் ! சிக் பில் அந்த இடத்தினை இத்தனை காலமாகியும் நிரப்பிடாதது ஏன் ? என்பது தான் எனக்கு வியப்பினைத் தந்திடும் விஷயம் ! சொல்லுங்களேன் guys - உட்ஸிட்டி சிரிப்புப் போலீசார் அந்த டாப் ஸ்லாட்டினை எட்டிடத் தடுமாறுவது ஏன் என்று ?
And a last question : இன்னும் ஒரே ஒரு கார்ட்டூன் தொடருக்கு மறு வாய்ப்புத் தருவதாக இருப்பின், உங்களின் தேர்வு யார் ? அல்லது எதுவாக இருக்குமோ ?
முன்கூட்டிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் all ; இல்லம்தோறும் ஒளியும், மகிழ்வும், நலமும், வளமும் பொங்கலாய்ப் பொங்கட்டும் !! Bye all...see you around ! Have a super duper long weekend ! கெட்ட பயலான டெட்வுட் டிக்கோடு மல்லுக்கட்ட நான் கிளம்புகிறேன் !
பதிவினை மேலோட்டமாய்ப் படிப்போராய் நீங்க இருப்பின் - உங்கள் வசதிக்காக இதோ இந்தப் பதிவினில் நான் கோரியுள்ள கேள்விகள் 3 :
1.இந்தாண்டில் மிகச் சரியாக 40-ஐ தொட்டு நிற்கும் / தொடப் போகும் நண்பர்கள் எத்தினி பேரோ ? கொஞ்சம் கரம் தூக்குங்கள் ப்ளீஸ் ?
2.உட்ஸிட்டி சிரிப்புப் போலீசார் (சிக் பில் & கோ) அந்த டாப் ஸ்லாட்டினை எட்டிடத் தடுமாறுவது ஏன் ?
3.இன்னும் ஒரே ஒரு கார்ட்டூன் தொடருக்கு மறு வாய்ப்புத் தருவதாக இருப்பின், உங்களின் தேர்வு யார் ? அல்லது எதுவாக இருக்குமோ ?
Me first
ReplyDeleteவாழ்த்துக்கள்...
Deleteவாவ்...வாழ்த்துகள் பத்து சார்
Deleteவாழ்த்துக்கள் 10 சார்
Deleteவாழ்த்துகள் சகோ
DeleteMe also second
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteமூன்றாவது
ReplyDeleteVanakkam
ReplyDeleteவணக்கம் நண்பர்களே மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDeleteQ.3. ப்ளு கோட் பட்டாளம்.
ReplyDelete🙏🙏
ReplyDelete10
ReplyDeleteIn cartoon do we have any idea about Calvin and Hobbes? Is it possible to try that in Tamil. Hope you would have tried that one as i had seen Garfield and hegar in Tamil. So just wondering if we had done any discussion on Calvin and Hobbes sir.
ReplyDeleteNot for Tamil...
DeleteOh hoping the creators change their mind sir
Deleteதற்போதைய வயது 40.
ReplyDeleteஅடுத்த மாதம் 41.
Endrum 18 nu ninaichikittu irundhen sir😁
Delete1984-ல் பிறந்திருக்க வேணும் பாபு !
Deleteஅடுத்த வருடமே XIII இங்கே வெளியிட்டு விடுலாம் ஆசிரியரே
ReplyDeleteவணக்கம்
ReplyDelete//இன்னும் ஒரே ஒரு கார்ட்டூன் தொடருக்கு மறு வாய்ப்புத் தருவதாக இருப்பின், உங்களின் தேர்வு யார் ? அல்லது எதுவாக இருக்குமோ ? //
ReplyDeleteமேக் & ஜாக்
அப்புறம் எங்க அம்மாவின் சாய்ஸ் மேக் & ஜாக்
Deleteஎனது சாய்ஸ் மேக் அண்ட் ஜாக் தான்.
DeleteI personally don't feel chick bill is so funny. Actually I feel pity for chick bill. So unable to feel the fun aspect.
ReplyDeleteWOW.. another cartoon option is superb announcement sir.
ReplyDeleteநிறைய கார்ட்டூன் கதைகளை சிறப்பு முன்பதிவு முறையில் வெளியிடுங்கள் சார்.
ரின் டின் கேன், க்ளிப்டன், அலிபாபா, சுஸ்கி விஸ்கி, ஸ்மர்ஃப்ஸ், ப்ளூ கோட், பென்னி, மேக் ஜாக், லியானர்டோ, சிந்துபாத், டிம்மி ஜெர்ரி,
எல்லாரையுமே எனக்கு பிடிக்குமே... யாரையென்று சொல்ல...
2.உட்ஸிட்டி சிரிப்புப் போலீசார் (சிக் பில் & கோ) அந்த டாப் ஸ்லாட்டினை எட்டிடத் தடுமாறுவது ஏன் ?
ReplyDeleteneed at least two issues for kit ordin sir .. one s not enough ..
3.இன்னும் ஒரே ஒரு கார்ட்டூன் தொடருக்கு மறு வாய்ப்புத் தருவதாக இருப்பின், உங்களின் தேர்வு யார் ? அல்லது எதுவாக இருக்குமோ ?
MAK AND JAK (OR) BENNY ..
//need at least two issues for kit ordin sir .. one s not enough ..//
Deleteஒரு பானைச் சோறு பற்றாது ; இன்னொரு குண்டாவிலேயும் ஆக்கினா தான் ருசி பாக்க முடியும்னு சொல்லவாது செய்வோமா ?
ஒண்ணுக்கே (!!!) லாட்டரி அடிக்கையிலே மேற்கொண்டு எங்கே யோசிக்க நண்பரே ?
Beautiful sir... 😄😄❤️
Delete1. நானும் நாற்பதுகளில் தான் சார். (41, 42,43,44,45,46,47,48,49 எல்லாம் கணக்கில் உண்டா சார்).
ReplyDelete2. டாக்புல் & கிட் ஆர்டினை சொல்லாமல் சிக்பில்-ஐ கதாநாயகன் என்று சொன்னதால் இருக்குமோ?
3. நிறைய கார்ட்டூன் கதைகளை சிறப்பு முன்பதிவு முறையில் வெளியிடுங்கள் சார்.
ரின் டின் கேன், க்ளிப்டன், அலிபாபா, சுஸ்கி விஸ்கி, ஸ்மர்ஃப்ஸ், ப்ளூ கோட், பென்னி, மேக் ஜாக், லியானர்டோ, சிந்துபாத், டிம்மி ஜெர்ரி,
எல்லாரையுமே எனக்கு பிடிக்குமே... யாரையென்று சொல்ல...
யாரையென்று சொல்லன்னு கேட்டுக்கிட்டே யாரையும் சொல்லாம கெளம்பிடீங்க சார் !
Deleteகார்ட்டூனில் யார் வந்தாலும் மகிழ்ச்சி சார். வந்தால் மட்டும் போதும்.
Deleteஅது என்னமோ தெரியல எனக்கு மிகவும் பிடிக்கும் தொடர்கள் மற்றும் கதாநாயகர்கள் தொடர்ந்து நிலைப்பதில்லை. கிராபிக் நாவல் எனக்கு பிடிக்கும் ஆனால் கிராபிக் நாவலின் கதி அதோகதியாகி வருகிறது. கேப்டன் டைகரை எனக்கு பிடிக்கும் அவரது கதையே தற்போது இல்லை என்கிற நிலை ஆகிவிட்டது. கார்ட்டூன்களில் ஸ்மார்ட் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் அந்த பொடி பாசை அட்டகாசமாக இருக்கும். ஆனால் ஏனோ அந்தத் தொடரும் பெரும்பான்மையோருக்கு பிடிக்கவில்லை. ரின்டின் கேனையும் எனக்கு பிடிக்கும் அந்தத் தொடரும் தற்போது இல்லாமல் போய்விட்டது. டிசம்பரில் வெளியான சிஸ்கோ ஆல்பம் கூட அட்டகாசமான கதை தான் ஆனாலும் சிஸ்கோவை யாருக்கும் பிடிக்க மாட்டேன் என்கிறது என்னவென்றே தெரியவில்லையே.
ReplyDelete2023-ன் ஹிட்ஸ் :
Deleteகுற்ற நகரம் கல்கத்தா
விதி எழுதிய வெள்ளை வரிகள்
காலனின் கால்தடத்தில் !
The தளபதி ஸ்பெஷல்
தோணுச்சு சார்...சொல்லி வைச்சிருக்கேன் !
// . கார்ட்டூன்களில் ஸ்மார்ட் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் அந்த பொடி பாசை அட்டகாசமாக இருக்கும். ஆனால் ஏனோ அந்தத் தொடரும் பெரும்பான்மையோருக்கு பிடிக்கவில்லை. ரின்டின் கேனையும் எனக்கு பிடிக்கும் //
DeleteMy group sir 😊
ரின்டின்னால
Delete@PFB நம்ம குரூப் நம்ப சின்னதா இருக்கிறது. ஏனோ பலருக்கு கார்ட்டூன் என்றாலே வேப்பங்காயாக இருக்கிறது என்ன காரணம் என்று தெரியவில்லை
Delete@விஜயன் சார்
Deleteஆமாம் சார் இது போன்ற கிராபிக் நாவல் கதைகளை தொடர்ந்து வெளியிடுங்கள். என்னதான் ஹிட் அடித்தாலும் கிராபிக் நாவலின் எண்ணிக்கை குறைந்து விட்டதே சார்.மூக்கை சுற்றி வாய் தொடும் கதைகளை இன்னும் தொடர்ந்து வெளியிடுங்கள்.
மீண்டும் வர ஆசைப்படும் கார்ட்டூன் ப்ளூ கோட்ஸ் பட்டாளம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete// நமது லயனின் 40-வது ஆண்டினை kickstart செய்திட இதை விடவும் அட்டகாசமானதொரு ஆரம்ப மாதம் அமைந்திருக்க முடியாதென்பேன் //
DeleteWow sir. Very good news on beginning of the year. Great start.
அனைவருக்கும் வணக்கம்.
ReplyDelete// In hindsight - லார்கோவையும் ஜனவரிக் கூட்டணிக்குள் நுழைத்தது நல்லதாகப் போயிற்று என்பது புரிகிறது ! Phew !!! //
ReplyDeleteGreat move on the beginning of the year sir.
எனக்கு இந்த வருடம் 40 சார் ..அடுத்த வருடம் 39 சார்...
ReplyDeleteதலீவரே....இதுக்கு தான் சங்கத்து செலவுலே வாங்குற ஊசிப்போன மசால் வடையை சாப்பிடாதீங்கங்கிறது ! இப்போ பாருங்க, நடுச்சாமத்திலே எழுந்திருக்க வேண்டி கீது ; அரை தூக்கத்திலே டைப் பண்ண வேண்டிக்கீது !
Delete🤣🤣🤣
Delete😂😂😂😂😂😂
Deleteஹா.. ஹா.. Beautiful sir.. 😄😄😄
Delete:-(
Deleteஎனக்குமே.. சிக்பில் குழு மிக பிடித்த நாயகர் குழு சார்...
ReplyDeleteஇன்று ஸ்டாலுக்கு சென்று இருந்தேன். நிறைய பேர் english comics கேட்கிறார்கள்.
ReplyDeleteஅது ஆண்டாண்டாய் கேட்கப்படுவது தான் நண்பரே ; அமர் சித்ர கதா ஸ்டாலுக்கு வழிகாட்ட வேண்டியது தான் !
Delete:-)
Delete// சூட்டோடு சூடாய் அவர் ரசிக்கப் போகும் கதைகளை நாமும் அடுத்தாண்டிலாவது ரசிக்க ஏற்பாடுகள் செய்திடலாமா folks ? //
ReplyDeleteIf you feel they’re good please publish them in Tamil asap sir.
Tintin also very less stock
ReplyDeleteமேற்கொண்டு புக்ஸ் இன்று அனுப்பியுள்ளோம் ; நாளை கணிசமான நம்பரில் டின்டின் இருப்பார் சார் !
Delete40வது..
ReplyDelete1. நாற்பதை தாண்டி பதினொரு ஆண்டுகள் ஆகின்றன.
ReplyDelete2. கார்ட்டூனையே யாரும் ரசிப்பதில்லை.
3. மேக் & ஜாக் ஜோடி எனக்கு பிடித்த கார்ட்டூன்.
கார்ட்டூனில் யார் வந்தாலும் மகிழ்ச்சி சார். வந்தால் மட்டும் போதும்.
ReplyDelete// பதிவினை மேலோட்டமாய்ப் படிப்போராய் நீங்க இருப்பின் - உங்கள் வசதிக்காக இதோ இந்தப் பதிவினில் நான் கோரியுள்ள கேள்விகள் 3 //
ReplyDeleteGood ide sir.
Karthik @ Please note this.
சென்னை எக்ஸ்பிரஸ் ஒன்பது புத்தகங்களை ஒரு சேர ரூ.850க்கு வாங்க ஆன்லைன் லிஸ்டிங் செய்யுங்கள் சார்.
ReplyDeleteஸ்மர்ப் & மதியில்லா மந்திரி
ReplyDeleteஇன்னொரு வாய்ப்பு கொடுங்கலாம் சார்..
In addition to that include Rin Tin and ப்ளு கோட் பட்டாளம்.
Deleteஅப்புறம் இந்த 'மானே'...'தேனே'...'பொன்மானே'ல்லாம் போட்டுக்க வழியில்லே சார் ! ஏதாச்சும் ஒண்ணு....ஒண்ணே ஒண்ணு !
DeleteSir make it two - My choices are Rin Tin and ப்ளு கோட் பட்டாளம்.😁
Delete//உட்ஸிட்டி சிரிப்புப் போலீசார் (சிக் பில் & கோ) அந்த டாப் ஸ்லாட்டினை எட்டிடத் தடுமாறுவது ஏன் ?//
ReplyDeleteஇந்த உட்சிட்டி போலீஸ் மிகவும் பிடித்த குழு
அப்புறம் அந்த முதல் கேள்விக்கும் எனக்கும் சம்பந்தமில்லை😁😁😁
ReplyDeleteஎனக்கும் தான் ரம்யா !
Delete😊😊😊💐💐
DeleteSir why don't we bring Avatar Comics series in Tamil and in herge apart from tintin there are other set of comics also that also superb hit stories. Please check
ReplyDeleteபிரான்சில் வாங்குறே உதை போரடிச்சுப் போச்சுன்னா ஜப்பானில் நாலு (Avatar) சாத்து வாங்கிப் பார்ப்போம் என்று தோணுச்சா சார் ?
DeleteHerge உருவாக்கிய Jo ; Zette & Jocko ; Quike & Flupke போன்றவையெல்லாமே நம்ம சுசுகி & விஸ்கி ரேஞ்சிலானவைகள் ! And நிரம்பவே பழையவை !
Herge-ன் மணிமகுடம் டின்டின் மாத்திரமே சார் !
எல்லாத்தையும் ஒன்னு போடலாமே சார்
DeleteI like Chick Bill stories. May be jolly jumper kind of character is missing in Chick Bill stories.
ReplyDeleteமதியில்லா மந்திரி என் சாய்ஸ்.
ReplyDeleteஎன் வயது 55
நம்மளுக்கு கொஞ்சம் சின்னவர் சார் நீங்க !
Delete@Ajjiraj ஜி..😍😃
DeleteMe too..😃😃
55 ❤💛💙💚💜
Edi sir..😍😘
ReplyDeleteMe in.. 👍
Sir, in last year comics calendar you mentioned about Cartoon special under “Enkey Yeppothu”, when shall we expect sir. Did you get a chance to finalize the stories sir. Eagerly waiting for cartoon special sir.
ReplyDeleteகதைகள்லாம் final பண்ணுவது லேசு சார் ; முன்பதிவுகளும், விற்பனைகளும், தான் சிரமமான காரியங்கள் !
DeletePlease make the announcement sir, based on the pre booking numbers you can start the work sir 🙏🏻
Deleteஏற்கனவே MYMOS இருக்கு பரணி.
Delete//இதுவரைக்குமான சென்னைப் புத்தக விழாவின் விற்பனையில் யார்-யார் என்ன மாதிரி இடம் பிடித்துள்ளனர் ? என்பதை மேலோட்டமாய்ப் பார்த்த போது top of the list இருப்பது டின்டின் தான் !//
ReplyDeleteடின்டின் இன்னும் சாதனை படைக்க வாழ்த்துகள்
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஸ்மர்ப் மந்திரி
ReplyDeleteஎனக்கென்னவோ டாக்புல் & கோ லக்கியை நெருங்கியே இருக்கிறார்கள்... என்னைப் பொருத்தவரை அவர்களின் ஒரு புத்தகம் கூட சோடை போனதில்லை...
ReplyDeleteஎனக்கும்
Deleteநம்ம ஸ்டாக் லிஸ்டைப் பாருங்க சார் ; அதுவே ஒரு கதை சொல்லும் !
Deleteகடைசி 12 வருஷங்களில் உத்தேசமாய் 20 to 22 லக்கி லூக் போட்டிருப்போம் - இன்றைய ஸ்டாக் தற்போதைய மூன்றைச் சேர்த்து ஆறு !
சிக் பில் - போட்டிருக்கக்கூடியது maybe 14 or 15 ; கையிருப்பில் முக்கால்வாசி !
1. ஒரு பத்து வயசு கூடன்னா அட்ஜஸ் பண்ணிக்க மாட்டீங்களா?
ReplyDelete2. சிக்பில் எனக்கு பிடித்திருந்தது. அதுமட்டுமா மந்திரி, ரின்டின்கேன், பென்னி எல்லாம் பிடிச்சது. மத்தவங்களுக்கு ஏன் பிடிக்கலைன்னு தெர்லீங்கோ. மேக&ஜாக் வகையறாக்களில் வந்த காமெடியை விட தாத்தாக்கள் பண்ணும் காமெடி புடிச்சிருக்கு.
3. மந்திரி, பென்னி மாதிரியான தொடர்கள் ட்ரை பண்ணலாம்.
ஒரிஜினல் 40 வயசுக்குனா ஜோடி ஜோன்சாம் !
Deleteஅஜீஸ் பண்ற 50 வயசுக்குனா ஜோடி மார்த்தாவாம் !
ஓ.கே. தானா ?
🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️
Deleteசார் சார் மார்த்தா சார்....
Deleteகண்ணா ரண்டு லட்டு துன்ன ஆசயா
Benny இன்னொரு சான்ஸ் கொடுக்கலாம்...
ReplyDeleteValerian & Laureline ஒரு புத்தகமாவது வெளியிட்டுப் பார்க்கலாம்... 🥺
//Valerian & Laureline ஒரு புத்தகமாவது வெளியிட்டுப் பார்க்கலாம்.//
Deleteசிரிப்பு வறட்சி நீங்கிடும் சார் - நம்மவர்கள் மத்தியிலே !
போன வருசம் மே மாதம் ஆன்லைன் புத்தக விழா இருந்துச்சே. அந்த மாதிரி இந்த வருடமும் ஒரு இரண்டு குண்டு டெக்ஸ் புக்கோட கொண்டாட வழி உண்டுங்களா?
ReplyDeleteபெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுங்களா சார் - இந்தத் தீப்பந்தம் ....லாந்தர்லாம் ஆகாதுங்களா ?
Deleteபெட்ரோமேக்ஸ் கூட தீபந்தம், லாந்தர், அகல் விளக்கு ன்னு எது வந்தாலும் மகிழ்ச்சியோட ஏத்துக்குவோங்க சார்.
Deleteதீக்குச்சி தந்தாலும் ரெண்டு பெட்ரோமாக்ஸ்
DeleteEdi Sir..😍😘
ReplyDelete1)இந்த 1968/1969 -ல பொறந்தவங்களுக்கு
ஏதாவது சலுகை உண்டுங்களா சார்..😍😘
2)எனக்குரொம்ப பிடிக்குமே சார்..😍
ஆனா.. ஏன் மத்தவங்களுக்கு கம்மியா பிடிக்குதுன்னு தெரியலிங்களே சார்..😃
3)ப்ளுகோட் ஈஸ் மை சாய்ஸ் சார்..😍👍👌
ரண்டே ரெண்டு வருஷம் பொறுத்துக்கோங்க சார்....ரயில்வேலயாச்சும் சலுகை நிச்சயம் ! டிக்கெட்டுக்கு தண்டம் அழுது மாளலை !
Delete😃😀😀😃😃well said Sir..
DeleteMadhi illa mandhiri- Iznogoud
ReplyDeleteSuch a wonderful series which didn't went well with our viewers.When it was published initially it was smash it .Not sure what went wrong after that.
May be we can try few of full length books in this series
Also there is collection which tells how mantri comes out of danger each time from the last panel.my personal favourite
Nopes...they're all collections of short stories !
Deleteநாற்பத்தாறு ரன்னிங். சிக்பில் உட்சிட்டி போலீசார் சாதிப்பாங்க.. எனக்கு இந்த ஆண்டில் புதுசா ஒரு சிக்பில் வந்தா நல்லா இருக்கும் சார். ஹேப்பி பொங்கல் ஆல்.
ReplyDeleteவர்ற சிக் பில் எல்லாமே புதுசு தானே சார் ?
Deleteஅந்த புதுசுதான் சார்...புதுசா
Deleteஆமாம் சார். அந்த கிட் ஆர்டினின் அப்பாவித்தனம் எவர்க்ரீன். டாக்புல்லின் உதையில் தலைகீழாய்ப் போய் விழும் சீன்களெல்லாம் அப்ளாஸ் அள்ளுபவை. விற்பனையில் சறுக்கியதன் மர்மம்தான் பிடிபடமாட்டேங்குது சார்.
Deleteவந்துட்டேன். ரொம்ப லேட்டா வந்துட்டேன்.
ReplyDeleteதற்போது வயது ஜனவரி 3 முதல் 40
ReplyDeleteஅடடே....!! லிஸ்டில் சேர்த்துப்புடுவோம் சார் !
Deleteஇந்த வருடம் ஜூலை 11 அன்று 40 வயதை கொடுக்கிறேன்
ReplyDelete(நல்ல வேளை யாரும் இந்த கமெண்ட் டை பார்க்க வில்லை)
லிஸ்டிலே # 2
Deleteசூப்பர் தோழரே
Deleteயாருக்கு கொடுக்கறீங்க சத்யா?
Deleteயாருக்கோ
Delete@Edi Sir..😍😘
ReplyDeleteசென்னை எக்ஸ்பிரஸ் புக்ஸ் பொங்கல் விழாவை சிறப்பிக்க நாமக்கல்லுக்கு கிளம்பியாச்சுங்களா சார்..😍😘
கோவைக்கு
Delete1.Sir, 40 வயசேதான் வேணுமா ( பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா Slang ல் படிக்கவும்) 43, 44 னா Adjust பண்ணிக்கிற மாட்டீங்களா
ReplyDelete2.சிக்பில் தரத்தினில் லக்கிலூக்கிற்கு இணையானதே ஆனால் இன்னும் Promote செய்யப்பட வேண்டும், எனக்கு மிகவும் பிடித்த தொடர் இது.
3.சிந்துபாத் Or அலிபாபா தொடர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க முயற்சி செய்யுங்கள் Sir
மேலே பதில் கீது சார் !
Deleteபெட்ரோமேக்ஸ் லைட்டே தான்னா ஜோன்ஸ் ஜோடியாம் !
தீப்பந்தம் ; அரிக்கன் லைட்னாலாம் மார்த்தா ஜோடியாம் !
தீப்பந்தம்...அரிக்கேன் லைட் சார்
Deleteசூப்பர் சார்...துள்ள வைக்கும் விற்பனை உங்க எழுத்துக்களிலும்...பதிமூன்று ஏன் அவங்க வெளியிட்டதுமே வெளியிடக் கூடாது...ஃபிப்ரவரி பட்டைய கெளப்புமே வான்ஹாம்மே வரத்'தால்...
ReplyDelete1... நாப்பதை எட்டி ஆறே வருடங்கள்தான் புரண்டதால் எனக்கும் சரியா நாப்பதேதான்
2. சிறு வயதில் அதாவது 40 வரை எனக்கு லக்கிய விட பிடித்த கதை வுட்சிட்டிலதான் துவங்குமென்றாலும்...இப்ப லக்கிய ரொம்ப பிடிக்குது கிட்ட விட...ஆனா கிட்டும் செமயா பிடிக்கும்...இவர்கள் விக்காதது ஆச்சரியமே... உங்களுக்கு போல
3.ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
Delete....ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
....ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
....ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
....ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
....ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
....ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
....ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
....ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙
ஸ்மர்ஃப்💙🤍
Deleteஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
....ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
ஸ்மர்ஃப்💙🤍...ஸ்மர்ஃப்💙🤍..ஸ்மர்ஃப்💙🤍
அப்புறம் அந்த இரண்டாவது சுற்று....அந்த ஸ்பின் ஆஃப் தீவாளிக்கோ ஈரோட்டுக்கோ இவ்வாண்டே
இரு பெரும் ஜாம்பவான்கள் பிறந்த வருடம்
1. முதல்படம் அலட்சியத் திகைப்பு
2. இரண்டாம் படம் சிங்கம் பசித்தாலும் புசிக்காது பணத்த
ஒவ்வொரு நீலப் பொடியர்களுக்கும் ஒவ்வொரு நீல இதயம் போல் தோன்றுகிறது
Deleteஅந்த வெள்ளை மனதுக்கும் கூட கடல்
Delete40..
ReplyDeleteஉண்மையாகவே எதிர்பார்க்க இயலாத எண் இந்த பதிவின் மூலம்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் 40 என்ற எண் எனக்கு காலப்போக்கில் நிர்ணயம் ஆன ஒரு குட்டி இலக்கு.
ஏனென்றால் 40 என்ற எண்ணிக்கையில், வரும் செவ்வாய்க்கிழமை அன்று குட்டி விழா ஒன்று ஏற்பாடு ஆகியுள்ளது மிக சரியாக 40 என்ற எண்ணிக்கையில்.
அந்த குட்டி விழாவில், 40 என்ற எண்ணிக்கைக்கு சில நண்பர்களுக்கு அர்த்தம் என்னவென்று கடந்த ஒரு வாரமாக அறிவார்கள்.
40 என்ற எண் இந்த வாரம் எனக்கு குஷியான எண்...
ஏனுங்க....நான் செரியா தானே பேசிட்டிருக்கேன் ?
Deleteசார் நண்பன் ஒரு Sponsor மூலமாக அவனது வீட்டு அருகே சிலம்பம் கற்றுக் கொள்ள வரும் 40 குழந்தைகளுக்கு இந்த பொங்கல் விடுமுறையில் ஆளுக்கு 2 புத்தகங்கள் என பரிசு வழங்க திட்டமிட்டு இருந்தார். நமது லயன் ஆபீஸில் இருந்து புத்தகங்களும் வந்து விட்டன. திங்கள் அல்லது செவ்வாய் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வழங்கப் படும். இந்த பதிவில் தற்செயலாக நீங்கள் 40ஐ பற்றி பேசியதும் நண்பன் குஷி ஆகி விட்டான். இது தான் சார் விஷயம்.
Delete// நண்பன் ஒரு Sponsor மூலமாக அவனது வீட்டு அருகே சிலம்பம் கற்றுக் கொள்ள வரும் 40 குழந்தைகளுக்கு இந்த பொங்கல் விடுமுறையில் ஆளுக்கு 2 புத்தகங்கள் என பரிசு வழங்க திட்டமிட்டு இருந்தார். //
DeleteSirapana seyal
ரகுவய்யா அருமையான செயல் வாழ்த்துக்கள் காமிக்ஸ் எங்கெங்கும் பரவட்டும்
Deleteஎங்க அம்மா சிக்பில் நல்லா இருக்கு
ReplyDeleteசிக்பில் படிக்க பொறுமை இருந்தால் நன்றாக இருக்கும் என்றார்
வரவர லக்கி லூக்கில் தான் காமெடி குறைச்சலா இருக்கு என்று சொல்கிறார்
குட்டீஸ் களிடம் லக்கிலூக் பேமஸ் ஆக கா ணம், அவர் கார்ட்டூன் சேனல்களிலும் வருவதால் இருக்கலாம்
ReplyDeleteமுக்கியமாக டால்டன்ஸ்
வாங்குற குட்டீஸ்களுக்கெல்லாம் மீசையும், தாடியும் இருக்குதே ரம்யா ?
Delete😂😂😂😂😂
Deleteஅதுவும் உண்மைதான் ஆசிரியரே
கோவையில் லக்கி லூக்கிற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது
கோவையில் இவரை ஸ்டாக் அவுட் செய்து விடுவார்கள்
திருப்பூர் ; திருநெல்வேலி ; சிவகங்கைன்னு வரிசைக்கு புத்தக விழாக்கள் காத்துள்ளன ; அங்கெல்லாமுமே ஒல்லியார் கில்லி தான் !
Deleteசூப்பர் ஆசிரியரே
Deleteதன் நிழலை விட வேகமாக காலியாகிறார்
// குட்டீஸ் களிடம் லக்கிலூக் பேமஸ் ஆக கா ணம், அவர் கார்ட்டூன் சேனல்களிலும் வருவதால் இருக்கலாம்
Deleteமுக்கியமாக டால்டன்ஸ்// உண்மை தான் கடல் பல குழந்தைகளுக்கு லக்கியை விட டால்டன்களை தெரிந்து உள்ளது.
// தன் நிழலை விட வேகமாக காலியாகிறார் //
DeleteAda sema
September 4th, I will be 40 Years sir.
ReplyDeleteMy vote is for bluecoats sir
ஹை...லிஸ்டிலே # 4 !!
Delete2.எனக்கு சிக் பில் கதைகள் லக்கி லூக் கை விட பிடிக்கும்.
ReplyDeleteஅதுவும் டாக் புல் expression லாம் நினைத்து நினைத்து சிரிக்கலாம். (ஒரு மெயின் ஹீரோ nu இல்லாமல், ஒரு டீம் ஆக இருப்பதால் பல பேர் முக்கியத்துவம் தராமல் இருக்கலாமோ?🤔🤔🤔)
3. Definitely மதியில்லா மந்திரி👍
வெடிச் சிரிப்புக்கு கேரண்டி தரும் தொடர் இது...
Bore அடிக்கும் போது மீண்டும் மீண்டும் எடுத்து படிக்கும் கார்ட்டூன் தொடர் 🙏
சிக் பில்& கோ ஒரு ஹிட் கொடுத்தால் அடுத்து வரும் இதழ் ஆவரேஜ் ஆகி விடுகிறது விண்வெளியில் ஒரு எலி தேவை ஒரு மொட்டை போன்ற சூப்பர் ஹிட் களுக்கு பிறகு மாறிப்போன மாப்பிள்ளை
ReplyDeleteஒரு பைங்கிளி படலமென ஆவரேஜாக வருவதுதான்
சிக்பில் &கோ இன்னும் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியவில்லை என்னளவில் சிக்பில் &கோ வே லக்கி லூக் கை விட ரொம்ப பிடிக்கும்
// 1.இந்தாண்டில் மிகச் சரியாக 40-ஐ தொட்டு நிற்கும் / தொடப் போகும் நண்பர்கள் எத்தினி பேரோ ? கொஞ்சம் கரம் தூக்குங்கள் ப்ளீஸ் ? //
ReplyDeleteதாண்டி வந்தாச்சி சார்...
// 2.உட்ஸிட்டி சிரிப்புப் போலீசார் (சிக் பில் & கோ) அந்த டாப் ஸ்லாட்டினை எட்டிடத் தடுமாறுவது ஏன் ? //
தெரியலையே,ஆனா எனக்கு பிடித்த ஸ்லாட்தான்...
// 3.இன்னும் ஒரே ஒரு கார்ட்டூன் தொடருக்கு மறு வாய்ப்புத் தருவதாக இருப்பின், உங்களின் தேர்வு யார் ? அல்லது எதுவாக இருக்குமோ ? //
மதியில்லா மந்திரி,சுட்டிப் பயல் பென்னி பிடிக்கும்...
/ 1.இந்தாண்டில் மிகச் சரியாக 40-ஐ தொட்டு நிற்கும் / தொடப் போகும் நண்பர்கள் எத்தினி பேரோ ? கொஞ்சம் கரம் தூக்குங்கள் ப்ளீஸ் ? // நானும்
ReplyDeleteதாண்டி வந்தாச்சி சார்...
// 2.உட்ஸிட்டி சிரிப்புப் போலீசார் (சிக் பில் & கோ) அந்த டாப் ஸ்லாட்டினை எட்டிடத் தடுமாறுவது ஏன் ? //
நிஜமாக தெரியவில்லை சார். என்னை பொறுத்த வரையில் சிக் பில் at par with லக்கி லூக்.
// 3.இன்னும் ஒரே ஒரு கார்ட்டூன் தொடருக்கு மறு வாய்ப்புத் தருவதாக இருப்பின், உங்களின் தேர்வு யார் ? அல்லது எதுவாக இருக்குமோ ? //
மேக் அண்ட் ஜாக் தான் சார்.
நன்றி ரவி அண்ணா 🙏
Delete//மேக் & ஜாக்//
Delete+9
இந்தாண்டில் மிகச் சரியாக 40-ஐ தொட்டு நிற்கும் / தொடப் போகும் நண்பர்கள் எத்தினி பேரோ ? கொஞ்சம் கரம் தூக்குங்கள் ப்ளீஸ் ?
ReplyDeleteஇந்த ஆண்டில் 40 😭
April 3 1984
DeleteDon't cry, don't cry, don't cry.
Deleteநன்றி குமார் ஜி .40 வருடம் இவ்வளவு விரைவாக கழிந்ததை நினைக்க கவலை தான். மறுபுறம் லயனுக்கும் XIII க்கும் கூட இதே வயது தான் என்று நினைத்து ஆனந்தக் கண்ணீரும். 😊
Deleteஉற்சாகம் ததும்பும் பதிவு சார். சென்னை புத்தக விழாவில் நல்ல விற்பனை தொடர்வது மிக்க மகிழ்ச்சி. டின் டின் விற்பனை பட்டையை கிளப்புவதில் இன்னும் மகிழ்ச்சி.
ReplyDeleteசிக்பில் காமெடி எல்லாம் கவுண்டமணி செந்தில் காமெடி மாதிரி சார் அதனால ரசிக்கலனு நினைக்கிறேன் ப்ளூகோட்ஸ் தான் என்னோட சாய்ஸ். காமெடி ரைட்டிங்ஸ்க்கு கிட்ஆர்டின் கண்ணனையே உபயோகிக்கலாம் என்று நினைக்கிறேன் சார்
ReplyDeleteகவுண்டமணி - செந்தில்னா பிய்ச்சிக்கிட்டு போகணுமே சார் - பீச்சிக்கிட்டு அல்லவே ?!
Delete///1.இந்தாண்டில் மிகச் சரியாக 40-ஐ தொட்டு நிற்கும் / தொடப் போகும் நண்பர்கள் எத்தினி பேரோ ? கொஞ்சம் கரம் தூக்குங்கள் ப்ளீஸ் ? ///
ReplyDeleteவரப்போற ஜுன் 15ல எனக்கு 40ம் சில மாதங்களும் பிறக்க இருக்குது சார்..! போட்டிக்கு நானும் எலிஜிபிள்தானே..!?
மார்த்தா கூட மங்காத்தா ஆடணும் ; ரெடி தானுங்களே ?
Deleteமாதங்களை பெத்தெடுக்க வாழ்த்துக்கள் கண்ணரே
Deleteடின் டின் வெற்றி... மட்டற்ற மகிழ்ச்சி..
ReplyDeleteஎதிர்பார்த்த வெற்றி, சொல்லி அடித்த கில்லி தான் டின் டின்...
////2.உட்ஸிட்டி சிரிப்புப் போலீசார் (சிக் பில் & கோ) அந்த டாப் ஸ்லாட்டினை எட்டிடத் தடுமாறுவது ஏன் ?
ReplyDelete3.இன்னும் ஒரே ஒரு கார்ட்டூன் தொடருக்கு மறு வாய்ப்புத் தருவதாக இருப்பின், உங்களின் தேர்வு யார் ? அல்லது எதுவாக இருக்குமோ ? ////
2. நீண்ட நாட்களாகவே என் நெஞ்சில் உழலும் கேள்விதான் சார் இது..? எந்தவிதத்திலும் பழுதில்லாத ஒரு கார்ட்டூன் தொடர் ஏன் சோபிக்கவில்லை..!
என்ன குறை என்ன குறை என் செல்ல ஆர்டினுக்கு என்ன குறைன்னு பாடத்தான் தோணுது..😭
3. சுஸ்கி விஸ்கி
ஏன்னா.. ஏராளமான கதைகள் இருக்கு..!
சின்ன ஃபேன்டஸி கலந்த சாகசங்கள்.. லகுவான வாசிப்புக்கு ஏற்ற கதைக்களங்கள் + வசனங்கள் + சித்திரங்கள்.. மன பாரங்களை நீக்கவல்ல அருமருந்து அந்தத் தொடர்.!
மன பாரங்களை நீக்கவல்ல மருந்துக்கு, கிட்டங்கி ரேக் மீதான பாரத்தையும் நீக்கும் வித்தை தெரிஞ்சிருக்க வேணாமோ ?
Delete45 started
ReplyDeleteChick Bill is my favourite ஹீரோ, லக்கி லுக்கு எனக்கு இரண்டாவது தான். ஆனால் லக்கி லுக் அளவுக்கு மக்களிடம் ரீச் ஆகவில்லை. சிக் பில் 30 முறைக்கு மேல் படித்த கதைகளில்
விசித்திர ஹீரோ ,இரும்பு கவுபாய், கொலைகார காதலி, அதிரடி மன்னன். புத்தக திருவிழாக்களில் சிக் பில் அண்ட் கோவின் ஒரு பேனர் போடவும். முடிந்தால் சென்னை புத்தக விழாவிலே ஒரு பேனர் போட்டு விடுங்கள்.
comedy hero Asterix and obilex
மிகச் சரியாக 37 ஆண்டுகளாகின்றன நண்பரே - சிக் பில் நம்மிடையே அறிமுகமாகி ! இந்த 37 ஆண்டில் சாதிக்காததை ஆர்டின் & டாக்புல் கோஷ்டி
Deleteஒரு பேனர் போட்ட கணத்தில் சாதித்திடப் போகிறார்களா ?
///1.இந்தாண்டில் மிகச் சரியாக 40-ஐ தொட்டு நிற்கும் / தொடப் போகும் நண்பர்கள் எத்தினி பேரோ ? கொஞ்சம் கரம் தூக்குங்கள் ப்ளீஸ் ? ///
ReplyDeleteஎடிட்டர் சார்..!
நமது அன்பு நண்பரும் எனது அருமை அங்கிளுமான சென்னை இளவிஜய் அவர்கள்
( 9 ஜூலை1984 ) 2024 ஆண்டில் நாற்பதில் நங்கூரமிட்டு நின்றுகொண்டிருக்கிறார்..! ஆகவே நாற்பது ப்ளஸ்க்கு நீங்கள் ப்ளான் பண்ணியிருக்கு ஸ்பெசல் ஐட்டத்திற்கான க்ளப்பில் எங்க அங்கிள் இளவிஜய் அவர்ளையும் அங்கத்தினராக சேர்த்துக்கொள்ளும்படி பணிவும் அன்பும் பாதிப்பாதி விகிதத்தில் கலந்து கேட்டுக்கொள்கிறேன்..!
தளத்தில் பதிவிடுவதில் அவருக்கு சிறு சிரமம் இருந்ததால் அவர் சார்பாக அவரின் ஜூனியரான என்னை பதிவிடச்சொல்லி ஆணையிட்டார் சார்.. ஆகவே அதனை சிரமேற்கொண்டு நான் நிறைவேற்றினேன்.!
டின் டின் பற்றிய செய்திகள் தொடர்ந்து மகிழ்ச்சியை தருகிறது. 98இல் இருந்து நான் வாங்கிய எந்த டின் டின் ஆங்கிலப் புத்தகமும் முதல் பதிப்பாக இருந்தது இல்லை. எல்லாமே சில மறுபதிப்பு தாண்டி வந்தும் விற்று தீர்ந்த பின் வந்த மறுபதிப்புகள் தான். அதே போல் தமிழிலும் விற்பனை தீயாக இருக்க பல மறுபதிப்புகள் காண வாழ்த்துக்கள். நமது வாசக வட்டத்தையும் தாண்டி ஒவ்வொரு புத்தகக்கடையிலும் தமிழிலும் டின்டின் கிடைக்க வையுங்கள் சார்.
ReplyDeleteநண்பரே...ஆசை இருக்கு திபெத்தின் சிகரங்களின் உசரத்துக்கு ! ஆனால் இன்று புத்தகக் கடைகளில் வசூல் என்பது காளைமாட்டிடம் பால் கறக்க முயற்சிப்பதற்குச் சமானம் !
Deleteஅள்ளி இறைக்கலாம் ஊரெல்லாம் ; கடன் தரலாம் கடை கடையாய் ! சந்தோஷமாய் வாங்கிக்கவும் செய்வார்கள் ! ஆனால் இரும்பில் செருப்பு அவசியமாகிடும் பணம் கோரி நடையாய் நடப்பதற்கு !
சின்னக்கடைகள் - பெரியகடைகள் ; உள்நாடு - அண்டைநாடு என்ற பாகுபாடில்லாது ஒரே மாதிரியான அல்வா தான் அதன் பின்னே !
ரொம்பவே filter செய்து கொஞ்சமேனும் ஈரம் கொண்ட முகவர்களோடு மட்டுமே இப்போதெல்லாம் வியாபாரம் செய்கிறோம் !
அவர்களுக்கு எங்கேனும் நேரும் இழப்பினை, பத்தாண்டுகள் வியாபாரம் செய்த பின்னேயும் , நம் தலையில் சாத்தத் தான் முயற்சிக்கின்றனர் ! வார்த்தைகளுக்கு இம்மியும் மரியாதை கிடையாது இன்றெல்லாம் !
DeleteVarudhamana visayam sir😞
Delete2) எனக்கு லக்கி போல் சிக்பில் பிடிக்கும் என்பதால் குறையாக எதுவும் தெரியவில்லை. இரண்டுக்கும் வித்தியாசம் என்றால் லக்கி கதைகளை பொறுத்த வரை அங்கே வசனங்களை விட ஓவியங்கள் அதிகம் நகைச்சுவை பேசும். சிக்பில்லில் ஓவியங்களை விட வசனங்களில் தான் நகைச்சுவை வெளிப்படும்.
ReplyDeleteஇந்தாண்டு சந்தாவில் இணைந்துவிட்டேன்.
ReplyDeleteஅருமை சகோ.நன்றி.
Delete1. ஐம்பதை தொட்டாச்சு சார்
ReplyDelete2. நோ கமெண்ட்ஸ்
3. டிக் டிரேசி (கனவே கொல்லாதே..
செம்ம கதை சார்! இந்த ஒரே கதையுடன் இவரை முடித்தது வருத்தமே!)
40 முடிஞ்சு XIII மாதங்கள் ஆகின்றன
ReplyDeleteஜில் ஜோர்டனை கொண்டாரலாம்.
Deleteஅப்புறம் பெரும்பாலான நண்பர்களின் விருப்பம் எதுவோ அதுவே நமக்கும்
3. சுட்டிப்புயல் டென்னிஸ்... முடிந்தால் இவனை கொண்டு வாருங்கள்!
ReplyDeleteகேள்வி -1.
ReplyDeleteபதில் - 47 வயசு நடக்குது சாரே. கொஞ்சம் பார்த்துப் போட்டுக்கக் கூடாதா?
Me just 61 only sir. is it ok. Pl consider.
Deleteகேள்வி -2.
ReplyDeleteபதில் - டாக்புல் கிட்ஆர்டின் தொடர் எனக்கு மிகப் பிடித்த தொடர். விற்பனையில் சாதிக்காதது தான் ஏனென்று தெரியவில்லை சார்.
கேள்வி.. -3.
ReplyDeleteஸ்மர்ப்ஸ்.
ஒரேயொரு கார்டூனுக்கு மறு வாய்ப்பு
ReplyDeleteசுஸ்கி விஸ்கி
.1.ஒரு கார்ட்டூன் மறுபதிப்பு ஜேன் பார்ட் 2 பேய் நகரம். 2.எனக்கு 52முடியப் போகுது 3.ஹீரோ சிக்பில் என்று இருப்பதால். கிட்ஆர்டின்& .ஷெரிப் பையும் முன்னிலைப்படுத்தி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.வில்லன்கன் மனதை கவரும்படி இருப்பதில்லை. .சார் லயன் இல் இளவரசிக்கும் இது நாற்பதாவது ஆண்டு . அதற்காக ஒரு ஸ்பெசல் மறுபதிப்பு. .கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteநண்பரை கதைல முன்னிலை படுத்தியுள்ளார்களே
Deleteசார்..ஏது இவ்வளவு பணம்.?xiii..
ReplyDeleteகண்டிப்பா.. காமிக்ஸ் - ல சம்பாதித்ததா இருக்காது.?..
நல்லா ஞாபகப்படுத்திச் சொல்லுங்க..?iii..
கர்னல். அமோஸ் - தேடி வந்துக்கிட்டிருக்காரு..
தப்பிச்சு திபெத்-துக்கு ஓடிருங்க.சார்..
அங்க ஈவிங்ற யேட்டன் யேட்டின்னு ...
Delete@ஸ்டீல் சகோ
Delete🤣🤣🤣
எனக்கு பிடித்த மேலுமான கார்ட்டூன் நாயகர் ப்ளூகோட் பட்டாளம் சார்...
ReplyDeleteசார் ஆஸ்ட்ரிக்சுக்கும் தமிழ் பேச கத்து குடுங்க சார் இந்த 40 லயே...பல சாதனை புரிஞ்ச ஆண்டாருந்துட்டு போகட்டுமே...பாரதி சொன்னத போல..
ReplyDeleteமார்த்தா மார்த்தான்னு பல இடங்கள்ல சொன்னத பாத்தா...மார்த்தாக்கு தமிழ் சொல்லித் தர்ரீங்களோ
தேரே மேரே பீச் ஹை
Deleteஏக் துஜே கேலியே/ கேள்வியே/ கெழ்வியே...
Deleteபாக்கு போட்டு துப்பலியே..
கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலயும் போட்டா வாய் சிவக்கும்.....
மார்த்தாவும் 13 ம் தமிழ் பேசுனா வாயினிக்கும்...
ஆலன் ஒரு முறை அழுத்தமா முத்தமிடு ப்ளீஸ்....என்னா காதல் சார்
Jai thorgal
ReplyDeleteஒரே தொகுப்பா
DeleteChick bill not going well may be because of small size and black and white
ReplyDeleteGive another chance to smurfs. We all know how hard it was for u to obtain smurfs from the publishers. Also we know how hard u worked for smurfs. When ur expectations were flying high, the reality struck us.
I think this is the correct time to promote and re release smurfs.
1. எங்கவூர்ல ஆண்களின் வயதையும், பெண்களின் சம்பளத்தையும் கேட்கக் கூடாதுன்னு சொல்லுவாய்ங்க சார்!
ReplyDelete2. வாழ்க்கையின் புரியாத புதிர்களில் அதுவும் ஒன்று!
3. ம்.. அது வந்து.... ஸ்மர்ஃப்ஸ்? அதுவொரு அழகான உலகம் சார்! அதில் உலவிட மனசு எப்பவும் ஏங்கிக் கிடக்குது! ஆரம்பத்துல நாம வெளியிட்ட ஒன்றிரண்டு இதழ்களில் பொடி பாஷையை பயன்படுத்துவதில் நமக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள் ஏற்பட்டிருந்தாலுமேகூட, அதன் பிறகு வெளியானவை எல்லாமே அட்டகாசமாய் அமைந்திருந்தது உண்மையிலும் உண்மை!! மீண்டும் இந்த அழகான நீலப் பொடியர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால் மாடஸ்டியை நேரில் கண்டதுபோல் மகிழ்வேன்!
மார்த்தா வேண்டாம் என்று சொல்றீங்க, சகோ 👍👍👍
DeleteSmurfs yes but Maxi size like Tintin ! A4 does not make the cut.
Delete@Edi Sir..😍😘😃
ReplyDeleteநம்ப லயன்-முத்து-
வி காமிக்ஸ் ..❤💛
"லேட்டஸ்ட் ஸ்டாக் லிஸ்ட்" கிடைக்குங்களா..சார்..😍
1. 11 வருஷம் கழிச்சு லேட்டா இந்த கேள்வி கேக்குறீங்க.
ReplyDelete2. ஷெரிஃப் டாக் புல் கிட் ஆர்டின் இவர்கள் இருவரையும் முன்னிலைப்படுத்தாமல் சிக் பில்லை முன்னிலைப்படுத்துவது தான் காரணம் என்று நினைக்கிறேன்
3. மதி இல்லா மந்திரி மற்றும் ப்ளூ கோட்ஸ்
ஃபாட்டி-யையும், முடித்து
ReplyDeleteஃப்டி -யையும் முடித்து
எப்போதும் ஃப்டீனில் - இருக்க
ஆசைப்படும் வயசு.
சிக்பில்- பிடித்த கதைத் தொடர்..
எப்படியாவது வருடம் ஒரு ஆல்பம் கிடைத்தால்கூட சந்தோசமே..
மற்ற தொடர்கள் கார்ட்டூன் ஆல்பங்களாக தெரிகின்றன..
கிட் ஆர்டின் - தொடரில் நமது சாயல்கள் நையாண்டியாய் வெளிப்படுகின்றன..
நான் - இதில் - என்னை-என் மகனை பொருத்திப் பார்த்து ரசிப்பேன்..
மற்றவர்கள் - பொருத்திப் பார்த்து கடுப்பாகலாம்..
(மொத்தத்தில் கிட் ஆர்டினை ரசிக்க ஒரு மெச்சூரிட்டிே வேண்டும்..?ii) சிறுவர்களுக்கு இதைகதையாக சொல்லமுடியாது..
நேரடியாகத்தான் படிக்க வேண்டும்..)
மேக் & ஜாக்-எனக்கு வேண்டும்..
Sir - Instead of re-introducing a cartoon series again, please make it a collect hard bound - like 5-6 stories in a book and one book a year for pre-booking. May be released during EBF or CBF !
ReplyDeleteOr a box set !
DeleteChik Bill has become too much Goundamai - Senthil like - and deviated from perhaps it's original intended theme may be !
ReplyDeleteசார், வணக்கம்.
ReplyDelete1. வயது 39
2. வேண்டிய கார்ட்டூன் ஸ்மர்ஃப்ஸ். வீட்டில் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
1. 40 முடிந்து just 7 years தான் ஆவது.
ReplyDelete2. Chick Bill சிறார்களுக்கு மிகவும் பிடித்த தொட்ரதானே Sir?
3. 1. Suske Whisky...
2 Susky Whisky
3. Dusky Whisky
4 Smurf
5. Blue coats...blue coats
6. Sherlock Holmes...