Saturday, May 28, 2022

கதை இல்லை....ஆனா இருக்கு !!

 நண்பர்களே,

வணக்கம். தொடரவுள்ள வாரத்தின் முதல் பகுதியினில் புறப்பட புது இதழ்கள் தயாராகி வருகின்றன ; so ஜூன் பிறக்கும் பொழுதினில் நமது டப்பிகளுடன் கூரியர் நண்பர்கள் உங்கள் இல்லங்களின் கதவைத் தட்டும் வாய்ப்புகள் பிரகாசம் ! இந்த மாதம் நான் ரொம்பவே ஈர்ப்போடு காத்திருக்கப் போவது மர்ம தேசம்"கென்யா" அதிரடிக்கு நீங்கள் தந்திடவுள்ள மார்க்குகளை அறிந்திடவே ! இந்தக் கதை பாணியானது நமக்கு சற்றே off the beaten track எனும் போது, இதனை நீங்கள் ரசிக்கிறீர்களா ? இல்லையா ? என்ற புரிதல், அடுத்த வருஷத்துக்கான அட்டவணையினில் பிரதிபலித்திட உதவிடும் ! So மர்ம தேசத்துக்கு thumbs up-ஆ ? நஹியா ? என்பதே மில்லியன் டாலர் கேள்வி !

ரைட்டு...எங்கள் தரப்பில் ஆண்டின் முதல் பாதியினை நிறைவு செய்தாயிற்று ; காத்திருக்கும் next 6 மீது பார்வைகளை ஓட விடச் செய்யும் போது நிறையவே சுவாரஸ்யமான இதழ்கள் இன்னமும் காத்திருப்பது தெரிகிறது ! குறிப்பாக - ஒரு stretch-ல் வெளியாகவுள்ள 'தல' டெக்சின் டபுள் ஆல்பங்கள் அனைத்துமே அனல் பறக்கும் ரகங்களாய் வெயிட்டிங் ! அப்புறம் போன வருஷம் விமர்சனங்களைத் தெறிக்க விட்ட தாத்தாக்களும் லூட்டியடிக்கக் காத்திருப்பது கண்ணில்படுகிறது ; not to mention - 'கச்சாமுச்சா ' வசனங்கள் பேசித்திரியும் ஊத்தைவாயன்  டெட்வுட் டிக் ! So லேசாயொரு சோம்பல் முறிப்போடு அடுத்த ஆறின் பயணத்துக்குப் / பணிகளுக்கான முஸ்தீபுகளில் இறங்கியாச்சு ! "காத்திருக்கும் சுவாரஸ்யங்கள்" பற்றிய topic-ல் இருக்கும் போது - ஒரு செம முக்கிய இதழினை / தடத்தினைப் பற்றி நான் பேசாது விட்டால் - "எக்கச்சக்க கோவைக் கவிதைகளை தினப்படிக் கேட்கக் கடவாய் நீ !!" என்ற அதிரடித் தீர்ப்பை புனித மனிடோ வழங்கிடக்கூடும் என்று பயந்து பயந்து வருவதால் - நம் வீட்டு முக்கியஸ்தர்களுக்கென ரெடி செய்து வரும் அந்த புதுத் தடத்தின் preview பார்க்கலாமா இப்போது ?

கதை சொல்லும் காமிக்ஸ் !! 

"இந்த புக்கு புச்சா கதை சொல்லப் போகுதாக்கும் நைனா ? அப்டின்னா பாக்கி எல்லாக் காமிக்ஸும் பருப்பு வடையா சுட்டுக்கினு இருக்கு ?" என்று உங்களுக்குத் தோன்றலாம் தான் ; ஆனால் இந்தத் தடத்தினில் காத்துள்ள காமிக்ஸ் அனைத்துமே உலகை வசியம் செய்துள்ள சிலபல அமர fairytales-களை காமிக்ஸ் வடிவினில் நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சி ! இந்தத் தனித்தடத்தின் சந்தா இன்னமும் சூடு பிடிக்கவில்லை தான் ; ஆனால் அதன் முதல் இதழ் தயாராகி வரும் நேர்த்தி,  க்ளோண்டைக்கில் தங்கம் தேட வேட்டையர்களை ஈர்த்தது போல, வெகு சீக்கிரமே உங்களை அக்கட அழைத்துக் கொள்ளுமென்ற நம்பிக்கை துளிர் விடச் செய்கிறது ! And பதினாலு கழுதை வயசான எனக்குமே இந்த இதழினில் பணியாற்றியது செம ஜாலி அனுபவம் !! சந்தாக்களில் வேகம் லேது என்றதால், பணியினைக் கையில் எடுப்பதிலும் சோம்பல் கீது என்பதை உணர முடிந்தது ! தவிர, "பச்சைப் புள்ளீங்களுக்கான கதை தானே ; யார்கிட்டேயாச்சும் தள்ளி விட்டு எழுதப் பண்ணிடலாம் !" என்றதொரு நப்பாசையுமே உள்ளாற உறைந்து வந்ததை மறுக்க மாட்டேன் ! ஆனால் நாட்கள் தான் ஓட்டமெடுத்தனவே தவிர, காட்சிகளில் பெரிதாய் மாற்றங்கள் தென்படலை ! 

So 'ஜாக் & the beanstalk' புக்கைத் தூக்கிக் கொண்டு இந்த வாரத்தின் வியாழனன்று WFH-ல் அமர்ந்த போது வீட்டம்மா பார்த்த பார்வையில் ஏகப்பட்ட கரிசனம் தென்பட்டது ! 'அக்கினி நட்சத்திரத்து வெயிலிலே இந்த மொழு மொழு கபாலத்தோடே வெளியே சுத்தாதேன்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டா ஜென்மம் கேக்குதா ?' என்ற கேள்வி அந்தக் கரிசனப்பார்வையினில் தொக்கி நிற்பது புரிந்தது ! 'இல்லே பேபிம்மா ........இன்னும் நிறைய பேருக்கு ஸ்க்ரூவைக் கழற்றிக் கொடுக்காம இந்த மறை கழன்று போகாது ; இன்னும்  எக்கச்சக்க  "நண்பனின் கதை"..."வெடிக்க மறந்த வெடிகுண்டு"......"மாட்டா ஹாரி"ல்லாம் போட வேண்டி கீது !! பிலீவ் மீ !!' என்று சமாதானம் சொல்லி விட்டு ஜாக்கோடு பழகிப் பார்க்க முனைந்தேன் ! ஏற்கனவே சொன்னது போல நமது பிரெஞ்சுப் பதிப்பகத்தின் இந்தப் படைப்பினில் வசனங்களோ ; வரிகளோ மருந்துக்கும் கிடையாது ! முழுக்க முழுக்கவே silent movie ரகம் தான் ! "தங்கக்கல்லறை" மறுபதிப்பினை வண்ணத்தில் 2012-ல் வெளியிட்ட வேளையினில் ஒரிஜினல் வஜனங்களை மாற்றிய குற்றத்துக்காக ஊறப்போட்டு, ஊறப்போட்டு நம்ம சாத்தான்ஜி உதைத்த நாட்களில் இம்மாதிரியானதொரு இதழைத் தான் தேடிக் கொண்டிருந்தேன் - "இப்போ என்ன செய்வீங்க ? இப்போ என்ன செய்வீங்க ?" என்று டான்ஸ் ஆடியபடிக்கே அவரிடம் கேட்கும் நோக்கினில் ! என் கெட்ட நேரமோ ; சாத்தான்ஜியின் நல்ல நேரமோ தெரியலை - இந்தப் படைப்பு வரிசை அன்றைக்கு என் கண்ணில் படாது போயிற்று ; so நான் டான்ஸ் ஆடும் கொடுமையையெல்லாம் இந்த லோகம் பார்க்காமலும்  தப்பிச்சது !! முழுசுமாய் படங்களிலேயே ஓவியர் கதையினை செம லாவகமாய் நகற்றிச் சென்றிருந்தார் ! ஆனால் நமக்கோ பிள்ளைகளுக்குச் சொல்லவொரு கதை ; வாசித்துக் காட்ட வரிகள் ; பிள்ளைகள் படித்திட டயலாக்ஸ் என்றிருத்தல் அவசியமாச்சே ?! So அவர்களிடம் அதற்கான அனுமதி பெற்றிருந்தோம் - தொடருக்கு உரிமைகளை வாங்கும் முன்பாகவே ! 

இந்தியாவும், பாகிஸ்தானும் போர்க்களத்தில் மோதிக்கொண்ட அரை நூற்றாண்டுக்கு முன்பான பொழுதில் தான் இந்தக் கதையை நான் ஒரிஜினலாய் வாசித்திருக்க வேண்டும் ; அப்புறமாய் கால் நூற்றாண்டுக்கு முன்னே ஜூனியர் எடிட்டருக்குக் கதை சொல்லும் பொருட்டு மறுக்கா வாசித்திருக்க வேணும் ! So மேலோட்டமாய் 'ராட்சச பீன்ஸ்கொடி ; ராட்சசன் ; குட்டிப்பயல் ஜாக்' என்று மட்டுமே மண்டைக்குள் ஞாபகங்கள் தங்கியிருந்தன ! 'நாங்கள்லாம் மொரட்டு கி.நா.க்களையே முழுசுமா படிக்கிற பார்ட்டி கிடையாது ; வர வரப் பாத்துக்கலாம் ! என்ற சோம்பேறிமாடன் கட்சி .....ஆப்டரால் ஒரு குட்டீஸ் கதையை முழுசுமாய் ஒருவாட்டி படிக்கிறதா ? ஷேம்..ஷேம்..பப்பி ஷேம் !!' என்று உள்ளுக்குள் குரல் கேட்க, "ஓவியருடனே ஓட்டமெடுத்துப் பார்க்கலாம் ; எங்கயாச்சும் கதை உதைச்சாக்கா படிச்சுத் தெளிவு பண்ணிக்கலாம் !!" என்ற தீர்மானத்தில் உள்ளே புகுந்தால் - oh woww ....ஒரு சுனா.பானாவுக்கு கூட சுலபத்தில் புரியும் விதத்தினில், ஓவியர் அசத்தியிருப்பது புலனானது  !! ஒரு கதையினை frame by frame எவ்விதம் பிரிப்பது ? எங்கெங்கே கட் செய்து, எங்கெங்கே திரும்ப ஓபன் செய்வது ? துளி கூட தொய்வின்றிக் கதையினை நகர்த்திக் கொண்டு போவது எப்படி ? என்றொரு masterclass எடுத்திருப்பதை அவதானித்த போது - "இது மெய்யாலுமே ஜாலியான பொம்ம புக் தானே !!" என்று நினைத்திருந்த என்னை நினைத்து எனக்கே சிரிப்புத் தான் எழுந்தது !! படைப்பாளிகள் மனது வைத்தால் பேனாக்களின் பணியினையும், தூரிகைகள் செய்திடல் சாத்தியமே என்பதை ஒவ்வொரு கட்டமும் உணர்த்திட, சிரத்தையோடு நானும் உடன் பயணித்தேன் ! நாம் போடவுள்ள "வஜன எக்ஸ்டரா நம்பர்கள்" கதையின் அழகை எவ்விதத்திலும் மட்டுப்படுத்திடல் ஆகாதென்ற பயத்தோடு - மாமூலான லொள்ளுகளை டிக்கியில் வைத்துப் பூட்டி விட்டு, கதைக்குத் தேவை என்னவோ, அதை மாத்திரமே வரிகளாக்க முனைந்தேன் ! And முழுசும் நிறைவுற்ற பிற்பாடு படித்துப் பார்க்கும் போது நம் அடுத்த தலைமுறைக்கு வாசிக்கச் சிரமங்கள் இராதென்றே பட்டது ! இங்கே எனக்கொரு சின்ன சந்தேகம் folks ! இதோ கீழுள்ள preview பக்கத்தினை ஒருக்கா வாசித்து விட்டு எனது கேள்விக்கு பதில் சொல்லிட முனையுங்களேன் - ப்ளீஸ் ?

இன்னமும் வேலை பாக்கியுள்ளது கவரில்..இது first look மட்டுமே !

உரைநடையினில் கதை சொல்வது லைட்டாய் கோணங்கித்தனமாய்ப்பட்டது என்பதால் பேச்சு வழக்கில் வரிகளை யதார்த்தமாய் அமைத்திருக்கிறேன் கதை நெடுகிலும் ! ஆனால் பசங்களுக்கு வாசிக்க இது சுலபமாய் இருக்கும் தானா ? தமிழில் வாசிக்க முயற்சிக்கும் பசங்களுக்கு இந்தப் பேச்சு வழக்கு பாணியானது தப்பும், தண்டாவுமாய் ஸ்பெல்லிங் கற்றுத்தரக் காரணமாகிடக்கூடுமா ? என்ற ஒற்றை நெருடலுக்கு மட்டும் பதில் தெரியவில்லை ! (நீ எப்புடி போட்டாலும்  ஸ்பெல்லிங் புடலங்காய் என்ன லட்சணத்தில் இருக்கும் என்பது தெரிஞ்சது தானே !! கேக்குது..கேக்குது..உங்க மைண்ட்வாய்ஸ் கேக்குது !!) "குற்றம்....நடந்தது என்ன ? பீன்ஸ்கொடி ஜாக்கில் முழியங்கண்ணனின் அட்டகாசம் !!: என்று  க்ரூப்களில் சுடச்ச்சுட அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்துத் தர இந்த சாதுவான தடமும் ஒரு காரணமாகிட வேண்டாமே என்பதால் இக்கேள்வியினை உங்கள் முன்வைக்கிறேன் : இந்த பேச்சு வழக்கு நடை ஓ.கே. வா ? அல்லது கோனார் நோட்ஸ் பாணிக்குத் தாவிடல் க்ஷேமம் நல்குமா ? ப்ளூச்சட்டை மாறன் ரேஞ்சுக்கு அலசி, ஆராய்ந்து, பின்னிப் பெடலெடுத்து, விமர்சகர்களாய் உருமாற்றம் கண்டு உட்புக இக்கட அவசியங்கள் நஹி guys ; ஆகையால் சிம்பிளான பதில்ஸ்  ப்ளீஸ் !! இதுவே ஓ.கே. எனில் done ; "இல்லே...உரைநடை தான் பசங்களுக்கு சுகப்படும்" என்று நினைத்தீர்களெனில் மாற்றிக்கலாம் ! 

ஜூன் 15-க்கு உங்களின் இல்லங்கள் தேடி, உங்கள் குட்டீஸ் பெயர் தாங்கி தனி கூரியரில் வரவுள்ள இதழ்களுக்கு இன்னமும் சந்தா செலுத்தியிரா பட்சங்களில் now is still a good time for it ! இவை கடைகளில் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் சொற்பமே ; so நமது பிரிண்ட்ரன்  ரொம்பச் சுருக்கமாகவே இருந்திடவுள்ளது ! PLEASE NOTE guys : இது மெய்யாலுமே நிஜார் போடும் பாலகர்கட்கு மாத்திரமே ; தம்' கட்டியபடிக்கே தொப்பைகளை உள்ளுக்குள் தள்ளிக்கொண்டு பெர்முடாக்களில் உலா வரும் pseudo பாலர்கட்கு அல்ல !! 

Moving on, புத்தகவிழா circuit சூடு பிடிக்க துவங்கியிருப்பது திக்கெட்டிலும் விழாக்கள் அரங்கேறும் அதிரடிகளில் புரிகிறது ! நம் வண்டியானது ஜூன் 24-க்கு தர்மபுரியில் துவங்கி, அப்படியே ஓசூர் சென்று, அங்கிருந்தபடிக்கே கவிஞரின் புண்ணிய கோவை மண்ணில் கால்பதித்து ; அப்பாலிக்கா ஈரோடு பயணிக்கவுள்ளது ! ஈரோட்டினில் இம்முறை புத்தக விழாவிற்குப் புதியதொரு இடத்தினில் அரங்கம் ! அந்த முதல் வாரத்து வாரயிறுதிக்கு ஈரோட்டுக்கு டிக்கெட் போட்டுப்புடலாமா ? என்பதை உங்களின் எண்ணங்களை அறிந்த பிற்பாடு செய்திட நினைக்கிறேன் ! What say folks ?   ஈரோட்டில் நமது "பொம்ம புக் மஹாசிந்தனை மாநாட்டினில்"  கும்மியடிக்க யாருக்கெல்லாம் தோதுப்படும் ?

And ஆயிரம், ரெண்டாயிரம் பக்கங்கள் என்ற ரீதியினில் அல்லாது, குறுக்கைக் கழற்றாத வகையினில் ஈரோட்டுக்கென ஏதேனும் ஒரு ஸ்பெஷல் இதழினை நீங்கள் பரிந்துரை செய்வதாயின் - உங்கள் தேர்வு ஏதுவாக இருக்குமோ ? Of course இண்டிகேட்டர்களை முழுசுமாய்ப் போட்டுப்புட்டு, வண்டியையே புளிய மரத்தில் சாத்தி விட்டு, பஸ்ஸைப் பிடித்துப் போகக்கூடிய ரகம் தான் நான் ; but still உங்களின் ஏகோபித்த  ஆதரவுக்குரிய இதழ் என்று ஏதேனும் ஒன்றிருந்து, அதுவும் நமது சாத்திய எல்லைகளுக்குள் இருப்பின் - would love to give it a try !! "இளம் புலியார் புது ஆல்பங்கள்"  என்ற கோரிக்கை 'பச்சக்' என்று எழுந்திடுமென்பதை யூகிக்க சிரமமில்லை தான் ; ஆனால் அர்ஜென்ட்டாய் கோவைக்கும், மதுரைக்கும் ஒரு முழு க்ரேட் சோடா அனுப்ப வேண்டியுள்ளதால் அந்த யூகத்தின் பின்தொடர்ச்சியினில் செயல்பட இயலவில்லை ! பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்த முயற்சியில் கோவையில் மயங்கிக் கிடப்பவருக்கு முதல் க்ரேட் எனில் ; தமிழாக்கம் செய்திட வேகமாய் ஆரம்பித்து 15 பக்கங்களைத் தாண்டிய நிலையில் 'கேராகி' இருக்கும் கருணையானந்தம் அங்கிளுக்கு இரண்டாவது க்ரேட் ! So மூணாவது க்ரேட் ஒன்றினை ரெடியாக வைத்துக் கொண்ட  கையோடு இந்த 4 பாக சுற்றினை ஒற்றை மாத அவகாசத்திற்குள் மொழியாக்கம் செய்திட யாருக்கேனும் தில்லும், நேரமும் இருப்பின் can give it a shot !! ஏற்கனவே குவிந்து கிடக்கும் ரெகுலர் இதழ்களின் பணிகளுக்கு மத்தியில் இளம்புலியாருடன் வலம் செல்ல நம்மள்கிட்டே நேரம் நஹி என்பதே சிக்கல் ! And இயன்றமட்டிலும் direct to our வாசகர்ஸ்க்குச்  செல்லும் ரீதியினில் மொழியாக்கம் இருத்தல் முக்கியம் ; மறுக்கா மாற்றி எழுதுவது என்பது இப்போதெல்லாம் குடலை வாய்க்குக் கொணரும் சிரமத்தை உண்டு பண்ணி வருகிறது ! 

Maybe இளம்புலியாரை வேறொரு தருணத்துக்கென அமைத்துக் கொண்டு,  மித அழுத்தப்பணிகளாய் வேறு எவற்றையேனும் சிபாரிசு செய்திடும் பட்சத்தில், நோவு குறைவு ! சொல்லுங்களேன் என்ன செய்யலாமென்று ?

Bye all...see you around ! Have a fun weekend !

294 comments:

 1. நானே நானா....? யாரோ தானா ?

  ReplyDelete
  Replies
  1. மெல்ல மெல்ல மாறினேனோ

   Delete
  2. போங்காட்டம் யுவர் ஹானர்...

   Delete
 2. // நாட்கள் தான் ஓட்டமெடுத்தனவே தவிர, காட்சிகளில் பெரிதாய் மாற்றங்கள் தென்படலை ! // அதான் சார் நீங்க.

  ReplyDelete
 3. // ஜாக் & the beanstalk' புக்கைத் தூக்கிக் கொண்டு இந்த வாரத்தின் வியாழனன்று WFH-ல் அமர்ந்த போது வீட்டம்மா பார்த்த பார்வையில் ஏகப்பட்ட கரிசனம் தென்பட்டது ! 'அக்கினி நட்சத்திரத்து வெயிலிலே இந்த மொழு மொழு கபாலத்தோடே வெளியே சுத்தாதேன்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டா ஜென்மம் கேக்குதா ?' என்ற கேள்வி அந்தக் கரிசனப்பார்வையினில் தொக்கி நிற்பது புரிந்தது ! 'இல்லே பேபிம்மா ........இன்னும் நிறைய பேருக்கு ஸ்க்ரூவைக் கழற்றிக் கொடுக்காம இந்த மறை கழன்று போகாது ; //

  சார் சார் செம செம சிரிப்பு

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சத்தியமாக வாய் விட்டு சிரித்து விட்டேன்.

   Delete
 4. ஆறு மாதங்கள் சர் என சென்று விட்டது சார். இந்த ஆறு மாதங்களில் வந்த ஒரு சில கதைகளைத் தவிர அனைத்தும் மிக அருமை.

  ReplyDelete
 5. // நிறைய பேருக்கு ஸ்க்ரூவைக் கழற்றிக் கொடுக்காம இந்த மறை கழன்று போகாது ; இன்னும் எக்கச்சக்க "நண்பனின் கதை"..."வெடிக்க மறந்த வெடிகுண்டு"......"மாட்டா ஹாரி"ல்லாம் போட வேண்டி கீது !! பிலீவ் மீ !!' //

  பிலீவ்ட் யூ சார்.‌டெப்னட்லி டெப்னட்லி ;-)

  ReplyDelete
 6. // அந்த முதல் வாரத்து வாரயிறுதிக்கு ஈரோட்டுக்கு டிக்கெட் போட்டுப்புடலாமா ? என்பதை உங்களின் எண்ணங்களை அறிந்த பிற்பாடு செய்திட நினைக்கிறேன் ! What say folks ? //

  Yes. Please:-) I am eagerly waiting.

  ReplyDelete
  Replies
  1. நானும் வரேன். நானும் வரேன்

   Delete
  2. டிக்கெட் போட்டிங்கன்னா நானும் வந்துடுறேன்

   Delete
  3. போட்டு விடலாம் சத்யா. உங்களை போல உண்மையான காமிக்ஸ் ரசிகர் இல்லாமலா

   Delete
 7. வணக்கம் நண்பர்களே 🙏

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. உங்கள் சேவை தமிழ் காமிக்ஸ் உலகின் சிகரம் ஐயா.... விலை குறைவாக புத்தகங்கள் போடுங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பரே

   Delete
  2. வாய்ப்பு அமைந்திடும் போது நிச்சயம் செய்திடுவோம் நண்பரே !

   Delete
 10. சார் உயிரைத் தேடி, டெக்ஸ் கிளாசிக் 3 விலை விவரம் பற்றி கூறுங்கள்

  ReplyDelete
  Replies
  1. உரிய நேரத்தினில் நண்பரே !

   Delete
 11. ஈரோடு Bfக்கு... Count me in... 🙋🏻‍♂️

  ReplyDelete
  Replies
  1. ஈரோட்ல அதெல்லாம் உண்டா .. ஹி ஹி !! :-)

   Delete
  2. ராகவா குசும்பு ஓவர்:-)

   Delete
  3. அடடே நம்ம டாக்டர் சார் வரார்.வாங்க வாங்க

   Delete
  4. இத்தினி வருஷமா ஈரோட்டுக்கு போய்க்கிட்டு இருக்கேன் ; எனக்கே தெரியாதே சார் !!

   Delete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. // இளம்புலியாரை வேறொரு தருணத்துக்கென அமைத்துக் கொண்டு, மித அழுத்தப்பணிகளாய் வேறு எவற்றையேனும் சிபாரிசு செய்திடும் பட்சத்தில், நோவு குறைவு ! சொல்லுங்களேன் என்ன செய்யலாமென்று ? //

  ஆக சுத்தி வளைத்து அதிகாரி கதையை போடுங்க என சொல்லச் சொல்லுறீங்க. நாராயணா நாராயணா :-)

  ReplyDelete
 14. சார் என் மகன் பேர் தாங்கி வரும் இரண்டாவது புத்தகம் என்பதால் எனக்கும் மகிழ்ச்சி....
  ஓவியங்கள் அட்டகாசம்....வண்ணங்களுமே....என் மகனைப் போலவே சிறுவன்...ஆர்வமாயிருக்கிறேன்....இதே மொழி பெயர்ப்பு அருமை....கோனார்நோட்சையும் பதிவிட்டால் அதயும் ஆராஞ்சிடலாம்

  ReplyDelete
  Replies
  1. அட்டைப்படம் சிம்பிளாருக்கு....நேரில் தூள் கிளப்புமா....குழந்தைகள் ஈர்க்கனும்....அத அணச்சிட்டே தூங்கனும்...சீக்கிரம் வரட்டும்.

   Delete
  2. கென்யா ஹிட்டடிச்சா....நமீபியா...அமேசானியாவ ஈரோட்டுக்கு தயார் பண்ணிடுவமே

   Delete
  3. 'ஊம்'னு ஒரு வார்த்தை சொல்லுங்க ஸ்டீல்....CINEBOOK லேர்ந்து ஈரோட்டுக்கு முன்னமே இறக்கிப்புடலாம் !

   Delete
 15. #####ஈரோட்டில் நமது "பொம்ம புக் மஹாசிந்தனை மாநாட்டினில்"  கும்மியடிக்க யாருக்கெல்லாம் தோதுப்படும் ?####

  நான் வருகிறேன் சார்..
  எனக்கு ஒரு சிவகாசி ரவுண்ட் பன் பார்சல் பண்ணி வச்சிடுங்க சார்..

  ReplyDelete
  Replies
  1. அது எல்லார்க்குமே கிடைக்குமே சகோ .. 😆😆

   Delete
  2. நம்ம சிவாவும் வரார்.

   Delete
 16. வசனத்தை கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம் டியர் எடி .. இக்காலத்து குழந்தைகளுக்கு ஏற்றார்போல் .. தற்போது நீங்க போட்டது இந்த குழந்தை (அடியேன்தான்) 😉😉 சிறு வயதாக இருந்தபோது வெளியான நடைமுறை ..

  ReplyDelete
 17. இந்த பேச்சு வழக்கு நடை ஓ.கே. வா ? அல்லது கோனார் நோட்ஸ் பாணிக்குத் தாவிடல் க்ஷேமம் நல்குமா ?

  பேச்சு வழக்கு நடைக்கு double ok... 🤝🤝

  ReplyDelete
  Replies
  1. இந்த நடையே நன்றாக உள்ளது.

   Delete
 18. ####இந்த பேச்சு வழக்கு நடை ஓ.கே. வா ?###


  ஓகே தான் சார் ...
  ஆனா இடையில வரும்

  ""விற்று விடலாமா ??"""


  அந்த வசனம்

  ""வித்துடலாமா""

  இன்னும் நல்ல இருக்கும் சார்..

  ReplyDelete
 19. எழுத்துக்களுக்கு இடையில் உண்டான இடைவெளியையும் கணக்கில் கொள்ளவும் டியர் எடி

  ReplyDelete
  Replies
  1. பதிவிலேயே குறிப்பும் கீது சம்பத் ; கவனிக்கலியோ ?

   Delete
 20. Replies
  1. அய்யா அது ஆகஸ்ட் முதல் வாரம். செப்டம்பர் மாதம் புத்தக விழா முடிந்து விடும்.

   Delete
  2. செப்டெம்பரில் மதுரையிலோ ; வேறெங்கோ புத்தக விழா நடந்து கொண்டிருக்கும் சார் !

   Delete
 21. ஈரோடு வருவது இம்முறை இன்னும் உலவிக்கொண்டிருக்கும் pandemicனால் நஹீ சார். ஆனா வருங்காலத்தில் ஒரு முறை வருவதற்கு புனித மானிடோ அருள் புரிவார் என்ற நம்பிக்கை உள்ளது சார்.

  புலி வேண்டாமென்றால் வேறென்ன சார் - தல தான் பெஸ்ட் சாய்ஸ் - விற்கும் அல்லவா ? ஒரு action மாக்ஸியாக போட்டால் சூப்பர் !

  அல்லது தங்கக்கல்லறை ஒரிஜினல் வசனங்களுடன் ஹார்ட் பவுண்டாய் !

  ReplyDelete
  Replies
  1. ராகவன் சார் , உங்க சென்னைல மாதம் மும்மாரி பொழிய வங்க கடலாரையும் , காற்றழுத்த தாழ்வு மண்டலத்தாரையும் வேண்டுகிறேன். :)

   Delete
  2. இங்கேயும் அதுதான் சார் கதி - எந்த ஊருக்கும் இன்னும் செல்ல ஆரம்பிக்கவில்லை என்பதையே சொன்னேன் !

   Delete
  3. புலி வேண்டாம்னு சொல்ல வரலை ; ஆனால் புலி வந்து.... நீங்க வேண்டாம்னு சொல்லிடுவீங்களோன்னு தான் பயம் சார் !

   Delete
 22. வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 23. Edi Sir..
  மாலை வணக்கங்கள்

  ReplyDelete
 24. கென்யா! ஓர் மர்ம தேசம்!! விசித்திரமான உலகிற்கு நம்மை அழைத்துச் செல்ல வருகிறது

  ReplyDelete
  Replies
  1. நான் இரண்டு வருடமாக படிக்க காத்துக் கொண்டு இருக்கும் புத்தகம். இதனுடன் கலர் டெக்ஸ் மற்றும் எனது ஃபேவரைட் ஹீரோக்களில் ஒருவரான ஸ்டர்ன். ஜனவரிக்குப் பிறகு மிக ஆவலுடன் நான் எதிர்பார்க்கும் இதழ்கள் இந்த மாதம் தான் வருகின்றன. எனவே மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

   Delete
 25. ஈரோடு மீட்டிங்குக்கு எல்லோருமே அவாவோடு வெயிட்டிங் சாரே 😇😍😊

  ReplyDelete
 26. குட்டீஸ்க்கான இந்த இதழின் மொழி ஆக்கம் சரியாகவே உள்ளது சார்...எனக்கு ஓகே..

  ReplyDelete
 27. ஈரோடு முதல் வாரம் தாங்கள் வரும் பொழுது நாங்கள் இல்லாமலா...:-)

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா வேறு என்ன வேலை எனக்கு

   Delete
 28. சார் இந்த குட்டிஸ்களின் இதழ்களை இதழ் வரும்பொழுதோ அல்லது புத்தக கண்காட்சிகளிலோ வாங்கி கொள்ளலாம் என்று இருந்தேன் ..கிடைக்கும்தானே...?!

  ReplyDelete
  Replies
  1. தெரிலியே தலீவரே...!

   Delete
 29. இதுவரை வெளிவராத மினி அல்லது திகில் மறுபதிப்புகளை வெளியிட வாய்ப்பிருப்பின் பரிசீலனை செய்யுங்கள் Sir

  ReplyDelete
  Replies
  1. அந்தக்கோணத்தில் தேடினால் பிரின்ஸ் ; ஜானி...ப்ருனோ பிரேசில் என்று நிறைய தேறும் நண்பரே !

   Delete
  2. திகில் காமிக்ஸ் மறுபதிப்புகள் 2 அல்லது 3 கதைகள் இணைத்து ஹார்ட் பௌண்டில் வெளியிட்டாலும் மேதஹ மகிழ்ச்சி தான் சார்.

   Delete
  3. மெத்த மகிழ்ச்சி தான்

   Delete
 30. கென்யா நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்..:-)

  ReplyDelete
 31. ஈரோடு புத்தக திருவிழா ஸ்பெஷல் இதழ் " தல " யை தவிர வேறு யாரை சொல்ல முடியும் சார்...புது கதையாக இருந்தாலும் ஓகே...:-)

  ReplyDelete
 32. உரைநடை கதை சொல்லல் படங்கள் மறைக்கா வண்ணம் குழந்தைகளுக்கு கதை சொல்ல நன்றாக இருக்கும் தான், அதே சமயம் படிக்க தெரிந்த குழந்தைகளுக்கு வசனங்கள் இன்னும் எளிதாக இருக்கும் என்பதும் கணக்கில் கொண்டால் எந்த ஆப்சன் தேர்வு செய்வது என்று குழப்பமாக உள்ளது சார்.

  ஆனால் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பெற்றோர் விட படிக்க தெரிந்த குழந்தைகள் அதிகமாக இருப்பார்கள் என்ற கணக்கில் எனது ஓட்டை வசனங்களுக்கே அளிக்கிறேன் சார்

  ReplyDelete
  Replies
  1. மண்டையை மங்கு மங்கென்று சொரிந்து கொண்டிருக்கிறேன் கிருஷ்ணா...நீங்கள் சொல்ல வருவதை சரியாய்ப் பிடித்திட !!

   Delete
  2. இப்போ போட்டுள்ள வசன நடையே ஒகே என்று கொஞ்சம் ஓவரா விளக்கி விட்டேன் 😁

   Delete
  3. "கமல்" கிருஷ்ணா 🤭

   Delete
  4. சார், வஜனம் எழுதும் பொறுப்பை கிருஷ்ணாவிடம் ஒப்படைத்தால், ஜம்போ பிராண்டில் இன்னொரு கிராஃபிக் நாவலைத் தேற்றி விடலாம்! :)

   Delete
 33. ஹைய்யா புதிய பதிவு...!!!

  ReplyDelete
 34. //இன்னும் எக்கச்சக்க "நண்பனின் கதை".//

  ***ஒரு தோழனின் கதை*** போன்ற காவியம் இன்னும் நிறைய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. டெபினிட்லி...டெபினிட்லி...!

   Delete
 35. // so ஜூன் பிறக்கும் பொழுதினில் நமது டப்பிகளுடன் கூரியர் நண்பர்கள் உங்கள் இல்லங்களின் கதவைத் தட்டும் வாய்ப்புகள் பிரகாசம் ! //
  சிறப்பான தகவல்...

  ReplyDelete
 36. // அப்பாலிக்கா ஈரோடு பயணிக்கவுள்ளது ! ஈரோட்டினில் இம்முறை புத்தக விழாவிற்குப் புதியதொரு இடத்தினில் அரங்கம் ! //

  ReplyDelete
 37. Edi Sir..
  பீன்ஸ் கொடியில் ஜாக்: பேச்சுவழக்கு நடை double O.k..

  ஈரோடு பொம்ம புக் மஹா சிந்தனை மாநாடு:
  தங்களை நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். Me too ready for கும்மி.

  ஈரோடு ஸ்பெசல் :
  லக்கியின் கலக்கல் ஸ்பெஷல் (or) ஆர்ச்சி & இரட்டை வேட்டையர் double album (or) Tex ன் அதிரி புதிரி புது அட்டகாச கலக்கல் (or) அப்புறம் நீங்களே முடிவு பண்ணி வச்சிருக்கற அட்டகாச அருமை கதை.

  ReplyDelete
 38. // And ஆயிரம், ரெண்டாயிரம் பக்கங்கள் என்ற ரீதியினில் அல்லாது, //
  அப்ப ரெண்டுக்கும் பொதுவா 1500 பக்கமா போட்டுடுங்க சார்...!!!

  // குறுக்கைக் கழற்றாத வகையினில் ஈரோட்டுக்கென ஏதேனும் ஒரு ஸ்பெஷல் இதழினை நீங்கள் பரிந்துரை செய்வதாயின் - உங்கள் தேர்வு ஏதுவாக இருக்குமோ ? //
  ஏதேனும் 2 அல்லது 3 இதழ்களை நீங்களே சொல்லுங்கள் சார் ,அதில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்...

  ReplyDelete
  Replies
  1. எனது தேர்வு ரூட் லிஸ்ட் 66

   Delete
  2. ஏதோ ஒன்று ரூட் க்ளியர் ஆகி வந்தா சரி...

   Delete
  3. //ஏதேனும் 2 அல்லது 3 இதழ்களை நீங்களே சொல்லுங்கள் சார் ,அதில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்...//

   நாமல்லாம் தருமி ரகம் சார் ; கேள்வி கேட்க மட்டுமே தெரியும் !!

   Delete
 39. சுவாரஸ்யமான சிரிக்க செய்த அருமையான பதிவு.

  ReplyDelete
 40. / And ஆயிரம், ரெண்டாயிரம் பக்கங்கள் என்ற ரீதியினில் அல்லாது, //.
  ஸ்பைடரின் கொலை படை மற்றும் விண்வெளி பிசாசு - sir

  ReplyDelete
 41. Erode book fair special
  My choice young tex willer.

  ReplyDelete
 42. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 43. . டியர் எடி சார்.
  வசன பலூன் இருக்கட்டும் சார்.
  இந்த புக் படித்துப் பழகிவிட்டு அப்படியே லக்கிலூக், - சிக்பில்-என்று வந்து விட உதவும் சார்.
  B_F_S_சிக் பில்--டபுள் ஆல்பம் வெளியிடலாமே-(பழசு - புதுசு என்று) நல்ல வாய்ப்பு சார்...

  ReplyDelete
  Replies
  1. பார்க்கலாம் சார்....உட்ஸிட்டி சிரிப்புப் போலீசாரின் புதுக் கதைகளே அத்தனை பெருசாய் சாதிப்பதில்லை கொஞ்ச காலமாகவே !!

   Delete
 44. முதலில் குழந்தைகளை வாசிப்புக்குப் பழக்குவோம் சார். அதற்கு பேச்சு வழக்குதான் சிறந்தது. பிறகு கோனார் நோட்ஸுக்குப்போகலாம் . முதல் சந்தாசுற்று முடிவதற்குள் குழந்தைகள் நமது ரெகுலர் இதழ்கள் வாசிக்குமளவு தேறிவிடுவார்களாதலால் கோனார் நோட்ஸிற்கு தேவையேயிருக்காதுங் சார். ஈரோடு ஸ்பெசல் இதழ் எதுவாd கயிருந்தாலும் பரவாயில்லைங்க சார் Do not open. எச்சரிக்கை முக்கியமாக செயலர் பிரிக்கக்கூடாது என்ற வாசகத்தோடு சஸ்பென்சாக ஏதோ ஒரு இதழ்வந்தால் போதும். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. உண்டான மாதாந்திர கூரியர் டப்பிகளையே பிரிக்காது அடுக்கி வைத்திருக்கும் செயலர் ....இந்தப் பார்சலைப் பிரித்திடுவாரா ?

   Delete
 45. சார்,
  ஈரோடு புத்தக விழாவில் வாசகர் ஆசிரியர் சந்திப்பிற்கு எனது வருகையினையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.


  ஈரோடு புத்தக விழா ஸ்பெசலாக "ஏற்கனவே நீங்கள் வாக்களித்திருந்த "பிரளயம்" எனது சாய்ஸ். நிறுத்தி வைக்கப்பட்ட இந்த இதழ் ஏதேனும் புத்தக விழாவிலோ, ஸ்பெசல் வெளியீடாகவோ தலை காட்டும் என்று உறுதி அளித்திருந்தீர்கள். முயற்சி செய்யலாம் சார்.

  ReplyDelete
  Replies
  1. அதனில் அவசியமாகிடக்கூடிய எடிட்டிங்குக்கு படைப்பாளிகளின் இசைவு கிட்டியாகணுமே நண்பரே ! நேற்றைக்கு கூட அந்த ஆல்பத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன்....!!

   எந்த நம்பிக்கையில் அதனை தேர்வு செய்தெனென்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் !!! அத்தனை adults only சமாச்சாரங்கள் !!

   Delete
 46. EBF க்கு வெயிட்டான ஸ்பெஷலை விட லைட்டான ஸ்பெஷல்களை போடலாம் சார். இவைகள் என்னுடைய சாய்ஸ்!

  1. தங்கக் கல்லறை பழைய (மொழிபெயர்ப்பு) ரீரீபிரிண்ட்.

  2. இதுவரை நமது இதழ்களில் மறுபதிப்பே கண்டிராத துரதிர்ஷ்டசாலிகளான இரட்டை வேட்டையர் ஜார்ஜ் & டிரேக் கதைகளை ஒரே டைஜஸ்டாக ரீபிரிண்டலாம்.

  3.zagor இன் அறிமுக இதழை வெளியிடலாம் !

  ReplyDelete
  Replies
  1. //இதுவரை நமது இதழ்களில் மறுபதிப்பே கண்டிராத துரதிர்ஷ்டசாலிகளான இரட்டை வேட்டையர் ஜார்ஜ் & டிரேக் கதைகளை ஒரே டைஜஸ்டாக ரீபிரிண்டலாம்.//

   10000% vote for the Hunters (இரட்டை வேட்டையர் ஜார்ஜ் & டிரேக்) BW Reprint n Full Collection Digest(400+ Pages?)... Whenever possible...

   Delete
  2. // தங்கக் கல்லறை பழைய (மொழிபெயர்ப்பு) ரீரீபிரிண்ட்.//
   100% Agree for Economy BW reprint....

   Delete
  3. 2. இதுவரை நமது இதழ்களில் மறுபதிப்பே கண்டிராத துரதிர்ஷ்டசாலிகளான இரட்டை வேட்டையர் ஜார்ஜ் & டிரேக் கதைகளை ஒரே டைஜஸ்டாக ரீபிரிண்டலாம்.

   தெய்வமே
   சாத்தான் ஐயா அருமையான யோசனை

   Delete
  4. // லைட்டான ஸ்பெஷல்களை போடலாம்//
   //zagor இன் அறிமுக இதழை வெளியிடலாம் !//

   அண்ணாச்சியின் அறிமுக இதழ் 6 அத்தியாயங்கள் கொண்ட 384 பக்க ஜாகஜம் சார் ; ஐநூறு ரூபாயினைத் தொட்டு விடும் - with hardcover !

   Delete
  5. அப்போ அதுவே ஓகே

   Delete
 47. ஈரோடு புத்தக விழா...
  வேற யாரு...
  டெக்ஸ் வில்லர் தான்

  ReplyDelete
  Replies
  1. ரேஞ்சர் & கோ.வை அடுத்த ஈரோட்டுக்கு ஸ்பெஷல் விருந்தாளி ஆக்கிடலாம் நண்பரே !

   Delete
 48. //இந்த பேச்சு வழக்கு நடை ஓ.கே. வா ? அல்லது கோனார் நோட்ஸ் பாணிக்குத் தாவிடல் க்ஷேமம் நல்குமா ?//

  குட்டிஸ் சந்தா ஆர்டர் பண்ணது என்னமோ அக்கா பிள்ளைக்கு தான்... ஆனால் கிராபிக் நாவலுக்கு வோட்டளிக்கும் என்னையே சிறுவர்மலர், அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா பால்யத்திற்கு கொண்டு, கொண்டு போயுள்ள மொழிநடை படிக்க இப்பவே ஜாலியாயிருக்கு என்பதே உண்மை.. முதல் முக்கியத்துவம் கொடுத்து எவ்வளவு சீக்கிரம் ரிலீஸ் பண்ண முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிடுங்கள் சார்.

  ReplyDelete
 49. And ஆயிரம், ரெண்டாயிரம் பக்கங்கள் என்ற ரீதியினில் அல்லாது, குறுக்கைக் கழற்றாத வகையினில் ஈரோட்டுக்கென ஏதேனும் ஒரு ஸ்பெஷல் இதழினை நீங்கள் பரிந்துரை செய்வதாயின் - உங்கள் தேர்வு ஏதுவாக இருக்குமோ ? //

  Any two from
  Tex Classics 3
  Uyirai Thedi
  Suske Wiske

  if possible release them on August 1st so people who cant make to EBF can get them by courier.

  ReplyDelete
  Replies
  1. குட் ஐடியா. ஓய் நாட் ஆல் தீரி :-)

   Delete
  2. ஆனால் அந்த டெக்ஸ் கிளாசிக் பதில் அதிகாரியின் புதிய கதையை போடலாம்.

   Delete
  3. //if possible release them on August 1st so people who cant make to EBF can get them by courier//

   Will make no difference ; will need a bigger box to accomodate the additional issue(s)... plus the courier costs will go into the next slab !

   Delete
  4. ஹி ..ஹி...idea was not to save on courier. அஞ்சாம் தேதி இரவு return flight. அதனால் புத்தக விழாக்கு வர இயலாது. சனிக்கிழமை புத்தக விழாவில் ரிலீஸ் பண்ணினா அந்த புத்தகங்களுக்காக 6 மாசம் வெயிட் பண்ணனும். தனி கூரியர் ஓகே. முடிஞ்சா முன்னாடி அனுப்புற மாதிரி ஏற்பாடு பண்ணினா அதையும் கூட்டிட்டு கிளம்பிடுவேன்.

   Delete
  5. ஓஹோ..."நெக்ஸ்டு லீப் பாயசம்" கதை இது தானா ?

   Delete
  6. இம்மாம் தொலைவு வந்திட்டு வெறும் கையோட போகாத மெரி பாத்துக்கலாம் சார் !

   Delete
  7. // இம்மாம் தொலைவு வந்திட்டு வெறும் கையோட போகாத மெரி பாத்துக்கலாம் சார் ! // அற்புதம் சார்.

   Delete
 50. ஈரோடு புத்தக விழாவில் டெக்ஸ் வில்லரை தவிர்த்து வேறு எந்த புத்தகம் போட்டாலும் சந்தோசமே...

  ReplyDelete
  Replies
  1. டீலிங்குகள் பலவிதம்....

   ஒவ்வொன்றும் ஒரு விதம்....!

   Delete
 51. ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஸ்மர்ப்ஸ், விஞ்ஞானி தாத்தா, பொடியன் பென்னி இவர்களின் ஏதாவது ஒரு கதை வெளிவந்தால் மகிழ்வேன் :-)

  ReplyDelete
  Replies
  1. ஆனால் நிறைய பேர் மண்டையிலேயே போடுவார்களே சார் !

   Delete
  2. வாங்கிக்கலாம் சார் ஹெல்மட் போட்டுக்கொண்டு 😂

   Delete
 52. ஈரோடு புத்தகத் திருவிழாவில் மறுபதிப்பு கதைகள் ஏதும் தயவு செய்து வேண்டாம். குறிப்பு: டெக்ஸ் மறுபதிப்பு உட்பட

  ReplyDelete
  Replies
  1. ஹி..ஹி...சித்தே scroll down ப்ளீஸ் ?

   Delete
 53. //ஏதேனும் ஒரு ஸ்பெஷல் இதழினை நீங்கள் பரிந்துரை செய்வதாயின் - உங்கள் தேர்வு ஏதுவாக இருக்குமோ ?//

  ஸ்பைடர் தொகுப்பு , இரும்புக்கை நார்மன் (80 பக்கங்கள்), ஜான் மாஸ்டர் (96 பக்கங்கள்), அதிரடிப்படையின் சாகச தொகுப்பு (64+ ???), அல்லது விச்சு கிச்சு தொகுப்பு. எத்தனை, எதனை வெளியிட்டாலும் கருப்பு வெள்ளை டெக்ஸ் வில்லர் அச்சு தரம் போல இருப்பின் கொண்டாடலாம்.

  ReplyDelete
  Replies
  1. If it is for Tex, then I vote for இரத்த முத்திரை Replica

   Delete
  2. 32 பக்க, 112 பக்க அற்புத சித்திரத்தர டெக்ஸ் முழுவண்ண கதைகளை தவிர ஹிட்டான டெக்ஸ் மறுபதிப்பு கதைகள் மட்டுமே முழுவண்ணத்தில் வெளியிடும்படி வேண்டுகிறேன். அனைத்து தரப்பு வாசகரும் வாங்கும் பொருட்டு12 பிளஸ் கதைகளோடு வெளிவரும் மஞ்சள் சட்டைக்காரர் 224 பிளஸ் பக்க புதுக்கதை என்றால் கருப்பு வெள்ளை போதுமே சார் ப்ளீஸ்.

   Delete
  3. உதய்..ஜி
   என் மனசுல இருக்கிறத அப்படியே சொல்லீட்டீக..

   உங்க கருத்துக்கு ப்ளஸ்ஸோ ப்ளஸ்..

   Delete
  4. ரீபிரிண்ட்! ரீபிரிண்ட் !! ரீபிரிண்ட் !!! என்னை போன்றவர்கள் ரீபிரிண்ட் கோருவது பால்யத்து நினைவுகள் என்பதனை தாண்டி பல நல்ல காரணங்களுக்காகவே தான். அதில் ஒன்று கதைத்தரம்.
   ஜான் மாஸ்டர் கதைகள் இரண்டுமே என்னிடம் உள்ளது தான். அதன் கதை சுவை புதியவர்களும் படித்து இன்புறவே அதை கேட்கிறேன். ஒருவேளை ரீபிரிண்ட் இல்லாத புது கதைகள் (உதாரணம்: பிரிவோம் சந்திப்போம்) தரமாக இருப்பின் நிச்சயம் வரவேற்கிறேன்.

   Delete
  5. //12 பிளஸ் கதைகளோடு வெளிவரும் மஞ்சள் சட்டைக்காரர் //

   அதென்ன 12 பிளஸ் ?? புரியலையே ??

   Delete
  6. வருடத்தின் மொத்த டெக்ஸ் கதைகள் எண்ணிக்கையை சொன்னேன் சார்.

   Delete
 54. எல்லோரும் மகிழனும்னா 10,15 இதழ்களை ஆசிரியர் வெளியிடனும்னு நினைக்கிறேன்...
  வகைக்கு ஒன்னா..
  ஹி,ஹி,ஹி...

  ReplyDelete
  Replies
  1. பஞ்சாயத்துக்கள் ஓய்வதில்லை சார் !

   Delete
 55. ஆவலோடு..
  குட்டீஸ் கதை சொல்லிகளுக்கு..

  ReplyDelete
 56. பதிவின் ஆரம்ப பத்தியில் ஹாஷ்யம் தெறித்துக் கிடக்கிறது..

  காமிக்ஸ் கிரேசி மோகனோ நம்ம எடி..

  ReplyDelete
  Replies
  1. அவரெல்லாம் காமெடியில் ஊறிய ஜாம்பவான் சார் ; நாமெல்லாம் பஞ்சத்துக்குக் காமெடியன்ஸ் !

   Delete
 57. ஸ்மர்ப்ஸ் டைஜஸ்ட்..??

  ReplyDelete
 58. ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு
  எனக்கும் ஒரு இடம்.

  ReplyDelete
  Replies
  1. @ STV : ஈரோட்டுக்கு ஒரு லிஸ்ட் போடலாமா சார் ?

   எண்ணிக்கை தேறினால் ஹாலில் சந்திப்பு ; இல்லாங்காட்டி மரத்தடியினில் ! இந்தப் புது கல்லூரி வளாகத்தில் எக்கச்சக்க மரங்கள் கண்ணில்பட்டன !

   Delete
  2. ஹால் தான் வேண்டும். பகலில் வெயிலில் மரத்தடியில் ரொம்ப நேரம் நிற்பது கடினம் சார். ரவுண்ட் பன்னு, ஜாங்கிரி, கடலை மிட்டாய்,தார்வார் பேடா டிஸ்ரிபுயூட் செய்வது கடினம் சார் :-)

   Delete
  3. எனக்கு ஹாலாக இருந்தாலும் சரி மரத்தடியில் என்றாலும் சரி மகிழ்ச்சியே...

   Delete
  4. மரத்தடி என்றால் பெரிய ஜமுக்காளத்துடன் வந்து விட வேண்டியதுதான்:-)😀

   Delete
  5. ////@ STV : ஈரோட்டுக்கு ஒரு லிஸ்ட் போடலாமா சார் ?///

   ----ரெடி பண்ணிடலாம் சார்...!!!

   Delete
  6. என்ன விஜயராகவன் கறிக்கடை வேலை எல்லாம் முடிந்ததா ,😂

   Delete
 59. Chick bill classic, prince classic, உயிரைத் தேடி,, mini color Tex, roger classic, any one consider please

  ReplyDelete
  Replies
  1. நல்ல தேர்வுகள் தான் நண்பரே ; பார்க்கலாமே இன்னும் என்னென்ன பரிந்துரைகள் வெளிப்படுகின்றன என்று !

   Delete
 60. ஈரோடுக்கு ஒரு லிஸ்ட். நானும்ஆஜர் சார். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 61. EBF Special - Color Tex தொகுப்பு

  ReplyDelete
 62. ஒவ்வொரு முறையும் புகைப்படங்கள் மட்டுமே பார்த்து பெருமூச்சு விடுவேன். இம்முறையாவது கலந்துகொள்ள முடிகிறதா என்று தெரியவில்லை. தற்போது இருக்கும் project முடிந்து புது project போகிறேன் Aug முதல் வாரத்தில் ஆகையால் நிலை எப்படி இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக முயற்சி செய்வேன்

  ReplyDelete
  Replies
  1. சனி ஞாயிறு விடுமுறை தினம் தானே கிருஷ்ணா? வாருங்கள்

   Delete
  2. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் 🙏🏼

   Delete
  3. கிருஷ்ணா கண்டிப்பா வரணும்... உங்கள meet பண்ண ஆவலுடன் waiting...

   Delete
 63. உயிரை தேடி ஈரோட்டில் என்று கூறி இருந்த ஞாபகம் சார். அது கருப்பு வெள்ளை ஆகையால் கலரில் susky கொண்டு வரலாம். மற்ற அனைவரும் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 64. ஈரோட்டில் விச்சு கிச்சு ஸ்பெஷல் வாய்ப்புண்டா

  ReplyDelete
 65. பிஸ்டலுக்கு பிரியாவிடை மாதிரி Super ஆன கதை ஏதாவது ஒன்றை ஈரோடு புத்தக விழாவிற்கு வெளியிடுங்கள் சார். இரண்டு வருட இடைவெளியை சரி செய்வதாக அது இருக்கும்.

  ReplyDelete
 66. ஈரோடு புத்தக விழா சிறப்பாக நடைபெற எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார்.
  புத்தக விழாவிற்கு வருவதற்கான வாய்ப்பு எனக்கு இந்த வருடம் இல்லை.
  அடுத்த மாதம் 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 வரை அமெரிக்காவில் இருக்க வேண்டிய சூழல், எங்கள் மகளின் பிரசவத்தை முன்னிட்டு. முதல்முறையாக ஒரு அந்நிய தேசத்தில் சில மாதங்கள் தங்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.

  ReplyDelete
  Replies
  1. என்ஜாய் அன்ட் ஹவ் அ குட் டைம்.

   Delete
  2. வாழ்த்துக்கள் சார். இந்த முறை இல்லை என்றால் அடுத்த முறை சந்திப்போம்

   Delete
  3. அமெரிக்க அனுபவங்களை இங்கே பகிருங்கள் சார் - அவ்வப்போது !

   Delete
 67. விஜயன் சார், வழக்கம் போல் அரங்கத்தை புக் செய்யுங்கள். நண்பர்கள் பலர் கடைசி நேரத்தில் வந்து சேர்வார்கள். அரங்கில் புத்தகத் திருவிழா ஸ்பெஷலை வெளியிட்டு குளு குளு ஏஸி ஹாலில் ஜாலியாக அரட்டை அடிக்கலாம். மாலை நேரம் வழக்கம் போல் மரத்தடி.

  நண்பர்கள் வருவதே உங்களுடன் உரையாட மற்றும் அனைவரையும் ஒரே நேரத்தில் சந்திக்க. எனவே ஹால் ப்ளீஸ்.

  மேலும் புதிய அரங்கில் நமது ஸ்டால் முன்னால் கூட்டம் சேர்ந்தால் பக்கத்துக்கு கடைகளுக்கு வேறு இடைஞ்சலாகும் சார். எனவே ஹால் புக் செய்ய தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 68. புலி வந்து இனிமே வேண்டவே வேண்டாம்னு சொல்லிடுவோமேன்னு பயமா இருக்கு சார். பீக்ல மாஸா இருக்கும் போது, கௌரவமா ரிட்டையர்டான புலியை திரும்பக் கூட்டிட்டு வந்துசுமாரான கதையில் வெளியிட்டு புலிரசிகர்களை சங்கடப்படுத்தவேண்டாம்சார். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. நேசம் புதுசு வடிவேலு காமெடிதான் ஞாபகத்துக்கு வருகிறது 😀

   Delete
 69. வாழ்த்துக்கள். பத்மநாபன் சார். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 70. This translation for children ok.

  Please avoid big words, complicated words. My son closes the book if he cant spell or understand a difficult word

  ReplyDelete
 71. 3-5 வயது குழந்தைகளுக்கு நாம்தான் கதை சொல்ல வேண்டும்..

  6-10 வயது குழந்தைகள் தானகவே படித்துக் கொள்வார்கள்.. ஆனால் அவர்களுக்கு இலக்கணத் தமிழ் அப்போது தான் புரிபட ஆரம்பித்து இருக்கும்..

  11 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அநேகமாக பேசுவதும் புரிந்துகொள்வதும் பேச்சுத் தமிழே..

  எனவே இது குழந்தைகளுக்கானது என்பதால் பேச்சு தமிழில் வெளியிடுதலே ஏற்புடையது..

  ReplyDelete
 72. சார் தர்மபுரியில் ஆரம்பிக்கும் புத்தக விழாவில் இருந்து ஒவ்வொரு புத்தக விழாவிற்கும் ஒரு புத்தகம் உண்டா?

  ReplyDelete
  Replies
  1. முதலில் சுஸ்கி விஸ்கி அண்ட் உயிரை தேடி.

   Delete
  2. பாவம்யா நம்ப எடிட்டர்:-)

   Delete
 73. EBF க்கு ஒரு டிக்கெட்.

  ReplyDelete
  Replies
  1. பீன்ஸ் கொடியில் ஜாக்.

   நடை குழந்தைகள் வாசிக்கும் வண்ணம் உள்ளது.

   தொடரலாம் சார்.

   Delete
 74. ஈரோட்டுக்கு சுஸ்கி விஸ்கி & உயிரைத்தேடி ( முடிந்தால் வண்ணத்தில்) கொண்டுவந்து அறிவித்த புத்தகங்களை முடித்து விடலாங்க சார்.

  ReplyDelete
 75. //இந்த பேச்சு வழக்கு நடை ஓ.கே. வா ? அல்லது கோனார் நோட்ஸ் பாணிக்குத் தாவிடல் க்ஷேமம் நல்குமா ?//
  பேச்சு வழக்கு நடையெல்லாம்  ஓகே தான், ஆனாலும், நீங்க ரொம்ப வளவளன்னு பேசுறீங்க எடிட்டர் சார் :D

  மாடு டாட்டா எல்லாம் சொல்லல, அது பாவம் சோகமா அழுதுட்டே போகுது...

  அவங்க போறத ஒரு குட்டி முயலும், ஒரு வெட்டிப் பயலும் எட்டிப் பாக்குறாங்க...

  இதற்கான முழுநீள வஜனங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் சார் :)

  தற்போது குழந்தைகளும், அவர்களின் தந்தைகளும் மிகவும் ரசித்துப் பார்க்கும் சின் சான், டோரேமான் மற்றும் பல தொடர்களில், இந்தத் தமிழ் பேச்சு வழக்கு நடையினை, மிகவும் அழகாகக் கையாள்கிறார்கள். அந்நடையை முழுவதுமாய் காமிக்ஸில் புகுத்துவது சற்று கடினம் தான்..

  கு.சொ,க. - பெங்களூர்.

  ReplyDelete
 76. எனது சாய்ஸை ரூட் லிஸ்ட் 66 இல் இருந்து Zagor க்கு மாற்றிக் கொள்கிறேன் சார். பார்த்து செய்யுங்கள் ஈரோட்டுக்கு

  ReplyDelete
 77. இன்னும் ஒரு கமெண்ட் மட்டுமே தேவை load more க்கு

  ReplyDelete