நண்பர்களே,
வணக்கம். நிறைய விதங்களில் செம சுவாரஸ்யமான வாரமிது - at least எனக்காவது !! (பெண்டு கழன்று வரும் நம்மவர்கள் வேறு மாதிரியாய் இந்த வாரத்தை வர்ணிக்கக்கூடும் தான் !!) பெருசாய் ஒரு பட்டியலுடன் ; ஒரு வண்டிப் பணிகள் தொங்கலில் நின்று கொண்டிருந்ததைப் பற்றி 2 வாரங்களுக்கு முன்பாய் மூக்காலே அழுதிருந்தது நினைவிருக்கலாம் !! Surprise ...surprise ....கார்சனின் மேஜையில் பரிமாறப்பட்ட சுக்கா ரோஸ்ட்டைப் போல பணிகளை ஒவ்வொன்றாய் 'டிக்' அடித்துக் கொண்டே போக இந்த வாரத்தினில் சாத்தியமானது !! And நம்பச் சிரமமாக இருந்தாலும் - 80 சதவிகித மலையைத் தாண்டியாச்சு என்பதே நிலவரம் !! To start off - 'தல' !!
மௌன நகரம் !! ரொம்ப காலமாய், ரொம்பவாட்டி சொல்லியிருக்கும் சமாச்சாரம் தான் ; ஆனால் yet again ஒப்பிப்பதைத் தவிர்க்க முடிலீங்கோ ! இத்தாலியக் கதாசிரியர்களுக்கும், நமது தமிழ் சினிமாக்களின் கதைப் பார்ட்டிக்களுக்கும் நிச்சயமாய் ஏதோவொரு தனிப்பட்ட டெலிபதி அலைவரிசை இருக்க வேணுமென்பேன் ! இங்கே நாம் பார்க்கும் சமாச்சாரங்களின் சாயல்கள் அடிக்கடி அங்கே, நம்ம தல ஆல்பங்களில் தென்படுவதும், அங்கு தெறிக்க விடும் அனல்களின் பிரதிபலிப்புகள் நம்மூரில் வெள்ளித்திரையினில் தெரிவதும் இப்போதெல்லாம் சகஜம் என்றாகி விட்டது ! அதை ஊர்ஜிதம் செய்கிறது, இதோ இம்மாதத்து டெக்ஸ் த்ரில்லரான "மௌன நகரம்" ! இன்னமும் இதன் மீதான பணிகள் முடியவில்லை தான் ; இன்னுமொரு 60 பக்கங்களாவது எழுத வேண்டிக்கிடக்கிறது தான் ; ஆனால் அதற்குள்ளாய் எனக்கு நினைவுக்கு வந்திருக்கும் தமிழ் திரைப்படங்கள் 2 ! Maybe இந்த புக் வெளியான பிற்பாடு, எனக்குத் தெரிந்திருக்கா இன்னும் சில படங்கள் கூட உங்களுக்கு ஞாபகங்களுக்கு வரலாமோ - என்னவோ ! இதோ - ஆகஸ்டில் உங்களோடு அன்னம், தண்ணீர் புழங்கக் காத்திருக்கும் இரவுக்கழுகாரின் அட்டைப்பட முதல் பார்வை :
போனெல்லியின் அட்டைப்படங்களில் 'தல' தரும் போஸ்கள் ஒவ்வொன்றுமே ஹாலிவுட் ரேஞ் என்பதில் no secrets ! என்ன - அவர்களது வண்ணக் கலவை பாணிகள் சற்றே தட்டையாய் இருப்பதுண்டு ! ஆனால் நமக்கோ சினிமா போஸ்டர்கள் சாயல்களில் சும்மா 'பச்சக்' பச்சக்' என்று மனதில் ஒட்டிக் கொள்ளும் வர்ணமயமான டிசைன்களில் தான் நாட்டம் எனும் போது அவற்றை மறுபடியும் வரைய முனைவதுண்டு ! And இம்முறையும் அதுவே நடைமுறை !! இதோ - நமது சென்னை டிஜிட்டல் ஓவியர் உருவாக்கியிருக்கும் டிசைனுக்கு base ஆன போனெல்லி அட்டைப்படம் இதுவே :
அவருமே அட்சர சுத்தமாய்ப் போட்டுத் தாக்கி அனுப்பிய டிசைன் இதோ - இது தான் :
'பளிச்' என்று இருந்தாலுமே - 'தல' தலைக்குக் கொஞ்சம் எர்வாமாட்டின் தேய்க்க வேண்டியிருப்பது போல் பட்டது ! ஏற்கனவே வர்ணங்களில், சின்னச் சின்ன பின்னணித் திருத்தங்களில் நிறையவே அவரைக் குடலை உருவி முடித்திருந்தோம் எனும் போது மண்டையை மேற்கொண்டு டிங்கரிங் பார்க்கச் சொல்லிக் கோரிட மனசு கேட்கலை ! ரைட்டு, என்றபடிக்கு கோகிலாவிடம் டிசைனை ஒப்படைத்து 'தாண்டுறா ராமா...ஆடுறா ராமா !' என்று பழகிப் போன சர்க்கஸ்களை செய்யப் பணித்தேன் ! இறுதியாய் செய்த மாற்றங்களோடு தல தக தகவென மின்னிய போது தான் திருப்தியாய் இருந்தது ! Of course - உங்களின் கலைக்கண்ணோட்டங்கள் மாறுபடலாம் தான் ; ஆனால் எனக்கு, மாலையப்பனின் ஆரம்ப நாட்களின் பாணியில் இருப்பதாய்ப் பட்டது !!
கதையைப் பொறுத்தவரைக்கும் உலகை உலுக்கும் புது template கிடையாது தான் ; but சின்னதொரு அத்துவான நகரில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் ரொம்பவே விறு விறுப்பாய் இருப்பதாகப் பட்டது ! கதாசிரியர் Ruju & புது ஓவியரின் கைவண்ணத்தில் செம crisp ஆக ஓட்டமெடுக்கிறது ! இதோ - உட்பக்க preview :
ரக ரகமாய், வித விதமாய் முந்திரி, ஏலக்காய் ; கிஸ்மிஸ் என்று போட்டு எத்தனை பாயாசங்கள் கிண்டினாலும் மாதத்தின் ஆயாசம் போக்கும் திறன் இந்த டாப் நாயகருக்கே என்பதை ஸ்லீப்பர் செல்களே ஒத்துக்க கொள்வர் ! Going to be no different this time too !
Moving on, ஒரு குடும்பஸ்தனின் அல்லல்களை தெறிக்கச் செய்யும் கற்பனைகளோடு கலந்து கட்டியடித்திருக்கும் ஜாம்பவான் வான் ஹாமின் "தோர்கல்" !! நினைவைப் பறித்துக் கொண்டனர் கடவுளர் ; ஷை-கான் என்ற பெயருடன் க்றிஸ் ஆப் வல்நாருடன் செம டாவடித்தபடிக்கே கடற்கொள்ளையனாய் காலத்தை ஒட்டி வருகிறான் மனுஷன் ! மனைவி ஆரிஷியாவோ, குழந்தைகள் ஒநாய்க்குட்டி, மற்றும் ஜோலனுடன் நாடுகடத்தப்பட்டு தத்தளித்து வருகிறார் !! உச்சக்கட்டமாய் நம்ம XIII பாணியில் தன் சுயத்தையே மறந்து போயிருக்கும் தோர்கலின் தீவிலேயே ஆரிஷியாவும் சேவகம் செய்யும் கொடுமை நிகழ, தொடரும் காலகட்டத்து நிகழ்வுகளே - "கூண்டிலோரு கணவன்" !! 2 அத்தியாயங்கள் கொண்ட ஆல்பமிது - தனித்தனிக் கதைகளாய் வாசிக்கவும் செய்திடலாம் ; அந்த "ஷைகான்" சுற்றின் சங்கிலித்தொடராகவும் பார்த்திடலாம் ! பல்லடத்துப் பக்கமாய் தோர்கலுக்குச் சிலை வைக்க இடம் தேடிக்கொண்டிருக்கும் நமது சரவணகுமார் சாரின் முன்கதைச் சுருக்கத்தோடு as always வண்ணத்தில் மிளிரவுள்ள ஆல்பத்தின் முதல் பார்வை இதோ :
முன்னும் பின்னுமே ஒரிஜினல் டிசைன்களே - இக்ளியூண்டு மெருகூட்டல்களோடு !! உபயம் : கோகிலா ! And கதையின் மொழிபெயர்ப்புப் பணிகளை கருணையானந்தம் அவர்கள் வழக்கம் போல் கையாண்டிருக்க, மாமூலான மாற்றி எழுதும் படலங்கள் மாத்திரமே என் வேலையானது ! தோர்கல் தொடரின் ஸ்கிரிப்ட், க்ளாஸிக் பாணியில் இருப்பினும், ஆங்கிலத்தில் CINEBOOK இதற்கெனச் செய்திருக்கும் மொழியாக்கம் வேறொரு உச்சம் ! நீள நீளமான வாக்கியங்களில் அவர்கள் அடைத்திருக்கும் விஷயங்களையும், ஸ்டைல்களையும் தமிழில் பிரதிபலிக்கச் செய்யத் தவறினால் வாசிப்பினில் நிச்சயமாய் ஒரு சிறு நெருடல் நேரக்கூடும் என்பது எனது அபிப்பிராயம் ! So அத்தகைய இடங்களைக் கணிசமாகவே மாற்றி எழுத 2 நாட்களைச் செலவிட, தோர்கலார் புதன்வாக்கில் அச்சுக்கு ரெடியாகி விட்டார் ! இதோ - உட்பக்க previews - 2 கதைகளிலிருந்துமே :
தோர்கலை நிறைவுக்குக் கொணர்ந்த கையோடு, கைப்புள்ள ஜாக் ! கார்ட்டூன் ; குட்டி நாயகன் ; புது வரவு ; பரிச்சயமான வன்மேற்கு - இது போதாதா இந்தப் 16 பக்க இதழை மின்னலாய் போட்டுத்தாக்க ? இதோ - நண்பர் சூட்டிய பெயருடன் LOSER JACK - தமிழில் :
Next in line - நம்ம மாண்ட்ரேக் ஸ்பெஷல் இதழுடன் விலையில்லா இணைப்பாய் வந்திடவுள்ள குட்டி புக்கின் பணிகள் ! சின்ன புக் என்றாலும் இந்த நாயகருக்குப் பேனா பிடிப்பது நாக்கைக் கொண்டு தெருவைச் சுத்தம் செய்வதற்குச் சமானம் என்பேன் simply becos ஒரிஜினலின் அசாத்திய ஸ்டைல் அத்தகையது ! வியாழன் இரவின் முக்கால்வாசியினை இந்த அதிரடிக்காரருடன் செலவிட்டதால் bingo - அவருமே நாளை அச்சுக்குச் செல்லத் தயாராகி வருகிறார் ! அவர் யார் என்பதை மட்டும் கூரியர் டப்பிக்களைப் பிரிக்கும் தருணத்தில் நீங்களே பார்த்துக் கொள்ளுங்களேன் !
So ஆகஸ்டின் (ரெகுலர்) அத்தியாயத்தை கரை சேர்க்க புனித மனிடோ மகத்தாய் உதவியிருக்க, இதோ - இனி தடத்தில் இடம்பிடித்திடா ஸ்பெஷல் இதழ்களுக்குள் கவனங்களை செலுத்த வேண்டியது தான் !! அதற்கு முன்பாய் 2023 அட்டவணை சார்ந்த பணிகளுக்குள் கொஞ்சமாய்ப் புகுந்தால் - எனது வெள்ளிக்கிழமையினை வெளிச்சமாக்க, 2 புதுத் தொடர்கள் கண்ணில்பட்டன ! இரண்டுமே நமக்கு நிரம்பப் பிடிக்கும் ஜானர்கள் என்ற உடனே ஆர்வத்தை அடக்க முடியலை ; குறுக்கும், நெடுக்குமாய் மின்னஞ்சல்களை அனுப்பி, நமது கோரிக்கையினை முன்வைத்துள்ளோம் ! ஐரோப்பாவில் தற்சமயமாய் கோடை கொளுத்தோ கொளுத்தென்று போட்டுத் தாக்கிவருவதால் - நிறைய பேர் விடுமுறைகளில் உள்ளனர் ! So நாளைக்கே பதிலும், ஒப்புதல்களும் கிடைத்து விடுமென்று சொல்ல மாட்டேன் ; ஆனால் whenever it comes - இந்த 2 தொடர்களுமே நமது அட்டவணைக்குள் automatic தேர்வுகளாகிடுவது சர்வ நிச்சயம் !! புதுசைக் கண்ட உடனே சாமியாடியாச்சு ; ஆனால் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டிருந்த அட்டவணையிலிருந்து குறைந்தபட்சமாய் 2 ஸ்லாட்களை கழற்றி விட்டால் தான் புதியவர்களுக்கு இடம் தர இயலும் என்ற நிதரிசனம் முன்னிற்கிறது ! 'கோட்டை அழி...கோடு பூராத்தையும் அழி...பரோட்டா முதல்லேர்ந்து சாப்பிடலாம் !" என்ற கதையாக ஆரம்பிச்சாச்சு கூத்துக்களை !
இந்த நொடியில் உங்களுக்கான கேள்விகள் guys :
1. ஸ்டைலிஷ் நாயகர் ALPHA ; அது தானுங்க, அஸ்ஸியா டோங்கோவாவை காதலிக்கும் பணியோடு களமிறங்கிய புது ஏஜெண்ட் ......! இம்மாதத்துக் "காலனின் காகிதம்" பாணியில் இவரது அடுத்த ஆல்பமும் ஒரு பரபரப்பான ஒன் ஷாட் ஆல்பமே ! 2023-க்கு இவ்ருக்கு ஒரு டிக்கெட் வழங்கிடலாமா ? அல்லது ஒரேடியாய் டிக்கெட் தந்து ஊட்டுக்கு அனுப்பிடணுமா ? FFS இதழின் முப்பாக சாகசத்தினையும், இம்மாதத்து சிங்கிள் ஆல்பத்தினையும் வாசித்திருக்கும் நண்பர்களே - உங்களின் பதில்கள் மட்டும் ப்ளீஸ் ?
2. இந்த வாரத்தின் எனது சுவாரஸ்யங்களின் உச்சமே - தாத்தாஸ் பட்டாளத்தின் இரண்டாம் ஆல்பத்தின் மொழிபெயர்ப்புப் படலமே ! "அந்தியும் அழகே.." (முதல் ஆல்பம்) ரொம்பவே intense என்று கருதினால், இந்த இரண்டாம் பாகம் செம முரட்டு கதைக்களம் ! கூகுள் துணையும், கணிசமாய்ப் பொறுமையும் இல்லாங்காட்டி இந்தப் பல்போன தாதாக்களை சமாளிப்பதற்குள் நம்ம பல்லு-கில்லெல்லாம் ஆடிப் போய்விடும் என்பதை இம்முறையும் உணர முடிந்தது ! முதல் பாகத்தை கைக்கெட்டும் தொலைவிலேயே வைத்துக் கொண்டு - அதிலிருந்த அதே 'எவனா இருந்தா எனெக்கென்ன ?' பாணியினில் இதன் பணிகளை வெள்ளியிரவு பூர்த்தி செய்தேன் ! அந்த நொடியில் உங்களிடம் கேட்க வேண்டுமென்று எனக்குத் தோன்றிய கேள்வி இதுவே :
இந்தத் தொடரானது நாமெல்லாம் நினைத்திருப்பதைக் காட்டிலும் (or maybe நான் நினைத்திருந்ததைக் காட்டிலும்) செம அழுத்தமானது ; ஆழமானது ! கதாசிரியர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கி.நா. கியர்களை மேலே மேலே ஏற்றிச் செல்வது அப்பட்டமாய்ப் புரிகிறது ! "வித்தியாச வாசிப்பு" என்பதற்கு இவர்கள் ஒரு அடையாளமாய்த் தொடரட்டுமா 2023-ல் ? அல்லது இவர்களை ரெகுலர் தடத்தினில் அல்லாது நகற்றிடல் நலமா ? என்பதே உங்களுக்கான கேள்வி ! Given a choice - நம்ம பொம்ம புக் உலகினில் இந்த "என்றும் மார்க்கண்டேயர்கள்" தவறாது இடம்பிடிக்க வேண்டுமென்பதே எனது அவாவாக இருந்திடும் ! ஆனால் இவர்களோடு பொழுதுகளைக் கழிக்க உங்களின் மத்தியிலான யூத்களுக்கு நேரம் ஒதுக்கிட இயலுமா ? என்ற கேள்விக்கு பதிலை உங்களிடமிருந்தே தெரிந்து கொள்ள விழைகிறேன் !!
- ALPHA - IN என்றோ ALPHA - OUT என்றோ முதல் கேள்விக்கு பதிலும் ;
- தாத்தாஸ் - IN என்றோ தாத்தாஸ் - SIDETRACK என்றோ இரண்டாம் கேள்விக்கும் பதில் தந்திட்டால் எனது தீர்மானங்களுக்கு உதவிடும் folks !!
And please note : ALPHA....தாத்தாஸ் இரு தொடர்களையும் நீங்கள் வாசித்திருந்தால் மட்டுமே கருத்துக்களைப் பதில்களாக்கிடக் கோருகிறேன் ! சும்மாவாச்சும், எங்கோ க்ரூப்பிலோ ; FB-யிலோ யாராச்சும் ஆத்தியிருந்த கதையைக் காதில் வாங்கியபடிக்கே சொல்லிடும் அபிப்பிராயங்கள் நமக்கு பயன்கள் நல்கிடாது ! So ப்ளீஸ் guys !!
ரைட்டு...ZAGOR பணிகள் + தல குறைபடிப் பக்கங்களுக்குள் புகுந்திடக் கிளம்புகிறேன் !
கோவையில் புத்தக விழாவினில் நேற்றைய தினம் மெதுவான ஆரம்பம் என்றாலும், இன்றைக்கு தெறி மாஸ் !! எஞ்சியிருக்கும் 10 நாட்களுமே இதே அனல்வேகம் தொடர்ந்திட புனித மனிடோவும், கோவைக்காரவுகளும் மனம் வைப்பார்களாக !!
Bye all ...see you around !! Have a fun weekend !!
P.S : "சுஸ்கி & விஸ்கி" முன்பதிவுகளுக்கும் மறந்து விடாதீர்கள் - ப்ளீஸ் :
https://lion-muthucomics.com/special-release/961-prebooking-for-suske-wiske-special.html
வணக்கம் நண்பர்களே...
ReplyDeleteஅட டே பர்ஸ்ட்டா நண்பா..வாழ்த்துக்கள்...💐💐💐💐💐
Delete2 nd
ReplyDeleteFirst 2 entries from Theni District
ReplyDeleteஆஜர்
ReplyDeleteJust miss 5th
ReplyDeleteTop 10?
ReplyDeleteEdi Sir..
ReplyDeleteHappy Saturday evening..😆
நானே நானே
ReplyDelete4லே தானே.....
ALPHA -IN
ReplyDeleteதாத்தாஸ் - SIDETRACK
ஆல்பா : கிட்டத்தட்ட சம காலத்திய
Deleteகருக்களை கையாள்கிறது.
கதை சொல்லும் யுக்தி நவீனமானது.
சிக்கலான கதை சொல்லும் பாணி
சித்திரங்கள் மேல் அழுத்தமான பார்வையை விழச் செய்கிறது.
சில அயல்நாட்டு பெயர்களும், முகங்களும் குழப்பமான நிலைக்கு இட்டுச் செல்வது போல் தோன்றினாலும் ஆழமாக ஊன்றி படித்தாலே இந்நிலை விலகும்.
எனவே ஆல்பா தேவை.
தாத்தாஸ்
கதைத் தொடரின் 'இன்டென்ஸிட்டி"
அதிகரித்தால் மெயின் லேனில் இருந்து விலக்கி matured readers - க்கு
என ஒதுக்கி விடுவது உத்தமம்.
பின்னாளில் எழலாம் எனக் கூடிய
சர்ச்சைகளை தவிர்க்க இது உதவக் கூடும்
என்னை ஈர்ப்பதே அந்தக் கதைகளில் அதிகரிக்கும் intensity தான் சார் !
Deleteநம் மத்தியில் விடலைகளோ, இளசுகளோ சொற்பம் என்பது நிதரிசனம். குறைந்தபட்சமாக நாமொரு 30+ audience என்று தாராளமாய் ; தைரியமாய்ச் சொல்லிக்கொள்ளலாம் ! அவ்விதமிருக்க, மிகையின்றி, இம்மி கூட யதார்த்த மீறல்களின்றிப் பயணிக்கும் ஒரு தொடரை "சர்ச்சைகள்" என்ற மூ.ச.மேட்டருக்காக ஓரமாய்ப் பயணிக்கச் செய்யணுமா ? என்பது தான் நெருடுகிறது ! அதுவும் ஆண்டுக்கு ஒரேயொரு ஆல்பத்தில் தலைகாட்டக் கூடியதொரு தொடரிது எனும் போது இதன் வீரியத்தைச் சமாளிக்கும் பக்குவம் நமக்குக் குறைச்சல் என்றெல்லாம் நம்பிட மனம் மறுக்கிறது சார் !
கொடியில் காய்ந்து கொண்டிருந்த பழைய ஜாக்கியைக் காணோம் என்றால் கூட மூ.ச.க்கு இட்டுப் போக ஒரு அணி கச்சை கட்டுவதையெல்லாம் பார்த்துப் பழகிடுச்சு ; so that stops being a factor to influence the decision making !
வாசிக்கும் / விமர்சிக்கும் ஒவ்வொருவரையும் பானைச் சோற்றின் பதமாக எடுத்துக் கொண்டு, அவர்களின் அபிப்பிராயங்களை பிரதானமாக்கிக் கொள்வோம் சார் ! உங்க வோட்டு தாத்தாஸ் IN என்று சேர்த்துக்குவோம் ! End of the day - let the majority prevail !
11th
ReplyDeleteவணக்கம் 🙏 ஐயா
ReplyDeleteஆல்பா வேண்டும். தாத்தா எப்போதும் வேண்டாம்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி. முழுவதும் படித்து விட்டு வருகிறேன்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteடெக்ஸ் அட்டைப்படம் சூப்பர். சும்மா ஜாலிக்கு:- யாருப்பா அது தல'க்கு அடியில் நெருப்பை வைத்தது:-)
ReplyDeleteஉள்ளேன் ஐயா... படிச்சிட்டு வர்றேன்
ReplyDeleteதாத்தாஸ் - IN
ReplyDeleteமெயின் டிராக் :-)
DeleteAlpha in thathas sidetrack
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஅன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteஆல்பா -in
தாத்தாஸ் - sidetrack
ஆல்பா - முதல் கதை தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. வசனங்கள் அதிகம் இருப்பதாக படிக்கும் போது தோன்றியது ஆனால் அது கதையை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது.
ReplyDeleteகாலனின் காகிதம் பர பர வென்று போனது ஆனால் அழுத்தமான காட்சி அமைப்புகள் இல்லை. யார் எந்த குழுவை சேர்ந்தவர்கள் என ஓவியத்தில் தெளிவு இல்லை.
ஆல்ஃபா தொடரலாம் முடிந்தால் இரண்டு பாகங்களாக உள்ள கதையை அடுத்த வருடம் கொடுங்கள்.
Alpha IN
ReplyDeleteGrandpas IN as well
வணக்கம் காமிக்ஸ் உறவுகளே.
ReplyDeleteஎன்னைப்பொறுத்தவரை ஆல்பா நன்றாக இருக்கிறது.
அதனால்
ALPHA. IN.
தாத்தாஸ் இன்னொரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.
அதனால்
தாத்தாஸ் IN.
தோர்கல் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருவது போல் தெரிகிறது. ஆவலுடன் எங்கள் குடும்பத்துடன் காத்திருக்கிறேன். இரண்டு ஆல்பங்கள் டபூள் கொண்டாட்டம் இந்த முறை எங்களுக்கு.
ReplyDeleteபோட்டுத் தாக்குங்க சார் !
Delete//போட்டுத் தாக்குங்க சார் !//
Deleteநிச்சயமாங்க சார்...
கண்டிப்பாக:-)
Deleteடெக்ஸ் அட்டைப்படம் பிரமாதம்... மனதை கொள்ளை கொள்கிறது.
ReplyDeleteAlpha - IN
DeleteGrandpas -IN
அந்த க்ளாஸிக் மாலையப்பன் ஸ்டைல் ஆதி !
Deleteஆல்பா - உள்ளே & தாத்தா - ஒரமாக வரட்டும்
ReplyDelete80 சதவீத பணிகளை முடித்து புத்தகங்களை தயார் செய்து உள்ள உங்களுக்கு பாராட்டுக்கள். இவைகளை ரெடி செய்ய நீங்கள் அடித்த கூத்துக்கள் இந்த முறை சொல்லவில்லை என்றாலும் ஒரு இமாலய பணியை முடித்து உள்ளீர்கள் சார். அதுவும் இந்த முறை ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகை. உங்கள் காமிக்ஸ் காதல் வாழ்க.
ReplyDeleteவிடுமுறைகள் முழுக்க ஊர் சுற்றிவிட்டு, ஸ்கூல் ஆரம்பிப்பதற்கு முந்தைய நாள் உட்கார்ந்து மாங்கு மாங்கென்று assignment களை எழுதும் பசங்க மாதிரியாகிப் போச்சு சார் நம்ம பிழைப்பு ! நாட்கள் நெருங்கிடும் போது தான் எஞ்சின் பாய்லர் சூடு பிடிக்கிறது !
Deleteகடைசி நேரத்தில் மாங்கு மாங்கு என்று எழுதினாலும் முழு அர்ப்பணிப்புடன் நீங்கள் செய்வது எங்களுக்கு சிறப்பான காமிக்ஸ் வாசிப்பு அனுபவத்தை ஒவ்வொரு முறையும் தருகிறது சார்.
DeleteAlpha - IN,
ReplyDeleteதாத்தாஸ் - IN
Alpha In
ReplyDeleteThathas Sidetrack
ஆல்பா In
ReplyDeleteதாத்தா 🤔🤔🤔
ஆல்பா சுமார் தான். எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. தாத்தாஸ் நல்லா இருந்தாங்க. 2வது புக் வந்ததான் தாத்தா ஓகேவா இல்லையான்னு தெரியும்
ReplyDeleteசெப்டெம்பரில் தாத்தாக்கள் ஆஜராகிடுவர் நண்பரே !
Deleteஐ சூப்பர்
DeleteAlpha - Out
ReplyDeleteசமகால (நவீன கணினி கால) கதைகளில் 25 ஆண்டுகள் முன்பு என்பது 100 ஆண்டுகள் பழமைக்கு சமம் தான்...!
Alpha 90களில் படித்திருந்தால் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்...!
இப்போது ஒட்ட முடியவில்லை...!
தாத்தாஸ் - In (No doubt)
ஆல்பா துவங்கியது '90 களில், ஆனால் இன்று வரைக்கும் தொடர்ந்து வரும் தொடர் சார் !
DeleteTex is looking good and far better than original
ReplyDelete:-)
Delete36
ReplyDeleteவந்துட்டேன். கொஞ்சம் லேட் ஆ வந்துட்டேன்
ReplyDeleteபுதிய கதைகளுக்கு கண்டிப்பாக இடம் தேவை என்றால் மட்டும் ஆல்பா out
ReplyDeleteதத்தாஸ் எனக்கு பிடித்திருந்தாலும் எதிர்ப்பு குரல்களும் இருந்ததாக நினைவு ஆகையால் அவர் தேவைபட்டால் வாங்கிக்கொள்ளும் வகையில் இருந்தால் நன்றாக இருக்கும்.
டெக்ஸ் அட்டைப்படம் அந்த இரவு நேரத்தை நமது அட்டை நன்றாக எடுத்துக்கொடுக்கிறது.
Zagor முன்பதிவு பற்றிய செய்தி அடுத்த வார பதிவில் இருக்குமா சார்.
மாயாவியில் ஆரம்பித்து, மாடஸ்டி வரைக்கும் எதிர்ப்புக் குரல்கள் பார்த்திரா நாயக / நாயகியர் யார் தான் உள்ளனர் கிருஷ்ணா ? அட, நம்ம "பீன்ஸ்கொடியில் ஜாக்" கூட கண்டனங்களைச் சந்தித்த இதழ் தானே ?
Deleteவாசிக்கும் ஒவ்வொருவரின் எண்ணப்பிரதிபலிப்புகளே எனது தீர்மானங்களின் முதுகெலும்புகள் என்பதால் உங்களின் வோட்டை
"தாத்தாஸ் IN" கட்சியில் எடுத்துக் கொள்கிறேன் !
Edi Sir..
ReplyDeleteஎன் பால்ய சினேகிதர் மாஜிக் மாண்ட்ரேக்குடன் வர உள்ள விலையில்லா Suspense ஹீரோ(யினி)..க்காக ஆவலுடன் வெயிட்டிங்..
"யினி"லாம் இல்லீங்க ; "ரோ" தான் !
DeleteEdi Sir..
ReplyDeleteஆல்ஃபா & தாத்தாஸ்.. ரெண்டு பேரையும் Side track ல வைச்சுட்டு,
புது track ல, புது ஆளுங்க ரெண்டு பேரை கொண்டாங்க..
Performance பாத்துட்டு முடிவு எடுத்துக்கலாம்..
Edi Sir..
ReplyDelete*Zogar*.. முன்பதிவுக்காக ஆவலுடன் வெயிட்டிங் .
சீக்கிரம் அறிவிப்பு கொடுங்க..
நல்ல வேளை எங்கே Zagor வராம போய்டுமோ என்று நினைத்தேன். வெற்றி வெற்றி
Deleteஅது எப்புடி வராமப் போவாரு ?
Deleteஇந்த மாச பட்ஜெட் ஏஜெண்ட்களுக்கு எக்குத்தப்பாய் உதைக்க வேண்டாமே என்பதால் தான் ஆகஸ்டின் ரெகுலர் இதழ்களின் ஜோதியில் புதியவரைக் கலக்கச் செய்யவில்லை ! ZAGOR வருவார் - ஆகஸ்டின் பிற்பகுதியினில் !
இந்த வருடம் எல்லா அட்டைப்படங்களுமே அட்டகாசம்.. அதிலும் குறிப்பாக டெக்ஸ்.
ReplyDeleteஆல்பா கண்டிப்பாக in.
தாத்தாஸ் இன். ஒரு வேளை மெயின் ட்ராக் இல்லாவிட்டாலும் , ஏதேனும் ஒரு வழியில். Long Run இல் நிச்சயமாக நமது பெயர் சொல்லும் படைப்பாக இருக்கும். But again end of the day it is also a business sir. We respect your decision.
Waiting for Zagor updates Sir.
//Long Run இல் நிச்சயமாக நமது பெயர் சொல்லும் படைப்பாக இருக்கும்//
DeleteMy thoughts too sir....ஆனால் நண்பர்களின் அபிப்பிராயங்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போமே !
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteAlpha in
ReplyDeleteThathas sidetrack
ஆகஸ்ட் மாதம் புத்தக மழை பொழியப் போவதால் கொஞ்சம் முன்கூட்டியே இதழ்களை அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது...
ReplyDeleteஇந்த ஒருமுறை நானும் உங்க கட்சி ரவி!
Deleteஆமா சார் முதல் பேட்ஜ் இந்த வார மத்தியில அனுப்பிவிடலாம்.....!!!
'தல' மட்டும் பூர்த்தியாகணும் !
Delete// இந்த ஒருமுறை நானும் உங்க கட்சி ரவி! //
Deleteவருக,வருக...
// 'தல' மட்டும் பூர்த்தியாகணும் ! //
சீக்கிரம் சட்டுபுட்டுனு தலைக்கு மேக்கப்பை போட்டு அனுப்புங்க சார்...
1. ALPHA - IN (Single Shot)
ReplyDelete2. தாத்தாஸ் - SIDETRACK.
அண்ணன் எவ்வழியோ தம்பியும் அவ்வழியே
DeleteAlpha - In
ReplyDeleteதாத்தாஸ் - கண்டிப்பாக IN
ஆல்பா - காலனின் காகிதம்
இரு பக்கம் படித்தேன் அப்புறம் படிக்கலாம் என்று மூடினேன், இரண்டு நிமிடம் தான், திரும்ப இரண்டு பக்கம்..இப்படியாக ஒரே சிட்டிங்கில் படித்து முடித்துவிட்டேன். East Berlinன் ரஸ்யன் காமண்டர் மற்றும் ஆல்பாதவிற மற்றவர்கள் யார் யார் எந்த ஊர்காரர்கள் என்று நியாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை, ஆணால் விறுவிறுப்பாக சென்றது. இன்னோரு வாய்ப்பு கண்டிப்பாக கொடுக்களாம்.
ஹை..DP-லே அதுக்குள்ளாற கை.பு.ஜா. வா ?
DeleteALPHA -IN
ReplyDeleteதாத்தாஸ் - SIDETRACK
(ஆல்பா - காலனின் காகிதம் Going on.. இருந்தாலும் IN என்பது ஸ்ட்ராங்கான முடிவுதான் சார்.!)
ஏனுங்கோ.. இந்த மாச ஆல்பாவை அரை அவருக்குள்ளே ரெண்டுவாட்டி படிச்சுப்புடலாம் ; நீங்க எத்தினி நாளா படம் ஓட்டிட்டு இருக்கீங்க ?
Deleteஅவரு அந்த ஜெர்மன் காரன் வொய்ஃப்பை சைட் அடிச்சிகிட்டு இருக்காருங்க சார்.....!!😉
Deleteஅஃப்கோகோர்சுங்க...😜
Delete// 2 புதுத் தொடர்கள் கண்ணில்பட்டன ! இரண்டுமே நமக்கு நிரம்பப் பிடிக்கும் ஜானர்கள் என்ற உடனே ஆர்வத்தை அடக்க முடியலை //
ReplyDeleteஇழுத்து போடுங்க உள்ளே...!!!
போடுங்க போடுங்க
Deleteஆமா போட்டு வுடுங்க...
Deleteஇழுத்துப்புடுவோம் ; இன்னும் தான் நேரம் இருக்குல்லே !!
Delete// தோர்கலார் புதன்வாக்கில் அச்சுக்கு ரெடியாகி விட்டார் ! //
ReplyDeleteமாய உலகத்தில் உலாவ காத்திருக்கிறேன்...
எங்க தலைய பார்த்து ஒரு யுகம் ஆனது போல ஒரு ஃபீலிங். அடுத்த வருடமாவது 4 பாகங்களாக தோர்கல் வெளியிட வேண்டுகிறேன்
DeleteFantasy 'தல' ஆத்துக்காரம்மாகிட்டே வாங்குற மொத்துக்களை ரெண்டு ரெண்டு பாகமா பார்த்துட்டே போவோம் சார் ; அவரும் பாவமில்லே ?
Delete// Fantasy 'தல' ஆத்துக்காரம்மாகிட்டே வாங்குற மொத்துக்களை ரெண்டு ரெண்டு பாகமா பார்த்துட்டே போவோம் சார் ; அவரும் பாவமில்லே ? //
Deleteஹா..ஹா...!
// அடுத்த வருடமாவது 4 பாகங்களாக தோர்கல் வெளியிட வேண்டுகிறேன் //
Deleteஅதுக்கு இப்படி பண்ணலாம் குமார்,5 பாகக் கதையா போட்டு ஹார்ட் பைண்டிங்கோட வந்தா செமையா இருக்கும்...
Alpha - IN,
ReplyDeleteதாத்தாஸ் - IN
Alpha IN
ReplyDeleteGrandpa IN
Alfa in
ReplyDeleteThathas in
Perasai
Hi hi
Tex wrapper sema
ReplyDeleteI think this is one of the best
அந்த night effect டெக்சின் போஸுக்கு கெத்து சேர்க்கிறது !
Deleteடியர் எடி,
ReplyDeleteடெக்ஸ் அட்டையில் பிண்ணணி சேர்ப்பு கனஜோர்... சென்னை டிசைனர் மாலையப்பரை நினைவுகூற வைக்கிறார். மூல ஓவியம் மட்டும் சரியாக அமைந்துவிட்டால் பின்னி பெடலெடுத்து விடுகிறார்கள்.
ஆல்ஃபா தமிழில் இதுவரை படித்ததில்லை என்பதால், இதில் ஜகா வாங்கி கொண்டு, முதல் பாக படித்துவிட்டபடியால் தாத்தாஸூக்கு மட்டும் INஸ் போட்டு துண்டு போட்டுகிறேன், சாமியோவ்ஸ் 🥰
சுள்ளான் ஜக் ஒரு பக்க சாம்பில் அலாதி. வண்ணம், ஓவிய பாணி, எழுத்து நடை என்று அமர்க்களமாக தெரிகிறது.
Deleteதோர்கல் உலகத்தில் மீண்டும் நுழைய ஆயத்தமாகி கொண்டிருக்கிறேன். டாலர், யூரோ விண்ணை எட்டும் உயரம் சென்றவுடன் சினிபுக் வாங்குவது தள்ளி போவதால், இனி தோர்கலை தமிழிலேயே படித்துகொள்ள வேண்டியதுதான்.
கைப்புள்ள ஜாக் ரொம்பச் சமீபப் படைப்பு என்பதால் அந்த டிஜிட்டல் கலரிங் வேற லெவலில் உள்ளது சார் ! பக்கத்துக்குப் பக்கம் கலரிங்கே கதை சொல்லுகிறது !
Delete//மூல ஓவியம் மட்டும் சரியாக அமைந்துவிட்டால் பின்னி பெடலெடுத்து விடுகிறார்கள்//
Deleteமாலையப்பன் காலத்திலிருந்தே இது தான் சார் யதார்த்தம் ; உருப்படியாய் ஒரு reference + அதற்கேற்ற பின்னணி வர்ணத் தேர்வையும் ஒப்படைத்துவிட்டால் சொல்லியடிக்கிறார்கள் ஓவியர்கள் !!
புத்தக விழாவின் நாயகர் ?
ReplyDeleteதறத்திலும் வாட்ஸ் அப் குருப்பகளிலும் நாம தல தளபதி தூக்கி வைச்சு கொண்டாடுறோம்
புக் ஃபேர்க்கு வரவங்க நம்ம இரும்புக்கை மாயவியை தான் தாங்குறாங்க
நானு டவுசர் போட்டுருந்து காலத்தில வந்தவர்...அட இன்னும் வரரார சொல்வறங்க இந்த வருடமும் கண்டினு ஆகுது🙃🙃🙃
அப்புறம் நம்ம காமிக்ஸ் படிக்கிறவங்க
டெக்ஸ் அன்ட் டைகர் கேட்டாங்க
தளபதியை உண்மையாக கேட்டாங்கப்பா, காணோமேனு வருத்த பட்டாங்க🤞
டெக்ஸ் அதிகமாக இருந்தனால அவர் சேல்ஸ் ஆகிறார்
தோழர் ஒருவரின் ஆலோசனையால் டெக்ஸ்யை தேடி புதிதாக ஒருவர் வந்தார் எதில் ஆரம்பிப்பது என்பதில் தெரியவில்லை, எனக்கும் சொல்ல தெரயல. அவர் நண்பரிடன் வருவதாக கூறி சென்று விட்டார்
சகோ விஜயராகவன் அவர்களிடம் கேட்டேன், டெக்ஸின் கதை லிஸ்ட் அனுப்பினார்
மிக உதவியாக இருந்தது, நனறி சகோதரரே🙏🙏🙏
ஒரு பெண்மணி தான் சின்ன வயதில் படித்த மாயாவியை தன் புதல்விக்கு வாங்கி குடுத்து இதப்படிம்மா என்றார் அப்போது நான் சின்ன குழந்தை தானே நம்ம குட்டீஸ் கதை குடுத்தேன் ஆகையால் கலரில் இருந்த
பீன்ஸ் கொடியில் ஜாக் தான் செல்லுப்படி ஆனார்
குழந்தை அட்ராக் ஆன காரணம் கலர்😎
வேதாளர் மாண்ட்ரேக் கேட்டாங்க
தனியாக Subscribe செய்யனும் என்று சொல்லி உள்ளேன்
அடுத்த மாதம் மாண்ட்ரேக் வர்றார் என்று சொன்னவுடனே மாண்ட்ரேக்கின் ரசிகரின் முகத்தில் புன்னகை
புன்னகைக்கு காரணம் நான் மாண்ட்ரேக்கை வர்றார் என்று மரியாதை குடுத்து பேசியதால்🤧😢
இன்றைய புத்தக விழாவின் நாயகர் நம்ம இரும்புக்கை மாயாவி🥳🥳🥳
இரும்பு கை மாயாவி பழய கதைகள் மற்றும் ஓவியம் நன்றாக இருக்கும்
Deleteஅப்டேட் சிறப்பு கடல்.... இரும்புக்கையாரின் டிமாண்ட் அப்படிதான்.... நானும் இதை விழாக்களில் பார்த்துள்ளேன்....
Deleteஅந்த hardcore இரும்புக்கை மாயாவி fans இங்கெங்கின்றில்லாது, எல்லா ஊர்களிலும் உள்ளனர் ரம்யா ; ஆனால் சிக்கல் என்னவெனில் அவர்களின் காமிக்ஸ் உலகம் பெரும்பாலும் ஆரம்பிப்பதும், நிறைவுறுவதும் மாயாவியோடே !
Deleteஅதனில் நிச்சயமாய்த் தப்பில்லை தான் ; ஆனால் அந்த நோஸ்டால்ஜியா factor ; சேகரிப்பு factor மாத்திரமே பிரதானப்பட்டு நிற்பதால், சமகாலத்து புக்ஸுக்குள் பெரிதாய் அவர்களுக்கு ஆர்வம் எழுந்திடுவதில்லை ! அங்கு தான் (நமக்குச்) சிக்கலே !
இன்றைய விழா நிகழ்வை அழகாக சொல்லி உள்ளீர்கள்.நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.
Deleteஎங்கெங்கு காணினும் இரும்புக் கையடா..😂
Deleteஒரு வேளை அதிகமா சேல்ஸாகறதால் டெக்ஸை அதிகமா கொண்டு வந்தாங்களோ?
Delete// சின்ன புக் என்றாலும் இந்த நாயகருக்குப் பேனா பிடிப்பது நாக்கைக் கொண்டு தெருவைச் சுத்தம் செய்வதற்குச் சமானம் என்பேன் simply becos ஒரிஜினலின் அசாத்திய ஸ்டைல் அத்தகையது // ஆகா ஆகா இப்போதே 30ஆம் தேதி ஆகாதா
ReplyDeleteசார் அட்டைப்படம் டெக்ஸ் பட்டய கிளப்ப....கூண்டிலோர் கணவனோ வானவில்லை வம்புக்கிழுக்கிறார்....இருவரும் மிரட்டுறார்....ஒருவர் தப்பாக்கிய காட்ட மறுவர் வாளை நீட்ட....எதுக்குடா வம்புன்னு நான் இரு கையையுமே தூக்குறேன்ன் இரண்டுமே டாப்பென சரண்டரோடு தம்ஸப்பாய்...
ReplyDeleteசுஸ்கி விஸ்கி....ஜாக்....இரண்டும் இழுக்க
ஆல்ஃபா டாப்போ டாப்
தாத்தா டப்ஸா டாப்
இரண்டும் வரட்டும்
2023 புதிய இரண்டு ஜானர் ஸ்பைடர் வகையறான்னு பக்ஷ்க்ஷி பாடுது
கோவை திருவிழா பட்டய கிளப்பும் போல...
Deleteநாளை களத்தில் நானும்
கவித கொட்டுதே
Delete// நாளை களத்தில் நானும் //
Deleteரம்யா நாளைக்கு காதில் நல்லா பஞ்சை வச்சுகிட்டு நமது ஸ்டாலில் இருங்கள். பொன்ராசு வாரானாம் :-)
Aipha ..In
ReplyDeleteதாத்தாஸ் Sidetrack
ஆல்பா...IN
ReplyDeleteதாத்தாஸ்...IN
புதிய கதை தொடர்கள்
ReplyDeleteஆல்சோ...IN & IN....
ஆமாம் அதுவுமே IN IN தான்.
Deleteஅடடே ஆகஸ்ட்ல தோர்கலும் வருகிறாரா.?
ReplyDeleteஏற்கனவே நாலுமாச புத்தகங்கள் படிக்காம அப்படியே இருக்கு..அதனால அடுத்த வெளீயீடுகள் பத்தின ஆர்வம் ஏற்படாததால சரியாக கவனிக்கலை..
Alpha - In
ReplyDeleteதாத்தாஸ் - In
// பல்லடத்துப் பக்கமாய் தோர்கலுக்குச் சிலை வைக்க இடம் தேடிக்கொண்டிருக்கும் நமது சரவணகுமார் சாரின் முன்கதைச் சுருக்கத்தோடு as always வண்ணத்தில் மிளிரவுள்ள ஆல்பத்தின்... //
ReplyDeleteநன்றிகள் சார்!
ஆல்பா IN
ReplyDeleteதாத்தாஸ் IN
தாத்தாக்கள் சுகப்படாத நண்பர்களின் பொருட்டு சைடிராக் செய்யப்படுவதில் தவறில்லைதான். ஆனால் வருடம் ஒரு ஆல்பமாவது உத்தரவாதமாக வந்தால் சரி!
Deleteதாத்தாக்களை 2023ல் சைட் டிராக் செய்தால் சந்தாவில் ஒற்றை கி.நா கூட இல்லாமல் போய்விடுமேங்க சார்?
Deleteஇல்லை வேற ஏதாச்சும் கி.நா வருதுங்களா?
Sidetrack செய்யப்படுவதில், 'தல' தவிர்த்த எந்த இதழும் பெரிதாய்ப் பேசப்படுவதில்லை சார் ! கவலைகள் பட்டியலில் அதனையும் சேர்த்துக்கோங்க !
Delete// நமது சரவணகுமார் சாரின் முன்கதைச் சுருக்கத்தோடு as always வண்ணத்தில் மிளிரவுள்ள ஆல்பத்தின்... //
ReplyDeleteசூப்பர் சரவணகுமார். வாழ்த்துக்கள்.
கைப்புள்ள ஜாக் கவரிங் செம செம கூல். எலியப்பாவை விட இவர் இன்னும் சிறப்பாக இருப்பதாக தெரிகிறது. ஆவலுடன் வெயிட்டிங். குழந்தைகள் ரசிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது.
ReplyDelete///எலியப்பாவை விட இவர் இன்னும் சிறப்பாக இருப்பதாக தெரிகிறது///
Deleteவீசிட்டீங்கள்லே?.... தூக்கி வீசிட்டீங்கள்லே?... துக்ளியூண்டு பொடியன் வந்தவுடனே எலியப்பாவையே எட்டப்போகச் சொல்ட்டீங்கள்லே?!!
அவன் காதிலே விழுந்தா மனசையே விட்ருவான். மலை மேலிருந்து குதிச்சு உயிரை விட்ருவான்!
///அவன் காதிலே விழுந்தா மனசையே விட்ருவான். மலை மேலிருந்து குதிச்சு உயிரை விட்ருவான்!///
Deleteஅவனா குதிக்கலைன்னா நாங்களா தள்ளிவிட்றலாம்னு இருந்தோம்.!
Deleteஎலியை மறக்க முடியுமா:-)
அப்புறம் எலி உடம்பு கீழே தள்ளி விடுவது போலயா இருக்கிறது:-)
அந்த எறும்பை நம்ம எலி 'லவ்ஸ்' விடும் டிராக்கை கதாசிரியர் இன்னும் கொஞ்சம் கொண்டு போயிருக்கலாம் தான் !!
Deleteதாத்தா ஒரமாக என்றால் எப்படி வரும், எப்போது வரும் என்ற கேள்வி எழுகிறது சார். ஏற்கனவே கிராபிக் நாவல்கள் வாய்ப்பின்றி கிடக்கின்றது. உதாரணம் - உலகத்தின் கடைசி நாள். இதுவும் அதோடு சேர்ந்து காணாமல் போக வாய்ப்பு அதிகம். ஆனால் விற்பனையில் தொய்வு இருக்கும் என அறிந்தும் அதிக விலையுடன் சுஸ்கி விஸ்கி யை களமிறக்கும் லாஜிக் புரியவில்லை சார். மேலும் super 60's, சினிஸ்டர் 7, டெக்ஸ் மறுபதிப்புகள் என்று மீண்டும் மரத்தை சுற்றி ஆடும் ஆட்டம் நாளுக்கு நாள் விரிவடைகிறது. நீங்கள் போதிய விளக்கம் அளித்து விட்டாலும், கிராபிக் நாவல்கள் அரிதாய் வருவதை ஏதாவது ஒரு இடத்தில் தடை போடும் போது வெளிப்படும் ஆதங்கமே இது சார்.
ReplyDeleteவிளக்கங்கள் apart - "விற்பனை" என்ற ஒற்றைச்சொல்லே அத்தனை லாஜிக் மீதும் புல்டோசர் விட்டு ஏற்றி போகும் ஆற்றலாளன் சார் !சப்பளிக்கப்படுவதில் எனது விருப்பு-வெறுப்புகளுமே சேர்த்தி !
DeleteSMASHING '70s தெறி வெற்றி சொல்லும் சேதி இது தான் !!
Maybe ஓரிரு ஆண்டுகளில் அந்த க்ளாஸிக் நாயகர்கள் போர் அடித்துப் போகலாம் தான் ; அல்லது அந்த நேர்கோட்டு டிராக்கே சுகம் என்று நண்பர்களின் பெரும்பான்மை தீர்மானிக்கவும் செய்யலாம் தான் ! சைக்கிளை ஓட்டுவது நானாக இருப்பினும், பின்னே அமர்ந்திருக்கும் பெரும்பான்மை ஒரு பக்கமாய் இழுக்கும் பட்சத்தில், வண்டியும் தானாய் அந்தத் திசையில் திரும்பியாகணும் தானே சார் !
///சைக்கிளை ஓட்டுவது நானாக இருப்பினும், பின்னே அமர்ந்திருக்கும் பெரும்பான்மை ஒரு பக்கமாய் இழுக்கும் பட்சத்தில், வண்டியும் தானாய் அந்தத் திசையில் திரும்பியாகணும் தானே சார் !///
Deleteப்பா!! எப்படி சார் இந்தமாதிரியான உதாரணங்கள் எல்லாம் உங்களுக்குத் தோனுது?!!!!
This comment has been removed by the author.
ReplyDeleteகாலனின் காகிதம் :
ReplyDeleteபெர்லினின் மதில் சுவர் தகர்க்கப்பட்ட காலகட்டத்தில் கிழக்கு ஜெர்மனியின் ஸ்டாசி அமைப்பின் கர்னல் ஒருவர் அதிமுக்கிய ரகசியமான ஃபைல்களுடன் தலைமறைவாகி விடுகிறார்.! அந்த ஃபைலில் உள்ள நபர்களும்.. தகவல்களும் வெளிப்பட்டால் பல முக்கியஸ்தர்களின் தலை உருளும் என்ற நிலை.!
பல வருடங்களுக்குப் பிறகு.. நெருக்கடியின் காரணமாக.. உல்ஃப்கேங் வேக்முல்லர் என்கிற அந்தக் கர்னல்.. ரகசிய ஃபைலை விற்க முடிவு செய்து வாஷிங்கடன் பெரும்புள்ளிகளை தொடர்பு கொள்கிறார்... இதுதான் கதைக்கு முன்னுரை.!
இனிதான் கதையே ஆரம்பம்.!
முன்னாள் கர்னல் வேக்முல்லரிடமிருந்து ஃபைலை விலைக்கு வாங்கத் துடிக்கும் ஒரு அமெரிக்கக் குழு.. அதை எப்படியாவது ஆட்டையைப் போட்டுவிட வேண்டுமேன ஆலாய்ப் பறக்கும் இஸ்ரேலியக் குழு.. அந்த ஃபைல் எக்காரணம் கொண்டும் வெளியே வந்துவிடக்கூடாதென்று அதை அழிக்கத்துடிக்கும் முன்னாள் கிரிமினல் இன்னாள் விஐபிகளின் குழு.. இந்தக் குழுக்கள் போதாதென்று.. கிடைத்தால் லாபமென்று உள்ளே நுழையும் ஹாலந்து போலிஸ் குழு...!
இத்தனை சிக்கலையும் தாண்டி வேக்முல்லரை பத்திரமாக ஹாலந்தில் இருந்து அமெரிக்கா கொண்டு வந்து சேர்க்க வேண்டிய பொறுப்பு ஆல்பா மற்றும் ஷீனா வசம் ஒப்படைக்கப்படுகிறது.! எத்தனுக்கு எத்தன்.. வல்லவனுக்கு வல்லவன்.. கில்லாடிக்கு கில்லாடின்னு பல சொற்பதங்களை கேள்விப்பட்டு இருப்பீங்க.. அவங்க அத்தனை பேரையும் இந்தக் கதையில் பார்த்துக் கொள்ளலாம்.!
ஹாலந்து போலிசுக்கும் இஸ்ரேல் கும்பலுக்கும் பாதாம் அல்வா குடுத்துட்டு வேக்முல்லர் குடும்பத்தை ரகசியமாக கப்பலில் கூட்டிப்போறார் ஆல்பா.! ஆனா.. ஆல்பாவுக்கு கோதுமை அல்வா குடுத்துட்டு ஆல்பா ஏற்பாடு பண்ணின ஹெலிகாப்டர்லயே ஃபைலோடு தப்பிப் போறாங்க இஸ்ரேல் குழு.!
அந்த இஸ்ரேல் குழுவுக்கு கேரட் அல்வா குடுத்துட்டு ஹெலிகாப்டரையே வெடிக்கவெச்சி ஃபைலையும் அழிச்சிடுறாங்க அமெரிக்க குழு.!
எல்லாம் முடிஞ்சுதுன்னு பாத்தா இவங்க அத்தனை பேருக்கும் முதல்லயே திருநெல்வேலி அல்வா குடுத்துட்டு ஃபைலை வேற இடத்துல ரகசியமா பதுக்கி வெச்சிருந்திருக்காரு வேக்முல்லர்.! கடைசியில் அந்த ஃபைல் யாருக்குத்தான் கிடைச்சுது.. என்ன ஆனதுன்னு கதையைப் படிச்சா தெரியும் மக்களே..😜
இந்த 48 பக்கங்களுக்குள்தான் எத்தனை திருப்பங்கள்.. எத்தனை பரபரப்புகள்.. எத்தனை சம்பவங்கள்.. சாகசங்கள்..!
இதுகோக.. கதையில் ஷீனா.. ட்ரூடீ(மிஸஸ் வேக்முல்லர்).. அப்புறம் பெயர் தெரியாத ஒண்ணு. ரெண்டு.. என்று கலர்ஃபுல் அம்சங்களும் உண்டு.!
காலனின் காகிதம் - இடியாப்பம் + இடியாப்பம்
விமர்சனம் எழுத சொன்னா உங்க கதையை எழுதி இருக்கீங்க:-)
Delete// இடியாப்பம் + இடியாப்பம் //
Deleteஜானி கதையை படிச்ச மாதிரி இருந்தது என ஒரு வரியில் சொல்லுங்களேன்:-)
அல்வா லிஸ்ட்டில் அசோகா அல்வா குறையுதே....J சார் கோச்சுக்கப் போறார் - எங்க ஊரு பதார்த்தத்தை யதார்த்தமா மறந்தாச்சேன்னு !!
Deleteஅருமையான விமர்சனம் சகோ 😻😻😻
Deleteவிஜயன் சார், புத்தகங்கள் எல்லாம் நன்றாக காய்ந்த பிறகு நிதானமாக அனுப்புங்கள் சார். புத்தகங்கள் சிறப்பாக எந்த வித குறையும் இன்றி வரட்டும் சார்.
ReplyDeleteபுத்தகங்களை தாங்கி வரும் அட்டைப் பெட்டிகள் இந்த முறை கனமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
மௌனநகரம்..
ReplyDeleteஅட்டைப்படம் செம்மயா வந்திருக்கு..😍
நல்லவேளை நெருப்பைக் கொஞ்சம் தள்ளி வரைஞ்சிருக்காங்க.. இல்லேன்னா...😱
அது பாயச அண்டாவுக்காக மூட்டினது சாமி !
Deleteசார்..😂😂😂😂😂😂
Deleteகிட்... 😂😂😂😂😂😂
Deleteஎடிட்டர் சார்.. செம டைமிங் 😂😂😂😂😂😂
// அது பாயாசம் அண்டாவுக்காக மூட்டியது சாமி //
Deleteமுந்திரி திராட்சை சேமியா சர்க்கரை எல்லாம் இதோ
ரெடியா இருக்கு சார்.
கச்சிதமாய் ஒரு குற்றம்:
ReplyDeleteரிப் கிர்பியின் அக்மார்க் டிடெக்டிவ் கதை இது இந்த கதையை பொருத்த வரையில் கதைதான் ஹீரோ.
சவாலான அதேசமயம் புத்திசாலித்தனமான வில்லன்.
கதைக்கு ஏற்ற வகையில் கொஞ்சமும் மிகாமல் கதை மாந்தர்கள்.
கொஞ்சம் கூட தொய்வில்லாத குழப்பம் இல்லாத தெளிந்த நீரோடை போன்ற கதையோட்டம்.
கொள்ளை நடந்தது எப்படி என்று தெரியாமல் மண்டையை பிய்த்துக் கொண்டு திரியும் வேளையில், தற்செயலாக நடக்கும் தவறினால் முதல் சந்தேகம் எழுகிறது. அதை, காத்திருந்து மீன் பிடிக்கும் கொக்கு போல பிடித்துக் கொள்ளும் ரிப் - இந்த இடத்திற்கு போடலாம் ஒரு சபாஷ்!
பணத்தாசையினால் ஒரு தவறை செய்து விட்டு, அதே விசயத்தினால் மீண்டும் தவறு செய்யும் லேரிக்கும், அவனுடைய முரட்டு நண்பன் கார்ப்புக்கும் இடையிலான நட்பை காட்டும் அந்த இடத்திற்கு மீண்டும் ஒரு சபாஷ்!
ஒருமுறை கும், இன்னொரு முறை டுமீல் அவ்வளவு தான் கதையை சட்டை மடிப்பு கலையாமல் முடித்து வைத்து விட்டார் ரிப் கிர்பி...
கிளுகிளுப்புக்காக மட்டுமன்றி, கதையில் முக்கியமான பாத்திரமாகவும் வரும் வில்லனின் காதலி, இவளே இந்த கதையின் நாயகி!
அற்புதமான கதைகளை பொறுத்த வரையில் ரிப் கிர்பி இந்த ஸ்பெஷலில் சாதித்து விட்டார்...
ஒரு கிரீடத்தின் கதை - ரிப் கிர்பி
ஸ்மசிங் 70s-ல் வந்துள்ள கதை...
ரிப்புக்கு அதிக வேலையில்லை என்றாலும், இந்த கதையில் கதாநாயகனாக கதையே இருப்பதாக தோன்றுகிறது.
கதையில் வந்த அனைத்து பாத்திரங்களும் - முமு & டுடு ஆமோர் சகோதரிகள், விக்கர்ஸ், டெஸ்மாண்ட், இன்ஸ்பெக்டர் என எல்லோருமே கச்சிதமாக , சமமான பங்களிப்பு கொடுத்துள்ளார்கள்.
கடைசியாக ரிப் எழுதி அனுப்பும் குறிப்பும், அதன் பிறகு டெஸ்மாண்ட் உடன் உள்ள உரையாடலும் அவர்கள் இருவருக்குள்ளான புரிதலை அழகாக காட்ட முடிவு சுபம்!
ரிப் ஏமாற்றவில்லை... 😻😍
இந்தக் கதைகளின் அகவை அரைநூற்றாண்டுகளுக்கும் அதிகம் சார் ; ஆனால் தரமான இசையைப் போல காலத்தை வென்று நிற்கின்றன !
Deleteஇந்த கதைகளில் வரும் மனித உணர்வுகள், உறவுகள் தொடர்பான விஷயங்கள் எல்லாம் இந்த கால கதைகள் பார்ப்பது அரிதாக உள்ளது. எனவே தான் காலம் கடத்தாலும் இந்த கதைகள் கோலோய்ச்சுகின்றன்.
Deleteஅருமை பூபதி.
Deleteஇந்த கதை தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை காணாமல் போன வாரிசுகள்.
// இந்த கதைகளில் வரும் மனித உணர்வுகள், உறவுகள் தொடர்பான விஷயங்கள் எல்லாம் இந்த கால கதைகள் பார்ப்பது அரிதாக உள்ளது... //
Deleteஉண்மை...
ஆல்பா IN
ReplyDeleteதாத்தாஸ் இரண்டாவது கதையை படித்த பிறகு முடிவு
Hello brothers
ReplyDeleteLong day no see! I mean I'm not that active because of my studies guys and now I'm starting this comment with 1 happy news and 1 bad news!
Happy news - I'm going finish my UG degree waiting for Mark's hopefully get some good Mark's I think so! And also i applied for MBA counseling!
Bad news - I go thru an life taking accident recently and keep on having bad health condition😑 and currently in bed rest with all your prayers will get recover before erode book festival!
And I came know that no meet up in erode this time! Really kinda of bad for me😕 but atleast will meet you brothers in our stall!
Waiting
@Editos sir
Erode vijay
Salem tex vijay raghavan
Kid kanan
Karthik prasanth
Parani etc...
brothers!
PS - Now I'm about to start Alpha 1 shot story will review tomorrow sir!
Take care bro! 🤝🏽
Deleteவணக்கம் அகில். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உனது பின்னூட்டம். நல்ல மதிப்பெண் பெற்று உயர் கல்வி பெற எனது வாழ்த்துக்கள்.
Deleteநன்றாக ஓய்வு எடு உனது உடல் நலத்தை கவனித்து கொள்ளவும். விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
உடம்பை கவனி அகில் ; மீதமெல்லாம் காத்திருக்கும் !!
DeleteTake care Akkil..🙏
Deleteஉடல்நிலை விரைவில் குணமாகிடவும், நல்லபடியாக டிகிரி முடிக்கவும் எங்களின் பிரார்த்தணைகள் என்றும் உண்டு அகில்!!
Deleteஓ காட்.....டேக் கேர் அகிக்... வீ ஆல் வித் யூ.... ஈரோட்டில் பார்ப்போம்....
Deleteஇரத்த வெறியர்கள் வேற ஆரம்பிச்சதோட காத்துக்கிட்டு இருக்காங்க..!
ReplyDeleteஅர்ஸ் மேக்னா அப்படியே வெயிட்டிங்கு..!
வேதாளர்ல நாலு.. ரிப் கிர்பியில மூணு.. தான் முடிஞ்சிருக்கு.!
எப்பவோ நின்னுபோன ஜேம்ஸ்பாண்ட் 2.0.. கடேசியா வந்த லார்கோ (தலைப்புகள் கூட நினைவில் இல்லை)..ரெண்டும் ரொம்ப நாளா கிடப்பில் கிடக்குதுங்க..
இத்தனைக்கும் நடுவில் நேற்று காசு பணம் துட்டு படிச்சேன்.!
இத்தனை அழகான.. அற்புதமான.. ஆழமான Smurf தொடர் நம்மோடு தொடர வகையில்லாமல் போயிற்றே என்று வருத்தத்தோடோ உறங்கப்போனேன்..!😔
அர்ஸ் மேக்னா படிச்சா AXA free !!
Deleteஆரம்பிக்கலாமுங்களா ?
///அவரு அந்த புத்தகத்தை படிச்சு படிச்சு சாரி பார்த்து பார்த்து கிழிஞ்சு போச்சு என்பதை எப்படி சார் சரியாக கண்டுபிடிச்சீங்க :-)///
Deleteகலர்லாம் அடிச்சி வெச்சிருக்கேன் பரணி.! அதுமட்டுமில்ல AXAக்கு மீசை கூட வரைஞ்சி வெச்சிருக்கேன்.! -:)
😜😁😁🤣🤣🤣
Delete///AXAக்கு மீசை கூட வரைஞ்சி வெச்சிருக்கேன்///
Deleteஅழகான பெண்களிடம் இப்படித்தான் மீசை வரைஞ்சு விளையாடி டயத்தை வேஸ்ட் பண்ணிட்டிருப்பீங்களா கிட்?!!
இதுக்கு மாடஸ்டியை மணல் திட்டுல உட்காரவச்சுட்டு மீன் புடிக்கற டாக்டர்களே தேவலாம் போலிருக்கே?!!
வாவ்!! தல அட்டைப்படம் அட்டகாசம்!! சர்வலட்சணங்ளும் பொருந்திய - குறையில்லாத படைப்பு! ஓவியருக்கு ஒரு பூச்செண்டு!!
ReplyDeleteதல'யின் தலையை கழட்டி மாட்டிய விதமும் அபாரம்! கோகிலாவுக்கு ஒரு பூச்செண்டு!! டை அடித்து, தொப்பி போட்டு, பவுடர் பூசி
ச்சும்மா எம்ஜியார் கணக்காய் தகதகக்கிறார் தல!!
தமிழ்படங்களின் சாயலைக் கொண்ட திரில்லர் கதை என்பதால் தலயோடு அன்னந்தண்ணி புழங்க ஆவல் ஊற்றெடுக்கிறது!
ஆகஸ்டில் 'தல' சாகசத்தைக் கொஞ்சம் தள்ளிப்போடுவோமா ? என்ற எண்ணம் எழுந்த போது அதை பின்னுக்குத் தள்ளிய காரணிகளில் ஒன்று இந்த அட்டைப்படமும் !
Deleteசார்.. அந்த ரெண்டு தமிழ்படங்கள் எதுன்னு சொன்னீங்கன்னா...
Deleteஒரு பிரபல கதாசிரியர் எழுதி, ஒரு பிரபல டைரக்டர் இயக்கி, ஒரு பிரபல நடிகர் நடித்து, ஒரு பிரபல அம்மணி one ஆட்டம் போட்ட படம் ! கண்டு பிடியுங்க !
DeleteALPHA - IN - 3 + 1 பாகங்கள் அனைத்தும் வாசித்து விட்டேன். எனக்கு பிடித்திருந்தது. அதிலும், கடைசியாக வந்த ஒற்றை சாகசம் செம!
ReplyDeleteதாத்தாஸ் - SIDETRACK - நல்ல முயற்சி என நிறைய பேர் சொல்லி இருந்தாலும், எனக்கு மனதில் ஒட்டவில்லை.
நன்றி 🙏🏼
ஆங்!! கண்டுபிடிச்சுட்டேன்!!
ReplyDeleteகோகிலா வெட்டி ஒட்டிய தலயின் தலையை உற்றுப் பார்த்தபோது அது ஏற்கனவே பரிச்சயமான முகத்தை/ஓவிய பாணியை நினைவூட்டியது! அப்புறம் தான் தெரிஞ்சது - அது 'பழிவாங்கும் புயல்' மறுபதிப்பு அட்டைப்படத்தில் பார்த்த அதே முகம் தான்னு! ஆனாலும் அருமையான வேலைதான்! செமயா பொருந்திப் போகுது!!
நேராய்ப் பார்த்தா மாதிரி ; ரைட்டுக்கா / லெப்ட்டுக்கா திரும்பின மாதிரி ; சிரிச்சா மாதிரி ; முறைச்சா மாதிரி ; தூரத்து ஷாட்டிலே ; க்ளோஸப்பிலே - இந்த ஓவியரின் ஸ்டைலில் ; அந்த ஆர்டிஸ்ட்டின் பாணியில் என்று நம்ம கிட்டே ஒரு folder முழுக்க 'தல'யின் தலைகள் கிட்டத்தட்ட நூறுக்கு நெருக்கி உள்ளன ! உடல்வாகுகளுக்கு ஏற்றவாறு ; அட்டையில் அவசியமாகிடும் தோரணைகளுக்கு ஏற்றா மாதிரியான தலைகளை அதிலிருந்து பொறுக்கிப்போம் !! ஹி..ஹி...!!
Delete'தலைவாங்கிக் கோகிலா'ன்னு பேர் வச்சுடலாம் போலிருக்குங்களே?!!😂😂
Deleteஉங்களுக்கு மிகச்சிறந்த துப்பறிவாளராக எல்லா தகுதியும் இருக்கிறது இளவரசே :-) கண்ணா தகுதியை தொந்தி என வாசிக்க கூடாது:-)
Delete// இன்றைக்கு தெறி மாஸ் !! எஞ்சியிருக்கும் 10 நாட்களுமே இதே அனல்வேகம் //
ReplyDeleteசூப்பர். மகிழ்ச்சி. தொடரட்டும் சிறப்பான விற்பனை.
தோர்கலின் வருகை நீண்ட நாட்களுக்கு பிறகு.. 'நாயகன் மீண்டும் வரார்.. எட்டுத்திக்கும் பயம்தானே..'பாடல் காதுக்குள் ஒலிப்பது எனக்கு மட்டும்தானா..
ReplyDeleteநில்லுங்க சார்...காதிலே மிஷினை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் !
DeleteAlpha - IN
ReplyDeleteதாத்தாஸ் - IN
தாத்தாஸ் மொத கதையிலேயே பட்டைய கிளப்பிடாங்க, அதுவும் இந்த 2 வது ஆல்பம் மார்ச்சுலேயே வரவேண்டியது, இதுவே நொம்ப லேட்.
ஒதுக்க கூடாத தொடர் இந்த தாத்தாஸ்.
மறுக்கா மறுக்கா சொல்லுங்கோ !
Deleteதாத்தாஸ் கதையில அங்கங்கே சிரிப்பு வெடிகள் பட்டைய கிளப்புனது
Delete"அந்த குண்டு தாத்தா கஷ்டப்பட்டு காரை விட்டு இறங்கியதும், இன்னொருவர் வசனமே பேசி முடிச்சிட்டு மறுபடியும் ஏற்றா வண்டிலன்றதும்".
"துப்பாக்கிய செவுத்துக்கு அப்பால தண்ணியில போட்டுட்டு அப்புறம் அதுல இறங்கி துலாவுறதும்"
அப்படியே பசுமையா இருக்கு 😍😍😁😁
Alpha - sidetrack
ReplyDeleteதாத்தாஸ் " IN
சார்
தாத்தாஸ்'களுக்கு ஏன் சிலர் நோ சொல்கிறார்கள் என தெரியவில்லை.ஒருவேளை அந்தியும் அழகே படிக்கவில்லையோ..?நண்பர்களே .. இன்றுவரை தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்து கொண்டிருப்பதே "இரு தாத்தாக்கள்" தான் என்பதை .சமீபத்திய 'விக்ரம்'மூலமாக நினைவுபடுத்துகிறேன்.
ReplyDelete😆😆😆
Delete/// ஒரு பிரபல கதாசிரியர் எழுதி, ஒரு பிரபல டைரக்டர் இயக்கி, ஒரு பிரபல நடிகர் நடித்து, ஒரு பிரபல அம்மணி one ஆட்டம் போட்ட படம் ! கண்டு பிடியுங்க ! ///
ReplyDeleteஹி...ஹி..அல்லேலக்கா... பல்லேலக்கா....
சூப்பர் பத்து சார்! நானும் இதை ஓரளவு யூகித்திருந்தேன் என்றாலும் எடிட்டரின் ///அம்மணி one /// க்ளூவை வைத்து அந்த அம்மணி 'சன்னி LeOne' ஆக இருக்கலாமோ என (கொஞ்சம் கிளுகிளுப்பாக) யோசித்துக் கொண்டிருந்தேன்.
Deleteஅப்படியானால் கதையின் பின்புலம் 'மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்' பற்றியது என்றாகிறது!
அந்த இன்னொரு படம் 'அந்தியன்' என்று எளிதாகச் சொல்லிவிடலாமே?
என்ன சொல்றீங்க எடிட்டர் சார்?
//அந்தியன்// ---> அந்நியன்
Deleteஹிஹி! கொஞ்சம் தூக்க கலக்கம்!
சந்திரமுகி.. மணிசித்ரதாழு ன்ற மலையாளப் படத்தோட ரீமேக்.! அதை இயக்கியது ஃபாசில்..கதை மது முட்டம்.!
Deleteதமிழில் பட்டி டிங்கரிங் பார்த்து ஹிட்டாக்கியது பி வாசு.!
பிரபல கதாசிரியர் எழுதின்ற வரி தான் என்னை சந்திரமூகியை டிக் செய்ய விடவில்லை.! நான் நம்மூரு கதாசிரியர்களையே யோசிச்சிக்கிட்டு இருந்துட்டேன்.!
சூப்பர் பத்து சார்..😃
165
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஅட்டை படம் -அருமை. Alfa- IN, தாத்தாஸ் -கண்டிப்பாக IN -> இது புதுவகை ரசிக்க தக்க ஆல்பம்
ReplyDeleteஆல்பா- வேணும்.
ReplyDeleteதாத்தாஸ்-கண்டிப்பா வேணும். இந்த தொடர் சொல்லும் வாழ்வியல் சங்கதிகள் இப்போதைக்கு கண்டிப்பாக தேவை. தொடரும் ஆல்பங்களில் இடது, வலது இரண்டையும் போட்டு கிழிச்சிருப்பாரு. நடுநிலை என்பது உண்மைக்கும் பொய்யுக்கும் நடுவால இருப்பது என்று பலர் இருக்கும் இந்த காலத்தில் a well balanced critic இந்தத் தொடர்.
முதல் ஓவரில் ரன் கொடுக்கும் பவுலர் பின் Comeback கொடுத்து Maiden & Wickets எடுப்பதில்லையா?
ReplyDeleteஒரு பவுலரின் திறமையை ஒரு ஓவரைக்கொண்டு தீர்மானிக்ககூடாது.... அதுபோல்
தாத்தாக்களுக்கு சில வாய்ப்புகள் கொடுத்து பார்க்கலாம்.......
தாத்தா வேண்டாம் என்று சொல்லும் பேரன்மார்களே.... தாத்தா வேண்டாம் தாத்தா சொத்து மட்டும் வேண்டுமோ 😇
////தாத்தா வேண்டாம் என்று சொல்லும் பேரன்மார்களே.... தாத்தா வேண்டாம் தாத்தா சொத்து மட்டும் வேண்டுமோ ///
Deleteஹிஹி! நச் கேள்வி!!
அருமையாக சொன்னீங்க நண்பரே
Delete@PFB
Deleteதாத்தா வேண்டாம் என்போர் பேத்தி மட்டும் தனியாக வரச்சொல்லி கேட்கிறார்கள்
Thathas = +1n
ReplyDeleteIn recent years only book i read for second time that too back to back.. and probabaly will read again.. plz dont side line as side line will eventually side out..
For me just thathas and stern make up for the subscription
Alpha= ok, in or out fine by me
Alpha IN
ReplyDeleteGrandpa IN
நேற்று மாலை முதல் இணையம் வேலை செய்யாத காரணத்தால் பார்வையிட முடியாமல் இப்பொழுது வந்தால் அதற்குள் லோட்மோர் அருகே வந்து விட்டது முதலில் பதிவை படித்து விட்டு...
ReplyDelete178 கமெண்ட்ஸ்லயே லோட்மோர் ஆயிருக்குன்னா.. தலீவரைப் பாத்து கூகுள் குரோமே மிரண்டுடுச்சின்னு அர்த்தம்.!😆
Deleteஆமாம் கண்ணா! நிறைய கமெண்ட்-ஐ கூகுள் ஆண்டவர் கண்களில் காண்பித்து விட்டு நீக்கி விட்டார்! எனது பல கமெண்ட் காணவில்லை. கூகுள் ஆண்டவர் நமது கமெண்ட்களில் விளையாடவில்லை என்றால் தளத்தில் இப்போது கமெண்ட் எண்ணிக்கை 250-ஐ தாண்டி இருக்கும்!
Delete// எனது பல கமெண்ட் காணவில்லை. //
Deleteஎனதும்...
Thatha out
ReplyDeleteAlpha IN
ReplyDeleteAlpha IN
ReplyDeleteThathas IN
நமது டெக்ஸ் அட்டைப்படம் இப்பொழுது எல்லாம் செம பட்டாஸாக கலக்குகிறது சார்...இந்த முறையும் அவ்வாறே சூப்பர்..சூப்பர்.சூப்பர்..
ReplyDeleteஆல்பா என்ன சொலறதுன்னு தெரியலையே பிடிச்சுருக்குற மாதிரியும் இருக்கும்...சுமாரா இருக்குறமாதிரியும் இருக்கு இவரை எடுத்தால் இன்னொரு அட்டகாச தொடர் உண்டு எனில் ஆல்பா அவுட்
ReplyDeleteதாத்தா எனக்கு ஓகே இன்..
தோர்கலின் உட்பக்க டீஸர் பக்கங்கள் வண்ணத்தில் மிரட்டுகிறது!
ReplyDeleteகைபுள்ள ஜாக் - டீசர் பக்கத்தில் கடைசி பேனலில் ஜாக் வாங்கிய பல்ப் தான் அவரை இந்த சாகசங்களை செய்ய தூண்டிய காரணி என நினைக்கிறேன் :-) சீக்கிரம் வா ஜாக்.
ReplyDelete1) ALPHA - IN
ReplyDelete2)தாத்தாஸ் - IN
டெக்ஸ் அட்டைப்படத்தில் பின்புலங்கள் எல்லாம் ஓகேதான்,ஆனால் டெக்ஸ் முகத்தை இன்னும் கொஞ்சம் தெளிவா காட்டி இருக்கலாமோன்னு தோணுது,தலைக்கு எர்வாமாட்டின் போட்டுட்டு முகத்துக்கு ஓவரா பாலீஷ் போட்டுட்டாங்க போல...!!!
ReplyDelete