நண்பர்களே,
வணக்கம். காலத்துக்கேற்ப நாமும் சில விதிகளை மாற்றிக் கொள்ளணும் போலும் ! "300 பின்னூட்டங்களானால் உபபதிவு" என்ற கம்பெனி ரூல் நடைமுறையில் இருப்பது தெரியும் நமக்கு ! ஆனால் சமீப காலங்களில் இரும்புக் கவிஞர் வீறு கொண்டு களமிறங்கி, ஒவ்வொரு பின்னூட்டத்தினையும் தனது உரைநடை, செய்யுள், கவிதை,காப்பியம், இதிகாச வரிகளால் மெருகூட்டி வருவதால் , கம்பெனிக்கு அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க தோதுப்பட மாட்டேன்கி ! So இனிமுதற்கொண்டு "400 பின்னூட்டங்களில் உப பதிவு" என்று ரூல்ஸை மாற்றினாலென்ன ? என்ற சீரிய சிந்தனையில் இந்தச் செவ்வாய் பகலைக் கழித்து வருகிறேன் !
SMASHING 70's ; SUPER 60's என்று போன பதிவினில் நான் சொல்லியிருந்தது குறித்து நிறையவே curiosity எழுந்திருப்பதைக் கண்டேன் ! "இது என்ன புதுக் கரடி ?" என்ற கேள்வியுமே எழுந்திருக்கக்கூடும் என்பதும் புரிகிறது ! அது புதுசாகவோ ; பெருசாகவோ ஏதுமில்லை guys !! வேதாளன் ; மாண்ட்ரேக் ; ரிப் கிர்பி & காரிகன் மெகா தொகுப்புகள் நடப்பாண்டினில் SMASHING '70s என்ற தடத்தினில் வெளிவரவுள்ளது நமக்குத் தெரியும் தான் ! And இவற்றிற்கான உரிமைகளை வாங்கிடும் பொழுதே, படைப்பாளிகளின் குறைந்தபட்ச ராயல்டி இலக்கினைத் தொடும் அவசியத்தின் பொருட்டு - 2 ஆண்டுகளுக்கான கதைகளை வாங்க நேர்ந்திருந்தது ! And அது பற்றி ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருந்தேன் என்ற நினைவும் உள்ளது எனக்கு ! இந்த நாயகர்களின் டாப் கதைகள் உருவானது 1960 & 1970-களில் தான் என்பதால் நான் கதைத் தேர்வுகளை இந்த 2 தசாப்தங்களுக்குள்ளேயே செய்திருந்தேன் ! அதன் பலனாய் 2022-ன் தொகுப்புகளை SMASHING '70s என்ற பெயர் !! காத்திருக்கும் 2023-ன் தொகுப்புகள் - SUPER '60s என்ற பெயரினில் வெளிவந்திடும் ! நான் நேற்றைக்குக் குறிப்பிட்டிருந்தது இதனைத் தான் !
| UNEDITED VERSION ! So வசனங்களில் திருத்தங்கள் இருந்திடும் ! |
2022-ன் நவம்பருக்கு முன்பாய் SMASHING '70s ஆல்பங்கள் நான்குமே வெளி வந்திருக்கும். So அவற்றிற்கான உங்களின் reactions-களை பொறுத்து 2023-ன் SUPER 60's க்கான திட்டமிடலிருக்கும் ! வேதாளர் நீங்கலான பாக்கி vintage நாயகர்கள் (ரிப் ; மாண்ட்ரேக் ; காரிகன்) தொடர்ந்திடணுமா ? அல்லது 2023 ஆண்டோடு போதுமா ? என்பதான தீர்மானங்களையும் அந்நேரம் எடுத்திட வேண்டி வரும் ! Maybe இதில் யாரேனும் இருவரைக் கழற்றி விட்டுவிட்டு, சார்லி & விங் கமாண்டர் ஜார்ஜை கூட்டணிக்குள் கொண்டு வரலாம் ; அல்லது வேதாளருக்கு mass ஆக ஸ்லாட்ஸ் தந்து விட்டு, பாக்கிப் பேருக்கு விடை தந்திடவும் செய்யலாம் ! எல்லாமே உங்களின் தீர்மானங்களாக இருந்திடவுள்ளன !
எது எப்படியோ - மொத்தமாய் இரண்டு ஆண்டுகளுக்கான ஒரு லோடு கதைகளின் மீது குந்தியிருக்கும் இந்த அனுபவம் செம த்ரில்லிங் !! And நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதைகளை படித்துப் பார்க்கும் போது மெய்யாகவே பிரமிக்கத் தோன்றுகிறது - அந்நாட்களில் கதை உருவாக்கத்தினில் படைப்பாளிகளின் செம ஷார்ப் திறன்களைக் கண்டு ! மாண்ட்ரேக் காதிலே சுற்றும் ரீல்கள் கூட செம நேர்த்தியாய், ரொம்பவே ரசிக்கும் விதமாய் உருவாகியுள்ளது சுலபக்காரியமே அல்ல ! And என்னை ரொம்பவே impress செய்தவை நமது ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப்பின் சாகசங்கள் ! ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு ; அவ்வளவு சுவாரஸ்யம் & அவ்வளவு மாறுபட்ட களங்கள் !! பின்னாட்களில் கதைகளின் பொறுப்பும் சரி, சித்திரங்களின் பொறுப்பும் சரி, கைகள் மாறிய பிற்பாடு இந்தத் தொடரை செம டப்ஸாவாக்கி விட்டனர் என்பதை கடுப்போடு பார்த்தவனுக்கு இந்த vintage '60s & '70s விருந்துகள் மெர்சலூட்டுகின்றன ! ஆண்டொன்றுக்கு 4 ஆல்பங்கள் வீதம் சுமார் 800 பக்கங்கள் எனும் போது - 2 ஆண்டுகளுக்கு 1600+ பக்கங்கள் என்றாகிறது ! And கிட்டத்தட்ட 75 சாகஸங்களாகிடும் இந்த 1600+ பக்கங்கள் ! Game arcade-களில் அரங்கு முழுக்க கலர் கலராய்ப் பந்துகளைக் குவித்து விட்டு வாண்டுகளை உள்ளாற இறக்கி விட்டு விளையாட அனுமதிப்பார்கள் அல்லவா ? கிட்டத்தட்ட அது போன்றதொரு சூழலில் தான் நானிருக்கிறேன் கடந்த 3 மாதங்களாய் ! 1970-களின் பிற்பகுதிகளில் முத்து காமிக்ஸ் ஆபீசுக்கு King Features முகவர்களிடமிருந்து ஒரு பழுப்பு நிற முரட்டு கவரில் இந்தக் கதைகளின் ஒரிஜினல்கள் வளவளப்பான பிரிண்ட்களில் வந்து சேர்ந்திடும் & நிறைய நாட்கள் நான் ஆபீசுக்கு வரும் போது அதனை உடைத்து கதைகளை வெளியெடுத்து, முதல் ஆளாய் வாசிக்கும் வரைக்கும் கவரையே உடைக்காமல் பத்திரமாக வைத்திருப்பார்கள் ! அன்றைக்கு அவற்றினுள் மிஞ்சிப் போனால் இரண்டோ, மூன்றோ கதைகள் இருந்திடும் ! But அதுவே ஒரு செம குதூகல அனுபவமாக இருந்திடும் ! இன்றைக்கோ 75+ கதைகள் ; 1600+ pages !! Phewwwwww !!
And 2023-ன் SUPER '60s - "Buy All 4 (or) Buy Any 2" என்ற வசதியுடனும் வந்திடும் ! So பிரச்சார பீரங்கிகள் இதன் பொருட்டு இன்னொருக்கா 'தம்' கட்ட 2023-ல் அவசியங்கள் இராதென்று நம்பிடலாம் ! கதைகளின் தரம் + தயாரிப்புத் தரம் உங்களை சகல இதழ்களையும் வாங்கச் செய்யுமென்ற நம்பிக்கையே எனது இந்தத் தீர்மானத்தின் பின்னணி !
இதோ - 2022 சந்தாவினில் கூட ரூ.3000 செலுத்தி "எனது காமிக்ஸ் - எனது உரிமை" என்று pick & choose செய்திட ஒரு வாய்ப்பை நாம் தந்திருப்பினும், இன்று வரையிலும் அந்தத் தடத்தினில் புகுந்திருப்போர் வெறும் 6 நண்பர்கள் மாத்திரமே !! பாக்கி அத்தனை பேருமே "ஒரே நாடு-ஒரே காமிக்ஸ்" என்று ALL IN சந்தாவுக்கே 'ஜே' சொல்லியுள்ளனர் ! சந்தாச் சேர்க்கையினில் பயணிக்க இன்னமும் நிறைய தூரம் உள்ளது தான் ; ஆனால் இந்த 'ஒரு சோற்றுப் பதம்' சொல்லும் சேதி ரொம்பவே உற்சாகமூட்டுகிறது ! நமது தேர்வுகள் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஐயாயிரத்து நூறு நன்றிகள் folks !!
ரைட்டு...FFS இறுதிக்கட்டப் பணிகளுக்குள் திரும்பவும் புகுந்திட கிளம்புகிறேன் ; see you around all ! Have a great week !
P.S : அப்புறம் அந்த கார லட்டு # 2 பற்றி லைட்டாய் !! இங்கே பூந்தி ரெடி ; லட்டு பிடிக்கச் சொல்லி நீங்கள் உத்தரவிட்டால் - 'சரிங்க ஆபீஸர்ஸ்" என்றபடிக்கு லட்டு பிடிக்க முனையணும் நான் ! அது பற்றி சனிக்கிழமையில் பதிவினில் ! Trust me on this guys - இது யூகிக்க வாய்ப்பே இல்லாததொரு பண்டமாக்கும் ! So கவிஞர் வழக்கம் போல அள்ளி விட்டுக் கொண்டிருப்பதை, "ஒரு வேளைக்கு இதா கூட இருக்குமோ ?" என்ற யோசனைகளின்றி ஜாலியாய்க் கடந்திடலாம் !!







