Powered By Blogger

Saturday, February 13, 2021

பிரளயம் !

 நண்பர்களே,

வணக்கம். ஒரு சில நேரங்களில் பெயர் ராசி கனகச்சிதமாய் இருக்கும் தான் போலும்! “பொக்கிஷம் தேடிய மொக்கையன்” ; “புதையலின் பாதையில் புளிமூட்டையன்” என்று தலைப்பு வைத்த பல நேரங்களில் புண்ணாக்கு கூட கண்களில்  தென்பட்டதில்லை ; ஆனால் “பிரளயம்” என்ற பெயரை எந்த நேரத்தில் வைத்தேனோ - அது நிஜப் பிரளயமாகவே உருமாறி விட்டுள்ளது தான் இந்த வாரத்துப் பதிவே !

சந்தா E – கிராபிக் நாவல் தடம் – ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்‘ என்பதே இதன் விசிட்டிங் கார்ட்! ஆனால் என்னையே ஜெர்கடிக்கச் செய்த புண்ணியம் இந்த “பிரளயம்” இதழைச் சாரும்! “PANDEMONIUM” என்ற பெயரில் பிரெஞ்சில் முப்பாக ஆல்பமாய் வெளியான இந்த ஹாரர் காதக்கு நாம் உரிமைகள் வாங்கியது 2018-ன் இறுதியில்! இந்தக் கதை ஸ்கேன்லேஷனிலும் சரி, படைப்பாளிகளின் மொழிபெயர்ப்பிலும் சரி – ஆங்கிலத்திலும் உள்ளது தான்! And இதன் உரிமைகள் ஆரம்பத்தில் “பௌன்சர்” கதைகளை வைத்திருந்த Humanoids நிறுவனம் வசமிருந்ததும், பின்நாட்களில் ட்யுராங்கோ கதைகளை உருவாக்கும் Soleil பதிப்பகத்துக்குக் கைமாறியதும் அறிந்திருந்தேன் ! இரு நிறுவனங்களது கேட்லாக்கலும் இதற்கான preview-க்களை வாசித்திருந்தேன் & ஆங்கில வடிவத்தில் முதல் பாகத்தையும் வாசித்திருந்தேன்! மிரட்டோ மிரட்டென்று மிரட்டியது - சித்திரங்களில் ; கலரிங்கில்; கதையோட்டத்தில்! So ‘விடாதே.. பிடி!‘ என்று உரிமைகளை வாங்கியும் விட்டோம்! 2019-ன் அட்டவணை அதற்கு முன்பாகவே தயாராகி விட்டிருக்க, இதற்கான வாய்ப்பு 2020-ன் சந்தா E-ல் கிட்டவும் செய்தது! கொரோனா தாண்டவப் புண்ணியத்தில் 2020-ன் இதழ்கள் மார்ச் வரையிலும் நீண்டு சென்றிட – அட்டவணையின் இறுதி இதழாக அமைந்திட்டது “பிரளயம்”! 3 பாக ஆல்பம்…. மிரட்டலான, அதே சமயம் கனமான கதைக்களம் என்பதால் காலா காலத்தில் பணிகளை முடித்துத் தந்தால் தான் 28 நாட்களே கொண்ட பிப்ரவரியிலும் தாமதங்களைத் தவிர்க்க இயலும் என்பது ஸ்பஷ்டமாய்ப் புரிந்தது ! So ஒரு சோம்பலான ஞாயிறன்று விடாப்பிடியாய்ப் பணிகளைத் துவக்கினேன் முதல பாகத்தினில்! 

ஏற்கனவே பகிர்ந்திருக்கும் சேதி தான் – மறுஒலிபரப்பு செய்திட்டால் தப்பில்லை என்றுபடுகிறது – இந்தப் பணியின் context-ல்! எப்போதுமே குடு குடுவென்று ஓடிப் போய் கதையின் க்ளைமேக்ஸை வாசித்து வைக்கும் பழக்கம் எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை தான்! கதை அதன் போக்குக்கு என் முன்னே விரிந்து செல்ல – take things one page at a time என்றே நான் எழுதிச் செல்வேன்! இங்கேயும் அதுவே நடைமுறையாக இருந்தது! And நிஜத்தைச் சொல்வதானால் இந்தவாட்டி மொழிபெயர்ப்புக்கு வண்டி ஏகமாய் தடுமாறவே செய்தது! கையில் ஆங்கில ஸ்கிரிப்ட் தெளிவாய் இருந்தது தான்; அர்ஸ் மேக்னாவைப் போல இண்டிலும் இடுக்கிலும் இன்டர்நெட் அலசல்களுக்கு அவசியங்களும் இருக்கவில்லை தான்; ஆனாலும் எனது வழக்கமான வேகம் இந்தவாட்டி அமைய சண்டித்தனம் செய்தே வந்தது! காரணம் கதைக்களத்தின் ரொம்பவே disturbing ஆன ஓட்டம்! மென்சோகம் நமக்குப் புதிதல்ல தான்; ஆனால் இது வேறு விதமானதொரு விதத்தில் நெருடியபடியே பயணிக்க, மூன்றோ – நான்கோ பக்கங்களுக்கு மேல் ஒரு stretch-ல் பணியாற்ற முடியவில்லை! போன வாரத்து சனியன்று முதல் அத்தியாயத்தைப் பூர்த்தி செய்து விட்டு, போன வாரத்துப் பதிவை எழுதத் தொடங்கியிருந்த போதிலும், மண்டை முழுக்கவே “பிரளயம்” முதல் அத்தியாயத்தின் சுவடுகளே குறுக்கும், நெடுக்குமாய் அலைபாய்ந்து கொண்டிருந்தன! ஏதோ ஒரு குறுகுறுப்பு உள்ளுக்குள்!

பதிவை எழுதி முடித்த கையோடு, அத்தியாயம் 2 & 3-ஐ எடுத்து வைத்துப் பரபரவெனப் படிக்கத் துவங்கினேன்! கதை நான் எதிர்பார்த்த திக்கில் பயணிக்காது வேறொரு ரூட்டில் தடதடப்பதை ஆந்தை விழிகள் மேலும் விரியப் படித்தேன்! பாகம் 2-ன் முடிவில் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவசியப்பட – ஒற்றை விஷயம் மட்டும் தெளிவாய்ப் புரிந்தது : Christophe Bec என்ற இந்தக் கதாசிரியரின் எண்ணவோட்டங்களை யூகிப்பது சுலபமே அல்ல என்பது தான் அது ! சுருங்கிய புருவங்களோடு அத்தியாயம் மூன்றுக்குள் புகுந்தால் தலைப்புக்கேற்ற நிகழ்வுகளே தொடர்ந்தன! எங்கெங்கோ பயணித்த கதையானது தந்த twist-கள்; க்ளைமேக்ஸ்; சோகம் என அத்தனைக்கும் இறுதியில் ‘முற்றும்‘ என்ற எல்லையைத் தொட்ட போது எனக்குள் மூளை கொதிநிலையில் இருந்த உணர்வு!

- இது ஹாரர் கதையா? த்ரில்லர் கதையா? என்ற கேள்வி பிரதானமாய் ஓட்டமெடுத்தது!

- ஜானர் எதுவாகயிருப்பினும், நமது வழக்கமான சென்ஸார் பாணிகளில் இங்கு கண்ணில்படும் பல மிடறுகள் தூக்கலான அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்களையும், குரூர வன்முறைகளையும் சமாளித்திட முடியும் தானா? என்ற வினாவும் தலைதூக்கி நின்றது!

- ஒரு அமெரிக்க காச நோய் சிகிச்சை மையத்தில் அரங்கேறும் ரணகளங்களே இந்த ஆல்பத்தின் பின்னணி எனும் போது, ஒரு பெரும் நோய்த்தொற்ற்றானது லோகத்துக்கே பல பிரளங்களைக் கண்ணில் காட்டி வரும் இந்தக் காலகட்டம் - இந்த ஆல்பத்துக்குப் பொருத்தமானது தானா? என்ற கேள்வியுமே கைகோர்த்துக் கொண்டது!

- And more than anything else – கதையின் நடுவே இடம்பிடிக்கும் டாக்டர் ஒருவர் காமுகராய்; மனிதாபிமானமற்ற நடைமுறைகளைக் கடைபிடிக்கும் சைக்கோவாய், கொடூர மருத்துவ வழிமுறைகளையும் தொடர்பவராக வலம் வருவது ரொம்பவே நெருடியது எனக்கு! பொத்தாம் பொதுவான இது மாதிரியான சித்தரிப்புகள் உன்னத சேவையில் ஆழ்ந்திருக்கும் மருத்துவ community-க்கு நிச்சயமாய் மகிழ்வைத் தராது என்று உறுத்தியது உள்ளுக்குள்! Of course – நெகடிவான கதாப்பாத்திரமே; கற்பனையே and நமக்கு இத்தகைய dark கதைமாந்தர்கள் புதிதல்லவும் தான் என்பது புரியவே செய்தது ; but still இந்த ஆல்பத்தின் dark கையாளல் சரிதானென்று எனக்குச் சொல்ல சாத்தியப்படவில்லை!

To cut a long story short – போன சனியிரவுக்கான பதிவினில் – மார்ச்சின் வெளியீடுகள் என்ற விளம்பரப் பக்கங்களை upload செய்த சமயம், என்னிடமிருந்த “பிரளயம்” விளம்பரப் பக்கத்தை அப்படியே அமுக்கி விட்டிருந்தேன் ! மாமூலான  “பலூன்களைத் தூக்கி இங்கே ஒட்டு; அங்கே ஒட்டு” பாணிகள் இம்முறை நன்மை தராது என்பதால், கணிசமான கூடுதல் சென்சாரிங் இங்கே அவசியமாகிடும் என்பதாலும் ; அதற்கென படைப்பாளிகளிடம் முறைப்படி அனுமதி கோரிடத் தேவைப்படும் என்பது புலனானது ! And சில பக்கங்களை முழுமையாய் நீக்கவும் அவர்களது சம்மதங்கள் அவசியமாகிடும் எனும்போது அது அத்தனை சுலபச் சமாச்சாரமாகிடாது என்பதும் தெரியும்! So காலில் சுடுகஞ்சியை ஊற்றியபடிக்கே அந்த முயற்சியில் ஈடுபடுவது நிச்சயம் சாத்தியமாகிடாது என்பதால் ‘பிரளயம்‘ for March `21 என்பதை மாற்றியமைக்கவே வேண்டும் என்பது புரிந்தது! 

எல்லாவற்றையும் விட – இந்த இதழானது சந்தாவில் பொது விநியோகத்துக்கு சுகப்படும் சமாச்சாரமாகிடாது என்ற உறுத்தலே தலையாய கவலையானது எனக்கு! என்ன தான் ‘கிராபிக் நாவல் ; தனித்தடம்‘ இத்யாதி… இத்யாதி' என்ற பில்டப்களை நாம் முன்கூட்டியே தந்திருப்பினும், கண்ணை மூடிக்கொண்டு சந்தாக்களை செலுத்தும் ; வலைக்கு அடிக்கடி வருகை தரா வாசகர்களின் தலைகளில் இத்தகையதொரு ஆல்பத்தை, முறையான சென்ஸார்களின்றி ; without an extra dose of warnings இன்றிச் சாத்துவது அவர்களது நம்பிக்கைகளை நீர்த்துப் போகச் செய்திக் கூடும் என்று பட்டது ! So ஞாயிறு காலையில் எழுந்த போதே தீர்மானித்திருந்தேன் – இந்த இதழை நமக்கேற்ற விதமாய் மாற்றியமைக்க முடிந்தால் மட்டுமே பின்னொரு நாளில் வெளியிடுவதென்று ! அதற்கான அனுமதியினை கோரி படைப்பாளிகளிடம் நிதானமாய்க் கெஞ்சிக் கூத்தாட வேண்டியது தான் ! அவர்கள் நம் மார்க்கெட்டின் இக்கட்டுகளைப் புரிந்து கொண்டு இசைவு சொல்லிடும் பட்சத்தில், உரிய சென்சார் சகிதம், ஏதேனுமொரு தருணத்தில் - "வேண்டியோர் மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள் ப்ளீஸ்" என்ற அறிவுறுத்தலோடு வெளியிடுவோம் ! அவர்கள் NO சொல்லிடும் பட்சத்தினில்   2 ஆண்டுகளுக்கு  முன்னமே நாம் செலுத்தியுள்ள பெரும் தொகை ராயல்டியை என் புத்திக்கொள்முதல் கணக்கில் எழுதிட வேண்டியதே என்றும் தீர்மானித்தேன் ! ஒரு dicey ஆன கதையினை, முழுமையாய்ப் படித்திராது வாங்கிய வகையில் அது எனக்கு அவசியமுமே என்றும் பட்டது !

ரைட்டு… ரூ.250 விலையிலானதொரு இதழைத் தூக்கியாயிற்று; அதனிடத்தில் அவசரம் அவசரமாய் எதை நுழைப்பதோ ? என்று போன வாரத்து சனியிரவே சிந்தனைகள் ஓடியிருந்தன ! இடதுகை சுழல்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்குக் காயம் என்றவுடன், அதே பாணியிலான அக்ஸர் படேலுக்கு வாய்ப்பு என்பது போல – கிராபிக் நாவலின் இடத்தில் இன்னொரு கிராபிக் நாவலே இடம் பிடித்திட வேண்டுமென்று தீர்மானித்தேன்! ஆனால் நின்ற நிற்பில் இன்னொரு 144 பக்க கதையை வரவழைப்பதற்கும் ; அதனை ப்ரெஞ்சு to இங்கிலீஷ் to தமிழ் மொழியாக்கம் செய்வதற்கும் நேரமிராது என்பதாலும், கைவசம் என்ன சரக்குள்ளது என்று மண்டையைச் சொரிந்தேன் ! 

முந்தைய இரவு தான் கிட்டியிருந்த 2021ன் சந்தா E-க்கான ஆல்பமான “வழியனுப்ப வந்தவன்” டிஜிட்டல் கோப்புகள் ‘பளிச்‘சென்று கைதூக்கி நிற்க, நொடியும் தாமதிக்காது ‘ஞாயிறு காலையில் அத்தினி பேரும் வேலைக்கு வந்திடுங்கோ‘ என்று வாட்சப்பில் சாமக் கோடாங்கியாய் மெசேஜ் அனுப்பி வைத்தேன்! ஞாயிறு அதிகாலையிலேயே 64 பக்கங்கள் கொண்ட அந்த ஆல்பத்துக்கு மொழிபெயர்ப்பைத் துவங்கிட – நாம் மாமூலாய்க் குப்பை கொட்டி வரும் வன்மேற்கின் பின்னணியில் நகரும் கதைக்குள் செம சரளமாய் வண்டியோட்ட முடிந்தது! புஜம் கழன்று விட்டது தான் – ஆனால் ஞாயிறு மாலைக்குள் 55 பக்கங்களைப் போட்டுச் சாத்தியிருந்தேன்! And ஞாயிறு காலையிலேயே DTP பணிகளும் ஆபீஸில் துவங்கிட, ரணகளத் துரிதத்தில் துளிர்விட்டான் – “வழியனுப்ப வந்தவன்”! திங்களன்று பாக்கிப் பக்கங்களின் மீதான மொழிபெயர்ப்பும் நிறைவுற – புதன் மதியத்துக்குள் எடிட்டிங்குக்கென 64 பக்கங்கள் என் மேஜையில் ஆஜராகியிருந்தது ! 'மூன்றாம் பிறை' கமலஹாசனை விடவும் ஜாஸ்தி குரங்கு பல்டிகளை அடித்திருக்கும் நமக்கே கூட இந்த 64 பக்க ஆல்பத் தயாரிப்பு ஒரு மைல்கல் ! புதனுக்குள் அட்டைப்படமும் ரெடியாகி, வியாழன்று அச்சும் ஆகிவிட்டது !

STERN !! வழியனுப்ப வந்தவன்! நமது அணிவகுப்பில் வெட்டியான் #2 இவர்! முதலாமவர் ‘கடுகடு‘ ஆக்ஷன் ஹீரோவெனில் இந்த வழுக்கை மனுஷனோ ஒரு பலமுக மன்னர்! தீவிர இலக்கிய ரசிகர்; மருத்துவத்தில் விபரமானவர்; நாலு காசு கிடைக்குமெனில் – எல்லா வேலைகளையும் செய்யத் தயாராகயிருக்கும் ஒண்டிக்கட்டை ; அதே சமயம் ஒரு வெட்டியானுமே! Maffre சகோதரர்கள் இவரது படைப்பாளிகள் ! அண்ணன் கதையெழுத, தம்பி சித்திரம் போட்டு கலரிங்கும் செய்துள்ளார் ! கிராபிக் நாவல் தடத்துக்கு செம cute ஆகப் பொருந்திடும் இந்தக் கதைக்களத்துக்கு semi formal ஆர்ட்வொர்க் பாணி பின்னிப் பெடல் எடுக்கிறது! And ஒருவிதப் புராதன காலகட்டங்களை கண்முன்னே கொணர பயன்படுத்தப்பட்டிருக்கும் கலரிங் ஸ்டைல் அசாத்திய அழகு! ‘பச்சக்‘ – ‘பச்சக்‘ என்ற அடர் வண்ணங்களின்றி கண்களுக்கு செம இதமாய் வலம் வருகின்றன லைட் வர்ணங்கள்!

இந்தக் கதையின் பணிகள் எனக்கு இரு விதங்களில் வித்தியாசம் காட்டியதாய்ப்பட்டது ! Of course – concept to reality என்பது மூன்றே நாட்களில் சாத்தியமானது ஒருபக்கமெனில், இந்தக் கதைக்கென நான் இம்முறை கையாண்டிருக்கும் மொழியானது செம லோக்கல் ! அர்ஸ் மேக்னாவுக்குப் பேனா பிடித்த கையோடு இதற்குள் குதித்தால், இங்கே களமும் சரி; கதைமாந்தர்களும் சரி – ரொம்ப ரொம்பக் கரடுமுரடு ! மருந்துக்கும் கல்வி வாசனையானது நாயகர் ஸ்டெர்னுக்குத் தவிர்த்து வேறு யாருக்கும் கிடையாதெனும் போது, அந்தச் சூழலுக்கு ; சித்திர & கலரிங் பாணிகளுக்கு நியாயம் செய்வதாயின் – நம் பேனாக்களின் புஜபல பராக்கிரமங்களை இறக்கி வைப்பது சுகப்படாது என்றுபட்டது! So கதையோட்டத்துக்கேற்ப சிலபல கலீஜான வார்த்தைப் பிரயோகங்களும் இம்முறை இருந்திடும்! தயைகூர்ந்து அவற்றைக் கதையின் context–ல் மட்டும் எடுத்துக் கொள்ளக் கோருகிறேன்; ‘உங்ககிட்டேயிருந்து இந்த மாதிரி வார்த்தைகளை எதிர்பார்க்கலை‘ என்ற text அனுப்பிட முகாந்திரங்களாய் அல்ல ! So இலக்கிய நடை; தத்துவார்த்தங்கள்; பன்ச் டயலாக்குகள்; நையாண்டிகள் என்று எழுதிப் பார்த்த பிற்பாடு – இந்த coarse நடையினையும் முயற்சிக்க இதுவொரு வாய்ப்புத்  தந்துள்ளது! Trust me guys – இது சுலபமாக இருக்கவே இல்லை தான்!

இதோ – ஒரிஜினல் டிசைனில் நமது எழுத்துக்கள் சேர்க்கையுடனான அட்டைப்படம்! ப்ளஸ் உட்பக்க பிரிவியூவுமே!


இது ரூ.125 விலையிலான இதழே எனும் போது – பாக்கி ரூ.125-க்கு இன்னொரு இதழ், தொடரும் மாதத்தில் உங்கள் இல்லம் தேடி வரும்! இம்மாதப் பணிகளிலிருந்து நிமிரக் கிடைக்கும் முதல் நொடியில் அந்த இதழ் சார்ந்த முஸ்தீபுகளுக்குள் புகுந்திடுவேன்! இந்த நொடி வரையிலும் அதற்கான தேர்வை நான் இறுதி செய்திருக்கவில்லை ! Or maybe அந்த ரூ.125 தொகைக்கு ஒரு கூப்பன் தந்து - 2021-ன் சந்தாவிலோ ; வேறேதும் இதழ்களின் கொள்முதலிலோ அதனை ஈடு செய்து கொள்ளவும் வாய்ப்பாக்கிடலாம் ! 

அப்புறம் 2021-ன் அட்டவணையில் “வழியனுப்ப வந்தவன்” இடத்தினில் STERN-ன் தொடரின் இதழ் # 2 இடம்பிடித்திடும் ! So 2021-ன் அட்டவணையில் மாற்றங்கள் இராது!

So thus ends the story behind our latest குட்டிக்கரணம் ! கிளம்பும் முன்பாக இன்னொரு சமாச்சாரமும் folks ! அது “கழுகு வேட்டை“ பற்றி !

நமது பரோபகார நண்பரின் உபயத்தில் பெரும் தொகையொன்று நமக்குக் கிட்டியிருக்க, அதனை 2021 சந்தா நண்பர்களுக்கொரு விலையில்லா இதழாகிடுவது பற்றி ஏற்கனவே அறிவித்திருந்தோம் & TEX-ன் "கழுகு வேட்டை" முழுவண்ண ஹார்ட் கவர் பதிப்பே அந்த இதழாகிடும் என்றும் சொல்லியிருந்தேன் அல்லவா ? ஏப்ரல் முதல் தேதிக்கு புதுச் சாந்தாவின் துவக்க வேளையினில் இந்த இதழும் தயாராக இருந்தால் பொருத்தமாக இருக்குமென்ற எண்ணத்தில் அதற்கான பணிகளும் இணைதடத்தில் ஓடி வருகின்றன ! நேற்றைக்கு அதன் அட்டைப்பட டிசைன் இறுதி வடிவம் பெற்று, ஹார்டகவர் மாதிரியுடன் ஒரு டம்மி இதழினைத் தயார் செய்து பார்த்துக் கொண்டிருந்த போது தான் - இதற்கு முன்பான டிராகன் நகரம் ஹார்ட் கவர் மறுபதிப்பு நினைவில் நிழலாடியது ! ரெக்கார்டுகளை முறியடிக்கும் வேகத்தில் விற்றுத் தீர்ந்த இதழது என்பதும், அதன் உட்பக்க முகப்பினில் உங்கள் போட்டோக்களை போடுவதாய் சொல்லி மண்டகப்படிகள் பல வாங்கியதுமே நினைவில் நடனம் ஆடின ! அந்த நொடியினில் தான் 'தல'யின் இந்த landmark இதழிலும் இஷ்டப்படுவோரின் போட்டோக்களை உட்பக்கத்தில், கலரில் இணைத்திட வாய்ப்பு வழங்கலாமே ? என்ற எண்ணம் உதித்தது ! Of course 2021 சந்தாவில் இணைந்திடும் நண்பர்களுக்கு இது விலையில்லா இதழே எனும் போது அவர்கள் சந்தாத் தொகைகளுடன் தமது போட்டோக்களை lioncomics@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் போதும் ! ஏற்கனவே சந்தா செலுத்திவிட்ட நண்பர்கள் தங்களின் போட்டோக்களை மட்டும் அனுப்பினால் போதும் !

And துரதிஷ்டவசமாக சந்தாக்களில் இணைந்திட இயலா நண்பர்கள் - இந்த இதழின் விலை + கூரியர் கட்டணம் + தம் போட்டோக்கள் என அனுப்பிட்டால் அவர்களுக்கும் இதுவொரு personalized இதழாகிடக்கூடும் ! But that can happen only in April'21 - when we do the online listings. இப்போவே இதற்குமொரு "முன்பதிவு" என்று லிஸ்டிங் போட்டு வைத்து, சந்தாச் சேர்க்கையின் மத்தியில் - 'இதென்ன ? அதென்ன ?' என்ற குழப்பங்களுக்கு இடம் தருவதாகயில்லை ! நம்மாட்கள் அவ்வப்போது வாங்கி வரும் சாத்துக்களே ஒரு வண்டி எனும் போது, புதுசாய் எதையேனும் அறிவித்து வைத்து அவர்களை மேலும் புண்ணாக்கிடப் போவதில்லை நான் ! And just a request please folks : அவ்வப்போது பத்து ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் கூரியர் கட்டணம் ஜாஸ்தியென்ற முகாந்திரங்களில் நம்மவர்களோடு போனில் ஒருசில வாசக நண்பர்கள் நடத்திடும் மல்யுத்தங்களைப் பார்க்கும் போது ரொம்பவே நெருடுகிறது ! உங்களின் முகங்களில் புன்சிரிப்பைக் கொணரும் முயற்சியில், அவர்களது கண்களில் அவ்வப்போது கண்ணீரைப் பார்ப்பது உறுத்துகிறது ! எதுவாயினும் பொறுமை ப்ளீஸ் ?  

இதோ "கழுகு வேட்டை" அட்டைப்பட first look - ஒரிஜினல் டிசைன், கோகிலாவின் வண்ண மெருகூட்டலோடு ! (டிசைனின் கீழ்ப்பகுதியினில் - கால்கள் நீண்டுள்ளன ; மடங்கியுள்ளன " என்ற பீதி அவசியமில்லை guys - அந்த எக்ஸ்டரா நீளங்கள் உட்பக்கம் ஒட்டப்பட்டு கண்ணில் படாது !)

இது வரவுள்ளது ஏப்ரல் 2021-ல் guys : so மார்ச் கூரியரில் இதைத் தேடிட வேண்டாமே ப்ளீஸ் ? And இப்போவே பணம் அனுப்பிடக் கோரிடவும் வேண்டாமே ப்ளீஸ் ! இந்த நொடியில் சந்தாக்களே நமது தலையாய இலட்சியம் !

And before I sign out - இன்னொரு வேண்டுகோளுமே : 

இதோ இங்குள்ள இந்த மாயாவி இதழின் உருப்படியான முத்து காமிக்ஸ் புக் உங்களிடம் இருக்கும் பட்சத்தில் யாரேனும் ஒருவர் ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிட இயலுமா - ப்ளீஸ் ? நமது கையிருப்பை உருட்ட இந்த நொடியில் நேரமில்லை என்பதால் இந்த request !!

Bye all...have a great weekend ! See you around !! ஐ கோயிங் டு மல்லு கட்டிங் வித் மர்ம மனிதன் மார்ட்டின் ! 

அப்புறம் முன்கூட்டிய Valentine's தின வாழ்த்துக்கள் - அக்மார்க் காமிக்ஸ் காதலர்களான உங்களுக்கு ! பொம்மை புக் காதலும் கொண்டாடப்பட வேண்டிய காதல் தானே ? Have a ball all !

210 comments:

  1. ஞானே குஞ்சா கோபன் first ஆக்கும் !

    ReplyDelete
    Replies
    1. இது போங்காட்டம்

      செல்லவே செல்லாது சார் 🤷🏻‍♂️
      .

      Delete
    2. வாழ்த்துக்கள் சார்

      Delete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. #கழுகுவேட்டை
      அவரவர் புத்தகத்தில் மடடும் அவரவர் புகைப்படம் இடம்பெறுமா அல்லது அனைத்து புத்தகங்களிலும் இடம்பெறுமா என்று எனக்கு புரியவில்லை சார்?

      Delete
    2. அவரவர் புத்தகத்தில் இடம் பொறுவது போலத்தான் போனமுறை நண்பரே..

      அதே நடைமுறை தான் இப்பொழுதும் ...என்றே நினைக்கிறேன்...

      Delete
  4. அட டே சர்ப்ரைஸ் பதிவு.... படிச்சிட்டு வர்றேன்.

    ReplyDelete
  5. வந்திட்டேன் சார்

    படித்திட்டு அப்பாலிக்கா வர்றேன் சார் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. ///Valentine's தின வாழ்த்துக்கள் - அக்மார்க் காமிக்ஸ் காதலர்களான உங்களுக்கு ! ///

    உங்களுக்கும் வாழ்த்துகள் சார்.!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் சார்

      Delete
  8. எடிட்டர் சார்,

    'பிரளயம்' கிடப்பில் போடப்பட்டது வருத்தமளிக்கிறது. ஏகப்பட்ட ராயல்டி தொகை உங்களுக்கு முடங்கிப்போயிருப்பது அதைவிட வருத்தமளிக்கிறது! ஆனால் சென்ஸாருக்காண்டி நீங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவு - வரவேற்கத்தக்கது!

    'புதிய வெட்டியான் - ஸ்டெர்ன்'னின் கதையை புயல் வேகத்தில் மொழிபெயர்ந்து மூன்றே நாளில் அச்சிலேற்றியிருக்கும் அசுரப் பணிக்கு ஒரு - hats off!! அட்டகாசமான அடைப்படம் & வித்தியாசமான தோற்றத்திலிருக்கும் புதிய வெட்டியானின் அடாவடிகளை ரசித்திட ஆவல்!

    கழுகு வேட்டை - ஏப்ரலில் வரயிருப்பது கூடுதல் மகிழ்ச்சி! ( சந்தாதாரர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய அந்த முகமறியா நண்பருக்கு அட்வான்ஸ் நன்றிகள்). அட்டைப் படம் - மிரட்டுகிறது! நிலவொளியின் பின்னணியில் அந்த 'ஒற்றைக்கு ஒற்றை' - பார்க்கும் போதே கிலியை ஏற்படுத்துகிறது!

    தற்போது கிடைக்கும் கேப்களில் 'அர்ஸ் மேக்னா'வை வாசித்து வருகிறேன். மிரட்டாலான, பிரம்மிப்பான வாசிப்பு அனுபவம்!

    ReplyDelete
    Replies
    1. அப்புறம்.. கடந்த வாரங்களைப் போல பதிவு போடுவதை ரொம்ப இழுத்தடிக்காமல் பதிவுக்கிழமையன்றே; அதுவும் குறித்த நேரத்துக்கு முன்பே பதிவைப் போட்டுத் தாக்கியதற்கு நன்றிகள் பல!

      Delete
  9. வழியனுப்ப வந்தவன்.. சித்திரங்களிலும் வண்ணக்கோர்வையிலும் இனம்புரியா ஷோபிதம் பொங்கிவழிகின்றது.!

    ReplyDelete
    Replies
    1. ஷோபிதம் - புரியவில்லை! :-)

      Delete
    2. ஷோபிதம்-ஈர்ப்போ ?!

      Delete
    3. எந்த மொழியில் ராசா?

      Delete
    4. ஜன்னல், சாவி, சாபல்யம், சௌஜன்யம், சாஸ்வதம் இதெல்லாம் எந்த மொழியோ அந்த மொழி.

      Delete
  10. ///ஏதேனுமொரு தருணத்தில் - "வேண்டியோர் மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள் ப்ளீஸ்" என்ற அறிவுறுத்தலோடு வெளியிடுவோம் ! அவர்கள் NO சொல்லிடும் பட்சத்தினில் 2 ஆண்டுகளுக்கு முன்னமே நாம் செலுத்தியுள்ள பெரும் தொகை ராயல்டியை என் புத்திக்கொள்முதல் கணக்கில் எழுதிட வேண்டியதே என்றும் தீர்மானித்தேன் !///

    ஏதேனும் ஒரு புத்தகத் திருவிழாவில் Disclaimerஓடு லிமிடேட் எடிசனாக வெளியிடுங்கள் சார்.!
    ராயல்டி செலுத்தி வாங்கிவிட்டு அதை கிடப்பில் போடுவதென்பது.. சங்கடமான சங்கதி சார்.!

    ReplyDelete
    Replies
    1. ஏதேனும் ஒரு புத்தகத் திருவிழாவில் Disclaimerஓடு லிமிடேட் எடிசனாக //
      யெஸ். சில இடங்கள் நம்மூருக்கு ஒத்து வராது எனினும் கதை பரபரப்புக்கும் அதிர்ச்சிகளுக்கும் பஞ்சமில்லாதது. *எல்லாவித* அதிர்ச்சிகளுக்கும்.

      Delete
    2. // ஏதேனும் ஒரு புத்தகத் திருவிழாவில் Disclaimerஓடு லிமிடேட் எடிசனாக வெளியிடுங்கள் சார்.!
      ராயல்டி செலுத்தி வாங்கிவிட்டு அதை கிடப்பில் போடுவதென்பது.. சங்கடமான சங்கதி சார். //

      +1
      எனது எண்ணமும் இதுவே!

      Delete
    3. // ஏதேனும் ஒரு புத்தகத் திருவிழாவில் Disclaimerஓடு லிமிடேட் எடிசனாக வெளியிடுங்கள் சார்.! //
      அதே,அதே...

      Delete
    4. லிமிடெட் எடிஷன் யெஸ் யெஸ் யெஸ்

      Delete
  11. இப்போ நெம்ப அழகா யூத்தா இருக்கற மாதிரி போட்டோக்களை தேடி எடுக்கனுமே. நிறய டைம் ஆகும். ட்ரை பண்ணுவோம். கிடைக்காமயாப் போகும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க எப்பவுமே யூத் தான்!
      ஆனால் என்ன முயற்சி செய்தாலும் தாரை பரணியிடம் போட்டி போடா முடியாது!

      Delete
    2. ஆஹாஆஹாஆஹாஆஹா...


      உண்மையை உரைக்க சொல்லும் உத்தமரே தீவிர பல்லாண்டு வாழ்க...

      Delete
    3. இதென்ன நீவிர் ன்னு எழுதுனா தீவிர மா வெளிப்படுகிறது...


      எழுத்துக்கே பொறாமை...

      Delete
    4. நீங்க எப்பவுமே யூத் தான்!

      #####

      FAKE NEWS

      Delete
  12. 'பிரளயம்' - கடந்த பதிவில் நீங்கள் இதனை பற்றி சொன்னவுடன் நீங்கள் ஏதோ திட்டத்துடன் இருப்பது தெரிந்தது. எங்களுக்கு எப்போதும் சிறந்ததை சிறப்பாக தரவேண்டும் என்ற உங்கள் எண்ணம் பாராட்டுக்குரியது.

    வழியனுப்ப வந்தவன் அட்டைப்படம் மற்றும் உட்பக்க டீஸர் ஆர்வத்தை கிளப்புகிறது. அதுவும் கார்ட்டூன் பாணியில் கதையின் நாயகன் ப்ளஸ் உட்பக்க சித்திரங்கள் வித்தியாசமாக வண்ண மயமாக உள்ளது.

    ReplyDelete
  13. வழியனுப்ப வந்தவன்: அட்டை படம் மனதை கொள்ளைகொள்கிறது! இந்த ஒல்லிப்பிச்சி வெட்டியான் அவரின் பின்புறத்தில் மயானம் + பின் அட்டையில் ஒரு குடும்ப போட்டோ என அழகாக உள்ளது! சிகப்பு வண்ணம் அட்டைப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும்படி உள்ளது!

    ReplyDelete
  14. விஜயன் சார், சென்னை புத்தக திருவிழா பற்றி ஏதேனும் தகவல் உண்டா! மாயாவின் கதை பற்றி இங்கே பதிவிட்டது புத்தக திருவிழாவிற்கு அவரை தயார் செய்வது போல் தெரிகிறது!

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் தெரிகிறது! இது என்ன புத்தகம் என்று ஞாபகம் வரமாட்டேன் என்கிறதே?

      Delete
    2. நம்ம ஆன்லைன் புத்தக விழாவுக்கு ரெடியான மாயாவியே கணிசமான கையிருப்பில் உள்ளார் சார் ! இந்தக் கதையையும் அதனோடே சேர்த்தே வாங்கியிருந்தோம் என்பதால் சும்மா இருக்கும் நேரங்களில் ரெடி பண்ணிடலாம் என்று நினைத்தேன் !

      Delete
  15. பிரளயம் கதை தள்ளிப் போவதின் பின்னால் உள்ள பிரளயம் பற்றி புரிகிறது. ஆனால் அந்த கதையை ரெகுலர் தடத்தில் வரமுடியாது என்றால் சிறப்பு வெளியீடாக ஏதாவது சரியான தருணத்தில் வெளியீடுகள் சார்.

    ReplyDelete
    Replies
    1. கதையின் தன்மையை அறிய நேரிட்டால் அது அத்தனை சுலபமல்ல என்பது புரியும் சார் !

      Delete
  16. ஆஹா....கழுகு வேட்டையும் ,கிராபிக் நாவலின் அட்டைப்படமும் அசத்துகிறது சார்..

    பிரளயம் மாறியதில் உங்களுக்கான காரணங்கள் சரியாக இருப்பின் அது தவறல்ல..


    புகைப்படம் விரைவில் சார்...:-)

    ReplyDelete
    Replies
    1. // புகைப்படம் விரைவில் சார்...:-) //
      மேக்கப்போடதானே தலைவரே...!!!

      Delete
    2. தலைவர் மேக்-அப் போட்டால் தனுஷ் மாதிரி இன்னும் யூத் ஆகிவிடுவார். எனவே நோ மேக்-அப் தலைவராக தலைவர் இருப்பார் :-)

      Delete
  17. கடந்த சில மாதங்களாக செல்வம் அபிராமி, அனு, மற்றும் பழனிவேல் இருவரும் பின்னூட்டம் இடவில்லை. இருவரும் நலமா? வேலை பளுவாக இருந்தாலும் இங்கு வந்து ஒரு வரி பின்னூடமாவது விட்டு செல்லுங்கள்.

    அதேபோல் ATR இவரை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. ATR நீங்களும் அவ்வப்போது வந்து ஓரு ஹாய் சொல்லிவிட்டு செல்லுங்கள்.

    மாதேஷ், பிரபு உங்களையும் காணவில்லை.

    ReplyDelete
    Replies
    1. செனா அனா ரொம்ப பிசின்னு கேள்விப்பட்டேன்.

      Delete
    2. வழிமொழிகிறேன் நண்பர்களே...

      வாருங்கள் வழக்கம் போல்..

      Delete
    3. செனா அனா இன்னும் ஒரு மாதத்திற்கு விடுமுறையில் இருப்பார்..!

      Delete
    4. டீ கடையிலிருந்து இளநீர் கடைக்கு மாறியாச்சு ! இதுவும் வேலைக்கு ஆகாங்காட்டி சர்பத் கடை போடணுமா ? மோர் பந்தல் ?

      Delete
    5. மோர் பந்தல் விருதுநகர் மற்றும் சிவகாசி பங்குனிப் பொங்கலை ஞாபகப் படுத்துகிறது சார்.

      Delete
    6. அன்பு பரணி, புது சாஃட்வேர் ஸ்விட்சோவர்(ஆரக்கிள்.ஒன்றுமே புரியவில்லை .விப்ரோ மென்பொருள் ,படுத்தி எடுக்கிறது பெயர் ifhrms.)மிடில.அதுதான் ஏரியாவுக்கு வரவில்லை .

      Delete
  18. ஆழ்கடலில் ஆர்ச்சி:

    ஜனவரி ஆன்லைன் புத்தகத் திருவிழா வெளியீடான ஆழ்கடலில் ஆர்ச்சி ஆர்ச்சி ரசிகர்களுக்கு எந்தக் குறையையும் வைக்காத அக்மார்க் கதை. கடலில் தொலைந்து போன நண்பர்களை தேடிச் செல்லும் ஆர்ச்சி, விக்டர், தாம்சன் குழுவினர் அமானுஷ்யமான மரணக் கப்பலை காணும் அந்த ப்ரேம், பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் கடல் கொள்ளையர்களின் கப்பலை நினைவுபடுத்தியது.

    வழக்கம் போல பீரங்கி தாக்குதல்கள், கட்டுமர சவாரி, சைக்கிள் மிதவை என சட்டித்தலையனின் அலப்பறைகளும், தலைக்கனம் மிகுந்த வசனங்களும் ஆர்ச்சியை எண்ணி சபாஷ் போட வைத்தன என்றால் மிகையல்ல.

    நண்பர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் கை கொடுப்பதில் ஆர்ச்சியை மிஞ்சியவர் எவரும் இல்லை என்பது போல பல இடங்களில் காட்சி அமைப்புகள் இருப்பது ரசிக்க வைக்கிறதேயன்றி, காதில் பூ சுற்றுவதாக தோன்றவில்லை. இப்படியான கற்பனைகள் மட்டுமே, நிதர்சன வாழ்க்கையின் வெம்மையான தாக்குதல்களுக்கு இளநீராக இனிக்கும்.

    இந்த கதையை காதில் பூ சுற்றும் கதையாக எண்ணி ஒதுக்காமல், வளரும் குழந்தைகளிடம் வாங்கி கொடுத்துப் பாருங்கள், அவர்களுடைய பால்யம் இரசனை மிக்கதாகவும், கற்பனை வளம் மிகுந்ததாகவும் இருக்கும்.


    நண்பரைத் தேடி தொடங்கும் ஆர்ச்சியின் இந்த முழுநீள சாகஸம், நண்பரை கண்டுபிடிப்பதும், அநியாயம் செய்பவர்களின் பிடியிலிருந்து தீவுவாசிகளை காப்பதும், சமயோசிதமாக செயல்பட்டு எதிரிகளை பந்தாடுவதும் அசத்தலான விருந்து என்பேன். குறிப்பாக, நெருப்பை கக்கும் சிறுத்தையின் வாயில் மரத்தை சொருகி வெப்பத்திலிருந்து தப்பிச் செல்வதும், பாலத்தின் கயிறு அறுந்து விழும் போது, அதிர்வை ஆர்ச்சி தாங்கிக் கொண்டு நண்பர்களை பாதுகாப்பதும் சாதாரண மனிதர்களும் கூட சிந்திக்கக் கூடிய ஐடியாக்கள்... காதில் பூ என்று சொன்னால், நம்ப முடியாது...

    ஆழ்கடலில் ஆர்ச்சி இந்த ஆண்டின் அசத்தலான ஆக்ஷன் விருந்து!

    வெளியிட்ட ஆசிரியருக்கு நன்றிகள்! 🙏🏼🙏🏼😍

    ReplyDelete
    Replies
    1. உண்மை. உங்கள் கருத்தே எனதும். பூபதி

      Delete
    2. அட, சட்டிதலையனுக்கு இத்தனை நீள சிலாகிப்பா ? பயலின் காதில் விழுந்தால் பறப்பானே !!

      Delete
    3. இது பால்ய காமிக்ஸ் நினைவல்ல ஐயா... உண்மையில், எந்தவொரு முழுநீள ஆர்ச்சி கதையையும் பள்ளி நாட்களில் படித்ததில்லை. எனவே தான், ஆர்ச்சி கதைகளை இப்போது படிக்கும் போதும் ஆர்வத்தை தூண்டுகிறதோ?!



      Delete
  19. ராயல்டி செலுத்தி வாங்கிவிட்டு அதை கிடப்பில் போடுவதென்பது.. சங்கடமான சங்கதி சார்.!


    உண்மை...:-(

    ReplyDelete
  20. So கதையோட்டத்துக்கேற்ப சிலபல கலீஜான வார்த்தைப் பிரயோகங்களும் இம்முறை இருந்திடும்! தயைகூர்ந்து அவற்றைக் கதையின் context–ல் மட்டும் எடுத்துக் கொள்ளக் கோருகிறேன்


    #####

    திரையில் அந்தந்த வட்டார கதைகளுக்கு ஏற்ப மொழி வசன நடையை மாற்றி பேசும் திரைப்படங்கள் உண்மைக்கு நெருக்கமாகின்றன எனும் பொழுது இதுவும் அவ்வாறு தான் என்ற புரிதல் என்றுமே உண்டு சார்..

    ReplyDelete
    Replies
    1. மணி எட்டரை ; இன்னும் தூங்காம லூட்டியா தலீவரே ?

      Delete
  21. // ரணகளத் துரிதத்தில் துளிர்விட்டான் – “வழியனுப்ப வந்தவன்”! //
    அண்டர்டேக்கரின் பாணி இவரிடம் இருக்காது எனினும்,இவர் வேறு மாதிரி கலக்குவார்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  22. // உங்களின் முகங்களில் புன்சிரிப்பைக் கொணரும் முயற்சியில், அவர்களது கண்களில் அவ்வப்போது கண்ணீரைப் பார்ப்பது உறுத்துகிறது ! //
    சங்கடமான விஷயம்தான் சார்...!!!

    ReplyDelete
  23. // ஐ கோயிங் டு மல்லு கட்டிங் வித் மர்ம மனிதன் மார்ட்டின் ! //
    சூப்பரு...

    ReplyDelete
  24. அடுத்த வெளியீடுகள் பிப்ரவரியில் மார்ச்சா ?! இல்லை மார்ச்சில் மார்ச்சா சார் ?!

    ReplyDelete
    Replies
    1. மார்டினின் கையில் உள்ளது சொற்பமான சிண்டு ! அது விடுபடுவதைப் பொறுத்தே சார் !

      Delete
  25. டியர் எடி ,

    இரும்பு கை மாயாவியின் கதை தலைப்பு என்னங்க.?

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஞாபகசக்தி அந்த மட்டுக்குலாமா இருக்குங்கிறீங்க சம்பத் ? திங்கட்கிழமை போய் உருட்டணும் - இக்கடவும் யாருக்கும் ஞாபகம் இல்லாத பட்சத்தில் !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  26. நல்ல கண்டிசனில் என்னிடமிருந்தால் தேடி எடுத்து அனுப்பிடலாமே அதற்க்காகத்தான் கேட்டேன் சார்

    ReplyDelete
  27. ஆர்ஸ் மேக்னா
    நிறைகள் நிறைய பேர் எழுதி விட்டார்கள்.
    சில குறைகள் மட்டும் இங்கே
    1. கதாபாத்திரங்களின் ஒரே முக பாவனைகளோடு கதை முழுவதும் வருகின்றனர்.- ஓவியர் டிஜிட்டல் ஆர்ட் உபயோகித்ததால் வந்த விளைவு?
    2. கிளிமாஸ்சை முதலில் கற்பனை செய்து விட்டு பின் கதையை பின்னோக்கி கதாசிரியர் எழுதியது போன்று ஒரு உணர்வை தவிர்க்க முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்று. தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே. வரவு நல்வரவாகுக.

      Delete
    2. ஒரு மொழிபெயர்ப்புப் பணியினை வேண்டுமானால் முன்னிருந்து எடுத்துச் சென்று கதை போகும் போக்கோடு பயணிக்கலாம் நண்பரே ; ஆனால் ஒரு முழுநீள கதையினை எப்போதுமே ஒன் லைனர் கருவிலிருந்து தானே வளர்த்தெடுத்துச் செல்ல முடியும் ? அந்த ஒன் லைனரில் க்ளைமாக்சில் சொல்லவுள்ள சமாச்சாரங்கள் தானே கதாசிரியரின் மனதில் highlight ஆகி நின்றிருக்கும் ?

      இந்தப் படைப்புக்கு தனது inspiration எதுவென்பதைத் தெளிவாக்கி விட்டுள்ள நிலையில், கதாசிரியர் வித்தியாசம் காட்டிட அந்த அணுசக்தி சார்ந்த கதையோட்டத்தைத் தெரிவு செய்துள்ளார் ! And இதை முதலில் பதிப்பகத்தாரிடம் சொல்லித் தானே படைப்பைத் துவங்க சம்மதம் பெற்றிருப்பார் ?

      So "இது தான் எனது கதைக்கரு ; இது தான் எனது க்ளைமாக்ஸ்" என்ற சிறு புள்ளிகளை மனதில் இருத்திக் கொண்டே பணியினைத் துவக்கியிருப்பார் ! And கதையின் முன் ; மத்திய பாகங்களை அதற்கேற்பவே செதுக்கியிருக்க முனைந்திருப்பார் ! அர்ஸ் மேக்நா மட்டும் தானென்றில்லை ; மெஜாரிட்டியான காமிக்ஸ் ஆல்பங்களின் படைப்புப் பாணிகள் இவ்விதமே இருக்கக்கூடும் சார் !

      ஆர்ச்சி ; ஸ்பைடர் போன்ற வாராந்திரத் தொடர்கள் வேண்டுமானால் கதாசிரியரின் மனசு போகும் போக்கில் , வரவேற்புகளுக்கு ஏற்ப நீண்டோ / சுருங்கியோ உருவாகிடலாம் !

      Ars Magna-வில் குறைகள் காண்பதாயின் வேறு சில சமாச்சாரங்களைச் சுட்டிக் காட்டிடலாம் சார் ; ஆனால் கதையை வரலாற்றோடும் , மத நம்பிக்கைகளோடும், fiction க்குத் தேவையான மசாலாப் பூச்சோடு நகர்த்திச் சென்றுள்ள விதத்தினில் என்னால் குறை கண்டிட இயலவில்லை சார் !

      Delete
    3. உங்கள் விளக்கத்திற்கு நன்றி ஸார்!

      Delete
    4. //ஆனால் கதையை வரலாற்றோடும் , மத நம்பிக்கைகளோடும், fiction க்குத் தேவையான மசாலாப் பூச்சோடு நகர்த்திச் சென்றுள்ள விதத்தினில் என்னால் குறை கண்டிட இயலவில்லை சார் //

      நிச்சயமாக சார்!

      Delete
  28. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்க வேண்டும் என்றால் தாரை பரணிக்கு கோழி லெக் பீஸ் உடன் இரண்டு பிரியாணி பார்சல் குமார். அப்புறம் கொஞ்சம் வாழைப்பூ வடையும்.

      Delete
    2. கண்டிப்பாக வாங்கி கொடுத்து விடலாம் பரணி.

      Delete
    3. நீங்க வாங்கிட்டு வர்றது, அவர் கண்முழிக்கிறச்சே ஊசிப் போய் ஒரு மாமாங்கம் ஆகியிருக்குமே சார் ; பிஞ்சு தலீவர் வெள்ளென கண் அசந்திடுவாரோல்லியோ ?

      Delete
    4. கரீட்டா சொன்னீங்க சார்...


      பாருங்க நேற்று நீங்கள் போட்ட பதிவிற்குள் உறங்க சென்றாயிற்று...


      :-(

      Delete
  29. வழியனுப்ப வந்தவன், கிட்டத்தட்ட சோடா போலவே இருப்பார் என்று யூகிக்கிறேன். காலகட்டம், மற்றும் தொழில் வேறு வேறு என்றாலும் ஏதோஒரு அலைவரிசையில்ஒன்று போலவே தோன்றுகிறது. கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்க சார் ; இந்த வெட்டியான் மாறுபட்டவன் !

      Delete
    2. காத்திருக்கிறோம் சார்...:-)

      Delete
  30. // உங்களின் முகங்களில் புன்சிரிப்பைக் கொணரும் முயற்சியில், அவர்களது கண்களில் அவ்வப்போது கண்ணீரைப் பார்ப்பது உறுத்துகிறது ! //

    வருத்தமாக உள்ளது.

    அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் என்று மனதில் வைத்துக் கொண்டு இனிவரும் காலங்களில் பேசுங்கள் நண்பர்களே. ப்ளீஸ்.🙏🙏🙏🙏

    ReplyDelete
  31. // ஒரு அமெரிக்க காச நோய் சிகிச்சை மையத்தில் அரங்கேறும் ரணகளங்களே இந்த ஆல்பத்தின் பின்னணி எனும் போது, ஒரு பெரும் நோய்த்தொற்ற்றானது லோகத்துக்கே பல பிரளங்களைக் கண்ணில் காட்டி வரும் இந்தக் காலகட்டம் - இந்த ஆல்பத்துக்குப் பொருத்தமானது தானா? //

    பதிவை முழுமையாக மீண்டும் ஒருமுறை படித்த பின்னர் தோன்றியது.
    நீங்கள் தள்ளிப்போட்டது மிகவும் சரியான முடிவு சார்.

    ரொம்பவும் நெகடிவ் என்றால் வேண்டாம் என மனது சொல்கிறது. மன்னிக்கவும் விஜயன் சார்.

    ReplyDelete
    Replies
    1. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...:-)

      Delete
  32. //ஏதேனுமொரு தருணத்தில் - "வேண்டியோர் மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள் ப்ளீஸ்" என்ற அறிவுறுத்தலோடு வெளியிடுவோம் ! அவர்கள் NO சொல்லிடும் பட்சத்தினில் 2 ஆண்டுகளுக்கு முன்னமே நாம் செலுத்தியுள்ள பெரும் தொகை ராயல்டியை என் புத்திக்கொள்முதல் கணக்கில் எழுதிட வேண்டியதே என்றும் தீர்மானித்தேன் !//

    பிரளயம் தற்போது வராதது ஏமாற்றமளிக்கிறது. ஆனால் கண்டிப்பாக வெளியிடுங்கள்.
    அறிவுறுத்தலோடு , 18+ என்ற குறிப்போடு வரும்பட்சத்தில் கதையோட்டத்திற்கு பாதிப்பு வந்துவிடாமல் சென்சார் பண்ணுவதில் சற்று நிதானிக்கலாம் சார்!

    ReplyDelete
  33. //ஏதேனுமொரு தருணத்தில் - "வேண்டியோர் மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள் ப்ளீஸ்" என்ற அறிவுறுத்தலோடு வெளியிடுவோம் ! அவர்கள் NO சொல்லிடும் பட்சத்தினில் 2 ஆண்டுகளுக்கு முன்னமே நாம் செலுத்தியுள்ள பெரும் தொகை ராயல்டியை என் புத்திக்கொள்முதல் கணக்கில் எழுதிட வேண்டியதே என்றும் தீர்மானித்தேன் !//

    பிரளயம் தற்போது வராதது ஏமாற்றமளிக்கிறது. ஆனால் கண்டிப்பாக வெளியிடுங்கள்.
    அறிவுறுத்தலோடு , 18+ என்ற குறிப்போடு வரும்பட்சத்தில் கதையோட்டத்திற்கு பாதிப்பு வந்துவிடாமல் சென்சார் பண்ணுவதில் சற்று நிதானிக்கலாம் சார்!

    ReplyDelete
    Replies
    1. முட்டையை உடைக்காது ஆம்லெட் போடும் கலையினை இன்னும் படிக்கலியே சார் நான் !

      Delete
  34. // மூன்றாம் பிறை' கமலஹாசனை விடவும் ஜாஸ்தி குரங்கு பல்டிகளை அடித்திருக்கும் நமக்கே கூட இந்த 64 பக்க ஆல்பத் தயாரிப்பு ஒரு மைல்கல் //

    கண்டிப்பாக இது ஒரு சாதனையே சார்.

    ReplyDelete
  35. // பாக்கி ரூ.125-க்கு இன்னொரு இதழ், தொடரும் மாதத்தில் உங்கள் இல்லம் தேடி வரும்! இம்மாதப் பணிகளிலிருந்து நிமிரக் கிடைக்கும் முதல் நொடியில் அந்த இதழ் சார்ந்த முஸ்தீபுகளுக்குள் புகுந்திடுவேன்! இந்த நொடி வரையிலும் அதற்கான தேர்வை நான் இறுதி செய்திருக்கவில்லை ! Or maybe அந்த ரூ.125 தொகைக்கு ஒரு கூப்பன் தந்து - 2021-ன் சந்தாவிலோ ; வேறேதும் இதழ்களின் கொள்முதலிலோ அதனை ஈடு செய்து கொள்ளவும் வாய்ப்பாக்கிடலாம் ! // முதல் பார்ட் ஓகே. 125 ககு ஒரு இதழ். 2ஆவது பார்ட் not ok இந்த கூப்பன் கொடுப்பது எல்லாம் வேண்டாமே சார்.

    ReplyDelete
  36. விஜயன் சார்,
    // இந்த நொடி வரையிலும் அதற்கான தேர்வை நான் இறுதி செய்திருக்கவில்லை //

    // Or maybe அந்த ரூ.125 தொகைக்கு ஒரு கூப்பன் தந்து - 2021-ன் சந்தாவிலோ ; வேறேதும் இதழ்களின் கொள்முதலிலோ அதனை ஈடு செய்து கொள்ளவும் வாய்ப்பாக்கிடலாம் ! //

    இந்த இரண்டுமே வேண்டாம் சார். ஒரு வேளை பிரளயம் வெளியிட முடியாமல் போனால் அந்த கதைக்கு நீங்கள் செலுத்திய ராயல்டி தொகைக்கு இதனை உபயோக படுத்தி கொள்ளுங்கள் சார். மறுக்காதீர்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. சார் .."லாபம் என்து ; நஷ்டம் உன்து " என்ற பாலிசி என்றைக்குமே சுகப்படாது ! கிட்டங்கியில் கிடப்பன புக்ஸ் ; பீரோவில் கிடப்பன கதைகள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான் !

      Delete
    2. புரிந்து கொண்டேன்.

      Delete
  37. பிரளயம் - ஏமாற்றம்

    ReplyDelete
    Replies
    1. வராது போனதில் ஏமாற்றம் ; வந்திருப்பின் பிரளயம் !

      Delete
  38. // ஐ கோயிங் டு மல்லு கட்டிங் வித் மர்ம மனிதன் மார்ட்டின் ! //

    கட்டுங்கோ நல்லா மல்லு கட்டுங்கோ. வெற்றியோடு திரும்பி வாருங்கள் :-)

    ReplyDelete
    Replies
    1. ஒரேயொருவாட்டி மார்டினின் படைப்பாளிகளிடம் கேட்கணும் -" நீங்க மட்டும் கிழியாத சட்டைகளை எந்தக் கடையிலே வாங்குறீங்கன்னு ?!"

      Delete
    2. சார் சட்டையை கழற்றி வைத்து சண்டை போடுவார்கள். அப்புறம் சண்டை முடிந்த பிறகு சட்டையை போட்டுக் கொண்டு கிளம்பி விடுவார்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் :-)

      Delete
  39. Pandemonium முழுவதும் படித்து முடித்த வகையில் "பிரளயம்" அறிவிப்பு வந்ததுமே மிகவும் குழப்பம். நமக்கு இது செட் ஆகுமான்னு..உண்மையில் இதை கைவிடுவது நல்ல முடிவு.. வாசகர்களுக்கும் இது ஒரு கிரேட் எஸ்கேப் என்றால் மிகையாகாது..

    ReplyDelete
  40. கழுகு வேட்டை வெகுநாட்களாக எதிர்பார்த்த டெக்ஸ் கதை. அதுவும் வண்ணத்தில், ஐ ஆம் வெயிட்டிங்

    ReplyDelete
  41. அந்த மாயாவி கதை தலைப்பு "ஆழ்கடலில் மாயாவி" தானே சார். நாளை தேடிப் பார்த்து விட்டால் போச்சு...

    ReplyDelete
  42. //உரிய சென்சார் சகிதம், ஏதேனுமொரு தருணத்தில் - "வேண்டியோர் மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள் ப்ளீஸ்" என்ற அறிவுறுத்தலோடு வெளியிடுவோம் !//

    யே யெப்பா... தயவுசெய்து என்னவிதமான ஜானர் என்று ஸ்டிக்கர் ஒட்டி விற்பனைக்கு வைக்கவும். அதாவது எந்தவிதத்தில் இது அடல்ஸ் ஒன்லி அல்லது 18+ என்று ஸ்டிக்கர் ஒட்டவும் ❤️

    பராகுடா என்ற புத்தகம் ; நினைவுக்கு வரும்போதெல்லாம் வாந்திதான் வருகிறது ; கதை நகர்வில் தெரியாமல் படித்த அந்த 2, 3 பக்கங்கள் ; மீண்டும் ஒரு அருவருப்பு எனக்கு வேண்டாமே ; அப்படியாப்பட்ட காமிக்ஸ் அறிவும் எனக்கு வேண்டாமே ❤️

    அது மட்டுமா

    இன்னுமோர் புத்தகம் ; அதற்கு வெகு நாட்களுக்கு முன் வெளிவந்தது ; பெயர் தேடாமல் நினைவில்லை ; ஐயோ சாமி, எனக்கு காமிக்ஸ் ரசனையே குறைந்து விட்டது ❤️

    ReplyDelete
  43. கழுகு வேட்டை அட்டை ஓவியம் மற்றும் வடிவமைப்பு அமர்க்களம்.

    ReplyDelete
  44. மாற்றங்கள் ஒன்றே மாறாதது!

    ReplyDelete
  45. //பாக்கி ரூ.125-க்கு இன்னொரு இதழ், தொடரும் மாதத்தில் உங்கள் இல்லம் தேடி வரும்! இம்மாதப் பணிகளிலிருந்து நிமிரக் கிடைக்கும் முதல் நொடியில் அந்த இதழ் சார்ந்த முஸ்தீபுகளுக்குள் புகுந்திடுவேன்! இந்த நொடி வரையிலும் அதற்கான தேர்வை நான் இறுதி செய்திருக்கவில்லை ! Or maybe அந்த ரூ.125 தொகைக்கு ஒரு கூப்பன் தந்து - 2021-ன் சந்தாவிலோ ; வேறேதும் இதழ்களின் கொள்முதலிலோ அதனை ஈடு செய்து கொள்ளவும் வாய்ப்பாக்கிடலாம் ! //

    2021 சந்தாவில் தோர்கல் ஒரு book தான் வருகிறது.. இந்த RS125ku இன்னொரு தோர்கல் சேர்த்து double album ஆக, if possible வெளியிட முடியுமா சார் ..

    ReplyDelete
    Replies
    1. அடடே அருமையான idea தம்பி.

      Delete
    2. சூப்பர் ஐடியா... +1000

      Delete
    3. நடப்புச் சந்தாவில் உள்ளோர் அனைவருமே 2021 -ன் சந்தாவில் இணைந்திடும் பட்சத்தில் இது போன்ற ஐடியாக்கள் ஓ.கே . தான் நண்பரே ! ஆனால் அதற்கு உத்திரவாதம் கிடையாதே ?

      Delete
  46. “பிரளயம்” தள்ளிப் போனது வருத்தமே! அதுவும் உரிமைகளை வாங்கிய பின்னர்..... ஏதேனும் ஒரு புத்தக திருவிழாவினில் 18+ என குறிப்பிட்டு வெளியிட முடியுமா சார்?
    “ வழியனுப்ப வந்தவன்” இனை வெறும் மூன்றே நாட்களில் தயாரித்து வழங்குவது என்பது.... பற்பல அந்தர்பல்டிகள் அடித்திருப்பது கண்கூடு .. தங்களாலும் ரீமாலும் மட்டுமே இது சாத்தியம் . Hats Off. நிஜமாகவே நீங்கள்தான் காமிக்ஸ் காதலர்.. தங்களுக்கு Valaitine’s தின வாழ்த்துக்கள் சார்.

    “கழுகு வேட்டை” இனை நான் இன்றும் படிக்கவில்லை. கலரில் அதுவும் போட்டோ உடன் என்றால் கேட்க வேண்டுமா? இதோ அனுப்புகின்றேன் சார். அட்டை படங்கள் .... செம. வெட்டியானின் கலர் .. ஓவியங்கள் வித்தியாசமாக அழகாக உள்ளதாகவும் தோன்றுவது .... எனக்கு மட்டுமா

    ReplyDelete
    Replies
    1. // Hats Off. நிஜமாகவே நீங்கள்தான் காமிக்ஸ் காதலர்.. தங்களுக்கு Valaitine’s தின வாழ்த்துக்கள் சார். //

      +1

      Delete
  47. பிரளயம்....ட்ராப்பிங் நல்ல முடிவு சார்.

    அந்த இடத்தை நிரப்ப தாங்கள்+ தங்களது அணியின் உழைப்புக்கு சிரம் தாழ்ந்த வந்தணங்கள்.🙏

    முந்தி கொண்ட வெட்டியானை வரவேற்கிறோம்.

    ReplyDelete
  48. பிரளயம்

    Very big disappointment 😭

    ReplyDelete
  49. மார்ச் கூட்டணி வித்தியாசமானதும்,எதிர்பார்ப்பு உள்ளதுமாக இருக்கிறது சார்...
    நகைச்சுவைக்கு-கெளபாய் எக்ஸ்பிரஸ்,
    சீரியஸா துப்பறிய-மூவர் கூட்டணி,
    பழமை+துப்பறிதல்-ஜேம்ஸ்பாண்ட்,
    எந்த வகைன்னு இதுவரை தெரியாத-ஸ்டெர்ன்...
    ஒவ்வொன்னும் ஒவ்வொரு வகை என்பதால் எது டாப் இடத்தை பிடிக்கும்னு சட்டுனு கணிக்க முடியலை...
    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. 2022 இல் மார்ட்டினும்,ரிப்போர்ட்டர் ஜானியும் இரு ஸ்லாட்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்...
      2022 ஆண்டு தன் கதவுகளை விசாலமாக திறந்து விடட்டும்...

      Delete
    2. 2022-ல் வேற மாதிரி திட்டமிட முடிகிறதாவென்று பார்ப்போம் சார் !

      Delete
    3. ஆஹா ஆவலுடன் சார்...

      Delete
  50. காமிக்ஸ் காதலரான ஆசிரியருக்கும் என்னைப்போன்றே முதல் மரியாதை சிவாஜிகளான காமிக்ஸ் நண்பர்களுக்கு இனிய காதலர்தின வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    ReplyDelete
  51. சார் சரியான முடிவே....வழியனுப்ப வந்தவன் தலைப்பே அதிருதே....அட்டைப்படமோ ஆளையடிக்குது...கழுகு வேட்டை அட்டைப்படம்...டாப்....

    ReplyDelete
  52. ஒவ்வொரு புத்தகத்தின் வெளியீட்டிற்கும் நிராகரிப்புக்கும் இவ்வளவு தெளிவான விளக்கமான காரணங்கள் ( தொழில்நுட்ப காரணங்கள் அல்லது கதைக்களங்கள் குறித்தோ) தரும் ஒரே ஆசிரியர் நீங்கள்தான் Sir,

    அளவற்ற சுதந்திரத்தை ஆசிரியர் தருவதால் வாசகர்களாகிய நாமும் மிகுந்த பண்புடன் நடக்க விரும்புகிறேன், தமிழின் ஆகச்சிறந்த வாசக வட்டம் நம்முடையதே,

    ReplyDelete
    Replies
    1. ஏழரைக் கோடி ஜனத்தின் மத்தியில் காமிக்ஸ் காதலர்கள் ஆயிரத்துச் சொச்சமே எனும் போது இந்த வட்டத்துக்கு உரிய அன்பும் மரியாதையும் வழங்கிடுவது நம் கடமையாச்சே சார் ? தவிர சில நேரங்களில் கதைகளின் பின்னுள்ள கதையிலும் சுவாரஸ்யம் இருக்கக்கூடும் என்பதால் அவற்றையும் பகிர்ந்திட முனைகிறேன் !

      Delete
    2. //தமிழின் ஆகச்சிறந்த வாசக வட்டம் நம்முடையதே,//

      :-))

      Delete
    3. சார் இந்தச் சிரிப்பிற்கும், மேலே பதிவில் ///And just a request please folks /// அப்படீன்னு நீங்க ஆரம்பிச்ச வரிகளுக்கும் சம்மந்தம் இல்லைதானே?!! :D

      Delete
    4. யாருப்பா அது ..இளநீர் கடையிலே ஒரண்டைய இழுத்திட்டு ?

      Delete
    5. தமிழின் ஆகச் சிறந்த வாசகர் வட்டம் நம்முடையது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.அதே போல் மிகச்சிறந்த இதழாசிரியர் நம் விஜயன் சார் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமே இல்லை.

      Delete
  53. ***** அர்ஸ் மேக்னா - யுகம் தாண்டியதொரு யுத்தம் *****

    கதாசிரியரும், ஓவியரும் இணைந்து அணுகட்டமைப்புச் செய்த 'ஃபீனிக்ஸை' நம் உள்ளூர் எடிட்டர் தன் அசாத்திய மொழிபெயர்ப்பால் செறிவூட்டி தமிழ்காமிக்ஸ் ரசிகர்களின் மீது பிரயோகிக்க....

    'பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்'

    700+ வாகர்கள் சின்னாபின்னமாகியிருக்கின்றனர்!

    ReplyDelete
    Replies
    1. நறுக்!

      சுருக்!!

      பூம்ம்ம்ம்ம்.......!!

      செம ஈ.வி.

      Delete
    2. அது எல்லாம் சரிதானுங்கோ ஈவி.

      மெரட்டலான அட்டை...

      மினுக்கலான ஓவியங்கள்...

      சரசரனு ஓடற கதை...

      செமத்தியான தரம்... அசத்தி போட்டாரு எடிட்டரு...

      கதை ஊடல ஒரு ஓட்டை தெம்படுதுங்களே கவனிச்சியலா???

      "பீனிக்ஸ்"ல தடவப்பட்ட ரேடியம் புதையலா காட்டப்படுது...!!

      ஆனா அணுகுண்டு தனிமங்களும் போன நூற்றாண்டின் துவக்கத்தில் தான் கண்டுபிடிச்சாங்க...!!

      "பீனிக்ஸ்" ஆராய்ச்சிக்கு அவிகளுக்கு எங்கேர்ந்து பொருட்கள் கிடைத்தன????
      (அந்த "பொருளை" பற்றியே தெரியாது என்பது ஒரு பக்கம்)

      முன்னூறு... நானூறு...வருசமா எதை வெச்சி "பீனிக்ஸ்" ல வறுத்த கறி பண்ணி இருப்பாங்க???

      Delete
    3. யோசியுங்கள் சார் ; பதில் கதை நெடுகவே உள்ளதே !

      Delete
    4. ஆசிரியர் சார்@ நானும் நம்ம "நண்பரும்" இந்த பதிலை விவாதித்து விட்டோம். நம்ம நண்பர்களும் அதையே சிந்தித்தார்களானு பார்ப்போம்.

      Delete
    5. ஆமாம் STVR.. எடிட்டர் சொன்னதுபோல நிறைய இடங்களில் அதைப் பற்றிய விளக்கங்கள் இருக்கிறது!

      300 வருட ஆராய்ச்சிகளின் ஒட்டுமொத்த ஆராய்ச்சிக் குறிப்பான 'அர்ஸ் மேக்னா' புத்தகம் கையில் கிடைத்த பிறகுதானே 'சின்னப் பையன் & குண்டுப் பையன்' இறுதிவடிவம் பெற்று ஜப்பானில் 'பூம்ம்ம்ம்' செய்யப்படுகிறது?!!

      Delete
    6. விவாதிக்கும் அளவுக்கு இதில் சாரமே லேதாச்சே ? கதையின் கட்டமைப்பின் முக்கிய தூணாச்சே - யாரும் மிஸ் செய்திருக்க இயலாது !

      Delete
    7. அது ஏன் என்றால் ஆசிரியர் சார், அசாத்திய ஓவியங்கள்+
      செதுக்கி எடுத்த டயலாக்குகள்+
      அடுத்து என்ன...அடுத்து என்ன என அவசரப்படுத்தும் கதையம்சம்
      நம் பார்வைக்கும் சிந்தைக்கும் மெல்லிய திரையிட்டு விடுவதால்....!!!

      Delete
    8. ////'அர்ஸ் மேக்னா' புத்தகம் கையில் கிடைத்த பிறகுதானே 'சின்னப் பையன் & குண்டுப் பையன்' இறுதிவடிவம் பெற்று ஜப்பானில் 'பூம்ம்ம்ம்' செய்யப்படுகிறது?!!///--

      ஆம் ஈவி.
      கதையில் அப்படி தான் முடிச்சி இருக்காரு....!!!

      அசாத்திய கற்பனையை அங்கே கொண்டு வந்து முடிச்சி போட்டு இருக்காரு....!!!

      அந்த அளவில் நாம ஏற்று கொள்வோம்.

      (நிசத்தில் என்ன நடந்தது என்பதை பிற்பாடு ஒரு நாள் பார்ப்போம்)

      Delete
    9. //விவாதிக்கும் அளவுக்கு இதில் சாரமே லேதாச்சே ? கதையின் கட்டமைப்பின் முக்கிய தூணாச்சே - யாரும் மிஸ் செய்திருக்க இயலாது !//

      விவாதம் பழைய விவிலிய காலத்திற்கும் பின்னோக்கிச் சென்று நாகரிகங்களின் தோற்றத்திலிருந்து தொடங்கி இனங்கள், பண்டைய மதங்கள் என்று போய்விட்டது.

      Delete
  54. //மூன்றாம் பிறை' கமலஹாசனை விடவும் ஜாஸ்தி குரங்கு பல்டிகளை அடித்திருக்கும் நமக்கே கூட //

    ஹா..ஹா..ஹா..

    ReplyDelete
  55. தோர்கல் இப்போ தான் படிச்சேன்!

    கடேசி 2 பாகம் சூப்பர்!!

    ஜோலன் அட்டகாசம்!!

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா one of the best of this year மிதுன்

      Delete
  56. **** பாதிக் கிணறுகூடத் தாண்டாத சந்தா எண்ணிக்கை கொஞ்சமேனும் அதிகரித்திட நம்மால் இயன்றதைச் செய்வோம் நண்பர்களே! பின்வரும் கோரிக்கையை தங்களின் முகநூல் / வாட்ஸ்அப் க்ரூப்களில் பகிரலாமே ப்ளீஸ் ?! 🙏🙏🙏🙏******


    ரூ. 250 மதிப்புள்ள 'கழுகு வேட்டை' முழுவண்ணப் புத்தகம் முகமறியா நண்பர் ஒருவரின் அன்பளிப்பாய் 2021ன் சந்தாதாரர்கள் அனைவருக்கும்!!!
    தவிர, அழகான பரிசாகக் கிடைக்கவிருக்கும் இப்பிரதியின் முதல் பக்கத்தில் உங்களுடைய ஃபோட்டோவை பிரின்ட் செய்து தருகிறார் நமது எடிட்டர் விஜயன்!

    வேறென்ன வேண்டும் நண்பர்களே.. நீங்களும் சந்தாவில் இணைந்திட?!!

    சந்தாவில் இணைவது பல விதங்களிலும் பயனிக்கக்கூடியது என்பதோடு, இந்த சிறிய காமிக்ஸ் உலகுக்கு நீங்கள் செய்திடும் பேருதவி என்பதிலும் மாற்றுக் கருத்து ஏது?

    பயன்பெற்றுப் பயனளியுங்கள்! இன்றே சந்தாவில் இணைந்திடுங்கள்!

    மேலும் விவரங்களுக்கு :
    https://lion-muthucomics.blogspot.com/2021/02/blog-post_13.html

    ஆன்லைனில் சந்தாச் செலுத்திட : www.lion-muthucomics.com

    ReplyDelete
  57. @STVR @EV

    இப்படி வச்சுக்கலாம்...
    அர்ஸ் மேக்னா புனைவுதான், நிஜம் இல்லை என்பதற்கு குறிப்புகள் கொடுங்களேன்...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்!

      மேலே ஆல்ரெடி நான் ஆரம்பித்து உள்ளேன் நண்பரே.

      ///அணுகுண்டு தனிமங்கள் 1900களில் கண்டுபிடிக்கப்பட்டவை...!!!//.

      ///கதாசிரியர் முடிச்சி போட்டு இருக்கும் க்ளைமாக்ஸ்///-- இதை நல்லா நாம பிரமிப்பு விலகி் ஆராய்ச்சி பண்ணினா தெரிந்து விடலாம்.

      Delete
    2. ///அர்ஸ் மேக்னா புனைவுதான், நிஜம் இல்லை என்பதற்கு குறிப்புகள் கொடுங்களேன்...///

      என்னோட சிஷ்யப் பிள்ளை இப்போ லீவுல இருக்காரு ( பேரு - செனா அனா). அவரு வந்து குறிப்புகள் கொடுப்பாரு! :D

      Delete
    3. அதாவது இது புதினம் தான் - முதல் பகுதியில் ஒரு நபர் நெற்றி பொட்டில் குண்டு வாங்கி இறப்பார் இல்லையா அவர் உண்மையில் இறந்த விதம் பற்றி கூகுளை தட்டி பாருங்களேன் :-)

      Delete
    4. //முதல் பகுதியில் ஒரு நபர் நெற்றி பொட்டில் குண்டு வாங்கி இறப்பார் இல்லையா//

      அவர் இறக்க மாட்டாரே... தோட்டா உரசிக் கொண்டு தானே போகும்?

      Delete
    5. //அந்த Sniper//

      இல்லை K.S.

      PfB அவரைச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. நீங்கள் சொல்வது சரிதான் சரவணன்.

      அந்த மனுஷன் கதையில் சாகவில்லை என்பதை எப்படி மறந்து போனேன். 🙄

      ஒரு வேளை வீக்கி பீடியாவில் அணுசக்தி கண்டுபிடிக்கபட்ட. விதத்தை தேடிப் பார்த்தால் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்.

      ஆனால் உண்மை ப்ளஸ் கற்பனை கலந்து கதை. ஆனால் கதை பின்னப்பட்ட விதம் இது உண்மைதானோ என படித்து முடித்த பின்னர் என்னையும் சிந்திக்க செய்தது.

      Delete
  58. படிச்சுட்டேன்......😊

    ReplyDelete
  59. சார் ஃபோட்டோ வை எந்த mail id க்கு அனுப்ப வேண்டும்??? கழுகு வேட்டை புத்தகத்திற்கு????

    ReplyDelete
    Replies
    1. // அவர்கள் சந்தாத் தொகைகளுடன் தமது போட்டோக்களை lioncomics@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் போதும் //

      I hope this helps you!

      Delete
    2. நன்றி பரணி மிக்க நன்றி

      Delete
  60. கலீஜான வார்த்தைகளுடனான மொழி பெயர்ப்பு. ஹை பதுமாதிரியான ஒரு மொழி பெயர்ப்பு இது போதாதா வெட்டியானின் வெற்றிக்கு அந்த மொழிபெயர்ப்புநடைக்கு ஆவலுடன் வெய்ட்டிங் கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  61. நாங்கள்ளாம் கலாமிட்டி ஜேனுக்கே டாட்டா காட்டினவங்க. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. நாங்கள்ளாம் கலாமிட்டி ஜேனுக்கே டாட்டா காட்டினவங்க. செம்ம செம்ம ராஜசேகரன் சார்.

      Delete
  62. பிரளயம் வராதது சற்று ஏமாற்றமளித்தது.வாகான ஒரு தருணத்தில் முன்பதிவிற்கு மட்டும் என்று களமிறக்கலாம்.

    ReplyDelete
  63. ஆசிரியரின் பீரோவில் துயிலும் கதைகளை ஏன் வெளியிடக் கூடாது ? ஒன்று இரண்டாக வெளியிடலாமே? முதலீட்டை முடக்கவேண்டியிராதே ஆசானே.

    ReplyDelete
  64. “மா .. துஜே...சலாம்” ஆல்பத்தை படித்து ஆடிப்போனேன். இலங்கை வன்னியில் நிகழ்ந்த பேரலவங்களை தரிசித்தவன் என்ற வகையில் அதனுடன் ஒத்த .... இன்னும் சொல்லிலடங்காத பேரவலங்களுடன் மறுபடி தரிசித்தது, பற்பல வலியுடன் கூடிய உணர்வுகளை தூண்டின. கதையில் வரும் அம்மா போன்று எத்தனை .. எத்தனை அம்மாக்கள் ... மனைவிகள்.. பிள்ளைகள் தங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை இன்று வரை தேடுகின்றனர். பதில் கடவுள் ஒருவனே அறிவான்.
    😰😰😰😰
    படைப்பாளிகளுக்கும் உங்களுக்கும் ஒரு ராயல் சலூட் சார்.

    ReplyDelete
    Replies
    1. இங்குள்ள மற்ற யாரையும் விட உங்களைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களால் மட்டுமே இக்கதையின் தாக்கத்தை முழுவதுமாய் உணரமுடியும் பிரபானந்த் சார்!

      'மா துஜே சலாம்' - ஒரு அபாரமான படைப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை!

      Delete
  65. @ all uncles and Aunties...

    சுகந்தன்னே..?

    ReplyDelete
  66. After reading Ars magna, again I am now reading Jason Brice series!

    ReplyDelete
  67. தளம் மிக அமைதியாக இருக்கிறது.என்னவாக இருக்கும்?

    ReplyDelete
  68. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  69. இரத்தப்படலம் 2130 மீ..!


    ஜேசன் மக்லேன் மேலே ஏறுவதைப் பார்த்து..,2130 மீ என்பது எரிபொருள் விலை போல, கரிவேப்பி விலை போல மேல்நோக்கிய ஏற்றம் போலும் என நினைத்தேன். ஆனால் 2130 மீ கிடைமட்டத்தொலைவு என முன்பக்கத்திலேயே புரிந்தது.

    ***************-

    ஸ்நைப்பர்...சமீப காலமாக சகஜமாக புழங்கி வரும் சொல்லாடல். ஏற்கனவே தேர்ந்த ஸ்நைப்பராக இ.ப வில் அடயாளம் கண்டுகொள்ளப்பட்ட XII, மீண்டுமொருமுறை மனமுவந்து ஸ்நைப்பராக உருவெடுக்கிறார்.

    *****************

    ரெண்டு கி.மீ தொலைவிலுள்ள இலக்கை வெறும் ஐந்து நொடிகளில் தொடும் தோட்டாவானது குடியிருக்கும் அந்த ஸ்நைப் ன் முனையில் உள்ள தோலைநோக்கி, எதை நோக்கியுள்ளது? எதைத் துளைக்க காத்திருக்கிறது.?
    கருப்புச் சூரியன் மீண்டும் உதயமாகிறதா?
    படிக்கப் படிக்க கேள்விகள் விரிந்து கொண்டே செல்கின்றன.

    ******************

    இலக்கைத் தரைமட்டமாக்க, தரைமட்டத்திலிருந்து குறைந்தது 150மீ உயரத்தில் ஸ்நைப்பர் நிலை கொள்ள வேண்டும்.இத்தனைத் துல்லியமாக பிரமாதமாகத் திட்டமிட்டு, காய் நகர்த்திய கதாசிரியர் ..தோட்டா கிளம்பும்போதுதானா தொடரும் போட வேண்டும்?

    நெஞ்சு பொறுக்குதில்லையே.!!!!!

    ReplyDelete
  70. ரொம்ப நாள் கழிச்சு, ரிப் கிர்பியைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி.

    ReplyDelete

  71. "தகிக்கும் பூமி...!"

    கதாசிரியர் அபாரமாகவே செயல்பட்டிருக்கிறார்.கதையில் கதை எனும் வஸ்து அவ்வளவாக கிடையாது என்பதையும், ஹீரோவுக்கான தன்மை குறைந்துள்ளது என்பதையும் தெளிவாக உணர்ந்தேயிருப்பார்.அந்தக் குறையை நிவர்த்திக்க அவர் கதை சொல்லும் முறையில் கவனத்தைக் குவித்து, நம் குவிமையத்தில் ஆழ்த்துகிறார்.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு கதை ஒளிந்துள்ளது.அது ,அழகானதாகவோ சோகமாகவோ இல்லை மோசமானதாகவோ இருக்கலாம்.அப்படிப்பட்ட நினைவுகளை நீட்டாக தேவையான இடங்களில் ஒன்றன் பின் ஒன்றாக நிரப்புவதன் மூலம், மாறுபட்ட அனுபவத்தை வழங்கமுடியும் என கட்டமைக்கிறார்
    ஆம் .ஏகப்பட்ட ப்ளாஷ்பேக்'கள் கதைநெடுக வரிசைகட்டி வருகின்றன..கதாசிரியர் அதை நல்ல முறையில் கையாண்டுள்ளார்.
    ஒரு வழக்கமான ப்ளாஷ்பேக்கில், நாயகனோ, நாயகியோ, இல்லை வில்லனோ, நினைவுகூர ப்ளாஷ்பேக் காட்சிகளாக விரிவடையும்.ஆனால் இதிலோ முதலில் நினைவு கூர்வது கதாசிரியர்.
    ஆம். ஒவ்வொரு.ப்ளாஷ் பேக்'ம் வெறுமனே சொல்லப்படவில்லை . அவை கதையோடு கச்சிதமான பொருந்தம் வண்ணம் தொடர்பை ஏற்படுத்துகிறார்.இது ஒரு நல்ல யுக்தி.

    *******************

    திடும் 'மென, கப்பலில் தொடங்கும் அதிரடி, மெல்ல எங்கோ பின்னோக்கி பயணித்து மீண்டும் கப்பலில் சேர்வது ஒரு வித்யாச தொடக்கம்.அந்த சம்பவத்திற்கிடையே
    தாயின் மறைவையும், அந்த வெற்றிடத்தை நிரப்ப முனையும் தந்தையின் பொறுப்புணர்வையும், காட்டும் ப்ளாஷ்பேக் 'ம், அமைத்த விதம், சோகத்தையும் தாண்டி அழகியல் தன்மை பெற்றது.

    இளமையில் மேற்படிப்புக்காக மேற்படி சிகாகோவுக்கு ரயிலேறும் லோன் ரேஞ்சர் கொஞ்ச காலம் கழித்து, கொஞ்சம் கடமை, கொஞ்சம் பழிவாங்க என மீண்டும் சிகாகோவுக்கு ரயிலேறுகிறார். சிகாகோவுடனான கடந்தகால பிணைப்பையும், சிநேகத்தையும் விளக்கும் ப்ளாஷ்பேக் உறுத்தலின்றி உயிரோட்டமாக அமைந்தது சிறப்பானது .

    மர்லே 'வின் குற்றவுணர்வின் இருண்டபக்கத்தை விளக்கும் ப்ளாஷ்பேக், இடைச்செருகலாக இல்லாமல் முடிவில் அவனுடைய செயலுக்கு நியாயம் சேர்க்கிறது.

    அது ஒரு சாதாரண சண்டைக் காட்சிதான். ஆனால் ,அதை அப்படி வெறுமனே கடந்து செல்ல இயலாத படி ,அதன் பின்ணணியில் ஒரு நாடோடிக்கதையினூடே ஒருஅசரீரி விவரிக்க கம்பீரத்தன்மை பெற்றதற்காக தாராளமாகக் கைதட்டலாம்.கதை முழுக்க இப்படி நிறைய விசயங்கள் நிறைந்து கிடக்கின்றன.

    மொத்தமாகப் பார்க்கும்போது சின்னச்சின்னக் கதைகள் தானே என்று ஆர்வத்தைக் குறைத்தாலும், அந்தச் சோர்வு ஏற்படாவண்ணம் கதையை அமைத்து நகர்த்திய திறனே கதாசிரியரின் திறமை

    ReplyDelete
  72. இங்கேயும் ஒரு ப்ளாஷ்பேக்...!


    "மஞ்சளும் ஒரு நிறமே."

    எங்கோ,என்றோ, எப்போதோ நடக்கும் ஒரு சம்பவம், பின்னாட்களில் நாட்டுப்புற கதையாகி, மேலும் சுருங்கி செவிவழிக்கதையாகி, இன்னும் தன்னை இழந்து ஒரு கட்டுக்தையாக பாவிக்கப்படும் என்பதை முதலிரண்டு பக்கங்கள் உணர்த்துகிறது.ஆனால் உண்மையானது எப்போதுமே தனது தடத்தை அழுத்தமாகவே விட்டுச் செல்லும் என்பதே எஞ்சி நின்ற தோட்டா விட்டுச் செல்லும் செய்தி.

    ReplyDelete
    Replies


    1. ப்ளாஷ்பேக் 'கள் தொடர்கின்றன.


      "நேருக்கு நேர்."

      லோன் ரேஞ்சர் நட்புக்காக மட்டும் தலைகாட்டும் கடுகு சைஸ் கதை.

      Delete
    2. நன்று கோவிந்தராஜ்

      Delete
  73. ஐ “பொக்கிஷம் தேடிய மொக்கையன்” ; “புதையலின் பாதையில் புளிமூட்டையன்” இந்த தலைப்புகள் நன்றாக உள்ளது. ஏதாவது கார்டூன் கதைகளுக்கு உபயோக படுத்திக்கொள்ளலாம் சார்.

    ReplyDelete
  74. G. P. எப்ப வந்தாலும் அசத்தல். அடிக்கடி வாங்க சார் கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete