Saturday, March 06, 2021

கடன் தீர்க்கும் நேரமிது !

 நண்பர்களே,

வணக்கம். 2 நாட்களுக்கு முன்னே மார்ச் புக்சின் பேக்கிங் பணிகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்த பிற்பகல் வேளை அது ! 'பர்ரக்..சர்ரக்' என்று ப்ரவுண் டேப்பால் டப்பிகளுக்கு பிளாஸ்திரி ஓட்டும் ஓசை மட்டும் என் அறைக்கு வந்து கொண்டிருந்தது ! ஏப்ரலில் வரவுள்ள SODA இதழுக்கு பேனா பிடிக்க முயன்று கொண்டிருந்தவன், 'சித்தே உலாத்துவோமே' என்று எழ, முன்னாபீஸில் நம்மாட்கள் கூரியர்களுக்கான பைசா கோபுரங்களைக் கட்டிக் கொண்டிருப்பதை கண்ணாடி வழியாய்ப் பார்த்திட முடிந்தது ! கடந்த 100+ மாதங்களாய் இதுவொரு மாதாந்திரச் சடங்காகிப் போயிருக்கும் நிலையில் - ஏனோ தெரியலை, இம்மாதம் நடந்து கொண்டிருந்த yet another பேக்கிங் படலத்தை இமை தட்டாது பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றியது ! நமது செகண்ட் இன்னிங்ஸ் துவங்கிய பிற்பாடு, ஓராண்டின் திட்டமிடல்  மறு ஆண்டின் மார்ச் வரையிலும் நீண்டு செல்வது இதுவே முதன்முறை என்பது தலைக்குள் லேசாய் ஓட்டமெடுக்க, 12 மாதங்கள் பின்னோக்கி, நினைவுகள் நகர்வதைத் தவிர்க்க இயலவில்லை ! 'எல்லாமே நலம்' என்று ஓடிக்கொண்டிருந்த நாட்டுக்கே  - ஒரு கொடூரத்தின் துவக்கப்புள்ளியாய் ;  மறக்கவியலா ரணங்களின் துவக்க மாதமாய், போன மார்ச் அமைந்து போன ஞாபகங்கள் நிழலாடின ! பெருமூச்சோடு அமர்ந்த போது, இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் நமது பயணம் தட்டுத் தடுமாறியேனும் தொடர்ந்திருப்பதை எண்ணி மேலிருப்பவரையும் ; முன்னிருப்போரையும் நோக்கிக் கரம் கூப்பத் தான் தோன்றியது ! இந்த கொரோனா சூறாவளியில் எண்ணற்ற ஆலமரங்களே தடம் தெரியாது மாயமாகிப் போயிருக்க, ஒடிசலான நாணலாய் நாமெல்லாம் தாக்குப் பிடித்து நிற்பதென்பது, nothing short of a miracle என்றுபட்டது ! புனித மனிடோவுமொரு காமிக்ஸ் காதலரே என்பதை இது நிரூபிக்காது போயின், வேறேது தான் நிரூபிக்கப் போகிறதென்று நினைத்துக் கொண்டேன் !! 

Back to reality - மார்ச்சின் புக்ஸ் தினுசு தினுசாய் உங்கள் முன்னே இறைந்து கிடக்கும் இந்த வேளையில், அவற்றுள் புகுந்திட நிறையப் பேருக்கு இன்னமும் நேரம் கிடைத்திருக்காது என்பதில் no secrets ! அப்படியே நேரம் கிடைத்திடின் - வாசிப்புக்கென இந்த நான்கில் எதை முதலில் தேர்வு செய்வதென்ற கேள்வி உங்கள் முன்னிருப்பின், எனது suggestion இம்மாதத்தில் அறிமுகம் கண்டுள்ள புதியவரான ஸ்டெர்ன் தோன்றும் "வழியனுப்ப வந்தவன்" கிராபிக் நாவலாகத் தானிருக்கும் ! ரொம்பவே impress செய்துள்ள Maffre சகோதரர்களின் உருவாக்கமான இந்த ஆல்பத்தை நான் பரிந்துரைக்க இன்னொரு காரணமும் உண்டு ! ரூ.125 விலையிலான இந்த இதழ் வந்திருப்பது - ரூ.250 விலையிலான "பிரளயம்" கிராபிக் நாவலின் இடத்தினில் ! So நாம் இன்னமும் ரூ.125 விலைக்கான இன்னொரு இதழை 2020-ன் சந்தா நண்பர்களுக்குத் தரக் கடமைப்பட்டுள்ளோம் ! "வழியனுப்ப வந்தவன்" இதழையும், இந்தப் புது வரவு ஸ்டெர்னையும் நீங்கள் சடுதியாக வாசிப்புக்கு உட்படுத்தி, "இவர் ஓ.கே. தான் ; தேறிடுவார் !!" என்ற முத்திரை குத்தினீர்களெனில்,- இவரது ஆல்பம் # 2-ஐ கூடிய சீக்கிரமே வரவழைத்து ; தயார் செய்து,அதனை அந்தக் கடன் தீர்க்கும் ஆல்பமாக்கி விடலாமென்று நினைத்தேன் ! மாறாக, "ஸ்டெர்ன் அத்தினி ஷார்ப் இல்லே மாமூ ; இந்தாள் வோணாம் !!" என்றோ - "ஆசாமி ஓ.கே. தான் ; ஆனால் back to back அவர் ஆல்பங்களே என்பதுலாம் டூ மச்" என்றாலோ  - கடன் தீர்க்க நம் முன்னே உள்ளே இதர options-களைக் கடை விரிக்க வேண்டி வரும் !  

"அந்த options தான் என்னடாப்பா ?" என்று நீங்கள் கேட்டாலும் சரி, கேட்காவிடினும் சரி, சொல்லி வைக்கிறேன் guys !!

நம்மிடம் கையில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு சகிதம் தயாராக உள்ள கிராபிக் நாவல்களின் லிஸ்ட் இது :

கதிரவன் கண்டிரா கணவாய் 

விதி எழுதிய வெள்ளை வரிகள்

காலனின் கால்தடத்தில் !

தமிழாக்கத்துக்கு மட்டும் 'தம்' கட்டிடும் பட்சத்தில் இவற்றுள் ஏதேனும் ஒன்றை சட்டுப்புட்டென்று ரெடி செய்து விடலாம் தான் ; மூன்றுமே black & white கி.நா ஆல்பங்களே !!

'இல்லேடா தம்பி, வெய்ய காலம் ஆரம்பிக்குது  ; நீ போடற மொக்கைக்கே தெறிக்குது, இதிலே மேற்கொண்டும்  கி.நா படலம்லாம் தாங்காது'" என்று அபிப்பிராயப்பட்டீர்களெனில் - உங்கள் முன்னே நான் வைத்திடக்கூடிய அடுத்த சாய்ஸ் :

முழுவண்ணத்தில், ஆர்ட்பேப்பரில் - 

இரும்புக்கை மாயாவியின் "கொரில்லா சாம்ராஜ்யம்"

முதன் முதல் பதிப்பின் போது (maybe 1974 ??)கலரில் மிரட்டிய இந்த இதழானது, பின்னாட்களில் black & white-ல் மட்டுமே தலைகாட்டியிருந்தது ! புதுசாய் டிஜிட்டல் கலரிங் செய்யப்பட்டு, நம்மிடம் ஓராண்டுக்கும் மேலாகவே துயின்று வரும் இந்த இதழை அந்த கடன் தீர்க்கும் slot-க்கு நுழைப்பதெனில் செம ஈஸி நமக்கு !! 

ரைட்டு, அதுவும் வேணாம்னா - கார்ட்டூன் பக்கமாய் கொஞ்சம் பார்வைகளை படரச் செய்தால் - this is what we have ready :

ஹெர்லாக் ஷோம்ஸ் - "அலாவுதீனும், ஒரு புலனாய்வுப் பூதமும் "

மெர்ச்சலூட்டும் காமெடி மேளா இது ; ரம்மி ஆடும் அலாவுதீன் விளக்குப் பூதத்துடன் !! இங்கிலாந்தின் டாப் டிடெக்டிவுக்கு இந்தத் தொங்கு மீசை பூதமானது செய்திடும் ஒத்தாசைகளை நீங்கள் ரசிக்கத் தயாரெனில், நாளைக்கே பேனாவில் மசியை நிரப்பி தமிழாக்கத்துக்குள் ரவுண்டடிப்பதே எனது ஜாலியாகிடும் ! 2021-ன் அட்டவணைக்கான இதழே இது ; but no worries at all , அந்த இடத்துக்கு ஹெர்லாக் ஷோம்ஸ் தொடரில் எஞ்சியிருக்கும் ஒற்றை ஆல்பத்தைப் போட்டு man for man நிரவல் செய்திடலாம் !

"அட...கார்டூன்லாம் என் பேரப்புல்லீங்கோ பட்ச்சுப்பாய்ங்க ; யூத்தான எனக்கு ஆவுறா மேரி ஏதாச்சும் சொல்லு வாத்தியாரே !" என்று ரவுண்டு கட்டுகிறீர்களா ? இருக்கவே இருக்காரு நம்ம 'தல' !! 

"பொக்கிஷம் தேடிய பயணம் "

சும்மா கனகச்சிதமா அதே ரூ.125 விலைக்கு கலரில் ரெடியா கீது கையிலே ! எடிட்டிங் செஞ்சு, அட்டைப்படம் மட்டும் அச்சிட்டா - சும்மா 'ஜிலோ'ன்னு தாக்கிப்புடலாம் ! 

இவை தவிர, இன்னும் கொஞ்சம் புது ஆர்ச்சி கதைகள் ; இஸ்பய்டர் / மாயாவி b&w மறுபதிப்புகள் ; மார்ஷல் டிலான் கதை ; புயட்சி அம்மிணி அமாயா கதை ; காரிகன் கதை ; மாண்ட்ரேக் கதை என்றும் பீரோவில் உள்ளன ! ஆனால் இவர்களைக் கொண்டு ரூ.125 கடனை அடைப்பதாயின், நூத்திச் சில்லறைப் பக்கங்களுக்கான கூட்டணி இதழாய்த் தான் தயாரிக்க வேண்டி வரும் ! And அங்கே புராதன மணம் நாசியெல்லாம் அடைக்கும் என்பதிலும் ரகசியங்கள் நஹி ! So not an ideal option !!

தொடரும் நாட்களில் STERN உங்களிடம் ஈட்டிடும் விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு STERN ஆல்பம் # 2-ஐ களமிறக்குவதா ? வேண்டாமா ? எனத் தீர்மானிக்கவுள்ளேன் ! In the meantime இதர options-களுள் ஏதேனுமொன்று நம்மிடையே ஏகோபித்த ஆதரவைக் காணின், அப்டிக்கா வண்டியைத் திருப்பிட உத்தேசம் ! பார்க்கலாமே !

Before I sign out - பதிவில் நான் நீட்டி முழக்குவதை பாதி படித்து, பாதி படிக்கா நண்பர்களின் பொருட்டு - ஒரு செய்திச் சுருக்கம் போல recap : 

1.2020-ன் சந்தா இம்மாதத்துடன் நிறைவுற்று விட்டது guys ! So ஏப்ரலில் புதுச் சந்தா இதழ்கள் களம் காணும் ! So இன்னமும் சந்தாக்கள் புதிப்பித்திரா பட்சங்களில், please do now !!

2.அப்புறம்  "கழுகு வேட்டை" இதழில் போட்டோவினை இணைக்க  விரும்பும் 2021 சந்தா நண்பர்கள் - please do rush ! மார்ச் 15 வரையே அதற்கான அவகாசம் !

3.மார்ச் இதழ்கள் ஆன்லைன் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளன ! லிங்க்ஸ் இதோ :

https://lion-muthucomics.com/latest-releases/675-march-pack-2021.html 

https://lioncomics.in/product/2021-march-pack/4. சென்னைப் புத்தக விழாவின் கடைசி 3 நாட்கள் தொடரவுள்ளன !! நமது ஸ்டால் நம்பர்ஸ் 105 & 106 !! புது இதழ்கள் உட்பட - ஒரு வண்டி புக்ஸ் உங்களுக்கெனக் காத்துள்ளன ! Please do drop in !!

Bye all ; see you around !! 

IMAGES :


காலனின் கால்தடத்தில்..!

கதிரவன் கண்டிரா கணவாய் 

விதி எழுதிய வெள்ளை வரிகள் 

பொக்கிஷம் தேடிய பயணம் 
ஸ்டெர்ன் 328 comments:

 1. Replies
  1. அட டே! வாழ்த்துகள் யுவா🌹

   Delete
  2. Nalla parthukkonga nanum rowdy than..nanum rowdy than...

   Delete
 2. Hm... technical fault 😩😩😩

  ReplyDelete
 3. Wowwww.. இவ்வளவு சீக்கிரம் வருவேன்னு நினைக்கவில்லை...

  ReplyDelete
 4. My vote color TEX for that remaining Rs.125 slot sir ..

  ReplyDelete
  Replies
  1. ஆமா...ஆமா...எடிட்டர் ஐயா!

   டெக்ஸின் "பழிக்கும்பழி".... சரியாக இருக்கும்.

   நன்றி நவிழ தலையை விட சிறப்மான தேர்வும் ஏது????

   Delete
 5. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 6. My all time favorite comics

  1.ஒரு வீரனின் கதை

  2.பயங்கரப் பயணம் , பேரிக்காய் போராட்டம்

  3.All Archie Stories

  4.அதிரடி வீரர் ஹெர்குலஸ்

  5.கறுப்பு பாதிரி மர்மம் & புயலோடு ஒரு போட்டி

  6.உயிரைத் தேடி - சிறுவர் மலர்

  7.கொலை வாரண்ட் - ராணி

  8.தங்க கல்லறை & மின்னும் மரணம்

  9.பேய் வீரர் செக்ஸ்டன் பிளேக்கின் அனைத்து கதைகள்

  10.திக்கு தெரியாத தீவில் - லயன்

  11.காணாமல் போன கடல்

  12.திகிலில் வந்த பேட்மேன் கதைகள்

  ReplyDelete
  Replies
  1. Nice சாய்ஸ் சார். வாழ்த்துக்கள்

   Delete
 7. Hi hi சூப்பர்.. ப்ரசன்ட் சார்..

  ReplyDelete
 8. பொக்கிசம் தேடிய பயணம் அல்லது கொரில்லா சாம்ராஜ்யம்.

  ReplyDelete
  Replies
  1. இதழ் ஒன்றே ; so தேர்வும் ஒன்றாகவே இருக்கட்டுமே சார் !

   Delete
 9. ஸ்டெர்ன் Super ! ❤️

  வழியனுப்ப வந்தவன்! - மிகவும் நன்றாக இருக்கிறது ❤️

  ReplyDelete
  Replies
  1. ஒரு புது நாயகன் ; அதுவும் ஹீரோ என்ற இலக்கணங்களுக்குத் துளியும் பொருந்தாதவன் எனும் போது, அவனது அறிமுக இதழ் பற்றி இன்னும் சித்தே விரிவாய் ப்ளீஸ் சார் ?

   Delete
  2. சார்,

   எனக்கு அவ்வளவாக கதை விமர்சனம் எழுத வராது. இருந்தாலும் கொஞ்சமாக எழுதுகிறேன்.

   ஒரு குட்டி நகரத்தில் ஒரு குட்டிச் சம்பவம் நடக்கிறது. அதற்கு ஒரு குட்டி தான் காரணம் என்று சட்டம் தன் கடமையை செய்ய அங்கே ஒரு குட்டி ட்விஸ்ட் உருவாகிறது. இப்படியாக குட்டிக் குட்டியான சம்பவங்களால் கதையைப் படிக்கும் போது சுவாரஸ்யமாக இருப்பது தான் என் தேர்வுக்கு காரணம் ❤️

   கதாநாயகன் ஸ்டெர்ன் !

   கொரோனா கால சம்சாரியைப் போன்ற தோற்றம் ; கதை நெடுக தோழமையுடன் வலம் வருகிறான் ; நாணயமாக நடந்து கொள்கிறான் ; நம்பிக்கையுடன் புத்தகம் வாங்குகிறான் ; அதை ஏகாந்தமாக வாசிக்கிறான் ; சாகசம் புரிந்து கடைசியில் ஒரு அப்பாவியைக் காப்பாற்றுகிறான். ஒரு கதையை ரசிக்க இதுவே போதும் என்று நினைத்தேன் ❤️

   Delete
 10. சாரி சார்_ராபினே எனது சாய்ஸ்..
  எனவே ராபினே முதலில் படித்தேன்.
  Dr.NO.இதழ் தயாரிப்பு விதம் அருமை..
  இது எங்களுக்கு பக்கத்துக்கு 6 கட்டங்கள் என்று படித்ததை .Maxi SIze_யில் படிப்பது போல் சிறப்பாக உள்ளது.
  . _ஷெர்லாக் ஹோம்ஸ் வெளியிட்டால் ரொம்ப சந்தோசப்படுவேன்.. சார் .

  ReplyDelete
  Replies
  1. ராபினைப் படித்தது ஓ.கே. சார் ; படித்ததைப் பகிர்ந்திட்டால் டபுள் ஓ.கே. ஆகிடும் அல்லவா ?

   Delete
  2. Robin ...neenga mail id kuduthenga ill send you a detailed email.

   Delete
 11. // கடன் தீர்க்கும் நேரமிது //
  அட நம்ம லார்கோ புக்கோட தலைப்பே கடைசியில் நம்ம பதிவுக்கு டைட்டில் ஆயிடுச்சே...

  ReplyDelete
  Replies
  1. பொருந்துகிறதல்லவா சார் - தலைப்பு ?!

   Delete
 12. // நாணலாய் நாமெல்லாம் தாக்குப் பிடித்து நிற்பதென்பது, nothing short of a miracle என்றுபட்டது ! //
  நாணல்கள் அவ்வப்போது வளைந்து கொடுப்பதால் தாக்கு பிடித்துக் கொண்டிருக்கிறதோ...

  ReplyDelete
 13. // எனது suggestion இம்மாதத்தில் அறிமுகம் கண்டுள்ள புதியவரான ஸ்டெர்ன் தோன்றும் "வழியனுப்ப வந்தவன்" //
  வழியனுப்ப வந்தவன் நம் மனதுக்கு நெருக்கமானவன்,எதார்த்தமான ஒரு பாத்திரப் படைப்பு சார்...
  அடுத்து களம் காண தகுதியானவரே...

  ReplyDelete
 14. // ஒடிசலான நாணலாய் நாமெல்லாம் தாக்குப் பிடித்து நிற்பதென்பது, nothing short of a miracle என்றுபட்டது ! புனித மனிடோவுமொரு காமிக்ஸ் காதலரே என்பதை இது நிரூபிக்காது போயின், வேறேது தான் நிரூபிக்கப் போகிறதென்று நினைத்துக் கொண்டேன் !! //


  உண்மை. இறைவனுக்கு நன்றி.

  ReplyDelete
 15. எனது முதல் சாய்ஸ் - ஹெர்லாக் ஷோம்ஸ் - "அலாவுதீனும், ஒரு புலனாய்வுப் பூதமும் "

  சாய்ஸ் இரண்டு - வழியனுப்ப வந்தவன் இரண்டாம் பாகம்.

  ReplyDelete

 16. தொங்குமீசை பூதமே என் சாய்ஸ்....ஷெர்லாக் புகழ் ஓங்குக...

  ReplyDelete
  Replies
  1. அட ...துப்பறியும் சிங்கம்..புலி..சிறுத்தைக்கு ரசிகர் மன்றமா ? சூப்பர் சார் !

   Delete
 17. விஜயன் சார், கடன் தீர்க்கும் நேரம் என இங்கு நீங்கள் வரிசைப்படுத்தி கொடுத்த அனைத்து இதழ்களும் தேவை. எல்லாவற்றையும் இணைத்து ஒரு ஸ்பெஷல் குண்டு புத்தகமாக கொடுக்க முடியுமா? நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி நன்றி நன்றி

   Delete
  2. கதம்ப இதழ்களுக்கு வாய்ப்பில்லன்னு ஏற்கனவே ஆசிரியர் சொல்லிட்டாரே PFB...
   போன பதிவில் கண்ணனுக்கு இதே பதிலையே நீங்களும் சொல்லி இருந்தீர்கள்...

   Delete
  3. // போன பதிவில் கண்ணனுக்கு இதே பதிலையே நீங்களும் சொல்லி இருந்தீர்கள்...// அது வேற department இது வேற department

   Delete
  4. அப்படி சொல்லக் கூடாது குமார், அது போன வாரம்,இது இந்த வாரம்...
   அப்படிச் சொல்லோனும்...

   Delete
  5. எனது தவறு தான்.

   குண்டு புத்தகத்திற்கு பதிலாக இந்த இதழ்களை தனித்தனியாக தயார் செய்து ஒரு பாக்ஸ் செட்டில் தரமுடியுமா? இது எப்படி இருக்கு :-) (பரட்டை ஸ்டைலில் படிக்கவும்)

   Delete
 18. // இதர options-களுள் ஏதேனுமொன்று நம்மிடையே ஏகோபித்த ஆதரவைக் காணின், அப்டிக்கா வண்டியைத் திருப்பிட உத்தேசம் ! பார்க்கலாமே ! //
  தலை எப்போதும் விற்பனைக்கு உத்தரவாதம் அளிப்பவர்,வாசிப்புக்கும் மனதளவில் நெருக்கமானவர் அதனால் முதல் தேர்வு அவரே...
  ஹெர்லக் ஷோம்ஸும் ஓகேதான்,ஒருவேளை அதை முயற்சிப்பின் மொழிபெயர்ப்பில் இன்னும் கொஞ்சம் கூடுதலாய் நேரம் எடுத்துக் கொள்வது கூடுதல் சிறப்பாய் அமையும்...
  மற்றபடி ஸ்டெர்ன் 2 ஆட்டத்துக்கு ஓகேதான்,வாகான நேரத்தில் நுழைக்கலாம்...
  கொரில்லா சாம்ராஜ்யம் இன்னும் படித்ததாக நினைவில்லை,வண்ணத்தில் எனும்போது கொஞ்சம் ஆர்வம் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது...

  ReplyDelete
  Replies
  1. அதுவும் மேலே உள்ள preview பக்கம் அட்டகாசமாக இருக்கிறதே... கொரில்லா சாம்ராஜ்யம் செம்ம செம்ம. இத்தனை சாய்ஸ் கொடுத்தால் ஞான் என்ன செய்யும்???? மண்டையை பிய்த்து கொண்டு தெருவில் ஓடும் படங்கள் 100

   Delete
  2. ஹெர்லக் ஷோம்ஸ் ஆல்பங்களுக்கு கூடுதலாய் ஆறு மாத அவகாசம் எடுத்துக் கொண்டாலுமே - output-ல் பெரிதாய் வேறுபாடுகள் இராது சார் - simply becos அவற்றின் ஒரிஜினல் ஸ்கிரிப்ட் அவ்விதமே ! அந்த கார்ட்டூன் பாணி சித்திர அதகளங்களைப் பார்த்து விட்டு, கதையின் வரிகளும் நகைச்சுவை ததும்ப இருந்திடுமென்று தான் நினைக்கத் தோன்றும் ! ஆனால் அது நிஜமாவது சில கதைகளில் மாத்திரமே !

   Delete
 19. // வழியனுப்ப வந்தவன்" இதழையும், இந்தப் புது வரவு ஸ்டெர்னையும் நீங்கள் சடுதியாக வாசிப்புக்கு உட்படுத்தி, "இவர் ஓ.கே. தான் ; தேறிடுவார் !!" // ஓகே இல்லை சார் டபிள் ஓகே போட்டு விடுங்க சார்.

  ReplyDelete
 20. அனைவருக்கும் வணக்கங்கள்

  ReplyDelete
 21. என்னுடைய தேர்வு

  பொக்கிஷம் தேடிய பயணம் " நன்றி

  ReplyDelete
 22. கடன் தீர்க்கும் நேரமிது ! என்ன சார் இது பெரிய பெரிய வார்த்தை சொல்கிறீர்கள்
  நாங்கள் தான் கடமைப்பட்டுள்ளோம் நன்றி  ReplyDelete
  Replies
  1. கை நீட்டி வாங்கியுள்ள காசுக்கு பொறுப்பாய் நடந்திட வேண்டும் தானே சார் ?!

   Delete
 23. கொரில்லா சாம்ராஜ்யம் சார்...எனது விருப்பம்...

  ReplyDelete
 24. நேற்றைய புத்தகதிருவிழா விசிட் கலங்கிப்போயிருந்த என் உடலுக்கும் மனதுக்கும் ஒரு புது தெம்பைக்கொடுத்தது சார்..ஆகஸ்ட் புத்தகத்திருவிழாவை. நோக்கி ஆவலுடன்...நண்பர் உதய் சந்திப்பு மேலும் ஒரு டானிக்...

  XIII MEMORY எப்போ சார் RELOAD ஆகுது....??

  ReplyDelete
  Replies
  1. அது ஆற அமர ஆகும் பழனி !

   Delete
  2. சீக்கிரம் ஆனா பரவாயில்லை சார்..

   Delete
 25. கொரில்லா சாம்ராஜ்யம் வரட்டும் ஆசிரியரே

  ReplyDelete
 26. எடிட்டர் சார்

  சாய்ஸ் ரொம்ப அதிகம் :-)

  என்னோட விருப்பம் என்னவென்றால்

  1. காரிகன் மாண்ட்ரேக் (இவங்களுக்கு இந்த சந்தர்ப்பத்தை விட்டா வேறு வாய்ப்பு கிடைப்பது அரிது)
  2. கொரில்லா சாம்ராஜ்யம்
  3. பொக்கிஷம் தேடிய பயணம்

  ReplyDelete
  Replies
  1. இன்னமும் கூடுதலாய் சாய்ஸ் தருவதும் சாத்தியமே சார் ; ஆனால் குறுகிய அவகாசத்தினுள் எவற்றில் பணியாற்ற இயலுமோ - அவற்றை மட்டுமே சாய்சாக்கியுள்ளேன் !

   Delete
 27. @ ALL : நிறைய படங்களை இணைத்துள்ளேன் folks - பதிவின் வால் பகுதியில் !

  ReplyDelete
  Replies
  1. இதெல்லாம் போங்காட்டம் சார்,இப்படி எல்லாம் ஆசை காட்டினா நாங்க எந்த செய்யும்...
   கொயந்தைங்க முன்னாடி அவங்களுக்கு புடிச்ச எல்லா முட்டாயியையும் காட்டி எது வேணும்னா கேட்டா அந்த கொயந்தைங்க எந்து செய்யும் அய்யகோ.....!!!

   Delete
 28. பொக்கிஷம் தேடிய பயணம்.... இப்போ வந்தால் தீபாவளிக்கு தலயின் குண்டு புக் வர வாய்ப்புள்ளது..

  ReplyDelete
 29. அத்தனையையும் அள்ளிக் கொள்ள மனம் ஏங்குகிறது.இப்படிலாம் கேட்கலாமா ஆசானே ?
  ஞான் என்ன செய்யும் ?!
  ஒன்றே தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதால் என் தேர்வு "கொரில்லா சாம்ராஜ்யம் "தான்.இரும்புக் கையாரை வண்ணத்தில் காண ஆவல்.

  ReplyDelete
 30. என்னமோ போங்க...ஜாரே...

  ReplyDelete
 31. எல்லா படங்களையும் பார்த்தபின் இரும்புக்கையாருக்கு டபுள் ஓகே சார்.

  மொத ஹீரோ என்ற சென்டிமென்ட்+ அந்த கலரிங் அசத்துகிறது!

  ப்ளஸ் மற்றவை ஷெட்யூல் படி செல்லவும் சரியாக இருக்கும்!

  ReplyDelete
 32. // இந்த நாளில் உங்களின் ALLTIME Favorite Comics பற்றிச் சொல்லுங்களேன் //
  நான் படிக்காவிட்டாலும் 30+ வருடங்களுக்கு முன்பு படம் பார்க்க காமிக்ஸ் புக்கை புரட்டியபோது நினைவில் பதிந்துள்ள பிரேம்கள்
  1. ஒரு உயர கட்டிடத்தின் ஜன்னல் வழியாக கொரில்லா ஒன்று தூங்கி கொண்டிருந்த அழகியை கடத்திச்செல்லும். திகில் காமிக்ஸ்ஸாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
  2.திருச்சி மாரிஸ் காம்ப்ளெக்ஸில் இவினிங்ஷோவிர்க்கு மதியமே க்யூவில் நின்றபோது சித்தப்பா படித்த லக்கி லூக் கதையில் (புரட்சித் தீ என்று நினைக்கிறேன்) லக்கி சுட பரனிலிருக்கும் பாரலிலிருந்து மை எதிரியின் மேல ஊத்தும். என்னப்பா இது துப்பாக்கிலேந்து நூல் மாதிரி கோடு போகுது என்ற என்னுடைய சந்தேகத்துக்கு, அது துப்பாக்கி குண்டு "கடந்து வந்த பாதை"எனும் காமிக்ஸ் பால பாடம் கற்ற மொமண்ட்.

  எனது ஆல்டைம் பேவரிட் தங்க கல்லரை மற்றூம் XIII.

  எனது காமிக்ஸ் குரு நமது திருச்சி விஜயசங்கர், அவங்க வாங்குன காமிக்ஸ்களை எனது அத்தை எங்கள் வீட்டுக்கு வரும்போது எடுத்து வருவார்கள், நானும் தங்கச்சியும் போட்டி போட்டு படிப்போம்.

  ReplyDelete
 33. கொரில்லா சாம்ராஜ்யம் கரீக்டா கீதும்னானு தோனூது வாத்யாரே :)

  ReplyDelete
 34. கொரில்லா சாம்ராஜ்யம் எனது சாய்ஸ் சார்.

  மேலும், நீங்கள் குறிப்பிட்ட மாண்ட்ரேக், காரிகன் உள்ளிட்ட நாயகர்களின் இதழ் என்றாலும் நன்று

  மற்ற கதைகள், எதையும் வேண்டாம் என சொல்ல முடியவில்லை. எனினும், அவை வருவதற்கு வாகான தருணங்கள் அமைந்திடும் வரை காத்திருக்க தயார்

  ReplyDelete
 35. நேற்று மாலை தான் இம்மாத இதழ்களை கைப்பற்ற நேர்ந்தது.. இந்த மாதம் நான்கு இதழ்கள் எனும் பொழுது மிகுந்த மகிழ்ச்சி.நான்கு இதழ்களுமே அட்டைப்படத்தில் ஒன்றுக்கொன்று முதலிடத்தை பெற போட்டி போடுகிறது..அவ்வளவு அட்டகாசம்.லக்கி ,007 ,ராபின் ,மார்ட்டின் ,டைலன் ,அறிமுக நாயகர் என செம சிறப்பான காமிக்ஸ் மாதம்..உண்மையில் எதை முதலில் கை வைப்பது என அனைத்து இதழ்களையும் மாறி ,மாறி புரட்டி ரசித்து கொண்டு இருந்தேன்..

  பின் எதனை படிக்கலாம் என இங்கி பாங்கி போட புது நாயகர் ஆனால் நாயகர் போலவே தெரியாத ஓர் நாயகர் வித்தியாசமாய் பட நேற்று இரவு வழிஅனுப்ப வந்தவனை தேர்ந்தெடுத்து படித்தாயிற்று..

  ReplyDelete
 36. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
  Replies
  1. இன்னும் புத்தகங்களை வாசிக்கும் படலம் ஆரம்பிக்கவில்லை சார்.

   2020 க்கான சந்தாவில் இரண்டு வாண்டு ஸ்பெஷல் கார்ட்டூன்களை அரஸ் மேக்னா விழுங்கிவிட்டது சார்... அதற்கு பதிலாக இங்கே புலனாய்வு பூதத்தை களமிறக்கி விட்டீர்கள் என்றால் தராசு சமமாகிவிடும். எனவே எஞ்சியுள்ள கார்ட்டூன் கடனை அடைக்கும் வாய்ப்பாகவே இதை கருதுகிறேன்.

   மற்றவைகளும் சிறந்த தேர்வுகள் தான், அதற்கான வாய்ப்புகள் எப்போதும் வேண்டுமானாலும் அமையும். அப்போது களம் காணட்டும்.

   உண்மையில் 2020 க்கான கடன் கார்ட்டூனே!
   நன்றிகள் சார்!

   Delete
  2. // உண்மையில் 2020 க்கான கடன் கார்ட்டூனே! //

   +1

   Delete
 37. வழியனுப்ப வந்தவன்...அட்டைப்படம் சிறப்பு..உட்பக்க சித்திரங்களும் சிறப்பு..என்ன நாயகனின் தோற்றம் தான் ஒரு நாயகனாய் தோற்றமளிக்க வில்லை..ஏற்கனவே வந்த ஓர் வெட்டியான் ஓர் ஆக்‌ஷன் நாயகராய் அவதாரமெடுக்க இந்த நாயகர் நம்மை போல ஓர் சாதாரண நபராய் மின்னுகிறார் ( க்ளைமேக்ஸில் கொஞ்சம் சண்டை போட்டாலும் ).கதை ,சித்தரம் அனைத்தும் ஓகே...எனக்கு கதையும் பிடித்தே இருக்கிறது.கண்டிப்பாக பாஸ் மார்க் தான் எனினும் இது வரை வந்த பல கிராபிக் நாவலில் ஏற்படுத்திய பலத்த தாக்கத்தை இவர் ஏற்படுத்த வில்லை என்பதும் உண்மை...இவரை தொடரலாம் தான் பட் வருடம் ஒன்றாக என...


  வழியனுப்ப வந்தவன் - நம்மை போல் ஒருவன்...

  ReplyDelete
 38. கொரில்லா சாம்ராஜ்யம் சரியான தேர்வு.அதையே வெளியிடலாம்.

  ReplyDelete
 39. யாராவது ஓட்டுகளை எண்ணி பத்திரமா வைங்கோ...
  செல்லாத ஓட்டு யாராவது போட்டுருந்தா அவங்க மண்டையில் கொட்டு வைங்கோ...

  ReplyDelete
  Replies
  1. இப்ப என்னா ஸ்டெர்ன் வேணுமா ?ஆனா தலதான் லீடிங்ல இருக்காரு!

   Delete
  2. எனக்கு எதுன்னாலும் ஒகேங்கோ...

   Delete
 40. கடன் தீர்க்கும் நேரத்திற்கு தாங்கள் கொடுத்துள்ள சாய்ஸ் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வீதத்தில் கவர்கிறது...எதை தேர்ந்தெடுக்கலாம் என்பதே மிகவும் குழப்பமாக உள்ளது...என்ன செய்வது...அழகான ஓர் ஓட்டெடுப்பு முறை இருந்தது.. அதனையும் சிலர் முறியடித்து விட்டனர்..

  ஹூம்.

  நன்கு யோசித்து ,சிந்தித்து ஓட்டுப்போட எனக்கு சிலமணித்துளிகள் அவசியப்படுகிறது சார்..:-)

  ReplyDelete
 41. வழியனுப்ப வந்தவன்:
  வடக்கத்தியர்களுக்கும் தெற்கத்தியர்களுக்கும் இடையிலான பிரச்சனைகளின் பின்னணியில் கதை பயணிக்கிறது...
  அதனால்தான் ஒவ்வொரு பாத்திர அமைப்புகளும் இனம் சார்ந்த முரண்பாடுகளோடு ஒவ்வொருவரையும் அணுகுகிறார்களோ ?!
  அதைப் பொறுத்தே அவர்களைப் பற்றிய குணாம்சங்களை முடிவு செய்கிறார்களோ ?!
  இனங்கள் மாறினாலும்,இடங்கள் மாறினாலும் மனித குணங்கள் மாறுவதில்லை போலும்...
  இதில் மேற்கென்ன,கிழக்கென்ன...
  மேலை நாடுகள் என்ன,கீழை நாடுகள் என்ன...
  இந்த மனுஷப் பயக எப்போதும் இப்படித்தானோ ?!

  தொடக்கத்தில் காட்டப்படும் நிகழ்வின் முடிச்சு பின்பாகத்தில் சரியாக இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு...

  பழி வாங்கும் எண்ணம் சமயத்தில் சிந்தனையைக் குழைத்து விடும்போல,தவறான அனுமானங்கள் சிலரின் தடத்தை மாற்றி விடுகிறது...

  இருள் சார்ந்த கதைக் களங்கள் தான் கி.நா வின் ஸ்பெஷல் போலும்...
  லோக்கல் பாஷையில் வூடு கட்டி அடிச்சிருக்கிங்க சாரே...
  சில இடங்களில் இராவாக உதிர்க்கப்படும் சொல்லாடல்கள் கொஞ்சம் நெளிய வைப்பினும் கதைக் களத்தின் ஊடே அவசியமாகிப் போவதால் பெரிய நெருடல் இல்லைதான்.

  ஸ்டெர்னின் பாத்திரம் இயல்பாக படைக்கப்பட்டுள்ளது,நியாய தர்மங்கள் மீதான நம்பிக்கைப் பற்றிய வினா எழும்பொழுது ஸ்டெர்னின் பதில் "சூழ்நிலைகளைப் பொறுத்து" என்பதாக அமைவது அப்பாத்திரத்தின் சுவராஸ்யத்தைக் கூட்டுகிறது,கிடைக்கும் தொகைகளில் கவனமாய் இருப்பது பொருளாதாரத் தேவையின் அடிப்படையில் கடினமான முடிவுகளை மேற்கொள்ளத் தயங்காதவன் என யூகிப்போமாக,அதனால்தானோ என்னவோ மிஸஸ்.பெனிங்கின் கடினமான கோரிக்கைக்கு இணங்குகிறான்...
  லென்னியின் இசைத்திறனும்,பீத்தோவன் இசையை மழையாய் ஆர்ப்பரித்துக் கொட்டுவதும்,ஸ்டெர்னின் வாசிப்பு பழக்கமும் சுவராஸ்யமூட்டுகின்றன...
  ஒரு தனிமனிதரின் தொழில்களைக் கொண்டோ,அவர்களின் பழக்கங்களைக் கொண்டோ குணங்களை எடைபோடுவது எவ்வளவு முரணாடானது...

  வழியனுப்ப வந்தவன் மனதுக்கு நெருக்கமானவன்...

  எமது மதிப்பெண்கள் - 9/10.

  ReplyDelete
  Replies
  1. கதையின் உள்ளே பயணிக்காமல் மேலாப்புலதான் தொட்டுகிட்டு போயிருக்கேன்...
   திரும்ப நண்பர்கள் கதையை விவரிக்கும்போதுதான் விவாதிக்கனும்...

   Delete
  2. அட்டகாசமான விமர்சனம் அண்ணா. வழியனுப்ப வந்தவன் மிக அழகான ஒரு கதை. படித்தவர்கள் தங்களது விமர்சனத்தை இது போல பதிவிட்டால் புத்தக விற்பனைக்கும் ஏதுவாக இருக்கும்.

   Delete
 42. இரும்புக்கை மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யத்தையே போடலாம் சார்! நீண்ட வருடங்களுக்குப் பிறகு மாயாவி வண்ணத்தில் வெளிவந்தால் நிறைய பழைய காமிக்ஸ் வாசகர்களுக்கு இது ஒரு பொக்கிஷமாகவே தெரியும்! இதையே தாங்கள் முயற்சிக்கலாம்! மற்ற கதைகளை விட விற்பனையிலும் தூள் கிளப்புவார் அதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை

  ReplyDelete
 43. கொரில்லா சாம்ராஜ்யம்......

  இது வரை வெளிவராத....மறுபதிப்பு.....

  எனது தேர்வு

  ReplyDelete
 44. ஹெர்லக் ஷோம்ஸ்..!


  (டெஷா வுக்கு தயாராகிக்கொள்கிறேன்) :-)

  ReplyDelete
  Replies
  1. ஹி!ஹி!

   உண்மையை சொல்லிட்டீங்க...
   நம்மல்லாம் தோற்கிற கட்சின்னு தெரிந்தும் ஓட்டுப் போடறவீங்க... வேறென்ன செய்ய முடியும்?

   Delete
  2. இதுவரை ஹெ.ஷோ க்கு 6 ஓட்டுகள் கிடைச்சிருக்கே... அடேங்கப்பா...

   Delete
  3. டெபாஷிட் கிடைச்சிட்டும் போலயே😉😉😉

   Delete
 45. //எனது காமிக்ஸ் குரு நமது திருச்சி விஜயசங்கர், அவங்க வாங்குன காமிக்ஸ்களை எனது அத்தை எங்கள் வீட்டுக்கு வரும்போது எடுத்து வருவார்கள், நானும் தங்கச்சியும் போட்டி போட்டு படிப்போம்.//
  காமிக்ஸ் குரு நல்லா இருக்குது இந்த டைட்டில். கொஞ்சம் பிளாஷ்பேக் வைக்கலாமா. வாசகர்களே இந்த கிரிதரன் என்னுடைய தாய் மாமா பையன். கிரிதரனின் இந்த காமிக்ஸ் காதலுக்கு நானும் ஒரு காரணம் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. கிரி உனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல. 1987 மேட்டுப்பாளையத்துக்கு நாம எல்லாம் லீவுக்கு போயிருந்தோம். அப்ப லயன் கோடை மலர் வெளிவந்த சமயம். நீ ரொம்ப சின்ன பையன். அப்ப என்கிட்ட காசு இல்லை ஏன்னா எங்க அப்பா அம்மா ஊருக்கு வரல. நான் உங்க அப்பா அதாவது என் மாமா கிட்ட கேக்கறதுக்கு தயங்கிவிட்டு உன்னை தூண்டிவிட்டு இந்த புக்கை வாங்கினேன். நிஜமாவே அது ஒரு அழகிய நிலாக்காலம் தான் இல்லையா. நான் லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ் வாங்குவேன். மாமா ராணி காமிக்ஸ் பூந்தளிர் வாங்கி கொடுப்பாங்க. போட்டிபோட்டு கபிஷ் காக்கை காளி எவ்வளவு படிச்சோம். டைம் மெஷின் ஒரு கிடைச்சா கண்டிப்பா 1980லிருந்து 1985 வரை உள்ள காலகட்டத்தில் கண்டிப்பா போகணும்.

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் விஜய் சார். அற்புதமான நினைவுகள். இரண்டு காமிக்ஸ் நண்பர்கள் உறவினர்கள் என்று தெரிந்தது மிக்க மகிழ்ச்சி... உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். நினைவை பகிர்ந்ததற்கு நன்றிகளும்...

   Delete
 46. கொரில்லா சாம்ராஜ்யம் எனது சாய்ஸ் சார்.

  ReplyDelete
 47. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
  எடிட்டருக்கு நன்றிக்கடன் பட்டுள்ள
  என்னுடைய சாய்ஸ்
  காரிகன் மற்றும் மாண்ரெக் கதைகள். இப்போது இல்லாவிட்டால் எப்போது அந்த கதைகளை படிக்கமுடியும?.
  காரிகன்,மாண்ரெக் கதம்ப கூட்டணி குண்டு புக்கே எனது சாய்ஸ்

  ReplyDelete
  Replies
  1. இப்ப்பவும் வேனாம். எப்பவும் வேனாம். மன்னிக்கவும்.

   Delete
 48. மாண்ட்ரேக்,ஆர்ச்சி,காரிகன் ஸ்பைடர்.........

  கதம்பக் கடல்!

  ReplyDelete
 49. நீங்களே முதலாவதாக மாயாவியின் வண்ணப்படத்தை வெளியிட்டு, முதல் சாய்ஸ் யாருக்கு என்பதை தெளிவுபடுத்திவிட்டீர்கள்.
  இரண்டாவது படத்தில் மாயாவி சிகப்பு கலர் கோட் அணித்து சும்மா எம்ஜியார் மாதிரிேயே தகதகன்னு மின்னுறாரு. வண்ணம் கண்ணைப் பறிக்குது. இதுவரை நான் படித்ததாக நினைவில் இல்லாத கதை இது. இதுக்கு அப்புறமும் வேற சாய்ஸ் கேக்குமா மனசு. இரும்புக்கை எம்ஜியாருக்கே எனது ஒட்டு. வண்ணத்தில் மாயாவியைக் காண ஆவல்.
  வழியனுப்ப வந்தவரை வீட்டில் தங்கி இருக்கச் சொல்லுங்கள். பிறகு ஒரு வாகான சமயத்தில் புகுத்தி விடுங்கள்.
  பொக்கிஷம் தேடிய பயணத்தை கோடை மலருடன் இணைந்து கொண்டாட வைத்து விடுங்கள்.
  அப்புறம்.. அந்த மாண்ட்ரக் கதை எப்போ வரும் சார்? அட்லீஸ்ட் கதையின் பெயரை மட்டுமாவது இப்போது சொல்லுங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஹலோ பத்து சார்,உங்களுக்கும் அதே போல தோன்றுகிறதா.

   Delete
  2. I remember our Gounder in Singaravelan addressing an Adayar Gate bearer"DEI SEGAPPU SATTAI" ;) :) :D

   Delete
 50. வழியனுப்ப வந்தவன். ஒரு செமி கார்ட்டூனில்இவ்வளவு சோகத்தை காட்ட முடியுமா45ம் பக்கத்தின் கடைசிப்பேனல். குடும்பம்னுசொல்லிக்க இனியார் இருக்காங்க எனக்கு தனிமரமாகிட்டேனே .பக்கம் 51.மனதை உலுக்குகிறது. இவ்வளவு இருண்ட கதை உடனே வேண்டாமே. . ஆறுதலுக்கு ஹெர்லாக் எனது சாய்ஸ், அல்லது மாண்ட்ரேக், காரிகன் ஓக்கே. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. இராஜசேகர் ஜி வழியனுப்ப வந்தவன் கி.நா வாச்சே...

   Delete
 51. மீ 98....பத்தாவது வகுப்பில் சேர்ந்த ஆண்டு ��. வீசாக்களின் வீச்சில் நடந்து கொண்டு இருக்கிறது... ஷப்பா...

  ReplyDelete
 52. டிடெக்டிவ் ஸ்பெஷலில் பின்பக்கம் வெளியீட்டு எண்ணில் மேலே 446 என்று கீழே பார்கோடில் 444 என்றும் உள்ளது சார்...
  எனது புத்தகப் பதிவு விவரப்படி இரண்டு எண்களுமே வரவில்லை என்று காட்டுகிறது,எந்த எண் சார் சரி...
  அநேகமாக 444 தான் வரும் சரியா சார் ?!

  ReplyDelete
  Replies
  1. இல்லை இல்லை 444 வந்து விட்டது,திசை மாறிய சோடா...
   அப்ப 446 தான் சரியா சார்...
   எது சரியோ அதை திருத்தம் செய்து விடுங்கள் சார்...

   Delete
 53. மாயாவி கொரில்லா சாம்ராஜ்யம் ஓகே சார்

  ReplyDelete
 54. இவை தவிர, இன்னும் கொஞ்சம் புது ஆர்ச்சி கதைகள் ; இஸ்பய்டர் / மாயாவி b&w மறுபதிப்புகள் ; மார்ஷல் டிலான் கதை ; புயட்சி அம்மிணி அமாயா கதை ; காரிகன் கதை ; மாண்ட்ரேக் கதை என்றும் பீரோவில் உள்ளன ! ஆனால் இவர்களைக் கொண்டு ரூ.125 கடனை அடைப்பதாயின், நூத்திச் சில்லறைப் பக்கங்களுக்கான கூட்டணி இதழாய்த் தான் தயாரிக்க வேண்டி வரும் ! //// வந்துட்டுதான்போவுட்டுமே சார். 1980sன் கோடை மலராட்டம். கிடைக்கனுமே!

  ReplyDelete
 55. மன்னிக்கவும் சார், இதுவரை வந்த பழைய கிளாசிக் நாயகர்களின் படையெடுப்பே தாங்க முடியல சார். கொரில்லா சாம்ராஜ்யம் மற்றும் பழைய நாயகர்கள் தவிர்த்து எது வந்தாலும் நலம்.

  ReplyDelete
 56. அருமை சார்....ஸ்டெய்ன் நாலு பக்கத்த புரட்டினேன்....நிச்சயமா அசத்துவார்னு படுது....இருந்தாலும் நீங்க சொன்ன எல்லா கதைகளையும் மொத்தமா புது கூடுதல் சந்தால போட்டுத் தாக்குமா பட்டய கிளப்புமே.கொரனா தாமத மூனு மாசத்தயும் ஈடு செய்யலாம்...
  அப்படி லாம் வேலுடா தம்பின்னா நம்ம மாயாவின் பனி அசுரர் படல் ஆர்ச்சி போல அம்மாம் பெரிய சைசுல போடலாம்...அசத்தலாம்...அதும் இல்லன்னா தலையில்லா போராளிய நினைவுறுத்தும் டெக்ஸ் கதையை அதே படா சைசுல போடலாமே

  ReplyDelete
 57. //STERN ஆல்பம் # 2-ஐ களமிறக்குவதா//

  இந்த கி.நா தகவல் மட்டுமே கொடுத்ததே தவிர என்னுள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.

  ReplyDelete
 58. ஷெர்லக் தான் எனக்கு புடிச்சது. ஆனால் வர்றதுக்கு வாய்ப்பு இல்லை ன்னு தெரியும்.

  ReplyDelete
 59. 1st choice- Tex
  2nd Maayavi
  3rd Herlock Shomes
  4th collections
  5th Stern

  ReplyDelete
 60. சார்,
  தலைப்பு "கடன் தீர்க்கும் நேரமிது" என்று இருப்பதை யோசித்து பார்த்ததில் - ஏற்கனவே புக்கிற்கு Uதில் ஒரு புக் என்று கிடைத்துவிட்டது.
  எனவே, என்னைப் பொறுத்தவரை "புதிய கதைகள்" தொடரும் காலங்களில் சந்தாவில் வந்து விடும். அல்லது சிறப்பிதழ்களாக வெளிவந்தாலும் வாங்கி விடுவேன் (வோம் ) ..
  எனவே, இரத்தப் படல கோரிக்கை மாதிரி திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கும் "கொரில்லா சாம்ராஜ்யம் " வண்ண இதழையே வெளியிடுங்கள் - .இந்த தருணத்தில் இது வே சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. எனக்கு O. K தான் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.. சார் ..

  ReplyDelete

 61. பொக்கிஷம் தேடிய பயணம் இளம் டெக்ஸ் என்றால் முயற்சிக்கலாம். இல்லை என்றால் வேண்டாம் 🙏

  அதேபோல் மாயாவியோ அல்லது பழைய நாயகர்களின் கதைகள் வேணாம்.

  புதிய கதைகளை கொடுங்கள் ப்ளீஸ்.

  ReplyDelete
 62. லயன், முத்து காமிக்ஸ் ரசிகர்கள் எல்லாம் சிவகாசிக்கு வந்து உங்கள சந்திச்சு விருந்து சாப்பிட்டு ஒருத்தர ஒருத்தர் அறிமுகப்படுத்திக்கும் அறிமுக விழாவிற்கு இந்த 125 ரூபாய் செலவிடலாமோன்னு கூட தோனுதே சார்.
  இது சாத்தியம் இருக்காதுன்னாலும்.......காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் ஒரு இடத்தில ஒன்னா சந்திச்சா நல்லா இருக்குமே...

  ReplyDelete
  Replies
  1. இந்த முறை ஈரோடு புத்தக விழாவிற்கு வாருங்கள் நண்பரே. இது சாத்தியமே

   Delete
  2. // லயன், முத்து காமிக்ஸ் ரசிகர்கள் எல்லாம் சிவகாசிக்கு வந்து உங்கள சந்திச்சு விருந்து சாப்பிட்டு ஒருத்தர ஒருத்தர் அறிமுகப்படுத்திக்கும் அறிமுக விழாவிற்கு இந்த 125 ரூபாய் செலவிடலாமோன்னு கூட தோனுதே சார். //

   கவலை வேண்டாம் விரைவில் நடக்கும். அடுத்த வருடம் நடக்க வாய்ப்புகள் அதிகம். தயாராக இருங்கள்.

   Delete
  3. 2020 நீங்கலாக கடந்த 9 ஆண்டுகளில் ஈரோட்டிலோ ; சென்னையிலோ சந்திப்புகள் தான் நடந்த வண்ணம் உள்ளனவே நண்பரே ?

   Delete
  4. இந்த வருடம் நிச்சயம் சந்திப்பு உண்டு சார்...

   Delete
 63. பொக்கிஷம் தேடிய பயணம் தயவுசெய்து கலரில் வெளியிடுங்கள் எடிட்டர் சார்

  ReplyDelete
  Replies
  1. அதன் விளம்பரத்தை ஒருக்கா பாருங்களேன் ; அட, மேலுள்ள படத்தைக் கூடப் பாருங்களேன் சார் @

   Delete
 64. மாயாவி கதை மற்றும் டெக்ஸ் பொக்கிஷம் தேடிய பயணம் ஆகிய இரண்டு கதைகளையும் ஈரோடு புத்தக கண்காட்சிக்கு வெளியிடுங்கள் நன்றி சார்

  ReplyDelete
  Replies
  1. ஈரோட்டுக்கென வேறு திட்டமிடலைத் தான் அட்டவணையிலேயே அறிவித்துள்ளோமே நண்பரே ?

   Delete
 65. டாக்டர் நோ படிச்சாச்சி,பொழுதுபோக்கான வாசிப்புக்கு ஏற்ற இதழ்தான்,எளிய வாசிப்புக்கு ஏற்றவாறு ஜாலியா போகுது,என்ன ஓவியஙள் கொஞ்சலல்ம் தெளிவில்பாமல் இருப்பதாய் தோன்றுகிறது...
  இந்த எழுத்துருவும்,விலையும் பெரும்பாலானோருக்கு ஏற்ற வகையில் உள்ளது கூடுதல் சிறப்பு...
  இனி வரும் காலங்களில் விற்பனை இன்னும் களைகட்டும் என்று நம்புகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. இனி வயசுக்கு வந்தா என்ன - வராட்டி என்ன ? என்ற கவுண்டரின் அமர (!!) வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன சார் !

   மாமூலான சைசே போதுமென்று இந்தாண்டின் பெரும்பகுதிக்கு ஒலித்த குரல்களின் பலனாய் இனிமேல் ஸ்பைடர் ; மாயாவி ; ஆர்ச்சி போலான Fleetway சமாச்சாரங்கள் நீங்கலாய், பாக்கி b & w கதைகள் அனைத்துமே ரெகுலர் சைசில் தான் வெளிவந்திடும் !

   Delete
 66. லக்கி கெளபாய் எக்ஸ்பிரஸ்...

  பழைய லக்கி க்ளாசிக் லக்கி தான் என மீண்டும் நிரூபித்து இதழ்..அதுவும் வண்ண அட்டைப்படம் அடர் சிவப்பில் அட்டகாசப்படுத்துகிறது..

  காமெடிகளுக்கு பஞ்சமே இல்லாத சிறப்பு இதழ் ..அதுவும் துப்பாக்கியில் சுட்டு விட்டு தோட்டாவை விட வேகமாக முன்னேறி செல்லும் லக்கியின் ஜாலிஜம்பர் வாய்விட்டு சிரிக்க வைத்தது...

  ஓல்ட் ஆனாலும் கோல்ட் என்பது லக்கிக்கே உரியது என்பதை மீண்டும் நிரூபித்து இதழ்..

  ReplyDelete
 67. எடிட்டர் சார்.. 'கடன் தீர்ப்பதற்கான' உங்களது சாய்ஸ் ரொம்பவே அதிகம்! எல்லாமே அருமையானதும் கூட!

  பர்சனால எனது விருப்பம்:
  ஹெ.ஷோ
  (அல்லது)
  கி.நா

  அஃபீஷியலாக எனது தேர்வு :
  கலர் மாயாவி
  (அல்லது)
  கலர் டெக்ஸ்

  புத்தகங்கள் நேற்று வீடுவந்து சேர்ந்ததாக தகவல். இன்று மாலை புத்தகங்களைக் கைப்பற்றி தடவிப்பார்க்க ஆவலாய் காத்திருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தடவிப் பார்க்கத் தானுங்களா இப்போதைக்கு ?

   Delete
 68. வழியனுப்ப வந்தவன். ஒரு வெட்டியானின் கதையில் என்ன மாதிரியான வாழ்வியலை எதிர் பார்ப்போமோ அனைத்தும் நிறைவாக அமைந்துள்ளது. படித்து முடித்தபின் இயல்பு நிலைக்கு வர பல நிமிடங்களானது. உலுக்கிவிட்டது. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. அருமை சார். கச்சிதமாக பிடித்து விட்டீர்கள் அருமை அருமை

   Delete
  2. வன்மேற்கின் வார்னிஷ் இல்லாத முகமிது சார் !

   Delete
  3. அட்டகாசமான நச் விமர்சனம் ராஜசேகரன்.

   Delete
 69. எனதுதேர்வு - கொரில்லா சாம்ராஜ்யம்

  ReplyDelete
 70. // இரும்புக்கை மாயாவியின் "கொரில்லா சாம்ராஜ்யம்" ! //

  எங்களது ஓட்டு மாயாவிகாருக்கே 👍🏼💪🏼

  .

  ReplyDelete
 71. // இரும்புக்கை மாயாவியின் "கொரில்லா சாம்ராஜ்யம்" ! //

  எப்படியும் தல தாண்டவம் வந்திடும்
  அதனால


  எங்களது ஓட்டு மாயாவிகாருக்கே 👍🏼💪🏼
  .

  ReplyDelete
 72. காமிக்ஸில் பழைய நாயகர்கள்,புதிய நாயகர்கள் என்று எதுவும் கிடையாது ஆசிரியர் சார்.காரிகன்,மாண்ட்ரேக்,டில்லான்,இரும்புக் கையார்,ஆர்ச்சி,ஸ்பைடர் என்று போட்டுத் தாக்குங்கள் ஆசானே.அமாயாவும் வரட்டும் சாரே.

  ReplyDelete
  Replies
  1. சபையிலே அம்மணி அமாயாவுக்குக் கொடி பிடித்த ஒரே ஆள் என்ற முறையில் உங்களுக்கு ஒரு பெரிய 'ஓ ' போடணும் சரவணன் சார் !

   Delete
 73. இப்போ வரைக்கும் ஆருக்கு எம்புட்டு வோட்டு விழுந்திருக்கு ?

  ReplyDelete
  Replies
  1. மாஸாவியாரும் , மஞ்சச்சட்டைக்காரவுகளும் லீடிங்கிலே இருக்கா மேரி தோணுச்சு எனக்கு !

   Delete
  2. இப்ப வரைக்கும் இரும்புக்கையார் லீடிங் சார்.

   Delete
  3. தல இரண்டாமிடத்தில் தானா ? பார்டா !

   Delete
  4. பழைய "தல" ஃபீல்டுல இருக்கும் போது நம்ம தலயும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கணும் போல சார்.

   Delete
  5. வசந்தமாளிகை, நினைத்ததை முடிப்பவன் எல்லாம் Re realese ல 50 நாள் தாண்டியும் ஓடிக்கிட்டு இருக்கும் போது New realese மாஸ்டர் அடக்கித்தான் வாசிக்கணும் சாரே.

   Delete
 74. டெக்ஸ் வரட்டும்...

  கோடி கும்பிடு,மாயாவிக்கும்,ஹெர்லக்குக்கும்.....எங்க உயிர வாங்காதீக சாமிகளா....
  காதில டன் கணக்குல பூ சுத்தினது போதுமய்யா..கதற விட்ராதீங்க கனவான்களே.
  ஏற்கனவே முடிஞ்ச சந்தா சுமார்தான்.
  இதுல உங்கள பாத்தா காமிக்ஸ் படிக்கிற ஆசையே போயிரும்..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தேர்வுகளை அழுந்தச் சொல்வது சரி தான் சார் ; அதே சமயம் இதர தேர்வுகளை சாத்திடணுமா - என்ன ?

   நீங்களே தான் இங்கே பார்க்கிறீர்களே ஒவ்வொரு வாசகரின் எண்ணவோட்டங்களையும் ?

   Delete
  2. Sorry sir.. மாத்திக்கிறேன்.

   Delete
 75. Dear Editor
  Started March story reading with Martin Mystery.
  The way they have given a twist to Pinocchio story was very nice.
  Wry humor,just for fun sake glamour and parallel paths taken to reach the climax make it a rollercoaster ride.
  From ur initial reaction after translation i thought it may be difficult read but it was fun!
  Regards
  Arvind

  ReplyDelete
  Replies
  1. மார்டினை இப்படியொரு அவதாரில் பார்த்ததும் , மெய்யாலுமே இதன் பின்னணியில் வேறேதேனும் இருந்து , அதனை நான் தவற விட்டதாகிடக் கூடாதே - என்பதே எனது கவலையாக இருந்தது !

   Delete
  2. Dear Editor
   I dont think anything has been lost in translation.
   As usual translation rocks.
   Story itself is qwirky but fun.
   Regards
   Arvind

   Delete
 76. Dear Editor
  My vote is for
  Gorilla Samrajyam.
  Looks attractive in color.
  Regards
  Arvind

  ReplyDelete
 77. எனது தேர்வு gorilla சாம்ராஜ்யம்!

  ReplyDelete
 78. எனது தேர்வு gorilla சாம்ராஜ்யம்!

  ReplyDelete
 79. 1:00PM...வாக்கு நிலவரம்

  மாயாவியார்:18

  டெக்ஸார்:11

  ஷெர்லாக்:7

  ஸ்டெர்ன்:2

  செல்லாதவை:3

  மற்றவை:0,0,0

  ReplyDelete
  Replies
  1. செல்லாதவை மூணா - அது யாரோடதோ ?

   Delete
  2. "இது அல்லது அது" என மல்டி சாய்ஸ் ஆக ஒரு 3 நண்பர்கள் சொல்லி உள்ளார்கள் சார்.

   Delete
  3. அய்யய்யோ அப்ப நானே இருப்பேனே...
   சரி அப்ப நம்ம ஓட்டு கொ.சா வுக்கே...
   தல எப்படியும் உள்ளே வந்துடுவாரு...

   Delete
  4. ரவி@ முன்பே நீங்கள் தெளிவாக வாக்களித்து இருந்தீர்கள்.
   இப்போது உங்க வாக்கையும் இரும்பு பார்டிக்கு சேர்த்துடலாம்.

   வெற்றி எனும் காந்தத்தை இரும்புக்கையார் பலமாக ஈர்க்கிறார்...!

   ஈவினிங் செசன்ல இன்னும் சில ஓட்டுகள் வரும்போது மாறுதுனா பார்ப்போம்.

   Delete
 80. டெக்ஸ் and மாயாவி ஏதாவது ஒன்று,
  பின் வாய்ப்பு உண்டு என்றால், bw ஹீரோஸ் கதம்பம் போடவும் (carricon, mandrake, மற்றும் பலர்).

  ReplyDelete
 81. எனது ஓட்டு "பொக்கிஷம் தேடிய பயணம்"

  ReplyDelete
 82. Black & white ல குண்டு புக்க (Detective Special)பாக்கறதே சந்தோசமா இருக்கு சார். ஒரு சந்தேகம்...லக்கி லூக் புக் படங்களில் outlines தெளிவின்றி தெரிவது எனக்கு மட்டும்தானா?.....

  ReplyDelete
 83. Gorilla Samrajyam would be a good choice and an eye feast. My 2 cents.

  ReplyDelete
 84. Stern.... ஒரு அற்புதமான தொடர்... Undertakerக்கு ஒரு இணையான ஆனால் சற்றே literateஆன கதாநாயகன்... என் ஓட்டு Sternக்கே... ஆனால் la cite des sauvagesல் கொஞ்சம் 18+ சமாச்சாரங்கள் சற்றே தூக்கலாக இருக்குமென எண்ணுகிறேன்... இந்த தொடரை வரிசை மாறியும் படிக்கலாம்... Standalone கதைகளானதால் இந்த வசதி... என் ஓட்டு STERN..

  ReplyDelete
 85. Replies
  1. பார்த்துட்டேன்,பார்த்துட்டேன்...

   Delete
  2. கரூர் சரவணனிடம் இருந்து பதில் டயலாக்

   பார்த்துட்டான் பார்த்துட்டான் :-)

   ரிச்சா மாமா கவுண்டமணி டயலாக் :-)

   Delete
 86. My choice
  Option 1: Holmes
  Option 2: Graphic Novels
  Option 3: Stern
  Option 4: Tex

  Thumbs down for Mayavi.

  ReplyDelete

 87. STERN கதை அருமையாகவே இருந்தது.. ஆனால் கொஞ்சம் மென் சோகம் இழைந்தோடுவதால், எனது ஓட்டு ஷெர்லாக்கின் கார்ட்டூனுக்கே..

  ReplyDelete
 88. Editor sir,

  How to send the photo? Email ID please.

  ReplyDelete
  Replies
  1. lioncomics@yahoo.com இந்த ஐடியில் அனுப்புங்க நண்பரே.
   உங்க சந்தா எண், பெயர் எல்லாம் குறிப்பிட்டு அனுப்புங்க.

   Delete
 89. 5 வருஷத்துக்கு முன் கொரில்லா சாம்ராஜ்யம் வருகிறது.....என்று அறிவிப்பு வந்தவுடன்.....என்னிடமிருந்து கொ.சா வை exchange போட்டு விட்டு....இன்று வரை....கிடைக்காமல் திண்டாடி வருகிறேன்.....

  ReplyDelete
 90. கொரில்லா சாம்ராஜ்யம்

  ReplyDelete
 91. STERN - Making, சித்திரம், கலரிங் எல்லாம் அட்டகாசம். என்னுடைய சாய்ஸ் STERN - 2 தான்.

  மாயாவியை புத்தக விழாவினில் இறக்குவதே சிறப்பு எ. எ. க.

  ReplyDelete
 92. மார்ச் மாத வெளியீட்டில் CID ராபின் சூப்பர்

  ReplyDelete
 93. மாயாவி வரட்டுமே சார்.
  வழியனுப்ப வந்தவன் சிகப்பு மேட் ஃபினிஷ் அட்டை மட்டுமே அமர்க்களம் அல்ல!!! நிறைவான கதை சார்.

  ReplyDelete
  Replies
  1. // வழியனுப்ப வந்தவன் சிகப்பு மேட் ஃபினிஷ் அட்டை மட்டுமே அமர்க்களம் அல்ல!!! நிறைவான கதை சார். //

   நச் விமர்சனம்.

   Delete
 94. மீண்டும் எனது சாய்ஸ் ஷெர்லாக் ஹோம்ஸ் தான் யுவர் ஆர்னர் ;-)

  ReplyDelete
 95. ஆசிரியர் இந்த முறை மூன்றாம் இடம் பிடிக்கும் கதையை கடன் தீர்க்கும் நேரத்திற்கு கொடுப்பதாக ஊருக்குள் ஒரு பேச்சு ஓடுகிறது. அதாவது ஷெர்லாக் ஹோம்ஸ் கார்டூன் வறட்சியை போக்க இந்த முடிவு :-)

  ReplyDelete
 96. Martin Mystery உண்மையின் உரைகல்..!

  லக்கி லூக், கிட் ஆர்ட்டின் டாக் புல் கதைகளை, ஒரு கொத்தாக இழுத்துப் போட்டு மிதி மிதியென்று மிதித்து துவைத்துப் போட்டு விட்டது இந்த கதையில் வரும் காமெடிகள் ! என்னவொன்று துவைத்துக் காயப்போடுவதற்குள் க்ளைமாக்ஸ் வந்து விட்டது சற்றே வருத்தம் தான் !

  உள்ளதை உள்ளபடி உண்மையைக் கூறுவதால் ஏற்படும் விளைவுகளை இந்த கதையின் மூலம் அறியும் போது, ஒரு சமயத்தில் நான் எவ்வளவு மரமண்டையாக இருந்துள்ளேன் என்பது மட்டும் நன்றாக புரிகிறது !சுவாரசியம் மிகுந்த புதையல் தேடலுடனான, மர்மம் நிறைந்த இந்த கதையைப் படிக்க ஆரம்பித்த முதல் பக்கத்தில் இருந்தே, எதைத் தேடுவார்கள் என்றும் ; எதைத் தேடுகிறார்கள் என்றும் எனக்குத் தெரிந்து இருந்தது தான் மிகப்பெரிய சோகம். கடைசியில் படிக்க வேண்டிய பக்கம் 226 ஐ தவறுதலாக, முகவுரை என்று படித்து விட்டதே காரணம். ஹா.. ஹா.. என்ன தான் இருந்தாலும் நான் ஒரு மரமண்டை தான் :) கொரானாவை விட பயங்கரத் தொற்றாக சித்தரிக்கப்பட்டுள்ள தொற்று, என்னைச் சற்று திகிலாடச் செய்து விட்டது. என்னதான் 225 பக்க கதை என்றாலும், மிஸ்டர் அபெர்க்ரோம்பியின் சிரித்த முகத்தை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலுள்ளது ;)


  புரியாத புதிர்கள் !!

  1.மர்ம மனிதன் மார்ட்டின் - இந்த கதையில் எதற்கு வருகிறார் ?!
  2.இரண்டு இடங்களில் இடது கையின் விரல்கள் மடிக்கப்பட்டு முத்திரையாக காட்டப்படுவது ஏன் ?!

  ReplyDelete
 97. தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு ரயிலில் பயணம் ஆரம்பித்து விட்டது.

  ReplyDelete