Powered By Blogger

Saturday, April 30, 2022

கொஞ்சம் பதில் சொல்லுங்க பாஸ் !

 நண்பர்களே,

வணக்கம். டெஸ்பாட்ச் தினங்கள் எப்போதுமே ஒரு குஜாலான நாள் - at least என் மட்டிலாவது ! அதற்கு முந்தைய பொழுதுகளில் பேமானிகளாய்  நானும், நமது DTP செக்ஷனும் நாக்குத் தொங்க விடிய, விடிய பணியாற்றி வந்திருக்க, முன்னாபீஸிலோ டெங்ஷன்களின்றி 'ஆமாங்க சார் ; நெத்தப் படலம் அப்போவே காலிங்க சார் ! இல்லீங்க  - வேதாளர் புக் மட்டும் தனியா கிடைக்காதுங்க சார் !" என்ற ரீதியில் ஏதாச்சும் பேசிக்கொண்டிருப்பார்கள் ! ஆனால் டெஸ்பாட்ச் நாளிலோ நிலவரம் செம உல்டாவாகிப் போகும் !  சரேல்..சரேல் ...என்று உரிபட்டு, ஒட்டப்படும் செல்லோ டேப்களின் ஓசைகளையும், காதுக்குள் போனைச் செருகிக் கொண்டே "இல்லீங்க சார் ; புக் இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகும் சார் !" என்று சொல்லியபடிக்கே முரட்டு டப்பிக்களை வளைக்க பிரயத்தனங்கள் மேற்கொள்வதையும் காலை ஆட்டிக் கொண்டே பார்த்தும், கேட்டுக் கொண்டுமிருப்பேன் !  சம்பள நாளில் வாசலில் ஆஜராகிடும் ஈட்டிக்காரனைப் போல அரை அவருக்கு ஒருவாட்டி முன்னே போய் - "DTDC-க்கு கிளம்பிடுச்சா ? ST-க்கு எவ்ளோ போயிருக்கு ?" என்று குடல்களை உருவிவிட்டு மறுக்கா கால்ஆட்டும் படலத்தினை கருமமே கண்ணாய் தொடர்ந்திடுவேன் ! 

இன்றைக்கும் no different ! ஆனால் ஒரு சன்னமான வித்தியாசத்துடன் ! இம்மாத டப்பிகளில் ஸ்மாஷிங் '70s சார்பினில் மெகா சைஸினில் நமது ஜென்டில்மேன் சாரும் பயணிப்பதால் மாமூலைக் காட்டிலும் 'பொட்டிகளின்' எண்ணிக்கை செம ஜாஸ்தி ! So மதியம் மூன்று மணிவாக்கினில் நிறைவுற வேண்டிய டெஸ்பாட்ச், இம்முறை பொழுது சாயும் நேரம் வரையிலும் தொடர்ந்தூ !! And சின்னச் சின்ன நடைகளாய் கூரியர் ஆபீசில் ஐக்கியமான பார்சல்களே இன்றைக்கு அங்குள்ளோரையும் இரவு ஒன்பது வரைக்கும் பிசியாக்கிடும் ! ஒரு ஜென்டில்மேன் டிடெக்டிவ், சூப்பர் ஸ்டார் அந்தஸ்தினைத் தேடிடும் இந்தப் படலமானது இனிதே துவக்கம் கண்டுள்ளது ; தொடரும் நாட்களில் கண்ணாடிக்கார அங்கிளையும், சறுக்குத்தலைத் தாத்தாவையும் நீங்கள் வாஞ்சையோடு அணைத்துக் கொண்டால் இந்த SMASHING '70s முயற்சியானது பாதிக் கிணறைத் தாண்டும் வைபவமானது  ஒரு smashing success ஆகியிருக்கும் ! நேர்கோட்டுக் கதையானந்தாவும், பால்யக்காதலானந்தாவும் நம்முடன் இருப்பார்களாக ! தொடரும் நாட்களில் புது இதழ்களின் மசி வாசனைகளோடும், புதுக் கதைகளோடும் 'பழகிப்' பார்க்கும் படலங்கள் விமரிசையாய்த் துவங்கியிடவுமே  புனித மனிடோ அருள்வாராக !

Before the spotlight goes on to the newbies - உங்களிடம் கேட்க ஒரு டஜனுக்கு அனுசரித்த கேள்விகள் வெயிட்டிங் ! "இந்த மாமாக்கு மனசிலே இடம் தரலாமா ? அட்டவணையில் தரலாமா ? இந்த அத்தாச்சிக்கு பரண் சுகப்படுமா ? தரையில் உலவ விடலாமா ? " என்ற ரீதியிலான மாமூலான கேள்விகளே அவை ! ஆனால் ரசனைகள் எனும் நீரோடை - நில்லாது ஓடிவரும் சுட்டிக் குழந்தை போலானதெனும் போது,  'நான் சரியா தானே பேசிட்டிருக்கேன் ?" என்று சங்கிலி முருகன் பாணியில் அவ்வப்போது ஊர்ஜிதம் தேடிக் கொள்ளும் அவசியம் எழுவதைத் தவிர்க்க வழிகளில்லை ! So 'எதிர்கட்சிக்காரன் இதையெல்லாம் பார்த்தா என்ன நினைப்பான் ?" என்று கவுண்டர் பாணியில் திகைத்திடாது - மனசில் படும் பதில்களை பளிச்சென்று அடித்திடுங்களேன் folks !! 2023 இன்னும் கணிசமான தொலைவினில் இருந்தாலுமே, அதற்கான முன்னேற்பாடுகளை நடைமுறைப்படுத்திடும் தருணங்கள் புலர்ந்துவிட்டன நமக்கு ! So உங்களின் inputs செம முக்கியம் இந்த நொடியினில் ! Here goes : 

நூற்றி நாற்பத்தியேழாவதுவாட்டியாய் கேட்பதாய்த் தோன்றினால் மன்னிச்சூ guys ; 'தல' தான் கேள்விகளின் முதற்புள்ளி ! காத்திருக்கும் 2023 செப்டெம்பர் 30 தேதிக்கு, நமது தலயின் 75-வது பிறந்தநாள் புலர்ந்திடவுள்ளது ! In effect - இது நமது டாப் ஸ்டாரின் மைல்கல் பொழுதெனும் போது அவருக்கான மருவாதிகளில் குறைச்சல்கள் இருக்கப்படாதே என்ற எண்ணம் உள்ளுக்குள் ! அதே சமயத்தினில் - "பொன்முட்டையிடும் வாத்தை தலப்பாக்கட்டிக்கு தாரை வார்த்த தேங்காமுடி !" என்ற பெயரை ஈட்டிடக்கூடாதே என்ற பயமுமே சமவிகிதத்தில் உள்ளுக்குள் ! So இந்த ஒற்றை topic gains more significance than the others to follow !!

கேள்வி # 1 : போன ஆண்டு + நடப்பாண்டில் இதுவரையிலும் - டெக்ஸ் சாகசங்களில் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ?

Answer

A .என்ன கேள்வி கேட்டுப்புட்டே சகோ ? அல்லாத்தியும் படிச்சுப் போட்டுப்புட்டோம்லெ !! 

B  ஆங்....ஒரு பாதி ?!  

C . அது வந்துங்கண்ணா...நெறய பக்கம் பொம்ம பாத்துட்டதுலாம் "வாசிக்க புக்ஸ்" லிஸ்டில் சேர்த்துக்கலாமா ?

கேள்வி 2 :ரு நம்பராய் மட்டும் சொல்லுங்களேன் - 2023-க்கு எத்தனை டெக்ஸ் இதழ்கள் இருந்தால் நலமென்று ? (சைடு குறிப்பு :கவிஞர்களின் பதில்கள் தற்காலிகமாய் ஒரு சாக்குப்பைக்குள் போட்டு கட்டப்படும் ! )

கேள்வி # 3 : இதுவுமே 'தல' சார்ந்த கேள்வியே ! கலரில் TEX க்ளாசிக்ஸ் வெளியாவது அடுத்தாண்டிலுமே தொடரலாமா ? அல்லது 2023 க்கு மாடர்ன் டிரெஸ் போட்ட இந்த அபிதகுஜாலாம்பாட்கள் வேண்டாமா ? 

உங்கள் பதில்களை : YES / NO என்று அமைத்திடுங்களேன் - ப்ளீஸ் !

கேள்வி # 4 :

நடப்பாண்டினில் அறிமுகம் கண்டுள்ள நிறைய புது நாயக / நாயகியருக்கு தொடரும் மாதங்களில் மறு வாய்ப்புகள் வெயிட்டிங் ! So அவர்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் விதங்களை பொறுத்தே அவர்களது எதிர்காலங்கள் தொடர்ந்திடும் ! இந்த நொடிதனில் கீழ்க்கண்ட புதியவர்களை நீங்கள் எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ?

ஆல்பா

a )தொடரலாம் ! 

b )பேச்சைக் குறைச்சால் தொடரலாம் ! 

c)பரணில் LADY S-க்கு பேச்சுத்துணைக்குப் போகலாம் ! 

சிஸ்கோ

a நிச்சயமாய் ! 

b பார்ப்போமே !

டேங்கோ

a Oh yes !! 

b Oh no !!

ரூபின்

a தொடாமலே தெறிக்குதே ;நிச்சயமாய் வேணும் !! 

b ஒரு சாயலுக்கு ராணியிலே வர்ற குரங்கு குசலாவை ஞாபகப்படுத்துது பாப்பா ! டாப்பா வேற பார்த்துப்போமே !

கேள்வி # 5 : கார்ட்டூன் சார்ந்த கேள்வி இது :

க்ளிப்டன் - VRS தரப்பட்டு கேரட் மீசைக்காரர் புறப்பட்டாச்சு !

ஹெர்லக் ஷோம்ஸ் - கிட்டத்தட்ட கதைகள் காலி !

So எஞ்சியுள்ள லக்கி லூக் ; சிக் பில் ; ப்ளூகோட் பட்டாளம் ; மேக் & ஜாக் கூட்டணியில் வண்டி ஓடி வருகிறது ! 

My question is : இந்த நாற்கூட்டணியே ஓ.கே.வா ? போதுமா ? அல்லது கொஞ்சம் புதுமுகங்கள் உள்நுழைந்தால் 'கதவைத் திற..காற்று வரட்டும்' என்று feel பண்ணுவீர்களா ? 

கேள்வி # 6 : 

இறை ஊழியம் பண்ண வேண்டிய அந்த டேவிட் சாலமோன்  NYPD-ல் டாணாக்காரராய்ச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார் ! 

a SODA-வின் சேவை நமக்குத் தேவையா ? 

b அல்லது வேறு ஆணிகள் பிடுங்க முயற்சித்தல் நலமென்பீர்களா ?

கேள்வி # 7 :

கமல் மெரி பேசிடும் அந்த கி.நா.க்கள் தற்காலிகமாய் பின்சென்றுள்ளன ! ஸ்டெர்ன் ; அண்டர்டேக்கர் போன்ற கமர்ஷியல் கி.நா.க்களே தற்சமயம் நடைமுறையில் உள்ளன ! 

a இதுவே தொடரலாமா ? 

b அல்லது 300 times மூக்கைச் சுற்றவல்ல கதைகளிலும் ஒரு சுகம் உண்டென்பீர்களா ?

கேள்வி # 8 :

மாதமொன்றுக்கு வாசிக்க எத்தனை புக்ஸ் இருந்தால் தேவலாமோ ?

2 ? 3 ? 4 ?

கேள்வி # 9 :

என்னதான் நாங்கள் உருண்டு புரண்டு புதியவர்களைக் கண்ணில் காட்டி வந்தாலுமே, "ஆனாலும் அந்தக்காலத்து தியாகராஜ பாகவதர் போல வருமா ? !" என்று ஆங்காங்கே ஒரு அணியினர் குரல்கொடுப்பது ஒரு தொடர்கதையே ! 

So ஒரு பழைய பார்ட்டியை ; ஒரேயொரு பழைய பார்ட்டியை கைத்தாங்கலாய்க் கூட்டி வர நாங்கள் ரெடியெனில் - யாரை அழைத்து வரக் கோருவீர்களோ ?  உங்களின் நிகழ்காலத்து காமிக்ஸ் உலகினை ஜொலிக்கச் செய்யக்கூடிய அந்த ஒரேயொரு புராதனர் யாராக இருக்கக்கூடும் ? 

கேள்வி # 10 :

மறுபதிப்புகளே இல்லாததொரு ஆண்டு !! இதனை ஒருக்கா முயற்சித்துப் பார்த்தாலென்ன ? என்று உங்களுக்குமே எப்போதேனும் தோன்றியுள்ளதா folks ? இது குறித்து உங்களின் சிந்தனைகள் ப்ளீஸ் ?

கேள்வி # 11 :

"குண்டூ புக்ஸ் ; மெகா புக்ஸ்" என்ற உங்களின் ஆர்வங்கள் நிஜமாகிடும் போது அவற்றை கொண்டாடும் கையோடு 

a ஏக் தம்மில் வாசித்துத் தள்ளி விடுவீர்களா ?

b தலைமாட்டில் வைத்தபடிக்கே வெறிச்சு வெறிச்சுப் பார்ப்பீர்களா ?

c ரொம்ப காலமாய் ஆடி வரும் அந்தக் கூடத்து மேஜையின் ஒரு காலுக்கு தாக்கானாக குண்டு புக்கைச் செருகுவதன் சாதக-பாதகங்களை மோட்டு வளையைப் பார்த்தபடிக்கே ஆராய்வீர்களா ? 

கேள்வி # 12 :

கௌபாய் ஜானருக்கான தற்போதைய ஸ்லாட்ஸ் பற்றி :

a ஓ.கே. இதுவே போதும் !

b ஊஹூம்...ஜாஸ்தியுள்ளது !

c இன்னும் கூட்டலாம் !

கேட்க இன்னமுமே கேள்விகள் உண்டென்றாலும், தற்சமயத்துக்கு இவையே போதுமென்று படுகிறது ! கேள்விகளின் அடுத்த அத்தியாயம் ஜூலையினில் ! So கொஞ்சமே கொஞ்சமாய் நேரமெடுத்துக் கொண்டு இப்போதைய பதில்ஸ் ப்ளீஸ் !! 

அப்புறம் மே இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங் ரெடி ! Happy Shopping & happier reading guys ! Bye all ....see you around !! Have a cool weekend !

317 comments:

 1. வணக்கமுங்க நட்புக்களே

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 5. கேள்வி # 1 : போன ஆண்டு + நடப்பாண்டில் இதுவரையிலும் - டெக்ஸ் சாகசங்களில் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ?

  Answer : I have read five or Six
  C . அது வந்துங்கண்ணா...நெறய பக்கம் பொம்ம பாத்துட்டதுலாம் "வாசிக்க புக்ஸ்" லிஸ்டில் சேர்த்துக்கலாமா ?

  ReplyDelete
  Replies
  1. கேள்வி 2 : ஒரு நம்பராய் மட்டும் சொல்லுங்களேன் - 2023-க்கு எத்தனை டெக்ஸ் இதழ்கள் இருந்தால் நலமென்று ? (சைடு குறிப்பு :கவிஞர்களின் பதில்கள் தற்காலிகமாய் ஒரு சாக்குப்பைக்குள் போட்டு கட்டப்படும் ! )

   Six.... Yes, 6 BW stories are enough. Two Reprint Color Album are mostly welcome.

   Delete
  2. கேள்வி # 4 :

   YES for for all the new comers

   Delete

  3. 5 YES for all cartoons whatever reminds our favorite Mini Lion.

   6. Absolutely... SODA is a big stress buster

   7. கி நா
   b. YES. Except few stories, I always prefer Graphic Novels.

   8. Monthly 4 single slot comics is a must.
   In the Genre, Lion, Mini Lion, Thigil and Muthu everymonth. Variety is the spice of life.
   It can be reduced when Specials come.

   10. மறுபதிப்பு இல்லாத ஆண்டு

   STRICTLY NO SIR, PLEASE. Those days newsprinted old goldies must come in our HiTech avatar with sharp printing. And it is just 60 bugs.

   11. குண்டு புக்ஸ்
   b. Will read slowly…

   12. b ஊஹூம்...ஜாஸ்தியுள்ளது !

   Delete
  4. கேள்வி # 9 :

   SPIDER or
   (But as his stories are over, The next preference is) ARCHIE

   and all the other Golden fleetway heroes are in the line

   Delete
 6. ஐ..ஜாலி..
  கிளம்பிட்டார்ல்ல... ரிப் கிர்பி ...

  ReplyDelete
 7. பதிவு நேரத்தோட வந்தது ஹாப்பி அண்ணாச்சி 😁😁

  ReplyDelete
 8. தல பிறந்தநாளில் ஒரு குண்டு புக் வேணும்...

  ReplyDelete
 9. Edi Sir.. ஏகப்பட்ட கேள்விகள் கேட்டுள்ளீர்கள்.. Question paper ஐ மறுக்கா..மறுக்கா படிச்சிட்டு
  யோசித்து "மனம் சொல்லுதே More" என நாளை சொல்கிறேன்.

  ReplyDelete
 10. போன ஆண்டு + நடப்பாண்டில் இதுவரையிலும் - டெக்ஸ் சாகசங்களில் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ?


  அனைத்து பாகங்களையும் படித்திருக்கிறேன் ரசித்துக்கொண்டிருக்கிறேன்

  ReplyDelete
 11. ஒரு நம்பராய் மட்டும் சொல்லுங்களேன் - 2023-க்கு எத்தனை டெக்ஸ் இதழ்கள் இருந்தால் நலமென்று ?  12 லிருந்து 15 வரை

  ReplyDelete
 12. போன ஆண்டு + நடப்பாண்டில் இதுவரையிலும் - டெக்ஸ் சாகசங்களில் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ?
  அனைத்து கதைகளும்.
  ஒரு நம்பராய் மட்டும் சொல்லுங்களேன் - 2023-க்கு எத்தனை டெக்ஸ் இதழ்கள் இருந்தால் நலமென்று ?
  12 கதை

  இதுவுமே 'தல' சார்ந்த கேள்வியே ! கலரில் TEX க்ளாசிக்ஸ் வெளியாவது அடுத்தாண்டிலுமே தொடரலாமா ? அல்லது 2023 க்கு மாடர்ன் டிரெஸ் போட்ட இந்த அபிதகுஜாலாம்பாட்கள் வேண்டாமா ?
  கண்டிப்பாக தொடரலாம்
  நடப்பாண்டினில் அறிமுகம் கண்டுள்ள நிறைய புது நாயக / நாயகியருக்கு தொடரும் மாதங்களில் மறு வாய்ப்புகள் வெயிட்டிங் ! So அவர்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் விதங்களை பொறுத்தே அவர்களது எதிர்காலங்கள் தொடர்ந்திடும் ! இந்த நொடிதனில் கீழ்க்கண்ட புதியவர்களை நீங்கள் எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ?
  ஆல்பா-B, Sisco and Tango தொடரலாம்.

  கார்ட்டூன் சார்ந்த கேள்வி இது :
  Lucky luck, chickbill ok
  புதிய heros try pls.
  இறை ஊழியம் பண்ண வேண்டிய அந்த டேவிட் சாலமோன் NYPD-ல் டாணாக்காரராய்ச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார் !
  Soda அவசியம் வேண்டும்.
  கமல் மெரி பேசிடும் அந்த கி.நா.க்கள் தற்காலிகமாய் பின்சென்றுள்ளன ! ஸ்டெர்ன் ; அண்டர்டேக்கர் போன்ற கமர்ஷியல் கி.நா.க்களே தற்சமயம் நடைமுறையில் உள்ளன
  கண்டிப்பா தொடரலாம்.
  மாதமொன்றுக்கு வாசிக்க எத்தனை புக்ஸ் இருந்தால் தேவலாமோ ?
  Four books
  ஒரு பழைய பார்ட்டியை ; ஒரேயொரு பழைய பார்ட்டியை கைத்தாங்கலாய்க் கூட்டி வர நாங்கள் ரெடியெனில் - யாரை அழைத்து வரக் கோருவீர்களோ ? உங்களின் நிகழ்காலத்து காமிக்ஸ் உலகினை ஜொலிக்கச் செய்யக்கூடிய அந்த ஒரேயொரு புராதனர் யாராக இருக்கக்கூடும் ?
  ஜெஸ்லாங், விங் commander jeorge.
  மறுபதிப்புகளே இல்லாததொரு ஆண்டு !! இதனை ஒருக்கா முயற்சித்துப் பார்த்தாலென்ன ? என்று உங்களுக்குமே எப்போதேனும் தோன்றியுள்ளதா folks ? இது குறித்து உங்களின் சிந்தனைகள் ப்ளீஸ் ?
  No எதாவது வேண்டும்.
  குண்டூ புக்ஸ் ; மெகா புக்ஸ்" என்ற உங்களின் ஆர்வங்கள் நிஜமாகிடும் போது அவற்றை கொண்டாடும் கையோடு
  படித்து ரசித்தேன்.
  கௌபாய் ஜானருக்கான தற்போதைய ஸ்லாட்ஸ் பற்றி
  கூட்டலாம்.  ReplyDelete
 13. இதுவுமே 'தல' சார்ந்த கேள்வியே ! கலரில் TEX க்ளாசிக்ஸ் வெளியாவது அடுத்தாண்டிலுமே தொடரலாமா ? அல்லது 2023 க்கு மாடர்ன் டிரெஸ் போட்ட இந்த அபிதகுஜாலாம்பாட்கள் வேண்டாமா ?


  கண்டிப்பாக வேண்டும் இந்த ஆண்டு வெளியான இரண்டு புத்தகங்களுமே சூப்பர் ஹிட்

  ReplyDelete
 14. 1. A
  2. 15. Tex 75 should be celebrated as big as possible. We need as many big fat color books as possible.
  3. Double Yes
  4. Alpha- Yes Sisco - Yes Tango - Yes Rubine - Have not read; but heard she is good looking. So yes.
  5. Not sure what to say; stories like Soda and Maggie are making us to laugh better than Cartoons.
  6. Soda - Double Yes
  7. Yes. Big No to Sad & Tragic Stories
  8. 4
  9. Irattai Vettaiar
  10. If it is Tex, Lucky and Chick Bill then reprint is OK. One or two of others OK.
  11. A
  12. C. We need Young Tiger special.

  ReplyDelete
 15. 1-A
  2-15
  3- Yes
  4-
  a- A
  c-A
  t-A
  r-A
  5- நாலே நலம்.
  6 - A
  7- A
  8 -4 and above
  9- No one
  10- No reprints
  11- A
  12-A

  ReplyDelete
 16. கேள்வி 2: 12
  கேள்வி 3: யெஸ்ஸ்ஸ்ஸ்
  கேள்வி 4: தொடரலாம்
  கேள்வி 5: புச்சா நன்னா இருந்தா ட்ரை பண்ணிபுடலாம் 😇😁😁

  ReplyDelete
 17. கேள்வி # 12 :

  கௌபாய் ஜானருக்கான தற்போதைய ஸ்லாட்ஸ் பற்றி :

  a ஓ.கே. இதுவே போதும் !

  கேள்வி # 11 :

  "குண்டூ புக்ஸ் ; மெகா புக்ஸ்" என்ற உங்களின் ஆர்வங்கள் நிஜமாகிடும் போது அவற்றை கொண்டாடும் கையோடு

  a ஏக் தம்மில் வாசித்துத் தள்ளி விடுவீர்களா ?
  இரண்டு தம்மில் வாசித்து விடுவேன்.

  கேள்வி # 10 :

  மறுபதிப்புகளே இல்லாததொரு ஆண்டு !! இதனை ஒருக்கா முயற்சித்துப் பார்த்தாலென்ன ? என்று உங்களுக்குமே எப்போதேனும் தோன்றியுள்ளதா folks ? இது குறித்து உங்களின் சிந்தனைகள் ப்ளீஸ் ?

  எனக்கு ரொம்ப ஆசை. நீங்கள் தான் இன்னும் செயல்படுத்தவில்லை :-)

  கேள்வி # 8 :

  மாதமொன்றுக்கு வாசிக்க எத்தனை புக்ஸ் இருந்தால் தேவலாமோ ?

  குண்டு புத்தகம் வரும் மாதம் என்றால் மூன்று புத்தகங்கள் இல்லை என்றால் 4 ஒல்லியான புத்தகங்கள்.

  ReplyDelete
  Replies
  1. கேள்வி # 6 :

   இறை ஊழியம் பண்ண வேண்டிய அந்த டேவிட் சாலமோன் NYPD-ல் டாணாக்காரராய்ச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார் !

   a SODA-வின் சேவை நமக்குத் தேவையா ?

   கண்டிப்பாக தேவை யுவர் ஆர்னர் :-)

   கேள்வி # 7 :

   கமல் மெரி பேசிடும் அந்த கி.நா.க்கள் தற்காலிகமாய் பின்சென்றுள்ளன ! ஸ்டெர்ன் ; அண்டர்டேக்கர் போன்ற கமர்ஷியல் கி.நா.க்களே தற்சமயம் நடைமுறையில் உள்ளன !

   a இதுவே தொடரலாமா ?
   ஆமாம். இவைகள் விற்பனையில் சாதித்தால் இதுவே நன்று.

   Delete
  2. 9. Smashing 60s & 70s மட்டும் போதுமே சார். :-)

   Delete
 18. ஒரு சின்ன நினைவூட்டல்.

  சில மாதங்களுக்கு முன் "ஆளுக்கொரு ஆசை" யை பற்றி கேட்டீர்கள் அதைப் பற்றி ஏதாவது.....
  🤔🤔😇😇😇😇

  ReplyDelete
 19. // "DTDC-க்கு கிளம்பிடுச்சா ? ST-க்கு எவ்ளோ போயிருக்கு ?" என்று குடல்களை உருவிவிட்டு மறுக்கா கால்ஆட்டும் படலத்தினை கருமமே கண்ணாய் தொடர்ந்திடுவேன் ! //
  ஓகோ பழிக்கு பழி என்பது இதுதானா :-)

  ReplyDelete
 20. 1. Reading tex books? - B, maybe half the books
  2. No of tex books - 8 to 10
  3. Color tex - No
  4. Alpha - A, yes
  Cisco - A, a big yes
  Tango - A , a bigger yes
  Rubine - A
  5. Explore interesting new options too
  6. Yes for continuing Soda
  7. Yes for continuing with commercial Graphic Novels
  8. 3 books every month is ideal
  9. None, except for the smashing 70s, it is time for others to retire
  10. Yes please, no re-runs
  11. I read the year 50 books in one go, so if the stories are interesting, yes.

  ReplyDelete
 21. For the TEX queries:

  Read all

  18 TEX

  Color TEX classics 4 an year - Jan Apr Jul Oct

  ReplyDelete
 22. கேள்வி # 4 :

  நடப்பாண்டினில் அறிமுகம் கண்டுள்ள நிறைய புது நாயக / நாயகியருக்கு தொடரும் மாதங்களில் மறு வாய்ப்புகள் வெயிட்டிங் ! So அவர்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் விதங்களை பொறுத்தே அவர்களது எதிர்காலங்கள் தொடர்ந்திடும் ! இந்த நொடிதனில் கீழ்க்கண்ட புதியவர்களை நீங்கள் எவ்விதம் பார்த்திடுகிறீர்கள்

  1.ஆல்பா
  பேச்சை ரொம்பவும் குறைக்கனும்
  2.சிஸ்கோ
  நிச்சயமாய்
  3.டேங்கோ
  Oh yes
  4.ரூபின்
  தொடாமலே தெரிக்குதே தொடரலாம்

  ReplyDelete
 23. 1. Tex - சமீபத்திய இதழ்கள் ஒன்றிரண்டு தவிர அனைத்தும் படித்தாயிற்று சார்.

  2. சந்தாவில் 6 B/W Tex; ஸ்பெஷலுகளில் 2 colour classic reprints ஆக மொத்தம் 10 கதைகள்

  3. Tex Classics தற்போதைய டிரெண்டில் உள்ளதுங்க சார்... நிச்சயம் தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. 4. ஆல்பா: நிறைய விவாதத்துக்கு உரிய கதைக்களம். கண்டிப்பாக தொடரலாம்.

   அவசியமில்லாத பேச்சாக எதுவும் தெரியவில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் நாவல் போல தெரிந்தாலும் மறுவாசிப்பில் எல்லாமே ரொம்ப அவசியமாகத் தெரிகிறது.

   தயவுசெய்து கத்தரிக்கோலை எடுத்துடாதீங்க சார்...

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. 4. சிஸ்கோ - OK.

   டேஙகோ - கட்டாயமாக வரட்டும்! எக்ஸ்ட்ரா ஸ்லாட்ஸ் வேணுங்க சார்...

   ரூபின் - அமர்க்களமான ஒரு நாயகியை களத்தில இறக்கி விட்டிருக்கீங்க சார்... கட்டாயம் தொடரட்டும்.

   Delete
  4. 5. கார்ட்டூன்

   லக்கி & சிக்பில் எக்ஸ்ட்ரா ஸ்லாட்ஸ்... புதியவர்களுக்கு வெல்கம்

   6. சோடா - வரட்டும் சார்.

   7. இப்போதைக்கு இதுவே தொடரட்டும் சார். அடுத்த ஆண்டு மீண்டும் ரெகுலர் கி.நாக்களை கொண்டுவந்து விடலாம்.

   Delete
  5. 8. மாதம் 4 புக்ஸ் கொஞ்சம் முன்னேபின்னே ஆனாலும் கண்டிப்பாக படிச்சிடுவோங்க சார்.

   9. ஆரம்ப ஜெஸ் லாங் கதைகள் மேல் கொஞ்சம் ஆர்வம் உண்டுங்க சார்.

   10. மறுபதிப்புகள் இல்லாத ஆண்டு- சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறதுங்க சார்... அதே சமயத்தில் புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்துவிடக் கூடாது... அளவோடு (1 or 2) இருக்கும்வரை மறுபதிப்புகள் நல்லது.

   Delete
  6. 11. குண்டு புக்: ஏக் தம்மில் இல்லாவிட்டாலும் விரைவில் முடித்து விடுவேன் சார்.

   ONOT ஒரே தம்மில் வாசித்தது. குட் டெம்போ..

   ஆல்பா... கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக வாசித்தது.


   12. கௌபாய்... போதுமுங்க சார். இன்னும் எவ்வளவோ ஜானர்கள் இருக்கே... Sci fi, Horror பக்கமெல்லாம் கொஞ்சம் போகலாமுங்க சார்...

   Delete
 24. கேள்வி # 5 : கார்ட்டூன் சார்ந்த கேள்வி இது


  சிக்பில்&கோ விற்க்கு ஸ்லாட் அதிகரிக்கலாம் புதியவர்களுக்கும் வாய்ப்பு தரலாம்

  ReplyDelete
 25. கேள்வி # 6 :

  இறை ஊழியம் பண்ண வேண்டிய அந்த டேவிட் சாலமோன் NYPD-ல் டாணாக்காரராய்ச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார் !


  சோடாவின் சேவை தொடரலாம்

  ReplyDelete
  Replies
  1. இரண்டுமே சேவை வகையறா தானே, செந்தில் சகோ

   Delete
 26. Replies
  1. நான் நாளை வருகிறேன்.

   Delete
 27. கமல் மெரி பேசிடும் அந்த கி.நா.க்கள் தற்காலிகமாய் பின்சென்றுள்ளன ! ஸ்டெர்ன் ; அண்டர்டேக்கர் போன்ற கமர்ஷியல் கி.நா.க்களே தற்சமயம் நடைமுறையில் உள்ளன !

  இதுவே தொடரலாம்

  ReplyDelete
 28. கேள்வி # 12 :

  கௌபாய் ஜானருக்கான தற்போதைய ஸ்லாட்ஸ் பற்றி :

  இன்னும் கூட்டலாம்

  ReplyDelete
 29. எனது பதில்கள்

  1. எல்லா புத்தகங்களையும் படித்து விட்டேன்.

  2.12 டெக்ஸ் மாதம் ஒன்று. டெக்ஸ் 75 என்பதால்
  3. கிளாசிக் கலர் yes. 3 மாதத்திற்கு ஒன்று வருடத்திற்கு 4
  4. புது முகங்கள்

  ஆல்ஃபா ஓகே

  சிஸ்கோ double ok

  டேங்கோ வாரே வா நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தது இது தான்.

  ரூபின் அடி தூள். இப்படி எல்லாம் கேள்வியே கேட்கப் படாது.

  5. கார்ட்டூன்

  புது முகங்கள் தேவை சார் குறைந்தது இரண்டு தேவை.

  6. சோடாவின் சேவை எப்போதுமே தேவை.

  7. கி நா
  b)எனக்கு கமல் ரொம்பப் பிடிக்கும் சார்.

  8. எனக்கு 4 புத்தகங்கள் கட்டாயம் வேண்டும்.

  9. Action ஹீரோ சைமன். சாவதற்கு நேரமில்லை. இல்லையேல் இரட்டை வேட்டையர். இல்லையேல் கருப்பு கிழவி.

  10. மறுபதிப்பு இல்லாத ஆண்டு

  நான் எப்போதோ ரெடி சார்.

  11. குண்டு புக்ஸ்
  a) உடனே வாசித்து முடித்து விடுவேன்.

  12. கௌ பாய். கதைகள்

  இன்னும் கூட்டலாம்

  ReplyDelete
 30. 1)அனைத்து டெக்ஸ் புத்தகங்களும் பார்சல் வந்தவுடன் அதுதான் முதல் வேலையே
  2)புது டெக்ஸ் புத்தகங்கள் 12.மறுமதிப்புகள் குறைந்த பட்சம் 5
  3)yes
  4)சிஸ்கோ,ஆல்பா,டேங்கோ ,ரூபின்..யெஸ்
  5)புது வரவு ஓக்கே
  6)சோடா வேண்டும்
  7)தலை சுற்றும் கி.நா க்கள் வேண்டாமே
  8)4
  9)விங் கமாண்டர் ஜார்ஜ்
  10)மறு பதிப்புகள் இல்லாமலா நெவர்
  11)தினம் ஒரு கதை என்று சுவைத்து படிப்பேன்

  ReplyDelete
 31. 1.A

  2.இதழ்கள் 12

  கதைகள்- 16

  3.நோ

  4. ஆல்பா -a

  சிஸ்கோ- b

  டேங்கோ-a

  ரூபின்-a

  5.கதவை திறவுங்கள்.. காற்று வரட்டும்

  6.a

  7.b

  8.4

  9.விங் கமாண்டர் ஜார்ஜ்

  10. வணிக ரீதியாக பெரிய அளவில் இவை பேருதவி புரிகின்றன என நீங்கள் சொல்லவில்லை என்றால் வேண்டவே வேண்டாம்.புதிய கதைகள் பல காத்துக் கிடக்கின்றன.
  மறுபதிப்புகளை மனம் விரும்பவில்லை

  11.a

  12.a

  ReplyDelete
 32. 1. A
  2. 75ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் 75 இதழ்கள் கேட்கத்தான் ஆசை மற்ற உறுப்பினர்களுக்கும் இடம் வேண்டும் என்பதால் 24+1=25 போதும்
  3. Yes
  4.
  ஆல்ஃபா - b
  சிஸ்கோ - b
  டேங்கோ - a
  ரூபின் - a
  5. மூவர் கூட்டணி ( லக்கி, ப்ளுகோட், சிக் பில்)
  6. A
  7. A
  8. 4
  9. ஸ்பைடர் (விண்வெளி பிசாசு)
  10. 2023ல் முயற்சித்து பார்கலாம் sir
  (மறுபதிப்பில்லா ஆண்டு)
  11. A.
  12. C. இன்னும் கூட்டலாம் sir

  ReplyDelete
 33. அல்லாருக்கும் வணக்கமுங்கோ...

  ReplyDelete
 34. டெக்ஸ் வில்லர் வில்லர் எப்படி வேணாலும் போடலாம் எவ்வளவு வேணாலும் பண்ணலாம் எவ்வளவு பெருசு குண்டு புக்கு நிறைய வந்தா நல்லா இருக்கும் மாண்ட்ரேக் திரும்ப வந்தால் ரொம்ப நல்லாருக்கும் ரே புக் 1500 பக்கம் போட்டா ரொம்ப நல்லா இருக்கும் அதை கையில் தூக்கிட்டு போறது தனி கெத்து

  ஆம்னிபஸ் புக்கு mari1 போட்டா எப்படி இருக்கும் செமையா இருக்கும் தயவுசெய்து ஆம்னிபஸ் ஒன்னு போடுங்க

  ReplyDelete
 35. கேள்வி # 3 : இதுவுமே 'தல' சார்ந்த கேள்வியே ! கலரில் TEX க்ளாசிக்ஸ் வெளியாவது அடுத்தாண்டிலுமே தொடரலாமா ? அல்லது 2023 க்கு மாடர்ன் டிரெஸ் போட்ட இந்த அபிதகுஜாலாம்பாட்கள் வேண்டாமா?

  தொடரலாம் 👍

  ReplyDelete
 36. கேள்வி # 8 :

  மாதமொன்றுக்கு வாசிக்க எத்தனை புக்ஸ் இருந்தால் தேவலாமோ ?

  2 ? 3 ? 4 ?
  3

  ReplyDelete
 37. கேள்வி 2 : ஒரு நம்பராய் மட்டும் சொல்லுங்களேன் - 2023-க்கு எத்தனை டெக்ஸ் இதழ்கள் இருந்தால் நலமென்று ? (சைடு குறிப்பு :கவிஞர்களின் பதில்கள் தற்காலிகமாய் ஒரு சாக்குப்பைக்குள் போட்டு கட்டப்படும் ! )
  12

  ReplyDelete
 38. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 39. 1-A
  2-9
  3- Yes
  4-A, A ,A ,A
  5- 'கதவைத் திறங்கள்..
  காற்று வரட்டும்' சார்
  6 - B
  7- B
  8 -4 ++
  9- பழைய ஹீரோ ன்னா மந்திர ராணி கதைல சாம்சன் கொண்டு வாங்க சார்
  10- எனக்கும் மறுபதிப்பு இல்லாத புத்தம் புதிய கதைகளை வாசிக்க ஆசைதான் ஆனால் அது நடக்காதே சார்
  11- A
  12-A


  அவ்ளோதானா, ?!!
  ஏதோ பார்த்து பண்ணுங்க சார்

  ReplyDelete
 40. 1 அனைத்தையுமே படித்து முடித்து விட்டேன். புத்தகங்கள் வந்த உடன் படிப்பதால் வீட்டில் திட்டுகள் / குத்துக்கள்/ கொட்டுகள் கிடைக்கும். இரண்டு அல்லது மூன்று நாட்களில் இது முடிந்து விடும்.

  2 . 12 டெக்ஸ் இதழ்கள் போதும்

  3. டெக்ஸ் ஸின் வண்ண மறுபதிப்பு கள் வேண்டாம்.

  4ஆல்பா : 
  a )தொடரலாம் ! 


  சிஸ்கோ : 
  a நிச்சயமாய் ! 

  டேங்கோ : 
  a Oh yes !! 

  ரூபின் : 
  a தொடாமலே தெறிக்குதே ;நிச்சயமாய் வேணும் !! 

  5. கார்ட்டூன் சார்ந்த புது முகங்கள் வரட்டும்.

  6. SODA வேண்டும்.

  7. ஸ்டெர்ன் போன்ற மென் சோகங்கள் தொடரட்டும்,
  அண்டர்டேக்கர் போன்ற அதிரடி சோகங்களும் தொடரட்டும். "முடியா இரவு ". " கதை சொல்லும் கானகம்" சிப்பாயின் சுவடுகளும் தொடரட்டும்.

  8. மாதம் ஒன்றுக்கு வகைக்கு ஒன்றாக 4 புத்தகங்களும் விசேஷ மாதங்களுக்கு 5 அல்லது 6 புத்தகங்களும் போதும்.

  கேள்வி # 9 :
  எவர் வந்தாலும் அரவணைப்போம் .

  10. ஆமாம். மறுபதிப்பே வேண்டாம். மறுபதிப்பு வேண்டவே வேண்டாம்.

  : 11. குண்டோ அல்லது ஒல்லியோ உடனே படித்து முடித்து விடுவேன்.

  கேள்வி # 12 :

  கௌபாய் ஜானருக்கான தற்போதைய ஸ்லாட்ஸ் பற்றி :

  a ஓ.கே. இதுவே போதும்

  ReplyDelete
 41. கேள்வி # 9 :

  என்னுடைய பதில் - ஆர்ச்சியை கொண்டு வரலாம் என்பதே...

  ஒரு மறுபதிப்பு, ஒரு புதிய கதை

  மேக்சி சைஸ் & முழு வண்ணம் என்றால் இன்னும் அசத்தல்...

  ReplyDelete
 42. 1. டெக்ஸ் வந்தவுடன் படித்துவிடுவேன்.
  2. மாதம் ஒரு டெக்ஸ்
  3. டெக்ஸ் கிளாசிக்ஸ் தொடரலாம்.
  4. ஆல்பா தொடரலாம். சிஸ்கோ நிச்சயமாய். டேங்கோ Oh yes!!
  ரூபின் நிச்சயமாய்.
  5. புதுமுகங்கள் மற்றும் பழைய மினி லயன் காமிக்ஸ் கார்ட்டூன்கள்.
  6. Soda தேவை.
  7. இதுவே தொடரலாம்
  8. 4
  9. ஜான் மாஸ்டர்
  10. மறுபதிப்பு வேண்டும்
  11. ஏக் தம்மில் முடித்துவிடுவேன்
  12. சிங்கிள் ஷாட் கௌபாய் கதைகள் ராணி காமிக்ஸ் போல

  ReplyDelete
 43. கேள்வி # 1 : போன ஆண்டு + நடப்பாண்டில் இதுவரையிலும் - டெக்ஸ் சாகசங்களில் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ?
  ALL ..

  கேள்வி 2 : ஒரு நம்பராய் மட்டும் சொல்லுங்களேன் - 2023-க்கு எத்தனை டெக்ஸ் இதழ்கள் இருந்தால் நலமென்று ?

  12.. MONTHLY ONE ..

  கேள்வி # 3 : இதுவுமே 'தல' சார்ந்த கேள்வியே ! கலரில் TEX க்ளாசிக்ஸ் வெளியாவது அடுத்தாண்டிலுமே தொடரலாமா ?

  YES .. MY CHOICE நள்ளிரவு வேட்டை , ரத்த நகரம் , மந்திர மண்டலம் ..

  கேள்வி # 4

  ஆல்பா : பேச்சைக் குறைச்சால் தொடரலாம் !
  சிஸ்கோ : நிச்சயமாய் !
  டேங்கோ :Oh yes !!
  ரூபின் : YES ..

  கேள்வி # 5 : கார்ட்டூன்

  INCREASE SLOTS FOR KIT ORDIN ..

  6.SODA - YES

  கேள்வி # 7 : கமலும் வேணும் .. ரஜினியும் வேணும் .. BIT OF BOTH

  8.மாதமொன்றுக்கு வாசிக்க எத்தனை புக்ஸ் - 3 TO 4 DEPENDS ON SIZE ..

  9.So ஒரு பழைய பார்ட்டியை ; ஒரேயொரு பழைய பார்ட்டியை கைத்தாங்கலாய்க் கூட்டி வர நாங்கள் ரெடியெனில் - யாரை அழைத்து வரக் கோருவீர்களோ - NO ONE ..

  10.மறுபதிப்புகளே இல்லாததொரு ஆண்டு !! .. NO SIR .. NEED TEX RE PRINT AT LEAST ..

  11.குண்டூ புக்ஸ் ; மெகா புக்ஸ்".. WILL FINISH WITHIN THAT MONTH

  12.கௌபாய் ஜானருக்கான தற்போதைய ஸ்லாட்ஸ் பற்றி :
  ஓ.கே. இதுவே போதும் !

  ReplyDelete
 44. கேள்வி # 1 : போன ஆண்டு + நடப்பாண்டில் இதுவரையிலும் - டெக்ஸ் சாகசங்களில் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ?

  Answer :

  A .என்ன கேள்வி கேட்டுப்புட்டே சகோ ? அல்லாத்தியும் படிச்சுப் போட்டுப்புட்டோம்லெ,அப்பப்ப மறு வாசிப்பு வேற...

  கேள்வி 2 : ஒரு நம்பராய் மட்டும் சொல்லுங்களேன் - 2023-க்கு எத்தனை டெக்ஸ் இதழ்கள் இருந்தால் நலமென்று ?
  மாசம் 2 புக்,2023 ஆண்டிற்கு மொத்தம்-24

  கேள்வி # 3 : இதுவுமே 'தல' சார்ந்த கேள்வியே ! கலரில் TEX க்ளாசிக்ஸ் வெளியாவது அடுத்தாண்டிலுமே தொடரலாமா ? அல்லது 2023 க்கு மாடர்ன் டிரெஸ் போட்ட இந்த அபிதகுஜாலாம்பாட்கள் வேண்டாமா ?

  NO (ஒரு வருஷம் தள்ளிப் போடுவோம்)

  கேள்வி # 4 :

  நடப்பாண்டினில் அறிமுகம் கண்டுள்ள நிறைய புது நாயக / நாயகியருக்கு தொடரும் மாதங்களில் மறு வாய்ப்புகள் வெயிட்டிங் ! So அவர்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் விதங்களை பொறுத்தே அவர்களது எதிர்காலங்கள் தொடர்ந்திடும் ! இந்த நொடிதனில் கீழ்க்கண்ட புதியவர்களை நீங்கள் எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ?

  ஆல்பா :
  b )பேச்சைக் குறைச்சால் தொடரலாம்...
  சிஸ்கோ :
  a )நிச்சயமாய் தொடரலாம்...
  டேங்கோ :
  a Oh yes !! டபுள் யெஸ்...

  ரூபின் :
  a )தொடாமலே தெறிக்குதே ;நிச்சயமாய் வேணும்...

  கேள்வி # 5 : கார்ட்டூன் சார்ந்த கேள்வி இது :
  My question is : இந்த நாற்கூட்டணியே ஓ.கே.வா ? போதுமா ? அல்லது கொஞ்சம் புதுமுகங்கள் உள்நுழைந்தால் 'கதவைத் திற..காற்று வரட்டும்' என்று feel பண்ணுவீர்களா ?
  புதுசா முயற்சி எடுப்பதால்,பரீட்சார்த்த முயற்சிகள் ரிஸ்க் எனினும்,அதுவே எதிர்காலத்திற்கு நல்ல பலனை கொடுக்கும்...

  கேள்வி # 6 :
  a )SODA-வின் சேவை நமக்குத் தேவையா ?
  கண்டிப்பாக தேவை...

  கேள்வி # 7 :
  b ) 300 times மூக்கைச் சுற்றவல்ல கதைகளிலும் ஒரு சுகம் உண்டென்பீர்களா ?
  300 தடவை சுத்தி வந்தாலும் தப்பில்லைங்க சார்,300 பருத்தி வீரர்கள் மாதிரி செம கெத்தா கதைகள் வரணும்,ஸ்பெஷல் கி.நா விற்கு ஸ்பெஷல் வெல்கம்...
  கேள்வி # 8 :

  மாதமொன்றுக்கு வாசிக்க எத்தனை புக்ஸ் இருந்தால் தேவலாமோ ?
  கண்டிப்பாக குறைந்த பட்சம் 4 புக்காவது தேவை,2023 டெக்ஸிற்கான ஸ்பெஷல் ஆண்டு என்பதால் அதில் சமரசம் கூடாது...
  டெக்ஸ்-2 (1 க&வெ,1 கலர்),
  கி.நா-1,
  கார்ட்டூன்1,
  ரெகுலர் புக்-1, இந்த கணக்கு போட்டாவெ மாசம் 5 புக் வருது,அப்ப நீங்க 5 னு ஒரு ஆப்ஷன் கொடுத்திருக்கனும் சார்...
  5 இலட்சியம்,4 நிச்சயம்...

  கேள்வி # 9 :
  So ஒரு பழைய பார்ட்டியை ; ஒரேயொரு பழைய பார்ட்டியை கைத்தாங்கலாய்க் கூட்டி வர நாங்கள் ரெடியெனில் - யாரை அழைத்து வரக் கோருவீர்களோ ? உங்களின் நிகழ்காலத்து காமிக்ஸ் உலகினை ஜொலிக்கச் செய்யக்கூடிய அந்த ஒரேயொரு புராதனர் யாராக இருக்கக்கூடும் ?
  பதில் சொல்லத் தெரியலை அல்லது தோணலை...

  கேள்வி # 10 :
  மறுபதிப்புகளே இல்லாததொரு ஆண்டு !! இதனை ஒருக்கா முயற்சித்துப் பார்த்தாலென்ன ? என்று உங்களுக்குமே எப்போதேனும் தோன்றியுள்ளதா folks ? இது குறித்து உங்களின் சிந்தனைகள் ப்ளீஸ் ?
  கண்டிப்பாக 2023 இல் முயற்சிக்கலாம் சார்,டெக்ஸ் 75 ஆண்டு என்பதால் டெக்ஸ் கதைகள் உட்பட எல்லா வரிசை இதழ்களிலும் புதிய கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்...
  முந்தைய மறுபதிப்பு இதழ்களின் இருப்பும் குறைய கொஞ்சம் நேரம் கிடைக்கும்...

  கேள்வி # 11 :
  "குண்டூ புக்ஸ் ; மெகா புக்ஸ்" என்ற உங்களின் ஆர்வங்கள் நிஜமாகிடும் போது அவற்றை கொண்டாடும் கையோடு...
  a) ஏக் தம்மில் வாசித்துத் தள்ளி விடுவீர்களா ?
  முடிந்த வரைக்கும் ஏக் தம்,நேரம் இல்லைன்னாலும் கொஞ்சம் இடைவெளி விட்டாவது கண்டிப்பா படிச்சுடுவேன்...

  கேள்வி # 12 :
  கௌபாய் ஜானருக்கான தற்போதைய ஸ்லாட்ஸ் பற்றி :
  a )ஓ.கே. இதுவே போதும்...

  ReplyDelete
 45. 1.என்பது சதவீதம்


  2.பெரிய சாக்குப் பைல கட்டுமளவு.....இளம் டெக்ஸ் 12
  சாதா டெக்ஸ் ...12 குண்டு சிறப்பிதழ்கள் 3


  3.போதும் சார்....பிறகு பாத்துக்கலாம்....அந்த இடங்களில் புதிய அதிரடிக்கதைகள்....நண்பர் கோரியபடி bomb கதை விடலாம்....நீங்களும் சிறப்பான கதை என கூறினீர்களே....டெக்ஸ் ஸ்பெசல் தான் விற்பனையில் புத்தக விழாக்களை கலக்குமெனில் புதிய டெக்ஸ் கதைகளை பளபளப்பான ஹார்டு அட்டைகள் ஐ தரலாமே...

  4.ஆல்ஃபா சூப்பர்.
  சிஸ்கோ இவர் எனக்கு எதிரியாய் படுகிறார் வில்லத்தனமான செயல்களால்....தொடரட்டும் பார்ப்போம்
  டேங்கோ இதென்ன கேள்வி ...மொத்தமா ஒரே தொகுப்பாக போட்டுத் தாக்க நீங்க தயாரா...என்னா காட்சி அமைப்புக...என்னா ஓவியங்க...என்னா கலருங்க

  ReplyDelete
 46. ரூபின் இன்னும் படிக்கல..படித்த நண்பர்கள் அனைவரும் சூப்பர்ஸ்டார் தொடரலாம்....

  5.புதுசால்லாம் வேணாம் ஃஸ்மர்ஃப்க ஓரளவு வித்து புடிச்சிருக்கா மீண்டு வரட்டுமே....யகாரி...ஆஸ்ட்ரிக்ஸுக்கு வாய்ப்பு கிடைச்சா ப்ரீமிமியம் விலைல தரலாமே...

  6...கலைத்தாகம் தீர்க்கும் வண்ண சோடா இல்லாமலா

  7.கிநான்னாலும் அதிரடிதா சூப்பர்னாலுமே ...அழுகாச்சி காவியங்களும் வரட்டூமே

  8. மிகலாம் நாலுக்கு குறைய வேண்டாம்...இம்மாதம் இரண்டுதான் என்பது சப்புன்னு இருக்கு

  ReplyDelete
 47. கேள்வி # 1 : போன ஆண்டு + நடப்பாண்டில் இதுவரையிலும் - டெக்ஸ் சாகசங்களில் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ?


  ₹###

  அனைத்து இதழ்களையும் சில சமயம் போரடித்தால் மீண்டும் மறுவாசிப்பாகவும்..

  ReplyDelete
 48. ஒரு நம்பராய் மட்டும் சொல்லுங்களேன் - 2023-க்கு எத்தனை டெக்ஸ் இதழ்கள் இருந்தால் நலமென்று ?

  #####


  15 +

  ReplyDelete
 49. இதுவுமே 'தல' சார்ந்த கேள்வியே ! கலரில் TEX க்ளாசிக்ஸ் வெளியாவது அடுத்தாண்டிலுமே தொடரலாமா ? அல்லது 2023 க்கு மாடர்ன் டிரெஸ் போட்ட இந்த அபிதகுஜாலாம்பாட்கள் வேண்டாமா ?


  தொடரலாம்...

  ReplyDelete
 50. ரூபின் டபுள் ஓகே

  மற்றவர்கள் சாகஸத்தை பொறுத்து

  ReplyDelete
 51. எஞ்சியுள்ள லக்கி லூக் ; சிக் பில் ; ப்ளூகோட் பட்டாளம் ; மேக் & ஜாக் கூட்டணியில் வண்டி ஓடி வருகிறது !

  My question is : இந்த நாற்கூட்டணியே ஓ.கே.வா ? போதுமா ? அல்லது கொஞ்சம் புதுமுகங்கள் உள்நுழைந்தால் 'கதவைத் திற..காற்று வரட்டும்' என்று feel பண்ணுவீர்களா ?


  நான்கு பேருமே ஓகே சார் அதே சமயம் சிக்பில்லுக்கு இன்னும் சில ஸ்லாட்கள் கூடுதலாக்கலாம்

  ReplyDelete
 52. SODA-வின் சேவை நமக்குத் தேவையா ?

  b அல்லது வேறு ஆணிகள் பிடுங்க முயற்சித்தல் நலமென்பீர்களா ?


  சோடா ஓகே

  ReplyDelete
 53. 9. அலிபாபா முஸ்தபா
  10.மறுபதிப்பில்லா முழுதும் புதிய நாயகர் கதைகள

  11.ஏ+பி..... நேரமின்மை சார்....படிக்க ஆரம்பிச்சா கரைந்து விடூவது நிச்சயம்..வேற லெவல் உலகம் சார்....என்பதுகளின் மத்தியில்னு வைத்துக் கொள்ளுங்களேன்
  12.அதிரடி சரவெடின்னாலும்..பிரிவோம் சந்திப்போம்னாலும் கசக்கவா செய்யும்....போட்டுத் தாக்கவும்....லோன் ரைடர்....சாகர் வரட்டும்

  ReplyDelete
 54. கமல் மெரி பேசிடும் அந்த கி.நா.க்கள் தற்காலிகமாய் பின்சென்றுள்ளன ! ஸ்டெர்ன் ; அண்டர்டேக்கர் போன்ற கமர்ஷியல் கி.நா.க்களே தற்சமயம் நடைமுறையில் உள்ளன !

  a இதுவே தொடரலாமா ?

  b அல்லது 300 times மூக்கைச் சுற்றவல்ல கதைகளிலும் ஒரு சுகம் உண்டென்பீர்களா ?


  ####


  இதுவே தொடரலாம்...

  ReplyDelete
 55. குண்டூ புக்ஸ் ; மெகா புக்ஸ்" என்ற உங்களின் ஆர்வங்கள் நிஜமாகிடும் போது அவற்றை கொண்டாடும் கையோடு

  a ஏக் தம்மில் வாசித்துத் தள்ளி விடுவேன்

  ReplyDelete
 56. கேள்வி # 1 : போன ஆண்டு + நடப்பாண்டில் இதுவரையிலும் - டெக்ஸ் சாகசங்களில் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ?

  Answer :

  A .என்ன கேள்வி கேட்டுப்புட்டே சகோ ? அல்லாத்தியும் படிச்சுப் போட்டுப்புட்டோம்லெ !!

  டெக்ஸ் & கார்ட்டூன் மட்டும் எப்போதும் ரொம்ப நாட்கள் தள்ளிப்போட்டு பழக்கமில்லை சார்!
  பனிக்கடல் படலம் முடிச்சாச்சி.. ரத்த வெறியர்கள் மட்டும் பாக்கி.!

  Ipl முடிஞ்ச பிறகு பாக்கி வைத்திருக்கும் இதர கதைகள்...!

  ReplyDelete
 57. 1)B.
  2)6.
  3)YES/NO.
  4)ஆல்பா-B.
  சிஸ்கோ- A.
  டேங்கோ- OH YES.
  ரூபின்- A.
  5)இவர்கள் தொடரட்டும். புதுமுகங்களும் வரட்டுமே.
  6)B
  7) A.
  8) 3.
  9) லாரன்ஸ் & டேவிட்.
  10) கண்டிப்பாக சார். மறுபதிப்பு என்பதைவிட,மறுமறுபதிப்பு என்பதே சரி.
  மறுபதிப்புக்கு பதிலாக,அதே ஹீரோவின் புதிய கதைகள் தரலாம்.23ல் முயற்சித்து பார்ப்போமே சார்.
  11)B.(ஆசை தீர பார்த்து விட்டு பின்பு படிக்கலாமே!. அன்றும் இன்றும்).
  12)C.

  ஹா...அதுக்குள்ள முடிந்துவிட்டாதா!? கேள்விகள்.
  நல்ல சுவாரசியமா இருந்தது.

  ஏன்? இந்த திடீர் கேள்விகள் என புரியவில்லை சார். ஆனா எதாவது இருக்கும்.

  ReplyDelete
 58. டெக்ஸ் இப்போதுதொடர்ந்து படிக்க கூடிய( promising) ஒரே hero, பழைய ஜெஸ்லாங்,கறுப்புகிழவி கதைகள்,சிறுசிறு திகில் கதைகள் ,டின்டின்,ஆஸ்ட்ரிக்ஸ் முயற்சிக்கலாம். ஷெர்லக் வைத்து கற்பனை செய்யப்பட்ட புதியசீரியஸ்கதைகளை முயற்சிக்கலாம்

  ReplyDelete
 59. கேள்வி 2 : ஒரு நம்பராய் மட்டும் சொல்லுங்களேன் - 2023-க்கு எத்தனை டெக்ஸ் இதழ்கள் இருந்தால் நலமென்று ?

  ஆசை 25
  குறைந்தபட்சம் 16

  கேள்வி # 3 : இதுவுமே 'தல' சார்ந்த கேள்வியே ! கலரில் TEX க்ளாசிக்ஸ் வெளியாவது அடுத்தாண்டிலுமே தொடரலாமா ? அல்லது 2023 க்கு மாடர்ன் டிரெஸ் போட்ட இந்த அபிதகுஜாலாம்பாட்கள் வேண்டாமா ?

  கலரில் டெக்ஸ் கிளாசிசச் லெளியாவது கட்டாயம் தொடரவேண்டும்..!

  YESSSSSSSSS

  ReplyDelete
 60. கேள்வி # 4 :

  நடப்பாண்டினில் அறிமுகம் கண்டுள்ள நிறைய புது நாயக / நாயகியருக்கு தொடரும் மாதங்களில் மறு வாய்ப்புகள் வெயிட்டிங் ! So அவர்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் விதங்களை பொறுத்தே அவர்களது எதிர்காலங்கள் தொடர்ந்திடும் ! இந்த நொடிதனில் கீழ்க்கண்ட புதியவர்களை நீங்கள் எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ?

  ஆல்பா :

  இன்னும் படிக்கவில்லை..

  சிஸ்கோ :

  இன்னும் படிக்கவில்லை..

  டேங்கோ :

  இன்னும் படிக்கவில்லை..

  ரூபின் :

  a தொடாமலே தெறிக்குதே ;நிச்சயமாய் வேணும் !!

  நல்லா இருக்கு.. தாரளமாக தொடரலாம்.!

  ReplyDelete
 61. Answer 1 :
  அனைத்தும்.. சில கதைகள் இரண்டு அல்லது மூன்று முறை

  Answer 2 :
  12 / மாதம் ஒரு முறை

  Answer # 3 : YES

  Answer # 4 :
  ஆல்பா :
  a )தொடரலாம் !
  சிஸ்கோ :
  a நிச்சயமாய் !
  டேங்கோ :
  a Oh yes !!
  ரூபின் :
  a தொடாமலே தெறிக்குதே ;நிச்சயமாய் வேணும் !!

  Answer 5 :
  'கதவைத் திற..காற்று வரட்டும்'

  Answer # 6 :
  தேவை

  Answer # 7 :
  b 300 times மூக்கைச் சுற்றவல்ல கதைகளிலும் ஒரு சுகம் உண்டு

  Answer # 8 :
  3 or 4

  Answer # 9 :
  நாயகர்கள் மீது எனக்கு அக்கறையில்லை சார்... நல்ல கதைகள் எதுவாக இருந்தாலும் ஓகே

  Answer # 10 :
  நல்ல கதைகளை நான் நிறைய இழந்து விட்டேன், மீண்டும் படிக்க வாய்ப்பு கொடுப்பது அந்த மறுபதிப்பு தான். ஆகவே சில கிளாசிக் மறுபதிப்புகள் கட்டாயம் தேவை

  Answer # 11 :
  ஒரேயடியாக படிப்பது சிரமம் தான் ஆனால் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படித்து விடுவது உறுதி... இந்த லாஜிக் டெக்ஸ் புத்தகங்களுக்கு கிடையாது. ஏக் தம்மில் முடித்து விடுவேன்

  Answer # 12 :
  c இன்னும் கூட்டலாம் !

  ReplyDelete
 62. கேள்வி # 5 : கார்ட்டூன் சார்ந்த கேள்வி இது :

  க்ளிப்டன் - VRS தரப்பட்டு கேரட் மீசைக்காரர் புறப்பட்டாச்சு !

  ஹெர்லக் ஷோம்ஸ் - கிட்டத்தட்ட கதைகள் காலி !

  So எஞ்சியுள்ள லக்கி லூக் ; சிக் பில் ; ப்ளூகோட் பட்டாளம் ; மேக் & ஜாக் கூட்டணியில் வண்டி ஓடி வருகிறது !

  My question is : இந்த நாற்கூட்டணியே ஓ.கே.வா ? போதுமா ? அல்லது கொஞ்சம் புதுமுகங்கள் உள்நுழைந்தால் 'கதவைத் திற..காற்று வரட்டும்' என்று feel பண்ணுவீர்களா ?

  கதவை அகலத் திறக்கவும்.. பூந்தென்றல் தீந்தென்றல் பைந்தென்றல் அனைத்தும் கலந்து சுகந்தமாகி மேனியை சிலீரடிக்கட்டும்.!.!

  கிட் ஆர்டினுக்கு ஆண்டிற்கொரு வாய்ப்பு கூடுதலாக வழங்கலாம்.!

  கேள்வி # 6 :

  இறை ஊழியம் பண்ண வேண்டிய அந்த டேவிட் சாலமோன் NYPD-ல் டாணாக்காரராய்ச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார் !

  a SODA-வின் சேவை நமக்குத் தேவையா ?

  b அல்லது வேறு ஆணிகள் பிடுங்க முயற்சித்தல் நலமென்பீர்களா ?

  அதுவுந்தே.. இதுவுந்தே..

  ReplyDelete
 63. கேள்வி # 7 :

  கமல் மெரி பேசிடும் அந்த கி.நா.க்கள் தற்காலிகமாய் பின்சென்றுள்ளன ! ஸ்டெர்ன் ; அண்டர்டேக்கர் போன்ற கமர்ஷியல் கி.நா.க்களே தற்சமயம் நடைமுறையில் உள்ளன !

  நல்லாத்தானே போயிட்டுருக்கு...

  கமல் மேரி பேசுற கி.நாக்கள் வந்தால் நல்லா இருக்காதுன்னு சொல்லலை.. வராம இருந்தா நல்லா இருக்குமுன்னுதான் சொல்றோம்.!

  ReplyDelete
 64. கேள்வி # 8 :

  மாதமொன்றுக்கு வாசிக்க எத்தனை புக்ஸ் இருந்தால் தேவலாமோ ?

  3 அ. 4

  குண்டு குண்டா இருந்தா மூணு.. ஸ்லிம்மா இருந்தா 4

  கேள்வி # 9 :

  என்னதான் நாங்கள் உருண்டு புரண்டு புதியவர்களைக் கண்ணில் காட்டி வந்தாலுமே, "ஆனாலும் அந்தக்காலத்து தியாகராஜ பாகவதர் போல வருமா ? !" என்று ஆங்காங்கே ஒரு அணியினர் குரல்கொடுப்பது ஒரு தொடர்கதையே !


  So ஒரு பழைய பார்ட்டியை ; ஒரேயொரு பழைய பார்ட்டியை கைத்தாங்கலாய்க் கூட்டி வர நாங்கள் ரெடியெனில் - யாரை அழைத்து வரக் கோருவீர்களோ ? உங்களின் நிகழ்காலத்து காமிக்ஸ் உலகினை ஜொலிக்கச் செய்யக்கூடிய அந்த ஒரேயொரு புராதனர் யாராக இருக்கக்கூடும் ?

  மைக் எஸ் டோனாவன் என்கிற லெப்டினென்ட் ப்ளூபெர்ரி என்கிற ஷி நா பா என்கிற கேப்டன் டைகர் என்கிற குழலூதுவோன்.!

  ReplyDelete
  Replies
  1. அடடே blueberry ஆமா ஆமா

   Delete
  2. கேப்டன் டைகர்.. ... புராதனர்????

   Delete
  3. ///கேப்டன் டைகர்.. ... புராதனர்????///

   வேறு எந்த பழைய நாயகரும் டைகர் அளவுக்கு கவர்ந்ததில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும்... உண்மையில் டைகர் கதைகளை பார்த்து மூன்று மாமாங்கங்கள் ஆன ஒரு ஃபீலிங்..!

   Delete
  4. //உண்மையில் டைகர் கதைகளை பார்த்து மூன்று மாமாங்கங்கள் ஆன ஒரு ஃபீலிங்..!//


   இளம் டைகர் தொகுப்பினை நம்ம KOK வின் வேண்டுகோளுக்கு இணங்கியாவது கொண்டு வரலாங்க சார். 4 ஆல்பத் தொகுப்பாக...

   Delete
 65. கேள்வி # 10 :

  மறுபதிப்புகளே இல்லாததொரு ஆண்டு !! இதனை ஒருக்கா முயற்சித்துப் பார்த்தாலென்ன ? என்று உங்களுக்குமே எப்போதேனும் தோன்றியுள்ளதா folks ? இது குறித்து உங்களின் சிந்தனைகள் ப்ளீஸ் ?

  சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு கோரிக்கை வைத்தேன்.. இங்கும்.. நேரிலும்.. நினைவுள்ளதா சார்.?

  அதாவது ஒரு ஆண்டு முழுக்க முழுக்க இதுவரை நமது இதழ்கள் எதிலும் வந்திராத முற்றிலும் புத்தம்புதிய நாயகநாயகியரின் கதைகளை மட்டும் முயற்சித்தாலென்ன சார்..? என்று கேட்டிருந்தேன்..! டெக்ஸ்.. லக்கி.. என்று யாருமே இல்லாத புத்தம்புதிய அட்டவணை..! எப்படி இருக்கும் என்று கேட்டிருந்தேன்..!
  நடைமுறைக்கு ஒத்துவராது தம்புடுன்னு சொல்லி ஒதுக்கி வெச்சிட்டிங்க சார்..!
  அப்படி ஒரு வித்தியாசமான ஆசை கொண்டிருந்த எனக்கு மறுபதிப்பில்லா ஆண்டு என்னும் முயற்சி கசக்குமா என்ன.?

  நான் வரவேற்கிறேன் சார்.!!

  ReplyDelete
 66. கேள்வி # 1 : போன ஆண்டு + நடப்பாண்டில் இதுவரையிலும் - டெக்ஸ் சாகசங்களில் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ?
  All the books.
  கேள்வி 2 : ஒரு நம்பராய் மட்டும் சொல்லுங்களேன் - 2023-க்கு எத்தனை டெக்ஸ் இதழ்கள் இருந்தால் நலமென்று ?
  Monthly one double album.
  கேள்வி # 3 : இதுவுமே 'தல' சார்ந்த கேள்வியே ! கலரில் TEX க்ளாசிக்ஸ் வெளியாவது அடுத்தாண்டிலுமே தொடரலாமா ? அல்லது 2023 க்கு மாடர்ன் டிரெஸ் போட்ட இந்த அபிதகுஜாலாம்பாட்கள் வேண்டாமா ?
  Yes. May be once or twice in the year.
  கேள்வி # 4 :

  நடப்பாண்டினில் அறிமுகம் கண்டுள்ள நிறைய புது நாயக / நாயகியருக்கு தொடரும் மாதங்களில் மறு வாய்ப்புகள் வெயிட்டிங் ! So அவர்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் விதங்களை பொறுத்தே அவர்களது எதிர்காலங்கள் தொடர்ந்திடும் ! இந்த நொடிதனில் கீழ்க்கண்ட புதியவர்களை நீங்கள் எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ?

  ஆல்பா :
  b )பேச்சைக் குறைச்சால் தொடரலாம் !


  சிஸ்கோ :

  b பார்ப்போமே !

  டேங்கோ :

  b Oh no !!

  ரூபின் :

  a தொடாமலே தெறிக்குதே ;நிச்சயமாய் வேணும் !!
  கேள்வி # 5 : கார்ட்டூன் சார்ந்த கேள்வி
  Please try new series.

  கேள்வி # 6 :

  a SODA-வின் சேவை நமக்குத் தேவை.

  கேள்வி # 7 :
  a இதுவே தொடரலாம்.
  கேள்வி # 8 :

  மாதமொன்றுக்கு வாசிக்க எத்தனை புக்ஸ் இருந்தால் தேவலாமோ ?
  4

  கேள்வி # 9 :

  கேள்வி # 9 :

  கேள்வி # 9 :

  So ஒரு பழைய பார்ட்டியை ; ஒரேயொரு பழைய பார்ட்டியை கைத்தாங்கலாய்க் கூட்டி வர நாங்கள் ரெடியெனில் - யாரை அழைத்து வரக் கோருவீர்களோ ? உங்களின் நிகழ்காலத்து காமிக்ஸ் உலகினை ஜொலிக்கச் செய்யக்கூடிய அந்த ஒரேயொரு புராதனர் யாராக இருக்கக்கூடும் ?
  காரிகன்

  கேள்வி # 10 :

  மறுபதிப்புகளே இல்லாததொரு ஆண்டு !! இதனை ஒருக்கா முயற்சித்துப் பார்த்தாலென்ன ? என்று உங்களுக்குமே எப்போதேனும் தோன்றியுள்ளதா folks ? இது குறித்து உங்களின் சிந்தனைகள் ப்ளீஸ் ?

  This is a commercial decision to be taken by the editor.

  கேள்வி # 11 :

  "குண்டூ புக்ஸ் ; மெகா புக்ஸ்" என்ற உங்களின் ஆர்வங்கள் நிஜமாகிடும் போது அவற்றை கொண்டாடும் கையோடு

  a ஏக் தம்மில் வாசித்துத் தள்ளி விடுவேன்

  கேள்வி # 12 :

  கௌபாய் ஜானருக்கான தற்போதைய ஸ்லாட்ஸ் பற்றி :

  c இன்னும் கூட்டலாம் !

  ReplyDelete
 67. கேள்வி # 8 :

  மாதமொன்றுக்கு வாசிக்க எத்தனை புக்ஸ் இருந்தால் தேவலாமோ ?

  4

  ReplyDelete
 68. கேள்வி # 9 :

  ஒரு பழைய பார்ட்டியை ; ஒரேயொரு பழைய பார்ட்டியை கைத்தாங்கலாய்க் கூட்டி வர நாங்கள் ரெடியெனில் - யாரை அழைத்து வரக் கோருவீர்களோ ? உங்களின் நிகழ்காலத்து காமிக்ஸ் உலகினை ஜொலிக்கச் செய்யக்கூடிய அந்த ஒரேயொரு புராதனர் யாராக இருக்கக்கூடும் ?

  இரட்டை வேட்டையர்கள்
  ஜார்ஜ் & ட்ரேக்

  ReplyDelete
 69. கேள்வி # 10 :

  மறுபதிப்புகளே இல்லாததொரு ஆண்டு !! இதனை ஒருக்கா முயற்சித்துப் பார்த்தாலென்ன ? என்று உங்களுக்குமே எப்போதேனும் தோன்றியுள்ளதா folks ? இது குறித்து உங்களின் சிந்தனைகள் ப்ளீஸ் ?

  மறுபதிப்பு வேண்டும்

  ReplyDelete

 70. கேள்வி # 11 :

  "குண்டூ புக்ஸ் ; மெகா புக்ஸ்" என்ற உங்களின் ஆர்வங்கள் நிஜமாகிடும் போது அவற்றை கொண்டாடும் கையோடு

  ஏக் தம்மில் வாசித்து விடுவேன்

  ReplyDelete
 71. 1. அனைத்து கதைகளையும் படித்து விடுவேன்

  2. மாதம் 1 வருடம் 12 slots for tex

  3. கலர் டெக்ஸ் மறுபதிப்பாக வேண்டாம். அந்த இடத்தில் புதிய டெக்ஸ் கலரில் வந்தால் நலம்

  4. ஆல்பா, சிஸ்கோ, டேங்கோ, ரூபின் - yes for all

  5. கார்டூன் வறட்சியை போக்க புதியவர்களை முயற்சிக்கலாம்

  6. சோடா - OK

  7. கமல் பாணி கிராபிக் நாவல்கள் கண்டிப்பாக வேண்டும்

  8. மாதம் 4 புக் அவசியம். அதற்கு குறைவாக வேண்டாம்

  9. Oldies return என்றால் எனது சாய்ஸ் "இரும்புக்கை நார்மன்"

  10. மறுபதிப்புகள் இல்லாத ஆண்டு - தயவுசெய்து 2023ல் முயற்சித்து பாருங்கள். முடியல. ரெகுலர் இதழ்களுக்கு சமமாக போட்டு தாக்கி கொண்டிருக்கிறீர்கள்.

  11. ஒரே கதையாக இருந்தால் முயற்சிப்பேன், தனி தனி கதைகளாக இருப்பின் இடைவெளி விட்டு தான் படிப்பேன். ஆனால் முடித்து விடுவேன்.

  12. கௌபாய் ஜானரில் சுவாரஸ்யமான கதைகள் தென்பட்டால் இன்னும் கூட்டலாம்

  ReplyDelete
 72. 1. Tex - தல தானே முதல் சாய்ஸ்..தல இல்லாத மாதங்களில் தானே எதை படிப்பதுனு இங்கி பிங்கி பாங்கி போடணும்...சோ பதில் A....

  2. மாசம் பூரா டெக்ஸ் வரணுங்கோ...அது சந்தாவோ, க்ளாசிக்கோ, கலரோ கருப்போ..எதுனாலும் சரிங்கோ சார்!

  3. Tex Classics...வேற லெவலு வேற லெவலு தொடரட்டும் சாமி....💞

  ReplyDelete
  Replies
  1. 4.க்கு...ஆல்பா : பேஸாக தொடரலாம் ! (அஸ்ஸியா டொன்கோவா மாதிரி ஆங்காங்க உலாவும்வரை)

   சிஸ்கோ : ஓகே!

   டேங்கோ : டபுள் எஸ்.

   ரூபின் : ஆஹா...மாடஸ்திக்கு மாற்றே கிடைச்சி போச்சுல்ல.

   Delete
  2. 5.கார்டூன்கள் ட்ரெஸ் பஸ்டர்... 4வெரைட்டி நிச்சயமாக போதாது சார்... 5&6னு இன்னும் இருவர் செட் ஆகும் வரை கதவை அகலத்திறக்கலாம்...அவ்வ்வப்பது பல்பு வாங்கும் கேரட் மீசைகளையும், பொடுசுகளையும் பார்த்தா வேலைக்காகாது...

   Delete
  3. 6.பிரியாணி ஜீரணிக்க கோலி சோடா! காமிக்ஸ் ருசிக்க சாலமன் சோடா!

   Delete
  4. 7.தற்போதைய சூழலில் ரெகுலராக வரும் இருவரே போதும் சார்!

   2024ல ஜம்போ சீசன்5ல "கி.நா.ஸ் பேக் வித் பேங்"

   8.மாதம் 4புக்கு; வாரம்1புதிய காமிக்ஸ் வேணும் சார்...4வந்தாலும் மாதம் முழுதும் வைத்து வாசிக்கும் கோஷ்டியாக்கும் நான்...

   Delete
  5. 9.சார்ஜண்ட் தாமஸ்! எமனுக்கு எமன்- மறுபதிப்பாக கொடுத்தாலும் ஓகேதான் சார்... வாய்ப்பில்லைனா இரட்டை வேட்டையர்! இதற்கும் வாய்பில்லைனா டைகர்-தங்க கல்லறை மறுமறுபதிப்பு- பழைய வசனம் பாடல்கள் உடன்...

   Delete
  6. 10. ரெண்டுமூணு வருசத்துக்கு முன்பே இதை கேட்டு இருந்தோம் சார்.... ஆனா லயன் லைப்ரரி அடிக்கும் ஹிட்டை பார்த்தபின்பு அந்த ஜானர் அவசியம்னு தோணுது..சோ, டெக்ஸ்,லக்கி, சு.வி.னு அது தொடரட்டும்...

   Delete
  7. 11. குண்டு புக்ஸ் மெகா புக்ஸ் ஸ்பெசல் புக்ஸ் னு நினைக்கும்போதே ஜிவ்வுனு இருக்கும் சார்.... சந்தாவில் எதிர் பார்க்கும் மிக முக்கிய ஐட்டமே குண்டு புக்ஸ்தான்...

   லயன் தீபாவளி மலர்கள்; கோடைமலர்கள்; மின்னும் மரணம் தொகுப்பு, இ.ப. தொகுப்புனு பார்க்கும் போது மனசு றெக்கை கட்டுது...குண்டுபுக் ரொம்ப நல்லது... டெக்ஸ் 75க்கு நல்லா தடிதடியான குண்டுபுக் வரட்டும் சார்...

   அப்படியே அந்த கார்சனின் கடந்த காலம் -ஒரே குண்டு புக்காக, ஹார்டு பவுண்டுல, பழைய வசனம் பாடல்கள் மாறாமல் அடுத்த ஆண்டுல ஒரு ஸ்லாட் போட்டி புட்டீங்கனா டெக்ஸ் 75களை கட்டும்...

   Delete
  8. 12. நம்ம காமிக்ஸ் மந்திரம் இளமை-புதுமை-இனிமை-- தான் சார்.... புதியனவை தேடும் முயற்சியில் தான் லார்கோ, ஷெல்டன், தோர்கல் ஏஜிர்ஸன், ஜேசன் ப்ரைஸ், பெளன்சர், டியூராங்கோ எல்லாமே கிட்டியது...

   பராகுடா, பிஸ்டலுக்குப் பிரியாவிடை, தேவரகசியம் தேடலுக்கல்ல....என்ற முத்துக்களும் கிடந்தது.

   கிரீன்மேனர்களும், சிப்பாயின் சுவடுகளும், தோழனின் கதையும், நிஜங்களின் நிசப்தங்களும்...இன்னபிறவும் கிடைத்தன... புதியனவற்றுக்கான தேடல் எப்போதும் போல தொடரட்டும் சார்...

   இதற்கான முயற்சியில் கெளபாய் தடங்களின் எண்ணிக்கைய கட்டுக்குள் வைத்தாலும் சரியே! அல்லது குறைத்தாலும் சம்மதமே!!!!

   ஆண்ட்ரெர்களை நித்தமும் சந்திப்பதில்லையே... அத்திபோல எதிர்ப்படும்போது கைகுலுக்க தயங்குவானேன்...

   Delete
  9. This comment has been removed by the author.

   Delete
  10. //புதியனவற்றுக்கான தேடல் எப்போதும் போல தொடரட்டும் சார்...//

   ஆமாங்க சார்...
   +1

   Delete
  11. Salem tex ji

   Please count the numbers for question 2 and 3 - total how much, how many have said 12+ for question 2 and YES for question 3 - TEX Classics in color

   Delete
  12. ராக் ஜி@ செய்துடலாம் ஜி. நாளை காலை,.....!!

   Delete
 73. 1. A

  2. 6000 pages.... Atleast

  3.. No..... Yes...

  4. a. a. aa.a

  5 New cartoon ides

  6 Soda needs more tests

  7 b

  8. Atleast 5 to 6../2 big

  9. No Oldies

  10 No Reprints

  11 a

  12. c

  ReplyDelete
 74. 1) D- இலங்கையில் கிடைத்த டெக்ஸ் பெரும்பாலும் வாங்கி விட்டேன்.

  2) 8-10

  3) Yes
  ( தயவு செய்து ரூ 10 விலை மாடர்ன் காலத்தில் வந்த ஓநாய் வேட்டை 😤 போன்ற கதைகள் கிளாஸிக்ஸ் தொகுப்பில் வேண்டாம்🙅‍♂️. அதற்கு முன் வந்த உண்மையான கிளாசிக் டெக்ஸ் கதைகள் மட்டுமே வேண்டும்)

  4) நோ கமெண்ட்ஸ்

  5) லக்கி லூக், சிக் பில், ப்ளூகோட் போல் நல்ல கார்டூன் தொடர்கள் கிடைத்தால் போடுங்கள்

  6) நோ கமெண்ட்ஸ்

  7) 2ம் வேண்டாம்🙅‍♂️. கென்யா, அல்டப்பிரான் போன்ற Sci-Fic களை வெளியிடுங்களேன் சார்

  8) 2 😌

  9) வேதாளர்? (வருடம் குறைந்தது 5 சாகசம்?)

  10) -

  11) முதலில் b அப்புறம் a

  12) a

  ReplyDelete
 75. Not a Tex fan. So no comments on that.

  கேள்வி # 4 :
  ஆல்பா :
  b )பேச்சைக் குறைச்சால் தொடரலாம் !

  சிஸ்கோ :
  b பார்ப்போமே !

  டேங்கோ :
  a Oh yes !!

  ரூபின் :
  a தொடாமலே தெறிக்குதே ;நிச்சயமாய் வேணும் !!

  கேள்வி # 5 :
  Yes to புதுமுகங்கள்

  கேள்வி # 6 :
  David Solomon. Big Yes to proceed.

  கேள்வி # 7 :
  a இதுவே தொடரலாம்

  கேள்வி # 8 :
  3 books

  கேள்வி # 9 : BIG No to oldies

  கேள்வி # 10 :
  I have not read the old books. The reprints look like new for me. Problem is, some stories sound too old like Bagavathar. So, if reprinting, avoid stories like that.

  கேள்வி # 11 :
  a. ஏக் தம்

  கேள்வி # 12 :
  a ஓ.கே. இதுவே போதும் !

  ReplyDelete
 76. ரிப்கிர்பிபுக்கோட போஸ்டர் இல்லையே சார்

  ReplyDelete
 77. This year 2023 is special for tex of 75 years anniversary..so we celebrate the monument with tex @ each month

  May be all are colour
  All are double album
  Some are trible album
  One is mafesto
  One is very lengthy album already told
  Then tex tex tex tex

  ReplyDelete
 78. 1) A
  2) 15+
  3) Yes
  4) Alpha, Tango, Rubin -- Yes, Cisco -- No
  5) Welcome to new comic heroes. No to Mac & Jack and Blue coats.
  6) Yes to Soda
  7) b
  8) 4
  9) Vedalar & Karuppu kilavi
  10) No
  11) a
  12) c

  ReplyDelete
 79. 1. டெக்ஸ் - எல்லாமே படித்துவிட்டேன். இப்போதுவரை 'டெக்ஸ் ஓவர் டோஸ்' என்று துளியும் தோன்றவில்லை!

  2. 2023க்கு டெக்ஸ் குறைந்தது 12. அதில் குண்டுகள் 4

  3. டெக்ஸ் கிளாசிக்ஸ் - தொடரலாம்

  4. ஆல்பா, சிஸ்கோ, டேங்கோ - சூழ்நிலை காரணமாக இன்னும் படிக்கவில்லை! இரு தினங்களுக்கு முன் ரூபின் கதையைப் படித்தேன் - அட்டகாசமான, ரொம்பவே ஸ்டைலான கதை நகர்வு!

  5. கதவைத் திறங்கள்.. கார்ட்டூன் வரட்டும். நிறைய்ய்ய வரட்டும்!

  6. SODA - அவசியம் வேண்டும்! (இந்தக் கேள்வியை கேட்கவேண்டியதன் அவசியம் என்னவோ எடிட்டர் சார்?!!)

  7. கி.நா'க்கள் பர்சனலாக எனக்கு ரொம்பப் பிடிக்கும். நாமே எதையோ தேடிக் கண்டுபிடிப்பதைப் போன்ற உணர்வைத் தருவதுதான் காரணமோ என்னமோ! கோவிட்டால் ஏற்பட்ட இறுக்கம் குறைந்த பின்னேயாவது வருடத்திற்கு சில கி.நா'க்கள் கிடைத்தால் வரவேற்பேன்!

  8. மாதம் 2? 3? 4?
  5 கிடைத்தாலும் எனக்கு ஓகே தான்! ( இப்போது படிக்க நேரம் கிடைக்கவில்லையென்றாலும், என் ரிடையர்மென்ட்டுக்குப் பிறகு (அதாவது, 30 வருடங்களுக்குப் பிறகு) ரசித்து ரசித்துப் படிக்கப் போகிறேனாக்கும்!

  9. ஒரே ஒரு பழைய பார்ட்டி - அங்கிள் ஸ்க்ரூட்ஜ்.

  10. மறுபதிப்புகளே இல்லாத ஆண்டு எந்தவித மாற்றத்தையும் கொண்டுவருமென்று எனக்குத் தோன்றவில்லை! ( வேண்டுமானால் கருப்பு-வெள்ளை கதைகளே இல்லாத 'ழுழுவண்ண முழு ஆண்டு' ஒன்றைக் கடைபிடித்தால் என்ன சார்?!!)

  11. குண்டுபுக்குகளின் காதலன் நான்!

  12. கெளபாய் கதைகள் - தரமான கதைத் தொடர்கள் கிடைத்தால் தாராளமாகக் கூட்டலாம்! ஏனோ நவநாகரீக கதைத் தொடர்களைவிட இந்தப் பாலைவனப் புழுதிகளிலேயே மனசு இன்னும் லயித்துக் கிடக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. ///என் ரிடையர்மென்ட்டுக்குப் பிறகு (அதாவது, 30 வருடங்களுக்குப் பிறகு) ///

   இதை டைப் பண்ணும்போது உங்களுக்கு கைகள் வியர்க்கவில்லையா.? விரல்கள் நடுநடுங்கவில்லையா.? நெஞ்சு படபடக்கவில்லையா.?
   இன்னும் மூணு மாசத்துல ரிட்டயராகப் போறோமே.. இப்படி பச்சையா புளுகுறோமேன்னு கொஞ்சங்கூட கூச்சநாச்சமே இல்லையா.!?

   அப்படின்னு ஜனங்க பேசிக்கிறாங்க குருநாயரே.!

   Delete
  2. ///இதை டைப் பண்ணும்போது உங்களுக்கு கைகள் வியர்க்கவில்லையா.? விரல்கள் நடுநடுங்கவில்லையா.? நெஞ்சு படபடக்கவில்லையா.?///

   இல்லை! வூட்டம்மா வூரில் இல்லை! :D

   ///அப்படின்னு ஜனங்க பேசிக்கிறாங்க குருநாயரே///

   ஜனங்களுக்கு வேற என்ன வேலைங்க கிட்?!! ஞாயித்துக்கிழமையாச்சுன்னா கையில ஏதாவது காமிக்ஸ் புத்தகத்தை வச்சுக்கிட்யவேண்டியது.. ரோட்ல நகர்வலம் போற அப்பாவி இளவரசர்களை வம்புக்கு இழுத்து கெக்கபிக்கேன்னு சிரிக்கவேண்டியது!

   Delete
  3. உங்களுக்கு கைகள் வியர்க்கவில்லையா.? விரல்கள் நடுநடுங்கவில்லையா.? நெஞ்சு படபடக்கவில்லையா.?

   அவ்ளோ சிம்ப்டம்ஸ் -ம் எனக்கு வந்துச்சு..மாட்டா ஹரி
   விமர்சனம் எழுத நினச்சப்போ.

   Delete
 80. கேள்வி # 1 : போன ஆண்டு + நடப்பாண்டில் இதுவரையிலும் - டெக்ஸ் சாகசங்களில் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ?
  A .என்ன கேள்வி கேட்டுப்புட்டே சகோ ? அல்லாத்தியும் படிச்சுப் போட்டுப்புட்டோம்லெ !!

  கேள்வி 2 : ஒரு நம்பராய் மட்டும் சொல்லுங்களேன் - 2023-க்கு எத்தனை டெக்ஸ் இதழ்கள் இருந்தால் நலமென்று ?

  12

  கேள்வி # 3 : இதுவுமே 'தல' சார்ந்த கேள்வியே ! கலரில் TEX க்ளாசிக்ஸ் வெளியாவது அடுத்தாண்டிலுமே தொடரலாமா ? அல்லது 2023 க்கு மாடர்ன் டிரெஸ் போட்ட இந்த அபிதகுஜாலாம்பாட்கள் வேண்டாமா ?

  தொடரலாம்

  கேள்வி # 4 :

  நடப்பாண்டினில் அறிமுகம் கண்டுள்ள நிறைய புது நாயக / நாயகியருக்கு தொடரும் மாதங்களில் மறு வாய்ப்புகள் வெயிட்டிங் ! So அவர்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் விதங்களை பொறுத்தே அவர்களது எதிர்காலங்கள் தொடர்ந்திடும் ! இந்த நொடிதனில் கீழ்க்கண்ட புதியவர்களை நீங்கள் எவ்விதம் பார்த்திடுகிறீர்கள்

  1.ஆல்பா
  தொடரலாம்
  2.சிஸ்கோ
  நிச்சயமாய்
  3.டேங்கோ
  Oh yes
  4.ரூபின்
  தொடாமலே தெரிக்குதே தொடரலாம்

  கேள்வி # 5 : கார்ட்டூன் சார்ந்த கேள்வி இது :

  க்ளிப்டன் - VRS தரப்பட்டு கேரட் மீசைக்காரர் புறப்பட்டாச்சு !

  ஹெர்லக் ஷோம்ஸ் - கிட்டத்தட்ட கதைகள் காலி !

  So எஞ்சியுள்ள லக்கி லூக் ; சிக் பில் ; ப்ளூகோட் பட்டாளம் ; மேக் & ஜாக் கூட்டணியில் வண்டி ஓடி வருகிறது !
  My question is : இந்த நாற்கூட்டணியே ஓ.கே.வா ? போதுமா ? அல்லது கொஞ்சம் புதுமுகங்கள் உள்நுழைந்தால் 'கதவைத் திற..காற்று வரட்டும்' என்று feel பண்ணுவீர்களா ?

  புதியது முயற்சி பண்ணலாம்

  கேள்வி # 6 :
  a )SODA-வின் சேவை நமக்குத் தேவையா ?
  கண்டிப்பாக தேவை...

  கேள்வி # 7 :
  b ) 300 times மூக்கைச் சுற்றவல்ல கதைகளிலும் ஒரு சுகம் உண்டென்பீர்களா ?

  இரண்டு வருடம் இடைவேளி விடலாம்

  கேள்வி # 8 :

  மாதமொன்றுக்கு வாசிக்க எத்தனை புக்ஸ் இருந்தால் தேவலாமோ ?

  இரண்டு புத்தகம் போதும்

  கேள்வி # 9 :
  So ஒரு பழைய பார்ட்டியை ; ஒரேயொரு பழைய பார்ட்டியை கைத்தாங்கலாய்க் கூட்டி வர நாங்கள் ரெடியெனில் - யாரை அழைத்து வரக் கோருவீர்களோ ? உங்களின் நிகழ்காலத்து காமிக்ஸ் உலகினை ஜொலிக்கச் செய்யக்கூடிய அந்த ஒரேயொரு புராதனர் யாராக இருக்கக்கூடும் ?
  பதில் சொல்லத் தெரியலை அல்லது தோணலை...

  கேள்வி # 10 :
  மறுபதிப்புகளே இல்லாததொரு ஆண்டு !! இதனை ஒருக்கா முயற்சித்துப் பார்த்தாலென்ன ? என்று உங்களுக்குமே எப்போதேனும் தோன்றியுள்ளதா folks ? இது குறித்து உங்களின் சிந்தனைகள் ப்ளீஸ் ?

  மறுபதிப்புகள் வேண்டாம் என்பது என் கருத்து

  கேள்வி # 11 :
  "குண்டூ புக்ஸ் ; மெகா புக்ஸ்" என்ற உங்களின் ஆர்வங்கள் நிஜமாகிடும் போது அவற்றை கொண்டாடும் கையோடு...
  a) ஏக் தம்மில் வாசித்துத் தள்ளி விடுவீர்களா ?

  படித்து முடித்து விடுவேன்... ஆனால் மெதுவாக நேரம் கிடைக்கும் போது படிப்பேன்

  கேள்வி # 12 :
  கௌபாய் ஜானருக்கான தற்போதைய ஸ்லாட்ஸ் பற்றி :
  a )ஓ.கே. இதுவே போதும்...
  ReplyDelete
 81. வேதாளர் பெற்ற வெற்றியை ரிப்கிர்பி பெறுவாரா ?!

  ReplyDelete
 82. டெக்ஸ் கிளாசிக் ஒரு வருடம் நிறுத்தி வைத்து அதற்கு பதிலாக இளம் டெக்ஸ் கலரில் விடலாம்

  ReplyDelete
 83. அடுத்த டெக்ஸ் கிளாசிக் கொடூர வனத்தில் டெக்ஸ் வர வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு சார் நிறைவேறுமா?

  ReplyDelete
 84. Edi Sir..
  நன்றிகளும் வணக்கங்களும் திருமதி பழனியை பல்வேறு பணிகளுக்கு இடையேயும் இன்று நேரில் சந்தித்து உதவிகள் செய்ததற்கு.😇🙏
  உடன் இருந்து இப்பணியினை ஒருங்கிணைத்த Dr.Raja sir அவர்களுக்கும் நன்றிகள்.🙏🙏

  ReplyDelete
 85. 1. A
  2. 12
  3. Yes
  4. A, A, A, A
  5. Newcomers needed
  6. A
  7. B
  8. 4
  9. None
  10. Go ahead
  11. A
  12. A

  ReplyDelete
 86. டெக்ஸ் அவர்தான் நமது விற்பனையின் முதுகெலும்பு எனும் போது உங்களுக்கு எது சரி என நினைக்கிறீங்களோ அதற்கு எனது முழு ஆதரவும் உண்டு.

  ReplyDelete
 87. கேள்வி # 5 : கார்ட்டூன் சார்ந்த கேள்வி இது :

  கார்ட்டூனில் புதுமுகங்களை உடனே அறிமுகப்படுத்துங்கள் சார்.

  ReplyDelete
 88. சென்றவாரம் திருப்பூர் புத்தக விழாவில் நான் வாங்கிய டெக்ஸ் கிளாசிக் 2 புத்தகம் தரமான ஆக்கமாக இருந்தாலும் எனக்கு வந்த புத்தகத்தின் பைண்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை, படங்களோடு பைண்ட் ஆகியுள்ளது பக்கங்களை விரித்து தான் வாசிக்க வேண்டிய நிலை. சிவி டெல்லியின் அழகிய சித்திரங்களை மற்றும் என் ஆல்டைம் பேவரைட் இரத்த வெறியர்களை ரசிக்க இயலாது போய்விட்டது, அந்த சோகத்தில் புத்தகத்தை வாசிக்காமல் எடுத்து வைத்துவிட்டேன். இதனிடையே ரிப்கிர்பி ஸ்பெஷல் எனக்கு எப்படி வரப்போகிறதோ என்று சற்றே கவலையில் இருந்தேன்... "கவலைக் கொள்ளாதே எப்படி அட்டகாசமாக வந்துள்ளேன் பார்" என்று என் கையிலுள்ள புத்தகத்தில் ரிப் கிர்பி என்னை பார்த்து புன்னகைக்கிறார்.

  ரிப் கிர்பி ஸ்பெஷல் 1, மிக மிகத் தரமாக வெளிவந்துள்ளது. ஹார்டு கவர் அட்டைப்படம், சித்திரங்களின் அச்சுத்தரம் மற்றும் சிறப்பான பைண்டிங் என அனைத்தும் நிறைவாக உள்ளது. இந்த புத்தகத்தின் முன்னட்டை அவ்வளவு அழகாக உள்ளது.

  வேதாளன் ஸ்பெஷல் மற்றும் ரிப் கிர்பி ஸ்பெஷல் ஆகிய இரண்டுமே படு அட்டகாசமாக வந்துள்ளது. இதே தரத்தில் அடுத்த SMASHING '70s இரண்டாம் சுற்றை வண்ணத்தில் கொண்டு வந்தால் மிகவும் அருமையாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. // ரிப் கிர்பி ஸ்பெஷல் 1, மிக மிகத் தரமாக வெளிவந்துள்ளது. ஹார்டு கவர் அட்டைப்படம், சித்திரங்களின் அச்சுத்தரம் மற்றும் சிறப்பான பைண்டிங் என அனைத்தும் நிறைவாக உள்ளது. இந்த புத்தகத்தின் முன்னட்டை அவ்வளவு அழகாக உள்ளது.
   //

   SUPER NEWS!

   Delete
 89. 1. A
  2. Min 15 (2023 டெக்ஸ் 75 அல்லவா!!)
  3. Yes
  4. A, A, A, A
  5. Newcomers needed
  6. A
  7. A
  8. 4
  9. இரட்டை வேட்டையர்கள்
  10. மறுபதிப்பு வேண்டும்
  11. I love குண்டு புக்ஸ், ஏக் தம்மில் இல்லையென்றாலும் அந்தந்த மாதத்திற்க்குள் படித்து விடுவேன்
  12. C

  ReplyDelete
 90. 1. டெக்ஸ் உடனே படிக்காவிட்டால் என்னென்னமோபோபியாக்கள் வந்துவிடும் 2 டெக்ஸ் வருடம் 12 வேண்டும் 3.கலரில் டெக்ஸ் மறுபதிப்புகள் வேண்டும் 4.முத்து 50 அறிமுகங்கள் மூவர்+ரூபின் தொடரவேண்டும். 5.கார்ட்டூனிலும், புதியமுயற்சி லைட்டா ஒரு முன்னோட்டம் பார்க்கலாம் சார் 2023ல் 6.சோடா தொடரவேண்டும். ஸ்லாட் அதிகப்படுத்தவேண்டும் 7. கிராபிக்நாவல் தொடரவேண்டும். 8.சாய்ஸ்ல விட்டுற்றேன் சார். 9.இரட்டை வேட்டையர். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 91. 10. சார் இது 2023க்கான ஒரு திட்டமிடலென்றால் ஒரு சின்ன ஞாபகமூட்டல்சார். மாடஸ்டிய மறந்தறாதீங்க. அடுத்தவாரம் மாடஸ்டிக்கு ஸ்லாட் அதிகமாக்கலாமா என்று ஒருஓட்டெடுப்பு நடத்துங்க ப்ளீஸ். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. ஆகா ஆஹாககாக இந்த ஆட்டத்துக்கு நான் வரலீங்க

   Delete
  2. ஆஹா - சூப்பர்சார் - முக்கியமான நினைவூட்டல் சார்.
   என்னைப் பொறுத்தவரை
   Tex_யைத் தவிர மீதி கேள்விகள் அனைத்திலும் மாடஸ்டியை ஒப்பிடு - செய்துதான் பார்த்தேன்..

   Delete
 92. மறுபதிப்பு//
  அன்புள்ள எடிட்டர், வண்ணத்தில் இருக்கும் டெக்ஸ் கதைகளை தயவு செய்து வண்ணத்திலேயே முதற்பதிப்பாக போட்டு விடுங்கள். ப்ளீஸ்

  ஒரு பத்தாண்டுக்குள் வந்த கானகக்கோட்டை, ஓநாய் வேட்டை, பனிக்கடல் படலம், சிவப்பாய் ஒரு சிலுவை போல் புத்தகங்கள் அநேகமாக அனைவரிடமும் இருக்கும். இவற்றை இவ்வளவு விரைவில் வண்ணத்துக்காக மீண்டும் மறுபதிப்பாக காண சங்கடமாக இருக்கின்றது. இவற்றுக்கு இன்னும் காலம் எடுக்கலாமே.

  காரணம் நாம் பலர் மிஸ் பண்ணிய ஏராளமான பழைய உண்மையான டெக்ஸ் கிளாஸிக்ஸ்கள் ஒரு பக்கம் கிடக்க, இன்னொரு பக்கம் நாம் படிக்க வேண்டிய புதிய டெக்ஸ் கதைகளோ மலை போல் குவிந்து கிடக்கின்றது.

  ReplyDelete
 93. ரிப் கிர்பி ஸ்பெஷலை சும்மா மேலோட்டமாக பார்வையிட்டு தூங்கப் போகலாம் என்று புரட்டியதில்.. முதல் இரண்டு கதைகளை வாசித்து விட்டேன். இரண்டுமே அருமை. டாங்கா துரோகத்தில் பெண்ணாதிக்க தீவில் அவர்கள் கொடுக்கும் உடையை டெஸ்மாண்ட் அணிந்து அவர் பேசும் வசனம்... "காதிலே பூ... கழுத்திலே பூ... கால்சட்டையில் பூ... பஜாரில் பஞ்சுமுட்டாய் விற்கிறவன் போடுவது போலொரு நிஜார்!" நல்ல நகைச்சுவை. போலவே குறிப்பாக கதை நெடுக உறுத்தாத நயமான வசன உரையாடல்கள் மிகவும் ரசிக்க வைக்கிறது.

  ரிப் கிர்பி ஸ்பெஷல் டபுள் ஓகேங்க விஜயன் sir.

  ReplyDelete
 94. 1. இதுவரை வந்த அனைத்து டெக்ஸ் மற்றும் இளம் டெக்ஸ் கதைகள் படித்துவிட்டேன். இந்த மாத கிளாசிக் 2 மட்டும் பெண்டிங்.

  முன்பு போல மறுவசிப்புக்கு வாய்ப்பு இருப்பதில்லை. அதை மறுபதிப்புகள் சரி செய்துவிடுகின்றன.

  2. மாதம் ஒரு டெக்ஸ் புத்தகம் அதில் விசேஷ மாதங்களில் குண்டு புத்தகம் ஒன்றுக்கு மேற்பட்ட டெக்ஸ் கதைகளோடு

  3. தொடரலாம் கதை தேர்வுகள் மட்டும் வரிசை படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற வருத்தம், இரும்புகுதிரையின் பாதையில், நள்ளிரவு வேட்டை போன்ற க்ளாசிக்குகள் இன்னும் இருக்க சமீப இதழ்கள் வருவதை முடித்தால் தவிர்க்கலாம் சார்.

  4. நீங்கள் குறிப்பிட்ட 4 பேருக்குமே இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம் ஆனால் டெட் உட் மற்றும் duke முடிந்தால் தவிர்த்து வேறு ஹீரோக்கள் முயலலாம்

  5. கார்ட்டூன் தற்போதைய 4 பேர் போதும். புதியவர்கள் யாரும் தற்போதைய 4 பேர் விட நன்றாக தோன்றினால் மேக் பதில் முயலலாம்

  6. சோடா வேண்டும்

  7. தேடல்கள் தொடரலாம் சார் அதில் கிடைத்த நல்ல கதைகள் தான் அதற்கு அத்தாட்சி ஆனால் தேர்வுகள் இன்னும் கொஞ்சம் பார்த்து தேர்ந்தெடுக்கலாம் மாட்டா போன்ற கதைகளை தவிர்க்கலாம்

  8. 4+ வாய்பிருந்தால், மினிமம் 3

  9. அல்லது கருப்பு கிழவி கதைகள்

  10. இல்லை சார். பழையது எப்போதுமே ஒரு சுகம் தான்

  11. ஏக் தம்மில் கண்டிப்பாக கடினம் சார் ஆனால் அதன் மீதான ஈர்ப்பு குறையவே குறையாது

  12. குறைவு தான் சார் புதிய தேர்வுகள் சோபிக்கவில்லை ஆகையால் இன்னும் தேடலாம்

  ReplyDelete
 95. I think, it's better to write answers in a single short post so that it will help whoever trying to deduce from our feedback.

  After that u can make a detailed post on why u made those choices.

  ReplyDelete
 96. This comment has been removed by the author.

  ReplyDelete
 97. கேள்வி # 1 : போன ஆண்டு + நடப்பாண்டில் இதுவரையிலும் - டெக்ஸ் சாகசங்களில் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ?
  A – அத்தனையும். முதலில் படிக்கும் புத்தகமும் தல தான்.

  கேள்வி 2 : ஒரு நம்பராய் மட்டும் சொல்லுங்களேன் - 2023-க்கு எத்தனை டெக்ஸ் இதழ்கள் இருந்தால் நலமென்று
  மாதம் ஒரு புத்தகம். தல பொன் முட்டையிடும் வாத்து தான். ஆனால் நிச்சயம் சலிக்கும் என்று தோன்றவில்லை.

  கேள்வி # 3 : இதுவுமே 'தல' சார்ந்த கேள்வியே ! கலரில் TEX க்ளாசிக்ஸ் வெளியாவது அடுத்தாண்டிலுமே தொடரலாமா ? அல்லது 2023 க்கு மாடர்ன் டிரெஸ் போட்ட இந்த அபிதகுஜாலாம்பாட்கள் வேண்டாமா ?

  Yes absolutely sir. Classic கதைகளில் வண்ணச் சேர்க்கை இன்னமும் பிரமாதமாக இருக்கிறது . உதாரணம் – பனிக்கடல் படலம். ஒவ்வொரு framesஉம் கண்ணில் ஒத்திக் கொள்ளும் ரகம்

  கேள்வி # 4 :
  நடப்பாண்டினில் அறிமுகம் கண்டுள்ள நிறைய புது நாயக / நாயகியருக்கு தொடரும் மாதங்களில் மறு வாய்ப்புகள் வெயிட்டிங் ! So அவர்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் விதங்களை பொறுத்தே அவர்களது எதிர்காலங்கள் தொடர்ந்திடும் ! இந்த நொடிதனில் கீழ்க்கண்ட புதியவர்களை நீங்கள் எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ?

  Alpha, Tango, Sisco, ரூபின் – All yes sir

  கேள்வி # 5 : கார்ட்டூன் சார்ந்த கேள்வி இது :

  புதுமுகங்கள் always welcome sir . Soda, Rubin போன்ற action cartoon வகைகள் இன்னமும் ரசிக்க வைக்கின்றன.

  கேள்வி # 6 :
  இறை ஊழியம் பண்ண வேண்டிய அந்த டேவிட் சாலமோன் NYPD-ல் டாணாக்காரராய்ச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார் !
  a SODA-வின் சேவை நமக்குத் தேவையா ?

  yes sir. Falling in love with this character arc.

  கேள்வி # 7 :
  கமல் மெரி பேசிடும் அந்த கி.நா.க்கள் தற்காலிகமாய் பின்சென்றுள்ளன ! ஸ்டெர்ன் ; அண்டர்டேக்கர் போன்ற கமர்ஷியல் கி.நா.க்களே தற்சமயம் நடைமுறையில் உள்ளன !
  a இதுவே தொடரலாமா?

  Sadly yes sir. சென்ற ஆண்டில் படிக்காமல் அல்லது படிக்க முடியாமல் வைத்த புத்தகங்கள் அத்தனையுமே கி.நாக்களே.

  கேள்வி # 8 :
  மாதமொன்றுக்கு வாசிக்க எத்தனை புக்ஸ் இருந்தால் தேவலாமோ ?
  2 ? 3 ? 4 ?

  மூன்று

  கேள்வி # 9 :
  என்னதான் நாங்கள் உருண்டு புரண்டு புதியவர்களைக் கண்ணில் காட்டி வந்தாலுமே, "ஆனாலும் அந்தக்காலத்து தியாகராஜ பாகவதர் போல வருமா ? !" என்று ஆங்காங்கே ஒரு அணியினர் குரல்கொடுப்பது ஒரு தொடர்கதையே !
  So ஒரு பழைய பார்ட்டியை ; ஒரேயொரு பழைய பார்ட்டியை கைத்தாங்கலாய்க் கூட்டி வர நாங்கள் ரெடியெனில் - யாரை அழைத்து வரக் கோருவீர்களோ ? உங்களின் நிகழ்காலத்து காமிக்ஸ் உலகினை ஜொலிக்கச் செய்யக்கூடிய அந்த ஒரேயொரு புராதனர் யாராக இருக்கக்கூடும் ?

  நான் 2000-கு பின்பே லயனின் ரெகுலர் வாசகன். அதனால் இந்த கேள்விகக்கு நண்பர்களின் பதிலே நம் பதிலும்.
  Special request – ஒரு நாயகருக்கு பதில் ஹிட் அடித்த one shot புத்தகங்கள் இருப்பின் முயற்சிக்கலாம்.
  உதாரணம். ஹாலிவுட்டில் ஜாலி (அதெல்லாம் ஹிட்டா என்று தெரியவில்லை. ஒரு கோடை மொத்தமும் தூக்கிக் கொண்டு திரிந்தது நினைவிருக்கிறது. போன வருடம் படித்த பொழுது கூட ஜாலியாகவே இருந்தது.
  சார் அப்புறம் அந்த கருப்பு கிழவி தொகுப்பு 😊

  கேள்வி # 10 :
  மறுபதிப்புகளே இல்லாததொரு ஆண்டு !! இதனை ஒருக்கா முயற்சித்துப் பார்த்தாலென்ன ? என்று உங்களுக்குமே எப்போதேனும் தோன்றியுள்ளதா folks ? இது குறித்து உங்களின் சிந்தனைகள் ப்ளீஸ் ?

  Tex Classic வந்தால் போதும் 😊

  கேள்வி # 11 :
  "குண்டூ புக்ஸ் ; மெகா புக்ஸ்" என்ற உங்களின் ஆர்வங்கள் நிஜமாகிடும் போது அவற்றை கொண்டாடும் கையோடு
  a ஏக் தம்மில் வாசித்துத் தள்ளி விடுவீர்களா ?
  b தலைமாட்டில் வைத்தபடிக்கே வெறிச்சு வெறிச்சுப் பார்ப்பீர்களா ?
  c ரொம்ப காலமாய் ஆடி வரும் அந்தக் கூடத்து மேஜையின் ஒரு காலுக்கு தாக்கானாக குண்டு புக்கைச் செருகுவதன் சாதக-பாதகங்களை மோட்டு வளையைப் பார்த்தபடிக்கே ஆராய்வீர்களா ?

  வைத்துப் பார்க்க அழகாக இருந்தாலும் படிக்க சிரமமாய் இருப்பது நிஜம் தான். டெக்ஸ் தீபாவளி குண்டு size படிக்க சரியாக இருக்கிறது. இந்த முறை முத்து 50, இரண்டு புத்தகங்களாய் வந்தது சரியான size. எப்பொழுதும் கடைசியில் எடுப்பது குண்டு புத்தகமே. வெறித்து பார்ப்பது தான் அதிகம். டெக்ஸ் விதிவிலக்கு.

  கேள்வி # 12 :
  கௌபாய் ஜானருக்கான தற்போதைய ஸ்லாட்ஸ் பற்றி :
  a ஓ.கே. இதுவே போதும் !
  b ஊஹூம்...ஜாஸ்தியுள்ளது !
  c இன்னும் கூட்டலாம் !

  c. இன்னும் கூட்டலாம்.

  ReplyDelete
 98. ராக் ஜி@

  கேள்வி 2க்கும் 3க்கும் இதுவரை பதியப்பட்டுள்ள கருத்துகள், எண்ணங்கள், பதில்கள்....1மணி நிலவரப்படி...

  கேள்வி2:- 2023ல படிக்க விரும்பும் மொத்த டெக்ஸ் எண்ணிக்கை....

  மொத்த பதில்கள்...=39

  6க்கு குறைவாக=0 பேர்

  6டூ12 கதைகள்=6 பேர்

  12கதைகள்/மாதம்1டெக்ஸ் வேணும்=17 பேர்

  12 ப்ளஸ் டெக்ஸ் வேணும்=16 பேர்


  கேள்வி3:- டெக்ஸ் க்ளாசிக் வேணம்/வேணாம்

  வேணும்=31 வாக்கு

  வேணாம்=6 வாக்கு

  வந்தாலும் சரி;வர்லனாலும் சரி=2வாக்கு


  இரவு மீண்டும் பார்ப்போம்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார் !

   Delete
  2. Thanks TEX Ji !

   So overall majority for Questions 2 and 3 - to have 12+ issues per year and continuing Tex Classics - natural given the times we are going through - MGR formula always works any time !

   Note to Editor:

   Apart from Classics in color, new story albums can also be in color sir - may in July to celebrate Lion Anniversaries.

   Delete
 99. டெக்ஸ் கிளாசிக் - டெகஸ் கிளாசிக் கதைகளை வண்ணத்தில் படிப்பது மனதிற்கு செம நிறைவாக உள்ளது. விற்பனை சிறப்பாக எல்லோரும் வாங்கும் விதமாக இருந்தால் இப்போது போன்று தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. பழைய கதை ஒன்று புதிய கதை ஒன்று என இணைத்து வண்ணத்தில் கொடுக்க முடியுமா?

   Delete
 100. பிரம்மாண்ட பார்சல் பிரிக்க கத்தியோட அமர்ந்ததால்... அழகா பொறுமையா பிரிச்சா...திறந்திடு சீசேன்னு துள்ளி விழுது எலியப்பா துணையோடு யானையாய் ரிப்புமே...முதல்ல டெக்ச எடுத்தா அட்டைப்படம் ஃபோட்டோ தான் என் அடித்துச் சொல்லுது தத்ரூபமாய்...உள் சித்திரமோ வேற லெவல்....முதல் பக்கம் வரிகளுக்கேற்ப நகரமே கோபமாய் வரவேற்பதாய் தோன்றுவது...செம சார்....வண்ண டெக்ஸின் கடந்த காலம்...ஆஹா

  அடுத்த புத்தகம் தேவையில்லா தேவதையின் பின் பக்கத்துக்கு போனா அடுத்த வெளியீடு கோடை ஸ்பெஷலா சுடுது...மலரா குளிரா வரட்டுமே சார் கோடை மலர்...
  மறந்தே போச்சு இம்மாத இதழல்லவா அது..பரவால்ல சார் அடுத்த மாதமே வரட்டுமே...

  ரிப்போட அட்டை மரண மாஸ் ...வேதாளர தூக்கி எறிந்து காமிக்ஸோட இலக்கணம் பிசகாம நான்தான் டாப்புன்னு முறுவலிக்கிறார் ரிப்...பின்ணட்டை ரிப் கெர்ரி ஆங்கிலத்தில் தகதகப்பதழகு...சூப்பர் சார்..உள்பக்கங்களும் மாஸ்...ஆயிடுவார் பாஸ்

  ReplyDelete
  Replies
  1. அடுத்த மாதம் என் மகனுக்காக பீன்ஸ் கொடியில் ஏறும் ஜாக்க...அவனும் சிமிட்டாம பாக்க....முன்னட்டை தேவதைய காட்டி யாருன்னு கேட்டா அண்ணன்ங்கிறான் என் கண்ணன்

   Delete
  2. // அண்ணன்ங்கிறான் என் கண்ணன் //
   கந்தவேலன் என்ற உனது பையனின் பெயரை எப்போது கண்ணன் என மாத்துனாலே ? :-)

   // முன்னட்டை தேவதைய காட்டி யாருன்னு கேட்டா //
   உன் கண்ணை கொஞ்சம் செக் பண்ணு இல்ல புரிகிற மாதிரி எழுத பழகிக்கோ மக்கா :-)

   Delete
 101. புத்தகங்கள் கிடைத்து விட்டன.

  ReplyDelete
 102. வந்து விட்டது புத்தகம் வந்தே விட்டது. திருவிழா ஆரம்பம்.

  ReplyDelete
 103. இன்று மதியம் புத்தகம் வந்தது எலியப்பாவை படித்து முடித்துவிட்டேன். அடுத்து டிரென்ட் அதற்கு அடுத்து டெக்ஸ்வில்லர் கடைசியாக ஜென்டில்மேன் ரிப் கிர்பி படிக்கவேண்டும்

  ReplyDelete
 104. சார்,
  கிராபிக் நாவல் poll இதுவரை,
  மொத்தம் - 38
  கமல் மாதிரி கிராபிக் நாவல் - 17
  கமர்ஷியல் கிராபிக் நாவல் - 17
  இரண்டும் - 4
  மிரண்டு ஒடியதை காட்டிலும் இப்பொழுது வித்தியாசமான கிராபிக் நாவல்களுக்கு ஆர்வலர் கள் சரி சமமாக வாக்களித் திருப்பது காமிக்ஸ் ரசனைக்கு ஓர் ஆரோக்ய நிலைப்பாடு.

  கரம் கோர்ப்போம் நண்பர்களே, காணாத புதையல்கள் கடல் போல் விரிந்து கிடக்கையில் இன்னும் நாம் எத்தனை நாள் மரத்தை சுற்றிக் கொண்டே இருப்பது.

  மறுபதிப்பு இல்லா ஆண்டு poll இதுவரை,

  மொத்தம் - 33
  வேண்டாம் மறுபதிப்பு - 20
  வேண்டும் - 12
  நடுநிலை - 1

  மறுபதிப்புக்கு ஆதரவு குறைந்தது கொண்டுள்ளது சார் கவனிக்கவும்.

  மேலும் கலர் டெக்ஸ் புதிய கதைகளாக இருப்பது நலம் என்ற ஆதங்க வெளிப்பாட்டை யும் கருத்தில் கொள்ளவும் சார். படித்த கதைகளையே மீண்டும் மீண்டும் படிப்பதற்கு பதில் அதே தரத்தில் புதிய கதைகளை படிப்பது நலம்.

  ஒரு முறை டெக்ஸ் 75 வது ஆண்டிலாவது மறுபதிப்பில்லா ஆண்டாக இருக்க முயற்சித்து பாருங்கள் சார்.

  நன்றி.

  ReplyDelete
 105. ரிப் கிர்பி பற்றி ஒரு வரியில் அமர்க்களமான கதை தொகுப்பு. மிகவும் ரம்யமான வாசிப்பு அனுபவம். தயாரிப்பு தரம் சிற்பி போல் அழகாக செதுக்கி உள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி நண்பரே.

   Delete
 106. வாரே வா தேவையில்லாத தேவதை அருமை. டிரெண்ட் அடுத்த வருடம் முடிவது வருத்தமே.

  முதலில் படித்தது எலியப்பா சும்மா சொல்லக்கூடாது சிரிக்க வைப்பதில் இது A1. சீனியர் எடிட்டர் அவர்களின் தொடர் நன்றாகவே சென்று கொண்டு இருக்கிறது.

  டிரெண்ட் இந்த முறை புல்லட் வேகத்தில் பயணிக்கிறார். அந்த ஹெலன் கதாபாத்திரம் அட்டகாசமான ஒன்று. எப்போதும் போல மெதுவாக கதை நகராமல் இந்த முறை ஆரம்பத்தில் இருந்தே வேகம். நண்பர் சரவணகுமார் சொன்னது போல ஆரம்பத்தில் எதுவோ குறைவது போல இருக்கிறது.

  எனது மதிப்பெண் 8/10.

  ReplyDelete
 107. ரிப் கிர்பி ஸ்பெஷல் 1:
  கதை 3: டாக்டர் டேட்டா! எதிர்காலத்தை கணிக்கும் டேட்டாவின் அற்புதமான கம்ப்யூட்டர், கிர்பியின் எதிர்காலத்தை கணித்து அவரை திகைக்க வைக்கிறார் டேட்டா. டெஸ்மாண்ட் துணையோடு டேட்டாவின் திட்டத்தை முறியடிக்கிறார் ரிப். கதை விறுவிறுப்பாக நகர்கிறது.

  கதை 4: காணாமல் போன வாரிசுகள்!
  90களில் நான் வாசித்து மகிழ்ந்த கதை இது. தற்போதைய வாசிப்பில் மறுவாசிப்பு போல இல்லாமல் படு ப்ரெஷ்ஷாக உள்ளது கதை. இந்த கதையின் மையம் அன்புள்ளம் கொண்ட அந்த காஸினோ சகோதரர்கள் தான். எவ்வளவு தீங்கிழைத்தாலும் மறந்து குழந்தை போல மாறிவிடும் அந்த சகோதரர்களை மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

  நேற்று 2 கதைகள், இன்று 2 கதைகள் என வாசித்து விட்டேன். நான்கும் சிறப்பு.

  ReplyDelete
 108. தலைமையாசிரியரின் பதிவு சுவாரஸ்யமாக உள்ளது....நாகிரெட்டியோடு சுவாரஸ்யமான விசயங்கள் அட்டகாசம்....
  அடுத்த முன்னோடிகளின் தகவலுக்காக காத்திருக்கிறேன்
  ....சூப்பர் சார்...தொடர்வோம்

  ReplyDelete
 109. ஊரில் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு தான் இல்லம் திரும்பி பார்சலை பிரிக்க முடிந்தது. முதலில் கண்ணை கவர்ந்து இழுத்தது ரிப்கெர்பி ஸ்பெஷல் .மேக்ஸி அளவில் அட்டகாசமான வடிவமைப்புடன் பட்டையை கிளப்புகிறது. முனபக்க மினுமினுப்பு ,பின்பக்க ரிப்கெர்பியின் தங்க மினுமினுப்பு அட்டகாசப்படுத்துகிறது.தெளிவான தாளில் ரிப்கெர்பியின் ஆர்ப்பாட்டமில்லாத தெளிவான சித்திரங்கள் பிரித்து பார்க்கும் பொழுது அழகை கூட்டுகிறது ..ஒரே மூச்சில் கிர்பியின் அனைத்து கதைகளையும் படிக்காமல் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கதைகள் மட்டுமே படிக்க வேண்டும் என்று முடிவெடுத்து உள்ளேன்..அப்பொழுது தான் ஒரே நாயகரின் பாணி அயர்ச்சியையும் ஏற்படுத்தாது ..படிக்க இன்னும் புதுக்கதைகள் இல்லையே என்ற சோகத்தையும் ஏற்படுத்தாது என்ற எண்ணமே இதற்கு காரணம்.

  அடுத்து வாவ் என்று சொல்ல வைத்த அட்டைப்படம் டெக்ஸ் ன் விடாது வஞ்சம் ..நினைத்தது போலவே அட்டைப்படம் செம மாஸ் எனில் உள்ளே சித்திரங்கள் அதே போல் பட்டையை கிளப்புகிறது .இந்த அளவில் இந்த பக்கங்களில் இந்த நாயகரின் இதழை கைகளில் ஏந்தும் பொழுதே ஓர் இனம் புரியா மகிழச்சி தன்னால் எழுகிறது .அருமை.

  அடுத்த இதழான் ட்ரெண்ட் ன் தேவையில்லாத தேவதை இதழும் அழகான ,தெளிவான அட்டைப்பட சித்திரம் ,உள் பக்க சித்திரங்கள் என வழக்கம் போல் ட்ரெண்ட் அசத்துகிறார்.

  இலவச இணைப்பான என் பெயர் எலியப்பா வழக்கம் போல் சிறப்பாகவே அமைந்து உள்ளது..

  இனி எதை முதலில் படிப்பது என்ற குழப்பமே வழக்கம் போல் ..குழப்பம் தீர்ந்து படித்து முடித்து பின்...

  ReplyDelete
 110. தவிப்பில் ஒரு தாத்தா - ஒரு பெரியவர் பேரன் பேத்தி நடுவில் ரிப் & டெஸ்மாண்ட் கொண்டு ஒரு நேர்கோட்டு கதை.‌ தவறு செய்பவர்களை இறுதி காட்சியில் கையும் களவுமாக பிடிப்பது கதையின் ஹைலைட். டெஸ்மாண்டை சுற்றி வரும் டயலாக் சிரிக்க செய்தது.

  ReplyDelete
 111. வணக்கம் சார்
  வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
 112. 1/டெக்ஸ் கதைகளை மாதம் தவறாமல் வேண்டும்

  2/ அதுவும் குண்டு புக்காக வேண்டும்

  3/மறு பதிப்பு என்பது தற்போது கண்டிப்பாக தேவை

  4/வண்ணத்தில் அடிக்கடி டெக்ஸ் கதைகள் வேண்டும்
  5/ ஓவ்வொரு புத்தக விழாவிற்கும் டெக்ஸ் கதைகள் வேண்டும்
  6/ஆகமொத்தம் அள்ள அள்ள குறையாமல் ஆண்டு முழுவதும் வேண்டும் டெக்ஸ் கதைகள்

  நன்றி 🙏

  ReplyDelete
 113. விடாது வஞ்சம் படித்து முடித்து விட்டேன். என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

  வேறு விமர்சனம் வரட்டும் பிறகு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சரியோ தவறோ பட்டுன்னு எழுதுங்க....அப்பதான் உண்மயாருக்கும் விமர்சனம்

   Delete
  2. 'தல' பாசிட்டிவ் ; நெகட்டிவ் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட அப்பாடக்கர் சார் ; கதையை வாசிக்க மக்களுக்கு சித்தே அவகாசம் தந்த பின்னே மனசில் தோன்றுவதை பதிவிடுங்கள் !

   Delete
  3. கண்டிப்பாக சார்.

   Delete
 114. Laura Zuccheri

  விடாது வஞ்சம் : அட்டைப்படம் நேரில் இன்னும் அட்டகாசமாக உள்ளது. அந்த கலரிங், ஒரிஜினலை விட பளிச் என்று உள்ளது. கோகிலா மேடம் கலக்கிட்டீங்க. ஏற்கனவே சொன்னதுப் போல், Tex's rapper one of the best in recent times.
  உள்ளே சித்திரங்களோ அதகளம். இந்த சித்திரங்கள் தீட்டியவர் Laura Zuccheri என்னும் பெண் ஓவியர். பிரம்மிக்கச் செய்து விட்டார்,.Stunning. மேக்கிங் & சித்திரங்களே இதொரு Instant Hit என்று சொல்கிறது.
  Big Nose Kate = "கோணமூக்கி கேட்" டா.... ஹாஹா!

  ட்ரெண்ட்: இத்தனை ஆல்பங்களுக்கு அப்புறம் ட்ரெண்டை கைப்பிடிக்கும் ஆக்னஸ்க்கு இந்த நிலைமையா...? நான் கூட என்னடா "தேவையில்லாத தேவதை"னு டைட்டில் ஏடாகூடமாயிருக்கேன்னு நினைச்சேன். அப்புறம் பார்த்தா ஹெலன்னு இன்னொரு ட்ராக், சூப்பர்.

  ரிப் கிர்பி : Collage அட்டைப்படங்கள் நிறைய முறை அவ்வளவாக சோபிக்காது. ஆனால் இந்த முறை has done well. அந்த நாகசு வேலைப்பாடுகள் ஒரு X Factor. மேக்ஸி சைஸ், ஹார்ட் பவுண்ட், வரிசையாக 8 கதைகள் எனும் போது ரிப் கிர்பி வேறொரு நாயகர் அந்தஸ்தில் நிற்கிறார். அவரே கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் இந்த Format-ல் நாம் தலைக் காட்டுவோமென்று.
  கதைகளைப் படித்து விட்டு மார்க் வேறு போடச் சொல்லிட்டாங்கோ கூடிய சீக்கிரத்தில் போட்டு விடுவோம். (நான் மிகவும் எதிர்ப்பார்த்த "காசில்லா கோடீஸ்வரன்" கதை இடம் பெறாதது ஒரு சிறிய ஏமாற்றமே.)

  ReplyDelete
  Replies
  1. //ரிப் கிர்பி : Collage அட்டைப்படங்கள் நிறைய முறை அவ்வளவாக சோபிக்காது. ஆனால் இந்த முறை has done well.//

   தவிப்பில் ஒரு தாத்தா படித்துவிட்டேன்..நெருடல் என்னவெனில் ரிப் அட்டைப்படத்துக்கென எடிட்டர் எடுத்துக் கொண்ட சிரமங்கள் பற்றி படித்த கையோடு முகநூலில் திரு கிங் விஷ்வா " எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கிருந்து ( மீண்டும்) எடுக்கப்படும்" என்ற தலைப்பில் போட்டிருந்த பதிவை படிக்க / பார்க்க நேர்ந்ததுதான்.
   அதில் தற்போதைய ரிப் -பின் அட்டைப்படம் ஏற்கனவே வந்த ஒரு ஜேம்ஸ் பாண்ட் அட்டைப்படம் , நமது காமிக்ஸில் வெளியான பெர்முடா படலம் அட்டை இவற்றோடு ஒத்திருக்கிறது என்பதாக போடப்பட்டிருக்கிறது.மற்றபடி இதழ் தயாரிப்பு தரம் அருமைதான்.

   Delete
  2. "அட்டைப்பட reference" என நான் ஒவ்வொருமுறை குறிப்பிடுவதே இன்ன பிற மொழிகளிலோ ; படைப்புகளிலோ உருவாக்கப்பட்டிருக்கும் அட்டைப்பட முன்மாதிரிகளை தானே சார் ! அதிலும் ஜேம்ஸ் பாண்ட் சார்ந்த அட்டைப்படங்கள்; திரைப்போஸ்டர்கள் செம ஸ்டைலாக இருப்பதால் அவை எந்தவொரு டிடெக்டிவ் / சீக்ரெட் ஏஜென்ட் கதைக்கும் சுலபமாய்ப் பொருந்திடுபவை ! நமது எண்ணற்ற அட்டைகளுக்கு அவையே inspirations !
   காத்திருக்கும் காரிகன் ஸ்பெஷல் ராப்பருக்கும் கூட JB 007 தான் அடித்தளம் ! இதனில் ஒருபோதும் இரகசியங்கள் இருந்ததில்லையே - புதுசாய்க் கண்டறிந்து அவர் பறைசாற்றிட !

   டிசைன் templates மட்டுமென்றில்லை சார் - வர்ணச் சேர்க்கைகளிலுமே ஹாலிவுட்டின் inspirations நம்மிடம் அநேகம் ! ரிப் கிர்பியின் கலரிங் கூட ஒரு சமீபத்தைய மூவி போஸ்டரின் தழுவலே ! Never been secretive about these & never need to either !

   Delete
  3. //ரிப் கிர்பி வேறொரு நாயகர் அந்தஸ்தில் நிற்கிறார். அவரே கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் இந்த Format-ல் நாம் தலைக் காட்டுவோமென்று.//

   நானே ஒரு வருஷத்துக்கு முன்வரையிலும் நம்பியிருக்க மாட்டேனே சார் ! :-)

   Delete
 115. ஆசிரியர் சாருக்கு வணக்கம்!
  வேதாளன் ஸ்பெசல் மற்றும் ரிப் கிர்பி ஸ்பெசல்... சிறிய குறை என்னவெனில், கதை எண்கள் வரிசை மாறி வெளியிட்டது!
  வேதாளன் ஸ்பெசல் - கதை எண்கள் 106, 99, 104, 100, 101, 103, 97, 108, 98 என்ற வரிசையில் வெளியிடப்பட்டதை 97, 98, 99, 100, 101, 103, 104, 106, 108 என்ற வரிசையில் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
  ரிப் கிர்பி ஸ்பெசல் - கதை எண்கள் 82, 80, 84, 79, 78, 77, 85, 73 என்ற வரிசையில் வெளியிடப்பட்டதை 73, 77, 78, 79, 80, 82, 84, 85 என்ற வரிசையில் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இல்லை இப்படி கதை வரிசைகளை மாற்றி வெளியிடுவதற்கு எதேனும் காரணம் உள்ளதா?

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. கதைகளை ரெடி பண்ணி ; அவற்றின் பின்னணிகளையும் ரெடி பண்ணிய பின்னேயும் அவற்றை வரிசைக்கிரமமாய்ப் போடாது போயின் அதன் பின்னணியில் காரணம் எதேனும் இல்லாது போகுமா நண்பரே ? கதைகளை படித்த பிற்பாடு யோசியுங்களேன் - புரியாது போகாது !

   Delete
 116. Smashing 70's ரிப் ஸ்பெஷல் அருமை. புத்தகத்தின் ஆக்கம், அட்டைப்படம் கதைகள் எல்லாமே அருமை. 7 கதைகளை படித்து முடித்து விட்டேன். கடைசி கதை மட்டுமே பாக்கி. படித்த வரையில் மிக நன்றாக இருந்தது.

  வேதாளர் போல பக்கத்துக்கு 16 பேனல்கள் இல்லாமல் 12 பேனல்களாக இருப்பது பார்க்கவும் அழகாக இருக்கிறது. வசனங்களும் ஓவியங்களை மறைக்காமல் இருப்பதால் ரொம்பவே பிடித்திருந்தது.

  ரிப் அடித்தது சிக்ஸர் தான் இம்முறை. எனது மொத்த மதிப்பெண் 100/100.

  ReplyDelete
 117. My Answers

  1. அனைத்து Tex கதைகளையும் வாசித்துவிட்டேன்

  2. 12 ( Including Tex Classics)

  3. yes

  4. ஆல்பா - No, சிஸ்கோ - No, டேங்கோ - No, ரூபின் - Yes

  5. நான் எதிர்பார்த்த கேள்வி ( சுஸ்கி விஸ்கிக்கு நிறைய வாய்ப்பு கொடுங்கள், முன்பு மினி லயனில் வந்த சிந்துபாத், அலிபாபா வேண்டும், ஸ்மர்ப் மீண்டு வந்தால் சந்தோசம், எவ்வளவு புதுமுகங்கள் வந்தாலும் சந்தோசமே

  6. No

  7. இதுவே தொடரலாம்

  8. Three

  9. புயல் வேக இரட்டையர் ( ஜோ, சாண்டி)

  10. மறுபதிப்புகள் இல்லாத ஆண்டு நான் காமிக்சை புறக்கணித்த ஆண்டாக இருக்கும்

  11. A

  12. இன்னும் கூட்டலாம்

  ReplyDelete
 118. இன்று கொரியர் வந்துவிட்டது. ரிப் கிர்பி ஸ்பெஷல் மேக்கிங் சூப்பர். கடந்த சில மாதங்களாக படிக்க இயலாத புத்தகங்கள் நாளை முதல் reading Will Start.
  மகளின் தலைப்பிரசவத்திற்காக மனைவியை இன்று அதிகாலை திருவனந்தபுரத்தில் இருந்து அமெரிக்காவிற்கு விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு ரிடர்ன் to கரூர்.
  So, free to read all books from tomorrow.
  ரிப் கிர்பி Spl. box வண்ணத்தில் இல்லாதது சிறிது ஏமாற்றமே. அதிலும் படத்தின் மீதே கொரியர் Slip ஒட்டி வந்திருந்தது, பிரித்தெடுக்க சற்று சிரமமாகவே இருந்தது. மாண்ட்ரெக் Spl.box ஆவது வண்ணத்தில் வரவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Sorry sir ; கடந்த 2 மாதங்களின் பேப்பர் ; அட்டை ; தயாரிப்பின் உட்பொருட்களின் விலையேற்றம் கிறுகிறுக்கச் செய்து வருகின்றது ! வெளிப்பெட்டிகளை கலரில் செய்து வாங்குவது literally impossible !

   Delete