Powered By Blogger

Wednesday, February 24, 2021

இன்று ஒரு தகவல் !

 நண்பர்களே,

வணக்கம். துவங்கி விட்டது சென்னைப் புத்தக விழா 2021 !! BAPASI-ன் தொடர் முயற்சிகளும், அரசாங்கத்தின் இசைவும் இல்லாது போயிருப்பின் நிச்சயமாய் இது சாத்தியமாகியிராது தான் ! இருவருக்குமே நமது நன்றிகள் ! சென்னை காட்டியுள்ள வழியில் இனி நெய்வேலி ; கோவை ; ஈரோடு ; மதுரை என புத்தக விழா circuit சிறுகச் சிறுக நார்மலுக்குத் திரும்புமென்று நம்புவோம் ! Fingers crossed !

And வழக்கமான நமது புத்தகக் கத்தைகளோடு நம்மாட்கள் ஸ்டாலில் ஆஜர் ! 
இங்கே சின்னதாயொரு கொசுறுத் தகவல் : 

நம்மிடம் உள்ள CINEBOOK ஆங்கிலப் பதிப்புகள் நெருக்கிக் காலியாகி விட்டிருக்க - புதுசாய், கொஞ்சம் டைட்டில்களை இறக்குமதி செய்திட ஜனவரியில் ஏற்பாடுகளைத் துவக்கி விட்டோம் ! பொங்கல் சமயத்தில் நடந்திட்ட நமது ஆன்லைன் புத்தக விழாவின் விற்பனைகளே இந்த முயற்சிக்கான விதைநெல் ! So மார்ச்சின் இறுதிக்குள் புக்ஸ் நம்மை எட்டியிருக்கும் & as a result இனி வரவுள்ள மேஜர் நகர விழாக்களுக்கு அவற்றையும் சுமந்து செல்லவுள்ளோம் ! ஆகையால் இனிமேல் பரபரப்போடு உள்ளே நுழைந்து - "இங்கிலீஷ் காமிக்ஸ் இல்லையா ?" என்று வினவிடக்கூடிய புதுயுகப் பெற்றோருக்குமே நம்மிடம் சரக்கிருக்கும் ! "காமிக்ஸ்" எனும் ஆர்வம் ஏதேனுமொரு ரூபத்தில் துளிர் விட்டால், அது எந்த மொழியின் புண்ணியத்தில் ? என்ற கேள்விகளெல்லாம் பின்னுக்குச் சென்றிட வேண்டுமல்லவா ? இங்கிலாந்தில் லாக்டௌன் அக்கப்போர் மட்டும் இல்லாது போயிருப்பின், இந்தச் சென்னை விழாவின் நேரத்துக்கே நம் ஸ்டாலின் variety அதிரடியாய்க் கூடியிருக்கக்கூடும் ! Anyways, always a next time !

And நமது சந்தா அங்கத்தினருக்கு இந்த புக்ஸை சின்னதொரு சலுகையோடு வாங்கிட வழி செய்யும் திட்டமும் உள்ளது ; மார்ச்சில் அது பற்றிப் பார்ப்போமே ! ரைட்டு....மார்டினுடனான மல்யுத்தத்தைத் தொடர நான் புறப்படுகிறேன் ; நீங்கள் சென்னையில் இருப்பின், நம் ஸ்டாலுக்கொரு விசிட் அடிக்கலாமே - ப்ளீஸ் ? Bye for now ! 

பின்குறிப்பு : புக்ஸ் வந்து சேரும் வரைக்கும் அவை என்னவென்பது பற்றி நம்மாட்களுக்குத் தெரிந்திராது ! So மார்ச்சில் நான் அறிவித்த பின்னே மேற்கொண்டு பார்த்துக் கொள்வோமே ?!

116 comments:

 1. Hi, first time first....😂🤩🤩🤩🤩🤩

  ReplyDelete
 2. Hiyo.... yaarumae illayae...
  Yaaravathu vaangalaen....

  ReplyDelete
  Replies
  1. வந்துட்டோம் நண்பரே

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் சார்...


  விற்பனை சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. வெற்றிக்கொடி பறக்க வாழ்த்துக்கள் சார்...

  ReplyDelete
 6. Replies
  1. நலம் பரணி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். என் அண்ணா திருமணம் முடிந்த கையோடு வெளிநாடு செல்ல விசா விண்ணப்பித்ததால் அவருக்கு முடிந்த உதவியை செய்துகொண்டு வருகிறேன். கொஞ்சம் பிஸி ஆகிட்டேன். சண்டே அன்று கணேஷ் சாரை புஸ்தக கண்காட்சியில் சந்திக்கும் திட்டம் இருக்கு.

   Delete
  2. @ அனு சகோ

   ///என் அண்ணா திருமணம் முடிந்த கையோடு வெளிநாடு செல்ல விசா விண்ணப்பித்ததால் அவருக்கு முடிந்த உதவியை செய்துகொண்டு வருகிறேன்.///

   நானும் ரொம்ப நாளா இத்தாலி போகணும்னு ப்ளான் பண்ணிக்கிட்டிருக்கேன். வழிச்செலவுக்காண்டி உண்டியல்ல காசு கூட சேர்த்துட்டிருக்கேன். நீங்க எனக்கும் உதவுனீங்கன்னா பொனெல்லி ஆபீஸுல ஒரு வேலைய வாங்கிக்கிட்டு பீஸா சாப்பிட்டே காலந்த ஓட்டிக்கிடுவேன்.

   ஒருவேளை புதுசா கல்யாணம் பண்ண அண்ணன்களுக்கு மட்டும்தான் உதவி பண்ணுவீங்கன்னா, புதுசா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிடவும் நான் ரெடி நான்!

   ன்னான்றீங்க சகோ?!!

   Delete
  3. // புதுசா கல்யாணம் பண்ண அண்ணன்களுக்கு மட்டும்தான் உதவி பண்ணுவீங்கன்னா, புதுசா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிடவும் நான் ரெடி நான்! //


   இது வேறயா :-) ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான் :-)

   Delete
  4. அப்புறம் இரண்டாவது கல்யாணத்துக்கு நீங்க பொண்ணு பார்த்து விட்டீர்களா விஜய் :-)

   Delete
  5. அப்புறம் இரண்டாவது கல்யாணத்துக்கு நீங்க பொண்ணு பார்த்து விட்டீர்களா விஜய் :-)//

   ஆசுபத்திரில ரூம் ரிசர்வ் பண்ணிட்டீங்களா செயலரே?

   Delete
 7. புக்ஸ் வந்து சேரும் வரைக்கும் அவை என்னவென்பது பற்றி நம்மாட்களுக்குத் தெரிந்திராது !//

  கேட்டுவைப்போம்

  XIII cinebook உண்டுதானே சார்...??

  ReplyDelete
 8. புத்தக விழாவில் விற்பனை சிறக்க வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 9. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 10. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 11. விற்பனை சிறக்க வாழ்த்துகள் சார்.🌹

  ReplyDelete
 12. வாழ்த்துகள் ஆசானே....

  ReplyDelete
 13. // ரைட்டு....மார்டினுடனான மல்யுத்தத்தைத் தொடர நான் புறப்படுகிறேன் ; //
  மார்ட்டின் பெண்டை கழட்டுகிறார் போல சார்,இதழ்களை வாசிப்புக்கு அனுப்பிய பிறகு அது சார்ந்த தகவல்களை சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்...

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் அய்யா!!!

  Cinebookல் XIII 2ம் சுற்றின் சமீபத்திய பிரதிகள் வந்தால் , ஒரு செட் தேவைப்படும் ஐயா

  ReplyDelete
 15. நம்ப ஸ்டால் சூப்பராக அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. புத்தக விற்பனை சிறப்பாக நடக்க விற்பனையில் நாம் சாதிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 16. // இத்தாலியில் கதை சார்ந்த சில தெளிவுகளைக் கோரிப் பெறாது Detective Special புக்கை உங்கள் தலையில் கட்டினால் , கிறுகிறுத்துப் போய் விடுவீர்கள் என்பது உறுதி ! ஆகையால் மார்ச் புக்சில் ரெண்டோ - மூன்றோ நாள் தாமதம் இருக்கும் guys ! Sorry !! //

  நோ பிராப்ளம். தாமதமானாலும் உங்களுக்கு முழு திருப்தி ஆன பிறகு அனுப்பி வையுங்கள் சார்.

  ReplyDelete
 17. புத்தாண்டில் விற்பனை சிறக்க வாழ்த்துகள் சார்.

  ReplyDelete
 18. இந்த அளவு மார்டினோடு மல்லுக் கட்டுவதைப் பார்த்தால்..,எதிர்பார்ப்பு எகிறுகிறது.

  ReplyDelete
 19. இன்று அனைவருக்கும் வணக்கம்

  ReplyDelete
 20. புத்தகவிழாவில் நமதிதழ்கள் வெற்றி பெற செந்தூரான் அருளை வேண்டுகிறேன்

  ReplyDelete
 21. Super - Stall is looking stunning, best wishes to have a good sale.
  Next time we should put a stall in NY comic con - Its only an hour away for me :)

  ReplyDelete
 22. ஞாயிறு சென்னையிலிருந்தால் விழாவிற்கு வர உத்தேசம்.
  முடிந்தால் நண்பர்களை சந்திப்போம்.

  ReplyDelete
 23. சென்னை புத்தக விழா சிறப்பாக விற்பனையில் சாதிக்க வாழ்த்துக்கள் தேங்கிக் கிடந்த உள்ளங்களும் புத்தகங்களுக்கும் இது ஒரு மகிழ்சிகரமான தினங்களாக அமையுமென்றே நினைக்கிறேன். சென்னைக்கும் ஒரு விசிட் அடிக்க ஆசைதான் காலமும் நேரமும் ஒத்துழைத்தால் எல்லோரையும் சந்திக்கலாம்தான் 😊

  ReplyDelete
 24. வணக்கம் நண்பர்களே. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 25. இன்று நமது ஸ்டாலுக்கு நண்பர்கள் யாராவது சென்று வந்து இருந்தால் அப்டேட் கொடுங்களேன்.

  ReplyDelete
 26. ரதீஜா எங்கே எப்படி இருக்கீங்க?

  ReplyDelete
 27. ஆங்கில டைட்டில்களை வரவேற்கிறேன். ஆக்கப்பூர்வமான முயற்சி சார்.. பொடிசுகள் வாசிக்க ஆங்கிலத்திலேயே கிடைப்பதால் கணிசமான விற்பனைக்கு சாத்தியம் அதிகமாகிறது..

  ReplyDelete
  Replies
  1. ஆனால் அதற்கான விலைகளுக்கும் புதுயுக மக்கள் தயாராக இருந்திட வேண்டி வரும் சார் ! Cinebook will not be cheap at all !

   Delete
  2. //ஆனால் அதற்கான விலைகளுக்கும் புதுயுக மக்கள் தயாராக இருந்திட வேண்டி வரும் சார் // I know Sir I really do.

   Delete
 28. நமது ஸ்டாலில் கவனித்த விஷயம் கூகிள் / போன்-pay மூலம் பணம் செலுத்த அட்டைகளை எல்லோருக்கும் தெரியும் படி வைத்தது! தற்சமயம் அனைவரும் இது போன்ற pay-ஆஃப் மூலமே பணம் செலுத்த விரும்புவதால் இதனை வரவேற்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. ஸ்டால் இருப்பது அரங்கின் உட்பகுதியில் என்பதால் க்ரெடிட் கார்ட் மிஷினுக்கு network கிடைப்பது பெரும் அக்கப்போராய் உள்ளது சார் ! So இப்போது கைகொடுத்து வருவன GPAY & Phone Pe தான் !

   Delete
 29. IF time permits 28.02.2021 we will meet.
  Senthil Nathan K,
  Chennai
  9150814090

  ReplyDelete
 30. சென்னை புக் ஃபேர் பற்றி சொல்லுங்களேன்

  ReplyDelete
  Replies
  1. 'ஆனை படுத்தாலும், குதிரை மட்டம்' என்பது நிரூபணமாகி வருகின்றது நண்பரே !

   43 ஆண்டுகளாய்ப் பழகிப் போன அந்த ஜனவரி & பொங்கல் சார்ந்த காலகட்டமில்லை இம்முறை ; வாரத்தின் 6 நாட்களும் பணிக்கு மக்கள் போகும் நாட்களாகி விட்டுள்ளன இப்போது ; and புத்தக விழா ஆரபித்துள்ளதுமே வாரத்தின் நடுவாக்கில் ! And இது கொரோனா காலம் என்பதையும் மறக்க இயலுமா ? ஆனால் இன்னமும் சிங்காரச் சென்னையில் சாத்தியப்படும் அந்த விற்பனை நம்பர்கள் சென்னையின் பிரத்யேக முத்திரை தாங்கி நிற்கின்றன ! "ஒரு வாரயிறுதியின் செம சேல்ஸ் " - என்று கோவை ; ஈரோடு ; மதுரை ; திருப்பூர் விழாக்களில் எதைச் சொல்லுவோமோ - அவற்றை சென்னையின் மிதமான வாரநாட்கள் ஜாலியாய்த் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றன !

   வாரயிறுதிகள் எவ்விதம் இருக்கவுள்ளன ? என்பதைப் பார்க்க வேண்டும் !

   Delete
  2. // ஆனால் இன்னமும் சிங்காரச் சென்னையில் சாத்தியப்படும் அந்த விற்பனை நம்பர்கள் சென்னையின் பிரத்யேக முத்திரை தாங்கி நிற்கின்றன ! //

   மகிழ்ச்சி.

   Delete
  3. மகிழ்ச்சியான சேதி.

   Delete
  4. நல்ல செய்தி சார். இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே....

   Delete
  5. மகிழ்வான செய்தி சார்...🌹

   Delete
  6. சூப்பரான செய்தி சார்! மகிழ்ச்சி மகிழ்ச்சி!!

   Delete
  7. நல்லதொரு துவக்கம் நிரம்ப மகிழ்வைத் தருகிறது.

   Delete
  8. பௌர்ணமி அன்று நல்ல செய்திகள் பல. சூப்பர்.

   Delete
 31. அதுங்களா. புதுசாவற்ற பழைய வாசகர்கள்ளாம்இரும்புக்கை மாயாவி எங்க எங்கம்பாங்க டெக்ஸ் வில்லர். லார்கோன்னு நாம கரடியாகத்துவோம். நகரு தம்புன்னு மாயாவிய அள்ளிக்கிட்ட போவாங்க. அப்படியே கண்ணெல்லாம் வேர்த்து நிப்போம் இதுதான்சார் அங்கன ரெகுலரா நடக்கும். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. அந்த trend கொஞ்சமாய் மாறி வருகிறது சார் ; போன வருஷமே கூட அந்த "ஒன்லி மாயாவி" craze பழைய அளவுக்குத் தூக்கலாக இல்லை ! Maybe கடந்த ஐந்தாறு ஆண்டின் புத்தக விழாக்களில் மூத்த வாசகர்கள் எல்லோருமே வாங்கி விட்டார்கள் போலும் !

   நடப்பாண்டில் பார்க்க வேண்டும் !

   Delete
 32. ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு வணக்கம்
  கடந்த 50 வருடங்களாக காமிக்ஸை மூச்சு என்று வாழ்ந்து வருபவன் நான்.
  வாழ்நாளில் என் மனதை கவர்ந்த கதை புத்தகம் கதாநாயகன் மற்றும் கனவு நாயகன்XIII ஜேசன் மக்லேன் என்றால் மிகையாகாது. கடந்த 35 வருடங்களாக தனித்தனி பாகங்களாக வந்தபோதும் மொத்தமாக பதினெட்டு பாகமாக வந்தபோதும் பிறகு 2018 ல் வண்ண மறுபதிப்பாக வந்தபோதும் அதை ஆசையுடன் அணைத்து கொண்டவர்களில் நானும் ஒருவன்.
  எந்த ஒரு காலத்திலும் நீங்கள் வெளியிடும் புத்தகத்தைப் பற்றி குறை கூறவும் இதன் உருவாக்கத்தில் தலையிடவோ நான் விரும்பியது இல்லை. அது என் வேலையும் இல்லை.
  வருடா வருடம் நீங்கள் அறிவிக்கும் சந்தாவில் இந்தப் புத்தகம் வேண்டும் அந்த புத்தகம் வேண்டாம் கதையை இப்படி மாத்து அளவை இப்படி மாத்து என்று எந்தவிதமான கருத்தும் சொன்னது கிடையாது.2017 ஈரோடு புத்தக விழாவில் பதினெட்டு பாகங்களும் இணைந்த ஒரு மாதிரி வடிவ இரத்தப்படலம் புத்தகத்தை எங்களுக்கு காட்டினீர்கள். பிறகு அது வரும்போது வேறு சில பிரச்சினைகளின் காரணமாக மூன்று தொகுதியாக பிரித்துக் கொடுத்தீர்கள். அதையும் மகிழ்வுடன் நாங்கள் வாங்கிக் கொண்டோம் அதனைப் பாராட்டி பேசினோமே ஒழிய அதனை எதிலும் குறை கூறவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து கொரோனா வின் தாக்கத்தில் உலகம் தன் வீட்டினுள் அடைந்து கிடந்த போது அதனை மூன்றாவது முறையாக மறுபதிப்பு க்கு நீங்கள் அறிவிப்பு செய்து இருந்தீர்கள். அந்தப் புத்தகம் முழுமையான ஒரே புத்தகமாக வர ஆசைப்பட்டு வேண்டுகோள் வைத்தோம். அதன் பின்னர் சில புத்தக வியாபாரிகள் சில புத்தக சேகரிப்பாளர்கள் இவர்களின் கோரிக்கை என்னவென்றால் சென்ற முறை வந்த அதே தோற்றத்தில் மீண்டும் வரவேண்டும் அப்படி வந்தால்தான் புத்தகச்சந்தைக்கு பாதிப்பில்லை சேகரிப்பு தேவையில்லை. இந்த இரண்டு கருத்துகளையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தபோது
  அதற்கு உங்கள் விளக்கமாக
  விடையாக 2 தொகுதியாக இரத்தப்படலம் வெளிவரும் என்று சொல்லி இருந்தீர்கள். நானும் என் சகோதரர்களும் நண்பர்களும் பல முன்பதிவுகள் செய்துள்ளோம். மேலும் நான் பல நண்பர்களை வற்புறுத்தி முன்பதிவு செய்ய வைத்துள்ளேன் எங்களது நோக்கம் புத்தகம் வர வேண்டும் என்பதைத் தவிர அது தடை படுவதில் அல்ல மட்டுமல்லாமல் முன்பு முன்பதிவு செய்ய தவறியவர்கள் மற்றும் முதல்முறை முன்பதிவு செய்பவர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது அதேசமயம் புதிய வடிவில் வரும்பொழுது ஏற்கனவே வாங்கி புத்தக அலமாரியில் வைத்துள்ள அந்த புத்தகத்திற்கு சற்றேனும் வித்தியாசம் தெரிய வேண்டும் அது இரண்டு தொகுதியாக வந்தால் மிகவும் மகிழ்ச்சி அல்லது உங்களுக்கு மூன்று தொகுதியாக தான் போட முடியும் என்றாலும் அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அதே சமயம் ஏற்கனவே வந்த 3 தொகுதி அட்டைப் படங்களை முற்றிலுமாக தவிர்த்து விட்டு புதிய அட்டைப் படங்களை கொண்டு அலங்கரித்தால் புத்தக விற்பனை சிறப்பாக செல்ல வாய்ப்புள்ளது. கடின அட்டை கொண்டுதான் புத்தகத்தை பைண்டிங் செய்ய முடியவில்லை என்றால் அதனைத் தனித்தனியாக 18 கூடவே புலன்விசாரணை சேர்த்த 19 பாகத்தையும் ஏற்கனவே வெளிவந்துள்ள அசல் புத்தகத்தின் அட்டைகளைப் பயன்படுத்தி தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ரெகுலர் சைஸ் புத்தகங்களை போல வெளியிட்டாலும் எங்களுக்கு மறுப்பில்லை புத்தகம் வெளிவர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமே தவிர அதை தடுக்க வேண்டும் என்பது அல்ல அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே கூறியபடி முழு தொகுதியாக வெளிவந்தால் மிகவும் மகிழ்ச்சி.
  இப்படிக்கு
  என்றும் உங்கள் மற்றும்
  காமிக்ஸ் நலன்நாடும்
  K.V.GANESH.

  ReplyDelete
  Replies
  1. சார், முதல் முன்பதிவுக்கென வழங்கப்பட்ட அவகாசத்தில் பாதிக் கிணறையும் ; அடுத்த 60 நாள் அவகாசத்தில் மீதத்தையும் தாண்டவுள்ள இந்த முயற்சிக்கு எது சரியானதோ - அதை உரிய வேளையில் நடைமுறைப்படுத்துவேன் என்றமட்டுக்கு நம்புங்கள் ! இந்தப் படலத்தின் ஒவ்வொரு புள்ளியிலும் என்ன சாத்தியம் ? ஏன் சாத்தியம்? ஏன் அசாத்தியம் ? என்பதை துளியும் ஒளிவின்றிப் பகிர்ந்து வந்திருக்கிறேன் ! இன்னமும் அதற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பின், ஜேசனின் மூளையில் பதிந்திருந்த இரத்தப் படலமானது இதர நண்பர்களின் காதுகளிலும் கசியத் துவங்கி விடும் !

   கடினக் காரியமாக இருக்கலாம் தான் ; ஆனால் - கிட்டத்தட்ட 800+ இதழ்களை உருவாக்கியவன் இந்த 801-ஐயும் உருப்படியாய்க் கரை சேர்ப்பான் என்ற நம்பிக்கையினை வளர்த்திட மட்டுமே முயற்சியுங்கள் - போதும் !

   Delete
  2. அது எழுநூற்றிச் சொச்சமா ? எண்ணூற்றுச் சொச்சமா ? Not very sure !

   Delete
  3. And ஒரு வாரத்தில் 2 ஏஜெண்ட்கள் முன்பணத்தோடு தங்கள் ஆர்டர்களைப் பதிவு செய்வதாகச் சொல்லியுள்ளனர் ! அது நிஜமாகிடும் பட்சத்தில் - "450 / 500 " எனும் எண்ணிக்கை சாத்தியங்களுக்குள் வந்திருக்கும் & இரண்டே தொகுப்புகளாய் மெஷினில் பைண்ட் செய்ய கேட்டுப் பார்க்கவும் சாத்தியமாகும் !

   Delete
  4. 500 முன்பதிவுகளை எட்டி
   இரண்டு தொகுதியாக
   புதிய பரிணாமத்தில் வந்தால்
   இரட்டிப்பு மகிழ்ச்சி.

   Delete
  5. // And ஒரு வாரத்தில் 2 ஏஜெண்ட்கள் முன்பணத்தோடு தங்கள் ஆர்டர்களைப் பதிவு செய்வதாகச் சொல்லியுள்ளனர் ! அது நிஜமாகிடும் பட்சத்தில் - "450 / 500 " எனும் எண்ணிக்கை சாத்தியங்களுக்குள் வந்திருக்கும் // இன்னும் ஒரு இனிப்பான செய்தி சார்.இந்த நாள் இனிய நாளே...

   Delete
  6. தங்கள் முடிவு எதுவாயினும் சிறந்ததையே தருவீர்கள் என்ற நம்பிக்கையில்.... நன்றி சார்!

   Delete
  7. புக்கிங் 500 என்ற எண்ணிக்கையை நெருங்குவது இன்றைய 2வது மகிழ்வான செய்தி சார்.

   "காமிக்ஸால் ஓன்றுபடுவோம்"---(நன்றி:பூபதி)

   Delete
  8. அடடே!! இ.ப - இரண்டு தொகுப்பா வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகிட்டே போகுதே?!! சூப்பர் சூப்பர்!!

   Delete
  9. ஆசிரியர் தன்னளவில் மிகச் சிறப்பானதையே தருவார் என்ற நம்பிக்கை எப்போதுமே எனக்குண்டு.

   Delete
  10. 2 ஆக வருவதற்காக 500 என்ற எண்ணிக்கையை அடையுதோ இல்லியோ; அந்த எண்ணிக்கையை அடைந்தால் கொவிட்டால் ஏற்பட்ட சுணக்கத்தைப் போக்க மிக உதவியா இருக்கும். அதுக்காகவே ஜெய் ஜேசன்!!!

   Delete
  11. இரண்டு தொகுதிகளா?

   👌👌👌👌👌👌👌👌👌👌

   சூப்பர்!
   சூப்பர்!!

   Delete
  12. இரண்டு தொகுதிகளா?


   சூப்பர்!
   சூப்பர்!!

   Delete
 33. சிங்கிள் ஆல்பமோ, டபுளோ, அல்லது ட்ரிபுளோ,XIII என்னும் புதிர்ப்புயல் எந்த வடிவில் வந்தாலும் Terrible தான். உத்தமபுத்திரனில் சிவாஜி இரண்டு வேடத்தில் கலக்கினார். தெய்வமகனில் 3 வேடத்தில் கலக்கோ கலக்கென்று கலக்கினார். இரண்டுமே ரசிக்க உகந்ததே. அது போன்றே இதுவும். இரத்தப்படலம் மூன்றாவது வெளியீடு சிறப்பாக அமைத்திட வாழ்த்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. பத்து சார் அது terrible ஆ இல்லை terrific ஆ???

   Delete
 34. This comment has been removed by the author.

  ReplyDelete
 35. இரண்டுமே ஒன்றுதானே சார். பதின்மூன்று என்றாலே அதிரடி தானே.

  ReplyDelete
  Replies
  1. சின்னதா ஒரு வித்தியாசம் இருக்குங்க 10 சார்!
   கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு உங்க கண்களுக்கு terrificஆகத் தெரியும்! ஆனா அதே பொண்ணை நீங்க கல்யாணம் பண்ணிகிட்டா இப்போ உங்க கண்களுக்கு அது terribleஆகத் தெரியும்! ஹிஹி!

   Delete
  2. EV வெல்கம் பேக்.

   Delete
  3. கல்யாணத்துக்கு முன்னே ஆத்துகாரம்மா போட்டுத் தரும் காப்பி அமிர்தமாய்த் தோன்றினால் அது terrific. கல்யாணத்துக்கு அப்பாலிக்கா அது சட்டி கழுவின தண்ணியாட்டம் தெரிவது terrible !

   Delete
  4. ஆகா ஆகா எல்லோரும் காஃபி போட கிளம்பிட்டாங்கப்பா கிளம்பிட்டாங்க :-)

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. அதாவது....

   இரத்தப் படலம் ரெண்டு புக்கா வந்தா, அது terrific.மூணு புக்கா வந்தா அது terrible.

   :-)

   Delete
  7. தயாரிப்புக்கு ஏதுவாய் திட்டமிட்டால் - பலன் - terrific ! ஆசைக்கேற்ப மட்டுமே திட்டமிட்டால் - பலன் terrible !

   Delete
  8. அடேங்கப்பா ஆளை விடுங்க :-)

   Delete
  9. இரத்தப்படலம் என்று சொல்லி லேசாக தும்மினால் கூட ஏதோ ஒரு விதத்தில் தளம் அதிர்கிறது. உண்மையில் 13 மந்திர எண்தான் என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம்தான்.

   Delete
  10. This comment has been removed by the author.

   Delete
  11. This comment has been removed by the author.

   Delete
  12. படிக்காமல் பரீட்சை எழுதி பாஸானால் அது terrific... ஆனால் பரீட்சையே எழுதாமல் பாஸானால் அது terrible :-)

   Delete
  13. எப்பூடி நாங்களும் எழுதுவோம்ல :-)

   Delete
 36. .அனுபவங்களில் இருந்தே மனிதன் பாடம் கற்றுக் கொள்கிறான் என்பது பழமொழி. சரிங்களா ஈவி

  ReplyDelete
  Replies
  1. ஆனால் இது ரொம்ப காஸ்ட்லியான அனுபவம் பத்து :-)

   Delete
 37. சேதாரம் இல்லாமல் தங்க நகை கிடையாது. சிலருக்கு அதிகம். சிலருக்கு குறைவு. பூர்வ புண்ய ஸ்தானம் பலமாக இருப்பவர்கள் தப்பிக்கிறார்கள்.

  ReplyDelete
 38. எல்லாம் நன்மைக்கே!

  ReplyDelete
 39. ஒரு சிறிய காமிக்ஸ் ரசிக வட்டத்திற்குள் நானும் ஒருவன் என்பதை நினைந்து பெருமிதப்படுகின்றேன்.

  ReplyDelete
 40. சென்னைப் புத்தக விழா விற்பனை பரவாயில்லை என்பதறிந்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 41. சார் இன்று பதிவுக் கிழமை......

  ReplyDelete
  Replies
  1. மினி மீல்ஸ் எனும் போது ஜாலியாய் போட்டுத் தாக்கிப்புடலாம் சார் !

   Delete
  2. ஆசிரியர் சார்@ ஒரு சாதம், ஒரு குழம்பு எனும்போது சட்டுனு சமைத்து விடலாம். குவான்டிடி அதிகம் என்றாலும்...

   ஆனா மினி மீல்ஸ் எனில்,

   ஒரு ஸ்பூன் இனிப்பு(பெரும்பாலும் கேசரி),
   ஒரு கப் சாம்பார் சாதம்,
   ஓரு கப் வெஜ் பிரியாணி,
   ஒரு கப் தயிர் சாதம்(மாதுளை தூவியது),
   ஒரு ஸ்பூன் பச்சடி,
   ஒரு தம்ளர் லெமன் சூஸ்,
   & ஒரு சின்ன ஊறுகாய்

   -----என சமைக்கனும்.   வேணும்னா நம்ம சகோவின் ஆர்மரியில் ஏகப்பட்ட "உப்மா" தளவாடங்கள் உண்டு!

   Delete
  3. //மினி மீல்ஸ் எனும் போது ஜாலியாய் போட்டுத் தாக்கிப்புடலாம் சார் !// நன்றி சார்

   Delete
  4. விஜயராகவன் நீங்கள் சொன்ன மீல்ஸ்ஸில் அப்பளத்தையம் சேர்த்து கொள்ளுங்கள் :-)

   Delete
 42. இரத்தப் படலம் இரண்டு தொகுதிகளாக வெளிவர வாய்ப்புகள் அதிகரித்து வருவதைக் கண்டு மனம் மகிழ்கிறது.

  ReplyDelete
 43. பதிவை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

  ReplyDelete
 44. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

  ReplyDelete