நண்பர்களே,
வணக்கம். இன்னொரு வாரயிறுதி & இன்னொரு மொக்கையோடு அடியேனும் ஆஜர் ! இருபத்தியெட்டெ தினங்கள் கொண்ட மாதம் முற்றுப்புள்ளி காணும் நேரம் நெருங்குவதால், பணிகளின் இறுதி நேரத்து பரபரப்புகளோடு ஆபீசில் வண்டி ஓடி வருகிறது !
இப்போதெல்லாம் பதிவுப் பக்கத்தில் ஈயோட்ட, கண்ணுக்கெட்டும் தொலைவுக்கும் யாரேனும் தென்படுவதில்லை எனும் போது - இக்கட என்ன எழுதுவதென்ற வறட்சி தலைக்குள் தவறாது தாண்டவமாடுகிறது ! ஏகமாய் வாட்சப் குழுக்கள் ; FB க்ரூப்களென்று பொழுதுகள் நகர்ந்து வரும் நாட்களில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாய்த் தொடர்ந்து வரும், நீட்டி முழக்கும் எனது அதே காலட்சேப ஸ்டைல், பொறுமைகளைச் சோதிக்கத் தவறாது என்பது புரிகிறது ! தவிர, இந்த New Normal நாட்களில் யார் - எப்போது - எதை - எங்கே செய்து வருகிறோமென்பதே தெரியாத ஒருவித மோன நிலை நிலவிடுவதில் ஏது ரகசியம் ? So இந்தத் தருணங்களிலும் பழைய சாயாவையே ஆற்றுவது, கொட்டாவியை மட்டுமே கொணரும் என்பது நிதரிசனம் ! சொல்லப் போனால், இத்தினி காலத்துக்கு இந்தமட்டுக்கு வண்டி ஓடியதே தெய்வச் செயல் தானென்பேன் ! Of course - பகிர்ந்திட நிறைய சேதிகள் உள்ள வேளைகளில் எப்போதும் போலான அந்த இராமாயண பாணியை கைவிட மாட்டேன் ; இதர நாட்களிலோ crisp குண்டலகேசியாக வலம் வந்திடவுள்ளேன் ! So இங்கே நறுக்கென்ற பதிவுகளை அமைத்து விட்டு, எஞ்சிடும் நேரங்களை புக்சில் ஏதேனும் புதுசாய்ப் பக்கங்களை புகுத்த வழியுள்ளதாவென்று முயற்சிக்கச் செலவிட நினைத்துள்ளேன் ! இங்கே போரடித்துப் போனால் no big deal ; ஆனால் புக்சில் அயர்ச்சி எட்டிப் பார்த்து விட்டால், அது பெரும் சிக்கலன்றோ ? So ஏப்ரல் முதலாய் சின்னச் சின்னதாய் சுவாரஸ்யமூட்டக்கூடிய பக்கங்களை நுழைக்க இப்போதிலிருந்தே ரோசனைகள் ஓடி வருகின்றன ! Filler pages-களில் என்ன நுழைக்கலாமென்று உங்கள் பங்குக்கு ஏதேனும் suggestions folks ? தவிர, 2022-ன் திட்டமிடல்களுக்கென இப்போதிலிருந்தே நிறைய வாசிப்புகள் அவசியப்படுகின்றன ! ஏற்கனவே வரவழைத்த ஒரு வண்டிக் கதைகள் தொட நேரமின்றி மேஜையில் தூங்கி வர, கிட்டும் அவகாசங்களில் இனி அவற்றை பரிசீலிக்க முனைவேன் ! The New Normal Blogging !! 😀😀
On to serious stuff - இதோ 2020 அட்டவணையினில் MAXI லயனின் இறுதி இதழின் preview ! யார் கண்டது - MAXI சைசிலுமே இதுவே கூட இறுதி இதழோ - என்னவோ ? 'சேகரிப்புக்கு இது ரசிக்கலை ' - என்ற ரீதியிலான புகார்கள் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதால் - தொடரும் காலங்களில் இந்த மாக்ஸி ஸைஸையே மறு பரிசீலனைக்கு உட்படுத்தணுமென்றே தோன்றுகிறது ! என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த மெகா சைசில், வண்ணத்தில் இதழ்களை ரசிப்பதென்பதொரு ரம்ய அனுபவமே ; ஆனால் இறுதி முடிவு உங்கள் கி தரப்பில் தானுங்கோ ! And இதோ - நமது ஒல்லியார் மறுபதிப்பில் கலக்கும் "கௌபாய் எக்ஸ்பிரஸ்" ! டெக்சா ? டைகரா ? என்ற கேள்விகள், சர்ச்சைகள் இருக்கலாம் தான் ; "கார்ட்டூன்கள் ஓகே-வா ? மொக்கைகளா ?" என்ற வினாக்களும் இருக்கலாம் தான் ! ஆனால் சர்ச்சைகளோ, கேள்விகளோ எழுப்பா ஒரே ஆசாமி - நமது ஜாலி ஜம்பரின் முதலாளி மட்டுமே ! 'வாசிப்பிலும் சுகம் ; விற்பனையிலும் இதம்' - என்று கடந்த 34 ஆண்டுகளாய் நம்மோடு பயணித்து வரும் லக்கி லூக் - yet another classic சாகசத்தில் கலக்குவது மார்ச்சின் highlight-களுள் பிரதானம் என்பேன் ! And "வழியனுப்ப வந்தவன்" இதழுக்கு புஜம் கழன்று போக ஒன்றரை நாட்கள் பேனா பிடித்த கையோடு, மேஜை மீது குவிந்து கிடந்த "கௌபாய் எக்ஸ்பிரஸ்" பக்கங்களைப் பார்த்த போது மெய்யாலுமே குஷி கொப்பளித்தது ! 'ஒரு செம ஜாலி கார்ட்டூன் ; அதுவும் மறுபதிப்பே எனும் போது எழுத்துப் பிழைகளை இயன்றமட்டுக்குச் சரிபார்த்து விட்டு அச்சுக்குத் தூக்கிவிட்டுப்புடலாம் !!' என்ற நிம்மதியே குஷியின் பின்னணி ! ஆனால் நம்மை சுளுக்கெடுக்க வித விதமாய் நோவுகள் தலைகாட்டத் தான் தவறுவதில்லையே ? அந்நாட்களில் வெளியான புக்கை ஈயடிச்சான் காப்பியாய் டைப்செட் செய்திருக்க, வாசித்தால், பல்லெல்லாம் ஆடுவது போலொரு பீலிங்கு ! முழுக்கவே இலக்கண சுத்தத் தமிழில், கருணையானந்தம் அவர்களின் அன்றைய மொழியாக்கம் அமைந்திருக்க - லக்கியும், ஜாலியும், சலூனின் குடிகாரன்களுமே நயமான தமிழில் செப்போ செப்பென்று செப்பிக் கொண்டிருந்தனர் !
'பொஸ்தவம் என்று ஏதாச்சும் வந்தாலே போதும்' என்பதே அந்நாட்களின் நிலவரம் என்றிருக்க, மொழியாக்கத்தில் ஒரே மாதிரியான பாங்குகளைக் கடைப்பிடிக்கும் அவசியங்களெல்லாம் மண்டைக்கு எனக்கு உறைத்திருக்கவில்லை ! இன்றைக்கோ, "எதையாச்சும் செஞ்சா - உருப்படியா செய்யணும்" என்ற நினைப்பு பிரதானம் எனும் போது, இந்த ஒற்றை இதழுக்கு மொழிநடை எப்படியும் இருந்து விட்டுப் போகட்டுமே என்று விட மனசு ஒப்பவில்லை ! So முதல் பக்கத்திலிருந்து "தனிமையே என் துணைவன்" பக்கம் வரைக்கும் - ஒவ்வொரு வரியையும்,ஒவ்வொரு வசனத்தையும் பேச்சு வழக்கு நடைக்கு மாற்றும் அவசியம் பிசாசாய் முன்நின்றது ! Trust me guys - புதுசாய் எழுத நேர்ந்த 64 பக்க ஆல்பத்தில் கூட இத்தனை மொக்கை போடவில்லை நான் ; ஆனால் இந்த 44 பக்க மறுப்பதிப்பை reshape செய்வதற்குள் ஒரு வாரம் ஓடியிருந்தது & என் பொறுமைகளில் ஒரு குவியலும் காணாது போயிருந்தது !! திருத்தங்கள் போட்டிருந்த பக்கங்கள் - அதிகாலைக் கசாப்புக் கடை வாசலைப் போல எகச் சிவப்பு !! பற்றாக்குறைக்கு ஜாலி ; அந்த செவ்விந்தியன் ; ஊர்க்காரர்கள் என எல்லோரது வசனங்களிலும் ஹ்யூமர் ஒரு மிடறு குறைவாகவே தென்பட்டது ! So மொக்கைகளாய் மாறிடாது, அவற்றையும் சன்னமாய்த் திருத்தியமைக்க முனைந்ததும், நேரத்தை விழுங்கிய காரணியாகிப் போச்சு ! இனி வரும் நாட்களில், மரியாதையாய் பேச்சு வழக்கு கடைகளில் உள்ள கதைகளையாய்த் தேர்ந்தெடுத்தே மறுபதிப்பு செய்திட வேண்டும் போலும் !! Pheww !!
But anyways - இதோ அந்த அடர்சிகப்பு ஒரிஜினல் ராப்பர் - துளியும் மாற்றங்களின்றி ! And உட்பக்க பிரிவியூவுமே !! அந்தக் காலத்தில் சின்ன சைசில் ; நியூஸ்பிரிண்ட்டில் ரசித்த சமாச்சாரத்தை இன்றைக்கு ஆர்ட் பேப்பரில், மெகா சைசில் வாசிப்பது செம classy அனுபவமாகப் பட்டது எனக்கு ! இந்த சைசே தொடரலாமா ? அல்லது பிடுங்கும் ஆணியைப் பழைய சைசுக்கே பிடுங்கணுமா ? Thinking !!
சனிக்கிழமை மாலை நேரம் - திங்க் பண்ண சிறப்பான நேரம்தான் சார்!
ReplyDelete2nd
ReplyDeleteGood evening to all
ReplyDeleteme too surprisingly
ReplyDeleteஐந்தாவதாக....
ReplyDeleteSir, We are keen to read your write up's every sunday here in this blog and request,not to shorten it. Really such an entertaining sunday it is,with
ReplyDeleteyour blog info.
இதோ சத்தமிலா ஒருவர்....பிறரும் வரட்டும்
Deleteஉண்மை உங்கள் பதிவு இல்லாத நாள் எப்போதுமே வருத்தமான நாளே....
DeleteThe new normal sir...
Deleteஉங்களின் பதிவு இல்லையெனில் அந்த ஞாயிறு வெறுமையாகிறது
Deleteசூப்பரா சொன்னீங்க @Nagarajsethupathi
Delete///உங்களின் பதிவு இல்லையெனில் அந்த ஞாயிறு வெறுமையாகிறது///
'நச்' சத்யா!!
இவ்வளவு சீக்கிரம் பதிவு தந்த ஆசிரியருக்கு நன்றிகள் பல.
ReplyDelete8
ReplyDeleteசார்.....உங்க பதிவு இல்லன்னா கஷ்டம்தான்.....வாழ்வின் சுவைகளில் இதுவும் தனி சுவை....சத்தமில்லாமல் கடக்கும் நண்பர்கள் பலர்....
ReplyDeleteஜேம்ஸ் அட்டை பட்டை....
லக்கியின் அட்டையும் அதகளம்...
அடுத்த மாதம் சந்தா எக்ஸ்பிரசில் தொற்றிடுவேன்....
அருமை ஏடிஆர்.....
வருகை தாருங்கள் அடிக்கடி...
இரும்புக்கை மாயாவி,ஸ்பைடர் மற்றும் லாரன்ஸ் -டேவிட் கதைகளை MAXI சைசில் படிக்க ஆசையோ ஆசை.
ReplyDeleteஏன் சரவணன் ஏன். :-)
Deleteபடிக்கதாம்ல....நச் சரவணன்
DeleteMaxi size கார்ட்டூன் கதைகளுக்குத் தான் மிகப் பொருத்தமாகத் தான் இருக்கிறது.ஆனாலும் மாக்ஸி சைஸ் தொடர்ந்தால் நல்லது தான்.
ReplyDeleteXIII
ReplyDeleteவணக்கம். பதிவை படித்து விட்டு வருகிறேன்
ReplyDeleteஇரும்புக்கை மாயாவி,ஸ்பைடர் மற்றும் லாரன்ஸ் -டேவிட் கதைகளை MAXI சைசில் படிக்க ஆசையோ ஆசை.
ReplyDeleteReply yes yes yes
இப்படித்தான் டெக்ஸ் வில்லரை மாக்சி சைசுக்கு கொண்டு சென்றேன் சார் ; தர்மஅடி வாங்கியதே பலன் ! அடுத்து முதுகு பழுக்க மும்மூர்த்திகளா ? தாங்காது !
Deleteஏன் கார்த்திகேயன் ஏன் இப்படி எல்லாம் விபரீத ஆசை :-)
Deleteஎஸ்ஸோ எஸ்
Deleteடியர் சார்,
ReplyDeleteMaxi Size_ முன்பே எங்களை பழக்கிய பக்கத்துக்கு 8 படங்கள் அல்லது 6 படங்கள் உள்ள கதையை - அதிகம் ரசித்துப் படித்த கதைகளாக ஹீரோக்களுக்கு ஒன்றாக தேர்ந்தெடுத்து வெளியிடலாமே.
(உம்) சிக்பில், ரிப்.ஜானி, ப்ரூனோ Gரேசில் (அப்பலோ படலம்), x 1 11 (முதல் பாகம் மட்டும்). என்று.
மற்றபடி "லக்கிலுக் " _ பால்ய நண்பர் மாதிரி - தற்போதைய தரத்தில் Uழைய கதைகள் அனைத்தும் மறுபதிப்பு வெளியிட வேண்டும் என்பதால் - அதற்கு Maxi Size - விலை என்பது ஒரு தடையாக அமைந்து விடக் கூடாது.
எனவே, இரண்டு, இரண்டு கதைளாக இணைத்து சாதா அட்டையுடனே அடிக்கடி வெளியிட முயற்சி செய்யுங்களேன்.சார்.
( மேக்ஸி சைஸ் - ஒரே செட்டாக சேர்த்து வைப்பதற்கு இடஞ்சல் தான். எனவே லக்கி லூக்கிற்கு தேவையில்லை என்பது எனது கருத்து . )
ப்ரூனோ பிரேசிலின் அந்நாட்களது கதைகளை படிப்பது கிராமத்து மாட்டு வண்டியில் சவாரி செய்வது போலுள்ளது சார் ! அவரது 2.0 அவதார் தெறிக்க விடுகிறது ! அதனை முயற்சிக்கலாம் தைரியமாய் !
Deleteசெய்வோம் சார்
Deleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteலக்கி ரீபிரிண்ட்களுக்கு மேக்ஸி சைஸ் டபுள் ஓகே சார்!
Delete🙏🙏
ReplyDeleteகௌபாய் எக்ஸ்பிரஸ்: பழைய வசனங்களை மெருகூட்டியது நல்ல விஷயம், அப்ப இன்னும் கொஞ்சம் சிரிப்பு தூக்கலாக கிடைக்கிறது. நன்றி.
ReplyDeleteஅப்புறம் அந்த ஆணி பழைய சைசில் வரட்டுமே சார். ஆணி எல்லாம் மேக்ஸி சைசில் வேண்டாம். :-)
சார் இங்கு ப்ளாகில் காமிக்ஸ் சார்ந்த தகவல்கள் (லேட்டஸ்ட் US , பிரான்க்கோ-பெல்ஜியன் ) அதிகம் வெளியிடுங்கள் படங்களோடு.
ReplyDeleteகாமிக்ஸ் புத்தகத்தில் இது வரை வெளி வராத (பிரளயம்/கமான்சே/புருனோ/ஜோர்டான்/ஸ்ம்ர்ப் போன்று) கதைகளை தொடர்கதைகளாக வெளியிடலாம்.
அந்த ஊர்களில் புளிய மரங்கள் கிடையாது சார் ; so வேறு மரமாய் எதையேனும் தேடிப் பிடித்து, கட்டி வைத்து வெளுப்பார்கள் என்னை - தொடர்கதைகளாக்கிட prime நாயகர்களை கோரிடும் பட்சங்களில் !
Delete/// அந்த ஊர்களில் புளிய மரங்கள் கிடையாது சார் ; so வேறு மரமாய் எதையேனும் தேடிப் பிடித்து, கட்டி வைத்து வெளுப்பார்கள் என்னை ///
Delete😃😃😃
ஹையா முன் மாலை பதிவு..
ReplyDeleteசர்ப்ரைஸ்கள் தொடருது...
வணக்கங்கள் சார்.🙏🙏🙏
ஹாய் ப்ரெண்ட்ஸ்😍
இரத்த படலம் - ATR ன் சேவையை பாராட்டுகிறேன். விரைவில் பழைய ATR ஆக வேண்டுகிறேன்.
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி. திரும்ப வாருங்கள் ATR சார்.
Deleteநன்றி ATR சார்
Deleteஅடடே மிக சீக்கிரமே பதிவு.
ReplyDeleteஎனக்கு பதிவு ரீடிங் டைம்.
ReplyDeleteDr.NO - விற்கு வரைந்த ஓவியரின் 007-க்கு பொருந்தக் கூடியவர் - ஸின் கானரியும்'. பட்டாம்பூச்சி Uடலத்திற்கு வரைந்த ஓவியரின் _ 007_க்கு பொருந்தக்கூடியவர் டிமோத்தி டால்டனும் ஆவர்கள். எனவே அட்டைப்படத்தில் அவர்களை எதிர்பார்த்தால் - உங்கள் அமெரிக் ஓவியை - ரோஜர் மூர் - ரசிகை போலும். எல்லா இதழ் . டிசைனிங்கிலும் ரோஜர் மூரே - இடம் பிமத்து விட்டார்.
ReplyDeleteஅப்றம் பக்கத்திற்கு 6 கட்டங்கள் தான் என்பது 007-யை Mazi Size யில் ரசிக்கும் அனுவம் கிடைக்கும்.
இந்த மாதம் வந்த "கம்பி நீட்டிய குருவி" யில் ரிப் கிர் பி-யைUக்கத்திற்கு 6 கட்டங்களில் படித்தது - அதுவும் இந்த ஓவியரின் கைவண்ணத்தில் ரிப் கிர் பி__ தான என்ன மிடுக்கு (கலரில் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப் பட வைத்து விட்டீர்கள்) ..
ரிப் கிர்பி கருப்பு வெள்ளையில் தலை தப்பியதே தம்பிரான் புண்ணியம் சார் ; நானும் கதை நெடுக நம்மாள் செய்யப்போகும் ஜாகஸத்தை எதிர்பார்த்தபடிக்கே நகன்றால் - முற்றும் போடும் இடம் வந்து முட்டிக்கினு நிற்கின்றது !
Delete///அவர்களை எதிர்பார்த்தால் - உங்கள் அமெரிக் ஓவியை - ரோஜர் மூர் - ரசிகை போலும். எல்லா இதழ் . டிசைனிங்கிலும் ரோஜர் மூரே - இடம் பிமத்து விட்டார்.///
Deleteஅமெரிக்க ஓவியை மட்டுமன்றி உள்ளூர் எடிட்டரும் ரோஜர்மூரின் ரசிகர்தான் போலும்!
ஆனாலும் அந்த சுருள்முடி ஜேம்ஸ் பாண்டு மேல நம்ம எடிட்டருக்கு ஏதோவொரு காண்டு இருக்குமோன்னும் எனக்கு ஒரு டவுட்டு இருக்கு!
// நானும் கதை நெடுக நம்மாள் செய்யப்போகும் ஜாகஸத்தை எதிர்பார்த்தபடிக்கே நகன்றால் - முற்றும் போடும் இடம் வந்து முட்டிக்கினு நிற்கின்றது ! //
Deleteமுந்தைய பதிவில் நீங்கள் சொன்னது போல் ரொம்பவுமே நேர் கோட்டுக் கதை சார்...
எனக்கு தெரிஞ்சி,இவ்வளவு நாகரீகமா,மென்மையா யாரும் துப்பறிஞ்ச மாதிரி தெரியலை...
சிறு கோரிக்கை: 007 ராணி காமிக்ஸில் இதுவரை வரதா கதைகள் இருந்தால் அவைகளை முதலில் கொடுங்கள் சார்.
ReplyDeleteலேது சார் !
Deleteஇரண்டு அல்லது மூன்று கதை உள்ளது சார்.. அதை முயற்ச்சிப்போமே....
DeleteTest
ReplyDeleteவந்திட்டேன் சார் 🙏🏼🙏🏼🙏🏼
ReplyDelete.
கிரேட் பைசனின் ஆத்துக்காரி கிரேட் டைசன் இந்தப்பக்கம் வராதவரை ஜாலியோ ஜாலிதான். கௌபாய் எக்ஸ்பிரஸ்மறுபதிப்பாக இல்லாமல்புதுமொழிபெயர்ப்பாக கலக்கும்போல. ஆசிரியருக்கு நன்றி. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteகழுகுப் பார்வை சார் உங்களுக்கு !! யானையின் நினைவாற்றலுமே !
Delete// கழுகுப் பார்வை சார் உங்களுக்கு !! யானையின் நினைவாற்றலுமே ! //
Deleteஉண்மை தான் சார்.
// சென்னை புத்தக விழாவினில் இடம்கிடைக்கும் பட்சத்தில் எப்போதும் போலவே காமிக்ஸ் கேரவனை நந்தனத்தில் 2 வாரங்களுக்கு நிலைகொள்ளச் செய்திடுவோம் ! //
ReplyDeleteகண்டிப்பாக இடம் கிடைக்கும் சார்
புக்பேர் ஸ்பெசல் புத்தகம் ஏதாச்சும் வருமுங்களா சார் 🙏🏼😍
.
கைவசமுள்ள வண்டி புக்ஸை விற்க முயற்சிப்போமே சார் முதலில் !
DeleteFact fact
Delete/// கைவசமுள்ள வண்டி புக்ஸை விற்க முயற்சிப்போமே சார் முதலில் ! ///
Delete+1
பிராபகர் @ just a request: அவ்வப்போது கதைகளின் விமர்சனங்களை நீங்கள் இங்கு பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
Deleteவிமர்சனம்தானே போட்டுடுவார்,போட்டுடுவார்...ஹா,ஹா,ஹா...
Deleteஅறிவரசு :-) முயற்சி செய்வோம் வெற்றி பெறுவோம் :-)
Deleteபிரபாகர் @ பாருங்க அறிவரசு இப்படி சொன்னதற்காவது விமர்சனம் எழுதுங்கள்!
PfB@ பிரபாகர்ன உடனே முன்னொரு காலத்தில் இருந்த இந்தியாவின் ஓரே ஓப்பனிங் பேட்ஸ்மென் & ஒப்பனிங் பெளலர் மனோஜ் பிரபாகர் மாதிரி ஸ்பீடா இருப்பார்னு நினைச்சுடாதீங்கன்னேன்....
Deleteஇந்த பிரபாகர் நேர் எதிரே... வாட்ஸ்ஆப்பிலயே வாரம் ஒருதடவை தான் பழைய கமெண்ட்களுக்கு பதில் போடுவாரு...!!!
இவரு இப்ப வந்த கதைகளுக்கு 2025ல விமர்சனம் போட்டு விடுவார்...ஆமா நிச்சயமாக....!!!
அட நீங்க வேற PFB அவராவது வந்து விமர்சனம் போடறதாவது...ஹி,ஹி,ஹி...
Delete// இங்கே சில காலமாய் வருகை தந்திருக்கா நண்பர் ATR அவர்கள் "இரத்தப் படலம்" வண்ண தொகுப்பின் மறுபதிப்பின் போது செய்திட வேண்டிய எழுத்துப் பிழைத் திருத்தங்களை ஒரு அழகான தொகுப்பாக்கி நமக்கு அனுப்பியிருக்கிறார் ! "ஓங்கி அடிச்சா ஒம்பது டன்னாக்கும்' //
ReplyDeleteசூப்பர் சார்
வாழ்த்துக்கள் நண்பரே 👍🏼💐💐💐
.
ஏதோ நைட்ல தூங்குறதுக்கு முன்னாடி உங்களை மற்றும் நண்பர்களை இந்த தளத்தில் தான் பார்க்க முடிகிறது...
ReplyDeleteஅதுக்கும் ஆப்பா
Dear Editor,
ReplyDeleteThe problem with Lucky reprints is - they are already in two sizes. For now, I like the MAXI size and would vote for continuing Lucky reprints in MAXI size and re-printing the Normal size re-prints again towards the end of this run.
For other albums you may decide as it deems fit for sales.
Regarding length of blog entries I vote for your new style. If you look at the first years of HOTLINE - they used to be crisp and upto the point. Special occassions - you may grace with longer posts. Be it a festive occasion or a milestone for us !
//Regarding length of blog entries I vote for your new style.//
Deleteஅதே..அதே சார் !
உள்ளேன் ஐயா..!!
ReplyDelete///இங்கே சில காலமாய் வருகை தந்திருக்கா நண்பர் ATR அவர்கள் "இரத்தப் படலம்" வண்ண தொகுப்பின் மறுபதிப்பின் போது செய்திட வேண்டிய எழுத்துப் பிழைத் திருத்தங்களை ஒரு அழகான தொகுப்பாக்கி நமக்கு அனுப்பியிருக்கிறார் ! "///
ReplyDeleteபாராட்டுகள் ATR sir...👌👌👌
ஆஹா.. கௌபாய் எக்ஸ்பிரஸ்..!!
ReplyDelete🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அப்படி இல்லை கண்ணா....
Deleteஆஹா ஆஹா கௌபாய் எக்ஸ்பிரஸ் :-)
///இங்கே சில காலமாய் வருகை தந்திருக்கா நண்பர் ATR அவர்கள் "இரத்தப் படலம்" வண்ண தொகுப்பின் மறுபதிப்பின் போது செய்திட வேண்டிய எழுத்துப் பிழைத் திருத்தங்களை ஒரு அழகான தொகுப்பாக்கி நமக்கு அனுப்பியிருக்கிறார் ! "///
ReplyDeleteவேறு லெவல் ATR sir நீங்கள்...💐💐💐💐💐
அசாதாரணமான பணி....வாழ்த்துகள்!
என்ன சொல்லி பாரட்டுவது என்றே தெரியலை...எழுந்து நின்று கை தட்டுகிறேன்....!!!
1. மேக்ஸி சைசில் லக்கி தொடரலாம் எ. எ. க.
ReplyDelete2. பழய பாண்ட் 120 காராக இருக்கலாம். முடிந்தால் ஒரே இதழில்ஒற்றைக்கு பதிலாக இரட்டை ஆல்பங்கள். பழய பாண்ட் நண்பர்கள் ரசித்தால் மட்டுமே (பழய பாண்ட் எனக்கு அவ்வளவா சுகப்படலை).
3. மிக்க நன்றி ATR சார். முன்னே போல் பழய உற்சாகத்துடன் மீண்டு(ம்) வர பிரார்த்தனைகள்.
Maxi suits lucky more than TeX .. So let lucky come in maxi sir ..
ReplyDeleteOld 007 can continue in current format.. Its not that bad sir ..
Hi..
ReplyDeleteசார்ப்ரூனோப்ரேசில்2. Oவிரைவில் ப்ளீஸ். கரூர் ராஜ சேகரன்
ReplyDelete+1000
DeleteMaxi lion சைஸ் நிறைய பேருக்கு அவ்வளவு பிடித்தமானதாக இல்லை சார் வழக்கமாக வெளிவரும் 90 ரூபாய் சைஸை அடுக்குவதற்கு உகந்த சைஸாக உள்ளது ஆனால் மாக்ஸி லயன் அட்டை வளைந்து நெளிந்து பாதுகாப்பதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது! இதற்கு ஒரே வழி டெக்ஸ் & லக்கிலுக் கதைகளை ஆல்பமாக தொகுத்து பைண்டிங் பண்ணித்தான் வைத்துக் கொள்ள வேண்டும்!
ReplyDeleteவிஜயன் சார், பதிவு எந்த சைசில் வந்தாலும் ரசிக்கும் படி உள்ளது. அதேநேரம் பின்னூட்டங்கள் குறைவாக தெரிந்தாலும் பார்வைகளின் எண்ணிக்கை எப்படி உள்ளது என கொஞ்சம் சொல்லுங்களேன்.
ReplyDeleteகோரோனாவிற்கு பின்னர் எல்லோரும் முன்னை விட வேகமாக ஓட ஆரம்பித்தது விட்டார்கள் என்பது தான் உண்மை. இங்கு பின்னூட்டம் இடவில்லை என்றாலும் படித்து கொண்டு தான் உள்ளோம். வார இறுதியை உற்சாக மூட்டுவது உங்களின் பதிவே.
என்னைப் போன்றவர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்தால் போதும் என்று சொல்லி விட்டார்கள். எனவே ஆபிஸ் செல்வது மாதம் ஒரு நாள் அல்லது வாரம் ஒரு நாள் என மாறிவிட்டது. எனவே நான்கு சுவற்றுக்குள் வேலை மற்றும் குடும்பம் என மாறிவிட்டது. உடன் வேலை பார்பவர்களிடம் வாய்ஸ் காலில் பேசுவது அவர்களை பார்ப்பது என்பது இப்போதைக்கு இல்லை. ஒன்றரை வருடமாக ஊருக்கு போகவில்லை. ஒரேயடியாக வாழ்கையில் சுவாரசியம் குறைந்தது போல் உள்ளது. அவ்வப்போது சுவாரசியம் தொற்றிக் கொள்வது உங்கள் பதிவுகள் மற்றும் மாதம் தவறாமல் வரும் நமது புத்தகங்கள்.
இதுதான் பலரின் இன்றைய நிலைமை.
அதேபோல் நீங்கள் பதிவு போட்ட பின் அவ்வப்போது இங்கே தலை காட்டுங்கள். அது எங்களை போன்றவர்களுக்கு மேலும் உற்சாகம் கொள்ள செய்யும் சங்கதி.
சிலகாலம் முன்னர் இங்கே அடிக்கடி ஏதாவது ஒரு கருத்து சண்டைகள் ஏற்படும் (ஒரு சமயம் இந்த பதிவு தளத்தை நோட்டீஸ் போர்டாக மாற்றி விடலாம் என்று கூட நீங்கள் நினைத்தீர்கள்) இப்போது அவ்வாறு இல்லை முடிந்தவரை அது போன்ற பின்னூட்டங்களை கடந்து செல்ல பழகிவிட்டார்கள்.
அதனால் நீங்கள் இளநீர் கடை சர்பத் கடை மோர் பந்தல் போல மாற்றலாமா என யோசிக்க வேண்டாம். எப்போதும் போல் உங்கள் மனதில் தோன்றுவதை எழுதுங்கள். நாங்கள் தினமும் பத்துமுறை வருகிறோம் உங்கள் பதிவையும் நண்பர்கள் பலரின் பின்னூட்டத்தை தொடர்ந்து படிக்கிறோம்.
சார் - என் பதிவு ஒரு பக்கமெனில், இங்கே பதிவாகிடும் உங்களின் அலசல்கள் ; அரட்டைகள் இன்னொரு பக்கம் ! சமீபமாய் அவை குறைந்து போனதே இங்கு நிலவும் தொய்வுக்குக் காரணம் ! அதன் காரணம் - மாறிப் போயிருக்கும் இன்றைய வாழ்க்கைமுறைகளே எனும் போது அதற்கேற்ப நாமும் கொஞ்சமேனும் மாற்றிக்கொள்ள வேண்டும் தானே ?
Deleteவாசிப்பே மெயின் பிக்சர் ; இதெல்லாம் சும்மாக்காச்சும் ஓடும் விளம்பரங்கள் எனும் போது - தொய்வு வாசிப்பினில் குடி கொள்ளாது பார்த்திடுவதே முக்கியம் என்று படுகிறது சார் !
@ PfB
Delete+1000000000000000000000000
அதாவது, நீங்க இதுவரைக்கும் போட்ட பின்னூட்டங்கள்லயே இதான் பெஸ்ட்!! எல்லோரது சார்பிலும் சூழ்நிலையை தெளிவாக விளக்கிவிட்டீர்கள் - சபாஷ்!!!
சூப்பர்ல பரணி...
Deleteசார் வாசிப்பும்....
அதற்கான இந்த சுவாசிப்பும் அவசியமே
மிக அருமையான கருத்துக்கள் பரணி சார்.அனைத்தும் உண்மையே.விரைவில் தேக்க நிலை மாறும்.
Delete// அதாவது, நீங்க இதுவரைக்கும் போட்ட பின்னூட்டங்கள்லயே இதான் பெஸ்ட்!! //
Deleteநீங்கள் இப்படி சொல்வது இரண்டாவது முறை விஜய் :-) 🏃🏃🏃🏃
PfB யின் கருத்துகளே எனதும்...
Deleteவணக்கம் ஆசிரியர் அவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் தற்பொழுது லயனில் வெளிவரும் ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் வசனங்கள் அதிக அளவு உள்ளது அதை முடிந்தால் குறைக்க வாய்ப்பு இருந்தால் நன்றாக இருக்கும் நன்றி
ReplyDeleteவணக்கம் சரண்
Deleteவணக்கம் அண்ணா
Deleteமுத்து காமிக்ஸில் வெளிவந்த ஒரு வீரனின் கதை மறுபதிப்பாக வெளி வர வாய்ப்பு உள்ளதா எடிட்டர் சார் நன்றி
ReplyDeleteமறுபதிப்புகளில் இப்போதெல்லாம் மாயாவியே தடுமாறுகிறார் நண்பரே ; இதர கதைகளை முயற்சிப்பது வம்பை விலைக்கு வாங்கும் முயற்சியாகிடும் ! Sorry sir !
Deleteபதில் அளித்ததற்கு மிகவும் நன்றி சார்சமீபத்தில் என்னுடைய பெரும்பாலான காமிக்ஸ் புத்தகங்கள்எலிகளால் அழிந்துவிட்டதுஅதில் முத்து காமிக்ஸில் வந்த ஒரு வீரனின் கதையும் ஒன்றுஅதனால்தான் கேட்டேன் மேலும் இக்கதை மிகவும் என்னுடைய மனதை பாதித்த கதைநன்றி சார்
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete65th
ReplyDeleteஅடேங்கப்பா ரொம்ப சீக்கிரமாகவே பதிவு
ReplyDelete007 க/வெ பொஸ்தவம் நார்மல் சைசில் வர வாய்ப்புள்ளதா டியர் எடி ..??
ReplyDeleteராணி காமிக்ஸ் ல் சிறிய அளவில் படித்தே பழக்கப்பட்டு போனதின் விளைவாக அவ்வாறே படிக்க மனம் விரும்புகிறது .. பிக் சைஸ் கலர்க்கு பொருத்தமாக இருக்குமென்பது என் ஐயம் ..
எது எப்படியோ - இதோ ஒரு வருஷத்துக்கே முன்னமே நமது அமெரிக்க ஓவியையின் கைவண்ணத்தில் உருவான டிசைனில் போன ஜூன் மாதமே அச்சாகிய அட்டைப்பட first look ! "ஆங்...நெத்தியில ஜேம்ஸுக்கு சுருள் முடி இல்லியா ?" என்று முறைக்கும் நண்பர்கள் ரெண்டே ரூபாய்க்கொரு ஸ்கெட்ச் பேனாவை வாங்கினால் பிரச்னை தீர்ந்திடும் !
ReplyDeleteஹா ஹா ஹா ஹா 😂😂😂
மறுபதிப்பு கதைகளை ஒரு சில வருடங்களுக்கு நிறுத்தி விட்டு அந்த இடங்களில் புதிய கதைகளை கொடுங்கள் சார் ஒரு மாற்றமாக இருக்கும்.
ReplyDelete//மறுபதிப்பு கதைகளை ஒரு சில வருடங்களுக்கு நிறுத்தி விட்டு அந்த இடங்களில் புதிய கதைகளை கொடுங்கள் சார் ஒரு மாற்றமாக இருக்கும்.//
Delete+1000 ...
ஜேம்ஸ்பாண்டு அட்டைப் படம் - அபாரம்!! அமெரிக்க ஓவியை அபாரமாக வரைந்திருக்கிறார்! கலரிங்கிலும் அனல் பறக்கிறது!
ReplyDeleteசிறு குறை : துப்பாக்கியை கையில் பிடித்தபடி ஒயிலாக நிற்கும் பெண் இடம்பெறாதிருப்பது 'நிஜமாகவே ஜேம்ஸ்பாண்டு கதைதானா?!!' என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது!
லக்கி லூக் பெரிய சைசில் தொடரட்டும் சார்...
ReplyDeleteசென்னைபுத்தகதிருவிழா..! தங்கள் வருகை..! தகவல் தந்தால் டிக்கெட் போட ஏதுவாக இருக்கும் சார்...
ReplyDeleteஸ்டால் கிடைக்கட்டும் சாமீ முதலில் !
Deleteஎப்படி என்றாலும் நீங்கள் பைக்கில் தானே போவீங்க பழனி :-)
Deleteஆத்தாடி இஞ்ஜின் பீஸ் ஆகிடும் தலைவரே...!!
Deleteஸ்டால் கிடைக்கட்டும் சாமீ முதலில் !//
Deleteநமக்கு இல்லாம யாருக்கு கிடைக்கும் சார்..
007 I20 யிலேயே வலம் வரட்டும் ஆசிரியரே
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபத்து வருடங்களாக இந்த ப்ளாக் படித்தாலும், வாராவாரம் அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பேன். எனவே, இதை மொக்கை என சொல்வதை ஏற்க முடியவில்லை
ReplyDeleteசமீபமாக இங்கே நிலவிடும் நிசப்தம் ரொம்பவே உரக்க சேதி சொல்லுவதாகப் பட்டது சார் எனக்கு !
Deleteவாரா வாரம் உங்கள் பதிவுகள் படித்துத் தான் மனதை லேசாக்கிக் கொள்கின்றேன் ஆசிரியர் சார்.தொடர்ந்து கலக்குங்கள் ஆசானே.உங்கள் பதிவுகள் எனக்கு அலுக்கவே இல்லை.
ReplyDeleteநன்றிகள் சார் :-))
Deleteலயன் Maxi - பெரிய கலர்புள் ஆன சித்திரங்களுடன், என்னை மாதிரி வளர்ந்த குழந்தைகளுக்கு படிக்க ஏதுவானது சார். அப்படியே தொடரலாம் சார்.
ReplyDeleteகெளபாய் எக்ஸ்பிரஸ் - பெரிய கலரான சித்திரங்களுடன் லக்கியை தரிசிக்க காத்துள்ளேன்.
“டாக்டர் நோ” இனை தங்களின் மொழிநடையில் காண ஆவல். அதற்கு சாட்சி - உட்பக்க வெள்ளோட்டம்
ஞாயிற்றுக்கிழமை தங்களின் பதிவுடன்தான் எங்கள் பொழுது கழியும். அதைப் குறைக்கவோ கைவைக்கவோ வேண்டாம் சார்! எமது வெளியீடுகள் பாதி என்றால், இந்த தளத்திற்கும், தங்களின் எழுத்து நடைக்கும் நான் ரசிகன் சார்.
2020 -ன் புக்ஸ் கிட்டி விட்டனவா சார் ?
Deleteஆமாம் சார். அவர் கடந்த பதிவில் மா துஜே சலாம் விமர்சனம் எழுதி இருந்தார். :-)
Deleteஜூன்-நவம்பர் மாத இதழ்கள் வந்து விட்டன சார். பெரும்பொழுது அவற்றுடன்தான் கழிகின்றது. நண்பர் பரணி கூறியது போன்று மா துஜே சலாம் இதழ் வேற லெவல் சார். இன்றும் அதன் தாக்கம் தீரவில்லை சார். படைப்பாளிக்கும், அப்பட்டமாக மொழிபெயர்த்து வழங்கிய தங்களுக்கும் ராயல் சலூட் சார். அதுவும் அந்த பொஸ்பரஸ் குண்டு மழை. சான்சே இல்லை. அப்பட்டமாக வன்னி களம்தான். எல்லா இதழ்களையும் முடித்த பின் கட்டாயம் மறுவாசிப்புக்கு உட்படுத்துவேன்.
Delete97th.
ReplyDeleteகாமிக்ஸ் படிப்பது எவ்வளவு விருப்பமோ அதுபோல தஙகள் பதிவும் விரும்பி வாசிக்கும் ரசிகன்
ReplyDeleteஇரண்டுக்கும் நன்றிகள் நண்பரே !
DeleteMaxi size தொடரலாம். பதிவை குறைக்கவோ, சுருக்கவோ, நிறுத்திடவோ வேண்டாம் சார். வார இறுதியில் மிகவும் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteநேரமின்மை இன்றைக்கு அநேகருக்கொரு பெரும் பிரச்சனையாக தலையெடுத்து வரும் சூழல்களில் காலங்களுக்கேற்ற சிறு மாற்றம் அவசியமாகிடக் கூடும் ! Anyways பார்க்கலாம் சார் !
Deleteஅந்த வாரம் பதிவிடும் இதழ்களின் அட்டைப் படத்தை மட்டும் பதிவில் போட்டுவிட்டு அவ்வப்போது பதிவுகளுக்கு இடையே டிரெய்லர் பக்கங்களின் டீஸர்களை வெளியிட்டு இரத்தினச் சுருக்கமாக சில வரிகளை இடையே நுழைத்தால் ஏதேனும் சுவராஸ்யம் கூடுமா சார்...
Deleteமினி டெக்ஸ் நான் படித்து விட்டேன்.
ReplyDeleteஅடடே...!!!
Delete// அவரது 2.0 அவதார் தெறிக்க விடுகிறது ! அதனை முயற்சிக்கலாம் தைரியமாய் ! //
ReplyDeleteசூப்பர். சர்ப்ரைஸாக இவரை வெளியிடுங்கள் சார்.
Black & white-ல் வெளியிடுவதா ? கலரா ? என்பதே எனது யோசனை சார் ! இரண்டிலுமே தெறிக்க விடுகின்றது !
Deleteகலர்லயே ஒரு முயற்சியை எடுப்போம்,வெற்றியையும்,வரவேற்பையும் பொறுத்து அடுத்தகட்ட முடிவு எடுப்போம் சார்...
Deleteஅதில் உள்ளதே ஒரேயொரு இரு பாக ஆல்பம் மாத்திரமே சார் !
Deleteஅட அப்படியா சார்,அப்ப ரெண்டு பாகத்தையும் ஒரே முட்டா படிச்சிடுவோம்...
Delete// அதில் உள்ளதே ஒரேயொரு இரு பாக ஆல்பம் மாத்திரமே சார் ! //
Deleteபோட்டு தாக்குங்கல் உடனே. மூளை பட்ஜெட்டை மனதில் வைத்து கருப்பு வெள்ளை என்றாலும் மனது ப்ரூனோவை வண்ணத்தில் இதுவரை தரிசனம் செய்யாததால் வண்ணம் வண்ணம் என கூவுகிறது. எனவே வண்ணத்தில் ப்ளீஸ்.
பரணி
Deleteசாக மறந்த சுறா
மறந்து விட்டதா
முகமற்ற கண்கள்
மறந்து விட்டதா.????
2.0 நன்றாக இருக்கிறது என ஆசிரியர் சொல்லி உள்ளார். எனவே அது கண்டிப்பாக நன்றாக இருக்கும் கணேஷ்.
Deleteஅப்புறம் நீங்கள் சொன்ன கதைகளை படித்தும் மறந்து விட்டேன் கணேஷ் :-)
டியர் எடி,
ReplyDeleteமேக்ஸி தொடரலாம் என்பதே என்னுடைய அவாவும்... ஆனால் சேகரிப்பது பத்திரபடுத்துவது போன்ற சமாச்சாரங்களில் அங்கே ஒரு பெரிய ப்ரேக்டவுன் தான். விற்பனை நிலவரங்களை பொறுத்து, குறைவான குறிபிட்ட கிளாசிக் இதழ்கள் மட்டும் என்று தொடரலாம்.
ஆனால், கண்டிப்பாக தொடர வேண்டியது, சின்ன விலை பெரிய சைஸ் பாண்ட், மாடஸ்தி, ரிப்கிர்பி கிளாசிக் இதழ்களை தான். கொரோனா நிலவரம் சரியான பிறகு, சில்லறையாக பத்திரிக்கை கடைகளிலும், புத்தக கண்காட்சிகளில் பண்டிலாகவும் இவை சாதிக்கும் எனவும், நேர்கோட்டு கதைகள் புதிய வாசகர்களை நம் பக்கம் ஈர்க்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை அதிகம். எனவே கண்டிப்பாக தொடருங்கள்.
பதிவு எண்ணிக்கை பொறுத்த வரை, பதிவுகளை முழுவதும் படிக்க எனக்கு நேரம் கிடைப்பதில்லை. Reading between Paragraphs என்பதே என்னுடைய தற்போதைய New Normal. எனக்கே இப்படியென்றால், உங்கள் நேரம் இன்னும் உக்கிரமாக இருக்கும். எனவே பதிவுகளை crisp ஆக எழுதுவதில் எனக்கு டபுள் ஓகே.
//கொரோனா நிலவரம் சரியான பிறகு, சில்லறையாக பத்திரிக்கை கடைகளிலும், புத்தக கண்காட்சிகளில் பண்டிலாகவும் இவை சாதிக்கும் எனவும், நேர்கோட்டு கதைகள் புதிய வாசகர்களை நம் பக்கம் ஈர்க்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை அதிகம்//
Delete+1
சென்னையில் இடம் கிடைத்தால் இப்போதே கூட இதுகுறித்தொரு hint கிடைக்கக் கூடும் நமக்கு ! இந்த format -ல் 11 புக்ஸ் உள்ளன எனும் போது பார்க்கலாம் சார் !
// ஆனால் புக்சில் அயர்ச்சி எட்டிப் பார்த்து விட்டால், அது பெரும் சிக்கலன்றோ ? //
ReplyDeleteஅதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை சார்,இங்கே வந்து பதிவு போடலைன்னாலும் அவ்வப்போது எட்டிப் பார்த்துகிட்டுதான் இருக்கோம்...
கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மதிப்புமிக்க நம் இதழ்களுக்கு கண்டிப்பாக நேரம் ஒதுக்குவோம் சார்,பணிப்பளுவின் அயற்சியைப் போக்க அதைவிட்டால் நமக்கு வேறு கதி என்ன,இதயத்திற்கு நெருக்கமான நம் இதழ்களுக்கு நேரத்தை ஒதுக்காமல் விட்டுவிட முடியாதே....
சமீபத்தில் கிடைத்த நேரங்களில் சர்வமும் நானே,லயன் மேக்னம் ஸ்பெஷல்,சிகப்பாய் ஒரு சொப்பனம்,பூத வேட்டை,டெக்ஸ் 70,தீபாவளி வித் டெக்ஸ்-எமனின் வாசலில்,டைனோசரின் பாதையில்,ஸ்மர்ப்ஸின் சில இதழ்கள்னு முடிச்சிட்டு இப்ப லக்கி ஸ்பெஷல்-1 வாசிப்பில் போய்கிட்டு இருக்கு சார்...
சில வருடத்துக்கு முந்தைய இதழ்களை புரட்டும்போது அந்த இதழ்களுடன் சேர்ந்து நண்பர்களுடனான இனிய நினைவுகளும் புரளுகின்றன சார்,அவற்றை சற்றே அசைபோட்டு விட்டு அடுத்து இதழ்களைத்தான் புரட்டுவேன்....
நம் இதழ்கள் கதைகளை மட்டுமல்ல,இனிய நினைவுகளையும் சுமந்து கொண்டு உள்ளன...
//சில வருடத்துக்கு முந்தைய இதழ்களை புரட்டும்போது அந்த இதழ்களுடன் சேர்ந்து நண்பர்களுடனான இனிய நினைவுகளும் புரளுகின்றன சார்,அவற்றை சற்றே அசைபோட்டு விட்டு அடுத்து இதழ்களைத்தான் புரட்டுவேன்....
Deleteநம் இதழ்கள் கதைகளை மட்டுமல்ல,இனிய நினைவுகளையும் சுமந்து கொண்டு உள்ளன...//
சூப்பர் சார் !!
//////சில வருடத்துக்கு முந்தைய இதழ்களை புரட்டும்போது அந்த இதழ்களுடன் சேர்ந்து நண்பர்களுடனான இனிய நினைவுகளும் புரளுகின்றன சார்,அவற்றை சற்றே அசைபோட்டு விட்டு அடுத்து இதழ்களைத்தான் புரட்டுவேன்....
Deleteநம் இதழ்கள் கதைகளை மட்டுமல்ல,இனிய நினைவுகளையும் சுமந்து கொண்டு உள்ளன...//
---- ப்ளஸ்ஸோ ப்ளஸ்கள்...
ஒரு வருடமாக வீடு...கடை..வீடு..கடைனு செக்குமாடு் வாழ்க்கை ஆகிட்டது. இப்படியே தொடர்ந்தா விரைவில் சட்டையை கிழித்து கொள்வது உறுதி....!!
அவ்வப்போது மனசு தொய்ந்து கிடக்கும் போது புத்தகவிழா போட்டோக்களை ஒரு ரவுண்ட் பார்த்தா,
நாம அடிச்ச லூட்டிகள், ஆட்டங்கள், சுற்றிய நினைவுகள், கொண்டாட்டங்கள் என மனசு ரிலாக்ஸ் ஆகி ஒரு தெம்புவரும்.
பழைய நினைவுகள் என்றும் உற்சாக டானிக்தான். அந்த நினைவுகளை மீட்டும் இதழ்கள் என்றென்றும் பொக்கிஷம்!!!
107th
ReplyDelete// சொல்லப் போனால், இத்தினி காலத்துக்கு இந்தமட்டுக்கு வண்டி ஓடியதே தெய்வச் செயல் தானென்பேன் ! Of course - பகிர்ந்திட நிறைய சேதிகள் உள்ள வேளைகளில் எப்போதும் போலான அந்த இராமாயண பாணியை கைவிட மாட்டேன் //
ReplyDeleteஎனது தனிப்பட்ட கருத்து என்னவெனில்,உண்மையில் அனுபவங்கள் மகத்தானவை,அவற்றின் மதிப்பு அளவிட முடியாததது,உங்களுடைய அனுபவங்களை சொல்லும்போது நீங்கள் மட்டும் அங்கே இல்லை,உங்களுடன் சமயங்களில் நானுமே பயணிப்பதான உணர்வு ஏற்பட்டுள்ளது சார்,அதே நேரத்தில் அனுபவங்களின் பகிர்வில் நாம் கற்றுக் கொள்ள ஏதேனும் ஒரு செய்தியும் கண்டிப்பாக இருக்கும்...
இது எனது அனுபவத்தில் நான் கண்டறிந்த உண்மை...
+1....
Deleteமாதம் ஒரு பதிவு தங்களது பயண அனுபவங்கள், காமிக்ஸ் சார்ந்த சுவாரஸ்யங்கள் என விவரிக்கலாம் சார்.
மொத்தத்தில் வாரம் ஒரு பதிவு, சிங்கத்தின் சிறு வயதுக்கு ஒதுக்குங்கள்...!!!
// இடம் கிடைக்க ஒரு விரலையும், இடம் கிடைத்தால் விற்பனை சிறக்க இன்னொரு விரலையும் cross செய்தபடிக்கே பொழுதுகளை ஓட்டிடுவோம் ! //
ReplyDeleteசென்னையில் நமது விற்பனை சிறக்கவும்,தங்களின் சுமைகள் குறையவும் மனமார்ந்த வாழ்த்துகள் சார்.....
// நண்பர் ATR அவர்கள் "இரத்தப் படலம்" வண்ண தொகுப்பின் மறுபதிப்பின் போது செய்திட வேண்டிய எழுத்துப் பிழைத் திருத்தங்களை ஒரு அழகான தொகுப்பாக்கி நமக்கு அனுப்பியிருக்கிறார் ! //
ReplyDeleteவாழ்த்துகள் ATR சார்...
// டிடெக்டிவ் ஸ்பெஷல் பணிகளை முடித்து விட்டால் - அப்பாலிக்கா 2021 சந்தாவினுள் புகுந்திடத் தயாராகி விடுவேன் !! //
ReplyDeleteஅப்ப பிப்ரவரியில் மார்ச்சை எதிர்பார்க்கலாம்...
வாரக் கடைசியை சுவராஸ்யமாக்குங்கள் சார்...
// Filler pages-களில் என்ன நுழைக்கலாமென்று உங்கள் பங்குக்கு ஏதேனும் suggestions folks ? //
ReplyDeleteநம் வாசகர்களின் கடிதம் பக்கம் சில மாதங்களாய் வருவதில்லை போல சார்...!!!
ஆமா...கடிதங்களை காணல????? கம்பளைன்ட் கொடுத்தாச்சி!
Deleteஎடிட்டர் சார், பதிவுகளை குறைத்து விடாதீர்கள்.ஞாயிறு காலை எங்கள் பொழுதே அதோடுதான்.அதுவும் புத்தகங்கள் தேட நீங்கள் வெளிநாட்டில் அலைந்த அனுபவங்கள் இன்னமும் ரசிக்க முடிகிறது.எனவே தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDelete////On to serious stuff - இதோ 2020 அட்டவணையினில் MAXI லயனின் இறுதி இதழின் preview ! யார் கண்டது - MAXI சைசிலுமே இதுவே கூட இறுதி இதழோ - என்னவோ ? 'சேகரிப்புக்கு இது ரசிக்கலை ' - என்ற ரீதியிலான புகார்கள் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதால் - ////
ReplyDeleteநிசம்தான் சார்....
மேக்ஸி சைஸ் நம்மை பொறுத்து தற்போதய சூழலில் ஒத்தி வைப்போம்.
ஆர்ச்சி கதையில் வந்த முழு பக்க ஓவியங்கள் ரசிக்க வைத்தது.
ஆனா டெக்ஸிலோ, லக்கியிலோ இருக்கும் அப்படி இல்லை.
தற்போதைய பட்ஜெட்டில் இது விலையும் அதிகம்! சேகரிக்கவும் சிரமம்... ஒவ்வொரு தடவை எடுத்து படித்துட்டு மீண்டும் வைப்பதற்குள் எங்காவது கசங்கிடுது.
எனவே இந்த இதழோடு மேக்ஸிக்கு டாட்டா காட்டுவோம் என்பதற்கே என் ஓட்டு...
பை..பை..மேக்ஸி!
// ஆர்ச்சி கதையில் வந்த முழு பக்க ஓவியங்கள் ரசிக்க வைத்தது.
Deleteஆனா டெக்ஸிலோ, லக்கியிலோ இருக்கும் அப்படி இல்லை. //
Point. Thank for realising this.
///The New Normal Blogging !! 😀😀////
ReplyDeleteஅருமையான ஐடியா சார். வரவேற்கிறேன்.
ப்ளாக் ஆரம்பித்து வரும் நவம்பரில் 10 ஆண்டுகள் பூர்த்தி ஆகப்போகிறது.
"மாற்றம் ஒன்றே மாறாதது"---என தாங்கள் அவ்வப்போது சொல்வீர்கள்.
தளத்திலும் தங்களது பிரசன்டேசனில் ஒரு மாற்றம் காலத்தின் கட்டாயம்.
சார்ட் அன்ட் சுவீட்....க்ரிஸ்ப் பதிவுகள் பலரையும் கவரும்.
பர்சனலி எனக்கும் விரிவாக விலாவரியாக சும்மா அ முதல் ஃ வரை சொல்லும் தங்களது பாணியே பிடிக்கும்... ஆனா பெரும்பாலான ரசிகர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதே முக்கியம்.
சோ, ஒபாமா ஸ்டைலை கொஞ்சம் கடன் வாங்குவோம்..
""""""We need a change"""""
///ஆனால் புக்சில் அயர்ச்சி எட்டிப் பார்த்து விட்டால், அது பெரும் சிக்கலன்றோ ?///
ReplyDelete--- எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அம்மாவின் சமையல் சலிக்காது சார்.!
சில வேளைகளில் உப்பு, உரைப்போ கொஞ்சம் கூடவோ குறையவோ இருக்கலாம். ஆனா எங்கள் ரசனையை 30ஆண்டுகளாக வார்த்தெடுத்த தங்களது இதழ்களில் அயர்ச்சி என்பதே கிடையாது....,
"""" அன்றும்...இன்றும்....என்றும்"""
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அம்மாவின் சமையல் சலிக்காது சார்.!
Deleteசத்தியம்
சென்னை புத்தகக் திருவிழாவில் நமக்கு இடம் கிடைத்து புத்தக விற்பனை சிறப்பாக நடந்தது 2021 சந்தா ரயிலுக்கு தேவையான எரிபொருளாக மாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDelete////ஏப்ரல் முதலாய் சின்னச் சின்னதாய் சுவாரஸ்யமூட்டக்கூடிய பக்கங்களை நுழைக்க இப்போதிலிருந்தே ரோசனைகள் ஓடி வருகின்றன ! ///----
ReplyDeleteஅருமை...இது இது இதைத்தான் எதிர்பார்த்தோம் சார்.
"ஹாட்லைன்,
வருகிறது விளம்பரங்கள்,
அடுத்த இதழ்கள்,
வாசகர் கடிதங்கள்..."
என 40 ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்!
கதையை தாண்டி இந்த 4 பகுதிகள் எப்போதும் முதலில் பார்ப்பவை.
இதே வரிசையில் அடுத்து எது இடம்பெறும் என காண ஆவலுடன் வெயிட்டிங்....!!!
கதை சொல்லும் படங்களோ???
சிங்கத்தின் சிறுவயதோ???
---போல எதுவந்தாலும் சக்ஸஸ் தான்!!!
Keep it short and sweet KISS இது அனைத்து பதிவுகளுக்கும் பொருந்தும்
ReplyDeleteபதிவு எந்த சைசில் வந்தாலும் ரசிக்கும் படி உள்ளது. ஆனால் வாரம் தவறாமல் பதிவு கண்டிப்பாக வேண்டும். அதன் அளவு உங்கள் விருப்பம் போல் இருக்கட்டும் சார்.
ReplyDeleteபதிவு எப்போதும் Maxi size போன்று பெரிதாக இருந்தால் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Delete//என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த மெகா சைசில், வண்ணத்தில் இதழ்களை ரசிப்பதென்பதொரு ரம்ய அனுபவமே///
ReplyDeleteஎனக்கும் Maxi size ரொம்ப பிடித்த விஷயம். வருடம் ஒருமுறை யாவது வரட்டுமே சார்.
சேமிப்பில் Maxi size இல்லாமல் போவது ஒரு குறையாக தெரியாதா?
/// So "சின்ன விலையில் - பெரிய புக்ஸ்" என்ற பரீட்சார்த்தத்தின் கடைசி அத்தியாயமிது ! Hope you like it guys !!//
ReplyDelete----நல்லாத்தானே போயிட்டு இருக்கு இது... இப்படியே தொடரட்டும் சார்.
அதுவும் இம்மாத "கம்பி நீட்டிய குருவி"--- கதையென்னவோ ரொம்பவே சிம்பிளனாலும் அந்த பெரிய எழுத்துக்கள் படிக்க ரொம்பவும் பிடித்திருந்தன.... 40களில் இருக்கும் எங்கள் கண்களுக்கு இது ஏற்றது.
இன்னும் கூட இந்த சைஸ் இதழ்களை படிப்படியாக அதிகப்படுத்தலாம் சார்.
நீஈஈஈஈஈண்ட கதைகளை இதே பாணியில் ரசிக்க கொள்ளை ஆசை....
குறிப்பு:- ஒரு பக்கம் மைனஸ், ஒரு பக்கம் ப்ளஸ் குறைபாட்டை சரிசெய்ய உதவும்
கண்ணாடி அணியாமலே படிக்க முடிஞ்சதுனா பார்த்துக்கோங்களேன்...!!!!
///இடம் கிடைக்க ஒரு விரலையும், இடம் கிடைத்தால் விற்பனை சிறக்க இன்னொரு விரலையும் cross செய்தபடிக்கே பொழுதுகளை ஓட்டிடுவோம் ! ///
ReplyDelete--- புனித மணிடோவின் அருள் நிச்சயமாக கிட்டும் சார். நல்லபடியாக விற்பனை சிறக்க முன்கூட்டியே வாழ்த்துகள்.
//// ! டிடெக்டிவ் ஸ்பெஷல் பணிகளை முடித்து விட்டால் - அப்பாலிக்கா 2021 சந்தாவினுள் புகுந்திடத் தயாராகி விடுவேன் !///
ReplyDelete"மார்ச்சில் மார்ச்" னு சொல்லாம
"பிப்ரவரியில் மார்ச்"--னு சொல்லும் தங்களது பதிவை எதிர்நோக்கி....!!!
அப்புறம் அந்த டிடெக்டிவ் ஸ்பெசல், ரொம்பவும் எதிர்பார்க்கும் இதழ்.
நாங்கள்லாம் சின்ன வயசுல அந்த நரேந்திரன், விவேக் துப்பறிஞ்சி கொலைகாரர்களை அமுக்கும் கதைகளை தேடி தேடி படித்து இருக்கோம்...இப்பவும் டிடெக்டிவ் னா ஒரு கிக்.....!!!
எடிட்டர் அவர்களுக்கு,
ReplyDeleteசார் உங்கள் பதிவுகள்தான் எங்களுக்கு வாராவாரம் உற்சாகமூட்டும் எனர்ஜி டானிக். அதனால், அவற்றிலே கைவைத்துவிடாதீர்கள். சிறிய பதிவாக எழுத நினைத்தால், வாரம் இரண்டு பதிவுகள் என்றும் பெரிய பதிவாயின் ஒன்று என்றும் வைத்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்.
Editor Sir,
DeleteOn a re-think I second this. Your fans South of Indian Ocean definitely consider this as a weekly energizer. Even if they are tens in number it is worth writing for them weekly - your usual length articles !
முதலில் ஏடிஆர் சார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்...விரைவில் வழக்கம் போல் இங்கே அட்டகாசப்படுத்த மனமார்ந்த வேண்டுதல்கள்..விரைவில் வாருங்கள் ஏடிஆர் சார்..
ReplyDelete*********
மேக்ஸி சைஸ் இதழ் ஓகே தான் என்றாலும் அது ஒரே கதையாக இருப்பதால் பக்கம் குறைவாக இருப்பது போல் ஓர் எண்ணம் தோன்றுகிறது..மேக்ஸி சைஸா ,சரியான சைஸோ இரண்டு கதைகளாக வெளிவந்தால் சிறப்பாக இருக்கும் சார்..அதிக பக்கம் கொண்ட இதழ்கள் எந்த அளவில் இருந்தாலும் குண்டாக இருந்தாலே அதன் மகிழ்ச்சியே தனிதான் சார்...
******
007 கதைகளை பொறுத்தவரை பெரிய அளவை விட வழக்கமான டெக்ஸ் அளவில் வந்தால் சிறப்பாக இருக்கும் சார்...அதனை மட்டும் மாற்றிட முயற்சி செய்யுங்கள் சார்..
******
பதிவுகளில் தலைகாட்டா நண்பர்கள் பதுங்கு குழியிலேயே இருந்தாலும் இங்கே எட்டிப்பார்க்கவோ ,நண்பர்களின் பதிவுகளை படித்து வருவதிலோ எந்த மாற்றுக்கருத்தும் இல்லை சார்..
ReplyDeleteஎன்ன இங்கே நண்பர்களின் பங்களிப்பு குறைவது வேண்டுமானால் உண்மை தான் சார்...மேலே நண்பர் பெ.பரணி அவர்கள் சொன்னது போல் இப்பொழுது பல காரணங்கள்..ஆனால் எத்தனை காரணங்கள் இருந்தாலும் நண்பர்களுக்கு சனி இரவோ, ஞாயிறு பகலோ இங்கே தலை காட்டினால் தான் அவ்வளவு மகிழ்ச்சி சார்..எனவே வழக்கம் போல் தங்கள் பதிவுகள் தலை காட்ட வேண்டுகிறேன் சார்..
வணக்கம் எடிட்டர் சார்..
ReplyDeleteடெக்ஸ் வில்லர் மேக்சி சைசில் விளங்காமல் போனதற்குக் காரணம் அந்த சின்ன சின்ன பேனல்களே..!
ரூ.150 விலைக்குள் அதை கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நிர்ணயிக்கப்பட்ட பக்கங்களுக்குள் பேனல்களைத் திணித்தததே பிரச்சினையாகிப் போனது.சைஸ் மேக்சி எனும் போது படங்களும் மேக்சியாக இருந்தால்தான் அந்த இதழ் சிறப்பு பெறும்.தலை வாங்கிக் குரங்கில் ஒரு பக்கத்திற்கு கிட்டத்தட்ட 15 கட்டங்கள்.
டெக்ஸ் மேக்சியில் ஜொலிக்காமல் போதற்கு இது ஒரு காரணமாகவும் இருக்கலாம்.
கார்சனின் கடந்த காலம் வண்ண மறுபதிப்பும் கொஞ்சம் ஏமாற்றம் அளித்த இதழ் எனவும் சொல்லலாம்.அந்த இதழிலும் பேனல்களை சுருக்கியதால் ஓவியங்கள் அகலவாக்கில் இருப்பதைப் போன்ற தோற்றத்தை தந்திருக்கும்.
பக்கங்களை அதிகப்படுத்தி,பேனல்களைப் பெரிது படுத்தி,அதற்குண்டான விலையையும் நிர்ணயம் செய்தால் கண்டிப்பாய் டெக்ஸ் மேக்சியில் கெலிப்பார்.
இது எனனுடைய தனிப்பட்ட கருத்தேயாகும்.
மனதில் பட்டதை சொல்லியிருக்கிறேன்!
நண்பர்களுக்கும்,எடிட்டர் அவர்களுக்கும் மேலான நன்றிகளும்,வந்தனங்களும்!
சார் தாங்கள் மொத்தமாக வருட விளம்பரத்தை ஆரம்பத்திலியே சந்தா நண்பர்களுக்காக புத்தகமாகவே வெளியிட்டு வருவது மகிழ்வான ஒன்று தான் எனினும் நமது ஆரம்ப கால இதழ்களில் இதழ் வந்த வுடன் வெகு ஆவலுடன் அடுத்த மாதம் எந்த நாயகர் கதை ,என்ன கதை என்ற ஆவலே கதையை விட அதிகமாக எதிர்பார்க்க வைக்கும் பில்லர் பேஜ்களில்..
ReplyDeleteவருட மொத்த விளம்பரங்கள் வெளிவருவதில் குறையோ ,பிரச்சனையோ இல்லையெனில் இனி மீண்டும் அந்த சஸ்பென்ஸ் பில்லர் பேஜ்களை ( மட்டும் ) கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் சார்..
அதே போல் இங்கே இணையத்தில் போட்டி வைப்பது போல் அல்லாமல் புத்தகத்திலும் ஏதாவது போட்டி வைத்தால் நன்றாக இருக்கும் ..
007 கதைகளை பொறுத்தவரை பெரிய அளவை விட வழக்கமான டெக்ஸ் அளவில் வந்தால் சிறப்பாக இருக்கும் சார்...அதனை மட்டும் மாற்றிட முயற்சி செய்யுங்கள் சார்..
ReplyDeleteநண்பர் பரணீதரன் அவர்களின் மேலான இந்தக் கருத்தை ஆமோதித்து வழி மொழிகிறேன்!
//// ! டிடெக்டிவ் ஸ்பெஷல் பணிகளை முடித்து விட்டால் - அப்பாலிக்கா 2021 சந்தாவினுள் புகுந்திடத் தயாராகி விடுவேன் !///
ReplyDeleteடிடெக்டிவ் ஸ்பெஷலுக்காக வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்..
இருளின் மைந்தர்கள் வண்ண மறுபதிப்பு இதழை ஹார்டு பவுண்டில் ஒரே இதழாக வெளியிட்டிருக்கலாம்.
ReplyDeleteஇங்கும் விலைதான் பிரதானமாக நிற்கும்.ஆனால் இது போன்ற சூப்பர் டூப்பர் இதழ்களுக்காக விலையை ஒரு பொருட்டாகவே நாங்கள் நானைக்க மாட்டோம் சார்.
பழசான தூக்கி எறியற சங்கதியா சார் இதெல்லாம்..?
காலா காலத்தும் கண்ணுல ஒத்தி,நெஞ்சுல நிறுத்தி,கட்டை காடு போனாலும் இதுகள கட்டி புடிச்சிகிட்டே செத்துப் போற பந்தம் இது..
அடுத்து மிக மிக மிக மிக மிக முக்கிய பதில் சார்....
ReplyDeleteஅந்த பில்லர் பேஜ்களில் கண்டிப்பாக இடம் பெற வேண்டியது
சிங்கத்தின் சிறு வயதில் ..
சிங்கத்தின் சிறு வயதில்...
சிங்கத்தின் சிறு வயதில்...
சிங்கத்தின் சிறு வயதில்....
என இன்னும் 108 முறை இணைத்து படித்துக்கொள்ளுங்கள் சார்...:-)
ஆமா...ஆமா....
Deleteநம்ம பங்குங்கு ஒரு,
சிங்கத்தின் சிறு வயதில் ..
சிங்கத்தின் சிறு வயதில்...
சிங்கத்தின் சிறு வயதில்...
சிங்கத்தின் சிறு வயதில்....
..............
..............
ஒரு 108 முறை!
இளம் தலயின் "சிங்கத்தின் சிறுவயதில்"ஸ்டாக் சுருக்கமா தான் இருக்கும் தலீவரே ; ஆளுக்கு 108 வாங்குனா sold out ன்னு போர்டு மாட்டிப்புடலாம் !
Deleteசிங்கத்தின் சிறு வயதில் வந்து விற்பனையில் சக்கை போடு போடுகிறதே தாரை பரணி :-) இன்னும் எதற்காக கொடி பிடித்து கொண்டு இருக்கிறீர்கள் :-)
Deleteஆளுக்கு 108.....
Deleteஅஸ்கு புஸ்கு....
ஆனால் புக்சில் அயர்ச்சி எட்டிப் பார்த்து விட்டால், அது பெரும் சிக்கலன்றோ...?!
ReplyDelete**********
எத்தனை வேலைகள் ,கடின சூழல்கள் இருப்பினும் மாதாமாதம் இதழ் வந்த இரண்டு நாளில் அந்த மாத இதழ்கள் அனைத்தும் வாசித்து விட்டு மீண்டும் அடுத்த மாத இதழ்கள் எப்பொழுது சார் என்று வினவிக்கொண்டு இருக்கும் எங்களை போன்றோர் இருக்கும் வரை காமிக்ஸ் புத்தகத்தில் அயர்ச்சி வராது சார்..
ப்ளஸ்ஸோ ப்ளஸ்...
Deleteதலீவரே....எதையுமே taken for granted என்று நான் எடுத்துக் கொள்ளப்படாது ! முன்ஜாக்கிரதை என்றைக்குமே மோசமாகிடாதல்லவா ?
DeleteI like maxi size, அது நமது காமிக்சிற்கு ஒரு பிரம்மாண்ட Look ஐ தருகிறது. Book stall and New readers இந்த Lookக்கே வாங்குவார்கள், தலையில்லா போராளியை மறக்க முடியுமா
ReplyDeleteஉலகத்திலேயே இத்தனை Size களில் Comics வெளியிட்ட நிறுவனம் நமது நிறுவனமாகத்தான் இருக்கும். Maxi size எந்த மாதிரியான கதைகளுக்கு பொறுத்தமாக இருக்கும் என்பதை Editor ன் அனுபவம் தீர்மானிக்கட்டும் But please don't quit maxi size for few readers sir
நம்மவர்களின் பெரும்பான்மை எதெதிலோ மாற்றங்களுக்கு ஜே போடுபவர்களே சார் ! கி.நா .க்கள் ; புது பாணிகள் என்று சகலத்தையும் சுலபமாய் ஏப்பம் விட்டு விடுவார்கள் தான் ! ஆனால் வெகு சில சமாச்சாரங்களில் அடிக்கப்பட்டது ஈயாகவே இருந்ததாலும் , அதனையே தொடர்ந்திடுவதில் தீவிரம் காட்டுவர் ! One such instance is this fixation with sizes !
Deleteமேக்ஸி ஆரம்பத்தில் இருந்து என்னை பெரிதாக கவரவில்லை. அந்த சைசில் ரசித்த கதைகள் ஒன்று ஆர்ச்சி மற்றொன்று தலையில்லாத போராளி.
Deleteசாரி. நோ மேக்ஸி. அந்த சைஸூக்கு ஏற்ற கதைகள்/சித்திரங்கள்/வண்ணம் அமைந்தால் மட்டும் மேக்ஸி சைசில். வெளியிடுங்கள் சார்.
தங்கத்தின் பாதையில் - பரோட்டா ப்ளஸ் மிளகு சிக்கன் மசாலா சாப்பிட்டது போல் சிறப்பாக இருந்தது.
ReplyDeleteசிறிய ட்வீஸ்ட் அதனை சுற்றி கதை அதில் டெக்ஸ் ப்ளஸ் ஆக்சன் என அட்டகாசம்.
//பரோட்டா ப்ளஸ் மிளகு சிக்கன் மசாலா//
Deleteஅடடே !!
தங்களின் பதிவு Mini Lion ஆகவும்,
ReplyDeleteபுத்தகம் Maxi Lion ஆகவும்
வருவது மட்டுமே விருப்பமாக இருக்கிறது ❤️
முறையான வாசிப்பு நின்று, ஆண்டுகள் ஐந்தோ ஆறோ ஆகின்றன! பிரிக்கப்படா பெட்டிகளின் எண்ணிக்கை, இடையே படித்த இதழ்களின் எண்ணிக்கையைத் தாண்டி நிற்கிறது. கைபேசி, கைவாசியாக மாறியதில், விரல் போன போக்கில், வரிக் கணக்கில் சரிந்து நிற்கிறது என் வாசிப்பு. ஆர்வம் திரும்பும் ஒரு நாளில், அடுக்கிய பெட்டிகள் பிரிக்கப்படும். இத்தொய்வு நிலை மாறும் வரையில், தமிழ் காமிக்ஸ் நிகழ்வுகளுடன் தொடர்பிலிருப்பதற்கான எளிய வழி உங்கள் பதிவுகள் மட்டும். நீள அகலங்கள் பயமுறுத்தினாலும், அங்கங்கே தாவிக் குதித்தாவது படித்து விடுவதுண்டு. துவண்டு விடாமல், தொடர்ந்து எழுதும் / வாசிக்கும் மனநிலை அனைவருக்கும் வாய்த்து விடுவதில்லை. உங்களிடம் உள்ளது, விட்டு விடாதீர்கள்!
ReplyDeleteநேரடி அனுபவம் நஹி கார்த்திக் ; ஆனால் அந்நாட்களில் காதில் விழுந்துள்ள சமாச்சாரமிது ! சென்னையில் கிண்டியில் அப்போதெல்லாம் தினமும் குதிரைப் பந்தயங்கள் மாலைகளில் நடந்திடுமாம் ! ரெகுலராய்ப் போய் - ' கமான்..கமான் ' என்று கூக்குரலிட்டுப் பழகியோருக்கு மதியம் மூணு மணியானாலே கையில் நமைச்சல் எடுக்கத் துவங்கிடுமாம் !
Deleteகிட்டத்தட்ட நானும் - கடந்த எட்டு வருஷங்களாக அதே கேஸ் தான் ; சனிக்கிழமையானால் கீபோர்டைத் தட்டும் நமைச்சல் குடிகொண்டு விடும் !
So அத்தனை சீக்கிரத்தில் எழுதுவதை மூட்டை கட்டிட மாட்டேன் ; maybe downsize things a bit !
ஆசியருக்கும் நண்பர்களுக்கும் நன்றியும் வணக்கமும். நான் செய்தது
ReplyDelete'பிழைகளை கண்டுபிடிக்கும் வேலை' மட்டுமே. ஊரில் எத்தனையோ மாமியார்கள் சர்வ சாதாரணமாய் செய்யும் வேலைதானே இது! அதுவும் ஆறு மாதங்களுக்கு முன்பு அனுப்பியது. அது தற்போதுதான் ஆசிரியர் பார்வைக்கு சென்றிருக்கிறது.(என் கண்களுக்கு பெப்பே காட்டிவிட்டு இன்னும்கூட ஒன்றிரண்டு பிழைகள் மிச்சமிருக்கலாம்!) இதற்கு போய் எனக்கு பாராட்டென்பதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்.
இந்த பாராட்டெல்லாம் போய் சேரவேண்டியது இரத்தப்படலம் எனும் பிரம்மாண்ட காவியத்தை நம் கையில் தவழச்செய்த ஆசிரியருக்கும், புலன் விசாரணையை மொழி பெயர்த்த நண்பர்களுக்குமே. அவர்கள் தானே இந்த பிரம்மாண்ட படைப்பின் உருவாக்கத்திற்கு உழைத்தவர்கள்.
அப்புறம்----
எடிட்டர் சார் உங்களுடைய பதிவுகள் என்றைக்குமே எங்களுக்கு தேவைதான். உங்களின் கடந்த கால நிகழ்கால அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது உங்களுடைய ஜாலியான அனுபவங்கள் எங்களையும் பரவசப்படுத்துகிறது. உங்களின் சங்கடமான நிகழ்வுகளில் நாங்களும் சங்கடப்பட்டு நிற்கிறோம். 'சிகப்புத்தோல் ஜேப்படி பாட்டி'யிடம் நீங்கள் ஏமாந்த சமயம் நாங்களும் 'ஙே'(உபயம் திரு.ஆர்.கே) என்று விழி பிதுங்கி நின்றிருக்கிறோம்! 'கறுப்பு மனித கொரில்லா'விடம் சிக்கி சீரழியாமல் 'எஸ்கேப்' ஆனபோது நாங்களுமே உங்களுடன் தப்பி ஓடியிருக்கிறோம். எத்தனை வெளிநாட்டு பயணங்கள்! எத்தனை புத்தக விழாக்கள்!! எத்தகைய கலவையான அனுபவங்கள்!!! பாஸ்போர்ட், விசா இல்லாமலே ஒரு ரூபாய் செலவில்லாமல் நாங்களும் உங்களுடன் பயணப்பட்டிருக்கிறோம்! இளம் வயதுமுதல் இன்றுவரை
இப்படி அலைந்து திரிந்து காமிக்ஸ்களின் பதிப்புரிமை பெற்று மொழிபெயர்த்து, அலங்கரித்து(எதிர்கட்சி தலைவரின் பாணியில் சொல்வதானால் சீவி சிங்காரிச்சி!) அதனை உரிய நேரத்தில் எங்களை வந்தடைய நீங்களும், நம் அலுவலக நண்பர்களும் படும் சிரமங்கள் இவை எல்லாமுமே உங்கள் பதிவுகள் மூலமே எங்களை வந்தடைகின்றன. காமிக்ஸைப் போலவே உங்கள் பதிவுகளும் இன்றுவரை சலிக்காதவையாகத்தான் இருக்கிறது. நம்மவர் 'வாழவைக்கும் காதலுக்கு ஜே' என்றார். நாங்களோ எங்களை 'வாழவைக்கும் காமிக்ஸூக்கும், உங்கள் பதிவுகளுக்கும் ஜே' என்கிறோம். இதற்குமேல் டைப் செய்ய இயலவில்லை. தற்போதைய சூழல் சீரானதும் வருகிறேன். நன்றி.வணக்கம்.
பன்னீர்செல்வம் is back !
DeleteAnd back with a bang. ATR சார் வாங்க வாங்க இப்போது நன்றாக இருக்கீங்களா???
Deleteசூப்பர் ஏடிஆர் சார்....
Deleteவெல்கம் பேக். ATR sir...!!!
DeleteWarm welcome back ATR
Deleteவணக்கம் விஜயன் சார், நண்பர்களே
ReplyDeleteஇங்கே பின்னூட்டம் குறைய மற்றொரு காரணம் கேள்விக்கு பதில் இல்லாததும்
கேள்வி கேட்டவர் கேள்வி கேட்கப்படுவதும்.
அவரவர் ஆசைகளையும் ஆலோசனைகளையும் தாங்கள் மட்டும்
சீர்தூக்கிப்பார்த்தால் நன்று.
கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்.
விருப்பத்தை வாசகர் கேட்கிறார்.
அதற்கு பதிலை நீங்களே சொன்னால் நலம்.சிங்கங்கள் இரண்டு பேசும்போது
சிறு நரிகளுக்கு அங்கென்ன வேலை.?
அனைவரையும் அரவணைத்துச்செல்வது
ஆசிரியரின் பணி...பாணி.
முடிந்தால் இரத்தபடலம் முன்பதிவை
புத்தகவிழாவிலும் தொடருங்கள்.
அதற்கென தனியாக ஒரு பேனர் தயார் செய்தால் நலம்.புத்தக விழாவில் முன்பதிவு
செய்தால் குரீயர் கட்டணம் இலவசம் என்றும் சொன்னால் முன்பதிவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மறுபதிப்புகளை பொறுத்த மட்டில் முன்பதிவுக்கென
அறிவித்து குறைந்த பட்சம் 1000 புத்தகங்கள் என்ற அளவில் முயற்சி செய்தால் நன்று. மேலும் புத்தக அளவுகளை இரண்டு மட்டும் என்று கொண்டு சென்றால் சிறந்தது.
தங்களிடம் இருந்து நேரிடை பதிலை
எதிர்பார்க்கிறேன்.
மறுபடியும் கோட்டை அழிச்சுப்புட்டு முதல்லேர்ந்து பரோட்டா சாப்பிட தெம்பு லேது சார் ! அறிவித்தபடியே 3 தொகுப்புகளாகவே இரத்தப் படலம் வெளிவந்திடும் !
DeleteAnd இன்றைய பேப்பர் விலைகளில் நான் கிழிந்த சட்டையோடு இ.பா.வினிலிருந்து விடை பெற்றாலே அது போன ஜென்மத்துப் புண்ணியமாகிடும் ! இதில் கூரியரும் இலவசமென்றால் பட்டாப்பெட்டியுமே சேர்ந்து கிழியும் !
அப்புறம் இரத்தப் படலத்தைத் தாண்டியுமொரு காமிக்ஸ் லோகம் உண்டென்பதை நானுமே மறப்பது சுகப்படாதே சார் !
சார்,
Deleteஇரத்தப் படலம் வெளிவருவது உறுதி செய்யப்பட்டு விட்டதா?
300 என்ற இலக்கை எட்டி விட்டதா?
162 முன்பதிவுகள் இதுவரையிலும் சார் & yes - இதில் ரிவர்ஸ் கியர் போடும் எண்ணமில்லை இனி ! எற்கனவே அதையும் அறிவித்த ஞாபகம் உள்ளது எனக்கு - நீங்கள் கவனிக்காது போயிருக்கணும் ! ஏப்ரல் டு மே 31 வரை மறுபடியுமொரு முன்பதிவு ஜன்னல் திறக்கப்படும் ! அதன் results எவ்விதம் இருந்தாலுமே ஜூன் முதல் தேதிக்கு அச்சுப் பணிகளைத் துவக்கிடவுள்ளோம் !
Delete///சிங்கங்கள் இரண்டு பேசும்போது
Deleteசிறு நரிகளுக்கு அங்கென்ன வேலை.?///
சிறப்பு...மிகச் சிறப்பு... காமிக்ஸ் ரசிகர்களையும், இங்கே பின்னூட்டம் இடும் அன்பர்களையும் நீங்கள் எந்தளவு மிதிக்கிறீர்கள்...ச்சே மதிக்கிறீர்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. 👌👌👌👌👌👌👌
This comment has been removed by the author.
ReplyDeleteபில்லர் பேஜஸ். இன்றும் ஒரு பழைய காமிக்ஸ் புக்கை கையில் எடுத்தால்ஹாட்லைன் முதலில், அடுத்தது கடைசிப் பக்கம் என்றே வாசிப்புஓடுகிறது. எனவேஅடுத்து வரும் வெளியீடுகள்பற்றியவிளம்பரங்கள்சென்ற இதழ் பற்றிய விரிவானவிமர்சனங்கள். பில்லர்பேஜஸாக மட்டுமில்லாமல் நிறைவாகவும் இருக்கும்மேலும் மாதம் ஒரு ஹீரோ என்றுநமதுஹீரோக்களைப்பற்றிஒரு அவுட்லைனும் ஓவியமும் வெளியிடலாம். விளம்பரங்களும் வெளியிடமுயற்ச்சிக்கலாம் சார். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteமரியாதைக்குரிய நம் மூத்த வாசகர் ATR அடிக்கடி நம் தளத்திற்கு வருகை தராததன் காரணம் புரிந்தது.அவரின் சிறப்பான பணிக்குத் தலைவணங்குகின்றேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅனைத்தும் விரைவில் சரியாகும் பத்மநாபன். சில வலிகளை காலம் ஆற்றிவிடும்.
Deleteவிரைவில் வாருங்கள்.
மின்னும் சொர்க்கம்: தங்கப் புதையல் இருக்கும் என அலையும் கூட்டம் அது செய்யும் ஒரு தவறு அதனை எப்படி டெக்ஸ் & டைகர் கண்டுபிடிக்கிறார்கள் என்ற கதை. இங்கேயும் ஒரு டுவிஸ்ட் மெமிஸ்டோ கதை கேட்கும் ரசிக கண்மணிகளுக்கு ஒரு முன்னோட்டம் போல். குன்றில் நடக்கும் சண்டை சுமார் ரகம்.
ReplyDeleteமுதல் கதை என்னை கவர்ந்த அளவுக்கு இந்த கதை கவரவில்லை.
டீ குடித்து முடிப்பதற்குள் படித்து முடித்து விடலாம்.
இது திங்கிங் நேரம் என்ற தலைப்பை பார்த்தவுடன் செந்தில் கவுண்டமணி காமெடி ஞாபகத்துக்கு வந்தது. டீயில் விழுந்த ஈயை தூக்கி போட்டு விட்டு அதை குடிக்கலாமா வேண்டாமா என திங்க் செய்யும் காட்சி மனதில் ஓடியது :-)
ReplyDelete