நண்பர்களே,
வணக்கம். நம்மூர் அரசியல்வாதிகளுக்கு அப்புறமாய், பெயர் சூட்டுவதில் மன்னாதி மன்னர்கள் யாரென்றே கேள்வி எழுந்திடும் பட்சத்தில், ஒரு சின்னதான 'பொம்ம புக்' வட்டத்தைத் தாண்டித் தேடவே வேண்டியிராது என்பேன் ! சும்மா ஆளாளுக்குத் தெறிக்க விடும் வாணவேடிக்கைகள் எங்க ஊரின் தீபாவளி பட்டாசுகளுக்கே சவால் விடும் போலும் ! காத்திருக்கும் ஞாயிறினில் - நீங்கள் பரிந்துரைத்திருக்கும் பெயர்க்குவியல்களுக்குள் முத்துக் குளித்து, LOSER JACK புள்ளையாண்டானுக்கான (தமிழ்ப்) பெயரைத் தேர்வு செய்திடுவதாக உள்ளேன் ! நம் மத்தியில் வெறும் விளம்பரமாய் தோன்றியதுக்கே பொடியனுக்கு இத்தனை அலப்பறை சாத்தியமாகிறதெனில் - கதைகளோடு சந்திக்கும் போது என்ன ரவுசு விடக்காத்துள்ளானோ - தெரியில்லா !! Anyways - இந்தப் புது வரவுக்கு நீங்கள் தந்திருக்கும் சரவெடி வரவேற்பைப் பற்றி படைப்பாளிகளுக்கு இன்றைக்கு ஜாலியாய்ச் சொல்லியிருந்தேன் ; விடுமுறை தினமாக இருந்தாலும் செம உற்சாகமாகி பதில் போட்டுள்ளனர் !! உங்களின் இந்த infectious enthusiasm-ஐ மட்டும் ஒரு பாட்டிலில் அடைக்கச் சாத்தியப்படுமெனில் - அடடா, ஜோப்பிக்குள் திணித்துக் கொண்டு போகும் இடத்துக்கெல்லாம் கொண்டு போய் விடுவேனே !!
இதில் கூத்தென்ன தெரியுமோ ? ஒரேயொரு பெயர் வைக்கக் கோரினால் இக்கட ஒரு நூறு பெயர்கள் பிரவாகமெடுத்து வருகின்றன !! ஆனால் வருடாந்திர அட்டவணைக்கோசரம் 2023-ன் கதைகளுக்குப் பெயர் தேடும் படலத்தில் நானிங்கே போட்டு வரும் மொக்கைகளோ சொல்லி மாளா ரகம் !!
*மரணம் : ஊஹூம்...பெயர்களில் அபசகுனம் வாணாம் !!
*படலம் : ஊஹூம்...எனக்கே காதில் கெட்சப் கசியும் ரேஞ்சுக்கு இதைப் போட்டுத் துவைத்தெடுத்தாச்சு !
*மர்மம் : ஊஹூம்...P .T .சாமி காலத்தோடே காலாவதியான பெயர் பாணி இது !
இப்டிக்கா வரிசையாய் 'தவிர்க்க வேண்டிய பதங்கள்' கொண்டதொரு பட்டியலைக் குறித்து வைத்துக் கொண்டு, அவை இடம்பிடிக்கா விதமாய்ப் பெயர் சூட்டுவதற்குள், கிராமத்துப் பாட்டிகளின் காதுகளில் தொங்கும் பாம்படங்கள் பாணியில் நம்ம நாக்கார் தொங்காத குறை தான் !! இந்த அழகில் 2023 அட்டவணையின் களேபரங்கள் போதாதென, மாண்ட்ரேக் ஸ்பெஷல் இதழினில் இடம் பிடித்திடும் 8 கதைகளுக்குமே பெயர் கோரி மைதீன் நிற்பது தெரிகிறது !! அடங்கப்பா......!!
Moving on , நேற்றைய பதிவினில் "ஸ்பைடர் சார்" புதுக் கதைக்கு உங்களின் ஏகோபித்த thumbs up மெய்யான வியப்பே !
- முடங்கிக்கிடக்கும் நமது பணம் வெளிப்பட வேண்டுமென்ற அவா மேலோங்கியதா ?
- அல்லது நம்ம கூர்மண்டையர் காதல் புது வேகம் கண்டுள்ளதா ?
- Or சேகரிப்புக்கென வாங்கும் பழக்கம் தொடர்கிறதாவென்று சொல்லத் தெரியவில்லை எனக்கு !
Of course மேற்படி மூன்று காரணங்களுமே வெவ்வேறு விகிதாச்சாரங்களில் பின்னணியில் இருப்பது உறுதி ; but still நெகடிவாக எவ்வித எண்ணச் சிதறல்களும் இல்லாது போனதில், சன்னமான நிம்மதிப் பெருமூச்சு !! கொஞ்சமாய் திட்டமிட அவகாசம் எடுத்துக் கொண்டு ; முகவர்களிடமும் பேசி விட்டு, "SPIDER vs THE SINISTER 7" கதையினை முன்பதிவுக்களத்தில் குதிக்கச் செய்ய வேண்டியது தான் !! இந்தத் தீர்மானம் மனதில் ஓடும் போதே இன்னொரு சமாச்சாரமும் மனதில் ஓடிவருகிறது - "ஆகா...இந்த ஸ்பைடர் சாகசத்துக்குமே ஒரு பெயரிடும் பொறுப்பை நம்ம பொதுக்குழுவிடம் நேற்றிக்கே ஒப்படைக்காது போனோமே !!" என்று .....!! So இந்த ஆல்பத்துக்கானதொரு சிறப்பான பெயரைச் சூட்டிடுவீராக புலவர்களே !! "சாம்பார் சோறு சாப்பிட்ட ஸ்பைடர்" ; " சுரக்காய்க் கூட்டுக்கு உப்பில்லை ஸ்பைடர்" என்ற ரீதியில் அல்லாது, கொஞ்சமே கொஞ்சமாய் சிந்தனைக் குதிரைகளைத் தட்டி விட்டு, உருப்படியான முன்மொழிவுகளை சபைக்குக் கொண்டு வரலாமே - ப்ளீஸ் ?
ரைட்டு...அடுத்த ரவுசுக்கு வழி ஏற்படுத்தியாச்சு எனும் போது அடுத்த டாபிக்குக்கும் நகர்ந்திடலாமா ? பீரோவைத் திறக்கும் போது கண்ணில் பட்ட அடுத்த ஆல்பம் பற்றிப் பேசிடலாமா ?
ஒரு வெகுஜன, பால்யத்து நாயகரைப் பற்றி நேற்றைக்கு பார்த்தோமெனில், இன்றைக்கு, நாம் விரும்பும் வன்மேற்கின் ஜானரிலான ஒரு யதார்த்த கதையினை / தொடரினைப் பற்றிப் பேசிடுவோமா ? "STORY OF THE WEST".....வன்மேற்கின் பல பரிமாணங்களை மிகையின்றி, பன்ச் வரிகளின்றி, தெறிக்கும் ஆக்ஷன் ஹீரோக்களின்றிப் பார்த்திட முனைந்திடும் ஒரு இத்தாலியக் கதை வரிசை ! ரொம்ப ரொம்ப வருஷங்களுக்கு முன்னே இதனிலிருந்து ஒரேயொரு கதையினை முயற்சித்திருந்தோம் ; ஆனால் ஏனோ அதைத் தொடர்ந்திருக்கவில்லை ! கொஞ்ச காலத்துக்கு முன்னமே இது ஞாபகத்துக்கு வந்திருக்க, நமது ரேடாரினில் இடம்பிடித்த சற்றைக்கெல்லாம், தொடரின் உரிமைகளை வாங்கியிருந்தோம் !
ஒவ்வொரு ஆல்பமும் 96 பக்கங்கள் ; கலரில் !! அயர்லாந்திலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்க மேற்கிற்கு வந்திறங்கும் ஒரு குடும்பத்துடன் தொடர் துவக்கம் காண்கிறது ! அவர்களது பயணங்கள் ; வன்மேற்கின் raw ஆன பூமியினில் காலூன்றிடச் சந்திக்கும் சவால்கள் ; போராட்டங்கள் என செம சுவாரஸ்யமாய், கதையினை நகர்த்திக் செல்கின்றனர் ! இடையிடையே வன்மேற்கின் நிஜ மனிதர்களும் (வயட் ஏற்ப் ; கிட் கார்சன் ; கலாமிட்டி ஜேன் etc) கதையோடு இணைந்து தலைகாட்டுகின்றனர் ! "ஜெரோனிமோ" பாணியில் இதை வரலாற்று ஆவணமாகவெல்லாம் உருவாக்கிடாது, அழகான கதையாகவே முன்னெடுத்துச் செல்கின்றனர் !! ஒவ்வொரு ஆல்பத்தினையும் தனிக்கதையாகவும் வாசிக்கலாம் ; தொடரின் சங்கிலியின் ஒரு கண்ணியாகவும் எடுத்துக் கொள்ளலாம் ! நமது டெக்ஸ் சைசில், compact ஆக வெளியிடலாம் ! நெடும் கதைகளல்ல எனும் போது பணியாற்ற எனக்கும், வாசிக்க உங்களுக்கும் சிரமங்கள் இராதென்றே நினைக்கிறேன் ! இதோ ஒரிஜினல்களின் சில பக்கங்கள் :
ஸ்பைடர் ஓகே பாஸ்
ReplyDeleteஅடடே முதலாவதா?
Delete#மீ2
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteஸ்டோரி ஆஃப் தி வெஸ்ட் வேண்டும் வேண்டும். டிரெய்லர் மிக அருமை
ReplyDeleteவன் மேற்கின் கதை இது
Deleteவன் மேற்கின் கதை
ஸ்பைடர்க்கு எப்போ முன்பதிவு ஆரம்பம்
ReplyDeleteஅதே அதே
Deleteசொல்கிறேன் நண்பரே....அட்டவணைகளின் மத்தியில் ஒரு வாய்ப்பான இடைவெளியினைத் தேடிட வேண்டும் !
Deleteஉப பதிவுக்கு நன்றி சார்
ReplyDeleteபடித்து விட்டு வருகிறேன்
Story of the west - வன்மேற்கின் கதை
ReplyDeleteமேற்கே ஓர் கதை.....
ReplyDeleteசந்தோஷமாக ஆரம்பிக்கலாம் :-)
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteசார் ஸ்பைடர் அடுத்த மாதமே வரனும்.....ஈரோடு அதிர
ReplyDeleteபையனை தூக்கம் கிடத்தணுமாம் ஸ்டீல்...ஊட்டிலே கூப்பிடுறாங்க பாருங்க !
Deleteஇந்த வெஸ்ட் கதைய இரண்டு புக்க ஒன்னாக்கி கதய குண்டாக்கி 250 விலைல விடலாம்
ReplyDeleteபுக்கை குண்டாக்குறோமோ இல்லியோ, அதனை உண்டாக்கும் பொறுப்பை என்னிடம் விட்டுப்புடுங்க ஸ்டீல் ; வாங்குற சம்பளத்துக்கு நானும் ஏதாச்சும் வேலை பாத்துப் போடுறேன் !
Delete// முடங்கிக்கிடக்கும் நமது பணம் வெளிப்பட வேண்டுமென்ற அவா மேலோங்கியதா ? //
ReplyDeleteYes.
ஒரு வீரனின் கதைதானே இதுக்கு முன்ன
ReplyDelete// இதனை அவ்விதம் ஒரு வாகான தருணத்தினில் வெளியிடும் பட்சத்தில், வாங்கும் / வாசிக்கும் ஆர்வம் எழுந்திடுமா folks ? சொல்லுங்களேன் ப்ளீஸ் ! //
ReplyDeleteI am ready for this!
// STORY OF THE WEST என்ற இந்தத் தொடரின் பெயரை தமிழில் சற்றே நயமாய் மொழிமாற்றம் செய்திட உங்களின் பரிந்துரை என்னவாக இருக்குமோ ? (தீர்ந்தான்டா கொமாரு !!) //
ReplyDeleteவன்மேற்கின் கதை இது
வன்மேற்கின் மறுபக்கம்
(வன்)மேற்கின் நிஜம்
Delete(வன்)மேற்கின் நிழல்
Edi Sir..
ReplyDeleteமறுக்கா..மறுக்கா.. Saturday evening wishes..
STORY OF THE WEST - வண்ணத்தில் படங்கள் நன்றாக உள்ளது! கதை டாக்குமெண்ட்ரி வகையில் இல்லாமல் இருந்தால் எனக்கு ஒகே!
ReplyDelete///ஸ்பெஷலாகவோ களமிறக்கலாம் தான் ! இதனை அவ்விதம் ஒரு வாகான தருணத்தினில் வெளியிடும் பட்சத்தில், வாங்கும் / வாசிக்கும் ஆர்வம் எழுந்திடுமா folks ?///
ReplyDeleteஅஃப்கோர்சுங்க...!
STORY OF THE WEST என்ற இந்தத் தொடரின் பெயரை தமிழில் சற்றே நயமாய் மொழிமாற்றம் செய்திட உங்களின் பரிந்துரை என்னவாக இருக்குமோ ? ///
ReplyDeleteமேதகு மேற்கு..
மாண்புமிகு மேற்கு..
சூப்பர் கண்ணா செம்ம ஃபார்ம் ல இருக்கீங்க
DeleteSTORY OF THE WEST என்ற இந்தத் தொடரின் பெயரை தமிழில் சற்றே நயமாய் மொழிமாற்றம் செய்திட உங்களின் பரிந்துரை என்னவாக இருக்குமோ ? ///
Deleteஎன் பெயர் மேற்கு..
நன்றி குமார்..😍
Delete@Kid ஆர்டின் 😆😆 ( உண்மையான பெயரே மறந்திடும் போலிருக்கு )
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteEdi Sir..
ReplyDeleteமேற்கின் கதை..
மேற்கே ஒரு உதயம்..
புயலில் ஒரு புதையல் வேட்டை
ReplyDeleteகதை ரொம்ப நல்லா பாஸ்ட்டா ( FAST ) போனது ..
வழக்கம் போல ஒரு சிட்டி + சலூன் + கொள்ளையர்கள் + ஷெரீப் + கர்னல் என தோண்றினாலும் கதை என்னவோ வித்யாசமாகத்தான் இருக்கிறது .. பக்கத்துக்கு பக்கம் சரவெடிதான் போங்கோ .. டெக்ஸ் ன் கை முஷ்டிக்கே இங்கே அதிக வேலை கார்ஸன் அங்கங்கே காமெடி செய்து கொண்டு போகிறார் ..
ஓவியங்களின் நேர்த்தி படு அட்டகாசம் கண்ணில் ஒத்திக்கலாம் போல இருக்கு😘😘
கதை 09 / 10
ஆர்ட் 10 / 10
படிக்கும் சுவராஸ்யம் 20 / 10 😎
குட்டி குட்டியான உருவங்களும் அவ்வளவு நேர்த்தியாய் வரையப்பட்டிருக்கு மாஸ் ஆர்ட்.. 😍😍
அந்த சதுப்புக்காட்டுக் காட்சிகள் தெறி ரகம் !!
DeleteEdi Sir..
ReplyDeleteTex- பு.ஒ.பு.வே
படிச்சு முடிச்சுட்டேன்..💋💐😍🙏👌
செம்ம..செம்ம..
முதல் பக்கத்தில இருந்து கடைசி வரை ஒரே.. விறு..விறு.. சுறு..சுறு..🥰👏🤝
10/10
கால்வெஸ்டனில் நேர்ந்த நிஜ வெள்ளத்தைக் கதையோடு இணைத்துள்ளனர் சார்...கவனித்தீர்களா ?
Deleteமேற்கு மிரண்டால் ..
ReplyDelete////ரொம்ப வருஷங்களுக்கு முன்னே இதனிலிருந்து ஒரேயொரு கதையினை முயற்சித்திருந்தோம்///
ReplyDeleteஇரத்த பூமி..?
///ஸ்பெஷலாகவோ களமிறக்கலாம் தான் ! இதனை அவ்விதம் ஒரு வாகான தருணத்தினில் வெளியிடும் பட்சத்தில், வாங்கும் / வாசிக்கும் ஆர்வம் எழுந்திடுமா folks ?///
ReplyDeleteகண்டிப்பாக சார்.
எச்சரிக்கும் எழுவரும் ஸ்பைடரும்
ReplyDeleteஸ்பைடருக்கு எழுவரின் சவால்
ஏழுலக வெறியரும் ஸ்பைடரும்
ஏழுலக கொடூரரின் கொட்டம்
பாதகரை எதிர்த தலைமன்னார்
ஸ்பைடரா ஏழு கயவரா
எட்டுக் கால் பூச்சியும்,ஏழு கால் பூச்சியும்... இதை விட்டுங்க ஸ்டீல்...
Deleteமுடியல..
Deleteஎட்டுக் கால் பூச்சியும்,ஏழு கால் பூச்சியும் !!
Deleteஇத செலக்ட் பண்ணிப்புடலாமோ ?
எழுவரோ எழுவர் ஸ்பைடரோ ஒருவர்
Delete*லயன் லக்கி ஆண்டுமலர்2022*
ReplyDeleteமுதல் கதை
*புத்தம்புது சிறையொன்று வேண்டும்*
டால்டன்களின் குறட்டை சத்தத்தால் பேதி ஆகிப்போன மூன்று டாலர் அச்சடித்த கைதி சொல்லும் பொய்யை நம்பி *டால்டன்கள்* அடுத்தடுத்து செய்கின்ற கோமாளித்தனமான வேலைகளே கதை .. காமெடிக்கென்ற வந்த கதை என்றாலும் படிக்க படிக்க காமடி கலாட்டாக்கள் ஆரம்பிக்கின்றன ..
அங்கங்கே ஆவ்ரெல் அடிக்கிற சேஷ்டைகளுக்கு எனது க்ளாப்ஸ் .. 🙌🙌🙌
இரண்டாவது கதை
*நில் கவனி சிரி*
உண்மையிலேயே ரொம்ப நாள் கழித்து மனம் விட்டு விலா நோக சிரித்து மகிழ்ந்தேன் .. இரண்டாவது கதை பற்றி கதை சொல்ல எனக்கு விருப்பமில்லை
*மேலும் புத்தகத்தை படித்து வாய் நோக சிரித்துக்கொள்ளவும்*
வழக்கமான கதை போலத்தோன்றினாலும் கதை சொல்லும் பாணி வசனங்கள் அனைத்துமே காமடித்தோரணங்கள். 😍😄😄😁
இந்த வருட ஆண்டு மலரை எதிர்பார்த்து காந்திருந்ததற்க்கு நம்ம எடி சோடை போகாம அருமையான இரு கதைகளை கொடுத்துள்ளார் 😍😍😍😍
லயன் ஆண்டு மலர் 2022
வெற்றிக்கோப்பையின் வின்னர் பட்டியலில் சேர்ந்தாச்சு 🥰🥰🥰
ஜூனியர் எடிட்டர் ரொம்பவே மெருகேறிட்டிருக்கார் என்பதற்க்கு இந்த ஆண்டு மலரே சாட்சி.. 🙏🙏
Delete///ஜூனியர் எடிட்டர் ரொம்பவே மெருகேறிட்டிருக்கார் என்பதற்க்கு இந்த ஆண்டு மலரே சாட்சி..///
Deleteஅடடே! ஆர்வம் அதிகரிக்கிறதே!!
"படைப்பாளிகள் உருவாக்கித் தரும் சோடை போகாத கதைகளுள் இரண்டை எடி தொகுத்து வழங்கியுள்ளார்" என்று சொல்லுங்க சம்பத் - பொருத்தமா இருக்கும் !
Deleteகெட்டபய சார் இந்த ஸ்னிஸ்டர்..
ReplyDeleteஒரு நல்லவனும் 7 கெட்டவனும்
கெட்டவனுக்கு ஏழரை
முரட்டெழுவர கருவருத்த வீரன்
ReplyDeleteகழுவேற்றி மூர்க்கன்...
Deleteவன்மேற்கு பேசுகிறது.
ReplyDeleteஸ்பைடரோடு மோதும் நாசக்காரர்கள்
ReplyDeleteவலைமன்னனோடு மோதாதே
ஏழு பயங்கரவாதிகளும் ஒத்தை வீரனும்
To the story of the west question, a big yes
ReplyDeleteபுத்தம் புது சிறையொன்று வேண்டும்...!
ReplyDeleteமுதலில் மொழிமாற்றம் அருமை!
பேசாம லக்கி கதைகளில் நீங்க விஆர்எஸ் வாங்கிடலாம் எடிட்டர் சார்...!
அடுத்த தலைமுறைக்கும் லக்கியை சிறப்பாக கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டார் ஜுனியர்...!
9/10
Given a choice சந்தோஷமாய் மொத்தத்திலிருந்தும் VRS வாங்கிப்புட்டு இங்கேயே கதை பேசிக்கொண்டு டென்ஷனின்றி டேரா போட்டுப்புடுவேன் சார் ! இள ரத்தம் ; புது ரத்தம் பாய்ந்திட கிழ போல்டாய் ஞான் குறுக்கே நிற்பதில் உடன்பாடு நஹி ! And அதை நோக்கிய முயற்சிகளிலுமே ஓசையின்றி ஈடுபட்டு வருகிறேன் ! வேளை வரும் போது விவரிப்பேன் !
DeleteAnd yes, ஜூனியர் is indeed on the right track ! நான் மறுக்கா கைவைக்க அவசியமில்லாத ஸ்கிரிப்டை கொஞ்ச காலத்தில் தந்திட ஜூனியருக்குச் சாத்தியப்படும் என்ற நம்பிக்கையை இந்த ஆல்பம் தந்துள்ளது !
Deleteநடுராத்தியில் மனசை ரணமாக்கிப்புட்டீங்களே எடிட்டர் சார்!
Deleteமுந்தைய காலகட்டத்தை விடவும் கதைத் தேர்வுகளிலாகட்டும்; மொழிபெயர்ப்பு மெனக்கெடலாகட்டும்; கதையின் தன்மைக்கேற்ற வசன பாணியாகட்டும்; நகைச்சுவை உணர்வாகட்டும்; தயாரிப்புப் பணிகளாகட்டும்; அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாகட்டும் - மிக மிகச் சிறப்பாக இக்காலகட்டத்தை அமைத்துவிட்டிருக்கிறீர்கள் என்பதுவே உண்மை!!
உடல் சார்ந்த உபாதைகள் காலத்தின் கட்டாயமெனினும், VRS வாங்கிடும் வயதை எட்ட இன்னும் நீண்டநெடுங்காலம் பாக்கியிருக்கிறது!
'வேளை வரும்போது நீங்கள் விவரிக்க இருப்பதை' எல்லாம் நாங்கள் கேட்கத் தயார் இல்லை!
+1
Deleteசார்....ரொம்ப காலம் முன்னே நிகழ்ந்தது இது ! அநேகமாய் அப்போல்லாம் நீங்க டயப்பர்லே சுச்சு போகிற வயசா இருந்திருக்கும் !
Deleteபெங்களூரில் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ; கடைசி நாளின் ஆட்டம் ; பிட்ச் பம்பரம் போல ஸ்பின் எடுத்து வருகிறது ! பாகிஸ்தானிய சுழல் பந்து வீச்சு வீரர் - இக்பால் காசிம் என்று பெயர் - நம்மாட்கள் அத்தினி பேரையும் தண்ணி குடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ! கட்டையைப் போடவே ஆளாளுக்குத் திணறிக் கொண்டிருக்க, ஒரேயொரு கட்டையான உருவம் மட்டும் அசால்ட்டாய் முன்னே போக, பின்னே வர என்று செம லாவகமாய், நேர்த்தியாய் ஆடிக் கொண்டு ரன்களைக் குவித்து வருகிறது !
96 அவரது ஸ்கோர் ...ஸ்டேடியமே மெய்மறந்து அவரது சதத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் போது காஸிமின் ஒரு பந்து நல்ல பாம்பாட்டம் சீறுகிறது பிட்சிலிருந்து ! ஸ்லிப்பில் கேட்ச் ... மனுஷன் அவுட் !! ஒரேயொரு கணம் சுற்றுமுற்றும் பார்த்தபடிக்கே பேட்டை கக்கத்துக்குள் செருகிக் கொண்டு விறு விறுவென நடக்க ஆரம்பிக்கிறார் ; ஸ்டன் ஆகியிருந்த அரங்கு கரகோஷம் எழுப்ப தயாராவதற்குள் அவர் உள்ளே சென்று மறைந்து விட்டார் !
வருஷம் 1986 ! அந்த ஆட்டக்காரர் - சுனில் மனோகர் கவாஸ்கர் ; இந்தியா ஈன்றெடுத்த கிரிக்கெட் வீரர்களுள் முதல்வர் ! And அதுவே அவரது இறுதி மேட்ச் என்பது கொசுறுத் தகவல் !
விடைபெறும் போது WHY ?? என்ற கேள்வி மேலோங்கினால் தப்பில்லை ; WHY NOT ?? என்ற கேள்வி கேட்கப்படும் வரையிலும் ஒரு பிளேயர் மொக்கை போட்டுக் கொண்டிருந்தாரெனில் அது தான் தப்பு என்பது அந்த ஜீனியஸின் அபிப்பிராயம் ! காலம் முழுக்க ஆட்டத்தில் காட்டிய அதே நளினத்தை, ஆரவாரங்களோ, டம்பங்களோ இன்றி விடைபெறுவதிலும் காட்டியபடிக்கே அகன்றிருந்தார் கவாஸ்கர் !
நாமெல்லாம் அவரது கட்டைவிரல் நகத்துக்குக் கூடச் சமானம் நஹி தான் ; ஆனால் அவரது அந்த சிந்தனையில் இருந்த நேர்த்தி என்னுள் ஏதோவொரு மூலையில் பதிந்தே போனது ! யோசித்துப் பாருங்களேன் சார் - விடைபெறுவதிலும் ஒரு timing எத்தனை அவசியம் என்பதை அவரது கூற்று உணர்த்திடும் !! நாளைக்கே டாட்டா காட்டப் போறேன் என்றோ, நாளான்னிக்கே VRS பணத்துக்கு மகஜர் போடப்போறேன் என்றோ நான் சொல்ல வரவில்லை ! ஆனால் சிறுகச் சிறுக ஜன்னல்களைத் திறந்து புதுக்காற்றும், வெளிச்சமும் உட்புக அனுமதிப்பதன் அவசியத்தை உணராதில்லை என்று சொல்ல முனைகிறேன் !
P.S : இந்தப் பதிவின் தலைப்பை ஒருக்கா படிச்சுப்புட்டு இந்தப் பின்னூட்டத்தை மறுக்கா வாகான மாடுலேஷனில் வாசியுங்கோ !!
Deleteகவாஸ்கர் போய்ட்டாலும் அவரது இடத்தை ஓரளவுக்காவது இட்டு நிரப்ப ஆட்டக்காரர்கள் இருந்தாங்களே சார்?!!
Deleteகண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாலும் எங்களுக்கு உங்களை விட்டா வேற யாரையும் காணலியே?!! விக்ரமின் திறமைகளும் இதுவரை வெளிக்காட்டப்படாமல் குடத்திலிட்ட விளக்காகத் தானே இருக்கிறது?!
சரி விடுங்க - ஒரு மரத்தடியில் வச்சுப் பேசிக்கிடலாம்!
Story of the west - வன்மேற்கின் வாழ்க்கை சரித்திரம்
ReplyDeleteSo மறுக்கா ஆரம்பிக்கலாமுங்களா 😒😒
ReplyDeleteமுடியல மாஸ்டர் முடியல. 😢😢😢
இதுக்கு மெயின் சேலம் பெரிசும் கும்பகோணம் பெரிசும் தான் சரியான சாய்ஸ் .. இவங்க கிட்ட மெயில்ல டீடெய்ல்ஸ் வாங்கிக்குங்களேன் .. ப்ளீஸ்
மேற்க்கில் ஒரு வீரன்
ReplyDeleteOr சேகரிப்புக்கென வாங்கும் பழக்கம் தொடர்கிறதாவென்று சொல்லத் தெரியவில்லை எனக்கு !
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு... சேகரிப்பு பழக்கம் தொடர்கிறது சார்..., சேகரிப்புக்கு தகுந்த Awesome கதைகளை நீங்கள் மறுபதிப்பு செய்தால் கண்டிப்பாக மனதளவில் 1000 நன்றிகள் சொல்லிடுவோம்... கருப்பு கிழவி, திரில் ஸ்பெஷல், திகில் ஸ்பெஷல், ஹாரர் ஸ்பெஷல் மற்றும் பிரபல நாயக நாயகிகள் Ever green stories ஐ தாங்கள் Maxi Size இல் கொடுத்தால் ரசிகர் பட்டாளம் பெரிதாவது உறுதி..
மேற்க்கில் ஒரு வீரனின் கதை
ReplyDeleteமேக்காலே ஓர் இரத்தச் சரிதம்
ReplyDeleteமேக்காலே சீறிய காத்து
மேக்காப்ல ஓர் பயணம்
மேக்காலே முளைத்த ஜன்னல்
மேக்கின் விளைச்சல் இரத்தமா
மேற்கே ஓர் சுரண்டல்
மேற்குலக வாசிகளின் வீழ்ச்சி சரிதம்
மேக்கேயும் ஓர் வேட்டை
மேக்கே மேய்வோம் வாங்க
மேக்கே எட்டி பாப்போம்
மேற்கே மாய்ந்த மைந்தர் கதை
மேற்கே பாய்ந்த ஒளி
தெற்கே வரும் மேற்கு
Delete👍👍
Delete// தெற்கே வரும் மேற்கு //
Deleteகிழக்காலே சுத்தி தெக்கால போய் வடக்கப் பார்த்து வரும் மேற்கு...
-எப்பூடி...
@அறிவரசு
Delete😄😄😄😄😄😄
Arivu ..😆😆😆😆
Delete///ஸ்பெஷலாகவோ களமிறக்கலாம் தான் ! இதனை அவ்விதம் ஒரு வாகான தருணத்தினில் வெளியிடும் பட்சத்தில், வாங்கும் / வாசிக்கும் ஆர்வம் எழுந்திடுமா folks ?///
ReplyDelete# Definetly# Edi Sir..
அன்புள்ள ஆசிரியர் விஜயன் sir... எப்போது இந்த "வன்மேற்கின் வரலாறு" தொடரை கையிலெடுப்பீர்கள் என்று மிகவும் ஆவலாக இருந்தேன் தற்போது இந்த தொடருக்கான நல்ல துவக்கம் எழுந்துள்ளது வரவேற்க தக்கது.
ReplyDeleteமொத்தம் 75 கதைகள் கொண்ட இந்த தொடரில் தாங்கள் இரண்டு கதைகளை முன்பே வெளியிட்டுளீர்கள். அவைகள் இரண்டுமே நம்முடைய இதழ்களில் மிகவும் மதிப்புக்குரியவை. வன்மேற்கின் நிஜ வரலாற்றை கொண்டு பின்னப்பட்டவை இந்தக் கதை வரிசை. தற்போது போனல்லி நிறுவனம் அட்டகாசமான வண்ணத்தில் இந்த தொடரை வெளியிட்டு வருகிறார்கள். இயன்றால் 75 இதழ்களையும் ஏதேனும் ஒர் சந்தா ஏற்படுத்தி தொடர்ந்து வெளியிட வேண்டுகிறேன்.
"வன்மேற்கின் வரலாறு" எனும் தலைப்பு நன்றாக பொருந்தும் என்பது என் கருத்து.
Deleteதலைப்பு நன்றாக உள்ளது ராஜ்.
Deleteஏற்கனவே இத்தொடரில் நாம் வெளியிட்டுள்ள கதை எது?
சூப்பர் ராஜ்குமார் அவர்களே. மிகப் பொருத்தமான தலைப்பு.
Delete@கிருஷ்ணா வ வே sir... அந்த இரண்டு கதைகள்!
Delete1. ஒரு வீரனின் கதை! (முத்து - 231)
2. இரத்த பூமி! (லயன் - 162)
தனிச்சந்தா அளவுக்கெல்லாம் நம்மிடம் பட்ஜெட் இல்லியே சார் ! ஆண்டுக்கு 4 இதழ்களுக்கு ஸ்லாட் தேட முடிந்தாலே பெரும் பாடு ! பார்க்கலாமே !
Deleteமேற்கில் ஒரு கிழக்கு..
ReplyDeleteமேற்கே ஒரு மின்னல்..
மேற்கே ஒரு சூரியன்..
மேற்கில் உதித்த மின்னல்..
மேற்கே ஒரு வெளிச்சம்..
மேற்கே ஒரு உதயம்..
எடி சார்.... ஸ்மாஷிங் 70 யில் ரிப் கிர்பி மற்றும் மாண்ரேக் மட்டும் தனியாக கிடைக்குமா.........
ReplyDeleteஇல்லைங்க...செட்டாக மாத்திரமே நம்மிடம் கிடைக்கும் !
Deleteஸ்பைடர் vs ஸ்னிஸ்டர்
ReplyDelete// இதனை அவ்விதம் ஒரு வாகான தருணத்தினில் வெளியிடும் பட்சத்தில், வாங்கும் / வாசிக்கும் ஆர்வம் எழுந்திடுமா folks ? சொல்லுங்களேன் ப்ளீஸ் ! //
ReplyDeleteபோட்டுத் தாக்குங்க,இதையும் ஒரு கை பார்த்துடுவோம்...!!!
ஸ்பைடர் பற்றி ஒரு பதிவு போட்டேன் டியர் எடி
ReplyDeleteஇங்கே பதிவாகவில்லையே
?!!!!
நீங்க ஏதும் டெலிட் பண்ணிட்டீங்களா என் பதிவை ??
அது பிரௌசர் பிரச்சினை சம்பத். பலருக்கு இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Deleteஎனவே உங்கள் கமெண்டை ஒரு காஃபி எடுத்து விட்டு பப்ளிஷ் பண்ணுங்க. ஒரு வேளை பப்ளிஷ் ஆகவில்லை என்றாலும் காஃபி செய்து உள்ளதை பேஸ்ட் செய்து மீண்டும் பப்ளிஷ் செய்து விடலாம்.
Ok nna
Deleteஇது என்ன புதுத் தொல்லையா கீது ?
Deleteஆனால் எனக்கெல்லாம் Lion Comics ஐடியில் பதிவிடும் சமயங்களில் இது போல் எதுவும் நிகழ்ந்ததில்லையே ?
இதுக்கு நீங்கதான் ஏதாவது பண்ணணும் டியர் எடி ... 😆😆😆
Deleteதெய்வமே..இது கூகுள் நிறுவனத்தின் தளம் !! (Blogger.com)
Deleteஇங்கே ஓசியில் நாமெல்லாம் கும்மியடித்து வருகிறோம் ! மாற்றங்களோ, முன்னேற்றங்களோ - எதைச் செய்வதாக இருந்தாலும் நம்மால் முடியாது ; நம்மாள் சுந்தர் பிச்சை தான் மனசு வைத்தாகணும் !
// இது என்ன புதுத் தொல்லையா கீது ? //
Deleteஆமா சார் என்னுடைய பதிவுகளுமே இப்படி காணாமல் போயிருக்கு,தற்போதைய அப்டேட் User Friendly யாக இல்லையோ என்று தோன்றுகிறது...!!!
துயரத்துடன் ஒரு துவந்த யுத்தம்
ReplyDeleteஒரே ஒரு ஸ்பைடரும்
ஏழூரு ஸ்னிஸ்டரும்
ஸ் vs உஷ்
///ஸ் vs உஷ்////
Delete😄😄😄😄😄😄
// STORY OF THE WEST என்ற இந்தத் தொடரின் பெயரை தமிழில் சற்றே நயமாய் மொழிமாற்றம் செய்திட உங்களின் பரிந்துரை என்னவாக இருக்குமோ ? //
ReplyDeleteமேற்கே போகும் இரயில்,
மேற்கில் இது பொய்யடா,
மேற்கே ஒரு மேட்டுத் தெரு,
மேற்கு சீமையிலே,
மேற்கு தெரு மச்சான்...
-எப்பூடி.....
மேற்கே பிடுங்கிய ஆணி ..!
Deleteஇது விட்டுப் போச்சோ சார் ?
தேவையான ஆணியா,தேவையில்லாத ஆணியாங் சார்...!!!
Deleteவாசக நண்பர்களே... *வன்மேற்கின் வரலாறு* தொடரை வெளியிட நமது எடிட்டரின் மனம் கணிந்துள்ளது. நிச்சயம் நல்லதொரு தொடர் இது. நண்பர்கள் அனைவரும் இந்த தொடருக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள்.
ReplyDeleteகண்டிப்பாக...
Delete// அப்புறம் ஜூலை இதழ்களின் அலசல்களுமே களம்காணட்டுமே ப்ளீஸ் ? //
ReplyDeleteஇன்னும் வரலைங்கோ...!!!
அண்ணே எனக்கும் வரல
Deleteபரவாயில்லை நமக்கு துணைக்கு ஆள் இருக்கு...ஹி,ஹி...
Deleteதிரும்பி வந்த தீயவன்
ReplyDeleteஸ்பைடருக்காண்டி.:-)
ஹை...சூப்பர் !
Delete///STORY OF THE WEST என்ற இந்தத் தொடரின் பெயரை தமிழில் சற்றே நயமாய் மொழிமாற்றம் செய்திட உங்களின் பரிந்துரை என்னவாக இருக்குமோ ?///
ReplyDeleteவிதியின் விளைநிலம் வன்மேற்கு!
அப்ப மதியின் விளைநிலம் வட மேற்கா...!!!
Deleteமதியின் விளைநிலம் கால்வின் வாக்ஸ் சார்.:-)
Deleteஉரக்கடை விளம்பரம் போல தொனிக்குது சார் !
Delete////அப்ப மதியின் விளைநிலம் வட மேற்கா...!!!////
Deleteஹாஹாஹா....! சூப்பர்...!
உப பதிவையும் இன்னும் சிறப்பான பதிவாக அளித்ததற்கு நன்றி.
ReplyDeleteவஞ்சகர்கள் 7/ ஏழு vs ஸ்பைடர்
ஜாலியாய் எழுதுகிறேன் கிருஷ்ணா...உங்களுக்குத் பிடித்துப் போகும் போது gets to be the icing on the cake !
Deleteவன்மேற்கின் ரத்த சரித்திரம்.
ReplyDeleteSounds good...
Deleteடியர் எடி,
ReplyDeleteஜூலை மாத புத்தகங்கள் இன்னும் வந்து சேராத்தால் முந்தைய மாத டப்பிகளை உருட்டி கொண்டிருக்கிறேன்.
ஸ்பைடர் கதைக்கு என்னுடைய பெயர்... தீயோர் எழுவர்....
அப்புறம் வைல்ட் வெஸ்ட் கதைக்கும் டபுள் ஓகே. அதற்கு என்னுடைய சாய்ஸ் ... வன்மேற்கின் முகவரி
//தீயோர் எழுவர்//
DeleteSounds catchy....பார்க்கலாமே சார் !
வாரோயோ வன்மேற்கே..
ReplyDeleteமேற்கும் வன்மேற்கும் சந்தித்தால்..
மேற்கே ஒரு வரலாறு..
அடடே பீரோவில் இருந்த கதைகள் எல்லாம் பட்டாசா இருக்கே. பேசாம பீரோ ஸ்பெஷல் என்று ஒரு சந்தா அறிவித்து மாதம் ஒரு புத்தகமாக வெளியிடலாம்.
ReplyDeleteஅட...இது கூட நல்ல அகுடியாவா இருக்கே !!
Delete// பீரோ ஸ்பெஷல் என்று ஒரு சந்தா அறிவித்து மாதம் ஒரு புத்தகமாக வெளியிடலாம். //
Deleteபீரோவில் துயிலும் பீரங்கிகளா ?!
## முடங்கிக்கிடக்கும் நமது பணம் வெளிப்பட வேண்டுமென்ற அவா மேலோங்கியதா ?
ReplyDeleteஅல்லது நம்ம கூர்மண்டையர் காதல் புது வேகம் கண்டுள்ளதா ?
Or சேகரிப்புக்கென வாங்கும் பழக்கம் தொடர்கிறதாவென்று சொல்லத் தெரியவில்லை எனக்கு ! ##
@# மூணு காரணமுமே தான் Edi Sir.. @#
Edi Sir..
ReplyDelete#சூப்பர் சுள்ளான் ஜாக்..#
இதையும் சேத்துக்கோங்க செலக்சன் லிஸ்ட்ல...🙏
சேர்த்துப்போம் நண்பரே !
Deleteஸ்பைடர், சுஸ்கி விஸ்கி , ஜாகோர் , உயிரே தேடி, பல Tex ஸ்பெசல்கள், மற்றும் கிளாசிக் புக்ஸ் என பல அபிமான இதழ்கள் வர இருப்பதால் இப்போதிற்க்கு Story of west க்கு thumbs down சார்.
ReplyDeleteவைல்ட் west க்கு tex போதும் சார். Sorry
Sorry-க்கு அவசியமே இல்லை நண்பரே ! மனதில் படுவதை ஜாலியாய்ப் பகிர்ந்திட sorry அவசியமா - என்ன ?!
DeleteMe too
Deleteஎனினும் கதை தரம் உள்ளதால் வருடகோடைமலரில் நிச்சயம் இணைக்கலாம்.
Deleteமேற்கே போகும்/ பாயும் குதிரை
ReplyDeleteமுரட்டுப் பூமியில் சிந்தும் சிவப்பு
மேற்கே சிவந்த மண்
வடிந்தது இரத்தமல்ல விடிந்த மேற்கு
மேற்கு மேகமும சிவப்பு
நதியிலோர் குருதிப்புனல்
மேற்கே இரத்த வெள்ளம்
காரிருள் மேற்கு
மேக்காலே சிவக்கும்
திரும்பிப்பார் மேற்கே
மேற்கே மறைந்த/தொலைத்த சூரியன்
புத்தம்புது சிறையொன்று வேண்டும் :
ReplyDeleteகதையின் முதல் பக்கத்தில் ஜெயிலுக்கு கொண்டு செல்லும் கூண்டு வண்டியின் அடிப்பாகத்தில் 'நாலு ஓட்டைகள்' போட்டு தப்பிப்பதில் தொடங்கி... கடைசிப் பக்கத்தில் ஜெயில் முழுக்க பள்ளங்களாக தோண்டியிருந்தாலும் அவற்றை பொறுப்பாக மூடிவிட்டு, தப்பிக்க புதிதாய் பள்ளம் தோண்டுவது வரை.. கதைமுழுக்க டால்டன்ஸின் குடாக்குத்தனமான அடாவடி ரவுசுகள்தான்..!
ஜெயிலில் சந்திக்கும் கள்ளநோட்டு கிங் பென்னி பட்டர்கப்பின் உளறலை நம்பி.. நியூ ஆர்லியன்ஸின் சிறைக்குள் இருக்கும் புதையலை எடுக்க டால்டன் குழு முயற்சிக்கிறது..! அந்த ஊர் ஜட்ஜோ ஜாலி ஜட்ஜூன்னு பேர் வாங்கினவர்.! டால்டன் குழு ஜெயிலுக்குள் போகணும்னு குற்றங்களை பண்ணும்போதெல்லாம்.. அரெஸ்ட் பண்ணாமல் செல்லம் கொஞ்சிவிட்டு போய்விடுகிறார் ஜாலி ஜட்ஜ்.!
ஜட்ஜின் இந்தச் செயலுக்கு காரணமென்ன.? அந்த ஜெயிலில் அப்படி என்னதான் இருக்கு.? லக்கிலூக் இந்தக் கதையில் என்னதான் செய்கிறார் என்பதையெல்லாம் படிச்சி சிரிச்சிக்கோங்க.!
ஜோ.. பேங்கை கொள்ளையடிக்கப் போறப்போ.. அங்கிருக்கும் அம்மினியும் அவருடைய நாயும் சேர்ந்து ஜோவை விளாசி.. வரிசையில் நிற்கவைப்பது..
கஷ்டப்பட்டு கொள்ளையடிச்சது மூணு டாலர் கள்ள நோட்டாக இருப்பது.. அதே கள்ளநோட்டை அரிய பொருள் என குதிரை லாய உரிமையாளர் விற்பனை செய்வது..
மயக்கமடைந்த ஆவ்ரேலை டிபன் ரெடி என எழுப்புவது...
என சிரிக்க பல சங்கதிகள் இருக்கின்றன.!
எப்படியாச்சும் அரெஸ்டாகி ஜெயிலுக்குள்ள போயிடணும்னு டால்டன்ஸ் செய்யும் சேட்டைகளும்.. வாய்ப்பில்லை ராஜாக்களான்னு டால்டன்ஸை அரெஸ்டே பண்ணாமல் ஜூஜூஜூன்னு செல்லம் கொஞ்சிவிட்டுப் போகும் ஜட்ஜின் குறும்பும்.. ஹா..ஹா..ஹா..
விடாக்கண்டன் கொடாக்கண்டன் போல..!
புத்தம் புது சிறையொன்று வேண்டும் - புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.!
சில நேரங்களில் ஈரோவையே தூக்கிச் சாப்பிட்டு விடுவான்கள் இந்தக் குற்ற வித்வான்கள் !! இந்த சாகசமும் அதற்கொரு சாட்சி !
Deleteஉண்மை தான் சார்... அக்கா மகனுக்கு காமிக்ஸ் ருசி காட்டிட நானும் லக்கி முதற்கொண்டு ஏதேதோ புக் காட்டுவேன்... அவனோ லக்கிய கொஞ்சம் கூட சட்டை செய்யாது டால்டன் கதை தான் வேணும்பான்... அதன் பாத்திர அமைப்பு அவ்வளவு ஈர்ப்புள்ளது.
Deleteபேசாம டால்டன்ஸ நல்லவன்களாக்குற மாதிரி கதை ஏதும் உண்டா சார்?
மேக்காலே ஓர் பார்வை
ReplyDeleteமேக்காலே பறந்த கழுகு(அமெரிக்கா)/மேற்கே பிணந்திண்ணிகள்
இருண்ட கண்டம்
இருண்ட போதும் நிறம் காயா சிவப்பு
செந்நிற புழுதியை விழுங்கிய குருதி
திமிறும் தோள்களும் மேற்கின் சவால்களும்
மேற்கின் செல்லப்பிள்ளை எமனா
புலவரே....தொடருக்கொரு பெயர் ; அந்தத் தொடரினில் ஒவ்வொரு கதைக்கும் ஒரு பெயர் - என்று இங்கே அமைத்திட வேண்டி வரும் ! தொடருக்கான உங்க இம்மாம் நீளத்துப் பரிந்துரைகளைப் போட்டால், அப்பாலிக்கா கதைக்குப் பெயரெழுதவெல்லாம் இடம் இருக்காது - "ஒண்ணு" ; "ரெண்டு" என்ற ரீதியில் மட்டுமே போட இயலும் !
Deleteசிவந்த மண் மேற்கு சார்
Deleteகதையின் திசை மேற்கு...எப்புடி
Deleteஉளுந்தூர்பேட்டையில் இருப்பதோ உளுந்து !
Deleteஅது தானே ஸ்டீல் ?
மேற்க்கின் விடியல்!
ReplyDeleteமேற்கு நோக்கி!
வாராயோ வன்மேற்கே!
மேற்கே ஒரு இதிகாசம்!
Wild West - வாழ்வைத் தேடி!
விதி தேடி west
///Wild West - வாழ்வைத் தேடி!///
Deleteசெம!!
Spider vs Sinister Seven
ReplyDelete8கால் பூச்சியும் 7 எழறைகளும்
unfortunately 7 பேர் என்பது வேறு ஒரு contemprary issue வை ஞாபகப்படுத்துகிறது சார்.
ReplyDeleteSinister 7 என்பது பாவிகள் எழுவர் என்ற பொருளா.. அல்லது பாவியின் எண் ஏழா எனத் தெரியவில்லை.!
ReplyDelete.கதை தெரியாமல் தலைப்பிடுவது கண்ணை மூடிக்கொண்டு சேவிங் செய்வதற்கு சமம்..😂
எனவே... ஓடீர்ர்ர்ர்ர்ரா கைப்புள்ள..🏃🏃🏃🏃
மேற்க்கே ஒரு வீரன்
ReplyDeleteஇந்த Story of west தொடரில் ஏற்கணவே வெளியானதாக சொல்லப்படும்..
ReplyDeleteஒரு வீரனின் கதை படிச்ச ஞாபகம் இல்லை.!
ஆனா.. இரத்த பூமியை மாஞ்சி மாஞ்சி படிச்சிருக்கேன்.! அந்த கைடு மாக்கும் பயலாஜி புரபசரும் கண்ணுக்குள்ளேயே நிக்கிறாங்க..!
மாக் கைடாக பணியாற்றும் அந்தக் குடியேற்ற குழுவில் ஒருவனை ஒருவன் அடித்துச்சாப்பிடும் நிலை ஏற்படுவது..
புரபசரும் மாக்கும் எதேச்சையாக தங்கத்தை கண்டுபிடிப்பது..
அதைத்தொடர்ந்து அங்கே ஒரு சிறு நகரமே உருவாவது..
சாத்வீகமான கிழங்கு தோண்டிகள் என்று கேவலமாக வர்ணிக்கப்பட்ட ப்யூட் இன செவ்விந்தியர்கள் சூழ்நிலையால் கொடூர வன்முறையாளர்களாக மாறுவது..
அப்பப்பா.. யதார்த்தத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திய அற்புதமான கதை.! ஐம்பது முறைகளுக்கும் குறையாமல் படித்திருப்பேன்.!
Storey of westக்காக வெறித்தனமாய் காத்திருக்கிறேன் சார்.!
முடிந்தால் முதலிரண்டு கதைகளையும் கூட தரமாக மறுபதிப்பு செய்யுங்கள் சார்..😍
கொஞ்சம் நீளமான பதிவுகளை இங்கேயே டைப்புவதில் ஏகப்பட்ட சிரமங்கள் வருகின்றன..! எழுத்துப்பிழைகள்... வரிக்கு வரி கீழே ஸ்க்ரோல் செய்ய வேண்டிய நிர்பந்தம்..
Deleteஎனவே வெளியே டைப் செய்து காப்பியாற்றுவதே உத்தமம்..😁
நயமான பெயர்கள
ReplyDelete___________________________________
வன்கொலை மேற்கு
மேற்கின் வன்துயர்
வளமான கொலை மேற்கு
கொலை மேற்கு
மெத்த கொல்லும் மேற்கு
துன்பியல் மேற்கு
துயரமேற்றும் மேற்கு
கொல்லத் துரத்தும் மேற்கு
மனிதம் மறந்த வன்மேற்கு
வன்மேற்கின் வறட்டுமுகம்
ஆணவ மேற்கின் ஆவணம்
மேல் அலங்கோலக் கொலை
கொல்ல வா கொலைக்கும் வா
கொலை புதுசு மேற்கே பழசு
கொல்ல போகும் மேற்கு
மேற்கின் கொலை மேன்மை
உயிர் கொலை உயிரற்ற மேற்கு
உயரே கழுகு கீழே கொலை
உன்னைக் கொல்ல மேற்கே துணை
மேற்கின் பொய்முகம்
கொலை விளையும் பூமி
இரத்தத்தின் சரித்திர பூமி
நின்று பார் கொன்றால் பேர்
கொலை கொலையாய்
வளமான கொலை மேற்கு
கார பூமியின் கோர முகம்
இப்படிக்கு கொலைமேற்கு
சூரியனே கொலை சாட்சி
கொல்ல துடி இல்லை மடி
விற்பனைக்கல்ல கொலைகள்
மேற்கு முழுவதும் உதிரம்
வாட்டம் உயிரின் ஓட்டம்
பந்தம் காணா மேற்கு
கொலைக் களஞ்சியம் மேற்கு
மெத்தனம் செத்தனம்
கொலை செய்தால் பிழை
தொட்டனைத்தூறும் கொலைகள்
///மனிதம் மறந்த வன்மேற்கு///
Deleteசெம!!
"மனிதம் மறந்த மேற்கு" - இது இன்னும் 'நச்' !
Deleteக்ரைம் நாவல்களுக்கு பொருந்தும் தலைப்புகள் போலவே இருக்கே...!!!
Delete137th
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteஆத்தாடி எனக்கு என்பேரே மறந்திடும் போல இருக்கே...
ReplyDeleteதீர்ப்புச் சொல்லும் பதிவுல திரும்ப வர்றேன்...
யார் அந்த எழுவர் படை?
ReplyDeleteஸ்பைடரோடு மோதாதே!
சாகச தலைவன் ஸ்பைடர்!
என்றென்றும் ஸ்பைடர்!
ஏழு எதிரிப் போராட்டம்!
ஏழு திசை எதிரிகள்!
விரோதிகளை வேட்டையாடுவேன்!
எண்திசை மோதல்
Delete//அல்லது நம்ம கூர்மண்டையர் காதல் புது வேகம் கண்டுள்ளதா ?//
ReplyDeleteஸ்பைடர் தெள்ள தெளிவாக அச்சிடப்பட்ட முதற்பதிப்பு ஸ்பைடர் கதைகள் விற்பனை குரூப்களில் உடனேயே நல்ல விலைக்கு... அதாவது நீங்கள் பத்து ஸ்பைடர் கதைகள் வெளியிடும் விலைக்கு எப்போதும் போனியாவது உண்டு... மேலும் இருபேனல் பாக்கெட் சைஸ் கதைகளுக்கு காதலர்கள் பலர் உண்டு. இப்பவும் மாயாவி, ஸ்பைடர் நியூன்ஸ் பிரின்டில் கடைகளுக்கு களமிறக்கப்பட்டால்...விற்பனையில் ஏற்றம் காண செய்வர் என உறுதியாக நம்பலாம்.
1.RAISING & ROARING SPIDER SPECIAL. 2.DUPER LUCKY JACK. 3.வன்மேற்கின் அதகளங்கள்.
ReplyDelete*சிங்கிள் ஸ்பைடர் சினிஸ்டர் செவன்.
ReplyDelete*சப்தசத்ருக்கள்
(of course not Tamil)
ஏடாகூட எழுவர்
Wild dust
ReplyDeleteசெங்காடா மேற்கு
வாழ்வதே போராட்டம்
துப்பாக்கி சூடு குறைவதில்லை
தங்க தேசம் மேற்கு
தங்கப் பாதையில் உதிரம்
சிந்தியது வியர்வையில்லை
கல்லறை விளையும் பூமி
தங்கக் கல்லறை மேற்கு
பஞ்சமிலா வஞ்சம்
கடவுள் சபித்த பூமி
எஃகு நெஞ்சங்கள்
விடியலை தேடும் மேற்கு
மேற்கை புயல் ஓயாது
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
தங்க பூமி வரமா சாபமா
தங்கத்தின் பாதை சிவப்பு
டாலர் தேசத்தில் சிவப்பு!
சிவப்பு வீழ்வதில்லை மேற்கே
குருதிக் கொடை மேற்கு
உறங்குது நேயம் மேக்கே
Wild worst
சாத்தானின் கையில் மேற்கு
மேற்கே உதிரம் காய்வதில்லை
மேற்கே உதிரும் மனிதர்கள்
சாகு சாகவிடு
மேற்கே ஓர் சுடுகாடு
மேற்ககே இது நாகரிகம்
மேற்கின் ராகம்
துடிக்க துடிக்க அடங்காது மேற்கு
மேற்கின் ராமாயணம்
Deleteமேற்கேயும் மகாபாரதம்
மேற்கின் முகம் சிவப்பு
மேற்கோடு உறவாடு
Deleteமேல்தட்டு மக்களா
மேல்திசை மௌனங்கள்
மௌனம் கலைந்த மேற்கு
விடிவதெல்லாம் மடிவதற்ககே
Deleteசிம்பிளா வன்மேற்கு/இரத்த பூமி என்று வைக்கலாம்
Deleteநல்லாருக்கும் நண்பரே....புதுசா இன்னும் ட்ரை பன்னுங்க
Delete// விடிவதெல்லாம் மடிவதற்ககே //
Delete:-)
** மேற்க்கே ஒரு உதயம் **
ReplyDeleteதிசையெல்லாம் மேற்கே
ReplyDeleteசிவப்பு நிழலில் மேற்திசை
தங்கப் பாதை....இரத்தச் சுவடு( செமயாருக்கே ....எல்லாத்தையும் சொல்லிருமே சார்)
Deleteபார்த்தறியா எழுவர்
ReplyDeleteஎழுவரோடு போராட்டம்
பூமிக்கு வந்த எமன்கள் எழுவர்
ஏழரக்கருக்கும். ஏழரை
ஸ்பைடரின் போராட்டம்
சாவோடு சடுகுடு
வலையனும் ஏழு விரியனும்
அந்தக் குட்டி சாத்தான் மறுபடி திரும்ப வந்து விட்டது போலவே EV
Deleteஆமாங்க KS!
Deleteஅந்த குட்டிச்சாத்தான் கோவையிலும், கும்பகோணத்திலும் மாத்தி மாத்தி குடித்தனம் பண்றாப்ல இருக்கு! வாங்க ஓடிரலாம்!!
🏃🏃🏃
Deleteவலை மன்னனும் வஞ்சகர் எழுவரும்.
ReplyDeleteவஞ்சகரின் வலையில் வலை மன்னன்.
ஸ்பைடரும் ஏழு மரண தூதர்களும்.
Hi..
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ஆரம்பத்திலிருந்தே சில பல தங்கள் பதிவுகளில் தங்கள் மேஜை மற்றும் பீரோவில் உறங்கிக் கிடக்கும் கதைகளை துயில் எழுப்பச் சொல்லி வலியுறுத்தியுள்ளேன். அதற்கான வேளை இப்போது தான் புலர்ந்துள்ளது. தங்கள் தேர்வுகள் என்றும் சோடை போகாது என்பதில் அழுத்தமான நம்பிக்கை எனக்கு உண்டு. வரவேற்கின்றேன். இன்றைய கொரோனா தரும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து இது மீள தங்களுக்கு உதவும். ஆதரிக்கின்றேன் .நன்றி. வணக்கம்.
ReplyDelete///இதனை அவ்விதம் ஒரு வாகான தருணத்தினில் வெளியிடும் பட்சத்தில், வாங்கும் / வாசிக்கும் ஆர்வம் எழுந்திடுமா folks ? சொல்லுங்களேன் ப்ளீஸ் !///
ReplyDelete----- வன்மேற்கின் வரலாறு-க்கு டபுள. யெஸ் சார்....!!
இந்த சீரியஸ்ல வெளியான இரத்த பூமி அருமையான ஒரு வன்மேற்கு காவியம்....
ப்ளாக்பைபர் வாசிக்கும் மாக், ஆட்டை அடித்து பகிர்ந்துண்ணும் அந்த தங்க ஆராய்ச்சியாளர், கிழங்கு தோண்டிகள்னு அவமானபடுத்திய பின்னே அந்த அப்பாவி செவ்விந்தியர்கள் பதுங்கி பாய்வது செம....
ஆர்ப்பாட்டமில்லாத சாகஸம்....!!
என்னுடைய முதல் விமர்சனம் லயன் காமிக்ஸ் புக்கில முதல் முறையாக இந்த இரத்த பூமிக்குதான் வந்திருந்தது....
வன்மேற்கின் ஜீவிதங்களுக்கான விசயங்களை ஆங்காங்கே தூவியிருப்பாங்க கதை நெடுக....!!
டீ இன்னும் வராத காரணமாக நோ கமெண்ட்ஸ்.....
ReplyDeleteரவி, குமார் அணியில் மீயும் உண்டு!!
me tooo :-)
Deleteசமீக காலங்களில் கமெண்டுகள் காணாம போவது அதிகரித்துள்ளது எனக்குமே....
ReplyDeleteஒவ்வொரு கமெண்டையும் வாட்ஸ்ஆப்பில அடிச்சி இங்கே போட்டாதான் இனி சேஃப்.
அத்தோடு ஒவ்வொரு லைனுக்கும் டவுன் ஸ்க்ரோல்பண்ணி டைபுவதற்குள் செம டஃப்பாக உள்ளது சமீபத்திய குரோம் அப்டேட்டில்...
///அத்தோடு ஒவ்வொரு லைனுக்கும் டவுன் ஸ்க்ரோல்பண்ணி டைபுவதற்குள் செம டஃப்பாக உள்ளது சமீபத்திய குரோம் அப்டேட்டில்...///
Deleteஎனக்கும் இதே பிரச்சினைதான்! ரொம்பவே படுத்துது!
1.ஆறிலும் சாவு .. 7 லிலும் சாவு
ReplyDelete2.எழுவர் வலையில் சிலந்தி
3.சிலந்தி வலையில் எழுவர்
4. வஞ்சத்தின் எண் 7 ..
ஹஹஹஹ....நான் சிலந்தி வலையில் எழுவர் சரியாருக்குமே என நினைத்து கீழே பாக்க என்னா வேகம்
Delete"""வன்மேற்கின் வரலாறு"""
ReplyDeleteநண்பர் ராஜ் உடைய பெயர் அருமை!
1டோமரு jacku
ReplyDelete2.உட்டாலக்கடி jacku
3. dokku jacku
4.ஜகா jacku
5.jack தி டோமரு..
வன் மேற்கின் நாயகன்
ReplyDeleteThoragal series please
ReplyDeleteஉதிரம் உதிரும் மேற்கின் கதை.
ReplyDeleteவன்மேற்கின் மரண யுத்தம்.
விளை நிலம் கொலை நிலமான வன்மேற்கின் கதை.
வன்மேற்கின் ஜீவ மரண போராட்டங்கள்.
மரணத்திற்கு மனு எழுதும் வன்மேற்கின் கதை.
உதிரத்தால் எழுதப்பட்ட வன்மேற்கின் கதை.
மேற்கு வன்மேற்கான கதை.
மேற்கு வன்மேற்கான கதை.:-)
Deleteபுத்தகங்கள் வரவில்லை! வேற வழியே இல்லை ரிப் கிர்பி கதையை மறு வாசிப்பு செய்ய ஆரம்பித்து விட வேண்டியதுதான் :-)
ReplyDeleteவெல்வான் ஸ்பைடர்
ReplyDeleteFighter spider
ReplyDeleteஸ்பைடரோடு போதாதே....ஸ்பைடர்டா
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஸ்பைடருக்கான களத்தில் எழுவர் ராஜ்யம்...
Deleteதீண்டாதே...தூண்டாதே...வதாங்காதே...
பூமிக்காவலன் ஸ்பைடர்
எழுவர் தேடிய ஸ்பைடர்
Deleteஸ்பைடரைத் தேடி
விண்ணிலோர் வலைமன்னர்
துள்ளாதே துவலாதே
Deleteமிஞ்சிய எழுவரும் தலையோடு ஸ்பைடரும்
Deleteவலையோடு
Deleteவன்மேற்கின் பல பரிமாணங்களை மிகையின்றி, பன்ச் வரிகளின்றி, தெறிக்கும் ஆக்ஷன் ஹீரோக்களின்றி ஒரு கதை வருவது சந்தோஷம். அதேபோல எப்போதோ நின்று போன கமான்சே கதை வரிசையில் வராமல் போன கடைசி பாகங்களை ஒரே புத்தகமாக hard cover- ல் வெளிவந்தால் இன்னும் சந்தோஷம். 2023' ல் முயற்சித்து பாருங்கள் சார்!
ReplyDelete1.வன்மேற்கு அத்தியாயங்கள்
ReplyDelete2.ஒரு வன்மேற்கு பொழுது
3.வன்மேற்கு குறிப்புகள்
4.வன்மேற்கின் கால சுவடுகள்
5.வன்மேற்கின் வன்பொழுதுகள் ..
6.மேற்கின் நிறம் சிவப்பு ..
// வன்மேற்கின் வன்பொழுதுகள் //
Delete+1
இன்னைக்கு 1000 கமெண்ட் confirm
ReplyDelete