நண்பர்களே,
வணக்கம். "ரசனை" எனும் ஆறானது பொதுவாய் டிசைன் டிசைனான பாதைகளில் பயணிப்பதுண்டு !
*"ஒரு தோழனின் கதை" சூப்பரப்பு என்று நான் நினைத்திருக்கும் வேளையில், நீங்களோ நடுமண்டையோடு ஒரு டபுள் கொட்டை இறக்குவீர்கள் !
*"ஆத்தீ...இந்தக் கதைக்கு துடைப்பம் பிய்வது உறுதி !" என்ற பயத்தோடு வெளியிடும் "காலனின் கால்தடம்" கி.நா.வுக்கு சூப்பர்ஹிட் அந்தஸ்து தருவீர்கள் !
*சந்தாவில் இருக்கும் நண்பர்களுக்குப் பிடிப்பது கடைகளில் வாங்குவோருக்குப் பிடித்திருப்பதில்லை !
*And புத்தக விழாக்களில் போணியாவது சந்தா நண்பர்களின் ரசனைகளோடு ஒத்துச் செல்வதில்லை !
ஆனால்.....ஆனால்....ஒரு தெறி ஜனவரியில் ; ஒரு அனல் கூட்டணியில் துவங்கியுள்ள ஆண்டினில் - நம்ப இயலா ஒரு அதிசயமும் அரங்கேறியுள்ளது ! அது தான் மூன்று துருவங்களும் ஒற்றை நேர்கோட்டினில் இணைந்து நின்றிடும் அதிசயம் !! இன்னா மேட்டருங்குறீங்களா ? - தோ சொல்றேனே !
துருவம் # 1 : நாங்க !! மண்டைக்குள் ஓடும் முதல் சிந்தனைக்கு பூம் பூம் மாடாட்டம் 'ஜிங்கு ஜிங்கென்று' மண்டையை ஆட்டியபடியே, டைப் டைப்பாய் தொடர்களை / நாயகர்களை களமிறக்கும் பார்ட்டிகளான நாங்க !!
துருவம் # 2 : நீங்க !! நம் மீதான அன்பும், காமிக்ஸ் மீதான தீராக் காதலுமாய் இந்த பொம்ம புக் உலகினை தாங்கிப் பிடித்து நிற்கும் ஹெர்குலீஸ்கள் !! நல்லவற்றை நயமாக சிலாகிக்கும் கையோடு, டப்ஸாக்களுக்கு தெளிவாக டின் கட்டிவிடும் ஜூரிக்கள் !
துருவம் # 3 : Casual வாசகர்கள் ! சந்தர்ப்பங்கள் வாய்க்கும் சமயங்களில் ; புத்தக விழாக்களில் ; கடைகளில் ; ஏஜெண்ட்களிடம் - அந்த நொடியின் பொரி பறக்கும் திசையினில் உள்ள இதழ்களை on merits வாங்கிடுவோர் ! Of course காமிக்ஸ் நேசத்தில் யாருக்கும் சளைத்தோர் அல்ல தான் ; அதே சமயம் "சர்வம் பொம்ம புக்மயம்" என்று அவகாசம் தந்திடவும் வாய்ப்பில்லாதோர் !
இந்தப் பயணத்தின் பெரும்பான்மைக்கு - "இந்த மூணு நைனாக்களும் ஒட்டே நேர்கோட்டில இணைஞ்சு நின்னாக்கா இன்னாமா இருக்கும் ??!!" என்ற பெருமூச்சோடு தான் சுற்றி வந்திருக்கிறோம் ! ஆனால் நம்ம லயனின் 40-வது ஆண்டுக்கொரு gift ஆக இருக்கட்டுமென்று பெரும் தேவன் ஓடின் எண்ணினாரோ, என்னவோ - சென்னையின் அசாத்திய விற்பனையின் நடுவாக்கில் எனது அவா நிறைவேறிடும் அதிசயமும் அரங்கேறியுள்ளது !!
Yes - நடப்பாண்டில் நாம் முன்னெடுத்திருக்கும் "ஸ்டார் நாயகர்களோடு, மாதா மாதம் crisp வாசிப்பு...!" என்ற அந்த template-க்கு சென்னைப் புத்தக விழாவின் casual வாசக வட்டமும் ஒரு மிகப்பெரிய thumbs up தந்துள்ளது !! இதோ - தொடர்கிறது சென்னையின் விற்பனை சார்ந்த அதகளங்களும், அலங்கோலங்களும் !! Here goes :
துளியும் ஐயமின்றி இந்தாண்டின் சென்னை ஹீரோ டின்டின் தான் ! ஏற்கனவே அவருக்கு இருக்கும் பிரபல்யம் ; star power பற்றி ஊருக்கே தெரியும் & பற்றாக்குறைக்கு இங்கும், FB ; வாட்சப் க்ரூப்களிலும் நீங்கள் செய்த சிலாகிப்புகள் "திபெத்தில் டின்டின்" இதழை ஒரு blockbuster ஹிட் ரேஞ்சுக்கு இட்டுச் சென்றுள்ளது ! And அதனில் நமக்கொரு பாடமுமே கிட்டியுள்ளது - காத்திருக்கும் பயணங்களில் வருஷத்தினைத் துவக்குவது இந்த மெகா ஸ்டாரோடு தான் இருந்திட வேண்டுமென்று !! So பொங்கலும், வடையும் போல ; பூரியும், கிழங்கும் போல ; பரோட்டாவும், பாயாவும் போல, அடுத்த நாலைந்து வருஷங்களுக்காவது ஜனவரியும், டின்டின்னும் இணைந்தே காணப்படுவர் !!
Yes, டின்டின் ஊடு கட்டி அடித்துள்ளார் தான் ; காண்போரையெல்லாம் காதலில் விழச் செய்துள்ளார் தான் ! ஆனாலும் நம்பர்களில் அவரை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி விட்டுப்புட்டு மொத இடத்தில நிற்பவர் யாரென்று தான் யூகியுங்களேன் folks ? யூகிப்போருக்கு நேபாளத்துக்கெல்லாம் டிக்கெட் தரப்போவதில்லை ; வேணும்னா மாயூரத்துக்கோ ; மாபலிபுரத்துக்கோ தரலாம் - becos அசைக்க இயலா முதலிடத்தில் இருப்பவர் 52 ஆண்டுகால ஜாம்பவானான இரும்புக்கை மாயாவி மாம்ஸ் தான் ! மொத்தம் 6 மறுபதிப்புகள் நம் கைவசமிருந்தன இந்தாண்டினில் - and ஒன்றே ஒன்று தான் நடப்பாண்டுக்கென சேர்த்தது ! அந்த இதழும் (இரும்புக்கை மாயாவி) சென்னை எக்ஸ்பிரஸின் ஒரு அங்கமாக, maybe ஒரு வாரம் கழித்தே சென்னை ஸ்டாலுக்கு சென்றிருந்தது ! ஆனால் லேட்டா வந்தாலும், லேப்போ லேப்பென்று விற்பனையில் லேப்பி - "2024 சென்னையின் MOST SELLING புக்" என்ற வெற்றியினை தனதாக்கியுள்ளது ! And 6 மறுபதிப்புகளுமாய்ச் சேர்ந்து கண்டுள்ள விற்பனை - கிறுகிறுக்கச் செய்யும் ஒரு நம்பர் !! எண்ட தெய்வமே....எனக்குப் புரியில்லா !! அடுத்த வருஷத்துக்கு எந்த மாயாவியையெல்லாம் ரீபிரிண்ட் பண்ணுவதென்று இப்போதே யோசிக்க ஆரம்பிச்சுட்டோம் !!
அதே சமயம், மாயாவியின் செட் - CID லாரன்ஸ் - டேவிட் & ஜானி நீரோ-ஸ்டெல்லா ஒரு ரெண்டு, மூணு லெவெல்கள் கீழேயே இருக்கின்றனர் விற்பனையில் ! இத்தனைக்கும் "ஜானி in ஜப்பான்" ; "விண்ணில் மறைந்த விமானங்கள்" - ஒரிஜினல் அட்டைகளோடு, சமீப மறுபதிப்பு கண்டிரா இதழ்களாகவே இருந்துள்ளன ! Yet - மாயாவியில் 10 விற்றால், இவர்களது ஆல்பங்களில் 5 தான் போணியாகியுள்ளன ! ஆனால் 'ஆனை படுத்தாலும் குதிரை மட்டம்' என்பதை நிஜமாக்கும் விதத்தில், இன்ன பிற சமகால நாயகர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு பெருசாய் ஒரு ஏப்பமும் விட்டிருக்கிறார்கள் ! க்ளாஸிக் நாயகர்கள் தான் ; இன்றைய நவீன ரசனைகளுக்கு ஈடுதர சிரமப்படுவோர் தான் - ஆனாலும் "ஜாலிலோ-ஜிம்கானா" என்று பாட்டுப் பாடியபடியே, புதுப்புது வாசக இல்லங்களுக்கு குடிபோகும் ஆற்றல் இவர்கட்கு உள்ளது !
ஆனால், நாக்குத் தள்ளப் பணியாற்றி, நாளெல்லாம் மேடை போட்டு ; மைக் பிடித்து, "இது புதுசுங்கோ ; செம டிப்பரன்டுங்கோ" என்று சிலாகித்தாலும் - கம்பீரமாய் சென்னைக்குப் பயணமாகி, சட்டையின் மடிப்பு கூடக் கலையாமல் மறுக்கா கிட்டங்கிக்கே திரும்பிடும் புதுயுக நாயக / நாயகியர் கணிசம் ! இதோ - கண்ணில் ரத்தம் வரச்செய்யும் நம்பர்களுடன் சென்னையின் "சூரப்புளிகளை" பட்டியலிடுகிறேன் :
- *கமான்சே : கைவசம் 6 தலைப்புகள் - மொத்தத்துக்கு விற்றுள்ளது 24 புக்ஸ் !
- *லேடி S : கைவசம் 3 தலைப்புக்கள் - மொத்தத்துக்கு விற்றுள்ளது 9 புக்ஸ் !
- *காலவேட்டையர் - 1 புக் !
- *பிஸ்டலுக்குப் பிரியாவிடை - 4 புக்ஸ் !
- *சோடா : கைவசம் 3 தலைப்புகள் - மொத்தத்துக்கு விற்றுள்ளது 10 புக்ஸ் !
- *டிரெண்ட் : மொத்தம் 8 தலைப்புகள் - மொத்தத்துக்கு விற்றுள்ளது 31 புக்ஸ் !
இவை தவிர, நிறைய one shots "எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போயிருக்கார் !" என்ற பாணியில் ஜில்லென்று ஜிப்பாக்களையும், அங்கவஸ்திரங்களையும் போட்டிக்கினு சென்னை போய், ரேக்குகளில் புது மாப்பிள்ளைகளாட்டம் போஸ் கொடுத்து விட்டு, ஊருக்குப் புறப்படும் வேளை வந்தவுடன் முதல் ஆளாய் லாரியில் துண்டைப்போட்டு கிட்டங்கி திரும்பியுள்ளதும் அரங்கேறியுள்ளது !
நடப்பாண்டில் சென்னையின் சோகக் கதைகள் இவையென்றால், சாகசக் கதைகளின் பட்டியலும் கணிசம் !! As always 2 கௌபாய் ஜாம்பவான்கள் போட்டுத் தாக்கியுள்ளனர் and அவர்களே விற்பனைகளில் நமக்குப் பெரிதும் கைகொடுத்துள்ளோர் ! "அந்த லைனா இருக்கிற டெக்ஸ் புக்ஸ் அல்லாத்திலேயும் ஒண்ணொண்ணு தாங்க ! இங்கே அடுக்கியிருக்கிற லக்கி லூக்கில all ஒண்ணொண்ணு !" என்ற குரல்கள் சென்னையில் அடிக்கடி ஒலித்துள்ளதன் பலனாய் - நமது விற்பனை நம்பர்கள் ஆரோக்கியம் கண்டுள்ளன ! அதிலும் டெக்சின் SUPREMO ஸ்பெஷல் செம மாஸ் ! அதே போல லக்கியின் 3 லேட்டஸ்ட் மறுபதிப்புகளும் கிட்டத்தட்ட விழாவின் halfway mark-ன் போது தான் ஸ்டாலுக்குச் சென்றிருந்தன ! ஆனால் மூன்றுமே பட்டையைக் கிளம்பியுள்ளன & "தலைக்கு ஒரு விலை" நம்ப முடியாத நம்பர்களை கண்டுள்ளது !! Phew !!!
மூன்றாவதாகவுமே ஒரு கௌபாய் இம்முறை தெறிக்க விட்டுள்ளார் - and அவர் தான் நம்ம 'தளபதி' !! நவம்பரில் வந்த "தளபதி ஸ்பெஷல்" தாறுமாறு-தக்காளிச்சோறு விற்பனை கண்டுள்ளதன் புண்ணியத்தில் - கிட்டங்கியினை காலி செய்துவிட்டார் இளம் தட்டைமூக்கார் ! திருப்பூரில் நமது ஸ்டாலில் உள்ள சொற்ப புக்ஸ் தான் அதனில் எஞ்சிய பிரதிகள் !! Phew ...நவம்பரில் வெளியாகி, ஜனவரிக்குள் "SOLD OUT" என்ற போர்டை மாட்ட சாத்தியமாகிறதெனில், பாக்கியுள்ள இளம் டைகர் சாகசங்களை தொடரும் ஆண்டுகளில் போட்டுத் தாக்கிடும் 'தகிரியம்' நமதாகிறது ! யாரங்கே...? தளபதியை சயனத்திலிருந்து தட்டி எழுப்பு !!
சென்னையின் இன்னொரு அதிரடி ஆட்டக்காரர் - நம்ம டெங்காலி கானகத்தின் காவலர் தான் ! "நடமாடும் மாயாத்மா வேதாளர்" இம்முறை SUPREME '60s ஹார்ட்கவர் இதழாகவும், V காமிக்சின் கலர் இதழாகவும் கையிருப்பில் இருந்தார் ! முதல் பத்தே நாட்களுக்குள் ஹார்ட் கவர் வேதாளர் ஸ்பெஷல் -2 முற்றிலுமாய்க் காலி & "வீரனுக்கு மரணமில்லை" செம மிரட்டலான விற்பனை கண்டுள்ளது ! Again ஒரு ஸ்டார் நாயகர் + நேர்கோட்டுக் கதைகள் என்பதே வெற்றியின் template !! For sure - அடுத்த சென்னைப் புத்தக விழாவின் போது கணிசமான வேதாளர் இதழ்களை நம் அணிவகுப்பினில் பார்த்திடலாம் !
சரி, பெருசுகளாய் சாதிக்கிறார்களே ?! என்ற நெருடலைப் போக்கிட ஒரு ஸ்டைலிஷ் சமகால ஹீரோவின் வெற்றியைப் பற்றியும் சொல்லுகிறேனே ? லார்கோ இந்தாண்டினில் சுழற்றியடித்திருக்கிறார் விற்பனையில் ! "இரவின் எல்லையில்" அடித்திருப்பது ரோஹித் சர்மா சிக்ஸர் எனில், தொடரின் மீத இதழ்களுமே செம்மையாய் ஸ்கோர் செய்துள்ளன ! So லார்கோ மொதலாளியின் தொடரில் நாம் நடுவாக்கில் skip செய்துள்ளதொரு டபுள் ஆல்பத்தினை அடுத்தாண்டினில் களமிறக்கிட எண்ணியுள்ளோம் ! And அதற்குப் பேனா பிடிக்க உள்ளவர் இங்கே நம் மத்தியில் உள்ளதொரு low profile நண்பரே ! ஏற்கனவே 2022-ல் அதன் முதல் பாகத்துக்கு மொழிபெயர்ப்பினை ஆர்வத்தினில் செய்து அனுப்பியுள்ளார் & பாகம் இரண்டையும் விரைவில் முடித்து வாங்கி விட்டோமெனில் அடுத்த ஜனவரியிலும் இதே template (டின்டின் + லார்கோ + டெக்ஸ் + வேதாளர்) சாத்தியமாகிடும் ! பேனா பிடித்துள்ள / பிடிக்கவுள்ள நண்பரின் பெயரில் 2 பெயர்களிருக்கும் and எங்களுக்கு நிரம்பவே அண்மையில் உள்ளவர் ! கண்டுபுடியுங்களேன் பார்ப்போம் - நேபாள ட்ரிப் இல்லாங்காட்டியும் நேந்திரங்காய் சிப்சாச்சும் பரிசுண்டு !
சென்னையில் இம்முறை அடிச்சுப் புடிச்சு தங்களது உறுப்புகளுக்கு நியாயம் செயதோர் 4 பேர் ! முதலாமவர் - நம்ம ரிப்போர்ட்டர் சார் ! Yes ; இம்முறை ரிப்போர்ட்டர் ஜானியின் எல்லா சாகசங்களுமே decent விற்பனை கண்டுள்ளன ! நிஜத்தைச் சொல்வதானால், சோடாவா ? ஜானியா ? என்ற கேள்வி எழுந்த போது எனது வோட்டு முன்னவருக்கே இருந்தது ! ஆனால் விற்பனையில் பாஸ்டர்-போல்ஸ்கார் சொதப்பியிருப்பதும், ஜானி சாதித்திருப்பதும் என்னை திருட்டு முழி முழிக்கச் செய்துள்ளது !
சாதித்துள்ள பார்ட்டி # 2 : நம்ம இளவரசி மாடஸ்டி ! சிக்கென்ற black & white இதழ்கள் ; அடக்கமான விலைகள் - என்பன காரணமா ? அல்லது ஸ்டாலுக்கு கணிசமான டாக்டர்கள் வருகை புரிந்தனரா ? என்று சொல்லத்தெரியவில்லை - but அம்மணி செம பார்மில் இருந்திருக்கிறார் இம்முறை !
வெற்றி நாயகன் # 3 - நம்ம ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப் கிர்பி தான் ! ஹார்ட்கவர் தொகுப்பில் இருந்த "ரிப் கிர்பி ஸ்பெஷல்-2" அட்டகாசமாய் விற்றுள்ளது ! ரொம்பச் சீக்கிரமே இவருக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை தந்திட ஏற்பாடுகள் அரங்கேறினால் please don't be surprised ! மனுஷன் செம கில்லியாய் செயல்பட்டுள்ளார் & deserves a promotion !
சாதித்துள்ள ஹீரோ # 4 : ரின்டின் கேன் ! கையிருப்பில் மூன்று இதழ்கள் மட்டுமே இருந்தாலும் - செம sales ஒவ்வொன்றிலும் ! அதே போல "கதை சொல்லும் காமிக்ஸ்" தொடரின் 2 ஸ்டாக் இதழ்களும் குட்டீஸ்களுக்கு நிரம்பவே போணியாகியுள்ளது !
Surprise of Chennai - என்று குறிப்பிடுவதாயின் அது நமது கேரட் மீசை கிளிப்டன் தான் ! ஆறோ-ஏழோ இதழ்கள் கையிருப்பில் இருக்க, ஒவ்வொன்றிலுமே கணிசமான சேல்ஸ் ! அதிலும் "நில்..கவனி..சிரி" அதிரடி விற்பனை !
Maybe ...just maybe அடுத்தாண்டினில் வெறும் 6 இதழ்கள் கொண்டாவது ஒரு கார்ட்டூன் சந்தாவினை மறுக்கா கொணருவோமா ? என்ற மஹாசிந்தனை தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் போதே இன்னும் கொஞ்சம் நம்பர்கள் கண்ணில்பட்டன ! And அவற்றைப் பார்க்கப் பார்க்க ஷெரிஃபீடம் பிட்டத்தில் உதை வாங்கக்காத்திருக்கும் கிட் ஆர்டினைப் போலவே முழிக்கத் தோன்றியது ! Becos என் கண்ணில்பட்ட நம்பர்கள் - ப்ளூ கோட் பட்டாளம் & மேக் & ஜாக் வரிசைகளின் விற்பனை சார்ந்தது ! ரொம்பவே ; ரொம்ப ரொம்பவே சுமார் !!! Phew !!!! ரெகுலர் தடத்திலிருந்து சில தொடர்களை MYOMS பிரத்தியேக முன்பதிவுச் சந்தாவுக்கு நகற்ற நான் தீர்மானித்தது எத்தனை உத்தமம் என்பது அந்த நொடியில் உரைத்தது !
அதிரடி ; சூப்பர்-டூப்பர் என்றெல்லாம் இல்லாது, அழகான, ஆர்ப்பாட்டமில்லாத விற்பனை கண்டுள்ள தொடர்களை சொல்வதாயின் :
- சிக் பில்
- XIII
- ஏஜெண்ட் ராபின்
- ஸாகோர்
- டெட்வுட் டிக்
- ஸ்பைடர்
ஆகியோரைக் குறிப்பிடலாம் !
And ரொம்பவே இக்கட்டில் நிற்குமொரு prime நாயகர் - நம்ம பிரபஞ்சத்தின் புதல்வர் தான் ! மிகச் சரியாக ஒரு டஜன் டைட்டில்கள் கையிலிருக்க, வண்டியை தள்ளி விட்டுத், தள்ளி விட்டுத் தான் ஸ்டார்ட் செய்து வர வேண்டியுள்ளது ! புரியாத புதிர்களுள் பிரதானமானதென்பேன் - தோர்கலின் இந்த அற்புதத் தொடரின் slow movement !!
To cut a very long story short :
- ஸ்டார் value உள்ள நாயக / நாயகியர் அன்றி, இனி வரும் காலங்களில் இரண்டாம்நிலை ஹீரோக்கள் ஜெயம் காண்பதெல்லாம் கனவில் மட்டுமே சாத்தியம் போலும் !
- Entertainment value ; சிண்டைப் பிய்க்க அவசியங்கள் ஏற்படுத்தா கதைகள் - முன்செல்லும் பாதையினில் இவையே சக்கரங்களை உருளச் செய்திடும் !
- பரீட்சார்த்தங்கள் ; one shots ; இவையெல்லாமே இனி பிரத்யேக முன்பதிவுத் தடத்தில் மட்டுமே ஓடக்கூடியவை ! ரெகுலர் சந்தாவில் இணைத்து தொண்டைக்குள் திணிக்கப் பார்த்தால் மூக்கில் தான் குத்து விழும் போலும் !
- விற்பனை உத்திரவாதம் வேணுமா - பழசை அரவணைத்தே போகணும் தான் போலும் ! இதனில் யார் கடுகடுத்தாலும், யார் முகம் சுளித்தாலும் - நிதர்சனம் மாறிடாது !
- So 2025 முதலாய் அடிக்கடி முன்பதிவுத் தடங்களில் தான் புதுவரவுகளையும், வித்தியாசமான ஜானர்களையும் பார்த்திட சாத்தியமாகும் போலும் ! இப்போதே அதற்கான திட்டமிடலை ஆரம்பிச்சாச்சு folks !!
அப்புறம்....அப்புறம்....இப்போவே கட்டை விரலை தொண்டைக்குள்ளாற திணிக்கவுமே ஆரம்பிச்சாச்சு - புதுசாய் 2 தொடர்களுக்கு துண்டை விரித்த கையோடு ! நாம என்னிக்கு இண்டிகேட்டர்களுக்கேற்ப வண்டியோட்டி இருக்கோம் - இன்னிக்கு ஒழுங்குப பிள்ளை டிரைவராகிட ? ஒவ்வொரு தினமும் ஒரு பாடம் கற்றுத் தந்திடும் சூழலில், விற்பனைக்கும் - ரசனைக்கும் மத்தியில் ஒரு "கம்பி டான்ஸ்" ஆடப் பழகிக்குவோமா guys ?
Bye all ....see you around ! புது இதழ்கள் பற்றிய previews நாளை போடுகிறேன் ! Have a cool Sunday !