Saturday, January 08, 2022

திக்கெட்டும் பொம்ம புக்குகள் !!

 நண்பர்களே,

வணக்கம். ஏதோ ஒரு யுகத்தில் பள்ளிக்கூடம் படித்த நாட்கள்...! ஆறாப்போ..ஏழாப்போ என்று நினைக்கிறேன் ! 'ஸ்கூலிலிருந்து ஒரு நாள் excursion ஆக திருச்சிக்கு கூட்டிப் போறோம்' என்று சொன்னார்கள் ! "அதிகாலை நாலரைக்குலாம் கிளம்பணும் ; so அல்லாரும் நைட்டே ஸ்கூலுக்கு வந்து தங்கிடணும் ; இங்கேயே குளிச்சி கிளம்பிடலாம்னு" உத்தரவுகள் ! சும்மா ராத்திரி எட்டரைக்கே அவனவன் வாயெல்லாம் பல்லாய் வந்து சேர்ந்து, நைட்டு படுக்க கிளாஸ்ரூமில் இடம் ஒதுக்கி, 'தூங்குறேன் பேர்வழி' என்று ரெண்டு மணி வரைக்கும் கெக்கே பிக்கே என்ற அரட்டையடித்துக் கொண்டிருந்துவிட்டு அப்பாலிக்கா 4 மணிக்கு எழுந்து, நடுக்கும் குளிர்நீரில் குளிச்சுக் கிளம்பியதெல்லாம் அந்நாளின் நினைவுகள் ! 'ச்சே...டூருக்கான பில்டப்பே இம்புட்டு ஜாலின்னா - டூர் ஜாலிலோ ஜிம்கானா  தான் ! பஸ்ஸிலே வழி நெடுக கலக்கிட்டே போகணும் !' என்றபடிக்கே பஸ்ஸிலே ஏறி உட்கார்ந்தது மட்டும் தான் ஞாபகம் ! வாந்தியெடுக்க அவனவன் எழுந்த நேரம் நீங்கலாய், மீத நேரம் முழுக்க ஆளாளுக்கு பிசாசாய் உறங்கி வழிந்து, திருச்சி போய்ச் சேர்ந்த போது ஆரம்பகால 'தலைவர்' மண்டையோடு அத்தினி பேரும் பரட்டைகளாய் (நானுந்தேன் ; நானுந்தேன் !!) இறங்கினோம் ! "இது தான் புள்ளீங்களா கல்லணை !! யாரு இத கட்டுனதுன்னு சொல்லுங்க பாக்கலாம் ?" என்று தமிழ் மிஸ் ஆர்வமாய்க் கேட்க, அவனவன் கோடுவாய் வழிந்த வதனங்களைத் துடைத்துக் கொண்டே கொட்டாவி கிழிய மலங்க மலங்க முழித்து நின்றோம் ! அப்புறமாய் மலைக்கோட்டை ; காவேரியாற்றுப் பாலம் - என்று ஏதேதோ இடங்களுக்குச் சுற்றிப் பார்க்கக் கூட்டிப் போனப்போவும் எங்களது ரியாக்ஷன்ஸ் ஒன்று போல் 'பே' என்றே இருந்தன ! 'இம்புட்டு தானாக்கும் ? நாங்க தான் வைகை டேம்லாம் பாத்திருக்கோமில்லே ? மதுரையிலேயே ஆத்துப் பாலம்லாம் பாத்திருக்கோமேலே ?' - என்றபடிக்கே ரிட்டன் பயணத்து வாந்திகளுக்கும், குறட்டைகளுக்கும் தயாராகிக் கொண்டே பஸ்ஸில் குந்தினோம் ! மதுரையில் ஆரிய பவனில் 'ஆளுக்கொரு பூரி மட்டும்' என்ற தெளிவான instructions சகிதம் இறங்கிச் சாப்பிட்டுவிட்டு, ராத்திரி 9 மணிக்கு ஸ்கூலுக்குத் திரும்பிய பஸ்ஸிலிருந்து இறங்கிய வேளையில் எங்களது உற்சாகங்கள் மறுக்கா உதயமாகி ஒட்டிக்கொண்டிருந்தன !!காத்திருந்த பெற்றோர்களிடம் "சும்மா டூர் பிரிச்சி மேய்ஞ்சுடுச்சி ; செம ஜாலி !!" என்று பீலா விட்டபடிக்கே அவரவர் வீடுகளுக்குத் திரும்பினோம் ! மறு நாள் ஸ்கூலுக்குத் திரும்பிய போதுமே அத்தினி பயல்களின் முகங்களிலும், கல்வெட்டுக்களில் இடம்பிடிக்கவுள்ள "ஊம் சொல்றியா மாமா ?"வை விடிய விடிய பார்த்தும்,கேட்டும் ரசித்த நம்மாட்களின் பிரகாசம் போலான மகிழ்ச்சி தெறித்துக் கொண்டிருந்தது ! நைட் அடித்த அரட்டைக் கச்சேரி ; சொன்ன மொக்கை ஜோக்குகள் - என ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்து கொண்டு ஆளாளுக்கு மிதந்து கொண்டிருந்தோம் ! 

"Cut ..cut ...cut ....!!! இந்த வரலாற்று நிகழ்வின் விவரிப்பு இப்போ எதுக்குடா டோமர் மண்டையா ?" என்கிறீர்களா ? 'இருக்கே....நமக்கும் இந்த நிகழ்வுக்கும் சம்பந்தம் இருக்கே !! 

அப்டியே "திருச்சி டூர் ; ஸ்கூல் டூர்' எனும் இடத்தில் - நமது மாதாந்திர இதழ்கள் ; அதுவும் ஏதேனும் ஸ்பெஷல் இதழ்கள் வெளியாகும் வேளையினைப் பொருத்திக் கொள்ளுங்களேன் ! அப்புறமேட்டு அந்த மீசை அரும்பும் விடலைகளின் இடத்தில, பால் மணம் மாறாத பச்சிளம் பாலகர்களான உங்களைப் பொருத்திக் கொள்ளுங்கோ ! Then டூருக்கு முந்தின இரவின் கூத்துக்கள் ; கச்சேரிகள் - என்ற இடத்தில நம்ம வலைத்தள ஜாலிக்கள் ; FB / வாட்சப் க்ரூப் கும்மிகளை  நுழைச்சுக்கோங்கோ ப்ளீச் ! Later on - டூரின் ஆரம்பம் ; கல்லணை ; உச்சிப் பிள்ளையார் கோயில் போன்ற ஸ்தலங்களின் ஸ்பரிசங்களின் இடங்களில் - புக்குகளை ஆரவாரமாய் டப்பிக்களிலிருந்து உடைத்தெடுத்து , தடவித் தடவிப் பார்த்து விட்டு, குப்பறடிக்கா படுத்துத் தூங்குவதோடு ஜாயிண்ட் பண்ணிக்கோங்களேன் ! And lastly - பஸ் ஸ்கூலுக்குத் திரும்புறச்சே மீண்டும் துளிர்விட்ட அந்த உற்சாகங்களின் இடங்களில், ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வாரம் முதலாய் நம் மத்தியில் குடி கொள்ளும் அந்த மறுமாத புக்ஸ் சார்ந்த உற்சாகங்களை / எதிர்பார்ப்புகளை நுழைத்துக்கோங்கோ !! இப்போ சொல்லுங்களேன் - அடியேனின் அந்த டூர் நிகழ்வு சார்ந்த நினைவுகூரல் இங்கே பொருந்துகின்றதா - இல்லையா என்று ? இலக்கின் சுவாரஸ்யங்களை விடவும், அது நோக்கிய பயணத்தின் சுகங்கள் பிரதானப்பட்டு நிற்பதை சித்தரிப்பதன் லாஜிக் ஓ.கே. தானுங்களே ? 

Lone Ranger போல நமது கவிஞர் மட்டும் 'FFS ஆடலும், பாடலும்' நடத்திக் கொண்டிருக்க, நாமெல்லாம் 'புஷ்பா' பட வசூல் பற்றியும், ராஷ்மிகாவின் ஸ்டெப்ஸ் பற்றியுமான ஆழ்ந்த ஆராய்வுகளில் பிஸியாகியிருப்பது கண்கூடு ! And ஜனவரியின் வாசிப்புக்கான சுமார் 680+ பக்கங்களில், முதல் நூறைத் தாண்டியிருக்கக்கூடிய நண்பர்களின் எண்ணிக்கையினை மார்கழி மாதத்தில் பச்சைத் தண்ணீரில் குளிப்போரின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு விடலாம் என்பதே எனது யூகம் ! Of course, சூட்டோடு சூடாய் வாசித்து, அலசவும் செய்திடும் நண்பர்கள் இதற்கொரு விதிவிலக்கே ; but அவர்களது எண்ணிக்கையானது - 'மஞ்சக் கொடிய பிடிச்சிக்கிட்டு ஆரவாரமா கிளம்புற அளவுக்கு' நஹி என்பதில் ஏது ரகசியம் ?  ஓட்டமே வாழ்க்கை என்றாகி விட்டுள்ள இன்றைய நாட்களில், மாஸ்க்கையும் மாட்டிக் கொண்டே சதா காலமும் கொரோனா பயங்களோடும், வண்டியை ஓட்ட வேண்டிய இந்நாட்களில் - இதனில் வியப்பே இல்லை தான் ! ஆனால் 'தல' டெக்ஸ்  போன்ற கமர்ஷியல் அசுரர்களின் பலம் இது போலான தருணங்களில் தான் உறைக்கின்றன ! 'இன்னான்றீங்க.....? இப்போ படிக்கப் போறீங்களா-இல்லியா ?' என்ற கேள்வியினை தோரணையாய்க் கேட்க மஞ்சச் சட்டைக்காரர்களுக்கு மட்டும் தானே இப்போதெல்லாம் சாத்தியப்படுகிறது ? So காத்திருக்கும் லாக்டௌன் ஞாயிறிலும், தொடரவுள்ள பொங்கல் விடுமுறைகளின் போதும், ஆல்பாக்களோடும் ; சிஸ்கோக்களுடனும் ; டேங்கோக்களுடனும் அன்னம் தண்ணீர் புழங்க முயற்சிப்பீர்களென்ற நம்பிக்கையில், இம்மாதத்தின் இதர இதழ்கள் சார்ந்த பணிகளுக்குள் டைவ் அடித்துக் கொண்டிருக்கிறேன் ! 

சென்னை புத்தக விழா அறிவிப்பினைத் தொடர்ந்து, டெக்சின் "பழிக்குப் பழி" தவிர்த்து இரு (புது) இதழ்களையும் வேக வேகமாய்த் திட்டமிட்டிருந்தேன் ! ஆனால் அரசின் வழிகாட்டுதலின்படி சென்னை விழா ஒத்தி வைக்கப்பட, மொட்டைமாடி ஆன்லைன் புத்தக விழாவென்ற தீர்மானத்துடன், புது இதழ் திட்டமிடலை  இரண்டிலிருந்து ஒன்றாக்கிடத் தீர்மானித்தேன் ! But FFS எனும் சமுத்திரத்தையே இன்னமும் நீங்கள் தாண்டிட ஏகமாய் நேரம் பிடிக்கும் எனும் போது, மேற்கொண்டும் வாசிப்புக்கென (புதுசாய்ப்) பளுவினை ஏற்றிட வேண்டாமென்ற எண்ணமே தலைதூக்கியது ! So பழிக்குப் பழி + இன்னும் கொஞ்சம் reprints + சின்னச்சின்ன surprises என்று ஆன்லைன் விழா அரங்கேறிடும் ! And 'தல' வண்ணத்தில் மினுமினுப்பதை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலும் ! நேற்றிரவு அச்சு முடிந்திருக்க, வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன் கொஞ்ச நேரத்துக்கு ! Phew ..பட்ஜெட் மட்டும் ஒத்துழைத்து இரவுக் கழுகாரை ரெகுலராய் வண்ணத்தில் தரிசிக்க மட்டும் வாய்ப்பிருப்பின் - ஹைய்யோஓஓஓ !! அப்புறம் இந்தச் சித்திரத்திலுள்ள ஆக்ஷன் சீன் நினைவுள்ளதா guys ? ரொம்ப காலத்துக்கு முன்னே நமது ஓவியர் போட்டுத் தந்த டிசைன் பயன்படவுள்ள காலம் விரைவில் புலரவுள்ளது ! 

அப்புறம் போன வாரத்துப் பதிவினில், அந்த செக்ஸ்டன் ப்ளேக் கதையில் பிழை கண்டு பிடிக்கும் உங்கள் முனைப்பு செம ஜாலியாய் இருந்தது ! Maybe உங்களுக்கு நேரமும், ஆர்வமும் இருக்கும் பட்சங்களில் பொங்கல் விடுமுறைகளின் போது ஒரு TANGO Quiz ; ஒரு SISCO க்விஸ் என்று ஏதாச்சும் Live-வாக நடத்திடலாம் ! This is how it can work :

 • ஒரு Zoom மீட்டுக்கான நாளையும், நேரத்தையும் ; பங்கேற்க ஆர்வமுள்ள நண்பர்களின் பட்டியலையும் ரெடி செய்தால் -அந்நேரத்துக்கு,  இந்த ஆல்பங்களிலிருந்தான கேள்விகளுடன் ஞான் ஆஜராகும் ! 
 • நிங்களும் புக்ஸை எட்டிப் பார்த்து போங்காட்டம் ஆடாது, கிட்டக்க பாரியாளை அமரச் செய்து பதில்களைத் தேடித்தரச் சொல்லாது, Live-ல் கேள்விகளுக்குப் பதில் எழுதிடணும் ! 
 • அதற்கான நேரம் முடிஞ்சா பிற்பாடு, அவரவரது answer ஷீட்களை போட்டோ எடுத்து இதற்கென நான் தந்திடும் மொபைல் நம்பருக்கு வாட்சப்பில் உடனடியாய் அனுப்பிட வேணும் ! 
 • அவற்றை சரி பார்த்த கையோடு, ஜூனியர் எடிட்டர் மார்க் போட்டுத் தந்திடுவார் ! 
 • முழுசாய் score செய்திடும் நண்பர்களுக்கு ரூ.200 மதிப்பிலான points வழங்கப்படும் & அவற்றைக்  கொண்டு நமது ஆன்லைன் புத்தக விழாவின் போது நீங்கள் விரும்பிடும் எந்த புக்ஸ்களுக்கும் ஆர்டர் செய்து கொள்ளலாம் ! Say, ஐநூறு ரூபாய்களுக்கு புக்ஸ் தேர்வு செய்கிறீர்களென்று வைத்துக் கொண்டால், இந்த ரூ.200-க்கான points-களை கழித்துக் கொண்டு பாக்கிப் பணம் ரூ.300 மட்டும் நீங்கள் அனுப்பினால் போதுமானதாக இருக்கும் !  
 • புலவர் தருமியின் பரிந்துரைப்படி, 'எவ்வளவு பிழைகள் உள்ளனவோ - அதற்கேற்ப மார்க்குகளும், உங்களின் reward points-களும் குறைந்து கொண்டே செல்லும் - ரூ.150 ; ரூ.100 ; ரூ.50 என்று ! But there will still be rewards ! 
 • இந்த பாய்ண்ட்கள் - இந்தப் பொங்கல் ஆன்லைன் விழாவுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதை சொல்லிப்புடுறேனுங்க ! 

So பொங்கல் விடுமுறைகளின் கரும்புகளுக்கும், OTT படங்களுக்கும் மத்தியினில் நேரம் கிட்டிடுமென்ற நம்பிக்கை உங்களுக்கு இருப்பின் - நமது கும்மிகளில் இதனை இம்முறை இணைத்துப் பார்ப்போமே ? ஆர்வம் + நேரம் கொண்டிருக்கக்கூடிய நண்பர்கள் இங்கே கைதூக்குங்களேன் ப்ளீஸ் ? The more, the merrier of course !!

And குடந்தை J சார்...குறைந்த பட்சத்துக்காவது நண்பர்கள் ஆர்வம் காட்டிட நேர்ந்தால், இதற்கான ஏற்பாட்டினை முன்னின்று பார்த்துக் கொள்ள முடியும்ங்களா ப்ளீஸ் ? 

Bye guys...பிப்ரவரியின் டெக்ஸ், பாதி நிறைவுற்றிருக்கும் நிலையினில், மீதத்தையும் முடித்திடக் கிளம்புகிறேன் ! புத்தாண்டு பிறந்து ஒற்றை வாரமே ஆகியுள்ளதெனும் போது - FFS அலசல்களைத் தொடர்ந்தால் சிறப்பு !! Give it some of your time folks ?! See you around ! Memes உபயம் : தம்பி பிரஷாந்த் கார்த்திக் !

241 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. ஆல்ஃபாவும், சிஸ்கோவும் இனிதே முடிந்தது. டேங்கோ நாளை may be. ரிவ்யூ அப்பாலிக்கா.

  ReplyDelete
 3. வணக்கம் நண்பர்களே 🙏🙏

  ReplyDelete
 4. // ஒரு யுகத்தில் பள்ளிக்கூடம் படித்த நாட்கள்...! ஆறாப்போ..ஏழாப்போ என்று நினைக்கிறேன் ! 'ஸ்கூலிலிருந்து ஒரு நாள் excursion ஆக திருச்சிக்கு கூட்டிப் போறோம்' என்று சொன்னார்கள் ! "அதிகாலை நாலரைக்குலாம் கிளம்பணும் ; so அல்லாரும் நைட்டே ஸ்கூலுக்கு வந்து தங்கிடணும் ; இங்கேயே குளிச்சி கிளம்பிடலாம்னு" உத்தரவுகள் ! சும்மா ராத்திரி எட்டரைக்கே அவனவன் வாயெல்லாம் பல்லாய் வந்து சேர்ந்து, நைட்டு படுக்க கிளாஸ்ரூமில் இடம் ஒதுக்கி, 'தூங்குறேன் பேர்வழி' என்று ரெண்டு மணி வரைக்கும் கெக்கே பிக்கே என்ற அரட்டையடித்துக் கொண்டிருந்துவிட்டு அப்பாலிக்கா 4 மணிக்கு எழுந்து, நடுக்கும் குளிர்நீரில் குளிச்சுக் கிளம்பியதெல்லாம் அந்நாளின் நினைவுகள் ! 'ச்சே...டூருக்கான பில்டப்பே இம்புட்டு ஜாலின்னா - டூர் ஜாலிலோ ஜிம்கானா தான் ! பஸ்ஸிலே வழி நெடுக கலக்கிட்டே போகணும் !' என்றபடிக்கே பஸ்ஸிலே ஏறி உட்கார்ந்தது மட்டும் தான் ஞாபகம் ! வாந்தியெடுக்க அவனவன் எழுந்த நேரம் நீங்கலாய், மீத நேரம் முழுக்க ஆளாளுக்கு பிசாசாய் உறங்கி வழிந்து, திருச்சி போய்ச் சேர்ந்த போது ஆரம்பகால 'தலைவர்' மண்டையோடு அத்தினி பேரும் பரட்டைகளாய் (நானுந்தேன் ; நானுந்தேன் !!) இறங்கினோம் ! "இது தான் புள்ளீங்களா கல்லணை !! யாரு இத கட்டுனதுன்னு சொல்லுங்க பாக்கலாம் ?" என்று தமிழ் மிஸ் ஆர்வமாய்க் கேட்க, அவனவன் கோடுவாய் வழிந்த வதனங்களைத் துடைத்துக் கொண்டே கொட்டாவி கிழிய மலங்க மலங்க முழித்து நின்றோம் ! அப்புறமாய் மலைக்கோட்டை ; காவேரியாற்றுப் பாலம் - என்று ஏதேதோ இடங்களுக்குச் சுற்றிப் பார்க்கக் கூட்டிப் போனப்போவும் எங்களது ரியாக்ஷன்ஸ் ஒன்று போல் 'பே' என்றே இருந்தன ! 'இம்புட்டு தானாக்கும் ? நாங்க தான் வைகை டேம்லாம் பாத்திருக்கோமில்லே ? மதுரையிலேயே ஆத்துப் பாலம்லாம் பாத்திருக்கோமேலே ?' - என்றபடிக்கே ரிட்டன் பயணத்து வாந்திகளுக்கும், குறட்டைகளுக்கும் தயாராகிக் கொண்டே பஸ்ஸில் குந்தினோம் ! மதுரையில் ஆரிய பவனில் 'ஆளுக்கொரு பூரி மட்டும்' என்ற தெளிவான instructions சகிதம் இறங்கிச் சாப்பிட்டுவிட்டு, ராத்திரி 9 மணிக்கு ஸ்கூலுக்குத் திரும்பிய பஸ்ஸிலிருந்து இறங்கிய வேளையில் எங்களது உற்சாகங்கள் மறுக்கா உதயமாகி ஒட்டிக்கொண்டிருந்தன !!காத்திருந்த பெற்றோர்களிடம் "சும்மா டூர் பிரிச்சி மேய்ஞ்சுடுச்சி ; செம ஜாலி !!" என்று பீலா விட்டபடிக்கே அவரவர் வீடுகளுக்குத் திரும்பினோம் //

  எனக்கு ஒம்பதாம்பு டியர் எடி உங்களுக்கு திருச்சின்னா
  எங்களுக்கு கொச்சி டிரிப்

  அட்டகாசமான நாட்களது .. பாய்ஸ் கேர்ல்ஸ் ன்னு ரகளையான நாட்களது இரண்டுநாள் டிரிப் வேற ..

  ReplyDelete
 5. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
  Replies
  1. ஒ.நொ.ஒ.தோ., டேங்கோ, சிஸ்கோ முடிந்தது சார்.... ஆல்பா மட்டும் பாக்கி....

   Delete
  2. பொங்கலுக்கு அடுத்த நாள் நண்பர்களுக்கு வசதிப்படும் நேரத்தில் ரெடி.

   Delete
 6. புக்கை கைப்பற்றாத எங்களை மாதிரி பார்வையாளருக்கு எதுனா பரிசு உண்டுங்களா?

  ReplyDelete
  Replies
  1. கைப்பற்றியும் படிக்க முடியாத சூழலில் பொங்கல் தின விடுமுறையை எதிர்பார்த்து காத்திருக்கும் எங்களுக்கும் எதுனா பரிசு உண்டுங்களா ?

   Delete
  2. படிச்சும் ரிவ்யூ போடமுடியாத சூழலில இருக்கும் என்போன்றோருக்கும் அப்படியே ஏதாவது பாத்து செய்யுங்க சாரே.

   Delete
  3. 1980ல் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல் நிலைப் பள்ளியில, + 1 படித்த போது, அதுவரை திருவண்ணாமலையை விட்டு வெளியே சென்றிராத எனக்கு, மதுரை, கொடைக்கானல், சுருளி ஃபால்ஸ், தேக்கடி என இண்டு நாள் டூர் ஜாலியாக, இன்றளவும் 'மறக்க முடியாத' நினைவுகளாய், என் மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.ஜெயக்குமார் அவர்களால் அமைந்தது, மிகவும் அற்புதமான ஒன்று. அது எனது பாக்கியமே. பள்ளிப் பருவ நாட்களும், நட்பும் என்றும் இனியவையே.
   டூர் செலவுக்கு பணம் இல்லாத மாணவர்களுக்கு எங்கள் ஆசிரியர் மதுரையில் பணம் கொடுத்து, ஊருக்கு திரும்பியதும் கொடுக்கச் சொல்லி டூரை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வழி செய்தது என்னால் இன்றும் மறக்க இயலாத ஒன்று. நான் ஐம்பது ரூபாய வாங்கிக கொண்டு, நண்பர்களுடன் செலவு செய்து மகிழ்ந்தேன். Fond memories.
   அந்த நண்பர்கள் எல்லாம் இன்று வெவ்வேறு திசையில், காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டோம்.
   நினைவுகள் மட்டுமே நிற்கிறது.

   Delete
  4. Danish mission பள்ளிக்கூடமே காலத்தை கடந்து நிற்கும் வரலாற்று ஆவனம் தானே சார்.

   Delete
  5. நானும் 93-ல் அங்கேதான் +1 படிச்சேன்.

   Delete
  6. Suryajeeva and mageshkumar sirs, நீங்களும் திருவண்ணாமலை தானா.

   Delete
 7. 70s பற்றி ஏதாவது சொல்லுங்கள் ஜி

  ReplyDelete
  Replies
  1. பொங்கல் விடுமுறைகளின் போது பார்ப்போம் சார் !

   Delete
 8. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 9. பொங்கல் ஆன்லைன் புத்தக விழாவிற்கு மட்டுமே reward செல்லுபடியாகுமென்றால் க்விஸ் அதற்கு முன்னாடி நடத்தி முடிச்சாகனுமே...

  ReplyDelete
 10. சார் ஒற்றை நொடி ஒன்பது தோட்டா பற்றிய ஒரு சிறு சந்தேகம்.

  எனக்கு முதல் பாகத்தின் மொழிபெயற்பிற்கும் மற்ற 4 பாகத்தின் மொழிபெயற்பிற்கும் சிறிது வித்தியாசம் இருப்பதாக தோன்றுகிறது.

  முழுவதும் இல்லாவிடிலும் முதல் பாகத்தின் பெரும்பான்மை என கொள்ளலாம்.

  எனக்கு மட்டும் தான் என நினைத்து இருந்தேன் ஆனால் மேலும் ஒரு சில நண்பர்களும் உணர்ந்ததாக தெரிகிறது.

  இதை பற்றிய உங்கள் கருத்து ப்ளீஸ்

  ReplyDelete
  Replies
  1. வித்தியாசம் என்று சொல்ல வருவது என்னவென்று புரியலையே கிருஷ்ணா ; முதற்பாகம் சுமாரா இருந்துச்சா ? அல்லது பின்பாதியா ? இரண்டுமே நான் எழுதியதே ; ஆனால் ஆரம்பித்தது 2020 மார்ச்சில் ; முடித்தது செப்டெம்பர் 2021-ல் !

   ஆனால் அதன் பொருட்டு வித்தியாசம் இருந்ததாய் எனக்குத் தென்படவில்லை ! Anyways factual errors என்று ஏதும் இராதென்ற மட்டுக்கு உறுதிப்படச் சொல்லுவேன் ; ஸ்கேன்லஷன் கொண்டு சரி பாருங்களேன் விடுமுறைகளின் போது !

   Delete
  2. Factual errors பற்றி நான் கூறவில்லை சார் எனக்கு அதை பற்றி தெரியாது. ஸ்கேன்லேஷன் நான் டவுன்லோட வில்லை 😀.

   நான் மொழிபெயர்ப்பு மட்டுமே கூறுகிறேன் சார். ஏனோ ஆரம்பத்தில் கதையோடு ஒன்ற முடியவில்லை ஆனால் கொஞ்சம் தாண்டியவுடன் ஒரு seamless ஆக இருந்ததாக உணர்கிறேன்.

   அதனால் கேட்டேன் சார். நன்றி தங்களது பதிலுக்கு.

   Delete
  3. நான் இன்னொருக்கா படிக்க முயற்சித்துப் பார்க்கிறேன் நண்பரே - அவசரங்கள் இல்லாத இன்றைய பொழுதில் ஏதேனும் நெருடுகிறதா என்று !

   Delete
  4. கதையே அப்படி தான் என்று தோன்றுகிறது எனக்கு.

   Delete
  5. இந்த ஆல்பத்தை பற்றி edi அவர்கள், செமயாக / தெறிக்க விடுவதாகவும் பலமுறை கூறியிருந்தார்.
   ஆனால், பின்னால் அவரே உணர்ந்ததால், புத்தக வெளியீடு சமயம் அமைதி காத்தார்.

   கடைசியாக புத்தகம் படித்த போது தான் தெரிகிறது. இது கொண்டாட வேண்டிய புத்தகம் அல்ல. என்னைப் போன்ற selective readers தவிர்த்திருக்க வேண்டிய புத்தகம் .
   Simple story, complex treatment and confusing timeline..
   படிப்பதற்கு ஆர்வமாக இல்லாமல், தலைவலியாக இருந்தது.

   Edi'க்கு எப்படி இருந்திருக்கும்? முழுக் கதையையும் எப்படித்தான் மொ(மு)ழியெர்த்தாரோ?

   Delete
 11. // இன்னும் கொஞ்சம் reprints //

  பிரளயப் பயணம் & நெஞ்சே எழு வாக இருக்குமோ...

  ReplyDelete
 12. /. So பழிக்குப் பழி + இன்னும் கொஞ்சம் reprints + சின்னச்சின்ன surprises என்று ஆன்லைன் விழா அரங்கேறிடும் ! //
  சர்க்கரைப் பொங்கல்,பால் பொங்கலுக்காக வெயிட்டிங் சார்...

  ReplyDelete
 13. // புது இதழ் திட்டமிடலை இரண்டிலிருந்து ஒன்றாக்கிடத் தீர்மானித்தேன் //
  வட போச்சே...!!!

  ReplyDelete
  Replies
  1. //But FFS எனும் சமுத்திரத்தையே இன்னமும் நீங்கள் தாண்டிட ஏகமாய் நேரம் பிடிக்கும் எனும் போது, மேற்கொண்டும் வாசிப்புக்கென (புதுசாய்ப்) பளுவினை ஏற்றிட வேண்டாமென்ற எண்ணமே தலைதூக்கியது ! So பழிக்குப் பழி + இன்னும் கொஞ்சம் reprints + சின்னச்சின்ன surprises என்று ஆன்லைன் விழா அரங்கேறிடும் !//

   பஜ்ஜியும் போச்சு சார் !

   Delete
  2. வடையும் பஜ்ஜியும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பரிமாறுங்கள் சார் - ஜனவரிக் கூட்டம் ஆடி அடித்த பின்னர் படிக்க வசதியாய் இருக்கும் !

   Delete
  3. எல்லாத்தையும் பிப் ஒண்ணாந்தேதி பார்சல் பண்ணலாம்னு பாத்தேன். இப்ப வடை பஜ்ஜியும் சேந்து வர இன்னும் ஒரு மாதம் வெயிட் பண்ணனும்.

   Delete
  4. கருடவேகா கூரியர் ஒன்லி இப்போதைக்கு சார் ; ஏர் மெயில்கள் கடையை மூடிங்ஸ் !

   Delete
  5. நான் சில வருடங்களாக கருடவேகா தாங்க சார் யூஸ் பண்றேன். 25 கிலோ சேரும் வரை வெயிட் பண்ணி சேந்தவுடன் நண்பர்கள் அனுப்பி விடுகிறார்கள். வீட்டிற்கே வாரம் பத்து நாட்களில் டெலிவரி ஆகிவிடுகிறது. ஏர்மெயில்னா போஸ்ட் ஆபிசிற்கு போய் வாங்க வேண்டியது வரும். அந்த வேலையும் மிச்சமாயிடுதுங்க சார். இப்போதைக்கு 18 கிலோ தான் ஆயிருக்குங்களாம். FFS மாதிரி இன்னும் 3 இதழ்கள் வந்தால் ஜோரா உடனே அனுப்பிடுவாங்க.

   Delete
  6. மகி பாவம் சார் ஏழு கிலோல அடுத்த மாதம் வாய்ப்பிருந்தா...சார் பஜ்ஜியாவது

   Delete
 14. சார் s70 புத்தகங்கள் தனித்து அனுப்புவீர்களா அல்லது Feb புத்தகங்களோடு சேர்த்து வருமா?

  FFS 1 மட்டும் பெண்டிங் சட்டென்று அனைத்தும் முடிந்தது போல இருக்குமே என்று வைத்துள்ளேன் கொஞ்சம் பொறுத்து படிக்க.

  பொங்கல் போட்டிக்குள் படித்து முடித்துவிடவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. //சார் s70 புத்தகங்கள் தனித்து அனுப்புவீர்களா அல்லது Feb புத்தகங்களோடு சேர்த்து வருமா?//

   Along with the Feb books..

   Delete
 15. // Maybe உங்களுக்கு நேரமும், ஆர்வமும் இருக்கும் பட்சங்களில் பொங்கல் விடுமுறைகளின் போது ஒரு TANGO Quiz ; ஒரு SISCO க்விஸ் என்று ஏதாச்சும் Live-வாக நடத்திடலாம் //
  ஹைய்யா...

  ReplyDelete
  Replies
  1. ஆள் தேறுதான்னு பாப்போம் சார் !

   Delete
 16. பொட்டி இன்னும் அங்கேயிருந்தே கிளம்பலயாம்... எப்படி கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல...


  200 பொன்னாச்சே சொக்கா... சொக்கா...

  ஹ்ம்ம்.. மண்டபத்துல யாராவது மாட்டுறாங்களான்னு பார்க்கணும்...

  ReplyDelete
  Replies
  1. UK லே இருக்கீங்கல்லியா சார் ? ஏர்-மெயில்சுக்குத் தான் மொத்தமாய் தபால்துறை தற்காலிக COVID பூட்டுப் போட்டுப்புட்டாங்களே - ஸ்ரீ லங்கா தவிர்த்து !

   Delete
  2. ஆமாம் சார்..

   வேறு மார்க்கங்கள் இல்லையா சார்.. கருடவேகா பரவாயில்லை என்று கேள்விப்பட்டேன்.. ஒரு முறை பயன்படுத்தியும் உள்ளேன்..

   போன வருட புத்தகங்கள் பாதி மட்டுமே படித்துள்ளேன். மீதி இன்று தான் ஒரு நண்பர் மூலம் கிளம்பியுள்ளது. இப்போதைக்கு அவற்றை படிக்க வேண்டியது தான்...

   இவ்வருடம் மீண்டும் சந்தா கட்டியும் (சாமி வரம் கொடுத்தும்) கொரோனா (பூசாரி) விடமாட்டேங்குது..

   நிலைமை சரியானதும் அனுப்புங்கள் சார்.

   மிக்க நன்றி..

   Delete
 17. Ironically, I haven't finished the November's Young Tex, but couldn't put down FFS books. 🤷‍♂️

  ReplyDelete
 18. சார் 

  பலரும் விரைவாய் முடிந்துவிடும் என்று படிக்காமல் வைத்திருக்கலாம் சார். நான் FFS 1 மட்டுமே இன்னும் பாக்கி வைத்துள்ளேன். இந்த வாரம் முடித்துவிடுவேன்.

  கோல்டன் ஹீரோ ஸ்பெஷல் - முடீலை சார் - எனக்கு மிகவும் பிடித்த ஸ்பைடரின் கதை ஆரம்பித்த வேகத்தில் முடிந்தது (திகிலில் வெளிவந்த Batman - ஒரு அறிமுகம் மட்டுமே கதையினை ஞாபகப்படுத்தியது).

  Sexton Blake முதல் கதை சுமார் - ஒரு முறை படிக்கலாம்.இரண்டாம் கதை - again stale. மாயாவி கதை கடைசியில் இருவரும் சேர்ந்து ஒரே frame-ல் கதையை முடித்தது மிடீல !!

  ஆக மொத்தம் இது வரை :
  1) ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள் - 9/10
  2) எலியப்பா - 9/10
  3) Golden Heroes ஸ்பெஷல் - மிடீலே 
  4) FFFS 1 - just started !

  ReplyDelete
  Replies
  1. Sexton Blake எனக்கு மோசமில்லை என்று பட்டது சார் !

   Delete
  2. The first story yes sir - can read once.

   Delete
 19. /So பழிக்குப் பழி + இன்னும் கொஞ்சம் reprints + சின்னச்சின்ன surprises என்று ஆன்லைன் விழா அரங்கேறிடும்/

  ஆர்ச்சி, இரட்டை வேட்டையர் னு மனசு எங்கெங்கயோ போகுதே

  ReplyDelete
  Replies
  1. ஆர்ச்சிலாம் இனிமே முன்பதிவுக்கான லிமிடெட் எடிஷன் மாத்திரமே சார் ; ரெகுலர் தடத்தில் நஹி !

   Delete
  2. அப்படின்னா வண்ணத்திலா? கடந்த வருடம் வந்த சட்டித்தலையனை படித்துக்காட்டும் போது மகள் ரசித்தாள். க. வெ. சட்டித் தலையனை கண்டுக்கவே இல்லை. அப்படியே ஸ்டீலுன் மனம் குளிர விண்வெளிப்பிசாசஐ கலர்ல போட்டு விட்டீங்கன்னா அவரு சின்னத்தம்பி மாதிரி பாடறதை கேட்டுட்டு நாங்க தூங்குவோம்.

   Delete
  3. விண்வெளிப் பிசாசு +1

   Delete
  4. //ஆர்ச்சிலாம் இனிமே முன்பதிவுக்கான லிமிடெட் எடிஷன் மாத்திரமே சார் ; ரெகுலர் தடத்தில் நஹி !//


   அச்சச்சோ... எங்க தங்கத்தலைவன் ஆர்ச்சியை மூட்டை கட்டி பரனுக்கு அனுப்பிட்டிங்களே sir! 😭😭😭 என்றேனும் ஒருநாள் அதிசய தீவில் ஆர்ச்சி ரீபிரிண்டில் வரும்ன்னு மிகவும் ஆவலாக இருந்தேன்.☹️☹️☹️

   Delete
  5. விண்வெளிப் பிசாசு +1

   Delete
  6. விண்வெளி பிசாசு + 1

   Delete
  7. கவிஞரை பாத்து அல்லாருக்கும் குளிர் விட்டுப் போச்சுன்னு தெரியுது ; நாளைக்கே 'ராசாத்தி உன்னே காணாத நெஞ்சு' டியூனிலே வி.பி.க்கு கொடிபுடிச்சிட்டு வருவாரு பாருங்க - அப்போ இருக்குது கச்சேரி !

   Delete
  8. @Rajkumar : நான் ஏன் சார் பரணுக்கு அனுப்பப் போறேன் ? கையில் உள்ள 2 கதைகளை வெளியிட வழி தெரியாமல் நானே மலங்க மலங்க முழிச்சிட்டு இருக்கேன் !

   Delete
  9. மகி கொலைப் படை ரிப்ளிகாதான் அப்படியே மாற்றமில்லாம பால்யத்துக்கோர் பயணம் இருவண்ணத்ல....அது ஓர் நினைவுப் பொக்கிஷமாக வரட்டுமே...வண்ணத்தில் விண்வெளிப் பிசாசும் கோர்த்து...
   சார் வாங்கிய இரு கதைகள லிமிட்டெட்ல விடுங்க...

   Delete
 20. சிஸ்கோ'வில் சின்னதாய் நெருடல். பக்கம் 169ன் படங்களையும் வசனங்(?)களையும் தவிர்த்திருக்கலாமே.

  ReplyDelete
  Replies
  1. Nopes...அனுமதி லேது சார் !

   Delete
 21. /ஆர்வம் + நேரம் கொண்டிருக்கக்கூடிய நண்பர்கள் இங்கே கைதூக்குங்களேன் ப்ளீஸ்/

  ஆர்வமெல்லாம் அளவு கடந்து இருக்கு சார், போட்டி நடக்கும் நேரம் ஒத்துழைத்தால் I am ready

  ReplyDelete
  Replies
  1. பார்க்கலாம் சார் ; நண்பர்களுக்கு புக்ஸை படிக்க முதலில் நேரம் கிட்டுகிறதாவென்று !

   Delete
 22. அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன் சார்.

  Wonder Ball - 10/10
  ஆல்ஃபா -9.5/10 முதல் பாகம் கொஞ்சம் நீளம்
  சிஸ்கோ - 9.75/10 செம்ம ஃபாஸ்ட் ஆனால் ரொம்ப ஒரு peculiar ஆன ஹீரோ.
  டேங்கோ -10/10 மூவரில் எனக்கு மிகவும் பிடித்தது இவரையே. சும்மா தெறி.

  நான் ரெடி ஜூம் மீட்டிங் மற்றும் குவிஸ் போட்டிக்கு.

  ReplyDelete
  Replies
  1. GHS-க்கு மார்க் போடக்காணோமே சார் ; கவிஞரை விட்டு நினைவூட்டச் சொல்லணும் போலிருக்குதே !!

   Delete
  2. GHS - 5/10 போட்டுட்டேன். ஸ்டீல் வேண்டாம் ஸ்டீல் வேண்டாம்

   Delete
 23. வேதாளர் புத்தக பக்கங்களை முகப்பை பார்க்க ஆவல் சார்

  ReplyDelete
  Replies
  1. உரிய தருணத்தில் நண்பரே !

   Delete
 24. Our Baby Photo printed in FFS very disappointing sir. You claimed the result was amazing. But I don't feel that way. A very normal quality and doesn't give any purpose to be printed this way.
  Anyway Kudos for your experiment sir.

  ஒற்றை நொடி ஒன்பது தோட்டா , கதையளவில் திருப்தியில்லை. ட்ரீட்மென்ட் Average. மொழிபெயர்ப்பு ok. சில இடங்களில் சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. சார்...வாசகர்கள் அனைவரது போட்டோக்களும் டிஜிட்டல் பிரிண்ட் போடப்பட்டவை - including yours ! இங்கே நமது அச்சகப் பணிகள் பூஜ்யமே ; அவரவர் அனுப்பும் போட்டோக்கள் அவ்விதமே டிஜிட்டல் பிரிண்ட்கள் போட்டு வாங்கி, புக்கில் இணைத்திருக்கிறோம் !

   இப்போது தான் நீங்கள் அனுப்பிய போட்டோவை எடுத்துப் பார்த்தேன் ; பாப்பாவும், நீங்களும் உள்ள போட்டோ 200 DPI-ல் 870 KB சைசில் மட்டுமே உள்ளது & lighting மீடியம் ! இந்த போட்டோவினை சும்மா ஒருவாட்டி உங்கள் ஊரிலுள்ளதொரு Konica லேப்பில் பிரிண்ட் போட்டுப் பாருங்களேன் - ரிசல்ட் சுமாராய் இருப்பதன் காரணம் புரிந்திடும் ! இன்னும் உயர் resolution-ல், நல்ல வெளிச்சத்தில் எடுத்திருக்காது போனீர்களே சார் !

   Delete
  2. ஒவ்வொரு முயற்சியிலும், உங்களது சிரத்தை அபாரம். hats off to you Sir.

   Delete
 25. இரட்டை வேட்டையர்கள் வருகின்ற வாய்ப்பிருக்கிறதா ஆசிரியரே

  ReplyDelete
  Replies
  1. படைப்பாளிகளிடம் இவை எதுவுமே டிஜிட்டல் கோப்புகளில் சேமிக்கப்படவில்லை சத்யா ! அவர்கள் கைவசமுள்ள specimen பிரதிகளை ஒவ்வொன்றாய் தேடிப் பிடித்து எடுத்து, கொஞ்சம் கொஞ்சமாய் டிஜிட்டல் கோப்புகளாய் மாற்றம் செய்து வருகின்றனர் ! அவர்கள் பணியாற்றி வரும் பட்டியலுக்குள் ஸ்பைடர் ; ஆர்ச்சி ; மாயாவி ; 13 வது தளம் ; ஒற்றைக்கண் ஜாக் - என்று நமக்குப் பரிச்சயமான நாயகர்கள் தற்செயலாய் அமைந்து போக அவற்றை வெளியிட இயன்றுள்ளது !

   கடல் போல் அவர்களிடம் கொட்டிக்கிடக்கும் கதைக்குவியலிலிருந்து உங்கள் ஆதர்ஷ இரட்டை வேட்டையர் கதைகளை அவர்கள் கையில் எடுப்பார்களா ? அப்படியே எடுத்தால் எப்போது எடுப்பார்கள் ? எப்போது முடிப்பார்கள் ? என்பது யூகமாய்க் கூட நமக்குத் தெரியாது ! So இதனில் நான் செய்யக்கூடியது எதுவுமே இல்லையே ?!

   Delete
  2. காலம் கணியும் என்று காத்திருக்கிறேன் ஆசிரியரே

   Delete
 26. சார் அருமை....அந்த இரண்டு புக்கும் என்னன்னியாவது சொல்லலாமே ...சுஸ்கி விஸ்கி ...உயிரைத்தேடியா...
  வேதாளர் பொங்களுக்குக் கிடையாதா...
  நான் தயார் ஆன் லைனுக்கு

  ReplyDelete
  Replies
  1. நீங்க பின்னூட்டமிடற வரைக்கும் தந்தி ஆபீஸ்கள் மூடின குறையே தெரியாது ஸ்டீல் !

   Delete
  2. மகிஜி. தூங்கறதுக்கு ரெடியா. பாடறதுக்கு 'சின்ன தம்பி' ஸ்டீல் ரெடி.
   (வெள்ளிக்கிழமை ராமசாமின்னு தான் நான் இதுவரைக்கும் நெனச்சுக்கிட்டு இருந்தேன். Sorry Steel. go ahead. lam escape)

   Delete
  3. அந்த இரண்டு கதைகள் என்னன்னு தெரிலன்னா தலையே வெடிச்சிரும்...தலையே வெடிச்சிரும் போலவே

   Delete
 27. இந்த வருடம் சூட்டோடு சூடாக, வரும் புத்தகங்களை உடனுக்கு உடன் படித்து இங்கு விமர்சிக்கலாம் என்று resolution எடுத்து உள்ளேன். நான் subscription கட்டி முதல் முதலாக வீட்டிற்கு வரும் முதல் காமிக்ஸ் பேட்டி முத்து Fifty and Forever Special தான். பெட்டி டிசைன் பாத்தவுடன் நான் அடைந்த பரவசம் எல்லையே இல்லை. (நெறய பேருக்கு வருவதற்கு முன் சரியாக வந்து விட்டது கூடுதல் சந்தோஷம் அப்புறம் கலர் பெட்டி இது தான் முதல் முறை என்றும் அப்பொழுது தெரியாது ) அதை வீட்டிற்குள் எடுத்து செல்லும்போதே என் வாய் இரண்டு காதோரம் வரை இருந்ததை பார்த்து என் குழந்தைகள் என்னை கிண்டல் பண்ணினார்கள்.. காமிக்ஸ் படிக்க போகுது பாப்பா என்று.

  இது ஒரு பொக்கிஷம், உங்களுக்கு புரியாது என்று.. பரவசமாக பிரித்தேன்.

  ஒவ்வொன்றாக எடுக்க எடுக்க வந்து கொண்டே இருந்தது. நான் ஒரு புக்மார்க் பைத்தியம். ஒன்றுக்கு 4 புக்மார்க். ஒரு குட்டி சாக்லேட். ஆளுக்கு ரெண்டு என்று பிய்த்து அப்பவே சாப்பிட்டோம். வெறும் FFS சந்தா கட்டி இருந்ததால், எலியப்பா இருக்காது என்று நினைத்தேன். அதுவும் இருக்கவே எனக்கு ஆச்சர்யம். பிறகு என்னுடைய எவர் எவர் evergreen நாயகன் in முத்து world மாயாவி போஸ்டர். அனைத்தும் டி பையில் அடுக்கி போட்டோ எடுத்தேன். (கண்டிப்பாக நெறய பேர் இது போல் போட்டோ எடுத்து வைத்து இருப்பார்கள் அதை எல்லாம் நம் பிளாகில் வெளியிடலாம்)

  ஒரு வித பதட்டத்துடன் என் போட்டோ வந்து இருக்கிறதா என்று பார்த்தேன். அதை பார்த்த பின் ஒரு நிம்மதி தொடர்ந்து பரவசம். வீட்டில் எல்லோரிடமும் காட்டி மகிழ்ந்தேன் .

  ReplyDelete
  Replies
  1. // அதை வீட்டிற்குள் எடுத்து செல்லும்போதே என் வாய் இரண்டு காதோரம் வரை இருந்ததை பார்த்து என் குழந்தைகள் என்னை கிண்டல் பண்ணினார்கள்.. காமிக்ஸ் படிக்க போகுது பாப்பா என்று. //
   ஹா,ஹா,ஹா,செம...

   Delete
 28. அன்றே காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தேன். எனது விமர்சனம் நான் படித்த புத்தகங்களின் அடிப்படியில்.

  1 . என் பெயர் எலியப்பா / அந்தியும் அழகே :

  3 நிமிடங்களில் படித்து முடித்துவிட்டேன். அட இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என்று நினைத்தேன். மிகவும் அருமையாக இருந்தது.

  ரேட்டிங்: 10 / 10
  சித்திரங்கள் : அருமை
  படிப்பதற்கு : எளிது

  அந்தியும் அழகே : சீனியர் எடிட்டர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள். என் வாழ்க்கையின் பெரும் மகிழ்ச்சியை தந்தது அவர் தான். அவர் இல்லை என்றால் முத்து இல்லை. முத்து இல்லை என்றால் லயன் ?!!! அவர்களின் வாழ்க்கை பயண கட்டுரை மிகவும் அருமை.

  எடிட்டருக்கு கேள்வி > எலியப்பா கதை ஆறு மாதத்திற்கு ஒரு முறை கடையில் வரும் என்று அறிவித்திருக்கிறீர்கள். சீனியர் எடிட்டரின் அந்தியும் அழகே அதுவும் அதனுடன் வருமா ?

  ReplyDelete
 29. 2. The Fifty and Forever Special:

  எ) ஆல்பா : துரோகம் ஒரு தொடர்கதை
  சரியான தலைப்பு. ரஷ்யா நிதி நிலைமை சிக்கல்கள் இருப்பதினால், அரசாங்கத்தின் பிரதிநிதியாக அஸ்ஸியா டேங்கோவா எனும் கதாநாயகி பாரிஸில் ரூபிள்களை தந்து அதிக விலைக்கு டாலர்கள் வாங்கி செல்ல ரகசியமாக வந்து இருக்க, திடீரென்று ஒரு மர்ம கும்பல் வந்து அங்கு இருக்கும் அனைவரையும் கொன்று ரூபிள்களையும் டாலர் இரண்டையும் திருடி சென்று விடுகின்றனர். இதில் அஸ்ஸியா உயிர் தப்பி விட, அவளுக்கு கதாநாயகன் ஆல்பா உதவுகிறான். ஆல்பா உண்மையில் அமெரிக்கா CIA வினால் அஸ்ஸியாவை கண்காணிக்க அனுப்ப பட்ட உளவாளி. யார் அந்த மர்ம கும்பல்? டாலர்களை ரஷ்யா மீட்டதா? அஸ்ஸியா ஆல்பா உறவு என்ன?

  ரேட்டிங் : 7.5 / 10
  சித்திரங்கள்: அட்டகாசமான தத்ரூபமான சித்திரங்கள்.
  கதை :
  முதல் அத்தியாயம் முழுங்க முடியா மாத்திரை.
  இரண்டாம் அத்தியாயம் விழுங்க முடிந்த மாத்திரை.
  மூன்றாம் அத்தியாயம் தேன் மிட்டாய். முதல் அத்தியாயத்தில் ஆரம்பித்த குழப்பம் மர்மம் இதில் முடிச்சு அவிழ்த்து சரியாக சுபம் போட்டு இருக்கிறார்கள்.
  படிப்பதற்கு : சிரமம்

  குறை : பிரின்டிங் issue . 123 ஆம் பக்கத்தில் இங்க் கொட்டி ஒரு பாக்ஸில் எழுத்துக்களை மறைத்து விட்டது. அப்புறம் நெறய பக்கங்களில் வெள்ளை போர்டர்களில் கருப்பு இங்க் சிலந்தி வலை போல லேசாக அப்பி கொண்டு இருந்தது . அடுத்த புத்தகங்களில் இது போல் வராமல் இருக்கவே இதை குறிப்பிடுகிறேன்.

  பி) சிஸ்கோ : சத்தமாயாறு மௌனம் :
  மீண்டும் சரியான தலைப்பு. US கவெர்மென்டின் மேலிடத்து (ப்ரெசிடெண்ட்) உத்தரவுகளை பிசகில்லாமல் செய்து தடயமே இல்லாமல் பண்ணும் ஏஜென்சியில் வேலை செய்யும் ரகசிய ஏஜென்ட் தான் சிஸ்கோ. ஒரு முறை ஒருவனை கொல்லும்போது ஜன்னல் சுத்தம் செய்யும் ஆசாமி இந்த கொலையை செல்போனில் படம் எடுத்து விடுகிறான். அவனை பிடிக்க முயன்று தோற்கிறான் சிஸ்கோ. இதனிடையே சக ஊழியன் வெர்ராட்டுக்கும், சிஸ்கோவிற்கும் இடையே நடக்கும் பனி போரினால் இந்த விஷயம் ஊதி பெருசாகிறது. இந்த சிக்கலில் இருந்து சிஸ்கோ தப்பிக்கிறானா?

  ரேட்டிங் : 8 / 10
  சித்திரங்கள்: தெளிவான அருமையான சித்திரங்கள்
  கதை : ஆரம்பம் முதலே டாப் கீரில் கதை பறக்கிறது. பரபரப்பாக ரசிக்கும்படி போகிறது.
  படிப்பதற்கு : லகு

  குறை: ஆல்பா கதை பளிச்சென்று தெளிவாக இருந்தது. இந்த கதை முழுவதும் ஒரு மோடம் போட்ட மழைநாளில் கதை நகர்வது போல் இருட்டாக இருக்கிறது. கொஞ்சம் டிஜிட்டல் கோப்புகளில் பிரைட்னெஸ் அதிகம் பண்ணி இருக்கலாம்.

  சி) டேங்கோ : என் பெயர் டேங்கோ :
  தனிமை விரும்பி டேங்கோ அண்டெஸ் மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு சிறிய பாலைவன கிராமத்தில் 4 வருடங்களாக வாழ்ந்து வருகிறான். தன்னுடைய சிறிய நண்பன் டியகோவுடன் பாலைவனத்தில் புராதன பொருட்களை தேடுவது பொழுது போக்காக வைத்து கொண்டு இருப்பவன். டியகோவின் அப்பா ஆன்செல்மோவை சில பேர் அடித்து உதைக்க, டேங்கோ அவரை காப்பாற்றி மற்றவர்களை கொல்கிறான். இப்பொழுது அந்த சிறிய கிராமத்திற்கு ஒரு டிடெக்ட்டிவ், டேங்கோவின் பழைய கூட்டாளிகள், டியகோவை தேடி வரும் ஒரு கூட்டம் என்று கதை திடிரென்று காட்டு தீ ஊத்தியதை போல் பற்றி கொள்கிறது. இந்த கதையில் டேங்கோ, ஆன்செல்மோ, டேங்கோவின் காதலி, டிடெக்ட்டிவ் என எல்லாரிடமும் ஒரு ரகசியம் இருக்கிறது. ஆன்செல்மோ இறந்த பின் டியாகோவை பாதுகாப்பது டேங்கோ தலையில் விழுந்து விடுகிறது.

  ரேட்டிங் : 8 .5 / 10
  சித்திரங்கள்: தத்ரூபமான சித்திரங்கள். ஒவ்வொரு பிரமேமும் ஒரு தனி கதையே சொல்லும். நிதானமாக பாலைவனத்தை ரசித்து பார்க்க வேண்டிய கதை.
  கதை : மெதுவாக ஆரம்பித்து சட்டென்று தீ போல் வேகம் எடுக்கும் கதை.
  படிப்பதற்கு : உற்சாகம்

  குறை : monologue டையலாக்ஸ் கொஞ்சம் அதிகம்.

  ReplyDelete
  Replies
  1. // monologue டையலாக்ஸ் கொஞ்சம் அதிகம். //
   யெஸ்,உடன் தத்துவார்த்த சிந்தனையும்,பார்வையும் இணைந்திருந்தது...
   எனினும் நன்றாகவே இருந்தது...
   அப்பப்ப ஆசிரியர் பிளாக்கில் இடும் பதிவும் இதே பாணியில் இருப்பதாக எனக்குத் தோன்றியது...

   Delete
  2. மூன்று சாகஸங்களில் டேங்கோ மிகவும் இரசிக்கும்படியாக இருந்தது...

   Delete
 30. 3. தி கோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷல்:
  இந்த புத்தகம் மட்டும் FFS இல் இணைக்காது போய் இருந்தால், முத்து காமிக்ஸ் என்ற அந்த feel கண்டிப்பாக மிஸ் ஆகி இருக்கும். பழசு தான் ஆனாலும் புதுசு என்று version 2 கலக்கி எடுத்து இருக்கிறார்கள். செக்ஸ்டன் பிளேக் ஒரு சர்ப்ரைஸ் ஹிட்

  எ) ஸ்பைடர் - இனியெல்லாம் குற்றமே :
  நடந்தே விட்டது, ஸ்பைடர் கலரில். வெர்சன் 2 . 0 . ஹப்பா... திரும்பவும் கூர் மண்டையன் மீண்டும் வில்லனாக. நடிகர் ஹீரோ சத்யராஜை விட எனக்கு வில்லன் சத்யராஜ் தான் அதிகம் புடிக்கும். எனக்கு ஆரம்பம் முதலே நீதி காவலன் ஸ்பைடரை பிடித்ததில்லை. ஸ்பைடர் என்றால் அந்த அகம்பாவம், தெனாவெட்டும், தலை கணமும் தான் அழகு. படைப்பாளிகளுக்கு அது புரிந்து மீண்டும் வில்லனாக மாற்றியதற்கு நன்றி. ஸ்பைடர் மீண்டும் வில்லன் ஆவதற்கு தகுந்த முகாந்திரமும் தரபட்டு இருப்பது நன்று

  முத்துவுக்கு இரும்பு கை மாயாவினா ... லயனுக்கு ஸ்பைடர்.

  ரேட்டிங் : 9 / 10
  சித்திரங்கள்: வித்தியாசமான சித்திரங்கள்
  கதை : சிறு சரவெடி.
  படிப்பதற்கு : ஆனந்தம் ஆனந்தமே
  குறை: சிறு கதை

  பி) செக்ஸ்டன் பிளேக் - திகில் தீவு :
  ட்ரோல் தீவிலிருந்து ஒரு அனாமதேய போன் கால் வருகிறது. செக்ஸ்டன் பிளேக்கும் அவருடைய உதவியாளர் டின்கரும் அங்கே செல்கிறார்கள். உள்ளே செல்லும் இடத்திலிருந்தே கொலை கொலையா முந்திரிக்கா என்று வரிசையாக கொலை நடக்கிறது. அனைவரும் அந்த பனி பொழியும் இரவில் மாட்டி கொல்கின்றனர். அந்த தீவில் இருக்கும் 6 அல்லது 7 பேர்களுக்குள் ஒரு கொலையாளி. அதை செக்ஸ்டன் பிளேக் அடுத்த கொலை நடப்பதற்குள் கண்டு பிடிக்க வேண்டும். ஒரு சினிமா படம் பார்த்த பீல் இந்த கதையை படிக்கும்போது.

  ரேட்டிங் : 10 / 10
  சித்திரங்கள்: அருமையான கருப்பு வெள்ளை கிளாசிக் சித்திரங்கள்
  கதை : திக் திக் ... த்ரில்
  படிப்பதற்கு : என்ன நடக்கிறது.. யார் அந்த கொலையாளி என்று தவிக்க விடுகிறது.
  குறை: ஒன்றுமே இல்லை.


  சி) இரும்புக்கை மாயாவி - புது யுகத்தில் மாயாவி :
  டிசம்பர் 1999 இரவில், மாயாவி ஒரு கொள்ளை கூட்டம், கொடூரர்களின் மாநாட்டில் அரூபமாக கலந்து கொள்கிறார். லண்டனில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தை கெடுத்து பேரழிவை உண்டாக்க வெவ்வேறு நாடுகளின் சார்பில் 6 சூப்பர் வில்லன்களை களம் இருக்குகின்றனர். லட்ச கணக்கில் புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்க்க ஒரு மண்டபத்தில் குவிந்து இருக்கும் மக்களை காப்பாற்றும் பெரும் பணி மாயாவின் தோள்களில். காப்பற்ற முடிகிறதா அவரால் ?

  ரேட்டிங் : 7 / 10
  சித்திரங்கள்: சிறப்பு
  கதை : கசாப்பு கடையில் வேலை செய்தவர் எழுதியது போல இருக்கிறது. இது தான் மாயாவி வெர்சன் 2 வின் முதல் கதையா ? நெறய புது characters , புது வில்லன்ஸ் எல்லோரையும் ஒரு வார்த்தையில் அறிமுக படுத்துவது குறை. ஒரு 3 மணி நேர படத்தை 30 நிமிடங்களில் முடித்தால் எப்படி இருக்கும். அப்படி இருக்கிறது கதை.
  படிப்பதற்கு : குழப்பம், ரசிக்க முடியவில்லை.
  குறை: மாயாவி தனியாக சாகசம் செய்து வருவதையே பார்த்த நமக்கு, அவரால் வில்லன்களை சமாளிக்க முடியாமல் திணறுவதும், கடைசியில் வேறு யாரோ சூப்பர் ஹீரோ வந்து ஒரே செயலில் அத்தனை வில்லன்களையும் வீழ்த்துவது, மாயாவியை டம்மி பீஸாக மாற்றியது அதி தீவிர மாயாவி பேன் ஆன என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

  ட) செக்ஸ்டன் பிளேக் - வல்லவன் வீழ்வதில்லை :
  செக்ஸ்டன் பிளேக் சிறுகதை கலரில். அவரின் பிரதான வில்லன் செஸ் மேன் பிடிக்க முயல்கிறார். ஒரு முறை அவர் அவனை துரத்தி செல்லும்போது ஒரு வீட்டு மாடியில் இருந்து விழுந்து இறந்து விடுகிறார். அவரின் இறுதி சடங்கில் அவருடைய உதவியாளர் டிங்கர் ஆற்றும் சொற்பொழிவில் ஆரம்பிக்கிறது கதை.

  ரேட்டிங் : 9 .5 / 10
  சித்திரங்கள்: வெறும் நாலு ஐந்து கலரில் உருவாக்க பட்ட சித்திரங்களை திரும்ப திரும்ப பார்க்க விரும்புகிறது மனது.
  கதை : சிறுகதை வித் எ ட்விஸ்ட்
  குறை:ஒன்றும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. மாயாவியைப் புது பாணியில் பார்க்க எனக்குமே செம நெருடல் !

   Delete
 31. 4 ) ஒற்றை நொடி ஒன்பது தோட்டா :
  எல்லோரும் இதை முதலில் படித்து இருப்பார்கள், ஆனால் நான் இதை கடைசியாக படித்தேன். better save the best for last என்பார்களே அது போல. இப்பொழுது சிறு நேரத்திற்கு முன்பு தான் நான் படித்து முடித்தேன். இத்துடன் FFS அணைத்து புத்தகங்களும் படித்து முடித்து விட்டேன். ஸ்பாட்ச்சினி.... கதையின் கதாநாயகனின் பெயரிலேயே இத்தனை வித்யாசம் இருக்கும்போது கதை எப்படி இருக்கும் என்று யூகித்து பார்த்து கொள்ளுங்கள். ஒரு அருமையான இன்வெஸ்டிக்டிவ் திரில்லர் வெப் சீரீஸ் பார்த்த உணர்வு தான் மேலோங்குகிறது. மிகவும் ஆழமான கதை. வேகமாக படித்து செல்ல முடியாது டேங்கோ, சிஸ்கோ போல.
  மெது மெதுவாக ஒவ்வொரு கேரக்டரும் கதைக்குள் வருகிறார்கள். எந்த கேரக்டருக்கும் ஒரு இன்ட்ரோ கிடையாது. கதையோடு படித்து அவர்களின் பங்கை நாமே உணர்ந்து கொள்ள வேண்டும்.

  ஒரு வெறியன், 9 நொடிகளில் 9 பேரை சுட்டு கொல்கிறான். அவன் யார் என்பதை முரடன் என்று பெயர் எடுத்து இருக்கும் இன்ஸ்பெக்டர் ஸ்பாட்ச்சினி துப்பு துலக்குவதில் ஆரம்பிக்கும் கதை. அவருடன் நாமும் சேர்ந்து செல்கிறோம். இது ஒரு வெறியன் செயல் அல்ல, இவன் இப்படி ஆவதற்கு காரண கர்த்தா யார் என்று ஸ்பாட்ச்சினி சொல்வதை கேட்க அவரின் மேல் அதிகாரி முதற்கொண்டு யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை. இவனுக்கு பின்னல் இருந்து உதவி செய்வது ஆவி என்னும் இன்னொருவன். ஸ்பாட்ச்சினி மேல் எந்த தப்பும் இல்லை என்று தெரிந்து வேறு வழியில் புலனாய்வை தொடரும் டிடெக்ட்டிவ் என்று அனைத்தும் ஸ்ட்ரோங் காரெக்டர்ஸ். ஹீரோவை போட்டு தள்ள முயற்சிக்கும் அசாசின்ஸ் ஒரு புறம், தப்பாக புரிந்து கொண்டு கைது செய்ய முற்படும் போலீஸ்காரர்கள் ஒருபுறம், இவர்கள் இருவரையும் சமாளித்து, நிழல்களில் இருந்து கொண்டு இப்படி பட்ட வெறியர்கள் உருவாக காரணமா இருந்த பெரிய தலைகளை நெருங்க முடிந்ததா ? தன்னை நிரபராதி என்று நிரூபிக்க முடிந்ததா என்பது தான் இந்த மூச்சு இரைக்கும் 5 பாக கதை.

  ரேட்டிங் : 10 / 10
  சித்திரங்கள்: நல்ல சித்திரங்கள்.
  கதை : ஏகாந்தமாக மெதுவாக சரக்கு அடித்து சுதி ஏத்துவது போல் மெதுவாக படிக்க வேண்டிய கதை.
  குறை: கதை நன்றாகவே இருந்தாலும், நடு நடுவே நிறுத்தி படிக்க வேண்டி இருக்கிறது. highway இல் 500 km வண்டி ஓட்டும்போது ஏற்படுமே அயர்ச்சி அது போல என்று வைத்து கொள்ளுங்களேன்.

  மொத்தத்தில் FFS அணைத்து கதைகளும், அணைத்து ஹீரோசும் எனக்கு பரம திருப்தி

  ReplyDelete
  Replies
  1. //ஏகாந்தமாக மெதுவாக சரக்கு அடித்து சுதி ஏத்துவது போல் மெதுவாக படிக்க வேண்டிய கதை//

   அட...உவமானமே ஒரு மார்க்கமாய் உள்ளதே !!

   And thanks a ton sir ....நிறையோ, குறையோ - அவற்றை in depth அலசிடவும், டைப் அடிக்கவும் அசாத்தியப் பொறுமை தேவை !! போட்டுத் தாக்கியுள்ளீர்கள் !! சூப்பர் !

   And சின்ன typo : சிஸ்கோ பணியாற்றுவது பிரெஞ்சு அதிபரிடம் ; US மேலிடத்திடம் அல்ல !

   Delete
  2. Prabhu sir.. amazing reviews congrats.

   Delete
  3. பிரபு சார் நல்ல விமர்சனம்...

   Delete
  4. உவமானத்திற்கு மட்டுமே சார், நான் அல்மோஸ்ட் a teetotaler

   என் விமர்சனங்களை படித்து உங்கள் கருத்தை சொன்னதற்கு நன்றி.

   இதற்கு பதில் கூறவில்லையே ??

   எடிட்டருக்கு கேள்வி > எலியப்பா கதை ஆறு மாதத்திற்கு ஒரு முறை கடையில் வரும் என்று அறிவித்திருக்கிறீர்கள். சீனியர் எடிட்டரின் அந்தியும் அழகே அதுவும் அதனுடன் வருமா ?

   Delete
  5. நன்றி பத்மநாபன், அறிவரசு

   Delete
 32. நாங்க மூனாப்பு படிக்கயில இரவு ஏழு மணிக்கே பள்ளிக்கு அருகே தங்கி நாலு மணிக்கு குளிச்சி மதுரைக்கு போய் மீனாட்சியம்மன் கோயில் ...மீனிருக்கா என தேடிய தெப்பக் குளம் ...குரங்கு பறித்துச் சென்ற தேங்காய் காந்திமியூசியம்...இரவு வந்து நண்பர்களுடன் உறங்கலாம்னு பாத்தா பதினோரு மணிக்கு என்னை அழைக்க சைக்கிளோடு உற்சாகமா இருந்த தந்தையார்...அடடா

  ReplyDelete
 33. முதலில் படித்தது எலியப்பா

  தொடங்கிய வேகத்திலேயே தொடரும்.. ஆகையால் 2வது பாகத்துக்கு waiting.

  இரண்டாவது படித்தது சீனியர் எடிட்டர் சாரின் அந்தியும் அழகே..

  நினைவலைகளில் நீந்துவது ஆனந்தமே அது நமதாக இருந்தாலும் பிறருடையதாக இருந்தாலும்...

  3வதாக படித்தது

  கோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷல்

  அதுவும் போட்டிக்காக

  ஆனால் செக்ஸ்டன் பிளேக் ஏமாற்றவில்லை.. பர பர என்று நகருகிறது இரு கதைகளும்.

  4வது படித்தது ஒ.நொ.ஒ.தோ

  Non linear கதை என்பதால் உள்வாங்கி உள்வாங்கி படித்தேன்.. கதைஓவிய் இரண்டுமே வேற level

  ReplyDelete
  Replies
  1. நேரம் கிடைக்கும் போது இரண்டாவதுவாட்டி படித்துப் பாருங்கள் நண்பரே ; 6 வருடங்களுக்கு நீண்டுள்ள இதன் உருவாக்கப் பணிகளில் கதையோட்டத்துக்கு creative team எத்தனை கவனம் தந்துள்ளனர் என்பது இன்னமும் highlight ஆகித் தெரிந்திடும் !

   Delete
 34. ஒ.நொ.ஒ.தோ கதையில் wonderballக்கும் பிற ஆல்ஃபாக்களுக்கும் வித்தியாசம் காட்டினாலும், ஆவிக்கும் ஸ்பாட்டாச்சினிக்கும் ஏதாவது வேறுபாட்டை சுட்டுவது போல காட்சி இருந்திருந்தால் சூப்பராஇருந்திருக்கும்..

  ReplyDelete
 35. டியர் சார்,
  FFS-புத்தகங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சம் படித்துவிட்டு அப்படியே வைத்துவிட்டேன்.. பெருமை..
  அப்புறம், ஒரு சின்ன உறுத்தல்..
  ஆல்பா- கதைக்கு ஓவியம் எல்லாம் போட்டோ காப்பி போல் அத்தனை அருமை.. ஆனால், வசனங்களால் பாதி படம் மறைக்கப்பட்டிருப்பது ரொம்ப கொடுமை சார்..
  ஆல்பா- போன்ற பக்கத்திற்கு 4 வரிசை படங்கள் உள்ள கதையை "ஜம்போ, "- இதழ் சைஸில்- வண்ணத்தில் - சாதா பேப்பரில் (ஆர்ட் பேப்பர் அல்லாமல் |) முயற்சி செய்யலாமே..சார்..
  ஏதேனும், காரணங்கள் சொல்வீர்கள்..
  எனவே, கொஞ்சம் மனசு ஆறின பிறகுதான். படிக்க வேண்டும். -

  ReplyDelete
  Replies
  1. வசனங்களை நோவ நோவ எழுதியவனுக்கல்லவா நண்பரே - அந்த ஆதங்கம் முதன்மையாய் இருந்திடும் ? And அந்த வரிகளில் எவையுமே நானாய்த் திணித்தவைகளும் அல்லவே ?! கதையின் புரிதலுக்கு ஒவ்வொரு புள்ளி, கமா கூட இன்றியமையாதவை எனும் போது நான் செய்திடக்கூடியது என்னவாக இருக்கக்கூடும் ? Ideally, பக்க நீளத்தினை கதாசிரியர் இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி இருந்திருக்க வேண்டும், இந்தச் சிக்கல் எழாதிருந்திருக்க !

   அப்புறம் MAXI சைஸைத் தான் மங்களம் பாடியாச்சே ; அதை நினைத்து ஏங்குவானேன் சார் ?

   Delete
  2. And 10 வருஷங்களது ஆர்ட்பேப்பர் பரிச்சயங்களுக்குப் பிற்பாடு, சாதா பேப்பரின் வாசிப்பு அனுபவம் எவ்விதமிருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பின் நிச்சயமாய் அந்த முன்மொழிவைச் செய்திருக்க மாட்டீர்கள் ! பழைய மாருதி 800 சவாரிக்கும், புது ஹோண்டா சிட்டி சவாரிக்கும் இடையிலான வேறுபாடு தென்படும் !

   Delete
  3. டியர் சார்..
   பதிலுக்கு நன்றி சார்..
   இனிமே ஸ்பீடாக படித்துவிடுவேன்..
   ஆர்ட் பேப்பர் என்பது ஒரு ஆடம்பர அழகு என்பதாக ரசிக்கத் தான் செய்கிறது.. மற்றவர்கள் பார்வையில் ஒரு ராயல் லுக் கிடைக்கிறது தான்.
   X 111-ன் முதல் ஆல்பத்தை மட்டும் தனி இதழாக (வண்ணத்தில்) ரசிக்க பல கோணங்களில் கேட்டும் தங்களிடம் கிடைக்காததால் Cini Book -யில் - The day of the Black Sun_வாங்கினேன். - சாதாரண ஃபியூர் வொய்ட் பேப்பரில்-வண்ணத்தில்-சின்ன சைஸ் தான்.
   'கலரிங், "- நல்ல எடுப்பாக .ெ தெரிந்ததாக ஒரு ப்பீலிங்ஸ் -
   முன் அட்டை - நீங்கள் ஏமாற்றிய - அந்த முதல் ஆல்ப ஓவியம்-அட்டகாசமாக கிடைத்து விட்டது.. திருப்தி அடைந்துவிட்டேன்..சார்..
   மற்றபடி இதழ்களை பொறுமையாக - நிதானமாக - ரசித்துப் படிக்கவே விரும்பம் சார்..
   மற்றவர்களின் விமர்சனங்களை படிக்கப்படிக்க-எந்த கோணத்தில் படிக்க வேண்டும் - என்ற புரிதல் வந்துவிட்டது..
   மொத்தத்தில் FFS-க்கு பல பல நன்றிகள் சார்...

   Delete
  4. //நீங்கள் ஏமாற்றிய - அந்த முதல் ஆல்ப ஓவியம்-அட்டகாசமாக கிடைத்து விட்டது..//

   அடடா..அட்டைப்படமே இல்லாமல் நாம் புக் போட்டு விட்டோம் போலுமே !.

   Delete
 36. 5வதாக படித்தது

  ஆல்ஃபா

  உளவு அமைப்பு குறித்த எதிர்பார்க்காத கதைக்களம்..

  டேங்கோ

  விடை தெரியா கேள்விகள் ஏராளமாய்.. அடுத்த புத்தகத்துக்க waiting

  ReplyDelete
 37. யானைக் கல்லறை & புதையல் பாதை
  கலரில் ஆன்லைன் புத்தகத்திற்கு விழாவில் சஸ்பென்ஸாக வெளிவந்தால் எப்படியிருக்கும் நண்பர்களே

  ReplyDelete
  Replies
  1. தெய்வமே....வந்திருக்கிற புக்கை முதலில் படியுங்க ! ஒரு விமர்சனம் போடுங்க !

   Delete
  2. சத்யா இதோடு சேர்த்து சிறுத்தைகள் சாம்ராஜ்யம்.

   Delete
  3. // தெய்வமே....வந்திருக்கிற புக்கை முதலில் படியுங்க ! ஒரு விமர்சனம் போடுங்க ! //

   அதே அதே சார்

   Delete
 38. சார் மிஸ்டர் ஜெட் வரும் வாய்ப்பு இருக்குமா. ஆர்ச்சி கதைகள் வராததால் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்க முடியுமா. ஒரு கதை நீங்கள் வாங்கி உங்களிடம் இன்னும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆரவாரமாய் களமிறங்கிய ஆர்ச்சியையே பலூன் பறக்கவிட்டு ரிவர்ஸ் கியர் போட வைச்சுட்டோமே கிருஷ்ணா ?! மற்றவர்களெல்லாம் எம்மாத்திரம் ?

   Delete
  2. ஆர்ச்சியின் மறுவரவின் கதைகள் எனக்கு பிடிக்காமல் இருந்தது சார். சரி என ஆர்த்திக்கொரு ஆர்ச்சி புத்தகம் கிடைத்தது அதை படிக்கும் பொழுதும் இப்பொழுது கொஞ்சம் இழுவையாக தெரிந்தது.

   ஆனால் மிஸ்டர் ஜெட் இப்பொழுது மறுவாசிப்பின் பொழுதும் நன்றாக இருந்தது. அப்பொழுதே எதிர்காலத்தில் நடக்கும் கதை என்பதால் நீதி தேவன் மாதிரி ஒரு ஈர்ப்பு. நிறைய gadget குட்டி ரோபோ மற்றும் சிலந்தி ரோபோ என நன்றாக இருந்தது. நண்பர்களிடம் ஆர்வம் இருந்தால் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் சார்.

   Delete
  3. சார்
   மிஸ்டர் ஜெட் கதைகள் தற்காலத்துக்கும் பொருந்தும் அளவுக்கு கதை இருக்கும்.
   ஆர்ச்சி அப்பவே ஹி.. ஹி. ஹி

   Delete
 39. அன்பு சால் நண்பர்களே...

  நாளை மாலை 4 மணிக்கு ஜூம் டெஸ்ட் மீட்டிங் நடத்திடுவோம்...

  முயற்சி செய்வோம்...

  ReplyDelete
 40. விண்வெளிப் பிசாசு +1

  ReplyDelete
 41. சீனியர் எடிட்டர் சாருக்கும், விஜயன் சாருக்கும், மற்றும் முத்து லயன் டீம் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொன்விழா ஆண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 42. வருட ஆரம்பத்தில் கரெக்டா 8ஆம் தேதி இப்படி ஒரு பதிவு வருது...

  Apr 8, 2014 இல்லம் எங்கிலும் காமிக்ஸ்...உள்ளம் முழுவதும் மகிழ...
  May 8, 2016 திசையெங்கும் காமிக்ஸ்...!
  Jan 8, 2022 திக்கெட்டும் பொம்ம புக்குகள் !!

  ReplyDelete
 43. Edi Sir.. நானும் ஒரு அட்டென்டன்ஸ் போட்டுக்கிறேன்.

  ReplyDelete
 44. 1.தி கோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷல்:

  ஸ்பைடர் -நான்கு கதைகளில் இதுவே அதிகம் ஈர்த்தது ..
  செக்ஸ்டன் பிளேக் - ரெண்டுமே (BOTH COLOR AND B/W) சுமார் தான் ..
  இரும்புக்கை மாயாவி - படிப்பதற்கு குழப்பம், ரசிக்க முடியவில்லை .. மாயாவிற்கு பெரிதாக வேலையும் இல்லை இதில் ..

  rating:7.5/10 ...

  2.FFS1

  1.ஆல்பா :
  சித்திரம் ,மொழிபெயர்ப்பு பலம் .. ஆனால் பேசுகிறார்கள் , பேசுகிறார்கள் .. பேசி கொண்டே இருக்கிறார்கள் .. ஹீரோவிற்கு பெரிதாக வேலையும் இல்லை கதையில் .. GOOD POLITICAL STORY ..ஆனால் தொடர்ந்து படிக்க அயர்ச்சி .. 8.5/10 ..

  2.சிஸ்கோ

  செம POLITICAL, RACY ACTION THRILLER .. ஆரம்பம் முதலே டாப் GEARல் கதை பறக்கிறது .. 9/10 ..

  3.டேங்கோ

  சித்திரங்கள் , COLORING அட்டகாசம் .. கதை மெதுவாக ஆரம்பித்து வேகம் எடுக்கிறது ..
  9/10 ..

  3.ஒற்றை நொடி ஒன்பது தோட்டா(FFS2)

  இன்னொரு KENNEDY - CONSPIRACY POLITICAL THRILLER .. முதல் பாகம் SET ஆக கொஞ்ச நேரம் எடுத்தது.. அதற்கு அப்பறம் கதை SPEED எடுக்கிறது .. ஆனால் தொடர்ந்து படிக்க இயலவில்லை .. ஒவ்வொரு பாகமாக தான் படிக்க முடிந்தது .. 9.5/10 ..

  4.எலியப்பா .. சீனியர் எடிட்டரின் அந்தியும் அழகே தான் இதன் HIGHLIGHT .. LOOKING FORWARD TO IT ..

  AND அனைத்து இதழ்களின் MAKINGம் செம சார் ..

  ReplyDelete
 45. அந்த இரண்டு கதைகள் என்னன்னு தெரிலன்னா தலையே வெடிச்சிரும்...தலையே வெடிச்சிரும் போலவே

  ReplyDelete
 46. //ஆர்வம் + நேரம் கொண்டிருக்கக்கூடிய நண்பர்கள் இங்கே கைதூக்குங்களேன்//

  I am waiting

  ReplyDelete
 47. I prefer typing if it is live exam.. Will it be possible sir

  ReplyDelete
 48. சார் அனைத்து இமழ்களையும் படித்தாயிற்று..

  விமர்சனமும் இட்டாயிற்று ..

  அடுத்த மாத இதழ்கள் எப்பொழுது சார்...!?

  :-)

  ReplyDelete
  Replies
  1. // அடுத்த மாத இதழ்கள் எப்பொழுது சார்...!? //
   அடுத்த மாதம் தானாம் தலைவரே...

   Delete
  2. சார்,
   உஷாரா..இருங்க..
   பிப்பிரவரி - 28 நாள்தான்-
   ஜனவரியிலேயே அனுப்பி வைத்தீர்களேயானால்-650-பக்கங்களையே 8ம் - தேதிக்குள் ஊதித்தள்ளியவர்கள் - பிப்பிரவரி 20ம் தேதியே மார்ச் மாத இதழ்களை கேட்டு போராட ஆரம்பித்துவிடுவார்கள்.. iii.

   Delete
 49. // நேற்றிரவு அச்சு முடிந்திருக்க, வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன் கொஞ்ச நேரத்துக்கு //
  அடடே,கேட்க நல்லாதான் இருக்கு...

  ReplyDelete
 50. // Phew ..பட்ஜெட் மட்டும் ஒத்துழைத்து இரவுக் கழுகாரை ரெகுலராய் வண்ணத்தில் தரிசிக்க மட்டும் வாய்ப்பிருப்பின் - ஹைய்யோஓஓஓ !! //

  ஆசை இருக்கு தாசில் பண்ண,அம்சம் இருக்கு ஆடு மேய்க்கன்னுதான் சார் இருக்கு நம்ம நிலைமை...!!!

  // அப்புறம் இந்தச் சித்திரத்திலுள்ள ஆக்ஷன் சீன் நினைவுள்ளதா guys ? //

  இந்த இதழ் என்னிடம் இல்லை,படித்ததும் இல்லை,ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்...

  ReplyDelete
 51. இன்று பிறந்தநாள் காணும் சீனியர் எடிட்டர் ஐயா சௌந்திரபாண்டியன் அவர்களை வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறேன்

  ReplyDelete
  Replies
  1. இப்போல்லாம் 16 நாட்களுக்கொருவாட்டி பர்த்டே வருதா சத்யா ?

   Delete
  2. பேஸ்புக்கில் பார்த்தேன் ஆசிரியரே

   Delete
 52. FFS books ordered. waiting for delivery

  ReplyDelete
 53. பொங்கல் online book fair list எப்போது கிடைகும்

  ReplyDelete
  Replies
  1. 13 அவ்வளவு நல்ல நம்பர் இல்ல அப்படின்னு சொல்லுறாங்களே, ஏன் 12ஆம் தேதி வைத்துக் கொள்ளக் கூடாதா

   Delete
 54. Enter your comment...தேதியை மட்டும் கூறுங்கள் சார். நேரம் இருந்தால் நிச்சயம் நான் கலந்து கொள்வேன். 9080599601 என்ற எண்ணுக்கு ஜூம் லிங்க் ஐ அனுப்பி விடுங்கள்

  ReplyDelete
 55. ஆன்லைன் புக் பேர் தான் நமக்கு பொங்கல் திருவிழா

  ReplyDelete
 56. கதய கதய கதய காட்டுனா
  குடு குடு குடுன்னு கேப்பாங்க
  குட்டி குட்டி ஸ்பைடர போட்டா
  குறுக்கா மறுக்கா பாப்பாங்க

  பெரிய கதையோ சின்ன கதையோ
  ஸ்பைடர்ல ஒன்னும் இல்லைங்க
  ஆச வந்தா பாடிப் பாடி
  கேள்வியா தாக்கும் ஸ்டீலு புத்தி
  ஊ சொல்றியா நண்பா ஊ ஊ சொல்றியா நண்பா
  ஊ சொல்றியா நண்பா ஊ ஊ சொல்றியா நண்பா

  கலர்ரா இருக்கும் ஸ்பைடர பார்த்தா
  கதைய வாங்க துடிப்பாங்க
  கருப்பா இருக்கும் ஸ்பைடர பார்த்தா
  நல்லா இருக்குன்னு சொல்வாங்க

  கலரோ கருப்போ இருநிறமோ
  நெறத்துல ஒன்னும் இல்லைங்க
  கொலைப் படை கதய சுத்தி
  வெறியா திரியும் ஸ்டீலு புத்தி

  ஊ சொல்றியா நண்பா ஊ ஊ சொல்றியா நண்பா
  ஹேய் ஊ சொல்றியா நண்பா ஊ ஊ சொல்றியா நண்பா

  மேக்ஸியா வந்த புக்க
  பாத்து பாத்து திகைப்பாங்க
  பாக்கட்சைசு இருக்கும் புக்க
  பாக்கட்ல வச்சுசு ரசிப்ப்பாங்க

  மேக்சி புக்கோ பாக்கட் புக்கோ
  கதைக எல்லாம் ஒண்ணுங்க
  மனசு எல்லாம் ரசிப்பு முத்தி
  வாங்க ஏங்கும் ஸ்டீலு புத்தி

  ஊ சொல்றியா நண்பா ஊ ஊ சொல்றியா நண்பா
  ஹேய் ஊ சொல்றியா நண்பா ஊ ஊ சொல்றியா நண்பா

  கொழுக்க முழுக்க சினிஸ்டர் புக்க
  கும்முன்னு இருக்கு சொல்வாங்க
  ஒல்லி பிச்சாffsல வந்தா
  கச்சிதமான்னு நெளிவாங்க

  கொழு கொழு புக்கோ குச்சி புக்கோ
  சைஸ்ல ஒன்னும் இல்லைங்க
  விண்வெளி பிசாசு கதையச்சுத்தி
  அள்ள துடிக்கும் ஸ்டீலு புத்தி

  ஊ சொல்றியா நண்பா ஊ ஊ சொல்றியா நண்பா
  ஹேய் ஊம் சொல்றியா நண்பா ஊ ஊ சொல்றியா நண்பா  புதிய புதிய நாயகர்கள்னு
  ஒரு சிலரு இங்கே வருவாங்க
  விறுவிறுப்புன்னா நானேதான்னு
  ஒளறி சிலது திரியுமுங்க

  புதிய ஹீரோ ஒசந்த ஹீரோ
  சும்மா போடும் வேஷம்ங்க
  ஸ்பைடர் வந்தா போதும் எல்லாம்

  ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
  ஸ்பைடர் வந்தா போதும் எல்லாம்
  மூலைக்கொன்னா ஓடுமுங்க

  ஊம் சொல்றியா நண்பா ஊஹூம் சொல்றியா நண்பா
  ஊம் சொல்வோமே நண்பா ஊஹூம் சொல்வோமா நண்பா
  ஊம் சொல்றியா நண்பா ஊஹூம் சொல்றியா நண்பா
  ஊம் சொல்வோமே நண்பா ஊஹும் சொல்வோமா நண்பா
  ஊ சொல்றியா நண்பா ஊ ஊ சொல்றியா நண்பா

  ReplyDelete
 57. சூம்...
  சூம்..
  சொல்லுங்க
  வந்துடுவோம்...

  ReplyDelete
 58. என் பெயர் டேங்கோ..!

  ஆண்டெஸ் சிகரங்களின் கார்டிலோரா பகுதியில் கதையின் நாயகன் பயணம் செய்யும் இடத்தில் ஆரம்பிக்கிறது கதை. இவரின் உண்மையான முகம் என்ன என்ற விபரங்கள் கதையின் போக்கில் அழகாக புகுத்தி உள்ளார்கள். அந்த சிறிய ஊரில் உலாவரும் மனிதர்களுக்கும் இவருக்கு இடைப்பட்ட உறவு எப்படி, சிறுவன் டியேகோ, சிறுவனின் தந்தை ஆன்செல்மோ, மரியோ போர்ஹேல், அகஸ்டினா போன்ற கதாபாத்திரங்கள்; இவர்கள் அனைவருக்கும் ஒரு அட்டகாசமான ரசிக்கும்படி ஒரு ஃப்ளாஷ் பேக் என சூப்பராக உள்ளது. டியேகோக்காக தனது உயிரை பணயம் வைக்கும் போது (தமிழ் பட சென்டிமென்ட் உங்கள் ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல :-)) கதை இன்னும் வேகமெடுக்கிறது.

  தத்துவார்த்த வசனங்கள் பல இடங்களில் கவனிக்க வைக்கிறது. கதை நடக்கும் இடத்தை நம் கண் முன்னே உயிரோட்டம் உள்ளதாக கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் ஓவியர். பிரிண்டிங் வேற லெவல். டிரெக் அருகில் டியேகோ உடன் டேங்கோ நிற்கும் படம் செம கிளாசிக்.

  டேங்கோ - நல்ல அறிமுகம்.

  கதை முழுக்க வசனங்கள், எனக்கு இது அதிகமாக தோன்றியது. பொதுவாக வசனங்கள் குறைவான மற்றும் ஆக்சன் அதிகம் உள்ள கதைகளே எனக்கு பிடிக்கும். இவர் கதையின் இது முதல் கதை என்பதால் வசனங்கள் அதிகமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. டேங்கோ என்ற பெயரை பார்த்த உடன் ரஸ்னா போன்ற ஆரஞ்சு கூல் டிரிங் பானம் ஞாபகத்தில் வந்து போனது. :-)

   Delete
  2. ஆன்செல்மோ போன்ற கதாபாத்திரத்தை பிரதானமாக வைத்து தமிழில் படங்கள் வந்து உள்ளன.

   Delete
 59. விஜயன் சார், சீனியர் எடிட்டர் உடன் zoom meeting நாள் மற்றும் நேரம் பற்றி முன்கூட்டியே சொல்லுங்கள் சார்.

  ReplyDelete
 60. * துரோகம் ஒரு தொடர்கதை ***

  தலைப்புக்கு நியாயம் செய்யும் வகையிலான கதை.
  ஆரம்பம் முதல் கடைசி க்ளைமாக்ஸ வரை துரோகம் நம்மை துரத்துகிறது.
  ரஷ்ய ரூபிள்களுக்கு பண்டமாற்றாக வரும் டாலர்களை கொண்டு வரும் கும்பலின் பணப் பரிமாற்றத்தை கண்காணிக்க வரும் CIA உளவுத்துறை அதிகாரி ஆல்ஃபா.
  அந்த ரூபிள்களின் மதிப்பிலான பத்திரங்கள் மற்றும் செக்குகளை கொண்டுவந்த கையோடு, ஆல்ஃபாவின மனதை கொள்ளையடிக்கும் (நம்மையும்) நாயகி அஸ்ஸினா டொன்காவா.
  மொத்த கும்பலையும் போட்டுத் தள்ளி விட்டு பணத்தை களவாடிச்செல்லும் வேறொரு கும்பல்.
  இதனை கண்டுபிடிக்க ரஷ்யா வரும் ஆல்ஃபா.
  தனக்கு இடப்பட்ட மேலிடத்து உத்தரவுப்படி (திருமணமான) அஸ்ஸியாவை காதலி(ப்பவராக இரு)க்கும் ஆஃபா. (ஒரு துளி துரோகம்). அதற்காக ஓவியராக நடிக்கிறார்.
  அஸ்ஸியாவை உண்மையாகவே காதலிக்கும் இகோர், அதற்காக தனது நிஜ அடையாளத்தை மறைத்து இசைக்கலைஞனாக வருகிறார்.
  ரஷ்ய மாபியா கும்பலின் தலைவரான தந்தையை துரோகிகள் மூலமாக வீழ்த்தி தானே தலைவனாகவும் ஆகிறார்.
  கணவனுக்கு துராகமிழைத்து, ஆல்ஃபாவுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் அஸ்ஸிகா.
  தன் சுயநலத்திற்காக அஸ்ஸிகாவின் உயிரைப் பணயம் வைத்து பணப் பரிமாற்றத்துக்கு அவளை அனுப்பி வைப்பதுடன், அவள் தனக்கு துரோகம் இழைத்ததால், அவளை கொல்ல ஆட்களை ஏவி விட்டு, வேட்டையாடும் அவள் கணவன் ஒலெக்,
  சொந்தநாட்டுக்கு துரோகம் செய்து, பணத்தை களவாட நிலைக்கும் CIA , KGB கனவான்கள்.
  இப்படி திரும்பும் பக்கமெல்லாம் கொட்டிக் கிடக்கும் துரோகம்.
  விறுவிறுப்பான க்ளைமாக்சில் அததனை முடிச்சுகளும் அவிழ்கின்றன.
  மூன்று பாகங்களும் செம விறுவிறுப்பாக செல்கின்றன.
  ரஷ்யாவின அழகை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை.
  தாம் தூம் படத்தில ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான, மறைந்த ஜீவா அவர்கள் ரஷ்யாவை அருமையாக படம்பிடித்துக் காட்டியிருப்பார். அது போல அருமையாக இருந்தன ரஷ்யாவின் ஓவியங்கள்.
  இந்தக் கதையில் ஆல்ஃபாவிற்கு அதிகமாக வேலை ஏதும் இல்லை என்பதுபோலவே எனக்குப் படுகிறது.
  ஆனால் எல்லோரும் மூச்சு விடாமல் பக்கம் பக்கமாக பேசித் தீர்க்கிறார்கள்.
  வசனங்களுக்கு மத்தியில் தான் காட்சிகள் என கதை நகர்கிறது.
  ஆல்ஃபா எப்படிப்பட்ட ஹீரோ என்பது தொடரும் கதைகளில் தான் தெரியவரும்.
  FFS க்கு சிறந்த தேர்வு.

  ReplyDelete
 61. மெய்யாலுமே இன்னும் Ffs படிக்க நேரம் வாய்க்கவில்லை என்பது உண்மை. 2மாதங்கள் நிகழ்ந்த நிகழ்வுகளும் ஆபீஸ் deadlines காரணம்.தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்புகிறேன்!

  ReplyDelete
 62. *** சத்தமாயொரு மெளனம் -சிஸ்கோ ***

  ஆல்ஃபாவிற்கு நேரெதிரான கதை. வசனங்கள் இருந்தாலும், காட்சிகளில் வேகம் அதிகமே.
  மேலிடத்து உத்தரவுப்படி செல்வாக்கான அரசியல் புள்ளியை போட்டுத் தள்ள வரும் பிரெஞ்சு அதிரடிப்படை ஏஜெண்டான சிஸ்கோ, அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் போது, அந்த பில்டிங்கில் வேலை செய்யும் ஒரு பெயிண்டர் , அதனை பார்த்ததும் அல்லாமல், மொபைல் போனில் படம் பிடித்தும் விடுகிறான்.
  அந்த பெயிண்டரையும், அவருக்கு உதவும் டிவி பெண் நிருபரையும் துரத்தி பிடிக்க முற்படுவது பாதிக்கதை.
  அதன் பின் இலாகாவில் நடக்கும் உள்குத்து வேலைகளால் சிஸ்கோவை கொன்று வீழ்த்திடத் துரத்தும் சகா வெர்ராட். இறுதியில் சிஸ்கோ அவரையே போட்டு தள்ளுகிறார்.
  கதை ச்சும்மா தெறிவேகம். பிரான்ஸின் அழகு அற்புதம்.
  மெயிண்டரை சிஸ்கோ துரத்தும் இடங்களும், அதிலும் அந்த ஸ்டேஷன் துரத்தல் காட்சிகள்.. அப்பப்பா...
  சிஸ்கோவை வெர்ராட் துரத்தும் இடங்களும் மிஷன் இம்பாசிபிள் படங்களை மிஞ்சும் வேகம்.
  இது எனக்கு ரத்தப்படலத்தில் XIII ஐ போட்டு தள்ள ஜெஸ்ஸிகா கும்பல் ரயிலில் துரத்தும் கட்டங்களை நினைவூட்டியது.
  செம்மயான ஆக்ஷன் த்ரில்லர்.
  இவரது அடுத்த கதைக்காக ஆர்வத்துடன் வெயிட்டிங்.
  FFS ன் இரண்டாவது ஹீரோ தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.

  டேங்கோ, ஒ.நொ.ஒ.தோ..இன்னும் படிக்கவில்லை.

  ReplyDelete
 63. //UK லே இருக்கீங்கல்லியா சார் ? ஏர்-மெயில்சுக்குத் தான் மொத்தமாய் தபால்துறை தற்காலிக COVID பூட்டுப் போட்டுப்புட்டாங்களே - ஸ்ரீ லங்கா தவிர்த்து !//

  ஆமாம் சார்..

  வேறு மார்க்கங்கள் இல்லையா சார்.. கருடவேகா பரவாயில்லை என்று கேள்விப்பட்டேன்.. ஒரு முறை பயன்படுத்தியும் உள்ளேன்..

  போன வருட புத்தகங்கள் பாதி மட்டுமே படித்துள்ளேன். மீதி இன்று தான் ஒரு நண்பர் மூலம் கிளம்பியுள்ளது. இப்போதைக்கு அவற்றை படிக்க வேண்டியது தான்...

  இவ்வருடம் மீண்டும் சந்தா கட்டியும் (சாமி வரம் கொடுத்தும்) கொரோனா (பூசாரி) விடமாட்டேங்குது..

  நிலைமை சரியானதும் அனுப்புங்கள் சார்.

  மிக்க நன்றி..

  ReplyDelete
 64. நண்பர்களே...

  திங்கள் மாலை 7 மணிக்கு ஜூம் மீட்டிங் நடக்க உள்ளது...

  நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் இருகரம் கூப்பி அழைக்கின்றோம்...

  https://us05web.zoom.us/j/85464857597?pwd=bi9RQkJHZTgwdVAzUC96cG9rSy9KZz09

  மீட்டிங் லிங்க் இது தான்...

  Zoom app டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. எடிட்டர் சார் அறிவித்த படி இந்த ஜூம் மீட்டிங் மூலம் பொங்கல் பண்டிகை அன்று Quiz போட்டி நடைபெற உள்ளது...

   Delete
  2. Wifi

   அல்லது

   Cellur data கேட்கும் போது மறக்காமல் செல்லுலார் டேட்டா ஆன் பண்ணுங்க...

   Delete
  3. வாங்க பழகலாம்

   Delete
 65. Mondays are very busy days J sir ! Friday and Saturday evenings are most suitable. Sunday 4 PM also is fine. But I dont want to be the spoil sport if there are others ready to join. Enjoy it all !!

  ReplyDelete
  Replies
  1. Yes of course...

   We just plan to introduce zoom meeting to our friends as testing mode sir...

   Let them get accustomed sir...

   For Going directly to quiz program by Editor sir our friends must do some preliminary steps . Isn't it?

   Delete
 66. மீட்டிங் லிங்க் - காப்பி பேஸ்ட் பண்ணுங்க...

  நேரா மீட்டிங் உள்ள வந்துடலாம்

  ReplyDelete
 67. சார் எல்லாருக்கும் தெரிஞ்ச ஓர் கதை , இந்த உலகம் எப்படி பட்டது என பாத்து வா என கடவுள் அனுப்பி வைக்கிறார் வண்ணத்துப் பூச்சிய . திரும்பி வந்து மலர்களால் அழகாய் உள்ளதாய் சொல்ல கடவுள் வண்டை அனுப்பி பூமிய பாத்து வா என பணிக்கிறார் . வந்த வண்டு நாற்றம் பிடித்த அசிங்கமாய் உள்ளதெனக் கூற கடவுள் சிரித்த படியே வண்ணத்துப் பூச்சியை பூவோடும் வண்டை நாற்றத்தோடும் வாழ வைக்கிறார் . இரண்டுக்குமே அதனதன் பார்வையில் திருப்தி தான் ஆனா நம்ம பார்வை வேறதானே !  சிஸ்கோ கதையின் துவக்கம் எரிச்சலாய் பேசி நுழையும் சிஸ்கோவ பிடிக்கவே இல்ல !

  அடுத்து பிரெசிடண்டுக்காக கொலையைச் செய்யப் போகும் போது பார்த்த ஒருவனை கொல்லத் துடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை !

  இப்ப ஹீரோவுக்கு எதிராக உள்ள பெர்ட்ரண்ட் நினைச்சி பாத்ததும் வேணும்டா உனக்கு என் சந்தோசமா பயணிக்க ...
  கதையோ இருவர் மேலும் கோபத்தை காட்டி எவன் ஜெயிச்சா நமக்கென்ன என ஜெட் வேகத்துல என்னையும் இழுக்க , யார்தான் கெலிப்பாங்கன்னு பாக்க பரபரப்பா இழுத்துட்டுப் போகுது !

  நடுவே அந்த எரிச்சலுக்கு காரணம் பெர்னாட்டின் நடவடிக்கைகள்தானோ என ஓர் பச்சாதாபம் தோன்ற ஹீரோ ஜெயிக்கனுமேன்னு பரபரப்பு பத்திக்கிடுது முரட்டுக் பக்கங்களில் !

  கதையில் வரும் கம்ப்யூட்டர் கில்லாடி தூள் கிளப்புவத பாக்யில யாரானாலும் தப்ப முடியாது கடவுள் போல கண்காணிக்க முடியுமே ! நல்லதற்கு பயன்படுத்துனா நன்மை விளையாதா என ஏங்கச் செய்யுது . ஆனா வல்லவனுக்கு உதவத் தானே இதுவும் ! நல்லவர்களாய் மனித இனத்தை மாற்ற வருங்காலம் உதவனும் ! குற்றவாளிகள் தப்ப முடியாது என தெரிஞ்சு அதனால் குறையனும் குற்றவாளிகள் ?
  நியாயத்தை நிலை நாட்ட உயிரைப் பணயம் வைக்கும் அந்த ரிப்போர்ட்டரும் , அந்த கண்ணாடி க்ளீனரும் கொல்லப்படுவது அதிகார வர்கத்த பகச்சுக்காதன்னு நம்மள எச்சரிக்கவா !

  கடைசியில் நியாயம் வென்றது என அநியாயமாய் கதை முடியுது அதிகார வர்கத்துக்கு சேவகம் புரிய ! வித்தியாசமாதான் கதை ...நல்லத ஜெயிக்கும் என முடிவுரை நம்பிச் செல்லும் நமக்கு இது எரிச்சலா ய் படலாம் ! ஒரே நிம்மதி பத்திரிக்கைப் பெண்ணுக்காக வருந்தும் சிஸ்கோ ? வரும் கதைகளில் நல்லவரா வருவாரோ ...இல்லை இதே சரியென போவாரோ ?

  எதுவுமே தெரியாம சந்தோசமா குடும்பத்தோடு வாழ்வதே வாழ்க்கையா...அங்கும் நடக்கும் சண்டை சச்சரவு கோபதாபங்கள் என தாண்டி வாழும் போது இக்கதையை படிச்சி நாமெல்லாம் எவ்வளவோ மேல்னு சந்தோசப் படுவதா அல்லது இவ்வலை ஒட்டு மொத்த சமூகத்தை பாதிக்குமே என நடுங்குவதா ? அதாவது இது போல் கதைகள் வேணுமா நல்லதுக்காக நாலு சாத்தும் டெக்ஸ் வேணுமா பட்டி மன்றத்துல விற்பனை நடுவராய் சொல்லும் !

  கதைய படிக்கயில் ஏதோ அச்சமும் ...இதையும் தெரிஞ்சுக்கலாமே என ஆர்வமும் போட்டிப் போட செல் போன் ஜாக்கிரதை என பாடம் புகட்டிய படி மின்னலென பாயுது பிசகாத மொழி பெயர்ப்போடும் , கொஞ்சமும் தொய்வில்லா வேகத்தோடும் !
  பக்கம்221...

  வேணும்டான்னு அதிகார போதை பிடிச்ச மனிதனுக்கு என சபாஷ் போட வைத்த வரிகள் கதை படைத்த தெய்வத்தின் அதிகார வர்கத்துக்கான தலையெழுத்து வரிகள்...


  இதோ பார் பெர்னாட்...! எனக்குப் பணி செய்து வருவோரின் சொதப்பல்களை என் கவனத்திற்க்கு கொண்டு வந்தாய்தான் ...! ஆனால் அவர்களின் விசுவாசத்தில் சந்தேகம் எழுப்புவதை அத்தனை சுலபமாய் என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை !

  ஆனால் , நிஜம் என்றைக்குமே விசித்திரமானது தான் !

  எவ்வளவு நொந்திருப்பான் என உணர்ந்து ...எல்லோரும் நல்லாருக்கனும்னு சந்தோசமா அடுத்தவன் மேல் அதிகாரத்தை செலுத்த நினைக்காம வாழ்ந்தா வண்ணத்துப் பூச்சிகளால் நிரம்பிடாதா ஒன்றுபட்ட உணர்வால்....ஏக்ககங்களுடன்
  ReplyDelete
 68. துவக்க அட்டை அந்த ட்ரெக் வசீகரிக்க என் பெயர் டேங்கோ ...அழகிய சித்திரங்களால் ஈர்க்க ....ஆசிரியரின் வண்ண எழுத்துக்கள் நாட்டியமாட ...இதுவரை ஆசிரியரின் மொழி பெயர்ப்பு உற்சாகத்ல டாப்...தனிமையும் நல்லாருக்குமோ என ஏங்க வைக்குது மெய்யாலுமே...படித்தபின் மீதம்

  ReplyDelete
 69. // So பழிக்குப் பழி + இன்னும் கொஞ்சம் reprints + சின்னச்சின்ன surprises என்று ஆன்லைன் விழா அரங்கேறிடும் ! //

  மகிழ்ச்சி. விஜயன் சார். புத்தகத் திருவிழாவில் tex reprints ஒரு புத்தகம் என்றால் டெக்ஸ் புதிய கதை ஒன்று என கொடுங்கள் சார். டெக்ஸ் நாம் படிக்காத புதிய கதைகள் நிறைய உள்ளன என்பதால் இந்த கோரிக்கை.

  ReplyDelete
 70. டியர் எடி,

  உங்கள் கூற்று உண்மையே. வேளைபளு மத்தியில் கிடைக்கும் சொற்ப ஓய்வு நேரங்களில், நோவாமல் உட்கார்ந்து கொண்டு OTT ல் வெப்சீரிஸ் மற்றும் படங்கள் பார்ப்பது இப்போது ரொம்பவே பழகி போய்விட்டது... மிச்சம் இருக்கும் நேரங்களையும் ஸ்மார்ட்போன் என்ற பகாசுரன் ஆக்கிரமித்துவிட்டதால், காமிக்ஸ் படிக்கும் நேரங்கள் குறைவானது உண்மைதான்.

  ஸ்பைடர் மினி சாகஸம் மட்டும் படித்தேன்... அருமையான தொடக்கம்... இதை வைத்து புதிய ஸ்பைடர் கதைகள் வந்தால் நன்றாக இருக்கும்.. பார்ப்போம். செக்ஸ்டன் ப்ளேக்கும் தான்... போட்டியெல்லாம் முடிந்த பிற்பாடு... போட்டிக்கு முன்பே படித்திருந்தாலும், அந்த முதல் உலக போர் என்னும் விடயத்தை கண்டுபிடித்திருக்க போவதில்லை என்பது உறுதி... 1929 என்று கதை ஆரம்பித்த விஷயம்,படித்து முடிக்கும் போது நினைவில் இல்லை என்பது தான் உக்கிரமான கதைபோக்கின் மகிமை. செக்ஸ்டன் ப்ளேக் வருகை அபாரம், அவர் தொடர்களை இன்னும் தொடரும் எண்ணம் உண்டா ?

  ஆன்லைன் புத்தக திருவிஷா க்விஸ் போட்டிக்கு டபுள் ஓகே... நேரம் நாள் மட்டும தெரிவியுங்கள்... இதே சாக்காக வைத்து FSS இதழ்களை படிக்கும் ஒரு வாய்ப்பையாவது ஏற்படுத்தி கொள்ளலாம். இன்றிலிருந்து முதல் தொடக்கம் செய்ய முயல்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆன்லைன் க்விஸ்ஸிற்கு எனது சாய்ஸ்... வெள்ளி சனி இரவுகள் இல்லை பிந்திய மாலை பொழுதுகள்... Any others days or time might be tough to mark attendance :(

   Delete
 71. சிஸ்கோ - ராஜாங்கதில் நடக்கும் விளையாட்டு என்றாலே செம இருக்கும் இதில் அங்கு உள்ள சிப்பாய்களுக்கு இடையில் நடக்கும் விளையாட்டும் சேர்ந்தால் கேட்ட வேண்டுமா விறுவிறுப்புக்கு.

  தெளிவான வண்ண சித்திரங்கள் + கதைக்கு தேவையான வசனங்கள் + சுவாரசியமான திருப்பங்கள் + அதிரடி ஆக்ஷன் + முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு (இரண்டு பாகங்களுக்கும் இது பொருந்தும்) = இது தான் சிஸ்கோ.

  கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் என்னை ஒருவகையில் கவர்ந்தது.

  டேங்கோ & சிஸ்கோ படித்து விட்டேன் - முதலிடம் சிஸ்கோ.

  சிஸ்கோ - இது போன்ற கதைக்கு தான் இத்தனை நாட்கள் காத்துக்கொண்டு இருந்தேன்! இவர் தொடர்ந்து நமது காமிக்ஸில் வரவேண்டும்!

  ReplyDelete
 72. // FFS எனும் சமுத்திரத்தையே இன்னமும் நீங்கள் தாண்டிட ஏகமாய் நேரம் பிடிக்கும் எனும் போது, மேற்கொண்டும் வாசிப்புக்கென (புதுசாய்ப்) பளுவினை ஏற்றிட வேண்டாமென்ற எண்ணமே தலைதூக்கியது //

  சார் இப்படி எல்லாம் சொல்லி ஆன்லைன் புத்தக திருவிழா புத்தக எண்ணிக்கையை குறைக்க கூடாது! இப்போது வரும் கதைகளில் வசனங்கள் அதிகம் எனவே அவைகளை ரசித்து படிக்க தோதான நேரம் கிடைக்கவேண்டும்; அதே போல் அந்த அந்த மாத புத்தகங்களை அடுத்த செட் புத்தகங்கள் வருவதற்குள் படித்து விடுவேன்! எனவே ஆன்லைன் புத்தக திருவிழாவிற்கு ஏற்கனவே திட்டமிட்ட புத்தகங்ககளை வெளிஇடுங்கள் :-)

  ReplyDelete
  Replies
  1. ஆமா சார் நிச்சயமா படிக்காமலிருக்கப் போவதில்லை...தோதான நேரம் கிடைக்கயில படிக்கத்தான் போறோம்...தயார்னா வெளியிடலாமே சுஸ்கி விஸ்கிய இந்த தோதான நேரத்ல...ஐம்பதாமாண்டு துவக்கம் அதிரடில பட்டய கிளப்பியாச் ...கார்ட்டூன்ல மட்டும் சும்மா விடலாமா

   Delete
  2. மேலும் அதிரடின்னாலும்...கார லட்டுன்னாலும் பரவால்லதான்...அதிரடிகள் அலுப்பதில்லையே எப்பயுமே

   Delete
 73. நீங்கள் சிறுவயதில் பள்ளியில் சென்ற சுற்றுலா அனுபவம் பற்றி நன்றாக ரசிக்கும்படி எழுதி இருக்கிறீர்கள், மிகவும் ரசித்தேன்! நானும் திருச்சி கல்லணையை இரவு நேரத்தில் பள்ளிகூடத்தில் படிக்கும் போது சுற்றுலா சென்று பார்த்ததாக ஞாபகம் உள்ளது, ஆனால் எந்த வருடம் என ஞாபகம் இல்லை.

  ReplyDelete
 74. இப்பொது எல்லாம் எனது குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த கார்ட்டூன் கதை வரவில்லை என்றாலும் கவலைப்படுவது இல்லை :-) பழைய/சமகால கார்ட்டூன் நாயகர்கள் புத்தகம் எது கிடைத்தாலும் கொண்டு வந்து கொடுத்து கதை சொல்ல சொல்லி விடுகிறார்கள்! சமீபத்தில் சொல்ல ஆரம்பித்த கதை கர்னல் கிளிப்டன், லண்டன் வாசிகளின் பகட்டு வாழ்க்கையை சொல்லும் போது கெக்கே ப்பிக்கே என சிரிக்கிறார்கள். நானும் அவர்கள் ரசிக்கும் படி கதையை எப்படி சொல்லவேண்டும் என கதைக்குள் போவதற்கு முன்னால் திட்டமிட்டு கொள்கிறேன் :-)

  ReplyDelete
 75. சிஸ்கோ கதையில் எந்த பக்கமும் போரடிக்கவில்லை, கதையின் ஓவ்வொரு பக்கமும் கதைக்கு தேவையானவை! சூப்பர் சிஸ்கோ! புத்தாண்டின் மிக சிறந்த அறிமுகம்.

  ReplyDelete
 76. ஆன்லைன் சிறப்பிதழ்கள் விலை விவரங்கள் சொன்னால் அனுப்ப ஏதுவாக இருக்கும் சார் ?

  ReplyDelete
 77. Memes - பிரஷாந்த் கார்த்திக் @ The first one is top :-)

  ReplyDelete