Powered By Blogger

Saturday, October 22, 2022

நவம்பர் காத்திருக்கு !

நண்பர்களே,

வணக்கம். எட்டித் தொடும் தொலைவில் தீபாவளிஎங்கள் நகரோ அனல் பறக்கும் பிசியில் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறதுதிரும்பிய திசைகளிலெல்லாம் பட்டாசுப் பார்சல்கள் அம்பாரம் அம்பாரமாய் பயணமாகி வருகின்றன – நாட்டின் மூலை முடுகக்குகளுக்கும்! 2 வருடங்களாய் தட்டுத் தடுமாறியதற்குப் பி்ன்பாய் விட்டதைப் பிடிக்கும் முனைப்பில் இந்தாண்டு அனைவருமே நில்லாமல் ஓடிக் கொண்டிருப்பது புரிகிறதுவயல் செழிப்பாக இருந்தால் வரப்புகளுமே வளமாய் இருக்குமென்பதால் பட்டாசுத் தொழிலுக்கும் நமக்கும் ஸ்னானப் பிராப்தம் இல்லாத போதிலும் அவர்களின் பொருட்டு இதர தொழி்ல்களில் உள்ள அனைவருமே மகிழ்ந்திருக்கிறோம்! Anyways நமக்குக் கம்பி மத்தாப்புகளும்புஸ்வானங்களும்தரைச் சக்கரங்களும் மாத்திரமே வீரத்தின் அடையாளங்களாய் இருப்பதால் அவற்றோடு ஹேப்பியாக ஷாப்பிங் முடித்த திருப்தியில் பணிகளுக்குள் புகுந்தாச்சு

What next? என்ற கேள்வி முன்நிற்க கைதூக்கி நிற்போர் மூவர்…! And அவர்களே இவ்வாரத்துப் பதிவின் பிரதான ஆக்ரமிப்பாளர்கள்

சீக்ரெட் ஏஜெண்ட் காரிகன் ஸ்பெஷல்-1

இவரது அட்டைப்படத்தினை ஏற்கனவே கண்ணில் காட்டி விட்டோம் தான்நண்பர் ஆதியின் எழுத்துருக்கள் சகிதம்ஜுனியர் எடிட்டரின் நகாசு வேலைகளுடன் ராப்பர் சும்மா தீயாய் மின்னுவதை சீக்கிரமே பார்த்திடவுள்ளீர்கள்கதைகளைப் பொறுத்த வரை – எல்லாமே செம க்ளாஸிக் சரக்கு தான்முழுக்க முழுக்கக நேர்கோட்டுக் கதைகள் முழுக்க கருணையானந்தம் அங்கிளின் மொழிபெயர்ப்பபில்ஆங்…அப்படியே உரித்த வாழைப்பழமாய் பணிகள் இருக்கும்மேல் நோகாமல் இதழைக் கரை சேர்த்து விடலாம் என்ற நப்பாசையில் 200 பக்கக் கத்தையைத் தூக்கிக் கொண்டு அமர்ந்தால் – ஐயகோ… குமட்டில் சரமாரியாய்க் குத்துக்கள்! To start with நமக்கு King Features நிறுவனத்திடமிருந்து வந்திருந்த கதைக் குவியலில் ஆங்காங்கே ஓரிரு பக்கங்கள் missing! மொத்தமாய் வேதாளர்மாண்ட்ரேக்ரிப்கிர்பிகாரிகன் – என நாயகர்களின் வருடத்து சாகஸங்கள் என்றதொரு மெகா குவியல் வந்திருந்ததால் அவற்றினுள் புகுந்து சரிபார்க்க அந்நேரம் சாத்தியப்பட்டிருக்கவில்லை! And நம்மாட்களும் நான் ‘டிக்‘ அடித்துத் தந்திருந்த கதைகளை பிரிண்ட் அவுட் போட்டு கருணையானந்தம் அவர்களுக்கு எழுத அனுப்பி விட்டிருந்தனர்அவருமே ‘கட கட‘‘வென்று போட்டுத் தாக்கியிருக்க, DTP முடிந்தது என் மேஜையில் மலையாய் குந்தியிருந்தன காரிகனின் சாகஸங்கள்மெதுவாய் முதல் கதைக்குள் புகுந்தால் என்னமோ உதைத்ததுநேர்கோட்டுக் கதைகளோடு நமக்குத் தான் ‘‘டச்‘‘ விட்டுப் போச்சோஎன்றபடிக்கே மறுக்கா பக்கங்களைப் புரட்டகதையில் ஒரு gap இருப்பது புலப்பட்டது!1 ஆஹா… என்ன கூத்துடா இதுஎன்றபடிக்கே ஒவ்வொரு சித்திர strip களுக்கும் தரப்பட்டிருக்கும் தேதிகளைச் சரிபார்க்க ஆரம்பித்தேன்! And yes – என் யூகம் சரியேநடுநடுவே 6 stripகள் கொண்ட ஒரிஜினல்கள் missing! எழுதும் போதே அங்கிள் இதைக் கவனித்திருக்க வேண்டும் தான்ஆனால் எப்படியோ miss செய்து விட்டார்! ‘கிழிஞ்சது கனவு‘ என்றபடிக்கே நம்மாட்களை அத்தனை கதைகளையும் வரிசைக்கிரமமாகச் சரிபார்க்கச் சொல்லிப் பணித்தேன் – தேதிகளைக் கவனிப்பது எப்படி என்று சொல்லித் தந்து விட்டுவரிசையாக கதைகளில் தலா 6 strips லேது என்பதை அன்றிரவு கண்டுபிடித்தோம்! “ஆஹா… இது புது மாதிரியால்லே இருக்கு?“ என்றபடிக்கே மண்டையைச் சொரிந்தபடிக்கே யோசித்தேன் என்ன செய்யலாமென்று! King Features க்குத் தகவல் தெரிவித்துகுறிப்பிட்ட அந்தப் படங்களை மட்டும் வரவழைக்கக் குறைந்தபட்சமாய் ஒரு அவகாசம் எடுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாய் அவர்கள் அனுப்பிய ‘சரக்கில்‘ இப்போது பஞ்சப் பாட்டுப் பாடவும் சங்கடமாகயிருந்ததுஅல்லல்படுவோரின் ரட்சகனான சர்வ வல்லமை பொருந்திய கூகுள் சாரிடம் தஞ்சம் அடைந்தேன் நம்பியவனை அவர் கைவிடவில்லைகாரிகன் தொடரின் தீராக் காதலி ஒருவர் அமெரிக்காவில் இருப்பதைக் கண்டறிந்துஅம்மணியிடம் நமது சிக்கலைச் சொன்னேன்அவரோ காரிகனைக் கரைத்துக் குடித்திருப்பார் போலும் – நான் மேலோட்டமாய் விவரிக்க ஆரம்பித்த போதே கதையையே ஒப்பித்து விட்டார்அப்புறமென்ன – அடுத்த அரை மணி நேரத்தில் நமக்குத் தேவையான பக்கங்கள் நமது மின்னஞ்சலில் கிடந்தனரைட்டு… பக்கங்களைதத் தேற்றியாச்சுதலைவலி ஓய்ந்ததென்று நினைத்தால் 6 stripsகளை ஒவ்வொரு கதையில் குறுக்காவும்நுழைப்பதெனில் நமது பக்க அளவில் ஒன்றரை பக்கங்கள் கூடுகின்றனமீத அரைப்பக்கத்தை வெற்றிடமாய் விட முடியாதே என்பதால் அந்த கதைகளையும் மறுக்கா set பண்ண வேண்டிப் போனதுபெருமூச்சு விட்டபடிக்கே நனைத்துச் சுமக்கும் வேலையைச் செய்து முடித்து விட்டு கதைகளுக்குள் fresh ஆகப் புகுந்தால் இம்முறை வேறொரு ரூபத்தில் இடறியதுபக்கமொன்றுக்கு 12 படங்கள் எனும் போது வளவள வென ஆளாளுக்கு சீரியல்களைப் போல வசனம் பேசினால் ரொம்பவே கொச கொசவென்று ஆகிப் போகுமல்லவா? So ‘நறுக்‘கென்று மொழிபெயர்ப்பு இருந்திட வேண்டும் என்று அங்கிளிடம் சொல்லியிருந்தேன்அந்த ‘நறுக்‘ – ரொம்பவே ‘நறுக்‘ ஆகிப் போயிருப்பதை ரொம்பச் சீக்கிரமே உணர முடிந்தது! In fact ஆங்காங்கே கதைக்குத் தேவையான குட்டிக் குட்டி விஷயங்களில் கொஞ்சம் காணாது போயிருக்கஆங்கில ஒரிஜினல்களை வைத்துக் கொண்டு ரிப்பேர் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன்மேலோட்டமாய் நாட்களில் இந்த ஆல்பத்தையே தேற்றிடலாமென்று கனா கண்டு வந்ததற்கு தண்டனையோ என்னமோ – முழுசாய் நாட்களை விழுங்கி விட்டதுநிஜத்தைச் சொல்வதானால் மூக்கை முன்னூறு தபா சுற்றும் non-linear கதைகளுக்குக் கூட இத்தனை நேரம் பிடிப்பதில்லை எனக்கு! Smashing ‘70s ஆல்பங்களின் ஒவ்வொன்றுமே செமத்தியான சவால்களே – பணிகளின் பழுவைக் கருத்தில் கொண்டால்

Anyways ஒரு மாதிரியாய்ப் பணிகளைப் பூர்த்தி செய்துஅச்சும் முடித்துப் பார்த்த போது செம ஸ்டைலிஷாக நமது FBI ஏஜெண்ட் காட்சி தந்தது போல் எனக்குப் பட்டதுமொத்தம் 11 கதைகள் எனும் போது – சாவகாசமாய் ஒவ்வொன்றாய் நேரம் கிட்டும் போதெல்லாமே நீங்கள் படிக்கச் சாத்தியப்படும்! And ஒவ்வொன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத stand alone கதைகளே எனும் போது – “ராமசாமி யாருமுன்சாமிக்கு என்ன ஒறவுகோயிந்தசாமி யார் பக்கம்?” என்றெல்லாம் நினைவூட்டிக் கொள்ளத் தேவைகளிராது! So ‘ஏக் தம்மில்‘ வாசிப்போருக்கும் சரிசுலபத் தவணைகளில் வசந்த் கோ வாடிக்கையாளர்களாய் வாசிப்போருக்கும் சரி – this would be perfect! முதல் சீஸனை அழகான இந்த இதழுடன் நிறைவு செய்யும் இந்த நொடியிலேயே காத்திருக்கும் SUPREME ‘60s பணிகளும் தடதடத்து வருகின்றனஅதிலும் விங் கமாண்டர் ஜார்ஜ் டிடெக்டிவ் சார்லியின் கதைக் குவியலுக்குள் மேலோட்டமாய்ப் புகுந்து பார்த்தாலே சும்மா ஜொள்ளு பிரவாகமெடுக்கிறது – அத்தனைப் புதுக் கதைகளைப் பார்க்கும் போதுஇந்த க்ளாஸிக் நாயகர்களின் பிரத்யேகத் தொகுப்புத் தடமானது எத்தனை காலத்துக்கு உங்கள் சுவாரஸ்யங்களைத் தக்க வைத்திடுமோ – சொல்லத் தெரியவில்லைஆனால் ஒரு மலையளவுக் கதைகள் இவர்கள் ஒவ்வொருவரது வரிசைகளிலும் படைப்பாளிகள் கைவசம் வைத்துள்ளனர்! So க்ளாஸிக் பார்ட்டிகள் உங்களுக்கு போர் அடிக்காது தொடர்ந்திடும் பட்சத்தில் 70’s; 60’s; 80’s என்று இஷ்டத்துக்கு ரவுண்டு கட்டலாம் தான்!  


2. சிஸ்கோ – அழகிய ஆபத்து!

ஒரு FBI ஏஜெண்டிடமிருந்து தாவினால் ஒரு ப்ரெஞ்ச் ஏஜெண்ட் காத்திருந்தார் – ‘சிஸ்கோ‘ ரூபத்தில்நடப்பாண்டின் முதல் இதழில் அறிமுகமானவர்சமகாலத்துக் கதை நாயகர்!1 என்ன – இஷ்டத்துக்கு சிக்கியவனையெல்லாம் இவர் போட்டுத் தாக்கியது தான் நம்மில் சிலருக்கு நெருடியிருந்ததுஆனால் தொடரின் ஆல்பம் # 3 & 4 முற்றிலும் வேறொரு களம்சொல்லி மாளா பரபரப்புடன் நகர்ந்திடும் கதையினில் ஆக்ஷன் sequences – எழுதும் போது எனக்கே ஒரு adrenaline rush தந்ததை மறுக்க முடியாதுஅதுவும் போதைப் பொருள் விற்கும் ஒரு கும்பலுக்குள் தனியாளாய் நம்மாள் புகுந்து அவர்களைப் பந்தாடும் பக்கங்களில் சினிமா தோற்றுப் போகும் சித்திரங்களின் ஒவ்வொரு ஃப்ரேமிலும்! And துப்பாக்கிச் சண்டைகளிலும் மனுஷன் பட்டையைக் கிளப்புவது அசாத்திய அதகளம்வழக்கம் போல வசனங்கள் ‘நறுக்‘கென்றநக்கலான பாணியில் இருக்ககாரிகனிடமிருந்து செம சாத்து வாங்கி வந்திருந்த எனக்கு இவற்றைப் பார்த்த போது ‘‘தெய்வம்யா நீங்க!‘‘ என்று சொல்லத் தோன்றியதுநடப்பாண்டில் எக்கச்சக்கமாய் எழுதியுள்ளேன் தான் – ஆனால் செம ஜாலியான பணிகள் என்ற பட்டியல் போட்டால் இது அவற்றுள் Top 3 ல் இருப்பது நிச்சயம்! And இந்த ஆல்பம் நம்மில் பெரும்பான்மைக்கு செமத்தியாய் ரசிக்காது போயின் நிச்சயமாய் ஆச்சர்யம் கொள்வேன்! An absolute corker ! 


மேக் ஜாக் ரீலாரியலா?


பரிச்சயமான சிகாகோ ஜோடி இம்முறை ஹாலிவுட் பயணமாகிறது. ஜாக் ஒரு மெகா ஹீரோவின் இடத்தைப் பிடிப்பதால்! தொடரும் கூத்துக்கள் இந்தக் கனவுகளின் தொழிற்சாலையில் அரங்கேறும் காமெடி மேளா! As stories go – செம அழகான படைப்பே! ஆனால் கட்டத்துக்குக் கட்டம்; ஃப்ரேமுக்கு ஃப்ரேம்; பக்கத்துக்குப் பக்கம் சிரிப்பில் உருள நினைத்தீர்களெனில் அது இங்கே சாத்தியமாகிடாது! கதையோடு சேர்ந்தே பயணிக்கவே நானும் முயற்சித்திருப்பதால், வம்படியாகச் சிரிப்பை வரவழைக்க ‘எக்ஸ்ட்ரா நம்பர்கள்‘ போட நான் முனைந்திருக்கவில்லை! So இந்த இரட்டையர்களின் எதிர்காலத்தை (நம் மத்தியில்) தீர்மானிக்கவுள்ள ஆல்பமிது! தவறாது படியுங்கள் ப்ளீஸ் & தவறாமல் அலசிடுங்கள் ப்ளீஸ்!


 

4. அட்டவணை 2023:

பணிகளில் the daddy of them all என்பேன்மேலோட்டமாய்ப் பார்த்தால் யாரெல்லாம் உறுதிபட உட்புக வேண்டியோர்; ‘தல‘ டெக்ஸுக்கு எத்தனை ஸ்லாட்ஸ் என்பதைத் தாண்டி பெரிதாய் சிண்டைப் பிய்த்துக் கொள்ள இங்கே எதுவும் இடர்கள் இருந்திருக்கக் கூடாது தான்ஆனால் கானல் நீராகவே தொடர்ந்து வரும் THE PERFECT SCHEDULEத் தேடி ஓட்டமெடுக்கும் போது எதுவுமே சுலபமாக இருப்பதில்லை தான்ஏப்ரலில் துவங்கியது எனது தேடல்களின் பிள்ளையார் சுழி! And A4 பேப்பர்களில் ஒரு அரை டன்னாவது இதுவரை காலி செய்திருப்பேன் விதவிதமானதினுசு தினுசான சிந்தனைகளை எழுதியும்கிழித்தும் விளையாடியதில்இடையிடையே subtle ஆக உங்களிடம் கேட்டறிந்த சமாச்சாரஙங்களை அட்டவணைக்குள் புகுத்திடஎனது தேர்வுகளை பட்டி டிங்கரிங் செய்திட பயன்படுத்திக் கொள்ளவும் தவறவில்லை! And இந்த தபா – உங்களது எண்ணச் சிதறல்களின் ஏகம் அட்டவணையில் பிரதிபலிப்பதைப் பார்த்திடவுள்ளீர்கள்ரைட்டு... ஒரு மார்க்கமாய் எல்லாத்தையும் ‘கவர்‘ பண்ணியாச்சுஇதுக்கு மேலே ‘தம்‘ லேது என்று அட்டவணையைப் பூர்த்தி செய்து விட்டு நிமிர்ந்தால் – ஆஹா... ஹா... ஹா... சில புதுத் தகவல்கள்சில புதுப் படைப்புகள்சில புதுத் தொடர்கள் என்று ஒரு "மாய மோஹினி" நம் முன்னே நர்த்தனம் ஆடுகிறது ! அக்டோபர் 30 க்கு அட்டைவனை அறிவிப்பு & நவம்பர் முதல் தேதிக்கு புக்ஸுடன் அட்டவணையின் அச்சிட்ட பிரதியும் உங்கள் கைகளில் இருந்தாக வேண்டும் எனும் போது - ஒற்றை நாளே உள்ளது - மறுக்கா பட்டி டிங்கரிங் செய்ய முற்பட ! கைவசம் உள்ள இந்த லேட்டஸ்ட் தகவல்களை அவகாசம் கிடைக்கும் போது உங்களோடு பகிர்ந்திடும் போது நிச்சயமாய்ப் புரிபடும் - ஜொள்ளோடு குப்பை கொட்ட நான் படும் சிரமங்கள் என்னவென்று !படைப்பாளிகள் உசுப்பேற்றுவதற்கு அளவே இல்லது போய் வருகிறது யுவர் ஆனர் !

மீண்டும் சந்திப்போம் all ! Bye - See you around  !




411 comments:

  1. இரவு வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே 🙏🙏

    ReplyDelete
  3. பதிவை படித்து விட்டு வருகிறேன்

    ReplyDelete
  4. மறுபடியும் 😍😇😁

    ReplyDelete
  5. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  6. தமிழ் காமிக்ஸ் நல்லுலகின் கனவான்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்..✨

    ReplyDelete
  7. பதிவின் எழுத்துருக்கள் வேறு பாணியில் இருப்பது போல் தெரிகிறதே சார்...

    ReplyDelete
    Replies
    1. தற்போது எழுத்துரு சரியாகி விட்டது,தொடர்ச்சி விடுபட்ட பதிவு முழுமையாகி விட்டது...

      Delete
  8. சார் அட்டகாசமான டிரெய்லர். Font ஏன் இப்படி இருக்கு?

    ReplyDelete
  9. காரிகன் கதையை தயார் செய்ய நீங்கள் அடித்த பல்டி கலந்த கதை மிகவும் அருமை சார். காரிகனுக்காக வெயிட்டிங்.

    ReplyDelete
  10. காரிகன் எப்போது வருவார்?

    ReplyDelete
  11. விஜயன் சார், பதிவில் உபயோக படுத்தி உள்ள font வேறு போல தெரிகிறது அதே போல் paragraph alignment சரி செய்யாமல் உள்ளது. இதனை கொஞ்சம் சரி செய்து விடுங்கள்.

    ReplyDelete
  12. அட்டவணை மற்றும் நவம்பர் புத்தகங்களுக்கு ரொம்பவே ஆவலுடன் நான்.

    ReplyDelete
  13. விஜயன் சார், பதிவை முழுமையாக முடிக்காமல் பப்ளிஷ் பட்டனை அழுத்தியது போல் உள்ளது சார்.

    ReplyDelete
  14. சட்டைய சரியா போடலன்னாலும் அட்டைய தெறியா போட்ருக்கீங்க....சிஸ்கோ அட்டைப் படம் செம.....

    ஜாக் அட்டையும் தூள் கிளப்புது..
    சூப்பர் சார்..

    ReplyDelete
    Replies
    1. // சட்டைய சரியா போடலன்னாலும் அட்டைய தெறியா போட்ருக்கீங்க... //

      லொல்லுலே உனக்கு.

      Delete
  15. சிஸ்கோ அழகிய ஆபத்து அட்டைப்படம் அருமை.

    குநாயரும் சிஷயபிள்ளையும் அட்டையைத் தாண்டி புத்தகம் படித்தால் புதிய உலக அதிசயம் தான்:-)

    ReplyDelete
  16. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரிப்பு கதை மேக் & ஜாக். வாருங்கள் சிரிப்பை தாருங்கள்.

    ReplyDelete
  17. Totally unrelated, but here it goes:
    இன்றைக்கு தான் lady S இன் மூன்று புத்தகங்களையும் ஒரே மூச்சாக படித்து முடித்தேன்... இதழ் வெளியான காலகட்டத்தில் காமிக்ஸ் விடுமுறையில் இருந்ததால் இந்த தொடர் ஈட்டிய விமர்சனங்கள் பற்றி அறியேன்.. ஆனால் இடையில் நின்று விட்டது ஒரு வருத்தத்திற்குரிய விஷயம்... Largoவிற்கு சற்றும் விறுவிறுப்பு குன்றாத தொடர்.. Albums 4-6 cinebook இதழ்களை இன்றே cart இல் add செய்து விட்டேன்.. அறிமுக படுத்தியதற்கு 🙏.. I pray Sisco and Tango don't receive the same fate. Big thanks for the efforts you put to bring such stories to Tamil. Eagerly waiting for the next year's schedule.

    ReplyDelete
    Replies
    1. சந்தாவில் பெரும்பாலும் புது யுக கதைகள் இருக்கும் என்று நானும் நம்புகிறேன் சார்.

      Delete
    2. கண்டிப்பாக இருக்கும் ஷெரீஃப்.

      Delete
  18. Sir,

    எங்களுக்கு S 70, S 60, S 80, னு வந்துகிட்டே இருக்கனும்

    ReplyDelete
    Replies
    1. இத்தனை நண்பர்களின் ஆதரவு இருக்கும் போது கண்டிப்பாக வெற்றி பெறும்

      Delete
  19. CID Robin was thrilling sir ! Real breezy story after a long time.

    ReplyDelete
  20. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  21. //இடையிடையே subtle ஆக உங்களிடம் கேட்டறிந்த சமாச்சாரஙங்களை அட்டவணைக்குள் புகுத்திட; எனது தேர்வுகளை பட்டி டிங்கரிங் செய்திட பயன்படுத்திக் கொள்ளவும் தவறவில்லை! And இந்த தபா – உங்களது எண்ணச் சிதறல்களின் ஏகம் அட்டவணையில் பிரதிபலிப்பதைப் பார்த்திடவுள்ளீர்கள்!//

    ஆமாம் சார், அதுக்குத் தானே காத்துக்கொண்டுள்ளோம். இந்த பொன்விழா ஆண்டு முதற்கொண்டு மாயாவி, ஸ்பைடர், சுசுகி விஸ்கி, உயிரைத்தேடி என்று எங்களின் நீண்ட நாள் அவாவை நிறைவேற்றி வருகிறீர்கள்... அது போன்றவை 2023 யிலும் தொடரவே விருப்பம்.

    //விங் கமாண்டர் ஜார்ஜ் & டிடெக்டிவ் சார்லியின் கதைக் குவியலுக்குள் மேலோட்டமாய்ப் புகுந்து பார்த்தாலே சும்மா ஜொள்ளு பிரவாகமெடுக்கிறது – அத்தனைப் புதுக் கதைகளைப் பார்க்கும் போது!//

    Eagerly waiting, Sir!

    ReplyDelete
  22. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்🧨🧨🧨🎆🎇🧨🧨🧨🪔🪔🪔🪔🪔🪔

    ReplyDelete
  23. காமிக்ஸ் உறவுகளுக்கும்,நமது காமிக்ஸ் குலசாமி எடிட்டருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  24. அட்டவணைக்கு இன்னும் 8 நாட்களே. புத்தகம் கையில் கிடைக்க இன்னும் 10 நாட்களே.

    நான் எப்போதுமே மிகமிக எதிர் பார்க்கும் பதிவு இந்த அட்டவணைப் பதிவு தான். எத்தனை வருடங்கள் ஓடினாலும் இன்னும் அந்த ஆர்வம் சற்றும் அடங்கவில்லை.

    ReplyDelete
  25. Haaaapy diwali .. ❤❤❤

    இங்குள்ள அனைத்து நட்புகளுக்கும் நட்பில் இல்லா காமிக்ஸ் உறவுகளுக்கும் .. உங்கள் குடும்பத்தார்க்கும்

    & நம்ம சிங்க முத்து வாத்தியார்க்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும்

    மகிழ்வுடன் .. அன்பில் கலந்து 😍😍😍

    TEX SAMPATH & MY FAMILY ..😍😍😍

    ReplyDelete
  26. இந்த முறை சிஸ்கோ தெறிக்க விடுவார் என்று நம்புகிறேன். போன முறை படித்த சிஸ்கோவே ஜெட் வேகம். காரிகன், மேக் and ஜாக் எல்லாமே இந்த முறை கலக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  27. காரிகனுக்காக ஆவலுடன் வெயிட்டிங் !!!

    ReplyDelete
  28. காரிகனுக்கு மட்டும் 11 கதைகளா !!!!!

    ரொம்ப தேங்க்ஸ் எடிட்டர் ஜி

    இந்த ஜி எல்லாம் காரிகனுக்காக மட்டுமே .. 😆😆😆

    உங்களை ஜி என்றும் எப்போதும் கூப்பிடமாட்டேன் டியர் எடி ..

    ReplyDelete
  29. ஐயாம் வெய்டிங் சிஸ்கோ வில்லனுக்காக .. 😉😉😉

    ReplyDelete
  30. அட்டவனைக்காக

    மனதில
    * மலரே குறிஞ்சி மலரே * பாட்டு எபக்ட் கேக்குது டியர் எடி & பிரண்ட்ஸ்

    அடுத்த வருட படைப்பு அப்படி இருக்கனும்ன்னு மனசில பட்டாம்பூச்சி பறக்குது

    ReplyDelete
  31. அனைத்து நண்பர்களுக்கும் வண்ண 🎆 மயமான இனிய தீபாவளி 🎇 நல்வாழ்த்துக்கள் 🤗

    ReplyDelete
  32. ராபின் - அடுத்தடுத்து கொலைகள் கொஞ்சம் கொடுரமாக மற்றும் வித்தியாசமாக தொடர்ந்து நடக்கிறது. ராபின் & கோ குழம்பிப் போய் இருக்கிறது. கொலையாளி யார் கொலையாளியின் நோக்கம் என்ன என்று ராபின் கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள் மற்றும் கொலையாளி இவனாக இருக்கும் என்பதை மனதுக்குள் கோர்ட்டில் வாதாடுவது போல் இரண்டு பக்கமும் பேசி கொலைகாரன் பற்றிய தனது கணிப்பு சரிதான் என ஊர்ஜிதம் செய்யும் அந்த காட்சி அமைப்பை மிகவும் ரசித்தேன்.

    வழக்கமான கதை என ஆரம்பத்தில் நினைத்த எனக்கு முற்றிலும் ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது.

    கதை சொன்ன விதம், திகிலூட்டும் காட்சிகள் மற்றும் கொலைகாரனைப் பற்றிய சஸ்பென்ஸ் கதையை ஒரே மூச்சில் என்னை படிக்க செய்தது.

    ராபின் - அடுத்த கதை எப்போது வரும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த கதையில் மற்றும் ஒரு ப்ளஸ் ஓவியங்கள், நிறைய இடத்தில் ஓவியங்கள் மூலம் கதையை நகர்த்திச் சிறப்பு. வசனங்கள் தேவையான அளவு இருந்தது.

      Delete
    2. Agree totally - one of the best books of 2022.

      Delete
  33. எடிட்டர் சார் 

    மொத்தம் 3 செட் தீபாவளி வெளியீடுகள் ஆர்டர் செய்திருந்தேன் சார். அனைத்தும் வந்துவிட்டன சார். எனினும் நமது dispatch நண்பர்கள் இன்னொரு Tex புத்தகம் தனியே அனுப்பிவிட்டனர் சார். என் அலுவலக நண்பருக்கு பிடிக்கும் என்பதால் நான் எடுத்துக்கொள்கிறேன் சார். இன்று மேலதிகமாக 150+35 = 185 ரூபாய் அனுப்பிவிட்டேன் சார்.

    ReplyDelete
  34. நான் காரிகனின் கதையை லயன் டாப் 10 ஸ்பெஷல்
    மேகலா காமிக்ஸ் என்று வெளிவந்து கொண்டிருந்த இதழில் சில கதைகளையும் படித்து இருக்கிறேன். காரிகன் இன் மனைவியை டாக்டர் ஒருவர் கடத்தி விடுவார் அந்த கதை மட்டுமே எனக்கு ஞாபகம் உள்ளது

    ReplyDelete
  35. விங் கமாண்டர் ஜார்ஜ்ன் பென்குயின் படலம் என்னும் கதை எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது. அதுபோக ஒரு பெண்ணை கடத்தி ஆள்மாறாட்டம் செய்யும் கதையும் எனக்கு சற்று ஞாபகமிருக்கிறது கதையின் தலைப்பு தெரியவில்லை

    ReplyDelete
  36. பென்குவின் படலம் என்னிடம் இல்லை ஆனால் அந்தப் பெண்ணை கடத்தி ஆள்மாறாட்டம் செய்யும் உன் கதைப்புத்தகம் இப்பொழுதும் என்னிடம் உள்ளது.

    ReplyDelete
  37. தீபாவளியன்று மாப்பிள்ளையுடன்(அக்கா பையன் மோகித்) பட்டாசு வெடிக்கவே நேரம் சரியாக இருக்கும் தளத்துப் பக்கம் வரமுடியாது என்பதால் காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் ஆசிரியர் மற்றும் லயன் முத்து காமிக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. சீனியர எடிட்டர்,எடிட்டர்,ஜூனியர் எடிட்டர் இற்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும்,பணியாளருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். 💥🎊❤️🎉🌸🎇🎁🌅

    ReplyDelete
  39. அட்டவணை 2023 வரவேற்கிறோம

    ReplyDelete
  40. எடிட்டர் மற்றும் குடும்பத்தினர், பணியாளர்கள் , வாசக அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  41. தோர்கலுக்காக வெயிட்டிங்

    ReplyDelete
  42. வணக்கம் நண்பர்களே!

    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
  43. டியர் விஜயன் சார்..
    என் அபிமான "காரிகன்" - ஸ்பெஷலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..
    சிஸ்கோ "_கதையில் ஓவியம் ஒரு அட்டகாசம்..அழகு..எனவே
    இவர் கதையையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..
    மற்றும் - அட்டவணை - 2023.
    அனைவருக்கும் இனிய தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள்..சார்.

    ReplyDelete
  44. "மாய மோஹினி" நம் முன்னே நர்த்தனம் ஆடுகிறது ! - yaar antha mogini sir :-)

    ReplyDelete
  45. இன்றைக்கே பலரை காணோம். எல்லாரும் பட்சணங்கள் சுடுவதில் பிஸி என நினைக்கிறேன்.

    இங்கே பட்சணங்கள் சுடுவதற்கு உதவி செய்வதில் நேற்றிலிருந்து பொழுது போய்க்கொண்டு இருக்கிறது.

    கிடைத்த கேப்பில் பாலைவனப் பரலோகத்தை படித்து முடித்து விட்டேன்.

    நமது இளவரசரை காணோம். இளவரசர் என்றாலும் பட்சணங்கள் சுடுவதில் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் போல தெரிகிறது:-)

    இதற்கு இடையில் 20-20 உலககோப்பை நேற்றிலிருந்து ஆரம்பித்து விட்டது. கிடைக்கும் நேரத்தில் ஸ்கோர் பார்த்து விட்டு வேலை ஓடுகிறது.

    தீபாவளி படங்கள் பார்ப்பதில் எத்தனை பெயர் பிஸி எனத் தெரியவில்லை.

    ஆமாம் இதெல்லாம் எதற்கு என்று ரொம்ப யோசிக்க வேண்டாம் நண்பர்களே. இதோ - நல்லவேளை நமது ஆசிரியர் காமிக்ஸ் அட்டவணையை அடுத்த வாரம் வெளியிடுவதாக தீர்மானித்தது.

    ReplyDelete
  46. Loved the paalaivana paralogam storyline. Reminded me of irulin mainthargal.

    ReplyDelete
  47. பரலோக பயணம் டெக்ஸ கதையின் அட்டை படத்துக்கு ஒரு மலை சிங்கத்தையும் சேர்த்து இருந்தால் இன்னும் அமர்க்களமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  48. நான் சொன்னா பொய்யின்னு சொன்னீங்களே... இப்ப வந்திருக்கிற தீபாவளி சரவெடி ஸ்பெசல் அட்டையை மட்டுமே மாத்தி வந்திருக்கிற ஏற்கனவே படித்த கதை தான்...

    அடிபட்டு படுத்திருந்த எங்க ஹீரோ 106ஆம் பக்கத்திலே தான் வர்றாரு ஒரு அவசர குடுக்கை அதிகாரியை காப்பாத்த... 106ஆம் பக்கத்துக்கு மேலே கதை செம வேகம்... என்ன ஒன்னு சில அச்சு பிழைகளையும், பேணல் வசன பிழைகளையும் கவனித்திருக்கலாம்,.
    இருந்தாலும் உப்புமா அவசரமா செய்யும் போது இது சகசம் தான்... ஆனாலும் தீபாவளிக்கு தேவையான இதழ்...

    ReplyDelete
    Replies
    1. // என்ன ஒன்னு சில அச்சு பிழைகளையும், பேணல் வசன பிழைகளையும் கவனித்திருக்கலாம்,. //

      +1

      Delete
    2. 20-20 Special :-) Yeah the mistakes could have been reviewed. But reading first time I felt good.

      Delete
  49. வில்லன் பெயரும்.. அதிகாரியின் பெயரும் கிட்ட தட்ட ஒரே மாதிரி தான்...

    ReplyDelete
    Replies
    1. முன்னாள் அதிகாரியாக இருந்து வயசாகி பாலைவனங்களையும் செவ்விந்தியர்களையும் பிரிய முடியாமல் இப்படி ஆகிப்புட்டாரோ என்னமோ - அதிகாரியின் future கதைகளில் தெரியும் :-)

      Delete
    2. அப்ப இரண்டு அதிகாரிகள் மோதும் கதைன்னு சொல்லுங்க ரம்மி :-)

      Delete
  50. நமது அட்டவணைக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே.

    ReplyDelete
  51. 2 books, cricket match result - hmm attaivanai would have added to crackers surely !!

    ReplyDelete
    Replies
    1. That's what I asked our எடிட்டர் சார். But he said there would be no one here on the day of தீபாவளி.

      Delete
    2. Avarayum kaanom :-) What he said proved true - total just 90 comments and I would have put 5-6 in that - that much empty.

      Delete
  52. All books of October are Super hits...if anyone missed any books, pls grab your copy..its really a Diwali treat...Editor Sir, Staffs and friends of comic lovers - Wish you all very happy, prosperous, safe Diwali...God Shower his blessings to all and family members...

    ReplyDelete
  53. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  54. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!!!

    ReplyDelete
  55. ஒரு மாயனோடு மோதல் :

    அற்புதமான கதை .

    வரலாறும் கற்பனையும் நன்கு பிணைந்து வார்ப்பெடுத்து ஆர்ப்பரிக்கும் கதை.

    டெக்ஸின் கதைகளில் மணிமகுடம்.

    ஆல்டைம் பெஸ்ட் !!!!!!

    9.9/10

    ReplyDelete
  56. WE NEVER SLEEP

    வருடம் 1868

    "அப்படியா உயில்ல எழுதியிருக்காரு?"

    "ஆமா! க்ரேஸ்லாண்ட் தோட்டத்தில்( Graceland cemetery) அவர் குடும்பத்துக்கான கல்லறைக்கான
    பகுதியில அந்தப் பொண்ணோட உடல் புதைக்கப்படப் போகுது. அவர்கிட்ட வேலை செஞ்ச பொண்ணுங்கிறதால குடும்பத்தைச் சேர்ந்தவள் இல்லைன்னு சொல்லி அந்த இடத்தை வேறு யாருக்கும் எந்த காலத்திலும் அவரோட வாரிசுகள் விற்க முடியாதுன்னு உயில்ல அழுத்தம் திருத்தமா எழுதியிருக்கார்.."

    "மரணத்துக்குப் பின்னாடியும் அந்தப் பொண்ணோட அமைதி கெடக்கூடாதுன்னு நினைக்கிறார் போல. "

    யார் அந்தப் பெண்?

    யார் அந்தப் பெரிய மனிதர்?


    வருடம் 1856

    அந்த அலுவலகத்தின் உள்ளே நுழைந்த பெண் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போகிறார்கள் வரவேற்பு பகுதியில் உள்ளவர்கள்.

    "முடியாது " என அவர்கள் சொன்னதை அப்பெண் ஏற்க மறுக்கவே முதலாளியிடம் அழைத்து செல்கிறார்கள்.முதலாளிக்கும் அப் பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. முதலாளி "ஆட்கள் வேண்டும்" என பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தது உண்மை.

    ஆனால் அவர் தொழிலுக்கு ஆண்களையும் வரவேற்பு, கிளார்க் போன்ற பணிகளுக்கு பெண்களையும் கேட்டிருந்தார்.
    இப் பெண்ணோ ஆண்கள் செய்யும் வேலையை தான் செய்வேன் என மல்லுக் கட்டி நின்றார். இப் பணியில் ஆண்களால் நுழையவே முடியாத இடங்களிலும் தன்னால் பணியாற்ற முடியும் என வாதித்தார்.முதலாளியும்
    சாமான்யப்பட்டவரல்ல . இதை ஒத்துக் கொண்டு அவருக்கு அப் பணியை அளித்தார். நினைத்தே பார்க்க முடியாத காலகட்டம்.
    இப்படியாக அமெரிக்காவின் முதல் துப்பறியும் பெண்மணியாக வரலாற்றில் இடம் பதித்து நுழைந்தார் KATE WARNE கேட்டி வார்னே.

    பெண்களுக்கான ஓட்டுரிமையே இந்நிகழ்வுக்கு 64 வருடங்களுக்குப் பின்னரே சாத்தியமானது எனும்போது இது பெரும் முயற்சிதான்.

    சம்பவம் நடந்த இடம் சிகாகோவில்
    உள்ள பிங்கர்ட்டன் ஏஜன்சியின் தலைமை அலுவலகம்.முதலாளி ஆலன் பிங்கர்ட்டன்.

    தனது உயிலில் கேட்டி வார்னேயின் கல்லறைத் துயில் எக்காலத்திலும் கலைக்கப்படக்கூடாது என எழுதியவர் ஆலன் பிங்கர்ட்டன்தான்.
    இலினாய்ஸின் சிகாகோவில் உள்ள கிரேஸ்லாண்ட் மயானப் பகுதியில்
    ( Graceland cemetery - Chicago, Illinois)

    NOTABLE BURIALS என்பதின் கீழ் கேட்டி வார்னேயின் பெயர் இன்றும் உள்ளது. Tombstone- னை இன்றும் நேரில் காண முடியும்.( பிங்கர்ட்டன் பேரும் இதில் உண்டு).வரலாறில் அழிக்கமுடியாத முத்திரை பதித்து சென்ற ஒரு பெண்ணை பற்றிய கதையை வெளியிட்டதன் மூலம் வெறுமனே " பெண் உளவாளி" என முத்திரை குத்தப்பட்டு பிரெஞ்சு அரசால் பலிகடா ஆக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையை வெளியிட்டதன் மூலம் எடிட்டர் சாருக்கு ஏற்பட்ட வருத்தத்தை இக்கதை அறவே போக்குவதோடு டெக்ஸ் கதைகளில் ஒரு முக்கிய இடத்தையும் அளிக்கிறது. காரணங்கள் பின் வருகின்றன.

    கேட்டி வார்னே பற்றி

    " கட்டளைகள் பிறப்பிக்கவென்றே பிறந்தது போல் தோற்றம்,முகத்தில் நேர்மை தொனித்தது, மெல்லிய ஆனால் உறுதியான உடல்வாகு, பிரௌன் நிற கேசம்,
    உடலசைவுகளில் நளினம்,அழகு என்பதை விட அறிவார்ந்த முகம், உணர்ச்சி ததும்பும் தெளிவான முகவெட்டு

    - பிங்கர்ட்டன் 1883-ல் வெளியான THE SPY OF THE REBELLION நூலில்.

    ReplyDelete
    Replies
    1. WE NEVER SLEEP 2

      1858-ல் ஆடம்ஸ் எக்ஸ்பிரஸ் கம்பெனியில் 50000 டாலர்கள் மாயமாக மறைந்தன. இதைத் துப்புதுலக்க பிங்கர்ட்டனை நாடினார் கம்பெனியின் அதிபர்.

      (போக்குவரத்து கம்பெனியாக 1854 - ல் துவங்கி 1929 - ல் Closed end fund- equity fund என்ற முறையில் இயங்கிய இக் கம்பெனி கிரேட் டிப்ரஷனை எல்லாம் சமாளித்து இதே முறையில் ஆடம்ஸ் ஃபண்ட்ஸ் என இன்றும் இயங்கி வருகிறது.)

      முக்கிய கையாடல் குற்றவாளியாக அலபாமாவைச் சேர்ந்த மரோனி சந்தேகிக்கப்பட்டபோதிலும் ஆதாரங்கள் இல்லை. மரோனியின் மனைவியுடன் நெருங்கிப் பழகி பல விஷயங்களை கிரகித்த கேட்டியின் திறமையால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40000 டாலர்கள் மீட்கப்பட்டன.மரோனிக்கு அலபாமா சிறையில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது
      .கேட்டியின் மீதான பிங்கர்ட்டனின் ஆழமான நம்பிக்கையை இச்சம்பவம் உறுதிப்படுத்தியது.

      Delete
    2. WE NEVER SLEEP

      கேட்டி வார்னே அமெரிக்க சிவில் வாரின் போதும் அதற்கு பின்னரும் பல சிறிதும் பெரிதுமான சாகசங்களில் ஈடுபட்டிருந்தாலும் நமது ஒரு மாயனோடு மோதல் கதையோடு தொடர்புடைய ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

      1860 -ல் பல பெண் டிடெக்டிவ்ஸ்களை நியமித்த ஆலன் பிங்கர்ட்டன் அவர்களுக்கு மேலாளராக கேட்டியை நியமித்தார்.

      பால்டிமோர் சதிவலை

      1861-ல் பிலடெல்பியா - வில்மிங்டன்- பால்டிமோர் ரயில்பாதையின் அதிபர் சாமுவேல் ஃபெல்ட்டன் ஆலன் பிங்கர்ட்டனை அணுகினார் . மேரிலாண்ட் மாகாண பகுதியில் அப்போதைய அரசியல் சூழ்நிலையில் அமெரிக்க யூனியனிலிருந்து பிரிந்து செல்ல விரும்பிய பிரிவினைவாதிகளால் ரயில் பாதைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அந்த பிரச்சினையை சமாளிக்க உதவவும் பிங்கர்ட்டன் ஏஜன்சியை கேட்டுக் கொண்டார்.இதைக் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆலன் ரயில் பாதை ஆபத்துகளையும் விட ஆபத்தான ஒரு சதியினைப் பற்றி அறிந்தார் . அப்போது தேர்தலில் ஜெயித்து அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவிருந்த ( President-elect) ஆப்ரஹாம் லிங்கனை கொல்ல அடிமை மாகாண ஆதரவாளர்களால் சதிவலை பின்னப்பட்டுள்ளது என்பதுதான் அது.

      மேலிடத்தில் இதுபற்றி மேலும் விசாரிக்க அனுமதி பெற்ற ஆலன் கேட்டி வார்னே உட்பட 5 ஏஜன்ட்களை மேரிலாண்டில் உள்ள பால்டிமோருக்கு பிப்ரவரி 3 1861 - ல் அனுப்பினார்.

      மிஸஸ் செர்ரி , மிஸஸ் பார்லி போன்ற பெயர்களில் பால்டிமோரில் உலவிய கேட்டி பால்டிமோரின் பார்னம் சிட்டி ஹோட்டலில் தங்கி " தெற்கத்திய இளம் கன்னிகையாக" உருமாறி தெற்கத்திய உச்சரிப்பு , நடிப்புத் திறமை போன்றவற்றால் பிரிவினைவாத கூட்டத்தில் ஊடுருவி முக்கிய தகவல்களை அறிந்தார் .

      Delete
    3. சதித்திட்டம் இதுதான்:

      ஜனாதிபதியாக பதவியேற்கும் லிங்கனின் பயண திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதான்.

      இலினாயஸ் - ல் உள்ள ஸ்பிரிங் பீல்டில் துவங்கும் ரயில் பயணம் வாஷிங்டன் DC - ல் முடிவடையும். இடையில் 16 இடங்களில் லிங்கன் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதிருந்த ரயில் தடங்களின் அமைப்பின் படி வடக்கிலிருந்து வரும் தடங்கள் மேரிலாண்ட் பால்டிமோரில் முடியும்.இறுதி ஸ்டேஷன் கால்வெர்ட் ஸ்ட்ரீட் ஸ்டேஷன்.

      தெற்கு நோக்கி பயண ரயில்தடம் காம்டென் ஸ்ட்ரீட்டில் ( தற்போது காம்டென் யார்ட்ஸ் ஸ்டேஷன்)
      துவங்கும். கால்வெர்ட் ஸ்ட்ரீட்டிலிருந்து காம்டென் ஸ்ட்ரீட்டுக்கு கோச்வண்டியில்தான் செல்லவேண்டும். சுமார் ஒரு மைல் தூரம்.

      கால்வெர்ட் ஸ்ட்ரீட் ஸ்டேஷனிலிருந்து கோச் வண்டியை அணுகும் பாதை மிகவும் குறுகலானது.
      லிங்கன் கோச் வண்டியில் ஏறச் செல்கையில் வெளியாட்கள் மூலம் பெரிய கலவரம் ஏற்படுத்தி உள்ளூர் , பாதுகாப்புக்கு வந்திருக்கும் போலிஸின் கவனத்தை திசைதிருப்பி லிங்கனை கொல்வதே ஏற்பாடு.கொலையாளிகள் ஒரு ஸ்டீம் படகு மூலம் செக்கெஸ்பீக் வளைகுடா பகுதிக்கு தப்பிச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

      கேட்டியிடம் ஒரு கடிதம் கொடுத்த பிங்கர்ட்டன் அப்போது நியூயார்க்கிலிருந்த இலினாய்ஸ் மாகாண முன்னாள் செனட்டர் நார்மன் ஜட்டை பார்க்க சொன்னார்.கொலை முயற்சி பற்றிய விவரங்களை கடிதம் மூலம் அறிந்த நார்மன் தானும் , பிங்கர்ட்டனும், லிங்கனும் பிப்ரவரி 21- ல் தனித்து பேச ஏற்பாடு செய்தார். நார்மன் தனது நலம் விரும்பி என்றபோதும் இந்த கொலை முயற்சியை நம்ப மறுத்தார் ஆப்ரஹாம் லிங்கன்.

      ஆனால் நியூயார்க் மாகாண முன்னாள் கவர்னரும், செனட்டரும் அமையப் போகும் அரசில் செகரட்டரி ஆஃப் ஸ்டேட் ஆக பதவியேற்கவிருந்த வில்லியம் ஸீவர்டின் மகன் பிரெடெரிக் ஸீவர்ட் ஆலன் பிங்கர்ட்டனின் தகவல்களை உறுதி செய்து செய்தி அனுப்பவே லிங்கன் பிங்கர்ட்டனின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்க ஒப்புக் கொண்டார்.ஆனால் பென்சில்வேனியாவின் ஹாரிஸ்பெர்க் வரை பயண திட்டத்தில் மாற்றம் செய்ய விரும்பவில்லை.

      Delete
    4. ஹாரிஸ்பர்க்கில் நடைபெற்று கொண்டிருந்த ஒரு உயர்மட்ட விருந்திலிருந்து இடையிலேயே கிளம்பிய லிங்கன் சாதாரண பயண உடைக்கு மாறி ஒரு சால்வை போர்த்தி ஒரு கை ஊனமுற்றவர் போல் கேட்டியால் மாற்றப்பட்டார்.ஹாரிஸ்பர்க்கிலிருந்து பிலடெல்பியாவுக்கு ஒரு சிறப்பு பென்சில்வேனியா ரெயில்ரோடு டிரெய்ன் மூலம் வந்த லிங்கன் மற்றொரு சிறப்பு பிலடெல்பியா, வில்மிங்டன் பால்டிமோர் ரயில் மூலம் பால்டிமோர் வந்தடைந்தார்

      (லிங்கனின் INAUGURAL JOURNEY MAP என இப்போது பார்த்தால் 16 இடங்களில் பேசினார் என இருக்கும்.
      ஆனால் பால்டிமோரில் பேசாமல் இரவுநேரத்தில் கடந்தார் என்றுமட்டுமே இருக்கும்)

      இதையெல்லாம் செய்யுமுன்பாக பென்சில்வேனியா- பால்டிமோர் தந்தி தொடர்பு முற்றிலும் செயலிழக்கச் செய்யப்பட்டது.

      எதிர்பாராத தேதியில் ( பிப்ரவரி 23-24) எதிர்பாராத நேரத்தில் மாறுவேடத்தில் வந்ததால் பால்டிமோர்- வாஷிங்டன் ரயில் மாற்றத்தில் லிங்கனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பென்சில்வேனியா துவங்கி வாஷிங்டன் டிசி வரும்வரை கேட்டி கண்ணுறங்கவில்லை. கண் அயராது செய்த கேட்டி யின் உழைப்பை நேரில் பார்த்த ஆலன் அதன் பின்னரே தனது கம்பெனியின் ஸ்லோகனாக

      " We never sleep" என வைத்தார்.
      ஊடகங்களில் கேட்டி வார்னே பற்றி பல வடிவங்கள் வந்துள்ளன.

      காமிக்ஸ் உலகின் உயரிய விருதான எய்ஸ்னர் விருது பெற்ற , எம்மி விருதும் பெற்ற ஜெஃப் ஜென்ஸன் ஆக்கத்தில் சமீபத்தில் வெளியான கிராபிக் நாவல்

      BETTER ANGELS - AN ADVENTURE OF KATE WARNE

      Written by Jeff Jensen

      Illustrated by George Schall

      Published by ARCHAIA

      Better angels என்பது லிங்கன் வாஷிங்டன் டிசி யில் பதவியேற்பு விழாவில் உரை ஆற்றியபோது உபயோகித்தவை

      லிங்கனின் உயிர்காக்கும் இம்முயற்சியில் கேட்டியின் பங்கு அளப்பரியது.பிங்கர்ட்டன், கேட்டி மட்டுமே இதில் ஈடுபட்டனர். வேறு யாரையும் நம்ப பிங்கர்ட்டன் தயாராக இல்லை. அப்போதிருந்த அரசியல் சூழல் அப்படி.

      லிங்கன் இதன் பின்னர் நான்கு ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தார். 1865-ல் கொல்லப்பட்டார். உள்நாட்டு போரில் வெற்றி பெற்று ஒருங்கிணைந்த அமெரிக்க தேசத்தை உருவாக்கியதில் அவர் திட மனதுக்கு பெரும் பங்குண்டு.அமெரிக்க நவீன பொருளாதாரத்துக்கு அடிக்கல் நாட்டியவர் அவரே.

      அவ்வகையில் கேட்டி வார்னேவை நாம் நினைவு கூறத்தான் வேண்டும்.
      கேட்டி வார்னே ஒரு unsung hero தான்.

      Delete
    5. Thanks for the info sir. Great job.

      Delete
    6. Wow very interesting facts Doc. So good to read this.

      Delete
    7. 'ஒரு மாயனோடு மோதல்' கதையைப் படிக்கும்போது 'கேட்டி வார்னே'வும் உண்மையாய் வாழ்ந்த கேரக்டராய் இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தேன். கூகுளில் தேடிப்பார்க்கலாமா என யோசித்தேன். 'சரி வேணாம் எதுக்கு டைமைஙவேஸ்ட் பண்ணிக்கிட்டு - அப்படி யாராவது இருந்தா செனாஅனா கட்டுரை எழுதுவாரில்ல - அப்பப் படிச்சிக்கிட்டாப் போச்சு' என்று யோசித்தேன்! காத்திருந்தேன்.. என் கணிப்பும், காத்திருப்பும் வீணாகவில்லை!! கேட்டி மற்றும் லிங்கன் பற்றிய அருமையான தகவல்களுக்கு நன்னிகள் செனா அனா ஜி! 'கேட்டி ஒரு நிஜமாய் வாழ்ந்த கேரக்டர்' என்று தெரியவரும்போது பிரம்மிப்பாய் இருக்கிறது!

      Delete
  57. ஆசிரியர், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  58. அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  59. நமது அன்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கும், நமது லயன் குழுமத்தை சேர்ந்த அனைவருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  60. அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  61. @ ALL : நம் வாசகக் குடும்பத்திற்கும், அவர்தம் குடும்பங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ! பண்டிகையும் தொந்தியும் போல , பலகாரங்களும், ஏப்பமும் போல - உங்கள் வாழ்வுகளும் , சந்தோஷங்களும் கரம் கோர்த்து நடை போடட்டும் !

    ReplyDelete
    Replies
    1. // பண்டிகையும் தொந்தியும் போல , பலகாரங்களும், ஏப்பமும் போல //
      நோம்பி நாளும் அதுவுமா ஏன் சார் ஈ.வி யை வம்புக்கு இழுக்கறிங்க...

      Delete
    2. அதானே?!! நான் பாட்டுக்கு கையில கிடைச்சத மென்னுகிட்டு சமத்தா உட்கார்ந்திட்டிருக்கேன்...

      Delete
  62. நட்புக்கள் அனைவருக்கும், ஆசிரியர் சார் மற்றும் அலுவலக நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎆🎇🤝🙏

    ReplyDelete
  63. Happy Deepavali to our editor ,office colleagues and to all friends.

    ReplyDelete
  64. சார் வணக்கம். அக்டோபர் நடுவில் இளவரசிக்கு ஒரு கேள்வி. இருப்பதாக சொன்னீர்களே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அப்போ அந்த கேள்வி அவுட் ஆஃப் syllabus போலவே ஹிஹிஹி

      Delete
    2. என்னது மாடஸ்டி அக்கா நம்ப லிஸ்ட்லேயே இல்லையா. அப்ப நாங்க ஒரு குண்டு புக்கு கேப்போம்...

      Delete
  65. ஆசிரியர் அவர்களுக்கும் ,அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் ,பணியாளர்களுக்கும் ,இங்கு கூடும் அனைத்து நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  66. நண்பர்களுக்கும், எடிட்டர் சமூகத்திற்கும், லயன் அலுவலக சகோக்களுக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
  67. அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  68. தீபாவளி ஸ்பெஷல் பதிவு இல்லையா சார் ?!

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா . தீபாவளி தின பதிவு அட்டவணக்கான முன்னோட்டத்துடன்

      Delete
    2. ஆளில்லாத டீக்கடையிலே பாய்லரைப் பற்ற வைப்பானேன் சார் ?

      Delete
    3. நாம டீயை சுடச் சுட போட்டா ஆளுங்க தன்னைப் போல வருவாங்க சார்...

      Delete
    4. நீங்க பதிவு போடுங்கள் சார். இன்று மாலைக்குள் 300 கமெண்ட் வர நான் Guarantee

      Delete
    5. குமார் இருக்க பயமேன்...

      Delete
    6. போங்கப்பா போய் நல்லாத் தூங்குங்க:-)

      Delete
  69. இனிய விளக்கு-வரிசை தின நல்வாழ்த்துகள் :)
    தீப ஆவளி - array of lights !

    ReplyDelete
  70. அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  71. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    இன்று தீபாவளி சிறப்பு பதிவு உண்டா?

    ReplyDelete
  72. நண்பர்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .....

    ReplyDelete
  73. எடிட்டர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  74. அன்பு நண்பர்கள்,
    ஆருயிர் சொந்தங்கள்,
    சீனியர் எடிட்டர் ஐயா,
    ஆசிரியர்,
    ஜூனியர் எடிட்டர்,
    & Team லயன் க்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...💐💐💐💐💐

    ReplyDelete
  75. லின்கனைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை எழுதுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனால் கேட்டிவார்னே பற்றியும்பிங்கர்டன் பற்றியும்எழுதுவீங்கன்னு எதிர்பார்க்கலைங்கடாக்டர்சார் அதுதான் உங்கபார்வையும்மேலோட்டமான எனதுபார்வையும். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  76. பருவத்தே கொலை செய்!

    மிகவும் விறுவிறுப்பான கதை!!

    இடையில் நிறுத்தாமலே படிக்க வைத்த கதை

    9.1/10

    ReplyDelete
  77. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  78. ஆசிரியர் குடும்பம், நமது காமிக்ஸ் அலுவலக சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  79. நடுநிசி வேட்டை..

    முடிவு முன்கூட்டியே யூகிக்கும் வண்ணம் இருந்தது.ஆயினும் who dunnit ரக கதைகள் பெரும்பாலும் சுவாரஸ்யமாகவே செல்லும்

    8.5/10

    ReplyDelete
  80. பாலைவனப் பரலோகம்


    முதல் வாசிப்பு! இவ்வளவு சீக்கிரம் படிக்க முடிந்தது ஆச்சரியம்! பரபரப்பாக கதை நகர்ந்ததுதான் காரணமாக இருந்திருக்கலாம்

    ReplyDelete
  81. அட்டவணைக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே.

    ReplyDelete
  82. லயன் காமிக்ஸ் டீம், ஆசிரியர், நண்பர்கள் யாவருக்கும் இனிய தீப ஒளி வாழ்த்துக்கள்💐💐💐💐💐

    ReplyDelete
  83. **** பருவத்தே கொலை செய் *****

    வழக்கமான டெக்ஸ் டெம்ப்ளேட்டிலிருந்து சற்றே மாறுபட்டு 'அட' சொல்ல வைக்கிறது!

    காசுக்காக கொலை செய்பவர்களுக்காக ஒரு சங்கம் - அதற்கொரு நிழல் தலைவர் - செயலாலர் - ரகசியக் கூட்டம் - சங்கத்திற்கான விதிமுறைகள்/கட்டுப்பாடுகள் - 'ரெகுலேட்டர்' என்ற பதவியின் பெயர் - அதற்கு ஆளெடுக்கும் பணி - அடேங்கப்பா செமத்தியான வில்லன்களா இருப்பானுக போலிருக்கே என்ற பரபரப்பிலேயே கதை முக்கால்வாசி நகர்ந்துவிடுகிறது! மீதமிருப்பது டெக்ஸ் குழுவினரின் வழக்கமான டமால் டுமீல் ஆக்ஸன் காட்சிகள்!!

    க்ளைமேக்ஸில், அச்சங்கத்தின் நிழல் தலைவர் யாரென்று தெரியவரும்போது கொஞ்சம் சிரிப்பு வந்தாலும் 'உண்மையான வில்லத்தனத்திற்கு உடலோ, வயதோ ஒரு பொருட்டல்ல என்பதும் - கொஞ்சூண்டு குரூரபுத்தி இருந்தால் போதும்' என்பதும் புரியவருகிறது!

    டெக்ஸின் பிஸ்டலில் தோட்டா தீர்ந்துபோய் அதை அவர் நிரப்பிக்கொள்ளுவதைப் போன்ற அபூர்வக் காட்சிகளும் இக்கதையிலுண்டு - டோன்ட் மிஸ் இட்!!

    9/10

    ReplyDelete
    Replies
    1. // டெக்ஸின் பிஸ்டலில் தோட்டா தீர்ந்துபோய் அதை அவர் நிரப்பிக்கொள்ளுவதைப் போன்ற அபூர்வக் காட்சிகளும் இக்கதையிலுண்டு - டோன்ட் மிஸ் இட்!! //

      Delete
    2. ஹிஹிஹி செம செம

      Delete
    3. // டெக்ஸின் பிஸ்டலில் தோட்டா தீர்ந்துபோய் அதை அவர் நிரப்பிக்கொள்ளுவதைப் போன்ற அபூர்வக் காட்சிகளும் இக்கதையிலுண்டு - டோன்ட் மிஸ் இட்!! //
      இதுபோன்ற காட்சிகள் பாலைவன பரலோகத்தில் பார்த்ததாக ஞாபகம் :-)

      Delete
    4. ///இதுபோன்ற காட்சிகள் பாலைவன பரலோகத்தில் பார்த்ததாக ஞாபகம்///

      'பாலைவனப் பரலோகம்' போன நூற்றாண்டில் வெளியான கதை! அதற்குப் பிறகு இப்போதுதான் நிரப்புகிறார் என்றால், அவருடைய பிஸ்டல் எத்தனை ஆயிரம் குண்டுகளை நிரப்பவல்லது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் PfB!

      Delete
    5. // அவருடைய பிஸ்டல் எத்தனை ஆயிரம் குண்டுகளை நிரப்பவல்லது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் PfB! //

      :-) :-) Rummi note this point :-)

      Delete
  84. அப்பாடி தீபாவளி பரபரப்பில் லோடு மோர் இன்னும் ஆகவில்லை..
    அட்டவணையும் இன்னும் பூர்த்தி ஆகவில்லை..i? என்று நினைக்கிறேன்..
    சந்தாவில் நிறைய தடங்கள் இருப்பது போல் இப்படியும் ஒரு தடத்தை வைத்துக் கொள்ளுங்களேன்.
    மறக்கமுடியாத சில பழைய ஹீரோக்களை,_ மறக்க முடியாத பழைய சைஸில் ஒருமுறை வெளியிட்டுத்தான் பாருங்களேன்.
    சைஸ் - பற்றி நீங்கள் பலமுறை கூறிவிட்டீர்கள்தான்.
    இருந்தாலும் எங்களது கோணத்தில் கதை நிறைய பக்கங்களை --கடந்து செல்லும்
    போது கிடைக்கும் சுவராஸ்யம் அலாதியானது என்பதுதான்.

    எனவே, ஒரு சில ஹிரோக்களை
    பழைய சைஸான --ரூ.10 சைஸ் (அ) தற்போதைய டெக்ஸ் இதழ் சைஸ் --ஸில் வெளியிட்டால் சுவராஸ்யமான சேகரிப்பாக அமையும் என்று நம்புகிறேன். சார்... ஒருமுறை முயற்சி செய்யுங்களேன்..
    அவர்கள் - ரிப்போர்டர்.ஜானி, கேப்டன் பிரின்ஸ், மேக் & ஜாக், சிக்பில்- ..என்று..ஒருமுறை முயற்சி செய்துபாருங்களேன்..சார்...ப்ளீஸ்...

    ReplyDelete
  85. அதாவது பக்கத்துக்கு 6 கட்டங்கள் என்று..

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பே இல்லை சார் ; அதற்கெல்லாம் இன்று அனுமதியே கிடையாது ! மாடஸ்டி தான் நீங்கள் குறிப்பிடும் பாணியில் வருகிறாரே - அவரை ரசித்துக் கொள்ள வேண்டியது தான் !

      Delete
    2. வாவ்..சூப்பர்.. ii இது நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாய் இருக்கட்டுமே..ii

      Delete
    3. // மாடஸ்டி தான் நீங்கள் குறிப்பிடும் பாணியில் வருகிறாரே //

      அடுத்த வருடம் இளவரசி வருகிறார் என எடுத்துக் கொள்ளலாமா சார்:-)

      Delete
  86. I am reading the story I left unread in Deepavali Malar 2021 - Pokkisham Thediya Payanam - so good - different from usual template Tex stories !!

    ReplyDelete
    Replies
    1. நிறைய பொக்கிஷங்களாய் அடிக்கடி நம் நாயகப் பெருமக்கள் தேடி வைப்பதாலும். ஏகப்பட்ட பயணங்களில் அடிக்கடி ஆழ்ந்திடுவதாலும், 'டக்'கென்று கதை நினைவுக்கு வர மறுக்கின்றது சார் ! But glad you liked it !

      Delete
  87. நடுநசி வேட்டை...


    செம கலக்கலான அட்டைப்படம் ,செம விறுவிறுப்பான க்ரைம் நாவல் சஸ்பென்ஸ் போல் செல்லும் கதை பாணி ,சர்ப்ரைஸ் க்ளைமேக்ஸ்..என படு வேகமாய் ராபினின் இந்த நடுநசிவேட்டை பட்டையை கிளப்புகிறது...எனக்கு எப்பவுமே ராபினை பிடிக்கும்..அவரின் சாகஸங்கள் ஓவர் பில்டப் ஆகவும் இல்லாமல்...சாதாரண நாயகராயும் காணப்படாமல் ஒரு நிஜ காவல் அதிகாரியின் வேகமான சாகஸமாய் எப்பொழுதுமே பரபரப்பாய் செல்லும் ..அதுபோலவே தான் இந்த தீபாவளி திடீர் சர்ப்ரைஸ் இதழ் படுவேகமாய் சென்று தீபாவளி அன்று அழகான ஒரு வாசிப்பு அனுபத்தை வழங்கியது...அருமை....

    *****

    பாலைவன பரலோகம்..


    ஏற்கனவே பலமுறை வாசித்த கதையே ..ஆனாலும் வண்ணத்தில் ,இந்த கைக்கு அடக்கமான அளவில் மீண்டும் வாசித்தபொழது புதிதாய் ஓர் டெக்ஸ் சாகஸத்தை படித்த திருப்தி ..

    மொத்தத்தில் தீபாவளிக்கு வந்த இந்த இரண்டு திடீர் சர்ப்ரைஸ் இதழ்களும் வாசிப்பாளர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சியை சிறிது அதிகபடுத்தி உள்ளது உண்பது வெகு உண்மை...

    ReplyDelete
    Replies
    1. நம்முடைய தலைவர் தீபாவளி கொண்டாடி விட்டார்:-)

      Delete
  88. Edi Sir..
    29 th சனிக்கிழமையே 2023 அட்டவணை ரிலீஸ் பண்ணி சந்தோஷ செய்தி சொல்லிடுவீங்க..😍😘

    நவம்பர் புக்ஸ் ம் , S70 காரிகனும் அனுப்பிச்சிட்டு எங்களை சந்தோசப் படுத்திடுவீங்க..😍😘

    அப்ப எங்களுக்கு 29th சனிக்கிழமை தான் Double தமாக்கா..✨🌟❤

    ReplyDelete
    Replies
    1. இரும்புக் கவிஞருடன் சமீபமாய் அளவளாவினீர்களா சார் - ஆரூடங்களில் அவர் சாயல் தென்படுகிறதே ?

      விடுமுறை முடிந்து நாளை ஆபீஸ் போனால் தான் தெரியும் - பிரின்டிங் பிரஸில் ; லேமினேஷனில் ; பைண்டிங்கில் இன்னமும் எத்தனை பேருக்கு பண்டிகை குஜால்கள் தொடர்ந்திடுகின்றன என்று ! வழக்கமாய் ஒன்றுக்குப் பாதிப் பேர் லீவ் போட்டிருப்பார்கள் ! So நவம்பரின் இதழ்கள் கரை சேர்ந்திட பணிகளில் மறுக்கா யதார்த்தம் திரும்பிட வேண்டும் என்பதால் சற்றே பொறுமை அவசியமாகிடும் சார் !

      அப்புறம் இது finishing week என்பதால் நான் தலையை அக்கட நுழைத்துக் கிடைக்க வேண்டியிருக்கும் எனும் போது - சனிக்கிழமை ராக்கூத்து அடித்துத் தான் அட்டவணைப் பதிவை தயார் செய்திட வேண்டி வரும் ! And அது ஆஞ்சநேயர் வால் நீளத்துப் பதிவாய் இருக்குமென்பதால், ஞாயிறு காலையில் டீயைப் போட்டு விட்டு நீங்கள் ரெடியாகும் நேரத்துக்கு பதிவைப் போட்டிருப்பேன் ! So இதனை எதிர்பார்த்தே அக்டோபர் 30 என்று முன்கூட்டியே சொல்லியிருந்தேன் சார் !

      Delete
    2. எடிட்டர் சார் ஹிஹிஹி. நீங்க அட்டவணைப் பதிவை 30 ஆம் தேதி போடுங்கள். புத்தகத்தை எப்போது வேண்டுமானாலும் அனுப்புங்கள்.

      Delete
    3. எனக்கெல்லாம் அட்டவணை பதிவை படித்து ரசிக்க இரண்டு நாட்கள். அப்பறம் அதன் pros and cons அலசி ஆராய 4 நாட்கள். நீங்கள் எழுதிய நானே கேள்வி நானே பதில் ரசிக்க ரெண்டு நாட்கள் என நாட்கள் பறக்கும். இன்னும் 4 நாட்கள் மட்டுமே. ரொம்பவே ஆவலுடன் நான்

      Delete
    4. நீங்க முன்னாடியே பதிவை ரெடி செய்து 29ஆம் தேதி போட்டாலும் சந்தோசமே சார்.

      Delete
    5. அப்ப நவம்பர் finishing touchஐ நீங்க பார்த்துக்கிறீங்களா குமார்:-)

      Delete
    6. அப்படி இல்லை பரணி
      நீங்கள் சொல்வது போல அந்த அட்டவணை பதிவை எழுதி கொடுத்து விட்டால் நான் அழகாக type செய்து யார் கண்ணிலும் படாமல் பத்திரமாக வைத்துக் கொள்வேன்.

      Delete
    7. எழுதுவதற்கும் நிறைய நேரம் தேவையே குமார்:-)

      // யார் கண்ணிலும் படாமல் பத்திரமாக வைத்துக் கொள்வேன். //
      நம்பிட்டோம் நம்பிட்டோம் :-)

      Delete
    8. அப்போ வாய்ஸ் note ஆக அனுப்புங்க சார். :))

      Delete
    9. I like you Kumar :-)

      ஆசிரியருக்கு தொண்டை கட்டி உள்ளதாம் குமார்:-)

      Delete
  89. புதன்! வியாழன்! வெள்ளி! சனி! ஐயோ இத்தனை நாளாகுமா?? அட்டவணை வர•••••••••••••😢

    ReplyDelete
    Replies
    1. அதே ஃபீலிங் சார் எனக்கும். என்ன செய்ய?

      Delete
  90. சார் இன்னும் 3 நாட்கள் மட்டுமே.

    ReplyDelete
  91. பாலைவனப் பரலோகம் - கடந்த ஒரு மணி நேரமாக இங்கே வீட்டில் ஒரு பக்கத்தையும் விடாமல், வசனங்களை எல்லாம் படித்து, சித்திரங்களை ரசித்தது போதாது என்று படித்த சில பக்கங்களை மீண்டும் ஒருமுறை புரட்டி பார்த்து ஒரு ஜீவன் படித்து கொண்டு இருக்கிறது யுவர் ஆனர். ஆமாம் அவர் எங்கள் வீட்டு எஜமானி அம்மா தான், கதையை படித்து முடித்த பிறகு தான் தூங்குவேன் என அடம்பிடித்து கொண்டு இருக்கிறார்கள். ரொம்பவே ரசித்து படித்து கொண்டு இருக்கிறார்கள். :-)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சந்தோசப் படவேண்டாம் PfB! எஜமானியம்மா தன் 'ஆராய்ச்சி' படிப்பை முடித்தபின் "இதைத்தான் நாப்பது வருடங்களா உருட்டி உருட்டி படிச்சுக்கிட்டிருக்கீங்களாக்கும்?" என்று முறைக்கவும் வாய்ப்பிருக்கிறது!

      Delete
    2. // "இதைத்தான் நாப்பது வருடங்களா உருட்டி உருட்டி படிச்சுக்கிட்டிருக்கீங்களாக்கும்?" //

      எனக்கு அதிகாரியை பற்றி ரம்மி போடும் பின்னூட்டம் எல்லாம் நீங்கள் எழுதி கொடுத்தது போல தெரிகிறது இளவரசே :-)

      Delete
    3. // "நாப்பது வருடங்களா உருட்டி உருட்டி படிச்சுக்கிட்டிருக்கீங்களாக்கும்?" //

      நான் எனது திருமணம் உன்னுடன் என்று உறுதியான நாள் முதல் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்து உள்ளேன் என எங்கள் வீட்டு எஜமானியிடம் சொல்லி உள்ளேன்:-)

      Delete
  92. **** HACKERS WANTED ****

    Reputed சங்கத்தில் பணியாற்றிட அரியதோர் வாய்ப்பு!

    பணி : சிவகாசியில் DTP & graphic designerஆக பணியாற்றிடும் பொன்னன் & கோகிலா ஆகியோரது கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து 'அட்டவணை-2023' குறித்த ஃபைல்களை எடுத்துத்தர தகுதிவாய்ந்த ஹேக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

    சம்பளம் : Attractive remuneration + inBUNtives will be offered.

    தகவல்களுக்கு:
    இளவரசர்,
    அந்தப்புரம்,
    ஈரோடு.

    ReplyDelete
    Replies
    1. உங்க தர re bun eration ல பாதியே நீங்களே அடிச்சுடுவீங்கன்னு ஊருக்குள்ள பேச்சு செயலரே.

      Delete
    2. என்ன பன் றதுங்க ஷெரீப்.. ஒரு ஜான் வயிறு இருக்கே?!!😌

      Delete
    3. உஷார் ஐயா உஷாரு லயன் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் எல்லாம் உஷாரு :-)

      விஜய் @ ஆசிரியர் ரொம்ப உஷாராம். அட்டவணையை தயார் செய்ய அவரின் லேப்டாப்பை தான் உபயோக படுத்த சொல்லி உள்ளாராம், வேலை முடிந்த கையோடு வீட்டுக்கு கொண்டு சென்று விடுகிறாராம்.

      இது போக சிசி டிவி கேமரா வேற.:-)

      அதனாலே ஆசிரியர் லேப்டாப்பை hack செய்ய ஆள் தேவை என சொல்லுங்க:-) 2024 அட்டவணை கூட நமக்கு கிடைக்கலாம்:-)

      Delete
    4. பட்சி ஹேக் பன்னதுல புதிய ஸ்பைடர் கதை 2022 போல இருக்காம்....லார்கோ இருக்காம்....சினிஸ்டர் செவன் இருக்காம்...ஸ்மர்ஃப் வந்தாலும் வருமாம்...மேலும் முயற்சி செய்யுதாம்....மீத பக்கங்களை மீட்க....ஆனா இளவரசர் அம்பை எடுக்க வாணாம்னு அன்பாய் கேக்குறது...

      Delete
    5. //பட்சி ஹேக் பன்னதுல புதிய ஸ்பைடர் கதை 2022 போல இருக்காம்//

      ஸ்டீல், நீங்க மிரட்டின மிரட்டல்ல பட்சி பயந்து இன்னும் ரெண்டு மாசத்துல முடிய போற வருஷத்தை சொல்லி இருக்கு பாருங்க !
      கொஞ்சம் பார்த்து கரெக்டா சொல்ல சொல்லுங்க :-)

      Delete
    6. // நீங்க மிரட்டின மிரட்டல்ல பட்சி பயந்து இன்னும் ரெண்டு மாசத்துல முடிய போற வருஷத்தை சொல்லி இருக்கு பாருங்க ! //

      :-) :-)

      Delete
    7. சினிஸ்டர் செவன் - இத சொல்ல ஒன்னோட பட்சி எல்லாம் தேவை இல்லை :-), நமது டாக்டர் சார் மொழி பெயர்ப்பை முடித்த உடன் புத்தகம் வெளி வரும் என்பதை ஆசிரியர் சொன்னதாக ஞாபகம் :-)

      Delete
    8. நண்பரே அதேதான் இந்த வருசம் ஜனவரிக்குதான வந்துது....பட்சி சுத்தி வளைச்சு சொல்லும்....புரிஞ்சவங்களுக்கு புரியும்.....புரியாதவங்களுக்கு புரியாது....அதைப்போல அடுத்த வருசம்....

      என்னல கெக்கே பிக்கே இளிப்பு...ஊர்லருந்து வெரட்டிட்டாங்களா

      Delete
    9. // புரிஞ்சவங்களுக்கு புரியும்.....புரியாதவங்களுக்கு புரியாது.... //

      உனக்கு புரியுதாலே முதல்லே:-)

      // .ஊர்லருந்து வெரட்டிட்டாங்களா //

      உன்னை மாமியார் வூட்ல இருந்தது விரட்டி விட்ட கடுப்பாலே :-)

      Delete
  93. புத்தகத்தை எடுத்தால் கதையைப் படிக்காமல், அடுத்தமாதம் என்ன புத்தகம் என்று உடனேகடைசிப் பக்கத்திற்கு ஓடும் எண்பதுகளின் அந்தப்பழக்கம்இன்னும்மாறவில்லை. இப்பொழுதுஅடுத்தவருடம் என்ன என்ன புத்தகங்கள்என்ற ரேஞ்சிற்குமாறியுள்ளது. அடுத்தமாதபுத்தகத்திற்கே அவ்வளவுசந்தோசம். அடுத்தவருடமொத்தப்புத்தகங்களின் புத்தகம் பற்றியஅட்டவணைக்கு எவ்வளவு சந்தோசம், கொண்டாட்டம். 30ம்தேதி2023 புதுவருடப்பிறப்பு. எங்களுக்கு. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  94. 2023 நமது காமிக்ஸ் அட்டவணைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் இங்கே நமது அட்டவணை பற்றிய எண்ணத்தை பகிரலாமே. ரெடி ஸ்டார்ட் தி மியூசிக்

    தலா ஒரு கதைகள் (கதையின் நீளத்திற்கு ஏற்ப இரண்டு கதைகளாக கூட வர வாய்ப்பு உள்ளது)
    ======================================================================================
    சிஸ்கோ
    டேங்கோ
    ஆல்பா
    இன்ஸ்பெக்டர் ரூபி


    ஸாகோர் - குறைந்தது மூன்று கதைகள் கொண்ட ஒரு வண்ண புத்தகம்

    தலா ஒரு கதைகள்
    ================
    சோடா
    ட்ரெண்ட்
    நவீன வெட்டியான்
    தாத்தாக்கள் லூட்டி
    மாடஸ்தி (பழைய கிளாசிக் மறுபதிப்பு வர வாய்ப்புகள் குறைவு)
    டெட்வுட் டிக்
    கிளாசிக் ஜானி

    லக்கி லூக் ஆண்டு மலர் (2 கதைகள்) + 1

    கார்ட்டூன் தலா ஒரு கதைகள்
    ==========================
    சிக் பில் & கிட் ஆர்டின்
    ப்ளூ கோட் பட்டாளம்
    +
    கார்ட்டூன் ஸ்பெஷல் - அனேகமாக சென்னை புத்தக திருவிழா ஸ்பெஷல் ஆக வரலாம்
    +
    கைப்புள்ள ஜாக்

    மாதம் ஒரு டெக்ஸ் கண்டிப்பாக இருக்கும் இதில் சிறப்பு இதழ்கள் மற்றும் இளம் டெக்ஸும் அடங்கும்
    ============================================================================================
    ஈரோட்டில் டெக்ஸ் 75 ஸ்பெஷல்
    தீபாவளி டெக்ஸ் ஸ்பெஷல்
    கோடை மலர் டெக்ஸ் ஸ்பெஷல்

    முத்து ஆண்டு மலர் - இதில் ஆசிரியர் எந்த கதைகளை கொடுப்பார் என்பதை யூகிக்க கடினமாக உள்ளது.

    தோர்கல் இரண்டு கதைகள் கொண்ட ஒரு புத்தகம்

    அண்டர்டேக்கர் புதிய கதை தயாராகி இருந்தால் இரண்டு கதைகள் கொண்ட ஒரு புத்தகம்

    புதிய கௌபாய் அறிமுக சாகசம்
    இரண்டு புதிய நாயர்களின் வித்தியாசமான கதை களத்துடன் கூடிய சிங்கள் ஆல்பம் கிராபிக் கதை தடத்தில்.

    கதம்ப கிளாசிக் கதைகள் கொண்டு ஒரு குண்டு ஸ்பெஷல் - அநேகமாக கோடை மலராக வரலாம்

    ReplyDelete
    Replies
    1. சாகோர் 6....டெக்ஸ் நாலாறு....ஈறாரு இளமை...மீதாறு முதுமை...இது தெர்லன்னா உனக்கு கோளாறு

      Delete
    2. // தெர்லன்னா உனக்கு கோளாறு //

      உனக்கு ஏதோ கோளாறு என தெரியுதுலே :-)

      ஏ டண்டனக்கா டணக்குனக்கா:-)

      Delete
  95. பருவத்தே கொலை செய்-இந்த ஆண்டின் மிகச்சிறந்த டெக்ஸ் இதழ். மற்றும் மிகச்சிறப்பான ஓவியங்கள். சான்பிரான்சிஸ்கோ என்றாலே தூள் கிளப்பி விடுகிறார்கள். டைகரை தொங்க விடுவது, கிட்டுக்கு மரண காயம், தோட்டா தீர்ந்து போகும் டெக்ஸ் என நிஜத்துக்கு மிக அருகில் (அதாவது டெக்ஸ் லெவல் நிஜத்துக்கு அருகில்னு சொல்ல வந்தேன்).

    ஆபிரகாம் லிங்கன் இதழும் நல்ல விறுவிறுப்பு. நிஜ மாந்தர்களுடன் இளம் டெக்ஸ் வருகிறார். வழக்கம் போல இளம் டெக்ஸ் கதைகளில் பக்கத்துக்கு ஒருவரை போட்டு தள்ளுவது இங்கேயும் தொடர்கிறது.

    விஞ்ஜானி டெக்ஸ் கதை- பழைய கால காமெடிக் கதை. மலைச்சிங்கத்தை கொலை சிங்கம் ஆக்கி வர்றவன் போறவன்லாம் அதுக்கு விருந்தாகுறான். முக்கால்வாசி படிச்சாச்சு. பாக்கி கால்வாசி இன்னிக்கு. படிக்காமலே பக்கத்துக்கு பக்கம் கதை சொல்லலாம்னு நினைக்குறேன். விஞ்ஜானி சாவான். அசிஸ்டென்ட் பிழைப்பான். கரெக்டா?

    ராபின் பாதி படிக்கும் போது, என் பையன் தட்டி விட, கட்டிலுக்கு அடில போயிடுச்சு. போகி பொங்கல் டயத்துல தேடி கண்டுபிடிக்கணும். கட்டில் செம ஹெவி.

    ReplyDelete
  96. அடுத்த வருட சந்தாவுடன், ஸ்பெஷல் இதழ்களுக்கான ஒரு அட்வான்ஸ் அமவுன்டையும் சேத்து வாங்கிக்கிட்டா நல்லாயிருக்கும். சும்மா சும்மா ஜிபே பண்ணி, மெயில் அனுப்பி, எங்களுக்கும், உங்களுக்கும் வேலை அதிகம்.

    ReplyDelete
  97. மாதம் ஒரு எலியப்பா, புளியப்பா, கண்டிப்பா வேணும் என்பது தாழ்மையான வேண்டுகோள்.

    ReplyDelete
  98. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே நமது அட்டவணைக்கு.

    ReplyDelete