Powered By Blogger

Saturday, January 01, 2022

இனியெல்லாம் ஜாலியே !!

 நண்பர்களே,

வணக்கம். 2021-ல் துவங்கி, 2022-ல் வெளிவந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க (!!!) பதிவு இது ! இதுக்கு முன்பாய் புத்தாண்டு புலரும் பொழுதினில் பதிவு(கள்) போட்டுள்ளேனா - இல்லையா  என்பது ஞாபகமில்லை ; ஆனால் இன்றைய பதிவானது அந்தப் புண்ணியத்தைத் தேடிக் கொள்ளட்டுமே !!

FFS !! இரண்டு தினங்களாச்சு - இந்த 5 மாத உழைப்பின் பலன் உங்களை எட்டிப் பிடித்து ! And இதுவரையிலுமான initial reactions ரொம்பச் சொற்பமே என்றாலும், அனைத்தும் செம பாசிட்டிவ் என்பது மகிழ்வூட்டும் சமாச்சாரம் ! காத்துள்ள நாட்களில், கதைகளுக்குள் மெது மெதுவாய்ப் புகுந்திட உங்களுக்கு நேரம் கிடைக்க ஆரம்பித்த பிற்பாடு, அலசல்கள் வேகமெடுக்கும் என்றும், அந்நேரமுமே இதே போலான பாசிட்டிவ் அபிப்பிராயங்கள் நம்மைக் கரை சேர்க்கும் என்றும் நம்புவோமாக !! இந்த மெகா இதழ்(களின்) behind the scenes கதைகள், நிறையவே உண்டு தான் ; ஆனால் நிறையப் பேருக்கு இன்னமும் எலியப்பாவைத் தாண்டிடக் கூட  அவகாசமே கிட்டியிராதென்ற நிலையில், நான்பாட்டுக்கு வாயை அகலமாய்த்  திறந்து வைப்பது சுகப்படாது ! So இந்தப் பதிவினில் "Life after FFS" பற்றி மட்டும் பேசுவோமா ? என்று பார்த்தேன் ! 

ஒவ்வொரு பத்தாண்டுகளுக்குமே நம்மை நாமே reinvent செய்து கொள்வது அவசியமென்று நான் முன்னமே தீர்மானித்திருந்தது பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தது நினைவிருக்கலாம் ! And இந்த FFS-ன் இரு மெயின் புக்குகளுமே அந்தப் புதுத் தடம் நோக்கிய பயணங்களே ! டாக்டர்களுக்கும், கேசம் குறைந்த பதிப்பாளர்களுக்கும் பிரியத்துக்கு உகந்த அம்மணி மாத்திரமே புராதனங்களுக்கொரு அடையாளமாய் வரும் ஆண்டுகளில் தொடர்ந்திடுவார் ! (007 கூட  அடுத்தாண்டு முதலாய்  2.0 வண்ண அவதாரத்தில் தொடர்ந்திடுவார்) பாக்கிப் பேரெல்லாமே இயன்றமட்டிலும் இன்றைய யுகத்தோடு பொருந்திச் செல்ல முயற்சிப்போராய் இருப்பர் ; at least நமது பிரான்க்கோ-பெல்ஜியத் தேர்வுகளில் ! போன வாரத்தில் நான் அறிமுகம் செய்து வைத்த அந்த IR$ கூட, அது சார்ந்த முனைப்பே ! And லார்கோவின் புதியதொரு ஆல்பம் ரெடியாகி வரும் வேளையில் - இந்த "கௌபாய் அல்லாத சூப்பர் ஸ்டார்" நாயகரோடு கரம்கோர்க்கும் நமது முனைப்பு வேகமெடுத்திடும் !  Of course "மாற்றம்-முன்னேற்றம்" என்ற ஓட்டத்தில், நம்மை ஒரு தசாப்தமாய்த் தோளில் சுமந்து திரிந்த குதிரைப் பார்ட்டிகளை மறந்திட மாட்டோம் தான் ; LONESOME ; (புது) ட்யுராங்கோ ; டெட்வுட் டிக் ; 'தல' டெக்ஸ் ; அப்புறம் இன்னொரு புது மேற்கத்திய தொடர் என்று கௌபாய்க் காதல் தொடரவே செய்யும் தான் ! ஆனால் தேர்வுத் தராசின் முள்ளானது இந்த சமகாலத்தோருக்கு சாதகம் காட்டிட முனையும் ! அதிலும் "ஒற்றை நொடி...ஒன்பது தோட்டாக்கள்" ஆல்பத்தினுடனான பயணத்தை நிறைவு செய்திடும் வேளையில் நமக்கே இனி இந்த racy ஆக்ஷன் த்ரில்லர்கள் மீது மையல் கூடிடும் என்பேன் ! 

And இதுவரையிலுமான அலசல்களில் அடிக்கடி உருண்ட இன்னொரு பெயரானது "மிஸ்டர் எலியப்பா" தான் ! தன்னோட கஸினுக்கும் போன் போட்டு அழைக்க ரெடியாகும் இந்த யானைப் பார்ட்டி, இதழுக்கு 8 பக்கங்கள் வீதம், அடுத்த 6 மாதங்களுக்கு நம்மோடு டிராவல் செய்திடுவார் ! And அதற்குள் ஒபாமா ரேஞ்சுக்கு நம் மத்தியில் இவர் பிரசித்தம் கண்டால் நான் வியப்படைய மாட்டேன் ! So தவறாது இந்த ப்ளூ யானையை உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு அறிமுகம் செய்து வையுங்களேன் guys - ப்ளீஸ் ? அடுத்த தலைமுறையினை இந்த பொம்ம புக் லோகத்தினை நோக்கி சன்னம் சன்னமாய் நடை பயிலச் செய்திட இது போலான வாய்ப்புகளே பிரதானமானவை என்பதை நான் சொல்லவும் வேணுமா - என்ன ? காத்திருக்கும் பொழுதுகளில் குட்டீஸ்களின் ஓட்டுக்களை அறுவடை செய்திட இன்னொரு திட்டமிடலுமே இறுதி வடிவம் கண்டு வருகிறது ; அது நனவாகிடும் போது உங்கள் ஒவ்வொருவரின் ஒத்தாசைகளும்  எனக்கு அவசியமாகிடும் guys !! 

அப்புறம் சீனியரின் "அந்தியும் அழகே" தொடர் டாப் கியரில் துவங்கியுள்ளதில் குஷி எனக்கு ! And சீனியருக்கு குஷியோ-குஷியாக இருக்குமென்பது திண்ணம் ! 1986-ல் திகில் காமிக்ஸ் துவங்கிய நாட்களில் பேனா பிடிக்கும் ஆவலில் ஒரு பகுதியினை புனைப்பெயரில் எழுதிட சீனியர் முயன்றது எத்தனை பேருக்கு நினைவுள்ளதோ தெரியலை ; in fact அது சீனியருக்கே நினைவிருந்தால் வியப்பு தான் !  ஆனால் அந்த முனைப்பு ரொம்பச் சீக்கிரமே காற்றில் கரைந்து போயிட, நாமுமே "சிறு திகில் கதைகள்" என்ற தடத்திலிருந்து முழுநீளக் கதைகளுக்கு மாறியிருக்க, சீனியரின் எழுத்தாளக் கனவு காலாவதியாகி இருந்தது அன்றைக்கு ! இதோ - இன்றைக்கு ஒரு மறுவாய்ப்பு கிட்டியுள்ளது & இம்முறையோ நிறைய கோல புக்களிலும், பால் கணக்கு நோட்டுகளிலும் ஓரஞ்சாரங்களில் எழுதி டிரெய்னிங் எடுத்து தயாராக இருக்கிறார் ! உங்களின் உற்சாகங்கள் அவருக்கு உத்வேகங்களைத் தந்தால் அடுத்த 11 மாதங்களுக்கு என் சொற்பச் சிண்டு தப்பிக்கும் ! 

And ஏற்கனவே சொல்லியிருந்தது போல - வரும் ஞாயிறன்று ஆன்லைன் மீட்டிங் ஒன்றினை சீனியருடன் திட்டமிடலாம் !  ஆர்வமுள்ளோர் இங்கு கைதூக்குங்களேன் ப்ளீஸ் ; ஓரளவுக்கு ஜனம் தேறினால் we'll go ahead ! அல்லது - ஏதேனும் நேர்காணல் போல திட்டமிட்டால் சுவாரஸ்யமாக இருக்குமெனில் that's a possibility too ! சொல்லுங்களேன் guys - எது சுகப்படுமென்று ! ஒரேமட்டுக்கு பொங்கல் விடுமுறைகளில் ஏதேனுமொரு தினத்தில் திட்டமிட்டால் உங்களுக்கு வசதியாக இருக்குமெனில், that'd be fine too !! அந்நேரத்திற்குள் FFS  இதழ்களைப் படித்திருக்கவும் உங்களுக்கு வாய்ப்புகள் கிட்டியிருக்கலாமெனும் போது - அதனிலிருந்த சமாச்சாரங்கள் பற்றியும் கேள்விகள் எழுப்ப உங்களுக்கு சாத்தியமாகிடலாம் ! யோசித்துச் சொல்லுங்களேன் !

ரைட்டு....ஒரு மெகா இதழ் உங்கள் கைகளில் ; அப்புறம் சென்னைப் புத்தக விழாவானது அரசாங்க வழிகாட்டுதலின்படி தள்ளிப் போகிறது என்ற நிலையில், 29 நாட்களின் தொலைவினில் வேதாளரும், பிப்ரவரி மாதத்து இதழ்களும் தான் நமது அடுத்த இலக்காகி நிற்கின்றது ! இடையினில் லயன் லைப்ரரியின் இதழ் # 1 - நமது ஆன்லைன் புத்தக விழாவின் தினத்தன்று ரிலீசாகிடும் ! அது சார்ந்த பணிகள் ஏற்கனவே ஓவர் எனும் போது - எனக்கங்கே பெருசாய் நோவுகளில்லை ! கலரில் 'தல' ஜொலிப்பதை பராக்குப் பார்ப்பது மட்டுமே அங்கே எனது முனைப்பாக இருந்திடும் ! So சங்கை நெரிக்கும் pressure இன்றி, ஜாலியாய் பணியாற்றும் சில நாட்கள் கண்முன்னே தெரிகின்றன !! Fingers Crossed !!

And ZAGOR அறிமுக இதழின் கலர் டிஜிட்டல் கோப்புகளும் கொஞ்ச காலத்துக்கு முன்னமே வந்தாச்சு !! Phew .....கண்ணைக் கட்டும் தரத்தில் artwork & கலரிங் டாலடிக்கிறது ! இந்த நொடியில் எனது ஒரே கொயப்பமானது - இவருக்கு எப்போது ஸ்லாட் ஒதுக்குவது என்பதே !! 

  1. லயன் லைப்ரரி # 1 - TEX க்ளாசிக்ஸ் 1 
  2. லயன் லைப்ரரி # 2 - உயிரைத் தேடி..!
  3. லயன் லைப்ரரி # 3 - சுஸ்கி & விஸ்கி 

என்று ஏற்கனவே 3 துண்டுகள் விரிக்கப்பட்டுக் கிடக்கின்றன ! இவருக்கு நான்காவது துண்டை விரித்துப்புடலாமா ? What say folks ?

கிளம்பும் முன்பாய் ஒரு கோக்கு மாக்கான மேட்டர் பற்றி !! "கார லட்டு" பட்டியலில் இதனையும் இணைத்திட எண்ணியிருந்தேன் முதலில் ! ஆனால் கோப்புகளை வரவழைத்துப் பார்த்த பின்னே குதிங்கால் பிடரியிலடிக்க ஓட்டமெடுத்தேன் ! என்ன மேட்டர் என்கிறீர்களா ?

கௌபாய் கதைகளில் ஒரு வண்டியை நாம் பார்த்திருப்போம் ! அழகான அம்மணிகள் சலூன்களில் நர்த்தனம் ஆடிக்கொண்டிருப்பர் ; அல்லது ஈரோ சாருக்கு டாவாக இருப்பர் ; இல்லாங்காட்டி வில்லனுக்குத் தோழியாய் இருந்து விட்டு, இறுதியில் அவனுக்கே குழி பறித்து விட்டு மண்டையைப் போடும் அம்மையாராக வலம் வருவர் ! குளிக்காத நம்ம குதிரைப் பசங்களோ - சவரம் காணாத முகரைகளோடு சலூனில் சரக்கடித்து ; சலம்புவது ; சுட்டுக் கொண்டு செத்து செத்து விளையாடுவது ; அழகான அம்மணிகளை அடைய அழிச்சாட்டியம் செய்வது ; புதையலைத் தேடி அலைவது ; யாஹூ - என்றபடிக்கே செவ்விந்தியர்களை சாய்ப்பது என்ற மாமூலில் திரிவது வழக்கம் அல்லவா ? ரைட்டு...ஒரேயொருவாட்டி அப்படியே சகலத்தையும் உல்டாவாக்குங்களேன் : 

  • சலூனில் டான்ஸ் ஆடும் பொறுப்பை தடிப் பசங்களுக்கும் ;
  • சலூனில் சரக்கடித்து, கெட்ட கெட்ட வார்த்தைகளை பேசி ரவுசு விடும் வேலைகளை பெட்டைகளுக்கும் தந்து....
  • குளத்தில் ஜலக்கிரீடைகள் செய்யும் அழகை ஆம்பிளை பசங்களுக்குத் தந்து ;
  • அவர்களை சைட் விடும் லொள்ளை பெண்பிள்ளைகளுக்கும் தந்து ....
  • செவ்விந்தியர்களோடு மோதுவதையும் பெட்டைகளே செய்து...
  • சிறைபிடிக்கப்பட்ட ஆண்களை மீட்பதும் அவர்களாகவே இருந்து...

ஒரு கதை உருவாகினால் எவ்விதம் இருக்கும் ? இதோ - இதை போல :



 





வன்மேற்கின் கதை மாந்தர்களின் பாலினத்தை மட்டும் அப்படியே உல்டாவாக்கினால் எவ்விதமிருக்கும் என்பதை ஒரு பகடியாய் உருவாக்கியுள்ளனர் ! என்ன - அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் மட்டும் தூக்கலாய் உள்ளன ! இல்லாங்காட்டி, இதனை கார லட்டு வரிசையில் சேர்த்திருக்கலாம் - ஜாலியாய் கெக்கலிக்கும் பொருட்டாவது ! But ரொம்பவே கிச்சாக்கோ...முச்சாக்கோ பாணி என்பதால் தடா போட வேண்டியதாகிறது ! எது எப்படியோ - கற்பனைகளின் எல்லைகளை நீட்டிக் கொண்டே போவார்கள் போலும் இந்தப் படைப்புலக அசுரர்கள் !! 

And by the way - "மகளிர் மட்டும்" என்றதொரு மெய்யான லட்டு கூட நமது ரேடாரில் உள்ளது ! இங்கே ஈரோ ; வில்லன் ; அல்லக்கை - என சகலமும் ஸ்கர்ட் போட்ட அம்மணிகளே ! இளவரசர்கள் போன்ற கூச்ச சுவாபிகள் நம் மத்தியினில் இருப்பதால் தான் இதனை லட்டு பிடிக்க தயங்குகிறேன் ! இல்லையேல் - பூந்தி லட்டு cum கார லட்டு வரிசையில் இதனை இணைத்திருக்கலாம் !! What say guys ? மகளிர் மட்டும் நமக்கு ஓ.கே. ஆகிடுமா ?

ரெம்போவே நாழியாகி விட்டதென்பதால் கிளம்புகிறேன் !! அனைவருக்கும் நமது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! இந்த ஆங்கிலப் புது வருஷம் சகல நலன்களையும் நமக்கு நல்கிட ஆண்டவனிடம் கரம் கூப்புவோம் ! Bye all ...see you around !! 

191 comments:

  1. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. 2022 ஆம் ஆண்டின் முதற் பதிவில் முதல் பின்னூட்டம் அடியேன். மிக்க மகிழ்ச்சி.

      Delete
  2. Happy new year editor and team. Happy new year friends

    ReplyDelete
  3. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு ,

    வணக்கம்.புத்தகங்கள் வந்துவிட்டன.என் மகனின் போட்டோ மிகப்பிரமாதமாய் வந்துள்ளது. பொன்விழாச் சிறப்பிதழ்கள் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டன.பிரமிப்பிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.மனம் நிறைந்துவிட்டது மகிழ்ச்சியால்.தங்களுக்கும் தங்கள் குழுவினர்க்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் & வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. 2022 தெறிக்கும் ஆண்டாக இருக்கப்போகிறது என்று ஜனவரி இதழ்கள் கட்டியம் கூறுகின்றன...

    ஐம்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முத்துவிற்கு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. ஞாயிறு ஜூம் அல்லது கூகிள் மீட் எதுவானாலும் ஓகே தான் சார்.

    நேரம் குறித்து ஒரு மீட்டிங் போட்டு லிங்க் இங்கு போட்டால் வந்துவிடுகிறேன்.

    புத்தக விழாக்கள் இல்லாமல் உங்களுடன் நேரிடையான உரையாடல்கள் இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும் புதிய ஒரு விசயத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது போல இருக்கும்.

    ReplyDelete
  8. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. பொம்மை புக்குக்கு சாக்லேட் யா... என் பையனின் வியப்பு.
    ஒரு பொம்மை புக்குக்கு இவ்வளவு மெனக்கெட லா.... காமிக்ஸ் மேல் காதல் கொண்ட ஒருவரால் மட்டுமே இப்படி எல்லாம் தர முடியும்... இது என் மனைவியின் வியப்பு.
    முத்து 50 ஆவது ஆண்டு சிறப்பு மலரை நான் பார்க்க முடியாத போதிலும் இவர்கள் இருவரின் மூலம் அந்த சந்தோசத்தை அனுபவித்தேன். காமிக்ஸ் படிப்பவர்களை மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தினரையும் சந்தோஷப்படுத்தும் கலைகளை கற்ற ஆசானே தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    ReplyDelete
  10. //டாக்டர்களுக்கும், கேசம் குறைந்த பதிப்பாளர்களுக்கும் பிரியத்துக்கு உகந்த அம்மணி மாத்திரமே புராதனங்களுக்கொரு அடையாளமாய் வரும் ஆண்டுகளில் தொடர்ந்திடுவார் !

    அப்போ கிளாசிக் 007 அவுட்டா

    ReplyDelete
  11. ஆசிரியரே நீங்கள் சொன்னால் நேராய் சிவகாசிக்கே வர்றோம் மீட்டிங்க போட்டுறலாம்
    ஆகஸ்ட் ஈரோடு புக்ஃபேர் நடக்கனும் அப்பதான் உங்களை மீட் பன்னமுடியும் ஆண்டவனே கருனை காட்டுங்கள்

    ReplyDelete
  12. ஆன்லைன் புத்தக திருவிழா 13 to 16 விளம்பரத்தில் ஸ்பைடர் இன் கதை உள்ளதே அது வெளி வருவதற்கு சாத்தியப்படுமாயின் மிகச் சிறப்பாக இருக்கும் ப்ளீஸ் ஆசிரியரே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    ReplyDelete
  13. Happy New year to all.Special Thanks to Editor and Team!

    ReplyDelete
  14. Zagorகண்டிப்பாக வேண்டும்.,.. முடிந்தால் உயிரைத் தேடி கொஞ்சம் பின்னே தள்ளி இவரை முன்னே கொண்டு வந்தால் கூட சந்தோசமே.

    ReplyDelete
  15. காமிக்ஸ் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. ZAGOR ZAGOR ZAGOR ZAGOR ZAGOR
    ZAGOR ZAGOR ZAGOR ZAGOR ZAGOR
    ZAGOR ZAGOR ZAGOR ZAGOR ZAGOR
    ZAGOR ZAGOR ZAGOR ZAGOR ZAGOR
    ZAGOR ZAGOR ZAGOR ZAGOR ZAGOR
    ZAGOR ZAGOR ZAGOR ZAGOR ZAGOR
    ZAGOR ZAGOR ZAGOR ZAGOR ZAGOR

    MONDO REVERSO
    MONDO REVERSO
    MONDO REVERSO
    MONDO REVERSO
    MONDO REVERSO

    ReplyDelete
    Replies
    1. MONDO REVERSO, MONDO REVERSO, MONDO REVERSO, MONDO REVERSO
      MONDO REVERSO, MONDO REVERSO, MONDO REVERSO, MONDO REVERSO
      MONDO REVERSO, MONDO REVERSO, MONDO REVERSO, MONDO REVERSO
      MONDO REVERSO, MONDO REVERSO, MONDO REVERSO

      Delete
  17. சீனியர் எடிட்டர், எடிட்டர்,ஜூனியர் எடிட்டர் அவர்தம் குடும்பத்தினருக்கும், பணியாளர்கட்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    🌹🌹🌹💥💥💥💥🌈🌈🌈🎇🎇🎇🎆🎆🎆

    ReplyDelete
  18. விஜயன் சார் & நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 💐💐💐

    ReplyDelete
  19. வந்துட்டேன். நமது ஆசிரியர் அவர்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. வணக்கம் ஆசிரியரே, நண்பர்களே!

    மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கும், அலுவலக அன்பர்களுக்கும், காமிக்ஸ் நட்புகள் அனைவருக்கும் 2022 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஜூம் மீட்டிங் - கண்டிப்பாக.

      ஜாகோர் - நிச்சயமாக.

      Delete
    2. மகளிர் மட்டும் - எனக்கு ஒ.கே.
      வேண்டுமானால் கூச்ச சுபாவமுடைய இளவரசரின் புத்தகத்தையும் எனக்கே அனுப்பி விடுங்கள்.

      Delete
    3. இந்த புத்தாண்டுத் தீர்மானம்

      அந்தந்த மாத புத்தகங்களை அந்தந்த மாதத்திலேயே படித்து விட வேண்டும்.

      Delete
  21. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  22. எடிட்டர் சார் & நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  23. // And ஏற்கனவே சொல்லியிருந்தது போல - வரும் ஞாயிறன்று ஆன்லைன் மீட்டிங் ஒன்றினை சீனியருடன் திட்டமிடலாம் //
    நல்ல விஷயம் சார்,நமக்குத்தான் டைம் லேது...

    ReplyDelete
  24. டியர் விஜயன் சார், உங்கள் குடும்பத்தினர்-அனைவருக்கும், அலுவலக நண்பர்களுக்கும், மற்றும் காமிக்ஸ் நேசங்கள்- அனைவருக்கும் 2022-ன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. "முத்து "ஆசிரியரின் - அந்தியும் அழகே - அழகாகவும், தெளிவாகவும், சரியன கோணத்திலும்- எழுதுகிறார்.
    எனக்குமே, பல கதைப்புத்தகங்கள் படித்தாலும், எப்போது முதல் காமிக்ஸ் காதல் ஏற்பட்டது. என்ற அந்த பால்ய நினைவுகளை தூண்டும் விதமாக ஆசிரியரின் கட்டுரை - விவரித்து செல்கிறது..
    நன்றிகள்..சார்...
    எங்களது காமிக்ஸ் நேசத்திற்கு ஒரு முழுமை கிடைத்தது போல் உள்ளது..

    ReplyDelete
  27. லயன் லைப்ரரியின் இதழ் # 1 - நமது ஆன்லைன் புத்தக விழாவின் தினத்தன்று ரிலீசாகிடும் ! //
    சூப்பர்,ஆன்லைன் லிஸ்டிங் போட்டா கொஞ்சம் முன்னாடியே புக் பண்ண வசதியாக இருக்கும் சார்...

    ReplyDelete
  28. // என்று ஏற்கனவே 3 துண்டுகள் விரிக்கப்பட்டுக் கிடக்கின்றன //
    அடடே,அப்ப லயன் லைப்ரரியில் தலைக்கு ஒரு ஸ்லாட் தானா ?!

    ReplyDelete
  29. // அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் மட்டும் தூக்கலாய் உள்ளன ! இல்லாங்காட்டி, இதனை கார லட்டு வரிசையில் சேர்த்திருக்கலாம் //
    இது இனிப்பு லட்டாச்சிங்களே,என்ன கொஞ்சம் திகட்டற இனிப்பு லட்டு...

    ReplyDelete
  30. // மகளிர் மட்டும் நமக்கு ஓ.கே. ஆகிடுமா ? //
    படிக்கவும்,பார்க்கவும் ஓகேன்னா போட்டுத் தாக்கலாம் சார்...

    ReplyDelete
  31. "முத்து" - 50வது ஆண்டு-பொன்விழா- மலரைப் பொறுத்தவரை சிறு குழந்தையாகவே ஆக்கிவிட்டீர்கள்..
    புத்தகத்தை அட்டை ஓவியத்தை ரசித்துப் பார்க்கவும், உள்ளே பக்கம் பக்கமாக புரட்டி ரசிக்கவும்-கதை மட்டும் அல்லாமல் - நாம் ஏதிர்பார்த்த கட்டுரைகளும் இருக்கிறதே - அலுவலக நண்பர்கள்-பற்றி. என்று..
    பார்த்து பார்த்து ரசித்துக்கொண்டே தான் இருக்கச் சொல்கிறது.
    இந்த பிரமிப்பு அடங்கியபின்புதான் படிக்கத் தோன்றும்.. சார்..

    ReplyDelete
    Replies
    1. நிறைய அவகாசம் உள்ளது சார் ; சாவகாசமாய்ப் படித்திட !! Enjoy !!

      Delete
  32. என் பெயர் டேங்கோ :

    மறைந்து வாழும் நாயகன்,உடன் அன்பான குட்டி நண்பன் டியேகோ,தேடி வரும் ஒரு கும்பல்,யாரைத் தேடுகிறார்கள்,எதற்குத் தேடுகிறார்கள் ?!
    முடிவா என்னாச்சி ?!

    நம் நாயகன் ஜான் எனும் டேங்கோ ஒரு தனிமை விரும்பியாகவே காட்டப்படுகிறார்,ஆனால் டேங்கோவின் முன்கதை எதிர்மாறாக உள்ளது,கடந்தகாலத்தின் கசப்பான அனுபவங்கள் இந்த முடிவை எடுக்க வைத்து விட்டது போலும்...
    எப்போதும் அனுபவங்களால் கிடைக்கும் கசப்பான முடிவுகள் எதிர்மாறான முடிவை எடுக்க வைக்குமோ அல்லது கடலின் தனிமை போல பாலையின் தனிமை டேங்கோவிற்கு பிடித்து விடுகிறதோ ???!!!

    டேங்கோ கதையில் பிரதான பாத்திரங்களுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை "எல்லோருக்கும் ஒரு முன்கதை உள்ளது "...

    டேங்கோவிற்கு உதவும் இரு பாத்திரங்கள்-அகஸ்டினோ,மரியோ...
    இதில் நாம் பாசிட்டிவாக பார்த்தால் இறுதியில் அகஸ்டினோவிற்கு கிடைப்பது வாக்கைக் காப்பாற்றிய நிறைவு,மரியோவிற்கு கிடைப்பது தேடிய சிறுவன் (டியேகோ)...

    நெகட்டிவாக பார்த்தால் இறுதியில் அகஸ்டினோவிற்கு தோன்றுவது எல்லாம் பூஜ்யம் எனும் வெறுமை,மரியோவிற்கு தோன்றுவது அடுத்து என்ன எனும் வெறுமை...
    அட சுவாரஸ்யமாதான் இருக்கு....

    டேங்கோவும் டியேகோவும் மலைப் பகுதியில் ஒரு தேடலில் "இன்கேன் காலம்" என வார்த்தை பிரயோகம் வருகிறது...சரி என்னன்னு கூகுளாரை கேட்டா
    13 ஆம் நூற்றாண்டு-
    இன்கா பேரரசு வந்தது...
    இன்கா நாகரீகம்னு ஏதாவது இருக்கோ ?!
    அந்த காட்சியமைப்பு எதற்கு ?!
    தொடரும் டேங்கோவின் சாகஸங்களில் அது பற்றிய விளக்கங்களை எதிர்பார்க்கிறேன் ?!

    சில இடங்களில் வசனங்கள் கொஞ்சம் நீளம் அதிகமா இருக்கோன்னு தோணிச்சி,இருப்பினும் கதையின் போக்கில் நச் என்ற வசனங்கள் :

    "பயத்துக்கும்,புத்திக்கும்தான் எப்போதுமே ஏழாம் பொருத்தமாச்சே"

    "ஒரு அசிங்கமான வரலாறு இல்லாத ஜனமோ,செய்ததை நினைத்து உள்ளுக்குள் வெட்கித் தலைகுனியாத மக்களோ ரொம்ப ரொம்பக் குறைச்சல்"

    "நண்பனுக்குத் தேவையறிந்து கைகொடுக்க வேண்டுமே தவிர,அவனைத் தராசில் நிறுத்திப் பார்க்கலாகாது"

    "வெளித் தோற்றங்கள் எப்போதுமே முழுக் கதையையும் செல்வதில்லை"

    "நெஞ்சம் நிறைய இரகசியங்களையும்,
    பொய்களையும் சுமந்து திரிவோருக்குப் பஞ்சமே கிடையாது தான் போலும்"

    "மனிதர்கள் குறைவு என்றால் தலைவலியும் குறைவுதானே"

    "கெட்ட பயல்களால் நிரம்பி வழியும் இந்த உலகத்தில் தாக்குப் பிடிக்க வேண்டுமானால் அவ்வப்போதாவது நாய் குணத்தை வெளிப்படுத்த வேணும்தான் போலும்"



    என் பெயர் டேங்கோ-அக்மார்க் ஆக்‌ஷன் பிளாக்.

    படித்து முடித்தவுடன் கேட்கத் தோன்றியது- "டேங்கோ நீங்க நல்லவரா,கெட்டவரா" ?!

    300 பக்கத்தில் முதல் பேனலும்,313 ஆம் பக்க மெகா பேனல் காட்சியமைப்பும் அட்டகாசம் சார்...

    டியேகோ வீட்டின் இரண்டு கார் இருந்த பேனலைப் பார்த்ததும் அடுத்து ஏதோ பிரச்சினை வரப் போகுதுனு பட்சி சொல்லிச்சி,அட சரியா போச்சி,வாசிப்பில் கொஞ்சம் தேறிட்டேன் போல,ஹி,ஹி......

    சிறுகுறையாய் தென்பட்டது : சில பக்கங்கள் கலரிங் டல்லாக இருந்தது (மங்கிப் போய்),பிரிண்டிங் பிரச்சனையோ ?!

    எமது மதிப்பெண்கள்-10/10.

    ReplyDelete
  33. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஸார்..

    அப்புறம் உங்க ஆபிஸில் கூட்டல் பெருக்கல் வேலை ஏதாச்சும் இருக்கா ஸார்???

    ReplyDelete
    Replies
    1. அஸ்கு..புஸ்கு...அந்த வேலையெல்லாம் ஆயுட்கால குத்தகைக்கு விட்டாச்சுங்கோ ! அந்த வேலையையும் விட்டுப்புட்டு நான் என்ன செய்றதாம் !!

      Delete
  34. சத்தமாய் ஒரு மெளனம் :
    ப்ரெஞ்ச் பிரஸிடெண்டுடன் நேரடி டீலிங்கில் இருக்கும் ஸெயின் செர்வானுக்கும் பிரஸிடெண்டுக்கும் முட்டிக் கொண்டுவிட அவரை சமாளிக்கும் பொறுப்பு ஏஜெண்ட் சிஸ்கோவோடம் வருகிறது,அடுத்து நடக்கும் "டுமீல்" சம்பவத்தை பார்க்கும் அறை சுத்தம் செய்யும் ஆசாமி தெறித்து ஓட சிக்கலின் பின்னணி கடுமையாகி எல்லோரையும் ஆபத்தில் மாட்டிவிட,ஏஜெண்ட் சிஸ்கோவின் நிலை ?!
    அந்த சிக்கலை களைந்தார்களா ?!ஏஜெண்ட் சிஸ்கோவை எப்போதும் சிக்கலில் மாட்டிவிட காத்திருக்கும் உடன் பங்காளி ஏஜெண்ட் வெர்ராட்,தப்பிச் சென்று ஆட்டம் காட்டும் ஆசாமி,பிரஸ்டெண்டின் கோபத்திற்கு ஆளாகும் ஏஜெண்ட் சிஸ்கோ நிலை...
    இதெல்லாம் பரபர ஆக்‌ஷனில் சொல்லி அசத்தியுள்ளனர் படைப்பாளிகள்,கிட்டத்தட்ட துரத்தி விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டம் தான்...

    ஏஜெண்ட் சிஸ்கோ திறமைசாலியாக இருப்பினும் ஆங்காங்கே சொதப்புவது போலான காட்சியமைப்பு கொஞ்சம் உறுத்தல்...

    கொஞ்சம் சினிமாத்தனமான ஆக்‌ஷன்,சேஸிங்,டுமீல்,டமால் காட்சி அமைப்புகள் இருப்பது நம்பகத்தன்மையை தாண்டி இருப்பினும்,அதிகாரமட்டத்திற்காக நடக்கும் மோதலாய் காட்டப்படுவதால் நம்புவதில் சிரமம் இல்லைதான்,அவங்க பவரை வெச்சிதான் என்ன வேணா பண்ணுவாங்களே...!!!

    ஆங்காங்கே "இழவு" வார்த்தைகள் மட்டும் கொஞ்சம் உறுத்தலாய் இருக்கு சார்,இது எல்லா சாகஸங்களிலும் தவறாமல் இடம் பெறுகிறது,முடியல...

    எமது மதிப்பெண்கள்-09/10.

    ReplyDelete
  35. துரோகம் ஒரு தொடர்கதை :
    பெரிதாய் நடக்குமொரு பணப் பரிமாற்ற நிகழ்வில் உண்டாகும் அதிரடிகளும்,அதன் தொடர்ச்சியாக நடக்கும் திருப்புமுனைகளுமே கதைக் களம்...
    டைகர்,லார்கோ கதைகளையே மிஞ்சும் அளவுக்கு எக்கச்சக்க பேனல்கள்,ஏகப்பட்ட டயலாக்குகள்,
    வார்த்தை குவியல்கள்,எப்படி சார்,,, பெண்டு நிமிர்த்தி இருக்குமே மொழி பெயர்ப்பு...
    டாலர்கள் ரூபிள்கள் சார்ந்த சர்வதேச பணப் பரிமாற்றம்,
    ரஷ்ய மாஃபியா,சர்வதேச மாஃபியாக்கள்,KGB உளவுத்துறை,CIA குறுக்கீடு...
    களம் எங்கெங்கோ சிறகை விரிக்கிறது...

    இங்கும் சர்வதேச கண்ணாமூச்சி ஆட்டம்தான்,நல்லதற்கும்,
    கெட்டதற்குமான ஆட்டமாய் இல்லாமல் அசுர அணிகளுக்கு இடையேயான ஆட்டம்,துரோகங்கள்,கூட்டுச் சதிகள்,முதுகில் குத்துதல் சாதரணமாய் நடக்கிறது...

    நாம் ஒரு வாசிப்பாளராக தொடர்ந்து வாசித்துக் கொண்டே செல்ல வேண்டியதுதான்,எந்த பக்கமும் சாயாத பாபா மாதிரி அப்படியே நேர்கோட்டில் போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான்...
    ஏஜெண்ட் ஆல்பாவும் உத்தரவுகளை நிறைவேற்றும் ஒரு ஏவலாளியே...

    முதல் பாகத்தில் ஏஜெண்ட் ஆல்பாவிற்கு பெரிதாய் ஆக்‌ஷன் ரோல் இல்லை,ஒன்லி லவ்பாய் ரோல்தான்,சரி அடுத்தடுத்த பாகங்களில் ஏதாவது செய்வார்னு பார்த்தா,ரொமான்ஸ் பண்றாரு அம்புட்டுதான்,கடைசி பார்ட்டில் இன்னொரு டீம்தான் வந்து அவரை காப்பாத்துது...
    தொடரும் பாகாங்களிலாவது ஏதாவது செய்வாரா ஆல்பா ?!

    2 ஆம் பாகத்தில் அஸ்ஸியா தன் கணவருடனான மனச் சங்கடத்தில் வெளியேறும் காட்சியின் அடுத்த பேனலில் அஸ்ஸியாவின் தலைக்கு மேல் வானில் காட்டப்படும் பிளைட்டும்,அடுத்து அதில் வந்து இறங்கும் ஆல்பாவும் செமையான காட்சியமைப்பு சார்...

    உறுத்தலாய் தெரிந்த சில விஷயங்களையும் பகிர நினைக்கிறேன்,
    வசனங்களில் எதிராளியிடம் இருக்கும் எரிச்சலை காட்டமாய் காட்ட "வேசி மகன்"," தே.... பையா" போன்ற கடும் வார்த்தை பிரயோகங்கள் கையாளப்படுகின்றன, இதை தவிர்க்க முடியாதா ?!
    அதே நேரத்தில்,கதைகளில் மட்டுமல்ல எதார்த்த வாழ்க்கையிலும் கூட எதிராளியை விமர்சிக்கும் எவரும் அவரின் மீதான எரிச்சலைக் காட்ட,பெற்ற தாயையோ,குடும்ப பெண்களையோ சந்திக்கு இழுத்து விடும் ஈனப் புத்தி நிறைய பேருக்கு உள்ளது...
    இது பொதுப் புத்தியின் அடையாளமாகி விட்டதா ?!
    மனித மனத்தின் வக்கிர உணர்வின் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்றா ?!
    இது ஒரு உளவியல் சார்ந்த தாக்குதலா ?!
    -இப்படி பல வினாக்கள் தோன்றுகின்றன...

    ஈர்த்த வசனங்கள் :
    "மனித மனங்களில் எழக்கூடிய சலனங்களும்,அந்த மனங்கள் திசை மாறும் விதங்களும் ஒரு உளவாளி எடுக்கக் கூடிய தீர்மானங்களுக்கு ரொம்பவே உதவிடுவதுண்டு"

    எமது மதிப்பெண்கள்-8/10.

    ReplyDelete
    Replies
    1. //வசனங்களில் எதிராளியிடம் இருக்கும் எரிச்சலை காட்டமாய் காட்ட "வேசி மகன்"," தே.... பையா" போன்ற கடும் வார்த்தை பிரயோகங்கள் கையாளப்படுகின்றன, இதை தவிர்க்க முடியாதா ?!//

      சிம்பிள் லாஜிக் சார் :

      ஒரு காமிக்ஸ் படைப்பின் துவக்கமும், இறுதியும் அதன் கதாசிரியரே ; கதை ; அதன் மாந்தர்கள் ; அதன் போக்கு, ஓட்டம் - என சகலத்தையும் சிருஷ்டிப்பவர் அவரே ! ஓவியருக்கு அவர் வழங்கும் குறிப்புகளில் - நாயகன் இந்த உசரத்தில் ; இந்த மாதிரிக் கண்களோடு ; இந்த உடல்வாகில் இருந்திட வேண்டும் என்பதில் ஆரம்பித்து, அவர் போட்டிருக்க வேண்டிய டிரஸ் ; அவர் பயணிக்க வேண்டிய கார் ; நடக்க வேண்டிய சாலையின் அமைப்பு, கையில் பிடிக்க வேண்டிய பிஸ்டலின் மாடல் ; கால நேர அமைப்பு - என சர்வ விவரிப்புகளையும் தந்திருப்பார் ! So கதாபாத்திரங்களின் வெளிப்புறத் தோற்றத்தை வடிக்கும் பொறுப்பு ஓவியரிடம் அந்த நிலையில் கைமாறுகிறது ! ஆனால் -

      அதே மாந்தர்களின் மனோபாவங்கள் ; mindset ; சிந்தனையோட்டங்கள் ; அவர்களது குணாதிசயங்கள் ; நச்சுத் தன்மைகள் - என உள்ளுக்குள்ளான அத்தனை சமாச்சாரங்களை வெளிப்படுத்த கதாசிரியர் கையில் எடுப்பது வசனங்களையும், பின்னணி விவரிப்புகளையுமே ! So அழுத்தங்களை அடிக்கோடிடவோ, ஆக்ரோஷத்தை சொல்லவோ, அந்த வில்லனின் கொடூரத்தை highlight செய்திடவோ கதாசிரியர் பயன்படுத்தும் வார்த்தைகளின் பின்னேயும் ஒரு லாஜிக் உள்ளது ! And நான் பேனா பிடிக்கும் போது அங்கெல்லாமே வீரியம் குறைச்சலான வார்த்தைகளை பிரயோகம் செய்திட்டால் - கதாசிரியரின் நோக்கம் dilute ஆனது போலாகி விடாதா ?

      தவிர, இங்கே நமது target audience யார் சார் ? பத்தி பத்தியான வசனங்களுடனான இந்த complex கதைகளுக்குள் சிறார்கள் சத்தியமாய் சுட்டு விரல்களைக் கூட நுழைத்திடப் போவதில்லையே ? கிட்டத்தட்ட 35 + வாசகர்களே இங்கே நமது audience எனும் போது வசனங்களின் முனைகளுக்கு குஷன் மாட்டிட அவசியப்படுமா - என்ன ? சித்திரங்களில் இதே அளவுகோல்களை பயன்படுத்திடல் சிரமமே ; புக்கைப் புரட்டும் குட்டீஸ்களின் கண்களில் பட்டுவிடுமோ - என்ற பயத்தில் ! ஆனால் அவர்கள் வாசிக்க வாய்ப்பே இல்லாத களங்களிலாவது ஒரிஜினலோடு ஒன்றிப் பயனிப்போமே என்று நினைத்தேன் சார் !

      And அந்த "இழவு" வரும் இடங்களில் பெரும்பாலும் f **k வார்த்தைகளோ ; shit வார்த்தைகளோ தான் பிரவாகமெடுக்கின்றன சிஸ்கோ கதையினில் ! அங்கும் அந்த நாயகனின் குணாதிசயமே ஒருவித பொறுமையற்ற ; 'வெட்டொன்று-துண்டு ரெண்டு' பாணி தானே ? பிரசிடென்டின் செக்ரட்டரியை அவசரமாய் அழைத்துப் போன கையோடு...வேலை ஆன பிற்பாடு "ஆங்....கிளம்பு...கிளம்பு.." என்று பத்தி விடும் போதே கதாசிரியர் establish செய்கிறார் - இந்த ஹீரோ ஒழுக்கசீலனோ ; பொறுமைக்கார பார்ட்டியோ நஹி என்பதை ! So அம்மாதிரியான ஆசாமி வாயைத் திறந்தாலே 'நறுமண' வார்த்தைகள் பிரவாகமெடுப்பது இயல்பு தானே சார் ?

      டேங்கோவைப் பொறுத்தவரையிலும், ஏற்கனவே நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயத்தைப் பற்றி எழுதியிருந்தேன் ; 'நிறைய எக்ஸ்டரா நம்பர்ஸ் போட்டிருப்பேனோ ? ' என்ற சந்தேகங்கள் - விஸ்தீரணமான விவரிப்புகளின் போது எழக்கூடுமென்று ! Rest assured - சகலமும் ஒரிஜினலின் வாசகங்களே ! கதையை நகர்த்திச் செல்வதே கதாசிரியரும் அவரது மோனோலாகும் தான் எனும் போது அவரது சில தத்துவார்த்தப் பார்வைகள் நீட்டி முழக்கும் வரிகளாய்த் தோன்றிடலாம் தான் ; but yet again - கதையின் போக்கையும், கதாநாயகனின் அடையாளத்தையும் ; காத்துள்ள கதைகளில் நான் எதிர்பார்த்திடக் கூடியது என்னவென்பதையும் பதிவிட கதாசிரியர் கையில் எடுத்துள்ள யுக்தியே அது என்பது எனது புரிதல் சார் !

      எந்தவொரு கதைக்குமே சிந்தனைகளின்றி பேனாவினை செயல்பட இம்முறை நான் அனுமதிக்கவே இல்லை சார்; almost every line has a reason to it !

      Delete
    2. And அத்தனை கதைகளுக்கும் அசுர கதி அலசல் - woww !!! நன்றிகள் சார் !

      Delete
    3. /டைகர்,லார்கோ கதைகளையே மிஞ்சும் அளவுக்கு எக்கச்சக்க பேனல்கள்,ஏகப்பட்ட டயலாக்குகள்,வார்த்தை குவியல்கள்,எப்படி சார்,,, பெண்டு நிமிர்த்தி இருக்குமே மொழி பெயர்ப்பு...//

      செம ஜாலியான அனுபவங்களாக இருந்தன சார் - இந்த ஒட்டுமொத்த மொழிபெயர்ப்பு நாட்களுமே ! ஒவ்வொரு அத்தியாயத்தினை நிறைவு செய்திடவும் ஒரு deadline போட்டுக் கொண்டு, அதனோடு போட்டியிட்டதெல்லாம் மறக்காது என்னளவில் !

      Delete
    4. // And அத்தனை கதைகளுக்கும் அசுர கதி அலசல் - woww !!! நன்றிகள் சார் ! //
      பல்வேறு சிரமங்களுக்கு இடையே புத்தகங்களை நீங்கள் பிரசவித்திருக்க,என்னால் முடிந்த சிறு வேலை சார்,ஒரு சின்ன சந்தோஷம் இதில் வேறென்ன...

      Delete
  36. சத்தமாய் ஒரு மெளனம் துரோகம் ஒரு தொடர்கதை மற்றும்
    என் பெயர் டேங்கோ என்னளவில் தோன்றிய ஒப்பீடு :
    சிஸ்கோ கதைக் களம் நல்லவன்,கெட்டவன் மோதலாய் இல்லாமல் அதிகாரம் சார்ந்த போட்டியாகவும்,பதவியைக் காத்துக் கொள்ளுதல்,உத்தரவை நிறைவேற்றுதல் என்ற அடிப்படையில் கதை நகர்வதால் குறிப்பிட்ட பாத்திரம் ஜெயிக்க வேண்டும் என்ற பதைபதைப்பு நம்மிடம் ஏற்படவில்லை,

    என் பெயர் டேங்கோவில்,டேங்கோ நல்லவனாகவோ,கெட்டவனாகவோ எந்த வட்டத்திற்குள்ளும் அடைக்கப்படவில்லை,அதே நேரத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் தடம் மாறும் பாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது... டேங்கோவிற்கும்,டியேகோவிற்கும் இருக்கும் பிணைப்பும், டியேகோ மீது நமக்கு எழும் அன்பும்,அந்த கதைப் பாத்திரங்கள் மீது நமக்கு ஒருவித கனெக்டிங் ஏற்பட்டு விடுகிறது...
    அதனால் டியேகோ காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே எழுகிறது...

    துரோகம் ஒரு தொடர்கதையிலுமே கூட்டுச் சதி,முதுகில் குத்துதல்,துரோகங்கள் எல்லோராலும் ஏதேனும் ஒருவகையில் ஏற்படுத்தப்படுகிறது...
    எந்த மையப் பாத்திரங்களும் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் ஏனோ நமக்கு எழவே இல்லை...
    இது இக்கதைகளின் சிறு பலவீனமாக எனக்குத் தோன்றுகிறது, அதே நேரத்தில் கதைக்களம் நடப்பது நியாய,அநியாயங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தளத்தில் நகர்வதால் "பிழைத்திருத்தல்" மட்டுமே பிரதானமாய் இருப்பின் இந்த சிறு பலவீனமும் அடிப்பட்டு போகலாம்...

    இதுவே மூன்று கதைகளிலும் நான் கண்ட வித்தியாசம்...

    ஒற்றுமைகளாக எடுத்துக் கொண்டால் எல்லாமே,மாஃபியா மற்றும் அதிகார வர்க்கம் சார்ந்த குழுக்களின் மோதலாகவே இருக்கிறது...
    மூவருமே கிடைக்கற கேப்பில் ஜல்சா செய்யும் பார்ட்டிகள்தான்...
    மூன்று கதை நாயகர்களுமே உத்தரவை நிறைவேற்றும் ஏஜெண்ட்கள்தான்...
    மூன்றுக் கதைகளிலுமே ஓவியங்களும்,காட்சி அமைப்புகளும் சிறப்பு...

    ReplyDelete
  37. டேங்கோ,ஆல்பா,சிஸ்கோ இவர்களின் சாகஸம் இதுவரை மொத்தமாக எவ்வளவு சார் வந்துள்ளன ?!

    இவைகள் எல்லாம் விடுபடாமல் அடுத்தடுத்து வந்தால் புக் கலெக்‌ஷனுக்கு வசதியாக இருக்கும்...!!!

    ReplyDelete
    Replies
    1. அதுக்குள்ள FFS.1 படிச்சு முடிச்சாச்சுங்களா ரவி..
      நான், சின்னப்புள்ளைங்க புது ஸ்கூல் புக்ஸ எடுத்து எடுத்து அழகு பார்க்கிற மாதிரி, இன்னும் பெட்டியை திருப்பி, திருப்பி பார்த்துக் கொண்டும், FFS ன் இரண்டு புத்தகங்களையும் வெளியில் எடுத்து அழகு பார்த்துக கொண்டும் இருக்கிறேன். இன்று மாலை தான் படிக்க நேரம் கிடைக்கும்,

      Delete
    2. ஆம் 10 சார்,வேலைகளை அதற்கு தகுந்தாற்போல் கொஞ்சம் முன்னாடியே பிளான் பண்ணி முடிச்சாச்சி...
      புக் வியாழன் அன்று காலையில் கிடைத்தது அன்றே புரட்டி அழகு பார்க்கும் படலங்களை முடிச்சிட்டு வாசிக்க ஆரம்பிச்சாச்சி... இன்று FFS-2 படிக்கனும்...
      திங்கள் அன்று வழக்கமான பணிகளில் மூழ்கி விடுவேன்...

      Delete
    3. FFS-2 சார்ந்த உங்களின் எண்ணங்களை அறிய ஆவலாய் இருப்பேன் சார் !

      Delete
    4. //டேங்கோ,ஆல்பா,சிஸ்கோ இவர்களின் சாகஸம் இதுவரை மொத்தமாக எவ்வளவு சார் வந்துள்ளன ?!//

      மூன்றுமே இன்றளவுக்குத் தொடர்ந்திடும் தொடர்கள் சார் ; மொத்தமாய்ப் பார்த்தால் இது வரைக்குமான ஆல்பங்களின் எண்ணிக்கை 40-ஐ தொடும் ! And still counting !!

      Delete
    5. Arivarasu @Ravi sir...

      விமர்சன புயல் சார் நீங்க...

      செம்ம...

      Delete
    6. நன்றி நண்பரே...புக்- 2 ஐ முடிச்சிட்டுதான் உங்கள் விமர்சனத்தையும் படிக்கனும்...

      Delete
  38. வந்தாச்சுங்க 🙏🙏🙏🙏

    ஆசிரியர் வர்ராரு
    வாரா வாரம் பதிவைப் போட்டு
    எல்லார் மனசையும் அள்ளுறாரு
    ரிப்பீட்டு.

    ReplyDelete
  39. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கும், நட்புகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    எலியப்பா - தெறியப்பா!!
    சீனீயர் எடிட்டரின் *அந்தியும் அழகே* - ஒரு மிகப்பெரிய வணக்கம். *சீனியர் சிங்கத்தின் சிறுவயதில்* - மிகுந்த ஆவலுடன் வெய்ட்டிங்.

    FFS - Mind blowing. Hats off to your efforts sir.

    ReplyDelete
  40. கோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷல் :
    பழைய நாயகர்களை நினைவு கூறவும்,ஒருமுறை வாசிக்கவும் ஏற்ற இதழ்...

    ஸ்பைடர் கதை படத்தோட ட்ரெய்லர் பார்த்த மாதிரி இருந்தது,சட்டுனு முடிஞ்சிடுச்சி...

    ஆங்காங்கே தட்டுப்படும் எழுத்துப் பிழைகள் மட்டும் கொஞ்சம் உறுத்தல்...

    ReplyDelete
  41. என் பேரு எலியப்பா,
    சிறுவயதில் படித்த சிறுவர் மலர் நினைவை தூண்டி விட்டன சார்,
    சீனியர் எடிட்டரின் அந்தியும் அழகே நினைவலைகளும் நன்று...
    சிங்கத்தின் சிறு வயதில் போல,முத்துவின் சிறு வயதில்...
    நினைவு பேழைகளை தொடர்ந்து திறக்கட்டும்,சிறப்பான நினைவுகளை அசைபோடுவதை விட வெறென்ன மகிழ்ச்சி வேண்டும்......

    ReplyDelete
  42. ஆனா இது சரியான போங்கு ஆட்டம் எடி சார், புதிய பதிவுக்காக 1 மணி வரை முழிச்சு இருந்தேன். அப்பாலிக்கா அப்படியே தூக்கம் சொழட்டி அடிக்க தூங்கிட்டேன். நீங்க 1.30 புதிய பதிவ போட்டு தாக்கிடீங்க ��������.

    நண்பர்கள் அனைவருக்கும், ஆசிரியர் மற்றும் அவர் தம் குடும்பத்தாருக்கும், அனைத்து அலுவலக சகோதர, சகோதரிகளுக்கும் உளமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ����������������.

    ReplyDelete
  43. Wish you a prosperous and happy new year 2022

    ReplyDelete
  44. வெள்ளி,டிசம்பர் 31, 2021
    3:44 PM - மணி 4ஆக போகுது பொட்டி இன்னும் வரலை, இன்று போனால் 2 நாள் கழுச்சுதான் வரும், அதுக்குள்ள வாங்குனவங்க கொஞ்ச பேரு அதை துவச்சு காய போட்டுடுவாங்க என்ற ஏக்கம் வேறு. சரி நம்ம ஏரியா கூரியர் ஆபீஸுக்கு போன் செஞ்சேன், பதில் இல்லை. 5 மணிக்கு மேல் நேரில் சென்று பார்க்கலாம் என்று முடிவுசெய்தேன். அங்கே சென்றாள் முதல் கேள்வி “Tracking number இருக்கா?” என்பதாகத்தான் இருக்கும். அதுக்கு லயன் ஆபீஸுக்கு போன் செய்யலாமா? Tracking number அவர்கள் கைகளுக்கு கிடைத்திருக்குமா? அவர்கள் இருக்கும் பிஸியில் போனை எடுப்பார்களா? என மனதுக்குள் பல கேள்விகள்.

    4:20 PM - “கூரியர் ட்ராக்கிங் நம்பர் கிடைக்குமா” என்று வாட்சாப்பில் கேள்விய தட்டி விட்டேன். இன்றே பதில் கிடைக்குமா, அல்லது திங்கள் தானா என்ற ஏக்கத்தோடு…

    4:24 PM - ஒரு நம்பரில் இருந்து போன், உங்களுக்கு பார்சல் வந்துருக்கு சார், வாசலில் இருக்கென்…. கதவை திறந்து பார்த்தால் யாருமே இல்லை!!!..திருச்சி சென்று இருக்குமோ??… இல்லை வேறு எங்கோ சென்று இருக்குமோ? திரும்ப ஃபோன் போடு. “எங்கே சார் இருக்கீங்க” என கேட்டால் அவர் நான் முன்பு குடியிருந்த வீட்டின் வாசலில் நின்று பதில் சொல்ல…… 

    4:27 PM- எதோ அந்த வகையில் சந்தோஷம் , அது 1.5 வருட பழைய அட்ரஸ், நான் இப்ப இருப்பது 2 ப்ளாக் தள்ளி அங்கே வந்து தாருங்கள் ப்ளீஸ் என்று கேட்டதுதான் தாமதம் வாணம் பிள்ந்து கொட்டோ கொட்டென்று கொட்ட தொடங்கியது.

    4:29 PM: Sri சார் வேறு புக் இன்னும் வரலை என்று 3 மணிக்கு போட்ட மெஸேஜுக்கு “ட்ரீட் தாங்க என்று வம்புக்கு இழுக்க… இருங்க சார் ன்னு பதிலை சொல்லிட்டு , வாணத்தை பார்த்து உட்கார்ந்தேன்… மழை பெய்தது என்னமோ10 நிமிடம்தான், ஆணால் என்க்கு ரொம்ப நேரமாக தோன்றியது… மழையில் பொட்டி நனஞ்சுபோச்சுனா??? ... மழையா இருக்குன்னு திரும்பி போயிட்டா, நாமே சென்று வாங்கியிருக்கலாமோ?? என்று குரங்கு மனசு அங்கு இங்கு தாவு தாவுன்னு தாவுச்சு.

    4:41 PM - மழை ஓய்ந்தது… ஆணால் வாசப்பக்கம் யாரையும் காணோம்…

    4:45 PM - கடைசியாக பொட்டி வந்து சேர்ந்தது…. Dairy Milk chocklateஉடன்

    4:54 PM - தாப்பான அட்ரஸுக்கி அனுப்பிட்டீங்க, ஆனால் கரீட்டா வந்துடுச்சு, கொஞ்சம் சரி செஞ்சுக்கொங்க என்று லயன் வாட்சப்பில் மெஸேஜ் தட்டிவிட்டேன்.

    போட்டோ சரியாக வந்ததுள்ளதா என்று மட்டும் சரி பார்த்து விட்டு புது வருஷத்தை ஆரம்பிக்கலாம் என் எடுத்து வைச்சுட்டேன்.

    ReplyDelete
  45. Dear Editor,
    Great start to the year with Alpha, Sisco.
    Making of FFS is fantabulous.Yellow based cover looks fresh.Integration of memories and nostalgic stamp pics of old books give a collectors edition feel.This reinvention for new decade with Largo like stories is a step in right direction.Happy to see my pic in our book.Also happy to see my eternal favorite Spider.Sexton blake was an old favorite of mine.Eager to read him too.Its so nice to see you carryimg forward your dads vision , especially considering that comic books are so so unique among usual reads in this country.
    A very niche taste to say the least.
    Please give more new books this year as the feel good factor of 50th year comics makes us yearn for more.If not thisyear , when next ? is an obvious question.This year WILL BE REMEMBERED as the greatest single year of your editorial tenure , no doubt about that in my mind.Thanks to your 11 member team too.
    Regards
    Arvind
    Ths

    ReplyDelete
    Replies
    1. //Please give more new books this year as the feel good factor of 50th year comics makes us yearn for more//

      God willing - பட்டையைக் கிளப்பிடுவோம் சார் !

      Delete
  46. Dear Editor,
    Happy new yearto you and your family, Team.
    Regards
    Arvind

    ReplyDelete
  47. Edi Sir..
    முத்து&லயன் குழும பெருமக்களுக்கும், உழைப்பாளி சகோதர சகோதரிகளுக்கும், வாசக கண்மணிகளுக்கும் 2022 புத்தாண்டு சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  48. அட்டகாசமான பதிவு சார் . வரும் ஒவ்வோர் பதிவுகளிலும் புதிய புதிய அறிவிப்புகள் சும்மா ஐம்பதாமாண்ட ராக்கட்ல தள்ளிகிட்டுப் போகுது . இந்த ஆண்டு புத்தகத் திருவிழா வேதாளர்...இம்மாத பிரம்மிப்பான இதழ்களுக்கு மத்தியிலான நம்மை அழுத்தமா காட்ட இருந்த வாய்ப்பு மிஸ்ஸானது வருத்தமான விஷயமே....ஆனால் கூடிய விரைவில் நிலைமை சீராகி புத்தகவிழா களைகட்ட அதில் நாமும் முன்னணியில் இருக்கும்னு செந்தூரான் அருளை வேண்டுகிறேன் . சாகர் என்னவோ தெரியல இந்த இதழ் மேல் எதிர்பார்ப்புகள் கூடிட்டே போகுது .வண்ணத்ல ஓவியபாணில டாலடிக்குதுன்னும் உங்க வார்த்தைகளும் கட்டை விரல் அருகே கை போகத் துடிப்பதையும் பாக்கும் போது நாளைக்கே போடுங்கன்னி கேக்க மாட்டேன் நாளை மறுநாள் தயாராகலாமே என கைய நானும் இழுத்து விட ஆசைப்படுறேன் . நல்ல கதைகளை தள்ளிப் போட வேண்டாமே . அந்த ஆரஞ்சு வண்ணம் எப்போதுமே ஆரஞ்சு மிட்டாய் போல ஈர்ப்பு என்னளவில் நம்ம இருவண்ண இதழ்கள் பூந்தளிர் மூலமாக...இத பாக்கயில் சபலம் தட்டுது அம்மணிகௌபாய்கள் மேல் ! கதைக நல்லாருந்தா ஒரு இதழாவது போடலாம் அடல்ட்ஸ் ஒன்லி இல்லாத கதைகளாக பாத்து . அதுவும் அதிரடி விறுவிறு கதைகள் எப்பவும் பட்டாசு தான் எனும் போது வரவேற்கத்தக்க முடிவுதான் . அப்ப டார்சான் சினிஸ்டர் போன்ற அதிரடித் கதைகளுக்கு வாய்ப்பில்லை என்பது அதிர்ச்சியான முடிவுதான் பரவாயில்லை கடந்து செல்வோம் . லார்கோ வரவிருப்பது சாதாரண செய்தியா என்ன , இதுவரை அறிவிப்பு அறிவிப்புகள்ளயே டாப் இதான் சார் . அப்படியே ஐஆர்எஸ் கூட லார்கோ போல கச்சிதமா தெரியுதே! இன்னோர் சந்தோசம் மூன்று+ நாளை மறுநாள் தயாராகவுள்ள சாகர் என நான்கு புத்தகத் திருவிழா இதழ்களும் அதனூடே களை கட்டும் உயிரைக் தேடியும் ஜில் ...அடுத்த புத்தகத் திரு விழா ஒரு வேளை ஃபிப்ரவரியிலே தொடர்ந்தால் உயிரைக் தேடியேவையும் இணைந்திருங்கள் ...நிச்சயமா வேதாளரோடு இதுவும் இணைந்து மணம் வீசி இனிமை பரப்பி மக்களை மக்களாய் கவரும் வாய்ப்பு அதிகமெனபபடுது .டெக்சோடு வேதாளாரையும் வாய்ப்பிருந்தா ஆன்லைன் திருவிழால அனுப்பலாமே !

    ReplyDelete
    Replies
    1. அடடா அந்த பக்கங்கள் பாக்க மறந்துட்டேன்....ஆண்கள் நீரில் குளிக்கும் காட்சி...பாலை மணல் வண்ணத்துக்கு போட்டி ..போடுதே....இந்தக் கதை வரணும் தூள் கிளப்பனும்

      Delete
  49. Edi Sir, நீங்க புது message போடுவீங்கன்னு நேத்து வந்த புக்ஸை தலை பக்கத்துலயே வச்சு பாத்துகிட்டு.. ச்சும்மா ச்சும்மா blog open பண்ணி பாத்துகிட்டு "நெஞ்சே எழு" ன்னு முழுச்சிட்டு இருந்தேன்..
    அப்புறம் ம்மிடியுல.. தூங்கிட்டேன்.. போலிருக்கு ..

    ReplyDelete
  50. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்ததுக்கள்

    ReplyDelete
  51. @Arivarasu@Ravi.. சரிபாஸ்டுங்க நீங்க .. SPICESன்னு ஒருபடம் வந்துச்சுங்க.. அதுல வெளி கிரகத்துல இருந்து வந்த ஒருஉயிரினம் மூலமா குழந்தை பொறக்குங்க..டக்..டக் ன்னு..

    டேஸ் டேஸ் நடக்கும், குழந்தைபிறக்கும்,தவழும், குபுக்குன்னு வளரும்,திடீர்னு பெருசாயிடும்.. அந்த மாதிரி நாங்கெல்லாம் புக் கவரையே பிரிச்சு புக்கை தடவி பாத்துகிட்டு இவரா,அவரா, அவர் இவரான்னு யாரை படிக்கன்னு ஜொல்லு ஊத்தி ஒரு முடிவுக்கு வர்ரதுக்குள்ளே.. நீங்க பட்ச்சு முட்ச்சு விமரிசனமே போட்டுட்டீங்க.. U r really GREAT ங்க.

    ReplyDelete
  52. Online meeting is fine sir. As the cases are raising, we dono when the next meeting in person is going to be a possibility. For now கையில இருக்கிற கலாக்காய் is better. Happy new year to all friends

    ReplyDelete
  53. காமிக்ஸ் குடும்ப உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ATR சார்

      Delete
    2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் குமார்.

      Delete
  54. அன்பு நிறை ஆசிரியர் நண்பர்கள் முத்து லயன் காமிக்ஸ் ஆர்வலர்கள் சிவகாசி ஆபீஸ் பணியாளர்கள் அலுவலக சகோதரிகள் - சீனியர்--நம்மாளூ- ஜூனியர் --- சோட்டா ஜூனியரு எடிட்டர் எல்லாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2022

    ReplyDelete
  55. தலைமை ஆசிரியர் அன்று எழுதியிருந்தால் த்ரில்லராக வேட்டைக் காட்சிகள் இடம் பிடித்திருக்கும்...அட்டகாச நினைவுகள் நினைவுக்கு வரனும்

    ReplyDelete
  56. ஆசிரியர், சீனியர், ஜூனியர் எடிட்டர்கள், குடும்பத்தினர், அலுவலக பணியாள நணப்ர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  57. Replies
    1. எலி தூக்கிட்டு போயிருக்குமோ ?

      Delete
  58. ஒற்றை நொடி ஒன்பது தோட்டா.. simply phenomenal.. I couldn't put it down.

    ReplyDelete
    Replies
    1. சொன்னேன் அல்லவா சார் ? Absolute firecracker !!

      Delete
  59. /// முத்து 50 வெளிவரும் இப் பொன்னான தருணத்தில் மூத்த வாசகர்களில் தலையாய உங்களை ( முதல் மாயாவியை அதே ஆண்டில் அதே மாதத்தில் படித்தவரல்லவா) கனப்படுத்தும் விதத்தில் 2022 முழு சந்தா உங்களுக்கு பரிசாக அளிக்கவிருப்பதில் பெருமை கொள்ளவிருக்கிறேன்///
    இந்த பதிவு தளத்தில் நண்பர் ஒருவர் விளையாட்டாக பதிவிட்ட வார்த்தைகள் என்று தெரியாமல் நானும் நன்றி கூறிவிட்டேன். எனக்கு முன்னர் நம் தளத்து நண்பர்களும் இதற்காக வாழ்த்தும் தெரிவித்திருந்தனர். சில நாட்கள் கழித்தாவது அந்த பதிவை இட்டவர் விளையாட்டுக்குத்தான் இப்படி செய்தேன் என்று சொல்லியிருந்தால் நலமாயிருந்திருக்கும். நானும் எனக்கான சந்தாவை செலுத்தியிருப்பேன். ( நேற்று நமது அலுவலகத்தில் விசாரித்தபோதுதான் தெரிந்தது எனக்கான சந்தா செலுத்தப்படவில்லையென்பது.) ஆண்டின் துவக்கத்தை நம் காமிக்ஸின் ஐம்பதாண்டு கொண்டாட்டத்துடன் ஆரம்பிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன். ஆயுசில் திரும்ப வருமா இந்த வாய்ப்பு. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு புத்தாண்டையாவது நம் காமிக்ஸூடன் இணைந்து மகிழ்ச்சியுடன் துவங்கலாம் என்று கனவோடிருந்த என்னை 'கனப்படுத்தி' மகிழ்ந்த நண்பருக்கு
    நன்றி. நண்பருக்கு ஒரே ஒரு கேள்வி. எனக்கான சந்தாவை செலுத்துமாறு நான் உங்களை கேட்டேனா என்பது மட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருத்தம் புரிகிறது சார் ; ஆனால் சரி பார்த்திட சற்றே அவகாசம் மட்டும் தாருங்களேன் ப்ளீஸ் ! யாரேனும் உங்களுக்கென செலுத்தியிருந்து, நம்மவர்கள் அதனைக் குறித்திடத் தவறி இருப்பார்களா ? என்பதை மட்டும் cross check செய்திடுகிறேன் !

      Delete
    2. ATR சார்..

      உங்களுடைய வருத்தம் புரிகிறது. ஆனால், உங்களுக்கான சந்தா இன்று செலுத்தப்பட்டு, சற்று முன்பு உங்களுக்கான புத்தகங்களும் பேக்கிங் செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது!

      உங்களுக்கு சந்தா செலுத்துவதாகச் சொல்லியிருந்தவர் விளையாட்டுப் பேர்வழியல்ல சார்! மனிதருள் மாணிக்கம்! ஆனால் யானைக்கும் அடிசறுக்குமில்லையா? பல்வேறு பிஸியான வேலைகளுக்கு நடுவில் அவர் உங்களுக்கு வாக்களித்திருந்ததை மறந்திருக்கலாம்!

      உங்களுக்கு சந்தா செலுத்துவதைப் பெருமையாக நினைத்த நபரை உங்களுடைய 'நான் கேட்டேனா?' போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் காயப்படுத்திவிடும்! (காயமானாலும் அவருக்கு அவரே மருந்து போட்டுக்கொள்வார் என்பது வேறு விசயம்!).

      உங்களுக்கானது கிடைக்காமல் போகாது. சற்றே பொறுமையைக் கடைபிடிக்கக் கோருகிறேன்!

      Delete
    3. என்ன ஒரு வார்த்தை பிரயோகம்...

      என்ன ஒரு பெருந்தன்மை...

      Delete

    4. ATR சார்@ மறதியால் விளைந்த தவறுக்கு வருந்துகிறேன் priyatel!
      பணிச்சுமை காரணமாய் எடிட்டர் சாரின் பதிவுகளை மட்டும் படித்து விட்டு கமெண்ட்ஸ்களை படிக்க இயலாது விட்டுவிடுகிறேன்..

      ஆதலால் உங்களின் நியாயமான வருத்தம் தோய்ந்த பதிவினையும் படிக்கவில்லை..அருமை நண்பர் காமிக் லவர் ராகவன் அலைபேசியில் அழைத்து பேசியபின்னர்தான் எனது தவறு தெரிந்தது.. தவறை திருத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

      லயன் அலுவலக தவறு இதில் ஏதுமில்லை...உங்கள் புத்தகங்களை விரைந்து அனுப்ப வேண்டுகோள் வைத்தபோது அன்புடனும் இனிமையான குரலிலும் உடனே ஆவன செய்வதாக உறுதியளித்தனர்.

      மறதி காரணமாய் உங்களுக்கு இழைக்கப்பட்ட தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன்..

      அன்புடன் செல்வம் அபிராமி

      Delete
  60. ஆசிரியர்,அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  61. // காத்திருக்கும் பொழுதுகளில் குட்டீஸ்களின் ஓட்டுக்களை அறுவடை செய்திட இன்னொரு திட்டமிடலுமே இறுதி வடிவம் கண்டு வருகிறது ; //

    வாரே வா. சூப்பர் தகவல். மகிழ்ச்சி.

    ReplyDelete
  62. ஆசிரியர்,சீனியர் எடிட்டர், ஜூனியர் எடிட்டர், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  63. புத்தாண்டு வாசிப்பு

    ஒற்றை நொடி... ஒன்பது தோட்டாக்கள்...!

    புத்தாண்டு தீர்மானத்தை உடனடியாக செயலாக்கம் செய்ய எண்ணி காலை 5:30 க்கு தொடங்கியதை முடித்து புத்தகத்தை கீழே வைக்கும்போது மணி 8.00 இடையில் 2:30 மணிநேரம் போனதே தெரியவில்லை. செம்மையான வாசிப்பு அனுபவம்.

    JFK படுகொலையை ஒட்டிய கான்ஸ்பைரசி தியரிகளில் ஒன்றைக் கருவாகக் கொண்ட கதை. தெறிக்கும் வேகமே கதையின் மூலபலம். அரூப சகோதரர்கள், ஆல்பாக்கள்,கலீஜியம் தேன்கூடு என ஒவ்வொரு முடிச்சையும் தொட்டு நகரும்போது பறக்கவே செய்கிறது. அவதரிக்கும் அசுரர்களின் ஒவ்வொருவரின் குரூரப் புத்தியும் வயிற்றை கலக்குகிறது.

    நிஜமாகவே ஸ்லீப்பர் செல் ஆல்பாக்கள் இந்த சமூகத்தில் நிறைந்திருந்தால்..., நம் அண்டை வீட்டுக்காரராக, உடன் பணிபுரிவோராக, நடைபயிற்சித் தோழனாக கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருந்தால்... கதிகலங்குகிறது சாமி! அறிவியல் என்பது இருமுனை கூர்தீட்டப்பட்ட கத்தி போன்றது என்பதை கதை ஊர்ஜிதம் செய்கிறது.

    உண்மை சம்பவங்களை ஆங்காங்கே பொருத்தி கதையின் களத்தை அழுத்தமாக வடிவமைத்துள்ள படைப்பாளிகளுக்கு ஒரு ஸ்பெஷல் கிளாப்ஸ். இன்ஸ்பெக்டர் ஸ்பாடாச்சினி உட்பட அனைத்து கதைமாந்தர்களையும் பின்னுக்குத் தள்ளி சீறிப்பாயும் கதையின் வேகமே ரியல் ஹீரோ இங்கே. அந்த குளவிக்கிழவி கொஞ்சநேரமே வந்தாலும் நமக்குமே கைகளில் வியர்த்து விடுகிறது. ஆக்சன் சீக்வென்ஸும் அதை அட்டகாசமான கோணங்களில் வெளிப்படுத்தி இருக்கும் ஓவியங்களும் அட்டகாசம். இந்த கோணத்திலெல்லாம் எப்படி வரைய முடியும் என்ற பிரமிப்பு எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    அருமையான கதைத்தேர்வு. நிச்சயம் மெஹா ஹிட் தான். மொழியாக்கம் சரளமாக வாசிக்க முடிகிறது. ஆங்காங்கே கொஞ்சம் ரிலாக்ஸாக குளுகுளு வசனங்கள் கண்ணில் பட்டாலும் கதையின் சூட்டில் ஆவியாகிப் போய்விடுகிறது. மறுவாசிப்பின் போது கொஞ்சம் நிதானிக்கலாம்.

    அட்டைப்படம், மேக்கிங் பற்றி சொல்லாவிட்டால் இதை நானே படுமோசமான விமர்சனம் என்று சொல்லிவிடுவேன். மார்வலஸ் மேக்கிங்! மைல்கல் இதழுக்கான சரியான உருவாக்கம். அருமை! அருமை!

    ஒற்றைநொடி ஒன்பது தோட்டாக்கள்... கிட்டே போனாலே ஷாக்கடிக்கும் 10000 வோல்ட் மின்சாரகம்பி. மாயாவியாரே உங்களிடம் கடைசியாக வருகிறேன்.

    கடைசியாக ஒரு குழப்பம்.... ஒன்பது தோட்டாக்கள் ஒற்றை நொடியிலா..? இல்லை ஒன்பது நொடிகளிலா...?

    9.8/10

    ReplyDelete
  64. // இவருக்கு நான்காவது துண்டை விரித்துப்புடலாமா ? What say folks ? //

    தாராளமாக பெரிய தூண்டா விரிங்க சார்.

    ReplyDelete
  65. // மகளிர் மட்டும் நமக்கு ஓ.கே. ஆகிடுமா ? //

    "மிகவும்" நன்றாக இருந்தால் முயற்சி செய்யலாம் சார்.

    ReplyDelete
  66. நேற்று எனக்கு நமது காமிக்ஸ் பொட்டி கிடைத்தது. அட்டைப்பெட்டி அருமை, இரும்புகை யார் நம்மை நோக்கி வருவது போல் அமைத்து நமது காமிக்ஸ் உலகின் ஆதர்சன நாயகனை உலகம் அறியும்படி கௌரவித்து உள்ளீர்கள் சார்.


    அட்டைபெட்டியை தாண்டி செல்ல முடியவில்லை, அந்த அளவுக்கு பிரம்மிப்பூட்டுகிறது. இன்று மாலையில் பொட்டியை உடைத்து உள்ளே உள்ள புதையலகளை தரிசிக்க உள்ளேன்.

    ReplyDelete
  67. அருமையான தயாரிப்புத்தரம். நல்ல நல்ல கதைகள். அட்டைப்படங்கள் அழகு கொஞ்சுகின்றன.எலியப்பா சும்மா பட்டய கிளப்புகின்றன. முத்து பொன்விழா சிறப்பிதழ் இவ்வளவு சிறப்புடன் அமையும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.உங்களின் அர்ப்பணிப்பும் காமிக்ஸ் காதலும் எங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதங்கள். தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் காதல். நாங்கள் தொடர்வோம் உங்களை என்றென்றும்.

    ReplyDelete
  68. In M.K.T. Bhagavathar movies we can hear bad word (Devadasi in Tamil slang) that we cannot even imagine to be allowed by censor board today.

    ReplyDelete
  69. In Sabapathy movie also such word is used casually . Nothing wrong if it is used in the particular context in the story

    ReplyDelete
  70. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  71. Zagor ஐ ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
    ஏதாவது காரணங்கள் அமையாதா என்ன இடைநுழைக்க...

    ReplyDelete
  72. புக்-2 வில் ஒவ்வொரு பக்கங்களுக்கும் "முத்து காமிக்ஸ் பொன்விழா ஆண்டுமலர்" னு இடபம் பெற்று இருப்பது மகிழ்ச்சி,ஏனோ புக்-1 இல் இது இடம் பெறவில்லையே ?!

    ReplyDelete
  73. சீனியருடன் Zoom meeting - பொங்கல் சமயத்தில் ஒரு மாலை வேளையில் வைக்கலாம் சார். அனைவரும் புத்தகங்கள் அனைத்தையும் படித்த பிறகு மீட் செய்வது நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  74. நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்💐💐💐💐💐💐

    ReplyDelete
  75. //What say guys ? மகளிர் மட்டும் நமக்கு ஓ.கே. ஆகிடுமா ?///


    வொய் நாட் சார்!!! கரும்பு தின்ன கூலியா!!!!

    4வது லைப்ரரியில் தாக்கிபுடலாம்.....

    ReplyDelete
  76. MONDO REVERSO,
    MONDO REVERSO,
    MONDO REVERSO,
    MONDO REVERSO
    MONDO REVERSO,
    MONDO REVERSO,
    MONDO REVERSO,
    MONDO REVERSO
    MONDO REVERSO,
    MONDO REVERSO,
    MONDO REVERSO,
    MONDO REVERSO
    MONDO REVERSO,
    MONDO REVERSO,
    MONDO REVERSO

    இதுவும்,

    Zagorம் புக்ஃபேர் ஸ்பெசல்களாக அதிரடி காட்டலாம் சார்...விருப்பத் தேர்வு எனும்போது.....😜😍

    ReplyDelete
  77. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  78. நமது லயன் குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் இனிய 2022 புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    FFS வெகு தாமதமாகத்தான் கைக்கு வந்து சேர்ந்தது. தங்களின் ‘செய்வன “திரில்லாய்ச்” செய்!’ பதிவு வந்த போதே லேசான பரபரப்பு தொற்றிக்கொண்டது. மறுநாள் காலை 9 மணியளவில் வாட்சப் க்ரூப்பில் வாசக நண்பர் ரபிக் ராஜா “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” என்பது போல் ffs முதல் வரவை போட்டோ எடுத்து போட்டு சந்தோஷ அதிர்வை உண்டாக்கினார். புத்தகம் தாங்கி வந்த பாக்ஸை பார்த்ததும் க்ரூப்பில் இருந்த அனைவருக்குமே ஒரு ஹை வோல்டேஜ் பரபரப்பு தொற்றிக்கொண்டது நிஜம், எப்போது நாமும் கைப்பற்றுவோம் என்று. போதாதற்கு வாசக நண்பர் STV அவர்கள் பளபளவென கிளீன் ஷேவ் செய்து கொரியர் ஆபிஸின் முன் தவம் நின்ற காட்சியையும் காண முடிந்தது.


    இந்த நிகழ்வுகளை கண்டுவிட்டு “பாக்ஸை தூக்கி போட முடியாதவாறு செய்திட்டாரே எடிட்டர்” என்று கமெண்ட் இட்டுவிட்டு என்னுடைய அன்றாட அலுவல்களில் மூழ்கலானேன்... ஆனாலும் அரைமணிக்கு ஒருமுறை வட்சப் க்ரூப்பை எட்டிப்பார்த்துக் கொண்டே இருந்தேன். மதியம் நமக்கும் வந்து விடும் நாமும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று. ஆனால் மதியம் தாண்டியும் கொரியர் அண்ணனின் போன் வரவே இல்லை, மனம் லேசாக வாடிப்போனது. உடனே லயன் ஆபிஸ் வாட்சப் எண்ணில் சந்தா எண் கூறி அனுப்பப்பட்டு விட்டதா? ட்ராக்கிங் நம்பர் கூற இயலுமா என்று கேட்டிருந்தேன். மெசெஜை உடனே பார்கிறார்கள் ஆனால் நோ ரிப்ளை. சாயந்திரம் ஆகும் போதே உற்சாகம் முற்றிலும் வடிந்து போனது.

    மறுநாள் வெள்ளிக்கிழமை, கொரியர் ஆபிஸ்க்கு போன் செய்து பார்சல் வந்துள்ளதை கண்பார்ம் லஞ்ச் பிரேக்கில் அன்றைய லஞ்சை தியாகம் செய்து பறந்தேன்... கையில் பார்சலை வாங்கியதும்தான் ஒரு பெரிய நிம்மதி. இனி ffs குறித்து...
    இம்முறை புத்தகம் தாங்கி வந்த பெட்டியே அதகளம் செய்துள்ளது. இரும்புக்கை, லயன், முத்து லோகோ சகிதம். இந்தப்பெட்டிக்கும் எதிர்காலத்தில் சந்தை மதிப்பு உருவானாலும் ஆச்சர்யமில்லை. (தாங்கள் வழங்கும் இலவச புக் மார்க்கையே விற்கும் காமிக்ஸ் வாசக விற்பனையாளர்கள் எதிர்காலத்தில் இந்த பெட்டியையும் தனியாக நல்ல விலைக்கு விற்க கூடும்.)

    புத்தக பைண்டிங் தரமோ தரம். பக்கங்கள் பைண்டிங்கில் மாட்டிகொள்ளாமல் அமைந்த பக்க லே அவுட்கள் பிரமாதம். எடிட்டரின் பக்கம் மட்டும்தான் வாசிக்க டைம் கிட்டியது. அதிலேயே முத்துவின் வரலாற்றை கண் முன் கொண்டு வந்து விடுகிறார். ஆரம்ப கால முத்து வளர்ச்சிக்கு உழைத்த அனைவரையும் நினைவு கூர்ந்து அவர்களையும் மனம் திறக்க செய்தது சிறப்பு. 50 ஆண்டுகள் என்பது தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் ஒரு அசாத்திய நிகழ்வு என்று நினைக்கிறேன். ஆகையால் முத்துவின் வரலாறு நிச்சயம் ஆவணப்படுத்த பட வேண்டிய ஒன்று, அதை நமது சீனியர் எடிட்டர் அவர்கள் அவசியம் செய்ய வேண்டுகிறேன். சீனியர் எடிட்டர் அவர்களின் எழுத்தினை தொடர்ந்து வாசிக்க ஆவலாக உள்ளேன்.

    அடுத்து முத்துவின் ஆரம்ப கால இதழ்களின் படங்களின் அலங்காரம் பிரமாதம். மற்றும் எங்களின் போட்டோ வெகு சிறப்பாக பிரிண்ட் ஆகியுள்ளது அதற்கு எங்களின் அன்பும் நன்றியும்.

    மொத்தத்தில் முத்துவின் பொன்விழா ஆண்டுமலர் எப்படியெனில்,.. விரைவில் விற்று தீரப் போகும் இதழ் இது என்பது மட்டும் நிச்சயம். ஆகையால் இதுவரை வாங்காத நண்பர்கள் இருப்பின் அவசியம் இப்போதே வாங்கி விடுங்கள். இல்லையெனில் பின்னாளில் வாசக விற்பனையாளர்களிடம் அதீத விலை கொடுத்து வாங்க நேரிடும்.

    எடிட்டர் விஜயன் ஸாரிடம் ஒரு சின்ன வேண்டுகோள். இயன்றவரை தற்போது வரப்போகும் லயன் லைப்ரரி வரிசையை ஒரே சைஸில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஒரிஜினல்களின் அளவுகள் வெவ்வேறாய் இருக்கும் போது அவற்றின் தமிழ் வார்ப்புகள் மட்டும் ஒரே சைசில் இருக்க வழியேது நண்பரே ? டெக்ஸ் அவரது வழக்கமான அளவில் இருந்திடுவார் & சுஸ்கி -விஸ்கி & "உயிரைத் தேடி " ரெகுலர் பெரிய சைசில் !

      Delete
    2. // மொத்தத்தில் முத்துவின் பொன்விழா ஆண்டுமலர் எப்படியெனில்,.. விரைவில் விற்று தீரப் போகும் இதழ் இது என்பது மட்டும் நிச்சயம் //

      Super

      Delete
    3. ///மொத்தத்தில் முத்துவின் பொன்விழா ஆண்டுமலர் எப்படியெனில்,.. விரைவில் விற்று தீரப் போகும் இதழ் இது என்பது மட்டும் நிச்சயம். ஆகையால் இதுவரை வாங்காத நண்பர்கள் இருப்பின் அவசியம் இப்போதே வாங்கி விடுங்கள். இல்லையெனில் பின்னாளில் வாசக விற்பனையாளர்களிடம் அதீத விலை கொடுத்து வாங்க நேரிடும்.///


      மிகவும் அவசியமான அறிவுறுத்தல்!!

      Delete
  79. எம் தானை தலைவன் ஸ்பைடர் மறுபடியும் தன் தனி வழியை துவக்கி விட்டான்....பல வருடங்கள் உறை நிலையில் வைத்து பார்த்தவர்கள் நிலை இனி பரிதாபமே...( தொடருமா... அவ்ளோதானா) ஹி ஹி...பதில் ப்ளீச் எடி அங்கிள்..தினகரன் நத்தம்

    ReplyDelete
  80. சார் புக்-2 முதல் பாகத்தையே இன்னும் என்னால தாண்ட முடியலை,ஏகப்பட்ட டீட்டெயிலிங் கொட்டிக் கிடக்கு,கை நமநமங்குது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க. உண்மை சம்பவங்களை சாமர்த்தியமா மேட்ச் பண்ணியிருப்பாங்க.

      Delete
  81. அதேதான்...கென்னடி...1983...1963...னு ஏகபட்ட விஷயங்கள்...கீழே அடிகுறிப்புகள் என பரபரக்குது....தினகரன் நத்தம்

    ReplyDelete
    Replies
    1. நிறைய உழைப்பைக் கோரிய தொடரிது சார் ! அந்த details கதையின் ஆழத்துக்கான அச்சாரம் !

      Delete
  82. Mr. எலியப்பா short and sweet.... My daughter is loving it and she wants the entire story...
    அந்தியும் அழகே... அருமையான ஆரம்பம்.
    கானகக் கூத்துகள்- Cute little additions.
    Thos book is an easy 10/10

    ReplyDelete
  83. ஹேப்பீ நியூ இயர் வாலிப வயோதிக அன்பர்களே..!!

    ReplyDelete
  84. ///"ஒற்றை நொடி...ஒன்பது தோட்டாக்கள்" ஆல்பத்தினுடனான பயணத்தை நிறைவு செய்திடும் வேளையில் நமக்கே இனி இந்த racy ஆக்ஷன் த்ரில்லர்கள் மீது மையல் கூடிடும் என்பேன் ! ///

    உண்மை சார்..!

    வேட்டையன் மற்றும் ஆவி இரண்டு அத்தியாங்களை முடித்திருக்கிறேன்..செம்ம திருப்பங்களுடன் கூடிய சூப்பர் த்ரில்லர்.!

    நீங்கள் சொன்னதுபோல அடுத்தடுத்த அத்தியாயங்களை தவணைகளில் படிக்கமுடியாது போலும்...!

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் காமிக்ஸ் என்பதை.. படங்களை ரசித்து.. வசனங்களை கிரகித்து.. கதையினை உள்வாங்கி ஆறஅமர படித்தால்தான் முழுமையாக அனுபவிக்கமுடியும்..!

      புல்லட் ட்ரெயீனில் ஏறி உக்காந்த கணக்கா சர்ர்ர்ர்ர்ருன்னு எழுத்துகளை மட்டும் வாசிச்சிட்டு போவதிலும் எனக்கு (எனக்கு) உடன்பாடு இருந்ததில்லை.! நாளை மீதி மூணு பாகங்களையம் (சு)வாசிக்க முயற்சிக்கணும்.!

      Delete
  85. //தவறாது இந்த ப்ளூ யானையை உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு அறிமுகம் செய்து வையுங்களேன் guys - ப்ளீஸ் ? //

    பெட்டியை பிரிக்கும் முன்னரே எங்கள் வீட்டுக் குட்டீஸிடம் இருந்து வந்த கேள்வி.

    "நியூ இயர்ல என்ன புக்கு வந்திருக்கு எங்களுக்கு?"

    பெட்டியை பிரித்து எலியப்பாவை எடுத்துக் கொடுத்தேன். சந்தோஷமாக வாங்கிக் கொண்டு ஓடியவள் இரண்டே நிமிடத்தில் திரும்பி வந்தாள். என் கையிலிருந்த இரண்டு குண்டு புக்குகளை பார்த்துவிட்டு கேட்டாள்.

    "உங்களுக்கு மட்டும் இவளோ குண்டா ரெண்டு புக்; ஆனா எங்களுக்கு இத்தினூண்டா? எனக்கு வேணாம்... போங்கப்பா..."

    என்று வைத்துவிட்டுப் போய்விட்டாள். என்ன செய்ய?

    ReplyDelete
    Replies
    1. ///உங்களுக்கு மட்டும் இவளோ குண்டா ரெண்டு புக்; ஆனா எங்களுக்கு இத்தினூண்டா? எனக்கு வேணாம்... போங்கப்பா..."

      என்று வைத்துவிட்டுப் போய்விட்டாள். என்ன செய்ய?///

      வழக்கம்போல நாமே படித்துச் சிரிக்க வேண்டியதுதான்!

      Delete
    2. // வழக்கம்போல நாமே படித்துச் சிரிக்க வேண்டியதுதான்!//

      வேறு வழி...?!

      Delete
  86. ///மகளிர் மட்டும்" என்றதொரு மெய்யான லட்டு கூட நமது ரேடாரில் உள்ளது ! இங்கே ஈரோ ; வில்லன் ; அல்லக்கை - என சகலமும் ஸ்கர்ட் போட்ட அம்மணிகளே ! இளவரசர்கள் போன்ற கூச்ச சுவாபிகள் நம் மத்தியினில் இருப்பதால் தான் இதனை லட்டு பிடிக்க தயங்குகிறேன் ! இல்லையேல் - பூந்தி லட்டு cum கார லட்டு வரிசையில் இதனை இணைத்திருக்கலாம் !! What say guys ? மகளிர் மட்டும் நமக்கு ஓ.கே. ஆகிடுமா ?///

    என் சார்பில் ஒரு நாலு டஜன் ஓட்டுகளை பதிவு செஞ்சிடுங்க சார்..!!

    ReplyDelete


  87. /// லயன் லைப்ரரி # 1 - TEX க்ளாசிக்ஸ் 1
    லயன் லைப்ரரி # 2 - உயிரைத் தேடி..!
    லயன் லைப்ரரி # 3 - சுஸ்கி & விஸ்கி
    என்று ஏற்கனவே 3 துண்டுகள் விரிக்கப்பட்டுக் கிடக்கின்றன ! இவருக்கு நான்காவது துண்டை விரித்துப்புடலாமா ? What say folks ?///

    வொய் நாட்..!?
    பெரிய கம்பளமே விரித்துவிடலாம் சார்..! இத்தாலியில் டெக்ஸ்க்கு நிகரான நாயகர் இவர் எனும்போது நாமும் சிவப்பு கம்பள வரவேற்பே கொடுத்துலிடலாம்.!

    ReplyDelete
  88. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  89. தி கோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷல்-
    ஸ்பைடரின் இனியெல்லாம் குற்றமே- மிக சரியானதொரு இன்ட்ரொ, setting pieces in place என சொல்வதற்கு ஏற்ப, வரப்போகும் கதைகள் எதிர்பார்ப்பை எகிற வைக்கின்றன.
    செக்ஸ்டன் ப்ளேக்கின் திகில் தீவு- விறுவிறுப்பாக நகரும் கதை.
    புது யுகத்தில் மாயாவி - தலையும் வாலும் புரியவில்லை. ஒரே பேனலில் அழியும் ஆ... ஊ.... பில்டப் வில்லன் கூட்டம். காது, கண், மூக்கு, வாய் என அனைத்திலும் புய்ப்பம்.
    செக்ஸ்டன் பிளேக்கின் வல்லவன் வீழ்வதில்லை - தடதடக்கும் ஆ‌க்சன்...
    If not for Mayavi it is 10/10 but because of Mayavi it is 7/10

    ReplyDelete
    Replies
    1. ////புது யுகத்தில் மாயாவி - தலையும் வாலும் புரியவில்லை. ஒரே பேனலில் அழியும் ஆ... ஊ.... பில்டப் வில்லன் கூட்டம். காது, கண், மூக்கு, வாய் என அனைத்திலும் புய்ப்பம்////

      ஹு ஹு! தகவலுக்கு நன்றி!!

      Delete
  90. அன்பு ஆசிரியருக்கு 🙏,
    காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு 2022ம் புது வருட நல் வாழ்த்துக்கள்.

    முத்து 50s டாப் 6.
    1)அழகான அட்டைப் பெட்டியில் வரும் என எதிர்பாக்கவே இல்லை சார்.
    அட்டைபெட்டியை தூக்கி போட முடியாதவாறு செய்து விட்டீர்கள்.

    2) அருமையான நினைவலைகள் கொண்ட வாசகர் கடிதங்கள்,சற்று பின்னோக்கி பயணிக்க வைத்து விட்டது.
    AKK.RAJA,
    சின்னமனூர் சரவணன்,
    கும்பகோணம் ஜனார்த்தனம் அண்ணா,
    RAFIQ RAJA போன்ற நண்பர்கள் பதிவுகளை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.
    ஆத்மார்த்தமான கடிதங்கள்.

    3)சீனியர் ஐயாவின் 1954ன் தொடக்க கால காமிக்ஸ் ஆரம்பமே அமர்க்களம்.
    வரும் தொடர்களில், இன்னுமொரு 10 பக்கங்கள் சேர்த்து போடுங்கள் சார்.

    4)"என் பேரு எலியப்பா". பெரியவர்களே காமிக்ஸ் ரசித்த சூழலில், முற்றிலும் குழந்தைகளை கவரும் வண்ணம் வந்துள்ள இந்த 16 பக்க குட்டி காமிக்ஸ்,
    அடுத்த தலைமுறை காமிக்ஸ் பக்கம் திருப்பும் நல்ல முயற்சிக்கு ஏற்ற புக்.
    வரும் மாதங்களில் இன்னும் சில பக்கங்கள் சேருங்கள் ஐயா.

    5) 50 வது ஆண்டில்,
    லயன் குழும தோழர்,தோழிகளுக்கு மதிப்பளித்து, அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாக, அனைவரின் அறிமுகப்பார்வை தொகுப்பு மிக அழகு.
    அருமை.

    6)செக்ஸ்டனின் ப்ளாக் & வெய்ட் சித்திரங்கள் மிக நேர்த்தி.

    எதை படிப்பது என தெரியாமலேயே இன்னமும் ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

    ஆன்லைன் திருவிழா எந்த தேதி சார்?.

    சீனியரின் நேர்காணல் கிடைத்தால் அதைவிட சந்தோஷம் ஏது?.
    பொங்கலன்று 4 நாட்கள் விடுமுறை என்பதால், ஏற்பாடு செய்யுங்கள் சார்.

    "லேடீஸ் கெளபாய்ஸ்".
    கேட்கவே சில்லென்னு இருக்கே.
    போடுங்க சார்.
    (நம்ம கண்ணன்,டெக்ஸ் விஜய் கூட்டணி இருக்க பயமேன்.)😉

    மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹

    ReplyDelete
    Replies
    1. ////4)"என் பேரு எலியப்பா". பெரியவர்களே காமிக்ஸ் ரசித்த சூழலில், முற்றிலும் குழந்தைகளை கவரும் வண்ணம் வந்துள்ள இந்த 16 பக்க குட்டி காமிக்ஸ்,
      அடுத்த தலைமுறை காமிக்ஸ் பக்கம் திருப்பும் நல்ல முயற்சிக்கு ஏற்ற புக்.
      வரும் மாதங்களில் இன்னும் சில பக்கங்கள் சேருங்கள் ஐயா.///

      +1

      Delete
  91. ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள்...
    ஜேசன் பார்ன் சீரிஸ், ஜாக் ரீச்சர், கொஞ்சம் உல்வரின் என பரபரக்கும் ஆக்ஷன் த்ரில்லர் கதைகளின் கதம்ப சோறு இந்த ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள்.
    இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம்மிடையே நெடுநாள் இருந்து அவ்வப்பொழுது நம் கனவுகளில் வந்து தொந்தரவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
    இல்லுமினாட்டிஸ், மேஸன்ஸ் போன்றுதான் இந்த ஆல்பாவும்.
    மேற்கத்திய நாடுகளில் 'ஃப்ரீ வில்' எனும் சுய சிந்தனை கொண்டே நாம் முடிவெடுக்கிறோம் செயல்படுகிறோம் என்பதனை எப்பொழுதும் கூறிக் கொண்டிருந்தாலும் அவர்களை அதை முழுமையாக நம்புவதில்லை.
    கன்ஸ்பிரசி தியரி மற்றும் மேட்ரிக்ஸ் போன்ற படங்களின் வாயிலாக மீண்டும் மீண்டும் அவர்கள் அதனை கேள்விக்கு உட்படுத்தி கொண்டே இருக்கின்றனர்.
    அமெரிக்காவின் முதல் கத்தோலிக்க பிரசிடெண்ட் ஜான் எஃப் கென்னடியின் மரணத்துடன் மிக அழகாக முடிச்சிட்டு வேகமாக நகரும் கதை அமைப்பினை புனைந்துள்ளார் ஆசிரியர்.
    சித்திரங்களும் அவற்றின் வரிசை அமைப்பும் ஜேம்ஸ் பாண்ட் மூவியை பார்த்த ஒரு த்ரில்லை நமக்குத் தருகிறது.
    மிக அழகாக கட்டமைக்கப் பெற்ற ஒரு ஆபத்தான தேன்கூட்டினை கலைத்து ஒழிக்க முயன்றிடும் நாயகனின் கதை.
    மனித மனதிற்குள் இருக்கும் ஆழ்மன வக்கிரங்களின் வெளிப்பாடும், மூர்க்கத்தனமும், கொலை வெறியும், கட்டுப்பாடின்றி கட்டவிழ்த்து விட்டால் என்ன ஆகும்?!
    இந்தக் கதை நமக்கு கோடிட்டு காட்டுவதும் அதுதான்.
    10/10

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனம்!

      Delete
  92. இந்த பொன்விழா ஆண்டு மலர் கிடைத்ததில் இருந்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இதற்கு காரணம்: 50வது பொன்விழா ஆண்டு மலரில் என் போட்டோ. மிக சிறிதாக வரும் என எதிர்பார்த்தேன் ஆனால் பெரிதாக போட்டு என்னை ஆனந்த கடலில் அமுக்கி விட்டார் ஆசிரியர். 30 ஆண்டுகளின் சந்தோஷமான அனுபவங்களை இந்த ஒரே நாளில் அனுபவிக்கிறேன். 93ல் முதன் முதலாக முத்து, லயன் காமிக்ஸ்களை படித்தப் போது நான் நினைத்து பார்த்தேனா? 2002ல் நான் முதன் முதலில் சந்தாவை கட்டிய போது நினைத்து பார்த்தேனா? அல்லது கடந்த வருடம் கனவாவது கண்டேனா? உடனடியாக ஊருக்கு போய் புத்தகத்தை அம்மாவிடமும் தம்பிகளிடமும் காட்ட வேண்டும் என மனம் பரபரக்கிறது.

    ReplyDelete
  93. பொன்விழா மலரின் முதல் கதை 'துரோகம் ஒரு தொடர்கதை' படித்துவிட்டேன்.
    பொன்விழா மணிமகுடத்தை அலங்கரிக்கும் வைரக் கற்களாக முன் அட்டையும், பின் அட்டையும், உள்ளே சித்திரங்களும் ஜொலி ஜொலிக்கின்றன.
    கதையும் அம்சமாக உள்ளது. சர்வதேச அரசியல் களம் + ரஷிய, அமெரிக்க பனிப்போரை பின்னணியாக கொண்டு வரும் ஆக்ஷன் கதைகள் அனைத்தும் அட்டகாசமாக உள்ளன.
    lady S-சின் கதைகள் வருவதில்லையே என்று ஏங்கும் என் மனசுக்கு, ஆல்ஃபாவின் கதை மாறுதலாகாவும், நல்ல ஆறுதலாகவும் இருந்தது.

    ReplyDelete
  94. Waiting anxiously for courier to deliver.
    Heartfelt thanks to Editor and his Team,, which is a extremely professional team and the best in this comics world😍❤️🎉

    The printing of personal photo in FFS is a wonderful gesture.
    The New Year has been made special.

    Dear Editor,, you have made my day!!
    The day I receive the FFS with photo,, I will consider it as a Day of Days in my life,, coz your comics world has been a great companion and stressbuster,, always brings out the nostalgic memories which makes me smile and happy.

    This is not like other comics publications which are commercial,, here the Editor has always brought in a personal touch and nostalgia which is what makes Lion Muthu great !!

    God bless Lion Muthu comics
    Godspeed.
    🙏🙏🙏

    ReplyDelete
  95. சார் உயிரைக் தேடி நமக்குக் கிடைத்த அட்டகாச விளம்பர வாய்ப்பு...தின மலர்ல ...சிறுவர் மலர்ல விளம்பரப்படுத்த வாய்ப்பிருந்தா உபயோகப்படுத்தலாம்...தினமலரில் வந்த இதழ்னு...சுஸ்கி விஸ்கி...எலியப்பா ஒரு பக்கத்த கொடுத்து விடைகாண வாங்கிப் படியுங்கள் லயனில்னு தந்தா ...ஒரு வேளை கொரனா தடைகள் வீட்டுக்குள் முடக்க வச்சா ...வரிக்கு வரி படித்து நேரம் போக்கும் வாசகர்கள் அடையலாம்

    ReplyDelete
  96. FFES amazing making சார் !

    எடிட்டர் ஏரியா, சீனியர் எடிட்டர் ஏரியா, ஏலியப்பா என்று மேய்ந்து விட்டு 1 நொடி 9 தோட்டாக்கள் படிக்க யோசித்துக்கொண்டே இன்னும் 'பொம்மை' பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    சிகரம் வைத்தாற்போல அந்த காலத்து அடர் வண்ண விட்டலாச்சார்யா போஸ்டர் நிறங்களுடனான Box - இதனை இன்னும் சில வாரங்களில் ஸ்பெஷல் auctionகளில் எதிர்பார்க்கலாம் சார் ! எழுதி வைத்துக்கொள்ளுங்கள் !!

    2013/4 என்று compare செய்தால் ஓராண்டின் ஆல்பங்களை வெறும் இரு வாரத்திற்கு அளித்திருக்கிறீர்கள் சார் - பிளஸ் இன்னும் லயன் லைப்ரரி மற்றும் phantom என்று பார்க்கும்போது - 50th year began with a bang indeed !

    ---000---000----000---

    Mondo Reverso - YES sir. கருப்பு மசிகள் தடவாமல் வெளியிடவும் - Alfa போலவே :-) :-) :-)
    அப்புறம் நம்மவர்களுக்கேற்ப என்று சொல்லி Mondo Reverso  பெயரை மேரி ரூபி என்று மாற்றிவிடாதீர்கள் சார் - eagerly awaiting ! 

    Wishing all of you a Happy New Year 2022 !!

    ReplyDelete
    Replies
    1. ///இதனை இன்னும் சில வாரங்களில் ஸ்பெஷல் auctionகளில் எதிர்பார்க்கலாம் சார் ! எழுதி வைத்துக்கொள்ளுங்கள் !!///

      :))))

      Delete
    2. Mondo Reverso என்றால் "தலைகீழான உலகம்" என்பது போலான அர்த்தம் சார் !

      Delete
  97. ZAGOR I சேர்த்து கொள்ளலாம் டிர் எடி ..

    நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ..

    ஜாகோர் க்காக ..

    ( குறிப்பு : தவறா எடுத்துக்காதீங்க டியர் எடி .. இந்த ** பெட்டை ** என்கிற வார்த்தை ப்ரயோகம் .. தவறாக படுகிறது எனக்கு .. இங்கும் பல பல பெண் வாசகிகளும் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ளவும் .. நன்றி 🙏🙏 )

    ReplyDelete
    Replies
    1. ///இந்த ** பெட்டை ** என்கிற வார்த்தை ப்ரயோகம் .. தவறாக படுகிறது எனக்கு ///

      உண்மைதான் சம்பத்! எனக்குமே கூட அந்த வார்த்தை கொஞ்சம் உறுத்தலாகத்தான் தோன்றியது!

      Delete
    2. தவிர்த்து விடுவோம் சம்பத் !

      Delete
  98. விஜயன் சார் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். கானக கோட்டை இதழில் மொழிபெயர்ப்பில் எந்த திருத்தமும் செய்யாமல் அப்படியே வெளியிடுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் தங்கக் கல்லறைக்கு ஏற்பட்ட நிலைமைதான் இதற்க்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எக்ஸ்ட்ரா நம்பர்கள் போடாமல் அப்படியே வெளியிடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கக் கல்லறை ஓராண்டுக்குள் மூன்று பதிப்புகள் காணும் அளவிற்கு விற்பனை கண்டதொரு இதழ் நண்பரே ! So அதன் கதிக்கு எந்த இதழ் ஆளானாலும் செம குஷியே !

      அவசியமாகிடும் மாற்றங்கள் செய்திடுவதில் "கானக கோட்டைக்கும்" சரி, "கோட்டையில் கானகத்துக்கும்" சரி, நிச்சயமாய் தயங்கிடவே போவதில்லை !

      Delete
    2. விஜயன் சார், விற்று தீர்ந்த tex இதழ்கள் இந்த ஆன்லைன் புத்தக விழாவில் கிடைக்குமா?

      ஒரு பிரளய பயணம், கழுகு வேட்டை, நெஞ்சே எழு.
      இரு முறை வெளிவரும் என்று கூறினீர்கள் ஆனால் வரவில்லை. இப்போதாவது கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாமா?
      ப்ளீஸ் கன்பிர்ம்.

      Delete
    3. சார் விற்பனையை பற்றி நான் கூறவில்லை. அது வெளியான போது நண்பர்களின் விமர்சனங்களைப் பற்றி தான் நான் கூறுகிறேன். கனவுக் கோட்டை என்பது அன்று செம ஹிட்டான கதை. அந்தக் கதையும் பேனல் பை பேனல் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. தங்கக் கல்லறை ஈட்டிய விமர்சனத்தை இந்த இதழ் கொண்டுவராமல் பார்த்துக் கொள்ளவே நான் இந்த பதிவிட்டேன். எல்லா நண்பர்களும் டெக்ஸ் வில்லரின் வேறு கதையை கேட்டுக் கொண்டிருக்க நான் இந்த கதையை வெளியிடுங்கள் என்று கூறியிருந்தேன். அந்தக் குறை எல்லாவற்றுக்கும் முன்னாள் வருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. வரும் புத்தகம் நல்ல விதமாக அமைய வேண்டும் என்பதே எனது அவா. ஏனென்றால் அன்று மொழிபெயர்ப்பு அட்டகாசமாக இருந்தது. என் நினைவில் நிற்கும் இதழ்களில் இதுவும் ஒன்று. வரும் இதழ் அதேபோல் எல்லோருடைய மனதையும் கவர்ந்து அந்த வெற்றியை தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே நான் இந்த பதிவை எழுதினேன். நீங்கள் கொணரும் மாற்றம் முன்னேற்றம் ஆகவே இருக்கட்டும். கானக கோட்டை புத்தகத்திற்காக ஆவலுடன் வெயிட்டிங். அந்தப் புத்தகம் எப்போது வெளிவரும் என்ற தகவலையும் சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும். நான் சொன்னதில் ஏதாவது தவறு இருந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்.
      நன்றிங்க சார்.

      Delete
    4. நண்பரே..மாற்றம் மட்டுமே நிரந்தரமானது ! முந்தைய இதழ் சார்ந்த பால்ய நினைவுகள் ஆளுக்கொன்றாய் இருந்திடும் தான் ; அதனில் மாற்றமே இல்லாது ஈயடிச்சால் தான் திருப்தி என்று அவரவருக்கு தோன்றுவது சகஜமே ! ஆனால் அவ்வித சார்பு நிலைகள் ஏதும் இல்லாத புதியவர்களுமே இன்றைக்கு அந்த மறுபதிப்பு இதழ்களைப் படித்திடவுள்ளதை நீங்கள் கருத்தில் கொண்டிட அவசியம் இல்லாது போகலாம் தான் ; ஆனால் நானுமே கண்மூடி இருக்க இயலாதே !

      சின்ன உதாரணம் சொல்கிறேன் : முந்தைய டெக்ஸ் இதழ்களில் டைகர் ஜாக் டெக்ஸை பெயர் சொல்லி நண்பனைக் கூப்பிடுவது போலவே அமைத்திருக்கிறோம். ஆனால் post 2012 - "இரவுக்கழுகாரே" என்று, நவஹோ இனத்தலைவராக மட்டுமே டைகர் விழிப்பதே நடைமுறை ! கிட் கூட இப்போதெல்லாம் "சின்ன கழுகார்" தான் ! So இன்றைய இந்தப் புது பாணிகளில் படிக்க ஆரம்பித்துள்ள புதிய வாசகர்களுக்கு அந்நாட்களது பாணிகள் நெருடிடலாம் தானே ?

      "மாயாவி கராட்டே வெட்டு வெட்டினார்" என்ற துவக்க நாட்களது வசனங்களுக்கும் உங்களை போல அபிமானிகள், நமது மூத்த வாசக வட்டத்தினுள் இருந்திடக்கூடும் தான் ! அதற்காக அங்கேயும் நான் ஈயடிக்க ஆரம்பித்தால், அப்புறம் கராட்டே (!!) வெட்டு விழுவது எனது கழுத்திலாகத்தானிருக்கும் !

      I repeat - அவசியப்படும் மாற்றங்களைச் செய்திட ஒருபோதும் நான் தயங்க மாட்டேன் - no matter what the album is !

      Delete
  99. புதிய கதைகளை வரவேற்கிறேன் முடிந்தால் 18+ என்ற தனி தடத்தில் வெளியிடலாம்

    ReplyDelete
  100. This comment has been removed by the author.

    ReplyDelete
  101. வேட்டையாடி முடித்து,ஆவியுடன் அரூபமாகி,கொடூர ஷெரீப்பை தாண்டியாச்சி...
    அடுத்து ஃபோட்டோ பிடிக்க போகனும்...

    ReplyDelete
  102. டியர் எடி,

    2022 தொடங்க ஒரு நாள் முன்னதாகவே பெட்டி வந்து சேர்ந்தது... அட்டை டப்பியிலேயே ஓவியங்கள் சேர்க்கும் இம்முறையை எப்போது யோசித்தீர்கள்?! 50 வருட நிறைவை கொண்டாட அருமையான உத்தி்.

    2014-5 தொடங்கி நமது அட்டைடப்பிக்களை ஒரு ஞாபகத்திற்காக சேர்த்து வைத்திருந்தேன். கப்போர்டு முழுவதும் நிரம்பி வெளியேவும் அடுக்கி வைத்திருப்பதை பார்த்த அம்மணியிடம் அர்ச்சனைகள் வாங்கியபின், இரண்டு மாதங்கள் முன்புதான் வெளியேற்ற வேண்டியதாயிற்று.

    இனி இதை பெருமையாக அடுக்கி வைக்கலாம்.

    சீனியர் எடியுடன் ஆன்லைன் மீட்டிங்கே இந்த வாரயிறுதிக்கு ஏற்பாடு செய்யுங்கள். கொரோனா கால கட்டுபாடுகளில் இதுதான் சிறப்பு.

    கூடவே, லேடீஸ் ஸ்பெஷலுக்கு டபுள் ஓகே. கூடவே, குட்டீஸ் ஸ்பெஷலுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆவலுடன் வெயிட்டிங்.

    ReplyDelete
  103. ஒற்றை நொடி ஒன்பது தோட்டா நேற்று இரவே படித்து முடித்து விட்டேன். புது வருடம் சரவெடி பட்டாசுடன் ஆரம்பம். நேற்று காலை தான் படிக்க ஆரம்பித்தேன் முதல் அத்தியாயம் மட்டும் படித்து விட்டு நேரம் ஆகிவிட்டதால் ஆபீஸ் கிளம்பி விட்டேன் எப்போது ஆஃபீஸ் முடியும் வீட்டுக்கு வந்து மிச்ச கதையை படிப்பேன் என்று காத்து இருந்தேன்.

    விடுவார்களா நேற்று புத்தாண்டு முன்னிட்டு கேக் வாங்கி கொண்டாடி விட்டு தான் செல்லவேண்டும் என்று கூறி விட்டார்கள். வீட்டுக்கு வரும் போது 8.20. ரொம்பவே சோர்வாக இருந்தது. சரி படிக்க ஆரம்பிக்கலாம் தூக்கம் வந்தால் போய் படுத்து விடலாம் என்று துவங்கினேன். படித்து முடிக்கும் போது 11 மணி இடையில் சில முறை தடங்கல்கள் வந்தாலும் மிக நிறைவான ஆரம்பம் 2022க்கு .

    தெறிக்கும் வேகம், அனல் பறக்கும் ஆக்சன் அட்டகாசமான படங்கள். முதல் பாக இறுதியில் வரும் டுவிஸ்ட். ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் டெரர் ஆன கதாபாத்திரங்கள் எட்டாவது கியரில் சும்மா பறக்கிறது கதை. எனக்கு ஹீரோவை விட மிகவும் பிடித்த இரு கேரக்டர்கள் அந்த ஆவியும், மேகியும் தனியாக ஒரு தொடர் தொடங்கலாம் இவர்களுக்காக. முத்து 50 இந்த இதழ் அட்டகாசமான வெற்றி அடித்த பந்து ஸ்டேடியத்தை விட்டு வெளியே 100/10. Wonderball wonderful.

    ReplyDelete
  104. அனைவருக்கும் வணக்கம்

    இன்றுதான் .புத்தகங்கள் வந்தன.
    பொன்விழாச் சிறப்பிதழ்கள் அனைத்தும் அருமை.

    புத்தகங்களை பார்க்கும்போது உங்கள் கடின உழைப்பு தெரிகிறது

    தங்களுக்கும் தங்கள் குழுவினர்க்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்

    FFS வெற்றிபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  105. மாற்றம் ஒன்றே மாறாதது. MONDO REVERSO is Must Needed one to attract Current GEN too... Awaiting Eagerly for MONDO REVERSO Release...and Of course ZAGOR Release Too...

    ReplyDelete
    Replies
    1. MONTO REVERSO..நீங்கள் சொன்ன அந்த குல்பி லட்டு தான Sir?🤩😍🤩

      Delete
  106. Edi Sir...

    If Zoom Meeting happens on Pongal Holidays...we all can diacuss on FFS Review also..and If you permit Q&A session also can be included...as We have shorter time for tomorrow....

    ReplyDelete
    Replies
    1. Yes sir, Pongal holidays it will be...tomorrow is bound to be tough for all !

      Delete
  107. ஒற்றை நொடி ஒன்பது தோட்டா

    இக்கதை பற்றிய அனைத்து பதிவுகளிலும் கூறி உள்ளேன், அதன் கடைசி பதிவிலும் கூறாமல் இருக்க கூடாது.

    ஆங்கில ஸ்கேன்லெசனில் பல வருடங்களுக்கு வந்து அதன் சில பக்கங்கள் படித்து பிடித்து போய் சரி முழுவதும் படிக்கலாம் என்று இருந்த பொழுது எடிட்டர் விரைவில் வருகிறது என்று தனது பதிவில் கூறினார் ஆகையால் படித்தால் தமிழில் தான் என்ற எனது காத்திருப்பு இன்றோடு முடிந்தது.


    காத்திருந்ததற்கு சரியான பலன் கிடைத்துள்ளது. கதை பட்டாசாக உள்ளது.

    அட்டையில் இருந்து ஆரம்பிப்போம், எவ்வளவு பேர் கவணித்தார்கள் என்று தெரியவில்லை, அட்டையில் நகாசு வேளைகளில் தோட்டாக்கள் கை வெடிகுண்டுகள் பறப்பது போல செய்துள்ளது நல்ல டச். வெளிச்சத்தில் ஒரு சாய்வாக வைத்து பார்த்தால் தெரியும். கீழே ஆண்டுமலர் என்று போட்ட இடம் கூட குற்றம் நடந்த இடத்தில் கட்டும் பட்டை போல இருப்பதும் சிறப்பு. அட்டையில் எங்குமே ஹீரோ படம் இல்லாததும் புதுமை.

    அடுத்து காமிக்ஸ் டைம் நன்றிகளுக்கு நடுவில் நீங்கள் கூறிய இந்த வரிகள் எனது கவனத்தை ஈர்த்தது.

    இவர்கள் நீங்களாய் இன்னும் சில சஸ்பென்ஸ் வரவுகள் --- சந்திக்க நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம் சார். டீம் அறிமுகங்களும் சிறப்பு.

    அடித்த பக்கத்தில் அமெரிக்காவில் நடத்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் பற்றிய செய்தித்தாள் படங்கள் அடுத்து முழுமையான கருப்பு பக்கத்தில் ஹீரோ துப்பாக்கியுடன் நிற்கிறார், அதுவே கதை சார்ந்த எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டது.

    சான் பிரான்ஸிகோவின் கழுகு பார்வை படம் வாவ். துப்பாக்கி சூட்டில் ஆரம்பிக்கும் கதை பர பரவென பறக்கிறது.

    இரவு 10 மணிக்கு படிக்க ஆரம்பித்ததாலோ என்னவோ அதிக வாசனங்கள் வாயில் நுழையாத பெயர்கள் முக்கியமாக ஹீரோவின் பெயர் அடுத்து அந்த வில்லன் போல், டக்கென்று உள்நுழைய முடியவில்லை பல நேரம் போல், போல என படித்துவிட்டு மீண்டும் படித்து தெளிந்தேன் ஆனால் கொஞ்சம் நுழைந்த பின் அவ்வளவு தான் 3 பாகங்கள் முடிந்து தான் எழுந்தேன் 2 மணி ஆகிவிட்டதால் மீதி இன்று காலை படித்து முடித்தேன்.

    ஆல்பா கதாபாத்திரங்கள் சற்று மார்வளின் வின்டர் சோல்ஜரை நினைவுபடுத்தியது, மேலும் கதை கூட பல ஹாலிவுட் கதைகளை நினைவுபடுத்தியது நமது அபிமான பார்ன் ஐடெண்டி உட்பட, முதல் கதையின் கிளைமாக்ஸ் கூட பார்த்த ஞாபகம் இருந்தது.ஆனாலும் இக்கதை கண்டிப்பாக வெற்றி பெறும் வாய்ப்பை கொண்டது.

    கதையில் கதாபாத்திரங்கள் படைப்பு அருமை ஒவ்வொரு கதைக்கும் வரும் மெயின் கதாபாத்திரங்களும் அருமை. மேலே மற்றொரு நண்பர் சொன்னது போல ஹீரோவை விட ஆவி தான் அசத்துக்கறார் அதுவும் ஒவ்வொரு முறையும் குடிக்க கொடுத்து மயக்கமடைய செய்வதெல்லாம் வேற லெவல். தொடரும் கதைகளிலும் அவர் தொடர்வார் என்றே நினைக்கறேன். மேகி கதாபாத்திரம் கூட சிறப்பு.

    ஆனால் வரும் கதைகளில் ஆல்பாக்கள் இல்லாமல் வேறு பக்கமும் கதை சென்றால் இன்னும் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது.

    கதை கரு , வயலன்ஸ் மற்றும் அந்த ஷெரீப் கதாபத்திரத்திற்காகவே இக்கதை கண்டிப்பாக +18 தான்.

    மொத்தத்தில் இதனை தமிழில் வாசிக்க எங்களுக்கு வாய்ப்பாளித்த ஆசிரியர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

    ReplyDelete
  108. பார்சல் பிரிப்புப் படலம்.

    கனமான அட்டைப்பெட்டியை கவனமாகப் பிரித்தேன்.
    முதலில் கண்ணில் பட்டது ஸ்வீட்தான்(ஸ்வீட் எடு கொண்டாடு.)
    அடுத்தது..ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல் போஸோடு ஆல்பா தென்பட்ட ஆல்பா சென்சுரி அடித்தது..

    அப்புறம்..தென்பட்டது..விகார இளிப்போடு கூடிய ஸ்பைடரின் அழகு வதன முகமும்..கூடவே இரும்புக் கையுமான கோல்டன் ஹீரோஸ் ஸ்பெசல்..

    பின்னாடி வந்தது..டக்கென புன்னகையை உருவாக்கிய எலியப்பா..

    கடைசியாக(ஏறக்குறைய) ஒருவழியாக வெளிவந்த.. ஒ.நொ.ஒ.தோ

    கடைசியில் சர்ப்ரைஸாக மாயாவியின் பிரம்மாண்ட ப்ளோ அப்..

    மேலும்..குட்டி குட்டியான புக் மார்க்ஸ்.

    தோண்டத் தோண்ட புதையலாக கிடைத்த ஃபீலிங்.

    ReplyDelete
  109. ஆசிரியரின் புதிய பதிவு தயார் நண்பர்களே...

    ReplyDelete