Powered By Blogger

Saturday, June 26, 2021

இன்னொரு சனி...இன்னொரு பதிவு !

 நண்பர்களே,

வணக்கம். நீங்கள் அலசி அதகளம் செய்ததில் அதிரிபுதிரி மாதமாகிப் போன ஜூன் - சிறுகச் சிறுக நிறைவை நோக்கி நகர்ந்திட, ஒரு மெய்யான அதிரடி மாதமே நம் முன்னே காத்து நிற்கின்றது ! நிஜத்தைச் சொல்வதானால் நடப்பு மாதத்தில் ரிப்போர்ட்டர் ஜானியின் சாகசம் பற்றி எனக்குத் துளியும் பயம் இருந்திருக்கவில்லை தான் ! ஆனால் ப்ளூகோட் பட்டாளம் லைட்டாகவும், கிராபிக் நாவல் செமையாகவும் புளியைக் கரைத்திருந்தன ! ப்ளூகோட் தொடரினில் இழையோடும் அந்த அவலச் சுவை இம்முறை கொஞ்சம் தூக்கல் என்பது எனது எண்ணம் ! So உங்களின் குத்துக்கள் மூக்கிலா ? தொப்பையிலா ? என்பதே எனது கேள்வியாயிருந்தது ! ஆனால் surprise ..surprise .. சிலாகிப்புகள் !! ஆனால் நமது நண்பரொருரவர் அனுப்பியிருந்த மின்னஞ்சல் எனது அனுமானத்தை ஒட்டியே இருந்தது :

=========================================================================

சார், நான் மிக மிக மிக மிக minorityயாக இருப்பேன் என்பது தெரியும்... இருந்தாலும் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது... இந்த புத்தகம் எப்படி முழு நகைச்சுவை என எல்லாராலும் கொண்டாடப்படுகிறதென்று... !!?

இனியெல்லாம் ரணமே... ஆரம்பம் முதல் நோய்வாய்ப்பட்ட வீரர்கள்... சாவின் விளிம்பில் படும் துயரங்கள்... ஏமாற்றும் ஜெனரல்கள்... தண்ணீருக்கு கூட துப்பாக்கி தாக்குதல் நடத்த வேண்டிய சூழல்... எரியும் குடியிருப்பு வீடுகள்... ஆகா பரவாயில்லை... அனைவரும் சேர்ந்து ஊரைச் சரி செய்கிறார்களே... மனிதம் பிழைக்கிறது என நினைக்கும் போதே அந்த வீடுகளை உடைத்து எரியும் குண்டுகள்... ஓடும் வயதான முதியவரின் புலம்பல்... "திரும்ப இந்த ஊரைக் கட்டுவது ரொம்ப ரொம்ப கஷ்டம்தான்..."...

இதில் என்னால் எந்த இடத்திலும் மனம் விட்டு சிரிக்கவே முடியவில்லை... சில இடங்களில் கவுண்டமணி/செந்தில் சண்டையை சற்றே நினைவு படுத்தி.. ஆங்காங்கு கஷ்ட புன்னகை வேண்டுமெனில் என்னால் செய்ய முடியும்...!

இது ஒரு அற்புதமான கிராபிக் நாவல் என்னளவில்... போரின் துயரங்களை இதைவிட ஒரு சித்திரக்கதையில் பட்டவர்த்தனமாக சித்திரிக்க முடியாது... !

என்னைப் பொருத்தவரை... "இனியெல்லாம் ரணமே" தான் இந்த மாதத்தின் மனதை உலுக்கும் கிராபிக் நாவல்...  !

=============================================================

நண்பரின் மின்னஞ்சலில் உள்ள கூற்றுக்களை மறுக்க பெரிதாய் முகாந்திரங்களில்லை ; moreso அடுத்த ஆண்டுக்கென நான் தேர்வு செய்து வைத்திருக்கும் இன்னொரு ப்ளூ கோட் ஆல்பத்தோடு ஒப்பிடுகையில் எனக்கே லைட்டாக நெருடத்தான் செய்தது ! Simply becos அடுத்தாண்டிற்கென காத்திருக்கும் ஆல்பமானது இதே போர்க்கள பின்னணியில் இருந்தாலும், வலி, சோகம்,ரணமென்று நகராது பக்கத்துக்குப் பக்கம் சிரிப்பு வெடி போடுகிறது ! Out & out காமெடியாக அது இருந்திடவுள்ளதைப் பார்க்கும் போது, இந்தத் தொடரினிலும் கதைகளை பொறுக்கிட நிறையவே மெனெக்கெடணும் போலும் என்பது புரிகிறது ! 'தேமே' என Cinebook தேர்வுகளுக்கு வால்பிடிப்பது இந்த ஒற்றைத் தொடரிலாவது இனி வேலைக்கு ஆகாதென்று தீர்மானித்துள்ளேன் ! So வரும் ஆண்டுகளில் ப்ளூவார் வருவர் ; ஆனால் இயன்றமட்டுக்கு போரின் இரத்த சகதிகள் தெறிக்காத விதமாய் ! 

Looking ahead - நமது ஆண்டுமலர் மாதத்தைக் கொண்டாட பெரியதொரு கேக்கும், மெழுகுவர்த்திகளுமாய், லயன் அண்ணாத்தே கால் விரித்துக் காத்திருக்கிறார் ! And இப்போதைய வாடிக்கைப்படி லக்கி லூக் அந்த ஸ்லாட்டைத் தனதாக்கியுள்ளதால் - இதோ "லயன் ஜாலி ஆண்டுமலர்" அட்டைப்பட முதல்பார்வை + உட்பக்க பிரிவியூ படலம் : 

As usual இம்முறையும் 2 லக்கி சாகசங்கள் ; ஒன்றினில் திருவாளர் ரின்டின் கேன் ஏகமாய் செய்திடும் அலப்பரைகளோடு ! I repeat - இது ரின்டின் கேன் கதையல்ல ;  ரின்டின் கேனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதொரு நார்மலான லக்கி லூக் கதையே ! ஒரு கோடீஸ்வர மனுஷன் தன் சொத்து பத்துக்களையெல்லாம் ரி.டி.கே.வுக்கு எழுதி வைக்க - அதுவும் செம பணக்கார ஞானசூன்யம் ஆகிப் போகிறது ! அதன் பாடிகார்டாய் ; கார்டியனாய் நம்மவர் நியமனம் காண, ஜாலி ஜம்பர் & டால்டன் சகோஸ் செய்யும் அட்டூழியம்ஸ் என்று கதை டாப் கியர் போட்டுத் தூக்குகிறது ! எப்போதும் போலவே இந்தக் கூட்டணியோடு கைகோர்ப்பது செம ஜாலி அனுபவமாய் இருந்தது தான் ; அந்த ஜாலியின் பிரதிபலிப்பு பேனா பிடித்ததில் தென்படின் ஹேப்பி அண்ணாச்சி ! 

And இங்கே கதை # 2 ஆக இடம்பிடித்திருக்கும் "பேய் நகரம்" கூட இன்னொரு க்ளாஸிக் ! டால்டன்கள் இல்லாத குறையை வேறொரு இரட்டையர் அணி நிரவல் செய்கிறது ! So சிரிப்புக்கு சிறப்பாய் உத்திரவாதம் தந்திடவுள்ள இந்த இதழ் ஏற்கனவே ரெடி நம்மளவினில் ! 

And ஏற்கனவே சொல்லியிருந்த விஷயமே - but still for those who might have forgotten  : இது ஹார்டகவர் இதழல்ல ! இனி வரும் நாட்களில், முந்நூறுக்கு மேற்பட்ட விலையிலான இதழ்கள் மட்டுமே (அதாவது மினிமமாக 3 பாகங்கள் / கதைகள் கொண்ட இதழ்கள்) ஹார்டகவர் option சுமந்து வந்திடும் ! இன்றைய சங்கை நசுக்கும் விலைவாசிகளின் மத்தியில் இந்தச் செலவினத்தை சிறு இதழ்களுக்குப் பொருத்திட இயலவே மாட்டேன்கிறது ! So புக் கையில் கிடைத்த உடன் என்னைச் சாத்த துடைப்பங்களைத் தேடாதீர்கள் - ப்ளீஸ் ! ஆனால் அட்டையினில் மினுமினுக்கும் எழுத்துக்கள் மெருகூட்டிடும் என்பது கொசுறுத் தகவல் ! 

நடப்பு மாதத்தினில் 15-ம் தேதி தான் இதழ்களை அனுப்பியுள்ளோம் என்பதால் ஜூலை இதழ்கள் கூட அதனை அனுசரித்தே வெளிவந்திடும் ! இன்னமும் நிறைய மாவட்டங்களில் கடைகள் / முகவர்கள் இயங்கத்துவங்கியிரா நிலையில் சித்தே GO SLOW அவசியமாகிப் போகிறது ! ஆனால் அதே பரிந்துரை எனக்கு எந்தவொரு விதத்திலும் சாத்தியமாகிடாது போலும் ! ஏதேதோ கதை பேசிக்கொண்டு - "ஆங்...அதுக்குத் தான் நேரம் கிடக்குல்லே ; இதைத் தான் அப்பாலிக்கா பாத்துக்கலாமில்லே ?" என்று பணிகளைப் புறம்தள்ள முடிந்த வரைக்கும் அடிவயிற்றைக் கலக்கவில்லை தான் ! ஆனால் 2 வாரங்களுக்கு முன்னொரு தினத்தினில், முன்னிற்கும் மெகா பணிகளினை தேதிவாரியாய் எழுதி, அவற்றிற்கு நாம் தயாராகிட வேண்டிய deadlines களையும் குறித்துப் பார்த்த போது மெய்யாலுமே உதறல் எடுத்து விட்டது ! 

*லயன் # 400  மெகா டெக்ஸ் புக்

* இரத்தப் படலம் வண்ணத்தொகுப்புகள் 

*2022 அட்டவணை இறுதிப்படுத்தல் ; அது சார்ந்த கதைகளுக்கு சகல ஏற்பாடுகளையும் செய்தல் ; and most importantly, அவற்றிற்கான 'டப்பை' தயார் செய்து அனுப்பிடல் !

*2022 கேட்லாக் ரெடி செய்தாக வேண்டும் ! 

*லயன் தீபாவளி மலர் with டெக்ஸ் 

* And the Daddy of them All : முத்து காமிக்ஸ் ஆண்டுமலர் # 50 !

இவை சகலமும் அக்டொபர் இறுதிக்குள் எங்கள்மட்டில் நூற்றுக்கு நூறு பணிநிறைவு கண்டிருக்க வேண்டும் !  முத்து காமிக்ஸ் ஆண்டுமலரை விரலுக்கேற்ற வீக்கமாய் நான் திட்டமிட்டிருந்ததை, உங்களின் அன்பான முட்டுச்சந்துப் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து  அவசரமாய் மாற்றிக் கொள்ள நேரிட்டதால்,  புது ப்ளான்னிங் ; அதற்கான படைப்பாளிகள் ஒப்புதல் என்று ஏகமாய் நேரம் ஓடிவிட்டது ! And இதோ இந்தத் திங்கள் முதலே அதன் மீதான வேலைகளைத் துவக்கிட முடிந்துள்ளது ! 

இதன் மத்தியில் நார்மலான பணிகளிலேயே ஒரு கணிசம் என் திக்கில் திசை திரும்பிவிட்டுள்ளன - தவிர்க்க இயலா சில துரதிர்ஷ்ட சூழல்களின் பலனாய் ! நமக்குப் பேனா பிடிக்கக்  கொஞ்சம் கொஞ்சமாய்த் தயாராகி வந்ததொரு தென் மாவட்ட சகோதரி பற்றி சமீபமாய்ச் சொல்லியிருந்தேன் தானே...அவரது கணவர் கொரோனாவுக்கு பலியாகி விட்டிருக்க, இடிந்து போயுள்ளார் !! தகவல் கேட்ட போது எனக்கே தூக்கிவாரிப் போட்டதெனும் போது அவரது நிலையைப் பற்றி யோசிக்கவே மனம் கனக்கிறது ! And இந்த நேரத்தில் "பணியினை முடிச்சு அனுப்புறீங்களா ? புண்ணாக்கை எழுதறீங்களா ?" என்று கேட்கவே நா கூசுகிறது ! So தொடரும் மாதங்களின் சில ரெகுலர் பணிகளையும் ஒட்டு மொத்தமாய் மேஜையினில் குவித்து வைத்துள்ளேன் ! இன்னொரு பக்கமோ, நமது பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பாளர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையினை கோவையினில் செய்திருக்கிறார் and 2 மாதங்களாகியும் ரொம்பவே சிரமப்பட்டு வருகிறார் ! So அவருமே தாற்காலிகமாய்ப் பணியாற்ற இயலா நிலையினில் இருக்க, அங்கும் இங்குமாய் ஜூனியர் தேடியதில் 2 பிரெஞ்சு நாட்டவர்களை மாற்றாகப் பிடிக்க முடிந்துள்ளது ! என்ன ஒரே சிக்கல் - அவர்களின் பிரெஞ்சுப் புலமை A-1 என்ற போதிலும் அவர்களின் ஆங்கிலப் புலமை சற்றே சுமார் ! So அந்த ஆங்கில ஸ்கிரிப்டை தமிழாக்கம் செய்திடும் பொருட்டு நமது கருணையானந்தம் அவர்களுக்கு அனுப்பினால் அதனில் சிக்கல் ! ரைட்டு...கோவைக்கே அனுப்பி, அம்மையாருக்கு மூட்டுவலி சற்றே தேவலாமென்று ஆன பிற்பாடு இன்னொருவாட்டி மொழிபெயர்க்கச் சொல்லலாம் ; ஒருக்கால் அது லேட்டாகும் என்று தோன்றினால் - அந்த ஆல்பத்தினையும் தக்கி முக்கியாவது நானே எழுதிட எண்ணியுள்ளேன் ! So என் மேஜை ஒரு பக்கமாய் பள்ளமாகாத குறை தான் - குவிந்து கிடைக்கும் பிரிண்ட் அவுட்களின் பளுவினில் ! இக்கட ஒரு சுவாரஸ்ய இடைச்செருகலுமே :

Deadwood Dick என்றதொரு அறிமுக நாயகரின் சாகசம் "நரகத்துக்கு நடுவழியே" என்று வெளிவரவுள்ளதை கவனித்திருப்பீர்கள் ! போனெல்லியின் உருவாக்கமே இது & இந்த மனுஷனும் வன்மேற்கின் நாயகன் தான் ! ஆனால் கறுப்பினர் என்பது வேறுபாடு ! தற்போதைய எனது மேஜை நிரப்பிகளுள் இவரும் ஒருவர் ! இந்த நாயகரின் பணிகளுக்குள் நான் புகுந்த நேரம் தான் - இக்கட  "ஒரு தோழனின் கதை" கி.நா.வில் "பப்பி ஷேம் படங்களை நீ எப்புடிப் போடப் போச்சு ?" என்ற பஞ்சாயத்து செம வேகமாய் ஓடிக்கொண்டிருந்தது ! அங்கே பதில்களைப் போட்டு விட்டு, இங்கே மொழிபெயர்ப்புக்குள் புகுந்தால் சிரித்து மாளவில்லை ! விஷயம் என்னவென்றால் இந்தக் கறுப்பின நாயகரும், அவரது தோஸ்த்தும் கதையின் முற்பாதியினில் பேசிக் கொள்வது முழுக்கவே  செம கரடு முரடு பாஷையினில் / பாணியினில் !! சம்பாஷணைகள் மட்டுமன்றி, கதையோட்டத்தோடு கலந்து வரும் சில அறிமுகங்கள் நாம் இதுவரைக்கும் பரிச்சயம் கொண்டிரா பாணிகளில் உள்ளன ! இதுவொரு வீரியமான நாவலின் காமிக்ஸ் உருமாற்றம் எனும் போது - வரிகளை சற்றே நாசூக்காக்குகிறேன் பேர்வழி என்று நான் புறப்பட்டால் - கதாசிரியரின் / நாவலாசிரியரின் தலைக்குள்ளிருந்து துளிர்த்த ஹீரோவை நம் சவுகர்யத்துக்கு மாற்றிய பிழை செய்தவனாவேன் ! படங்களில் உள்ள சில அஜால் குஜால் விஷயங்களை பலூன்களின் பொருத்தலால் சமாளித்து விடலாம் தான் ; ஆனால் முக்கியக் கதாப்பாத்திரங்களின் அறிமுக முன்பாதியினில் நான் நோண்டினேன் எனில் - Deadwood Dick - திண்டுக்கல் Dick ஆகிடுவார் என்பதே பயம் ! அதே சமயம் இதுக்கொரு முட்டுச் சந்தை நீங்கள் ஆங்காங்கே ரெடி பண்ணிடுவீர்களே என்ற பயமும் இன்னொரு பக்கம் ! சொல்லுங்களேன் guys ? திண்டுக்கல் டிக் ok தானா ? இல்லாங்காட்டி முட்டுச் சந்தில் next மீட் பண்ணிப்போமா ? (ஆனாலும் இந்த முட்டுச் சந்து மச்சம் நமக்கு ரொம்ப ஸ்பெஷலு தானுங்க !!)

அப்புறம் 2022-ன் கதைகளை இறுதிப்படுத்திட மே லாக்டௌன் மாதத்து வினவல்கள் ரொம்பவே உதவின என்பதை நான் சொல்லியே தீரணும் ! தினம் தினம் கேள்வி கேட்டு குடலை உருவியது போலிருப்பினும், நிறையவே 'இப்டியா ? அப்டியா ?' கேள்விகளுக்கு விடை காண முடிந்திருந்தது ! Of course - உங்களின் பரிந்துரைகள் எல்லாமே நடைமுறை கண்டிருக்கும் என்றெல்லாம் இல்லை தான் ; நான்பாட்டுக்கு இண்டிகேட்டர்களை ஒட்டு மொத்தமாய்ப் போட்டு விட்டு மெட்ரோ ரயிலுக்குத் தோண்டுவதை போல பாதாளத்தில் தோண்டவும் செய்திருப்பேன் தான் ! ஆனால் in general உங்களின் உள்ளப்பகிரல்கள் நிறையவே உதவியுள்ளன ! So thanks on that again guys !! அப்புறம் இந்த வாரத்து புதனன்று "ஆத்தா...நான் பாஸாயிட்டேன் !" ; "பாப்பாத்தியம்மா மாடு பத்துனா !!" ; "என் ஆளோட செருப்பை காணோம் " என்ற ரீதியில் கவித்துவமான தலைப்புகளை தேற்றி உள்ளேன் - அடுத்தாண்டின் இதழ்களுக்குச் சூட்டி, கேட்லாக்கில் புகுத்திடும் பொருட்டு ! முடிந்த மட்டுக்கு சைவமாகவே பெயர்களை அமைக்க முற்பட்டுள்ளேன் ; அதை மீறியும் சித்தே காசிமேடு கவுச்சி மார்க்கெட் வாசம் வீசினால் - spare me guys : கதைகள் அந்த ரகத்தினில் இருந்திருக்கும் ! 

Moving on, இ.ப. பிழைத்திருத்தங்கள் ஓடிக்கொண்டுள்ளன ஆபீசில் ! Corrections போட்டுத் தந்திருந்த நண்பர்களில் சிலர் பிரமாதமாகவும், சிலர் ஆர்வ மிகுதியினில் பொங்கோ பொங்கென்று பொங்கவும் செய்திருப்பதால் - லைட்டாக சிண்டைப் பிய்க்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது எனக்கு ! தேவையான ஆணியெது ? தேவையில்லாத ஆணியெது ? பின்னே வரும் பாகங்களில் இடறிடாது பிடுங்கக் கூடிய ஆணியெது ? என்ற அலசல்களும் இப்போது எனது அட்டவணையில் இணைந்திருக்க, இந்நேரத்துக்கு அச்சுக்குச் சென்றிருக்க வேண்டிய நாம் - a week behind schedule !! இதன் மத்தியில் "ஜூலை 1 வரைக்குமாச்சும் முன்பதிவுத் தேதிகளை நீட்டிக்கப்படாதா ?" என்று நம்மாட்களிடம் நிறைய கண்சிவத்தல்கள் !! ஒன்றேகால் ஆண்டுகளின் அவகாசமும் நிறைவுக்கு வந்து தானே தீர வேண்டுமென்பதை அவர்களுக்குப் புரிய வைக்க நம்மவர்கள் படாத பாடு பட்டு வருகின்றனர் ! நம்மிடம் புக் செய்யவில்லை என்றாலுமே, நமது முகவர்களிடம் கூட வாங்கிக் கொள்ளலாமே guys ? இதோ சின்னமனூர் போன்ற சிறு ஊரின் முகவர் கூட 20 புக்ஸ் ஆர்டர் செய்துள்ளார் ! So இங்கே நாம்பாட்டுக்கு கல்லாவைத் திறந்து வைத்திருந்து, சிக்கும் சில்லறையை வாங்கிப் போட்டுக் கொண்டே போகும் பட்சங்களில், இந்தப் பேரிடர் நாட்களிலும் பெரும் ரிஸ்க் எடுக்கும் முகவர்கள் பாடு சிக்கலாக்கிடக்கூடும் அல்லவா ? So புக்கிங்ஸ் நம்மிடம் நிறைவுற்றதாகவே கருதிடுங்கள் guys ; இதழ் வெளியாகும் ஆகஸ்ட் இறுதியினில் முகவர்களின் சிறு பட்டியலையும் தந்து விடுகிறோம் ; தேவைப்படுவோர் அவர்களிடமிருந்தே நேரடியாய் வாங்கிக் கொள்ளலாம் ! 

ரைட்டுங்கோ...பதிவை நிறைவு செய்திடும் நேரமிது ! வீட்டிலுள்ள என் மேஜைக்கு மேலே ஒரு போர்டில் - உத்தேசமாய் ஒவ்வொரு பணிகளையும் நிறைவு செய்திட வேண்டிய தேதிகள் எவையெவை ? எந்தக் கதைக்கு அடுத்து எந்தக் கதை ? என்று நான் குறித்து வைத்திருக்கும் விபரங்கள்  - என்னை இந்த நொடியினில் கூட  முறைத்துக் கொண்டுள்ளன ! ஒரே ஆல்பத்தில் தொடர்ச்சியாய்ப் பணியாற்றுவது ரொம்பவே படுத்துவது போலிருப்பதால் - காலையில் Deadwood Dick ; மதியம் மேக் & ஜாக் கார்ட்டூன் ; மாலை : முத்து ஆண்டுமலர் பணிகளின் ஆக்ஷன் அதகளக் கதை # 1 என்று அட்டவணையினை குடாக்காட்டம் அமைத்துக் கொண்டுள்ளேன் ! ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பதால் - இது கூட ஒரு லூசுத்தனமான சுவாரஸ்ய அனுபவமாகயிருப்பதையும் உணர முடிகின்றது !  

இந்தக் கூத்துக்களுக்கு இடையிடையே இன்னொரு சத்தமில்லா முயற்சியும் ஓடி வருது ! அதனில் மட்டும் ஜெயம் கிட்டி - பட்டாப்பட்டியின் மீதமும் டார் டாராயிடும் என்பது மட்டும் புரிகிறது ! ஸ்டெல்லா கிட்டே சொல்லி, நம்ம ஜானி நீரோ தீவாளிக்கென வேங்கி வச்சிருக்கக்கூடிய பூப்போட்ட டிராயர் ஒன்றை முன்ஜாக்கிரதையாய் லவட்டியாகணும் போலும் !!

Bye all ...மறை கழன்ற எனது தினங்களைத் தொடர்ந்திடக்  கிளம்புகிறேன் ! See you around !! Have a safe weekend all !

MEMES 😄😄

MKS Ram :



DR.A.K.K.Raja :


Dr.Partheeban, Karur :




Thursday, June 24, 2021

RIP ஓவியரே !

 நண்பர்களே,

வணக்கம். ஒரு வருத்தமான சேதியோடு உபபதிவு ! நமது மூத்த ஓவியர் மாலையப்பன் அவர்கள் கடந்த 5-ம் தேதி (ஜூன் 5) இறைவனிடம் ஐக்கியமாகி விட்டுள்ளார் ! இன்று காலை நண்பர் அனுப்பியதொரு FB தகவலைத் தொடர்ந்து அவரது வீட்டாரிடம் விசாரித்த போது இந்தச் சங்கடச் செய்தியைச் சொன்னார்கள் ! நமது அலுவலகத்திற்கு ஓவியர் கடைசியாய் வந்து நிறைய காலம் ஆகிப்போயிருந்த நிலையில் நமது நம்பர்களை அவரது வீட்டம்மா வைத்திருந்திருக்கவில்லை போலும் ! ஓவியரிடமும் தான் செல்போன் கிடையாதே ! ஆகையால் தகவல் சொல்லாது விட்டு விட்டார்கள் ! கொஞ்ச காலமாகவே low B.P. இருந்து வந்துள்ள நிலையில் அதிகாலை 3 வாக்கில் அசவுகரியமாய் உணர்ந்திருக்கிறார் போலும் ! வீட்டில் ஏதோ கைப்பக்குவங்கள் செய்து தந்துவிட்டு மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வதற்குள்ளாய் காலன் அழைத்துச் சென்று விட்டிருக்கிறார் ! 30 ஆண்டுகளுக்கும் மேலாய் என்னோடு சரளமாய் ; பல சமயங்களில் குழந்தைத்தனமாய் பழகிய மனுஷனை மூப்பு வென்று விட்டுள்ளது ! மரணித்த போது அவரது வயது 69 தான் ....போகும் வயதே அல்ல தான் !! 

1984-ல் ஒரு ஜூலையில் நமது துக்கனூண்டு ஆபீஸ் ரூமில் முதல்முறையாக அவரை சந்தித்தது இன்னமும் எனக்கு மறக்கவில்லை ! பாளையங்கோட்டையிலிருந்து அடிக்கடி தந்தையின் ஆபீசுக்கு நோட்புக் ராப்பர் டிசைன்கள் போட்டுக் கொண்டு வரும் மனுஷனை எனக்கு அப்போதே பழக்கமுண்டு தான் ! ஆரம்ப ஆண்டுகளில் நமக்கு பைண்டிங் செய்து வந்த பெரியவருமே மேலப்பாளையத்திலிருந்து வருபவரே என்பதால், அவரிடம் தகவல் சொல்லி மாலையப்பனை வரவழைத்திருந்தேன் ! முதல் டிசைனாய்  நான் தந்திருந்தது - பின்னாட்களில் "புரட்சித் தலைவன் ஆர்ச்சி"யின் அட்டைப்படமாய் மிளிர்ந்த படத்தினையே ! அது எனக்கு அத்தனை பிடிக்கவில்லை என்பது வேறு கதை ஆனால் அந்த முதல் பணிக்கு அந்நாட்களில் நான் தந்தது ரூ.100 தான் ! திருநெல்வேலியிலிருந்து வந்து போக பஸ் காசுக்கு ரூ.10 தனி ; சாப்பாட்டுக்கென ரூ.5 !! இன்றைய தலைமுறைக்கு இவை எல்லாமே நம்ப இயலா நம்பர்களாகவே இருக்கக்கூடும் ; ஆனால் trust me guys - அந்நாட்களில் நான் 27 நாள் ஐரோப்பா சுற்றி வந்த விமான டிக்கெட்டே ரூ.9000 தான் ! 

தொடர்ந்த காலங்களில்  - எனது எதிர்பார்ப்புகள் என்ன ? என்ன மாதிரியான ஜிங்கு ஜாங் கலர்களை நான் கோருவேன்? என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி ! அதிலும் ஸ்பைடர் டிசைன் என்றால் மனுஷனுக்கு செம குஷி ஆகிடும் ! இன்னமும் அந்த "கடத்தல் குமிழிகள்" ; சதுரங்க வெறியன் " அட்டைப்படங்களெல்லாம் தெறிக்கும் நினைவுகளாய் என்னுள் உள்ளன ! நடு நடுவே கோவில்களில் சுவர்களில் சித்திரம் போடும் காண்டிராக்டுகளுக்கு கூப்பிடும் போது என்னிடம் தயங்கியவாறே நிற்பார் ; அங்கே கணிசமான சன்மானங்களுக்கு வாய்ப்புண்டு என்பதால் நான் தடுக்க மாட்டேன் ; ஆறேழு மாதங்கள் கழிந்த பின்னே மீண்டும் வந்திடுவார் ! அங்கே கோவில்களில் போட்ட சித்திரங்களை ; அங்கே அணிவித்த பொன்னாடைகளை ; பாராட்டு மடல்களைக் காட்டி விட்டு அந்த டிரேட்மார்க் சிரிப்பைச் சிரித்து வைக்கும் போது அத்தனை பெருமிதம் மிளிரும் அவரிடம் ! 

ஆனால் கோவில்களில் அந்தப் பணிகள் ரொம்பவே பெண்டைக் கழற்றுவதால், அடிக்கடி சுகவீனங்களும் பலனாகிட்டன !  பின்னாட்களில் நமது ஊதியங்களையுமே கணிசமாய்க் கூடுதலாகி இருந்ததால் இயன்ற மட்டுக்கும் அந்தப் பணிகளைத் தவிர்த்து வந்தார் ! ஆனால் அந்த வரதா புயல் ; தொடர் மழைகள் என்ற காலத்தில் ரொம்பவே தளர்ந்து போனதால் சிவகாசிக்கு வந்து செல்லக்கூட தடுமாற ஆரம்பித்தார் ! And அந்தத் தளர்ச்சியின் பிரதிபலிப்பு பணிகளிலும் தென்பட்டது தவிர்க்க இயலாப் பின்விளைவாகிப் போனது ! ஒரு டிசைனைப் பூர்த்தி செய்ய ஒரு வாரமே ஜாஸ்தி என்ற நிலை மாறி, ஒரு மாதம் அவசியமென்றாகிய சூழலில் தான் நாம் வெளியீடுகளின் எண்ணிக்கைகளை திடுமென அதிகரித்திருந்தோம் ! So சிறுகச் சிறுக ஒரிஜினல் டிசைன்கள் ; டிஜிட்டல் ஓவியர்களென்று நாமும் நகர்ந்திட, ஓவியரும் ஒய்வு நாடிட துவங்கினார் ! அவரை கடைசியாய் நான் பார்த்தது 2019-ன் இறுதியில்....! இன்றைக்கு போட்டோக்களில் நினைவுகளாய் மட்டும் தொடர்கிறார் ! விதிகளின் வரிகள்....!!

நமது 50-வது ஆண்டு விழாவின் சமயம் பழைய ஆட்கள் அனைவரையுமே கௌரவிக்க எண்ணியிருந்தேன் ; ஆனால் இறைவனின் சித்தம் வேறாக இருந்துவிட்டுள்ளது ! நம்மால் இயன்றதொரு தொகையினை அவரது குடும்பத்தாரிடம் தந்திட எண்ணியுள்ளேன் ! காலச்சக்கரத்தின் ஓட்டத்தை இது போன்ற தருணங்களில் தான் முழுமையாய்ப் புரிந்து கொள்ள முடிகிறது ! Pheww !!

எண்ணற்ற நமது ஹிட் இதழ்களுக்கு உறுதுணையாய் நின்றிருந்தவருக்கு நமது வணக்கங்கள் & நன்றிகள் !!  ஆண்டவனிடம் அடைக்கலம் கண்டுள்ளவரின் ஆன்மா நிம்மதி காணட்டும் !! RIP ஓவியரே !! 

Saturday, June 19, 2021

ஒரு கதையிண்ட கதா !

 நண்பர்களே,

உஷார் : நெடும் பதிவு ahead ! பொறுமை குறைச்சலானோர் நேராய் பதிவின் bottom-க்கு ஜரிகண்டி ப்ளீஸ் ! 

வணக்கம். ஒரு "மெட்டல் மண்டையன்" இதற்கு முன்பாய் நம் மத்தியில் இத்தனை பரபரப்பை ஏற்படுத்தியது - போன வருஷத்து ஆர்ச்சியின் மாக்சி சைசிலான "பனி அசுரர்" இதழ் கலரில் வெளியான சமயம் தானென்று நினைக்கிறேன் ! அந்த சிகப்புச் சட்டித் தலையன் பேசியே பொழுதைக் கடத்துவான், இந்த விண்வெளி மண்டையனோ மௌனத்திலுமே வண்டி ஒட்டி விட்டான் ! Jokes apart - ஒரு all color மாதத்து இதழ்களின் மத்தியில் - அளவில் பாதியாய் இருந்தும், கவனத்தின் முழுமையையும் கபளீகரம் செய்துள்ள "ஒரு தோழனின் கதை" - என்னைப் பொறுத்த வரையிலும் ஒரு ஹிட்டா ? ; மிஸ்ஸா ? என்பதை விட ஒரு "மெகா அனுபவம்" என்பதாகவே நினைவில் தங்கிடும் ! இந்த இதழ் வெளியான பிற்பாடு பழைய பாட்டா சப்பல்ஸ் பிய்ந்திடவும் செய்யும் ; வழுக்கைத் தலையில் சில பரிவட்டங்கள்  கட்டவும்படும்  என்பதே எனது எதிர்பார்ப்புகளாய் இருந்தன ! (என்ன - சப்பல்சின் வீச்சு நான் யூகித்திருந்த விகிதாச்சாரத்தை விடக் கம்மியாகவும், பரிவட்ட எண்ணிக்கைகள் அதிகமிருந்ததும் செம pleasant surprise !  தேங்க்ஸ் all) துவக்கத்தில் கிட்டிய பூசைகளின் தடங்கள் மறையும் முன்னமே பிரவாகமெடுத்த சிலாகிப்புகள் - எனது யூகங்களைப் பூரணமாய் மெய்ப்படுத்தின ! 

"ஒரு தோழனின் கதை" இங்கே அலசோ அலசென்று அலசப்படும் வேளையில் கொஞ்சமாய் மண்டையை உருட்ட முனைந்தேன் - சென்றாண்டினில் இதனை அட்டவணைக்கென டிக் செய்த சமயத்தில் எனது thought process-ன் முழுமை என்னவாக இருந்ததென்று ! இதனில் பெரும்பகுதி ஏற்கனவே நான் இங்கு எப்போதாவது ஒப்பித்ததாகவே இருக்கலாம் தான் ; அவ்விதத்தில் இதுவொரு மறுஒலிபரப்பே எனில் - blame it on my மறதி please ! 

பொதுவாய் பணியில் எனது சக்கரங்களை சுழலச் செய்வன மூன்று சமாச்சாரங்கள் ! 

Of course - ஒரு தொழிலாய் ; கொஞ்சமேனும் பணம் ஈட்டித் தரும் வாய்ப்பாய் இதனைப் பார்த்திடுவதை மறுப்பதற்கில்லை என்பதால் - அந்த 3 சமாச்சாரங்களுள் ஒன்றாய் லாப நோக்கமும்  இருந்திடும் ! ஆனால் நிச்சயமாய் அதற்கான இடம் # 3 தான் ; moreso இந்தப் பேரிடர் காலங்களில் தலை தண்ணீருக்கு மேலிருந்தாலே சந்தோஷம் என்பதால், வரவு-செலவு கணக்குகளை பார்க்கும் நேரமே அல்ல இது, என்பது போன வருஷமே செய்ததொரு தீர்மானம் !

So மீதமிருப்பவை 2 factors & அவையே என்னுள் ஒரு சுவாரஸ்யத்தை உயிர்ப்போடு தொடரச் செய்கின்றன என்பேன் ! முதலாவதும், பிரதானமானதும் : ரக ரகமாய் ; வித விதமாய் ; கலர் கலராய்க் கதைகளை எங்கெங்கிருந்தோ உருட்டிப் புரட்டி எடுத்து வந்து உங்களிடம் ஒப்படைப்பதில் கிட்டும் அந்தச் சன்னமான ஒரு திருப்தி !  ஆண்டின் கதைத் தேர்வு நேரங்களே எனக்கு தீபாவளி ; பொங்கல் ; ரம்சான் ; கிருஸ்துமஸ் ; முழுப்பரீட்சை லீவுகள் - all rolled in one ! "லாட்டரியில் 15 லட்சம் ஜாக்பாட் அடிச்சிருக்கு " என்றவுடன் - "இந்த ரோட்டை வாங்கட்டுமா ? இந்தத் தெருவை வாங்கிப் போடட்டா ? இந்த ஆத்தை வாங்கட்டுமா ?" என்று பரபரக்கும் கவுண்டரைப் போல கதைத் தேர்வு நாட்களில் உள்ளங்கையிலிருந்து உச்சந்தலை வரைக்கும் நமைச்சல் எடுக்கும். (இல்லீங்க...தோல் டாக்டரைப் பார்க்கலாம் தேவை இல்லீங்க !!) கையில் இருப்பதோ குறிப்பிட்ட ஸ்லாட்ஸ் மட்டுமே ; பையில் இருப்பதோ அரைக்காசுப் பணம் மட்டுமே என்றாலும், வெள்ளை மாளிகையையும், பக்கிங்ஹாம் அரண்மனையையும், ஐபெல் டவரையும் வாங்கப் போகும் அம்பானி-அதானி ஓனரைப் போல சலம்புவது, ஒவ்வொரு ஆண்டையும் எனக்குத் திருவிழாவாக்கும் தருணங்கள் ! 

And வெவ்வேறு ஜானர்களில் நாம் கதைகளை வெளியிடத் துவங்கிய நாட்கள் முதலாய் எனது கதைத்தேர்வுத் திருவிழாவானது வேறொரு லெவெலுக்கு உயர்ந்தது என்று சொல்லலாம் ! மாமூலான டிடெக்டிவ் ; கௌபாய் என்ற ரசனைகளிலிருந்து கார்ட்டூன்ஸ் ; ஹாரர் ; கிராபிக் நாவல்ஸ் என்று நாம் கிளை விட, புலி வேஷம் கட்டிக்கிட்டு ஆட்டம் போட எனக்கான களம் விரிவடைந்தது போலிருந்தது ! So வித்தியாசமான தொடர்களை / நாயக / நாயகியரைத் தேடிக் கொண்டு வந்து உங்கள் முன்னே ஒப்படைக்கும் த்ரில்ஸ் ஒரு மிடறு கூடியது போலவே உணர ஆரம்பித்தேன் ! 

புதுசாய் எதையாச்சும் கண்ணில் காட்டி உங்களிடம் ஷொட்டு வாங்கும் அந்த முனைப்பே - கமான்சே ; லார்கோ ; ஷெல்டன் ; லேடி S ; ஜெரெமியா ; ஜூலியா ; மேஜிக் விண்ட் ; பராகுடா ; Damocles ; ப்ளூகோட்ஸ் ; மேக் & ஜாக் ; பென்னி ;  லியனார்டோ ; எண்ணற்ற கிராபிக் நாவல்கள் என இந்தப் பத்தாண்டுகளில் பல்டிக்களின் நிஜப்பின்னணி ! ஷொட்டுக்கள் - கொட்டுக்களாய் மாற்றம் கண்டதும் நிறையவே உண்டு தான் ; ஆனாலும், 'திரிஷா இல்லாட்டி நயன்தாரா இல்லாட்டி காந்திமதி' என்று உருண்டு கொண்டே செல்வது எனக்குப் பழகிப் போய்விட்டதொரு addiction ஆகி விட்டுள்ளது ! ஒவ்வொரு ஆண்டின் அட்டவணையிலும் யாரையாச்சும் புதுசாய்க் கண்ணில் காட்ட முனைவதுமே இந்தப் பின்னணியினில் தான் ! அதிலும் நாம் புழங்கும் கதைக்களங்களின் பெரும்பான்மை - scanlation-களில் இருந்தால் தவிர ஆங்கிலத்தில் வாசிக்கும் வாய்ப்புக்கள் கொண்டவையல்ல எனும் போது -'பாருங்கோ சார்...பெரிய கண்ணுப் பார்ட்டி கம்பி மேலே நடக்குது ; இப்போ கர்ணமும் போடுது !! அல்லாரும் ஒருவாட்டி ஜோரா கைதட்டுங்கோ !!" என்று உங்களின் முன்னே வித்தை காட்டும் ஆர்வம் கூடிடுவதுண்டு ! 

And கிராபிக் நாவல்களும், ஒன்-ஷாட் கதைகளுமே நம் தேடல்களின் ஒரு அங்கமாகிய பின்னே எனக்கான லைசென்ஸ் இன்னமும் ரொம்பவே வீரியமானதாக உணர்ந்தேன் ! ஒரு எடிட்டராய் எனக்கு bright ; light ; ஜாலியான கதைகளே பிடிக்கும் ; ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளனாய் சற்றே dark கதைகள் ; மென்சோகப் படைப்புகளென்றால் சப்புக் கொட்டத் தோன்றும் ! So உங்களிடமிருந்து "கி.நா. லைசென்ஸ்" கிட்டிய பின்னே - "ஐயோ பீரோலு...சிலுவரு பேட்டரி ....பாரின் சரக்கு....சட்டி...சாமானு.." என்று ஆடாத குறை தான் ! ரிப்போர்ட்டர் ஜானியைப் போல ஒரு ரெகுலரான நாயகரின் தொடரினிலிருந்து நல்லதாக ஒரு கதையைத் தேர்வு செய்து உங்களிடம்  ஒப்படைப்பதும் குஷி தான் ; ஆனால் அதே நேரம் ஒரு புதியவரையோ, அல்லது என்னவென்றே நீங்கள் அறிந்திருக்கா ஒரு கி.நா.வையோ ஒப்படைக்கும் போது உள்ள த்ரில் செம ஜாஸ்தி ! அந்த த்ரில் சார்ந்த தேடலின் பலனே  - நமது dark கி.நா.க்கள் ; கண்ணான கண்ணே ; பிஸ்டலுக்குப் பிரியாவிடை ; பனியில் ஒரு குருதிப்புனல் ; கோழைகளின் பூமி ; மா துஜே ஸலாம் ; அர்ஸ் மேக்னா போன்ற offbeat ஆக்கங்கள் ! கரணம் தப்பினால் ஒவ்வொரு தேர்விலும் பலப்பல பாட்டா சப்பல்ஸ்களை முகத்தோடு முகமாய் முத்தம் கொஞ்சும் வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இராதென்று தெரிந்தே இருக்கும் தான் ; ஆனாலும் அந்த ரிஸ்க் எடுக்க நான் தயங்கினால் எதுவுமே சாத்தியமாகிடாதென்பது தான் bottomline ! So இவை போன்ற கோக்குமாக்கான தேர்வுகளை செய்யத் துணிந்திடும் ஒவ்வொருமுறையும் என்னுள் நிகழும் அந்த adrenaline rush தான் இங்கே பிரதானம் ! 

"ஒரு தோழனின் கதை" பிரான்சின் top பதிப்பகமான க்ளெனாவின் ஒரு பிரத்யேக வரிசையின் படைப்பு ; 2015-ல் வெளியானது ! போன வருஷத்து லாக்டௌன் சமயத்தில் செய்த மாமூலான தேடலில் கண்ணில் பட்ட கதை !

இங்கே நமது படைப்பாளிகளைப் பற்றியும் சொல்லியாகணும் ! நமது மெயின் பிக்ச்சர் எப்போதுமே ஆக்ஷன் & கௌபாய் என்பதை அறிவார்கள் ! ஆனால் அவ்வப்போது நான் தோலான்-துருத்தி என ஏதேதோ ஜானர்களிலான கதைக்கோப்புகளையுமே கேட்டபடியே இருப்பேன் ! ஒவ்வொன்றையும் சளைக்காது அனுப்பித் தருவார்கள் - "இதுலாம் உனக்கு செட் ஆகுமா ?" என்ற கேள்விகளுக்கே இடமின்றி ! அவ்விதச் சுதந்திரமும், அன்பும் இல்லையெனில் நான் இந்தப் பரீட்சார்த்தங்கள் திக்கில் தலைவைத்துப் பார்க்கக் கூட வாய்ப்பிராது ! Of course - பிரான்சில் வசிக்கும் நம் நண்பர்களிடம் எப்போதோ ஒருமுறையெனில் கோரிடலாம் ; ஆனால் வாரத்தில் ரெண்டுவாட்டி குடலை உருவினேனெனில் - அந்த ஊரில் இருக்கக்கூடிய ஜார்கண்ட் பக்கமாய்க் குடி மாறிடுவர் ! கோப்புகளை வரவழைத்துப் பார்த்த நொடியில் "ரிஸ்க்...ரஸ்க்...".என்று தலைக்குள் ஒரு குரல் ஒலிக்கத் துவங்கியது ! அந்தக் கணத்தில்  கார்ட்டூன் பாணியிலான அந்த மொக்கைச் சித்திரங்களை நான் ரொம்ப கண்டுகொள்ளவெல்லாம் இல்லை ; சித்திர பாணிகளைக் கொண்டு ஒரு கதையை எடை போடாதே என்பதைத் தான் க்ரீன் மேனர் கற்றுத் தந்திருந்ததே ! நிறையவே நெட்டில் அலசினேன் ; ஏகோபித்த குரல்கள் சிலாகிப்புகளாகவே இருக்கக் கண்டேன் ; அப்புறமும் to be safer - கோவையிலுள்ள நமது மொழிபெயர்ப்பாளரிடம் முழுக்கதையையும் இங்கிலீஷில் எழுதிக் கேட்டு வாங்கி ; அவரது அபிப்பிராயங்களையும் கேட்டுக் கொண்டேன் ! அப்புறமும் முழுசாய் திருப்தி கிட்டவில்லை, இங்கிலீஷ் ஸ்கிரிப்ட் கத்தையை மேலோட்டமாய் வாசிக்கத் துவங்கினேன் ! கதையில் இழையோடும் dark humour எனக்கு ரொம்பவே பிடித்தது !! தமிழாக்கம் செய்திடும் போது இங்கெல்லாம் ஸ்கோர் செய்திட வாய்ப்புகள் பிரகாசம் என்று தோன்றிய நொடியிலேயே கதையை டிக் அடித்து விட்டேன் ! ஏனெனில் - என்னுள்ளான சக்கரச் சுழற்சிகளுக்கு உதவிடும் அந்தக் காரணி # 2 - மொழிபெயர்ப்பினில் ஸ்கோர் செய்யக் கூடிய வாய்ப்புகள் மீதான காதலே ! 

உலகத்திலேயே செம போரான பணி என்னவென்று என்னை யாரும் கேட்கப்போவதில்லை தான் ; ஆனால் கேட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன் - "பேனா பிடிப்பவனுக்கு பெருசாய் வாய்ப்பே தராது ஒரே சீராய் ஓட்டமெடுக்கும் கதைகளில் பணியாற்றுவது தான்..." என்பேன் !எக்கச்சக்கமாய்க் குவிந்து கிடப்பதிலிருந்து ஒரு மாமூலான க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட்  கதையையோ ; ஒரு மாடஸ்டி கதையையோ ; ஒரு விங் கமாண்டர் ஜார்ஜ் கதையையோ வாங்கிக் கொணர்ந்து வெளியிடுவதில் பெருசாய் த்ரில் இருப்பதில்லை எனக்கு ; simply becos அவையெல்லாமே இங்கிலீஷில் உள்ளவை ; எப்போது வேண்டுமானாலும் நீங்கள் படித்துக்கொள்ளக் கூடியவை & more importantly - ஒரு மொழிபெயர்ப்பாளனாய் ஸ்கோர் செய்திட இம்மியும் வாய்ப்பளிக்கா படைப்புகள் ! ஒரு டெக்சின் பன்ச் வரிகளுக்கு  அவசியங்களோ ; கார்சனின் நையாண்டி வரிகளுக்குத் தேவைகளோ அவற்றினில் இராது ! ஒரு ஜேம்ஸ் பாண்ட் 2.0-வின் ஸ்டைலான டயலாக்கள் முன்வைக்கும் சவால்கள் அங்கே இராது ! கார்ட்டூன் ஆல்பத்தில் புன்னகைகளை விரியச் செய்திடும் வாய்ப்புகள் இந்த நேர்கோட்டு கிளாசிக் கதைகளில் இராது ! ஒரு இருண்ட கிராபிக் நாவலின் மூடுக்கேற்ப பேனா பிடிக்க முயன்று, அதனில் ஓரளவுக்குத் தேறியும் விட்டால் கிடைக்கும் திருப்தி அங்கே சாத்தியமல்ல  ! 

So ஒரே படைப்பினில் நான் எதிர்பார்த்த ரிஸ்க் + மொழிபெயர்ப்பின் த்ரில் சாத்தியமாகிடக்கூடும் என்று "ஒரு தோழனின் கதை" உறுதி கூறுவதாக எனக்குத் தோன்றியதால் தான் துளியும் தயக்கமுமின்றி இதனுள் குதிக்கத் துணிந்தேன் ! இவை தான் இந்த ஆல்பத்தின் தேர்வின் நிஜமான பின்னணிகள் ! அதே சமயம்,these very same two factors தான் -  " இந்தக் கதை சுத்தமாய் ஒர்க் அவுட் ஆகாவிட்டால், உங்க காசு தண்டம் போகாது ; ஈடாய் வேறேதாவது தருவேன் ! " என்றும் என்னைச் சொல்ல வைத்தன ! Simply becos - இந்த ஒற்றைத் தேர்வின் பின்னாலிருந்தவை மட்டும் இம்மி கூட பதிப்பக லாஜிக் கொண்ட  சமாச்சாரங்களே அல்ல ! முழுக்க முழுக்கவே உங்களைத் திகைக்கச் செய்யும் அவாவும், முடிந்தால் உங்களிடமொரு ஷொட்டு வாங்கும் சுயநலமுமே எனும் போது - மொத்தமாய் இந்த முயற்சி சொதப்பிடும் பட்சத்தில் அதனை ஈடுசெய்யும் பொறுப்பு எனக்கு இருப்பதாய் நினைத்தேன் !! இதுவே நான் பெனாத்தித் திரிந்ததன் பின்னிருந்த சிந்தனை ! More on that at the bottom of this post guys !

இந்தியாவில் ஏதேனுமொரு மொழியில், ஏதேனுமொரு சுவாதீனமான காமிக்ஸ் எடிட்டரிடம் இதே கதையைக் கொடுத்துப் பார்த்தோமெனில் துண்டைக் காணோம், துணியைக் காணோமென்று ஓட்டமெடுத்திருப்பார் ! அங்கு தான் வாசகர்களாகிய நீங்கள் உங்கள் முத்திரையைப் பதிக்கிறீர்கள் !  'ரிஸ்க் எடுக்கிறேன்...ரஸ்க் எடுக்கிறேன்' என்று நான் செய்திடும் குரங்குக்கூத்துக்களை on merits பரிசீலிக்க நீங்கள் மட்டும் தயாரில்லையெனில் - மாசம் 2 மஞ்ச சட்டைக்காரர்கள் ; நடு நடுவே மாயாவிகாரு - என்று தான் நமது வண்டி ஓடிக்கொண்டிருக்கும் !  139 கோடி ஜனம் வசிக்கும் இந்த தேசத்தில் - இத்தனை பக்குவப்பட்ட காமிக்ஸ் வாசக வட்டம் இந்த ஆயிரத்துச் சொச்சத்தைத் தாண்டி வேறெங்கும் இருக்குமென்று நான் சத்தியமாக நினைக்கவில்லை !  So அந்த நம்பிக்கையும் கைகோர்க்க - மெட்டல் மண்டையன் தமிழ்நாட்டுக்கு வருகை தருவது சாத்தியமாகியது ! 

ரைட்டு...நிரம்பவே ரிஸ்க் நிறைந்ததொரு இதழை களமிறக்கியாச்சு & ஆண்டவன் புண்ணியத்தில், பெரும் சேதாரமுமின்றி தலையும் தப்பிடுத்து ! In fact ஸ்டார் நாயகர்களின் ஹிட் இதழ்களுக்கு நிகரான அல்லது அதை விடவும் ஜாஸ்தியான அலசல்கள் ; சிலாகிப்புகளை மெட்டல் மண்டைக்காரன் ஈட்டி விட்டான் ! 

So what does that mean for us ? 

ஏற்கனவே நான் சொன்னது போல - இது ஹிட்டா ? சுமாரா ? என்ற கேள்விகளெல்லாமே இரண்டாம் பட்சமே ! இதுவொரு சுவாரஸ்யமான அனுபவம் என்பதே இதிலிருந்து நான் கொண்டு செல்லவுள்ள நினைவுகள் ! மாறுபட்ட படைப்புகள் நம் மத்தியினில் ஒரு அணிக்கு ரொம்பவே extreme ஒவ்வாமையை உருவாக்குவதையும் கணக்கில் கொண்டாக வேண்டும் ; இன்னொரு அணிக்கு பிடித்திடுவதையும் கருத்தில் கொண்டாக வேண்டும் தான் ! "ஹா....அதான் நிறையப் பேருக்குப் பிடிச்சுப் போச்சுல்லே ; இதே ரீதியில் கதைகளைத் தேடுறது தான் இனி வேலை !" என்று நினைக்கப் போவதில்லை ! In fact -  "கதை இருக்கு....ஆனா கதை இல்லை !! புரிஞ்சிருச்சு,,,ஆனா புரியலை !!" என்ற திரிசங்கு நிலையில் நண்பர்களுள் கணிசமானோர் இருக்கக்கூடுமென்பதே எனது gutfeel !! அவர்களது பொறுமைகளையும், எனது அதிர்ஷ்ட தேவதையின் அண்மையையும் தொடர்ச்சியாய் பரிசோதனைகளுக்கு ஆளாக்கிடக் கூடாதில்லையா ? கம்பி மேல் என்றைக்கோ ஒருவாட்டி நடக்கலாம் தான் ; ஆனால் கம்பில பொழுதன்னிக்கும் நடப்பேன் என்ற அடம் ஆரோக்கியத்துக்கு ஆகாதில்லியா ? So புரிதலில் சிரமங்களைக் கோரிடாத படைப்புகளாய்த் தேடுவதற்கே வரும் நாட்களில் முன்னுரிமை தர முனைவோம் ! சேதங்கள் யாருக்குமின்றி, சுவாரஸ்யங்கள் எல்லோருக்குமே இருக்கும் விதமாய் எனது தேர்வுகளை  வாசகர் friendly ஆக அமைக்கும் பொறுப்பு இருப்பது புரிகிறது ! Phewwwwwwwww !! (அந்த மஞ்சள் சட்டைக்காரங்களுக்கு ஒரு கோயில் கட்டணும் போலிருக்கு !!

And yes - ஆஞ்சநேயர் வாலாய் நீண்டுவிட்ட பதிவினை நிறைவுக்குக் கொணரும் முன்பாய் அந்த replacement சமாச்சாரம் பற்றி

இந்த ஆல்பத்தின் தேர்வின் பின்னணியினில் உள்ள non commercial காரணிகள் பற்றியும், அவற்றின் காரணமாய் எனக்கொரு தார்மீகப் பொறுப்பு இருப்பதாய் நான் நினைப்பது பற்றியும் சொல்லியிருந்தேன் ! அதையும் தாண்டி, என்ன தான் சூடத்தை அணைத்து சத்தியம் செய்யாத குறையாய் இந்த ஆல்பத்தை டீசெண்டான நோக்கினில் நாம் வெளியிட்டாலுமே,  உசுப்பி விட்டுக் காசு பார்க்குமொரு முயற்சியாய் இதனைக் கருதிட நிச்சயமாய் ஆர்வலர்களுக்குப் பஞ்சமே இராதென்பதுமே எனது யூகமாகவும் இருந்தது ! அந்த யூகமுமே பொய்க்கவில்லை என்பதை இதோ - சமீப நாட்கள் நிரூபித்தே வருகின்றன ! நண்பர் மொஹிதீன் போல  நேரடியாய் தங்கள் நெருடல்களை முன்வைப்போருக்கு நமது நியாயங்களைப் புரியச் செய்து விடலாம் தான் ; ஆனால் நோய்வாய்ப்பட்ட மனங்களோடு இந்த ஆல்பத்தை பிட்டுப் படத்தோடு ஒப்பிடும் நேசங்களும், 'ஆமா..ஆமா..டெபினிட்லீ !! ' என்று அதற்கு முட்டுத் தரும் மூத்த (!!) நெஞ்சங்களும் இருக்கும் இந்தச் சிறு காமிக்ஸ் உலகினில் - I need to back my words with deeds ! பொழுது போகாத ஒரு சிறு அணிக்கு எதையும் நிரூபிப்பது என் நோக்கமேயல்ல இங்கே  ! மாறாக - எனது உள்ளுணர்வின் உந்துதலில் செய்த தேர்வானது பிழையாகிப் போகும் பட்சத்தில், அதனை நிவர்த்திக்க லட்ச ரூபாய் விரயமானாலும் கூட, நான் தடுமாற மாட்டேன் என்பதன் மூலம் அந்தப் படைப்பின் மீது எனக்கிருந்த நம்பிக்கையினையும், படைப்பாளிகளின் மீதான எனது அபிமானத்தையும் reitirate செய்திட இதனை ஒரு வாய்ப்பாக நான் பார்த்திடுகிறேன் ! I know this might sound corny ; but என்றைக்குத் தான் எனக்கு மண்டை ஒரு நிலையில் இருந்துள்ளது ?  ஆகையால் இதுவே எனது திட்டமிடல் :

லக்கி லூக்கின் 75-வது ஆண்டான இதனை சற்றே அழகாய்க் கொண்டாடிட சில திட்டங்கள் உள்ளன ! More on that later !! அவற்றின் ஒரு அங்கமாய்  நடப்பாண்டின் இறுதிக்குள் சில லக்கி மறுபதிப்புகளுமே உண்டு ! ரெகுலர் சைசில் ; தனித்தனி இதழ்களாய் ரூ.100 விலைகளில் அவை இருந்திடும் & அவற்றுள் ஒன்று - "சூ மந்திரகாளி !"  இம்மாதத்து கிராபிக் நாவலை சுத்தமாய் ஏற்றுக் கொள்ள இயலா வாசகர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுவே : 

"ஒரு தோழனின் கதை" புக்கின் முதல் பக்கத்தில் "NO" என்று ஸ்கெட்ச் பேனாவால் பெருசாய் எழுதி, ஒரு போட்டோ மட்டும் எடுத்து அதனை நமது அலுவலக வாட்சப் நம்பருக்கு (98423 19755) தங்கள் முகவரிகளோடு அனுப்பினால் "சூ மந்திரகாளி" புக்கானது - உரிய நேரத்தில் விலையின்றி அவர்களுக்கு அனுப்பிடப்படும். சந்தாவினில் உள்ளோரெனில் கூரியர் கட்டணங்களுக்கு அவசியமிராது ; சந்தாவில் அல்லாதோர் கூரியர் கட்டணம் மட்டும் செலுத்திட வேண்டி வரும். இது முறையான முன்னுதாரணம் ஆகிடாதென்ற நண்பர்களின் நல்லெண்ணங்களை நான் நிச்சயமாய் மதிக்கின்றேன் தான் ; and இதனை இனியொரு தொடர்கதையாக்கிட அனுமதிக்கவும் போவதில்லை தான் ! ஆனால் இந்த ஒற்றைத் தருணத்தில் மட்டுமே please permit me to stand by my words folks ! 

எது எப்படியோ - எனக்கு ஒரு விஷயத்தில் செம திருப்தி !! அடுத்த ஆறு மாசத்துக்குத் தேவையான மீம்ஸ் போட லட்டு லட்டா content கொடுப்பதில் ஐயாவுக்கு ஜெயமோ ஜெயம் ! வைகைப் புயல் ; தானைத் தலீவர் கவுண்டர் ; அப்பாலிக்கா இந்த egg eyes !! வேற யாரும் கிட்டக்க வந்துக்க முடியாதே !! பாருங்களேன் இந்த அட்டகாசங்களை !! எல்லாப் புகழும் நண்பர் MKS ராமுக்கே !! மற்ற நண்பர்கள் அனுப்பியுள்ள மீம்ஸ் அடுத்த பதிவினில் !! 

இந்தக் குவியலுள் best என எதைச் சொல்வீர்களோ guys ? 😍😍

Bye all....see you around ! Have a beautiful weekend !

And இம்மாதத்தின் பாவப்பட்ட மீத இதழ்களின் பக்கமாயும் இனி பார்வைகளை ஓடச் செய்வோமே ப்ளீஸ் ? 






















Wednesday, June 16, 2021

இது "நெத்த" பூமி !!

 நண்பர்களே,

வணக்கம்.  நினைவில் நின்றதொரு விஷயம் ; இரு ஜாம்பவான்கள் சார்ந்தது ! சும்மா ஒரு ஒப்பீடுக்காக இங்கே சொல்ல நினைக்கிறேன் ; so "அவங்களோட compare பண்ணிக்கிற அளவுக்கு நீ பெரிய அப்பாடக்கராகிப்புட்டியாக்கும் ??" என்று பொங்கல் வைக்க வேண்டாமே ?  ஏற்கனவே வைத்துள்ள பொங்கலே தீபாவளி வரைக்கும் இருக்கும் !

சுமார் 20 வருஷங்களுக்கு முன்பாய் டைரக்டர் ஷங்கரின் "பாய்ஸ்" திரைப்படம் வெளிவந்திருந்தது நினைவிருக்கலாம் ! அதற்கு திரைக்கதையிலும், வசனங்களிலும் ஒத்தாசை செய்திருந்தவர் மறைந்த ஜாம்பவான் எழுத்தாளர் சுஜாதா சார் என்பதுமே நினைவிருக்கலாம் ! படத்தில் ஒரு சீன் உண்டு - டீனேஜ் நடிகர் சிதார்த் மவுண்ட் ரோடில் அம்மணமாய் ஓடுவது போல் ! படம் வந்த பிற்பாடு, படமும் சரி ; அந்தக் காட்சியும் சரி - செம ரெய்டுக்கு ஆளாயின ! அந்த நேரம் குமுதத்தில் ஷங்கர் சார் ஒரு பேட்டியில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தார் ! படம் வெளிவருவதற்கு ரொம்பவே முன்னர், படத்தின் 'ரஷ்' பார்த்த பின்னே - இந்தக் காட்சிக்கும் சரி, படத்துக்கும் சரி, வெகுஜன விமர்சனம் இன்ன மாதிரி..இன்ன மாதிரி இருக்கும் ; ஊடகங்களின் விமர்சனங்கள் இன்னின்ன மாதிரி இருக்கும் என்பதை சுஜாதா அவர்கள் ஒரு தாளில் எழுதி டைரக்டரின் கையில் திணித்து விட்டுப் போயிருந்தாராம் ! And கிட்டத்தட்ட அனைத்துமே - சுஜாதா சாரின் கணிப்புகளின்படியே, யூகங்களின்படியே பின்னாட்களில் இருந்தனவாம் ! 

நேற்றைக்கு இந்த விஷயம் தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது - "காத்திருக்கும் கூத்து " குறும்பதிவினை upload செய்த போது ! 

  • மண்டகப்படி - டிக் 
  • சிலாகிப்பு - டிக் 
  • கதையைக் காணோம் - டிக் 
  • கலாச்சாரச் சீரழிவு - டிக் 
  • நூறு ரூபாய்க்குப் பிடித்த கேடு - டிக் 

திரும்பவும் சொல்கிறேன் - ஒன்னரையணா பேனாவைக் கையில் பிடித்திருப்பதால் என்னை சுஜாதா சாரோடு ஒப்பிட்டுக் கொள்வதோ ; "பாத்தீங்களா - பாத்தீங்களா - nostradamus-க்கு சித்தப்பா முறையாகும் நான் !" என்று பீற்றிக் கொள்வதோ இங்கே எனது நோக்கங்களல்ல ! மாறாக - உங்களின் ரசனைகளை முழுசுமாய் புரிந்திட இயலாது போயினும் , உங்களின் ரியாக்ஷன்களையாவது கணிக்க முயற்சித்த திருப்தியின் வெளிப்பாடு மட்டுமே !

"ஒரு தோழனின் கதை !"

ஏப்ரலில் ஏதோவொரு சமயத்தில் இதனில் பணியாற்றியது, இந்தப் பேரிடர் பொழுதுகளின் புண்ணியத்தில் தலைக்குள் அத்தனை fresh நினைவுகளாய் இருந்திருக்கவில்லை - நேற்று வரைக்கும் !  கோங்குரா காரங்களோடு பின்னூட்டங்கள் வரத்துவங்கிய பின்னே,  அவசரம் அவசரமாய் புக்கை மறுக்கா புரட்டிய போது, எங்கெங்கெல்லாம் நண்பர்களுக்கு இடறியிருக்கக்கூடும் என்பது நினைவுக்குத் திரும்பின ! நண்பரொருவர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார் - "இதனையே கொஞ்சமாச்சும் எடிட் செய்து ; சற்றே "கோடஸ்தி " ரீதியினில் தந்திருக்கலாமோ ? நண்பர்களுக்கு இத்தனை நெருடிடாது போயிருக்குமோ ?" என்று ! For starters - கதையினில் கைவைக்க நமக்கு அனுமதி இருந்திருக்கவில்லை ! தவிர, அந்தச் சுதந்திரம் இருந்திருந்தாலுமே - நான் இந்த ஆக்கத்தினில் கத்திரிகளையோ, தார் டப்பிகளையோ பயன்படுத்தியே இருக்க மாட்டேனென்பது தான் நிஜம் ! 

ஒரு மிகையான கற்பனையும் ; ஒரு யதார்த்த வாழ்வின் சித்தரிப்பும் இணைதடங்களாய்,வினோத நண்பர்களாய் ஓடிடும் இந்தப் படைப்பில் titillation - அதாவது கிளர்ச்சியூட்டும் நோக்கம் கிஞ்சித்தும் கிடையாது என்பது எனது புரிதல் ! நாம் சந்தோஷங்கள் / பொழுதுபோக்குகள் / வாழ்வின் தேடல்கள் எனக் கருதிடும் சமாச்சாரங்கள் மீது ஒரு மௌனமான மூன்றாம் மனுஷனின் பார்வையைப் படர விட்டுக்காட்டுவதும் ; மனித அபிலாஷைகளின் மீதான பகடிகளும் ; முற்றுப்புள்ளிகளும் கூட ஒரு பொழுதில் கமாவாகிடக் கூடுமென்று நம்பிக்கை தருவதும் இந்தப் படைப்பின் குறிக்கோள்களுள் சில - என்று எனக்குத் தோன்றியது ! அவ்விதமிருக்க, இதனை சரோஜா தேவி சமாச்சார treatment-க்கு உட்படுத்த எனக்கு மனம் ஒப்பவில்லை !  By intent இங்கே சித்திர பாணிகளை கார்ட்டூன் ஸ்டைலில் அமைத்துள்ளனர் படைப்பாளிகள் ! அந்த எழுத்துரு கூட ஒரிஜினலில் இதே ஸ்டைலில் தானிருக்கும் ! So ஒட்டு மொத்தமாய் ஒரு light atmosphere தனை உருவாக்கி, அதனூடே கொஞ்சம் கனமான வாழ்வியலைச் சொல்ல படைப்பாளிகள் எண்ணியிருப்பதாய் நினைத்தேன் ! இத்தனை தெளிவாய் சிந்தித்து ; இத்தனை சிரத்தையாய் அவர்கள் உருவாக்கிய படைப்பை சிதைவுகளின்றி அப்படியே வாசகர்களுக்குக் கொண்டு சேர்த்திடலே முறை என்று தோன்றியது எனக்கு - so துடைப்பங்கள் பறக்குமென்பது புரிந்த போதிலும் துணிந்தேன் ! என்ன - உலக்கைகளும் பறக்கும் படையில் பங்கெடுக்கும் என்பதைத் தான் யூகித்திருக்கவில்லை நான் ! 

கிராபிக் நாவல்கள் என்றாலே அழுகாச்சிகளாகிப் போய் விட்டன ; ஏற்கனவே இருண்டு கிடக்கும் பொழுதுகளில் இந்த நோவு வேறு தேவையா ? என்ற கேள்வி போன வருடமே ஒலிக்கத் துவங்கிட - "ரைட்டு.. கொஞ்ச காலத்துக்கேனும் no more dark stuff என்று தீர்மானித்தேன் ! "பிரளயம்" கதையை ஏகமாய் செலவழித்து வாங்கிய பின்னே மூலை சேர்த்தது கூட இதன் பொருட்டே ! அந்நேரம் கண்ணில் பட்டது தான் இந்தப் படைப்பு ! இதற்கு ஆங்கிலத்தில் scanlation உள்ளதாய் இன்றைக்கொரு நண்பர் சொல்லத்தான் கேள்விப்பட்டேன் ; ஆனால் நான் பரிசீலனைக்கு எடுத்ததோ பிரெஞ்சு version தான் ! வழக்கம் போல கதைச் சுருக்கம் ; இணைய தள விமர்சனம் என்ற பின்னணிகளோடு பரிசீலித்த போது - "heavy stuff told light" என்றதொரு விமர்சனம் கண்ணில் பட்டது ! 'அடடே...இது நமது கிராபிக் நாவல் தடத்துக்கு ; அதுவும் இந்தப் பொழுதுகளில் சுகப்படுமே !!' என்று தோன்றியது ! Plus அந்த காம்பாக்ட் சைசும் வசீகரிக்க, டக்கென்று தேர்வு செய்தேன் ! 

கதைச் சுருக்கங்கள் ; அலசல்களென்பதெல்லாம் வேறு - real stuff என்பது நாமே பணியாற்றும் போது உள்வாங்கிட சாத்தியப்படும் உணர்வுகளே என்பதை நானறிவேன் ! And ஏப்ரலில் இதனில் பணியாற்றிய போது புரிந்தது - இது ஏகோபித்த அங்கீகாரங்களை ஈட்டக்கூடியதொரு சமாச்சாரமே அல்லவென்று ! நிறைய extreme reactions இதற்கு இருந்திடுமென்று புரிந்தது ! ஆனால் "பிரளயம்" முயற்சியை மூட்டை காட்டியது போல் இதனையும் பரணுக்கு அனுப்ப மட்டும் மனசு ஒப்பவில்லை ! காமிக்ஸ் ரசனைசார் விஷயங்களில் 100% ஒருமித்த கருத்துக்களை அந்த லுக்கி லூக் மனுஷனைத் தாண்டி வேறு யாருமே ஈட்டியதில்லை என்பது bottomline ! சரி, ஏதேதோ முயற்சித்து விட்டோம் - இந்த வினோதக் கற்பனையையும்  ஓரளவுக்கேனும் ஏற்றுக் கொள்ளாது போக மாட்டோம் என்ற (அசட்டு) நம்பிக்கை எங்கிருந்தோ துளிர் விட - துணிந்தேன் !

மொழிபெயர்ப்பினை முடித்த நொடியினில் - இது வெளியான பிற்பாடு எவ்வித ரியாக்ஷன்களை வரவழைக்கக்கூடுமோ என்று யூகித்துப் பார்க்க முனைந்தேன் ! அன்றைக்கு மனசில் தோன்றியதை ஒரு நோட்டின் பின்பக்கமாய் எழுதி வைத்தது தான் - நேற்றைய குறும்பதிவின் வரிகள் ! In fact இந்த லாக்டௌன் இருந்திராவிடின் மே மாதமே இதனை உங்களிடம் ஒப்படைத்து, ஒரு மாதத்துக்கு முன்னமே வீங்கின மண்டையை தடவியிருப்பேன் தான் ! To cut a long story short - 'சகிக்கலை" என்ற விமர்சனங்களும் ; "not bad " என்ற எண்ணங்களும் பதிவாகியுள்ள நிலையில் எனக்கு பெரிதாய் வியப்புகள் இல்லை தான் ! So மாமூலான நாட்களாய் இவையிருப்பின், 'ஆங்...போ..போ...போ..ஆடு களவே போகலையாம் ...பஞ்சாயத்தை கலைச்சாச்சு..கிளம்பு..கிளம்பு !!" என்று சுனா-பனா வடிவேலாய் கிளம்பியிருப்பேன் தான் ! ஆனால் இவை அசாதாரண நாட்கள் & கொஞ்ச காலமாகவே எனக்குள் ஒருவித நெருடல் : 

நீங்கள் விரும்புவதை நான் தராது - நான் நினைப்பதையே உங்களின் தொண்டைகளுள் திணிப்பதான எண்ணம் நிறைய நண்பர்களுக்கு இருப்பதில் இரகசியங்களில்லை ! 

  • "ரோஜா மாளிகை ரகசியம்" கேட்டாக்கா ரோஜரை கண்ணிலே காட்டுறான் !
  • "வைரஸ் X " ஐ கேட்டாக்கா "வயசாகிட்டு - காரிகனுக்கு"ன்னு சொல்றான் !
  • "வேதாளரை" கேட்டாக்கா விளங்காத பாஷையிலே என்னென்னமோ பேசறான் !
  • "பேரிக்காய் போராட்டம்' கேட்டாக்கா பெட்டக்சில் கிள்ளி வைக்கிறான் !
  • "XIII ஸ்பின் ஆப்" கேட்டா நம்மளையே சுத்துலே விடறான் !!

என்று ஆளுக்கொரு ரூபத்தில் விசனங்களோடு குடியிருப்பதில் ஏது ரகசியம் ? ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையாகிட வேண்டிய சூழலில் என்னையும், எனது தேர்வுகளையும் அவ்வப்போது சகித்திடத் தான் வேண்டிப் போகிறது நண்பர்களில் நிறைய பேருக்கு ! 

போன மாதத்து முத்து காமிக்ஸ் 50-வது ஆண்டுமலர் அலசல்களின் களேபரத்தின் போது, இது அப்பட்டமாகவே தென்பட்டது ! End of the day - நான் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலுமே - அவரவர் தலைக்குள் போட்டு வைத்திருக்கும் அந்த காமிக்ஸ் சார்ந்த personalized வட்டங்களைத் தாண்டி வெளிவருவது என்பது அத்தனை சுகானுபவமே அல்ல என்பது தெரிந்த சமாச்சாரமே ; ஆனால் இம்முறை அவை வெளிப்பட்ட ரூபங்களில் அழுத்தம் அதிகமே  ! More than anything else - "கேட்டதை போடுறதை விட்டுப்புட்டு - இவனா என்ன நாட்டாமை ?" என்ற எரிச்சல் விரவியிருப்பதாக எனக்கு உணர முடிகிறது ! I might be wrong ...ஆனால் எனது gut feel இதனில் பொதுவாய்ப் பொய்ப்பதில்லை ! 

And நேற்றைக்கு நண்பர் மொஹிதீன் பதிவிட்டிருந்ததில் "பொம்ம புக் - பொம்ம புக்காவே இருந்துட்டுப் போகட்டுமே ?" என்ற வரிகளில் தொனித்த யதார்த்தம் எனக்கு தப்பிதமாய்த் தோன்றவில்லை ! So "ஒரு தோழனின் கதை" வெற்றியாக அமைந்திட்டாலும் சரி, தோல்வியாய் புதைந்தாலும் சரி - ஒரு course correction-க்கு உதவிடாது போகாது என்ற மட்டில் மகிழ்ச்சி எனக்கு !  பார்ப்போமே - இந்த அனுபவத்தில் நான் எடுத்துச் செல்லும் பாடங்கள் ஏதேனும் இருந்திடுமா ? இருந்திடுமெனில் அவை நமக்கு  பயன்பட்டிடக்கூடுமோ என்று ! 

அதற்காக நாளைக்கே "மணாளனே மங்கையின் பாக்கியம்" ரேஞ்சுக்கு கதைகளைத் தேடிட ஆரம்பிப்பதாகவெல்லாம் இல்லை ; நாளை மறுநாளே XIII ஸ்பின்-ஆப்களை போட்டு உங்கள் குடல்களின் மீதங்களை உருவுவதாகவும் இல்லை ! ஆனால் இனி வரும் நாட்களில் - உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு நெருக்கமானதாய் எனது தேர்வுகளை அமைத்திட முயற்சிப்பேன் - of course அவை கற்களைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதிக்கச் சொல்லும்  பரிந்துரைகளாக இல்லாத பட்சங்களில் ! 

And rest assured, இது நேற்றும், இன்றுக்குமான காரசாரப் பின்னூட்டங்களின் நீட்சியான எனது knee jerk ரியாக்ஷனும் அல்லவே அல்ல ! கொஞ்ச நாளாகவே மனதை அரித்துக் கொண்டிருந்த சமாச்சாரத்தினை பகிர்ந்திட மட்டுமே செய்கிறேன் ! ஏகமாய் வெறுப்பை ஈட்டுவதே எனது  ஒவ்வொரு பரீட்சார்த்தமான குட்டிக்கரணங்களின் இறுதிப் பலனெனில் - 'what's the point anyways ?' என்று உள்ளுக்குள் தோன்றி வருகிறது இப்போதெல்லாம் ! So நமது ஹோட்டலின் மெனுக்களை சற்றே வாசகர் friendly ஆக்கிடப் பார்க்கலாம் என்றுள்ளேன் ! அவ்விதத்தில் இம்மாத கி.நா. செம முக்கியமானதே ! 

அலசல்கள் தொடரட்டும் guys !! And போன பதிவின் பின்னூட்டங்களில் சொன்னது போல - எதிர்மறை அபிப்பிராயங்கள் பதிவாகிடும் பட்சங்களில் அவற்றினை கையாளும் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள் ப்ளீஸ் ! ஒரு உஷ்ணமான topic மேலும் உஷ்ணமாகிட அனுமதிப்பானேன் guys ? எதுவாயினும் பார்த்துக் கொள்ளலாம் ஜாலியாய் ! 

அப்புறம் இந்த மாதத்தில் மேற்கொண்டும் 2 புக்ஸ் உள்ளன என்பதையும் மறந்துப்புடாதீங்கோ ப்ளீஸ் ! Bye all...see you around !

Memes : Prasanth Karthick :


Memes : Dr.பார்த்தீபன், கரூர் :



 

Monday, June 14, 2021

காத்திருக்குது கூத்து !

நண்பர்களே, 

வணக்கம். ஒரு நாள் முன்னதாகவே பைண்டிங்கில் பணிகள் நிறைவுற, இதோ இன்றைக்கே ஜூன் இதழ்களை அனுப்பியாச்சு ! கூரியர் நண்பர்களும் இதே விறுவிறுப்போடு பட்டுவாடாக்களை நாளையே செய்து விட்டால் - "ஜூன் நடுவே ஜூன் !! " என்றுசொல்லிக்கொள்ளலாம் ! 

And இதோ - இம்மாத முக்கூட்டணியினில் நீங்கள் இன்னமும் பார்த்திரா ராப்பரின் முதல்பார்வையுமே ! 

இம்மாதம் எனக்கு செம மண்டகப்படிகளையோ ; சிலாகிப்புகளையோ தரவுள்ள இதழ் இதுவே என்பதில் இம்மியும் சந்தேகம் நஹி ! வேகமாய் ஓடும் ஆக்ஷன் ; நடுமூக்கில் குத்தும் நாயகர்கள் ; கெத்தாய் பன்ச் பேசும் பார்ட்டிகள் .... இவையே உங்களின் காமிக்ஸ் தேடல்களின் அடையாளங்களெனில் - தெய்வங்களே - இந்த கிராபிக் நாவலை புரட்டக்கூட மெனெக்கெடாதீர்கள் ப்ளீஸ் ! இக்கட மாமூலான காமிக்ஸ் சார்ந்த விஷயங்கள் எதுவும் இராது என்பதை விட, இக்கட மாமூலான வாழ்க்கை விஷயங்கள் மாத்திரமே இருக்கும் என்பதே சமாச்சாரம் ! So ஒரு அறிமுகம் ; ஒரு கதையோட்டம் ; ஒரு க்ளைமாக்ஸ் ; அப்புறமொரு feel good உணர்வோ ; சோகத்தின் தாக்கமோ இருந்திடுமென்றெல்லாம் தயவு செய்து கற்பனை செய்தபடிக்கு இந்த 88 பக்கங்களுக்குள் மூழ்கிடாதீர்கள் guys ; சர்வ நிச்சயமாய் ஏமாற்றமே மிஞ்சிடும் ! 

அப்புறம் நீங்கள் அவசர வாசிப்புப் பார்ட்டிகளாக இருக்கும் பட்சத்தில், இதனையுமே வழக்கமான அந்த வேக வேட்டையினில் அங்கமாக்கிட வேணாமே ? முதல்வாட்டி வாசித்த பின்னே நிச்சயமாய் "சேது" விக்ரம் போலவே காட்சி தருவீர்கள் ; so மறுக்கா ஒருக்கா படிக்க அவகாசம்அவசியமாகிடும் ! So அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுங்களேன் folks ?! அட்டையைப் பார்த்து விட்டு, இதுவொரு sci-fi கதை என்று தீர்மானத்துக்கு குதித்திட அவசரம் கொள்ளவும் வேணாமே - simply becos இது "அது" அல்ல !! And last but not the least - கதையைப் படித்து விட்டு - "அபச்சாரம் ; கலாச்சார சீர்கேட்டுக்கு வித்திட்டு விட்டான் ; முச்சந்தியில் வைச்சு இவனையும், புக்கையும் கொளுத்தினாக்கா என்ன ?" என்ற வேகம் எழுந்திடும் பட்சங்களில் முன்னட்டையினில் பளீர் சிகப்பில் உள்ள அந்தப் பரிந்துரையை one time வாசிச்சூ ப்ளீஸ் ! இது சர்வ நிச்சயமாய் சரோஜா தேவி ரகமல்ல ; இங்கே ஆபாசம் கிடையாது தான் ; ஆனால் சிறார்களின் வாசிப்புகளுக்கு உகந்ததுமல்ல ! So parental discretion is the need of the hour all !! "வீட்டு ஹாலில் போட்டுவைச்சேன் ; பையன் இதைப் படிச்சிட்டு கேட்ட கேள்விகளுக்கு பதில்  சொல்ல முடியாமல் நெழிஞ்சேன் " என்று சொல்லிட வேணாமே ப்ளீஸ் ?! ஆக , முடிஞ்ச அத்தினி கேட்டிலும் தேவையென்று தோணிய அத்தினி எச்சரிக்கைகளையும் ஒட்டி விட்டாச்சு ! இனி கவனத்துடன் கால் வைப்பது உங்கள் பொறுப்புகள் people !! 

சென்றாண்டினில் இதைத் தேர்வு செய்திட என்னைத் தூண்டியது எதுவென்று இந்த நொடியினில் சொல்லத் தெரியவில்லை எனக்கு ; ஆனால் அந்தக் கோக்கு மாக்கான கற்பனையும், கார்ட்டூன் பாணிச் சித்திரங்களும், அந்த சைசும்- டிக் அடிக்க உதவிட பெரும் பங்கு வகித்தன என்று மட்டும் சொல்லுவேன் ! So ஒருஅக்மார்க் விஷப்பரீட்சை தான் ! ஓ.கே. ஆகினால் நம் வாசிப்புக்கு ஒரு புதுப் பரிமாணம் and மொத்தமாய் சொதப்பிடின் ரூ.100-க்கு பிடித்த கேடு ! ஆனால் அந்தக் கேடு உங்களதாகஇருந்திடாது guys - ஈடான விலைக்கு வேறு புக் ஏதாச்சும் இந்தச் சந்தாவினிலேயே ஏற்பாடு செய்திடாது நிச்சயம் ஓட்டம் பிடிக்க மாட்டேன் ! ஆகையால் "உன் போதைக்கு நாங்க ஊறுகாயா ?" என்ற உயரிய சிந்தனைகளுக்கு for sure அவசியமே இராதென்பதை காத்திருக்கும் நம்ம பகடி ஆர்வலர்களுக்கு சொல்லிய கையோடு கிளம்புகிறேன் guys !!

Deadwood Dick அழைக்கிறார் !

And இதோ ஆன்லைன் லிஸ்டிங் : 

https://lioncomics.in/product/2021-june-pack/

https://lion-muthucomics.com/home/838-2021-june-pack.html

Bye all...See you around !

Saturday, June 12, 2021

ஒரு க்விக் ரவுண்டப் !

 நண்பர்களே,

வணக்கம். தினத்துக்குமொரு பதிவு என்று போட்டுத் தாக்கிய நாட்கள் நிறைவுக்கு வந்த பின்னே இங்கே ஒரு வாரமாய்த் தலைகாட்டக் கூட முடியாது போனதே யதார்த்தத்தின் இன்னொரு முகம் ! நிஜத்தைச் சொல்வதானால், எனக்கே என் எழுத்துக்களிலிருந்தொரு பிரேக் தேவைப்பட்டது ! ஆனால் இங்கே எழுதாது விட்டதையெல்லாம், 3 ஷிப்ட் போட்டு ; மூன்று வெவ்வேறு பணிகளில் எழுதிக் கொண்டிருப்பது செம முரண் தான் ! காலையில் "லக்கி லூக்கின் பேய் நகரம்" long size நோட் # 1-ல்  ; மதியம் போல டெக்சின் "பிரளயப் பயணம்" இன்னொரு நோட்டில் ; மாலை முதலாய் முத்து காமிக்ஸ் ஆண்டுமலர் # 50-ன் முதல் கதை மீதான பணிகள் மூன்றாவது நோட்டில் - என்று இந்த வாரம் ஓட்டமெடுத்து வந்துள்ளது ! 

எனக்கே அலுத்துப்  போகக்கூடிய எனது எழுத்துக்கள் உங்களுக்கும் ஒரு கட்டத்தில் அயர்ச்சியினை வரவழைக்காதிருக்க வேண்டியதன் அவசியம் புரிவதால், இடைப்பட்ட நேரங்களில் - மொழிபெயர்ப்புக்கென புதியவர்களைத் தேற்றும் பணியினில் ஈடுபட்டுமிருந்தேன் ! என்ன - "ஐ கேன் வாக் டமில்...டாக் டமில்" என்று இன்றைய தலைமுறை செய்திடும் ரவுசுகளுக்கு மத்தியினில் நிஜமான தமிழாற்றலை அடையாளம் காண்வதற்குள் நாக்குத் தொங்கிடும் போலிருக்கிறது ! ஆனாலும் இந்த சர்க்கஸில் ஒரு ஆதாயம் இல்லாதில்லை ! பசங்களும், புள்ளீங்களும் எழுதியிருக்கக்கூடிய கவிதைகளை (!!) வண்டி வண்டியாய் படிக்க முடிந்திருக்கிறது - இந்த ஒற்றை வாரத்தினில் ; so தொடரவுள்ள நமது இதழ்களில் கவிஞர் முத்துவிசயனார் 2.0 புது வீரியத்துடன் களமிறங்கும் வாய்ப்புகள் ரெம்போ பிரகாசம் !! Joking apart ஓரிரு பெண்கள் மெய்யான எழுத்துத்திறனுடன் கண்ணில்பட்டுள்ளனர் ! அதனில் ஏற்கனவே ஒரு தென்மாவட்டச் சகோதரி on board ! மீத இருவரின் பேனாக்களை நமது பணிகளுக்கு ஏற்ப mould செய்திட குட்டிக் கரணங்கள் அடித்து வருகிறேன் ! இந்த க்ளோனிங் விஞ்ஞானம் மாத்திரம் சாத்தியமெனில், நமது இள வயதுக் கருணையானந்தம் அவர்களை ஒரு ரெண்டு, மூணு நகலெடுத்து பணிகளை ஒப்படைத்து விட்டு, நான்பாட்டுக்கு இங்கே பிளாக்கில் வந்து அரட்டையடித்துக் கொண்டிருந்திருப்பேன் ; ச்சை..எனக்கிந்த விஞ்ஞானமே புடிக்கலை !!

On to practical stuff, ஜூன் இதழ்கள் மூன்றும் அச்சாகி விட்டன ! Yes , ஜுனுக்கான இதழ்கள் மூன்றே ;  இன்னமும் கொங்கு மண்டலம், ஈரோடு, சேலம், நாகப்பட்டினம், மயிலை என நமக்கு விற்பனை அமைந்திடும் பல மாவட்டங்கள் லாக்டவுனில் தொடர்வதால், அங்குள்ள முகவர்கள் எவரும் கடைதிறக்க வழியில்லை !  So இம்மாத கோட்டாவை சற்றே மட்டுப்படுத்திட எண்ணி ஜேம்ஸ் & இளவரசி தோன்றும் B & B ஸ்பெஷலை ஜூலைக்கு நகர்த்தியுள்ளோம் ! As a result - நடப்பு மாதத்தின் மூன்று இதழ்களுமே வண்ணத்தில் தான் & அவை மூன்றுமே பைண்டிங்கில் உள்ளன ! அங்கும் பாதியாட்களைக் கொண்டே வேலை ஆகி வருவதால் செவ்வாயன்று டெஸ்பாட்ச் இருந்திடும் guys ! மறுக்கா மாதத்தின் 15 -ம் தேதி ஸ்லாட்டுக்குத்  தள்ளப்பட்டிருக்கிறோம் ; இதனை சன்னம் சன்னமாய் சரி செய்ய இன்னமும் மூன்று மாதங்களாவது எடுக்கும் போலுள்ளது ! Phew !!

ஜூன் மாதத்தினில் :இரத்தப் படலம்" பணிகளும் துவக்கம் காண வேண்டும் என்பதும் நமது priority களில் பிரதானம் என்பதால் அட்டைப்பட டிசைனிங் ஆரம்பிச்சாச்சு ! பிழைத்திருத்தப் படலம் என்றைக்குப் பணிமுடித்து அனுப்புகிறதோ - அதன் மறுவாரத்தில் பிரின்டிங் துவங்கிடுவோம் ! And நேற்றைக்கு ஒரு மாதிரியாய் 'தம்' கட்டி அதற்கான பேப்பரையும்  முழுசாய் வாங்கியாச்சூ ! சூப்பர் நியூஸ் என்னவெனில் - டன்னுக்கு நாற்பதாயிரம் வரை விலை ஏற்றியவர்கள் - இந்தப் பேரிடரில் கடைகளை பூட்டிக் கொண்டு வியாபாரங்களின்றிக் குந்திக் கிடக்க நேரிட்டதில் 'போனால் போகட்டும் என்று ஆறாயிரம் குறைத்துள்ளனர் !! So "முதலாளி...நீவிர் வாழ்க..நின் குளம், மூத்திரம் ..ச்சீ..ச்சீ..குலம் கோத்திரம் வாழ்க !!" என்ற புகழ்பாடியபடிக்கே நேற்றைக்கு பர்ச்சேஸ் முடிந்தது ! தொடரும் நாட்களில் production பணிகளே பாக்கி ! And இதோ - வெள்ளி காலை வரையிலுமான வாசக முன்பதிவுப் பட்டியல் : 

NO

NAME

PLACE

1

Mr.K.V.GANESH

CHENNAI

2

Mr.K.PARTHIBAN

TRICHY

3

Mr.V.HARIHARAN

COIMBATORE

4

Mr.S.SENTHIL KUMAR

TIRUPUR

5

Mr.KRISHNA MOORTHY

DHARAPURAM

6

Mr.ARUN KUMAR

NAMAKKAL

7

Mr.ARUN KUMAR

NAMAKKAL

8

Mr.M.BABU MOHAMED ALI

SALEM

9

Mr.T.SOUNDRA PANDIAN

RAJAPALAYAM

10

Mr.T.SOUNDRA PANDIAN

RAJAPALAYAM

11

Mr.R.ANBALAGAN

GOBICHETTIPALAYAM

12

Mr.R.ANBALAGAN

GOBICHETTIPALAYAM

13

Mr.R.GANESH

MADURAI

14

Mr.AUGUSTIN SAINTLYDOSS

HOSUR

15

Mr.A.D.BASKARAN

CHENNAI

16

Mr.SARAVANAN SUNDARAVEL

NOIDA

17

Mr.SARAVANAN VADIVEL

NAGAPATTINAM

18

Mr.MOHAMMED ARAFARTH

MAYILADUTHURAI

19

Mr.SURESH NATARAJAN

AUSTRALIA

20

Mr.SURESH NATARAJAN

AUSTRALIA

21

Mr.SURESH NATARAJAN

AUSTRALIA

22

Mr.SRINIVASARAGHAVAN RAMAN

CHENNAI

23

Mr.PRABHUDASS PALANI

CUDDALORE

24

Mr.MAHENDRAN PARAMASIVAM

COIMBATORE

25

Mr.A.SATHISH KUMAR

VELLORE

26

Mr.PRASANNA SRIDHAR

COIMBATORE

27

Mr.S.S.KARTHIK

BANGALORE

28

Mr.A.PALANIVEL

TRICHY

29

Mr.A.PALANIVEL

TRICHY

30

Mr.RAJ KUMAR SIVANANDI

MADURAI



32

Mr.MA.SENTHIL

COIMBATORE

33

Mr.MA.SENTHIL

COIMBATORE

34

Mr.SANKAR CHELLAPPAN

CHENNAI

35

Mr.V.RAJEEV

COIMBATORE

36

Mr.SELVAM ANNAMALAI

ERODE

37

Mr.S.ANANTHA SANKAR

TIRUNELVELI

38

Mr.R.SARAVANAN

ERODE

39

Dr.PRASANNA

SRILANKA

40

Dr.PRASANNA

SRILANKA

41

Dr.PRASANNA

SRILANKA

42

Mr.A.PALANIVEL

TRICHY

43

Mr.M.RAMKUMAR

UNKNOWN

44

Mr.V.V.KRISHNA

CHENNAI

45

Mr.N.SHANMUGAM

TIRUCHENGODE

46

Mr.MOHAMED RAFIQ RAJA

BANGALORE

47

Mr.MANI.MB

CHENNAI

48

Mr.MANI.MB

CHENNAI

49

Mr.MANI.MB

CHENNAI

50

Mr.MANI.MB

CHENNAI

51

Mr.MANI.MB

CHENNAI

52

Mr.SUBRAMANIAN

CHIDAMBARAM

53

Dr.A.K.K.RAJA

KARUR

54

Dr.A.K.K.RAJA

KARUR

55

Dr.A.K.K.RAJA

KARUR

56

Mr.K.V.GANESH

CHENNAI

57

Mr.YOGI SIVAKUMARAN

SRILANKA

58

Mr.SELVAM ANNAMALAI

ERODE

59

Mr.SELVAM ANNAMALAI

ERODE

60

Mr.S.BALA SUBRAMANIYAN

BANGALORE

61

Mr.VIJAY

ERODE

62

Mr.V.R.SRINIVASA RAGHAVAN

CHENNAI

63

Mr.V.R.SRINIVASA RAGHAVAN

CHENNAI

64

Mr.SUNDARALINGAM MATHINATH

SRILANKA

65

Mr.R.S.SHARMA

SRILANKA

66

Mr.VIMALAKANDHAN THANUSHAN

SRILANKA

67

Mr.VIMALAKANDHAN THANUSHAN

SRILANKA

68

Mr.A.S.SOUNDERA RAJ

BANGALORE

70

Mr.RAM KUMAR GOPALA KRISHNAN

CHENNAI

71

Mr.JEBARATHINAM ALEXANDER

CHENNAI

72

Mr.D.V.KANNAN

CHENNAI

73

Mr.M.ANANDAPPAN

KARAIKAL

74

Mr.SANKAR CHELLAPPAN

CHENNAI

75

Mr.L.BOOPATHI

CHANDRAPUR

76

Mr.R.GANESH

MADURAI

77

Mr.KUMARESAN PALANIVEL

VIRUDHACHALAM

78

Mr.A.JEGAAN DHARMENRA

SRILANKA

79

Mr.YOGANATHAN

KODUMUDI

80

Mr.M.KARTHIKEYAN

PALAKKAD

81

Mr.KUMAR

SALEM

82

Dr.RAJESH

BANGALORE

83

Dr.RAJESH

BANGALORE

84

Mr.BALAMURUGAN MARUTHAN

TRICHY

85

Mr.IGNATIUS LORAN

KORBA

86

Mr.M.KUMAR

KANCHIPURAM

87

Mr.THIRUCHELVAM PRAPANATH

FRANCE

88

Mr.A.M.CHANDRA KUMAR

TIRUPUR

89

Mr.SIVAKUMAR SUBRAMANIAN

CHENNAI

90

Mr.KARTHIGAI PANDIYAN

COIMBATORE

91

Mr.SURESH KUMAR

MADURAI

92

Mr.MUTHIAH PALANIAPPAN

CHENNAI

93

Mr.K.ELAVARASU

BANGALORE

94

Mr.R.MUJAHIRUDEEN

CHENNAI

95

Mr.PRAKASH BALA

CHENNAI

96

Dr.V.VIKRAM

TRICHY

97

Mr.S.SATHIYA MOORTHY

TIRUPUR

98

Mr.L.BOOPATHI

CHENNAI

99

Mr.MAHESH KUMARSELVARAJ

CHENNAI

100

Mr.SENTHIL SATHYA

CHENNAI

101

Ms.NARMADHA

CHENNAI

102

Mr.DALAXSHAN

SRILANKA

103

Ms.ELEZABETH ANTONY

TRIVENDRUM

104

Mr.BHAVANI SRIDHAR

BANGALORE

105

Mr.P.SARAVANAN

CHINNAMANUR

106

Mr.M.BOOBALACHANDER MANI

CHENNAI

107

Mr.RAJESH RANGANATHAN

CHENNAI




109

Mr.SURESH RANGASAMY

AVINASHI

110

Mr.SURESH RANGASAMY

AVINASHI

111

Mr.N.MANI KANDAN

KULITHALAI

112

Mr.J.SENTHI LKUMAR

CUDDALORE

113

Mr.M.KANISHK

TRICHIRAPALLI

114

Mr.M.KANISHK

TRICHIRAPALLI

115

Mr.M.VEL

DHARMAPURI

116

Mr.K.PARIMELALAGAN

CHENNAI

117

Mr.K.PARIMELALAGAN

CHENNAI

118

Mr.M.SELVAM

THIRUVANNAMALAI

119

Mr.B.MANIMARAN

RANIPET

120

Mr.S.MOHAN

NAGAPATTINAM

121

Mr.SARABESAN

CHENNAI

122

Mr.ARULDASS

CHENNAI

123

Mr.M.SELVAKUMAR

PALANI

124

Mrs.TAMILSELVI SARAVANAN

KARAIKAL

125

Mr.K.V.GANESH

CHENNAI

126

Mr.LUTHUFUR RAHMAN

CHENNAI

127

MR.SANTHIRAKUMAR ABIRAJ

SRILANKA

128

Mr.IGNATIUS LORAN

TRICHY

129

Mr.S.SURESH BABU

CHENNAI

130

Mr.D.ASLAM BASHA

MADURAI

131

Dr.P.KARUNANITHI

PUDUKOTTAI

132

Mr.JOSEPH JEYACHANDRAN

ODDANCHATHIRAM

133

Mr.JOSEPH JEYACHANDRAN

ODDANCHATHIRAM

134

Mr.A.PALANIVEL

TRICHY

135

Mr.V.THILAGAR

MADURAI

136

Mr.NIRUN SANTHANANTHAN

SRILANKA

137

Mr.V.JAWAHARLAL NEHRU

MADURAI

138

Mr.SRIVATHSAN

BANGALORE

139

Dr.PRASANNA

SRILANKA

140

Mr.N.KUMAR

TIRUPUR

141

Mr.K.DHANAULLAH

GUDALUR

142

Mr.M.SIVASAMY

COIMBATORE

145

Mr.SHANTHAKUMAR

CHENNAI

146

Mr.VEERA PANDIYAN

TIRUNELVELI

147

Mr.ILANGO

MADURAI

148

Mr.C.BASKARAN

BANGALORE

150

Mr.K.V.GANESH

CHENNAI

151

Mr.H.SURESH CHAND

COIMBATORE

152

Mr.G.RAJA SEKARAN

CHENNAI

153

Mr.R.MARIMUTHU

ERODE

154

Mr.RAJA RAJAN

SALEM

155

Mr.R.KUMAR

DINDUGAL

156

Mr.C.MARIMUTHU

CHENNAI

157

Mr.KANAGARAJ

CHENNAI

158

Mr.G.JEGADEESWARAN

ARANTHANGI

159

Mr.ELAVIJAY

SALEM

160

Mr.KARTHICK MOHANRAM

U.S.A

161

Mr.A.KALEEL

PONDICHERRY

162

Mr.A.KALEEL

PONDICHERRY

163

Mr.THARAN

ARANTHANGI

164

Mr.T.UDAYA KUMAR

OOTY


165

Mr.N.ARUL

VADAMADIMANGALAM

166

Mr.K.SENTHIL NATHAN

CHENNAI

167

Mr.MAHESWARAN

KRISHNAGIRI

168

Mr.T.OMKUMAR

TANJORE

169

Mr.SURESH RANGASAMY

AVINASHI

170

Mr.J.JAFARDEEN

SALEM

171

Mr.PRADEEPRUBAN

ERODE

172

Mr.LAKSHMANA PERUMAL

RAJAPALAYAM

173

Mr.S.SHATHACKATHULLA

MADURAI

174

Mr.S.PRASANNA

ERODE

175

Mr.M.JEGADISH

ERODE

176

Mr.M.BHUVAVA RAJAN

ANDIPATTI

177

Mr.A.SRINIVASA SEKHAR

DHARMAPURI

178

Mr.A.SATHISH KUMAR

VELLORE

179

Mr.A.SATHISH KUMAR

VELLORE

180

Baby.M.DHEEPTHA

TIRUCHIRAPALLI

181

Mr.M.VADIVELU

CHENNAI

182

Mr.KARTHIKEYAN KUMAR

NAGERCOIL

183

Mr.D.MAHENDRAN

CUDDALORE

184

Mr.BABU

COIMBATORE

185

Mr.V.K.VENKATRAMAN

THURAIYUR

186

Dr.M.ANAND KUMAR

TIRUPUR

187

Mr.SENTHILNATHAN

PONDICHERRY

188

Mr.M.HARIHARAN

COIMBATORE

189

Mr.C.GOKUL

NAMAKKAL

190

Mr.M.SIVAKUMAR

TIRUPATTUR

191

Mr.S.RAJ KUMAR

BANGALORE

192

Mr.T.SOUNDARA PANDIAN

RAJAPALAYAM

193

Ms.S.NIHARIKA

VIRUTHUNAGAR

194

Ms.S.NIHARIKA

VIRUTHUNAGAR

195

Mr.P.SUBRAMANIAN

COIMBATORE

196

Mr.SARAVANAKUMAR

PALLADAM

197

Mr.MURUGAN PERUMAL

BANGALORE

198

Mr.N.JOTHI

CHENNAI

199

Mr.DOMINIC HENDRY

CHENNAI

200

Mr.R.BALAJI

SALEM

201

Mr.R.BALAJI

SALEM

202

Mr.DINESH KUMAR

NAMAKKAL

203

Dr.P.KARUNANITHI

PUDUKOTTAI

204

Mr.SANKARALINGAM ULAGANATHAN

CHENNAI

205

Mr.P.K.SELVA KUMARAN

PERUNDURAI

206

Mr.SARAVANA RAMESH

KARAIKAL

207

Mr.SENTHAMIL SELVAN

TIRUPUR

208

Mr.A.SATHYA SAINATHAN

VELLORE

209

Mr.S.S.BALAJI

CHENNAI

210

Mr.ANDICHAMY GURUSAMY

DINDIGUL


261-270

ODDANCHATHIRAM

211-212

Mr.R.SARAVANAN

Mr.R.SARAVANAN

ERODE

ERODE

213

Mr.R.SARAVANAN

ERODE

214

Mr.R.SARAVANAN

ERODE

215

Mr.B.SOUNDARA RAJAN

MAYILADUTHURAI




216

Mr.AUGUSTIN SAINTLYDOSS

HOSUR

217

Mr.L.BALA KRISHNAN

SALEM




218

Mr.LAKSHMANAN VISWANTHAN

ERODE

219

Mr.SENTHILNATHAN PERUMAL

TIRUCHIRAPPALLI

220

Mr.SURESH THANAPAL

THIRUVANNAMALAI



221

Mr.ANANTHA SANKAR

TIRUNELVELI

222

Mr.VENKATESHWARAN

CHENNAI

223

Dr.SURESH KUMAR

PALANI

224

Mr.K.SELVAKUMAR

CHENNAI

225

Mr.G.SIVA KUMAR

TRICHY

226

Mr.PATHY.RVC

HOSUR

227

Mr.K.SELVAKUMAR

CHENNAI

228

Mr.K.SELVAKUMAR

CHENNAI

229

Mr.PALANIKUMAR RAJASEKARAN

SIVAGANGAI

230

Mr.U.SENTHIL KUMAR

ERODE

231

Mr.ARUN KUMAR

KUMBAKONAM

232

Mr.M.MANOJ KUMAR

MADURAI




233

Mr.RAMA KARTHIGAI

U.S.A

234

Mr.SENTHIL VINAYAGAM

PALAYAMKOTTAI

235

Mr.SENTHIL VINAYAGAM

PALAYAMKOTTAI

236

Mr.SENTHIL VINAYAGAM

PALAYAMKOTTAI

237

Mr.S.PON RAJ

COIMBATORE

238

Mr.V.KUMAR

COIMBATORE

239

Mr.M.SENTHIL KUMAR

GOBI

240

Mr.M.SENTHIL KUMAR

GOBI

241

Mr.SATHYA BALAJI

BANGALORE

242

Mr.A.SHALLUM FERNANDAS

THUCKALAY

243

Mr.A.SHALLUM FERNANDAS

THUCKALAY

244

Mr.OM KUMAR

TANJORE

245

Mr.A.UDAYA KUMAR

CHENNAI

246

Mr.D.SIVA LINGAM

CHENNAI

247

Mr.C.POOVANNAN

THRISSUR




248

Mrs.TAMILSELVI SARAVANAN

KARAIKAL

249

Mr.SATHYAMOORTHY

KANGEYAM

250

Mr.GOPALA KRISHNAN

--

251

Mr.GOPALA KRISHNAN

--

252

Mr.GOPALA KRISHNAN

--

253

Mr.V.K.RAMANATHAN

CHENNAI

254

Mr.V.K.RAMANATHAN

CHENNAI

255

Mr.V.K.RAMANATHAN

CHENNAI




256

Mr.N.BASKAR

SIRKALI

257

Mr.AMALRAJ ABRAHAM

CHENNAI

258

Mr.S.ANANDAN

CHENNAI


இதனில் விடுதல் ஏதேனும் இருப்பின், பதட்டம் அவசியமில்லை guys, ஒரேயொரு மின்னஞ்சல் மட்டும் அனுப்பினால் சரி செய்து விடுவார்கள் ! 

Further down the road, நடப்பாண்டின் சந்தா இதழ்களில் ஓரிரு மாற்றங்கள் செய்திட உத்தேசித்துள்ளேன் ! அதன் முதல் அத்தியாயமாய் - மார்ட்டின் & டைலன் இணைந்து ஜாகெஜம் செய்திடும் "உலகத்தின் கடைசி நாள்" ஆல்பத்தையும், CID ராபினின் "நள்ளிரவு வேட்டை" ஆல்பத்தையும் ஒன்றிணைத்து ஒரே புக்காக்கிடவுள்ளோம் ! முந்தையது ரூ.125 & ராபின் ரூ.75 ; so ஒன்றாக்கி ரூ.200 விலையில் ஒரே புக்காக வெளிவந்திடும் ! இது தவிர, இன்னொரு மாற்றமும் உண்டு ; ஆனால் அதுகுறித்த ஊர்ஜிதம் படைப்பாளிகளிடமிருந்து கிட்டிடக் காத்துள்ளேன் ! 

And 2022 சந்தா அட்டவணையுமே ரெடி ; கதைகளுக்குப் பெயர் வைக்க வேண்டிய வேலையே பாக்கி ! So ஒரு சாவகாச நாளில் "நெத்தம் ; குத்தம் ; யுத்தம்" என்றில்லாது - மங்களகரமான பெயர்களாய்த் தேடிப் பிடித்து வைக்கணும் ! யாராச்சும் விக்கிரமன் சாரின் படங்களின் பெயர் பட்டியலை வைச்சிருக்கீங்கப்பு ? 

இப்போதெல்லாம் எங்கே சுற்றினாலும் மண்டை இறுதியாய் நிலைகொள்வது ஜனவரி 2022-ல் காத்துள்ள biggie-ன் பக்கமே ! And நான் சிலாகித்த புதுக் கதைத்தொடர்களின் உரிமைகளை வாங்கியாச்சு ; so கொஞ்சமாய் சத்துப் பிடித்துக் கொண்டால், பணமனுப்பி கதைகளை வரவழைச்சுடலாம் ! உங்களின் எதிர்பார்ப்புகளை ; ஆரவாரங்களை ஆதாரமாக்கி, நானாய் முதலில் போட்டு வைத்திருந்த சிக்கனக் கோடுகள் சகலத்தையும் அழித்துவிட்டு 'பப்பரக்கா'வென இப்போது கால்களை அகலமாய் விரிச்சாச்சு folks !! மொழிபெயர்ப்பினில் நான் விவரித்திருந்த சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு இப்போது முதலே வேலைகளையும்  ஆரம்பிச்சாச்சு !   இந்தப் பேரிடர் பொழுதினில் இது ரொம்பவே ambitious ஆன முயற்சியாய்த் தென்படுகிறது தான் ; ஆனால் உசுப்பிவிடப்பட்ட கைப்புள்ளை அடங்க மாட்டானே இனி ! புனித மனிடோ காப்பீராக !! சின்னப் பசங்களின் ஸ்கூல் டயரின் அட்டவணையைப் போல - இன்றைக்கு முதல் January 2022 முடியத் தேவைப்படக்கூடிய கதைகளில் மொத்த இடியாப்பங்களையும் என் பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஒரு chart போட்டு வைத்துள்ளேன் ! "இன்ன இன்ன தேதி முதல், இன்ன இன்ன தேதிக்குள் - இன்ன இன்னக் கதைகளை முடிச்சாகனும் !!" என்று எழுதி பார்த்ததில் செப்டெம்பர் '21-க்குள் அனைத்தையும் முடித்து விடலாம் போல் தோணிங் !! பேப்பரில் பட்டியல் போடுவது சுலபம் ; அதனை நிறைவேற்றுவதன் நோவு பிட்டத்துக்கும், புஜத்துக்குமே தெரியும் என்றாலும் - நீங்க எனது சேருக்கு அடியில் பற்ற வைத்திருக்கும் திரியானது லேசுப்பட்டதில்லையே ?! So ஞான் குந்தியிருக்கும் சேரே ராக்கெட்டாகி ; என்னையும், என்னுடன் அந்தப் பணிகளையும் ஒருசேர விண்வெளிக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையோடு எழுதிக் கொண்டிருக்கிறேன் ! அநேகமாய் செப்டெம்பருக்குள் தலீவரின் கடுதாசிக்கணை ரெக்கார்டுகளையெல்லாம் மூலை சேர்த்துப்புடுவேன் போல் தெரிகிறது ! தேவுடா !!! 

Bye for now guys ; சொக்க வைக்குமொரு சொப்பன சுந்தரி கதை நெடுக மிரட்டும் ஜாகஜம் ஒன்று அழைப்பதால் நானிப்போது கிளம்புகிறேன் ! நீங்கள் இந்த மீம்ஸ் மேளாவினில் நனைந்திருங்களேன் in the meantime !!


ஸ்பைடர் & சுசுகி-விஸ்கி வரைக்குமான மீம்ஸ் டாக்டர் பார்த்தீபன் ! அதன் பின்னுள்ள அனைத்தும் MKS Ram !