Saturday, July 09, 2022

ஒரு பணிமலைப் படலம் !

 நண்பர்களே,

வணக்கம். சில நேரங்களில் மெய்யாலுமே சந்தேகம் எழுவதுண்டு - நமது ஸ்கிரிப்ட்களை எழுதுவதெல்லாம் யாரோ என்று !! சும்மா ஒரு பட்டியலைப் போட்டுத் தான் பார்ப்போமே - 50 ஆண்டுகளாய்த் தட தடத்து வரும் இந்த காமிக்ஸ் எக்ஸ்பிரஸின் இந்த நொடியின்  (production) பின்னணி என்னவென்று ?

To start off

 • எழுபதைத் தொடவிருக்கும் ஒரு பிரெஞ்சு எழுத்தாள அம்மணி !
 • எழுபதுகளின் பின்பகுதிகளில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாளர் !

அப்பாலிக்கா :

 • ஒரேயொரு முழுநேர DTP பணிப்பெண்  !
 • ஒரேயொரு பகுதிநேர டிசைனிங் பணிப்பெண்  !
 • இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கும் ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா - ஒற்றை காமிக்சைக் கூட வாசித்திருக்கா சிறப்புடன் !

அப்புறமாய் :

 • நிர்வாக ஏற்பாடுகள் ; தயாரிப்பு ஒருங்கிணைப்பு ; எப்போவாச்சும் பேனா பிடிப்பதென்ற பொறுப்புகளுடன் one ஜூனியர் எடிட்டர் !

And இவர்களுடன் :

 • Once upon a time - தலை நிறைய கேசமும், ஆந்தைக்கண் நிறையக் கனவுகளுமாய் புகுந்து, இன்றைக்கு கேசத்தைத் தொலைத்திருப்பினும், கனவுகளைத் தொலைத்திருக்கா ஒரு மு.ச. & மூ.ச.காதலன் - எடிட்டர் என்ற அடையாளத்துடன் ! 

இந்த ஆட்பலத்துடன், மாதத்துக்கு ஒரு தபா ஒரேயொரு கையெழுத்துப் பத்திரிகையை உருப்படியாய்  ரெடி செய்திட முடிந்தாலே அது பெரும் அதிசயமாகப் பார்க்க வேண்டிய சமாச்சாரம் ! ஆனால் - ஆனால்...... இது தான் ஆண்டொன்றுக்கு தோராயமாய் 6000+ பக்கங்களைக் கடந்த 10+ ஆண்டுகளாய் உருவாக்கி வரும் டீம் என்று சொன்னால் நம்புற மாதிரியா இருக்கு ? "ரைட்டப்பு...இப்போ அதுக்கு இன்னான்றே ?" என்ற கேள்வி தானே ? இதோ -  ஓட்டமெடுத்துக் கொண்டிருக்கும் ஆண்டின் மூன்றாவது க்வாட்டரில், அகஸ்மாத்தாய்ச்  சேர்ந்திருக்கும் ஒரு அசாத்தியப் பணிமலையினை மிரள மிரளப் பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் தான் தலைக்குள் கலவையாய் சிந்தனைகள் பிரவாகமெடுத்து வருகின்றன !! தொடரவிருக்கும் 30 நாட்களுக்குள் நாங்கள் தயார் செய்திட வேண்டியிருப்பது எம்புட்டுப் பக்கங்களை என பாக்குறீகளா ?

 • டெக்ஸ் - "மௌன நகரம்" - 224  பக்கங்கள் Black & White
 • மாண்ட்ரேக் ஸ்பெஷல் - 208 பக்கங்கள் Black & White
 • மாண்ட்ரேக் இதழுடன் ஒரு ஜாலி இணைப்பு - ?? பக்கங்கள் 
 • தோர்கல் - "கூண்டிலோரு கணவன்" - 100  பக்கங்கள் - Color
 • கைப்புள்ள ஜாக் - விலையில்லா இணைப்பு - 16 பக்கங்கள் - Color

கதை சொல்லும் காமிக்ஸ் :

 • சிண்ட்ரெல்லா - 40 பக்கங்கள் - Color 

புத்தக விழா ஸ்பெஷல்ஸ் :

 • சுஸ்கி - விஸ்கி ஸ்பெஷல் - 112 பக்கங்கள் - Color 
 • ZAGOR - 256 பக்கங்கள் - Color

ஆக, இந்த ஆகஸ்டிற்கென மெனுவில் காத்திருப்பன  956 பக்கங்கள் - அந்த மாண்ட்ரேக் இதழுக்கான இணைப்பைச் சேர்க்காமலே ! And இதில் செம கூத்தென்னவென்றால் இந்த பட்டியலுக்குள் - 3 ஹார்ட்கவர்களும் சேர்த்தி

இப்போது பதிவின் முதல் வரியை ஒருவாட்டி வாசியுங்களேன் - நான் சொல்ல வருவது புரியும் !! பெருசாய் ஒரு திட்டமிடலெல்லாம் இன்றி, திடீர் திடீரென நாமே நிர்மாணித்துக் கொள்ளும் உசரங்களைத் தாண்டிக் குதிக்கும் முயற்சிகளில் இது நாள் வரைக்கும் மூக்காந்தண்டைகளைப் பெயர்த்துக் கொள்ளாமல் தப்பியுள்ளோமெனில் - காமிக்ஸை நேசிக்கும் ஒரு கடவுளரின் கரம் இந்தப் பயணத்தின் சுக்கான் மீதிருந்தாலொழிய not possible at all அல்லவா ? இந்த நொடியில் பேந்தப் பேந்தத் தேடிக் கொண்டிருக்கிறேன் - அந்த அரூப சக்தியின் லேட்டஸ்ட் ஒத்தாசைப் படலத்தினை !!

Becos at this point of time, சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் மட்டுமே அச்சு பூர்த்தி  கண்ட நிலையில் உள்ளது ! பாக்கி சகலமுமே - வெவ்வேறு கம்பியூட்டர்களிலும், மேஜைகளிலும், இறைந்து கிடந்து வருகின்றன - DTP / எடிட்டிங் / பிரிண்டிங் பணிகளை எதிர்நோக்கி ! உரிய நேரத்திற்குள் அவை சகலத்தையும் கரை சேர்த்திட அந்தப் புனித மனிடோ தனது இதர ஜோலிகளையெல்லாம் சற்றே ஒத்திப் போட்டு விட்டு கரம் தந்தால் தானுண்டு !! தெய்வமே !!

ரைட்டு...தற்போதைக்குப் பூர்த்தி கண்டுள்ள அந்தச் சுட்டிகளையே இந்த வாரப்பதிவின் focus ஆக வைத்துக் கொள்வோமா ?

Suske en Wiske !! சரியாகச் சொல்வதானால் இவர்களது மறுவருகையின் முதல் விதை மண்ணைச் சந்தித்தது - 2014-ல் ஒரு விருதுநகர் ரயில் நிலையத்து இரவினில் தான் ! அமர்க்களமாய் நமது 2012+ மறுவருகை அமைந்திருக்க, புது ஜானரிலான இதழ்கள் ஒருபக்கம் மெது மெதுவாய்க் காலூன்றிக் கொண்டிருக்க, இங்கே நமது வலைப்பதிவுப் பக்கங்களிலும் "முப்பதே நாட்களில் முன்னூறு மூ.ச.க்களை சமாளிப்பது எப்படி ?" என்ற பாடங்களைப் படித்தபடிக்கே வண்டி ஜாலியாய் ஓடிக்கொண்டிருந்த வேளைகள் அவை ! "சுஸ்கி-விஸ்கி" க்ளாசிக்ஸ்களை மறுக்கா கொண்டு வரலாமே ? என்ற கேள்வி ஒரு இரவு நேரத்து கும்மியின் போது இங்கே பதிவாகியிருந்தது ! நானோ, பெங்களூரு போகும் பொருட்டு விருதுநகர் ரயில்நிலைய பிளாட்பாரத்தில்  குந்தியிருந்தேன் - பக்கத்து பெஞ்சில் பர்மா கடை பரோட்டாவை மேயு மேயென்று மேய்ந்து கொண்டிருந்த ஒரு கோஷ்டியைக் கண்டு கொள்ளாமலிருக்கும் பிரம்மப் பிரயத்தனத்துடன் ! கண்டுகொள்ளாமலிருக்க கண்களுக்கு சாத்தியப்பட்டாலும், மூக்காருக்கும், லிட்டர் லிட்டராய் ஜொள்ளை உற்பத்தி செய்து கொண்டிருந்த நாக்காருக்கும் முடியணுமே ?!! 

"போங்கடா டேய்..." என்றபடிக்கே மனதை பரோட்டாவிலிருந்து இடம் மாறச் செய்யும் முனைப்பில் லேப்டாப்பை திறந்து பதிவுக்குள் புகுந்தேன் ! "சு.வி" கோரிக்கைக்கு, தட்டிக் கழிக்கும் விதமாய் ஏதோவொரு பதில் சொன்னது மட்டும் நினைவிருக்கிறது - simply becos எனக்கு இந்த dutch படைப்பு அந்தக் காலங்களிலேயே ரொம்பவே கொயந்தப்புள்ளைத்தனமாய்த் தென்பட்ட சமாச்சாரம் ! 1987-களின் ரசனை அளவுகோல்களுக்கே சுஸ்கி & விஸ்கி செம குட்டீஸ் கதைகளாய்த் தென்பட்டிருக்க, 2014-ல் "க்ரீன் மேனர்" ; இரவே..இருளே..கொள்ளாதே போலான கதைகளின் ஒப்பீட்டில் எனக்கு இந்தப் பொடிப்பசங்க துளி கூட ரசிக்கவில்லை தான் ! In fact எனக்கு ரொம்ப காலமாகவே ஒரு கேள்வியுண்டு - "நம்மாட்கள் இந்தக் கதைகளை தலையில் தூக்கி வைத்து  கொண்டாடுகிறார்களே ?! How come  ???"  என்று ! 

'ஈயம் பூசுனா மாறி ஒரு உருட்டு...பூசாத மாறி இன்னொரு உருட்டு' என்று அந்த நொடியில் கோரிக்கையைச் சமாளித்திருந்தாலுமே, எனக்குள் லைட்டாய் ஒரு எண்ணம் - 'கலரில் ; ஆர்ட்பேப்பரில் போட்டால் இந்தத் தொடர் டாலடிக்குமோ ? நாம தான் தட்டிக் கழிச்சிட்டே போறோமோ ?' என்ற ரீதியில் ! அப்போதெல்லாம் ஆண்டுக்கு 18+ புக்ஸ் போல் குறைவாய் மட்டுமே நமது திட்டமிடல்கள் இருந்து வந்தன ; so லொடக்கென்று ரெண்டோ-மூணோ ஸ்லாட்களை ஏற்படுத்துவது கம்பு சுத்தும் கடினமெல்லாம் கிடையாது தான் ! இருந்தாலும் தயக்கமே மேலோங்கியது ! கொசுக்கடிக்குள் பொழுதை நகற்றிக் கொண்டிருக்க, இரவு பத்தேமுக்காலுக்கு வர வேண்டிய ரயிலானது செம லேட் ; நடுச்சாமத்துக்கு முன்னே வராதென்று ஸ்பீக்கரில் அலறியது ! நியாயமாய்ப் பார்த்தால் கொலைவெறி பொங்கியிருக்க வேண்டும் உள்ளாற ; ஆனால் surprise ...surprise ...எனக்கோ செம குஷியாகிப் போனது  !! தம்மாத்துண்டு பேக் மட்டுமே லக்கேஜ்  என்பதால் தூக்கிக் கொண்டு விறு விறுவென்று வாசலுக்குப் போய் ஒரு ஆட்டோவைப் பிடித்து "அண்ணாச்சி...பர்மாக்கு விடுங்க !!" என்றேன் கெத்தாய் ! அப்போதெல்லாம்   ரயில் நிலையத்திலிருந்து கால் கிலோமீட்டர் தொலைவிலேயே பர்மாவின் கிளையொன்றிருந்தது !! ரயிலின் தாமதத்தால் புண்பட்ட மனதை பரோட்டோவால் ஆற்றிய பின்னே, உலகத்தையே ஒருவித தயாளத்தோடு பார்க்கும் குணம் குடியேறியிருந்தது ! பின்னியெடுக்கும் கொசுக்கடிக்கு மத்தியில் இன்னொரு மணி நேரத்தை பிளாட்பாரத்தில் ஒப்பேற்ற வேண்டிய அவசியம் கூட அந்த இரவினில் கடுப்பேற்றவில்லை ! அப்போது எழுந்தது தான் - ஹாலந்தின் திசையில், சுஸ்கி-விஸ்கி உரிமைகளுக்கென ஒரு கல்லை வீசிப் பார்ப்போமே என்ற எண்ணம் ! 

கிட்டத்தட்ட 20+ ஆண்டுகளாய் அவர்களோடு தொடர்பிருக்கவில்லை எனும் போது, ஆட்கள் யாரையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் ; so முன்னேயும், பின்னேயுமாய் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் நாட்களை விழுங்கிடும் என்று தான் நினைத்திருந்தேன் ! So உடனடியாய் பதில் கிட்டுமென்ற எதிர்பார்ப்பெல்லாம் இல்லாமல் ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டேன் ! ஆனால் surprise ...surprise ....விழுங்கிய பரோட்டா வயிற்றுக்குள் கிரைண்டரை ஓட்ட ஆரம்பிக்கும் முன்பாகவே அப்போது அங்கே பொறுப்பிலிருந்த ஒரு இளம் பெண் மின்னல் வேகத்தில் பதில் போட்டு விட்டார் ! ஆஹா....செம வேகமாக உள்ளதே !! என்றபடிக்கே துவக்கியது தான் சுஸ்கி-விஸ்கி மறுவருகையின் துவக்கப் புள்ளி ! 

ஆனால் எனக்குள் இருந்த அந்த ஒருவித நம்பிக்கையின்மை - என்னை முழுமூச்சாய் முயற்சிக்க அனுமதிக்கவில்லை ! "கொஞ்சம் யோசிச்சிப்போமே...!! இப்போ தான் மெது மெதுவா உப்மா...ஊசிப்போன வடைங்கிற ரீதியிலான நம் மீதான விமர்சனங்கள் மறைய ஆரம்பிக்குது ; இந்த நேரத்திலே சூதானமா இருந்தா தேவலியே !!" என்ற ஸ்பீட்ப்ரேக்கரோடே பயணிக்க, ஒரு மாதத்தை ஜவ்வு இழுத்திருந்தேன் ! அதற்குள் ஏனோ தெரியலை - அந்தப் பக்கத்திலிருந்தும் பதில் இல்லை ! "ரைட்டு...ஐரோப்பிய புத்தக விழா circuit துவங்கியிருக்கும் ; இன்னும் 2 மாதங்களுக்கு பிசியாக இருப்பார்கள் !" என்று எனக்கு நானே விளக்கம் சொல்லிக்கொண்டு "மின்னும் மரணம்" or ஏதோவொரு புராஜெக்ட்டுக்குள் மும்முரமாகிப் போனேன் ! So சு&வி. தேர் நடுவழியிலேயே அம்போவென நிற்பது போலாகி விட்டது ! 

கொஞ்சமாய் அவகாசமும், கையில் டப்பும் இருந்ததொரு தருணத்தில் - "இந்தவாட்டி final பண்ணிடனும் !" என்ற முனைப்பில் அவர்களோடு தொடர்பு கொண்டேன் ! ஆனால் இம்முறையும் surprise ...but வேறு மாதிரியான surprise !! மின்னலாய் செயலாற்றிய அந்தப் பெண்மணி அந்த நிறுவனத்திலிருந்து பணிவிலகி இருந்தார் !! நேரடிப் பரிச்சயம் இல்லாத போதிலும் அவருடன் தகவல் பரிமாற்றங்கள் ரொம்பவே சுலபமாய் இருந்திருக்க, அந்த நேரமே உரிமைகளை வாங்கிடாது போனோமே என்று என் மீதே கடுப்பாக இருந்தது எனக்கு ! புதிதாய் அந்தப் பொறுப்புக்கு வருபவரிடம் பிள்ளையார் சுழியிலிருந்து fresh ஆக ஆரம்பிக்க வேண்டுமே என்ற அயர்வுமே சேர்ந்து கொள்ள அப்படியே தொங்கலில் கிடந்து போயின அந்த முயற்சிகள் ! தொடர்ந்த பொழுதுகளில், புதுசு புதுசாய் ஏதேதோ குட்டிக்கரணங்களில் பிஸியாகிட, வாரங்கள் / மாதங்கள் / வருஷங்கள் ஓடியே விட்டன ! 

ஒரு வழியாய் அந்த கொரோனா காலங்களின் லாக்டௌன் பொழுதுகளில் கொஞ்சம் நிதானிக்கவும், உங்களின் சு.வி.கோரிக்கையினை நினைவூட்டிக்கொள்ளவும் அவகாசம் கிட்டியது ! அந்த வேளைகளில் அங்கே ஹாலந்திலுமே Work from Home ; எவ்விதப் புத்தக விழாக்களிலும் லேது என்பதால், சுணக்கங்களின்றி நமது கோரிக்கைகளை முன்வைக்க சாத்தியப்பட்டது ! And அவர்கள் அன்போடு நமது கதைத்தேர்வுகளுக்கும் இசைவு சொல்லிட - சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் 1 நனவாகிட all was in place !! இன்னமும் நிறைய "மனத்தளவுப் பாலகர்கட்குக்" கனவு இதழாய் தொடர்ந்திடும் இந்தச் சுட்டீஸ் album நம் பக்கமாய் மறுவருகை செய்திட சாத்தியமானதன் பின்னணி இதுவே ! 

டின்டின்...ஆஸ்டெரிக்ஸ்...லக்கி லூக் ரேஞ்சுக்கு Suske & Wiske சர்வதேச அரங்கில் அசுர வெற்றிக்கொடி நாட்டியிருக்காது போயிருக்கலாம் தான் ; ஆனால் அவர்களது தேசத்தில் / மொழியில் இவர்கள் ஜாம்பவான்களோ - ஜாம்பவான்கள் ! So நிறைய தரக்கட்டுப்பாட்டு கோரிக்கைகளுடன் "எங்கள் செல்லக் கண்மணிகளை உங்க மொழியிலே ஒப்படைக்கிறோம்...பார்த்துக்கோங்க !!" என்று சொல்லவும் படைப்பாளிகள் மறக்கவில்லை ! So ரொம்பவே பயந்து, பயந்து பணியாற்றியுள்ளோம் இதன் ஒவ்வொரு அங்குலத்தினிலும் ! அட்டைப்படங்களை அச்சாய் அவர்களின் ஒரிஜினல் பாணிகளில் அமைத்தால் நலமென்று தீர்மானித்தோம் ; so here you go : அந்த தலைப்பின் எழுத்துருக்கள் மட்டும் லயனின் துவக்க நாட்கள் முதலாய்ப் பணியாற்றிய (ஓவியர்) காளிராஜனின் கைவண்ணம் ! வாழ்க்கையில் நான் பணியமர்த்திய முதல் இளைஞன் என்று காளிராஜனை அடையாளம் காட்டலாம் தான் ; ஆனால் அதையெல்லாம் தாண்டி எனக்கொரு தம்பியைப் போலவே பல வருடங்களுக்கு நமது எக்கச்சக்கப் பதிப்புகளுக்குத் தோள் தந்தவன் அவன் ! 1984-ல் முன்னூறு ரூபாய் சம்பளத்திற்கு அவனை அமர்த்திய போது எனக்கு வயது 17 & சொச்சம் என்றால், அவனுக்கு அப்போது வயசு 17  தான் ! பெரிய பயிற்சியெல்லாம் கிடையாது ; ஆனால் ரொம்பவே நேர்த்தியாய் ப்ரஷ் பிடித்து clean strokes-ல் பணியாற்றுவான் ! பின்னாட்களில் சிகாமணி ; மாலையப்பன் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியபோது செமத்தியாய் தானும் முன்னேற்றம் கண்டவன் ! "ராஜா...ராணி..ஜாக்கி..!" என்ற அந்த எழுத்துக்களையும், அந்நாட்களின் ஞாபகங்களையும் மட்டும் இந்த ஆல்பத்தின் மூலமாய் மீட்டுக் கொள்ள முடிகிறது - simply becos அந்தத் துவக்க நாட்களின் நியூஸ்பிரிண்ட் பதிப்புக்கும், காத்திருக்கும் உயர் தர hardcover முழுவண்ண ஆல்பத்துக்கும் மத்தியில் "ஒற்றுமை" என்று சொல்லிக்கொள்ள வேறெதுவுமே கிடையாது ! 

பக்க அமைப்புகளில் ஒரிஜினல்களின் நேர்த்தி ; அந்நாட்களில் ஓவராய் டப்ஸாவாய்த் தென்பட்ட சில பகுதிகளுக்கு கத்திரி போட்டிருக்க, இன்று அவை துளியும் சேதமின்றி ஆஜராகியிருக்கும் அழகு ;  கண்ணில் ஒத்திக் கொள்ளத் தூண்டும் துல்லியமான கலரிங் ; தொடத்தொட வழுக்கிக் கொண்டே போகும் ஸ்பெஷல் ரக ஆர்ட்பேப்பர்  ; டாலடிக்கும் கலர் பிரின்டிங் ; hardcover  - என்று எல்லாமே இந்த டிஜிட்டல் யுகத்தின் முன்னேற்ற முத்திரைகளாய் காட்சி தருகின்றன ! And icing on the cake  - அந்த நாட்களின் செம average மொழியாக்கத்தினை ஒட்டுமொத்தமாய் மாற்றியமைத்துள்ளோம் !  "உன்ர கிட்டே எக்ஸ்டரா நெம்பர் போட சொல்லிக் கேட்டேனா ? உன்னே கேட்டேனா ?" என்று சட்டையைப் பிடிக்கும் பொங்கலோ பொங்கலெல்லாம் இதன் பொருட்டு  எழ வாய்ப்புகள் சொற்பம் என்றே சொல்லுவேன் - simply becos ஒரிஜினலில் இருந்த மொழிபெயர்ப்பு இன்றைக்கு இந்த ஆல்பத்தைப் புதிதாய்ப் படிக்கக்கூடிய வாசகரை தெறித்தடித்து ஓடச் செய்யும் ரகத்திலேயே இருந்ததென்பதால் ! So "பழமைக்குக் கேடு செஞ்சுப்புட்டான் பாவிப்பய !!" என்ற நெற்றிக்கண்கள் திறக்கும் படலங்கள் இன்னமுமே நடைமுறை கண்டாலும், ''சாரிங்கண்ணா...உங்க நெற்றிக்கண் பார்வைகளை ஏதாச்சும் ஒரு பர்னால்..அல்லாங்காட்டி சைபால் களிம்பு போட்டு ஆத்திக்கிறேன் ; ஆனா 55 வயசுக் கடாமாடாய் நான் பொறுப்பேற்றிருக்கும் ஒரு இதழினில், இது மாதிரியான  மொழிநடையை, nostalgia என்ற பெயரைச் சொல்லி அனுமதிக்க வாய்ப்பே இல்லீங்கண்ணா !!" என்பதே எனது பதிலாக இருக்கும் ! So உங்கள் ஆதர்ஷ சுஸ் & விஸ் இருப்பார்கள் - நயமாய் ; தரமாய் ; பற்களை ஆடச் செய்யாத மொழிநடையினில் ! And இந்த 2 கதைகளையுமே மறுக்கா rewrite செய்து தந்து, இந்த முழியாங்கண்ணனின் தாவு மேற்கொண்டும் தீராதிருக்க உதவிய கண்ணனின் பெயரை அடிச்சுக் கேட்டாலும் சொல்லவே மாட்டேனே !! ஊஹூம்...மூச் !! (ஷப்பா....இந்த தபா மூ.ச.confirm-னா, நமக்குத் பேச்சுத் துணைக்கு ஆளும் confirm !! மைதீன்...அந்த ப்ளீச்சிங் பவுடரை சந்துக்குள்ள ஓரமா ஒளிச்சு வைச்சிருப்பா...வர்ற மனுஷன் பாண்ட்ஸ் பவுடர்னு நினைச்சு பூசிடப் போறாரு !!இந்த இதழ் ரெகுலர் சந்தாத் தடத்திலும் கிடையாது ; முன்பதிவுகளிலும் கிடையாது என்பதாலும், "கார்ட்டூன்" என்ற 'கெட்ட வார்த்த' ஜானரைச் சார்ந்தது என்பதாலும், இதன் பிரிண்ட் ரன் - நமது இ.ப. வண்ணத் தொகுப்பின் எண்ணிக்கையினை ஒட்டிய சொற்பமான நம்பரே ! So இதன் விலை நமது வழக்கங்களைக் காட்டிலும் கூடுதலே - ரூ.330 ! இதே முயற்சி ஒரு ஆக்ஷன் நாயகரின் கதையோடோ ; 'தல' சாகஸத்தோடோ இருந்திருப்பின், நாங்கள்பாட்டுக்கு தைரியமாய், வழக்கமான எண்ணிக்கையில் அச்சிட்டு, "இருப்பில் இருந்தாலும் விற்றுக்கலாம்" என்ற நம்பிக்கையில் காத்திருந்திருப்போம் ; விலையினையும் சற்றே குறைவாய் நிர்ணயித்திருந்திருப்போம் ! ஆனால் கார்ட்டூன் ; கொயந்த பசங்க புக்ஸ் என்ற முத்திரை கொண்ட பதிப்புகளை ரொம்பவே தயக்கங்களோடே கையாள வேண்டியுள்ளது ! சமீபத்தைய "கதை சொல்லும் காமிக்ஸ்" (பீன்ஸ்கொடியில் ஜாக்) இதற்கொரு classic example !! சந்தா எண்ணிக்கை நார்மலில் மூன்றில் ஒரு பங்கு கூட நஹி & முகவர்கள் இதனில் பெரிதாய் ஆர்வம் காட்டிடவில்லை எனும் போது - கமான்சே கூடவும், ஜூலியாவோடும் ஜாக் செம அரட்டையில் ஈடுபட்டிருக்கிறார் நமது கிட்டங்கியினில் ! இது வரையிலும் 200 புக்ஸ் விற்றிருந்தோமெனில் அது பரமபிதாவின் கடாட்சம் என்பதே unvarnished truth !!  இந்த நேரத்துக்கு 'தல' சிறுகதைகளை ஒரு தொகுப்பாக்கி - இதே நூறு ரூபாய் விலைக்கு வெளியிட்டிருந்தால், முக்கால்வாசியை இந்நேரத்துக்கு  விற்று கையைத் தட்டியிருக்கலாமோ ? என்ற சலனங்கள் இதுபோலான வேளைகளில் தலைக்குள் ஓடுவதைத் தவிர்க்க இயலவில்லை தான் !! ஆகையால் - "சுஸ் & விஸ் விலையைக் கேட்டீகளா....? ஒரு கோடி அப்பு...ஒரு கோடி !!" என்ற விசனக்குரல்கள் எங்கேனும் ஒலிப்பின், அவர்கட்கு ஜாக் & beanstalk இதழினை நமது அன்புடன் அனுப்பிடலாம் ! 

So உங்களின் 35 ஆண்டுப் பரிச்சய வாண்டுகள், யதார்த்தத்தை ஒட்டியதொரு எண்ணிக்கையினில் உங்களுக்கெனத் தயாராகி வருகின்றனர் ! நிலவரம் இக்கட இவ்விதமிருக்க, இன்னொருபக்கம் செமத்தியான ஒரு சேதி எனது காலையை சூப்பர் டூப்பராக்கியுள்ளது ! ஹாலந்திலிருந்து சுஸ்கி & விஸ்கி ரசிகர் மன்றத் தலைவர் ஏற்கனவே தொடர்பினில் இருக்க, அங்குள்ளதொரு பிரத்தியேக சுஸ்கி & விஸ்கி கடையிலிருந்து decent எண்ணிக்கையில் நமது இந்த இதழுக்கு ஆர்டர் வந்துள்ளது ! "இது துவக்க ஆர்டர் அண்ணாச்சி...எங்க சுஸ் & விஸ் ரசிகர்கள் இன்னும் கணிசமாய் உள்ளனர் ! அவர்களுக்கெல்லாம் உங்க இதழைப் பற்றி நாங்கள் ஒரு ஈ-மெயில் தட்டி விட்டோமெனில் இன்னும் கூடுதல் ஆர்டர்கள் உறுதி ! So உங்க அட்டைப்படத்தை மட்டும் அதற்கோசரம் அனுப்பித் தர முடியுமா ?" என்று கேட்டிருந்தனர் ! "ஐயோ...அண்ணா...ஊம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க ....ஷேர் ஆட்டோ பிடிச்சாச்சும் நானே ஹாலந்துக்கு ஒரு நடை வந்து அட்டையைக் கண்ணிலே காட்டிட்டுத் திரும்பிடறேன் !!" என்று அடித்துப் பிடித்துப் பதிலைப் போட்டாச்சு ! அநேகமாய் ஒரு தமிழ் இதழின் அட்டைப்படத்தை ஐரோப்பாவில் இருப்போர் முந்திக் கொண்டு பார்ப்பது இதுவே இரண்டாவது  தபாவாக இருக்கும் என்பேன் (ARS MAGNA was the first occasion) !! அப்புறம் நம்ம முகமூடிப் பார்ட்டி டயபாலிக்கின் ரசிகர்களுக்கு செம tough தருவார்கள் - இந்த சுஸ் & விஸ் ரசிகர்கள் என்பது புரிகிறது ! Simply incredible passion !!

அங்குள்ள வெறித்தனமான நேசத்தினில் ஒரு பகுதி நமக்கு சாத்தியமானாலே நம் தலை தப்பி விடும் ! And தொடரும் காலங்களில் இந்த சுட்டீஸ் டீம் நம் மத்தியில் ஒரு ரெகுலர் இடம் பிடிக்க அருகதை கொண்டோரா ? என்ற தீர்ப்பெழுதும் பொறுப்புமே உங்கள் வசம் உள்ளது guys !! So கைகளில், கால்களில், உள்ள அத்தனை விரல்களையும் cross செய்தபடிக்கே காத்திருப்பேன் - இந்த இதழுக்கான உங்களின் மார்க்குகளை எதிர்நோக்கி ! 

ரைட்டு...இனி முன்பதிவுகள் துவக்கிடலாம் - சு.&வி.ஸ்பெஷலுக்கு !

 • நீங்கள் நமது சந்தாக் குடும்பத்தின் அங்கமாய் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு 10% டிஸ்கவுண்ட் இருந்திடும் ! (உங்களுக்கு புக்கின் விலை ரூ.300)
 • And வரும் ஜூலை 25-க்கு முன்பாய் நீங்கள் முன்பதிவு செய்திடும் பட்சத்தில், ஆகஸ்டின் இதழ்களோடு சேர்த்து கூரியரில் அனுப்பிடவும் செய்யலாம் - without additional charges !
 • அதற்குப் பின்பாய் ஆர்டர் செய்திடும் பட்சத்தில் கூரியர் கட்டணங்கள் will be as applicable ! 
 • Oh yes, கோவைப் புத்தக விழாவின் பிற்பாதியில் போதும் சரி, ஈரோட்டுப் புத்தகவிழாவின் முழுமையிலும் சரி, இந்த இதழ் நமது ஸ்டாலில் கிடைக்கும் ! So ஏதேனுமொரு இலக்கினில் வாங்கிக்கொள்வதென நீங்கள் தீர்மானிக்கும் பட்சத்தில் - ஒரேயொரு வாட்சப் மெசேஜ் - KOVAI ....ERODE என்ற ரீதியில் 73737 19755 என்ற நம்பருக்குத் தட்டி விடுங்கள் ப்ளீஸ் ! அதற்கேற்ப புக்ஸை அங்கே அனுப்பிட எங்களுக்கு இது பெரிதும் உதவும் ! 
 • சந்தாவினில் ஆர்வமில்லை ; புத்தக விழாவுக்குப் போகும் சாத்தியங்களுமில்லை - என்ற நண்பர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம் ! 
 • கடைகளில் வாங்கிடும் நண்பர்கள், உங்கள் முகவர்களிடம் அழுத்தமாய் ஒரு வார்த்தை சொல்லி வைத்தீர்களெனில் அவர்களை ஆர்டர் செய்திட தூண்டுகோலாகிடக்கூடும் folks !! மறவாது உங்கள் முகவர்க்கு ஒரு phone ப்ளீஸ் !
அடிக்கடி சொல்வது போல - பந்து இப்போது உங்கள் பக்கம் !! பார்த்து ஆடுங்கோ புலீஸ் !! 

அப்புறம் ZAGOR இதழுக்குமே முன்பதிவு பண்ணிப்போடுறோமே ? என்று கேட்கக்கூடிய நண்பர்களுக்கு - அதுகுறித்த அறிவிப்பு முறையாய் வரும் வரை பொறுமை காக்கக் கோருவேன் ! In any case ஏற்கனவே மாண்ட்ரேக் hardcover + சுஸ்கி-விஸ்கி hardcover + டெக்ஸ் இதழ் என்றிருக்கக்கூடிய August கூரியர் டப்பியில், ZAGOR இதழையும் நுழைக்க வாய்ப்பே இராது ! That will need to be a separate box & a booking !! So இந்த நொடியில் அந்தச் சோப்புச் சட்டைக்காரரையும் உள்ளுக்குள் இழுத்துப் போட்டுக் குழப்பிக்க வேணாமே என்று பார்த்தேன் !! 

நடையைக் கட்டுகிறேன் guys ; bye for now ! Have a fun weekend !! See you around !!

P.S : ஓசூர் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 40 ! அங்குள்ள HOTEL HILLS-ன் அரங்கினில் விழா துவங்கியுள்ளது ! அந்தப் பகுதியினைச் சார்ந்த நண்பர்கள் - please do drop in !! 
257 comments:

 1. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 2. 10 எண்றதுக்குள்ளே

  ReplyDelete
 3. Naan Hosur poren naalaiku verum kaiyoda. Ana thirumbi varuven neraya santhosangaloda and puthagnaloda

  ReplyDelete
 4. பகல் நேர பதிவுடன் சிறப்பான செய்திகள் தாங்கி வந்துள்ளீர்கள் சார் மகிழ்ச்சி.

  முன்பதிவை இன்றே அனுப்பிவிடுக்கிறேன்.

  உயிரை தேடி பின்னுக்கு தள்ளி zagor முன்னுக்கு வருவதன் காரணம் என்ன சார்.

  ReplyDelete
  Replies
  1. "உயிரைத் தேடி" - 184 பக்க ஆல்பத்தின் பணிச்சுமை ZAGOR-ன் 256 பக்கச் சுமையைக் காட்டிலும் இருமடங்கு ஜாஸ்தி என்பதால் தான் கிருஷ்ணா ! கண்மூடிக் கண் திறப்பதற்குள் 30 நாட்கள் கடந்துவிடுகின்றன ; literal ஆக நாக்குத் தொங்குகிறது !

   Delete
  2. கண்டிப்பாக புரிகிறது சார். பொறுமையாக வரட்டும் காத்திருக்கிறோம் 🙏🏼

   Delete
  3. /* கண்மூடிக் கண் திறப்பதற்குள் 30 நாட்கள் கடந்துவிடுகின்றன */ - In a recent conversation with my dad I realized this is to do with aging as well sir - for all of us as kids with less distractions time goes slow - but beyond 30 it just blitzes by leaving us dazed he said.

   Delete
 5. நண்பகல் வணக்கம்

  ReplyDelete
 6. மத்தியான வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
 7. மதிய வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 8. ஆச்சரியம்.பதிவு விரைவில் தந்ததற்கு. நன்றி ஆசிரியர் சார்.

  ReplyDelete
 9. நான் வாங்கிய + படித்த முதல் லயன் குழும புத்தகம் பேரிக்காய் தோட்டமும், பாம்புத் தீவும் தான். முன்பதிவு செய்தாகிவிட்டது gpay யில் .. அலுவலக முகவரிக்கு மெயில் தட்டியாகிவிட்டது. Can't wait to read this book to kids.

  ReplyDelete
 10. ஆச்சர்ய பதிவு ..அட்டகாச பதிவு ...


  ( தகவலுக்கு நன்றி பெ.பரணிசார்)

  ReplyDelete
 11. சுஸ்கி விஸ்கி வெகு வெகு வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன் ..இவற்றின் ஒரு இதழ் என்னிடமிருந்தும் சமீபத்தில் ஒரு முறை படிக்க ஆசைப்பட்டு எடுத்தாலும் சிறிய எழுத்தில் சுத்தமாக படிக்க இயலவில்லை ( எனக்கு வயசெல்லாம் ஏறலை என்பது பின்குறிப்பு ) எனவே மிக தரமாக வர இருக்கும் இந்த சுஸ்கி விஸ்கி இதழை வாங்கி படிக்க மிக மிக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.அட்டைப்படமும் பழைய ஒரிஜினல் இதழ் அட்டையைவே பயன்படுத்தியதற்கும் நன்றி சார்..

  ReplyDelete
 12. இந்த இதழுக்கு உறுதுனை செய்த கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. இந்த இதழுக்கு உறுதுனை செய்த கண்ணன் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

   Delete
 13. மொத்தத்துல ஆகஸ்ட்ல செம கொண்டாட்டம் காத்திருக்கிறது என்பது உறுதி ..வெகு ஆவலுடன் வெயிட்டிங்...!

  ReplyDelete
 14. சுஸ்கி விஸ்கி - என்னைப் பொருத்தவரை De Kaatendans கதை என்னிடம் பல மொழிகளில் இருந்தாலும், தமிழில் வந்த ராஜா ராணி ஜாக்கி கண்டிப்பாக ஸ்பெஷல் தான். அதில் மிகப் பெரும் குறையான சிறிய அளவு இரு வண்ணம் இது வரை குறையாகவே இருந்தது. இப்போது வரும் புத்தகம் மற்ற மொழிகளில் வந்த அனைத்திலும் சிறந்த தயாரிப்பிலும் மிகமிகக் குறைந்த விலையிலும் நம் அருமைத் தமிழில் வருவது பெருமகிழ்ச்சி. மிக்க நன்றி சார்.

  இவ்விதழ் பெரும் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 15. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 16. பணம் கட்டிக்காத்து.

  ReplyDelete
 17. வாட்ஸ் அப்பில் சுஸ்கி-விஸ்கி பாத்துட்டு இங்கே வந்தா...
  ஒரு முழுநீள கதையே ஓடிட்டிருக்கு...!

  ReplyDelete
 18. பணம் கட்டியாச்சு.

  ReplyDelete
 19. எடிட்டர் சார் சு-வி அட்டைப்படம் அருமை!!
  வண்ணத்தில் பார்க்கும்போது உள்பக்க சித்திரங்கள் 'இத்தனை அழகா!!' என்று பிரம்மிக்க வைக்கிறது! நீங்கள் பெயர் சொல்ல விரும்பாத அந்த கண்ணு நண்பரின் கைங்கர்யத்தில் ரீரைட் செய்யப்பட்ட வசனங்களும் அருமையாய் அமையப்போவது உறுதி!

  சு-வி கதைகளை டவுசர் போட்ட வயதுக்குப் பின் மறுக்காவும் படிக்கவில்லை (புக்கு தொலைஞ்சுடுச்சு சார்) என்பதால் இப்போதைய ரசணைகளுக்கு இது எவ்விதம் இருக்கப்போகிறதென்பதை அறிந்துகொள்ள நானுமே ஆவல்!!

  சு-வி'க்கு ஐரோப்பாவில் ஒரு தனிப்பட்ட ரசிகர் மன்றம் இருப்பது மேலும் ஆச்சரியமளிக்கிறது!

  நண்பர்கள் பலராலும் ரொம்ப வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட தொடர் என்பதால் நிச்சயம் நல்லதொரு விற்பனையை எட்டிக்காட்டும்!

  ReplyDelete
  Replies
  1. // நண்பர்கள் பலராலும் ரொம்ப வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட தொடர் என்பதால் நிச்சயம் நல்லதொரு விற்பனையை எட்டிக்காட்டும்! //

   +1

   Delete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. சுஸ்கி விஸ்கி - முன் பதிவுக்கு பணம் அனுப்பிவிட்டேன் :-)

   Delete
  2. சுஸ்கி விஸ்கி கதையை மீண்டும் கொண்டு வர நீங்கள் எடுத்த முயற்சிகளை சொன்ன விதம் மிகவும் ரசிக்கும் படி இருந்தது! சில நேரங்களில் பிடித்த உணவை சாப்பிட்டால் நமது எண்ணம்/பார்வை மாறும் தெளிவு பிறக்கும் என்பது பர்மாகடை பரோட்டா விஷயம் ஒரு நல்ல உதாரணம்; எனக்கு இது போன்ற அனுபவங்கள் உள்ளன, இன்றும் இவை தொடருகிறது :-)

   // பழமைக்குக் கேடு செஞ்சுப்புட்டான் பாவிப்பய !!" என்ற நெற்றிக்கண்கள் திறக்கும் படலங்கள் இன்னமுமே நடைமுறை கண்டாலும், ''சாரிங்கண்ணா...உங்க நெற்றிக்கண் பார்வைகளை ஏதாச்சும் ஒரு பர்னால்..அல்லாங்காட்டி சைபால் களிம்பு போட்டு ஆத்திக்கிறேன் //

   சுஸ்கி விஸ்கி வந்தாலே போதும் சார், இவ்வளவு விளக்கங்கள் தேவையில்லை!

   // நான் பொறுப்பேற்றிருக்கும் ஒரு இதழினில், இது மாதிரியான மொழிநடையை, nostalgia என்ற பெயரைச் சொல்லி அனுமதிக்க வாய்ப்பே இல்லீங்கண்ணா !!" என்பதே எனது பதிலாக இருக்கும் ! //

   மிகவும் சரியான முடிவு! தலை வணங்குகிறேன்!

   சுஸ்கி விஸ்கி கதையை சிறுவயதில் படித்த ஞாபகம் உள்ளது! ஆனால் இந்த மாதிரி பக்கங்களை படிக்கும் புதியக்கதையை படிப்பது போல் உள்ளது (ஷார்ட் டேர்ம் மெமரி வேற :-)) ! புத்தகங்களை எப்போது படிப்போம் என்ற ஆர்வத்தை கிளப்பிவிட்டது, குறைவான வசனங்கள் + தெளிவான படங்களை மிகப்பெரிய ப்ளஸ் ஆக பார்க்கிறேன்!

   மொழி பெயர்ப்பில் உங்களுக்கு உதவிய அந்த பெயர் தெரியாத கண்ணனுக்கு வாழ்த்துக்கள் :-)

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 21. ஆகஸ்டில் பருவ மழை பெய்கிறதோ இல்லையா கடந்த பத்து வருடமாக ஒவ்வொரு ஆகஸ்டிலும் காமிக்ஸ் மழை தவறாமல் பெய்கிறது! இந்த முறை வானவில்லுடன் காமிக்ஸ் மழைபெய்ய உள்ளது இன்னும் சிறப்பு; ஆமாம் தோர்கல் வாராக, சுஸ்கி விஸ்கி வாராக, டெக்ஸ் வாராக, ZAGOR வாராக, கைப்புள்ள வாராக, மாட்ரேக் வாராக, அப்புறம் சந்தாதாரர்களுக்கான surprise இதழ் வருது! செம்ம செம! நான் மாட்ரேக் செப்டம்பர் வரும் என நினைத்தேன் சார்! ஒருவேளை முடியாவிட்டால் மாட்ரேக்கை அடுத்து வரும் மாதத்தில் கூட வெளியிடுங்கள் சார்.

  இந்த மாத இதழ்களில் இவைகளின் அறிவிப்பை பார்த்தவுடன் அடுத்த 30 நாட்களுக்கு நீங்கள் ஆடப்போகும் நடனம் கண் முன்னே வந்து சென்றது சார்! எல்லாம் திட்டமிட்டபடி நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!

  ஆகஸ்டில் காமிக்ஸ் மழையில் நனைய தயாரா நண்பர்களே :-)

  ReplyDelete
  Replies
  1. சிண்ட்ரெல்லா வேற வாராங்க :-)

   Delete
 22. இந்த முறை ஈரோடு ஆசிரியர் & நண்பர்கள் சந்திப்பு இல்லை என்பதால் புத்தக திருவிழாவிற்கு வரவில்லை; ஆனால் இந்த முடிவு கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது ;-)

  ReplyDelete
 23. சுஸ்கி விஸ்கி எத்தனை இதுவரை நான் படித்ததில்லை. காமிக்ஸ் என்னும் கனவுலகம் போட்டியில் ஆறுதல் பரிசாக இந்தப் புத்தகம் எனக்கு அன்பளிப்பாக வந்துவிடும். நெற்றிக்கண் திறப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் நீங்கள் சொன்ன காரணத்திற்காக அதன் மீது கழும்பு தடவிக் கொள்கிறேன்

  ReplyDelete
 24. இந்த மாத புத்தகங்கள் அனைத்தும் படித்து முடித்து விட்டேன்! எனது வரிசை
  1. லக்கி & ஜாலி ஜம்பர்
  2. டெக்ஸ் & கார்ஸன்
  3. ஆல்பா

  டெக்ஸ் கதை இந்த முறை செம செம வேகம் புயல் மழை சதுப்பு நிலம் என டெக்ஸ் & கார்ஸன் உடன் நம்மை பயணம் செய்ய வைத்த ஓவியருக்கு எனது பாராட்டுக்கள்! கதையின் சில ட்விஸ்ட் சாதாரணமாக தெரிந்தாலும் ரசிக்கும் படி இருந்ததுக்கு இதற்கு காரணம் கதையை விறுவிறு என்று நரகர்த்திய விதம்!

  ReplyDelete
 25. நிறைய தகவல்களுடன் சிறப்பான பதிவு,மகிழ்ச்சி சார்...
  ஆகஸ்டில் புத்தக மழை,ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

  ReplyDelete
 26. // அப்புறம் ZAGOR இதழுக்குமே முன்பதிவு பண்ணிப்போடுறோமே ? என்று கேட்கக்கூடிய நண்பர்களுக்கு - அதுகுறித்த அறிவிப்பு முறையாய் வரும் வரை பொறுமை காக்கக் கோருவேன் //
  தொகையை சொல்லிட்டா இப்போது அனுப்புறவங்க அனுப்புகிறோமே சார்,புக் ரெடியாகும் வரை காத்திருப்பதில் பிரச்சினை எதுவும் இல்லை...

  ReplyDelete
 27. // ரைட்டு...இனி முன்பதிவுகள் துவக்கிடலாம் - சு.&வி.ஸ்பெஷலுக்கு ! //
  சிறப்பான ஆர்வமூட்டும் சலுகைகள்...

  ReplyDelete
 28. அது வந்துங்க.....

  சுஸ்கி விஸ்கி இதுவரை படிக்கவேயில்லை..
  அதனால்...ஆவலுடன் வெயிட்டிங்.

  ReplyDelete
 29. பணம் கட்டி இரண்டு மணிநேரம் ஆகியும் இன்னும் சுஸ்கிவிஸ்கி வரலை...!

  ReplyDelete
 30. Rs 300 amount transferred for suski,viski booking and message sent by whatsapp to lion office.

  ReplyDelete
 31. //2 கதைகளையுமே மறுக்கா rewrite செய்து தந்து, இந்த முழியாங்கண்ணனின் தாவு மேற்கொண்டும் தீராதிருக்க உதவிய கண்ணனின் பெயரை அடிச்சுக் கேட்டாலும் சொல்லவே மாட்டேனே !! ஊஹூம்...மூச் !!//

  அடடே அப்படியா மாப்ள!
  இனிமே நல்லாவே இருந்தாலும் நல்லா இருக்குன்னு சொல்ல மனசு வராதே மாப்ள!

  ReplyDelete
 32. சு &வி கதை எப்படியோ அதன் மறுவருகைக்கான முகாந்திரங்கள் பற்றிய கதை படு சுவாரஸ்யம்.

  குறைந்த ப்ரிண்ட் ரன், விண்ணை முட்டி நிற்கும் பதிப்பக செலவுகள், டாலருக்கெதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இவற்றை ஒப்பிடுகையில் விலை சரியானதுதான்.

  தொழிலுக்கு தேவையான அனைத்து ரக parchments ஒன்றரை மடங்கு ஏறிவிட்டன. மல்ட்டி கலர் அச்சு - மிக சாதாரண தேவைக்கானது- இரண்டே கால் மடங்கு விலையேற்றம் கண்டுவிட்டன.

  விலை கூடுதல் போல சிலருக்கு தோன்றினாலும் இது காலத்தின் கட்டாயம்.

  நான் இரண்டு இதழ்களுக்கு தொகை அனுப்பிவிட்டேன்.இதுவரை படிக்காத
  இதழ் என்பதாலும் ரீரைட் செய்யப்பட்டது ( கண்ணன் பவுடர் அடித்தாலும் ஏதாவது மாற்றம் தெரியும்ங்கிறீங்க? :D) என்பதாலும் ஆர்வம் மேலோங்குகிறது.

  ReplyDelete
  Replies
  1. // விலை கூடுதல் போல சிலருக்கு தோன்றினாலும் இது காலத்தின் கட்டாயம். //

   +1

   Delete
  2. ரெண்டாவது நம்ம அட்ரஸ் தாணுங்களே..

   Delete
  3. ஆமாங்கோ ரம்மி :-)

   Delete
 33. ஹைய்யா! நானும் பணம் அனுப்பிட்டேன்!

  ReplyDelete
 34. இன்று ஒசூரில் நமது புத்தக ஸ்டாலில் சேலம் சங்ககிரி நண்பரும் நமது காமிக்ஸ் ரசிகரும்.., தீவிர டெக்ஸ் ரசிகரும் ஆன ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியுமான நண்பர் கண்காட்சிக்கு சென்று சில இதழ்களை வாங்கி அண்ணாச்சியுடன் பேசி பிறகு எனக்கும் கால் செய்து அவரிடமும் ,அண்ணாச்சியிடமும் உரையாட வைத்து பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினா்.அண்ணாச்சி அவர்கள்.. உங்கள் பெயரை அவர் கூறியதும் தாங்கள் அப்பொழுது எழுதும் கடிதங்களும் , ஆரம்ப காலங்களில் இணையம் இல்லாத பொழுது மாதாமாதம் புத்தகம் வந்துவிட்டதா என தாங்கள் அலைபேசியில் அடிக்கடி விசாரித்து தன்னிடம் பேசியதும் , புத்தக காட்சி சமயம் தங்களை நேரில் சந்தித்த நினைவுகளையும் ,தங்கள் முகமும் என அனைத்துமே நினைவிற்கு வருகிறது என பேசினார்.. ஆசிரியர் போலவே அண்ணாச்சி அவர்களும் இந்த வாசக வட்டத்தில் உள்ள ஒவ்வொருவரையும் இன்னமும் நினைவில் வைத்து பேசியது மிகுந்த மகிழ்ச்சி அடைய வைக்கிறது .

  நன்றி அண்ணாச்சி🙏🏻

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்க அவரின் பெயரை குறிப்பிட மறந்து விட்டேன் ..ஓய்வுபெற்ற பின் ஓசுரில் செட்டில்ஆகி விட்ட அதிகாரி அவர்கள்

   திரு .சிவதாஸ் அவர்கள் ..அவருக்கும் எனது மனமார்ந்த நன்றி..

   Delete
 35. சிஸ்கோ...!
  சத்தமாயொரு மௌனம்...!

  மின்னல் தோற்றது கதையின் வேகத்தில்...! இத்தனை வேக கதையமைப்பை இதுவரை நான் கண்டதில்லை நமது காமிக்ஸ் கதைகளில்...!

  அருமை அருமை...!

  அத்தியாயம் 1 முடிச்சாச்சு...!

  ReplyDelete
 36. காமிக்ஸ் கனவுலகம் நண்பர்கள் சார்பில் எனக்கும் சுஸ்கி விஸ்கி இதழ் கிடைக்கும் இன்ப அதிர்ச்சி இருப்பதால் நான் பணம் அனுப்ப வில்லை என்பதை அறிவித்து கொள்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. Edi Sir..
   Me too..
   ஒரு வேலை லேட்டா gift கிடைச்சா என்ன பன்னுறது?.. அப்படின்னு ஒரு எண்ணம் மனசுல ஓடுதுங்க.. அதனால பணம் அனுப்பிச்சிடலாமா ன்னு மற்றொரு எண்ணம் ஓடுதுங்க..
   ஒரே குழப்பத்தில்..

   Delete
  2. ஈஸி சார். இப்போ நீங்க பணத்த கட்டுங்க.கிஃபட் வந்ததும், அதை , வாங்க இயலாத நண்பர்களுக்கு நீங்க அன்பளிப்பா கொடுங்க.

   Delete
  3. அருமையான யோசனை பத்மநாபன்.

   Delete
 37. சுஸ்கி விஸ்கி நீண்ட நாள் கனவு Sir, விலை ஒரு பொருட்டல்ல

  ReplyDelete
 38. விஸ்கி சுஸ்கி அட்டை படத்தை பார்த்ததோடு சரி ஒரு முறை கூட படித்தது கிடையாது, நானும் ஆவலாக காத்திருக்கிறேன்

  ReplyDelete
 39. ஆகஸ்ட்டில் ஒரு தீபாவளி காத்திருக்குதுடா சரவணா. மாண்ட்ரேக் , சுஸ்கி விஸ்கி , தல என கொண்டாட்டங்கள் காத்துள்ளன. ஹை...ஒரே ஜாலி தான்.

  ReplyDelete
 40. பழைய கால நினைவுகளை எங்களை அடுத்த மாதம் அழைத்துச் செல்லயிருக்கும் உங்களுக்கு நன்றி 🙏 சுஸ்கி விஸ்கி அழகான கார்ட்டூன் காமெடி மேளா!!மினி லயன் ஜூனியர் லயன் இவைகளை நீங்கள் கொஞ்சம் திரும்பி பார்த்தாள் நாங்களும் மகிழ்வோம் ஆசானே

  ReplyDelete
 41. சார் இது வரை வந்த பதிவிலே டாப் இதான்...
  ஊருக்கு பஸல போய்ட்ருப்பதால ....நானும் பர்மா கடை சம்பவம் போல இரவு திருச்செந்தூர் பஸ்ஸுக்கு காக்க பொறுமையில்லாம மதுர பஸ் ஏறியாச்.....
  தூத்துக்குடி போய் பராக்கு பாப்போம்....
  புத்தகம் பாக்க என் தாய் தடுத்தும் இறங்கி மதுரை பஸ் நிலையத்தில் புத்தக கடைல நம்ம இதழிருக்கான்னு பராக்கு பாத்த உற்சாக நினைவுகளுடன்....

  ReplyDelete
 42. நம்ம புத்தகங்கள்ள இதான் டாப் ....இனி வந்தா டூப்....அள்ளுது அட்டை...இந்த அட்டைப் படம் மட்டுமே நினைவில்...பின்னட்டை தீ பிடித்த கட்டடம் பார்த்தத போல உள்ளது....கதை துளி கூட நினைவில்லை.....இரண்டாம் கதை என் மகன் வயிற்றிலிருந்த போது பழய கடைல கிடைச்சது....படித்து பாத்ததும்...ஏன் நல்லாருக்கா..நல்லாருக்கான்னு கேக்குறார்னு கடுப்பை கிளப்பியதும் நினைவில்

  ReplyDelete
 43. உங்க ஈரோட்டுப் பணிச்சுமை சான்சே இல்ல சார்.....
  எப்படா சுஸ்கி வரும்....
  எப்படா சாகர் வரும்...
  எப்படா மாண்ட்ரேக் வரும்னு ஏங்க வைத்து விட்டீர்கள்....
  எங்களுக்காக உழைக்கும் உங்களை செந்தூரானாய் நினைத்து வணங்குகிறேன் ஆசிரியரே

  ReplyDelete
 44. ZAGOR வருங்காலத்தில் தமிழ் காமிக்ஸ் உலகில் தனக்கென ஓர் இடம்பிடிப்பார் என்று நம்புகிறேன்

  ReplyDelete
 45. // நான் பணியமர்த்திய முதல் இளைஞன் என்று காளிராஜனை அடையாளம் காட்டலாம் தான் ; ஆனால் அதையெல்லாம் தாண்டி எனக்கொரு தம்பியைப் போலவே பல வருடங்களுக்கு நமது எக்கச்சக்கப் பதிப்புகளுக்குத் தோள் தந்தவன் அவன் ! 1984-ல் முன்னூறு ரூபாய் சம்பளத்திற்கு அவனை அமர்த்திய போது எனக்கு வயது 17 & சொச்சம் என்றால், அவனுக்கு அப்போது வயசு 17 தான் ! பெரிய பயிற்சியெல்லாம் கிடையாது ; ஆனால் ரொம்பவே நேர்த்தியாய் ப்ரஷ் பிடித்து clean strokes-ல் பணியாற்றுவான் ! பின்னாட்களில் சிகாமணி ; மாலையப்பன் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியபோது செமத்தியாய் தானும் முன்னேற்றம் கண்டவன் ! "ராஜா...ராணி..ஜாக்கி..!" என்ற அந்த எழுத்துக்களையும், அந்நாட்களின் ஞாபகங்களையும் மட்டும் இந்த ஆல்பத்தின் மூலமாய் மீட்டுக் கொள்ள முடிகிறது //

  Interesting sir. காளிராஜன் அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்!

  ReplyDelete
 46. Sir,

  To avoid over-count of books may be Thorgal can be moved to September as an extra item?

  5 books with three hard covers and many 200+ pages + supplements looks overbearing for one month.

  ReplyDelete
 47. வணக்கம் உறவுகளே!

  ReplyDelete
 48. ZAGOR - 256 பக்கங்கள் என்ன விலை சார்?

  ReplyDelete
 49. எடிட்டர் சார்!

  ஓவர் வேலை உடம்புக்காகாது!
  மேலே ராக் ஜி சொன்னமாதிரி ஒன்றோ இரண்டோ கதைகளை செப்டம்பருக்கோ, அக்டோபருக்கோ நகர்த்திக் கொள்ளலாமே சார்?!!

  உடம்புக்குத் தேவையான ஓய்வைக் கொடுத்துட்டு உங்களால் எத்தனை புத்தகங்கள் முடிகிறதோ அதை மட்டும் கொடுங்கள் சார்!

  பொன் முட்டையிடும் கோழி நீங்க! ஒரே நாளில் ஏழெட்டு முட்டையிடச் சொல்லி கட்டாயப்படுத்தமாட்டோம்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் குணா! நலம் தானே?

   Delete
  2. // பொன் முட்டையிடும் கோழி நீங்க! ஒரே நாளில் ஏழெட்டு முட்டையிடச் சொல்லி கட்டாயப்படுத்தமாட்டோம்! //

   Yes. Agreed.

   Delete
  3. கரிசட்டிக்குள் தலையை முக்கிய கையோடு (என்ட்ர தலய தான் !) "ஊஹூம்... என்க்கு வயசாகலியே" என்று சொல்லிக்கிட்டுத் தெரிஞ்சாலும், ஒய்வு கேட்கும் உடம்பானது நிஜத்தை உணர்த்தத் தவறுவதில்லை ! திட்டமிடல்களை அதற்கேற்ப அமைக்கும் அவசியங்கள் புரிகின்றன சார் ! பார்ப்போமே...

   Delete
 50. மொழி பெயர்ப்பில் பங்கெடுத்திருக்கும் மர்மநபருக்கு வாழ்த்துக்கள். அடுத்ததாக இளவரசியின் மெகா ஆல்பம் ஒன்றிற்கு மொழிபெயர்ப்பு வாய்ப்பினைதரவேண்டும்என்று அவர் ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளன உண்மைங்களாங்க ஆசிரியர் சார் கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. அட ...நீங்க வேற ஏன் சார் டெரர் ஏத்திக்கிட்டு ?!!

   Delete
  2. // மர்மநபருக்கு வாழ்த்துக்கள். அடுத்ததாக இளவரசியின் மெகா ஆல்பம் ஒன்றிற்கு மொழிபெயர்ப்பு வாய்ப்பினைதரவேண்டும்என்று அவர் ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் //

   செம செம ஐடியா. அந்த கண்ணன் இனிமேலாவது இளவரசியை கலாய்ப்பதை நிறுத்தினால் நல்லது:-) இல்லை என்றால் நீங்கள் மேற்கொண்டு பல இளவரசி கதைகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள் :-)

   Delete
  3. As an exception for the commendable services the doctors of this site have provided to public during the pandemic braving up their own family fronts - we ma consider a 200 page Modesty hard cover black and white in smashing 70 format sir !!

   Delete
  4. /// a 200 page Modesty hard cover black and white in smashing 70 format sir !!///

   😍😍😍😍😍😍

   Delete
 51. தோர்கல் வர்றாக ...
  மாண்ட்ரேக் வர்றாக....
  தல டெக்ஸ் வர்றாக.....
  ஜாகோர் வர்றாக ....
  சுஸ்கி விஸ்கி வர்றாக....!!!!

  ஆகஸ்ட்டலேயே தீபாவளி வந்துடுச்சுங்கோ.

  இனி எங்களைக் கையில பிடிக்க முடியாதுங்கோ.

  ஓரே சந்தோஷம் தாங்கோ !!!!

  ReplyDelete
 52. ஆசிரியர் சார் தங்கள் உடல் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டுகின்றேன்.

  ReplyDelete
 53. சார், August க்கு வேறொரு மாதத்திற்குரிய Tex single ஆல்பத்தை மாற்றி வெளியிடலாமே ?

  இந்த மாதம் மற்ற heavy hitters இருப்பதால் readers wont miss out anything , அதே சமயம் அந்த மாத வாசிறப்பிற்கு வலு சேர்க்குமே?

  ReplyDelete
  Replies
  1. சிங்கிள் ஆல்பங்களில் எஞ்சியிருப்பது ஒரேயொரு இளம் டெக்ஸ் சாகசம் மட்டுமே நண்பரே & அதுவும் கதைவரிசைக்கேற்ப தீபாவளி மலரில் காத்துள்ள இளம் மெபிஸ்டோ சாகசத்துக்குப் பின்னானது ! So அதனை முன்னுக்குத் தள்ளிக் கொண்டு வர வாய்ப்பிராது !

   Maybe ஆகஸ்டில் 'தல' முழுசாய் ஓய்வெடுக்கும் விதமாய்த் திட்டமிடலாம் - பார்க்கலாமே !

   Delete
  2. நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. ஆனா கை விட மாட்டான்..
   கோடானா கோடி நன்றி ஏசய்யா.. அல்லாவே .. ஈஸ்வரனே..

   Delete
  3. ///Maybe ஆகஸ்டில் 'தல' முழுசாய் ஓய்வெடுக்கும் விதமாய்த் திட்டமிடலாம் - பார்க்கலாமே !///

   ஏன் சார்.. ஏன்.. எல்லாருக்கும் தல தான் தொக்கா போச்சோ..??

   Delete
  4. // Maybe ஆகஸ்டில் 'தல' முழுசாய் ஓய்வெடுக்கும் விதமாய்த் திட்டமிடலாம் - பார்க்கலாமே ! //
   வேண்டாம் சார் இந்த முடிவு...
   புத்தக விழா நடக்கும் சமயத்தில் டெக்ஸ் இதழ்கள் நல்ல விற்பனை ஆகும் உள்ளங்கை நெல்லிக்கனி,ஏற்கனவே சென்னை புத்தக விழாவில் டெக்ஸ் ஸ்பெஷல் வெளியிடாமல் விட்டதற்கு வருத்தப்பட்டிருந்தீர்கள்,சிக்கலான நேரங்களில் டெக்ஸ் இதழ் கண்டிப்பாக வர வேண்டும்,ஆகஸ்டில் வருவதே எல்லோருக்கும் சிறந்தது...!!!

   Delete
 54. @All : நண்பர்களுக்கு பக்ரீத் தின நல்வாழ்த்துகள் !!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் எடி... மதியம் வரை சமைத்து, ஒரு கட் கட்டி, தூக்கம் போட்டு, இப்போது இரவில் கண்விரித்து நமது வலைதளத்தில் உட்கார்ந்திருக்கிறேன்... அடுத்து ஒரு காமிக்ஸுடன் நைட்டை முடிக்க ப்ளான்... 😊 டெக்ஸ் பற்றி விதவிதமான விமர்சனங்கள் வந்துள்ளதால், அதை தான் முதலில் ஆரம்பிக்கனும்.

   Delete
  2. உங்கள் பிரியாணிப் படலத்தை ஸ்டேஜ் by ஸ்டேஜ் பார்த்து லைட்டாக ஜொள்ளும் விட்டுக் கொண்டேன் சார் !

   Delete
  3. ஹி ஹி... நமது பதிவுகளுக்கு எடியும் சீக்ரெட் வாசகர் எனும்போது வழியும் அசடை மறைத்து கொண்டு பதிவிடுகிறேன்.... 😂

   Delete
 55. என்ன ஆனாலும் சரி! இன்றைக்கு "ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள்...!" உடன் பொழுதை கழிப்பது என்று முடிவு செய்து விட்டேன்...!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாய் disappoint செய்திடாது சார் !

   Delete
  2. முதல் பாகத்தை முடித்து இரண்டு மாதங்கள் ஆகிறது. மீதி பாகங்களை சரியான நேரம் கிடைக்கும் போது படிக்க வேண்டும்.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 56. பெங்களூர் செல்லும் ரயில் என்றால் மைசூரு எக்ஸ்பிரஸ்ஸா இல்லை ஒவ்வொரு ஞாயிறு இரவு மட்டும் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸா சார்.

  ReplyDelete
  Replies
  1. Nagercoil to Bangalore வண்டி சார் ...இரவு பத்தே முக்காலுக்கானது !

   Delete
 57. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. இன்னாப்பா இது மதுரைக்கு வந்த சோதனை..

   Delete
 58. பணி -யில் ஒரு சுழியைகவனிக்காமல்-சுஸ்கி& விஸ்கி - பனியில் செய்த சாகசம் எது என்று யோசனையிலேயே பதிவை படித்தேன்...."பணிச்சுமை..?i" - அப்படியெல்லாம்.. நீங்க சொல்லப்படாது... "மு.ச& மூ.ச" -க்கெல்லாம் துணைக்கு ஆள்வர காத்திருக்கும் போது..
  "கோடை மலர்" - போல்-"ஆகஸ்டு மலர்"களையும் எதிர் பார்த்து பழகிவிட்டோம் சார்..எனவே சாரி சார்.. உங்களது பணிச்சுமைக்கு...
  .மற்றும்.. நன்றிகள் சார்..

  ReplyDelete
 59. போதும்ங்ற வார்த்தை பணம் வாங்குவதில் வருவதில்லை அந்த லிஸ்ட்டில் காமிக்ஸீம் சேர்ந்து விட்டது நீங்கள் எவ்வளவு காமிக்ஸ் கொடுத்தாலும் இன்னும் ஒரு டெக்ஸ் ஈரோடு ஸ்பெஷல்(சின்ன சாகஸம்) வேண்டும் ஆசிரியரே என்று கேட்க தோன்றுகிறது மண்ணிக்கவும்

  ReplyDelete
 60. அடுத்த மாதம் அளவில்லா கொண்டாட்டம்...

  ஆஹா - ஆஹாஹா

  மூணு குண்டு ஹார்டு கலரா...

  அந்த பால்ய கனாக் காலங்களை மீண்டும் நினைவு படுத்துகின்றன...

  ரிடையர் ஆகிவிட்டதால் நிறைய புத்தகங்கள் வாங்கி படிக்க ஆசை மேலோங்குகிறது...ஆனால் ஃபைனான்ஸியல் கன்ஸ்ட்ரெய்ண்ட்ஸ்...நினைத்தால் அடிவயிறு கலங்குகிறது...ஓய்வு நிறைய இருக்கிறது.

  எறும்பு போல இருந்துவிட்டு அக்கடா என்று இருப்பது என்னவோ போல் உள்ளது...

  ஆல்ஃபா - ஆக்ஷன். அவ்வளவு சிரமப்பட்டு கிழக்கு ஜெர்மானிய கர்னல் குடும்பத்தை எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு கப்பலில் ஏற்றிய ஆல்பா...ஹெலிகாப்டருக்கு மாற்றும் போது சொதப்பிய தால் கர்னல் இறப்பது சற்றே ஆதங்கம் தான். ஆனால் அவரது மனைவிக்கு வேண்டிய பணத்தை நைஸாக திரட்டி தந்து விடுவது சபாஷ்.அதில் தன் பங்குக்கும் கொஞ்சம் சொட்டி விடுவதற்கு ஏற்ப நடந்து கொள்வது அருமை.இந்த ஆல்ஃபா புத்திசாலி தான்.நன்றாக கிறிஸ்பாக இருந்தது ...8/10.


  லயன் அண்டு லக்கி ஆண்டுமலர் - இரண்டாமிடம் பிடிக்கிறது. சிறிய பிராயத்தில் விழுந்து விழுந்து சிரித்த லக்கி தான். ஆனால் வயது ஆக ஆக கிச்சுகிச்சு மட்டுமே மூட்டுகிறார்.ஆகவே நில் கவனி சிரி கதையை சிறிய பையனின் மனநிலையில் தயார் செய்து கொண்டு படிக்க திட்டமிட்டுள்ளேன்...முதல் கதை 8/10 பெறுகிறது.

  அட ஆண்டவனே...நம்ப டெக்ஸ் விறுவிறுப்பே இல்ல. ஒரே சவ சவ.ஜவ்வு மாதிரி இழுவை.கார்சனும் ஒண்ணும் பண்ணை.

  ரெண்டு பேரும் சாதாரணமா கால்வெஸ்டன் போயி - சாதாரணமா நல்ல ஷெரிப்ப பாத்து - எந்த துப்பறியும் வேலையும் பார்க்காம - தடத்த கூட ஆராயல -ஏன்னா சதுப்பு நிலையாய் - சரி நம்ம கார்சனாவது அந்த பொண்ணுங்க ஜொள் விடுவார்னு பாத்தா அதுவுமில்ல - கதைய்ல எல்லாரும் அநியாயத்துக்கு நல்லவங்கெளா இருக்காங்க.

  ஷெரீப் - நல்லவரு...வல்லவரூ

  அமெலியா மாஸ்டர்ஸ் - நல்ல பொண்ணு...ஏன்னா லக்கி ஸ்மைல் ஓனரம்மாவ மகளைப் போல பாத்துக்கிறாகல்ல.

  எல்லோர் ஹூட் - துடுக்கு பொண்ணாம்
  ஏதாச்சும் ஹீரோயினியாட்டம் பண்ணுவாங்கன்னு பாத்தா...பொசுக்குன்னு புதையல் சீட்டு கட்டு கர்னல் வுட்லார்டு கிட்ட தாரை வார்க்குது. அதனாலோ என்னவோ ஹிஹ்ஹி ஒரிஜினல் என்ட்ட தாம்ப்பா இருக்குன்னு பிலிப்பு காட்றப்ப படிக்கிறாங்க பல்ஸ் எகுறல. இதெல்லாம் பரவாய்ல.அந்ந சீட்டு கட்டு காட்டி எதாச்சும் நயமா புதையல் தேடுவாங்கென்னு பாத்தா எலியாஸ் சாதாரணமா கூட்டீட்டு போயி எலனோரு குழி தோண்ட சொல்லுது...

  இந்த பிஸ்கோத்து நேரத்துல வுட்லார்டு ஆறு அம்பு சேனையோஞ வர்றாராம் திடீர்னு...

  அதாச்சும் ஏத்துக்கலாம்...

  டெக்ஸ் எங்கிருந்தோ தீடீர்னு வர்றாரூ...எதிர்பார்த்தாராம்...

  சலிப்பு தான் தட்டுது...

  நீதிபதி ட்ரெண்ட் போதா வில்லனாம்...நைஸாக ஆளுங்கள வுட் வார்டுக்கு தண்டனைக்கி அனுப்பீடுவாராம்...அது டெக்ஸு கண்டுபிடிக்கவே மாட்டாராம்....முடியல.

  அல்லக்கை கார்லோஸ் கும்பல் ஜஸ்ட் லைக் தேடல் தொடைச்சிட்றாரூ டெக்குஸூ....

  இந்த அழகுல இத ஆரம்பத்துல ஒரு கும்பல் நெம்ப சாதாரண ஜாக்கிரதை மோட்ல கொன்னு மேனி ரோலின் நல்ல பிள்ளையாக காட்றாக. அவனும் தன் பங்குக்கு வெள்ளத்துரை பாச்சி ஒருத்தன காப்பாத்தி (டெக்ஸூ குடுத்த வாய்ப்பு பயன்படுத்துறாராம்) ஷெரீப் க்ரா போட்டுட்டு நல்ல புள்ளி மார்க்கு வாங்குறாரூ...என்று கேளூங்க...இனிமே ஒன்னய இங்குண்டு பாத்தேன்னு வைய்யின்னு அவன் கண்காணாத தேசத்துக்கு தண்டனை இல்லாம பெருந்தன்மையாக டெக்ஸூ வெரைட்டி விடணும்ல அதுக்குத்தான்....

  ஆக மொத்தத்துல அசர வைச்சி குனிய குனிய வச்சி.நம்ம முதுகுல புளிய கரைச்சி ஊஊஊஊத்தீட்டாங்கெ....

  புயலில் ஒரு சொதப்பல் என்று பேரு வச்சிருக்கான்...மனசாவது ஆறியிருக்கும்...

  டெக்ஸோட வேகம் -. டச் சத் கருத்தெல்லாம் கம்மி.  குயில் டுமீல் தம்பியோ கம்மி....  இதுல நம்ம துப்பாக்கி ய்ல குண்டு தீர்வே தீராதுல்லன்னு வசனம் வேற....


  போங்கப்பா....முடியல....


  சுத்தமா முடியல....

  ReplyDelete
  Replies
  1. மார்க்கு போடணுமாக்கும் - 7/10

   Delete
  2. டெக்ஸ் இம்மாதத்து சாகஸத்தில் ஆழம் குறைவு என்பதை மறுக்க மாட்டேன் சார் ; எழுதும் போதே உணர முடிந்தது !

   பொதுவாய் நமது டெக்ஸ் தேடல்களுக்கு உதவிடுவது 5 முக்கிய சமாச்சாரங்கள் !

   1 .பொதுவான இன்டர்நெட் அலசல்களில் கிட்டும் reviews ; விமர்சனங்கள் !
   2 .இதே கதையை இதர மொழியிலான டெக்ஸ் பதிப்புகளுக்குத் தேர்வு செய்துள்ளனரா ? என்ற தேடல் !
   3 .கதை வெளியான காலகட்டம்.
   4 .கதாசிரியர் யார் ? என்ற விபரம் .
   5 .சித்திரத் தரம் !

   # 1 - Reviews நன்றாகவே நெடுகப் பதிவாகியிருந்தன !
   #2 - பிரெஞ்சு ; பிரேசிலிய ஸ்பானிஷ் ; க்ரோவேஷியா மொழியில் என்று நெட்டுக்கு இந்தக் கதை தேர்வாகியுள்ளது தெரிந்தது !
   #3 - ரொம்பப் புராதனமெல்லாம் இல்லை - 2015 மத்தியில் தான் வெளியாகியிருந்தது ஒரிஜினலாய் !
   #4 - ருஜு Pasquale வழக்கமான மாவுகளை அரைக்க மாட்டாரென்ற நம்பிக்கையைத் தந்துள்ள ஆற்றலாளர் ! அது மட்டுமன்றி, இது மாதாந்திர routine இதழாக அல்லாது - ஆண்டுக்கொரு தபா வெளியாகிடும் ஸ்பெஷலின் தடத்தில் மெகா சைசில் வெளியானது ! So கதைத்தரம் சோடை போகாதென்றே எதிர்பார்த்திருந்தேன் !
   #5 - மிரட்டலான சித்திரங்கள் sealed the deal !!

   ஆனால் ஜாம்பவான் creators-களுக்கும் offdays இருக்கக்கூடுமென்பதையே இறுதியில் உணரும்படியானது ! சாரி சார் ...கதைத் தேர்வுக்கு இன்னமுமே அளவுகோல்களை கடினமாக்கிட வேண்டுமென்பது புரிகிறது !

   Delete
  3. நீங்களே சொல்லுங்க J ஜி!

   பல மாதங்களுக்கு பிறகு ஒரு அதிகாரி கதையை பரணில் போடாது வந்த உடனே படிக்கலாம்னு நெனைச்சா...!

   Delete
  4. சாரின்னு நீங்க சொல்றது என்னை வருத்துகிறது சார்...

   சில பல தேடல்களில் இது ஜகஜம்ங்க சார்...

   அதுக்காக உட்ருமாக்கும்...

   படிச்சிட்டோம்ல...

   நாங்கள் லாம் யாரூ...

   Delete
  5. படிச்சிடுங்க மிதுனு...

   டெக்ஸ் சோக கதையைக் கேளூ காமிக்ஸ் குலமே...
   அதக் கேட்டாக்க தாங்க மாட்டாங்கெ டெக்ஸ் குலமே....

   Delete
  6. This comment has been removed by the author.

   Delete
  7. This comment has been removed by the author.

   Delete
  8. Dr Selvam,

   சபை நாகரிகம் கருதி வணிக வர்க்கத்தினரின் பெயர்களைக் குறிப்பிடாமல் விட்ட நீங்கள் அதே சபை நாகரிகம் கருதி 'கர்னல்' வர்க்கங்களின் பெயரை உரக்க சொல்லாமல் இருந்திருக்கலாமோ ? You too doc ?!

   Delete
  9. Yes! It's mistake.sorry.i didn't want to offend anybody.

   Delete
  10. Sorry accepted but offense already made to one section - this remains the bane of TN !

   Delete
  11. இதே எண்ணம் எனக்கும் வந்தது. செனா அனா அவர்கள் குறிப்பிட்ட பெயர்களை தவிர்த்திருக்கலாம்.

   Delete
  12. மிதுன் @ இந்த கதையை படித்து நல்லா இருக்கிறது என நீங்கள் விமர்சனம் போட்டதை மறந்து விட்டீங்களே :-) இரண்டாம் முறை படிக்க ஜனாவிடம் ஐடியா கேக்கறீங்க என எடுத்துக் கொள்ளலாமா? :-)

   Delete
  13. எனக்கு இந்த மாத கதை நன்றாகவே இருந்தது:-)

   Delete
  14. // எனக்கு இந்த மாத கதை நன்றாகவே இருந்தது //
   அதே,அதே...

   Delete
  15. எனது விமர்சனத்தில் ஏற்பட்டு விட்ட டைப்பிங் குளறுபடிகளுக்கு வருத்தம் தெரிவிக்கின்றேன்...

   ஆசிரியரை காயப்படுத்த நினைக்கவில்லை...

   டைப் செய்யும் போது சரியா இருக்கு. பப்ளிஷ் ஆகும்போது குண்டக்க மண்டக்க வந்து நிக்குது...

   மன்னிக்கவும்...


   Delete
 61. பரணிசார். கிட் கண்ணரும். மாடஸ்டி ரசிகராகத்தான் இருப்பார். நம்மில் பலருக்கும் மறக்கமுடியாத கேரக்டரல்லவாமாடஸ்டி. 90களில் மாடஸ்டியும் தலயுமே நமது அடையாளங்கள். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. அவரு ஓண்ணாம் நம்பரு ரசிக்கரூ

   Delete
  2. அவரு ஒன்னா நம்பர் கலா ரசிகருன்னு சொன்னாங்க;-)

   Delete
  3. யாரைப்பத்தியோ பேசிட்டு இருக்காங்க.. நம்மளை இல்லை.!

   Delete
  4. டான்ஸ் மாஸ்டர் கலா தான சொல்றீங்க பரணி

   Delete
 62. Jசார்10க்கு7ங்கறது ஒரு டீசண்டான மார்க்குதான். என்னதான் கதையில் ஓட்டைகள்நாம் கண்டுபிடித்தாலும் அதையும்தாண்டி கதைவிறுவிறுப்பாக செல்கிறதல்லவா. அதுதான் டெக்ஸ்வில்லர் கதைகள்.
  மீண்டும் ஒருமுறை படிக்கத்தோன்றுகிறதல்லவா அதுதான் டெக்ஸ்வில்லர் கதைகள். ஒருதலைவனுக்கு வீரம்மட்டுமல்ல மன்னிக்கும் குணமும் கருணையும் வேண்டும்என்பதை அறிவுரையாகக்கூறாமல் கதையின்போக்கிலேயே கூறுகிறதல்லவா அதுதான் டெக்ஸ் கதைகள். எல்லாவற்றுக்கும் மேலாக224பக்கங்களுக்கு இதுபோல், அயர்வு தோன்றாமல், போரடிக்காமல் ஒருகதையைத்தாங்கிச்செல்லும்வேறுஹீரோ நம்மிடையேதற்போதுயாருமில்லை.சார் நீங்கள் கூறியதல்லாமல், ஜட்ஜ் சம்பந்தப்பட்டஇன்னொரு லாஜிக் ஓட்டையும் கதையில் உள்ளது. அதுபற்றி அடுத்தபதிவில். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. அந்த 7 சித்திரங்களுக்காக மட்டுமே

   Delete
 63. #Maybe ஆகஸ்டில் 'தல' முழுசாய் ஓய்வெடுக்கும் விதமாய்த் திட்டமிடலாம் - பார்க்கலாமே ! #

  Edi Sir..
  என்னாது.. தலை க்கு ஓய்வா?...😔😳

  யாரு சொன்னது?..
  🤨😳😭😨

  பாலைவனம் பத்தி எரியும்..
  😤
  தண்ணில தகராறு நடக்கும்..😤

  காத்துல கலவரம் பரவும்..😤

  இப்படிக்கு
  தலை Tex ன் விழுதுகள்..

  ReplyDelete
 64. Edi சார், Comics ஆர்வலர்கள் மட்டும் இருக்கும் இந்த தளத்தில் ஜாதி மற்றும் அரசியல் துவேஷம் வளர்க்கும் அந்த வாசகரின் கமெண்டை நீக்கும் மாறு கேட்டு கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. Oh.my goodness. I didn't mean it.
   I myself will delete the post .sorry it became controversial.

   Delete
  2. I do not blame him - he was just doing it right all these days - my point is if you do not want to name then refrain from naming anyone - just don't hurt one section - anyways !

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. @மகேஷ் திருப்பூர் : தவறென்று ஏற்றுக் கொண்டு , மன்னிப்பும் கோரிய கையோடு , பின்னூட்டத்தையும் அகற்றி விட்டார் ! அப்புறமும் அதனை துருவுவதில் ஆர்வம் ஏனோ நண்பரே ?

   தவிர தன்னம்பிக்கை என்பதை எப்போதிலிருந்து ஒரு குற்றமாக்கினார்கள் ??

   Delete
  5. எதார்த்தமாகத் தான் அவர் சொல்லியிருக்க கூடும். இத்தோடு விட்ருவோம்

   Delete
  6. எடி அவர்களே, இதே போன்று நான் ஒரு பதிவிட்டு, மன்னிப்பும் கோரினேன். ஆனாலும் செல்வம் சார் செய்யுள் எல்லாம் எழுதி என்னை meme செய்தார். அவருக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு தக்காளிச் சட்னியா?

   Delete
  7. மகேஷ் திருப்பூர்@ priyatel. என்னைப் போன்று தொடர்ந்து தளத்தில் பதிவிடுபவர்கள் சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்துடன் ஒரு பதிவிடுவது பெரிய தவறு. உள்நோக்கம் ஏதுமில்லை என்று சொன்னாலும் அருமை நண்பராகத் திகழும் ராகவன் அவர்களை பதிவு காயப்படுத்திவிட்டது என்றால் மற்றவர்கள் நிலை என்ன?

   தளம் கடந்த இரண்டாண்டாக அமைதியாக செல்லும் சூழ்நிலையில் என்னுடைய இது போன்ற பதிவுகள் முற்றிலும் தவிர்த்து இருத்திருக்க வேண்டியவை.தேவையற்ற அதிர்வுகள் .

   எடிட்டர் சாரிடமும் ஏனையவர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

   என்னுடைய எழுத்துக்கள் உங்களை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியிருப்பின் வருத்தம்
   தெரிவிக்கிறேன்.

   Delete
  8. சார், எனக்கு யார்மேலும் வன்மம் இல்லை. தளத்தில் எல்லோரையும் (haters தவிர்த்து) ஒரே மாதிரி treat செய்தால் நன்றாக இருக்கும். அது மட்டுமே என் வருத்தம். சந்தாதாரர்களை ஒரு கண்ணோட்டத்துடனும், மற்றவர்களை (என் போன்றோரை ) வேறு மாதிரியும் பார்ப்பது வருத்தம் அளிக்கிறது

   Delete
  9. மற்றபடி மன்னிப்பு என்பதெல்லாம் மிகப்பெரிய வார்த்தை

   Delete
  10. ///சந்தாதாரர்களை ஒரு கண்ணோட்டத்துடனும், மற்றவர்களை (என் போன்றோரை ) வேறு மாதிரியும் பார்ப்பது வருத்தம் அளிக்கிறது////

   மிகமிக தவறான புரிதல் மகேஷ் நண்பரே! எடிட்டருடன் இன்னும் கொஞ்சம் பழகிப்பார்த்தீர்களானால் நிச்சயம் உங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு விடுவீர்கள்!

   செனா அனா'வைக் கூட ஒருமுறை பார்த்துப் பேசிவிட்டீர்களானால் எத்தனை தன்மையான மனிதர் என்பதைப் புரிந்துகொண்டுவிடுவீர்கள்! அதன் பிறகு அவர் செய்யுள் வடிவில் ஒரு புத்தகத்தையே எழுதி அனுப்பினாலும் உங்களுக்குத் தவறாக நினைக்கத் தோன்றாது!

   இந்தவருட EBF மீட்டிங் நடந்திருந்தால் இதெல்லாம் சாத்தியமாகிடவாய்ப்பிருக்கிறது.. ஹூம்ம்...

   Delete
 65. ஓசுர் பகுதியினில் நமது நண்பர்கள் யாரேனும் உள்ளனரா ? இருப்பின் மெசெஜ் ப்ளீஸ் ...!

  ReplyDelete
  Replies
  1. டியர் எடி, ஓசூர் பக்கதில் பெங்களுரூன்னு ஓகேவா 😊... நாளை மாலை அங்கிருப்பதாக ஒரு ப்ளான் வைத்திருக்கிறேன்...

   Delete
 66. இந்த மாத இதழ்களை கொஞ்சம் தாமதமா படிச்சாச்சி...
  புயலில் ஒரு புதையல் வேட்டை-அசத்தல் ஓவியங்கள்,தரமான அட்டைப்படம்,
  வசனங்கள் நச் “சில நேரங்களில் ஒரு நூறு வார்த்தைகளுக்கு இல்லாத வலிமை ஒற்றை செயலுக்கு இருப்பதுண்டு”...
  டெக்ஸ் கதைகள் கமர்ஷியல் வட்டத்தில் இருப்பதாலோ,இன்ன பிற காரணங்களாலோ சிலருக்கு பிடிக்கவில்லையோ என்னவோ,ஆனால் நமக்கு அப்படியில்லை,டெக்ஸ் வில்லரின் கதைகள் எப்பொதும் ஒரு நம்பிக்கையையும்,மனதிடத்தையும் அளிப்பவை...
  நெருக்கடியான நேரங்களில் அச்சூழலை சமாளிக்கும் மனத்திடத்தை அளிப்பவை...
  அந்த வகையில் புயலில் ஒரு புதையல் வேட்டை சோடை போகவில்லை,எமது மதிப்பெண்கள்-9/10.

  ReplyDelete
  Replies
  1. வரிக்கு வரி வழிமொழிகிறேன் அறிவரசு ரவி அவர்களே..

   Delete
 67. நில்,கவனி,சிரி...
  புத்தம் புது சிறையொன்று வேண்டும்..
  -இரண்டுமே ரிலாக்ஸ் கார்னர் கதைகள் தான்,வழக்கம்போல் சிறப்பு...

  காலனின் காகிதம்...
  ஓகே ரகம்...

  ReplyDelete
  Replies
  1. அருமை அண்ணா. எப்போதும் போல புயல் வேக விமர்சனம்.

   Delete
 68. டியர் எடி,

  பல வருட கனவு, ஒருவழியாக அரங்கேற போகிறது... சுஸ்கி விஸ்கி ஸ்பெஷல் மூலம். நண்பர்கள் குழுவில் பல வருடங்களாக இதற்காக எடி ப்ளாகை முற்றுகை இடனும் என்று அவ்வப்போது குரல் எழும்போதெல்லாம், அங்கே தவறாமல் ஆஜராகி கொண்டிருந்தேன்... இப்போது விரைவில் அதை கையில் ஏந்த போகிறோம் என்பதில் ஒரு பால்யகால நண்பனை மீண்டும் பார்க்கும்போது வரும் பரவசம்...

  இணையத்தில் அவ்வப்போது சுஸ்கி விஸ்கி பூர்விக நாட்டில் அவர்கள் கொண்டாடும் விதத்தை பார்க்கும்போது, ஏக்கமாக இருக்கும். 300 ஆல்பங்கள் மேல் ஓடி கொண்டிருக்கும் இப்படிபட்ட அமானுஷ்ய, வேற்றுகிரக, மாய உருவங்கள், மந்திரம் என்று கலந்தடிக்கும் கதைதொடருக்கு, நமது வாசகர்களுக்கு கிடைக்காமல் போய் விட்டதேன் என்று..

  நாம் ஒரு பெயரில் அறிந்தவர்களை, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நாடு பிரசுங்களில்,
  பாப் பொபெட்டே
  ஸ்பைக் சுஸி
  வில்லி வாண்டா
  லூக் லூஸி
  என்று இன்னும் பல பெயர்களில் கொண்டாடி கொண்டிருக்கும் உலகளாவிய ரசிகர்கள் பட்டியலில் மீண்டும் இணையபோகிறோம்.. ஆவலுடன் எதிர்நோக்குகிறன்.

  பி.கு.: அந்த பழைய எழுத்துறு, புதிய அட்டை வடிவம், அதுவும் ஒரிஜினல் வடிவமைப்பில் எனும் கிளாசிக் டச்... கூடவே ஹார்ட்கவர் என்று அசத்தல் காம்பினேஷன்... 300 ரூபாய் அனுப்பி புக் பண்ணியாச்சு 😊

  ReplyDelete
 69. சார் அப்படியே அந்த Sinister 7 மற்றும் story of the west இரண்டு புத்தகங்களுக்கு பெயர் அறிவித்து விட்டால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 70. //சார் அப்படியேஅந்தsinister 7மற்றும்story of the westஇரண்டு புத்தகங்களுக்கு பெயர் அறுவித்தவிட்டால் நன்றாக இருக்கும். குமார் சேலம்//+1. . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 71. காலனின் காகிதம்

  ஆல்பா கதைத் தொடரின் கதைக்கருக்கள் தொடர்ந்து பிரமிப்பூட்டுகின்றன.

  கிட்டத்தட்ட இந்த தலைமுறை நிகழ்வுகளை கதையாக்குவதால் மனம் எளிதில் ஒன்றுகிறது.
  கிழக்கு ஜெர்மனி - மேற்கு ஜெர்மனி இணைந்தது தெரியும் .
  ஸ்டாஸி ஃபைல்கள் இதுவரை அறியாதவை. அமெரிக்க ஜனாதிபதிகளையே மிரட்ட உபயோகிக்கப்பட்டன எனச் சொல்லப்படும் ஜான் எட்கர் ஹூவர் ஃபைல்கள் அளவுக்கு இவை பிரபல்யம் இல்லை என்றபோதும் ( சார்லி சாப்ளின் அமெரிக்காவில் நுழையக் கூடாது என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு தன் வாழ்நாள் இறுதிவரை ஸ்விட்சர்லாந்தில் பிரிட்டிஷ் குடிமகனாக வாழ வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியவர் ஹூவர்.) ஸ்டாஸி ஃபைல்கள் வேறுவகையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

  நமது கதையில் சர்வதேச ஒற்று ஆவணங்கள் இடம்பிடித்தாலும் ( கதையின் வேகமான போக்கு மகிழ்ச்சியிலாழ்த்துகிறது.) ஸ்டாஸி ஃபைல்கள் வேறுவகையில் அதிர்ச்சியடையச் செய்கின்றன.

  1989- களில் 16 சொச்சம் மில்லியன் மக்கள் தொகை கொண்ட கிழக்கு ஜெர்மனி சாமான்ய மக்களில் 5.2 மில்லியன் குடிமக்களின் மீதான ஃபைல்கள் இடம் பெற்று இருந்திருக்கின்றன.இவை முறைகேடாக பயன்படுத்தப்பட்டும் இருக்கின்றன.

  இணைப்புக்குப் பின்பு இவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ( பாதியளவு ஸ்டாஸி ஃபைல்கள் இணைப்பின் போது எரியூட்டப்பட்டு விட்டன)

  ஆல்பாவின் முதல் ஆல்பம் ரூபிள் மதிப்பினை நினைவூட்டினால் இரண்டாவது கதை ஸ்டாஸி ஃபைல்கள் பற்றி நினைவூட்டுகிறது.

  அடுத்த ஆல்பா எதனை பற்றியதாக இருக்கும் என்பது பற்றி ஆவல் மேலிடுகிறது.

  சமகாலத்திய கதைகளில் ஆல்பா தொடர் தவிர்க்க இயலாத இடத்தை பெறும் என்ற ஆழமான நம்பிக்கை இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் விமர்சனத்தில் நீங்க குறிப்பிட்டிருந்த Stockholm syndromeஐ Money heist சீரிஸில் செம்மயாக கையாண்டிருப்பார்கள்.!
   புயலில் ஒரு புதையல் வேட்டையில் க்ளான்டைனின் குணத்தை பார்த்தபோது எனக்கு Money heistல் வரும் Monica நினைவுக்கு வந்துபோனார்.!

   Delete
  2. எனக்கு "பயணம்" ! நாகார்ஜுன் நடித்த விமான ஹை-ஜாக் படம் !

   Delete
  3. ஸ்டாசி files பற்றி மேலோட்டமாய்ப் பார்த்திருக்கிறோம் சார் - 4 வருஷங்களுக்கு முன்பாக ! நினைவூட்டிப் பாருங்களேன் - எந்த ஆல்பமென்று !

   Delete
  4. கண்ணன் @ yet to see money heist series.

   இன்னொரு ஸிண்ட்ரோம் இருக்கு

   நெஞ்சு படக் படக்குன்னு அடிச்சுக்கும், கால் தரையுல பாவுர மாதிரி இருந்தாலும் தலை செவ்வாய் கிரகத்துல இருக்குற மாதிரி தெரியும், ஒரே குழப்பமா இருக்கற மாதிரி பீலிங் வரும்.கண்ணு முன்னால காணாத கோலமெல்லாம் தெரியும்.

   எப்பங்கறீங்களா?

   மிகவும் அழகான கலைப்படைப்புகளை ஒரே நேரத்தில பாக்கறச்சே.

   பேரு ஸ்டெந்தால் ஸிண்ட்ரோம்
   ( STENDHAL SYNDROME)

   புயலில் ஒரு புதையல் வேட்டையின் அடுத்தடுத்த பக்கங்களின் ஓவியங்களை பாத்துகிட்டே வந்தப்ப இந்த ஸிண்ட்ரோமின் அறிகுறிகள் எனக்கு வந்தன.:-)

   Delete
  5. //ஸ்டாசி files பற்றி மேலோட்டமாய்ப் பார்த்திருக்கிறோம் சார் - 4 வருஷங்களுக்கு முன்பாக ! நினைவூட்டிப் பாருங்களேன் - எந்த ஆல்பமென்று !//

   Shall try sir.

   Delete
  6. ///மிகவும் அழகான கலைப்படைப்புகளை ஒரே நேரத்தில பாக்கறச்சே.
   பேரு ஸ்டெந்தால் ஸிண்ட்ரோம்
   ( STENDHAL SYNDROME)///

   புரிஞ்சி போச்சி செனா அனா..!

   எனக்கு மிஸ் எலனோரை பார்த்தப்போ ஏற்பட்ட மாதிரி.. உங்களுக்கும் ஈ வி க்கும் சமையல்காரம்மா அமெலியாவைப் பார்த்தப்போ ஏற்பட்டிருக்கும்..!

   Delete
  7. கிட்.. கருப்புதான் எங்களுக்குப் பிடிச்ச கலரு.. டொய்யொ டொய்யோ..

   Delete
  8. /எனக்கு மிஸ் எலனோரை பார்த்தப்போ ஏற்பட்ட மாதிரி.. உங்களுக்கும் ஈ வி க்கும் சமையல்காரம்மா அமெலியாவைப் பார்த்தப்போ ஏற்பட்டிருக்கும்..!/

   ஆஹான்..என்னிய பத்தி எழுதுறீங்க.சரி.சாமான்யன்.தப்பிச்சிகிடுவீங்க.
   .இ.சி.ஈ.இளவரசரை பத்தி இப்டி எழுதி ஒரே நேரத்தில குருதுரோகம்,
   ராஜதுரோகம் செஞ்சுபுட்டீங்க.போச்சு.கேபிட்டல் பனிஷ்மெண்ட்தான். அதாவது அடுத்த மாடஸ்டிக்கு மெய்யாலுமே நீங்கதான் மொழிபெயர்ப்பு.

   Delete
  9. ///அதாவது அடுத்த மாடஸ்டிக்கு மெய்யாலுமே நீங்கதான் மொழிபெயர்ப்பு.///

   இப்படியாக.. மேச்சேரி மெட்ரோபாலிட்டன் யூத் க்ளப் ஃபவுண்டரின் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது!

   Delete
  10. செனா அனா..

   என்ர குருநாயரை ஞான் அறியும் .. மேலே நோக்குங்கோ...

   டொய்யோ டொய்யோ ன்னு மண்ணு மிதிச்சி ஆமோதிக்கிறாரு..!😂

   Delete
 72. எனக்கு எலெக்ட்ரா.. World is not enough..

  ReplyDelete
 73. ஸ்டாசி filesபற்றி மேலோட்டமாய்பார்த்திருக்கிறோம். Lady sங்களா சார் . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. அந்த கருப்பு வெள்ளை கிராஃபிக் நாவல் தான சார்...

   Delete
  2. என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்

   Delete
 74. ஆசிரியருக்கு ஒரே ஒரு வேண்டுகோள்..

  ஆகஸ்ட் சமயம் அதுவும் புத்தகவிழா சமயம் டெக்ஸ் இல்லா மாதம் சரியானது அல்ல சார்..வேலைப்பளு அதிகம் இருப்பின் மற்ற ஏதாவது இதழை கூட தள்ளி வைக்கலாம் சார்.ஆனால் டெக்ஸ்..?!

  ReplyDelete
  Replies
  1. அதானே...!? மாபப்பிள்ளை இல்லாம கல்யாணமா.?

   இதெல்லாம் சரிபட்டு வராது தலைவரே..! உங்க தலைமேல ஒரு அரைநிர்வாண போராட்டத்தை சிவகாசியில நடத்திப்புடலாம்..! என்ன சொல்றிங்க.?

   Delete
 75. டெக்ஸ் செவ்விந்தியரிடம் மோதும் கதைகள் எப்பொழுதும் இன்னும் பரபரப்பும் ,சுவையும் கூடுவதால் அது போன்ற கதைகளையும் அதிகம் தேர்ந்தெடுங்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. இதுவும் நல்ல கோரிக்கைதான் தலீவரே..! இதுக்கும் ஒத்து வராங்களான்னு பாக்கலாம்..!
   இல்லாங்காட்டி மேலே சொன்ன போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கிட்டு போயிடலாம்...
   மெரண்டுறமட்டாங்க..!!

   Delete
  2. சிவகாசி முழுக்க மந்திரிக்கணுமே...

   Delete
  3. போராட்டத்துக்கு துணைத்தலீவரே நீங்கதான் மிஸ்டர் நியாண்டர்தால்..😝

   Delete
 76. //ஸ்டாசி files பற்றி மேலோட்டமாய்ப் பார்த்திருக்கிறோம் சார் - 4 வருஷங்களுக்கு முன்பாக ! நினைவூட்டிப் பாருங்களேன் - எந்த ஆல்பமென்று !//

  என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்

  ReplyDelete