Powered By Blogger

Wednesday, March 03, 2021

உளவும் கற்று மற !

 நண்பர்களே,

வணக்கம். காத்திருக்கும் ஜம்போ சீசன் 4-க்கென இதுவரையிலும் 4 இதழ்களை மட்டுமே கண்ணில் காட்டியிருந்தோம் ! Numbers 5 & 6 பின்னே அறிவிக்கப்படுமென்று விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள் ! 

அவற்றுள் # 5-க்கான தேர்வு ஆச்சு  ; in fact கிராபிக் நாவல் பாணியிலான லக்கி லூக்கின் புது ஆல்பத்தை ஏகமானதாய் நாம் ஏற்றிருப்பின், # 6 ஸ்லாட்டையும் அது எடுத்திருந்திருக்கும் ! ஆனால் 'சீரியஸ் லக்கி அத்தனை சுகப்படவில்லையே !' என்ற அதிருப்தி தலைகாட்டியுள்ளதால், அந்த இறுதி இடத்துக்கான தேடலைத் தொடர்ந்திடுகிறேன் ! சீரியஸ் லக்கி for another day I guess !!

"உளவும் கற்று மற !!" - இதுவே ஜம்போவின் இதழ் # 5 ஆக இருந்திடவுள்ளது ! 'இன்னாடா டேய்...ஊருக்குள்ளாற விவசாயிங்க நாக்குத் தள்ள போராடிக்கிட்டிருக்கும் வேளையிலே நீ உழவை மறக்க சொல்றியே ?' என்று கண்சிவக்க முனைவோருக்கு ஒரு சன்னமான சுட்டிக்காட்டல் - இது "ள" ; not "ழ" ! தலைப்பில் நாம் மறக்கச் சொல்ல நினைப்பது உளவாளிகள் செய்திடும் "உளவு வேலைகளை" ! 

"மாடா ஹாரி" என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கும் நண்பர்களுக்கு - இந்த ஆல்பத்தின் தலைப்பு might ring a bell ! ஐரோப்பாவில் 1900 களின் துவக்கத்தில் ஒரு செம கவர்ச்சிக்கன்னியாய் மேடைகளில் நடனமாடிய அம்மணி இவர் ! ஹாலந்து நாட்டைச் சார்ந்தவர் ; பார்ப்போரை தன் தாராளமயக் கொள்கைகளால் சுலபமாய்க் கவிழ்க்கும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார் ! முதலாம் உலக யுத்தத்தினில் ஜெர்மானியர்களுக்காக உளவு பார்த்திடவும் இவர் துணிந்ததே - வரலாற்றில் இவருக்கு இடம்பிடித்திட உதவியது !! நேச நாட்டுத் துருப்புகளிடம் மாட்டா ஹாரி சிக்கி, ஒரு firing squad முன்னே நிற்க நேர்ந்து கதை முடிந்த வேளையினில் அவருக்கு வயது 41 மட்டுமே ! மாமூலாய் firing squad முன்னே நிற்போருக்கு கண்கள் கட்டப்படுமாம் - மரணத்தை நேருக்கு நேராய்ப் பார்த்திடும் அனுபவம் வேண்டாமே, என்ற எண்ணத்தில் ! ஆனால் மாட்டாவோ அதெல்லாம் வேண்டாம் என்றபடிக்கே, தன்னைச் சரமாரியாய் சுட்டுக் கொல்ல நின்ற பிரெஞ்சு வீரர்களைப் பார்த்து flying kiss அனுப்பியபடியே தோட்டாக்களை வாங்கினாராம் !! இந்தப் பெண் உளவாளியின் கதையே "உளவும் கற்று மற "!!   அட்டகாசமான சித்திரங்கள், பிரமாதமான கலரிங் பாணி என மிரட்டும் இந்த offbeat ஆல்பம் ரொம்பவே சமீபப் படைப்பே ; சூட்டோடு சூடாய் தமிழுக்கு கொணர முனைகின்றோம் ! 

So மாறுபட்ட one shots-க்கான களம் நம் ஜம்போ என்பதை நிரூபிக்க yet another வாய்ப்பாக இதனைப் பார்த்திடுகிறேன் ! நம்பிக்கைகளை நிஜமாக்கிட இந்த ஆல்பம் உதவுமென்ற உறுதி உள்ளுக்குள் இருக்க, இதோ சின்னதாய் ஒரு preview : 

கதை சுழல்வதே கவர்ச்சியினை மூலதனமாக்கியதொரு அழகியைச் சுற்றி எனும் போது ஆங்காங்கே சித்திரங்களில் கொஞ்சம் ஜிலீர் படலங்கள் உள்ளன தான் ; பார்த்திட வேண்டும் அவற்றை எவ்விதம் சமாளிப்பதென்று !

So நமது 2021 சந்தா எக்ஸ்பிரஸ் கிட்டத்தட்ட முழுமை காண்கிறது - இன்னும் ஒரேயொரு ஸ்லாட் மட்டும் நிரவலுக்குக் காத்துள்ளது ! அதற்கென ஒரு வண்டிக் கதைகள் பரிசீலனையில் உள்ளதால் - not too long a wait !!

இன்னமும் சந்தாக்களில் இடம் போட்டிரா நண்பர்களுக்கு இந்தத் தருணத்தில் நினைவூட்டும் கையோடு - "கழுகு வேட்டை" ஹார்டகவர் இதழினில் உங்கள் போட்டோக்கள் இடம் பெற்றிட வேண்டுமாயின் - photos அனுப்பிட இன்னும் 10 நாட்களே உள்ளன என்பதையும் ஞாபகப்படுத்திடுகிறேனே ! மார்ச் 15 க்கு இதழ் அச்சுக்குச் செல்லவுள்ளதால் - அதன் முன்பாய் இப்பணிகள் நிறைவு கண்டிட வேண்டி வரும் ! So please note - மார்ச் 15-க்குள் கிட்டும் போட்டோக்கள் மட்டுமே உங்களது புக்கில் இடம்பிடித்திடும் ! தாமதமாய்க் கிட்டிடும் பட்சங்களில் 'தல' தரிசனம் மட்டுமே காத்திருக்கும் ! 

And before I sign out - சென்னைப் புத்தக விழா பற்றிய மினி update : 

மார்ச் இதழ்கள் தயாரிப்பில் சற்றே தாமதம் காண்பதால், மறுபதிப்பு இதழான "கௌபாய் எக்ஸ்பிரஸ்" இதழை மட்டும் நமது ஸ்டாலுக்கு அனுப்பியுள்ளோம் ! So அந்தப் பக்கமாய் விசிட் அடித்திடும் பட்சத்தில், சவாரி + சவரம் செய்திடும் லக்கியை பார்த்திடலாம் ! அப்புறம் - "சந்தாவுக்கு அனுப்புறதுக்கு முன்னமே, பொது விற்பனைக்கு எப்புடி அனுப்பப் போச்சு ?" என்ற கண்சிவத்தல்கள் வேண்டாமே - ப்ளீஸ் ?! இருப்பது இன்னும் ஒரே வாரம் தான் என்பதால், நன்றாய் விற்கக்கூடிய லக்கியினை மட்டும் சென்னைக்கு அனுப்பியுள்ளோம் - only because its a reprint !

மீண்டும் சந்திப்போம் ! Have a great week !

212 comments:

 1. இளநிக்கடை ஏகாம்பரம் first !!

  ReplyDelete
  Replies
  1. நல்லா தித்திப்பா 4 லிட்டர் தண்ணி வராப்ல ஒரு இளநி வெட்டுங்க சார்!

   Delete
  2. ரெண்டு எளநீ சாம்பிள் குடுங்க.. குடிச்சிப் பாப்போம்.!

   Delete
  3. யாருமே பாக்கெட் வைச்சிருக்கா மாதிரியே தெரிய காணோமே - பணத்தை லங்கோட்டில் செருகி வைச்சிருப்பாங்களோ ? இல்ல சாம்பிள் பாத்திட்டு கிளம்பிடற பார்ட்டிக்களோ ?

   Delete
  4. சார், EV, KOK செம்ம செம்ம ஹிஹிஹி

   Delete
  5. இது போங்கு ஆட்டம் சார் 🤷🏻‍♂️
   .

   Delete
 2. பதனிகடை பரமசிவம் second !!

  ReplyDelete
  Replies
  1. "மாடா"-- வை பார்த்தாவே போதை கிக்குனு ஏறுது!😍😍😍😍😍

   பதனீ கேன்சல்!

   Delete
 3. /கதை சுழல்வதே கவர்ச்சியினை மூலதனமாக்கியதொரு அழகியைச் சுற்றி எனும் போது ஆங்காங்கே சித்திரங்களில் கொஞ்சம் ஜிலீர் படலங்கள் உள்ளன தான் ; பார்த்திட வேண்டும் அவற்றை எவ்விதம் சமாளிப்பதென்று !/ இன்னமும் நாங்கள் சின்ன புள்ளிங்கோ என்று கருதினால் எப்படியாம்??? ஆழந்த கண்டனங்கள் சார்!!!

  ReplyDelete
  Replies
  1. ரெண்டு டாப்லெஸ் சீன்ஸ் ; அப்புறமா கணிசமான தாராளமய கொள்கை என்று பயணிக்கும் கதை சார் ; சொல்லுங்க என்ன பண்ணலாம்னு ?

   Delete
  2. கத்திரிக்கோலை மேசை ட்ராயரில் வைத்து பூட்டவும்!

   ஜம்போ போன்ற தனித்தடங்களில் காம்ப்ரமைஸ் வேணாம் சார்.

   Delete
  3. தடங்கள் மட்டுமன்றி

   *வாசக வட்டமும் தனி
   *இந்த புக்ஸ் செல்லும் இல்லங்களும் தனி

   என்று இருந்தால் சொல்லுங்கள் சார் - கத்தரிக்கோலை தலையைச் சுற்றி வெளியே வீசிப்புடலாம் !

   Delete
  4. தர்ம சங்கடம் தான் சார்...

   Delete
  5. Please don't edit the illustrations sir. Instead, you can devise a rating system with description like they do in OTTs (Violence,Nudity,Language etc) and display it on the cover. Readers can decide based on that.

   Delete
  6. //கத்திரிக்கோலை மேசை ட்ராயரில் வைத்து பூட்டவும்!//

   //கத்தரிக்கோலை தலையைச் சுற்றி வெளியே வீசிப்புடலாம் !//

   அதான் மை புட்டி வைத்திருக்கிறாரே SVTR, கத்தரிக்கோலை ஒளித்து வைத்து என்ன பிரயோஜனம்?

   Delete
  7. We hardly have the circulation for such systems to be of any use sir ! We just need to be practical!

   Delete
 4. டியர் சார்,
  ஜம்போக்கு 2.0 ஜேம்ஸ் பாண்ட் இல்லையா.

  ReplyDelete
  Replies
  1. அடடா... ஜேம்ஸ்பாண்ட் க்கும் லீவா சார்?

   Delete
 5. 2.0
  பாண்ட்
  ஜேம்ஸ் பாண்ட் கண்டிப்பா முயற்சி செய்யவும்.

  ReplyDelete
 6. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 7. சார் வரும் சனி கிழமை புத்தக அரங்கில் இருப்பீர்கள்களா.

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. இன்னமும் சந்தாக்களில் இடம் போட்டிரா நண்பர்களுக்கு இந்தத் தருணத்தில் நினைவூட்டும் கையோடு - "கழுகு வேட்டை" ஹார்டகவர் இதழினில் உங்கள் போட்டோக்கள் இடம் பெற்றிட வேண்டுமாயின் - photos அனுப்பிட இன்னும் 10 நாட்களே உள்ளன என்பதையும் ### ஞாபகப்படுத்திடுகிறேனே ! மார்ச் 15 க்கு இதழ் அச்சுக்குச் செல்லவுள்ளதால் - அதன் முன்பாய் இப்பணிகள் நிறைவு கண்டிட வேண்டி வரும் ! So please note - மார்ச் 15-க்குள் கிட்டும் போட்டோக்கள் மட்டுமே உங்களது புக்கில் இடம்பிடித்திடும் ! தாமதமாய்க் கிட்டிடும் பட்சங்களில் 'தல' தரிசனம் மட்டுமே காத்திருக்கும் ! ###


  சந்தாக்களில் இல்லாத நண்பர்கள் போட்டோவை எப்போது அனுப்பவேண்டும் சார்

  ReplyDelete
  Replies
  1. புக் வெளியாகி, ஆன்லைன் லிஸ்டிங் செய்தான பின்னே, ஏப்ரலில் சின்னதொரு ஸ்லாட் வழங்கப்படும் சார் !

   Delete
  2. கொஞ்சமா ஏதோ புரியுற மாதிரி தெரியுது....

   Delete
  3. புரிய கூடாதுன்னுலாம் இல்ல பாபு ; ஆனால் புரியாததை புரியுறதிலே , புரிஞ்சதும் புரியாமப் போயிடக் கூடாதில்லையா ? என்ன சொல்றீங்க ?

   Delete
 10. ////மாமூலாய் firing squad முன்னே நிற்போருக்கு கண்கள் கட்டப்படுமாம் - மரணத்தை நேருக்கு நேராய்ப் பார்த்திடும் அனுபவம் வேண்டாமே, என்ற எண்ணத்தில் ! ஆனால் மாட்டாவோ அதெல்லாம் வேண்டாம் என்றபடிக்கே, தன்னைச் சரமாரியாய் சுட்டுக் கொல்ல நின்ற பிரெஞ்சு வீரர்களைப் பார்த்து flying kiss அனுப்பியபடியே தோட்டாக்களை வாங்கினாராம் !! ///

  அம்மாடியோவ்!!! என்னவொரு துணிச்சலான பெண்!!!!!

  ReplyDelete
  Replies
  1. அவங்கவிங்க வீட்டமாவை விட துணிச்சலானவங்க
   இருக்காங்களா என்ன 🤷🏻‍♂️

   இல்லன்னு மட்டும் சொல்லிட்டு சேலம் போயித்தான் பாருங்களேன் செயலரே 😇
   .

   Delete
 11. ///ஊருக்குள்ளாற விவசாயிங்க நாக்குத் தள்ள போராடிக்கிட்டிருக்கும் வேளையிலே நீ உழவை மறக்க சொல்றியே ?' என்று கண்சிவக்க முனைவோருக்கு ஒரு சன்னமான சுட்டிக்காட்டல் - இது "ள" ; not "ழ" ! தலைப்பில் நாம் மறக்கச் சொல்ல நினைப்பது உளவாளிகள் செய்திடும் "உளவு வேலைகளை" !///

  என்னங் சார்.. 'உளவு'க்கும் 'உழவு'க்கும் வித்தியாசம் தெரியாதா எங்களுக்கு?!! அந்த அளவுக்குக் கூடவா தமிழ் தெரியாதுன்னு நினைச்சீங்க?!!

  (ஈவியின் கண்கள் சிவக்கின்றன)
  (திரை)

  ReplyDelete
  Replies
  1. நீங்க தமிழ்ல நாப்பது மார்க் வாங்கி பாஸானது எனக்கு தெரியும்...மக்களுக்கு தெரியாது அல்லவா செயலரே..:-)

   Delete
  2. இல்லீங்கண்ணா .."மத்தளம் கொட்ட முகாந்திரம் தேடுவோர் சங்கம்" சமீபமாய் ரெம்போ பிசியா இருக்கிறாங்கல்லியா - அதான் ஒரு முன்சாக்கிறதை !

   அப்புறம் தலீவர் புசுக்குன்னு உங்க பியூச பிடுங்கினா மாதிரி தோணுச்சே ; வாழைப்பூ வடையை பங்கு போடறதிலே ஏதாச்சும் தாவாவா ?

   Delete
  3. ////அப்புறம் தலீவர் புசுக்குன்னு உங்க பியூச பிடுங்கினா மாதிரி தோணுச்சே ; வாழைப்பூ வடையை பங்கு போடறதிலே ஏதாச்சும் தாவாவா ?///

   ---ஹா...ஹா...வாய் பூரா சோத்தை வெச்சிட்டூ மக்கள் இருக்கும் நேரம் பார்த்து சிரிப்பு வெடியை கொளுத்தோ கொளுத்தனு கொளுத்துறீங்களே சார்!!!   Delete
  4. // நீங்க தமிழ்ல நாப்பது மார்க் வாங்கி பாஸானது எனக்கு தெரியும்...மக்களுக்கு தெரியாது அல்லவா செயலரே..:- //

   :-) :-)

   Delete
 12. /// தன்னைச் சரமாரியாய் சுட்டுக் கொல்ல நின்ற பிரெஞ்சு வீரர்களைப் பார்த்து flying kiss அனுப்பியபடியே தோட்டாக்களை வாங்கினாராம் !! ///

  யப்போ... தில்லு பார்ட்டிதான் போல..!

  ReplyDelete
 13. போட்டோக்களில் மாட்டா ஹாரி செம்ம ஹாட்டா ன ஹாரியா தெரியிறாங்க..!

  அ னாவைத் தொடர்ந்து ஆ வன்னா வரும்கிறது மறுக்கா நிரூபனமாயிருக்கு.!

  அனா - அழகு
  ஆவன்னா - ஆபத்து

  ReplyDelete
 14. அருமை அருமை அருமை அருமை வந்துட்டேன்

  ReplyDelete
 15. அழகிக்கு அழகிய வரவேற்பு...

  ReplyDelete
 16. தன்னைச் சரமாரியாய் சுட்டுக் கொல்ல நின்ற பிரெஞ்சு வீரர்களைப் பார்த்து flying kiss அனுப்பியபடியே தோட்டாக்களை வாங்கினாராம்

  இதை கேட்க தான் கொஞ்சம் மனசு கஷ்டமா இருக்கு சார்...களை மேக்ஸை சந்தோசமா மாத்த முடியுமான்னு பாருங்க..உதாரணமா தாரமங்கலத்துல உள்ள ஒரு வாலிபரை காதல் மணம் கொண்டு உளவு துறையை மறந்து விட்டார் என...:-)

  ReplyDelete
  Replies
  1. பயரிங் ஸ்குவாட் வந்துப்புட்டா யாரையாச்சும் போட்டுத் தள்ளாம போக மாட்டாங்களாமே ? அழகி இல்லாங்காட்டி வாலிபர நிக்கச் சொல்லிப்புடுவாங்களே ?

   Delete
  2. ///உதாரணமா தாரமங்கலத்துல உள்ள ஒரு வாலிபரை காதல் மணம் கொண்டு உளவு துறையை மறந்து விட்டார் என...:-)///

   வாலிப வயோதிக அன்பர்களே ...

   Delete
  3. "பயரிங் ஸ்குவாட்" என்ற நொடியிலேயே அடிச்ச டையையும் தலீவர் அழிச்சுப்புட்டாராமே ?

   Delete
  4. // "பயரிங் ஸ்குவாட்" என்ற நொடியிலேயே அடிச்ச டையையும் தலீவர் அழிச்சுப்புட்டாராமே ? //

   :-) :)

   Delete
  5. எல்லாம் அவன் செயல்...:-(

   Delete
  6. // எல்லாம் அவன் செயல்...:-( //

   என்ன தலைவரே "அவள்" என்பதற்கு பதில் "அவன்" என எழுதி இருக்கீங்க :-)

   Delete
 17. ஹைய்யா புதிய பதிவு.....

  ReplyDelete
 18. இம்மாத புத்தகங்கள் நமது ஸ்டாலில் எப்போது கிடைக்கும் ஆசிரியரே

  ReplyDelete
  Replies
  1. வாரயிறுதியில் சத்யா !

   Delete
 19. காலைல தான் பார்த்தேன் அதுக்குள்ள புதிய பதிவு நம்ப முடியவில்லை

  ReplyDelete
 20. எடிட்டர் சார்,

  MATA HARI ஒரு ஹிட் கதை என்பது நீங்கள் கொடுத்த முன்னோட்டத்தில் இருந்து தெரிகிறது.
  ஒரு சிறு திருத்தம் : MATA HARI என்பதை மாத்தா ஹாரி என்றுதான் பிரெஞ்சு மொழியில் உச்சரிக்கப்படும்.

  ReplyDelete
  Replies
  1. YouTube-ல் உச்சரிப்பை காலையிலேயே பார்த்தேன் / கேட்டேன் சார் ; சொல்லிப் பார்த்த போது "மாத்தா " கொஞ்சம் நெருடியது ! அதனால் தான் "மாட்டா " என்று எழுதினேன் !

   ஆனால் சரி பண்ணிடுவோம் ; அம்மணி இன்று முதல் மாத்தாவாய் வலம் வரட்டும் !

   Delete
 21. @ All : ஆப்பிரிக்கா போவோமா guys ?

  ReplyDelete
  Replies
  1. சார்.. யூ மீன் கென்யா?!!

   Delete
  2. நான் வரேனுங்க. உட்டுபுட்டு போயிடாதீங்கோ.

   Delete
  3. "அடங்கொன்னியா ! " என்று சொல்ல வைக்கும் புதுக்கதை இது !

   கென்யா of course உண்டு தான் ; எப்போதென்பதே கேள்வி !

   Delete
  4. ஐயம் வெயிட்டிங் சார்..:-)

   Delete
  5. போலாம் சார். இப்போவே விசா apply பண்ணறேன்

   Delete
  6. ///"அடங்கொன்னியா ! " என்று சொல்ல வைக்கும் புதுக்கதை இது !///

   அட்றா சக்கை அட்றா சக்கை அட்றாசச்கைஅட்றாசக்கை...!

   நானும் ஆப்பிரிக்கா வரேன் சார்.!

   அவங்க நாட்டு மக்களோட ஈசியா மிங்கிள் ஆயிடுவேன்.. நோ ப்ராப்ளம்.!

   (என்னை கலாய்க்குறதுக்குன்னே இங்க ஒரு ஆளை நேர்ந்துவிட்டிருக்காங்க. அந்தாளு வந்து என் மச்சான் ஆப்பிரிக்கா வந்தா இவனுக்கும் அவங்களுக்கும் வித்தியாசமே தெரியாதுன்னு சொல்றதுக்குள்ள நானே சொல்லிக்கிறேன்)

   Delete
  7. இதென்னசார் கேள்வி

   மாட்டேன்னா சொல்லப்போறோம் 🤷🏻‍♂️

   சந்தோசமா வர்றோம் 😍💃🏻💃🏻💃🏻
   .

   Delete
  8. என் மச்சான் ஆப்பிரிக்கா வந்தா இவனுக்கும் அவங்களுக்கும் வித்தியாசமே //

   ச்சேச்சே...இப்படியெல்லாம் சொல்லி மனசைப் புண்படுத்த மாட்டேம்பா...   ஆபரிக்கா மக்களோட மனசை...

   ஆனா உனக்கு விசா தேவையிருக்காதுன்னு நினைக்கிறேன்.

   Delete
  9. //ஆப்பிரிக்கா போவோமா guys//

   Sure sir, I'm ready!

   Delete
  10. ///ஆனா உனக்கு விசா தேவையிருக்காதுன்னு நினைக்கிறேன்.///

   விசா ன்னா ஆரு..? ஏராப்பிளான்ல முட்டாயி குடுக்குற அம்மிணியா.?

   Delete
  11. ஆப்ரிக்காவை சுத்திப் பார்க்க வாரேன்.🎵🎵🎵

   Delete
 22. ///கதை சுழல்வதே கவர்ச்சியினை மூலதனமாக்கியதொரு அழகியைச் சுற்றி எனும் போது ஆங்காங்கே சித்திரங்களில் கொஞ்சம் ஜிலீர் படலங்கள் உள்ளன தான் ; பார்த்திட வேண்டும் அவற்றை எவ்விதம் சமாளிப்பதென்று !///

  சார் உங்க ஆபீஸுல DTP வேலைக்கு ஆள் யாராச்சும் தேவைப்பட்டா எங்கிட்டே கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்! உங்களால் முடிஞ்ச சம்பளத்தைக் கொடுங்க போதும். சம்பளம் அவ்வளவு முக்கியமில்லை!

  ReplyDelete
 23. Is the Matta Hari story in the book same as what you described in the post? In that case என்னா சார் climax சொல்லிடீங்க.

  ReplyDelete
  Replies
  1. இது கதையல்லவே சார் ; கூகிளில் அரை நிமிடம் செலவிட்டால் அம்மணியின் ஜாதகத்தையே சொல்லிப் போடுகிறது !

   Delete
  2. நண்றி. நான் பொதுவா google பன்ரதில்ல கதையை படித்து முடிக்கும் வரை :)

   Delete
 24. நேற்று (02.03.2021) நான் மாலை சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்று இருந்தேன் இரண்டாவது முறையாக.

  லயன் முத்து காமிக்ஸ் இருக்கும் கடையில் நான் கண்ட மாற்றம்.
  1. டெக்ஸ் வில்லர் கதைகள் அதிகம் காணப்படவில்லை அனைத்தும் விற்கப்பட்டு விட்டன அதில் பந்தம் தேடிய பயணம் என்னும் புத்தகம் கிடைக்கவில்லை.

  2. லக்கிலுக் கதைகள் விற்பனையை லேசாக தூண்டிவிடுகிறது.

  3. இரும்புக்கை மாயாவியும் தன்னாலான பங்களிப்பை செய்கின்றார்.

  3. நான் அதிகம் விரும்பும் கிராபிக்ஸ் நாவல் எனப்படுபவற்றை அந்த ஸ்டாலில் இருக்கும்போது சிலரிடம் அவற்றை வாங்கிட பரிந்துரை செய்தேன். ஆனால் அதில் எவரும் கவனம் கொள்ளாமல் அவர்களின் கவனம் முழுவதும் இதர கதைகளிலேயே இருந்தது

  ReplyDelete
  Replies
  1. "பந்தம் தேடிய பயணம்" & "எதிரிகள் ஓராயிரம் " காலி நண்பரே ! ஸ்டாலிலும், நம் கிட்டங்கியிலும் !

   Delete
  2. உங்கள் positive அலசல்களின் புண்ணியமே இது !

   Delete
  3. செந்தில் நாதன் - Thanks for the update!

   Delete
  4. தகவலுக்கு அருமை நண்பரே..

   Delete
  5. // பந்தம் தேடிய பயணம்" & "எதிரிகள் ஓராயிரம் " காலி நண்பரே ! ஸ்டாலிலும், நம் கிட்டங்கியிலும் ! //
   தல எப்போதும் அசத்தல் தான்...

   Delete
  6. அருமையான அப்டேட்ஸ் @செந்தில் நாதன்!

   வீ வாண்ட் மோர்!!

   Delete
  7. வெயில் காலத்திற்கு மோர் அவசியம்தான்...!!!

   Delete
  8. If memory serves me right, "பந்தம் தேடிய பயணம்" வெளியானது போன செப்டெம்பரில் தான் ! நான்கே மாதங்களில் done !!

   Delete
  9. முடிந்தவரை டெக்ஸ் மறுபதிப்புகளை வண்ணத்திலும்,கெட்டி அட்டையிலும் வெளியிடுங்கள் சார்...
   டிராகன் நகரம் இதழ் எல்லாம் வேற லெவல்...
   சும்மாவே தல வூடு கட்டி அடிப்பாரு,அசத்தலான மேக்கிங்ன்னா சொல்லவா வேணும்...
   சமீபத்தில் தீபாவளி இதழ் உருவாக்கமும் வேற லெவல் சார்.....

   Delete
 25. சார் படம் அனுப்பியவர்களுக்கு acknowlege மெயில் கிடைத்தால் நன்றாக இருக்கும் 🙏🏼

  ReplyDelete
 26. // உளவும் கற்று மற //

  Welcome to Jumbo!

  ReplyDelete
 27. உலகை உலுக்கிய உளவாளிகளில் சிறந்த இடத்தை பெற்ரிருந்தவர் இந்த அம்மணி. கிட்டத்தட்ட, 15 வருடங்களுக்கு முன் சில உளவாளிகளின் வாழ்க்கை வரலாறை படித்த போது, இந்தம்மாவின் வரலாறும் வந்தது... இப்போது பெயர் மட்டுமே நினைவில் உள்ளது. இந்த கதையில், ரஷ்யாவின் பெரையா என்ற ஜெனரலுக்கும் இடம் இருக்கக்கூடும்...

  வெற்றிகரமான வெளியீடாக இருக்கும்... வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 28. Ediji how to send the photos? Please inform about it

  ReplyDelete
 29. இந்த மாத இதழ்களின் தாமதம் காரணமாக இன்றைய பொழுது கழிந்தது

  சட்டத்திற்கொரு சவக்குழி மூலமாக ..


  இரண்டு மணி நேரம் செம மாஸ் பயணம்...


  டெக்ஸ் டெக்ஸ் தாம்ப்பா...

  ReplyDelete
 30. இந்த இதழை வாங்காதவர்கள் சென்னை புத்தக ஸ்டால் சென்றால் புத்தகமும் ஸ்டால் வசம் இருப்பின் இந்த சட்டத்திற்கொரு சவக்குழியை தவற விடாதீர்கள் நண்பர்களே...படித்து முடிக்கும் பொழுது ஓர் இரண்டு மணி நேர திரைப்படத்தில் பகுந்து வெளியேறும் மன உணர்வு உறுதி..:-)

  ReplyDelete
 31. போட்டோக்களை அனுப்பியாச்சு...

  ReplyDelete
 32. // "மாடா ஹாரி" என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கும் நண்பர்களுக்கு - இந்த ஆல்பத்தின் தலைப்பு might ring a bell ! ஐரோப்பாவில் 1900 களின் துவக்கத்தில் ஒரு செம கவர்ச்சிக்கன்னியாய் மேடைகளில் நடனமாடிய அம்மணி இவர் ! ஹாலந்து நாட்டைச் சார்ந்தவர் ; பார்ப்போரை தன் தாராளமயக் கொள்கைகளால் சுலபமாய்க் கவிழ்க்கும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார் ! //

  மாடா

  நெம்ப நெம்ப

  ஹா(ட்)டா இருக்காங்கோ

  செயலரை கையில பிடிக்க மிடியாதே
  .

  ReplyDelete
 33. // மார்ச் இதழ்கள் தயாரிப்பில் சற்றே தாமதம் காண்பதால் //
  இந்தவார கடைசியாவது புத்தக தரிசனத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா சார்...

  ReplyDelete
 34. // சுட்டுக் கொல்ல நின்ற பிரெஞ்சு வீரர்களைப் பார்த்து flying kiss அனுப்பியபடியே தோட்டாக்களை வாங்கினாராம் !! //
  யப்பா என்னா ஒரு கேரக்டர்,மாட்டா அழகிலும் அசத்தல்,தைரியத்திலும் அசத்தல்...
  மரணத்தை நேருக்குநேராக எதிர்கொள்ள கண்டிப்பாக திடச்சித்தம் வேண்டும்...

  ReplyDelete
 35. இப்பவே கேட்டு வைச்சிடுவோம்
  ——————————————

  முத்து 50 ஜனவரியில் வருதுன்னா:

  ஒரு அட்டகாச 5 பாக தோர்கல் தொகுப்பு ஜனவரியிலும், இளம்டைகரின் தள்ளிப் போன தொகுப்பு செ. பு. வி வுக்கும் வந்தா எப்பூடி இருக்கும்.

  இதை நினைச்சிட்டே தூங்கப் போறேன். அப்பத்தான் கனவில் க்ரிஸ்ஸும் சில்க்கும் வருவாங்க.

  ReplyDelete
  Replies
  1. //ஒரு அட்டகாச 5 பாக தோர்கல் தொகுப்பு ஜனவரியிலும், இளம்டைகரின் தள்ளிப் போன தொகுப்பு செ. பு. வி வுக்கும் வந்தா எப்பூடி இருக்கும்//

   செம்ம! அருமையாக இருக்கும்!

   Delete
  2. ஏனுங்கண்ணா ..பூவும், புய்ப்பமும் ஒண்ணு தானுங்களே ? சனவரியிலே தானே செ .பு.வி. இருக்கப் போகுது ?

   Delete
  3. இன்னாது இளம் டைகர் தொகுப்பா...இப்பவே கண்ணக் கட்டுதே...

   Delete
  4. கண்ணைக் கட்டினா போய் தூங்குங்க பாசு.

   Delete
  5. ஏனுங்கண்ணா ..பூவும், புய்ப்பமும் ஒண்ணு தானுங்களே ? சனவரியிலே தானே செ .பு.வி. இருக்கப் போகுது ?//

   சந்தாவில் வருபவரையும் (தோர்கலையும்) முன்பதிவில் வருபவரையும் (டைகர்) வேறுபடுத்திக் காட்டனுமில்லீங்களா?

   ———

   எல்லாம் வேண்டுகோள் தாங்க சார். உங்களுக்கு தோதான சமயத்தில் கால்கட்டை விரலைக் கடிச்சுக்கலாம்.

   Delete
  6. கடிக்கிற லிஸ்ட் வரிசை இது தானுங்கோ :

   ஒற்றை நொடி..9 தோட்டா
   கென்யா
   ரூட் 66

   மூன்றுமே தலா ரூ.600 heavyweights எனும்போது இவர்களைக் கரை சேர்த்த பிற்பாடே ஏதேனும் புதுசாய் !

   And நேற்றும், இன்றைக்கும் அலசி வரும் ஒரு புதுத் தொடரானது - கட்டைவிரலை மாத்திரமன்றி, பாதத்தையே கடிக்கலாமா ? என்று யோசிக்கச் செய்கிறது !

   Delete
  7. சிலுவரு பேட்டரி... சிலுவரு பேட்டரி...ன்னு வடிவேலு புலம்ப வைக்கறாங்களே நம்மை

   Delete
  8. //And நேற்றும், இன்றைக்கும் அலசி வரும் ஒரு புதுத் தொடரானது - கட்டைவிரலை மாத்திரமன்றி, பாதத்தையே கடிக்கலாமா ? என்று யோசிக்கச் செய்கிறது//

   அட! சீக்கிரமே காத்திருக்கு அதிரடின்னு சொல்லுங்க...

   Delete
  9. எடிட்டர் சார்@

   ///
   ஒற்றை நொடி..9 தோட்டா
   கென்யா
   ரூட் 66///--- தங்களது தேர்வுகள் என்றுமே சோடை போகாது.
   இவைகளை அவ்வப்போது வரும் விழாக்களில் தொடர்ச்சியாக தாக்குங்க!


   "முத்து 50"--- போன்ற ஓரு தங்கத் தருணத்தில் ஏற்கனவே மனதுக்கு நெருக்கமான ஹீரோவா இருந்தா அந்த ஃபீல் வேற மாதிரி!

   அந்த வகையில் நம்ம தங்கத்தளபதியை தவிர ஆப்டான தேர்வும் உண்டோ????

   ஏற்கனவே ப்ளானிங் பண்ணி தள்ளிவைக்கப்பட்ட யங் டைகர் தொடரையே முத்து50 க்கு களமிறுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏

   Delete
  10. அருமையான தேர்வு STVR நண்பரே! இது போன்ற மைல்கல் இதழை ஒரு லெஜண்டரி நாயகருக்கு ஒதுக்குவதே நலம்... ஒருவேளை இதற்காகத்தான் இளம் டைகர் தொகுப்பு தள்ளிப் போனதோ...

   50 YEARS... HALF CENTURY... WHAT A MILESTONE TO HAVE AHEAD... MARVELLOUS!!!

   Delete
  11. எல்லாம் ஒரு வேண்டுகோள் தான் சார்! முடியும் போது களமிறக்குங்கள்!

   Delete
  12. Muthu 50 YEARS
   யங் டைகர் + தோர்கல்

   Delete
  13. ஏற்கனவே ப்ளானிங் பண்ணி தள்ளிவைக்கப்பட்ட யங் டைகர் தொடரையே முத்து50 க்கு களமிறுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏

   Delete
  14. கட்டைவிரலை மாத்திரமன்றி, பாதத்தையே கடிக்கலாமா//

   முத்து 50 என்பதை வருடம் முழுக்க ஸ்பெசல்களால் கொண்டாடிலாம் போல் இருக்கே.

   Delete
  15. //முத்து 50 என்பதை வருடம் முழுக்க ஸ்பெசல்களால் கொண்டாடிலாம் போல் இருக்கே//

   யெஸ்! மாதம் ஒரு ஸ்பெஷல்... வருடம் முழுவதும்... 12 ஸ்பெஷல்!

   Delete
  16. மைல் கல் இதழுக்கு யங் டைகர் சரியான தேர்வாக இருக்காது என்று தோன்றுகிறது,வெறும் நாயக முத்திரை மட்டும் போதுமா என்ன ?!
   தோர்கல் சிறப்பான தேர்வு...

   Delete
  17. ரவி@ தோர்கல் இப்பத்தான் தன்னோட இடத்தையே தக்கவைத்துக்கொண்டு இருக்கிறார்.

   "முத்து50"--- என்பது நம்ம லஃப் டைமில் ஓரு தடவை மாத்திரமே!

   அதற்கு தோர்கல் என்பது நிச்சயமாக பல மாற்றுகள் குறைவான தேர்வு!

   இப்போது இருக்கும் நாயகர் வட்டத்தில் டைகரே சிறப்பான தேர்வு.

   Delete
  18. ///ஒருவேளை இதற்காகத்தான் இளம் டைகர் தொகுப்பு தள்ளிப் போனதோ...///

   ---ஆம் எனக்கும் அப்படித்தான் தோணுது. எல்லாம் நன்மைக்கே!

   Delete
  19. // இப்போது இருக்கும் நாயகர் வட்டத்தில் டைகரே சிறப்பான தேர்வு. //
   ஹி,ஹி இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு...
   தோர்கல் கண்டிப்பாக ஹிட் அடிக்கும்,விற்பனையில் சுணக்கம் ஏற்படும் என்ற நிலை ஒருவேளை இருந்தால்...
   அதிரடியாக புதிய வரவை களமிறக்கலாம்...
   ட்யூராங்கோ,பி.பி.வி எல்லாம் அப்படி கிடைத்ததுதானே...

   Delete
  20. //ஹி,ஹி இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு...//

   இரும்புக்கை மாயாவிக்கு அடுத்து முத்துவின் ஆல் டைம் பேவரைட் டைகர் தானே நண்பரே...
   தோர்கல் அருமையான தேர்வுதான். ஆனால் 50 ஆண்டுகளைக் கொண்டாட ஒரு ஹெரிடேஜ் பேக்டர் அவசியம்னு நினைக்கிறேன்.

   Delete
  21. முத்து 50ல் டைகர் ....,நினைத்தாலே இனிக்கிறது..

   Delete
  22. "முத்து 50"--- முன்பதிவிலோ அல்லது செ.பு.வி. சிறப்பு மலராகவோ வரப்போவுது.

   முன்பதிவுனா அதற்குரிய காலம் இருக்கும், நிச்சயமாக சாதிக்கும்.

   டைரக்டா சிறப்பு வெளியீடாக களமிறக்கினா செ.பு.வி. என்ற பேரலையே கரை சேர்த்துடும்!

   குறிப்பு:- "நம்பினாத்தான் சோறு"--என்ற சந்தானம் காமெடி லயலாக்கை போட்டுக்குங்க..ஹி...ஹி...!

   Delete
  23. தல நடிச்ச "திருப்பதி" ; "ஏகன்"....

   தளபதி நடிச்ச "குருவி".. "சுறா"

   தலைவர் நடிச்ச "பாபா"..."லிங்கா"...

   இவற்றுள்ளான ஒற்றுமை என்னவோ guys ?

   Delete
  24. தல சாகசமான "துயில் எழுந்த பிசாசு"...

   தளபதியின் - மார்ஷல் கதைவரிசை...

   லக்கியின் "பாரிசில் ஒரு கௌபாய் "..

   இவற்றுள்ளான ஒற்றுமை என்னவோ guys ?

   Delete
  25. சார் நண்பர்கள் கூறியது போல முத்து 50 க்கு யங் டைகர் அருமையான தேர்வு. 50 ஆவது ஆண்டை வருடம் முழுதும் கொண்டாடி தீர்ப்போம் சார். நீங்கள் ஸ்பெஷல் இதழ்களாக வெளியிட்டு கொண்டே இருக்க வேண்டும். 3 மாதத்திற்கு ஒன்று வருடத்திற்கு 4 போதும் சார். ஒற்றை நொடி ஒன்பது தோட்டா, கென்யா, ரூட் 66, யங் டைகர் இப்படி.....

   Delete
  26. //And நேற்றும், இன்றைக்கும் அலசி வரும் ஒரு புதுத் தொடரானது - கட்டைவிரலை மாத்திரமன்றி, பாதத்தையே கடிக்கலாமா ? என்று யோசிக்கச் செய்கிறது ! // அருமை அருமை 2022 உங்களை அன்புடன் வரவேற்கிறது.

   Delete
  27. // தல சாகசமான "துயில் எழுந்த பிசாசு"...

   தளபதியின் - மார்ஷல் கதைவரிசை...

   லக்கியின் "பாரிசில் ஒரு கௌபாய் "..

   இவற்றுள்ளான ஒற்றுமை என்னவோ guys ? //

   என்னவோ சொல்ல வர்றீங்கன்னு தெரியுது சார்... ஆனால் சுத்தமாக புரியவில்லை ... மீ எஸ்கேப்!

   Delete
  28. ///தல நடிச்ச "திருப்பதி" ; "ஏகன்"....

   தளபதி நடிச்ச "குருவி".. "சுறா"

   தலைவர் நடிச்ச "பாபா"..."லிங்கா"...

   இவற்றுள்ளான ஒற்றுமை என்னவோ guys ?///

   அத்தனையும் அட்டர்ஃப்ளாப்.!
   (ஆனா சுறா வுல தலைவன் வடிவேலு காமெடி செம்மயா இருக்கும்.!)


   ///தல சாகசமான "துயில் எழுந்த பிசாசு"...

   தளபதியின் - மார்ஷல் கதைவரிசை...

   லக்கியின் "பாரிசில் ஒரு கௌபாய் "..///

   Not upto the mark..

   அதாவது.. அவங்க பெயருக்கு லேசா பங்கம் விளைவித்த கதைகள்னு சொல்லலாம்.!

   Delete
  29. // // தல நடிச்ச "திருப்பதி" ; "ஏகன்"....

   தளபதி நடிச்ச "குருவி".. "சுறா"

   தலைவர் நடிச்ச "பாபா"..."லிங்கா"...

   இவற்றுள்ளான ஒற்றுமை என்னவோ guys ?

   //

   தோல்வியை தழுவிய படங்கள்! :-)

   Delete
  30. இவைகளை உதாரணமாக காட்டி என்ன சொல்ல வரீங்க என புரிஞ்சு போச்சு சார்! முத்து 50-இல் இளம் டைகர் வர வாய்ப்பு இல்லை.

   Delete
  31. // அதாவது.. அவங்க பெயருக்கு லேசா பங்கம் விளைவித்த கதைகள்னு சொல்லலாம்.! //

   அதே அதே!!!

   Delete
  32. நீங்க சொல்றது புரியதுங்க சார். அதாவது பெரிய அப்பாடக்கர் ஹீரோவா இருந்தாலும் இவையெல்லாம்ப்ளாப்புங்கறீங்க. முத்து 50 வது ஆண்டு மலருக்கு தோர்கலையே சந்தாவில் வர மாதிரி போட்டுக்குவோம். . செ பு வி க்கு தனி முன்பதிவுல தளபதியின் ஸ்பெசலை போட்டுடுவோம். எங்களுக்கு தளபதி வரனும் மாஸு தரணுங்கறது மட்டுதானே ஆசை.

   Delete
  33. ஒருக்க லிங்காவையும், குருவியையும் பாத்துப்புட்டு ; அப்டியே திருப்பதியை போட்டுத் தாக்கிட்டு ஓட்டமா ஓடியாங்க சார் ! ICU லே அட்மிட் ஆகாட்டி அடுத்து ஆக வேண்டியதை பாப்போம் !

   Delete
  34. //அதாவது.. அவங்க பெயருக்கு லேசா பங்கம் விளைவித்த கதைகள்னு சொல்லலாம்.!//

   ஒரு வெற்றிக்குத் தேவை - வெற்றி நாயகர்கள் மட்டுமே அல்ல ; அவர்களை வீரியமாய்க் காட்டவல்ல கதைக்களமும் தான் ! ரைட்டுங்களா ?

   Delete
  35. அப்ப வடை போச்சா? 😳

   Delete
  36. //மாஸு தரணுங்கறது மட்டுதானே ஆசை//

   படிக்கணும்னும் ஆசை உண்டில்லீங்களா ?

   Delete
  37. மொழிபெயர்த்தாச்சு 3 பாகங்களை !! So வடைய சாப்பிட்டுப் பார்த்தவனுங்க சார் நான் !

   முன்னே அதை அறிவிச்சப்போ ஞானும் வடைக்கு சப்புக் கொட்டியவனே !! ஆனால்...ஆனால்...

   Delete
  38. // அப்ப வடை போச்சா? //

   அதேதான்! #முத்து50 க்கு தோர்கல் தான் போல...

   Delete
  39. //முன்னே அதை அறிவிச்சப்போ ஞானும் வடைக்கு சப்புக் கொட்டியவனே !! ஆனால்...ஆனால்...//

   டைகருக்கு வந்த சோதனை...ம்...ம்....ம்.....!!

   Delete
  40. ஜனவரி 2022-க்கு இன்னும் 304 நாட்கள் உள்ளன சார் ! And no - தோர்கலார் இருக்கப் போவதில்லை அந்த மைல்கல் இதழில் ! இப்போதைக்கு இந்தமட்டுக்குப் போதுமென்று நினைக்கூ !

   Delete
  41. சார்.. அப்படீன்னா அந்த 5 பாக கெளபாய் கதையைப் போட்டுத் தாக்கலாமே - முத்து-50க்கு? போன மாசம் நீங்க கூட சொன்னீங்களே.. ட்யூராங்கோ ஸ்டைலில் ஒரு கதை இருக்குன்னு?

   Delete
  42. படிக்கணும்னும் ஆசை உண்டில்லீங்களா ?//

   எல்லாக் கதையையும் படிச்சுடறேன் சார். படிக்க முயன்று தோற்றது இந்த வருடத்தில் 2-3 கதைகளே.

   Delete
  43. முன்னே அதை அறிவிச்சப்போ ஞானும் வடைக்கு சப்புக் கொட்டியவனே !! ஆனால்...ஆனால்...//

   ஓகேங்க சார். டைகருக்கு சரியான நேரம் வரும் போது பாத்துக்கலாம்.

   Delete
  44. //இப்போதைக்கு இந்தமட்டுக்குப் போதுமென்று நினைக்கூ//

   சஸ்பென்ஸ் அன்ட் சர்ப்ரைஸ்!

   Delete
  45. நிஜத்தைச் சொல்வதானால் - மார்ச் இதழ்களை முடித்த கையோடு ஏப்ரலின் பணிகளுக்குள் குதிப்பதற்குப் பதிலாய் கதை அலசல்களுக்குள் புகுந்திருக்கிறேன் ! And என்னவோ ஒரு குருட்டு அதிர்ஷ்டம் - கண்ணில்படும் சகலமும் பின்னிப் பெடலெடுக்கும் ரகங்களாய் உள்ளன ! சில தருணங்களில் மண்டை காய தேடினாலும், ஒரு சுண்டைக்காய் கூடக் கண்ணில் பட்டுத் தொலைக்காது ! ஆனால் இப்போதோ லட்டு லட்டாய் வலம் வந்த வண்ணமுள்ளன - நடப்பு அட்டவணையில் இடமே இல்லாத இன்றைய சூழலிற்குள் !

   இப்போதே வாங்கி, அடுத்த வருஷம் வரைக்கும் இவற்றை அடை காக்க வேண்டும் - சந்தா தொகைகள் இன்னும் சற்றே வேகமெடுத்த பிற்பாடு ! பாதிக் கிணறே தாண்டியுள்ளோம் அக்கட !

   Delete
  46. நடுச்சாமத்திலே ஒருத்தர் வருவாரு பாருங்க - "ஸ்பைடர் விண்வெளிப் பிசாசும், Sinister 7 -ம் சேர்த்து ஒரே புக்காக்குங்க - 50 வது வருஷத்துக்குன்னு" கவிதை பாடிட்டே !

   Delete
  47. //சஸ்பென்ஸ் அன்ட் சர்ப்ரைஸ்!//

   பள்ளிக்கூடப் பசங்களைப் போல ஒரு கோடு போட்ட காம்போசிஷன் நோட்டே போட்டு வைச்சிருக்கேன் சார் ; 2020-ன் லாக்டௌன் நாட்களிலிருந்து நான் பரிசீலனைக்கு shortlist செய்து வைத்துள்ள கதைகளைக் குறித்திட !

   Delete
  48. //And என்னவோ ஒரு குருட்டு அதிர்ஷ்டம் - கண்ணில்படும் சகலமும் பின்னிப் பெடலெடுக்கும் ரகங்களாய் உள்ளன//

   ஆஹா அருமை! முத்து50ஆம் வருடம் பின்னி பெடலெடுக்கத்தான் போகிறது. காத்திருக்கிறோம் சார்!

   Delete
  49. /பள்ளிக்கூடப் பசங்களைப் போல ஒரு கோடு போட்ட காம்போசிஷன் நோட்டே போட்டு வைச்சிருக்கேன் சார் ; 2020-ன் லாக்டௌன் நாட்களிலிருந்து நான் பரிசீலனைக்கு shortlist செய்து வைத்துள்ள கதைகளைக் குறித்திட//

   சொக்கா... அத்தனையும் பொன்னாச்சே!

   Delete
  50. // ஒரு வெற்றிக்குத் தேவை - வெற்றி நாயகர்கள் மட்டுமே அல்ல ; அவர்களை வீரியமாய்க் காட்டவல்ல கதைக்களமும் தான் ! ரைட்டுங்களா //
   யாம் சொல்ல விரும்பிய மறைமுக கருத்தும் அதுவே சார்...

   Delete
  51. // பள்ளிக்கூடப் பசங்களைப் போல ஒரு கோடு போட்ட காம்போசிஷன் நோட்டே போட்டு வைச்சிருக்கேன் சார் //
   அட,அடுத்து இதைத்தான் சொல்லலாம்னு நினைச்சேன்...
   அருமையான பணி சார்...

   Delete
  52. // அட்டவணையில் இடமே இல்லாத இன்றைய சூழலிற்குள் ! //
   2021 ஐ பொறுத்தமட்டில் நம்ம நிலைமை, "ஆசை இருக்கு தாசில் பண்ண,அம்சம் இருக்கு ஆடு மேய்க்க" கதைதான்...

   Delete
  53. // And no - தோர்கலார் இருக்கப் போவதில்லை அந்த மைல்கல் இதழில் //
   அட சூப்பரு...சார் 50 ஆம் வருட மைல்கல் இதழுக்கு ஒரு ஸ்பெஷல் மட்டும் போதுமா என்ன,கொஞ்சம் பெரிசா ப்ளான் பண்ணுவோமே....
   ரெண்டு குண்டு வண்ண ஸ்பெஷல்...

   Delete
 36. போட்டோ அனுப்பிய நண்பர்களின் லிஸ்ட்டை வெளியிட்டால் மற்ற நண்பர்களும் வேகமாக அனுப்ப முயலுவார்கள்

  ReplyDelete
  Replies
  1. அது சந்தா செலுத்திடாதோரையுமே வெளிச்சம் போட்டுக் காட்டுமல்லவா ? யாரையும் அதன் பொருட்டு சங்கடப்படுத்திடலாகாது சத்யா !

   Delete
 37. அந்த பிளையிங் கிஸ்ஸை வாங்கிக் கொண்டும் சுட்டுத்தள்ளியிருக்கிறார்களே படுபாவிப்பயலுக

  ReplyDelete
 38. கடவுளே. கிட்டத்தட்ட 50 வருசமா பாடம் எடுத்த வாத்தியாரே இப்படிக் கேட்கிறாரே. எங்களுக்கு உழவுத்துறை வேணும்ணா தெரியாம இருக்கலாம். உளவுத்துறை தெரியாமல் போகுமாங் சார். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 39. முத்து 50க்கு கத்திமுனையில் மாடஸ்டியை கலர்ல போட்ருலோம்..!

  ReplyDelete
  Replies
  1. இதை நான் எதிர்பார்க்கலை...🏃🏃🏃

   Delete
  2. பழம் பெரும் ரசிகர்கள் நிறைந்த அவை இது என்பதை மறக்கலாகாது மாமா!

   Delete
  3. இனிமேல் மாடஸ்தி பற்றி பேசுவீங்க கண்ணா :-)

   Delete
  4. ///முத்து 50க்கு கத்திமுனையில் மாடஸ்டியை கலர்ல போட்ருலோம்..!///

   நீங்க மாடஸ்டியோட ஸ்லீப்பர்(அந்த ஸ்லீப்பர் இல்லைங்க) செல்லுனு இத்தனை நாள் தெரியாம போச்சே.!

   எவ்ளோ பெரிய ஐடியா குடுத்துட்டு, இவ்ளோ அமைதியா எப்படி சார் உங்களால இருக்க முடியுது.?

   Delete
  5. முத்து 50க்கு கத்திமுனையில் மாடஸ்டியை கலர்ல போட்ருலோம்..!//

   இதுக்கு பதிலா என்னை கத்தில குத்திருக்கலாம். ஆப்ரிக்கா போகும் போது கார்கோல தான் இடம். முட்டாய் குடுக்கற அம்மிணிகளை பாக்கவே முடியாம செஞ்சுடறோம். .

   Delete
 40. அப்புறம், கௌபாய் எக்ஸ்ப்ரஸை கைப்பற்றிய நண்பர்கள் விமர்சனங்களைசீக்கிரம் தெரிவிக்கலாமே கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 41. NBS மாதிரி இன்னொரு மெகா ஷ்பெசல் கேக்கலாமின்னு யாருக்காச்சும் தோணுதா பாரு.. சும்மா சவசவன்னு பேசிக்கிட்டு.!

  ReplyDelete
  Replies
  1. இது பாயிண்ட்...

   Delete
  2. கொடுத்தா வேணாமின்னா செல்லப் போறோம்.

   Delete
  3. கதம்ப கதை கூட்டணி வாய்ப்புகள் கிடையாது கண்ணா :-)

   Delete
 42. //"முத்து50"--- என்பது நம்ம லைஃப் டைமில் ஓரு தடவை மாத்திரமே!//

  முத்து 400, 450, 500, 550 எல்லாம் அடிக்கடி முறியடிக்கப்படக்கூடிய ரெக்கார்ட்ஸ்... லயன் கொஞ்சம் எட்டிநடை போட்டா தொட்டுவிடும்... ஆனால் #முத்து50years இதை லயன் தொட 2034 வரை காத்திருக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நூற்றில் ஒரு வார்த்தை. மிகப் பெரிய மைல் கல்.

   Delete
  2. நூற்றில் ஒரு வார்த்தை. மிகப் பெரிய மைல் கல்.

   Delete

 43. // சுட்டுக் கொல்ல நின்ற பிரெஞ்சு வீரர்களைப் பார்த்து flying kiss அனுப்பியபடியே தோட்டாக்களை வாங்கினாராம் !! //

  இதுவே தெலுங்கு படமாயிருந்தா அந்த ப்ளையிங் கிஸ் தோட்டா மேல பட்டு, தோட்டா அப்படியே Invertஆ திரும்பி சுட்டவங்களையே பொசுக்கியிருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. அட...தெலுங்கு செப்பும் கரைகள் வரை ஒதுங்குவானேன் சார் - ரெம்போ சீக்கிரமே இங்கொரு லெஜெண்ட் சுழற்றியடிக்கவுள்ளது !

   Delete
  2. @ GP

   :)))))) ஓவரா தெலுங்குப் படம் பாக்கறீங்க போலிருக்கே?!!

   Delete
 44. விஜயன் சார், அப்படியே 50,00,000 பார்வைகளுக்கு ஒரு ஸ்பெஷல் இதழ் தயார் செய்து விடுங்கள்! :-) மறந்து விடாதீங்க!

  ReplyDelete
  Replies
  1. முடிஞ்சா கென்யாவை 50,00,000 பார்வைகள் ஸ்பெஷல் இதழாக போட்டு தாக்க முடியுமா சார்! ஜஸ்ட் a request !

   Delete
  2. முதலில் தாண்ட வேண்டியது 2021 சந்தா இலக்கினை சார் ! மிச்சம் மீதத்தை அப்புறமாய் பிரெஷாகப் பார்க்கலாமில்லியா ?

   Delete
 45. இந்தவார வேலைகள் 1. போட்டோ எடுக்கணும் 2. சந்தா பணம் அனுப்பனும் 3. மெயில் அனுப்பனும் 4. தொடரும்

  ReplyDelete
  Replies
  1. மார்ச் புக்ஸைப் படிக்கணும்..!

   Delete
 46. இன்னமும் சந்தாக்களில் இடம் போட்டிரா நண்பர்களுக்கு இந்தத் தருணத்தில் நினைவூட்டும் கையோடு - "கழுகு வேட்டை" ஹார்டகவர் இதழினில் உங்கள் போட்டோக்கள் இடம் பெற்றிட வேண்டுமாயின் - photos அனுப்பிட இன்னும் 10 நாட்களே உள்ளன என்பதையும் ஞாபகப்படுத்திடுகிறேனே//

  சந்தாவில் இணைய முடியா வாசகர்களுக்கும் வாய்ப்புள்ளதா சார்..??

  ReplyDelete
  Replies
  1. ஏப்ரல் முதல் வாரத்தில் !

   Delete
  2. போட்டோவுடன் சார்....??

   Delete
 47. ரிப் கிர்பி. கம்பி நீட்டிய குருவி விமர்சன ரீதியாகவும் வியாபாரரீதியாகவும் திருப்தியாங்க சார் கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete