Powered By Blogger

Saturday, January 06, 2024

தி சென்னை எக்ஸ்பிரஸ் '24

 டின்டினியன்ஸ்,

வணக்கம். ஒற்றை வாரத்தில் இது மூன்றாவது தபா - நமது ஆபீஸ் அல்லோலம் + கல்லோலம் பார்த்திடுவதற்கு ! போன சனியன்று சிஸ்கோ & விங் கமாண்டர் ஜார்ஜ் புறப்பட்டதெல்லாம் நிலாவுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் கிளம்பிய காலமாட்டம் ஏதோ ஒரு யுகமாய்த் தென்பட, தொடர்ந்த புதனன்று டின்டின் + இளம் டெக்ஸ் + லார்கோ + கலர் வேதாளர் என்ற கூட்டணியும் கிளம்பியிருந்தது ! And அது பற்றாதென்று, நேற்று மாலை கிளம்பியுள்ளது - சென்னை எக்ஸ்பிரஸ் '24 !! 

சென்னைப் புத்தக விழா சார்ந்த பேக்கிங் பணிகள் டிசம்பரில் துவங்கிய போதே - "என்ன இல்லை ?...என்ன அத்தியாவசியத் தேவை ?" என்றொரு பட்டியல் போட்டிருந்தோம் ! மாயாவியின் கையிருப்பினை கூட்டுவது ; கொஞ்சமாகவேணும் லாரன்ஸ்-டேவிட் & ஜானி நீரோ மறுபதிப்புகளைத் தயார் செய்வது ; லயனின் 40 வது ஆண்டினில் கூர்மண்டையர் ஸ்பைடராருக்கும் இடம் தருவது - என்று தீர்மானித்தோம் ! அப்புறம் சென்னையின் செல்லப்பிள்ளையான லக்கி லூக்கை தேற்றுவது தான் கடினம், அவரது ஆல்பங்களின் கையிருப்புகளையாவது இயன்றமட்டுக்குக் கூட்டுவது என்றுமே தீர்மானித்தோம் ! அப்புறம் பள்ளிப்பசங்களிடம் செம ஹிட்டடித்துள்ள அந்தச் சிறுத்தை மனிதனின் அடுத்த ஆல்பத்தை ரெடி செய்வதென்றும் குறித்துக் கொண்டேன் ! 




'ஒரு மாசம் இருக்குல்லே...பாத்துக்கலாம் ; ரெடி பண்ணிக்கலாம்' என்று தகிரியமாய் லிஸ்டை டோட்டல் போட்டால் 9 இதழ்கள் தேறியது ! அந்த நொடியினில் எனக்குத் தெரியாது - விங் கமாண்டர் ஜார்ஜ் குனிய வைத்துக் குமுறுவாரென்பது ! So அதற்கென செலவாகிய பொழுதுகளை உபரியாகக் கருதி, தி சென்னை எக்ஸ்பிரஸ் '24  என்று இந்தத் திட்டமிடலுக்குப் பகுமானமாய் பெயரும் இட்டு விட்டேன் ! "அம்புட்டும் மறுபதிப்புகள் தானே ; இப்டிக்கா பிரிண்ட் பண்ணி, அப்டிக்கா சென்னைக்கு அனுப்புறோம் " என்ற எண்ணமும் உரம் சேர்த்தது எனக்கு ! ஆனால் பெயரளவிற்குத் தான் இவை மறுமதிப்புகளே தவிர, டிஜிட்டல் யுகம் துவங்கிய பிற்பாடு இந்த இதழ்களுள் எவற்றையுமே நாம் வெளியிட்டிருக்கவில்லை ! எல்லாமே நெகட்டிவ் எடுத்து பிரிண்ட் செய்திடும் அலாவுதீன் காலத்து டெக்நாலஜியின் பிள்ளைகள் என்பதால் - ஒன்று பாக்கியில்லாமல் அத்தனையையும் பிள்ளையார் சுழியிலிருந்து துவக்கிடும் அவசியம் எழுந்து நின்றது ! So 848 பக்கங்களை afresh தமிழில் DTP செய்வதிலிருந்து துவங்கிட வேண்டியிருந்தது !! And மறவாதீர்கள் ப்ளீஸ் - இந்தக் கூத்துக்கள் சகலமுமே டின்டின் & புதிய இதழ்களின் பணிகளுக்கு மத்தியிலேயே தான் டிராவல் செய்தும் வந்தன !! முன்னுரிமை - புதுசுகளுக்கு ; எக்காரணம் கொண்டும் DTP ; பிராசசிங் ; அட்டைப்படம்ஸ் ; அச்சு ; பைண்டிங் - என எந்தவொரு இடத்திலும் புதுசுகள் பின்னுக்குப் போயிடலாகாது என்பதை மட்டும் நம்மாட்களிடம் உரக்கச் சொல்லியிருந்தேன் !  

சத்தியமாய்த் தெரியலை - எங்கிருந்து இவ்வளவு பணிகளை நம்மாட்கள் முடித்தார்களென்று !! மொத்தம் 5 டிசைனர்கள் - உட்பக்கங்கள் ; அட்டைப்படங்கள் - என்று புகுந்து விளையாட கிட்டத்தட்ட வாரத்துக்கு மூன்று புக்ஸ் பிரிண்டிங்குக்கு துள்ளிக் குதித்துக் கிளம்பியிருந்தன !! இதற்கெல்லாம் மத்தியில் மொழிபெயர்ப்பின் மொக்கைகளைப் பூசி மெழுகிடும் பணிகள் எனக்கு !! லாரன்ஸ்-டேவிட் மத்தியில், சமீப காலத்து இதழ்களின் சகலத்திலும் "லாரன்ஸ் is the சீனியர் ; so டேவிட் அவரை மருவாதியோடு சரவணர்ர்ர்ர்ர்ர்" என்று விழிக்கும் விதத்தில் அமைத்திருக்கிறோம் ! அதே போலவே லக்கி லூக் - ஜாலி ஜம்ப்பர் மத்தியிலான உரையாடல்களில் மரியாதை குறைச்சல் இல்லாதவாறு எழுதியும் வருகிறேன் ! ஆனால் அந்நாட்களின் இந்த இதழ்களில் - டேவிட் ஜகஜமாய்  'என்னடா தம்பி' ரேஞ்சுக்கு லாரன்ஸை கூப்பிடுவதும், ஜாலி ஜம்ப்பர் - மொதலாளியை வா-போ பாணிகளில் விழிப்பதும் என்னைத் திரு திருவென விழிக்கச் செய்தன ! சரி, ரைட்டு,,,அவற்றைத் திருத்துவோம் என்றபடிக்கே உள்ளே புகுந்தால், சலூன்களில் ஒலிக்கும் பாடல்களில் "அழகான பொண்ணு தான் ; அதுக்கேத்த கண்ணு தான்" ரேஞ்சுக்கு முந்தைய மொழியாக்கங்கள் இருந்தன ! சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்த கவிஞர் முத்துவிசயனாருக்கு இது அடுக்குமா ? அல்லது பொறுக்குமா ? So "ஒரு நாள் போதுமா ? இன்றொரு நாள் போதுமா ? நான் கரெக்ஷன் போட இன்றொரு நாள் போதுமா ?" என்று 'திருவிளையாடல்' பாலையா ரேஞ்சுக்கு களமிறங்க நேரிட, அடுத்த நான்கு நாட்களில் கிட்டத்தட்ட பாதிக் கதைகளைத் திருத்தி எழுதும் படலம் அரங்கேறியது !! ரைட்டு, நமது டிரேட்மார்க் குட்டிக்கரணங்கள் ஆச்சு ; பிரிண்டிங்கும் ஆச்சு ; ஆனால் உச்ச ரஷில் உள்ள சிவகாசியில் இவற்றை பைண்டிங் செய்து வாங்கணுமே ?!!! அங்கு தான் புனித மனிடோ நமது பைண்டருக்கு இறகுகளை நல்கினார் - பறந்து, பறந்து பணியாற்றும் பொருட்டு !! So "அரக்கன் ஆர்டினி" & ஜானி in ஜப்பான்" & "சிறுத்தை மனிதன்" மாத்திரம் நான் ஊருக்குத் திரும்பிய பிற்பாடு கரெக்ஷன் பார்த்த கையோடு பிரிண்ட் & பைண்ட் ஆகிட வேண்டும் ; பாக்கி புக்ஸ் ஆறும் சென்னை bookfair வந்தாச்சு !

Of course, இவை சகலமும் மறுபதிப்புகளே & அனைத்துமே சென்னையின் புத்தக விழாவுக்கோசரம் ரெடியாகியுள்ளவைகளே ! So இப்போது தான் சந்தா செலுத்தி விட்டு பாக்கெட்டில் பொத்தலோடு இருக்கும் பட்சத்தில், no worries guys - உங்களுக்குத் தோதுப்படும் வேளைகளில் இவற்றை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் ! ராவோடு ராவாய் காலியாகிப் போகுமென்ற பயம் தேவையில்லை ! தேவையான இதழ்களை மட்டும், தேவையான நேரத்தில் வாங்கிக் கொள்ளலாம் ! சென்னைப் புத்தக விழாவின் முழுமைக்கும் ஆன்லைனில் ஆர்டர் செய்வோருக்குமே அந்த 10% டிஸ்கவுண்ட் இருந்திடும் என்பது கொசுறுத் தகவல் !! 

AND PLEASE NOTE - 9 இதழ்களும் ஒருசேர தேவையெனில் நான்கு நாட்களின் அவகாசம் அவசியமாகிடும் நம்மாட்களுக்கு ! ஏற்கனவே front desk-ல் ஸ்டெல்லா மாத்திரம் தானிருக்க, இந்த சென்னை எக்ஸ்பிரஸின் பளுவினையும் இந்த நொடியிலேயே ஏற்றி விட்டால் தடுமாறிப் போவாள் ! So ஆர்டர் செய்திடும் பட்சத்தில் கொஞ்சமே கொஞ்சமாய் பொறுமை ப்ளீஸ் ! 

ரைட்டு, இப்போதைக்கு இந்தப் பதிவுக்கு "சுபம்" போட்டு விட்டு, புத்தக விழாவில் தலையைக் காட்ட கிளம்ப முனைகிறேன் guys ! இயன்றால் இன்றிரவோ, நாளை பகலிலோ இங்கு மறுக்கா ஆஜராகிறேன் !! Bye all for now ! See you around ! Have a lovely weekend !!













189 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வணக்கம் அனைவருக்கும்

    ReplyDelete
  3. #வீரனுக்கு_மரணமில்லை...
    டின்டின் மற்றும் லார்கோ & டெக்ஸ் உடன் இந்த மாத ரேஸில் களமிறங்கிய வேதாளர் கதை.

    வேதாளர் கதையெல்லாம் படித்தது ராணி காமிக்ஸோடு நின்றுவிட்டது,
    எவ்வளவு காலம் ஓடி விட்டது.
    இந்த குறையை பூர்த்தி செய்தது கடந்த இரண்டு வருடங்களில் வெளியானது "வேதாளர் ஸ்பெஷல்" இதழ்கள்.
    இதுவும் தொகுப்பான இதழாக வந்ததால் பலருக்கும் கிடைக்காமல் போனது, மேலும் "குறைந்த விலையில் தனி தனி இதழாக வந்திருக்கலாம்"என்ற குறையும் இருந்தது.
    அந்த குறையை இந்த ஆண்டு முதல் பூர்த்தி செய்யும் விதமாக முதல் இதழாக வந்துள்ளது இந்த "வீரனுக்கு மரணமில்லை" கதை.
    வேதாளர் வாசகர்களை மட்டுமல்ல பொதுவான காமிக்ஸ் வாசகர்களையும் கண்டிப்பாக கவரும் இதுவும்,இதை தொடர்ந்து வரும் வேதாளர் கதைகளும்.

    40 வருடங்களுக்கு முன், கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸாருக்கு நினைவு தூண் எழுப்பு இடத்தில் சில அமானுஷ்ய நிகழ்வுகள்,
    இதை கண்டுபிடிக்க வரும் வேதாளர்,பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறார்.

    காமிக்ஸ் எடுத்ததும் தெரியலை படித்து முடித்ததும் தெரியலை அவ்வளவு சுவாரஸ்ய த்ரில்லர் ஸ்டோரி.
    கதையின் மைனஸ் பாயிண்ட் கலர்.
    ப்ளாக் &வெய்ட்டில் எப்பவோ வந்த கதையை கோர்வையில்லாமல் பெயிண்ட் அடித்துள்ளார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
    வரும் மாதங்களில் இந்த குறை களையப்படும் என்பதை உறுதியாக சொல்லியுள்ளார். ஆகவே, இனிவரும் வேதாளர் கதைகள் மிக குறைந்த விலையில்,
    அழகான படங்களுடன் அருமையான கதைகளை ரசிக்கலாம்.

    ஆனா இந்த கலர் குறையை தவிர,
    வழவழப்பான பேப்பர்,
    தெளிவான மொழிபெயர்ப்பு,
    கைக்கு அடக்கமான சைஸ்,
    கதையில் உள்ள சஸ்பென்ஸ் என
    நம்மை கவரும் விசியங்கள் உள்ளன.

    வேதாளர் கதைகள் தனி இதழாக கிடைக்கவில்லை என்ற பல காமிக்ஸ் வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது இந்த வரவு.

    ReplyDelete
  4. Edi Sir..😍😘

    எனக்கு ஒரு செட்டு மறுபதிப்பு பார்சல் ...

    Gpay Rs.850/- பண்ணிடறேன்..😍😘😃

    Discount 10% போக Rs.765/- பண்ணிடட்டுங்களா சார்..

    ReplyDelete
    Replies
    1. Ha ha - discount only if you buy at book fair :-)

      Delete
    2. Sorry friend - just read the full write up by EDI. Good price with 10% discount !!

      Delete
  5. Have a Lovely Weekend Folks.... சென்னை மறுபதிப்பு எக்ஸ்பிரஸ்ஸுக்கு டபுள் துண்டு போட்டு ரிசர்வ் பண்ணியாச்சு... பண்ணியாச்சு... 😊

    ReplyDelete
    Replies
    1. 😃😃😍😘😀👍👌✊சிறப்பு..மிக சிறப்பு ஜி..😍😃

      Delete
  6. Edi Sir..😍😘

    Rs.765 /- paid for 1set of reprint books ..😍😘😃

    ReplyDelete
  7. Edi Sir..😍

    As per my suggestion நம்ப நண்பர் "சேலம் காசிராமன்" என்பவரும்
    இப்பதான் ரீபிரிண்ட் புக்ஸ் 1செட் க்கு gpay பண்ணிருக்காரு சார்..😍😘😃

    ReplyDelete
  8. ஹ ஹா... Beautiful sir... 😄❤️👍...
    Lovely writing... ❤️

    ReplyDelete
  9. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  10. மறுபதிப்புகளில் அரக்கன் ஆர்டினியை தவிர மற்றவைகள் எல்லாம் சூப்பரோ சூப்பர் நான் யார் அந்த மினி ஸ்பைடர் களம் காணுவாரென நினைத்தேன்

    ReplyDelete
    Replies
    1. அது கலர்ல தான் வரனும் சத்யா...பொறுமையா வரட்டுமே....டெக்சுக்கு காககாலம்னா...நம்ம ஸ்பைடருக்கு யார் அந்த மினி ஸ்பைடர்தானே

      Delete
    2. கார்சன் கடந்த காலம் போல வடிவமைப்பை இவ்வாண்டு ஸ்பைடரின் நீதிக் காவலன்...யார் அந்த மினி...பாட்டில் பூதம் வண்ணத்ல ஒரே கொத்தாக தகதகக்க ஸ்பைடர் அருளனும்

      Delete
  11. ஆஹா....சூப்பர் சார்....இப்பதான் லயன் 40 ம் ஆண்டு கொண்டாட்டம் தூள் கிளப்புது

    ReplyDelete
  12. உள்ளேன் அய்யா....

    ReplyDelete
  13. அப்புறம் இந்த விளம்பரத்தையும் தந்துடுங்க பார்சல்ல...இன்னோர் மாபெரும் சந்தோசம் வேதாளர பிரிக்கப் போறேன்

    ReplyDelete
  14. என்னற்ற புத்தகங்கள் வந்தாலும் டெக்ஸ் இல்லாமல் ஒரு புத்தகத் திருவிழாவா??😢😢😢😢😢

    ReplyDelete
  15. வேதாளம் முன்னட்டை எப்படி அட்டையிருக்கனுங்றதுக்கு முன்னுதாராணமாக...பின்னட்டை பின்னியெடுக்க...வியாரை கடந்தா...நல்லாதானிருக்கு ...வண்ணம் குறைய வெண்மை நிறைய வித்தியாசமாதானிருக்கு...படிக்கும் போது எப்டியிருக்குன்னு பாத்துட்டு வருகிறேன்

    ReplyDelete
  16. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  17. தி சென்னை எக்ஸ்பிரஸ் 24க்கு full setம் வாங்க எவ்வளவு ரூபாய் GPay செய்ய வேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. 850ல் 85 கழித்து 765 சரியா? அல்லது எனது புரிதலின்படி புக் பேர் முடிவதற்குள் 850 செலுத்தி 890 மதிப்புள்ள புத்தகங்களை கொரியர் மற்றும் தள்ளுபடி சேர்த்து பெறலாம் என்பது சரியா?ஆசிரியர்
      தெளிவுபடுத்தவும். நன்றி

      Delete
    2. ஆமாங்க .. ஒரே குழப்பத்துல நாங்க..😃😃😃

      Delete
  18. சார்.. 'அரக்கன் ஆர்டினி' கதையில் உண்மையான ஹீரோ - ஆர்டினி தான்! இஸ்பைடர் பொது மக்களிடமும், போலீஸிடமும், ஆர்டினியிடமும் சகட்டுமேனிக்கு அடிவாங்கிடும் காமெடி பீஸ் தான்! அப்படியிருக்க, அட்டைப்படத்தில் ஆர்டினியை போடாத - அடாத செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

    ReplyDelete
  19. அரக்கன் ஆட்டினி, ஏற்கனேவே super hero special புத்தகத்தில் வந்தது தானே.

    ReplyDelete
  20. கடத்தல் முதலைகள் யாருடைய கதை

    ReplyDelete
  21. தலைக்கு ஒரு விலை எப்போது வந்தது. சரியாக ஞாபகம் இல்லை. தேடி பார்க்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இதே குழப்பம் தான்!

      Delete
  22. @Edi Sir..😍😘

    CBF 2024 மறுபதிப்பு 9 புத்தகங்களுக்கு தமிழ்நாட்டுக்குள் ரூ.850/- என்கிறதாலயும்,
    CBFபீரியட்ல ஆன்லைன் மூலம் வாங்கினாலும் 10% டிஸ்கவுண்ட்னு சொல்லியிருந்ததை வச்சும்,
    850-85=765-ன்னு ஊரெல்லாம் ஆர்வகோளாருல சொல்லி நம்ம பிரெண்ட்ஸ்கள 765 -Gpay பண்ணச் சொல்லிட்டேன். அவுங்களும் 765 அனுப்பி புக்கை புக் பண்ணிகிட்டே இருக்காங்க..😃😍

    Edi Sir..😍
    தயவு செஞ்சு ரூ.765/- .. சரி தான்னு சொல்லிபோடுங்க..🙏

    இல்லேன்னா..
    என்னை கொண்ணே போடுவாங்க..😃😃😃

    ReplyDelete
    Replies
    1. கொன்னாலும் பரவயில்லை...நாங்க 765 தான் கட்டுவோம்...(எப்படி...மாட்டி விட்டேன் பாத்தீங்களா? Ji)

      Delete
  23. இம்மாத டாப் டக்கர் டின் டின். கதை தேர்வு. இந்திய சாயல். சூப்பர் மேக்கிங். நல்ல தரம்.
    1. டின் டின்
    2. வேதாளர்
    3. இரவின் எல்லையில்.
    4. கலாஷ்னிகோவ் காதல்
    5. கண்ணீருக்கு நேரமில்லை
    6. பருந்துக்கொரு பொறி

    ReplyDelete
  24. நேப்பாளுக்கு டிக்கெட் போட்டாச்சு. நம்மிள் நம்பர் 18. தயவுசெய்து ஜன்னல் சீட் எனக்கு கொடுத்துடுங்க.....

    ReplyDelete
    Replies
    1. பைலட் சீட்டே உங்களுக்குத்தான்! :)

      Delete
  25. எனக்கு மட்டும் டிக்கெட்டை பட்டாயாக்கு 🥰🥰🥰🥰மாத்தி தர முடியுங்களா ஆபிசர்?

    ReplyDelete
    Replies
    1. Tintin in Thailand varra varaikkum wait pannavum :-)

      Delete
    2. ஓஹோ ஒரு முடிவோடதான் இருக்கீங்க அனைவரும்...!!

      ஆசிரியர் சார்@ நோட் திஸ்...

      Delete
  26. Edi Sir..😍😘

    காமிக்ஸ் அல்லாத என்னளவிலான சிலபல குரூப்கள்ல நம்ப லயன்- முத்து காமிக்ஸ் CBF 2024 reprints பற்றிய செய்திய போட்ட உடனே,

    நிறைய பேரு "முத்துகாமிக்ஸ் மறுபடியும் வருதா", "எப்படி வாங்கிறது"ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க..😍😃

    எல்லாருக்கும் நம்ப லயன் ஆபிஸ் நம்பரு, Gpay நம்பரு, website அட்ரஸ்னு கொடுத்து ஓஞ்சுபோயிட்டேன்..😃😃😃

    ஆஹா.. முத்துகாமிக்ஸ் படிச்ச நம்ப பழையகூட்டம் தமிழ்நாட்டுல ஆங்காங்கே தலைமறைவா வாழ்ந்துகிட்டுதான் இருக்காங்க போல..ன்னு நினைச்சு அண்ணாச்சி ரொம்ப ஹேப்பி..😍😘😘

    அதிலயும் மதுரைய சேர்ந்த Er.சரவண பெருமாள் னு ஒரு நண்பர் "தெய்வமே..ஏன் இவ்வளவு நாளா சொல்லலைன்னு ரொம்ப "ச்செல்லமா" கோவிச்சுகிட்டே, சந்தா விபரங்கள், வெளியீடுகள் குறித்த இதர விபரங்கள்னு நிறைய கேட்டு தெரிஞ்சுகிட்டாரு.😃😍😘😘உடனடியா Subscription கட்டறேன்னுட்டாரு..😍😃😘😀

    எனது துறை சார்ந்த "சேலம் காசிராமன்"னு நண்பர் முத்து லயன்காமிக்ஸ் சரியா கிடைக்கிறது இல்லன்னு ரொம்ப வருத்தபட்டவரு..
    உடனடியா..CBF 2024 க்கு ரூ.765/- Gpay ல கட்டிட்டாரு..😃😍😘

    நண்பர்கள் ரொம்பதான் அசத்திடறாங்க சில நேரங்கள்ள..
    😍❤💛💙💚💜

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஜம்ப்பிங் தலீவரே!! அசத்தலான காமிக்ஸ் சேவை!! ❤💛💙💚💜💓🌹💓🌹

      Delete
  27. 2024 ன் முதல் மாதமே அதகளம் செய்கிறது..💓🌹🌹💓💓🥰🥰

    ReplyDelete
  28. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  29. நீண்ட நாள் கழித்து லார்கோ அதுவும் புதிய கூட்டணியில் என்ற பொழுது எதிர்பார்ப்பு கொஞ்சம் mixed ஆகவே இருந்தது.

    ஆனால் ஒரு அட்டகாச ஆக்சன் த்ரில்லர் கதையாக அமைந்து விட்டது.

    ஆர்ட், கலரிங், மொழிபெயர்ப்பு என அனைத்தும் சிறப்பு.

    எனக்கு இம்மாத வெளியிடுகளில் டாப் இவர்தான்.

    தற்போதைய காலத்திற்கு ஏற்ப கதையம்சம், அங்கங்கே நகைச்சுவை, சஸ்பென்ஸ், நட்பு, எமோஷன் என அனைத்தும் அருமை.

    இனி அடுத்து வரும் கதைகளின் எதிர்பார்ப்பை இரு மடங்கு ஆக்கிவிட்டது.

    ReplyDelete
  30. நேபாளம் டூர் செல்ல,
    தலைக்கு தொப்பி கண்ணுக்கு கண்ணாடி, ஒரு காதுக்கு மட்டும் தொங்கட்டான் தோடு , பூ போட்ட முக்கால் சைஸ் டவுசர், கண்ணை பறிக்கும் வண்ணத்தில் கையில்லாத பனியன், சூ எல்லாம் வாங்கியாச்சு..

    அடுத்து கேம்ப் ஃபயர் மூட்டி கிட்டார் வாசித்து பாட ஆங்கில பாடல்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

    பார்ட்டிகளில் கலந்து கொண்டு ஆடுவதற்கு ஆங்கில நடனங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்...

    அவ்வளவுதான் நான் தயார்... ஒரு மாதத்தில் தேறி விடுவேன். நேபாளம் சென்றவுடன் போட்டோக்களை தவறாமல் உங்கள் அனைவருக்கும் பகிர்கிறேன் நண்பர்களே நேபாளத்திலிருந்து...

    எடிட்டர் சார், நேபாளம் டூர் செல்ல ஏர்போர்ட் எப்பொழுது வர வேண்டும் உரிய நேரத்தில் தெரிவித்து விடுங்கள் வந்து விடுகிறேன்...

    ReplyDelete
  31. ஆசிரியரை சந்தித்தாச்சு...ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தக விழாவில்...

    ReplyDelete
  32. ஆங்... இன்னொரு முக்கியமான சமாச்சாரத்தைlசொல்ல மறந்து விட்டேன்.நேபாளம் ஏர்போர்ட்டில் மற்றவர்கள் மாதிரி எல்லாம் சென்று இறங்க விருப்பம் இல்லை.

    விமானம் நேபாளத்தின் மேல் பறந்து செல்லும் பொழுது விமானத்திலிருந்து ஸ்கை டைவிங்க் அடித்து நேபாளத்தில் சாகசமாக தரையிறங்க ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. புரியுதுங்க. நீங்க விமானத்திலேர்ந்து குதிச்சு பனிமலையில இறங்கி, அங்க ஏதாச்சும் ஒரு குகையில பனிமனிதனோடு ( இட்ஸ் மீ!) சேர்ந்து காமிக்ஸ் படிச்சுட்டிருங்க... டின்டின் மாதிரியே உங்க நண்பர் KSம் கேப்டன் ஹேடாக்கை (Rummi XIII?!!) கூட்டிவந்து உங்களைக் காப்பாற்றட்டும். அதானே உங்க திட்டம்? :)

      Delete
    2. விஜய் சார்... செம டைமிங்...

      நண்பர் சேலம் குமாருக்கு இங்கேயே என் தொல்லை தாங்காமல் இருக்கிறார்

      இதுல அவர் கனவில் நான் போய் ... ஏதாவது சொல்ல . அவர் இன்னும் கடுப்பாக.. பூமி தாங்காது சார்

      Delete
  33. அச்சச்சோ இந்த விலைய கேட்க மறந்தாச்சு..801ஆஆ இல்ல 765ஆஆ

    ReplyDelete
  34. Kanyakumari la book festival ku namma lion-muthucomics varuma..?

    ReplyDelete
  35. *டின் டின்* *எப்படி புரட்டிப் பார்த்தாலும் எந்த ஒரு சிறு குறையும் இல்லாமல் நச்சுன்னு வந்திருக்கு*.

    *உள்ளே கலரிங் & பேப்பர் தரம் செம்ம* 👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻💖💐💐

    தயாரிப்புத் தரம் அட்டகாசம்.
    படித்த பிறகு விமர்சனத்தோட வர்றேன்.

    ReplyDelete
  36. வீரனுக்கு மரணமில்லை

    முன் பின் அட்டை படம் அருமை.

    ஆனால் முன்பு போல வேதாளர் கதைகள் படிக்க பிடிக்கவில்லை.

    எனக்கு காரணமாக தோன்றுவது கதை தேர்வு தான்

    வேதாளர் s60 முதல் புத்தகம் மட்டுமே கஷ்டப்பட்டு படித்தேன்.

    எனக்கு வேதாளர் கதைகளில் பெங்காலி காடு ஈடன் காடுகள் தங்க கடற்கரை ஜம்போ போன்ற மிருகங்கள் காட்டுவாசிகளுக்கு ஏற்படும் சண்டைகள் மாயாவி முகடு என கதைகள் வந்தால் நன்றாக இருக்கும்.

    டவுனிற்கு வரும் கதைகள் பெரிதாக இல்லை.

    அடுத்து இந்த மாத கதையின் ஆர்ட் ஒர்க் மற்றும் கலரிங்கும் சேர்ந்து நம்மை படுத்துகிறது.

    மொத்தத்தில் ஒரு குயிக் readingirku ஓகே

    இனி வரும் கதைகளில் வேதாளருக்கே உரிய தனித்துவங்கள் கதையில் வருமாறு இருந்தால் சிறப்பாக இருக்கும்

    அடுத்த வெளியீடு வேதாளர் கல்யாணம் ஆக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

    ஆனால் கலரை நினைக்கும் போது தான் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. @ கிருஷ்ணா வ வெ

      கடந்த பதிவில் எடிட்டரின் பதில் :
      ///Vijayan4 January 2024 at 23:23:00 GMT+5:30
      அடுத்த வேதாளர் தெறிக்கும் கலரில் இருப்பார் - நாமே பார்த்துப் பார்த்து கலர் செய்துள்ளோம் சார் !

      இந்த இதழ் ஒரிஜினலாய் King Features செய்த கலரிங்கே ; but அவசர அடிப்பு போலுள்ளது !///

      Delete
    2. நன்றிங்க விஜய் அப்போ கல்யாணத்தில் கலந்துகொள்ள டபுள் மகிழ்ச்சி

      Delete

  37. டின் டின் உடன் நேப்பால் பயணம் இனிதே முடிவடைந்தது.

    தமிழில் முதல் சாகசத்தை டின் டின் சிறப்பாக முடித்துள்ளார் என சொல்லலாம்.

    தயாரிப்பு தரம் அட்டகாசம் 295 ரூபாய் கொடுத்தாலும் கண்டிப்பாக ஓர்த். கெட்டி அட்டை, கெட்டியான தாள், கலர் பிரிண்டிங் என அனைத்து தரப்பிலும் டிஸ்டிங்சனில் பாஸ் செய்துள்ளார்.

    எனக்கு வந்த புத்தகம் மட்டும் பின் அட்டை மேல் புறம் சிறிது மடங்கி இருந்தது. முன்பு போல உருளை அட்டைகள் வைத்து புத்தகம் மடங்காத படி செய்யலாம்.

    அடுத்து மொழிபெயர்ப்பு, என்ன தான் நேர்கோட்டு கதை எளிதாக புரியும் படி இருந்தாலும் நாம் ஏன் விஜயன் சார் மொழிபெயர்ப்பை அதிகம் விரும்புகிறோம் என்பதற்கு மீண்டும் ஒரு சான்று. ஆங்கிலத்தில் கூட கேப்டன் வசனங்கள் இவ்வளவு நகைச்சுவையாக இல்லை என நினைக்கிறேன். தமிழில் ஊடு கட்டி அடிக்கறார். பல இடங்களில் சிரிப்பை வரவழைத்தார்.

    இரண்டு விஷயங்கள் மட்டும் எனது கருத்தில்.

    1. ஸ்னோயி டின் டினை ஆசான் என அழைப்பது ஒட்டவில்லை பதிலாக பையா என அழைக்கலாம் இல்லை எதுவும் சொல்லாமல் ஆங்கிலம் போல விட்டுவிடலாம்

    2. கேப்டன் அக்மார்க் வசனம் தமிழ் படுத்தும் கஷ்டம் பற்றி பதிவில் விளக்கி இருந்தார். அனைத்து இடங்களுக்கும் ஒரே வசனமாக இல்லாமல் இடத்திற்கு தகுந்தது போல வைத்துக்கொண்டது நல்ல உத்தி. ஆனால் அதன் நீளம் ஒரு சில இடங்களில் குறைத்து கொள்ளலாம் மற்றும் ஒரு இரண்டு அல்லது 3 எதுகை மோனை வைத்துக்கொண்டு அதை மட்டும் பயன்படுத்தலாம். இது ஒரு ஆரம்பம் மட்டுமே சீக்கிரம் நமக்கு பழகி விடும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அழகான அலசல் கிருஷ்ணா !

      இங்கிலீஷிலும் , பிரெஞ்சிலும் சில இடங்களில் கேப்டன் ரொம்பவே பொங்கியெழும் சமயங்களில் Billions of Blue Blistering Barnacles in a Thundering Typhoon என்று ஆர்ப்பரிப்பாரல்லவா - அது போலான இடங்களுக்கு மட்டுமே நீளமாக வரிகளை போட முனைந்தோம் !

      நீங்கள் சொல்வது போல சீக்கிரமே பழகிவிடும் !

      Delete
  38. இன்றிரவு பதிவு உண்டாங்க சார்?

    ReplyDelete
  39. இம் மாதம் திகட்டாத விருந்து
    டின் டின் ப்பா என்னா மேக்கிங் லயனின் பல மைல் கல்லில் இது முக்கியமானது அடுத்து நம்ம லார்கோ என்னா அசத்தல் கண்ணை பறிக்கும் கலரிங் பரபரப்பான கதைக்களம் முக்கியமாக பல வருடங்களாக பார்க்காத சகோதரனை பார்த்த உணர்வு அடுத்து டெக்ஸின் ஆக்சன் மேளா நறுக்கென நகர்கிறது வேதாளர் சுவாரசியமான கதை என்ன கலரிங் தான் மைனஸ் ஆக மொத்தம் இந்த மாதம் மாதிரி இன்னொரு மாதம் அமைவது கடினமே

    ReplyDelete
    Replies
    1. செம... செந்தில் சத்யா ஜீ...

      கலரிங் விஷயம் அடுத்த இதழில் பார்த்துக் கொள்ளலாம் என ஆசிரியர் சொல்லியுள்ளார்.

      இம்மாத டெக்ஸ்க்கு உண்டான விமர்சனம் தங்கள் வழியாக வந்துள்ளது.

      Delete
  40. நேற்று சென்னை புக் ஃபேர் சென்றிருந்தேன். அன்பு எடிட்டருடன் சில மணி நேரங்கள் செலவழித்தேன், என் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணம். வந்த வாசகர்களில் நிறைய பேர் டின் டின் வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது. டெக்ஸ் இருந்த ரோவில் புத்தகங்கள் காலி ஆகி திரும்பத் திரும்ப நிரப்பப்படுவது பார்த்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. புக் ஃபேர் ஸ்பெஷல் புக்ஸ் இன்னும் வரவில்லை இன்னைக்கு வந்துவிடும் என்று ஆசிரியர் தெரிவித்தார்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல தகவல்கள்!!

      Delete
    2. நல்ல பகிர்வு சார்... புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வது என்பது அலாதியான இன்ப நாள்..

      Delete
    3. சாய்@ வாழ்த்துகள்...

      புக்ஃபேர்னா அங்கே டெக்ஸ் தான் எப்போதும் ஆதிக்கம்... இம்முறையும் தொடர்வது ரொம்ப ஹேப்பி!

      டின்டின் ஒரு மாஸ் ஹிட்தான்...

      ஆகஸ்ட்ல ஈரோடு ப்ளான் பண்ணி வாங்க!

      Delete
  41. லார்கோ கதைகள் எப்பவுமே ஆச்சரியத்தைத் தொட்டுச் செல்வது வழக்கம்....அதற்க்கு இக்கதையும் விலக்கல்ல....கதையின் துவக்கமே வழக்கம் போல உயிர் காக்கும் ஓட்டம் தான்....லார்கோ வாங்க உள்ள கம்பெனியில்தான் இதுவும் அரங்கேறுது...

    அங்கிருந்து மாறுவேடத்ல லார்கோவும்....பைலட்டும் செல்ல இரு எதிரெதிர் திசைல பார்க்கும் இருவரின் பார்வைகளில் காட்சிகள்....அழகு எண்கிறார் கடலில் உறையும் பைலட்....லார்கோவோ நரகம் என்கிறார் தனிமத்தை பிரிக்கும் கூலியாட்களையும்...குழந்தைத் தொழிலாளர்களையும் பார்த்து....அப்புறமென்ன பொறுப்பதிகாரிய தூக்கி வீச ...அந்த சரங்கத்தின் பாதி சொத்துகளுக்கு வாரிசான லார்கோ தூக்கி வீசுகிறார் நெஜமாவே ஜன்னல் வழியே...அட அதே லார்கோ என நம்மை உள்ளிழுக்கிறார் இரு காட்சிகளிலேயே லார்கோ அந்த ஜன்னல் வழியே....


    அதன் பிறகு வேகம் விவேகம் பரபரப்பு என மே ஐ கம் இன் என எட்டிப்பார்த்த என்னை கேட்காமலே உள்ளிழுக்குது காலரை பிடித்து கொத்தாக தூக்கிய படி உள்ளிழுத்து


    இதெல்லாம் ஏன் இப்படி நடக்குது....இனிதானிருக்குது....லார்கோ கெத்தா அந்த இருக்கைல அமர்ந்தாலே நமக்கும் ஒரு கெத்து வருது...அந்த இடத்ல நம்ம கிங் ஃபிஷ் சர் மல்லையாவ பார்த்தாலே கொண்டாட்டம்தானே...வழக்கம் போல இக்குழுல யார்டா வில்லன்னு கடந்தா....வழக்கம் போல கோவப்படும் ட்வைன்...பதறும் லார்கோ...


    லார்கோ போட்டியாளர் ஜேரட்டிடமிருந்து அழைப்பு...அங்க அந்தப்பக்கங்கள்ல விருந்தோட வண்ண விருந்தும் காத்திருக்கு நமக்கு...


    பின்னர் லார்கோ விண்ணுக்குத் தாவ...இங்கோ லார்கோ விடம் டாம் ஒப்பந்த பிரச்சனைகள சைமனிடம் சொல்லத் துடிக்க...வழக்கம் போல சைமன் ஜுஜ்லிபாவுடன் படுத்த...


    டாமின் தோழி பலவாறு தடுக்கத் திணற...டாம் கொல்லப்படுவது அதிர்ச்சியா...கொலையாளி பேரதிர்ச்சி

    சூடு பிடிக்க பறக்கும் கதை....லார்கோ ஜேரட்டும் விண்வெளிக்குப் பறக்க...அங்கேயோ சுவாசிக்க போராடும் ...ஜேரட்டும் லார்கோவும் ஜேரட் மனைவி போல துடிக்க வைத்து விடுகிறார்கள் நம்மையும்...லார்கோ எழுந்து மிதக்க...லார்கோவ திருப்பியழைத்து வருவது யாரென நாம் துடிக்க...ஜேரட்டோ எழாமல் மிதக்க ...அடுத்து ஒரு வருடம் துடிக்க வைத்திருப்பார் கோடானு கோடி லார்கோ ரசிக்கக் கண்மணிகளை..


    அடுத்த பாக அட்டையே அந்த வானில் பறக்கும் மனிதர் தலையை மறைக்க...ஜேரட்டா லார்கோவா



    என அட்டய வாங்கியதும் நிச்சயமா ரசிகர்கள் திகைப்பிலாழ்த்தியிருப்பார்கள்...சில நிமிடங்களில் திரும்பி விடலாமென பறந்த இருவருக்கும் காலங்கள் சீக்கிரமா கரைந்திருக்கும்....ரசிகர்க்கோ ஓராண்டு ஓராயிரமாய் இணைந்திருக்கும்...இந்தத் தவிப்ப மின்னும் மரணம் படித்த சாரி தரிசித்த ரசித்த ... நண்பர்கள் உணர்ந்திருக்கலாம்....


    நல்லவேளை நம்ம ஆசிரியர் அப்படி விடல...துவக்கிய இரண்டாம் பாக முதல் பக்கமே நாமும் லட்சியக் கனவுக்குள் நுழைவோம்....


    லார்கோ இல்லன்னா சைமர் சொர்கத்திலிருந்து நரகத்துக்குள் பாய்வாரே .இங்கேயும் துடிப்போடு ராமர் கோடு போட்ட அணில் போல மனதை தொடுகிறார்..லார்கோ ஏன் இவரை தன்னுடன் வைத்துள்ளார் என காட்டுமிடங்கள்...நட்பு ஏன் இருவரையும் நம்மைத் தேடி வைத்து இணைக்கும் கட்சிகள்....



    நெரியோ வின்சின் கண்டுபிடிப்பு லார்கோ ன்னா..

    நெரியோ அவரை சுற்றியமர வைத்த நெரியோவின் பாதுகாவலர்கள் ...துரோகிகள் ...உன் முன்னை உள்ள சவால்களை சமாளி லார்கோ என ஏதோ ஓர் பாகத்ல சொல்லி மறைந்தாரே...ஆற்றல்களை சிறு வயது கால கட்டங்களில் செதுக்கித் தந்து லார்கோவ தீட்டிய புகழ் மிகு நெரியோ வின்ச்ச புகழ்வதா



    அல்லது நெரியோ வின்ச்ச கண்டெடுத்த வான்ஹாம்மேவ புகழ்வதா சத்தியமா தெரியல....


    லார்கோக்கு யார் கதையெழுதுனாலும் ஹிட்டடிக்கும்தான்..லார்கோன்னாலே கதை பறக்கும்தா...அதை கச்சிதமா பிடித்த புதிய கதாசிரியர புகழ்வதா....
    அல்லது அந்த லார்கோவ கடத்தி வந்த ஓவியர புகழ்வதா....

    லார்கோவா....வின்ச்சா...வின்ச் நியமித்த ஆளுமைகளா...


    ஹாம்மேவா...புதுக்கதாசிரியரா...ஓவியராக என நம் மனதுக்குள் எழும் பட்டி மன்றங்களுக்கு தீர்ப்பெழுதி நாமே சந்தோசிக்க ஓர் வாய்ப்பு...மீண்டு வந்த லார்கோ...இது தவற விட்றாதீங்க நண்பர்களே...


    மனதை பிழிய வைத்து...பசுமை போராளிகள்....முதலாளித்துவ ஈரமனங்கள் என புரட்டிப் போடும் விருந்துக்கு முதலில் புத்தகமெனும் இலையை வாங்கி விரியுங்கள்....புதிதாய் படிப்போரை நிச்சயமா மீத பாகங்களை வாங்க வைக்கும்....



    நம்ம ஆசிரியருக்கு...சார் இரு வருடம்லா காத்திருக்க முடியாது...டெக்ஸ்கதைய பாருங்கன்னு லார்கோ பொறுப்பாசிரியரிம் வருடம் நான்கு கதைகள் காலாண்டுத் கொன்று என வேண்டுமென இந்தத் தமிழ் ரசிகனின் சார்பாகப் கோரிக்கை வையுங்கள்....

    ReplyDelete
    Replies
    1. ஸ்டீவ் சார்...
      லார்கோ கதையை ஒரு முறை தான் படித்துள்ளேன். முழு கதையையும் இரண்டாவது முறையாக படித்தது போல் உள்ளது உங்களுக்கு விமர்சனம்.. அருமை

      Delete
    2. நம்மை எழுத வைக்குதுன்னா அந்த படைப்பே ...அதன் ஆற்றலே காரணம் நண்பரே ...இரண்டாம் பாகம் படிக்க படிக்க கடவுளோடு தான்...அதைத் தந்த விஜயனாரோடு

      Delete
    3. தூக்கத்தோடு முதல் பாகம் படிக்க...அதன் தாக்கத்தால் மீண்டுமெழுந்து இரண்டாம் பாகம் முடிக்க... மணி மூனு....அதன் பிறகு எழுந்த உணர்ச்சிகளில் தூக்கமாவது ஒன்றாவது...ஃபுல் ஜார்ஜ்

      Delete
  42. இரண்டாம் பாக விமர்சனம் அந்த விறு விறுப்ப குறைத்திடுமென்பதால் நான் சொல்லல.....திகட்டத்திகட்ட அதையும் தர துடித்த விரல்கள் கட்டுப்படுத்த முடிமாம டைப்படித்து வைத்தாச்சு...அது விரைவில்

    ReplyDelete
  43. இதோ டின்டின்னோடு நான் பயணிக்க போறேன்...என் மகன நேபாளத்துக்கு அனுப்ப டிக்கட் அப்ளை பன்னியாச்....சார் நல்ல சீட்டா பாத்....து எடுங....வாட்சப்புக்கு குலுக்கல் சீட்ட அனுப்பியாச் குளியோடு குளிரா

    ReplyDelete
  44. TIN TIN, படித்து முடித்ஆகிவிட்டது,
    surprise
    முதலில் புத்தகத்தின் size,
    லக்கி லுக் புத்தகத்தின் அளவில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அதைவிட மிகப்பெரியது. Making super

    அடுத்தது கதை.
    90 வருடத்திற்கு முன்பு வந்த கதையில் என்ன சுவாரஸ்யம் இருந்து விடப் போகிறது என்று படித்தேன். ஆனால் கதையில் சுவாரஸ்யம் குறையாமல் பழமையும் கண்களுக்கு தெரியாமல் சுவாரஸ்யமான கதை சென்றது.

    அடுத்தது ஓவியம்
    மிகப் பழமையான ஓவியம் தானே இருக்கப் போகிறது என்று பார்த்தேன். ஆனால் ஓவியத்திலியும் ஏமாற்றமும் இல்லை.

    உலக புகழ் TIN TIN எங்களுக்கு கொடுத்தமைக்கு உங்களுக்கு நன்றி எடி ஜி.

    அப்படியே, Asterix and obilex முயற்சி செய்யுங்கள் ஜி



    ReplyDelete
  45. அதுக்கு நேரம் போதாதாததால வாரி இழுக்கிறார் வேதாளரீ புஜ பலத்தால்...கச்சிதமான மெல்லிய புத்தகத்திலிருந்த படியே அட்டை வனப்பைக் காட்டி...மீண்டும் இவ்வருட பெஸ்ட் அட்டைக்காக நன்றி சொல்லியபடியே வியாரின் விருந்துக்குள் பாய்கிறேன் காலி வயிற்றோடு காலையிலே

    ReplyDelete
  46. ALL : "அட...நீ மாத்திரம் தான் உசரங்களைக் கூட்டிக்கிட்டே போய் ரெகார்டஸ் பண்ணுவியா மாமு ? நாங்க என்ன சளைச்சவுகளா - வேடிக்கையை மட்டும் இன்னிக்கிப் பாரு !!"

    இது சென்னை மக்களின் நேற்றைய மைண்ட்வாய்ஸ் என்பேன் !

    ஒற்றை மாதத்துக்கு முன்னே மழைக்குள் மூழ்கிக் கிடந்த நகரம் !! இன்னமுமே கடந்த 2 நாட்களாய் மழையோடு கண்ணாமூச்சி ஆடி வருகின்றது ! But "எங்களது ஆர்வங்களுக்கு எதுவுமே தடையாகிடாது" என்று புத்தக விழாவில் நேற்று தெறிக்க விட்டார்கள் பாருங்கள் - ஒரு 11 வருட விற்பனை ரெக்கார்டை பணால் பண்ணி நேற்றைக்கொரு புது உச்சத்தைத் தொட்டுக் காட்டியுள்ளனர் !

    Absolutely stunning !!

    வேதாளர் , டெக்ஸ் , டின்டின் , கார்ட்டூன்ஸ் , குட்டீஸுக்கான புக்ஸ் ; 2023-ன் ஒட்டு மொத்த packs - என்று கலந்து கட்டி அதகளம் செய்து காட்டி விட்டார்கள் ! 3 days into the fair - கோவை புத்தக விழாவின் மொத்த விற்பனையையும் தாண்டியாச்சு ! இதோ இன்றைக்கு ஈரோட்டையும், சேலத்தையும் overtake செய்துவிடுவோம் நம்பர்களில் !!

    பொதுவாக கூட்டம் வரும் ; கொஞ்சமாக ப்ரேக்கும் இருக்கும் - ஆனால் நேற்றைக்கோ non stop வருகை !! நமது டபுள் ஸ்டால் கூட திணறிப் போய்விட்டது - maybe பெரிய பதிப்பகங்கள் / விற்பனையாளர்களை போல 4 ஸ்டால் எடுக்கணும் போலும் - வரும் காலங்களில் !!

    ஒரு கோடி நன்றிகள் சென்னை !

    ReplyDelete
    Replies
    1. டிரான்ஸ்போர்ட்காரர்கள் மட்டும் நேற்றைக்கு சொதப்பாது, 6 மறுபதிப்புகளையும் ஸ்டாலுக்கு கொண்டு வந்து சேர்த்திருப்பின் இன்னமும் தெறி மாஸாக இருந்திருக்கும் சேல்ஸ் !

      Delete
    2. அட்டகாசம் சார்!! வாழ்க சென்னை!!

      Delete
    3. வாவ்..சூப்பர் சார்...மனமார்ந்த வாழ்த்துக்கள்..

      Delete
    4. சென்னை ராக்ஸ்...
      அட்டகாசம் ப்ரெண்ட்ஸ்... வாழ்த்துகள் சார்& டீம் லயனுக்கு பாராட்டுகள்....

      Delete
    5. அட்டகாசமான தகவல் சார். இன்னும் இன்னும் புதிய உச்சங்களை தொட்டுப் பிடிக்க வாழ்த்துக்கள். அந்த 4 ஸ்டால் ஐடியாவை அடுத்த வருடம் செயல் படுத்தி விடலாம் சார். வாழ்த்துக்கள் சார்

      Delete
    6. சூப்பர் நியூஸ் டியர் எடி .... விற்பனை இன்னும் களைகட்டட்டும் 🥰👍

      Delete
  47. சென்னை எக்ஸ்பிரஸ் - 9 புக்ஸ் கிரயம் - ரூ.890

    கூரியர் கட்டணம் - ரூ.60

    ஆக டோட்டல் : ரூ.950

    Less : ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் 10% = ரூ.100

    ஆக கூரியரில் பெற்றுக் கொண்டிட : ரூ.850 (தமிழகத்துக்குள்)

    ReplyDelete
  48. Largo winch this month was an unexpected surprise. The previous issue of Largo was not that much good. But this issue maintains the pace and freshness of older issues. Slightly touching Elon Musk and full of current issues. And a fast paced thriller too with lots of turns and twists. Going to read it again. Best book of January

    ReplyDelete
    Replies
    1. Yes Dr...Elon Musk is the background of Jared Munskind....

      Delete
  49. ஆங்! ஒரு ஐடியா!! எடிட்டர் சார்.. என்னை முதலில் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பீங்களாம்.. அங்கே பனிமலையில் நான் பனிமனிதன் மாதிரி வேஷம்லாம் போட்டுட்டு குகையில் காத்திருப்பேனாம்.. குலுக்கலில் பரிசு பெறும் நண்பர் அங்கே வரும்போது நான் தூரத்திலிருந்து பனிமனிதன் மாதிரி உருமி செருமி ஆட்டங்காட்டுவேனாம்.. அந்த கு.ப.பெ.நண்ருக்கும் இதுவொரு மறக்கமுடியாத திரில்லிங் அனுபவமாய் இருக்கும். என்னான்றீங்க?

    ReplyDelete
    Replies
    1. //பனிமனிதன் மாதிரி வேஷம்லாம் போட்டுட்டு//

      வீண் செலவுலாம் எதுக்குன்னு தலீவர் கேக்க சொன்னார் சார் ! தேவையே இல்லியேங்கிறாரோ ?

      Delete
  50. @all..😍😘😃

    CBF மறுபதிப்பு 9 புத்தகங்கள் விலை டிஸ்கவுண்ட் உட்பட ரூ.850 தான்.👍

    மக்களே...🙏 ரூ.765 Gpay பண்ணவங்க எல்லாரும் இன்னும் ரூ.85/-gpay
    அனுப்பிச்சிடுங்கோ...😀😀😀😀

    ReplyDelete
    Replies
    1. @Edi Sir..😍😘

      நானும்,எனது நண்பர் சேலம் காசிராமனும் மீதத் தொகை Rs.85/- gpay பண்ணிட்டோங்க சார்..😃👍

      Delete
  51. சார்...நியூ பதிவு...?!

    ReplyDelete
  52. 6 மறுபதிப்புகள் இப்போது சென்னை ஸ்டாலில் ரெடி folks !

    ReplyDelete
    Replies
    1. Wow..Super Sir..😀😍😘

      வருணபகவான் ☔☔மட்டும் சற்றே மனது வைத்தால் தேவலை..🙏

      Delete
    2. கொட்டித் தீர்க்கவில்லை சார் ; ஆனால் நய்யு .. நய்யென்று பெய்கிறது ! அதுவும் மாலையில் !!

      Delete
    3. ☔☔ஆமாம் சார்.. வெயில் எவ்வளவு அடித்தாலும் தாங்கி கொள்ளலாம்.. ஆனால் இந்த மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பது பெரிய இம்சைதான் சார்..😶இதனால் வாசகர்கள் வருகை குறையும்..

      ஒருவேளை புக்ஃபேர் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உத்தரவு வந்தால் ஓரளவு சமாளித்து கொள்ளலாம்..👍👌

      புனித மானிடோ அருள் புரிவாராக..🙏🙏🙏

      Delete
  53. Breaking news:😱😱⛈️🌧️🌨️

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில்

    நாளை மழை வரை 25cm வரை கனமழை பெய்ய வாய்ப்பு..⛈️🌧️🌨️😱😱

    Weatherman பிரதீப்ஜான்..

    ReplyDelete
  54. சென்னை விழா இன்று எப்படி நிலவரம்???

    விழா சென்றவங்க யாரும் அப்டேட் ப்ளீஸ்!??

    ReplyDelete
  55. Edi Sir..😍😘
    நேபாள் கூப்பன் Whatsapp பண்ணியாச்சுங்க..
    😃👍👌

    ReplyDelete
    Replies
    1. கூப்பனை போஸ்ட் அல்லது கொரியரில் அனுப்பனும் ஜி.

      அப்போது தான் குலுக்கலில் தேர்ந்தெடுக்க முடியும்னு நினைக்கிறேன்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. @Sivalingam ji..😍😍😘

      நேபாள் கூப்பன் சம்பந்த பட்ட விளம்பரத்துல Name , Address, Phone number etc., details எல்லாமே fillup பண்ணிட்டு, போட்டோ எடுத்து, Lion office number 7373719755 க்கு, Whatsapp 15.02.2024-க்குள்ள பண்ண சொல்லி இருக்காங்களே.. 😃

      ஒவ்வொரு கூப்பன்லயும் சீரியல் நம்பர் கொடுத்து இருக்காங்களே..👍
      அதனால குழப்பம் வராது..😍

      Delete
    4. ஓகே ஜி. 👍

      அப்படின்னா நமக்கு வேலை சுளுவாக இருந்திடும்.

      நான் அந்த விளம்பர போஸ்டரை இப்போது தான் பார்த்தேன்.

      Delete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. *வீரனுக்கு மரணமில்லை*

    வேதாளர் கதை சுறு சுறுன்னு எடுத்ததும் தெரியலை படிச்சு முடிச்சதும் தெரியலை.

    ஒரு பார்க்குல ஒரு குறிப்பிட்ட இடத்துல கார்ல போகும்போது தானாகவே கார் நின்று விடுகிறது.

    சில நிமிடங்களில் மறுபடியும் தானாகவே ஸ்டார்டும் ஆகிடுது.

    இந்த விசித்திரமான சம்பவம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழ, ஏன் அப்படி நடக்குதுன்னு கண்டுபிடிக்க வேதாளர் முயலும் போது அது அவருடைய தந்தையின் காலகட்டத்தில் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவம் & சிலர் கொல்லப் பட்டதற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார்.

    யார் அந்த கொலைகளுக்கு காரணம் & பல ஆண்டுகள் கழித்து இப்போதைய காலகட்டத்தில் அந்த சம்பவங்களை நினைவு படுத்தும் படி ஏன் நடக்குதுன்னு சில அதிரடி திருப்பங்களுடன் கதை நகர்கிறது.

    அருமையான கதை 👌🏻👏🏻

    ReplyDelete
  58. டின் டின் அறிமுகம் கண்டிப்பாக ஒரு மைல்கல். இவர் தமிழில் வரமாட்டாரா என்று 90ஸ் முதல் குறைந்தது இரு தலைமுறையினருக்கு ஏக்கம் இருந்தது. தங்களிடமும் நம்மில் சிலர் அவ்வப்போது கோரிக்கை வைத்திருந்தோம்.

    தமிழில் தாமதமாக வந்தாலும் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் டின்டின் தரமாக நீங்கள் தயாரித்திருப்பதும் அவருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பும் ஒரு டின்டின் ரசிகனாக எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    அநேகமான புத்தக கடைகளில் ஆங்கில டின் டின் இருப்பது வழமை. அதே போல் தமிழ் டின்டின்னும் அனைத்து முக்கிய புத்தக நிலையங்களிலும் கிடைக்குமாறு செய்து ஒரு பெரும் வாசகர் வட்டத்தை ஈர்க்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்....ஆங்கில பதிப்புகள் கிடைக்கும் இடங்களில் பக்கத்த இதையும் வச்சிடலாம்....இதுக்குள் நம்ம காமிக்ஸ் பத்தி ஓர் நோட்டீஸ் டின் டின் 4 பக்கம் போல

      Delete
  59. டியர் எடிட்டர் சார் TinTin ரசிகர்கள் தனி ரகம். பிறமொழிகளில் அனைத்து ஆல்பங்களும் கிடைப்பதால் மொத்தமாக அந்த கதைத்தொடரின் பல ஆல்பங்களை வாங்குவார்கள். புதிய வாசகர்களை ஈர்க்க அடுத்த வெளியீடுகளை சீரான இடைவெளியில் வெளியிட்டு குறைந்தது 10 இதழ்களையாவது 3 வருடங்களுக்குள் வெளியிட்டால் கண்டிப்பாக டின்டின் பெரிய வாசகர் படையை உருவாக்கித் தருவார்.

    ReplyDelete
  60. *வீரனுக்கு மரணமில்லை*

    அன்று ரசித்த வேதாளர் இன்றும் ரசிக்க வைக்கிறார்...எனக்கு எப்பொழுதுமே வேதாளரை விட அவர் வாக்கராக நடைபோடும் பொழுது இன்னமும் மனதை கவர்வார்....இதிலும் அப்படியே ...ஓர் சிறு குறை என்னவென்றால் இந்த இதழ் வண்ணத்தில் என்னை கவரவில்லை என்பதே...லார்கோ ,டின்டின் வண்ணங்களை ரசித்து விட்டு வேதாளரின் வண்ணத்தை பார்க்கும்பொழுது சிறிது குறையாகவே தெரிகிறது...மற்றபடி கதை வழக்கம் போல் ஓகே...வேதாளரை ஒட்டுமொத்த சாகஸத்தில் வாசிப்பதை விட இப்படி தனி சாகஸமாக வாசிப்பதே ரசிக்க வைக்கிறது...

    ReplyDelete
  61. *கண்ணீருக்கு நேரமில்லை*


    டெக்ஸ்வில்லர் கதையை பொறுத்தவரை எப்பொழுதும் அதிரடி ,சரவெடியாய் பட்டாஸாய் நகர்ந்து நம்மையும் எதிரில் எவனாவது தவறானவன் வருகை தந்தால் மூங்கில் குத்தலாம் போல் தோன்றும்...ஆனால் இந்த முறை வந்த இளம் டெக்ஸ் ன் சாகஸமும் அதே போல் தான் என்றாலும் இந்த முறை தலைப்புக்கேற்ற படி கண்ணீருக்கு நேரமில்லை எனினும் மனது கொஞ்சம் கனத்துடனே வாசிக்க வைத்து விட்டது...டெக்ஸ் அவர்களின் தாயாரின் மரணம்..,தந்தை கென் வில்லரின் மரணம் , தனது சகோதரன் சாம்வில்லரின் பிரிவு என டெக்ஸ் வில்லர் கனத்த மனதுடனே முழுவதுமாக வாசிக்க வைத்து விட்டார்...டெக்ஸ்ன் குதிரை டைனமட் மட்டுமே அவருக்கான மகிழ்ச்சி சம்பவமாக அமைகிறது...இப்படி கன சம்பவத்திலும் டெக்ஸ் பழிக்குபழி ,பதிலுக்கு பதில் பாணி பட்டையை கிளப்புகிறது...டெக்ஸ் அதுவும் இளம் டெக்ஸ் இதுவரைக்கும் ஒரு கதை கூட சோடை போனதில்லை எனும் பொழுது "கண்ணீருக்கு நேரமில்லை " மட்டும் விதிவிலக்கா என்ன...?! சித்திரங்களும் வழக்கம் போல் மிளிர வாசித்த அந்த நாப்பது நிமிடங்களும் இளம் டெக்ஸ்ன் தோழனாய் அந்த இருவருடன் நாமும் மூன்றாவதாய் அமர்ந்து கேட்பது போல ஓர் அனுபவம்...


    கண்ணீருக்கு நேரமில்லை...டெக்ஸ்ற்கு இணையே இல்லை என்பதை மீண்டும் நிரூபித்த மற்ற இதழ்...

    ReplyDelete
    Replies
    1. //கண்ணீருக்கு நேரமில்லை...டெக்ஸ்ற்கு இணையே இல்லை என்பதை மீண்டும் நிரூபித்த மற்ற இதழ்//

      👍👍👍💐💐

      Delete
  62. Edi ji,

    சென்னை புத்தக விழா, ஈரோடு புத்தக விழா ,ஆன்லைன் புத்தக விழாபோது நீங்கள் மறு பதிப்பு செய்கிறீர்கள். அவற்றில் இக்கதைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    ஜானி in லண்டன்
    Spider in பாட்டில் பூதம், கல்நெஞ்சன்

    ReplyDelete
  63. Tintin அருமை....விறு விறு என்று சென்றது...வேதளார் கையில் எடுத்ததும் தெரியவில்லை..முடிந்ததும் தெரியவில்லை....

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ்கிட் ...நீங்கபாட்டுக்கு இப்டி ஒரு நீ.....ள.... பதிவைப் போட்டுப்புட்டீங்க - மழை கொட்டாம என்ன பண்ணும் ?

      Delete
  64. CBF 2024..

    கடும்மழையின் காரணமாக புத்தக கண்காட்சிக்கு இன்று விடுமுறை..😶

    ReplyDelete
    Replies
    1. அட டா... நல்ல வார இறுதி விற்பனை ,வரவேற்பு ஜோரா இருக்கும் போது ஒரு பிரேக்...

      Delete
    2. கொஞ்சம் ஈரம் வடிந்து கொள்ள இந்த ப்ரேக் உதவிடும் சார் ; 3 நாட்களாகவே மழை நச நசவென்று பெய்து வருகிறதல்லவா ?

      Delete
    3. உண்மை தான் நேற்றும் ஆசிரியரையும் நண்பர்களை சந்திக்கலாம் என்று பார்த்தால் மழை பெய்ததால் போக முடியவில்லை..

      Delete
  65. TIN TIN in Tibet புத்தகம் வந்த உடனே படித்தாகிவிட்டது,
    இன்று காலை குளிரும் மழையுமாக இருக்க, இந்த நேரத்தில் மறு வாசிப்பு எடுத்தால் Tibet போய் வந்தது போலவே இருக்குமே என்று தோன்றி மறுவாசிப்பு செய்தேன், இரண்டாவது முறை படிக்கும்போது இன்னும் நன்றாக இருந்தது, climate ஒரு காரணமாகவும் இருக்கலாம். போதாது என்று யூடியூபில் தேடி பார்த்த போது, இரண்டு பாகங்களாக cartoon HD print ஆங்கிலத்தில் கிடைத்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய கார்ட்டூன் டின் டின் in Tibet.புத்தகத்தில் என்னென்ன இருந்ததே அத்தனையும் அதிலிருந்து எந்தவித மாற்றமும் இல்லை, கதை ,வசனம் ,உருவ அமைப்பு என்ற சகலமும் புத்தகத்தில் உள்ளது போலவே இருந்தது. குளிரும், மழையும் ஒன்று சேர உண்மையில் நான் வெகுவாக அனுபவித்து பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அட, இது கூட நல்ல டெக்னிகா தோணுதே சார் !!

      Delete
  66. புதிய புத்தகங்கள் இன்னும் இங்கே வந்து சேராததால் ஸ்மர்ஃப்ஸ் இதுவொரு ஊதா உலகம் படித்தேன்.

    ஆஹா.. என்னவொரு அருமையான சுலப வாசிப்புக்கு உகந்த கதை... Very relaxing story..
    Very sad this series not liked by many readers and you stopped publishing 😟.

    Wishing more cartoon stories in the future.

    Please consider Smurfs, Suske Wiske, other cartoon stories for special advance bookings sir.

    ReplyDelete
  67. திபெத்தில் டின்டின்

    நான் ஏற்கனவே இந்த கதையை ஆங்கிலத்தில் படித்து இருந்தாலும் நம் தாய் மொழியில் படிப்பது ரொம்பவே சுகமான ஒரு அனுபவம்.

    புத்தகத்தின் தரம் உண்மையாகவே அருமை, என்னிடம் இருந்த Egmont ஆங்கில டின்டின் உடன் Compare செய்து பார்த்த போது அதை விட இது கனமாகவும், Thick ஆகவும் இருந்தது.

    கதை மிகவே எளிதான ஒன்று, ஆனால் அந்த ஓவியங்களும், அதை சொன்ன விதமும் தான் இந்த தொடரின் Highlight. குட்டி நாய் ஸ்நோயியையும் , கேப்டன் ஹேடாக்கையும் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
    நமது எடிட்டர் சார் அவரது ஃபேவரைட் டின்டின் கதையை தான் முதலில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வரிசையில் ஒரு மிகச் சிறந்த கதை இது. அவரது மொழிபெயர்ப்பு இந்த கதை முழுவதும் வெகு சிறப்பு. பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைத்து விடுகிறார். வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் டென்ஷன், குடும்ப கவலைகள் எல்லாம் மறந்து கதையில் ஒன்ற அவரது மொழிபெயர்ப்பு முக்கிய காரணம். உங்கள் பெயர் தவிர இடம் பெற்று இருக்கும் இன்னொரு மொழிபெயர்ப்பாளர் பற்றி கூறுங்கள் சார்.

    இந்தகதைக்கு நான் மதிப்பெண் இடுவது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போல.

    தமிழ் பேசும் நல்லுலகுக்கு டின்டினை அன்புடன் வரவேற்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. டின்டின் கதைகள் ஆங்கிலத்தில் இருந்தாலுமே நாம் மொழிபெயர்த்திட வேண்டியது பிரெஞ்சு ஒரிஜினலிலிருந்து என்பதே நமக்கான வழிகாட்டல் சார ! So பிரெஞ்சு to இங்கிலிஷ் மொழிபெயர்த்துக் காட்டி, ஒப்புதல் வாங்கிய பிற்பாடே நான் தமிழில் எழுத ஆரம்பித்தேன்.

      அந்த இன்னொரு பெயரான "திருமதி.ரபியா ஷரீப்" தான் பிரெஞ்சு to இங்கிலிஷ் மொழிபெயர்த்தவர் !

      Delete
    2. சூப்பர் சூப்பர் சார். தகவலுக்கு நன்றி.

      Delete
    3. //இந்தகதைக்கு நான் மதிப்பெண் இடுவது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போல.//
      👌👌👌

      Delete
    4. // //இந்தகதைக்கு நான் மதிப்பெண் இடுவது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போல. // Agreed!

      Delete
    5. // இந்தகதைக்கு நான் மதிப்பெண் இடுவது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போல.//

      டார்ச் அடித்து ... ஒரு தொடக்கம் கொடுங்கள்

      Delete
  68. டெக்ஸ் கண்ணீருக்கு நேரமில்லை

    கதைக்கு மிகப் பொருத்தமான ஒரு தலைப்பு. இளம் டெக்ஸ் never Disappoints. இந்த முறையும் இதில் சிறிதும் மாற்றம் இல்லை. ஆனால் இதில் முக்கியமான 3 கதாபாத்திரங்களை அடுத்தடுத்து இறந்து விடுகின்றனர். ஜெட் வேக கதை.

    எனது மதிப்பெண் 8/10

    ReplyDelete
  69. வீரனுக்கு மரணம் இல்லை - தனது தந்தை காலத்தில் நடந்த ஒரு குற்ற வழக்கு முடிந்து விட்டது என நினைத்த வேதாளருக்கு அதன் உண்மை குற்றவாளி யார், அந்த வழக்கு முடியவில்லை என்பது எப்படி தெரிகிறது என்ற கதையை ரசிக்கும் படி சொல்லி உள்ளார்கள்! கதையை 30நிமிடத்தில் படித்துவிட்டேன். கட்சிதமான புத்தக அமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது, வசனம்களுக்கு உபயோக படுத்தி இருந்த எழுத்துரு படிக்க வசதியாக இருந்தது. வேதாளரை முதல் முறையாக வண்ணத்தில் படிக்க ஆர்வமாக இருந்த எனக்கு இந்த கதையின் சித்திரமும் சரி வண்ணமும் சரி அவ்வளவாக கவரவில்லை.

    ReplyDelete
  70. தலைக்கு ஒரு விலை அட்டைப்படம் சூப்பர்! ஜாலி ஜம்பர் சன் கிளாஸ் உடன் செம ரகளையான உள்ளது.

    ReplyDelete
  71. Is our website having link to order the Chennai Express books?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்! அவைகள் நமது ஆன்லைன் ஸ்டோரில் லிஸ்ட் செய்யப்பட்டு உள்ளன! இங்கே பார்க்கவும் https://lion-muthucomics.com/

      Delete
    2. மொத்தமாக ஆர்டர் செய்ய வசதி இல்லை. தனித்தனியாக மட்டுமே செய்ய முடிகிறது ஜி.

      ரூ.850க்கான லிஸ்டிங் கிடைக்கவில்லை

      Delete
  72. விஜயன் சார், சென்னை புத்தகத்திருவிழா படங்களில் சில வெளிநாட்டு ரசிகர்கள் நமது காமிக்ஸ் புத்தகங்களை வாங்குவது போல் தெரிகிறது! இந்த சந்தோஷ சம்பவம் பற்றி சிலவரிகள் சொன்னால் மகிழ்ச்சி அடைவோம் சார். ப்ளீஸ்!

    ReplyDelete
  73. கடந்த ஞாயிறு சென்னையில் காலையிலிருந்தே மழை.புத்தக கண்காட்சி போவதா இல்லையா என்ற குழம்பிய போது 11 மணிக்கு சற்றே குறைந்து தூறல் மட்டும் இருந்தது.துணிந்து நானும் எனது மகன் பிரபுவும் போய்விட்டோம்.அப்போது கூட தூறல் மட்டும்தான்.நமது ஸ்டாலில் புது புத்தகங்களை அள்ளி கொண்டு வந்தபோது மழை ஒரு போடு போட்டது. சகோதரி ஜோதியிடம் கூறி ஸ்டாலிலேயே வைத்துவிட்டு மீண்டும் 4 மணிக்கு மேல் வந்த போது ஆசிரியர் இருந்தார்.போட்டோ எடுத்துகிட்டு உடன் மழையில் குடை பிடித்து வெளியே வந்து வீடு அடைந்தோம். மழையிலும் நல்ல கூட்டம்.
    டின் டின் பிரமாதம்,லார்கோ அருமை,வேதாளர் சுமார்,டெக்ஸ்ஓகே.

    ReplyDelete
  74. https://www.facebook.com/100063719147067/posts/862335652567065/?mibextid=rS40aB7S9Ucbxw6v

    ReplyDelete
  75. 10 January 1929..

    🎂Happy 95th birthday TINTIN dear..😘😍❤💛💙💚💜

    ReplyDelete
  76. இன்று டின்டினுக்குப் பிறந்தநாள் !! மதியம் ஒரு குறும்பதிவைப் போட்டு சிறப்பிச்சிடலாம் !

    HAPPY BIRTHDAY TINTIN

    ReplyDelete
    Replies
    1. // மதியம் ஒரு குறும்பதிவைப் போட்டு சிறப்பிச்சிடலாம் ! //

      அருமையான அறிவிப்பு சார்...

      Delete
    2. Happy birth day Tintin!!

      /// மதியம் ஒரு குறும்பதிவைப் போட்டு சிறப்பிச்சிடலாம் ! //

      சூப்பர் சார்!

      ஸ்னோயியின் பிறந்தநாள் எப்போங்க சார்? ( இப்படிக்கு ஸ்னோயி ரசிகர்கள்)

      Delete
  77. முகநூலில் ஆசிரியரின் பதிவு..😍😘

    🎂🎂10 ஜனவரி 1929 !! 🎂🎂

    ஒரு இளம் நிருபர் தனது நாலு கால் நண்பனான ஸ்னோயியுடன் பிரஸ்ஸல்ஸிலிருந்து மாஸ்கோவிற்கு ரயிலில் ஏறினார். அவர் தான் டின்டின் & காமிக்ஸ் உலகின் ஒரு சகாப்தத்தின் துவக்கப் புள்ளியும் அதுவே !

    டின்டினின் முதல் சாகசத்தின் தொடக்கமாக இருந்த அந்த தினமே டின்டினின் பிறந்தநாள் !

    இதோ - இன்று, ஜனவரி 10, 2024 புதன்கிழமை அவரது 95வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். !!

    HAPPY BIRTHDAY TINTIN !
    🎂💐💐

    ReplyDelete
  78. கடந்த இரண்டு பதிவுகளாக நண்பர் சேலம் குமார் முதல் இடத்தை பிடித்து வருகிறார்...

    நண்பர் விரித்துப் போட்ட ஜமுக்காளத்தை சற்று நகர்த்தி போட்டுக் கொண்டால்... இன்றைய பதிவில் முதல் இடத்தை பிடிக்க முயற்சி செய்கிறேன்...

    ReplyDelete
  79. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete