Powered By Blogger

Saturday, January 29, 2022

கேள்விகள் மூன்று !! கார லட்டுக்களும் மூன்று !

 நண்பர்களே,

வணக்கம். போதி தர்மர் காலத்திலிருந்து நமது பொம்ம புக் பணிகள் தொடர்ந்திடுவது போல் உள்ளுக்குள் தோன்றுவதற்கொரு மறு பக்கமும் உண்டு ! கதைகளுக்குள் புகுந்திடும் போதெல்லாம் - 'ஆங்...இங்கே இவர் பன்ச் டயலாக் பேசணுமே ; இங்கே ஒரு செண்டிமெண்ட் சீன் வரணுமே ; க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் இப்படித் தான் இருந்தாகணுமே ?' என்ற ரீதியில் உள்ளுக்குள் பல்ப் எறிவதுண்டு ! யூகங்கள் நிறையவாட்டி பல்ப் வாங்குவதே பலனாகிப் போனாலும், பொதுவாய் ஒரு 'seen it all' உணர்வு எனக்குள் இருந்திடுவதை மறுக்க மாட்டேன் ! ஆனால் அவ்வப்போது சில கதைகள், சில கிராபிக் நாவல்கள் இந்தப் பரிச்சயமான கூட்டிலிருந்து நம்மைக் கையைப் பிடித்துத் தர தரவென வெளியே இழுத்து வரத் தவறுவதில்லை ; கதாசிரியர்களின் கற்பனை வளங்கள் பிடரியைப் பிடித்து உலுக்கி, 'அடேய்..கோமுட்டித் தலையா...இன்னும் எத்தினி கழுதை வயசுக்கு காமிக்ஸ் வாசிப்பு தொடர்ந்திட்டாலுமே, அதன் பரிமாணங்களில் கால்வாசியைக் கூட முழுசாய் தரிசித்திட இயலாது' என்பதை மண்டையில் குட்டிப் புரியச் செய்கின்றன ! And அதன் லேட்டஸ்ட் அத்தியாயம் தான் 'அண்டர்டேக்கர்' ! 

Xavier Dorison & Ralph Meyer ! சமகால பிரான்கோ -பெல்ஜியப் படைப்புலகில் இந்த ஜோடிக்கு ரொம்ப ரொம்ப உசரமானதொரு இடம் உண்டு ! இருவருக்குமே வயது 50 / 51 தான் எனும் போது இவர்களிடம் அனுபவத்தின் ஆழமும் உள்ளது ; புதுமைகளின் வேகங்களும் உள்ளன ! எக்கச்சக்கமான ஆல்பங்களில், தொடர்களில் பணியாற்றியுள்ள இந்த ஜோடியின் கூட்டணியை XIII - 'விரியனின் விரோதி' ஆல்பத்திலும் பார்த்திருக்கிறோம் ! 

அண்டர்டேக்கர் தொடரினில்  இதுவரைக்குமான 2 டபுள் ஆல்பங்களிலுமே ரொம்பவே வித்தியாசமான கதைபாணியை ; கதை மாந்தரைப் பார்த்திருப்போம் தான் ! So தொடரின் மூன்றாவது டபுள் ஆல்பத்தின் பணிகளுக்குள் புகுந்த போது, அந்த மாமூலான சோம்பலையும் மீறி, ஒரு சன்னமான எதிர்பார்ப்பு இருந்தது தான் ! And கதை துவங்கிய பத்தே பக்கங்களுக்குள் 'இதுதாண்டி மாப்ள இந்த ஆல்பத்தின் knot ...போகப் போக வேடிக்கையைப் பாரேன் !' என்று சொல்லாத குறையாய் கதாசிரியர் போட்டுத் தாக்கியதைப் பார்த்த போது 'அடங்கொக்காமக்கா' என்றபடியே நிமிர்ந்து உட்கார்ந்தேன் ! மேற்கொண்டு போகப் போக, நாற்காலியை இறுகப் பற்றியபடிக்கே வாசித்துச் சென்றவன், க்ளைமாக்சை எட்டிய போது அலிபாபா குகையாட்டம் திறந்திருந்த வாயை மூட, அரை டஜன் ரவுண்டு பன்கள் கூடப் பற்றியிராது ! கொட்டும் பனியின் மத்தியில் ரயிலில் அண்டர்டேக்கரையும், அவனது அணியினரையும் கடத்திச் செல்லும் sequence-ல் துவங்கி, 'சுபம்' போடும் பக்கம் வரையிலும் இரண்டாம் பாகத்தில் கதாசிரியரும், ஓவியரும் போட்டி போட்டுக்கொண்டு செய்துள்ள ரகளை வேறொரு லெவல் ! Oh yes - கொஞ்சம்  மிகைப்படுத்தல் உண்டு தான் ; துல்லியமாய் நூல்பிடித்தால் லாஜிக்கிலும் கொஞ்சம் பிசிறடிக்கும் தான் ! ஆனால் அவற்றை எல்லாம் ஒரு படைப்பாளியின் கற்பனைக்குத் தரும் குஷனாய் புறம்தள்ளிவிட்டுப் பார்த்தால் - நம் முன்னே விரிவது ஒரு ஹாலிவுட் பட ரேஞ்சிலான த்ரில்லர் ! கியானு ரீவ்ஸ் மாதிரியானதொரு ஹாலிவுட் நடிகருக்கு அண்டர்டேக்கர் அரிதாரமிட்டு, இதை மட்டும் வெள்ளித்திரைக்கு கொண்டு சென்றார்களெனில் பட்டையைக் கிளம்பிடும் என்பேன் ! 

Keanu Reeves

நடு நடுவே சமூகம் சார்ந்த கருத்துக்களையும் கதாசிரியர் உதிர்த்துள்ளார் தான் ; so கனமான சில பகுதிகளும் இங்குண்டு ! ஆனால் க்ளைமாக்ஸ் ஆக்ஷன் பாக்கி அத்தனையையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது ! And அண்டர்டேக்கர் அடுத்த சாகசத்தை நோக்கியும் நகர்வதாக கதை முடிவதால் - இந்த வித்தியாச நாயகரின் பயணங்கள் தொடரவுள்ளன என்பது icing on the cake !

At this juncture, சமீபமாய் ஒரு பிராங்கோ-பெல்ஜிய தளத்தினில் அரங்கேறியதொரு opinion poll  நினைவுக்கு வந்தது ! அதையே உங்களிடமும் கேட்டு வைத்தாலென்னவென்று தோன்றியது ! அது பெருசாய் ஒன்றுமில்லை guys ; காலம் காலமாய் இங்கே ஓடி வரும் ஒரு ஜாலியான பஞ்சாயத்து சார்ந்ததே : 

நிறைய கௌபாய் தொடர்களுக்குள் மண்டையை விட்டு வரும் பார்ட்டிகள் நாம் ! ரசனைகள் என்பன காலப்போக்கோடு மாற்றம் காணும் சமாச்சாரம் எனும் போது இந்த வேளைதனில் உங்களின் உள்ளங்களில் யார்-எங்கே நிற்கின்றனர் ? என்று பார்த்து விடுவோமா guys ?

நமது அணிவகுப்பினில் உள்ள action கௌபாய்களுக்கு ரேங்க் போடுவதாயின் - யாருக்கு எந்த ரேங்க் என்பதே கேள்வி ! களத்தினில் உள்ளோர் கீழ்க்கண்ட வஸ்தாதுகளே :

டெக்ஸ் வில்லர் ; கேப்டன் டைகர் ; ட்யுரங்கோ ; அண்டர்டேக்கர் ; நவீன வெட்டியான் ஸ்டெர்ன் !

(கமான்சே ஆட்டத்துக்கே சேர்த்தி இல்லை & டெட்வுட் டிக் வெறும் ஒற்றை ஆல்பத்தோடு போட்டிக்கு qualify ஆகிடவில்லை !)

என்னடா, சம்பந்தமில்லாம opinion poll நடத்துறானே பீன்ஸ் மண்டையன் ? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம் தான் ! இருக்கே...காரணம் இருக்கே... அது நான் பட்டியலிட்டிருந்த கார லட்டு # 3 சார்ந்ததெனும் போது automatic ஆக சம்பந்தம் ஏற்பட்டு விடுகிறதே ! 

வேறொன்றுமில்லை guys ; ஒரு மைல்கல் வருஷத்தினில் முத்துவின் டாப் நாயகர்களை ஆங்காங்கே எப்படியேனும் களமிறக்கி இந்த வருஷத்தையே ஒரு ஜாலி வேளையாக்கிட உள்ளுக்குள் ஆசை அலையடிச்சிங்ஸ் ! வேதாளர் வருகிறார் ; ரிப் கிர்பி ; காரிகன் ; மாண்ட்ரேக் - என கிளாசிக் நாயகர்கள் காத்துள்ளனர் ! ஆனால் MC டாப் நாயகர் லிஸ்ட்டில் - உச்சியில், செம உசரத்தில் நிற்கும் அந்த சவரம் கண்டிடா கௌபாயை குறிப்பிடாது போனால் இந்தாண்டு முழுமை காணாதென்றேபட்டது !  So (இளம்) 'தல' தாண்டவமாடிவரும் இந்நாட்களில் (இளம்) தளபதியையும் ரேஸில் இறக்கி விட்டாலென்ன என்ற மகா சிந்தனையே கார லட்டு # 3 -ன் பின்னணி ! 

To cut a long story short - இளம் டைகர் தொடரின் ஆல்பம்ஸ் எஞ்சியிருப்பன 12 !  'ஏக் தம்மில்' பன்னிரெண்டையும் ஒன்றிணைத்து இ.ப. பாணியில் மெகா புக்காக்குவது வேலைக்கே ஆகாது என்பது தீர்மானமாய்த் தெரிந்த பிற்பாடு, தொடரினை கொஞ்சம் கவனமாய் study செய்தேன். அப்போது தான் அவற்றுள் சின்னச் சின்னக் கதைச் சுற்றுக்கள் அடங்கியிருப்பது புரிந்தது ! So முதல் சுற்று என்ன மாதிரி ? என்று பார்த்த போது, ஆல்பம்ஸ் # 10 to 13 வரையிலுமான 4 ஆல்பங்கள் ஒன்றிணைந்து ஒரு cycle தேறிடும் என்பது புலனானது ! அப்புறமென்ன - ஒரு சுபயோக சுபதினத்தினில் திட்டமிடலைத் துவக்கினால், நடப்பாண்டின் இறுதியை ஒட்டிய ஏதோவொரு பொழுதினில், தட்டை மூக்காரை தடதடக்கச் செய்து விடலாம் என்றுபட்டது ! What say guys ? 

Question # 1 : டீலா ? நோ டீலா ?

Question # 2 : டீல் என்றால் - 4 ஆல்பங்கள் இணைந்த ஒற்றை புக்காகவா ?

(அல்லது)

மாதம் 1 பாகமென்ற ரீதியில் 2022 செப்டெம்பரில் துவங்கி, டிசம்பரில் முடிக்கலாமா ? சொல்லுங்களேன் ப்ளீஸ் ?

ரைட்டு, நான் நடையைக் கட்டுகிறேன் folks - SODA நலமா ? என்று விசாரிக்க ! நீங்கள் பதில் சொல்ல நேரமெடுத்துக் கொண்டு இந்த வாரயிறுதியினை ஜாலியாக்கிடலாமே ? Bye all...see you around ! Have a fun Sunday !

238 comments:

  1. Replies
    1. இளம் டைகர்!!! பேஷ் பேஷ்! எப்படி வந்தாலும் சூப்பர் தான் சாரே🎉🎊

      Delete
  2. வணக்கம், சார்... டைகர் ஒரே புக் ஆகவே வெளியிடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. கௌபாய் ஹீரோஸ் வரிசை

      1. கேப்டன் டைகர்

      2. டெக்ஸ் வில்லர் & கிட் கார்சன்

      3. ஸ்டெர்ன்

      4. அண்டர்டேக்கர்

      5. ட்யூராங்கோ

      லக்கி லூக், சிக் பில் எல்லாம் லிஸ்டில் சேர்க்க கூடாதா, ஐயா?

      Delete
  3. Deal
    Four albums in 1 book color hard cover

    ReplyDelete
  4. டைகர் - 10-13 ஹார்ட்கவர். ஒரே புக். தனித்தனியாக வேண்டாம்.

    ReplyDelete
  5. Question # 1 : டீல்

    Question # 2 : -4 ஆல்பங்கள் இணைந்த ஒற்றை புக்

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே🙏🙏

    ReplyDelete
  7. #1 டீலோ டீல்.
    #2 celebration என்றாலே குண்டு புத்தகம் தானே சார்.

    ReplyDelete
  8. இரவு வணக்கம் நண்பர்களே.....

    ReplyDelete
  9. Edi Sir..
    இளைய தளபதி டைகரை வரவேற்கிறோம்.

    Qn.no:1 - டீல்.
    Qn.no:3- 4 ஆல்பங்கள் இணைந்த ஒற்றை புக்.

    ReplyDelete
  10. கேப்டன் டைகர் -1;
    நவீன வெட்டியான் ஸ்டெர்ன் -2;
    ட்யுரங்கோ & அண்டர்டேக்கர்-3;

    டெக்ஸ் வில்லர் (தலைக்கு ரேங்க் கொடுத்தால் நம்பவா போறிங்க...)

    ReplyDelete
  11. டீல். நாலு ஆல்பங்கள் இணைந்த ஒற்றை குண்டு பேபிஸ்..

    ReplyDelete
  12. அனைவருக்கும் இரவு வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  13. டைகர் 10 -13 ஒரே புக்.

    மறுபடியும் பிரிக்க வேண்டாங்க சார்...

    ReplyDelete
  14. ஒரே புத்தகம். தங்கத் தலைவன் இல்லாமல் முத்து ஐம்பதா??? நெவர்.

    ReplyDelete
  15. Edi Sir..

    My Action cowboy Rank list:

    Tex,Tiger,Undertaker,Durango,Stern.

    ReplyDelete
  16. எனது கௌபாய் ஆக்சன் லிஸ்ட்
    1. டைகர்
    2. Durango
    3. டெக்ஸ்
    4. Undertaker
    5. Stern

    ReplyDelete
  17. முடிந்தால் ஆகஸ்டிலேயே தளபதியை கொண்டாந்துடலாம். புத்தகவிழா சிறப்பிதழாக.

    ReplyDelete
    Replies
    1. ஆமா... ஆகஸ்ட்ல உயிரைத்தேடி இருக்க கூடும்ல....

      Delete
    2. உயிரைத் தேடி மே கடைசிலன்னு போன பதிவுல எடிட்டர் சொன்னதா ஞாபகம்.

      Delete
  18. //டெக்ஸ் வில்லர் ; கேப்டன் டைகர் ; ட்யுரங்கோ ; அண்டர்டேக்கர் ; நவீன வெட்டியான் ஸ்டெர்ன் !//

    உங்களின் கேள்வியிலேயே பதில் - வரிசை உள்ளது, மிகச் சிறப்பாக.

    ReplyDelete
    Replies
    1. Text always stay on different track and we can't keep him in this race.

      Delete
  19. இளம் புலி..

    டீல் டீல் டீலோ டீல்.!

    நான்கு ஆல்பங்கள் இணைந்த ஒற்றை புக்குக்கே ஓட்டு..!

    பெட்றமாக்ஸ் லைட்டேதான் வேணும்.!

    யங் டைகர்..

    ReplyDelete
  20. டெக்ஸ் வில்லர்

    கிட் கார்சன்

    கேப்டன் டைகர்

    ட்யூராங்கோ

    அண்டர்டேக்கர்...


    ஸ்டெர்ன்....ம்ம்..ம்ம்..!

    ReplyDelete
  21. #1 டபிள் டீல்.
    #2 - 4 பாகங்கள் இணைந்தே வந்தால், அதுவும் ஹார்ட் கவரில் 😇😇😍😍😁😁

    ReplyDelete
  22. >>நமது அணிவகுப்பினில் உள்ள action கௌபாய்களுக்கு ரேங்க் போடுவதாயின் - யாருக்கு எந்த ரேங்க் என்பதே கேள்வி !

    டெக்ஸ் வில்லர் Rank 1
    கேப்டன் டைகர் Rank 2
    ட்யுரங்கோ Rank 3

    அண்டர்டேக்கர் Rank ஹி ஹி ;
    நவீன வெட்டியான் ஸ்டெர்ன் Rank மிடில

    >>Question # 1 : டீலா ? நோ டீலா ?
    டீல்

    >> டீல் என்றால் - 4 ஆல்பங்கள் இணைந்த ஒற்றை புக்காகவா ?

    ஒரே புக்

    ReplyDelete
  23. டீல் ஓகே!

    4பாகங்கள் இணைந்த ஒற்றை புக் ஆக ஓகே!

    ReplyDelete
    Replies
    1. 5,6 வருடமா கேட்டுட்டே இருக்கோம் சார்.. 3x4பாகங்களாக 3வருடத்தில் வந்தாலும் ஓகேதான்....

      Delete
    2. வாட்ஸ்ஆப் குருப்புகள்ல ஏகமாக பேசி பேசி பேசி தேய்ஞ்ச ரெகார்டு இது.... ஒவ்வொரு தடவையும் சார்ட்ட கேட்டு கேட்டு கேட்டு கேட்டு... கடைசியாக இப்ப பழத்திருக்கு பழம்....!!!

      Delete
  24. எடிட்டர் சார்,

    அண்டர்டேக்கர் ரகளையானதொரு கதைக்களத்தோடு களமிறங்கப்போது குதூகலமளிக்கிறது.

    இளம் டைகர் வரயிருப்பது ரொம்பவே மகிழ்ச்சியளிக்கிறது! பிரிந்திருந்த பழைய நண்பனொருவனை நீண்டநாள் கழித்துச் சந்திக்கப்போகும் ஆவல் மனதிற்குள்! 4 பாகங்களா போட்டாலும் சரி; மாதம் ஒரு பாகமா போட்டாலும் சரி - மகிழ்ச்சியே!

    மை வஸ்தாது லிஸ்ட் :
    டெக்ஸ் வில்லர்
    கேப்டன் டைகர்
    ட்யுரங்கோ
    அண்டர்டேக்கர்
    நவீன வெட்டியான் ஸ்டெர்ன்

    ReplyDelete
  25. டைகர் - 10-13 ஹார்ட்கவர். ஒரே புக். தனித்தனியாக வேண்டாம்.

    Reply

    ReplyDelete
  26. கௌபாய் ரேங்க் லிஸ்ட்,

    1. டெக்ஸ்
    2. டைகர்
    3. அண்டர்டேக்கர்
    4. டியூராங்ககோ
    5. ஸ்டெர்ன்

    தளபதி கேள்விக்கான பதில்,

    1. டீல் - தளபதி எங்கள் தளபதி

    2. குண்டு புத்தகம் நான்கையும் சேர்த்து

    ReplyDelete
  27. Question # 1 : டீல்

    Question # 2 : -4 ஆல்பங்கள் இணைந்த ஹார்ட் பவுண்ட் புக்

    ReplyDelete
  28. நம்ம ரேங்....

    1.டெக்ஸ் வில்லர்

    2.டெக்ஸ் வில்லர்

    3.டெக்ஸ் வில்லர்

    4.டெக்ஸ் வில்லர்

    5.டெக்ஸ் வில்லர்

    6.கேப்டன் டைகர்

    7.ட்யுரங்கோ

    8.அண்டர்டேக்கர்

    9.நவீன வெட்டியான் ஸ்டெர்ன்

    10.டெட்வுட்

    ReplyDelete
    Replies
    1. நாடி நரம்பு ரத்தம் சதை அனைத்திலும் டெக்ஸ் ஊறிப்போய் இருப்பது தெரிகிறது ஜி

      Delete
    2. ஹி....ஹி... ஆக்சுவலா டாப்10க்கு மே டெக்ஸ்தான்.... சரிபரால்லனு அவுங்களுக்கும் இடம் கொடுத்து உள்ளேன், பெரிய மனசு பண்ணி...😉😜

      Delete
  29. எனது கௌபாய் ஆக்சன் லிஸ்ட்
    1. டைகர்
    2. டெக்ஸ்
    3. Undertaker
    4. ட்யூராங்கோ
    5. ஸ்டெர்ன்- ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்ட்.

    ReplyDelete
  30. டீல் ஓகே சார்...

    4பாகங்கள் இணைந்த ஒற்றை புக் ஆக ஓகே!

    ReplyDelete
  31. டைகர் அறிவிப்பு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.

    ReplyDelete
  32. எனது கௌபாய் ஆக்சன் லிஸ்ட்

    1. தளபதி டைகர்
    2. அப்பறம் கேப்டன் டைகர்
    3. ப்ளூபெர்ரி.
    4. டெக்ஸ்
    5. ட்யூராங்கோ
    6. அண்டர்டேக்கர்

    ReplyDelete
  33. 1. டைகர்
    2. அண்டர்டேக்கர்
    3. டெக்ஸ்
    4. ட்யூராங்கோ
    5. ஸ்டேர்ன்

    ReplyDelete
  34. Replies
    1. 1. டைகர்
      2. டெக்ஸ்
      3. அண்டர்டேக்கர்
      4. ட்யூராங்கோ
      5. ஸ்டேர்ன்

      Delete
  35. Question # 1 : Ans - டீல்

    Question # 2 : Ans - 4 ஆல்பங்கள் இணைந்த ஒற்றை புக்

    ReplyDelete
  36. 1டெக்ஸ் வில்லர்
    2 கேப்டன் டைகர்
    3 அண்டர்டேக்கர்
    4 ட்யுரங்கோ
    5 வெட்டியான் ஸ்டெர்ன்

    ReplyDelete
  37. இளம் Tiger 4 அல்ல, மீதமுள்ள அனைத்து பாகங்களும் ஒரே புத்தகமாக போட்டாலும் ஆதரவு உண்டு...

    ReplyDelete
  38. *** பழிக்குப் பழி ***
    சும்மா போன ஊரில், பிறந்தநாள் கொண்டாடிய இளைஞனின் குடும்பத்தை நிர்மூலமாக்கும் அராஜக அதிகாரியின் கதை. ஆல்பர்டும் சுட்டு விட்டு நஷ்ட ஈடு தருகிறான், அதிகாரியும் பார் நாற்காலிகளை உடைத்து விட்டு நஷ்ட ஈடு தருகின்றார். அவன் சுட்டா ரத்தம், இவர் சுட்டா தக்காளி சட்னியா??? இதில் அரிதான பழமைவாய்ந்த காஸ்ட்லி கண்ணாடியை உடைப்பது அதிகாரி தான்.

    ரூபி ஸ்காட் சண்டைக்கு வருவோம். ரூபி சூரியன் தனுக்கு பின் இருக்கும் போது ஒத்தைக்கு ஒத்தை தவறு என்றால், அதிகாரியும் அதுதானே செய்கிறார். நேர்மையான போட்டியாக இருக்க வேண்டும் என்றால் வடக்கு தெற்காக போட்டியை சந்தித்து இருக்க வேண்டும். டாக்டர் கொடுத்த ஸ்டீராய்டு கஷாயம் குடித்து விட்டு அவனை கொல்கிறார். ஊக்கமருந்து அருந்தி சீட் செய்வது அதிகாரியே.. Bad boy

    ReplyDelete
    Replies
    1. வஞ்சகத்தை வஞ்சகத்தாலேயே போடனும் சார்.

      Delete
    2. கிரி @ ரம்மி எழுதி கொடுத்ததை எழுதிய மாதிரி தெரியுது :-)

      I like this review :-)

      Delete
    3. துபாக்கியை எடுக்காமலயே சுடுறவன்கிட்ட வேறு எப்படி நடந்துக்க இயலும்???? தல இந்த இடத்தில் இடதிகையால் தான் சுடுறார் என்பதையும் கணக்கில் கொண்டா சரிதான்....

      Delete
    4. அவர்தான் எப்பவுமே இரண்டு கையாலுமே சுடுவாரே, பாத்ததில்லையா நீங்க??? வலது மற்றும் இடது கை இரண்டுமே ஒரே மாதிரிதான் தனக்கு என்று அவரே சொல்கிறாரே!!!
      ரூபி ஸ்காட் வரும் முன் எச்சரிக்கை செய்கிறார், ஆணால் இவரோ அவன் குடித்திக் கொண்டிருக்கும் போது போய் சவாலுக்கு அழைக்கிறார். உரையிலிருந்து துப்பாக்கியை எடுக்காமல் சுடுவது தப்பில்லையே, அதுவும் ஒரு strategy தானே?. Krish Srikanth ஒரு நாள் போட்டிகளில் முதல் 15 ஓவரில் தூக்கி அடித்து அதிரடியாக ஆடும் “சூழ்ச்சியை” ஆரம்பித்ததை தவறு என்று சொல்வீர்களா?

      Delete
  39. Question # 1 : டீலா ? நோ டீலா ?

    டீல்

    Question # 2 :

    மாதம் 1 பாகமென்ற ரீதியில் 2022 செப்டெம்பரில் துவங்கி, டிசம்பரில் முடிக்கலாமா ? சொல்லுங்களேன் ப்ளீஸ் ?

    இதனை முயற்சி செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. கவலை படாதீங்க... டைகர் குண்டாத்தான் வருவார்..சாரி டைகர் கதை குண்டு புத்தகமாக தான் வரும் :-)

      Delete
  40. *** சிஸ்கோ*** 9.5/10
    முதல் பக்கம் மட்டுமே அமைதி, இரண்டாம் பக்கத்தில் ஆரம்பிக்கும் வேகம், கடைசி பக்கம் வரை பரபரப்பாக செல்கிறது. கூசாமல் கொலை செய்யும் அதிகாரி. மற்ற உயிர்களை பற்றி இல்லாத கவலை, தோழியின் கார் insure செய்ய பட்டு இருக்குமோ என்று கவலை படும் ஒரு ஹீரோ!!! முதல் பக்கத்தில் duty ஆரம்பிக்கும் சிஸ்கோ, கடைசி பக்கத்தில் duty பொறுப்பை அந்த மொட்டை அதிகாரியிடம் கொடுப்பதாக முடிகிறது.

    ஒரு விசயம் மட்டும் எனக்கு தெளிவாகவில்லை, அந்த முதல் ஆனை வெர்ரேட் மாற்றியதா இல்லை ஒரிஜினல் ஆனையே அந்த சாட்டியை கொல்வதா???

    ஸ்பைடரை ரசித்தோம், டையாபாலிக்கை ரசிக்கவில்லை, ஸராஃபை (zaroff) ரசித்தோம், இவரை எப்படி என்று பார்ப்போம், ஆள் எப்படியோ கதை சுவரஸ்யமாக இருக்கு.

    ReplyDelete
  41. விஜயன் சார், இன்றைய பதிவு நல்லா போய்க் கொண்டு இருந்த போது டக் என கிளைமாக்ஸை நுழைத்து படத்தை முடித்தது போல் இருந்தது.உங்களின் நிறைய வேலைக்கு நடுவில் எங்களுக்காக வாரம் தவறாமல் பதிவிடும் உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  42. மாதம் ஒரு ஆல்பமாக வருவதில் ஒரு சிக்கல், தொடரில் ஒன்று ஸடாக்-அவுட் ஆனால் கூட மற்றவைகளை விற்பது/வாங்குவது சிக்கல். அதனால் ஒரே ஆல்பமாக வருவதே நல்லது.

    1. டீல்
    2. ஒரே தொகுப்பாக

    ReplyDelete
  43. 1டெக்ஸ் வில்லர்
    2 கேப்டன் டைகர்
    3 அண்டர்டேக்கர்
    4 ட்யுரங்கோ
    5 வெட்டியான் ஸ்டெர்ன்

    II)Young Tiger -Album 10 to 13 - Single Hard bound Book - Color...OK.

    ReplyDelete
  44. தங்கக் கல்லறை மின்னும் மரணம், தோட்டா தலைநகரம், பரலோக பாதை ,என் பெயர் டைகர் போன்ற ஒரு தரமான கதையாக இருந்தால் போட்டு தாக்கங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிக்கு இருப்பதை வைத்து ஏற்றிக்க வேண்டியதுதான் கிக்கு!😉

      Delete
  45. Tex, Tiger, undertaker, stern, durango.. If bouncer was in the list, he would hv shared the first position with Tex.. Tiger.. Big books are little hard to handle while reading..

    ReplyDelete
    Replies
    1. வன்மேற்கு நாயகர்களில் பெளன்சர் வேற மாதிரிதான்.... பெளன்சருக்கு பிறகே நம்ம காமிக்ஸின் பயணபாதை விசாலாமகியுள்ளது.... பெளன்சர் ஆல்வேஸ் இன் டாப்5 ஹீரோஸ்..😍

      Delete
  46. #1 டீல்..டீல்...
    #2 - 4 பாகங்கள் இணைந்த ஹார்ட் கவருக்கு எனது ஓட்டு 😇😍


    1.கேப்டன் டைகர் & டெக்ஸ் வில்லர்
    2-n மற்றவர்கள்

    ReplyDelete
  47. 1.டெக்ஸ்
    2.லக்கிலூக்
    3.டைகர்
    4.ட்யூராக்கோ
    5.அண்டர்டேக்கர்
    6.ஸ்டெர்ன்

    ReplyDelete
  48. Question 1: Deal

    Question 2: Single Hard Cover with Muthu 50 logo - Deepavali Special Dhamaka !!

    ReplyDelete
  49. Sir,

    Thangakkallarai with old dialogues - hard bound special edition reprint with Muthu 50 logo please !

    ReplyDelete
  50. கௌபாய் ஜானர் நம் இரத்ததிலேயே கலந்து விட்டது. அதைப் பிரிக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது.

    கல்யாண விருந்தில் பிரியாணியை ஒரு கட்டுக்கட்டி விட்டு, ஏதோவொன்று குறையுதே-னு தோணும் போது, அது என்னவென்றுப் பார்த்தால், கடைசியில் போட மறந்த பீடாவோ, இல்ல அடிக்க மறந்த க்ளப் சோடாவா இருக்கும்.

    அதனால் முத்துவின் 50-வது ஆண்டு கேப்டன் டைகர் கதைகள் இல்லாது முழுமைக் காணாது. இளம் டைகரின் 4 ஆல்பங்களையும் ஒரேயிதழாக போட்டுத் தாக்குங்கள்.

    Tiger you're always welcome.

    ReplyDelete
  51. 1. டீல் டீல் டீல்.
    2.அனைத்தும் ஒரே (குண்டு) புக் ஆக வேண்டும்.

    கௌபாய் வரிசை:

    1. டெக்ஸ்
    2. இரவுக்கழுகு
    3. அதிகாரி
    4. தல
    5.நவஹோ தலைவர்
    6.வெள்ளிமுடியாரின் நண்பர்
    7.லிலித்தின் ஆத்துக்காரர்
    8.வன்மேற்கின் துருவ நட்சத்திரம்
    9.கிரேட் ரேஞ்சர்

    மற்றும்
    10. தளபதி டைகர்.

    மற்ற பொடிப்பயல்கள் எல்லாம் ஒரு ஓரமாக விளையாடலாம் .

    ReplyDelete
    Replies
    1. நிலா@ செம செம....💐💐💐💐💐👌👌👌👌👌👌

      Delete
    2. சில ஊர்கள்ல அவசரமா ஜெலுசில் பாட்டிலை தேடி இருப்பாங்க....🤣🤣🤣🤣

      Delete
  52. 1.durango2.undertaker3.captain tiger 4.tex willer மற்றவை சாரி!

    ReplyDelete
  53. இது நம்ம லிஸ்ட்ங்...

    1. கேப்டன் டைகர்

    2. டியூராங்கோ

    3. டெக்ஸ் வில்லர்

    ஸ்டெர்ன் எல்லாம் இன்னும் வாசிக்க வில்லை என்பதால் கருத்தில்லை.

    இளம் டைகருக்கு பெரியதொரு வெல்கம்.

    ReplyDelete
  54. 1. ட்யூராங்கோ
    2.இளம் டெக்ஸ்
    3. டெக்ஸ்
    4.அண்டர் டேக்கர்
    5, டைகர்
    6. ஸ்டெய்ன்

    டீல்


    ஒரே குண்டா

    அட்டைப்படமும்....கதை குறித்த தகவல்களும் இது வரை வந்ததிலேயே டாப்...


    ReplyDelete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. 'சவரம் கண்டிடா ' கெளபாய் ஷேவ் செய்த முகத்துடன ஸ்டைலாக, கெத்தாக போட்டோவுக்கு போஸ் கொடுதுக் கொண்டு நிற்கும் அழகான படம் சொல்லும் சேதி,
    4 பாகங்களும் ஒரே ஆல்பமாக, ஹார்டு பவுண்டில் வர வேண்டும் என்பதே.
    அப்படியே, இந்த படத்தை வால்போஸ்டராக, அந்த ஆல்பத்துடன் இணைத்து தர வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

    ReplyDelete
  58. டைகர் ஐயா எப்படி வந்தாலும் நமக்கு ஹாப்பி அண்ணாச்சி....
    குண்டு புக் or oneshot எப்டின்னாலும் நான் ரெடி... 😇😇

    ReplyDelete
  59. 1டெக்ஸ் வில்லர்
    2 கேப்டன் டைகர்
    3 அண்டர்டேக்கர்
    4 ட்யுரங்கோ
    5 வெட்டியான் ஸ்டெர்ன்

    என் rank list இது... 💐

    ReplyDelete
  60. ரஜினியை பத்தி தனுஷ் சொன்னமாதிரி

    டெக்ஸ் ஓடுறது தனிரேஸ்

    அந்த ரேஸ்ல அவர் மட்டும்தான் ஓடறாரு

    1. டெக்ஸ்

    ReplyDelete
    Replies
    1. அண்டர்டேக்கர்

      2. ட்யூராங்கோ

      இவங்க ரெண்டு பேரும் ஓடறதுதான் உண்மையான போட்டி ரேஸ்.

      Delete
    2. ஸ்டெர்ன்..

      இவரு ஓடறதும் தனி ரேஸ்தான்.

      சாக்குப்பை கட்டிக்கிட்டு ஓடறவரு..

      (காட்டான் கூட்டத்தில் செம கலக்கு கலக்கிய இவரு வித்தியாசமானவர்.இவரை சுத்தி இருக்கற மத்தவங்களாலாயேயும் இவரோட ஸ்கோர் ஏறும்)

      Delete
    3. டைகர்

      இப்பல்லாம் இவரை ஓடறது ஸ்லோ ரேஸ்தான்

      பழம்பெருமை பேசி என்ன ஆவப்போவுது?

      Delete

    4. இளம் டைகர்

      டீல்

      குண்டு புக் - 4 பாகம்


      Delete
    5. ஸ்டெர்னை எப்படி கவ்பாய் லிஸ்ட்ல சேத்தறது?
      1. அவருகிட்ட துப்பாக்கி இல்ல.
      2. குதிரை கூட இல்ல (பாவம் கழுதையத்தான் வச்சிருக்காரு)
      3. அவரு மேய்க்க மாடுகளும் இல்ல (புத்தகங்களைத் தான் வாசிக்கறாரு)

      அப்பறம் எப்படி இவரை கவ்பாய்னு சொல்ல?

      Delete
    6. //டெக்ஸ் ஓடுறது தனிரேஸ்//

      ஆமாம்... அவர் எக்ஸ்பிரஸ் டிரெய்ன்ல போறார்..
      டியூராங்கோ அண்டர்டேக்கர் எல்லாம் குதிரையில ஓடறாங்க...

      டைகரோட குதிரை செம்மையான குதிரைதான். ஆனா இப்போ கால் உடைஞ்சு நொண்டியாப் போச்சு...

      ஸ்டெர்ன் நீங்க சொன்னமாதிரி சாக்கு ஓட்டம்.

      ஆக...

      வேறவேற வாகனங்கள்ல போறவங்களுக்கு எப்படி ஒரு வரிசையில ரேங்க் போடறது.?

      Delete
    7. சேத்தறது?
      1. அவருகிட்ட துப்பாக்கி இல்ல.
      2. குதிரை கூட இல்ல (பாவம் கழுதையத்தான் வச்சிருக்காரு)
      3. அவரு மேய்க்க மாடுகளும் இல்ல (புத்தகங்களைத் தான் வாசிக்கறாரு)

      அப்பறம் எப்படி இவரை கவ்பாய்னு சொல்ல?//

      ஹா..ஹா..ஹா...

      நெசந்தான்.

      துப்பாக்கி வச்சிகிட்டு குதிரை மேல போனாக் கூட கௌபாய் இல்லதான்..

      மாடுமேச்சாதான் கௌபாய்

      அப்படி பாத்தா டெக்ஸ் மட்டுந்தான் மாடு மேச்சிருக்காரு..

      இப்படி வச்சுக்குவோம்..

      கௌபாய்ஸ் இருக்கற வன்மேற்கு காலத்துல நடந்த கதைகளின் ஹீரோக்கள்.

      Delete
    8. //கௌபாய்ஸ் இருக்கற வன்மேற்கு காலத்துல நடந்த கதைகளின் ஹீரோக்கள்//

      இதுதான் சரிங்க சார்.

      Delete
    9. லூசெட் @ டாப் டக்கரு எதுனா டாப்புதான்...

      Delete
  61. 1. Tex Willer
    2. Captain Tiger

    We goodbye to remainings.

    This my list

    ReplyDelete
  62. டெக்ஸ் வில்லர் 2; கேப்டன் டைகர் 1 ; ட்யுரங்கோ 5; அண்டர்டேக்கர் 3; நவீன வெட்டியான் ஸ்டெர்ன் 4!

    uestion # 1 : டீலா ? நோ டீலா ? DEAL

    Question # 2 : டீல் என்றால் - 4 ஆல்பங்கள் இணைந்த ஒற்றை புக்காகவா ? YES

    ReplyDelete
  63. டைகர் - 23
    ட்யூரங்கோ all
    'இளம்' டெக்ஸ்


    சற்றே இடைவெளி விட்டு
    வெட்டியான்ஸ்



    ரொம்பவே இடைவெளி விட்டு
    'கிழம்' டெக்ஸ்!!!

    ReplyDelete
    Replies
    1. ///சற்றே இடைவெளி விட்டு
      வெட்டியான்ஸ்///

      வெட்டியான்ஸ் கௌபாய் கதைகளில் எப்படி சேர்ப்பது???

      Delete
    2. கெளபாய்=வன்மேற்கு=கி.பி.1800டூ1900க்குள் நடந்த கதைனு நம்ம விக்‌ஷனரி சொல்லும் மிதுனரே😉

      Delete
  64. GMT+5:30
    'சவரம் கண்டிடா ' கெளபாய் ஷேவ் செய்த முகத்துடன ஸ்டைலாக, கெத்தாக போட்டோவுக்கு போஸ் கொடுதுக் கொண்டு நிற்கும் அழகான படம் சொல்லும் சேதி,
    4 பாகங்களும் ஒரே ஆல்பமாக, ஹார்டு பவுண்டில் வர வேண்டும் என்பதே.
    அப்படியே, இந்த படத்தை வால்போஸ்டராக, அந்த ஆல்பத்துடன் இணைத்து தர வேண்டும் என்பதே எனது கோரிக்கை.+1

    ReplyDelete
  65. //நமது அணிவகுப்பினில் உள்ள action கௌபாய்களுக்கு ரேங்க் போடுவதாயின் - யாருக்கு எந்த ரேங்க் என்பதே கேள்வி !//

    1.டெக்ஸ் வில்லர்
    2.கேப்டன் டைகர்
    3. ட்யுரங்கோ
    4.அண்டர்டேக்கர்
    5.ஸ்டெர்ன் ..

    Question # 1 : டீலா ? நோ டீலா ?

    deal ..

    Question # 2 : டீல் என்றால் - 4 ஆல்பங்கள் இணைந்த ஒற்றை புக்காகவா ?

    YES , 4 ஆல்பங்கள் இணைந்த ஒற்றை புக் ..

    ReplyDelete
  66. முடிந்தால் தீபாவளி ஸ்பெஷல் 1-13 ஒரே புத்தகம்

    ReplyDelete
  67. 4 புத்தகமும் ஒன்றாக - ஹார்ட் கவர்

    டெக்ஸ் / டைகர்
    அண்டர்டேக்கர் / ட்யூராங்கோ
    ஸ்டெர்ன்

    ReplyDelete
  68. Tex is first... rest of the places are all one and the same.
    (I'm ok for all 12 stories as a single volume.)
    4 stories as one shot.

    இந்த மாத புத்தகங்கள், உடன் மாயாவி என்று கிளம்பும்?

    ReplyDelete
  69. 1. ட்யுரங்கோ

    2. டெக்ஸ் வில்லர்

    3. கேப்டன் டைகர்

    வெட்டியான்களை இந்த கௌபாய் லிஸ்டில் சேர்க்கவில்லை. :-)

    இரண்டு வெட்டியான்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    ReplyDelete
  70. 1.CAPTAIN TIGER 2.DURANGO 3.TEXVILLER 4.UNDERTAKER
    AND 4 BOOKS AS SINGLE BOUND FOR UPCOMING RELEASE PREFERED.

    ReplyDelete
  71. முத்து 50 அண்டா என்றால் அதில்
    தளபதிபுக் குண்டா வருவதுதானே
    சிறந்த தொண்டா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியருக்கு ஏண்டா சொன்னோம்னு இல்லாதவரைக்கும் சரிதான்..

      Delete
    2. நட்புகள் யாரும் இதுவரை சொல்லல

      வேண்டா

      Delete
    3. இதைப்பார்த்து டைகர் எதிரிகள் ஆக வேணா,

      காண்டா

      Delete
  72. 1.டீல் ஓகே

    2.குண்டுக்கே என் ஓட்டு.

    ReplyDelete
  73. 1. என்றும் எப்போதும் முதலிடம் தல டெக்ஸ்வில்லர்க்கே.

    2.தளபதி டைகர்

    3.அண்டர்டேக்கர்.

    4.ட்யூராங்கோ

    5.வெட்டியான்.

    6.டெட்வுட் டிக்.

    7.ஜோனதான் கார்ட்லேண்ட்.

    ReplyDelete
  74. This comment has been removed by the author.

    ReplyDelete
  75. அன்பு நண்பர் பழனிவேல்... அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து விரைவில்... பரிபூரண குணமடைய... வாழ்த்துங்கள் நண்பர்களே...

    ReplyDelete
    Replies
    1. நலம் பெற வேண்டுகிறோம்..!

      Delete
    2. நண்பர் பழனிவேல் அவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

      Delete
    3. பரிபூரண குணமடைய கடவுளைப் பிரார்த்தனைகள் செய்கிறேன் டாக்டர்...🙏🙏🙏🙏🙏🙏

      Delete
    4. நண்பம் பழனிவேல் பூரணகுணமடைய இறைவனை வேண்டுகின்றேன்.

      Delete
    5. எனது வேண்டுதல்களும்..

      Delete
    6. Get well soon, Pazhani
      with Love and prayers,

      Delete
    7. மிக்க நன்றி என சாதாரணமாக கூறமாட்டேன் நண்பர்களே.. அதற்கு மேல்...இந்த உறவும் இந்த அன்பும் வேண்டுதலும் இறைவன் கொடுத்தவரம்....நல்ல நண்பர்கள் பிரார்த்தனையில் நிச்சயம் நான் நலம்பெற்று வருவேன் என் அன்பு உறவுகளே...🙏🙏🙏

      Delete
    8. ஆசியரிடம் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டி உள்ளது...

      Delete
  76. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனை
    வருக்கும் வணக்கம்.
    கௌபாய் உலகின் சூப்பர் ஸ்டார்கள் மூன்று பேர் .அவர்கள் பெயர்
    1) டெக்ஸ் வில்லர்
    2)டெக்ஸ் வில்லர்
    3)டெக்ஸ் வில்லர்.
    அவருக்கு பின் உள்ளவர்கள்
    4) ட்யூரங்கோ
    5)அண்டர் டேக்கர்
    6) ஸ்டெர்ன்
    ஒரு சந்தேகம் டைகர் என்பது யார்?.கேள்விப்பட்டதே இல்லையே

    ReplyDelete
    Replies
    1. ஆஹான்....

      இந்த தங்க கல்லறை, மின்னும் மரணம், இரத்தகோட்டைலாம் என்னானே தெரியாது? அப்படி தானே!!!!

      Delete
    2. Tex hatters போல நாமும் மனசாட்சி இல்லாமல் பேசினால் எப்படியிருக்கும்னு ஒரு trial பார்த்தேன்

      Delete
    3. ஹா....ஹா.... அப்பக்கூட அந்த அணி மனசாட்சி இல்லாமல் தான் பேசுவாங்க சார்...😉

      Delete
  77. This comment has been removed by the author.

    ReplyDelete
  78. புன்னகை சார்@ மீண்டும் பிரிச்சா சரிபடாது... ஒரே புக்குதான் ஹிட் ஆகும்....!!!

    ReplyDelete
  79. SK@ நம்புறோம் ரேங்கை கொடுங்க...😉

    ReplyDelete
  80. ஒரு வானவில்லைத் தேடி!

    சூப்பரோ சூப்பர்!

    10/10

    ReplyDelete
    Replies
    1. லக்கியோடு பயணிப்பது எப்போதுமே அலாதியான சுகானுபம் தான்!

      தடிதடியாய் இரண்டு புக் + ஒரு கிழம் டெக்ஸ் கைபடாமல் இருந்தாலும், லக்கிய மட்டும் வாங்கியவுடன் படிக்காமல் இருக்க முடிவதே இல்லை!

      Delete
  81. single book will good for blue berry( 4volumes)

    My list out :
    As per cowboy standards,
    1. Durango Pure hitman
    2. Blue berry half nomad and gambler
    3. Tex willer Even he has star value Ranger, side kick carson
    4. canadian police officer trent. loved stories for cool and wilderness landscapes
    5. Undertaker.. Even he is doing lot of action....something..missing

    ReplyDelete
  82. any stories about solo KIT CARSON saga...

    ReplyDelete
  83. My Rank
    1.Tex
    1. Young Tex
    1.Tex extra
    1.Tex Maxi
    1.Tex Graphic Novel
    1.Tex platinum
    1.Tex Magazine
    1.Tex Classic
    10. Tiger 🐅
    11.Durango

    ReplyDelete
  84. 1 டெக்ஸ் வில்லர். 2. டுயுரங்கோ 3.டைகர். 4. அண்டர் டெக்கர்.

    ReplyDelete
  85. டீல்
    குண்டு புக்

    ReplyDelete
  86. வணக்கம் சார்🙏 மெகா சாகஸங்கள்,குண்டு புத்தகங்கள் ஒரிரு வெளியீடுகளாக வந்தாலும் பரவாயில்லை ஒரு புக் இந்திய விலையில் ரூ300-350 தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள் சார். இலங்கையில் பணத்தின் பெறுமதி வீழ்ச்சியாலும் இந்தியாவிலிருந்து அனுப்ப எடுக்கும் செலவுகளாலும் விலைகள் நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு எகிறி கொண்டே இருக்கின்றன.

    ReplyDelete
  87. ஒன்றை கவனித்தீர்களா நண்பர்களே,

    இதுவரை எடுத்த வாக்கெடுப்பில் சன்னமான இடைவெளியில் தான் டெக்ஸ் முன்னிலையில் இடக்கிறார். டெக்ஸ் first to bottom அனைத்து இடங்களிலும் உலவுகிறார்.

    ஆனால் டைகர் முதலிரண்டு இடங்களை தாண்டி கீழே இறங்கவில்லை, இது டைகரின் தரத்திற்கு கிடைத்த அங்கீகாரமா. அல்லது டெக்ஸ் ரசிகர்கள் டைகரை விட்டுக்கொடுகாமல் இருப்பதை காட்டுகிறதா

    ReplyDelete
    Replies
    1. கையில் உள்ள காமிக்ஸைக் காண கண்ணாடி லென்ஸ் எதுக்கு திரு...😉

      டெக்ஸ் ரசிகர்கள் நாம என்னிக்கு டைகரை விட்டுத்தந்துள்ளோம்....💞

      ஆனா எதிர்பாரட்டிகளுக்கு தான்...😜

      Delete
  88. தங்க கல்லறை ,மின்னும் மரணம் ,இரத்த கோட்டை வரை எனது கெளபாய் தர வரிசை..


    1. டைகர்

    2.டெக்ஸ்..

    3. ட்யூராங்கோ

    4. அண்டர்டேக்கர்

    5. ஸ்டெர்ன்..


    அது முடிந்தவுடன் எனது கெளபாய் தரவரிசை

    1. இளம் டெக்ஸ்

    2. டெக்ஸ்

    3.ட்யூராங்கோ

    4. அண்டர்டேக்கர்

    5. டைகர்

    6. ஸ்டெர்ன்


    ****†

    ReplyDelete
  89. ஸ்டெர்ன் மரண ஆதி வாங்குகிறார் போலிருக்கிறதே ?

    சில rankingகில் ஸ்டெர்ன் லிஸ்ட்லயே இல்ல ...

    ReplyDelete
  90. 1. டைகர்

    2.டெக்ஸ்..

    3. ட்யூராங்கோ

    4. அண்டர்டேக்கர்

    5. ஸ்டெர்ன்..

    6. சிஸ்கோ கிட்

    7. வெஸ் ஸ்லேட்

    ReplyDelete
    Replies
    1. //6. சிஸ்கோ கிட்

      7. வெஸ் ஸ்லேட்//

      காணாமல் போன கௌபாய் ஹீரோஸ் இவர்களுக்கு எனது அபிமானமும் உண்டு. வெஸ் சிலேட் எல்லாம் க்ளாஸ், ரொம்பவே பிடிக்கும். ஆனால் கொண்டு வந்தால் ஆக்ஷன் ஹீரோஸ் முன் காலியாகி விடுவார்..

      Delete
  91. Ranking

    1. டைகர் & டெக்ஸ் இருவருமே ( கெளபாய் கதைகளில் தங்கக்கல்லறை & மின்னும் மரணத்தை மிஞ்சிய கதைகள் இல்லை, ஆனால் தொடர்ச்சியாக Hit அடிப்பதில் Tex ஐ மிஞ்ச ஆளில்லை So இரண்டு கண்களையும் பிரித்து பார்க்க இயலவில்லை)

    2.டியூராங்கோ

    3.அண்டர்டேக்கர்

    ஸ்டெர்ன்லாம் இந்த List ல யே கிடையாது

    ReplyDelete
  92. @STVR

    இப்போ டிரண்ட்ல இருக்கற கௌபாய்ஸ்ல இவர்கூட யாரை ஓட விட்டாலும் பாவம் மரண அடி கிடைக்குது.

    சோ... மத்தவங்களை காப்பாத்தவாச்சும் இவரை தனியே ஓடச்சொல்லிடுவோம்... முன்னாடி...

    ReplyDelete