Powered By Blogger

Saturday, February 27, 2021

துப்பறியலாம் வாங்க...!

 நண்பர்களே,

வணக்கம். அவசியங்கள் எழாத தருணங்களில் பதிவுகளை ஜவ்வாய் இழுக்கும் பாணிகள் இனி வேண்டாமெனத் தீர்மானம் செய்தது - எனது சனிக்கிழமைகளைச் சன்னமாய் இலகுவாக்கியுள்ளது  ! "எழுத ; டைப்படிக்க" என ஒவ்வொரு மாதமும் இதற்கென அவசியப்பட்ட  கிட்டத்தட்ட 20+ மணி நேரங்களை , இனி இதர பணிகளுக்கெனப்  பயன்டுத்திடச்  சாத்தியமாகும் என்பது வாரயிறுதியையே சற்றே விசாலமாக்கிக் காட்டுகிறது ! And ஏற்கனவே போன வாரத்து இறுதியில் கிட்டிய அந்த அவகாசத்தின் பெயரைச் சொல்லி, 2022-ன் ஜம்போ சீசன் 5-ன் முதல் இதழினை இறுதி செய்திட முடிந்துள்ளது ! Maybe இனி தொடரும் ஒவ்வொரு வாரயிறுதியினையும்  - அடுத்தாண்டின் ஒவ்வொரு இதழ் சார்ந்த அலசலுக்கென்று  செலவிட்டால் - 44 அழகான இதழ்கள் சாத்தியமாகிடுமோ - என்னவோ ?! Silver lining to just about everything I guess !

சந்தேகங்களின்றி இந்த வாரத்தின் பதிவு - போனெல்லியின் 3 in 1 டிடெக்டிவ் ஸ்பெஷல் பற்றியதே ! இங்கும் மும்மூர்த்திகள் ; போனெல்லியின் நவீன மும்மூர்த்திகள் இடம்பிடிக்கின்றனர் ! அமானுஷ்யங்களைத் துப்பறியும் டைலன் டாக் ; விசித்திரங்களைப் புலனாய்வு செய்திடும் மார்ட்டின் & நியூயார்க்கின் குற்றத் தெருக்களில் கொலைமுடிச்சுக்களை அவிழ்க்க முற்படும் CID ராபின் என்ற இந்த முக்கூட்டு இந்த மார்ச்சில் களமிறங்குகிறது !

ஆல்பம் துவங்கிடுவது ராபினோடு எனும் போது பதிவையுமே அவரிடமிருந்தே துவங்கிடுவோமென்று நினைத்தேன் ! எனக்கு எப்போதுமே ராபினைப் பார்க்கும் போது நடிகர் சித்தார்த் தான் ஞாபகத்துக்கு வருவார் ! அதே மீசையில்லா முகம் ; பன்ச் டயலாக்கெல்லாம் பேசாது தானுண்டு-தன் வேலையுண்டு எனச் சுற்றி வரும் பாணி அதற்குக் காரணமாக இருக்கலாம் ! தவிர, இதர big names ஒளிவட்டத்தைத் தமதாக்கிடும் நேரத்தில், இந்த இருவருமே தம் ரூட்டில் சீராய்ப் பயணம் செய்து கொண்டிருப்பர் தானே ?! "மன்ஹாட்டன் மரணங்கள்" ஒரு அழகான நேர்கோட்டு மர்டர் த்ரில்லர் ! ரிப்போர்ட்டர் ஜானி கதைகளின் பாணியில் இங்கே ஓராயிரம் குழப்ப முடிச்சுகளெல்லாம் கிடையாது ! அதே போல ஒரு புலனாய்வினை  விறுவிறுப்பாக்கிக் காட்டிடும் பொருட்டு ஏதேதோ dramatics களை உட்புகுத்தவுமே கதாசிரியர் மெனெக்கெடவில்லை ! ஒரு தொடர்கொலைகாரனை மடக்க சிம்பிளாய் ராபின் தீட்டிடும் திட்டம் ; அதன் பின்னுள்ள லாஜிக் ; NYPD-ன் நடைமுறைகள் என இந்த சாகசம் செம breezy read ! So இதனுள் பணியாற்றுவதில் தலைநோவுகள் பெருசாய் இருக்கவில்லை ! என்ன - பல மாதங்களுக்கு முன்னமே இது நமது கருணையானந்தம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டதெனும் போது, அவரது க்ளாஸிக் ஸ்டைல் தான் இங்கே எனக்கு நிறைய இடங்களில் இடறியது ! முழுக்க முழுக்க யதார்த்த பாணியில் கதை இருக்க - ஆளாளுக்கு இலக்கிய நடைகளில் பேசுவதென்பது எனக்கு ரசிக்கவில்லை ! So நெடுக வார்த்தைப் பிரயோகங்களில் மாற்றங்களை போடுவது தான் இங்கே எனக்குப் பணியானது ! மற்றபடிக்கு ராபினோடு செம smooth sailing ! And இக்கட இம்முறை கொஞ்சம் கண்களுக்குக் குளிர்ச்சி இருக்கூ என்பது கொசுறுச் சேதி ! 

"சொல்வதெல்லாம் உண்மை " !! ஊஹூம் - டிவி,ஷோ அல்ல ; மார்டினின் சாகஸத்தின் பெயரே இது ! And கடந்த ஐந்தாறு நாட்களாய் நான் big time மொக்கை போட்டு வருவது இங்கு தான் ! மார்டினின் கடைசி சாகசமான "நியூட்டனின் புது உலகம்" தவிர்த்து வெறெந்தவொரு சாகசமுமே சுலபப் பணியாய் இருந்த நினைவே இல்லை எனக்கு ! தொட்ட ஆல்பமெல்லாம் முடிச்சுகளோ - முடிச்சுகள் என்று தான் இருந்து வந்துள்ளன ! ஆனால் இதுவரைக்குமான பணிகளில் (கனவுகளின் குழந்தைகள்) நீங்கலாய் பாக்கி எதனிலுமே புரிதலில் ரொம்பத் திணறியதெல்லாம் கிடையாது தான் ! So இம்முறையும் எடிட்டிங்கினுள் நுழைந்த போதே அஹமதாபாத் பிட்சில் பேட்டிங் செய்வது போலானதொரு அனுபவத்துக்குத் தயாராகவே இருந்தேன் தான் ! பற்றாக்குறைக்கு - "புரியாத இடங்களையெல்லாம் காலியா விட்ருக்கேன்பா ; க்ளைமாக்ஸ் 4 பக்கங்களை மொத்தமாவே எழுதலை ; நீ பாத்துக்கோ !" என்றும் அங்கிள் சொல்லியிருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்தேன் இந்த 132 பக்க சாகசத்தினுள் ! வழியில் - கொஞ்சம் இல்லை ; ரொம்பவே வித்தியாசமாய்ப்பட்டது - கதையின் இதர மாந்தர்களில் ஒருத்தர் பாக்கியின்றி அத்தினி பேருமே காமெடிப் பீஸ்கள் போலவே சித்தரிக்கப்பட்டிருந்தது தான் ! கவுண்டரிடம் மிதிபட்டே சாகும் செந்திலைப் போல ஒரு ஜோடி ; அப்புறம் "அதிகாரிகள் நாங்க" என்றபடிக்கே 'மூடர் கூட்டம்' பாணியில் வலம் வரும் ஒரு கும்பல் ; பற்றாக்குறைக்கு நடிகர் பாண்டுவைப் போலவே 'ஈஈ' என்று பல்லைக்காட்டி வருமொரு பார்ட்டி ; 'துணியும் கிடையாது / மூளையும் கிடையாது' என்பது போலொரு நெளிவு சுளிவான பாப்பா - என கண்ணில்பட்ட அத்தனை character களுமே straight out of a smurf comics என்பது போலிருந்தது ! And yes - மெய்யாலுமே இக்கட ஒரு smurf தலைகாட்டும் கட்டமும் உண்டு ! இவர்களோடு "உர்ர்..டர்.."என்று உறுமிடும் ஜாவாவும் ! எப்போதுமே மார்டினின் கதைகளின் knot செம complex ஆக இருந்திடுவது நமக்குத் தெரியும் ; and ஏதேனுமொரு வரலாற்றுப் புள்ளியையோ ; இதிகாசத்துணுக்கையோ ; விஞ்ஞான அதிசயத்தையோ ; நிஜவாழ்வின் புரிபடா புதிரையோ கையில் எடுத்து அதனை develop செய்திருப்பர் என்பதும் நாமறிந்ததே ! ஆனால் இம்முறையோ - கதையின் முழுமைக்கும் சுற்றி வரும் ஜாலி ஆசாமிகளைப் போலவே ; இங்கு தேர்வாகியுள்ள கதையின் முடிச்சுமே (if you can call it that ) ரொம்ப ரொம்ப light ! மெய்யாலுமே அவர்கள் சொல்ல முனைந்திருப்பது இவ்வளவு தானா - அல்லது இத்தாலிய மொழிபெயர்ப்பினை நாங்கள் புரிந்து கொண்டதில் ஏதேனும் விடுபட்டுவிட்டதா ? என்ற சந்தேகத்தில் தான் சனி காலை வரையிலும் எடிட்டிங்கிலிருந்து பக்கங்களை நான் ரிலீஸ் செய்திடவே இல்லை ! எத்தனைவாட்டி, எத்தனை கோணங்களிலிருந்து அர்த்தம் செய்து கொள்ள முனைந்தாலுமே - பதில் ஒன்றாகவே தென்படுகிறதென்று ஒரு வழியாய் தீர்மானித்த பின்னே தான் திருத்தங்களைப் போட பக்கங்களைத் தந்துள்ளேன் ! And கோடு போட்ட A4 பேப்பரில் முழுசாய் 16 பக்கங்களுக்கு வந்துள்ளன திருத்தங்கள் / மாற்றங்கள் ! இங்கே கருணையானந்தம் அவர்களை குறை சொல்வதில் பிரயோஜனமிராது தான் ; நெட்டையும் / இணைய அலசல்களையும் இயன்றமட்டுக்குத்  துழாவிப் பார்த்த என்னையே இது நாக்குத் தொங்கச் செய்துவிட்ட போது, பாவம், அவர் என்ன செய்திடக்கூடும் ? இவற்றை முழுசாய் DTP செய்து ; திரும்பவும் முழுசாய் என்னிடம் ஒப்படைத்து, அதனில் நான் செய்யக்கூடிய திருத்தங்களையும் போட்டு, அப்புறமாய்த் தான் அச்சுக்கே அனுப்பிட இயலுமெனும் போது இந்த மார்ச்சில் please expect delays ! எல்லாவற்றுக்கும் பின்பாகவும் இன்னமும் எனக்குள் லேசான நெருடல் தொடர்கிறது - நிஜம்மாகவே இப்படியொரு கருவைத் தானா படைப்பாளிகள் தேர்வு செய்திருப்பார்கள் ? அல்லது எதையேனும் நான் தான் கோட்டை விட்டிருக்கக் கூடுமோ என்று ! Fingers crossed that I haven't missed anything !! தொடரும் காலங்களில் மார்டினின் கதைகளை தேர்வு செய்திடுவதற்கென கணிசமான அவகாசங்களை ஒதுக்கிட முடிந்தாலன்றி சிக்கலே என்பதே இம்முறை கற்றுள்ள பாடம் ! Phew !!

Moving on - இறுதியாய்க் காத்திருந்தவர் டைலன் டாக் என்றாலும், இம்முறை அதிகமாய் உதறவில்லை எனக்கு - simply becos அதுவொரு மினி சாகஸமே ! TEX சிறுகதைகளின் பாணியிலேயே டைலன் டாக் தொடரிலுமே ஒரு template ஓடிக்கொண்டுள்ளது - கலரில், 'நறுக்' சாகசங்கள் என்று ! So  அவற்றிலிருந்து தான் "ஒரு கனவு இல்லத்தை" தேர்வு செய்திருந்தோம் என்பதால் -  பஞ்சாயத்து எதுவாயினும் 32 பக்கங்களுக்குள் தீர்ந்து விடுமே என்ற தகிரியம் தான் எனக்கு ! And துளிகூட சோடை போக விடவில்லை இந்தச் சிறுகதையின் கதாசிரியர் ! கொஞ்சமும் யூகிக்க இயலாவொரு knot ; உயர் அழுத்த மின்சாரத்தின் வீரியம் ; மிரட்டும் சித்திரங்கள் + கலரிங் - என இந்த 32 பக்க சிறுகதையானது ஆடியுள்ள ஆட்டம், ரணகளம் ! அதிலும் கடைசிப் பக்கத்தில், கடைசி பிரேமில் கதாசிரியர் தந்துள்ள twist சத்தியமாய் அவருக்கு மட்டுமே புரிந்திருக்கும் ! ஒன்று நிச்சயம் guys - இந்த இதழ் கொணரவுள்ள விவாதங்களும், அலசல்களும் செம சுவாரஸ்யமாய் இருந்திடக்கூடும் !

இதோ இந்த 3-in-1 இதழின் அட்டைப்படம் - ஓராண்டுக்கு முன்னமே நமது அமெரிக்க ஓவியையின் கைவண்ணத்தில் உருவானது ! And தொடர்வன இந்த 3 ஆல்பங்களின் உட்பக்க preview-களும் ! So மார்டினின் திருத்தங்கள் பூர்த்தி கண்டு ; அச்சுக்குச் சென்று, பைண்டிங்கிலிருந்தும் திரும்பிட அடுத்த 4 நாட்களாவது பிடிக்கும் என்பதால் - பொறுத்தருள்க ப்ளீஸ் ! 

சென்னைப் புத்தக விழாவினில் வார நாட்களை விட இன்றைக்கு நல்ல கூட்டமென்று நம்மவர்கள் சொன்னார்கள் ! இரவில் விற்பனை நம்பர்களை கேட்டறிந்தால் தான் நிலவரம் புரியும் ! Fingers crossed !

Before I sign out - 2 கேள்விகள் :

***இதோ - நம் கூர்மண்டையரின் தொகுப்பு ஒன்று இங்கிலாந்தில் வெளியாகிறது, இந்த மிரட்டும் அட்டைப்படத்துடன் !! ஜோதியில் நாமும் ஐக்கியமாகணுமா guys ?

*** லக்கி லூக்கைச் சுட்டது யார் ? - கிராபிக் நாவல் பாணி நினைவுள்ளதா guys ? அதன் அடுத்த அத்தியாயம் ரெடியாகி, விற்பனையில் மிரட்டி வருகிறதாம் - கலரிலும், black & white -லும் ! இங்கும் நாம் துண்டைப் போட்டு வைக்கலாமா ? Bye all...have a super weekend ! See you around !

277 comments:

 1. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
  Replies
  1. DETECTIVE SPECIAL அட்டைப் படத்திலேயே ஒரு RUSH தெரிகிறது. அருமை!

   Delete
 2. ஆமாம். ஸ்பைடர் வேண்டுமே வேண்டும்..ஐக்கியமாகிடலாம் சார்..

  ReplyDelete
 3. துப்பறிய வந்து விட்டேன் :-)

  ReplyDelete
 4. வாவ்வ்வ்...செம்ம அட்டை.. மிரட்டுகிறது...டிடெக்டிவ் ஸ்பெஷல்..

  ReplyDelete
 5. Lucky Luke's "லக்கி லூக்கைச் சுட்டது யார் ? " was a disaster sir. No humor and not serious one though... may be its my view or most of us I'm not sure sir.

  ReplyDelete
  Replies
  1. ரசனைகள் பலவிதம். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி படித்தேன் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

   Delete
  2. என்னமோ எனக்குமே லக்கி புதிய பாணி பிடிக்கவில்லை. ஆனால் படிப்பதற்கு தயராக உள்ளேன்.

   Delete
 6. // விற்பனையில் மிரட்டி வருகிறதாம் - கலரிலும், black & white -லும் ! இங்கும் நாம் துண்டைப் போட்டு வைக்கலாமா ? //

  இந்த ஒல்லி பிச்சான் மஞ்சள் சட்டையருக்கு கேள்வியே கெட்காமல் அடுத்த சந்தாவில் சேர்த்து விடுங்கள்.

  ReplyDelete
 7. // சென்னைப் புத்தக விழாவினில் வார நாட்களை விட இன்றைக்கு நல்ல கூட்டமென்று நம்மவர்கள் சொன்னார்கள் ! //

  மீண்டும் ஒரு நல்ல சேய்தி அதுவும் பௌர்ணமி மாலையில் :-)

  ReplyDelete
 8. லக்கிக்கு ஜே.....👍

  ReplyDelete
 9. // நம் கூர்மண்டையரின் தொகுப்பு ஒன்று இங்கிலாந்தில் வெளியாகிறது, இந்த மிரட்டும் அட்டைப்படத்துடன் !! ஜோதியில் நாமும் ஐக்கியமாகணுமா guys //


  போடலாம் ஒரு கண்டிஷனுடன்: இவரின் பழைய இதழ்கள் எல்லாம் கிட்டங்கியை விட்டு முழுவதுமாக கிளம்பி விட்டால்.

  ReplyDelete
  Replies
  1. நானும் அவரின் ரசிகனே உதய். இரண்டு பதிவுகளுக்கு முன்னால் ஆசிரியர் தற்போது வந்த ஆர்ச்சி மற்றும் மாயாவி கதைகள் விற்பனை பற்றி சொன்னதை புரிந்து கொண்டதால் வெளிப்பட்ட பின்னூட்டம் இது :-)

   Delete
 10. அட்டைப்படம் அபாரம்! கலரிங் - அருமை!! பின்னட்டை - வித்தியாஆஆசமாய்!!

  மார்ட்டின் கதையில் வரும் பாத்திரப்படைப்புகள் பற்றிய விவரிப்புகள் ஆர்வத்தை எகிறச் செய்கின்றன எடிட்டர் சார்!

  கூர்மண்டையர் & லக்கிலூக் - வெல்கம் வெல்கம்!!

  ReplyDelete
  Replies
  1. // அட்டைப்படம் அபாரம்! கலரிங் - அருமை!! பின்னட்டை - வித்தியாஆஆசமாய்!! //

   நீங்கள் எழுதியதா அல்லது ஸ்டீல் எழுதியதை உங்கள் பெயரில் போட்டு உள்ளீர்களா விஜய் :-)

   Delete
  2. //கூர்மண்டையர் & லக்கிலூக் - வெல்கம் வெல்கம்!!/
   வ்வாவ், நன்றிகள் சகோ.

   Delete
 11. முன் மாலைப்பதிவு...சூப்பரே...!!!

  ReplyDelete
 12. 3 in 1 இதழில் அட்டைப்படம் terrific.

  டைலனின் 32 பக்க சாகசம் உண்மையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

  ReplyDelete
 13. லக்கிலுக் & கூர்மண்டையரையும் களம் இறக்கிப் பார்க்கலாம்! டிடெக்டிவ் ஸ்பெஷல் மிக மிக எதிர்பார்ப்பில் உள்ள இதழ் 😃

  ReplyDelete
 14. ஸ்பைடர் மற்றும் லக்கி இரண்டுமே வேண்டும் வேண்டும்.

  ReplyDelete
 15. சுட்டி டிவியில் மார்ட்டின் மிஸ்ட்ரி தமிழில் ஒளிபரப்பானபோது கண்டு இரசித்திருக்கிறேன். அதைப்போன்ற பெரிய முடிச்சுகளற்ற ஸ்டைலான கலாட்டாவான கதைகளையும் மார்ட்டினின் மிஸ்ட்ரி முடிச்சுகளின்றி இரசிக்க முடியும் என்பதில் ஐயமில்லை. தொடரலாமே..
  இத்தாலிய முப்பெரும் கூட்டணி மார்ச்சினை சிறப்பிக்கப் போவது உறுதி.. நண்பர்கள் நிச்சயம் இரசிப்பார்கள்..

  ReplyDelete
 16. மார்ட்டின் கதை பிரிவியூ பக்கத்தைக் காணவில்லையே?

  ReplyDelete
 17. Big NO to both new spider and graphic novel lucky Luke

  ReplyDelete
 18. சபைக்கு வணக்கமுங்க.

  ReplyDelete
 19. கூர் மண்டையர்? 🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️

  ReplyDelete
  Replies
  1. நானும் தான் ஒடுறேன். என்ன எதிர் திசையில்.

   Delete
 20. ஏற்கனவே வெளிவந்த 'லக்கிலாக்கைச் சுட்டது யார்?' கதை நன்றாகவே இருந்ததாலும் அவருடைய சீரியஸ் அவதாருடன் என்னால் அவ்வளவு sync ஆக முடியவில்லை. கார்ட்டூன் லக்கியே போதும் சார்!

  ReplyDelete
  Replies
  1. Exactly, it felt like reading a new series not lucky luke.

   Delete
  2. கிராஃபிக் நாவல் ஜம்போவை விரும்பும் உங்களை போன்ற நண்பர்கள் இப்படி சொல்வது ஆச்சரியமாக உள்ளது. எனிவே இரசனைகள் பலவிதம். :-)

   Delete
  3. // அவருடைய சீரியஸ் அவதாருடன் என்னால் அவ்வளவு sync ஆக முடியவில்லை. //
   அதே,அதே...

   Delete
  4. Pfb@ லக்கியுடனான நமது பரிச்சயம் மட்டுமே இத்தகைய எண்ணத்தை தோற்றவிக்கிறது. என்னதான் எதிர்பார்க்காமல் படிக்கனும்னு நினைத்தாலும் மருந்து சாப்பிடும் போது நினைக்கக்கூடாத குரங்கு கதையாகவே மாறிப்போகிறது...

   ஒருவேளை இரண்டொரு ஆல்பங்கள் கூட வாசித்தால் எண்ணம் மாறுமோ... சீரியசான ஹீரோக்களை பகடி செய்து காமெடியாக காட்டுவதை ரசிக்க முடிகிறது. அதையே உல்டாவாகச் செய்யும்போது ஏனோ அதனுடன் இணைந்து பயணிக்க இயலவில்லை.

   சிம்பிளாக சொல்வதானால் ஜாலி ஜம்பர் எப்போது பேசும் என்றே தேடத் தோன்றியது.

   Delete
  5. எதிர்பார்ப்புடன் படிக்கும் போது இது போன்ற அனுபவங்கள் கிடைக்கும் என்பதில் வியப்பில்லை :-). நான் படமும் சரி நமது காமிக்ஸும் சரி எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவைகளை ரசிப்பேன். என்டர்டெயின்மென்ட் விஷயம் என்பதில் எதிர்பார்ப்பு இன்றி ரசிப்பது எனது பானி :-)

   நமது மறுபதிப்பு கதைகளை கூட புதிய கதைகளாக எண்ணியே படிப்பேன். :-)

   Delete
 21. ஸ்பைடர்- அவருடைய டைஹார்ட் ரசிகர்களுக்காக வரட்டும் சார்!

  ReplyDelete
 22. //பதிவுகளை ஜவ்வாய் இழுக்கும் பாணிகள் இனி வேண்டாமெனத் தீர்மானம் செய்தது//

  அதற்கு பதிலாக வாரத்திற்கு இரண்டு (அ) மூன்று short and crisp பதிவுகள் தேவைக்கேற்ப (இந்த வாரத்தைப் போல...) இருப்பதும் நன்றாக இருக்கிறது சார்!

  ReplyDelete
 23. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 24. இதோ - நம் கூர்மண்டையரின் தொகுப்பு ஒன்று இங்கிலாந்தில் வெளியாகிறது, இந்த மிரட்டும் அட்டைப்படத்துடன் !! ஜோதியில் நாமும் ஐக்கியமாகணுமா guys ?
  ///அக்கிரமம் அநியாயம்! கேள்வி கேட்பானேன் சார்.

  ReplyDelete
 25. //இதோ - நம் கூர்மண்டையரின் தொகுப்பு ஒன்று இங்கிலாந்தில் வெளியாகிறது, இந்த மிரட்டும் அட்டைப்படத்துடன் !! ஜோதியில் நாமும் ஐக்கியமாகணுமா guys ?//

  Yes sir... நீங்கள் ஸ்பைடர் கதைகளுக்கே இப்படி கேள்வி கேட்பது வருத்தமளிக்கிறது சார்... முதல் மறுபதிப்பு விசித்திர சவால், உடனடியாக ஸ்டாக் அவுட். காரணம் அதன் தயாரிப்பு தரம், பாக்கெட் சைஸ், கூடுதல் பலம்... "சர்ப்பத்தின் சவால்" கதையை கொஞ்சம் "யாரந்த மினி ஸ்பைடர்?" போல எடிட் செய்திருக்க வேண்டுமல்லவா? ஆனாலும் அற்புதமான அட்டைப்படம், சூப்பர் மொழிப்பெயர்ப்பு என்று பட்டைய கிளப்பும் ஸ்பைடர் புத்தகம் சீக்கிரமே தீர்ந்து போகும் என்பதில் ஐயம் தான் வேண்டுமா, என்ன? மற்ற 50 ரூபாய் இதழ்கள் நிறையவே மறுபதிப்பு கண்டவை தானே, சீக்கிரமே காலியாகிவிடும்... அந்நாளைய வசூல் சக்கரவர்த்தி, நம்பிக்கை நாயகன் என்றும் நஷ்டம் தரமாட்டார்...

  ReplyDelete
  Replies
  1. You have the facts wrong நண்பரே ! விசித்திரச் சவால் pocket size உடனே காலியாகிட இல்லை ; 2 / 3 வருஷங்களுக்கு கைக்குள்ளும் , காலுக்குள்ளும் உழன்றது ! கிட்டங்கியில் பத்திரப்படுத்துவதற்குள் போதும் - போதுமென்றாகி விட்டது !ரெகுலர் சைசில் வெளியான புக்ஸ் துவக்கத்தில் did well ; அப்புறமாய்த் தான் தேக்கம் காண ஆரம்பித்தன !

   சர்ப்பத்தின் சவாலில் நான் என்ன எடிட் செய்யாது விட்டேன் - மினி ஸ்பைடரில் என்ன செய்தேன் என்பதெல்லாம் சத்தியமாய் எனக்குத் தெரியவில்லை ! பிரேமில் நிற்கும் ஒவ்வொருவரும் தேர்தல் மேடைகளில் பேசுவதைப் போல வாய் மூடாது பிரசங்கம் செய்வதை நான் எடிட் செய்வதாயின் கையில் எடுத்திருக்க வேண்டியது கத்திரியாய்த் தான் இருந்திருக்க வேண்டும் நண்பரே !

   இந்த சூப்பர் ஹீரோ ரசனைகளில் பயணித்தோரில் ஒரு பகுதியினர் கழன்று கொண்டு விட்டனர் ; உங்களை போன்ற diehard fans தொடர்கிறீர்கள் என்பதே யதார்த்தம் ! And அந்த யதார்த்தம் தான் என்னை இந்தக் கேள்வியைக் கேட்கவே செய்கிறது ! இன்றைய சிறுவட்டத்தில் ஸ்பைடர் ஒரு ஆட்டோமேட்டிக் தேர்வல்ல என்பதில் ரகசியங்கள் ஏது ?

   Delete
  2. PRICE ATHIGAMA IRUNTHA STOCK THAN AGUM

   Delete
  3. டைனமைட் ஸ்பெஷல் ரூ.700 ...

   தீபாவளி வித் Tex ரூ.450 ..

   மூன்றே மாதங்களுக்குள் விற்றுத் தீர்ந்த புக்ஸ் மேற்படி ! உங்க கமெண்ட்ஸ் ப்ளீஸ் ?

   Delete
 26. 1. ஸ்பைடரின் முந்தைய சாகஸங்களின் வில்லன்கள் எல்லோரையும், வலையில் தொங்க விட்டு விட்டு, தனக்கே உரிய இளிப்பை காட்டுகிறார் தானைத்தலைவர்... சீக்கிரமாகவே, ஒரு இஷ்பெஷல் புக்கை வெளியிடப் போகிறீர்கள் ஐயா... ஐக்கியமாகலாம்

  2. மேலே சொன்ன இதே பதிலே, ஜாலி ஜம்பரின் நண்பருக்கும் பொருந்தும் ஐயா...

  ReplyDelete
 27. // அடுத்தாண்டின் ஒவ்வொரு இதழ் சார்ந்த அலசலுக்கென்று செலவிட்டால் - 44 அழகான இதழ்கள் சாத்தியமாகிடுமோ //

  இதுபோக ஜம்போ தனிதானே சார் :-) ஆக 50 இதழ்களை 2022 சந்தாவில் எதிர்பார்க்கலாம். :-)

  ReplyDelete
  Replies
  1. முயற்சி செய்து பார்கலாமே சார். நமது முத்து 50வது வருடம் 50 இதழ்கள் நன்றாக இருக்கும் என்பதால் இந்த கோரிக்கை :-)

   Delete
  2. 2022 ஆம் ஆண்டை சும்மா மிரட்டி விடனும்,தெறிக்க விடனும் சார்...

   Delete
 28. // இதோ - நம் கூர்மண்டையரின் தொகுப்பு ஒன்று இங்கிலாந்தில் வெளியாகிறது, இந்த மிரட்டும் அட்டைப்படத்துடன் !! ஜோதியில் நாமும் ஐக்கியமாகணுமா guys ?//

  மிரட்டும் அட்டைப்படம் மாதிரியே கதையும் மிரட்டினால் ஓகேதான்...!!!

  ReplyDelete
 29. // லக்கி லூக்கைச் சுட்டது யார் ? - கிராபிக் நாவல் பாணி நினைவுள்ளதா guys ? //

  இதன் முதல் இதழ் பெரியதொரு ஈர்ப்பை எனக்கு கொடுக்கவில்லை,வரவேற்பு நன்றாக இருப்பின் போட்டுத் தாக்குங்க சார்...!!!

  ReplyDelete
 30. // So மார்டினின் திருத்தங்கள் பூர்த்தி கண்டு ; அச்சுக்குச் சென்று, பைண்டிங்கிலிருந்தும் திரும்பிட அடுத்த 4 நாட்களாவது பிடிக்கும் என்பதால் - பொறுத்தருள்க ப்ளீஸ் ! //

  அப்ப இந்த மாத தாமதத்திற்கு மார்ட்டின்தான் பொறுப்பா ???!!!
  சரி கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்...

  ReplyDelete
 31. // சென்னைப் புத்தக விழாவினில் வார நாட்களை விட இன்றைக்கு நல்ல கூட்டமென்று நம்மவர்கள் சொன்னார்கள் ! //
  அடடே...நல்ல செய்தி,நல்ல செய்தி...

  ReplyDelete
 32. This comment has been removed by the author.

  ReplyDelete
 33. இதோ - நம் கூர்மண்டையரின் தொகுப்பு ஒன்று இங்கிலாந்தில் வெளியாகிறது, இந்த மிரட்டும் அட்டைப்படத்துடன் !! ஜோதியில் நாமும் ஐக்கியமாகணுமா guys ?//

  வண்ணத்தில் என்றால் கேள்வியே வேண்டாம் சார்.. போட்டுத்தாக்கியர்ல்லாம்.. வண்ணத்தில் ஸ்பைடரையும் முதல்முறையாக பாப்போமில்ல...சார்...

  ReplyDelete
 34. //"எழுத ; டைப்படிக்க" என ஒவ்வொரு மாதமும் இதற்கென அவசியப்பட்ட கிட்டத்தட்ட 20+ மணி நேரங்களை , இனி இதர பணிகளுக்கெனப் பயன்டுத்திடச் சாத்தியமாகும் என்பது வாரயிறுதியையே சற்றே விசாலமாக்கிக் காட்டுகிறது !//

  சிறந்த முடிவு எடி... தொடருங்கள்.

  ஸ்பைடர் புதிய தொகுப்பு அதே அட்டை... மற்றும் லக்கி2 ... 2022 ல் தாராளமாக களம் இறக்கலாம்.

  ReplyDelete
 35. /// simply becos அதுவொரு மினி சாகஸமே !
  கலரில், 'நறுக்' சாகசங்கள் என்று ! So அவற்றிலிருந்து தான் "ஒரு கனவு இல்லத்தை" தேர்வு செய்திருந்தோம்///

  இன்னும் கொஞ்சம் பெரிய வீடாகவே பார்த்திருக்கலாம். டைலன்டாக் 32 பக்க சாகஸம் தான் என்பது சற்று ஏமாற்றமே.

  ReplyDelete
 36. அட்டை படங்கள் அசத்தல். அதுவும் “ஒரு கனவு இல்லம்” மிரட்டல்.

  ReplyDelete
 37. ஸ்பைடர் - கொஞ்சம் நிதானிக்கலாம் சார்.சர்ப்பதித்தின் சவால் கொடுத்த ஷாக்கிலிருந்தே இன்னும் வெளிவரவில்லை. Die hard fans மன்னிக்கவும். நானும் ஸ்பைடரின் அதிரி புதிரி ரசிகன் தான். ஆனால்?

  லக்கிலூக் - 50/50. Average sir. ஜம்போவுக்கு போருந்தாது.

  ReplyDelete
 38. Replies
  1. ஸ்பேடர் வேண்டாம். லக்கியும் வேண்டாம்.

   Delete
 39. வாவ்... ஸ்பைடர் அட்டைப்படம் ஆர்வத்தை தூண்டுகிறது. லக்கியும் சேர்த்து இரண்டும் தாராளமாக வரட்டுமே சார்

  ReplyDelete
 40. வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
 41. ஸ்பைடர் கண்டிப்பாக வேண்டும். சர்ப்பத்தின் சவால் ரசிக்கவைத்த சாகசம். அதனால் ஸ்பைடர் வேண்டும்.

  சீரியஸ் லக்கி வேண்டாம் சார்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியே பாட்டில் பூதம் மறு பதிப்பு வந்தால் இன்னும் அட்டகாசம்

   Delete
 42. ஸ்பைடர் ஜோதியில் ஆனந்தமாக கலக்க ரெடி ஆசிரியரே

  ReplyDelete
 43. லக்கிலூக் சாகஸத்தில் ரசிக்க முடியாமல் போனது லக்கிலூக்கை சுட்டது யார் மட்டுமே அதனால் கிராபிக் டைம் லக்கி வேண்டாம் சார்

  ReplyDelete
 44. கூர்மண்டையரின் அட்டைப்படமே செம மிரட்டலாக உள்ளது ஸார். கண்டிப்பாக நாமும் ஜோதியில் ஐக்கியமாகிலாம். Wanted Lucky Luke! இற்கு நாமும் துண்டை போட்டு வைக்கலாம் ஸார். கலரை விட Black& White இல் கலக்குகின்றது.

  ReplyDelete
 45. இதோ - நம் கூர்மண்டையரின் தொகுப்பு ஒன்று இங்கிலாந்தில் வெளியாகிறது, இந்த மிரட்டும் அட்டைப்படத்துடன் !! ஜோதியில் நாமும் ஐக்கியமாகணுமா guys ?
  ///அக்கிரமம் அநியாயம்! கேள்வி கேட்பானேன் சார்.

  ReplyDelete
 46. அது ஏன் மார்ட்டின் முதுகுல ராபின் பறந்து உதைக்கிறாரு ஏதெனும் முன் பகையா

  ReplyDelete
 47. வணக்கம் நண்பர்களே....

  ReplyDelete
 48. கூர்மண்டையனை தயங்காமல் விரைந்து தரவேண்டுகின்றேன்.பால்ய காலத் தலைவனை தரிசிக்க நாங்க தயார்ங்க.

  ReplyDelete
 49. கிராபிக் லக்கியை ஏனோ ரசிக்க இயலவில்லை.

  ReplyDelete
 50. திருப்பப் படிக்கக் கூட இல்ல ெதடக்கூட தயங்குற புக்கு சீரியஸ் லக்கிதான்

  ReplyDelete
 51. ராபின், மார்டின்,டைலன்
  மூவரும் எனக்கு மிக விருப்பமான கதாநாயகர்களே,
  ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் டிடெக்டிவ் ஸ்பெஷல் இதழை..

  லக்கி & ஸ்பைடர்,
  கேள்வியே வேண்டாம் சார்..
  போட்டு தாக்குங்கள்.

  ReplyDelete
 52. \\துணியும் கிடையாது / மூளையும் கிடையாது\\
  நீங்க ஒரு கலா ரசிகன் சார்.

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் ரெம்போ புகழறீங்க சார் !

   Delete
 53. டிடெக்டிவ் ஸ்பெஷல் பின்னட்டை வித்தியாசமாக உள்ளது...

  ReplyDelete
 54. // எத்தனைவாட்டி, எத்தனை கோணங்களிலிருந்து அர்த்தம் செய்து கொள்ள முனைந்தாலுமே - பதில் ஒன்றாகவே தென்படுகிறதென்று ஒரு வழியாய் தீர்மானித்த பின்னே தான் திருத்தங்களைப் போட பக்கங்களைத் தந்துள்ளேன் ! And கோடு போட்ட A4 பேப்பரில் முழுசாய் 16 பக்கங்களுக்கு வந்துள்ளன திருத்தங்கள் / மாற்றங்கள் ! //

  உங்களின் ஈடுபாடு வழக்கம் போல் ஆச்சரியப்பட வைக்கிறது. நன்றி.

  ReplyDelete
 55. அட்டைபடத்தை துப்பறிந்து பார்த்தால் அசாத்தியமான விஷயங்களை துப்பறியும் மார்ட்டின் கையில் உள்ள துப்பாக்கி வித்தியாசமாக உள்ளது. ராபின் கையில் உள்ள துப்பாக்கி ரெகுலர் துப்பாக்கி.

  அட்டைபடத்தில் ஒரு சிறிய விஷயம் மூலம் இருவரையும் வித்தியாச படுத்திக்காட்ட நீங்கள் செலக்ட் செய்த படங்கள் அருமை.

  டிடெக்டிவ் ஸ்பெஷல் விற்பனையில் சாதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

  வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற டிடெக்டிவ் ஸ்பெஷல் கொடுங்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. கிழிஞ்ச இந்தச் சட்டையைத் தைக்கவே தெருத் தெருவாய் சுற்றி வரேன் சார் ; இதில் வருஷத்துக்கு ஒருக்கையா ?

   Delete
  2. சட்டையை கழற்றி வைத்து மார்ட்டின் கதைகளில் வேலை பாருங்கள் சார் :-)

   வருடத்திற்கு ஒரு சட்டை கிழிந்தால் பரவாயில்லை சார் :-)

   Delete
 56. டிடெக்டிவ் ஸ்பெஷல் அட்டைப்படம் ஹீரோஸ் உருவங்கள் என் கண்களுக்கு மட்டும் தான் பனி படர்ந்தது போல தெரிகிறதா என்று தெரியவில்லையா

  ReplyDelete
 57. Spider வரட்டும் வரட்டும்

  ReplyDelete
 58. லக்கிலுக்கின் சீரியஸ் ஹீரோ கதையான லக்கிலுக்கை சுட்டது யார் மனதில் நிற்கவில்லை, ஆனால் வெளிவந்தால் வாங்கிவிடுவேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்குவதோடு பாடு தீராதே நண்பரே ! படிக்கவும், ரசிக்கவும் இயன்றால் தானே படைப்பின் நோக்கம் முழுமை காணும் ?

   Delete
 59. சென்னைப் புத்தக விழாவினில் வார நாட்களை விட இன்றைக்கு நல்ல கூட்டமென்று நம்மவர்கள் சொன்னார்கள் ! இரவில் விற்பனை நம்பர்களை கேட்டறிந்தால் தான் நிலவரம் புரியும் ! Fingers crossed !


  ######


  மகிழ்ச்சியான செய்தி சார்..வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 60. 3 in 1 டிடக்டிவ் இதழின் அட்டைப்படம் செம மாஸாக அமைந்துள்ளது சார்...இந்த இதழின் அட்டைப்படத்தை ரசிக்கவே சில மணித்துளிகள் ஆகலாம் என்பது உறுதி...

  ReplyDelete
 61. ஸ்பைடர்...

  ஹீஹீ...

  சீரியஸ் லக்கி


  ஹீம்...பெரும்பான்மை எண்ணங்கள் எதுவோ அதுவே சார்..:-)

  ReplyDelete
  Replies
  1. தலீவரே....தொண்டர்கள் அபிப்பிராயங்கள் ஒருபக்கமிருக்கட்டும் ; பதுங்கு குழி சொல்லும் சேதி என்னவோ ?

   Delete
  2. அதாவது தலைவர் நடுநிலை வகிக்கிறாராம் :-)

   Delete
  3. :-)


   சேதி கீழே சார்...:-)

   Delete
  4. அதாவது தலைவர் நடுநிலை வகிக்கிறாராம் :-

   #####


   ஹீஹீ. ..இது தேர்தல் சீசன் அல்லவா...கொஞ்சம் சாக்ரதையாக தான் இருக்கனும்..ஏற்கனவே குழி ஆழமாயிட்டே போகுது நண்பரே..:-)

   Delete
  5. பதுங்கு குழி சொல்லும் சேதி என்னவோ ?// குடோன் சொல்லும் சேதி தான் சார் முக்கியம். இந்த மாதிரிக் கதைகளை தனி முன்பதிவுக்கு கொண்டு போயிட்டா சாய்ஸில் விட விரும்புவோருக்கு வசதியா இருக்கும்

   Delete
  6. இல்லீங்க சார் ; கேள்வித்தாளில் இத்தினி சாய்ஸ் தருவதாயின் பரீட்சையே வைப்பானேன் ? ஆல் பாஸ் ன்னு விஷப் பரீட்சைகளின்றி நகன்றிடலாமில்லியா ? நாட்டு நடப்போடு ஒத்துப் போன புண்ணியமாச்சும் தேறுமில்லீங்களா ?

   Delete
  7. சரிங்க சார். அப்ப

   1. ஸ்பைடர் - வேணாம். மிடில.
   2. லக்கி நியூ ட்ராக் - இதுவுமே அவ்வளவா சுகப்படலை. இருந்தும் வேணும்னா இன்னொரு முறை ட்ரை பண்ணலாம்.

   Delete
 62. எனக்கு மிகப் பிடித்த நாயகர்களின் கூட்டணியில் வரும் டிடக்டிவ் ஸ்பெஷலை வருக வருக என வரவேற்கின்றேன்.

  ReplyDelete
 63. கிராபிக் லக்கியை எதிர்பார்ப்பு இல்லாமல் படிக்க வேண்டும் என நண்பர் பெ.பரணி சொல்வது புது அறிமுகமாக இருப்பின் சரியாக இருக்கும்...ஆனால் இத்தனை வருடமாக லக்கி என்றால் இவர்த்தான் ,இப்படித்தான் என்று மனதில் ஆளப்புகுந்தவரை இந்த லக்கி இப்படி அல்ல என எதிர்ப்பார்ப்பு இல்லாமல் சந்திப்பது மிக கடினம்..


  கதை சிறப்பாக இருந்தால் ஓகே...:-)

  ReplyDelete
 64. சார்,
  ஸ்பைடர் அட்டைப் படமும் வர்ணமும் மிகவும் அருமையாக இருக்கிறது.

  ஸ்பைடரை அதே அட்டைப்படத்துடனும், வர்ணக் கலவையுடனும் வெளியிட்டால், அட்டைப் படத்திற்காகவும், வர்ணக் கலவை ஈர்ப்பு காரணமாகவும் நிச்சயம் நான் இரண்டு புத்தகங்களை வாங்குவேன்.


  இப்படிக்கு

  பெட்ரோமாக்ஸ் பார்ட்டிகள் ❤️

  ReplyDelete
 65. Regarding the new look spider and new look/parody of lucky Luke,
  YES PLEASE....
  I am more than ok with both 😁

  ReplyDelete
  Replies
  1. இன்று மாலைக்குள் For & Against என்ன நிலவரமென்று பார்ப்போம் சார் !

   Delete
 66. இங்கே இன்னும் டிபன் வரவில்லை :-)

  ReplyDelete
 67. எடிட்டர் சார், உண்மையைச் சொல்வதானால் அண்மைய வருடங்களில் நமது ரெகுலர் லக்கியை விட 'லக்கியை சுட்டது யார்?' சற்று அதிகமாகவெ ஈர்த்திருந்தது. எனவே, யெஸ் ப்ளீஸ்!!!

  ReplyDelete
  Replies
  1. யெஸ்! இயல்பான ஒரு கெளபாயாக லக்கியை எனக்குமே பிடித்திருந்தது!

   Delete
 68. ஸ்படைர் & லக்கி...

  2ம் அத்தனை கவரவில்லை சார்

  விற்பனை சொல்லும் நிலவரங்கள் பார்த்து தாங்கள் முடிவெடுக்கலாம்.

  ReplyDelete
 69. இதுவரை லயனில் வெளிவந்துள்ள இரட்டை வேட்டையர்களின் (ஜார்ஜ் & டிரேக்) கதைகளை தொகுத்து ஒரு கதம்ப இதழாக புக் பேர் சமயத்தில் களம் இறக்கி விட்டால் விற்பனையில் கில்லியடிக்கும் சார். இதை ஏன் தாங்கள் முயற்சிக்கக்கூடாது) (ஆப்ரிக்க சதி, மீண்டும் ஹிட்லர், பயங்கர நாடகம், திக்குத் தெரியாத தீவில், ஸ்பெஷல் இதழ்களில் வெளிவந்த சிறுகதைகள்)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ஆஹா அருமையான idea கலீல் ஜி.

   Delete
  2. சூப்பர் கலெக்ஷன்

   Delete
  3. நல்ல ஐடியா....கலக்கல்

   Delete
  4. அருமையான மிக அருமையான கோரிக்கை கலில் ஜி ஆசிரியர் மனசு வைக்கனுமே சொக்கா

   Delete
  5. இங்கே நான்மட்டும் மனசு வைத்து பைசாப் பிரயோஜனம் லேது சார் ! இங்கிலாந்தில் பிரதான தொடர்களையெல்லாம் முதற்சுற்றில் மெருகேற்றி டிஜிட்டல் கோப்புகளாக்கி வருகின்றனர் ! மாயாவி ; ஆர்ச்சி ; ஸ்பைடர் ; ஜான் ஸ்டீல் ; மிஸ்டி திகில் கதைகள் ; செக்ஸ்டன் ப்ளேக் என்று செல்கிறது பட்டியல்.

   என்றைக்கு இரண்டாம்நிலைத் தொடர்களில் பணிகளைத் துவக்குகிறார்களோ - அன்றைக்கே இதர கோரிக்கைகளை முன்வைக்க முடியும் !

   Delete
  6. அந்த நாளுக்காக காத்திருப்போம் சார் கோரிக்கைக்கு மேலும் மெருகூட்டிய நண்பர்களுக்கு நன்றி 😄

   Delete
  7. இரட்டை வேட்டையர் ஸ்பெசலிஸ்டு நண்பர்கள்@
   "கொள்ளையர் தீவு"--- னு ஒரு இரட்டை வேட்டையர் கதை வந்திருந்ததா???

   எதோ ஒரு புக்கில் விளம்பரம் பார்த்த ஞாபகம்.

   தகவல் ப்ளீஸ்!

   Delete
  8. அது திக்கு தெரியாத தீவில் என்ற பெயரில் வந்தது டெக்ஸ்

   Delete
  9. 'திக்குத் தெரியாத தீவில்' - அந்நாளில் என் ஃபேவரைட் கதைகளுள் ஒன்று! வண்ணத்தில் வர வாய்ப்பிருந்தால் அட்டகாசமாய் இருத்திடும்!

   Delete
 70. Spider - No (P.S: Not a fan of Spider)
  Lucky - Yes

  ReplyDelete
 71. ஸ்பைடர் நூறு முறை தாண்டி படித்த புத்தகம்....
  .......

  கண்டிப்பா படிப்போம்....வரட்டும்..
  .டும்.... ட்டும்....

  ReplyDelete
 72. நமது திகிலில் வந்த ஸ்பைடரின் "விண்வெளி பிசாசு" தொடர்கதை தொகுப்பாக வெளி வந்தால் முழுதும் படிக்காத அனைவருக்கும் ஒரு அருமையான வாசிப்பு அனுபவமாக அமையும் சார்.

  ReplyDelete
  Replies
  1. என்னன்னே தெரில சார் ; சிக்னல் வீக்காவே இருக்கு ! நான் அப்பாலிக்கா லைனிலே வாரேன் !

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. +1111111 விண்வெளி பிசாசு ஒரே புத்தகமாக வந்தால் நன்றாக இருக்குமே!!!

   ஆசிரியர் ஐயா, கொஞ்சம் டவரை இந்த பக்கமா திருப்புங்...

   Delete
  4. அவர் வாண்டட்ஆ அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியாவுக்கு போயிட்டார் போல ஹம்ம்ம

   Delete
 73. ////And இக்கட இம்முறை கொஞ்சம் கண்களுக்குக் குளிர்ச்சி இருக்கூ என்பது கொசுறுச் சேதி ! ///---

  ஈஜிட்....!!! கோடையில் ஒரு லெமனேட்😍

  ReplyDelete
 74. 1மணி நிலவரப்பபடி....வாக்கு எண்ணிக்கை...

  கூர்மண்டையர்:

  Yes=21
  No= 10

  4(conditional votes)


  நியூ லக்கி:

  Yes=17
  No= 13
  Again 4 conditional votes.

  ReplyDelete
  Replies
  1. நியூ லக்கி:

   Yes !

   வேண்டும் !

   Delete
 75. ஸ்பைடர் லக்கி இரண்டும் வேண்டும்...

  ReplyDelete
 76. ஸ்பைடர் & லக்கி இரண்டுமே வேண்டும் சார்..🙏🏼🙏🏼🙏🏼

  ReplyDelete
 77. என் தலைவன் ஸ்பைடர்...special

  புக் fair speciaலில் வரட்டும்...

  ReplyDelete
 78. சார் அட்டைப் படம் அருமை....
  ஸ்பைடர் போடனுமா....இதென்ன கேள்வி...
  ஸ்பைடர் மூஞ்சி சுமாரானாலும்....பின்னணி பழம்...பழய கேடிங்க ஈர்க்கிறார்கள்....அடுத்த புத்தக விழால போட்டுத் தாக்கப் போவதா பட்சி போடும் தகவல் உண்மயா

  ReplyDelete
 79. டிடக்டிவ் ஸ்பெஷல்.!

  ராபின் :ஃபார்முக்கு வருவார் என்றே தெரிகிறது.

  மார்டின் :வழக்கம்போல நகம் கடித்தபடி வெய்ட்டிங்.

  டைலன் டாக்: இருப்பதோ ஒரேயொரு ஸ்லாட். அதுவும் வெறும் 32பாக மினி சாகசமாக சுருங்கிவிட்டது.

  முன்னட்டையைக் காட்டிலும் பின்னட்டையில் ஏதோ ஒரு வசீகரம் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. மினி டெக்ஸ் சாகசங்களைப் போல டைலனின் இந்த 32 பக்கப் பட்டாசுகளும் ரசிக்குமென்றே நினைக்கிறேன் சார் !

   Delete
  2. அப்போ ஒரு 5 சாகசங்களை ஒன்றாக போட்டு ஒரே புத்தகமாக வெளியிடலாமே சார்???

   Delete
  3. 5 டைலனா அதுவும் சம்மர் சீசன்ல...???

   Delete
  4. இப்போது இல்லை டெக்ஸ் அடுத்த வருடம் 2022.

   Delete
  5. ///முன்னட்டையைக் காட்டிலும் பின்னட்டையில் ஏதோ ஒரு வசீகரம் உள்ளது.///

   கரெக்ட்டுங்க GP!

   Delete
 80. ஸ்பைடர்

  நியூ லக்கிலூக்.

  வேண்டாம்.

  ReplyDelete
 81. நேற்று புத்தக கண்காட்சியில் நமது வெளியீடான ஆழ்கடலில் ஆர்ச்சி, மரண முள், நியூயார்க்கில் மாயாவி புத்தகங்கள் வாங்கினேன்.
  ஆழ்கடலில் ஆர்ச்சி - ஆச்சரியமாக ஆர்ச்சியின் பூச்சுற்றல் கம்மியாக இருந்தது. வர்ணத்தில் ஆர்ச்சியை பார்த்து விட்டு கருப்பு வெள்ளையில் மனம் ஒட்டவில்லை.
  As always 'No logic pure magic🤩'.

  நியூயார்க்கில் மாயாவி - கிரான்டேல் இரும்புக்கை மாயாவியாக மாறும்- Origin Story. அனைத்து கதை நாயகர்கள் போன்று, விதியின் வசத்தால் இறுதி நொடிகளில் பல திட்டங்கள் பாழகிட, நமக்கு கிடைக்கவிருந்த ஒரு நகைச்சுவை வில்லன் கிடைக்காமல் போய் விட்டார். அவருடைய ஆரம்ப கால திட்டங்கள் எதுவுமே பலே ரகம் இல்லை. நல்லவர்கள் தீய வழியில் நடப்பது அவ்வளவு சுலபமில்லை போலும்...
  நல்ல வேளை, நான் நல்லவனில்லை 😂
  A breezy reading.
  தலையின் இந்தக் கதை முதல் முறையாக படிக்கவிருக்கிறேன்...
  பிறகு தான் அர்ஸ் மேக்னா

  ReplyDelete
  Replies
  1. வாசிக்கும் அந்த வரிசை தலைகீழாய் இருந்திருப்பின் அனுபவம் வேறாய் இருந்திருக்கும் நண்பரே !

   Delete
  2. மிக இயல்பான விமர்சனம் நண்பரே! உங்கள் விமர்சனங்களைப் படிப்பதுமே கூட ஒரு breezy reading அனுபவம்தான்!

   Delete
 82. ஸ்பைடர் தான் வேண்டுமுங்க

  ReplyDelete
 83. ஸ்பைடர் மட்டுமே வேண்டும் ஐயா

  ReplyDelete
 84. இன்றைய முக்கிய செய்திகள்

  ReplyDelete
  Replies
  1. சென்னைப் புத்தக விழாவில் இப்போது செம கூட்டமாம் ! அது தான் மாலை 6 மணிச் செய்தி !

   Delete
  2. இந்த ஞாயிறில் புதிதாக ஒரு டிடெக்டிவினி கண்ணில் பட்டூ ! தொடரும் நாட்களில் கோப்புகளை வரவழைத்துப் பரிசீலிக்கணும் !

   இது ஆறரை மணிச் செய்தி !

   Delete
  3. ஆறரை மணிச் செய்தி அழகான செய்தி

   Delete
  4. இரண்டு செய்திகளும் அருமை!!

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. இரண்டும் செய்திகளும் மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.

   Delete
  7. இரண்டுமே கிக்கான செய்திகள் எடிட்டர் சார்!
   அடுத்த பதிவுல அந்த டிடெக்டிவ் அம்முணியை கண்ணிலே காட்டுவீங்கன்னு நம்பறோம்!

   Delete
 85. கண்டா வரச் சொல்லுங்க....
  ஜேசன (13) இரண்டு கையால கூட்டிட்டு வாங்க !!!

  ReplyDelete
 86. இன்று நமது ஸ்டாலில் நல்ல கூட்டம் டீசன்டான சேல்ஸ் வழக்கம் போல டெக்ஸ் வில்லரே முன்னணி வகிக்கிறார் கொரோனா தாக்கத்தினால் நிறைய ஸ்டால்கள் ஈயோட்டிக் கொண்டிருக்க கடவுள் அருளால் நமது ஸ்டாலில் மதிக்கத்தக்க விற்பனை கடவுளுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி செந்தில்.நன்றி.

   Delete
  2. அருமையான செய்தி செந்தில் சத்யா!

   புத்தகத்திருவிழாவில் நம் நண்பர்கள் யாரையெல்லாம் சந்தித்தீர்கள்.. நிகழ்ந்த அலப்பறைகள் என்னனென்ன என்பதையும் பகிர்ந்து கொண்டால் எல்லாம் படித்து மகிழ்வோமே?

   Delete
 87. மரண முள்- யாருப்பா அங்க? எல்லாரும் கொஞ்சம் ஒரமாக போய் விலையாடுங்க...
  தல தல தான்...
  ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியை, பின்புலமாய் கொண்டு அழகான ஒரு கதை...
  (Meteorite striking)
  நம்ம ஊருல பேய், பிசாசு, குட்டி சாத்தான், ரத்தக்காட்டேரி, குறளி, வேதாளம், கொல்லிவாய் பிசாசு, பிரேத பிசாசு, யட்சி, மினி, இப்டி அழகழகா, கதைகள் இருக்கிற அளவுக்கு வேற்று உலக, கிரக, உயிர்கள் பத்தின கதைகள் செவி அதிகம் இல்லை.
  நம்ம டிசைன் அப்டிதான் போல... நம்ம இறந்தப்புறம் என்ன ஆவொம்னு யோசிக்கிற ஆளுக, வேற உலகம், வேற்றுலக வாசிகள் அப்டினு யோசிச்சது கம்மி...
  டெக்ஸ் கதை நெடுக அவர் பார்த்து, அவர் அனுபவம் கொண்டு துப்பு துலக்க முயற்சிகள் செய்யும் போதெல்லாம் ஏன் இவர் அந்த செடிகளை சந்தேகப்படல அப்படினு யோசித்துப் பார்த்த அவரோட டிசைன் அப்படி...
  கதையின் முடிவில் மனிதர்கள் தங்களுக்கு பாதிப்பாக வரும் எந்த ஒரு உயிரினத்தையும், உடனடியாக அழித்து ஒழிப்பது ஒன்றே வழி ஏன வாழ்ந்து வருவதை அழகாக வடித்துள்ளனர். மரண முள்ளினால் ஏதேனும் நன்மைகள் இருந்திருக்குமோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
  10/10

  ReplyDelete
  Replies
  1. அந்த செடிகள் இப்படி இரத்தத்த உறிஞ்சும்னு யார்தான் நினைக்க முடியும்...ஆனாலும் அந்த மாந்ரீகன் எச்சரித்தார்...

   Delete
  2. அதையும் அவர் போதையில் கண்ட மனமயக்கம் என்று ஒதுக்கி விட்டனர்

   Delete
  3. செமயா எழுதறீங்க நவனீதன்! ரொம்ப ரசிச்சேன்!

   ///நம்ம ஊருல பேய், பிசாசு, குட்டி சாத்தான், ரத்தக்காட்டேரி, குறளி, வேதாளம், கொல்லிவாய் பிசாசு, பிரேத பிசாசு, யட்சி, மினி,///

   யே..யப்பா! இம்புட்டு தீயசக்திகள் இருக்கா நம்மவூர்ல?!!

   Delete
 88. /// இந்த ஞாயிறில் புதிதாக ஒரு டிடெக்டிவினி கண்ணில் பட்டூ !///

  Warm welcome to தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகம்.

  ReplyDelete
 89. அப்புறம் 200 பின்னூட்டம் யாரோடது :-)

  ReplyDelete
 90. This comment has been removed by the author.

  ReplyDelete
 91. /நம்ம ஊருல பேய், பிசாசு, குட்டி சாத்தான், ரத்தக்காட்டேரி, குறளி, வேதாளம், கொல்லிவாய் பிசாசு, பிரேத பிசாசு, யட்சி, மினி,///

  1991 வரைக்கும் இந்த பேரையெல்லாம் கேட்டாலே எனக்கு ரொம்ப பயமாயிருக்கும்.

  அப்புறம்....


  எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி.

  ReplyDelete