நண்பர்களே,
வணக்கம். அநேகமாய் புரட்சித் தலைவருக்கு அடுத்தபடியாக சட்டி, பொட்டிகளையெல்லாம் தூக்கிக் கொண்டு ஜாஸ்தியாய் உலகத்தைச் சுற்றி வரும் ஒரே வாலிபர்கள் (!!!) இந்த பொம்ம புக் க்ரூப்பைச் சார்ந்த நாமாகத்தானிருப்போம் என்று தோன்றுகிறது ! நமக்கெல்லாம் பாஸ்போர்ட் வேண்டியதில்லை ; விசா வீசம்படிக்குக் கூட அவசியமில்லை - ஆனால் நடுக்கூடத்திலிருந்தபடிக்கே உலகின் ஒவ்வொரு முடுக்கையும் 'ஜிலோ'வென்று தரிசிப்பது நூறோ, இருநூறோ, சில தருணங்களில் ஐநூறோ ரூபாய்களில் முடிந்து விடும் சமாச்சாரமாக்கும் !
- ஒரு லார்கோவை பிரெண்டு பிடித்தோமோ - அவர் பின்னே மோட்டார்சைக்கிளில் குந்தியபடிக்கே நியூயார்க்கின் வீதிகளையோ. இலண்டனின் அழகுகளையோ ; ஹாங்காங்கின் பரப்பரப்பையோ பார்வையிடுவது பிசுக்கோத்து மேட்டர் !
- ஒரு ஆல்பாவோடு டிராவல் செய்யத் துவங்கினால், அழகான அஸ்ஸிய டோங்கோவாக்கள் எதிர்படுகிறார்களோ, இல்லியோ - அசாத்திய அழகிலான பாரிஸும், மாஸ்கோவும், நமது தேரடி வீதிகளைப் போல கண்முன்னே விரியாத குறை தான் !
- ஒரு சிஸ்கோவோடு செய்திடும் பயணத்தினில், பிரெஞ்சுத் தலைநகரின் சந்தையும், பொந்தையும், இண்டையும், இடுக்கையும் அந்த ஊர்க்காரவுகளை விடவும் பெட்டராக அறிந்திட முடிகிறது !
- ஒரு டேங்கோவோ ; கேப்டன் பிரின்சோ வண்டியை விட்டார்களெனில் தென்னமெரிக்காக்களும் ; பசிபிக் தீவுகளும் நம்ம ஜாம் பஜாருக்கு மிக மிக அருகில் என்றாகி விடுகின்றன !
- அட, அவ்வளவெல்லாம் ஏனுங்கோ - மாசா மாசம் லொங்கு லொங்கென்று குதிரைகளில் நம் கௌபாய்களோடு அடிக்கும் ஷண்டிங்கினில் நாம் பார்க்காத அரிஸோனாவா ? டெக்ஸஸா ? நியூ மெக்சிகோவா ? நம்ம பச்சைப்புள்ளைத் தலீவரை அரவக்குறிச்சியில் கொண்டு போய் விட்டால் கூட தொலைஞ்சு போயிடக்கூடும் ; ஆனால் அரிசோனா போகும் பட்சத்தில் தாக்குப் பிடித்து விடுவார் என்பது திண்ணம் !
இந்தப் பயணப் பட்டியலில் லேட்டஸ்ட் சேர்க்கை : கென்யா !!
கடந்த இரு வாரங்களாய், ஆப்பிரிக்க இருண்ட கண்டத்தினில் ; கென்யா எனும் மர்ம தேசத்தினில், முரட்டுச் சிங்கங்களோடும், புலிகளோடும், அப்புறம் சற்றே எக்ஸ்டரா எக்ஸ்டரா லார்ஜ் சொக்காய்கள் மாட்டக்கூடிய சில ஜந்துக்கள் கூடவும் செய்ய அவசியப்பட்டிருக்கும் ஒரு பயணமானது - நமது இஸ்திரியில் ஒரு மறக்க இயலா அங்கமாகிட்டால் வியப்பே கொள்ள மாட்டேன் ! Of course - இந்த 5 பாக தொடரினை Cinebook ஆங்கிலப்பதிப்பில் நம்மிடமே வாங்கி ஏற்கனவே படித்து விட்டோராய் நீங்கள் இருந்தாலும் சரி, 'நீ கொயந்தையா இருக்கச்சேவே ஞான் ஸ்கேனிலேஷனில் படிச்சுப்புட்டேனாக்கும் !!" என்று மார்தட்டும் பட்டியலில் இருந்தாலும் சரி, நேராக பதிவின் bottom-க்குச் சென்று "See you later " என்ற வரிகளோடு விடை பெற்றிடல் க்ஷேமம் என்பேன் !
நமக்கு நிரம்பவே பரிச்சயமானதொரு creative team முற்றிலும் மாறுபட்டதொரு களத்துக்குள் / காலத்துக்குள் கால்பதித்திடும் முயற்சியே கென்யா ! கனடாவின் அசாத்திய பனிச்சிகர அழகுகளை நமக்குக் கண்முன்னே கொணர்ந்து வந்த அந்த Leo - Rodolphe ஜோடியே இங்கும் பிதாமகர்கள் ! ஜிலீரென்ற மண்ணில், கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பானதொரு காலகட்டத்தில் டிரெண்டோடு பயணிக்கச் செய்த இந்த ஜோடி, 1947 -ன் ஆப்பிரிக்காவுக்கு நம்மை இட்டுச் செல்கின்றனர் இம்முறை ! இந்த இதழுக்கான விளம்பரங்களையும் சரி, கீழுள்ள அட்டைப்படத்தினைப் பார்த்த கையோடும் சரி, தடித்தடியான அந்த டைனோசர்கள், ஜுராசிக் பார்க் ரேஞ்சிலானதொரு கதையினை நமக்கு வழங்கவிருப்பதை புரிந்திருப்பீர்கள் ! ஜுராசிக் பார்க் மாத்திரமன்றி, Close Encounters of the Third Kind படத்தினையுமே நமக்கு நினைவூட்டக்கூடியதொரு கற்பனைகளின் உச்சம் நமக்கெனக் காத்துள்ளது ! Make no mistake folks - 'எதிலும் லாஜிக் ; எல்லாவற்றிலும் லாஜிக்' - என்ற லாஜிக் லாலாஜிக்களாய் நீங்கள் இருப்பின், இம்மாதம் என் கபாலத்தில் ஜலதரங்கம் வாசிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு செமத்தி ! So இப்போவே கூட உங்களின் வாசிப்புக் கலைகளைத் தூசு தட்டி வைத்துக் கொண்டால், புக் வெளியான சூட்டோடு சூடாய் நீங்கள் வாசிக்க, உங்களின் நட்பு வட்டங்கள் ஆடிட, சும்மா சடுதியாய்க் களை கட்டிவிடுமல்லவா ?
On a more serious note - "மர்ம தேசம் கென்யா" ஒரு வளமான கற்பனையின், வல்லிய படைப்பே ! புராதனத்தையும், எதிர்காலத்தையும் ஒற்றைப் புள்ளியினில் இணைக்க படைப்பாளிகள் செய்திருக்கும் இந்த fusion முயற்சி வெற்றியா ? இல்லையா ? என்பதை நீங்களே தீர்மானித்திட வேண்டி வரும் ; ஆனால் பொட்டல் காடுகளிலும், பாலைவனங்களிலும், மங்கு மங்கென்று பயணித்துக் கிடப்பவனுக்கு - இந்தக் கானகங்களும், ஏரிகளும், கொடும் மிருகங்களும் ஒரு செம refreshing change ஆக இருந்தது என்பதை சொல்லியே தீரணும் ! நிறைய கதை மாந்தர்கள் ; வளைவுகளும், நெளிவுகளுமான வளப்பமான அம்மணிகள் ; அப்புறம் உங்கள் வீட்டுக் குட்டீஸ் வைத்திருக்கக்கூடிய டைனோசர் பொம்மைகளில் கணிசம் - என இந்தக் கதையின் 240 பக்கங்களிலும் இம்மி தொய்வு கூட இன்றி தடதடத்துக் கொண்டே இருக்கிறார்கள் ! பற்றாக்குறைக்கு - ஆர்யா-விஷால் நடித்த ஒரு படத்தில் "ஐநெஸ் " என்று சொல்லிக்கொண்டே ஒரு தொப்பைக்காரரும் நடித்திருப்பது நினைவுள்ளதா - விஷால் கூட கண்களை ஒரு மார்க்கமாய் வைத்துக் கொண்டே நடித்திருப்பாரே ? ; அதே பாணியில் இங்கொரு பென்சில் மீசை கோமகனும் குறுக்கும் நெடுக்கும் சுற்றி வருகிறார் - லிட்டர் லிட்டராய் ஜொள்ளை வடித்தபடிக்கே ! சந்தேகங்களின்றி இந்தப் படைப்பின் முதல் பிரமுகர் ஓவியரே - simply becos ஆப்பிரிக்காவின் அந்த வெப்பத்தையும், மொட்டைக்காடுகளையும் தொட்டு உணரக்கூடிய நெருக்கத்துக்குக் கொண்டு வந்துள்ளார் - தனது தூரிகையின் வலுவினில் ! கதைக்கான அந்த mood அழகாய் maintain ஆகிட, கலரிங்குமே அட்டகாசமாய்ப் பின்னி எடுத்துள்ளது ! So இயன்றமட்டுக்கு ஒரே வாசிப்பினில் கென்யாவைக் கடந்திட வாய்ப்புகள் உங்களுக்கு கிட்டுமாயின், படைப்பாளிகளின் இந்த மர்ம தேச சித்தரிப்பை முழுவதுமாய் உள்வாங்கிடல் சாத்தியப்படக்கூடும் ! இதில் செம ஜாலியான சமாச்சாரம் என்னவெனில், பாகங்கள் 5 கொண்ட நெடுங்கதையாய் இது இருப்பினுமே, எங்குமே ; யாருமே மைக்கை பார்த்த புது அரசியல்வாதி ரேஞ்சுக்கு "வானம் பொழிகிறது ; பூமி நனைகிறது" என்று 'தம்' கட்டவில்லை ! பக்கத்துக்கு மூன்றே row சித்திரங்கள், மித அளவிலான வசனங்கள் எனும் போது - புதுசாய்த் திறந்த, ஒழுங்காய்ப் போடப்பட்ட ஆறுவழிச் சாலையில், வண்டியோட்டுவதைப் போலான ரம்ய அனுபவம் சாத்தியமாகிறது !
போன வருஷத்தின் லாக்டௌன் சமயத்தின் போது நமது கருணையானந்தம் அவர்கள் இதற்கான மொழிபெயர்ப்பினைச் செய்திருக்க, மேற்கொண்டு மாற்றி எழுதும் பணிகளை வழக்கம் போல செய்திருக்கிறேன் ! கரடு முரடான பேர்வழிகள் கூட அங்கிளின் பேனாவில் வாய் திறக்கும் சமயங்களில் 'நாசூக்கு நாகராஜன்'களாகிவிடுவதையே இம்முறை மாற்ற வேண்டியிருந்தது ! தவிர, க்ளைமாக்சில் ஒட்டுமொத்தமாகவே redo செய்திட்டேன் என்றாலும் கதையின் களமானது இந்தவாட்டி நோவுகளின்றி கரை சேர்த்து விட்டது ! இதோ - ஒரிஜினல் அட்டைப்படத்துடன் , நமது டிரேட்மார்க் நகாசு வேலைகள் சகிதம் உங்கள் முன்னே வர்ணஜாலம் செய்திடக்காத்துள்ள அட்டைப்பட முதல் பார்வை :
Leoஎன்ற Luiz Eduardo de Oliveira - ஓவியர் ! |
கதாசிரியர் : Rodolphe |
First
ReplyDeleteவாழ்த்துகள் 💐
Delete2வது...
ReplyDeleteEdi Sir.. Happy Sunday
ReplyDeleteகாலை வணக்கம்.. படித்துவிட்டு வருகிறேன்..
ReplyDeleteWelcome to KENYA sir - long awaited - with our paper quality it is going to be a treat to behold !
ReplyDeleteLooks like a good set of books for June - great timing for Kenya !
வணக்கம் நண்பர்களே...
ReplyDeleteEdi Sir.. கென்யா.. ஆரம்பமே அதகளமா இருக்கே.. We are waiting Sir..
ReplyDeleteஅப்புறம் அந்த நமீபியா வுக்கும் இப்போவே என் ஓட்டினை ரிசர்வு பண்ணிடுங்க.
எனது ஓட்டும்.
DeleteHi..
ReplyDeleteஅம்மாடியோவ்!!! கென்யா - அட்டைப்படம் ஸ்தம்பிக்கச் செய்கிறது எடிட்டர் சார்!
ReplyDeleteஅனேகமாக, ஒரு ஐந்து பாகக் கதைக்கான முன்அட்டைப்படத்தில் ஈரோ/ஈரோயினிகளின் படம் இடம்பெறாமல் வருவது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன்!
இதற்கு முன்பு கென்யாவை எந்த ரூபத்திலும் படித்ததில்லை என்பதால் மிகுந்த ஆவலோடு இருக்கிறேன். கடந்தமாதங்களில் எனக்கு ஏற்பட்ட சிலபல பிரச்சினைகளிலிருந்தும் மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதால் படிப்பதற்கான நேரம் கிட்டுவது இனி பெரும்பாடாய் இருக்காது எனவும் நம்புகிறேன்!
புக்கை எப்போ அனுப்புவீங்க சார்?
+1000
Deleteபிரியாணி வாசனையே ஆள தூக்குதே..👍 எப்ப இலைக்கு வருங்க..
பர்ஸ்டு சமீப மாதங்களின் புக்குலேர்ந்து ஒரு டெஸ்டு வைப்போம் ; அதுவும் குறிப்பா மாட்டா ஹாரி கதையிலேர்ந்து ! அதுக்கு கரீட்டா பதில் சொன்ன பிற்பாடு புது புக்ஸ் புறப்பாடு !
Deleteஓ ஹோ
Delete// இதற்கு முன்பு கென்யாவை எந்த ரூபத்திலும் படித்ததில்லை என்பதால் மிகுந்த ஆவலோடு இருக்கிறேன். //
Deleteநானும்
// கடந்தமாதங்களில் எனக்கு ஏற்பட்ட சிலபல பிரச்சினைகளிலிருந்தும் மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறேன் // மகிழ்ச்சி விஜய்.
DeleteWarm welcome back
// இதற்கு முன்பு கென்யாவை எந்த ரூபத்திலும் படித்ததில்லை என்பதால் மிகுந்த ஆவலோடு இருக்கிறேன் // இரண்டு வருடங்களாக
Delete///பர்ஸ்டு சமீப மாதங்களின் புக்குலேர்ந்து ஒரு டெஸ்டு வைப்போம் ; அதுவும் குறிப்பா மாட்டா ஹாரி கதையிலேர்ந்து அதுக்கு கரீட்டா பதில் சொன்ன பிற்பாடு புது புக்ஸ் புறப்பாடு !///
Deleteசார்.. நான் கென்யாவை ஸ்கேன்லேசன்லயே படிச்சுக்கிடறேன் சார்! :D
நன்றிகள் PfT! _/\_
Deleteகடந்தமாதங்களில் எனக்கு ஏற்பட்ட சிலபல பிரச்சினைகளிலிருந்தும் மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறேன்
DeleteCome back நல்ல செய்தி செயலரே
// கடந்தமாதங்களில் எனக்கு ஏற்பட்ட சிலபல பிரச்சினைகளிலிருந்தும் மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறேன் // நல்லது ஈவி..
Deletewelcome back💐💐💐💐
// இதற்கு முன்பு கென்யாவை எந்த ரூபத்திலும் படித்ததில்லை என்பதால் மிகுந்த ஆவலோடு இருக்கிறேன். //
Deleteஒருவேளை யாரும் படித்திருந்தாலும் கூட இப்படியொரு கதையை எடிட்டர் அனுபவமிக்க மொழிபெயர்ப்பில் அழகுத்தமிழில் படிப்பதற்கு நிகராகாது.😊 அப்படியே அந்த கமகமவென்று மணக்கும் புதிய மை வாசனையோடு புத்தகமாக படிக்கும் அனுபவத்தை தவறவிட்டால் பாவமன்னிப்பு கூட கிடைக்காது.😊
@STVR, செந்தில் சத்யா, தலீவரே
Deleteநன்றி நண்பர்களே! _/\_
@ தலீ
ஹாப்பி பர்த்துடே தலீவரே! இன்னிக்குமாரியே என்னிக்கும் வெள்ளந்தித் தலீவரா இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ வாழ்த்துகள்!
@Abisheg
அருமையா சொன்னீங்க சகோ!
மிக்க நன்றி செயலரே...
Deleteவாருங்கள் மகிழ்வாய் ஈவி
Delete@Erode VIJAY
Deleteவணக்கம் சகோ 😊😊😊
//முன்அட்டைப்படத்தில் ஈரோ/ஈரோயினிகளின் படம் இடம்பெறாமல் வருவது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன்!//
Deleteதாங்கள் சொன்னதுக்கு அப்புறம் தான் கவனித்தேன். Good noting
டைனோசர் தான் கதாநாயகன் போல
வணக்கம் நண்பர்களே!
ReplyDeleteநாங்க எப்பவுமே one shot reader தான்....
ReplyDeleteவணக்கம் படித்து விட்டு வருகிறேன்
ReplyDelete//அப்புறம் பழகிய அந்த வன்மேற்கு பூமிக்குள் புதிதாயொரு பயண மார்க்கமும் ரெடியாகி வருகின்றது ! யாருடன் ? எப்போது ? என்ன மாதிரி ? என்ற கேள்விகளுக்கான பதில்களையெல்லாம் காத்திருக்கும் புத்தக விழா circuit-ன் ஏதாவது ஒன்றின் போது அறிந்திடுவீர்கள் ! இப்போது தான் கதைகளுக்கான அக்ரீமெண்ட் கையெழுத்தாகியுள்ளது ! //
ReplyDelete'இன்னுமொரு கெளபாயா?
இன்னுமொரு கெளபாயா!
Deleteவந்துட்டேன்
ReplyDelete//
ReplyDeleteஅப்புறம் பழகிய அந்த வன்மேற்கு பூமிக்குள் புதிதாயொரு பயண மார்க்கமும் ரெடியாகி வருகின்றது ! யாருடன் ? எப்போது ? என்ன மாதிரி ? என்ற கேள்விகளுக்கான பதில்களையெல்லாம் காத்திருக்கும் புத்தக விழா circuit-ன் ஏதாவது ஒன்றின் போது அறிந்திடுவீர்கள் ! இப்போது தான் கதைகளுக்கான அக்ரீமெண்ட் கையெழுத்தாகியுள்ளது !
//
*நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்..னு தெரியாது. ஆனா.. வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துருவேன்*..
Welcome..Welcome..💐💐
சீக்கிரம் போடுங்க சார். அப்படியே அந்த கோடை புத்தக விழா???
Deleteஓசூர் ; தருமபுரி ; கோவை ; ஈரோடு என வரிசையாய்ப் புத்தக விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன சார் ! So ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாய் புக்ஸை இறக்குவோமென்று எண்ணினேன் சார் !
Deleteஅருமை அருமை
Deleteஓசூர் ; தருமபுரி ; கோவை ; ஈரோடு என வரிசையாய்ப் புத்தக விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன சார் ! So ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாய் புக்ஸை இறக்குவோமென்று எண்ணினேன் சார் !
Delete###
வாவ்..அருமையான தகவல் சார்..:-)
ஓசூர் ; தருமபுரி ; கோவை ; ஈரோடு என வரிசையாய்ப் புத்தக விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன சார் ! So ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாய் புக்ஸை இறக்குவோமென்று எண்ணினேன் சார் !//
DeleteI am waiting...for fat color books!!!
சூப்பர் சார் புத்தக விழா ஒன்றுக்கு இரண்டு புத்தகங்கள்
Deleteஆஹா அட்டாகாசம்
Deleteகாலை வணக்கம். விருதுநகரில் இருந்து உங்கள் பரணி 😀
ReplyDeleteபர்மாலாம் நலமா சார் ? பர்மாவில் ரவுண்டு கட்டியோரும் நலமா ?
Deleteபல ஊர்களில் இருக்காரே
Deleteஇந்த முறை பர்மாவில் ஸ்பெஷல் டீ மட்டும்.
Deleteஒரு நாள் தமிழ்விருந்தில் சாப்பிட்டேன் சுமார் அதுவும் விலை ஜாஸ்தி.
// இதே படைப்பாளி டீமின் "நமீபியா" ; அமேசான் ; ஸ்காட்லான்ட் தொடர்களும் சரி ; இதே ஸ்டைலிலான ஆக்ஷன் களங்களும் சரி, காத்துள்ளன ! //
ReplyDeleteஎன்ன எடிட்டர் சார்;
புக் வாங்க நாங்க ரெடி
புக் போட நீங்க ரெடியா..
We waiting for adventure folks
Me too me too
DeleteMe too
Deleteகென்யா ரகளையாய் இருக்கும்போல?! சித்திரங்கள் பிரமிக்க செய்கின்றன.
ReplyDeleteசார் அந்த வன ரேஞ்சர் ஜோ மூன்று கதைகள் ஒரே புத்தகமாக, கலரில்
ReplyDeleteயானைக் கல்லரை Hero வை... கலரில் பார்க்க எனக்கும் ஆசை தான்....
Deleteஅட்வென்ச்சர் கதைகளுக்கு கென்யா ஒரு மறு துவக்கம் தருகிறதா ? என்பதை முதலில் பார்ப்போமே !
Deleteகாத்து இருப்போம் சார்.
Deleteஅந்த கௌபாய் Zagor ஆ?
ReplyDeleteNopes
DeleteZAGOR கதை வாங்கி வருஷம் ஒன்றாகப் போகுது சார் !
Deleteசார்,
DeleteZAGOR வெளியிடும்போது அதே பெயரில் (ZAGOR) வெளியிடவும் - டாமி என்று மாத்திடாதீங்க :-)
ஆஹா இன்னும் ஒரு புதிய கௌபாய் வாங்கோ வாங்கோ வெல்கம்
Deleteஆஹா சார் சாகர் சீக்கிரம் கண்ல காட்டுங்க....
Deleteட்யூராங்கோவோட மாறு வேடமா
"ஜுராசிக் பார்க்"- கதைவரிசை - அந்த காடுகளும் டைனோசர் வகைகளும் எப்பொழுதும் பார்த்து அலுக்காதவைகள்..
ReplyDelete. புத்தகத்தில் எந்த அளவு நம்மை ரசிக்க வைக்கிறார்கள் என்று பார்ப்போமே..
ஓவியமும்-கலரிங்கும் சும்மா நச்..சுன்னு இருக்கு...
This comment has been removed by the author.
ReplyDeleteகென்யா அட்டைப்படம் சும்மா சொல்லக்கூடாது சும்மா அள்ளுது.
ReplyDeleteஸ்பீல்பெர்க் படத்தை போல கதையும் இருக்கும்னு உங்கள் வர்ணிப்புல தெரியுது.
ஆவலுடன் வெயிட்டிங் 😍😍😇😇
ஹீரோ ; ஹீரோ சார்ந்த கதை நகற்றல் என்பனவெல்லாம் இல்லாத ரகக் கதைகளை நாம் எவ்விதம் ரசிக்கிறோம் என்று பார்க்கலாம் சார் !
Deleteசுவாரசியமான & வித்தியாசமான கதைகள் என்றும் சோடை போகாது எடி சார்.
Deleteநாம் தான் பல்சுவை ரசிகர்கள் ஆச்சே 😇😃😁
அடுத்தடுத்த நமீபியா, அமேசான் போன்ற கதைகளும் வரும் என்றே நினைக்கிறேன்.
// அடுத்தடுத்த நமீபியா, அமேசான் போன்ற கதைகளும் வரும் என்றே நினைக்கிறேன் // வரணும்
Deleteவந்து தீரனும்
Delete+9
Deleteஃபேவரைட் கென்யா .. ஆவலுடன் ..
ReplyDeleteமாட்டா ஹாரியிலிருந்த கேள்வியாங்க சார். சாய்ஸ்ல விட்டர்ரோங்க சார். வேண்ணா மாடஸ்ட்டியில இருந்து ஆரம்பிக்கலாங்களா. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅட்டைப்படம் அருமையாக உள்ளது சார். நீங்கள் கூறிய இருவகைகளிலும் இன்னும் பிடிக்காததால், உங்களுடைய அறிமுக பதிவில் இருந்தே காத்திருப்பு தொடர்கிறது. அது அடுத்த மாதம் முடிவுக்கு வருவது கண்டு மிக மகிழ்ச்சி.
ReplyDeleteஅடுத்த மாத ஸ்டெர்ன் காகவும் ஆவல் அதிகரிக்கிறது, போனமுறை எதிர்பாராத வெற்றியால்.
வரும் மாதம் மூன்று புத்தகங்களும் கலர் புத்தகங்கள் வாரே வா
Deleteநீங்க கேள்விகளத் தயாரிக்கும்வரை டெக்ஸ ஒரு பார்வ பார்த்துட்ட வந்திடரேங்க சார். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteகென்யா முன் அட்டையை விட பின் அட்டை சூப்பர்
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎊 தல...💐💐🎂🎂
ReplyDeleteமிக்க நன்றி அதிகாரியின் அதி தீவிர ரசிகரே..:-)
Deleteவிடாது வஞ்சம்
ReplyDeleteயாரும் வாங்காம விட்ராதீங்க.
மிக அருமையான டெக்ஸ்.பொறுமையா படிங்க 100% சஸ்பென்ஸ் உறுதி.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி 😂
Deleteடெஸ்ட்
ReplyDeleteபெயிலு... போ.!
Deleteஅப்பாடா பப்ளிஷ் ஆகுது...:-)
Deleteசார் சில சமயம் கமெண்ட் பாக்ஸ் வேறு மாதிரி இப்பொழுது வருகிறது .சில சமயம் பதிவும் இட முடியவில்லை ..நாலு வரி எழுதினால் முன்போல் தவறு உள்ளதா இல்லையா என்பதும் இனம் முடியவில்லை சார்....பழையமாதிரி கொண்டு வாருங்கள் சார்..நாலு
ஒரு தபா நம்ம சுந்தர் பிச்சை சார் கிட்ட கேட்டுப்புடுவோமா தலீவரே ? பொறந்த நாளும் அதுவுமா கேட்டாக்கா மாட்டேன்னா மனுஷன் சொல்லப் போறார் ?
Deleteஓ.இது வேறய்யா சார் சரி விடுங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்..:-)
Deleteபெயிலு போ வா..
Deleteநானெல்லாம் ஏழாவதிலியே எட்டு வருசம் படிச்சாலும் பெயிலு மட்டும் ஆகமாட்டோம் அட்டு சார் சாக்ரதை..
ஆமா தல காலையில் இருந்து நான் போட்ட கமெண்ட் பதிவாகவே இல்லை. என்ன கொடுமை சார் இது
Deleteதன் நிஜாரில்லாத தலீவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!!
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
Deleteதலீவரே!
மிக்க நன்றி நண்பர்களே...
Deleteதலீவருக்கு உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐🥗🥙🎂🤝
Deleteஅட்டைப்படம் செம சார்...ஒண்ணு தெரிஞ்சுருச்சு இந்த புத்தகம் வந்தவுடன் என் பையன் அவனுக்கு ன்னு சொல்லி எடுத்துக்க போறான் வரையறதுக்கும் பக்கம் பக்கமா புரட்ட போறான் படிக்க எனக்கு இன்னொரு புக்கு வாங்கியாகனும் என நினைக்கிறேன்..:-)
ReplyDeleteதலீவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐
ReplyDeleteமிக்க நன்றி செந்தில் சத்யா...
Deleteஅப்புறம் பழகிய அந்த வன்மேற்கு பூமிக்குள் புதிதாயொரு பயண மார்க்கமும் ரெடியாகி வருகின்றது ! யாருடன் ? எப்போது ? என்ன மாதிரி ? என்ற கேள்விகளுக்கான பதில்களையெல்லாம் காத்திருக்கும் புத்தக விழா circuit-ன் ஏதாவது ஒன்றின் போது அறிந்திடுவீர்கள் ! இப்போது தான் கதைகளுக்கான அக்ரீமெண்ட் கையெழுத்தாகியுள்ளது !
ReplyDelete####
வாவ்..அட்டகாச செய்தி சார்...
இதற்கு முன்பு கென்யாவை எந்த ரூபத்திலும் படித்ததில்லை என்பதால் மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்
ReplyDelete#####
நானும்...:-)
அட்வன்ஜர் கதைகள் எப்போதுமே ஒரு தனிரகம்.வருடத்திற்கு 1,2 இது போன்று குண்டு அட்வன்ஜர் புக் வருவதை மனதார வரவேற்கிறேன்.
ReplyDeleteஎனக்கு ஏற்பட்ட சிலபல பிரச்சினைகளிலிருந்தும் மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதால் படிப்பதற்கான நேரம் கிட்டுவது இனி பெரும்பாடாய் இருக்காது எனவும் நம்புகிறேன்
ReplyDelete###
வாழ்த்துக்கள் செயலரே...இனி முன்போல் இங்கும் கலக்குவீர்கள் என்பதில் மிக மகிழ்ச்சி
(
ஐ கென்யா......
ReplyDeleteகென்யா, எவ்வளவு நாள் காத்திருப்பு. ஹார்ட் பவுண்டில் புத்தகத்தை புரட்டும் தருணத்திற்காக காத்திருக்கிறேன். அப்புறம் ஒரு குட் நியூஸ் வேதாளரின் ஒன்பது கதைகளையும் படித்து விட்டேன். நாள் ஒன்றுக்கு மூன்று கதைகளாக மூன்று நாட்களில்.
ReplyDeleteஏன் இந்த கொலை வெறி?
Delete// ஒரு குட் நியூஸ் வேதாளரின் ஒன்பது கதைகளையும் படித்து விட்டேன். நாள் ஒன்றுக்கு மூன்று கதைகளாக மூன்று நாட்களில். //
Deleteமகிழ்ச்சி.
என்ன இப்படி சொல்லிபுட்டீங்க, நாமெல்லாம் கலையரசி M. G. R. மாதிரி பிரபஞ்சங்கள், லோகங்கள் எல்லாம் சுத்தி பாத்தாச்சப்பு... இன்னும் உலகம் ன்னு சொல்லி சின்ன வட்டத்தில் சுருக்க வேண்டாமே..
ReplyDelete70
ReplyDeleteகென்யா மர்ம தேசம் மட்டும் அல்ல மறக்க முடியாத தேசமாவும் இருக்கும் போல
ReplyDeleteபாலைவன கெளபாய்களையும்,
ReplyDeleteகுதிரைகளின் கொலை வெறி ஓட்டங்களையும், தோட்டாக்களின் தொடர் முழக்கங்களை ரசித்த நமக்கு,
இந்த "மர்மதேசம் கென்யா"நிச்சயம் மாறுதல்தான்.
இதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.
நல்ல வரவேற்பு பெறும்.முக்கியமாக வீட்டு குழந்தைகளிடம்.
வழக்கம்போல அட்டைப்படம் மிக அழகு.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நாங்கள் கண்ட இரு கனவுகளை நனவாக்கி விட்டீர்கள். 🥰மிக்க நன்றி ஆசிரியருக்கு.🙏
ReplyDeleteமார்வல், DC போல் சூப்பர் ஹீரோ காமிக்ஸ்கள் அவற்றில் தழுவலாக வரும் திரைப்படங்களில் கூட Sci-Fic சும்மா புகுந்து விளையாடிக் கொண்டிருக்க நம் தமிழ் காமிக்ஸ்களில் இந்த ஜானரில் வெறுமை மட்டுமே இருந்தது.
எனக்கு தெரிந்து பிளாஷ் கார்டன், சாகசவீரர் ரோஜர் தான் தமிழில் முழுமையான Sci-Fic கதை நாயகர்களாக இருக்கிறார்கள். காரிகனிலும் ஓரிரு கதைகள் வந்திருக்கு.(வேறு யாரும் இருக்கிறார்களா? தெரிந்தால் நண்பர்கள் குறிப்பிடவும்)
இவர்களை தூக்கி சாப்பிடப் போகும் நவீன யுக நாயகியாக கேத்தி ஆஸ்டின் எங்கள் அனைவர் மனதையும் கொள்ளையடிக்கப் போவது உறுதி. இக்கதையை வாசகர்கள் கண்டிப்பாக தவறவிடக்கூடாது. நீங்கள் மனப்பூர்வமாக கொடுக்கும் ஆதரவு தான் தமிழ் காமிக்ஸ் விண்வெளி,பழமை,புதுமை எல்லாவற்றையும் விஞ்ஞானத்துடன் கலந்த கலவையாக தரும் Sci-Fic என்ற புதிய ஒரு களத்தில் தடம் பதிக்க உற்சாகமூட்டும். 🙏
ஸ்பைடர் ஆர்ச்சி ஜெட் இரூம்புக்கை
Deleteஅவர்களை மறந்தே விட்டேன். நன்றி ஸ்டீல் கிளா சார்
Delete
ReplyDeleteகென்யா வருவது மகிழ்ச்சி. முதல் பாகம் ஆங்கிலத்தில் படித்ததோடு சரி.
ஸ்கேன்லேஷன் வெகு காலம் முன்பே அருமை நண்பர் அனுப்பியிருந்தார்.
அசௌகர்யம் கருதி படிக்க முடியவில்லை.
டெம்ப்ளேட் மீம்
நண்பர்1: பெட்ரோல் விலை ஏறிப் போச்சுன்னு பைக்க வீட்ல நிறுத்திட்டு பஸ்ல
வேலைக்கு போனியே. இப்ப பஸ் டிக்கெட் விலையும் ஏத்தப் போறதா பேச்சு
அடிபடுதே?
நண்பர்2: வேற வழியே இல்ல..கொஞ்சம் செலவானாலும் மும்பை போய் ஆபரேஷன் பண்ணிகிட்டு பொம்பளயா மாறவேண்டியதுதான்
வரைகதை பிரியர்1: எடிட்டர் சார் கென்யா படிக்கணும்னா லாஜிக் பாக்கப்படாது
அப்டினு சொல்லியிருக்காரே. ஸ்பைடர், பழைய மாண்ட்ரேக் ஏற்கனவே படிச்ச அனுபவம்லாம் பத்தாது போலிருக்கே?
வரைகதை ப்ரியர்2: கொஞ்சம் செலவானாலும் பரவாயில்லே. ஆந்திரா பார்டர்
க்ராஸ் பண்ணி குண்டூர், காகிநாடா, ராயல சீமா இங்கல்லாம் இருக்கற பழைய தியேட்டர்ல ஓடற பாலையா படங்களை எல்லாத்தியும் பாத்து லாஜிக் மறந்த மனுஷனா வரப் போறேன்.கென்யா படிச்சே ஆவணும்
///நண்பர்1: பெட்ரோல் விலை ஏறிப் போச்சுன்னு பைக்க வீட்ல நிறுத்திட்டு பஸ்ல
Deleteவேலைக்கு போனியே. இப்ப பஸ் டிக்கெட் விலையும் ஏத்தப் போறதா பேச்சு
அடிபடுதே?
நண்பர்2: வேற வழியே இல்ல..கொஞ்சம் செலவானாலும் மும்பை போய் ஆபரேஷன் பண்ணிகிட்டு பொம்பளயா மாறவேண்டியதுதான்///
Hahaha... Super...
செனா அனா ஜி! :D :D :D
Deleteநல்ல ஐடியாவே இருக்கே.... இங்குட்டூம் ஒரு டோக்கன்!
Delete😶😑
Deleteகென்யா ஹார்ட் பைண்ட் ஆ சார்?
ReplyDeleteஆமா ஆமா
Deleteஇந்த கதாசிரியர் மற்றும் ஓவியர்களின் கூட்டணியில் உருவான கதைகள் அனைத்தும் நன்றாக இருக்கும், Scotland, amazonia,terre.
ReplyDeleteஎனவே வாய்ப்பு கிடைக்கும் போது இந்தக் கூட்டணியின் கதைகளை தேர்வு செய்து விடுங்கள்.
// "மர்ம தேசம் கென்யா" ஒரு வளமான கற்பனையின், வல்லிய படைப்பே ! புராதனத்தையும், எதிர்காலத்தையும் ஒற்றைப் புள்ளியினில் இணைக்க படைப்பாளிகள் செய்திருக்கும் இந்த fusion முயற்சி வெற்றியா ? இல்லையா ? என்பதை நீங்களே தீர்மானித்திட வேண்டி வரும் //
ReplyDeleteகென்யா வரும் அதே ஜூலையில் Jurassic World Dominion ஹாலிவுட் மூவி வருவது வியப்பான தற்செயல் நிகழ்வு...!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவரே.....
ReplyDeleteநன்றி ரவி...:-)
Delete// புக் வெளியான சூட்டோடு சூடாய் நீங்கள் வாசிக்க, உங்களின் நட்பு வட்டங்கள் ஆடிட, சும்மா சடுதியாய்க் களை கட்டிவிடுமல்லவா ? //
ReplyDeleteகென்யாவிற்காக ஆவலுடன்...
// இதே படைப்பாளி டீமின் "நமீபியா" ; அமேசான் ; ஸ்காட்லான்ட் தொடர்களும் சரி ; இதே ஸ்டைலிலான ஆக்ஷன் களங்களும் சரி, காத்துள்ளன ! //
ReplyDeleteவாவ்...
// ஓசூர் ; தருமபுரி ; கோவை ; ஈரோடு என வரிசையாய்ப் புத்தக விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன சார் ! So ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாய் புக்ஸை இறக்குவோமென்று எண்ணினேன் சார் ! //
ReplyDeleteSuper super news.
// இந்த ஆக்ஷன் ஜானரில் எக்கச்சக்கப் படைப்புகள் உண்டென்பதால், காத்திருக்கும் காலங்களில் அவையும் நமக்கொரு பயன்தரும் தடமாகிடக்கூடும் ! //
ReplyDeleteவெள்ளித் திரைக்கு வரும்போது இந்த வகை படைப்புகள் பலகோடிகளை முழுங்கி,துறை சார்ந்த நவீன டெக்னாலஜிகளை பயன்படுத்தி நம்பகத் தன்மையையும்,பரபரப்பையும்,எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது...
இவற்றை அப்படியே புத்தகவடிவில் கொண்டு வந்து வாசிப்பாளனுக்கு நிறைவை ஏற்படுத்துவது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம் தான்....
// இதே படைப்பாளி டீமின் "நமீபியா" ; அமேசான் ; ஸ்காட்லான்ட் தொடர்களும் சரி ; இதே ஸ்டைலிலான ஆக்ஷன் களங்களும் சரி, காத்துள்ளன ! //
ReplyDeleteவிரைவில் அவைகளையும் களமிறக்குங்க சார்.வாசிக்க நான்/நாங்கள் தயார்.
Kenya Namibia... இந்த பாணி adventure கதைகள் நம்ம கம்பெனில வந்தால் மிக மிக மகிழ்ச்சி...
ReplyDeleteயானை கல்லறை ரசிகனாக்கும் நானு.... 😬😂😬
பச்சை புள்ளை தலீவருக்கு இனிய இனிப்பான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....💐💐💐💐💐🎂🎂🎂🎂
ReplyDeleteநன்றி டெக்ஸ்...:-)
Deleteகடுதாசித் தலீவருக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteநன்றி நண்பரே...
Deleteகென்யா. வனரேஞ்சர் ஜோ டைப் கதைங்களா சார். ப்ரீவியூவாகக் கொடுத்திருக்கும் ஒருபக்கமே கதையின் விறுவிறுப்பைக் கூறுகிறது. வெல்கம் கென்யா
ReplyDeleteஇல்லை அய்யா
Deleteசூப்பர் சார்.....கென்யா அட்டைப்படமே குட்டீஸ்களை ஈர்த்து விடுமே....இந்த புத்தகத்தை இரண்டா வாங்கலாம்னு தோணுது....நீல வானம் குளிர்ச்சியையும்....கீழோகம் வெம்மையுமாய்....அட்டகாசமாய் ஏதோ சொல்வது போலுள்ளது....
ReplyDeleteஅப்ப நமீபியா....அமேசான் லா இதன் தொடர்ச்சி இல்லையா....நிச்சயம் இக்கதை வெற்றி பெறும்னு அட்டைல பறக்கும் அண்டரண்ட பட்சி சொல்லுது....வெற்றி பெறாட்டியும் அமேசான் நமீபியால்லாம் பிரீமிய விலைலயாட்டும் வரட்டும்....நாம் லோகமெல்லாம் சுத்துனாலும் ஆப்பிரிக்க காடுகளுக்குள் சுத்துவது குறைவே...ஆப்பிரிக்க காடுகளுக்குள் தொலைந்து போக வழி காட்டுங்கள்....
நம்பிக்கையுன்
உங்கள் மாணாக்கன்
ஓவியங்கள் பொம்மை போலவே உள்ளது...வித்தியாச அனுபவம் கிடைக்கலாமோ
Deleteகென்யா விற்கு ஒரு அருமையான வரவேற்பு கவிதை
Deleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteகமெண்ட் போட முடிகிறதா.... சூப்பரு.....
Deleteநான் ரெடியானேன் ஷெரீப்ம் ரெடியாயிட்டாரு வெரிகுட்..:-)
Deleteஒரு கமெண்ட் போடுவதற்குள் நான் படும் பாடு இருக்கே...
Deleteஇல்லை. செல்போனில் இருந்து போட முடியலை. கம்ப்யூட்டரில் இருந்து மட்டுமே முடிகிறது.
Deleteஎன்னால் முடிகிறது
Deleteஎனக்கு ஒரு வாரம் கழித்து இப்போது முடிகிறது...:-)
Deleteஎனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களும் பரணி கொண்டாரே
ReplyDeleteநன்றி ஸ்டில் ஜீ...:-)
Delete136th
ReplyDeleteகென்யா.....
ReplyDeleteஅட்டைப்படம் ஆர்வத்தை தூண்டுகிறது
டைனோசருடன் பயணிக்க ஆவலாய் இருக்கிறது
அட்டைப்பட ஒர்க் அசத்தல்
ஒகே இம்முறை ஸ்பெஷல் பதிவு ரெடி பண்ணிடலாம்
//அப்புறம் பழகிய அந்த வன்மேற்கு பூமிக்குள் புதிதாயொரு பயண மார்க்கமும் ரெடியாகி வருகின்றது ! யாருடன் ? எப்போது ? என்ன மாதிரி ? என்ற கேள்விகளுக்கான பதில்களையெல்லாம் காத்திருக்கும் புத்தக விழா circuit-ன் ஏதாவது ஒன்றின் போது அறிந்திடுவீர்கள் ! இப்போது தான் கதைகளுக்கான அக்ரீமெண்ட் கையெழுத்தாகியுள்ளது ! //
ReplyDeleteஅருமை
காத்திருப்பு சரி காத்திருக்கிறோம் தாங்கள் வாய் திறக்கும் வரை
அநேகமாக ஈரோடாக இருக்கலாம் என்பது என் கணிப்பு
கோவை பக்கம் புத்தக திருவிழா ஜூலை பின்பாதியில் தான்
காத்திருக்கிறேன்
கடல் அதுக்கு கென்யாவின் அடுத்த பாகத்த கேப்போமா
Deleteசரிங்க சகோ
Deleteஅதுவே கேக்கலாம் 🤝🤝🤝
டியர் எடி,
ReplyDeleteநெடுநாள் கழித்து நமது வலைபக்கங்களில் மீண்டும் ஆஜராகிறேன்... வேளைபளுவில் காமிக்ஸ் படித்தே இரு மாதங்களாவது இருக்கும். சமீப பதிவுகளை படித்து விட்டு இங்கே கருத்திடுகிறேன்.... நாளைக்குள்.
பதுங்கு குழி புகழ் தலைவர் பரணிதரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே....:-)
Deleteஎன்னாச்சி....கென்யாவுக்கு கமண்டுகளே வரலயே....புயலுக்கு முன்னமைதியோ
ReplyDeleteநீங்க களத்தில் இறங்குங்க ஸ்டீல்
Deleteசுத்தமாக்கவா....
Deleteசுத்தமாக்கணும்
Deleteகென்யா என்னும் கற்பனை தேசம் எப்படியுள்ளது என்பதை நமது மொழிபெயர்ப்பில் படித்து பார்த்தபின்னே தானே சொல்ல முடியும்... வன ரேஞ்சர் ஜோ கதைகள் போல இருந்தாலே சிறப்பாகத்தான் இருக்கும். இப்போதைக்கு சித்திரம் மற்றும் வண்ண சேர்க்கை கண்களுக்கு விருந்தாக உள்ளது.
ReplyDeleteகாலனோடு கூட்டணி..
ReplyDeleteஅது போகிற போக்கில் அன்றாடம் காணும் ஒரு யதார்த்தமான காட்சிதான்... அதையே ஸ்பெஷலான ஒரு பதார்த்தமாக காட்ட.. மேலும் விசேசமாக மாறியது.
இதோ...
ஒரு பின்மாலைப் பொழுது..பொன்மாலைப் பொழுதாக முடிய,
சூரியன்..உச்சி வானிலிருந்து கீழிறங்கி...மெதுமெதுவாக நிறம் மாறி...மெள்ளமாக அஸ்தனமாகிறது..
கதிரவனின் ட்யூட்டி முடிந்த பின்னே..தங்களுடைய கடைசி ட்யூட்டியை முடித்துக்கொண்ட பொதுஜனம், பரபரப்பான சாலைகளில் சாரை சாரையாக வீடுகளுக்குத் திரும்புகிறது..
மூச்சுத் திணறும் போக்குவரத்து நெரிசல்...போகப்போக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.
இருள் போர்த்திய பிறகு நகரம் சப்தநாடியும் அடங்கி..அவரவர் வீட்டில் ஐக்கியமாகிறது..
கப்சிப்பான நகரில் கடைசியா வலம் வந்து தம் பணியை நிறைவு செய்கிறது போலிஸ்.
ரொம்ப ரொம்ப இயல்பாகத் தெரியும் இந்தக் காட்சிகள் ரொம்ப ரொம்ப இயல்பாக நினைவில் இருந்து அகன்று விடுவதுதானே நியதி.
ஆனால்..அப்படி நிகழாவண்ணம் கதாசிரியரும், ஓவியரும் கரம் கோர்த்து முதலிரண்டு பக்கங்களில் கொடுத்த விஷுவல்.. ரொம்ப Fresh ..ரொம்ப புதுசும் கூட.அது கொணர்ந்த உணர்வுகள். அடடா..!
ஒரு கோப்பைத் தேநீர் முதல் மிடறிலேயே சுறுசுறுப்பையயும் சுவையையும் ஏக காலத்தில் தருவதை உணர்ந்த ஃபீலிங்.
SODA.. பெயரைப் போலவே புத்துணர்ச்சி தருகிறார் மனுசன்.
அருமையாக எழுதியுள்ளீர்கள்.
Deleteஅட்டகாசம் GP.
DeleteDouble thumbs up to Kenya series sir ... We are expecting Namibia, Amazon in this Genre!!!
ReplyDeleteகென்யா போக பெட்டி படுக்கையோட தயாராகுங்கள்...பத்தே நாட்கள்தாம்
ReplyDeleteசார் மழைத்தூவலால் இப்பத்தான் அமேசானியா...ஸ்காட்லேண்ட்...நமீபியால்லாம் நெட்ல தட்டிப் பாத்தேன்....வண்ணங்களில் விளையாடி உள்ளனரே....மாறுதலா புதிய கதைகள் மட்டும் வருடம் முழுதும் அறிமுகப்படுத்தலாமா எனக் கேப்பீங்களே....இந்தக் கதைகள் மட்டும்....டெக்ஸோடு சேத்து ஒரு வருடம் முழுக்க விட்டா எப்படி இருக்கும்
ReplyDelete'அண்டரண்டப் பட்சி'மறந்து, மறைந்தே போய்விட்ட சொல் சின்னவயதில் அம்மாகூறும்கதைகளில்வரும்அண்டரண்டப்பட்சியை ஞாபகப்படுத்திய கவிஞருக்கு நன்றி. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஎங்கப்பா பனைமரத்துல எங்க ஊர் கானத்துல தேரி அருகே அண்டரண்டபட்சி கூடு இருப்பதா கதை சொன்னார் ...86களில்....இப்பவும் அந்தக் கூடு இருக்கும்னு அந்த வருடம் சொன்னார் நண்பரே....உண்மையா பொய்யான்னு தெரியாது....பத்தாவது படிக்கயில் ஆர்னிதோப்டஸுன்னு ஏதோ ஒரு பறவய அறிவியல் பாடபுத்தகத்ல பாத்து இதுவா இருக்குமோன்னு நினைத்தேன்...ஆனா வருடங்கள் இடித்தது....எங்கப்பா பாத்த அந்தப் பறவை இன்றும் எதுவாயிருக்கும்னு துளைப்பதுண்டு....இக்கதை வந்ததும் காட்டி கேட்ருவம்
Deleteஈரோடு பு.விழா 2022
ReplyDeleteசிங்கம் நாயக்கர் கல்லூரி வளாகத்தில் ஜுலை 29- ஆகஸ்ட் 9 வரை
சிக்கய்ய நாயக்கர் - திருத்தம்
Deleteஅப்போ இந்த வருடம் ஈ பு வி உண்டு. வாரே வா
Deleteஆம். திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்களே மாநில பொதுக்குழு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இரண்டு வாட்ஸ் அப் அதிகாரப் பூர்வ குழுமங்களில் வெளியிட்ட அறிவிப்பு
Deleteநமக்கு ஸ்டால் கிடைத்து புத்தக விழா ஸ்பெஷல் புத்தகங்கள் வரும் என்று எண்ணுகிறேன்.
Deleteஸ்பெசலா நமீபியா....அமேசான்
Deleteஅதாவது ஈரோட்ட பிடிச்சி....அங்கிருந்து அமேசானியா
Deleteஒற்றை நொடி ஒன்பது தோட்டா போல ஒரு அதிரடி. இல்லையேல் ஒரு புதையல் வேட்டை கதை, இல்லையேல் ஒரு Sci-fi இல்லையேல் Zagor, இல்லையேல் அந்த புது கௌபாய். இருக்கு நிறைய option இருக்கு
Deleteநாளை பதிவுக்கிழமைங்க.
ReplyDeleteசார் நீங்க ரொம்ப பாஸ்ட்.
Deleteஇன்று பதிவுக்கிழமைங்க ஆசிரியர் சார்.
ReplyDeleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteரிப் கிர்பி அனைத்தும் அசத்தல்!
ReplyDeleteஅட என்னமோ போங்க, இப்போ தான் காமிக்ஸ் படிச்ச பீலிங்கே வருது!
இப்போதிருக்கும் சமுதாய, வாழ்க்கை சூழலுக்கு இது போன்ற கதைகள் தான் தேவலையோனு தோணுது!
FFS தடிதாண்வராயன் கைபடாமல் அப்படியே இருக்குது! 60s 70s எல்லாம் வந்தவுடனே படிக்கத் தோணுது!
"ரிப்" ஆல் ஸ்டைரிஸ் 8+/10
மீண்டும் ஒரு டஜன் டெக்ஸ் பரணுக்கு பார்சல்!
Deleteஅஞ்சு மாசம் ஆகியும் அம்பது பக்கங்களை கூட தாண்ட முடியலனா பரணுக்கு தான் போகனும்!