Powered By Blogger

Saturday, July 30, 2022

சர்க்கஸாய் ஒரு சனிக்கிழமை !

 நண்பர்களே,

வணக்கம். கோவில்பட்டிக்கு கடலைமிட்டாய் ; சாத்தூருக்கு சேவு ; நெல்லைக்கு அல்வா என்பது போல் எங்க ஊரில் (ஒரு காலத்தில்) பக்கோடா செம famous ! பெரியதொரு ஆடம்பரமோ, பந்தாவோ இல்லாமல் பஜாருக்குள் இருக்கும் அந்தக் கடையின் முன்னே எந்நேரமும் மொய்யென்று கூட்டம் அப்பி நிற்கும் ! ராத்திரிக்கு பால்சோறு - பக்கோடா கூட்டணியில் தான் இக்கட ஆயிரக்கணக்கான வீடுகளில் இன்னமும் வண்டி running ! அதைக் கொறித்துப் பழகிப் வளர்ந்த பிள்ளைகள் திருமணமாகி வெளியூர்களுக்கு சென்று விட்டாலும், இங்கிருக்கும் தகப்பன்மார்கள் தவறாது பார்சல்கள் வாங்கி கூரியர்களில் போட்டுத் தாக்குவதுண்டு ! பக்கோடா famous என்றாலும், அந்தக் கடையின் இனிப்புகள், காரங்கள் சகலமுமே செமையாக இருக்கும் - so மூத்த பிள்ளை வீட்டுக்கு ; அடுத்த பிள்ளை வீட்டுக்கு ; கடைக்குட்டிக்கு என்ற ரீதியில் பிரித்துப் பார்சல் வாங்க வருவோரை வேடிக்கை பார்ப்பதே ஒரு அனுபவம் !! "ஆங்...ஒரு கிலோ பக்கோடா - மூணு பார்சல் அண்ணாச்சி ; அந்த மொத பார்சல்லே அரை கிலோ ஜிலேபி சேர்த்து வைச்சிருங்க ; ரெண்டாவதுலே பூந்தி லட்டு ; மூணாவதிலே மைசூர்பாகு ! அப்டியே அந்த ஜிலேபி பார்சலோட முக்கா கிலோ சிப்ஸ் போட்ருங்க ; பூந்தி லட்டு கூட ஓமப்பொடி ; மைசூர்பாகோட பாதுஷா ! இந்த சிப்ஸ் வைச்ச பார்சல் இருக்கில்லியா - அதோட கால் கிலோ கருப்பட்டி முட்டாய் ஜீரா ஊத்தாதது வேணும் ; பாதுஷா பார்சல்லே ஜீரா ஊத்தின கருப்பட்டி முட்டாய் ; அப்புறமா ஓமப்பொடி பார்சல்லே கோதுமை அல்வா அரை கிலோ !!" என்று ஒவ்வொரு பிள்ளைக்கும், மாப்பிள்ளைக்கும், பேரப்பிள்ளைக்கும் பிடித்தமான சமாச்சாரங்களை மாய்ஞ்சு மாய்ஞ்சு ஆர்டர் செய்வதை கிட்டக்க இருந்து கேட்கும் போதே, தலீவரின் கடுதாசிகளைப் படிச்சா மாதிரி நமக்கு கேரா இருக்கும் ; ஆனால் கடையில் நிற்கும் சிப்பந்திப் பசங்களோ செம அசால்ட்டாய் அதைக் கையாள்வார்கள் ! இன்றைய பகலில் நமது ஆபீசுக்குள் நுழைந்த போது எனக்கு அந்தப் பக்கோடா கடை ஞாபகமே தான்......!

"Smashing 70s-க்கு அவர் சந்தா கட்டியிருக்காரு....அதுக்கான free புக்கை வைச்சிருங்க ; புக்மார்க் மறந்திராதீங்க ! அவரே ரெகுலர் சந்தாவிலேயும் இருக்கார் - ஆனா டெக்ஸ் வில்லர் இல்லாத சந்தா - அதனாலே தோர்கல் புக் மட்டும் வைக்கணும் ! அது கூடவே 'கைப்புள்ள ஜாக்' இலவச புக் மறந்திடப்படாது ! ஊஹூம்....அவர் சுஸ்கி-விஸ்கிக்கு பணம் இன்னும் கட்டலே....அதை வைக்க வாணாம் ; ஆனா அதுக்கான அந்த செகப்பு கலர் புக்மார்க் மட்டும் வைச்சு விடலாம் !!"......" இல்லே - இது சுஸ்கி-விஸ்கி மட்டும் ஆர்டர் பண்ணுன சாருக்கு ; ஹே.. அது  "காமிக்ஸ் எனும் கனவுலகம்" FB க்ரூப்பிலேர்ந்து பணம் கட்டுனவங்களுக்கு - மறக்காம அந்த ஸ்டிக்கர் போட்ட புக்கான்னு பார்த்து வைக்கணும் ! ஆமா...அவங்க ரெகுலர் சந்தாவிலே இருக்காங்க தான் ; ஆனா Smashing-க்கு கட்டலை ; சுஸ்கி-விஸ்கி, தோர்கல் , டெக்ஸ் மட்டும் அனுப்பணும்,,,ஒரு free புக் மட்டும் தான் !!" என்ற ரீதியில் அங்கே நடந்து கொண்டிருந்த களேபரங்களை வாசலில் நின்றபடிக்கே பார்த்தும், கேட்கவும் செய்த எனக்கே கிறு கிறுவென்று வந்தது ! ஆனால் நம்மாட்கள் அந்தப் பக்கோடாக் கடையின் தேர்ந்த சிப்பந்திகளைப் போல, டெஸ்பாட்ச்சை அசால்ட் அறுமுகங்களாய்க் கையாண்டு கொண்டிருந்தனர் ! உள்ளே கால்வைத்தால் எனது அறைக்குள் போகவே பாதையில்லை - நெடுக பார்சல்கள் / டப்பிகள் / புக்குகள் என்ற ஆக்கிரமிப்புகள் !!  அது என்ன கதை, ஏது கதை என்பதோ, மாண்ட்ரேக் யார் - மயிலாடுதுரைக்காரரா - மதுராந்தகத்தாரா ? என்றோ நம்மாட்களுக்குத் தெரியாது தான் ! ஆனால் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் இவற்றை உங்களிடம் கொண்டு சேர்ப்பது எத்தனை முக்கியம் என்பதை அழகாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் ! நான் வித விதமாய் வடைகளைச் சுட்டுத் தள்ளினாலும், மறையைக் கழற்றிக் கையில் தர டிசைன் டிசைனாய்த் திட்டமிட்டாலும், அத்தனைக்கும் செவி சாய்த்து நடைமுறைப்படுத்தும் ஆற்றலாளர்கள் ! Of course - அங்கே இங்கே என சிற்சிறுப் பிழைகளுக்கு விதிவிலக்குகள் ஆகிட மாட்டார்கள் தான் ; ஆனால் இந்தப் பயணத்தின் ஒரு understated அங்கம் இவர்கள் என்பதில் எனக்கு ஐயங்களே கிடையாது ! முகம் சுழிக்க முகாந்திரங்கள் தராமல் இயன்றமட்டுக்கு அனைவருக்கும் பணியாற்றிட எண்ணும் இந்தச் சின்ன டீமுக்கு அவ்வப்போது கிடைப்பது என்னவோ விளக்குமாற்றுச் சாத்துக்களுமே - like yesterday !! ஈரோட்டிலிருந்து ஒரு வாசகர் ; Smashing '70s க்கு மாத்திரம் சந்தா + சுஸ்கி-விஸ்கி முன்பதிவு என்று செலுத்தியுள்ளவர்.....போன் செய்து - "மாண்ட்ரேக் புக் இங்கே எல்லா இடத்திலேயும் வித்துக்கிட்டு இருக்கு ; எனக்கு தான் அனுப்பலை நீங்க !!" கத்தித் தீர்த்திருக்கிறார் ! இங்கிருந்து யாரேனும் களவாடி புக்ஸை கொண்டு சென்றிருந்தால் தவிர, அதற்கு வாய்ப்பே இல்லை என்று அவரைப் புரியச் செய்ய முயன்றாலும் கூச்சல் மட்டுமே மறுமுனையிலிருந்து ! புரிந்து கொள்ளவே முடிவதில்லை - நமது பொறுமைகளுக்கு, சில தருணங்களில் இத்தனை சன்னமான திரிகள் தானா ? என்பதை ! Phewww !!டெக்ஸ் வில்லர் புக்ஸ் ரெடியாகிட ஒரு நாள் கூடுதலாய் அவசியமாகிட்டதால் இதர புக்ஸும் காத்திருக்க வேண்டிப் போனது ! இது தான் நிலவரம் எனும் போது எங்கோ-யாரோ சொன்னதைக் கேட்டுக்கொண்டு இவர்களைக் காய்ச்சி எடுப்பானேன் ? இது போலான பஞ்சாயத்துக்களுக்கு இடம் தர வேண்டாமே என்பதால் தான், ரெடியாகிக் காத்திருந்த சுஸ்கி-விஸ்கி புக்ஸைக் கூட இன்று வரைக்கும் கோவைப் புத்தக விழாவில் விற்பனைக்கு வெளியே எடுத்திடவில்லை ! சற்றே முன்கூட்டி அவற்றை விழாவில் கண்ணில் காட்டியிருந்தால், நிச்சயமாய் விற்பனைக்குக் கைகொடுத்திருக்கும் தான் ; ஆனால் ஒரே சமயத்தில் அனைவருக்கும் கிடைக்கட்டுமே என்று எண்ணி, ஸ்டாலில் உள்ள பண்டலை இந்த நொடி வரைக்கும் உடைக்க அனுமதி தந்திருக்கவில்லை நான் ! And we get this !! 😑😑😑

நாளை கடைசி தினம் காணும் கோவை விழாவினை இந்த சு&வி.ரெட்டையர் சிறப்பிப்பார்கள் ! And இது வரைக்குமான கோவை அனுபவம் - செமத்தியோ செமத்தி !! வார நாட்களில் கூட பின்னிப் பெடலெடுத்துள்ள விற்பனைகள் ! By far - நமது இது வரைக்குமான கோவைப் புத்தக விழாக்களுக்குள், இந்த நடப்பாண்டே டாப் !! இந்த வாரயிறுதியும் அதே வேகத்தில் தொடர்ந்திடும் பட்சத்தில் புனித மனிடோ நம்மை ஜம்மென்று கரை சேர்த்திருப்பார் !! அப்புறம் கவிஞரே..ஞாயிறுக்கு கோவையில் மழை என்று forecast காட்டுகிறது ; உங்க கவிதைகளில் ஒண்ணை எடுத்து விட்டு அதை சித்தே தள்ளிப் போட முடியுதான்னு பாருங்களேன் ?!

Moving on, உடனடியாய் காத்திருக்கும் அடுத்த இதழ் - நம்ம கதை சொல்லும் காமிக்ஸ் வரிசையின் இதழ் # 2 - சின்ட்ரெல்லா !! இதோ - அதன் அட்டைப்பட preview & உட்பக்க preview க்களை உங்களிடம் காட்டும் சமயமே, மண்டைக்குள் யோசனைகள் பல குறுக்கும், நெடுக்கும் ஓட்டமெடுத்து வருகின்றன : 'ஆஹா....இதிலே எடுத்த உடனேயே ரெண்டு பெருசுக ரெண்டாம் கண்ணாலம் கட்டிக்குதுங்க ; இளவரசருக்கு (கதையிலே வர்றவருக்கு தான் !!) பொண்ணு பாக்கிறச்சே அழகான பாப்பாக்களா தேடுறாங்க ; இறுதியிலே இளவரசருக்கு பச்சக்குனு சின்டி பாப்பா இச்சு கொடுக்குது !!' இவற்றையெல்லாம் காரணம் காட்டி இந்தக் கதைக்குக் கட்டம் கட்ட வேண்டி வருமோ ? Go Back சின்டி !! என்று பலூன்கள் பறக்குமோ ? என்று பயந்து பயந்து வருது ! 

நிறையவே கனவுகளோடு துவங்கிய இந்தக் கதை வரிசையானது பெரிதாய் take off ஆகவில்லை என்பதே நிலவரம் ! Yes - கோவை புத்தக விழாவில் இதற்கு "பரவாயில்லை" ரக response கிட்டியுள்ளது தான் ; ஆனால் in general - ஜாக் கையில் ஒரு பிஸ்டலோ ; பிச்சுவாவோ இருந்திருந்தால் தலை தப்பியிருக்கும் போலும் ! நமது யூத் வாசக வட்டத்து இல்லங்களில் குட்டீஸ்கள் குறைவோ ; அல்லது அவர்கட்குக் கதை சொல்லிடும் மெனெக்கெடல்களுக்கு நம் மத்தியில் அவகாசம் குறைச்சலோ ; அல்லது ஒன்லி இங்கிலீபீஷ் என்ற எண்ணங்களோ ; அல்லது கரிச்சட்டிகளுக்குள் தலைகளை முக்கி எடுத்து யூத்தாய்க் காட்சி தரும் வட்டத்தின் இல்லங்களில் மிகுந்திருப்பது வளர்ந்த பிள்ளைகளோ-  காரணங்கள் எதுவாக இருப்பினும் the response has been very lukewarm ! பிறந்தநாள் பரிசளிக்க, நூலகங்களுக்கு அன்பளிப்பாக்கிடக் கூட இவை பயன்தரவில்லை எனும் போது மண்டையைச் சொரிய மட்டுமே முடிகிறது !  அடுத்த சீசனுக்கு இந்த முயற்சி தொடர்ந்திடும் பட்சத்தில் - இடைப்பட்ட நாட்களில் எனக்கு சிக்கிம் லாட்டரியில் ஒரு கோடி விழுந்திருக்க வேணும் தான் !! சிக்கிமுக்கு எந்த பஸ்னு வேற தெரிலியே...!


Next in line, ஈரோட்டுப் புத்தக விழா காத்திருக்க, "அங்கே என்ன இஸ்பெஷல் ?" என்ற கேள்வி எழுவது இயல்பே ! ஆனால் சின்னச் சின்ன சில நிகழ்வுகள் நமது திட்டமிடல்களுக்கு சற்றே நிதானங்கள் தேவை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளன ! 50 ஆண்டுகளைத் தொட்டாச்சு ; வெளியீடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை நோக்கிப் பயணிப்பதையும் பார்க்கிறோம் - ஆனாலும் இத்தனை காலமாய் நமது கிட்டங்கிகளில் உருப்படியான ரேக்குகள் கூட இருந்ததில்லை ! பலகைகள் மீது இங்கும் அங்குமாய் புக்ஸ் குந்தியிருப்பதே அரை நூற்றாண்டின் வாடிக்கை ! ஆனால் சமீப பொழுதுகளில் நமது வெளியீட்டு எண்ணிக்கைகளும், இதழ்களின் கையிருப்புகளும் உசக்கே பயணித்துக் கொண்டேயிருக்க, 'கிட்டங்கியில் இடம் இல்லா சாரே ; இனி புக்ஸ் வந்தால் பக்கத்து பொட்டலில் தான் இறக்கி வைக்கணும் !" என்று நம்மாட்கள் தாக்கல் சொன்ன போது 'திரு திருவென்று' முழிக்கவே முடிந்தது ! 

"பொட்டலில் பொம்ம புக் !!" டைட்டில் சிறப்பாய் இருந்தாலும், அந்த இடத்துக்காரர் நாயை விட்டுக் கடிக்கப் பண்ணுவார் என்ற புரிதலோடு, தொப்புளை சுற்றி 16 ஊசிகள் போட்டுக் கொள்ளவும் திராணி தேறவில்லை ! So தீர்வு என்ன ? என்ற யோசனைக்கு - புத்தக ரேக்குகள் செய்து வாங்குவதே வழி ; ஒவ்வொரு ரேக்கிலும் 5 தட்டுக்கள் இருக்கும் பட்சத்தில் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கி இடத்தை manage செய்து கொள்ளலாம் என்று பட்டது ! தொடர்ந்த சுபயோக சுப ஜூன் மாதத்தினில், மதுரையிலிருந்து ரேக் செய்யும் நிறுவனத்தினர் வந்து நமது கிட்டங்கியை அளவெடுத்து இந்த முனையிலிருந்து அந்தக் கோடி வரைக்கும் எத்தனை ரேக்குகள் போட முடியும் என்ற கணக்குடன் ஒரு வரிசைக்கு ரூ.50,000 என்ற எஸ்டிமேட்டும் தந்தனர் ! மொத்தம் 4 வரிசைகள் அதே போல போடலாம் என்றும் சொன்ன போது 'கைத்தாங்கலாக யாராச்சும் என்னைப் பிடிங்கப்பா !!' என்று சொல்லாத குறை தான் ! வேற வழியே இல்லை என்றான பின்னே, first "ஒரேயொரு வரிசை போட்டுப்போம்ணே....சரியாய் வந்தா மேற்கொண்டு செஞ்சுக்குவோம் !" என்றேன் ! நாலாவது தினமே வந்தார்கள், மாட்டினார்கள், பில்லை நீட்டினார்கள், உடனடி பேதிக்கு மருந்தென்ன ? என்று என்னைத் தேட விட்டார்கள் ! ஒரு மாதிரியாய் புக்ஸை தட்டுக்களில் அடுக்கி, ஒவ்வொன்றின் பெயரையும் எழுதி ஒட்டிய போது, "இதே மாதிரி மேற்கொண்டு செஞ்சு வாங்கி குடுங்க சார் ; வசதியா இருக்குது !" என்று நம்மவர்கள் கோரிக்கை வைக்க "ஜெய் கோவைப் புத்தக விழாவாய நமஹ !!" என்ற நம்பிக்கையில் ரேக் # 2-க்கு ஆர்டர் செய்தோம் ! 

வந்தாங்க..மாட்டுனாங்க..பில்லு தந்தாங்க ..பேதி..!! ரிப்பீட்டு !! 3 நாட்களுக்கு முன்னே மாட்டி முடித்த ரேக்கினில் இதுநாள் வரைக்கும் அட்டைப்பெட்டிகளுக்குள் துயில் பயின்று கிடந்த hardcover இதழ்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்த சமயமாய் உள்ளே போய் பராக்குப் பார்த்தவனுக்கு சில பல ஷாக்குகள் !! இதுநாள் வரைக்கும் sold out என்ற நம்பிக்கையில் கடையைச் சாத்தியிருந்த நம்ம ஜெரெமியா ஆல்பம் # 2 "பயணங்கள் முடிவதில்லை" கணிசமான எண்ணிக்கையில் ஒரு அட்டைப்பெட்டிக்குள் கிடந்தது ! அடங்கொன்னியா...என்றபடிக்கே கொஞ்சம் முன்னே நகர்ந்தால், செமத்தியாய் டாலடிக்கும் "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" ரேக்கில் குதூகலமாய்க் குந்திக்கிடந்தது ! இத்தனை காலமாய் டப்பாக்களுக்குள் துயில் பயின்று வந்ததால் பெரிதாய்க் கண்ணில்பட்டிருக்கவில்லை ; ஆனால் இப்போது உடைத்து வெளியே எடுத்து அடுக்கும் போது தான் யதார்த்தம் பிடரியில் அறைகிறது ! "இந்த இதழில் ஸ்டாக் தங்கியது எவ்விதம் ? சூப்பர் ஹிட் இதழாச்சே ?" என்று யோசித்த போது தான், இது சந்தாவின் அங்கமே நஹி ; ஈரோட்டு ஸ்பெஷல் என 2018-ல் தயார் ஆனது என்பது புலனானது ! ஆக சந்தாவிலோ, முன்பதிவிலோ இடம்பிடிக்கா ஸ்பெஷல் இதழ்கள், அந்நேரத்து euphoria-வில் பரபரப்பாய் விற்பனையாவதைத் தாண்டி பெரிதாய் சாதிப்பதில்லை என்பதே நிஜம் ! இதற்கு ஒரே விதிவிலக்கு நம்ம மஞ்சள்சட்டை மாவீரரின் ஸ்பெஷல் இதழ்கள் ! அட்டவணையில் இடம்பிடித்தாலும் சரி, out of syllabus பாடமாய் இருந்தாலும் சரி, இவை கரைசேர்ந்து விடுகின்றன ! 

So மறுக்கா ஈரோடு..மறுக்கா ஸ்பெஷல்...மறுக்கா அட்டவணையில் இடம்பிடிக்காத ஸ்பெஷல் இதழ்...ரிப்பீட்டு !!! என்ற S.J சூர்யாவின் மாடுலேஷனில் தலைக்குள் குரல் கேட்டது !! இன்றைக்கு காகிதம் விற்கும் விலைகளில் புக்ஸை அச்சிட்டு கிட்டங்கியில் அடுக்கி அழகு பார்க்கும் 'தம்' - அதானி ஓனருக்கு மட்டுமே சாத்தியம் என்பதால் நம் முன்னே இருப்பன இரண்டே options :

***Zagor எனும் இந்தப் புதுவரவை முன்பதிவுக்கு அறிவித்திடல் ; with maybe 2 months time for the booking !! 

அல்லது

***2023-ன் அட்டவணையினில் ஜனவரி இதழாய் இந்தச் சிகப்பு பனியன்காரரை களமிறக்கல் ! 

So சொல்லுங்களேண்ணே - இரண்டில் எது சுகப்படக்கூடுமென்று ?


முன்பதிவு option ஓ.கே. எனில் - சைக்கிள் கேப்பில் "உயிரைத் தேடிஇதழையும் இணைத்திடல் ஓ.கே.வாகிடுமா guys ? 

And இந்தப் பட்டியலில் உள்ள இதழ்களையும் முன்பதிவுகளுக்குப் பரிசீலனை ப்ளீஸ் ?

STORY OF THE WEST (Color)

SPIDER vs. THE SINISTER SEVEN (Black & White)
 
யோசித்துச் சொல்லுங்களேன் ? முன்பதிவு இதழ்களென்றொரு லிஸ்ட் தந்து - அவற்றுள்ளிருந்து pick & book whatever you want என்ற வாய்ப்பளிக்கலாமோ ? 

அக்டொபரின் துவக்க நாட்களில் விடுமுறைகள் நெடுக கரம் கோர்க்கின்றன ! அந்நேரத்துக்கு ஒரு ஆன்லைன் விழா திட்டமிட்டு, இந்த முன்பதிவு இதழ்களைக் கொண்டு அந்த  'விலாவை' சிறப்பிக்கலாமோ ? Thinking caps on ப்ளீஸ் all ?

Further down the line, 2023-ன்  அட்டவணைக்கான புது வரவுகளில் ஒருவர் 'டிக்' ஆகியாச்சு & அதிகாரபூர்வமாய் நமது அணிவகுப்பினில் அங்கமாகிட மனுஷன் ரெடியாகி விட்டார் ! அந்தப் புது வரவு # 2 நம்மோடு கரம்கோர்க்க, இன்னும் கொஞ்ச அவகாசம் அவசியமாகிடும் போலும் ; நமக்கு நிரம்பவே நேரம் இருப்பதால் பொறுமையாய்க் காத்துள்ளோம் ! இருவருமே கௌபாய்கள் அல்ல என்பதே இங்கே ஸ்பெஷல் ! 

மீண்டும் சந்திப்போம் folks, bye for now !! Have a cool weekend !! 

திங்களன்று  உங்களின் ஆகஸ்ட்களைத் துவக்கிட நமது புது வரவுகள் உங்கள் வீட்டு வாசல்களில் காத்திருப்பார்கள் ! 

ஆன்லைன் லிஸ்டிங்களுமே ready ! Happy Shopping & Reading !!


372 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. பத்துக்குள்ள வந்துட்டேன்..

  ReplyDelete
 3. மாலை நேரத்து வணக்கம்

  ReplyDelete
 4. வணக்கம் நண்பர்களே🙏🙏

  ReplyDelete
 5. இன்றும் நல்ல சேல்ஸ் ஆசிரியரே
  இன்று கடைசி இரண்டு நாட்கள் என்பதால்
  மக்கள் கூட்டமும் அதிகமாக காண முடிந்தது
  நம்ம ஸ்டாலிலும் கூட்டம்
  குழந்தைக்களுக்காக பெற்றோர் இன்று நம் காமிக்ஸ் பக்கம் வந்தோர் நிறைய

  ReplyDelete
  Replies
  1. @செந்தில் சத்யா
   நன்றி தோழரே

   Delete
  2. @Parani from Bangalore
   நன்றி சகோதரரே

   Delete
  3. உங்களின் இந்த காமிக்ஸ் சேவை பாராட்டுக்குரியது ரம்யா!

   Delete
  4. நல்ல சேதி சகோ..

   சிவகாசி ல
   ரெண்டு ரேக் காலியாச்சுனா சரி ...

   Delete
 6. வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 7. சின்ட்ரெல்லா புக் ஓவியம் மற்றும் கலரிங் பிரமாதம் Sir,

  இவை விற்பனையில் சாதிக்கவில்லை எனும் போது " கடை விரித்தேன் கொள்வாரில்லை" என்ற வாசகம்தான் ஞாபகம் வருகிறது

  ReplyDelete
 8. // குட்டீஸ்கள் குறைவோ ; அல்லது அவர்கட்குக் கதை சொல்லிடும் மெனெக்கெடல்களுக்கு நம் மத்தியில் அவகாசம் குறைச்சலோ ; //

  பெற்றோர்கள் மொபைலில் செலவழிக்கும் நேரத்தை குறைத்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் குழந்தைகள் கதை புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டும் :-(

  ReplyDelete
 9. முன்பதிவிற்கு என் ஆதரவு உண்டு. நான்கு இதழ்களையும் முன்பதிவில் ஒரே சமயத்தில் வெளியிடலாம்.

  ReplyDelete
 10. பக்கோடா கடை அனுபவம். சிறுவயதில் தூத்துக்குடியில் பல நேரங்களில் இதனை பார்த்து ரசித்து இருந்திருக்கிறேன் அதனை உங்கள் எழுத்துக்களில் படித்த உடன் எனது சைக்கிள் பல வருடங்கள் பின்னோக்கி சென்று விட்டது. நன்றி.

  என பக்கத்து வீட்டு நண்பன் வீட்டில் தினமும் இரவு பால் சோறு 50 பைசாவுடன் எனது நண்பன் கடைக்கு செல்வான், 5 பொட்டலங்கள் ஒவ்வொருவருக்கும் வேண்டியதை பத்து பைசா வீதம் வாங்கிச் செல்வதை பார்த்து ஆச்சரியப்படுவேன். எனது வீட்டில் இரவு ஏதாவது காய்கறி பொரியல் இருக்கும் எனவே பக்கோடா கடை பக்கம் அதிகம் செல்வது இல்லை :-)

  நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.

  ReplyDelete
 11. கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது - புகைப்படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉

  ReplyDelete
 12. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 13. // ***Zagor எனும் இந்தப் புதுவரவை முன்பதிவுக்கு அறிவித்திடல் ; with maybe 2 months time for the booking !! //

  2023 வரைக்கும் தாங்காது எஜமான் :-) தீபாவளி ஸ்பெஷல் :-) அல்லது டிசம்பரில் வின்டர் ஸ்பெஷல் :-)

  ReplyDelete
  Replies
  1. அக்டோபரில் ஒரு ஆன்லைன் புத்தக திருவிழா வருமாமே...அப்ப அந்த ஸ்பெஷலா அக்டோபர் மாதமே போட சொல்வோமே நண்பரே..

   Delete
  2. // ஸ்பெஷலா அக்டோபர் மாதமே போட சொல்வோமே நண்பரே.. //

   Okay!
   +1

   Delete
 14. // SPIDER vs. THE SINISTER SEVEN (Black & White) //

  தீபாவளிக்கு தானைத் தலைவனின் புத்தகம் வேண்டும்! ரெடி ஸ்டார்ட் தி மியூஸிக் :-)

  ReplyDelete
 15. வன ரேஞ்சர் ஜோ கதைகள் மற்றும் கேப்டன் டைகர் கதைகள்

  மீண்டும் வர வேண்டும்

  ReplyDelete
 16. வன ரேஞ்சர் ஜோ
  கேப்டன் டைகர்

  இரண்டு ஹீரோ மீண்டும் வர வேண்டும்

  ReplyDelete
 17. // முகம் சுழிக்க முகாந்திரங்கள் தராமல் இயன்றமட்டுக்கு அனைவருக்கும் பணியாற்றிட எண்ணும் இந்தச் சின்ன டீமுக்கு அவ்வப்போது கிடைப்பது என்னவோ விளக்குமாற்றுச் சாத்துக்களுமே - like yesterday !! ஈரோட்டிலிருந்து ஒரு வாசகர் ; Smashing '70s க்கு மாத்திரம் சந்தா + சுஸ்கி-விஸ்கி முன்பதிவு என்று செலுத்தியுள்ளவர்.....போன் செய்து - "மாண்ட்ரேக் புக் இங்கே எல்லா இடத்திலேயும் வித்துக்கிட்டு இருக்கு ; எனக்கு தான் அனுப்பலை நீங்க !!" கத்தித் தீர்த்திருக்கிறார் ! //

  வருத்தமான விசயம் :-( இது போன்ற போன் கால்களை உடனே துண்டித்து விடலாமே சார்! கடந்த முறை இதனை சொன்னீர்கள், தயங்காமல் இது போன்று உண்மை தெரியாமல்/காரணம் இல்லாமல் பேசும் நண்பர்களின் போன் கால்களை தயங்காமல் உடனே துண்டித்து விடலாம்.

  ReplyDelete
 18. இரண்டு முன்பதிவுகள் ஒவ்வொரு முன்பதிவிலும் இரண்டு புத்தகங்கள் வீதம் இரண்டு மாத இடைவெளியில் வெளியிடுங்கள்!

  ReplyDelete
 19. Zagor

  உயிரைத் தேடி

  The story of wild west

  Spider vs The Sinister seven

  அனைத்தும் முன்பதிவுக்கு கொண்டுவர எனது வாக்கு.

  ஆகஸ்டுக்கு படிக்க நிறைய இதழ்கள்
  உள்ளன.ஸ்பெஷல் இதழ் ஈபுவிக்கு வேண்டாம்.உண்மையில் ஈபுவி-ன்
  நிஜ ஹைலைட் உங்கள் வருகைதான்.பாதுகாப்பு கருதி அது இல்லை என்று ஆனபின் கிட்டங்கியில் ஈபுவி மூலம் கொஞ்சம்
  இடம் காலியாகட்டும்.

  அக்டோபரில் zagor உட்பட இவ்விதழ்கள் வெளிவரலாம்.

  ReplyDelete
  Replies
  1. அத்தனையையும் வழிமொழிகின்றேன். ஆதரிக்கின்றேன்.

   Delete
 20. முன்பதிவில் இதழ்களை கொடுப்பதை வரவேற்கிறேன்! அதே நேரம் உங்களுக்கு தேவையான ஓய்வூ இருக்கும்படி பார்த்து புத்தகங்களை வெளியீடுகள்! உங்கள் உடல் நலம் அதனை விட முக்கியம்!

  ReplyDelete
 21. // இருவருமே கௌபாய்கள் அல்ல என்பதே இங்கே ஸ்பெஷல் ! //

  ஐ ஜாலி :-)

  ReplyDelete
 22. சின்ட்ரெல்லா - அட்டை படமும் சரி உட்பக்க டீஸரும் சரி செம கலரிங்கில் உள்ளது! ஆவலுடன்!

  ReplyDelete
 23. Edi Sir..
  Very spl.Saturday evening wishes.😁

  Eagarly waiting for Mandrek.

  Zagor/உயிரைத்தேடி/ S&S7/Wildwest..

  எல்லாமே முன்பதிவுக்கு O.k..Sir.. சீக்கிரம் அறிவிப்பு கொடுங்க.

  Erode spl.ஏதாவது ஒண்ணு கொடுங்க Sir..

  பயபுள்ளைங்க ஏமாந்து போயிடும்.. பாவங்க..  ReplyDelete
 24. Edi Sir..

  நம்ப டீம்.. சின்ன டீமில்ல சார்.. உழைப்பில பெத்த டீமு..

  அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களும்,
  வணக்கங்களும்.💐💐💐

  ReplyDelete
 25. ஈரோடு புத்தக கண்காட்சியில் நமது ஸ்டால் எங்கே சார்.

  ReplyDelete
 26. Edi sir..

  இந்த தடவை EBF ல ரவுண்டு பன்னும், பால்சோறும், பக்கோடாவும் நம்ப மக்களுக்கு கொடுக்க ஏற்பாடு பண்ணிடுங்க சார்..😎

  ReplyDelete
 27. ஆசிரியர் மற்றும் அவரது சிறு அணியினருக்கு எனது வாழ்த்துக்கள்.. உண்மையாகவே மிக கடினமான பணியாகவே இந்த முறை despatch இருந்து இருக்கும்.. என்னுடைய சந்தா புத்தகம் மற்றும் suski viski 2 copy matrum smashing 70 plus sindrella plus comic எனும் கனவுலகம் சார்பாக கிடைத்த suski viski அனைத்தையும் எவ்வாறு ஒரு பெட்டியில் அடைக்க முடிந்ததோ.. நன்றி .. இது போல எத்தனை குழப்பமான ஆர்டர்கள் இருந்ததோ..
  மு.பாபு
  ஆத்தூர்..

  ReplyDelete
 28. Edi Sir..

  2023 அட்டவணைகளை நீங்களே முடிவெடுத்து முடிவு பண்ணி களமாடுங்க.. கூட கம்பு சுத்த நாங்களும் ரெடி..

  ஆனா..
  Zagor/S&S7/உயிரைத்தேடி/வன்மேற்கு
  இவங்க நாலு பேரையும் 2023 அட்டவணைக்கு தயவு செஞ்சு கொண்டு போயிடாதிங்க..
  🙏🙏🙏🙏

  ReplyDelete
 29. சர்ப்ரைஸாக வெளிவரும் சந்தாவிலோ முன்பதிவிலோ இல்லாத இதழ்களை நிறுத்தி விடலாம் சார்.

  1. சந்தா தடம்
  2. முன்பதிவு தடம்
  3. சர்ப்ரைஸ் இதழ்களாக டெக்ஸ் ரீபிரிண்டுகள் மட்டும் வரட்டுங்க சார்.

  ReplyDelete
  Replies
  1. Zagor, உ.தே, சினிஸ்டர் 7 இவை குறிப்பிட்ட இடைவெளியில் தனித்தனி முன்பதிவுகளாக வரட்டும் சார்.

   வன்மேற்குத் தொடர் ஒற்றை ஆல்பங்களைக் காட்டிலும் தொகுப்பாக முன்பதிவுக்கு வந்தால் நன்றாக இருக்கும்.

   Delete
  2. பொதுவாக தொகுப்பாய் கதை தொடர்கள் வரும்போது அந்த தொடர் ஹிட் ஆகவில்லை என்றால் புத்தகங்கள் கிட்டங்கியில் தேங்கி பணம் முடங்கி போக வாய்ப்புகள் அதிகம். அதற்கு பதில் வருடம் ஒன்று அல்லது இரண்டு கதைகளை தனி தனியாக கொடுக்கலாம் அல்லது இரண்டு புத்தகங்களை இணைத்து ஒரு புத்தகமாக கொடுக்கலாம்.

   Delete
 30. இந்த வருடத்தில் எப்படியாவது zagor மையும்,ஸ்பைடரையும் இறக்கி விடுங்கள்.அடுத்த வருடம் வரை காத்திருக்க பொறுமை இல்லை...

  ReplyDelete
 31. // அக்டொபரின் துவக்க நாட்களில் விடுமுறைகள் நெடுக கரம் கோர்க்கின்றன ! அந்நேரத்துக்கு ஒரு ஆன்லைன் விழா திட்டமிட்டு, இந்த முன்பதிவு இதழ்களைக் கொண்டு அந்த 'விலாவை' சிறப்பிக்கலாமோ ? //
  தாரளமாக முன்பதிவுக்கே எல்லாவற்றையும் களமிறக்கலாம் சார்...

  ReplyDelete
  Replies
  1. அடேங்கப்பா அண்ணா சரி என்றவுடன் தம்பி பின்னாலேயே வந்து ஆமாம் போடும் அழகே அழகு:-)

   Delete
 32. // இதுநாள் வரைக்கும் sold out என்ற நம்பிக்கையில் கடையைச் சாத்தியிருந்த நம்ம ஜெரெமியா ஆல்பம் # 2 "பயணங்கள் முடிவதில்லை" கணிசமான எண்ணிக்கையில் ஒரு அட்டைப்பெட்டிக்குள் கிடந்தது ! //
  ராமையா உங்களைப் பார்த்து செமையா லுக்கு விட்டுருப்பாரே சார்...!!!

  ReplyDelete
 33. // திங்களன்று உங்களின் ஆகஸ்ட்களைத் துவக்கிட நமது புது வரவுகள் உங்கள் வீட்டு வாசல்களில் காத்திருப்பார்கள் ! //
  ஹும்...!!!

  ReplyDelete
  Replies
  1. நமக்கு திங்கள்கிழமை புத்தகங்கள் கிடைத்தால் உலக அதிசயம் 10வது என நாம் கொண்டாடலாம் அறிவுவரசு :-)

   Delete
  2. அப்போ திங்கள் திருவிழா...

   Delete
  3. ஹா,ஹா,ஹா,அதே,அதே PFB...

   Delete
 34. Editor sir அந்த பகோடா கடை C.Velayutha Nadar Sweets ?

  ReplyDelete
 35. என்னப்பா இது பதிவு வந்தவுடன் நண்பர்கள் அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டு மறைந்து போய் விடுகிறார்கள் :-) எல்லோரும் ரொம்ப பிஸி போல தெரியுது!

  ReplyDelete
 36. சார் ஜாக் மற்றும் சிண்ட்ரெல்லா கதைகளை ஆங்கிலத்தில் புத்தக கண்காட்சிக்கு மட்டும் முயற்சி செய்து பாருங்கள் சார் முடிந்தால்.

  முன்பதிவு இல்லை என்றால் அடுத்த வருடம் இன்னொரு தனி தடம் எதுவென்றாலும் சரி.

  வெஸ்டர்ன் தனிதடமாக வந்தால் தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் சார். உங்களுக்கும் குழப்பம் இல்லாமல் இருக்கும்

  மற்ற கதைகள் முன்பதிவிற்கு ok

  ReplyDelete
 37. 1)ஜாகோர் 2023 ன் அட்டவணையில் விட்டால் அருமையாக இருக்கும்.

  2) உயிரைத்தேடி நீண்ட நாளாக எதிர்பார்ப்பில் உள்ள புக்.
  இதுவும்,
  ஸ்பைடர் வந்தும் பலநாள் ஆச்சு என்பதால்
  இந்த 2 ம் முன்பதிவில் விடலாம் சார்.

  ReplyDelete
 38. // pick & book whatever you want என்ற வாய்ப்பளிக்கலாமோ //
  ஏன் சார் ஏன்! உடம்பை இன்னும் புண்ணாகி கொள்ள வேண்டாமே; உங்கள் நலம் முக்கியம்!! இந்த optionனுக்கு பிக் நோ.

  ReplyDelete
 39. சார் நிஜமாகவே வலிக்கிறது....பேசாம டெக்ச 24 ஆக்கி....பிற கதைகள லிமிட்டெட்ல விடுங்க....
  சிண்ட்ரெல்லா அட்டை இதுவரை வந்ததிலேயே டாப்பாருக்குமோ...
  உசக்க வரை அடுக்கி வைத்த சுஸ்கி சிவப்பும்....மாண்ட்ரேக்கும் அதகளம்....அருமை.....திருச்செந்தூர் பஸ்ல போயிட்ருக்கேன் சிங்காநல்லூரிலிருந்து.....நம்ம ஸ்டாலுக்கு போக முடியல சாரி சார்.....திங்களுக்கு கோவைய திரட்டிப் பிடிக்கனும்.....சிவகாசி பஸ் வேற அருகில் நிக்குது...நடத்துனர் சிவகாசிய ஏலமிட்டுகிட்டிருக்கிறார்...

  ReplyDelete
  Replies
  1. கோவை புத்தக விழா இன்றைய மழை போல காசு மலைய அள்ளித் தூவி வெற்றியைத் தரனும்னு செந்தூரான் அருளை வேண்டுகிறேன்.....அந்த ரோட்ல போலீஸ் வண்டிகள் விரட்டுவது காண முடிந்தது....இப்ப சரியாகி இருக்கலாம்....இருக்கணும்...

   Delete
  2. எந்த காம்பினேசன்ல வந்தாலும் மகிழ்ச்சி....விற்பனைய மனதிலிருத்தி முடிவெடுங்க......அனைத்துமே எதிர்பார்ப்பை மிஞ்சப் போகும் கதைகள் என்பதில் ஐயமில்லை

   Delete
  3. படுவா ராஸ்கோலு நமது ஸ்டாலில் போய் நிக்காமல் திருச்செந்தூருக்கு போற :-) என்ன மாமியார் வீட்டுல விருந்தா நாளையில் இருந்து :-)

   Delete
  4. எதுக்கு சாம்பார் சோறு சாப்பிடவா :-)

   Delete
  5. வெஜிடபிள் பொங்கல் என சொல்லுலே :-)

   Delete
 40. 28/7/22 கோவை புத்தக திருவிழா...

  இதற்கு முன் திருப்பூரில் புக் ஷோ நடந்த போது கலந்து கொண்ட வாசகர்கள்
  இங்கு வரவில்லை என்ற குறை இருந்தபோதும், அமெரிக்கா நண்பர் மஹி, கோவை தோழி கடல் யாழ், மாடஸ்டி பாபு, வாட்சப் நண்பர் ஜெயப்ரகாஷ் என கல கலப்பாகவே போனது மாலை 5 மணி வரை.
  நல்ல சந்திப்பு.

  ஷோவில் கண்ட மனம் நிறைந்த நிகழ்வுகள் சில...

  செஞ்சேரிமலை பாளையம் அரசு பள்ளி ஆசிரியர், அவருடைய காமிக்ஸ் ஆர்வத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தும் முயற்சியாக,
  அவருடைய சொந்த செலவில், காமிக்ஸ் வாங்கி, பள்ளி நூலகம் மூலம் மாணவ மாணவிகளுக்கு காமிக்ஸ் படிக்க ஏற்பாடு செய்திருந்தார். பல காமிக்ஸ் வாங்கிச் சென்றார்.

  #ஒரு பள்ளி சிறுவனுக்கு ""இரும்புக் கை மாயாவி" கதைகள் என்றால் பிடிக்குமாம்.
  "அண்ணா 10 ரூபாய்க்கு காமிக்ஸ் தருவீங்களா?", "இல்லை" என்றதும், சிறிது நேரம் கழித்து மூச்சு வாங்க வந்தான்,
  "அண்ணா, 45 ரூபாய்க்கு 5 ரூபா கமியா இருக்கு. இந்த புக் தறீங்களா?(உறைபனி மர்மம்)". எனக்கும்,மஹிக்கும் அவன் காசு குறைவு என்றதை விட, "எத்தனை ஆர்வம் காமிக்ஸ் மீது" என்றே வியக்க வைத்தது.
  அவனுக்கு மேலும் சில புக் எங்கள் சார்பில் வாங்கி தரலாம் என நினைத்தபோது,
  "ஸ்கூல் பஸ் கிளம்பிரும்ணா" என, மாயாவி புக் வாங்கியதும், சிட்டாக பறந்து விட்டான்.

  வந்தவர்களில் 4 ல் 2 பேர் 1985 கேட்டகிரியிலேயே இருந்தனர்.
  அவர்களுக்கு ஸ்பைடர் & ஆர்ச்சி & இ கை மாயாவி தான் பர்ஸ்ட் சாய்ஸ்.
  "நீங்க எப்பிருந்து காமிக்ஸ் படிக்கறீங்க?" என்று மட்டும் கேட்டா போதும்,ஆஹா,
  மடைதிறந்த வெள்ளம் போல்,‌ காமிக்ஸ் அனுபவத்தை கொட்டி தீர்த்தனர்.
  "பாம்புத்தீவு பல வருசத்துக்கு முன்னாடி படிச்சது சார். இது 1 போதும். பின்னாடி சிலிண்டர் மாதிரி வெச்சு பறப்பாரு ஒரு ஹீரோ"
  "யாரு ஸ்பைடர்தானங்க"
  "ஆமா, அந்த கதையெல்லா படிக்க நல்லாருக்கும்"
  "இந்த கதை படிங்க.(பழிவாங்கும் பொம்மை) ரெம்ப நல்லாருக்கும்" என
  ஸ்பைடரை அவரிடம் சொன்னதும், மகிழ்வுடன் எடுத்துக் கொண்டார்.
  இவரைப் போல மேலும் சில விட்ட குறை தொட்ட குறை வாசகர்கள், அவர்களுடைய பசுமை நினைவுகளை புதுப்பிக்க காமிக்ஸ் வாங்கியது மன நிறைவாக இருந்தது.
  இவர்கள் மீண்டும் வாங்குவது வேறு ஏதாவது புக் ஷோவிலாக இருக்கலாம்.
  ரெகுலராக வாங்குவது இல்ல போல.

  மனநிறைவாக இருந்தது அன்றைய சந்திப்பு.

  ReplyDelete
 41. எனது சாய்ஸ் story of the west. இதர புத்தகங்களான zagor, spider, உயிரை தேடி ஆகியவை மேல் நாட்டம் இல்லை சார். வெளிவந்தால் வாங்கி படிப்பேன், வரவில்லை என்றால் வருத்தப்படவும் மாட்டேன்.

  ReplyDelete
 42. சார் நான்கு புத்தகங்களையும் முன்பதிவிற்கு கொண்டுவாங்க சார். அக்டோபர் மாதம் புத்தக விழாவை சிறப்பித்து விடலாம்.

  ReplyDelete
 43. அப்போ ஈரோடு புத்தக விழா ஸ்பெஷல்???

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் கிளாசிக் 3 ஆவது வருமா?

   Delete
  2. ஏம்பா ஆசிரியருக்கு கொஞ்சம் மூச்சு விட நேரம் கொடுங்கப்பா :-)

   Delete
 44. ####2023-ன் அட்டவணையினில் ஜனவரி இதழாய் இந்தச் சிகப்பு பனியன்காரரை களமிறக்கல் !####

  இந்த யோசனை சரியாக வரும் சார்..

  ReplyDelete
 45. ####STORY OF THE WEST (Color)

  SPIDER vs. THE SINISTER SEVEN (Black & White)######

  முன்னது முன்பதிவும்
  (இரண்டு கதைகள் வந்தபின் வரவேற்ப்பை பொறுத்து ரெகுலர் தடத்தில் இணைக்கலாம் சார்)

  பின்னது ரெகுலரிலும் வரலாம் சார்..

  ReplyDelete
 46. ###அக்டொபரின் துவக்க நாட்களில் விடுமுறைகள் நெடுக கரம் கோர்க்கின்றன ! அந்நேரத்துக்கு ஒரு ஆன்லைன் விழா திட்டமிட்டு, இந்த முன்பதிவு இதழ்களைக் கொண்டு அந்த 'விலாவை' சிறப்பிக்கலாமோ ? Thinking caps on ப்ளீஸ் all ?#####  நூறு விலையில் நான்கு புத்தகங்கள் வந்தால் மகிழ்ச்சி சார்..

  ReplyDelete
 47. நாம safe ஆ முன்பதிவே போய்றலாங்க சார். கண்டிப்பா ஹிட் அடிக்கற, ரிஸ்க் இல்லாத புத்தகங்கள் ஆண்டு சந்தாக்கு. இந்த உயிரைத் தேடி, sinister 7 மாதிரி off beat, fan demand புத்தகங்கள் முன்பதிவுக்கு மட்டும்.. Smashing 70s அடிச்ச ஹிட்டுக்கு - முன்பதிவுக்கு மட்டும், மொத்தமா வாங்கணும் ..ரெண்டு strategies உமே முக்கியமான காரணங்கள் சார்.

  கிட்டங்கிய காலி பண்றோம்.. நெக்ஸ்ட் பீரோ காலி பண்றோம். ஸ்பெஷல்லாம் அதுக்கப்பறம் பாத்துகலாங்க சார்.

  ReplyDelete
 48. திங்களில் ஒரு தீபாவளி காத்திருக்கிறது.

  ReplyDelete
 49. செம ரகளையான பதிவு. நன்றி ஆசிரியர் சார்.

  ReplyDelete
 50. ஜாகோர் , தானைத் தலைவர் , உயிரைத் தேடி , வன்மேற்கின் கதை இந்த ஆண்டே அக்டோபரில் முன்பதிவு இதழ்களாக வரட்டும். என் ஆதரவு எப்போதும் போல் உண்டு.

  ReplyDelete
 51. 2023க்கான S60 முன்பதிவு எப்போது தொடங்கும் ஆசிரியர் சார் ?

  ReplyDelete
 52. நல்ல பதிவு. நாக்கில் ஜலம் ஊறவைத்த பதிவு.

  ReplyDelete
 53. டியர் எடி,

  கிட்டங்கி நிரம்பியிருக்கும் வேளையில், இனியும் முன்பதிவுகள் இவ்வருடத்திற்கு வேண்டாம் என்றே தோன்றுகிறது. என்னதான் முன்பதிவவுகளுக்கு மட்டும் என்றாலும் எண்ணிக்கை தொடவில்லை என்றால் மினிமம் ரன் அடித்து சேர்க்க வேண்டுமே?!

  அவற்றை தீபாவளி, புது வருட முன்பதிவுகளாக அறிவித்தால், சென்னை புத்தக கண்காட்சிக்கு கறையேற்றிடலாம்.

  ReplyDelete
 54. சூப்பர் 6 போல் தனி சந்தா ஆரம்பித்து விடுங்கள்
  ஜாகோர்.
  wild west.
  சினிஸ்டர் 7
  உயிரைக் தேடி(கலரில்)
  சுஸ்கி விஸ்கி ஸ்பெஷல் 2
  திகில் கதைகள் தொகுப்பு
  என தெறிக்க விடுங்கள்

  ReplyDelete
 55. ஆஹா புத்தகம் கிளம்பி விட்டதா சூப்பர் சார்...ஆனால் இரு நாட்களுக்கு வெளிநாடு பயணம் இருப்பதன் காரணமாக இதழ் வருகை தந்தாலும் இதழை கைப்பற்ற புதன் அன்று தான் முடியும் சார்..காத்திருக்கிறேன்..

  ReplyDelete
 56. 2023-ன் அட்டவணையினில் ஜனவரி இதழாய் இந்தச் சிகப்பு பனியன்காரரை களமிறக்கல் !

  So சொல்லுங்களேண்ணே - இரண்டில் எது சுகப்படக்கூடுமென்று ?

  ###

  இது சார்..:-)

  ReplyDelete
 57. Smashing '70s க்கு மாத்திரம் சந்தா + சுஸ்கி-விஸ்கி முன்பதிவு என்று செலுத்தியுள்ளவர்.....போன் செய்து - "மாண்ட்ரேக் புக் இங்கே எல்லா இடத்திலேயும் வித்துக்கிட்டு இருக்கு ; எனக்கு தான் அனுப்பலை நீங்க !!" கத்தித் தீர்த்திருக்கிறார்

  ###

  கொடுமை...:-(

  ReplyDelete
 58. சீரான இடைவெளியில் இரண்டிரண்டு புத்தகங்களாக முன்பதிவை அறிவிச்சா நண்பர்ளுக்கு பதிவு செய்ய வசதிஆக இருக்கும். உயிரைத் தேடி + சினிஸ்டர் 7 ஒரு பேக்கேஜ். Zagor & Wild West ஒரு பேக்கேஜ் என முன்னறிவிப்பை அடுத்தபதிவில் போட்டு 3-4 மாத டைம் குடுத்து அக்டோரில் ஒருபேக்கேஜ், நவம்பரில் ஒரு பேக்கேஜ் ரிலீஸ் பண்ணலாமே?

  ReplyDelete
 59. அந்தரிக்கு நமஸ்காரம்!

  ReplyDelete
 60. ஆபீஸ் பெண்களிடம் போன் செய்து கத்தி தீர்க்கும் மகானு பாவர்களை பற்றி பதிவில் பெயர் சொல்லாமல் ஏன் விட்டீர்கள்?

  எங்கு மாண்ட்ரேக் விற்கிறதாம்?

  அந்த மாதிரி பபூன் பிஸ்தாக்களை உடனடியாக சந்தாவிலிருந்து நீக்கி கிடைக்கக்கூடிய இடத்தில் சௌகரியமாக நாலு நாள் முந்தியே வாங்கிவிட்டேன் என்று பீற்றிக் கொள்ள விட்டு விடுங்கள்.

  தயவு தாட்சண்யம் - காமிக்ஸ் கண்ணியம் காப்பது வேஸ்ட்.

  ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது காதில் விழுந்தது - லயன் முத்து பீடிஃப் போட்ட நல்லவங்கள இரும்புக் கரம் கொண்டு தடை செஞ்சட்டீங்களாமே.... சபாஷ் எடிட்டர் ஐயா...

  நல்ல ஆரம்பம்....

  ReplyDelete
 61. This comment has been removed by the author.

  ReplyDelete
 62. This comment has been removed by the author.

  ReplyDelete
 63. உங்கள் தோது போல அனைத்தையும் தகுந்த உகந்த நேரத்தில் வெளியிடுங்கள் சார். இவ்வளவு மெனக்கெட்டு போடும் அந்த உயிரைத் தேடி புக்கை கலரிலேயே போட்டுப் புடுங்க சாரே... (கலரிங் டைம் எடுக்கும் என்பதால் க.வெ என்று முன்னர் கூறியதாக நினைவு)

  ReplyDelete
 64. இந்த மாதம் சர்ப்ரைஸ் இதழ் ஜட்ஜ் ட்ரெட் Files, யார் அந்த நீதி தேவன். அட்டைப்படம் மிகவும் அருமை. - வாட்ஸ்அப்பில் மெஸேஜ் உபயோகம் சேலம் டெக்ஸ் விஜயராகவன்.

  ReplyDelete
  Replies
  1. அட, அதுக்குள்ளாறவா கூரியர்கள் கடமையை ஆற்றி விட்டார்கள் ? அதுவும் இந்த மழை வேளைகளில் ?

   Delete
 65. ஜட்ஜ் ட்ரெட் தான் அந்த சர்ப்ரைஸா....மில்லனியம் நீதி காவலனின் மறு வருகை.... Excited 🥰👍

  ReplyDelete
 66. எப்படிங்க...
  இது நடந்துச்சு..
  இன்னிக்கு கூரியர் லீவு ஆச்சே..

  ReplyDelete
 67. // first "ஒரேயொரு வரிசை போட்டுப்போம்ணே....சரியாய் வந்தா மேற்கொண்டு செஞ்சுக்குவோம் !" என்றேன் ! நாலாவது தினமே வந்தார்கள், மாட்டினார்கள், //

  எப்படியோ இரண்டு ராக் மாட்டிவிட்டது சிறப்பு. கண்டிப்பாக இது நமது கிட்டங்கியில் உள்ள புத்தகங்களை அடுக்கி வைக்க இது தேவை.

  ReplyDelete
 68. அன்புள்ள ஆசிரியருக்கு, 

  இந்த பக்கோடா பார்சல் பரிதாபங்களுடன், பத்தோடு பதினொன்றாக, "எந்தக் கதையை வெளியிட்டாலும் வாங்கி அடுக்குவோர் வாங்குவோர் சந்தா" ஒன்றை அறிவித்து, அதையும் நீங்களே (அதாகப் பட்டது உங்கள் டீம்) ட்ராக் செய்தீர்களேயானால், அதற்கு ஆண்டுக்கு ஆறாயிரமோ, பத்தாயிரமோ கட்டி விட்டு, அடுத்த வேலையைப் பார்ப்போம். இந்த திடீர் இதழ்களை கண்கொத்திப் பாம்பாக கவனித்து வாங்குவது, என்னைப் போன்ற வா.ப. சோம்பேறிகளுக்கு வசதி குறைவாக இருக்கிறது :)

  சுஸ்கி விஸ்கி - இன்னும் புக் செய்யவில்லை, வேறு என்னவெல்லாம் விடுபட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. சிண்ட்ரெல்லா, மாண்ட்ரேக், ஜாகோர், கைப்புள்ள, ஆங் அப்புறம் பரணியின் வாட்ஸ் அப்பில் வந்த ஜட்ஜ் ட்ரெக் - "இவர்களெல்லாம் எந்தெந்த சந்தாவுக்குள் வருகிறார்கள், நாம் அந்தந்த சந்தாவை எல்லாம், இந்திந்த தேதிக்குள் கட்டி விட்டோமா?" என்பதையெல்லாம் பலவித கோணங்களில் அமர்ந்து ஆராய்ந்து ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றுவதற்குள் அடியேனின் தாவு தீர்ந்து விடுகிறது! இதில் இன்றைக்குள் ITR Filing வேறு முடித்தாக வேண்டும், இம்முறை தேதியை நீட்டிக்க மாட்டார்களாம், ஒரே குஷ்டமப்பா! :)

  ReplyDelete
  Replies
  1. Smashing 70s இலவச இணைப்பு இதழ் ஜட்ஜ் டெரேக். கைப்புள்ள சந்தாவில் உள்ள நண்பர்களுக்கான இலவச இணைப்பு இதழ் கார்த்திக்

   Delete
  2. சிண்ட்ரெல்லா கதை சொல்லும் காமிக்ஸ். இதற்கும் சுஸ்கி விஸ்கிக்கும் நீங்கள் பணம் அனுப்பினால் போதும் கார்த்திக். மற்றவைகளுக்கு நீங்கள் பணம் ஏற்கனவே கட்டி இருப்பீர்கள் என்று நம்புகிறேன் :-)

   Delete
  3. மிக்க நன்றி பரணி, இப்போது தான் எனக்கு தெளிவாகக் குழம்புகிறது! :)

   Delete
  4. குழப்பம் நல்லதுதான் கார்த்திக்:-)

   Delete
  5. கார்த்திக் @ ஒரு குழப்பமும் இல்லை...
   மொத்தம் 3 சந்தாக்கள் தான்...

   1.ரெகுலர் சந்தாஸ்-A,B,C,D&GN...

   2.smashing 70... வேதாளர்,மாண்டி,ரிப்,காரி......

   3.கதை சொல்லும் கதைகள்-பீன்ஸ், சின்ட்ரெலா....குழந்தைகள் க்காக....

   4.தான் குழப்பவாதி.... அதாவது புக்ஃபேர் ஸ்பெசல்ஸ், திடீர் ஸ்பெசல்ஸ் இப்படி.... இதில் இம்முறை 2022 ஜனவரி ஆன்லைன் விழா ஸ்பெசல், திருப்பூர் விழா ஸ்பெசல், கோவை, ஈரோடு ஸ்பெசல்கள், வரப்போகும் அக்டோபர் ஆன்லைன் ஸ்பெசல்ஸ்...


   ரெகுலர் சந்தாவை சந்தா அறிவிப்பு அன்று கட்டிவிடுங்க...

   மற்றவற்றுக்கு ஒரு 4ஆயிரத்தை தனியாக அனுப்பி இந்த ஆண்டுலவர்ற அனைத்துக்கும் முன்பணம்னா வேலை ஓவர்...;

   இல்லியா ஃப்ரீ டைம் நிறைய உள்ள யாரையாவது பிடிச்சிகோங்க,... இதுபோல திடீர் இடியாப்பங்களை கவனித்து புக்கிங் பண்ண சொல்ல....

   Delete
  6. No குஷ்டம்ஸ் கார்த்திக் ; டப்பிக்களை அடுக்கும் அந்த அலமாரியில் சைடுக்கா கொஞ்ச இடத்தை ஒதுக்கிப்புட்டால் மட்டுமே போதும் !


   ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் பாணியில், நம்மகிட்ட 'எல்லாமே இருக்கும்...நல்லாவும் இருக்கும்...and எப்போவுமே இருக்கும் !" என்பதால் miss out ஆகும் சமாச்சாரங்களை கவனிக்கும் தருணத்தில் ஆர்டர் போட்டு வாங்கி அடுக்கிப்புட்டால் முடிந்சூ !

   Delete
  7. Jokes apart இந்த கிட்டங்கியில் ரேக் ...ரேக்கிலே ஒரு வண்டி புக்ஸ் என்ற படலத்துக்குப் பின்பாய், திடு திடுப்பென தலைகாட்டக்கூடிய இதழ்கள் நிரம்ப இருந்திடாது ! Moreso வாரா வாரம் கொன்னு கொன்னு விளையாடுவோமா ? என்று ரவுசு விட்டு வரும் பேப்பர் மில்களின் ஆட்டங்களுக்கு முற்றுப்புள்ளி விழும் அறிகுறிகளே காணோம் ! So இனிமேல் கையிருப்பு காகிதங்களை தங்கம் போல பாவிக்க வேண்டி வரும்

   Delete
 69. கதை சொல்லும் காமிக்ஸ் வரிசையின் 'பீன்ஸ கொடியின் ஜாக்' புத்தகம் இந்த மாதத்தின் 10ம் தேதி வாக்கில் கிடைத்தது. அந்த கதையைப் படித்து உள்வாங்கிக் கொண்டு, எனது மகன் மற்றும் மகளுக்கு சொன்னேன். இந்த புத்தகத்தைக் கைகளில் வைத்துக கொண்டே சொன்னதால், அவர்கள் ஆர்வமுடன் கேட்டார்கள். நான் வெளிமாநிலத்தில் இருப்பதால், ஆரம்பப் பள்ளி நிலையில் இருக்கும் இருவருக்குமே தமிழ் படிக்கத் தெரியாது. எனினும், ஆர்வமுடன் புத்தகத்தை எடுத்து படங்களைப் பார்த்து, கதைகளை எனக்குத் திரும்ப சொன்னார்கள்.

  இது ஒரு நல்ல முயற்சி. மங்களம் பாடிட வேண்டாமே ஐயா! கொஞ்சம் விட்டுப் பிடிக்க முயற்சி செய்யலாம்...

  ReplyDelete
  Replies
  1. அருமை பூபதி. அடுத்த ஒரு வருடம் பிரேக் கொடுத்து பார்க்கலாம்.

   Delete
 70. /// கடையில் நிற்கும் சிப்பந்திப் பசங்களோ செம அசால்ட்டாய் அதைக் கையாள்வார்கள் ! இன்றைய பகலில் நமது ஆபீசுக்குள் நுழைந்த போது எனக்கு அந்தப் பக்கோடா கடை ஞாபகமே தான்......!////

  ----ஹா...ஹா....முதல் பெரிய பாரா, தங்களது நையாண்டி ஸ்டைல்ல இடியாப்ப சிக்கலையும் விவரிக்கும் பாங்கு அருமை சார்... ஏழெட்டு தடவை வாசிச்சாலும் சிரிப்பு வந்திட்டே இருக்கு....

  ReplyDelete
 71. சந்தாதாரர்கள் அட்டைப்பெட்டிகள், அடுக்கிவைக்கப்பட்டுள்ள சுஸ்கி விஸ்கி, டெக்ஸ் புத்தகங்கள் கண்கொள்ளாக் காட்சி சார்....!!!

  நாளை புத்தகங்களை கைப்பற்றிடலாம்....😍

  ReplyDelete
 72. //// "காமிக்ஸ் எனும் கனவுலகம்" FB க்ரூப்பிலேர்ந்து பணம் கட்டுனவங்களுக்கு - மறக்காம அந்த ஸ்டிக்கர் போட்ட புக்கான்னு பார்த்து வைக்கணும்///---
  ஆஹா புத்தகங்கள் உடன் கனவுலகம் அன்பையும் சுமந்து வரும் சுஸ்கி விஸ்கியே இம்முறை முதல் சாய்ஸ் வாசிக்க.....

  ReplyDelete
 73. ////மாண்ட்ரேக் புக் இங்கே எல்லா இடத்திலேயும் வித்துக்கிட்டு இருக்கு ; எனக்கு தான் அனுப்பலை நீங்க !!" ////

  -- ஙே...ஙே....ஙே...!!!

  வெளிவராத புக்குக்கே இப்படி அலப்பறையா????

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளை காரிகன் புத்தகம் வந்துவிட்டது எனக்கு ஏன் இன்னும் வரவில்லை என கேட்கவில்லை அந்த நண்பர் :-)😀😀😀😀

   Delete
 74. ////காரணங்கள் எதுவாக இருப்பினும் the response has been very lukewarm ! ///

  அட டா.. இதுவும் சொதப்பிட்டா....!!!

  கூடுதல் சுமையைக்கூட்ட வேணாம் சார்....!!

  4ம் விற்று தீர்ந்தபின் மறுமுறை கையில் எடுக்கலாம்...

  ReplyDelete
 75. /////ஒரே விதிவிலக்கு நம்ம மஞ்சள்சட்டை மாவீரரின் ஸ்பெஷல் இதழ்கள் ! அட்டவணையில் இடம்பிடித்தாலும் சரி, out of syllabus பாடமாய் இருந்தாலும் சரி, இவை கரைசேர்ந்து விடுகின்றன ! ////

  --- தல ராக்ஸ்....💃💃💃💃💃💃💃


  இனி தலை புக்ஸ் தான் புக்ஃபேர் ஸ்பெசல் னாவே என்ற முடிவுக்கு இந்த நிலவரம் தள்ளுவது புரிகிறதுங் சார்...

  தல ஃபேனாக ரொம்ப மகிழ்ச்சி..💞💞💞💞

  ஆனா காமிக்ஸ் ஃபேனாக ரொம்பவே வருத்தம்.... புக்ஃபேர்னா அந்த சர்ப்ரைஸ் இதழ்ல ஒரு கூடுதல் கவர்ச்சி உண்டு..!!!!

  ReplyDelete
 76. நண்பர்களே@@@

  DTDT மற்றும் ST courierமெயின் ஹப்ல இருந்தே டேலிவரி பண்றாங்க....

  ST courierல இருந்து ஆகஸ்ட் பார்சல் டெலிவரி பண்ணப்பட்டுள்ள நண்பரும் சற்று முன் போட்டோ போட்டுள்ளார், வாட்ஸ் ஆப்பில.....


  சேலம் DTDC main ஹப், புறநகர்ல கொண்டாலாம்பட்டி பைபாஸ்ல உள்ளது... அங்கிருந்து இப்ப எனக்கு போன் பண்ணினாங்க.. டெலிவரிக்கு வறோம். சார், பிரகாஷ் பப்ளிஷர்ஸ்லி இருந்து பார்சல் வந்துள்ளது என.....

  *ஞாயிறு எனில் இப்படி ஹப்பில இருந்தே டெலிவரி தருவது நல்ல சேவை....*

  உங்கள் பார்சல்களுக்கு உடனடியாக உங்க கொரியர் நண்பரை அழைத்து ஹப்பை நாடுங்க....!!!

  ReplyDelete
 77. ஆஹா... ஞயிறு கடை லீவு வீட்டில ஆஉள்ளேன்... DTDC ல இருந்து நான் வேலை செய்யும் கடை உள்ள காம்ளக்ஸ் சென்று வாட்ச்மேன்கிட்ட டெலவரி கொடுத்து விட்டாங்க....

  இப்ப வீட்டில் இருந்து கிளம்பி போய் பார்சலை கைப்பற்றி எடுத்துட்டு வர்றதா???

  திடீர்னு கிள்ளம்பினா வீட்டம்மா முறைப்பாளே😩😩😩😩😩😩

  பேசாம நாளைக்காலையே போய் புக் பார்த்துகிடலாம்.....😉

  உப்ப டீவியில காமன்வெல்த் கேம்ஸ் பார்ப்போம்...😍

  இதான் சரி...

  ஹூம் இப்படி பொம்மை புக் புலம்ப விட்டுட்டதே.....!!!!

  ReplyDelete
  Replies
  1. வெளியிலே அவசர வேலை இருப்பதாக சொல்லிவிட்டு போய் புத்தக பார்சலை வாங்கிட்டு வாங்க பாஸ்... இது எல்லாம் சகஜம் பாஸ்:-) முதுகில் பெரிய தலையனையை கட்டிகிட்டு போங்க பாஸ்:-)

   Delete
 78. நான் லயன் அலுவலகத்திற்கு எத்தனையோ முறை பேசியுள்ளேன். அவர்கள் தொலைபேசியில் நம்முடன் பேசும்போது அவர்களின் புண்ணகை முகம் நம் கண் முன்னே விரியும். நான் கூட செவ்வாயன்று ஒரு புத்தகத்திற்கு ஆர்டர் செய்தேன் வியாழக்கிழமை எனக்கு அனுப்பி வைத்தார்கள். நான் கேட்ட சில புரியாமல் கேட்டதும் கூட நிதானமாக பதில் சொன்னார்கள். ஒருமுறை என் செல் தவறிவிட்டதால் அந்தக் கொரியர் ஆபீஸ் இல் சென்று என் மாற்றி என்னை பதிவு செய்திருந்தேன். ஆனால் அதை அங்கிருந்த நிர்வாகி கவனிக்காமல் அந்த மாதம் கொரியரில் என்னை அழைத்து எடுக்காததால் திருப்பி அனுப்பி விட்டார்கள். பின்னர் விவரம் தெரிந்து லயன் ஆபிசுக்கு தகவல் கொடுத்தேன். இது என் தவறு ஆகையால் புத்தகத்தை திருப்பி அனுப்பும் போது அதற்குண்டான கொரியர் செலவை நான் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னபோது புன்னகையுடன் அதை மறுத்துவிட்டார். எனது மாற்றி எண்ணெய் ஆபீஸில் கொடுத்தவுடன் மதுரையிலிருந்து எனக்கு உடனே போன் வந்தது. நான் இந்த எண்ணை கொடுத்து அதே முகவரிக்கு அனுப்பி விடுங்கள் என்று கூறினேன். ஒரே நாளில் எனக்கு புத்தக பார்சல் வந்து சேர்ந்து விட்டது. இவ்வளவு தூரம் அன்பாக செய்துகொடுக்கும் அவரிடம் எப்படித்தான் காரசாரமாக பேச முடிகிறதோ தெரியவில்லை. தவறு நடந்து இருந்தாலும் கூட அதை சொல்வதற்கு ஒரு மாண்பு இருக்கிறது. இத்தனையும் சகித்துக்கொண்டு வேலை செய்யும் அவருக்கு என் நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற கால்களை உடனே துண்டித்து விடுங்கள்.

  ReplyDelete
 79. //இந்த பக்கோடா பார்சல் பரிதாபங்களுடன், பத்தோடு பதினொன்றாக, "எந்தக் கதையை வெளியிட்டாலும் வாங்கி அடுக்குவோர் வாங்குவோர் சந்தா" ஒன்றை அறிவித்து, அதையும் நீங்களே (அதாகப் பட்டது உங்கள் டீம்) ட்ராக் செய்தீர்களேயானால், அதற்கு ஆண்டுக்கு ஆறாயிரமோ, பத்தாயிரமோ கட்டி விட்டு, அடுத்த வேலையைப் பார்ப்போம். இந்த திடீர் இதழ்களை கண்கொத்திப் பாம்பாக கவனித்து வாங்குவது, என்னைப் போன்ற வா.ப. சோம்பேறிகளுக்கு வசதி குறைவாக இருக்கிறது :)//

  நண்பரின் இந்த யோசனையை பரிசீலிக்கலாம். அல்லது முன்பே இந்தளத்தில் ஆசிரியர் வாக்களித்தது போல பதிவின் இறுதியில் பதிவின் முக்கிய அம்சங்களை மட்டும் குறிப்பிடலாம். நேரமின்மையால் பதிவை முழுமையாக படிக்க இயலாத காரணத்தால் சில பல முன்பதிவு இதழ்களை இழக்க வேண்டியுள்ளது.

  ReplyDelete
 80. நாளை நிச்சயம் புத்தகப் பார்சலை கைப்பற்றிவிடலாம் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

  ReplyDelete
 81. அட்டகாசமாய் வந்து சேர்ந்தது செமத்தியான பார்சல்..
  மாண்ட்ரேக் அள்ளுது..
  தோர்கல் கிள்ளுது..
  டெக்ஸ் மின்னுது..
  சு&வி பின்னுது..
  ஜட்ஜ் கௌப்புது..

  ஆனா..
  ஆனா..

  கைப்புள்ள ஜாக் என்னோட பார்சல்ல காணோமே...

  ReplyDelete
  Replies
  1. ஆகா கொண்டாட்டம் தான் போங்கள். விரைவில் ஜாக் உங்களை வந்தடையும்.

   Delete
  2. அப்படியே ஆகட்டும்..♥♥♥

   Delete
 82. செய்வதை தில்லாய் செய் மேரி கேரிசனின் அடுத்த கதை எப்போது சார்?

  ReplyDelete
 83. சந்தா மற்றும் முன்பதிவு இதழ்களை தான் வாங்க முடிவு செய்துள்ளேன். மற்ற சர்ப்ரைஸ் புத்தகங்களை சென்னை புக் ஃபெரில் வாங்கிகளாம் என்று முடிவு செய்திட்டேன். எல்லாமே ஆன்லைனில் வாங்கிட்டா, புக் ஃபேரில் வாங்க எதும் இருக்கமாட்டேங்கிது( அதுவும் இல்லாமல் கூரியர் காசூக்கு இன்னு
  ஒரு புக் extra வாங்கலாம் என்ற நப்பாசைதான், cost cutting).

  ReplyDelete
  Replies
  1. பார்த்து சுஸ்கி விஸ்கி விற்றுவிடப்போகிறது சென்னை புத்தகக் திருவிழாவிற்குள் :-)

   Delete
  2. அது சந்தா போட்டிக்கான பரிசாக கிடைக்க போகுது , நன்றி "காமிக்ஸ் எனும் கனவுலகம்" குழு.

   *கார்சனின் கடந்த காலம்* கிடைக்க உதவினீர்கள்..நீவீர் இருக்க பயமேன் :)

   Delete
 84. டியர் விஜயன் சார், சென்ற வாரம் என் சக மருத்துவ காமிக்ஸ் நண்பரொருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது நம் காமிக்ஸ் வெளியீடுகளை பற்றிய சிறிய அதிருப்தியை வெளியிட்டார்...
  எனக்கும் அது சரியாகவே பட்டது...
  புத்தகவெளியீட்டு புத்தகங்கள்,சிறப்பு வெளியீடுகள் பற்றிதான் அது..
  அனைத்திற்கும் சேர்த்து ஒரே சந்தாவாக கட்டிவிட்டால் வேலை முடிந்தது..எது எது சிறப்பு வெளியீடுகள் என்று தெரிய மாட்டேன் என்கிறது..
  சில மாதங்கள் கழித்து தான் எனக்கு தெரிய வருகிறது...அப்படி சில புத்தகங்களை தவறவிட்டுள்ளேன் என்றார்..
  அவர் Blog பார்க்கும் நபர் அல்ல...
  பேசாமல் சந்தா A வை அனைத்து வெளியீட்டிற்கும் சேர்த்து ஒரு தொகையை நிர்ணயம் செய்து விடுங்களேன் சார்..
  சந்தா B சிறப்பு வெளியீடு இல்லாமல் என்று...
  எனக்குமே ஒவ்வொரு முறையும் தனித்தனியாக ஒவ்வொரு சிறப்பு வெளியீட்டிற்கும் நினைவு வைத்துகொண்டுபணம் கட்ட சிரமமாக உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். எனது கோரிக்கையும் இதுவே...

   Delete
  2. சார் ...blog பார்க்காதோர் அநேகம் என்பதை நன்றாகவே அறிவேன் ! Infact இந்த வலைப்பக்கத்தை தங்களது வாரயிறுதிகளின் அட்டவணைகளுக்குள் புகுத்திக் கொண்டதொரு சிறு வட்டத்தைத் தாண்டி இங்கே இஸ்ட்ராங்காய் டேரா போட்டு blog-ன் கமா , புள்ளிகளைக் கூட உள்வாங்கிட நேரம் இருந்து வருவது நம்மை "வாழ்த்த " முகாந்திரங்கள் தேடும் அண்ணாச்சிகளுக்கு தான் என்பதுமே தெரிந்த சமாச்சாரம் தானே ?!

   ஆனால் சிறப்பு வெளியீடுகள் பற்றிய அறிவிப்புகள் ப்ளாக்கில் மாத்திரமே வருவன அல்லவே ?! நமது ரெகுலர் இதழ்களின் சகலத்திலும் சகட்டுமேனிக்கு குறைந்த பட்சம் 4 மாதங்களுக்காவது அந்த ஸ்பெசல் புக்ஸ் பற்றி விளம்பரப்படுத்தி வருகின்றோமே - "இது ரெகுலர் சந்தா தடத்தின் அங்கமல்ல" என்ற தகவலோடுமே !

   இதோ இப்போது வெளிவந்திருக்கும் சுஸ்கி -விஸ்கிக்கு போன வருஷத்திலிருந்தே விளம்பரம் செய்து வந்துள்ளோமே சார் ? And திடுமென வெளியான TEX க்ளாசிக்ஸ் ஓவ்வொன்றுக்குமே மினிமம் 3 மாதங்களுக்கேனும் விளம்பரப் பக்கங்களை ஒதுக்கி வந்துள்ளோம் எனும் போது, ரெகுலர் சந்தாவில் உள்ளோரின் கவனங்களை இவை தப்பிடக் கூடாதே சார் ?!

   ரைட்டு ...இந்தப் பஞ்சாயத்தே வாணாம் ; வருஷ துவக்கத்தில் ஒட்டு மொத்தமாய் அறிவித்துப் போட்டு விடலாமே ? என்ற ஆதங்கத்துக்கு பதில் பெரியதொரு ராக்கெட் விஞ்ஞானமே இல்லையே சார் ?!

   பட்ஜெட் !! எந்த ராஜாவோ ராணியோ, நமது அணிவகுப்பினில் புதிதாய் இணைந்தாலும் சரி, எந்த விலைவாசி எத்தனை ஏறினாலும் சரி, நான் செய்யும் முதற்காரியம் : Total சந்தாத் தொகை - ஐந்தாயிரத்துச் சொச்சம் என்பதை கீழே எழுதிடுவது தான் ! அதன் பின்னர் அந்தப் பணத்துக்குள் நுழைவது போலாக புக்சின் திட்டமிடல்களை ; இதழ்களின் எண்ணிக்கைகளை ; ஸ்பெஷல் இதழ்களின் பட்ஜெட்களை அமைத்திட விழைவேன் !

   * டெக்சின் 70 வது பிறந்த ஆண்டா ? எழுநூறு விலையில் டைனமைட் ஸ்பெஷலா ? அந்த வருடத்து பட்ஜெட்டும் அதே தான் !

   *முத்து காமிக்சின் பொன்விழா ஆண்டா ? பரவாயில்லையே, அதே பட்ஜெட்டுக்குள் நுழைத்திடுவோம் !

   *ஆக்ஷன் சந்தா ; பொனெல்லி சந்தா ; கார்ட்டூன் சந்தா ; மறுபதிப்புச் சந்தா ; கிராபிக் நாவல் சந்தா - என ஒரு வண்டிப் பிரிவுகளா ? இருந்துவிட்டுப் போகட்டுமே - அதே காசுக்குள் அனைத்தையும் அடக்கிட முனைவோமே ?!

   இந்த சர்க்கஸ் ஏனென்று உங்களுக்குத் தோன்றலாம் தான் சார் ; ஆனால் இந்த ஆண்டுச் சந்தா விஷயத்தினில் ஒரு psychological barrier இருப்பதாக என்மட்டிற்காவது நெருடுவதுண்டு ! ஒரு வருஷத்து பொம்ம புக் பட்ஜெட் இது தான் ; இதனை இரு தவணைகளாய் கட்டிட இன்னென்ன மாதிரிப் பணம் புரட்ட வேண்டுமென்ற திட்டமிடலுடன் பல நண்பர்கள் இருக்கக் கூடும் அன்றோ ? அவர்களுக்குப் பழகி விட்ட இந்த 6 ஆண்டுகளாய்த் தொடர்ந்திடும் ஒரே மாதிரியான பட்ஜெட்டினை, consolidated சந்தாவாய் அறிவிக்கிறேன் பேர்வழி என்ற முனைப்பினில் ஆறாயிரத்துச் சொச்சம் என்றோ , ஏழாயிரம் என்றோ நான் அறிவித்தால் அதுவொரு shock factor ஆகிடக்கூடுமே ?

   Oh yes , பின்னாட்களில் இந்த சந்தாவில் அல்லாத ஸ்பெஷல் இதழ்களை வாங்கும் வேளைதனில் அவர்களை மறுக்கா பணம் புரட்ட நிர்ப்பந்திக்கிறோம் தான் - ஆனால் ஆண்டின் துவக்கத்திலேயே அவர்களின் சுமைகளை ஏற்றிட என்னுள் உறையும் தயக்கமே அந்த ஐந்தாயிரத்துச் சொச்சம் என்ற threshold ஐத் தாண்டிட அனுமதிப்பதில்லை !

   Delete
  3. அருமையான விளக்கம் எடி. சந்தா தனி, மற்ற தடம் தனி என்பதன் சாராம்சத்தை நிறைய பேர் புரிந்து கொள்வதே இல்லை.

   அதற்கு நீங்கள் செய்யும் பிரம்மபயத்தனங்களுக்கும் மதிப்புக்கு எடுத்து கொள்ளபடாது என்றால், புத்தகங்களை மிஸ் செய்து விட்டோம் என்று குறைபடுவதில் அர்த்தமே இல்லை. தொடருங்கள் உங்கள் சீரிய பணியை.

   Delete
  4. ஜம்போ சந்தாக்களின் சீசன் துவக்கமும் ; ரெகுலர் சந்தாவின் துவக்கமும் ஒன்றாக இருக்க வேணாமே ! என்ற எண்ணத்தின் பின்னணி இதுவே ...

   Smashing '70s விஷயத்திலும் அதுவே !

   வருஷத்தின் துவக்கதிலேயே " பொம்ம புக்குக்கு பட்ஜட் இவ்ளோவா ? " என்ற மலைப்பு தலைதூக்கிடும் பட்சத்தில், இன்றைய சூழல்களில் சிரமங்களோடு பயணிக்கும் நண்பர்கள் - "இது நமக்கு எட்டாதுப்பா ; பேசாம அப்பப்போ வேணுங்கிறதை மட்டும் வாங்கிக்கலாம் !" என்ற எண்ணத்தில் ஒதுங்கிக்கொள்ளவும் கூடும் தானே சார் ? அவ்விதம் நிகழக்கூடாதென்ற ஆதங்கமே நாமாய்ப் போட்டுக் கொண்ட அந்தக் கோட்டைத் தாண்டிட துணிவதில்லை !

   இதோ - காத்திருக்கும் 2023-ல் கூட இதுவே தான் நடைமுறை கண்டிட உள்ளது ! விலைவாசிகள் விண்ணைத் தொட்டாச்சு ; நம்மிடம் புதுசும்,பழசுமாய் குவிந்து கிடக்கும் தொடர்களைக் கொண்டு ரெம்பச் சுலபமாய் பத்தாயிரத்துக்குக் கூட சந்தா திட்டமிட சரக்குள்ளது ! And பற்றாக்குறைக்கு தல 75 என்ற அட்டகாசத் தருணமும் waiting ! ஆனால் இதோ இந்த நொடியில் கூட என் மேஜையில் உள்ள 2023 planner - ஐந்தாயிரத்துச் சொச்சம் என்ற total கண்டு மட்டுமே நிற்கிறது சார் !

   Delete
  5. Thanks for the explanations sir. What you can do is allocate one page for SPECIAL BOOKS THIS YEAR NOT PART OF SANDHAA - in ANY of the mainstream books every month.

   In that page keep listing both the published SPECIAL books of that year hitherto and the forthcoimg SPECIAL books - until what you know. This way there can be a list with ALL the readers.

   Delete
  6. And more than anything else, திட்டமிடலில்லாத திட்டமிடல் தானே சார் காலமாய் நமது / எனது அடையாளம் ?

   இண்டிகேட்டரை ; தெருவிளக்குகளை ; பெட்ரோமாக்ஸ் லைட்களை - என சகலத்தையும் எரிய விட்டுக்கொண்டே ஏதாச்சும் ஒரு பைபாஸுக்குள் வண்டியை விடுவது தானே நம் டிரேட்மார்க் ?

   ஒரு வாசக சந்திப்பை இன்னும் சுவாரஸ்யமாக்கிட ஒரு ஸ்பெஷல் !

   ஒரு ஆன்லைன் புத்தக விழாவை இன்னும் சுறுசுறுப்பாக்கிட இன்னொரு ஸ்பெஷல் !

   மந்தமாய் நாட்கள் நகரும் பட்சத்தில் , என் பிட்டத்துக்குக் கீழேயே நெருப்புச் சட்டியாகிடவொரு ஸ்பெஷல் !

   வாசக உற்சாக மிகுதிகளுக்கு செவிசாய்க்கும் விதமாயொரு special!

   காரணங்கள் வேறாக இருப்பினும் Surprisefactor எனும் அந்த இலட்சியம் ஒன்று தானே சார் ?

   Delete
  7. விஜயன் சார், இதே முறையில் தொடருங்கள். நாங்கள் தொடர்ந்து உங்களுடன் பயணிப்போம்.

   Delete
  8. // நெருப்புச் சட்டியாகிடவொரு ஸ்பெஷல் ! //

   நெருப்புச் சட்டி ஸ்பெஷல் நல்ல பெயர்:-)

   Delete
 85. Edi Sir..
  இன்றைய கோவை ஃபுக் பேர் சேல்ஸ் எப்படிங்க?..

  சுஸ்கி&விஸ்கி விற்பனை ஆரம்பிச்சாச்சுங்களா?..

  ReplyDelete
 86. *ஆண்டுச் சந்தாவில் இருப்பதால்..*
  *விலைகளில் சலுகை..*
  *இலவசமாக சில புத்தகங்கள்..*
  *ஒவ்வொரு மாதமும் ஒரு இருபது பக்க குட்டி* *காமிக்ஸ் இலவசமாக..*
  *தவிர கொரியர் கட்டணமும் கிடையாது*

  *இவையனைத்தையும் விட..*
  *பால்யங்களை* *மீட்டெடுக்கும்* *அதி அற்புதமான* *மகா மந்த்ர பாடசாலை* *எமது* *இந்த* *லயன்-முத்து காமிக்ஸ்..*

  *பார்சல் வந்த சில நாட்கள் வரை சிறு பிள்ளைகளாகவே மாறித் திரிகிறோம்...!!*

  ReplyDelete
  Replies
  1. அழகான பாராட்டு சார் ! Thanks a ton !

   Delete
 87. 😍ஒரு காதல் யுத்தம்/TEX/
  காமிக்ஸ் கலாச்சாரம்..💘
  ஒரு கலந்துரையாடல்💝

  எல்லாருக்கும் ஒரு சப்ரைஸ்

  https://youtu.be/GAnhy6HjjGM

  ReplyDelete
 88. டியர் விஜயன் சார்,

  அதே அலமாரிகள், அதே அடுக்குகள், அதே பிரிக்கப்படாத காமிக்ஸ் புத்தகங்கள். ஆனால், அவை இருக்கும் இடத்தைப் பொறுத்து தான்  எவ்வளவு வேறுபாடு?! நேரமின்மை, தற்காலிக ஆர்வக் குறைபாடு, போன்ற சில பல சாக்குபோக்குகள் மறையும் காலத்தில், அவற்றில் பாதியையாவது பிரித்து வாசிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது! அதற்கே எனக்கு இவ்வளவு அலுப்பும் சலிப்புமாய் இருக்கும் போது, விற்கப்படாத புத்தகங்களை அடுக்கடுக்காய் பேணிப் பாதுகாக்க வேண்டிய உங்கள் நிலையை எண்ணிக் கூட பார்க்க முடியவில்லை. வங்கியில் போட முடிந்தாலாவது வட்டி வரும், அடுக்கி வைத்து பாதுகாப்பதற்கு நீங்கள் அல்லவா மேற்கொண்டு செலவு செய்ய வேண்டும்! வடக்கே டைமண்ட் காமிக்ஸ் நிறுவனத்தார், இருபது முப்பது வருட பழைய கையிருப்புகளின் அட்டைகளில், இன்றைய விலைவாசிக்கேற்ப ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்கிறார்கள். நீங்கள் அதையும் செய்ய மாட்டீர்கள்.

  விடாது நம்முடன் பயணிக்கும் "அதே ஐநூறு அல்லது ஆயிரம் வாசகர்கள், அவர்களுக்குப் பிடித்தமான கதைகள்" என்ற பெரும் தடுப்புச் சுவரை நாம் தாண்டிச் செல்லும் வரையில். சிவகாசி ஸ்டீல் ரேக்குகள் காலியாவது சாத்தியமா என்பது சத்தியமாகத் தெரியவில்லை. இப்படிச் சொல்லிச் செல்வது எளிது தான். ஆனால் ஒருவரை புத்தகம் படிக்கும் மனநிலைக்கு இழுத்து வருவது, இந்த காலகட்டத்தில் எவ்வளவு கடினமான ஒன்றாக மாறிவிட்டது என்பதை நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது! முதலில் என்னை அந்த மனநிலைக்கு கொண்டு வந்து விட்டு, பிறகு ஊருக்கு உபதேசம் செய்ய வேண்டும்!

  @சேலம் Tex விஜயராகவன்:
  மிக்க நன்றி நண்பரே! எங்களைப் போன்ற "அடுக்கி வைக்கிகள்" உதவுகிறோமோ இல்லையோ, உங்களை போன்ற பல நண்பர்களின் வற்றாத காமிக்ஸ் ஆர்வமும், தீவிர இரசிகத் தன்மையுந்தான், தமிழ் காமிக்ஸ் உலகை உயிர்ப்புடன் வைக்க உதவிக் கொண்டிருக்கிறது என்பதில் சற்றும் ஐயமில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஷப்பா, ஃபீல் பண்ணி, ரொம்ப தான் சீரியஸாக எழுதி விட்டோமோ?! :P சரி சரி, ஆளாளுக்கு பக்கோடா பக்கோடா என்று பகட்டு காட்டுகிறீர்கள்! தொன்னூறுகளில் புதுக்கோட்டைப் பக்கம் தூள் பஜ்ஜி சாப்பிட்டு இருக்கிறீர்களா? மண்ட பத்திரம்!

   Delete
  2. True கார்த்திக் ! முன்பெல்லாம் உலகை எட்டிப்பார்க்க வாசிப்பு ஒரு அத்தியாவசியமாக இருந்து வந்தது ; ஆனால் இன்றைக்கோ வெள்ளை மாளிகையைக் கூட நமது கூடத்துக்கோ, கொல்லைப்புறத்துககோ, கொண்டு வர ஒரு கையளவுக் கருவியும், 4G / 5G என்று ஏதாச்சுமொரு ஜி இருந்தால் போதுமென்றாகிப் போச்சு ! So வாசிக்க ஒரு முனைப்போ, அவசியமோ, ஆர்வமோ தொடர்வது தெய்வச் செயல் என்ற ரேஞ்சுக்கு இங்கு நிலவரம் மாறி வருவதில் no surprises !

   ஆனால் ...ஆனால் ....உலகின் முக்கிய காமிக்ஸ் மார்க்கெட்கள் அனைத்திலுமே திகிடு முகுடான வளர்ச்சி - அதுவும் இந்தக் கடைசி 2 ஆண்டுகளில் என்பது தான் செம வியப்பளிக்கும் விஷயம் !

   So இன்றில்லாவிடினும் நாளையோ, நாளான்னிக்கோ, நாலு மாசமோ, நாலு வருஷமோ தள்ளியதொரு பொழுதில் இங்கும் (comics) வாசிப்பு வளருமென்று நம்புவோம் !

   Delete
  3. நிச்சயமா வரும் சார்....ஆனா அதுவரை தேவைக்கு அச்சிடுதல் நலம்....காமிக்ஸ் கடல்ல வற்றாத ஆறுகள் வந்து தள்ளும் போது நம்ம குளத்துக்கு தண்ணி புதுசா பாயும் போது தேவைக்கேற்ப உபயோகிக்கலாமே

   Delete
  4. கோவைக் கவிஞரின் கருத்தை வரவேற்கின்றேன். தேங்கிக் கிடக்கும் காமிக்ஸ்களைக் கண்டு உண்மையான காமிக்ஸ் காதலனாகக் கண்ணீர் வடிக்கின்றேன். 2012 ஆம் ஆண்டு தங்கள் மாடி அலுவலகத்தில் மலை போல் குவிந்து பெஞ்சுகளில் உறங்கிக் கொண்டிருந்த புத்தகங்களைக் கண்டு வேதனைப்பட்டேன். இன்றும் அதே நிலை நீடிப்பது மனம் வருத்தம் தருகிறது.

   Delete
 89. Unable to attend book fair. Reason, my 2 sons periodic assessment exams. It was over by friday and to destress we went to ooty on Saturday and sunday. May be will attend erode

  ReplyDelete
 90. For the questions u asked. Whatever u decide is ok with me sir. My Vote to Editor's discretion

  ReplyDelete
 91. பார்சலை கைப்பற்றிய ஆச்சு. முதல் இதழாக ஜட்ஜ் ட்ரெட் படிச்சாச்சு.
  சுருக்கமாக விளக்கமாக சொல்வதென்றால் இன்னொரு பதிமூன்றாவது மாடி.

  ReplyDelete
 92. பொக்கிஷத்தைக் கைப்பற்றியாச்சுங்கோ....!!!!

  ReplyDelete
 93. காமிக்ஸ் எனும் கனவுலகம் FB குழு நடத்திய சந்தாப் போட்டிக்கான சுஸ்கி விஸ்கி பரிசு இதழ் கிடைத்தது. நன்றி குழு நிர்வாகிகளுக்கு.

  ReplyDelete
 94. மாண்ட்ரேக் அட்டைப்படம் சும்மா தெறிக்குது. அழகான வடிவமைப்பு. நன்றிகள் ஆசிரியர் சார்.

  ReplyDelete
 95. சார் ஈரோட்டுக்கு வாய்ப்பிருந்தா.....சினிஸ்டரோ.....சாகரோ ஒன்றாவது வந்தால்தான் களைகட்டும்....வாசகர்கள் எல்லாரையும் கவரும் வண்ணமிறக்கவும்...இரண்டும் வந்தா எல்லா சாரரயும் கவரும்....
  முன்பதிவ ஆரம்பிக்கலாமே

  ReplyDelete
 96. ஆகஸ்ட்டு புத்தகங்கள் வந்து கிடைத்தன...

  மிக கனமான பார்சல்... மாண்ட்ரேக் கெட்டி அட்டை பெட்டி பத்திரமாக புத்தகங்களை கொணர்ந்து சேர்ந்தது...

  கனவுலகம் குழுவின் சார்பில் போட்டிக்கு பரிசாக சுஸ்கி விஸ்கியும் வந்தடைந்தது....

  ReplyDelete