Powered By Blogger

Monday, March 08, 2021

போடுங்கய்யா வோட்டு...! போடுங்கம்மா வோட்டு..!

 நண்பர்களே,

வணக்கம். முன்னெல்லாம் தியேட்டர்களில் இன்டெர்வல் முடிஞ்சு படம் தொடரும் முன்பாய், காத்திருக்கும் இங்கிலீஷ் படங்களுக்கோ ; கார்ட்டூன்களுக்கோ டிரெய்லர் போடுவார்கள். படத்தைப் பார்ப்பதை விட, அந்த 'டிரெய்லர் படலம்' செம சுவாரஸ்யமாய் இருக்கும் ! அந்த அனுபவம் தான் உங்களின் நேற்றைய உற்சாகங்களைப் பார்க்கும் போது நினைவுக்கு வந்தது ! அது மட்டுமன்றி, இங்கு இதுவரையிலும் மௌனத்தை மட்டுமே மொழியாகக் கொண்டிருந்த நண்பர்களையும் கூட வாக்களிக்க வெளிக்கொணர்ந்திருந்த அந்த உற்சாகம் - icing on the cake !!

சோப்புச் சட்டைக்காரரா ? 

மஞ்சச் சட்டைக்காரரா

கறுப்புச் சட்டைக்காரரா ? 

சிரிப்புக்காரரா ? 

என்ற ரேஸில் உங்களின் ரசனைகளும் பிரதிபலிப்பது முன்செல்லும் நாட்களில் எனக்கு ரொம்பவே பயன் தருமென்பது உறுதி ! ஒவ்வொரு தபாவும், உங்களிடம் கேட்டுக் கேட்டே தீர்மானங்களை செய்வது நடைமுறை சாத்தியமல்ல எனும் போது - இது மாதிரியான தருணங்கள் ஒரு பானைச் சோறையும் சுவைக்கும் அவசியங்களை எனக்கு மட்டுப்படுத்தி விடுகின்றது ! 

On to the subject - ஒவ்வொரு பார்ட்டியின் (எனது பார்வையிலான) நிறைகளையும், குறைகளையும் லைட்டாக தொட்டுச் செல்கிறேன் - மிச்சம் மீதம் உள்ள வாக்குகளை செலுத்தவுள்ளோரின் வசதிக்காக !

Option # 1 :சோப்பு கோட்டு ஜொலிக்குது !!

இரும்புக்கை மாயாவியின் "கொரில்லா சாம்ராஜ்யம்" - முழுவண்ண மறுபதிப்பு : 

நம்ம ஹீரோக்கள் சண்டைக் காட்சிகளில் நாலு சாத்து வாங்குவார்கள், வாயோரம் கசியும் உதிரத்தைத் துடைத்துக் கொள்வார்கள் ; அப்புறமாய்த் தான் வில்லனைப் பொளந்து கட்டுவார்கள் ! ஆனால் இன்னொரு பாணியும் இருக்கும் ; எடுத்த எடுப்பிலேயே எதிராளியை நடுமூக்கில் நச்சு நச்சென்று குத்தி தள்ளுவார் ஹீரோ ! மாயாவியின் "கொரில்லா சாம்ராஜ்யம்" சாய்சினில் அரங்கேறுவது பாணி # 2 ! துவக்கம் முதலே முன்னணியில் உள்ள மனுஷனின் பலமென்று இங்கே நான் கருதுவது வண்ணங்களின் வர்ண ஜாலங்களையே ! ரெகுலரான black & white மறுபதிப்பெனில் - இந்தமட்டுக்கு வாக்குகளை மாயாவி சார் அள்ளியிருப்பாரா ? என்பது ஐயமே ! So ஒரு நெடுநாளைய வாக்குறுதி நிஜமாகிடும் சாத்தியம் இந்த evergreen நாயகரை முன்னணியில் பவனி வரச் செய்கிறது என்பது எனது எண்ணம் ! 

Positives

விற்பனையில் 200 சதவிகித உத்திரவாதம் தரவல்ல இதழ் என்பதில் no secrets at all !!

தயாராய் உள்ளன டிஜிட்டல் கோப்புகள் ; அட்டைப்படத்தை மட்டும் டிசைன் செய்து தயார் பண்ணிவிட்டால் - Maggy நூடுல்ஸ் ரெடி !

Negatives : 

புராதன நெடி இந்த 1960-களின் ஆக்கத்தில் விரவியிருப்பது தவிர்க்க இயலா சமாச்சாரமே

மறுபதிப்பே !

Option # 2 : மஞ்சளின் மகத்துவம் !

முழுவண்ணத்தில், ரெகுலர் சைசில் ; ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணத்திலான TEX - "பொக்கிஷம் தேடிய பயணம்" !!

நிஜத்தைச் சொல்வதானால் - பாக்கிப் பேரின் டெபாசிட்களையெல்லாம் 'தல' காலி பண்ணி விடுவாரென்றே நான் நினைத்திருந்தேன் ! ஆனால் பெஞ்சமின் பிராங்க்ளின் எழுதிய வரிகளே இங்கு எனக்கு நினைவுக்கு வந்தன : Nothing is certain - except death & taxes !! மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் மறுக்கா சொல்வதானால் - "மரணமும், வரிகளும் தான் லோகத்தில் சர்வ நிச்சயமான சமாச்சாரங்கள் !!" 'தல'யே ஆனாலும், சில தருணங்களில் போட்டியில் tough fight களை சந்தித்தே திறனும் போலும் !!

Positives :

முழு வண்ணம் ; முழு நீள சாகசம் ; ஓவியர் சிவிடெல்லியின் மாயாஜாலம் !

Again - விற்பனையில் 200 சதவிகித உத்திரவாதம் தரவல்ல இதழ் என்பதில் no secrets at all !!

And again - தயாராய் உள்ளன டிஜிட்டல் கோப்புகள் ; அட்டைப்படத்தை மட்டும் டிசைன் செய்து தயார் பண்ணிவிட்டால் - Top Ramen நூடுல்ஸ் ரெடி !

Negatives :

ஏற்கனவே குறுக்கும் நெடுக்கும் வலம் வருபவரே எனும் போது - பெரிதாயொரு novelty factor மட்டும் மிஸ்ஸிங் ! 

Option # 3 : கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு,,,,டொய்யுந்,,டொய்யுந்.!

ஸ்டெர்ன் - ஆல்பம் # 2 :

வண்டி வண்டியாய் பீட்டர்களோ ; பன்ச்களோ இந்த ஒடிசலான வெட்டியானிடம் இராது  ; ஆனால் வாழ்க்கையின் வலிநிரம்பிய யதார்த்த முகமே இந்த கி.நா. தொடரின் பலம் ! வன்மேற்கிலும் ஒரு இலக்கிய ரசிகன் வலம் வந்திட முடியுமென்று காட்டும் பன்முக ஆற்றலாளன் ! இவரது முதல் ஆல்பத்துக்குச் சளைக்கா இன்னொரு soft flowing ஆல்பம் அதன் பாகம் 2 ! 

Positives :

Like for Like - கி.நா. சந்தா இதழினில் விழுந்திட்ட வெற்றிடத்தை இன்னொரு கி.நா.வே நிரவல் செய்வது !

அந்த கார்ட்டூன் பாணிச் சித்திரங்களின் இதம் !

Negatives :

Too early in the day - ஸ்டெர்னின் முதல் ஆல்பத்தினையே இன்னமும் 90 சதவிகித நண்பர்கள் வாசித்திருக்கா நிலையில், அடுத்ததையும் தலையில் கட்ட முனைவது ஓ.கே. தானா ? என்ற ஐயம் !

கதையினை வரவழைத்து ; மொழியாக்கம் இத்யாதி என சகலத்தையும் இனிதான் துவங்கிட வேண்டி வரும் ! முதலிரண்டும் ரெடிமேட் நூடுல்ஸ் எனில், இது சடுதியாய்க் கிளற வேண்டிவரும் உப்மா ..இல்லே..இல்லே..கிச்சடி !

Option # 4 : சிரிப்பே சிறப்பு : 

ஹெர்லக் ஷோம்சின் - புலனாய்வுப் பூதம் !!

மாறுவேஷ மன்னன் ஹெ.ஷோ. இதுவரையிலும் சிங்கமாய் ; புலியாய். குதிரையாய் ; குரங்காய் வேஷம் போட்டுப் பார்த்திருப்பீர்கள் ; ஆனால் ஒரு பூதமாய் வேஷமிடுவதை பார்க்க ஆசையெனில் நீங்கள் குத்த வேண்டியது கார்ட்டூன் சின்னத்தினில் ! வழக்கம் போல ஜாலியான, லாஜிக் இல்லா காமெடி மேளா !

Positives :

கரடு முரடான ஆசாமிகளாய் சுற்றி வந்து கொண்டிருக்கும் சூழலில், a whiff of humor !! மனதை இலகுவாக்கிட, நம் வீட்டுக் குட்டீஸ்களுக்கும் கதை சொல்லிட - ஏற்றதொரு தேர்வு !

கதை கைவசம் ரெடி ! பேனா பிடிக்க மட்டுமே அவகாசம் தேவைப்படும் !

Negatives : 

'குலுங்கக் குலுங்கச் சிரிக்க மட்டுமே வேணும் ' என்பதே உங்களின் கார்ட்டூன் எதிர்பார்ப்பெனில் கொஞ்சம் கஷ்டமே ! கதையின் concept ; அந்தச் சித்திர பாணி ; கதை நகர்த்தல் - என சகலத்தையும் ஒட்டு மொத்தமாய் ரசித்திட முடிந்தால் தான் இந்த அனுபவம் முழுமையடையும் !

So வேட்பாளர்களின் முக்கியஸ்தர்களை அறிமுகம் செய்தாச்சு !!  மீதமுள்ள ஓட்டுக்களை ; மீதமுள்ள நண்பர்கள் செலுத்திட மேற்படி brief உதவிடின் - நான் ஹேப்பி அண்ணாச்சி !

Bye all ; see you around ! Have a great week !!

310 comments:

  1. இன்று காலை பெங்களூர் வந்தவுடன் நமது காமிக்ஸ் பார்சலை திறந்து அட்டை படங்களை பார்த்து பக்கங்களை புரட்டி பார்த்து விட்டேன்! படிக்க ஆரம்பிப்பது வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தான்.

    ReplyDelete
  2. வணக்கம் சார்.

    ஹாய் ப்ரெண்ட்ஸ்.

    ReplyDelete
  3. விஜயன் சார், கடந்த பதிவின் இறுதியில் பார்த்தீர்கள் என்றால் ஷெர்லாக்-ஹோம்ஸ்க்கு ஆதரவு கூடி வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஒரு 3 ஓட்டுகள் கூடி இருக்கும் போல... ஆனா சார் சொன்னபடி, 2&3ம் இடங்களின் ஓட்டுகளை கூட்டினா கூட இரும்புக்கையாரை நெருங்க கூட முடியலயே!

      இரும்பார்....ராக்ஸ்....🎸🎸🎸

      Delete
    2. அப்போ ஷெர்லாக்குக்கு என்னோட கள்ள ஓட்டு ஒண்ணை சேர்த்துக்கோங்கோ..

      Delete
  4. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  6. 3. வெட்டியான்
    4. ஷெர்லக்

    நீங்களே பிரிச்சு வச்சிட்டீங்களே ...
    எடி ... 😉😃😃

    ReplyDelete
  7. 1.இரும்பு கை மாயாவி
    2.டெக்ஸ்

    ReplyDelete
  8. 1.மாயாவி சார்

    ReplyDelete
  9. 1.இரும்பு கை மாயாவி
    2.டெக்ஸ்

    ReplyDelete
  10. கொரில்லா சாம்ராஜ்யம்

    ReplyDelete
  11. பொக்கிஷம் தேடிய பயணம்.

    ReplyDelete
  12. ப்ரசன்ட் சார்...

    ReplyDelete
  13. உங்கள் ட்ரையலர் ஐ படிக்கும் பொழுது ,சாரி பார்க்கும் பொழுது இவை அனைத்தையும் இணைத்து ஒரு ஸ்பெஷல் வெளியீடு ஆக வெளிவந்தால் எப்படி இருக்கும் என ஆசை மேலோங்குகிறது சார்..

    ReplyDelete
  14. நாலு புக்குக்கும் மொத்தம் எவ்வளவு கட்டனும் ???

    ReplyDelete
    Replies
    1. உங்க டீல் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

      Delete
    2. எனக்கும் ரொம்ப பிடிச்சு இருக்கு

      Delete
    3. இது கேள்வி‌.. 😁

      Delete
  15. ///குலுங்கக் குலுங்கச் சிரிக்க மட்டுமே வேணும் ' என்பதே உங்களின் கார்ட்டூன் எதிர்பார்ப்பெனில் கொஞ்சம் கஷ்டமே ! கதையின் concept ; அந்தச் சித்திர பாணி ; கதை நகர்த்தல் - என சகலத்தையும் ஒட்டு மொத்தமாய் ரசித்திட முடிந்தால் தான் இந்த அனுபவம் முழுமையடையும் !///

    இங்கே நிறைய நண்பர்கள் கார்ட்டூன் என்றாலே குலுங்கி குலுங்கி சிரிக்கவேண்டுமென விரும்புகிறார்கள்..

    முதலில் கார்ட்டூன் என்பது சிரிப்பதற்கு மட்டுமே என்ற அறியாமை இருளை போக்கவேண்டும்.! அந்தக் கற்பனையை அந்த அழகை அந்த களத்தை உள்வாங்கி அதனோடு ஒன்றினால்... அந்த உலகமே வேறுமாதிரி அலாதியானது..!

    முழுநீள காமெடித் திரைப்படம் என்று சொல்லி வரும் படங்களிலேயே மருந்துக்கு கூட சிரிப்பு வருவதில்லை.. (குடுத்த காசு வீணாப் போகக்கூடாதேன்னு நாமேளே அக்குள்ள கிச்சுகிச்சு மூட்டி சிரிச்சிட்டு வரவேண்டியதா இருக்கு.) .!

    கார்ட்டூன்களை ஒரு சம்பவமாக ஒரு கதையாக அணுகுங்கள்.. சிரிப்பு வந்தாத்தான் கார்ட்டூன் என்று அர்த்தமிவ்வை.. அது ஒரு தனி உலகம்.!

    இல்லை.. எங்களுக்கு டுமீல்.. பேங். பூம்.. ப்ளாம்.. கும்.. நங்..சத்.. தொப்.. தொம்.. செத்தை.. சருகு இவைதான் சூப்பர் காமிக்ஸ்.. அதுவே போதுமென்று நினைத்தாலும்..ஒன்றும் செய்வதற்கில்லை.!

    மாதம் தவறாமல் டெக்ஸை ஆராதிப்பவன்தான் நானும்.. டைகரை கொண்டாடி.. கி.நா க்களை களித்து.. தோர்கல், கௌபாய்கள்.. பாண்ட்.. XIII என்று எல்லோரையும் ஆதியோடந்தம் ரசிப்பவன்தான்.. சரிவர புரிந்துகொள்ளப்படாமல் ஒரு ஜானர் மெல்ல துடிப்பை இழந்துகொண்டிருக்கிறதே என்ற ஆதங்கத்தில்தான் எழுதினேன்..

    யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல நண்பர்களே..!

    யாரேனும் லேசாக ஃபீல் பண்ணியிருந்தாலும் எக்ஸ்ட்ரீம்லீ சாரி..!

    ReplyDelete
  16. இரும்பு கையாருக்கே என் வோட்டு...

    ReplyDelete
  17. இப்போதெல்லாம் லாஃப்டர் தெரபி என்றொரு சிகிச்சை முறை பரவலாக ஃபேமஸாகிக் கொண்டிருக்கிறது..! அது என்னவேன்று உங்களுக்கும் தெரிந்திருக்கும்.. பத்து பதினைந்துபேர் சுற்றி நின்றுகொண்டு வலுக்கட்டியமாக சிரித்துக்கொண்டிருப்பார்கள்.. சிரிக்க ஒரு சங்கதியும் இல்லாமலேயே சிரிக்க வேண்டிய கட்டாயம்.. காலத்தின் கொடுமை.!
    சிரிப்பு என்பது நம் உள்ளத்தில் இருப்பது.அதை நாம்தான் வெளியே கொண்டுவரவேண்டும்..அதைப்பாத்தா சிரிப்பு வரலே.. இதைப்பாத்தா சிரிப்பு வரலேன்னு சொன்னா தவறு அதன்மேலும் இதன்மேலும் இருக்கப்போவதில்லை.!

    வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்..

    இல்லைன்னா..

    டாக்டர்கிட்ட பீஸை குடுத்து.. போய் அரைமணி நேரம் சிரிப்பா ன்னு பிரிஸ்க்ரிப்ஸன்ல எழுதிக்கொடுத்தார்னா எதைப் பார்த்தாலும் சிரிப்பு வரலேன்னு உக்காந்துக்க வேண்டியதாகிடும்.! :-)

    சிரிப்பை வெளியே தேடாதிங்க மக்களே..சின்ன சின்ன விசயங்களை சந்தோசமா அணுகிப்பாருங்க.. அதுவே மகிழ்ச்சி.. அதுவே கார்ட்டூன் கதைகளின் மாயாஜாலம்..!
    இதுல சிரிக்க என்ன இருக்கு? அதுல சிரிக்க என்ன இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே போனா கடைசியில எதுலையும் சிரிக்க எதுவுமே இல்லாம. மனுசனும் ஆன்ட்ராய்டு வெர்சன்ல ஒரு அங்கமாயிருலான்.!

    நன்றி.. நான் போய் லஞ்சுக்கு ககத்திரிக்கா நறுக்குறேன்..பை..!

    ReplyDelete
    Replies
    1. இப்போது நடக்கும் ஸ்லாட் தேர்வுக்கான பிரச்சாரம் இல்லை மேற்கூறிய எனது இரு பின்னூட்டங்களும்..!

      பொதுவான ஆதங்கம்.. தட்ஸ் ஆல்.!

      Delete
    2. /// டாக்டர்கிட்ட பீஸை குடுத்து.. போய் அரைமணி நேரம் சிரிப்பா ன்னு பிரிஸ்க்ரிப்ஸன்ல எழுதிக்கொடுத்தார்னா எதைப் பார்த்தாலும் சிரிப்பு வரலேன்னு உக்காந்துக்க வேண்டியதாகிடும்.! :-)////

      /// நன்றி.. நான் போய் லஞ்சுக்கு ககத்திரிக்கா நறுக்குறேன்..பை..!///

      உண்மையிலேய சிரித்துவிட்டேன் கண்ணன்.

      Delete
    3. சூப்பர் KOK!! அருமையா சொன்னீங்க!!
      இதை இங்கே மட்டும்னு இல்லாம முகநூல் குழுக்களிலும் பதிவா போடுங்க!

      Delete
    4. அருமை கண்ணன்!

      Delete
    5. நீங்கள் எழுதிய சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று கண்ணா. மிகவும் ரசித்தேன்

      Delete
    6. அருமை ரவிக்கண்ணன் அவர்களே.....


      பாராட்டுகள்...


      எனது ஓட்டு கொ.சா..:-)

      Delete
    7. நன்றி நண்பர்களே..😊🙏🙏🙏

      Delete
  18. என் பெரியப்பா பையன் ஓட்டு

    கொரில்லா சாம்ராஜ்யம்

    ReplyDelete
  19. Cartoon is not a genre, it's a method of art!
    Cartoon is misunderstood for comedy genre by us, I think.

    We have come across so many graphic novels on the form of cartoon art (drawing).

    ReplyDelete
    Replies
    1. அடடா!! இது தெரியாம இத்தனை நாளா எல்லா கார்ட்டூன் கதைகளுக்கும் கெக்கபிக்கேன்னு சிரிச்சுத் தொலைச்சுட்டனே!! ;)

      எடிட்டர் சார்.. இனிமே நான் எந்தக் கார்ட்டூன் கதைக்கும் சிரிப்பதாய் இல்லை - சொல்லிட்டன்!

      Delete
  20. அப்புறம் என் ஒட்டும்

    கொரில்லா சாம்ராஜ்யம் க்கே !

    மனம் மாறியது, ஓட்டும் மாறியது.

    ReplyDelete
  21. வில்லனுடன் மோதுவதற்கு வாத்யார் நிற்கும் ஸ்டைலில் (ராமன் தேடிய சீதை) மாயாவி நிற்கும் ஸ்டைல் அடர் சிவப்பு வண்ணத்தில் ச்சும்மா அதிருது.
    மிக மிக நீண்ண்ட வருடங்களுக்குப் பிறகு மாயாவி வண்ணத்தில் வருகிறார். இதற்கு முன் வண்ணத்தில் வந்தாரா என எனக்கு நினைவில்லை. Anyway Warm Welcome to steel Claw.

    ReplyDelete
  22. இரும்பு கை மாயாவி

    ReplyDelete
  23. நிறை-குறை சகிதம் நீங்கள் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கும் விதமே தனீ அழகு தான் எடிட்டர் சார்!

    வேட்பாளர்கள் எல்லோருமே திறமையானவர்களே!
    என் வோட்டை ஷோம்ஸுக்கு குத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தால், மாயாவி மாமாவும், அதிகாரியும், ஸ்டெர்னும் பாவமாய் என்னையே நோக்குவது போல ஒரு பிரம்மை!!

    என் தனிப்பட்ட விருப்பம் கார்ட்டூனே என்றாலும், விற்பனையில் 200% சாதிக்கவல்ல மாயாவி மாமாவோ, அதிகாரியோ தான் உங்கள் தேர்வெனில் அதில் எனக்கும் மகிழ்ச்சியே!

    புதிய நண்பர்கள் பலரும் உற்சாகமாய் வோட்டுக்களைப் பதிவு செய்து வருவது உற்சாகமளிக்கிறது!

    காலமெல்லாம் கார்ட்டூன்ஸ் வாழ்க!

    ReplyDelete
  24. அப்புறம் இது வந்து உங்களுக்கு அதிகமாக வேலை வைக்கக் கூடாதுங்கிறதனாலேயே எடுத்த முடிவே தவிர நார் மீதும் உள்ள காழ்ப்புணர்சி கிடையாது..

    ReplyDelete
  25. //எனது வீட்டில் இருந்து 23 வோட்டுக்களை மாயாவி - "கொரில்லா சாம்ராஜ்யம்" இதழுக்கு சேர்க்க முடியுமா சார்?// நன்றி PFB sir... பேரன் பேத்தி தவிர!!! ஹி ஹி ஹி. *இவன்: அதி தீவிர அந்தியும் அழகே எவர்க்ரீன் யூத் கிளப் ரொமாண்டிக் பாய்ஸ்* _/\_

    ReplyDelete
    Replies
    1. பிரியரே@ ஹா...ஹா... செம..செம...!!!
      பரணிக்கு சரியான கவுன்டர்!

      குறிப்பு:- கிளப்பின் பெயர் டாப்பு.😍😍😍

      Delete
    2. ///அதி தீவிர அந்தியும் அழகே எவர்க்ரீன் யூத் கிளப் ரொமாண்டிக் பாய்ஸ்///

      :))))))

      Delete
  26. Mayavi only.. tex epdi um release panniduveenga.. mayavi ippa illana eppavum illa..

    ReplyDelete
  27. இரும்புக்கையாரை வண்ணத்தில் தவறவிட மனமில்லை சார்..
    எனது ஓட்டு.

    இரும்புக்கை மாயாவி

    ReplyDelete
  28. என் ஓட்டு ஹெர்லக் ஷோம்சின் - புலனாய்வுப் பூதம்

    ReplyDelete
  29. கொரில்லா சாம்ராஜ்யம்-இரும்புகை மாயாவி எனது தேர்வு.

    ReplyDelete
  30. 1) Tex
    2) Stern = 3) Herlock Sholmes
    4) Mayavi

    As much as all of us like Mayavi, you're right about 'பழைய நெடி'. Let's keep it aside for some 'old memories special' type issue somewhere down the line. If you do put it out, I'm going to buy it and keep it safe & neat. If you want people to buy, do Mayavi. If you want people to buy and read, do something else.

    I'd be happy if you go with Tex, equally satisfied if you do Stern/Sholmes.

    ReplyDelete
    Replies
    1. // Let's keep it aside for some 'old memories special' type issue //
      :)

      Delete
  31. புத்தகங்களை தபாலில் பெற முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. subscription books? I think it is possible.
      Otherwise courier ST/DTDC.

      Delete
  32. எனது வோட்டு, நம்பர் 1 க்கு. கொரில்லா சாம்ராஜ்யம் - முழு வண்ணத்தில்.

    பி.கு. : நான் தல (டெக்ஸ்) இரசிகன் தான். பொக்கிஷம் தேடிய பயணம் - வண்ணத்தில் பின்பு வர வேண்டும்.

    ஹிஹிஹி.... அப்படியே அந்த விண்வெளிப் பிசாசு - முழுத் தொகுப்பும் ... முழு வண்ணத்தில் இல்லாவிடினும், இரு வண்ணத்தில் ... 😊

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி
      /****
      ஹிஹிஹி.... அப்படியே அந்த விண்வெளிப் பிசாசு - முழுத் தொகுப்பும் ... முழு வண்ணத்தில் இல்லாவிடினும், இரு வண்ணத்தில் ... 😊 ***/
      +100000

      Delete
  33. எனது வாக்கு -கொரில்லா சாம்ராஜ்ஜியம் !

    ReplyDelete
  34. கொரில்லா சாம்ராஜ்யம்...

    ReplyDelete
  35. I would like Herlock shomes - in my view we get all other type of books any way except a good cartoon book.
    So Option 1

    ReplyDelete
  36. என் ஓட்டு மாயாவி கொரில்லா சாம்ராஜ்யம்

    ReplyDelete
  37. @ ALL : ஒரு திங்களின் பகலிலும் ஆர்வங்கள் தொடர்வதைப் பார்த்திட செமையாக உள்ளது & புதியவர்களின் பங்களிப்புகளும் இருப்பது super stuff !

    இன்று இரவு 10 வரைக்கும் இந்த ஓட்டெடுப்பு தொடர்ந்திடும் and please note - வாக்கெடுப்பின் முடிவுகள் சொல்லவுள்ள சேதியே நடைமுறை காணவுள்ள இதழினைத் தீர்மானிப்பதாக இருந்திடும் ! இத்தனை ஆர்வங்களுடன் ஓட்டுக்கள் பதிவாகியிருக்கும் நிலையில் ரைட்டிலே கையைக் காட்டிப்புட்டு, லெப்ட்டிலே இண்டிகேட்டரை போட்டுப்புட்டு நேரா போகும் என் பாணிகள் இருந்திடாது !

    So நீங்கள் சொல்றான் ; நம்பள் செய்றான் !

    ReplyDelete
  38. நேற்றைய வாக்குகள் மீண்டும் கிராஸ் செக் செய்தாகிட்டது சார்.

    7மணிக்கு மேல ஸ்டெர்ன்க்கு வாக்குகள் ஏதும் பதிவாகல...

    கார்டூனுக்கு பின்னிரவில் நிறைய வாக்குகள் விழுந்துள்ளன.

    மாயாவியும் இரவில் ஸ்கோர் செய்து இருந்தார்.

    இன்றைய பதிவில் மீண்டும் மாயாவி வீருகொண்டு எழுந்துள்ளார்.

    தொடவே முடியாத உயரம்!

    கார்டூன்களுக்கு ஆதரவு நம்பிக்கையை ஊட்டுகிறது.

    இன்று மதியம் 2.00pm நிலவரம்...

    மாயாவியார்: 47

    கார்டூன்: 22

    டெக்ஸ்:20

    ஸ்டெர்ன்:10

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் 2&3வது இடங்களை கூட்டினாகூட மாயாவியே முந்துகிறார்.

      அஸ்டானிஷிங் ரிசல்ட்😍

      Delete
    2. கயிறு இழுக்கும் போட்டியினில் பாக்கி அத்தனை பேரும் ஒரு பக்கமிருந்து இழுக்க, இந்தப் பக்கமிருந்து மாயாவி ஒற்றையாய் சமாளிப்பது போலுள்ளது ! Wow !!

      Delete
    3. ///மாயாவி ஒற்றையாய் சமாளிப்பது போலுள்ளது ! Wow !!///

      --- இரும்புக்கையாரின் டாமினேசனை இந்த பதிவுகள் வழியே பார்த்துக் கொண்டு இருக்கும் சீனியர் எடிட்டர் சாரின் உற்சாகம் பற்றி நாங்களும் அறிய வேணும் சார்.

      தங்களின் டைட்டான பணிகளுக்கு இடையே, வாய்ப்பு இருந்தால் சீனியர் ஐயாவிடம் கேட்டு அவரது கருத்துக்களை இங்கே பதிய வேண்டுகிறோம்🙏🙏🙏🙏🙏

      Delete
    4. ///கயிறு இழுக்கும் போட்டியினில் பாக்கி அத்தனை பேரும் ஒரு பக்கமிருந்து இழுக்க, இந்தப் பக்கமிருந்து மாயாவி ஒற்றையாய் சமாளிப்பது போலுள்ளது ! Wow !!///

      சார்.. அவர் இரும்புக்கையை கழட்டி வச்சுட்டு அப்புறம் இழுக்கச் சொல்லுங்க பார்ப்போம்?!

      Delete
    5. இரும்புக்கையாலே கயித்தைப் புடிச்சா வழுக்கலே செய்யணும் ?

      Delete
    6. // சார்.. அவர் இரும்புக்கையை கழட்டி வச்சுட்டு அப்புறம் இழுக்கச் சொல்லுங்க பார்ப்போம்?! //
      ஹா ஹா

      Delete
    7. //கார்டூன்களுக்கு ஆதரவு நம்பிக்கையை ஊட்டுகிறது.//

      நிச்சயம் நண்பரே! ரொம்ப சந்தோஷமாக உணர்கிறேன்.

      Delete
  39. கொரில்லா சாம்ராஜ்யம்

    ReplyDelete
  40. கொரில்லா சாம்ராஜ்யம்

    ReplyDelete
  41. இரும்புக்கை மாயாவி

    ReplyDelete
  42. என் ஓட்டு STERN (கருப்பு) க்கே.....

    ReplyDelete
  43. இரும்புக்கை மாயாவிக்கே ஓட்டு.

    ReplyDelete
  44. மறுபடி என்ஓட்டு ஹெர்லாக் ஷோம்ஸுக்கே. இருந்தாலும் ராமன் தேடியசீதை , ஈஸ்ட்மென்கலர் பத்தம் புதுகாப்பியில் மாயாவியைகாண மனம்ஏங்குகிறது. கார்ட்டூன் ஜேனரின் சார்பில்மிகத்திறமையாக வாதாடியk. O. K. சாருக்குஒருபூங்கொத்து. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. தென்னைமரத்திலே ஒரு குத்து ; பனைமரத்திலே ஒரு குத்து !!

      Delete
  45. ஹெர்லாக் ஷோம்ஸ்க்கு ஒரு ஓட்டு

    ReplyDelete
  46. Tex+mayavi குண்டு புக்.

    ReplyDelete
  47. மாயாவி மாயாவி தான்.அவரே வண்ணத்தில் வர வேண்டும்.

    ReplyDelete
  48. Tex, mayavi, Sherlock and stern கலக்கும் கோடை கதம்ப ஸ்பெஷல் க்கு ஒரு வோட்டு.

    ReplyDelete
    Replies
    1. கோடைமலர்ல லார்கோ ச்சே.. (ஆள் இல்லீனாலும் அவர் ஞாபகமாவே இருக்கு) டியூராங்கோ சும்மா பளபளனு வர்றார்.

      நீங்கள் சொல்லி உள்ள ஸ்பெசலை "எலக்‌ஷன் ஸ்பெசல்" ஆக போடச் சொல்லி கேட்போம்.😍💞

      Delete
    2. அப்படியே செஞ்சிரலாம்..உங்க வாக்கு 4 In 1 ஸ்பெஷல் க்கே ...தனித்தனியே அடித்துக் கௌள்ளாமல் 4 In 1 special ku வாக்களியுங்கள்.

      Delete
  49. ஹெர்லாக் ஷோம்ஸ்!

    ReplyDelete
  50. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  51. 1.டெக்ஸ் வில்லர். 2.மாயாவி

    ReplyDelete
  52. கொஞ்சநேரம் கண்ணயர்ந்தேன் அதற்குள் புதிய பதிவு சொக்கா நான் காண்பது கனவா

    ReplyDelete
  53. இரும்புக்கையார் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பார் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  54. உண்மையில் மாயாவியை வண்ணத்தில் பார்க்கும் போது ஒரு இனம் புரியாத சந்தோஷம் உள்ளுக்குள் தோன்றுகிறது. அந்த இளம் பருவத்திற்கே திரும்பிச் சென்றது மாதிரி ஒரு உணர்வு. நன்றிகள் சார்.
    இது போல இன்னும் மறுபதிப்பு காணாத கதைகளை , முடிந்தால் வண்ணத்தில், வருடம் ஒன்று அல்லது இரண்டு வெளியிடலாம். வரவேற்பை பொறுத்து.

    ReplyDelete
    Replies
    1. //மறுபதிப்பு காணாத கதைகளை , முடிந்தால் வண்ணத்தில், வருடம் ஒன்று அல்லது இரண்டு வெளியிடலாம். வரவேற்பை பொறுத்து // யெஸ்சு

      Delete
    2. வரவேற்கின்றேன்.
      வழிமொழிகின்றேன்.

      Delete
  55. என் ஓட்டு மாயாவிக்கே ..!


    (ஜுனியர் எடிட்டருக்கு வேண்டுகோள்
    திரும்பவும் பிரிண்ட் ஆகாத "(ஒற்றைக்கண் மர்மம்)" மாயாவி கலர் காமிக்ஸ் திரும்ப கிடைக்க அருள் செய்யுங்கள்....(எடிட்டர் பிசியா இருப்பாரு.....)அதனாலதான் ஜுனியர் எடிட்டர்....!..

    ReplyDelete
    Replies
    1. ஒற்றைக் கண் மர்மம் முத்து வாரமலரில் தொடராக வந்தது.மிக அருமையான கதை.வண்ணத்தில் தொடராக வந்து மிரட்டியது.முழுப் புத்தகமாக வந்தால் மிக நன்றாக இருக்கும்.

      Delete
  56. நான் டெக்ஸ்வில்லர் ரசிகனே.எப்படியும் டெக்ஸ் மற்றும் ஸ்டெர்ன் மற்றும் கிராபிக் நாவல்களை ஆசிரியர் வெளியிடத் தான் போகின்றார்.எனவே மாயாவிகாருக்கு வாக்களிக்கும்படி வாசக வாக்காளப் பெருமக்களைப் பணிவன்புடன் வணங்கிக் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்போ மாயாவியை வெளியிட மாட்டார் என்றா நினைக்கிறீர்கள்...

      Delete
  57. //சிரிப்பை வெளியே தேடாதிங்க மக்களே..சின்ன சின்ன விசயங்களை சந்தோசமா அணுகிப்பாருங்க.. அதுவே மகிழ்ச்சி.. அதுவே கார்ட்டூன் கதைகளின் மாயாஜாலம்//


    அருமை KOK நண்பரே!

    உண்மையில் நானும் பெரும்பாலான கார்ட்டூன்களுக்கு வாய்விட்டுச் சிரித்ததில்லை. அனால் அவை மனதுக்குள் கொண்டு வரும் குதூகலத்தை எப்போதும் அனுபவிக்கிறேன்.இது லக்கி லூக்கையும் சேர்த்துத்தான்...

    சில சமயங்களில் வேறு ஜானர் கதைகளிலும் இதைக் காட்டிலும் ஹியூமர் இழையோடும், டைலனின் கிரௌச்சோ ஒரு சரியான உதாரணம். அவை சில சமயங்களில் கார்ட்டூன்களை விடவும் நகைச்சுவை கலந்திருக்கும்...

    விழுந்து விழுந்து நான் சிரித்த சில இடங்களை என் மகள் பார்த்து விட்டு இதுக்கா இப்படி சிரிச்சீங்க என்று கலாய்த்ததும் உண்டு. @EV

    அதுவே அவள் ரசித்து விழுந்து விழுந்து சிரிக்கும் லியானர்டோவும் மந்திரியும் நமக்கு புன்னகையையே வரவழைக்கும்.

    படகின் கயிற்றைக் கட்டும் மரக்கட்டையாக ஷோம்ஸ் நிற்க அது உறுதியாக இல்லை என்று சுத்தியலை ஓங்கும் பேணலைத் தாண்ட எனக்கு 10 நிமிடங்கள் அவசியப்பட்டது. பாஸ்கர்வில் பேய்களின் கிளைமாக்ஸ் அணிவகுப்பின் போதும் அதேகதைதான்.

    வெடிச்சிரிப்போ... மென்நகையோ... புன்னகையோ... மனதிற்குள் அது கொணரும் ஒரு சிறிய சந்தோஷத்தை அதனால் இலகுவான பாரத்தை... அதனுடன் பயணிக்கும் யாவரும் உணர்ந்திருப்பார்கள் என்பது திண்ணம்.

    மாதம் ஒரு புத்தகம் இதுபோன்று வருமானால் இப்போதைய கடினமான பயணத்தில் நம் வழித்துணையாய் உடனிருக்கும்... நம் நெஞ்சை மயிலிறகால் வருடிவிடும்...

    ReplyDelete
    Replies
    1. // நம் நெஞ்சை மயிலிறகால் வருடிவிடும்... //நீங்கள் எழுதியதை படித்த போது எனது மனதை மயில் இறகால் வருடியது போல இருந்தது. செம்ம SK

      Delete
    2. ///மாதம் ஒரு புத்தகம் இதுபோன்று வருமானால் இப்போதைய கடினமான பயணத்தில் நம் வழித்துணையாய் உடனிருக்கும்... நம் நெஞ்சை மயிலிறகால் வருடிவிடும்...///

      ஆசையாத்தான் இருக்கு! ஆனால் நண்பர்களில் சிலபலருக்கு முள்ளுருண்டையால் வருடுவது மட்டுமே போதுமென்கிறார்கள் - அதான் பிரச்சினையே!

      Delete
  58. கொரில்லா சாம்ராஜ்யத்துக்கே எனது ஓட்டும்!
    எழுபதுகளில் நியூஸ் ப்ரிண்ட் தாளில் அந்நாளைய வண்ணக் கலவையில் அடிக்கடி முகர்ந்து கொண்டே படித்த அனுபவம் இன்னும் மிச்சமிருக்கிறது. கர்ணனின் நீட்சியான! எனது அண்ணனின் கைங்கர்யத்தால் புத்தகம் அவரது நண்பர்களிடம் சென்று திரும்ப கிடைக்கவேயில்லை. போன ஊர்களிலெல்லாம் பழைய பேப்பர் கடைகளில் சல்லடை போட்டு தேடியும் வேறொரு பிரதி கிடைக்கவில்லை. குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து நிறைந்த விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளோ ஆயிரக் கணக்கில் விலை சொன்னதால் அந்த தேடலை விட்டுவிட்டேன்.
    இப்போது ஆசிரியர் நியாயமான விலையில் கொடுக்கும் போது கசக்கவா செய்யும்.
    குறிஞ்சிப்பூ கூட பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் என்பார்கள். இந்த இதழோ ஏறக்குறைய நாற்பத்தைந்து வருடங்களுக்குப்பின் வண்ணத்தில் வருகிறது. இதனுடன் ஆசிரியர் சொல்லும் கதைகள் பின் எப்போதாவது கிடைத்துவிடும். ஆனால் இந்த இதழ் இப்போது இல்லைன்னா எப்பவும் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ATR சார்.உங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன்.

      Delete
    2. வாருங்கள் ஏடிஆர் சார்...

      Delete
    3. சூப்பர் ATR சார். உங்களுக்காகவே இந்த புத்தகம் வரவேண்டும். எடிட்டர் சார் கொரில்லா சாம்ராஜ்யம் ஓகே ஓகே.

      Delete
    4. நன்றி தோழர்களே.

      Delete
    5. அருமை ATR சார். அருமை. நலமாக இருக்கின்றீர்களா?

      Delete
    6. நலமாக இருக்கிறேன் பத்து சார். நீங்கள் நலம்தானே?

      Delete
    7. ரைட்டு ...பத்து சார் / ATR சார் : "கொரில்லா சாம்ராஜ்யம்" இதழின் பிழைத்திருத்தங்களை உங்களில் யாரேனும் ஒருவர் செய்து தர முன்வந்தால் - என் பாடு கொஞ்சம் இலகுவாகிடும் !

      Delete
    8. எடிட்டர் சார்
      நான் ரெடி! நீங்க ரெடியா?

      Delete
  59. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கானகமே காலடியில் மற்றும் பயமே ஜெயம் படித்து பார்த்து சிரித்து மனம் மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  60. அடேங்கப்பா கார்ட்டூன் இரண்டாம் இடத்தை பிடித்து விட்டதே...

    வாழ்த்துக்கள்...


    எனது ஓட்டு இரும்புக்கை மாயாவி

    ReplyDelete
  61. கார்ட்டூன் இரண்டாம் இடத்தைப்பிடித்துவிட்டதே. அதுவும் தலையை பின்னுக்குத்தள்ளி. கார்ட்டூனுக்குப் பெருகிவரும் ஆதரவு சந்தோசத்தைத்தருகிறது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  62. மீ ஓட்டு மனச லேசாக்கும் கார்ட்டூனுக்கே

    ReplyDelete
  63. சார்..
    ஒருத்தருக்கும் ஓட்டு
    ேபாடவே தெரியவில்லை. இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்று கேட்கிறார்கள்.
    நான் தெளிவா ஓட்டு ேபாடுேறேன் சார்..
    "ெகாரில்லா சாம்ராஜ்யம் "தான்ேவண்டும்,
    (இ.கை. மாயாவி என்றாலே கூடவே "விச்சு&கிச்சு"வும் வண்ணத்தில் நான்கு, ஐந்து கதைகள் கிடைக்கும்தானே சார்...)
    எப்பவுமே, ஒரு புக்குக்கு-தான் ஓட்டு ேபாடணும்..?ii

    ReplyDelete
  64. இரும்புக்கை மாயாவி
    வசீகரம் .

    ReplyDelete
  65. ஓட்டு எண்ணிக்கை முடிந்ததா சாரே?
    முடிவுகள் அறிவிக்கும் நேரம் நெருங்கிவிட்டது.

    ReplyDelete
  66. தேர்தல் நேரம் முடிவடைய உள்ளதால் வாக்களிக்காத அன்பர்கள் உடனே தங்கள் வாக்குகளைச் செலுத்த ஓடோடி வருமாறு உங்களை அழைக்கிறது இரும்புக்கையாரின் ரசிகப் படை.

    ReplyDelete
    Replies
    1. வெற்றியாளர் யாரென்பது தான் எப்போதோ தெரிந்து விட்டதே சார் ; வாக்கு வித்தியாசமே இனி சுவாரசியம் !

      Delete
  67. கொரில்லா சாம்ராஜ்யம்

    ReplyDelete
  68. ஹெர்லாக்கும்,டெக்சும் எப்படியும் பின்னாளில் கண்டிப்பாய் நமக்குக் கிடைத்து விடும்.

    கொரில்லா சாம்ராஜ்யம்..அதுவும் முழு வண்ணத்தில்...

    இதுதான் சரியான தேர்வு..
    சரியான நேரம்..!

    ReplyDelete
  69. கொரில்லா சாம்ராஜ்யம்

    ReplyDelete
  70. மார்டின்....!

    ஙே.!

    (தலையை) பிச்சு உதறிடுச்சு.!

    ReplyDelete
  71. டெக்ஸ் வில்லர் . & மாயாவி

    ReplyDelete
  72. This comment has been removed by the author.

    ReplyDelete
  73. எடிட்டர் சார் சொன்னவாறு ஓட்டிங் நேரம் நிறைவடைந்தது... இருப்பினும் லைனுக்கு வரும் நண்பர்கள் வாக்களிப்பை தொடரலாம்னு நினைக்கிறேன்.

    எடிட்டர் சார் அறிவித்த நேரம் வரையிலான இறுதி நிலவரம்..

    மாயாவியார்: 56

    கார்டூன்: 25

    டெக்ஸ்:23

    ஸ்டெர்ன்:11

    ஓவர் டூ எடிட்டர் சார்.🙏

    ReplyDelete
    Replies
    1. மாயாவி Vs Others
      56 vs 59

      Wow... Great!!!
      Steel claw Rocks!

      Delete
    2. இரண்டு நாட்களாக தன்விருப்பத்தோடு ஓட்டுகளை பிரித்து எண்ணி முடிவினை அறிவித்த நண்பர் STVR அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்!

      Delete
    3. பாக்சிங்கில் K.O. என்று சொல்லுவார்களல்லவா - சுத்தமாய் எதிராளியை சாய்த்திடும் போது ? அதுவே இங்கே அரங்கேறியுள்ளது !

      ஒட்டு மொத்தமாக பற்பல எதிராளிகளை ; பற்பல ஜானர்களை தனது இரும்புக்கரத்தால் கும்மாங்குத்து தந்து வீழ்த்தியுள்ள இரும்புக்கை மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யம் தான் களம்கண்டிடும் - முழுவண்ணதில் !

      Delete
    4. Thanks guys for the fun over 2 days ! And thanks Salem Tex too !!

      Delete
    5. நண்பர்கள் சரியான முடிவினையே அளித்து உள்ளார்கள்! மற்ற கதைகள் 2021ன் பட்டியலில் ஏற்கனவே இருக்க அதில் இல்லாத மாயாவியாரைத் தேர்ந்தெடுத்த அதே வேளையில் மற்றவர்களுக்கும் சரியான விகிதத்தில் வாய்ப்பளித்து ஜனநாயகத்தை நிலைநாட்டி உள்ளனர். வாழ்த்துகள் நண்பர்களே!

      Delete
    6. //// இரும்புக்கை மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யம் தான் களம்கண்டிடும் - முழுவண்ணதில்///


      ---ஊய்...ஊய்... வாழ்த்துகள் மாயாவியார்& மும்மூர்த்திகள் ரசிகர்களே💐💐💐💐💐

      நண்பர்கள் சிலாகிக்கும் கொரில்லா சாம்ராஜ்ஜியத்தின் தரிசனித்திற்கு ஆவலுடன் வெயிட்டிங்!

      ரன்னர்அப் வந்த கார்டூன் ரசிகர்களுக்கும் வாழ்த்துகள்🌹
      டெக்ஸை பின்னுக்கு தள்ளி ரன்னர்அப் வருவது நாள்தோறும் நிகழ்வதல்ல...காலரை தூக்கிவிட்டுங்கப்பா!

      Delete
    7. Surprise - Cartoon got more votes than tex 👍🏽

      Delete
  74. மாயாவி கலரில் வருவாதாலும் டெக்ஸ் எப்படி இருந்தாலும் வந்து விடுவார் கார்ட்டூனும் கண்டிப்பாக களம் கண்டுவிடும் என்பதாலும் மாமாவிற்கு அபார வெற்றி

    ReplyDelete
  75. இரும்புக்கை மாயாவி கதையையே வெளிவிடுங்கள் எடிட்டர் சார்

    ReplyDelete
  76. @ பத்து சார் / ATR சார் :

    "கொரில்லா சாம்ராஜ்யம்" இதழின் பிழைத்திருத்தங்களை உங்களில் யாரேனும் ஒருவர் செய்து தர முன்வந்தால் - என் பாடு கொஞ்சம் இலகுவாகிடும் !

    யாருக்கு கட்டலாம் பரிவட்டத்தை ?

    ReplyDelete
  77. கலரில் களம் காணவிருக்கும் மாயாவிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் வளமான வாழ்த்துகள்!!

    ReplyDelete
  78. குறுக்கும் நெடுக்குமா என்று தெரியவில்லை தீபாவளிக்கு பின்பாக அதிகம் மஞ்சள் சட்டை காரர் வரவில்லை என்பதே எனது கருத்து.

    எனது ஓட்டு மஞ்சள் சட்டைக்கே

    ReplyDelete
  79. ****** வழியனுப்ப வந்தவன் ******

    * யதார்த்தமான கதை.. இயல்பான கதை நகர்வு.. மிகப் பொருத்தமான மொழியாக்கமும், வார்த்தைப் பிரயோகங்களும்!
    * சித்திரங்களும், வண்ணக்கலவைகளும் அபாரம்! கதையோட்டத்துக்கு மிகப் பொருத்தமாய் அமைந்து இயல்பாகவே ஒன்றச் செய்கின்றன!
    * க்ளைமாக்ஸ் - 'இதான்பா வாழ்க்கை' என்று உணர வைக்கிறது! கவிதை கவிதை!

    வெட்டியான் 'ஸ்டெர்ன்'னின் பாத்திரப்படைப்பு முழுமையாக இல்லாததுபோல தோன்றுவது மட்டும் சிறு குறை!

    வழியனுப்ப வந்தவன் - கொஞ்சம் கி.நா, கொஞ்சம் வைல்டு வெஸ்ட், கொஞ்சம் சோகம், கொஞ்சம் யதார்த்தம் - ஆகியவை ஒன்றாய் கலந்த கலவை!

    எனது ரேட்டிங் : 9.5/10

    ReplyDelete
  80. கலரில் களம் காணவிருக்கும் மாயாவிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் வளமான வாழ்த்துகள்!!

    ReplyDelete
  81. my vote for மாயாவியின் "கொரில்லா சாம்ராஜ்யம்"

    ReplyDelete
  82. என் தெரிவு Tex Willer

    ReplyDelete
  83. இன்றே கடைசி நாள் சென்னை புத்தகத் திருவிழா. உங்கள் அனுபவங்களை யாராவது பதிவு செய்யுங்கள்

    ReplyDelete
  84. *STERN-வழியனுப்ப வந்தவன்*

    வன்மேற்கின் நிஜமுகத்தை எந்தவித அரிதாரப் பூச்சும் இல்லாமல் படீரென பிடறியில் அறைந்து சொல்கிறது கதை. சார்லஸ், மிசஸ் அடா பெனிங், கோல்க்விட், லென்னி, மின்டி, ஜென்னா, செல்லப்பிள்ளை மர்ரோ மற்றும் ஷெரீப் என ஒவ்வொரு கதைமாந்தரும் அவரவரின் நிறைகுறைகளோடே சித்தரிக்கப்பட்டிருப்பது யதார்த்தம்! இங்கே யாரைக் குற்றம் சொல்வது, யாரை பாராட்டுவது, அவரவர் பார்வையிலான புரிதல்களும் நியாயங்களும் ஏற்புடையனவேயன்றி துவேஷிக்க எதுவுமில்லை! ஒவ்வொரு பாத்திரப் படைப்பைக் குறித்தும் தனித்தனியே பேசவே ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.

    லென்னி (அ) லியானர்ட் உட்ரோ... போர்முனையில் உயிர் காத்த தன் நண்பனின் நினைவுகளில் கறைபடக்கூடாது என எண்ணி அவன் மறுபக்கத்தை கூட ஏற்றுக் கொள்ளாத மொடாக்குடியன்... பீத்தோவனின் சிம்பொனியை வாசித்து முடிக்கும் நொடியில் கதைமாந்தர்களைப் போலவே நம் விழிகளும் உறைந்துதான் போய்விடுகிறதோ இல்லையோ?!

    தன் ஆத்ம நண்பனாக இருந்து சகோதரியை மணந்தபின் தன் சொந்த இலட்சியத்துக்காக அனைத்தையும் துறந்து எதிரிகளோடு சேர்ந்து கொண்டவனின் துரோகத்தை அவன் சவக்குழியில் மூத்திரம் பெய்து ஆறுதல் கொள்ளவே வெகுதொலைவில் இருந்து கிளம்பி வந்த ஜேம்ஸ் கோல்க்விட் தரப்பு நியாயத்தை நம்மால் உணர முடிகிறதா?!

    கறுப்பின பெண்களை துன்புறுத்தி களிக்கும் சார்லஸ் பெனிங்... தன் சொத்து சுகங்களை கைவிட்டு வடக்குடன் சேர்ந்து அவர்களின் அடிமைத்தனம் விலக போராடியதை எந்த கணக்கில் சேர்ப்பது?!

    அந்த பாரில் நடக்கும் ஏக களேபரத்துக்கு மத்தியிலும் ஷேக்ஸ்பியர் பற்றி விவாதிக்கும் மூன்று பேரைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது?!

    ஐந்து வயதில் கண்ணெதிரே தன் தாய்க்கு நிகழ்ந்த கொடுமைக்கு பழிவாங்க பயணிக்கும் செல்லப்பிள்ளையின் ரௌத்திரத்தில் நியாயமில்லையா?! அதை ஆதரிக்கும் பெண்கள் நம் நாயகனைச் சீண்டுவதில் என்ன குறையை காணமுடியும்?!

    இப்படி ஒவ்வொரின் பின்னேயும் இருக்கும் அவரவர் தரப்பு நியாயங்களை சொல்லி பரிணமிக்கும் கதையின் நாயகன்... தன்னை ஆபேலின் விழிகள் உற்றுநோக்குவதை உணரும் நொடியில் பிம்பங்கள் உடைந்து நிஜம் பிரதிபளிக்கிறது.

    ஆசிரியரின் மொழிபெயர்ப்பு நடையில் சில சொற்கள் இதுவரை நாம் காணாதது என்றாலும் அதைப் பேசும் மாந்தரின் குணநலன், சூழல்சார்ந்து நூறு சதவீதம் பொருந்துகிறது. வெல்டன் சார்... to take this dare decision!

    *"மூத்திரமும் ஆத்திரமும் தானா மாயமாகிப் போயிடும்"*
    -நான் ரசித்த வசனம் இது!

    வழியனுப்ப வந்தவன்: 9.5/10

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான விமர்சனம் SK. சும்மா பின்னறீங்க

      Delete
    2. // பீத்தோவனின் சிம்பொனியை வாசித்து முடிக்கும் நொடியில் கதைமாந்தர்களைப் போலவே நம் விழிகளும் உறைந்துதான் போய்விடுகிறதோ இல்லையோ?! // ஆமாம் அட்டகாசமான பகுதி அது..

      Delete
    3. @Saravanakumar

      அருமை அருமை!! அனுபவித்துப் படித்திருக்கிறீர்கள்! அதை வார்த்தைகளில் கொண்டு வந்த விதமும் அருமை!!

      படைத்தவர்களுக்கும், அதை நம்மிடம் அழகுத் தமிழில் கொண்டு சேர்த்தவருக்கும் பெருமையளிக்கும் விமர்சனம்!

      Delete
  85. "கொரில்லா சாம்ராஜ்யம்" - இந்த கதையை படித்ததாக ஞாபகம் இல்லை! மாயாவியின் படிக்காத கதையை அதுவும் வண்ணத்தில் படிக்க போகிறேன்! நன்றி.

    ReplyDelete
  86. //// இரும்புக்கை மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யம் தான் களம்கண்டிடும் - முழுவண்ணதில்///

    தலைமை தேர்தல் ஆணையருக்கும், போலிங் பூத் ஆபீசருக்கும் எங்கள் சார்பிலும், சிகப்பு சட்டைக்காரர் சார்பிலும் நன்றிகள் உரித்தாகுக. நன்றி எடிட்டர் சார். நன்றி STVR ஜி.

    /// @ பத்து சார் / ATR சார் :

    "கொரில்லா சாம்ராஜ்யம்" இதழின் பிழைத்திருத்தங்களை உங்களில் யாரேனும் ஒருவர் செய்து தர முன்வந்தால் - என் பாடு கொஞ்சம் இலகுவாகிடும் !

    யாருக்கு கட்டலாம் பரிவட்டத்தை ?///

    ஆசிரியரின் விருப்பத்தை மகிழ்வுடனும் பெருமையுடனும் ஏற்றுக் கொள்கிறேன். ஒரு சாதாரண வாசகனை ப்ரூஃப் ரீடராக்குகின்ற பெருமை, ஆசிரியரையும், இரும்புக் கரத்தாரையுமே சாரும். மிக்க மகிழ்ச்சி சார்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் பத்து சார்.... மிக்க மகிழ்ச்சி

      Delete
    2. வாழ்த்துகள் பத்து சார்!

      சாதாரண பத்துவாக இருந்த நீங்கள் இன்றுமுதல் பதிற்றுப்பத்து என்று அன்போடு அழைக்கப்படுவீர்களாக!

      Delete
    3. அருமை.... வாழ்த்துகள் பத்து சார்.🌹

      Delete
  87. இன்று காலையில் ஆசிரியரின் வேண்டுகோளை கண்டவுடன் நானும் ஓகே சொல்லியிருந்தேன். பின்னூட்டங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டதால் அது கண்ணில் படாமல் போய்விட்டது. பத்து சார் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அடடா! உங்களுக்கு இல்லாததா திரு.ATR சார்?!! இரத்தப்படலத்தையை புரூப் ரீடிங் பண்ணவராச்சே நீங்க! இதெல்லாம் சாதாரணம் உங்களுக்கு!

      உங்களுக்குன்னு ஸ்பெஷலா ஜானி நீரோவின் கதையை வண்ணத்தில் போடச் சொல்லிக் கேட்கலாம்! ஸ்டெல்லாவை கலர்ஃபுல்லா பார்த்திடணும்னு எனக்கும் கூட ஒரு ஆசை இருக்கு! ஹிஹி!

      Delete
    2. ஈ.வி. உங்களது ஆசை பலித்தால் நன்றாகத்தான் இருக்கும். கூடவே லாரன்ஸ் டேவிட்டையும் வண்ணத்தில் கொடுத்தால் நமது முத்துவின் மும்மூர்த்திகளை தலா ஒரு இதழிலாவது வண்ணத்தில் பார்க்க வேண்டும் என்ற நெடுநாளைய ஏக்கம் தீரும்.

      Delete
  88. ஸ்டெல்லா எங்க யூத்து காலத்து ஹீரோயின். இப்ப அவியளுக்கு மேக்கப் போட்டா ஒன்ஸ்மோர் படத்துல சரோஜாதேவி மாதிரி இருக்கும். ok வா. (இப்படித்தான் பொங்குற பாலுல தண்ணிய ஊத்தணும்.)

    ReplyDelete
  89. என்ன ஈவி..தேஷா ரசிகர் மன்றத்த கலைச்சாச்சா?

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி! அதுவுந்தே.. இதுவுந்தே!!
      அம்புட்டு ஏன்.. 'எதுவுந்தே'!

      Delete
    2. எல்லாம் ரைட்டு ; ஆனாக்கா அர்த்த ஜாமங்களில், அண்டர்வேரில் கூரைகளில் ஷண்டிங் அடிக்கும் அம்மணிக்கு ஆருமே கை கொடுக்கலியே ?



      பேசாமே தலீவர்கிட்டே ஷானியா நற்பணி மன்ற பொறுப்பை ஒப்படைக்கணும் போல ! யூத்துக்கு தானே இன்னொரு யூத்தம்மணிய ரசிக்க தெரியும் !

      Delete
    3. தேசா எப்போ டெக்ஸை அண்ணானு சொல்லிச்சோ அப்பமே சங்கம் காத்தோடு கரைஞ்சிட்டது😉😉😉

      Delete
    4. ///அர்த்த ஜாமங்களில், அண்டர்வேரில் கூரைகளில் ஷண்டிங் அடிக்கும் அம்மணிக்கு ஆருமே கை கொடுக்கலியே ?///

      சார்.. அந்தப் பொண்ணு ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதிகிட்டே யாரு-எவரு'ன்னு கூட விசாரிக்காம கற்பைப் பறிகொடுத்துட்டு வந்து கண்கலங்கி நின்னப்போ கருமமேன்னு ஆகிப்போச்சு! ஆரம்பகால பில்ட்அப் எல்லாம் வச்சு ரொம்ப புத்திச்சாலிப் பொண்ணுன்னு நினைச்சோம்.. நிறைய ஜாகஜம்லாம் பண்ணப் போகுதுன்னு நினைச்சோம்.. ஆனா யாராவது எதுக்காவது துரத்திக்கிட்டேஏஏஏ இருக்க, இந்தப் பொண்ணும் ஓடிக்கிட்டேஏஏஏஏ இருந்துச்சு!

      ஆனா ஸ்டெல்லா அப்படி இல்லையே.. எப்பவும் தன்னோட பாஸ் மேல கண்ணும் கருத்துமா இருக்கு.. ஆபத்துல இருக்கும்போது ஓடிப்போய் காப்பாத்துது!

      தமிழ்நாட்டுக்கு கலாச்சாரத்துக்கு உகந்த பொண்ணு ஸ்டெல்லா தான்!

      Delete
    5. ஷானியா அந்த தொடரில் வரும் ஒரு இயல்பான பாத்திரம் போல.... பில்டப் கொடுத்து கொடுத்தே அதை அடுத்த மாடஸ்தி ரேஞ்ச்க்கு ஏத்திவிட்டாச்சு...

      ஆனா அம்மனியின் "ஜாகஜங்கள்" எதுனு தெரிஞ்ச பிற்பாடு...புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....!!!

      இன்னொரு "குட்டி" பெட்டி பர்னோவ்ஸ்கி.....!!!

      கமான்சே தொடரில் நாயகன் ரெட் டஸ்ட்; ஆனா கமான்சே கமான்சே னு எதிர்பார்த்து ஏமாந்த மாதிரி கதைதான் ஷானியாக்கும்.

      Delete
  90. /// தமிழ்நாட்டுக்கு கலாச்சாரத்துக்கு உகந்த பொண்ணு ஸ்டெல்லா தான்!///
    அப்போ தமிழ் கலாச்சாரப்படி பேரை மாத்திடுவோம்.
    'இசுத்தெல்லாம்பாள்.' பேர் எப்படி?. நல்லா இருக்குதுங்களா?.. நம்ம KB சுந்தராம்பாள் மாதிரி. அவங்களும் எஸ்.ஜி.கிட்டப்பா. மேல அவ்ளோ பாசமா, உசுரா இருந்தாங்க. (இப்படியும் பீஸ் புடுங்கலாம்)

    ReplyDelete
  91. This comment has been removed by the author.

    ReplyDelete
  92. ஒரு சந்தேகம்...
    மாயாவி அமர்ந்திருக்கும் கார் கண்ணாடியின் வழியாக எதிரே உள்ள மரம், கட்டிடங்கள் எதுவும் புலப்படவில்லையே!
    கண்ணாடிக்கு பதிலாக பலகையை வைத்திருப்பது போலத் தோன்றுகிறதே. டாப் ஓப்பனாக இருப்பதால் மாயாவி எக்கி எக்கி ரோட்டைப் பார்த்து கார் ஓட்டுவாரா?

    ReplyDelete