Powered By Blogger

Friday, May 24, 2024

999 !!!

நண்பர்களே,

வணக்கம். நம்ம சேலம் குமார் வந்து பூச்சாண்டி காட்டுவதற்கு முன்பாக, எனக்கு நானே புளியைக் கரைச்சுக்கிறேனே ; இது பதிவு நம்பர் 999 guys !! இந்த நம்பர் விளையாட்டுக்கள் இந்தியாவுக்கே ஒரு தேசீய பொழுதுபோக்கெனும் போது, நாம் மட்டும் அதற்கொரு விதிவிலக்கா - என்ன ? So ஆயிரமெனும் ஒரு மைல்கல்லின் முகப்பிலிருக்கும் இந்த நொடியில், வழக்கம் போலவே ஜாலியாய் வண்டியை அடிச்சு ஓட்டுவோமா ?

மே '24 !! நிறைய விதங்களில் செம த்ரில்லான மாதமிது என்பேன் ! ரெகுலர் தடத்தில் ஆட்டத்தைத் துவக்கிய போது, மூன்று இதழ்களுமே தத்தம் பாணிகளில் தெறிக்க விட்டது, பரபரப்பான இந்த மாதத்துக்கொரு டிரெய்லர் போல அமைந்தது என்பேன் !! 

டேங்கோ :

ஒரே நேரத்தில் மூணு பேர் ஞானப் பழம் இல்லாங்காட்டியும், வாழைப்பழம் தேடிப் புறப்பட்டனர் - நமது முத்துவின் ஐம்பதாவது ஆண்டுமலரினில் ! மூவருமே தத்தம் பாணிகளில் ஆற்றலாளர்கள் என்ற போதிலும், ஒருத்தருக்கே முழுச் சீப்பு வாழைப்பழமும் கண்ணில் பட்டிருந்தது ! And அவர் தான் நம்ம லோன் ஸ்டார் டேங்கோ ! இவரது முதல் சாகசத்துக்குப் பேனா பிடிக்கும் போதே எனக்கு இவரை நிரம்பப் பிடித்திருந்தது ; but கதாசிரியர் பின்னணியில் பேசிக் கொண்டே கதையை நகற்றும் அந்த monologue பாணிக்கு நீங்கள் எவ்விதம் ரியாக்ட் செய்வீர்களோ ? என்ற ஐயம் என்னுள் ஒரு மூலையில் இருக்கவே செய்தது ! ஆனால் கடலும், கடல் சார்ந்த சாகசங்களும் நமக்கு எப்போதுமே மனதுக்கு நெருக்கமானவை எனும் போது, டேங்கோவின் voyages நிச்சயமாய் நம்மிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டிருந்தேன் ! And அது பொய்க்கவில்லை என்பதற்கு சான்று - டேங்கோ தனது நான்காவது ஆல்பத்தை வெற்றியோடு பூர்த்தி செய்திருப்பதே ! 

And இங்கே ஒரு தகவலுமே folks : வாழைப்பழம் தேடி பந்தயத்தில் டேங்கோவுடன் பங்கேற்ற இதர 2 நாயகர்களான C.I.A ஆல்பா & சிஸ்கோ ; அப்புறம் ப்ளூகோட் பட்டாளம் & க்ளாஸிக் நாயகர்களின் 4 ஆல்பங்களுடனான Make My Own Mini Santha (MYOMS) இரண்டு மாதங்களாகியும் பெருசாய் take-off ஆகியிருக்கவில்லை என்பதே சங்கடமான நிலவரம் ! ரொம்பச் சமீபமாய்த் தான் 100 எனும் எண்ணிக்கையினையே தாண்டியுள்ளது & இலக்கான 400 ரொம்பத் தொலைவில்.....ரொம்ப ரொம்பத் தொலைவில் இருப்பதாகவே இப்போதைக்குத் தெரிகிறது ! ரெகுலராய் சந்தாக்களோடு விளம்பரங்கள் செய்து வருகிறோம் ; தலா 256 பேர் கொண்ட ஒன்பது வாட்சப் க்ரூப்களில் நம்மிடம் புக்ஸ் வாங்கிடும் நண்பர்களின் நம்பர்களை சேமித்து வைத்து, அம்புட்டுப் பேருக்குமே ரெகுலராய் அனுப்பும் தகவல்களோடு, இந்த MYOMS பற்றியுமே தெரிவித்து வருகிறோம் ! போன் பண்ணும் வாசகர்கள் அத்தனை பேரிடமும் இது குறித்து நம்மாட்கள் சொல்லியும் வருகின்றனர் ! But ஒரு தானைத் தலைவருக்கு உருவாகிடும் எழுச்சியில் கால்வாசி கூட புதியவர்களுக்குத் தேற மாட்டேங்குது என்பதே யதார்த்தம் ! 

இது போலான சந்தர்ப்பங்களில் தான் க்ளாஸிக் நாயகர்களும் சரி, அவர்களை ஆராதிக்கும் நண்பர்களும் சரி, என்னை நோக்கி நீள நீளமான விரல்களை நீட்டியபடிக்கே - "உனக்கு இது தேவையா ? தேவையா ??" என்று கேட்பது போலவே உள்ளது ! இதோ - இம்மாதத்து கமர்ஷியல் கி.நா.ஹிட் அடித்திருப்பது போலான தருணங்களில், புது இதழ்களின் அணி செம வீரியமாய், தாட்டியமாய் RCB டீம் போலவே தென்படுகிறது ! ஆனால் "கூட்டிக் கழிச்சுப் பாரு, கணக்கு சரியா வரும் !" என்று கோரஸாக, கெத்தாக சவுண்டு விடும் ஸ்பைடர்களும், வேதாளர்களும், மாயாவிகளுமே இறுதியில் IPL கோப்பைகளைத் தட்டிப் போய்விடுகின்றனர் !! And காசியப்பன் பாத்திரக்கடை பக்கமே புதியவர்களைக் கூட்டிக்கினு போகும்படியாகிப் போகிறது ! இந்த MYOMS முயற்சிக்கும் அவ்விதமொரு தலைவிதி நிகழாதிருக்க பெரும் தேவன் மனிடோ அருள் பாலிப்பாராக !!

"பிட்டு-பிட்டா, நடுநடுவே ஸ்பெஷல் இதழ்களை அறிவிச்சுப்புட்டு, அப்பப்போ பணம் அனுப்பப் சொல்லுறதுக்குப் பதிலா, வருஷ ஆரம்பித்திலேயே ஒரு நல்ல தொகையை வசூல் பண்ணிப்புட்டு, குறுக்கால, நெடுக்கால, சைடாலே போடக்கூடிய அம்புட்டு புக்ஸையும் அனுப்பலாமே ? மீதம் இருந்தாக்கா அடுத்த வருஷத்துக்கு மாற்றிடலாமே ?" என்ற நண்பர்களின் வினவல்களில் உள்ள லாஜிக் இத்தகைய தருணங்களில் புரிகிறது தான் ; ஆனால் இதற்கொரு மறுபக்கம் இருப்பதை பெரும்பாலும் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை ! சரியான திட்டமிடலோடு, முறையான இதழ் அறிவிப்புகளோடு, நாம் ஓராண்டுக்கென வசூலிக்கும் சந்தாக்களிலேயே, சில நண்பர்களிடம் காரசாரமான பேச்சுக்களை நம்மவர்கள் வாங்க நேரிடுகிறது ! இதோ - சமீபத்தில் நிறைவுற்ற அந்த Supreme '60s தனித்தடத்தினில் 5 இதழ்களுக்கென தொகை வசூலித்திருந்தோம் ! இடையே ஏகமாய் ஸ்பெஷல் இதழ்கள் குறுக்கிட்டபடியால், இந்த தடித்தடி புக்ஸுக்குள் புகுந்து பணி முடித்திட எனக்குத் தீர்ந்திருக்கவில்லை and so 2023-ல் முடிந்திருக்க வேண்டிய சந்தாவானது நடப்பாண்டின் மூன்று மாதங்கள் வரை நீண்டு விட்டது ! Phewww ....இதற்கே நம்மாட்கள் வாங்கிய பூசைகள் சொல்லி மாளாது ! இந்த அழகில், வருஷ ஆரம்பத்தினில், ரெகுலர் சந்தா தவிர்த்த வேறெந்த planning-ம் பெருசாய் எனக்கே இல்லாததொரு தருணத்தில் உருட்டுப் பொதியாய் காசை வசூலித்தோமேயானால் - ஆண்டு முழுக்க நம்மாட்கள் கத்தி மேல் நடந்தது போலாகவே இருந்திடும் ! இந்த வம்பே வேண்டாம் என்பதற்காகவே - "சுடப் போறது ரவா தோசையா ? ராகி தோசையா ? பேப்பர் ரோஸ்ட்டா ? ஊத்தப்பமா ?" என்பதையெல்லாம் ஸ்பஷ்டமாய் அறிவித்து விட்டு, அதற்கேற்ப மட்டுமே காசை வசூலிப்பது சாலச் சிறந்தது என்று தீர்மானித்து வருகிறேன் ! இந்த நொடிக்கு MYOMS கரை சேர்ந்தால் சரி தான் என்பதே நிலவரம் ! 

டாக்புல் & கிட் ஆர்டின் :     

நம்ம உட்ஸிடியின் நீதிக் காவலர்களுக்கு முதல் ரசிகர்கள் நீங்களோ - நாங்களோ நஹி என்பேன் !! கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாய் நமக்கு பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்து தரும் கோவை நகரத்து மொழிபெயர்ப்பாளரே சிக் பில் & கோ.வின் பிரதம ரசிகை ! ஆறேழு மாதங்களாய் மாடு மேய்க்கும் பசங்களின் வறட்சியான கதைகளையாய் அனுப்பிக் கொண்டிருந்தால், அவரே கேட்டு விடுவார் - "சிக் பில் இன்னும் ரெடியாகலியா ?" என்று !! And அவர் மட்டுமன்றி, நாமுமே ஏகமாய் ரசிக்குமொரு வாய்ப்பாக இம்மாதத்துக் "கடமையைக் கைவிடேல்" அமைந்து விட்டது இந்த மாதத்தின் இன்னொரு highlight ! இதற்குப் பேனா பிடித்திருந்தது நம்ம மேச்சேரிக்காரர் & நானும் ஆங்காங்கே மெருகூட்டல்களைச் செய்திருந்தேன் ! ஒவ்வொருவாட்டி அந்த மொக்கைச்சாமித் திருடனிடம் சாத்து வாங்கத் தயாராகும் போதெல்லாம் நம்ம டெபுடி ஷெரீபின் expressions வேற லெவல் ! இறுதியில் கொஞ்சம் சினிமாத்தனமான க்ளைமாக்ஸ் என்றாலும், லாஜிக் அவசியமாகிடாத  கார்ட்டூன் உலகில் இதெல்லாமே par for the course என்பேன் ! சூப்பராக விற்பனை கண்டுள்ள இதழ்களுள் இதுவும் ஒன்று !!

ஏஜெண்ட் ராபின் :

இந்த மாதத்து ரெகுலர் தடத்தின் surprise என்னைப் பொறுத்தவரையிலும், ராபினின் "தலைவனுக்கொரு தாலாட்டு" தான் ! வழி நெடுக ரேடியோ பாடிக் கொண்டேயிருக்க, அங்கெல்லாம் கவிதைகள் (ஹி..ஹி..ஹி..சரி...வஜனங்கள்) எழுத நேர்ந்த போது கடுப்பாய் இருந்தது தான் ! ஆனால் கொஞ்ச நேரத்திலேயே புரிந்தது - இதுவும் ஏதோவொரு விதத்தில் கதையோடு தொடர்பு கொண்டிருக்கும் என்று !! ரிப்போர்ட்டர் ஜானி பாணியில் dramatic நிகழ்வுகள் ஏதுமின்றி ; ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ரகளைகளுமின்றி, யதார்த்தமாய்ப் பயணித்த ராபினின் இந்த ஆல்பத்தினை நீங்கள் ரசித்திருப்பது செம refreshing ! Maybe ராபினும் நம்மோடே முதிர்ந்திருப்பது, இந்த flashback கதைகளை ரசிக்க நமக்கொரு கூடுதல் முகாந்திரத்தைத் தருகிறதோ - என்னவோ !! 

ஆன்லைன் மேளாவின் ஸ்பெஷல் இதழ்களுள் நீங்கள் சன்னம் சன்னமாகத் தான் உட்புகுந்திருப்பீர்கள் என்பது உறுதி ! Of course - முழுசையும் ஏக் தம்மில் போட்டுத் தாக்கியோரும் இருப்பீர்களென்பது உறுதி ! வெளிவந்துள்ள அந்த 7 ஸ்பெஷல் புக்ஸ் மத்தியில் என்னை சுவாரஸ்யப்படுத்திய இதழ்கள் நான்கு !! Oh yes - டெக்சின் "ஓநாய் வேட்டை" மறுபதிப்பு என்பதாலும், எனது ரேட்டிங்குகளுக்கு அப்பாற்பட்டதொரு ஆளுமை நம்ம 'தல' என்பதாலும் அங்கே கருத்துக் கந்தசாமியாகிட எனக்கு அவசியங்களில்லை ! அவர்பாட்டுக்கு தனி வழியில் தடதடத்துப் போவார் !! 

என்னைக் கொக்கி போட்ட முதல் இதழ் நம்ம ஜம்பிங் நாயகர் ஸாகோர் தான் ! 

இந்தப் "பனிமலைப் பலிகள்" இருவித diverse அலசல்களுக்கு உள்ளாகியிருப்பதை கவனித்தேன் & in fact இவ்விதம் தான் நீங்கள் ரியாக்ட் செய்வீர்கள் என்பதையுமே யூகித்திருந்தேன் ! 'ஒரு அமானுஷ்ய எதிரியோடு மோதும் காதிலே புய்ப்பம் அவசியமா ?' என்ற கேள்விக்கு எனது பதில் ரொம்பவே சிம்பிளானது folks ! உருவாக்கத்தின்படியே ஸாகோர் மாயாஜாலங்கள் ; செவ்விந்தியப் பழங்குடி நம்பிக்கைகள் என்பனவற்றின் நடுவே ஜனித்தவர் ! அவரது அந்த அறிமுக ஆல்பத்திலேயே இதற்கான குறியீடுகள் தெள்ளத் தெளிவாய் தரப்பட்டிருந்ததை நினைவுபடுத்திப் பாருங்களேன் guys ?  And இன்னுமொரு படி மேலே போய் - "யார் இந்த ஸாகோர் ?" என்று விக்கிப்பீடியாவைக் கேட்டுப் பாருங்களேன் !! 

இங்கிலீஷ் விக்கிபீடியா சொல்வது இதோ : Zagor is not a typical western character, as his stories mix horror and science fiction by side with a bit of humour coming mostly from his sidekick Chico !

இத்தாலிய விக்கிபீடியா சொல்வது இதோ : The stories, starting from a western setting, are characterized by the variety of ideas, themes, characters and situations, with a notable mix of genres, from western to fantasy to science fiction ; can be defined as a "fantasy western". 

சொல்லுங்களேன் guys - "பனிமலைப் பலிகள்" - fantasy western என்ற அடையாளத்துக்குப் பொருந்துகிறதா ? இல்லையா ? என்று !

அட, அதே விக்கிப்பீடியாவில் இன்னும் கொஞ்சம் ஆழமாய்ப் போனால் கிடைக்கும் தகவல்கள் இவை !!

ஸாகோரின் ஜென்மப் பகைவர்கள் இவர்களெல்லாம் தான் :

புரஃபஸர் ஹெல்லிஞ்ஜன் : உலகையே ஆட்டிப்படைக்கும் வெறி கொண்டு ரோபாட்கள் ; நீர்மூழ்கிகள் ; கம்பியூட்டர்கள் என்றெல்லாம் கண்டு பிடித்துத் தள்ளும் விஞ்ஞானி !    

அக்ரோனியன்கள் : வேற்று கிரகத்திலிருந்து வந்தோர் ; பாதி மிருகம்-பாதி தாவரம் என்றான உயிரனங்கள் ! இவுகளை முதல் பத்தியில் உள்ள புரஃபஸர் ஒரு கம்பியூட்டர் வாயிலாகத் தொடர்பு கொண்டு பூமிக்கு வரவழைக்கிறார் !! பூமியை நோட்டமிடும் நோக்கில் துவக்கத்தில் வருவோர் - அப்புறமாய் படையெடுக்கத் தீர்மானிக்கின்றனர் !

டெவில் முகமூடி : சூனியக்காரன் ! 

பெல்லா ராக்கோசி : இதுவோ ஒரு ஹங்கேரிய நாட்டு இரத்தக் காட்டேரி ! 

இரும்பு மனிதன் : ஒரு மன்னர்காலத்துக் குதிரைப்படை வீரனைப் போல தலையில் ஹெல்மெட் ; நெஞ்சில் கவசம் என்று மாட்டிக்கொண்டு திரியும் வெறியன் !

ருநோக் : "அக்னியின் மைந்தன்" என்று அறியப்படுபவர் ; டைனோசார்கள் வசிக்கும் ஒரு பள்ளத்தாக்கில் வாழ்ந்து வரும் ஆசாமி !

காண்டராக்ஸ் : ஆயிரக்கணக்கான வருஷங்களாக வாழ்ந்து வரும் ஒரு மாந்த்ரீகர் !

Oh yes, நார்மலான கடாமாட்டு எதிரிகளும் உள்ளனர் தான் - நாட் மர்டோ ; மோர்டிமர் ; சூப்பர் மைக் என்றெல்லாம் ! ஆனால் அவை இந்த மந்திர-தந்திர எதிரிகளின் சாகசங்களை மத்தியில் புதைந்தே கிடக்கின்றன ! 

சிம்பிளாகச் சொல்லப் போனால் டெக்ஸை ஸாகோரில் தேடினால் 'பிம்பிலிக்கி பிலாக்கி' தான் பலனாகிடும் ! டெக்ஸ் ஒரு ரேஞ்சர் ; ஒரு நவஹோ இனத் தலைவர் ; நார்மலான நாதாரிகளை சுளுக்கு எடுத்து சற்றே போரடித்துப் போயிருக்கும் தருணத்தில், மெபிஸ்டோவுடன் ஒரண்டையை இழுப்பவர் !! So டெக்ஸை யமாவுடனோ ; மெபிஸ்டோ உடனோ மோதச் செய்யும் சாகசங்களை நான் தவிர்க்க எண்ணுவது - ஒரு யதார்த்த நாயகரின் சின்னஞ்சிறு fantasy முகத்தினை இயன்றமட்டுக்கும் வெளிச்சம் போட்டிட வேண்டாமே - என்ற ஆதங்கத்தில் தான் ! அதே சமயம் - ஸாகோரின் முக்கிய மெனுவே fantasy தான் எனும் போது - "விட்டிகோ வேட்டையில்" லாஜிக்கைத் தேடினால் ஞான் என்ன செய்யும் ? Simply put....முதலாமது நம்ம கோனார் மெஸ் போலானது ; அசைவத்தின் அம்புட்டு ரகங்களும் தடையின்றிக் கிடைக்குமிடம் ! So அங்கே போய் Nasi Goreng என்ற மெபிஸ்டோவை தேட வேணாமே என்பது தான் எனது எண்ணம் ! இரண்டாவது கடையோ - ஜப்பானிய Sushi பரிமாறும் ஹோட்டல் ! இங்கே ரக ரகமாய் exotic ஐட்டங்களே பிரதானமாய்ப் பரிமாறிடுவார்கள் எனும் போது - 'அண்ணாச்சி....... எனக்கொரு கொத்து பரோட்டா,ஆங்..அப்புறமொரு ஒன் சைட் ஆம்லெட் !' என்று ஆர்டர் செய்தல் சிரமமாச்சே ! 

யோசித்து மட்டும் பாருங்களேன் - அந்த அக்ரோனியன்ஸோடு கோடாரி மாயாத்மா மோதும் கதையினை மட்டும் நான் தேர்வு செய்திருந்தால் நிலவரம் என்னவாக இருந்திருக்குமென்று !! Of course - நார்மலான  ரவுடிப் பயபுள்ளைக உதார் விடும் கதைகளையே இயன்றமட்டுக்கு தேடி வருகிறேன் - காத்திருக்கும் "வஞ்சத்துக்கொரு வரலாறு" அந்த மாதிரியானது தான் ! But கொஞ்சமே கொஞ்சமாய் இந்த fantasy western ஜானருக்கும் நாம் பழகிக் கொள்ளல் அவசியம் என்பேன் - at least ஜம்பிங் பேரவையின் பார்வையிலாவது ! (பேரவைத் தலைவரே....முடிஞ்சா மட்டுக்கு முட்டு கொடுத்திருக்கிறேன் ; நீங்களும் உங்க பங்குக்கு  கொஞ்சம் பாத்து பண்ணுங்க !! )

துணைக்கு வந்த மாயாவி !

By now, இந்த கமர்ஷியல் கி.நா. நம் மத்தியில் நல்லதொரு ரவுண்ட் வந்திருக்கும் என்றே நினைக்கிறேன் - because இது வரையிலான word of mouth விமர்சனங்கள் செம பாசிட்டிவாக இருந்துள்ளன !! நிஜத்தைச் சொல்வதானால் இந்தக் கதையின் மாயாவிப் பொடியன் - "சூது கவ்வும்" படத்தில் விஜய் சேதுபதியின் மடியில் குந்திக்கினே ஊரெல்லாம் சுற்றி வரும் அந்த சஞ்சிதா ஷெட்டி அம்மணி போலவொரு கற்பனைக் கதாப்பாத்திரமாய் இருப்பானென்றே எண்ணியிருந்தேன் ! ஆனால் அவன் நெசம் தான் என்பதை க்ளைமாக்சில் அறிந்த போது - "சூது கவ்வும்" பாணியில் சத்தமில்லாமல் நாமும் மாற்றிப்புடுவோமா ? என்றெல்லாம் கூட நினைத்தேன் ! ஆனால் அங்கே, விஜய் சேதுபதிக்குத் தாண்டி வேறு யாருக்கும் அம்மணி புலப்படுவதில்லை ; வேறு யாரோடும் interact செய்திடுவதும் இல்லை ! ஆனால் இங்கேயோ அப்படியில்லை ; அந்த மெக்சிகப் பண்ணை முதலாளி பார்க்கிறார் ; சங்கை அறுத்துப்புடுவேன் என்று மிரட்டுகிறார் ; இராணுவ ஆபீசில் வாயில் காவலன் பார்த்திடுகிறான் etd etc....! So நான் பாட்டுக்கு அவனை மெய்யாலுமே ஒரு  மாயாவி என்று பிட்டைப் போட்டிருந்தால் வம்பாகிப் போய்விடும் என்பது புரிந்தது ! So பொடியன் நிஜமே என்ற ஒரிஜினல் க்ளைமாக்ஸுடன் சுபம் போட்டோம் ! 

Oh yes, இங்கே சித்திரங்கள் செமையாய் ஸ்கோர் செய்திருந்தது நிஜமே ! ஆனால் இந்த ஆல்பத்தை முதன்முதலில் பார்த்த சமயத்தில், சீரியஸான ஒரு கதைக்கு, இந்தக் கீச்சு பாணிச் சித்திரங்களை அமைத்திடத் தீர்மானித்தது யாராக இருக்குமென்று யோசித்தேன் ! அப்படியே பக்கங்களை நகற்றிய போது பார்த்தால் - கதை-வசனம்-சித்திரம்-கலரிங் என சகலமும் ஒருத்தரே என்பது தெரிந்தது !! அந்த ஒருத்தர் இவரே : 


இவரைப் பார்த்த கையோடு ஒருக்கா புக்கைப் புரட்டி, நாயகன் ஆம்பரோஷியஸ் மார்கனையும் பாருங்களேன் - ஏதாச்சும் ஒற்றுமை தெரியுதுங்களா ? 😀😀😀

பொதுவாகவே இந்த மாதிரியான ஒன்-ஷாட்ஸ் எனக்குப் பிடிக்கும் ; வித விதமான கதைக்களங்களுக்குள் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி வரிந்து கட்டிக் கொண்டு நுழைந்திட வாய்ப்புகள் கிட்டிடும் என்பதனால் ! ஜம்போ காமிக்ஸ் வண்டி ஓடிக்கொண்டிருந்த வரைக்கும், இந்த பாணிக்கு ஒரு தடம் சாத்தியப்பட்டு வந்தது ! But "வாசிக்கவே நேரமில்லே ; இதிலே முன்சாமி, கோயின்சாமிலாம் ஈரோவா ஆக்டு குடுக்கும் கதைங்களுக்குள் எங்க போறதாம் ?" என்ற கேள்வி எழுந்த பிற்பாடு, one-shots களின் பாடு திண்டாட்டமாகிப் போயுள்ளது ! இந்த நிலைமை மாறிட "துணைக்கு வந்த மாயாவி"  கொஞ்சமாய்க் கை கொடுத்தால் சூப்பர் !! What say people ?

டைலன் டாக் :

இந்தக் கலர் மினி இதழை கையில் ஏந்திப் பார்த்த நொடியில் புரிந்தது - இது நிச்சயம் நமக்கெல்லாம் ரசிக்குமென்று !! ஒரு மித தூரத்துப் பொழுதில், நமது வாசிப்புகளெல்லாமே இந்த ரேஞ்சுக்கே அமைந்து போனாலும் வியப்புக் கொள்ள மாட்டேன் ! Because - இவை போலான மினி புக்செல்லாமே கையில் ஏந்திடும் நொடிதனில், "இதை வாசிக்க எம்புட்டு நேரம் புடிக்கும் ?" என்ற கேள்வியினை முன்வைத்திடாதவை ! "அட..." என்றபடிக்கே கையில் எடுத்தால், அடுத்த பத்தாவது நிமிடத்தில் வாசித்து முடித்திருப்போம் !! அதிலும் இந்த டைலன் ஜாகஜத்தில் வசனங்கள் குறைவு, சித்திரங்களின் முதுகிலேயே கதையின் பெரும்பங்கு சவாரி செய்து விடுகிறதெனும் போது - செம breezy ride & read ஆகிப் போகிறது ! பற்றாக்குறைக்கு இங்கே டைலன் நடத்திடும் undercover புலனாய்வுகளும், நிச்சயம் நம் மத்தியில் ஒரு பேசுபொருளாகிடுமென்று எதிர்பார்த்திருந்தேன் - நம்ம பன்பாண செயலரின் உபயத்தில் அதுவும் பொய்த்திருக்கவில்லை ! So ஜாலியான வாசிப்பு ; yet நமக்கு ரசிக்கக்கூடியதொரு களம் அமைந்ததில் ஹேப்பி ! 

தானைத் தலைவர் & இரும்புக்கரத்தார் !!

மேலே சொன்ன அதே காரணங்களுக்காக எனக்கு ரசித்த இன்னொரு குட்டி சாகசம் தான் நம்ம க்ளாஸிக் சூப்பர்ஸ்டார்ஸ் ஸ்பெஷல் 1 !! Of course மாயாவியை தண்ணீர் குடிக்கச் செய்யும் அந்தக் கதை பாணி கடுப்பைக் கிளப்பவே செய்தது - but still நமது பிரதான நாயக / நாயகியர் ஒன்றிணையும் சாகசத்தினை skip செய்வது உசிதமாகாதென்று பட்டது ! தவிர, இந்தப் புதுயுக பாணிச் சித்திரங்கள், டிஜிட்டல் கலரிங் என்று எல்லாமே பட்டையைக் கிளப்பிடுவதை நீங்களும் பார்த்தே தீரணும் என்று தலைக்குள் குடைந்தது ! More than anything else - நம்ம தானைத் தலைவருக்கு பேனா பிடிக்கும் வாய்ப்பு ரொம்ப காலம் கழித்து இங்கே வாய்த்திருப்பதை miss பண்ண மனசு கேட்கலை !! (அதுக்கோசரம் முழுநீள SINISTER SEVEN கதைக்குள் குதிக்கவெல்லாம் மாட்டேனுங்கோ !!) 

கொசுறுத் தகவல் : இந்தத் தொடரின் அத்தியாயம் # 2 - ஆகஸ்ட்டில் - ஈரோட்டுப் புத்தக விழாவின் போது !! நம்ம ஆர்ச்சி பயல் தானைத் தலைவரை தட்டாமாலை சுற்றுவதை அந்நேரம் பார்த்திடலாம் !!

So மே மாதத்தினை செம bright ஆக்கிட (என்னளவிலாது) உதவிய இதழ்கள் இவையென்றால், காத்துள்ள ஜூன் ரெகுலர்ஸ், தம் பங்குக்குப் பட்டாசாய்ப்  பொரிந்து தள்ளியுள்ளனர் !! 

XIII .... நம் மத்தியில் எப்போதுமே அதிர்வலைகளை உருவாக்கிடும் நம்பர் இது ! And அந்த மறதிக்கார ஜேசன் மக்லேன், எல்லாமே துவக்கம் கண்ட க்யூபாவுக்குப் பயணமாவதே காத்திருக்கும் சாகஸத்தின் highlight !! சமீப வருடங்களாகவே XIII-க்குப் பேனா பிடிக்கும் போதெல்லாம் எக்கச்சக்க நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட மாதிரியுள்ளது - அமெரிக்க அரசியல் பற்றி ; யுத்த நுணுக்கங்கள் பற்றி etc etc ! இம்முறையும் அதற்கு விதிவிலக்கல்ல ! ஒவ்வொரு கதையின் பின்னணியில் எவ்வளவு research உள்ளது ; எத்தனை தேடல் உள்ளதென்பதையெல்லாம் பார்க்கும் போது மலைப்பாக உள்ளது ! அனல் பறக்கும் ஆக்ஷனில் ஓட்டமெடுக்கும் இந்த சாகஸத்தின் முடிவில் நம்மாள் க்யூபாவிலிருந்து நேராக மாஸ்கோவுக்குப் பயணமாகிறார் and அங்கே இந்த இரண்டாம் சுற்று நிறைவு காணப்போவதாகத் தகவல் ! அமெரிக்க ப்ரெசிடெண்டை போட்டுத் தள்ளிய குற்றச்சாட்டோடு நமக்கு அறிமுகமான மனுஷன் இன்று வெள்ளை மாளிகைக்குள் உதவி ஜனாதிபதியாக நுழைந்திடும் தருவாயில் நிற்கிறார் ! பார்க்கணும் - க்ளைமாக்ஸ் பாகத்தில் என்ன காத்துள்ளதென்று !! And மூன்றாவதாய் ஒரு சுற்றுக்குள் ஜேசனை இறக்கி விடும் சபலத்தை படைப்பாளிகள் தவிர்ப்பார்களா - இல்லையா ? என்பதையுமே பார்த்தாகணும் !! இதோ - துளியும் மாற்றங்களில்லா ஒரிஜினல் அட்டைப்படம் & அடர் வர்ணங்களில் மிளிரும் உட்பக்கம் !! 


நம்ம XIII தான் பட்டையைக் கிளப்புகிறாரென்றால் - ஜூன் மாதத்தில் இரவுக்கழுகாரும் ஆயிரம்வாலாவாய் பொரிந்து தள்ளுகிறார் ! கதையின் துவக்கத்திலேயே ஒரு ட்விஸ்ட் உள்ளது - கார்சன் லேது ; கிட் லேது ! டெக்ஸ் & டைகர் ஜாக் மட்டுமே கதையின் முழுமையிலும் அதிரடி பண்ணி வருகிறார்கள் !! நவஹோ தலைவரும், சிகப்பின சகோதரனுமாய் செய்திடும் அதிரடிகள் 224 பக்கங்களிலும் எதிரொலிக்கிறது ! And கதைக்களமோ செம சுவாரஸ்யம் - அவனை இவர்கள் பின்தொடர ; இவர்களை வேறொருவர் பின்தொடர ; அப்புறம் வரிசை மாறி மறுக்கா பின்தொடரல் தொடர்ந்திட, இக்ளியூண்டு கூடத் தொய்வே இல்லாமல் கதை சீறிப் பாய்கிறது ! ஏஜெண்ட் ராபின் ; மேஜிக் விண்ட் தொடர்களிலெல்லாம் பணியாற்றியுள்ள ஓவியரின் கைவண்ணத்தில், சித்திரங்களும் செம க்யூட்டாக இருக்க, கண்களுக்குமே ஒரு விருந்து வெயிட்டிங் என்பேன் ! இதோ - மறுக்கா ஒரிஜினல் அட்டைப்படம்ஸ் & உட்பக்கங்கள் !!  


நாளை XIII & டெக்ஸ் என இருவருமே அச்சுக்குச் செல்கின்றனர் !! And நம்ம V காமிக்ஸ் பணிகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன ! ஆன்லைன் ஸ்பெஷலில் விடுபட்டிருந்த க்ரே தண்டருமே இம்மாத கூரியர்களோடு ஐக்கியமாகிடுவார்  ! 

அப்புறம் சின்னதாயொரு change : தாத்தாஸ் ஜாகஜம் அடுத்த மாதத்திற்கு இடமாற்றமாகிறது ! நிறையவே கூகுள் செய்து, பின்னணித் தகவல்களைப் புரிந்து கொண்டு, எழுதினால் மட்டுமே இந்தத் தொடருக்கு நியாயம் செய்திட இயலும் என்பதால் காலில் வெந்நீரை ஊற்றிக் கொள்ளாது, கொஞ்சமாய் டைம் எடுத்துக் கொண்டு பணியாற்ற நினைக்கிறேன் ! சாரி guys !! 

ரைட்டு....குவிந்து கிடக்கும் பணிகளுக்குள் ஐக்கியமாகிடப் புறப்படுகிறேன் !! And நம்ம next meet - ஆயிரமாவது பதிவில் எனும் போது இப்போதிலிருந்தே வவுத்தை என்னமோ செய்றா மெரியே ஒரு பீலிங்கு !!  தெய்வமே....என்ன எழுத ? என்று இந்த நொடி வரைக்கும் தெரியாமல் பேந்தப் பேந்த முழிச்சிக்கினு திரியும் இந்தப் பச்சை மண்ணை, மானாவாரியாய் அள்ளி விடக்காத்திருக்கும் கவிஞரிடமிருந்தும், நண்பர்களின் பெரும் எதிர்பார்ப்புகளெனும் இமயமலையிடமிருந்தும் காப்பாத்துவீராக !! Bye all....see you around !! Have a super cool weekend !!

Friday, May 17, 2024

ஒரு ரவுண்ட் பன் ரவுண்டப் !

 நண்பர்களே,

வணக்கம். வழக்கமாய் புது புக்ஸ் ஆபீசுக்கு வந்து இறங்கும் போதெல்லாம்  பிரெஷான அந்த பிரின்டிங் இங்கின் மணம் நாசியைத் துளைக்கும் ! So டெஸ்பாட்ச் தினத்தை ஆந்தை விழிகள் ஊர்ஜிதம் செய்யும் முன்பாகவே மிஸ்டர் மூக்கார் இனம்கண்டு சொல்லி விடுவது வழக்கம். ஆனால் இன்றைக்கோ ஆபீஸ் வாசலிலேயே ஒரு 'ஜம்'ம்மென்ற மணம் நாசியை வருட, 'அடடே இன்னா மேட்டரு ?' என்றபடிக்கே உள்ளே நுழைந்தால், திக்கெட்டும் ரவுண்டு பன் பாக்கெட்கள் !! அடடா, ரக ரகமாய், சைஸ் சைஸாய், நமது ஆன்லைன் மேளா புக்ஸ் குவிந்து கிடக்க, நடுநாயகமாய் ஒரு பன் மலை ! நூறு தபா கடையில் பார்த்த சமாச்சாரம் தான் ; ஆனால் இப்படி மொத்தமாய்ப் பார்க்கையில், "ஆகா....ஆகாகா..." என்றபடிக்கே பாய்ந்து ஒரு பாக்கெட்டைப் பிரித்து மொசுக்கும் ஆசையை அவசரம் அவசரமாய் விழுங்கி வைப்பது அத்தனை சுலபமாகவெல்லாம் இருக்கவில்லை ! 'ச்சே..ச்சே..நாம சட்டைய இன்லாம் பண்ணிட்டு, கெத்தா வந்திருக்கோம் ; ஒரு வட்டமான வஸ்துவுக்கோசரம் புள்ளீங்க முன்னாடி அதை விட்டுக்கொடுக்கப்படாது' என்றபடிக்கே நடையைக் கட்டினேன் ! "ஆங்...அல்லா டப்பிகளிலேயும் ஒண்ணை மறக்காம வைச்சு விட்டுருங்க !!" என்று கடமைக்குச் சொல்லிவிட்டு ரூமுக்குள் போனாலும், கடைவாயில் கர்சீப்பை ஒற்றியெடுக்கத் தேவை இருந்தது ! பேக்கரியே இங்கு குடி மாறியிருந்தது போலான பீலிங்கை தவிர்க்க இயலவில்லை ! "மைதீன்...இரத்தப் படலம் எவ்ளோ பக்கம் முடிஞ்சிருக்குப்பா ?" என்று வினவும் போதும் பார்வை CC டி.வியில் லயிக்கிறது - பரபரவென்று உசரம் குறைந்து வரும் பன் மலையைப்  பார்த்தபடிக்கே ! "அப்புறம்...அந்த ஆண்டுமலர் ராப்பர் டிசைன் கோகிலா கிட்டேர்ந்து வந்திருச்சா மைதீன் ?" என்று விசாரிக்கும் போதும் முட்டைக்கண்கள் அக்கடயே !! "வாங்கியிருக்க பன்னு எண்ணிக்கைலாம் செரியா போயிடுமில்லையா ? எதும் பற்றாம கிற்றாம போயிடாதுலே ?" என்று அக்கறையாய்க் கேட்கும் தோரணையில் வெளியே வந்து நின்ற போது டப்பிகளுக்குள் வேக வேகமாய் அடைக்கலமாகிக் கொண்டிருந்த வட்ட வடிவங்கள் என்னைப் பார்த்து வசீகரப் புன்னகையினை உதிர்ப்பது போலவே இருந்தது !! "இன்னிக்கி சட்டைய இன் பண்ணாமலே வந்திருக்கணுமோ ?" என்ற எண்ணம் மண்டைக்குள் ஓடியதும், "பன்னு ஜாஸ்தி தான் இருக்கு சார் ; பாக்கெட்லாம் போட்ட பிறகும் பத்து-பதினைஞ்சு மிச்சம் கிடக்கும் !" என்று நம்மாட்கள் தகவல் சொன்னதும், ஒரே நொடியின் நிகழ்வுகளாகிட, பச்சக்கென்று குனிந்து ஒரு பாக்கெட்டை கையில் எடுத்துக் கொண்டு ரூமுக்குள் போய் ஐக்கியமானேன் !! "மாடு..மாடு...எடுத்தது தான் எடுத்தே - ரெண்டா எடுத்திருக்கலாமில்லே ?" என்ற குரல் உள்ளுக்குள் ஒலித்த போது, எனக்கே லஜ்ஜை பிடுங்கித் தின்ன, பன்னில் ஒரு வாயைப் பிய்த்துப் போட்டு, அதை சமன் செய்ய முயன்றேன் !!  So ஒரு கத்தை இதழ்களோடு இன்றைய டெஸ்பாட்ச் இனிதே நடந்தேறியதென்ற தகவலை, பண்பட்ட மனங்களுக்கு, பன் போட்ட வாயால் சொல்வதே இந்தப் பதிவின் பிரதான நோக்கம் ! நாளை காலை கூரியர்கள் பட்டுவாடாக்களைச் செய்து என்னையும், பன்னையும் காப்பாற்றிட, புனித தேவன் அருள்புரிவாராக !! Phew !!

பொதுவாய் ஒவ்வொரு மாதமும், புக்ஸை தயாரிக்கும் பணிகளினிடையே இருக்கும் போது - ஏதோவொரு காரணத்தின் பொருட்டு, "ஆஹா..புக்ஸ் இப்போவே நண்பர்களைப் போய்ச் சேர்ந்தால் சூப்பரா கீதுமே ?" என்ற எண்ணம் மேலோங்கும் ! ஒரு சூப்பரான கதை அதற்கொரு காரணமாயிருக்கலாம் ; அல்லது நெடுநாள் காணாது போயிருந்ததொரு க்ளாஸிக் நாயகரின் மறுவருகை ஆல்பமாக அது இருந்து வைப்பது காரணமாக இருக்கலாம் ; இல்லாங்காட்டி, உங்களின் கைதட்டல்களை ஈட்டவல்ல ஏதேனும் ஒரு மொழிபெயர்ப்புப் பகுதி மீதான நம்பிக்கை காரணமாக இருக்கலாம் ! And இதோ, இந்த நொடியில் அந்த ஆர்வம் ஊற்றெடுக்கிறது உள்ளுக்குள் - இந்த ஸ்பெஷல் புக்ஸ் மத்தியில் உள்ளதொரு ஒற்றை ஆல்பம் மட்டுமாவது, அம்புட்டுப் பேரது பார்வைகளிலும் இப்போதே விழுந்து விடாதா ? என்று !! அந்த ஆல்பமானது - இம்முறையின் கமர்ஷியல் கி.நா.வே தான் !!

துணைக்கு வந்த ஆவி !!! ஏற்கனவே இது பற்றிய பில்டப்பெல்லாம் 2 பதிவுகளுக்கு முன்னமே தந்து விட்டிருந்தேன் தான் ; yet அதை மறுக்கா மெய்சிலிர்த்து சிலாகிக்க காரணமுள்ளது ! பொதுவாகவே காக்கைகளுக்கு கூட்டில் இருப்பவையெல்லாமே பொன்னிறமாகத் தென்படக் கூடும் தான் !! அட்டுப் படம் எடுப்போருக்குக் கூட, "வாங்கப் போகும் ஆஸ்கார் விருதை எந்த ஷெல்பிலே வைப்பது ?" என்ற கேள்வி எழுந்திடும் ! டப்ஸா புக்கைத் தயாரிக்கிறோம் என்று ஆழ்மனசுக்குத் தெரிந்தாலும், "உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக" என்று கூவவே ஒரு பப்லிஷருக்குத் தோன்றும் ! அடியேனும் அதற்கு விதிவிலக்கல்ல எனும் போது - "துணைக்கு வந்த ஆவி" மீதான அதீத வாஞ்சையினை கொட்டாவியோடு நீங்கள் எதிர்கொண்டீர்களேயானால் தவறு உங்களிடம் இராது ! Yet, trust me guys , இது மாமூலான பில்டப் படலமே அல்ல ! 

இந்த ஆல்பத்தினை நான் முதன்முதலாய்க் கண்ணில் கண்டது, லாக்டௌன் நாட்களின் ஏதோவொரு வேளையில் தான் ! வழக்கமான கௌபாய் கதை போலத் தென்பட்டாலும், கச்சா-முச்சா என்ற அந்த ஓவிய பாணி பெருசாய் எனது ஆர்வத்தைக் கிளறியிருக்கவில்லை ! நாட்கள் ஓடின & மறுக்கா அந்த ஆல்பம் பற்றிய தகவல்கள் அகஸ்மாத்தாய்க் கண்ணில்பட்டன - செம சிலாகிப்புகளாய் ! Black & White டீலக்ஸ் பதிப்பாகவும், கலர் பதிப்பாகவும் இது சக்கை போடு போட்டு வருவதாய் வாசிக்க முடிந்தது ! இன்னொருவாட்டி பக்கங்களை புரட்டிய போது, முதல்வாட்டி கேப்டன் பிரின்ஸ் கதைகளுக்கு ஓவியர் ஹெர்மன் தீட்டியிருந்த சித்திரங்களைப் பார்த்தது தான் நினைவுக்கு வந்தது ! சரி, இதை ஓரம்கட்டுவதானால், அதற்கு சித்திர பாணி ஒரு காரணமாக இருக்க வேண்டாமே ? என்ற எண்ணத்துடன் நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரிடம் அனுப்பி வைத்தேன் ! 2 வாரங்களுக்குப் பின்னே அவருக்கு போன் செய்து, "அந்தக் கதை எப்புடி கீது மேடம் ? ஏதாச்சும் தேறுமா ?" என்று விசாரித்தேன் ! பொதுவாய், சிக் பில் தவிர்த்த மீத பிரெஞ்சு ஆல்பங்களையெல்லாமே - "ஓ.கே.வா இருக்கு மிஸ்டர் விஜயன் ; எதுக்கும் நீங்க ஒருவாட்டி செக் பண்ணிக்கோங்க !" என்று சொல்லி ஒதுங்கி கொள்ளுவார் ! ஆனால் இம்முறையோ, "வித்தியாசமா இருக்கு ! நம்ம ரீடர்ஸுக்குப் புடிக்கும்னு தான் நினைக்கிறேன் !" என்றார். நமக்கெல்லாம் கதை வாங்குவதென்பது, B.G.நாயுடு ஸ்வீட் ஸ்டாலில் நிற்கும் பச்சைப் புள்ளைக்கு சகல துவாரங்களிலிருந்தும் ஜொள் பிரவாகமெடுப்பதற்கு ஈடானதொரு செயல் ! நம்ம மொழிபெயர்ப்பாளரே க்ரீன் சிக்னல் தந்த பின்னே கேட்கவும் வேணுமா - கபாலென்று வாங்கிப்புட்டேன் ! தொடர்ந்தது தான் ஸ்டெர்ன் வேணுமா ? அல்லது இந்த நவீன கிராபிக் நாவல் வேணுமா ? என்ற ஓட்டெடுப்பு இத்யாதி...இத்யாதி !  

அங்கே ஸ்டெர்ன் கெலித்திருந்தாலும், இந்த கமர்ஷியல் கி.நா.வை வாகானதொரு வேளையில் உங்களிடம் காட்டியே தீரணுமே - என்ற குடைச்சல் தலைக்குள் இருந்து வந்தது ! ஆன்லைன் மேளா அதற்கான களமாகிட, ஒரு வழியாய் மொழிபெயர்ப்புக்கென இந்த ஆல்பம் கைக்கு வந்து சேர்ந்தது ! 78 பக்கங்கள் ; கிட்டத்தட்ட நமது ரெகுலர் இதழ்களின் ஒண்ணேமுக்கால் பங்கு நீளம் கொண்டது ! And ஜாலியாய் 2 பெருசுகளோடு வன்மேற்கில் கதை துவங்க, 'அட்றா சக்கை' என்றபடிக்கே வேகமெடுத்தேன் ! 'இப்போதெல்லாம் கிழடுகள் கதைமாந்தர்களானால் நம்மையும் அறியாது குஷி கிளம்பிடுதே - ஒருக்கால் நாமளுமே கிழடாகி வர்றோமோ ?' என்று உள்ளுக்குள் எழுந்த கேள்வியை மண்டையோடு தட்டி அமுக்கி விட்டு வேலையைத் தொடர்ந்தேன் ! டெட்வுட் டிக் அளவுக்கெல்லாம் இல்லாங்காட்டியும், இங்கே நாகரீகமே எட்டிப் பார்த்திரா raw ஆன மனிதர்களே உலா வருகிறார்கள் என்பதும், செம லோக்கலான பேச்சு நடையுமே புழக்கத்தில் இருக்க வேண்டியதன் அவசியம் புரிந்தது ! And ரொம்பச் சீக்கிரமே புரிந்தது, இதுவொரு கதை என்பதைக் காட்டிலும் "ஒரு பயணம்" என்பதே மெய்யாகிடும் என்பது ! நம்ம Texkit போடும் பின்னூட்டங்களுக்குச் சவால் விடும் சுருக்கத்தில் இந்தக் கதையினைச் சொல்லி விடலாம் ! ஆனால் அதனைச் சொல்லியுள்ள பாணியும் சரி, செம சுவாரஸ்யமாய் இணைத்துள்ளதொரு இணைகோட்டுப் பயணியும் சரி, இந்த ஆல்பத்தை ரொம்பவே ரசிக்கும் விதமானதாக்கி இருந்தது ! நிறைய பக்கங்களில் வசனங்களே இல்லாமல் ஓவியர் நம்மோடு பேசியிருப்பதையும் பார்த்த போது - "ஹை...இந்தப் பக்கங்களுக்குலாம் பேனா புடிக்க தேவையே இல்லியே !!" என்று உள்ளுக்குள் குஷியானது ! ஆனால், நிறையவே அழுத்தமான இடங்கள் இருக்க, நிறையவே வேலை வாங்கிடவும் செய்தது ! எல்லாம் முடிந்து, அச்சுக்குச் சென்று, மாதிரிகள் வந்த போது தான் உள்ளுக்குள் 'ஜிவ்வென்று' பரபரக்கத் தோன்றியது !! வேறொன்றுமில்லை - நான் எழுதுவதோ black & white பிரிண்ட்களிலிருந்து ; so டின்டின், லக்கி லூக் போல நான் ஏற்கனவே பார்த்திருக்கும் இதழ்களாய் இருந்தால் தவிர, புக் அச்சாகும் வரைக்கும் கலரில் அதன் பரிமாணங்களை நான் பெரிதாய்ப் பார்த்திருக்க மாட்டேன் ! நான் வேக வேகமாய்த் தாண்டிச் சென்றிருந்த வசனங்களில்லா முழுப்பக்க சித்திரங்களெல்லாம் கலரில் சும்மா தெறிக்க விட்டுக் கொண்டிருந்தன !! Phewwwwww !!! இங்கே கதையே தேவை லேது ; இந்தச் சித்திரங்களை ரசித்தாலே வயிறு நிரம்பி விடும் போல் தோன்றியது ! அந்த நொடியில் எழுந்தது தான், 'இப்போவே இந்த புக் நண்பர்கள் கைக்குச் போய்ச் சேர்ந்திடாதா ?" என்ற பேரவா !! So இந்த ஆல்பத்துக்கும், பணியாற்றிய எங்களுக்கும் நீங்கள் எத்தினி மார்க் போட்டாலும் சரி, போடாமல் மூ.ச.பக்கமா பழகிப் பார்க்க இட்டுப் போனாலும் சரி, நிச்சயமாய் 'ஈஈஈஈ' என்ற இளிப்பு மட்டும் முகத்திலிருந்து அகன்றிடாது - becos இவை போலான சித்திர விருந்துகள் தினமும் வாய்ப்பதே இல்லை ! And அவற்றை இது போன்ற தருணங்களில் களமிறக்கிடும் 'த்ரில்' அறிவார்ந்த சில ஆர்வலர்கள் காதில் புகை விட்டு கழுவி ஊற்றினாலும் கூட மட்டுப்படவே செய்யாது ! இதோ பாருங்களேன் folks : 






  

அந்த முதல் சித்திரத்தைத் தான் பாருங்களேன் !! கண்ணில் பார்க்கவே செய்திரா ஒரு காலகட்டத்தினை இத்தனை உயிர்ப்போடு வரைவதென்பது இந்த AI காலத்திலுமே பிரமிக்கச் செய்கிறது ! And அந்தக் கலரிங் ஆர்ட்டிஸ்ட் நெடுக கதையின் மூடுக்கேற்ப அடர் வர்ணங்களைக் கொண்டு விளையாடியுள்ளார் ! நாளையே உங்களின் பார்சல்கள் கைக்கு கிட்டிடும் பட்சத்தில் - பன்னுக்குத் தரும் கவனிப்பினை "து.வ.ஆ."க்குமே தந்திட்டால் you won't be disappointed guys !!

அப்புறம் க்ளாஸிக் சூப்பர்ஸ்டார்ஸ் ஸ்பெஷலில் ஒரு சின்ன மாற்றம் கீது folks ; அதுக்கோசரம் முன்கூட்டிய sorry ! நம்ம ஸ்பைடர் சாரும், ஆர்ச்சீ சாரும் மோதும் சாகசத்தைக் கண்டு பரவசமாகி, கதையினை ரெடியும் செய்து விட்டோம் ! ஆனால் எடிட்டிங் செய்திடும் போது தான் புரிந்தது - இந்த சாகசம் தொடரின் அத்தியாயம் # 2 என்பது ! So வேக வேகமாய் முதல் பாகத்தையும் வரவழைத்து, ராத்திரியோடு, ராத்திரியாய் மொழிபெயர்ப்பினையும் செய்து முடித்து, பிரிண்டும் செய்தாச்சு ! Surprise ...surprise ....இங்கே நம்ம ஸ்பைடரோடு சலம்புவது சாட்சாத் இரும்புக்கை மாயாவி தான் !! And கூர்மண்டையர் நயமாய் அல்வா தந்திடுகிறார் - மிஸ்டர் கிராண்டேலுக்கு !!   

And இன்னொரு இறுதி நிமிட சமாச்சாரமுமே - இம்முறை தவிர்க்க இயலா விஷயமாய் ! பைண்டிங்கில் இறுதி நிமிடத்தில் இயந்திரப் பழுது நேர்ந்திட்டத்தைத் தொடர்ந்து "தண்டர் in ஆப்ரிக்கா" இதழ் சுணங்கி விட்டது ! பழுது நீக்கி, அதையும் முடித்து வாங்கிடுவதானால் இன்னும் 2 அல்லது 3 நாட்களாகிடக்கூடும் என்றொரு சூழ்நிலை ! இவை லேட்டாகிக் கொண்டே போனால் அப்புறம் ஜூன் மாதத்து ரெகுலர் இதழ்களும் சுணங்கிடக்கூடும் என்பதால் இன்றைக்கு 7 புக்ஸ் மட்டுமே அனுப்பியுள்ளோம் ! விடுபட்டுள்ள அந்த ஒற்றை இதழானது ஜூன் சந்தா டப்பிகளோடு பயணமாகும் & சந்தாவில் அல்லாதோருக்கு, தனியாக அனுப்பிடுவோம் ! Very Sorry guys ; தவிர்க்க இயலா இடர் !! 

அப்புறம் புறப்படும் முன்பாக ஒரு குட்டியான ஜாலி சேதி !! பிரமிக்கச் செய்யும் 2 ஒன்-ஷாட் ஆல்பங்களுக்கான உரிமைகள் அடுத்த வாரத்தில் நம்மதாகிடும் என்று எதிர்பார்க்கிறேன் ! தெய்வமே.....அவற்றை உள்ளே நுழைக்க கூடுதல் ஸ்லாட்ஸ் தேவை ; அதற்கென வருஷத்தில் ஒரு ரெண்டோ-மூணோ மாசங்களைக் கூட்டிட மட்டும் முடிந்தால் சும்மா 'ஜிலோ'வென்று இருக்குமே !! புனித மனிடோ ! 

ரைட்டு..நான் நடையைக் கட்டுகிறேன் guys - க்யூபாவில் நம்ம XIII கூட ரகளை செய்திட !! And ஆத்தீ.....நம்மவருக்கென படைப்பாளிகள் திட்டமிட்டிருக்கும் க்ளைமாக்ஸ் மட்டும் எனது யூகத்தின்படி இருக்குமேயானால், பிதாமகர் ஷான் வான் ஹாம் கூட மெய்சிலிர்த்துப் போய்விடுவார் ! அடுத்த ஆல்பத்தோடு முடிவுக்கு வருகிறதாம் இந்த இரண்டாம் சுற்று - பார்க்கணும் இந்த நவம்பரில் அந்த க்ளைமாக்ஸ் இதழை !! 

Bye guys....see you around !! அப்புறம் இதையே இந்த வாரயிறுதிக்கான பதிவாய்ப் பாவித்திடக் கோருகிறேன் ! ஆயிரமாவது பதிவின் வருகையை இன்னும் 2 வரங்களுக்காச்சும் நீட்டிக்கணும் ஷாமியோவ் !!  Have a beautiful weekend !!

Wednesday, May 15, 2024

ராயப்பா....நான் - நான் தானா ?

 நண்பர்களே,

வணக்கம். That "டேய் ராயப்பா....நான் நான் தானா ? நீ நீ தானா ?" #moment !! டீக்கடையில் 200 பின்னூட்டங்கள் பதிவாவதே பெரும்பாடாகிக் கிடக்கும் வேளையில் 413 பின்னூட்டங்களா ? ஆத்தீ !! தானைத் தலைவர் ஸ்பைடரின் மகிமையே மகிமை !! So இந்த குஷியான நொடியினில் ஆன்லைன் மேளா ஸ்பெஷல் pack இதழ்கள் வாங்கியுள்ள நண்பர்கள் அனைவருக்கும் ஒரு ரவுண்டு பன் பார்சல்லல்லல் போட்டுப்புடலாமா ? வருண பகவான் இந்த வாரம் முழுக்க கருணையும், மழையும் பொழிந்து தள்ளியிருக்க, ஹார்ட்கவர் பைண்டிங் டெக்ஸ் காய்ந்திட சண்டித்தனம் பண்ணி வருகிறார் ! So கொஞ்சமே கொஞ்சமாய் காய்ந்திட அவகாசம் தந்து விட்டு வெள்ளியன்று டெஸ்பாட்ச் செய்திடுவதாக இப்போதைக்குத் திட்டம் - வருண பகவான் willing !! சற்றே  பொறுமை ப்ளீஸ் guys !!

ரைட்டு, இடைப்பட்ட இந்தப் பதிவினில் என்ன எழுதலாமென்று யோசித்த போது தான் நேற்றைக்கு வந்ததொரு மின்னஞ்சல் நினைவுக்கு வந்தது ! அதுவே ஒரு சுவாரஸ்ய மினி பதிவுக்கு ஓ.கே. ஆகிடுமென்று பட்டது ! வேறொன்றுமில்லை folks - நம்ம ஜெரெமியா தொடரின் ஆல்பம் # 41 ரெடியாகியுள்ளதாம் ! அதனைத் தொடர்ந்திடும் ஆர்வமுள்ளதா ? என்று கேட்டிருந்தனர் ! தவிர, அமெரிக்காவில் டி.வி.தொடராக உருவான ஜெரெமியா இப்போது அமேசான் ப்ரைமிலும் பார்க்கக் கிடைக்கிறதாம் ! Luke Perry என்ற அமெரிக்க ஹீரோ நடித்திருக்கிறாராம் ! 

நம் மத்தியில் செமத்தியான இருதரப்பட்ட கருத்துக்களை உருவாக்கிய தொடரிது என்பதை நாம் மறந்திருக்க இயலாது ! "சூப்பர்" என்று சிலாகித்தோர் கணிசம் ; "பதம் தப்பிய மைசூர்பாகு" என்று சாத்தியோரும் கணிசம் ! So இரண்டே தொகுப்புகளுக்குப் பின்பாய், சகல துவாரங்களிலும் பெவிகாலைப் பூசிவிட்டு அமர்ந்து விட்டோம் ! Absence makes the heart grow fonder என்பார்கள்......பிரிவு நேசத்தை மறுபடியும் மலரச் செய்யும் ஆற்றல் கொண்டதென்று ! அப்பிடிக்கிப்பிடி ஒரு நேசம்...ஒரு லவ்ஸ்...பிதாமகர்  ஹெர்மனின் இந்த apocalypse நாயகர்களின் தொடர் மீது இந்த ஏழெட்டு ஆண்டுகளின் பிரிவினில் உங்களிடையே எழுந்துள்ளதா ? என்றறிய ஆர்வம் ! What say people ?  

ரைட்டு....கேள்வியைக் கேட்டாச்சு ! அதன் நீட்சியாய் ஒரு காமிக்ஸ் தொடர் வெள்ளித்திரைக்கு புரமோஷன் காண்பது பற்றி லேசாக சிந்தித்துக் கொண்டிருந்தேன் ! இங்கே நம்மூரில் கூட, ஆறு மாசத்துக்கொருவாட்டி "இரும்புக்கை மாயாவி"ன்னு நானொரு கதை எழுதியிருக்கேன் ; படமாக்கப் போறேன் !" என்று கோலிவுட் செய்திகளைக் கிளப்பிக் கொண்டிருக்கும் சூழலில், மெய்யாலுமே வெள்ளித்திரைக்குச் சென்ற நம்ம ஈரோ / ஈரோயினி பற்றி லேசாக கூகுள் செய்த போது கிட்டிய தகவல்கள் இவை !!

1966-ல் மோனிகா விட்டி என்ற நாயகி நமது ஆதர்ஷ இளவரசியாய் நடித்திருக்கும் படமொன்று வெளியாகியுள்ளது போலும் ! இதோ - இந்த அம்மணி தான் அவர் ! 


ஓரளவுக்கு நாமெல்லாம் மனதில் உருவகப்படுத்தி வைத்திருக்கும் மாடஸ்டிக்கு இவர் ஒத்துப் போகிறார் என்று எனக்குத் தோன்றியது ! இன்ன பிற மருத்துவ வல்லுனர்களும், கலா ரசிகர்களும் தான் தீர்ப்பைச் சொல்லிட வேண்டும் !

நமது 'தல' 1985-ல் வெள்ளித்திரைக்கு சென்று, ரொம்பவே சுமாரானதொரு படத்தினில் இடம்பிடித்திருக்கிறார் போலும் ! TEX & The Lord of The Deep என்பதே அந்தப் படம் & இதோ - இந்த போட்டோவிலுள்ள இத்தாலிய நடிகரான கிலியானோ ஜெம்மா தான் டெக்ஸாக ஆக்ட் கொடுத்துள்ளார் !!  😕😕


இன்னொரு ஆதர்ஷ கௌபாய் நாயகரான லுக்கி லூக் வெவ்வேறு தருணங்களில் வெள்ளித்திரையில் வலம் வந்துள்ளார் போலும் - but அவை எதுவும் பெருசாய் சோபித்த மாதிரித் தெரியக் காணோம் ! இதோ - 2009-ல் லக்கி லூக்காக வேஷம் கட்டிய டீன் டுஜார்டின் :


Of course - ஜேம்ஸ் பாண்ட் எண்ணற்ற திரைப்படங்களில், எண்ணற்ற அதிரடி ஹீரோக்களின் அவதார்களில் களம் கண்டுள்ளார் ; so அவரைப் பற்றி பெருசாய் பேசிட ஏதுமிராது ! நவயுக ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஸ்டைலாக காமிக்ஸ்களில் கலக்கிய நமது லார்கோ 2008-ல் வெள்ளித்திரையில் அறிமுகமாகி, அப்பாலிக்கா 2011-ன் இறுதியில் இரண்டாவதாயொரு படத்திலும் ரகளை செய்திருந்தார் ! இதோ - அதன் நாயகர் Tomer Sisley ! (இவரது பெயரை தமிழில் டைப்படித்தால் திட்டுறா மெரி அமையுதுடா சாமி !!)  


And 2008-ல் பிரான்ஸ்-கனடா கூட்டணியில் உருவான XIII - The Conspiracy - இரு பாக டி-வி. படத்தில் நம்ம ஆதர்ஷ ஞாபக மறதிப் பார்ட்டியாக நடித்திருந்த ஹீரோ ஸ்டெபென் டொர்ஃப் இவர் தான் !   


இவர்கள் தவிர்த்து, நமது நாயகர்களில் யாரேனும் வெள்ளித்திரையில் காலூன்றியுள்ளனரா ? இருப்பின், சொல்லுங்களேன் folks !! அப்புறம் ஒரு ஜாலியான உட்டாலக்கடி வினாவும் : 

இவையெல்லாம் அசலூர்களில், அசல்நாட்டு நடிக / நடிகையரின் கைவண்ணங்களில் உருவானவை !! நம்ம ஊரில், நம்ம கோலிவுட்டில், நம்ம இளவரசி மாடஸ்டி movie ஒன்றினை இங்குள்ள டாக்டர்ஸ் + தொழிலதிபர்ஸின் தயாரிப்பில் உருவாக்குகிறோமெனில் - மாடஸ்டி ரோலுக்கு எந்த நடிகை பொருத்தமாக இருப்பார் ? கார்வின் வேஷத்துக்கு யார் பொருந்திப் போவார் ? நானெல்லாம் யோசித்தால் பரவை முனியம்மாவும், காந்திமதியும் தான் நினைவுக்கு வருகிறார்கள் ! இங்குள்ள 'யூத்ஸ்' ரோசனை பண்ணிச் சொல்லுங்களேன் ! (ஐயா இரும்பாரே - இத படிச்சிப்புட்டு 'மெய்யாலுமே மாடஸ்டி படமெடுக்கப் போறாக'ன்னு பீதியைக் கிளப்பிப்புடாதீங்க ! )

Bye all...see you around ! Have a lovely week ! 

P.S : ராஜசேகர் சார் : ஸ்பைடர் கேப்ஷன் போட்டியின் முடிவுகளை நாளை அறிவிக்கலாம் ! பரிசீலனைகளை வேகமாய் ஆரம்பியுங்களேன் சார் ! 

Saturday, May 11, 2024

மேஜர் சுந்தர்ராஜன் ஹியர் !!

நண்பர்களே,

வணக்கம். ஒரு "அப்பாடா" பதிவு..😃!! நீண்ட நாட்களுக்கு பிறகு மண்ணை குளிர்ச்சியாக்கப் பெய்த மழையைபோல மனதை நிறைவாக்கி விற்பனையில் திக்குமுக்காட வைத்து ஆன்லைன் புத்தக மேளாவை "கிராண்ட் சக்சஸ்" ஆக்கிய நண்பர்களுக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏 ஆந்தை விழியனின் விழிகள் தெறித்து விழும் அளவிற்கு புக்கிங்குகள், விற்பனைகள்..👍நமது சின்னஞ்சிறு டீமின் மெம்பர்கள் இப்போதுதான் கடைசி புத்தக பார்சலை அனுப்பிவிட்டு "அப்பாடா" என்று உட்கார்ந்தார்கள்.. ! (நன்னி ஜம்பிங் பேரவை தலைவரே !! ஏதேனும் ஒரு பொழுது போகாத நாளில் சும்மானாச்சும் ஒரு தபா, நம்ம வாராந்திரப் பதிவை ஆளாளுக்கு எழுதினால் எப்புடி இருக்குமென்று பார்க்க வேணும் போலும் !!)

Oh yes, இரண்டே இரண்டு ஆர்டர் நீங்கலாய் பாக்கி சகலத்தையும் நம்மாட்கள் அனுப்பி முடித்து விட்டார்கள் ! And  of course - அந்தப் புது இதழ்களை அடுத்த வாரத்தினில் அனுப்பிட வேண்டும் ! இந்த வாரத்தின் திங்களும், புதனும் கோவில் திருவிழாவினையொட்டி உள்ளூர் விடுமுறைகள் என்பதால் டெஸ்பாட்ச் கொஞ்சம் தேங்கி விட்டது ! இல்லாவிடினுமே இம்முறை வந்திருந்த ஆர்டர்களுக்கும் சரி, அந்த FCBD புக்குகளுக்கும் சரி, இரண்டு கிட்டங்கிகளிலும் உருட்டி புக்ஸை எடுக்க வேண்டியிருந்ததால் அநியாயத்துக்கு நேரத்தை விழுங்கியதை மறுக்க இயலாது ! பத்தாண்டுகளுக்கு முன்பான இதழ்களை, படர்ந்து கிடந்த தூசுப் படலங்களைத் தட்டிய கையோடு சேகரித்துக் கொண்டு வருவதே ஒரு பெரும் பிரயத்தனமாகிப் போனது !! Anyways - கண்ணாலம் ஆன பிற்பாடு தாய்வீட்டை விட்டுப் பிரியத்  தடுமாறும் பாசமான புள்ளீங்களை ஒரு பெருமூச்சோடு வழியனுப்புவது போல, நம்மோடே இத்தினி காலமாய் ஐக்கியமாகியிருந்த சில பல புக்ஸ்களுக்கு பிரியாவிடை தந்து அனுப்பி வைத்திருக்கிறோம் !  And பழைய புக்ஸை இந்தத் தருணத்தில் பார்த்த போது பற்பல மலரும் நினைவுகளும் நிழலாடத் தவறவில்லை ! "ஹைய்யோ ...இந்த புக்குக்குத் தானே புளியமரத்திலே கட்டி வைச்சு கும்முனாங்க !"......"ஆத்தீ....இந்த புக்கோட தானே மொதவாட்டி மூத்திர சந்துப் பயணம் !!" ......"அச்சோ....இந்த புக்குக்கோசரம் முட்டுச் சந்திலே மொத்து வாங்கி எம்புட்டு நாளாச்சு ?!!" என்ற ரேஞ்சில் அந்தக்காலத்து ஈஸ்ட்மேன் கலரில் flashbacks ஜிவ்வென்று ஓட்டமெடுத்தன !! In fact - வாய்ப்பு அமையும் வேளையில் - "இதே நாள் - இதே மாசம் - பத்தாண்டுகளுக்கு முன்னே" என்று திட்டமிட்டு, அந்தத் தருணத்தின் பதிவினை மறுக்கா இங்கே publish பண்ணி, அதனோடு இப்போது ஒருமுறை fresh-ஆகக் கும்மியடித்துப் பார்க்கலாமோ ? என்று கூடத் தோன்றுகிறது ! ஒவ்வொன்றிலும் தான் எத்தனை நவரசங்கள் ? What say people ?

இங்கே உள்ளூரில் விடுமுறை என்றாக, சொந்த ஜோலியாய் நானும் சில நாட்களுக்கு சென்னைக்குப் பயணமாக, ஸ்பெஷல் இதழ்களின் இறுதிக் கட்டப் பணிகளுக்குள் இன்று முதலே மறுக்கா தலை நுழைக்க முடிந்துள்ளது ! ரைட்டு....பதிவைப் போட்டுப்புட்டு தொடரலாமென்று இங்கே ஆஜராகி, உங்களின் last batch of comments-களுக்குள் புகுந்தால், திடீரென்று "தானைத் தலைவர் ஸ்பைடருக்கொரு ஸ்பெஷல் !!" என்ற கோரிக்கை எழுந்திருப்பதைப் பார்க்க முடிந்தது !! "ஹை..இதென்ன புது ஐட்டமா இருக்கே ?" என்ற கேள்வியோடு முகத்திலொரு புன்னகை விரிந்ததை மறுக்க மாட்டேன் ! புதுசாய் நமக்கு வேலை வைக்காமல், அப்டிக்கா சூடு பண்ணி, அப்டியே பரிமாறக்கூடிய மறுபதிப்புப் பதார்த்தங்களென்றால் எனக்கு எப்போதுமே ஓ.கே. தான் ; ஆனால் மெய்யாலுமே இவற்றை நாம் இன்று ரசிக்கும் வாய்ப்புகள் எத்தனை சதவிகிதம் ? என்ற கேள்வியை என்னை நானே கேட்டுக் கொண்ட போது கிடைத்த பதிலில் அத்தனை வலு இருந்திருக்கவில்லை! 

In fact ஐம்பது ரூபாய்க்கு க்ளாஸிக் ஸ்பைடர் கதைகள் மறுபதிப்பான 2015 / 2016 ஆண்டுகளில் நம்ம கூர்மண்டையரை வாருவதே நிறைய பேருக்கு மாதாந்திர ஆதர்ஷப் பொழுதுபோக்காக இருந்து வந்தது ! ஒரு கட்டத்தில் எனக்கே போதுமென்று பட்டதாலே, கடைசி batch ஸ்பைடர் இதழ்களை அன்றைக்கு மறுபதிப்பிடவில்லை ! பழசோ, புதுசோ பொதுவாக நமது இதழ்களை வாங்கிடும் அந்த core குரூப் நீங்கள் தான் என்பதில் எனக்குச் சந்தேகங்களில்லை ! So உங்கள் விருப்பங்களுக்கேற்ப ஒரு க்ளாஸிக் ஸ்பெஷலை ரெடி பண்ண முயற்சிக்கலாம் தான் ; ஆனால் எனது நெருடலோ - இவற்றை வாங்கிடக்கூடிய புது வாசகர்களை எண்ணியே ! Of course -மஞ்சக் கொடிய புடிச்சுக்கிட்டு, கூட்டம் கூட்டமால்லாம் புதிய வாசகர்கள் படையெடுக்கப் போவதில்லை தான் ; but still புத்தக விழாக்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது newcomers நமது இதழ்களை அள்ளிச் செல்கின்றனர் என்பது நிஜம் ! அந்தப் புதியவர்கள், அந்த manga தலைமுறை,  நம்ம இஸ்பைடர் சாகசங்களை இன்றைக்குப் படிக்கும் பட்சத்தில், அவர்களது ரியாக்ஷன்ஸ் என்னவாக இருக்குமோ ? என்ற குழப்பம் தான் எனக்கு ! இந்த ஜனவரிக்கு சென்னைக்கென நாம் மறுபதிப்பு செய்த லக்கி லூக் இதழ்களெல்லாம் தெறி ஹிட்ஸ் ! வசனங்களில் நிறைய tweak செய்திருந்தோம் & அந்தக் கதைகள் சகலமுமே செமத்தியான evergreen hits ! So அவற்றை நாம் (சு)வாசித்தாலும் சரி, புதியவர்கள் வாசித்தாலும் சரி, வண்டி ஓடி விடுகிறது ! Oh yes, ஸ்பைடரின் சூப்பர்-ஹீரோ சாகசங்கள் - அமெரிக்காவில் விண்ணைத் தொடும் விற்பனை காணும் அந்த மனிதன்-இந்த மனிதன் சாகசங்களுக்குச் சளைத்தவைகளே அல்ல தான் & நம்மை தாங்கிப் பிடித்த ஜாம்பவானும் இவரே ! So அவரை மட்டம் தட்டும் எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது ! But மாறியுள்ள காலங்களில் / ரசனைகளில் இவருக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்த curiosity என்னுள் நிறைய உள்ளது !! கொஞ்சம் பேசுங்களேன் guys இது பற்றி ?

ஒற்றை இதழ், இரண்டு இதழ்களென்றால் கூடப் பரவாயில்லை ; ஆனால் ஒரு முழுநீளத் தொகுப்பென்பது totally a different beast !! அதனை சமாளித்து விடலாமென்று மெய்யாலுமே நினைக்கிறீர்களா folks ? இதோ - ஆகஸ்டில் நம்ம தானைத் தலைவர் மெகா சைசில், கலரில், "விண்வெளிப் பிசாசு" உடனான மோதலில் களமிறங்கிடவுள்ளார் - நம்ம கரூர் ஸ்பைடர்மன்றத் தலைவரின் மொழிபெயர்ப்புடன் ! விண்வெளிப் பிசாசை ரசிச்சுக்கிட்ட பிற்பாடு, இந்த ஸ்பைடர் டைஜெஸ்ட்டை, டைஜஸ்ட் செய்வது பற்றியொரு தீர்மானம் பண்ணுவோமே guys ? What say ? 

And ஏற்கனவே ஏதோவொரு சமயத்தில் பிராமிஸ் செய்திருந்த "மாண்ட்ரேக் ஸ்பெஷல்-2" பெண்டிங் உள்ளது ! அவரைக் கரைசேர்க்கும் பொருட்டு, இம்முறை டக்கரான கதைகளையாய்த் தேர்வு செய்து, கொஞ்சம் கொஞ்சமாய் ரெடி செய்து வருகிறோம் ! So அவர் சூட்டவிருக்கும் புய்ப்பங்களோடு, ஸ்பைடரும் ஒரு கொத்தைச் சூட்டச் செய்தால், ஈரோட்டுக்கு வரும் போது அம்புட்டு பேரும் ஊட்டியின் மலர்க்கண்காட்சிகளிலிருந்து ஓடியாந்தோர் போலிருப்பது உறுதி ! பரால்லீங்களா ?   

Moving on, வருஷத்தில் ஒரு பாதியினைக் கடக்கும் தருவாயினை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் எனும் போது - 40-வது லயன் ஆண்டுமலர் ;  ஈரோடு ; தீபாவளி ; கிறிஸ்துமஸ் - என்பனவற்றையெல்லாம் தாண்டி, அடுத்த ஆண்டினுள் பார்வைகளை ஓட விடும் சபலங்கள் மேலோங்குகின்றன ! And காத்துள்ள 2025-ல் முத்துவின் இதழ் # 500 வெயிட்டிங் ! In fact முத்துவின் ஆண்டுமலரே இதழ் நம்பர் ஐநூறாகவும் இருந்திடவுள்ளது ! So அதற்கு என்ன திட்டமிடுவது ? என்ற கேள்வி தலைக்குள் இப்போதே உருட்டி வருகிறது ! 

அடுத்தாண்டுக்கென என்னிடமுள்ள அடுத்த கேள்வி - பொதுவானது !! இது வரையிலும் குண்டு புக்ஸ் ; புஷ்டியான புக்ஸ் - என்று டிராவல் செய்திருந்த நாம், 2024-க்கென crisp வாசிப்புகள், முன்செல்லும் பாதையென்று தீர்மானித்திருந்தோம் ! And அந்த முனைப்போடு நடப்பாண்டின் அட்டவணையினையும் அமைத்திருந்தோம் ! இதோ - முதல் 5 மாதங்கள் ஓட்டமெடுத்திருக்கும் நிலையில், எனது கேள்விகள் இவையே :

1.இந்த வாசிப்பு அனுபவம் எவ்விதம் ரசிக்கிறதோ மக்கா ? 'எடுத்தோம்-படிச்சோம்' என்ற ஸ்டைல் சுகப்படுகிறதா ? இதோ - இந்த மே மாதம் கூட ஒரு க்ளாஸிக் உதாரணம் ! போனவாட்டி, இதே டேங்கோவையும், இதே சிக்பில்லையும், துணைக்கு ரூபின் அம்மணியையும் கூட்டிக் கொண்டு, கூட்டணி இதழாய் வெளியிட்டு, அதே மாதத்தில் மேற்கொண்டும் இரண்டு இதழ்களை வெளியிட்டிருந்தோம் ! ஆனால் இம்முறை, ஒவ்வொன்றும் தனித்தனியாய், நறுக் என்ற crisp பாணியில் !! இது ஓ.கே. என்பீர்களா ? அல்லது 'என்ன இருந்தாலும் குண்டூஸ் மெரி வருமா ? என்பீர்களா ? 

2.இந்த ஆண்டினில் இதுவரைக்கும் பதினைஞ்சோ, பதினாறோ இதழ்கள் வெளியாகியிருக்கும் என்று நினைக்கிறேன் ! அவற்றுள் நீங்கள் வாசித்தது  எத்தனையை ? என்று சொல்லுங்களேன் ப்ளீஸ் ? 

3.லார்கோ ; டின்டின் ; பெளன்சர் ; டேங்கோ ; ராபின் ; டெட்வுட் டிக் - என crisp reading களங்களிலும் ஸ்கோர் செய்துள்ள புக்ஸ் இருந்துள்ளன இம்முறை என்ற எனது இந்த அனுமானம் சரிதானுங்களா ? இல்லாங்காட்டி, நான்பாட்டுக்கு கனா கண்டுக்கினு இருக்கேனுங்களா ?

உங்களின் மெய்யான பதில்கள், அடுத்த ஆண்டிற்கென ஒரு blueprint போடும் முதற்கட்டப் பணிகளுக்கு உரம் சேர்க்கும் என்பதால், தவறாது பதில்ஸ் ப்ளீஸ் ? இதோ - இந்தப் பதிவில் நான் தருமி அவதாரில் கேட்டுள்ள கேள்விகளின் தொகுப்பு - பதிவுகளும் crisp ஆக இருந்தால் தேவலாமென்று எண்ணிடும் நண்பர்களுக்கோசரம் !! So மேஜர் சுந்தர்ராஜனாய் ஒருக்கா performance பண்ணிய கையோடு நான் கிளம்புகிறேன் !! கபாலத்துக்கு மேல் பணிகள் காத்திருப்பதால் ஓட வேண்டுமுங்கோ !! Bye all....see you around ! Have a bright Sunday !!

QUESTIONS AT A GLANCE :

1.ஒரு பொழுது போகாத நாளில் சும்மானாச்சும் ஒரு தபா, நம்ம வாராந்திரப் பதிவை என் மொக்கை பாணியில் ஆளாளுக்கு எழுதினால் எப்புடி இருக்குமென்று பார்ப்போமா ? 

2.வாய்ப்பு அமையும் வேளையில் - "இதே நாள் - இதே மாசம் - பத்தாண்டுகளுக்கு முன்னே" என்று திட்டமிட்டு, அந்தத் தருணத்தின் பதிவினை மறுக்கா இங்கே publish பண்ணி, அதனோடு இப்போது ஒருமுறை fresh-ஆகக் கும்மியடித்துப் பார்க்கலாமா ?

3.விண்வெளிப் பிசாசை ரசிச்சுக்கிட்ட பிற்பாடு, இந்த ஸ்பைடர் டைஜெஸ்ட்டை, டைஜஸ்ட் செய்வது பற்றியொரு தீர்மானம் பண்ணுவோமா ?

4.முத்து காமிக்சின் இதழ் நம்பர் 500-க்கு உங்கள் பரிந்துரை என்னவாக இருக்குமோ ? 

5.நடப்பாண்டின் crisp reading பாணி உங்களுக்கு எப்படிப்படுகிறது ? ஓ.கே.வா ? Not ஓ.கே.வா ?

6.நடப்பாண்டினில் இது வரை வெளியாகியிருக்கும் இதழ்களுள் நீங்கள் வாசித்தது எத்தனையோ ?

7.லார்கோ ; டின்டின் ; பெளன்சர் ; டேங்கோ ; ராபின் ; டெட்வுட் டிக் - என crisp reading களங்களிலும் ஸ்கோர் செய்துள்ள புக்ஸ் இம்முறை இருந்துள்ளன என்ற எனது அனுமானம் சரிதானுங்களா ?

P.S : பன் போட்டியில் வென்று, நமது இஸ்திரியில் பெயர் பொறித்திருக்கும் நண்பர், தனது அட்ரஸ் & போன் நம்பரை நமக்கு மின்னஞ்சலில் அனுப்பிடக் கோருகிறேன் ப்ளீஸ் ! ஒரு வேளை பன் பார்சலை இரக்க சிந்தனை கொண்ட கிளவரசருக்கு, ச்சீ..சீ.....இளவரசருக்கு அனுப்பிட எண்ணினாலும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் சாத்தியமே !! 

And இதோ - ரவுண்டு பன் படலத்துக்குப் பிற்பாடாக ஒரு ஸ்பாஞ் கேக் போட்டி !! இதோ - ஆழ்ந்த சிந்தனையில் லயித்துக் கிடக்கும் நம்ம வலைமன்னருக்குப் பொருத்தமான மைண்ட்வாய்ஸ் ஒன்றை எழுதி அனுப்புவோருக்கு ஸ்பா.கே. 4 பார்சல்லல் !! And இம்முறை நடுவராக இருந்து தேர்வு செய்திடவுள்ளது - நம்ம கரூர் ராஜசேகரன் சார் ! புலவர்களே களமிறங்குங்கள் !






Sunday, May 05, 2024

சந்தோஷம் - ஒரு தொடர்கதை !

 நண்பர்களே,

வணக்கம். Phewww !! அடை மழை பெய்து ஓய்ந்த மாதிரி ஒரு பீலிங் - நமது இரு தின ஆன்லைன் மேளாவின் நிறைவினைத் தொடர்ந்து !! 

ரெண்டு நாட்களுமே நமது ஆபீஸ் போன்களின் கீ-பேட்களும் சரி, கால்குலேட்டர்களின் பட்டன்களும் சரி, சட்னியாகாத குறை தான் ! இதற்கு முன்பான விழாக்களின் போது, போன்கால் பேசியே நாக்கு வறண்டு போயிருந்த நம்மாட்கள், இம்முறை கூலாக டைப் பண்ணியே 2 தினங்களின் ஆர்டர் பிரவாகங்களைச் சமாளித்து விட்டுள்ளனர் என்று தான் எட்ட இருந்து பராக்குப் பார்க்கும் படலத்தின் போது நினைத்திருந்தேன் ! ஆனால் கொஞ்ச நேரம் கிட்டக்க இருந்து கவனித்த போது தான், எந்த புக் எந்த டிஸ்கவுண்ட் விகிதத்தில் ? மொத்த லிஸ்டின் கிரயமென்ன ? யார்-யார் எந்த free books தேர்வு செய்துள்ளனர் ? And அவற்றை எங்கே அனுப்புவது ? அப்புறம் புது இதழ்களுக்கான ஆர்டர்கள் என்ன ? என்ற விபரங்களை பதிவு செய்வதெல்லாம் மொத்தமாய் குறுக்கைக் கழற்றிடும் பணியாகிப் போனதை புரிந்து கொள்ள முடிந்தது ! இந்த ரகரகமான டிஸ்கவுண்ட்களும் சரி, FCBD விலையில்லா இதழ்களின் திட்டமிடலும் சரி, 8 புது ரிலீஸ்களின் அறிவிப்பும் சரி, கணிசமாகவே டெஸ்பாட்ச்சில் கசரத் வாங்குமென்பதை எதிர்பார்த்திருந்தேன் தான் ; ஆனால் அதன் முழுப் பரிமாணத்தையும் 2 நாட்களாய்ப் பார்த்த போது, இருக்கும் சொற்ப (wo)man பவரைக் கொண்டு, கொஞ்சம் டூ மச் ; த்ரீ மச்சாகத் தான் இழுத்து விட்டுப்புட்டோமோ ?? என்று தோன்றியது ! But புண்ணியத்துக்கு 8 புது ரிலீஸ்களில் யாருமே, "எனக்கு இது வேணும் ; அது வேணாம் !" என்ற ரீதியில் pick & choose பண்ணியிருக்காது மொத்தமாகவே செலெக்ட் செய்து விட்டதால் அதன் பொருட்டு நோவுகளின்றித் தப்பித்து விட்டார்கள் ! And சஞ்சீவி மலையையே தூக்கி தலையில் வைத்தாலும், முகம் சுளிக்காது - 'சரிங்க சார் !' என்று செயலாற்றிடும்  நம்மவர்களின் புண்ணியத்தில் நானும் தப்பித்தேன் !

மாலையில் பலத்த காற்றும், லேசான மழையுமாய் பெய்ததில் கரண்ட் கட்டாகிப் போயிட ஆபீசில் wi-fi பணாலாகியதால், கடைசி ஒரு மணி நேரத்து ஆர்டர்களுக்கு சரி வர தொகைகளைச் சொல்ல முடிந்திருக்கவில்லை ! அவர்களுக்கும் இந்த 2 தினங்களின் சலுகைகள் உண்டென்பதால் no worries ; திங்கட்கிழமையின் உள்ளூர் திருவிழா  விடுமுறை முடிந்து, செவ்வாய் காலையில் ஆபீசுக்கு வந்தவுடன் சொல்லி விடுவார்கள் ! So லேட்டாக ஆர்டர் செய்திருந்த நண்பர்கள் ஒரு நாள் பொறுத்துக்க கொள்ளுங்கள் - ப்ளீஸ் ! I repeat - திங்கள் நமது அலுவலகம் உள்ளூர் திருவிழாவின் பொருட்டு விடுமுறையிலிருக்கும் !

ரைட்டு....பொதுவாய் என்ன விற்றது ? அதற்கு ஈடாக Free Comics லிஸ்டிலிருந்து எதைத் தேர்வு செய்தார்களென்று பார்த்த போது - made for interesting viewing !! 

*நம்ம மீசைக்கார ஷெல்டன் சார் புதுசாய் ஜாகைகள் தேடிட ஒரு வழியாக இந்த 2 நாட்களிலும் மனசு இறங்கியுள்ளார் !! நல்லதொரு நம்பரில் ஷெல்டன் புக்ஸ் நகன்றுள்ளன !!

*விறு விறுப்புக் காட்டியுள்ள இன்னொரு title - "உயிரைத் தேடி" ! போன வருஷம் இதே சமயம் வெளி வந்திருந்த இந்த cult hit-ன் black & white இதழ்கள் அப்போதே காலியாகியிருந்தன ! கலர் புக்ஸ் மட்டும் ஸ்டாக்கில் இருக்க, அவற்றில் brisk sales !

*பொதுவாகவே ஹார்ட்கவர் இதழ்களில் நல்ல நகர்வுகள் !! அதுவும் கென்யா கிட்டத்தட்ட அனைவரது லிஸ்ட்டிலும் இருந்துள்ளது !!

*மிதமாய் நகர்ந்துள்ளது சுஸ்கி & விஸ்கி ஹார்ட் கவர் Book # 2.

*சுப்ரீம் '60s ஹார்ட்கவர் இதழ்களும் fast movers !! 'நீ தெற்கே போய்க்கோடே  ...மேற்கே போய்க்கோடே ...!! ஆனா நாங்க பாட்டுக்கு சிக்ஸர் அடிச்சிகினே தனி வழியிலே டிராவல் பண்ணிப்போம் !' - என்று க்ளாஸிக் பார்ட்டீஸ் சொல்லாத குறை தான் !   

*Talking of hardcovers - போன மாசத்து பெளன்சர் அடித்திருக்கும் சிக்சரின் புண்ணியத்தில் முந்தய பெளன்சர் இதழ்களும் செம decent ஆக நகர்ந்துள்ளன !

*And சர்ப்ரைஸ்....சர்ப்ரைஸ்....கிட்டத்தட்ட அனைவரது தேர்விலும் இடம் பிடித்துள்ள ஒரு பார்ட்டி - நம்ம இளவரசி மாடஸ்டி தான் !! சின்ன விலைகள் ; அதிலுமே டிஸ்கவுண்ட்ஸ் என்பதைத் தாண்டி, இவர் இன்றைக்கு ஏதோவொரு வசீகரத்துடன் செம hot property ஆகத் தெரிகிறார் ! போகிற போக்கில் அடுத்த க்ளாஸிக் தொகுப்புகளின் பட்டியலில் அம்மணிக்குமொரு பெசல் போட வேண்டிப் போகும் போலும் !! 

*இன்னொரு surprise தேர்வு - நம்ம வலைமன்னன் தான் ! நிறைய நண்பர்கள் ஸ்பைடர் இதழ்களை pick செய்துள்ளனர் !! And அந்த புது ஸ்பைடர் + ஆர்ச்சி சாகசம் எப்போதென்று எக்கச்சக்க ஆர்வங்ஸ்கி !! நம்ம தானைத் தலைவர் ஸ்பைடரை கம்பியூட்டர் மேக்ஸும், ஆர்ச்சியும் பந்தாடுவதைப் பார்த்து நிறைய பற்கள் நறநறக்கப்படுமென்பது உறுதி !! 

*கைவசமுள்ள ஒன்-ஷாட் ஜம்போ கிராபிக் நாவல்களிலிருந்து "மா..துஜே ஸலாம்" நிறையப் பேரின் லிஸ்ட்களில் இருந்துள்ளதில் எனக்கு பெர்சனலாக நிரம்ப மகிழ்ச்சி !! நான் ரசித்த சமீப ஆண்டுகளின் புக்சில் அதற்கொரு முக்கிய இடமுண்டு என்பதில் ஏது ரகசியம் ? 

*புது இல்லங்களைத் தேடி டெமக்ளீஸ் டீமும் புறப்படுவது சந்தோஷமான இன்னொரு சேதி !! சில பல வருஷங்களுக்கு முன்னே ஈரோட்டில் வெளியான நாள் முதலாய் கிட்டங்கியில் நீண்ட நெடு நாள் குத்தகையினை எடுத்திருக்கும் இந்த இதழ் கொஞ்சமாகவேணும் நகர்ந்திருப்பதில் ஹேப்பி !

*ஆச்சர்யமாய் இம்முறை - அயல்நாட்டுப் பங்களிப்புகளும் கணிசம் ! புக்ஸை இங்குள்ள முகவரிகளுக்கு அனுப்பப் கோரினார்களா ? என்பது எனக்குத் தெரியலை - but கண்முழித்திருந்து கனடாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் நண்பர்கள் ஆர்டர் செய்துள்ளனர் ! And நம் அண்டை வீட்டு ஸ்ரீ லங்காவினை குறிப்பிடாதிருக்க இயலுமா ? அங்கிருந்தும் செம handsome orders !!

*இந்த தபா "இரத்தப் படலம்" தொகுப்புகள் ஏதேனும் surprise விற்பனைக்கு இல்லியா ? என்று கேட்டோரும் நிறைய !! நிஜத்தைச் சொல்வதானால் இந்த ஏற்பாடுகளை குளறுபடிகளின்றிச் செயல்படுத்திடும் முனைப்பிலும், புது புக்ஸ்களின் பணிகளிலும் மறந்தே போய்விட்டேன் !! 

*மொத்தமான 40 விலையில்லா புக்ஸையும் ஆங்காங்கேயுள்ள நூலகங்களுக்கு அனுப்பிடக் கோரியுள்ள நண்பர்களே கணிசம் !! அவை வெறும் 10 சதவிகிதப் புது வாசகர்களைச் சென்றடைந்தாலுமே இந்த முயற்சி செம வெற்றி என்றாகிடும் !! 

பந்தாவாய் அறிவிச்சாச்சு ; விழாவையும் தெறிக்க விட்டாச்சு ; இனி டெஸ்பாட்ச் செய்திடும் பணி நம்மாட்களுக்கும், எஞ்சியுள்ள 2 புது இதழ்களுக்கான பணிகளை சட்டென்று முடிக்கும் பொறுப்பு எனக்கும் வெயிட்டிங் !! So இந்த 2 நாட்களாய் வேறொரு மண்டலத்தில் உலாற்றிக் கொண்டிருந்ததிலிருந்து தரையிறங்கி, பணிகளுக்குள் மூழ்கியாக வேண்டும் ! But பற்பல காமிக்ஸ் ஜாம்பவான்கள் கொண்டாடிய ஒரு மைல்கல் தினத்தினில் சுண்டெலி ரேஞ்சுக்காவது நாமும் களமாடிய மகிழ்ச்சியில், காத்துள்ள பணிகளின் பளு அழுத்தவே காணோம் !! And guess what - கையிலுள்ள இரண்டும் முடிந்த நொடியில், அடுத்ததாகக்  காத்துள்ளோர் நம்ம XIII-ம், தாத்தாக்களும் தான் ! 'கரும்பு தின்னக் கூலி' என்ற தேய்ந்த பழமொழியினை நாமறிவோம் ; அதனை மெய்யாலுமே yet again அனுபவித்திடும் வரம் எனக்குக் காத்துள்ளது ! புனித மனிடோ - yet again நன்றிகள் ஓராயிரம் !

Bye guys ...see you around !! And thanks for being the wonderful people you are !! எந்தவொரு முயற்சிக்கும் சர்வ நிச்சயமாய்த் தோள் கொடுப்போமென்பதை ஒவ்வொரு தருணத்திலும் நிரூபித்து வருகிறீர்கள் !! Thanks a million !! Have a beautiful week ahead !!

P.S : மகளிரணித் தலைவி - தனது கேப்ஷன் தேர்வினை அறிவிக்கலாம் !!

Saturday, May 04, 2024

டெக்னாலஜி !!!

நண்பர்களே,

வணக்கம். டெக்னாலஜி பின்னிப் பெடலெடுத்து வருகிறது இன்றைய பொழுதினை !! வழக்கமாய் போன் பண்ணி விபரங்கள் கேட்டு ; ஆர்டர் சொல்லி ; சந்தேகங்களை நிவர்த்தித்திட முயன்று அப்புறமாய் ஆர்டர் place செய்து வந்த நண்பர்களெல்லாம்  இன்றைக்கு செம கூலாக வாட்சப்பில் ஆர்டர்களைக் குவித்து வருகின்றனர் !! முந்தைய இதழ்களின் லிஸ்ட் + Free Comics லிஸ்ட் - என இரண்டையும் அழகாய் அனுப்பி வருவதால் நம்மாட்களின் வேலைகள் சூப்பர் சிம்பிள் ஆகி வருகிறது !! Maybe நேற்றைக்கே இந்த லிஸ்ட்களை இங்கே நமது பதிவிலும், ஆபீசில் வாட்சப்பில் இருந்தும் பகிர்ந்தது இதற்கொரு காரணமாய் இருந்திருக்கலாம் ! And இம்மாத புது புக்ஸ் கூரியர்களோடு நியூஸ்பேப்பர் பாணியில் அனுப்பியிருந்த ஆன்லைன் மேளா ஸ்பெஷல்ஸ் விளம்பரங்களும், back issues stocklist-ம் செமையாக reach ஆகியுள்ளது ! More than anything else - நண்பர்கள் இதனை பரவலாக்கிட க்ரூப்களில் ; FB-ல் செய்து வரும் முயற்சிகளும் ஒரு அசாத்திய ஒத்தாசையாய் இருந்துள்ளது ! Thanks a ton folks !! 

"மெய்யாலுமே - விலைக்கு ஈடாய் புக்ஸ் free தானா ?" என்ற கேள்வி தான் காலை முதலாக ஒலித்து வருகிறது போனில் ! தொடர்ந்து எழுந்த கேள்விகளால் நம்மாட்களுக்கே சந்தேகம் ஆகிப் போய் என்னிடம் மறுக்கா கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு, இப்போது தெம்பாகப் பதிலளித்து வருகின்றனர் ! Oh yes - FCBD சர்வ நிச்சயமாய் உருட்டல்ல ; நீங்கள் வாங்கிடும் முந்தைய இதழ்களுக்கு ஈடான கிரயத்துக்கு விலையின்றி புக்ஸ் தேர்வு செய்து பெற்றுக் கொள்ளலாம் ! And முந்தைய இதழ்களுக்கு மட்டும் ஆர்டர் செய்துள்ள நண்பர்களுக்கு, அவர்கள் தேர்வு செய்த free books சகிதம் இயன்றமட்டுக்கு இன்றே அனுப்பிடவும் முயற்சித்து வருகிறோம் ! 

இதோ - புது இதழ்களின் பிரிவியூ படலங்கள் ! டெக்ஸ் க்ளாசிக்ஸ் நீங்கலாக பாக்கி 7 இதழ்களிலுமே limited print runs தான் ! நேற்றும், இன்றுமாய் அதற்குள்ளாகவே கிட்டத்தட்ட 30% புக்ஸுக்கு ஆர்டர்கள் வந்தாச்சு ! And அனைவருமே மொத்த செட்டாகவே ஆர்டர் செய்துள்ளனர் என்பது தான்  icing on the cake !! நான் கூட அந்த குட்டி புக்சில் selective ஆக வாங்கிடுவீர்களென்று எண்ணியிருந்தேன் ; but ஊஹூம்...ஏக் தம்மில் 8 ! 😍😍😍








 


















விடுபட்டுள்ள ப்ரிவ்யூக்களை மதியம் upload செய்கிறேன் !! இப்போதைக்கு "துணைக்கு வந்த மாயாவி"யோடு பயணத்தைத் தொடர்ந்திடக் கிளம்புகிறேன் folks !! Bye for now ....see you around & have a super cool weekend !!

P.S : Online மேளா ஸ்பெஷல் புக்ஸ் ஆன்லைன் லிஸ்டிங்கும் ரெடிhttps://lion-muthucomics.com/pre-booking/1203-the-great-online-comics-mela-tamilnadu.html