Powered By Blogger

Sunday, October 30, 2022

MIRROR POST of >>>>>> "ஆரம்பிக்கலாமுங்களா..?"

 நண்பர்களே,

ரெண்டு கோரிக்கைகள் :

1 : இந்தப் பதிவினை 'ஏக் தம்மில்' வாசிக்க உங்களுக்கு நேரமிருப்பின், அதற்கு எத்தனை நிமிடங்கள் பிடித்தன ? என்று time செய்து விட்டு, உங்கள் பின்னூட்டங்களிலும் போடுங்களேன் ப்ளீஸ் ? எனக்குச் செலவான எண்ணற்ற மணிநேரங்கள், வாசிப்பினில் எத்தனை நிமிடங்களாய் உங்களுக்கு translate ஆகியுள்ளதென்று தெரிந்து கொள்ளும் ஒரு சிறுபிள்ளைத்தனமான ஆவல் தான் !

# 2 : எப்போதும் போலவே இந்த ரயில் வண்டியின் நீளம் சாஸ்தி ; and yes, இன்னும் தியாகராஜ பாகவதர் பாணியில் நீட்டி முழக்கியே உள்ளேன் தான்  ! So கார்த்திக் சோமலிங்கா ; அய்யம்பாளையம் நண்பர் ; மற்றும் குறைவான நேரமும், பொறுமையும் உள்ளோர் - நேரடியாய் IMAGE-களுக்குப் பயணிக்கலாம் ! நான் எச்சரிக்கவில்லையென்று அப்பாலிக்கா குறை சொல்லாதீர்கள் - ப்ளீஸ் !

வணக்கம். தமிழ் செப்பும் நல்லுலகம் தானைத் தலைவர் கவுண்டரின் தீரா ரசிகப்பிள்ளைகள் என்பதில் ரகசியங்களில்லை ! அவரது அகில உலக ரசிக மன்றத்தின் சிவகாசி வட்டச் செயலாளர் ஒரு ஆந்தைக் கண்ணன் என்பதிலுமே no secrets ! கவுண்டரின் ஏகப்பட்ட பின்னியெடுக்கும் sequences இருந்தாலும், அந்த கான்ஸ்டபிள் கோட்டைச்சாமி தூக்கத்தில் நடக்கும் வியாதியுடன் “தலைகீழாத் தான் குதிப்பேன்!” என்று பண்ணும் சலம்பல் செம favourite எனக்கு ! இந்த நொடியில் அதனை இங்கே நினைவு கூர்ந்திடக் காரணங்கள் உண்டு – simply becos காத்திருக்கும் 2023-ன் அட்டவணைத் திட்டமிடலின் பின்புலமே கவுண்டரின் காமெடி வரிகளை மெய்யாலுமே மெய்ப்படுத்திப் பார்க்கும் முயற்சி தான் எனலாம் !

In simple terms – நம்மிடமுள்ள நாயக / நாயகியர் பட்டியலைக் கொண்டு லயன், முத்து, ஜம்போ, லயன் கி.நா.; லயன் லைப்ரரி என்பதைத் தாண்டி புலி. சிறுத்தை, கரடி, ஒட்டகச்சிவிங்கி லைப்ரரி என்ற ரீதியில் வண்டலூர் zoo-வில் உள்ள பாதி மிருகங்களின் பெயர்களிலும் ஒரு வரிசையினைத் துவங்கிட முடியும் என்பது நீங்கள் அறியாததல்ல ! இது பீற்றலின் தொனியில் சொல்லப்படவில்லை என்றாலும், நிஜம் இதுவே என்பதை நாமறிவோம் ! அவ்விதமிருக்க, ஓராண்டின் அட்டவணையைத் தேற்றுவதென்பது, வெயில் காலத்தில் குச்சி ஐஸ் சாப்பிடுவது போல செம simple பணியாகத் தானே இருந்திருக்க வேண்டும் ?! ஆனால்… ஆனால்... நமக்குத் தான் தலைக்குள் அவ்வப்போது லியனார்டோ தாத்தா ரேஞ்சுக்கு பல்புகள் பிரகாசமாய் எரிந்து வைக்குமே? So ஒரு சிம்பிளான பணியைச் சிம்பிளாகவே முடித்து விட்டால் அப்புறமாய் அதனில் ஏது கிக் ?

இங்கலீஷில் ஒரு சொற்றொடர் உண்டு- “Why fix something that isn’t broken?“ என்று!! மேஜர் சுந்தர்ராஜனுமே எனக்குப் பிடித்த நடிகர் என்பதால் அவர் பாணியிலேயே அதனைத் தமிழிலும் மறுக்கா சொல்லி விடுகிறேனே? “ஒரு சமாச்சாரம் உடையாமல்; பழுதாகாமல் இருக்கிற வரைக்கும் அதை ரிப்பேர் பார்க்க / நோண்ட முனைவானேன் ?“ கச்சிதமாய் set ஆன நாயக / நாயகியர் யார் என்பது ஓரளவுக்கு உங்களிடமிருந்தும், நமது கிட்டங்கிக் கையிருப்புகளிலிருந்தும் கிரகித்து விட்டுள்ள சூழலில், கண்ணை மூடிக் கொண்டு “ஆங்…. டஜன் டெக்ஸ் வில்லர்; ரண்டு தோர்கல்; ரண்டு லக்கி; ஒன்னரை சிக் பில்; ஒன்னேகால் டேங்கோ, etc. etc…" என்ற ரீதியில் 2023-ன் அட்டவணையினை அமைத்திட வாய்ப்புகள் இருந்தும், நான் அந்தப் பாணியினைக் கையில் எடுக்கவில்லை – at least இந்த முறையிலாவது!

டாப் நாயகர்கள் & சமீபத்தைய வரவுகள் ஆட்டோமேடிக்காக ‘டிக்‘ அடிக்கப்பட்டு 2023-ன் பயணத்தில் முன்வரிசைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்! அந்த "திரிசங்கு நிலை" நாயக / நாயகியரில் மட்டும் கொஞ்சம் இன்க்கி - பின்ங்கி – பான்கி போட்டுள்ளேன் – சிலரை உள்ளேயும, சிலரை வெளியேவும் அமர்த்தி ! Define “திரிசங்கு நிலை நாயகர்கள்“ என்கிறீர்களா? “வந்தால் ஷேமம்… வராது போனாலும் குடிகள் முழுகிடப் போவதில்லை !“ என்ற ரியாக்ஷன்களை ஈட்டும் நாயக / நாயகியரே இவர்கள் ! Of course – மரத்தடியில் சீட் போட்டுத் தரும் இந்தப் படலமானது அவர்களை நிரந்தரமாய் வெளியேற்றுவதற்கான முதல் படியே அல்ல ! For sure அவர்கள் நமது திட்டமிடல்களில் தொடர்ந்திடவே செய்வர் ! So உங்களிடம் சாத்துக்கள் வாங்கப் போவது உறுதி என்றாலுமே சில நாயக, நாயகியரை இம்முறை ஓய்வெடுக்கச் செய்துள்ளேன்! இதற்குக் காரணமும் உண்டு ! அது பற்றி இந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நீளத்துப் பதிவின் இறுதியில் ! 

So ஆரம்பிக்கலாமுங்களா  ?

தலைகீழாக் குதிக்கப் போறேன்!“ என்று வெறுமனே சொல்வதோடு நிறுத்திக் கொள்ள மாட்டோமாக்கும் இம்முறை – மெய்யாலுமே எல்லோருமே தலைகீழாக் குதிக்கும் ஒரு ஆல்பமே உண்டு – நமது லயன் கிராபிக் நாவல் வரிசையில் ! நம்பினால் நம்புங்கள் – “தரைக்கு வந்த வானம்“ ஒரு செமத்தியான கற்பனையின் பலனான இத்தாலிய ஆக்கம் ! ஒற்றை நாளில் புவியீர்ப்பு சக்தி இல்லாதே போய்விட்டால் என்னவாகும் ? என்று முழுவணத்தில், crisp ஆனதொரு த்ரில்லராய் 80 பக்கங்களில் போனெல்லி உருவாக்கியுள்ளனர் ! "நேர்கோடுகள் மாத்திரமின்றி சைடுகோடுகளுமே எங்களுக்குக் கைவந்த கலைதான்“ என்று பறைசாற்றும் போனெலியின் இந்தப் படைப்பைத் தொடர்ந்து, கிராபிக் நாவல் வரிசையினில் கடை போட வரவுள்ளது  XIII மர்மம் ! 

இரத்தப் படலத் தொடரின் spin-offs மொத்தம் 13 and அவற்றுள் ஒரு நாலைந்தை நாம் ஏற்கனவே கலவையான விமர்சனங்களுடன் வெளியிட்டுள்ளோம் தான் ! சில மாதங்களுக்கு முன்பாய் நம்மிடமிருந்து விடைபெற்று ஓவியர் வில்லியம் வான்ஸை விண்ணுலகில் சந்திக்கச் சென்று விட்டிருக்கும் நமது காமிக்ஸ் நண்பர் பழனிவேல் இருந்தவரைக்கும் இந்த spin-offகளை வெளியிடக் கோரி, அவர் வருஷம்தோறும் கொடி பிடித்ததும், நான் அதனைத் தவறாது தட்டிக் கழித்ததும் நடைமுறை ! ஆனால் எதிர்பாராவிதமாய் தீராநோய்க்கு அவர் பலியாகியிருக்க, அவரது நினைவாகவும், அவரது சிறு குடும்பத்துக்கு ஒவ்வொரு கல்வியாண்டின் சமயத்தில் சின்னதாய் ஒரு தொகையினைத் திரட்டவும், ஆண்டுதோறும் XIII (or) XIII Spin-offs இருக்குமாறு பார்த்துக் கொள்வோமென்று வாக்களித்திருந்தோம் ! அதனைச் செயல்படுத்திடும் தருணம் என்பதால் “ஜானதன் ஃப்ளை“ நமது 2023-ன் கிராபிக் நாவல் வரிசையின் இதழ் # 2 ஆகிறது ! (இதழ் வெளியாகும் நேரத்துக்கு தலைப்பு மாறியிருக்கும் ; தற்போதைக்கு "ஜானதன் பிளை" என்பது சும்மா ஒரு அடையாளத்துக்கே !

XIII-ன் புது ஆல்பம் வெளியாகி விட்டது தான் & நமக்கு அவற்றின் கோப்புகளும் வந்தாச்சு தான் ! ஆனால் மூக்கை முன்னூறு தபா சுற்றும் இந்த பாணியிலான கதைகளுக்குள் கால்பதிக்க ஒரு ஆங்கில இதழ் கைவசமிருந்தால் தமிழாக்கத்தினில் பிழைகளைத் தவிர்க்க ஏதுவாய் இருக்குமே என்ற ஆதங்கம் எனக்கு ! அநேகமாய் அடுத்த 6 மாதங்களுக்குள் CINEBOOK, XIII-ன் புது ஆல்பத்தின் ஆங்கிலப் பதிப்பை வெளியிட்டு விடுவார்கள் என்று தகவல் ; so அதன் பிற்பாடு இரத்தப் படலம் mainstream இதழுக்குள் புகுந்திடலாமென்று இருக்கிறேன் ! So 2023-க்கு நமது அட்டவணையினில் XIII spin-off ! குட்டிப் பையனான ஜேசனை விரல்பிடித்து அழைத்துச் செல்லும் அந்த தந்தை கேரக்டரை XIII தொடரின் ஆர்வலர்கள் யாரும் மறந்திருக்க மாட்டோம் ! இதோ - அவரது கதையினைச் சொல்ல விழையும் முயற்சியினை வெளியிடுவோமே - மேலிருந்து பழனி ரசிப்பாரென்ற நம்பிக்கையுடன் ! பழனி.. ஹேப்பி தானா ? 



“இன்னாடா… ‘தல‘ டெக்ஸின் திருவிழாக்கால வருஷத்தை கி.நா. அறிவிப்புகளோடு ஆரம்பிக்கிறானே?" என்ற குழப்பமா? வேறொன்றுமில்லை guys – வெறும் மூன்றே ஆல்பங்கள் கொண்ட கிராபிக் நாவல் பிரிவு இம்முறை எனும் போது, அவற்றை முதலில் அறிவித்து விடலாமே என்று நினைத்தேன் ! தவிர, "தலைகீழா தான் குதிப்பேன்" டயலாகுக்கும், "தரைக்கு வந்த வானம்" கி.ந.வுக்கும் ரைமிங் ஆக வந்ததால், அப்படியே சின்ன U-டர்ன் போட்டு விட்டேன் கி.நா.திசையினில் ! And கி.நா. பட்டியலின் இறுதி slot செல்வது நமது தாத்தாஸ் கும்பலுக்கே ! 2021-ல் முதல் தாத்தா அன்ட்வானின் flashback ; 2022-ல் தாத்தா #2 பியரோ மயோவின் flashback என்று பயணிக்கும் இந்தத் தொடரின் குண்டு தாத்தா மில்ஸேவின் flashback – காத்திருக்கும் “எல்லாம் கிழமயம்!” ஆல்பத்தில் தடதடக்கவுள்ளது! Of course "தாத்தாக்கள் தேவை தானா?" என்ற கேள்வி எழலாம் தான் ; ஆனால் எவ்வித templates பக்கமும் தலை வைத்துப் படுக்காது பயணிக்கும் ஒரு முற்றிலும் மாறுபட்ட தொடரினை அந்தரத்தில் தொங்க விடுவதாக நாம் இல்லவே இல்லை ! இம்முறை தாத்தாக்களை மட்டுமல்லாது, கி.நா.பிரிவையே வேணும் / வேண்டாம் எனத் தேர்வு செய்திடும் வகையில் சந்தாப் பிரிவுகளில் உங்களுக்கு சுதந்திரம் இருந்திடவுள்ளது எனும் போது, கவலைகளின்றி தாத்தாக்கள் will get a free run ! So "இந்த வியாக்கியானத் தாத்தாக்களோ, விவகாரமான கி.நா.க்களோ நமக்கு set ஆகாதுடோய்" என்று எண்ணும் நண்பர்கள் நாசூக்காய் சந்தா கி.நா.விலிருந்து கழன்று கொள்ளலாம் !! And இந்தக் கிழக் கும்பலின் கதைகள் இப்படித் தானிருக்கும் என்பதிலும் இப்போது ரகசியங்களில்லை எனும் போது,  "இந்தச் சந்தா வேணும்-வேணாம்" என்ற முடிவெடுப்பதில் உங்களுக்கு பெரிய சிரமங்கள் இருக்கக்கூடாது தான் !

ரைட்டு… விளம்பரங்கள்…ட்ரெய்லர்களெல்லாம் முடிந்தது எனும் போது main picture-க்கு போகலாம் folks !

டெக்ஸ் வில்லர் YEAR 75!!

சந்தேகங்களின்றி காத்திருக்கும் 2023-ன் திருவிழா நாயகர் நமது இரவுக் கழுகாரும்,அவரது அணியினரும் தான்! முக்கால் சதம் சாத்தியிருக்கும் இந்த “என்றும் 16” நாயகர் நம் மத்தியில் தனது 38-வது ஆண்டை எதிர்நோக்கியுள்ளார்!! எனக்கு நினைவுள்ள வரைக்கும் இத்தனை காலமாய் ஓட்டப்பந்தயத்தில் முன்னணியில் தொடர்ந்த நாயகர் வேறு யாருமிலர்! Of course மாயாவியார் evergreen என்றாலும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கதைகள் கொண்ட தொடரினில் மறுபதிப்புகள் தானே இன்று வரையிலும் கும்பியடித்து வருகின்றன ? லக்கி லூக்கும், XIII-ம் அந்தப் போட்டியில் இடம்பிடிக்கத் தகுதி கொண்டோரே – ஆனால் by the sheer weight of numbers, டெக்ஸ் வேறொரு உச்சத்தில் நிற்கிறார். And இந்த இத்தாலிய ஜாம்பவானுக்கு அகவை 75 காத்துள்ளதெனும் போது - அதுவே 2023-ன் நமது பிரதான focus ஆக இருந்திடப் போகிறது! போனெலியில் இதற்கென நிச்சயமாய் தடபுடலாய் ஏதேனும் திட்டமிட்டிருப்பார்கள் தான்; ஆனால் அது என்னவென்பது 2023-ன் முதல் க்வார்ட்டர் வரையிலும் தகவல்கள் கிட்டிடாது எனும் போது, அவர்களது வாலைப் பிடித்துக் கொண்டு இந்த platinum ஆண்டை நாம் வலம் வருவது சுலபமாகயிராது ! So நமது திட்டமிடல்கள் நம் பாணியிலேயே ! ஆனால்- TEX 75-க்கென போனெலி அறிவிக்கும் அதிரடிகள், போட்டுத் தாக்கும் ரகமாக இருக்கும் பட்சத்தில், தலையை அடமானம் வைத்தாவது அவர்களது புது அறிவிப்புகளோடு ‘தல‘ bandwagon-ல் தொற்றிக் கொண்டு விடுவோம். 

நம்மவரின் 75வது பிறந்த நாள் ஆண்டு மலரை எவ்விதம் திட்டமிடலாமென்று கொஞ்ச மாதங்களுக்கு முன்னே நமது வலைப்பக்கத்தில் கேட்டிருந்தது நினைவிருக்கலாம் ! “ஆயிரம் பக்கத்தில், ரெண்டாயிரம் ரூபாயில்!” என்று ஏகமாய் ஆடம்பரமான suggestions குவிந்து தள்ளியிருந்தன! அவை இரவுக்கழுகார் மீது நாம் கொண்டுள்ள வாஞ்சையின் பிரதிபலிப்பு என்பது புரிந்தது & அதை நடைமுறைப்படுத்துவதுமே விற்பனை angle-ல் சாத்தியமே என்பதும் புரிந்தது தான்! ஆனால் குறிப்பிட்டதொரு பட்ஜெட் எனும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டி வரும் நமக்கு, ஆசைகளிருக்கும் அளவிற்கு பட்ஜெட் லேதே ?! ஒற்றை மெகா இதழில் ஆயிரம், ரெண்டாயிரம் என lock பண்ணி விட்டால் ; மீத மாதங்களுக்கான TEX சாகஸங்கள் எப்படியும் இன்னொரு இரண்டாயிரத்தைக் கோரி விடும்! அப்பாலிக்கா இதர நாயகர் & தொடர்கள் தமக்குள் குருவி ரொட்டிகளையும், குச்சி மிட்டாய்களையும் மட்டுமே பகிர்ந்திட வேண்டிப் போய் விடும்! So 'தலயின் அந்தப் பிறந்த நாள் ஆண்டு மலரான THE SUPREMO SPECIAL-ன் திட்டமிடலை சற்றே வித்தியாசமாய்க் கையாள எண்ணினேன்!

இரவுக் கழுகாரின் இந்த ஏழரை தசாப்தப் பயணத்தினில் எண்ணற்ற படைப்பாளிகள் தங்கள் உழைப்புகளைத் தந்துள்ளனர் தான்! ஆனால் இதுவரையிலான டெக்ஸ் வரலாற்றை சற்றே நிதானமாய்ப் பகுத்தாய்ந்தால் 4 மகாமனிதர்கள் மற்றவர்களை விடவும் head & shoulders உசந்து நிற்பது புரிபடும்!

- முதலாமவர்- பிதாமகர், பெரியவர் G.L.போனெலி !

- இரண்டாமவர்- அவரது புதல்வரான செர்ஜியோ போனெலி!

- மூன்றாமவர்- 20+ ஆண்டுகளாய் எண்ணற்ற டெக்ஸ் சாகஸங்களை எழுதிய க்ளாடியோ நிஸ்ஸி !

- நான்காமவர்- தற்போதைய டெக்ஸ் எடிட்டரும், ஒரு புது சகாப்தத்தையுமே உருவாக்கி வரும் மௌரோ போசெலி!

இந்த நால்வருமாய் இதுவரைக்கும் உருவாக்கியுள்ள டெக்ஸ் ஆல்பங்களின் எண்ணிக்கை – பிரமிக்கச் செய்யுமொரு எண்ணிக்கை ! So இவர்கள் ஒவ்வொருவரின் படைப்புகளிலிருந்தும் ஒரு முத்தைத் தேர்ந்தெடுத்து SUPREMO SPECIAL எனும் மாலையாக்க எண்ணினேன்! So நான்கில் மூன்று கலரிலும், ஒன்று மட்டும் black & whilte–ல் ! 700 பக்கங்கள் in all ! டெக்ஸின் பிறந்த நாளான செப்டம்பர் 30-ம் தேதியன்று இந்த இதழினை உங்களிடம் ஒப்படைப்பதே திட்டமிடல் – புனித மனிடோவின் இசைவுடன் ! And இந்த இதழின் highlight-ஆக இருக்கவுள்ளது மௌரோ போசெலியின் “வந்தார்… வென்றார்…!” தான் என்று எனக்குள் இப்போதே ஒரு பஜ்ஜி சொல்கிறது! முன்னொரு முறை அமெரிக்கக் கரைகளிலிருந்து நெடுந்தொலைவு பயணித்து க்யூபா சென்ற ‘தல‘ லைட்டாக விட்டலாச்சார்யா பாணியிலானதொரு கதையில் சறுக்கியிருந்தது நினைவிருக்கலாம் ! ஆனால் இம்முறையோ டெக்ஸ் பயணிப்பது அர்ஜெண்டினாவிற்கு ! And அங்கு ஒரு வித்தியாசமான யுத்த களத்தில் நம்மவர் செய்யும் அதிரடிகளும், வகுக்கும் வியூகங்களும் இந்த TEX 75-வது ஆண்டுமலரின் டாப் கதைகளுள் ஒன்றாகயிருக்கும் ! பாக்கியுள்ள 3 கதைகளுமே தத்தம் பாணிகளில் பட்டாசாய்ப் பொரிந்திடக் காத்துள்ளன ! கலரில் டெக்ஸ் & கோ. டாலடிப்பதைப் பார்க்கும் போது இப்போதே ஜொள்ளு வடிகிறது இங்கு எனக்கு ! இன்னமும் 11 மாதங்கள் இவற்றை அடைகாப்பது நிச்சயம் சுலபக்காரியமாய் இருக்கவே செய்யாது என்பது மட்டும் உறுதி !! 



அப்புறம் இந்த இதழினில் filler pages-களுக்கான டெக்ஸ் சார்ந்த தகவல்களை இங்கும்-அங்குமாய்த் திரட்டித் தர ஒரு “TEAM TEX” உருவாக்கப்படும் – July'23-ல் ! நம் மத்தியில் இரவுக்கழுகார் செய்த அதிரடிகளை நினைவு கூர்வது ; உலக அரங்கில் அவரது லேட்டஸ்ட் தகவல்கள் எனச் சேகரித்துத் தரும் பொறுப்பு ஆர்வமுடன் கரம் தூக்கிடவுள்ள நண்பர்கள் சார்ந்த அந்த டீமிடம் இருக்கும் ! கிட்டத்தட்ட ஒரு கல்யாண வீட்டுத் திட்டமிடல் போல நிறையவே planning அவசியமாகிடும் என்பதால் “டெக்ஸ் மேளா” பற்றி சாத்தியப்படும் அடுத்த தருணத்தில் பேசலாமே ?

Moving on – காத்துள்ள 2023-ல் TEX-க்கென அட்டவணையின் பட்டியலில் இருப்பன மொத்தம் 11 அதிகாரபூர்வ slots ! அதிகாரிக்கு கேட்களை உடைத்து துவம்ஸம் செய்வது நல்ல நாட்களுக்கே பிரியமான பொழுதுபோக்கு எனும் போது – இவரது மைல்கல் ஆண்டில் கேட்கவும் வேண்டுமா? So “11 தானா ?மாதமொரு டெக்ஸ் இல்லியாப்பூ?” என்ற கேள்வி எழுப்பிட அவசியங்களே இராது தான் ! And இந்த ‘தல‘ தாண்டவ ஆண்டினில் சதிராடக் காத்திருப்பது ஒரு மெகா வில்லனுமே ! எதிராளி பலமாகயிருக்கும் போது தானே மோதல்களில் அனல் பறக்கும் ? And who better than – மௌரோ போசெலி’s மெஃபிஸ்டோ ? காலம் காலமாய் டெக்ஸ் & கோவிற்கு தீராப் பகைவனாய் திரிந்து வரும் மாயாஜால மெஃபிஸ்டோ - உங்களில் ஒரு அணியினருக்கு பிடித்தமான ஒரு வில்லனாக இருந்து வரும் போதிலும், பிடிவாதமாய் அவனது கதைகளை நான் தவிர்த்து வந்திருப்பதில் ரகசியங்களில்லை! ”கடமையில் நெருப்பானதொரு ரேஞ்சர்” என்ற பிம்பத்தை முன்னிலைப்படுத்தும் எனது முனைப்புக்கு, அந்த “விட்டலாச்சார்யா ஸ்டைல்” மந்திர-மாயாஜாலங்களெல்லாம் சுகப்படாது என்பதே எனது நிலைப்பாடென்பதிலுமே no secrets ! ஆனால் நடப்பாண்டில் (2022) இத்தாலியில் மெஃபிஸ்டோவை தூசிதட்டிக் கையிலெடுத்து ஒரு மூன்று பாக அதிரடியையும், அதைத் தொடர்ந்து ஒரு நான்கு பாக அதகளத்தையும் உருவாக்கியுள்ளார் டாப் கதாசிரியரான மௌரோ போசெலி ! இத்தனை காலமாய் நாம் பார்த்த மெபிஸ்டோ வேறு ரகம் ; போசெல்லியின் கைவண்ணத்தில் அவன் முற்றிலும் வேறொரு ரகம் என்பது கதைகளின் கோப்புகளை வரவழைத்துப் பார்த்த போதே புரிந்தது ! ”பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே?!” என்ற ரேஞ்சுக்கு, டெக்ஸ் தொடர்களில் அதகளம் செய்து வரும் ஒரு அசாத்திய ஆற்றலாளரின் treatment-ல் மெஃபிஸ்டோ பிரதானமாய்க் களமிறங்குகிறாரென்றால் – அந்த வண்டில் தொற்றிக் கொள்ள நமக்குத் தயக்கங்கள் தேவையே இராதென்றுபட்டது ! So நெடுநாள் இடைவெளிக்குப் பின்பாய்  நம் மத்தியில் ரவுசு விட மெஃபிஸ்டோ all ready! (போன மாதத்து தீபாவளி மலர் இளம் டெக்ஸ் கதையில் மனுஷன் தலைகாட்டியது சும்மா “கௌரவத் தோற்றம்” தானே?!) “மீண்டு(ம்) வந்த மாயன்” – ஒரு 3 பாக; 330 பக்க ஆக்ஷன் மேளா – சான் பிரான்சிஸ்கோவின் மனநல காப்பகத்திலிருந்து துளிர்விடும் நெடும் த்ரில்லராய் ! ஊருக்குள் பெரியளவில் அராஜகம் செய்து சிக்கலில் மாட்டும் பெரும் புள்ளிகளெல்லாம், வரிசையாய் ஒரு புது, உயர்தர மனநல விடுதியில் போய்த் தஞ்சமடைய, "இன்னாங்கடா நடக்குது இங்கே?” என்று பார்வையிட ‘தல‘ & டீம் களமிறங்குகின்றனர்! தொடரும் high octane சாகஸத்துக்கு இம்முறை இரண்டு வெவ்வேறு அட்டைப்பட டிசைன்கள் தந்திடவுள்ளோம் – ஒரிஜினலின் மிரட்டலான ராப்பர்களை இயன்ற மட்டுக்கு உங்களின் கண்களில் காட்டும் பொருட்டு ! இதோ – கீழுள்ள இரண்டு டிசைன்கள் தான் நமது variant covers ! சந்தாவில் இணையும் போதே –‘Kit” அல்லது “Tex” என்று குறிப்பிட்டு விட்டால் – "சின்னத் தல கிட் ராப்பரா? பெரிய தல டெக்ஸ் ராப்பர் கொண்ட புக்கா?" என்று பதிவு செய்து கொள்வார்கள் நம்மாட்கள்! (இப்போதே அவர்கள் சிண்டைப் பிய்த்துக் கொள்ளும் காட்சி கண்முன்னே விரிகிறது தான் !!) நீங்கள் எந்த ராப்பரைத் தேர்வு செய்கிறீர்களோ, அதை விடுத்து அடுத்த அட்டைப்படமானது ஒரு அழகான போஸ்ட்கார்டாய் உங்களுக்கு அந்த மாதமே புக்குடன் அனுப்பப்படும் ! So "2 புக்கா தலையிலே கட்டப் பாக்குறாண்டா டோமர் மண்டையன் !" என்று என்னை வாழ்த்திட அவசியமிராது - hopefully   ! கவர் K தேர்வு செய்வோருக்கு கவர் T போஸ்ட்கார்டாய் & vice versa !

‘தல‘ ஆண்டின் அடுத்த highlight வழக்கம் போல தீபாவளியை அனல் பறக்கச் செய்திடவுள்ள தீபாவளி with டெக்ஸ் ! இம்முறையோ அது இளம் டெக்ஸின் 6 அத்தியாய சாகஸத்தின் தொகுப்பாய் – “The சிக்ஸர் ஸ்பெஷல்!” என்று வரக் காத்துள்ளது ! சில காலம் முன்பாக – “தனித்தடத்தில் மாதமொரு இளம் டெக்ஸ் 64 பக்க இதழைக் களமிறக்கலாமா guys?” என்று நான் கேட்டிருந்ததும், நீங்கள் உடனடியாக ஒரு பெரிய பாக்கெட் Surf வாங்கி அங்கேயே என்னைத் துவைத்துக், காயப் போட்டிருந்ததும் நினைவிருக்கலாம்! “மணந்தால் ஸ்ம்ரிதி மந்தனாவை… வாசித்தால் குண்டு புக்கை !!” என்று நீங்கள் பிடிவாதமாக நின்று விட்டதால் – நான் திட்டமிட்டிருந்த 6 சிங்கிள் இதழ்களையும் (3+3 கதைச் சுற்றுக்கள்) ஒற்றை 384 பக்க இதழாக்கியாச்சு! So – "நாங்க சொல்றதையெல்லாம் முழியாங்கண்ணன் என்னிக்குக் கேட்டான்?" என்ற விசனங்கள் இந்த ஆண்டிலாவது தேவையிராது – becos there are many more areas where your decisions have prevailed !

And 2023-ல் கலரிலும் நம்மவருக்குச் சொல்லிக்கொள்ளும்படியான slots உண்டு! “ஒரு கௌபாயின் காதலி” கலரிலேயே உருவாக்கப்பட்ட ஒரு முழுநீள ; சாகஸம் ! In fact பட்ஜெட் உதைக்காது போயிருப்பின், நடப்பாண்டிலேயே இது களம் கண்டிருக்கும் ! 

இன்னொரு கலர் ஆல்பமான “கரையெல்லாம் குருதி” கூட வண்ணத்திலேயே உருவாக்கப்பட்ட டெக்ஸ் அதிரடி ! இதுவோ  பிரான்கோ-பெல்ஜியப் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள ஆல்பம் என்பதால் – கலரில் – லக்கி லூக் சைஸில் வெளிவரும் !

So இவை நீங்கலான slots-களில் டெக்ஸ் & டீமின் ரெகுலர் அதிரடிகள் இடம்பிடித்திடும் ! ‘அதிகாரி அலெர்ஜி‘ கொண்ட மிகச் சொற்ப நண்பர்களுக்கு இதுவரையிலான தகவல்கள் ‘லைட்‘டாக பாயசம் போடும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடும் தான் ; ஆனால் அவர்களின் அந்த பில்டப்களெல்லாம் வார்த்தைகளில் மாத்திரமே என்பதை நிரூபிக்கின்றன – நடப்பாண்டின் “வேண்டாமே வன்மேற்கு சந்தா”வின் உறுப்பினர் எண்ணிக்கை ! மொத்தமே ஆறோ-ஏழோ பேர் தான் “டெக்ஸ் வேண்டாம்” என்ற அந்த சந்தாப் பிரிவில் உள்ளனர் ! So அவர்கள் மீண்டும் அதே பாணியில் ஒரு சந்தாப் பிரிவு வேண்டுமெனக் கோரிடும் பட்சத்தில் மட்டுமே “No Tex சந்தாப்பிரிவு” இம்முறை ஏற்படுத்தப்படும் ! இந்த நொடிக்கு நமது தலைமகனின் மைல்கல் ஆண்டினில் அவர் சகல சந்தாக்களிலும் தாட்டியமாய் இடம்பிடித்திருப்பார் !


Moving on, இம்முறை உங்களின் ரசனைகளுக்கு கணிசமான கவனம் தந்துள்ளோம்- இந்த அட்டவணையின் தயாரிப்பில் துவங்கியே ! சில மாதங்களுக்கு முன்னே இங்கே கேட்டிருந்த இன்னொரு கேள்வியானது – “ஒவ்வொரு ஆண்டின் அட்டவணையிலும் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?” என்பதே! அதற்கென நீங்கள் சொல்லியிருந்த பதில்கள் எனது தேர்வுகளில் பலவற்றை shape செய்திட உதவியுள்ளதை 2023-ன் அட்டவணையின் பக்கம் 2 (Index Page) தவறாமல் சொல்லும் ! So “குண்டூஸ்… ஒரு காதல் கதை” என்ற BIG BOOKS பிரிவில்-

- The SUPREMO Special

- The சிக்ஸர் ஸ்பெஷல்

இதழ்களுக்கு அடுத்தபடியாகக் காத்திருப்பவருமே ஒரு வன்மேற்கின் முரட்டு நாயகர்! And இவரும் நமக்கு ஏற்கனவே பரிச்சயமானவரே! 

So let’s welcome back ஒற்றைக்கை “பௌன்சர்”! இவரது தொடரில் வன்முறை & shock factors ஏகப்பட்ட மிடறுகள் தூக்கல் என்பது உலகுக்கே தெரிந்த விஷயம் ! And அது கதாசிரியர் Alejandro Jodorowski-ன் முத்திரையாகவுமே இருந்தது ! தட்டுத் தடுமாறி, ஏதோ எடிட் செய்து இந்தத் தொடரின் முதல் 7 ஆல்பங்களை ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பாய்ப் போட்டு விட்டு, சற்றே ஜகா வாங்கியிருந்தோம் – ஆல்பம் # 8 & 9-ல் தெறித்து ஓடிய 'அடல்ட்ஸ் ஒன்லி' சமாச்சாரங்களைக் கண்டு! விதிவசமாய் ஆல்பம் 10 முதலாய் கதாசிரியர் Jodorowski மூப்பின் காரணமாய் கழன்று கொள்ளும் சூழல் உருவாகியிருக்க, ஓவியரான ப்ரான்ஸே போ கதைப் பொறுப்பையும் தனதாக்கிக் கொண்டு ஒரு riveting ஆக்ஷன் த்ரில்லரை உருவாக்கி இருந்தார் ! 78 + 78 = 156 பக்க நீளத்திலான இந்த மெகா ஆல்பத்தில் பெளன்சருக்கே உரித்தான அத்தனை அம்சங்களும் இருக்கின்றன – except the extreme sexual stuff ! So கதைக்கே முன்னிலை ; சதைக்கு அல்ல ! என்பது ஊர்ஜிதமாகிட, உடனே ‘டிக்‘ அடித்தேன் “சபிக்கப்பட்ட தங்கம்” ஹார்டுகவர் ஆல்பத்துக்கு ! And இங்கே yet again – உங்களின் ரசனைகளுக்கே முன்னுரிமை! எப்படி என்கிறீர்களா?

வேகமுள்ளவொரு கதையா? அல்லது ஒரு மெகா ஸ்டாரா ?" எதற்கு முன்னுரிமை தருவீர்களோ folks?” என்று சில மாதங்களுக்கு முன்பாகக் கேட்டு வைத்திருந்தேன்! உங்களின் ஏகோபித்த தேர்வு – “வேகமுள்ள கதை” சார்ந்தே இருந்தது ! And அங்கு தான் பௌன்சர் முந்திக் கொண்டார் – “இளம் டைகரின் தொகுப்பினை !” நான் அங்கே பூடகமாய்க் கேட்டிருந்தது –

- அனல் பறக்கும் பௌன்சரா?

(அல்லது)

- சற்றே நிதானமான  இளம் டைகர் தொகுப்பா ?

என்ற கேள்வியைத் தான்! நீங்கள் ‘டிக்‘ அடித்தது ஒற்றைக் கை பௌன்சருக்குச் சாதகமாகிட, தங்கத் தலைவன் வாகான வாய்ப்புக்கோசரம் வெயிட்டிங் ! 

இந்த நொடியினில் தேர்ந்தெடுத்த கெட்ட கெட்ட வார்த்தைகளால் நேக்கு "முதல் மரியாதை" செய்யத் தயாராகும் டைகர் ஆர்வலர்கள் கொஞ்சமே கொஞ்சமாய்ப் பொறுமையோடு தொடரும் பத்தியினையும் வாசித்தால் நலம்  என்பேன் !

Bouncer IN ; Tiger OUT !! இப்படித்தான் இந்தப் பதிவினில் எழுத ஒரிஜினலாய் தலைக்குள் திட்டமிட்டிருந்தேன் - ஒரு மாதத்துக்கு முன்வரையிலும் ! 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎 

இடைப்பட்ட நாட்களில் "தங்கக் கல்லறை" மறு-மறுபதிப்பு வேணுமா ? வேணாமா ?" என்ற கேள்வியோடு ஒரு பதிவினை நான் களமிறக்கியிருந்தது மறந்திராது ! அந்தப் பதிவினில் "மறு-மறுபதிப்பு" வேணாம் எனப் பெரும்பான்மை கருத்துச் சொல்லியிருந்த போதிலும், தங்கத்தலைவனுக்கான ஆதரவும், ஆதர்ஷமும் பீறிக்கொண்டு உங்களின் பின்னூட்டங்களில் தென்பட்டது ! நிஜத்தைச் சொல்வதானால் - "தங்கக் கல்லறை" புராஜக்ட் பெரிதாய் ஓட்டுக்களை வாங்காதென்பது எனக்குத் தெரிந்திருந்த போதிலும், அந்தக் கேள்வியுடனான பதிவை நான் அவிழ்த்துவிட்டதே, நமது golden leader-க்கு இன்னமும் மவுசு எவ்விதம் தொடர்கிறதென்றோரு feeler பார்த்திடவே ! வெறித்தனமான அந்த அன்பு இன்னமும் தொடர்கிறதென்பதை நீங்கள் ஆணித்தரமாய்ப் பதிவு செய்த நொடியே தீர்மானித்தேன் - நம்ம பவுன்சர் அண்ணாச்சிக்கு என நான் போட்டு வைத்திருந்த சீட் நிச்சயமாய் இளம் தளபதிக்கே என்று !! So BOUNCER OUT & TIGER IN !!! தவிர, 'தல' centerstage எடுக்கும் ஒரு ஆண்டினில், அவருக்கு நிகரான இன்னொரு நாயகரும் களம் கண்டால் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்குமென்று எண்ணினேன் ! 

பலன் : "The தளபதி ஸ்பெஷல் " !! 

இளம் தளபதி தொடரினில் 4 அத்தியாயச் சுற்றுடன் தட தடக்கும் story arc இந்த ஹார்ட்கவர் ஆல்பத்தில் இடம்பிடிப்பதோடு மட்டுமன்றி, ஆகஸ்ட் 2023-ல் ஈரோட்டில் ரிலீஸ் கண்டிடும் ! So இன்னொரு தல vs தளபதி தாண்டவத்துக்குத் தயாராகிக் கொள்ளுங்கள் folks ! வேங்கை மறுபடியும் நம் மத்தியினில் !!  And "வேங்கையின் கதைக்கு பேனா பிடிக்க நானாச்சு" என்று கடல்கடந்து வசிக்கும் ஷெரீப்பார் முன்வந்திருக்க, அந்த மெனக்கெடல் எனக்கு அவசியமாகிடாது! ஏற்கனவே ஸ்பைடருக்குப் பேனா பிடித்து வரும் முயற்சியில் கரூர் பக்கமாய் நமது டாக்டர் சார் கன்னத்தில் பற்பல மருக்களோடு ஜார்க்கண்ட் ரயிலில் ஏறியிருப்பதாய்த் தகவல் வந்திருக்க, இந்த அசல்நாட்டுக்காரரும் மருக்கள் வாங்க Walmart வாசலில் காத்திருக்க மாட்டாரென்று நம்புவோம் ! புனித மனிடோ - ஆற்றல் அருளி  கரைசேர்ப்பீராக !!

”குண்டு புக்” பட்டியலை நிறைவு செய்திடக் காத்திருப்பதோ முத்துவின் “சம்மர்  ஸ்பெஷல்‘23”! And இதுவும் நடப்பாண்டின் பாணியில் ஒரு கதம்ப இதழாக அமைந்திடும் -

- CIA ஏஜெண்ட் ஆல்பா

- Lone Star டேங்கோ

- இன்ஸ்பெக்டர் ரூபீன்

- உட்சிடியின் சிரிப்புப் போலீஸ்

என்ற கூட்டணியில் ! Alpha இதுவரையிலும் கலவையான விமர்சனங்களை ஈட்டியிருந்தாலுமே நடப்பாண்டின் சிங்கிள் ஆல்பமான “காலனின் காகிதம்” 2022-ன் bestsellers-களுள் இடம்பிடித்துள்ளது! So இந்த சம்மர் ஸ்பெஷல் '23-ல் காத்துள்ள  one-shot சாகஸம் ஆல்பாவுக்கான இறுதி வாய்ப்பாகிடும் – சாதிக்க அல்லது சந்தடியின்றிப் பதுங்கிட ! இன்றளவில் தொடர்ந்து வரும் இது போலான சமகாலத்துக் கதைவரிசைகளுக்கு சற்றே நீளமான rope தந்தால் தப்பில்லை என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் ; ஓவரான புராதனங்கள் ,அரதப் பழசான கலரிங் பாணிகள் என்ற நெருடல்கள் இங்கு இராது என்பதால் ! ஆனால் இறுதி முடிவு உங்கள் கைகளில் தான் !

டேங்கோ‘வைப் பொறுத்தவரையிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஓ.கே.வாகிவிட்ட நாயகர் என்பதால் அவரது ஆல்பம் # 3 சுலபமான தேர்வாகியது எனக்கு! And மனுஷன் போட்டுத் தாக்குகிறார் காத்துள்ள சாகசத்தினில் !

இன்ஸ்பெக்டர் ரூபின்- துவக்க சாகஸத்திலேயே SODA + ரிப்போர்ட்டர் ஜானியின் வழித்தோன்றலாய் அசத்தியிருக்க, அவருக்கும் அடுத்த ஸ்லாட்டை confirm செய்திட அதிகம் மெனக்கெடவில்லை ! 14 கதைகளே கொண்ட தொடரிது என்பதால் இவற்றுள் உள்ள உருப்படியானவற்றைத் தேர்ந்தெடுத்துக் களமிறக்கிட முடியுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது!

சம்மர் ஸ்பெஷலின் இறுதி இடம் – நமது உட்சிட்டி சிரிப்புப் போலீஸ் அணிக்கே ! உலகுக்கே செல்லமான கிட் ஆர்டின் இந்த சீரியஸான ஆல்பத்துக்கு ஜாலியான வர்ணம் பூச வருகிறார் எனும் போது கோடை களைகட்டுமென்ற நம்பிக்கை பிறக்கின்றது ! ஹார்ட்கவரில் டாலடிக்கவுள்ளது இந்த சம்மர் ஸ்பெஷல் !


குண்டூஸ் லிஸ்ட் ஓவர் ; அடுத்தது புது வரவுகள் பற்றிய பார்வை !!

“ஒவ்வொரு அட்டவணையிலும் புதுமுகங்கள் இருந்தாலொழிய உற்சாக மீட்டர்கள் வேகம் பிடிக்காது என்பது எனது நினைப்பு ! அது சரியா? தப்பா guys?" என்று 2 மாதங்களுக்கு முன்பாய்க் கேட்டிருந்தது நினைவிருக்கலாம் ! “ஆமா…ஆமா…புதுசு புதுசா வேணுமே!” என்று நீங்களும் பதில்களில் பதிவிட்டிருக்க – ஆரம்பித்தது எனது வலைவீச்சு! 

புதுசாய் லட்டுக்கள் :

And first in line – காத்துள்ளது – அமெரிக்கக் க்ரைம் நாவல் ஜாம்பவனான மிக்கி ஸ்பிலெய்னின் “மைக் ஹேமர்!” அந்த தேசத்து ராஜேஷ்குமார் பாணியிலே ஸ்பிலெயினின் க்ரைம் நாவல்கள் கிட்டத்தட்ட 23 கோடி பிரதிகள் விற்றுள்ளன & அவரது இந்த டிடெக்டிவ் நாயகர் ஒரு ரணகள ஆக்ஷன் பார்ட்டி ! இவரது சாகஸங்களை அவ்வப்போது காமிக்ஸ் தொடர்களாகவும், டி.வி. தொடர்களாகவும் உருவாக்கியுள்ளனர் ! அப்படியானதொரு காமிக்ஸ் ஆக்கத்தினை இங்கிலாந்தில் மிரட்டலான சித்திரங்களுடன் வெளியிட்டிருந்ததை சில காலம் முன்பே பார்த்திருந்தேன்! முழுவதுமாய் பெயிண்டிங் பாணியில் போடப்பட்ட அந்தச் சித்திரங்களும் ; ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான ஆக்ஷன் தோரணங்களும் நமக்கு நிரம்பவே ரசிக்குமென்று மனதுக்குப்பட்டது! So ஒரு சுபயோக சுபதினத்தில் இவருக்கான உரிமைகளை வாங்கிடும் முயற்சியினைத் துவக்கினோம் – and இதோ - முத்துவின் 51-வது ஆண்டுமலரில் மைக் ஹேமர் அதிரடி செய்யக் காத்துள்ளார் ! இவரது படைப்பைப் போலவே ஏகப்பட்ட க்ரைம் த்ரில்லர்களும் இந்த பிரிட்டிஷ் பதிப்பகத்திடம் நிரம்பி வழிவதால் – சிறுகச் சிறுக அவற்றையும் ரசித்திடலாம்!

புதுவரவு # 2 நமக்கு ஆதர்ஷமான வன்மேற்கின் களத்தில் சாகஸம் செய்திடுபவர் ! ஆனால் அவர் சவாரி செய்வதோ தடதடக்கும் ஒரு மோட்டார் சைக்கிளில் ! 1930-களில் சிறுகச் சிறுக ஹாலிவுட் திரையுலகு பிஸியாகி வந்த நாட்களில் – அந்தப் பகுதிகளில் பணியாற்றும் “எதையும் செய்வேன் ஏகாம்பரம்” பாணியில் எல்லாச் சிரமமான பணிகளையும் நிறைவேற்றுபவரே நமது நாயகர் ! "பிரபல “லோன் ஸ்டார்” (!!!) திரையுலக நட்சத்திரத்தைக் காணோமா? படப்பிடிப்பு சுணங்கி நிற்கிறதா ? Where is நெவாடா ? "என்று அறைகூவல் விடுகிறார்கள் ! தேடிப் பிடிக்க புறப்படுகிறார் நமது புதிய நாயகர் நெவாடா ! "ஒரு புதிய திரைப்படத்தின் ஒப்பந்தத்துக்கு முன்னோடியாய் ஒரு முக்கியமான பார்சல் சைனா டவுணிலிலுள்ள பிரமுகர் வசம் சென்றாக வேண்டுமா ? Oh yes....கூப்பிடுங்கள் நெவாடாவை !" “ஒற்றை நொடி… ஒன்பது தோட்டாக்கள்” தொடரின் மூலமாய் நமக்கு அறிமுகமான அதே டுவால் / பெகா / வில்சன் கூட்டணியே 2019-ல் துவங்கியுள்ள இந்தப் புதுத் தொடரின் படைப்பாளிகள் ! வருஷத்துக்கொன்று என்ற வீதத்தில் இதுவரைக்கும் 3 ஆல்பங்கள் வந்துள்ளன இந்தத் தொடரில்! ஒவ்வொன்றும் one-shot தான் ; ஆனால் ஒட்டுமொத்தமாய்ப் படித்தாலும் ஒரே கதைச் சுற்றாகக் கருதிட முடியும் தான் ! பிரமிக்கப் பண்ணும் அந்நாட்களது அமெரிக்காவை மிரட்டும் சித்திரங்களில் நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார் ஓவியரான காலின் வில்சன் ! சமகாலப் படைப்பு என்பதால் புதுயுக சித்திர பாணிகள், கலரிங் என்று அதகளம் செய்திருக்கிறார் “நெவாடா”!

புதுசுகளின் பவனி தொடரவுள்ளது – ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டிருந்த I.R.$ வாயிலாக!1999-ல் தொடங்கிய இந்த high-tech தொடரானது – டாணென்று வருஷத்துக்கொரு ஆல்பத்துடன் ஆஜராகி வந்துள்ளதால் – தந்சமயம் #22-ஐ தொட்டு நிற்கின்றது ! லார்கோ பாணியில் இந்த ஹீரோவும் வித்தியாசமானவர் – வருமான வரித்துறையில் பணியாற்றும் மோசடித் தடுப்பு அதிகாரியாய் ! And லார்கோ பாணியிலேயே 2 ஆல்பங்கள் ஒன்றிணைந்தால் ஒற்றை முழுக்கதை ! So ஏஜெண்ட் லேரி மேக்ஸ் இட்டுச் செல்லக் காத்திருக்கும் நிதியுலக மோசடிப் பாதைகளில் ; பெரும் குழுமங்கள் வரிஏய்ப்பு முயற்சிகளில், நாமும் தொற்றிக் கொள்ளலாமா 2023 முதலாய்? லார்கோ பாணியிலேயே இந்த மனுஷனும் கொஞ்சம் 'சிக்காய்ங் – முக்காய்ங்' பிரியர் என்பதால் ஆங்காங்கே கலர் கலரான அம்மணிகளும் தொற்றிக் கொள்வதுண்டு ! “கரை படிந்த கரன்ஸி” – I.R.$. தொடரின் முதல் சாகஸம்!

புதுசு கண்ணா… புதுசு” பாணியில் புதிய கதைத் தொடர்களின் அறிமுகம் தொடர்கிறது – நமக்கு பரிச்சயமான “வன்மேற்கின் அத்தியாயம்” வாயிலாக! Wild West உருவான கதையை அங்கே பிழைப்பு நாடி குடிமாறிச் செல்லுமொரு ஐரிஷ் குடும்பத்தின் பார்வையில் சொல்லும் இந்தத் தொடரானது – முழு வண்ணத்தில் ; டெக்ஸ் சைஸில் செம crisp ஆக வரவுள்ளது! ஆல்பங்கள் 1&2 அடுத்தடுத்த மாதங்களில் 2023-ல் இடம்பிடித்திடும்! Probably – நவம்பர் ’23 & டிசம்பர் ’23. So அதற்கடுத்த ஆண்டின் துவக்கப் பொழுதுகளிலும் அத்தியாயம் 3 & 4 என்று திட்டமிட்டால் – இந்தக் கதைகளின் arc வாசிப்புக்கு உரம் சேர்க்குமென்றுபட்டது! Oh yes – இவையெல்லாமே ஒன்-ஷாட்ஸ் தான்! ஆனால் ஒரு பெரும் பயணத்தின் அத்தியாயங்கள்! So நவம்பர் வரையிலும் தள்ளிப் போகாது, முன்கூட்டியே வெளியாகவும் கூடும் தான் !

ரைட்டு… புதுசுகளின் கதவைச் சாத்தும் முன்பாய் – மடேரென்று எத்திக் கொண்டு உள்ளே புகக் காத்திருக்கும் ஒரு tough as rails ரகசிய ஏஜெண்டையும் நம்மோடு ஐக்கியமாக்கிக் கொள்ளலாமா ? Say ஹலோ to xxxxxx… அனாமதேய ஏஜெண்ட் / கொலையாளி / அதிரடிக்காரர் ! பூர்வீகம் நியூயார்க்…! பணியாற்றிய வேட்டைக்களம் ஐரோப்பா !! கம்யூனிசமும், மதில் சுவரும் தளர்ந்து வந்த பெர்லின் நகருக்கு விதி அவரை இழுத்துச் செல்கிறது! வெறிகொண்டு காத்திருக்கும் கிழக்கு பெர்லினின் அதிகார மட்டம் ; முன்னாள் நாஜிக்கள் என்பதோடு வாழ்க்கையின் முதல் அத்தியாயத்தில் தொட்டுப் பிடித்து ஆடிய எதிரிகள் ஒட்டு மொத்தமாய்க், கொலை வெறியில் காத்திருக்கின்றனர் ! Black & White-ல் ஒரு தெறிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் !

👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀

மேற்படிப் பத்தியை இப்படித் தான் எழுதி விட்டு அந்தப் புது நாயகரை உள்ளே புகுத்த எண்ணியிருந்தேன் ! ஆனால் "ரெகுலர்களின் ஸ்லாட்டில் இடப் பற்றாக்குறை ; so 2023-க்கு SODA வேணுமா ? அல்லது ரிப்போர்ட்டர்  ஜானி தேவலாமா ?" என்று கேட்டு வைத்திருந்தேன் ! சிக்கிய துடைப்பங்களையெல்லாம் கொண்டு சாத்தத் தொடங்கினீர்கள் என்பதால், மேலுள்ள பத்தியில் நான் விவரித்த புது நாயகரை ஓசையின்றி ஒளித்து வைத்து விட்டு SODA சார் & ஜானி சார் என ரெண்டு சார்களுக்கும் இடம் கொடுக்க வேண்டியதாகிப் போனது ! So இந்த அதிரடி spy 2024-க்கு !

புதுசுகள் கோட்டா ஓவர் – at least ரெகுலர் சந்தா அட்டவணையில் எனும் போது, இனி ‘ரவுசு காட்டும் ரெகுலர்கள்‘ பக்கமாய் பார்வையை ஓடச் செய்யலாமா folks? இதோ – களமிறங்கும் சில ரெகுலர்கள்:

THE REGULARS

லக்கி லூக் – வழக்கம் போல லயனின் ஆண்டுமலரில் – வழக்கம் போல டபுள் கதைகளுடன்! ஒருவித டெம்ப்ளேட்டாய் லக்கியுடன் ஆண்டுமலர்களைக் கொண்டாடுவது set ஆகி விட்டதால் அதனை நோண்டத் தோன்றவில்லை – இம்முறையுமே ! And டால்டன்கள் லூட்டியும் உண்டு இம்முறையுமே !

ட்ரெண்ட் - என்றைக்குமே இவர் ரகளை செய்ததொரு அதிரடி நாயகரெல்லாம் கிடையாது தான்! ஆனால் அமைதியிலும் ஒரு அழகுண்டு என்பதை இந்தச் சிகப்புச் சட்டைக் கனேடியக் காவலரும் ; கனடாவின் பரந்து விரிந்த பூமிகளும் நமக்கு உணர்த்தத் தவறியதில்லை! விற்பனையைப் பொறுத்தவரையிலும் இவர் பாதாள பைரவியுமல்ல ; கூரையேறும் கோவிந்தனுமல்ல தான்! So நியாயப்படி பார்த்தால் 2023-ல் இவருக்கான ஸ்லாட்டை சற்றே சிந்தித்தே உறுதி செய்திருக்க வேண்டும்  தான்! ஆனால் இந்தத் தொடரின் இறுதி ஆல்பம் இது என்பதோடு; புது மாப்பிள்ளை ட்ரெண்ட் – புது டாடியாகவும் பரிணாம வளர்ச்சி காணும் ஆல்பமிது என்பதால் இவரையும், கையிலுள்ள பிள்ளையையும், தொடரையும் தொங்கலில் விட மனம் ஒப்பவில்லை ! So தொடரை மிகச் சரியாய் பூர்த்தி செய்த திருப்தியோடு விடைபெறக் காத்திருப்பார் – ட்ரெண்ட் !

ப்ளூகோட் பட்டாளம் : Again – இது முழுக்க முழுக்க உங்கள் தேர்வே! “இருப்பது ஒரு ஸ்லாட்; அந்த இடத்தில் மேக் & ஜாக்கா? ப்ளூகோட்டா?” என்று ரொம்பச் சமீபமாய்க் கேட்டிருந்தது நினைவிருக்கலாம்! மூன்றுக்கு-ஒன்று என்ற ரீதியில் ப்ளூகோட்ஸிற்கு உங்கள் வாக்குகள் பதிவாகியிருக்க, ராணுவத்தின் குள்ளனும், மொக்கையனும் edged out சிகாகோவின் குள்ளன் + மொக்கையன் ! ஆனால்... இதோ- நவம்பரில் காத்துள்ள மேக் & ஜாக் தோன்றும் “ரீலா...? ரியலா?” ஒரு decent ஹிட்டாகிடும் பட்சத்தில், சபலப் பேய் என்னை ஆட்டிப் படைக்குமென்பது உறுதி ! Truth to tell – எனது ஓட்டு மேக் & ஜாக்குக்கே இருந்தது !



- தோர்கல் : இன்னொரு டபுள் ஆல்பம் ; இன்னொரு அதிரடி fantasy சாகஸம் ! தோர்கல் ஆர்வலர்களுக்கு இங்கே ஏமாற்றம் தொண்டைகளைக் கசக்கச் செய்திடக்கூடும் என்பது புரிகிறது தான் – ஆனால் விற்பனைகளின் நிர்ப்பந்தங்கள் சில தருணங்களில் முன்நிலை வகிக்க வேண்டிப் போகிறதே guys! அற்புதமான தொடர்; அருமையான நாயகன்; அசாத்தியக் கதாசிரியர் என்ற எல்லாமே இருந்தும் – ”காமிக்ஸ்” என்றாலே கௌபாய்ஸ் அல்லது டிடெக்டிவ்ஸ் என்ற ஒரு template நம் மனங்களில் பதிந்து கிடப்பதால், இந்த fantasy ஜானருக்குள் எல்லோராலும் சகஜமாய்ப் புகுந்து குதூகலித்திட இயலவில்லை என்பதை நம்பர்கள் தெரிவிக்கின்றன! புத்தக விழாக்களில் in particular – தோர்கல் ரொம்பவே திணறுகிறார் ! So ஆசைகள் அநேகமிருந்தும் – யதார்த்தம் கோலோச்சுவது காலத்தின் கட்டாயமாகிறது ! Sorry தோர்கல் fans! ஆனால்...ஆனால்...உங்களுக்கோர் தித்திப்பான சேதி வெகு விரைவில் உண்டென்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி விடுகிறேன் ! பல்லடம் சரவணகுமார் சார் - நிச்சயமாய் குதூகலிக்கப் போகிறீர்கள் அந்த நியூஸுக்கு ! எல்லா அறிவிப்புகளையும் 'ஏக் தம்மி'ல் பண்ணி வைத்தால் அப்பாலிக்கா வண்டி ஓட்ட topics பஞ்சமாகிப் போகுமே ! So சஸ்பென்ஸ் நல்லது guys !

ப்ரெஞ்ச் ஏஜெண்ட் சிஸ்கோ : நடப்பாண்டில் FFS-ல் அறிமுகமான இந்த "எவனா இருந்தா எனக்கென்ன?" பாணி ஏஜெண்ட், அதற்கடுத்த சாகஸத்தில் உங்களை இன்னமும் சந்தித்திருக்கவில்லை! அடுத்த சில நாட்களில் உங்களை எட்டிப் பிடித்திடவுள்ள அவரது அதிரடி # 3 & 4 ஒன்றிணைந்த “உஷார் ...அழகிய ஆபத்து” அவரை நமது அணிவகுப்பில் நான் தக்கச் செய்துள்ள பின்னணியைப் புரியச் செய்யும்! முதல் ஆல்பத்தைப் போலவே இங்கேயும் தலைதெறிக்கும் வேகம்; ஆனால் தெளிவான கதையுடனான சவாரி ! So சிஸ்கோ தொடரின் ஆல்பங்கள் #5&6 இணைந்து – 2023-ல் “கலாஷ்னிகோவ் காதல்” என்று காத்துள்ளது ! இந்தத் தொடர்களில் நான் பார்த்திடும் இன்னொரு ப்ளஸ் – எல்லாமே சமகாலத்துப் படைப்புகள் என்பதால் இங்கே ஜெய்ஷங்கர் காலத்துத் துப்பாக்கிகள் ; M.N.நம்பியார் காலத்துக் கார்கள்; அசோகன் காலத்து டெலிபோன்கள் என்று உறுத்தக்கூடிய சமாச்சாரங்கள் கிஞ்சித்தும் இராது! So புதுயுகப் படைப்புகளுடன் அன்னம், தண்ணீர் புழங்க சற்றே பழகிப்போமே?

SODA & ரிப்போர்ட்டர் ஜானி :

நிறையவே யோசித்தேன் – இந்த இறுதி இதழின் இருக்கையை SODA-விற்குத் தருவதா? அல்லது ரிப்போர்ட்டர் ஜானிக்குத் தருவதா? என்று ! ஜானி ஒருவித குண்டுச்சட்டிக்குள்ளாகவே தொடர்ச்சியாய் ‘குருத‘ ஓட்டி வருவது போல் எனக்குத் தோன்றினாலும், க்ளாஸிக் நாயகர்களுள் இந்த மலர்ந்த முகத்துக்காரர் ரொம்பவே முக்கியமானவர் என்பதை மறுக்கவோ / மறக்கவோ வழியில்லை ! அதே சமயம் SODA ரொம்பவே புத்துணர்ச்சியூட்டும் நாயகராக அமைந்து விட்டிருப்பதையுமே ஓரம் கட்ட முடியவில்லை! So – பாஸ்டரா? ரிப்போர்ட்டரா? என்ற கேள்விக்கான விடை தேடி உங்களை அணுகிய போது விழுந்த சாத்துக்களில் பழுத்த முதுகுக்கு இதம் தேடி தென்னைமரக்குடி எண்ணெய் வாங்கியே ஆஸ்தியில் பாதி கரைஞ்சூ  ! So சோடாவும்  உண்டு ; சர்பத்தும் உண்டு ! சோடாவில் எலுமிச்சம்பழம் புழிஞ்சா சுலபமா ஜீரணம் ஆகும்  ; அதே எலுமிச்சம்பழத்தை கபாலத்தில் புழிஞ்சா ஏர்வாடிக்கு டிக்கெட் கிடைக்கும் !  அபிராமி...அபிராமி !

ரைட்டு... மொத்தம் 27 இதழ்கள் கொண்ட அட்டவணை இது தான் என்றான பின்னே, ‘கொசுறுகள்‘ பற்றிப் பார்த்து விடலாமா? “கொசுறுகள்” in the sense – சந்தா நண்பர்களுக்கு விலையின்றிச் சென்றிடவுள்ள விலையில்லா இதழ்கள்! “மாதமொரு இணைப்பு” என்று தொடர்ந்திடும் ஆசை இருப்பினும் எகிறி நிற்கும் விலைவாசிகள் அந்த ஆசை மீது மண்ணள்ளிப் போட்டு வருகின்றன! So 2023-ல் மொத்தம் 4 விலையில்லா இதழ்கள் மாத்திரமே இருந்திடும்:

- கலர் டெக்ஸ் – 1

- கலர் டெக்ஸ் – 2

- கலர் டைலன் – 1

- விங் கமாண்டர் ஜார்ஜின் “புதையலுக்கொரு பாதை” 

முதல் 3 இதழ்கள் 32 பக்கங்களில், கலரில் எப்போதும் போல வந்திட – நான்காவது இதழான விங் கமாண்டர் ஜார்ஜ் மட்டும் black & white-ல் வரக் காத்திருக்கிறார்! And இந்த ஆல்பத்தின் ஸ்பெஷாலிட்டி என்னவெனில் இது 1975-ல் முத்து காமிக்ஸில் சூப்பர் ஹிட்டடித்த “நெப்போலியன் பொக்கிஷம்” இதழின் முன்னோடி! “புதையலுக்கொரு பாதை”யின் நீட்சியே "நெ.பொ."! So க்ளாசிக் காதலர்களுக்கொரு fresh ஆன விருந்து வெயிட்டிங்! புனித சாத்தான் சார் - ஹேப்பியா ? 

And yes - மேற்படி விலையில்லா இதழ்கள் ஆண்டின் இரண்டாம் பகுதியினில் ஏதேனும் புத்தக விழாக்களின் போது தொகுப்புகளாய் விற்பனைக்கு வந்திடும் ! "புதையலுக்கொரு பாதை" & "நெப்போலியன் பொக்கிஷம்" இதழ்களுமே இணைந்து ஈரோட்டிலோ ; ஏதேனுமொரு புத்தக விழாவிலோ ஆண்டின் (2023) பிற்பகுதியினில் வெளிவரக்கூடும் ! So சந்தாவில் இணைந்திடப் பிரியப்படாத நண்பர்களுக்கும் இந்த இதழ்கள் கிடைக்காது போகாது ; but they will not be free  ! 



அப்புறம் ஒவ்வொரு மாதத்துக் கூரியர் டப்பிகளையும்  கடுப்போடு வாங்கி வைத்திடும் இல்லத்தரசிகளைக் குளிர்விக்கவும், மாலையில் பொட்டிகளை எடுத்தாந்து உங்களிடம் சேர்ப்பிக்கும் குட்டீஸ்களை குஷியாக்கவும் ஒவ்வொரு மாதமும் 4 பக்கங்கள் கொண்ட கலர் flyers உங்களின் கூரியர்களில் இடம்பிடித்திடும் ! அந்த flyer-ல்  மகளிருக்கு சுவாரஸ்யமான 2 பக்கங்களும், குட்டீஸ்களுக்குப் பிடித்தமான 2 பக்கங்களும் அச்சாகியிருக்கும் ! So கூரியர் கிழமைகளில் சிலபல பற்கள் கடிக்கப்படும் ஓசைகள் மட்டுப்படின், சந்தோஷமே !

ஆங்... உள்ளே யார்? என்று பார்த்தான பின்னே, ‘வெளியே யார் - for 2023 ?‘ என்றும் பார்த்திடல் அவசியமன்றோ? Here is the short list:

இளவரசி ப்ளைஸி:  2023-ல் இவருக்கு ஒரு குட்டி விடுமுறை! கண்டிப்பாக டாக்டர்களுடன் மட்டும் அல்ல ! இந்த விடுமுறைக்கான பின்னணியினை next பதிவில் சொல்லிடுறேன் guys ! நம்புங்கள் - நம்புங்கள் - அது ரசனையோ, விற்பனையோ சார்ந்த காரணமே அல்ல ! 

மேக் & ஜாக்: முந்தைய பத்தியில் விவரித்திருந்தேன் பின்னணியை! இந்த சிகாகோ ஜோடி சர்வ நிச்சயமாய் 2024-ல் இடம்பிடிப்பர் – on may be even earlier too - நீங்கள் மனசு வைத்தால் !

டெட்வுட் டிக் : இன்னும் ஒரு சாகஸம் பெண்டிங் – இந்த கறுப்பின கச்சா-முச்சாப் பேச்சுக்காரரின் தொடரில்! டிசம்பர் 2022-ல் தான் நடப்பாண்டின் இதழுடன் வரவுள்ளார் என்பதால், இளவரசிக்குப் போலவே இவருக்கும் லீவு! 2024-ல் இவரது தொடர் பூர்த்தி காணும்!

மர்ம மனிதன் மார்டின்: Again – உங்களின் குரல்களே எனது தீர்மானத்தின் பின்னணி ! மார்டின் தொடரில் ஏகப்பட்ட கதைகள் நமக்கு கிஞ்சித்தும் புரிபடா ரேஞ்சிலேயே இருந்து வருவது தொடர்கதையாகி வருகிறது ! இதோ ரொம்பச் சமீபத்தில் கூட இரண்டு கதைகளை வாங்கி விட்டு, அவற்றை இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்த்து விட்டுப் ‘பேந்தப் பேந்த‘ முழித்து வருகிறேன் – என்ன செய்வதென்று புரிபடாமல் ! என்ன செய்யலாம் ? என்று ரொம்பச் சமீபமாய்க் கேட்டிருந்தேன் உங்களிடம் ! "ஒரு ப்ரேக் குடுத்திடலாம் ! " என்றீர்கள் ! So எனக்கு ஓராண்டு விடுமுறை – நமது மர்ம மனிதரிடமிருந்து !

ரைட்டு....2023-ன் அட்டவணையைப் பார்த்தாச்சு ! ஆனால் அட்டவணைகளெனும் வேலிகளைத் தாண்டியும் மேய்ச்சலுக்கு நாம் நடை போடுவது தெரிந்த சமாச்சாரம் தானே ? So இதோ - "எங்கே ? எப்போது ?" பார்ட்டிகள் ! இவர்களெல்லாம் எங்கே வருவார்கள் ? எப்போது வருவார்கள் ? என்பதெல்லாம் இந்த நொடியினில் எனக்குத் தெரியாது ! ஆனால் ஏதேனுமொரு மார்க்கத்தில் இவர்களைக் களமிறக்குவதே நமது இலக்குகளில் ஒன்று - for 2023 !

எங்கே ? எப்போது?

- சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல்-2:

நடப்பாண்டின் அதிரிபுதிரி ஹிட்களுள் பிரதானமானது சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல்-1 ! இரு க்ளாஸிக் மறுபதிப்புகளோடு வெளியான இந்த ஆல்பம் காட்டிய மாஸ் அட்டகாசம் ! So அதே பாணியில், அதே தரத்தில், அதே 2 இதழ் காம்போவில் சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல்-2 2023ல் களம் காணும்! And ஏகப்பட்ட நண்பர்களின் கோரிக்கையான “பேரிக்காய் போராட்டம்” ப்ளஸ் இன்னொரு புது சாகஸமான “நானும் ரௌடி தான்” ஒன்றிணைந்து பட்டையைக் கிளப்பிடவுள்ளது – உரிய சந்தர்ப்பத்தில் !

டெக்ஸ் க்ளாஸிக்ஸ் – 4:

சின்னதொரு கதை மாற்றத்துடன் டெக்ஸ் க்ளாஸிக்ஸ்-4 வெயி்ட்டிங்! Yes, you guessed it – “மந்திர மண்டலம்” தான் இந்த ஆல்பத்தின் பிரதானக் கதை & “மரண நடை” will be கதை #2 ! வழக்கம் போல ஹார்ட் கவரில் ; in full color ! சேலம் குமார் சார் ; யுவா ....ஹாப்பியா ?

The BIG BOYS ஸ்பெஷல் :

மெய்யாலுமே நம்புங்கோ – இந்தப் பெயரின் பின்னே குசும்பு கிஞ்சித்தும் நஹி! மெகா சைசில் வரவுள்ளதால் இந்த இதழுக்கு BIG BOYS ஸ்பெஷல் என்று பெயரிட்டேனா ? அல்லது இதை (சு)வாசிக்க உள்ளோரெல்லாம் ஒரு காலத்தில் குயந்தைகளாய் இருந்த இன்றைய BIG BOYS என்பதாலா ? அல்லது இதன் நாயகர்கள் அனைவருமே 'பெரும் தலைகள்' என்பதால் BIG BOYS ஸ்பெஷல் என்ற பெயர் பொருத்தமெனப்பட்டதா ? சொல்லத் தெரியலை ; but இந்த மாதிரியானதொரு இதழைத் திட்டமிட்ட முதல் நொடியில் என் தலைக்குள் உதித்த பெயர் இதுவே !! So here you go with the story selections :

  • - இரும்புக்கை மாயாவி தோன்றும் “கொலைகாரக் குள்ளநரி”!
  • ஸ்பைடரின் “கொலைப் படை” – இரு வண்ணங்களில்!
  • - இரும்புக்கை நார்மனின் “மனித எரிமலை”!

மேற்படி 3 க்ளாஸிக் அதிரடிகளும், MAXI சைஸில் ; Smashing '70s-ன் அதே அட்டகாசத் தயாரிப்புத் தரத்தில் ; ஹார்ட் கவரில் – “முன்பதிவு” ரூட்டில், ஒரு “வாகான வேளையில்” களம் காணும் ! உதய் ; கவிஞர் ; செந்தில் சத்யா...கரூர் குணா..ராஜசேகரன் சார் & all நோஸ்டால்ஜியா நேசர்கள்  - ஹேப்பியா ?

அப்புறம் இங்கே இன்னொரு சமாச்சாரமுமே !!

  • - ஸ்பைடரின் “கொலைப்படை” ஒரு cult hit என்பதால் தானைத் தலைவரின் வதனம் தாங்கியொரு அட்டைப்படமும் ;
  • மாயாவியின் ஆக்ஷன் சித்திரம் தாங்கியதொரு அட்டைப்படமும் இந்த இதழுக்கு இருந்திடும்! 

So முன்பதிவுத் தருணத்தின் போது – எந்த variant cover உங்கள் சாய்ஸ்? என்று சொல்வது அவசியமாகிடும் ! Given a choice - முன்னட்டையில் ஸ்பைடரையும், பின்னே மாயாவியையும் போட்டிடலாம் தான் ; ஆனால் புத்தக விழாவில் தேடி வரும் மாயாவி ரசிகர்களுக்கென மாயாவியை பிரதானப்படுத்த வேண்டியதும்  அவசியமாகிறது ! So a variant cover will be the solution here ! 

பெளன்சர் :

பட்டு வேஷ்டி சட்டையெல்லாம் வாங்கியாந்து, மனுஷனை டிரஸ் செய்யச் செய்து, மண்டபத்தின் வாசலில் flex பானெரில் கூட பெயரைப் போட்ட பிற்பாடு, மாப்பிள்ளையை மாற்ற நேர்ந்திட்டது செம துரதிர்ஷ்டமே ! ஆனால் சில வேளைகளில் வாழ்க்கையின் விளையாட்டுக்கள் இவ்விதம் இருக்க நேரிடும் போது யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு, முணுமுணுப்பின்றி நடையைக் கட்டத் தான் வேண்டிப் போகிறது ! And பெளன்சரும் நல்ல பிள்ளையாய் அதையே செய்துள்ளார் ! அந்த நல்லபிள்ளைத்தனம் மருவாதைகளின்றிப் போயிடக்கூடாதென்று எனக்குப்பட்டது ! So இளம் புலியார் பிடித்திருந்த "அட்டவணைக்கு வெளியிலான ஸ்லாட்டை" அப்படியே Bouncer-க்கு தாரை வார்க்கின்றோம் and வாகான சந்தர்ப்பத்தில், முன்பதிவு ரூட்டில் இவரது சாகசம் களம் காணும் ! ஒரு விதத்தில் இதுவும் நல்லதுக்கு தானோ ? என்றுமே தோன்றுகிறது - becos பெளன்சர் ஒரு சகல தரப்பின் அபிமான நாயகனென்று கருதிட வாய்ப்புகள் குறைவு தானே ? "ரெகுலர் சந்தாவிற்குள் புகுத்தி தலையில் கட்டி விட்டானே !!" என்ற விசனங்களுக்கு தற்போது வாய்ப்பின்றிப் போய்விட்டது கூட சாதகமான சமாச்சாரம் தான் என்பேன் ! So காத்திருப்பார் மனுஷன்- நீங்கள் வாய்ப்பெனும் கதவினைத் திறந்து விடும் வரையிலும் !

ஸாகோர்  - இருள்வனத்தின் மாயாத்மா ! 

போன மாதம் வந்தார் ; வந்த வேகத்திலேயே மனங்களை வென்றார் & வென்ற சூட்டிலேயே நமது அட்டவணையினில் இடம் பிடிக்கும் தகுதியையும் பெற்றார் - இந்தக் கோடாரி மாயாத்மா ! ஆனால் ரெகுலர் சந்தாவினுள் ஓரளவுக்காவது decent ஆன இடம் தந்து இவரை ரெகுலர் திட்டமிடல்களில் உள்ளே  நுழைப்பதாயின், ஏற்கனவே நடமாடி வரும் நாயகாஸ் சிலரைக் காவு கொடுக்க வேண்டிப் போகும் ; அல்லது பட்ஜெட் இன்னமுமே எகிறி விடும் ! ஏற்கனவே சோடாவா ? சர்பத்தா ? என்ற கேள்விக்கு வாங்கிய அடிக்கே பிஸியோதெரபிஸ்டிடம் நான் போய் வந்து கொண்டிருக்கும் நிலையில், மேற்கொண்டும்  யாரைக் கழற்றி விடுவதென்று கேட்டு வைத்து, எனக்கு நானே சூன்யம் வைத்துக் கொள்ள பிரியப்படவில்லை ! So புதியவரைப் புகுத்த, எவரேனும் முதியவரை அப்புறப்படுத்திட வேண்டாமென்றே தீர்மானித்தேன் & ஆட்சி செய்திடும் கூட்டணிக்கு ஸாகோர் வெளியிலிருந்தே ஆதரவு தரட்டுமென்றும் தீர்மானித்தேன் ! தவிர ஆரம்பமே அமர்க்கள முழு வண்ணத்தில் ; புதுயுகக் கதை சொல்லும் பாணியினில் & ZAGOR 2.0 சகிதம் எனும் போது, திடு திடுப்பென அவரது புராதன black & white கதைக்குவியலுக்குள் டைவ் அடிப்பது அத்தனை ரசிக்காதென்று நினைத்தேன் ! So இன்னொரு ஆண்டுக்கு அந்த லேட்டஸ்ட் ஸாகோர் கதைகள் ; சித்திர பாணிகள் ; வர்ணங்கள் ; ஹார்ட்கவர் என்றே கெத்தைத் தொடர்ந்து விட்டு, 2024 முதலாய் ரெகுலர் அட்டவணைக்குள் இந்த டார்க்வுட் மாயாத்மாவை அழகான கதைத் தேர்வுகளோடு புகுத்திடலாமென்று எண்ணியுள்ளேன் ! ஆகையால் காத்திருக்கும் ஆண்டினில், ஸாகோர் தனது லேட்டஸ்ட் சாகசங்களுடன் உங்களை முன்பதிவு ரூட்டினிலேயே சந்தித்திடுவார் - கலரில் ! 



The சிரிப்பே சிறப்பு Special !

தடித் தடியான வில்லன்களோடு மோதும், புஷ்டியான நாயகர்களுக்கெல்லாம் தயங்காமல் ஸ்பெஷல் போடுகிறோம் ; இன்னிக்கி ஆரம்பித்தால் பொங்கல் வரைக்கும் மூக்கைச் சிந்தும் அழுகாச்சிக் காவியங்களுக்கு ஸ்பெஷல் போடுகிறோம் ; ஆனால் இந்த சிரிப்புப் பார்ட்டிகளுக்கு ஒரு ஸ்பெஷல் போட கை நடுங்குவதென்னவோ மெய் தான் ! காரணங்கள் ஏதாய் இருப்பினும், கார்ட்டூன்கள் மீதானதொரு அசுவாரஸ்யம் சாதனைகள் பல புரிந்து நிற்கும் நமது சிறுவட்டத்தின் திருஷ்டிப் பரிகாரம் என்று சொன்னால் அது மிகையே ஆகாது ! Anyways சமீபமான பதிவில் கேட்டிருந்த கேள்விக்கு ஒரு thumping பதில் கிட்டியிருந்தது - முன்பதிவு ரூட்டில் ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் போட்டுத் தாக்கிடத் தடைகள் லேதுவென்று ! அதன் பிரதிபலிப்பே - The சிரிப்பே சிறப்பு ஸ்பெஷல் ! இதற்கு இன்னொரு நறுக்கென்ற பெயர் அமையும் வரையிலும் S S S என்றே அறியப்படட்டும் (Sirippe Sirappu Special) & புதிதாய்ப் பெயர் சூட்ட முனையும் The மக்களே ; The மறக்காமல் உங்கள் தேர்வுகளில் The THE இருக்கிறா மாதிரிப் பார்த்துக்கொள்ளுங்களேன் !! 

The SSS திட்டமிடலில் the 4 தனித்தனி புக்ஸ் இருந்திடும் ; வெவ்வேறு பதிப்பகங்களின் படைப்புகளை ஒன்றிணைக்க அனுமதியும் / வாய்ப்பும் கிடையாதென்பதால் ! So இதை ஒன்றாக்க நினைக்கும் the நண்பர்கள் 'பச்சக்' என்றொரு பைண்டிங்கைப் போட்டுக் கொள்ளத் தான் அவசியமாகிடும் ! கண்ணில் படாமலிருந்த நாலு கால் ஞானசூன்யம் ரின்டின் கேன் ; புது வரவான கைப்புள்ள ஜாக்கின் புது ஆல்பம் ; அப்புறம் இன்னொரு சிக் பில் சிரிப்பு மேளா என்பதோடு ஸ்லாட் # 4 காலியாக இருக்கிறது - உங்களின் தேர்வினை எதிர்நோக்கி ! மதியில்லா மந்திரியாரை அங்கே அமர்த்துவதா ? க்ளிப்டனையா ? மேக் & ஜாக் ஜோடியையா ? அல்லது சோன்பப்டித் தாடிவாலா லியனார்டோ தாத்தாவையா ? என்று தீர்மானிக்க வேண்டியது நீங்களே ! PLEASE NOTE : இந்தப் பட்டியலில் இல்லாத நாலடியாரையோ ; தொல்காப்பியரையோ கூட்டியாற இரும்புக் கவிஞர் கோரிக்கை வைப்பார் தான் ; ஆனால் கேள்விக்கு நாலே options மட்டுமே என்பதை மனதில் கொண்டிடக் கோருகிறேன் ! தேர்வு செய்வது மட்டுமன்றி, இந்த ஒற்றை ஆல்பத்தின் மொழிபெயர்ப்பு ; அட்டைப்பட டிசைனிங் ; டைப்செட்டிங் என சகலத்தையுமே செய்திடவுள்ளது நம் மத்தியிலுள்ள ஆற்றலாளர்களே ! Of course முழியாங்கண்ணன் will have the final say - ஆனால் பணிகளை பார்த்திடவுள்ளது அந்நேரத்தின் தன்னார்வலர்களே ! So இதுவே திட்டமிடல் இந்த SSS முயற்சிக்கு !

ஒரு வழியாய் the பதிவுக்கு the சுபம் போடும் வேளையை நெருங்கிவிட்டோம் என்பதால் மண்டைக்குள் லைட்டாயொரு குயப்பம் - மாமூலான அந்தக் "கேள்வியும் நானே, பதிலும் நானே" கூத்தையும் இத்தோடு சேர்த்து விடவா ? அல்லது அதை அடுத்த பதிவில் பார்த்துக் கொள்ளலாமா ? என்று ! பதிவின் முதல் பாதியை டைப் செய்து தந்த நண்பர் குருமூர்த்தி செல்லை off பண்ணிவிட்டு கேரளாவுக்கு போகும் பலாப்பழ லாரியில் ஏறிவிட்டாரென்பதாலும், மீதத்தை டைப் செய்த எனது விரல்கள் "ஐயா..என்னை விட்டுடு !!" என்று கதறுவதாலும் யோசனை பலமாகிறது இந்த நொடியினில் !! ஆனால் நீங்கள் என்ன கேட்பீர்கள் என்பதை யூகிக்க முடிவதாலும் ; மறுக்கா ஒவ்வொருவருக்குமான பதில்களைக் கொண்டு சேர்க்கும் குட்டிக்கரணங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதாலும் இன்னொரு க்ரீன் டீயை போட்டுத் தாக்கி விட்டுத் தொடர்ந்திடுகிறேன் !!

Here goes : The கேள்வியும் நானே ; பதிலும் நானே ; The ப்ளேடும் நானே ; மருந்தும் நானே பகுதி :

கேள்வி # 1 : 'தல'யின் மைல்கல் ஆண்டில் இன்னுமே கொஞ்சம் சாஸ்தியாய் கூவக்கூடாதா ? 

Oh yes ...கூவலாம் தான் ; ஆனால் இங்கே அறிவித்திருக்கும் கூவல் இன்னமும் சற்றே உரக்க ஒலிக்கலாம் - போனெல்லி தங்களின் YEAR 75 அட்டவணையினை வெளியிடும் சமயத்தில் ! அதிரடியாய் ; நமக்கு ஜொள்ளு ஓடச் செய்யும் விதத்தில் அவர்கள் ஆரவாரமாய் எதையேனும் அறிவிக்கும் பட்சத்தில், நிச்சயமாய் அதனையும் 2023-ல் ரசிக்க வழி தேடாது போக மாட்டோம் ! நமது தற்சமயத் திட்டமிடல்களும், கதை இறுதிப்படுத்தல்களும் நிகழ்ந்திருப்பது ஜூலை 2022-ன் இறுதியில் ! So போனெல்லியின் PLANS for 2023 பற்றி அந்நேரத்திற்கு நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை !

2 .இந்தவாட்டியும் ஜேம்ஸ் பாண்ட் 2.0 இல்லியா ??

நிஜத்தைச் சொல்வதானால் கையை ரொம்பவே சூடு போட்டுக் கொண்டிருக்கிறோம் - அமெரிக்க டாலரின் சந்தை மதிப்பு எகிறிப் போய்விட்டுள்ள காரணத்தினால் ! நமது படைப்பாளிகளின் பெரும்பான்மை ஐரோப்பாவில் உள்ளனர் - King Features & Dynamite நீங்கலாய் ! க்ளாஸிக் கதைகளான வேதாளர் ; ரிப் கிர்பி ; மாண்ட்ரேக் etc என்று அவர்களிடம் நாம் வாங்கிடும் கதைகளுக்கு ஏதோ குலசாமி புண்ணியத்தில் ஜூன்வாக்கிலேயே பணம் கட்டி விட்டோம் ! ஆகையால் டாலரின் மதிப்பு சுமார் ரூ.72 என்று இருந்த போதே வேலை முடிந்து விட்டது ! ஆனால் தற்போதோ ரூ.83-க்கு அருகினில் நிற்கின்றது ! தவிர அயல்நாட்டுக்கு அனுப்பிடும் தொகைகள் மீது இங்கே 20.8% வருமான வரியினையும் (அவர்கள் சார்பினில்) கட்டியாக வேண்டும் ! So கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஜேம்ஸ் பாண்ட் கதையின் ராயல்டித் தொகை கண்முழி பிதுங்கச் செய்யும் ஒரு தொகையாக இன்று நிற்கிறது ! ரூ.200 விலையில் இதுவரையிலும் வெளியிட்டு வந்த இந்தத் தொடரை இனி தொடர்வதாயின் என்ன விலை நிர்ணயம் செய்வதென்றே தெரியாது தடுமாறுவதால், அவர்களை கூடிய விரைவில் நேரில் சந்தித்து இந்த இக்கட்டிலிருந்து வெளிப்பட ஏதேனும் மார்க்கமிருக்குமா ? என்று யோசிக்க எண்ணியுள்ளேன் ! So இந்த நொடியினில் கொஞ்சமாய் அவகாசம் தேவைப்படுகிறது - JB மறுவருகைக்கு ! யதார்த்தத்தை விளக்கி விட்டேன் guys ; "போச்சு...அல்லாம் நாசமாப் போச்சு...J.B. இல்லாம உலை வைக்கவே முடியாதே ; சாம்பாரிலே பருப்பு கூட வெந்து தொலைக்காதே ?!" என்ற ரேஞ்சுக்கு விசனங்களை வெளிப்படுத்துவதோ, புரிந்து கொண்டு பொறுமை காப்பதோ - இனி உங்கள் சாய்ஸ் !  

3.நமீபியா ?

கொஞ்சமாய் இக்கட Pause பட்டன் அமுக்க வேண்டிப்போயுள்ளது - இதற்கு முன்பாய் இன்னும் சில மெகா நீள தொடர்கள் காத்திருப்பதால் ! சொல்லப் போனால் கென்யாவே செம வெயிட்டிங்குக்குப் பின்னர் தானே களம்கண்டுள்ளது ! ROUTE 66-க்கு ரூட் க்ளியர் ஆகிய பிற்பாடு நமீபியப் பயணத்தை மேற்கொள்வோம் folks !

4. தீபாவளி மலர் வெறும் ரூ.300 தானா ? தமிழ்நாட்டிலே ஆட்டோ ஓடாது ; பஸ் ஓடாது ; தெரியும்லே ?

அண்ணா....அது கனகச்சிதமாய் TEX 75-வது பிறந்த நாள் மலர் வெளியாகும் மாதத்திற்கு அடுத்த மாதம் ! So 30 நாட்களுக்கு முன்னே ஒரு செம விருந்துக்குப் பிற்பாடு இன்னொரு பிரியாணி மேளாவென்றால் வயிறு தாக்குப் பிடிக்கணுமில்லியா ? அதேன்...! 

(கோவைக் கவிஞரே : இந்த மேட்டருக்கு 25 பின்னூட்டங்கள் மட்டும் உங்களுக்கு allowed ; அதுக்குள்ளாற பார்த்து முடிச்சுக்குங்க ...ஓ.கே.வா ?)

5. விலைகள் சும்மா போட்டுத் தாக்குதே நைனா ? எலன் மஸ்க் கிட்டேர்ந்து Twitter-ஐ விலைக்கு வாங்க இப்போவே பணம் புரட்ட ஏற்பாடுகளா ?  

இல்லீங்க ஆபீசர் ! சுற்றிலும் எகிறியடிக்கும் விலைவாசிகளுக்கு மத்தியினில் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் நம் கைகளை விட்டுப் போய் வருஷம் ஒன்றரை ஆகி விட்டது ! February 2021-ன் காகித விலைகளும் ஏப்ரல் 2022-ன் விலைகளும் exact இரு மடங்குக்கும் ஜாஸ்தி ! நம்பச் சிரமமாக இருந்தாலும் கலப்படமில்லா நிஜம் இதுவே ! And ஏப்ரலிலேயே விலையேற்றத்தை அறிவித்திருக்க வேண்டியவன் தான் ; ஆனால் எனக்குள் ஒரு ஓரத்தில் இந்த விலைகள் மார்க்கெட்டில் நிலைக்க வாய்ப்பே கிடையாது ... அதிக பட்சமாய் 6 மாதங்களுக்குள் ஓரளவுக்காவது விலைகளை உற்பத்தியாளர்கள் குறைத்தே தீர வேண்டுமென்ற நம்பிக்கை இருந்து வந்தது ! So பல்லைக் கடித்துக் கொண்டு தொடர்ந்தோம் ! ஆனால் இப்போதோ 'டாலர் கூடிடுச்சு ; செயின் கூடிப் போச்சு ; யுக்ரைனில் யுத்தம் நடக்குது ; குழாயடியில் குடுமிப்பிடி நடக்குது' என்று கம்பி கட்டும் கதைகளையெல்லாம் சொல்லி அந்த உச்ச விலைகளிலேயே ஆணியடித்தார் போல நின்று விட்டனர் ! So கூடியது கூடியது தான் ; இனி ஒருபோதும் விலைகளில் பின்செல்ல பேப்பர் மில்கள் முன்வரப்போவதில்லை என்பது ஊர்ஜிதமாகி விட்ட இந்தச் சூழலில், நாம் ஐந்து ரூபாயோ ; பத்து ரூபாயோ விலையேற்றி, கிஞ்சித்தும் பற்றாதென்று ஆகிவிட்டது ! 

ஆண்டுக்கு ஆண்டு சம்பளங்கள் கூடிட வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஆபீஸுக்கான கரெண்ட் பில் தெறிக்க விட்டு வருகிறது ; பைண்டிங்கில் விலைகளை ஏற்றி விட்டார்கள் ; லேமினேஷன் பிலிம் தீயாய் தகிக்கிறது ; அச்சு மையின் விலையும் செவிட்டில் அறைகிறது ; அட்டைகளின் விலை உயர்வால்  கூரியர் டப்பிக்கள் சங்கை அறுக்கும் விலையேற்றம் கண்டுள்ளன ; கூரியர் கட்டணங்களுமே பின்தங்கிடவில்லை ; அட..மாதா மாதம் புக்குகளை குறுக்கும் நெடுக்கும் சுமந்து திரியும் லோட் ஆட்டோக்களின் கூலிகளுமே எகிறிப்போயுள்ளன எனும் போது நமது  குட்டியான பிரிண்ட் ரன்னில் தாக்குப்பிடிக்க, விலையில் இந்த 'ஜம்ப்' அத்தியாவசியம் என்றாகிப் போகிறது ! 

அது மட்டுமன்றி, முன்னெல்லாம் தேவைக்கு அவ்வப்போது பேப்பர் வாங்குவது சுலபமாய் இருந்தது ; ஆனால் இன்றோ முன்கூட்டி கொள்முதல் செய்து பேப்பரை வாங்கி வைக்காவிட்டால், மாதா மாதம் ஒரு லிட்டர் ஜெலுசில் குடிக்க வேண்டிப் போகும் என்றாகி விட்டது ! ஆர்ட் பேப்பர் மாத்திரமன்றி சாதாத் தாள் ரகங்களும் அதே புளியன்கொம்பில் தான் குந்தியிருக்கின்றன என்பதால், நம்மிடம் 2024 துவக்கம் வரைக்கும் தேவையான சகல பேப்பர் ரகங்களும் கையிருப்பில் உள்ளன ! இந்த முதலீட்டுக்குமான பேங்க் வட்டி ஒரு திக்கில் ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கமோ கிட்டங்கியில் 'ஜாலிலோ ஜிம்கானா' என்று விசிலடித்து வரும் புத்தகக் கையிருப்புகளைச் சமாளிக்கவும் விலையேற்றம் எனும் கசப்பான மருந்தைக் குடிப்பதைத் தவிர்த்து வேறு மார்க்கமில்லை folks ! வெட்கத்தை விட்டு, ஒரு விஷயத்தைச் சொல்வதானால், இப்போதெல்லாம் மாதத்தில் நான்கில் மூன்று கதைகளை நான் மொழிபெயர்ப்பதெல்லாம் ஆர்வத்தில் என்று மட்டுமல்லாது, அதனிலாவது ரெண்டு காசை மிச்சம் பிடிக்க வழியிருக்குமா ? என்ற ஆதங்கத்திலும் தான் ! 

விலையேற்றத்தை மட்டுப்படுத்த முன்னாட்களின் பார்முலாவான "சைஸ் குறைப்பு" என்ற அஸ்திரத்தையும் கையில் எடுத்தாலென்ன ? என்ற மஹா சிந்தனையும் ஓடியது ! லக்கி லூக் சைசில் வெளிவரும் கதைகளை டெக்ஸ் வில்லர் சைசுக்கு மாற்றிடுவோமா ? என்று ஒரு 16 பக்கங்களை பிரிண்ட் செய்தே பார்த்தோம் ! ஆனால் ஆளாளுக்கு நாற்பதையும், ஐம்பதையும் தொட்டு நிற்கும் பொழுதுகளில், சின்ன சைசில், குட்டியான எழுத்துக்களுடனான வசனங்களை வாசிக்க வேண்டுமானால் புதுசாய் வாசன் eye care-க்கு விஜயம் செய்ய நேர்ந்திடக்கூடும் என்பது புரிந்தது ! So அந்தப் 16 பக்கங்களை கடாசி விட்டு, விலையேற்றம் எனும் தோட்டாவைப் பல்லில் பிடிக்கத் தயாராகி உங்கள் முன்நிற்கிறோம் !

ஒரேயடியாய் எல்லா இதழ்களுக்கும் விலையேற்றம் செய்திடாது, கொஞ்சமாய் balance செய்திடவும் முனைந்திருக்கிறேன் - மனசு கேட்காமல் ! So டபுள் ஆல்பமான தோர்கல் ரூ.250 விலையில் வரவுள்ள  அதே மூச்சில் டபுள் ஆல்பமான I.R.$ - ரூ.200 விலையிலேயே வந்திடவுள்ளது ! ரூ.125 விலையில் டிரெண்ட் தலைகாட்டும் அதே நொடியில் சோடா & ரிப்போர்ட்டர் ஜானி ரூ.100 விலைகளில் தான் வந்திடவுள்ளனர் ! ஆகையால் கொஞ்சமாய்ப் பாத்து குத்துங்க எஜமான் ! 

6.ஏண்டாப்பா தம்பி....அட்டவணையை விட, "அட்டவணைக்கு அப்பால்" அறிவிக்கப்பட்டிருக்கும் ஸ்பெஷல் இதழ்கள் செம ஆர்வத்தைக் கிளப்புதுகளே .....பேசாம அதுக்கு ஒரு சந்தாவைப் போட்டுப்புட்டா அதிலே மட்டுமே சவாரி பண்ணிடலாம்னு தோணுதே ?!

பண்டிகைகள் அடிக்கொரு தபா வந்தாக்கா, அத்தோட சுவாரஸ்யமும், கிக்கும் போயிடுமே guys ! வார நாட்களில் பருப்பையும், சாம்பாரையும், அவியலையும் அசை போட்டால் தானே ஞாயிறின் விருந்து ரசிக்கும் ? சிலுக்குவார்பட்டியோடும், சீரங்கப்பட்டினத்தோடும் மேட்ச் ஆடிட்டே இருந்திட்டு உலகக் கோப்பைக்குப் போனா தானே த்ரில் இருக்கும் ? அதை விட்டுப்புட்டு நெதத்துக்கும் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்களும், உலகக் கோப்பைகளும் அரங்கேறினால், ஆறே மாதத்தில் ஆளாளுக்கு ப்ளூ சட்டை மாறன்களாகி விராத் கோலியையுமே வெளுத்தெடுக்க ஆரம்பித்து விட மாட்டோமா ? அதே லாஜிக் தான் இந்த 'சிலபஸில் இல்லாத பாடங்களின்' பின்னணி மேஜிக் ! 

வாய்க்கும் சந்தர்ப்பங்களில் ; உங்களுக்கும் நோவுகளின்றி, எங்களுக்கும் பணி செய்திட சாத்தியமாகும் விதங்களில் இவற்றை சிறுகச் சிறுகக் களமிறக்குவோம் ! There will NOT be a timeframe linked to these ! புரிகிறது தான் - அடிக்கொரு தபா நான் அடிக்க உத்தேசிக்கும் குட்டிக்கரணங்களோடு குப்பை கொட்டுவது சுலபமே அல்ல தான் ; ஆனால் நம் சிறுவட்டப் பயணத்தின் flipside அதுவே ! 'ஆசை இருக்கும் அளவுகளுக்கு ஆற்றல்கள் லேது' எனும் போது இது போலான சமரசங்கள் தவிர்க்க இயலா சிரமங்களாகிப் போகின்றன ! தவிர எனக்குமே கழுத்தில் கத்தியை வைக்கும் tight அட்டவணைக்குள் குதித்துக் குதித்துக் கும்மியடிப்பதை விட, சற்றே flexible ஆன திட்டமிடலின் மத்தியில் பயணிப்பது கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொள்ளும் சலுகையினைத் தருகிறது !  ஆனி, முடிஞ்சு ஆவணி பொறந்தா மில்சே தாத்தாவைத் தொட்டுப்பிடிக்கும் வயதும் அடியேனுக்கு பொறந்திருக்கும் என்பதை கொஞ்சமே கொஞ்சமாய்க் கருத்தில் கொண்டாகவும் வேணுமில்லீங்களா ?

7. லார்கோ ?

புது ஆல்பத்தின் இரண்டாம் பாகமானது 2023 இறுதியில் தான் ரெடியாகிறதாம் ! So இரு பாகங்களும் இணைந்த ஆல்பம் 2024 -ல் !

8. வருஷத்துக்கு மொத்தமே 27 புக்ஸ் தானா ? ரெம்ப குறைச்சலா கீதே மன்னாரு ?

இப்போ பார்த்தீங்கன்னா 'தல' - பொஸ்தவம் 27 தான் ; ஆனா அதுக்குள்ளாற இருக்கது 37 தனித்தனிக் கதைங்க ! அப்பாலிக்கா SUPREME 60's அப்டின்னு ஒரு ஐட்டமும் குறுக்க-மறுக்க ஓடிக்கினே இருக்கும் - 5 மொரட்டு ஆல்பங்களோட ! ஒவ்வொண்ணிலேயும் பத்துக்கு கொறையாத கதைகள் கீது ! இதுவும் போக, இன்னாவோ 'சிலபஸிலிலேயோ, டவுன் பஸ்சிலேயோ' இல்லாத தடி தடி பொஸ்தவங்களும் உண்டுமாமே ? அப்டிங்கிறப்போ பயிக்க  ஒனக்கு நேரம் தான் வேணும் வாத்தியாரே !

9. பராகுடா மாதிரி ; பிஸ்டலுக்கு பிரியாவிடை மாதிரில்லாம் ஏதும் பெருசா, நீளமா கதைங்க காண்கலியே அப்பு ?

வருது....ஒரு செமத்தியான கடல்கொள்ளையார் தொடர் ரெடியாகிக்கினே வருது ! அதன் இறுதி பாகம் 2022-லேயே வந்திருக்க வேண்டியது ; but ஓவியர் "எனக்கொரு நெடும் விடுமுறை வேணும்பா !" என்றபடிக்கே 6 மாத பிரேக் எடுத்து விட்டார் ! So 2023-ன் மத்தியில் அது ரெடியாகி விடுமென்று நம்பலாம். அதன் பிற்பாடு பார்ட்டிகளை தமிழ் பேச வைத்திடலாம் !

And இன்னும் இரண்டு தெறிக்க விடும் வன்மேற்கின் நெடும் அதிரடிகளுக்கும் துண்டு விரித்து வைத்துள்ளோம் ! இரண்டிற்குமே 2023-ல் க்ளைமாக்ஸ் அத்தியாயங்கள் தயாராகிட வேண்டும் ! ரெடியான உடனே நம் கரைகளுக்குப் பயணம் மேற்கொண்டிடுவார்கள் ! 2 உத்திரவாத ஹிட்ஸ் ....for sure !!

10.கி.நா.க்கள் பூட்ட கேஸ் தானா ?

Not at all !! நடுவாக்கிலே ஏதேனுமொரு ஓய்வான தருணம் வாய்க்கும் போது, 2 மிரட்டலான புது கி.நா.க்களைப் பற்றிப் பேசியே தீரணும் ! இரண்டுமே dark தான் ; ஆனால் நிச்சயமாய் அழுகாச்சி ரகக் கதைகள் அல்ல ! இரண்டுமே சித்திர அதகளங்களில் மூச்சிரைக்கச் செய்யும் படைப்புகள் & இரண்டுமே ரொம்பச் சமீபமான படைப்புகள் ! ஒன்றின் கதைக்களம் நமக்குப் பரிச்சயமானதே - ஆனால் அதனில் கதையை நகற்றிடும் பாணி simply wow !! அதனை MAXI சைசில் முழுவண்ணத்தில் போடாங்காட்டி இந்த ஜென்மம் சாபல்யம் காணாது ; அப்படியோரு தெறிக்க விடும் சித்திர பாணி + கலரிங் !! இரண்டாவதன் களமோ முற்றிலும் புதுசு ; இதுவரைக்கும் நாம் அந்த டாபிக் பற்றிக் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டோம் ! இரண்டுக்குமான உரிமைகள் இந்த நவம்பர் இறுதிக்குள் or மிஞ்சிப் போனால் டிசம்பரில் மத்திக்குள் நமதாகி இருக்கும் ! ரெடியான பிற்பாடு ஓட்டைவாயை இன்னும் கொஞ்சம் விஸ்தீரணமாய்த் திறக்கிறேன் ! சரி தானுங்களா ? 

ரைட்டு....இதுக்கு மேலேயும் நான் இந்தப் பதிவை நீட்டித்தால் மதியம் நடக்கவுள்ள தென்னாப்பிரிக்காவுடனான மேட்ச் வரைக்கும், பொழுது ஓடியே போய்விடும் ! So நமது சிறு அணிக்குச் சாத்தியப்பட்டுள்ள ஒரு திட்டமிடலை உங்கள் முன்வைத்த திருப்தியில் இப்போதைக்குக் கிளம்புகிறேன் guys ! சர்வ நிச்சயமாய் இதனில் உங்களுக்குத் திருப்திகளும் இருக்கும் ; நெருடல்களும் இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகங்களே கிடையாது ! "ஆங்...ஆந்தையன் இதை இப்புடிப் பண்ணியிருக்கலாம் ; அதை அப்புடிப் பண்ணியிருக்கலாம் !" என்று உங்களுள் சிந்தைகள் ஓடிடக்கூடும் என்பதில் no secrets ! ஆனால் நமது ஒவ்வொரு தேர்வின் பின்னேயும், தேர்வின்மையின் பின்னேயும், ஒரு உருப்படியான காரணமில்லாது போகாதென்ற புரிதலுக்கு முன்கூட்டிய thanks guys !! உங்கள் மனம்கவர் நாயகனோ, நாயகியோ இந்த அட்டவணையினில் இடம்பிடித்திருக்கவில்லையெனில் வருத்தம் கொள்ளாதீர்கள் ப்ளீஸ் - இதோ திடுதிடுப்பென ராபின் உங்கள் முன்னே பிரசன்னமான பாணியில் யார்-எப்போது உட்புகுவார்கள் என்பது எனக்கே தெரியாது தான் ! So இல்லாதோரை எண்ணி விசனங்கள் கொண்டிடாது, இருப்போரைக் கொண்டாடி மகிழ்ந்திடுவோமே folks ? கடந்த 4.5 மாதங்களாய் வெவ்வேறு நிலைகளைக் கடந்து வந்துள்ள இந்த அட்டவணையானது, உங்களின் எதிர்பார்ப்புகளை 60% பூர்த்தி செய்திருந்தாலே - a job well done என்று எண்ணிக் கொள்வேன் ! அதற்கு மேலான மதிப்பெண்கள் கிட்டினால் அம்புட்டும் போனசே ! So நமக்குள்ள limitations-க்கு மத்தியினில் இயன்ற பல்டிகளை அடித்துப்  பார்க்க முயற்சித்திருக்கிறோம் என்ற சன்னமான நிறைவுடன் நடையைக் கட்டுகிறேன் ! புனித மனிடோ நம் அனைவருடனும் கனிவுடன் இருப்பாராக !! Bye all ! See you around ! Have a wonderful Sunday ! 

இனி ஆரம்பிக்கலாமுங்களா..? 😀😀😀 

And by the way : சந்தா லிஸ்டிங்ஸ் காலையில்  போடப்படும் ! 




Bye again !! And thank you too !! இந்த ரயில்வண்டியின் முழுமையையும் வாசிக்க நேரம் எடுத்துக் கொண்டதே ஒரு சாதனை என்பேன் ! 





சொல்லவும் வேணுமா - மீம்ஸ் யாரது கைவண்ணமென்று ?  😁😁😁

271 comments:

  1. @ ALL : நேற்றிரவின் அட்டவணைப் பதிவின் இன்னொரு வார்ப்பு guys ; முன்னூற்றுச் சொச்சம் பின்னூட்டங்களுக்குள் கபடி ஆடுவது யாருக்குமே சுலபமல்ல என்பதால் !

    அப்புறம் நேற்றைக்கு or இன்று அதிகாலையில் நீங்கள் பின்னூட்டமிட்டு அவை என் கண்ணில் பட்டிருக்கா பட்சத்தில், இங்கே மறுக்கா போட்டு விடுங்களேன் ப்ளீஸ் ?

    ReplyDelete
    Replies
    1. நல்ல முடிவு சார். நண்பர்களின் உற்சாகத்தில் ப்ளாக் நிரம்பி வழிகிறது 😇😁🤩🤩

      Delete
    2. நீங்களே சொல்லிடுங்க, எது எது கண்ணில் படவில்லைனு,
      ஏன்னா , நாங்க தூக்கி போட வசதியாய் இருக்கும்

      Delete
  2. வந்தனம் நண்பர்களே 🙏🙏

    ReplyDelete
  3. இதுக்கும் ரவுண்ட் பன்னு கிடைக்குங்களா?

    ReplyDelete
  4. அப்படின்னா எனக்கு 2 பன்னு 😋😋

    ReplyDelete
  5. மகிழ்ச்சியான நாள் சார்... நன்றிகள் பல... உங்களின் அடுத்த பதிவை எதிர்பார்த்து நாட்களை எண்ண ஆரம்பித்து விட்டேன்... ஆவலுடன் waiting...

    ReplyDelete
    Replies
    1. அலுத்துப்புடும் சார் - என்னோட one dimensional எழுத்துக்களை ஒரே வாரத்தில் இதுக்கு மேலாகவும் வாசித்தால் !

      Delete
    2. சார் இளவரசி பத்தி அடுத்த பதிவுல சொல்றேன்னீங்களே அதான்....

      Delete
    3. இந்த வாரத்தின் ஒரு நாளில் சார் !

      Delete
  6. ஒரே வாரத்தில் 2 தீபாவளி.
    மகிழ்ச்சி சார்.
    சென்ற வருடத்தை விட இந்த வருடம் கதை தேர்வுகள் மெருகேறியுள்ளது.
    குறை சொல்லவே முடியாத அளவுக்கு வாசகர்களின் எண்ணங்களை பகிர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் 💐 சார்.

    பதிவை படிக்க ¾ மணி நேரம் ஆயிற்று இரவு.
    மிகச்சிறந்த ஹீரோக்களின் கதை வரிசைகள்,
    ஸ்பெஷல் இதழ்கள்,
    தீபாவளி மலர்கள்,
    கோடை மலர்கள்,
    ஆன்லைன் ஸ்பெஷல்கள்,
    மறுபதிப்பு ஸ்பெஷல்,
    க்ளாசிக் ஸ்பெஷல்,
    விலையில்லா இதழ்கள்,
    குண்டு புக்ஸ்❤️❤️❤️
    அப்பப்ப்பப்ப்பபா....
    வருசத்துக்கு 27 புக்ஸ், அதும் மரண மாஸாக.
    படிக்க படிக்க மனசுக்குள் மத்தாப்பூ பூக்கும் பதிவு.

    அடுத்த வருட டாப் ஹீரோவே டெக்ஸ்தான்.
    எங்கும் டெக்ஸ் எதிலும் டெக்ஸ்✊.
    டெக்ஸ் 75 இதழை கொண்டாட வாசகர்கள் தயாராக உள்ள வேளையில்,
    இந்த குண்டு புக் அறிவிப்பு செம்ம அதிர்வெடி💥🔥💥🔥.

    முத்து காமிக்ஸின் க்ளாசிக் கதைகள் மறுபதிப்பாக வருவது மட்டற்ற மகிழ்ச்சி.
    ஸ்பைடரின் கொலைப்படையை 35 வருடங்களுக்கு பின் மீண்டும் காண்பது ஆனந்தமே மற்றும் சுஸ்கி விஸ்கி
    இரும்புக் மாயாவி ஆஹா 👌.

    விலையேற்றத்தைப்பற்றி நீங்க இவ்வளவு தூரம் சொல்ல வேண்டுமா சார்?.
    எந்த பொருளின் விலை குறைந்துள்ளது?.
    2 ரூபாய்க்கு விற்ற ஊறுகயே இப்ப 5/10 ரூபாய். பெட்ரோல்/கேஸ் விலைகள் எப்ப எப்ப விலை ஏறும் என்றே சொல்ல முடியாது.
    இதில் திரும்ப திரும்ப, "பேப்பர் விலை மட்டும் கம்மியா கிடைக்கும், காமிக்ஸ் விலை கம்மி பண்ணலாம்ல? " என அபத்தமாக கேள்வி கேட்பது முட்டாள்தனம். மற்ற எந்த காமிக்ஸ்சும் இந்த விலைக்கு தரவே முடியாது என்பதை உறுதியாக சொல்லலாம்.
    உங்கள் நியாயமான விலையேற்றத்தை கண்டிப்பாக வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் சார்.

    மகிழ்ச்சியான பதிவு. வாழ்த்துக்கள் 💐.

    ReplyDelete
  7. 2023 அட்டவணை :

    THAT ஹாப்பி அண்ணாச்சி moments :

    1.நெறய TEX .. கூடவே தலைவன் மெபைஸ்டோவும் ..

    2.modern stories like ஆல்பா, சிஸ்கோ ,டேங்கோ are retained ..

    SURPRISES:

    YOUNG TIGER, பௌன்சர் , மந்திர மண்டலம் ...

    ஏமாற்றங்கள்:

    1.தோர்கள் - only double album..

    2. பாண்ட் 2.0 இல்லாதது .. வராததற்குரிய விளக்கமும் ஏற்கக்கூடியதே .. hope ur negotiations comes good SIR ..NEED A WELL KNOWN HERO IN OUR LINE UP TO ATTRACT NEW READERS ..

    3.மார்ட்டின் மற்றும் டெட் வுட் டிக் இல்லாதது ..

    எதிர்பார்ப்புகள்:

    கி .நா ,புது வரவுகள் ...

    FOR VARIANT I CHOOSE "KIT" COVER AND FOR "SSS" "MAK AND JAK" FOR LAST SPOT

    OVERALL திருப்தி 80% ...

    ReplyDelete
    Replies
    1. விற்பனை அளவுகோல்கள் >>>> வாசக ரசனைகள் பெரும்பான்மை >>>> ஒரு நாயக / நாயகியின் வெற்றியையோ, தோல்வியையே தீர்மானிக்கின்றது ! தோர்கல் இரு அளவீடுகளிலும் மித performer !

      பொதுவாய் ரெகுலர் இதழ்களில் சுமாராயப் போகும் புக்ஸ் கூட, ஹார்ட்கவர் format-ல் வெளியாகும் போது விற்பனையில் சாதிப்பது உண்டு ! "கடவுளரின் தேசம்" நான்கோ-ஐந்தோ ஆண்டுகளுக்கு முன்பான hardcover ரிலீஸ் ; இன்னமும் கணிச ஸ்டாக்கில் !

      இப்போது சொல்லுங்களேன் நண்பரே - டபுள் ஆல்பத்துக்குக் கூடுதலாய் ஸ்லாட் ஒதுக்கிட சாத்தியப்பட்டிருக்குமா எனக்கு ?

      Delete
    2. I understand and agree with u sir .. But that "மூளைக்கு புரியுது ஆனா மனசுக்கு தெரியல"moment .. Because Thorgal series deserve more appreciation than it received ..

      Delete
    3. தோர்கல் இல்லாதது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் காமிக் உலகத்துக்கு இப்பதான் புதுசு . எனக்கு புடிச்ச comicsணா அது தோர்கல் மட்டும்தான். என்னோட friendsகும்  தோர்கல்தான்  புடிச்சிருந்து நான் என்ன நினைக்கிறேன்னா தோர்கலோட சரிவுக்கு காரணம் தோர்கல் அட்டைப்படம் என்று நினைக்கிறேன்   அதனால தான் நிறைய பேர் வாங்கல என்று நினைக்கிறேன் முதல்ல தோர்கல் புக்கு முதலில் வாங்கியது எப்படி  என்றால்  தோர்களல் புக் எனக்கு முதல்ல பார்க்கும்போது அட்டைப் பார்த்த உடனே இது என்ன புக் என்று தான் நினைச்சேன் ஆனா தோர்கல் பெயரை netla சர்ச் பண்ணி அது நல்ல புக் அப்படின்னு சொல்லிட்டு பார்த்த பிறகு தான் வாங்கினேன் ஆனா வாங்குன பிறகு எனக்கு ஒரு புக் வாங்கின உடனே எல்லா புக்கும் வாங்கணும் என்று  தோனிச்சு எல்லா புக்கும் வாங்கிட்டேன் அடுத்த தோர்களல் பாகத்துக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்
      😔😭😭

      Delete
  8. ஒரு பதிவு இரண்டு முறை வந்தது வரலாற்றில் இதுதான் முதல் முறை

    ReplyDelete
    Replies
    1. நாம என்ன தஞ்சைப் பெரிய கோயிலா கட்டிப்புட்டோம் சத்யா - வரலாறு, பூகோளம் என்று பேசிட ? நாமாய் போட்டுக்கொண்டு ஒரு நூறு பேருக்குள் ரசித்து சிலாகித்துக் கொள்கிறோம் ! அவ்வளவு தானே ?

      Delete
    2. இந்த நூறு பேருக்காக வருடம்
      ( வாழ்க்கை)முழுவதும் காமிக்ஸ் தேடலே வாழ்க்கை என முழ்கி முத்தெடுக்கும் நீங்களும் எட்ட முடியாத உயரமே

      Delete
  9. ஆங், தோர்கல் ஸ்பெசல் குண்டு புக் முன்பதிவிலாவது வேண்டும்.
    ஒரு நல்ல அருமையான தொடர் பெரும்பான்மையான ஆதரவு பெறாதது வருத்தம் & ஆச்சரியம் தான்

    ReplyDelete
    Replies
    1. தோர்கலை மட்டும் ஒரு குருதையிலே குந்த வைச்சு, வான் ஹாம் சாகசம் செய்ய அனுப்பியிருக்கணும் சார் - நம்மவர்கள் இன்னும் செம வாஞ்சையாய் அரவணைத்திருப்பார்கள் !

      Delete
  10. வரலாற்றுச் சாதனை சார்.

    ReplyDelete
  11. விஜயன் சார்,
    தோர்கல் ரசிகர்கள் கவலை பட வேண்டாம் என்று சொன்ன பிறகு நிம்மதியாக உள்ளது சார், எப்படியும் ஏதாவது ரூபத்தில் குண்டு புத்தகமாக வர போவது உறுதியாகி விட்டது! நன்றி! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அந்த அறிவிப்புக்கு வெயிட்டிங். யங் தோர்கல்????

      Delete
    2. ஊஹூம்...பெரியவரே கால் ஊன்றாத போது சின்னவரையும் சந்தைக்கு அவசரப்பட்டுக் கொண்டு வருவானேன் சார் ? அதற்கு நேரமுள்ளது இன்னமும் !

      Delete
  12. சார் அட்டகாசமான அட்டவணை. எனது மதிப்பெண்கள் 100/100. எல்லா பாக்ஸையும் tick செய்து விட்டீர்கள்.

    எனக்கு பிடித்த கிராஃபிக் நாவல், தோர்கல், சோடா என எல்லாமே இருக்கிறது.. ஒரு சில ஹீரோக்கள் இல்லை என்பதே நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிந்தது. அப்படியே பதிவில் involve ஆகி விட்டேன்.

    எந்த நெகடிவ் கமெண்ட் இல்லை என்னிடம்.

    முதல் தவணை நேற்று இரவே கட்டி விட்டேன்.

    2022ஐ விடவே 2023 பட்டயை கிளப்பும் என்று எதிர்பார்க்கிறேன்.

    ரூட் லிஸ்ட் 66 மட்டும் வாய்ப்பு இருந்தால் உள்ளே கொண்டு வாருங்கள் சார்.

    நண்பர் ஷெரீஃப் சொன்னது போல சந்தாவை விட எங்கே? எப்போது? இன்னும் ஆர்வத்தை கிளப்புகிறது.

    நீங்கள் அறிவித்தது 6 புத்தகங்கள், இரண்டு மாத இடைவெளியில் ஒன்றோன்றாக வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

    என்றும் உங்களுடன் தொடர்வோம். மிக்க மிக்க நன்றிகள் சார்

    ReplyDelete
    Replies
    1. "எங்கே ? எப்போது ?" இதழ்களை எந்த வரிசையில் வெளியிடுவதென்று தீர்மானிக்கப் போவதே நண்பர்கள் தான் சார் ! சந்தா சேகரிப்புகள் பூர்த்தி கண்டான பின்னே அவற்றுள் படிப்படியாய் நுழையலாம் !

      Delete
    2. அப்போ முதலில் Big Boys Special

      Delete
    3. மைக் ஹேமர், IR$, நெவாடா மற்றும் Wild West புது அறிமுகங்கள் எல்லாமே தூள். அதுவும் I'm very much impressed With நெவாடா.

      ஒரு suggestion சார். Straw Poll நடத்தி விடலாம் சார் The SSS நான்காவது கதைக்கு.

      Delete
    4. நெனச்சேன் !! ஹி...ஹி...!

      Delete
    5. // எங்கே ? எப்போது ?" இதழ்களை எந்த வரிசையில் வெளியிடுவதென்று தீர்மானிக்கப் போவதே நண்பர்கள் தான் சார் //
      ஒரு மாசம் S'60,அடுத்த மாசம் எங்கெ,எப்போது இதழ்னு போட்டுத் தாக்குங்க சார்,மற்றபடி எல்லாம் வரப்போறதுதான்,அதனால் எப்ப வந்தாலும் மகிழ்ச்சி...

      Delete
  13. சார், ₹5800 & ₹5400 என இரண்டு சந்தாக்களுக்கும் இலவச இதழ்கள் உண்டா?

    ReplyDelete
  14. சுவாரஸ்யமான கதை தேர்வுகள். இதற்கான தங்களது தேடுதலுக்கான உழைப்பை நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது! 🙏

    ReplyDelete
    Replies
    1. நேற்றிரவும், இன்று காலையும் காணக்கிடைத்த இத்தகைய அன்பினை ஈட்ட இது கூடச் செய்யாமல் போனால் எப்படி சார் ?

      And இங்கு நீங்கள் பார்த்திருப்பது பனித்திட்டின் முனை மாத்திரமே ; பாராத ஏகம் நீர்ப்பரப்புக்கு அடியே கீது சார் !

      Delete
  15. உள்ளேன் ஐயா...!!
    (Mirror comment..😊)

    ReplyDelete
    Replies
    1. பன் சாப்பிடறேன் சார் ; கண்ணாடியிலே பாத்துக்கலாம் moment !

      Delete
  16. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  17. ரின் டின் கேன் ஜனவரியில் கிடைக்குமா சார். குழந்தைகள் எழுப்பிய கேள்வி இது. ஞானசூன்யம் மடச்சாம்ரானியை காண ஆவலுடன் உள்ளார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரின் டின் கேன் வரவிருப்பது SSS இதழினில் ! And அந்த SSS வரவிருப்பது முன்பதிவுகளுக்கான "எங்கே..? எப்போது" பிரிவில் !

      சந்தாச் சேர்க்கையின் மத்தியில் - "இதுக்கு தனியா முன்பதிவு பண்ணுங்க மக்களே !" என்று சொல்லவாவது முடியுமா சார் ?

      Delete
    2. ஓகே சார். அப்ப சென்னை புத்தகக் திருவிழாவில் வெளியிட விரைவில் முன்பதிவை ஆரம்பியுங்கள் சார் :-)

      Delete
    3. உனக்கும் வேணாம்..எனக்கும் வேணாம்....ஆறு ரூபாய்ய் moment

      Delete
  18. சார், அந்த மேற்கே போ மாவீரா... !எப்போது?

    டெக்ஸின் மந்திர மண்டலம் + நள்ளிரவு வேட்டை இணைந்து வந்தால் சிறப்பு சார்.

    ReplyDelete
    Replies
    1. மேற்கே போ மாவீராவும் 2023-க்குள் புகுத்திட முயற்சிப்போம் சார் ; கைவசம் வெயிட்டிங்கில் உள்ள ஆல்பங்களில் அதுவும் ஒன்று !

      Delete
  19. இந்த வருடம் போல அடுத்த வருடமும் அறிவிக்காத பல கதைகள் எதிர்பாராத நேரத்தில் வந்து மகிழ்ச்சி கடலில் முழ்கடிக்க நீங்கள் ஒரு முடிவுடன் உள்ளது போல் தெரிகிறது. நான் happy:-)

    ReplyDelete
  20. தரைக்கு வந்த வானம் சுவாரஸ்யத்தை கூட்ட....என்னைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் ஜானதன் ஃப்ளை மர்மம் என்றதுமே துள்ளிக் குதிக்க என்னென்ன காவியமெல்லாம் வருமோ என எண்ண ஒரு கனம் பழனிவேல் வந்து நிக்க நீங்களும் மனம் திறக்க....என்னவோ தாண்டிச் செல்கிறோம் கலங்கி..அட்டகாசம் சார்..மார்த்தா , ஆலன் எனதான் ஆசைப் பட்டேன்.ஆனா நினைத்து பாக்க இயலா அட்டகாச வரவு....

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே அந்த 300 ரூபாய் தீபாவளி மலர் மேட்டரை சரியாய் கவனிக்கணும்ங்கிறேன் - என்னங்க இது சோதனை - 75ம் ஆண்டும் அதுவுமா - 750 ரூவா இருக்க வேணாமா ?

      Delete
    2. ஆகா....ஆகாகா......இது வேறயா சார் ?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. அது கூடுதலாக தீபாவளி அதிரடி சரவெடி 2 வரும்னு பட்சி சொல்லுது சார் 🤩😇

      Delete
  21. சிறப்பான அட்டவணை சார்,
    உண்மையைச் சொன்னால்,ஆகச் சிறந்த மெனக்கெடல்,
    எனது சிஸ்டம் அப்டேட்டில் உள்ளதால் நிறைய கமெண்ட்ஸை தமிழில் விரைந்து பதிய இயலவில்லை, சிஸ்டத்தில் பதிவை படித்து விட்டு போனில் பதிகிறேன்...
    அதனால்தான் நிறைய பதில்கள் மண்டைக்குள் சுற்றிக் கொண்டு இருப்பினும்,பதிலிட இயலவில்லை, போனில் ஒரு பதிலை இட்டுவிட்டு அடுத்த பதிலுக்கு போனால் முந்தைய பதில் காணாமல் போகிறது,எல்லாத்துக்கும் சேர்த்து ஒரே பதில் சொல்லனும் போல,வேலையை முடிச்சுட்டு வந்து பார்த்தா அதுக்குள்ள அடுத்த பதிவு,பதிவை படிச்சி முடிக்க 46 நிமிடங்கள் ஆச்சு சார்,இந்த ஆண்டின் மிகச் சிறந்த பதிவு இது,நவரசங்களும் கொட்டிக் கிடக்கின்றன பதிவில்,பெரும்பாலான இதழ்கள் பிடித்தவையே,இதை டைப் செய்து சரமாலையாய் கோர்த்து எடுத்து அளித்த தங்களின் மெனக்கெடலுக்கும்,உழைப்புக்கும் இதயமார்ந்த நன்றிகள் சார்,அட்டவணை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,குறையென்று பெரிதாய் எதுவும் இல்லை,அடுத்த அறிவிப்பில் எங்கே எப்போது விளம்பரங்கள் இன்னமும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது,மேலோட்டமாக பார்க்கையில் இதழ்கள் குறைவாக தோன்றினாலும்,கதைகள் அதிகம்,கெட்டி அட்டையில் பல இதழ்கள் வருவது மகிழ்ச்சி, மார்ட்டின் இல்லாதது கொஞ்சம் வருத்தமே,ரி.ஜானி ஒன்றிலாவது வந்தது மகிழ்ச்சி,புது வரவுகள் அறிவிப்பு சார்ந்த முடிவுகள் துணிச்சலானது,அவை கலக்கும் என்று நம்புகிறேன், டெக்ஸ் அறிவிப்புகள் நிறைவு,இடைச் செருகலாய் அவ்வப்போது டெக்ஸ் நுழைவார் என்று நம்புகிறேன்,இளம் டெக்ஸ் குண்டு புக்,ஹார்ட் பைண்டிங் அறிவிப்பு நன்று,அடுத்தடுத்த வருடங்களில் இதே பாணியை தொடரவும்...அட்டவணை அறிவிப்பை பார்த்தவுடன் இரண்டு சந்தா கட்டலாமோ என்று நினைக்க வைக்குமளவு இருந்தது சார்,கார்ட்டூன் அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிக்கிறது,கார்ட்டூன் டிரிபிள் எஸ் இதழில் கடைசி இதழாய் மதியில்லா மந்திரி இடம் பிடிப்பின் மகிழ்வேன்,டெக்ஸ் ஸ்பெசல்-4 இல் மந்திர மண்டலம் வருவது மகிழ்ச்சி, மறுபதிப்பில் நார்மனைத் தவிர மற்றவை இன்னும் படிக்காதவை,நார்மனே கூட காமிக்ஸ் படிக்க ஆரம்பித்த நாட்களில் முதலில் படித்ததாய் நினைவு, ஏதோ பழைய புத்தக கடையில் பாதி புக் இல்லாமல் துண்டாய் கிடைத்த இதழை வாசித்த நினைவுள்ளது,ஸ்பைடரின் கொலைப் படை எல்லாம் கண்ணில் கூட பார்த்ததில்லை,இதே போல ஒரு நாளில் மறுபதிப்பில் வண்ணத்தில் பாட்டில் பூதமும் வந்தாம் மகிழ்வேன்...

    ReplyDelete
    Replies
    1. No worries sir ; இடைவெளிகளின்றி பின்னூட்டம் ஏக் தம்மாய்த் தோன்றுவதைத் தாண்டி ஏதும் சிக்கல்களில்லை !

      Delete
  22. வேறு ஏதேனும் தோன்றினால் திரும்பவும் டைப்புகிறேன்,எழுத்துப் பிழைகள் இருப்பின் மன்னிச்சூ...

    ReplyDelete
  23. இந்த அறிவிப்பில் எனக்கு மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்திய கதை என்றால் அது தரைக்கு வந்த வானம் தான்.

    ReplyDelete
  24. அய்யய்யோ..
    பழைய பதிவுகள் எதுவுமே காட்ட மாட்டேங்குதே..??

    ReplyDelete
    Replies
    1. இதனை கிளிக் பண்ணுங்கள் குணா https://lion-muthucomics.blogspot.com/

      Delete
  25. கொலைகார குள்ளநரி எனது ஏழு வயதில் வாங்கிய முதல் காமிக்ஸ்.80-82க்குள் வந்த்து என்று நினைக்கிறேன். கொஞ்சம் டாக்டர் நோ படத்தின் பாதிப்பில் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் வந்த மாயாவி கதை.மறுபதிப்பு வராத கதை,ஒற்றைக்கண் மர்மமும் இதுவரை மறு பதிப்பு வரை. இளம் வயது நினைவுகள்..

    ReplyDelete
    Replies
    1. ஒற்றைக்கண் மர்மமும் சீக்கிரத்தில் முயற்சிப்போம் சார் !

      Delete
    2. // ஒற்றைக்கண் மர்மமும் சீக்கிரத்தில் முயற்சிப்போம் // ஆகா ஆகா ஆகா ஆகா

      Delete
    3. //ஒற்றைக்கண் மர்மமும் சீக்கிரத்தில் முயற்சிப்போம் சார் !//

      வெகுநாள் ஆவல்!

      நிறைவேறினால் மிகுந்த மகிழ்ச்சி!

      Delete
    4. //ஒற்றைக்கண் மர்மமும் சீக்கிரத்தில் முயற்சிப்போம் சார் !//
      சூப்பர்

      Delete
  26. விடியறதுக்குள்ள லோட் மோர் ஆனது இந்த பதிவாத்தான் இருக்கும்..
    அதுக்குள்ள 296 கமெண்ட்டானு வாய பொளந்துட்டேன்

    ReplyDelete
  27. அந்த எங்கே? எப்போது? மட்டும் பாத்துகிட்டே இருக்கலாம்னு தோணுது

    ReplyDelete
  28. 7.7 am க்கு ஆரம்பிச்சு இமேஜ் எல்லாம் டவுண்லோடு பண்ணி பதிவ வாசிச்சு முடிச்ச நேரம் 7.44 am

    ReplyDelete
  29. சொக்கா..
    சொக்கா..
    கொலைப்படை அதுவும் அதே மாதிரி ரெண்டு கலர்ல..
    அதுவும் அதே மாதிரி பெரிய சைசுல..
    அடங் கொய்யால..
    நம்ம நார்மன் பயலும் வந்துட்டான்..
    கூடவே மாயாவி மாமா வேற..
    அதுவும் ஹார்டு பவுண்டுல..

    பெருமாளே..
    பெருமாளே..
    நேக்கு என்னென்னமோ பண்றதே..

    ஈஸ்வரா..
    இந்தப்பக்கம் பாத்தா மந்திர மண்டலம்..
    மரண நடை..
    அய்யய்யோ.
    எனக்கு ஒரு மாதிரி வருதே..
    ஒடம்பெல்லாம் ஜிவ்வுன்னு இருக்கே..
    வேர்த்து வேர்த்து கொட்டுதே..
    கண்ணுல ஜலம் வருதுடா அம்பி..
    அபிஸ்டு..
    ஆனந்தத்துல வருதுடா..
    என்ன பண்ணுவேன்..
    என்ன பண்ணுவேன்..
    சொக்கா..
    சொக்கா...

    ReplyDelete
  30. அப்புறம் அந்த SSS ல மதியில்லா மந்திரியார சேத்துக்கோங்க சாரே..
    ரொம்ப வருசம் ஆச்சு..

    ReplyDelete
  31. அப்பறம் சொல்ல மறந்துட்டேன்..
    சுஸ்கி விஸ்கி க்கு ஜே!

    ReplyDelete
  32. கொலைகார குள்ளநரி நான் படிக்காத மாயாவி கதை வருவது சந்தோஷத்தை தருகிறது. நன்றி விஜயன் சார்.

    ReplyDelete
  33. அதிரடியான தலைப்புகள்..
    தலைப்புகள் யோசனை பண்ணி வக்கறதுக்கே ஒரு மாசம் ஆகியிருக்கும் போல..

    யப்பா..சாமி..
    கிரேட் சார்..

    ReplyDelete
    Replies
    1. நம்பினால் நம்புங்கள் சார் - ஒட்டு மொத்த 27 ரெகுலர் இதழுக்கும் மொத்தமாய் ஒரு மணி நேரம் எடுத்திராது பெயர்கள் வைக்க ! இந்தவாட்டி ஒரிஜினல்களின் பெயர்களிலேயே நமக்கான பெயர்கள் பொதிந்திருக்க, எனக்கு ரொம்பத் தடுமாறவில்லை !

      Delete
    2. ட்ரெண்ட் இதழுக்கு மட்டும் தலைப்பு கொஞ்சம் பொருந்தாது போல் தோன்றுகிறது,மற்ற தலைப்புகள் ஓகே...
      பனிவனம் சார்ந்த தலைப்புகள் அடிக்கடி தென்படுகின்றன...
      கனடா எபெக்டோ ?!
      அதே போல் கைதியாய் கார்சன் தலைப்பு கூட ஏற்கனவே ஒரு மினி டெக்ஸ் இதழுக்கு வைத்த தலைப்பாய் தோன்றுகிறது, ஆனால் அந்த மினி இதழ் வந்ததான்னு தெரியலை...

      Delete
    3. டிரெண்ட் பணியாற்றுவதே பனிவனங்களில் தானே சார் - what better name for his farewell ?

      Delete
    4. The Bomp னு ஒரு புக்ஸை பத்தி முன்பு சொல்லி இருந்திங்களே சார்,அதைப் பற்றி தகவல் எதுவும் இல்லையே,2023 இல் இருக்கும் இட நெருக்கடியில் இப்போதைக்கு வாய்ப்பு இல்லையோ ?!
      தோர்கல் சர்ப்ரைஸ் இருக்கும்னு சொல்லி இருப்பது மகிழ்ச்சி சார்...

      Delete
    5. டெக்ஸ் & மெபிஸ்டோ கூட்டணி மறுவருகை மகிழ்ச்சி அளிக்கிறது...

      Delete
  34. @ ALL : சந்தாக்களுக்கு ஆன்லைன் லிஸ்டிங் போட்டாச்சு :

    https://lion-muthucomics.com/latest-releases/1037-2023-santha-ulagam-suttrum-vaalibar-tamilnadu.html

    ReplyDelete
  35. அட்டவணையில் அறிவித்தது போக ஸ்பெஷல் புத்தகங்களாக அதிகமான இளம் டெக்ஸ், இருந்தால் அண்டர்டேக்கர் , லார்கோ ,வன்மேற்கின் புது நாயகர்கள் ஆகியோரை களம் இறக்கினால் ஒரே குஷி தான். தற்போது இருக்கிற அட்டவணையில் புத்தகங்கள் குறைவாக இருந்தாலும் திருப்தி அளிக்க கூடியதாகவே இருக்கிறது. நல்ல வேளை, ரீபிரிண்ட் என்பது தனி சந்தா தடமாக இருந்து வருவது.
    வரும் ஆண்டில் நமது ஆசிரியர் குறைந்தபட்சம் 50 புத்தகங்களையாவது தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஹோட்டலில் முதல் தம்மில் போட்ட பிரியாணி சீக்கிரமே தீர்ந்து விட்டால், சூட்டோடு சூடாய் அடுத்த தேக்ஸாவை ரெடி பண்ணுவார்கள் அல்லவா சார் ? அதே போலவே தான் இக்கடயும் ! அறிவிக்கப்பட்ட இதழ்கள் பரபரப்பாய் போணியாகினால், பின்னேயே பீரோ நாயகர்கள் வரிசை கட்டிடுவார்கள் !

      இங்கே பந்து இருக்கப் போவது முழுக்கவே உங்கள் தரப்பிலேயே சார் !

      Delete
  36. 30 நிமிடம் ஆச்சு... வேகமா படிச்சு முடிக்க.

    ReplyDelete
  37. சார், 2023 க்கான அட்டவணை நன்றாக உள்ளது . அமெரிக்கன் mystery சம்பவங்கள் பற்றி ஏதேனும் காமிக்ஸ்
    வெளியாகி இருந்தால் அது ஒரு different genre ஆக இருக்கும். tiger கதைகள் ஏற்கனவே கிடப்பில் உள்ள young
    blueberry கதைகள் தானா ??

    ReplyDelete
    Replies
    1. டைகர் தொடரில் எஞ்சியுள்ள கதைகள் அவை மாத்திரமே சார் !

      Delete
  38. Main matterஐ படிக்க 2நிமிடம் போதும் இவ்வளவு வழவழன்னு எழுத வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. அது வழ வழ இல்லை நண்பரே..வள வள.தமிழ் கற்கவும் பொறுமை இல்லை போலும்.அதான் இப்படி

      அப்புறம் சீக்கிரம் படிச்சிட்டு போய் நாஸா லா ராக்கெட்டா விடவா போறீங்க? அந்த முக்குல இருக்க கடைக்கு போக போறீங்க. போங்க பாஸு. கஷ்டப்பட்டு எழுதிருக்கார். பொறுமையா படிங்க.

      Delete
    2. சரிங்க சார் ; அடுத்த அட்டவணையினை Morse Code-ல் எழுத முனையும் போது மறக்காமல் உங்களைத் தேடிப்பிடித்து வழிமுறையினை கேட்டுக் கொள்கிறேன் !

      Delete
    3. சார் அவருக்கு Morse Code தெரியுமா என கேட்டு அதன் பிறகு எழுதுங்கள்.

      அப்புறம் எனக்கு நீங்கள் Morse Code பதிவிட்டால் படிக்க முடியாது. எனவே எனக்கு புரிகிற மாதிரியும் கொஞ்சம் எழுதுங்கள் சார்.

      Delete
  39. 2023 இல் வெளியாக இருக்கும் மோட்டார் சைக்கிள் கதை இப்போதே ஆர்வத்தை தூண்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆண்டின் முதல் பாதியிலேயே அதைக் கண்ணில்க்காட்ட விழைவேன் சார் !

      Delete
  40. பேசாம நம்ம இளவரசிய 60' , 70' வரிசையில சேர்த்து மேக்சி சைசுல ஒரு எட்டு கதைய செலக்ட் பண்ணி இளவரசி ஸ்பெஷல்~01 அப்டீன்னு போடுங்க..
    முன் பதிவுகளுக்கு மாத்திரம்னு ..

    எவ்வளவு சந்தாக்கள் சேருகிறதோ அதற்குத் தகுந்தாற் போல் கையைக் கடிக்காதவாறு விலை நிர்ணயம் செய்யலாம்..

    அடியேனின் மேலான யோசனை மட்டுமே இது..!!!

    ReplyDelete
    Replies
    1. மொழிபெயர்ப்பாளரை ICU-வில் தான் சேர்த்தாகணும் சார் !!

      Delete
    2. அதி தீவிர ரசிகர் ஆரவாரமாக மொழிபெயர்ப்பு செய்து தருவாரே சார்.

      Delete
    3. இன்னும் ஸ்பைடரிடம் வாங்கிய மொத்துக்களுக்கே மாலிஷ் போட்டு மாளலை எனும் போது அடுத்ததுக்குள் கோர்த்து விடறீங்களே சாமி ?!

      Delete
  41. டெக்ஸ் சுப்ரீம் ஸ்பெசல் அருமை சார்....700 பக்கம் கூடுதலாக 50 பக்கம் போட்டா 75 ஆண்டு ஸ்பெசலாகி இருக்குமே..,.

    அந்த கடைசி அர்ஜெண்டினா கதை சேகுவேராவுடனான்னு பட்சி கேக்குதே....

    குண்டுக் கதைகள் தீபாவளி மலர் செம....ஆச்சரியம் இது வரை படித்தும் சாகோரை நினைக்கல...ஞாபக மறதியா....

    குண்டூஸ் ஸ்பெசல்னாலநமக்கு பரகுடா....இப....பிஸ்டல் பிரியா விடை...கென்யா....போல தனிக் கதைகள்தான் வேனும்....

    ஆனா இதக் கூட நினைக்கத் தோணலை....கடல் கொள்ளை கேட்டு பாடனும்னு நெனச்சேன்....பாடாமலேயே கடல் கொள்ளை அறிவிப்பு அசத்த...
    நமீபா இவையெல்லாம் ஸ்பெஷலா வரும் போது பயமென்ன..

    மாயனோடு மோதல் அருமைன்னாலும் அந்த 500பக்க மெபிஸ்டோ வேணும் மாயாலோகத்தில்.....

    ReplyDelete
  42. Good afternoon Vijayan Sir,
    I have just sent to you Rs.5800 for Santha 2023
    Tks & Regards
    S.Gopinath, Chennai.

    ReplyDelete
  43. பௌன்சர்....தளபதி....கோடை மலர் குண்டுகள் அருமை....பௌன்சருக்கு50_50.... கதை வரட்டும் பார்ப்போம் மார்க் கூடுமான்னு

    ReplyDelete
  44. எங்கே எப்போது - எங்கேயும் எப்போதும் காமிக்ஸூ சந்தோஷம்:-)

    ReplyDelete
  45. புது வரவுகள் ஐஆர்எஸ்....நெவாடா....மைக் மூவரும் எதிர் பார்ப்பதை ஏகத்துக்கும் எகிறச் செய்ய.....அதிலும் நெவாடா குதிரைக்கு பதிலாய் பைக் அசத்த....லார்கோ டைப் நாயகர்..ராஜேஷ் குமார்..என கதைகள் அருமை

    ReplyDelete
    Replies
    1. சோடாவா ...ஜானியா....xxxxx....இன்று கேட்டா மூனாவதுக்கே எனதோட்டு ....ஏமாந்துட்டமான்னு நெனச்சா.....நீங்க ஏமாத்திட மாட்டீங்களே ஸ்பெசல் வெளியீடுகள் வாயிலாய் என புத்தவிழா வாயில்களை நோக்கி

      Delete
  46. @ 30.10.2022 at 0.59 க்கு போட்ட பதிவு..

    Edi Sir..🙏

    முழுசா பதிவு படிச்சு முடிச்சு பரவச நிலையிலே இருக்கேன்..😍

    (ரசிச்சு படிச்சு முடிக்கவே 50 நிமிசம் ஆகியிருக்குன்னா.
    எழுத எம்புட்டு நேரம் ஆகியிருக்கும்..👍

    You are really great Edi Sir..💋👄)
    😍😘💐💐♥💛💙💚💜❤

    அறிவிப்புகள் அத்தனையும் மலைக்க வைக்குது.. ✨🌟⭐💐🌸

    😃நமீபியா வர்லியேன்னு லைட்டா ஒரு ஆதங்கம்.. அம்புட்டுதான்..🌺

    மொத்தத்தில Me ஹேப்பி அண்ணாச்சி ..😃😀😍😘

    100/100..😍👍👍

    ReplyDelete
    Replies
    1. "நமீதா வரலியேன்னு வருத்தம்"ன்னு படிச்சு வைச்சேன் சார் - அவசரத்தில் !!

      Delete
    2. எடிட்டர் சார் ஹிஹிஹி

      Delete
  47. 1 மணிநேரம் 15 நிமிடங்கள்...!

    ReplyDelete
    Replies
    1. பொறுமையின் சிகரம் சார் !

      Delete
    2. ரின்டின்கேன், சுஸ்கிவிஸ்கி

      டைகர் சூப்பர் சூப்பர்

      பிக்பாஸ் கமலைப் போல சூப்பர் தீர்ப்பு சார்...!

      Delete
  48. நேற்றைய பதிவினை படிக்க 20 நிமிடம் ஆகியிருக்குமோ, என்னமோ தெர்ல... ஆனா blog விட்டு வெளியே புக்ஸ் பிளஸ் 60 நிமிடங்கள் எடுத்து கொண்டது...இப்போது ஒருவாரமாக இரவில் தூங்கிட முடிகிறது என்பதால் நேற்று தூக்கத்தை தாண்டி காத்திருந்த பதிவு என சொல்லலாம்... தயவு செய்து ஆர்ச்சியை எப்படியாவது பிக் பாய்ஸ் ஸ்பெசலில் இணைத்திட முயற்சி செய்யுங்கள் சார், ப்ளீஸ்ஸ்... இரும்புக்கைகள், இரும்பு இதய தானைத்தலைவன் கூட இரும்பு மனிதன் நல்ல காம்பினேஷன் தானே.... மறுபதிப்பாய் இருந்தாலும் நன்று தான்.

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் இன்னொரு சந்தர்ப்பத்தில், இரட்டை வேட்டையர், ஜான் மாஸ்டர், அதிரடிப்படை, மிஸ்டர் ஜெட் இதே போன்று பெத்த சைசில் வெளியிட ஆவண செய்யுங்கள் சார்.

      Delete
    2. ஆர்ச்சியின் இரும்பு மனிதன் இதோ போல ஒரு ஸ்பெஷல் வராமல் போகுமோ! ஆசிரியரின் மனதில் அடுத்து விழுந்திருக்கும் துண்டு ஆர்ச்சியே! ஆர்ச்சியே! ஆர்ச்சியே!

      Delete
  49. தோர்கள் எனக்கு மிக பிடித்த கதை தாங்கி.... வழக்கம் போல இரு கதைகள் எனும் போது ஏமாற்றமில்லை..ஆனா பத்து பாகம் ஒட்டுக் கான்னு பல்லடத்லாருக்கு நீங்க சொன்ன போது வானத்தில் எனது கால்கள்

    ReplyDelete
    Replies
    1. பத்து தானே எனக்கு 20என்று கேட்டதே?

      Delete
  50. @Edi Sir..😍

    The சிரிப்பே சிறப்பு ஸ்பெஷல் (SSS)..

    My vote for *மேக்&ஜாக்*..😍😘😃👍

    ReplyDelete
  51. ப்ளூ கோட்.....சிஸ்கோ வந்தாலும் வராட்டியும் பரவால்ல ரிக் கதைகளே என்னளவில்....மேக் ஜாக் வேணும் நிச்சயமாய்

    ReplyDelete
    Replies
    1. // ப்ளூ கோட்.....சிஸ்கோ வந்தாலும் வராட்டியும் பரவால்ல //

      பிச்சு பிச்சு மகனே.

      Delete
  52. @all 2023 சந்தா friends:
    🙏😃😍😘

    👽👻*மீண்டு(ம்) வந்த மாயன்*👾💀

    ## சந்தாவில் இணையும் போதே –

    ‘Kit” அல்லது “Tex” என்று குறிப்பிட்டு விட்டால் நலம்–

    "சின்னத் தல கிட் ராப்பரா? பெரிய தல டெக்ஸ் ராப்பர் கொண்ட புக்கா?" என்று மறக்காமல் பதிவு செய்து விடுங்கள்##..
    😃😍

    நான் *சின்னதலை K wrapper* என்று பதிவு செய்துவிட்டேன்.😍👍👍✊

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் கிட் Wrapper தான் வேண்டும்.

      Delete
  53. @Edi Sir..🙏

    நெப்போலியன் பொக்கிஷமெல்லாம் இருக்கட்டும்.😃

    எங்களுக்கு கலர்ஃபுல்லான சந்தா 2023 அட்டவணை Hard copy ய எப்ப கண்ணுல காட்ட போறீங்க ..😍💐❤💚💙💛💜

    ReplyDelete
    Replies
    1. இருக்கு நாளை மாலை நவம்பர் புத்தகங்கள் கிளம்பிய பதிவு இருக்கு. ஒண்ணாம் தேதி புத்தகம் கையில் இருக்கும். 3ஆவது தீபாவளி.

      Delete
    2. அப்படி இல்லை இந்த வார கடைசி தான் புத்தகம் வரும் என்றாலும் பரவாயில்லை. அதான் இந்த பதிவு இருக்கே. இதை படித்தே ஒரு மாதம் ஓட்டலாம்.

      Delete
    3. // நெப்போலியன் பொக்கிஷமெல்லாம் இருக்கட்டும்.😃 // நான் அந்த புத்தகத்தைக் கண்ணில் கூட பார்த்தது இல்லை சார்.

      2023 விங் கமாண்டர் ஜார்ஜ் வருடமோ? Supreme 60s இப்போது இன்னும் இரண்டு புத்தகங்கள். ஐயம் ஹேப்பி அண்ணாச்சி

      Delete
  54. \\Main matterஐ படிக்க 2நிமிடம் போதும் இவ்வளவு வழவழன்னு எழுத வேண்டாம்||

    உங்களை யாரும் படிக்கச் சொல்லி கம்பெல் பண்ணலையே..49 O...

    Reply

    ReplyDelete
  55. லயன் காமிக்ஸ் 1999 இல் வெளியான 150 வது இதழ் ஆன மந்திர மண்டலம் எனது all time favourite TEX EILLER
    கதைகளில் முதன்மையானது . அது மீண்டும் வெளிவருவதில் மிக்க மகிழ்ச்சி சார்

    ReplyDelete
  56. // So சோடாவும் உண்டு ; சர்பத்தும் உண்டு ! சோடாவில் எலுமிச்சம்பழம் புழிஞ்சா சுலபமா ஜீரணம் ஆகும் ; அதே எலுமிச்சம்பழத்தை கபாலத்தில் புழிஞ்சா ஏர்வாடிக்கு டிக்கெட் கிடைக்கும் ! அபிராமி...அபிராமி ! // இதை படித்து விட்டு வாய் விட்டு சிரித்து விட்டேன் சார். ROFL:)))))

    ReplyDelete
  57. cold war, fall of the communism, after cold war, berlin wall broke-up, ஆகிய சம்பவங்கள் சமீபத்திய கதைகளில் மைய கருவாக உள்ள கதைகள் மெய் யாகவே ஆர்வத்தை தூண்டுகின்றன. present ஒற்றை துருவ அரசியல் உலகில் இது போனற பொலிடிகல் திரில்லர் கதைகள் வரவேற்பை பெறுவதில் ஐயமில்லை . late 80'இல் early 90'இல்
    சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எந்த நிலையில் இருந்தது , என்பதை சமீப கதைகளில் வாசித்து வருகிறேன். அது போலவே குயின் விக்டோரியா காலத்திய பிரிட்டன் , லண்டன் நகரத்தில் நடக்கும் டிடெக்ட்டிவ் கதை ஏதேனும் வெளியாக வாய்ப்பு இருக்கிறதா சார்??

    ReplyDelete
  58. Sir Durango பற்றி சொல்லவில்லையே

    ReplyDelete
    Replies
    1. தகவல் உள்ளது கிருஷ்ணா...ஒரு தனிப்பதிவில் சில பல நாயகர்களின் updates பற்றிப் பேசலாம் !

      Delete
  59. The SSS எனது ஓட்டு மேக் ஜேக்

    ReplyDelete
  60. புதையலின பாதையில்.....நெப்போலியன் பொக்கிசம்.....ஜார்ஜ் பெரிதாக பிடிக்காதுன்னாலும்...இக்கதை குறித்து 2012 ல் முதன் முதல் சந்தித்த நண்பர் ஸ்டாலின் கதைத்தது நினைவில் வந்து செல்வதால் நானும் நண்பரைப் போலவே ஏக எதிர்பார்ப்பில்

    ReplyDelete
  61. ஆனா சேஸ்கி விஸ்கி இல்லையா என கேள்வியே எழல ... ஆனா இருக்கு ....அருமை சார்....பேரிக்காய் போராட்டம் புதுக் கதைக்காக ஆவலுடன்...ஸ்மர்ஃப் இல்லாக் குறய இவியதான் தீக்கோனும்

    ReplyDelete
  62. டெக்ஸ் கிளாசிக் இரு கதைகளும் அருமை...மரண நடை நினைவில்லை இல்லை....காத்திருப்பேன்

    ReplyDelete
  63. அடுத்ததாக போட்டீங்க பாரு ஒரே போடு.....நம்பினோரை கைவிட மாட்டேன்னு முருகனே சொல்வதைப் போல விசயனாரும்...

    கொலைப் படை அதே சைசுல....மேலும் இரு வண்ணமெல்லாம் எடுபடுமோன்னு தயங்குவீங்களோன்னு நெனச்சா....
    தட்டுங்கள் திறக்கப் படும்னு பொம்மைகளின் பேரரசர் தன் கொலைப் படையோடு ஸ்பைடரிடம் அடி வாங்க வாரார்..இது நிச்சயம் வரும்னு இருந்தாலும் அடுத்த வருடமே என்பது கிள்ளிப் பாக்க சொல்ல மனசே வலிக்குது கிள்ளாமலே..இது வரை வந்த அறிவிப்பிலே மரண டாப் இதான்...கூடவே இது வரை மறு பதிப்பு காணா மாயாவி......

    இரும்புக் கைன்னா தேடித் தேடி திரிந்த நார்மன் ...இது வண்ணத்ல இருந்தா
    கருப்பு வெள்ளை....இரு வண்ணம்...வண்ணம்னு ஒரு பரிணாமப் பாதை வருமே....

    அதிலும் ஹார்டு பௌண்டில் இரு அட்டைகள்....இரண்டு கதைகள் நமக்கு பார்சல்....அவ்ளோதான் சார் எனது தேவைகள் முடிந்தது....இனி நீங்க தருவத வாங்கிக்குவேன்

    ReplyDelete
  64. ஸ்மாஷிங் 70 வழிமுறையில்இ மூன்று க்ளாஸிக் நாயகர்களையும் ஒரே இதழாக இணைத்து போடாமல் கொலைப்படை அதே சைஸில்இ அதே வண்ணத்தில்இ தனி இதழாக வந்தால் நலம்! (அப்படி எதுவும் திட்டமாக இருந்தால், இப்பவே சொல்லிடுங்கோ எடிட்டர் ஐயா!)

    ReplyDelete
  65. ஆர்ச்சியின் இரும்பு மனிதன் இதோ போல ஒரு ஸ்பெஷல் வராமல் போகுமோ! ஆசிரியரின் மனதில் அடுத்து விழுந்திருக்கும் துண்டு ஆர்ச்சியே! ஆர்ச்சியே! ஆர்ச்சியே!

    ReplyDelete
  66. Dear Editor,
    Adipoli Sandha
    Enjoy Jamaai Enjamoy for us
    Special thanks for Spider, Norman book in advance
    Regards
    Arvind

    ReplyDelete
  67. காமிக்ஸ் காதலர்களின் உற்சாசம் கரை புரண்டோடுவதைக் காண்கையில் வீட்டில் விசேஷம் நடப்பது போல் உள்ளது. நன்றி நண்பர்களே.

    ReplyDelete
  68. எனக்கு இந்தப் பதிவை படிக்க 45 நிமிடங்கள் பிடித்தது

    ReplyDelete
  69. எனது தளபதி மீண்டும் வருவதில் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  70. அட்டவனே என்னை பொறுத்தவரை நூற்றுக்கு நூறு சதவீதம் திருப்தி. என்ன இளவரசி இல்லையே என்ற ஒரு குறை தான்

    ReplyDelete
  71. பரணிதரன் சார்.நெவாடா பெயரை மாற்றமுடியுமா என்று கேட்டிருந்தீர்கள்.
    க்யூபா படலம் ரசித்தோம். கென்யாவை கொண்டாடினோம். தற்போது நமீபியா வேண்டும் என்று கோருகிறோம், இவை எல்லாமே பிரதேசங்களின் பெயர்களில் வந்த கதைகள் தான், எனும் போது நெவாடா தலைப்பில் எந்த வித நெருடலும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. //நெவாடா பெயரை மாற்றமுடியுமா என்று கேட்டிருந்தீர்கள்.//

      ஆத்தி ! அதை எதுக்கு மாத்தக் கேட்டாரு தலீவர் ? நான் அந்தப் பின்னூட்டத்தைக் கவனிக்கலியே ?!

      Delete
  72. 'supremo spl'ன் கதைத்தேர்வுகள் அட்டகாசம்!! நான்கு ஜாம்பவான்களின் சிறப்பான படைப்புகளில் கதை செலக்ட் செய்யப்பட்டிருப்பது - நான் எதிர்பார்த்திடாத கோணம்! 3 கதைகள் கலரில் & 1 கருப்பு-வெள்ளையிலும் என்பதும் (கருப்பு-வெள்ளைக்கு கம்பீரமான ஒரு வசீகரம் உண்டு. இந்த வசீகரத்தில் இன்றுவரை மயங்கிக்கிடக்கும் விட்டில் பூச்சிகளும் நம்மில் பலர் உண்டு. அவர்களையும் திருத்திபடுத்திட இதுபோன்ற கலர்+கருப்புவெள்ளை காம்போ இதழ்கள் உதவிடுமென்று தோன்றுகிறது!), 700 பக்கப் பெருங்குண்டூஸ் என்பதும் குதூகலமான சமாச்சாரங்கள்!

    ReplyDelete
    Replies
    1. போஸெல்லியின் ஆக்கத்தில் வரயிருக்கும் மெபிஸ்டோ - மற்றொரு சந்தோசமான சமாச்சாரம்! நான் மெபிஸ்டோவின் அபிமானி இல்லைதான் - ஆனால் போஸெல்லியின் கதை சொல்லும் திறனில் நிறையவே நம்பிக்கையிருக்கிறது!

      Delete
    2. லயன் கி.நா சார்பில் வரயிருக்கும் 3 கதைகளுமே - கொஞ்சம் வித்தியாசத்தை விரும்பும் காமிக்ஸ் வாசகர்களுக்கு அவசியமானது! 3 கதைகள் மட்டுமே என்பது ரொம்பவே மிதமான அளவு!

      Delete
    3. தீபாவளி மலராக இம்முறை இளையவரை 6 பாகக் கதைகளோடு 'THE டெக்ஸ் சிக்ஸர் ஸ்பெஷல்'ஆகக் களமிறக்கியிருப்பதும் நாவில் எச்சில் ஊறச்செய்திடும் சங்கதியே! 384 பக்கங்கள் ஹார்டு பவுண்டில் வெறும் 300 ரூபாய் என்பதெல்லாம் டெக்ஸ் சர்குலேசனில் செய்யும் மேஜிக்கை வாசகர்களுக்கே பலனாக்கிடும் சமாச்சாரமாகவே கருதுகிறேன்!

      Delete
    4. enna irundhaalum 300 kammi aachungalE - oru 750-yaavadhu ?! Hee hee !!

      Delete
    5. இளம் தளபதியின் 4 பாக சாகஸமும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியே! அதைவிட இன்ப அதிர்ச்சி - சவாலான மொழிபெயர்ப்பை சமோசா சாப்பிடுவதைப் போல எடுத்துக் கொண்டிருக்கும் ஷெரீப்பின் தைரியத்தை! பார்ப்போம் - ஷெரீப்பின் கைவண்ணத்தில் இளம் டைகர் எப்படி மீசை முறுக்கயிருக்கிறார் என்பதை!!

      Delete
  73. சிரிப்பு ஸ்பெசலில் நமக்காக ஜாக்....பரணிக்காக ரின்டின்.....எனக்காக நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஸ்மர்ஃப்.....ஜுனியருக்காய் லியனார்டோன்னு வந்தா வானவில்லாய் ஏழு கதை வந்தா நல்லாருக்கும்

    ReplyDelete
  74. ஸாகோர மறக்கடிக்க செய்த பதிவின் கடைசியில் அசரடிக்க ஸாகோர் மீண்டுமாறு பாக அறிவிப்பு சூப்பர்

    ReplyDelete
  75. சார் கேள்வியும் பதிலும் அட்டகாசம் என் ஏக்கங்கள் ...ஏன் சக நண்பர்கள். ஏக்கங்களும் தீத்துடுச்சி....அதிலும் லார்கோ...ரூட் நமீபியா....கடல் கொள்ளையர்.....இரண்டு வன் மேற்கு அடுத்த வருடமே ....கோடி கோடி நன்றிகள் சார்....எப்படி அடைப்பது நன்றிக் கடனைன்னு தெரியல...நீங்களே சொலஂட்டீங்க.....சந்தாவ விட இவை டாப்போ டாப்....
    சீக்கிரமா போட்டுத் தாக்குங்க

    ReplyDelete
  76. அசத்தலான அட்டவணை
    ஆரவாரமான அட்டவணை
    இனிப்பான அட்டவணை
    ஈர்க்கும் அட்டவணை
    உற்சாகமான அட்டவணை
    ஊர் புகழும் அட்டவணை
    எல்லோருக்குமான அட்டவணை
    ஏகாந்தமான அட்டவணை
    ஐயமில்லா ஜெயமான அட்டவணை
    ஒழுக்கமான அட்டவணை
    ஓங்காரமாய் ஒலிக்கும் அட்டவணை
    ஃகுது ஃகுது இந்த அட்டவணை நமது

    ReplyDelete
  77. இந்த sort-outல முக்கியமான விஷயம் என்னவென்றால் - மரத்தடி ஒய்வு பார்ட்டிகளை கச்சிதமாக தேர்ந்தெடுத்ததுதான். வந்தால் நன்றாக இருந்திருக்கும் தான் - ஆனால் வரலேன்னா யாரும் அழப்போவதில்லை என்பதான தேர்வுகள். That's walking on thin ice. 
    சதி வலை கூட ஒரு மறுபதிப்பு கொண்டு வரணும் சார் - that was my first Lion comics ! கொலைப்படை அறிவிப்பு immensely nostalgic. 

    ReplyDelete
    Replies
    1. நமது தேர்வுகளின் பெரும்பான்மை கம்பி மேல் நடக்கும் ரகம் தானே சார் ?!

      க்ளாசிக்ஸ் போடுவது கி.நா .பிரியர்களுக்கு ரசிக்காது !

      கார்ட்டூன் போட்டால் ஆக்க்ஷன் ரசிகர்களுக்கு சுகப்படாது !

      ஒன் ஷாட்ஸ் போடுவது கதம்ப குண்டு புக் ஆர்வலர்களுக்கு ஒத்துப் போகாது !

      அழுகாச்சிக் கதைகள் லைட் ரீடிங் பிரியர்களுக்கு செட் ஆகாது !

      கௌபாய் கதைக்களங்கள் யதார்த்தத் தேடலின் ரசிகர்களுக்கு தீனி போடாது !

      But இந்த உலகுக்குள் தானே சார் கும்மியடித்து வருகின்றோம் ! பழகிடுத்து !

      Delete
    2. //கௌபாய் கதைக்களங்கள் யதார்த்தத் தேடலின் ரசிகர்களுக்கு தீனி போடாது//
      அதே தான் சார்😊

      Delete
  78. அப்புறம் அந்த பாட்டில் பூதம் பக்கம் ஒரு வருஷம் கண்ணை காட்டினீங்கன்னா க்ஷேமம் சார் .. 2012ல் ஒரு முறை வாங்க எத்தனித்து 5000 என்று கேள்வி பட்டு ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட்மென்ட் செய்ய ஆரம்பித்தவன் தான் - ஹி ஹி !!

    ReplyDelete
    Replies
    1. பாருங்க ...உங்க பங்குச்சந்தை ஆதாயத்துக்கு அந்த 5000 வாலாவுமே ஒரு காரணம் சார் !

      Delete
  79. உங்களது அட்டவணை நாள் எனக்கெல்லாம் ஒரு திருவிழா மாதிரி. அனைவரையும் திருப்திபடுத்தும் விதமாக கதைகளை தேர்ந்தெடுத்து நீங்கள் அதனை இவ்வளவு மெனக்கடலோடு உங்களின் போரடிக்காத வார்த்தை ஜாலங்களோடு எங்களுடன் பகிர்ந்து கொள்வதும் நாங்களும்
    வரும் நாட்களில் நேரம் கிடைப்பதெல்லாம் மீண்டும் மீண்டும் அதனை பார்த்தும், படித்தும் இன்புறும் சுகமே அலாதி சார். இது தேவையில்லையென்பவர்கள் வேண்டுமானால் Morse Code என்று புள்ளிகளையும், கோடுகளையும் போட்டு சுருக்கி படித்துக் கொள்ளட்டும். எனக்கு இதுவே குறைச்சல்!

    ReplyDelete
    Replies
    1. அட...ஜாலியா விடுங்க சார் ; அவருக்கு என்ன மனத்தாங்கலோ ?!

      Delete
  80. சார், சென்ற ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட
    Lone Some,
    Go West,
    Mondo Riverso
    என்னவாயிற்று சார்?.
    இந்த வருடம் வாய்ப்பு தந்திருக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. Lonesome க்ளைமாக்ஸ் பாகம் இன்னும் ரெடியாகலை சார் !

      Delete
  81. சார் - தலீவர் போன ஒரிஜினல் பதிவுல பாத்தி கட்டி அடிச்சிருக்காரு ஏகப்பட்ட கமெண்ட்களை - பாத்தீங்களா சார் ?

    ReplyDelete
    Replies
    1. ஆமா..! வழக்கமா பழைய சோத்தை பாத்தி கட்டி அடிச்சிட்டு குறட்டை விட்டுட்டு இருப்பாரு... அதிசயமா அந்நேரத்துக்கு கமெண்ட் போட்டிருந்தாரு..!

      Delete
    2. ஊஹும் ...பாக்கலியே !!

      Delete
  82. வணக்கம் வன்மேற்கு..
    மேதகு மேற்கு..
    வன்மேற்கின் வரலாறு ன்னு ஆவலோடு காத்திருந்தோமே...

    அந்தத் தொடரின் முதல் அத்தியாயம்..

    நதிபோல ஓடிக்கொண்டிரு...😍

    ஆர்வங்கா வெயிட் சேசி உண்ணானு..😍

    ReplyDelete
  83. நேற்று தலைவர் இட்ட பின்னூட்டம் நெவாடா பற்றி விஜயன் சார்!

    இதில் வேறொன்றுமில்லை சார்...பெயரை பற்றி மட்டுமே...முன்னர் ஒரு முறை சில நண்பர்கள் வேண்டுக்கோளுக்கிணங்க இப்பொழுது எல்லாம் நாயகர்களின் ஒரிஜினல் பெயரையை நாம் பயன்படுத்தி வருகிறோம் சார்...அதில் தவறேதும் இல்லை தான்...புது நாயகர்களின் பெயரும் ஓகே தான் ..ஆனால் அவை அனைத்தும் கதாப்பாத்திரத்தின் பெயராக தான் தோற்றம் அளிக்கிறது சிறிது அந்நியபட்டாலும்..டேங்கோ..சிஸ்கோ..லார்கோ ஏன் பெளன்ஸர் ...இப்பொழுது அறிவித்த மைக் ஹேமர் கூட...ஆனால் இந்த " நெவாடா " என்பது கதாப்பாத்திரத்தின் பெயர் போல் இல்லாமல் ஏதோ பிரதேசத்தின் பெயரை போல் மிகவும் தள்ளிவைக்கிறதே சார்...சில சமயம் நாயகர்களின் பெயர் சூட்டும் தங் களின் பழைய பாணி ஒரிஜினலை விட சரியான அழகான பெயராக அமைந்து வரும்...மனதிலும் நெருக்கமாக உட்கார்ந்து கொள்ளும் சார் கேப்டன் டைகரை போல ... ஒரு வித கரடுமுரடான பெயர் நெருக்கத்தை தள்ளியே வைக்கும் என்பது எனது எண்ணம் மட்டுமே..எனவே நெவாடா என்ற பிரதேசத்தின் பெயரை மாற்றி ஒரு நாயகரின் பெயராக நாயகருக்கு மொழிமாற்றுங்களேன் சார்....:-)

    ReplyDelete
  84. டெக்ஸ் வில்லரின் சர்ப்பத்தின் சின்னம்: இது போன்ற சின்னத்தை மையமாக வைத்து இதற்கு முன்னால் வேறு ஏதோ கதை வந்ததாக ஞாபகம், அந்தக்கதை ஒரு கிளாசிக் மறுபதிப்பு கதை என நினைக்கிறேன்! அதே போன்று இந்த கதையும் மிரட்டலாக இருக்கும் என நினைக்கிறன்!

    ReplyDelete
  85. ஆஹா... அருமையான கதைத் தேர்வுகள். நிறைய கார்ட்டூன்கள் மகிழ்ச்சி. சுஸ்கி விஸ்கிக்கு ஸ்பெஷல் நன்றி.
    டெக்ஸ் 75 இன்னும் வாண வேடிக்கைகள் இருக்கும் என்று பட்சி சொல்கிறது.
    டைகர் வருவது மகிழ்ச்சி.
    இளவரசி கதை இல்லை என்பது குறையே... நினைவுள்ள வரை இளவரசி வராத ஆண்டு இதுதானோ?? ஒரு சிறுகதையாவது போட முடியுமானால் நன்று.

    புது வரவுகள் ஆஹா ரகம்.

    மெகா சைஸ் இரு வண்ண ஸ்பைடர் அட்டகாசம்.

    இந்த ஆண்டைப் போலவே அடுத்த ஆண்டும் தெறிக்க விட எதிர்பார்ப்புகளுடன் வாழ்த்துகள்.

    படிக்க ஆன நேரம் 40 நிமிடங்கள் (படங்களை ரசித்ததனால்).

    அனைத்து கதைகளும் விற்பனையில் சாதனை செய்ய நல்வாழ்த்துகள்.

    மிக்க நன்றி

    ReplyDelete
  86. தோர்கல் இல்லாதது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் காமிக் உலகத்துக்கு இப்பதான் புதுசு . எனக்கு புடிச்ச comicsணா அது தோர்கல் மட்டும்தான். என்னோட friendsகும்  தோர்கல்தான்  புடிச்சிருந்து நான் என்ன நினைக்கிறேன்னா தோர்கலோட சரிவுக்கு காரணம் தோர்கல் அட்டைப்படம் என்று நினைக்கிறேன்   அதனால தான் நிறைய பேர் வாங்கல என்று நினைக்கிறேன் முதல்ல தோர்கல் புக்கு முதலில் வாங்கியது எப்படி  என்றால்  தோர்களல் புக் எனக்கு முதல்ல பார்க்கும்போது அட்டைப் பார்த்த உடனே இது என்ன புக் என்று தான் நினைச்சேன் ஆனா தோர்கல் பெயரை netla சர்ச் பண்ணி அது நல்ல புக் அப்படின்னு சொல்லிட்டு பார்த்த பிறகு தான் வாங்கினேன் ஆனா வாங்குன பிறகு எனக்கு ஒரு புக் வாங்கின உடனே எல்லா புக்கும் வாங்கணும் என்று  தோனிச்சு எல்லா புக்கும் வாங்கிட்டேன் அடுத்த தோர்களல் பாகத்துக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்
    😔😭😭 ஸ்ரீ

    ReplyDelete
    Replies
    1. Thorgal is there - please read properly - a double album is there. What editor said is a 4-5 album Thorgal is not there. Do not confuse.

      Delete
    2. Thorgal double album Undu - aanaal illai gundu ! :-)

      Delete
    3. // தோர்கல் பெயரை netla சர்ச் பண்ணி அது நல்ல புக் அப்படின்னு சொல்லிட்டு பார்த்த பிறகு தான் வாங்கினேன் ஆனா வாங்குன பிறகு எனக்கு ஒரு புக் வாங்கின உடனே எல்லா புக்கும் வாங்கணும் என்று தோனிச்சு எல்லா புக்கும் வாங்கிட்டேன் //

      Super Sir!

      Delete
    4. தோர்கல் இரண்டு கதைகள் இணைத்த ஒரு புத்தகம் 2023-ல் வருகிறது, கவலை வேண்டாம் நண்பரே!

      Delete
    5. //தோர்கல் பெயரை netla சர்ச் பண்ணி அது நல்ல புக் அப்படின்னு சொல்லிட்டு பார்த்த பிறகு தான் வாங்கினேன் ஆனா வாங்குன பிறகு எனக்கு ஒரு புக் வாங்கின உடனே எல்லா புக்கும் வாங்கணும் என்று தோனிச்சு எல்லா புக்கும் வாங்கிட்டேன் /
      👍👍👍😀

      Delete
  87. அருமையான பதிவு. முழுவதுமாக படிக்க நேரமில்லை. மைக் ஹேமர், நெவாடா, IRS என புது வரவுகள் ஆவலை தூண்டுகிறது. அதுவும், ஜனவரி முதல் மாதத்திலேயே ஒரு க்ரைம் ஸ்டோரி. அனைத்து கதைகளும் அட்டகாசமான தேர்வு. முதல் பார்வையிலேயே படங்கள் கதையை படிக்க தூண்டுகிறது.

    ReplyDelete
  88. ஆஹா .. இப்போதான் புரியுது .. இன்னாடா Tex தீபாவளிக்கு 300 ரூ தானான்னு யோசிச்சேன் .. அப்போ என்னவோ திட்டம் இருக்கு - like this years தீபாவளி but bigger and smashing !! ;-)

    ReplyDelete
    Replies
    1. அதே..அதே…அங்கே போனெல்லி அறிவிச்சதும் இங்கே போராட்டத்தை ஆரம்பிச்சிடலாம். தீவாளிக்கு 1000 வாலா பட்டாசு கண்டிப்பா வேணும்னு

      Delete
    2. ஆமாமலே? வருஷா வருஷம் போராட்டக் களத்தை அவரே அமைத்து கொடுத்து வாங்கி கட்டிக்கொள்கிறாரோ - ஹி ஹி ஹி !! ;-)

      Delete
    3. அட இப்படி எனக்கு யோசனை வரலயே....அதுக்கு முந்தி 700 என சொன்னதால் இருக்கலாம்....அப்ப 500 விலைல வந்தா...700+300+500=2*750.... ஆசிரியர் ரா சும்மாவா...கணக்குல கில்லியாச்சே

      Delete
  89. எனக்கு மீண்டும் ஒரு வருட சந்தாவை இலவசமாக அளித்துள்ள சார் அவர்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்.!!!🙏 மேலும் நீங்கள் வழங்கிய தீபாவளி சிறப்பு வெளியீடு புத்தகங்கள் இரண்டுக்கும் சேர்த்து எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 🙏 விஜயராகவன் சார் அன்று இரவில் என்னிடம் சொன்ன மறுநாளே எனது நன்றியை இங்கே பதிவிட நினைத்திருந்தேன். ஆனால், தீபாவளி நேரத்தில் கடையில் இருந்த கூட்டத்தில் பதிவிட மறந்து விட்டேன். புத்தகங்களும் எனக்கு வராமல் என் ஊர் விலாசததிற்கு சென்றுவிட்டது. 2015-ம் வருட சந்தாவுக்கு நான் பயன்படுத்திய விலாசம் அது. லயன் அலுவலகத்தின் கணிப்பொறியில் அதை இன்னும் அழிக்காமல் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். 🙏🙏

    ReplyDelete
  90. Suski vs wisky வெளியிடுவதற்கு 🎇🎆🎆

    ReplyDelete
  91. மறுபடி படிக்க படிக்க இன்னும நிறைய விசயங்கள் நல்லா சிங்க் ஆகுது. நேத்து மத்தியானம் பிரியாணி சாப்பிட்டே படிச்சதாலோ என்னவோ இன்னிக்கு காப்பி குடிச்சிட்டே படிக்கும் போது இன்னும் புத்சு புத்ச நிறைய மேட்டர் சிக்குது.

    2023 சந்தாவில பழய கதைகளோ மறுபதிப்போ எதுமில்லை. எல்லாம் புதுசு. சரியான முடிவு. பழய கதைகள் எல்லாம் கிளாசிக் தடத்தில் ஹார்ட்கவர் மேக்ஸி சைஸ்ல நிறய மேக்கப்போடு வருவது செம. பழய கள்ளு…புது மொந்தை. போதை மட்டும் அதே…

    ReplyDelete
  92. மெபிஸ்டோ கதையை பற்றி இந்த வருடம் ஏப்ரல் "அம்மணிகளின் ஏப்ரல் !" என்ற பதிவில் எழுதி இருந்தீர்கள், இதில் அட்டை படம் + உட்பக்க டீஸர் இருந்தது! இது இப்போது 2023 அட்டவணையில் இடம் பிடித்தது மகிழ்ச்சி!

    ஆரம்பிக்கலாமுங்களா..? இதே தலைப்பில் இந்த வருட மார்ச் மாத பதிவில் டெக்ஸ் கிளாசிக் பதிவுக்கு பெயர் வைத்து இருந்தீர்கள் சார்! :-)


    2023 காமிக்ஸ் அட்டவணையை தற்போது "Featured post" இடத்தில் உள்ள அட்டவணை திருவிழாவிற்கு பதில் மாற்றிவிடுங்கள் சார்! பலர் பார்வையில் எளிதாகபடும் சார்!

    ReplyDelete
  93. டியர் எடி,

    பதிவை படித்தோமோ இல்லையோ.... சந்தாவில் இணைந்தாயிற்று ..... ☺️

    ReplyDelete