Powered By Blogger

Saturday, June 18, 2022

ஜூலையினை எதிர்நோக்கி...!

 நண்பர்களே,

வணக்கம். 'ஜூன் போனால்.... ஜூலை காற்றே,,' என்ற பாட்டு தான் மண்டைக்குள் ஒலிக்கிறது - ஜூலை மாதத்துக்கும், லயனின் ஆண்டுமலருக்கும் நாம் தயாராகி வரும் இந்த நொடியினில் ! இளவரசியோடு இரண்டு ரூபாய்க்கான லயனின் முதல் இதழை ஏந்தியபடிக்கே தெற்கேயும், வடக்கேயும் குட்டி போட்ட பூனையாட்டம் நான் சுற்றி வந்து வருஷங்கள் 38 ஆச்சு !! "கிழிஞ்சது போ.......ஆரம்பிச்சுட்டாண்டா புராணத்தை !!" என்ற மைண்ட்வாய்ஸ்கள் ஆங்காங்கே அலாரமடிக்கத் துவங்கியிருப்பின், பயப்படேல் guys ; இது தம்மாத்துண்டு  fleeting மொக்கை மட்டுமே !

நேற்றுப் போலுள்ளது - "கத்திமுனையில் மாடஸ்டி" என்ற  அரைப்பக்க விளம்பரத்தை  கல்கண்டு வாரயிதழினில்  போடும் பொருட்டு,  ரூ.1800-ஐப்  புரட்ட குட்டிக்கரணம் அடித்த அந்த நாட்கள் ! மதுரையில் 'கல்பனா அட்வர்டைசிங்' என்றதொரு குட்டியூண்டு விளம்பர ஏஜென்சி மூலமாய் அந்த விளம்பரத்தை அனுப்புவதாக இருந்தோம் ; so விளம்பரத்துக்கான பாசிடிவைத் தூக்கிக் கொண்டு மதுரைக்கு பஸ் ஏறியிருந்தேன் ! அவர்களது ஆபீசுக்கு போகும் போதோ பாக்கெட்டுக்குள் இருந்தது ரூ.1700 தான் ! ஊர் திரும்ப பஸ்ஸுக்கு பத்தோ, இருபதோ ரூபாய்கள் தேவை ! ரவுண்டாக 50 ரூபாயை கையில் வைத்துக் கொண்டு, அவர்களிடம் திக்கித் திக்கி, 150 ரூபாய் கடன் சொல்லிய கையோடு, தெற்கு மாசி வீதியில் ஒரு ஜிகர்தண்டாவைப் போட்டுப்புட்டு, மதுரை இஸ்பெஷலான தென்னங்குருத்தை வாங்கித் தின்னப்படிக்கே பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்த நாட்களை இன்றைக்கு நினைவு கூர்ந்தால் - சட்டித்தலையன் ஆர்ச்சியிடம் கால இயந்திரத்தை இரவல் வாங்கிக் கொண்டு ரிவர்ஸ் கியர் போடும் ஆசை அலையடிக்கிறது !!

அன்றைக்குத் தான் நமது திட்டமிடலில் எத்தனை சுலபத்தன்மை குடிகொண்டிருந்தது ?!! 

 • Black & white தான் நடப்பே  !
 • நியூஸ்பிரிண்ட் பேப்பர் போதும் !
 • ஆக்ஷன் / டிடெக்டிவ் / பிரிட்டிஷ் சூப்பர் ஹீரோ  கதைகள் மட்டுமே தான் நமது ராடார்களில் !
 • சின்ன விலைகள் ; நிறைந்த சர்குலேஷன் !
 • ஒரு நேர்கோட்டுக் கதைக்களம் ; நாலு fight ; ஆறு சேஸ் என்றிருந்தாலே ஏகமாய் மகிழ்ந்திருக்கும் mindset ! 
 • தானைத் தலைவர் ஸ்பைடரைப் பார்த்த நொடியில் சில்லறையைச் சிதற விடும் காதல்  !!

என்று (காமிக்ஸ்) வாழ்க்கை தான் என்ன மெரி ஒரு சுலபமாய் அந்நாட்களில் இருந்து வந்தது ?!! 

 • சீனாக்காரர்களின் புண்ணியத்தில் புளியம்கொம்பில் குந்தியிருக்கும் ஆர்ட் பேப்பர்களைத் தேடிடும் காவடிகள் அவசியமில்லை அன்றைக்கு ! 
 • 'அ.நா. ; ஆ.வன்னா ; கி.நா' - என்றெல்லாம் படிக்கும் அவசியங்கள்  பள்ளிக்கூடப்  பசங்களுக்கு மாத்திரமே இருந்தது அப்போது  ! 
 • அடுத்த மாசத்துக்கான கதையை நடப்பு மாசத்தின் 15-ம் தேதிக்கு மேலாய் வரவழைத்தாலுமே, "அட...ஜாவகாஜமாய் போட்டுக்கலாம் !!" என்ற பயமின்மை இருந்தது - புளியங்குச்சிகளோடு நிற்கும் வயசுகள் உங்களுக்கு அன்றில்லை என்ற  தைரியத்தினில் ! 
 • "அடுத்த வெளியீடா ? ஆங்க்க்க்க்..இந்த மாசம் ஆர்ச்சின்னா...அடுத்த மாசம் ஸ்பைடர்...மறு மாசம் இயவரசி.." என்று சிம்பிளாய் முடிச்சுக்கும் திட்டமிடல்கள் அப்போது ஓ.கே. !!
 • நமது கூர்மண்டைத்   தலைவர் அந்நாட்களில் சிரசாசன SMS அனுப்பினாலும், என்னைக் கட்டி வைத்து உதைக்க கோணிமூட்டைகளை தேடாது, ஜென்ம சாபல்ய சந்தோஷம் காண்பது சாத்தியப்பட்டது ! 
 • ஆயிரம் அளவுகோல்களைத் தாண்டிடும் அபூர்வ சீவக சிந்தாமணிகளாய் ஒவ்வொரு படைப்பும் அமைந்திட வேண்டிய அவசியங்கள் நஹி  !  அவற்றை அங்குலம் அங்குலமாய் அலசிடும்  பொதுவெளிகளும் லேது ! So 'ஜிலோ'வென்று கப்பல்களைப் பந்தாடும் சட்டித்தலையனும், நியூயார்க்குக்கு ரிவிட் அடித்து தண்ணீருக்கடியில் கட்டி இழுத்துப் போகும் ஸ்பைடரும் அசால்ட்டாய்க் கோலோச்சிய தினங்கள் possible !! 

Phewwwwwwww !! "பழைய நெனப்புடா பேராண்டி...!" என்ற ரீதியில் நான் இங்கு புலம்புவதற்கு ஒரு மினி காரணம் உண்டு guys ;  கடந்துள்ள பத்து நாட்களாய், ஜூலை பணிகளைக் கூட சற்றே ஓரம்கட்டி விட்டு, விடிய, விடிய நான் மொக்கை போட்டு வந்திருப்பது நமது 2023 அட்டவணையின் திட்டமிடலின் இறுதிக்கட்டத்தோடே !! 

 • 'காத்திருப்பது 'தல'யின் 75-வது ஆண்டு ; அழகாய் ஏதேனும் செய்தாகணுமே ! என்ற குடைச்சல் !
 • 'தல' பட்ஜெட் என்ன மாதிரி இருந்தாகணும் - without being an overkill ? என்ற மண்டை சொறியல் !
 • "பாலைவனத்தில் பிணம்தின்னிகள்" போன்ற கார ஆந்திரா மீல்ஸாய் மட்டுமேவும் இருக்க கூடாது ; "விடாது வஞ்சம்" போன்ற கனமான பிரியாணியாகவும் இருக்கப்படாதே !! என்ற டெக்ஸ் கதைத் தேர்வின் இடியாப்பங்கள் !
 • 'கி.நா.' சாப்டர் கொஞ்ச காலத்துக்கு மூடப்பட்டதாகவே இருக்கணுமா - வாணாமா ?' என்ற கேள்வி !
 • 'புதுசாய் யாரையாச்சும் உள்ளாற புடிச்சு இழுத்திட்டு வரணுமே - அட்டவனைக்கொரு 'கிக்' ஏற்றிட !!' என்ற ஆதங்கம் !
 • 'ஸ்டெர்ன் உள்ளே....யார் வெளியே ?' என்ற ரோசனை !
 • 'பட்ஜெட் உதைக்குதே !...புக் எண்ணிக்கையைக் கம்மி பண்ணிப்பதா ? அல்லது கொஞ்சமேட்டும் சந்தாத் தொகைகளை ஏத்திக்கலாமா ? என்ற question !!
 • 'கென்யா' திறந்து விட்டிருக்கும் கதவினை பயன்படுத்திப் புதுசாய் இந்த அட்வென்ச்சர் ஜானருக்கும் முக்கியத்துவம் தரணுமா ?' என்ற சிந்தனை !
 • அத்தகைய கதவினைத் திறந்திடும் பட்சங்களில் இராட்சஸ மிருகங்கள் மாத்திரமன்றி, பட்ஜெட் எகிறும் சாத்தியங்களும் உள்ளே புகுந்திடுமே ! என்ற நெருடல் !

இதெல்லாம் இப்போது பழகிப் போய்விட்டுள்ளதொரு வருடாந்திரச்  சமாச்சாரமாகி விட்டது தான் ; ஆனால் ஆண்டுமலரின் சாக்கில் கொஞ்சமே கொஞ்சமாய் நோஸ்டால்ஜியாவுடன், துவக்க நாட்களை நினைத்துப் பார்த்த போது பெருமூச்சு விடாது இருக்க இயலவில்லை ! ஓராண்டின் அட்டவணையினை 'ஏக் தம்'மில் வெளியிடும் அவசியங்கள் இல்லாது, take it as it comes என்று ஜாலியாய் இதழ்களை on the go திட்டமிட்டு, சஸ்பென்சாய் வெளியிட்டால் எவ்விதமிருக்கும் ? என்றதொரு பகற்கனவே மேலுள்ள பத்திகளில் பிரதிபலித்துள்ளன ! Maybe இன்னுமொரு பத்தாண்டுகளுக்கு நமது நம்பகத்தன்மைகளையும், கதைத் தேர்வில் பாண்டித்துவதையும் வளர்த்துக் கொண்டான பிற்பாடு அது சாத்தியமாகிடுமோ - என்னவோ ! இந்த நொடிக்கோ, தற்சமயத்து நடப்பே சுகப்படுமென்று படுகிறது & in any case இந்த "கம்பி மேலே நடக்குது ஷாமியோவ் !!" என்ற வித்தை காட்டும் படலத்திலும் செம த்ரில் இல்லாதில்லை ! திட்டமிடலிலும், தேர்வுகளிலும் ஜெயம் நாடி, கஜினி முகமது போல திரும்பத் திரும்பப் படையெடுப்பதும் ஒரு வருடாந்திரப் பரீட்சை போலவே நெஞ்சைப் படபடக்கச் செய்யத் தவறுவதில்லை ! So புலம்பிக்கொண்டே தேடல்களுக்குள் இன்னும் ஒரு மீட்டர் உள்ளே புகுந்திடவே விழைவேன் ! 

Anyways காத்திருக்கும் ஆண்டின் 'தல 75'  சார்ந்த எல்லா இதழ்களும் தேர்வாகியாச்சு & திட்டமிடலும் இறுதி வடிவம் பெற்றாச்சு ! ஆனால் 2023 புலரும் போது, போனெல்லி ஏதேனும் அதிரடியாய் அறிவித்து, கட்டைவிரலைத் தொண்டைக்குள் செருகிக் கொள்ளும் முனைப்பை நமக்கு செமத்தியாய் மேலோங்கச் செய்தார்களெனில், நிச்சயமாய் இறுதி நிமிட மாற்றங்கள் - டெக்ஸ் கதைகளில் மட்டும் இருக்கலாம் ! But இந்த நொடிக்கு இத்தாலிய சந்தா all set ! And இங்கே தான் உங்களின் பங்களிப்பு அவசியமாகிடுகிறது !! செப்டெம்பர் 30,1948 தான் டெக்ஸ் உலகைப் பார்த்த பொழுது ! So சரியாக அந்த தினத்தினில் அவரது 75th பிறந்த நாள்மலரை நாம் வெளியிட வேண்டுமென்று எண்ணியுள்ளேன் ! அந்த ஸ்பெஷல் இதழுக்கு ஒரு ஸ்பெஷல் தலைப்பு சூட்டுங்களேன் - ப்ளீஸ் ! இந்த முறை நான் இந்த ஆட்டத்துக்கு வரவே போவதில்லை ; நடுவராய்க் குந்திக்கொண்டு மட்டுமே இருக்கவுள்ளேன் ! So நீங்கள் முன்மொழியும் பெயர்களில் ஏதேனும் best ஆனதைத் தேர்வு செய்வது மட்டுமே எனது வேலையாக இருந்திடும் ! தேர்வாகிடும் தலைப்பினை முன்மொழியும் நண்பருக்கு அந்த ஸ்பெஷல் இதழ் மாத்திரமன்றி, அடுத்த ஆண்டினில் லயன் லைப்ரரியில் வரக்கூடிய டெக்ஸ் மறுபதிப்புகளுமே நமது அன்புடன் விலையின்றி அனுப்பிடப்படும் ! (ஒரேயொரு கோவையில் உள்ள ஒரேயொரு இரும்புக்கவிஞருக்கு, போட்டியினில் இடம்பெறாமலே இந்தப் பரிசுகளைத் தந்து விடலாமென்று இருக்கிறேன் ; so கவிஞரே - மற்ற புள்ளீங்கோ பிழைச்சுப் போகட்டும் !!)  

சரி, ரைட்டு - நடப்புப் பொழுதுகளை பார்க்கலாமா இனி ? இதோ - காத்திருக்கும் 38-வது ஆண்டுமலரின் அட்டைப்பட முதற்பார்வை : 

முன் + பின் அட்டைகளும் ஒரிஜினல்களே ; நமது டிசைனர் கோகிலாவின் மெருகூட்டலில் ! இது ஹார்ட் கவர் இதழல்ல என்பதை இங்கே நினைவூட்டி விடுகிறேன் guys ; புக் வெளியான பிற்பாடு "ஏமாத்திப்புட்டே மாமே !!" என்ற விசனங்களுக்கு பதில் சொல்ல 'தம்' லேது என்பதால் ! எப்போதும் போலவே அந்த கேக் முன்னான சிங்கத்துக்கும் அட்டைப்படத்தினில் இடம் ஒதுக்கியுள்ளோம் ! And இதோ - 2 சாகஸங்களிலிருந்தும் தலா ஒரு பக்க டிரெய்லர்கள் :

"புத்தம் புது சிறையொன்று வேண்டும்" 

"நில்..கவனி...சிரி..!"

இன்னமும் எத்தனை ரகம் ரகமாய்க் கதைகளைப் பார்த்தாலுமே, எத்தனைக்குப் பேனா பிடித்தாலுமே - கார்ட்டூன்களுக்குள் உலவிடும் மனநிறைவு சத்தியமாய் வேறெதிலும் கிட்டுவதில்லை ! ஒரேயொரு வருஷம் மட்டும் முழுக்க முழுக்க கார்டூன்களோடே காலம் தள்ளலாமென்ற ஒரு வரம் மட்டும் கிடைத்தால்.....ஆகா...ஆகக்கா...' இன்னா மாரி இருக்கும் !!! 

போன மாசம் டெக்ஸ் பெயரைச் சொல்லி அந்த ஓ.கே. Corral துப்பாக்கி சண்டையினை revisit செய்திருந்தோம் என்றால், இம்மாதம் லக்கியின் உபயத்தில் அதே மோதலை ஒரு சிரிப்புப் பார்வையில் ரசித்திடவுள்ளோம் - நில்..கவனி...சிரி..!  ஆல்பத்தின் வாயிலாக ! And "புத்தம் புது சிறையொன்று வேண்டும்" வழக்கம் போல டால்டன்களின் ரவுசுகளால் தெறித்திடும் ஜாலி மேளா ! Don't miss them folks !!

இந்த வாரத்தின் நடுவே சத்தமின்றி வெளிவந்த குட்டீஸ் காமிக்ஸ் (பீன்ஸ்கொடியில் ஜாக்) உங்களின் கவனங்களை இன்னும் பெரிதாய் ஈர்க்கவில்லை என்பது அதன் துக்ளியூண்டுச் சந்தா எண்ணிக்கைகளிலேயே புரிகிறது ! விற்பனையில் சாதிக்கிறதோ இல்லையோ - வாசிப்புக்குப் புதியவர்களான குட்டீஸ்களை கொஞ்சமே கொஞ்சமாய் ஈர்த்திட்டாலும் எனக்கது போதும் தான் ! And தனது 8 வயது மகள் இந்தக் கதையினை வீட்டிலுள்ளோருக்குச் சொல்லும் வீடியோவை எனக்கும் பகிர்ந்திருந்தார் நண்பர் ஒருவர் ; அந்த அழகான கீச்சுக் குரலில் அந்தக் கதையைக் கேட்கும் போது சத்தியமாய் ஏதோ சாதித்த உணர்வு உள்ளுக்குள் ! நீங்கள் எதையெதையோ சிலாகிக்கும் போதெல்லாம் மண்டைக்குள் 'ஜில்லென்று' இருக்கும் தான் ; but அடுத்த நொடிக்கு மேல் அது தலைக்குள் தங்கிடாது  ! ஆனால் மழலைகளின் பார்வைகளில், நமது இந்தக் "கதை சொல்லும் காமிக்ஸ்" பணி சின்னதாயொரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது எனக்கு ஏகமாய் மனநிறைவை தருகிறது !! கையைக் கடித்தாலும் பரவாயில்லை - இந்த முயற்சியினைக் கைவிடக்கூடாதென்ற அவாவே மேலோங்குகிறது ! புனித மனிடோ கைகொடுப்பாராக !!

Before I sign out, துவங்கிடவுள்ள புத்தக விழாக்களின் circuit பற்றி கொஞ்சமாய் :

1 காத்திருக்கும் 24 ஜூன் முதலாய் தர்மபுரியில் துவங்கிடவுள்ள புத்தக விழாவிற்கு மெய்யாகவே செம அழகான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர் விழா ஏற்பாட்டுக் குழுவினர் ! தினமும் whatsapp குழுவினில் கிடைத்து வரும் தகவல்களும், போட்டோக்களும் அதற்குக் கட்டியம் கூறுகின்றன ! நமக்கு இந்தப் பகுதிகளில் சுத்தமாய் விற்பனைப் பரிச்சயங்களே நஹி எனும் போது, இந்த மாவட்டத்தோடு பழகிப் பார்க்க ரொம்பவே ஆர்வமாய்க் காத்துள்ளோம் ! அந்தப் பகுதிகளில் நண்பர்கள் யாரேனும் உள்ளனரா ? Just curious !!

2 தர்மபுரிக்கு அடுத்ததாய் ஓசூர் !

3 அதனைத் தொடர்ந்து கோவை !

4 அதன் பிற்பாடு ஈரோடு !! 

ஈரோட்டில் இம்முறை புத்தக விழா புதியதொரு இலக்கில் என்பதால்,   நமது வாசக சந்திப்பை எங்கு வைத்துக் கொள்வதென்ற கேள்வி ஓடிடுகிறது ! 

 • புது இடத்திற்கு அருகிலுள்ள சின்ன மண்டபங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்வதா ? 
 • அல்லது வழக்கம் போலவே LE JARDIN ஹோட்டலின் பேஸ்மெண்ட் பக்கமாய் ஒதுங்குவதா ? 

பழைய இடமேவா ? குட்டியான மண்டபமா ? குளுகுளு மரத்தடியா ?  Your thoughts ப்ளீஸ் ? 

அந்த ஆகஸ்ட் 6 தேதிக்கு ஈரோட்டில் ஆஜராக உங்களில் எத்தனை பேருக்கு வசதிப்படுமென்ற கணக்கிற்கேற்ப திட்டமிடலை இறுதிப்படுத்திடலாம் என்று தோன்றுகிறது ! 

Bye all...see you around ! Have a fun weekend !

330 comments:

 1. இரண்டாப்பு 😁😃

  ReplyDelete
 2. லக்கி தெறிக்க விடுகிறார்..

  ReplyDelete
 3. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏🙏

  ReplyDelete
 4. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. ஈரோட்டுக்கு ஒரு டிக்கெட் சாரே...
  எனக்கு 😇😍

  ReplyDelete
 7. டெக்ஸ் வைர விழா மலர்

  ReplyDelete
 8. என்ன தான் இப்போது பலவிதமான கதைகளை "ஆர்ட் பேப்பர்ல, கலர்ல படிச்சாலும்..."
  அந்த பள்ளி பருவத்தில் வந்த (ஸ்பைடர், ஆர்ச்சி, மாயாவி, இத்யாதி கதைகளை) படிச்ச காலத்தின் இனிய நினைவுகள் (தருணங்கள்) போல இப்போது எல்லாம் இல்லை என்பதே நிதர்சனம் 😤😤😇😇

  ReplyDelete
 9. * Tex Diamond Jubilee Special
  * டெக்ஸ் வைர விழா மலர்
  * Tex Diamond Special
  * Tex Forever Diamond Special
  * Tex 75 Not Out Special

  ReplyDelete
 10. ஆஹா...வந்துட்டேன்....

  ReplyDelete
 11. சார் இந்த ஒரு முறை எந்தெந்த நாயகர் தலைகாட்டுகிறார் என்பதை அறிவித்து விட்டு இதழ்களை ஏதும் அறிவிக்காமல் அன்று போல் சஸ்பென்ஸ் ஆக வெளியிட்டால் எப்படி இருக்கும்..அன்று போல் அடுத்த வெளியீடு விளம்பரங்களுக்காகவே குஷி பறந்தோடி வருமே..:-)

  ReplyDelete
 12. So நீங்கள் முன்மொழியும் பெயர்களில் ஏதேனும் best ஆனதைத் தேர்வு செய்வது மட்டுமே எனது வேலையாக இருந்திடும் ! தேர்வாகிடும் தலைப்பினை முன்மொழியும் நண்பருக்கு அந்த ஸ்பெஷல் இதழ் மாத்திரமன்றி, அடுத்த ஆண்டினில் லயன் லைப்ரரியில் வரக்கூடிய டெக்ஸ் மறுபதிப்புகளுமே நமது அன்புடன் விலையின்றி அனுப்பிடப்படும்

  ####  சொக்காகாஆஆஆஆஆஆஆஆஆ

  ReplyDelete
 13. திக்கெட்டும் டெக்ஸ் (75 வருட சிறப்பிதழ்)

  ReplyDelete
 14. TEX NEVER EVER BEFORE SPECIAL 75th YEAR

  ReplyDelete
  Replies
  1. ஒரு 3 கலர் டெக்ஸ் தொகுப்பு + 3 கருப்பு வெள்ளை தொகுப்பு 🤤🤤😋😋

   Delete
 15. //ஆனால் 2023 புலரும் போது, போனெல்லி ஏதேனும் அதிரடியாய் அறிவித்து, கட்டைவிரலைத் தொண்டைக்குள் செருகிக் கொள்ளும் முனைப்பை நமக்கு செமத்தியாய் மேலோங்கச் செய்தார்களெனில், நிச்சயமாய் இறுதி நிமிட மாற்றங்கள் - டெக்ஸ் கதைகளில் மட்டும் இருக்கலாம்//

  நாங்களும் பெர்சா சிவகாசி 100000 வாலா சரம் போல எதிர் பார்க்கிறோம் சாரே

  ஏமாத்திப் புடாதிங்க குழந்த பசங்கல 😇😍😍😇

  ReplyDelete
 16. Replies
  1. DTDC-ன்னு வர்ற மாதிரி பேர் வச்சீங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும்ல? ;)

   Delete
  2. DYNAMITE TEX SPECIAL (DTS)
   DYNAMIC TEX SPECIAL (DTS)

   Delete
  3. ஒரே DTS எபெக்டா இருக்கே...

   Delete
 17. டெக்ஸ் டயமண்ட் ஸ்பெசல்...

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. * ஆண்டு மலர் அட்டைப்படம் அட்டகாசம்! கதைத் தேர்வுகள் பட்டையைக் கிளப்பப் போவது உறுதி!!

  * பீன்ஸ் கொடியில் ஜாக் - சற்றே லேட் பிக்அப் ஆகி சீக்கிரமே 'தேடப்படும்' இதழாகிடும்!

  * தர்மபுரி புத்தகத் திருவிழா அமைப்பாளர்களின் ஆர்வம் அவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தேடித்தரும். நமக்கு சில தொலைந்து போன காமிக்ஸ் ரசிகர்கள் திரும்பக் கிடைப்பார்கள்!

  * போட்டியில் பங்கு கொள்ளமலேயே இரும்பு தெய்வத்திற்கு பரிசு கிடைத்திருக்கும் அநியாயங்கள் எல்லாம் வரலாற்றில் பொறிக்கப்படும்!

  * EBFக்கு வருகை தரும் வெளியூர் நண்பர்களின் நலனை (மற்றும் தங்கும் விடுதிகளின் அருகாமையை) கருத்தில் கொண்டு பஸ்-ஸ்டாண்டு அருகிலுள்ள; ஏற்கனவே பழக்கப்பட்ட இடத்திலேயே வாசகர் சந்திப்பை வைத்துக் கொள்வதே சிறப்பாக இருந்திடும்!

  மியாவ் மியாவ்!

  ReplyDelete
  Replies
  1. // EBFக்கு வருகை தரும் வெளியூர் நண்பர்களின் நலனை (மற்றும் தங்கும் விடுதிகளின் அருகாமையை) கருத்தில் கொண்டு பஸ்-ஸ்டாண்டு அருகிலுள்ள; ஏற்கனவே பழக்கப்பட்ட இடத்திலேயே வாசகர் சந்திப்பை வைத்துக் கொள்வதே சிறப்பாக இருந்திடும்! //

   எனது எண்ணமும் இதுவே.

   Delete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. // விடாது வஞ்சம் //

  கடந்த மாதம் வந்த கதையை நேற்று தான் படிக்க தோன்றியது. ஆரம்பத்தில் கதை தள்ளாடியபடி ஆரம்பித்தது ஆனால் நாம் தள்ளாடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு கதை துப்பறியும் திசையில் பயணிக்க ஆரம்பித்த உடன் சுவாரசியமாக்கியது. கடைசி வரை கொலைகாரன் யார் என்ற சஸ்பென்ஸ் உடன் சென்ற கதை நம்மை கட்டிப் போட்டது. ஆனால் புலன்விசாரணை என்ற பெயரில் உள்ள நிறைய வசனங்கள் கதையின் வேகத்தை ஆங்காங்கே குறைத்தது.

  வழக்கமான டெக்ஸ் கதையில் இருந்து மிகவும் மாறுபட்ட கதை.

  டெக்ஸ் எப்படி புதையலுக்காக இந்த கொலைகள் நடக்கலாம் என ஆரம்பத்திலேயே கவனித்தார்?

  புதையலை தேடி செல்லும் அந்த பெண்களுக்கு புதையல் கிடைத்ததா? இதன் தொடர்ச்சி கதையாக உள்ளதா?

  பல கேடிகளை தாளம் பாடி உண்மையை வரவைக்கும் டெக்ஸ் மற்றும் கார்சன் அந்த டாக்டரிடம் உள்ள ரகசியங்களை வெளிக்கொண்டு வர முயற்சிக்காதது ஏன்?

  விடாது வஞ்சம் - கிராபிக்ஸ் நாவல்:-)

  ReplyDelete
 22. அதிகாரி வயிர சிறப்பிதழ்

  ReplyDelete
  Replies
  1. ஆயாசம் தரா பாயாசம் ஸ்பெஷல்?

   Delete
  2. அதிரடி வாலா ஸ்பெசல்

   Delete
  3. அண்டாவில் பாயாசம் அதிரடி ஸ்பெஷல்...

   Delete
 23. ஹைய்யா புதிய பதிவு.....

  ReplyDelete
 24. Platinum Star TeX Special
  TeX the Diamond Special

  ReplyDelete
 25. கோடவுன் தங்கா கோமகன் ஸ்பெஷல்? :)

  இதே டைட்டிலை டைகர் கதைகளுக்கு வைத்தால் - 'தங்கா'வுக்கு பதிலாக 'தாங்கா'! ;)

  ReplyDelete
 26. எனது தேர்வுகள்
  Tex Diamond birthday special
  TEX DIAMOND SPECIAL
  TEX DIAMOND DELIGHT SPECIAL
  Tex sensational September special
  Diamond jubilee special
  TEX TURNING DIAMOND SPECIAL
  TEX TREMENDOUS SPECIAL

  ReplyDelete
  Replies
  1. Diamond Destination Special
   Tex in DESTINATION DIAMOND SPECIAL

   Delete
 27. // தெற்கு மாசி வீதியில் ஒரு ஜிகர்தண்டாவைப் போட்டுப்புட்டு, மதுரை இஸ்பெஷலான தென்னங்குருத்தை வாங்கித் தின்னப்படிக்கே பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்த நாட்களை இன்றைக்கு நினைவு கூர்ந்தால் - //
  ஜிகர்தண்டா சாப்பிட்டு பார்த்தாச்சி,தென்னங்குருத்தா அதென்ன சார் புது ஐட்டமா இருக்கு...!!!

  ReplyDelete
 28. // பட்ஜெட் உதைக்குதே !...புக் எண்ணிக்கையைக் கம்மி பண்ணிப்பதா ? அல்லது கொஞ்சமேட்டும் சந்தாத் தொகைகளை ஏத்திக்கலாமா ? என்ற question !! //
  புக் எண்ணிக்கையை குறைப்பதா வேண்டவே வேண்டாம் சார், சந்தா தொகையை வேணும்னா ஏத்திக்குங்க...

  ReplyDelete
 29. தி டைனமட் ஹீரோ -75

  ReplyDelete
  Replies
  1. 70 ஸ்பெஷலுக்கே டைனமைட் ஸ்பெஷல்னு பேர் வெச்சாச்சிபா...!!!

   Delete
 30. Replies
  1. இது இரும்பு மண்டையனுக்கும் .. இஸ்பைடர்க்கும் போட்டாச்சு கொளப்பம் ஏற்படும்

   Delete
 31. Edi sir..
  Saturday evening வணக்கங்கள்.

  ReplyDelete
 32. Arivarasu @ Ravi21 May 2022 at 20:10:00 GMT+5:30

  // 3 .காத்திருப்பது 'தல' டெக்சின் 75-வது பிறந்தநாள் ஆண்டென்பதை நாமறிவோம் ! அதற்கென சிறப்பு சேர்க்க உங்களின் ஒற்றை 'அகுடியா' என்னவாக இருக்கும் ? //
  டெக்ஸ் 70 ஸ்பெஷலிற்கு சவால் விடும் அளவிற்கு டெக்ஸ் 75 ஸ்பெஷல் ஒன்று மெகா குண்டு ஸ்பெஷலாக முழுவதும் வண்ணத்தில் 750 பக்கங்களில்...
  70 ஸ்பெஷலிற்கு டைனமைட் ஸ்பெஷல்னு பெயர் வெச்ச மாதிரி,75 ஸ்பெஷலிற்கு டெக்ஸ் சூப்பர் ஸ்பெஷல் (TSS),டெக்ஸ் ஜெயிண்ட் ஸ்பெஷல் (TGS) அப்படின்னு ஏதாவது ஒரு பேர் வெச்சிடுவோம்...
  மத்தபடி முடிஞ்சா மாதம் இரண்டு டெக்ஸ் ஒன்று வண்ணத்தில்,மற்றொன்று க&வெ யில்...
  இல்லன்னா மாதம் ஒன்று கலரில் 3 மாதத்திற்கு ஒரு முறை டெக்ஸ் குண்டு ஸ்பெஷல்...

  ReplyDelete
  Replies
  1. நாங்க எல்லாம் அப்பவே யோசிச்சி சொல்லிட்டோமுல்ல...!!!

   Delete
  2. பெரிய ஆளுங்கோ நீங்க:-)

   Delete
  3. Western Legend Special (WLS),
   Evergreen Cowboy Special (ECS),
   Never Ever Hero Tex 75 Special,
   Wildwest Hero 75 Special (WHS)

   Delete
  4. இதுக்கு முன்னாடி “The" போட்டுக்கனும்னு ஈ.வி யோட குறிப்பு...

   Delete
  5. The Tex Super Spl(TSS),
   The Tex Giant Spl (TGS)
   The Western Legend Special (WLS),
   The Evergreen Cowboy Special (ECS),
   The Never Ever Hero Tex 75 Special,
   The Wildwest Hero 75 Special (WHS)

   Delete
  6. ஸ் யப்பா இப்பவே கண்ணக் கட்டுதே...

   Delete
  7. The Wildwest Super Star Special (WSS),
   The Bonelli Super Star Special (BSS)

   Delete
  8. ப்பா! எத்தனை 'The'க்கள்!!

   'the பிடிக்க the பிடிக்க முத்தம் கொடுடா'ன்னு பாடணும் போலிருக்கு!

   Delete
  9. This comment has been removed by the author.

   Delete
  10. This comment has been removed by the author.

   Delete
 33. டெக்ஸ் தண்டர் ஸ்பெஷல் - Tex Thunder Special

  ReplyDelete
 34. Replies
  1. 'The' முதல்ல வரணுங்க! இல்லேன்னா 'The Tex The gun The special'னு வச்சீங்கன்னா பரிசு உறுதியா உங்களுக்கேதான்!

   Delete
 35. தல'க்கு தலைப்பு வைக்க தலையை உருட்டிக்கொண்டிருக்கும் தள நண்பர்களுக்கு ஒரு டிப்ஸ்:

  உங்கள் தலைப்புக்கு முன் 'The' இடம்பெற வேண்டியது அவசியம்!
  உதாரணத்திற்கு 'THE THALA 75 SUPER SPECIAL'

  அச்சச்சோ..! இந்தத் தலைப்பை தேர்வானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்!! :D

  ReplyDelete
 36. ஆண்டு மலர் என்றால் லக்கிதான் அதுவும் இரண்டு கதைகள். நீண்ட இடைவெளிக்கு லக்கி. ஆர்வமுடன் எனது குழந்தைகளுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 37. பத்து தலைப்பு சொல்லியும் பவர் பத்தலை போல யோசிடா பரணி...:-)

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்....The powerman special 75..:-)

   Delete
  2. :-) இன்னும் உங்கள் கிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்:-)

   Delete
  3. தலைவர் டெக்ஸ் ஸ்பெஷல் பேர் வைங்க தலைவரே...!!!

   Delete
  4. ஓகே அதையும் என் கணக்குல வச்சுகுங்க ..:-)

   Delete
  5. // Please wait...:-) // எப்படி தலைவரே இப்படி வித்தியாசமாக யோசிக்கிறீங்க. தலைவர் தலைவர் தான்.

   Please wait...:-) Please wait...:-)
   ஆகா ஆகா புத்தகத்தில் ஜிகினா வேலைகளுடன் வரும் போது கலக்கிவிடும் கலக்கி :-)

   Delete
 38. 75th பிறந்த நாள்மலரை நாம் வெளியிட வேண்டுமென்று எண்ணியுள்ளேன் ! அந்த ஸ்பெஷல் இதழுக்கு ஒரு ஸ்பெஷல் தலைப்பு சூட்டுங்களேன்😌😌😔😔😔

  😜😛😛"MAGNUM 2" (400+Pages - 3 stories)

  ReplyDelete
 39. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஓர் பதிவு....என் 2.1/4 வயது மகன் அந்த புத்தகத்தோடே திரியுரான் ...சௌரியத்துக்கு கதை சொல்றான் பீன்ஸ் ஜாக்குங்றான்....நீங்க சாதிச்சதால நானும் சாதிச்சிடுவேன் சார்....மகிழ்ச்சி பல கோடி

  ReplyDelete
 40. அடுத்த ஆன்டுக்கான திட்டமிடல் ரொம்பவே ஆர்வத்தை தூண்டுகிறது. 2023 நமது காமிக்ஸ்க்கு மிகப்பெரிய சாதனை ஆண்டாக இருக்கும் என்பது நிச்சயம்.

  ReplyDelete
 41. This comment has been removed by the author.

  ReplyDelete
 42. Replies
  1. சார்.. உங்க ப்ரொஃபைல் நேமே சூப்பரா இருக்குதே! 'The Sam Tex-75 special'? :)

   Delete
 43. Replies
  1. த டம் டமால் ஸ்பெசல்

   பட் படார் ஸ்பெசல்.

   Delete
 44. எனக்கும் என்ன புக் வரும்னு தெரியாம இன்ப அதிர்ச்சியா சில புக் வந்ததா அடடான்னு தோணுமேன்னாலும் அட்டவணை வரட்டும்...ஏதாவது ஓரிரு மாதங்களுக்கு அப்படியோர் இன்ப அதிர்ச்சி தரலாமே

  ReplyDelete
 45. Replies
  1. ///Tex-Settanta­cinque///

   சேட்டன் டெக்னிக் ஆ..? Texஐ கேரளாவிலும் ரிலீஸ் பண்ணப்போறோமா.!? :-)

   Delete
 46. சந்தாவ உயர்த்துங்க....இளம் டெக்ஸ் ஒன்னாச்சும் கலர்ல வரட்டும்....சந்தாவ உயர்த்தி இதழ்கள அதிகரிங்க

  ReplyDelete
  Replies
  1. அவங்க அதிரடியாக ஏதும் செஞ்சா அதே நாள்ல இங்கேயும் வரட்டும்...கட்டை விரலையும் வாயயும் ஆயத்தமாய் வையுங்க

   Delete
 47. Replies
  1. இதுகூட செம டைட்டில் தான்! The உள்ளேன் ஐயா special - பரிசு உங்களுக்கே! வாழ்த்துகள் கிட்!!

   Delete
  2. பாரேன்...

   இதுக்கு மட்டும் பரிசு கிடைச்சிட்டா.. அந்தப் பரிசை உங்களுக்கே குடுத்திடுறேன் The குருநாயரே.!

   Delete
  3. ஹிஹி! the மகிழ்ச்சி கிட்!!

   Delete
  4. Excuse me னு பயனுக்கு பெயர் வைப்பது போலயா...

   Delete
  5. அதை அப்படியே தமிழ்ல " எச் உச்சு மீ" என்று உரைக்கலாம்

   Delete
 48. சார் அப்படியே தர்மபுரியில் உயிரை தேடி???

  ReplyDelete
  Replies
  1. அப்படிக் கேளுங்க KS!!

   ஆனா EBF வாசகர் சந்திப்பு களைகட்டணும்னா இதை அல்லது இதைவிடவும் அட்டகாசமான ஒரு சர்ப்ரைஸ் இதழை அங்கே இறக்கியாகணுமே!!

   Delete
  2. ///ஆனா EBF வாசகர் சந்திப்பு களைகட்டணும்னா இதை அல்லது இதைவிடவும் அட்டகாசமான ஒரு சர்ப்ரைஸ் இதழை அங்கே இறக்கியாகணுமே!!///


   ராமைய்யாவை மறுக்கா உலாத்த விட்ருவோமா.?

   Delete
  3. ///ராமைய்யாவை மறுக்கா உலாத்த விட்ருவோமா.?///

   ஆனா என்னைவிடவும் நீங்கதானே ராமைய்யாவால் பாதிக்கப்பட்டவர் கிட்?!"

   Delete
 49. உங்களுடனான பயணம் எனது 47 வயதிலும் தொடர்கிறது . எனக்கு என்னப் பிடிக்கும் என்பதே மறந்துவிட்டது. ஆனால் நீங்கள் வெளியிடும் அனைத்துமே எனக்குப் பிடிக்கிறது

  ReplyDelete
  Replies
  1. ஒரு கவிதை மாதிரி அழகா சொல்லிட்டீங்க இனியன் சார்!

   Delete
 50. அந்த ஸ்பெஷல் இதழுக்கு ஒரு ஸ்பெஷல் தலைப்பு சூட்டுங்களேன் /////

  TEX 75

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் அதிரடி ஸ்பெசல் 75

   Delete
  2. இந்த பேர நான் முன்னாடியே சொல்லிட்டேன் கிட் 😉😉

   Delete
 51. லக்கி லூக்கின் ரெண்டு டீசர்களுமே வரவிருக்கும் சிரிப்பு மழைக்கு முன்கூட்டியே இடி இடிக்கின்றன.!

  ஆர்வங்கா வெயிட் சேஸ்தானு.....

  ReplyDelete
 52. டெக்ஸாஸில் இருந்து டெக்ஸும் அவரின் மகன் கிட் வில்லர் இத்தாலியில் இருந்தும் இவரின் அக்கிள் கார்சன் கொலராடோவில் இருந்து நண்பன் டைகருடன் கலக்கும் நால்வர் ஸ்பெஷல்:-)

  ReplyDelete
 53. The டெக்ஸ் இருக்க பயமேன்..

  The. டெக்ஸுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்.?

  :-)

  ReplyDelete
 54. வில்லரின் விஸ்வரூபம் ..

  எங்கேயும் எப்போதும் டெக்ஸ்.

  ReplyDelete
 55. The Legend’s Special

  -மகேந்திரன் பரமசிவம்.

  ReplyDelete
 56. ////ஒரேயொரு வருஷம் மட்டும் முழுக்க முழுக்க கார்டூன்களோடே காலம் தள்ளலாமென்ற ஒரு வரம் மட்டும் கிடைத்தால்.....ஆகா...ஆகக்கா...' இன்னா மாரி இருக்கும் !!! ////

  சொம்மா சொறாப்புட்டு கணக்கா ஷோக்காத்தான் இருக்கும்...!!

  நம்ம கைல இன்னா கீது..!?
  சிலுக்கு சொக்கா ஷோக்கா இருந்தா கண்டி போதுமா.. பொத்தான் போட்டுக்க தொப்பை வயிவுட்னுமே.?!

  இத்தினி வருசமா கார்ட்டூனு கார்ட்டூனுன்னு பெருமூச்சி வுட்டுகினே பொயப்பை ஓட்டிக்கினு கீறேனே.. என்னைய ஃபாலோப் பண்ணுங்க சார்..!

  ReplyDelete
 57. டெக்ஸ் வில்லர் 75
  TEXWILLER 75
  TEX WILLER NON STOP SPECIAL

  ReplyDelete
 58. //ஒரேயொரு வருஷம் மட்டும் முழுக்க முழுக்க கார்டூன்களோடே காலம் தள்ளலாமென்ற ஒரு வரம் மட்டும் கிடைத்தால்.....ஆகா...ஆகக்கா...' இன்னா மாரி இருக்கும் !!! //

  அட போங்க சார். ஒரு கார்டூன் ஸ்பெஷல் பல வருடங்களாக கேட்டு வருகிறோம். அதற்கே இன்னும் வழியைக் காணோம். கார்ட்டூன் பற்றி கனவு மட்டும் தான் இனி காணவேண்டும் போல.

  நீங்கள் சொல்வது போல் நடந்தால் நன்றாக இருக்கும். ஹ்ம்ம்.

  ReplyDelete
 59. என்றென்றும் 'தல' டெக்ஸ்,
  என்றென்றும் டெக்ஸ்
  Tex forever special

  ReplyDelete
 60. TEX UTLIMATE COLLECTION SPECIAL (TUCS) 😁😂😁😇

  ReplyDelete
 61. Wild West Willer - WWW
  Desert Dada
  Ever (Our) Yellow Hero

  ReplyDelete
 62. "பீன்ஸ் கொடியில் ஜாக்" எப்படி வீடு தேடி நேற்று என்னை வந்தது என்றே புரியவில்லை... வந்தவுடன் பிரித்து படித்து விட்டேன்... அந்த சில நிமிடங்களில் ஆர்ச்சியின் கோட்டையில் காலத்தை பின்னோக்கி சென்றது சாத்தியமானது... மனதை குளிர்வித்த கதை. இன்றைய பிள்ளைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றே நம்புகிறேன். இந்த புக் ரேட்டிங்களுக்கு நிச்சயம் நமது இல்லங்களில் இருக்க வேண்டிய படைப்பு.

  ReplyDelete
  Replies
  1. எனது பார்வையில் இம்மாத புத்தகங்களில் முதலிடம், ரேட்டிங் "மேற்கே அது மெய்யடா". மற்ற ஹீரோஸ் எங்கோ நின்று பயணிக்க, இவரோ நீதானே நான் என்று யதார்த்தமாக முத்திரை பதிக்கிறார்... கிளாஸ்.
   எனது ரேட்டிங் 4.5/5

   Delete
  2. இம்மாத 112 பக்க one shot டெக்ஸ் வில்லர் ஒரு நிஜமான கிளாசிக்...சித்திரங்கள் விருந்தோ விருந்து....வர்ணம் போனஸ். பரபரவென்று அதகள ஆக்சன். டெக்ஸ்சுக்கே உரிய வியூகம், பிளஸ் பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பான கதைக்களம். அட்டைப்படம் அருமை.

   அற்புதமான விடைசொல்லும் வசனம் ஒன்று *மரணம் என்பது இன்னொரு மேம்பட்ட வாழ்க்கைக்கான பயணம்.*

   வழக்கமான டெக்ஸ் கதை போலல்லாது எல்லாவற்றுக்கும் மேலே இறுதி பக்கம் மனத்தை கனக்க செய்து விடுகிறது. டெக்சுக்கும் இளகிய மனது தான் என்பதோடு கதை முடிகிறது.

   எனது ரேட்டிங்: 4.3/5

   Delete
  3. சூப்பர் ரிவியூஸ்!!

   Delete
 63. ஒரு காதல் யுத்தம்

  கதை என்னவோ எப்பவும் போல வந்தார் சுட்டார் வென்றார் கதைதான்..!

  எப்போ பார்த்தாலும் ஊர் ஊரா சுத்திக்கிட்டே திரியும் டெக்ஸ் அண்ட் கோ இந்தக் கதையிலும் அப்படித்தான் எங்கேயோ ஊர் சுத்தக் கிளம்பிடுறாங்க.!

  அப்படி போறப்போ ராத்தங்கறதுக்கு சிதிலமடைஞ்ச ஸான் ஜோகின் மடாலயத்துக்குப் போறாங்க.! வழக்கம்போல குழந்தை டெக்ஸ் தூக்கம் வர்ரதுக்கு கதை ஒண்ணு சொல்லுங்க டாடின்னு கேட்க..
  நெருப்பைக் கூட்டி உக்காந்ததும்.. அந்த மடாலயத்தோடு தனக்கும் தன் காதல் மனைவி லிலித்துக்கும் உள்ள சம்மந்தத்தை ஒரு கதையாக சொல்கிறார் டெக்ஸ்.! (இந்த இடத்தில் தலைவன் வடிவேலு இருந்திருந்தால்.. "ஏய்யா எல்லாத்துக்கும் ஒரு கதை வெச்சிருக்கியா நீயி" ன்னு டெக்ஸை கேட்டிருப்பார்)

  டெக்ஸ் சொல்லும் ஃப்ளாஷ்பேக் கதை நல்லாவே இருக்கு.! பேட் க்ரோன்ற இளம் அபாச்சேவை குதிரை திருடியதற்காக டெக்ஸ் தண்டிக்க.. காலச் சூழலில் பேட் க்ரோ அபாச்சே தலைவனாயிடுறான்.!
  அடுத்து என்ன.. ஆங்.. அதேதான்.! டெக்ஸை பழிவாங்க வெறியோடு காத்திருக்கிறான் க்ரோ.! மனைவியோடு ஸான் ஜோகின் மடாலயத்துக்கு போகும் டெக்ஸை அபாச்சே கும்பல் வழிமறிக்க தப்பி மடாலயத்துக்கு போய்விடுகிறார் டெக்ஸ்..! கூடுதல் படையுடன் வரும் பேட் க்ரோ வை மடாலயத்தில் இருக்கும் சாதுக்களை வைத்துக்கொண்டே எப்படி சமார்த்தியமாக ஜெயிக்கிறார் என்பதே கதை.!

  விறுவிறுப்பான குட்டிக் கதை.! எத்தனை முறை படித்தாலும் அலுக்காத அதே டெக்ஸ் ஃபார்முலா.! ஆனால் இந்தக் கதையில் ஒரு சிறப்பம்சம்... சித்திரங்கள்..!

  அடா அடா.. நெருப்பு வெளிச்சத்தில் அந்த புதர்களும் பூண்டுகளும் எத்தனை டீட்டெய்லாக தெரிகின்றன.!

  குதிரைகளின் கண்கள்.. பிடறி.. வால்.. குளம்புகள்.. கௌபாய்களின் உடைகள்.. அதன் நிறங்கள்.. அத்தனையும் வெகு திருத்தமாக கண்ணைக் கவரும் வகையில் வரையப்பட்டு இருக்கின்றன.. முழு வண்ணம் கூடுதல் கவர்ச்சி.!

  எல்லாற்றிற்கும் மேலாக பக்கம் எண் 57ல் ஸான் ஜோகின் மடாலயத்தை டாப் ஆங்கிளில் வரைந்திருப்பார் பாருங்கள்... வர்ரே வாஹ்.!

  ஓவியர் திரு சிவிடெல்லி அவர்களை டெக்ஸ் சித்திரங்களின் சாம்ராட் என்றே சொல்லலாம்.!

  ஒரு காதல் யுத்தம் - சித்திர யுத்தம்.

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் & லிலித் அழகோ அழகு அதை விட்டுடீங்களே.

   மடாலயம் டாப் ஆங்கிள்ல தெரியுது இத பார்க்கலையோ... 😇😇

   Delete
  2. ///இந்த இடத்தில் தலைவன் வடிவேலு இருந்திருந்தால்.. "ஏய்யா எல்லாத்துக்கும் ஒரு கதை வெச்சிருக்கியா நீயி" ன்னு டெக்ஸை கேட்டிருப்பார்///

   :)))))

   Delete
 64. Replies
  1. அடேங்கப்பா..!

   இதை அடைப்புக்குறி ஷ்பெசல்னுகூட வெச்சிக்கலாம்...🏃🏃

   Delete
 65. நேத்து பாதியில் விட்டிருந்த மேற்கே இது மெய்யடா வை தொடரப்போகிறேன்.!

  குருநாயருக்கான குறிப்பு. : புத்தகத்தை பாதுகாப்பான தூரத்தில வெச்சிக்கிட்டுதான் படிக்கப்போறேன்.!

  ReplyDelete
  Replies
  1. ரெண்டு பேரும் இ.ப.2.0வை தொந்தியில வெச்சி படியுங்க...!!😉

   Delete
  2. ஏன்யா இந்த கொலைவெறி..?

   Delete
  3. @ அறிவரசு

   நீங்க குடும்பக் கட்டுப்பாடு ஆபீஸரா?!! :D

   Delete
 66. Replies
  1. வித்தியாசமான சிந்தனை சத்யா... உங்க ஐடியா தானே,☺️

   Delete
 67. The Ranger's Roar Special
  Or
  The Ranger's Roar - Tex 75 Notout
  Or
  Tex 75 Notout - The Ranger's Roar Special

  ReplyDelete
 68. பேசாம சிம்பிளா

  "டெக்ஸ் 75th பிறந்தநாள் மலர்"

  அப்படினு வச்சிடலாம்.

  ReplyDelete
 69. 1.தல 75 ..
  2.tex 75 - yellove ranger special
  3.Tex 75 - the night eagle special ..
  4.tex75 - a celebratory special

  ReplyDelete
 70. இளஞ்சிங்கம் கார்சன் ஸ்பெசல்..

  ReplyDelete
 71. LION & TEX 75 SPECIAL ....நம்ப காமிகஸ் பெயரும் வந்த மாதிரி ஆச்சி..

  ReplyDelete
 72. ஆசிரியருக்கு, ஒரு சிறு யோசனை...
  டைட்டிலை இப்படி வெளிப்படையாக பகிரும்போது, நண்பர்கள் யோசித்து வைக்கும் புதுமை, நல்ல பெயர்கள் வேறு வகையில் காப்பியடிக்கப்படும்... தலைப்பை உங்கள் ஈமெயில் idக்கு, வாட்சப்புக்கு அனுப்ப சொல்லலாமே. மேலும் சீக்கிரமே loadmore ஆகி நண்பர்கள் மற்ற விஷயங்களை பகிர சிரமமாகிடுமே... நன்றி.

  ReplyDelete