டா-ஆஹ்ன்-சோ நண்பர்களே,
வணக்கம். விடுமுறைகள் முடிந்த கையோடு மாமூலுக்குத் திரும்பியோர் கொஞ்சம் ; திங்கள் வரைக்கும் நீண்டிடும் விடுப்புகளில் இருப்போர் இன்னும் கொஞ்சம் - என இந்த வாரமே அரை உறக்கத்தில் பயணித்தால் வியப்புகளிராது தான் ! ஆனால் இங்கேயோ நம்மாட்கள் காலில் சட்டி சட்டியாய் சுடுநீரைக் கொட்டிக் கொண்டு, முகவர்களுக்கு புக்ஸ் அனுப்புவதிலும், அலறி வரும் போன்களுக்குப் பதில் சொல்வதிலும் பிசியோ பிசியாக உள்ளனர் !! "ஆங்...நான் விடிய விடிய கோட்டானாட்டம் முழிச்சி வேலை பாத்துக்கினு இருந்தச்சே நீங்கள்லாம் காலாட்டிக்கிட்டு இருந்தீங்கள்லே ; இப்போ நாங்க ஆட்டுவோம்லே கால !!" என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டே ஆபீஸின் அதகளப் பரபரப்பை ரசித்துக் கொண்டிருக்கிறேன் ! நடப்பாண்டினில் இந்த scenes நிறையவே நிகழ்ந்திருப்பது - சொல்லி மாளா மனநிறைவைத் தருவதோடு, அடிக்க அவசியமான கர்ணங்களுக்கெல்லாம் ஒரு அர்த்தம் தருவதாகவும் படுகிறது !
*FFS புக்ஸ் ரிலீஸ் வேளை
*வேதாளர் ஸ்பெஷல்-1 ரிலீஸ் தருணம்
*ரிப் கிர்பி ஸ்பெஷல் -1 ரிலீஸ் பொழுது
*கென்யா வெளியான மாதம்
*மாண்ட்ரேக் ஸ்பெஷல் வேளை
*சுஸ்கி-விஸ்கி ஸ்பெஷல் -1 ரிலீஸ்
என்று இந்தப் பட்டாசுப் பொழுதுகள் ஒரு தொடர்கதையாகிடுவது புனித ஓடினின் மகிமையே என்பேன் ! Latest addition : டெக்ஸ் தீபாவளி மலர் & ஸாகோரின் அறிமுகம் ! ஆன்லைன் ஆர்டர்களிலும் அனல் பறந்து வருகிறது - இந்த போனெல்லியின் புத்திரர்களுக்கு ! Oh yes, விருந்தின் முதல் பந்தி தான் பரிமாறப்பட்டு வருகிறது ; இன்னமும் நிறைய பேர் பசியாறிடணும் ; ருசி குறித்து அலசிடணும் என்பது புரிகிறது - ஆனால் முதல் பந்தியின் verdict - "சூப்பர்" என்பதை மறுப்பதற்கில்லை !
கமர்ஷியல் கதைசொல்லலில் மன்னர்களான நமது இத்தாலியக் குழுமத்தின் # 2 நாயகர் ஸாகோர் தான் என்பது ஊருக்கே தெரிந்த சமாச்சாரம் எனும் போது, "இந்த ஹிட் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டதென்றெல்லாம்" பீலா விட மாட்டேன் நான் ! On the contrary - இத்தனை காலமாய் இவரை நம் அணிவகுப்பினில் இணைக்காது போனது ஏனென்று வேண்டுமானால் யோசிப்பேன் ! விடை நிரம்பவே சிம்பிள் : போனெல்லியின் 75-ம் ஆண்டுக்குப் பின்னே நிறைய போனெல்லி நாயக / நாயகியருக்கு புது உத்வேகம் / புது வார்ப்புகள் நல்கப்பட்டுள்ளன ! தவிர,தலைமை எடிட்டர் மௌரோ போசெல்லியின் வழிகாட்டுதல்களில் நிறைய புது இலக்குகள் வகுக்கப்பட்டுள்ளன ! A prime example is Young Tex Willer & Zagor ! போனெல்லி அவர்களின் உருவாக்கத்தில் தலையெடுத்த நாட்களுக்கும் இன்றைக்கு போசெல்லியின் ஒத்துழைப்போடு, கதாசிரியர் மொரேனோ புராட்டினியின் செதுக்கலில் வலம் வரும் ஸாகோருக்கும் ஏகமாய் வேற்றுமைகள் ! இப்போதெல்லாம் சரளமாய் கலரில் ஆஜராகிறார் ஸாகோர் ! In fact கடந்த 6 ஆண்டுகளாய் "கலர் ஸாகோர்" என ஆண்டுக்கு 2 முறை ஒரு முழுநீள 128 பக்க ஸாகோர் ஆல்பம் வெளிவருகிறது ! So முன்னாட்களின் வசீகரத்தை விட இன்றைக்கு ஸாகோரிடம் glamor ஒரு மிடறு தூக்கல் என்பது எனது அபிப்பிராயம் !
So what next ? நம் மத்தியினில் what does the future hold for ZA-GOR-TE-NAY ?
கிட்டத்தட்ட 700 ஆல்பங்கள் black & white-ல் உள்ளன இவரது ரெகுலர் தடத்தில் ! And இந்த black & white கதைகளின் அநேகத்தைப் பின்னாட்களில் வர்ணம் பூசி மறுபதிப்பிட்டுள்ளனர் ! அவை நீங்கலாய் வண்ணத்திலேயே உருவாக்கப்பட்ட கலர் சாகசங்கள் நிறையவே உள்ளன ! நாயகரின் உதயத்தை இந்த அறிமுக ஆல்பம் establish செய்து விட்டுள்ள நிலையில் நாம் அடுத்த பயணத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது ? இந்த நொடியில் என் முன்னேயுள்ள கேள்வி இதுவே ! And 2023 அட்டவணையினை அக்டோபர் இறுதி வரைக்கும் நான் தள்ளிப் போட்டதுமே - ஸாகோர் சாரை அடுத்தாண்டினில் எவ்விதம் கையாள்வதென்ற தெளிவினை எதிர்பார்த்தே ! இந்த நொடியில் நீங்கள் எனக்குச் செய்ய வேண்டிய உதவி இது தான் guys :
ஸாகோரை படியுங்கள் please - படித்த கையோடு உங்களின் எண்ணங்களை பகிருங்கள் ப்ளீஸ் ! அட, அதற்கு நேரமில்லையா - வெறுமனே மார்க் மட்டும் போட்டால் கூடப் போதுமானது ! வாட்சப்பில் கூட உங்கள் மார்க்குகளை அனுப்பிடலாம் ! (73737 19755) உங்களின் மதிப்பீடுகளைக் கொண்டே 2023-ல் இவரைக் கையாளும் பாணியினை நான் தேர்வு செய்திட வேண்டியிருக்கும் guys ! நானாக புது நாயகரை ஓவராய் மதிப்பீடு செய்து தேவைக்கு அதிகமாய்க் கதைகளை உங்கள் சிரங்களில் கட்டி விடவும் கூடாது ; underestimate செய்திடவும் கூடாதே ?!
இதோ - நடப்பாண்டைப் போலவே ஒரு கலக்கலான கலர் ஆல்பத்தை ஐநூறுக்குப் போட்டுப்புட்டு போய்க்கினே இருக்கலாமா ? இல்லாங்காட்டி இன்னும் ..இன்னும் நிறைய expressions தர வேண்டியிருக்குமா ? படிச்சிட்டு மார்க்ஸ் போடுங்கோ ப்ளீஸ் - படம் பார்த்துட்டு நஹி ! திட்டமிடல்களை அதற்கேற்ப இந்த "மூ" பாத்துக்குறான் ! டோனடகோஹ்வி guys !
Me the 1st
ReplyDeleteMe the 2nd.
ReplyDeleteஅலோ அலோ...ஆங்காங்கே குழுமி இருக்கும் நண்பர்கள், உடனடியாக விழாக்குழுவினர் அமைத்துள்ள 'கமெண்ட்'பந்தலின் கீழ் வந்து சேருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்....இங்ஙனம் விழாமலர் குழுவினர்.
ReplyDelete3rd
ReplyDelete4th or 5th
ReplyDeleteவணக்கம் நண்பர்களே 🙏🙏
ReplyDeleteMe 5th
ReplyDeleteவணக்கம் நண்பர்களே...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!!
ReplyDeleteHi..
ReplyDelete...😍
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteவிடாது வஞ்சத்தை பிறகு பார்ப்போம்...!
ReplyDeleteஸாகோர் ஸ்டார்ட் பண்றேன்...!
ஜாகோர் இனி கலரிலேயே வரட்டும் மை டியர் எடி .. கலரிலேயே வெளி வந்து புது அத்யாயம் படைத்திட்ட ஹீரோ என்கிற பெய.யை ஜாகோர் அடைந்திடட்டுமே ..
ReplyDeleteசரிதானேங்க விஜயன் சார் .. 😉😉😉😉
*பெயரை
ReplyDeleteஸாகோர் 15/10..
ReplyDeleteரம்மி சொன்னா அது சரியாகத்தான் இருக்கும் .. 😍😍😍
Deleteஇது சரின்றேன்
Deleteவார இறுதியில்,முக்கிய விடுமுறை நாட்களின் இடையே இதழ்களைஇனியாவது அனுப்பாமல் இருந்தால் நலம்,இன்னும் இம்மாத இதழ்கள் எனக்கு வந்து சேர்ந்த பாடில்லை...
ReplyDeleteஎன்னத்த சொல்ல,எங்கெங்கோ சுத்தி நாளைக்காவது வருமான்னு தெரியலை ???!!!
தயவுசெய்து கொஞ்சம் யோசிக்கலாமே சார் ?!
Edi Sir..
ReplyDeleteஸாகோருக்கு கட்டட்டாயம் 2023 ல ஸ்லாட் அலாட்பண்ணுங்கோ..😘
ஸ்பெஷல் எடிசன் போடுங்கோ..😍
ஆனால் எனக்கெல்லாம் ஸாகோர் கலர்ல வந்தே ஆகணும் ஆமா.😍👍✊👌
(கலர்ல ஓவியங்கள் அப்படியே மனசை உள்ளே இழுத்துக்குதுங்க).💐❤💛💙💚💜
100/100 என் மதிப்பெண்.
👍
Deleteஸாகோர் முதல் கதையிலேயே நல்ல ஸாகோர் செய்து உள்ளார் எடிட்டர் சார்.
ReplyDeleteமுதல் 200 பக்கங்களை படித்து விட்டேன்.
சித்திரங்களும் & வண்ணக் கலவையும் அதகளப் படுத்தி இருக்கு. கதையும் அருமை.
அடுத்த ஆண்டு தயங்காமல் இவரை சந்தா வண்டியில் ஏற்றலாம்.
படித்த வரை ஸாகோர் மதிப்பெண்
சித்திரங்கள் + வண்ணக் கலவை + கதை = 100/100.
உள்ளேன் ஐயா..!!
ReplyDelete////
ReplyDeleteடா-ஆஹ்ன்-சோ நண்பர்களே///
///டோனடகோஹ்வி guys ! ////
பரவாயில்ல சார்! நீங்க எவ்வளவு திட்டினாலும் நாங்க கோவிச்சுக்க மாட்டோம்!!
😆😆😆
Deleteஸாகோர் ரெகுலர் சந்தாவில் கோடை மலராக தடிமனான புக்காக வெளியிடலாம்.
Deleteஎனக்கும் இதுவரை ஜாகோர் வந்து சேரவேயில்லை .. வெறுமெனே மற்றவர்களின் பதிவுகளை பார்த்துக்கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கு .. புத்தகம் வெளிவரும் 15 நாட்களூக்கு முன்னே இதை அனுப்ப ஆபீஸில் ஸ்டெல்லா மேடத்திடம் அழுத்தமாக விவரமாக கூறி கண்டிப்பாக அனுப்பிடுவாங்கன்னு நம்பி வந்த கொரியர பார்த்ததும் சூம்பி போன பையன் போல் பாக்ஸ்ஸில் டெக்ஸ் மட்டுமே வந்து சேர்ந்தார் ( கூடவே கைப்புள்ள மட்டும்)
ReplyDeleteஇனியாவது அட்வான்ஸ்ஸா சொல்றவங்களையும் கணக்கில வச்சிக்கங்க டியர் எடி .. தேங்க்ஸ்
9.0/10
ReplyDeleteHai all.. Zagor படிக்க ஆரம்பிச்சுட்டேன்...
ReplyDeleteஇன்னிக்குதான் புக்ஸ் கைல கெடச்சுது....
டெக்ஸ இன்னும் தொடல... Zagor 3 start பண்ணனும்...
முடித்துவிட்டு மார்க் போடுறேன் எடி சார்...
ReplyDeleteஸாகோர் தொடரலாம் சார்.
ReplyDeleteஸாகோர் 9.9 /10.
ReplyDeleteஸாகோர்...
ReplyDeleteஇன்றைக்குத்தான் தொடங்கவிருக்கிறேன்...
மேலேயிருக்கும் அட்டைப்படத்திலுள்ள செந்நிற ஆடையணிந்த பொன்னிறக் கூந்தல் தேவதைதான் என்னுடன் துணை வரவேண்டும்..!
க்கும்! அப்புறம் எங்கே படிக்கிறது?!!
Deleteஅட்டைப்படத்தில் உள்ள தேவதையா.. நிஜம்மாவா..படிக்கிறதுக்கா..😀😀😀
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபுதிதாய் ஒரு புயல் - மூன்று பாகங்கள் முடித்து விட்டேன். சித்திரங்கள், சித்திரங்கள் சொல்லும் காட்சி அமைப்பு, சண்டையை காண்பிக்கும் முறை, மிரளவைக்கும் சித்திரங்கள், மனிதர்களை இயல்பாக காட்டிய விதம், கதையை நகர்த்தும் விதம், தேவையான இயல்பான வசனங்கள் என செமையாக உள்ளது.
ReplyDeleteபோனெலி குழுமத்தில் வண்ணத்தில் இவ்வளவு அழகான சித்திரங்களை ரசித்தது இதுவே முதல் முறை. மிகவும் அட்டகாசமான அறிமுகம்.
அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு அழகான அழுத்தமான ரசிக்க வைக்கும் ஃப்ளாஷ் பேக்.
இவர் விரைவிலேயே நமது கிட்டங்கியில் இருந்து அவுட் ஆஃப் ஸ்டாக் ஆகிவிடுவார் சார்.
இவரின் கதைகளை தொடர்ந்து வண்ணத்தில் கொடுங்கள் சார் 🙏🙏🙏
///சித்திரங்கள் சொல்லும் காட்சி அமைப்பு, சண்டையை காண்பிக்கும் முறை, மிரளவைக்கும் சித்திரங்கள், ///
Deleteயெஸ்!! சண்டைக் காட்சிகளுக்கான பேனல்கள் வெகுநேர்த்தியாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது! sequenceஐ சரியாகத் திட்டமிட்டு காட்சியில் அனல் பறப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்!! வண்ணங்கள் - கூடுதல் ப்ளஸ்!!
ஆசிரியர் சொன்ன மாதிரி "தலை"க்கு போட்டியாக எல்லாம் ஸ்கோரை எடுத்துக் கொள்ள முடியாது. "தளபதி" போல் மிரட்டல் அதிரடியாகவும் (தங்க கல்லறை)இல்லை.
ReplyDeleteஇவர் வேறு மாதிரி. சித்திரங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு மிக மிக அருமை.
எனவே ₹ 1000 க்கு இன்னும் ஒரு ஸ்பெஷல் புக் இறக்குங்கள். அப்புறம் வேண்டுமானால் ரெகுலர் சந்தாவில் சேர்க்கலாம்.
///எனவே ₹ 1000 க்கு இன்னும் ஒரு ஸ்பெஷல் புக் இறக்குங்கள். அப்புறம் வேண்டுமானால் ரெகுலர் சந்தாவில் சேர்க்கலாம்///
Deleteநல்ல ஐடியா! ஆனால் ரூ.500 விலையில் வருவதே அனைவருக்கும் ஏற்றதாக இருந்திடும்!
இந்த ஆட்டத்துக்கு நாங்க வரலை.
Delete// ரூ.500 விலையில் வருவதே அனைவருக்கும் ஏற்றதாக இருந்திடும்! //
Delete+1
*ஸாகோர்
ReplyDeleteசார் ஸாகோர் சூப்பர் ஹிட் தான். எனவே இதே போல ஒரு கலர் ஆல்பம் நச் என்று போட்டாலும் சரி. இல்லை இவரை சந்தாவில் நுழைத்து 3 புத்தகங்களை போட்டாலும் சரி. எனக்கு double ok தான். கலரில் தான் வேண்டும்
ReplyDelete///கலரில் தான் வேண்டும்///
Deleteஎனக்கு கருப்பு-வெள்ளையில் இவர் கதைகள் எப்படியிருக்கும் என்று பார்த்துவிட ஆசை!
Like a young Tex without the hat !
Delete"எனக்கு கருப்பு-வெள்ளையில் இவர் கதைகள் எப்படியிருக்கும் என்று பார்த்துவிட ஆசை!"
Deleteஒரு இதழ் Trail வெளியிட்டு பார்க்கலாம். மக்கள் அனைவரும் Ok சொன்னால். Or உங்களுக்கு சரி என்று பட்டால்.
வந்தாச்சு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteவிஜயன் சார், ஸாகோரின் "புதிதாய் ஒரு புயல்" பாகம் 1 & 2 ஓவியங்கள் & கலரிங் வேற லெவல்! 3ஆம் பாக ஓவியங்கள் முதல் இரண்டு பாகத்தில் உள்ளதை விட வித்தியாசமாக உள்ளது! 3 பாகத்தின் ஓவியர் வேறு ஒருவரா ?
ReplyDeleteஸாகோர்- யங் ஸாகோர் வரிசையில் உள்ள கதைகளை தொடரவும் சார். பிறகு மெயின் வரிசை கதைகளை ட்ரை பண்ணலாம்
ReplyDeleteஆமாங்க. இதே போல உள்ள கதைகளை தொடரவும்
Deleteடெக்ஸுக்கு சவால் விடக்கூடியவர்....வாய்த்தால் ஜனவரிக்கு ,தீபாவளிக்கே வரட்டும்.... அங்க ஆறு வருடம் 2(128 பக்கம்) கதைக வரதால கணக்குக்கு 12 (24 பாகம்)கதைக...6 வந்தாச்சு மீதி பதினெட்டு வருடம் இரு தொகுப்பா(12) கதைக....
ReplyDeleteபழய கலர் கதைக வரட்டுமே...
காட்டிய அட்டைக தூள்
இது முடிஞ்சதும் கருப்பு வெள்ளை.....சக்ஸஸ் தொடர்ந்தா (தொடரும்)தனித்தடம்
Deleteகடந்த பதிவின் இறுதியில் ஒரு நல்லவருக்கு எடிட்டர் அளித்திருந்த பதிலின் ஒரு பகுதி:
ReplyDeleteஅப்புறம் பொதுவானதொரு கருத்து guys :
எல்லா போனெல்லி க்ளாஸிக் நாயகர்கட்குமான ஒரு சாபக்கேடு - 'தல' டெக்ஸோடு ஏதோவொரு ரூபத்தில் ஒப்பீட்டுக்கு உள்ளாவதே ! And புதியவர் ஸாகோரும் அதற்கு விதிவிலக்கல்ல ! 74 ஆண்டுகளாய் உலகுக்கும், 37 ஆண்டுகளாய் நமக்கும் பரிச்சயமானதொரு நாயகருக்கு கதைகளில் நல்கப்பட்டிருக்கும் ஆற்றல்களைத் தாண்டி, நமது மனங்களில் உரம் சேர்க்கப்பட்டிருக்கும் கோட்டைகளும் உண்டல்லவா ? அத்தகைய எதுவும் இல்லாத ஒரு புது வரவை - "வாய்யா...வந்து தராசில் ஏறி நில்லுய்யா !!" என்று நிர்ப்பந்திக்காமல் அவரை, அவரது ஆற்றல்களுக்காக மட்டுமே எடை போடுவோமே ?
டெக்ஸ் கோடியில் ஒருத்தர் ! ஸாகோர் maybe மில்லியனில் ஒருவராக இருந்தாலும் - கோடியின் நாயகரின் நிழலில் நிற்கும் பட்சத்தில் சுள்ளானாய்த் தோன்றிடக்கூடும் ! So இவரை தன் பாங்கில் பயணிக்க அனுமதிப்போமே - ஒப்பீடுகளை இப்போதைக்கு கையில் எடுக்காமல் !
Yes. No need to compare with Tex.
Deleteஇது எங்கே போய் முடியுமோ.
Deleteஸாகோர் கதைகள் டார்க்வுட் வனத்தில் முடியும் சார் ; டெக்ஸ் கதைகள் நவஹோ குடியிருப்பில் !
Deleteஹிஹிஹிஹீஹீ...
Deleteஇதுக்குத்தா எடிட்டர் சார் வேணுங்கிறது.
DeleteZAGOR:
ReplyDeleteFINALLY TEX KU tough குடுக்கும் ஒரு BONNELI ஹீரோ .. பாக்கறதுக்கும் "தல" மாறி தான் இருக்கார் ..சின்னமும் அதே" கழுகு".. ஆனால் 'தல' மாரி GENTLEMANஆக இல்லாமல் எதார்த்தமாக உள்ளார் ..
சமீப காலங்களில் TEX கதையில் வராத செவ்விந்தியர்கள் , அமானுஷ்யம் போன்றவை இவர் கதையில் உள்ளது .. ZAGOR COLOR + HARD BOUNDலேயே வரட்டும் SIR .. முடிந்தால் TEX+ZAGOR COMBO இதழை அடுத்த வருடம் வெளியிடுங்கள் .. MARTIN+DYLAN COMBOதான் MISS ஆயிடிச்சி ..
RATING : 9/10 ..
சூப்பர் தம்பி.
Deleteஇந்தக் கூட்டணிகள் கொஞ்ச காலத்துக்கு வேணாம் நண்பரே ; புதியவர் தனக்கென ஒரு பாணியை வகுக்க சுதந்திரமும், அவகாசமும் தருவோம் !
Delete// Dear Editor sir - Finished Zagor in a single sitting. A neat and power packed hero's Journey type, a Batman Begins like origin story. Undoubtedly an instant hit. Hope Zagor makes his mark on sales too. Thanks for keeping us entertained with new stories.//
ReplyDeleteசென்ற பதிவில் படித்த கையோடு பதிவிட்டது. எனது மதிப்பெண் நிச்சயமாக 9/10.
ஸ்பெஷலான ஒரு தருணத்தில், நல்ல தரத்தில், தெளிவான வண்ணங்களில், பெரிய சைஸில் வெளியானது ஹிட் அடிக்க முக்கியமான காரணம்.
இவரை மாமூலான சந்தாவில் நுழைக்கும் முன், இதே போன்ற ஸ்பெஷல் புத்தகமாக இதே சைஸில் இரண்டொரு முறை முயற்சித்துப் பார்க்கலாமே சார்.
எப்படியாயினும் வண்ணம் பெரிய பிளஸ்.
// இவரை மாமூலான சந்தாவில் நுழைக்கும் முன், இதே போன்ற ஸ்பெஷல் புத்தகமாக இதே சைஸில் இரண்டொரு முறை முயற்சித்துப் பார்க்கலாமே சார். // Double ok
Deleteநல்ல ஐடியா தான் நண்பரே ; பார்ப்போமே - over the course of the week எல்லோரும் படிக்கப் படிக்க ஸாகோர் என்ன மாதிரியாக ஸ்கார் செய்கிறாரென்று !
DeleteZAGOR - அத்தியாயம் 1
ReplyDeleteஅருமை...! அருமை...!
கதை சூப்பர் ஸ்பீடு...!!
ஓவியங்கள் சிறப்பு...!!!
வண்ணங்கள் மிகச் சிறப்பு...!
அத்தியாயம் 1 : மார்க் 9/10
(அதிகாரியோடு ஒப்பிட மிடியாதுங்க.. ஏன்னா... இது நல்லாயிருக்குங்க...! கொஞ்சம் பயத்துட்டேன் இன்னொரு அதிகாரி போல் இருக்குமேனு...!)
நானும் பலமுறை டெஸ்ட் பண்ணிட்டேன்...! அதிகாரி கதையை படிக்கும் போது மட்டும் தூக்கம் பிச்சிட்டு வருது...!! 30 பக்கம் தாண்றதுக்குள்ளயே தூங்கிடறேன்...!
Delete///அதிகாரி கதையை படிக்கும் போது மட்டும் தூக்கம் பிச்சிட்டு வருது...!! ///
Deleteஅதிகாரி கதையைப் படிக்கும்போது நீங்க ரொம்ப பாதுகாப்பா உணர்றீங்க மிதுன். அதான் அப்படி தூக்கம் வருது! :D
///அதிகாரி கதையைப் படிக்கும்போது நீங்க ரொம்ப பாதுகாப்பா உணர்றீங்க///
Deleteஹாஹாஹா
Delete//அதிகாரி கதையைப் படிக்கும்போது நீங்க ரொம்ப பாதுகாப்பா உணர்றீங்க//
விஜய் @ மிதுனாவது அதிகாரியை கொஞ்சம் அசிங்கப் படுத்தினார். நீங்கள் என்னவென்றால் அதிகாரியை கூர்க்கா லெவலுக்கு இப்படி அசிங்கப் படுத்திவிட்டீங்களே :-) நீங்க உண்மையில் யாரு பக்கம்:-)
@PfB
Deleteஅசிங்கப்படுத்திட்டேனா?!!
சரி.. ஒரு குழந்தை யாருடைய மடியில் இருந்தால் நிம்மதியாகத் தூக்கத்தை அரவணைத்துக்கொள்ளும்?!
என்னுடைய பதில் : தாய் அல்லது தந்தை
உங்களுடைய பதில் : கூர்க்கா அல்லது வாட்ச்மேன்
This comment has been removed by the author.
Deleteவிஜய் @
Deleteசெம பதில்.
இந்த மாதிரி முதலில் நீங்கள் எழுதி இருந்தால் அதிகாரியின் உண்மையான ரசிகர் நீங்கள் என ஈரோட்டில் சிலை வைத்து இருப்பேன்:-) you missed it :-)
கண்ணன் மடாஸ்கா ன்னு சொன்னதுக்கே மனசு புண்படுதுன்னு ரிப்போர்ட் அடிச்சாங்க சொன்னவுங்க இப்ப எந்த மடாலயத்துல இருக்காங்களோ தெரியலை(மடாலயத்தில் தொலை தொடர்புகள் கிடையாது) நாம் பதில் சொல்லலாம்னா பதிவை நீக்கிடுவாங்க டெக்ஸ் விஜயராகவன் கமெண்ட்ஸை நீக்கியது போல் ஏனோ பாட்ஷா படத்தில் தலைவரை கட்டி வைத்து அடிக்கும் காட்சி நினைவுக்கு வருகிறது
Deleteசெந்தில்..
Deleteஉங்க அன்புக்கு நன்றி..! என்னுடைய பிரச்சினை வேறு..! நான் கூப்பிடுவது தற்போது Steel claw என்று பெயரை மாற்றிக்கொண்டு காணாமல் போயிருக்கும் Raj என்கிற இன்னும் சில பெயர்களுக்குரிய முகமூடியை..!
தயவுசெய்து சம்மந்தமில்லாத எதிலும் என்னைக் கோர்த்து விட்டுடாதிங்க செந்தில்...😂😂😂
பழைய பிரச்சினைகளையே தீர்க்கமுடியலை..😂😂😂
ஹலோ! மாப்ளே! நீயும் ஒவ்வொரு முறையும் உன்னை சீண்டுன Rajன்ற ஃபேக் ஐடிய கைய புடிச்சு இழுக்கிறதும், யாராவது உன்ன பிடிச்சு அவங்க சொந்த பிரச்னையில லிங்க் பண்ணுவதும் ,
Deleteஆகா பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு.ஆனாலும் நீ ரொம்பத்தான் பாவம்டா மாப்ளே.
உனக்குன்னே ஒவ்வொருமுறையும் யாராவது வந்திடுறாங்க.
அப்போ Raj - மாடஸ்டி - நீ ன்னு பேசலாம்னு வந்திருந்த. ஆனா ஒருத்தர் அதை டெக்ஸ் ரசிகர் - மாடஸ்டி ரசிகர் னு புது திசையில இழுத்துக்கிட்டு போயிட்டாரு.
இப்போ அதையே ஒருத்தர் எடிட்டருக்கு எதிரான பிரச்சினை மாதிரி பேசிக்கிட்டு இருக்காரு. ஆனாலும் உன்பாடு கொடுமைடா மாப்ளே.
நண்பர்களே. என் மாப்ள கிட் ஆர்டின் கண்ணன் இதே தளத்துல ஒத்தை ஆளா ஏழெட்டு ஃபேக் ஐடிகளை சமாளிச்சவன். நீங்க மறந்திருந்தா என்கிட்ட கேளுங்க சொல்றேன். அவன் இப்போ தூண்டி போடுறது Rajனு முகமூடி போட்டுக்கிட்டு வந்த, இந்த தளத்துதல ஏற்கனவே நல்லபிள்ளையாட்டமம் சுத்தி வரும் ஆளை வம்பிழுக்கத்தான். அதுமட்டுமில்ல, என் மாப்ள சிலரை மாதிரி , இந்த பிளாக்குல ஆக்டிவாவும் ரொம்ப அக்கறையாவும் இருக்குற மாதிரி காட்டிக்கிட்டு வெளியே போய் "வேற வேலை" பண்ற ஆளும் கிடையாது. அப்படி அவனை இங்கிருந்து வெளியேத்தலாம்னு நினச்சாலும் நடக்காது.
எத்தனை முயற்சி பண்ணினாலும் அவன் எடிட்டரையோ லயன்முத்து காமிக்சையோ விட்டுத்தரவேமாட்டான். ஏன்னா எல்லாரையும் விட அவனை எனக்கு நல்லா தெரியும்.
நீ இழுடா மாப்ள !
வந்தா Raj.
போனா பொரி !
ZAGOR is a 7/10 sir - and in my scale that is very high. Would rate MOST TEX stories as 6/10. Given to understand my scales.
ReplyDeleteFor 2023, ZAGOR - YES but in color with minimum of 2 * 128 pages.
டெக்ஸுக்கு 6க்கு மேல் காட்டாத அந்த ஸ்கேலைப் பிடுங்கி ஒருநாள் உடைச்சு எறியறேனா இல்லையா பாருங்க!
DeleteConfederate Gold Saga + Thangakkkallarai - 8 :-) Not all TEX is 6. Average is 6. There are Tex stories I would rate 8 too.
Deleteநாளை டெக்ஸ் வில்லர் படிக்க வேண்டும்..
ReplyDeleteஸாகோர் எனக்கு பிடித்து உள்ளது...
இன்றிரவு டெக்ஸ் வில்லர் படிக்க வேண்டும்..
ReplyDeleteஸாகோர் எனக்கு ஓரளவு பிடித்தே உள்ளது...
எடி ஜி,
ReplyDeleteZagor குறைந்தபட்சம் இரண்டு கதைகள் ஆவது 2023 இல் வரட்டும்.
புதிதாய் ஒரு புயல், குழந்தை பருவத்தில் இருந்து ஒரு திறமையான, zagor என்ற பெயர் எப்படி வந்தது என்ற அறிமுக படலம் என்பதால் கதை சூப்பர் என்றும் சொல்லிட முடியவில்லை அதே சமயம் விறுவிறுப்பு குறைவு என்றும் சொல்லிட முடியவில்லை.
அடுத்து வரவிருக்கும் கதைகளை வைத்து இந்தத் தொடர் எதை நோக்கி போகிறது என்று தெரியும் எனவே தாராளமாக வெளியிடுங்கள் வண்ணத்தில்.
யெஸ்! நான் சொல்ல நினைப்பதும் இதையே!!
Delete"வண்ணத்தில்" என்பதில் இதுவரையிலும் ஏகோபித்த கருத்தே நிலவுகிறது சார் ; பார்க்கலாமே மீத நண்பர்களும் அவ்விதமே அபிப்பிராயப்படுகிறார்களா என்று !
Deleteநானும் ஆமோதிக்கிறேன். இன்னும் நான்கு, ஐந்து கதைகள் வந்த பிறகு ஸாகோரின் மதிப்பீடு உறுதியாக இருக்கும். எனவே சீக்கிரம் குண்டு புக்ஸ் போடுங்கள் ஆசிரியர். தயவுசெய்து ஆரிசியாவின் கணவரைப் போல பிரித்து போட்டு இவருக்கும் குறைவான மதிப்பீடு பெற வேண்டாம்.
Delete// வந்த இரண்டு புத்தகங்களில் ஒன்றை படித்து முடித்து விட்டேன்.
ReplyDeleteஸாகோர் அட்டகாசமான துவக்கம் சார். ஆரம்பத்தில் எடுக்கும் வேகம் 4 வது பாகம் முடியும் வரை சற்றும் குறையவில்லை. 5 ஆவது பாகம் மட்டும் கொஞ்சம் வேகம் குறைவு.
மொத்தத்தில் இது இரத்த பூமி. என்னா அடி, என்னா சண்டை. புத்தகத்தில் தெறிக்கும் இரத்தம் எனது சட்டையில் தெறித்தது போல ஒரு உணர்வு.
ஸாகோர் is here to stay.
முதல் பந்திலேயே சிக்சர்.
எனது மதிப்பெண் 9.5/10, வேகத்தை குறைத்த 5 ஆம் பாகத்தால் . அரை மதிப்பெண் கம்மி.
அடுத்த வருடம் ரெகுலர் தடத்துக்கு கொண்டு வரவும். // போன பதிவில் எனது Zagor விமர்சனம்
///புத்தகத்தில் தெறிக்கும் இரத்தம் எனது சட்டையில் தெறித்தது போல ஒரு உணர்வு.
Delete////
உங்களுக்கெல்லாம் வெறும் உணர்வுதான்! எனக்கு அது நிகழ்வு!!
பருப்பு மத்துகளும், குழம்புக் கரண்டிகளும் பறந்துவந்து தாக்கிடும்போது அவை ஜாகோரின் கல்-கோடரியைவிடவும் பலமடங்கு ஆபத்தானவை! பெரும்பாலான எனது சட்டைகள் ரத்தக்கறையோடே இருக்க இதுதான் காரணம்!
😳
DeleteRaththa sarithram
Deleteஇப்போ புரியுது ஒரு நல்லவருக்கு ஸாகோர் டுப்பாக்கி வைச்சுக்காமே கோடாரி வைச்சிருப்பதிலே why இத்தினி காண்டுன்னு !! அடி பலமோ தல ?
DeleteZagor படித்துவிட்டேன்....
ReplyDelete4ஆம் அத்தியாயம் வரை ஒரு வகை....
5 மற்றும் 6 வேற வகை...
என் மதிப்பெண் - 8/10
Zagor தொடர்ந்து வரலாம் எடி சார்.... 💐💐💐
That was fast !!
DeleteIf my son (2 years old) permits.. I can read even more quickly... The quality of the artwork was also superb sir..
Deleteஸாகோர். என்னுடையமார்க்9/10.இப்போதைக்கு ரெகுலர் சந்தாவில் வேண்டாம்சார். குண்டுபுத்தகமாக, இதேபோல் முன்பதிவாக ஜனவரி 2023புத்தாண்டுசிறப்பிதழாக வெளிட்டால்சந்தோசமுங்கசார். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteசார் ...ஜனவரி கூப்பிடு தொலைவில் உள்ள போது, கதையைத் தேர்வு செய்து ; பணியாற்றி ; முன்பதிவும் செய்து விற்றிட இயலுமென்று மெய்யாலுமே தோன்றுகிறதா ?
Deleteஅப்போ அடுத்த வருட ஆகஸ்ட் புத்தக விழாவில்
DeleteZAGOR - அத்தியாயம் 3 வரை முடிச்சாச்சு...!
ReplyDeleteஅடுத்து என்ன நடக்கும் என யோசிக்க முடியாத சுவாரஸ்யம் தான் கதையை தொடர்ந்து படிக்கும் எண்ணத்தை உண்டாக்கும்...!
அந்த வகையில் இதுவரையான ZAGORக்கு மார்க் 10/10
(ஆனாக்கா சிலரது கதைகள் அடுத்து இதுதான் நடக்கும் என குழந்தைகள் கூட யூகிக்கும் படியாய் இருப்பதால் நேரடியாக பரணில் இடம் பிடிப்பதையும், படிக்கும் போது கொட்டாவி களையும் தவிர்க்க இயலவில்லை...!!)
////சிலரது கதைகள் அடுத்து இதுதான் நடக்கும் என குழந்தைகள் கூட யூகிக்கும் படியாய் இருப்பதால்////
Deleteகதை படிப்பது ரிலாக்ஸ் செய்யவே! யோசித்து மண்டையைச் சூடாக்கிக்கொள்ள அல்ல! அதனால்தான் அனைவருக்கும் தெரிந்த ஒன்றிரண்டு கதைகளையே வேறுவேறு ஓவியர்களைக் கொண்டு வரைந்து, புதிய அட்டைப்படங்களோடு தருகிறோம்!
உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி EV.
Deleteஏற்கனவே பலமுறை இங்கே சொல்லியிருக்கிறேன் KS! எல்லோருக்கும் தெரிந்த உண்மைக்கு நன்றியெல்லாம் எதற்கு?!!
Deleteதங்குதடங்கலின்றி பரபரன்னு பக்கங்களைப் புரட்டணும்.. கதையைப் படிச்ச பிறகு - பைக்கில் காதலியுடன் ஒரு ரவுண்டு ஊர்சுற்றித் திரும்பியபின் ஒருமாதிரி சுறுசுறுன்னு இருக்குமே - அப்படி இருக்கணும்!!
தேவையில்லாமல் மண்டையைச் சூடேற்றி ஆகப்போவது என்ன? அது எங்க கொள்கை இல்லையே!! :)
Yes for zagor .Also in the recent release both Tex and zagor will come together.please publish that as well as early as possible
ReplyDeleteபொதுவாகவே இந்த cross over கதைகளில் லாஜிக் தர்மஅடி வாங்குவது வழக்கம் ! கொஞ்ச காலத்துக்கேனும் அவரவர் தடங்களில் அவரவர் சோலோவாகப் பயணிக்கட்டும் நண்பரே !
Deleteபுதிதாய் ஒரு புயல் - கதையில் கதாசிரியரின் கற்பனையை மிகச்சரியாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப காட்சிகளை உருவாக்கி அற்புதமான சித்திரத்தை சரியான வண்ணக் கலவையில் கொடுத்த ஓவியருக்கு எனது பாராட்டுக்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபுதிதாய் ஒரு புயல் - கதையில் முடிச்சுகள் உண்டு ஆனால் அந்த முடிச்சை அவிழ்க்கும் போதுதான் நாம் இந்தமாதிரி ஒரு முடிச்சை எப்படி யூகிக்கவில்லை எனத் தோன்றும்.
ReplyDeleteமற்றும் ஒரு ப்ளஸ் இந்த முடிச்சுகள் எல்லாம் அந்த அந்த அத்தியாத்திலேயே அவிழ்த்து கதையை நகர்த்துவது.
கதையில் ஜாகோரால் காப்பாற்றப்படும் செவ்விந்தியப் பெண்ணின் உடையில் சில முடிச்சுகள் காணப்பட்டன!
Deleteஅப்புறம் அந்த சர்க்கஸ்காரி ஜெலெனாவின் உடையிலும் சில முடிச்சுக்கள் தென்பட்டன! ஆனால் அவை திடீரென்று காணாமல் போயின!
அப்புறம் அந்த வனதேவதை ஷயரின் தக்கணூண்டு உடையிலும் ஒன்றிரண்டு முடிச்சுகளைக் காணமுடிந்தது!
///இந்த முடிச்சுகள் எல்லாம் அந்த அந்த அத்தியாத்திலேயே அவிழ்த்து கதையை நகர்த்துவது.///
ஆமாம் ஆமாம்!! ;)
விஜய் @ நான் நீங்க சொன்ன இநத முடிச்சுக்களை எல்லாம் கவனிக்க வில்லை:-)
Deleteஆனால் நீங்கள் ரொம்ப கவனித்து படிச்சு இருக்கீங்க விஜய்:-) இதற்கு பரிசாக சங்கத்து தலைவரிடம் சொல்லி மூன்று வருடங்களுக்கு முன்னர் ஈரோடு புத்தகத் திருவிழாவின் போது யாருக்கும் தெரியாமல் சங்கத்தில் உள்ள தலைவரின் பதுங்கு குழிக்கு பக்கத்தில் உள்ள எலிப்பொந்தில் ஓழித்து வைத்த இரண்டு ரவுண்டு பன்னை உங்களுக்கு கொடுக்கச் சொல்கிறேன். :-)
அப்போ இரண்டு பேரும் சேர்ந்து ஸாகோர் ஒரு முடிச்சு அவி.......@#&#@னு சொல்ல வர்றீங்க...!
Deleteரிப்போர்ட் அடிச்சவங்க எல்லாம் உசுரோடதான் இருக்கிங்களா.? :-)
Deleteஇத்தாலியில் படம் பார்த்ததை வைத்தே 8/10 மார்க் போட்டு விடுவேன்.
ReplyDeleteஸாகோர் ஆண்டுக்கு 3- 5 முறை ஒரு முழுநீள 128 பக்க "கூடியவரை யதார்த்தமான" ஸாகோர் ஆல்பம் என்று வெளியிடலாம் சார்.
லயனில் டெக்ஸ் உட்பட நட்சத்திர பட்டாளம் இருப்பதாலும் அதனால் ஸ்லாட் பிரச்சினை வருமென்பதாலும் அதேவேளை முத்து காமிக்ஸில் ஸ்டார் பவர் கம்மியாக தெரிவதாலும் (தோர்கல் தனித்து நிற்கிறார், பாவம்) டைகரின் இடைவெளியை நிரப்பவும் இவரை முத்து ஹீரோவாக்கலாம். எதுவாயினும் தங்கள் சித்தம்.
XIII புதிய கதை எப்போது வருகின்றது, ஏதும் அப்டேட்கள் உண்டா சார்?
ReplyDeleteNov'22 நண்பரே !
Deleteநமக்கு சார்
Deleteஇம்மாத டெக்ஸ், அடடே....
ReplyDeleteAwesome, awesome, awesome!
என்னை பொறுத்தவரை ரொம்ப நாளைக்கு பிறகு பூரிப்போடே படிக்க செய்த டெக்ஸ் கதை... ரேஞ்சர் டெக்ஸ் ஐ விட குற்றவாளியாய் தேடப்படும் டெக்ஸ் செம்ம த்ரில்.
சித்திரங்கள் வர்ணஜால visual ட்ரீட்.
கதை டைகர் கதை போல் அத்தனை details. மொழிபெயர்ப்பு விஜயன் Sir அமர்க்களப்படுத்தியுள்ளார்.
எனது ரேட்டிங்: 4.6/5
முன்பக்கத்தில் கிட் கார்சன் இளமையாக தோன்றுகிறார்... ஆனால் கதை முழுக்க வரவே இல்லை... ஓவியர் மாலையப்பன் மட்டும் இருந்திருப்பாரேயானால் இரத்த முத்திரை போன்று ஒரு அற்புதமான அட்டைப்படத்தினை ஆசிரியர் உருவாக்கி இருப்பார் என்பேன்.
Deleteடிராகன் நகரம் போன்றே சில பல இடங்களில் அதனையும் தாண்டி அதிரடியாக உள்ளது... மின்னும் மரணத்தின் சில அத்தியாயங்கள் கண்முன்னே வந்து போகிறது. டெக்ஸ் குழு இல்லாத நாட்கள், rough n tough பிங்கர்டன் லேடி ஹீரோயினும், சரித்திர புருஷர் லிங்கனும் ஏகமாய் இந்த கதையில் மனதை கொள்ளை கொள்கின்றனர்.
சூப்பர் டூப்பர் ஹிட்... புக் காலியாகுமுன்னே புக் செய்து கொள்ளுங்கள்.💐💐💐💐💐
நடுநிலையான விமர்சனம் உதய் ப்ரோ... சிறப்பு!
Deleteகதையை படிக்காமலே தன்னை அனைவரும் உற்றுநோக்கனும்னு டெக்ஸ் மேல துவேசத்தை வெளிப்படுத்தும் நண்பர்கள் சிலர், உங்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது இது...
DeleteThis comment has been removed by the author.
Deleteநன்றி... எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது சகோ... அதனால் தான் கருத்து பகிர்ந்தேன்.
DeleteZAGOR - அத்தியாயம் 4 தொடங்கியாச்சு...!
ReplyDeleteமின்னல் தோற்றது போங்க...!
Deleteஅத்தியாயம் 4 செய் ஸ்பீடு
அத்தியாயம் - 5
Deleteசரேலென சறுக்கி பாதாளத்தில் விழுந்து விட்டது...!
5/10
இதுவரை ஸாகோர் விமர்சனங்கள் நேர்மறையாகவே வந்துள்ளது.. அடுத்த ஆண்டு அட்டவணையில் இவரை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.
ReplyDeleteஎப்போதும் முழு வண்ணத்திற்கே என் ஓட்டு.
இம்மாத இதழ்கள் இதுவரை அங்கிருந்து கிளம்பியதாக தகவலில்லை. எங்கேயிருந்து கருத்து சொல்வது. வழக்கம் போல உங்கள் முயற்சிகளுக்கு என் ஆதரவு உண்டு. அடுத்த ஆண்டும் தெறிக்க விடுங்கள். நன்றி.
ZAGOR - புதிதாய் ஒரு புயல்!
ReplyDeleteமுதல் 4 பாகங்கள் அமர்க்களம்
அடுத்த 2 சுமார் ரகம்...!
அத்தியாயம் -1 : 9
அத்தியாயம் -2 : 9
அத்தியாயம் -3 : 10
அத்தியாயம் -4 : 10
அத்தியாயம் -5 : 5
அத்தியாயம் -6 : 5
48/6 = 8
ஒட்டுமொத்தமாக : 8/10
எதிர்வரும் கதைகள் அத்தியாயம் 5,6 போல இருந்தால் ZAGOR சறுக்கி விடுவார்...!
தொடரும் கதைகள் கொஞ்சம் குறைவான 'காதில் பூ' சமாச்சாரங்களோடு முழு வண்ணத்தில் வந்தால் நலம்...!!
Deleteஸாகோர் எனது மார்க் 8/10
ReplyDeleteநம் ஜோதியில் கலந்து பிரகாசிக்க கூட அத்தனை தகுதியும் உள்ள ஒரு தொடர் ஸாகோர்....
ReplyDeleteஅறிமுக படையே அமர்க்களம்....
நமது அட்டவணையில் சேர்ப்பதோடு இல்லாமல் டெக்ஸ் போன்று அடிக்கடி குண்டு புக்காக வந்தால் நலமே.கறுப்பு வெள்ளையில்அதிகம் வெளியிடவும்.(கதைகள் அதிகம் இருப்பதால்)....
இனிமேல் டெக்ஸ்&ஸாகோர் கூட்டணியில் நிறைய குண்டு புக்கை எதிர் பார்க்கலாமா!!!!!!
ஸாகோர் எனது மார்க் 10/10
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteநான் ராஜா கோவில்ராஜ். ஓசூர்.
Sent this over whatsapp before reading the comment section. Comparison between Tex and Zagor was unintentional; So, apologies friends.
இம்மாத ஸாகோர் ஸ்பெஷல் பற்றிய எனது கருத்து:
ஸாகோர் வைல்ட் வெஸ்ட் பின்புலத்தில் ஒரு டார்ஸன் டைப் கதையாக உள்ளது. அசகாய திறமைகள் கொண்ட ஒரு தனிமனிதனின் நீதியை நிலைநாட்டிடும் பயணக் கதைகளுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு. டெக்ஸ் வில்லர் எப்படி அந்தக்கால காமிக்ஸ் ரசிகர்களையும் தாண்டி புதிதாக காமிக்ஸ் வாசிக்க வரும் 2K கிட்ஸ் மத்தியிலும் ஒரு இரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியிருக்கிறாரோ அதே போல் ஸாகோருக்கும் ஒரு வாசகர் அடித்தளம் அமையும் வாய்ப்பு உள்ளது.
இருவருடைய கேரக்டர் ஆர்க் ஏறக்குறைய ஒன்றே போல் தான் உள்ளது. கதைக் களனும் கூட ஒன்று தான். ஸாகோர் கதைகளில் கொஞ்சம் செவ்விந்திய மூடநம்பிக்கைகள் / மாந்த்ரீக சமாச்சாரங்கள் தூக்கலாக இருக்கும் என்பதை இந்த முதல் இதழில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. சிலருக்கு மாயாஜால சமாச்சாரங்கள் கண்ணைக் கட்டுவதாக இருக்கலாம்; எனினும், பருக்கும் இது சுவாரசியத்தை கூட்டவே செய்யும்.
டெக்ஸ் வில்லரில் இருந்து ஸகோர் வேறுபடும் புள்ளி என்றால் கதை நடக்கும் காலகட்டம். உண்மையில் டெக்ஸ் கதைகள் படிக்கும் போது நமக்கு பெரிதும் அந்நியமாக தோன்றாததற்கு காரணம் அவர் காலத்தில் அறிவியல் நவீனங்கள் துவக்கம் கண்டிருந்தன. இரயில், தந்தி தகவல் தொடர்பு, ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், நவீன ஆயுதங்கள் போன்ற நவீன சமூகத்தின் துவக்கத்திற்கும் - பழைய காலகட்டத்தின் முடிவுக்கும் இடைப்பட்ட காலத்தில் டெக்சில் களங்கள் அமைந்துள்ளன.
இதே ஸாகோரின் காலம் கொஞ்சம் அரதப் பழசானதாக இருக்கிறது. அவருமே மரத்துக்கு மரம் தாவும் போக்குவரத்தையே பெரிதும் சார்ந்துள்ளார். எனவே இந்த புராதணத் தன்மை டெக்ஸ் வில்லர் Vs ஸாகோர் போட்டியில் பின்னவருக்கு நெகட்டிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். படிப்பவருக்குமே கூட இந்த புராதணத் தன்மை கொஞ்சம் அந்நிய உணர்வை ஊட்டக் கூடும்.
Nevertheless... நீங்கள் மார்க்கெட் ஸ்டேட்டிஸ்டிக்சையும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.
எப்படியாயினும், ஸாகோர் என் மதிப்பீட்டில் ஒரு சக்சஸ்புல் ஹீரோவாகவே இருப்பார் But, second only to Tex.
My Rating - 9/10.
Kindly include Zagor in your monthly schedule. Probably 6 Books in 2023 should be fine.
Also, One Special request : Please include 3-4 Rin tin can books. My 10 yr old daughter became Rin Tin's diehard fan. Not only her, all her friends from our street also became fans after she introduced Rin Tin to them.
Thank you Sir.
///ஸாகோர் வைல்ட் வெஸ்ட் பின்புலத்தில் ஒரு டார்ஸன் டைப் கதையாக உள்ளது. அசகாய திறமைகள் கொண்ட ஒரு தனிமனிதனின் நீதியை நிலைநாட்டிடும் பயணக் கதைகளுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு. டெக்ஸ் வில்லர் எப்படி அந்தக்கால காமிக்ஸ் ரசிகர்களையும் தாண்டி புதிதாக காமிக்ஸ் வாசிக்க வரும் 2K கிட்ஸ் மத்தியிலும் ஒரு இரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியிருக்கிறாரோ அதே போல் ஸாகோருக்கும் ஒரு வாசகர் அடித்தளம் அமையும் வாய்ப்பு உள்ளது.////
Deleteஅருமையான கணிப்பு!
///அவருமே மரத்துக்கு மரம் தாவும் போக்குவரத்தையே பெரிதும் சார்ந்துள்ளார்///
:))))))
///One Special request : Please include 3-4 Rin tin can books. My 10 yr old daughter became Rin Tin's diehard fan. Not only her, all her friends from our street also became fans after she introduced Rin Tin to them.
////
எடிட்டர் சார்.. எடிட்டர் சார்.. நோட் பண்ணுங்க சார்.. நோட் பண்ணுங்க சார். தொப்ளா செல்லத்தை திரும்பக் கொண்டு வாருங்கள் சார்.
அப்படியே ஸ்மர்ஃப், லியனார்டோ தாத்தாவை முன்பதிவுலயாவது கொண்டு வாங்க சார்!
// One Special request : Please include 3-4 Rin tin can books. My 10 yr old daughter became Rin Tin's diehard fan. Not only her, all her friends from our street also became fans after she introduced Rin Tin to them. //
Deleteஇது இது பேச்சு சார்!
விஜயன் சார், எங்கள் ரின் டினை சீக்கிரம் கண்ணில் காட்டுங்கள் சார்.
// அப்படியே ஸ்மர்ஃப், லியனார்டோ தாத்தாவை முன்பதிவுலயாவது கொண்டு வாங்க சார்! //
+1
அடுத்த கதைலருந்து ஓஓஓஓஓஓ....ன்னு டார்சான் போல வருவார் சாகோர்....சிறுவயதுல டார்சான படிக்க முடியல்ல.... ஏக்கத்த சாகோர் தீர்க்கட்டும் குழந்தைகளுக்கு
DeleteZokar - திருப்தி... தொடரலாம்! எ.எ.க
ReplyDeleteசிரிப்பவன் மனிதன். சிரிக்க வைப்பவன் இறைவன். நாம் சிரிக்க மறந்து விட்டது போல தோன்றுகிறது. என்னதான் Tex , Zagor. என பிரமாண்ட படைப்புகள் இருந்தாலும் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணம் உள்ளது. தீபாவளி with Tex. Super. ஆனால் இது தீபாவளி without சிரிப்பு. வாழ்க்கையில் சாதனையை விட சந்தோஷம் முக்கியம். என்ன ஒரு கார்ட்டூன் book இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
ReplyDeleteஆறுதல் no.1 . டெட் வுட் வராதது. எங்கள் cartoon நாயகர்களுக்கே இடமில்லை. டெட் வுட் வந்து என்ன சாதிக்க போறான்.
ஆறுதல் no. 2. எப்படியும் நமது ஆசிரியர் Rs.500 விலையில் ஒரு கார்ட்டூன் காமிக்ஸ் புக் வெளியிட போவது இல்லை. இந்த கோரிக்கையை எங்கள் தானைத்தலைவன் பிராபாஸ் உடனடியாக ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி அதிரடியாக Rs.500கோடியில் 😃 ஆதிபுருஸ்
😃 என்னும் கார்டூன் படத்தை எடுத்து டிரெய்லரும் வெளியிட்டு எங்களது கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார். சோ ஹேப்பி தீபாவளி வித் ஆதிபுருஸ் மீம்ஸ்.
கார்டூன் இல்லா காமிக்ஸ் காமிக்ஸ் இல்லை
கார்டூனே எல்லாவற்றிற்கும் தலை.
பின்றீங்க ப்ரோ!
Delete////கார்டூன் இல்லா காமிக்ஸ் காமிக்ஸ் இல்லை
கார்டூனே எல்லாவற்றிற்கும் தலை.///
+111111
ஆதிபுருஸைத்தான் வெச்சி செய்றாங்களே ப்ரோ..😂😂😂
Delete"ஒரு தலைவலி தைல விளம்பரக்காரன் என்னமா கிராபிக்ஸ் பண்ணியிருக்கான்.. நீயும்தான் பண்ணி வெச்சிருக்கியே.."..இதுதான் உச்சக்கட்ட நக்கல்.! சரி அதை விடுவோம்.!
மமனிதனையும் மிருகத்தையும் வேறுபடுத்திக் காட்டும் சிரிப்புக்கே இடமில்லாமல்தான் போய்க் கொண்டிருக்கிறது.! இங்ஙு மட்டுமல்ல.. திரைத்துறையிலும் சரி.. தொலைக்காட்சித்துறையிலும் சரி.. எல்லா இடங்களிலும் பப்ஜி.. ஃப்ரீபயர் போல சுட்டுக்கொண்டே திரிவதற்குத்தான் வரவேற்யு இருக்கிறது.!
ஏற்கனவே இருப்பனவற்றை வைத்தே சிரித்துக்கொள்ள வேண்டியதுதான்..!
அப்படியும் இல்லேன்னா.. கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. சினிஸ்டர் செவன் அப்படின்னு ஒண்ணு தயார் ஆயிட்டு இருக்கு.. நல்ல நகைச்சுவையா இருக்கிறதா சொன்னாங்க..!
முகத்திலே பன்னிரண்டு மருக்களை ஒட்டிக்கினு ஜார்கண்ட் போற பலாப்பழ லாரியிலே கரூர் பக்கத்திலிருந்து ஒரு சார் தொற்றிக்கினு போறதா லேட்டஸ்ட தகவல் !
Delete😂😂😂😂😂
DeletePlease Increase cartoon books in future sir. Previous years , before of 2000 . every year cartoon books comes in minimum 10 nos. But still now 6 nos only. 🤗🤗🤗
Delete// கார்டூன் இல்லா காமிக்ஸ் காமிக்ஸ் இல்லை
Deleteகார்டூனே எல்லாவற்றிற்கும் தலை. //
+1 😎
அடுத்த வருடம் இன்னமும் குறைவு சார்.
DeleteNext year Cartoon books குறைந்தால் , சந்தாவை continue பண்ணுவது பற்றி reconsideration செய்ய வேண்டும் bro. இந்த வருடமே செய்திருக்க வேண்டும். பார்க்கலாம் next year அட்டவணையில் என்ன இருக்கிறது என்று. More cartoon books continue yearly subscription , otherwise denied subscription. இறைவன் அருள் புரியட்டும்.
Delete@ Saro bro
Deleteம்ஹூம்! இது ரொம்ப அதிரடியால்ல இருக்கு?!!
கார்ட்டூன் கதைகளின் மீது நம்மைவிடவும் எடிட்டருக்குப் பன்மடங்கு ஆர்வம் அதிகம் என்பது ஒருவேளை உங்களுக்குத் தெரியாதோ என்னவோ?!!
லக்கிலூக் தவிர மற்ற கார்ட்டூன் கதைகள் விற்பனையில் பலத்த அடிவாங்கி குடோனின் தேங்கிக் கிடப்பதாலும், நமது வாசக நண்பர்களில் ஒருபகுதியினரே கார்ட்டூன் கதைகளுக்கு எதிரான கருத்துகளை அவ்வப்போது பதிவு செய்வதாலும் தானே எடிட்டர் வேறு வழியின்றி (மனதைக் கல்லாக்கிக்கொண்டு) கார்ட்டூன் கதைகளுக்கான ஸ்லாட்டைக் குறைத்துவருகிறார்!
இதுவும் மாறும்! பொறுமையோடும், நம்பிக்கையோடும் காத்திருப்போம்! அவ்வப்போது ஆதரவுக் குரல் கொடுப்போம்!
மதியில்லா மந்திரி
DeleteSmurfs
பென்னி
லியனார்டோ
கிளிப்டன்
ஹெர்லாக் ஷோம்ஸ்
ஸ்டீல்பாடி ஷெர்லாக்
ரின்டின் கேன்
மேற்படியாரெல்லாம் யாரது நிர்ப்பந்தங்களின் பெயரில் நம் மத்தியில் உலவினர் நண்பரே ? இந்த பட்டியலில் உள்ள அனைவருமே இந்தியாவில் களம்கண்ட ஒரே மொழி தமிழ் மட்டுமே என்பது கொசுறுத் தகவல் !
ஒரு கதையினை / தொடரினை அறிமுகம் செய்யும் வரைக்கும் தான் எனது கையில் லகான்களிருக்க முடியும் ! அதன் பின்னே அவற்றை ஏற்பதும், புறம் தள்ளுவதும் நமது வட்டத்தின் தீர்மானமே ! யதார்த்தம் இது தானெனும் போது - "கார்டூன் இல்லாங்காட்டி no சந்தா" என்ற சிந்தையால் சாதிக்கப் போவது ஏதுமிராது நண்பரே !
எற்கனவே அடிக்கோடிட்டு விட்டேன் - காத்துள்ள சந்தாவினில் கார்ட்டூன் slots சொற்பமே என்பதை ! கிட்டங்கியை நிரப்பிப் பெருமை சேர்த்துக் கொள்ள இதற்கு மேலும் தம் இல்லை நம்மிடம் !
உண்மைதான் சார்...😔
DeleteSaro bro @
இதில் யாரையேனும் நொந்துகொள்ள வேண்டுமெனில் அது நம் போன்ற வாசகர்களைத்தான்..!
ரின் டின் , மதியில்லா மந்திரி மற்றும் ஸ்மர்ப்பை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். கிராபிக் நாவலை விட இவை அனைத்தும் மிகச் சிறப்பு. வாசக பெருமக்களே !!!ஆசிரியருக்கு எழுதுங்கள் கார்ட்டூன் வேண்டும் என்று.
Delete// ரின் டின் , மதியில்லா மந்திரி மற்றும் ஸ்மர்ப்பை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். //
Delete+1
// ஆசிரியருக்கு எழுதுங்கள் கார்ட்டூன் வேண்டும் என்று. //
+1
I support this! I am missing them!
ஆஹா ....எழுதச் சொல்லுங்க சார் ! கிட்டங்கியிலுள்ளவற்றை ஒரு டிஸ்கவுண்ட் போட்டுத் தாக்கிப்புடலாம் !
Delete//கரூர் பக்கத்திலிருந்து ஒரு சார் //
DeleteOgo...."சினிஸ்டர்" செவன் பட்டைய கிளப்ப போறது உறுதி போலயே
ZAGOR
ReplyDeleteபுதிய பயணம் போல் ஓர் உற்சாகமான வாசிப்பு! பயணத்தின் ஊடே கண்களைக் கடந்து செல்லும் காட்சிகளைப் போல - மரம், செடி, கொடி, மலை, அறிமுகம் இல்லா மக்கள் என ஒரு சுவாரசியமான உணர்வும், அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புமாக கதை அமைந்துள்ளது! விறுவிறுப்பான கதை சற்றும் அயர்ச்சி ஏற்படுத்தவில்லை!
இங்கு பதிவிடப்படும் எனது கமெண்டுகள் அனைத்தும் - பாறையில் பள்ளம் தோண்டி விதைத்த விதைகளாக மாறுவதால், நான் எப்போதும் புத்தகம் விமர்சனம் இங்கு செய்வதில்லை!
COLOR ZAGOR - வண்ணத்தில் வேண்டும் !
700+ ஆல்பங்கள் என்று தாங்கள் கூறியுள்ளதால், கடந்த ஆறு வருடங்களில் வெளியான கலர் ஆல்பங்களில் இருந்து - 2022, 2021, 2020, 2019, 2018, 2017 எனற வரிசையில் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது!
S60 முன்பதிவு செய்து டிக்கெட் புக் செய்தாச்சுங்க.
ReplyDeleteSuper
Deleteநாளை பதிவுக்கிழமை சார்.
ReplyDeleteஸா கோர் என் இல்லம் தேடி வந்து விட்டார். மேக்கிங் அற்புதம். கலரில் பக்கத்துக்கு பக்கம் கலக்குகிறது.
ReplyDeleteபடித்து விட்டு விமர்சனத்தை பதிவிடவும்...
Deleteபத்துவிடம் பத்துக்குப் பத்து இஸ்கோர் செய்வாரா ஜாகோர்?!! - காமிக்ஸ் உலகம் பரிதவிப்பு!
Deleteமுதல்பாகம் முடித்தாகிவிட்டது. இரவுப்பணிக்கு செல்லும் முன்பு படித்து விட வேண்டும் என்று ஆரம்பித்தேன். இரண்டாம் பாகம் பாதி வரை வந்துவிட்டேன் - மீதம் நாளையே.
Deleteபடித்தவரை சூப்பர்.
வலது கையில் சுத்தியல், இடதுகையில் துப்பாக்கி. கடவுள் பாதி, மிருகம் பாதி என ஆளவந்தான் கமல் மாதிரி ஸா கோர் நின்றிருந்த அந்த அவதார புருஷன் போஸ் அருமை.
அடுத்த பக்கம் முதல் ஃபிரேமில் கழுகு பறப்பது மெக்கன்னாஸ் கோல்ட் படத்தின் ஆரம்ப காட்சியை நினைவு படுத்துகிறது.
செல்விந்தியர்களால் பழிக்கு பழியாக கொல்லப் பட்ட ஸாகோரின் தந்தை, தாய். பிட் ஸியால் காப்பாற்றப்படும் ஸாகோர் அவர்களின் மரணத்திற்கு பழிக்குப்பழிவாங்க சபதம் ஏற்கிறார். குடியிருந்த கோயில் இளம் எம் ஜி ஆர் ஏனோ நினைவுக்கு வருகிறார்.
60 பக்கங்கள் போனதே தெரியவில்லை. சித்திரங்கள் மிரட்டல் ரகம். கதையோட்டத்திற்கு ஏற்ற அளவான வசனங்கள். ஸாகோர் ஸ்கோர் அள்ளுகிறார்.
மீதம் நாளை.
ஜாகோர் கதையை முழுதாகப் படித்தவர்களுக்கு மட்டும்::::
ReplyDeleteஜாகோருக்கு கோடரி எறியக் கற்றுக்கொடுத்த நாடோடி பிட்ஸி ஒரு பாதிரியாரால் சுடப்பட்டு உயிர்விடுகிறார்!
ஜாகோருக்கு மரத்துக்கு மரம் தாவக் கற்றுக்கொடுத்த மானுவல் - மலை உச்சியிலிருந்து விழுந்து மரித்துப் போகிறான்!
அவ்வளவு ஏன் - நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்த வனதேவதை ஷயர் கூட ஜாகோரின் எதிர்காலம் பற்றிக் கற்றுக்கொடுத்த பிறகு மலையிலிருந்து குதித்து உயிரை விடுகிறாள்!
நல்லவேளையா ஜாகோர் ஸ்கூலுக்குப் போகலை!!😰😅
ஹிஹிஹி உங்க தல டெக்ஸ் வில்லரின் நண்பர்களை விடவா அவர்கள் துரதிர்ஷ்டசாலி?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிவந்த மண். டேங்கோ கதையில் பாதி வரை ஆக்சன் எங்கே என தேட வேண்டி இருக்கிறது. அவரோட தாத்தா பொளந்து கட்ட, இவரோ பேசி பாக்கிறேன்னு அடி வாங்குகிறார். அப்புறமா ரொமான்ஸ் காட்றார். எப்படியோ கிளைமாக்ஸ் வந்து விடுகிறது.
Deleteடேங்கோ அடுத்த எபிசோடுல பழைய டேங்கோவா நீஙக திரும்பி வரணும்.
கடலில் பயணிக்கும் டேங்கோ, நம்மையும் உடன் அழைத்து செல்கிறார். அவனது சிந்தனை, அந்த வர்ணனைகள் அபாரம்.
DeleteMarks : 7/10
அருமையான விமர்சனம்
Deleteதனிவேங்கை ஸாகோர்..!
ReplyDeleteரெண்டு ஆல்பங்களை மட்டுமே தொட்டிருக்கிறேன்.!
பதம் பார்க்க ஒரு பானை சோற்றையும் தின்றாக வேண்டுமென்றில்லை..!
சித்திரங்கள் ஸ்டன்னிங்....ப்ப்ப்பா.!
ஸாஹோர் அறிமுகத்தின் ப்ளஸ் பாயிண்டாக நான் பார்ப்பது... கதைத் தொடர் ஆரம்பித்த விதம்..! ஸாகோரின் தந்தையிலிருந்து தொடங்கி அழகாக சென்டிமென்ட்.. விறுவிறுப்பு அனைத்தும் கலந்த அற்புதமான தொடக்கம்.!
ஒரு மனிதனுக்கு தண்டனை கிடைப்பதற்கு.. அவன் தப்பு செய்தேதான் இருக்க வேண்டுமென்ற எந்த கட்டாயமும் இல்லை என்னும் யதார்த்த உலகின் சித்தாந்தத்தை வெகு சாதாரணமாக ஸாகோரின் தந்தைக்கு நடக்கும் சம்பவங்ளின் மூலம் சொல்லிவிடுகிறார்கள்..!
என்னுடைய மதிப்பெண்கள் 9/10
ஸாகோர் தொடர்ந்து வரலாம்.. வரோணும்..!
5,6 அத்தியாயங்களை பார்த்துவிட்டு முடிவுக்கு வாங்க...!
Deleteஸாகோர்!
ReplyDeleteசித்திரங்கள் பிரமாதம்! முதல் நான்கு பாகங்கள் அட்டகாசமாக நகரும் கதை ஐந்தாவது பாகத்தில் செவ்விந்திய நம்பிக்கைகள் மாந்திரீகங்கள் என்று நகர்கிறது. ஆனால் ஸாகோர் டிநேயின் ஆரம்பப்புள்ளி அதுவாகவே இருப்பதால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. கிளைமாக்சில் கந்தசாமி ஸ்டைலில் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் சேர்த்து ஸாகோரை அரங்கேற்றம் செய்வது டெக்னாலஜி அறிவில் பின்தங்கிய செவ்விந்திய தலைவர்களை ஏமாற்றுவது போலுள்ளது. மேற்கொண்டு எந்த திசையில் பயணிக்கிறது என்று பார்க்கலாம்...
ஸாகோரை சந்தாவில் சேர்த்தாலும் சரி... சிறப்பு வெளியீடாக வெளியிட்டாலும் சரி... ஜந்தாறு பாகங்களை சேர்த்து ஒன்றாக இதேபோல் வெளியிடுங்கள்...
நன்றிகள் சார்!!
>>காத்துள்ள சந்தாவினில் கார்ட்டூன் slots சொற்பமே
ReplyDeleteஅதில் சுஸ்கி விஸ்கி atleast ஒரு double album புக் சார் .....
// சுஸ்கி விஸ்கி atleast ஒரு double album புக் சார் //
Deleteஇரண்டு double album புத்தகங்கள் வேண்டும் சார்.
"யார் கிட்ட கேக்குற ராஜா...அண்ணன் கிட்ட தானே ..? இன்னும் கூச்சப்படாம கேளு !"
Deleteவடிவேல் பட டயலாக் ஏனோ நினைவில் வந்து செல்கிறது சார் !
அதனால் தான் இரண்டு டபுள் ஆல்பம் வேண்டும் என கேட்டுள்ளேன் சார். நீங்க ரொம்ப நல்லவர் இந்த குழந்தைகளின் ஆசையை கண்டிப்பாக எப்படியாவது நிறைவேற்றுவீர்கள் என நம்பிக்கை தான் சார்.
Delete"எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா" தேவர் மகன் டயலாக் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது சார்:-)
Deleteஇன்று பதிவுக்கிழமை சார்.
ReplyDelete170வது
ReplyDeleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteகிட் ஆர்டின், ரின் டின் மற்றும் மதியில்லா மந்திரி க்கு மினிமம் 2 புக் 2023 ல் வேண்டும். Please consider editor.
ReplyDeleteசரியா ஆடாங்காட்டி இந்திய கிரிக்கெட் டீமில் ஒரு பிளேயரை தூக்கி வெளியே குந்த வைப்பாங்க ! அவரும் எதுவும் செய்யாமலே 'தேமே ' ன்னு இருப்பார். ஒரு 6 மாசம் கழிச்சு அவரையே மறுக்கா காரண காரியமில்லாம தேர்வு பண்ணி டீமுக்குள்ளாற சேர்த்துப்பாங்க !
Deleteஇந்த நடைமுறையை நாமும் கடைபுடிச்சாக்கா முதுகைப் பழுக்கப் பண்ணிடுவாங்க சார் நண்பர்கள் !
Atleast , Increase nos of Lucky luke books sir. Combined with story of Rindy always happy sir.,,,,,🙏🙏
Deleteடெக்ஸ்வில்லர் மாயனோடு ஒரு மோதல் நேற்று இரவு தான் படித்து முடித்தேன்.. அருமை..அருமை...தூக்க கலக்கத்தில் தான் இதழை படிக்க எடுத்தேன்..பெரிய கதை பாதியாவது படித்து விடுவோம் என ..ஆனால் முதலில் சிறிது மெதுவாக நகர்வது போல தோன்றினாலும் சிறிது நேரத்திலியே வழக்கம் போல தூக்க கலக்கம் எங்கே போயிற்று என்றே தெரியவில்லை..எப்பொழுதும் போல பரபர விறுவிறு பரபர விறுவிறு தான்..இளமையான மெபிஸ்டோவின் அறிமுகபடலமும் .பல கதைகளில் டெக்ஸ்ற்கு உத்தரவு இடம் பிங்கர்டன் ஏஜென்ஸி எப்படி .டெக்ஸ்ற்கு அறிமுகமானது என்பதையும் இந்த மாயனோடு மோதல் நமக்கு அறியபடுத்துகிறது..உண்மை நாயகர் லிங்கனும் கதையில் ஒரு மெயின் பாத்திரமாகவே வருவது அவரை பற்றி அறியாத என்னை போன்றோருக்கே கதை சுவராஸ்யபடுத்துகிறது எனில் பலருக்கு சொல்லவே தேவையில்லை..மொத்த்தில் வழக்கமான வெற்றியை எப்பொழதும் போல டெக்ஸ் பெற்றுள்ளார்..பறந்து போன தூக்கத்தால் அடுத்து டெக்ஸ் வாசிக்கலாம் என நினைத்தாலும் அதனையும் படித்து விட்டு அடுத்த மாத இதழ் எப்பொழுது சார் என நான் கேட்டால் ஆசிரியர் அடிக்க வருவாரோ என்ற அச்சத்தின் காரணமாக இன்று படித்து கொள்ளலாம் என நானே மறுதலித்து கொண்டேன்..மொத்தத்தில் தீபாவளி மலர் இரண்டுமே சரவெடி அதிரடி என்பது மறுக்க முடியாத உண்மை..
ReplyDelete// தீபாவளி மலர் இரண்டுமே சரவெடி அதிரடி என்பது மறுக்க முடியாத உண்மை.. // தல நீங்க இரண்டாவது கதையை இன்னும் படிக்கல. அது சும்மா ஜெட் வேகம்.
DeleteEdi Sir...
ReplyDeleteஇன்னும் பதிவு வர்லிங்க..
நான் இனிமேல *ஸாகோர் ஸ்ரீபாபு* ன்னு பேர மாத்தி வச்சுக்கலாம்னு இருக்கேன். 💐 (கலர் ஸாகோர் க்குதான் my ஓட்டு 100/100)
😍😘😃
போனெல்லியின் மூலம் நமக்கு அறிமுகமான ஸாகோர் முதல் படைப்பு முத்தான படைப்பாக அமைந்தது!! ஸாகோரின் குழந்தை பருவம் அவரோடு இணையும் தாய் தந்தை இருவரும் மறைவுக்குப் பின் வழிகாட்டியாக ஒருவர் பின் ஒருவராக வளம் வரும் கதாபாத்திரங்கள் இளமைப் பருவம் அடையும் ஸாகோருக்கு உதவிடும் பெண் மந்திரவாதிகள் இப்படியாக வளரும் ஸாகோர் படைப்பு அற்புதம் ஆறு பாகங்களை அழகாக படைத்துள்ளார்கள் இவருடைய அடுத்த கதை எப்படியிருக்கும் என ஆவல் ஸாகோரின் அடுத்த இதழும் இதேபோல் குண்டு புக்காகத்தான் அதுவும் வண்ணத்தில் தான் வரவேண்டும்
ReplyDeleteZagor 9/10.. a perfect introduction
ReplyDeleteI vote for at least the same for next year (6 albums in one shot). Color please.. the art is gorgeous.
ஒரு மாயனோடு மோதல்...!
ReplyDelete"இளம் டெக்ஸ்" அசத்தல்...!
டைகர் இடத்தை இவர் தான் நிரப்பப் போகிறார்...!
பாகம் - 1
ஓவியம், வண்ணம் மற்றும் கதை சொல்லல், மொழிமாற்றம் அனைத்தும் அருமை...!
இதனால் தானோ என்னவோ ஒரு 'இளம் டெக்ஸ்' கூட இதுவரை பரணுக்கு போகவில்லை...!
பரணென்றும் பாயசமென்றும் விளித்திடுவார் அவரேபின்
Deleteபடித்துப் பரவசமெய் திடுவார்.
பாகம் - 2
Deleteஇதுவுமே அமர்க்களம்...!
Well said.
Deleteவிஜய் @ செம குறள்.
DeleteSusky wisky is already hit...hope we can expect more from them
ReplyDeleteஸாகோர் ok sir,
ReplyDelete9/10
வாய்ப்பு
கொடுங்க Sir
ஒரு மாயனோடு மோதல்...!
ReplyDeleteநிஜ ஹீரோவும் (மதிப்பிற்குரிய ஆபிரஹாம் லிங்கன் அவர்கள்),
நிழல் ஹீரோவும் (இளம் டெக்ஸ்) இணைந்து கலக்கும் அட்டகாசமான கதை...!
மாயாஜாலத்தில் எல்லாம் பெரிதாக எனக்கு ஈர்ப்பு இல்லாவிடினும் கதையின் ஓட்டத்தில் மெபிஸ்டோ மோசம் இல்லை...!
ஆபிரஹாம் லிங்கன் அவர்களை கதையில் இயல்பாக உலாவ விட்டிருப்பது கூடுதல் சிறப்பு...!
சமூகநீதி என்றாலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும் (என் போன்ற) நபர்களுக்கு விருந்து படைக்கும் காமிக்ஸ் களமிது...!
சும்மா ஒரு ஜாக் :
மாணவன் : சார், அரசியல் என்றால் என்ன?
ஆசிரியர் : இல்லாத பிரிவினையை உண்டாக்கி அதனால் சுயலாபம் பெறுவது...!
(கேப்பிடலிசம், கம்யூனிசம், திராவிடம், தமிழ் தேசியம், பார்ப்பனியம், இந்துயிசம் இன்னும் பலபல பிரிவினைகள்)
இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு மனிதனை மனிதனாய் மட்டுமே பார்ப்பதே சமூகநீதி...!
இவையெல்லாம் கதையை படித்த பிறகு மனதில் ஓடிய எண்ணவோட்டங்கள்..!
இதுபோன்ற கதைகள் வரவேற்கதக்கன...!
மார்க் : 10 / 10
///ஜாக்///
Deleteஜோக் 😀
டெக்ஸ் : டக்ளஸ் பேசுவதோ பொருளாதாரம், செல்வ செழிப்பை பற்றி...!
Deleteலிங்கன் சமூக நீதிக்கு குரல் கொடுக்கிறார்...!
வழிப்போக்கன் : இரண்டுமே ஒன்று தானே?
என்று கேட்டதற்கு,
டெக்ஸ் : இல்லை நண்பா! இரண்டும் ஒன்றல்ல என்பது என் கருத்து...!
என்று சொல்லும் போது 'இளம் டெக்ஸ்' மீதான மரியாதை கூடுகிறது...!
ஒரிஜினலிலும் இதே வசனம் தான் இருக்கிறதா? என தெரிந்து கொள்ள ஆர்வமுண்டாகிறது...!
கதை முடிவில் வரும் ரொம்பவே ரசிக்க வைத்த ஷார்ப் பஞ்ச்...
DeleteZagor4வது அத்தியாயம் படித்துவருகிறேன்.படித்தவரையில் ok..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்றைய இரவுப் பணி செல்லும் வரையில் 4 பாகங்கள் முடிந்து 5ம் பாகம் பாதி வரை வந்திருக்கிறேன். இதுவரை கதை ஒரே நேர்கோட்டில் விறுவிறுப்பாக செல்கிறது.
ReplyDeleteஸாகோரின் வளர்ச்சியில துணையாக இருப்பவர்கள எல்லாம் இறந்து விடுகிறார்கள்.
ராசிக்கட்டம் சரியில்லை போலிருக்கு.
மிரட்டலான சித்திரங்கள். கண்டிப்பாக ஸா கோர், கலரில் , ஹார்டு பவுண்டில், வேண்டும்.
199
ReplyDelete200
ReplyDelete