நண்பர்களே,
வணக்கம். சாமத்தில் டெக்ஸ் & கார்சனோடு கபடி ஆடிவிட்டுக் கட்டையைக் கிடத்தும் போது, கூர்க்காக்களின் விசில் சத்தங்களையெல்லாம் தாண்டிய பொழுதாகிப் போனதால் காலையில் கண்ணைத் திறக்க பெரும் பிரயத்தனமாகிப் போனது ! சும்மாவே நம்ம முழிகளானவை டாஸ்மாக் தங்கங்களாய் தோன்றிடும் அழகில், இப்போது கேட்கவே வாணாம் - ஆந்தைகளே மிரளும் ரேஞ்சுக்கு உள்ளன ! And இந்த ஞாயிறுக்கு நமது DTP பெண்கள் முழுநாளும் பணியாற்ற வருவர் என்பதால் பதிவினை short n sweet ஆக அமைத்து விட்டு, டெக்ஸ் ஆல்பத்தின் பாக்கிப் பக்கங்களுக்கு பேனாவைத் தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தாக வேண்டி வரும் guys ; ஆகையால் இந்த ஞாயிறின் பதிவு கார்சனின் ஆட்டுத்தாடி நீளத்துக்கே இருந்திடும் !
To start off, இதோ - நான் மல்லுக்கட்டி வரும் 'தல' டபுள் ஆல்பத்தின் preview படலம் ! "புயலில் ஒரு புதையல் வேட்டை" - போனெல்லி குழுமத்தினில் அப்பாவும், பிள்ளையும் கதாசிரியர் அவதாரங்களில் மிளிர்ந்த பின்னே பொறுப்பேற்ற ஜாம்பவானான கிளாடியோ நிஸ்ஸியின் க்ளாஸிக் ! வழக்கம் போலவே நாலாவது பக்கத்திலேயே வில்லனை அறிமுகம் செய்து விட்ட பின்னரே 'தல' & தாத்தா entry தருகிறார்கள் !! 'வதம் செய்யவிருப்பது இவனைத் தான் !' என்று வாசகர்களிடம் இம்மித் தயக்கமுமின்றி வில்லப்பயல்களை கண்ணில் காட்டி விட்டு அதன் பின்னேயும் 224 பக்க நீளத்துக்கு ஒரு சாகசத்தை சுவாரஸ்யமாய்க் கொண்டு செல்லும் அந்த பாணி டெக்சின் கதாசிரியர்களுக்கே உரித்தான அடையாளம் என்பேன் ! இம்முறை நமது ரேஞ்சர்கள் பயணம் செய்வது சதுப்புகளும், துறைமுகமும் கொண்ட கால்வெஸ்டன் நகரினில் ! ஏதோவொரு கேப்டன் பிரின்ஸ் ஆல்பத்தினில் (உறக்கச்சொக்கில் என் பெயரே பால்பாண்டியோ ? சுடலைமுத்தோ ? என்ற சந்தேகம் எழும் நிலையில் - அந்த இதழின் பெயர் ஞாபகத்துக்கு வர மாட்டேக்கி !!) சதுப்புகளில் முதலைகளுக்கு நடுவே பார்னேயும், பிரின்சும் செய்யும் அதிரடிகளைப் போல இங்கேயும் ஒரு action sequence மிரட்டுகிறது ! And இந்த சாகஸத்தின் பின்னணியாய் நிற்பது கொட்டித்தள்ளும் மழையும், ஒரு புயலுமே ! வழக்கமாய் சுட்டெரிக்கும் கதிரவனின் கீழே லொங்கு லொங்கென்று பயணிக்கும் நம்மவர்களோ, இம்முறை குளியல் போட்டபடிக்கே தோட்டாக்களைப் பறக்க விட்டுவருகின்றனர் ! இன்னமும் 55 பக்கங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் க்ளைமாக்ஸ் எவ்விதமென்று இன்னமும் எனக்கே தெரியாது ; ஆனால் பக்கங்களைப் புரட்டும் போது அதகளமாய்த் தென்படுகின்றது ! And இதோ - இந்த இதழின் அட்டைப்பட முதல்பார்வை - நமது சென்னை ஓவியர் + டிசைனர் கோகிலாவின் கூட்டணியினில் :
பின்னணியினில் தெரிந்திடும் அந்தக் கட்டிடங்கள் எல்லாமே 1800-களின் பிற்பகுதியில் கால்வெஸ்டன் நகரில் இருந்த அசல் கட்டிடங்களின் நகல்களே ; in fact வரலாற்றில் இடம்பிடித்ததொரு மெகா புயலின் தாக்கத்தினைத் தொடர்ந்த நாட்களில் கால்வெஸ்டனில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் இவை !
And இதோ - உட்பக்க முதல்பார்வை :
So 'தல' புராணம் இப்போதைக்குப் போதுமென்றபடிக்கே நமது அடுத்த நாயகரின் பக்கமாய் கவனங்களைத் திருப்பிடுவோமா ? எப்பா.....ALPHA ...கொஞ்சம் மேடைக்கு வாப்பா !!
காலனின் காகிதம் !!
அறிமுக சாகசத்தில் 3 பாக நெடும் கதையினில் வலம் வந்த இந்த ஸ்டைலிஷ் நாயகர் இம்முறை ஒரு சிங்கிள் ஆல்பத்தில் சாகசம் செய்திருக்கிறார் ! ஸீன் நதியோரம் அஸ்ஸியா டோங்கோவாவை 'பச்சக்' அடித்ததையெல்லாம் "ஜாகஜம்" லிஸ்ட்டில் சேர்த்தால் தான் அந்த முதல் ஆல்பத்தினில் ஆல்பாவினை ஹீரோவாக சேர்த்திட முடியும் ; ஆனால் இங்கோ மனுஷன் மெய்யான ஹீரோவாய் சுற்றி வருகிறார் ! வழக்கம் போலவே (இரத்தப் படலம் இரண்டாம் சுற்றின் புகழ்) ஓவியர் Jigounov நம்மை டிக்கெட்டோ, விசாவோ இல்லாமலேயே, கிழக்கு ஜெர்மனி ; ஆம்ஸ்டர்டாம் ; பிரான்ஸ் என்று டூர் கூட்டிப் போகிறார் ! ஒவ்வொரு பிரேமிலும் ஓவியர் போட்டுள்ள உழைப்பைப் பார்க்கும் போது மெர்சலாகிறது ! அறிமுக ஆல்பம் ரேஞ்சுக்கு இங்கே வசனங்கள் லேது என்பதால், ஒன்றரை நாட்களில் இதன் மொழிபெயர்ப்பைக் கரை சேர்க்க சாத்தியப்பட்டது ! கணிசமான action sequences இருப்பதும் எனது பணியினை சுலபமாக்க உதவிய சமாச்சாரங்கள் ; வாழ்க டமால்-டுமீல் !! இதோ - உட்பக்க preview :
So நம் மத்தியினில் ஆல்பா தொடர்வதா - வேண்டாமா ? என்ற கேள்விக்கு விடை தரவுள்ளது இந்த ஆல்பத்திற்கு நீங்கள் தந்திடவுள்ள வரவேற்போ / குட்டுக்களோ தான் ! So இயன்றமட்டுக்கு உங்களின் இம்மாதத்து வாசிப்பினில் Jigounov சிருஷ்டித்திருக்கும் இந்த அழகரை முன்னிலைப்படுத்திட முனைந்திடலாமே - ப்ளீஸ் ?
இ.ப. ஓவியர் பற்றிய mention வந்திடும் இந்தத் தருணத்தில் இதோ ஒரு இ.ப. update !! ஆல்பம் # 28-ன் பணிகளில் படைப்பாளிகள் மும்முரம் காட்டி வர, அட்டைப்படத்துக்கென இதோ அவர்கள் முயற்சித்துப் பார்த்திருக்கும் ஒரு variant !! "க்யூபா - எல்லாமே துவங்கிய இடம்" என்பது போல் தலைப்பிட்டிருக்கிறார்கள் ; ஆனால் அதுவும் சும்மா ஒரு டம்மி தலைப்புத் தான் ! ஆகஸ்ட்வாக்கில் தான் அசல் ராப்பரும், கோப்புகளும் ரெடியாகிடும் என்பது தற்போதைய நிலவரம் ! பார்க்கலாமே,,,,!!
ரைட்டு...உறுமும் வயிற்றுக்கு கொஞ்சமாய் பெட்ரோல் போட்டு விட்டு ஆபீசுக்குக் கிளம்பும் முன்பாய் கொஞ்சம் updates :
1 .தருமபுரி புத்தக விழா வெள்ளியன்று துவக்கம் கண்டிட, முதல் நாள் மிதமான விற்பனை மட்டுமே ! ஆனால் நேற்றைக்கோ நிஜமாகவே ஆச்சர்யமூட்டும் விற்பனைகளைப் பார்த்திட முடிந்துள்ளது ! மொத்தமே 60 பதிப்பகங்கள் தான் எனும் போது பார்வையாளர்களுக்கு நிதானமாய் ஒவ்வொரு ஸ்டாலிலும் நேரம் செலவிட சாத்தியப்படுவதால் - நமது ஸ்டாலுக்கும் நல்ல வரவேற்பு ! எந்தெந்த புக்ஸ் விற்பனையாகியுள்ளதென்பது தெரியலை ; ஆனால் விற்பனை ஆரோக்கியமானதொரு நம்பர் என்றமட்டுக்கு ஹேப்பி அண்ணாச்சி ! And மாஸ்க் போட்டபடிக்கே நம்ம அண்ணாச்சி தான் ஸ்டாலில் நடுநாயகம் !! எனக்குப் 10 வயதாய் இருந்த வேளையினில் வேலைக்கு வந்த மனுஷன்,......ஆண்டவன் அருளுடன் இன்னமும் சுறுசுறுப்பாய் நமது சக்கரங்களுள் முக்கியமானதொன்றாகச் சுழன்று வருகிறார் ! One of these days - நாம் சந்திக்க கொரோனா கொடூரன் மனது இழகிடும் ஒரு பொழுதினில் அண்ணாச்சி deserves a day in the sun !! யோசிப்போமா folks ?
2 .புத்தக விழா ஸ்பெஷல் தர்மபுரியில் லேதுவா ? என்ற கேள்விக்கு - "sorry no guys !" என்பதே பதிலாகிடும் ! தர்மபுரியில், ஒசூரிலும் என்ன எதிர்பார்ப்பதென்ற ஐடியாவே இல்லாது தான் நாம் களமிறங்கிடுகிறோம் என்பதால் அங்கு ஸ்பெஷல் ஏதும் திட்டமிடத் துணியவில்லை ! புத்தக விழா ஸ்பெஷல்ஸ் பற்றி இம்மாதத்து இதழ்களில் பார்த்திடப் போகிறீர்கள் ; so ஜூலை பிறக்கக் காத்திருங்களேன் ப்ளீஸ் !
3 அப்புறம் "ஈரோட்டில் வாசக சந்திப்பு இந்தாண்டினில் வேண்டவே வேண்டாமே ப்ளீஸ்" - என்று நமது செனா அனாஜி அறிவுறுத்திய ரீதியிலேயே - நமது வாசக குடும்பத்து டாக்டர்கள் மூவரும் (தனித்தனியாக) விளக்கமான மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளனர் ! ஆகஸ்டில் நிலவரம் எவ்விதம் இருக்கக்கூடுமென்று மருத்துவ வட்டத்தினுள் கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி - "பொறுத்தது பொறுத்துவிட்டோம் - இந்த ஒற்றை வருடமும் பொறுத்துவிடுவோமே ; இளைஞர் அணியில் இடம்பிடிக்கும் சீனியர் எடிட்டர் ; அடியேன் ; கருணையானந்தம் அங்கிள் - என அனைவருக்குமே இந்த சூழல் உகந்ததாய் இராது ; பற்றாக்குறைக்கு நமது மூத்த வாசக நண்பர்களுமே இந்த ரிஸ்க் எனும் ரஸ்க் சாப்பிட இந்த ஒற்றை வருடமும் நாம் வாய்ப்பேற்படுத்திட வேண்டாமே !!" என்று செல்லும் அந்த மின்னஞ்சல்கள் பின்னுள்ள மருத்துவ நியாயங்களை புறம்தள்ள இயலவில்லை ! "கொஞ்சம் கட்டுப்பெட்டித்தனமாகவே இருந்துவிட்டாலுமே தப்பில்லை ; ஆனால் ஒரு சந்தோஷச் சந்திப்பினில் நெருடலோடு பங்கேற்பது யாருக்கும் ரசிக்காது" என்ற நமது டாக்டர் அபிமானிகளின் லாஜிக்கின் முன்பாக, ஆமோதிப்பதைத் தாண்டி வேறெதுவும் செய்ய தோன்றவில்லை ! So 2023 தான் ; 'தல' 75 தான் - நமது சந்திப்புக்கு ஏற்ற காலமோ / களமோ போலும் !! Sorry guys !! அந்நேரத்து சூழலுக்கேற்ப / பணிகளுக்கேற்ப நான் மட்டும் ஈரோட்டிலும், கோவையிலும் வாரயிறுதியினில் எட்டிப்பார்க்க முயற்சிப்பேன் !
4 .ஒரு சுவாரஸ்ய நியூஸ் !! ரொம்பச் சமீபமாய் சென்னையிலிருந்து 2 டைரக்டர்கள் நம்மிடம் உள்ள FULL SET புக்ஸ்களை கொள்முதல் செய்துள்ளனர் !! கிட்டத்தட்ட முப்பதாயிரம் பெருமானம் - ஒரு full set ! அவற்றினை கூரியரில் அனுப்பும் கட்டணமே நான்காயிரமோ, என்னவோ !! அத்தனை காசு செலவிட்டுப் புறப்பட்டுள்ள 2 செட்கள் எந்த ரூபத்தில் வெள்ளித்திரையினில் ரவுண்டடிக்கக் காத்துள்ளனவோ - தெரியலை !!
ரைட்டு...நேரமாச்சு கால்வெஸ்டன் பயணத்தினை நான் தொடர்ந்திட ! மீண்டும் சந்திப்போம் all ; have an awesome sunday ! See you around !!
Hai.
ReplyDelete1st?
ReplyDeleteஆமா வாழ்த்துகள் சிவா🌹
Delete2வது...
ReplyDeleteHi..
ReplyDeleteஆஜர்
ReplyDeleteஅஞ்சாப்பு பாஸ் 😁😃
ReplyDeleteஞாயிறு காலை வணக்கம் நண்பர்களே & ஆசிரியர் அவர்களே 🙏🙏
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteஅடுத்த வருடம் பட்டையை கிளம்பலாம் ஆசிரியரே
ReplyDeleteதங்களின் உடல் நிலையும் பாதுகாப்புமே முக்கியம் அடுத்த வருடம் வட்டியும் முதலுமாக கொண்டாடி விடலாம்
ReplyDelete///அப்புறம் "ஈரோட்டில் வாசக சந்திப்பு இந்தாண்டினில் வேண்டவே வேண்டாமே ப்ளீஸ்" - என்று நமது செனா அனாஜி அறிவுறுத்திய ரீதியிலேயே - நமது வாசக குடும்பத்து டாக்டர்கள் மூவரும் (தனித்தனியாக) விளக்கமான மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளனர் ! ஆகஸ்டில் நிலவரம் எவ்விதம் இருக்கக்கூடுமென்று மருத்துவ வட்டத்தினுள் கணிக்கப்பட்டுள்ளது///
ReplyDeleteI hate doctors!! கிர்ர்ர்ர்...
I love doctors!!💞 ஹி..ஹி...!!
Deleteஆஹா தல புராணம்னா அந்த பதிவு படிக்கும் போதே ஜிவ்...!!
ReplyDeleteஅன்பு சால் வணக்கம் அனைவருக்கும்.
ReplyDeleteஅட்டைப்படம் செம மாஸாக இருக்கிறது
ReplyDeleteதல போல வருமா ?!
ReplyDeleteவராது.
தல க& வெ -யில் செம ஸ்டைலிஷா இருக்கார்
ReplyDeleteஇந்த டாக்டருங்கள...
ReplyDeleteகல்யாண மண்டபம் ஒண்ண புடிச்சி நல்ல சமூக இடைவெளி விட்டு N95 வோட சந்திப்பிற்கு ஏற்படு பண்ணீருக்கலாம்...
Deleteஒரு கலகலப்பாவது மனசுக்கு கெடைச்சிருக்கும்ல
தல'யின் அட்டைப்படம் அசத்தல் சார்! பின்னால் அந்த மின்னல் கீற்றுகளும், சூறைக்காற்றும் ஏற்படுத்தும் களேபரத்தின் நடுவே வீதியில் இப்படி ஒயிலாக நடைபோட தல'க்கு மட்டுமே சாத்தியம்!! செம செம!
ReplyDelete(தல கொஞ்சம் பூசினாப்ல வெயிட் போட்டிருக்கார்! வறுத்த கறியின் உபாயம் போல!! )
ஓஓஓ...வெயிட் போடணும்னா உபாயம் இது தானா...
Deleteஅப்ப உபயம்...
///(தல கொஞ்சம் பூசினாப்ல வெயிட் போட்டிருக்கார்! வறுத்த கறியின் உபாயம் போல!! )///
Deleteஇதில் தான் கச்சிதமாக இருப்பதாக நினைத்தேன்!
Tom platz எனக்கு மிகவும் பிடித்த பாடிபில்டர்!
அட்டகாசமான தொடைகளுக்கு சொந்தக்காரர்!!
ஏனோ டெக்ஸின் அட்டைபட ஷேப் அந்த பாடிபில்டரை ஞாபகப் படுத்துகிறது!
இ.ப லீட் பாத்திரங்கள் முதுகு மட்டும் காண்பித்திருப்பது அவர்களின் பிரபல்யத்தின் உச்சத்தை உணர்த்துகிறது
ReplyDeleteஅந்த பொம்மனாட்டி ஒகுரு சாமி...
DeleteStuntmanனோட சம்சாரம் தான...
அருமையான சொன்னீங்க!
Deleteஎன்னதான் எனக்கு டாக்டர்களின் மீது வெறுப்புன்னாலும் என்னிக்காச்சும் ஒரு தடவை, அத்திபூத்தா மாதிரி அவங்க ஒரு நல்ல கருத்தைச் சொல்லும்போது அதை என்னால் ஆமோதிக்காமல் இருக்க முடியாதுதான்!
இதில் ஏதும் வரலாற்று - விஞ்ஞானப் "பின்னணி" இருக்குமா என்று கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள்!
Deleteஇது மெய்ஞான பின்னணி
Delete/அந்த பொம்மனாட்டி ஒகுரு சாமி.../
DeleteBy default 'மரியா'ன்னு எடுத்துகிட்டேன்.
கியூபான்னா மரியாதானே.
/என்னதான் எனக்கு டாக்டர்களின் மீது வெறுப்புன்னாலும் என்னிக்காச்சும் ஒரு தடவை, அத்திபூத்தா மாதிரி அவங்க ஒரு நல்ல கருத்தைச் சொல்லும்போது அதை என்னால் ஆமோதி//க்காமல் இருக்க முடியாதுதான்!
Delete:-))))
கியூபா ன்னாலே 'சே குவேரா' தான்.👍💐
Deleteவணக்கம் நண்பர்களே!
ReplyDelete28th
ReplyDeleteடியர் எடி, தற்காப்பே பிரதானம். 2023'லேயே கண்டுக்கலாம், சென்னை புத்தக கண்காட்சியில்.
ReplyDelete// ஒரு சுவாரஸ்ய நியூஸ் !! ரொம்பச் சமீபமாய் சென்னையிலிருந்து 2 டைரக்டர்கள் நம்மிடம் உள்ள FULL SET புக்ஸ்களை கொள்முதல் செய்துள்ளனர் !! கிட்டத்தட்ட முப்பதாயிரம் பெருமானம் - ஒரு full set ! அவற்றினை கூரியரில் அனுப்பும் கட்டணமே நான்காயிரமோ, என்னவோ !! அத்தனை காசு செலவிட்டுப் புறப்பட்டுள்ள 2 செட்கள் எந்த ரூபத்தில் வெள்ளித்திரையினில் ரவுண்டடிக்கக் காத்துள்ளனவோ - தெரியலை !! //
ReplyDeleteஅட சூப்பர் நியூஸ் சார். யார் அந்த டைரக்டர்கள் என சொல்ல முடியுமா:-)
படம் பார்த்து கதை சொல்லீடமாட்டோமா...
DeleteThis comment has been removed by the author.
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete// One of these days - நாம் சந்திக்க கொரோனா கொடூரன் மனது இழகிடும் ஒரு பொழுதினில் அண்ணாச்சி deserves a day in the sun !! யோசிப்போமா folks ? //
ReplyDeleteகண்டிப்பாக செய்யலாம். சிறப்பாக செய்யலாம்.
கண்டிப்பாக செய்ய வேண்டும் சார்.
Deleteநிச்சயமா
Delete// நமது ஸ்டாலுக்கும் நல்ல வரவேற்பு ! எந்தெந்த புக்ஸ் விற்பனையாகியுள்ளதென்பது தெரியலை ; ஆனால் விற்பனை ஆரோக்கியமானதொரு நம்பர் என்றமட்டுக்கு ஹேப்பி அண்ணாச்சி ! //
ReplyDeleteமகிழ்ச்சியான விஷயம்.
காலனின் காகிதம் அட்டைப்படம் நன்றாக உள்ளது. பின்பக்க அட்டையில் காரில் சாய்ந்த படி ஆல்பா நிற்பது லார்கோவை நினைவு படுத்துகிறது.
ReplyDeleteஆல்பா கதையில் இந்த முறை வசனங்கள் குறைவு மற்றும் ஆக்சன் ஹூரோவாக கலக்கி உள்ளார் என்பது படிக்கும் ஆர்வத்தை பல மடங்கு அதிகப்படுத்தி உள்ளது. I am waiting:-)
ReplyDeleteடெக்ஸ் அட்டைப்படம் செம செம செம செம கலக்கல் ..சார்..
ReplyDeleteபதிவு சார்ட் அன் நச்!
ReplyDeleteதல தகவல்கள் சற்றே சிம்பிளாக இருந்தாலும் ஆவலை கிளப்பிட்டது....
ஈரோடு மகிழ்ச்சி
ReplyDeleteமீண்டும் தள்ளியா..
:-(
தேவையான தள்ளிதான் தலீவரே!
Delete///// One of these days - நாம் சந்திக்க கொரோனா கொடூரன் மனது இழகிடும் ஒரு பொழுதினில் அண்ணாச்சி deserves a day in the sun !! யோசிப்போமா folks ? //
ReplyDeleteசார்.. அண்ணாச்சி ரொம்ப நல்லவர். ரொம்ப அன்பானவர். நம் நண்பர்களில் பலரும் அவர் மேல் மரியாதை வச்சிருக்காங்க.
அப்படிப்பட்ட அவரை நீங்க உச்சிவெயில்ல ஒருநாள் முழுக்க உட்காரவைக்கலாம்னு சொல்றது கொஞ்சம்கூட நல்லாயில்லீங்க சார்!
ROFL
Delete4 வதாக உள்ள செய்தி தந்த மகிழ்ச்சி அதிகம் ஆசிரியரே.
ReplyDelete////இம்முறை நமது ரேஞ்சர்கள் பயணம் செய்வது சதுப்புகளும், துறைமுகமும் கொண்ட கால்வெஸ்டன் நகரினில் ///
ReplyDelete------பெரும் ஹிட் அடித்த பெயரிலயே மிரட்டிய ட்ராகன் நகரம் கதையில் தல&கோ கால்வெஸ்டன் நகருக்கு போய் சீனர்களை பந்தாடுவாங்க....
கதையில் ஒரு பகதியில் வந்ததற்கே கால்வெஸ்டன் கவர்ந்திட்டது...
இம்முறை முழு கதையும் கால்வெஸ்டன் லதான் எனும்போது இதுவும் ஷூயூர் ஹிட் ஆக அமையப்போவது உறுதி!
ஜூலையில் முதல் சாய்ஸ் தலயே...!!!
டெக்ஸ்-அட்டைப்படம்-கலரிங் அருமையாக அமைந்து விட்டது.
ReplyDeleteஆல்பா - லார்கோ இடத்தை நிரப்பினால் மிகவும் சந்தோசபடுவேன்..
என் அபிமான x 111-ன் அட்டைப்பட தோற்றம் அருமை..
2023-அட்டவணையில் எதிர்பார்க்கலாமா..?iii சார்..
உள்ளேன் ஐயா..!!
ReplyDeleteகால்வெஸ்டன் - டிராகன் நகரம் கதையில் ஒரு ஆற்றுப்பாலம் வரும். அது இந்த நகரில் தான்...
ReplyDeleteயெஸ்... அந்த பால நடுமத்தியில் சீனர்களின் வண்டியை மடக்கி துவம்ஸம் பண்ணுவாங்க... மீண்டும் அந்த இடங்களில் ஒரு பயணம்னா....
Deleteசூப்பர்தான்
Deleteநெற்றிக்கண் திறப்பினும்..
ReplyDeleteமேலே அந்த XIII அட்டைப்பட ஓவியத்தில் ஒரு பிழை!
சூரியன் ஒளி வீசும் கோணத்தில் - உட்கார்ந்திருப்பவர்கள் இருவரது நிழல் அந்தப் பாறையில் விழுந்தது போக மீதமுள்ள இடங்களில் அங்கங்கே சில ஒளிக்கீற்றுகளும் அப்பாறையின் மேல் இருந்திருக்க வேண்டும்! முழுவதும் நிழலாகவே இருக்க சாத்தியமில்லை (சூரியன் இருக்கும் கோணம் அப்படி!) எ.எ.கருத்து!
மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!
தல'யின் அட்டைப் படத்திலும் கூட அவரின் வலதுபுற தோள்பட்டை (அட்டையில் இடதுபுறம்) சற்றே அளவுக்கு அதிகமாக நீண்டிருக்கிறது.
Deleteநீங்களே அந்த மாற்றுக் கருத்தையும் எழுதிவிட்டால் நன்று :-)
Delete///நீங்களே அந்த மாற்றுக் கருத்தையும் எழுதிவிட்டால் நன்று ///
Deleteக்யூபாவிலுள்ள ஒரு குறிப்பிட்ட வகைப் பாறை ஒளியைப் பிரதிபலிப்பதோ, நிழலை தன் மீது வாங்கிக்கொள்வதோ இல்லை. எப்போதும் அவை கண்ணங்கரேல் என்றே இருக்கின்றன!
போதுங்களா PfB? :D
குளோஸப் ஷாட் என்பதால் ஒட்டுமொத்த நிழல் மட்டுமே காட்டப்பட்டுள்ளது போல.. கொஞ்சம் ஜூம் பேக் வந்தா அவர்களின் நிழலும், ஒளிக்கீற்றுகளும் தெரியக்கூடும்.
Deleteஇன்னும் ஜூம் பேக் வந்தால் அவர்களின் நீளமான நிழலைத்தாண்டி முழு ஒளியும் விழும் காட்சியும் கூட காணலாம்னு நினைக்கிறேன்...
தல திரும்பி நடக்கும் கோணம்
Deleteஇந்த சாகசம் நடக்கும் போது டெக்ஸின் க்யூபா படலமும் நடந்ததா சொல்றாங்களே விஜய் உண்மையா?:-)
Deleteஇதுமாதிரியான வரலாற்றுச் சம்பவங்கள் குறித்து ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா எனக்கு பிடிக்கவே பிடிக்காத (உவ்வே!) டாக்டர்கள் யாரிடமாவதுதான் நீங்க கேட்கணும் PfB!
Delete///ஸீன் நதியோரம் அஸ்ஸியா டோங்கோவாவை 'பச்சக்' அடித்ததையெல்லாம் "ஜாகஜம்" லிஸ்ட்டில் சேர்த்தால் தான் அந்த முதல் ஆல்பத்தினில் ஆல்பாவினை ஹீரோவாக சேர்த்திட முடியும்//
ReplyDelete---ஆல்ஃபா-1ல ரசிக்கும்படியான கட்டமே அதான்....!!!
007ஸ்டைல்ல....
// 'தல' & தாத்தா //
ReplyDeleteஸ்டைல் & ஸ்டைல் கிங் கார்சனை தாத்தா என எழுதியதை வண்மையாக கண்டிக்கிறேன்.
///கணிசமான action sequences இருப்பதும் எனது பணியினை சுலபமாக்க உதவிய சமாச்சாரங்கள் ; வாழ்க டமால்-டுமீல்///
ReplyDelete---ஆல்ஃபாவின் சாகஸக் களங்கள் விரிவடைகின்றனவே...
///So இயன்றமட்டுக்கு உங்களின் இம்மாதத்து வாசிப்பினில் Jigounov சிருஷ்டித்திருக்கும் இந்த அழகரை முன்னிலைப்படுத்திட முனைந்திடலாமே - ப்ளீஸ் ?//
ReplyDelete---தலைகிட்ட பெர்மிசன் கேட்டுட்டு ஆல்ஃபாவையே முதல்ல வாசித்திடலாம் சார்.
// ரொம்பச் சமீபமாய் சென்னையிலிருந்து 2 டைரக்டர்கள் நம்மிடம் உள்ள FULL SET புக்ஸ்களை கொள்முதல் செய்துள்ளனர் //
ReplyDeleteகோலிவுட்டில் நம்ம சாகஸங்களின் தாக்கம் ஆங்காங்கே இனி ஓரம் சாரமாய் எட்டிப் பார்க்குமோ ?!
குளிர் கண்ணாடி இயக்குநர்,மாநகரத்தவரா,,சதுரங்க வேட்டையரா ?!
தற்போது தல அட்டைப்படங்களில் சிவப்பு கலர் கோட்டு போட்டுக்கொண்டு வருவது அதிகமாகி உள்ளது ..
ReplyDeleteவரவேற்கத்தக்க விசயம் .. 😘
ஆசிரியருக்கு வணக்கம்...
ReplyDeleteடெக்ஸின் அடுத்த சாகஸத்தை பாதி சொல்லி, ஆர்வத்தை அதிகப்படுத்திட்டீங்க.
ஈரோடு புக் ஷோ பற்றி கனவு கண்டிருக்க, பெரிய குண்டா தூக்கி போட்டது வருத்தமே.
சூழ்நிலையும் சரியாக இல்லாததால்,
ஏற்றுக் கொண்டு ஆகவேண்டும்.
பொறுமையாகவே வாசகர் கூட்டத்தை சிறப்பாக செய்வோம்.
// இம்மித் தயக்கமுமின்றி வில்லப்பயல்களை கண்ணில் காட்டி விட்டு அதன் பின்னேயும் 224 பக்க நீளத்துக்கு ஒரு சாகசத்தை சுவாரஸ்யமாய்க் கொண்டு செல்லும் அந்த பாணி டெக்சின் கதாசிரியர்களுக்கே உரித்தான அடையாளம் என்பேன் ! //
ReplyDeleteஉண்மைதான்,இதைத் தாண்டி கதைக் களத்தை சுவராஸ்யமாக நகர்த்துவது ஆகப்பெரும் சவால்தான்,பெரும்பாலும் அதில் வெற்றியும் கண்டு விடுகின்றனர்.....
புயலில் ஒரு பதையல் வேட்டை அட்டைப்படம் செம கெத்தா கீது...
ReplyDeleteசார் சின்னப்பதிவா என அயற்ச்சியாய் படிக்க நீண்ட அற்புதப் பதிவு....
ReplyDeleteதருமபுரி விற்பனை மகிழ்விக்க விழா மலர் உயிர்த் தேடி இல்லையென்றாலும் புஸ்ஸானது மனது...ஜூலை விளம்பரம் பாருங்கள் வரிகள் ஜலீரென இரத்தத்தை வேகப்படுத்த...டெக்ஸின் அட்டையோ இதுவரை வந்ததிலையே டாப் நானென செக்ஸின் டை கோட்டை அசைத்துப் பாக்க சூரைக்காற்றின் பின்னணியில் மிடுக்காய் அசையாமல் வின்செஸ்டர் துணையோடு வரும் டெக்ஸ் நம்மை அசைத்து செல்ல....ஆல்ஃபா வின் அட்டையோ நான்தானே டாப் பென எகிறுது அசத்தல் வண்ணக்கலவைகளால் நீலமாய் ....அந்த ராணுவ உருவம் ஏனோ ஹிட்லரை நினைவு படுத்த....எனக்கு நம்ம பதிமூன படிக்கயில க்யூபா எப்பவும் நினைவுக்கு வரும்...கீயூப பயிற்ச்சி போராளி என சந்தேகத்தை முந்தய கதையில் படித்தது மட்டும் காரணமல்ல....இப்ப க்யூபா....ஆஹா...சே ஃபிடல் என உன்னதத்தலைவர்களோடு உன்னதத்தை...கோவையில் என சாதாரணமா போடாமல் ஈரோட்டை விஞ்சக் காத்திருக்கும் கோவை என பிரம்மாண்ட பதிவை எதிர்பார்க்கிறேன் தங்களிடம்.....வருக...பிரம்மாண்ட கதய தருக
அந்த டைரக்டர்கள் டெக்ச தயார் செஞ்சா நம்ம காமிக்ஸ் மீண்டும் உச்சம் தொடும்....
Deleteஒரு வேளை இரத்தப்படலம்னா அந்த டயானா கேரக்டருக்கு சமந்தாவை போட்டா பட்டாசு தான்...ஹீரோதான்????
புயலின் தாக்கம் கட்டிடங்கள் நம் வயதைத் தாண்டிய காலப்பயணத்துக்கு ஜூலைக்காத்தை சீக்கிரமா எதிர்பாக்குது....மாறுதலா அடுத்த வாரமே துவக்கத்திலே வந்தா அடடா
Delete///One of these days - நாம் சந்திக்க கொரோனா கொடூரன் மனது இழகிடும் ஒரு பொழுதினில் அண்ணாச்சி deserves a day in the sun ///
ReplyDeleteஇதெல்லாம் கேட்கவே வேணாம் சார் போட்டுதள்ளுங்க விழாவை... எங்க எப்போனு சொல்லுங்க வந்திடறோம்....
////புத்தக விழா ஸ்பெஷல் தர்மபுரியில் லேதுவா ? என்ற கேள்விக்கு - "sorry no guys !" என்பதே பதிலாகிடும் ! தர்மபுரியில், ஒசூரிலும் என்ன எதிர்பார்ப்பதென்ற ஐடியாவே இல்லாது தான் நாம் களமிறங்கிடுகிறோம் என்பதால் அங்கு ஸ்பெஷல் ஏதும் திட்டமிடத் துணியவில்லை ! ///
ReplyDeleteம்ம்ம் புரிகிறதுங் சார்.... துவக்கப்புள்ளிகளில் விளம்பரமே பிரதானம்.
////புத்தக விழா ஸ்பெஷல்ஸ் பற்றி இம்மாதத்து இதழ்களில் பார்த்திடப் போகிறீர்கள் ; so ஜூலை பிறக்கக் காத்திருங்களேன் ப்ளீஸ் !//
--ஜூலை இதழ்களில் உள்ளது அதிரடி😍
வில்லன்களைக் காட்டிவிட்டு 224 பக்கங்கள்செல்லும் ஒரு வேற்றுமொழிக்கதையை சுமார் 35 வருடங்களாகஅலுக்காதவகையில் சுவாரஸ்யமான மொழிபெயர்ப்போடுதமிழுக்கு வழங்கும்எடிட்டருக்கு பெருமிதத்தோடு ஒருராயல் சல்யூட். நாங்கள் உங்களை அறிந்துள்ளோம் என்பதே எங்கள்வாழ்நாள் சாதனை. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteEdi Sir..
ReplyDeleteஇனிய ஞாயிறு மதிய வணக்கங்கள் ..
நன்றி @STV ஜி..
ReplyDelete# அப்போ ஈரோடு புக்ஃபேர் கிடையாதா?#
*புக்ஃபேர் உள்ளது*.
*லயன் ஸ்டாலும் உண்டு.*
*சிறப்பு வெளியீடுகளும் உண்டு.*
*மரத்தடியில் நம்ம சந்திப்புகளும் கூட உண்டு.*
ஆனா....
ஆனா....
*ஆசிரியர் தலைமையில் நடைபறும் மீட்டிங்& வாசகர் சந்திப்பு மட்டுமே ரத்து செய்யப்படுகிறது*...
மற்றதெல்லாம் உள்ளது.
"சதுப்பில் ஒரு சதிகார கும்பல்" கதையில் வருவது போல களமாக இருக்குமோ டெக்ஸ் கதை
ReplyDelete@ஆசிரியர் சார்
ReplyDeleteஇம்மாத இதழ்களில் அடுத்தமாத டெக்ஸ் இதழாக வர இருந்தது நிழல்களின் ராஜ்யத்தில்....
(விளம்பரத்தில் வாம்பப் பட்டையோடு வருவதால் செமயாக இருக்கும் னு பேசக்கிட்டோம், வாட்ஸ்ஆப் கலந்துரையடால்ல.......)
ஆனா இன்றைய அறிவிப்பில அதற்கு பதிலாக "புயலில் ஒரு புதையல் வேட்டை"--என அட்டைப்படம் கதை, உட்பக்கம்னு போட்டு உள்ளீர்கள்.
நிழல்களின் ராஜ்ஜயத்துக்கு என்ன ஆச்சுது? இந்த மாற்றத்திற்கு ஏதேனும் குறிப்பிடத்தக்க காரணங்கள் உள்ளனவா???
(மாற்றத்தை நினைவூட்டிய எங்க பக்கத்து ஸட்ரீட், அருமை நண்பர் குமார் சேலம், க்கு நன்றிகள்)
தலையோட டைட்டில் என்னவா இருந்தா என்னய்யா - எல்லாம் ஒரே கதைதான் - all super hits !
ReplyDeleteபுயலில் ஒரு புதையல் வேட்டைதான் நிழல்களின் ராஜ்யத்தில் என்று நினைத்துப் படிக்கவும் ... அப்புறம் நிழல்களின் ராஜ்யத்தில் வந்தவுடன் புயலில் ஒரு புதையல் வேட்டை என்று நினைத்துப் படிச்சுக்கலாம்னேன் ;-)
ஹா..ஹா... வாம்பப் பட்டையோட தல வந்தா செவ்விந்தியர் வருவாங்க.... அவுங்க பின்னணி பழக்க வழக்கமாலாம் விலாவரியாக வரும்ங்க...அதான் ஆசையோ இருந்திச்சி,... இப்ப இது புயல்ல ஒரு வேட்டை..இதுவும் பட்டையை கிளப்பும்தான்... ஓவியங்கள் தான் எதிர்பார்ப்புல....💕
Deleteஅதிகாரியோட ஸ்லீப்பர் செல்லோட கமெண்ட் மாதிரி தெரியுது ராகவன்:-)
Deleteஜூனில் ஜூலை உண்டுங்களா சார் ?!
ReplyDeleteஆல்பா அட்டைப்படமும் செம கலக்கல் என சொல்ல மறந்து விட்டேன்..லார்கோவை நினைவுபடுத்துகிறார் மனுசன் சித்திரத்தில் இந்த முறை கதையிலும் அதே போல் எனில் பட்டாசு தான் ஐயம் வெயிட்டிங்..
ReplyDelete86th
ReplyDeleteEdi Sir..
ReplyDeleteஜூனில் ஜூலைங்களா?..
ஜூலையில் ஜூலைங்களா?..
ஏற்கனவே அவர் விடிய விடிய வேலை பார்த்துட்டிருக்கார். இதுல இப்படியொரு கேள்வி வேறயா!!
Deleteஜனவரியில் வெளியான ஆல்பா, டேங்கோ & ஒ.நொ.ஒ.தோ கதைகளையே நான் இன்னும் படிக்கவில்லை என்பது நான் இங்கே வருத்தத்துடன் குறிப்பிட விரும்புவது! அப்போதைய களேபரமான சூழலில் படிக்கமுடியாமல் போய் அப்படியே தேங்கிவிட்டது!
ReplyDeleteஆல்பா படிக்கலயா... என்ன??
Deleteஅழகு இரஷ்ய ஆரணங்கு அஸ்ஸியா டோங்கோவாவை ரசிக்கலயா???
6மாதங்களை வீண்டித்து விட்டீர்களே ஈவி... உடனடியாக ஆல்ஃபாவை மட்டுமாவது வாசியுங்கள்...
நான் பரவாயில்லை குருநாயரே.! ஒ.நொ.ஒ.தோட்டா அப்பவே படிச்சிட்டேன்.! ஆல்பா, சிஸ்கோ, டாங்கோ இன்னைக்கு படிக்கலாம்னு எடுத்து வெச்சிருக்கேன்.. கரெக்ட்டா உங்க பதிவு கண்ணுல படுது..😃
Deleteதமிழ் சினிமாவில் 'தளபதி' என்று குறிப்பிடப்படும் நடிகரின் அடுத்த படத்தின் கதை நம்ம லார்கோ வின்ச்சின் கதையிலிருந்து பட்டி-டிங்கரிங் செய்யபட்டதென்று ஊருக்குள் பேசிக்கறாங்களே?!! நெசமா?!!
ReplyDeleteசான்ஸ் இருக்குங்க செயலரே.. சிலவருடங்களுக்குமுன்னர்இதே தளபதி நடிகர் நடிக்க ஸ்டைலிஸ், க்ரைம் த்ரில்லர் படங்கள் இயக்கும்இயக்குனரின் இயக்கத்தில் 'யோகன் அத்தியாயம் ஒன்று' என்ற பெயரில்'லார்கோவிஞ்ச்' தொடர்படமாக்கப்படவிருந்ததாக செய்திகள் வெளிவந்தன..கரூர் ராஜ சேகரன் .
ReplyDeleteஇந்த வருடத்தின் எனது எதிர்பார்ப்பில் இருந்த கதைகளில் ஒன்று. புயலில் ஒரு புதையல் வேட்டை இந்த இதழ் அறிவிக்கப்பட்ட போது இருந்தே ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது. I am waiting
ReplyDelete100th
ReplyDeleteபோன வாரம் எல்லாரும் மாங்கு மாங்கு என்று கமெண்ட் போட்ட அலுப்பில் இந்த வாரம் எல்லோரும் ரெஸ்ட் எடுக்கிறாங்களோ :-)
ReplyDeleteபுக்ஃபேர் ஸ்பெசல்கள் அறிவிப்பு வர்ல...
Deleteஆசிரியர் சார் பதில்கள் போடல...
பீன்ஸ் கொடி பற்றிய விளக்கம் காணல...
னு சில காரணங்களால் கொஞ்சம் காத்து வீசுது!
ஒரு தலைவனின் கதை
ReplyDelete(ஜெரோனிமோ) படிக்கலாம்னு எடுத்திருக்கேன்..!
என்னை வாழ்த்தி ஆசிர்வதிங்க பிரென்ஞ்...!
உங்கள் மன திடத்தை பாராட்டுகிறேன் கிட்
Deleteபார்த்து ரசிப்பது கலையும் அழகும் னு திருவிளையாடல் ல சொல்வாரு... அதேபோல ஓவியங்கள் பார்த்து ரசிப்பதோடு நிப்பாட்டிக்கலாம்.. அந்த ஆச்சர்யத்தோடு நிறுத்திக்கிடலாம்.
DeleteKumar and மாம்ஸ்..
Deleteதலைவனின் கதையை புரட்டிப் பார்த்துட்டு 'தல'யை சரணடைஞ்சிட்டேன்.!
விமர்சனத்தோட நைட்டுக்கா வர்ரேன்.!
கடைசி பீன்ஸ் விதையும்
ReplyDeleteநீதிக்கதையும்
ஹால்மார்க் பொழுதுபோக்கு நிறுவனம்: jack and the beanstalk கதையை ஒரு தொலைக்காட்சி குறுந்தொடராக உருவாக்கி தாருங்கள் மிஸ்டர் ஹென்ஸன்!
ப்ரியன் ஹென்ஸன் : அந்த கதையே எனக்கு பிடிக்காது. வேற ஆள பாத்துக்குங்க.
ஹால்மார்க்: எப்படியாவது நீங்கதான் பண்ணி தரணும்
ஹென்ஸன்: கதைய நெறிமுறை சார்ந்ததாக( ethical), மனித வர்க்க கோட்பாடுகளுக்குட்பட்டு(humanistical) கதையை மாற்றியமைப்பேன்.
அதற்கு சம்மதமா?
ஹால்மார்க் : ஒத்துக்குறோம்.
இப்படி உருவானதுதான் 2001-ல் வெளியான அமெரிக்க தொலைக்காட்சி குறுந்தொடர்
JACK AND THE BEANSTALK; THE REAL STORY.
லயன்முத்துவில் வெளியான பீன்ஸ் கொடியில் ஜாக்கை படிச்சிட்டு அப்புறமா இதைப் படியுங்க..
******"""""""""*********"""""""""********"""""""""
ஜாக் ராபின்ஸன் ஒரு பன்னாட்டு வணிக குழுமத்தின் தலைமை நிர்வாகி. பல தலைமுறைகளாய் செல்வ செழிப்பில் திளைக்கும் குடும்பத்தின் ஒரே வாரிசு.
Deleteஒருவகை சாபமோ என்னவோ ராபின்ஸன் வகையறா ஆண்கள் யாருமே 40 வயதை தொடுவதற்கு முன்பே மரணிக்கிறார்கள்.
இதனால் நமது நாயகன் ஜாக் எவ்வித கெட்ட பழக்க வழக்கமின்றி ஆரோக்கிய உணவுக்கென்று அல்பேனிய சமையற்காரன் துஸ்ஸன் என்பவனை நியமித்து உடல்நலம் பேணி வாழ்ந்து வருகிறான்.
ஜாக்கின் வணிக சம்பந்தமான நிர்வாகி சிக்பெரெய்ட் மான்ஹீம் - சுருக்கமாக- சிக்கி( siggy) .நெடுநாளாக பணிபுரியும் நபர்.
மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில் பஞ்சம் காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்பட அந்த நாடுகளுக்கு உதவும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை வழங்கும் ஒரு பெரிய வணிக ஒப்பந்தம் ஜாக் நிறுவனத்துக்கு வருகிறது.
இதில் லாபம் பெரிதாக இருக்காது.ஒரு சேவை போல்தான்.
அதற்கு பதில் அருகில் உள்ள நகரில்
சூதாட்ட மையம் கட்டினால் பெரிய அளவு லாபம் வரும் என சிக்கி சொல்ல அதை ஏற்றுக் கொள்கிறான்
ஜாக். ஆனால் அந்நகர மக்கள் சூதாட்ட மையம் அமைக்க எதிர்ப்பு
தெரிவிக்கின்றனர்.
அதை மீறி கட்டிட கட்டுமானப் பணிகள் துவங்குகின்றன. பள்ளம்
Deleteதோண்டுகையில் ஒரு அரக்கனின்
எலும்புக் கூடு கிடைக்க பரபரப்பு
ஏற்படுகிறது.
ஒரு இளம்பெண் ஜாக்கின் முன் தோன்றி "கொலைகாரா ! " எனச்
சொல்லி மறைகிறாள்.
அன்றிரவு ஜாக்கின் அறையில் நுழையும் ஒரு மனிதன் வயோதிக பெண்மணி ஒருத்தியிடம் அழைத்து
செல்கிறான் . அப்பெண்மணி ஜாக்கின் பெரிய அத்தையான
வில்ஹெல்மினா. பலகாலம் முன்பே
இறந்துவிட்டதாக கூறப்பட்டவர்.
குழம்பி நிற்கும் ஜாக்கிடம்
வில்ஹெல்மினா பீன்ஸ் கொடியில்
ஜாக் கதையை கூறி இக்கதையில் அரக்கன் சுயநலவாதி, மூர்க்கன் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
அது உண்மையா என நீ அறியவேண்டும் எனக் கூறி ஒரு
மந்திர பீன்ஸ் விதையை கொடுக்கிறாள்
இதை நீ செடியாக மாற்றி அதில் ஏறிச் சென்றால் ஏற்கனவே நடந்தது
Deleteஇப்போது நடக்கும் சம்பவங்கள் பற்றி
அறியலாம் என்கிறாள்.
அரக்கனின் எலும்புக்கூடு கிடந்த இடத்தின் அருகாமையில் உள்ள காட்டில் ஜாக் பீன்ஸை போட அது கொடியாக மாறி மேலே செல்கிறது.
அதில் ஏறி அரக்கர் உலகம் அடைகிறான் ஜாக்.அப்போது பூமியில் யாரோ கொடியை வெட்ட கொடி மறைகிறது.
ஜாக்கை கொலைகாரன் என்றழைத்த இளம்பெண்ணை சந்திக்கிறான் ஜாக். அவள் பெயர் ஆன்டைன்..அரக்கர் உலகத்தில் ஒருநாள் என்பது பூமியில் ஒரு வருடம்.
எலும்புக்கூடாக கிடந்த அரக்கன் பெயர் தண்டெரல் . அரக்கர் தலைவன்.மிகவும் நல்லவனான இவன் கருணை , நேர்மைக்கு பேர் போனவன்.ஆன்டைனின் வளர்ப்புத்
தந்தை.பீன்ஸ் விதை மூலம் வந்த ஜாக் ( முதல் ஜாக்)தண்டெரலுக்கு நண்பனாக பழகி பின் நம்பிக்கைத் துரோகம் செய்து யாழையும், தங்க முட்டையிடும் வாத்தையும் திருடிச்
செல்வதோடு அதை திரும்பிக் கேட்க
பூமி செல்லும் தண்டெரலின் மரணத்திற்கும் காரணமாய் விளங்குகிறான்
This comment has been removed by the author.
Deleteயாழ் ( THE HARP OF HARMONY) அரக்கர்களின் மாயாஜால சக்தியின் மூலம் . அமைதியுடன் அரக்கர் உலகம் இருக்க அவசியமானது.
Deleteவாத்து ( THE GOOSE OF PROSPERITY)
அரக்கர் உலகம் வளமையும் செழுமையும் பெற அவசியம்.
இவை இல்லாமல் போகவே அரக்கர் உலகம் மெல்ல அழியத் துவங்குகிறது.பயிர்கள் வளராது.
வசந்தம் வராது என்பது அரக்கர் உலகத்தின் மீது விழும் சாபம்.
நம்பிக்கைத் துரோகம் இழைத்ததால்
ஜாக் இன ஆண் வாரிசுகள் நீண்ட நாள் வாழ முடியாது என்பது அவர்கள் மீது விழும் சாபம்.
வில்ஹெல்மினா முதல் ஜாக்கின் தாய் என்பது தெரிய வருகிறது.அவள் தண்டெரலின் மரணத்துக்கு காரணமானவள் .
அவள் தன் மகன், அவன் வாரிசுகள்
மரணிப்பதை பார்த்து துயருற வேண்டும் என்பதற்காக சாகாவரம் அளிக்கப்படுவது அவள் மீது விழும்
சாபம்.
இந்த ஜாக் 35-வது வாரிசு.பூமியில் நூற்றாண்டுகள் ஆனாலும் அரக்கர் உலகத்தில் இது நடந்து ஓரிரு ஆண்டுகளே ஆகிறது.
Deleteதனது மூதாதையர் செய்த தவறை சரி செய்ய முயல்கிறான் 35-வது ஜாக்
யாழையும், வாத்தையும் திருப்பி கொடுக்கும் ஜாக்கின் முயற்சி வெற்றி பெற்றதா?
ஜாக் அரக்கர் உலகத்தில் இருக்கும்போது பீன்ஸ் கொடியை வெட்டியது யார்? ஏன்?
மனவலியுடன் தண்டனை அனுபவித்து பல நூற்றாண்டுகளாய் வாழும் வில்ஹெல்மினாவின் சாகாவரம் என்ற சாபம் முடிவுக்கு வந்ததா?
முதல் ஜாக் காதலிப்பதாக சொல்லி ஏமாற்றிய ஆன்டைன் என்ன நிலை இறுதியில் எடுத்தாள்?
போன்ற பல விஷயங்கள் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளன.
இப் பதிவின் நோக்கம் பீன்ஸ் கொடியில் ஜாக் போன்ற கிளாஸிக் கதைகளும் குழந்தைகளுக்கு என்ன நீதி சொல்கின்றன என்ற பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டியவையே என்பதேயாகும்.
Deleteபீன்ஸ் கொடியில் ஜாக்கை முதலில் நீங்கள் வாசியுங்கள்.
பின் குழந்தைகளுக்கு சொல்லும்போது அதை எப்படி உள் வாங்கிக் கொள்கிறார்கள் என கவனித்து வழி நடத்துங்கள்.
தானாகவே படிக்க இயலும் குழந்தைகளிடம் இதை குறித்து மென்மையாக விவாதியுங்கள்.
முதல்முறை திடீரென தங்க காசுகள் அடங்கிய பெட்டியை கொண்டுவரும் ஜாக்கின் போக்கினை கண்டிக்காத தாயின் செயல்கண்டிக்கத்தக்கதல்லவா ?
நாம் வாங்கிக் கொடுக்காத புதுப்பென்சில் மகன்/ மகளின் பென்சில் பாக்ஸில் முளைத்தால் கேள்வி கேட்டு அது தவறான வழியில் வந்திருந்தால் கண்டிக்க முயல்வது நம் கடமையல்லவா?
///இந்த ஜாக் 35-வது வாரிசு.பூமியில் நூற்றாண்டுகள் ஆனாலும் அரக்கர் உலகத்தில் இது நடந்து ஓரிரு ஆண்டுகளே ஆகிறது.
Deleteதனது மூதாதையர் செய்த தவறை சரி செய்ய முயல்கிறான் 35-வது ஜாக்///
கேட்டீங்களா எடிட்டர் சார்? இன்னும் 34 பாகங்கள் பாக்கியிருக்கு! இரத்தப் படலத்தைவிட பெரிசா இருக்கும் போலிருக்கு! மாசத்துக்கு ஒன்னுன்னு போட்டு சட்டுபுட்டு முடிச்சு விடுங்க. இந்த ஜாக் பயபுள்ளயும் அவங்க மம்மியும் எந்த பாகத்தில் நல்லவங்களா வராங்களோ.. அதைத்தான் என் குழந்தைகளுக்குப் படிக்கக் கொடுக்கலாம்னு இருக்கேன்!
டாக்டர்களை நான் அறவே வெறுக்கிறேன் என்றாலும் நடுராத்திரியை தாண்டிய நேரத்திலும் பீன்ஸ் விதையை ஆராய்ச்சி பண்ணி எழுதியதை துளியூண்டாவது பாராட்டாம இருக்க முடியலை! முகத்தை அந்தண்டை திருப்பியபடியே ஒரு தபா "கிரேட்!" சொல்லிக்கறேன்!
//ஹென்ஸன்: கதைய நெறிமுறை சார்ந்ததாக( ethical), மனித வர்க்க கோட்பாடுகளுக்குட்பட்டு(humanistical) கதையை மாற்றியமைப்பேன்.
Deleteஅதற்கு சம்மதமா?//
Thanks for sharing this making bro. Your research is great.
This comment has been removed by the author.
DeleteLusettesofia
Delete(மேற்கத்திய) அவரைக்கொடியில் ஜாக் கதை 48 பக்கங்கள்தானே.?
உங்கள் குழந்தைகளுடன் இந்த காமிக்ஸை விவாதம் செஞ்சுட்டீங்களா டாக்டர் ? :-)
Deleteராகவன்@ பையன் pg online coaching - ல இருக்கிறான்.நடுவில கிடைக்கற நேரத்தில சூர்யகுமார் யாதவ், ருத்துராஜ் கெய்க்வாட், ஆண்ட்ரிச், மார்னஸ், பாபர் அஸாம் இப்படி கிரிக்கெட் பத்தி மட்டுந்தான் பேசுவான்.90 -களில் நடந்த மேட்ச்ல்லாம் பாக்குறான்.
Deleteபொண்ணு கூட இப்பல்லாம் large bowel obstruction repair - ல நடந்த complications பத்திதான் பேச முடியுது.
பேரக் குழந்தைங்க கூடத்தான் அவரைக் கொடி பத்தி பேசனும்.
/மேற்கத்திய) அவரைக்கொடியில் ஜாக் கதை 48 பக்கங்கள்தானே.?//
Deleteநிறைய வெர்ஷன் இருக்கு கண்ணன்..
உதாரணமா
STV-க்கு அனுப்பியது இல்லஸ்ட்ரேடட் மாரலைஸ்ட் வெர்ஷன்.13 பக்கங்கள் வந்துச்சு.
ஃ பாண்ட் சைஸ்,படம் சைஸ் பொறுத்து விதம் விதமாக இருக்கு.
அடல்ட் வெர்ஷனும் ஏகத்துக்கு இருக்கு
///அடல்ட் வெர்ஷனும் ஏகத்துக்கு இருக்கு///
Deleteஅட்றஸ் அனுப்பட்டுமா செனா.. ம்ம்..ம்ம்..😋
/அட்றஸ் அனுப்பட்டுமா செனா.. ம்ம்..ம்ம்..😋//
Deleteஹா..ஹா.ஹா..
Test
ReplyDelete//'தல' & தாத்தா entry தருகிறார்கள் !!//
ReplyDeleteசூப்பர் சார் 'தல' கார்சன் கதையில் உள்ளார் என்று முன்னமே சொன்னதற்கு
நீங்களே தயாரித்துள்ள டெக்ஸ் அட்டை சூப்பர். அட்டகாசமான டெஸ்மாண்டின் காசில்லா கோடீஸ்வரனை அட்டையை ஏகமாய் நினைவுப்படுத்துகிறது.
Deleteஇன்னொரு பக்கம் கேப்டன் பிரின்சின் (Bernard Prince à Manhattan) அட்டையும் சேர்த்தே நினைவுப்படுத்துகிறது.
(ஆனாலும் டெக்ஸ் தலையை இடது புறம் கொஞ்சம் 2mm நகர்த்தி வைத்தால் தேவலாம் போல உள்ளது).
Health and safety first will do next year sir..
ReplyDeleteசென்னை ஓவியர் மிகவும் அருமையாக வரைகிறார்! அவருக்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteஜூனில் ஜூலை வரும்ங்களா?
ReplyDeleteஇந்த வெள்ளி இல்லை சனிக்கிழமை புத்தகம் கிடைக்குமா சார்?
Deleteதயாரான வரப்போகுது. :-) நல்லா காய்ந்த பிறகு புத்தகங்களை பைண்டிங் செய்து நிதானமாக அனுப்புங்கள் சார்.
Delete//தயாரான வரப்போகுது. :-) நல்லா காய்ந்த பிறகு புத்தகங்களை பைண்டிங் செய்து நிதானமாக அனுப்புங்கள் சார்.//
Delete100% Agree with this Sir, Take your own time for the quality making. No rush at all.
Wow this is amazing, click here to read more
ReplyDeleteபாலைவனத்தில் புலனாய்வு :
ReplyDeleteஜெரோனிமா ஹேங்க்ஓவர் போவதற்காக கையில் எடுத்த டெக்ஸ்வில்லர் கதை.!
பால்டிமோர் என்னும் பேரூரில் நடைபெற்ற தொடர்கொலைகளை செய்த கொலைகாரனான டாக்டர் லிவர்டோனைப் பற்றி விசாரிக்க..
சியாரா விஸ்டா என்னும் சிற்றூருக்குப் போயிருந்த போலிஸ்கார் நிக் மார்டின் என்ன ஆனாரென்ற தகவலே இல்லாமல் போக..
அதை விசாரிக்க டெக்ஸ் வில்லர் அதே சியாரா விஸ்டாவுக்கு டைனமைட் மீது டக்கராக வந்து இறங்குகிறார்.!
நிக் மார்டினைப் பற்றி ஊருக்குள் பத்தே பத்து பிரதிகள் வெளியாகும் ஒரே ஒரு பத்திரிக்கையில் விளம்பரம் செய்து விசாரிக்கத் தொடங்க.. தகவல் கொடுக்க முயன்ற ஸ்டோர் ஒனர் ஸ்டோரோடு வைத்துக் கொளுத்தப்படுகிறார்.!
இருந்த ஒருவழியும் அடைபட்டுவிட்டதே என டெக்ஸ் விழிபிதுங்கி நின்றிருக்கும் வேளையில்.. மொட்டைக் கடுதாசி மூலமாக வேறொரு வழி திறக்கிறது.! அதன் மூலம் நிக் மார்ட்டின் என்னவானார்.. அந்த பால்டிமோர் தொடர்கொலைகாரனான லிவர்டோன் இப்போது யாராக இருக்கிறான் என்பதையெல்லாம் கண்டறிவதோடு குற்றவாளியையும் தண்டித்து கதையை சுபமாக முடித்து வைக்கிறார் டெக்ஸ் வில்லர்.!
சரி.. இனி நம்ம டிப்பார்ட்மென்டுக்கு வருவோம்.!
பால்டிமோர்ல அஞ்சி வருசத்துக்கு முன்னால செத்துப்போயிட்டதா போலிசை ஏமாத்திட்டு தலைமறைவான கொலைகாரன்.. சியாரா விஸ்டாவுல இருக்கிறதா ஸ்ட்ராங்கான தகவல் கிடைச்சிதான் நிக் மார்டின் அந்த ஊருக்கே வர்ராரு.!
சியாரா விஸ்டா.. மொத்தமே பதினைஞ்சி கட்டிடங்களும் ஒண்ணேஅரைக்கால் தெருவும் கொண்ட பிசாத்து ஊரு.! அஞ்சி வருசத்துக்கு முன்னால ஊருக்கு வந்து செட்டில் ஆனவன் யாருன்னு பாத்தாலே கேசு முடிஞ்சுது.. இதுல என்ன புலனாய்வு..? நிக் மார்டின் போலிசுல அப்பிடி என்னத்தைத்தான் ட்ரெயினிங் எடுத்திருப்பாப்ல..! சரி.. அவருதான் அப்படின்னா டெக்ஸும் அதையேதான் பண்றாரு..!
பால்டிமோர்ல நடந்த மாதிரியே சியாரா விஸ்டாவுலயும் நாலஞ்சி வருசத்துல நாலஞ்சி இளம்பெண்கள் கழுத்தறுத்து கொல்லப்பட்டிருக்காங்களாம்..
அப்போ.. அந்த பால்டிமோர் கொலைகாரன் இங்கேதானே இருக்கணும்..
அப்போ.. நாலஞ்சி வருசத்துக்கு முன்ன இந்த ஊருக்கு வந்த ஒரே ஆளு ரெக்ஸ் மரியட்தான்..
அப்புறம் என்ன புலனாய்வு.?
ஸ்டோர் ஓனர் தானாக தகவல் சொல்ல வர்ராரு.. போகிக்கு பழையதுணிமூட்டையை கொளுத்துறமாதிரி அவரை(அவரும் துணிமூட்டை மாதிரிதான் இருக்காரு) கொளுத்திடுறாங்க..
அடுத்து குடிகார டாக்டர் பென்டனும் தானாவே மொட்டைக் கடுதாசி மூலமா தகவல் தராரு..
மொட்டைக்கடுதாசியை எழுதினது பென்டன்தான்னு பத்திரிக்கை ஆசிரியர்தான் கண்டுபுடிச்சி சொல்றாரு..
ரெக்ஸ் மரியட்தான் போலீசார் தேடும் லிவர்டோன் அப்படின்னு டாக்டர் பென்டன் எல்லா விசயத்தையும் தானாவே புட்டு புட்டு வெச்சிடுறாரு..
ஹான்ஸ் கீஃபர்ன்ற அடியாள் டெக்ஸை கொல்ல பாக்கும்போது ரெக்ஸ் வந்து காப்பாத்திடுறான்.. (தல யோட கெத்துக்கு பங்கம் வந்திடப்படாதுன்னு.. "நான் வரலைன்னாலும் நீங்களே உங்களை காப்பாத்திக்குவிங்கன்னு தெரியும் டெக்ஸ்"னு ஒரு வசனத்தையும் ரெக்ஸ் வாயால சொல்ல வெச்சிடுறாங்க)
ரெக்ஸ் என்கிற லிவர்டோனை மடக்கப் போன இடத்துல டெக்ஸே மடக்கப்பட.. ரெக்ஸின் பாவப்பட்ட மனைவியின் குறுக்கீட்டாலதான் டெக்ஸே காப்பாத்தப்படுறாரு.!
இந்தக் கதையில நீ எதுவுமே செய்யலையே தல ன்னு யாரும் டங்க்கு மேல டூத்தைப் போட்டு பேசிடக்கூடாதேன்னு... கடேசியா ரெக்ஸ் மரியட் எனும் டாக்டர் லிவர்டோனை சுட்டுக் கொன்னு ரெஸ்பெக்டை காப்பாத்திக்கிடுறாரு டெக்ஸ்.!
இந்த குழந்தைபுள்ள கேசுக்கு கார்சன் வேற எதுக்குன்னு லீவு குடுத்திட்டாங்க போல.!
பாலைவனத்தில் புலனாய்வு - பாலைவனத்தையும் காணோம் புலனாய்வையும் காணோம்.
முக்கிய பின்குறிப்பு :
எது எப்படி இருந்தாலும்.. டெக்ஸ் வில்லர் கதைகளை படிக்கும்போது மனசு லேசாகி.. சுணக்கங்கள் நீங்கி ஒரு சந்தோச உணர்வு பரவுவதை மறுக்கவே முடியாது..!
லவ் யூ டெக்ஸ்..😍
ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்.. ஆனா பூசக்கூடாது. அப்படித்தானுங்களே..
Deleteகடைசி இரண்டு paragraph ஐ விட்டு மற்றதைப் படித்தால் ரம்மி எழுதியதை போல உள்ளது:-)
Deleteநாம யாரும் வம்புக்கும் போறதில்லே..யாரும் தும்புக்கும் போறதில்லே.. நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்திடுறதுதான்..!
Deleteஅதாவது பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது போலயா :-)
Deleteஹீ....ஹீ...ஹீ..
Deleteஅதான் பாருங்களேன் பத்து சார், எப்படி பூசியிருக்காருனு...
Deleteஹா ஹா! கதையில் தல புலனாய்வு பண்ணதைவிட நீங்க பண்ணியது அதிகமா இருக்குங்களே KOK?!! நியாயப்படி இந்நேரத்துக்கு ரேஞ்சர்களின் தலைமை அலுவலகத்திலிருந்து உங்களுக்கு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வந்திருக்கணும்!
Delete'ரேஞ்சர் கிட் கண்ணன்'னு சொல்லிக்கிடறது எங்களுக்கும் பெருமை தானே!! :)
///'ரேஞ்சர் கிட் கண்ணன்'னு சொல்லிக்கிடறது எங்களுக்கும் பெருமை தானே!! :)///
Delete.அதுல பாருங்க குருநாயரே.. வெறுமனே ரேஞ்சர்னு மட்டும் சொன்னா.. அதுல ஒரு இது இருக்கமாட்டேங்குது.!
முன்னாடி ஏதாச்சும் பட்டம் போட்டுக்கிட்டா நல்லா இருக்குமில்ல.?!
உதாரணத்துக்கு கில்மா ரேஞ்சர் கிட் கண்ணன்.. இப்படி.😛
கில்மா ரேஞ்சர் கிட் கண்ணன் - Nice name :-)
Deleteவருஷம் முழுசும் தாலிக்கு பங்கம் வராம ஊமைக்குத்தா குத்திபுட்டு சுமங்கலி பூஜை அன்னிக்கு மட்டும் தாலில மொச்சைக்கொட்டை அளவுக்கு குங்குமம் வச்சிக்கற பொண்டாட்டி மாதிரி விமர்சனம் புல்லா டெக்ஸை நொக்கிபுட்டு கடைசி வரில லவ் யூ டெக்ஸாம்ல்ல ! :D
ReplyDelete:-)
DeleteSafe ப்பா விளையாடுராங்களாம் செல்வம் அபிராமி:-)
Deleteசெனா அனா & பரணி
Deleteநாளை பின்ன இன்னொரு கதைக்கு விமர்சனம் எழுதோணுமில்ல...!
///வருஷம் முழுசும் தாலிக்கு பங்கம் வராம ஊமைக்குத்தா குத்திபுட்டு சுமங்கலி பூஜை அன்னிக்கு மட்டும் தாலில மொச்சைக்கொட்டை அளவுக்கு குங்குமம் வச்சிக்கற பொண்டாட்டி மாதிரி///
Deleteநேர்ல பாத்தா மாதிரியே சொல்றாரே.. அவ்வ்வ்..!
அவர் அனுபவத்தை சொன்னார் கண்ணா :-) நீங்களா வழிய வந்து உண்மையை ஒத்துக் கொண்டீங்களே கண்ணா :-)
Deleteஅடடா... நானாத்தான் மாட்டிக்கிட்டேனா.?!
Deleteஓஹோ... இப்படி ஒரு விசம விமர்சனமா இது....!!
Deleteயோவ் KOK அங்கிள் என்னய்யா இது! ரம்மிக்கூட ஏதும் போன்ல பேசுனியா போன வராம்...???
///அவர் அனுபவத்தை சொன்னார் கண்ணா :-) //
Delete----பொருளர் ஜி@ இதில் ஏதும் உண்மை உள்ளதா?? ஆங் இருக்கத்தானே செய்யும்..
ஆசிரியர் சார் @ சிவகாசி பக்கம்லாம் ஊமைக்குத்து உபசாரம் உண்டுங்களா???😉
Delete///
Deleteயோவ் KOK அங்கிள் என்னய்யா இது! ரம்மிக்கூட ஏதும் போன்ல பேசுனியா போன வராம்...???///
அந்த பீசு மும்பையில மேஞ்சிகிட்டு இகுக்குது மாம்ஸ்.!
ரம்மிகிட்ட பேசினா ரெண்டுநாளைக்கு எதையும் தெளிவா யோசிக்கவே முடியாதே.. அப்புறம் எங்குட்டு விமர்சனம் எழுத..!?😂
// ரம்மிகிட்ட பேசினா ரெண்டுநாளைக்கு எதையும் தெளிவா யோசிக்கவே முடியாதே. //
Deleteயோசிக்க முடியாதா இல்ல பார்க்க முடியாதா :-)
This comment has been removed by the author.
ReplyDelete///
Deleteவீட்டுக்கு வீடு வாசப்படி..கண்ணன்.///
சரியாத்தானே சொல்லியிகுக்கிங்க பத்து சார்.. அப்புறம் ஏன் டெலிட் பண்ணிட்டிங்க.?
ஒரு ரககியம்.. என்னோட வீட்டுக்கு நாலு வாசப்படி இருக்கு... அதான் அடியும் நாலுமடங்கு விழுகுது..😭
அதுங்களா கண்ணன்,
ReplyDeleteநாம பாக்காத வீடுகளை பற்றி பொத்தாம்பொதுவாக கமெண்ட் அடிக்கக் கூடாதுன்னு நம்ம ஏழாம் அறிவு மண்டையில ஓங்கி ஒரு குட்டு வெச்சது. அதான், டெலிட் பண்ணிட்டேன்.
:-)
ReplyDeleteநேத்து டாங்கோ படிக்கலாமின்னு எடுத்தேன்..! அந்தப் பயபுள்ள பல்லி மேல ஒண்ணுக்கு அடிச்சிக்கிட்டு இருந்தான்..! சர்தான் நாளைக்கு பாத்துக்கலாமுன்னு தூங்கிட்டேன்.!
ReplyDeleteஎனக்கென்னமோ அவன் தாகத்தோட தவிச்சுக்கிட்டிருந்த பல்லிக்கு உதவி செஞ்சிருக்கான்னு தோனுது!
Deleteஇஸ்கூல் படிக்கும்போது நானும் இதுமாதிரி நிறைய்ய உதவியிருக்கேன்!
பல்லி செத்திருக்குமே..!
DeleteROFL:-)
Delete///பல்லி செத்திருக்குமே.///
Deleteயெஸ்! ஆனா அதை ஒருவகையான கருணைக்கொலைன்னு தான் சொல்லணும்!
This comment has been removed by the author.
Deleteஏன் உங்ககிட்ட கருணை கொலை பண்ணுங்க என அந்த பல்லி மனு கொடுத்ததா? :-)
DeletePfB...
Deleteகருணைக் கொலைன்னு சொன்னவுடனே இங்கேயிருக்கும் எனக்குப் பிடிக்காத டாக்டர்களின் ஞாபகம் வந்துடுச்சு! முன்னெல்லாம் கிராமங்கள்ல 'இனி இதுக்கு மேல தாங்காது' என்ற நிலையிலிருக்கும் பெரிசுகளை ஒரு ஊசியப்போட்டு அப்படியொரு க.கொ பண்ணி கதையை முடிப்பாராம் அங்கேயிருக்கும் டாக்டர்! சின்ன வயசுல கேள்விப்பட்டிருக்கேன்!
இப்பவும் இதுமாதிரி க.கொ நடக்குதான்னு தெரியலை! 'சம்மந்தப்பட்டவக' யாராவது விளக்கினாத் தேவலை!
அந்த டாக்டரின் பதில் கிட்டத்தட்ட இப்படி இருக்கக்கூடும் :
Delete"கருணைக் கொலை பண்ணுவேனோ இல்லையோ.. ஆனா நல்லா தின்னுகொழுத்த கரும்பூனை ஒன்றை கருணையே இல்லாமக் கொல்லப் போறேன்றது மட்டும் உறுதி""
ய்ய்யீஈஈஈக்!!
சேச்சே அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க விஜய். அவங்க ரொம்ப நல்லவங்க. பால் பாயாசம் கொடுத்து அமைதியாக முடிச்சிடுவாங்க அந்த பூனையை :-) இத அந்த பூனைகிட்டே மட்டும் சொல்லிடாதிங்க :-)
Deleteபால் பாயாசத்துல விஷம்லாம் எதுவும் கலக்க வேணாம்னு சொல்லுங்க. அவங்க சாதாரணமா வைக்கிற பாயாசத்தை குடிச்சாலே புலியா இருந்தாக்கூட பொசுக்குனு விழுந்து செத்துடும்!
Delete//பால் பாயாசத்துல விஷம்லாம் எதுவும் கலக்க வேணாம்னு சொல்லுங்க. அவங்க சாதாரணமா வைக்கிற பாயாசத்தை குடிச்சாலே புலியா இருந்தாக்கூட பொசுக்குனு விழுந்து செத்துடும்!//
DeleteROFL :-)))))))
// பால் பாயாசத்துல விஷம்லாம் எதுவும் கலக்க வேணாம்னு சொல்லுங்க. அவங்க சாதாரணமா வைக்கிற பாயாசத்தை குடிச்சாலே புலியா இருந்தாக்கூட பொசுக்குனு விழுந்து செத்துடும்! //
Deleteசாதாரண பாயசமே போதும் என அவங்களுக்கு நல்லாவே தெரியும் விஜய். கவலை வேண்டாம் :-)
///சாதாரண பாயசமே போதும் என அவங்களுக்கு நல்லாவே தெரியும் விஜய்///
Deleteஅவங்க வீட்டுப் பாயாசத்தைப்பத்தி அவங்களுக்குத் தெரியாமப் போய்டுமா PfB?!! எத்தினிதபா விஷமுறிவு மருந்தை கையில் வச்சுக்கிட்டு அதை உறிஞ்சியிருப்பாங்க!!
ROFL :-)
Deleteஇந்த நகைச்சுவைக்காகத்தான் அந்த பூனையை எல்லோரும் விட்டு வைக்கிறாங்க:-)
DeleteSulfuric acid மழைக்கு அப்புறமும் அந்த பல்லி உசுரோட இருக்குமா என்ன?
ReplyDeleteபல்லி இனத்தைச் சேர்ந்த ஓணானுக்கு ஒரே நாளில் ஏழெட்டு முறை கூட ஆசிட் மழையைத் தொடர்ந்து தாக்குப்பிடிக்கும் தன்மையுண்டுங்க பத்து சார்! சிலசமயங்களில் நாலாபுறங்களிலிருந்தும் பெய்யும் ஆசிட் மழையையும் தலையை ஒரு சிலுப்பு சிலுப்பி சமாளிக்கும் அசாத்திய திறமை கொண்டது! (நீங்க வேணும்னா அங்கே டெட்ராய்டு பல்லிகளின் திறமையை சோதிச்சுப்பாருங்களேன்?!) :)
Delete// பல்லி இனத்தைச் சேர்ந்த ஓணானுக்கு ஒரே நாளில் ஏழெட்டு முறை கூட ஆசிட் மழையைத் தொடர்ந்து தாக்குப்பிடிக்கும் தன்மையுண்டுங்க //
Deleteஅட்ரா அட்ரா அப்படிப் போட்டுத் தாக்கு :-)
நாங்க இஸ்கோல் படிக்கிறப்ப ஓணானுக்குத்தான் இது மாதிரி எல்ப்புல்லாம் பண்ணுவோம். ஏன்னா அதுக்குத்தான் கொஞ்சம் நம்மை மாதிரியே முரட்டு தோல். அவ்ளோ சீக்கிரம் உறைக்காது.
ReplyDeleteThanks to EV for fond memories.
ரொம்ப இளகிய மனசு உங்களுக்கு எல்லாம்:-)
Deleteநீங்க எங்களை ரொம்பவும் புகழறீங்க PFB. கூச்சமா இருக்கு.
ReplyDeleteஇத பாருடா நம்ப பத்து சார் கூச்சத்த :-) ஓணான் மேல மழை பொழியத்தில் வராதா கூச்சம் எல்லாம் இப்ப வருது :-)
Deleteவணக்கம் நண்பர்களே..
ReplyDeleteஅலாவுதீனும் ஒரு புலனாய்வு பூதமும்..."""
ReplyDeleteகான மயிலாட...
கடன்வந்து மேலாட...
வாங்கிய கடன் கழுத்தை நெறிக்க..
ஒரு நல்ல நாள் பார்த்து கம்பெனி பணத்தில் கைவைத்த முதலாளி..நேக்காக பழியை தன் ஆபிஸிலேயே வேலை செய்யும் ஒரு அப்பாவியின் தலையில் வைக்கிறார்.. தப்பியோடும் அந்த அப்பாவி தலைமறைவாகிறார்.
அதிர்ஷ்டவசமாக அந்த பயபுள்ளைக்கு லட்டு மாதிரியான அழகான காதலி அமைந்தது வரப்பிரசாதம்தான்.
காதலி வர..காதலி மூலம் துப்பறியும் சூரப்புலி ஹேர்லக் ஷோம்ஸும் வர...ஷோம்ஸ் மூலம் கூடவே சாட்சியாக அலாவுதீன் பூதம் வர..
ஹா...ஹா...ஹா..
சுபம்...சுபம்..சுபம்..
Deleteரொம்ப நாளைக்குப்பிறகு காமிக்ஸ் படிக்க டைம் வாகாக அமைந்தது அதிர்ஷ்டம்தான்..
அது கார்டூனா அமையவும்வசதியாகப் போனது.
அதுவும் பாதிநீளக் கதையாக இருக்க மேலும் சௌகரியமானது .
ஹா...ஹா....ஹா..
செம ஜாலியான கதையிது.
விட்டால்...இறக்கை கட்டிப் பறக்கும் கதையை ..இருபது பக்கத்தினை தாண்ட விடாமல் கயிறு கட்டியது ஒரு வருத்தம்.
நாளை விழா மலர்கள் தெரியும் நாள்....அதிரடி காத்துள்ளதாய் பட்சி சொல்லுது....
ReplyDeleteஆமா ஆமா இன்று புத்தகங்கள் கிளம்பும் நாள்....
Deleteபுத்தகங்கள் புறப்பட இன்னும் 2-3 தினங்கள் ஆகும் என்று பட்சி சொல்லுது
ReplyDeleteஅவ்வ்வ்வ்
Deleteஅது அடுத்த மாத புத்தகமாம்...கூடவே புத்தகதிருவிழா மலருமாம்
Deleteஉயிர்த் தேடி...சுஸ்கிவிஸ்கி...ஸ்பைடர்....நமீபியா
Deleteஜூலையெங்கும் ஜுவாலைகளே
ReplyDeleteசார் இந்த மாச புத்தகங்கள் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை சார்...! :-)
ReplyDeleteதலீவரே.. இந்தமாச புத்தகங்கள் எடிட்டருக்கே இன்னும் கிடைக்கலையாம்!
Deleteஇன்று லட்சியம் இன்னைக்கு மாலைக்குள் நிச்சயம்
Deleteஜூலையில் ஜூலையா...!!!
Deleteஆசிரியர் கடந்த சில தினங்களாக இங்கு வராததை பார்த்தால் "புயலில் ஒரு புதையல் வேட்டை" கதைக்கு பதில் வேறு கதையை ரெடி செய்து கொண்டு இருப்பதால் இருக்குமோ :-)
ReplyDelete75 வருசமா ஒரே கதை தான்! இப்படி திடீர்னு கதைய மாத்தச் சொன்னா எப்படி?!! வேணுமின்னா தலைப்பில் ஒரு மருவை ஒட்டி 'புயல் காட்டிய புதையல்'னு வச்சுக்கிடலாம். யாராலும் கண்டுபிடிக்க முடியாது!
Deleteஇப்படிக்கு
ரம்மி ரசிகன்
200வது!
ReplyDelete