Powered By Blogger

Sunday, May 08, 2022

கோட்டுக்கு மேல் ஜட்டி !

 நண்பர்களே,

ஞாயிறு காலையின் வணக்கங்கள் ! பழைய SVe சேகர் காமெடியா ? கிரேஸி மோகனின் காமெடியா ? என்பது நினைவில்லை - ஆனால் "பேண்டுக்கு மேலே ஜட்டி போட்டுக்கொண்டால் அது சூப்பர்மேன்" என்ற அந்த அசாத்திய தத்துவமே இந்தப் பதிவின் தலைப்பின் பின்னணி ! கோட்டு சூட் போட்டு உலவும் இந்த நொடியின் நாயகரானதொரு ஜென்டில்மேன் - இந்த ஒற்றை வாரத்தினில் சூப்பர்மேனாய் உருமாற்றம் கண்டிருப்பதே இந்த வாரத்தின் story எனும் போது - அவரது கோட்-சூட்டுக்கு மேலே ஒரு ஜாக்கி ஜட்டியைப் போட்டுவிடுவதே பொருத்தமென்று நினைத்தேன் ! 

ரிப் கிர்பி ! The man of the moment....

போன வாரம் வரையிலும், நண்பர் காரைக்கால் பிரசன்னாவுக்கும், maybe ஒரு கையளவு நண்பர்களுக்கும், அப்புறம் ஹனி டோரியனுக்கும்   மட்டுமே கனவுக்கண்ணனாக காலத்தை ஒட்டி வந்த ஒரு வெள்ளந்தி மனுஷன் - இப்போது நம்மிடையே குஜராத் டைட்டன்ஸ் போல புதுசாய் ; கெத்தாக நிற்பதை பார்க்கும் போது எனக்குள் செம ஜிலீர் !! ஆனால் அதற்காக - "ஆங்...இதெல்லாம் ஞான் எதிர்பார்த்ததே ; yes ...yes ..I know ..I know ..." என்று ரகுவரன் பாணியிலெல்லாம் நான் டயலாக் விடப்போவதில்லை - simply becos இந்த தெறி வெற்றி எனக்குமே ஒரு bolt from the blue !! போன வருஷத்து லாக்டௌன் சமயங்களின் அன்றாடப் பதிவுப் படலங்களில் துவங்கிய இந்த Smashing '70s திட்டமிடலின் போது, வேதாளர் எனும் ஒரு மெகா காந்தத்தைக் கொண்டு உங்களை ஈர்த்து விட்டு, அப்புறமாய் ரிப் ; மாண்ட்ரேக் ; காரிகன் என்ற குட்டித்தம்புக்களைக் கொண்டு வண்டியை ஓட்ட வேண்டியிருக்கும் என்றே உங்களை போலவே நானும் எண்ணியிருந்தேன் ! In fact - வேதாளரை கடைசியாகவும், மற்றவர்களை முன்னேயும் வெளியிட்டால் தேவலாமா ? என்ற நினைப்புமே எழாதில்லை தான் ! ஆனால் துவக்கமே ஒரு அதிரடியுடன் அமைவதே சரிப்படுமென்று அப்புறமாய்த் தீர்மானித்தேன் !  

இந்த Smashing '70s தனித்தடத்தின் ஜீவநாடியே - வேதாளரின் star power இல்லாத இதர க்ளாஸிக் நாயகர்களின் கதைத் தேர்வினில் தான் உள்ளது என்பதை ரொம்பச் சீக்கிரமே நான் உணர்ந்த வேளையில் நான் செய்த முதல் உருப்படியான காரியம் - வேதாளர் + ரிப் + மாண்ட்ரேக் + காரிகன் கதைகளை சேகரிக்க எடுத்துக் கொண்ட முயற்சி ! அமேசானில் ; அமெரிக்கப் பதிப்பகங்களிடம் நேரடியாக - என்று ஒரு பெரும் தொகைக்கு ஒரே நேரத்தில் அம்பானியாட்டம் புக்ஸ் ஆர்டர் செய்த பேமானி நானாகத் தானிருப்பேன் ! அவை அமெரிக்காவில் லாக்டௌன் அமலில் இருந்த நாட்களெனும் போது அங்கிருந்த பூசாரிகளால் துரித வரம் வழங்கிட இயலவில்லை ! 'சரி, அது வர்ற நேரத்துக்கு வரட்டும்' என்றபடிக்கே  நெட்டில் கணிசமாய்க் கிட்டியவற்றை மாங்கு மாங்கென்று படிக்க ஆரம்பித்தேன் - இணைக்கோட்டில் டேங்கோ / சிஸ்கோ / ஒற்றை நொடி ..ஒன்பது தோட்டாக்கள் என்ற சமகாலப் படைப்புகளில் பணியாற்றிக் கொண்டே ! அந்த நொடியில் எனக்குள் பிரவாகமெடுத்த வியப்பு - துளித்துளியாய் நம்பிக்கைகளாய் உருமாற்றம் கண்டன - இந்த க்ளாஸிக் நாயகர்கள் மண்ணைக் கவ்வ மாட்டார்களென்று ! சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னேயிலான அந்தப் படைப்புகளில், பரணின் பழம்நெடியோ ; உறக்கத்தை உடனே வரவழைக்கும் மாயாஜாலங்களோ கிஞ்சித்தும் இருக்கவில்லை என்பதே எனது நம்பிக்கையின் அஸ்திவாரம் ! ஒவ்வொரு நாயகரின் தொடரிலும், ஏகப்பட்ட creative teams பணியாற்றியுள்ள போதிலும், ஒரு மாஸான காலகட்டம் யாரது பேனாக்களில் ; தூரிகைகளில் சாத்தியப்பட்டுள்ளது ? என்பதைக் கண்டறிய முனைந்த போது ரொம்பவே சுலபமாய் விடைகள் கிட்டின ! அமெரிக்கப் படைப்புலகின் பல ஜாம்பவான்கள் - அந்த நடு '60கள் முதல் துவக்க '80கள் வரையிலும் 'ஏக் தம்மில்' அவரவரது தொடர்களில் அதகளம் செய்து வந்திருப்பதை உணர முடிந்த போது - 'கண்டேன் சாதனையாள தா(த்)தாக்களை !!" என்று கூவத் தோன்றியது !  

நான் ஆர்டர் செய்த ஆங்கிலப் பிரதிகளில் முதலில் வந்து சேர்ந்தது ரிப் கிர்பியின் IDW தொகுப்பே ; பொட்டியைத் திறந்து புக்கைப் புரட்டிய நொடியில் பிடரியோடு அறைந்தது அந்தத் தயாரிப்புத் தரமும் ; ரிப்பின் சித்திர அசாத்தியங்களும் ! அந்த அழகான மெகா சைசில் ; ஹார்ட் கவர் அட்டையில் ; துல்லியமான பிரிண்டிங்கில், குவிந்து கிடக்கும் க்ளாஸிக் ஹீரோக்களின் கதைகளின் பிரவாகத்தினை தரிசிக்கும் எந்தவொரு காமிக்ஸ் காதலனுக்கும் அவற்றைத் தாண்டிச் செல்ல சாத்தியமே ஆகாதென்பதை தீர்மானமாய் நான் உணர்ந்த தருணம் அதுவே ! ஆனால் அதற்காக, என்னதான் செம மேக்கப் போட்டுவிட்டாலும், மணவறையில் குந்தவிருப்பது ஒரு பல் போன பாட்டையாவாக இருப்பின், நீங்கள் ஓட விட்டே கல்லைக் கொண்டு சாத்தாது விடமாட்டீர்களென்ற பயமுமே உடனிருந்தது ! அது சன்னம் சன்னமாய்ப் பின்னுக்குச் செல்லத்  துவங்கியது - நான் படித்திருக்காத ரிப்பின் (புது) சாகசங்களுக்குள் பயணித்த நொடிகளிலேயே ! ஒவ்வொரு நாளும் மூன்றே சித்திரங்கள் கொண்டதொரு strip ; ஒவ்வொரு கதையும் தோராயமாய் இரண்டரையோ ; மூன்றோ மாதங்களுக்கு நீண்டிடுவது என்ற அந்தப் பொதுவான template-ல் கதாசிரியர் செய்திருக்கும் உழைப்பைப் பக்கத்துக்குப் பக்கம் பார்த்து வியக்காது இருக்க முடியவில்லை ! ரொம்பவே முக்கியமான விஷயமாய் எனக்குப்பட்டது ஒற்றைச் சமாச்சாரமே : நெருடும் அளவிற்கு கதைகளுக்கிடையே புராதன ரேகைகள்  தென்படாதது தான் அது ! Of course - வேதாளர் கதைகளில் இந்தக் குறை கொஞ்சம் தூக்கலாய் இருந்தது தான் ; ஆனால் பாக்கி மூவரின் கதைகளில் உறுத்தும் அளவில் அந்த நோவை பார்த்திட இயலவில்லை ! Truth to tell, க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் 007 கதைகளுக்குள் பயணிக்கும் போது நெருடல்களில் ஆடத்தோன்றிய அந்தப் பாம்பு டேன்ஸ்கள் இங்கே அவசியமாகிடவில்லை ! அந்த உறுத்தலின்மையே போதும் ; மிச்சம் மீதத்தை படைப்பாளிகளின் ஜாலங்களும், உங்களின் பழமைக் காதலும் பார்த்துக் கொள்ளுமென்ற எண்ணம் என்னுள் அல்ட்ரா டெக் சிமெண்ட் போல உரம் கண்டது ! 

எனது பிரதான பயமே - இக்கதைகளுக்குள் இதற்கு முன்பாய் நிறைய பதிப்பகங்கள் சடுகுடு ஆடியுள்ளன எனும் போது, "பிரசுரமான கதைகள் எவை ? புதியன எவை ?" என்று கண்டறிய இயலுமா ? என்பதாகவே இருந்தது ! அதிலும் வேதாளர் தொடரிலிருந்து ராணி காமிக்சில் எக்கச்சக்கக் கதைகளை போட்டிருந்தது நமக்குத் தெரியும் ! அவற்றைத் தேடி எடுத்து பட்டியலிடவெல்லாம் அந்த சமயத்தில் நேரமிருக்கவில்லை என்பதால், "ஜெய் பாகுபலி ; பாக்கெட்டுக்குள் ப்ளீச்சிங் பவுடரை வைத்திருப்பவனுக்கு எந்த மூ.ச.வும் முட்டுக்கட்டையாகிடாது !!" என்ற அசட்டுத்துணிச்சலுடன் கதைகளை டிக் அடிக்க ஆரம்பித்தேன் ! நம்மட்டில், முத்து காமிக்சில் ஏற்கனவே வெளியான கதைகளுக்கு மட்டும் இங்கு அதிக இடம் மட்டும் தந்திட வேண்டாமென்று தீர்மானித்துக் கொண்டேன் ! அந்தக் க்ளாஸிக் கதைகளை எதிர்பார்த்துக் காத்திருந்த நண்பர்கள் சற்றே ஏமாற்றம் கொள்வாரென்றாலும் - புதுசாய், fresh ஆகப் படிக்கும் வேளைகளில் அந்த ஏமாற்றம் கரைந்து விடுமென்ற நம்பிக்கை தான் அதன் பின்னணி ! கதைகளும் கத்தையாய் வந்து சேர்ந்தன ; பணிகளும் மொந்தையாய் குவிந்தன ; and இதோ - Smashing ;70s தடத்தின் பாதியினைத் தாண்டியிருக்கும் தருணத்தில் நம் முன்னே - where do we go from here ? என்றொரு  சுவாரஸ்யக் கேள்வி விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது ! இனி தொடரும் நாட்களில் - VRS வாங்கிப் போன ஒவ்வொரு golden oldie நாயகரையும் தேடிப்பிடித்து இதே போலான நேர்கோட்டுக் கதைகளில் போட்டுத் தாக்கிப் பயணத்தை நடத்துவதா ? அல்லது - எப்போதும் போலான பயணத்தின் மத்தியினில் இளைப்பாறும் ஒரு பூங்காவாக மட்டுமே இந்த க்ளாஸிக் பார்ட்டீஸ்களைக் கையாள்வதா ? 

காதில் எழும் புகைகளுக்கு மத்தியினில் 'பார்டா...ஒரு பத்து விமர்சனம் செமையா வந்துப்புட்டதிலே தலை கால் புரியாம ஆடறாண்டா முழியாங்கண்ணன் !" என்று நம்ம அன்பான ஆர்வலர்களுக்கு தென்படலாம் தான் ; ஆனால் இது தரையினில் கால் பதிந்திராத நிலையில் எழுந்திருக்கும் ஒரு கேள்வியே அல்ல - simply becos ரிப் கிர்பி ஸ்பெஷல் இஸ் கான் ...போயிண்டே....காலி...முடிந்ச்சூ.....ஸ்டாக் இல்லா.....டாட்டா...பை..பை..!! இன்னமும் Smashing '70s சந்தாக்களில் நண்பர்கள் இணைந்த வண்ணமே உள்ளனர் எனும் போது, அவர்கட்கென ஒரு சிறு எண்ணிக்கையை மாத்திரமே கையில் நிறுத்தி வைத்துள்ளோம் - பாக்கி ஸ்டாக் மொத்தமாய்க் காலி ! And  மேற்கொண்டு பிரதிகள் கோரி வரும் நமது முகவர்களிடம் கடந்த மூன்று தினங்களாய் நம்மாட்கள் தர்ம அடி வாங்கி வருகின்றனர் !! வேதாளர் கூட இந்த விற்பனைப் புள்ளியினைத் தொட்டுப் பிடிக்க இரண்டரை மாதங்கள் எடுத்துள்ளார் ; ஆனால் ரிப் & டெஸ்மாண்ட் ஒற்றை வாரத்தில் செய்துள்ள அதகளம் one for the ages !!! சத்தியமாய்ப் புரியவில்லை - ரசனைகளின் அளவுகோல்களாய் நான் இத்தனை காலம் கருதி வந்தவற்றையெல்லாமே பழைய இரும்புக்கடையில் போட்டுப்புட்டு ; கோடுகளையெல்லாம் மொத்தமாக அழித்து விட்டு, புதுசாய், பிரெஷாய் உங்களை அறிந்திட நான் பிள்ளையார் சுழி போட வேண்டுமாவென்று !! 

பத்தாண்டுகளுக்கு ஒருவாட்டி நம்மை நாமே reinvent செய்து கொள்ள வேண்டி வருமென்று எண்ணியிருந்தேன் தான் - ஆனால் "போட்றா ரிவர்ஸ் கியரை ; வண்டிய 30 வருஷம் பின்னோக்கி விட்றா சம்முவம் !!" என்று சொல்லக் கூடியதொரு தருணம் நம் பாதையில் பிரசன்னமாகி நிற்குமென்று சத்தியமாய் நான் எதிர்பார்த்திடவில்லை ! Of course இதே க்ளாஸிக் நாயகர்களை ஒற்றைக் கதைகளாய் ; நார்மல் format-ல் பார்த்தால், மேக்கப் போடாத கீர்த்தி சுரேஷ்களாய் மாத்திரமே தென்படுவர் என்று எனக்குத் தோன்றுகிறது தான் ; ஆனால் இனியும் எனது அளவுகோல்களை மட்டுமே கொண்டு, 'டக்கிலோ...ஸ்ப்ரிங் ரோல் ; கபாப் ; என்று  நமது தேர்வுகளை செய்வது சுகப்படுமா ? என்று சொல்லத் தெரியவில்லை !! "எனக்கு நூடுல்ஸ் வாணாம் ; இடியாப்பம் போதும் ; லசானியா வாணாம் ; பணியாரம் போதும் !!" எனும் நண்பர்களின் எண்ணிக்கைகள் மிகுந்திருக்கும் பட்சங்களில் - எஞ்சின் டிரைவர் யூனிபார்மைக் கழட்டிப்புட்டு, 'சம்முவம்' அவதாருக்கான வேட்டியும், தலைப்பாகைக்கும் ஆர்டர் செய்தாகணும் போலும் ! ஏனுங்கனா....அமேசானிலே முண்டாசு கிடைக்குமாங்களா ? 

You bet - ரசனைசார் சமாச்சாரங்களில் - "இது உசத்தி ; அது குறைச்சல்" என்ற பேச்சுக்கே இடமில்லை தான் ; so "எங்களது தேவைகள் நேர்கோடுகள் மாத்திரமே" என்பதை நீங்கள் தொடர்ச்சியாய் அழுத்தம் திருத்தமாய் அடிக்கோடிட்டு வரும் பட்சத்தில் - சைடு கோடு ; பின்கோடு ; முன்கோடு - என இதர கோடுகளுக்கு VRS தந்திடும் (தற்காலிக) சூழல் எழவும் கூடும் ! அதற்காக அட்டவணையினில் தாத்தாக்களையும், பாட்டிகளையும் போட்டு நிரப்பிடவெல்லாம் போவதில்லை தான் ; இந்த Smashing '70s ; '60s என்ற பயணம் ஒரு தனித்தடத்தில் உங்கள் மையல்கள் தொடர்ந்திடும் வரையிலும் தொடர்ந்திடட்டும் ! ஆனால் ரெகுலர் அட்டவணையினில் இயன்றமட்டிலும் பரீட்சார்த்தங்களுக்கு தடா போடும் வேளையோ - என்னவோ இது ? "இண்டிகேட்டரை பிடுங்கிப் போட்டுப்புட்டு ; கைய இங்கிட்டும், அங்கிட்டும் நீட்ட வழிகளின்றி கட்டிப்போட்டுப்புட்டு, நீ நேரா போனாலே போதும்டா ராசா !! " என்பதா இந்த நொடியினில் எனக்கான உங்களின் புகை சமிஞை guys ? 

பளபளக்கும் FFS இதழ்கள் கிட்டங்கியினில் கலரில் தேவுடா காத்து  வந்திட, கருப்பு-வெள்ளையில் க்ளாஸிக் பார்ட்டிஸ் டாட்டா சொல்லிவிட்டு சிவகாசியைக் காலி செய்து கிளம்புகின்றனர் ! காத்துவாக்கில் ரெண்டு காதலையும் வாங்குவோம் என்று பார்த்தாக்கா - உங்க சாய்ஸ் வேறா இருக்குதுங்களே - ஞான் என்ன செய்யும் ? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க !

Bye all...have a chill Sunday ! See you around !

P.S : இன்னொரு சமாச்சாரமுமே : Smashing '70s தடத்தின் 'கைப்புள்ள' என நான் எண்ணி வந்த மாண்ட்ரேக் ஸ்பெஷல் தானாய், ஆட்டோகியரில் தலை தெறிக்கும் வேகத்தில் ; தெறி மாஸாய் ரெடியாகி வருகிறது guys !! அட்டைப்படத்தில் மாண்ட்ரேக் & லொதார் தில்லாய் சுட்டுக் கொண்டிருக்க , "இதை எங்கிருந்து முட்டைக்கண்ணன் சுட்டான் ?" என்ற ஆழ்நிலை ஆராய்ச்சிகளுக்கு ஆர்வலர்கள் ஆர்வம் காட்டிட முகாந்திரங்கள் ஒருபக்கமெனில், இதுவரைக்கும் நாம் படித்திரா பல சாகஸங்கள் ஓவராய்க் காதிலே புய்ப்ப சூட்டல்களின்றி, செம அழகான பக்க அமைப்புகளுடன், சூப்பராய் ரெடியாகி வருகின்றன ! So இதழ் # 3 ரிப்புக்குப் போட்டி தந்தால் - 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதி மாண்ட்ரேக் வாழ்க !' என்ற பதாகையினை ரெடி செய்ய வேண்டி வரும் !! நீங்க தயாரா ? 

இன்னொரு முக்கிய தகவல் பகிர்வுமே : போன ஞாயிறன்று நண்பர் பழனிவேலின் குருவிக்கூட்டினை டாக்டர் ராஜா சாருடன் சென்று பார்க்க முடிந்தது !! அழகான இரு குழந்தைகள் திண்ணையில் வெள்ளந்தியாய் விளையாடிக்கொண்டிருக்க, அமைதியான அழகுடன் அந்தச் சின்னஞ்சிறு வீடு முழுக்கவே நண்பரின் காமிக்ஸ் காதல் இழையோடிக் கிடப்பதைப் பார்க்க முடிந்தது ! பத்தாண்டுகளுக்கு முன்னே கைக்குழந்தையாய்ப் பார்த்த வர்ஷாவிடம், அப்பாவின் போட்டோ அச்சாகியிருக்கும் புக்கை தயங்கித்தயங்கி ஒப்படைத்த போது மனசு ரொம்பவே வலித்தது !  ரம்யமான அவர்களின் அந்தச் சிறு உலகினைக் குலைத்திட ஆண்டவனுக்கு என்ன முகாந்திரங்கள் தான் இருந்தனவோ - சத்தியமாய்ப் புரியவில்லை ! தேறுதல் ; தைரியம் சொல்லல் என்ற சம்பிரதாயங்களின் வியர்த்தம் புரிந்தாலும் அந்த நொடியினில் வேறெதுவும் பேசத்தோன்றவில்லை ! உங்களின் அன்புடன் நம்மிடம் வந்து சேர்ந்துள்ள தொகை ரூ.179,500 ! அதனுடன் நமது பங்களிப்பாக ஒரு தொகையினையும் சேர்த்து பிள்ளைகளின் பெயர்களில் போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்டாகப் போட்டுவிடவா ? அல்லது சேமிப்பு நிதிகளில் முதலீடு செய்து 10 ஆண்டுகளில் நல்லதொரு வளர்ச்சியுடன் தர ஏற்பாடு செய்திடலாமா ? என்று கேட்ட போது - பிந்தைய option தேவலாமென்று அவரது குடும்பத்தினர் எண்ணினர் ! So பிள்ளைகளின் பெயர்களில் safe ஆன விதமாய் முதலீடுகளை செய்திடும் பொறுப்பினை நமது திருப்பூர் நண்பர் பொறுப்பேற்றிருக்கிறார் ! தொடரும் நாட்களில் அதற்கான பேப்பர்ஒர்க் முடிந்த மறுநொடியே முதலீடுகள் செய்திடப்படும் ! Just to keep you updated guys !! உங்கள் தயாளங்களின்றி இது சாத்தியமே ஆகியிராது !! Thanks ever so much !!

195 comments:

  1. 2nd time in the history of lion blog... Me first

    ReplyDelete
  2. படித்துவிட்டு வருகிறேன்..

    ReplyDelete
  3. What? Unbelieavble - The quality of Rip's making was there for everyone to see sir. But to knock it off the shevles in one week - save for the subscription copies is just outlandish at the least !

    Anyways .. so long as your coffers are ringing !

    PS: That .. Supaidar special .. he he .. and Paatti Bond special ... :-)

    ReplyDelete
  4. Edi Sir..
    எத்தனை latest dances வந்தாலும் பரதநாட்டியத்துக்கு இருக்கும் மரியாதையும் மவுசும் தனிதானுங்களே..
    அதுபோலதாங்க.. நம்ப Oldies..ம்

    ReplyDelete
  5. /* நீ நேரா போனாலே போதும்டா ராசா !! */

    Precisely sir - unti we come out of the Pandemic fatigue this will be the case at least for the next 2-3 years. Simply lot of avenues to redeem in life sir - straighter stories are easier to absorb and get entertained in these times. But they have to be like Rip Kirby collection or TEX stories - even the straight line plots must make an underlying sense sir !

    ReplyDelete
  6. வாழ்க ரிப் கெர்பி..i.
    வாழ்க டெஸ்மெண்ட்.. ir

    ReplyDelete
  7. சார் 
    வயசான பாட்டிமா போருக்கு போய் bomb போடும் கதைகளெல்லாம் மெயின் trackல போட்டு அழகாய் கோடௌனிலே தூங்க பண்ணுங்க சார். Smashing 70ஸ் தனித்தடம் அது பாட்டுக்கு போகட்டும் சார் - so also with The Lion Library. 
    Logic என்னவென்றால் கடந்த 3 ஆண்டுகளில் நாம் தொலைத்த பல "பழைய வழக்கங்களை" மனம் தேடுகிறது என்பதே - சில ஆண்டுகளாவது அந்த வைரஸ்சும் இந்த தேடலும் ஒன்றுக்கொன்று போட்டி போடும் நிலவரம் தான் சார். 
    எனவே ஸ்மாஷிங் ட்ராக், Tex டிராக், Godown golden boys டிராக் என்று பிரித்து பிளான் பண்ணுங்கள் சார்.

    ReplyDelete
  8. இன்னொரு முக்கிய தகவல் பகிர்வுமே :

    போன ஞாயிறன்று நண்பர் பழனிவேலின் குருவிக்கூட்டினை டாக்டர் ராஜா சாருடன் சென்று பார்க்க முடிந்தது !! அழகான இரு குழந்தைகள் திண்ணையில் வெள்ளந்தியாய் விளையாடிக்கொண்டிருக்க, அமைதியான அழகுடன் அந்தச் சின்னஞ்சிறு வீடு முழுக்கவே நண்பரின் காமிக்ஸ் காதல் இழையோடிக் கிடப்பதைப் பார்க்க முடிந்தது ! பத்தாண்டுகளுக்கு முன்னே கைக்குழந்தையாய்ப் பார்த்த வர்ஷாவிடம், அப்பாவின் போட்டோ அச்சாகியிருக்கும் புக்கை தயங்கித்தயங்கி ஒப்படைத்த போது மனசு ரொம்பவே வலித்தது ! ரம்யமான அவர்களின் அந்தச் சிறு உலகினைக் குலைத்திட ஆண்டவனுக்கு என்ன முகாந்திரங்கள் தான் இருந்தனவோ - சத்தியமாய்ப் புரியவில்லை ! தேறுதல் ; தைரியம் சொல்லல் என்ற சம்பிரதாயங்களின் வியர்த்தம் புரிந்தாலும் அந்த நொடியினில் வேறெதுவும் பேசத்தோன்றவில்லை !

    உங்களின் அன்புடன் நம்மிடம் வந்து சேர்ந்துள்ள தொகை ரூ.179,500 ! அதனுடன் நமது பங்களிப்பாக ஒரு தொகையினையும் சேர்த்து பிள்ளைகளின் பெயர்களில் போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்டாகப் போட்டுவிடவா ? அல்லது சேமிப்பு நிதிகளில் முதலீடு செய்து 10 ஆண்டுகளில் நல்லதொரு வளர்ச்சியுடன் தர ஏற்பாடு செய்திடலாமா ? என்று கேட்ட போது - பிந்தைய option தேவலாமென்று அவரது குடும்பத்தினர் எண்ணினர் ! So பிள்ளைகளின் பெயர்களில் safe ஆன விதமாய் முதலீடுகளை செய்திடும் பொறுப்பினை நமது திருப்பூர் நண்பர் பொறுப்பேற்றிருக்கிறார் ! தொடரும் நாட்களில் அதற்கான பேப்பர்ஒர்க் முடிந்த மறுநொடியே முதலீடுகள் செய்திடப்படும் !

    This's just to keep you updated guys !! உங்கள் தயாளங்களின்றி இது சாத்தியமே ஆகியிராது !! Thanks ever so much !!

    ReplyDelete
    Replies
    1. சில ஒளிமிகுந்த எதிர்காலங்களின்  துவக்கங்கள் கும்மிருட்டினிலிருந்தே சார் - அதுவரை மேலே உள்ளவர் செய்தது சரி என்ற புரிதலில் நண்பர் குடும்பத்திற்கு தோள் கொடுத்து காத்திருப்போம் !
      நண்பர்களின் தயாளங்கள் நெக்குருகச் செய்கிறது சார். நண்பர் Rummy XIII ஒரு முறை கூறியது போல - 'எனக்குப் பிறகு என் குடும்பம் கவனிக்கப்படுகிறது' என்ற ஒரு புரிதல் இந்த சிறிய வட்டத்தினால் சாத்தியப்பட்டிருக்கிறது சார்.

      Delete
  9. என்னைப் பொறுத்தவரை காமிக்ஸ் என்பது கதை சார்ந்த விசயம் அல்ல சார் -.
    அது ஓவியம் சார்ந்த விசயம்..
    இரண்டாவது - ஒரு ஹீரோ (யிசத்தை)வை கதாசிரியர் கையாளும் விதம் சார்ந்த விசயம்..என்று ரசிப்பவர்களால் SM-70-யை கொண்டாடாமல் இருக்க முடியாது..
    ." ரிப் கிர்பி "- சின்ன வயதிலிருந்தே - அப்பாவின் தோரணை - இயல்பான துப்பறியும் திறன்-என்றும்
    ஒவ்வொரு frame_யிலும் தெரியும் பளிச்சென்ற கதைமாந்தர்கள்.. மனதில் என்றும் நிறைந்திருப்பவர்கள்...
    எந்த காலகட்டத்திலும் எடுத்து படித்து ரசிக்க முடியும் - கதைக்காக அல்ல - அதுவே முக்கியமான point. சார்...
    ரிப் கிர்பி வெற்றி என்பது எனக்கு ரொப்பவே மகிழ்ச்சி தரும் செ ய்தி சார்.. நன்றி..iii.

    ReplyDelete
  10. ட்ரெண்ட் :

    வழக்கமான ட்ரெண்ட் பாணியில் இல்லாமல் கொஞ்சம் ஸ்பீடாக சென்ற கதை .. good read .. rating :8.5/10..

    TEX விடாது வஞ்சம் :

    வல்லவர்கள் வீழ்வதில்லை பிறகு ஒரு வித்தியாசமான ,கனமான கதை களம் .. கதை சொல்ல பட்ட விதம் IS DIFFERENT .. வரலாறு + FICTION கலந்த வித்தியாசமான களம் .. tex கு சரி சமமாக இன்னொரு CHARACTER வந்தாலே அந்த கதை நன்றாக இருக்கிறது (EG: ஷான் FROM வல்லவர்கள் வீழ்வதில்லை )
    ONE OF BEST TEX STORIES IN RECENT TIMES .. NOT FOR LIGHT READ AS USUAL TEX.. RATING 9.5/10 ..

    SMASHING 70S:(RIP KIRBY )

    MAKING S AWESOME .. STILL DIDNT READ ANY STORY ..

    ReplyDelete
    Replies
    1. /** வல்லவர்கள் வீழ்வதில்லை **/

      Is this Kings Special ???? அய்யகோ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      அதை ஞாபகப்படுத்தாதீங்க !!!!!! எடிட்டருக்கு யாம் கொடுத்த title-ம் அவருக்கு ஞாபகம் வந்துரும் :-)

      Delete
  11. ஆஹா நானும் வந்துட்டேன்

    ReplyDelete
  12. அருமையான செய்தி சார்.... "Rip Classic" definitely deserves all the accolades and plaudits.. As I have most of the IDW hardbounds of Rip and X-9, நமது லயனின் latest ரிப் special அவற்றிற்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை... சொல்லப் போனால் நமது ஸ்பெஷலின் அட்டை படத்தின் நேர்த்திக்கு முன் அந்த ஆங்கில பதிப்புகள் மண்டியிடத்தான் வேண்டும்... இனி காரிகனின் வருகைக்கு ஆவலுடன்‌ waiting...

    ReplyDelete
  13. ரிப் கிர்பி புக் உள்ளதா

    ReplyDelete
  14. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  15. Image-இல்லாத பதிவாக இருக்கிறதே..சார்.
    ஒரு ரிப் கிர்பி image_pl..சார்..

    ReplyDelete
  16. ரிப் கிர்பி ஒவ்வொரு கதையை அதுவும் கடைசி பக்கத்தை படித்து முடித்தவுடன் முகத்தில் ஒரு புன்னகை தவறாமல் வந்தது. காரணம் கதையை மகிழ்ச்சி உடன் முடிப்பது, உதாரணம் ஒரு கீரிடத்தின் கதையில் இரு பெண்களுக்கும் கீரிடத்தின் மேல் ஆசை இறுதியில் அதனை தலையில் சூட வாய்ப்பில்லாத பெண்ணும் அதனை சூடுவது போல் முடித்து செம செம feel good factor.

    ReplyDelete
    Replies
    1. ரிப் கிர்பி கதையை மொத்தமாக படிக்கும் போது தான் இதனை உணரமுடிந்தது.

      Delete
    2. வல்லிய point சார் !

      Delete
  17. இந்த ஸ்மாஷிங் 70ஸ் பாதி இப்போதே வெற்றி, அடுத்த பாதியும் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் மாற்று கருத்தில்லை. என் கேள்வி... அடுத்த ஸ்மாஷிங் ரவுண்ட் வண்ணத்தில் வரும் வாய்ப்புள்ளதுங்களா sir?

    ReplyDelete
    Replies
    1. 2024-ல் வேதாளருக்கு மட்டும் முயற்சிப்போம் சார் ; ஏகத்துக்கு வண்ணமெனும் போது பட்ஜெட் எகிறி விடும் !

      Delete
    2. ஆஹா.... கேட்கவே மகிழ்ச்சியாக இருக்குங்க sir!

      Delete
    3. வாவ் பட்டைய களப்புறீங்க
      அந்த டெங்காலி வனமும் & மண்டை ஓட்டு வசிப்பிடம் கலரில் 😍😍🥰😍

      Delete
    4. சூப்பர் சார்....வேதாளருக்கு ...அந்த வனங்களுக்கு....விலங்குகளுக்கு ....நீர் வீழ்ச்சிக்கு...இயற்கையோடிணைந்து வாழ வண்ணமவசியமே

      Delete
    5. ////2024-ல் வேதாளருக்கு மட்டும் முயற்சிப்போம் சார் ;/////

      2023 ங்கிறத தப்பா 2024 னு டைப் பண்ணிட்டிங்க சார்...😜😜😜😜😜

      Delete
    6. தப்பு டைப்பிங்கில் நஹி யுவா ; உங்கள் புரிதலில் ! மறுக்கா வாசியுங்கோ - புரியாது போகாது !

      Delete
    7. ////2024-ல் வேதாளருக்கு மட்டும் முயற்சிப்போம் சார் ; ///--

      சார்@ விற்பனையில் சாதனை பண்ணுவது ரிப்பு.. அதென்ன கலரு வேதாளருக்கு...இதென்ன லாஜிக்???

      Delete
    8. கலரு ஜட்டி கலரு ஜட்டிதான் விஜயராகவன் :-)

      Delete
    9. சார்@ விற்பனையில் சாதனை பண்ணுவது ரிப்பு.. அதென்ன கலரு வேதாளருக்கு...இதென்ன லாஜிக்???//

      May be because the path was created by Vedhalar.

      Delete
    10. ரிப் இப்போத்தானே சார் - கால்ச்சட்டைக்கு மேலாக ஜாக்கியைப் போட்டிருக்கார் ; வேதாளர் ஆல்வேஸ் அப்படித்தானே ?

      So அதுக்கோசரமாச்சும் முன்னுரிமை தர வாணாமா ?

      Delete
    11. ////தப்பு டைப்பிங்கில் நஹி யுவா ; உங்கள் புரிதலில் ! மறுக்கா வாசியுங்கோ - புரியாது போகாது !////

      நல்லாவா புரிந்ததுங்க சார்...நான்
      அப்படி சொன்னது , அப்பவாவது 2023 ல வந்துடாதானு ஆசையில் தான் சார்....

      Delete
  18. ரிப் கிர்பி - காணாமல் போன வாரிசுகள் கதையில் வரும் சகோதரர்கள் என்னை பல வகையில் மிகவும் கவர்ந்து விட்டார்கள். ரிப் கிர்பி வீட்டில் டெஸ்மாண்ட் உடன் சேர்ந்து பாட்டு பாடி நண்பர்கள் ஆகும் இடம் மிகவும் ரசிக்கும் படி இருந்தது. என்ன ஒரு பாத்திரப் படைப்பு, hats off to the கதாசிரியர். இந்த கதை தான் டாப் ரிப் கிர்பி தொகுப்பில்.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ரிப் கிர்பி கதையை இதற்கு முன்னர் படித்து இருக்கிறேன் ஆனால் இது போல் இரசித்தது இல்லை. நன்றி இது போன்ற நல்முத்துக்களை ஒரு மாலையாக கொடுத்ததற்கு விஜயன் சார்

      Delete
  20. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  21. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  22. ரிப்கிர்பி ஸ்பெஷலின் அதகள வெற்றி மிகுந்த மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒருசேர அளிக்கிறது எடிட்டர் சார்! அதுவும் 'ஸ்டாக்-அவுட்' நிலை வாயைப் பிளக்க வைக்கிறது! ஒரு நல்ல படைப்பும்; அதற்கான உங்களது தேடலும்; உழைப்பும் ஒருபோதும் வீண்போவதில்லை என்பது மறுக்கா மறுக்கா நிரூபிக்கப்பட்டிருக்கிறது!

    இத்தனை பிஸியான வேலைகளுக்கு நடுவிலும் நண்பர் பழனிவேலின் வீட்டுக்கே நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலும், உதவியும் அளித்தவந்த உங்களது செய்கை நிறையவே பெருமையளிக்கிறது! கிடைத்த தொகையை நீண்டகால சேமிப்பின் அடிப்படையில் நமது திருப்பூர் நண்பர்களிடம் ஒப்படைத்திருப்பது மிக நல்ல முடிவு! அத்துறையில் நிபுணர்களான நம் நண்பர்கள் இத்தொகையை சிலபல வருடங்களுக்குப் பின்னே ஒரு கணிசமான தொகையாக்கி பழனிவேலின் மகள்களிடம் கொண்டுசேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது!

    தனது பொன்னான நேரத்தை பழனிவேலின் குடும்பத்திற்காக செலவளித்து, உதவிகள் பல செய்துவரும் நண்பர் AKK ராஜா அவர்களுக்கு ஒட்டுமொத்த காமிக்ஸ் நண்பர்களின் சார்பாக நன்றிகளும், பாராட்டுகளும்!!_/\_

    ReplyDelete
    Replies
    1. எனது நன்றியும் பாராட்டுக்களும்.

      Delete
    2. என்னுடைய பாராட்டுகளும் , நன்றிகளும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும்....🙏🙏🙏

      Delete
  23. சார் நான் எல்லாம் 45 வயசு கடந்த ஆள்தான். நான் சின்ன வயசா இருக்கும்போது நம்ம காமிக்ஸ் புக்ஸ் எல்லாம் ஒரே புக்கை 100 தடவை படித்திருக்கிறேன். ஆனா இப்ப எல்லாம் ஒரு புக்க ரெண்டு தடவை படிக்கிறதுக்கு டைம் இல்ல. ஆனாலும் புக்கு வந்தவுடனே படிக்கிற நாயகர்கள் யார் என்று பார்ப்போம். டெக்ஸ் வில்லர் ஜானி லக்கிலுக் சிக்பில் போன்ற பழைய நாயகர்கள் கதைகளை உடனே படித்து விடுகிறேன். நேரம் கிடைக்கும்போது இவைகளை மீள்வாசிப்பு செய்து வருகிறேன். இது என்னுடைய ரசனை. பழைய நாயகர்கள் இல்லை புது நாயகர்கள் எதுவாக இருந்தாலும் உங்களுக்கு உடனடியாக விற்றுத் தீர்ந்து நல்ல லாபம் தரக்கூடிய புத்தகங்களாக மட்டுமே தயவு செய்து வெளியிடுங்கள்.எங்களுக்கு காமிக்ஸ் வந்துகிட்டே இருக்கணும்

    ReplyDelete
    Replies
    1. வரிக்கு வரி ப்ளஸ்ஸோ பளஸ்ங்கோ..... நாம 45கடப்பதற்கு இன்னும் நிறைய காலம் இருந்தாலும் திருச்சி விஜய் அவர்களின் கருத்தோடு ஒத்துப்போகிறேன்...

      Delete
    2. //புக்கு வந்தவுடனே படிக்கிற நாயகர்கள் யார் என்று பார்ப்போம். டெக்ஸ் வில்லர் ஜானி லக்கிலுக் சிக்பில் போன்ற பழைய நாயகர்கள் கதைகளை உடனே படித்து விடுகிறேன். நேரம் கிடைக்கும்போது இவைகளை மீள்வாசிப்பு செய்து வருகிறேன்.//

      கவனத்துக்குரிய செய்தி சார் !

      Delete
    3. Edi Sir..
      நீங்க நல்லா இருக்கோனும் தமிழ் காமிக்ஸ் முன்னேற..

      நாட்டில் உள்ள காமிக்ஸ் வாசகர்களின் ஆசை நிறைவேற..

      Delete
    4. நல்லவங்க வாசகர்கள் நாங்க எல்லோரும் உங்க பின்னாலே..

      நீங்க நினைச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே..

      Delete
  24. ரிப் கெர்பி போல் கிளாஸிக் பாண்ட் 007 னும் வந்தால் கட்டாயமாக வெற்றி பெறும்

    ReplyDelete
    Replies
    1. அழகியை தேடியில இருந்து வெளியான 8கதைகளை இதேபோல கொடுத்தா நிச்சயமாக 007ம் 5வதாக இணைவார்....

      Delete
    2. அழகியைத்தேடி
      மந்திரியை கடத்திய மாணவி
      காதலியை விற்ற உளவாளி
      எரி நட்சத்திரம்
      சீன உளவாளி
      இரத்த காட்டேரி
      ராஜாளி ராஜா
      கொலைகார கொரில்லா
      ரகசிய மாநாடு.1
      ரகசிய மாநாடு.2
      பாம்புப்பாடகி
      தலை மட்டும்
      மொட்டைத் தலை ஒற்றன்
      கவச உடை
      போன்ற பல ஹிட்கள் உள்ளன ரிப் கெர்பி பேக்கிங் போல் போட்டுத்தாக்கினால் கண்டிப்பாக வெற்றி உறுதி

      Delete
  25. சூப்பர் சார்....
    பழனிவேல் ஆசியுடன் செந்தூர் வேல் அருட்பார்வையுடனும் நண்பர் குடும்பம் மேலேறி வரட்டும்

    ReplyDelete
  26. ரிப்பின் அட்டைப்படமே அனைத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டதே.....கதைகளும் நீங்க முன்னமே சிலாகித்ததால் இவ்வெற்றி அதிசயமாய் படலை....ஆனாலும் அதிரடி ஹிட் எதிர்பாராதது....அனைத்தையும் வாங்குனாதான் வேதாளர் எனும் போது வரும் வெற்றி போல் என் முன்பு தோன்றினாலும் நண்பர்களின் உற்சாகப் பதிவுகள் சரியான திசை எனக் காட்டுது....தொடரட்டும் வெற்றிகள்

    ReplyDelete
  27. பதிவின் சிவப்பு எழுத்துக்கள் மனதை கனக்கச் செய்கின்றன..

    ReplyDelete
  28. வெளியூரில் இருப்பதால் வீடு நாடி வந்த ரிப் கிர்பியை காணாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்..

    ReplyDelete
  29. லக்கி லூக் ,டெக்ஸ் வில்லர்,தோர்கல்,மர்ம மனிதன் மார்டின்,ரிப்போர்ட்டர் ஜானி (க்ளாசிக் மறு பதிப்புகள்),கமான் சே,கேப்டன் பிரின்ஸ் (க்ளாசிக் மறு பதிப்புகள்),ஸ்மர்ப்ஸ் ஆகியவைகளை மட்டும் தனது பிரத்யேக அலமாரியில் வைத்திருக்கும் என் புதல்வன் நந்த கிஷோர் வேதாளருக்கும்,ரிப் கிர்பிக்கும் அந்த அலமாரியில் ஓரிடத்தை ஒதுக்கியிருக்கிறான்..
    அட..
    சூப்பர் ஸ்டார்கள் என்றைக்குமே சூப்பர் ஸ்டார்கள் தானே..

    ReplyDelete
  30. வேதாளரும்,ரிப் கிர்பியும் இன்றைய தலைமுறையினரையும் கட்டிப் போடும் ஆற்றலாளர்கள் என்பது நிரூபணமாயிருக்கிறது..!!

    ReplyDelete
  31. நண்பர் பழனிவேலுக்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து செய்திருக்கும் உதவி மகத்தானது..நன்றிகள் பல...

    ReplyDelete
  32. விடாது வஞ்சம்....
    இவன்தான் வில்லன் என காட்டி செல்லும் டெக்ஸ் கதையிலிருந்து மாறுபட்ட கதை....இவன்தான்...கவனித்த....இவன முன்னிறுத்தி இவனுமல்ல என சென்று முடிவு வேறுமாதிரி காட்டி சோகமாய் முடிக்கிறார்கள் .
    வழக்கத்தை விட கார்சன் டெக்ஸ் நையாண்டிகள்....அனல் பறக்கும் பேச்சுகள் என கூர் தீட்டிய வார்த்தைகள் நெஞ்சினில் கலந்து மிதக்கச் செய்கிறது மனச ...நாமளும் நாலு பன்ச் பேசி சாத்தலாமா கீ போர்டால்தான் என பரபரக்கச் செய்யுது படிக்கும் போதே .இது வரை வந்ததிலே டாப் மொழி பெயர்ப்பு என மனசு குதூகலிக்க....முழங்கும் வசனங்கள் எக்காளமிட. ....
    கண்களை படைத்தவன் அருமையை உணரச் செய்யும் ஓவியங்கள்....லொகேசன்கள்....அனைத்தும் நிறைய....இக்கதை மாபெரும் வெற்றி பெற்று வண்ணத்ல விரைவில் வரும்னு பட்சி சொல்லுது....
    என் பெயர் டைகர்ல அந்த மதுக்கடையை இருவரா என கௌபாய் கேக்கு என்னையும் சேத்துக்க என ஒருவரும் நானுந்தா என ஒருவரும் வருவது நினைவு படுத்தும் வகைல நானுமிருக்கேன் என நண்பர்கள் வருவதும் அழகு...

    என் பெயர் டைகருக்கிணையாய் அட்டகாசமாய்....நில் கவனி சுடு ..இவற்றின் தொடர்ச்சியாய் அற்புத ஆக்கமாய் வந்த இதனை வாசிக்க இல்லை பஞ்சம்...பரபரப்பாய் அலைந்த மனதை கட்டுப்படுத்தி ஓரிரவில் ஒருங்குபடுத்தி மீண்டும் சிறுவனாய் மீட்டது இக்கதை என்றால் மிகையில்லை...இக்கதைய முடிக்காம வேலையே ஓடலை....சூப்பர் ஆசிரியரே

    ReplyDelete
  33. இதே போல வடிவுடை சுஸ்கி விஸ்கி ...லக்கி...ஸ்மர்ஃப்...கிட் கதைக வந்தா நல்லாருக்காதா

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே ; நாமளா கதையெழுதி, படமும் வரையுறப்போ எந்த ஆட்டையும்,எந்தக் குட்டியோடும் போட்டுக்கலாம் !

      Delete
  34. மகளிர்அணியில்சீனியர் நம்ம இளவரசிதான். அவருக்கும் ஒருஸ்பெசல் போட வேணும். ஓ. கே. தானா? _ சென்றபதிவில் ஆசிரியர் .__ டபுள் ஓகே சார். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. செத்தான்டா சேகரு மொமெண்ட்# பூமி தாங்காது சார் !

      Delete
  35. விடாது வஞ்சம் கதையின் நீளம் அதிகம். Crispy ஆக இருந்திருக்கலாம்.

    ReplyDelete
  36. *** காலனோடு கூட்டணி ****

    SODAவிடமிருந்து மீண்டும் ஒரு ஆக்ஸன் அதகளம்!!
    ஒருசில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் பரபரப்பாகக் கதையை நகர்த்தி, ஒரு மென்சோகத்தோடு முடித்திருப்பது சிறப்பு!

    9/10

    ReplyDelete
  37. // இந்த Smashing '70s ; '60s என்ற பயணம் ஒரு தனித்தடத்தில் உங்கள் மையல்கள் தொடர்ந்திடும் வரையிலும் தொடர்ந்திடட்டும் //

    Good Idea

    ReplyDelete
  38. பழனிவேல் குடும்பம் பற்றிய செய்தியை படிக்கும் போது கண்களில் நீர் அடக்க முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பிள்ளைகளின் மனசுகள் படும் பாட்டை நினைக்கவே தடுமாறுகிறது சார் !

      Delete
    2. உங்கள் எழுத்துக்களின் மூலம் அந்த வலியை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது சார்.

      Delete
  39. ///simply becos இந்த தெறி வெற்றி எனக்குமே ஒரு bolt from the blue ///

    ---ரிப் கிர்பிக்கு சத்தம் காட்டாமல் அமைதியாய் உள்ள ரசிகர்கள் ஏராளம் சார்..

    பெர்சனலாக ரிப் கெர்பியை பிடிக்கும் என்றாலும் இந்த அதகள வெற்றி சர்ப்ரைஸ் ஆன ஒன்றுங் சார்...

    ரிப் வாழ்க.....

    ReplyDelete
    Replies
    1. சிம்பிளான கதைக்களங்களின் வெற்றியாய்ப் பார்க்கவே தோன்றுகிறது சார் !

      Delete
  40. ///எப்போதும் போலான பயணத்தின் மத்தியினில் இளைப்பாறும் ஒரு பூங்காவாக மட்டுமே இந்த க்ளாஸிக் பார்ட்டீஸ்களைக் கையாள்வதா ? ///

    ---மை சாய்ஸ் இதற்கு தான் சார்...!!


    என்னதான் கடந்த காலத்தில் ஒரு நாள் விசிட் அடித்தாலும், மீண்டும் இன்றைய நாளில் வாழ்ந்து தானே ஆகணும்.......!!

    கடந்த வந்த பாதையில் ஓரு நொடி இளைப்பாறும் பின்னோக்கிய பார்வையாக மட்டுமே இருக்கட்டும்..பிரதான பயணம் முன்னோக்கியதாகவே அமையட்டும் சார்....

    2011வேல்டு கப் ஹைலைட்ஸ் பார்த்தாதான் அழகு...!!

    ReplyDelete
    Replies
    1. அருமையாக சொல்லி உள்ளீர்கள் STV இனிப்பு ஒரு பதார்த்தம் போல இருந்தால் அதன் சுவை அருமை.
      ஆனால் அதுவே முழு இலையில் வைத்தால் ...

      Delete
    2. நல்ல சிந்தனை விஜயராகவன்

      Delete
    3. அருமை நண்பரே STVR.

      Delete
  41. ////வேதாளர் கூட இந்த விற்பனைப் புள்ளியினைத் தொட்டுப் பிடிக்க இரண்டரை மாதங்கள் எடுத்துள்ளார் ; ஆனால் ரிப் & டெஸ்மாண்ட் ஒற்றை வாரத்தில் செய்துள்ள அதகளம் one for the ages !!! ///---
    அப்படி போடுங்க சார் அருவாளை....!!!

    தெறி வெற்றி ஜென்டில்மேன் & பட்லர் தாத்தாவுக்கு...!!!


    ReplyDelete
  42. S70 பெரும் வெற்றி பெற்றுக் கொண்டிருப்பது உங்களுடைய வார்த்தைகளில் நன்கு தெரிகிறது. இதில் எங்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி 😇😃🙌

    ReplyDelete
  43. // பாக்கெட்டுக்குள் ப்ளீச்சிங் பவுடரை வைத்திருப்பவனுக்கு எந்த மூ.ச.வும் முட்டுக்கட்டையாகிடாது //

    LOL :-)

    ReplyDelete
  44. //எப்போதும் போலான பயணத்தின் மத்தியினில் இளைப்பாறும் ஒரு பூங்காவாக மட்டுமே இந்த க்ளாஸிக் பார்ட்டீஸ்களைக் கையாள்வதா ? //

    Yes. மிகவும் சரி.

    ReplyDelete
  45. கடந்த இரண்டு வாரங்களாக ரிப் -டெஸ்மாண்ட் கதையை தவிர வேறு பக்கங்களில் கண் பார்வை போக விரும்பவில்லை. நேற்று தான் டிரெண்ட் பக்கம் பார்வையை செலுத்தினேன்.

    தேவையில்லாத தேவதை - தலைப்பே கதையைச் சொல்லும் படி மிகச் சரியான தலைப்பு. முதல் சில பக்கங்களில் கல்யாணம் அதன் பிறகு ஒரு இன்டரஸ்டிக்கான ஃப்ளாஷ் பேக் அதனால் டிரெண்ட் கல்யாண வாழ்கையில் ஏற்படும் குழப்பம் இறுதியில் ஒரு அட்டகாசமான ஆக்ஷன் + சென்டிமென்ட் உடன் கதையை முடித்த விதம் அருமை. டிரெண்ட் இந்த முறையும் மனதை கவர்ந்து விட்டார்.

    ReplyDelete
    Replies
    1. ட்ரெண்ட் ஆல்வேஸ் பாஸ்மார்க் பார்ட்டிதான்...

      Delete
    2. உங்களுக்கு பாஸ் மார்க் எனக்கு distinction பார்ட்டி.

      Delete
  46. ////பளபளக்கும் FFS இதழ்கள் கிட்டங்கியினில் கலரில் தேவுடா காத்து வந்திட, கருப்பு-வெள்ளையில் க்ளாஸிக் பார்ட்டிஸ் டாட்டா சொல்லிவிட்டு சிவகாசியைக் காலி செய்து கிளம்புகின்றனர் ! ///


    ஆச்சர்யம்...

    ReplyDelete
  47. //எப்போதும் போலான பயணத்தின் மத்தியினில் இளைப்பாறும் ஒரு பூங்காவாக மட்டுமே இந்த க்ளாஸிக் பார்ட்டீஸ்களைக் கையாள்வதா ? ///
    +1
    //பழைய நாயகர்கள் இல்லை புது நாயகர்கள் எதுவாக இருந்தாலும் உங்களுக்கு உடனடியாக விற்றுத் தீர்ந்து நல்ல லாபம் தரக்கூடிய புத்தகங்களாக மட்டுமே தயவு செய்து வெளியிடுங்கள்.எங்களுக்கு காமிக்ஸ் வந்துகிட்டே இருக்கணும்//
    +1000

    Sir, Any news on Tiger Special? Can we still expect 5 Album collection this year?

    ReplyDelete
    Replies
    1. மஹி எடிட்டர் சார் சொன்னதே 4 பாகம் தான்.

      Delete
    2. உயிரைத் தேடி ...சுஸ்கி & விஸ்கி லைனில் வெயிட்டிங் ! அவர்களை களமிறக்கியான பின்னே பார்ப்போமே சார் !

      Delete
    3. சார் அப்படியே அந்த கோடை புத்தக விழா, 6 புத்தகங்கள்...

      Delete
    4. கோடை போகப் போகுது...இப்பவாவது அந்த கோடை இதழ்கள் என்னன்னு சொல்லலாமே ஆசிரியரே

      Delete
  48. ஆமாங்க ஆசிரியரே! சீக்கிரமாக ஒரு நல்ல செய்தி சொல்லுங்க - டைகர் வருவாரென!

    இளம் டைகருக்கு சந்தா கட்டிய ஆட்களில், அடியேனும் ஒருவன் நான்!

    ReplyDelete
  49. சார் தனியாக நாலு லக்கி...நாலு கிட்...நாலு ஸ்மர்ஃப்...நாலு சுஸ்கி....இந்த 70ஸ் போல முன்பதிவுக்கு மட்டுமன்று தனித்தும் போட்டா தூள் கிளப்புமே....அந்தந்த ஆட்டின் குட்டிகள் ஆட்டோட

    ReplyDelete
    Replies
    1. நமக்குமே நாலு கை ; நாலு தலைன்னு என்னிக்காச்சும் வளராமலா போயிடும் கவிஞரே ? அன்னிக்குப் போட்டு கிட்டங்கிய ஜெகஜோதியாக்கிடுவோம் !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  50. சார், வேதாளரும் ரிப் கிர்பியும் தயாரிப்பு தரம் மற்றும் பிரிண்ட் தரம் மற்றுமின்றி சித்திர தரத்தினால் ஜொலிக்கின்றனர்.

    அனால் Mandrake சித்திரம் கொஞ்சம் வேறு மாதிரி. ஆகையால் Mandrake ஒன்றிரண்டு கதைகள் வண்ணத்தில் அல்லது இரு வண்ணத்தில் வந்தால் நன்றாக இருக்கும். நீங்கள் மனது வைத்தால் கண்டிப்பாக முடியும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, மாண்ட்ரேக்குக்கு கன்னத்தில் மரு வைப்பதானால் கூட அனுமதியின்றிச் செய்திடல் அசாத்தியம் !

      அப்புறம் கொஞ்சமே கொஞ்சமாய்ப் பொறுங்களேன் - மாண்ட்ரேக்கின் ஜாலங்களை பார்த்திட ! அதன் பின்பாய்ச் சொல்லுங்களேன் சித்திரங்கள் எவ்விதமென்று !

      Delete
    2. நானும் நண்பர் கேட்ட கேள்வியை கேக்க நினைத்தேன்....வரட்டும் பார்ப்போம்....வாய்ப்பிருந்தா ஏதாவது ஒரு கதையாவது ஆரஞ்சு வண்ணம் தாங்கி வரட்டும்

      Delete
    3. Ok Sir. We will wait.

      //வாய்ப்பிருந்தா ஏதாவது ஒரு கதையாவது ஆரஞ்சு வண்ணம் தாங்கி வரட்டும்

      Neon Green also good

      Delete
  51. அப்புறம் அந்த விளையாட்டு வீரன் ஃபுட்பாலா டென்னிசா என திகைப்பானே தந்தைக்கு கட்டுப்பட்டு...அது போல கதைகள் இருந்தால் வரட்டுமே ஆசிரியரே

    ReplyDelete
  52. ஆசிரியர் சார்@@@ ////ரிப் இப்போத்தானே சார் - கால்ச்சட்டைக்கு மேலாக ஜாக்கியைப் போட்டிருக்கார் ; வேதாளர் ஆல்வேஸ் அப்படித்தானே ?

    So அதுக்கோசரமாச்சும் முன்னுரிமை தர வாணாமா ?////


    ஓகே சார், வேதாளர் உலவும் அந்த பெங்காலியா காடு, அந்த கடற்கரை கிராமங்கள், கிராமவாசிகளின் குடியிருப்பு, வனவிலங்குகள் எல்லாம்வண்ணத்தில் கலக்கும்னு புரிகிறது.!!


    ஒரு கோரிக்கை சார்!!!

    நான்கு Smashing 70 ஹீரோக்களும் பட்டையை கிளப்பும் வெற்றி அடையப்போகிறார்கள்னு தெரிஞ்சிபோச்..

    4வரின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஒரு கம்பைண்டு கலர் இதழ் போட வாய்ப்பு உள்ளதா?

    வேதாளர்-2 கலர் கதைகள்

    ரிப் கிர்பி-2 கலர் கதைகள்

    மாண்ட்ரேக்-2கலர் கதைகள்

    காரிகன் 2கலர் கதைகள்

    --என 8கலர் கதைகள்கொண்ட இதே போன்ற தொகுப்பு ஜனவரி2024ல.....


    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான ஐடியா. எடிட்டர் சார் இதற்கு வாய்ப்பு உண்டா?

      Delete
    2. கலர் இல்லாமல் கருப்பு வெள்ளை ஆக இருந்தாலும் ஓகே தான்

      Delete
    3. முட்டைகள் மொத்தமாய்ப் பொரிக்க முதலில் பொறுமை காப்போம் நண்பர்களே ; வெளிவருவதெல்லாமே ஆரோக்கியமான கோழிக்குஞ்சுகளே என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம் ! அப்புறமாய் அவற்றை தோட்டத்தில் உலவ விடுவதா ? அல்லது பண்ணைக்கு அனுப்புவதா ? என்று யோசிப்பது சுகப்படக்கூடும் அல்லவா ?

      Delete
    4. ஒண்ணும் பிரச்சினை இல்லை சார். நவம்பர் ஒன்றாம் தேதி தெரிந்து விடும் அல்லவா? அப்போது மறுபடியும் வருகிறேன்

      Delete
  53. சிறுவயதில் போட்டி போட்டு தகறாரு செஞ்சு புடிங்கி காமிக்ஸ் படித்த தங்கை இப்போது selactive reader’ஆக மாரி , டைகர், லக்கி, ப்ரிண்ஸ் மற்றும் வெகு சில கதைகள் தான் படிக்கிறார். ரிப் கிர்பியை விரும்பி படிப்போம், ஆகையால் இன்று வீட்டிற்க்கு வந்த போது, ரிப் ஸ்பேஷலை படித்து விட்டு தா என்று கொடுத்தேன். அதில் இருக்கும் கதை தலைப்புகளை படித்தார்.. அதை கேட்ட என் தங்கையின் கணவர்… “என்னா புக்குபா இது?! - தவிப்பில் ஒரு தாத்தா!.., டேஞ்சர் டார்லிங்!… பெரெல்லாம் ஒரு மார்கமா இருக்கு” என்று கிண்டல்டித்து விட்டார்.

    ReplyDelete
  54. சார் அப்படியே அந்த Zagor எப்போது வரும்?

    ReplyDelete
  55. தேவையில்லாத தேவதை....

    ட்ரெண்ட் எப்போதும் ஆஹோ ஓஹோனு பெர்ஃபார்ம் பண்ணலனாலும் டீஸன்ட் ஸ்கோர் பண்ணுவார்..இம்முறை இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஆவரேஜக்கும் அதிகமாகவே மார்க் வாங்கியுள்ளார்...

    ஒர கணம் சபலப்பட்டு கொள்ளைக்காரி ஹெலனின் அழகில் மயங்கிட்டு மனுசன் மாட்டிக்கிறார்...

    அவரது கடந்தகாலத்தை அன்பு மனைவி அக்னெஸிடம் சொல்ல இயலாமல் தவிக்கும் தவிப்பு; மனைவியை கடத்திட்டாங்கனு அறிந்து துடிக்கும் ட்ரெண்டின் வேதனை!

    ஒருதலையாக ட்ரெண்ட்டை காதலிக்கும் ஹெலன்,அக்னெஸைக் கொல்லும் அளவுக்கு போவது ட்ரெண்ட்டுக்கு மட்டுமல்ல நமக்குமே அதிர்ச்சி தான்....!

    க்ளைமாக்ஸ் யூகிக்க இயன்றதே என்றாலும், தான் ட்ரெண்ட்டின் மனைவியை கொல்ல முயன்றதை ஒப்புக்கொண்டு மரணிக்கும் ஹெலனை பார்த்து பரிதாப படத்தான் தோன்றுகிறது! ட்ரெண்ட் மாதிரி ஆசை வர்ல....!!

    கதைக்கு ரேட்டிங்& ரேங்கிங் 75%...
    அட்டைக்கு 100%....!!!!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விமர்சனம் டெக்ஸ்.

      Delete
    2. STV @

      ஹெலன் கதாபாத்திரம் ஆழமானது.அவள் சாதாரண பெண்ணல்ல.Anarchism என்ற அராசக வழியைப் பின்பற்றுபவள்.அரசு அல்லது பெரிய பணக்காரர்கள்
      வைத்திருக்கும் பொருளை கவர்ந்து எளியவர்களுக்கு வழங்குவதால் அவளை
      ஏதோ ராபின்ஹூட் பாணி என்றோ தீவிர இடதுசாரி கம்யூனிசவாதி என்றோ
      எண்ணி விடலாகாது.

      அனார்கிஸம் anorkhos என்ற கிரேக்க சொல்லிலிருந்து வந்தது. Arkhos என்றால் ஆள்பவன் எனப் பொருள். Anorkhos என்றால் அரசின்மை அதாவது "having no ruler "எனப் பொருள்.

      இவர்கள் - அனார்கிஸ்ட்கள்- படிநிலை அரசாள்வதை புறக்கணிப்பவர்கள்.
      உதாரணமாக முதல்வர் - அமைச்சர்கள்- அரசு அதிகாரிகள் என்ற hierarchy படிநிலை மூலம் மக்கள் ஆளப்படுவதை விரும்பாதவர்கள். இதன் மூலம் சுதந்திரம் பறிபோவதாக உணர்கிறார்கள்.


      ஆண்டவனும் இல்லை; எமை ஆள்பவனும் இல்லை என்பது இவர்கள் தாரக
      மந்திரம்.NEITHER GOD NOR MASTER. இதில் பலவிதங்கள் உண்டு.
      1. தனிமனித அராஜகம்
      2. சமுதாய அராஜகம்
      3. க்ரீன் அராஜகம்

      இன்னும் பல.

      பிட்காயின் என்பது கூட கிரிப்டோ அராஜகம்தான்.ஊழலில் திளைக்கும் சில அரசுகள், நேர்மையாக சம்பாதிப்பதை கொள்ளை வரிகளால் பிடுங்கும் சில அரசுகள் இவற்றுக்கு எதிரான மாற்று நாணயம் என்பது CRYPTO ANARCHISM என்றே கருதப்படுகிறது.

      ( அராஜகம் என்பது ராஜகம் என்ற சம்ஸ்கிருத சொல்லின் எதிர்மறையாக கருதவேண்டும். தர்மம் ,அதர்மம் என்பது போல)

      ஹெலன் செய்வது சமுதாய அராஜகம்.அதிகாரம் மற்றும் பயன்பாட்டு பொருள்கள் அனைவருக்கும் பகிரந்தளிப்பதே. Power and resources to be shared among the community.

      தனது வழிமுறையில் செயல்படும் ஹெலனின் வழியில் குறுக்கிடும் ட்ரெண்ட்டை பயன்படுத்திக் கொள்ளும் அவளுக்கு காதல், குடும்பம் , குழந்தைகள் என்பதெல்லாம் அற்பமானவை.

      ஆனால் மறுபடி ட்ரெண்ட்டை ஒரு கணவனாக பார்க்கும்போது ஏற்படும் பொறாமை உணர்வு அவளுக்கே வியப்பளிப்பதும் நமக்குமே திகைப்பளிப்பதுமே ஆகும்.பல இடங்களில் ஹெலன் பேசும் வசனங்கள் அந்த கதாபாத்திரத்தை பற்றி சொல்கின்றன.

      Pierre Joseph proudhorn

      Giuseppe Fanelli

      Mikhail Bakunin

      Auguste vaillant

      Francoise Claudius koenigstein என்ற
      Ravachol

      என்ற பெயர்கள் 23-ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.இதில் முதல் மூவர்
      மாபெரும் அனார்கிஸ சிந்தனையாளர்கள்.இறுதி இருவர் அனார்கிஸத்தை பின்பற்றியவரகள்.
      ( வைலாண்ட், ரவ்சோல் மொழிபெயர்ப்பு எளிமை கருதி தூக்கிலிடப்பட்டதாகச்
      சொல்லப்பட்டு இருக்கிறது. உண்மையில் அவர்கள் கில்லட்டின் எந்திரத்தால் தலை துண்டிக்கப்பட்டு இறந்தார்கள்)

      ஒரு சோஷியல் அனாரகிஸ்ட்டாக வாழ்ந்த ஹெலன் சமுதாய பொதுநலனுக்காக இறுதிவரை போராடினாலும் ட்ரெண்ட் - அக்னெஸின் எளிய இயல்பான குடும்ப வாழ்வைப் பார்த்து பொறாமையுற்றதாக மரணத் தறுவாயில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு சராசரிப் பெண்ணின் மன உணரவுகள் ஒரு போராளிக்குமுண்டு என உணர்த்துவதோடு அனார்கிஸ சிந்தனைகளே ஒரு வகையில் தயிரில் மறைந்திருக்கும் வெண்ணெய் போன்று
      கதையின் ஜீவ இழைகள் என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.

      ரவசோலை உந்துதல் எனக் கொண்டு 2011-ல் ஷெர்லக் ஹோம்ஸின் A Game of Shadows - ல் Claude Ravache என்ற கதாபாத்திரம் படைக்கப்பட்டது.

      தே.இ. தேவதை has more that meets the eyes.








      Delete
    3. வேறு லெவல் விளக்கங்கள் பொருளர் ஜி..

      இந்த அனார்கிஸ்ட் விளக்கங்களோடு இதை படிக்கும்போது கதையின் டைமன்சனே மாறுகிறது..

      கொள்ளைக்காரி ஹெலன் என நினைத்தது எத்தனை தவறான பார்வைனு புரிஞ்சிட்டது!.. மீண்டும் ஒருமுறை கதையை படிக்க தூண்டிவிட்டீர்கள்...

      Delete
  56. நலம் .நலமறிய அவா.!

    ReplyDelete
  57. ஒரு வண்டிப் புத்தகங்கள் படிக்காமல் கிடக்கிறது.எப்போவாவது படிக்க நேரம் கிடைக்கும் போது..எதை படிப்பது என்ற குழப்பத்திலேயே நாட்கள் நகர்கின்றன..

    இன்று கண்டிப்பாக படித்தே ஆகவேண்டுமென்ற உறுதியுடன் கண்ணை மூடி, புத்தகக் குவியலில் கையை நீட்ட....அகப்பட்டதோ SODA.

    😌😌😌😌

    ReplyDelete
  58. மிஸ்டர் கிர்பி ஸ்பெஷல் இனிதே முடிவுற்றது.. மிகவும் மகிழ்ச்சியானதொரு வாசிப்பனுவமாக அமைந்திருந்தது. அடுத்து ட்ரெண்ட் மற்றும் டெக்ஸை கவனிக்க வேண்டும்.🙂

    ReplyDelete
  59. சிம்ப்பிளான கதைக்களம் மட்டுமின்றி கதையின்ஊடே வரும் மெல்லிய நகைச்சுவையும், ப்ரத்யேகமான மொழிநடையுமே கிர்பியின் வெற்றிக்கு காரணம்.

    ReplyDelete
    Replies
    1. ப்ளஸ் ரியாலிட்டி! கொஞ்சம் கூட மிகைப்படுத்தலே இல்லை எனும்போது நாமே ரிப் போல உணர்கிறோம்....!!!

      Delete
    2. நீங்க ஒரு காமிக்ஸ் ரசிகர், ராஜசேகர் சார். எல்லா வகை காமிக்ஸ் களையும் உங்களால் ரசிக்க முடிகிறது.

      Delete
  60. ஆமாங்க. குமார்சார் 8 வயசிலிருந்தே படக்கதைப் புத்தகங்கிறது. என்னோட அடயாளமாஇருக்குது.. லயன் முத்துவில் எது வந்தாலும்அது என்னோட பொக்கிசந்தான்(சுமார் 9,10வயசில கிர்பியின்4கால் திருடன்ல ஆரம்பிச்சது, முத்துவுடனான எனதுபயணம்) . அதற்குமுன்பு8வயதில் பாலமித்ராவில் வாசிப்புப் பயணம் ஆரம்பம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எந்த கதைக்கும் நெகட்டிவ் விமர்சனம் எழுதுவது இல்லை. இன்னும் உங்கள் மனதை குழந்தை போலவே வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

      Delete
    2. இது போல இன்னும் ஒரு ரசிகர் நமது ஸ்டீல் தான்.

      Delete
  61. ஒரு வேதாளர் கதை ஒரு ரிப் கதை என்று படிப்பதும் ஸ்வாரஸ்யமாக உள்ளது. கடைசி 2 கதைகளை 2 புத்தகங்களிலும் விட்டு வைத்துள்ளேன். அடுத்த இதழ்கள் வர வர கடைசீ 8 கதைகளை மாற்றி மாற்றி படித்து ரசிக்க.

    ReplyDelete
  62. மே மாத இதழ்களை முடித்தாயிற்று,விடாது வஞ்சம் வசனங்கள் அதிகம்,நிறைய கதாபாத்திரங்கள், பெயர்கள் சற்றே கடினமாக இருப்பதாய் தோன்றியதால் நினைவில் வைத்து கதையைக் கடப்பது எளிதாய் இருக்கவில்லை,புலனாய்வு,
    சஸ்பென்ஸ் முடிச்சுமாய் நகரும் வில்லரின் இந்த பாணியும் புதுவிதமாய் உள்ளது,பிடித்தும் உள்ளது,வல்லவர்கள் வீழ்வதில்லைக்குப் பின் டெக்ஸ் சாகஸத்தில் நிறைய கதை மாந்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை நகர்வு அமைந்துள்ளதாய் நினைக்கிறேன்...
    எமது மதிப்பெண்கள்-9/10.

    ReplyDelete
    Replies
    1. // விடாது வஞ்சம் வசனங்கள் அதிகம்,நிறைய கதாபாத்திரங்கள், பெயர்கள் சற்றே கடினமாக இருப்பதாய் தோன்றியதால் நினைவில் வைத்து கதையைக் கடப்பது எளிதாய் இருக்கவில்லை // நான் பேச நினைப்பதல்லாம் ...

      Delete
  63. தேவையில்லாத தேவதை :
    நீ புடுங்கறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான் வடிவேலு சொல்ற மாதிரி, ட்ரெண்டுக்கு இது தேவையில்லாத ( தேவதை) ஆணிதான்...
    ஏன்னா பக்கத்தில் ஆக்னஸ்னு ஒரு தேவதையை வெச்சிகிட்டு எப்பப் பார்த்தாலும் யாரையாவது வெறிச்சி,வெறிச்சி பார்க்கிறார்...
    எதையாவது சிந்திச்சிகிட்டே இருக்கார்,குல்லா முடி வெச்சிகிட்டு இருக்கற ஹெலனிடம் சொக்கி வீழ்ந்து கிடக்கிறார்...
    இவை ஒரு எதார்த்த நாயகரின் மனப் பலவீனங்களோ ???!!!
    சரிசரி ஒரு சாகஸம் வேணும்னா இந்த மாதிரி பிரச்சினைகள் நடந்தாதானே கதையில் பரபரப்பு கிடைக்கும்...
    ஓவியங்கள் வழக்கம்போல் நிறைவு.
    ட்ரெண்ட் இத்துடன் முடிவது வருத்தமே...
    எமது மதிப்பெண்கள்-9/10.

    ReplyDelete
    Replies
    1. ///ட்ரெண்ட் இத்துடன் முடிவது வருத்தமே///

      இன்னொரு பாகம் இருக்குன்னு எடிட்டர் தன் ஹாட்-லைனில் எழுதியிருந்ததா ஞாபகம்!

      Delete
    2. இருக்கு இன்னும் ஒரு பாகம் கட்டாயம் இருக்கு.

      Delete
  64. ரிப் கெர்பி ஸ்பெஷல்,
    8 கதைகளும் ஏதாவது ஒரு விதத்தில் வித்தியாசமாகவும்,ஈர்ப்பாயும் இருந்தது,
    காணாமல் போன வாரிசுகள்-மனிதம் பேசியது,அன்பை தூவியது...
    தவிப்பில் ஒரு தாத்தா-போன்ஸியின் அன்புக்கு மரியாதை...
    டாங்கா துரோகம்-பெண்ணாதிக்கமோ, ஆணாதிக்கமோ எல்லாம் சமஅளவுதான்,சமநிலை தவறினால் குழப்பம்தான்...
    டாக்டர் டேட்டா- வித்தியாசமான கதைக் கரு,ரிப்புக்கு நல்லா ஃடப் கொடுக்கும் வில்லன்...
    டேஞ்சர் டார்லிங்-அழகிய ஆபத்து...
    கச்சிதமாய் ஒரு குற்றம்-சாமர்த்தியமான குற்றம்...
    பொக்கிஷ வேட்டை-ஆர்வமூட்டும் சிந்தனை...
    கிரீடத்தின் கதை-ரிப்புக்கு வேலை அதிகம் இல்லைன்னாலும் நல்லாவே இருக்கு...

    ரிப்பின் கதைகள் விக்ரமன் படங்கள் போல,வில்லன்களின் பாத்திரப் படைப்புகளின் குற்ற எல்லைகள் ஒரு வரையறைக்குள்ளேயே இருக்கும்...
    இவ்வளவு டீசண்டா,இவ்வளவு மென்மையா துப்பறிய ரிப்பை தவிர யாரால் முடியும்,எதிராளியை துன்புறுத்தாமல்,முடிந்தளவு யாரையும் நோகாமல்,புலனாய்வுக்கு இவ்வளவு தொகை என பேரம் பேசாமல் நல்லவர்களுக்காக போராடும் ரிப்பை நமக்கு பிடிப்பதில் வியப்பேது...
    ரிப் ஸ்பெஷல் மனதை கவர்ந்து விட்டது....

    ReplyDelete
  65. ஆமாம் சார் ஒரு புத்தகத்தை நான் ரசிப்பதர்க்கு அதில் வரும் ஒருசின்ன ஸ்பார்க் போதும். அதில் உள்ள நல்லஅம்சங்களைத்தேடித்தேடி ரசிக்க ஆரம்பித்துவிடுவேன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அருமை ராஜசேகரன்.

      Delete
    2. சூப்பர் சூப்பர் ஜி

      Delete
    3. உங்ககிட்டேர்ந்து நிறையக் கத்துக்கிடணும் போலிருக்கே ராஜசேகர் ஜி?!!

      Delete
  66. **** காட்டேரிக் கூட்டணி ****

    ரிப்போர்ட்டர் ஜானியின் ஆவரேஜ் கதைகளுள் ஒன்று! இறுதிப் பக்கங்களில் ஜானியின் வழக்கமான முடிச்சவிழ்ப்பு பாணி இருந்தாலுமே கூட, அது நிறைவாக இல்லை! டெவில் வேடம், அழிவு வேலைகள், பேங்க் கொள்ளை - என்பதெல்லாம் இஸ்பைடர் கதைகளுக்கோ, லாரன்ஸ் & டேவிட் கதைகளுக்கோ சரிப்படலாம்.. ஆனால் ஜானிக்கு செட்டாகவில்லை! கூடவே, நிறைய லாஜிக் ஓட்டைகள்! நகரத்தையே குலைநடுங்கச் செய்யும் டெவில் கும்பலைப் பின்தொடரும் வேலைகளில் கூட ஜானி பிஸ்டல் எதையும் எடுக்காமல்தான் போகிறாராம்! முடியல!

    7/10

    ReplyDelete
    Replies
    1. // டெவில் கும்பலைப் பின்தொடரும் வேலைகளில் கூட ஜானி பிஸ்டல் எதையும் எடுக்காமல்தான் போகிறாராம்! முடியல! // அவரே ஒரு ஆயுதம் எனவே அவருக்கு ஆயுதம் தேவையில்லை.

      Delete
    2. குமார் செம்ம நீங்கள் சொல்வது சரியே வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஜானிக்கு மூளையே வஜ்ராயுதம்

      Delete
    3. // அவரே ஒரு ஆயுதம் எனவே அவருக்கு ஆயுதம் தேவையில்லை. //

      :-) :-)

      Delete
    4. ///அவரே ஒரு ஆயுதம் எனவே அவருக்கு ஆயுதம் தேவையில்லை///

      ஹிஹி உண்மைதானுங்க KS. இந்தக் கதையில் அவர் ப்ளேடு எனும் ஆயுதமாக இருப்பதை படிக்கும்போதே நானும் உணர்ந்தேன்! :)

      Delete
  67. Replies
    1. தேவையில்லாத தேவதை..கதையின் தலைப்பே சொல்லி விடுகிறது....

      ஆனால் ஹெலன் சாகும் போது ஒரு பாடத்தை தருகிறார்....ஆகையால் தேவையான தேவதையாய் பாடம் தருகிறார்....கொன்று விட்டானா....சாகும் போதும் சந்தோசமாய் கேட்க...மறுதலிக்கும் பதிலால் ....தவிப்பாய் காயமாவது படுத்தி விட்டானா....இல்லை என்றதும் என்னை மன்னித்து விடுங்கள் எனக் கேட்டு சாகிறார் அவ்வகையிலாவது ட்ரெண்ட் வருத்தப்படட்டும் என்று......
      அதாவது பிறர் மகிழ்ச்சியை பார்த்து இதுலென்னடா அற்ப சந்தோசம் எனக் கேட்போமே வியப்பாய் அதுவே மாறுது எரிச்சலாய் பிறருக்காக வாழும் பிறரிடம் திருடித்( காமிக்ஸ் கலை வளர்ப்போர் மன்னிக்க)
      தந்து என்னை விட உனக்கு சந்தோசமா....காமிக்ஸ் படிக்குறதுல என்னடான்னு கேப்பாங்களே அதைப்போல....வழியின்றி இருப்போர் நண்பர்களை தேடி கதைத்து சந்தோசமாய் இருப்பாரே அன்பே பிரதானமெனஅதைப் போல....
      பணக்காரங்க தட்டுப்பட்டதெல்லாம் வாங்கி மகிழ்வாரே பணம்தான் எல்லாம் என அதைப்போல ..இந்த இரண்டையும் பேலன்ஸ் செய்து வாழ்வாரே அதைப் போல..

      பிறரைப் பாத்து இதுதான் சந்தோசம்னு முடிவு கட்டிடாத உனக்கானதை நான் தந்த உனது வழியில் பயணம் வைத்து இன்பமாய் இரு ..கடவுள் படைப்பில் ஐந்து விரல்களும் ஒன்று போலில்லே என்றாலும் தவிர்க்க முடியாது...அட கையே இல்லைன்னாலும் உடலியங்கும்....நானில்லை சென்றாலும் நாமென்றிருந்த பிறரைச் சுற்றிச் சுழலும் உலகம்....
      வாழு...வாழ விடு
      பிசகாத மொழி பெயர்ப்பு அப்பக்கத்திலே சூப்பர் சார்....வசனங்கள் குறைவால் பட்டென முடியும் கதை....சித்திர வண்ணங்களால் சற்றே நீள்கிறது ...அருமை

      Delete
    2. ஸ்டீல் என்ன ஒரு விமர்சனம். என்ன ஒரு உணர்ச்சி பிரவாகம். அருமை அருமை.

      Delete
    3. அருமை... அழகு விமர்சனம் பொன்ராஜ் சகோ...

      Delete
    4. ///ஸ்டீல் என்ன ஒரு விமர்சனம். என்ன ஒரு உணர்ச்சி பிரவாகம்///

      உண்மை தான்! ஒரு ஃபுல் ஸ்டாப் கூட இல்லாத நான்-ஸ்டாப் உணர்ச்சிப் பிரவாகம்!

      Delete
    5. // ஒரு ஃபுல் ஸ்டாப் கூட இல்லாத நான்-ஸ்டாப் உணர்ச்சிப் பிரவாகம்! //

      :-) LOL

      Delete
    6. இப்போதெல்லாம் கவிஞரின் வரிகளில் வீரியம் ஜாஸ்தி ; கொஞ்சமே கொஞ்சமாய் மூச்சு வாங்கிக் கொண்டு எழுதினாரெனில் செமத்தியாக இருக்கும் !

      Delete
  68. இந்த மாதம் வந்ததில் எலியப்பா உண்மையாகவே சிரிப்பை வரவழைத்தது. "என் பொண்ணுக்கு அப்புறம் யானை வேஷம் உனக்கு தான் பொருத்தமா இருக்கு எலி" செம காமெடி. சீனியர் ஆசிரியர் நினைவலைகள் கொஞ்சம் dry feel. ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்தது கொஞ்சம் hazy ஆகத்தான் இருக்கும்.

    டெக்ஸ் வில்லர் செம. OK corralக்கு பின் என்ன நடந்தது என்பதை யாரும் சொல்லவில்லை. அதை டெக்ஸ் பாணியில் செம கலாட்டாவாக சொன்னது நன்று.

    டிரென்ட்- தலைப்பை பார்த்து என் மனைவி விழுத்து விழுந்து சிரித்தார். தேவையில்லாத தேவதை. ஆசிரியர் குப்புற படுத்து கனவு கண்டு, விழித்து நோட்ஸ் எடுத்து இப்படி தலைப்புகளை பிடிக்கிறாரா தெரியவில்லை. ஈரோடு விஜய் சொன்னது போல, இத்தினி நாள் ஆக்னசுக்கு ஏங்கியவனுக்கு இப்படி ஒரு குஜால் பிளாஷ்பேக்கா!!! ஆனாலும் வழக்கமான டிரென்ட் சாகசம். ரசித்தேன்.

    ரிப் கிர்பி உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை. ஆசிரியர் அவரை ஜென்டில்மேன் டிடெக்டிவ் என்பார். அப்படித்தான் லைட்டாக இருக்கும். ஆனால் நாம் தான் அதிரடி விரும்பிகளாச்சே. ரசிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. அட்டைப்படத்தில் வேறு 70s ஹிந்தி ஹீரோ போல இருந்தார். ஆனால் கதையை படிக்க ஆரம்பித்ததில் இருந்து அப்படியே தென்றல் வீசுவது போல இருந்தது. ஆசிரியர் சொல்வாரே Breezy read. அது இப்போது தான் கிடைத்தது. நேற்று தான் முடிக்க முடிந்தது. உண்மையான ஹீரோ ஆசிரியரின் பேனாவே. அவரின் டிரேட்மார்க் ஹாஸ்யம் முழு புத்தகத்திலும் விரவிக் கிடந்தது. ஒரே குறை, இம்மாம் பெரிய புக்கை மடக்கவும் வழியில்லாமல் மல்லாக்க படுத்துக்கொண்டு இரு கைகளாலும் தாங்கிப்பிடித்து படித்து கை வலி வந்தது மட்டுமே.

    கோடையை முழுதும் ஜிலிராக்கிய வருண பகவானுக்கும் ஆசிரியருக்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. // உண்மையான ஹீரோ ஆசிரியரின் பேனாவே// 100 சதம் உண்மை.

      Delete
    2. ///அட்டைப்படத்தில் வேறு 70s ஹிந்தி ஹீரோ போல இருந்தார்///

      ஹா ஹா! உண்மை உண்மை!! :)))

      ///கதையை படிக்க ஆரம்பித்ததில் இருந்து அப்படியே தென்றல் வீசுவது போல இருந்தது. ஆசிரியர் சொல்வாரே Breezy read. அது இப்போது தான் கிடைத்தது////

      இன்னிக்கு நைட் நானும் தென்றலை உணர்ந்திடலாம்னு இருக்கேன்!

      Delete
    3. // இன்னிக்கு நைட் நானும் தென்றலை உணர்ந்திடலாம்னு இருக்கேன்! //

      கண்டிப்பாக நீங்கள் தென்றலை உணர்வீர்கள் .. பல அழகு பெண்கள் கதைகளில் வருகிறார்கள் :-)

      Delete
    4. ஹிஹி! இன்னிக்கு விடிய.விடிய கண்ணுமுழிச்சுப் படிச்சுடவேண்டியதுதான்!

      Delete
    5. உங்களை காமிக்ஸ் படிக்க வைக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது:-)

      Delete
    6. //ஆசிரியர் குப்புற படுத்து கனவு கண்டு, விழித்து நோட்ஸ் எடுத்து இப்படி தலைப்புகளை பிடிக்கிறாரா தெரியவில்லை//

      நம்மள் கி பெயர் சூட்டும் சூட்சுமங்கள் தான் தெரிந்ததாச்சே சார் ; சில சமயங்களில் (இம்முறை) போல hit ; சில சமயங்களில் miss ! ஹிட்டடிக்கும் சமயங்களில் வாயெல்லாம் பல்லாகிடும் ; மிஸ்ஸாகிடும் வேளைகளில் 'ஹல்லோ..ஹல்லோ...இங்கே டவர் கிடைக்கலே..ஹலோ..ஹலோ..' தான் !

      அப்புறம் அந்த நெட்டுக்கான காமெடி டிராக் ரொம்பவே சுலபம் சார் ; டெஸ்மாண்டின் முகத்தை அந்தந்த ப்ரேம்களில் பாருங்களேன் - தானாய் ஏதாச்சும் குசும்பாய் எழுதத் தோன்றி விடும் ! இங்கே ஓவியருக்கே முழு credit தர வேண்டுமென்பேன் !

      Delete
  69. ஜென்டில்மேன் ரெமிங்டன் டாப்போ டாப்👍👍👍

    ReplyDelete
  70. ரிப் கிர்பி - அனைத்து கதைகளும் என்னிடம் இல்லாத கதைகள்-(இந்திரஜால் காமிக்ஸ்-நமது லயனில் என்று வெளிவந்தவைகளில்)
    தினம் ஒரு கதை என்ற விதத்தில் படித்து வருகிறேன்...
    அருமையான விருந்து...சார்..

    ReplyDelete
  71. டேங்கோ துரோகம்....வேதாளனுக்கு அமைய வேண்டிய கதை ரிப்புக்கு கிடைத்தால்...யார் நடித்தாலும் இது ஹிட் என்பார்களே அதேப் போல ஒரு கதை நம்ம ரிப்புக்கு கிடைக்க தூள் கிளப்பிட்டார் மனுசன்...கதையும் அது சூழ்ந்த கடலும் கிடைக்கும் முத்துக்கும்....ராணி காமிக்ஸ் மன்னர் பீமாவுடன் துணையிருக்கும் பிந்துவை நினைவு படுத்தும் நாயகி...உடைகள்....இடங்கள் காட்சிகள் என என்பதுகளின் நடுவில் ....நம்மையும் அழைத்துச் செல்கிறார் நடுவே ரிப்....கதை புரட்டப் புரட்ட உற்சாகத்தை தெறிக்க விடுது...பெண்ணாதிக்க பூமியில் ஆணாதிக்கமே அவசியம் என ஆணாதிக்க சிந்தனை தந்தாலும் ...பயணிக்கும் கதை வேகம் வேகம் என ஓவியங்களால் நிதானிக வைத்து அதாவது ரசிக்க வைத்து நகருது...மொழி பெயர்ப்பு வழக்கம் போல....ரிப்புக்கு மட்டும் எப்படிதான் நாயகிகள் அமைவார்களோ...அனைத்தும் சூப்பர் சார்....தற்போது இரசித்த கதைகளில் இதான் டாப்

    ReplyDelete
    Replies
    1. //ரிப்புக்கு மட்டும் எப்படிதான் நாயகிகள் அமைவார்களோ...அனைத்தும் சூப்பர்//

      உங்க வீட்டுக்காரம்மாவுக்குத் தெரிந்திருக்கக்கூடும் ஸ்டீல் - மேற்படிக் கேள்விக்கான பதிலானது !! கேட்டுப் பாக்குறீகளா ?

      Delete
    2. சார் நான் காமிக்ஸ் நாயகர்களில்னு சொன்னேன்....இப்படி மாட்டி விடப் பாக்குறீங்களே

      Delete
    3. நீதான் ஏற்கனவே மாட்டிக்கொண்டு முழிக்கிறது நல்லாத் தெரியுமேலே :-) இதுல உன்னை புதுசாக வேற மாட்டிவிடனுமாக்கும்லே :-)

      Delete
  72. கிர்பி விற்று தீர்ந்ததில் உள்ளம் உவகையுற்றது.கோவிட்-19 மற்றும் அதன் பின்
    வந்த சோதனை காலங்கள், இடர்கள்,பொருளாதார தடுமாற்றங்கள் இதனை
    யோசிக்கையில் இத்தகைய செய்திகள் மனமகிழ்வைத் தருகின்றன.

    பழையதோ, புதியதோ விற்பனையில் சாதிப்பதே நிர்ப்பந்தங்கள் உள்ள
    இப்போதைய காலகட்டத்தில் முன்னுரிமை பெறுவது அவசியமாகிறது.
    நேர்கோடோ ,பரவளையக் கோடோ விற்றால் சரி. பணத் தட்டுப்பாடுகள் ஏதும்
    இன்றி இரண்டாண்டு காலமாவது நன்முறையில் நமது வரைகதை உலகம்
    செல்ல வேண்டும்.

    ஆல்பா வசனங்கள் நிரம்பியிருப்பினும் சில இடங்களில் வசனமின்றி அதிமுக்கிய நிகழ்வுகளை கொண்டு சென்று இருப்பதை அனைவரும் அறிவர்.
    தளத்தில் பல நண்பர்கள் வினா எழுப்பியபோதே அவற்றின் முக்கியத்துவம் தெரிய வந்தது. கதையின் ஒரு முக்கிய பங்கான ரூபிளின் பண மதிப்பை
    சர்வதேச சந்தையில் உயர்த்துவது என்பது மறைமுகமாக இருந்தது என்பது
    ரஷ்ய உக்ரைன் போரினால் ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையின் இன்னல்களை குறைக்கரஷ்யா தனது நாணய மதிப்பை உயர்த்த எரிவாயு வாங்குவோர் ரூபிளில்பணம் செலுத்துமாறு கூறியதை புரிந்து கொள்ள உதவி செய்தது.புதியவை
    பற்றி பரிந்து பேச இத்தருணம் சரியானதாக இல்லாமல் இருக்கிறது.(;FFS இன்னும் சரக்ககத்தில் இருப்பது மேற்கொண்டு பேச முடியாமல் தடை செய்கிறது)

    டெம்ப்ளேட்
    உணவுப் பிரியர் 1: நான் முட்டை மட்டும் சாப்பிடுவேன்.மத்தபடி நான் சைவம்.
    நீங்க?

    உணவுப் பிரியர் 2: நான் கொஞ்ச காலம் பொறுத்திருந்து அது வளர்ந்தவுடனே
    சாப்பிடுவேன்.மத்தபடி நானும் சைவம்தான்

    வரைகதை பிரியர் 1: நான் பழைய நேர்கோட்டு காமிக்ஸ்களை விரும்பி படிப்பேன்.நீங்க?

    வரைகதை பிரியர்: நான் புதுசா வர்ற காமிக்ஸ்களையே வாங்கி பத்து வருஷம்
    கழிச்சுதான் படிப்பேன்.கம்பேக் ஸ்பெஷல்லயே இன்னும் ஒருகதை பாக்கியிருக்கு. மத்தபடி அப்படி பாத்தா நானும் பழங்காமிக்ஸ் ரசிகன்தான்.

    [ எனக்கென்னவோ ரெண்டாவது வரைகதை பிரியர் மாதிரிதான் என்னால்

    பழங்காமிக்ஸ் ரசிகராய் இருக்கமுடியும் எனத் தோன்றுகிறது :D]


    ReplyDelete
    Replies
    1. ///வரைகதை பிரியர்: நான் புதுசா வர்ற காமிக்ஸ்களையே வாங்கி பத்து வருஷம்
      கழிச்சுதான் படிப்பேன்.கம்பேக் ஸ்பெஷல்லயே இன்னும் ஒருகதை பாக்கியிருக்கு. மத்தபடி அப்படி பாத்தா நானும் பழங்காமிக்ஸ் ரசிகன்தான்.////

      செனா அனா ஜி 😂😂😂😂

      Delete
  73. செனா அனா ஜீ . கம்பேக் ஸ்பெசல்லயே ஒரு கதை பாக்கியிருக்கு. (என்னது. எம். ஜி. ஆர் செத்துட்டாரா ))) . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  74. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  75. இன்று சனிக்கிழமை பதிவுக்கிழமைங்க ஆசிரியர் சார்.

    ReplyDelete
    Replies
    1. அதெதானுங் சரவணன் சார்

      Delete
  76. மாலை வணக்கம் நண்பர்களுக்கு

    ReplyDelete
  77. Replies
    1. வல்லிய மூகூர்த்த தினமாகும் சாரே :-) அதனால் ஆசிரியர் பிஸியாக இருக்கலாம்:-)

      Delete
  78. சார் இன்று பதிவு?

    ReplyDelete
  79. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete