Powered By Blogger

Wednesday, June 01, 2022

போவோமா கென்யாவுக்கு ?

நண்பர்களே,

வணக்கம். சகோதரியின் இல்ல 'விலா'வைச் சிறப்பிக்க கவிஞரின் பூர்வீகம் பக்கமாய்ப் போன இடத்தில், மருந்துக்கும் இன்டர்நெட் நஹி ! 2G டவரோடு மோதுவது - மெபிஸ்டோவுடன் மோதுவதைக் காட்டிலும் ஆபத்தானது என்பதால், இன்று மாலை வீடு திரும்பும் வரைக்கும் மௌனமே தேவலாம் என்றிருக்க வேண்டிப் போனது !! 

நேற்றைக்கே உங்களின் கூரியர் டப்பிக்கள் கிளம்பியிருக்க, இன்றைக்குப் பரவலாய் பட்டுவாடா ஆகியிருக்க வேண்டும் தான் ; ஆனால் இங்கே பதிவாகியுள்ள பின்னூட்டங்களைக் கொண்டு கணிக்கும் போது பூசாரிகள் வரம் அருள முனைந்திடவில்லை என்பது புரிகிறது ! So உங்களின் கென்யா flight tickets நாளைய காலையிலாவது கதவைத் தட்டி நிற்குமென்று எதிர்பார்த்திடுவோம் ! நமது டாக்டர் ராஜா சார் அதற்குள் கென்யப் பயணத்தைப் பூர்த்தி செய்து ; 'வெற்றி' என்று கொண்டாடிய கையோடு, sci-fi பாயசத்துக்கு ஜவ்வரிசி ; முந்திரி ; ஏலக்காய் ; சர்க்கரை என்று கொள்முதலும் செய்து முடித்து விட்டார் தான் ! ஆனால் அவரது வேகத்துக்கு நண்பர்கள் ஈடு கொடுத்தல் சுலபமே அல்ல எனும் போது, 'பெரும்பான்மைப் பாயசம்' என்ன மாதிரியான ரகமாய் இருக்கப் போகிறதென்பதைத் தெரிந்திட சற்றே பொறுத்திருக்க வேண்டும் தான் ! இயன்ற மட்டிலும் தத்தம் வாசிப்புகளின் வரிசைக்கிரமங்களில் கென்யாவினை முன்னணியில் இருத்திட்டால் - சட்டுப்புட்டென்று ரிஜல்ட்கள் தெரிந்திட வாய்ப்புண்டு ! Fingers crossed !! 

And இம்மாதத்தின் ஸ்டெர்ன் ஆல்பமுமே என்ன மாதிரியான ரியாக்ஷன்களை வரவழைத்திடவுள்ளதென்பதை அறிந்திட ஆவல் !  இது மாதிரியான off beat கதைகள் ஸ்கோர் செய்திட்டால், எப்போதுமே ஒரு எக்ஸ்டரா மிடறு குஷி ஆட்கொள்வதுண்டு ; இதுவோ செம off beat ஆல்பம் எனும் போது இங்குமே ஆர்வ மீட்டர் உச்சத்தில் ! So இம்மாதத்தின் முதல் வாரத்தில் மட்டுமாவது சிலபல அடுக்களைகளிலும், கிணற்றடிகளிலும் நம்மாட்களுக்கு கொஞ்சமே கொஞ்சமாய் சுதந்திரம் கிட்டிட புனித தேவன் மனிடோவை வேண்டிக் கொள்கிறேன் ! And கிடைக்கக்கூடிய அந்த அவகாசங்களில் செல்(ல)போன்களை நொண்டிடாது 'பொம்ம புக்' நோண்டல்களுக்குள் நீவிர் பிஸியாகிடவுமே வேண்டுதல்கள் ! 

Bye for now !! See you around...happy reading !!

P.S : இம்மாதத்து இதழ்கள் சார்ந்த உங்களின் பின்னூட்டங்கள் முந்தைய பதிவினில் இருப்பவற்றை சிரமம் பாராது இங்கே transfer ப்ளீஸ் !

And online listings நேற்று முதலே ரெடி

https://lioncomics.in/product/june-pack-2022/

https://lion-muthucomics.com/latest-releases/955-june-pack-2022.html


163 comments:

  1. 10‌மணிக்கு பிறகு பதிவை படித்து விட்டு கமெண்ட் போடுகிறேன். ஆன் த வே டூ home from office:-)

    ReplyDelete
  2. புத்தகங்கள் கிடைத்து விட்டது. வீட்டுக்கு சென்ற பிறகு பிரித்து ரசிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. புத்தகங்கள் கிடைத்து விட்டது. வீட்டுக்கு சென்ற பிறகு பிரித்து ரசிக்க வேண்டும்.


      அப்படின்னு

      நாளைக்குதான்
      சொல்லனும்...

      Delete
    2. பரணி வாழ்த்துகள்;
      ரவி+100...

      Delete
    3. சேம் பிளட் 😩😤😩

      Delete
    4. ஆஃபிஸிலிருந்து வீடு வர 90 நிமிடங்கள். வந்த பிறகு சாப்பிட்டு விட்டு புத்தகங்களை புரட்டிப் பார்த்து விட்டேன் அதுவும் கென்யாவை இரண்டு முறை :-)

      Delete
  3. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  4. Short and sweet post. பதிவை படித்து விட்டேன்.

    ReplyDelete
  5. அப்ப இந்த மாதத்து வரிசை
    கென்யா,ஸ்டெர்ன்,டெக்ஸ்
    அப்படின்னு வெச்சிக்குவோம்...

    ReplyDelete
  6. இரவு வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  7. புத்தகங்கள் கைக்கு வந்துவிட்டது இன்று இரவு சிவராத்திரியாக மாறப்போகிறது

    ReplyDelete
  8. போட்டிக்கு அப்புறம் பதிவு, இதுவும் நல்லா இருக்கு

    ReplyDelete
  9. இந்த மாதம் வந்த யானை புக்கும் டைனோசர் புக்கும் என் மகளுடையதாம், அய்யா புக்கு இரண்டும் என்னுடையதாம்

    ReplyDelete
  10. வணக்கம் நண்பர்களே 🙏🥗💐

    ReplyDelete
  11. Edi Sir..
    Tex, Stern, எலியப்பா எல்லோரும் இன்னைக்கு கென்யா போறதுக்காக நாமக்கல் வந்துட்டாங்க.
    கிளம்பிகிட்டே இருக்கேன் Edi sir.
    கென்யா போயிட்டு வந்து feedback தர்றேன் Sir..

    Virroooom...✈

    ReplyDelete
  12. கென்யா அட்டைப்படம் அருமை அதுவும் முன் பக்க படம், வண்ணக்கலவை மற்றும் நகாசு வேலைகள் அருமை. அதிலும் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் மற்றும் ஒரு பறவை பறப்பது தெரியும்! 5 பாகங்கள் சொக்கா இந்த வாரமே படிப்பதற்கு நேரம் கொடு :-)

    இன்று இரவு குழந்தைகளுடன் ஏலியப்பாவை படித்து ரசிக்க போகிறேன் :-)

    ReplyDelete
  13. தனது சேஷ்டையான முகபாவங்களாலும், நையாண்டி வசனங்களாலும் நம்மை கிச்சுகிச்சு மூட்டிவந்த எலியப்பா - இந்தமாதம் பாலே நடனம் ஆடிய காலோடு விடைபெறுகிறார். EBF கொண்டாட்டங்கள் முடிந்து நண்பர்களிடம் விடைபெறும்போது மனசு கொஞ்சம் பாரமாய் உணருமே.. அப்படியொரு மனநிலை இப்போது!

    திரும்பவும் வருவாரென்றால் விசிலடித்து வரவேற்க நான் ரெடி!

    ReplyDelete
    Replies
    1. //தனது சேஷ்டையான முகபாவங்களாலும், நையாண்டி வசனங்களாலும் நம்மை கிச்சுகிச்சு மூட்டிவந்த எலியப்பா//

      எலியப்பாவின் முகபாவங்கள் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தன அருமை அருமை.

      Delete
  14. கென்யா…. கேள்விபட்டிருக்கிறேனே ஒழிய… அதைப்பற்றி எந்தவொரு முகாந்திரமும் இன்றி புத்தகத்திற்குள் நுழைந்தேன்…

    முதலில் கவர்ந்தது புத்தக வடிவமைப்பு… அருமையான பைண்டிங்… அற்புத வண்ண சேர்க்கை… படங்களின் அழகை மறைக்காத பலூன்கள்… உறுத்தாத எழுத்துரு… அட்டை படங்கள் அழகுக்கு அழகூட்டுகின்றன… Spineல்… பாம்புத் தோல் போன்ற வடிவமைப்பு அசரடிக்கிறது…

    இப்பொழுது கதைக்கு வருவோம்… இது ஒரு அப்பழுக்கற்ற SciFi… 1947ல் இரண்டாம் உலகப் போர் முடிந்து இங்கிலாந்து ருஷ்ய உறவு விரிசல்கள் ஆரம்பிக்கும் காலகட்டத்தில் கென்யாவில் கதை தொடங்குகிறது… Safariக்கு செல்லும் ஐந்து வெள்ளையர்கள் நம்ப முடியாத சூழ்நிலைகளில் தொலைந்து போக… அதை ஆராய கிளம்பும் ஒரு ஆங்கிலேய ஆசிரியை, அவள் மேல் மையம் கொண்ட இரண்டு ஆசிரியர்கள், ஒரு eccentric பிரபு, ஒரு பைலட்… அவர்களைச் சுற்றி நடக்கும் திகிலூட்டும் சம்பவங்களே கதையின் பயணமாகிறது…

    கதையின் மாந்தர் ஒருவர் குறிப்பிடுவது போல… “இங்கே யார் கெட்டவர்கள்..!? யார் நல்லவர்கள்…!?” எனும் ஐயம் கதை முழுவதும் நிரவி யிருப்பது ஒரு பெரிய பலம்…

    புத்தகத்தை ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் முடித்து விட்டேன்… அவ்வளவு வேகம்… கதையின் கிளைமாக்ஸ் மட்டுமே சற்றே வேகத்தை குறைக்கிறது…

    எடிட்டர் சாருக்கு ஒரு வேண்டுகோள்… scifi கதைகள் நம் வட்டத்திற்கு ஒவ்வாது என பல காலம் கூறி வந்துள்ளீர்கள்… இப்பொழுது கென்யாவின் வெற்றி நமக்கு ஒரு புதிய பாதையை திறந்து வைத்துள்ளது…. தக்க சமயத்தில் அந்த Valerian & Laurelineஐ களமிறக்க கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்… ப்ளீஸ்…

    ReplyDelete
    Replies
    1. இதுவொரு hybrid ஜானர் சார் ; முழுக்க முழுக்க sci-fi என்று அடையாளமிட இயலாது !

      நெடுக கானக சாகசங்கள் ; நிறைய ஆக்க்ஷன் ; கொஞ்சம் லவ்ஸ் ; கொஞ்சம் மர்மங்கள் ; அப்புறமாய் sci-fi பின்னணி - என்றொரு விசேஷக் கலவை இது !

      வெற்றியோ, வேறெதுவுமோ - அதற்கு சொந்தம் கொண்டாட எந்தவொரு ஒற்றை ஜானருக்கும் உரிமை இராதென்பேன் !

      Delete
    2. இருங்க இருங்க நானும் படித்து விட்டு நாளை மாலைக்குள் பதிவிடுகிறேன்.

      Delete
    3. படிச்சிட்டு வரோம் டாக்டர் .. 😉😉😉

      Delete
  15. கிடக்கல கிடக்கல புத்தகம் ஒண்ணும் கிடக்கல...சிக்கல சிக்கல பார்சல் இன்னும் சிக்கல...
    :-(

    ReplyDelete
  16. அமெரிக்கா செல்வதற்கு இன்னும் 2 வாரம் இருக்கிறது. அதற்குள் கென்யாவிற்கு சென்று வந்து விடலாம் என்று புத்தகத்தை எடுத்து விட்டேன்.
    ஹார்ட் பவுண்டில் புத்தகம் வந்தாலே மனதிற்குள் ஒரு வித சந்தோஷம் பிரவாகம் எடுக்கிறது.
    கென்யா மேக்கிங் அற்புதம். உள் பக்கங்கள் வண்ணத்தில் பின்னுகிறது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார். முன் பின் அட்டைகள் அமர்க்களம். நம்ம ஸ்டீல் பாணியில் இது வரை வந்த அட்டைகளில் இனிமேல் வரும் அட்டைகளிலும் இது தான் டாப்.

      Delete
  17. எலியப்பா குழந்தைகளுடன் படித்து முடித்து விட்டேன். நன்று.

    ReplyDelete
  18. மேற்கே இது மெய்யடா...

    என்னா கதை என்ன ஒரு ஆக்சன். இந்த முறை ஸ்ட்ர்ன் கதை ஒரு கம்ப்ளீட் ஆக்சன் packed. ஆரம்பத்தில் ஸ்லோ ஆக இருக்கும் கதை போகப் போக சும்மா ஜெட் வேகத்தில் செல்கிறது. ஒவ்வொரு முறையும் கதையில் வரும் மற்ற கதா பாத்திரங்கள் ரசிக்க வைக்கும் இந்த முறையும் விதிவிலக்கல்ல. Climax சண்டையும் அதற்கு பிறகு வரும் காட்சிகளும் உண்மையாகவே மனதை நெகிழ வைத்தது. எப்போதும் போல இப்போதும் Stern பெறும் மதிப்பெண் 10/10.

    அருமை சார் எண்ணி 30 நிமிடங்களில் படித்து முடித்து விட்டேன். துவங்கியது மட்டும் தான் தெரியும் படக் என்று முடிந்து விட்டது. மேற்கின் உண்மையான முகம். எனக்கு மிகவும் பிடித்தது Stern உடைய ப்ரெண்ட் தான் இந்த முறை. ஒரு சில பேனல்களில் வரும் அந்த சிறுமி அட்டகாசம்.

    இன்னும் எத்தனை கதைகள் உள்ளது சார் இந்த தொடரில்?

    ஜம்போவிற்க்கு நான் கட்டிய பணம் இரண்டு வெட்டியான்களுக்கு சரியாகப் போய் விட்டது. உங்கள் புதுக் கதை தேடல்கள் தான் இவர்களை எங்களுக்கு பெற்று தந்தது. எனவே உங்கள் தேடல்களை தொடரவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //இன்னும் எத்தனை கதைகள் உள்ளது சார் இந்த தொடரில்?//

      இதுவரையிலும் 4 சார் ; ஐந்தாவது ஆண்டின் இறுதிக்குள் or 2023 துவக்கத்தில் !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  19. ஒரு காதல் யுத்தம்


    மெய்யாலுமே ஒரு சினிமா பார்த்த எபக்ட் .. 😍😍

    டெக்ஸ்ஸோட ஹனிமூன்ல க்ரோ வொய்ட் கும்பலால் நடத்தப்பட்ட ஒரு யுத்தம்..

    அருமையான டாப்பான கதை.. 💚💛💚💛💚💛💙

    ReplyDelete
  20. கென்யா நாளைக்குத்தான் படிக்கனும்

    நேரம் குறைவாக இருப்பதால் தற்போது டெக்ஸ் மட்டும்

    எலியப்பாநாளை ட்ரிப் கேப்பில் டைம் இருக்கும்போது ..

    கென்யா நிதானமா படித்தால்தான் ரொம்ப ஹேப்பியா இருக்கும் .. லவ் ஈஸ் கென்யா ..💛💙❤💚💜

    ReplyDelete
  21. கென்யா படித்தாகி விட்டது.

    எப்பிடி இருக்குன்னா...

    நல்லா பிரிண்ட் ஆகியிருக்கு

    கதை நம்ப முடியல...எப்பிடிங்கிறீங்களா....


    டெக்ஸூ வில்லரு நல்ல கதையோட கேப்டன் டைகரு மாதிரி துப்பறிய்ற மாதிரி ஆக்ஷன்....

    நாளைக்கி ரிவிஷன் பண்ணணும் மறுக்கா...

    ReplyDelete
    Replies
    1. ரிவிஷன் செய்ய நேரம் கிட்டுச்சா சார் ?

      Delete
  22. Bye eliyappa. Will miss your innocence and lies.

    Stern s story is a strong one, having so many layers inside. Why people needlessly died in west, a father who lost confidence of daughter, whole town becoming endlessly united for needless cause, etc., Nice deep read.

    ReplyDelete
    Replies
    1. யெஸ் சார் ...பார்க்க லைட்டான கதைக்களம் போல தென்பட்டாலும் அடர்த்தியான ஆக்கமே !

      Delete
  23. எனக்கும் புத்தகம் இன்னும்வரலே . கிர்பியுடன் பொழுது போய்க்கிட்டிருக்கு. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  24. சார் நம்ம ஊரு எப்படி...செந்தூரான் அருளை பெற்று கொண்ட திருமணத் தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் கூறிக் கொண்டு ....

    இம்மாத புத்தக பார்சலை அரக்க பரக்க கிழிக்க...வெளியே மிச்சத்தை கிழித்த படி பறந்து வந்து மடியில் தவழுது .... கென்யப் பறவை....அடடா இதுவல்லவோ அட்டை...பின்னட் டையும் பிரம்மாண்டத்தை வாரி வழங்க .....
    ஸ்டெய்ன் நீல வானத்தை இழுத்து போட்டு வெண்மையை தரையில் பிரதிபலிக்க அட்டகாசமாய் ஜொலிக்க....
    தலையோ வண்ணமயமாய் ஜோடி சேர்ந்த சந்தோசத்தில் பிரகாசிக்கிறார் பழமையை காட்டும் ஓவியமாய் நிறத்துணையோடு தன் துணை சேர்த்து ....மூன்று அட்டைகளும் ஒவ்வோர் விதத்தில் போட்டா போட்டி போட....

    நேரில் ஸ்டெர்னை மிஞ்சி யாரடா போட்டியிலங்கே என விண்ணை நோக்கித் தன்னந்தனியாக பறக்குது அந்த அண்டரண்ட பட்சி போல நான்தான் இது வரை வந்த பறவையிலே பெருசுன்னும் அட்டைகளிலே டாப்புன்னும் ....சூப்பர் சார்.....ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப....எதிர்பார்த்த கென்யாவ புரட்ட முடியல மகனினருளால்....இன்று எப்படியும் படித்து வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. உள்ள புரட்ட ஸ்டெய்ன் இருளான வண்ணத்துல ஈர்க்க...டெக்ஸோ வானவில்ல வைத்து பக்கங்களை உற்சாகப்படுத்த...நம்ம கென்யா முதல் பக்கம் அந்த இருண்ட ஆரஞ்சு நிறத்தால்/ள் அப்படியே மனதை நிரவ...உள்பக்கங்கள் வெம்மை தெறிக்க இதய படிக்கும் முன்னே பார்த்துக் கூடாதுன்னு ஜாக்கிரதையா மூடியாச்சு..அடுத்த மாதம் மூன்று முத்துக்களாய்....
      லக்கி...டெக்ஸ்...அசத்தலான ஆல்ஃபாவுடன்...வெயிட்டான இதழில் லா மாதம்

      Delete
    2. அடஅட கவிதை கவித

      Delete
    3. //அடஅட கவிதை கவித//

      Same Feeling brother

      Delete
    4. ரொம்ப பீல் பண்ணாதீங்க அப்புறம் ஸ்டீல் இன்னும் ஒரு கவிதையை போட்டுவிடப்போகிறான் :-)

      Delete
  25. கென்யாஅனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதத்தில்அமைந்துள்ளது என்பது வரும்விமர்சனங்களைப்பார்த்தால்புரிகிறது.. புதிய ஜேனர். வெற்றி. சந்தோசம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. நீங்க படித்து விட்டு விமர்சனம் போடுங்க

      Delete
  26. டெக்ஸ் படித்து விட்டேன். ஒண்ணும் மோசம் இல்லை. Single shot என்பதால் நீட்டி முழக்காமல் பட் என்று முடித்து விட்டார்கள். I'm ஹேப்பி அண்ணாச்சி.
    மதிப்பெண் 8/10.

    ReplyDelete
  27. இப்போது கென்யாவில் பயணம் 3 பாகங்கள் படித்து விட்டேன். சும்மா ஜிவ் என்று take off ஆகி போய்க் கொண்டிருக்கிறது. நிறைய கேரக்டர்கள் ஆனால் கொஞ்சமும் குழப்பம் இல்லை. எனது ஃபேவரைட் ஹீரோக்களில் ஒருவரான ட்ரெண்ட் ஆசிரியர், ஓவியர் என்பதால் ரொம்பவே பிடித்திருந்தது.

    புத்தகத்தின் தயாரிப்பு தரம் அட்டகாசம். மீதமுள்ள இரண்டு பாகங்களையும் படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கமெண்ட்ஐ பார்த்தால் நீங்கள் இன்று வேலைக்கு போன மாதிரி தெரியல குமார்! :-)

      Delete
    2. போகவில்லை பரணி. விடுப்பு எடுத்துக் கொண்டேன்.

      Delete
    3. முடித்து விட்டேன். அட்டகாசம் அபாரம் அற்புதம் இன்னும் என்னென்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையும் பயன் படுத்தி கொள்ளவும். அட்டகாசமான பயணம். Sci-fi, Adventure எல்லாம் கலந்து இருக்கு இந்தக் கதையில். இது வரை இந்த கதையை எந்த வடிவிலும் படிக்காததால் எந்த ஐடியா வும் இல்லாமல் தான் படிக்க ஆரம்பித்தேன். அருமை கேத்தி உடன் மேற்கொண்ட பயணம் அருமை.

      ஒற்றை நொடி ஒன்பது தோட்டா போல இன்னும் ஒரு மாஸ் ஹிட். அடுத்த வருடம் நமீபியா வெளியிடவும். நன்றி வணக்கம்

      Delete
    4. கொடுத்து வைத்தவர்யா நீங்கள்:-) என்ஜாய்:-)

      Delete
    5. அதுவும் அந்த 5 ஆம் பாகத்தில் வந்த தேங்காய் மூடி எடிட்டர் டயலாக் தெறித்து சிரிக்க வைத்தது. இந்த விசயத்தில் உங்களை நெருங்கவே முடியாது சார்.

      Delete
    6. ஹெ ..ஹெ... டைட்டான த்ரில்லரில் கூட ஒரு இம்மி ஹ்யூமருக்கு இடமின்றிப் போகாதே சார் !

      Delete
  28. கென்யாவுக்கு விசா வந்துடுச்சே..🥰

    ReplyDelete
  29. கென்யா !!!

    இந்த கதையை முன்பே கேள்வி பட்டு தான் இருந்தேனே தவிர இப்போது தான் முதல் தடவையாக புத்தகமாக கையில்.

    தயாரிப்பு தரம் அற்புதம்.

    அட்டை படத்தில் தொடங்கி உள்பக்கங்கள் முதல் பின் அட்டை வரை அட்டகாசம் அட்டகாசம்.
    கதையை படிக்க தூண்டுகிறது அட்டை படங்கள். அதுவும் அந்த புத்தகத்தின் முதுகு பக்க (spine) டிசைன் அருமையோ அருமை.

    அதேபோல ஒவ்வொரு பாகத்தின் அட்டை படங்களும் அற்புதம். கலரிங் மற்றும் ஓவியங்கள் பார்க்க பார்க்க ரசிக்க வைக்கிறது.

    ஆசிரியருக்கும் இதற்காக உழைத்த குழுவிற்கும் பாராட்டுக்கள் & உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    இந்த கதை நிச்சயமாக சோடை போகாது என்று தான் தோணுகிறது, இதை போன்ற அடுத்தடுத்த கதை தொகுப்புகளும் வர வேண்டும்.

    கதை படிக்க இனி தான் நேரம் ஒதுக்க வேண்டும் இந்த வார இறுதிக்குள் படித்து விடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. படித்து விட்டு அபிப்பிராயத்தினைப் பகிர்ந்திடுங்கள் நண்பரே !

      Delete
    2. நிச்சயமாக சார்

      Delete
  30. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  31. ஜூன் இதழ்களை கைப்பற்றியாச்சி,
    முதல் புரட்டலில் இதழ்கள் கலரிங்கில் கலக்குகிறது,அட்டைப்படங்களில் மூன்றுமே நிறைவு...
    அடுத்து கென்யாவுக்கு டூர் போகனும்...

    ReplyDelete
  32. புத்தகங்கள் வந்து சேர்ந்தன... தயாரிப்பு தரம் அருமை..

    3இதழ்களும் ஒன்றையொன்று விஞ்சினாலும் கென்யா ப்ளைட்ல ஏறுவரும் டெக்ஸ்& ஸ்டெர்னை ராக்கெட்ல றெக்கை கட்டுது....

    ஸ்டெர்ன் அட்டை சும்மா மயக்குது...

    டெக்ஸ் இதழ் சென்ற தீபாவளிமலர் "பொக்கிஷம் தேடிய தேசா"வின் நீட்சி போலவே தோணுது...

    ReplyDelete
  33. கென்யா அட்டைப்படம், மேக்கிங் எல்லாம்A1 ரகம்...

    எஸ்பெசலி பின் அட்டை சான்சே இல்லை வெகு நேர்த்தி... வானூர்தி, ஆழ்கடல் மூழ்கிகள், டைனோசர்கள், எறிகற்கள், பழங்குடியினர்னு பார்க்கப் பார்க்க பரவசம்.

    இதழின் முதுகு லெதர் பெல்ட் ஃபினிஷிங்ல உள்ளது. அதுஎன்ன வகை சார்... இதுவரை நாம் பார்த்திராத யுக்தியாக உள்ளது. கண்ணைப்பறிக்குது..💞💕(நன்றி:டாக்டர்AKK and KS)

    ReplyDelete
  34. மூன்று வண்ண இதழ்களும் பட்டையைக்கிளம்பினாலும் கென்யா ஓரு படி முன்னேயுள்ளது. முதல் உள் பக்க வெளிர் ஆரஞ்சு வண்ண நிற அறிமுகம் வெகு சிறப்பு சார்...

    ReplyDelete
  35. கென்யா கலரிங் பாணியும் ஓவியங்களும் செம கலக்கலாக உள்ளது... முகங்களைப் பார்த்த உடன் பரிச்சயமான டிரெண்ட் தொடர் நினைவுக்கு வருது...

    19ம் பக்க டைனோசர் ஓவியம் ப்பா....மூச்சடைக்க வைக்கிறது....

    ஆனா,

    ReplyDelete
    Replies
    1. இத்தனை சிறப்பு மிக்க ஓவியத்தை ரசிக்க இயலாவண்ணம் தாள் வரிவரியாக உள்ளதுங் சார்... முக்கால்வாசி ஓவியங்கள் வரை இப்படி வரிபுலியாக உள்ளதால் அதை ரசிக்க இயலவில்லை...
      இத்தனை அம்சமான தயாரிப்பு முழுமையடையாமல் இது செய்திட்டது.. கென்யா " தி பெஸ்ட் ஆஃப் 2022" ஆக வந்திருக்க வேண்டியது,,,,இந்த குறைபாடு மட்டுமே இல்லையெனில்.!!!


      இது எதனால் என தங்களுக்கே தெரியும்.. இதைக்களைய ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் சார்..

      நிறைய நண்பர்களுக்கு இவ்வாறே வந்துள்ளதாக தெரிவித்து உள்ளார்கள்..

      Delete
    2. // தாள் வரிவரியாக உள்ளதுங் சார்... முக்கால்வாசி ஓவியங்கள் வரை இப்படி வரிபுலியாக உள்ளதால் //

      எனது எண்ணமும் இதுவே.

      Delete
    3. எனக்கும் அவ்வாறே வந்துள்ளது,முந்தைய சில இதழ்களுக்கும் இது போன்று இருந்தது,இது எதனால் ?!

      Delete
    4. காகிதம் ஈரப்பதத்தோடே இருந்திருக்கிறது ! இனி வரவுள்ள ஹார்ட் கவர் புக்ஸுக்கு இந்த மில் காகிதத்தைத் தொடவே கூடாது போலும் ! விலை ஏறும் வேளையில் மொத்தமாய் வாங்கிப் போட்ட சீனச் சரக்கு !! Sigh !!

      Delete
    5. ரவி@ அர்ஸ்மேக்னாவில் இருந்து இந்த சிக்கல் ஆக ஆரம்பித்தது.

      ஆசிரியர் சார்@ இனி ஹார்ட் கவர் புக்ஸ்க்கு இந்த குறிப்பிட்ட தாள்கள் போடப்படாது எனும்போது அடுத்த ஹார்ட்கவர் புக் க்ளாசிக் லைப்ரரி 3ஐ ஆவலுடன் எதிர் நோக்கி.... டெக்ஸ் தீபாவளி மலரும் ஹார்ட் கவர், சும்மா நச்சுனு வரட்டும் சார்--ரிப்கெர்பி இதழ்மாதிரியான ஃபினிஷிங்கில்....

      ஈ.ஈ.ஈரோட்டுக்கு ஏதும் ஹார்ட் கவர் புக் இருக்கானு.....??

      Delete
  36. கென்யா !

    முதல் அத்தியாயம் முடிச்சாச்சு!
    அமர்க்களமாக இருக்கிறது!!

    மணி 6 - வாக்கிங் போகும் வேளை என்பதால் வந்து தொடரலாம்!!

    ReplyDelete
    Replies
    1. அத்தியாயம் 2 ஸ்டார்டிங்

      Delete
    2. அத்தியாயம் 2
      பிரமாதம்!

      3 ஸ்டார்டிங்!

      Delete
    3. அத்தியாயம் 4 போயிட்டிருக்கு!

      Delete
    4. அட, ஒரே நாளில் போட்டுத் தாக்கியாச்சா சார் ?

      Delete
  37. Welcome Kenya !

    ஆங்கிலத்தை விட  தமிழில் படிக்க நன்றாக இருக்கிறது - this story ! விறுவிறுவென 40 பக்கங்களைக் கடந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். வரவேற்கப்பட வேண்டிய கதைத்திரட்டு !
    ஹிட் அடிக்கும் என்று தோன்றுகிறது !!

    ReplyDelete
  38. இந்த மாத தர வரிசை
    1. கென்யா
    2. Stern
    3.Tex..
    மு பாபு
    ஆத்தூர்

    ReplyDelete
  39. கென்யா - ஒரே வார்த்தையில் அட்டகாசம். ஒரே அமர்வில் படிக்க முடிந்தது. நிச்சயமாக நமது கிளாஸிக் வரிசையில் நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்கும். மொழிபெயர்ப்பு பிரமாதம். படிப்பதற்கு இலகுவாகவும், அதே சமயம் quality யிலும் compromise இல்லாமல். புத்தக தரமும் அருமை. Waiting for Namibia and Amazon. Thanks for the wonderful book sir.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் ; நிறையவே உழைப்பைக் கோரிய ஆல்பமிது ! நினைவில் தங்கிடும் வாசிப்பினை தந்திருக்கிறதெனில் நிரம்பவே மகிழ்ச்சி !

      And புதிய சில கதவுகளையும் இது திறந்து விட்டிருப்பது icing on the cake !

      Delete
  40. ***மேற்கே இது மெய்யடா...! ***

    ஸ்டெர்ன் இந்த முறையும் ஏமாற்றவில்லை. சில பிரேம்கள் இன்னும் கண்ணில் அப்படியே நிற்கின்றன, இது ஒவ்வொரு ஸ்டெர்ன் கதையிலும் ஒன்று மனதில் பசக் என்று ஒட்டிக்கொண்டு விடுகிறது.

    கதை-1 : சிறுவன் ஸ்டெர்ன், நடக்கும் ஒரு அசம்பாவிதத்தை பார்த்து திகைத்து நிற்பது.
    கதை-2 : கிழவி டைனமைட்'டுடன் குத்து சண்டை அரங்கில் முளைப்பது

    ******Spoiler*****
    கதை-3 : ஷெரீப் தலையில் சுடுவது...

    எப்போதும் போல கதைமாந்தர்கள் தான் கதையின் ஹைலைட். அடுத்த கதைக்கு வெயிட்டிங்.

    8.5/10

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனம். அட்டகாசமான கதை

      Delete
    2. பார்க்கப் பார்க்க...பழகப் பழக சிலரைப் பிடிக்குமல்லவா - அந்த லிஸ்ட்டில் ஸ்டெர்னைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பேன் சார் ! எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது இவரது understated கேரக்டர் தான் !

      ஹீரோயிசமா ? வீசம்படி என்ன விலையென்று கேட்கும் அந்த பாணி சுலபமாய் நம்மை ஒன்றச் செய்து விடுகின்றது !

      Delete

  41. கென்யா

    மிகவும் குழப்பமான கதைக் கரு.

    பைபிளின் ஆர்க் ஆஃப் நோவா வை நினைவூட்டுகிறது.

    இயற்கையின் ஊடே குறுக்கிடும் 'விண்வெளி உயிரிகள் ' எதையும் ஆராயத் துணியும் மனிதர்களின் மனப்போக்கை குற்றம் சாட்டுவது விசித்திரம் மட்டுமல்ல கொஞ்சம் அபத்தமாகத் தெரிகிறது.

    கதையை நடத்தி செல்வதில் தெளிவில்லை..நடுநடுவே படிக்க தொய்வு ஏற்படுவது உண்மை..

    பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப கால உயிரினங்களை மீண்டும் பாதுகாக்க நினைப்பதுவே ( அப்படித்தான் கதையில் சொல்லப்பட்டுள்ளது) இயற்கையின் அடிப்படை சுழற்சி விதிகளுக்கு முரணானது.

    ஊழிப் பெருவெள்ளத்தின் நோக்கம் ஒரு புதிய துவக்கத்துக்குத்தானே?

    விண்வெளிவாசிகள் அவசியமற்ற செய்கைகளில் ஈடுபடும் "முகமது பின் துக்ளக் "குகளாகத் தென்படுகிறார்கள்.

    ஓணானை உறைய வைப்பானேன்?

    பின் அது வெளிப்படுகையில் துரத்தி பிடிப்பானேன் ? அல்லது கொல்வானேன்?( மரபணுக்களை பாதுகாக்க வேறு செய்கிறார்கள். கடவுளே! இதனால் மனித குலத்துக்கு என்ன பயன் ?) நடைமுறையில் இருக்கும் உணவுச் சங்கிலியை இது சீரழிக்காதா?

    கென்யா .. ஏமாற்றம்..

    8/10

    ReplyDelete
    Replies
    1. முரண்படுகிறேன் சார் ....!

      எந்தவொரு sci -fi த்ரில்லரின் அடிப்படையுமே ஒரு மிகையான கற்பனை தானே ? அயல்கிரகங்களில் ஜீவன்கள் வசித்து வருவதையும் ; பிரபஞ்சப் பயணங்கள் மேற்கொள்ளும் அளவிற்கு மேம்பட்ட அறிவும் ஆற்றலும் அவற்றிற்கு / அவர்கட்கு இருப்பதையும் ; இட்லி வட்டுக்கள் போன்ற கலன்களில் அவ்வப்போது 'வண்டிய பூமிக்கு உட்றா சம்முவம்' என்று கிளம்பிடுவதையும், லாஜிக் ஓட்டைகளை மறந்து ஏற்றிடல் முதற்படி ! ஹாலிவுட்டின் தெறி ஹிட்ஸ் - E .T ; Close encounters of the Third Kind ...Star Wars ...இத்யாதிகள் ஒவ்வொன்றின் அடிப்படைகளுமே SUSPENSION OF LOGIC on these lines என்றே சொல்வேன் !

      So அதே sci -fi ரக ஜானரின் பிரதிநிதியான கென்யாவில், அந்த அயல்கிரகவாசிகள் செய்திடும் வேலைகள் எக்ஸ்டரா நம்பர் போடும் முயற்சிகளா ? நஹியா ? என்ற ஆய்வே not in place என்றுபடுகிறது ! அவ்விதமொரு கேள்வியினை எழுப்புவதாயினுமே - extinct ஆகிப் போகிடக்கூடிய species-களை ஆழ்உறைநிலைக்குள் கொண்டு சென்று பத்திரப்படுத்துவதே, உயிர்ச் சங்கிலியின் ரகசியங்கள் முற்றிலுமாய் காணாது போய்விடலாகாது என்ற அவர்களது வேட்கையினில் என்று சொல்ல முனைந்துள்ளனரே ! Getting into the rights or the wrongs of that'd negate the SUSPENSION OF LOGIC that is a basic prerequisite right from Page 1 here sir !

      அந்த ஆழ்நிலைப்பனிப் பெட்டகங்கள் எதிர்பாராவிதங்களில் உருகி, உள்ளிருக்கும் அசுர விலங்கினங்கள் வெளியேறி உலவ ஆரம்பிக்கும் பொழுதினில், அவற்றை விரட்டி விரட்டி சேர்ந்தம்பட்டி ஸ்டைலில் கிடாவெட்டு செய்ய முனைவதே, நீங்கள் குறிப்பிடும் சமகாலத்து உணவுச் சங்கிலி சீரழிந்திடக் கூடாதே என்ற எண்ணத்தினாலாக இருந்திடக்கூடும் சார் !

      லாஜிக் தேடல்களை கொஞ்ச நேரத்துக்கு உறக்கம் கிடத்தி விட்டு டெக்சாஸில் உலாற்றும் அதே ஜாலியில் கென்யாவிலும் பயணித்தால் maybe the results would seem different என்பேன் ! Oh yes - கதையின் கையாளல் குறித்தோ ; கதை நகர்த்தல் குறித்தோ நான் சால்ஜாப்புகள் சொல்லவே மாட்டேன் ...வாசிக்கும் ஒவ்வொருவருக்குமான interpretation அங்கு ஒவ்வொரு விதமாய் இருத்தல் முற்றிலும் சாத்தியமே ! இது இந்த sci fi ஜானர்களுக்கான ஒரு பொதுவான defence மாத்திரமே சார் !

      And இன்றுவரைக்கும் இந்த எதிர்காலக்கதைகளை கையாள நான் தயங்குவதே இத்தகைய நெருடல்கள் நம் சிறுவட்டத்தின் ஒரு தரப்புக்கு எழுந்தாலுமே அது சுகப்படாதே என்ற எண்ணத்தினில் தான் !

      Delete
    2. ///பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப கால உயிரினங்களை மீண்டும் பாதுகாக்க நினைப்பதுவே ( அப்படித்தான் கதையில் சொல்லப்பட்டுள்ளது) இயற்கையின் அடிப்படை சுழற்சி விதிகளுக்கு முரணானது.

      ஊழிப் பெருவெள்ளத்தின் நோக்கம் ஒரு புதிய துவக்கத்துக்குத்தானே?///

      செனா அனாவுக்கே சாத்தியப்படும் வித்தியாசமான சிந்தனை!!

      Delete
  42. நேரம் கிடைக்காமல் இன்று காலை நான்கு மணிக்கு ஆரம்பித்து, கென்யா காமிக்ஸை முழுதும் படித்தேன். என்னவொரு திரில்லர். ஜுராசிக் பார்க் வந்த போது, எப்படி பல கோடி ஆண்டுகளுக்கு முன் உள்ள டைனோசார்கள் இப்போது இருக்கும் எனும் லாஜிக் ஓட்டை படத்தின் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் ஒரு டைனோசாரின் ஒரு சொட்டு ரத்தம் வைத்து, அதை மீள் உருவாக்கம் செய்தோம் என லாஜிக் ஓட்டையை அடைப்பார்கள். அதே போல் தான் கென்யா கதையும். ஓவர் பில்டப்பா இருக்கே, டைனோசார் கதை வேற, என நினைத்து ஆரம்பித்தேன். லாஜிக் இடிக்காதபடி கதையை உருவாக்கியிருக்கிறார்கள். கதையும் சுண்டி இழுக்கிறது வேகத்தில். ஓவியங்களும் அருமை. அட்டையை கூர்ந்து பார்த்தால் தெரியும் டிசைன்கள், நம் லயன் காமிக்ஸ், தரத்தில், கதை செலக்ஷனில் உலகளவில் டாப் டென்னில் வந்து விட்டதாகவே கருதலாம் (2012க்கு முன் எப்படியிருந்தோம் என நினைவு கூறவும். இது ஒரு அசுரப் பாய்ச்சல்). லயன்-முத்து போல இத்தனை வெரைட்டிகளை சினிபுக் கூட வெளியிட்டிருக்காது என்றே நினைக்கிறேன். மிக்க நன்றி ஆசிரியரே.

    வெயிட்டிங்- நமீபியா மற்றும் இதர நாடுகள் செல்வதற்கு.

    ReplyDelete
    Replies
    1. அதிகாலை ஆப்பிரிக்கப் பயணமா சார் ? சூப்பர் !!! தொந்தரவுகளற்ற அந்த வேளை இந்த tight த்ரில்லருக்கு உரம் சேர்த்திருக்கவும்கூடும் !

      Cinebook சர்வதேச ஜாம்பவான்கள் சார் ; நாமெல்லாம் 'வாடா..வாடா...என் ஏரியாவுக்கு வாடா..!!' என்று உதார் விடும் வடிவேல் ரேஞ்சிலான தாதாக்கள் மட்டுமே ! அவர்களின் வாலைத் தொட்டுப்பார்க்கவே நாமெல்லாம் இன்னும் ஒரு மாமாங்கம் பயணிக்க வேண்டியிருக்கும் சார் !

      Oh yes, 2012 to 2022 என்ற கண்ணோட்டத்தினில் நாம் நிரம்பவே ஜம்ப் பண்ணியிருப்பது வாஸ்தவமே ; இந்த இரண்டாவது இன்னிங்ஸ் பந்தியில் அமர்ந்திருப்போர் பாலகர்களல்ல என்ற புரிதல் சீக்கிரமே புலர்ந்திருந்ததால் அதற்கேற்ப சமையல்களை மாற்றிக் கொள்ள முடிந்தது சார் !

      Delete
    2. ///நம் லயன் காமிக்ஸ், தரத்தில், கதை செலக்ஷனில் உலகளவில் டாப் டென்னில் வந்து விட்டதாகவே கருதலாம் (2012க்கு முன் எப்படியிருந்தோம் என நினைவு கூறவும். இது ஒரு அசுரப் பாய்ச்சல்).///

      உண்மை உண்மை உண்மை!

      Delete
  43. வர்ண ஜாலங்களில்
    ஓர்
    காதல் யுத்தம்

    ReplyDelete
  44. **** கென்யா ****

    * கென்யாவின் இயற்கை அழகை கண்முன் நிறுத்திய சிறப்பான சித்திரங்கள்
    * பரபரப்பான கதை நகர்வு
    * ரசணையான மொழிபெயர்ப்பு
    * அசத்தலான புத்தக ஆக்கம்
    * பிரம்மிக்கச் செய்யும் UFO சமாச்சாரங்கள்
    * திகிலூட்டும் வினோத உயிரினங்கள்
    * மர்மமான நிகழ்வுகளுக்கு நியாயம் சேர்க்கும் இறுதிப் பாகம்

    நல்லவர்களா, கெட்டவர்களா என்று நான்கு பாகங்கள் வரை கணிக்க இயலாமல் அமைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள் - இது கதைக்கு பலமா, பலவீனமா என்றும் கணிக்க இயலவில்லை!

    UFO சமாச்சாரங்களில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு இதுவொரு அட்டகாசமான வாசிப்பு அனுபவத்தைத் தருமென்பது உறுதி! UFO சமாச்சாரங்களில் நம்பிக்கையில்லாதவர்களும் கூட கென்யாவின் அழகுக்காக ஒருமுறை படிக்கலாம்!

    அளவாகக் கையாளப்பட்ட sci-fi கதைகளை 'எப்போதாவது ஒன்று' என்ற வகையில் வெளியிட்டால் ரசித்துப் பிரம்மிக்கத் தடையேதும் இருக்காதுதான்!

    கென்யா - அட ங்கொன்னியா!

    9.5/10

    ReplyDelete
    Replies
    1. கடேசி பக்கத்தில், கடேசி பேனலில் ஒரு பூனையை மதில்மேல் பூனையாக அம்போவென விட்டுவிட்டு நடையைக் கட்டும் கேத்தியை மட்டும் நான் ரொம்பவே வெறுக்கிறேன்!

      Delete
    2. //ஒரு பூனையை மதில்மேல் பூனையாக அம்போவென விட்டுவிட்டு நடையைக் கட்டும் கேத்தியை மட்டும் நான் ரொம்பவே வெறுக்கிறேன்!//

      ROFL

      Delete
  45. கென்யா - மர்ம தேசம்!

    65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மீசோயிக் யுக முடிவு! டைனசர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் 80% உயிரினங்களின் பேரழவு நிகழ்ந்த காலகட்டம்.

    இந்த பேரழிவுக்கு விண்வெளிக்கல் மோதல், எரிமலை வெடிப்பு, காலநிலை மாற்றம், பெருவெள்ளம் போன்ற பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன.

    அவ்விதம் ஒரேயடியாக அழிந்துபோன விலங்குகள், இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த சமீப நாட்களில், அதாவது அனைத்து நாடுகளும் பிற நாடுகளையும் உலக நடப்புகளையும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கும் உளவாளியுக நாட்களில் அவற்றின் நடமாட்டம் திடீரென மீண்டும் வெளிப்பட்டால் அவை எவ்விதம் இந்த உலகத்தால் கையாளப்படும்?

    பிற (எதிரி) நாடுகளின் முன்னேற்றமடைந்த அறிவியல் நுட்பமாகவா?

    புதிரான அயல்கிரக வாசிகளின் ஊடுருவலாகவா?

    மரபியல் மாற்றமோ அல்லது பரிணாம வளர்ச்சியிலோ ஏற்பட்ட சிக்கலாகவா?

    எல்லாவற்றுக்கும் மேலாக இவை உருத்தெரியாமல் அழிந்து போகும் மர்மம் என்னவோ?

    பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் மட்டுமே இவை காணப்பட காரணம் என்ன?

    இவ்விதம் புதிரான புரிபடாத வினாக்களை ஆங்காங்கே எழுப்பியவாறே பயணிக்கிறது கதை.

    மேலும் விசித்திரமான விண்வெளி UFOக்கள், உருமாறும் ஏலியன்கள், விசித்திரமான விலங்குகள், ஒட்டுண்ணிகள் என சகல திசைகளிலும் கற்பனைக் குதிரை கட்டுப்பாடில்லாமல் பறந்திருக்கிறது. நல்ல கதையோட்டம்!

    அங்காங்கே கலாச்சார கருப்படிப்புகளும் நடந்துள்ளதை அறிய முடிகிறது. நன்று. இருந்தாலும் டைனோசர் புத்தகம் என குழந்தைகளிடம் வாசிக்கச் சொல்லிக் கொடுக்க முடியாது. கவனம்!

    ஒவ்வொரு சீக்வென்சையும் சரியான இடத்தில் வெட்டி ஒரு சர்ப்ரைஸ் பேக்டரை உண்டாக்கி அதன் தொடர்ச்சியை பிறிதோரிடத்தில் சொல்லும் பாங்கு வாசிப்பின் போது சுவாரஸ்யத்தைக் கூட்டுவதாக உள்ளது.

    அமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்ய உளவாளிகள் உலகம் முழுவதிலும் வியாபித்து இருந்த அந்த காலகட்டத்தை கண்முன் காட்டுகிறது.

    கேத் ஆஸ்டினுக்காக ஒவ்வொருவரும் மாறி மாறி அடித்துக் கொள்வது திரில்லர் கதையில் காமெடி டிராக்காக செல்கிறது. புன்னகைத்துக் கொண்டே வாசிக்கலாம்.

    மொழி பெயர்ப்பு நல்ல ஹாஸ்யத்துடன் அமைந்துள்ளது சிறப்பு. விரைவில் 'வேட்டையாடும் விசித்திரம்' வெளிவருமென நினைக்கிறேன்.

    ஒரு ஏலியனின் விவரிப்பாக அமைந்த கிளைமாக்ஸ்தான் கொஞ்சம் சப்பென போய்விட்டது.

    கென்யா நமது காமிக்ஸில் Sci-fi கதைகளுக்கான ஒரு திறவுகோலாக அமையுமா?

    ஒட்டுமொத்தத்தில்...

    கென்யா - கடிவாளமில்லாத கற்பனைக் குதிரை!

    ReplyDelete
    Replies
    1. ///விரைவில் 'வேட்டையாடும் விசித்திரம்' வெளிவருமென நினைக்கிறேன்.///

      ஹா ஹா ஹா! எனக்குமே அந்த நம்பிக்கை நிறையவே உண்டு! :D

      Delete
    2. அருமையான விமர்சனம்

      Delete
  46. கென்யா - சூப்பரப்பு ....

    ReplyDelete
  47. வணக்கம் 🙏வெயிட்டே இல்லாத பார்சல் வந்தது பிரித்து பார்த்தால் வேர ஒரு சைசில் வேர மாதிரி ஒரு கலரில் கென்யா!! இரண்டாவது டெக்ஸ் ! முதலில் நான் படிப்பது டெக்ஸ் மட்டுமே! இந்த தடவை ஏனோ தெரியவில்லை கென்யாவை! மிரட்டலான அட்டை மற்றும் ஓவியங்கள் மூன்று பாகங்கள் போனதே தெரியவில்லை திரில்லர்+சஸ்பென்ஸ் விதவிதமான விலங்குகள் விதவிதமான மனிதர்கள் இவர்களை கொண்டு நகர்ந்திடும் கதை பல வருடங்களுக்கு பின்னோக்கி அழைத்து சென்ற உணர்வு இன்னும் இரண்டு பாகம் உள்ளது அதையும் படித்து விட்டு வருகிறேன்!!!குறிப்பு தமிழ்காமிக்ஸ்சை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் அருமையான வாய்ப்பு!! மீண்டும் வருகிறேன்

    ReplyDelete
  48. கென்யா:
    நிஜத்திற்கும் புனைவிற்குமான இடைவெளியில் கென்யாவின் கதைக்களம் அழகாய் பயணிக்கிறது...
    ரெமிங்டன் மற்றும் சிலரின் காதல் களியாட்டங்களும்,ஆஸ்டினிடம் வழியும் சக கூட்டாளிகளின் ஜொள்ளும் கதை நகர்வுக்கு எந்த வகையிலும் உதவவில்லை,கதைக்களம் வறட்சியாக தோன்றிவிடக் கூடாது என படைப்பாளிகள் யோசித்ததன் விளைவோ என்னவோ ?!
    மிருகங்கள் தாக்குகிறதோ இல்லையோ இந்த ஜொள்ளர்களுக்குள் எங்கும் மோதல்தான்...
    நிறைய கதைப் பாத்திரங்கள் இருந்தாலும் மனசில் நச்சுனு நிக்கற மாதிரி எந்த கேரக்டரும் இல்லாதது ஒரு குறையாய் தோன்றியது...
    பூமி பந்து தோன்றியதில் இருந்து சமகாலம் வரை மனித இனத்திற்கு ஏற்பட்ட கேள்விகள் பல,அந்த கேள்விகளின் முடிச்சுகள் நிறைய அவிழ்க்கப்படாமலே உள்ளன...
    கென்யாவின் களத்திலும் நமக்கு பல கேள்விகள் எழுகின்றன,அமெரிக்கா மற்றும் இரஷ்யாவிற்கு ஏன் இந்த நிகழ்வில் அதீத ஆர்வம் என்ற கேள்வி எழுகிறது ?!
    இருநாடுகளுக்கும் இடையிலான பனிப்போரும்,அந்தந்த நாட்டின் மீதான ஸ்திரத்தன்மையற்ற நம்பகத்தன்மையும் காரணமாக இருக்கலாமோ ?!
    இல்லை,பெயரை நிலைநாட்டிக் கொள்ளும் ஆர்மமோ ?!
    இயற்கை நிகழ்வுகளை பொறுத்த மட்டில் எதுவாயினும் அதன் விதிகளை மீறினால் நிகழ்வுகள் மோசமாய் இருக்கும் என்று சொல்லப்படுவதுண்டு,அதன் தாக்கம் என்னவென்று நம் சிற்றறிவுக்கு தெரியவும் தெரியாது,புரியவும் புரியாது...
    பேரறிவுக்கு புரிந்தாலும் புரியலாம்...
    பூமியின் நிகழ்வில் அயல்கிரகத் தலையீடு சுவாரஸ்யமான லைன் தான்...
    அயல் கிரகம் சார்ந்த நிகழ்வுகளை பொறுத்த மட்டில் நிஜமோ,புனைவோ நிறைய பேருக்கு அதில் ஆர்வமுண்டு...
    இயற்பியல் ஆய்வாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங்,எழுத்தாளர் ராஜ் சிவா போன்றோரின் ஆர்வமும்,எழுத்துகளும் நமக்கு சுவராஸ்யமூட்டக் கூடியவை...
    கென்யா மிரளச் செய்கிறதோ இல்லையோ,நிறைய புதிர்களையும்,கேள்விகளையும் தொடுக்கிறது...
    அவை இயற்கையின் பிரமாண்டத்தின் முன் மண்டியிட்டு நிற்கிறது...
    கென்யா வித்தியாசமான,சுவாரஸ்யமான ஒரு பயணம்...

    எமது மதிப்பெண்கள்-8/10.

    ReplyDelete
    Replies
    1. இதழை படித்து விட்டு உங்கள் விமர்சனத்திற்கு வருகிறேன் மன்னிச்சூ..:-)

      Delete
    2. பின்றீங்க அறிவரசு ரவி!!

      Delete
  49. ஸ்டெர்ன் படித்து விட்டு ஸ்டர்ன் ஆகிட்டேன். செம செம.

    ReplyDelete
  50. இந்த முறை வந்த இதழ்கள் மூன்றுமே (ப்ளஸ் எலியப்பா ) சிறப்பாக அமைந்து உள்ளது...கென்யா ஒரு சில நண்பர்களுக்கு சித்திரத்தில் ஓரிரு பக்கங்கள் ஏதோ வரிவரியாக வந்து உள்ளதாக தெரிவித்து இருந்தபடியால் முதலில் கென்யாவையே புரட்டினேன் ..எனக்கு சரியாகவே வந்து உள்ளது எவ்வித குறைகளும் இன்றி ..( நன்றி மானிட தேவனே..:-)

    மூன்று இதழ்களின் அட்டைப்படமும் ,சித்திரதரமும் அட்டகாசமாக அமைந்து உள்ளது ..அனைத்து இதழ்களையும் வழக்கம் போல் ரசித்து விட்டு கென்யாவை முதலில் படிக்க ஆசைப்பட்டாலும் இந்த முறை டெக்ஸ் சிறியதாக இருந்த காரணத்தால் ( 114 பக்க இதழ் சிறியதா என்றெல்லாம் நகைக்க கூடாது டெக்ஸ் என்றாலே 200 + இருந்தால் தான் முழுநீள கதை எனக்கு ) முதலில் எடுத்தது "ஒரு காதல் யுத்தம் "

    அழகான முன்னட்டை படம் ,அட்டகாசமான வண்ணத்தரம் ,சூப்பரான சித்திரத்தரம் என இதழை பார்க்கும் பொழுதே அசத்தியது ...பின் கதையை தொடர்ந்தாயிற்று..வழக்கமான டெக்ஸ் டெம்ப்ளேட் அதே சமயம் அழகான பின்னோக்கிய நினைவுகளின் சாகஸ கதை என்று கதை மிக மிக விறுவிறுப்பாகவே சென்றது ..போனமுறை சிறிது ( எனக்கு ) ஏமாற்றமளித்த டெக்ஸ் இந்த முறை சிறப்பாகவே அமைந்து அட்டகாசபடுத்தி விட்டார்..கதை ஆரம்பத்திதும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை ..சிறப்பு..

    ReplyDelete
  51. ***** ஒரு காதல் யுத்தம் ****

    கலிஃபோர்னியா காட்டுப்பயணத்தில் டெக்ஸ் வழக்கம்போல தன் இரவுநேர ஃப்ளாஸ்பேக்கை ஆரம்பித்துவைக்க, டெக்ஸ் குழுவினரும் வழக்கம்போல கார்ஸன் போட்ட கடுங்காப்பியை கடித்தபடியே கதை கேட்பதில் ஆரம்பிக்கிறது இந்தக்கதை!

    அபாச்சே இனத்தைச் சேர்ந்த பேடு க்ரோ எனும் பேடு பாய் ஒரு பழைய பகையை நேர்செய்யும்பொருட்டு டெக்ஸையும் லிலித்தையும் துரத்த, சான்டா க்ரூஸ் மடாலயத்தில் நடக்கும் மோதல்களும், அதன் முடிவுமே மிச்சமீதிக் கதை!

    கதாசிரியர் நிஸ்ஸி ஊருக்குச் செல்லும் அவசரத்தில் தனக்குத் தோன்றியதை ஓவியர் சிவிடெலியிடம் "இந்தக் கதைக்கு 110 பக்கம் வராப்ல நீயே எதையாவது வரைஞ்சுக்கோப்பா. எல்லாம் உன் கையில தான் இருக்கு!" என்று சொல்லிவிட்டு ஓடியதைப்போல ரொம்பவே சுமாரான கதைக் களம்!

    ஓவியரும் இதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டிருக்கவேண்டும் - தன்னால் இயன்ற வித்தைகளைத் தன் தூரிகைகளால் காட்டி அசத்தியிருக்கிறார்! அபாரமான சித்திரங்கள் மற்றும் அசரவைக்கும் வண்ணக்கலவைகள் - பாலைவனப் பரப்புகளை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிடுவது உண்மை!

    கொடுக்கிற மொத்தக் காசும் ஓவியங்களுக்கே சரியாகப் போய்விட்டதால் கதையெல்லாம் இலவச இணைப்பு மாதிரிதான்!

    10/10 - சித்திரங்களுக்கு!
    7/10 - கதைக்கு!

    ReplyDelete
    Replies
    1. // அபாரமான சித்திரங்கள் மற்றும் அசரவைக்கும் வண்ணக்கலவைகள் - பாலைவனப் பரப்புகளை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிடுவது உண்மை!
      //
      உண்மையோ உண்மை...

      Delete
  52. ஒரு காதல் யுத்தம் :
    எடுத்தேன்,படித்தேன்,முடித்தேன்...

    எந்த திருப்பமும் இல்லாத பக்கா நேர்கோட்டுக் கதை,முடிவும் எதிர்பார்த்ததே,இருந்தாலும் வழக்கம்போல் பரபர,சுறுசுறு...

    "ஓநாய்கள் சிங்கத்தை வீழ்த்தியதாய் வரலாறே கிடையாது"
    -உண்மை தானே...

    அசத்தலான லவ் & ஆக்‌ஷன் பேக்கேஜ்..

    எமது மதிப்பெண்கள்-9/10.

    ReplyDelete
  53. நான் லயன் முத்துவின் எல்லா கதைகளும் படிக்கும் தொடர்ச்சியான வாசகர் அல்ல...!

    வித்யாசமான கதைகளை படிக்கும் ஆர்வம் உள்ளவன்.

    கென்யா கதை படித்தேன். Jurassic park படம் பார்த்தது போன்ற thrill ஆன அனுபவம் கிடைத்தது.

    ஆண்டிற்கு ஒரு முறையாவது இது போன்ற கதைகள் வர வேண்டும் என விரும்புகிறேன்.

    இந்த கதைக்கு என்னுடைய மதிப்பெண் 10/10

    அடுத்து நமீபியாவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    நன்றி !!

    ReplyDelete
    Replies
    1. ///ஆண்டிற்கு ஒரு முறையாவது இது போன்ற கதைகள் வர வேண்டும் என விரும்புகிறேன்.///

      +111

      Delete
    2. ///அடுத்து நமீபியாவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.///

      ஒரு வேகத்துல 'நமீதாவை'ன்னு படிச்சுட்டேன். ஹிஹி!

      Delete
  54. கென்யா!

    படித்த மறுநாளே மறுவாசிப்பு போயிட்டிருக்கு!

    நிச்சயமாக இந்த வார இறுதி நாம் சொர்க்கம் போன பிறகு நினைவு கூறப்படும்!

    "நீ பூமிப் பயணத்தில் என்னத்தையெல்லாம் அனுபவித்தாய்" என்று இறைவன் கேட்பாராயின் கென்யா உடனான இந்த வாரயிறுதியை நிச்சயமாக நினைவு கூறலாம்!

    மார்க் : கென்யாவிற்கும், கே.ஜி.எப்.2 விற்கும் மார்க்கெல்லாம் போட முடியாது! விலைமதிப்பற்றது! சாரி மார்க் மதிப்பற்றது!!!

    ReplyDelete
    Replies
    1. செம. குட் டு ஹியர் திஸ்

      Delete
    2. ///"நீ பூமிப் பயணத்தில் என்னத்தையெல்லாம் அனுபவித்தாய்" என்று இறைவன் கேட்பாராயின் கென்யா உடனான இந்த வாரயிறுதியை நிச்சயமாக நினைவு கூறலாம்!///

      அருமை!!

      Delete
    3. இதை விடப் பெரியதொரு பாராட்டினை சந்திக்க என்றைக்கும் சாத்தியமாகாது என்பேன் !! அற்புதமான வரிகள் !

      Delete
  55. இன்று சனிக்கிழமை பதிவுக்கிழமை ஆசிரியர் சார்.

    ReplyDelete
  56. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  57. போன மாதம் வந்த டெக்ஸ் கதையை படிக்க இன்னும் தோன்றவில்லை.

    ஒரு காதல் யுத்தம் எடுத்தேன் முடித்தேன் ஒரே மூச்சில். டெக்ஸின் நக்கல் பஞ்ச் வசனங்கள் கிடையாது ஆனால் விறுவிறுப்பாக சென்றது. ஓவியர் புகுந்து விளையாடி இருக்கிறார் அபாச்சேக்கள் உடன் ஆன மோதலில் வித்தியாசமான கோணத்தில் சண்டையை நேரில் பார்ப்பது போல வரைந்து உள்ளார். ஓவியருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    ஒரு காதல் யுத்தம் - ஓவிய யுத்தம்.

    ReplyDelete
    Replies
    1. ///ஓவியர் புகுந்து விளையாடி இருக்கிறார் அபாச்சேக்கள் உடன் ஆன மோதலில் வித்தியாசமான கோணத்தில் சண்டையை நேரில் பார்ப்பது போல வரைந்து உள்ளார்///

      உண்மை உண்மை!! ஓவியர் அசத்தியிருக்கிறார்!!

      Delete
  58. சார் இன்று முன் மாலை பதிவா? இல்லை பின்னிரவுப் பதிவா?

    ReplyDelete
    Replies
    1. பின்னிரவு சார்...

      Delete
    2. தலீவரோட பின்னிரவா அல்லது தொண்டர்களின் பின்னிரவா சார்?!!

      Delete
    3. ஆந்தை கி பின்னிரவு சார் !

      Delete
  59. Reading KENYA 25 pages at a time - finding breaks - just awesome. Should take it as wildest imagination from the Author though. Scientifically there may be bloopers given the time period and the author is a fiction writer but very very engaging read.

    As I had already said - it is more engazing in Tamil than it was in English though Cinebook sketches had less of black-blots ;-) :-p

    ReplyDelete
    Replies
    1. ///though Cinebook sketches had less of black-blots///

      ஹிஹி! எங்கிட்டே சினிபுக் இருந்திருந்தா அதுல படங்களைப் பார்த்துக்கிட்டே இதுல படிச்சிருப்பேன்! :)

      Delete
    2. ஹி..ஹி...நீங்க பிரெஞ்சு ஒரிஜினலைப் பாத்திருக்கணுமே !

      Delete
    3. சார் உங்கிகிட்டேயிருக்கும் அந்த பிரெஞ்சு ஒரிஜினலை வச்சு ஏதாச்சும் கேப்ஷன் போட்டி கீட்டி நடத்துற ஐடியா இருக்குங்களா சார்?!!

      Delete
  60. Success! Success!Success!
    KENYA. மர்ம தேசம் BIG Blog BUSTER of this Year.
    Thanks Editor Sir for bringing this kind of wonder thriller. This is what we expected for a long time. Thanks for your wonderful Invention sorry Discovery of these type of Stories.
    Through out the story a thriller Momentum was maintained for readers..
    1. Little bit of sentiment 2. Little Adult entertainment 3. A Lot of Thriller Momemtum 4. Feel Good of Jungle Safari in KENYA 5. Complete Enjoyment ...
    Suitable for all kinds of Age People...
    Expecting NAMIBIA Very Soon...Sir.
    Once Again Thanks for publishing this kinds of Stories.

    ReplyDelete
    Replies
    1. ////Expecting NAMIBIA Very Soon...Sir.
      Once Again Thanks for publishing this kinds of Stories.////

      +1

      Delete
    2. Senthil Kumar சார் நைஸ் reviews. தொடர்ந்து எழுதுங்கள் சார்.

      Delete
  61. Good Evening Sir..

    Sorry for the Late Review. Recently Read Mata Hari.
    I liked the story very well. and the Mata Hari character was portrayed very well and very important thing is your Translation was Extradinarily good to understand the story (kind of self biopic). It might not satisfy all readers but my humble request dont stop searching these kind of stories...and VARIETY is the BIG Success of LION/Muthu COMICS Group. So, we expect more varieties and Genres. So you can keep continue JUMBO for bringing these kinds of Graphic Novels Sir. Interested can opt for Subscription.
    Always we obliged to thank you for your continuous effort to identify and shortlist of wonderful stories for READERS.
    Cheers Edi Sir.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா..மாட்டா மம்மிக்கும் சிலாகிப்பா ?

      யார் சார் நீங்க ? எனக்கே உங்கள பாக்கணும் போலிருக்கே !

      Delete
    2. Jokes apart, thanks for the kind words sir ! Privileged !

      Delete
    3. Sir,

      I also liked Mata Hari - read recently. Perhaps you have undersold it yourselves sir.

      Delete
  62. ஜம்போவை இந்த வருடம் நிறுத்தியதும் வருந்தியது இதற்கு தான் சார். ரெகுலர் தடங்கள் பெரிய வெரைட்டி இல்லை ஆனால் இது தான் புத்துயிர் தருவது போல இருந்தது வாசிப்பாளர்களுக்கு. பார்த்து செய்யுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. கை கொடுங்கள் கிருஷ்ணா. இது தான் எனது கருத்தும்

      Delete
  63. ***** மேற்கே இது மெய்யடா! ******

    நான் சமீபகாலங்களில் வாசித்தவற்றுள் என்னை ரொம்பவே பாதித்ததென்றால் அது இதுதான்!

    படைப்பாளிகளின் திசையை நோக்கி எழுந்துநின்று சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்!

    ஒரு 70 பக்க படைப்பொன்று எத்தனைவிதமான உணர்வுகளை, அனுபவங்களை அள்ளி வீசுகிறது! இதுதான் உண்மையான வாசிப்பு அனுபவமோ?!!

    இக்கதையின் பாத்திரப்படைப்புகள் எல்லாமே கதாசிரியராலும், ஓவியராலும் உயிர்பெற்ற உருவங்களாக நம்முன் உலவித்திரிவதைப்போல உணரமுடிகிறது! ஒவ்வொரு கதாபாத்திரமும் தம் பாத்திரப்படைப்பை அநியாயத்துக்கு நியாயப்படுத்துகிறது! அதுவே கதைக்கு மிகப்பெரிய வலு சேர்க்கிறது!!

    இன்னொன்றைக் குறிப்பிடாவிட்டால் எனக்கு சொர்க்கம் கிட்டாதுபோக வாய்ப்பிருக்கிறது - வசனங்கள்!!! ரொம்பவே இயல்பான வசனங்கள் கதாபாத்திரங்களின் தனித்துவத்தை அப்படியே பிரதிபலிக்கிறது - ஆச்சரியப்படுத்துகிறது - கிச்சுகிச்சு மூட்டுகிறது - மனதை வருடுகிறது. ரொம்பவே ரசித்து ரசித்து எழுதிய எடிட்டரின் கரங்களுக்கு ஒரு மானசீகப் பூங்கொத்து! நாளுக்கு நாள் உங்கள் ரசணையும், ஆற்றலும் கூடிக் கொண்டே போகிறது எடிட்டர் சார்!

    'கூன் விழுந்த ஒல்லிப்பிச்சான் உடம்பு, பரட்டைத் தலை, வெட்டியான் வேலை - ம்ஹூம் இந்த ஹீரோல்லாம் நம்ம தமிழ் ரசிகர்களுக்கு சரிப்பட்டு வரமாட்டான்' என்று எடிட்டர் நினைத்திருப்பாரேயானால் இப்படிப்பட்ட வாசிப்பு அனுபவத்தை நிச்சயம் இழந்திருப்போம்! எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், உங்களின் தேடல்களுக்கும் நன்றிகள் கோடி, எடிட்டர் சார்!!

    10/10

    ReplyDelete
    Replies
    1. // நாளுக்கு நாள் உங்கள் ரசணையும், ஆற்றலும் கூடிக் கொண்டே போகிறது எடிட்டர் சார்! // சத்தியமாக உண்மை

      Delete
    2. அருமையான விமர்சனம்...

      Delete
  64. உங்கவூர்ல இதானா சார் 'பின்னிரவு'?!! கோழி கூவ இன்னும் கொஞ்சூண்டு நேரம் தான் பாக்கியிருக்கு!!

    ReplyDelete
  65. இன்னும் பதிவு வரலையா???

    ReplyDelete
  66. கூவுன கோழி கோலம்புல கொதிக்குது....

    ReplyDelete
  67. கென்யா எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யவில்லை....

    ReplyDelete