Powered By Blogger

Saturday, October 08, 2022

சிரிப்பே சிறப்பு !

 நண்பர்களே,

வணக்கம். கலரில் கலக்கலாய் வந்திருக்கும் தீபாவளி டெக்ஸையே சித்தே ஓரம் கட்டிய புண்ணியத்தை ஈட்டியிருக்கும் ஸாகோர் தான் இந்த நொடியின் நாயகன் போலும் - இந்த வாரத்தின் முழுமையிலும் ஆன்லைன் ஆர்டர்களில் கோடாரிக்காரர் முகம் தான் தெரிந்து வருகிறது ! புதியவரை ரசிப்பதையும், அலசுவதையும் உங்களிடம் ஒப்படைத்து விட்டு நாங்கள் இங்கே காரிகனோடு கும்மியில் பிசியாகியாச்சு ! And இதோ - இந்தப் பதிவினை டைப் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்வரையிலும், SMASHING '70s-ன் இறுதி இதழின் இறுதிக்கட்டப் பணிகளில் தான் மூழ்கிக் கிடந்தேன் ! FBI ஏஜெண்ட் சாரின் எடிட்டிங்கும் ஒரு வழியாய் ஓவர் என்பதால் - இப்போது சிக்காகோ சக்திவேல் & வாஷிங்க்டன் வெற்றிவேல் ஜோடியான மேக் & ஜாக் என் மேஜையை நிறைத்துக் கிடக்கின்றனர் ! "கார்ட்டூன்கள் இல்லியே அதிகமாய்" - என நண்பர்களின் சமீபப் பின்னூட்டங்கள் கண்ணில்படும் வேளைதனில் இந்தச் சிரிப்புப் பார்ட்டீங்களுக்குப் பேனா பிடிக்கும் முன்பாய் அவர்களையே உற்று நோக்கிக்கொண்டிருந்தேன் ! கார்ட்டூன்ஸ்...! முன்செல்லும் பாதையில் இவர்கட்கு மெய்யாலுமே இடம் இல்லியா ? என்ற கேள்வி தான் என் தலைக்குள் !! கொஞ்சமாய் address செய்திட வேண்டிய இந்தப் பிரச்னைக்கு இந்த வாரயிறுதியின் அலசலை ஒதுக்கினாலென்ன என்றுபட்டது ! So here goes :

நிறையவே பேசியதொரு சமாச்சாரம் தான் ; நிறையவே ஆதங்கங்கள் இவற்றின் பொருட்டு வெளிப்பட்டும் உள்ளன தான் ; ஆனால் end of the day - "எப்படி இருந்த நான் - இப்புடி ஆகிட்டேனே ?" என்று ஓமக்குச்சி நரசிம்மன் பாணிக்கு தேய்ந்து போயிருக்கும் கார்ட்டூன் ஜானர் நம் மத்தியினில் இந்த மொத்து வாங்குவதன் பின்னணி தான் புரிய மாட்டேன்கிறது ! Moreso நானெல்லாம் ஒரு கார்ட்டூன் வெறியன் எனும் போது, சிரிப்புலகினுள் புகுந்திட நண்பர்களின் பெரும்பான்மை காட்டிடும் இந்தத் தயக்கமானது  சுத்தமாய் அர்த்தமாவதில்லை ! 

இதோ - இதுவரையிலும் நம் மத்தியினில் ஆஜராகி, அதே வேகத்தில் காணாமலும் போக நேர்ந்திருக்கும் சிரிப்புப் பார்ட்டிக்களையும், அவர்களை உங்களுக்கு ஏன் பிடிக்காது போயிருக்கக்கூடுமென்ற எனது யூகங்களையும் மேலோட்டமாய் பதிவிடுகிறேன் ! Correct me wherever I'm wrong please :

1.ரின்டின் கேன் : ஞானசூன்யம் தான் ; லக்கி லூக் சாகசங்களில் நமக்குப் பரிச்சயம் தான் ; அந்த ஆல்பங்களில் ஜாலி ஜம்பரைக் கடுப்படிக்கும் ரோலில் நம்மை சிரிப்பில் உருண்டு புரளச் செய்துள்ளது தான் ! ஆனால் - சோலோவாய் ; ஒரு ஈரோவாய் ரி.டி.கே. ஆஜராகும் போது கதைகளின் லெவல் ரொம்பவே குழந்தைத்தனமாகிப் போகிறதோ ?! தவிர, ரி.டி.கே. போடும் மொக்கைக்கு ஈடாய், சுற்றி வரும் இதர பாத்திரங்களும் கோமுட்டித் தலையர்களாய் வலம் வரும் போது நீங்கள் கடுப்பாகிப் போகிறீர்கள் என்பது எனது யூகம் ! ஏனுங்க நான் சரியா பேசுறேனுங்களா ?

2. ஸ்டீல்பாடி ஷெர்லாக் : ஒரு உலகப் பிரசித்தி பெற்ற துப்பறியும் நாயகர் இங்கே செம லந்துக்கு ஆளாகும் கைப்புள்ளையாய் அடிக்கும் கூத்துக்கள் நெருடினவா ? அல்லது சிறுகதைகளாய் இருந்து போன அந்த பாணி ரசிக்கவில்லையா ? Or அந்தக் கீச்சுக் கோட்டு ஓவிய ஸ்டைல் புடிக்காமப் போச்சா ? இன்னமும் எனக்கு இந்த நாயகர் 'ரிஜிட்' ஆனதன் பின்னணிக் காரணம் புரியவே இல்லை !

Maybe இவரது முழுநீள சாகசம் ஒன்றை வெளியிட்டால் ரசிக்குமா guys ? ஜஸ்ட் curious !! 

3.லியனார்டோ தாத்தா : நிஜத்தைச் சொல்வதானால் இது ஜூனியர் எடிட்டருக்கு செம favorite தொடரும் கூட ! வீட்டில் ஒரேயொரு லியனார்டோ ஆல்பம் இங்கிலீஷில் இருந்ததை பல நாட்களுக்கு மறுக்கா மறுக்கா படித்து வந்ததோடு, இதன் மீத (இங்கிலீஷ்) புக்ஸையும் தேடிப் பிடித்து வாங்கித் தர கேட்டுக் கொண்டே இருப்பான் ! நமது படைப்பாளிகளின் பாரிஸ் ஆபீசில் ஒருவாட்டி அவை கண்ணில்பட முதற்காரியமாய் லவட்டிய அதே ஆண்டில் தான் இந்த சோன்பப்டித் தாடித்தாத்தாவின் உரிமைகளையும் வாங்கினோம் ! But அந்தோ - தாத்தாவை நீங்கள் ஆராதிக்கவே இல்லை ! Maybe குட்டிக் குட்டிக் கதைகளாய் இருந்ததும், பெருசாய் நீங்கள் வாசிக்கச் சமாச்சாரங்கள் இல்லாது போனதும் தான் உங்களின் விசனங்களின் காரணங்களோ ? தவிர, இங்கே பேனலுக்குப் பேனல் ஏதேனும் ஒரு குட்டி டிராக்கில் ஏதாச்சும் கூத்துக்கள் அரங்கேறி வருவதையெல்லாம் ரசிக்க பொறுமை இல்லாமலே போய்விட்டதோ ?

4 .SMURFS : ஏகமாய் எதிர்பார்ப்புகள் ; ஏகமோ ஏகமாய் ஏமாற்றம் என்பதே இந்த நீலப்பொடியர்களின் one-liner verdict ! உலகெங்கும் செமயாய் சாதித்துள்ள பசங்கள் இங்கே இன்று வரைக்கும் அங்கீகாரம் தேடித் திரிவது நிஜமான சோகம் ! Maybe இந்தத் தொடரை தமிழாக்கம் செய்வதில் அந்த "பொடி பாஷை" கடுப்பேற்றியதா ? அல்லது சுண்டுவிரல் உசரத்து மக்கள் செய்யும் நாட்டாமைகள் சுகப்படவில்லையா ? என்று தெரியவில்லை - இன்னமும் கைவசம் 5 டைட்டில்கள் கணிசமாகவே தேங்கி நிற்கின்றன ! 

5 .பென்னி : ரொம்பவே குட்டீஸ்களுக்கான கதையாய் இது தென்பட்டதோ ? Under 10 களுக்கான கதைகளை 40+ களுக்கு வழங்கியதில் தான் பிழையோ ?

6 .கிளிப்டன் : இங்கே சிக்கல் படைப்பாளிகளின் தரப்பிலானது என்பேன் ; சில ஆல்பங்களில் ஒரு தெளிவான கதையம்சம் & சிலவற்றில் ஏனோ-தானோ ரக storyline எனும் போது கேரட் மீசைக்காரரால் ஒரு முழுமையான காமெடி நாயகராயப் பரிணமிக்க சாத்தியப்படவில்லை என்று தோன்றுகிறது ! Am I right ?

7.மதியில்லா மந்திரி : Again அந்தச் சின்னச் சின்னக் கதைகள் தான் நெருடல்களா ? அவற்றை filler pages ஆகப் பார்த்தே பழகி விட்டு, திடீரென முழுநீள ஆல்பத்தினில் ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ ? அல்லது மாமூலான ஐரோப்பிய / அமெரிக்கப் பின்னணிகளின்றி, பாக்தாத் ; பாரசீகம் என்ற பின்னணிகள் ஒருவித உள்ளூர் படைப்பின் சாயலைத் தருவதாய் எண்ணி ஒதுங்குகிறீர்களா / ஒதுக்குகிறீர்களா ? 

கார்ட்டூன்களில் பெரும்பான்மை ஒற்றைப் பக்க gags - தற்போதைய கைப்புள்ளை ஜாக் போல ; மீதமுள்ள சுட்டி லக்கி ஆல்பங்களை போல ! ஆனால் ஒரு முழுநீள கல்யாண விருந்தின் பாணியில் ஸ்வீட் ; காய் ; கூட்டு ; பொரியல் ; சாம்பார் ; ரசம் ; நெய் ; ஊறுகாய் ; அப்பளம் ; பாயசம் என ஒவ்வொரு படைப்புமே முழுநீளக் கதையாய் இருத்தல் அவசியமென்ற நமது எழுதப்படா விதிகள், இந்த gags இருக்கும் திசையில் தலை வைத்துக் கூடப் படுக்கவிட மாட்டேனென்கின்றன ! பற்றாக்குறைக்கு ஒவ்வொரு கார்ட்டூன் நாயகரையும் லக்கி லூக்கின் தரங்களோடு ஒப்பீடு செய்கிறோமோ - என்னவோ செம சாத்து வாங்கிடுகிறார்கள் புதியவர்கள் ! இன்றைக்கு லக்கி ; சிக் பில் & ப்ளூகோட்ஸ் ஆகிய மும்மூர்த்திகள் மாத்திரமே கார்ட்டூனின் கொடி பிடித்து நிற்போர் ! இதோ ஏன் முன்னே கிடைக்கும் மேக் & ஜாக்கின் தலைவிதி நவம்பரில் தெரிந்து விடும் !

So இன்னும் புதுசு புதுசாய் சிரிப்புப் பார்ட்டிகளைத் தேடிப்பிடிக்க ரொம்பவெல்லாம் வாய்ப்புகளில்லை becos - டின்டின் ; ஆஸ்டெரிக்ஸ் போன்ற ஜாம்பவான்களும் சரி, வால்ட் டிஸ்னி, டாம் & ஜெரி போன்ற அமெரிக்க மெகா ஸ்டார்களும் சரி, நமது தக்கனூண்டு சர்குலேஷன்களுக்கு ஓத்தே போக மாட்டார்கள் ! தவிர பாட்டியிடம் வடை திருடிய காக்காய் கதையில் கூட நாம் லாஜிக் ; நீதி, நேர்மை தேடுகிறோமெனும் போது, ஆஸ்டெரிக்ஸே இக்கட வந்தாலும், ஒபெலிக்சின் கையிலிருக்கும் அந்த மென்ஹிரைப் பிடுங்கி ஒரு போடு தான் போடுவோமோ என்ற சந்தேகமே எனக்கு ! So இருப்பதையாச்சும் தக்க வைக்க / தழைக்கச் செய்ய என்ன செய்யலாமென்று ஏதேனும் யோசனைஸ் ப்ளீஸ் ?

1.நடைமுறையில் உள்ள எந்தவொரு சிரிப்புப் பார்ட்டியையும் கூட்டான்சோறு சாப்பிடச் செய்ய வாய்ப்பே இல்லை என்பதால் அந்த மாமூலான கதம்ப குண்டு புக் சிந்தனைக்கு வாய்ப்பே லேது ! Maybe 3  சிக் பில் கதைகள் ; அல்லது 4 லக்கி லூக் கதைகள் or 3 ப்ளூகோட்ஸ் என்ற ரீதியில் வேண்டுமானால் திட்டமிடலாம் ! அது self எடுக்கும் முயற்சியாய் அமைந்திடுமா guys ?

2.அல்லது 2015 (வருஷம் சரி தானா?) ஈரோட்டுப் புத்தக விழாவில் வெளியிட்டது போல சின்னதொரு slipcase-க்குள் வெவ்வேறு நாயகர்களின் தனித்தனி இதழ்களை நுழைத்து ஒரு CARTOON COMBO உருவாக்கிடலாமா ? அவ்விதம் செய்வதெனில் மேலுள்ள எழுவருள் யாருக்கு இடம் தந்திடலாம் அந்த முயற்சியினில் ?

மேற்படி 2 திட்டங்களில் எதைக் கையில் எடுப்பதாய் இருந்தாலுமே - முன்பதிவுக்கு மாத்திரமே என்பதில் no doubts ! ரெகுலர் சந்தாவினில் தற்போதுள்ள "மித கார்ட்டூன்" பாணியினை நோண்டி வைக்க தில் லேது நம்மிடம் ! 

இப்படியொரு கார்ட்டூன் முன்னெடுப்பினை நிஜமாக்கிடுவதாயின் உங்களின் ஆதரவு இருக்குமா folks ? அல்லது "இந்த ஆணிகள் பிடுங்கும் எல்லைக்கு அப்பாற்பட்டுள்ளவை" என்று கருதுவீர்களா ? எதுவாயினும் நெருடல்களின்றிப் பதில் சொல்ல உதவிட அந்த வோட்டுப் போடும் தளத்தினுள் link ஏற்படுத்தியுள்ளேன் guys !! 

https://strawpoll.com/polls/jVyGJAJq9Z7

நிஜமான அக்கறையுடன், உங்களின் பதில்களை அங்கே பதிவிடுங்களேன் ப்ளீஸ் ? And சொல்லவும் வேண்டுமா - திருமங்கலம் / RK நகர் பார்முலாக்கள் வேண்டாமே ப்ளீஸ் ?

அப்புறம் இன்னொரு முக்கிய கேள்வியுமே guys :

2023 அட்டவணையில் பாஸ்டர் டேவிட் சாலமன் (SODA) அல்லது நமது மலர்ந்த முகத்துக்காரர் ரிப்போர்ட்டர் ஜானியா ? என்றொரு கேள்வி எழும் பட்சத்தில் உங்கள் ஆதரவு யாருக்கு இருக்குமோ ? பதில்ஸ் ப்ளீஸ் ? இங்கேயே சொன்னாலும் சரி ; வோட்டாய்ப் போட்டாலும் சரி : https://strawpoll.com/polls/40ZmdJdplga


Bye all....see you around ! Enjoy the weekend !

355 comments:

  1. சோடா மற்றும் ரிப்போர்ட்டர் ஜானி இருவரும் வேண்டும் 2023 ல்

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு பேருக்குமே இடம் இருக்கும் பட்சத்தில் இங்கே அதைக் கேள்வியாய் உங்கள் முன்னே கொண்டு வரவாவது செய்வேனா நண்பரே ?

      Delete
  2. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete

  3. ஸாகோர் அருமையான comercial கதை களத்துடன் நன்றாக இருந்தார்.

    தனிவேங்கை என்பது தமிழ் நாம் அளிக்கும் பட்டமா சார்?

    கதை ஒரு typical ஹீரோ ஆரிஜின் ஸ்டோரி பெற்றோர்கள் அநியாயமாக கொல்லப்பட அவர்களை பழிவாங்க துடிக்கும் ஹீரோ.

    இக்கதையில் அவரை சுற்றி படைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் நன்றாக இருந்தது. அவர்கள் அனைவருக்கும் ஒரு கிளை கதைகள் அனைவருக்கும் ஒரு முடிவு என்பது நன்றாக இருந்தது.

    என்ன ஹெலெனா வின் மகன் கொல்லப்பட்ட கதை சரிவர காமிக்க வில்லை எனக்கு கொஞ்சம் புரியவும் இல்லை.

    ஒரு கொலைகாரன் அவனை கொன்று விட்டான். அந்த கொலைகாரனை பாட் சொல் கேட்டு போலீசிடம் ஒப்படைத்து விட்டார்கள் அதனால் ஹெலெனா நாடோடியை விட்டு போய் விட்டாள் சரியா?

    கொஞ்சம் இதே போன்ற ஆரிஜின் தான் இளம் டெக்ஸ் கதைக்கும் ஆனால் இந்த அளவு ரத்தம் அவர் கதையில் இல்லை.

    சார் ஆரம்பத்தில் இருந்தே ஸாகோர் கதைகளில் இந்த அளவு வன்முறை இருக்குமா இல்லாது புதிய கதைகளில் மட்டும் தானா?

    அவருடன் இணைந்து இருக்கும் மெக்ஸிகன் இனி தான் சேருவாரோ?

    மொத்தத்தில் எனக்கு ஸாகோர் தொடர்வத்தில் சந்தோஷமே மற்றும் எனது ஓட்டும் உண்டு.

    கதையில் இருக்கும் ஒரு சில காட்சிகள் மற்றும் வன்முறை கொண்டு 18+ என்று போட்டுவிட்டால் புத்தக கண்காட்சிகளில் சிறுவர்கள் கைகளில் கிடைக்காமல் இருக்கும் 😀

    ReplyDelete
    Replies
    1. //ஆரம்பத்தில் இருந்தே ஸாகோர் கதைகளில் இந்த அளவு வன்முறை இருக்குமா இல்லாது புதிய கதைகளில் மட்டும் தானா?//

      New Age தாக்கம் கிருஷ்ணா !

      Delete
  4. இரவினில் ஆட்டம் ஆரம்பம்:-)

    ReplyDelete
  5. ஓட்டை சோடாவிற்கு போட்டுவிட்டேன்.

    மேலே இருக்கும் கார்டூன்களில் எனது விருப்பம்

    ஸ்டீல் பாடி ஷெர்லாக் முழு நீள கதை
    Smurf
    பென்னி
    காரட் மீசை காரர்.

    தாத்தா ஏனோ இன்னும் படிக்கவில்லை சார். வாங்கியதோடு சரி. அதே தான் மத்தியில்லா மந்திரியும் படிக்க தோன்றியதில்லை.

    ரின்டின் படித்துவிடுவேன் ஆனால் ஏனோ அவ்வளவு பிடித்தம் இல்லை.

    முன்பதிவிற்கும் கார்ட்டூன் ஓட்டும் போட்டாச்சு.

    ReplyDelete
    Replies
    1. //தாத்தா ஏனோ இன்னும் படிக்கவில்லை சார். வாங்கியதோடு சரி. அதே தான் மதியில்லா மந்திரியும் படிக்க தோன்றியதில்லை//

      Thinking !!!

      Delete
  6. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  7. ஸ்மர்ப், ரின்டின்கேன், மதியில்லா மந்திரி நான் மிகவும் ரசித்தவை...!

    ஸ்மர்ப்பில் ஒருவேளை பொடிபாஷை தான் பிரச்சனையாக இருக்கலாம்...! ஆனால் எனக்கு ஓகே தான்...!

    ஸ்மர்ப்ஸ் 5யும் ஒரே புக்காக முன்பதிவிற்கு வெளியிடலாம்....!

    ReplyDelete
    Replies
    1. நான் குறிப்பிட்டது 5 வருடங்களுக்கு முன்னே வெளியிட்டு இன்னும் கிட்டங்கியில் தேங்கி நிற்கும் 5 smurfs இதழ்களை சார் !

      Delete
    2. பென்னி, லியானர்டோ
      ரொம்பவே குழந்தைத்தனம்...!

      ஷேர்லக் - ஓகே தான்

      Delete
    3. ///நான் குறிப்பிட்டது 5 வருடங்களுக்கு முன்னே வெளியிட்டு இன்னும் கிட்டங்கியில் தேங்கி நிற்கும் 5 smurfs இதழ்களை சார் !///

      அய்யய்யோ...!

      நான் கூட ஒரு வினாடி 5 புக் புதுசா வர வாய்ப்பிருக்குனு சபலப்பட்டுட்டேன்...!

      Delete
    4. // நான் குறிப்பிட்டது 5 வருடங்களுக்கு முன்னே வெளியிட்டு இன்னும் கிட்டங்கியில் தேங்கி நிற்கும் 5 smurfs இதழ்களை சார் ! //
      ஓ மை காட்...!!!

      Delete
  8. ஜனநாயகம் வாழ்க..
    ஓட்டு போட்டாச்...
    கார்ட்டூன் முன்பதிவு மற்றும் ஜானிக்கே எனது ஓட்டு.
    அச்சச்சோ.. யாருக்கு ஓட்டு போட்டேன்னு சொல்லலாமோ?

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ..மைண்ட்வாய்ஸ் வால்யூம் கம்மி பண்ண மறந்துப்புட்டீங்களே சார் !

      Delete
  9. Soda vs Johny

    இரண்டுமே வேண்டும்.

    ஏதேனும் ஒன்றிற்குதான் என்றால் நிச்சயமாக ஜானிதான்.

    ReplyDelete
  10. Combo like muthu350...

    1.ரின் டின் கேன்
    2.ஸ்மர்ஃப்
    3.மந்திரி
    4.க்ளிப்டன்

    (4மே ஓரளவு மெச்சூர்டு, பென்னி+லியனார்டோ+ஸ்டீல்பாடி-3ம் டூ சைல்டிஸ்)

    ReplyDelete
    Replies
    1. ரின்டின் கேன் மெச்சூர்டா சார் ? :-)

      Delete
    2. ஹி..ஹி....3பேரு ஈஸியா செலக்ட் ஆகிட்டாங்க சார்.

      மற்ற 3ஐ விட ரின் டின் ஓகே..

      Delete
    3. சார் ...மனதை இலகுவாக்க முயல்வோர் மெச்சூர்டாய் இருந்தா என்ன - இல்லாங்காட்டி என்ன ?

      Delete
  11. 1.சார் எழுவருக்கும் ஒரு கதை....வானவில் மலர்...
    2.ஸ்மர்ஃப் அந்த அஞ்சயும் ஒரே கொத்தாக ஹார்டு பௌண்டுல
    3.ஸ்மர்ஃப் ....மதியில்லா மந்திரி...ஸ்டீல் பாடி...லியோனார்டோ....ரின்டின்
    ஜானி வரட்டும்


    ReplyDelete
  12. SODA is good. But if i HAD to choose, I'd go with Reporter Johnny.
    Johnny for 2023, all the way !!!

    Cartoon books:
    I vote for -
    Lucky Luke
    Chick Bill
    மதியில்லா மந்திரி

    The rest of them... Meh !

    ReplyDelete
  13. Edi Sir..
    Me வந்துட்டேன்..😍😘

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸாகோர் பாபுஜி !

      Delete
    2. Edi Sir..
      நன்றி...😃😍😘

      வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்..🙏💐💐

      Delete
  14. ஓட்டு போட்டாச்சு... ஜானிக்கா இந்த நெலமை.. கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கட்டும்... சோடா வரட்டும் ஃப்ரஷா..

    ReplyDelete
    Replies
    1. நானெல்லாம் ஊடு சூனிய காலத்து ஜானி ஃபேன். நாம இப்டிக்கா போவோம். நம்மாளுங்க சர்கஸ் துப்பாக்கியாட்டம்.. எந்த பக்கம் சுடும்ன்னே தெரில..

      Delete
  15. சார்... strawpoll ல் time out என்று validating ல் சொல்லி விட்டது. அப்புறம் Already voted ன்னு சொல்லுது...

    ஓட்டு போட முடியலை...

    ReplyDelete
    Replies
    1. உங்க வோட்டை யாரோ குத்திப்புட்டாங்க போலும் சார் !

      Delete
  16. கார்ட்டூன் கதைகள், என் வரையில்..
    ரின் டின் கேன்..
    கிச்சுகிச்சு மூட்டும் ரகம்.
    ஸ்மர்ப்ஸ்...
    பொடி பாஷை. (என்னைப் பொருத்தவரை கடிபாஷை). கதையோடு ஒன்றவில்லை.
    ஹெர்லக்..
    சில கதைகள் நன்றாகவே இருந்தன
    க்ளிப்டன்..
    ரசிக்கவில்லை.
    மதியில்லா மந்திரி..
    நன்றாகவே இருந்தது.
    தாத்தா..
    எனக்குப் பிடித்திருந்தார்.
    பென்னி ..
    சுமார் ரகம்.

    ReplyDelete
  17. SODA!!!! artwork at peak in every episode, கதையும் அருமையாகவே இருக்கும். குறிப்பாக soda & அவரது தாயும் பேருந்தில் போவது போல் ஒரு episodeல் வரும், நாமும் அவருடன் செல்வது போலவே இருக்கும். மனதை தொட்ட இதழ்!!!

    ReplyDelete
  18. ரிப்போர்ட்டர் ஜானிக்கே என்னுடைய நல்ல ஓட்டும் கள்ள ஓட்டும். ### 50 !!!

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஓட்டோடு நிறுத்திக் கொள்வோமே ப்ளீஸ் ?

      Delete
  19. கார்ட்டூன காம்போ :
    மதியில்லா மந்திரி
    லியனார்டோ
    ஹெர்லக்
    ஸ்மர்ப்ஸ் (பொடி பாஷை வேண்டாம்)

    ReplyDelete
  20. கார்ட்டூன் வறட்சியை போக்க விற்பனையில் சாதித்துக்காட்டிய சுஸ்கி விஸ்கியை பரிசீலனை செய்யலாமே Sir

    My vote for Reporter Johny

    ReplyDelete
  21. எனக்கு ஜானியும் வேண்டும் சோடாவும் வேண்டும். கண்டிப்பாக யாராவது ஒருவர் என்றால் சோடாதான் வேண்டும்.

    ஜானி பல வருடங்களாக வருகிறார் எனவே இந்த புதிய நாயகருக்கு அடுத்த சில வருடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.

    அடுத்த வருட அட்டவணையில் சோடா இல்லை என்றால் கண்டிப்பாக வருந்துவேன்.

    முடிந்தால் அடுத்த வருடம் சோடாவின் கதைகள் இரண்டை இணைந்து ஒரு புத்தகமாக கொடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. ///ஜானி பல வருடங்களாக வருகிறார் எனவே இந்த புதிய நாயகருக்கு அடுத்த சில வருடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.///

      +111

      Delete
    2. பாக்கெட்டுக்குள் கை விட்டால் இப்போவே முட்டிங்காலைத் தொடும் அளவுக்கு பட்ஜெட் நீண்டு போய்க் கிடக்கின்றது ! இதில் 2 புக் ; 3 புக் சேர்த்து என்றால் கணுக்காலைத் தட்டி நிற்கும் சார் !

      Delete
    3. சார் கொஞ்சம் பார்த்து செய்யுங்கள் சார்.

      Delete
    4. நீங்களே ஒரு பட்ஜெட் போடுங்களேன் சார் - டெக்ஸ் 75th ஆண்டு ஸ்பெஷல் ; தீபாவளி மலர் ; கோடை மலர் ; முத்து ஆண்டுமலர் ; லயன் ஆண்டுமலர் ; ரெகுலர் மாதந்திர டெக்ஸ் ஒன்பது / பத்து ; அப்புறம் ரெகுலர் நாயகர்கள் ; புது வரவுகள் ; ஸ்பெஷல் தருணத்தின் இதழ்களென்று ! அப்புறமா எகிறி வரும் கூரியர் கட்டணங்களையும் சேர்த்துக்கோங்க ! And டோட்டல் ஐயாயிரத்து சொச்சத்தைத் தாண்டப்படாது !

      Delete
    5. அது மட்டும் இல்லாம பின்மண்டையில் பொடேர் பொடேர் என்று சாத்தும் விலைவாசி ஏற்றங்களுக்கும்,டாலரின் எகிறல்களுக்குமே ஒரு குஷன் வைத்திடணும் மறவாது !

      Delete
    6. சார் விலைவாசி எல்லாம் ஏறிவிட்டது எனவே இன்னும் ஐந்தாயிரம் தான் பட்ஜெட் என்பதிலேயே நிற்க வேண்டாமே. எனவே இந்த ஆண்டில் இருந்து ஆறாயிரம் என்று வைத்து தயவு செய்து பட்ஜெட் போடுங்களேன் சார்.

      Delete
    7. அந்தளவுக்கு நாம் இன்னும் வளரலை சார் !

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. சார் - டெக்ஸ் 75th ஆண்டு ஸ்பெஷல் without சந்தா special edition ஆக வெளியிட்டால் , சந்தா budget குறையும் சார்.

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
  22. Soda..
    Cartoons-
    1, Smurfs(no பொடி பாஷை, pls)
    2, Clifton
    3, steel body sherlock ( full story will help)
    4, leonardo ( full story will be better)

    Rintin, benny not really upto the mark

    ReplyDelete
    Replies
    1. //leonardo ( full story will be better)//

      There isn't one..

      Delete
    2. Filler pages kind of stories are not engaging.. So eithet it should be a full length else NO.

      Delete
  23. 2.அல்லது 2015 (வருஷம் சரி தானா?) ஈரோட்டுப் புத்தக விழாவில் வெளியிட்டது போல சின்னதொரு slipcase-க்குள் வெவ்வேறு நாயகர்களின் தனித்தனி இதழ்களை நுழைத்து ஒரு CARTOON COMBO உருவாக்கிடலாமா ? அவ்விதம் செய்வதெனில் மேலுள்ள எழுவருள் யாருக்கு இடம் தந்திடலாம் அந்த முயற்சியினில் ?

    குட் ஐடியா.
    ரின் டின் கேன்
    ஹெர்லக்
    ஸ்மர்ப் (பொடி பாஷையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து வெளியிட்டால் நன்றாக இருக்கும் சார்)

    ReplyDelete
  24. கார்ட்டூன் ஸ்பெஷல் வேண்டும்.

    ஸ்மர்ப்ஸ், லியானர்டோ, மந்திரி, இவங்களோட வேற யாராச்சும் ஒருத்தர்.

    சுஸ்கி விஸ்கி என்னாச்சுங்க சார்?

    ReplyDelete
    Replies
    1. இங்குள்ள பட்டியல் தொங்கலில் உள்ள சிரிப்புப் பார்ட்டிகளுக்கு மாத்திரமே சார் !

      Delete
  25. ஸோடா . மிகவும் மாறுதலான கதைவரிசை..ஓட்டு ஸோடாவுக்கே.

    காரட்டூன்கள் அவசியம்.7 பாத்திரங்களில் எவை இருந்தாலும் சரி. ஸ்லிப் கேஸில் 7 புஸ்தகங்கள் இருக்க மிகவும் விருப்பம்.

    ReplyDelete
    Replies
    1. // ஸ்லிப் கேஸில் 7 புஸ்தகங்கள் இருக்க மிகவும் விருப்பம். //

      நன்றி சார்.

      Delete
    2. எனக்கும் 7 வேணும் - slipcase தடிமனாக இருக்கணும். அனால் எனக்கென்னமோ slipcase உடன் சேர்ந்து ஒரு ஷெல்ப் ஆர்டர் பண்ணணுமோன்னு தோணுது. எனவே யோசித்து ஒரு 5 or 7 books கொண்ட collection செய்யவும். 

      அப்புறம் KOK கீழே சொன்னதுபோல் கிளாசிக் சிக் பில் படிக்க ஆவல் - ஏன்னா அப்போவெல்லாம் எனக்கு Tex / சிக்-பில் பிடிக்காது - லக்கி, Scrooge, அலிபாபா எல்லாம் வந்து அசத்திக் கொண்டிருந்ததால் - பிளஸ் சுஸ்கி-விஸ்கி வேறு. ஆனால் from 2012 எப்போ tex பிடிக்க ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து சிக்-பில்லும் பிடிக்க ஆரம்பித்து விட்டது. 

      அப்பாலிக்கா .. அந்த Maxi Size தங்கக்கல்லறை ... வந்து .. பழைய வசனங்களுடன் .. ஹி ஹி !! :-)

      Delete
  26. கார்டூன் my choice
    1. ரின் டின் கேன்
    2. மந்திரி
    3. ஸ்மர்ப்
    4. கிளிப்டன்

    வந்தாலும் OK, வராவிட்டாலும் OK
    1. பென்னி

    வேண்டவே வேண்டாம்
    1. ஸ்டீல் பாடி ஷெர்லக்
    2. லியானார்டோ

    SODA or JOHNY
    ஜானி தான். No comparison.

    ReplyDelete
  27. ஆட்காட்டி விரலில் மை வெச்சி அனுப்பிட்டாங்கோ..!

    கார்ட்டூன்ஸ் ஷ்பெசல்.. கசக்குமா என்ன..😍

    ReplyDelete
  28. ஐயகோ Reporter ஜானிக்கே ஆபத்தா ???

    சார்....

    ReplyDelete
    Replies
    1. அதான் எனக்கும் கேள்வியா இருக்கு...

      Delete
  29. /// Maybe 3 சிக் பில் கதைகள் ; அல்லது 4 லக்கி லூக் கதைகள் or 3 ப்ளூகோட்ஸ் என்ற ரீதியில் வேண்டுமானால் திட்டமிடலாம் ! அது self எடுக்கும் முயற்சியாய் அமைந்திடுமா guys ?///

    சிக்பில் வரிசையில் நிறைய மறுபதிப்புகளும் காத்துக்கொண்டு இருக்கின்றன சார்.!

    தலைவாங்கும் தேசம் + (மலையோடு மல்யுத்தம் + மிஸ்டர் மஹாராஜா) இந்த காம்பினேசனை பெரிய பழுவேட்டரையருக்கு கல்யாணம் ஆன அன்னியிலருந்து கேட்டுக்கிட்டே இருக்கேன்..😭

    ReplyDelete
    Replies
    1. போடாத கதைகளே இன்னும் ஒரு அம்பாரம் கிடக்கும் போது பழசுக்குள் தலை நுழைப்பானேன் சார் ? வருஷத்துக்கு ஒரு ஸ்லாட் தேத்தவே ஏழு கடல் தாண்ட வேண்டிக்கிடக்கும் பொழுதுகள் இவை ; கிடைக்கும் வாய்ப்பை பழசில் செலவிட வேணுமா - என்ன ?

      Delete
    2. புத்திக்கு தெரிஞ்சாலும் மனசு அடங்கமாட்டேங்குது சார்..😔

      Delete
  30. விஜயன் சார், பென்னி ரொம்பவே குழந்தை தனமான கதையாக இருந்தது.

    மதியில்லாத மந்திரி கதையில் நகைச்சுவை களங்கள் குறைவாக இருந்தது எனவே அதில் சிரிக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தது.

    கிளிப்டன் கதையில் பிரிட்டிஷ் பழக்கங்களை நையாண்டி செய்து இருந்தது அதுவும் அதிகமாக/ கதை முழுக்க இல்லை. கார்ட்டூன் பாணியில் அழுத்தமான துப்பறியும் கதையாகவும் இல்லை. அதாவது இவர் இந்தப் பக்கமும் இல்லை அந்த பக்கமும் இல்லை. இதுவே இவரை பலருக்கு பிடிக்காமல் போனதற்கு காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  31. ///2.அல்லது 2015 (வருஷம் சரி தானா?) ஈரோட்டுப் புத்தக விழாவில் வெளியிட்டது போல சின்னதொரு slipcase-க்குள் வெவ்வேறு நாயகர்களின் தனித்தனி இதழ்களை நுழைத்து ஒரு CARTOON COMBO உருவாக்கிடலாமா ? அவ்விதம் செய்வதெனில் மேலுள்ள எழுவருள் யாருக்கு இடம் தந்திடலாம் அந்த முயற்சியினில் ?////

    ஸ்மர்ஃப்
    ரின்டின்கேன்
    பென்னி
    கிளிப்டன்

    குறைந்தபட்சம் மேற்கூறிய நால்வர்..!

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாள் காசு சேத்து வெச்சு 500 புஸ்தகம் (7 கார்ட்டூன் குண்டு) போட சொல்லி விக்கலேன்னா நாம தமிழ்நாடு முழுக்க 500 பள்ளிகளுக்கு freeயா குடுக்கறோம் KOK - எடிட்டர் retire ஆகறதுக்குள்ள பன்றோம் !

      Delete
    2. ஓ.கே Ragavan ஜி.! நான் போய் உண்டியல் வாங்கிட்டு வந்திடுறேன்.!

      Delete
    3. @ராகவன் அப்படி நீங்க செய்தீர்கள் என்றால் 10 செட் என்னுடைய பங்கு ப்ரோ.

      Delete
  32. இப்போ வரைக்கும் ஜானி லீடிங்.. மகிழ்ச்சி.!
    ஆமா.. இது பழைய ஜானியா அல்லது ஜானி 2.0 ஆ.? நான் வேற தெரியாம ஓட்டுப் போட்டுட்டேன்..!??

    ReplyDelete
    Replies
    1. ஹைய்யோ...ஹைய்யோ ! நாங்கள்லாம் ஜோடா குடிச்சாச்சு ! ஏவ்வ்வ்வ்வ்வ் !

      Delete
    2. ஆனா காலைக்குள்ளாற 3000 ஓட்டு லீடிங் என்று poll சொன்னாலும் ஆச்சர்யப்பட மாட்டேன் தான் !

      Delete
    3. கரூர் சரவணர் தூங்கியிருப்பாரே சார்.. :-)

      Delete
    4. நான் சோடாவுக்கே ஓட்டு போட்டுட்டேன்.. ஜானியும் ஓகே.. அதனால் கள்ள ஓட்டுக்கு அவசியமில்லை..

      Delete
  33. அந்த மூணு கார்டூன் கலெக்சன்.

    1) மதியில்லா மந்திரி.
    2) ஸ்டீவ் பாடி ஷெர்லாக்.
    3) க்ளிப்டன் (அ) பென்னி

    ReplyDelete
  34. இரும்பு கை மாயாவி மறுபதிப்பு இனி வருமா சார். i am eagerly waiting for long time

    ReplyDelete
  35. ம்ம்.. சரி..! கார்ட்டூன் இல்லாத குறைய போக்க UK பக்கம் இருந்து யாரச்சும் வராமலா போயிருவாங்க..!

    ReplyDelete
  36. சோடா, ஜானி இருவரும் புக் வந்தவுடன் படிக்க செய்ய வைக்கும் அற்புதமான ஹீரோஸ்...

    "மாதம் ஒரு ஜானி" கூட கொண்டு வர கூடுமானால் எனது ஆதரவு ஜானிக்கே... சோடா கண்டிப்பாக ஒரு ஸ்லாட் கொடுங்கள்.

    ReplyDelete
  37. ஐயகோ ... கார்டூனிலும் cowboy வேணும் .. குருதை வேணும்னு சொல்றாங்களே .. cowboyயோட நாயி கூட ஓகே (அதான் RTC) ஆனால் மத்ததெல்லாம் வேணாம்னு சொன்னா என்னதான் பண்ணுவது :-(

    Leonardo was simply brilliant .. Hmmm .. நமக்கு வாய்த்தது அவ்ளோதான் ! 

    ReplyDelete
  38. Soda க்கு ஓட்டுப் போட்ட நான் கார்ட்டூனுக்கு ஒட்டுப் போடலை. மேக் & ஜாக் மாதிரி கதையாப் போட்டா தாங்க முடியாது. லக்கி, சிக்பில், ரின்டின், மந்திரி, பென்னி & ப்ளுகோட்ஸ் பிடிக்குது. மத்ததெல்லாம் ஆவரேஜ் தான். கடைசி சில ஸ்மர்ப் பொடி பாஷை இல்லாமல் யதார்த்தமாக இருந்தது நன்றாக இருந்தது. சோடா, மேகி, தாத்தாக்களில் இருக்கும் நகைச்சுவை கார்ட்டூன்களில் ஏனோ மிஸ்ஸிங்.

    ReplyDelete
    Replies
    1. தாத்தாக்களில் இருக்கும் நகைச்சுவை கார்ட்டூன்களில் ஏனோ மிஸ்ஸிங்.

      ,,,😂😂 Best Ever Comedy of the Year. ,😂😂 என்ன செய்வது பாவம் வயசாச்சில்ல. அதான்.

      Delete
    2. தாத்தாஸ்.... ஆவ்சம் காமெடி...

      Delete
  39. கண்டிப்பாக ஜானி வேண்டும் சார்.தயவு செய்து அவரை நிறுத்த வேண்டாம்.அகதா கிறிஸ்டி கதைகள் போல் கடைசிப் பக்கங்களில் மர்மத்தை விடுவிக்கும் ஜானி கதைகளுக்கு ஈடுயிணை ஏதுமில்லை.சித்திரங்களும் நன்றாக உள்ளன.தொடர வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  40. எனக்கு ஜானி & சோடா இரண்டுமே OK சார். இந்தாண்டு கதம்பயிதழில் ஜானி வந்ததுப் போல், அடுத்தாண்டும் போட்டுத் தாக்கிடலாமே.....? (

    1. ஜானி (க்ரைம் த்ரில்லர்)
    2.தொட்டால் தெறிக்கும் ரூபின் (ஆக்ஷன்)
    3.டேங்கோ (அட்வென்சர்)
    4. சிக்பில் (காமெடி)
    5. ப்ரூனோ பிரேஸில் V.2.0 (லேட்டஸ்ட்டாக களமிறங்கியிருக்கும் மூன்றாவது ஆல்பம், ஓவியர் 'பிலிப் ஐமண்ட்' சித்திரத்தில் தெறிக்கவிட்டிருக்கார்).

    இப்போது இருக்கும் ஒரே சாய்ஸ் Le Lombard குழுமத்தின் நாயகர்களின் ஒரு குண்டு புக். அதைத் தவறவிட வேண்டாமே..?

    ReplyDelete
  41. கார்ட்டூன் காம்போ ஸ்பெஷல் 2023ல் வந்தால் நன்றாக இருக்கும். மன்னிக்கவும் ஆசிரியர் சார் .ஸ்டீல்பாடி ஷெர்லாக் மற்றும் லியனார்டோ தாத்தா ஏனோ என்னைக் கவரவில்லை. பாக்கி அனைவரும் வரட்டுமே !! ஒரு கை பார்க்கலாம்.!!

    ReplyDelete
  42. 2023ல் சுஸ்கி விஸ்கி வண்ணத்தில் இரட்டை ஆல்பம் உள்ளது தானே சார் ? வரும்னு உங்களைத் தான் மலை போல் நம்பியிருக்கின்றேன் சார்.

    ReplyDelete
  43. 2023ல் நம்ம சேகர் அது தான் சார் நம்ம ஸாகோர் வண்ணத்தில் அட்டகாசமான ஆறு ஆல்பங்கள் கொண்ட குண்டு ஹார்ட் கவருடன் வருகின்றார் தானே சார்.பயபுள்ளய ரொம்ப நம்பியிருக்கின்றேன் சார். ஏமாத்திப்புடாதீங்க சார்.

    ReplyDelete
  44. எனது ஓட்டு எப்போதும் ஜானி கதைகளுக்கே !!!
    கார்ட்டூன் கதைகளில் நீங்கள் எழுதிய லிஸ்டில் ரின் டின் கேன் தவிர வேறு கதைகள் எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை

    ReplyDelete
  45. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    எனது ஓட்டு ஜானிக்கே

    ReplyDelete
  46. Soda vs Johny

    இரண்டுமே வேண்டும்.

    ஏதேனும் ஒன்றிற்குதான் என்றால் நிச்சயமாக ஜானிதான்

    ReplyDelete
  47. என் மனதில் முன்னுரிமையில் உள்ளவர்கள் சிக்பில் அண்ட் லக்கி லுக்,

    Smurfs, எனது பிள்ளையின் பேவரிட் கார்ட்டூன், புத்தகமாக வெளிவந்த போது அந்த பொடி பொடி என்ற பாஷை அவளுக்கு பிடிக்காமல் போய்விட்டது. மூன்றாவது புத்தகத்துக்கு மேல் வந்த பொடி பாஷை இல்லாத smurfs கதைகள் அனைத்தும் படிக்க நன்றாகவே இருந்தது.
    தொடக்கத்தில் வந்த அந்த பொடி பாஷை தான் இந்த கதையை ஃபெயிலியர் செய்து விட்டதோ என்று தோன்றுகிறது. மீண்டும் வருமானால் படிப்பதற்கு ரெடி.

    Bluecoats அடுத்த இடத்தில்.

    Soda நன்றாக உள்ளது தொடர்ந்து அதற்கு ஒரு இடத்தை தரலாம்.

    ரிப்போட்டர் Jhonny or சோடாவா என்றால் இடியாப்ப சிக்கல் நாயகரே முதலில்.
    மற்றவர்களுக்கு என் மனதில் இடம் இல்லை.

    சிக்பில் ஆரம்ப காலத்தில் வந்த சில கதைகளை மறு பதிப்பு செய்யுங்கள்.

    அதுபோல கேப்டன் பிரின்ஸ் கதைகளான காணாமல் போன கழுகு சைத்தான் ஜென்ரல் பனிமண்டலக்கோட்டை போன்ற புத்தகங்களையும் வண்ணத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
  48. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  49. காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் எனது ஓட்டு ஜானிக்குத்தான். ஆனால் சோடா வந்தால் வேண்டாம் என்றும் சொல்ல மாட்டேன்.

    ReplyDelete
  50. Reporter Johnny - Yes
    Cartoon Special - Ok

    ReplyDelete
  51. என்ன அளவிலான கார்ட்டூன் இதழ்கள்:
    1: ஸ்மர்ப்ஸ்
    2: ரின்டின்கேன்
    3: மதியில்லா மந்திரி
    4: கிளிப்ட்டன்.

    ReplyDelete
  52. ஸ்டீல்பாடி
    தாத்தா
    பென்னி
    எனக்கு பிடிக்கவில்லை.
    எனவே மற்ற நால்வரை ஸ்லீப்கேஸ் பதிப்பாக கொண்டுவரலாம்.
    முன் பதிவுக்கு ஒரு வருடம் வரை அவகாசம் கொடுத்து பின் வெளியிடலாம்.

    ReplyDelete
  53. எனக்கு பிடிக்காத கார்ட்டூன் என்று எதுவும் இல்லை சார். நீங்க லிஸ்ட் செய்த 7 கார்ட்டூன் எனக்கு பிடித்தே இருந்தது. தனி முன் பதிவுக்கு எனது வாக்குகளை அளித்து விட்டேன்.

    ஏதேனும் 4 என்றால்
    1. ஸ்டீல் பாடி ஷெர்லாக்
    2. Smurfs
    3. மதியில்லா மந்திரி
    4. லியோனார்டோ

    இவர்களே எனது choice.

    ஜானி யா இல்லை சோடா வா என்று வந்து நிற்பது கொடுமை. எனது வாக்கு சோடா வுக்கு தான்.

    ReplyDelete
  54. ரின்டின் கேன்
    ஸமர்ப்
    மதியில்லா மந்திரி
    கிளிப்டன்
    மு.பாபு
    ஆத்தூர்

    ReplyDelete
  55. ஜானி-வா நீ😍😘

    SODA- போ டா..😘

    ReplyDelete
  56. மதியில்லா மந்திரி.
    ஸ்மர்ஃப்
    ரின்டின்கேன்
    பென்னி

    ReplyDelete
  57. ஜானியைக் காட்டிலும் சோடாவுக்கே என் ஓட்டு.சமீபமாக ஜானி அவ்வளவு கவரவில்லை.
    இல்லை..அவரோட ஸ்டைல் ரொம்ப நமக்கு பழகிப் போனதால, இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்திடுவதால் பெரிதாக இல்லை.

    சொடா செம ப்ரெஷ்.

    ReplyDelete
  58. ஸ்டீல்பாடி ஷெர்லக்..
    லியனார்டோ தாத்தா..

    ரொம்பப் புடிச்சது.

    ReplyDelete
  59. ஸ்மர்ஃப்ஸ் - பொடி பாஷை இல்லாமல் இன்னும் 2 சான்ஸ் தந்து பாருங்களேன்
    மேக் & ஜாக் - last கதை பட்டாஸ், எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
    மதியில்லா மந்திரி: all time favourite


    கிளிப்டன் தாத்தா & பென்னி பேரன் - no for me,
    ரிண்டின் கென்: காமடி என்பது அவ்வளவு ஈசி இல்லை, அதுக்கு ஒரு புத்திசாலிதனம் வேண்டும், ரிண்டின் கேனில் காமடி 75% தினிக்கப்பட்டதாக தோண்றும்… no. லக்கியுடன் வருவதே போதும்.

    லியணார்டோ இன்னும் படிக்க வில்லை, வாங்கி வைத்துள்ளேன், so no comments

    ஸ்டீல் பாடி , படித்தது எதுவும் நியாபம் இல்லை, so no comments

    ReplyDelete
  60. ரிப்போர்ட்டர் ஜானி...

    ReplyDelete
  61. ரிப். ஜானி - என் பிடித்தமான ஹிரோ + நண்பர் + அந்த ஓவிய அழகு..அதுவும் கலரில். அருமை..
    ஆனால் கைவசம், இவர் கதைகள் நிறைய ..?i உள்ளன.
    எனவே, ஓட்டு எனும்போது, சோடா - விற்கே..(இவர் கதைகளும் கொஞ்சம் சேர்த்துக்கொள்கிறோமே..)
    .இவருக்கு அதிக ஓட்டு விழும்பட்சத்தில் இரண்டு ஆல்பமாக தரமுயற்சி செய்யுங்களேன்.(அப்பதான், இவர் மேல் - இன்னும் அதிக
    ஈ ர்ப்பு வர வாய்ப்பு உள்ளது..)

    ReplyDelete
  62. கார்ட்டூன்-ஏதேனும் நான்கு தே ர்வு எனில்,
    1.ரின்டின் கேன்.
    2. ஹெர்லக்
    3.ஸ்மர்ப்
    4. மதியில்லா மந்திரி..

    ReplyDelete
  63. டியர் எடி ஓட்டு க்கு 2000 / 3000 ன்னுகொடுத்தீங்கன்னா நீங்க சொல்றவர்க்கே நாங்க ஓட்டு போட்டிடறோம் .. சத்தியமா சார் ..

    😉😉

    ReplyDelete
  64. கார்டூன்-சில கதைவரிசை களின் தோல்விக்கு நீங்கள் . - குறிப்பிடாமல் விட்ட ஒரு காரணம்- இது நமக்கானது மட்டும் அல்ல.. நம் பிள்ளைகள் ரசனைக்கானதாக அமையலாம்-என்று வாங்கி படித்து சே ர்த்து
    வைக்க நினைத்தால் - கொஞ்சம் முன்னேற்றம் காணலாம்..
    ஆனால், பெரியவர்கள் -?ii-நம் ரசனைக்கு ஒத்துப் போகிறதா-என்று மிகவும் அழுத்தம் - திருத்தமாக ஆராய்ச்சி செய்கிறார்கள்..
    கதை சொல்லும் காமிக்ஸ்-என் தம்பி பிள்ளைகளுக்கு (பெண்கள் - 6th, 8th,9th,)-சந்தா கட்டி இருந்தேன்.
    சரஸ்வதி பூஜை - லீவிற்கு அங்கு சென்றிருந்தேன்.
    நான் வாங்கிப் படித்தேன்..
    மன்னிக்க. - லக்கிலூக்-கும் -சிக் பில்-லும் படித்த என் ரசனைக்கு
    ரொம்ப சுமாரான கதையாகத் தெரிந்தது - பிள்ளைகள் பார்வையில் ரொம்ப ரசித்தார்கள்-அடுத்த புக்_எப்ப வரும் என்கிறார்கள்..
    எனவே, நாம் வாங்கி சேகரித்தால், பின்னர், அவர்கள் ரசனைக்கு-அனைத்துமே பிடித்துப் போகலாம்..
    எனவே, அவர்களுக்காக எல்லா கார்டூன்-இதழ்களையும் வாங்கிச் சே கரிப் போம்...

    ReplyDelete
    Replies
    1. // நாம் வாங்கி சேகரித்தால், பின்னர், அவர்கள் ரசனைக்கு-அனைத்துமே பிடித்துப் போகலாம்..
      எனவே, அவர்களுக்காக எல்லா கார்டூன்-இதழ்களையும் வாங்கிச் சே கரிப் போம்... //

      Very good point sir.

      Delete
    2. இப்போதெல்லாம் அடிக்கடி ப்ளூ சட்டைகள் போடுகிறோம் சார் - சிக்கலே அங்கு தானே ?!

      பிள்ளைகளுக்கென தனித்தடத்தினில் fairy tales போடுவதிலேயே கூட அலசல்கள் தொடர்கின்றன எனும் போது - ரெகுலர் தடத்தின் கார்ட்டூன்களும் ஸ்கேன்னருக்குக் கீழே செல்வதில் வியப்புகள் இல்லை தானே ?!

      Delete
  65. வெகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு cartoon special edition. கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எடிட்டர் சார் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  66. Dear Editor,
    It will be nice to have one cartoon per month
    Hence my choices will be
    1.Chick bill X3
    2.Lucky luke X3
    3.Sherlockx2 full or small one combos
    4.Ran tan plan x2
    5.Smurf without podi x1
    6.madhiyilla mandiri x1
    All prebook option
    Not part of sandha ofcourse
    The reason is it's getting too serious otherwise
    Can't compare current mood with past
    Just like straight line stories getting acceptance, this may become hit too.
    Regards
    Arvind

    ReplyDelete
    Replies
    1. Nopes sir. .pre-bookings can at best be for 1 special book ; not a whole year's special subscription !

      Delete
  67. ஜானிதான் என் பேவரைட்.அவருக்கே என் ஓட்டு.அப்புறம் கார்ட்டூன் ஸ்பெஷல் டபுள் ஓ.கே சார்.

    ReplyDelete
  68. என் choice...

    சிக் பில்
    லக்கி லூக்

    சோடா அருமையாக உள்ளது... But சோடா வருவது ஜானிக்கு பதிலாக என்றால் எனக்கு வேண்டாம்...

    Bluecoatsக்கு பதிலாக Soda வந்தால் நன்றாக இருக்கும்...

    So, எனது vote is for ரிப்போர்ட்டர் ஜானி...

    ReplyDelete
    Replies
    1. கார்ட்டூன்களுக்கு ஸ்லாட்ஸ் கூட்ட வழி தேடுவோமா ? எனும் போது இருக்கும் ஸ்லாட்டை (ப்ளூ கோட்ஸ் ) மடை மாற்ற நினைக்க சுகப்படுமா சார் ?

      Delete
  69. 1. ரின்டின்க்கேன் - எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்.
    2. ஹெர்லாக் ஷோம்ஸ் - ஒரிஜினல் ஷெர்லாக் என் மிகவும் பிடித்த கதாநாயகன் ஆகையால் இவர் அடிக்கும் லூட்டிகள் எனக்கு சகிக்கவில்லை.
    3. லியனார்டோ தாத்தா - இதுவும் எனக்கு பிடித்த புத்தகமே
    4. SMURFS - வசனங்கள் ஈர்க்கவில்லை
    5. பென்னி - கார்ட்டூன்களில் எனக்கு பிடித்தவைகளில் கடைசியாக இருப்பவர்.
    6. கிளிப்டன் - கதைகள் ஈர்க்கவில்லை. ஒரு வேளை இவரின் நல்ல கதைகளை நான் பிடிக்கவில்லையோ என்னவோ
    7. மதியில்லா மந்திரி - ஏனோ ஈர்க்கவில்லை, கதையில் புதுமையான ட்விஸ்ட்கள் இல்லாதது காரணமாக இருக்கக் கூடும்

    கூட்டாஞ்சோறு SELF எடுக்காது என்றே தோன்றுது சார்.

    கார்ட்டூன் காம்போ நல்ல ஐடியா


    YES TO SODA AND NO FOR JOHNNY

    ReplyDelete
  70. Making Soda compete with Johny for a slot is not a right step in reinventing every 10 years. It is a step back. As a part of our younger audience, I hope Soda gets a slot next year.

    ReplyDelete
    Replies
    1. Why would a question of a tight budget need to imply that this is a part of the re-inventing exercise sir ? Moreso in a year when Tex grabs a major portion of the budget ? Let's not keep looking for hidden reasons when there simply are none !

      Delete
  71. // 2023 அட்டவணையில் பாஸ்டர் டேவிட் சாலமன் (SODA) அல்லது நமது மலர்ந்த முகத்துக்காரர் ரிப்போர்ட்டர் ஜானியா ? //
    சோடா பிடிக்கும்தான்,எனினும் ஜானிக்கே முன்னுரிமை...
    ரிப்போர்ட்டர் ஜானிக்கு ஓட்டு போட்டாச்சி...

    ReplyDelete
  72. // ஸ்டீல்பாடி ஷெர்லாக் : Maybe இவரது முழுநீள சாகசம் ஒன்றை வெளியிட்டால் ரசிக்குமா guys ? ஜஸ்ட் curious !! //
    தாராளமாக இரசிக்கலாமே...

    // ரின்டின் கேன் : ஞானசூன்யம் தான் //
    ஏனோ பெரிதாய் ஈர்க்கவில்லை...

    // லியனார்டோ தாத்தா : //
    ஏனோ பெரிதாய் ஈர்க்கவும் இல்லை,ரசிக்கவும் இயலவில்லை...

    // SMURFS :இன்னமும் கைவசம் 5 டைட்டில்கள் கணிசமாகவே தேங்கி நிற்கின்றன ! //
    எனக்கும் மிகவும் பிடித்தவை ஸ்மர்ப்ஸ்,இதில் பேசப்படும் அரசியல் நுட்பமானது...இது சார்ந்த புரிதல் பரவலாக எவரையும் சென்று அடையவில்லையோ என்று தோன்றுகிறது...
    ஸ்மர்ப்ஸ் குழந்தைகளுக்கானது என்ற புரிதலும் உள்ளது,அது தவறென்று எனக்கு தோன்றுகிறது...!!!
    கைவசம் உள்ள 5 டைட்டில்களையும் வாகான ஒரு தருணத்தில் ஹார்ட் பைண்டிங்கில் முன்பதிவு அல்லது ரெகுலர் இதழ்களில் எந்த ஸ்லாட்டில் தோதுபடுகிறதோ அதில் வெளியிட்டால் கண்ணை மூடிக் கொண்டு நான் வாங்கத் தயார்...!!!

    // பென்னி : //
    எனக்கு பிடித்தே இருந்தது,கதைக் களங்கள் ரசிக்கக் கூடிய வகையில் இருந்தது...

    //கிளிப்டன் :கேரட் மீசைக்காரரால் ஒரு முழுமையான காமெடி நாயகராயப் பரிணமிக்க சாத்தியப்படவில்லை என்று தோன்றுகிறது ! Am I right ? //
    கிளிப்டன் செமி கார்ட்டூன் வகையில் மாட்டிக் கொண்டதுதான் காரணமோ ?!
    ஜில்லார் (ஜில் ஜோர்டன்) கதைகளுமே இப்படித்தானே...!!!
    செமி கார்ட்டூன் கதைகளில் மொழிபெயர்ப்பில் சிரிப்பு வித்தைகளைக் காட்டினால்தான் களம் நம்மை ஈர்க்கும்...இது ரொம்பவே சவாலான பணிதான்...

    // மதியில்லா மந்திரி : //
    விக்கிரமாதித்தனின் விடா முயற்சியைப் போல,மந்திரியாரின் விடா முயற்சியும் நம்மை நகைச்சுவையுடன் ஈர்க்கக் கூடியவை...
    மதியில்லா மந்திரி எப்போதும் எனது ரசனைப் பட்டியலில் இருப்பவர்...
    இருப்பினும் கிளிப்டன் ஓகே ரகம் தான்...

    ReplyDelete
  73. // Maybe 3 சிக் பில் கதைகள் ; அல்லது 4 லக்கி லூக் கதைகள் or 3 ப்ளூகோட்ஸ் என்ற ரீதியில் வேண்டுமானால் திட்டமிடலாம் ! //
    கார்ட்டூன் வறட்சியைப் போக்க சிறப்பான யோசனை,சிக்பில்,லக்கி,ப்ளூகோட்ஸ் மூன்றையும் கலந்து ஒரு காம்போ பேக் தர இயலுமா சார் ?!
    அந்தந்த இதழ்களின் வெளியீட்டார் ஏற்றுக் கொள்வார்களா ?!
    அவ்வாய்ப்பு இல்லையெனில் சிக்பில் அல்லது லக்கி அல்லது ப்ளூகோட்ஸ் குண்டு இதழ்கள் ஓகேதான்...
    அடுத்தடுத்த ஆண்டுகளில் மூவரையும் அடுத்தடுத்து வெளியிட்டாலும் நலமே..

    ReplyDelete
  74. // slipcase-க்குள் வெவ்வேறு நாயகர்களின் தனித்தனி இதழ்களை நுழைத்து ஒரு CARTOON COMBO உருவாக்கிடலாமா ? //
    இது விற்பனை அளவில் பெரிதாய் சாதிக்குமா என்ற சந்தேகம் உள்ளது சார்,அப்படி வெளியிட்டால் கண்டிப்பாக slipcase செட்டுடன் அனைத்து இதழ்களும்தான் விற்பனை,தனித் தனியாக இதழ்கள் கிடைக்காது என்ற ஒரு கட்டாயச் சூழலை ஏற்படுத்தினால் ஓரளவு வெற்றி வாய்ப்பு உண்டு என்று தோன்றுகிறது...
    2015 slipcase செட்களில் வந்த இதழ்கள் பிரித்து விற்கப்பட்டதாக நினைவு...

    ReplyDelete
  75. இரண்டாம் திட்டமிடலை விட முதல் திட்டமிடலுக்கு வெற்றி வாய்ப்பு சதவீதம் அதிகம் உள்ளதாய் தோன்றுகிறது...

    ReplyDelete
  76. வோட்டுப் போட்டுட்டேன்!
    கார்ட்டூன் இல்லா காமிக்ஸ் - பீஸ் இல்லாத பிரியாணி போல!

    ரின் டின் கேன் - ரொம்ப ரொம்ப பிடிக்கும்!
    ஸ்டீல்பாடி - ஓரளவு பிடிக்கும்!
    லியனார்டோ தாத்தா - ரொம்ப ரொம்பப் பிடிக்கும்!
    ஸ்மர்ஃப்ஸ் - ரொ.ரொ.ரொ. பிடிக்கும்!
    பென்னி - ஓரளவு பிடிக்கும்!
    க்ளிப்டன் - ரொ.ரொ.பிடிக்கும்!
    மதியில்லா மந்திரி - ரொ.ரொ.ரொ. பிடிக்கும்!
    மேக் & ஜாக் - ரொ.பிடிக்கும்
    ப்ளூகோட்ஸ் - ரொ.ரொ.ரொ.பிடிக்கும்
    சோடா - ரொ.ரொ.ரொ.பிடிக்கும்!

    ஒரு சாதா காமிக்ஸை உருவாக்குவதைக்காட்டிலும், ஒரு கார்ட்டூன் படைப்புக்கு 100 மடங்கு கிரியேடிவிட்டியும், உழைப்பும், நகைச்சுவை உணர்வும் தேவைப்படுகிறது.

    மெல்ல மெல்ல சிரிக்க மறந்துகொண்டிருக்கிறோம்!

    சொளேர் சொளேர் என்று ரத்தம் தெறிப்பதையும், மண்டைகள் துண்டாக்கப்படுவதையும், மண்டைத்தொலிகள் உரிக்கப்படுவதையும் ரசித்து ரசித்துப் படித்து மனதுக்குள் உறைந்துகிடக்கும் வன்மத்திற்கு தீனி போடுகிறோம்!

    மனதை லேசாக்கிடும் கார்ட்டூன்களை ஆதரிப்போம்! வால்ட் டிஸ்னி & ஆஸ்ட்ரிக்ஸ் கதைகளை மீண்டும் தமிழுக்குக் கொண்டுவரயிருக்கும் நம் எடிட்டரின் முயற்சிகளுக்கு (ஹிஹி) ஆதரவளிப்போம்!

    கார்ட்டூன் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. // ஒரு சாதா காமிக்ஸை உருவாக்குவதைக்காட்டிலும், ஒரு கார்ட்டூன் படைப்புக்கு 100 மடங்கு கிரியேடிவிட்டியும், உழைப்பும், நகைச்சுவை உணர்வும் தேவைப்படுகிறது.

      மெல்ல மெல்ல சிரிக்க மறந்துகொண்டிருக்கிறோம்!

      சொளேர் சொளேர் என்று ரத்தம் தெறிப்பதையும், மண்டைகள் துண்டாக்கப்படுவதையும், மண்டைத்தொலிகள் உரிக்கப்படுவதையும் ரசித்து ரசித்துப் படித்து மனதுக்குள் உறைந்துகிடக்கும் வன்மத்திற்கு தீனி போடுகிறோம்! //


      அருமையாக சொன்னீர்கள் விஜய். எனது மனதில் உள்ளதை அப்படியே நீங்கள் எழுதிவிட்டீர்கள்.

      Delete
    2. வால்ட் டிஸ்னி....ஆஸ்ட்ரிக்ஸ் போன்ற கதைகளை இதில் வெளியிடலாம்....பிரீமிய விலையில் ....பெரிதும் நண்பர்களுக்கு ஈர்ப்பில் லா தற்போதய கதைகளில் இரண்டுக்கு ஒன்றாய் இதை விட்டுப் பார்க்கலாம்...

      Delete
    3. அருமையான கருத்து விஜய் Sir

      Delete
    4. ஏனுங்னா...சந்தடி சாக்கிலே செம டார்க்கான SODA கதையையும் சிரிப்புப் பார்ட்டிங்க கூட மூட்டை கட்டிப்புட்டீங்களே ?

      Delete
    5. அதிலும் கார்ட்டூன் பாணி ஓவியம் தானே எடிட்டர் சார்?!! சிரிப்புமூட்டினாத்தான் கார்ட்டூனாக்கும்?!!

      Delete
    6. சார், சோடா மூட்டை கட்டி விட கூடியவரல்ல... சோடா or smurf ஆ என்று கேட்டு இருந்தால் சோடா வெற்றி பெற்றிருப்பார்.

      Delete
    7. @Parani from Bangalore
      @கோயம்புத்தூரிலிருந்து...பொன்ராஜ்
      @Ganesh Kumar
      @Vijayan
      @Erode VIJAY
      @udhay adi

      ஆதரவளித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள் பல!

      கார்ட்டூனை மீட்டெடுப்போம்...
      காமிக்ஸை வாழ வைப்போம்!

      Delete
  77. Dear EDI,

    கொஞ்ச நாட்களுக்கு முன்பு Velerian காமிக்ஸ் sci-fi பற்றிய நீங்கள் எழுதியதை நினைவில் உள்ளது அந்த கதைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டா.

    ReplyDelete
    Replies
    1. வாசிக்க நம்மவர்கள் தயாராக இருந்தாகணுமே நண்பரே ?!

      Delete
  78. நமது இதழ்களில் வெளிவந்த அனைத்து கார்ட்டூன் நாயகர்களின் கதைகளும் நன்றாகதான் இருந்தன.சுமார் கதைகள் என்றால் ஸ்டீல்பாடி ஷெர்லாக் கதைகளை மட்டுமே சொல்லாம். ஸ்மர்ஃப்ஸ், பென்னி,ரின் டின் கேன், மதியில்லா மந்திரி, லியனார்டோ தாத்தா, சிக் பில், லக்கி லூக் கதைகள் புதிய இளம் வாசகர்களை நமது காமிக்ஸ் இதழ்களை நோக்கி வரவைக்கும். கார்ட்டூன் கதைகள் ஒரு 20 சதவீதமேனும் ஆண்டுதோறும் வெளியிடப்படவேண்டும். அதுவும் ஒரு புதிய Brand பெயரில் (Junior Lion) ; ஒரு குறிப்பிட்ட Brandல் கார்ட்டூன் கதைகள் வெளிவரும் போது அதனை தனி சந்தாவாகவும் அறிமுகம் செய்தால் குழந்தைகளுக்கு பரிசளிக்க ஏதுவாக இருக்கும். புத்தக கண்காட்சிகளில் 18+ கதைகளை தவறுதலாக சிறுவர்களுக்கு வாங்கி கொடுத்து பின்பு காமிக்சுக்கு தடா என்ற நிலையை தவிர்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார், மினி லயன் மீண்டும் சிறுவர்களுக்கென வருவது தான் சரியானதாக படுகிறது... பழயவர்களுக்கும், புதியவர்களுக்கும் அந்த லோகோ அலாதியான அனுபவம் தரக்கூடியது. வருடம் 6 இதழ்கள் நிச்சயம் தரலாம்... சிறுவர்களுக்கு மட்டும் விலை குறைந்த Subsidised இதழ்களாக கொண்டு வருவீர்களானால் அதற்கு விருப்பமுள்ள வாசகர்களை ஸ்பான்சர்சிப் கேட்கலாம்... என்னால் இயன்ற sponsor தொகையை நானும் தருவேன்.

      Delete
    2. That "கண்ணாடிய திருப்பினா ஆட்டோ ஓடுமா ஜீவா ?# moment !

      3 ஆண்டுகளுக்கு முன்னே வரைக்கும் கார்ட்டூன்களுக்கு தனிப்பிரிவு (சந்தா C ) ; குறைந்தது ஆறோ / எட்டோ புக்ஸ் என்பது நடைமுறையில் இருந்த சமாச்சாரம் தானே சார் ? ஒவ்வொரு சிரிப்பு நாயகராய் சாத்து வாங்க வாங்கத் தானே, எண்ணிக்கையினைக் குறைத்துக் கொண்டே போய் இன்றைக்கு கார்டூனுக்கென தனியாய்த் தடமின்றி மெயின் சந்தாவுக்குள் கரைத்திருக்கிறோம் ? இதனில் "ஜூனியர் லயன்" என்று பெயரை மட்டும் மாற்றி புதிதாய் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது ?

      இதோ - "கதை சொல்லும் காமிக்ஸ்" exclusively for kids என்று அறிவித்து அதன் சந்தா எண்ணிக்கை 200 ஐத் தொடக்கூட தடுமாறிக் கொண்டு நிற்கும் பரிதாபத்தைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ! சர்வ நிச்சயமாய் அதன் முதல் சீசனே அதன் இறுதியாகவும் இருக்கப் போகிறது !

      கார்ட்டூன்களை ரசிக்கவோ ; அல்லது பசங்களுக்கு அவற்றைக் கதைகளாய்ச் சொல்லி அறிமுகம் செய்திடவோ நமக்கு இயன்றாலன்றி இந்த ஜானர் தழைக்க வழி கிடையாது சார் ! இது தான் யதார்த்தம் எனும் போது, மறுக்கா ஜூனியர் லயன் ; மினி லயன் என்ற திட்டமிடல்கள் சாதிக்கப் போவது எதையுமில்லை !

      Delete
    3. @ udhay adhi : நண்பரே...."சர்வதேச A4 சைசில் இதழ்களெல்லாம் வரவேண்டும் என்பது தான் காலத்தின் கட்டாயம்" எனும் அதே மூச்சில் "குறைந்த விலையில் புக்ஸ் வரவும் வேண்டும்" என்கிறீர்கள் ! தற்போதைய அமெரிக்க டாலரின் மதிப்பு என்னவென்று ஒரேவொருவாட்டி நெட்டில் பாருங்களேன் - இன்றுள்ள விலைவாசிகளில் லெமூரியாவில் தான் இனிமேல் subsidised / குறைந்த விலை இதழ்கள் சாத்தியமாகிடும் என்ற நிலவரம் புரியும் !

      வெறும் 500 பிரதிகள் அச்சிட்டிருக்கிறோம் "சின்டெரெல்லா" இதழில் ! நூறு ரூபாய்க்கு ; வண்ணத்தில் ; ஆர்ட் பேப்பரில் ; முழுசாய் ராயல்டி செலுத்தி ! இந்த ஐநூறை விற்க இன்னும் ஐந்து வருடங்கள் எடுத்தாலும் ஆச்சர்யம் கொள்ள மாட்டேன் ! இதையும்,தொடரவுள்ள 2 இதழ்களையும் மட்டும் யாராச்சும் sponsor செய்தார்களெனில், டக்கென்று எங்க ஊரின் நடுவே ஒரு சிலையை எழுப்பிடுவேன் !

      Delete
    4. மன்னிக்கவும் சார்... நான் விலையை சிறுவர்களுக்கு மட்டும் மானிய விலையில் தந்திட வேண்டுகிறேன். நண்பர் ராகவன் அவர்களும் பள்ளிக்கூடங்களுக்கு 500 புக்ஸ் அன்பளிப்பு தர பதிவு போட்ட பிறகுதான் மானிய விலை கோரி பெறலாம் என்ற் சொல்கிறேன் சார்...
      அதுவும் பள்ளிக்கூட சிறுவர்களுக்கு மட்டுமே தான் சார்.
      மேலும் கார்ட்டூன் கதைகளுக்கு இப்போதுள்ள சைஸ் பொருத்தமானதே தான் சார்.
      வளர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்த எங்களில் பலர் நம்மை போல பால்யத்து மக்களுக்கு காமிக்ஸ் படிக்க உதவிட இப்படி ஏதாவது செய்தாவது இளம் பாலாரை காமிக்ஸ் சங்கமித்தில் சேர்த்திட ஒரு சிறு யோசனை... சாத்திய படுமா என்பதை முடிவெடுப்பது நீங்களே. கார்ட்டூன் கதைகள் தொடர்ந்திட ஏதாவது செய்ய வேண்டும் என்றே இதை எல்லாம் சொல்கிறேன் சார்.

      Delete
  79. கார்டூன் ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை பரிசீலனை செய்ததற்கு மிக்க நன்றி விஜயன் சார். :🙏🙏🙏🙏

    ReplyDelete
  80. ஷெர்லாக் கடைசியில் ஒரு ட்விஸ்ட் வைப்பாறு.......


    விழுந்து விழுந்து சிரிச்சேன்......

    படம் தான் கொஞ்ச. கோமாளி தனம்

    ReplyDelete
  81. மந்திரி சொல்லவே வேணாம் ஹா ஹா ஹா

    ReplyDelete
  82. ஜூனியர் லயன் னு பேர் போட்டா தான் சிரிப்போம் வாங்குவோம்.....

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இந்த மதியில்லா மந்திரியையும் பிடிக்கும்!
      இந்த மந்திரி யாரென்று தெரியவில்லை! ஆனால் ஒருநாள் நேரில் சந்தித்துவிட ஆசை!

      Delete
  83. Sir
    நான் ஒரு ரின் டின் கேன் தீவிர ரசிகன். இன்று காலை கனவில் உங்களிடம் ஏன் இதனைத் தொடர கூடாது என்று உங்களிடம் கேள்வி கேட்டு அதற்கு நீங்கள், வித்தா நான் ஏன் போடாமல் இருக்கிறேன் என்று பதில் கூறிய மாதிரி கனவு.

    இங்கு வந்து பார்த்தால் ....

    ஜூனியர் லயன் small size less cost will it help ? I am not sure.

    Many feel that why spend Rs 150 to buy just cartoon. That might be one of the reason

    Anyway it's going to remain as D R E A M only..

    Bye
    Bye
    Mydear rin tin can

    ReplyDelete
    Replies
    1. //Many feel that why spend Rs 150 to buy just cartoon//

      இருக்கக்கூடும் சார் !

      Delete
  84. ரின்டின்கேன்
    பென்னி
    கிளிப்டன்

    ReplyDelete
  85. கடந்த ஒரு வருடமாக தான் காமிக்ஸ் படிக்கிறேன். 100 புத்தகங்கள் வரை வாங்கி உள்ளேன்.
    அவற்றில் எனக்கு பிடித்தது
    1) பிரியமுடன் பிணைக்கைதி ரின்டின்கேன்
    2) ஜேசன் பிரைஸ் தொடர்
    3) காசு பணம் துட்டு smurf

    அப்புறம் தான் எல்லாம்.


    ReplyDelete
    Replies
    1. // பிரியமுடன் பிணைக்கைதி //

      One of my favourite rin tin story. பல முறை மறுவாசிப்பு செய்த கதையிது.

      Delete
    2. // பிரியமுடன் பிணைக்கைதி //

      முதல் பக்கமே அசத்தலாக இருக்கும்...!

      Delete
  86. We want Smurfs, rin tin tan and மதிஇல்லா மந்திரி

    ReplyDelete
  87. போடலேன்னா பன் உண்ணா போராட்டம நபத்து வோம்

    ReplyDelete
    Replies
    1. போராட்டம் இப்போவே "நபத்துப்" போன மாரி கீதே சார் !

      Delete
  88. இது கடி பாஷை சார்

    ReplyDelete
  89. கார்ட்டூன் புத்தகங்கள் கதைகளைவிட படங்களை ரசிக்கப் பழகினால் தன்பால் ஈர்த்து விடும். ஸ்மர்ப்ஸ் படங்களை இன்றெல்லாம் ரசிக்கலாம்.

    எப்போதும் எனது ஓட்டு கார்ட்டூன்களுக்கு உண்டு.

    Spirou & Fantasio, Marsupilami, Yoko Tsuno முயற்சிக்கும் எண்ணம் உண்டா சார்?

    கார்ட்டூன் கதைகளை முன்பதிவு முறையில் வெளியிடுங்கள். உங்கள் கையையும் கடிக்காது. ரசிகர்களும் திருப்தியாகி விடுவார்கள்.

    ReplyDelete
  90. Many feel that why spend Rs 150 to buy just cartoon. That might be one of the reason

    What a funny reason.
    Please consider how much money cinema theatre.
    What a pathetic word just cartoon.
    Always just
    Just Tex, tiger, xiii,etc.....

    Our life always Just.,,(காலையில் எந்திரிச்சா காஃபி,
    எந்திரிக்கிலினா பால் ) இதுதான் our life. Just life.

    Why like cartoons,. .. it gives more HAPPINESS OF OUR LIFE.

    இந்த பூமியில் வாழும் வரை மகிழ்ச்சியாக மட்டுமே இருப்போம்.

    ReplyDelete
  91. ஸா கோர்...
    படித்து முடித்தாகிவிட்டது.
    5ம் பாகம் கொஞ்சம் தத்துவ விசாரமாக இருந்தாலும் ரசிக்க முடிந்தது.
    6ம் பாகம் பாட்ரிக் ஸாகோர் ஆக அவதாரமெடுக்கும் படலம். ஸாகோரின் promo காட்சி அமைப்புகள் செம..
    6 பாகங்களிலும் சித்திரங்கள் பேனலுக்கு பேனல் அற்புதம். கலரிங்கும் கண்ணுக்கு இதமாகவே தெரிந்தது.
    மொத்தத்தில் 6 பாகங்களில் தனக்கென ஒரு வலுவான இடத்தை நம்மிடையே உறுதி செய்திருக்கிறார் ஸா கோர்.
    இனி வரும் ஸ்கோர் கதைகளும் இது போலவே சிறப்பாக இருத்தல் வேண்டும்.
    நண்பர் ஒருவர் பதிவிட்டது போல், ஸாகோர் கதைகளை முத்து லோகோவில் வெளியிடலாம்.
    லயனுக்கு டெக்ஸ் கதைகள் மாதிரி முத்துவக்கு ஸாகோர் கதைகள் இருக்கலாம்.
    தீபாவளிக்கு மத்தாப்பூ வர்ணஜாலம் படைத்துவிட்டீர்கள் எடிட்டர் சார். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  92. Smurfs due to similar faces we are unable to enjoy.

    Mathi illa mantri / leonardo - due to small stories.some of them are good but not all. Pictures are not good.

    Clipton - you already said about the problem
    Benny - good for kids.
    Sherlock - joke?



    ReplyDelete
  93. ரிப்போர்ட்டர் ஜானி கதைகளை எனக்குப் பிடிக்கும்!

    ஆனால் ஜானியா, சோடாவா என்று கேட்டால் என் வோட்டு சோடாவுக்கே!

    காரணம் - தெரியவில்லை!

    ReplyDelete
  94. பழைய ஜானியா, 2.0 ஜானியா - எது வேண்டும் என்று யாராவது கேட்டால் பழைய ஜானிக்கே என் வோட்டு!

    காரணம் - தெரியும். ஆனால் சொல்ல மாட்டேன்!

    ReplyDelete
  95. //சந்தடி சாக்கிலே செம டார்க்கான SODA கதையையும் சிரிப்புப் பார்ட்டிங்க கூட மூட்டை கட்டிப்புட்டீங்களே ?//

    சோடாவும் அருமையான தொடர் சார். ஆனால் ஜானியுடன் அந்த இடியாப்பச் சிக்கல் ஸ்டைலுடன் அதை ஒப்பிட முடியவில்லை. அது புது பாணி... அதுவும் பிடித்திருந்தது.

    அதுவா? இதுவா? என கேட்கும் போது ஏதாவது ஒன்றைத்தானே தேர்வு செய்ய முடிகிறது? இந்த நிலை ஏற்பட்டதுதான் கொடுமை என நினைக்கிறேன்...

    ReplyDelete
  96. நானும் அதையே ஆமோதிக்கிறேன் எடிட்டர், ரிப்போர்ட்டர் ஜானி வேறு soda வேறு

    ReplyDelete