Saturday, May 21, 2022

அந்த பூமி பழசு...பார்வையோ புதுசு...!

 நண்பர்களே,

வணக்கம். ரொம்ப காலமாச்சு - நாட்களின் ஓட்டத்தினை நமது பதிவு தினங்களோடு முடிச்சுப் போடத் துவங்கி ! "சார்...பதிவுக்கிழமை !" என்று நண்பர் குமார் ஞாபகப்படுத்தும் போது புதுசாயொரு வாரயிறுதி புலர்ந்திருப்பது உறைக்கத் துவங்கும் ! And இதோ : கென்யாவின் பில்டப்போடு பயணமான பொழுது, அதற்குள் ஒரு வாரத்துக்கு முன்பான 'இஸ்திரி'யாகிப் போயிருக்க - நெக்ஸ்டு..நெக்ஸ்டு..என்று தேடி நிற்கிறேன் ! இந்த நொடியிலோ நமது பயணம், back to the Wild West ! வீட்டோடு மாப்பிளையாய் ஐக்கியமாகிடும் பார்ட்டீக்களுக்கு, மாமியார் வீடுகளின் அடுக்களைகளும், பாத்திரம் தேய்க்கும் இடங்களும் எத்தனை பரிச்சயமோ - அத்தனை பரிச்சயமல்லவா நமக்கிந்த டெக்சாசும், அரிஸோனாக்களும் ?! 

அந்தப் பொட்டல்காடுகளில் இம்மாதத்தின் முதல் பயணமானது - நமது ஆதர்ஷ தல & கோ. சகிதம் ! "ஒரு காதல் யுத்தம்" - ஒரிஜினலாய் போனெல்லியின் கதைவரிசையினில் # 575 ! ஒரு மினி லேண்ட்மார்க் இதழை, ஒரு மினி அதிரடியோடு ; முழுவண்ணத்தில் உருவாக்கியுள்ளனர் - ஓவியர் சிவிடெலியின் கைவண்ணத்தினில் ! And அதனை மிளிரும் அதே வண்ணங்களோடு ; ஒரிஜினல் அட்டைப்படத்தினோடே உங்களிடம் ஒப்படைக்க ரெடியாகி வருகிறோம் ! இந்த ஆல்பத்தின் highlights இரண்டு :  கிட் வில்லரின் மம்மியுடன் 'தல' கழித்த நாட்களைச் சுற்றிச் சுழன்றிடும் கதைக்களம் - ஹைலைட் # 1 . இரண்டாவது ஹைலைட் - எப்போதும் போல ஓவியரின் மிரட்டலான ஜாலங்கள் !! சும்மாவே black & white-ல் அதிரச் செய்யும் மனுஷனுக்கு ஒரு முழுவண்ண வாய்ப்பை ஒப்படைத்தால் வூடு கட்டி அடிக்க மாட்டாரா - என்ன ? 110 பக்கங்களிலும் சும்மா மாய்ஞ்சு..மாய்ஞ்சு பணியாற்றியுள்ளார் ! அதிலும் லிலித்தை சிவிட்டெலியின் தூரிகையினில் பார்க்கும் போது பெரியவர் போனெல்லி மீது லைட்டாய் வருத்தமே மேலோங்குகிறது - அம்மணியை அப்போதே க்ளோஸ் செய்து விட்டாரே என்று ! எது எப்படியோ - சிங்கிள் ஆல்பம் எனும்போது கதைக்களமும் பெரிதாய் எவ்வித முடிச்சுகளுமின்றி சீராய், நேராய் பயணிக்கின்றது ! So பிரீசியோ breezy read காத்துள்ளது இம்முறை ! அதுவும் போன மாதத்து "விடாது வஞ்சம்" ஸ்ட்ராங் ப்ளாக் காபியாக இருப்பதாய் எண்ணிய நண்பர்களுக்கு, இம்மாதத்து "காதல் யுத்தம்" திருச்செந்தூரின் ஒரிஜினல் பதநீராய் தென்படக்கூடும் ! 


மாதத்தின் இறுதி இதழும், ஜம்போ சீசன் 4-ன் இறுதி இதழுமான "மேற்கே .....இது மெய்யடா..! கூட செம breezy read தான் ; ஆனால் முற்றிலும் வேறொரு விதத்தினில் ! ஸ்டெர்ன் தொடர் எனக்குத் தனிப்பட்ட முறையில் ரொம்பவே பிடித்தமானது ;  தோளில் கரம்போட்டு, எதிர்ப்படும் முதல் மூ.ச.பக்கமாய் அடியேனை இட்டுப் போய் தடபுடலாய் "முதல்மருவாதிகள்" செய்திட வாய்ப்புகள் அநேகம் என்பது அப்பட்டமாய்ப் புரிந்தாலுமே ஏதோவொரு அசட்டுத் துணிச்சலில் தான் இவரை நம் மத்தியினில் நடமாடச் செய்தேன் ! And எதிர்பார்த்த அளவிற்கு மூ.ச.வில் Spa ட்ரீட்மெண்ட் நிகழவில்லை என்ற தைரியத்தில் இரண்டாம் ஆல்பத்தையும் சீக்கிரமே களமிறக்கி விட்டபோது - surprise ..surprise ...நல்ல வரவேற்பு ! "THE REAL WEST" என்ற பெயருடன் Maffre சகோதரர்கள் உருவாக்கியுள்ள மூன்றாம் ஆல்பமுமே இதோ - உங்களோடு பழகிப் பார்க்க கச்சை கட்டி வருகிறது !

இதன் ஆங்கில வார்ப்பினை படைப்பாளிகள் நமக்கு ரொம்ப முன்னமே அனுப்பியிருந்த போதிலும், மேலோட்டமாய்ப் புரட்டியதைத் தாண்டி வேறெதுவும் செய்திருக்கவில்லை ! போன ஞாயிறுக்கு இங்கிருந்து கிளம்பிய பின்னே பக்கங்களைப் புரட்டிய போது முதலில் கவனத்தைக் கோரியது அந்த 'டமால்..டுமீல்...பிளாம்..க்ராக்...' படலங்கள் தான் ! இது நாகரீக வெட்டியானின் கதை தானே..? இதனில் எதுக்கு டெக்ஸ் வில்லர் சாகசத்துக்கு இணையாய்த் தோட்டாப் பரிமாற்றம் ? என்ற கேள்வியோடே பணியாற்றத் துவங்கினேன் ! 

பொதுவாய் இந்த மாதிரி Onomatopoeia (!!!!) நிறைந்த ஜாகஜங்களெனில், பேனா பிடிக்கும் போது உற்சாகம் பிய்த்துக் கொள்ளும் ; சர்ர்..சர்ரென்று பக்கங்களைக் கடந்திட முடியும் என்பதால் ! ஆனால் ஸ்டெர்னின் கதாசிரியர் வெறுமனே பக்கங்களைக் கடத்த இந்த மாதிரியான வாணவேடிக்கைகளை நிகழ்த்துபவரல்ல என்பதால் அடக்கி வாசித்தபடிக்கே ஸ்டெர்ன் + லென்னியுடன் அந்த மோரிசன் சிறுநகரில் வலம் வந்தேன் ! கதைக்கென ; அந்தக் களத்துக்கென, கதாசிரியர் தேர்வு செய்திருக்கும் ஆட்களும் சரி, வரிகளும் சரி - 'நாசூக்கென்றால் வீசம்படி எவ்வளவு ?" என்று கேட்கக்கூடிய ரகமே ! So மொழிபெயர்ப்பினில் தன்மையான பதங்களையோ ; கரடு முரடற்ற வார்தைகளையோ தேடிட நான் மெனெக்கெடவே இல்லை ! ஒரேயொரு A ஜோக்கைத் தவிர்த்து பாக்கி இடங்களின் முழுமையிலும் Frederic Maffre  அடித்திருக்கும் ஈக்களை அட்சர சுத்தமாய் அடிக்க நானுமே முயன்றிருக்கிறேன் ! 18+ வாசகர்களுக்கான பரிந்துரையானது கதையின் ஓட்டத்துக்கோ ; சித்திரங்களுக்கோ அவசியமே ஆகிடாது - it's just for the script !! 

கதாசிரியர் Frederic Maffre

ஓவியர் Julien Maffre


இதோ - அட்டைப்படத்தின் முதல் பார்வை - ஒரிஜினலில் மாற்றங்களின்றி ! பின்னட்டையுமே ஒரிஜினல் தான் ! 

72 பக்கங்களுக்கு நீண்டிடும் ஸ்டெர்னுடனான எனது பயணம் இரண்டரை நாட்களில் நிறைவுற்றதற்கு கதாசிரியருக்கே நான் நன்றி சொல்லணும் - இம்மியும் தொய்வின்றி ஒரு ரொம்பவே யதார்த்தமான கதையினை நம் கண்முன்னே விரியச் செய்ததற்கு ! எங்குமே பாசாங்கு இல்லாத சராசரி மனிதர்கள் - அவர்களது அபிலாஷைகள் ; ஆதங்கங்கள் ; கனவுகள் ; வலிகள் என்று அத்தனையையும் நம்மிடம் ஒழிவின்றிக் காட்டும் போது அவர்களோடு நாமும் ஒன்றிப் போவதில் வியப்பில்லை என்பேன் !  நானுமே அந்த மோரிசன் சிறுநகரில் முயல் கறி சாப்பிட்டுக் கொண்டு மூன்று நாட்களுக்கு குப்பை கொட்டிய அந்த பீலிங்கு தான் இந்த சீசன் 4 ஜம்போவின் இறுதி இதழின் takeaway - என்னளவிற்காவது ! Of course - வெகுஜன அபிமானத்தினை ஈட்டவல்ல இதழா இது ? என்ற ஆரூடமெல்லாம் சொல்ல எனக்குத் தெரியவில்லை ! ஆனால் மாமூலான "யாஹீ....வோ...பிளாம்..பிளாம்'-களைத் தாண்டி அந்த வன்மேற்கின் வலி நிறைந்த பக்கங்களை இதமான சித்திர பாணியினில் தரிசிக்க நீங்கள் ரெடியெனில் - ஸ்டெர்ன் உங்களை disappoint செய்திட மாட்டார் ! Fingers crossed !

கென்யா அச்சாகி பைண்டிங்கில்..!

டெக்ஸ் அச்சாகி பைண்டிங்கில்..!

ஸ்டெர்ன் செவ்வாயன்று அச்சுக்கு !

So ஜூன் பிறக்கும் பொழுதினில் 3 முழுவண்ண இதழ்களுமே உங்களிடம் இருந்திடுமென்று எதிர்பார்க்கலாம் !

Work காத்திருப்பது - எலியப்பாவில் மாத்திரமே ! 

And எலியப்பா இத்தோடு நிறைவு காண்கிறார் என்பதால் அவரையும், அவரது காதலியையும் ரொம்பவே மிஸ் செய்வேன் வரும் நாட்களில் ! படைப்பாளிகள் இந்த யானை சாரை மறுக்கா தொடர்ந்தால் சூப்பராக இருக்கும் ! Anyways மாதாந்திர இணைப்புகளில் 'எலிக்கு அடுத்து யாரு ?' என்ற கேள்வி இந்த நொடியினில் என்முன்னே ! வருஷம் துவங்கிய போதே தெரியும் தான் - ஆறு மாதங்கள் கழித்து எலியப்பாவுக்கு டாட்டா காட்ட நேரிடும் என்பது ! ஆனால் அன்றைக்கு தலைக்கு மேல் குவிந்து கிடந்த பணிகளுக்கு மத்தியில் இது பெரியதொரு மேட்டராய்த் தோன்றவில்லை ! But கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஆறு மாதங்கள் நகன்றிருக்க, எலியின் காமிக்ஸ் வாரிசைத் தேட வேண்டுமென்ற நிலை இப்போது ! So அந்தத் தேடலுக்கும், 2023-ன் அட்டவணைக்கும் நேரம் தந்திட நான் நடையைக் கட்டுகிறேன் ! Before I sign out - questions for you please :

1 ."இந்த ஒருத்தர் மட்டும் வேண்டாமே - வேண்டாமே நைனா !!"  என்ற ரீதியில் யாரேனும் உள்ளனரா நடப்பு அட்டவணையினில் ? If yes - அந்த ஒரேயொரு பெயர் மட்டும் ப்ளீஸ் ?

2 ."2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" என்று நீங்கள் ஆதங்கப்படுவீர்களெனில் - அது யாருக்காக இருந்திடக்கூடும் ? Again just 1 name ப்ளீஸ் ! டின்டின் ; ஆஸ்டெரிக்ஸ் என்று இல்லாது - நமது சாத்தியங்களுக்குள் உட்பட்ட பெயராய் இருக்கட்டுமே ப்ளீஸ் ?

3 .காத்திருப்பது 'தல' டெக்சின் 75-வது பிறந்தநாள் ஆண்டென்பதை நாமறிவோம் ! அதற்கென சிறப்பு சேர்க்க உங்களின் ஒற்றை 'அகுடியா' என்னவாக இருக்கும் ? (கவிஞர்கள் மாத்திரம் இக்கேள்வியைத் தாண்டிச் செல்லக் கோருகிறேன் !!)

Bye all...have a great weekend ! See you around !

278 comments:

 1. 2 ."2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" என்று நீங்கள் ஆதங்கப்படுவீர்களெனில் - அது யாருக்காக இருந்திடக்கூடும் ?

  ஆர்ச்சியை கொண்டு வாருங்கள்!

  வண்ணத்தில், மேக்சியில் என்றால் இன்னும் சிறப்பு

  நன்றி...

  ReplyDelete
 2. அட அதுக்குள்ளவா பதிவு 😳😳

  ReplyDelete
 3. வணக்கம் நட்புக்களே

  ReplyDelete
 4. வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 5. Edi Sir..
  என்னவொரு ஆச்சர்யம்.. சனிகிழமை அதிமாலை பதிவு..

  ReplyDelete
 6. ஆன்லைன் கோடைப் புத்தக விழா உண்டுங்களா சார் ?

  ReplyDelete
 7. ஸ்டெர்ன் அட்டைப்படம் அட்டகாசம் 👌👏👏

  ReplyDelete
 8. ஒரு பெரிய சைஸ்ல ஜனவரி புத்தக விழாவுல டெக்ஸ் ஸ்பெசல் போட்டு ஆண்டோட தொடக்கத்தில் கொண்டாட்டம் தொடங்குறோம் 😍😇😍😇

  ReplyDelete
 9. அதுக்கு அப்புறம் பரம விசிறிகள் கோரிக்கை வைப்பார்கள் 😃😁

  ReplyDelete
 10. 2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" என்று நீங்கள் ஆதங்கப்படுவீர்களெனில் - அது யாருக்காக இருந்திடக்கூடும் ?

  Rin tin can

  ReplyDelete
 11. வணக்கம் ஆசிரியரே.
  1)மாடஸ்டியைத் தவிர வேறு பெண் காமிக்ஸ் நாயகியே வேண்டாம்.
  2)லோன் வோல்ப்,மாயாவி,ஸ்பைடர் ஒரு கதையாவது வேண்டும்.
  3)டெக்ஸின் 75 வது ஆண்டை கொண்டாடும் வகையில் 750 ரூபாயில் புத்தகம் வெளியிடலாம்.அல்லது 750 பக்க அளவில் கதை புத்தகம் வெளியிடலாம்..

  ReplyDelete
 12. Stern wrapper wow vera level best wrapper of the year... if it is hard cover with nagasu work is diamond...

  We want to add tiger with 4 album or whole young tiger album...

  ReplyDelete
 13. தளபதி மீள் வருகை புரிந்தால் நன்று 😇😇

  ReplyDelete
 14. தல தளபதி சேர்த்தே கொண்டாடி புடலாம் 2023ல 😍😍

  ReplyDelete
 15. 1. I don't like tragic stories. other than that all are welcome.
  2. Tiger...Tiger...Tiger
  3. 3 Triple Color Album in Slip case as TBS (Tex Birthday Special)

  ReplyDelete
  Replies
  1. No.3 command ஐ வரவேற்கிறேன்

   Delete
  2. // 3. 3 Triple Color Album in Slip case as TBS (Tex Birthday Special) //
   +1

   Delete
  3. Point no 3 பிளசோ பிளஸ்

   Delete
 16. 1. தாத்தாக்கள் 2. diabolik 3 .மாதம் இரண்டு டெக்ஸ்

  ReplyDelete
 17. 1000 page tex willer book never before tex with colour hard binding for 75 year celebration...and also each month with tex (minimum double albums ) by separate 75 year celebration tex subscribtion

  ReplyDelete
 18. சார், ஈரோடு புத்தக விழா அறிவித்து விட்டார்கள். ஜூலை 29 வர இறுதியில் காமிக்ஸ் சந்திப்பு இருக்கும் என்ற ஆவலில் வாசகர்கள் இருக்கிறார்கள். ஒரு மெகா சிறப்பிதழாவது இருக்கும் என்ற கனவு வேறு வந்து போய்கிட்டிருக்கு. சட்டு புட்டுன்னு அறிவிப்பை எதிர்பார்க்கிறோம். அப்படி வரலேன்னா ஸ்டீலின் பாடல்களுக்கு செயலரை மியூசிக் போடா சொல்லி என்னோட மச்சானை பட வச்சு தினம் ஒன்னு அனுப்பறதா பிளானு. உங்களுக்கு வசதி எப்படின்னு சொல்லிட்டீங்கன்னா நாங்க actionல இறங்க வசதியா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு டிக்கெட் போட்டிங்கன்னா நானும் வந்துடுறேன்

   Delete
  2. ஸ்டீலின் கவிதை ஒன்றே போதுமே எப்பேர்ப்பட்ட இரும்பும் இளகுமே

   Delete
  3. ஒரு மெகா சிறப்பிதலாவது !!!!

   Delete
 19. Separate tex subscription to celebrate 75 years of our no 1 hero

  ReplyDelete
  Replies
  1. // Separate tex subscription to celebrate 75 years of our no 1 hero //
   டெக்ஸ் தனித் தடத்தில் வருவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது,ரெகுலர் தடத்தில் வருவது மட்டுமே எல்லா வகையிலும் அனுகூலம் தரும்...

   Delete
  2. Ji only for this year for 75 yrs celebration

   Delete
 20. டெக்ஸ் 75 ஆவது ஆண்டில் இளம் தலை ஒரு மெகா குண்டு புக் கலர் அல்லது கருப்பு வெள்ளை சூப்பரா இருக்கும் சார் .75வது ஆண்டை சிறப்பித்த மாதிரி இருக்கும் எங்களுக்கும் ஒரு பெரிய தீனி கிடைத்திருக்கும்.

  ReplyDelete
 21. பிரசன்ட் சார்...

  மட்ட மதிய பதிவு சர்ப்ரைஸ்...

  ReplyDelete
 22. 2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" என்று நீங்கள் ஆதங்கப்படுவீர்களெனில் - அது யாருக்காக இருந்திடக்கூடும் ?


  இத்தாலிய மாந்திரீக தாந்திரீக புலனாய்வாளர்
  "DYLON DOG" Returns..... என்றால் Happy sir

  ReplyDelete
 23. வேண்டாம் என சொல்லும்படி யாரும் இல்லை.
  லார்கோ வின்ச்சை மீள்வருகைக்கு வரவேற்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வேண்டாம் என சொல்லும்படி யாரும் இல்லை. Double plus

   Delete
 24. டெக்ஸ் ,ஸ்டெர்ன் இரண்டு இதழ்களின் அட்டைப்படமும் செம கலக்கலாக அமைந்து உள்ளது சார்...பாராட்டுகள்...

  ReplyDelete
 25. இந்த ஒரே நாயகர் வேண்டாம் எனில் யாரை சொல்வீர்கள்..ஒருவரை சொல்ல ஆசை சார்... கெளபாய் நண்பர் தான் ஆரம்பத்தில் டெக்ஸை விட பிடித்தமானவர் தான் ..ஆனால் இப்பொழுது...?சொன்னாலும் நிறைய்ய நண்பர்கள் வருத்தப்படலாம் எனவே தாண்டி செல்கிறேன் சார்..:-)

  ReplyDelete
 26. டெக்ஸ் 75 ம் ஆண்டை முன்னிட்டு வரும் வருடம் கண்டிப்பாக எந்த காரணமும் கூறாமல் மாதம் ஒரு டெக்ஸ் தவறாமல் வர வேண்டும் சார்...அது கலரோ ,கறுப்பு வெள்ளையோ ஆனால் 200 + பக்கங்களாக மாதந்தோறும் குண்டாக வரவேண்டும்..

  அடுத்து இளம் டெக்ஸ் டெக்ஸை விட அதிக சுவையை கொண்டு வருவதால் இளம் டெக்ஸ் ஒரிஜினல் அதிக கதைகள் இருந்தால் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் இளம் டெக்ஸை படை எடுக்க சொல்லலாம் சார் ..( டெக்ஸ்ற்க்கு பதிலாகவே ஒரு மாதம் டெக்ஸ் ஒரு மாதம் இளம் டெக்ஸ்..தொகுப்பாக )


  அப்புறம் ஆண்டுமலர் ,தீபாவளி மலர் ,கோடை மலர் ,பொங்கல் மலரில் படா டெக்ஸ் வழக்கம் போல் வரவேண்டும் சார்...


  அப்புறம் யோசிச்சு சொல்றேன் சார்..

  ReplyDelete
 27. 1 ."இந்த ஒருத்தர் மட்டும் வேண்டாமே - வேண்டாமே நைனா !!" என்ற ரீதியில் யாரேனும் உள்ளனரா நடப்பு அட்டவணையினில் ?
  NO ONE ...

  2 ."2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" -
  BOND 2.0

  3 .காத்திருப்பது 'தல' டெக்சின் 75-வது பிறந்தநாள் ஆண்டென்பதை நாமறிவோம் ! அதற்கென சிறப்பு சேர்க்க உங்களின் ஒற்றை 'அகுடியா' என்னவாக இருக்கும் ?

  MEFISTO .. HARD BOUND IN COLOR ..( NOT THE YOUNG MEFISTO)

  ReplyDelete
  Replies
  1. // MEFISTO .. HARD BOUND IN COLOR ..//
   +1

   Delete
  2. // 2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" -
   BOND 2.0 // இதே தான் எனது கருத்தும் பாண்ட் 2.0 தெறி

   Delete
 28. 1. No One

  2. Largo or Tiger

  3. சிறப்பு மலர்கள் மற்றும் பதிவுகள்

  ReplyDelete
  Replies
  1. சரவணன் சார் ரொம்ப நாளாக உங்களை காணோமே?

   Delete
 29. வேண்டாம் என்று யாரும் இல்லை.

  ஜேம்ஸ் பாண்ட் 2.0 பாத்து ரொம்ப நாள் ஆச்சு

  டெக்ஸ் 75 - மெஃபிஸ்டோ

  ReplyDelete
  Replies
  1. Bond 2.0 இன்னும் ஒரு ஓட்டு

   Delete
 30. Edi Sir..
  1). யார் வேண்டாம் என்பதை யோசிக்க அவகாசம் வேண்டுமே.

  2) My favourite சிஸ்கோ &பாஞ்சோ கதை ஒன்றே ஒன்று கலரில் வேண்டும். அப்படியே ஆர்ச்சி கலரில் வந்தால் நலமே.

  3).75 வது ஆண்டு விழாவினை சிறப்பிக்க Our Evergreen தல Tex ன் தமிழில் வந்த கதைகள் பற்றிய ஒரு கதை சுருக்கம் with அந்தந்த கதையின் Highlight படத்துடன் அட்டகாச கலரில் A4 size ல் பக்கம் ஒன்றுக்கு ஒரு கதை வீதம் ஒரு ஆல்பமாக எடிட்டரின் அன்பு பரிசாக வாசகாஸ் க்கு வழங்கலாம். விலையின்றி அன்பு பரிசு எனில் கோடி சந்தோசம்.😍

  ReplyDelete
 31. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 32. // 1 ."இந்த ஒருத்தர் மட்டும் வேண்டாமே - வேண்டாமே நைனா !!" என்ற ரீதியில் யாரேனும் உள்ளனரா நடப்பு அட்டவணையினில் ? If yes - அந்த ஒரேயொரு பெயர் மட்டும் ப்ளீஸ் ? //
  நடப்பு அட்டவணையினில் எவரும் இல்லை...

  ReplyDelete
 33. // 2 ."2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" என்று நீங்கள் ஆதங்கப்படுவீர்களெனில் - அது யாருக்காக இருந்திடக்கூடும் ? Again just 1 name ப்ளீஸ் ! டின்டின் ; ஆஸ்டெரிக்ஸ் என்று இல்லாது - நமது சாத்தியங்களுக்குள் உட்பட்ட பெயராய் இருக்கட்டுமே ப்ளீஸ் ? //
  நல்லவரா,வல்லவரா பார்த்து யாரையாவது கொண்டு வாங்க சார்...
  புலனாய்வு செய்யும் நாயகராக இருப்பின் கூடுதல் மகிழ்ச்சி...

  ReplyDelete
 34. இந்த பதிவு வெளியான நேரம் மிக சரியான நேரம். இது அனைத்து சனிக்கிழமைகளிலும் தொடர்தல் நலம்!

  ReplyDelete
 35. // 3 .காத்திருப்பது 'தல' டெக்சின் 75-வது பிறந்தநாள் ஆண்டென்பதை நாமறிவோம் ! அதற்கென சிறப்பு சேர்க்க உங்களின் ஒற்றை 'அகுடியா' என்னவாக இருக்கும் ? //
  டெக்ஸ் 70 ஸ்பெஷலிற்கு சவால் விடும் அளவிற்கு டெக்ஸ் 75 ஸ்பெஷல் ஒன்று மெகா குண்டு ஸ்பெஷலாக முழுவதும் வண்ணத்தில் 750 பக்கங்களில்...
  70 ஸ்பெஷலிற்கு டைனமைட் ஸ்பெஷல்னு பெயர் வெச்ச மாதிரி,75 ஸ்பெஷலிற்கு டெக்ஸ் சூப்பர் ஸ்பெஷல் (TSS),டெக்ஸ் ஜெயிண்ட் ஸ்பெஷல் (TGS) அப்படின்னு ஏதாவது ஒரு பேர் வெச்சிடுவோம்...
  மத்தபடி முடிஞ்சா மாதம் இரண்டு டெக்ஸ் ஒன்று வண்ணத்தில்,மற்றொன்று க&வெ யில்...
  இல்லன்னா மாதம் ஒன்று கலரில் 3 மாதத்திற்கு ஒரு முறை டெக்ஸ் குண்டு ஸ்பெஷல்...

  ReplyDelete
  Replies
  1. ///மாதம் ஒன்று கலரில் 3 மாதத்திற்கு ஒரு முறை டெக்ஸ் குண்டு ஸ்பெஷல்...///

   அருமையான, பட்ஜெட்டுக்குள் அடங்கும் கோரிக்கை

   Delete
 36. இரட்டை வேட்டையர் ஜார்ஜ் & டிரேக் கதைகளை ரீபிரிண்ட் செய்ய வாய்ப்பிருக்கா சார் ??? ஒரே தொகுப்பாக !

  ReplyDelete
  Replies
  1. அருமையான யோசனை.
   வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.

   Delete
  2. இரட்டை வேட்டையர் வாழ்க சாத்தான் ஜி வாழ்க

   Delete
  3. நானும் நிறைய முறை கேட்டிருக்கிறேன், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் விற்பனை சாத்தியங்கள் ஆசிரியருக்கே தெரியும்

   Delete
  4. இரட்டை வேட்டையர் வாழ்க சாத்தான் ஜி வாழ்க..

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. கொள்ளையர் தீவும், ஆப்பிரிக்க சதியும.... எனக்கும் ஒரு செட்டு...

   Delete
 37. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete

 38. "3).75 வது ஆண்டு விழாவினை சிறப்பிக்க Our Evergreen தல Tex ன் தமிழில் வந்த கதைகள் பற்றிய ஒரு கதை சுருக்கம் with அந்தந்த கதையின் Highlight படத்துடன் அட்டகாச கலரில் A4 size ல் பக்கம் ஒன்றுக்கு ஒரு கதை வீதம் ஒரு ஆல்பமாக எடிட்டரின் அன்பு பரிசாக வாசகாஸ் க்கு வழங்கலாம். விலையின்றி அன்பு பரிசு எனில் கோடி சந்தோசம்.😍"

  விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம்.ஆனால் செய்து கொடுங்கள் இந்த கருத்தை வரவேற்கிறேன்

  ReplyDelete
 39. எலியப் பா அனைத்தும் சேர்ந்த தொகுப்பாக வெளியிடுவீர்களா?

  ReplyDelete
 40. 1. இந்த ஒருத்தர் மட்டும் வேண்டாமே - வேண்டாமே நைனா !!"

  பாண்ட் & ப்ளைஸி ஸ்பெசல்

  2 ."2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!"

  பௌன்ஸர்

  3. டெக்ஸ் 75 கொண்டாட்டம்

  இதுவரை வந்த டெக்ஸ் ஸ்பெசல்களில் லயன் 250 மற்றும் தலையில்லா போராளி ஆகிய இரண்டும் தரம் மற்றும் making ன் உச்சம்.

  The 250 போல் விடுவதென்றால், அதில் ஒக்லஹோமா தவிர்த்து மற்ற இரண்டும் சுமார். மேலும் ஒன் ஷாட் ஆல்பங்களில் தல பெருசாய் எடுபடுவதில்லை. ஆகையால் ஒரு டிரிபிள் ஆல்பம் + இரண்டு டபுள் ஆல்பம் என மூன்று பட்டாசு ரக கதைகளாய் தேர்வு செய்து 750 பக்க வண்ண பக்கங்களாக சிறப்பிக்கலாம்.

  அல்லது maxi சைஸில் தலையில்லா போராளி போல் சித்திரங்களை பெரிதாக்கி தலா ஒன்று கலரிலும், கறுப்பு வெள்ளையிலும் சேர்த்து வெளியிடலாம். அல்லது கலரிலேயே இரண்டு கதைகளையும் போட்டு தாக்கினாலும் சரிதான்.

  புதிய டெக்ஸ் கதைகள் கலரில் வருவது அரிதாகி வருவதால், சித்திரங்களில் மிரட்டும் கதைகளாக தேர்ந்தெடுத்து வெளிவிடுவது அதிமுக்கியம்.

  ReplyDelete
  Replies
  1. புதிய டெக்ஸ் கதைகள் கலரில் வருவது அரிதாகி வருவதால், சித்திரங்களில் மிரட்டும் கதைகளாக தேர்ந்தெடுத்து வெளிவிடுவது அதிமுக்கியம்.
   One valid point.I can't avoid.

   Delete
 41. 2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" என்று நீங்கள் ஆதங்கப்படுவீர்களெனில் - அது யாருக்காக இருந்திடக்கூடும் ?

  வண்ணத்தில் ஆர்ச்சி ***😊☺️

  ReplyDelete
  Replies
  1. சட்டித் தலையன்..
   ++++++++++++++
   +++++++++++++++
   ++++++++++++++++
   ப்ளஸ்ஸோ ப்ளஸ்..

   Delete
 42. எல்லா டெக்ஸ் கருத்துக்கும் +1

  ReplyDelete
 43. நவீன வெட்டியானின் புதிய கதையை படிக்க ஆர்வத்துடன் உள்ளேன்.

  ReplyDelete
 44. 1 ."இந்த ஒருத்தர் மட்டும் வேண்டாமே - வேண்டாமே நைனா !!" என்ற ரீதியில் யாரேனும் உள்ளனரா நடப்பு அட்டவணையினில் ? If yes - அந்த ஒரேயொரு பெயர் மட்டும் ப்ளீஸ் ?

  மாடஸ்டி ப்ளைசி

  2 ."2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" என்று நீங்கள் ஆதங்கப்படுவீர்களெனில் - அது யாருக்காக இருந்திடக்கூடும் ? Again just 1 name ப்ளீஸ் ! டின்டின் ; ஆஸ்டெரிக்ஸ் என்று இல்லாது - நமது சாத்தியங்களுக்குள் உட்பட்ட பெயராய் இருக்கட்டுமே ப்ளீஸ் ?

  Smurfs (if possible)

  3 .காத்திருப்பது 'தல' டெக்சின் 75-வது பிறந்தநாள் ஆண்டென்பதை நாமறிவோம் ! அதற்கென சிறப்பு சேர்க்க உங்களின் ஒற்றை 'அகுடியா' என்னவாக இருக்கும் ?

  முழு வண்ணத்தில் மூன்று 333 பக்க கதைகள்.. தனித்தனி இதழ்களாக ஒரே பாக்ஸில்..!!
  (ஹார்டு பவுண்ட் கூடத் தேவையில்லை)

  ReplyDelete
  Replies
  1. ஹார்டுபவுண்டை விட இன்றைக்கு ஹார்டபவுண்ட் டப்பாக்கள் கொள்ளை விலை சார் !

   Delete
  2. 1 ."இந்த ஒருத்தர் மட்டும் வேண்டாமே - வேண்டாமே நைனா !!" என்ற ரீதியில் யாரேனும் உள்ளனரா நடப்பு அட்டவணையினில் ? If yes - அந்த ஒரேயொரு பெயர் மட்டும் ப்ளீஸ் ?

   Smurfs

   2 ."2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" என்று நீங்கள் ஆதங்கப்படுவீர்களெனில் - அது யாருக்காக இருந்திடக்கூடும் ? Again just 1 name ப்ளீஸ் ! டின்டின் ; ஆஸ்டெரிக்ஸ் என்று இல்லாது - நமது சாத்தியங்களுக்குள் உட்பட்ட பெயராய் இருக்கட்டுமே ப்ளீஸ் ?

   மாடஸ்டி ப்ளைசி

   குண்டு புக்கில் மாடஸ்டி ப்ளைசி

   ஹார்ட் பவுண்டில் மாடஸ்டி ப்ளைசி


   Delete
  3. சபாஷ்....சரியான போட்டி...!!

   Delete
  4. சூப்பர்.. கரூர் சார்.
   அருமை ... கரூர் சார்.
   'அமர்க்களம்... கரூர் சார்.

   Delete
 45. 75ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அதிரடியான 1000 பக்கங்களுக்கு வண்ணத்தில்! மாதம் மாதம் 300+ பக்கங்களுக்கு வண்ணத்தில்+கருப்பு வெள்ளை இதை தவிர ஓவ்வொரு புத்தக விழாவிற்கும் ஒரு குண்டு புக்ஸ் அடுத்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக நிறைவடைந்தது விடும்

  ReplyDelete
  Replies
  1. மொத்த ஐந்தாயிரத்துக்கும் டெக்ஸ் ஐட்டங்கள் மட்டுமே மங்களம் பாடி விடும் நண்பரே !

   Delete
  2. இதை நான் யோசிக்கவே இல்லை ஐயா

   Delete
 46. இரத்த படலம் b/w sizeல் 1000 பக்கங்களுக்கு டெக்ஸ் புத்தகம்

  ReplyDelete
 47. அருமையான பதிவு சார்....டெக்ஸ் அட்டைப் படம் முன்னுது மின்னுது....பின்னது பின்னுதுன்ன படியே கீழ வந்தா மேல காணும் அந்த நீல வானப்பிண்ணணில பனிபடர்ந்த முண்ணணில பனிவெட்டியாக வெட்டியான் ஸ்டெர்ன்....நம்ம அத்தனை அட்டைப்படங்களையும் சுருட்டி லபக்கிட்டு என்னப் போல யாரு நண்பான்னு பாடுவது உங்களுக்கும் கேட்குதா......இதப் போல அட்டை வராதுன்னு அடிச்ச படியே இறகடிச்சு பறக்குது பட்சி....அட்டகாசம் சார்....நேர்ல மேலும் மிரள வைக்குமோ

  ReplyDelete
 48. 1.இல்ல
  2.லார்கோ...சாகர்....லோன் ரைடர்....டார்சான்...அங்கிள் டெர்ரி...ஸ்மர்ஃப்....ட்யூராங்கோ போல புதிய கதை சொன்னீங்களே அது....இவங்க எல்லாத்துக்கும் ஆளுக்கோர் ஸ்லாட் அவ்ளோதான்
  3.சார் இது வரை வந்த அதிக விலை இதழைத் காட்டிலும் ஒத்த ரூவா அதிகமா....பாத்து செய்யுங்க 75ஆண்டு விழா நாயகன் மட்டுமல்ல நாம் இளைப்பாறும் மண்டபத்தின் நான்கு கால் நீதித்தூதுவன் கூட அல்லவா

  ReplyDelete
  Replies
  1. //ட்யூராங்கோ போல புதிய கதை சொன்னீங்களே//

   அது 4 பாக தொடர் ஸ்டீல் ; இறுதி பாகத்துக்கு வெயிட்டிங் !

   Delete
 49. 1 ."இந்த ஒருத்தர் மட்டும் வேண்டாமே - வேண்டாமே நைனா !!" என்ற ரீதியில் யாரேனும் உள்ளனரா நடப்பு அட்டவணையினில் ? If yes - அந்த ஒரேயொரு பெயர் மட்டும் ப்ளீஸ் ?

  ஜெரோனிமா

  (ஸ்மர்ப் இப்ப இல்லை ஆனா எப்பவுமே வேண்டாம்)

  ReplyDelete

 50. 2 ."2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" என்று நீங்கள் ஆதங்கப்படுவீர்களெனில் - அது யாருக்காக இருந்திடக்கூடும் ? Again just 1 name ப்ளீஸ் ! டின்டின் ; ஆஸ்டெரிக்ஸ் என்று இல்லாது - நமது சாத்தியங்களுக்குள் உட்பட்ட பெயராய் இருக்கட்டுமே ப்ளீஸ் ?

  சாத்தியமிருப்பின்
  இரட்டை வேட்டையர்கள்
  ஜார்ஜ் & ட்ரேக்
  இல்லையெனில்
  ஜெஸ்லாங்

  ReplyDelete
 51. 3 .காத்திருப்பது 'தல' டெக்சின் 75-வது பிறந்தநாள் ஆண்டென்பதை நாமறிவோம் ! அதற்கென சிறப்பு சேர்க்க உங்களின் ஒற்றை 'அகுடியா' என்னவாக இருக்கும் ?

  டைனமைட் ஸ்பெஷல் போல் ஒரு இதழ்

  ReplyDelete
 52. எடிட்டர் சார்
  தல அட்டைப்படம் அமர்க்களம்! பின்னணியில் மேகக் கூட்டமே இந்தக் காதல் ஜோடிக்கு ஒரு ஆர்ட்டின் சிம்பளை வரைந்துவிட்டதைப் போலிருக்க, தல'யின் பாதுகாப்பு அரணுக்குள் லிலித்தின் முகத்தில் ஒரு நிம்மதி விரவிக்கிடந்தாலும், லிலித்தின் முகம் மட்டும் ஏதோ பாடம் செய்யும்போது பாதியிலேயே எழுந்துவந்த எகிப்திய மம்மி போல தோற்றமளிப்பது சின்னதாய் ஒரு திருஷ்டிப் பொட்டு! மற்றபடிக்கு உள்பக்க சித்திரங்களில் லிலித் - செம!!

  வெட்டியான் ஸ்டெர்ன் கதையில் வரயிருக்கும் இயல்பான கதை மாந்தர்கள் இம்முறையும் வசீகரிப்பார்கள் என்றே தோன்றுகிறது! அட்டைப்படம் - செம வித்தியாசமாய்!! 'மேற்கே இது மெய்யடா' தலைப்பும் - செம செம வித்தியாசமாய்!! 72 பக்கங்கள் எனும்போது கிட்டத்தட்ட ஒரு டபுள் ஆல்பம் படித்த அனுபவத்தைத் தரப்போகிறது!

  கென்யா, தல, வெட்டியான் - மூன்றுமே எதிர்பார்ப்புகளை ஏகத்திலும் கிளப்பியிருப்பதால், இம்மாத இறுதியில் புத்தகங்கள் கைக்குக் கிடைத்தபிறகு நம் நண்பர்களில் பலருக்கும் இவற்றுள் எதை முதலில் படிப்பது என்ற குழப்பம் ஏகத்துக்கும் எழப் போவது உறுதி!

  ReplyDelete
  Replies
  1. கென்யா ....by a distance sir !

   புக் அமர்க்களமாய் அமைந்து வருகின்றது !

   Delete
 53. ///எலியப்பா இத்தோடு நிறைவு காண்கிறார் என்பதால் அவரையும், அவரது காதலியையும் ரொம்பவே மிஸ் செய்வேன் வரும் நாட்களில்///

  நானும் மிஸ்டர் எலியை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் எடிட்டர் சார்!

  ReplyDelete
 54. ///"2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" என்று நீங்கள் ஆதங்கப்படுவீர்களெனில் - அது யாருக்காக இருந்திடக்கூடும் ?///

  ஸ்மர்ஃப்ஸ்!!


  ///காத்திருப்பது 'தல' டெக்சின் 75-வது பிறந்தநாள் ஆண்டென்பதை நாமறிவோம் ! அதற்கென சிறப்பு சேர்க்க உங்களின் ஒற்றை 'அகுடியா' என்னவாக இருக்கும் ?///

  1000 பக்கங்களில் ஒரு கலர் குண்டு?

  ReplyDelete
  Replies
  1. சந்தாவில் நாலிலொரு பகுதியை அப்படியொரு குண்டு மட்டுமே விழுங்கிடும் சார் !

   Delete
  2. ஸ்மர்ப்ஸ்..
   டிரிபிள் ஓகே..

   Delete
  3. விழுங்கிட்டு போகட்டும் சார் இந்த வருட முத்து 50 போல

   Delete
 55. 1. Modesty
  2. Smurfs or rintin can or any cartoons discontinued
  3. Young tex 2 issues as single album

  ReplyDelete
  Replies
  1. மாடஸ்டியை மறுதலிக்கும் டாக்டர் !! Surprise !!

   Delete
 56. Eagerly expecting june issues. Really interesting combo of books

  ReplyDelete
 57. 1. சிஸ்கோ

  2. ஸ்பைடர் .. வண்ணத்தில் / சினிஸ்டர் செவன். ஸ்டீல் க்ளாவுக்கு ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டு அது நிறைவேற்ற முடியாமல் போனது.. குறைந்தபட்சம் இதையாவது செய்யலாம்..

  3.LMS போல் ஒவ்வொரு காலாண்டுக்கும் ஓரிதழ்.+ காப்புறுதி பெற்று டெக்ஸ் உருவ பொம்மை

  ReplyDelete
  Replies
  1. தாட் 'ராயப்பா ......நான் நான் தானா ?' moment#

   Delete
  2. உருவ பொம்மை ஓராண்டுச் சந்தாவை நெருக்கி விடும் சார் ! And பெரும்பாலான வேளைகளில் அவற்றை ஐரோப்பாவுக்கு வெளியே விற்க பிரியப்படுவதில்லை !

   Delete
 58. // 2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" என்று நீங்கள் ஆதங்கப்படுவீர்களெனில் - அது யாருக்காக இருந்திடக்கூடும் ? //

  ஸ்மர்ஃப்ஸ்!!

  ReplyDelete
 59. 1.இனி வேண்டவே வேண்டாம். ரிப்போர்ட்டர் ஜானி. ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளுடன் சுவாரஸ்யமாக ஒன்றுமே இல்லாமல் வளவள, கொழகொழவென்றுவரும் கதைகள் மறுவாசிப்புக்கு த்தொடவே முடியவில்லை 2.பேட்மேன். வந்தால் நமது தோற்றமே வேறுலெவலுக்கு மாறிவிடும் 3.டெக்ஸ் மாதம் ஒன்று. ஏதோஒருவடிவில் . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. அட, ஹிட்லஸ்டில் ஜானியா சார் ?

   Delete
  2. அதும் நம்ம ராஜசேகர் சாரா?? நம்ப முடியவில்லை

   Delete
 60. 2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே


  டைகர்..மிஸ்டர் டைகர்... கேப்டன் டைகர்...

  ReplyDelete
 61. ஸ்டெர்ன் டபுள் ஆல்பம் . மிக்கமகிழ்ச்சி. பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட ஏகப்பட்ட பாத்திரங்கள் வந்தாலும், கதைமுடிந்தவுடன் இன்னும் சிலபக்கங்கள் இருந்திருக்கலாமே. டக்கென்று முடிந்துவிட்டதே என்ற எண்ணம் தோன்றும். இம்முறைநிறைவாக இருக்கும். அதேபோலவே அந்தியும் அழகே தாத்தாக்களுக்கும் டபுள் ஆல்பம் சான்ஸ் உண்டுங்களாங்க சார். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. // அந்தியும் அழகே தாத்தாக்களுக்கும் டபுள் ஆல்பம் சான்ஸ் உண்டுங்களாங்க சார். //
   அந்தியும் அழகே,சிங்கிள் ஷாட்தான் அழகே...

   Delete
  2. // பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட ஏகப்பட்ட பாத்திரங்கள் வந்தாலும், கதைமுடிந்தவுடன் இன்னும் சிலபக்கங்கள் இருந்திருக்கலாமே. டக்கென்று முடிந்துவிட்டதே என்ற எண்ணம் தோன்றும். //

   சரியாக சொன்னீர்கள். கடந்த இரண்டு கதைகள் படித்து முடித்த உடன் இதே எண்ணம் தான் எனக்கு.

   Delete
 62. காமிக்ஸ் சொந்தங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்!

  ReplyDelete
 63. சார்..
  அந்த இரட்டை வேட்டையார்..??!!

  ReplyDelete
 64. டெக்ஸ் அட்டைப்படம் இம்முறை கூடுதல் மாஸாக உள்ளது சார்....

  உள்பட ஓவியமே காத்திருக்கும் விருந்துக்கு அத்தாட்சி....

  தலைதான் முதல் சாய்ஸ்.....💕

  ReplyDelete
 65. வெட்டியான் இம்முறை பனியில் என்னமாதிரியான அனுபவங்களை கொண்டு வர உள்ளாரோ??

  அட்டகப்படமே சிலிர்ப்பூட்டுது...

  வெட்டியான் நிச்சயமாக செகண்ட் சாய்ஸ் தான்...


  இத்தோடு முடியிறாரா? இன்னும் பாகங்கள் உள்ளனாவா சார்?

  ReplyDelete
 66. ////கென்யா அச்சாகி பைண்டிங்கில்..!

  டெக்ஸ் அச்சாகி பைண்டிங்கில்..!

  ஸ்டெர்ன் செவ்வாயன்று அச்சுக்கு !

  So ஜூன் பிறக்கும் பொழுதினில் 3 முழுவண்ண இதழ்களுமே உங்களிடம் இருந்திடுமென்று எதிர்பார்க்கலாம் !////


  -----@ரவி, KS, தலீவர், சி.ச., ஸ்ரீபாபு........!!! உங்க காட்டில 31ந்தேதியே மழைதான்...

  ReplyDelete
  Replies
  1. இந்த வாரக் கடைசியில் அனுப்பி வைத்தாலும் சரிதான்.

   Delete
  2. // இந்த வாரக் கடைசியில் அனுப்பி வைத்தாலும் சரிதான். //
   ஆமாம்பா ஆமாம்...இந்த வாரம் வந்தா வார விடுமுறையில் படிக்க வாய்ப்புண்டு...
   மாதக் கடைசின்னா கொஞ்சம் கஷ்டம்தான்...

   Delete
 67. இந்த ஒருத்தர் மட்டும் வேண்டாமே - வேண்டாமே நைனா !!"
  Smurfs

  2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா
  Cisco Kid

  ReplyDelete
 68. 1."இந்த ஒருத்தர் மட்டும் வேண்டாமே - வேண்டாமே நைனா !!" என்ற ரீதியில் யாரேனும் உள்ளனரா நடப்பு அட்டவணையினில் ? If yes - அந்த ஒரேயொரு பெயர் மட்டும் ப்ளீஸ் ?

  ALFA - pesi pesiyE kolraaru manushan !

  2 ."2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" என்று நீங்கள் ஆதங்கப்படுவீர்களெனில் - அது யாருக்காக இருந்திடக்கூடும் ? Again just 1 name ப்ளீஸ் ! டின்டின் ; ஆஸ்டெரிக்ஸ் என்று இல்லாது - நமது சாத்தியங்களுக்குள் உட்பட்ட பெயராய் இருக்கட்டுமே ப்ளீஸ் ?

  AN EXTRA SPECIAL ONE TIME ONLY CARTOON EDITION OF YOUR CHOICE SIR!!

  3 .காத்திருப்பது 'தல' டெக்சின் 75-வது பிறந்தநாள் ஆண்டென்பதை நாமறிவோம் ! அதற்கென சிறப்பு சேர்க்க உங்களின் ஒற்றை 'அகுடியா' என்னவாக இருக்கும் ? (கவிஞர்கள் மாத்திரம் இக்கேள்வியைத் தாண்டிச் செல்லக் கோருகிறேன் !!)

  1) MONTHLY 224 page issue with TEX 75 EMBLEM
  2) SIX OF THEM COLOR
  3) TEX STICKERS WITH ALL 2023 TEX BOOKS
  3) POSSIBLY

  ReplyDelete
 69. 1 ."இந்த ஒருத்தர் மட்டும் வேண்டாமே - வேண்டாமே நைனா !!" என்ற ரீதியில் யாரேனும் உள்ளனரா நடப்பு அட்டவணையினில் ? If yes - அந்த ஒரேயொரு பெயர் மட்டும் ப்ளீஸ் ?  அப்படி யாரும் காணலயே சார்???

  ReplyDelete
 70. 2 ."2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" என்று நீங்கள் ஆதங்கப்படுவீர்களெனில் - அது யாருக்காக இருந்திடக்கூடும் ? Again just 1 name ப்ளீஸ் ! டின்டின் ; ஆஸ்டெரிக்ஸ் என்று இல்லாது - நமது சாத்தியங்களுக்குள் உட்பட்ட பெயராய் இருக்கட்டுமே ப்ளீஸ் ?

  "இளமையில் கொல்"-- இளம் டைகர் பாகங்கள் 2&3 வண்ணத்தில்--- நெடுநாட்களாக காத்துள்ளன சார்....

  புதிய கதைகள் இப்பத்தைக்கு இல்லை எனும்போது டைகருக்கு அட்டவணையில் இடம் கிடைக்கும் ஒரே வாய்ப்பு இதான்..


  சாய்ஸ்2ம் டைகர் தான்.., தங்க கல்லறை-வித் பழைய வசனம்!


  கேப்டன் டைகர் மறந்தே போயிடும் போல..,

  அப்புறம் யங் டைகர் போடும்போது யாருங்க இதுனு நண்பர்கள் கேட்கும்நிலை வந்திடப்படாது சார்...வாட்ஸ்ஆப்பில படங்களுடன் அப்புறம் விளக்கம் தர வேண்டியதாகிடும்...

  ReplyDelete
  Replies
  1. எது அடுத்த வருசமா? இந்த வருடம் வராதா?

   Delete
  2. இயன்றால் இந்த ஆண்டே...
   ஈரோட்டில் 2யும் கொடுத்தா வேணாம்னா சொல்லப்போறோம்...

   Delete
  3. சார் அப்படியே ஈரோடு புத்தக விழாவுக்கு ஸ்பெஷல் புத்தகங்கள் அறிவிக்கலாமே? இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது.

   Delete
 71. Back to Bangalore. தூத்துக்குடியில் வெயில் பின்னணி பிடல் எடுத்தது என்றால் இங்கே சிலு சிலு வென்று கொடைக்கானலில் இருப்பது போல் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. என்ஜாய் பரணி

   Delete
  2. இங்க 15நாளு, அங்க 15நாளும என்ஜாய் பண்ணுங்க....💐

   Delete
  3. Yes bharani.l agreed. Last one week I'm in bangalore with my sons family. Daily evening rain. super climate. now come back to karur to join duty.

   Delete
  4. மகிழ்ச்சி பத்மநாபன். நான் ஒரு மாதம் முன்னால் தூத்துக்குடி சென்றேன் அன்று முதல் பெங்களூரில் தினமும் மழைதான் என வீட்டு ஓனர் சொன்னார். உங்கள் மகன் எந்த ஏரியாவில் உள்ளார்.

   நன்றி குமார்.

   விஜயராகவன், அடுத்த வாரம் முதல் வாரம் இரண்டு நாட்கள் ஆபீஸ் செல்ல வேண்டும். இனி தூத்துக்குடி செல்வது குழந்தைகளின் விடுமுறையை பொருத்துதான்.

   Delete
  5. @Parani from Bangalore
   கோவையும் ஜிலு ஜிலு வென்று தான் இருக்கிறது சகோ 😊😊😊

   Delete
 72. 3 .காத்திருப்பது 'தல' டெக்சின் 75-வது பிறந்தநாள் ஆண்டென்பதை நாமறிவோம் ! அதற்கென சிறப்பு சேர்க்க உங்களின் ஒற்றை 'அகுடியா' என்னவாக இருக்கும் ?


  மாதம் ஒரு டெக்ஸ்லாம் அட்டவணையில் வந்திடும், சோ அதுபற்றிய விசாரம் தேவையில்லை... சோ என்ன கேட்கலாம்???

  ஆங் முத்து 50மாதிரி கலர் பாக்ஸில் 4கனமான தனிதனி ஹார்டு பவுண்டு இதழ்கள்....

  டெக்ஸ்75ம் சந்தாவோடு இணைத்தா ஒண்ணும் பெரிசாக பண்ண இயலாது சார், சந்தாவில் இல்லாத தனி முன்பதிவுக்குனு செய்யலாம் சார்.

  என் சாய்ஸ்...

  1.கலர் ட்ரிபிள் ஆல்பம்1

  2.கருப்பு வெள்ளை ட்ரிபிள் ஆல்பம்1

  3.இரத்தப்படலம் 2.0 பார்மேட்டில் ஒரு டபுள் அல்லது ட்ரிபிள் ஆல்பம் ,சைஸ் எல்லாம் அதுவே...

  4."கார்சனின் கடந்த காலம்"- பழைய வசனங்கள் & பாடல்கள் மாறாமல், ஹார்டு பவுண்டில்... இரத்தப்படலம்2.0 பார்மேட்டில்....

  2பெரிய இதழ்கள்& 2 சிறிய இதழ்கள்... பட்ஜெட்லாம் பார்க்க வேணாம்.,இந்த ஒருமுறை..... இந்த ஆண்டு செப்டம்பர்30ல அறிவிக்கிறீங்க, 3தவணைகளில் முன்பதிவு பண்ணிடறோம்.. டெக்ஸ்75ஐ அடுத்த ஆண்டு கொண்டாடுறோம்....💞💞💞💞💞


  ReplyDelete
  Replies
  1. பிளஸ்சோ பிளஸ். முன் பதிவு ஐடியா அருமை.

   Delete
  2. சூப்பர்.. 😍😍😍😍

   Delete
  3. கா.க.கா விற்கு இப்போது அவசரம் ஏதும் இல்லை,டெக்ஸ் 75 கொண்டாட்டத்திற்கு நிறைய புதிய இதழ்களை முயற்சிக்கலாம்...

   Delete
  4. //சந்தாவில் இல்லாத தனி முன்பதிவுக்குனு செய்யலாம்//

   வெரிகுட். பட்ஜெட் பற்றிய கவலை இருக்காது.

   Delete
 73. நைட் அரை மணி நேரம் ஒரு பதிவை அடித்து பதிவிட்டால் காலையில் அதை காணோமே...

  ReplyDelete
 74. 1. வெட்டியான் வேண்டாம்

  2. ஆர்ச்சி Or இரட்டை வேட்டையர்

  3.டெக்சின் மிக நீண்ட சாகசம் - தலையில்லா போராளி Size ல் தெளிவான கறுப்பு வெள்ளை சித்திரங்களுடன்

  ReplyDelete
 75. அம்மணியை அப்போதே க்ளோஸ் செய்து விட்டாரே என்று//
  உண்மை தான்😭 . குறைந்தது கிட்டுக்காவது டோனா போல் ஒரு காதலி அவ்வப்போது வலம் வந்தால் டைகர் கதைகள் போல் டெக்சிலும் இந்த கொதிக்கும் வன்மேற்கில் கொஞ்சம் தென்றலும் வீசிடக் கூடும். இது போல் பல வித்தியாசமான கதைகள் வரவும் வாய்ப்பிருக்கும்.வந்தால் நன்றாகவும் இருக்கும் தானே. கார்சனின் கடந்த காலத்தில் ஓடிய இரு மெல்லிய காதல்களும் அக்கதையை டாப் பாக மாற்றியதற்கு காரணம்.

  வேதாளர் முதல் அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ்கள் வரை ஒவ்வொருத்தருக்கும் காதல், கல்யாணம் என்று பண்ணி வைத்து கதைகளையும் விடாமல் சுவாரஸ்யமாக நகர்த்திக்கொண்டே செல்கிறார்கள். ஆனால் 700 கதைகள் தாண்டியும் டெக்ஸ் கதைகளோ ஒரு குறிப்பிட்ட வருடத்திலேயே எப்போதும் நடப்பது போல் ஒரு பீலிங்கு இருந்து கிட்டே இருக்கு.😪 டெக்ஸ் கதைகள் ஒரே மாதிரியிருக்கு என்று சிலர் சொல்வது இதனால் தானோ தெரியல

  டியர் எடிட்டர், கிட்டையும் இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இப்படியே பார்ப்பது . எங்கள் குரல்கள் தான் இத்தாலியை , பதிப்பகத்தை எட்ட வாய்ப்பில்லை. தாங்களாவது அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் போது கிட்டுக்காக பரிந்துரை செய்வீர்களா .ப்ளீஸ் 🙏🙏🙏

  ReplyDelete
  Replies
  1. வன்மேற்கு மேட்ரிமனி !!

   இவ்விட வல்லிய பெண்குட்டிகள் தேடித் தரப்படும் !!

   இப்புடி போர்டு போட்டாக்கா லைனிலே முதல்லே நிக்க கார்சனுக்கும் ; டைகருக்கும் தான் அடிதடி தகறாரா இருக்கும் நண்பரே !

   Delete
 76. டெக்ஸின் 75 ஆண்டு!! ஆரம்பத்தில் அதாவது சென்னை புத்தக திருவிழாவில் வண்ணத்தில் ஒரு சிறிய கு....ண்டு புக்ஸ் ட்ரிபிள்! அடுத்து முன் பதிவுக்கு ஆகஸ்ட் புத்தக விழாவில் பெரிய சைசில் ஒரு பெரிய குண்டு புத்தகம் வண்ணம்+b&w !!பிறகு மாதம் மாதம் டெக்ஸ் & இளம் டெக்ஸ் கருப்பு வெள்ளை மற்றும் வண்ணத்தில் டெக்சை நாம் கொண்டாடும் ஆண்டு என்பதால் மறுக்காமல் முயற்சி செய்யுங்கள் ஆசானே!

  ReplyDelete
 77. ஸ்டெர்ன் அட்டைப்படம் கலக்கல்,டெக்ஸ் கலரில் அள்ளுது,கென்யா ஆர்வத்தைக் கிளப்புது,ஈ.வி சொன்ன மாதிரி எதைப் படிக்கனும்னு முடிவு செய்யறது கடினம்தான்...

  ReplyDelete
 78. // இந்த ஒருத்தர் மட்டும் வேண்டாமே - வேண்டாமே நைனா !!" என்ற ரீதியில் யாரேனும் உள்ளனரா நடப்பு அட்டவணையினில் ? If yes - அந்த ஒரேயொரு பெயர் மட்டும் ப்ளீஸ் ? //

  ஒரு தலைவனின் கதை, மார்தா, ஜனாதன் ஸ்காட்லாண்ட் தாத்தா, ஒரு தலைவன் சகாப்தம் போன்ற கதைகளை வெளியிடாமல் இருந்தால் ரொம்ப சந்தோஷம் சார் :-)

  ReplyDelete
  Replies
  1. நீருண்டு நிலமில்லை கதையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் அந்த சைக்கோ ஓவியரின் கதையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

   Delete
  2. கொஞ்ச காலத்துக்கு ஜம்போவை பரணுக்கு அனுப்ப ரெடியாகியாச்சே சார் ; இந்த ஒன் ஷாட்ஸ் தலைகாட்ட வாய்ப்பு குறைச்சலே இனி !

   Delete
  3. மகிழ்ச்சி. கிராஃபிக் நாவல் வேண்டும்

   Delete
 79. வெட்டியானட்டை...
  நேற்று கீழ் வானம் சிவக்கும்
  இன்று கீழ் வானம் ப்ளூக்கும்
  வராட்டா புளுக்கும
  வந்தா புழுக்கும்
  விட்டா புலுக்கும்

  ReplyDelete
 80. அடுத்த மாதமும் கொண்டாட்டம்...
  குண்டாய் கென்யா
  நினைவாய் லிலித்
  எதிர்பார்ப்பாய் வெட்டியான்


  ReplyDelete
 81. 1. அழுகாச்சி, சோக முடிவுகள் கொண்ட கதைகளை தவிர்க்கவும்.

  2. Alone 1 பாகமாவது தொடங்கலாம்

  3. டெக்ஸ் மெபிஸ்டோ வண்ண இதழ்

  ReplyDelete
 82. சார் டெக்ஸ் அதிக பக்கங்கள் வரட்டும்...வண்ணத்தால் பக்கங்கள் குறைய வேண்டாம்....7500 பக்கத்துல ...பத்து புத்தகங்களாக வரட்டும்...இளம் டெக்ஸ் 5000 பெரிய டெக்ஸ் 2500 பக்கத்ல...மெபிஸ்டோவுடன்......
  மாறுதலா ஒரு வருடம் முழுக்க வித்யாசமான்னு கேப்பீங்களே ...ஒரு வரும் முழுக்க போனல்லி வரிசைல டெக்ஸ் ...மட்டுமே

  ReplyDelete
  Replies
  1. // காத்திருப்பது 'தல' டெக்சின் 75-வது பிறந்தநாள் ஆண்டென்பதை நாமறிவோம் ! அதற்கென சிறப்பு சேர்க்க உங்களின் ஒற்றை 'அகுடியா' என்னவாக இருக்கும் ? (கவிஞர்கள் மாத்திரம் இக்கேள்வியைத் தாண்டிச் செல்லக் கோருகிறேன் !!) // ஸ்டீல் உங்களுக்கு இந்த கேள்வி இல்லை. 😁😁😁

   Delete
 83. Tex 75, 12 மாமாதங்களுக்கு 12 புத்தகம், ஒவ்வொரு கதையும் ஒரு வித்தியாசமான எதிரியோடு
  டெக்ஸ் மோத வேண்டும்.

  ReplyDelete
 84. சந்தா வாசகர்களுக்கும் கலர் மினி டெக்ஸ் வேண்டும்

  ReplyDelete
 85. இளம் டெக்ஸ் 5000, பெரியடெக்ஸ் 2500.
  (பெரிதினும் பெரிது கேள்.) கவிஞரே. நினைக்கும் போதே கண்ணைக்கட்டுதுங்க கவிஞரே. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 86. 1. கிளாசிக் ஜேம்ஸ்! கடைசியாக வந்த பாண்ட் ஏனோ அவ்வளவாக கவரவில்லை.

  2. ஜேம்ஸ்பாண்ட் 2.0; ஆவலுடன் வெயிட்டிங். (ஜெரெமயா கேட்கத்தான் நினைத்தேன்... ஆனால் என் குரல் எனக்கே கேட்காதோ என்று மனக்கிலேசம்)

  3. டெக்ஸ் 750: 3 மேக்சி கதைகள் கொண்ட 1000 பக்க சிறப்பிதழ்.

  கதை-1: வழக்கமான டெக்ஸ் ஆக்சன் டெம்ப்லேட்.(330+ பக்கங்கள்)

  கதை-2: மெபிஸ்டோ / மோரிஸ்கோ கூட வரும் ஒரு கதை.(330+ பக்கங்கள்)

  கதை-3: விடாது வஞ்சம் போன்ற சீரியஸ் டெக்ஸ் கதை.(330+ பக்கங்கள்)

  மொத்தம் ஆயிரம் பக்கங்கள்: சந்தாவோ... சிறப்பு வெளியீடோ... வண்ணமோ... கருப்பு வெள்ளையோ இல்லை ஹைபிரிடோ எப்படி இருந்தாலும் சரி!

  அனைவரும் ரசிக்கும் விதமாய் 1000 பக்கங்களில் டெக்ஸ்!!!

  ReplyDelete
 87. This comment has been removed by the author.

  ReplyDelete
 88. // 1 ."இந்த ஒருத்தர் மட்டும் வேண்டாமே - வேண்டாமே நைனா !!" என்ற ரீதியில் யாரேனும் உள்ளனரா நடப்பு அட்டவணையினில் ? If yes - அந்த ஒரேயொரு பெயர் மட்டும் ப்ளீஸ் ? //

  Classic ஜேம்ஸ் பாண்ட்

  ReplyDelete
 89. பழைய நாயகர்கள் :: மும் மூர்த்திகளில் ஒருவர்.
  (கிளாசிக் மட்டுமே!
  2.0 வேண்டாம்.)


  வேண்டவே வேண்டாம் ::
  நம்மைப் பொறுத்தவரை நிறைய உண்டு.............


  டெக்ஸ் :: தனித்தடம்??

  ReplyDelete
 90. 1. Bluecoats
  2. Bouncer
  3. Hard Bound tex special

  ReplyDelete
 91. 1.Bluecoats
  2. Bouncer
  3. Hard Bound tex special

  ReplyDelete
 92. 1. வேண்டாம் என்று ....யாரும் இல்லை

  2. 2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!"

  என்னுடைய விருப்பம் - ஜூலியா அல்லது லேடி

  3. டெக்ஸ் 75 சிறப்பிதழ்

  புத்தகம் எந்த வடிவமாக இருந்தாலும் எனக்கு ஓகே தான்...
  கதைகள் நன்றாக இருக்க வேண்டும்...
  சில நேரங்களில் அங்கு அதிரடியாக கருதப்படும் கதைகள் நம்மவருக்கு பிடிப்பது இல்லை..
  சிறப்பு புத்தகத்திற்கு அதிரடியான அருமையான கதைகள் வேண்டும் என்பது என் விருப்பும்
  எப்போதும் டெக்ஸ் தனி போஸ்டராக வே வந்துள்ளார்
  கார்சனுடன் இணைந்து அல்லது அவருடைய gang உடன் ஒன்றாக இருக்கும் படியான ஒரு போஸ்டர் கிடைத்தால் நன்றாக இருக்கும்

  ReplyDelete