Powered By Blogger

Sunday, July 03, 2022

ஒரு பொடியன்..ஒரு நூறு பெயர்கள்..!

 நண்பர்களே,

வணக்கம். உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெயரிடும் மிருகத்தை ரொம்ப ரொம்ப முன்னமே ஞான் தட்டி எழுப்பியிருக்கணும் போலும் - பெயர் தெரியாது தவித்துத் திரிந்து கொண்டிருந்த நம்ம XIII-க்கே படா ஷோக்கா ஏதாச்சும் ஒரு பெயரை முன்மொழிந்திருக்க மாட்டீர்களா ?!! கதாசிரியர் வான் ஹாமே திகைச்சுப் போகும் விதமாய், வித விதமான பெயர்களை நீங்கள் போட்டுத் தாக்குவதில், அந்தப் பெயர்களில் சிலவற்றையாச்சும் பயன்படுத்திடும் நோக்கில் கூட மனுஷன் கூடுதலாய் இன்னும் ரெண்டு பாகங்களை எழுதி இருக்கக்கூடும் ! வரலாறு படைக்கும் வாய்ப்பு மிஸ்ஸாகிப் போச்சே !!

இப்போது கூட ஒண்ணும் கெட்டுப் போகலை தான் ; LOSER JACK கதாசிரியருக்கு இங்கே பதிவாகிக்கிடக்கும் பெயர்களை அனுப்பி வைத்தால், பொடியனுக்குமே ஒவ்வொரு பாகத்திலும் XIII பாணியில்  ஒரு பெயரிட்டு ரசிக்க வாய்ப்பிருக்கக்கூடும் ! Anyways வண்டி வண்டியாய்க் குவிந்து கிடந்த பெயர்களுள் ஜாக்கின் குணாதிசயங்களுக்கு மட்டுமன்றி, அடிக்கடிக் கூப்பிடவும் பொருத்தமானதாய் எனக்குப் பட்ட பெயர்கள் கீழ்க்கண்டவைகளே :

*கைப்புள்ள ஜாக் - selvas 

*சுள்ளான் ஜாக் - கிட் ஆர்டின் கண்ணன் 

*சோப்ளாங்கி  ஜாக் - கிட் ஆர்டின் கண்ணன்

இவை தவிர்த்து என் மண்டைக்குள் ஓடியிருந்த பெயர்கள் 2 :

*சுட்டிப்பூஜ்யம் ஜாக்

*மங்குணி ஜாக் 

இதில் எனக்கு சில சந்தேகங்கள் :

1."மங்குணி ஜாக்" என்ற பெயரை நண்பர்கள் யாரேனும் முன்மொழிந்துள்ளனரா இங்கே ? தேடிப் பார்த்தவரைக்கும் தெரியக் காணோம் எனக்கு !

2.And மற்ற பெயர்களை முன்மொழிந்திருப்பதாய் நான் குறிப்பிட்டிருக்கும்  நண்பர்களின் தகவல்கள் சரி தானா ? Or வேறு யாரேனும் அந்தப் பெயரை அதற்கு முன்னமே இங்கே பதிவு செய்துவிட்டார்களா ? 

கவுண்டரும், பிரபுவும் டுபாக்கூர் லாட்டரி சீட்டை வைத்துக் கொண்டு பேங்க் வாசலில் பேண்ட் செட் முழங்க ஆஜரான கதையாய், மேற்படிப் பட்டியலில் பெயரிட்டவரை நான் தப்பாகக் குறிப்பிட்டு சொதப்பி வைத்திருக்கக்கூடாதில்லையா ? So - விபரங்களை ஒருக்கா ஊர்ஜிதம் செய்திடுங்களேன் ப்ளீஸ் ?

இந்த 5 பெயர்களை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்த பிற்பாடு, போட்டியிலிருந்து வெளியேறிடும் நாமகரணங்களை முதலில் தேர்வு செய்திட நினைத்தேன் :

*"சுள்ளான் ஜாக்" என்பது catchy ஆக இருந்தாலும், சகலத்திலும் முட்டையிடும் ஜாக்கின் குணத்துக்கு பொருந்துவதாய் எனக்குத் தெரியலை ! Maybe லக்கி லூக் கதைகளில் வரும் அந்த பொடியன் பில்லி போலான பாத்திரத்துக்கு "சுள்ளான்" என்ற அடையாளம் ஓ.கே.வாகிடக்கூடும் என்று பட்டது ! So சலோ "சுள்ளான்" என்றேன் !

*அடுத்ததாக "சுட்டிப்பூஜ்யம் ஜாக்" என்ற பெயர் ஜாக்கின் சொதப்பலை சுட்டிக்காட்டும் விதமாய் இருந்தாலும், கதையின் நடுவே "அடேய்..மங்குணி ; அடேய் கைப்புள்ள ! அடேய் சோப்ளாங்கி..." என்ற ரீதியில் கூப்பிட முடியாதில்லையா ? "அடேய் சுட்டிப்பூஜ்யம்" என்பது கொஞ்சம் ட்ராமா வசனமாட்டம் தெரியக்கூடும் என்பதால் அதற்கும் ஒரு டாட்டா சொன்னேன் !

எஞ்சியிருந்த 3 பெயர்களுமே பொருத்தமாய் இருக்க, "மங்குணி" என்ற அடைமொழி அசமந்தத்தையும், சற்றே கூமுட்டைத்தனத்தையும் குறிப்பிடும் விதமாய் இருப்பது நெருடியது ! ஜாக் கெட்டிக்காரனாக இருந்து, அதிர்ஷ்டம் அவன் பக்கம் இல்லாது போயின், பயபுள்ளை தோற்றுக்கொண்டும் இருக்கலாமில்லையா ? So அது தெரியாமல் அவனுக்கு "மங்குணி" என்ற முத்திரை தருவது முறையாகாது தானே ? So மங்குணி ரிஜிட் !

ஆக, நேரடி மோதல் "கைப்புள்ள vs சோப்ளாங்கி" என்றாகியது ! மறுக்கா நிரம்ப ரோசனைகள் !! End of the day, வைகைப் புயலாரின் உபயத்தில் தமிழ் அகராதியினில் இடம்பிடிக்காத குறையாய் நம் மத்தியில் காலத்தால் அழியா (!!!) ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் அந்தக்  "கைப்புள்ள" கதாப்பாத்திரம் தான் வென்றது ! "கைப்புள்ள ஜாக்" பச்சாதாபத்தையும் ஏற்படுத்திடக்கூடும், லைட்டான டம்மி பீஸாகவும் அர்த்தம் தந்திடக்கூடும் ; தோற்கும் மங்குணியாகவும் புரிபடக்கூடும் ; and it's loads easier on the tongue too ! ஆகையால் இந்தக் குள்ள வாத்து ஹீரோ தமிழில் "கைப்புள்ள ஜாக்" என்று அன்போடு அறியப்படுவாராக !! பெயர் சூட்டிய நண்பர் selvas (ரைட்டு தானுங்களே ??) அவர்களுக்கு kudos !! LJ கதைகளின் தொகுப்பு என்றைக்கு வெளியானாலும் அதிலொரு பிரதி உங்களுக்கு நமது அன்புடன் அனுப்பிடப்படும் ! 

Phewwww !! சுஸ்கி-விஸ்கி பணிகளுக்குள் மூழ்கிடக் கிளம்புகிறேன் guys !! Bye for now !! See you around !!


154 comments:

  1. வாழ்த்துகள் செல்வா!

    ReplyDelete
  2. நானும் கைப்புள்ள சொன்னேன், ஆனால் ஜாக் டைப்படிக்க விட்டேன்

    வாழ்த்துக்கள் செல்வா💐

    ReplyDelete
    Replies
    1. அடடா.. சட்டை போட்டுக்கிட்டு பேன்ட்டு போட மறந்துட்டிங்களே கிரி..!

      Delete
    2. ////அடடா.. சட்டை போட்டுக்கிட்டு பேன்ட்டு போட மறந்துட்டிங்களே கிரி///

      வெட்கத்துல கையால கண்ணை மூடிக்கிட்டார் பாருங்க! :D

      Delete
    3. ///யாரு கண்ணை???///

      க்கும்! சரியாப் போச்சு!!😂😂

      Delete
  3. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  4. Edi Sir..
    எங்களுக்கு ஏதும் ஆறுதல் பரிசு இல்லீங்களா?..😥😭

    ReplyDelete
    Replies
    1. நீங்கதான் தரவேண்டி இருக்கும் பாஸ்..😂

      Delete
    2. இப்போதைக்கு நாங்க ஆறுதல் சொல்றதுதான் உங்களுக்கான பரிசு!

      பை த வே, நீங்களும் எனக்கு ஆறுதல் பரிசு கொடுக்க மறந்துடாதீங்க! :)

      Delete
  5. நில் கவனி சிரி :

    டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர் எல்லோரும் சாகசம் செஞ்ச O. K. Corral சம்பவத்துல நம்ம லக்கி லூக்கும் சாகசம் செஞ்சிருக்காரு.!

    நண்பன் டாம் டெய்லரின் மந்தையை அபிலினுக்கு ஓட்டிச்செல்லும் வழியில் பல் வலியால் துடிக்கும் டாமை பக்கத்து டவுனில் இருக்கும் டென்டிஸ்டிடம் அழைத்துச் செல்கிறார் லக்கி லூக்...

    அந்த டென்டிஸ்ட் டாக் ஹாலிடே..
    அந்த டவுன் டும்ப்ஸ்டோன்..

    இப்படி எதேச்சையாக உள்ளே நுழையும் லூக்.. சூழ்நிலையால் ஏர்ப் சகோதரர்களுக்கு துணை நின்று.. இறுதியில் O.K. corralல் க்ளான்டன் கோஷ்டியை , தன்னுடைய ஸ்டைலில் முறியடித்து சுபமாக்குகிறார்.!

    ஆண்டுமலரின் முதல்கதையை விட இதில் சிரிப்பூட்டும் சம்பவங்கள் அதிகம்.!

    டாம் டெய்லருக்கு பல் பிடுங்க டாக் ஹாலீடேவும் கோணமூக்கி கேட்டும் கையாளும் மெத்தேடை பத்து முறைகளுக்கு மேல் திருப்பித் திருப்பிப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தேன்.!

    அடுத்து.. சலூன் ரகளையில் இடம்பெயர்ந்த பற்களை பிடுங்க வேண்டி பெரிய க்யூவே நிற்க.. வ்யாட் ஏர்ப்புக்கு ஓட்டு போடுவேன்னு சொன்ன நபர்களுக்கு பிடுங்கினதே தெரியாமல் பிடுங்குவதாகட்டும்.. அதே க்ளான்டனுக்கு ஓட்டுப் போடுவேன்னு சொன்ன ஆசாமிக்கு வேண்டுமென்றே தவறான பற்களை பிடுங்கி பிடுங்கி பொக்கை வாயாக்கி அனுப்புவதாகட்டும்.. ஃபுல் மப்பில் க்ளான்டன்களை வம்பிழுப்பதாகட்டும்.. க்ளைமாக்ஸில் நண்பர்களுக்கு துணை நிற்க வீரமாக கிளம்புவதாகட்டும்.. டாக் ஹாலீடே கலக்கியிருக்கிறார்..!

    ஜெயிலில் இருந்து தப்பிவிட்டதாக கூறப்படும் டால்டன் சகோஸ்.. கதையிலேயே இல்லையென்றாலும்.. ஒரே ஒரு ஃப்ரேமில்.. குறிப்பாலேயே கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார்கள்.!

    ஏர்புக்கும் க்ளான்டனுக்கும் நடைபெறவிருக்கும் பொதுவிவாதத்தைப் பற்றிய கட்டுரை வெளியான செய்தித்தாளை அந்த மீட்டிங் ஹாலிலேயே விற்கும் பத்திரிக்கைக்காரர்...
    டாக்டர் ஹாலீடே எது செய்தாலும்.. ஹைய்யோ.. என்ர மாமனுக்கு சமத்தைப் பாரேன்னு ரசிக்கும் கோணமூக்கி கேட்.. ட்ரெஸ்ஸில் மட்டுமே வேறுபாடு இருக்கும் ஏர்ப் குடும்பம்..
    தாடியில் மட்டுமே வேறுபாடு இருக்கும் க்ளான்டன் குடும்பம்..
    பகுபாடே இல்லாமல் ஜெயிச்ச பக்கம் ஜே போடும் டும்ப்ஸ்டோன் ஜனங்கள்.. அடடா அடடா..!

    இரண்டுமுறை படித்துவிட்டேன்..!

    நில் கவனி சிரி - உக்காந்து ஆறஅமர சிரிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் இரண்டுமுறை படிப்போம், புக்கு வரட்டும்!

      Delete
  6. என்ன தாவு தாண்டினாலும் கடைசியிலே Loser Jack ஆகவே ஆயிடறமே.. ஓடிடுறா கைபுள்ள.😳.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பெருசா ஏதோ காத்துக்கிட்டிருக்கலாமில்லையா?!! உங்க ஹியூமர் சென்ஸ் = செம! தொடர்ந்து அசத்துங்க!

      Delete
  7. ஆகையால் இந்தக் குள்ள வாத்து ஹீரோ தமிழில் "கைப்புள்ள ஜாக்" என்று அன்போடு அறியப்படுவாராக !! பெயர் சூட்டிய நண்பர் selvas (ரைட்டு தானுங்களே ??) அவர்களுக்கு kudos !!////

    வாழ்த்துகள் Selvas..💐💐

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  9. எடிட்டர் சாருக்கு சிறிய வேண்டுகோள்.!

    இனி முருகேசிக்கு பெயர் சூட்டும் வைபவங்கள் வருமாயின்.. நபருக்கு இத்தனை பெயர்கள்தான் அனுமதின்னு ஒரு ரூலை போட்டிருங்க சார்..!

    அப்படி இல்லேன்னா.. முருகேசிக்கு அண்ணன் எறநூறு ரூவா மொய் செஞ்ச மாதிரி.. ஒவ்வொரு பேருக்கும் எறநூறு ரூவா மொய் செஞ்சாகணும்னு சொல்லிடுங்க.!

    முக்கிய குறிப்பு : முருகேசியோட கொலுசு பத்திரம்..!

    ReplyDelete
  10. வாழ்த்துகள் Selvas நண்பரே!

    ReplyDelete
  11. கிருக்கு ஜாக்..

    ReplyDelete
    Replies
    1. கல்யாணத்துக்கு கூப்பிட்டா.. வளைகாப்புக்கு வந்து நிக்கிறதே வேலையாப் போச்சி.!

      Delete
    2. அதுலயும் கிறுக்கு வை கிருக்கு ன்னு வேற எழுதிக்கிட்டு...

      Delete
    3. எப்போதாவது வந்து கமெண்ட் போடறவரையும் இப்புடி போட்டு தாளிக்கறேளே இது நியாயமா மாயக் கண்ணன்

      Delete
    4. எப்ப வந்தாலும்.தாளிக்கிறதுதான் சிவா..😂

      Delete
  12. வாழ்த்துகள் Selvas நண்பரே!

    ReplyDelete
  13. இனிய வாழ்த்துக்கள் நண்பர் செல்வா 💐🥙🥗🤝

    ReplyDelete
  14. இப்போ வந்த ஆல்பாவை படிக்கலாம்னா.. அப்போ வந்த ஆல்பாவையே இன்னும் படிக்காம அப்படியே போட்டு வெச்சிருப்பதால... இப்போ வந்த ஆல்பாவை அப்போ வந்த ஆல்பாவுக்கு துணையா அங்கேயே போட்டு வெச்சிட்டு....

    கிட் கார்சனோடும் டெக்ஸ் வில்லரோடும் புயலில் ஒரு புதையல் வேட்டையை நடத்தப் புறப்படுறேன்.. பை..பை.!

    ReplyDelete
    Replies
    1. எப்படியும் அடுத்த ஆல்பா கதை வரத்தான் போகுது.அந்த மொத்தமா எடுத்து வெச்சிட்டு அந்த ஆல்பா கதையோடு இந்த ஆல்பா கதையை சேர்த்து அடுத்து வர்ற கதையையும் ஒண்ணா வெச்சிக்கிட்டு அதுக்கப்புறமா வரப்போற ஆல்பா கதை வர்றதுக்குள்ள ஒண்ணா படிச்சிடுங்க

      Delete
    2. @MAGESH KUMAR
      😂😂😂 செம செம!!

      Delete
    3. @ MAGESH KUMAR
      அதான் ப்ளானே..!

      புயலில் ஒரு புதையல் வேட்டை..
      கதையின் ஆரம்பம் லியானார்டோ டி காப்ரியோ நடிச்ச ஜாங்கோ அன்செயின்டு படத்தை நினைவூட்டுது..!
      மீதியை நாளை பார்ப்போம்.!

      Delete
  15. ஸ்பைடர் v/s சரிகமபதநி

    ReplyDelete
  16. இன்னும் புத்தகம் வராததால், தூக்கமும் வராததால் ரிப்கிர்பியின் டேஞ்சர் டார்லிங் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டுள்ளது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  17. ஆண்டுமலரில் லக்கிலூக்&டெக்ஸ்வில்லருக்கு அடுத்த இடத்தில் இளவரசியே . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  18. லக்கி ஆண்டு மலர்..

    வழக்கம் போல் இல்லை வழக்கத்தை விட இந்த முறை லக்கி இரண்டு கதைகளிலுமே அதிரடியிலும் சரி ,காமெடியிலும் சரி அசத்தி விட்டார்..காமெடி க்கு கேரண்டி டால்டன் பிரதர்ஸ் எனலாம் .பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்தனர்.டால்டன் வராத இரண்டாவது கதையில் லக்கியின் துப்பாக்கி சாகஸம் சூப்பர் சர்க்கஸ் இதழ் வந்த பொழுது ஏற்பட்ட அசத்தல் நகைச்சுவை நினைவுக்கு வருகிறது .ஓர் கதைக்கு ஜூ.எடிட்டர் மொழிபெயர்ப்பு என்பது ஆச்சர்யத்தையும் ,பாராட்டையும் ஒரு சேர வழங்குகிறது .கலக்கி விட்டார்..மொத்தத்தில் ஆண்டுமலர் லக்கிக்கு மட்டுமல்ல நமக்குமே லக்கி..

    ReplyDelete
  19. புது பொடியனுக்கு பெயர் சூட்டிய நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் ,பாராட்டுகளும்..

    ReplyDelete
  20. ஆல்பா ..ஓகே

    இந்த இதழுக்கு பிறகு முடிவெடுக்கலாம் என ஆசரியர் சொல்லி இருந்தார்..

    என்னை பொறுத்தவரை வந்தாலும் ஓகே வராவிட்டாலும் ஓகே :-)

    ReplyDelete
  21. இனி இன்று டெக்ஸ் இடம் தஞ்சம் அடைய வேண்டும் .அதற்கு முன் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் அதே வசனத்தை கூறிக்கொள்கிறேன்.


    புத்தகத்தின் விலை அட்டைப்படத்திற்கே சரியாகிவிட்டது...:-)

    ReplyDelete
    Replies
    1. சரி..!

      அட்டையை கிழிச்சிக்கிட்டு புத்தகத்தை திருப்பி அனுப்பிடுங்க தலீவரே.!

      Delete
  22. Edi Sir..
    சுஸ்கி விஸ்கி மற்றும் புதிதாய் ஒரு புயல் @அட்வான்ஸ் புக்கிங் எப்ப ஸ்டார்டிங் சார்..🤓
    😍

    ReplyDelete
  23. அடுத்த மாதம் சுஸ்கி விஸ்கி அறிவிப்பே பட்டாஸை கிளப்புகிறது...ஆவலுடன் காத்திருக்கிறேன்..:-)

    ReplyDelete
  24. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  25. அடுத்தவர் புள்ளைக்கு பெயர் வைக்கும் படலம் நமக்கு ஒத்து வராது போல. ஜாம்பஜார் ஜக், சுட்டி ஜக், லிட்டில் லூட்டி 'ன்னு பல எண்ட்ரி போட்டும், பப்பரப்பான்னு வந்திருச்சி 😁

    ஆனா எடி, நண்பர்கள் பெயர் வைக்கும் கதை ஒருபுறம் என்றாலும் நீங்கள் யோசித்து வைத்திருந்த பெயர் என்னவோ?! சும்மா எதையாவது கொழுத்தி போடுவோம் 😜

    ReplyDelete
    Replies
    1. // இவை தவிர்த்து என் மண்டைக்குள் ஓடியிருந்த பெயர்கள் 2 :

      *சுட்டிப்பூஜ்யம் ஜாக்

      *மங்குணி ஜாக் // இது எடிட்டர் சார் யோசித்து வைத்து இருந்த பெயர்கள்.

      Delete
    2. அப்ப புது பெயர்தான் சரியா பொருந்தியிருக்கு... கைப்புள்ள ஜாக்

      Delete
  26. வாழ்த்துக்கள் செல்வா.

    ReplyDelete
  27. ஸ்பைடர் - பகைவர்கள் ஏழு

    ReplyDelete
  28. ஸ்பைடருக்கே சவாலா?

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. வலைமன்னனும் வானவில் கூட்டமும்.

    ReplyDelete
  31. புயலில் ஒரு புதையல் வேட்டை படிச்சிக்கிட்டு இருக்கையில.. என்ர சின்னூன்டு புத்தியில தீடீர்னு ஒரு சிந்தனை தோணுச்சி..

    அதாகப்பட்டது..

    நாம ஏன் TEX 75 வருசத்தை.. டெக்ஸோட 75 கதைகளை வெளியிட்டு கோலாகலமா கொண்டாடக்கூடாது.?!

    🏃🏃🏃🏃🏃🏃🏃

    ReplyDelete
    Replies
    1. அதாவது, 75 அட்டைப்படங்களைத் தயார் பண்ணாப் போதும்னு சொல்றீங்க. அதானே?!! :D

      Delete
    2. ஒரு அழகான பூச்செடி துளிர்க்கும்போது.. அடியில ஆசிட் ஊத்தக்கூடாது குருநாயரே..!

      Delete
  32. 🤔🤔🤔
    அப்ப மாசம் சராசரி 6 கதை x 12 மாசம் =
    72 கதைகள்..

    3 குறையுதே ..

    அந்த மூணையும் ஸ்பெஷல் போட்டு தாக்கினா டேலியாயிடும்..👏👏👍😜

    சூப்பர்.. சூப்பர் ஐடியா ஜி..😄👏💐😍

    ReplyDelete
  33. புக் நாளைக்குத்தான் போல....

    ReplyDelete
  34. Edi Sir..
    *சுஸ்கி & விஸ்கி மற்றும் ஜகோர்*..
    *அட்வான்ஸ் புக்கிங் எப்ப ஆரம்பம்* சார்?..😍🤓

    ReplyDelete
  35. புத்தகம் வரலைன்ன கொரியரை நம்ம அலுவலக சகோதரியிடம் வாங்கிய கன்சைனி நம்பரால் வாயடைத்து ..... விரட்டி புத்தகத்த வாங்கியாச்சு....நான் ஹெட் ஆஃபீசுல போயே வாங்கிட்டு வந்துருவேன்....அசால்ட்டு...எங்க ஊருக்கு போட்ட கிளை சரியில்லை....மாதம் ஒரு சப்ளையர் வாரார்....எஸ்டிக்கு மாறனும் போல....
    பார்சல அரக்க பரக்க கிழிக்க மூன்று இதழ்களோடு ஓர் அழகிய அட்டை மன்னிப்பு கேட்டபடி அத நீக்கியிருந்தா நல்லாருக்கும்னு சொல்லுமென்னை மன்னியுங்கள்......மூனு அட்டைகளில் வழக்கம் போல கலக்குது லக்கி....ஆனா மத்த இரண்டும் தெறிக்க விடுது இது வரை வந்த டாப்பட்டய...காதலனின் காகிதம் மௌனமாய் தென்றலை வீசி கண்ணாடி போல் மினுங்கி சினுங்க...மெக்சிகன் அட்டையோ சூறைக்காற்று பின்னணில புயலாய் சீற...எது டாப்பிதா அதா..என லப்டப்பிட...இதயம் விரியுது ஒன்னப் பாத்து சுருங்குது இதான்டாப்பான்னு இன்னொன்னு நோக்கி....இதா அதானு லப்டப்பிட...எனக்கு ரொம்ப பிடித்த நீல அட்டைய போனா போவுதுனு நிறத்த காட்டி மனச நேத்தி டாப்புன்னு எழுதுனா...டெக்சட்டை மழைய தூற்றி துடைக்குது காத்தால....அதுவும் விடாப்பிடியா....புயலுக்கு பின் அமைதிதான....என புயலட்டை துள்ள ...நீல வண்ண அட்டய தேர்வு செய்து அமைதியா புரட்டுன என்ன முதல் பக்கம் கப்பலோடு ஹெலிகாப்டர் உற்சாகப்படுத்த அடுத்த பக்கம் என்னா வண்ணமய்யா மயிலோனே என செந்தூரான் நடனமிட...டெக்ச புரட்டுனா புரட்டிப் போடுது ஓவியங்க சான்சே இல்ல சார்...இது வரை இப்படியோர் ஓவியங்கள் பாத்ததில்லை..புதிய ஓவியரோ..இவ்விரண்டுகளில் பெஸ்ட் தேர்வு செய்ய என்னாலாகாது...விக்கிரமாதித்தன அழைக்கனும் போல....சுஸ்கி விஸ்கி ஜாகர் சூப்பர் சார்...சிண்ட்ரெல்லாருமே....ஆனந்தக் தேன் சிந்தும் டப்பியே...

    ReplyDelete
  36. புத்தகங்கள் வரவில்லை. நாளைக்கு தான் வரும் என உளுந்தவடை சொல்லுது (எத்தனை நாளுக்கு தான் பஜ்ஜி சொல்லுது என எழுதுவது) :-)

    ReplyDelete
  37. பு.பு.சி.வேண்டும் + நில்.கவனி. சிரி

    9/10

    தந்தை ஒரு பாக்குத்தான் என்றால் தனயன் கமுகுத் தோப்பு என்றாகிவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை போலும்
    வெகுஜன ரசனையின் நாடி பிடித்து எழுதப்பட்ட எழுத்துக்கள்.
    நகைச்சுவை எழுதுவது மிகவும் கடினமான வேலை.

    தாசில்தார் வீட்டு கோழிமுட்டை சம்சாரியின் அம்மிக்கல்லை உடைக்கும் என்ற கதையாக எடிட்டர் சாரின் இளவல் ( இளம்பிராயம் என்பதால் முட்டை உருவகம்) லக்கி லூக் என்ற அம்மிக்கல்லை ஒரே போடாக போட்டுத் தள்ளியிருக்கிறார்
    ( முன்பொரு ஆல்பத்தில் சுமாராக இருந்தவர் இப்போதுஜொலிக்கிறார்)

    விக்ரம் என்ற பெயர் இருந்தாலே வெற்றி வரும் நேரம் இது போலும்.

    சபாஷ் ஜூனியர் எடிட்டர் சார்!

    ReplyDelete
    Replies
    1. சார் " என்ற அடைமொழிகளெல்லாம் உங்கள் கண்முண்ணே வளரும் பிள்ளைக்கு அவசியமே லேது சார் !

      Delete
    2. சார்.. விக்ரம்க்கும் எங்களுக்கும் மீறிப்போனா ஒரு ரெண்டோ.. மூனோ.. வயசு வித்தியாசம் இருக்கும். அதுக்குப் போயி நீங்க எங்களை வயசானவங்க மாதிரி காட்றது கொஞ்சம் கூட நல்லா இல்லீங்க சார்!

      இப்பக்கூட அரை டவுசர் போட்டுகிட்டு வெளியே போனேன்னா "இன்னிக்கு ஸ்கூல் லீவாடா கண்ணு?"ன்னு தான் ஊருக்குள்ள கேட்பாங்க. தெரிஞ்சுக்கங்க!

      Delete
    3. /* வெகுஜன ரசனையின் நாடி பிடித்து எழுதப்பட்ட எழுத்துக்கள்.
      நகைச்சுவை எழுதுவது மிகவும் கடினமான வேலை. */

      Totally agree - good translation - and in his own style too. Good effort from Vikram !

      Delete
  38. Edi Sir..
    பள்ளியில் படித்து மேடையில் அவார்டு வாங்கும் மாணவனை பாராட்டும்போது "நம் பள்ளி மாணவன்" என்றா சொல்லுவோம்..
    "நம் பள்ளி மாணவர்" என்றுதானே சொல்லுவோம்.

    அதுபோலதான் நம் காமிக்ஸ் பள்ளி மாணவர் விக்ரமும் பாராட்டபடுகிறார்.😍😘

    ReplyDelete
  39. ஹைய்யா! கொரியர் டப்பியை கைப்பற்றிட்டேன்!

    ReplyDelete
  40. வந்து விட்டது புத்தகம்....

    ReplyDelete
  41. புயலில்ஒருபுதையல்வேட்டை. காமிக்ஸ்உலகின்எவர்க்ரீன் ஹீரோ டெக்ஸ் தான்என்பதற்கு சான்றாகும் மற்றொருசூப்பர் இதழ். மாதம் மாதம் படிக்கிறோம்டெக்ஸ் என்னும் ஒரு ஹீரோவின் கதையை.ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் அட்டவணையை அறிவிக்கும்போது சற்றே அலுப்பாகவே இருக்கும்இந்தவருடமும் டெக்ஸ்கதைகள்தானாஎன்று. ஆனால்ஒவ்வொருமாதமும்முதலில் கையில்எடுப்பது டெக்ஸ்கதைகளையே. இதோ இந்தமாதமும் அப்படியே. 224 பக்கங்களுமே க்ளைமாக்ஸ் பக்கங்கள் போலவே விறுவிறுப்பு. டெக்ஸ் போல இனியொருஹீரோகாமிக்ஸ்உலகிற்குக்கிடைக்கப்போவதில்லைகரூர்ராஜசேகரன்.

    ReplyDelete
  42. கானா....டெக்சா என யோசிக்க விடாமல் நம்ம நண்பர்கள் விக்ரம பாராட்டுறாங்களே அது எடுப்போம்னு நில் கவனி சுடு எடுத்தா ....டால்டன்களுக்கு ஈடு கொடுக்க முடியாம லக்கி பின் தொடர நம்ம விக்ரமும் அவர்களோடும் கூட வரும் சக பயணிகளோடும் லூட்டியடித்தபடி கலக்கி உள்ளார்....வாழ்த்துக்கள் விக்ரம்....இதுவரை நடித்த லக்கி கதையே சூப்பர் சேர்க்கை கூட மிஞ்சிய கதை கிடைத்ததும் நம்ம விக்ரமின் அதிர்ஷ்டமே...வாய்ப்பை கெட்டியா பிடிச்சி எங்கயும் தயங்கி யோசிக்க வைக்காம பயணிக்குது வார்த்தைகள் உதவியோடு....நானே நடுங்குறைன் நீ வேற ஆடாதேப்பா என போதை ஆசாமி யும் , செல்ல தட்டு தண்டனை ஜட்ஜும் ஆவ்ரெல்லும் , ஜெயிலுக்கு போக தோண்டும் குழிகளும்அட்டகாச கற்பனைகள்...வேலை அழைப்பதால் கவர்ந்த வசனங்களோடு வருகிறேன்

    ReplyDelete
  43. *** புயலில் ஒரு புதையல் வேட்டை ***

    சித்திரங்கள் - செம ஷார்ப்! டெக்ஸ் கொஞ்சம் இளமையாகத் தெரிகிறார்!

    வசனங்கள் - கையைப் பிடித்து நடத்திச் செல்வதைப்போல அத்தனை இதம்!

    வில்லன்கள் - அந்த நீர்யானை கர்னல் கேரக்டர் மிரட்டல்! மலைமாடு டியாகோ காரஸ் தலயின் ஒற்றை புல்லட்டுக்கு பொட்டென்று போய்ச் சேர்ந்துவிடுவது கொஞ்சம் ஏமாற்றமே!

    க்ளைமாக்ஸ் - புயலின் கோர தாண்டவத்திற்கு நடுவே வித்தியாச அனுபவமாய்!

    மைனஸ் - சீட்டுக் கட்டை வைத்து எப்படி வரைபடத்தைத் தயாரித்தார்கள் என்று காட்டவேயில்லை! அப்பட்டமான போங்காட்டம்!

    ஒருமுறை படிக்கலாம்! அட்டகாசமான பொழுதுபோக்கிற்கு குறைந்தபட்ச உத்தரவாதம் உண்டு!

    என்னுடைய ரேட்டிங் :
    சித்திரங்கள் - 10/10
    அட்டைப்படம் - 9/10
    கதை - 8/10
    வசனங்கள் - 10/10

    ReplyDelete
  44. ///இந்தக் குள்ள வாத்து ஹீரோ தமிழில் "கைப்புள்ள ஜாக்" என்று அன்போடு அறியப்படுவாராக !! பெயர் சூட்டிய நண்பர் selvas (ரைட்டு தானுங்களே ??) அவர்களுக்கு kudos !!///
    ----- வாழ்த்துகள் செல்வாஸ்💐💐💐💐💐🍫🍫🍫🍫

    பைனல் வரை வந்து ரன்னர் அப் ஆகும் KOK அங்கிளுக்கும் பாராட்டுகள்.💐

    பலவிதம் முயற்சிகள் செய்த அனைவருக்கும் ஆறுதல் வாழ்த்துகள்🍫🍫🍫 பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

    ReplyDelete
  45. நேற்று மாலை ஜூலை இதழ்கள் கிடைத்தன சார்..


    ஆண்டுமலர் அற்புதமான தரம்...கதைகளுக்கு அறிமுகம் பாந்தமாக உள்ளது.

    அட்டைப்படங்கள்ல ஆல்ஃப்பா அடிச்சிட்டாரு...

    முன்பொரு முறை தாங்கள் சிங்கத்தின் சிறுவயதில் தொடரில் குறிப்பிட்ட அந்த ஸ்பைடரின் நீலக் கலர் சம்பத்தை நினைவூட்டும் விதமாக உள்ளது...செம.

    டெக்ஸ் அட்டையும் ரொம்ப நேச்சராக உள்ளது...கதையை அட்டைப்படமே ஸ்பஸ்டமாக தெரிவிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கடும் புயல் காற்றுல பறக்கும் அட்டைகள், ஊழிக்காற்று, மின்னல் வெட்டு, அசால்டாக நடந்து போகும் தலையை நனைய வைக்கும் மழை என அற்புதமான ஓவியம்.

      பின் அட்டையும் டாப்..

      Delete
  46. வருகிறது விளம்பரங்கள் 1990களுக்கே கூட்டிப்போகுது...

    ஸ்மாஷிங் 70 மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் ஸ்பெசல்...

    சிண்ரெல்லா...

    புக்ஃபேர் ஸ்பெசல்ஸ்...1
    சுஸ்கி விஸ்கி.. மிக நீண்ட காத்திருப்பு ஆகஸ்ட்டில் நிறைவேறப் போகது... உய்..உய்.

    ReplyDelete
  47. ஆஹா.... ஜாகோரு வர்றாரு ஆகஸ்ட்லயே ஜூப்பரு..

    ஆத்தீ அந்த செவ்விந்தயன் ஏன் அத்தனை வன்முறையை காட்டுறான்..

    கழுத்தை என்னவோ கீரை அறுப்பது போல....

    புதிதாய் ஓரு புயல்-- ஆகஸ்ட்க்கு இப்பவே எதிர பார்க்க வைக்கும் போலயே...

    ReplyDelete
  48. ஆல்ஃபா இம்முறை என்ன பண்றாருனு பார்ப்போம் முதல்ல...!

    போன இதழ்ல அஸ்ஸியா மாதிரி இப்ப ஏதாவது சில்க்கியா சிக்குதானு..!!!

    ReplyDelete
    Replies
    1. ஆல்ஃபா படித்து முடித்து விட்டேன். போன கதையை ஒப்பிடும் போது இந்த முறை ஜெட் வேகம் தான். அது மட்டுமின்றி இந்த முறை ஒரு அட்டகாசமான ஹீரோ வாக வலம் வருகிறார் ஆல்ஃபா. ஒரு சில டுவிஸ்ட் எல்லாம் எதிர்பாராதது.

      டபிள் கிராஸ், டிரிபிள் கிராஸ் என்று செம்மையாக போகிறது.

      எனது மதிப்பெண் 9/10.

      ஆல்ஃபா கண்டிப்பாக தொடர வேண்டும் சார்.

      Delete
    2. கதையின் ஆர்ட் work பற்றி கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும். அட்டகாசமாக ஜெர்மனி மற்றும் இதர நாடுகளை வரைந்து இருக்கிறார். ஓவியங்களை ரசிக்கவே நிறைய நேரம் எடுக்கிறது.

      Delete
  49. பொட்டி வந்துடுச்சி :-)

    ReplyDelete
    Replies
    1. நம்ம மூவருக்கும் 2வது நாள்தான் கிளம்புது போல...!!

      Delete
    2. இதுல ஏதாவது அயல்நாட்டு சதி இருக்குமோ...

      Delete
    3. அத எல்லாம் எதுக்கு யோசித்துகிட்டு, புத்தகங்கள் கிடைத்து விட்டது என சந்தோஷப்படுவோம்! சந்தோஷமாக வாசிப்போம் :-)

      Delete
  50. நானும் கைப்புள்ள ஜாக் தான் சொன்னேன்..2 days late ah solliten...
    மு. பாபு
    ஆத்தூர்

    ReplyDelete
  51. என்னோட comment load more வேற mattikichi..

    ReplyDelete
  52. புயலில் ஒரு புதையல் வேட்டை...


    வாவ்.. எந்த பகுதியும் இல்லாமல் முதல்பக்கத்தில் இருந்து கடைசிபக்கம் வரை ஒன்லி கதைப்பக்கம் மட்டுமே.அந்த முதல் பக்கத்தை ஆரம்பித்த விநாடியில் இருந்து அந்த கடைசிபக்கம் முடிக்கும் விநாடி வரை ஒரு மணிநேரம் விறுவிறுப்பு ,பரபரப்பு ,அதிரடி ,அட்டகாசம் என கலந்து கட்டி அசரடித்து விட்டது.

    அட்டைப்பட சித்திரத்தை முதலிடத்தில் கொண்டு வருவதா ,இல்லை உள்பக்க சித்திரங்களை முதலிடத்தில் கொண்டு வருவதா ,இல்லை வசன மொழிஆக்கத்தை முதலிடத்தில் கொண்டு வருவதா ஒன்றும் புரியவில்லை..அதென்னவோ எத்தனை டெக்ஸ் கதை படித்தாலும் அந்த வன்மேற்கில் நம்மையும் கட்டி போடுவதை இந்த டெக்ஸ்குழு நிறுத்தவே மாட்டேன் என்கிறார்கள் .

    ஒரு ..ஒரே ஒரு சில கதைகள் மெதுவாக நகர்வது (0.1 %) போல் தோற்றம் அளித்தாலும் அடுத்த அதிரடியில் அதனை மறக்கடித்து விட்டு மீண்டும் டெக்ஸை எதிர்நோக்க வைப்பதில் டெக்ஸ்க்கு நிகர் டெக்ஸே..


    சிறப்பு வெகு சிறப்பு இந்த புயலில் ஒரு புதையல்வேட்டை.

    ReplyDelete
  53. இந்த மாத இதழ்களில் எனது ரசனையின் படி முதல் வரிசை இடங்களை பிடிப்பவர்கள்

    முதலிடத்தில் டெக்ஸ்வில்லர் ( வழக்கம்போல் )

    இரண்டாம் இடத்தில்

    லக்கி ( டெக்ஸ்வில்லர் இம்மாதம் இல்லாமல் இருந்தால் இவரே முதலிடம் காமெடியில் இரு கதைகளும் இந்த முறை கலக்கி எடுத்து விட்டார்கள்.

    மூன்றாம் இடத்தில்

    ஆல்பா

    இது கதைவரிசை படியே ஆனால் சித்திரதரத்தில் ,அட்டைப்படத்த்தில் ,தயாரிப்பு தரத்தில் அனைவருமே முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

    அருமை அருமை அருமை..


    ****

    சார்... அப்புறம் தப்பா நினைக்க கூடாது..ஜூலையில் ஆகஸ்ட் எப்பொழுது சார்...?!

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை தலைவரே ஜூலையில் செப்டம்பர் கேட்காம போனிங்க...

      Delete
    2. // சார்... அப்புறம் தப்பா நினைக்க கூடாது..ஜூலையில் ஆகஸ்ட் எப்பொழுது சார்...?! // ஆமா தல எனது புத்தகங்களும் முடிந்தது. எப்போ அடுத்த செட் புத்தகங்கள் வரும்???

      Delete
  54. அதிகாலையில் ஆல்பா! படிச்சாச்சு!

    காலனின் காகிதம்...!

    சரவெடி ரகம்...! கிளைமாக்ஸ் மட்டும் சட்டென முடிந்த விட்டது..

    மற்றொருமொரு அதிரடி நாயகர்!
    தொடரும் கதைகளும் இதே பாணியில் இருந்தால் போரடித்து விடும்...!

    மார்க் : 7.5/10

    கடந்த மூன்று பாகம் சாசனம் பிரமாதமாக இருந்தது!

    ReplyDelete
  55. Zagor,சுஸ்கி விஸ்கி இரண்டும் புக்கிங் செய்யனுமா ?!
    எப்போது ?!

    ReplyDelete
  56. **** புத்தம் புது சிறையொன்று வேண்டும் ****

    எல்லாமே சரியாய் வாய்க்கப்பெற்ற ஒரு அக்மார்க் சிரிப்புச் சரவெடிக் கதை!

    ஆரம்பப் பக்கங்களில் மெல்லிய தள்ளாட்டத்தோடு தொடங்கும் விக்ரம் அரவிந்தின் (செனா அனா.. எப்படி தில்லா பேரைச் சொன்னேன் பாத்தீங்களா?!! இளவரசர்களுக்கே உரித்தான பிரத்யேக தில்லாக்கும்!) வசனங்கள், அதன்பிறகு இறுதிவரை நாற்கால் பாய்ச்சலில் ரகளையாய் பயணித்து வாய்விட்டுச் சிரிக்கவும் (விக்ரமுக்குள்ளே இப்படியொரு நகைச்சுவை உணர்வா என) ஆச்சரியப்படவும் வைக்கிறது!

    அந்த 'அன்பான' ஜட்ஜ் கேரக்டர் அபாரம்! 'செல்லக்குட்டி, வெல்லக்கட்டி, ஜுஜ்ஜுஜ்ஜு' என்று நம்மைக் கொஞ்சுபவர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருந்துவிட முடியாதென்பதையும், அவர்களில் ஒரு சிலர் உள்நோக்கத்தோடு செயல்படும் கபடவேடதாரிகளாக இருந்துவிட வாய்பிருக்கிறது என்பதையும் ஒரு வாழ்வியல் பாடமாக நமக்குச் சொல்கிறது இந்தக்கதை!

    லக்கியின் டாப்-ஹிட் கதைகளுள் ஒன்றாக, மறுக்கா மறுக்கா வாசித்திடும் கதைகளில் ஒன்றாக இருந்திடும்!

    10/10

    ReplyDelete
    Replies
    1. // எல்லாமே சரியாய் வாய்க்கப்பெற்ற ஒரு அக்மார்க் சிரிப்புச் சரவெடிக் கதை! //

      +1

      Delete
  57. Editor sir, whenwill be uyirai thedi release?

    ReplyDelete
  58. ஒரு காதல் யுத்தம் - சார் தயவு செய்து இந்த மாதிரி மரண மொக்க டெக்ஸ் கதைகளை போடா வேண்டாமே ப்ளீஸ்
    காதல் யுத்தம் ஒரு சாவு யுத்தம் for readers :(
    ஷிப்பிங் க்கு நல்ல box உபயோகிங்களேன் . இப்போ நீங்கள் அனுப்பும் பாக்குசுக்கு பதிலாக 5 ரூபாய் கொரியர் கவரிலேயே அனுப்பிவிடலாம் .

    ReplyDelete
    Replies
    1. ///நீங்கள் அனுப்பும் பாக்குசுக்கு பதிலாக 5 ரூபாய் கொரியர் கவரிலேயே அனுப்பிவிடலாம் .///

      இந்தமாசம் எனக்கு வந்திருந்த டப்பியும் வதவதவென்று வதங்கி, மூன்றில் இரண்டு புத்தகங்கள் முனை மடங்கி வந்திருந்தது.

      Delete
  59. புயலில் ஒரு புதையல் வேட்டை 🙋 பிரமாதம்!!!

    ReplyDelete
  60. எனக்கு ஒரு டவுட் - லயன் ஆண்டு மலர் ஒகே, ஆனால் அது என்ன லயன் & லக்கி ஆண்டு மலர், இந்த ஆண்டு லக்கிக்கு ஏதும் சிறப்பு ஆண்டா ? :-)

    ReplyDelete
    Replies
    1. ஆண்டுமலர்னா லக்கியை முன்னிலைப்படுத்தல் இருக்கணும்னு சில ஆண்டுகளாகவே லக்கி-ஆண்டுமலர் என வருகிறது....

      Delete
    2. லூட்டி வித் லக்கி-2018
      தி லக்கி ஆண்டுமலர்-2019
      லக்கி’s லயன் ஆண்டு மலர்-2020
      லயன் ஜாலி ஆண்டுமலர்-2021
      _-----இப்படி...

      Delete
    3. இந்த முறைதான் இதனை கவனித்தேன்! கடந்த வருடங்களில் வந்த ஆண்டு மலரில் இதனை சரியாக கவனிக்கவில்லை :-) விளக்கத்திற்கு நன்றி!

      Delete
  61. லயன் ஆண்டு மலர் படித்து விட்டேன்! இரண்டு கதைகளும் சிறப்பு! டால்டன்கள் வழக்கம் போல் சிரிப்பில் வயிற்றை பதம் பார்த்து விட்டார்கள்! ஆசிரியர் மிகவும் சரியான கதையை தேர்ந்தெடுத்து விக்ரமுக்கு கொடுத்து இருக்கிறார் அதனை விக்ரம் சரியாக பயன்படுத்தி உள்ளார்!

    நில் கவனி சிரி - டாக்டர் ஹாலிடேயின் இந்த கதையை படித்த பிறகுதான் விடாது வஞ்சம் முழுவதும் புரிந்து கொள்ள முடிந்தது! லக்கி கதைக்கு பின்னர் விடாது வஞ்சத்தை வெளி இட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் கதையை முழுமையாக புரிந்து கொள்ள! சில வசனங்கள் இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்கலாம்!

    லயன் ஆண்டு மலர் வழக்கம் போல் கலகல :-)

    ReplyDelete
    Replies
    1. ///ஆசிரியர் மிகவும் சரியான கதையை தேர்ந்தெடுத்து விக்ரமுக்கு கொடுத்து இருக்கிறார் அதனை விக்ரம் சரியாக பயன்படுத்தி உள்ளார்!///

      யெஸ்!!

      Delete
  62. காலனின் காகிதம் - கதை விறுவிறுப்பாக செல்கிறது ஒரு ரகசியத்தை சுற்றி, இதில் ஆல்பா என்ன செய்கிறார் என படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆக்ஷன் காட்சிகள் குறைவு தான், ஆனால் கதையை வேகமாக நகர்த்தி உள்ளார்கள்! சித்திரங்கள் நாம் போக முடியாத அல்லது போக விரும்பும் ஊர்களை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது , சபாஷ் ஓவியருக்கு! ஆனால் கதை விறுவிறுப்பாக செல்வதற்காக பல பல பிரேம், யார் யாருடைய ஆள் என்பதை மனதில் நிறுத்தி கொள்ள சிரமமாக உள்ளது; சில நேரம் எல்லோரையும் பார்க்க ஒன்றுபோல் தெரிகிறது! ஏர்போர்ட்டில் இறங்கும் ஆல்பா சரியாக எப்படி அந்த இடத்துக்கு செல்கிறார் என்பது எல்லாம் தமிழ் படத்தை தூக்கி சாப்பிடும் அளவுக்கு உள்ளது.

    ஆல்பா கடந்த கதை வசனங்கள் அதிகம் என்றாலும் ரசித்து படித்தேன்! ஆனால் இந்த முறை சாரி ஆல்பா.

    ReplyDelete
  63. Sinister 7 க்கு சில பெயர்கள்

    வஞ்சக இருளில் வலைமன்னன்.

    தானைத் தலைவனும் தறுதலைகள் எழுவரும்.

    வஞ்சகர் எழுவரும் வலை மன்னனும்

    வல்லவன் ஒருவன், வஞ்சகர் எழுவர்.

    தீயோர் எழுவர்

    எத்தர்கள் எண் 7

    விரியன்கள் எழுவர்

    விரியன்கள் வஞ்சத்தில் ஸ்பைடர்

    விரியன்களும் வலை மன்னனும்

    விரியன்கள் சதியும் தலைவனின் மதியும்

    ReplyDelete
    Replies
    1. // தானைத் தலைவனும் தறுதலைகள் எழுவரும். // :-)

      Delete
    2. மறுபடியுமா குமார்! பொன்னரசுவ சீண்டி பார்ப்பதே உங்க வேலையா போச்சு :-)

      Delete
    3. இன்னும் போட்டி முடியவில்லை

      Delete
    4. @KS

      எல்லாமே செம தலைப்புகள்!! குறிப்பாய் 'வஞ்சக இருளில் வலை மன்னன்' - அட்டகாசம்""

      Delete
    5. நன்றி நன்றி நண்பர்களே

      Delete
  64. பு.ஒ.பு.வே - பக்கம் 1- 25
    **************************
    அட்டகாசமான் அட்டைபடம், சிறப்பான் ஓவியம்ஸ் என சுண்டி இழுத்த புக்.
    வில்லன் அறிமுகம் - கர்னல் அஜானுபாஹுவாய் மிரட்டலாய் அடிமைகளை வைத்து வேலை வாங்கும் முதளாலி அவனுக்கு உதவும் உள்ளுரு நீதிபதி.
    அப்புறம் நம்ம ஹீரோ entry, 6 போக்கிரிகளை பின் தொடர்ந்து வற்றாங்க, எப்படி முடியும்ன்னுதான் நமக்கு தெரியாதா?!... எப்படா முடியும்ன்னு இருந்தது.

    போக போக எப்படி இருக்குன்னு பாப்போம்..

    ReplyDelete
  65. அதிகாலையில் அதிகாரி...!

    புயலில் ஒரு புதையல் வேட்டை...!

    150 பக்கங்களுக்கு வழக்கமான வள கொளகொள... ஆனால் புயல் வந்த பிறகான அடுத்த 70 பக்கங்கள் நல்ல வேகமெடுத்து கதையை சுவாரஸ்யம் ஆக்குகின்றன...!

    வழக்கமான அதிகாரிக்கு ஒரு வித்தியாசமான கதைக்களம்!

    மார்க் 8/10

    ReplyDelete
  66. இம்மாத காமிக்ஸ் மூன்றையும் படித்து முடித்து விட்டேன்.
    எனது வரிசை.
    1. டெக்ஸ் வில்லர்.
    புயலில் ஒரு புதையல் வேட்டை.
    புதையல் உண்டு.
    அதை தேடும் போது புயலும் உண்டு.
    சஸ்பென்ஸ் உண்டு.
    கதை. புதையலைத் தேடும் கதை. புதையலின் குறிப்பு எங்கு உள்ளது என்ற குறிப்பும் உண்டு. அது
    எவரிடமும்
    ஏன் உள்ளது?

    இதை டெக்ஸ் கார்ஸனுன் எப்படி துப்பு துவக்குகிறார் என்பது தான் கதை. படித்து இன்புறுங்கள்.

    2. லக்கி லூக்.
    டால்டன்கள் போலீஸுக்கு பயந்து ஓடுவார்கள்.
    இந்த கதையில் போலீஸீடம் சென்று சரணடைந்தாலும் கைது செய்யப்பட்டார்கள். ஏன்? ஏனென்று கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    இதிலே இன்னொரு கதை. ஓ. கே. கார்ல் ஒற்றைக்கு ஒற்றை தான் கதைகளம்.

    கேப்டன் டைகர்.
    டெக்ஸ் வில்லர்.
    இவங்க அதிரடி பாதையில் சொன்னதை லக்கி காமடி தோரணம் கட்டி சொல்லி இருப்பார்.

    3. ஆல்ஃபா.

    உலகம் சுற்றி பாக்கலாம். கதை
    ஏஜெண்ட்
    உளவுத்துறை
    அந்நிய நாட்டு தலையீடு
    ரகசியம்
    வெளியுறவுத் துறை
    என்று கலந்து கட்டி வழங்கப்பட்ட ஆக்ஷன் திரில்லர். படிக்க ஏற்றது.

    ReplyDelete
  67. புயலில் ஒரு புதையல் வேட்டை :-

    உலகநாயகன் நடித்த தசாவாதரம் படத்தின் கற்பனைக் கதையின் க்ளைமாக்ஸை.. உண்மையில் நடந்த இயற்கை சீற்ற சம்பவமான சுனாமியுடன் இணைத்து பின்னியிருப்பார்கள்..!

    அதே போல..
    The "Night of Horrors"..
    Galveston flood 1900..
    Galveston hurricane 1900..
    என்றெல்லாம் வரலாற்றில் பதியப்பட்ட.. நிஜத்தில் நடந்த இயற்கை சீற்றத்துடன் இந்த புயலில் ஒரு புதையல் வேட்டை எனும் கற்பனைக் கதையின் க்ளைமாக்ஸை பின்னிப் பிணைத்து அதகளப்படுத்தி இருக்கிறார்கள்.!

    அஃப்கோர்ஸ்.. டெக்ஸூம் கார்சனும் சேர்ந்து... கருப்பினர்களை அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்தும் கர்னல் மற்றும் அதற்கு துணை போகும் நீதிபதி.. இருவரின் மண்டையையும் உடைத்து மாவிளக்கு வைத்துவிடுவார்கள் என்பது எல்லோருக்கும்தான் தெரியும்.! அதை எத்தனை சுவாரஸ்யமாக செய்கிறார்கள் என்பதில்தானே வெற்றியின் ரகசியமே அடங்கி இருக்கிறது.!

    சின்ன சின்ன சுவாரஸ்ய திருப்பங்களும்.. விறுவிறுப்பான சம்பவக் கோர்வைகளும் கொண்ட இந்தக் கதைக்கு சித்திரங்கள் மிகப்பெரிய பலம்.!

    வழக்கமான கதைகளைப் போல புதையல் யாருக்கும் கிடைக்காமல் போய்விடுமென்று எதிர்பார்த்தால்.. அப்படி நடக்காமல் உரிய நபரான மிஸ் எலனோருக்கே கிடைக்கிறது.. இது கௌபாய் கதைகளில் வெகு அரிதான சம்பவம்.!

    டெக்ஸ் வில்லர் கதை வரிசையில் இன்னுமொரு வெற்றிப் படைப்பு..!

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான விமர்சனம் கண்ணா. இந்த விமர்சனம் கதையை விட நன்றாக இருக்கிறதே...

      Delete
    2. ///இந்த விமர்சனம் கதையை விட நன்றாக இருக்கிறதே...///

      😂😂😂😂 செம KS!

      Delete
  68. Edi Sir..
    இன்று ஏதேனும் பதிவு உண்டுங்களா ..

    ReplyDelete
  69. இந்தமாதம் இரண்டு மஞ்சச்சட்டக்காரங்களுக்கும்வில்லனாக வருவது ஜட்ஜ்கேரக்டர் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  70. இன்று பதிவுக்கிழமை ஆசிரியர் சார்.

    ReplyDelete
  71. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  72. இந்த ஆல்பாவுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமாவே இருக்கு.!

    படிக்கலாம்னு எடுப்பேன்.. ஆனா படிக்க மாட்டேன்.. திரும்ப எடுப்பேன்.. படிக்க மாட்டேன்.. திரும்ப எடுக்கப்போறேன்.... ஆராச்சும் செய்வினை செயப்பாட்டுவினைன்னு வெச்சிருந்தா எடுத்திடுங்க சுவாமீ.. மீ பாவம்..😊

    ReplyDelete
  73. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete