Powered By Blogger

Saturday, July 16, 2022

ஜூஸ் பிழிய வாரீகளா ?

 நண்பர்களே,

வணக்கம். சும்மா ஜிலோன்னு ஐயா நிக்குறாரு...! எதிர்த்தாப்லே லைனா நம்மவர்கள் நிக்குறாங்க ! வலது கையை மட்டும் தூக்கிப்புட்டு. ஆரஞ்சு பழத்தை சூஸ் பிழியுற பாணியிலே விரல்களை சுழட்டுறேன்... வரிசையிலே முதல்லே நிக்கிற ஸ்டீல் - சீவக சிந்தாமணியிலே ஆரம்பிச்சு. Quantum Physics வரைக்கும் குட்டிக்கதைகள் சொல்லி ஒப்பிக்கிறாரு, ஒத்த குளறுபடி இல்லாம !! அடுத்து நிக்கிறவரை பாக்குறேன்...இன்னொருக்கா விரல்களால் சூஸ் பிழியுறேன்...அடடே...நம்ம செனா அனா சார் தானே அது ? ....'நேற்றுஇல்லாதமாற்றமதுஎன்னத்து....காற்றுஎன்காதில்ஏதோசொன்னத்து...இதுதாண்டாப்புஎன்பதா? செந்தூர்முருகனருளாலேஸ்பைடர்கதைப்பழக்கண்டுவென்றுஏழாயிரம்ரூபாய்க்குபுக்ஸ்போடுவீராக' என்று மூச்சுத் திணற ஒப்பிக்கிறார் ! லைட்டான கலவரத்தோடே அடுத்த ஆள் நோக்கி நடக்கிறேன் ...இன்னொரு சூஸ்...இம்முறையே நிப்பவர் நம்ம தலீவர் !!  "ஓங்கி அடிச்சா பதினெட்டு டன் தெரியுமா ? பதுங்கு குழியிலே பால்பாயாசம் சாப்பிடுவேன்....சங்கத்தேர்தலிலே சகட்டுமேனிக்கு கள்ள வோட்டு குத்துவேன் ! பழைய தலைவன்னு நினைசீங்களா ? ஒற்றைத் தலைவர்டா....!!" என்று சூறாவளி வஜனம் பேசுகிறார் ! 'கிழிஞ்சது போ' என்றபடிக்கே அடுத்த ஆஜானுபாகுவான உருவத்திடம் போய் நின்று 'எதுக்கும் இருக்கட்டுமே' என்று ரெண்டு பழத்தைச் சேர்த்தே சூஸ் பிழியுறேன் !! "டெக்ஸ் வில்லர் அவர்கள் இம்முறையும் என்னை ஏமாற்றவில்லை ! கார்சன் அவர்கள் அந்தச் சிறப்பான சுக்காவைக் கடிக்க முற்படும் வேளையில் அந்த சொட்டைத்தலை வெயிட்டர் அவர்களின் கண்களில் அன்பு ஓடுவதை கண்டு ஒரு கணம் பஸ் என்றும் பாராமல் கண்களில் தாரை தாரையாய் நீர் வச்சுண்டேன் ! உடனடியாக எனது கண்ணீருக்கு வடிகால் தேடிக் கடுதாசி எழுத கை பரபரத்தது ; ஆனால் இல்லத்தரசி அவர்கள் அருகில் இருக்கவே, பேனா அவர்களைத் தேடிப் பிடிக்கும் வேகம் தானாய் வடிந்து போனது என்பதைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன் சார் ! அப்புறமாய் அந்த நடன அழகியை பார்த்த நொடியே ஒரு sister பீலிங்கு   !" என்று கூச்சத்தோடு பேச ஆரம்பிக்க, 'எண்ட குருவாயூரப்பா !!' என்றபடிக்கே நகர்கிறேன் ! அடுத்த பார்ட்டிக்கு சூஸ் பிழிய நினைத்துக்கொண்டிருக்கும் போதே - "அதிகாரி என்றாலே அராஜகம் செய்பவர் என்று நாக்கு மேலே பல் போட்டுப் பேசுறவர்களைப் பார்த்து நான் கேக்கிறேன் - தட்டைமூக்கர் சுட்டா மட்டும் தக்காளிச் சட்னியா வருகுது ? மஞ்சள் சொக்காயை தோய்ச்சுப் போடக்கூட நேரம் இல்லாமல் கடமை...கண்ணியம்...சுட்டுப்பாடு ன்னு ஒரு லட்சியத்தோட வாழற எங்க தல என்ன தொக்கா  ? என்ன தக்காளித் தொக்காங்கிறேன் ?" என்று பொங்குகிறார் ! ஆத்தாடியோவ் !! இது எதுவும் சரிப்படாது போலிருக்கே, என்றபடிக்கே  விரல்களை ஜோப்பிக்குள் திணித்துக் கொண்டே நடக்க -  "சார்... இன்னிக்கு சனிக்கிழமைங்கிறதினால பதிவா ? பதிவுங்கிறதாலே சனிக்கிழமையா ?" என்ற குரல்  கேட்கிறது !! அட, நம்ம சேலம் குமார் சார் ! 

எல்லாமே அந்த சூஸ் பிழியுற சிக்னல் பண்ற வேலையோ ? என்றபடிக்கே ஒரு பெரிய சொடுக்கை மட்டும் போடுறேன் - அத்தினி பேருமே நார்மலுக்குத் திரும்பிடுகிறார்கள் ! "அச்சச்சோ...மணி ஏழாக போகுதே....நான் தூங்குற நேரமாச்சே?" ; "அதிகாரியின் காலியே ஆகாத பிஸ்டலை இந்த மாசம் பேரீச்சம்பழக்காரன் லவட்டிட்டுப் போயிடுறானாமே - ஏசப்பா ..உமக்கு நன்றி !!" ; "யாகவா முனிவரும், ஜப்பானிய பகுத்தறிவாளர் யகுமா குமமாட்டோவும்  ஒற்றை இடத்தில ஒத்த கருத்தோடு இருப்பதை - "நீயும் நானும் ஒண்ணு..நான் தின்னுவதோ ரவுண்டு பன்னு !!" என்ற வரிகளில் நாம் உணரும் அதே வேளையில் பன்னில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் பற்றிய கேள்வியும் நம்முன்னே எழுகிறது !" என்று கலவையாய்க் குரல்கள் ஒலிக்க, தெறித்தடித்து கண்விழிக்கிறேன் !! ஆத்தாடியோவ்....அத்தினியுமே கனவு தானா ? 

மலங்க மலங்க கொஞ்ச நேரத்துக்கு முழித்த பிற்பாடு தான் புரிகிறது - கடந்த ஒரு வாரமாய் நம்ம மாயாஜால மன்னன் மாண்ட்ரேக்கோடு கொட்டிய குப்பையின் பலனே இந்தக் கலவரமான கனவெல்லாம் என்பது !! இன்னமும், இந்த நொடி வரைக்குமே அந்த hangover தொடர்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் - இன்னா ரவுசு விட்டிருப்பார் பென்சில் மீசைக்காரர் என்று !!

MANDRAKE The Magician !! காமிக்ஸ் உலகின் அதீத சக்தி கொண்ட சூப்பர் ஹீரோக்கள் வரிசையில் மனுஷன் செம முன்னோடி எனலாம் ! சூப்பர்மேன் அறிமுகம் கண்டது 1938-ல் ! BATMAN அறிமுகம் ஆனது 1940-ல் ! ஸ்பைடர்மேன் தலை காட்டியது 1962-ல் ! The Incredible Hulk கூட அதே 1962 தான் ! ஆனால் சில்க் அங்கியும், சதுரத் தொப்பியும் போட்ட நம்மாள் இவர்கள் அனைவருக்குமே சீனியர் - 1934 born !! வேதாளரை உருவாக்கிய அதே Lee Falk தான் மாண்ட்ரேக்கின் பிதாமகருமே ! கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே இந்த மாயாஜாலக்காரரை Lee Falk உருவாக்கி விட்டாராம் ! ஜட்டியை சட்டைக்கு மேலே மாட்டிக் கொண்டு இஷ்டத்துக்கு பறந்து, பாய்ந்து லூட்டியடிக்கும் சூப்பர்மேனை ஏற்றுக் கொள்வதைப் போல, 'பிச்சக்' என்று பிசினைப் பீச்சி விட்டு அதில் வலைகட்டிப் பறக்கும் ஸ்பைடர்மேனை ஏற்றுக் கொள்வது போலவே, மாண்ட்ரேக்கின் மாயாஜால கண்கட்டி வித்தைகளை ஜனம் ரொம்ப காலமாய், உலகின் பல்வேறு மொழிகளில் ஏற்றுக் கொண்டு விட்டுள்ளனர் ! இதில் ஒரு கூத்து என்னவெனில் அந்நாட்களில் அமெரிக்காவில் லியோன் மாண்ட்ரேக் என்ற நிஜவாழ்க்கை மேடை மந்திரவாதியும் இருந்துள்ளாராம் ! அவரைப் பார்த்து Lee Falk காமிக்ஸ் நாயகரை சிருஷ்டித்தாரா ? அல்லது காமிக்ஸ் நாயகரைப் பார்த்து தனது கெட்டப்பை லியோன் மாற்றிக் கொண்டாரா ? என்பதை இங்கே போனால் அலசி ஆராய்ந்திடலாம் : https://en.wikipedia.org/wiki/Mandrake_the_Magician#Leon_Mandrake 

ஆராய்ச்சிகளெல்லாம் ஒருபுறமிருக்க - இந்த SMASHING '70ஸ் தனித்தடத்தின் மூன்றாம் இதழில் தான் க்ளாஸிக் காமிக்ஸ் காதலர்களுக்கான நிஜமான லிட்மஸ் பரிசோதனை காத்துள்ளது என்பேன் ! 

  • வேதாளர் - சொல்லவே வேணாம் ; மாஸ் நாயகர் ! 
  • ரிப் கிர்பி - மாஸ் நாயகராய் இல்லாவிடினும் நம்மை நைஸ் பண்ணும் வித்தைகள் அறிந்தவர் ! 

ஆனால் நார்தாவின் ஆளான நம்மாள் மாண்ட்ரேக்கோ வித்தைகள் மட்டுமே அறிந்தவர் !!  லாஜிக் தேடும் நண்பர்கள் ஆளுக்கொரு சம்மட்டியோடு மூ.ச.வாசலில் காத்திருப்பர் என்பது புரிந்தாலுமே - 1938 முதல் 2013 வரையிலும் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு உலகெங்கிலும் தாக்குப்பிடித்திருக்கும் இந்த மாயாஜால மனுஷனை அத்தனை சுலபமாய் மட்டம் தட்டிவிட இயலாது என்பதே நிஜம் ! முக்கால் நூற்றாண்டுக்குத் தாக்குப் பிடித்திருக்கும் எதுவுமே ; யாருமே முழு தத்தியாய் இருத்தல் அசாத்தியமன்றோ ? So ஒரு நெடும் இடைவெளிக்குப் பின்பாய் நம் கரைகளில் ஒதுங்கியிருப்பவருக்கு சிகப்புக் கம்பளம் விரித்தாலும் சரி, விரிக்காது போனாலும் சரி - இடுப்பிலே உள்ள லங்கோட்டை உருவாத வரையிலும் 'வெற்றி...வெற்றி..!!' என்று கரூர் ராஜசேகரன் சாரோடு சேர்ந்து நானும் குரல் கொடுக்க ஏதுவாக இருக்கும் ! 

மாண்ட்ரேக்குடன் எனது பரிச்சயம் ரொம்பச் சின்ன வயதிலேயே என்பதை உங்கள் காதுகளில் கெட்சப் கசியும் ரேஞ்சுக்கு ஏற்கனவே சொல்லியிருப்பேன் ; ஆனால் எனக்கு நினைவில் நின்ற கதைகளின் பட்டியல் அந்த ராட்சஸக் கரையான் கதையைத் தாண்டியும் உண்டு ! அந்நாட்களில் இந்திரஜால் காமிக்ஸில் ரெகுலராய் வலம் வந்த மாண்ட்ரேக்கின் தொடரில் The Camel என்றொரு மாறுவேஷப் பார்ட்டி வில்லன் வருவான் ! அவனோடு மாண்ட்ரேக் மோதும் கதை இன்னமும் நினைவில் நிற்கிறது ! அப்புறம் சமையல்காரனாய் மாண்ட்ரேக்கிடம் பணியாற்றும் ஹோஜோ தான் இன்டெர்-இன்டெல் உளவு அமைப்பின் ரகசியத் தலைவர் என்ற உண்மை தெரிய வரும் கதையுமே செம  favorite !! ஜூடோவில் பத்தாவது பெல்ட் வாங்கியிருக்கும் ஹோஜோ வில்லன்களைப் பந்தாடுவதை அம்புட்டு ஆர்வமாய் ரசித்த நாட்கள் அவை ! பின்னாட்களில் எடிட்டர் குல்லாவை மாட்டிக் கொண்டு மாண்ட்ரேக் கதைகளை முத்து காமிக்சில் மறுக்கா நுழைத்த வேளையில் "8" கும்பலோடு மோதும் சாகஸங்கள் லயிக்கச் செய்தன தான் ; ஆனால் ஒருகட்டத்தில் இவர் மீதான மையல் ஏகத்துக்குக் குன்றியிருக்க, அந்நாட்களில் வாங்கிய கதைகளில்  3 பிரசுரம் காணாமலே கையில் தங்கி விட்டன ! இடைப்பட்டிருக்கும் இந்த 20+ ஆண்டுகளில் நாம் எங்கெங்கோ, எதிலெதிலோ சவாரி செய்தாச்சு ; புதுசு புதுசாய் நாயகர்கள்...ஜானர்கள் என்று பார்க்கவும் செய்தாச்சு ! ஆனால் பழமை மீதான soft corner உங்களிடம் இன்னமும் தொடர்கிறது என்பதை மறுப்பதற்கில்லை - at least ஒரு கணிசமான எண்ணிக்கையிலானோரிடமாவது ! 'பிரிவின் தூரம் பாசத்துக்குத் தூண்டுகோல்.........Absence makes the heart grow fonder' என்று மேல்நாட்டு அறிஞர் மேஜர் சுந்தர்ராஜன் சொன்னாரோ, சொல்லலியோ தெரியலை - ஆனால் அதனை நம்பி இந்த ஆகஸ்டில் மாண்ட்ரேக்கை களமிறக்க all is ready !!   

இதோ - அட்டைப்பட முதல் பார்வை - நமது சென்னை ஓவியரின் கைவண்ணத்தில் ! Of course நெட்டில் கிட்டிய வெவ்வேறு டிசைன்களை ஒருங்கிணைத்து, அதே நெட்டில் கிட்டிய வர்ணச் சேர்க்கையினையுமே அழகாய் நுழைத்து, ஜூனியர் எடிட்டரின் கைவண்ணத்து நகாசு வேலைகளுடன் நீங்கள் மெகா சைசில் பார்த்திடவுள்ள அட்டைப்படத்தின் முதற்பார்வை இதோ :  

("ஸ்பெஷல்" என்ற எழுத்துருக்கள் ; பின்னட்டையில் வரும் சில எழுத்துக்கள் - நகாசு வேளைகளில் இடம்பிடிக்கும் !)

கதைகளைப் பொறுத்தவரைக்கும் மொழிபெயர்ப்பு முழுக்க முழுக்க நமது கருணையானந்தம் அவர்களின் கைவண்ணமே ! எடிட்டிங் செய்து, மேலோட்டமாய் மாற்றி எழுதியதுக்கே கனவுகளில் பாயசச் சட்டிகளோடு பெருசுப் பெருசாய் ஆட்கள் தட தடவெனக் குறுக்கேயும் நெடுக்கேயும் ஓடுகிறார்கள் - இந்த அழகில் நானே 200 பக்கங்களையும் மொழிபெயர்த்திருப்பின் - அடுத்த வருஷத்து ஈரோட்டுச் சந்திப்பு வரைக்குமே ஆரஞ்சு பழங்களை சூஸ் புழிஞ்சிட்டே இருந்திருப்பேன் என்பது நிச்சயம் !! விதவிதமான ஜானர்களிலான கதைகள் ; சவாலான கதைகள் என்று எதெதெற்குள்ளோ தலை நுழைத்து விடுவதற்குத் துளியும் தயங்காதவனுக்கு இந்த க்ளாஸிக் நேர்கோட்டுக் கதைகளுக்குள் பயணிப்பது next to impossible !! அவற்றைச் சளைக்காது இன்றளவும் கையாண்டு வரும் அங்கிளுக்கு இங்கொரு round of applause அத்தியாவசியம் என்பேன் ! க்ளாஸிக் நாயகர்கள்...க்ளாஸிக் கதை பாணி...க்ளாஸிக் எழுத்து நடை - என்ற கூட்டணி அரிதல்லவா ? And பேனா பிடிக்க அவசியமின்றிப் போனாலும் இந்த SMASHING 70's தனித்தட இதழ்கள் ஒவ்வொன்றுமே - குறுக்கைச் சுத்தமாய்க் கழற்றிக் கையில் கொடுத்து விடும் hard taskmasters ! இருநூற்றுப் பன்னிரண்டு பக்கங்கள் இம்முறை ; வேலை பார்க்கப் பார்க்கப் பார்க்க வந்து கொண்டே இருப்பது போலொரு பிரமை !! DTP செக்ஷனிலுமே இந்த ஆல்பங்கள் அநியாயத்துக்கு வேலை இழுக்கும் ; இந்த ஒற்றை ஆல்பத்தில் பணியாற்றும் நேரத்துக்கு அரை டஜன் கலர் இதழ்களை அசால்ட்டு ஆறுமுகமாய் பந்தாடிட இயலும் !! So சகலத்தையும் இந்த வாரத்தில் தக்கி முக்கி கரை சேர்த்து, அச்சும் முடித்தாயிற்று ! இனி பைண்டிங் காவடிகள் மாத்திரமே பாக்கி ! 


And இந்த வாரத்தில் எடுக்க நேர்ந்த இன்னொரு காவடி ரத்தக் கண்ணீர் ரகம் ! மார்ச் துவக்கத்திலேயே நடப்பாண்டுக்குத் தேவையான ஆர்ட்பேப்பர் மற்றும் வெள்ளைத்தாள்களை கணிசமாய் வாங்கிப் போட்டிருந்ததால் - பேப்பர் மார்க்கெட்டின் அன்றாட நகர்வுகளைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை நான் ! சரி, இன்னும் காரிகன் ஸ்பெஷலுக்கு மட்டும் பேப்பர் வாங்கிப் போட்டுப்புட்டால், அடுத்தாண்டு அடுத்த கொள்முதலைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் பேப்பர் ஸ்டோருக்கு போன் போட்டேன் ! "அண்ணாச்சி,...நல்லா இருக்கேளா ? இந்த மெரி பேப்பர் இத்தினி ரீம் வேண்டியிருக்குது....செக்க போட்டு குடுத்தனுப்பிட்டு வண்டிய கோடவுனுக்கு போக சொல்லட்டுமா ?" என்று வெள்ளந்தியாய்க் கேட்டு வைத்தேன் ! ஜெயிலுக்குப் போய்விட்டு வெளியே வரும் கவுண்டர் ஒத்தை ரூபாய்க்கு தேங்காய் கேட்டு கடையில் நிற்கும் போது அந்தக் கடைக்காரர் ஒரு பார்வை பார்ப்பாரில்லையா - அதே லுக் தான் எனக்கும் கிட்டியிருக்கும் நான் பேசியிருந்தது மட்டும் வீடியோ காலாக இருந்திருக்கும் பட்சத்தில் ! "ஹா ஹா ஹா...அண்ணே ரொம்ப நாளா பாரின் டூர் கீர் போயிருந்திருப்பீகளோ ? நடப்பே தெரிய காணோமே ?!!" என்றார் அந்தப்பக்கமிருந்தவர் ! "கிலோவுக்கு ரெண்டோ..மூணோ ஓவா விலை ஏத்தியிருப்பீங்க ; அது தானே ? ஒண்ணும் பிரச்சனையில்லை...பாத்துக்கலாம் !" என்றேன் லைட்டாய் உள்ளுக்குள் தலைதூக்கிய எரிச்சலை மறைத்தபடிக்கே ! "ஹோ..ஹோ..ஹோ..! சந்தேகமே இல்ல,,...அண்ணே ஊரிலேயே இல்லை போல !! ரெண்டு ரூவா...மூணு ரூவாவா ? டன் ஒண்ணுக்கு இன்னிக்கு விலை என்ன தெரியுமா ? _____ இத்தனை ஆயிரம் !!" என்றார் ! என் தலைக்குள் கடைசியாய் மார்ச் கொள்முதலின் விலை மட்டுமே தங்கியிருக்க, அந்த மனுஷன் சொன்ன விலையை கால்குலேட்டரில் அடித்துப் பார்த்த போது -  விலை முப்பத்தி ஓராயிரம் ரூபாய்கள் கூடியிருக்கு என்று வந்தது !! அந்த நொடியில் எனக்குள் உருவாக்கம் பெற்ற வார்த்தைகளை  கலாமிட்டி ஜேன் உதிர்த்திருந்தாலே காதுகள் கருகிப் போயிருக்கும் !! சொல்ல முடியாத பிரளயமாய் ஆத்திரம், ஆற்றமாட்டாமை, கடுப்பு, கொலைவெறி, கெட்ட கெட்ட வார்த்தைகள், சாபங்கள் - என்று ஏதேதோ வாயிலிருந்து கொட்டித் தள்ள, அந்த முனையில் இருந்த பேப்பர் ஸ்டோர் அண்ணாச்சியும் தன் பங்குக்கு பேப்பர் உற்பத்தியாளர்களை சகட்டு மேனிக்கு திட்டித் தள்ளினார் ! கொஞ்சமாய் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னே மார்க்கெட் நிலவரம் என்னவென்று அவரிடம் கேட்டேன் !! அவர் விளக்கியதன் சாரம் இதுவே : 

  • இன்றைக்குப் பெரிய பேப்பர் மில்கள் கணிசமாய் தம் உற்பத்திகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர் ; 
  • உட்பொருட்கள் தட்டுப்பாட்டால், மித விலை ரகங்களின் உற்பத்திகளை ரொம்பவே குறைத்துக் கொண்டு விட்டனர் ! 
  • ஒவ்வொரு நகர விநியோகிஸ்தருக்கும் ஒரு குறிப்பிட்ட கோட்டாவில் மட்டுமே சரக்கு வழங்கப்படுகிறது & அந்தக் கோட்டாவின் 70 சதவிகிதத்தை மாத இறுதிக்குள் மில் supply செய்தாலே அது அவர்களின் குலசாமிப் புண்ணியமாம் !! 
  • கொரோனா கூத்துக்கள் ஒரு வழியாய் மங்களம் கண்டு, பள்ளிகள் மீண்டும் இயங்கத்துவங்கியிருக்க - புக்ஸ் ; நோட்புக்ஸ் ; டயரி ; கைடு என்று சகலத்துக்கும் தெறி டிமாண்ட் ! 
  • So உற்பத்தி குறைவு ; தேவையோ தாறுமாறு என்ற சூழல் ! விளைவு : வாய்க்கு வந்த விலைக்குக் காகிதம் விற்பனை காண்கிறது !! 

To cut a long story short - அண்டா..குண்டா...சட்டி...பாத்திரம்...என்று சகலத்தையும் ஜாமீனாய் பேங்க்கில் ஒப்படைத்து, ஒரு குறுகிய அவகாசத்து லோனை வாங்கி - தெருத் தெருவாய்ப் பிச்சை எடுக்காத குறையாய் பேப்பரை கொள்முதல் செய்திட நானும் ஜூனியர் எடிட்டரும் இறங்கினோம் ! கையில் ரொக்கத்தை வைத்துக் கொண்டு 2 டன் கேட்டால் - "அப்டி ஓரமாய் போயி வெளயாடுங்க தம்பி !!" என்ற பதிலே கிட்டியது ! சளைக்காது கொஞ்சம் கொஞ்சமாய், மொத்தம் 4 பேரிடம், வெவ்வேறு பெயர்களில் பில் போட்டு இயன்ற அளவிற்குப் பேப்பரை வெறித்தனமாய் வாங்கிக் குவித்து விட்டோம் ! இந்த 2 நாட்களில் நாம் வாங்கியுள்ள பேப்பரை மட்டும் எண்ணி நான்கே மாதங்களுக்கு முன்பாய்க் கொள்முதல் செய்திருந்தால் - விலைகளில் கிட்டியிருந்த சகாயத்தைக் கொண்டே 6 மாதத்து ஆபீஸ் நிர்வாகச் செலவுகளை ஒப்பேற்றியிருக்கலாம் !! லிட்டர் லிட்டராய் ஜெலுசில் குடித்தாலும் தீராது இந்த வயிற்றெரிச்சல் !! கொரோனா காலங்களின் விலையேற்றங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டிருக்கும் வரலாறு கண்டிராத price hikes தற்போது அமலில் உள்ளவை ! And அடுத்த ஆண்டுக்கென பேப்பர் வாங்கிட டிசம்பர்வாக்கில் தயாராகிடும் போது அடுத்த ஷாக் படலம் எவ்விதம் இருக்குமென்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் !! Of course அடுத்த வருஷம் நமது இதழ்களில் சின்னதான விலையேற்றங்கள் இருக்கும் தான் - ஆனால் இந்தப் பிராந்தன்கள் மனசாட்சிகளேயின்றிச் செய்திருக்கும் விலையேற்றங்களை அதே விகிதத்தில் உங்கள் தலைகளில் ஏற்றி விடும் மடத்தனத்தை நிச்சயமாய் நாம் செய்திடுவதாக இல்லை & அது எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச (காமிக்ஸ்) வாசிப்பினையும் போட்டுத் தள்ளிடும் புண்ணியத்தையே சேர்க்கும் ! So பற்களை இறுகக் கடித்துக் கொள்வோம் ; இயன்ற விரயங்களை கத்திரி போட முனைவோம் ; இயன்ற luxury-களை இதழ்களில் மட்டுப்படுத்திட முனைவோம் !! 

ஆனால் இன்றைய பொழுதுகளின் இந்த விலை வெறியாட்டங்களின் நிஜமான impact நம்மைப் பொறுத்தவரையிலும் 2024-ல் தெரியாது போகாதென்பேன் ! டாலரின் மதிப்பு இப்போதே ரூ.80-ஐக் கடந்து விட்டிருக்க, அடுத்த வருஷம் இந்நேரமேல்லாம் பேப்பரின் விலை என்னவாக இருக்குமென்று யூகிக்கக் கூட பயமாகவுள்ளது !! ஏனுங்கண்ணா...அந்த நியூசுபிரிண்ட் பேப்பர் இன்னா கம்பீரமா இருக்கு தெரியுமா ? புக்கு எடையும் குறைஞ்சிடும்,...கூரியரில் காசும் கம்மியாகிப்புடும் !! The Stone Age beckons.....!! Phew !!!!

On to better stuff, சுஸ்கி-விஸ்கி முன்பதிவுகளுக்கு எதிர்பாரா இன்னொரு திக்கிலிருந்து சுளையாய் ஒரு ஆர்டர் கிட்டியுள்ளது ! நண்பர்கள் ஆங்காங்கே நடத்தி வரும் FB க்ரூப்களில் அவ்வப்போது ஏதேனும் (காமிக்ஸ்) போட்டிகள் வைப்பதும், பரிசாய் நமது இதழ்களை வழங்குவதும் நடைமுறையில் இருந்து வருவதை அறிவீர்கள் ! அவ்விதமானதொரு முயற்சியிலோ - நம்மிடம் 2022 க்கு சந்தா செலுத்திடும் நண்பர்களை ஊக்குவிக்கும் விதமாய் சு & வி ஸ்பெஷல் இதழினை அந்த க்ரூப்பின் admins தங்கள் கைக்காசைப் போட்டு வாங்கித்தர வாக்களித்திருந்துள்ளனர் போலும் ! And கிட்டத்தட்ட நூற்றிச்சொச்சம் நண்பர்கள் நம்மிடம் சந்தா செலுத்தி விட்டு அங்கே பதிவும் செய்திட - அவர்கட்கு சுஸ்கி & விஸ்கி வண்ண இதழினை அன்புப்பரிசாய் அனுப்பிடும் பொருட்டு நம்மிடம் FB க்ரூப் நிர்வாகிகள் பணம் கட்டியுள்ளனர் !! சந்தாக்கள் கிட்டுவதே ஒரு பெரும் பேறு ; அடுத்த கட்டமாய் இந்த சு & வி ஸ்பெஷலுமே மொத்த போணி எனும் போது, தொடர்கதைகளாகிடும் இத்தகைய நன்றிக்கடன்களை எவ்விதம் ஈடுசெய்வதென்றே புரியவில்லை ! Phewwww !! 'விடிய விடிய வேலை பார்த்து கை ஒடியது ; கண் சொக்குது' என்ற பஞ்சப்பாட்டுக்களைப் பாடத் தோன்றும் வேலைகளிளெல்லாமே இது போன்ற அன்புள்ளங்கள் எனது ஆந்தைக் கண்முன்னே நிழலாடிட, நோவுகள் சகலமும் மாயமாய் மறைந்தே விடுகின்றன !! இந்த அன்புக்கும், நேசத்துக்கும் ஈடாய் சஞ்சீவி மலையையே தலையில் சுமந்து தூக்கி வந்தாலும் தப்பில்லை தான் !! Thanks a ton guys !!! You are our Rock of Gibraltar !! 

And சுஸ்கி-விஸ்கி இதழுக்கு ஹாலந்திலிருந்தும் ஆர்டர் தெறித்து வருகிறது ; so காத்திருக்கும் ஜூலை 25 க்கு முன்பாய் உங்களின் பிரதிக்கு முன்பதிவு செய்திட்டால் நலமென்பேன் !! I repeat - சின்னதொரு பிரிண்ட் ரன்னே இந்த இதழுக்கு !! 

ஓசூர் புத்தக விழா திங்களோடு நிறைவுறவுள்ளது ! இதோ அண்ணாச்சி - ஒரு ஸ்பெஷல் விருந்தினருடன் !!

அடுத்த வாரம் கோவை மாநகரில் கேரவன் கேம்ப் அடித்திடவுள்ளது ! அங்கு நமது ஸ்டால் # 116 !! கொடீசியா அரங்கம் !! And சகோ.கடல்யாழ் அக்கட நம் சார்பில் ஸ்டாலில் உதவிடக்காத்திருப்பார் !! நேரம் கிட்டும் போதெல்லாம் கவிஞர் பாய்ந்து பாய்ந்து புகுந்து கவிதை மழைகளால் உங்களை நனைப்பார் !

Bye all...ஆகஸ்டில் 'தல' தாண்டவமின்றிப் போகாது - அவரோடு சவாரி செய்ய நான் கிளம்புகிறேன் ! இடைப்பட்ட நேரத்தில் இங்கே நீங்களும் ஆரஞ்சு சூஸ் பிழியும் முத்திரைகளை பயின்று ஏதாச்சும் கோக்குமாக்கு மாயாஜாலங்கள் செய்திடலாம் தான் !! See you around !! Have a cool weekend !!

LEON MANDRAKE !!


291 comments:

  1. Replies
    1. அடிச்சிட்டாரு பத்து சார்...டெட்ராய்டுல் இருந்து.... தூங்கம் வர்லயா சார்?

      Delete
    2. இங்கே காலை 5.30 க்கே நன்றாக விடிந்துவிடுகிறது. இரவு 9.30 மணிக்கு மேல் தான் இங்கே இருட்டவே ஆரம்பிக்கிறது. மாலை 5 மணிக்கு நண்பகல் மாதிரி வெய்யில். இது ஒரு வித்தியாசமான அனுபவம். So , Scored the 1st Comment.

      Delete
    3. நான் பதிவிடும் போது இங்கே நேரம் , சனிக்கிழமை காலை 6.50 AM.

      Delete
  2. Replies
    1. வாழ்த்துக்கள் சகோதரி 🥗💐

      Delete
  3. துப்பாக்கிக்கு பதில் ஆரஞ்சு புழியும் கைகளையே அட்டையில் வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து சார்.

    உட்பக்கங்களை பார்த்தால் இதுவரை வராத கதை போல தெரிகிறது.
    அதோடு நீங்கள் சொன்ன கேமல் மற்றும் ஹோஜோ கதையும் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி.

    Susky wisky படித்தது இல்லை ஆகையால் அதற்கும் ஆவலாக உள்ளேன்.
    நண்பர்களின் தயவில் எனக்கும் ஒரு காபி வருகிறது.

    Zagor பற்றி கூறினால் அதற்கும் முன்பதிவு+கொரியர் அனுப்பிவிடுவோம் சார்.

    ReplyDelete
    Replies
    1. அடடே கிருஷ்ணா என் மனதில் இருந்ததை எல்லாம் நீங்களே சொல்லி விட்டீர்களே...

      நன்றி

      Delete
  4. Edi Sir..
    மாண்ட்ரெக் காக ஆவலுடன் வெயிட்டிங் ..
    மாண்ட்ரெக், லொதார், நார்தா..எல்லோரையும் ஜாநாடுவில் பார்க்க ஆசை..

    ReplyDelete
  5. சுஸ்கி விஸ்கிக்கு பலமுறை நீங்கள் மறுப்பு தெரிவித்த போதும் நாங்கள்விடாமல் கோரினோம், நீங்களும் செவிசாய்த்தீர்கள்

    இப்போது சுஸ்கி விஸ்கி வெற்றியடைய குறித்து உங்களை விட பதற்றத்துடன் காத்துள்ளோம் Sir

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே 🙏🙏🙏🙏

    ReplyDelete
  7. எடிட்டர் சார். லொதார், எம்.ஜி.ஆர் பட வில்லன் N.S. நடராஜன் மாதிரியே இருக்காரு.

    ReplyDelete
  8. ஆரஞ்சு பிழிதல் படலம் செம செம. எடிட்டிங் பார்த்த உங்களுக்கே இப்படி என்றால் இந்த கதைகளுக்கு மொழிபெயர்த்த திரு.கருணையானந்தம் பற்றி யோசித்து பாருங்கள் :-) hats off to you திரு.கருணையானந்தம் சார்.

    ReplyDelete
    Replies
    1. Yes sir...செம கடினமான பணியிது !

      Delete
    2. ///எடிட்டிங் பார்த்த உங்களுக்கே இப்படி என்றால் இந்த கதைகளுக்கு மொழிபெயர்த்த திரு.கருணையானந்தம் பற்றி யோசித்து பாருங்கள் :-) hats off to you திரு.கருணையானந்தம் சார்.///

      அபாரமான உழைப்பு கருணையானந்தம் சார்!! எங்களது நன்றிகள் பல!

      Delete
  9. பேப்பர் படலம் விடாது கருப்பு என்று நம்மை துரத்தி வருகிறது வருத்தமாக உள்ளது சார். நமது காமிக்ஸுக்கு தேவையான விலையேற்றத்தை தயங்காமல் செய்யுங்கள் சார் நாங்கள் தோள் கொடுக்க தயாராக உள்ளோம்.

    வேறு பேப்பர் உபயோக படுத்தினால் விலையை கட்டுக்குள் வைக்க முடியும் என்றால் அதனையும் தயங்காமல் செய்யுங்கள். முடிந்தால் அந்த புதிய பேப்பரில் அடுத்து வரும் இதழ் எதாவது ஒன்றை முயற்சி செய்து அதன் மூலம் நண்பர்கள் எண்ணங்களை தெரிந்து கொள்ளலாம்.

    எங்களுக்கு தொடர்ந்து காமிக்ஸ் வரவேண்டும். அவ்வளவுதான்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப அருமையா சொன்னீங்க PfB! நான் சொல்ல நினைப்பதும் இதுவே!

      Delete
    2. பரணி எழுதிய எல்லா வரிகளுக்கும் +1

      Delete
  10. சுஸ்கி விஸ்கி இதழ்களுக்கு பல்க் ஆர்டர் கொடுத்த காமிக்ஸ் முகநூல் நண்பர்கள் குழுவுக்கு நன்றி. நமது காமிக்ஸை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் அனைத்தும் சிறப்பு. நன்றி நண்பர்களே.

    ReplyDelete
  11. நீங்கள் சொல்வதை பார்த்தல் மாண்ட்ரெக் கதைகளை ஒரு நேரத்தில் படிக்காமல் தகுந்த இடைவேளை விட்டு ஒவ்வொரு கதையையும் படிக்க வேண்டும் போல தெரிகிறது.‌இல்லை என்றால் நாள் முழுவதும் ஆரஞ்சு நாங்கள் புழிந்து கொண்டே இருக்கனும் போல தெரிகிறது. உங்கள் முன் எச்சரிக்கைக்கு நன்றி சார்:-)

    ReplyDelete
  12. அண்ணாச்சி முகத்தில் தெரியும் சிரிப்பை பாருங்கள். அதுதான் அண்ணாச்சி ஸ்பெஷல்.

    ReplyDelete
  13. Will book my copies b4 25th surely sir !

    ReplyDelete
  14. கோவை புத்தகத் திருவிழாவில் நமது புத்தகங்கள் விற்பனையில் புதிய சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நமது காமிக்ஸ் ஸ்டாலில் விற்பனைக்கு உதவ உள்ள நண்பர்கள் ரம்யா மற்றும் பொன்ராசுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பொன்ராசு ”சின்ராசு” மாதிரி வேலை பார்க்கப் போறாரு...

      Delete
    2. கோவை புத்தகத் திருவிழாவில் நமது புத்தகங்கள் விற்பனையில் புதிய சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நமது காமிக்ஸ் ஸ்டாலில் விற்பனைக்கு உதவ உள்ள நண்பர்கள் ரம்யா மற்றும் பொன்ராசுக்கு நன்றிகள்

      Delete
    3. கோவை புத்தக விழாவிற்கு வாழ்த்துக்கள். நண்பர்கள் இருவருக்கும் நன்றிகள்.

      Delete
  15. படித்து விட்டு வருகிறேன் 🙏

    ReplyDelete
  16. //அடுத்த கட்டமாய் இந்த சு & வி ஸ்பெஷலுமே மொத்த போணி எனும் போது, தொடர்கதைகளாகிடும் இத்தகைய நன்றிக்கடன்களை எவ்விதம் ஈடுசெய்வதென்றே புரியவில்லை ! Phewwww//

    எங்களின் சிறுவயது நினைவுகள் கலைக்காமல், லயன்&முத்து மூலம் தொடர்ந்து மறக்காமல், பசுமையாய் கொண்டு செல்கிறீர்களே சார். இதைவிட வேறு என்ன செய்ய?.
    வேறு எந்த துறையிலுமே இல்லாத ஒரு அருமையான உணர்வு இந்த காமிக்ஸ்.
    1972 முதல் 2022 வரை உள்ள அனைத்து கால மனிதர்களுக்கும் இது ஒரு அழகான அனுபவம். அந்த நினைவுகளுடனேயே நம் வாசகர்கள் பயணிப்பது உங்கள்/நம் காமிக்ஸால் மட்டுமே. வேறு எங்குமே நம் சிறு வயதுடன் தொடர்பு கொண்டு போகவே முடியாது. எங்களுக்கெல்லாம் ஆசுவாசமே இந்த காமிக்ஸ் உலகம் தான்.
    சிறுவயது நினைவுகளை மீட்டெடுக்க நீங்க செய்வதை விட வேறு கைமாறு எதுவுமேயில்லை. உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பதும் இதுவே. மகிழ்வதும் இதுவே.

    காமிக்ஸ் முகநூல் நண்பர்கள் செயல் அளப்பறியது. வெறும் லாப, சுயநல நோக்கங்களுடன் செயல்படும் "சில" குழுக்கள் மத்தியில், காமிக்ஸ் வாசகர்களை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டிகளும், அவர்களுக்கு பரிசுகளும் வழங்கி, காமிக்ஸ் பாதையில் இருந்து தவறாமல் தங்களுடன் கொண்டு செல்வது நல்ல செயல். நல்ல நோக்கம்.
    இதில் மறைமுகமாக உதவிடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    நன்றி 🌹🌹🌹

    ReplyDelete
    Replies
    1. // காமிக்ஸ் முகநூல் நண்பர்கள் செயல் அளப்பறியது. வெறும் லாப, சுயநல நோக்கங்களுடன் செயல்படும் "சில" குழுக்கள் மத்தியில், காமிக்ஸ் வாசகர்களை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டிகளும், அவர்களுக்கு பரிசுகளும் வழங்கி, காமிக்ஸ் பாதையில் இருந்து தவறாமல் தங்களுடன் கொண்டு செல்வது நல்ல செயல். நல்ல நோக்கம். //
      +1

      Delete
    2. அருமையாக சொன்னீர்கள்..சூப்பர்..

      Delete
  17. நிறைய பேர் ஆன்லைன்ல இப்ப படிக்கிறாங்க. Crime நாவல் கூட இப்ப online ல வருது. Tinkle கூட online வருது. பேசாம நீங்க கூட online mode க்கு வரலாம்.

    பழைய புக்ஸ் ஆவது நீங்க கொண்டு வரலாம். இப்ப நிறைய புக்ஸ் வருது. நீங்க அதை ஒழுங்கு பண்ணி லாபம் பார்க்கலாமே

    ReplyDelete
    Replies
    1. We can just read them. Collecting books is a hobby.

      Delete
    2. நீங்கள் குறிப்பிடும் நாவல்கள் ; காமிக்ஸ்கள் எல்லாமே இங்கு அந்தந்தப் பதிப்பகங்களால் உருவாக்கப்பட்டவை நண்பரே ! அவர்கள் இஷ்டப்படும் பாணிகளில் வெளியிட்டுக் கொள்ளலாம் ! ஆனால் நம் சமாச்சாரம் அப்படிப்பட்டது இல்லையே ! படைப்பாளிகளின் இசைவின்றி நாமாய் செய்யக்கூடியது எதுவுமே கிடையாதே !

      Delete
    3. //Collecting books is a hobby.//

      Very true sir !

      Delete
  18. மாயாவி,மாண்ட்ரேக் போட்டது போலவே, லாரன்ஸ் & டேவிட்,
    இரட்டை வேட்டையர், இவர்களின் வெளிவராத
    கதைகளை வெளியிட்டால் நல்லாருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த SMASHING '70s முழுமை காணட்டும் சார் ; அடுத்த சீசனுக்கான அறிவிப்போடு இந்தக் க்ளாசிக் நாயகர்கள் பற்றி நிதானமாய் அலசுவோம் !

      Delete
    2. // இந்த SMASHING '70s முழுமை காணட்டும் சார் ; அடுத்த சீசனுக்கான அறிவிப்போடு இந்தக் க்ளாசிக் நாயகர்கள் பற்றி நிதானமாய் அலசுவோம் ! // அடடே ஆவலுடன் நான்.

      Delete
  19. மாண்ட்ரெக் அட்டைப்படம் நன்றாக உள்ளது, மாண்ட்ரெக் முகத்தை மிகவும் நன்றாக வரைந்துள்ளார் சென்னை ஓவியர். லோதரை இன்னும் கொஞ்சம் நன்றாக கொண்டு வந்து இருக்கலாம் :-)

    ReplyDelete
    Replies
    1. ///லோதரை இன்னும் கொஞ்சம் நன்றாக கொண்டு வந்து இருக்கலாம் ///

      யெஸ்! லோதாரின் டூப்போட டூப்பை வரைஞ்ச மாதிரி இருக்கு!

      Delete
  20. ஜூல்ஸ் பிஜியின் ஹிப்னாடிச சைகை ஒங்களுக்கு அவ்வளவு லேசா போச்சா...

    இருக்கட்டும்...
    இருக்கட்டும்..


    ஆஹா...மாண்ட்ரேக்
    புத்தம் புதிய காப்பி
    ஈஸ்ட்மென் கலரிலா....

    அட்றா சக்க....

    நர்தா
    லோத்தார்.
    ஜோஜோ
    கோடி கிரகாதிபதி மெக்னான்
    எட்டு
    வாங்க
    வாங்க....

    குதூகலங்கள் குதூகலிக்கட்டூம்

    ReplyDelete
    Replies
    1. ஜூஸ் பிழியும் ஹிப்னாடிச சைகை...

      Delete
  21. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  22. சுஸ்கி விஸ்கி வெளிவரும் முன் அனைத்தும் விற்பனையாகி, நீங்கள் அடுத்த கதையைப் பற்றி அறிவிக்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் சார்..

    வண்ணச்சேர்க்கை அருமை.

    ReplyDelete
    Replies
    1. // வண்ணச்சேர்க்கை அருமை. // ஆமா ஆமா

      Delete
  23. இனி வரப்போகும் ஸ்பெஷல் இதழ்களின் விலையில் தற்போது இருக்கும் பாரத்தை சிறிதேனும் இறக்கி வைக்கவும் சார். பாரத்தை ஷேர் செய்ய நாங்கள் கூடவே இருக்கிறோம் தானே!

    ReplyDelete
    Replies
    1. ஸ்பெஷல் இதழ்களை சற்றே விலையேற்ற வேண்டித்தான் வரும் சார் - but அடுத்த ஆண்டிலிருந்தே !

      Delete
    2. புத்தகப்பிரியன் +1

      Delete
    3. // ஸ்பெஷல் இதழ்களை சற்றே விலையேற்ற வேண்டித்தான் வரும் சார் - but அடுத்த ஆண்டிலிருந்தே // வேறு வழி இல்லையே சார்.

      Delete
  24. 1995ல் நான் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்த புதிதில் முத்து காமிக்ஸில் மாண்ட்ரேக் கதை தொடராக வெளிவந்தது. சில வருடம் கழித்து அதே போன்ற கதைக்களத்துடன் இன்னொரு மாண்ட்ரேக் கதையும் வெளிவந்தது. இரண்டு கதையும் நன்றாகத்தான் இருந்தது. அதேபோல் நள்ளிரவு நாடகம் என்ற கதையும் வந்ததும் அதுவும் நன்றாகத்தான் இருந்தது. எனக்கு இந்த மூன்று கதை மட்டுமே ஞாபகத்தில் உள்ளது. வேறு கதைகள் வந்திருக்கிறதா என்று எனக்கு சரியாக தெரியவில்லை. எனக்கு மாண்ரேக்கை மிகவும் பிடிக்கும். அவரது கதை திரும்ப வருவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நிறையவே வந்துள்ளன நண்பரே !

      Delete
  25. // so காத்திருக்கும் ஜூலை 25 க்கு முன்பாய் உங்களின் பிரதிக்கு முன்பதிவு செய்திட்டால் நலமென்பேன் !! //
    அப்ப சுஸ்கி-விஸ்கி சீக்கிரமே இடத்தை காலி பண்ணிருவாங்கன்னு சொல்லுங்க,சூப்பர்...

    ReplyDelete
  26. // So உற்பத்தி குறைவு ; தேவையோ தாறுமாறு என்ற சூழல் ! விளைவு : வாய்க்கு வந்த விலைக்குக் காகிதம் விற்பனை காண்கிறது !! //
    பள்ளிகளில் தேர்வுகளுக்கும்,அலுவலக பயன்பாட்டுக்கும் வழக்கமாய் வாங்கும் பேப்பர்களின் விலை எகிடு,தகிடாய் இங்கே ஏறிக் கிடக்கிறது சார்,எங்களுக்கே கொஞ்சம் ஜெர்க் அடிக்குது...
    பல்க்காய் பயன்படுத்தும் தங்கள் நிலை கடினம்தான்,கொரொனா சூழலுக்குப் பிறகு எல்லாமே அசாதரண விலை ஏற்றத்தில்தான் உள்ளது...
    அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலை உயர்வை மாத கணக்கான பயன்பாட்டில் ஒப்பிட்டு பார்த்தால் கணிசமான செலவுகள் எகிறி அடிக்கின்றன,கொஞ்சம் கவனம் இல்லை எனில் சிரமம் தான்...

    ReplyDelete
    Replies
    1. விலையேற்றம் என்றால் பரவாயில்லையே சார் .. இது கூச்ச நாச்சங்களே இல்லாத கொள்ளை !

      அடுத்தாண்டில் ஸ்டேஷனரி விலைகளெல்லாம் சங்கை நெரிக்கப் போகின்றன பாருங்களேன் !

      Delete
    2. கொடுமை சார்..:-(

      Delete
    3. ஹூம்.. எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ யாரோ அறிவார்...

      Delete
  27. மாண்ட்ரேக் , லொதர் கையில் டுப்பாக்கி .......!உறுத்தலாக இல்லை?

    ReplyDelete
  28. பதிவின் ஆரம்பத்தில் படிக்க ,படிக்க வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தேன்..மாண்ட்ரேக் அட்டைப்படமும் ,அவரை பற்றிய தகவல்களும் படிக்க ஆரம்பித்தவுடன் வியக்க ஆரம்பித்தேன்..நடுவில் பேப்பர் படலத்தை பற்றி படிக்க ஆரம்பித்தவுடன் வருத்தப்பட்டேன் ..நண்பர்களின் சுஸ்கிவிஸ்கி பற்றி படிக்க ஆரம்பித்தவுடன் பெருமிதப்பட்டேன்..

    மொத்தத்தில் இந்த பதிவு ஒரு நவரச பதிவு சார்..:-)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானுங்க தலீவரே!

      Delete
    2. // பதிவின் ஆரம்பத்தில் படிக்க ,படிக்க வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தேன்.. // இது நேற்று மாலை ஆபீஸில் படிக்கும் போதே சிரித்து விட்டேன். ரொம்ப நாட்களுக்கு பிறகு மிகவும் ரசித்த பதிவு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் எழுதிய பதிவு.

      ஒரு காலத்தில் நான் எழுதிய ஒரு கமெண்டுக்கு எடிட்டர் சாரின் reply வந்து உள்ளதா என்று காத்துக் கொண்டு இருந்த காலம் உண்டு. ஆனால் இந்த பதிவில் என்னை பற்றி இரண்டு வரிகள் வருவது எல்லாம் வேற லெவல் ஃபீலிங். நன்றி சார்.

      Delete
  29. மாண்ட்ரேக் அட்டைப்படம் ரொம்பவே பிடிச்சுருக்கு சார்..

    ReplyDelete
  30. எப்படியோ ஆகஸ்ட் மாதம் டெக்ஸ் உண்டு என அறிவித்து விட்டீர்களே அது போதும் சார் ..மிக்க மிக்க நன்றி...:-)

    ReplyDelete
    Replies
    1. 'தல' இல்லாங்காட்டி முகவர்களிடம் தலை காட்ட முடியலீங்க தலீவரே !

      Delete
    2. தல “செக் மீட்”னு சொல்லிட்டாரா சார்...

      Delete
    3. 'தல' ஸ்பைடர் கதைகள் முடிந்து விட்டது என்பதை நாசுக்காக சொல்லிடலாமே சார்.😊

      Delete
    4. Zagor வருமா சார்?

      Delete
  31. இந்த வருட இனி வரும் இதழ்களில் கூட சாதா பேப்பரை பயன்படுத்த பாருங்கள் சார்...சுமை சிறிது குறையும் அல்லவா..

    ReplyDelete
    Replies
    1. "பேப்பர் விலை குறைஞ்சிருந்தா புக் விலையைக் குறைச்சிருப்பியாக்கும் கொமாரு ?" என்ற அன்பொழுகும் கேள்விகளுக்கு இடம் தருவானேன் தலீவரே ?

      ஆண்டின் துவக்கத்தில் தந்த வாக்கைக் காப்பாற்றிய திருப்தி மட்டுமே இந்த தபா போதும் நமக்கு !

      Delete
  32. அடுத்த கட்டமாய் இந்த சு & வி ஸ்பெஷலுமே மொத்த போணி எனும் போது, தொடர்கதைகளாகிடும் இத்தகைய நன்றிக்கடன்களை எவ்விதம் ஈடுசெய்வதென்றே புரியவில்லை ! Phewwww !! '///
    Good news..

    ReplyDelete
  33. கொரோனா காலங்களின் விலையேற்றங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டிருக்கும் வரலாறு கண்டிராத price hikes தற்போது அமலில் உள்ளவை ! And அடுத்த ஆண்டுக்கென பேப்பர் வாங்கிட டிசம்பர்வாக்கில் தயாராகிடும் போது அடுத்த ஷாக் படலம் எவ்விதம் இருக்குமென்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.///

    Bad news..

    ReplyDelete
  34. // Bye all...ஆகஸ்டில் 'தல' தாண்டவமின்றிப் போகாது //
    அடடே சூப்பரு...

    ReplyDelete
  35. ஆகஸ்டில் 'தல' தாண்டவமின்றிப் போகாது - அவரோடு சவாரி செய்ய நான் கிளம்புகிறேன் !////

    VERY BAD NEWS..

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII & udhay adi

      கிர்ர்ர்ர்ர்...

      Delete
    2. @ஈரோடு விஜய் அவர்களே...
      உங்களுக்கும், உங்களை போன்றவர்களுக்கும் ஒரு குறள் அர்ப்பணம்...

      குறள் 475:
      பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
      சால மிகுத்துப் பெயின்.

      சாலமன் பாப்பையா விளக்கம்:
      மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்

      Delete
    3. ///மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்///

      சாதாரண கட்டை வண்டியில் ஏற்றியிருப்பாங்க ப்ரோ! லாரியில் ஏற்றியிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது!

      Delete
    4. உதய் நம்மாளுகளுக்கு சோறு போல டெக்ஸ்....குழம்பு ...இட்லி ....தோசை போல பிற கதைகள்....வெறும் டெக்ஸ் மட்டுமே வந்தா நீங்க சொல்லும் குறள் பொருந்தலாம் ....
      இங்கேயோ விற்பனையின் குரல்ல டெக்ஸ்தான

      Delete
    5. //சாதாரண கட்டை வண்டியில் ஏற்றியிருப்பாங்க ப்ரோ! //

      குறளும், பழமொழியும் எல்லாக்காலத்துக்கும் பொருந்துமே சகோ.
      மேலும் லோடு தாங்காமல் பணால் ஆன ஹேவீ load வாகனம் பற்றி கேள்விப்பட்டதில்லையா நீங்கள்?

      ஒரு சாம்பிள் பாருங்கோ
      https://www.youtube.com/watch?v=BJkpPL2bLMA

      Delete
    6. //நம்மாளுகளுக்கு சோறு போல டெக்ஸ்.//
      போங்க ஸ்டீல், நான் எல்லாம் டெக்ஸ் வில்லராவே செம்ம பஞ்ச் எல்லாம் விட்டு வாழ்ந்தே இருக்கேன்... எனக்கு இத்தாலியில் ஒரிஜினலா வருவது போன்று மாதம் 112 பக்க கதை (BW) என்றால் எனக்கு ஓகே...

      Delete
  36. // இந்த SMASHING '70ஸ் தனித்தடத்தின் மூன்றாம் இதழில் தான் க்ளாஸிக் காமிக்ஸ் காதலர்களுக்கான நிஜமான லிட்மஸ் பரிசோதனை காத்துள்ளது என்பேன் ! //
    எனக்குமே மாயஜால மன்னனை பிடிக்கும் சார்,ஒருவேளை நாம் செய்ய முடியாத ஜால வித்தைகளை அவர் செய்வதாலோ என்னவோ...
    சாகச வித்தைகளை டெக்ஸ் செய்தாலும்,மாயஜால வித்தைகளை மாண்ட்ரேக் செய்தாலும் ஏதோ ஒரு வகையில் ஈர்க்கத்தான் செய்கின்றனர்,இதில் கூட ஏதேனும் உளவியல் இருக்குமோ ?!
    எத்தர் கும்பல் 8 உடன் மாண்ட்ரேக் மோதும் சாகஸங்களை அப்போது படித்த போது பிடித்தது,தற்போதைய சாகஸத்துகாக வெயிட்டிங்...
    லாஜிக் இல்லா மேஜிக்காய் இருக்கும் என்று நம்புவோமாக...!!!

    ReplyDelete
  37. பலஹீனமானவர்களை பலம் வாய்ந்தவர்கள்தொல்லைக்குள்ளாக்கும்போது ஹீரோகுறுக்கிட்டு தீயவர்களைப்பந்தாடும் போது நமக்கு உற்சாகம்ஊற்றாகக் கிளம்புவது இயல்பே. அதிலும் மாண்ட்ரேக்கின் வசியத்தின்முன் கிரிமினல்கள் ஏதும் புரியாமல் பதறி ஓடும்போது அந்த உற்சாகம் இரண்டுமடங்காகிக் கொண்டாட்ட உணர்வாக மாறும். நீண்டவருடங்களுக்குப்பிறகுஅந்தக்கொண்டாட்டம் இதோஎதிர்வரும் ஆகஸ்ட்டில். எதிர்பார்ப்புடன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. // பலஹீனமானவர்களை பலம் வாய்ந்தவர்கள்தொல்லைக்குள்ளாக்கும்போது ஹீரோகுறுக்கிட்டு தீயவர்களைப்பந்தாடும் போது நமக்கு உற்சாகம்ஊற்றாகக் கிளம்புவது இயல்பே. //
      பாயிண்ட்...

      Delete
  38. சதாசிவம் சார். நள்ளிரவு நாடகம் எனக்கும் favarite. வாரிசு இல்லாத ஒருகோடீஸ்வரர் ஒரு இளஞ்ஜோடியைத்தத்தெடுக்க அவர்களோ அவரைபயமுறுத்தி, பைத்தியமாகக் காட்ட பேய்நாடகமாடுவர். பயந்த அவரோ மாண்ட்ரேக்கின் உதவியை நாடுகிறார்.. அவரது மாளிகைக்குச் செல்லும் மாண்ட்ரேக் மெல்ல, மெல்ல அவர்களது சூழ்ச்சியைத்தெரிந்து கொள்வார். அந்த ஜோடி ஒன்றும் பெரிய கிரிமினல்கள் அல்ல மாண்ட்ரேக்கோ சூப்பர் ஹீரோ. அவர்களை மிகச்சாதாரணமாகப்புரட்டி எடுப்பார். மிகஅருமைமான மொழிநடையும்ஓவியங்களும்கொண்டஇந்தக்கதை எனது டாப்டென்னில் ஒன்று.( சம்வி). உங்களுக்கும் இந்தக்கதைபிடித்திருப்பது சந்தோசம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு ராஜசேகர் ஜி!

      Delete
    2. நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு ராஜசேகர் ஜி

      Delete
    3. உங்களுடைய காமிக்ஸ் காதல் நீங்கள் எழுதும் ஒவ்வொரு கமெண்ட் மூலம் தெரிகிறது சார். அபாரமான ஞாபக சக்தி உங்களுக்கு.

      Delete
  39. சுஸ்கி விஸ்கி புக் செய்திட மாத இறுதிவரை நேரம் தாருங்கள் சார்.
    என்னளவில் 5 பிரதிகள் இப்போதைக்கு உண்டு... நாங்கள் கோரும் புத்தகங்கள் நீங்கள் வெளியிடும் போது தேவைக்கு அதிகமாகவே வாங்குவது எனது வழக்கம்... "சர்ப்பத்தின் சவால்" 20 பிரதிக்கும் மேல் ஆர்டர் செய்தேன்... சுஸ்கி விஸ்கி சற்று விலை கூடுதல் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிட வகை செய்யுங்கள் ப்ளீஸ்... இரத்தப்படலம் போன்று டிமாண்ட் ஆக்கிட வேண்டாமே...

    மாண்ட்ரேக் அட்டைப்படம் பெஸ்ட் of the year so far என்று சொல்லலாம்... பின்னட்டை முன்னட்டை க்கு பொருந்தும்படி இன்னமும் கொஞ்சம் மேம் படுத்தலாம்... சிறுவயதில் மாண்ட்ரேக் என் கண்களுக்கு ரொம்பவே ஸ்டைலாக தெரிந்ததால் எனது நோட் புக்சிக்கு மாண்ட்ரேக் போன்ற ஹீரோஸ் படம் வரைந்து அதனையே அட்டைப் போடுவேன்... நான் எதை செய்தாலும் பாராட்டி தள்ளும் ஆசிரிய பெருமக்களும் எனக்கு பாலயத்தில் கிடைத்திட்ட வரம். ஆனால் ஏனோ எத்தர் கும்பல் எட்டு, பயங்கர பல்வலி... போன்ற கதைகள் தாண்டி மாண்ட்ரேக் ஒருமுறை புரட்டலாம் என்பதை தவிர impact செய்யவில்லை... இந்த 8 கதைகள் எப்படி தான் என்று பார்ப்போமே...

    வேதாளர் ஸ்பெசலில் நான் எழுத்து கூட்டி மாலை மலரில் முதன் முதலில் படித்த கதை வெளிவந்து பரவசப்படுத்தியது... ரிப் கிர்பி 8 கதைகளும் செம்ம...

    இருப்பினும் எனது ஆவல் காரிகன் தான், ஆனால் அதற்கு இன்னும் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டுமே...

    பேப்பர் விலைகள் குறைந்தது 12000 ரூபாய்கள் மேல் கூடியிருக்கும் போல இருக்கிறது...
    அதனால் தான் சார் சொல்கிறேன்... உங்களுக்கும், எங்களுக்கும் செட் ஆகும்படி வரவிருக்கும் சந்தாவில் எல்லா ஸ்பெசல் வெளியீடுகளுக்கும் சேர்த்தே விலை நிர்ணயம் செய்து, வருடத்திற்கு முழுவதும் தேவையான பேப்பர்களை மொத்தமாக கொள்முதல் செய்து விடுங்கள் சார்... ஒரு வருடத்திற்கு பேப்பர் விலை ஏற்றம் உங்களை அண்ட முடியாது அல்லவா? எங்களுக்கும் ஒருவருடத்திற்கு சந்தா பணம் தவணையில் கட்டிட ஏதுவாயிருக்கும்... கொரானாவிற்கு முன்னே சந்தா பணம் எனக்கு எனக்கு பெரிய தொந்தரவு இல்லை, ஆனால் இப்போது அப்படியல்ல... உங்களால் அதனை திட்டமிடமுடியும் என்றே நினைக்கிறேன். தயவுசெய்து தயவு செய்து 2023 க்கான மொத்த சந்தா டிசம்பருக்குள் சொல்லிவிடுங்கள். புரிதலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. >>சுஸ்கி விஸ்கி புக் செய்திட மாத இறுதிவரை நேரம் தாருங்கள் சார்.
      ++1

      Delete
    2. சுஸ்கி விஸ்கி 25ம் தேதிக்குள் முன்பதிவு செய்தால் அதனை ஆகஸ்ட் புத்தகங்களுடன் சேர்த்து அனுப்ப வசதியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தேதி என நினைக்கிறேன். அதற்கு பிறகு பணம் அனுப்பினால் இந்த புத்தகம் மட்டும் தனியாக கொரியரில் கிளம்ப வாய்ப்புகள் அதிகம். எனவே நண்பர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்பது எனது எண்ணம்.

      Delete
    3. //எனவே நண்பர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்பது எனது எண்ணம்.//

      இல்லை சகோ,
      1997ம் முதல் புத்தகம் மிஸ் செய்யாமல் வாங்கிடும் நான் 'மியாவி' இதழும், இரத்தப்படலம் சமீபத்திய பதிப்பு Extra copyம் கிடைக்காமல் திண்டாடி போனேன்... அந்த நிலைமைக்கு மீண்டும் ஆளாகிட வேண்டாம் என்று ஒரு முன்னெச்சரிக்கை கோரிக்கை தான்.
      மேலும் ஆசிரியர் சுஸ்கி விஸ்கி மே மாதம் வெளிவரும் என்று வாக்களித்திருந்தார்... அப்போது புத்தகம் வாங்கிட தயாராக இருந்தேன். கிட்டதட்ட மூன்று மாதங்கள் கழித்து வெளிவருவதால் திட்டமிடல் எனக்கு மாறிவிட்டது.

      Delete
    4. உதய் @ கடந்த முறை நீங்கள் எத்தனை நாட்கள்/மாதங்கள் தாமதமாக சென்று வாங்கினீர்கள் என்பதை பொருத்து, தற்சமயம் சுஸ்கி -விஸ்கி நீங்கள் வாங்க செல்வது 5-7 நாட்கள் கால இடைவெளியில் எனவே கண்டிப்பாக உங்களுக்கு புத்தகம் கிடைக்கும்/இருக்கும்! கவலை வேண்டாம்!

      Delete
    5. Ok bro... ஆனா இரத்தப்படலம் புக் வெளிவரும்முன்னே புக்கிங் நிறுத்தப்பட்டது. புக் வெளிவரும் முன்னே கூடுதல் 1000, 1500 கொடுத்தால் புத்தகம் கிடைக்கும் என்று பதுக்கல்கள் ஆரம்பித்தது கசப்பு அனுபவமே எனக்கு.
      மியாவி (சந்தாவில் வெளிவராமல் தனியே வெளியிடப்பட்டது ) உடனே ஸ்டாக் அவுட் ஆனது, போன வருடம் தான் RTM அண்ணா மூலம் மியாவி அன்பளிப்பாய் கிடைத்தது.

      Delete
  40. Edi Sir..
    நமக்கு லயன்/முத்து காமிக்ஸ் தொடர்ந்து வரணுங்க. சந்தோசமா படிக்கணுங்க.. அம்புட்டுதாங்க..

    ReplyDelete
  41. கலக்கல் அட்டைப்படங்க மாண்ட்ரேக்..
    செம்ம..

    ReplyDelete
  42. ஹைய்யா..
    மாண்ட்ரேக் பேனல் பெரிசு பெரிசா இருக்கே..
    ஜூப்பரு..

    ReplyDelete
  43. டியர் எடி,

    முதல் பாராவில் அர்த்தம் கண்டுபிடிக்க திணற ஆரம்பித்தபோதே புரிந்தது... இது ஒரு கனா காலம் என்று.. அதை ஜம்ப் செய்து ஏனைய செய்திகளை படித்து கொண்டே அப்படியே கடைசியில் வந்தால் ராக் ஆஃப் கிப்ரல்டார் பத்தி படித்த கையோடு, பேஜ் ஜம்பிங்க் செய்து அதைபற்றி படித்து, ஸ்பானீஷ், ப்ரெஞ்சு, பிரிட்டன் போர் என்று பல கதைகளை படித்துகொண்டிருந்த போது தான்... அடடே நம்ம கருத்து போடாம வந்துபுட்டோம் என்று பொறி தட்டிச்சு.... இந்த இணைய Binge Reading ஒரு தீரா பிணியாக வந்து விடுகிறது... அது தரும் தகவல்கள் அத்தனை கோடி...

    Back to the Points... மாண்ட்ரேக் அட்டைபடம் என்னளவில் ஒரு ஏமாற்றமே... மாண்ட்ரேக்குக்கும், லோதருக்கும் ஒரே விதமான நிற ஒற்றுமை போல தோன்றுவது ஒரு பக்கம் என்றால், இருவர் கையிலும் துப்பாக்கிகள் இன்னும் விகாரமாக தெரிகிறது. மாண்ட்ரேக் நான் படித்த கதைகளில் ஆயுதங்கள் உபயோகம் செய்த ஞாபகம் இல்லை... ஏதோ சில கதைகளில் மாய பிம்பத்தில் அவரிடம் துப்பாக்கி இருந்தது போல காட்சி அமைப்பு படித்த நியாபகம் என்றாலும், அதை பிரதாணபடுத்தாமல், அவரின் தொப்பி, மாயஜால கோள் இவற்றை மையபடுத்தி அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    இருந்தாலும், குண்டு ஹோஜா, கரையான் புற்று, கேமல் எதிரி, அழகு நார்தா, மந்திர ஜானாடு, என்ற ஒரு மாயஜால உலகத்திற்கு தமிழில் மீண்டும் உணர ஆவலுடன் காத்திருப்பேன். அதுவும் சில கிளாசிக் கதைகள் தேர்வாகியிருப்பதால் ஆர்வம் இரட்டிப்பாகிறது.

    சுஸ்கி விஸ்கி சாம்பிள் பக்கம் சூப்பரோ சூப்பர்... ராஜா ராணி ஜாக்கியின் ஒவ்வொரு பக்கமும் இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது.. வண்ணத்தில் இது ஒரு சூப்பர்ஹிட் கலெக்ஷ்னாக மாறும் என்ற நம்பிக்கை இன்னும் விடவில்லை.

    பேப்பர் விலைவாசி மிகவும் கவலை தரும் செய்திதான்... கொரோனா வை காரணம் காட்டி இன்னும் எத்தனை தொழிலதிபர்கள், தங்கள் பணபெட்டியையும் வயிற்றையும் பெருக்கி கொள்வார்களோ. ஒரு பெரிய பொருளாதார சிக்கலுக்கு அவர்களே குழி வெட்டி கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.

    ஆனால், எக்காரணம் கொண்டும் விலையை கட்டுக்குள் கொண்டு செல்கிறேன் என்று நியூஸ்பிரிண்ட் உலகத்திற்கு மீண்டும் சென்றுவிடாதீர்கள்.. அதற்கு விலை தேவைபடும்படி பெரிய மாற்றமாக இல்லாமல் ஏற்றிகொள்வதே சரியான உத்தி. புதிய புத்தக பாணிக்கு பலரும் பழகியிருககும்போது.. இந்த பின்வாங்கல் அவ்வளவு நல்ல பயன் தரும் என்று தோன்றவில்லை.

    சமீபத்தில் வெளியான நமது வாசக நண்பர்களின் காமிக்ஸ் இதழ்களின் விலையே சொல்லும், உங்கள் விலைவிதிப்பு வாசகர்களுக்கான் ஏ1 பொருத்தம் என்று.. எனவே, நீங்கள் எடுக்கும் விலை நிர்ணய முடிவு எப்போதும் போல சரியாகவே இருக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.

    அடிச்சு விளையாடுங்க... நாங்க கூட நிற்போம்.... எக்காலமும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் ரபிக்... இருப்பினும் நியூஸ் பிரிண்ட் பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது... குமுதம், ஆனந்த விகடன், சிறுவர்மலர் போன்ற பத்திரிக்கைகளுக்கு பயன்படுத்தும் நல்ல தரமான நியூஸ் பிரிண்டும் உண்டு... கடைகளில் நல்ல நல்ல காமிக்ஸ் மறுபதிப்புகள் தரமான நியூஸ்பிரின்டில், கட்டுப்படியாகும் மலிவு விலையில் வருடம் 6 எண்ணிக்கையில் கொண்டு வரலாம் என்பது எனது suggestion... அதன் மூலம் தொலைந்து போன காமிக்ஸ் ஒரு கணிசமான வாசகர்களை மீண்டும் கண்டடையலாம் என்பது எனது கூற்று.

      Delete
    2. உண்மைதான் உதய். நியூஸ்பிரிண்ட் காகிதம் குமுதம், விகடன் போன்ற பதிப்பகங்கள் பயண்படுத்துவதுதான். ஆனால். அவற்றுக்கு பக்கத்துற்கு பக்கம் கட்டங்களாக முழுவதும் ஓவியங்களுடன் நமது காமிக்ஸ் அச்சடித்தால் அது ஈய்ந்து விடும். சேகரிப்புக்கு உகந்த தரமல்ல.

      புதிய வாசகர்களை மலிவான விலையில் சென்றடையும் என்ற மாய உலக நினைவுகள்ளை விட, இதை வாங்குவதும் போற்றுவதும் ஒரு சிறு குழு என்பதும், அவர்கள் சேகரிப்பில் குறை வைக்க போகிறோம் என்பதான நடைமுறை அணுகுமுறையே அவசியம்.

      Delete
    3. // புதிய புத்தக பாணிக்கு பலரும் பழகியிருககும்போது.. இந்த பின்வாங்கல் அவ்வளவு நல்ல பயன் தரும் என்று தோன்றவில்லை //

      மிகவும் சரி. உடன்படுகிறேன்.

      Delete
    4. உதய் .. நீங்கள் குறிப்பிடும் அந்தக் காகிதத்துக்கு LWC என்று பெயர் ...ஒரேயொருவாட்டி நாளைக்கு ஆண்டர்சன் ஸ்ட்ரீட்டில் அதன் விலையை விசாரியுங்களேன் ! விலையைக் கேட்ட பிற்பாடும் உங்களின் அனுமானம் சரியாக உள்ளதா என்று பார்ப்போமே ?

      Delete
    5. //அடிச்சு விளையாடுங்க... நாங்க கூட நிற்போம்.... எக்காலமும்.//

      இது போதுமே சார் ; புரட்சித்தீ கதையில் வரும் எடிட்டரைப் போல பசுமாட்டின் முதுகிலாச்சும் அச்சடிச்சு வீடு வீடாய்க் கொண்டு சேர்த்து விடுவோமே !!

      Delete
    6. //நீங்கள் குறிப்பிடும் அந்தக் காகிதத்துக்கு LWC என்று பெயர் //
      ஆண்டர்சன் தெரு போய் வருடங்கள் 15 மேல் ஆகிறது சார். நீங்கள் சொன்னால் ஓகே தான் சார்.

      Delete
    7. //புரட்சித்தீ கதையில் வரும் எடிட்டரைப் போல பசுமாட்டின்//
      நிச்சயம் அது தெரியுமே, நீங்களும் ஒரு 'புரட்சித் தீ" எடிட்டர் தான் சார்.

      Delete
  44. /// எக்காரணம் கொண்டும் விலையை கட்டுக்குள் கொண்டு செல்கிறேன் என்று நியூஸ்பிரிண்ட் உலகத்திற்கு மீண்டும் சென்றுவிடாதீர்கள். //

    ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  45. சார்... ஆங்கில CINEBOOK இதழ்களின் விலையோடு ஒப்பிட்டால் தமிழில் நமது புத்தங்களின் விலை ஆறில் ஒரு பங்கே.

    சமீபத்தில் பத்து ஆங்கில தோர்கல் புத்தகங்கள் வாங்க ஒரு முழு சந்தா அளவிலான தொகையை செலவழிக்க வேண்டி இருந்தது. ஹார்டு பவுண்டுகளை பற்றி நினைக்கவே முடியவில்லை.

    மற்ற பொருள்களைப் போலவே காமிக்ஸ் விலையேற்றம் தவிர்க்க இயலாத ஒன்றுதான். ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை.

    ReplyDelete
    Replies
    1. புத்தி சொல்லுகின்றது ..ஆனால் மனசு கேட்க தடுமாறுகிறதே சார் !

      Delete
    2. // மற்ற பொருள்களைப் போலவே காமிக்ஸ் விலையேற்றம் தவிர்க்க இயலாத ஒன்றுதான். ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை.//

      Delete
  46. மாண்ட்ரெக் அட்டைப்படம் இதுவரை வித்தியாசமாய் வந்ததிலயே டாப்.....ஆரஞ்சு சூச குடிச்சிட்டு காலைல வர்ரேன்....கோவைக்கு உயிரைக் தேடி உண்டா...நீங்க வருவீங்களா ஆசிரியரே....

    ReplyDelete
  47. Hmm. Print run குறைக்கும் பொழுது விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது

    ReplyDelete
  48. விஜயன் சார்,
    மான்ட்ரேக் மற்றும் அவர் சகோதரருக்குள் நடக்கும் யுத்தங்கள் ஒரு அற்புத மாயஜால உலகுக்கு இழுத்து செல்லும்.
    நான் இந்த smashing 70 வாங்குவது மான்ட்ரேக்க்குக்காக தான்.
    1980 களில் ( 1984/85) தினமணி நாளிதழில் வெளியான strips தான் எனது முதல் காமிக்ஸ் அறிமுகம்.

    வரப்புயர:
    விற்பனை அதிகரித்தால்
    பிரிண்ட் ரன் அதிகம் செய்யலாம் அப்பொழுது விலையை கட்டுக்குள் வைக்கலாம்.
    என் செய்வது! :(

    இங்கே 1000 வாசகர்களுக்காக ஆக ஒரு புக் பிரிண்ட் செய்யும் பொழுது விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது. வாசகர்களின் ஆதரவு என்றும் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அவர்களது குரு தெரான் நினைவுள்ளாரா சார் ?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. குருவாக வரும் தெரான் தான் மாண்ட்ரெக், அவரது தம்பி ட்ரெக் இருவரின் தந்தை என்பதும் ஒரு கதையில் வரும். வில்லனாக வரும் லூஸிபர் கூட மாண்ட் ரெக்கின் சகோதரன் என மாண்ட்ரெக் சொல்வதாக ஒரு கதையில் படித்த ஞாபகம்

      Delete
    4. Yes sir, தெரான் இன்னும் நினைவில் உள்ளார்.
      I am super excited and waiting to receive and read my favourite off beat hero Mandrake.
      84 ல் எழுத்து கூட்டி படித்த பார்த்து இரசித்த மான்ட்ரேக்கை மற்றும் ஒரு முறை limelight ல் படிக்க
      வாய்ப்பு தருவதற்கு நன்றிகள் பல.
      மாண்டவன் மீண்டான் எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது. அது தான் கடைசியாக வந்த mandrake காமிக்ஸ் என்று நினைக்கிறேன். இனி மேல் Mandrake பலரின் favourite hero வாக மீண்டு வருவார் என்று நம்புகிறேன்

      Delete
  49. ரிப்கிர்பி, வேதாளர் இரண்டு அட்டைகளைவிடமாண்ட்ரேக் அட்டை மிகவும் வசீகரிக்கிறது. இதோ இப்பவே ஷாநாடுவுக்குக் கிளம்பிவிட்டேன். தானாகமூடிக்கொள்ளும்பாலம் குறுக்கேஎழுந்து மறிக்கும் மதில்சுவர்,, தலைவர் ஹோஜோ, எத்தர்கும்பல் 8,லொதார்,கர்மா,நார்தா ஒருபுது(பழைய) உலகப்பயணம் விரைவில். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. ஒரு எடிட்டரின் கனவு வாசகர் சார் - நீங்க !!

      Delete
    2. // ஒரு எடிட்டரின் கனவு வாசகர் சார் - நீங்க !! //

      Wow super. வாழ்த்துக்கள் ராஜசேகர் சார்.

      Delete
  50. சார்..
    இதுவரைக்கும் நான் இப்படி பயந்தது இல்ல.." மந்திரவாதி மாண்ட் ரெக்" - புக்க இந்த தரத்தில் -- கையில் ஏந்தி ஆசையா படிக்க நினைக்கும் போது புக்க மறைய வைத்துவிடுவாரோ என்று ஒரே பீதியாக உள்ளது..(ஏதாவது மந்திரிச்ச தகடு வைத்து அனுப்புங்க சார்..ப்ளீஸ்..)

    ReplyDelete
    Replies
    1. ஜெய் மலையாள பகவதி !!

      Delete
  51. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  52. செம சார்.....மாயாஜால மன்னனை ஏனோ ஸ்பைடர் வராத பின்னாட்களில் பிடிக்கவில்லை....பெரிதாய் கவரவுமில்லை..இன்றைய உங்கள் பதிவுகள் ....புத்தக அட்டை வண்ணக்கனவுகளாய் மேஜிக்காய் பிரதிபலிப்பதும்.....மான்ட்ரெக் லொதார் அட்டையில் தூள் கிளப்பவும் மாயாஜால மன்னனை காண ஆவல் மேலோங்குது .

    மேலும் இன்றைய அதிரடிக்கதைகளுக்கு மத்தியில் நிச்சயமாய் இதுபோன்ற மாற்றாக அமையும் சுவாரஸ்ய நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் .

    முதன்முதலில் சிறுவயதில் இரண்டாப்போ மூனாப்போ படிக்கயில் எங்க அத்த வீட்ல பேப்பர்களோடு கிடந்த குவியலில் டார்சான் மற்றும் மாண்ட்ரேக்க முதன்முதலாக தரிசித்த நினைவு......ஏதோ பாதாள அறைக்குள் அடைபட்ட லொதார் நினைவு....அது கருப்பு வெள்ளையென்பதால் நிச்சயம் முத்தாக இருக்கலாம்...அப்புறம்தான் எங்க கடைக்கு வந்த புத்தகங்களும் பார்த்து ரசித்தது போலத்தான் உள்ளது...ஆனா பின்னர் 90 களில் கவராததும் ஆச்சரியமே...இன்று நிச்சயம் கவர்ந்தார் மாடஸ்டி போலவே....


    கோவை விழாவுக்கு ஆவலுடன்....நிச்சயமாய் ஸ்பைடரை வெளியிட வருவீர்கள் என மாயாஜால மன்னன் குச்சியை காட்டி காற்றில் வரைந்து காட்டுனாராம் பட்சியிடம்....

    சுஸ்கி விஸ்கி இக்கதை படித்த நினைவே இல்லை எனக் கூறினேன்....ஆனா இங்க காட்டிய பக்கம் அப்படியே நினைவிலாட எனது ஞாபக சக்தியை மெச்சிய படி கடந்து போகிறேன்....இப்பால்ய நண்பர்களை காண ஆவலோடுள்ளேன்....எங்க பெரியப்பா மகனோடு குரும்பூரிலிருந்து வாங்கி வரும் போது சைக்கிளில் பின் சீட்டில் அமர்ந்து படித்த பேரிக்காய் போராட்டமும் நினைவில் ..மே மாத மலர்தானே

    ReplyDelete
  53. ஆனா நல்ல விற்பனை கண்ட ஸ்பைடரை ஏன் விடாமல் இருந்தீர்கள்...சினிஸ்டர் செவன....சுஸ்கிவிஸ்கி சிறார் இதழ்கள் என்பது ஆச்சரியமே...எங்க நாடி பிடிப்பதில் தவறிட்டீங்களோ

    ReplyDelete
    Replies
    1. அப்படி இல்ல ஸ்டீல் இப்பொழுது கூட டெக்ஸ்ன் சில கதைகளை ரசிகர் ஏற்கமாட்டார்களோ ( மெபிஸ்டோ போன்று ) என்று நிறுத்தி வைத்திருக்கிறார் அல்லவா ..அது போலத்தான்..

      Delete
    2. இல்லை நண்பரே ஸ்பைடருக்கு மீதம் இருந்த ஒரே கதை அதான...டெக்ஸ் கதையோ வேற

      Delete
  54. Welcome to Cbe. Since I subscribed to almost everything from 2012, I dont need anything. But will come one day to checkout other stalls and ur english cinebooks for my sons

    ReplyDelete
    Replies
    1. Welcome sir & sorry too ....
      ஸ்டாலில் தமிழ் இதழ்கள் மாத்திரமே இருந்திடும் - ஆங்கில இதழ்களையும் display செய்வதாயின் ஸ்டால் வாடகை அதிகம் !

      And பொதுவான புத்தக விழா சேதாரங்கள் (pilferage) ஆங்கில இதழ்களில் எப்போதுமே ஜாஸ்தி ! தவிர, புரட்டிப் புரட்டிப் பார்ப்பதில் அவற்றிற்கு ஆகிடும் சேதங்களும் கணிசம் ! So கொஞ்ச காலமாகவே we travel only with the Tamil comics !

      Delete
  55. @ கரூர் ராஜசேகரன் சார்
    சில கதைகள் மட்டுமே நம் நினைவில் தாலாட்டாய் தங்கி விடுவது உண்டு. தலயின் பாலைவனப் பரலோகம், மரணமுள், காண கோட்டை, கானலாய் ஒரு காதல் போன்ற கதைகள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
    அதேபோல் மாண்ட்ரேக்ன் கதை பெயர் ஞாபகம் இல்லை. மாண்ட்ரேக் ரூம்ல தரும் ஒரு பள்ளியின் விழாவில் கலந்துகொள்ளச் செல்லும் போது பாதை மாறி விடுவார்கள். தாங்கள் வர நேரம் ஆகும் என்று பள்ளிக்கு தகவல் அளிக்க ஒருரெஸ்டாரன்ட் அணுகுவார்கள். அந்த ரெஸ்டாரண்ட் இன் முதலாளி பெண் இவர்களுக்குப் போதை பானத்தைக் கலக்கி கொடுத்து அடிமையாக்கி கொள்வார்கள். இவர்களைக் காணாததால் அவர்களுடைய தோழிகளான நார் தாவும் கர்மாவும் வந்து இவர்களை காப்பாற்றுவார்கள் இந்த கதை சூப்பராக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ராணி காமிக்ஸ் ல படித்த ஞாபகம்

      Delete
  56. இதே சாயலில் ஆனால் இன்னொரு கதையும் இது.
    ஒரு விஞ்ஞானி மனிதர்களை அடிமைப்படுத்தும் ஒரு மருந்தை தற்செயலாக கண்டுபிடிக்கிறார். அந்த மருந்தை எந்த உணவுடன் கலந்து சாப்பிட்டாலும் அந்த உணவிற்கே அவர்கள் அடிமையாகிப் போவார்கள். ஏதேச்சையாக அந்த விஞ்ஞானி இடம் சிக்கும் மாண்ட்ரேக் மற்றும் லெதர் எப்படி தப்பித்தார்கள் என்பதே மீதிக்கதை. இந்தக் கதையும் நன்றாகத்தான் இருந்தது. பழைய ஞாபகத்தை தட்டி எழுப்பிய கரூர் ராஜசேகரன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  57. Mandrake கதைகள் காதில் ஊற்று சுற்றுவதால் இருந்தாலும், எதிர்காலம் இறந்த காலம் நிகழ் காலம் என்று மூன்று காலங்களையும் கதை நகர்வு இருக்கும், விஞ்ஞானம் கதைகள் மிக வித்தியாசமாக இருக்கும். விஞ்ஞானம் அதிதி வளர்ச்சியால் அல்லது மனிதர்களின் அதிதி அறிவியல் மூளையால் ஏற்படும் தீமைகள் பற்றியதாகவும் இருக்கும்.
    I like very much mandrake stories

    ReplyDelete
    Replies
    1. அடடே... மூ.ச. விசிட் அவசியப்படாதோ ?

      Delete
  58. என்னை பொறுத்தவரையில் மாண்ட்ரேக் குக்கே எப்பொழுதும் முதலிடம்.

    இந்திரஜால் காலத்தில் இருந்து இருவர் தான் என் பால்ய வாழ்க்கையை அழகாக்கினர். அது வேதாளன் மற்றும் மாண்ட்ரேக்.

    வேதாளன் - 49 %
    மாண்ட்ரேக் - 51 % எனக்கு.

    மாண்ட்ரேக் ஸ்பெஷல்க்காக ரொம்ப நாள் வைட்டிங்.

    அட்டை படத்திற்கு இன்னமும் கொஞ்சம் நன்றாக பண்ணி இருக்கலாம். இதுலேயும் boat ரிப் கிர்பி லேயும் boat . கொஞ்சம் ஏமாற்றமே

    ReplyDelete
    Replies
    1. கதையில் போட் வருதே - அங்கேயும்...இங்கேயும் !

      Delete
    2. Me too Prabhu ji..
      வே:மா.. 50:50..

      Delete
  59. வணக்கம் சார்.மாண்ட்ரேக்குக்கு நல்வரவு. அட்டை வண்ணக்கலவை நன்றாக உள்ளது. கண்ணைப் பறிக்கிறது.

    சிறு நெருடல்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மாண்ட்ரேக் மாயாஜால மன்னன் அல்லவா. மாண்ட்ரேக் நம்ம பத்தோடு பதினொரு ரக ஹீரோக்கள் போல் துப்பாக்கி பயன்படுத்துவது போல் அட்டைபடம் சற்று நெருடலாக உள்ளது. லோதாரையும் அவ்வளவு சரியாக அடையாளம் தெரியவில்லையே. சற்று கரிய நிறமாக இருப்பது தானே அவரது அடையாளம். 🤷‍♂️

    மாலையப்பன் அவர்களுக்கு பின் தங்களுக்கு நமது காமிக்ஸ் பற்றி அறிந்த ஒரு ஓவியர் கிடைக்காதது தூரதிர்ஷ்டம்😓. நமது காமிக்ஸ் நண்பர்களில் ஆர்ட்டிஸ்ட் உதய், சிவகுமார், அப்புசிவா, வினோபா போல் பல ஓவிய நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு நீங்கள் வாய்ப்புக் கொடுத்து பார்க்கலாமே சார்.🙏

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ...என்னையும் ஒரு ஆர்ட்டிஸ்ட் என்று விளித்ததற்கு...

      Delete
    2. "காமிக்ஸ் அறிந்த ஓவியர் மாலையப்பன்" என்பது நிஜமல்ல நண்பரே ! அவர் முறையாய்ப் பயின்றது தெய்வீகச் சித்திரங்கள் தீட்டும் ஒரு ஓவியரிடம் & அவரது டிரேட்மார்க்கே அது தான் ! நெல்லை பக்கத்துக் கோவில்களில் அவர் தீட்டியுள்ள அற்புதச் சுவர் ஓவியங்கள் எக்கச்சக்கம் !

      Delete
    3. காலத்தைத் தாண்டியும் அவரது பெயர் சொல்லி நிற்கக்கூடியவை அவையே !

      Delete
    4. மலையப்பன் அவர்களை பற்றிய அறியாத தகவல்களுக்கு நன்றி சார், 🙏🏼 எமக்கு தாங்களும் லயன் & முத்துவும் அறிமுகம் செய்து வைத்திருக்காவிடில் அவரை நம்மில் பலர் அறிந்தே இருக்க மாட்டோம்.

      Delete
    5. தமிழ் காமிக்சில் தங்களின் பெயரும் கூட அழியாததே.🥰 யாரும் செய்யாத அளவுக்கு 40 வருட காமிக்ஸ் சேவை யோடு இன்று இவ்வளவு பேரை ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாக்கியதிலும், பலரது நல்ல மனங்களை, திறமைகளை அறிய வைத்ததிலும் ,காமிக்ஸ் பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஒரு நிலையான வாசக வட்டமாக உருவாக்கியதிலும் உங்களின் பங்களிப்பு தான் அதிகம்.🥰

      Delete
    6. மிகவும் சரி அபிஷேக். அருமையாக சொன்னீங்க.

      Delete
    7. ///ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாக்கியதிலும், பலரது நல்ல மனங்களை, திறமைகளை அறிய வைத்ததிலும் ,காமிக்ஸ் பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஒரு நிலையான வாசக வட்டமாக உருவாக்கியதிலும் உங்களின் பங்களிப்பு தான் அதிகம்.///

      சூப்பரா சொன்னீங்க அபிஷேக்! ஆத்மார்த்தமான வரிகள்!!

      Delete
  60. காகித விலையேற்றம் இந்தளவு உயர்வாக இருப்பதும் தங்களை பாதித்துள்ள விதமும் கவலையளிக்கிறது. கண்மூடித்தனமான விலையேற்றங்களால் எதை சாதிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் பலரின் தொழில்களும் நசித்து போகும். இதைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த அரசாங்கங்களும் முயற்சி எடுக்காதது கவலையளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வலியவன் பிழைத்துக் கொள்ளட்டும்...சிறியவன் தெரிஞ்சதைச் செய்து கொள்ளட்டும் - என்று சொல்லாமல் சொல்லியாச்சு நண்பரே !

      Delete
    2. // வலியவன் பிழைத்துக் கொள்ளட்டும்...சிறியவன் தெரிஞ்சதைச் செய்து கொள்ளட்டும் - என்று சொல்லாமல் சொல்லியாச்சு நண்பரே ! //

      கசப்பான உண்மை!

      Delete
  61. //வலியவன் பிழைத்துக் கொள்ளட்டும்...சிறியவன் தெரிஞ்சதைச் செய்து கொள்ளட்டும்//

    சத்தியமான வார்த்தைகள் ஐயா

    ReplyDelete

  62. >>>And பொதுவான புத்தக விழா சேதாரங்கள் (pilferage) ஆங்கில இதழ்களில் எப்போதுமே ஜாஸ்தி ! தவிர, புரட்டிப் புரட்டிப் பார்ப்பதில் அவற்றிற்கு ஆகிடும் சேதங்களும் கணிசம் ! So கொஞ்ச காலமாகவே we travel only with the Tamil comics !

    ஓ இதில் இத்தனை nuances இருக்கிறதா ?

    Book fair ஸ்டால் நடத்துவது எளிதல்ல போலிருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வெளியே சொல்ல இயலா நோவுகள் ஒரு நூறு உண்டு நண்பரே !

      Delete
  63. நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு உங்கள் பாணியில் ஒரு அட்டகாச பதிவு சார். பதிவின் ஆரம்பமே அமர்க்களம். நண்பர்கள் ஒவ்வொருவரையும் நீங்கள் விவரித்து இருப்பது செம்ம. அதில் எனது பெயரையும் நீங்கள் சொல்லி இருப்பது ஐசிங் ஆன் தி கேக்.

    மாண்ட்ரேக் எப்போதுமே ரசிக்க வைக்கும் ஒரு ஹீரோ. இப்போது எல்லாமே கிளாசிக் என்பதால் இந்த முறை ஹிட் தான் என்பது எனது நம்பிக்கை.

    பேப்பர் விலை உயர்வு மிகவும் வருத்தம் அளிக்க வைக்கும் செய்தி. இதனால் நீங்கள் என்ன முடிவு செய்தாலும் அதற்கு நான் உடன்படுகிறேன் சார்.

    நண்பர்கள் எல்லாம் சேர்ந்து நூற்றுக் கணக்கில் சுஸ்கி விஸ்கி வாங்கி இருப்பது மகிழ்ச்சி. காமிக்ஸ் அனைவரையும் சென்றயடைய அவர்கள் செய்யும் முயற்சிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    நன்றி சார். நன்றி நண்பர்களே

    ReplyDelete
  64. பழைமை விரும்பிகளுக்காகsmasing 70's தனித்தடத்தில், கார்ட்டூன் ரசிகர்களுக்காக லக்கி, சிக்பில், புது உலகப்பயணமாக ஆல்பா, சிஸ்கோ, டாங்கோ, டெக்ஸ்ரசிகர்களுக்காக திகட்டத்திகட்ட டெக்ஸ் கதைகள், மாடஸ்டி ரசிகர்களையும் புறந்தள்ளாமல்வருடம் ஒருஸ்லாட், எதிர்பாராமல் பைலட் ஜானி என்றுகுறைந்த பட்ஜெட்டில்அனைத்து தரப்பு வாசகர்களையும்திருப்திப்படுத்தி அரவணைத்துச் செல்லும்ஒரு ஆசிரியராகநீங்கள்இருக்கிறீர்கள். இதில் எதிலுமேஅதிருப்தி அடையாதசாதாரணவாசகன்சார்நான்.மனநிறைவுடனே வாசித்து வருகிறேன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  65. சுஸ்கி விஸ்கி .. புத்தகத்துடன் இலவசமா ஏதேனும் போஸ்ட்டர் (6*4) சைஸ்ல அ கீ செய்ன் இது போல ஏதாவது கிடைக்க வாய்ப்பிருக்குங்களா டியர் எடி ..

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹஹஹஹ......
      சம்பத் சாவில மாட்டுற கீச்செயினுக்கு பதிலா.....
      கீச்செயின்ல மாட்டுற கார கேக்கலாமே

      Delete
  66. ஜாகோர் வருவதால் டெக்ஸ்க்கு ஆப்பு விழுமோன்னு அஞ்சுறது எப்படி இருக்குன்னா...


    வீட்ல அம்மாக்கள் டீன்ஏஜ் மகன்களை பார்த்து அப்போல்லாம் அடிக்கடி ஒரு வார்த்தை சொல்லுவாங்க..
    "நாளைக்கு பொண்டாட்டி பேச்சை கேட்டுக்கிட்டு நம்மளை எல்லாம் விரட்டிப்புடுவான்" அப்படீன்னு..!

    அதாவது வரப்போற மருமக யாரு எப்படி இருப்பா என்ன. கேரக்டர்னே தெரியாம அவளை குறை சொல்ல ஆரம்பிக்கிறது..😂

    என்னைக் கேட்டா..
    டெக்ஸ் வில்லருக்கு போட்டியா.. இணையா.. இன்னொரு தொடர் வரணும்..!

    இத்தாலியிலேயே டெக்ஸை பின்னுக்கு தள்ளும் ஜாகோர் அந்த இன்னொருத்தரா இருந்தா மகிழ்ச்சியே..!


    இஸ்டார்ட் மீஜிக்...🏃🏃🏃

    ReplyDelete
    Replies
    1. ஜாகோரா.. இல்லை சாகோரா.. இல்லை ஜஹோரா.. இல்லை சகோரா.. இல்லை சாஹோரா.. இல்லை சஹோரா.. இல்லை.. வேறு ஏதாவதா..!.??

      🙆

      Delete
    2. ////ஜாகோர் வருவதால் டெக்ஸ்க்கு ஆப்பு விழுமோன்னு அஞ்சுறது எப்படி இருக்குன்னா../// ----🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சிரிச்சாச்சி மாமா!!! மஹியோட செம காமெடிக்கு...., இந்த மஹியோட ஜாகோர் பற்றிய கட்டுரையை எடுத்து ஜாகோரின் தன்மையை அலசிட்டு இருந்தோம்... அதற்கு நாங்க அவ்வாறு நினைப்பதாக, மஹி தன் ஆசையை சொல்லிட்டாரு...

      உப்ப ஒவ்வொரு டைகர் ரசிகராக இந்த ஆசையை வெளிக்கொணர்ராங்க...

      மொதல்ல ஜோகோர் தன்னை நிலைநிறுத்திகட்டும்... அப்புறம் ட்ரெண்ட் மாதிரி வெளிவிளிம்பு நாயகர்களோடு பொருதட்டும்....


      Delete
    3. இப்படி பொசுக்குன்னு முடிச்சிட்டா எப்படி மாமா.?

      ஆகஸ்டு புக்ஸ் வர்ர வரைக்கும் பொழுது போகவேணாமா..?!

      😜😜😜

      Delete
    4. அப்ப கூப்பிடு என்ற அமெரிக்க மாப்பிள்ளையும், உன்ற மச்சானுமான மஹியை....

      என்ன ரீசன்காக இந்த கருத்தை சொன்னாராம்????

      Delete
    5. அங்குட்டு பஞ்சாயத்தே முடியமாட்டேங்குதே..😂

      Delete
  67. Replies
    1. வூட்டுல போயி உப்புபத்தல காரம்பத்தல என சொல்லுங்க:-) அப்புறம் பாருங்க எப்படி பத்திக்கும் என :-)

      Delete
    2. போனமாசம் சொல்லிப்புட்டு... இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா தேறி வர்ரேன்..
      ஏஞ்சாமீ..!

      Delete
    3. அதனால் என்ன கண்ணா :-) நீங்க எல்லாம் பல பல களங்களை பார்த்தவங்க :-) இதுக்கு எல்லாம் இப்படி சொல்லலாமா :-) இன்றொரு முறை முயற்சித்து பாருங்கள் :-) முதுகில் எதற்கும் கொஞ்சம் நல்லா எண்ணையை தடவிக்கோங்க :-)

      Delete
  68. ஆண்டு மலரில் லக்கி கதைக்கு "நில் கவனி சிரி" என்ற தலைப்பை விட வேறு ஏதாவது தலைப்பு இருந்து இருக்கலாமோ என கதையை படித்து முடித்தவுடன் தோன்றியது.

    ReplyDelete