Powered By Blogger

Friday, April 01, 2022

ஏப்ரலின் புதுத் துவக்கம் !

 நண்பர்களே,

ஏப்ரலின் வணக்கங்கள் ! தகிக்கும் கோடைக்கு maybe நமது காமிக்ஸ் கூட்டணி சற்றே இதமளிக்குமா ? என்று பார்த்திட ஏதுவாய் நேற்றைக்கே கூரியர்களில் சந்தாப் பிரதிகள் கிளம்பிவிட்டன ! And இன்றைக்கு நமது ஏஜெண்ட்களுக்குமே பார்சல்கள் புறப்படவுள்ளன என்பதால் இந்த வாரயிறுதியினை  'பொம்ம புக்'  சகிதம் நகற்றிடலாமே folks ?! ஆன்லைனில் லிஸ்டிங்களும் போட்டாச்சு :

https://lion-muthucomics.com/latest-releases/942-april-pack-2022.html

https://lioncomics.in/product/april-pack-2022/

And இன்று முதலாக வாட்சப் வாயிலாகவும் நண்பர்களை எட்டிப் பிடிக்கும் முயற்சிகளுக்கொரு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறோம் ! புது இதழ்கள் சார்ந்த அறிவிப்புகளை,  சந்தாக்களுக்கு அப்பாலுள்ள பல நண்பர்களுக்கு இன்று 'ஏக் தம்'மில் அனுப்பியுள்ளோம் ! அவற்றுள் ஒரு குட்டியான சதவிகிதம் ஆர்டர்களாய் உருமாறினாலே கூட மகிழ்வோம் ! தவிர, 73737 19755 என்ற நமது அலுவலக எண்ணினை business account ஆக மாற்றியிருப்பதால் - அங்கேயே நமது ஒட்டுமொத்த புக்ஸ் லிஸ்டிங்களையும் Catalogue பகுதியினில் upload செய்திட முடிந்துள்ளது ! So அதனிலேயே புக்ஸைப் பார்த்துக் கொண்டு, வாட்சப்பில் ஆர்டர்களை அனுப்பிட செம சுளுவான வசதிகள் இருப்பதை பயன்படுத்திட முனைந்துள்ளோம் ! இதற்கென front office-ல் புதிதாய் ஒரு பெண்ணையும் நியமனம் செய்துள்ளோம் & இந்த ஒட்டு மொத்த ஆபரேஷன்களின் கதை-வசனம்-டைரெக்ஷன் ஜூனியர் எடிட்டரே ! 

நீங்களுமே நமது இந்த வாட்சப் business account நம்பரை (73737 19755) உங்களின் contacts பட்டியலில் இணைத்துக் கொள்ளலாமே folks ? 

ரொம்ப ரொம்ப முன்னாட்களது கோடைகளில் இது போலான கதம்பக் கூட்டணிகளில் ஸ்பெஷல் இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்ததை இன்று வரைக்கும் நாம் மறந்திருக்கவில்லை தான் ; and இந்த முத்து கோடை மலர் '22 அந்தப் precious பட்டியலுக்குள் இடம்பிடித்தால், இந்த ஐம்பதாம் ஆண்டினில் இது இன்னொரு memorable தருணமாகிடும் என்பேன் ! In particular, புது வரவான டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ரூபின் சார்ந்த உங்களின் அபிப்பிராயங்களை செம ஆவலாய்க் காத்திருப்போம் ! And இம்மாதத்து 'எலியப்பா' லவ்ஸில்  விழுந்து கலக்குவது ஒருபக்கமெனில், 'பொசுக்..பொசுக்'ன்னு முடிஞ்சிப்புடுதே !!'  என்ற உங்களின் விமர்சனங்களைத் தொடர்ந்து, சீனியர் எடிட்டர் இம்முறை 'அந்தியும் அழகே' பகுதியினை விசாலமாய் எழுதியுள்ளது ஒரு highlight ! நிஜத்தைச் சொல்வதானால், போன இதழினில் மணிரத்னம் பட டயலாக் பாணியில் தனது இலண்டன் விஜயத்தை சீனியர் முடித்திருந்ததை பார்த்த போது - இந்தத் தொடரை ஆறு மாதங்களுக்கு மேல் நீட்டிக்க வழியிராதோ ? என்ற பயம் தொற்றியிருந்தது எனக்கு ! கொஞ்சம் மசாலாவைக் கூட்டுறேன் ; இனிப்பைக் கூட்டுறேன்' என்று நான் லைட்டான ghost writing செய்திடக் கூட அவசியப்படுமோ ? என்றுமே யோசித்துக் கொண்டிருந்தேன் ! ஆனால் மண்டையை மறைத்தாலும், கொண்டையை மறைக்க இயலாதென்ற கதையாய், எனது எழுத்து பாணி நிச்சயமாய்க் காட்டிக் கொடுத்து விடுமென்ற பயத்தில் அந்த வேலையைச் செய்திருக்கவில்லை ! Anyways all's well now !

அப்புறம் ஆர்வமாய் நான் காத்திருக்கப் போவது ஜம்போவின் "உளவும்   கற்று மற" இதழிற்கான உங்களின் ரியாக்ஷன்களுக்கு !! கதையின் இறுதியினில் Mata Hari-யின் வாழ்க்கை பற்றி விக்கிப்பீடியாவும், இன்ன பிற தரவுகளும் சொல்லிய சேதிகளை இணைத்துள்ளேன் ! கதையைப் படித்த பிற்பாடு, அந்த real life facts களுக்குள் புகுந்தீர்களெனில், கதையின் பின்னணி இன்னும் ஒரு லெவல் தெளிவாய்ப் புரியும் என்பேன் ! And மு.ச. ; மூ.ச. பக்கமாய் என்னை எக்ஸ்கர்ஷன் அழைத்துப் போவதாக இருப்பினுமே, அதற்கு முன்பாய் இந்த real facts-களை சித்தே வாசிச்சுப் போட்டுடுங்கண்ணா !! 

Bye all....see you around ! Happy Reading !

WHATSAPP NUMBER : 73737 19755
237 comments:

 1. புத்தகங்கள் வந்தாச்சு. அட்டை ரசிக்கும் படலம் ஆரம்பம்.

  ReplyDelete
 2. // மு.ச. ; மூ.ச. பக்கமாய் என்னை எக்ஸ்கர்ஷன் அழைத்துப் போவதாக இருப்பினுமே, // கண்டிப்பாக அழைத்து போவோம் சார். ஹிஹிஹி

  ReplyDelete
 3. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 4. வாங்க வாங்க...

  இளநீ நுங்கு ...

  ReplyDelete
 5. பார்சல் வந்தாச்சு சார்...


  ஆனால் மாலை தான் கைப்பற்ற முடியும் ...:-)

  ReplyDelete
 6. பொட்டி வந்துடுச்சேய்.....

  ReplyDelete
 7. Books received ...summer special rocks.

  ReplyDelete
 8. கூரியர் அண்ணாச்சி பத்து மணிக்கே வந்து விட்டார். பார்சல் வாங்கி பிரிதாகிவிட்டது. நான் குழந்தை அதனால் எலியப்பாவை படித்து முடித்துள்ளேன். அடுத்து மாட்டா ஹாரி.
  மாட்டா ஹாரியின் அட்டைப்படம் சும்மா அள்ளுகிறது.

  ReplyDelete
 9. எலியப்பா வழக்கம் போல not disappointing... கானக கூத்துகள் simply awesome.. சீனியர் எடிட்டரின் அந்தியும் அழகே ஒரு வரலாற்று ஆவணம்... அடுத்து டெக்ஸா ரூபினான்னு யோசிச்சுகிட்டு உக்காந்துகிட்டு இருக்கேன்...

  ReplyDelete
 10. கோடைமலர் பார்சலைக் கைப்பற்றியாச்சே....

  கோடைகொண்டாட்டம் ஆரம்பம்...

  ReplyDelete
 11. வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 12. ஹைய்யா!! கோடை மலர்!!!!! :)

  ReplyDelete
 13. // front office-ல் புதிதாய் ஒரு பெண்ணையும் நியமனம் செய்துள்ளோம் & இந்த ஒட்டு மொத்த ஆபரேஷன்களின் கதை-வசனம்-டைரெக்ஷன் ஜூனியர் எடிட்டரே ! //

  Good move and good job Vikram!

  ReplyDelete
 14. // சந்தாக்களுக்கு அப்பாலுள்ள பல நண்பர்களுக்கு இன்று 'ஏக் தம்'மில் அனுப்பியுள்ளோம் ! //

  I got the updates in my number :-)

  ReplyDelete
 15. நண்பர்களுக்கு வணக்கம்.

  எனக்கு எல்லாம் கூரியர் மதியம் 2 மணிக்கு தான் வந்தது.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு எப்போதுமே அந்த நேரம் தான் வரும் சார்.

   Delete
 16. புது டிஜிட்டல் வழி முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. பொட்டி வந்தாச்சு. 😍😍😍😍

  ReplyDelete
 18. சிகாகோவின் சாம்ராட்...

  அதகளம்.. நிமிடங்கள் பறந்தன.. மொத்தம் 35 நிமிடங்கள்... ஓவியங்கள் பிரமிப்பூட்டுகின்றன... அதுவும் அந்த சிகாகோ புகைவண்டி நிலையத்தில் எவ்வளவு detail கள்...

  ReplyDelete
  Replies
  1. ஹலோ இங்கு இன்னும் டீ வரவில்லை! அதற்குள்ள நீங்கள் பண்ணை பற்றி பேச ஆரம்பித்து விட்டீர்கள் :-)

   Delete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. இளம் குட்டி சுட்டி வாசக தேவதைகளை வரவேற்கிறேன்!

  So So Cute!

  ReplyDelete
 21. //And இன்று முதலாக வாட்சப் வாயிலாகவும் நண்பர்களை எட்டிப் பிடிக்கும் முயற்சிகளுக்கொரு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறோம் ! புது இதழ்கள் சார்ந்த அறிவிப்புகளை, சந்தாக்களுக்கு அப்பாலுள்ள பல நண்பர்களுக்கு இன்று 'ஏக் தம்'மில் அனுப்பியுள்ளோம் ! அவற்றுள் ஒரு குட்டியான சதவிகிதம் ஆர்டர்களாய் உருமாறினாலே கூட மகிழ்வோம் ! தவிர, 73737 19755 என்ற நமது அலுவலக எண்ணினை business account ஆக மாற்றியிருப்பதால் - அங்கேயே நமது ஒட்டுமொத்த புக்ஸ் லிஸ்டிங்களையும் Catalogue பகுதியினில் upload செய்திட முடிந்துள்ளது ! So அதனிலேயே புக்ஸைப் பார்த்துக் கொண்டு, வாட்சப்பில் ஆர்டர்களை அனுப்பிட செம சுளுவான வசதிகள் இருப்பதை பயன்படுத்திட முனைந்துள்ளோம் ! இதற்கென front office-ல் புதிதாய் ஒரு பெண்ணையும் நியமனம் செய்துள்ளோம் & இந்த ஒட்டு மொத்த ஆபரேஷன்களின் கதை-வசனம்-டைரெக்ஷன் ஜூனியர் எடிட்டரே ! //

  நல்லது ஆசிரியரே
  மொபைல் ஆடர்ஸ்க்கு மிக பயனுள்ளதாக இருக்கும்

  ReplyDelete

 22. கோடைமலர் என்றாலே கொண்டாட்டம்
  ஏன்???

  #லயன்காமிக்ஸ் கோடைமலர்கள்,

  #முத்துவில் சம்மர் ஸ்பெசல்கள்,

  #திகிலில் கோடை மலர்கள்,

  #மினிலயன் சம்மர் ஸ்பெசல்கள்

  ----இப்படி நான்கு வகையான கோடைமலர்கள் வந்திருந்தாலும் லயன் கோடைமலர்கள் பட்டையை கிளப்பின. ஏன்??? ஏன்???ஏன்???

  *கோடைமலர்கள் என்றாலே கொண்டாட்டம் எனும்போது, அதை அதிகப்படுத்துவது லயன் கோடைமலர்கள் தானே...!!!

  """யோவ்,அதான் எங்களுக்கே தெரியுமே நீ என்னய்யா சொல்ற???""-னு நீங்கள் கேட்பது தெரிகிறது நண்பர்களே!!!

  #முத்து, திகில், மினிலயன்- கோடைமலர்கள் எல்லாமே அவ்வப்போது வரும் ஞாயிறு & இரண்டு நாள்-மூன்று நாள் வரும் பண்டிகை விடுமுறைகள் போன்றது. ஆனா,

  """"லயன் கோடைமலர்கள் என்பவை ஏப்ரல்-மே மாதம் வரும் கோடை விடுமுறைகள் போன்றது; கோடைவிடுமுறை என்றாலே கிடைக்கும் குதூகலத்தை நினைத்து பாருங்கள் நட்பூஸ்...இரு மாதங்கள் விடுமுறை; அவருவர்க்கு பிடித்த தாத்தா,பாட்டி, மாமா வீடுகள், ஊர் சுற்றல்கள், பல்வேறு சுற்றிலாக்கள் என ஆடித்தள்ளுனோறோமே.... அதே கொண்டாட்டம் தான் லயன் கோடை மலரை கையில் ஏந்தும் போதும்....."""

  *லயன் கோடைமலர்களும் பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு கோடையிலும் அசத்தின. கோடைமலர், சம்மர் ஸ்பெசல், ஹாலிடே ஸ்பெஷல், சென்சுவரி ஸ்பெசல், Top10 ஸ்பெசல், ட்ரீம் ஸ்பெசல், ஜாலி ஸ்பெஷல், கெளபாய் ஸ்பெசல் என்பன அவ்வப்போது காலத்திற்கும், சாதனை மைல்களின் போதும் சூட்டி, நம்மை மகிழ்வித்து- எடிட்டர் சாரும் மகிழ்ந்தவை

  *சதி வலை-1985
  *கோடைமலர்-1986
  *கோடைமலர்-1987
  *ட்ராகன் நகரம்-1988
  *வைக்கிங் தீவு மர்மம்-1989
  *திக்குத் தெரியாத தீவில்-1990
  *லயன் ஹாலிடே ஸ்பெஷல்-1992
  *இரத்த வெறியர்கள்-1993
  *லயன் சென்சுவரி ஸ்பெசல்-1994
  *லயன் Top10 ஸ்பெசல்-1995
  *மரணமுள்-1996
  *கார்சனின் கடந்த காலம்1&2-1997
  *மந்திர மண்டலம்-1999
  *இருளின் மைந்தர்கள்-2003
  *மெகா ட்ரீம் ஸ்பெசல்-2004
  *லயன் ஜாலி ஸ்பெஷல்-2005
  *லயன் கெளபாய் ஸ்பெசல்-2006

  ---இவைகள் 2012 கம்பேக்கிற்கு முன்பான கோடைமலர்கள்..

  லயன்-முத்து இணைந்த கம்பேக்கிற்கு பிறகு ஏப்ரல்-மாதங்களில் தடிதடியான குண்டுபுக்குள் வெளியானாலும் கோடைமலர் என்ற பெயரில் வெளியாகாமல் இருந்தன.... அந்த குறையை எல்லாம்,

  ----லயன்-முத்து கோடைமலர்-2018,

  """"டியூராங்கோவின்---"மொளனமாயொரு இடிமுழக்கம்"""
  ---போக்கியது....

  தொடர்ந்தன கோடைமலர்கள்,

  லயன்-முத்து கோடைமலர்-2019-வதம் செய்ய விரும்பு

  லயன்-முத்து கோடைமலர்-2021-ரெளத்திரம் கைவிடேல்

  *இந்தாண்டு முத்து 50ன் ஓரு பகுதியாக இன்று வெளியான "முத்து கோடைமலர்" யை கையில் ஏந்துகையில் குதூகலிக்கிறது மனசு.... கோடை கொண்டாட்டங்கள் ஆரம்பம்....😍😍😍😍😍

  இந்த லிங்கில் லயன், முத்து முந்தைய கோடைமலர்களை நினைவு படுத்திக்கலாம்...

  https://www.facebook.com/100036515580386/posts/654918249068689/

  ReplyDelete
  Replies
  1. அப்ப மீதி கோடைமலர்லாம் எனக்கு அனுப்பி விடுய்யா...க்ளா...😍😍😍😍

   Delete
  2. Was it 86 or 87 where Lion and Dhigil both had Kodai Malars - Dhigil had Batman Introduction - amazing year that was - about 10 stories across the two books for 10 rupees. Must be 86 as for 87 Deepavali I fondly remember Lion Super Special - again with Batman story and that color Lucky Luke !

   Unbelievable that 36 years have flown by !!

   Delete
  3. //கோடை மலர்னா 86...87... மட்டுந்தா....அந்தக் கதம்பகாலம் காலம்...அடேயப்பா//
   உண்மை தான் பொன்ராஜ் சகோ.., அதே உணர்வு தான் எனக்கும்.
   8, 6 கதை கதம்பம்... லயன் ஹாலிடே ஸ்பெசல் கூட இதில் சேர்த்துக்கலாம். அட்டைப்படம் வேறு லெவல்... குறிப்பாக 1986 கோடைமலர்...

   Delete
 23. கோடைமலர் அட்டகாசமான மேக்கிங் சார்...

  சுடசுடச்சுட டை வாசனையை தாங்கி வந்துள்ளது.....

  முத்து கோடைமலர்- முத்து காமிக்ஸ் பழைய வாசகர்கள் இடையே ஏற்படுத்தப்போகும் உவகையை நேரில் காண இயன்றால் எப்படி இருக்கும்?????

  முதல் புரட்டலில் நிறைய எழுத்துக்கள் தென்படுகின்றன.... கிட்டத்தட்ட காமிக்ஸ்-நாவல் போல தெறிகிறது....

  கோடைமலர் முன் அட்டையைவிட பின்அட்டை பிரமாதம்....

  ஹார்ட் பவுண்ட் இருந்து இருந்தால் வேறலெவல் என நினைக்க தோன்றும் எண்ணத்தை சொல்லாமல் இருக்க இயலவில்லை சார்...

  முத்து கோடைமலர் பார்த்துட்டு சீனியர் சார் என்ன சொன்னார்கள் என்பதை அறிய ஆவல்.....

  ReplyDelete
 24. தல கையில் எடுக்கும்போதே சிலிர்ப்பு ஓடுது....சிக்கென சின்ன ஸைஸ்.... பார்க்கும் பொதே ஓவியங்கள் தெறிக்க விடுகின்றன....

  டெக்ஸ்ம், கார்சனும் தோட்டா தெறிக்க விடும், வேளையில் ரெபெட்டோ தன் தூறிகையை தெறிக்க விட்டுள்ளார்...

  ReplyDelete
 25. அட்டைபடத்திலயே அள்ளிக்கொள்கிறாள் மட்டா ஹாரி...

  நேரில் புத்தகத்தில் அதகளப்படுத்துகிறது அட்டை...

  பின்அட்டையும் வித்தியாசமான பாணி....

  ஓவிய பாணி வித்தியாசமான ஒன்றாக செமையாக கவருகிறது சார்...


  ஓவியங்களிம் கூடத்தான்....ஹி..ஹி...

  இதான் நிஜமான கோடைமலர் போல இருக்கிறது....😍😉


  ஜம்போ சீசன் 4ன் 5வது இதழ் இது வெளியீடு எண்24 வரை கவர்செய்திட்டது..

  சீசன் 4ன் கடைசி இதழின் வெளியீடு எண் ஆக, ஸ்கிப் ஆன 19 ஐ கொடுத்து விட்டீர்கள் எனில் கணக்கு சரியாகிடும் சார்...

  ReplyDelete
 26. Dear Editor,
  Whether TEX Classic -2 send Or not?

  ReplyDelete
 27. புத்தம் புது பூமி வேண்டும் வசனங்களை பத்தி சொல்லியே தீரணும். நிறைய இடங்களில் சிரிச்சு மாளலை. ஸ்விம் க்ளாஸ்ல வெயிட்டிங் ஏரியால உக்காந்து லூசு மாதிரி சிரிச்சுட்டு படிச்சிட்டிருந்த என்னைப் பாத்து நல்லவேளை யாரும் 911 க்கு போன் பண்ணலை.

  2 நாள்ல முழி பிதுங்க மொழி பேத்தவருக்கு 💐💐💐💐💐💐

  ReplyDelete
 28. Edi Sir..
  April வணக்கங்கள்.. இந்த நிதி ஆண்டு உங்களுக்கு எல்லா நலத்தையும், நல்ல வளத்தையும் தர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்..

  ReplyDelete
 29. இன்று காலை 09.00 மணிக்கே கூரியரில் இருந்து அழைப்பு,இஸ்கூலுக்கு போற வழியாண்ட அப்படியே புக்கை கொத்திகிட்டு போயாச்சி...
  இந்த வார இறுதி காமிக்ஸுடன் கொண்டாட்டம்...

  ReplyDelete
 30. கோடை மலர் 300/- இதழ் என்ன இளைத்த மாதிரி இருக்கேன்னு ஓப்பன் பண்ணா கலரில் தகதக...
  நம்ம பேவரட் ரிப்போர்ட்டருடன்...
  உளவும் கற்று மற வழக்கமான அட்டைப்படத்தில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக...
  சிகாகோவின் சாம்ராட் தல கலக்கலாய்,உள்ளே எழுத்துருக்கள் கொஞ்சம் வித்தியாசமாய் இருப்பது போல் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ?!

  ReplyDelete
 31. சிகாகோவின் சாம்ராட் :
  செல்வாக்குமிக்க வில்லன்,கொட்டத்தை அடக்கும் தல,வழக்கமான நேர்கோட்டுக் கதை,சில பக்கத்துக்குள்ளேயே மெயின் வில்லன் யார்னு தெரிஞ்சிடுது,வழக்கமா அட்ராசிட்டி பண்ணும் வில்லன் மற்றும் அல்லக்கை கோஷ்டிகள்னு நகர்ந்தாலும், நேர்த்தியான வசனங்கள் கதையை சற்றே தூக்கிப் பிடிக்கிறது..
  போதாக் குறைக்கு கீர்த்திமிக்க டெக்ஸ்,கார்ஸனின் ஆக்‌ஷன் தோரணங்கள், கதைக்களம் களைக்கட்ட இது போதாதா என்ன ?!

  "மன்னர்களுக்குமே அவ்வப்போது மறை கழன்று போவதுண்டு,கழன்று போகும்போது மண்ணைக் கவ்வாது போக மாட்டார்கள்"

  "யாராவது கெலிக்க வேண்டுமெனில்,யாராவது தோற்றேயாக வேண்டும்"

  "கால்நடைகளைக் குதற பின் தொடரும் நரிகளுமே தடங்களை விட்டுச் செல்லும்போது நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா" ?!

  "சில நேரங்களில் உயரங்கள் ஆபத்தானவைகளே விழுந்தால் எதுவும் மிஞ்சாது"
  -அடடா அசத்தல் வசனங்கள்...

  "பன்றி குட்டியெல்லாம் தத்துவம் பேசுகிறதே ஆண்டவரே " - கார்ஸன் பன்ச் செம காமெடி...

  குறைகள்,

  ஓவிய பாணிகள் சில இடங்களில் தெளிவாகவும்,சில இடங்களில் தெளிவின்றி இருப்பது போலவும் தோன்றியது,உதாரணமாக டெக்ஸின் முகம்-93 ஆம் பக்கத்தில் கொஞ்சம் முரடாகவும்,94 ஆம் பக்கத்தில் தெளிவாகவும் இருப்பதாய் தோன்றியது...

  55 ஆம் பக்கத்தில் வரும் வசனங்கள் சற்றே பொருந்தா தோற்றத்தை ஏற்படுத்தியது...

  ஆங்காங்கே தட்டுப்படும் எழுத்துப் பிழைகள் சற்றே உறுத்தல்...

  -இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் எல்லாத்தையும் மீறி தல சாகஸம் நம்மை உள்ளே ஈர்க்கிறது...

  இலகுரக வாசிப்பில் கதை போன வேகமே தெரியலை,சட்டுனு முடிஞ்சிடுச்சி,தல கதைகளின் மற்றுமொரு பலம் இது...

  எமது மதிப்பெண்கள்-08/10.

  ReplyDelete
  Replies
  1. 93 ஆம் பக்கம் வரை ஒரு ஓவியரும் 94 க்கு பிறகு வேறு ஒரு ஓவியம் போல் காட்சி அளிக்கிறது.

   Delete
 32. நேற்று மாலை அலுவலகம் முடிந்து வந்தவுடன் பொக்கிஷ பார்சலை தான் தேடியது மனம்...பின் பார்சலை திறந்து ஒவ்வொரு இதழாக எடுத்து பிரித்து ஒவ்வொரு பக்கமாக ரசிக்கும் அனுபவம் .அனைத்து இதழ்களின் அட்டைப்படமும் மிக அருமை ..என்ன ஒன்று முத்து கோடை மலர் இதழின் அட்டைப்படத்தில் ஜானியை இடம் பெற வைத்து இருந்தால் இன்னும் கலக்கலாக அமைந்து இருக்குமோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை...மற்றபடி டெக்ஸ் அட்டைப்படம் ,உளவும் கற்று மற அட்டைப்படம் இரண்டும் கண்களுக்கு செம விருந்தாக அமைந்து இருந்தது.


  முதலில் வழக்கம் போல் படிக்க ஆரம்பித்தது எனது சிறுவயதுக்கேற்ற எலியப்பா தான் ..போன முறை கொஞ்சம் சோர்ந்து போனது போல இருந்த எலியப்ப இந்த முறை அதற்கும் சேர்த்து சுறுசுறுப்பாக ரசிக்க வைத்து விட்டார்...அனைத்து கதைகளும் அருமை..மற்றும் சீனியர் எடியின் கட்டுரை இந்த முறை தான் முழுவதுமாக படித்த ஓர் அனுபவம்..வெகு சிறப்பு . சீனியரின் தொடருக்கு இதே போல் பக்கங்களை அளித்து வாருங்கள் சார்..கட்டுரையும் இப்பொழுது சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது..

  இனி இன்று ஒவ்வொரு இதழ்களையும் படிக்க ஆரம்பிக்க வேண்டியது தான்..

  ReplyDelete
  Replies
  1. பார்த்து தலைவரே நீங்கள் சிறுவயது என்று மாட்டாவை படிக்க கூடாது என வீட்டில் சொல்லி விடப்போகிறார்கள் :-)

   Delete
  2. அம்மணியை படிக்கும் பொழுது குளிர்ச்சி கண்ணாடியை அணிந்து கொண்டு பெரியவனாகி விடுவேன் பரணீ சார்...:-)

   Delete
  3. //
   குளிர்ச்சி கண்ணாடியை அணிந்து கொண்டு பெரியவனாகி விடுவேன் //

   எப்பூடி தலைவரே செம ஐடியா:-)

   ஓகோ இது மரு ஒட்டி வைத்து மாறுவேடம் போடுவது போல் :-)

   Delete
 33. Edi Sir..
  முதலில் எலியப்பா.. அப்புறம் மத்ததப்பா..என்று முதலில் எலியப்பரை படித்தேன்.. சிரித்தேன்.. ரசித்தேன்.. வீடு கிளினீங்கின்போது செய்யும் அட்டகாசம் அருமை. சீனியரின் நினைவலைகள் கூடுதல் பக்கங்களில் மலைக்க வைக்கிறது.
  ச்சும்மா எழுப்பபடவில்லை காமிக்ஸ் சாம்ராஜ்யம் என்பதை புரிய வைக்கிறது. கானக கலாட்டா கூடுதல் பக்கம்- கூடுதல் மகிழ்ச்சி.

  Tex-சிகாகோ சாம்ராட்- வழக்கம்போல அதகளம். பஞ்ச் வசனங்கள் சிறப்பு.

  மாட்டாஹறி.. வெயிட்டிங் for reading.

  ReplyDelete
 34. நேற்று கொரியர் அலுவலகம் போய் விசாரித்த போது எனது புத்தகங்கள் பெங்களூரில் வேறு ஒரு பிராஞ்சில் உள்ளது இவர்கள் பிராஞ்ச்க்கு திங்கள்கிழமை தான் வரும் என்றார்கள்: இன்று அவர்களுக்கு லோக்கல் விடுமுறை நாளை வார விடுமுறை.

  காத்திருக்கிறேன்:-)

  ReplyDelete
 35. Sir,

  PORMUNAIYIL DEVATHAIGAL is not listed in whatsapp - can you please check? I have sent queries for the pricing of two books - POR MUNAIYIL DEVATHAIGAL + ULAVUM KATRU MARA !

  ReplyDelete
 36. சார் இன்று பதிவுக் கிழமை...

  ReplyDelete
 37. ரெகுலர் கதைதான் .. பட் கார்சன் / டெக்ஸ் இடையே நிறைய நக்கல் நையாண்டிகள் + சித்திரம் .. கொஞ்சம் பற பற ன்னு உடனே படிக்கனும்ன்னு நினைக்க வைக்கிற சில இடங்கள் .. கலக்கலா போகுது.. சிகாகோவின் சாம்ராட் .. முடிவுதான்
  வேற மாதிரி ஆகிட்டு மற்றபடி இதழ் பட்டாஸ் ( என் வரையில் 08/10 .. பத்துக்கு எட்டு .. )

  ReplyDelete
 38. காட்டேரி கூட்டம்...

  தனது அக்மார்க் கதைக்களத்துடன் சூப்பர் ரிப்போர்ட்டர் ஜானி அசத்திவிட்டார். பழைய திகில் காமிக்ஸ் படிப்பது போன்றே கோடை மலர் அமைந்தது. அழகான சித்திரங்களும், நேர்த்தியான வண்ணக்கலவையும் அச்சும் கண்களுக்கு விருந்து படைக்கிறது... இந்த சஸ்பென்ஸ்(??? எதிரியை யூகிக்க முடிவது ஏனோ) கதையில் இடியாப்ப சிக்கல் மொழிப்பெயர்ப்பு பிரச்சனைகள் புரிகிறது... இல்லாவிட்டால் இன்னுமொரு ஜானி ஸ்லாட் கொடுக்கலாம்.

  முன் அட்டையில் ஜானி நிராகரிக்கப்பட்டிருப்பது பெரும் குறை.

  எனது ரேட்டிங் 4/5

  ReplyDelete
 39. எலியப்பா- ஓ.கே ரகம். சீனியர் எடிட்டரின் அனுபவங்கள் அருமை.

  ReplyDelete
 40. மாட்டா ஹாரி- கதையல்ல கட்டுரை.
  ஒட்டவோ, ஒன்றவோ முடியவில்லை

  ReplyDelete
  Replies
  1. அட! நான் வளவளன்னு எழுத நினச்சத ரெண்டே வரில நச்னு எழுதிட்டீங்க..

   திருவள்ளுவர்ங்க நீங்க..   Delete
  2. திருவள்ளுவரேதான் - இப்போ பாருங்க - அவரோட எழுத்துக்களையே கொஞ்சம் மாற்றினால் :


   கதையில்லை ஓட்டவோ ஒன்றவோ கட்டுரை
   முடியவில்லை மாட்டா-ஹரி

   ;-)

   Delete
  3. ராகவன், எப்படி இப்படி:-)

   Delete
  4. கதையில்லை ஓட்டவோ ஒன்றவோ கட்டுரை
   முடியவில்லை மாட்டா-ஹரி./

   ராகவன்@ :-)))

   Delete
 41. எடிட்டர் சார்

  ஏப்ரல் 14, 15 லீவு நாட்கள் சார் - புத்தாண்டு மற்றும் புனித வெள்ளியின் பொருட்டு - ஏப்ரல் 12ம் தேதி tex புத்தகம் கிளம்பினால் 4 நாட்கள் விடுமுறைக்கு நன்றாக இருக்கும் சார். பார்த்து செய்யுங்கள் சார்.

  ReplyDelete
 42. First whatsapp catalog order successfully placed for 2 jumbo books sir - I would request you to enable whatsapp payment to the same bank where you have other remittance options AND integrate payment with catalog and an indication to office members so that no manual intervention is required.

  ReplyDelete
 43. சி.சாம்ராட்..

  எப்பொழுதும் டெக்ஸ் இதழை இறுதியாக படித்து ரசிப்பதை இந்த முறை மாற்றியாகி விட்டது.காரணம் மற்ற இதழ்களை ஒப்பிடும் பொழுது டெக்ஸ் இந்த முறை கடுகாக தெரிகிறார்...எனவே முதலில் கடுகை ருசி பார்த்து விடலாம் என முதலில் படிக்க ஆரம்பித்தது டெக்ஸ் சாகஸமே ..அட்டைப்படமும் சரி உட்பக்க சித்திரங்களும் சரி மிக சிறப்பு ..கதை வழக்கம் போலவே டெக்ஸ்ன் அதிரடி சரவெடியாக பட்டாஸாய் சென்றது .என்ன ஒன்று சில மாதங்களாக கொஞ்சம் பெரிய டெக்ஸ் சாகஸத்தை படித்து விட்டு இந்த முறை நூறு பக்க டெக்ஸை படிக்கும் பொழுது ருசி சிறப்பாக இருந்தாலும் பசி அடங்க வில்லை என்பதை போல ஓர் உணர்வு..

  மற்றபடி டெக்ஸ் டெக்ஸ் தான் என்று நீரூபித்த மற்றொரு சாகஸம் இந்த சி.சாம்ராட்..

  ReplyDelete
  Replies
  1. அதுக்குதான் தலீவரே அடுத்த tex வந்த உடன் சேர்ந்து படிக்க போறேன் :-)

   Delete
  2. ஆகா ...இது பெரிய அகுடியாவா இருக்கே சார்...:-))))

   Delete
 44. சிகாகோவின் சாம்ராட்...
  டெக்ஸ் மற்றும் கார்சன் தெறிக்க விட்டுள்ளனர்.
  கடுகு சிறுத்தாலும், காரம் குறையவில்லை...

  ReplyDelete
 45. மாட்டாவின்

  உளவும் கற்று மற ..

  சில இதழ்களை பற்றி விமர்சனம் எழுத தயக்கம் வரும் இந்த கதை பிடிக்க வில்லை எனக்கூற..ஆனால் பிடிக்க வில்லை என்பதை ஆசரியருக்கு தெரிவித்தால் தானே அதை அவரும் அறிந்து அடுத்த முறை அதனை நிவர்த்தி செய்வார் ..அந்த மனநிலை தான் இப்பொழுது உளவும் கற்று மற கதையில்.

  உளவும் கற்று மற நானோ மாட்டாவை மறக்க நினைக்கிறேன்

  மாடஸ்தியை ரசிக்கா ரவிக்கண்ணன் ,கொம்பர் எனும் சுசீ போன்றோர்கள் மாட்டாவை படித்தவுடன் மாடஸ்திக்கு ரசிகர் ஆனாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை ..

  சாரி சார்...

  ReplyDelete
  Replies
  1. இது என்னுடைய ரசிப்பு கருத்து மட்டுமே ..!

   Delete
  2. // ரசிப்பு கருத்து மட்டுமே ..! //

   ஓகோ படத்தை மட்டும் ரசித்து விட்டு போட்ட விமர்சனமாக்கும் :-) கதையை படித்து சீக்கிரம் விமர்சனம் போடுங்க தலைவரே :-)

   Delete
  3. //சில இதழ்களை பற்றி விமர்சனம் எழுத தயக்கம் வரும் இந்த கதை பிடிக்க வில்லை எனக்கூற..ஆனால் பிடிக்க வில்லை என்பதை ஆசரியருக்கு தெரிவித்தால் தானே அதை அவரும் அறிந்து அடுத்த முறை அதனை நிவர்த்தி செய்வார் ..அந்த மனநிலை தான் இப்பொழுது உளவும் கற்று மற கதையில் //

   இதைவிட நயமாக சொல்லமுடியாது..

   செம தலீவரே!

   Delete
 46. Tex : முழுக்கதையும் பின் அட்டையில் நாலே வரில போட்டுடட்டு மேற்கொண்டு புக்க படிக்க சொல்ற கெத்து Tex கதைகளுக்கு மட்டுமே சாத்தியம், கதையும் ஓவியங்களும் Top. Short and crisp treat.

  Note : வழக்கமா வில்ல்ன்கள் எல்லாம் Tex பேரக்கேட்டாலே அலறுவாங்க ...இந்தக் கதையில வித்தியாசமா கா....ர்...ச..னா அவர் பயங்கரமான ஆளாச்சே அலர்றது புதுசு.

  ReplyDelete
 47. கோடைமலர் :

  டிடெக்டிவ் ரூபின்: புதுசா வந்த அம்மணி சூப்பர் ...அட்டகாசமான க்ரைம் கதை ...மேரி கேரிசன் ( பெயர் சரியா ஞாபகம் வரலை ..Correct me if im wrong) அப்புறம் இந்த சிறந்த சிறந்த புது வரவு.

  Chick bill and jhonny : இரண்டு கதைகளுமே அட்டகாசம் ... you have a delivered a best summer special once again.

  மாத்தம்மா பாட்டி ...ஆங்ங் ...சொல்றதுக்கு ஓன்னுமில்லை.

  ReplyDelete
 48. Edi sir..
  Wow..😃 what a speed..👍
  *உளவும் கற்று மற*.. நேத்துதான் பணம் அனுப்பினேன். இன்னைக்கு கைக்கு கிடைச்சிடுச்சு..🤝👍சூப்பர் Sir.. Thanks ..🥰💐

  ReplyDelete
 49. @ ALL : டெக்ஸ் க்ளாசிக்ஸ் 2 - "பனிக்கடல் படலம்" பிழைதிருத்தத்துக்கு ரெடியாய்க் காத்துள்ளது guys ! பொறுமை + அவகாசம் + தமிழினில் ஆர்வம் இருக்கும் நண்பர்கள் கை தூக்குங்கள் ப்ளீஸ் ! நாங்கள் சொதப்பும் அளவிற்கு அல்லாத proof readers எனில் தேவலாம் !!

  ReplyDelete
  Replies
  1. நான் செய்ய விரும்புகிறேன்

   Delete
  2. செய்து தருகிறேன் ஸார்

   Delete
  3. நானுமே தயார் தான் சாரே😌🤗

   Delete
  4. நானும் தயார் ஆசானே..
   மு.பாபு..
   babu.gangavalli@gmail.com

   Delete
 50. இந்த மாதப் புத்தகங்கள் அனைத்தும் அட்டகாசத் தரத்தில் மின்னும் வண்ணக் கலவையில் மிளிர்கின்றன.மிரட்டும் தயாரிப்புத்தரம். எழுத்துக்கள் கொஞ்சம் பெரிதாகத் தெரிவது எனக்கு மட்டுந்தானா ?

  லயன் கிளாஸிக் 2யும் ரிப் கிர்பியையும் காணும் ஆவல் பொங்கித் ததும்புகிறது.

  ReplyDelete
 51. பார்சலை அரக்கப்பரக்க கிழிக்க...தளும்பி நிக்குது மாட்டா ஹாரி அட்டைப்படம்....என்னா அழகு ...அன்றய லண்டன் வாசிகளும்...துப்பாக்கியை துடைப்பவரும்....அந்த நாயகியும் இது ஓவியந்தான் என அடித்துக் கூவ...உள்பக்கங்கள் அசத்த இரண்டு பக்கங்களுக்குள் நுழைய துவக்கமே ஈர்ப்பாய்....இதைத்தான் முதலில் புரட்டிப் போகிறேன்....டெக்சின் அட்டைப் படமோ வேற லெவல்..முதன்முறையாக சிக்கென பக்கத்தில் சிக்கென ஜொலிப்பதாய் தோன்றுவது எனக்கு மட்டும்தானா ..உட்பக்கமோ என்பதுகளுக்குள் இழுக்க மீறிய உற்சாக லெவல்....எலியப்பா நீலவண்ணத்துல அசத்த....நிக்க...எலியப்பா அட்டைப் படங்கள் மஞ்சள் ,நீலம்னு ஒரே நிறந்தானோ....சூப்பர்....கோடை மலர் அட்டைப்படமும் அருமை....முரட்டுக் போது ஏதோ உள்ளே இருப்பது போல் முன்கை தட்டுப்பட ...துழாவினான் இல்லை....ஓவியம் இது வரை காணா வித்தியாச ஸ்டைல்...வண்ணங்களும் அருமை ...ஜானியும் வண்ணத்தில் வாரியிழுக்க...ஏனோ தெரியலை கிட் உடனை படிக்கச் சொல்லித் தூண்ட....மார்த்தாவை மாறிப் பார்த்து புரட்ட ஓடுறேன்

  ReplyDelete
  Replies
  1. அடுத்தமாதம் இரண்டே கதைகள்...ரிப்பு அவ்வளவா கவர்ந்ததில்லை...இப்ப எப்படி இருக்குன்னு பார்ப்போமே...நீங்க சொன்னாலும் ஆவல் கூட...சுஸ்கி விஸ்கி விளம்பரத்தால் என்ன அழகு...நண்பர் பழனிவேல் ...என்ன சொல்லன்னு தெரியல....இரத்தப்படலம்னா உன் ஞாபகம் தான் நண்பா....அதே படலம் எனக்கும் தலையில் என ஈஎஸ்ஐயில் கூறிச் சிரித்தது நினைவில்....காத்திரு நண்பா நாங்களும் வரும்வரை

   Delete
 52. இதுவரை வந்த மார்தா ரிப்போர்ட் சரியில்லை போல தெரிகிறது:-)

  ReplyDelete
 53. டிடெக்டிவ் ரூபினின்

  தொட்டால் தெறிக்கும்...

  ஒரு நாயகி ஏமாற்றியதற்கு இந்த நாயகி பட்டையை கிளப்பி விட்டார்..அட்டகாச ஆக்‌ஷன் ,எள்ளல் கிண்டல் தொனியில் அசராத பாணி ,துப்பறியும் அட்டகாச பாணி என முத்து கோடை மலரின் முதல் சாகஸ நாயகி ரூபின் அசத்தி விட்டார்..முதல்பக்கத்தில் ஆரம்பித்த விறுவிறுப்பு கதை முடியும்வரை குறையவே இல்லை...இவரின் இந்த கார்ட்டூன் சித்திரபாணி மட்டும் மாடஸ்தி போன்று நிஜ சித்திரப்பாணியாக இருந்திருப்பின் இவர் லேடி 007 ஆக இருந்து இருப்பார்..ஆனாலும் எந்த நெருடலும் இன்றி அட்டகாசமாய் தெறிக்க வைத்து விட்டது தொட்டால் தெறிக்கும்..


  இவரின் அடுத்த சாகஸத்தை மிக ஆவலுடனே காண காத்திருக்கிறேன்..

  ReplyDelete
 54. உளவும் கற்று மற:

  உளவை கற்காமலே மறந்திருக்கலாம் 😀

  நீங்கள் போன பதிவில் கொடுத்திருந்த முன் எச்சரிக்கையால் எதிர்பார்ப்பு இல்லாமல் தான் படித்தேன் ஆனாலும் நிஜ வாழ்வில் பலரை மயக்கிய மாட்டாவால் என்னை ஈர்க்க முடியவில்லை 😂.

  கடைசியில் இரு பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளதே போதுமானது அவளை பற்றிய காமிக்ஸ் தேவை அற்றது.

  ஒரு வேளை நிகழ்ந்த போர் பற்றி ஆர்வம் உள்ளவர்களுக்கு மற்றும் தெரிந்தவர்களுக்கு ஒரு அளவிற்கு பிடிக்கலாம்.

  என்னை பொறுத்தவரை ஜாம்போவின் தொடர் வெற்றிக்கு ஒரு திருஷ்டிப்போட்டு

  ReplyDelete
 55. உளவும் கற்று மற :
  ஓவியங்கள் மட்டுமே தெளிவாய் அமைந்துள்ளன...
  ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு முரணான பாதையை தேர்ந்தெடுத்தால் விளைவுகளும் மோசமானதாகவே அமையும்...
  எப்படி வாழக் கூடாதுன்னு வேணா மாட்டா ஹாரியை பார்த்து தெரிஞ்சிக்கலாம்...
  முடிவு ஒரு வாசிப்பாளனாக நமக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை,
  கதையளவில் நகர்த்த மாட்டாவில் என்ன இருக்குன்னு படைப்பாளிகள் இதை முயற்சித்தார்களோ தெரியலை ?!
  இது போன்ற கதைக் களங்களை தவிர்ப்பதே நலம் சார்...

  ReplyDelete
  Replies
  1. மாட்டா ஹாரியா ?? அவ பயங்கரமான உளவாளியாச்சே !! என்றே நெட்டுக்குக் கேள்விப்பட்டதில் அம்மணியின் கதையினில் சுவாரஸ்யம் இருந்திடுமென்று நம்பியதன் பலன் சார் ! தவிர பிரெஞ்சு காமிக்ஸ் உலகின் நம்பர் 1 பதிப்பகமான க்ளெனா இதனைக் கையாண்டுள்ளனர் எனும் போது நிச்சயமாய் சோடை போகாதென்றும் நம்பிக்கை கொண்டிருந்தேன் ! Phew !

   Delete
  2. வருடத்திற்கு ஒன்று இரண்டு இதுபோன்ற மிகவும் சுமாரான கதைகள் நமது காமிக்ஸில் வந்து விடுகிறது சார். இந்த வருடம் எல்லாம் தெறிக்கும் கதையாக இருக்கும் என நினைத்தேன் ஆனால் மார்தாவின் விமர்சனங்கள் அதனை தவிடு பொடியாக்கி விட்டது.

   Delete
  3. // நெட்டுக்குக் கேள்விப்பட்டதில் அம்மணியின் கதையினில் சுவாரஸ்யம் இருந்திடுமென்று நம்பியதன் பலன் சார் ! //
   ஆனாக்கா அம்மணி நிறைய பேருக்கு சுவாரஸ்யமா இருந்திருப்பாங்க போல இருக்கு...
   புதிய தேடல்களில் ஒன்றிரண்டு தவறுவது சகஜம் தானே சார்...

   Delete
  4. Parani - cannot help that. The team is small. If we do not experiment we will end up with run-of-mill kurudha mele dodak dodak kurudha bum-la dumeel stories !!

   Delete
  5. Still need to cop the blame for the story selection sir ! சிலாகிப்புகளை ஏற்கும் போது சொதப்பல்களையும் acknowledge செய்திடுவது தானே முறை !

   Delete
 56. சிகாகோவின் சாம்ராட்

  வில்லன்/ வில்லனைப் பற்றி தலைப்பு தாங்கி வரும் மற்றுமொரு டெக்ஸின் கதை ..

  அமெரிக்க டாலரின் மதிப்பு ஏறும் வேகத்தில் கதைப்போக்கு..

  9/10


  ReplyDelete
  Replies
  1. // சிகாகோவின் சாம்ராட் //
   சர்வமும் நானே மாதிரி இதுவும் மாஸான தலைப்பு...

   Delete
 57. விஜயன் சார் இன்று பதிவுக் கிழமை

  ReplyDelete
  Replies
  1. யெஸ் சார் ....உங்கள் ஒவ்வொருவரின் அலசல்ப் பதிவுகளின் கிழமை !

   Delete
  2. சார் இது போங்காட்டம்...:-(

   Delete
 58. தொட்டால் தெறிக்கும்

  சமீப காலங்களில் இவ்வளவு விரைவாக எந்த கதைக்கும் நான் விமர்சனம் எழுதியது இல்லை. ரூபீன் எழுத வைத்து விட்டார். முதலில் படிப்பது கோடை மலர் தான் என்று முடிவான பின் எதில் இருந்து துவங்குவது என்று சிறு குழப்பம்.

  ட்ரெய்லர்களில் சித்திரங்கள் சுமாராய் பட, soda போல் ஒரு average கதையாக தான் இருக்கும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் புத்தகத்தில் சித்திரங்கள் நான் எண்ணியதை விட பெட்டராய் இருக்க, ரூபின் அல்டிமேட் சாய்ஸ் ஆனது.

  பெயருக்கேற்ப தெறிக்க விட்டிருக்கிறார் ரூபின். கதை சொல்லும் விதம் என்று ஒன்று இருக்கிறதல்லவா. அதில் செமயாய் ஸ்கோர் செய்துள்ளார் கதாசிரியர். ஓவியரும் ஆங்காங்கே குறிப்புகளை விட்டு செல்ல, கவனமாக படித்ததில் முதல் முறையே குழப்பமின்றி அற்புத வாசிப்பு அனுபவத்தை நல்கியது.
  ஆசிரியர் குறிப்பிட்டது போல் படித்து முடித்தவுடன் கண்டிப்பாக புத்தகத்தை மீண்டும் புரட்டாமல் இருக்க முடியாது. குறிப்பாக முதலிரண்டு பக்கங்களை.
  வெய்ஸ் டாக்டரிடம் பேட்ஜைக் குத்தி செல்வது எல்லாம் அசாத்திய script brain sir.

  மொத்தத்தில் மிக நன்கு.

  குறிப்பாக எனக்கு. காரணம் நமது புத்தகங்கள் அனைத்தையும் படித்தாயிற்று. வேதாளர் மட்டுமே பாக்கி, ஆனால் 17 முறை முயன்றும் என்னால் முதல் 16 பக்கங்களை கூட தாண்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த எனக்கு pleasent surprise இக்கதை. மீண்டும் வேதாளர் safe ஆக பீரோக்குள் புகுந்து கொண்டார்.

  தாத்தாஸ், டெட்வுட், ஸ்டெர்ன், மேகி கேரிசன், ரூபின் ஆகிய அதிகம் ஒளிவட்டம் பாயாதவர்கள் வித்தியாசனமான களங்களில் வெற்றி பெற்று அடுத்த செட் நாயகர்களாக உறுவெடுத்து வருவது ஆரோக்யம்.

  முதல் பார்வையில் mata Hari படு வீக்கான படைப்பாக தென்படுகிறது எனக்கு மட்டும் தானா. பார்க்கலாம் கடைசி கதையாக.

  ReplyDelete
  Replies
  1. ஆஸ்டினுக்கு அனுப்ப இருந்தா வேதாளர் ஆட்டோவை வழுக்குப்பாறைக்கு அனுப்பி விடுங்க சார்.

   Delete
  2. சூப்பர் விமர்சனம் திரு. இப்போதே தொட்டால் தெறிக்கும் படிக்கணும் போல.

   Delete
  3. ஓலாவிலே ஒண்ணு புக் பண்ணினா இன்னொன்னு பிரீயாம் - தெலுங்கு வருஷப்பிறப்பு இஸ்பெஷலாம் ! அதனாலே ரெண்டு ஆட்டோக்களுக்கு ஏற்பாடு பண்ணிப்புடலாம் !

   Delete
  4. //தாத்தாஸ், டெட்வுட், ஸ்டெர்ன், மேகி கேரிசன், ரூபின் ஆகிய அதிகம் ஒளிவட்டம் பாயாதவர்கள் வித்தியாசனமான களங்களில் வெற்றி பெற்று அடுத்த செட் நாயகர்களாக உறுவெடுத்து வருவது ஆரோக்யம்.//

   True sir...ஆனால் ஜாலியான வாசிப்புகளுக்குப் பரிச்சயமான நாயகர்களே போதுமென்ற நண்பர்களின் mindset பரவலாக மாறிடக் காணோமே இன்னமும் !

   Delete
  5. // அதனாலே ரெண்டு ஆட்டோக்களுக்கு ஏற்பாடு பண்ணிப்புடலாம் ! //

   அப்படி போடுங்க :-)

   Delete
  6. திரு @ நீங்கள் வித்தியாசமான ரசனை உள்ளவர் என தெரியும். எனவே மார்த்தாவை பற்றி பாஸிட்டிவ் விமர்சனம் வரும் என நினைத்தேன் ஆனால் உங்களுக்கும் அது பிடிக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

   Delete
  7. மார்த்தாவை இன்னும் படிக்கவில்லை சார். முதல் புரட்டலில் விமர்சனமே மேற்கூறியது

   Delete
 59. எலியப்பா

  சீனியர் எடிட்டரின் எழுத்துகளில் மெருகேறுகிறது..

  எலியப்பாவுடன் மனதில் மெதுவாக பிணைப்பு ஏற்படத் துவங்குகிறது.'காதலில் விழுந்தேன்'
  -ல் வரும் வசனங்கள் அருமை.முடிவில் சிரிப்பை அடக்க முடியவில்லை.கானகக் கூத்துகள் எப்போதும் போல புன்னகைக்க வைக்கின்றன..

  ReplyDelete
  Replies
  1. சீனியருக்கும், ஜுனியருக்கும் மத்தியிலிருக்கும் நடுவப்பாவின் டிபார்ட்மெண்ட் சார் நம்ம எலியப்பா !

   Delete
 60. உள்நாட்டு கதைகள் ஏன் லயன்முத்துவில் இடம் பெறுவதில்லை என்ற நெடுநாள் வாசகர் மனதில் உள்ள கேள்விக்கு சீனியர் எடிட்டர் அந்தியும் அழகேவில் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்

  ReplyDelete
 61. முத்து கோடை மலர்

  தொட்டால் தெறிக்கும்!!!

  அதிரடியான ஆரம்பம்.

  எதேச்சையான ஒற்றுமை என்னவெனில் இம்மாத டெக்ஸ், தொட்டால் தெறிக்கும் இரண்டிலும் கதைக்களம் சிகாகோ,செனட்டர்களே வில்லன்கள். கலக்கும் அறிமுக நாயகி ரூபின் ( RUBINE).

  9.2/10

  ReplyDelete
  Replies
  1. யாருமே இன்னும் இந்த ஒற்றுமையைக் கவனிக்கலியே என்று நினைத்திருந்தேன் சார் !

   Delete
  2. புத்தகங்கள் இன்னும் வரவில்லை என்பதால் இதனை கவனிக்க முடியவில்லை சார்:-)

   Delete
 62. முத்து கோடை மலர்

  மியாவ் ..மியாவ் ..சிங்கக் குட்டி..

  சிக்பில் & கோ எப்போதும் மனம் கவர்பவையே.இம்முறையும் அதுவே.
  மனவலிமை பற்றி கதையின் அடிநாதம் ஓடுவது சிறப்பு

  9.3/10

  ReplyDelete
 63. புது பதிவு காணோமே சார்...:-(((

  ReplyDelete
 64. டிடெக்டிவ் ரூபினின் தொட்டால் தெறிக்கும், பொறி பறக்க விட்டது... ஓவிய பாணி அசத்தல், கதையும் கலக்கல்.. கோடை மலரின் முதல் கதையே முத்தான கதை...

  ReplyDelete
 65. உளவும் கற்று மற :

  உடனே மறந்துட்டேன்..!

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி செம்ம கண்ணா செம்ம

   Delete
  2. மாட்டாவின் பாவம் பொல்லாததாம் ; தொடர்ச்சியாய் 7 இளவரசி ஜாகஜங்களை வாசித்தாலொழிய நீங்காதாம் !

   Delete
 66. ஆசானே இன்று பதிவு நாள்

  ReplyDelete
  Replies
  1. சார் நேற்றே பதிவு நாள்.

   Delete
 67. ஆமாங்க தலைவரே. டெக்ஸ் புக் மட்டும் சின்ன புத்தகம் மட்டுமல்லாமல் பெரிய புக் படித்தாலும் அடடா அதற்குள் முடிந்து விட்டதே என்ற வருத்தம் தோன்றுவது உண்மையே. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 68. உளவும் கற்றுமற:உடனே மறந்துட்டேன். நறுக் விமர்சனம்

  ReplyDelete
 69. புத்தகங்கள் கிடைக்காதவங்க பற்றி கொஞ்சம் யோசியுங்கள்:-)

  ReplyDelete
 70. ###150###

  வணக்கம் நட்பூக்களே...

  ReplyDelete
 71. சார் டிடெக்டிவ் ரூபின் அட்டகாசம். என்ன ஒரு ஆரம்பம். Don't care attitude உள்ள ஒரு பெண் டிடெக்டிவ் பற்றிய கதை.

  அது ஒரு பக்கம் போகுது என்று நாம் நினைத்தால் கதாசிரியர் அப்படி இல்லை தம்பி இப்படி என்று சொல்கிறார். உண்மையாகவே சரியான டுவிஸ்ட் இறுதியில் ஒன்றுக்கு இரண்டாக நான் கதை முடிந்து விட்டது என்றே நினைத்தேன் பார்த்தால் இன்னும் தொடர்கிறது.

  தொட்டால் தெறிக்கும் உண்மையாகவே தெறி.

  10/10. புது முகம் அறிமுகம் distinction

  ReplyDelete
  Replies
  1. அதுவும் அந்த அறிமுக காட்சி. பாங்க் கொள்ளையை ரூபின் தடுக்கும் ஆக்சன் வரிசை ஆங்கில பட காட்சி போல செம்ம. அப்போதே தெரிந்து விட்டது இந்த கதை வேறு மாதிரி என்று.

   Delete
  2. பின்னிட்டீங்க :-)

   Delete
  3. // தொட்டால் தெறிக்கும் உண்மையாகவே தெறி. //
   அதே,அதே தம்பி...

   Delete
  4. இந்த புது நாயகியின் பின்னணி பற்றி அப்பாலிக்கா சொல்லுகிறேன் சார் ; enjoy the action !

   Delete
  5. சீக்கிரமே சொல்லுங்கள் சார்.

   Delete
  6. ///இந்த புது நாயகியின் பின்னணி பற்றி அப்பாலிக்கா சொல்லுகிறேன் சார் ; enjoy the action !///

   ----இப்படி அப்பாலிக்கா சொல்றேன்னு சொன்ன பல கதைகளின் பின்னணி இன்னும் சொல்லப்படல யுவர் ஹானர்...

   அவற்றை வரிசையாக சொல்லவும்....

   Delete
 72. முத்து கோடை மலர்

  காட்டேரிக் கூட்டணி

  ரிப்போர்ட்டர் ஜானியின் கதைகளிலேயே பத்தாவது பக்கத்திலேயே (109 - ம் பக்கத்தில் இடம் பெறும் ஒரு வசனத்தின் வாயிலாக) முழு கதையின் போக்கையும் ஓரளவுக்கு யூகித்து விட சாத்தியப்பட்டது இக்கதையில்தான்.

  ஆனாலும் செம கதை!

  9.3/10

  ReplyDelete
  Replies
  1. ஜானியின் இடியாப்ப அளவுகோல்களில் இது ஒரு படி இலகு என்பேன் சார் ; கேச இழப்பு இம்முறை குறைச்சலே !

   Delete
 73. மியாவ் மியாவ் சிங்கக்குட்டி..

  முதல் பக்கத்தில் சிரிக்க வைத்த கதை முடியும் வரை அதை கைவிடாதவாறு அட்டகாசமாக ,அருமையாக ,அழகாக சென்றது ..சிக்பில் அன்ட் கோ எப்பொழுதுமே சோடை போகாதவர்கள் என்பது இந்த கோடைமலரில் வந்த இரண்டாவது கதையும் அதை நிரூபணமாகிவிட்டது.வழக்கத்தை விட நகைச்சுவை தூக்கல் என்பதும் உண்மை ..வித்தியாசமான தலைப்பாக ஆசிரியர் சூட்டியுள்ளாரே என நினைத்தேன் ..ஆனால் கதையை படித்தவுடன் சரியான தலைப்பு என்று நிருபித்த விட்டது..

  காட்டேரிக் கூட்டணி ..

  வழக்கமான ஜானியின் பாணி ,வழக்கமான அட்டகாச சித்திரங்கள் ,வழக்கமான மர்ம முடிச்சுகள் ,வழக்கமான க்ளைமேக்ஸ்..

  வழக்கமான அதே வெற்றி ..ரிப்போர்ட்டர் ஜானி அதாவது ஓல்ட் ஜானி என்றுமே அட்டகாசம் தான் ..இந்த முறையும் அதே அதே...


  மொத்தத்தில் முத்து கோடைமலரில் வந்து மூன்று கதைகளுமே அட்டகாசமான முத்துகள் ..

  முத்துவின் கோடை மலர் கோடையின் உஷ்ணத்தை சிறிது குறைத்து காமிக்ஸ் ரசிகர்களை குளிர வைக்கும் என்பது நூறு சதவீதம் உறுதி...

  ReplyDelete
  Replies
  1. // ஜானி அதாவது ஓல்ட் ஜானி என்றுமே அட்டகாசம் தான் //
   அதே,அதே தலைவரே...

   Delete
  2. அப்படி சொல்லுங்க தலைவரே :-)

   Delete
  3. கவலையே வாணாம் தலீவரே ; புது ஜானியைத் தான் நொங்கி எடுத்துப்புட்டாச்சில்லியா - அவர் இப்போதைக்கு மறுக்கா தலை காட்ட மாட்டார் !

   Delete
 74. உளவும் கற்று மற....அற்புதமான ஓவியங்கள் வண்ணச் சேர்க்கையும் கதையை நகர்த்துகிறது. நாயகி முதன்முறையாக துகிலுரிகிறாள் பொதுமக்கள் முன்னிலையில்...அதற்காக ஈர்க்கப்பட்ட கூட்டம் அவளை மேலே ஏற்றி வைக்க....ஜெர்மானியர் மேல் ஏற்பட்ட காதலால் அவனை நம்பி அங்கே செல்கிறாள் புகழின் உச்சத்தில் உள்ள போதே....காதலுக்குத்தான் கண்மண் தெரியாதே முதல் காதலானாலும் கள்ளக்காதலானாலும்...உதவியாளர் எச்சரிக்கையை மீறி செல்கிறாள் ....அங்கே காதலன் இவளைக் கைவிட நாட்டியமும் கைவிடுகிறது...அங்கே சேய்வதறியாது கண்ணீர் சிந்தி உயிரை விடத் துணியும் இவளை ஜெர்மானிய உளவுத்துறை கைப்பற்றி தனக்கு சாதகமாய் உளவாட பாரீசுக்கு அனுப்பி வைக்க....பாழாய்ப் போன காதல் மீண்டும் குறுக்கிடுகிறது....தனிமையின் கொடுமைதானே இவ்வளவுக்கும் காரணம்....மீண்டும் பாரீசில் உளவுத் துறையின் வலையில் விழுகிறாள் காதலுக்காகவே ....பணம்....ஆடம்பரம்...கர்வம்....பொறாமை அனைத்தும் கலந்து கட்டி இவளை வீழ்த்துவதாய் செல்லும் கதை.....டெக்சின் கதை ஆரம்பமே இப்படித்தான் செல்லும் என்பதை கூறினாலும் சுவாரஸ்யத்தை தர நல்லவன் வெல்வான் எனத் தூவியதைப் போல.....இக்கதையும் துவக்கத்திலே இவள் சும்மா எனக்கூறி நெறிதவறியவள் வீழ்ந்ததைச் சொல்கிறது....ஆசிரியரின் குறிப்புகளை வைத்துப் பார்க்கும் போது சிறுவயதிலே கணவனின் கொடுமை...இழப்பதற்கு ஏதுமில்லா தனிமை அவளை துரத்த அவளின் முடிவு...நேர் கோட்டுக் கதைகள் ஆயிரமுண்டு.....ஆனா இது போல் துணிச்சலான கதைகள் ஜம்போவில்தானே சாத்தியம்....ஆசிரியர் நல்ல கதைகளை பாராட்டலாம்....இக்கதை நல்லால்ல என முதலிலே விமர்சனத்தை தவிர்த்தால் நலம்.....கதையின் துவக்கமே அவளை மட்டம் தட்டுவதாய்தானே வருகிறது....அவள் அப்படியோர் பெரிய உளவாளி அல்ல என காட்ட இக்கதை உருவாகி இருக்கலாம்....ஆனால் திறமை இல்லாமல் இவ்வளவு தூரம் வர இயலுமா....அச்சம்தானே அவளை சுட்டுக் கொல்ல காரணம்...

  ReplyDelete
  Replies
  1. அட பின்னுரலே மக்கா:-)

   Delete
  2. ஸ்டீல் ..நீர் தேவுடு ஐயா !

   Delete
  3. சார் 17ம் பக்கம்...." வெளிச்சத்தைக் பார்க்கும் கணத்தில் வாழ்க்கையின் கோப்புகளை மறந்து விடுகிறோம் ! கனவுகளை ஆராதித்தபடிக்கே விடியல் கோளின் யதார்த்தங்களை மறந்து விடுகிறோம் ".... இரசிக்க இவ்வரிகளுமுண்டு....தேவுடு வரிகள் சார்

   Delete
 75. காட்டேரிக் கூட்டணி :
  புதிர் நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் வில்லன் "டெவில்" ஜானிக்கு சவால் விடும்போதே கதை களைகட்டிடுது...
  மர்மமாய் தகர்க்கப்படும் கட்டிடம்,புதிரான முறையில் காணாமல் போகும் ஆயுதங்கள்,சவாலான முறையில் லாக்கரில் "லம்ப்" பாய் ஆட்டையைப் போடப்படும் பணம்...
  தொடர்ச்சியாக ஜானியின் புலனாய்வு...
  இடையே பெரிய டிமாண்டுடன் வரும் மிரட்டல் கடிதம்...
  இடியாப்பச் சிக்கலில் செல்லும் புலனாய்வில் ஜானி புதிரை அவிழ்த்தாரா,இல்லையா என்பதே காட்டேரிக் கூட்டணியின் களம்...

  எங்கும் டெவில்,எதிலும் டெவில்னு ஒரு டெவில் மயமா இருக்கு...
  டெவில் யார்,டெவில் யார்னு எல்லோரும் மண்டையப் பிச்சிக்கிட்டு டென்ஷனுடன் சுத்தறதே நமக்கு சுவராஸ்யத்தைக் கூட்டுது...
  வழக்கம்போல் கடைசி பக்கங்களில் புதிர் அவிழ்க்கப்படுவது ஒரு அக்மார்க் ஜானி சாகஸத்தைப் படித்த நிறைவு ஏற்பட்டது...

  எமது மதிப்பெண்கள்-9/10.

  ReplyDelete
 76. எலியப்பா காதல் அருமை....தவளை இளவரசியாக மாற முயற்சிப்பது சிறுவயது நினைவுகளை தூண்டுது...டார்சான்....முன்னால் நின்றபடி மறைவது சிறுவர்கள் கதை சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது...என் மகன் இக்கதைகளை படிக்க ஆவலுடன்...தலைமையாசிரியரின் நினைவுகள் அருமை....இந்த முறை விரிவாய்....தொடர்வோம்....சூப்பர்

  ReplyDelete
 77. தொட்டால் தெறிக்கும் :
  இன்ஸ்பெக்டர் ரூபின் அசத்திட்டாங்க...
  ஆங்காங்கே கொஞ்சம் கிளுகிளுப்பும்,தெறிக்கும் ஆக்‌ஷனும்,கதை நகர்வில் கன்னி வெடிகளாய் ஆங்காங்கே புதைந்து கிடக்கும் கதை முடிச்சுகளும் அடடே முதல் சாகஸத்திலேயே முத்திரை
  பதிச்சிட்டாங்க ரூபின்...
  ரூபின் வில்லன் ஆட்களிடம் பாத்ரூமில் செய்யும் அலப்பறைகள் ஆக்‌ஷன்,காமெடியுமாய் கலந்து கட்டி அடிக்கிறது...
  ஓவிய பாணிகள் கொஞ்சம் கார்ட்டூன் ரகத்தில் இருப்பினும் கதை ஆக்‌ஷன் பிளாக்கில்தான் நகருது...
  கதையின் முடிவு செம ட்விஸ்ட்...

  திரும்பவும் படிக்கத் தூண்டுது தொட்டால் தெறிக்கும்...

  திரும்பவும் வருவாங்களா ரூபின் ?!

  எமது மதிப்பெண்கள்-9/10.

  ReplyDelete
  Replies
  1. //திரும்பவும் வருவாங்களா ரூபின் ?!//

   நிச்சயமாக சார் ; 14 ஆல்பங்கள் உள்ளன இந்தத் தொடரினில் !

   Delete
  2. ஆர்வமுடன் காத்திருக்கிறேன் சார்..இந்த நாயகியை மீண்டும் காண..:-)

   Delete
 78. இந்த மாத எலியப்பாவில் சீனியர் எடிட்டரின் கட்டுரை பல புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள உதவியது...

  ReplyDelete
 79. மியாவ் மியாவ் சிங்கக்குட்டி :

  ஒரு வருடத்திற்கு பிறகு வுட்சிட்டியின் உன்னத நண்பர்களை பார்த்ததிலேயே பரம திருப்தி.!

  டாக்புல்லின் தொடர் அர்ச்சனைகளால் துவண்டு போய்.. தான் எதற்கும் லாயக்கில்லாதவன் என்று தாழ்வுமனப்பான்மை நோயினால் பீடிக்கப்படும் கிட் ஆர்டினை.. (டாக்டரின் அறிவுரைப்படி..) தான் ஒரு பலசாலி.. புத்திசாலி.. சகலகலாவல்லவன் என்று நம்பச்செய்து குணமாக்க முயல்கின்றனர்.!

  ஆர்டினுக்கான சிகிச்சையை அவ்வபோது டாக்புல் சொதப்பி வைத்தாலும்.. சிக்பில் மற்றும் குள்ளன் சரியாகச்செய்து குணமாக்குகின்றனர் ..!

  தான் ஒரு சகலகலா வல்லவன் என்று நம்பும் ஆர்டின் ஒரு பயங்கரமான கொள்ளைகும்பலையே பிடித்து உள்ளே வைக்கிறான்.! ஊர்உலகமே ஆர்டினின் வீரத்தை ஆராதனை செய்கிறது..!

  இதனால்.. கிட் ஆர்டினுக்கு நோய் குணமாவதுடன்.. ஒரு படி மேலே போய் ரிவர்ஸ் ஆகிவிடுகிறது.. அதாவது இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் போய் சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வந்துவிடுகிறது.!

  இப்போது டாக்புல்லுக்கு தாழ்வுமனப்பான்மை உண்டாகிவிட... அதே டாக்டர் அதே சிகிச்சையை டாக்புல்லுக்கு செய்யச் சொல்ல.. கிட் ஆர்டின் திரும்ப அம்மாஞ்சி ஆக.. கதை சுபமாக முடிகிறது.!

  இக்கதையில் கிட் ஆர்டினை விட டாக்புல்லின் சேஷ்டைகள்தான் அதிக சிரிப்பை உண்டாக்குன்கிறன.!

  எல்லாவற்றையும் விட.. எத்தனை சண்டைகள் போட்டாலும்.. கிட் ஆர்டின் மற்றும் டாக்புல்.. சிக்பில், குள்ளன் ஆகிய நால்வரிடையே இருக்கும் மறைமுக அன்பும் நேசமும் நம் நெஞ்சை நெகிழவைக்கிறது..!

  ஆர்டின் , டாக்புல், சிக்பில், குள்ளன், பெர்ட் , டூகாசியர் , டாக்டர், ஜட்ஜ் இன்னும் பல வுட்சிட்டி மாந்தர்களும் ஏதோ என் நெருங்கிய நண்பர்கள் போலவும் உறவுக்காரர்கள் போலவும் தெரிகிறார்கள்.!

  கடவுள் நேரில் தோன்றி எனக்கொரு வரம் கொடுத்தால்... இந்த வுட்சிட்டியில்.. ஆர்டினையும் டாக்ல்லையும் சிக்பில்லையும் குள்ளனையும் பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டே வாழும் வரத்தை கேட்பேன்..!

  எடிட்டர் சார்...

  நானும் கடந்த பத்து வருடங்களாக.. (அதாவது பத்தாங்கிளாஸ் படிக்கறப்போ இருந்து).. கிட் ஆர்டினுக்கு ஒரு ஸ்லாட் சேத்திக்குடுங்க சார்னு ரெக்வெஸ்ட்டு , ப்ளாக்மெயிலு எல்லாமே பண்ணிக்கிட்டுதான் வர்ரேன்...
  ஏதாவது பாத்து செய்யுங்க சார்..!

  ReplyDelete
  Replies
  1. நம்மாட்கள் தான் "பாத்துப் பாத்து" செய்றாங்களே சார் - சிரிப்புப் பார்ட்டிங்களை !

   Delete
  2. வருத்தமான உண்மை சார்.!

   கிட் ஆர்டின் கதைகளில் இது கொஞ்சம் வித்தியாசமானது.. நகைச்சுவையோடு மன நெகிழ்ச்சியையும் கொடுத்த கதை இது.!

   Delete
  3. எனக்கும் கிட் ஆர்டின் டாக் புல் தான் பிடிக்கும் .
   /
   எல்லாவற்றையும் விட.. எத்தனை சண்டைகள் போட்டாலும்.. கிட் ஆர்டின் மற்றும் டாக்புல்.. சிக்பில், குள்ளன் ஆகிய நால்வரிடையே இருக்கும் மறைமுக அன்பும் நேசமும் நம் நெஞ்சை நெகிழவைக்கிறது..!

   ஆர்டின் , டாக்புல், சிக்பில், குள்ளன், பெர்ட் , டூகாசியர் , டாக்டர், ஜட்ஜ் இன்னும் பல வுட்சிட்டி மாந்தர்களும் ஏதோ என் நெருங்கிய நண்பர்கள் போலவும் உறவுக்காரர்கள் போலவும் தெரிகிறார்கள்.!
   /*

   சரியாக சொன்னீர்கள்

   Delete
  4. லக்கியை விட எனக்கும் பிடிச்சது உட்சிடி கோஷ்டியே....

   லக்கியுது கொஞ்சம் குழந்தைதனமான காமெடிகள்....

   கிட் ஆர்டின் காமெடி கதையோடு கூடியவை.... சீரியஸ் கதையை காமெடி கலந்து சொல்லி இருப்பாங்க....

   வன்மேற்கின் தில்லு முல்லு பார்டிகளை நையாண்டியாக தோலுரித்துக் காட்டும் சற்றே மேம்பட்ட சீரியஸ் இதுவே....

   Delete
  5. லக்கிலூக் என்னவோ விற்பனையில் சாதிப்பதால் நிறைய ஸ்லாட்டை தட்டிட்டு போயிடுறார்...

   Delete
 80. என்னவோ தெரியல பார்சல் வந்ததுமே நான் படிக்கத் துடித்தது கிட்டின் மியாவ் மியாவ்தான் . போன கிட் கதை கூட இன்னும் படிக்கல....சுஸ்கிவிஸ்கி விளம்பரத்தைப் பார்த்ததுமே படிக்கத் தூண்டியது என்பதுகளின் நாயகன் நினைவாய்... மனச இலகுவாக்க ....மனச்சஞ்சலத்த போக்க கிட்ட அடிச்சுக்க கதையே கிடையாது....பிரேக்கர் கும்பல அழிக்க கிட் வீரனாக மாற....எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் அருமை சார்...கிட்ட சூரனாக்கும் நான்கைந்து கதைகளில் இதுவுமொன்று....கதை புன்னகை கூட்டி விறுவிறுப்பாய் செல்ல....மரியாதையா இந்த மொட்டைத் தலை மாங்காயை அவிழ்த்து விடு....டைப்பும் போது கூட சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை....அருமை சார்...தம்பி இந்த பிஸ்டலைப் பிடிங்க...ஹஹஹஹா...கடைசில கொளுத்துடா பாக்கலாம்னு கிட் பாய் அருமை...மனசெல்லாம் நிறைவான மகிழ்ச்சி ...நன்றிகள் சார்

  ReplyDelete
  Replies
  1. முத்துவின் அந்த ஐந்து ரூபாய் கோடை மலருக்கப்புறம் அதே ஈர்ப்பாய் ...மேலாய் மூனு வண்ணக்கதைகள்....

   Delete
 81. நானும் புத்தகங்கள் கிடைக்காதவர்கள்லிஸ்டில் தான் உள்ளேன் ஜி . . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 82. கார்ட்டூன்களில், மெச்சூரிட்டியான லக்கிலூக்கைவிடகுழந்தை மனோபாவம்கொண்ட ஆர்டினேஅசத்தலானஹீரோ. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. உண்மை ..வழிமொழிகிறேன்...:-)

   Delete
 83. This month rating
  Tex - 9/10
  Martha - ? /10.
  Rubin - 6/10
  Kid artin - 7/10
  Reporter - 7/10

  ReplyDelete
  Replies
  1. Small corrections

   Martha - No

   மார்கரீட்டா ஸெல்லா( நிஜப்பெயர்)- மாட்டா ஹரி(புனைப்பெயர்)

   Rubin -No ( ஆண் பெயர் )

   Rubine- yes ( பெண் பெயர்)

   Kid artin - No

   Kid Ordinn - yes

   செவ்விந்திய குள்ளன் - little poodle ( petit caniche in French)

   Delete
 84. மன்னிக்க...இதுவரை வந்த ஜம்போவில் அண்டர்டேக்கர் மட்டுமே ஹிட்...மற்ற அனைத்தும் படு பிளாப்...சூர மொக்கை..

  ReplyDelete