Powered By Blogger

Sunday, October 30, 2022

ஆரம்பிக்கலாமுங்களா..?

 நண்பர்களே,

ரெண்டு கோரிக்கைகள் :

# 1 : இந்தப் பதிவினை 'ஏக் தம்மில்' வாசிக்க உங்களுக்கு நேரமிருப்பின், அதற்கு எத்தனை நிமிடங்கள் பிடித்தன ? என்று time செய்து விட்டு, உங்கள் பின்னூட்டங்களிலும் போடுங்களேன் ப்ளீஸ் ? எனக்குச் செலவான எண்ணற்ற மணிநேரங்கள், வாசிப்பினில் எத்தனை நிமிடங்களாய் உங்களுக்கு translate ஆகியுள்ளதென்று தெரிந்து கொள்ளும் ஒரு சிறுபிள்ளைத்தனமான ஆவல் தான் !

# 2 : எப்போதும் போலவே இந்த ரயில் வண்டியின் நீளம் சாஸ்தி ; and yes, இன்னும் தியாகராஜ பாகவதர் பாணியில் நீட்டி முழக்கியே உள்ளேன் தான்  ! So கார்த்திக் சோமலிங்கா ; அய்யம்பாளையம் நண்பர் ; மற்றும் குறைவான நேரமும், பொறுமையும் உள்ளோர் - நேரடியாய் IMAGE-களுக்குப் பயணிக்கலாம் ! நான் எச்சரிக்கவில்லையென்று அப்பாலிக்கா குறை சொல்லாதீர்கள் - ப்ளீஸ் !

வணக்கம். தமிழ் செப்பும் நல்லுலகம் தானைத் தலைவர் கவுண்டரின் தீரா ரசிகப்பிள்ளைகள் என்பதில் ரகசியங்களில்லை ! அவரது அகில உலக ரசிக மன்றத்தின் சிவகாசி வட்டச் செயலாளர் ஒரு ஆந்தைக் கண்ணன் என்பதிலுமே no secrets ! கவுண்டரின் ஏகப்பட்ட பின்னியெடுக்கும் sequences இருந்தாலும், அந்த கான்ஸ்டபிள் கோட்டைச்சாமி தூக்கத்தில் நடக்கும் வியாதியுடன் “தலைகீழாத் தான் குதிப்பேன்!” என்று பண்ணும் சலம்பல் செம favourite எனக்கு ! இந்த நொடியில் அதனை இங்கே நினைவு கூர்ந்திடக் காரணங்கள் உண்டு – simply becos காத்திருக்கும் 2023-ன் அட்டவணைத் திட்டமிடலின் பின்புலமே கவுண்டரின் காமெடி வரிகளை மெய்யாலுமே மெய்ப்படுத்திப் பார்க்கும் முயற்சி தான் எனலாம் !

In simple terms – நம்மிடமுள்ள நாயக / நாயகியர் பட்டியலைக் கொண்டு லயன், முத்து, ஜம்போ, லயன் கி.நா.; லயன் லைப்ரரி என்பதைத் தாண்டி புலி. சிறுத்தை, கரடி, ஒட்டகச்சிவிங்கி லைப்ரரி என்ற ரீதியில் வண்டலூர் zoo-வில் உள்ள பாதி மிருகங்களின் பெயர்களிலும் ஒரு வரிசையினைத் துவங்கிட முடியும் என்பது நீங்கள் அறியாததல்ல ! இது பீற்றலின் தொனியில் சொல்லப்படவில்லை என்றாலும், நிஜம் இதுவே என்பதை நாமறிவோம் ! அவ்விதமிருக்க, ஓராண்டின் அட்டவணையைத் தேற்றுவதென்பது, வெயில் காலத்தில் குச்சி ஐஸ் சாப்பிடுவது போல செம simple பணியாகத் தானே இருந்திருக்க வேண்டும் ?! ஆனால்… ஆனால்... நமக்குத் தான் தலைக்குள் அவ்வப்போது லியனார்டோ தாத்தா ரேஞ்சுக்கு பல்புகள் பிரகாசமாய் எரிந்து வைக்குமே? So ஒரு சிம்பிளான பணியைச் சிம்பிளாகவே முடித்து விட்டால் அப்புறமாய் அதனில் ஏது கிக் ?

இங்கலீஷில் ஒரு சொற்றொடர் உண்டு- “Why fix something that isn’t broken?“ என்று!! மேஜர் சுந்தர்ராஜனுமே எனக்குப் பிடித்த நடிகர் என்பதால் அவர் பாணியிலேயே அதனைத் தமிழிலும் மறுக்கா சொல்லி விடுகிறேனே? “ஒரு சமாச்சாரம் உடையாமல்; பழுதாகாமல் இருக்கிற வரைக்கும் அதை ரிப்பேர் பார்க்க / நோண்ட முனைவானேன் ?“ கச்சிதமாய் set ஆன நாயக / நாயகியர் யார் என்பது ஓரளவுக்கு உங்களிடமிருந்தும், நமது கிட்டங்கிக் கையிருப்புகளிலிருந்தும் கிரகித்து விட்டுள்ள சூழலில், கண்ணை மூடிக் கொண்டு “ஆங்…. டஜன் டெக்ஸ் வில்லர்; ரண்டு தோர்கல்; ரண்டு லக்கி; ஒன்னரை சிக் பில்; ஒன்னேகால் டேங்கோ, etc. etc…" என்ற ரீதியில் 2023-ன் அட்டவணையினை அமைத்திட வாய்ப்புகள் இருந்தும், நான் அந்தப் பாணியினைக் கையில் எடுக்கவில்லை – at least இந்த முறையிலாவது!

டாப் நாயகர்கள் & சமீபத்தைய வரவுகள் ஆட்டோமேடிக்காக ‘டிக்‘ அடிக்கப்பட்டு 2023-ன் பயணத்தில் முன்வரிசைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்! அந்த "திரிசங்கு நிலை" நாயக / நாயகியரில் மட்டும் கொஞ்சம் இன்க்கி - பின்ங்கி – பான்கி போட்டுள்ளேன் – சிலரை உள்ளேயும, சிலரை வெளியேவும் அமர்த்தி ! Define “திரிசங்கு நிலை நாயகர்கள்“ என்கிறீர்களா? “வந்தால் ஷேமம்… வராது போனாலும் குடிகள் முழுகிடப் போவதில்லை !“ என்ற ரியாக்ஷன்களை ஈட்டும் நாயக / நாயகியரே இவர்கள் ! Of course – மரத்தடியில் சீட் போட்டுத் தரும் இந்தப் படலமானது அவர்களை நிரந்தரமாய் வெளியேற்றுவதற்கான முதல் படியே அல்ல ! For sure அவர்கள் நமது திட்டமிடல்களில் தொடர்ந்திடவே செய்வர் ! So உங்களிடம் சாத்துக்கள் வாங்கப் போவது உறுதி என்றாலுமே சில நாயக, நாயகியரை இம்முறை ஓய்வெடுக்கச் செய்துள்ளேன்! இதற்குக் காரணமும் உண்டு ! அது பற்றி இந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நீளத்துப் பதிவின் இறுதியில் ! 

So ஆரம்பிக்கலாமுங்களா  ?

தலைகீழாக் குதிக்கப் போறேன்!“ என்று வெறுமனே சொல்வதோடு நிறுத்திக் கொள்ள மாட்டோமாக்கும் இம்முறை – மெய்யாலுமே எல்லோருமே தலைகீழாக் குதிக்கும் ஒரு ஆல்பமே உண்டு – நமது லயன் கிராபிக் நாவல் வரிசையில் ! நம்பினால் நம்புங்கள் – “தரைக்கு வந்த வானம்“ ஒரு செமத்தியான கற்பனையின் பலனான இத்தாலிய ஆக்கம் ! ஒற்றை நாளில் புவியீர்ப்பு சக்தி இல்லாதே போய்விட்டால் என்னவாகும் ? என்று முழுவணத்தில், crisp ஆனதொரு த்ரில்லராய் 80 பக்கங்களில் போனெல்லி உருவாக்கியுள்ளனர் ! "நேர்கோடுகள் மாத்திரமின்றி சைடுகோடுகளுமே எங்களுக்குக் கைவந்த கலைதான்“ என்று பறைசாற்றும் போனெலியின் இந்தப் படைப்பைத் தொடர்ந்து, கிராபிக் நாவல் வரிசையினில் கடை போட வரவுள்ளது  XIII மர்மம்

இரத்தப் படலத் தொடரின் spin-offs மொத்தம் 13 and அவற்றுள் ஒரு நாலைந்தை நாம் ஏற்கனவே கலவையான விமர்சனங்களுடன் வெளியிட்டுள்ளோம் தான் ! சில மாதங்களுக்கு முன்பாய் நம்மிடமிருந்து விடைபெற்று ஓவியர் வில்லியம் வான்ஸை விண்ணுலகில் சந்திக்கச் சென்று விட்டிருக்கும் நமது காமிக்ஸ் நண்பர் பழனிவேல் இருந்தவரைக்கும் இந்த spin-offகளை வெளியிடக் கோரி, அவர் வருஷம்தோறும் கொடி பிடித்ததும், நான் அதனைத் தவறாது தட்டிக் கழித்ததும் நடைமுறை ! ஆனால் எதிர்பாராவிதமாய் தீராநோய்க்கு அவர் பலியாகியிருக்க, அவரது நினைவாகவும், அவரது சிறு குடும்பத்துக்கு ஒவ்வொரு கல்வியாண்டின் சமயத்தில் சின்னதாய் ஒரு தொகையினைத் திரட்டவும், ஆண்டுதோறும் XIII (or) XIII Spin-offs இருக்குமாறு பார்த்துக் கொள்வோமென்று வாக்களித்திருந்தோம் ! அதனைச் செயல்படுத்திடும் தருணம் என்பதால் “ஜானதன் ஃப்ளை“ நமது 2023-ன் கிராபிக் நாவல் வரிசையின் இதழ் # 2 ஆகிறது ! (இதழ் வெளியாகும் நேரத்துக்கு தலைப்பு மாறியிருக்கும் ; தற்போதைக்கு "ஜானதன் பிளை" என்பது சும்மா ஒரு அடையாளத்துக்கே !

XIII-ன் புது ஆல்பம் வெளியாகி விட்டது தான் & நமக்கு அவற்றின் கோப்புகளும் வந்தாச்சு தான் ! ஆனால் மூக்கை முன்னூறு தபா சுற்றும் இந்த பாணியிலான கதைகளுக்குள் கால்பதிக்க ஒரு ஆங்கில இதழ் கைவசமிருந்தால் தமிழாக்கத்தினில் பிழைகளைத் தவிர்க்க ஏதுவாய் இருக்குமே என்ற ஆதங்கம் எனக்கு ! அநேகமாய் அடுத்த 6 மாதங்களுக்குள் CINEBOOK, XIII-ன் புது ஆல்பத்தின் ஆங்கிலப் பதிப்பை வெளியிட்டு விடுவார்கள் என்று தகவல் ; so அதன் பிற்பாடு இரத்தப் படலம் mainstream இதழுக்குள் புகுந்திடலாமென்று இருக்கிறேன் ! So 2023-க்கு நமது அட்டவணையினில் XIII spin-off ! குட்டிப் பையனான ஜேசனை விரல்பிடித்து அழைத்துச் செல்லும் அந்த தந்தை கேரக்டரை XIII தொடரின் ஆர்வலர்கள் யாரும் மறந்திருக்க மாட்டோம் ! இதோ - அவரது கதையினைச் சொல்ல விழையும் முயற்சியினை வெளியிடுவோமே - மேலிருந்து பழனி ரசிப்பாரென்ற நம்பிக்கையுடன் ! பழனி.. ஹேப்பி தானா ? 



“இன்னாடா… ‘தல‘ டெக்ஸின் திருவிழாக்கால வருஷத்தை கி.நா. அறிவிப்புகளோடு ஆரம்பிக்கிறானே?" என்ற குழப்பமா? வேறொன்றுமில்லை guys – வெறும் மூன்றே ஆல்பங்கள் கொண்ட கிராபிக் நாவல் பிரிவு இம்முறை எனும் போது, அவற்றை முதலில் அறிவித்து விடலாமே என்று நினைத்தேன் ! தவிர, "தலைகீழா தான் குதிப்பேன்" டயலாகுக்கும், "தரைக்கு வந்த வானம்" கி.ந.வுக்கும் ரைமிங் ஆக வந்ததால், அப்படியே சின்ன U-டர்ன் போட்டு விட்டேன் கி.நா.திசையினில் ! And கி.நா. பட்டியலின் இறுதி slot செல்வது நமது தாத்தாஸ் கும்பலுக்கே ! 2021-ல் முதல் தாத்தா அன்ட்வானின் flashback ; 2022-ல் தாத்தா #2 பியரோ மயோவின் flashback என்று பயணிக்கும் இந்தத் தொடரின் குண்டு தாத்தா மில்ஸேவின் flashback – காத்திருக்கும் “எல்லாம் கிழமயம்!” ஆல்பத்தில் தடதடக்கவுள்ளது! Of course "தாத்தாக்கள் தேவை தானா?" என்ற கேள்வி எழலாம் தான் ; ஆனால் எவ்வித templates பக்கமும் தலை வைத்துப் படுக்காது பயணிக்கும் ஒரு முற்றிலும் மாறுபட்ட தொடரினை அந்தரத்தில் தொங்க விடுவதாக நாம் இல்லவே இல்லை ! இம்முறை தாத்தாக்களை மட்டுமல்லாது, கி.நா.பிரிவையே வேணும் / வேண்டாம் எனத் தேர்வு செய்திடும் வகையில் சந்தாப் பிரிவுகளில் உங்களுக்கு சுதந்திரம் இருந்திடவுள்ளது எனும் போது, கவலைகளின்றி தாத்தாக்கள் will get a free run ! So "இந்த வியாக்கியானத் தாத்தாக்களோ, விவகாரமான கி.நா.க்களோ நமக்கு set ஆகாதுடோய்" என்று எண்ணும் நண்பர்கள் நாசூக்காய் சந்தா கி.நா.விலிருந்து கழன்று கொள்ளலாம் !! And இந்தக் கிழக் கும்பலின் கதைகள் இப்படித் தானிருக்கும் என்பதிலும் இப்போது ரகசியங்களில்லை எனும் போது,  "இந்தச் சந்தா வேணும்-வேணாம்" என்ற முடிவெடுப்பதில் உங்களுக்கு பெரிய சிரமங்கள் இருக்கக்கூடாது தான் !

ரைட்டு… விளம்பரங்கள்…ட்ரெய்லர்களெல்லாம் முடிந்தது எனும் போது main picture-க்கு போகலாம் folks !

டெக்ஸ் வில்லர் YEAR 75!!

சந்தேகங்களின்றி காத்திருக்கும் 2023-ன் திருவிழா நாயகர் நமது இரவுக் கழுகாரும்,அவரது அணியினரும் தான்! முக்கால் சதம் சாத்தியிருக்கும் இந்த “என்றும் 16” நாயகர் நம் மத்தியில் தனது 38-வது ஆண்டை எதிர்நோக்கியுள்ளார்!! எனக்கு நினைவுள்ள வரைக்கும் இத்தனை காலமாய் ஓட்டப்பந்தயத்தில் முன்னணியில் தொடர்ந்த நாயகர் வேறு யாருமிலர்! Of course மாயாவியார் evergreen என்றாலும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கதைகள் கொண்ட தொடரினில் மறுபதிப்புகள் தானே இன்று வரையிலும் கும்பியடித்து வருகின்றன ? லக்கி லூக்கும், XIII-ம் அந்தப் போட்டியில் இடம்பிடிக்கத் தகுதி கொண்டோரே – ஆனால் by the sheer weight of numbers, டெக்ஸ் வேறொரு உச்சத்தில் நிற்கிறார். And இந்த இத்தாலிய ஜாம்பவானுக்கு அகவை 75 காத்துள்ளதெனும் போது - அதுவே 2023-ன் நமது பிரதான focus ஆக இருந்திடப் போகிறது! போனெலியில் இதற்கென நிச்சயமாய் தடபுடலாய் ஏதேனும் திட்டமிட்டிருப்பார்கள் தான்; ஆனால் அது என்னவென்பது 2023-ன் முதல் க்வார்ட்டர் வரையிலும் தகவல்கள் கிட்டிடாது எனும் போது, அவர்களது வாலைப் பிடித்துக் கொண்டு இந்த platinum ஆண்டை நாம் வலம் வருவது சுலபமாகயிராது ! So நமது திட்டமிடல்கள் நம் பாணியிலேயே ! ஆனால்- TEX 75-க்கென போனெலி அறிவிக்கும் அதிரடிகள், போட்டுத் தாக்கும் ரகமாக இருக்கும் பட்சத்தில், தலையை அடமானம் வைத்தாவது அவர்களது புது அறிவிப்புகளோடு ‘தல‘ bandwagon-ல் தொற்றிக் கொண்டு விடுவோம். 

நம்மவரின் 75வது பிறந்த நாள் ஆண்டு மலரை எவ்விதம் திட்டமிடலாமென்று கொஞ்ச மாதங்களுக்கு முன்னே நமது வலைப்பக்கத்தில் கேட்டிருந்தது நினைவிருக்கலாம் ! “ஆயிரம் பக்கத்தில், ரெண்டாயிரம் ரூபாயில்!” என்று ஏகமாய் ஆடம்பரமான suggestions குவிந்து தள்ளியிருந்தன! அவை இரவுக்கழுகார் மீது நாம் கொண்டுள்ள வாஞ்சையின் பிரதிபலிப்பு என்பது புரிந்தது & அதை நடைமுறைப்படுத்துவதுமே விற்பனை angle-ல் சாத்தியமே என்பதும் புரிந்தது தான்! ஆனால் குறிப்பிட்டதொரு பட்ஜெட் எனும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டி வரும் நமக்கு, ஆசைகளிருக்கும் அளவிற்கு பட்ஜெட் லேதே ?! ஒற்றை மெகா இதழில் ஆயிரம், ரெண்டாயிரம் என lock பண்ணி விட்டால் ; மீத மாதங்களுக்கான TEX சாகஸங்கள் எப்படியும் இன்னொரு இரண்டாயிரத்தைக் கோரி விடும்! அப்பாலிக்கா இதர நாயகர் & தொடர்கள் தமக்குள் குருவி ரொட்டிகளையும், குச்சி மிட்டாய்களையும் மட்டுமே பகிர்ந்திட வேண்டிப் போய் விடும்! So 'தலயின் அந்தப் பிறந்த நாள் ஆண்டு மலரான THE SUPREMO SPECIAL-ன் திட்டமிடலை சற்றே வித்தியாசமாய்க் கையாள எண்ணினேன்!

இரவுக் கழுகாரின் இந்த ஏழரை தசாப்தப் பயணத்தினில் எண்ணற்ற படைப்பாளிகள் தங்கள் உழைப்புகளைத் தந்துள்ளனர் தான்! ஆனால் இதுவரையிலான டெக்ஸ் வரலாற்றை சற்றே நிதானமாய்ப் பகுத்தாய்ந்தால் 4 மகாமனிதர்கள் மற்றவர்களை விடவும் head & shoulders உசந்து நிற்பது புரிபடும்!

- முதலாமவர்- பிதாமகர், பெரியவர் G.L.போனெலி !

- இரண்டாமவர்- அவரது புதல்வரான செர்ஜியோ போனெலி!

- மூன்றாமவர்- 20+ ஆண்டுகளாய் எண்ணற்ற டெக்ஸ் சாகஸங்களை எழுதிய க்ளாடியோ நிஸ்ஸி !

- நான்காமவர்- தற்போதைய டெக்ஸ் எடிட்டரும், ஒரு புது சகாப்தத்தையுமே உருவாக்கி வரும் மௌரோ போசெலி!

இந்த நால்வருமாய் இதுவரைக்கும் உருவாக்கியுள்ள டெக்ஸ் ஆல்பங்களின் எண்ணிக்கை – பிரமிக்கச் செய்யுமொரு எண்ணிக்கை ! So இவர்கள் ஒவ்வொருவரின் படைப்புகளிலிருந்தும் ஒரு முத்தைத் தேர்ந்தெடுத்து SUPREMO SPECIAL எனும் மாலையாக்க எண்ணினேன்! So நான்கில் மூன்று கலரிலும், ஒன்று மட்டும் black & whilte–ல் ! 700 பக்கங்கள் in all ! டெக்ஸின் பிறந்த நாளான செப்டம்பர் 30-ம் தேதியன்று இந்த இதழினை உங்களிடம் ஒப்படைப்பதே திட்டமிடல் – புனித மனிடோவின் இசைவுடன் ! And இந்த இதழின் highlight-ஆக இருக்கவுள்ளது மௌரோ போசெலியின் “வந்தார்… வென்றார்…!” தான் என்று எனக்குள் இப்போதே ஒரு பஜ்ஜி சொல்கிறது! முன்னொரு முறை அமெரிக்கக் கரைகளிலிருந்து நெடுந்தொலைவு பயணித்து க்யூபா சென்ற ‘தல‘ லைட்டாக விட்டலாச்சார்யா பாணியிலானதொரு கதையில் சறுக்கியிருந்தது நினைவிருக்கலாம் ! ஆனால் இம்முறையோ டெக்ஸ் பயணிப்பது அர்ஜெண்டினாவிற்கு ! And அங்கு ஒரு வித்தியாசமான யுத்த களத்தில் நம்மவர் செய்யும் அதிரடிகளும், வகுக்கும் வியூகங்களும் இந்த TEX 75-வது ஆண்டுமலரின் டாப் கதைகளுள் ஒன்றாகயிருக்கும் ! பாக்கியுள்ள 3 கதைகளுமே தத்தம் பாணிகளில் பட்டாசாய்ப் பொரிந்திடக் காத்துள்ளன ! கலரில் டெக்ஸ் & கோ. டாலடிப்பதைப் பார்க்கும் போது இப்போதே ஜொள்ளு வடிகிறது இங்கு எனக்கு ! இன்னமும் 11 மாதங்கள் இவற்றை அடைகாப்பது நிச்சயம் சுலபக்காரியமாய் இருக்கவே செய்யாது என்பது மட்டும் உறுதி !! 



அப்புறம் இந்த இதழினில் filler pages-களுக்கான டெக்ஸ் சார்ந்த தகவல்களை இங்கும்-அங்குமாய்த் திரட்டித் தர ஒரு “TEAM TEX” உருவாக்கப்படும் – July'23-ல் ! நம் மத்தியில் இரவுக்கழுகார் செய்த அதிரடிகளை நினைவு கூர்வது ; உலக அரங்கில் அவரது லேட்டஸ்ட் தகவல்கள் எனச் சேகரித்துத் தரும் பொறுப்பு ஆர்வமுடன் கரம் தூக்கிடவுள்ள நண்பர்கள் சார்ந்த அந்த டீமிடம் இருக்கும் ! கிட்டத்தட்ட ஒரு கல்யாண வீட்டுத் திட்டமிடல் போல நிறையவே planning அவசியமாகிடும் என்பதால் “டெக்ஸ் மேளா” பற்றி சாத்தியப்படும் அடுத்த தருணத்தில் பேசலாமே ?

Moving on – காத்துள்ள 2023-ல் TEX-க்கென அட்டவணையின் பட்டியலில் இருப்பன மொத்தம் 11 அதிகாரபூர்வ slots ! அதிகாரிக்கு கேட்களை உடைத்து துவம்ஸம் செய்வது நல்ல நாட்களுக்கே பிரியமான பொழுதுபோக்கு எனும் போது – இவரது மைல்கல் ஆண்டில் கேட்கவும் வேண்டுமா? So “11 தானா ?மாதமொரு டெக்ஸ் இல்லியாப்பூ?” என்ற கேள்வி எழுப்பிட அவசியங்களே இராது தான் ! And இந்த ‘தல‘ தாண்டவ ஆண்டினில் சதிராடக் காத்திருப்பது ஒரு மெகா வில்லனுமே ! எதிராளி பலமாகயிருக்கும் போது தானே மோதல்களில் அனல் பறக்கும் ? And who better than – மௌரோ போசெலி’s மெஃபிஸ்டோ ? காலம் காலமாய் டெக்ஸ் & கோவிற்கு தீராப் பகைவனாய் திரிந்து வரும் மாயாஜால மெஃபிஸ்டோ - உங்களில் ஒரு அணியினருக்கு பிடித்தமான ஒரு வில்லனாக இருந்து வரும் போதிலும், பிடிவாதமாய் அவனது கதைகளை நான் தவிர்த்து வந்திருப்பதில் ரகசியங்களில்லை! ”கடமையில் நெருப்பானதொரு ரேஞ்சர்” என்ற பிம்பத்தை முன்னிலைப்படுத்தும் எனது முனைப்புக்கு, அந்த “விட்டலாச்சார்யா ஸ்டைல்” மந்திர-மாயாஜாலங்களெல்லாம் சுகப்படாது என்பதே எனது நிலைப்பாடென்பதிலுமே no secrets ! ஆனால் நடப்பாண்டில் (2022) இத்தாலியில் மெஃபிஸ்டோவை தூசிதட்டிக் கையிலெடுத்து ஒரு மூன்று பாக அதிரடியையும், அதைத் தொடர்ந்து ஒரு நான்கு பாக அதகளத்தையும் உருவாக்கியுள்ளார் டாப் கதாசிரியரான மௌரோ போசெலி ! இத்தனை காலமாய் நாம் பார்த்த மெபிஸ்டோ வேறு ரகம் ; போசெல்லியின் கைவண்ணத்தில் அவன் முற்றிலும் வேறொரு ரகம் என்பது கதைகளின் கோப்புகளை வரவழைத்துப் பார்த்த போதே புரிந்தது ! ”பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே?!” என்ற ரேஞ்சுக்கு, டெக்ஸ் தொடர்களில் அதகளம் செய்து வரும் ஒரு அசாத்திய ஆற்றலாளரின் treatment-ல் மெஃபிஸ்டோ பிரதானமாய்க் களமிறங்குகிறாரென்றால் – அந்த வண்டில் தொற்றிக் கொள்ள நமக்குத் தயக்கங்கள் தேவையே இராதென்றுபட்டது ! So நெடுநாள் இடைவெளிக்குப் பின்பாய்  நம் மத்தியில் ரவுசு விட மெஃபிஸ்டோ all ready! (போன மாதத்து தீபாவளி மலர் இளம் டெக்ஸ் கதையில் மனுஷன் தலைகாட்டியது சும்மா “கௌரவத் தோற்றம்” தானே?!) “மீண்டு(ம்) வந்த மாயன்” – ஒரு 3 பாக; 330 பக்க ஆக்ஷன் மேளா – சான் பிரான்சிஸ்கோவின் மனநல காப்பகத்திலிருந்து துளிர்விடும் நெடும் த்ரில்லராய் ! ஊருக்குள் பெரியளவில் அராஜகம் செய்து சிக்கலில் மாட்டும் பெரும் புள்ளிகளெல்லாம், வரிசையாய் ஒரு புது, உயர்தர மனநல விடுதியில் போய்த் தஞ்சமடைய, "இன்னாங்கடா நடக்குது இங்கே?” என்று பார்வையிட ‘தல‘ & டீம் களமிறங்குகின்றனர்! தொடரும் high octane சாகஸத்துக்கு இம்முறை இரண்டு வெவ்வேறு அட்டைப்பட டிசைன்கள் தந்திடவுள்ளோம் – ஒரிஜினலின் மிரட்டலான ராப்பர்களை இயன்ற மட்டுக்கு உங்களின் கண்களில் காட்டும் பொருட்டு ! இதோ – கீழுள்ள இரண்டு டிசைன்கள் தான் நமது variant covers ! சந்தாவில் இணையும் போதே –‘Kit” அல்லது “Tex” என்று குறிப்பிட்டு விட்டால் – "சின்னத் தல கிட் ராப்பரா? பெரிய தல டெக்ஸ் ராப்பர் கொண்ட புக்கா?" என்று பதிவு செய்து கொள்வார்கள் நம்மாட்கள்! (இப்போதே அவர்கள் சிண்டைப் பிய்த்துக் கொள்ளும் காட்சி கண்முன்னே விரிகிறது தான் !!) நீங்கள் எந்த ராப்பரைத் தேர்வு செய்கிறீர்களோ, அதை விடுத்து அடுத்த அட்டைப்படமானது ஒரு அழகான போஸ்ட்கார்டாய் உங்களுக்கு அந்த மாதமே புக்குடன் அனுப்பப்படும் ! So "2 புக்கா தலையிலே கட்டப் பாக்குறாண்டா டோமர் மண்டையன் !" என்று என்னை வாழ்த்திட அவசியமிராது - hopefully   ! கவர் K தேர்வு செய்வோருக்கு கவர் T போஸ்ட்கார்டாய் & vice versa !

‘தல‘ ஆண்டின் அடுத்த highlight வழக்கம் போல தீபாவளியை அனல் பறக்கச் செய்திடவுள்ள தீபாவளி with டெக்ஸ் ! இம்முறையோ அது இளம் டெக்ஸின் 6 அத்தியாய சாகஸத்தின் தொகுப்பாய் – “The சிக்ஸர் ஸ்பெஷல்!” என்று வரக் காத்துள்ளது ! சில காலம் முன்பாக – “தனித்தடத்தில் மாதமொரு இளம் டெக்ஸ் 64 பக்க இதழைக் களமிறக்கலாமா guys?” என்று நான் கேட்டிருந்ததும், நீங்கள் உடனடியாக ஒரு பெரிய பாக்கெட் Surf வாங்கி அங்கேயே என்னைத் துவைத்துக், காயப் போட்டிருந்ததும் நினைவிருக்கலாம்! “மணந்தால் ஸ்ம்ரிதி மந்தனாவை… வாசித்தால் குண்டு புக்கை !!” என்று நீங்கள் பிடிவாதமாக நின்று விட்டதால் – நான் திட்டமிட்டிருந்த 6 சிங்கிள் இதழ்களையும் (3+3 கதைச் சுற்றுக்கள்) ஒற்றை 384 பக்க இதழாக்கியாச்சு! So – "நாங்க சொல்றதையெல்லாம் முழியாங்கண்ணன் என்னிக்குக் கேட்டான்?" என்ற விசனங்கள் இந்த ஆண்டிலாவது தேவையிராது – becos there are many more areas where your decisions have prevailed !

And 2023-ல் கலரிலும் நம்மவருக்குச் சொல்லிக்கொள்ளும்படியான slots உண்டு! “ஒரு கௌபாயின் காதலி” கலரிலேயே உருவாக்கப்பட்ட ஒரு முழுநீள ; சாகஸம் ! In fact பட்ஜெட் உதைக்காது போயிருப்பின், நடப்பாண்டிலேயே இது களம் கண்டிருக்கும் ! 

இன்னொரு கலர் ஆல்பமான “கரையெல்லாம் குருதி” கூட வண்ணத்திலேயே உருவாக்கப்பட்ட டெக்ஸ் அதிரடி ! இதுவோ  பிரான்கோ-பெல்ஜியப் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள ஆல்பம் என்பதால் – கலரில் – லக்கி லூக் சைஸில் வெளிவரும் !

So இவை நீங்கலான slots-களில் டெக்ஸ் & டீமின் ரெகுலர் அதிரடிகள் இடம்பிடித்திடும் ! ‘அதிகாரி அலெர்ஜி‘ கொண்ட மிகச் சொற்ப நண்பர்களுக்கு இதுவரையிலான தகவல்கள் ‘லைட்‘டாக பாயசம் போடும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடும் தான் ; ஆனால் அவர்களின் அந்த பில்டப்களெல்லாம் வார்த்தைகளில் மாத்திரமே என்பதை நிரூபிக்கின்றன – நடப்பாண்டின் “வேண்டாமே வன்மேற்கு சந்தா”வின் உறுப்பினர் எண்ணிக்கை ! மொத்தமே ஆறோ-ஏழோ பேர் தான் “டெக்ஸ் வேண்டாம்” என்ற அந்த சந்தாப் பிரிவில் உள்ளனர் ! So அவர்கள் மீண்டும் அதே பாணியில் ஒரு சந்தாப் பிரிவு வேண்டுமெனக் கோரிடும் பட்சத்தில் மட்டுமே “No Tex சந்தாப்பிரிவு” இம்முறை ஏற்படுத்தப்படும் ! இந்த நொடிக்கு நமது தலைமகனின் மைல்கல் ஆண்டினில் அவர் சகல சந்தாக்களிலும் தாட்டியமாய் இடம்பிடித்திருப்பார் !


Moving on, இம்முறை உங்களின் ரசனைகளுக்கு கணிசமான கவனம் தந்துள்ளோம்- இந்த அட்டவணையின் தயாரிப்பில் துவங்கியே ! சில மாதங்களுக்கு முன்னே இங்கே கேட்டிருந்த இன்னொரு கேள்வியானது – “ஒவ்வொரு ஆண்டின் அட்டவணையிலும் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?” என்பதே! அதற்கென நீங்கள் சொல்லியிருந்த பதில்கள் எனது தேர்வுகளில் பலவற்றை shape செய்திட உதவியுள்ளதை 2023-ன் அட்டவணையின் பக்கம் 2 (Index Page) தவறாமல் சொல்லும் ! So “குண்டூஸ்… ஒரு காதல் கதை” என்ற BIG BOOKS பிரிவில்-

- The SUPREMO Special

- The சிக்ஸர் ஸ்பெஷல்

இதழ்களுக்கு அடுத்தபடியாகக் காத்திருப்பவருமே ஒரு வன்மேற்கின் முரட்டு நாயகர்! And இவரும் நமக்கு ஏற்கனவே பரிச்சயமானவரே! 

So let’s welcome back ஒற்றைக்கை “பௌன்சர்”! இவரது தொடரில் வன்முறை & shock factors ஏகப்பட்ட மிடறுகள் தூக்கல் என்பது உலகுக்கே தெரிந்த விஷயம் ! And அது கதாசிரியர் Alejandro Jodorowski-ன் முத்திரையாகவுமே இருந்தது ! தட்டுத் தடுமாறி, ஏதோ எடிட் செய்து இந்தத் தொடரின் முதல் 7 ஆல்பங்களை ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பாய்ப் போட்டு விட்டு, சற்றே ஜகா வாங்கியிருந்தோம் – ஆல்பம் # 8 & 9-ல் தெறித்து ஓடிய 'அடல்ட்ஸ் ஒன்லி' சமாச்சாரங்களைக் கண்டு! விதிவசமாய் ஆல்பம் 10 முதலாய் கதாசிரியர் Jodorowski மூப்பின் காரணமாய் கழன்று கொள்ளும் சூழல் உருவாகியிருக்க, ஓவியரான ப்ரான்ஸே போ கதைப் பொறுப்பையும் தனதாக்கிக் கொண்டு ஒரு riveting ஆக்ஷன் த்ரில்லரை உருவாக்கி இருந்தார் ! 78 + 78 = 156 பக்க நீளத்திலான இந்த மெகா ஆல்பத்தில் பெளன்சருக்கே உரித்தான அத்தனை அம்சங்களும் இருக்கின்றன – except the extreme sexual stuff ! So கதைக்கே முன்னிலை ; சதைக்கு அல்ல ! என்பது ஊர்ஜிதமாகிட, உடனே ‘டிக்‘ அடித்தேன் “சபிக்கப்பட்ட தங்கம்” ஹார்டுகவர் ஆல்பத்துக்கு ! And இங்கே yet again – உங்களின் ரசனைகளுக்கே முன்னுரிமை! எப்படி என்கிறீர்களா?

வேகமுள்ளவொரு கதையா? அல்லது ஒரு மெகா ஸ்டாரா ?" எதற்கு முன்னுரிமை தருவீர்களோ folks?” என்று சில மாதங்களுக்கு முன்பாகக் கேட்டு வைத்திருந்தேன்! உங்களின் ஏகோபித்த தேர்வு – “வேகமுள்ள கதை” சார்ந்தே இருந்தது ! And அங்கு தான் பௌன்சர் முந்திக் கொண்டார் – “இளம் டைகரின் தொகுப்பினை !” நான் அங்கே பூடகமாய்க் கேட்டிருந்தது –

- அனல் பறக்கும் பௌன்சரா?

(அல்லது)

- சற்றே நிதானமான  இளம் டைகர் தொகுப்பா ?

என்ற கேள்வியைத் தான்! நீங்கள் ‘டிக்‘ அடித்தது ஒற்றைக் கை பௌன்சருக்குச் சாதகமாகிட, தங்கத் தலைவன் வாகான வாய்ப்புக்கோசரம் வெயிட்டிங் ! 

இந்த நொடியினில் தேர்ந்தெடுத்த கெட்ட கெட்ட வார்த்தைகளால் நேக்கு "முதல் மரியாதை" செய்யத் தயாராகும் டைகர் ஆர்வலர்கள் கொஞ்சமே கொஞ்சமாய்ப் பொறுமையோடு தொடரும் பத்தியினையும் வாசித்தால் நலம்  என்பேன் !

Bouncer IN ; Tiger OUT !! இப்படித்தான் இந்தப் பதிவினில் எழுத ஒரிஜினலாய் தலைக்குள் திட்டமிட்டிருந்தேன் - ஒரு மாதத்துக்கு முன்வரையிலும் ! 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎 

இடைப்பட்ட நாட்களில் "தங்கக் கல்லறை" மறு-மறுபதிப்பு வேணுமா ? வேணாமா ?" என்ற கேள்வியோடு ஒரு பதிவினை நான் களமிறக்கியிருந்தது மறந்திராது ! அந்தப் பதிவினில் "மறு-மறுபதிப்பு" வேணாம் எனப் பெரும்பான்மை கருத்துச் சொல்லியிருந்த போதிலும், தங்கத்தலைவனுக்கான ஆதரவும், ஆதர்ஷமும் பீறிக்கொண்டு உங்களின் பின்னூட்டங்களில் தென்பட்டது ! நிஜத்தைச் சொல்வதானால் - "தங்கக் கல்லறை" புராஜக்ட் பெரிதாய் ஓட்டுக்களை வாங்காதென்பது எனக்குத் தெரிந்திருந்த போதிலும், அந்தக் கேள்வியுடனான பதிவை நான் அவிழ்த்துவிட்டதே, நமது golden leader-க்கு இன்னமும் மவுசு எவ்விதம் தொடர்கிறதென்றோரு feeler பார்த்திடவே ! வெறித்தனமான அந்த அன்பு இன்னமும் தொடர்கிறதென்பதை நீங்கள் ஆணித்தரமாய்ப் பதிவு செய்த நொடியே தீர்மானித்தேன் - நம்ம பவுன்சர் அண்ணாச்சிக்கு என நான் போட்டு வைத்திருந்த சீட் நிச்சயமாய் இளம் தளபதிக்கே என்று !! So BOUNCER OUT & TIGER IN !!! தவிர, 'தல' centerstage எடுக்கும் ஒரு ஆண்டினில், அவருக்கு நிகரான இன்னொரு நாயகரும் களம் கண்டால் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்குமென்று எண்ணினேன் ! 

பலன் : "The தளபதி ஸ்பெஷல் " !! 

இளம் தளபதி தொடரினில் 4 அத்தியாயச் சுற்றுடன் தட தடக்கும் story arc இந்த ஹார்ட்கவர் ஆல்பத்தில் இடம்பிடிப்பதோடு மட்டுமன்றி, ஆகஸ்ட் 2023-ல் ஈரோட்டில் ரிலீஸ் கண்டிடும் ! So இன்னொரு தல vs தளபதி தாண்டவத்துக்குத் தயாராகிக் கொள்ளுங்கள் folks ! வேங்கை மறுபடியும் நம் மத்தியினில் !!  And "வேங்கையின் கதைக்கு பேனா பிடிக்க நானாச்சு" என்று கடல்கடந்து வசிக்கும் ஷெரீப்பார் முன்வந்திருக்க, அந்த மெனக்கெடல் எனக்கு அவசியமாகிடாது! ஏற்கனவே ஸ்பைடருக்குப் பேனா பிடித்து வரும் முயற்சியில் கரூர் பக்கமாய் நமது டாக்டர் சார் கன்னத்தில் பற்பல மருக்களோடு ஜார்க்கண்ட் ரயிலில் ஏறியிருப்பதாய்த் தகவல் வந்திருக்க, இந்த அசல்நாட்டுக்காரரும் மருக்கள் வாங்க Walmart வாசலில் காத்திருக்க மாட்டாரென்று நம்புவோம் ! புனித மனிடோ - ஆற்றல் அருளி  கரைசேர்ப்பீராக !!

”குண்டு புக்” பட்டியலை நிறைவு செய்திடக் காத்திருப்பதோ முத்துவின் “சம்மர்  ஸ்பெஷல்‘23”! And இதுவும் நடப்பாண்டின் பாணியில் ஒரு கதம்ப இதழாக அமைந்திடும் -

- CIA ஏஜெண்ட் ஆல்பா

- Lone Star டேங்கோ

- இன்ஸ்பெக்டர் ரூபீன்

- உட்சிடியின் சிரிப்புப் போலீஸ்

என்ற கூட்டணியில் ! Alpha இதுவரையிலும் கலவையான விமர்சனங்களை ஈட்டியிருந்தாலுமே நடப்பாண்டின் சிங்கிள் ஆல்பமான “காலனின் காகிதம்” 2022-ன் bestsellers-களுள் இடம்பிடித்துள்ளது! So இந்த சம்மர் ஸ்பெஷல் '23-ல் காத்துள்ள  one-shot சாகஸம் ஆல்பாவுக்கான இறுதி வாய்ப்பாகிடும் – சாதிக்க அல்லது சந்தடியின்றிப் பதுங்கிட ! இன்றளவில் தொடர்ந்து வரும் இது போலான சமகாலத்துக் கதைவரிசைகளுக்கு சற்றே நீளமான rope தந்தால் தப்பில்லை என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் ; ஓவரான புராதனங்கள் ,அரதப் பழசான கலரிங் பாணிகள் என்ற நெருடல்கள் இங்கு இராது என்பதால் ! ஆனால் இறுதி முடிவு உங்கள் கைகளில் தான் !

டேங்கோ‘வைப் பொறுத்தவரையிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஓ.கே.வாகிவிட்ட நாயகர் என்பதால் அவரது ஆல்பம் # 3 சுலபமான தேர்வாகியது எனக்கு! And மனுஷன் போட்டுத் தாக்குகிறார் காத்துள்ள சாகசத்தினில் !

இன்ஸ்பெக்டர் ரூபின்- துவக்க சாகஸத்திலேயே SODA + ரிப்போர்ட்டர் ஜானியின் வழித்தோன்றலாய் அசத்தியிருக்க, அவருக்கும் அடுத்த ஸ்லாட்டை confirm செய்திட அதிகம் மெனக்கெடவில்லை ! 14 கதைகளே கொண்ட தொடரிது என்பதால் இவற்றுள் உள்ள உருப்படியானவற்றைத் தேர்ந்தெடுத்துக் களமிறக்கிட முடியுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது!

சம்மர் ஸ்பெஷலின் இறுதி இடம் – நமது உட்சிட்டி சிரிப்புப் போலீஸ் அணிக்கே ! உலகுக்கே செல்லமான கிட் ஆர்டின் இந்த சீரியஸான ஆல்பத்துக்கு ஜாலியான வர்ணம் பூச வருகிறார் எனும் போது கோடை களைகட்டுமென்ற நம்பிக்கை பிறக்கின்றது ! ஹார்ட்கவரில் டாலடிக்கவுள்ளது இந்த சம்மர் ஸ்பெஷல் !


குண்டூஸ் லிஸ்ட் ஓவர் ; அடுத்தது புது வரவுகள் பற்றிய பார்வை !!

“ஒவ்வொரு அட்டவணையிலும் புதுமுகங்கள் இருந்தாலொழிய உற்சாக மீட்டர்கள் வேகம் பிடிக்காது என்பது எனது நினைப்பு ! அது சரியா? தப்பா guys?" என்று 2 மாதங்களுக்கு முன்பாய்க் கேட்டிருந்தது நினைவிருக்கலாம் ! “ஆமா…ஆமா…புதுசு புதுசா வேணுமே!” என்று நீங்களும் பதில்களில் பதிவிட்டிருக்க – ஆரம்பித்தது எனது வலைவீச்சு! 

புதுசாய் லட்டுக்கள் :

And first in line – காத்துள்ளது – அமெரிக்கக் க்ரைம் நாவல் ஜாம்பவனான மிக்கி ஸ்பிலெய்னின் “மைக் ஹேமர்!” அந்த தேசத்து ராஜேஷ்குமார் பாணியிலே ஸ்பிலெயினின் க்ரைம் நாவல்கள் கிட்டத்தட்ட 23 கோடி பிரதிகள் விற்றுள்ளன & அவரது இந்த டிடெக்டிவ் நாயகர் ஒரு ரணகள ஆக்ஷன் பார்ட்டி ! இவரது சாகஸங்களை அவ்வப்போது காமிக்ஸ் தொடர்களாகவும், டி.வி. தொடர்களாகவும் உருவாக்கியுள்ளனர் ! அப்படியானதொரு காமிக்ஸ் ஆக்கத்தினை இங்கிலாந்தில் மிரட்டலான சித்திரங்களுடன் வெளியிட்டிருந்ததை சில காலம் முன்பே பார்த்திருந்தேன்! முழுவதுமாய் பெயிண்டிங் பாணியில் போடப்பட்ட அந்தச் சித்திரங்களும் ; ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான ஆக்ஷன் தோரணங்களும் நமக்கு நிரம்பவே ரசிக்குமென்று மனதுக்குப்பட்டது! So ஒரு சுபயோக சுபதினத்தில் இவருக்கான உரிமைகளை வாங்கிடும் முயற்சியினைத் துவக்கினோம் – and இதோ - முத்துவின் 51-வது ஆண்டுமலரில் மைக் ஹேமர் அதிரடி செய்யக் காத்துள்ளார் ! இவரது படைப்பைப் போலவே ஏகப்பட்ட க்ரைம் த்ரில்லர்களும் இந்த பிரிட்டிஷ் பதிப்பகத்திடம் நிரம்பி வழிவதால் – சிறுகச் சிறுக அவற்றையும் ரசித்திடலாம்!

புதுவரவு # 2 நமக்கு ஆதர்ஷமான வன்மேற்கின் களத்தில் சாகஸம் செய்திடுபவர் ! ஆனால் அவர் சவாரி செய்வதோ தடதடக்கும் ஒரு மோட்டார் சைக்கிளில் ! 1930-களில் சிறுகச் சிறுக ஹாலிவுட் திரையுலகு பிஸியாகி வந்த நாட்களில் – அந்தப் பகுதிகளில் பணியாற்றும் “எதையும் செய்வேன் ஏகாம்பரம்” பாணியில் எல்லாச் சிரமமான பணிகளையும் நிறைவேற்றுபவரே நமது நாயகர் ! "பிரபல “லோன் ஸ்டார்” (!!!) திரையுலக நட்சத்திரத்தைக் காணோமா? படப்பிடிப்பு சுணங்கி நிற்கிறதா ? Where is நெவாடா"என்று அறைகூவல் விடுகிறார்கள் ! தேடிப் பிடிக்க புறப்படுகிறார் நமது புதிய நாயகர் நெவாடா ! "ஒரு புதிய திரைப்படத்தின் ஒப்பந்தத்துக்கு முன்னோடியாய் ஒரு முக்கியமான பார்சல் சைனா டவுணிலிலுள்ள பிரமுகர் வசம் சென்றாக வேண்டுமா ? Oh yes....கூப்பிடுங்கள் நெவாடாவை !" “ஒற்றை நொடி… ஒன்பது தோட்டாக்கள்” தொடரின் மூலமாய் நமக்கு அறிமுகமான அதே டுவால் / பெகா / வில்சன் கூட்டணியே 2019-ல் துவங்கியுள்ள இந்தப் புதுத் தொடரின் படைப்பாளிகள் ! வருஷத்துக்கொன்று என்ற வீதத்தில் இதுவரைக்கும் 3 ஆல்பங்கள் வந்துள்ளன இந்தத் தொடரில்! ஒவ்வொன்றும் one-shot தான் ; ஆனால் ஒட்டுமொத்தமாய்ப் படித்தாலும் ஒரே கதைச் சுற்றாகக் கருதிட முடியும் தான் ! பிரமிக்கப் பண்ணும் அந்நாட்களது அமெரிக்காவை மிரட்டும் சித்திரங்களில் நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார் ஓவியரான காலின் வில்சன் ! சமகாலப் படைப்பு என்பதால் புதுயுக சித்திர பாணிகள், கலரிங் என்று அதகளம் செய்திருக்கிறார் “நெவாடா”!

புதுசுகளின் பவனி தொடரவுள்ளது – ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டிருந்த I.R.$ வாயிலாக!1999-ல் தொடங்கிய இந்த high-tech தொடரானது – டாணென்று வருஷத்துக்கொரு ஆல்பத்துடன் ஆஜராகி வந்துள்ளதால் – தந்சமயம் #22-ஐ தொட்டு நிற்கின்றது ! லார்கோ பாணியில் இந்த ஹீரோவும் வித்தியாசமானவர் – வருமான வரித்துறையில் பணியாற்றும் மோசடித் தடுப்பு அதிகாரியாய் ! And லார்கோ பாணியிலேயே 2 ஆல்பங்கள் ஒன்றிணைந்தால் ஒற்றை முழுக்கதை ! So ஏஜெண்ட் லேரி மேக்ஸ் இட்டுச் செல்லக் காத்திருக்கும் நிதியுலக மோசடிப் பாதைகளில் ; பெரும் குழுமங்கள் வரிஏய்ப்பு முயற்சிகளில், நாமும் தொற்றிக் கொள்ளலாமா 2023 முதலாய்? லார்கோ பாணியிலேயே இந்த மனுஷனும் கொஞ்சம் 'சிக்காய்ங் – முக்காய்ங்' பிரியர் என்பதால் ஆங்காங்கே கலர் கலரான அம்மணிகளும் தொற்றிக் கொள்வதுண்டு ! “கரை படிந்த கரன்ஸி” – I.R.$. தொடரின் முதல் சாகஸம்!

புதுசு கண்ணா… புதுசு” பாணியில் புதிய கதைத் தொடர்களின் அறிமுகம் தொடர்கிறது – நமக்கு பரிச்சயமான “வன்மேற்கின் அத்தியாயம்” வாயிலாக! Wild West உருவான கதையை அங்கே பிழைப்பு நாடி குடிமாறிச் செல்லுமொரு ஐரிஷ் குடும்பத்தின் பார்வையில் சொல்லும் இந்தத் தொடரானது – முழு வண்ணத்தில் ; டெக்ஸ் சைஸில் செம crisp ஆக வரவுள்ளது! ஆல்பங்கள் 1&2 அடுத்தடுத்த மாதங்களில் 2023-ல் இடம்பிடித்திடும்! Probably – நவம்பர் ’23 & டிசம்பர் ’23. So அதற்கடுத்த ஆண்டின் துவக்கப் பொழுதுகளிலும் அத்தியாயம் 3 & 4 என்று திட்டமிட்டால் – இந்தக் கதைகளின் arc வாசிப்புக்கு உரம் சேர்க்குமென்றுபட்டது! Oh yes – இவையெல்லாமே ஒன்-ஷாட்ஸ் தான்! ஆனால் ஒரு பெரும் பயணத்தின் அத்தியாயங்கள்! So நவம்பர் வரையிலும் தள்ளிப் போகாது, முன்கூட்டியே வெளியாகவும் கூடும் தான் !

ரைட்டு… புதுசுகளின் கதவைச் சாத்தும் முன்பாய் – மடேரென்று எத்திக் கொண்டு உள்ளே புகக் காத்திருக்கும் ஒரு tough as rails ரகசிய ஏஜெண்டையும் நம்மோடு ஐக்கியமாக்கிக் கொள்ளலாமா ? Say ஹலோ to xxxxxx… அனாமதேய ஏஜெண்ட் / கொலையாளி / அதிரடிக்காரர் ! பூர்வீகம் நியூயார்க்…! பணியாற்றிய வேட்டைக்களம் ஐரோப்பா !! கம்யூனிசமும், மதில் சுவரும் தளர்ந்து வந்த பெர்லின் நகருக்கு விதி அவரை இழுத்துச் செல்கிறது! வெறிகொண்டு காத்திருக்கும் கிழக்கு பெர்லினின் அதிகார மட்டம் ; முன்னாள் நாஜிக்கள் என்பதோடு வாழ்க்கையின் முதல் அத்தியாயத்தில் தொட்டுப் பிடித்து ஆடிய எதிரிகள் ஒட்டு மொத்தமாய்க், கொலை வெறியில் காத்திருக்கின்றனர் ! Black & White-ல் ஒரு தெறிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் !

👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀

மேற்படிப் பத்தியை இப்படித் தான் எழுதி விட்டு அந்தப் புது நாயகரை உள்ளே புகுத்த எண்ணியிருந்தேன் ! ஆனால் "ரெகுலர்களின் ஸ்லாட்டில் இடப் பற்றாக்குறை ; so 2023-க்கு SODA வேணுமா ? அல்லது ரிப்போர்ட்டர்  ஜானி தேவலாமா ?" என்று கேட்டு வைத்திருந்தேன் ! சிக்கிய துடைப்பங்களையெல்லாம் கொண்டு சாத்தத் தொடங்கினீர்கள் என்பதால், மேலுள்ள பத்தியில் நான் விவரித்த புது நாயகரை ஓசையின்றி ஒளித்து வைத்து விட்டு SODA சார் & ஜானி சார் என ரெண்டு சார்களுக்கும் இடம் கொடுக்க வேண்டியதாகிப் போனது ! So இந்த அதிரடி spy 2024-க்கு !

புதுசுகள் கோட்டா ஓவர் – at least ரெகுலர் சந்தா அட்டவணையில் எனும் போது, இனி ‘ரவுசு காட்டும் ரெகுலர்கள்‘ பக்கமாய் பார்வையை ஓடச் செய்யலாமா folks? இதோ – களமிறங்கும் சில ரெகுலர்கள்:

THE REGULARS

- லக்கி லூக் – வழக்கம் போல லயனின் ஆண்டுமலரில் – வழக்கம் போல டபுள் கதைகளுடன்! ஒருவித டெம்ப்ளேட்டாய் லக்கியுடன் ஆண்டுமலர்களைக் கொண்டாடுவது set ஆகி விட்டதால் அதனை நோண்டத் தோன்றவில்லை – இம்முறையுமே ! And டால்டன்கள் லூட்டியும் உண்டு இம்முறையுமே !

- ட்ரெண்ட் - என்றைக்குமே இவர் ரகளை செய்ததொரு அதிரடி நாயகரெல்லாம் கிடையாது தான்! ஆனால் அமைதியிலும் ஒரு அழகுண்டு என்பதை இந்தச் சிகப்புச் சட்டைக் கனேடியக் காவலரும் ; கனடாவின் பரந்து விரிந்த பூமிகளும் நமக்கு உணர்த்தத் தவறியதில்லை! விற்பனையைப் பொறுத்தவரையிலும் இவர் பாதாள பைரவியுமல்ல ; கூரையேறும் கோவிந்தனுமல்ல தான்! So நியாயப்படி பார்த்தால் 2023-ல் இவருக்கான ஸ்லாட்டை சற்றே சிந்தித்தே உறுதி செய்திருக்க வேண்டும்  தான்! ஆனால் இந்தத் தொடரின் இறுதி ஆல்பம் இது என்பதோடு; புது மாப்பிள்ளை ட்ரெண்ட் – புது டாடியாகவும் பரிணாம வளர்ச்சி காணும் ஆல்பமிது என்பதால் இவரையும், கையிலுள்ள பிள்ளையையும், தொடரையும் தொங்கலில் விட மனம் ஒப்பவில்லை ! So தொடரை மிகச் சரியாய் பூர்த்தி செய்த திருப்தியோடு விடைபெறக் காத்திருப்பார் – ட்ரெண்ட் !

ப்ளூகோட் பட்டாளம் : Again – இது முழுக்க முழுக்க உங்கள் தேர்வே! “இருப்பது ஒரு ஸ்லாட்; அந்த இடத்தில் மேக் & ஜாக்கா? ப்ளூகோட்டா?” என்று ரொம்பச் சமீபமாய்க் கேட்டிருந்தது நினைவிருக்கலாம்! மூன்றுக்கு-ஒன்று என்ற ரீதியில் ப்ளூகோட்ஸிற்கு உங்கள் வாக்குகள் பதிவாகியிருக்க, ராணுவத்தின் குள்ளனும், மொக்கையனும் edged out சிகாகோவின் குள்ளன் + மொக்கையன் ! ஆனால்... இதோ- நவம்பரில் காத்துள்ள மேக் & ஜாக் தோன்றும் “ரீலா...? ரியலா?” ஒரு decent ஹிட்டாகிடும் பட்சத்தில், சபலப் பேய் என்னை ஆட்டிப் படைக்குமென்பது உறுதி ! Truth to tell – எனது ஓட்டு மேக் & ஜாக்குக்கே இருந்தது !



- தோர்கல் : இன்னொரு டபுள் ஆல்பம் ; இன்னொரு அதிரடி fantasy சாகஸம் ! தோர்கல் ஆர்வலர்களுக்கு இங்கே ஏமாற்றம் தொண்டைகளைக் கசக்கச் செய்திடக்கூடும் என்பது புரிகிறது தான் – ஆனால் விற்பனைகளின் நிர்ப்பந்தங்கள் சில தருணங்களில் முன்நிலை வகிக்க வேண்டிப் போகிறதே guys! அற்புதமான தொடர்; அருமையான நாயகன்; அசாத்தியக் கதாசிரியர் என்ற எல்லாமே இருந்தும் – ”காமிக்ஸ்” என்றாலே கௌபாய்ஸ் அல்லது டிடெக்டிவ்ஸ் என்ற ஒரு template நம் மனங்களில் பதிந்து கிடப்பதால், இந்த fantasy ஜானருக்குள் எல்லோராலும் சகஜமாய்ப் புகுந்து குதூகலித்திட இயலவில்லை என்பதை நம்பர்கள் தெரிவிக்கின்றன! புத்தக விழாக்களில் in particular – தோர்கல் ரொம்பவே திணறுகிறார் ! So ஆசைகள் அநேகமிருந்தும் – யதார்த்தம் கோலோச்சுவது காலத்தின் கட்டாயமாகிறது ! Sorry தோர்கல் fans! ஆனால்...ஆனால்...உங்களுக்கோர் தித்திப்பான சேதி வெகு விரைவில் உண்டென்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி விடுகிறேன் ! பல்லடம் சரவணகுமார் சார் - நிச்சயமாய் குதூகலிக்கப் போகிறீர்கள் அந்த நியூஸுக்கு ! எல்லா அறிவிப்புகளையும் 'ஏக் தம்மி'ல் பண்ணி வைத்தால் அப்பாலிக்கா வண்டி ஓட்ட topics பஞ்சமாகிப் போகுமே ! So சஸ்பென்ஸ் நல்லது guys !

- ப்ரெஞ்ச் ஏஜெண்ட் சிஸ்கோ : நடப்பாண்டில் FFS-ல் அறிமுகமான இந்த "எவனா இருந்தா எனக்கென்ன?" பாணி ஏஜெண்ட், அதற்கடுத்த சாகஸத்தில் உங்களை இன்னமும் சந்தித்திருக்கவில்லை! அடுத்த சில நாட்களில் உங்களை எட்டிப் பிடித்திடவுள்ள அவரது அதிரடி # 3 & 4 ஒன்றிணைந்த “உஷார் ...அழகிய ஆபத்து” அவரை நமது அணிவகுப்பில் நான் தக்கச் செய்துள்ள பின்னணியைப் புரியச் செய்யும்! முதல் ஆல்பத்தைப் போலவே இங்கேயும் தலைதெறிக்கும் வேகம்; ஆனால் தெளிவான கதையுடனான சவாரி ! So சிஸ்கோ தொடரின் ஆல்பங்கள் #5&6 இணைந்து – 2023-ல் “கலாஷ்னிகோவ் காதல்” என்று காத்துள்ளது ! இந்தத் தொடர்களில் நான் பார்த்திடும் இன்னொரு ப்ளஸ் – எல்லாமே சமகாலத்துப் படைப்புகள் என்பதால் இங்கே ஜெய்ஷங்கர் காலத்துத் துப்பாக்கிகள் ; M.N.நம்பியார் காலத்துக் கார்கள்; அசோகன் காலத்து டெலிபோன்கள் என்று உறுத்தக்கூடிய சமாச்சாரங்கள் கிஞ்சித்தும் இராது! So புதுயுகப் படைப்புகளுடன் அன்னம், தண்ணீர் புழங்க சற்றே பழகிப்போமே?

- SODA & ரிப்போர்ட்டர் ஜானி :

நிறையவே யோசித்தேன் – இந்த இறுதி இதழின் இருக்கையை SODA-விற்குத் தருவதா? அல்லது ரிப்போர்ட்டர் ஜானிக்குத் தருவதா? என்று ! ஜானி ஒருவித குண்டுச்சட்டிக்குள்ளாகவே தொடர்ச்சியாய் ‘குருத‘ ஓட்டி வருவது போல் எனக்குத் தோன்றினாலும், க்ளாஸிக் நாயகர்களுள் இந்த மலர்ந்த முகத்துக்காரர் ரொம்பவே முக்கியமானவர் என்பதை மறுக்கவோ / மறக்கவோ வழியில்லை ! அதே சமயம் SODA ரொம்பவே புத்துணர்ச்சியூட்டும் நாயகராக அமைந்து விட்டிருப்பதையுமே ஓரம் கட்ட முடியவில்லை! So – பாஸ்டரா? ரிப்போர்ட்டரா? என்ற கேள்விக்கான விடை தேடி உங்களை அணுகிய போது விழுந்த சாத்துக்களில் பழுத்த முதுகுக்கு இதம் தேடி தென்னைமரக்குடி எண்ணெய் வாங்கியே ஆஸ்தியில் பாதி கரைஞ்சூ  ! So சோடாவும்  உண்டு ; சர்பத்தும் உண்டு ! சோடாவில் எலுமிச்சம்பழம் புழிஞ்சா சுலபமா ஜீரணம் ஆகும்  ; அதே எலுமிச்சம்பழத்தை கபாலத்தில் புழிஞ்சா ஏர்வாடிக்கு டிக்கெட் கிடைக்கும் !  அபிராமி...அபிராமி !

ரைட்டு... மொத்தம் 27 இதழ்கள் கொண்ட அட்டவணை இது தான் என்றான பின்னே, ‘கொசுறுகள்‘ பற்றிப் பார்த்து விடலாமா? “கொசுறுகள்” in the sense – சந்தா நண்பர்களுக்கு விலையின்றிச் சென்றிடவுள்ள விலையில்லா இதழ்கள்! “மாதமொரு இணைப்பு” என்று தொடர்ந்திடும் ஆசை இருப்பினும் எகிறி நிற்கும் விலைவாசிகள் அந்த ஆசை மீது மண்ணள்ளிப் போட்டு வருகின்றன! So 2023-ல் மொத்தம் 4 விலையில்லா இதழ்கள் மாத்திரமே இருந்திடும்:

- கலர் டெக்ஸ் – 1

- கலர் டெக்ஸ் – 2

- கலர் டைலன் – 1

- விங் கமாண்டர் ஜார்ஜின் “புதையலுக்கொரு பாதை” 

முதல் 3 இதழ்கள் 32 பக்கங்களில், கலரில் எப்போதும் போல வந்திட – நான்காவது இதழான விங் கமாண்டர் ஜார்ஜ் மட்டும் black & white-ல் வரக் காத்திருக்கிறார்! And இந்த ஆல்பத்தின் ஸ்பெஷாலிட்டி என்னவெனில் இது 1975-ல் முத்து காமிக்ஸில் சூப்பர் ஹிட்டடித்த “நெப்போலியன் பொக்கிஷம்” இதழின் முன்னோடி! “புதையலுக்கொரு பாதை”யின் நீட்சியே "நெ.பொ."! So க்ளாசிக் காதலர்களுக்கொரு fresh ஆன விருந்து வெயிட்டிங்! புனித சாத்தான் சார் - ஹேப்பியா ? 

And yes - மேற்படி விலையில்லா இதழ்கள் ஆண்டின் இரண்டாம் பகுதியினில் ஏதேனும் புத்தக விழாக்களின் போது தொகுப்புகளாய் விற்பனைக்கு வந்திடும் ! "புதையலுக்கொரு பாதை" & "நெப்போலியன் பொக்கிஷம்" இதழ்களுமே இணைந்து ஈரோட்டிலோ ; ஏதேனுமொரு புத்தக விழாவிலோ ஆண்டின் (2023) பிற்பகுதியினில் வெளிவரக்கூடும் ! So சந்தாவில் இணைந்திடப் பிரியப்படாத நண்பர்களுக்கும் இந்த இதழ்கள் கிடைக்காது போகாது ; but they will not be free  ! 



அப்புறம் ஒவ்வொரு மாதத்துக் கூரியர் டப்பிகளையும்  கடுப்போடு வாங்கி வைத்திடும் இல்லத்தரசிகளைக் குளிர்விக்கவும், மாலையில் பொட்டிகளை எடுத்தாந்து உங்களிடம் சேர்ப்பிக்கும் குட்டீஸ்களை குஷியாக்கவும் ஒவ்வொரு மாதமும் 4 பக்கங்கள் கொண்ட கலர் flyers உங்களின் கூரியர்களில் இடம்பிடித்திடும் ! அந்த flyer-ல்  மகளிருக்கு சுவாரஸ்யமான 2 பக்கங்களும், குட்டீஸ்களுக்குப் பிடித்தமான 2 பக்கங்களும் அச்சாகியிருக்கும் ! So கூரியர் கிழமைகளில் சிலபல பற்கள் கடிக்கப்படும் ஓசைகள் மட்டுப்படின், சந்தோஷமே !

ஆங்... உள்ளே யார்? என்று பார்த்தான பின்னே, ‘வெளியே யார் - for 2023 ?‘ என்றும் பார்த்திடல் அவசியமன்றோ? Here is the short list:

- இளவரசி ப்ளைஸி:  2023-ல் இவருக்கு ஒரு குட்டி விடுமுறை! கண்டிப்பாக டாக்டர்களுடன் மட்டும் அல்ல ! இந்த விடுமுறைக்கான பின்னணியினை next பதிவில் சொல்லிடுறேன் guys ! நம்புங்கள் - நம்புங்கள் - அது ரசனையோ, விற்பனையோ சார்ந்த காரணமே அல்ல ! 

- மேக் & ஜாக்: முந்தைய பத்தியில் விவரித்திருந்தேன் பின்னணியை! இந்த சிகாகோ ஜோடி சர்வ நிச்சயமாய் 2024-ல் இடம்பிடிப்பர் – on may be even earlier too - நீங்கள் மனசு வைத்தால் !

- டெட்வுட் டிக் : இன்னும் ஒரு சாகஸம் பெண்டிங் – இந்த கறுப்பின கச்சா-முச்சாப் பேச்சுக்காரரின் தொடரில்! டிசம்பர் 2022-ல் தான் நடப்பாண்டின் இதழுடன் வரவுள்ளார் என்பதால், இளவரசிக்குப் போலவே இவருக்கும் லீவு! 2024-ல் இவரது தொடர் பூர்த்தி காணும்!

- மர்ம மனிதன் மார்டின்: Again – உங்களின் குரல்களே எனது தீர்மானத்தின் பின்னணி ! மார்டின் தொடரில் ஏகப்பட்ட கதைகள் நமக்கு கிஞ்சித்தும் புரிபடா ரேஞ்சிலேயே இருந்து வருவது தொடர்கதையாகி வருகிறது ! இதோ ரொம்பச் சமீபத்தில் கூட இரண்டு கதைகளை வாங்கி விட்டு, அவற்றை இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்த்து விட்டுப் ‘பேந்தப் பேந்த‘ முழித்து வருகிறேன் – என்ன செய்வதென்று புரிபடாமல் ! என்ன செய்யலாம் ? என்று ரொம்பச் சமீபமாய்க் கேட்டிருந்தேன் உங்களிடம் ! "ஒரு ப்ரேக் குடுத்திடலாம் ! " என்றீர்கள் ! So எனக்கு ஓராண்டு விடுமுறை – நமது மர்ம மனிதரிடமிருந்து !

ரைட்டு....2023-ன் அட்டவணையைப் பார்த்தாச்சு ! ஆனால் அட்டவணைகளெனும் வேலிகளைத் தாண்டியும் மேய்ச்சலுக்கு நாம் நடை போடுவது தெரிந்த சமாச்சாரம் தானே ? So இதோ - "எங்கே ? எப்போது ?" பார்ட்டிகள் ! இவர்களெல்லாம் எங்கே வருவார்கள் ? எப்போது வருவார்கள் ? என்பதெல்லாம் இந்த நொடியினில் எனக்குத் தெரியாது ! ஆனால் ஏதேனுமொரு மார்க்கத்தில் இவர்களைக் களமிறக்குவதே நமது இலக்குகளில் ஒன்று - for 2023 !

எங்கே ? எப்போது?

- சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல்-2:

நடப்பாண்டின் அதிரிபுதிரி ஹிட்களுள் பிரதானமானது சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல்-1 ! இரு க்ளாஸிக் மறுபதிப்புகளோடு வெளியான இந்த ஆல்பம் காட்டிய மாஸ் அட்டகாசம் ! So அதே பாணியில், அதே தரத்தில், அதே 2 இதழ் காம்போவில் சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல்-2 2023ல் களம் காணும்! And ஏகப்பட்ட நண்பர்களின் கோரிக்கையான “பேரிக்காய் போராட்டம்” ப்ளஸ் இன்னொரு புது சாகஸமான “நானும் ரௌடி தான்” ஒன்றிணைந்து பட்டையைக் கிளப்பிடவுள்ளது – உரிய சந்தர்ப்பத்தில் !

- டெக்ஸ் க்ளாஸிக்ஸ் – 4:

சின்னதொரு கதை மாற்றத்துடன் டெக்ஸ் க்ளாஸிக்ஸ்-4 வெயி்ட்டிங்! Yes, you guessed it – “மந்திர மண்டலம்” தான் இந்த ஆல்பத்தின் பிரதானக் கதை & “மரண நடை” will be கதை #2 ! வழக்கம் போல ஹார்ட் கவரில் ; in full color ! சேலம் குமார் சார் ; யுவா ....ஹாப்பியா ?

- The BIG BOYS ஸ்பெஷல் :

மெய்யாலுமே நம்புங்கோ – இந்தப் பெயரின் பின்னே குசும்பு கிஞ்சித்தும் நஹி! மெகா சைசில் வரவுள்ளதால் இந்த இதழுக்கு BIG BOYS ஸ்பெஷல் என்று பெயரிட்டேனா ? அல்லது இதை (சு)வாசிக்க உள்ளோரெல்லாம் ஒரு காலத்தில் குயந்தைகளாய் இருந்த இன்றைய BIG BOYS என்பதாலா ? அல்லது இதன் நாயகர்கள் அனைவருமே 'பெரும் தலைகள்' என்பதால் BIG BOYS ஸ்பெஷல் என்ற பெயர் பொருத்தமெனப்பட்டதா ? சொல்லத் தெரியலை ; but இந்த மாதிரியானதொரு இதழைத் திட்டமிட்ட முதல் நொடியில் என் தலைக்குள் உதித்த பெயர் இதுவே !! So here you go with the story selections :

  • - இரும்புக்கை மாயாவி தோன்றும் “கொலைகாரக் குள்ளநரி”!
  • - ஸ்பைடரின் “கொலைப் படை” – இரு வண்ணங்களில்!
  • - இரும்புக்கை நார்மனின் “மனித எரிமலை”!

மேற்படி 3 க்ளாஸிக் அதிரடிகளும், MAXI சைஸில் ; Smashing '70s-ன் அதே அட்டகாசத் தயாரிப்புத் தரத்தில் ; ஹார்ட் கவரில் – “முன்பதிவு” ரூட்டில், ஒரு “வாகான வேளையில்” களம் காணும் ! உதய் ; கவிஞர் ; செந்தில் சத்யா...கரூர் குணா..ராஜசேகரன் சார் & all நோஸ்டால்ஜியா நேசர்கள்  - ஹேப்பியா ?

அப்புறம் இங்கே இன்னொரு சமாச்சாரமுமே !!

  • - ஸ்பைடரின் “கொலைப்படை” ஒரு cult hit என்பதால் தானைத் தலைவரின் வதனம் தாங்கியொரு அட்டைப்படமும் ;
  • - மாயாவியின் ஆக்ஷன் சித்திரம் தாங்கியதொரு அட்டைப்படமும் இந்த இதழுக்கு இருந்திடும்! 

So முன்பதிவுத் தருணத்தின் போது – எந்த variant cover உங்கள் சாய்ஸ்? என்று சொல்வது அவசியமாகிடும் ! Given a choice - முன்னட்டையில் ஸ்பைடரையும், பின்னே மாயாவியையும் போட்டிடலாம் தான் ; ஆனால் புத்தக விழாவில் தேடி வரும் மாயாவி ரசிகர்களுக்கென மாயாவியை பிரதானப்படுத்த வேண்டியதும்  அவசியமாகிறது ! So a variant cover will be the solution here ! 

பெளன்சர் :

பட்டு வேஷ்டி சட்டையெல்லாம் வாங்கியாந்து, மனுஷனை டிரஸ் செய்யச் செய்து, மண்டபத்தின் வாசலில் flex பானெரில் கூட பெயரைப் போட்ட பிற்பாடு, மாப்பிள்ளையை மாற்ற நேர்ந்திட்டது செம துரதிர்ஷ்டமே ! ஆனால் சில வேளைகளில் வாழ்க்கையின் விளையாட்டுக்கள் இவ்விதம் இருக்க நேரிடும் போது யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு, முணுமுணுப்பின்றி நடையைக் கட்டத் தான் வேண்டிப் போகிறது ! And பெளன்சரும் நல்ல பிள்ளையாய் அதையே செய்துள்ளார் ! அந்த நல்லபிள்ளைத்தனம் மருவாதைகளின்றிப் போயிடக்கூடாதென்று எனக்குப்பட்டது ! So இளம் புலியார் பிடித்திருந்த "அட்டவணைக்கு வெளியிலான ஸ்லாட்டை" அப்படியே Bouncer-க்கு தாரை வார்க்கின்றோம் and வாகான சந்தர்ப்பத்தில், முன்பதிவு ரூட்டில் இவரது சாகசம் களம் காணும் ! ஒரு விதத்தில் இதுவும் நல்லதுக்கு தானோ ? என்றுமே தோன்றுகிறது - becos பெளன்சர் ஒரு சகல தரப்பின் அபிமான நாயகனென்று கருதிட வாய்ப்புகள் குறைவு தானே ? "ரெகுலர் சந்தாவிற்குள் புகுத்தி தலையில் கட்டி விட்டானே !!" என்ற விசனங்களுக்கு தற்போது வாய்ப்பின்றிப் போய்விட்டது கூட சாதகமான சமாச்சாரம் தான் என்பேன் ! So காத்திருப்பார் மனுஷன்- நீங்கள் வாய்ப்பெனும் கதவினைத் திறந்து விடும் வரையிலும் !

ஸாகோர்  - இருள்வனத்தின் மாயாத்மா ! 

போன மாதம் வந்தார் ; வந்த வேகத்திலேயே மனங்களை வென்றார் & வென்ற சூட்டிலேயே நமது அட்டவணையினில் இடம் பிடிக்கும் தகுதியையும் பெற்றார் - இந்தக் கோடாரி மாயாத்மா ! ஆனால் ரெகுலர் சந்தாவினுள் ஓரளவுக்காவது decent ஆன இடம் தந்து இவரை ரெகுலர் திட்டமிடல்களில் உள்ளே  நுழைப்பதாயின், ஏற்கனவே நடமாடி வரும் நாயகாஸ் சிலரைக் காவு கொடுக்க வேண்டிப் போகும் ; அல்லது பட்ஜெட் இன்னமுமே எகிறி விடும் ! ஏற்கனவே சோடாவா ? சர்பத்தா ? என்ற கேள்விக்கு வாங்கிய அடிக்கே பிஸியோதெரபிஸ்டிடம் நான் போய் வந்து கொண்டிருக்கும் நிலையில், மேற்கொண்டும்  யாரைக் கழற்றி விடுவதென்று கேட்டு வைத்து, எனக்கு நானே சூன்யம் வைத்துக் கொள்ள பிரியப்படவில்லை ! So புதியவரைப் புகுத்த, எவரேனும் முதியவரை அப்புறப்படுத்திட வேண்டாமென்றே தீர்மானித்தேன் & ஆட்சி செய்திடும் கூட்டணிக்கு ஸாகோர் வெளியிலிருந்தே ஆதரவு தரட்டுமென்றும் தீர்மானித்தேன் ! தவிர ஆரம்பமே அமர்க்கள முழு வண்ணத்தில் ; புதுயுகக் கதை சொல்லும் பாணியினில் & ZAGOR 2.0 சகிதம் எனும் போது, திடு திடுப்பென அவரது புராதன black & white கதைக்குவியலுக்குள் டைவ் அடிப்பது அத்தனை ரசிக்காதென்று நினைத்தேன் ! So இன்னொரு ஆண்டுக்கு அந்த லேட்டஸ்ட் ஸாகோர் கதைகள் ; சித்திர பாணிகள் ; வர்ணங்கள் ; ஹார்ட்கவர் என்றே கெத்தைத் தொடர்ந்து விட்டு, 2024 முதலாய் ரெகுலர் அட்டவணைக்குள் இந்த டார்க்வுட் மாயாத்மாவை அழகான கதைத் தேர்வுகளோடு புகுத்திடலாமென்று எண்ணியுள்ளேன் ! ஆகையால் காத்திருக்கும் ஆண்டினில், ஸாகோர் தனது லேட்டஸ்ட் சாகசங்களுடன் உங்களை முன்பதிவு ரூட்டினிலேயே சந்தித்திடுவார் - கலரில் ! 



The சிரிப்பே சிறப்பு Special !

தடித் தடியான வில்லன்களோடு மோதும், புஷ்டியான நாயகர்களுக்கெல்லாம் தயங்காமல் ஸ்பெஷல் போடுகிறோம் ; இன்னிக்கி ஆரம்பித்தால் பொங்கல் வரைக்கும் மூக்கைச் சிந்தும் அழுகாச்சிக் காவியங்களுக்கு ஸ்பெஷல் போடுகிறோம் ; ஆனால் இந்த சிரிப்புப் பார்ட்டிகளுக்கு ஒரு ஸ்பெஷல் போட கை நடுங்குவதென்னவோ மெய் தான் ! காரணங்கள் ஏதாய் இருப்பினும், கார்ட்டூன்கள் மீதானதொரு அசுவாரஸ்யம் சாதனைகள் பல புரிந்து நிற்கும் நமது சிறுவட்டத்தின் திருஷ்டிப் பரிகாரம் என்று சொன்னால் அது மிகையே ஆகாது ! Anyways சமீபமான பதிவில் கேட்டிருந்த கேள்விக்கு ஒரு thumping பதில் கிட்டியிருந்தது - முன்பதிவு ரூட்டில் ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் போட்டுத் தாக்கிடத் தடைகள் லேதுவென்று ! அதன் பிரதிபலிப்பே - The சிரிப்பே சிறப்பு ஸ்பெஷல் ! இதற்கு இன்னொரு நறுக்கென்ற பெயர் அமையும் வரையிலும் S S S என்றே அறியப்படட்டும் (Sirippe Sirappu Special) & புதிதாய்ப் பெயர் சூட்ட முனையும் The மக்களே ; The மறக்காமல் உங்கள் தேர்வுகளில் The THE இருக்கிறா மாதிரிப் பார்த்துக்கொள்ளுங்களேன் !! 

The SSS திட்டமிடலில் the 4 தனித்தனி புக்ஸ் இருந்திடும் ; வெவ்வேறு பதிப்பகங்களின் படைப்புகளை ஒன்றிணைக்க அனுமதியும் / வாய்ப்பும் கிடையாதென்பதால் ! So இதை ஒன்றாக்க நினைக்கும் the நண்பர்கள் 'பச்சக்' என்றொரு பைண்டிங்கைப் போட்டுக் கொள்ளத் தான் அவசியமாகிடும் ! கண்ணில் படாமலிருந்த நாலு கால் ஞானசூன்யம் ரின்டின் கேன் ; புது வரவான கைப்புள்ள ஜாக்கின் புது ஆல்பம் ; அப்புறம் இன்னொரு சிக் பில் சிரிப்பு மேளா என்பதோடு ஸ்லாட் # 4 காலியாக இருக்கிறது - உங்களின் தேர்வினை எதிர்நோக்கி ! மதியில்லா மந்திரியாரை அங்கே அமர்த்துவதா ? க்ளிப்டனையா ? மேக் & ஜாக் ஜோடியையா ? அல்லது சோன்பப்டித் தாடிவாலா லியனார்டோ தாத்தாவையா ? என்று தீர்மானிக்க வேண்டியது நீங்களே ! PLEASE NOTE : இந்தப் பட்டியலில் இல்லாத நாலடியாரையோ ; தொல்காப்பியரையோ கூட்டியாற இரும்புக் கவிஞர் கோரிக்கை வைப்பார் தான் ; ஆனால் கேள்விக்கு நாலே options மட்டுமே என்பதை மனதில் கொண்டிடக் கோருகிறேன் ! தேர்வு செய்வது மட்டுமன்றி, இந்த ஒற்றை ஆல்பத்தின் மொழிபெயர்ப்பு ; அட்டைப்பட டிசைனிங் ; டைப்செட்டிங் என சகலத்தையுமே செய்திடவுள்ளது நம் மத்தியிலுள்ள ஆற்றலாளர்களே ! Of course முழியாங்கண்ணன் will have the final say - ஆனால் பணிகளை பார்த்திடவுள்ளது அந்நேரத்தின் தன்னார்வலர்களே ! So இதுவே திட்டமிடல் இந்த SSS முயற்சிக்கு !

ஒரு வழியாய் the பதிவுக்கு the சுபம் போடும் வேளையை நெருங்கிவிட்டோம் என்பதால் மண்டைக்குள் லைட்டாயொரு குயப்பம் - மாமூலான அந்தக் "கேள்வியும் நானே, பதிலும் நானே" கூத்தையும் இத்தோடு சேர்த்து விடவா ? அல்லது அதை அடுத்த பதிவில் பார்த்துக் கொள்ளலாமா ? என்று ! பதிவின் முதல் பாதியை டைப் செய்து தந்த நண்பர் குருமூர்த்தி செல்லை off பண்ணிவிட்டு கேரளாவுக்கு போகும் பலாப்பழ லாரியில் ஏறிவிட்டாரென்பதாலும், மீதத்தை டைப் செய்த எனது விரல்கள் "ஐயா..என்னை விட்டுடு !!" என்று கதறுவதாலும் யோசனை பலமாகிறது இந்த நொடியினில் !! ஆனால் நீங்கள் என்ன கேட்பீர்கள் என்பதை யூகிக்க முடிவதாலும் ; மறுக்கா ஒவ்வொருவருக்குமான பதில்களைக் கொண்டு சேர்க்கும் குட்டிக்கரணங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதாலும் இன்னொரு க்ரீன் டீயை போட்டுத் தாக்கி விட்டுத் தொடர்ந்திடுகிறேன் !!

Here goes : The கேள்வியும் நானே ; பதிலும் நானே ; The ப்ளேடும் நானே ; மருந்தும் நானே பகுதி :

கேள்வி # 1 : 'தல'யின் மைல்கல் ஆண்டில் இன்னுமே கொஞ்சம் சாஸ்தியாய் கூவக்கூடாதா ? 

Oh yes ...கூவலாம் தான் ; ஆனால் இங்கே அறிவித்திருக்கும் கூவல் இன்னமும் சற்றே உரக்க ஒலிக்கலாம் - போனெல்லி தங்களின் YEAR 75 அட்டவணையினை வெளியிடும் சமயத்தில் ! அதிரடியாய் ; நமக்கு ஜொள்ளு ஓடச் செய்யும் விதத்தில் அவர்கள் ஆரவாரமாய் எதையேனும் அறிவிக்கும் பட்சத்தில், நிச்சயமாய் அதனையும் 2023-ல் ரசிக்க வழி தேடாது போக மாட்டோம் ! நமது தற்சமயத் திட்டமிடல்களும், கதை இறுதிப்படுத்தல்களும் நிகழ்ந்திருப்பது ஜூலை 2022-ன் இறுதியில் ! So போனெல்லியின் PLANS for 2023 பற்றி அந்நேரத்திற்கு நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை !

2 .இந்தவாட்டியும் ஜேம்ஸ் பாண்ட் 2.0 இல்லியா ??

நிஜத்தைச் சொல்வதானால் கையை ரொம்பவே சூடு போட்டுக் கொண்டிருக்கிறோம் - அமெரிக்க டாலரின் சந்தை மதிப்பு எகிறிப் போய்விட்டுள்ள காரணத்தினால் ! நமது படைப்பாளிகளின் பெரும்பான்மை ஐரோப்பாவில் உள்ளனர் - King Features & Dynamite நீங்கலாய் ! க்ளாஸிக் கதைகளான வேதாளர் ; ரிப் கிர்பி ; மாண்ட்ரேக் etc என்று அவர்களிடம் நாம் வாங்கிடும் கதைகளுக்கு ஏதோ குலசாமி புண்ணியத்தில் ஜூன்வாக்கிலேயே பணம் கட்டி விட்டோம் ! ஆகையால் டாலரின் மதிப்பு சுமார் ரூ.72 என்று இருந்த போதே வேலை முடிந்து விட்டது ! ஆனால் தற்போதோ ரூ.83-க்கு அருகினில் நிற்கின்றது ! தவிர அயல்நாட்டுக்கு அனுப்பிடும் தொகைகள் மீது இங்கே 20.8% வருமான வரியினையும் (அவர்கள் சார்பினில்) கட்டியாக வேண்டும் ! So கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஜேம்ஸ் பாண்ட் கதையின் ராயல்டித் தொகை கண்முழி பிதுங்கச் செய்யும் ஒரு தொகையாக இன்று நிற்கிறது ! ரூ.200 விலையில் இதுவரையிலும் வெளியிட்டு வந்த இந்தத் தொடரை இனி தொடர்வதாயின் என்ன விலை நிர்ணயம் செய்வதென்றே தெரியாது தடுமாறுவதால், அவர்களை கூடிய விரைவில் நேரில் சந்தித்து இந்த இக்கட்டிலிருந்து வெளிப்பட ஏதேனும் மார்க்கமிருக்குமா ? என்று யோசிக்க எண்ணியுள்ளேன் ! So இந்த நொடியினில் கொஞ்சமாய் அவகாசம் தேவைப்படுகிறது - JB மறுவருகைக்கு ! யதார்த்தத்தை விளக்கி விட்டேன் guys ; "போச்சு...அல்லாம் நாசமாப் போச்சு...J.B. இல்லாம உலை வைக்கவே முடியாதே ; சாம்பாரிலே பருப்பு கூட வெந்து தொலைக்காதே ?!" என்ற ரேஞ்சுக்கு விசனங்களை வெளிப்படுத்துவதோ, புரிந்து கொண்டு பொறுமை காப்பதோ - இனி உங்கள் சாய்ஸ் !  

3.நமீபியா ?

கொஞ்சமாய் இக்கட Pause பட்டன் அமுக்க வேண்டிப்போயுள்ளது - இதற்கு முன்பாய் இன்னும் சில மெகா நீள தொடர்கள் காத்திருப்பதால் ! சொல்லப் போனால் கென்யாவே செம வெயிட்டிங்குக்குப் பின்னர் தானே களம்கண்டுள்ளது ! ROUTE 66-க்கு ரூட் க்ளியர் ஆகிய பிற்பாடு நமீபியப் பயணத்தை மேற்கொள்வோம் folks !

4. தீபாவளி மலர் வெறும் ரூ.300 தானா ? தமிழ்நாட்டிலே ஆட்டோ ஓடாது ; பஸ் ஓடாது ; தெரியும்லே ?

அண்ணா....அது கனகச்சிதமாய் TEX 75-வது பிறந்த நாள் மலர் வெளியாகும் மாதத்திற்கு அடுத்த மாதம் ! So 30 நாட்களுக்கு முன்னே ஒரு செம விருந்துக்குப் பிற்பாடு இன்னொரு பிரியாணி மேளாவென்றால் வயிறு தாக்குப் பிடிக்கணுமில்லியா ? அதேன்...! 

(கோவைக் கவிஞரே : இந்த மேட்டருக்கு 25 பின்னூட்டங்கள் மட்டும் உங்களுக்கு allowed ; அதுக்குள்ளாற பார்த்து முடிச்சுக்குங்க ...ஓ.கே.வா ?)

5. விலைகள் சும்மா போட்டுத் தாக்குதே நைனா ? எலன் மஸ்க் கிட்டேர்ந்து Twitter-ஐ விலைக்கு வாங்க இப்போவே பணம் புரட்ட ஏற்பாடுகளா ?  

இல்லீங்க ஆபீசர் ! சுற்றிலும் எகிறியடிக்கும் விலைவாசிகளுக்கு மத்தியினில் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் நம் கைகளை விட்டுப் போய் வருஷம் ஒன்றரை ஆகி விட்டது ! February 2021-ன் காகித விலைகளும் ஏப்ரல் 2022-ன் விலைகளும் exact இரு மடங்குக்கும் ஜாஸ்தி ! நம்பச் சிரமமாக இருந்தாலும் கலப்படமில்லா நிஜம் இதுவே ! And ஏப்ரலிலேயே விலையேற்றத்தை அறிவித்திருக்க வேண்டியவன் தான் ; ஆனால் எனக்குள் ஒரு ஓரத்தில் இந்த விலைகள் மார்க்கெட்டில் நிலைக்க வாய்ப்பே கிடையாது ... அதிக பட்சமாய் 6 மாதங்களுக்குள் ஓரளவுக்காவது விலைகளை உற்பத்தியாளர்கள் குறைத்தே தீர வேண்டுமென்ற நம்பிக்கை இருந்து வந்தது ! So பல்லைக் கடித்துக் கொண்டு தொடர்ந்தோம் ! ஆனால் இப்போதோ 'டாலர் கூடிடுச்சு ; செயின் கூடிப் போச்சு ; யுக்ரைனில் யுத்தம் நடக்குது ; குழாயடியில் குடுமிப்பிடி நடக்குது' என்று கம்பி கட்டும் கதைகளையெல்லாம் சொல்லி அந்த உச்ச விலைகளிலேயே ஆணியடித்தார் போல நின்று விட்டனர் ! So கூடியது கூடியது தான் ; இனி ஒருபோதும் விலைகளில் பின்செல்ல பேப்பர் மில்கள் முன்வரப்போவதில்லை என்பது ஊர்ஜிதமாகி விட்ட இந்தச் சூழலில், நாம் ஐந்து ரூபாயோ ; பத்து ரூபாயோ விலையேற்றி, கிஞ்சித்தும் பற்றாதென்று ஆகிவிட்டது ! 

ஆண்டுக்கு ஆண்டு சம்பளங்கள் கூடிட வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஆபீஸுக்கான கரெண்ட் பில் தெறிக்க விட்டு வருகிறது ; பைண்டிங்கில் விலைகளை ஏற்றி விட்டார்கள் ; லேமினேஷன் பிலிம் தீயாய் தகிக்கிறது ; அச்சு மையின் விலையும் செவிட்டில் அறைகிறது ; அட்டைகளின் விலை உயர்வால்  கூரியர் டப்பிக்கள் சங்கை அறுக்கும் விலையேற்றம் கண்டுள்ளன ; கூரியர் கட்டணங்களுமே பின்தங்கிடவில்லை ; அட..மாதா மாதம் புக்குகளை குறுக்கும் நெடுக்கும் சுமந்து திரியும் லோட் ஆட்டோக்களின் கூலிகளுமே எகிறிப்போயுள்ளன எனும் போது நமது  குட்டியான பிரிண்ட் ரன்னில் தாக்குப்பிடிக்க, விலையில் இந்த 'ஜம்ப்' அத்தியாவசியம் என்றாகிப் போகிறது ! 

அது மட்டுமன்றி, முன்னெல்லாம் தேவைக்கு அவ்வப்போது பேப்பர் வாங்குவது சுலபமாய் இருந்தது ; ஆனால் இன்றோ முன்கூட்டி கொள்முதல் செய்து பேப்பரை வாங்கி வைக்காவிட்டால், மாதா மாதம் ஒரு லிட்டர் ஜெலுசில் குடிக்க வேண்டிப் போகும் என்றாகி விட்டது ! ஆர்ட் பேப்பர் மாத்திரமன்றி சாதாத் தாள் ரகங்களும் அதே புளியன்கொம்பில் தான் குந்தியிருக்கின்றன என்பதால், நம்மிடம் 2024 துவக்கம் வரைக்கும் தேவையான சகல பேப்பர் ரகங்களும் கையிருப்பில் உள்ளன ! இந்த முதலீட்டுக்குமான பேங்க் வட்டி ஒரு திக்கில் ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கமோ கிட்டங்கியில் 'ஜாலிலோ ஜிம்கானா' என்று விசிலடித்து வரும் புத்தகக் கையிருப்புகளைச் சமாளிக்கவும் விலையேற்றம் எனும் கசப்பான மருந்தைக் குடிப்பதைத் தவிர்த்து வேறு மார்க்கமில்லை folks ! வெட்கத்தை விட்டு, ஒரு விஷயத்தைச் சொல்வதானால், இப்போதெல்லாம் மாதத்தில் நான்கில் மூன்று கதைகளை நான் மொழிபெயர்ப்பதெல்லாம் ஆர்வத்தில் என்று மட்டுமல்லாது, அதனிலாவது ரெண்டு காசை மிச்சம் பிடிக்க வழியிருக்குமா ? என்ற ஆதங்கத்திலும் தான் ! 

விலையேற்றத்தை மட்டுப்படுத்த முன்னாட்களின் பார்முலாவான "சைஸ் குறைப்பு" என்ற அஸ்திரத்தையும் கையில் எடுத்தாலென்ன ? என்ற மஹா சிந்தனையும் ஓடியது ! லக்கி லூக் சைசில் வெளிவரும் கதைகளை டெக்ஸ் வில்லர் சைசுக்கு மாற்றிடுவோமா ? என்று ஒரு 16 பக்கங்களை பிரிண்ட் செய்தே பார்த்தோம் ! ஆனால் ஆளாளுக்கு நாற்பதையும், ஐம்பதையும் தொட்டு நிற்கும் பொழுதுகளில், சின்ன சைசில், குட்டியான எழுத்துக்களுடனான வசனங்களை வாசிக்க வேண்டுமானால் புதுசாய் வாசன் eye care-க்கு விஜயம் செய்ய நேர்ந்திடக்கூடும் என்பது புரிந்தது ! So அந்தப் 16 பக்கங்களை கடாசி விட்டு, விலையேற்றம் எனும் தோட்டாவைப் பல்லில் பிடிக்கத் தயாராகி உங்கள் முன்நிற்கிறோம் !

ஒரேயடியாய் எல்லா இதழ்களுக்கும் விலையேற்றம் செய்திடாது, கொஞ்சமாய் balance செய்திடவும் முனைந்திருக்கிறேன் - மனசு கேட்காமல் ! So டபுள் ஆல்பமான தோர்கல் ரூ.250 விலையில் வரவுள்ள  அதே மூச்சில் டபுள் ஆல்பமான I.R.$ - ரூ.200 விலையிலேயே வந்திடவுள்ளது ! ரூ.125 விலையில் டிரெண்ட் தலைகாட்டும் அதே நொடியில் சோடா & ரிப்போர்ட்டர் ஜானி ரூ.100 விலைகளில் தான் வந்திடவுள்ளனர் ! ஆகையால் கொஞ்சமாய்ப் பாத்து குத்துங்க எஜமான் ! 

6.ஏண்டாப்பா தம்பி....அட்டவணையை விட, "அட்டவணைக்கு அப்பால்" அறிவிக்கப்பட்டிருக்கும் ஸ்பெஷல் இதழ்கள் செம ஆர்வத்தைக் கிளப்புதுகளே .....பேசாம அதுக்கு ஒரு சந்தாவைப் போட்டுப்புட்டா அதிலே மட்டுமே சவாரி பண்ணிடலாம்னு தோணுதே ?!

பண்டிகைகள் அடிக்கொரு தபா வந்தாக்கா, அத்தோட சுவாரஸ்யமும், கிக்கும் போயிடுமே guys ! வார நாட்களில் பருப்பையும், சாம்பாரையும், அவியலையும் அசை போட்டால் தானே ஞாயிறின் விருந்து ரசிக்கும் ? சிலுக்குவார்பட்டியோடும், சீரங்கப்பட்டினத்தோடும் மேட்ச் ஆடிட்டே இருந்திட்டு உலகக் கோப்பைக்குப் போனா தானே த்ரில் இருக்கும் ? அதை விட்டுப்புட்டு நெதத்துக்கும் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்களும், உலகக் கோப்பைகளும் அரங்கேறினால், ஆறே மாதத்தில் ஆளாளுக்கு ப்ளூ சட்டை மாறன்களாகி விராத் கோலியையுமே வெளுத்தெடுக்க ஆரம்பித்து விட மாட்டோமா ? அதே லாஜிக் தான் இந்த 'சிலபஸில் இல்லாத பாடங்களின்' பின்னணி மேஜிக் ! 

வாய்க்கும் சந்தர்ப்பங்களில் ; உங்களுக்கும் நோவுகளின்றி, எங்களுக்கும் பணி செய்திட சாத்தியமாகும் விதங்களில் இவற்றை சிறுகச் சிறுகக் களமிறக்குவோம் ! There will NOT be a timeframe linked to these ! புரிகிறது தான் - அடிக்கொரு தபா நான் அடிக்க உத்தேசிக்கும் குட்டிக்கரணங்களோடு குப்பை கொட்டுவது சுலபமே அல்ல தான் ; ஆனால் நம் சிறுவட்டப் பயணத்தின் flipside அதுவே ! 'ஆசை இருக்கும் அளவுகளுக்கு ஆற்றல்கள் லேது' எனும் போது இது போலான சமரசங்கள் தவிர்க்க இயலா சிரமங்களாகிப் போகின்றன ! தவிர எனக்குமே கழுத்தில் கத்தியை வைக்கும் tight அட்டவணைக்குள் குதித்துக் குதித்துக் கும்மியடிப்பதை விட, சற்றே flexible ஆன திட்டமிடலின் மத்தியில் பயணிப்பது கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொள்ளும் சலுகையினைத் தருகிறது !  ஆனி, முடிஞ்சு ஆவணி பொறந்தா மில்சே தாத்தாவைத் தொட்டுப்பிடிக்கும் வயதும் அடியேனுக்கு பொறந்திருக்கும் என்பதை கொஞ்சமே கொஞ்சமாய்க் கருத்தில் கொண்டாகவும் வேணுமில்லீங்களா ?

7. லார்கோ ?

புது ஆல்பத்தின் இரண்டாம் பாகமானது 2023 இறுதியில் தான் ரெடியாகிறதாம் ! So இரு பாகங்களும் இணைந்த ஆல்பம் 2024 -ல் !

8. வருஷத்துக்கு மொத்தமே 27 புக்ஸ் தானா ? ரெம்ப குறைச்சலா கீதே மன்னாரு ?

இப்போ பார்த்தீங்கன்னா 'தல' - பொஸ்தவம் 27 தான் ; ஆனா அதுக்குள்ளாற இருக்கது 37 தனித்தனிக் கதைங்க ! அப்பாலிக்கா SUPREME 60's அப்டின்னு ஒரு ஐட்டமும் குறுக்க-மறுக்க ஓடிக்கினே இருக்கும் - 5 மொரட்டு ஆல்பங்களோட ! ஒவ்வொண்ணிலேயும் பத்துக்கு கொறையாத கதைகள் கீது ! இதுவும் போக, இன்னாவோ 'சிலபஸிலிலேயோ, டவுன் பஸ்சிலேயோ' இல்லாத தடி தடி பொஸ்தவங்களும் உண்டுமாமே ? அப்டிங்கிறப்போ பயிக்க  ஒனக்கு நேரம் தான் வேணும் வாத்தியாரே !

9. பராகுடா மாதிரி ; பிஸ்டலுக்கு பிரியாவிடை மாதிரில்லாம் ஏதும் பெருசா, நீளமா கதைங்க காண்கலியே அப்பு ?

வருது....ஒரு செமத்தியான கடல்கொள்ளையார் தொடர் ரெடியாகிக்கினே வருது ! அதன் இறுதி பாகம் 2022-லேயே வந்திருக்க வேண்டியது ; but ஓவியர் "எனக்கொரு நெடும் விடுமுறை வேணும்பா !" என்றபடிக்கே 6 மாத பிரேக் எடுத்து விட்டார் ! So 2023-ன் மத்தியில் அது ரெடியாகி விடுமென்று நம்பலாம். அதன் பிற்பாடு பார்ட்டிகளை தமிழ் பேச வைத்திடலாம் !

And இன்னும் இரண்டு தெறிக்க விடும் வன்மேற்கின் நெடும் அதிரடிகளுக்கும் துண்டு விரித்து வைத்துள்ளோம் ! இரண்டிற்குமே 2023-ல் க்ளைமாக்ஸ் அத்தியாயங்கள் தயாராகிட வேண்டும் ! ரெடியான உடனே நம் கரைகளுக்குப் பயணம் மேற்கொண்டிடுவார்கள் ! 2 உத்திரவாத ஹிட்ஸ் ....for sure !!

10.கி.நா.க்கள் பூட்ட கேஸ் தானா ?

Not at all !! நடுவாக்கிலே ஏதேனுமொரு ஓய்வான தருணம் வாய்க்கும் போது, 2 மிரட்டலான புது கி.நா.க்களைப் பற்றிப் பேசியே தீரணும் ! இரண்டுமே dark தான் ; ஆனால் நிச்சயமாய் அழுகாச்சி ரகக் கதைகள் அல்ல ! இரண்டுமே சித்திர அதகளங்களில் மூச்சிரைக்கச் செய்யும் படைப்புகள் & இரண்டுமே ரொம்பச் சமீபமான படைப்புகள் ! ஒன்றின் கதைக்களம் நமக்குப் பரிச்சயமானதே - ஆனால் அதனில் கதையை நகற்றிடும் பாணி simply wow !! அதனை MAXI சைசில் முழுவண்ணத்தில் போடாங்காட்டி இந்த ஜென்மம் சாபல்யம் காணாது ; அப்படியோரு தெறிக்க விடும் சித்திர பாணி + கலரிங் !! இரண்டாவதன் களமோ முற்றிலும் புதுசு ; இதுவரைக்கும் நாம் அந்த டாபிக் பற்றிக் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டோம் ! இரண்டுக்குமான உரிமைகள் இந்த நவம்பர் இறுதிக்குள் or மிஞ்சிப் போனால் டிசம்பரில் மத்திக்குள் நமதாகி இருக்கும் ! ரெடியான பிற்பாடு ஓட்டைவாயை இன்னும் கொஞ்சம் விஸ்தீரணமாய்த் திறக்கிறேன் ! சரி தானுங்களா ? 

ரைட்டு....இதுக்கு மேலேயும் நான் இந்தப் பதிவை நீட்டித்தால் மதியம் நடக்கவுள்ள தென்னாப்பிரிக்காவுடனான மேட்ச் வரைக்கும், பொழுது ஓடியே போய்விடும் ! So நமது சிறு அணிக்குச் சாத்தியப்பட்டுள்ள ஒரு திட்டமிடலை உங்கள் முன்வைத்த திருப்தியில் இப்போதைக்குக் கிளம்புகிறேன் guys ! சர்வ நிச்சயமாய் இதனில் உங்களுக்குத் திருப்திகளும் இருக்கும் ; நெருடல்களும் இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகங்களே கிடையாது ! "ஆங்...ஆந்தையன் இதை இப்புடிப் பண்ணியிருக்கலாம் ; அதை அப்புடிப் பண்ணியிருக்கலாம் !" என்று உங்களுள் சிந்தைகள் ஓடிடக்கூடும் என்பதில் no secrets ! ஆனால் நமது ஒவ்வொரு தேர்வின் பின்னேயும், தேர்வின்மையின் பின்னேயும், ஒரு உருப்படியான காரணமில்லாது போகாதென்ற புரிதலுக்கு முன்கூட்டிய thanks guys !! உங்கள் மனம்கவர் நாயகனோ, நாயகியோ இந்த அட்டவணையினில் இடம்பிடித்திருக்கவில்லையெனில் வருத்தம் கொள்ளாதீர்கள் ப்ளீஸ் - இதோ திடுதிடுப்பென ராபின் உங்கள் முன்னே பிரசன்னமான பாணியில் யார்-எப்போது உட்புகுவார்கள் என்பது எனக்கே தெரியாது தான் ! So இல்லாதோரை எண்ணி விசனங்கள் கொண்டிடாது, இருப்போரைக் கொண்டாடி மகிழ்ந்திடுவோமே folks ? கடந்த 4.5 மாதங்களாய் வெவ்வேறு நிலைகளைக் கடந்து வந்துள்ள இந்த அட்டவணையானது, உங்களின் எதிர்பார்ப்புகளை 60% பூர்த்தி செய்திருந்தாலே - a job well done என்று எண்ணிக் கொள்வேன் ! அதற்கு மேலான மதிப்பெண்கள் கிட்டினால் அம்புட்டும் போனசே ! So நமக்குள்ள limitations-க்கு மத்தியினில் இயன்ற பல்டிகளை அடித்துப்  பார்க்க முயற்சித்திருக்கிறோம் என்ற சன்னமான நிறைவுடன் நடையைக் கட்டுகிறேன் ! புனித மனிடோ நம் அனைவருடனும் கனிவுடன் இருப்பாராக !! Bye all ! See you around ! Have a wonderful Sunday ! 

இனி ஆரம்பிக்கலாமுங்களா..? 😀😀😀 

And by the way : சந்தா லிஸ்டிங்ஸ் காலையில்  போடப்படும் ! 




Bye again !! And thank you too !! இந்த ரயில்வண்டியின் முழுமையையும் வாசிக்க நேரம் எடுத்துக் கொண்டதே ஒரு சாதனை என்பேன் ! 





சொல்லவும் வேணுமா - மீம்ஸ் யாரது கைவண்ணமென்று ?  😁😁😁

365 comments:

  1. மீ த பர்ஸ்டு!! (பன்னு ப்ளீஸ்!)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் இளவரசரே 🍞🍔

      Delete
    2. இது போங்கு ஆட்டம்

      Delete
    3. நம்பவே முடியல ! இது எப்படி சாத்தியம் ஆச்சு? நானும் பக்கத்திலேயே தான் இருக்கேன், முடியலேயே :-)

      Delete
    4. பன் வென்ற வேகத்தில் தூங்கிப்புட்டாரோ ?

      Delete
  2. Replies
    1. மூணாவதா வந்தவங்களுக்கு மட்டும் மூணு பன்னு குடுக்கப் போறாங்களாமே..!?

      ஜனங்க பேசிக்கிட்டாங்க..!

      Delete
  3. நானே நானா? யாரோ தானா ? :-)

    ReplyDelete
  4. எல்லோரும் சூடா சாப்டறப்ப நா மட்டும் ஆறுன பின் னாடியா சாப்புட முடியும்..நானும் சூடாத்தான் சாப்புடுவேன்..நானும் பந்திக்கு முந்தி ஓடி வருவேனே.....:-)

    ReplyDelete
    Replies
    1. தலீவரே....? மெய்யாலுமே நீங்க தானா ?

      Delete
    2. நம்புங்க சார்..நம்புங்க...:-)

      Delete
  5. வணக்கம் நண்பர்களே🙏🙏

    ReplyDelete
  6. இத இதைத்தான் எதிர்பார்த்தேன்

    ReplyDelete
  7. அதுக்குள்ள இத்தனை பேரா?

    ReplyDelete
    Replies
    1. சத்தியமா நம்ப முடிலே சார் !!

      Delete
  8. 20க்குள் வந்தாச்சு. பன்னு உண்டா ?

    ReplyDelete
  9. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  10. Replies
    1. சார்....தூங்கலியா நீங்களும் ?

      Delete
  11. டாப் 10 இல் நான் போட்ட கமெண்டை காணோம் என்ன கொடுமை சார் இது...

    ReplyDelete
    Replies
    1. அதேதான் எனக்கும் சாப்பிடாமல் வேகமாக வந்து 5 வதாக நான் போட்ட கமெண்ட் வரவில்லை ரவியாரே

      Delete
  12. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  13. Maghizhchi ... Manathuku piditha pala seithigal.

    ReplyDelete
  14. "So இவர்கள் ஒவ்வொருவரின் படைப்புகளிலிருந்தும் ஒரு முத்தைத் தேர்ந்தெடுத்து SUPREMO SPECIAL எனும் மாலையாக்க எண்ணினேன்! So நான்கில் மூன்று கலரிலும், ஒன்று மட்டும் black & whilte–ல் ! 700 பக்கங்கள் in all !
    Ethu matter...

    ReplyDelete
  15. Replies
    1. கிட்டி சார் ! நன்னி !!

      Delete
  16. எடிட்டர் அவர்கள், வந்தார்கள்..வென்றார்கள்...

    ReplyDelete
    Replies
    1. சார்....அதெல்லாம் 'தலை' க்கான டைட்டில் ! நாம அப்டியே ஜாலியா சுத்தி வர்ற பார்ட்டி தானே !

      உங்களின் ஆரூடம் நிஜமாகின் ஒரு கிலோ சர்க்கரை பார்சல்லல்லல் !

      Delete
  17. சனிக்கிழமையின் page views 3314 !!!! Phewwww !!

    ReplyDelete
  18. "ஆனால் நடப்பாண்டில் (2022) இத்தாலியில் மெஃபிஸ்டோவை தூசிதட்டிக் கையிலெடுத்து ஒரு மூன்று பாக அதிரடியையும், அதைத் தொடர்ந்து ஒரு நான்கு பாக அதகளத்தையும் உருவாக்கியுள்ளார் டாப் கதாசிரியரான மௌரோ போசெலி ! இத்தனை காலமாய் நாம் பார்த்த மெபிஸ்டோ வேறு ரகம் ; போசெல்லியின் கைவண்ணத்தில் அவன் முற்றிலும் வேறொரு ரகம் என்பது கதைகளின் கோப்புகளை வரவழைத்துப் பார்த்த போதே புரிந்தது ! ”பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே?!"
    Enkeyya poyirunthey Emma nalum....

    ReplyDelete
  19. வணக்கம் சார்.
    4 இதழ்களின் அறிவிப்பை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்... சுஸ்கி விஸ்கி ஸ்பெசல், பிக் பாய்ஸ் ஸ்பெசல், கார்ட்டூன் ஸ்பெசல், கோடை மலர்...
    முடிந்தால் நான்கையும் சேர்த்து
    ஒரே குண்டு கோடை மலராக மாற்றிட்டால் இன்னமும் தேவலாம்.
    மிக்க நன்றிகள். ஜார்ஜ் ஐயும் வரவேற்கிறோம். மற்றவை யாவும் உங்கள் விருப்பம் போல்.

    ReplyDelete
    Replies
    1. ஒரே பைண்டிங்கா போட்டுட்டால் வேலை முடிஞ்சிடும் உதய் ! கனத்த...ரொம்ப ரொம்ப கனத்த குத்தூசி வைச்சிருக்கும் பைண்டரா மட்டும் அமையணும் - அதுக்கு !

      Delete
    2. //உதய் ; கவிஞர் ; செந்தில் சத்யா...கரூர் குணா..ராஜசேகரன் சார் & all நோஸ்டால்ஜியா நேசர்கள் - ஹேப்பியா ?//
      Hurray... So much happy, Sir.
      கேப்டன் டைகர் வருகை மற்றும் புது பைக் நாயகர், அந்த கதையின் சித்திரங்கள் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது... அட்டவணை எல்லாருக்கும் மகிழ்ச்சியை தரும் வண்ணம் உள்ளது...

      Delete
  20. ஹைய்யோ..😍😍😍
    பலவருடங்களுக்குப் பிறகு மைடியர் கிட் ஆர்டினுக்கு ரெண்டு ஸ்லாட்ஸ்..😍😍😍

    நன்றி சார்..😍😍😍

    ReplyDelete
  21. அனல் பறக்கும் பௌன்சரா?
    😁

    ReplyDelete
  22. 24 நிமிடங்களில் உங்கள் பதிவை நோகாமல் படித்து விட்டேன் ஆனால் இந்த பதிவுக்காக ஒரு நாள் முழுவதும் எங்களுக்காக சிரமப்பட்ட உங்களை எப்படி பாரட்டுவதென்று தெரியவில்லை நன்றிகள் ஆசிரியரே

    ReplyDelete
  23. சற்றே நிதானமான இளம் டைகர் தொகுப்பா ?
    😩

    ReplyDelete
  24. தல டெக்ஸின் 75 கொண்டாட்டத்திற்கு ஏற்ற அட்டவணை...!

    எங்கெங்கு காணினும் டெக்ஸ் வில்லர்..
    எவருமே இல்லை இவருக்கு நிகர்..!

    ReplyDelete
  25. கொலைப்படை மனித எரிமலை
    யா ஹூ நன்றி மட்டும் இதற்கு பத்தாது ஆசிரியரே கிளாசிக் 007 இல்லாத வருத்தத்தை போக்க செய்த அறிவிப்பு கோடி நன்றிகள் ஆசிரியரே

    ReplyDelete
  26. ப்ளைசி இந்த வருடம் இல்லை அதற்கு பதிலாக கொலைகார குள்ளநரியை நினைத்து ஆறுதல் கொள்கிறேன்

    ReplyDelete
  27. இந்த நொடியில் 146 பேர் பதிவை வாசித்து வருகின்றனர் என்று blogger சொல்கிறது !! ராத்திரி பன்னிரெண்டரைக்கு !! Oh wow !!

    ReplyDelete
  28. பலன் : "The தளபதி ஸ்பெஷல் " !!
    Wow..super editer sir...

    ReplyDelete
  29. லக்கி லூக் (2)
    கிட் ஆர்டின் (2)
    ப்ளூகோட்ஸ்
    சுஸ்கி விஸ்கி

    இது போக The S S S

    இதுக்குமேல என்ன வேணும் ஒரு கார்ட்டூன் காதலனுக்கு..😍

    ReplyDelete
    Replies
    1. "ரின்டின் கேன்" - அப்டின்னு ஒரு பெரிய மனுஷரை பட்டியலில் பெயர் வாசிக்கல சாரே ?

      Delete
    2. ஆமால்ல..! உணர்ச்சி வேகத்துல மறந்தே போயிட்டேன் சார்..!

      உன்னை மறந்துட்டு லிஸ்ட் போட்டதுக்கு மன்னிச்சூ நாலுகால் நண்பா.. 🙏

      அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே ல்லாம் எத்தனை முறை வாசிச்சிருப்பேன்னு கணக்கே கிடையாது..😍

      Delete
    3. Absolutely - eagerly awaiting the S S S !

      Delete
  30. Best news for me : இரும்புக்கை நார்மனின் “மனித எரிமலை”! . Waiting

    ReplyDelete
    Replies
    1. 36 ஆண்டுகள் கழித்து மீள்வருகை நார்மனுக்கு !

      Delete
  31. Another super news for me : விங் கமாண்டர் ஜார்ஜின் “புதையலுக்கொரு பாதை”

    ReplyDelete
  32. டெக்ஸ் 75 ராக்ஸ்....

    தீபாவளிமலர் யங் டெக்ஸ்...ஆஹா.

    முத்து தீபாவளி மலர்....ஓஹோ

    கொலைப்படை...அட்டகாசம்

    மீண்டும் ஸ்பைடர் ச்சே பெளன்சர்..பேஷ் பேஷ்..



    ReplyDelete
  33. முழுதாய் 35 நிமிடங்கள் சார். பெர்சனலாய் அத்தனை கதைகளின் பெயர்களுமே மிகவும் பிடித்திருக்கின்றன. மீண்டுமொருமுறை படித்துவிட்டு வருகிறேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. மறுபடியுமா ? யப்பாஆஆ !!

      Delete
    2. பார்க்க வெறுமனே 27 புத்தகங்கள் போலத் தோன்றினாலும் 2023 fully loaded. இதன் கூட கிளாஸிக் கதைத் தடமும், ஸ்பெஷல்களும் எனும் போது தங்களுக்கு எல்லா நாட்களுமே பிஸியாக இருக்கப் போகிறது.

      Delete
    3. கூட வர இவ்வளவு பேர் இருக்கும் போது, ஜாலியாய் ஓடிடலாம் சார் !

      Delete
  34. புக் லிஸ்ட் அறிவிப்புகள் பார்த்தாச்சி,காலையில் பொறுமையா இன்னொரு வாட்டி பார்க்கனும்,பதிவையும் முழுசா காலையில்தான் படிக்கனும்...
    அட்டவணை அறிவுப்புகள் சம்திங் ஸ்பெஷல்னு தோணுது...
    முழுசா படிச்சுட்டு வர்றேன் சார்...

    ReplyDelete
    Replies
    1. தூங்கி முழிச்சி பிரெஷா வாங்க சார் !

      Delete
  35. //# 1 : இந்தப் பதிவினை 'ஏக் தம்மில்' வாசிக்க உங்களுக்கு நேரமிருப்பின், அதற்கு எத்தனை நிமிடங்கள் பிடித்தன ? என்று time செய்து விட்டு, உங்கள் பின்னூட்டங்களிலும் போடுங்களேன் ப்ளீஸ் ? //

    37 நிமிடங்கள் சார் (ஒரு முறை வாசிக்க மட்டும்)

    ReplyDelete
    Replies
    1. Oh...wow ! அவ்வளவு நேரத்தை விழுங்குகிறதா சார் ?

      Delete
    2. ஒரு முறை (மேலோட்டமாக) வாசிக்க மட்டுமே சார்... நாளை நிதானமாக படிக்க இன்னும் நிறைய நேரம் தேவைப்படும் சார்...

      Delete
  36. முழுசா 40 நிமிடங்கள்..

    ReplyDelete
  37. எனக்கு ஆனது 35 நிமிடங்கள் சார். இந்த சந்தாவுக்கு நான் கொடுக்கும் மதிப்பெண் 100/100.

    கொஞ்சம் கூட மனக் குறை இல்லை சார். நீங்கள் வாழ்க பல்லாண்டு.

    ReplyDelete
    Replies
    1. எனது முதல் தவணை கட்டி விட்டேன் சார். I'm very happy very very happy.

      Delete
    2. டெக்ஸ் கிளாசிக் 4 மந்திர மண்டலம் வருவது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி சார். வாரே வா

      Delete
  38. சம்மர் ஸ்பெசல்....1985/89கள்ல வந்ததை லைவாக காணல... இப்ப சம்மர் ஸ்பெசல் 2வை காண்கிறோம்...

    ReplyDelete
  39. It took 25 minutes for me to read, relook etc., The table satisfies maximum requirements, may be around 95 PC..As expected TeX 75th birthday celebration is excellent with diff authors 700 page book, classic etc., Graphic novel, unexpected stories - eagerly waiting. Thala - Thalapthy, Mike Hammer, Big boy special, SSS, Swisky wisky, Zagor, Summer special...waiting to see, read all books...we are with you sir on price front...we also aware what's happening in paper industry and we will extend our support...In short, its super hit....

    ReplyDelete
    Replies
    1. அறுபதுக்கு மேலே தேறும் மார்க்குகள் அவ்வளவுமே போனஸ் சார் எங்களுக்கு ! செமத்தியான போனஸ் தந்திருக்கிறீர்கள் !

      Delete
    2. Hold 5 marks for missing John Master and 86 summer special size book...you have told the reasons / issues, but we are having Nostrological effect...புத்தி ஒன்று சொன்னாலும், மனசு ஒண்ணு சொல்லுது சார்....don't mistake me for shortage of 5 Sir...actually it is more than our expectations... Keep rocking sir...

      Delete
  40. The தளபதி ஸ்பெசல....ஷெரீப் மொழி பெயர்ப்பு.... கண்ணா ரெண்டு லட்டு....

    ReplyDelete
  41. சுஸ்கி விஸ்கி 2...

    Big boys special....

    Tex waiting game...

    Ireland வன்மேற்கு...

    ஏகப்பட்ட சரவெடிகள் காத்துள்ளன....


    கொஞ்சம் பிரமிப்பான சந்தா தான்😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. ஒரு மைல்கல் ஆண்டு மாத்திரமன்றி, கொரோனா பயங்கள் இல்லாத ஒரு ஆண்டாகவும் 2023 இருக்குமென்ற நம்பிக்கையில் கொஞ்சம் கூடுதலாய் பட்டாசுகளை தயார் செய்துள்ளோம் !

      Delete
  42. உலகம் சுற்றும் வாலிபன் சந்தா செலுத்தியாகிவிட்டது சார் Gpay-யில்.

    ReplyDelete
  43. சரியாக பதிவை படித்து முடிக்க 41 நிமிடங்கள் சார்..

    மகிழச்சி..


    பதிவின் எனது எண்ணங்களை நாளை பகிர்கிறேன் சார்...

    ஆனால் ஹேப்பி என்பது உறுதி...:-)

    ReplyDelete
    Replies
    1. நாங்க நம்ப மாட்டோம் தலீவரே...இது நீங்க தான்னு ! பக்கத்து ஊட்டுப் பைய்யன் கிட்டே உங்க password குடுத்து அனுப்பி இருப்பீங்க !

      Delete
  44. //வெட்கத்தை விட்டு, ஒரு விஷயத்தைச் சொல்வதானால், இப்போதெல்லாம் மாதத்தில் நான்கில் மூன்று கதைகளை நான் மொழிபெயர்ப்பதெல்லாம் ஆர்வத்தில் என்று மட்டுமல்லாது, அதனிலாவது ரெண்டு காசை மிச்சம் பிடிக்க வழியிருக்குமா ? என்ற ஆதங்கத்திலும் தான் ! // உங்களின் வலியை உள்ளடக்கிய வார்த்தைகள். கலகலப்பான பதிவுக்கு இடையே இந்த வரிகளை படிக்கையில் மனது கனத்துப்போனது சார். பதிவினை மேலே தொடர முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. சாரி சார்...சங்கடப்படுத்திட நினைக்கவில்லை....! நெடும் பதிவினுள் ரொம்பவே ஐக்கியமாகிப் போனதால், வார்த்தைகளில் கொஞ்சம் வீரியம் கூடியிருக்கலாம் !

      Anyways இது தானே சார் நமது வேலையே ? இந்த அன்புக்கு அவ்வளவு கூட மெனெக்கெடாது போனால் எப்படி ?

      Delete
  45. 37 நிமிடங்கள் சார்
    இந்த பதிவை டைப் பண்ணுவதற்கு நீங்கள் எடுத்த உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்
    அருமையான அட்டவணை. அனைத்துக் கதைகளும் அருமையாக தேர்வு செய்து உள்ளீர்கள். நாளையே பணத்தை அனுப்பி விடுகிறேன் !

    ReplyDelete
  46. One subscription for me paid ! A couple more in later months for friends !

    ReplyDelete
  47. Am i missing stern or am i going to miss stern. Will be looking forward in 2024

    ReplyDelete
    Replies
    1. ஸ்டெர்ன் 3 கைவசம் ரெடியாக உள்ளார் நண்பரே ! "தலைவர்" பாணியில் anytime ஆஜராகிடலாம் தான் !

      Delete
  48. Replies
    1. மெய்யாகவே அனைவருக்கும் ரசித்திருப்பின், புனித மனிடோவின் கருணைப் பார்வை நம் மீதிருந்துள்ளதென்று எடுத்துக் கொள்ளலாம் சார் !

      Delete
  49. 12.03க்கு ஆரம்பித்து 12.49:18 ல் முடித்தேன் சார்.

    ReplyDelete
  50. காலையில் எழுந்து புத்துணர்வுடன் பதிவை படிக்க வேண்டும். இது தானே நமக்கு தீபாவளி.

    ReplyDelete
    Replies
    1. தூங்கியெழுந்து வாருங்கள் சார்!

      Delete
  51. 12.2 - 12.44 - எடுத்துக்கொண்ட நேரம்.

    சந்தா அனைத்துமே ஓகே சார். சொன்னது போல உதிரி இதழ்களுமே அதிரி புதிரியாக இருக்கிறது. 2023 அதிரடியாக இருக்க போகிறது.

    இரண்டு வேரியன்ட் கவர்களும் வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு என்பதையும் கூட்டி வைத்துக்கொள்ள சொல்லுங்கள் சார். திங்கள் தொடர்பு கொள்கிறேன் சம்பளம் வந்ததும்.

    இருக்கும் ஒரு குறை நீங்கள் டெக்ஸ் கிளாசிக் தேர்தெடுக்கும் கதைகள் தான் சார். மரண நடை இல்லாமல் இன்னும் நல்ல கதைகளே பாக்கி உள்ளன சார். அதில் மட்டும் கொஞ்சம் ஏதாவது செய்ய முடியுமா பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. Just buy the second variant cover in the online fairs :-) That way we get a chance to buy more books na?

      Delete
    2. "மரண நடை" ஆஸ்தான ஓவியர் கெலப்பின் மறைவுக்குப் பின்னே அவருக்கு tribute செய்திடும் ஸ்பெஷல் இதழில் இடம்பிடித்துள்ளது கிருஷ்ணா ! டெக்ஸ் படைப்பாளிகளுக்கு இதுவொரு ஸ்பெஷல் கதை !

      Delete
    3. புரிந்தது நன்றி சார்

      Delete
    4. அடுத்த CLASSICS முதலாய் கதைத் தேர்வினை நண்பர்களிடம் ஒப்படைத்து விடலாம் கிருஷ்ணா !

      Delete
  52. மனதிற்கு நிறைவான அட்டவணை சார். இதற்கு மேல் எனக்கு வேறு எண்ண வேண்டும். உங்களை கையெடுத்துக் கும்பிடுகின்றேன் சார். நன்றிங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. பெரிய வார்த்தைகளெல்லாம் வேண்டாமே சார் ?! இது தானே என் பணியே ?

      Delete
  53. எப்படியோ அட்டவணையில் XIII இடம் பிடித்து விட்டார் வாசகர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டால் சூப்பர் நண்பா பழனி நீங்கள் இருந்தும் ஜெயித்தீர்கள் எங்களோடு இல்லாமலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம்.நமதருமை நண்பர் பழனி இதை நினைந்து சந்தோஷப்படுவார்.

      Delete
    2. மேலிருந்து புன்னகைப்பாரென்று நம்புவோம் !

      Delete
  54. Actually I had taken decision to subscribe for my cousin and another friend and get my copies during online fairs. However the selections for 2023 have been so good that I first subscribed for my copies :-) It is good that the subscription has 27 books and some more books are seen as off-the-shelf releases. Including the classics and off-cycle books we might touch around 40 books half of which would be gundoos - so overall well planned !!

    ReplyDelete
  55. பதிவு படித்து முடிக்க எனக்கு 50 நிமிடங்கள் ஆகிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. Super sir...இந்த ராத்திரியிலும் நிதானமாய், படித்திருக்கிறீர்கள் !

      Delete
  56. மன்னிக்கனும் சார். உங்களிடம் கேட்கச் சங்கடமாக இருக்கிறது. உலகம் சுற்றும் வாலிபராக ஆசைப்படும் எனக்கு சந்தாவை மூன்று தவணைகளில் செலுத்த அனுமதி உண்டுங்களா சார்?

    ReplyDelete
    Replies
    1. எடுத்துக் கொள்ளுங்கள் சார் ; ஆபீசில் சொல்லி விடுகிறேன் !

      Delete
  57. நிறைய கமெண்ட்டுகள் போட்டவுடன் காணமல் போகிறது எதனால் இப்படி

    ReplyDelete
  58. Most exciting entries: Nevada and IRS. I cannot wait to get my hands on them.
    Happy news: Young Tiger and Bouncer. I am glad that neither was included at the expense of other.
    Glad that the new trio of Alfa, Cisco and Tango continue. Cisco is the pick of the three for me. Same goes for Soda. He is too good to be sacrificed for Johny.
    60% satisfaction? It is 100% for me. This is perfection.

    ReplyDelete
  59. பௌன்சரும்.. கேப்டன் டைகரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி..!
    டைகரின் புதிய கதையை பார்த்து யுகங்கள் ஆகிவிட்டதொரு உணர்வு.! (என் பெயர் டைகரையே மறுமறுவாசிப்பு செஞ்ச பலே ஆசாமியாக்கும் ஞான்.!

    பௌன்சர் அப்போது ஏற்படுத்திய அதே தாக்கத்தை இப்போதும் ஏற்படுத்துவார்னு நம்பலாம்..!

    மிக்க மகிழ்ச்சி சார்.!

    (நாலேகால் கழுதை வயசானாலும் (ஒரு கழுதைக்கு ஏழு வயசாம்) சில சங்கதிகளில் குழந்தைப் பையனாவே மாறிடுறோம்.. அவற்றில் ஒன்று இந்த வருடாந்திர அட்டவணை..😍)

    ReplyDelete
    Replies
    1. உண்மையைச் சொல்லணும்னா.. பதிவை முழுசாப் படிக்கவே இல்லை... கதைகளின் போட்டோக்களை மட்டுமே திரும்ப திரும்ப பார்த்துக்கிட்டு இருக்கேன்.!
      😆😆😆

      Delete
  60. @Edi Sir..🙏

    முழுசா பதிவு படிச்சு முடிச்சு பரவச நிலையிலே இருக்கேன்..😍

    (ரசிச்சு படிச்சு முடிக்கவே 50 நிமிசம் ஆகியிருக்குன்னா.
    எழுத எம்புட்டு நேரம் ஆகியிருக்கும்..👍

    You are really great Edi Sir..💋👄)
    😍😘💐💐♥💛💙💚💜❤

    அறிவிப்புகள் அத்தனையும் மலைக்க வைக்குது.. ✨🌟⭐💐🌸

    😃நமீபியா வர்லியேன்னு லைட்டா ஒரு ஆதங்கம்.. அம்புட்டுதான்..🌺

    மொத்தத்தில Me ஹேப்பி அண்ணாச்சி ..😃😀😍😘

    100/100..😍👍👍

    ReplyDelete
    Replies

    1. ///😃நமீபியா வர்லியேன்னு லைட்டா ஒரு ஆதங்கம்.. அம்புட்டுதான்..🌺///

      அதானே..! போனவாரம் முழுக்க போட்டிக்கான கேள்விகளை எடுக்க கென்யாவில்தான் மூழ்கிக் கிடந்தேன்..! அட்டகாசமானத் தொடர்.! இரண்டாம் முறை படிக்கும்போதும் அதே சுவாரஸ்யம் இருந்தது..!

      நமீபியா எப்பங்க சார் வரும்..? 😍

      Delete
    2. உண்மை போட்டிக்காக படித்த போது மீண்டும் பிடித்தது

      Delete
  61. பதிவை முழுமையாக படித்து முடிக்க 57 நிமிடங்கள் ஆனது சார்.

    ReplyDelete
  62. சிரிப்பே சிறப்பு ஸ்பெஷலுக்கு எனது ஓட்டு மேக் அண்ட் ஜாக்கிற்கு..

    ReplyDelete
  63. ஆசிரியர் சார் உங்களின் மெனக்கெடல்கள் கண்டிப்பாய் வீணாகாது. மிகச் சிறந்த அட்டவணையை தயாரிக்க நீங்கள் அடித்த பல்டிகள் நிறைய இருக்கும் என்று தோன்றுகிறது.

    HATS OFF SIR.

    ReplyDelete
  64. ட்ரெண்ட் நம்மிடமிருந்து விடை பெற்று செல்வதற்க்கு ஏற்றாற்போல் தலைப்பு சூப்பர்

    ReplyDelete
  65. புதிய வரவுகள் அதிகம் உள்ளது மகிழ்ச்சி. அதே நேரம் அவர்கள் எல்லோரும் எங்களை கவர்ந்தால் இன்னும் மகிழ்ச்சி. சிறப்பான கதைகளாக இருக்கும் என நினைக்கிறேன், மாட்டா அம்மணி அல்லது ஒரு தலைவனின் கதை போல இருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  66. THE SSS -எனது தேர்வு குள்ளவாத்து மந்திரியான மதியில்லா மந்திரி சார்.

    ReplyDelete
  67. ரின் டின் மீண்டும் வருவது மகிழ்ச்சி. எனது குழந்தைகளை கண்டிப்பாக மகிழ்விக்கும். ரின் டின் கதை ஜனவரியில் வந்தால் சிறப்பாக இருக்கும். அவர்கள் அதிக நாட்கள் காத்திருக்க தேவைப்படாது :-)

    ReplyDelete
  68. The SSS - விஞ்ஞானி தாத்தா வேண்டும் எனக்கு.

    ReplyDelete
  69. பேரிக்காய் 🍐 போராட்டமும் வருவதால் ஐயம் ஹாப்பி அண்ணாச்சி

    ReplyDelete
  70. குண்டு புத்தங்கள் இந்த முறை அதிகமே. மகிழ்ச்சி.

    அதுவும் big boys special super.

    ReplyDelete
  71. அருமையான அட்டவணை. என்னளவில் எந்த குறையும் தெரியவில்லை.

    1மணி நேரமும் 5 நிமிடங்களும் ஆச்சு முழுதாக படிக்க 😇😊

    ReplyDelete
  72. எதிர் பாராதது *பொளன்சர்* & *டைகர் தொகுப்பு* 👏🏻👏🏻👌🏻👌🏻

    ReplyDelete
  73. தாத்தாக்கள் தொடர்வது டபுள் ஹேப்பி. இரண்டாம் கதை இரண்டு நாட்கள் முன்புதான் படிக்க முடிந்தது. மிகவும் பிடித்திருந்தது.

    மேலே நண்பர் சூர்யா சொல்லி உள்ளது போல ஸ்டெரன் இல்லாதது வருத்தமாக உள்ளது உதிரியில் முடிந்தால் சேருங்கள் சார்.

    நண்பர் பழனிக்காக வரும் மர்மம் சிறப்பு.

    தளபதி ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி. அடடா பவுன்சர் இல்லையே என நினைத்த போது உதிரியில் சேர்த்து சிறப்பு.

    டிக் இல்லாதது எனக்கு வருத்தம் இல்லை.

    மெபிஸ்டோ வரும் அந்த அட்டைப்படம் சமீபத்தில் நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள், அடடா அருமையாக இருக்கே என நினைத்த போது அதை சந்தாவில் பார்த்தது மகிழ்ச்சி.

    கிரைம் கதைகள் பிடித்த எனக்கு புதிய அறிமுகத்தில் வரும் கிரைம் ஹீரோ கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.

    கென்யா ஒ நொடி ஒ தோ போன்று புதிய கதைகள் சேர்க்க முடியாதது வருத்தம்.

    ReplyDelete
    Replies
    1. நெடும் கதைகளாய்ப் போட்டால் கிட்டத்தட்ட ரூ.3600 வரும் அளவிற்குக் கதைகள் தற்சமயம் வெயிட்டிங் கிருஷ்ணா ! பட்ஜெட் எகிறிப் போகும் என்பதால் அடக்கி வாசிக்க வேண்டியதாகிறது !

      ஸ்டெர்ன் - ஆல்பம் 3 கதை கைவசம் காத்துள்ளது ! One of these days ...

      Delete
    2. நிலை கண்டிப்பாக புரிந்தது சார். ஒன்று செய்ய முடியாத ஆதங்கம் தான் .
      காத்துக்கொண்டு இருக்கும் புத்தகங்கள் வரும் நாட்களை எதிர்பார்க்கிறேன் சார் 🙏🏼

      Delete
  74. THE BIG BOYS SPL சும்மா தெறி ரகம் சார். சும்மா அதிருதில்ல சகாக்களே.

    ReplyDelete
  75. It's like getting ticket to watch Thalaivar movie, first day first show...I made my payment Rs.5800 feel happy...

    ReplyDelete
  76. லயன் ஆண்டு மலரில் வழக்கம் போல் லக்கி சிறப்பு. இதனை ஹார்ட் பௌன்டில் கொடுக்க வாய்ப்புகள் உண்டா சார்.

    லக்கி கதை இரண்டு என்பது மூன்றாக வர‌வாய்ப்புகள் உண்டா.?

    ReplyDelete
    Replies
    1. ///லக்கி கதை இரண்டு என்பது மூன்றாக வர‌வாய்ப்புகள் உண்டா.?///

      எடிட்டர் மைண்ட் வாய்ஸ்.: மூணு போதுமா.. நாலா கேளு.. ஏன் அஞ்சிகூட கேளு.. யாருகிட்ட கேக்குற..அண்ணன்கிட்டதானே...! தைரியமா பயப்படாம கேளு..! :-)

      Delete
  77. நம்ம ஸ்டெர்ன் & வெட்டியானுக்கு இடம் இல்லையா எடிட்டர் சார்

    ReplyDelete
    Replies
    1. இருவர் பற்றியும் தகவலேதும் தரவில்லையே ஆசிரியர் சார்.

      Delete
    2. யெஸ் அண்டர்டேக்கர்

      Delete
    3. வெட்டியான் (THE UNDERTAKER) புதுக் கதைகள் ஏதும் இன்னும் உருவாகவில்லை !

      ஸ்டெர்ன் 3 இடமின்றி வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளார் ; கையில் சுமார் 6 மாதங்களாய் உள்ளது அந்தக் கதை !

      Delete
    4. அட்டகாசமான அதிரடி அட்டவணை 👏👌👏👌👏

      ஸ்டெர்னை ஏதாவது புத்தக விழாவில் வெளியிடலாம் சார்.

      Delete
  78. பெளன்சர் எதிர்பார்க்கவே இல்ல சார்.

    ReplyDelete
  79. அட்டவணை 99.9999% திருப்தி. எங்கே எப்போதில் உள்ள அனைத்த இதழ்களும் 2023ல் வந்துவிட்டால் 200% திருப்தி ஆயிடும்.

    ReplyDelete
  80. Yea, big boy special is very special one...

    ReplyDelete
  81. இளம் டைகர் இந்த முறை கண்டிப்பாக வருகிறார் என்பதை உறுதி செய்ததற்கு நன்றி சார்.

    ReplyDelete
  82. நண்பர் பழனிவேல் குடும்பத்தின் பொருட்டு 13 மர்மம் வருவதில் மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  83. 2022 க்கான சந்தாவை விட 2023 க்கான சந்தா சிறப்பாக உள்ளதாகத் தோன்றுவது எனக்கு மட்டுந்தானா?

    ReplyDelete
  84. சுஸ்கி விஸ்கி மகிழ்ச்சி. நான் இந்த முறை இரண்டு டபுள் ஆல்பங்கள் வந்து கார்டூன் ரசிகர்களை மகிழ்விக்கும் என நினைத்தேன்:-) பட்ஜெட் காரணமாக முடியாது என புரிந்து கொண்டேன் சார்.

    ReplyDelete
  85. எங்கே & எப்போது கதைகள் எல்லாம் ஆர்வத்தை தூண்டுது ஆசிரியர் சார். 🥳🥳🤤🤤

    ReplyDelete
    Replies
    1. இங்கே நான் கண்ணில் காட்டியிருப்பது ஒரு பகுதி தான் சார் ; இதே பங்குக்கு பீரோவில் இன்னொரு குவியல் காத்துள்ளது ! சிறுகச் சிறுக ரசிப்போம் !

      Delete
  86. இந்த முறையாவது தேவையான விலை ஏற்றத்தை நீங்கள் தயங்காமல் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது சார்.

    வருங்காலத்தில் இதுபோல் அவசியப்படும் விலை ஏற்றத்தை தயங்காமல் செய்யுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. 2023 & 2024 இதே விலைகள் தொடரும் சார் ! கைவசம் தான் பேப்பர் உள்ளதே !!

      Delete
  87. இரட்டை வேட்டையர்கள் இந்த வருடமும் இல்லை அடுத்த வருடமாவது வருவார்களா நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் இரட்டை வேட்டையர்கள் ஸ்பெஷலுக்காக என்றாவது ஒருநாள் ஆசிரியர் என் இந்த கனவையும் நிறைவேற்றுவாரான்று

    ReplyDelete
    Replies
    1. நார்மன் வந்தது போல அவர்களும் ஒரு நாள் வருவார்கள்

      Delete
  88. டெட்வுட் டிக் எப்படி என்றாலும் வரப்போகிறார் என்பதால் மகிழ்ச்சி.

    ReplyDelete
  89. 56 நிமிடங்கள் ஆகியது! ஸ்டெர்ன் இல்லாதது சின்ன ஆச்சர்யம்!

    SSS இதழ் அறிவிப்பு சந்தோஷ வியப்பு.

    டபுள் சந்தா வழக்கமாக கட்டுபவர்கள் என்றால் வேரியண்ட் கவர் ஒவ்வொரு தனி சந்தாவுக்கும் வைக்க ஒரு " ஸ்டாண்டிங் இன்ஸ்டரக்‌ஷன்" கொடுத்து விடுங்கள் சார்!

    மீதி பகலில்!!

    ReplyDelete
    Replies
    1. கிழிஞ்சது !! நீங்களும் முழித்திருக்கிறீர்களா சார் ?

      Delete
  90. படிக்க ஆரம்பிக்கும்போது 3கமெண்ட்டுகள் இளவரசர் பன்னுவேணும்னு ஆஜர். படிச்சுமுடிக்க 50 நிமிடங்கள். அட்டவணை சுவாரஸ்யத்தில் இளவரசிக்கு இந்தவருசம் லீவு சொன்னதக்கூட அப்படியேதாண்டுவந்துவிட்டு திருப்பி உள்ளபோய் கண்டுபிடிக்க இவ்வளவு நேரமாயிருச்சு. இளவரசி வராததற்கு காரணம் நிச்சயம் இருக்கும்.சார் இளவரசி வருவார் நம்பிக்கையுடன் இருக்கிறேன். Big boys அறிவிப்பு சூப்பர்சார். thanks sir. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  91. ஸ்டெர்ன் கதை எங்கே எப்போது என யோசிக்கும் நேரத்தில் அடுத்த வருடம் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வந்து விடுவார் என நம்பிக்கையுடன் காத்திருப்பேன்.

    ReplyDelete