நண்பர்களே,
வணக்கம். தற்செயல் நிகழ்வுகள் அவ்வப்போது சிந்திக்கச் செய்வது நமக்குத் புதிதே அல்ல தான் ; இதோ இந்த ஜூன் மாதத்துக்கென தற்செயலாய் அமைந்துள்ள 2 இதழ்கள் - வானவில்லின் இரு வெவ்வேறு முனைகளாய் நின்று ஒரு 'அடடே' போடச் செய்கின்றன !
*கென்யா
*ஸ்டெர்ன்
முந்தையது மிகையோ மிகையான கற்பனையின் பிள்ளை எனில் ; பின்னது யதார்த்தமோ யதார்த்தமான பதார்த்தம் ! இவை இரண்டுமே பிராங்கோ-பெல்ஜியப் புள்ளீங்கோ தான் ; இரண்டுமே பிரெஞ்சில் வெவ்வேறு பாணிகளில் ஹிட்டானவை தான் & எவ்விதத் திட்டமிடலுமின்றி நம் மத்தியில் ஒற்றை தேதியின் ரிலீஸ் கண்டுள்ளன ! கென்யா பற்றிய First Day First Show பாணியிலான நமது அலசல்களின் பெரும்பான்மை செம பாசிட்டிவ் என்பதில் ஐயங்களில்லை ! தொடரும் நாட்களிலும் ஒளிவட்டத்தினை இந்த இதழே குத்தகைக்கு எடுத்துத் தொடர்ந்திட்டால் வியப்பில்லை எனும் போது - நாம் இந்தப்பதிவினில் பாய்ச்சும் தண்ணீரானது, அந்த ஒல்லிப்பிச்சான் வெட்டியானின் திக்கில் ஓடட்டுமே என்று நினைத்தேன் !
ஒவ்வொரு 15 நாட்களுக்கும் நமது அயல் தேசத்துப் பதிப்பகங்களிலிருந்து, தொடரவுள்ள வாரங்களில் வெளியாகிடவுள்ள அவர்களின் ரிலீஸ்கள் பற்றி ஏகப்பட்ட சித்திரங்களுடன், விவரிப்புகளுடன் நீள நீளமாய் மின்னஞ்சல்கள் வந்து விழும் நாட்களில் - "செத்தாண்டா சேகரு !!" என்று தான் சொல்லத்தோன்றும் ! அந்த நாட்களில் வெள்ளையும், சொள்ளையுமாய், வீட்டிலிருந்து புறப்பட்டது நினைவிருக்கும் தான் ; ஆனால் வீடு திரும்பும் வேளையிலோ, புதுசாய் லாலிபாப் சாப்பிட்டுப் பழகும் பாப்பாவின் சொக்காயைப் போல, சகலமும் ஜொள்ளுமயமாகிக் கிடப்பது வாடிக்கை ! "ஐயோ...ஐயோ..அட்வென்ச்சர் கதைகள் !! ; யம்மம்ம்ம்மா...புது டிடெக்டிவ் தொடர்கள் ; ஆத்தாடிக்காத்தாடியோவ்...மிரட்டும் கி.நா......" என்ற ரீதியில் அந்தத் தருணங்களில் மறையைக் கழற்றி கையில் தந்து விடும் - படைப்பாளிகளின் அசாத்திய கதைகளின் ரேஞ் !! எங்கிருந்து தான் இப்படிப்பட்ட diverse கதைக்கருக்களைத் தேடிப் பிடிப்பார்களோ இந்த மஹானுபாவர்கள் ? என்ற கேள்வி தவறாது முன்னிற்பதுண்டு !
கொரோனா ; அதன் எதிரொலியாக அன்றாட அழுகாச்சிகள் என்று கடந்த 2 ஆண்டுகளின் பெரும் பகுதி இறுக்கமாகவே நகன்றதைத் தொடர்ந்து - "கமர்ஷியல் கதைகளுக்கே முன்னுரிமை ; no அழுகாச்சிகள் or புரியாத நொய்யு நொய்யு கதைகள்" என்ற தீர்மானத்துக்கு நம்மில் தொண்ணூறு சதவிகிதம் பேர் கை தூக்கியிருந்தாலுமே, இந்த "மின்னஞ்சல் நாட்களில்" எனது வைராக்கியங்கள் படும் பாட்டைச் சொல்லி மாளாது ! "டயட்டில் இருக்கோம்...பசங்க இன்னிக்கு full கட்டு கட்டுற வேகத்திலே ஜூனியர் குப்பண்ணாக்குப் போய்க்கிட்டு இருந்தாலுமே, நாம கூட போறோம் ; நாசூக்கா ரெண்டே சப்பாத்தி வாங்குறோம் ; ஜென்டிலா சாப்டுட்டு கைய கழுவிடறோம் !" என்ற உறுதிமொழியினை எடுத்துக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் பண்ணியிருப்போம் தான் ! ஆனால் அங்கே போய் மெனுவை வாசிக்கும் போதே உள்ளாற பெருக்கெடுக்கும் எச்சிலை லபக்கு லபக்கென்று விழுங்கி விட்டு - "ஆங்...அது வந்து...இந்த சப்பாத்தி...அந்த குருமா.!!" என்று ஆர்டர் சொல்லும் பொழுதுக்குள் பக்கத்து டேபிளில் சும்மா 'சர்ர்ர்ர்ர்' என்ற ஓசையுடன் எவனாச்சும் ஒரு Sizzler வாங்கி இருப்பான் !! 'அட..போங்கடா டேய்...என்றபடிக்கே சப்பாத்தியை கேன்சல் பண்ணி விட்டு, கண்ணுக்குச் சிக்கிய சகல heavyweight ஐட்டங்களுக்கும் ஆர்டர் பண்ணுவோமில்லையா - அதுவே தான் எனது பிழைப்புமே ! இதோ - சமீபத்தில் நான் பார்த்து வைத்திருக்கும் 2 கிராபிக் நாவல்கள் என்னை உறங்க விடாது வதைத்து வருகின்றன ! "கையில் காசு இல்லாத வேளையினில், எப்போ போடுவோம்னே தெரியாத கதைகளை வாங்கிக் குவிக்காதேடா மலைக்குரங்கே !!" என்று மண்டைக்குள் ஒரு குரல் கேட்டாலும் - "ச்சீ..பே அந்தாண்டை !!" என்ற பதில் குரலே சவுக்கு சங்கரின் மாடுலேஷனில் ஓங்கி ஒலிக்கும் ! பலன் ?? கொள்முதல்கள் எனும் தொடர்கதை !
அத்தகையதொரு கொலைவெறிக் கொள்முதல் மேளாவின் பலனே நமது ஸ்டெர்ன் ! முதல் பாகத்தினை இங்கிலீஷில் வாசித்த பொழுதிலேயே அந்த நாயகனுடன் ஏதோவொரு இனம்புரியா சிநேகம் தோன்றியிருந்தது எனக்கு ! கபாலத்துக்கு 'டூ' விட்டுக் கிளம்பி இருந்த கேச பாணியில் நாங்கள் இருவருமே ஒன்றியிருந்தது தான் பின்னணிக் காரணமோ - என்னவோ !! ஏற்கனவே ஒரு சீரியஸ் சித்திர வெட்டியான் நம் மத்தியில் ஹிட்டடித்திருக்க, இந்த பென்சில் பாடி நாயகர் செமி கார்ட்டூன் சித்திரங்களில் வசீகரிப்பதாய் எனக்குப் பட்டதுமே இன்னொரு காரணமாய் இருந்திருக்கக்கூடும் ! Whatever - எனது முதல் எண்ணம் ஸ்டெர்னின் 3 கதைகளை 'ஏக் தம்மில்' ட்யுராங்கோ பாணியில் வெளியிடுவதே ! ஆனால் அது ஓவரோ ஓவரான விஷப்பரீட்சையாகிடுமோ ? என்ற பயமும் எட்டிப் பார்க்க, சடுதியில் அந்த எண்ணத்தைக் கை விட்டேன் !
ஆல்பம் # 1ம் வெளியானது ; ஆனால் பெரிய ஆரவார வரவேற்பெல்லாம் இல்லை தான் !! எனக்கு கொஞ்சம் 'சப்'பென்று ஆகிப் போனது ! அதன் பின்பாய்த் தான் ஸ்டெர்னுக்கு இன்னொரு வாய்ப்பு தரலாமா ? என்ற opinion poll நடத்தியதெல்லாம் ! ஒரே இதழோடு மூட்டை கட்டும் அளவுக்கு இவர் ஜடாமுடி ஜானதன் ரேஞ்சுக்கு டப்ஸா பார்ட்டி அல்ல என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது ! அதிர்ஷ்டவசமாய் "இன்னொரு வாய்ப்புக்குத் தகுதியானவர் !!" என்ற ரீதியில் உங்களின் தீர்ப்பும் அமைந்திட, இந்தக் கலாச்சாரக் காதல வெட்டியானுக்கு இரண்டாம் வாய்ப்பும் சாத்தியமானது ! நிஜத்தைச் சொல்வதானால் - எனது பார்வையில் இந்தத் தொடரின் best - ஆல்பம் # 1 தான் ! இரண்டாம் ஆல்பத்தில் ஒரு கோவணத்துணி அளவிற்கே plot இருப்பதாய் எனக்குத் தோன்றிட, அதன் வெற்றி சார்ந்து பெருசாய் எதிர்பார்ப்புகளெல்லாம் என்னிடம் இருக்கவில்லை ! ஆனால் - ரைட்டிலே கை காட்டி, லெப்ட்டுக்கா இண்டிகேட்டரைப் போட்டு , நேரா போகும் கலையில் நீங்களுமே வல்லுநர்கள் என்பதை ஸ்டெர்ன் # 2 க்கு செம வரவேற்பளித்து நிரூபித்து விட்டீர்கள் ! "இது surefire hit " என்ற நம்பிக்கையை விதைக்கும் ரூபின் போலான தொடர்களின் வெற்றிகளைக் காட்டிலும், இது போன்ற off the beaten track நாயகர்களின் வெற்றிகள் எப்போதுமே என்னளவிற்காவது ஸ்பெஷல் ! So எப்போதோ வாங்கிப் போட்டிருந்த ஸ்டெர்ன் # 3 கதையை பரணுக்குள் திணித்திடும் அவசியம் இருந்திடாதென்ற நம்பிக்கை புலர்ந்த போதிலும், இவரை ஒரு mainstream சந்தா நாயகராய் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு நம்மில் நூற்றுக்கு நூறு சதவிகிதத்தினரை ஸ்டெர்ன் வசீகரித்து விட்டதான நம்பிக்கையும் எனக்குள் பிறந்திருக்கவில்லை ! At best - மெயின் டீமில் யாருக்கேனும் வவுத்தைக் கலக்கிடும் பட்சத்தில், அவர்கள் களத்தை விட்டுத் தாற்காலிகமாய்க் கிளம்ப நேரிடும் சமயங்களில், ஓசையின்றி கிரவுண்டுக்குள் நுழைய வேண்டிய 12 வது ஆட்டக்காரராக மட்டுமே இவரைப் பார்த்தேன் ! And அந்த வாய்ப்பும் இதோ, இப்போது ஜம்போ சீசன் # 4-ல் கிட்டியிருக்க, "மேற்கே ...இது மெய்யடா !" உங்கள் கைகளில் !
மேலோட்டமாய் இது சுலபமான நேர்கோட்டுக் களமாக தோன்றினாலும், உரிக்க, உரிக்க subtle ஆன பல லேயர்கள் இருப்பது தென்படக்கூடும் ! So இதனில் பணியாற்றுவது சுலபமே அல்ல தான் ! மொழிபெயர்ப்பினில் அந்தக் கரடு முரடான பேச்சு வழக்கு பாணியே அமல் என்றாலும், ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் ஒரு விதத்தில் வித்தியாசமாய் குரல்களை கதாசிரியர் உருவகப்படுத்தி இருப்பதாய் எனக்குத் தோன்றியது ! ஸ்டெர்ன் அமைதியாய், ஆர்ப்பாட்டங்களின்றி ; நண்பன் லென்னியோ இன்னும் கொஞ்சம் refined ஆக ; ஊருக்குள் உள்ள அந்த பிராத்தல் பெண்கள் கொச்சையாக ; மேயரோ சவடாலாய், நக்கலாய், காமெடியாய் பேசிட வேண்டுமென்று நினைத்தேன் ! Trust me - அதனில் நான் கரை சேர்ந்திருந்தேனா - இல்லையா ? என்பது தெரியாது ; ஆனால் குறுக்கைக் கழற்றியதென்பது மட்டும் தெரியும் ! பற்றாக்குறைக்கு பக்க எண்ணிக்கையுமே 72 / 74 எனும் பொழுது - எழுத, எழுத பக்கங்கள் முளைத்து வந்து கொண்டே இருப்பதாய்த் தோன்றியது ; moreso மூன்றே நாட்களின் அவகாசத்தினில் இதை பூர்த்தி செய்திட வேண்டிய கட்டாயம் இருந்ததால் ! இப்போதைக்கு உங்களில் சொற்பமானோரே இம்மாதத்து ஸ்டெரனுடன் அன்னம் தண்ணீர் புழங்கியுள்ளீர்கள் என்பது obvious ; ஆனால் பழகியிருக்கும் அந்தச் சிறு அணி நண்பர்களிடம் மனுஷன் ஸ்கோர் செய்திருப்பது புரிகிறது ! இன்னுமும் பரவலாய் விமர்சனங்களும், அலசல்களும் வந்தாலன்றி, "வெற்றி..வெற்றி" என்று கூவுவது வெட்டி வேலை தான் ! So யார் மனதில் என்னவென்று அறிந்திட நிச்சயமாய்க் காத்திருப்போம் !! Fingers crossed as always !!
ரைட்டு..இக்கட ஒரு கேள்வியுமே :
ஸ்டெர்ன் # 4 அடுத்த வருடத்தின் சந்தாவினில் ஒரு அங்கமாகிடலாமா ? அல்லது ஓரமாய் சைக்கிள் விட்டுக்கொண்டிருப்பவர் ஓரத்திலேயே பயணித்து வரட்டும் என்பீர்களா ?
And நான் கிளம்பும் முன்பாய் இன்னொரு கேள்வியுமே :
SMASHING '70s நடப்பாண்டுக்கு ; அடுத்தாண்டினில் அதே க்ளாஸிக் நாயகர்களுடன் '60s பயணம் என்பதால் - ஜம்போவின் சீசன் # 5 அறிவித்திடவில்லை ; and அறிவிக்கும் உத்தேசமும் இந்த நொடி வரை இல்லை ! பட்ஜெட் சார்ந்த விசனம் பிரதான காரணம் என்பதோடு - இந்த one shot வரிசைகளில் கதைத்தேடல்களானவை இரு முனைகளும் கூரான கத்தி மீது கதக்களி ஆடுவதற்குச் சமானம் என்பதை சீசன் 4 நன்றாகவே உணர்த்தியிருந்தது - மாட்டாவும், ஜெரோனிமோவும் பொரித்த முட்டைகளின் ரூபங்களில் ! இங்கே தோல்விகளுக்கு கிஞ்சித்தும் இடங்களில்லை எனும் பொழுது, 200 % உத்திரவாதம் தரும் கதைகளாய் தொடரும் காலங்களில் தேடிட அவசியமாகிடும் ...and அது சொல்வதற்குச் சுலபம் - நடைமுறையில் கஷ்டமோ, கஷ்டம் ! So வேணாமே விஷப்பரீட்சைகள் !! என்று safe ஆன ஜானர்களில் பயணிப்போமா ? சொல்லுங்களேன் ப்ளீஸ் !
Bye all ...ஜூன் இதழ்களை தொடர்ந்து அலசிடலாமே - ப்ளீஸ் ! Have a cool Sunday ! See you around !
கறிக்கடைகளிலும், ப்ராய்லர் கடைகளிலும், கறிகாய்க்கடைகளிலும், மீன் மார்க்கெட்களிலும், கால் கடுக்க நின்று கொண்டிருக்கும் அந்திரிக்கும் நமஸ்காரா !
ReplyDelete:-)
Deleteஞாயிறு காலையிலும் மானிட்டர் முன்னே பிட்டம் பழுக்க அமர்ந்திருக்கும் எங்களுக்கு? :)
Deleteஅது எந்த "மானிட்டர்" என்பதை பொறுத்தது கார்த்திக்...!
Deleteஹா ஹா ஹா!! :))))
Delete😂😃🤣😁
Deleteஏன் காலையில் எழுந்து,குளித்து சந்தனம் இட்டுக்கொண்டு, விஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கும் எங்களுக்கு கிடையாதா அந்த நமஸ்க்காரா
Delete2 nd...
ReplyDeleteஸ்டெர்ன் வாய்ப்பு தரலாம் எடிட்டர்ஜி. ஜம்போ சந்தாவில் ஒன்ஷாட் கதைகளைத் தேர்வு செய்து 2024ல் புகுத்திடலாம்.
ReplyDeleteஆஜர்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteஅடுத்த சந்தாவில் ஸ்டெர்ன் நிச்சயமாய்!!!
Deleteஆமா ஆமா இப்படி எல்லாம் கேட்கப் படாது.
Deleteஸ்டெர்ன் # 4 அடுத்த வருடத்தின் சந்தாவினில் ஒரு அங்கமாகிடலாமா ? அல்லது ஓரமாய் சைக்கிள் விட்டுக்கொண்டிருப்பவர் ஓரத்திலேயே பயணித்து வரட்டும் என்பீர்களா ?
ReplyDeleteதாரளமாக சந்தாவில் அங்கமாக்கி விடலாம்
நன்றி சத்யா
DeleteThis comment has been removed by the author.
Deleteஸ்டெர்னின் ஹேர் ஸ்டைல் பர்சனலாக எனக்கு ரொம்ப பிடிக்கும் நண்பரே
Deleteஸ்டெர்ன் - மேற்கே... இது மெய்யடா..!
ReplyDeleteநிறைய எழுத எண்ணினாலும் எப்படி தொடங்குவது என யோசிக்கிறேன்.
ஸ்டெர்ன் தொடரின் முதல் பாகத்திலிருந்தே அது நிகழ்ந்திடும் யதார்த்த களமும் மேற்பூச்சுக்கள் இல்லாத கதை சொல்லும் பாணியும் என்னை வெகுவாக கவர்ந்துவிட்ட படியால் எலீஜா என் மனதுக்கு நெருக்கத்தில் உள்ள நாயகராகி விட்டார்.
ஒவ்வொருவரின் பார்வையிலான அவரவர் பக்க நியாயமும் சரியாக அமைந்து விட அதனடிப்படையில் ஏற்படும் நிகழ்வுகளின் தொடர்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் கதாசியரின் திறமை... அடேங்கப்பா! வியக்க வைக்கிறது.
பெரிய ஆர்ப்பாட்டங்கள் ஏதுமில்லாத மோரிசன் நகரில் தன் புத்தகத்தை வெளியிட வரும் மேற்கின் பெருமைமிகு துப்பாக்கி வீரர் கொலராடோ காப்பின் சுயசரிதை அவருக்கு புது எதிரிகளை உருவாக்கியிருக்க, அவரைத் தேடி பழிவாங்குவதற்கென்றே கிருஸ்துமஸ் பார்ட்டிக்கு அமைதியாக தயாராகி வரும் அந்நகருக்கு வருகை தரும் அந்த கும்பலின் தடாலடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடக்கும் ரணகள சம்பவங்கள்தான் கதை.
அப்பப்பா... மூச்சு விட நேரமில்லை...
கரடுமுரடான அந்த மேற்கின் மெய்யான முகத்தை நம் முன்னே தோலுரித்துக் காட்டியுள்ளனர் படைப்பாளிகள்.
என்னுடைய வாசிப்பில் இரண்டு வகையான படைப்பாளிகள் என்னை மிகவும் கவர்ந்ததுண்டு. முதலாமவர் தன் கற்பனை காட்சிகளை என் கண்முன்னே விரியச் செய்து அதில் லயிக்க செய்வார். மற்றவரோ என்னை காட்சிக்குள் அழைத்துச் சென்று அதை என் உணர்வுகள் ஸ்பரிசிக்கச் செய்வார். இதில் மேப்ரே சகோதரர்கள் இரணடாவது வகை.
நான் எலீஜாவோடு ஓடினேன்...
லென்னியோடு பியானோ வாசித்தேன்...
கொலராடோ காப்போடு குண்டடிபட்டு தப்பியோடினேன்...
அந்த துப்பாக்கிச் சண்டைகளின் போது சந்து பொந்துகளில் பதுங்கினேன்...
கடைசியில் தன் ஆருயிர் நண்பன் சார்லஸ் பெனிங்கின் கல்லறையின் அருகே லென்னியின் சவ அடக்கத்தின்போது கண்ணீர் விட்டேன்...
ஸ்டெர்னின் முதல் பாகம் வாசித்தபோது அதன் தாக்கத்தில் உடனடியாக விமர்சனம் எழுதினேன். இரண்டாவது பாகமான காட்டான் கூட்டம் வெளியானபோது நான் அதை படிப்பதற்கு முன்னரே நிறைய நண்பர்கள் நல்லபடி விமர்சித்திருக்க மேற்கொண்டு எதுவும் எழுதத் தோன்றவில்லை. ஆனால் இப்போது தோன்றுகிறது. கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும். ஒரு நேர்த்தியான படைப்பாளிக்குரிய மரியாதையான விமர்சனத்தை தராதது எவ்வளவு பெரிய தவறென்று புரிகிறது.
ஓவியங்களும் வண்ணச் சேர்க்கையும் கதையோடு போட்டி போடுகின்றன. கார்ட்டூன் பாணிச் சித்திரங்களா... ம்ஹூம்... அந்த முக பாவனைகளும் கோணங்களும் நம்மை கதைக்குள்ளே கையைப் பிடித்து அழைத்துச் செல்கின்றன.
மொழிபெயர்ப்பில் தனித்துவம் காட்டி நிற்கிறார் ஆசிரியர். நிச்சயம் பணி ஈடுபாட்டைத் தாண்டி அவரை ஸ்டெர்ன் வசீகரித்துள்ளதை எழுத்துக்களில் உணர முடிகிறது. மூன்று பாகங்களிலும் ஒரே பாணியைக் கையாண்டுள்ளார். சிறப்பு!
ஸ்டெர்னை தவறவிடுபவர்கள் ஒரு நிஜமான வன்மேற்கின் தரிசனத்தை மறுதலிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. புதிதாக தொடங்குபவர்கள் தயவுசெய்து முதல் பாகத்திலிருந்து படியுங்கள். களத்தையும் கதாபாத்திரங்களின் தன்மையையும் முழுமையாக அறிந்துகொண்டு தொடங்கினால் நிச்சயம் இதுவரை கிட்டாத ஓர் வாசிப்பு அனுபவம் உறுதி.
ஸ்டெர்ன் மூன்று பாகங்களில் வரும் கதை மாந்தர்களில் யாரொருவருக்கும் கெட்டவர் / வில்லன் என முத்திரைக் குத்த முடியாது. பொதுவாக வில்லனை எதிர்த்து ஜெயிக்கும் கதாநாயக பாணி இங்கில்லை. இது நிகழ்வுகளின் ஓட்டம். யாரையும் சாராமல் எந்த ஒப்பனையும் இல்லாமல் பயணிக்கும் பயணம்.
பயணித்து அனுபவிக்க தயாராக இருக்கிறோமா நாம்?
ஸ்டெர்ன் #4 க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!
//கதை மாந்தர்களில் யாரொருவருக்கும் கெட்டவர் / வில்லன் என முத்திரைக் குத்த முடியாது. பொதுவாக வில்லனை எதிர்த்து ஜெயிக்கும் கதாநாயக பாணி இங்கில்லை. இது நிகழ்வுகளின் ஓட்டம்//
DeleteVery true !!
மிக மிக நேர்த்தியான, உணர்வுப்பூர்வமான, உண்மையான விமர்சனம் நண்பரே!!
Delete////ஸ்டெர்னை தவறவிடுபவர்கள் ஒரு நிஜமான வன்மேற்கின் தரிசனத்தை மறுதலிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. புதிதாக தொடங்குபவர்கள் தயவுசெய்து முதல் பாகத்திலிருந்து படியுங்கள். களத்தையும் கதாபாத்திரங்களின் தன்மையையும் முழுமையாக அறிந்துகொண்டு தொடங்கினால் நிச்சயம் இதுவரை கிட்டாத ஓர் வாசிப்பு அனுபவம் உறுதி.////
100% உண்மையோ உண்மை!!
நன்றிகள் ஈ.வி. நண்பரே!
Deleteஎன்னளவில் இம்மாத நம்பர் #1 ஸ்டெர்ன் தான்.
கென்யா நம்பர் #2.
அருமையான ,அட்டகாசமான ,உண்மையான ,உணர்வுபூர்வமான விமர்சனம் நண்பரே பாராட்டுகள்...
Deleteஅருமையான தெளிவான விமர்சனம்
Deleteஅருமை நண்பரே SK. வித்தியாசமான கதைகளை அள்ளிக்கொள்ளும் உங்கள் ரசிப்புக்கு ஸ்டெர்ன் ரொம்பவே வாகானவன்.....
Delete// ஸ்டெர்ன் மூன்று பாகங்களில் வரும் கதை மாந்தர்களில் யாரொருவருக்கும் கெட்டவர் / வில்லன் என முத்திரைக் குத்த முடியாது. பொதுவாக வில்லனை எதிர்த்து ஜெயிக்கும் கதாநாயக பாணி இங்கில்லை. இது நிகழ்வுகளின் ஓட்டம். யாரையும் சாராமல் எந்த ஒப்பனையும் இல்லாமல் பயணிக்கும் பயணம். //
DeleteWell said.
+1
நீங்கள் எழுதிய விமர்சனம் அட்டகாசம் SK. ரொம்பவே ரசித்து வாசித்து இருக்கிறீர்கள். நான் இந்த மாதம் முதலில் படித்தது ஸ்டர்ன் தான். இப்போதெல்லாம் ரெகுலர் தடத்தில் இருந்து விலகி வரும் இது போன்ற கதைகள் தான் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகின்றது.
Deleteநீங்கள் சொல்வது போல 3 கதைகளும் 3 முத்துக்கள்.
// ஒரு நேர்த்தியான படைப்பாளிக்குரிய மரியாதையான விமர்சனத்தை தராதது எவ்வளவு பெரிய தவறென்று புரிகிறது. //
Deleteபாயிண்ட்...
// இது நிகழ்வுகளின் ஓட்டம். //
அதே,அதே...
ஸ்டெர்ன் தேவை
ReplyDeleteஅன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteஜம்போ 5 நல்ல தேர்வுகளுடன் ஓக்கே.ஸ்டெர்ன் சந்தாவில் வேண்டாம்.
இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்....!
DeleteROFL Sir :-D
Deleteஸ்டெர்ன் ok தான்
ReplyDeleteஜம்போ சீசன் - 5
முயற்ச்சி செய்யலாம்
கென்யா - டபுள் ok Sir
எடிட்டர் சார்,
ReplyDeleteகென்யா வரை வந்துவிட்டோம். அப்படியே ஆல்டபரான் , கோல்டன் சிட்டி,, ஆர்ட்டிகா போன்றவற்றையும் கண்ணில் காட்டிட வேண்டுகோள் விடுக்கிறேன்.
கென்யா சார்ந்த அலசல்கள் முழுமையாய் பதிவாகிட அவகாசம் கொடுப்போம் நண்பரே ; பெரும்பான்மைக்கு ரசித்தருக்கும் பட்சத்தில் வண்டிய இந்த ரூட்டிலே விடலாம் !
Deleteநன்றி சார்!!
Deleteஸ்டெர்ன் சந்தாவில் ஒரு அங்கம்.
ReplyDeleteடபுள் ஓக்கே. நாம் டெக்ஸின்வன்மேற்கில் பார்ப்பதெல்லாம்அட்வென்சர் மட்டுமே வன்மேற்கின் இயல்பான வாழ்வையல்ல ட்யூராங்கோ கதைகளில்ஓரளவு வன் மேற்கின் மனிதர்களின் வாழ்க்கையைதொட்டுச்சென்றாலும்அதுவும் நாயகனின் ஹீரோயிசம் சம்பந்தப்பட்ட ஒருபகுதியே., புத்தகப்பிரியர்கள், கவிதா ரசிகர்கள், மதுவுக்கு எதிரான அம்மணிகள், . கந்துவட்டிக்காரர்கள், பைத்தியக்காரப் பாட்டிகள், விலைமாதுக்கள் என அனைவருமே வன்மேற்கின் இயல்பான வாழ்வை நமக்குக் கண்முன்னே நிறுத்துகின்றனர் கரூர் ராஜ சேகரன்
உண்மை நண்பரே..
Deleteஅருமையாக சொன்னீர்கள். உண்மை.
Deleteசெம்ம செம்ம ராஜசேகர் சார்
DeleteEdi Sir..
ReplyDeleteHappy Stern day..😍
மேற்கே இது மெய்யடா....
ReplyDeleteகாலையில் எழுந்து குளித்து அலுவலகம் செல்ல தயாராகி இன்னும் பேருந்திற்கு நாற்பத்திஐந்து நிமிடங்கள் பாக்கி இருக்க ( இல்லத்தில் அனைவரும் வெளியூர் சென்று இருக்க ஒரு வார சுதந்திர மனிதன் இப்பொழுது..) சரி காலையில் அமைதி பொழுதில் ஒரு இதழை படித்துவிடலாம் என எடுத்தது "மேற்கே இது மெய்யடா"
அருமை ,அட்டகாசம் ,சூப்பர் என எந்த வார்த்தையை போட்டாலும் அது குறைவே....ஸ்டெர்ன் இதுவரை இரண்டு இதழ்கள் தாம் வந்துள்ளன ..அவையும் சோடை போகாத அட்டகாசமான இதழ்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை ..ஆனால் இந்த இதழ் அதற்கும் மேலே ...உண்மையில் காலை நேரத்தில் சுமார் நாப்பது நிமிடங்களும் அந்த வன்மேற்கு சிறு நகரத்தில் வாழ்ந்து வந்த உணர்வு ..இதை எழுத்தில் வடிக்க முடியாது.. ஸ்டெர்ன் கதையில் இந்த இதழில் ஆக்ஷன் அமர்க்களம் ஆனால் அதே சமயம் எவருமே வில்லனாக தோன்றவில்லை என்பது எவ்வளவு ஆச்சர்யமான விசயம் ..பழிவாங்குபவனும் சரி ,பழிவாங்கப்படுவனும் சரி அனைவருமே இறுதியில் அவர்கள் அனைவருமே அவர்கள் பக்கம் மனதை கனக்க வைக்க செயகின்றனர் .அந்த நகரில் நாமும் குடி இருந்த உணர்வுக்கான காரணம் , கதாபாத்திரங்கள் அனைவரின் மேலும் வரும் ஓர் ஈடுபாடு ,இறுதியில் நெகிழவைத்த முடிவு என அனைத்திலும் நம்மை இவ்வளவு ஓன்ற வைக்க செயதமைக்கு முதன்மையான காரணம் மொழிஆக்கமே ..நன்றி சார்..என்னை பொறுத்த வரை மேற்கே இது மெய்யடா இதழை ஓர் கமர்ஷில் இலக்கியமாக பார்க்கலாம் ..அவ்வளவு அழகான இதழ் ..அவ்வளவு அழகான கதை ..மிக மிக மிக அருமையான கதை கொண்ட இதழ் மட்டுமல்ல நண்பர்கள் எவரும் தவறக்கூடாத இதழ் .இந்த மாதம் டெக்ஸையும் முந்தி சென்று விட்டாரே ஸ்டெர்ன் என்று என்று ஆச்சர்யமும் அடைகிறேன்
/// இந்த இதழில் ஆக்ஷன் அமர்க்களம் ஆனால் அதே சமயம் எவருமே வில்லனாக தோன்றவில்லை என்பது எவ்வளவு ஆச்சர்யமான விசயம் ..பழிவாங்குபவனும் சரி ,பழிவாங்கப்படுவனும் சரி அனைவருமே இறுதியில் அவர்கள் அனைவருமே அவர்கள் பக்கம் மனதை கனக்க வைக்க செயகின்றனர்///
Deleteசூப்பரா சொன்னீங்க தலீவரே!
ஆத்மார்த்தமான விமர்சனம்!!
அருமை பரணி
Delete//எவருமே வில்லனாக தோன்றவில்லை என்பது எவ்வளவு ஆச்சர்யமான விசயம்//
Deleteஆமாம் நண்பரே...
இதுவரை வெளிவந்த ஸ்டெர்ன் கதைகள் மூன்றிலும் யாருமே வில்லனாக சித்தரிக்கப் படவில்லை.
தலைவரே மனதில் பட்டதை அப்படியே எழுத எப்போதும் நீங்கள் தயங்கியது இல்லை. அதனால் பல முறை சங்கடங்களை சந்தித்த போதும்.
Deleteஎப்போதுமே நீங்கள் எழுதும் விமர்சனம் என்னையும் அதை ஃபீல் செய்ய வைக்கும். அருமையான ஒரு கதைக்கு நீங்கள் எழுதிய அழகான விமர்சனம்.
நன்றி குமார் சார்....
Deleteதலைவரே செம...
Deleteகண்டிப்பாக ,உறுதியாக ஸ்டெர்ன்னை சந்தாவில் தைரியமாக நுழைக்கலாம் சார்...:-)
ReplyDeleteமேற்கே ஒரு மெய்யடா..
ReplyDeleteரேஷன் கார்டில் கெத்தாக குடும்பத் தலைவர் எனப் போட்டிருந்தாலும் குடும்பத்தை நடத்தி செல்வது பாரியாளும் குழுந்தைகளுமேங்கற மாதிரி( வூட்டுக்காரம்மா : நான் சொல்ற மாதிரி செய்யுங்க போதும்.
குழுந்தைங்க: பாவம்! உனக்கு ஒண்ணுமே தெரியலேப்பா! ) ஸ்டெர்ன் இக்கதையில் கிட்டத்தட்ட
ஒரு பார்வையாளர் போல் இருந்தபோதும் ஆக்கம் அற்புதம்
தாரை தலைவரும், இ.சி.ஈ. இளவரசரும் இது குறித்து விமர்சனம்
அற்புதமாக எழுதியுள்ளனர்.இவர்
மெயின்ஸ்ட்ரீம் அங்கமாக எல்லா தகுதியும் உள்ளவரே.
9/10
///ஸ்டெர்ன் இக்கதையில் கிட்டத்தட்ட
Deleteஒரு பார்வையாளர் போல் இருந்தபோதும்///
அட!! இதைக் கவனிக்காம விட்டுட்டேனே!! ஆனால் மற்ற கதை மாந்தர்களே கதையை நேர்த்தியாக நகர்த்திச் செல்லும்போது இதுவொரு குறையாகவே தெரியவில்லை தான்!! அப்படியே ஸ்டெர்னின் பங்கு அதிகமிருந்தாலும் பெரிய ஜாகஜமெல்லாம் இவர் செய்திருக்கப் போவதில்லைதானே?!!
பல்லடம் சரவணகுமாரும் ( இப்போதுதான் படித்தேன்) அருமையாக எழுதியுள்ளார்.வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவராக உள்ளார்.நிறைய தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
Deleteநன்றிகள் சார்.
Delete///வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவராக உள்ளார்///
Deleteயெஸ்!! ஒரு ஆசிரியருக்கே உரித்தான - தேர்ந்த, நேர்த்தியான, தனித்துவமான வார்த்தைப் பிரயோகங்கள்!!
சார்.. ஸ்டெர்ன் சந்தாவில் வரட்டும் அல்லது சைடு ட்ராக்கில் வரட்டும்... கண்டிப்பாக வரவேண்டும். நேற்றிலிருந்து இந்தக் கதையும், கதை மாந்தர்களும், அந்த வசனங்களும் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னமும் என்னால் மீளமுடியவில்லை!! என்னவொரு அசரவைக்கும் படைப்பு!!!!!
ReplyDeleteஉண்மையோ உண்மை செயலரே...கதையை படித்து முடித்து பேருந்திற்கு நேரமாகிவிட்டது என்று யோசிக்க கூட முடியாதவாறு சில நிமிடங்களுக்கு அந்த கதையின் தாக்கத்திலியே அமைதியாக உட்கார்ந்து கொண்டே இருந்தேன்
Deleteஇதுவொரு கி.நா தலீவரே!! அன்றைய ஆரம்ப நாட்களில் கி.நாவுக்காண்டி நீங்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்த நாட்களையும், இப்போது கி.நா தரும் போதையில் மயங்கிக்கிடப்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்!!
Deleteநீங்க வளர்ந்து, வயசுக்கும் வந்துட்டீங்க தலீவரே! கன்கிராஜுலேசன்ஸ்!! :)
:-)
Delete//நேற்றிலிருந்து இந்தக் கதையும், கதை மாந்தர்களும், அந்த வசனங்களும் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னமும் என்னால் மீளமுடியவில்லை!! என்னவொரு அசரவைக்கும் படைப்பு!!!!!//
Delete100% உண்மை!!
நடைமுறையில் கஷ்டமோ, கஷ்டம் ! So வேணாமே விஷப்பரீட்சைகள் !! என்று safe ஆன ஜானர்களில் பயணிப்போமா ? சொல்லுங்களேன் ப்ளீஸ் !
ReplyDelete###
மாட்டாவை இப்போது நினைத்தாலும் வேண்டாமே விஷ பரீட்சை என்றே உரக்க சொல்ல தோணுகிறது சார்...:-)
// சவுக்கு சங்கரின் மாடுலேஷனில் ஓங்கி ஒலிக்கும் //
ReplyDeleteஇவர் யார் சார். கேள்விப்பட்டதில்லை.
அரசியல் விமர்சகர்..நண்பரே..:-)
Deleteஓகே பரணி
Deleteவணக்கம் நண்பர்களே...
ReplyDelete//So வேணாமே விஷப்பரீட்சைகள் !! என்று safe ஆன ஜானர்களில் பயணிப்போமா ?//
ReplyDeleteமுள்குத்தும் என எண்ணினால் பழம் தின்ன முடியுமாங்க சார்...
ஜெரோனிமா & மாட்டா ஹாரி போன்றவை கொஞ்சம் டாகுமெண்டரி வாடை வீசியதே அன்றி ஒருமுறை வாசிப்புக்குக் கூட தகுதியற்ற இதழ்களாகி விடவில்லை.
சில தேர்வுகள் பிசகினாலும் பெரும்பான்மையான வெற்றியை சாத்தியப் படுத்தி விடுவீர்கள்.
ஈ.வி. சொன்னது எலீஜாவின் தோற்றத்தை வைத்து மதிப்பீடு செய்திருந்தீர்களேயானால் இந்நேரம் ஒரு யதார்த்தமான கதைத்தொடரை தவற விட்டிருப்போம்...
பன்முகத்தன்மை கொண்ட வாசிப்பே அதன் நோக்கத்தை பூர்த்தியடையச் செய்யும்.
தங்கள் அனுபவத்தால் வாசகர்களின் நாடி பிடித்து பார்க்க உங்களுக்கு சாத்தியப்படுகிறது.
அதற்கேற்றவாறு கலவையான அட்டவணையை தயாரிக்க உங்களால் இயலும் என்பதற்கு எத்தனையோ முன்னுதாரணங்கள் உண்டே!!
தொடருங்கள் சார்.
ஆமாம் சார் ஒன்று இரண்டு கதைகள் ஹிட் ஆகவில்லையென்றால் பரவாயில்லை. நீங்கள் புதுப்புது கதைகளாக கொண்டு வரும் போது தான் நமது வாசிப்பு ரசிக்க தொடங்குகிறது இப்போது. அரைத்த மாவையே அரைத்து கொண்டு இருப்பதில் எப்போதும் உடன்பாடு இல்லை.
Deleteப்ளஸ்ஸோ ப்ளஸ்கள்!
Delete//ஜெரோனிமா & மாட்டா ஹாரி போன்றவை கொஞ்சம் டாகுமெண்டரி வாடை வீசியதே அன்றி ஒருமுறை வாசிப்புக்குக் கூட தகுதியற்ற இதழ்களாகி விடவில்லை//
DeleteTrue.
விஷப் பரீட்சைகள் அவசியம் தேவை.
ReplyDeleteபுதுவெள்ளம் கணிப்புக்கு அப்பாற்பட்டு கரையை சிலசமயம் சேதாரப்படுத்தினாலும் அதன் அவசியம் அனைவரும் அறிந்ததே.
மூன்று கதை ஹார்ட் பவுண்ட் டெக்ஸ் மறுபதிப்பும் மாட்டா ஹரியும் ஒரே ஸ்லாட்டுக்கு போட்டியிட்டால் மாட்டா ஹரியையே தேர்ந்தெடுப்பேன்.
புதிய முயற்சிகள் ஜம்போ என்றல்ல எந்த பெயரில் வந்தாலும் ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்று.
கென்யா - நேற்று பகலில் கையில் எடுத்து புத்தகம் கிடைக்கும் கேப்பில் சுமார் 200 பக்கங்கள் தாண்டி விட்டேன். இந்த ஆண்டு வந்த மற்ற குண்டு புத்தகங்களைக் கூட இப்படி ஒரேநாளில் விரட்டி விரட்டி படிக்க வில்லை. இந்த கதை நகரும் வேகம் அடுத்து என்ன நீளமான காட்சிகள் கிடையாது சொல்ல வேண்டியதை சொல்லி இப்போது சொல்ல வேண்டாம் என்ற விஷயங்களை டக் என்று கட் செய்து அடுத்த காட்சிக்கு செல்வது என்று கதையை அமைத்த விதம் நல்ல சிந்தனை. காமிக்ஸ் என்றாலே கற்பனை இந்த கதையை கதையாக நினைத்து படிக்கும் போது எந்த நெருடலும் இல்லாமல் அவர்களுடன் நேற்று முழுவதும் பயணம் செய்ய முடிந்தது. கானகத்தை விண்வெளி அதிசயங்களை ஓவியர் கண்முன் அழகாக கொண்டு வந்துள்ளார்.
ReplyDeleteகென்யாவின் அடுத்த பாகத்தை அடுத்த வருடம் வெளியிடுங்கள். ஆவலுடன் கொண்டாட தயாராக உள்ளேன்.
அனைவருக்கும் ஹேப்பி ஞாயிறு வாழ்த்துகள்...
ReplyDeleteகறிகடையும் காலைப்பதிவும் ரொம்ப நாளைக்கு பிறகு மேட்ச் ஆகியுள்ளது.
நன்றிகள் சார்..
இதுபோல அவ்வப்போது பழசை மறக்காத பதிவுகளும் இருக்கட்டும்..
பதிவை விட பதிவு வந்த வேளையை ஐ ரொம்ப லைக்கிங்ஸ்...💞💞💞💞💞
வேணாமே விஷப்பரீட்சைகள் ! - அப்பப்ப ரிஸ்க் எடுக்கனும் சார். இல்லை என்றால் மு.ச இருக்கும் திசை மறந்து விடும் :-) ரிஸ்க் எடுத்தால் தான் வாழ்க்கை சுவாரசியமாக ஒரு பரபரப்புடன் இருக்கும். அதுவும் உங்களை போன்ற காமிக்ஸ் காதலர்களுக்கு இது போன்ற கதைகளே உந்து சக்தி என்பதால் தொடருங்கள். உங்கள் தேடலில் ஒன்று இரண்டு சோடை போனாலும் 90-95% நல்ல கதைகள் கிடைத்து இருக்கின்றன.
ReplyDeleteஸ்டெர்ன் முதல்பாக அட்டைப்படம் அத்தனை கவர்ச்சியாக இல்லாத காரணமாக கதைக்குள் புகவே கொஞ்சம் யோசனையாக இருந்தது சார்.
ReplyDeleteஅந்த கலவையான அடர் அதீத வன்மேற்கு அப்படியே முகத்தில் அறைந்தது....
ஆங்கில pdfகளில் அதைப்போன்ற அடர் கதைகள் வாசித்து இருந்தாலும் நம்ம லயனில் இதை ஜீரணிக்க கொஞ்சம் சோடா தேவையாக இருந்தது எனக்குமே... பலருக்கும் அவ்வாறே என்பது நிலவரமாக இருந்தது....
ஆனா பாகம்2 காட்டான் கூட்டம் வரும்போது அந்த ட்ரெண்டே பழகிட்டது போல...அத்தோடு கதையும் களனும்,காட்சியமைப்புகளும் ரொம்பவே நெருக்கத்தை கொடுத்தது..
ஸ்டெர்ன் பிடிச்சி போனான்...
இனி அவனும் நம்ம செட்டே...
தாராளமாக சந்தாவில இடம் அளிக்கலாம் சார்!!!
என்னைப் பொறுத்தவரை ஸ்டெர்னின் முதல் ஆல்பத்தில் சார்லஸ் பெனிங்கின் கல்லறையில் கோல்க்விட் மூத்திரம் பெய்யும்போதே இது வேறு மாதிரி என உறைத்து விட்டது நண்பரே...
Deleteதன்மகனை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக எண்ணி ஸ்டெர்னை வெறிகொண்டு துரத்தும் அந்த மேகிக் கிழவி அடுத்த கட்டம்.
இநாத ஆல்பத்தில் கையில் அடிபட்ட சிறுமியின் அறுவைச் சிகிச்சையின் போது இரவுமுழுக்க நகராமல் காத்திருக்கும் லென்னி மனதை கனக்கவைத்து விடுகிறார்.
உண்மைதான் நண்பரே SK. எந்தவித காம்பரமைசும் இன்றி வன்மேற்கை நம்முன்னே சுவரில் காட்சிகளாக ஓடச்செய்கிறது ஸ்டெர்ன்...
Deleteபெளன்சர்,
டியூராங்கோ,
அண்டர்டேக்கர்,
ஸ்டெர்ன்---
எல்லாம் ஆசிட் வெஸ்டர்ன்களாக அரிசோனாவையும், நியூமெக்ஸிகோவையும், டெக்ஸாஸையும் காட்டுது.
டைகர்&டெக்ஸில் பார்க்கும் வன்மேற்கு ஊறுகாய்+தயிர் சாதம்னா இவைகள் "கார"பிரியாணி...!!!
மெனுவில் காரபிரியாணிகள. இருக்கும் நாளில் கண்ணில் நீர்பொங்க ஒருவாய் சேர்த்து உண்கிறோமோ..... அதேதான் இங்கும்,...
இதுபோன்ற 4கதைகள் என்றும் நாவில் சுவை ஊறச்செய்யும்....
உவமைகளை மெனுவாக பொருத்திச் சொல்வதில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை STV. எக்ஸலண்ட்
Deleteதேங்யூ SK.🙏
Deleteகனவுலக காமிக்ஸ் மொழி:- " காமிக்ஸ்ம் (கறி)சோறும் இரு கண்கள் நமக்கு......."😍
உங்களுக்கு வித்தியாசமான காமிக்ஸில் ஒவ்வொரு காட்சிகளும் கண்ணில் நிற்கும் என்றும்;
எனக்கு 10ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு விழா அன்று காலை என்ன டிபன், மதியம் ஆசிரியர் சார் உடன், லஞ் என்ன சாப்பிட்டோம் என்பது எப்போதும் அத்துபடி...!
சந்தாவில் ஸ்டெர்ன் நிச்சயமாய்!!!
ReplyDeleteHi..
ReplyDeleteகென்யாவை ஏக் தம்மில் இரண்டு மூன்று தம்முகளோடு படித்து முடித்தாயிற்று..
ReplyDeleteஅட்டகாசமான திரில்லர்.. பரபரப்பான சம்பவங்கள்.. வித்தியாசமான கதைக்களம்.. சுவாரசியமான கதாபாத்திரங்கள்.. எதிர்பாராத க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்
மொத்தத்தில் இந்த மாதத்தின் டாப் இதழ் இதுவே..
ஸ்டெர்ன்.. எதிர்பார்க்காத ஆக்சன் விருந்து.. எதிர்பாராத சம்பவங்கள்..ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணங்களை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது
ஏனுங்..இப்ப மாமியார் வூட்டுக்கு போயி கறிச்சோறு சாப்ட்டு புட்டு வேப்ப மரத்தடில கயித்து கட்டில போட்டுப்புட்டு படுத்துட்டே ஏதோ கென்யா ஊராமே அத சுத்திப்புத்தி பாத்துப்புட்டு அப்பால வரேனுங்க வந்து விசை பரீட்சை ஏன் வேணாம்ன்னு தெளிவான சொல்றேனுங்கோ வரட்டுங்களா..
ReplyDelete!
என்ஜாய் தலைவரே...
Deleteகொடுத்து வைத்தவர்யா :-)
Deleteமாமியார் வீட்டுல விருந்து..ம்...கலக்குங்க தலீவரே...கூடவே கென்யாவா! டபுள் தமக்கா..
Delete:-)
Deleteவந்துட்டேன் வந்துட்டேன்
ReplyDeleteவிடிய விடிய காத்திருந்து தூங்கி இப்பத்தான் எழுந்தீங்களா KS?
Deleteஆமா SK. ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிட்டு
Deleteஹைய்யா புதிய பதிவு....
ReplyDelete// ஸ்டெர்ன் # 4 அடுத்த வருடத்தின் சந்தாவினில் ஒரு அங்கமாகிடலாமா ? அல்லது ஓரமாய் சைக்கிள் விட்டுக்கொண்டிருப்பவர் ஓரத்திலேயே பயணித்து வரட்டும் என்பீர்களா ? //
ReplyDeleteதாரளமாய் சந்தாவின் அங்கத்தினராக மாற்றலாம் சார்,ஸ்டெர்ன் அதற்கு தகுதியானவர்தான்...
// So வேணாமே விஷப்பரீட்சைகள் !! என்று safe ஆன ஜானர்களில் பயணிப்போமா ? சொல்லுங்களேன் ப்ளீஸ் ! //
ReplyDeleteபொறுமையா தேடி முத்துகளை எடுத்துட்டு வாங்க சார்,நாங்களும் அதுவரை பொறுமையாக காத்திருக்கிறோம்...
// இப்போதைக்கு உங்களில் சொற்பமானோரே இம்மாதத்து ஸ்டெரனுடன் அன்னம் தண்ணீர் புழங்கியுள்ளீர்கள் என்பது obvious ; //
ReplyDeleteஇன்னிக்குதான் மேற்கே பயணித்து மெய்யை காண வேண்டும்...
// அத்தகையதொரு கொலைவெறிக் கொள்முதல் மேளாவின் பலனே நமது ஸ்டெர்ன் ! //
ReplyDeleteஎங்களுக்கு அடிச்சது சார் லக்...
Dear Editor,
ReplyDeleteYes for safe Genre. Let's avoid deep experimentations until book sellers redeem themselves from sales slump. Fans can wait. You can use the wait time to find the right stories and announce may be 2 years later.
As an exception STERN can be part of subscription - this is not considered as IZHUVAACHI graphic novel.
This comment has been removed by the author.
Deleteஇழுவாச்சி= இழுவை+ அழுவாச்சி.... செம டிஸ்கிரைப்சன், ராக்ஜி...
Deleteஇது இல்லாத ஜம்போ 5சும்மா தெறிக்கும்....💕
லுக்கிங் ஃபார் தட்...
ஆமாம் பிரிவோம் சந்திப்போம், நில் கவனி வேட்டையாடு போன்ற கதைகளை மறக்க முடியுமா?
Delete
ReplyDelete//
மொழிபெயர்ப்பில் தனித்துவம் காட்டி நிற்கிறார் ஆசிரியர். நிச்சயம் பணி ஈடுபாட்டைத் தாண்டி அவரை ஸ்டெர்ன் வசீகரித்துள்ளதை எழுத்துக்களில் உணர முடிகிறது.//
//கபாலத்துக்கு 'டூ' விட்டுக் கிளம்பி இருந்த கேச பாணியில் நாங்கள் இருவருமே ஒன்றியிருந்தது தான் பின்னணிக் காரணமோ - என்னவோ !!//
!?
இந்தமாதத் தரவரிசை :
ReplyDelete1. ஸ்டெர்ன்
2. கென்யா
3. எலியப்பா
4. டெக்ஸ்
(த்சொ! எலியப்பாவை விட பின் தங்கிட்டீங்களே தல?!!)
என்னோட லிஸ்ட்டிலே எலி # 1 !!
Deleteஸ்டெர்ன் கதை பற்றி இங்கே நிறைய எழுத ஆசை! ஆனால் இதுவரை படிக்காத மற்றவர்களுக்கு அதுவொரு இஸ்பாயிலர் ஆகிவிடக் கூடாதே என்ற எண்ணம் மேலோங்குவதால் ஆசைக்கு தற்காலிகத் தடா!
ReplyDeleteஆனால் என்னைவிடவும் நண்பர் சரவணக்குமாரோ, செனா அனாவோ எழுதினால் இன்னும் சூப்பரா இருக்கும்! ஐ யாம் வெயிட்டிங்...
உண்மைதான் நண்பரே ஈ.வி. கதையில் வசனங்களாய் வெளிப்படுவது ஒருபங்கெனில் மௌனமாய் நிற்பது ஒன்பது பங்கு.
Deleteஉதாரணமாக 64 ஆம் பக்கத்தில் கடைசி 5 பேணல்கள் சொல்வதை எழுத எத்தனை வரிகள் தேவைப்படும்?
நீங்க எழுதி எனக்கு தனிச்செய்தியில் அனுப்புங்க
ReplyDeleteஃபோன் பண்ணிச் சொல்லிடறேனுங்க KS. சுளுவா வேலை முடிஞ்சுடுமில்லையா!! :)
Delete:-)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதலயின் கதை ஏனோ சட்டென்று முடிந்தது போல் இருந்தது. ஒரு 220 பக்கம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ReplyDeleteவழிமொழிகிறேன்...
Deleteஸ்டெர்ன் அட்டகாசமான கதை. இவரை அடுத்த வருட சந்தாவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ReplyDeleteஎலியப்பா கண்ணீருடன் விடை பெறுகிறார்.
ReplyDeleteகென்யாவுக்கு இனிமேல் தான் பயணம் செய்ய வேண்டும்.
ReplyDeleteஅருமை சார்......
ReplyDeleteஎனக்கு மார்ட்டா இப்ப படிச்சாலும் மார்ட்டா...ஜெரோனிமா இன்னும் படிக்கல....
இது போல் தேடல்ல வந்ததுதான் பிரிவோம் சந்திப்போம் எமனின் திசை மேற்கு போல அட்டகாச கதைகள்....
பத்துல ஏழு நிச்சயம் விட்டுதான்...நடக்கும் பாதையெல்லாம் சீராக அதாவது டெக்ஸ் ....அதிரடின்னா போரடிச்சிடுமே....மனதை நெருடும் கலங்கடிக்கும் கதைகளும் வரனும்.......விறுவிறுப்பான கதைகதான் டாப் ன்னாலும் ஓவியங்க சிலதுல சுறுசுறுப்பில்லா கதைகள்ல பட்டய கிளம்பி மனதை எங்கோ கொண்டு சென்றதுமுண்டே...
ஸ்டெய்ன் நிச்சயமா தொடரட்டும்
Deleteஜம்போ ஃபைவ அடுத்தாண்டு (நெஞ்சுல குத்தும் )அம்போனு விட்டுராதிய
Deleteகோல்டன் சிக்ஸ்டியும் வரனும் மாடர்ன் சிக்ஸ்டீனும் வரனும்
Deleteஜம்போ சீசன் 5 பற்றி
ReplyDeleteஇது போன்ற வித்தியாசமான கதைகளை தொடர்ந்து வெளியிட வேண்டுகிறேன். விஜயன் சார் நீங்கள் அதற்கான கதைகளைத் தேர்ந்தெடுத்து 2024 ல் நிச்சயம் ஜம்போ வந்தே ஆக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எலியப்பா கதை முடிந்து விட்டது வீட்டில் அனைவருக்கும் வருத்தம். எலியப்பாவின் வேறு கதைகள் இல்லை என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் யாரும் கேட்கும் மனநிலையில் இல்லை. வேறு கதை இல்லை என்றால் ஆசிரியருக்கு நிறைய அனுபவம் உள்ளதே அவரையே இது போன்று கதை எழுதி போடச் சொல்லலாமே என்று எனது மனைவியும் கேள்வி; அவர் எழுதினால் படம் போடுவது யார் என்ற உடன் அமைதியானார்கள். ஆங்கிலத்தில் இருந்தால் தமிழில் போடச் சொல்லுங்க அப்பா என்று எனது மகள், இல்லேடா ஆங்கிலத்தில்.
ReplyDeleteஎனது குடும்பம் எலியப்பாவை மிஸ் செய்கிறது.
கென்யா 5வது பாகமும் படித்து விட்டேன்.
ReplyDeleteமொத்தத்தில் மன நிறைவைக் கொடுத்த கதை எல்லா விதத்திலும்.
கென்யா பல வருட எதிர்பார்ப்பு ஒரு வழியாக தரிசனம் சிறப்பாக முடிந்தது.
மேற்கே இது மெய்யடா - ஸ்டெர்ன்
ReplyDeleteஜூன் மாத பார்சலை நேற்று-சனி இரவுதான் பிரிக்க நேரம் கிடைத்தது. இங்கே தளத்தில் ‘வெட்டியானுக்கு என்ன இவ்ளோ பில்டப்’ என்ற ஆர்வத்தில், எப்போதும் டெக்ஸ் கதைகளையே முதலில் படிக்கும் நடைமுறையை கைவிட்டு, மேற்கே இது மெய்யடா புத்தகத்தை கையில் எடுத்தேன். விறுவிறுப்பான கதைதான். கதை விமர்சனம் என்பதை ஒரு பக்கம் வைத்துவிட்டு மற்ற விஷயங்களை பக்கம் பக்கமாக கிலாகித்து எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் கொட்டி கிடக்கிறது இந்த வெட்டியான் எபிசோடில்.
அதிலும், இந்த 74 பக்க கதையில் இவர்தான் கதையின் நாயகன், இந்த அம்மனிதான் நாயகி, இவர்தான் வில்லன், இந்த விஷயங்களுக்குதான் இவர்களுக்குள் பிரச்சனை, இதை இப்படிதான் ஹீரோ சால்வ் பண்ணப்போகிறார் என்றில்லாமல், ஒவ்வொரு கேரக்டருக்கும் யதார்த்தமான குனாதிசியங்கள் என்று அருமையான கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ரசிக்க வைக்கிறது. அதுதான் இந்த கதையின் வெற்றி என புரிந்து கொள்ளலாம். கொச கொசவென ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். ஆனால் எதிலும் எந்த குழப்பமும் இல்லை. ஏதோ ஒரு கதாபாத்திரம், நாம் வாழ்வில் பழகிய, பழகும் ஒரு முகத்தை கண்டிப்பாக ஞாபகப்படுத்தும். இதில் ஓவியரின் உழைப்புக்கு ராயல் சல்யூட். செமையான டீடைலான ஓவியங்கள். வித்தியாசமான் கலரிங். இவைகள் நின்று நிதானித்து ரசிக்க வேண்டிய விஷயங்கள்.
இதில் குறை என்ன என தேடினால், இறுதி பக்கங்களில் சில, யார் யாரை சுடுகிறார்கள், யார் யரை தாக்குகிறார்கள் என குழப்படிகளை சொல்லலாம். கூர்ந்து கவணித்து வாசித்தால் குழப்பம் வருவதற்கு வாய்ப்பில்லைதான்.
மொத்தத்தில் இந்த வெட்டியான் வாசிப்பவர்களின் பொன்னான நெரங்களை வெட்டி பொழுதாக்காது என்பது மட்டும் நிச்சயம். வித்தியாசமான வாசிப்பு அனுபவத்திற்கு உத்திரவாதம் இந்த ‘மேற்கே இது மெய்யடா’.
எனது மார்க் 9/10
Good review
Deleteஅருமையாக எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்
Deleteஅருமை நண்பரே நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ளீர்கள் தொடர்ந்து வாருங்கள்..
Delete// யார் யரை தாக்குகிறார்கள் என குழப்படிகளை சொல்லலாம். //
Deleteயெஸ் எனக்கும் இதுவே தோன்றியது...
நண்பர்களின் வரவேற்புக்கு நன்றி !
Delete//கதை விமர்சனம் என்பதை ஒரு பக்கம் வைத்துவிட்டு மற்ற விஷயங்களை பக்கம் பக்கமாக கிலாகித்து எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் கொட்டி கிடக்கிறது இந்த வெட்டியான் எபிசோடில்.//
Deleteஎக்ஸ்டாட்லி!
அனுபவித்துப் படித்து, அழகான விமர்ச்சனமாய் வடித்துள்ளீர்கள் கார்த்திகேயன் ஜி! அருமை!!
Deleteகென்யா ::
ReplyDeleteமுதல் அத்தியாயம் படித்து முடித்திருக்கிறேன்.
சினிமா போன்று காட்சிகள் உள்ளன👍👍👍
பைன்டிங்க் குறையுண்டு..
முதல் முப்பது பக்கம் தேவையற்றது போன்று நமக்கு தோன்றுகிறது.....
4 ஜம்போ சீசனிலும் சேர்த்து ஆக மொத்தம் 24 கதைகளில் டாப் 3 கதைகள் எது என்று சிந்தித்துப் பார்க்கலாமே. அந்த முடிவுகள் நமது ஆசிரியருக்கு உதவும் தகவல்களாக இருக்கக் கூடுமோ?
ReplyDeleteஜம்போ ஐந்தாவது சீசனுக்காக காத்திருக்கிறோம்.... லயன் காமிக்ஸின் நிஜமான மாஸ் ஜம்போ வே
ReplyDeleteயெஸ்
DeleteGood Idea. Editor sir - can you please list all Jumbo releases thus far? We can see a voting to decide the pattern of better stories.
Deleteஸ்டர்னுக்கு அடுத்த மூன்று பாகங்கள் இருந்தால் அதை ஒட்டுமொத்தமாக வெளியிடும் பட்சத்தில் ஒரு புது ஹீரோ உருவாகி விடுவார் என்று தோன்றுகிறது.
ReplyDeleteகென்யா - மர்ம தேசம்
ReplyDeleteஇரண்டு முறை படிக்க வேண்டிய கதை.
முதல் முறை நாமும் கதை மாந்தர்கள் போல என்ன நடக்கிறது என்று புரியாமல் பயனிக்கிறோம். அது ஒரு சஸ்பென்ஸ் ரீடிங் அனுபவத்தை தருகிறது.
இரண்டாம் முறை படிக்கும் போது நமக்கு பல புள்ளிகளை இணைக்கும் முடியும், இது அதுவாச்சே... என்ற கதாசிரியரின் கற்பனை நம்மை வியக்கச் செய்யும்.
இந்த சைஸில் முழுபக்க ஓவியங்கள் அனைத்தும் ஆசம்!!
கேத்தி ஆஸ்டினின் அடுத்து எப்போது சந்திப்போம்?
விட்டா அகில உலக கேத்தி ரசிகர் மன்றம் ஆரம்பிச்சுடுவீங்க போலிருக்கே?!! :)
Deleteஆரம்பிச்சு... ஆங்கில இதழை இணையத்தில் தேடி பார்த்து :) :) :)
DeleteStern to continue...Very good story line, drawings...keep trying new stories Sir
ReplyDeleteஅப்புறம் வந்துட்டேன் ...விச பரீட்சை வேணாம்ன்னு சொன்னது ஆசரியர் 200 % வெற்றியை எதிர்பார்த்து என்பதாலேயே சார்..மற்றபடி ஸ்டெர்ன் இந்த கென்யா பிஸ்டலுக்கு பிரியா விடை போன்றவை எல்லாமே தங்கள் விசப்ரீட்சையாலே கிடைத்த முத்துக்கள் தானே ..என்ன மாட்டா போன்று ஒன்றில் ஏமாந்து போவதில் ஒன்றும் சொல்ல இயலாது சார்..எனவே பரீட்சியை தொடருங்கள்..தேநீர் இடைவெளியில் இங்கே வந்தேன் கென்யா பாதி தூரத்தில் இன்னும் உள்ளது சார்..எனவே அதை முடித்து விட்டு...
ReplyDeleteஹம் தேனீர் இடைவேளை :-). என்ஜாய் தலைவரே.
Delete:-)
Deleteஅப்புறம் விஜயன் சார் என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை இந்த மாத புத்தகங்கள் எல்லாத்தையும் 4 நாட்களில் படித்து முடித்து விட்டேன். எல்லாம் கதைகளும் சிறந்த வாசிப்பு அனுபவத்தை கொடுத்தன. ஒரு சூப்பர் ஹிட் மாதம்.
ReplyDeleteஅடுத்த மாத புத்தகங்களை எப்போது அனுப்புவீங்க :-)
இதையே நான் கேட்டால்????
Deleteஅதுதான் குமார்:-)
Deleteஇது தலைவரோட கேள்வியாச்சே...
Deleteசரி விடுங்க நானும் கேட்டுறேர்ன்
Deleteசார் நாலு தேசமும் சுத்தி பாத்தாச்சு ..அடுத்த மாச புக்கு எப்ப சார்...:-)
மேற்கே இது மெய்யடா :
ReplyDeleteமூச்சின் இறுதி தருவாயிலும் லென்னி இசைக் குறிப்புகளை கண்டு மகிழ்வது இசையை ஆத்மார்த்தமாக ஆன்மாவில் இருந்து நேசிப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம்...
ஸ்டேர்னின் வாசிப்பு நேசமும் அவ்வாறே,அதனால் தான் மற்றவர்கள் " கொலராடோ காப்"பை வம்பனாக பார்த்தாலும் ஸ்டெர்னின் பார்வை மாறுப்பட்டதாக உள்ளது...
வேட்டையாடி எழுத்தாளனாக இருப்பதும்,வெட்டியான் வாசிப்பாளனாக இருப்பதும்,நண்பன் லென்னி இசைக் குறிப்புகளின் நேசனாக இருப்பதும் அழகிய முரண்கள்...
சமூகத்தில் ஒருவரின் தோற்றமும்,படிப்பும்,தொழிலும்,
வசதி வாய்ப்புகளையும் வைத்து அந்நபர் நாகரீக வாழ்வை வாழ்பவர்,கணவான்,
கண்ணியமானவர் என்று அடை மொழியிட்டு அழைப்பதே பொது சமூகத்தின் புத்தி...
ஆனால் ஸ்டெர்ன்,காப்,லென்னி போன்றவர்கள் அந்த வரைமுறையில் அடங்காதவர்கள்,எனினும் பொது சமூகத்திற்கு இவர்கள் மேல் பெரிய அக்கறை கிடையாது என்பதே நிதர்சனம்...
இது போன்ற கதைகளை நாம் வாசிக்கும்போது சற்றே ஆழ்ந்து யோசித்தால் இந்த முரண்பாட்டை புரிந்து கொள்வது எளிது...
ஸ்டெர்ன் போன்றவர்கள் மூலம் நாம் கற்றுக் கொள்வது இதுதான் "வாழ்க்கை சார்ந்த சிந்தனைகளை சுருக்கிக் கொள்ளாதீர்கள்"...
எனது சிந்தையில் தோன்றிய எண்ணம் எதுவெனில்,ஸ்டெர்ன் போன்றவர்களிடம் தான் உண்மையான வாழ்க்கையை கற்றுக் கொள்ள முடியும்...
இறுதியில் ஸ்டெர்னின்
"காற்று வீசும் திசையிலே பயணம் போகலாம்டா பையா"
-வசனம் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம்...
புதுசா தோணின விஷயம் என்னன்னா டெக்ஸ் கதைகளுக்கு இணையாக இதில் "டூமில்" கள் சத்தம் இருக்கு,ஆனா டெக்ஸ் கமர்ஷியல் வட்டத்திலும்,ஸ்டெர்ன் எதார்த்த வட்டத்திலும் வருவதேன் ?!
-அதுக்கு பதிலாக மண்டைக்குள் நிறைய விஷயம் தோணிச்சி...
ஓவியங்கள், வர்ணக் கலவைகள்,பின்னணி காட்சியமைப்புகள் அனைத்தும் நிறைவு...
சண்டை நடக்கும் காட்சிகளில் யார்,யாரை சுடுகிறார்கள் என்பதை கவனிக்காவிடில் சற்று குழப்பம்தான் நேரும்...
ஸ்டெர்ன் கதையின் நாயகன்,மனதிற்கு நெருக்கமான நாயகன்...
எமது மதிப்பெண்கள்-10/10.
என் மனதில் தொன்றிய சில விஷயங்களை அப்படியே பிரதிபலிக்கிரீர்கள். அதிலும் பாப், லென்னி பொன்ற கதாபாத்திரங்கள் அலாதியானது. அதிலும் ஸ்டெர்ன் மற்ற காமிக்ஸ் ஹீரோக்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுவது இந்த தொடருக்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறது. இவரைப் போன்றவர்களை கதையின் நாயகனாக கொண்டு காமிக்ஸ் உருவாக்கம் செய்வது ரொம்பவே ரிஸ்க்கானது. கொஞ்சம் சொதப்பினாலும் பனால்தான். அதை கதாசிரியரும், ஓவியரும் திரம்பட கையாண்டுள்ளனர் என்றால் மிகையில்லை.
Delete//மூச்சின் இறுதி தருவாயிலும் லென்னி இசைக் குறிப்புகளை கண்டு மகிழ்வது இசையை ஆத்மார்த்தமாக ஆன்மாவில் இருந்து நேசிப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம்...//
Deleteலென்னி மீன்பிடிக்க தூண்டிலை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது அவனுக்கு கிருஸ்துமஸ் பரிசளிக்க எண்ணி எலீஜா பையிலிருக்கும் காசுகளை எண்ணியபடி கிளம்பி அந்த இசை குறிப்புகளை வாங்கச் செல்லும் இடம் கவிதைங்க சார்...
அதை மரணத் தருவாயில் அவனிடம் தரமுடிந்ததுதான் துரதிர்ஷ்டம்!!!
////புதுசா தோணின விஷயம் என்னன்னா டெக்ஸ் கதைகளுக்கு இணையாக இதில் "டூமில்" கள் சத்தம் இருக்கு,ஆனா டெக்ஸ் கமர்ஷியல் வட்டத்திலும்,ஸ்டெர்ன் எதார்த்த வட்டத்திலும் வருவதேன் ?!////
Deleteநல்ல கேள்வி!!
////ஸ்டெர்ன் மற்ற காமிக்ஸ் ஹீரோக்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுவது இந்த தொடருக்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறது. இவரைப் போன்றவர்களை கதையின் நாயகனாக கொண்டு காமிக்ஸ் உருவாக்கம் செய்வது ரொம்பவே ரிஸ்க்கானது. கொஞ்சம் சொதப்பினாலும் பனால்தான். அதை கதாசிரியரும், ஓவியரும் திரம்பட கையாண்டுள்ளனர் என்றால் மிகையில்லை.////
Deleteஉண்மை உண்மை!!
// லென்னி மீன்பிடிக்க தூண்டிலை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது அவனுக்கு கிருஸ்துமஸ் பரிசளிக்க எண்ணி எலீஜா பையிலிருக்கும் காசுகளை எண்ணியபடி கிளம்பி அந்த இசை குறிப்புகளை வாங்கச் செல்லும் இடம் கவிதைங்க சார் //
Deleteமிகவும் ரசித்த இடம் இது
// அதை மரணத் தருவாயில் அவனிடம் தரமுடிந்ததுதான் துரதிர்ஷ்டம்!!!
Delete//
உண்மைதான் நண்பரே...
அருமையான விமர்சனம் ரவி அவர்களே....
Delete// இவரைப் போன்றவர்களை கதையின் நாயகனாக கொண்டு காமிக்ஸ் உருவாக்கம் செய்வது ரொம்பவே ரிஸ்க்கானது. //
Deleteஎனக்கென்னமோ ஸ்டெர்னின் வாசிப்பு ஆர்வம்,லென்னியின் இசை நேசம்,"காப்" எழுத்து சார்ந்த படைப்பார்வம் போன்றவை கதாசிரியரின் மிகுந்த மெனக்கெடலில் இருந்து உதித்ததாய் தோன்றகிறது....
இப் பாத்திரங்கள் மிக தனித்துவம் வாய்ந்ததாய் தெரிவதில் ஆர்வமாய் இருந்திருக்கலாம்,அதுவே வாசிப்பாளர்களிடம் தனியிடத்தை பிடித்துத் தரும் என்று நம்பி இருக்கலாம் அல்லது கதாசிரியரின் பிரதி பிம்பமாக இப்பாத்திரங்கள் வெளிப்பட்டிருக்கலாம்.....
//ஒரு சூப்பர்ஹிட்மாதம். அடுத்த மாத புத்தகங்களை எப்போது அனுப்புவீர்கள்.// ஆமாம்.இப்போதிருந்தே அடுத்தமாதத்திற்கு மனம் ஏங்க ஆரம்பித்துவிட்டது. நல்ல வேலையாக ஸ்டெர்ன் எனக்கு பாக்கியிருக்கு. இந்த வாரத்தை ஓட்டிவிடுவேன். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteநம்மள் கிட்டே ஒற்றை நொடி ஒன்பது தோட்டா இன்னும் நான்கு பாகங்கள் உள்ளன. அதனை படித்து முடிக்க வேண்டியதுதான்:-)
ReplyDeleteகென்யா படலம் இனிதே முடிந்தது.
ReplyDeleteபறக்கும் தட்டுக்கள், வெளி கிரகவாசிகள், பண்டைய கால விலங்குகள் என்று கலந்து கட்டி அடித்த மாஸ் ஹிட்டான கதை.
பக்கத்துக்கு பக்கம் பிரம்மாண்டமான சித்திரங்கள், கலரிங் என மிரள வை
க்கிறது.
அதுவும் 5ம் பாகத்தில் 198,199 ம் பக்கங்கள் நேஷனல் ஜியாக்ரபிக் சே னலை நேரில் பார்த்த உணர்வு.
பறக்கும் தட்டு இறங்கும் காட்சிகள் எல்லாம் Closed encounters of the third kind படக்காட்சிகளையும், independence day படக் காட்சிகளையும் நினைவூட்டின.
பிரமிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை.
அடுத்த வார அமெரிக்க பயணத்தின் போது விமானத்தில் மறுவாசிப்புக்கு கென்யா என்னுடன் பயணிக்கும்.
எடிட்டர் சார். இது போன்ற கதைகளை ஹார்டு பவுண்டில் ஒரே தொகுப்பாக வெளியிடுங்கள். வரவேற்கிறோம்.
(சிறு நெருடல், இழவு, பேமானி போன்ற வார்த்தைகள். அங்கங்கே இந்த வார்த்தை பிரயோகங்கள் உறுத்துகின்றன. மன்னிக்கவும் )
////அடுத்த வார அமெரிக்க பயணத்தின் போது விமானத்தில் மறுவாசிப்புக்கு கென்யா என்னுடன் பயணிக்கும்.////
Delete'அமெரிக்காவில் ஒரு கென்யா'னு சொல்லுங்க பத்து சார்!!
பத்திரமா போய் வாங்க! வரும்போது எனக்கு ரெண்டு டுப்பாக்கி வாங்கிட்டு வாங்க. அங்கதான் யார் வேணும்னாலும் டுப்பாக்கி வாங்கலாமாமே?!!
சரி டுப்பாக்கி எதுக்குன்னு கேட்கறீங்க - அதானே? ச்சும்மாதான் பத்து சார்.. வீட்டிலே இருக்கும்போது இடுப்பிலே சொருகிட்டு சுத்திக்கிட்டிருந்தோம்னா வீட்டிலே இருப்பவங்கல்லாம் ஒரு மட்டு மருவாதியோட நடந்துக்குவாங்க பாருங்க?
This comment has been removed by the author.
Deleteநன்றிங்க ஈ.வி.
Deleteஇடுப்புல சொருகிக்கும் போது (sideல தானே?) துப்பாக்கில புல்லட் இல்லாம பாத்துக்கோங்க. படாத எடத்துல பட்டுறப் போவுது. very dangerous Weapon
ஹா ஹா!! ரொம்பவே கவனமா இருப்பேன் பத்து சார்!! :))
Deleteவெட்டியானில் ஏகப்பட்ட "இழவு" வார்த்தைகள் கொட்டி கிடக்கு பத்து சார்,வெட்டியான் வந்தாலே அங்கே " இழவு" விழும் நினைச்சோ என்னமோ அவை கொட்டிக் கிடக்கு,கதைக் களத்திற்கு அவை பொருந்தி வருவதால் பெரிதாய் உறுத்தவில்லை...
Deleteதப்பா சொல்றீங்க ரவி? இழவு விழுந்ததால் தான் வெட்டியானின் வருகை.
Deleteஇன்றும், நாளையும் பெங்களூர் வாசம்.
ReplyDeleteகரூரில் இரண்டு பாகங்களை படித்து, மீதி 3 பாகங்களையும் இன்று இங்கு மகன் வீட்டில் அமர்ந்து ஏக் தம்மில் கதையை படித்து முடித்துவிட்டேன். செம்மையான சித்திர விருந்து. அற்புதமான மேக்கிங்.
ஹார்டு பவுண்டு மேக்கிங்கில் வரும் எல்லா கதைகளும் அசத்துகின்றன சார். தரத்தில் ஒன்றையொன்று விஞ்சி நிற்கின்றன.
வாழ்த்துக்கள் சார்.
//வேட்டையாடி எழுத்தாளனாக இருப்பதும் வெட்டியான்வாசிப்பாளனாக இருப்பதும் அழகிய முரண்கள்//. //எனதுசிந்தையில் தோன்றிய எண்ணம் என்னவென்றால்ஸ்டெர்ன் போன்றவர்களிடம்தான் உண்மையான வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளமுடியும். // அருமைசார். விமர்சனங்கள் தொடரட்டும். கரூர் ராஜ சேகரன் .
ReplyDeleteபுத்தக விமர்சன விறுவிறுப்பில் ஈரோடு book fareஸ்பெசல்பற்றி மறந்துவிட்டோமே. சார் அறிவிப்பு ப்ளீஸ்
ReplyDelete**** (பன்) பரிசுப் போட்டி ***
ReplyDeleteமேற்கே இது மெய்யடா - பக்கம் 58 - முதல் இரண்டு பேனல்கள்!
விரல்களை இழந்த அந்த குட்டிப்பெண் தன்னுடைய வயது 9 என்று சொல்லுவாள்! அடுத்த பேனலில் கொலராடோ காப்பின் முகத்தில் ஒரு மெல்லிய அதிர்ச்சி+ சோகம் + குற்றவுணர்வு எல்லாம் கலவையாகத் தெரியும்! இதற்கான சரியான விளக்கத்தை அளிப்பவர்களுக்கு இந்த EBFல் பொன்னிறமாக வறுக்கப்பட்ட சிறப்பு பன்னுகள் பரிசாக அளிக்கப்படும்!
ஏ.பி.கு: யாருமே சரியான விடை அளித்திடாதபட்சத்தில் கம்பேனியே பன்னுகளை கபளீகரம் பண்ணும்!
நல்ல கேள்வி ஈ.வி:
Deleteநூனனின் கேள்வியில் இதற்கான விடை ஒளிந்துள்ளது,சம்பவம் நடக்கும் ஆண்டு 1882,சரியாக 9 வருடங்களுக்கு முன் அதாவது 1873 இல் நூனன் மகள் அபிகெய்லுடன் பழகிப் பார்த்திருந்த ஒரு குழந்தை பிறந்திருந்தால் தற்போது அதன் வயது 9.அதனால்தான் குழந்தை மரியானின் பதில் காப்பை திகைப்புற செய்தது...
என்னதான் வேட்டையாடியாக இருந்தாலும் காப்பும் மனிதன் தானே...
வாவ்!! அருமையான பதில்!! ஆழமான புரிதல்!!
Deleteபரிசு உங்களுக்கே, அறிவரசு அவர்களே! (கம்பேனிக்கு பன்னு போச்சே!!)
அருமை அறிவு.
Deleteசெம் கேள்வி - செம பதில்
Deleteவாரேஹ் வா!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
ReplyDeleteகடேசியில் 6 ஆவது மாதத்தில் இந்த வருடத்தின் அதிகாரி கதைகளில் ஒன்றை முழுவதுமாய் படித்துவிட்டேன்?
அந்தந்த மாத கதைகளை அந்தந்த மாதமே படித்துவிட வேண்டும் என்று நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழி காரணமா?
இல்லை கதையில் வரும் அம்மிணி காரணமா? தெரியவில்லை!
ஒரு காதல் முத்தம்?!
மார்க் : 7/10
சித்திரங்கள் டாப்பு
யுத்தத்தை முத்தமாக்கிவிட்டது கூகுள்
Delete166th
ReplyDeleteநம்ம சீனியர் நினைவலைகள் அருமை...80 களில் சுவர்களை அலங்கரித்த...நான் கிழித்து வந்த திரைப்பட போஸ்டர்களில் நமதும் உண்டு போலும்...
ReplyDeleteநம்ம தலைமை ஆசிரியர் உங்களை விட உலகம் சுற்றும் வாலிபராய் தெரிகிறார்....தொடர்க
கென்யா முதல் பாகம் எடுத்ததும் தெரியல முடித்ததும் தெரியல....சூடு பிடிக்கும் மர்மத்துடன் இரண்டாம் பாகம் தொடங்க நமது நாவல்கள் போல தனித்தனியா பயணிக்குது
ReplyDeleteஸ்டெரன் - பக்கம் 68 அபிகெய்லிடம் அவளது அப்பா "என்னை மன்னித்து கொள்" என்பதற்கு காரணம் என்ன? காப்பை தன்னால் கொல்ல முடியவில்லை என்பதற்கா?
ReplyDeleteதன் மரணத்தை உணர்ந்து, தன் மகளை தனியாக விட்டுச்செல்லப் போவதை எண்ணி நுனூன் உதிர்க்கும் வார்த்தைகள் அவை நண்பரே...
Deleteஅவள் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகச் சொல்வார்... அதாவது மரணம் வரை தன் பொறுப்பில் வைத்திருக்க எண்ணியிருப்பார்...
Deleteஆனால் அவர் மரணத்திற்கு பின்னர் அவளை பொறுப்பேற்றுக் கொள்ளும் நபரைப் பார்க்கும்போது காலம் எத்தனை விசித்திரமானது என தோன்றுகிறது.
புரிந்து கொண்டேன் சரவணன். நன்றி
DeleteThere's another perspective to this sirs....
Deleteநூனன் மன்னிப்புக் கேட்பதில் இன்னொரு கோணமும் உண்டு !
காப் உதிர்க்கும் வார்த்தைகளில் அதற்கான காரணம் உள்ளது ! இன்னொருக்கா முயற்சித்துப் பாருங்களேன் !
In fact அது தான் தொடரும் பிரேமுக்கும் நியாயம் செய்திடும் விளக்கமாகிடும் !
காப்:(பக்கம் 48) எனக்கு ஒரு மகள் இருந்து அவள் இது மாதிரி இக்கட்டில் சிக்கியிருந்தால் தூக்கில் தொங்கி இருக்க மாட்டாள்.என்னிடம் வந்து சொல்லி இருப்பாள்.
Deleteநூனன் ஒரு நண்பனாக தன் மகளுக்கு தோன்றவில்லை
அதற்கும் சேர்த்து மன்னிப்பு கோருகிறார்
// எனக்கு ஒரு மகள் இருந்து அவள் இது மாதிரி இக்கட்டில் சிக்கியிருந்தால் தூக்கில் தொங்கி இருக்க மாட்டாள்.என்னிடம் வந்து சொல்லி இருப்பாள்.//
Deleteஇதனை படிக்கும் போது ஏன் இப்படி சொல்கிறார் என நினைத்தேன், உங்கள் விளக்கம் அதற்கான காரணத்தை புரிந்து கொள்ள செய்து விட்டது.
//நூனன் ஒரு நண்பனாக தன் மகளுக்கு தோன்றவில்லை//
Deleteஎக்ஸலண்ட் சார்...
ஒரு காதல் யுத்தம்.
ReplyDeleteவண்னச் சித்திர விருந்து. ஒரு கைவிடப்பட்ட மிஷனரிக்கு வந்து சேரும் டெக்ஸ் தனது பிளாஷ்பேக்கை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். நவஹோக்களின் நிலத்தை அடைய துடிக்கும் அபாச்சே இனத்தை சேர்ந்த பேட் க்ரோ என்பவன்தான் கதையின் மெயின் பார்ட். அவனிடமிருந்து தனது மனைவி லிலித்தை காப்பாற்றுவதுதான் இதில் டெக்ஸ்சுக்கு கொடுக்கப்பட்ட பெரும் பணி. மொத்தத்தில் கதையின் மையம் இவ்வுளவுதான்.
டெக்ஸ் கதைகளின் ஆரம்ப ஆசிரியர் Gian Luigi Bonelli பிறகு வெகு சிறப்பாக கதை கூற கூடியவர் Claudio Nizzi அவர்கள் என்பது என் கருத்து. போலவே இந்தக் கதையையும் நன்றாக கூறியுள்ளார். ஆனால் இந்தக் கதையின் நிஜ நாயகர் Fabio Civitelli அவர்கள்தான் என்பேன். பக்கத்துக்கு பக்கம் சித்திரங்கள் சும்மா அள்ளுகிறது அதுவும் வண்ணத்தில். அந்தம்மா லிலித் எவ்வளவு அழகு. இந்தம்மாவுடன் வாழ நம்ம தலைக்கு கொடுப்பினை இல்லாது போயிற்றே என்றுதான் கதையின் இறுதியில் நமக்கு தோன்றுகிறது.
ஓகே.. அரிசோனா டூர் முடிந்தது இனி மர்ம தேசம் கென்யாவுக்கு பிளைட் பிடிக்க வேண்டும் சென்று வருகிறேன். 🙂
மேற்கே ஒரு மெய்யடா.. ஒரு unexpected hard hitting story. நிச்சயமாக அடுத்த வருட சந்தாவில் சேர்க்க தகுதியும் நியாயமும் உள்ள தொடர். இதன் கடைசி panel-உம் லக்கியின் கடைசி panel-உம் ஒன்றேயென்றாலும், இரண்டு extreme உணர்வுகள். இப்படி ஒரு தொடர் கண்டுபிடிக்க ஜம்போவில் எவ்வளவு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்கலாம் சார்
ReplyDelete///இப்படி ஒரு தொடர் கண்டுபிடிக்க ஜம்போவில் எவ்வளவு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்கலாம் சார்///
Deleteநச்சுனு சொன்னீங்க ரெஜோ!
கென்யா மர்மதேசம்!
ReplyDeleteசில படைப்புகள் விமர்சனங்களுக்கு அப்பார்பட்டவை. அதில் கென்யாவும் சேர்த்தி எனலாம். நீங்கள் கால இயந்திரத்தில் பயணித்து, 1980 களுக்கு உங்கள் மனதை பக்குவப்படுத்திவிட்டால், கென்யா உங்களை நிச்சயம் பிரமிப்பூட்டும்.
கென்யா புன்னகை - சந்தோஷ புன்னகையோ இல்லை நக்கலான புன்னகையோ அது வாசிப்பவர்களின் மன நிலையை பொருத்தது! :-)
எனது புன்னகை மர்மமாகவே இருந்துவிட்டு போகட்டுமே! ! :-))
இதுவொரு வித்தியாசமான விமர்சனமாக இருந்துவிட்டுப் போகட்டுமே?!! :)
Deleteகாதல் யுத்தம் - நெல்சன் தளபதியை மட்டும் நம்பி , ஸ்லோ மோஷன், BGM என பீஸ்டை ஒப்பேற்றியதைப் போல - தலயையும், அழகான ஓவியங்களை மட்டுமே நம்பி வந்திருக்கும் கதை போலத் தோன்றியது. அதிலும் லிலித் .. வாவ்.
ReplyDeleteதல - லிலித் flashback கதைகள் லயனில் இதற்கு முன்பு வந்திருக்கின்றனவா ? லிலித் கு என்னதான் ஆச்சு ?
*** மேற்கே இது மெய்யடா - பரிசுப் போட்டி - சீஸன் 2 ****
ReplyDeleteஇக்கதையில் நிறையவே வன்முறைகளும், உயிர் பலிகளும் இருந்தாலுமே கூட, இதில் வரும் கதாபாத்திரங்களில் யாருமே கெட்டவர்கள் இல்லை என்பதாகவே நமக்குத் தோன்றிடும்! மேலோட்டமாகப் பார்த்தால் இது சரியாக இருக்கலாம்!
ஆனால், அப்படியல்ல! உண்மையாகவே கொலைவெறி கொண்ட, குரூர புத்தியுள்ள ஒருவனும் இக்கதையில் இருக்கிறான்..
யாரவன்?
சரியான பதில் அளிப்பவர்களுக்கு EBFல் பொன்னிற மேல் தோல் கொண்ட சூடான பன் பரிசளிக்கப்படும்!
I think பார்ட் !
Deleteவாவ்... மர்ம தேசம் கென்யா படு விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டு பாகம் முடித்து விட்டேன்.
ReplyDeleteமூன்று புத்தகங்களையும் படித்து விட்டேன். கென்யாவும், ஸ்டெர்ன்னும் சூப்பர், டூப்பர் ஹிட்....மிஸ் பண்ணக்கூடாத புத்தகங்கள்... தலை, just OK....
ReplyDeleteதல,
ReplyDeleteகென்யா ஒரு வரியில் சொல்வதென்றால்
ReplyDeleteகென்யா இது ஈரோட்டில் கொடுக்கும் பன்யா
பிரபஞ்ச புளூ கிராஸ் சொஸைட்டிவாசிகளும் பின்னே சில சிந்தனைகளும்
ReplyDeleteஇடம் தேர்வறை
இடம் பெறுவோர் : ரகு - மாணாக்கன் , ஆசிரியரான தேர்வறை கண்காணிப்பாளர்[தே.க]( இருவரும் வரைகதை வாசகர்கள்)
தே.க : ஏண்டா ரகு, பக்கத்து பாலுவோட பேப்பரை பாத்து காப்பியடிச்சு எழுதுற?
ரகு: பரீட்சை ஹால் விதிகள் என்ன சார்?
தே.க: பிட் அடிச்சு எழுதக் கூடாது
காப்பியடிச்சு எழுதக் கூடாது
புஸ்தகம் கொண்….
ரகு:இருங்க சார்! நான் முதல் விதியை மீறலே. இரண்டாவது விதியைத்தான் மீறியிருக்கறேன்.
தே.க: என்னடா உளர்ரே?
ரகு : கென்யால 215 –ம் பக்கம் நட்சத்திர மண்டல அடிப்படை விதிகளில் முதலாவதை பிரபஞ்ச வாசிகள் – அதாவது வேற கிரக நிகழ்வுகளில் தலையிடப்படாதுங்கறதை மீறுராங்க. அழியவிருந்த உயிரிகளை காப்பாத்துறாங்க.216-ம் பக்கம் பாருங்க. அந்த உயிரிகளை தங்கள் வாழிடத்துக்கு கொண்டு போகணும்னுங்கறப்போ நட்சத்திரமண்டல விதிகள் குறுக்க வந்துருது..ஒரு விதியை மீறுவாங்களாம்..அது தொடர்பான இன்னொரு விதியை மீறமாட்டாங்களாம்
தே.க: [சிரித்து] அப்படி இங்கேயே வச்சிருந்தாலும் தப்பி ஓடறதை புடிச்சி அழிக்கிறாங்கல. காப்பி அடிச்ச உன்னை நான் புடிச்ச மாதிரி?
ரகு: என்னை புடிச்சீங்க..இதே ஹால்ல இன்னும் 9 பேரு பிட் அடிச்சு முடிச்சு.ஆதாரமான பிட்டையும் தடயமில்லாம அழிச்சுட்டாங்க.. பேரு சொல்லமாட்டேன்.
தே.க: [திகைத்து] என் சக்திக்கு உட்பட்டு பாத்தேன்.அப்படி யாரும் என் கண்ணுல மாட்டலியே/
ரகு:கென்யாலேயும் இப்படித்தான். அவங்க சக்திக்கு முயற்சி பண்ணியும் ஒரு மாமூத் ஒரு யானை மந்தையோட ஐக்கியமாயிடுச்சு. ஒரு சாதாரண கென்ய பெண் யானையோட புணர்ந்தால் ஒரு ஹைபிரிட் இனமே உருவாயிருக்கும். தங்க முடி
வாலில்லா குரங்கு டெய்சி உட்பட பலபேரை கொன்னுடுச்சு. ஒரு சைனோக்நாதஸ்(CYNOGNATHUS) ஒரு ஆண் சிங்கத்தை கொன்னு ஒரு PRIDE டோட ஆட்சிக்குப்பட்ட பகுதியோட நிலவரத்தையே மாத்துது.[ சிங்கத்தின் வேட்டை இரையை பங்கு போடத் துணிவது ஹயீனா கூட்டமும் சீட்டாவும்தான். .[இவையுமே ஆண் சிங்கம் இருந்தால் தயங்கும்]
Deleteதே.க: டேய். பரீட்சை நேரத்துல என்னடா வாக்குவாதம்?
ரகு: சார்! ஜன்னல் வழியா பாருங்க. ஒரு வெட்டுக்கிளியை ஒரு ஓணான் புடிச்சிடிச்சி. ஒரு பத்து நிமிஷம் அனுமதி கொடுங்க. போய் காப்பாத்திட்டு வந்துடறேன்..
தே.க:வெளையாடுறியா? எக்சாம் ஹாலை விட்டு நீ போக முடியாது.உன் வேலை எக்சாம் எழுதறது. அங்க நடக்கறது இயற்கை. வெட்டுக்கிளியை காப்பாத்துனா ஓணான் எப்படி உயிர் வாழும்?
ரகு: ஒரு பத்து நிமிஷம் கூட அனுமதி கொடுக்க மாட்டேங்கிறீங்க. விண்வெளி வாசிகள் சர்வ பிரபஞ்ச ப்ளூ கிராஸ் சொஸைட்டி அங்கத்தினர்கள் போல. எத்தனை தடவை பூமிக்கும் அவங்க கிரகத்துக்கும் ஷன்ட் அடிச்சிருக்காங்க.?
தே.க: MESOZOIC கால முடிவுல மிருகங்களை காப்பாத்துற மாதிரிதானே இருக்கு?
ரகு: MESOZOIC ERA அப்டிங்கறது 252 மில்லியன் வருடங்களில் இருந்து துவங்கி 65 மில்லியன் வருடங்கள் வரைக்கும் உள்ள காலகட்டம்.
இதை ட்ரிஸ்ஸிக் (TRISSIC) [ 250 மில்லியன் வருடங்கள் முதல் 201.0 மில்லியன் வருடங்கள் வரை ] ஜுராசிக்(JURASSIC) [201 மில்லியன் வருடங்களில் இருந்து 145 மில்லியன் வருடங்கள் வரை க்ரிடாஷியஸ்[CRETACEOUS](145 மில்லியன் வருடங்கள் முதல் 65 மில்லியன் வருடங்கள் வரை. அப்டின்னு மூணா பிரிச்சிருக்காங்க.
தே.க : என்ன குழப்புற?
ரகு : குழப்பல! கதையில வர்ற சைனோக்நாதஸ்[CYNOGNATHUS] ட்ரிஸ்ஸிக் காலத்துல அதாவது 215 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக
அழிந்து விட்டது. அப்ப ஒரு ஷன்ட் அடிச்சு பிரபஞ்ச ப்ளூ கிராஸ் ஆசாமிகள் அதைகாப்பாத்தியிருக்காங்க.
DeleteMESOZOIC காலத்தின் மூன்றாம் பகுதியான
க்ரிடாஷியஸ் (CRETACEOUS) காலகட்டத்தில் வாழ்ந்த கதையில் வரும் PLESIOSAURS நீர் வாழ் மிருகம் பக்கம் [ 143,149]
டெரொடாக்டைல்[PTERODACTYLUS] பக்கம்[107,108]
ப்ரோன்டொசாரஸ்[BRONTOSAURUS] பக்கம்188,189,192-195]( இதை இப்ப அபடாசாரஸ்னு[APATOSAURUS) சொல்லனுமாம்)
இவை எல்லாம் அழிந்தது 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக . அப்ப ஒரு ஷன்ட்..
பக்கம் 45-ல் குறிப்பிடப்பட்டு இருக்கும் DIATRYMA STEINII அழிவுற்ற காலம் CENOZOIC காலத்தின் முதல் பகுதியான PALEOGENE காலக்கட்டம். சுமார் 33.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு.அப்ப ஒரு ஷன்ட்..
மாமூத் இனம் முன்னூராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அழிந்து விட்டதாக பக்க்ம் 78-ல் சொல்றாங்க. உண்மையில் CENOZOIC காலகட்ட்த்தின் இறுதியான QUARTENARY காலத்தில் (இப்போதிலிருந்து 2.5 மில்லியன் ஆண்டுகளுக்குட்பட்டது ) சுமார் 11 000 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் மாமூத் இனம் அழிந்தது.அப்ப ஒரு ஷன்ட். சில மாமூத் வகைகள் அழிந்து 5000 ஆண்டுகள்தான் ஆகின்றன.
பக்கம் 176 –ல் கூறப்படும் PREHISTORIC லெமூர் 150 ஆண்டுகளுக்கு முற்பட்டதுன்னு சொல்றாங்க..பாலூட்டியாக இருப்பினும் இது தோன்றியதே 62 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான்..பகல் நேர லெமூர்கள் 23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகள் வருகை காரணமாக அழிந்து விட்டன. மடகாஸ்கரில் இப்போது இருப்பது அதன் வம்சாவளியே..அப்ப ஒரு ஷன்ட்.
தே.க: மூச்சு கட்டி இப்படி பேசுறியே. பரீய்சை எழுத போறதில்லயா?
ரகு: கிடக்கட்டும் சார்! நான் இப்ப எழுதற பரீட்சை பேப்பரை திருப்பி கொடுப்பாங்களா?
Deleteதே.க: பேப்பரை திருத்தி மார்க் வந்தவுடனே ரீவேல்யூவேஷன் நோக்கத்துக்காக கேட்டா கொடுப்பாங்க.
ரகு: நான் காலேஜ்லாம் சேந்து டிகிரி படிப்ப முடிச்சு
வேலைல சேந்தப் பின்னாடி கொடுப்பாங்களா?
தே.க: அப்ப எதுக்கு உனக்கு அது? அப்ப சூழ்நிலையே மாறிப் போயிருக்குமே?
ரகு:இல்ல , பக்கம் 241-ல் ஒருநாள் ஆதிகாலத்து ஜந்துக்கள் எல்லாம் பூமிக்கே திருப்பி கொடுத்துடுவோம்னு கான்ராட் வடிவத்தில் இருக்கும் பிரபஞ்ச புளூ கிராஸ் ஆசாமி சொல்றாரு.அதான் கேட்டேன்.
தே.க: ரகு .ஏற்கனவே நேரம் வீணாப் போச்சு..மீதி நேரத்துலேயாவது ஏதாச்சும் எழுது.
அடேங்கப்பா... நிறைய விவரங்கள் தந்திருக்கீங்க சார்...
Deleteஇந்த கால வித்தியாசம் எனக்கும் தோன்றியது. அப்புறம் கதை Sci-fi வகையை சார்ந்ததாலே ரொம்பவும் மெனக்கெடாமல் ஒட்டுமொத்தமாக கடைசிப் பேரழிவு நடந்த காலமான மீசோயிக் யுகமுடிவை எடுத்துக்கிட்டேன்.
ஆனா மமூத் மந்தையோட கலந்ததையெல்லாம் விடாம புடிச்சிருக்கீங்க... செம்ம சார்...
கிளைமாக்ஸ்ல நடந்ததை எல்லாம் அந்த ஏலியனோட வார்த்தைகளால் விளக்குவது ரொம்ப போரடிச்சது. மற்றபடி கதையமைப்பில் ஒரு சர்ப்ரைஸ் பேக்டரை தொடர்ச்சியா கொண்டு வந்திருக்காங்க...
மரியாதைக்குரிய செனா. அனா ஜி. ஒரு பதிவுலே எவ்வளவு டீடெய்ல்ஸ் கொடுத்திருக்கீங்க. அதற்கான உழைப்பைநினைத்தால் மலைப்பு . ராயல் சல்யூட். ஜி. கரூர் ராஜ சேகரன்
ReplyDelete