நண்பர்களே,
வணக்கம். உலகை உலுக்கிப் போடக்கூடியதொரு உண்மையை கடந்த சில வாரங்களில் ; அதுவும் குறிப்பாய், இந்த ஒற்றை வாரத்தில் கண்டு பிடித்து வருகிறேன் என்று தான் சொல்லணும் !! அதாகப்பட்டது - சுறுசுறுப்பானதொரு மாடு கூட படு சோம்பேறி மாடனாவது செம சுளுவானதொரு பிராஸஸாக்கும் !! மாங்கு மாங்கென்று வேலை செய்த நாட்களை ; ராவோ, பகலோ ; உள்ளூரோ ; அசலூரோ - எங்கிருந்தாலுமே எதையெதையோ இழுத்துப் போட்டுக்கொண்டு பணியாற்றிய தருணங்களை மறப்பதென்பதெல்லாம் சுலபமோ - சுலபமாக்கும் ! சொல்லிக் கொள்ள சாக்கு என்று ஏதேனும் சிக்கினால் போதும் - மல்லாக்கப் படுத்துக் கொண்டே ; வெட்டிப் பொழுதில் ஆயுளில் பாதியைக் கரைக்க மனசு டபுள் ஓ.கே. சொல்லி விடுகிறது ! கடந்த 2 மாதங்களின் கடைமூடிய வேளைகளில், மேற்படி மஹாகண்டுபிடிப்பு ஜனித்ததெனில் ; இந்தக் கடைசி ஒற்றை வாரத்து அனுபவமானது அதனை இன்னொரு உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது ! ஆமாங்கோ....ஐநூறு, அறுநூறு பதிவுகளை எங்கெங்கேயோ அமர்ந்து டைப்பிய விரல்களே தான் ; வாரம் தவறாது ; நேரம் தவறாது, சொந்தக்கதை, சோகக்கதை ; சோன்பப்டி சாப்பிட்ட கதை என்று எதையெதையோ சொல்லிப் பழகிய பள பளா கபாலமே தான் !! ஆனால் 'லேப்டாப் ரிப்பேர்' என்ற காரணத்தினால், ஒரே ஒரு வாரத்துப் பதிவை மட்டும் ஒரு வீடியோ காணொலியாய் அமைத்துப் பழகிய பிற்பாடு back to the laptop எனும் போது விரல்களும், கபாலமும், ஒருசேர சண்டித்தனம் செய்கின்றன !! 'சும்மா ஜாலியா கால் மேலே கால் போட்டபடிக்கு, மனசில் தோணும் சமாச்சாரங்களை அரை அவரில் ஒப்பித்தால் முடிந்திடும் வேலையை - குறைந்தது நாலைந்து மணி நேரங்களுக்கு நாங்கள் மெனெக்கெட்டு செய்யத்தான் வேணுமா ?' என்று அவை முன்வைக்கும் கேள்விகளில் "அக்மார்க் சோம்பேறி மாடன் " என்ற முத்திரை பிரதானமாய் மிளிர்கிறது ! "சரி...சரி...மாதத்தில் ஒரேயொரு வாரம் உங்களுக்கு இனி லீவு ; அந்தப் பதிவினை மட்டும் வீடியோப் பதிவாக்கிடலாம் !' என்று அவற்றைச் சமாதானம் செய்து விட்டு, டைப்படிக்கும் மாமூலுக்குள் புகுந்தால், மாறிப் போயுள்ள யதார்த்தங்களை நினைத்து மலைக்காது இருக்க இயலவில்லை ! அட்டவணை எத்தனை கனமாய் அமைந்து போனாலும், "bring them on !!" என்று 'தம்' கட்டிப் பணி செய்ததெல்லாம் ஏதோவொரு கி.மு. - கி.பி. காலத்துப் புராதனம் போல தோன்றிட - இந்த லாக்டவுன் நாட்களின் பிரதான சேதாரமாய் என்னளவிற்குத் தெரிவது - இத்தனை நாட்களாய் அரும்பாடுபட்டு வளர்த்திருந்த சுறுசுறுப்பே !சத்தியமாய்ப் பின்னணியினில் நீங்களும், உங்களின்செம energetic ஊக்குவிப்புகளும் மட்டும் இல்லாது போயின் - இந்த newfound சோம்பேறி சுப்பாண்டி அவதாரைப் பின்னுக்குத் தள்ளிட ரொம்பவே திணறிப் போயிருப்பேன் ! இதோவொரு சின்ன உதாரணம் - காத்திருக்கும் அடுத்த செட் இதழ்களைக் கொண்டு !! பர்ஸ்களுக்குப் பாதிப்பின்றி ; வாசிப்பிலும் இலகுத்தன்மை தொற்றிக் கொள்ளும் பொருட்டு திட்டமிட்டுள்ள இந்தப் பட்டியலைப் பாருங்களேன் :
SODA !! காத்திருக்கும் புது நாயகரின் அறிமுகம் இது தான் : "My name is SODA, but my real name is Solomon.....David Solomon." மம்மிக்கு மட்டும் என்னைப் பற்றிய நிஜம் தெரிந்திருக்குமேயானால் "என் புள்ளையாண்டான் ஒரு காவல்துறை அதிகாரி !" என்று கெத்தாகச் சொல்லவே பிரியப்பட்டிருப்பார் ! அவரது சுபாவம் அப்படி ; புள்ளை மீதான அபிமானமும் அப்படி ! ஆனால் நியூயார்க்கில் ஏது "கெத்தான அதிகாரிகள்" எல்லாம் ? இங்கே அத்தினி பேரும் "போலீஸ்காரர்கள்" மட்டும் தானே ? அட....எனது NYPD (NewYork Police Department) புராணமெல்லாம் எதுக்கு இப்போ ? மம்மிக்கு நிஜம் தெரியாது ; நான் ஒரு சர்ச்சில் பாதிரியாக இருந்து வருகிறேன் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார் ! தெரியாத நிஜம் மம்மியை ஒருபோதும் நோகச் செய்யப் போவதில்லை என்பதால் அவரது நம்பிக்கையோடு வாழட்டும் என்று விட்டுவிட்டேன் ! போலீஸ் உத்தியோகத்தில் இருந்த டாடி செத்த பிற்பாடு போன வருஷம் தான் ஊரிலிருந்து நியூயார்க்கிற்கு வந்தார் - என்னோடு காலத்தைத் தள்ளிட ! So மம்மியின் திருப்திக்கு pastor ஆகவும், நிஜத்தில் ஒரு NYPD போலீஸ்காரனாகவும் குப்பை கொட்டி வருகிறேன் நான் !!"
1986-ல் துவங்கிய இந்த SODA தொடரானது உலகின் தலைநகராய் விளங்கும் நியூயார்க்கின் இருண்ட பக்கங்களை செம ஜாலியாய்ச் சொல்ல முனையும் ஒரு படைப்பு ! க்ரீன் மேனர் பாணியில், இங்குமே இறுக்கமான கதைக்களத்திற்கு லைட்டான ஓவியங்கள் ; சுலபமான treatment என்று ஒரு வித்தியாசமான டெம்பிளேட் செட் பண்ணியுள்ளார் "TOME" என்ற புனைப்பெயருடன் உலவிய Philippe Vandevelde ; வெகு சமீபமாய் (அக்டொபர் 2019) மரித்துப் போனதொரு திறமைசாலி ! மொத்தம் 13 ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடரை அதன் ரொம்பவே வித்தியாசமான கதை சொல்லும் பாணிக்காகவே நான் தேர்வு செய்தேன் ! Dark humor ; நியூயார்க்கின் பரபரப்பு ; NYPD-ன் ஓய்வில்லா அதிரடிகள் ; மிரட்டும் ஆக்ஷன் என்பதன் மத்தியில் - ஒரு முதிய மம்மியின் மனதைக் குளிர்விக்க நினைக்கும் பொறுப்பான புள்ளையாகவிருக்கவும் முயற்சி செய்திடும் SODA நாம் பரிச்சயப்பட்டுள்ள typical ஹீரோவெல்லாம் கிடையாது ! மணிரத்னம் சார் பட நாயகர்களின் பாணியில் கொஞ்சமாய்ப் பேசுவார் ; நக்கலாய்ப் பேசுவார் ; கார்ட்டூன் பாணிச் சித்திரங்களில் சாத்து சாத்தென்று சாத்திவிட்டுப் போய்க் கொண்டேயிருப்பார் ! ஆனால் ஜேம்ஸ் பாண்ட் பாணி ஹீரோவல்ல இவர் ! So எவ்வித முன்மாதிரிகளையும் மனதில் இருத்திக் கொள்ளாது, ஒரு புது அனுபவத்துக்குத் தயாராகிக் கொண்டே இந்த ஆல்பத்தினுள் புகுந்திடுங்களேன் - you will not be disappointed !! இதோ - அதன் அட்டைப்பட முதல் பார்வை :
லக்கி லூக்கையும், அண்டர்டேக்கரையும் சேர்த்த கலவை போலான இந்த ஒடிசலான நாயகரை 2 வாரங்களுக்குள் உங்களிடம் ஒப்படைத்த கையோடு ஆர்வமாய்க் காத்திருப்போம் -நீங்கள் இந்த மனுஷனை பாஸ் பண்ணி விட்டு அடுத்த வகுப்பிற்கு அனுப்பப் போகிறீர்களா ? இல்லாங்காட்டி 'ரிஜிட்' என்று முத்திரை குத்தப் போகிறீர்களா என்று !! Fingers crossed !!
அதிகாரியின் அட்டைப்படத்தைத் தான் ஏற்கனவே கண்ணில் காட்டி விட்டேன் என்பதால் - எஞ்சியிருக்கும் 2 இதழ்களின் previews தான் தொடரும் ஞாயிறுப் பதிவுக்கான மேட்டர் ! So அவற்றின் preview இப்போதைக்கு நஹி !
Moving on, கொஞ்சம் ஜாலியான சேதிகள் !! வெளியே சுனா.பானா.போல கெத்தாய்க் காட்டிக் கொண்டு திரிந்திருந்தாலுமே - இந்த கொரோனாவின் தாக்கம் நமது காமிக்ஸ் வாசிப்பின் மீதும் ; விற்பனைகளின் மீதும் எவ்விதம் reflect ஆகிடுமோ ? என்ற 'டர்' உள்ளுக்குள் நிரம்பவே புரட்டி எடுத்துக் கொண்டேயிருந்தது !! பற்றாக்குறைக்கு வெளியாகியுள்ள 5 சமீப இதழ்களிலும் நம்ம 'தல' நீங்கலாய்ப் பெரிதாய் star power கொண்ட நாயக இதழ்கள் எவையும் கிடையாது என்ற நிலையில் - விற்பனை எந்தமட்டிற்கு இருக்குமோ ? என்ற நெருடல் கணிசமாகவே இருந்தது ! ஆனால் ஆண்டவனும், நீங்களும், உங்கள் காமிக்ஸ் காதல்களைப் பறைசாற்றிட வாகான தருணங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆர்வலர்கள் என்பதை yet again நிரூபித்துள்ளீர்கள் ! Of course - இது கூரையிலேறிக் கூச்சலிடுவதற்கு ரொம்பவே சீக்கிரமான தருணமே ; இன்னமும் விற்பனையாள நண்பர்களிடம் நிலவரங்கள் குறித்து நிறைய பேச வேண்டியுள்ளது தான் ! And தொடர்ந்திடவுள்ள நாட்களில் நம் தமிழகத்தில் இந்த வைரஸ் அரக்கனின் தாண்டவம் என்ன மாதிரியெல்லாம் வேதனையான வடுக்களை விட்டுச் செல்லவுள்ளதோ - கணிக்கவே இயலவில்லை தான் ! ஆனால் ஒற்றை விஷயம் மட்டும் ஊர்ஜிதம் கண்டுள்ளது - 'எது எப்படியிருப்பினும் வாசிப்புக்கு ஆயுள் ரொம்பவே கெட்டி & நம் காமிக்ஸ் நேசத்துக்குமே !! என்பதை அடிக்கோடிட்டு பதிவு செய்துள்ளீர்கள் !! Thanks a million folks ! ஊடகத் துறையின் அசாத்திய ஜாம்பவான்கள் கூட ஆட்டம் கண்டு நிற்கும் இந்தச் சிரம நாட்களில் நம் போன்ற துக்கடாக்களெல்லாம் - 'டுக்கடே ; டுக்கடே' ஆகிப் போவது நொடிப் பொழுது நிகழ்வாகவே இருந்திருக்கக்கூடும் - அரணாய் உங்களின் அன்பும், காமிக்ஸ் தேடலும் இல்லாது போயிருக்கும் பட்சத்தில் ! இண்டுக்குள்ளும், இடுக்குக்குள்ளும் புகுந்து வெளியேறிடும் திறன் கொண்ட flexible பூனைகளாய் இருப்பதன் சவுகரியங்களை எண்ணி இந்த நொடியில் ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் !! இன்றைக்கு வெகுஜன ஊடகங்களின் ஆக்சிஜன் சப்ளையை "விளம்பரமின்மை" என்ற சிக்கல் கோரமாய் நெரித்து வருகிறது ! ஆனால் நமக்கோ அவை என்றைக்குமே அரையணாவைக் கூட ஈட்டியிருக்கா சமாச்சாரம் தானே ? அப்புறம் லட்சம் ; பல்லாயிரம் என்ற பெரும் எண்ணிக்கையினை எட்டிப் பிடிக்க முனையும் ஊடகங்களுக்கு ஆட்பலமும் பன்மடங்கில் அவசியம் ; தொடர் விற்பனை ; நில்லா வசூல் என்பனவும் அவசியமோ அவசியம் ! ஆனால் இக்கடவோ மாவாட்டுவதும் நாமே ; டீ மாஸ்டரும் நாமே ; பரோட்டா மாஸ்டரும் நாமே ; சப்லையரும் நாமே ; இலை எடுப்பவரும் நாமே - எனும் போது, ஒரேயொரு பெரிய ஈரத்துணி போதும் தாற்காலிகமான சிரம நாட்களைச் சிக்கனத்தோடு தாண்டிப் போக ! And yes - அந்த சிக்கனத்தின் இன்னொரு பரிமாணமாய் நமது பணியாட்களை சுழற்சி முறையிலேயே மாதத்தின் பிற்பகுதிகளில் வரச் சொல்லிடுகிறோம் ! நிலவரத்தை உணர்ந்தவர்களாக அவர்களும் முழுமனசோடு ஒத்துழைத்து வருவதால், தட்டுத் தடுமாறியேனும் வண்டி ஓடி வருகிறது ! ஆன்லைன் ஆர்டர்கள் மட்டும் மாமூலான எண்ணிக்கையினைத் தொட்டிடும் பட்சத்தில் இன்னும் கொஞ்சம் மூச்சு வீட்டுக் கொள்வோம் ! And yes - புது இதழ்களுக்கான கூரியர் கட்டணங்கள் இம்முறை நம் ஆன்லைன் தளத்தில் தலை தெறிக்கும் விதமாய் உள்ளன ' என்ற புகார் நண்பர் பிரஷாந்த் கார்த்திக்கின் புண்ணியத்தில் கவனத்துக்கு வந்திருந்தது ! இம்மாத இதழ்களின் எடை தவறாய் input செய்யப்பட்டிருந்தால் 1 கிலோவுக்கு மேற்பட்ட slab கட்டணங்களை கணக்கிட்டு தளம் சொல்லியுள்ளது என்பதைக் கண்டறிந்து சரி செய்து விட்டோம் ! Thanks for bringing it to our notice Prashanth !!
தொடரும் நாட்களில் 500 ரூபாய்களுக்கு மேலான ஆர்டர்களுக்கு ரூ.50 விலையிலான any book of their choice அன்பளிப்பாகவும் ; ரூ.1000-க்கு மேலான ஆர்டர்களுக்கு ரூ.100 விலையிலான ஏதேனுமொரு புக் அன்பளிப்பாகவும் (and so on for higher order values) தந்திட எண்ணியுள்ளோம் ! ஆர்டர் செய்திடும் போதே - அதனில் உள்ள Remarks பகுதியினில் உங்களுக்கு அன்பளிப்பாய் அனுப்பிட வேண்டிய புக்கிங் பெயரைக் குறிப்பிட்டால் மதி ! Or ஒரு மின்னஞ்சல் ! ஜூன் 1 முதலாய் இது நடைமுறை கண்டிடுகிறது !
அப்புறம் இன்னொரு யோசனையும் கூட எழுந்தது - "ம.ப.வி.பா".நாட்களின் உபயத்தில் !! "இரத்தப் படலம்" வண்ண தொகுப்புக்கு நாம் வழங்கிய அந்த கெட்டியான slip case நினைவிருக்கும் தானே ? அதைப் போலான ரெடிமேட் கேஸ்களை அமெரிக்க ; ஐரோப்பிய பதிப்பகங்கள் காமிக்ஸ் ஆர்வலர்களின் பொருட்டு தயாரித்து விற்பனை செய்து வருவதை சமீபத்தில் பார்க்க நேரிட்டது ! உதாரணத்திற்கு - ஒரு எட்டுப் பத்து லக்கி லூக் ; சிக் பில் ; ரின்டின் கேன் போன்ற கார்ட்டூன் இதழ்களை உள்ளுக்குள் நுழைத்து வைக்கக்கூடிய விதத்திலான ஒரு கேஸை - THE CARTOON COLLECTION " என்ற பெயரோடு அழகாய் டிசைன் செய்து, முழுவண்ணத்தில் அச்சிட்டு, ரெடிமேட் கேசாய் நாம் விற்பனைக்குக் கொணர்ந்தால் - அது உங்களுக்கு பிரயோஜனப்படுமா guys ? Action Collection ; James Bond collection ; Graphic Novel Collection - என்ற ரீதியில் நமது திட்டமிடல்கள் படிப்படியாய் இருந்திடலாம் ! Of course - டப்பி ஒன்றுக்கு இன்றைய விலைவாசிகளில் சுமார் 75 ரூபாய் ஆகிடலாம் ; and அதன் பிற்பாடு அவற்றைப் பத்திரமாய் பேக் செய்து கூரியரில் அனுப்பிடும் செலவுகளும் உண்டு தான் ! So இந்த நொடியில் இதெல்லாம் தேவை தானா ? என்ற கேள்வி எழக்கூடும் என்பதில் ஐயமில்லை ! ஆனால் வெகு சமீபத்தில் கண்ணில்பட்ட சமாச்சாரத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ளாவிடின் மண்டைக்குடைச்சல் அடங்காதே ?! இதோ இப்போது இறக்கி வைத்து விட்டேன் ; இப்போதோ ; கொஞ்சம் பின்னேவோ, இது சார்ந்த முடிவினை எவ்விதம் எடுத்தாலும் எனக்கு ஓகே தான் !
Around the world, விட்டதைப் பிடிக்கும் உத்வேகத்தில் ஐரோப்பிய ; அமெரிக்க காமிக்ஸ் பதிப்பகங்கள் அதிரடி காட்டி வருவதை வாரமிருமுறை வந்து தாக்கிடும் மின்னஞ்சல்கள் பறைசாற்றுகின்றன ! And சில நாட்களுக்கு முன்பாய் Fleetway புராதனங்களுக்குப் புனர்ஜென்மம் தந்து அசாத்தியம் செய்து வரும் பிரிட்டிஷ் ஜாம்பவான்களிடமிருந்து வெகு சமீபத்தைய படைப்புகளான புது ஸ்பைடர் (சிறு) கதை வண்ணத்திலும் ; இரும்புக்கை மாயாவி (சிறு)கதை black & white -லும் மிரட்டலாய் வந்திருந்தது ! நிறைய வண்ணமும், கொஞ்சம் கருப்பு-வெள்ளையாய் இந்த SMASH Annual தக தகக்கிறது ! கொஞ்சமாய் சூழல் சரியான பின்னே இது குறித்து யோசிப்போமா ?
அது போதாதென்று - 2021 பிப்ரவரியில் "இரும்புக்கை மாயாவி ஸ்பெஷல்" 128 பக்கங்களிலும், நம்ம தானைத் தலீவர் ஸ்பைடரின் ஸ்பெஷல் ஒன்றும் - classic கதைகளுடன் அரங்கேறிடவுள்ளதாய் விளம்பரமும் !! பாருங்களேன் - நம் பால்யங்களின் கனவு நாயகர்களின் மறுவருகையின் வீரியத்தை !!
இரு ஸ்பெஷல் இதழ்களுக்கும் 'ஜெ' போட்ட கையோடு அவற்றை வெளியிடும் நமது ஆர்வங்களையும் சொல்லிடலாமா guys ? மாயாவிகாரு எப்படியேனும் விற்பனையில் தூள் கிளப்பிடுவார் எனும் போது - அதனில் குழப்பங்களில்லை ! எஞ்சியிருப்பது நம்ம ஸ்பைடர் சாரின் ஸ்பெஷல் மட்டுமே ! What say folks ?
அப்புறம் இன்னொரு "வரவுள்ளது" சேதியுமே - இம்முறை ஞாபகமறதிக்காரரின் மூன்றாம் சுற்றின் இரண்டாம் ஆல்பம் குறித்து ! XIII -ன் புது ஆல்பமான "2132 மீட்டர்" ஆகஸ்டில் நாம் வெளியிடவுள்ளோம் ; இந்நிலையில் அதன் தொடர்ச்சி நடப்பாண்டின் இறுதிக்குள் பிரெஞ்சில் தயாராகிடும் போலுள்ளது ! Mayflower எனும் அந்த இரண்டாம் சுற்றின் நீட்சியாகவே இந்தப் புது ஆல்பங்கள் அமைந்திடும் என்றாலும் - கதையின் ஒட்டுமொத்தத் திட்டமிடல் தன்னுள் பக்காவாக உள்ளதாய் கதாசிரியர் சொல்லியிருக்கிறார் ! So நாமுமே 'தகிரியமாய்' வண்டியைச் செலுத்தலாமா folks ?
"வரவுள்ளது" சேதிகளுக்குப் பின்னே - "வந்துள்ளது" சேதி ஒன்றுமே !! இத்தாலியில் டயபாலிக்கிற்கு வெறித்தனமான ரசிகர் பட்டாளம் இருப்பது நாம் அறிந்த தகவலே ! படைப்பாளிகளின் அதிகாரப்பூர்வமான Facebook பக்கத்தில் நமது "அலைகடலில் அதகளம்" இதழ் பற்றிய அறிவிப்பு வந்துள்ளதை பாருங்களேன் !! கிட்டத்தட்ட 56000 பேர் உள்ளனர் இந்த FB பக்கத்துக்கு subscribe செய்தவர்களாய் !! அதனைத் தொடர்ந்து இதுவரையிலும் 65 பிரதிகளுக்கு நம்மிடம் முன்பதிவு செய்துள்ளனர் !! (இத்தாலியிலுள்ள 'தல' ரசிகர்வாள் கவனிச்சிட்டு இருக்கீங்களா ??) துரதிர்ஷ்டவசமாக தற்சமயத்துக்கு 'No Airmail Bookings for now !' என்று நம் அரசாங்கம் அறிவித்துள்ளதால் ஏதும் செய்ய இயலா நிலை !
இங்கே எனது கேள்வி ஒன்றேயொன்று தான் !! இந்த முகமூடிக்காரரின் அசாத்திய கீர்த்திக்கு காரணம் என்னவாக இருக்கக்கூடுமோ ? சரக்கின்றி ஒரு தொடர் 58 ஆண்டுகளாய் ; பல நூறு ஆல்பங்களோடு சக்கை போடு போட இயலாதே ? இவரது இரகசியம் எந்த பூஸ்ட்டோ ?
Bye all ; இப்போதைக்கு கிளம்புகிறேன் - ஜேம்ஸ் பாண்டின் பணிகளில் புகுந்திட !!
And நடையைக் கட்டும் முன்பாய் ஒரு வேண்டுகோள் !! இதோவுள்ள இந்த image-ஐ உங்களது வாட்சப் DP ஆக ; Facebook DP ஆக ஓரிரு நாட்களுக்கேனும் வைத்திருக்க முடியுமா - ப்ளீஸ் ? குழந்தைப்புள்ளைத்தனமான யோசனையாகத் தோன்றிடலாம் தான் - ஆனால் இந்தக் கடின நாட்களில் காமிக்ஸ் வாசிப்பின் ரம்யத்தை ஒன்றிரண்டு பேருக்கேனும் தெரிவிக்க இது உதவிடின் சந்தோஷம் தானே ? Think about it folks !! And Please keep reading !!
Have a wonderful week-end all !! And Stay Safe please !!
வணக்கம். உலகை உலுக்கிப் போடக்கூடியதொரு உண்மையை கடந்த சில வாரங்களில் ; அதுவும் குறிப்பாய், இந்த ஒற்றை வாரத்தில் கண்டு பிடித்து வருகிறேன் என்று தான் சொல்லணும் !! அதாகப்பட்டது - சுறுசுறுப்பானதொரு மாடு கூட படு சோம்பேறி மாடனாவது செம சுளுவானதொரு பிராஸஸாக்கும் !! மாங்கு மாங்கென்று வேலை செய்த நாட்களை ; ராவோ, பகலோ ; உள்ளூரோ ; அசலூரோ - எங்கிருந்தாலுமே எதையெதையோ இழுத்துப் போட்டுக்கொண்டு பணியாற்றிய தருணங்களை மறப்பதென்பதெல்லாம் சுலபமோ - சுலபமாக்கும் ! சொல்லிக் கொள்ள சாக்கு என்று ஏதேனும் சிக்கினால் போதும் - மல்லாக்கப் படுத்துக் கொண்டே ; வெட்டிப் பொழுதில் ஆயுளில் பாதியைக் கரைக்க மனசு டபுள் ஓ.கே. சொல்லி விடுகிறது ! கடந்த 2 மாதங்களின் கடைமூடிய வேளைகளில், மேற்படி மஹாகண்டுபிடிப்பு ஜனித்ததெனில் ; இந்தக் கடைசி ஒற்றை வாரத்து அனுபவமானது அதனை இன்னொரு உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது ! ஆமாங்கோ....ஐநூறு, அறுநூறு பதிவுகளை எங்கெங்கேயோ அமர்ந்து டைப்பிய விரல்களே தான் ; வாரம் தவறாது ; நேரம் தவறாது, சொந்தக்கதை, சோகக்கதை ; சோன்பப்டி சாப்பிட்ட கதை என்று எதையெதையோ சொல்லிப் பழகிய பள பளா கபாலமே தான் !! ஆனால் 'லேப்டாப் ரிப்பேர்' என்ற காரணத்தினால், ஒரே ஒரு வாரத்துப் பதிவை மட்டும் ஒரு வீடியோ காணொலியாய் அமைத்துப் பழகிய பிற்பாடு back to the laptop எனும் போது விரல்களும், கபாலமும், ஒருசேர சண்டித்தனம் செய்கின்றன !! 'சும்மா ஜாலியா கால் மேலே கால் போட்டபடிக்கு, மனசில் தோணும் சமாச்சாரங்களை அரை அவரில் ஒப்பித்தால் முடிந்திடும் வேலையை - குறைந்தது நாலைந்து மணி நேரங்களுக்கு நாங்கள் மெனெக்கெட்டு செய்யத்தான் வேணுமா ?' என்று அவை முன்வைக்கும் கேள்விகளில் "அக்மார்க் சோம்பேறி மாடன் " என்ற முத்திரை பிரதானமாய் மிளிர்கிறது ! "சரி...சரி...மாதத்தில் ஒரேயொரு வாரம் உங்களுக்கு இனி லீவு ; அந்தப் பதிவினை மட்டும் வீடியோப் பதிவாக்கிடலாம் !' என்று அவற்றைச் சமாதானம் செய்து விட்டு, டைப்படிக்கும் மாமூலுக்குள் புகுந்தால், மாறிப் போயுள்ள யதார்த்தங்களை நினைத்து மலைக்காது இருக்க இயலவில்லை ! அட்டவணை எத்தனை கனமாய் அமைந்து போனாலும், "bring them on !!" என்று 'தம்' கட்டிப் பணி செய்ததெல்லாம் ஏதோவொரு கி.மு. - கி.பி. காலத்துப் புராதனம் போல தோன்றிட - இந்த லாக்டவுன் நாட்களின் பிரதான சேதாரமாய் என்னளவிற்குத் தெரிவது - இத்தனை நாட்களாய் அரும்பாடுபட்டு வளர்த்திருந்த சுறுசுறுப்பே !சத்தியமாய்ப் பின்னணியினில் நீங்களும், உங்களின்செம energetic ஊக்குவிப்புகளும் மட்டும் இல்லாது போயின் - இந்த newfound சோம்பேறி சுப்பாண்டி அவதாரைப் பின்னுக்குத் தள்ளிட ரொம்பவே திணறிப் போயிருப்பேன் ! இதோவொரு சின்ன உதாரணம் - காத்திருக்கும் அடுத்த செட் இதழ்களைக் கொண்டு !! பர்ஸ்களுக்குப் பாதிப்பின்றி ; வாசிப்பிலும் இலகுத்தன்மை தொற்றிக் கொள்ளும் பொருட்டு திட்டமிட்டுள்ள இந்தப் பட்டியலைப் பாருங்களேன் :
- SODA - திசை மாறிய தேவதை
- 'அதிகாரி' - கைதியாய் டெக்ஸ்
- ப்ளூ கோட் பட்டாளம் - போர்முனையில் ஒரு பாலகன்
- ஜேம்ஸ் பாண்ட் Black & white - விண்ணில் ஒரு வேதாளம்
SODA !! காத்திருக்கும் புது நாயகரின் அறிமுகம் இது தான் : "My name is SODA, but my real name is Solomon.....David Solomon." மம்மிக்கு மட்டும் என்னைப் பற்றிய நிஜம் தெரிந்திருக்குமேயானால் "என் புள்ளையாண்டான் ஒரு காவல்துறை அதிகாரி !" என்று கெத்தாகச் சொல்லவே பிரியப்பட்டிருப்பார் ! அவரது சுபாவம் அப்படி ; புள்ளை மீதான அபிமானமும் அப்படி ! ஆனால் நியூயார்க்கில் ஏது "கெத்தான அதிகாரிகள்" எல்லாம் ? இங்கே அத்தினி பேரும் "போலீஸ்காரர்கள்" மட்டும் தானே ? அட....எனது NYPD (NewYork Police Department) புராணமெல்லாம் எதுக்கு இப்போ ? மம்மிக்கு நிஜம் தெரியாது ; நான் ஒரு சர்ச்சில் பாதிரியாக இருந்து வருகிறேன் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார் ! தெரியாத நிஜம் மம்மியை ஒருபோதும் நோகச் செய்யப் போவதில்லை என்பதால் அவரது நம்பிக்கையோடு வாழட்டும் என்று விட்டுவிட்டேன் ! போலீஸ் உத்தியோகத்தில் இருந்த டாடி செத்த பிற்பாடு போன வருஷம் தான் ஊரிலிருந்து நியூயார்க்கிற்கு வந்தார் - என்னோடு காலத்தைத் தள்ளிட ! So மம்மியின் திருப்திக்கு pastor ஆகவும், நிஜத்தில் ஒரு NYPD போலீஸ்காரனாகவும் குப்பை கொட்டி வருகிறேன் நான் !!"
1986-ல் துவங்கிய இந்த SODA தொடரானது உலகின் தலைநகராய் விளங்கும் நியூயார்க்கின் இருண்ட பக்கங்களை செம ஜாலியாய்ச் சொல்ல முனையும் ஒரு படைப்பு ! க்ரீன் மேனர் பாணியில், இங்குமே இறுக்கமான கதைக்களத்திற்கு லைட்டான ஓவியங்கள் ; சுலபமான treatment என்று ஒரு வித்தியாசமான டெம்பிளேட் செட் பண்ணியுள்ளார் "TOME" என்ற புனைப்பெயருடன் உலவிய Philippe Vandevelde ; வெகு சமீபமாய் (அக்டொபர் 2019) மரித்துப் போனதொரு திறமைசாலி ! மொத்தம் 13 ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடரை அதன் ரொம்பவே வித்தியாசமான கதை சொல்லும் பாணிக்காகவே நான் தேர்வு செய்தேன் ! Dark humor ; நியூயார்க்கின் பரபரப்பு ; NYPD-ன் ஓய்வில்லா அதிரடிகள் ; மிரட்டும் ஆக்ஷன் என்பதன் மத்தியில் - ஒரு முதிய மம்மியின் மனதைக் குளிர்விக்க நினைக்கும் பொறுப்பான புள்ளையாகவிருக்கவும் முயற்சி செய்திடும் SODA நாம் பரிச்சயப்பட்டுள்ள typical ஹீரோவெல்லாம் கிடையாது ! மணிரத்னம் சார் பட நாயகர்களின் பாணியில் கொஞ்சமாய்ப் பேசுவார் ; நக்கலாய்ப் பேசுவார் ; கார்ட்டூன் பாணிச் சித்திரங்களில் சாத்து சாத்தென்று சாத்திவிட்டுப் போய்க் கொண்டேயிருப்பார் ! ஆனால் ஜேம்ஸ் பாண்ட் பாணி ஹீரோவல்ல இவர் ! So எவ்வித முன்மாதிரிகளையும் மனதில் இருத்திக் கொள்ளாது, ஒரு புது அனுபவத்துக்குத் தயாராகிக் கொண்டே இந்த ஆல்பத்தினுள் புகுந்திடுங்களேன் - you will not be disappointed !! இதோ - அதன் அட்டைப்பட முதல் பார்வை :
Philippe Vandevelde (aka) TOME |