Saturday, January 01, 2022

புத்தாண்டின் புளகாங்கிதம் !!

 நண்பர்களே,

வணக்கம். சனியிரவுகளின் அந்தப் பரிச்சயமான நமநமப்பு, எப்போதும் போல் விரல்களில் எடுத்திட, இதோ - இன்னொருக்கா அடியேன் ஆஜர் ! ஆனால் இம்முறையோ சும்மா, குட்டியானதொரு பதிவோடு !! In fact இதனைப் பதிவு என்பதை விடவும் "இன்றைய எங்களின் பொழுது - in pictures" எனலாம் !! 

பெரிதாய் book launch ; வாசக சந்திப்பு என்றெல்லாம் நடத்திட இம்முறை சாத்தியமாகிடாதென்பது ரொம்ப முன்னமே தெரிந்திருக்க,  low key ஆகவாவது இத்தருணத்தைக் கொண்டாடிட எண்ணினோம் ! And so இன்று காலை நமது ஆபீஸிற்கு கருணையானந்தன் அங்கிளையும், பாலசுப்ரமணியன் அண்ணாச்சியையும் வரவழைத்து, ஜூனியர் எடிட்டர் + தம்பி பிரகாஷ் + அவனது புதல்வன் சகிதம் சின்னதாயொரு கேக் வெட்டும் function + நம்மாட்கள் அனைவருக்கும் மதிய விருந்து என்று ஏற்பாடு செய்திருந்தேன் !! 2 நாட்களுக்கு முன்னமே கேக் ஒன்றினை முத்து லோகோவில் ஆர்டர் தந்து விட்டு, கேட்டரிங்கில் அசைவம் + சைவம் இரண்டுக்குமே ஆர்டர் செய்திருந்தேன் ! நண்பகலுக்கு அங்கிள் வந்து சேர, எனது அறையில் அமர்ந்து கொஞ்ச நேரம் கதைகளெல்லாம் பேசிவிட்டு, அப்புறமாய் நமது அலுவலக மாடிக்கு நகர்ந்தோம் ! சீனியர் எடிட்டர் முத்து காமிக்ஸ் 50 Not Out என்ற கேக்கை நம்மவர்களின் முன்னிலையில் வெட்டிட, அனைவரின் முகங்களிலும் செம பிரகாசம் !! தொடர்ந்த விருந்தில் நமது டீம் ; அச்சக ஊழியர்கள் என அனைவருமே உணவருந்திட, மனதுக்கு ரொம்பவே நிறைவாயிருந்தது !! நாளெல்லாம் நமக்காக உழைப்போரை இன்று ஒரு நாளாவது நம் விருந்தினர்களாய் நடத்திட முடிந்ததே என்ற சந்தோஷத்தோடு க்ளிக்கிய pictures இதோ !!

சூழல்கள் நார்மலாகிடும் ஒரு தூரத்து நாளில் உங்கள் முன்னிலையிலும் இதே நாளை மறுக்கா கொண்டாடிடுவோமா folks ? Bye for now !!

P.S: புறப்படும் முன்பாய் ஒரு quiz

செக்ஸ்டன் ப்ளேக் கதைக்குப் பேனா பிடித்தது அங்கிள் கருணையானந்தன் அவர்களே ! "அதனில் ஒரு மிஸ்டேக் செய்து விட்டேன்பா" என்று என்னிடம் சொல்லி விட்டு அதனைச் சுட்டிக் காட்டவும் செய்தார் - திகில் தீவு கதையிலிருந்து ! And அது எழுத்துப் பிழை சமாச்சாரம் அல்ல ! எங்கே, தைரியமாய் செக்ஸ்டனோடு பயணம் பண்ணி, அந்தப் பிழை என்னவென்பதைக் கண்டுபிடியுங்களேன் பார்ப்போம் - முதலாவதாய் அதனை spot செய்திடும் நண்பருக்கு லயன் லைப்ரரியின் முதல் 3 இதழ்களும் நமது அன்புடன் !!  Let's get cracking guys !!

338 comments:

 1. Replies
  1. ரொம்ப வருசத்துக்கு பிறகு முதல் கமெண்ட்டு😍

   Delete
 2. முத்து 50 கொண்டாட்டம் சிறப்பு சார்... கேக் செமயா இருக்கு💞

  ReplyDelete
 3. Replies
  1. ஈரோட்டில் சந்திக்க வாய்ப்பு இருந்தால் நாமும் பொன்விழா கொண்டாடலாம் சார்.

   கொரோனா தேவதை அருள்பாலிக்கனும்.🙏🙏😇😇🙃🙃

   Delete
  2. ஆகஸ்ட்டுக்குள்ளே இந்தக்கொரோனாவை வழியனுப்பிட்டு அந்தக் கொரானோவோட ஈபுவியை கொண்டாடிடலாம்.

   Delete
 4. அட இத எதிர்பார்க்கலையே

  ReplyDelete
 5. Replies
  1. முதல் முறையாக சந்தா கட்டி புத்தகங்களை கைப்பற்றுவதும் தனி பீல்தான். புத்தாண்டு அன்று புத்தகங்கள் கிடைத்தது இன்னும் சிறப்பு.

   Delete
  2. அன்பின் ஆசிரியருக்கும், அனைத்து காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

   Delete
 6. "கண்டுபிடியுங்களேன் பார்ப்போம் - முதலாவதாய் அதனை spot செய்திடும் நண்பருக்கு லயன் லைப்ரரியின் முதல் 3 இதழ்களும் நமது அன்புடன் !! Let's get cracking guys !!"

  ...@Still books not received

  ReplyDelete
 7. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 8. முத்துக்கு முத்தாக
  சொத்துக்கு சொத்தாக
  நண்பன் அன்பன் பிறந்து வந்தோம்
  கண்ணுக்கு கண்ணாக
  முத்தாலே இணைந்து வந்தோம்
  ஒண்ணுக்குள் ஒண்ணாக

  கேக்கு வெட்டி பார்த்ததில்லை
  கொண்டாட்ட முகம் பார்த்ததில்லை
  காமிக்சு போட்டதன்றி
  ஓர் ஓய்வும் அறிந்ததில்லை

  லயனாக வாழ்ந்து வந்தான்
  தங்கமென வளர்ந்த தம்பி

  துள்ளாத வயதினில் நான்
  எழுதுகிறேன் அவனை நம்பி


  முத்துக்கு முத்தாக
  சொத்துக்கு சொத்தாக
  நண்பன் அன்பன் பிறந்து வந்தோம்
  கண்ணுக்கு கண்ணாக
  முத்தாலே இணைந்து வந்தோம்
  ஒண்ணுக்குள் ஒண்ணாக

  மாமன் தந்த வார்த்தை எல்லாம்
  அச்சாக்கும் தம்பியுள்ளம்

  தந்தையென வந்த உள்ளம்
  அந்தியிலும் காவல் கொள்ளும்


  சின்னத்தம்பி கடைசித்தம்பி
  செல்லமாய் வளர்ந்த ஜூனியர்

  ஒன்றுப்பட்ட ஊழியர்களால்
  ஒரு நாளும் பிரிவு இல்லை


  முத்துக்கு முத்தாக
  சொத்துக்கு சொத்தாக
  நண்பன் அன்பன் பிறந்து வந்தோம்
  கண்ணுக்கு கண்ணாக
  முத்தாலே இணைந்து வந்தோம்
  ஒண்ணுக்குள் ஒண்ணாக

  ராஜாக்கள் மாளிகையும்
  காணாத இன்பமடா
  நாலுகால் மண்டபம்போல்
  இவர்கள் தந்த கதைகளடா

  ரோஜாவின் இதழ்களைப் போல்
  தீராத வாசமடா

  நூறாண்டு வாழவைக்கும்
  மாறாத பாசமடா

  முத்துக்கு முத்தாக
  சொத்துக்கு சொத்தாக
  நண்பன் அன்பன் பிறந்து வந்தோம்
  கண்ணுக்கு கண்ணாக
  முத்தாலே இணைந்து வந்தோம்
  ஒண்ணுக்குள் ஒண்ணாக

  ReplyDelete
  Replies
  1. ஆளாளுக்கு ஊரைக் காலி பண்ணிட்டுக் கிளம்பறதா flash news ஓடுது ! பாவம் ..இத்தோட விட்ருங்க !

   Delete
 9. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 10. // நாளெல்லாம் நமக்காக உழைப்போரை இன்று ஒரு நாளாவது நம் விருந்தினர்களாய் நடத்திட முடிந்ததே //
  அருமை சார்,மகிழ்ச்சியான தருணம்...

  ReplyDelete
 11. !! நாளெல்லாம் நமக்காக உழைப்போரை //இன்று ஒரு நாளாவது நம் விருந்தினர்களாய் நடத்திட முடிந்ததே என்ற சந்தோஷத்தோடு க்ளிக்கிய pictures இதோ//

  நல்ல மனிதரின் சிறப்பான செயல் சார்.

  உழைப்பவரை சந்தோச படுத்தினால் அவர்கள் உற்சாகத்துடன் பணி செய்வர்.

  பொன்விழா & புத்தாண்டில் இது ஒரு கூடுதல் சிறப்பு.

  அருமை அருமை, மனமார்ந்த பாராட்டுக்கள் சார்.������������

  ReplyDelete
 12. முத்து 50 முதல் புத்தகத்தையும் படித்து விட்டேன். சும்மா சொல்லக் கூடாது சூப்பர் சூப்பர் சூப்பர்.

  ReplyDelete
 13. //முதலாவதாய் அதனை spot செய்திடும் நண்பருக்கு லயன் லைப்ரரியின் முதல் 3 இதழ்களும் நமது அன்புடன் !! Let's get cracking guys !!//

  நம்ம நண்பர்கள் எல்லாம் ஜீனியஸ் சுளூவா கண்டு புடிச்சுடுவாங்களே 🤔🤔🤔🤔.

  ReplyDelete
 14. சரியாக தெரியவில்லை ஆனால் பிளேக் டிங்கரிடம் ஹொலிஸ் அம்பு விட்ட கதை கோர்வையாக இல்லை.

  கொலைகாரன் ஒரு முறை தான் எய்தான் ஆனால் பிளேக் இரு முறை எய்ததாக சொல்கிறார்.

  அந்த இடமா சார் ?

  ReplyDelete
 15. 38 ஆம் பக்கத்தில் அத்தியாயம் ஐந்தில், "புகைக்கும் பைக்கை மாற்ற வேண்டி இருக்கும்" என்று வந்திருக்கிறது. "புகைக்கும் பைப்" என்பது சரியாக இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. //திகில் தீவு கதையிலிருந்து ! And அது எழுத்துப் பிழை சமாச்சாரம் அல்ல//

   Delete
 16. Page no : 49 - டிங்கர் வில்லன் ஒருவன் பெயரை ஸன்ஷைன் என்று தவறாக குறிப்பிடுவார்

  ReplyDelete
 17. பக்கம் 38ல் டைப் ரைட்டரில் உள்ள லெட்டரில், காரை அங்கே காணாது திகைக்கிறார் என்று உள்ளது, ஆனால் ஹோலிஸை காணாது திகைக்கிறார் என்று இருக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. அல்லது அவரை காணாது திகைக்கிறார் என்று கூட இருக்கலாம்

   Delete
 18. முத்து 50 கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியளிக்கிறது நீங்கள் இருக்கும் புகைப்படம் இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. நானும் இருக்கேனே...தேடிப் பாருங்க !

   Delete
  2. 5 வது புகைப்படத்தில் மறைந்து இருப்பதெல்லாம் கணக்குல வராது ஆசிரியரே

   Delete
 19. சூப்பர் சார். நமது 50 ஆண்டு கொண்டாட்டத்தை காமிக்ஸ் பிதாமகர் மற்றும் காமிக்ஸ் பயணத்தில் உறுதுணையாக இருந்தவர்கள் மற்றும் நமது அலுவலக நண்பர்கள் உடன் கொண்டாடியது மிகவும் சிறப்பு. அனைவர் முகத்திலும் சந்தோஷம். தொடரட்டும் இந்த சந்தோஷம்.

  ReplyDelete
 20. மாளிகையில் நுழைந்ததும் ஒரு க்ராஸ் பவ் இருக்கிறது என்றார் ஆனால் சுவரில் 2 இருக்கிறது அதுவா

  ReplyDelete
 21. கையெழுத்துப் பிரதி பப்ளிஷர்ஸை அடைந்துவிட்டிருக்கும் என்று பிளேக் கூறுகிறார். ஸால்ட் அங்கிருந்த பிரதியை எடுத்துப் படிக்க முயல்கிறார். கையெழுத்துப் பிரதி ஒன்று தானே இருக்கும்? ஆக அது அங்கிருக்க பப்ளிஷர்சை சென்றடைய வாய்ப்பில்லையே...

  ReplyDelete
  Replies
  1. மின்னெல்லியும் கொலைகாரர்களில் ஒருவராக இருக்கும் பட்சத்தில் அவர் ஏன் அந்த கிராஸ்போவை சென்று எடுக்கிறார்? பக் 28.

   Delete
  2. கையெழுத்துப் பிரதி டைப் ரைட்டரின் அருகில் இருந்தே எடுக்கப்படுகிறது. எனவே அது மூலப்பிரதி என்றிருக்க வேண்டுமோ?

   Delete
  3. டெலிவிஷன் வழியாக ஹோலிசின் செகரட்டரி ஸிட்னி கோல்ட் கொல்லப்படுவதை பார்க்கும் பிளேக் , அதே அறையில் அமர்ந்து ஏதுவுமே நடக்காதது போல மற்றவர்கள் இருப்பதை காண்கிறார். கோல்ட் கொல்லப்பட்டதாக சொல்லும் வேளையில் தன்னுடன் இருந்ததாக ஹோலிஸ் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்கிறார்?

   Delete
  4. ஹோலிஸின் கதைகள் தற்போது செல்லாக்காசாகி விட்ட நிலையில் தற்போது அவர் எழுதி பப்ளிசர்களுக்கு அனுப்புவதை ஏற்க முடியவில்லை. மேலும் இது போல ஒரு நாடகத்தை உருவாக்கித் தான் மீண்டும் புகழ்பெற வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ள பார்க்கிறார் என நினைக்கிறேன். கதையின் கடைசி வசனமும் அதையே சுட்டிக் காட்டுவதாகவே உள்ளது.

   Delete
  5. லாஜிக் சம்பந்தப்பட்ட பிழையெனின், அது படைப்பாளிகளின் மேட்டர் சார் !

   Delete
 22. பக்கம் 24 இல் உங்களை கொல்ல இவர்கள் சதி திட்டமிட்டிருக்கிறார் என்று கூறுகிறார் அப்பொழுதே அவர்கள் அனைவரும் வில்லன்கள் என்று கூறி விடுகிறாரோ

  ReplyDelete
 23. 25இல் எதிரிக்கு கையில் அடிப்பட்டதாக கூறுகிறார் பிளேக் ஆனால் அது சார்ந்த பாலோ அப் அடுத்து இல்லை

  ReplyDelete
  Replies
  1. Nopes...அது படைப்பாளிகளின் சமாச்சாரம் கிருஷ்ணா !

   Delete
 24. பக்கம் 21 காலையிலும் இரவிலும் சரியாக 9 மணிக்கு பீரங்கிகளை முழக்குவது என்று உள்ளது...

  ஆனால் அப்பொழுது தான் விடிகிறது(அந்த நாட்டில் 9 மணிக்கு தான் விடியும் என்றால் அது பிழையல்ல)

  பக்கம் 30 சாலையில் கிடந்த முட்கள் என்று உள்ளது.. ஆணிகள் என்றிருக்க வேண்டும்.

  பக்கம் 34 இறுகப் பற்றி விசையாக இழுத்தார்(doubtதான்)

  பக்கம் 49 லாப்ட்ஸ் கொடுத்த தகவல் என்று உள்ளது. அது பிளேக் கொடுத்த தகவலாக இருக்க வேண்டும்...( இதுவும் doubt தான்)

  என்னால் முடிந்த முயற்சி

  ReplyDelete
 25. Havent recieved the books yet.. Hold on with the competitions..

  ReplyDelete
 26. கிராஸ் போவிலிருந்து அம்பு வருகிறது ஆனால் அந்த இடத்தில் துப்பாக்கி வெடிக்கும் சப்தம் டுமீல் என்று இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. செக்ஸ்டன் ப்ளேக் நோக்கி வரும் அம்பு கார் மீது பட்டு தெறிக்கும் போது விஷ் என்ற சப்தத்திற்கு பதிலாக துப்பாக்கி வெடிக்கும் ஓசை டுமீல் என்று கேட்கிறது

   Delete
  2. அது நம்மவர்களின் பிழை சாமி !

   Delete
 27. வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 28. பிளேக் இடைஞ்சலாக வந்ததாக கூறுகிறார்கள். ஆனால் வரவழைத்ததே அவர்கள்தானே. பக் 48.

  ReplyDelete
  Replies
  1. சரியான பதில் என நினைக்கிறேன் நண்பரே

   Delete
 29. Page 28ல் ஜன்னல் பக்கம் நகர்வது கெவின் மின்னெலி தான் அங்கே ஜே.பி.லே க்ரன் என்றுதவறாக குறிப்பிடப்பட்டுள்ளது

  ReplyDelete
 30. சில இடங்களில் எழுத்து பிழைகள் உண்டு
  பக்கம் 16 ல் எனக்கும் டிங்கருக்கும் புத்தாக்கப் பயிற்சி தேவைப்பட்டது என இருக்கிறது அந்த இடத்தில் தாக்கப் பயிற்சி அல்லது புதிதாக பயிற்சி தேவைப்பட்டது என இருக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. பக்கம் 38
   புகைக்கும் பைக்
   புகைக்கும் பைப்

   Delete
  2. பக்கம் 38 மிஸ்டர் ப்ளேக் லோப்ட்ஸ் வந்திருக்கிறேன் தவறு
   லாப்ட்ஸ் வந்திருக்கிறேன் இதுதானே சரி

   Delete
 31. மகிழ்ச்சியான சமாச்சாரம் எடிட்டர் சார்!

  வாழ்க்கையின் சில மைல்கல் தருணங்களை சின்னதாகவேனும் கொண்டாடிவிட வேணும்! அலுவலக சகோதர, சகோதரிகளோடு கேக் வெட்டிக் கொண்டாடியிருப்பது மிகச் சிறப்பு!

  சிறப்பான இந்தநாளை நாங்கள் எப்படி வாழ்த்துச் சொல்லாமல் மறந்துபோனோம் என்பது புரியவில்லை!!

  ஆகவே,

  முத்துவின் 50 ஆண்டுகால வெற்றிப் பயணத்தின் ஆணிவேரான சீனியர் ஐயா அவர்களுக்கும், பயணத்தைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் நிகழ்கால எடிட்டருக்கும், 100வது ஆண்டு கொண்டாட்டங்களைக் கடந்து முத்துவை வழிநடத்திச் செல்லயிருக்கும் எங்கள் எதிர்கால இளஞ்சிங்க எடிட்டருக்கும், மதிப்பிற்குரிய கருணையானந்தம் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய பாலசுப்பிரமணி அவர்களுக்கும் மற்றும் நம் அலுவலகச் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அகில உலக லயன்-முத்து வாசகர்கள் சார்பாக பொன்விழா ஆண்டு வாழ்த்துகளையும், வணக்கங்களையும், நன்றிகளையும் ஒருசேரத் தெரிவித்துக் கொள்கிறோம்!! 💐🙏🎂🍨🍥👏👏👏👏👏👏

  ReplyDelete
 32. //முதலாவதாய் அதனை spot செய்திடும் நண்பருக்கு லயன் லைப்ரரியின் முதல் 3 இதழ்களும் நமது அன்புடன் !! Let's get cracking guys !!//
  கிளைமாக்ஸில் பிளேக் அறுவருக்குமே பங்குண்டு என்பது தவறு! இதில் ஐவருக்கு மட்டுமே பங்குண்டு... கெவின் மின்னெல்லி அப்பாவி! பிளேக்கிற்க்கு வைக்கப்பட்ட பொறிக்கு பலி ஆகி விடுகிறார்.

  ReplyDelete
 33. திகில் தீவு அக்மார்க் செக்ஸ்டன் ப்ளேக் சாகஸம் கடைசி பக்கத்தில் முடிச்சுகள் அவிழ்வதென சஸ்பென்ஸ் & திரில்லர் சாகஸம் முதல் முறை வாசிப்புக்கு உகந்த அருமையான கதை

  ReplyDelete
 34. நல்லதொரு Event சார், அவசியமானதும கூட. பெரு மகிழ்ச்சி.

  நீங்கள் பிளேக் கதையில் ஒரு பிழையைச் சொன்னீர்கள். ஆனால் நண்பர்கள் ஆளாளுக்கு ஒரு பிழையை சொல்வதைப் பார்த்தால், ஒன்றும் புரியலையே.

  ReplyDelete
  Replies
  1. ப்ளேக் கதையை இம்புட்டு ஆர்வமாய்ப் படித்திருக்கிறார்களே என்ற சந்தோஷம் எனக்கு சார் !

   Delete
  2. அட்டகாசமான ஒரு க்ரைம் த்ரில்லர். நாங்கள் ரசித்ததில் வியப்பேதுமில்லை. செக்ஸ்டன் பிளேக் அறிமுகமாகி 100+ ஆண்டுகளாலும் கதையிலும், சித்திரத்திலும் புராதன நெடி நஹி. சித்திரங்கள் eye catching.

   Delete
 35. கேக், அசைவ, சைவ விருந்து, பணியாளர்கள், நண்பர்கள், உறவினர்கள்படைசூழ, புத்தாண்டு அருமையான தொடக்கம் கண்டிருக்கிறது நம் ஆஃபிஸில்.

  2022 நமது மறுவருகைக்கு பின் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலும் 1984 க்கு பின்பு ஒரு மைல்கல் வருடமாக இருக்க போவது உறுதி. ஆர்வத்துடன் தொடருவோம்.

  ReplyDelete
  Replies
  1. வரவேற்கிறேன் நட்பே... அருமையாக சொன்னீர்கள்.இந்த வருடத்தின் கதை தேர்வுகளும், மறுபதிப்பாக வரும் இதழ்களும்+புதிய வரவு நாயகர்களுமே இதற்கு சாட்சி.
   ❤️

   Delete
 36. சூழல்கள் நார்மலாகிடும் ஒரு தூரத்து நாளில் உங்கள் முன்னிலையிலும் இதே நாளை மறுக்கா கொண்டாடிடுவோமா folks ? Bye for now !!
  ஈரோட்டில் கொண்டாடி விடலாம் ஆசிரியரே

  ReplyDelete
 37. Edi Sir..
  உங்களின் நியாயமான வளர்ச்சிக்கு தொழிலாளர்களுக்கு எப்போதுமே மரியாதை செய்யும் இந்த நல்ல குணம்தான் காரணம் என்பேன் நான்.
  புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 38. அய்யா கருணையானந்தம் அவர்களுக்கு தெரிந்தது ஒன்று; அதற்கே பாவம் அவர் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். நண்பர்கள் சொல்வதைப் பார்த்தால் அவர் அறியாமல் பல பிழைகள் இருக்கும் போல;

  ReplyDelete
  Replies
  1. Not really, இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் பல தயாரிப்பின் பொழுதான பிழைகளே ! அதனில் அவருக்கு சம்பந்தம் லேது !

   Delete
 39. சார் அதை தீவு என்று குறிப்பிட்டுள்ளது தவறு.தரைப்பாலத்தின் வழியாக வந்து செல்லும் ஒரு பழைய கோட்டை.

  ReplyDelete
  Replies
  1. தீவு இயற்கையின் அமைப்பு சார் ; தரைப்பாலம் manmade ! So மனிதனின் செயலால் இயற்கையின் படைப்பில் மாற்றம் வராதே சார் ; தீவு தீவு தானே ?!

   Delete
 40. Dear Editor,
  Page 38
  Last panel
  Letter read by Blake- does not mention about Cross bow
  Blake thinks about cross bow
  This seems a mistake
  Regards
  Arvind

  ReplyDelete
 41. நேற்று மதியம் பொக்கிசப் பெட்டி கிடைக்கப்பெற்றேன். இந்த ஆண்டு சந்தாவில் என்னை இணைத்துள்ள நண்பருக்கு மிக்க நன்றி. . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. // நேற்று மதியம் பொக்கிசப் பெட்டி கிடைக்கப்பெற்றேன். //
   என்ஜாய்...

   Delete
 42. இந்த ஆண்டு சந்தாவில், பரிவுடன் என்னை இணைத்துள்ள நண்பருக்குநன்றி. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 43. This comment has been removed by the author.

  ReplyDelete
 44. வாவ்...அருமையான கொண்டாட்டம் சார்..

  வாழ்த்துகள்...

  வாசக நண்பர்களுடன் ,தங்களுடன் இதே போல்...


  ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்....


  முத்து 50 நாட் அவுட் மட்டுமல்ல


  முத்து 500 நாட் அவுட்

  வாழ்த்துக்களையும் முன்கூட்டியே தெரிவித்து கொள்கிறேன் சார்..

  ReplyDelete
 45. " இணைய விடுமுறையின் " காரணமாக புத்தாண்டு இதழ்களின் எனது முதல் பார்வையை " இங்கு " வெளியிடப்படாமல் போனாலும் இங்கே அசந்த ,பாராட்டிய அதே நண்பர்களின் கொண்டாட்டமே எனக்கும் என்பதை தெரிவித்து கொண்டு இணையம் இல்லா காரணத்தால் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என வைக்காமல் முழுவதுமாக இதழ்களை ஆரவாரமாக தழுவி ,ரசித்து ,சுவாசித்து ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்களை தவிர முக்காலே மூன்று இதழ்களை வாசித்த கையோடு இதழின் சாரி கதையின் எனது எண்ணவோட்டங்கள் இதோ இப்பொழுதே...:-)

  ReplyDelete
 46. *படிக்காதவர்களும் படிக்கலாம்*

  *தி கோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷல்*

  அட்டைப்படம் கலக்கி விட்டது..,சித்திரங்களும் முதல் முறை கலக்கி விட்டது..,இதழ் வடிவமைப்பும் ,அளவும் பழைய பெரிய லயன் காமிக்ஸை பார்த்தது போல..ஆரம்ப கால திகில் காமிக்ஸை பார்த்தது போல மகிழ்ச்சியை விதைத்தது மட்டுமல்ல கலக்கியும் எடுத்து விட்டது. ஆனால் இந்த கோல்டன் ஹீரோஸ் கதையில் அன்று போல் இன்றும் கலக்குவார்களா இல்லை போரடித்து கலங்க வைப்பாரகளா என்ற சந்தேகத்துடனே தான் படிக்க ஆரம்பித்தேன்.அதுவும் நமது வலை மன்னர் எல்லாம் இப்போது எப்படியோ என ஓர் இருவித மனநிலையில் படிக்க ஆரம்பத்தால் வலைமன்னன் ஆரம்பத்திலியே வாவ் போட வைத்து அசத்தி விட்டார் என்பது மட்டுமல்ல அடுத்த சாகஸம் எப்பொழுது என ஏங்கவும் வைத்து விட்டார் என்பதில் எனக்கே ஆச்சர்யம் .."இனியெல்லாம் குற்றமே" படைத்து சரித்திரம் படைக்க போகிறேன் என சவால் விட்ட ஸ்பைடரை மீண்டும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் .

  அடுத்த வந்த பேய்வீரர் செக்ஸ்டன் ப்ளேக் அதே அதே..கொஞ்சம் கூட போரடிக்காமல் விறுவிறுவென படிக்க வைத்து விட்டார்..சூப்பர் ரிப்போர்ட்டர் ஜானி பாணியில் கதையும் ,அன்றைய சித்திர தரமும் இன்றும் மனதை கவர்ந்து விட்டது . அதே நாயகரின் வண்ண சாகஸமும் அருமை.. இந்த இரு பெரும் சாகஸ நாயகர்களிடையே இரும்புகை மாயாவி கொஞ்சம் சோடை போனாலும் போரடிக்காமல் சென்றது சிறப்பு ..க்ளைமேக்ஸ் சட்டென முடிந்து மற்ற ஒருவர் வந்து காப்பாற்றியது ஒரு வேளை காரணமாக இருக்கலாம்..மொத்தத்தில் தி கோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷல் இதழ் அன்று எப்படி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்களோ அதே மகிழ்ச்சியை இன்றும் விதைத்துள்ளார்கள் என்பது உண்மை..கண்டிப்பாக கோல்டன் ஸ்பெஷல் தொடரவேண்டும் சார்..

  அருமை அருமை அருமை👌🏻👌🏻

  ReplyDelete
 47. *படிக்காதவர்களும் படிக்கலாம்*

  *CIA ஆல்ஃபா வின் "துரோகம் ஒரு தொடர்கதை"*

  அத்தியாயம் ஒன்றில் கதை ஆரம்பித்து பயணமாகும் பொழுது ஏதோ மெதுவாக போவது போல் இருக்கிறதே..ரூபிள்கள் ,டாலர்கள் என பேசிக்கொண்டே வருகிறார்களே ..என்று தோன்றும் பொழுதும் கதையை விட மனம் சொல்லவில்லையாதாலால் தொடர்ந்தேன் இரண்டாம் அத்தியாயம் தொடங்கியது அடேங்கப்பா ,என்னது ,வாவ்..ஆஹா என பல எண்ணவோட்டங்களை விதைக்க வைத்தது மட்டுமல்ல பரபரவென ,விறுவிறுவென அப்படி ஒரு வேகம் கதையில் மூன்றாம் அத்தியாயத்தையும் முடித்து விட்டு தான் இதழை கீழே வைக்க முடிந்தது.. அப்பொழுது தான் புரிந்தது ஆங்கில படங்களில் பலவற்றில் ஆரம்பத்தில் எப்பொழுதும் கொஞ்சம் மெதுவாக போவது போல் தோற்றமளிக்கும் ..பின் அப்படியே கொஞ்சம் ,கொஞ்சம் ஆக வேகம் பிடித்து சூடு பிடித்து பின் அப்படியே பறக்க ஆரம்பிக்கும் ..ஆனால் இறுதியில் பல விடைகள் ஆரம்பத்தில் மெதுவாக தோன்றிய காட்சிகள் தான் நமக்கு இன்னமும் தெளிவான விளக்கத்தையும் ,புரிதலையும் ஏற்படுத்தும் ..அதே பாணிதான் இந்த துரோகம் ஒரு தொடர்கதை..அப்பா என்ன ஓர் அட்டகாச படைப்பு ..அதே போல் ஓவிய படைப்பு அப்படியே பாரிஸ்ஸிலும் ,மாஸ்கோவிலும் நாமும் உலவுவது போலவே ஓர் எண்ணம் அப்படி ஓர் நிஜ தன்மை சித்தரத்தரங்களில் .உண்மையாகவே ஓர் ஆக்‌ஷன் ,அதிரடியான ஆங்கில படத்தை திரை அரங்கில் பார்த்து விட்டு வெளியே வந்தது போல ஓர் உணர்வு சார் .. அந்த வெற்றியில் மொழிஆக்கத்திற்கும் பெரும் பங்கு உண்டு என்பதை எடை போட த்தான் வேண்டுமா என்ன ..ஆல்பா இந்த முதல் சாகஸத்திலியே இப்பொழுது என் மனம் கவர்ந்த நாயகராகி விட்டார் லார்கோவை போலவே..இவரின் அதிரடி சாகஸத்தை இனி எதிர்பார்த்து கொண்டே இருக்கலாம் ..இன்னும் ,இன்னும் மன உணர்வுகளை கொட்ட ஆசை ..ஆனால் இன்னமும் படிக்காதவர் பலர் இருக்கும் பொழுது வரிகள் தடை போட வைக்கின்றன..இன்னும் இரண்டு நாயகர்கள் இந்த முதல் ஸ்பெஷல் இதழில் இருப்பவர்களை தரிசித்து விட்டு மீண்டும் வருகிறேன் சார்..CIA ஏஜெண்டே இந்த அசத்து அசத்திவிட்டார் எனில் ஆசரியரே பாராட்டிய ப்ரெஞ்ச் ஏஜெண்ட்ம் ,சாகஸ வீரன் டேங்கோவும் இன்னும் என்னை எப்படி அசத்த காத்திருக்கிறார்களோ ..படபடப்புடன் காத்திருக்கிறேன்..

  துரோகம் தொடர்கதையோ ,சிறு கதையோ ஆல்பா எப்பொழுதும் இனி தொடர வேண்டும் என்பதை மட்டும் மீண்டும் ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன் சார்..

  ReplyDelete
  Replies
  1. நல்ல விமர்சனம் தலைவரே...

   Delete
 48. கோலங்கள் அனைத்தும் டாப் டக்கர் சார். மிகவும் அருமையாக கோலம் போட்டு உள்ளார்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 49. *படிக்காதவர்களும் படிக்கலாம்*

  "சத்தமாயொரு மெளனம் "

  FFS ன் அடுத்த ஓர் அதிர்வெடி சாகஸம் ..உளவுத்துறையின் அதிரடிகளை மட்டுமல்ல அதன் உள்ளடி வேலைகளையும் மறைக்காமல் செம விறுவிறுப்பாய் ஆக்‌ஷன் களத்தோடு கொண்டு செல்கிறார்கள் ..அடுத்து என்ன நடக்க போகிறது என்ற படபடப்போடு பக்கத்தை நகர்த்த வைக்கிறார் ஏஜெண்ட் சிஸ்கோ. இறுதியில் க்ளைமேக்ஸ் முடிவு செம..கற்பனையை போல் அல்லாமல் நாமும் உளவுத்துறையின் ஓர் அலுவலக ஊழியனாக இருந்து கூட இருந்து கவனித்து கொண்டே வருவது போலவே கதையை வாசிக்கும் பொழுது உணரவைத்துவிட்டது இந்த சத்தமாயொரு மெளனம்.ஆல்பா ஒரு விதத்தில் அசத்தி விட்டார் எனில் சிஸ்கோ ஒரு விதத்தில் அசத்தி விட்டார் ..மொத்தத்தில் FFS ன் இரு ஏஜெண்ட்களும் பட்டையை கிளப்பி விட்டார்கள்.கதையும் சரி ஓவியங்களும் சரி ஆசிரியர் ஏற்கனவே சொன்னபடி பாரீஸில் தெருமுக்கெல்லாம் நமக்கு அத்துபடி ஆகிவிடும் போல.. இப்படியே போனால் நமது காமிக்ஸ் நண்பர் திரு. பாரீஸ் ஹசன் அவர்களின் இல்லத்திற்கு நேராய் சென்று அவர் இல்லத்தின் கதவை தட்டி "ஹலோ " சொல்லி விட்டு வந்து விடுவேன் போல..:-).

  "சத்தமாயொரு மெளனம்" சத்தியமாய் சத்தமாய் சொல்வார்கள் வாசித்த நண்பர்கள் ..

  "மீண்டும் சிஸ்கோ " எப்பொழுது என்று...!!

  ReplyDelete
 50. *படிக்காதவர்களும் படிக்கலாம்*

  *என் பெயர் டேங்கோ*

  ஆரம்ப முதல் பக்கமே சித்திரமும் சரி ..வசனங்களும் சரி தன்னிலை வாசிப்பில் நாயகனாய் நாமே அந்த அத்துவான பாலைவனத்தில் சுற்றி திரிய ஆரம்பிக்கிறோம் ..ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு சஸ்பென்ஸை வைத்து ஓர் அதிரடி ஆட்டத்தை ஆட வைத்துள்ளார் ஆசிரியர்..கதையில் பல வரிகள் பல நிஜ உண்மைகளை பிரதிபலிப்பது உண்மை.. சில படங்களில் அனைத்து கதாபாத்திரங்களுமே அது சிறிய வேடமாகவே இருப்பினும் மனதினுள் நின்று விடுவார்கள் ..அதே போலத்தான் என் பெயர் டேங்கோ கதையில் வரும் எந்த ஓர் கதாபாத்திரமும் அவசியமில்லாமல் தோன்ற வில்லை ..இது ஓர் ஆக்‌ஷன் கதையாகவே இருப்பினும்.. கண்டிப்பாய் டேங்கோ காமிக்ஸ் நண்பர்களின் ஆதர்ச நாயகராய் வீற்று இருக்க போவது உறுதி.


  மொத்தத்தில் இந்த "தி பிப்டி பார்எவர் ஸ்பெஷல் " ஒன்றில் அதிரடியாய் ..அறிமுகமாய் தலைகாட்டிய இந்த மூன்று நாயகர்களுமே பட்டாசாய் வெடித்து தள்ளி விட்டார்கள் ..கதையிலும் சரி ,சித்திர தரத்திலும் சரி ,மொழி ஆக்கத்திலும் சரி ஆஸம் ..,ஆஸம்...,ஆஸம்..

  இந்த மூன்று நாயகர்களில் எந்த நாயகர் முதலிடம் பெறுகிறார் ,எந்த நாயகர் முதிலிடம் பெறுகிறார் என எனது எண்ணவோட்டத்தில் யோசித்தால் சாரி சார் மூவருமே அனைத்து விதத்திலுமே சமமாய், படுவேகமாய் சீறி செல்லும் பொழுது தனிதனியே எப்படி பிரித்து பரிசளிப்பது அனைவருமே முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது இந்த மூவரின் சாகஸங்களை படித்து முடித்த உடனே மீண்டும் இவர்களின் சாகஸங்களை காண மனம் ஆவலாய் பரபரப்பதை கொண்டே அறியலாம்..மொத்த்தில் புத்தாண்டை செம செம ஆக்‌ஷன் களமாய் அதிரடித்து பாரிஸ் ,மாஸ்கோ ,பாலைவனம் ,ஆளரவுமற்ற ஓர் வெளிதேச குக்கிராமத்தில் எங்களை பயணிக்க வைத்தது மட்டுமில்லாமல் கதையில் மட்டுமல்ல இதழ்களின் தரத்திலும் அதகளப்படுத்திய எங்கள் ஆசரியருக்கு ,அவரின் குழுவினருக்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து வாசகர்களின் சார்பாக..சூப்பர் சூப்பர் சூப்பர் சார்..

  💐💐💐💐💐💐


  இனி FFS இதழின் இரண்டாம் இதழின் ஒற்றை நொடி ஒன்பது தோட்டா வாசித்து விட்டு...

  ReplyDelete
  Replies
  1. அடுத்த மாச புக் எப்போன்னு கேட்க மறந்துட்டிங்க தலைவரே...

   Delete
 51. அது போல் இரண்டாம் பக்கத்தில், ஜான் கார்ட்டருடன் ப்ளேக் பேசிவிட்டுதான் வீட்டிற்கு வருகிறார். அப்போது போன் மணி அடிக்கிறது. கார்ட்டராக இருக்கலாம் என்று ப்ளேக் சொல்கிறார். அவரிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வருவதற்குள அவரிடமிருந்தே எப்படி போன் அழைப்பு வரும்.இதுவும் தவறு.

  ReplyDelete
 52. ஆஹா ..விறுவிறுப்பாய் சென்ற ப்ளேக் கதையில் குறை உள்ளதா ..அந்த குறையை கண்டுபிடித்தால் "புதையலே" பரிசா..

  சொக்கா நமக்கு இல்ல..நமக்கு இல்ல..

  ஆனாலும் பரவால திரும்ப புக்கை எடுக்குறேன் சொக்கா..:-)

  ReplyDelete
 53. திகில் தீவு கதையில், முதல் பக்கத்தில் செக்ஸ்டன அறிமுக கட்டத்தில், ' அந்தப் பெயரைக் கேட்டாலே தீயவர்களுக்கு அஸ்தியில சுரம் கண்டுவிடும்' என்று இருக்கும்.
  அஸ்தி என்றால இறந்த உடலை எரித்த சாம்பல். அதற்கு சுரம் என்பது பொருளற்றது.
  கரீக்டுங்களா சாரே.

  ReplyDelete
 54. நடந்த சூழ்ச்சியில் அறுவருக்கும் பங்குன்டு
  என்று சொல்கிறார்கள் ஆனால் கிராஸ் போவில் வெடிகுண்டு தூண்டப்பட்டு வெடிக்கும் விபத்தில் பலியாவது அந்த ஆறுபேருக்குள் ஒருவரே

  ReplyDelete
 55. டைப்ரைட்டரில் கையெழுத்து பிரதி

  ReplyDelete
  Replies
  1. அது இல்லையென்று சொல்லிவிட்டார் சத்யா...

   Delete
  2. டைப்ரட்டரில் லெட்டர் டைப்படிக்கலாம் அங்கே எப்படி கையெழுத்து பிரதி ஒரே குழப்பமா இருக்கே

   Delete
 56. முதல் மாடி ஜன்னலை அடுத்துள்ள அறையின் கதவினை ஜன்னல் என கூறப்பட்டுள்ளது தவறு.

  ReplyDelete
  Replies
  1. பக் 31. அந்த அறையின் கதவு அப்போதுதான் சாத்தப்பட்டது.அதை உடைத்தே உள்ளே பிரவேசிக்கிறார்கள் இருவரும். அதை ஜன்னல் என குறிப்பிடப்பட்டுளளது பிழை.

   Delete
  2. முதல் மாடி ஜன்னல் திறந்தே இருக்கிறது. அதை நோக்கி ஓடிவரும் வேளையில் அருகிலுள்ள அறைக்கதவு சாத்தப்படுவதை டிங்கர் பார்த்து விடுகிறான். எனவே அந்த அறைக்கதவை உடைத்து உள்ளே நுழையும் இருவரும் சுரங்க வழியினை கண்டறிகிறார்கள்.

   Delete
  3. 31 பக்கம் கடைசி பேனல் டிங்கரின் வசனம் இவ்வாறு இருக்க வேண்டும்.
   "இந்த அறைக்கதவு இப்போதுதான் சாத்தப்பட்டதை நான் பார்த்தேன். அவன் இதற்குள் தான் ஒளிந்திருக்க வேண்டும்."

   Delete
  4. பக்கம் 32 முதல் பேனல்.

   'அந்த அறையின் கதவை மோதித் தகர்த்தார் பிளேக்'

   என்றிருக்க வேண்டும்.

   Delete
  5. பயங்கரமான அலசலா இருக்கே...

   Delete
 57. 220 பக்கத்தில் ஹோலிஸ், ப்ளேக்கிடம் ,' அதில் ஒரு ரகசியம் அடங்கியிருப்பது' என்கிறார். அடங்கியிருக்கிறது என்று இருக்க வேண்டும். அது தான் சரியானது.

  ReplyDelete
 58. பக்கம் 29,ல் அரைமணி நேரத்தில்இரண்டு கொலைகள் என்று ஹோலிஸ் சொல்கிறார்.(அவரது பார்வையில்) ஆனால் நடந்ததோ மூன்று கொலைகள்.(நம் பார்வையில்.) 1, மோப்பாட். 2, அட்லே. 3,மின்னெல்லி.

  ReplyDelete
 59. ஹோலிஸால் எழுத்தாளர்கள் என சொல்லப்படும் ஐவரில் ஒருவரை ப்ரைவேட் செகரட்டரி என்று இருக்கிறது அவருடைய ஸ்பெஷாலிட்டி அங்கு குறிப்பிட படவில்லை

  ReplyDelete
 60. இத்தனை தவறுகளைக் கண்டுபிடிச்சதுக்காக நியாயப்படி படைப்பாளிங்ககிட்டேர்ந்துதான் நம்ம நண்பர்களுக்கு ஏகப்பட்ட பரிசுகள் வந்துசேரணும் போலிருக்கே?!!

  ReplyDelete
  Replies
  1. நானும் இதையே நினைத்தேன் இளவரசே...ஆனா கண்டே பிடிக்க முடியாம ஒரு தவறு ஒளிந்துள்ளதே

   Delete
  2. ஆமாங்க ஈ.வி. ஆனவரைக்கும் முட்டி பாத்துட்டேன்... இதுக்கு மேல தெம்பு இல்லைங்கோ... சேக்ஸ்டன் பிளாக் கதையவே இத்தனை முறை படிக்க வச்சுட்டாரே நம்ம எடிட்டர்...ஹூம்ம்ம்...!

   Delete
  3. @ Saravanakumar & steel

   உங்களுக்கெல்லாம் இ.கை.மாயாவி கதையில போட்டிவச்சிருந்தாத்தான் சரிப்பட்டு வருவீங்க போலிருக்கு! சமீபத்துல அதைப் படிச்ச சிலர் இப்போ 'சின்னத்தம்பி' படத்துல முதலிரவு காட்சியில கவுண்டர் சுவத்துத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு நிப்பாரே.. அப்படி நின்னுக்கிட்டிருக்காங்களாம்! :D

   Delete
 61. அருமையான நினைவுகள்..இதே உத்வேகத்தோடு நூறாண்டு விழா கொண்டாட வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 62. ."முத்துகாமிக்ஸ்" - 50-வது ஆண்டு-மற்றும் பொன்விழா-வைகொண்டாடிய விதம் சிறப்பு சார்..இதுவே மகிழ்ச்சி..
  எனது தனிப்பட்ட கருத்து இதழும் - ஜனவரி-3 அல்லது 4ம் தேதி கிடைத்திருக்கவேண்டும் என்பதே... Cஏனென்றால், இப்பொழுதுதானே 50வது ஆண்டு பிறக்கிறது)
  ஆனாலும், எங்களிடம் புத்தகத்தை ஒப்படைத்துவிட்டு, நீங்கள் கேக் வெட்டி கொண்டாட நீங்கள் நினைத்திருக்கலாம்..
  எப்படியோ - எங்கள் சார்பாக - எங்களை இத்தனைக்காலம் - மகிழ்விக்க உறுதுணையாக இருந்த அனைவரையும் - சிறப்பு செய்து அவர்களோடு கொண்டாடி மகிழ்வித்துதற்கு எங்கள் சார்பாக நன்றிகள் வணக்கங்கள் சார்..

  ReplyDelete
 63. திகில் தீவு கதையிலிருந்து ! And அது /////எழுத்துப் பிழை சமாச்சாரம் அல்ல ! எங்கே, தைரியமாய் செக்ஸ்டனோடு பயணம் பண்ணி, அந்தப் பிழை என்னவென்பதைக் கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்// கதையோட Hero 'sherlock shomes' ...செக்ஸ்டன் பிளேக்கா மாறுவேஷம் போட்டிருக்கார்.

  ReplyDelete
 64. 48ம் பக்கத்தில் ஹோலிஸின் கையெழுத்துப் பிரதி பப்ளிஷர்களை சென்றடைந்துவிட்டிருக்கும் என ப்ளேக் சொல்கிறார். 49ம் பக்கத்தில ஸால்ட் கையெழுத்து பிரதியை எடுத்து படிக்க முற்படுவதாக காட்சி வருகிறது. இதுவும் தவறு.

  ReplyDelete
  Replies
  1. இது இல்லைன்னு சொல்லிட்டார் சார்....

   Delete
 65. நீண்ட வருடங்களுக்குப் பிறகு செக்ஸ்டன் பிளேக்கை காண்கிறேன். செக்ஸ்டனின் தங்க வில்லாளி கதை (கதையின் பெயர் நினைவில்லை) என்னுடைய பேவரைட். அப்போது நான் அடிக்கடி வாசிக்கும் கதைகளில் அதுவும் ஒன்று. அதைப்போலவே இந்த திகில் தீவும் சும்மா தடதடக்கும் திரில்லர்.

  விடையை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் திகில் தீவு கதையை பலமுறை வாசித்து விட்டேன். போதாதற்கு இதன் மூல இதழ்கள் tornadoவையும் தரவிறக்கி Terror Of Troll Island!யும் புரட்டு புரட்டு என்று புரட்டிப் பார்த்து விட்டேன், ம்ஹூம்.. என்ன மிஸ்டேக் என்று யூகிக்க கூட முடியவில்லை.

  தமிழில் எழுத்து பிழைகள் ஆங்காங்கே உள்ளதுதான், ஆனால் அது இல்லை, போலவே சில நண்பர்கள் கூறுவது போல் கதையிலோ, சித்திரங்களிலோ பிழை இருப்பின் அது படைப்பாளிகளை சாரும். மற்றபடி ஸ்பெஷல் எபெக்ட்ஸ் எல்லாம் கணக்கில் இல்லை.

  நம்ம கருனையானந்தம் sir செய்திருப்பது மொழி பெயர்ப்பு மாத்திரமே, ஆகையால் எங்காவது வசனங்களை மாற்றி எழுதியிருக்க வேண்டும். அது எங்கே என்று இயன்றவரை தேடிப்பார்கிறேன் சிக்குவேனா என்கிறது. ஆகையால் தேவை ஒரு க்ளூ.

  தமிழ் மொழிபெயர்ப்பு பிரமாதம்... அந்நாளைய முத்து இதழ்களின் நடையில் வாசித்தது போல் நிறைவு இருந்து எனக்கு. Hats off to கருனையானந்தம் sir!

  ReplyDelete
  Replies
  1. இது போன்ற க்விஸ் போட்டிகள் நன்றாக உள்ளது, இயன்றால் inspector danger's crime quiz, மீண்டும் கொண்டு வாருங்களேன் sir.

   Delete
 66. என் பெயர் எலியப்பா..

  எங்களது மகளின் இரண்டு வயது முதல் தமிழ் படங்கள் பார்ப்பதை விட்டு விட்டோம்.. வருடத்திற்கு 1-2 தமிழ் படங்கள் மட்டுமே பார்ப்போம் அதுவும் குழந்தைகள் பார்க்கும் விதமாக இருந்தால் மட்டுமே... சரி அதுக்கு என்ன இப்போ என்கிறீர்களா :-)

  கடந்த 15 ஆண்டுகளில் அனிமேஷன் படங்கள் ஒன்று விடாமல் பார்த்து வருகிறோம் பல படங்கள் 5-10 முறை பார்த்து இருப்போம் :-) சரி விஷயத்துக்கு வா என்கிறீர்களா :-)

  நேற்று பார்சலை பிடித்தவுடன் என மனைவி படித்தது "என் பெயர் எலியப்பா", படித்து முடித்த உடன் "இது அனிமேஷன் படம் பார்த்து போல் இருக்கிறது. செம ஜாலியாக உள்ளது. 8 பக்கங்கள்தான் உள்ளது, முழுவதையும் ஒரே புத்தகமாக கிடைக்காதா?".

  சரி அடுத்து என்ன என்கிறீர்களா :-) இந்த கதையை நடுவில் ஏதாவது காரணம் சொல்லி நிறுத்தி விடாதீர்கள்... அப்படி நடந்தால் எனது முகம் ஏதாவது டேமேஜ் ஆனா நீங்க தான் பொறுப்பு :-) ஆமாம் சொல்லிட்டேன் ;-)


  வி லவ் எலியப்பா :-)

  ReplyDelete
 67. Page 32 first panel .. அங்கு ஜன்னல் இல்லை .. கதவு மட்டுமே உள்ளது ..

  ReplyDelete
  Replies
  1. கதவை மோதித் தகர்த்தார் என இருக்க வேண்டும்.

   Delete
  2. ஆனால் இது இருக்காது என நினைக்கிறேன்.

   Delete
 68. // தூரத்து நாளில் உங்கள் முன்னிலையிலும் இதே நாளை மறுக்கா கொண்டாடிடுவோமா folks ? //

  கண்டிப்பாக கொண்டாட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அதுவும் சிவகாசி என்றால் டபுள் ஓகே.

   Delete
 69. பக்கம் 21ல் காலையிலும் இரவிலும் 9 மணிக்கு பிரங்கி முழங்குங என உள்ளது. செக்ஸ்டன் இலண்டனை விட்டு கிளம்பி இரவு முழுவதும் பயணம் செய்தது போல் உள்ளது, அவர் மேல் தாக்குதல் நடப்பது அதிகாலை அல்லது நடு இரவாக இருந்தால் பிரங்கி முழங்கிய நேரம் தவறு என நினைக்கிறேன்.

  மீதி கதையை படித்து விட்டு வருகிறேன் :-)

  ReplyDelete
  Replies
  1. பக்கம் 23ல் பினாமி எழுத்தாளர்கள் 5 பெயர் சொல்வதில் ஒருவர் அவரின் பர்ஸனல் செகரட்டரி, அவரை எழுத்தாளர்கள் லிஸ்டில் சேர்க்க முடியாது.

   ப்ரைவேட் செகரட்டரி என்பதை விட பெர்சனல் செகரட்டரி என சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.

   Delete
  2. நீங்கள் ஏன்பனவே - நீங்கள் ஏற்கனவே என இருந்தால் சிறப்பாக இருக்கும்.

   Delete
 70. ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள் :
  அரூப சகோதரத்துவம்-கலீஜியம்-தேன் கூடு-ஆல்ஃபாக்கள்-மறை கழன்று காரண காரியங்கள் இல்லாமல் செய்யும் குரூரங்கள்...யப்பா,இந்த மனுஷ பயலுக 6 வது அறிவை வெச்சிகிட்டு பண்ற அட்டகாசம் இருக்கே,இயற்கைக்கு மாறான ஆராய்ச்சிகள் என்றுமே மனித குலத்துக்கு நன்மை பயப்பதில்லை,அழிவையேத் தரும்,இந்த அழிவுகளைப் பார்க்கும் போது மனுஷ பயலுகளுக்கு சிந்திக்கும் ஆற்றலை கொடுத்தது இயற்கையின் பிழையோ என்று கூட சமயத்தில் தோன்றும்...

  ஆல்ஃபிரட் நோபல் டைனமைட்டை கண்டுபிடிச்சிட்டு அதனை அழிவுக்கு பயன்படுத்துவதைப் பார்த்து வருந்தினராம்,விஞ்ஞானம் வளர்ச்சிக்கு பயன்படும்போதுதான் அது முழுமையடையும்..

  தாத்தா,பாட்டி வழியே அறம் சார்ந்த கதைகளை கேட்டு வளர்ந்த நமக்கு இந்த வன்முறை சார்ந்த களங்கள் ஏனோ சற்றே மனதில் சிறு கலக்கத்தையும் உண்டு செய்கிறது,இதை வளர்ச்சியாக எடுத்துக் கொள்வதா,இல்லை மனிதர்களின் இன்னொரு பக்கங்களை புரட்டும் வாய்ப்பாக எடுத்துக் கொள்வதா ?!
  கதைக் களமே இங்கு பிரதானம்,வழக்கம்போல் இதிலும் அசுர ஆட்டம்தான்,நியாய, அநியாயங்களுக்கு இடமில்லை...
  ஸ்பாடாச்சினியை பிரதான பாத்திரமாக வைத்திருந்தாலும்,
  மற்றவர்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது..
  என்ன சரக்கு கை மாறுதுன்னு கடைசி வரைக்கும் சொல்லிகிட்டு இருக்காங்க,அந்த சரக்கு என்னன்னுதான் கடைசி வரைக்கும் தெரியலை,முடிவு அடுத்த களத்தின் தொடக்கப் புள்ளியோடே முடிகிறது...
  அடுத்த களத்தில் ஸ்பாடாச்சினி ஏன் மற்ற ஆல்ஃபாக்களிடம் இருந்து வேறுபடுகிறார் என்ற ஆராய்ச்சிகள் இடம் பெறுமோ ?!
  தேன் கூட்டாளர்களின் பிரதான நோக்கம்தான் என்ன ?!
  அதிகாரத்தை கட்டுப்படுத்துவதா ?!
  தனது மதச் சிந்தனைகளை வளர்த்து விடுவதா ?!
  பண பலத்தையும்,அதிகாரத்தையும் பெருக்கிக் கொள்வதா ?!
  ஆல்ஃபாக்களின் சார்ந்த ஆராய்ச்சிகளின் அடிப்படை நோக்கம் என்ன ?!
  இப்படி கேள்விக் கணைகள் வாசிப்பினிடையே மனதில் தோன்றி மறைகின்றன...

  பெருந்தகைன்னு ஒரு கேரக்டர் வருது,அன்பே சிவம் படத்தில்- "தென்னாடுடைய சிவனே போற்றி" னு சொல்லிகிட்டே எல்லா வில்லத்தனத்தையும்.பண்ணுவார்,அந்த மாதிரி பெருந்தகைன்னும் பேரை வெச்சிக்கிட்டு ரொம்ப சின்னத்தனமான வேலையைத்தான் செய்யறாரு...

  எனது புரிதலில்,LSD: Lysergic acid diethylamide-மாயத் தோற்றங்களை உருவாக்கும் மருந்தாகவும்
  ஆழ்நிலை எண்ணங்களை தூண்டவும்,உளவியல் சிகிச்சைக்காகவும் பயன்பட்டு வந்தது போல...

  இன்ஸ்பெக்டர் ஸ்பாடாச்சினி திறமைசாலியாக காட்டப்பட்டாலும் நிறைய இடங்களில் பல்பு வாங்குகிறார் குறிப்பாக "ஆவியிடம்"...

  நாவல் வடிவத்தில் வரவேண்டிய அக்மார்க் க்ரைம்,சஸ்பென்ஸ் & ஆக்‌ஷன் த்ரில்லர் காமிக்ஸ் வடிவத்தில் கிடைத்திருப்பது நம்ம அதிர்ஷ்டம்தான்...

  ரைபிள் டீட்டெயிலிங் சுவராஸ்யமூட்டியது...
  கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டது 1963 ஆம் ஆண்டு,கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்திருப்பதால் ஆயுதங்கள் அடுத்த லெவலுக்கு அப்டேட் ஆகியிருக்கலாம்,எனினும் அதேவகை ரைபிளே பயன்படுத்தப்பட்டதாக கதையில் காட்டப்பட்டிருப்பது அதனுடைய திறனை குறிக்கிறது...

  ஊக்க மருந்தை பயன்படுத்தும்போது வேகம் அதிகரிக்க வாய்ப்புண்டு,ஆனால் ரைபிளை பயன்படுத்துமளவு பார்வையின் கூர்மைத் திறன்,சிந்தனைத் திறன்கள் தெளிவாக இருக்குமா ?!
  ஒன்பது நொடியில் ஒன்பது தோட்டாக்கள் எனில் அசாத்திய வேகத்தில் இருக்கனுமே ?!
  தற்போதைய சில படங்களில் (மும்பை போலீஸ்) டைமர் செட் செய்து ரைபிளை பயன்படுத்துவது போல் காட்சியமைப்பு உள்ளது...

  முதல் பாகத்தில் விசாரணையில் இருக்கும் ஸ்நைப்பரை டீ கொண்டு வரும் போலீஸ்காரர் போட்டுத் தள்ளும் காட்சியை கொஞ்சம் பட்டி,டிங்கரிங் பார்த்து ஏற்கனவே நம்ம தமிழ் சினிமாவில் (விஷாலின் பாயும் புலி ) சுட்டுட்டாங்க...

  அமெரிக்க பிரஸிடெண்டை வைத்து ஒரு கதையை பிணைத்து பங்கம் செய்வதெல்லாம் ஹாலிவுட் படங்களிலும்,கதைகளிலும் மட்டும்தான் சாத்தியம்,நம்ம நாட்டில் இதை நினைத்துக் கூட பார்க்க முடியாது...

  ஈர்த்த வசனம் :
  "ஒரு வெடிகுண்டின் பின் உருவப்படாமல் இருக்கும் வரை அது வெடிப்பதில்லை ப்ரதர்"

  ஒ.நொ.ஒ.தோ-ஆசிரியரிடம் அசுரத்தனமாக வேலை வாங்கியிருக்கும் போல...

  நிறைய காட்சியமைப்புகள்,டாப் ஆங்கிள் ஷாட்கள் அசத்தலாய் இருந்தன,சில இடங்களில் இது போட்டோவா,ஓவியமா என்ற குழப்பமும் ஏற்பட்டது...

  ஆக்‌ஷனுக்கு இணையாக வசனங்களும் நிறைய,வார்த்தைகளின் வழியே நிறைய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன...
  புனைவுகளின் அடிப்படையில் பின்னப்பட்டுள்ள இக்கதை வெறும் புனைவாக மட்டுமே இருக்கட்டும்...

  ஒ.நொ.ஒ.தோ-கண்முன்னே ஒரு ஹாலிவுட் ஆக்‌ஷன் சினிமா...

  எமது மதிப்பெண்கள்-09/10.

  பொங்கல் விடுமுறையில் வாய்ப்பும்,நேரமும் அமைந்தால் முத்து 50 இன் 1 & 2 இரண்டு இதழ்களையும் மீள்வாசிப்பில் ஆழ்த்த வேண்டும்...

  ReplyDelete
 71. சார் உண்மையச் சொல்லுங்க,செக்ஸ்டன் பிளேக் கதையை நாங்க படிச்சிட்டமான்னுதானே செக் பண்றிங்க...!!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க சார்... இதுக்கு மேல சுத்தமா தம் கட்ட முடியல ...

   Delete
 72. ஒவ்வொரு பாகத் தலைப்பிலும் செக்ஸ்டன் பிளேக் தலை மட்டும் உள்ளது,தலையில் தொப்பி இல்லை,வாயில் ஆஸ்ட்ரே இல்லை,ஒருவேளை இதைத்தான் போட மறந்துட்டாங்களோ...!!!
  நம்ம பங்குக்கு நாமளும் எதையாவது சொல்லி வைப்போம்,ஹி,ஹி,ஹி...

  ReplyDelete
  Replies
  1. அப்ப இது செ.பிளேக் கதை இல்லை என சொல்றீங்களா :-)

   Delete
  2. வாயில ஆஸ்ட்ரேயா...ஆண்டவனே...

   Delete
  3. சும்மா டமாஸுக்குங்க...

   Delete
 73. பக்கம் 21ல் மோப்பாட் என்ற ஊழியர் கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால் பக்கம் 24ல் அட்லே என்ற சமையல்காரர் மோப்பாட் பற்றி பிளேக் இடம் தெரிவிக்கிறார். இந்த இடம் முரண்பாடாக உள்ளது.

  ReplyDelete
 74. பக்கம் 17 காற்றைக் கிழித்துக் கொண்டு மேற்றிசையில் விரைந்தது

  ஆனால் செல்வது வடக்கு கார்ன்வால் ஆகையால் வடதிசையில்னு இருந்திருக்கனுமோ

  ReplyDelete
  Replies
  1. i checked the map and it is in west of london only ... so nopes

   Delete
  2. ஆமாங்க சார்... கார்ன்வால் லண்டனுக்கு மேற்கேதான் உள்ளது. வடக்கு கார்ன்வால் என அவர்கள் குறிப்பிட்டது கார்ன்வாலின் வடக்குப்பகுதியைப் போலும். எனக்கும் புஸ்ஸாயிடுச்சு...

   Delete
 75. சிஸ்கோவும்,டேங்கோவும் சிக்ஸரடித்திருக்கிறார்கள்..
  கண்டிப்பாக அடுத்த ரவுண்டிற்கு சரியானவர்களே..
  நல்வரவாகட்டும்..

  ReplyDelete
 76. ஆல்ஃபா ஏனோ ஈர்க்கவில்லை..
  மனம் ஒட்டவில்லை..

  ReplyDelete
 77. ஒற்றை நொடி ஒன்பது தோட்டா..
  அதீத வசனங்கள் அயர்ச்சியூட்டுகின்றன..
  லயிக்கவில்லை..

  ReplyDelete
 78. பக்கம் 33...


  பேனல் 1...

  டெலிவிஷன் ரேடியோ அலைகளால் இயங்காது

  J

  ReplyDelete
  Replies
  1. பரிசை அறிவியுங்கள் எடிட்டர் சார்...

   Delete
  2. // டெலிவிஷன் ரேடியோ அலைகளால் இயங்காது //

   Yes. I too echo the same. :-)

   Delete
  3. ஏனுங்கண்ணா ...அதுலாம் படைப்பாளிங்க மிஷ்டீக் கணக்குலே தானே சேரணும் ?

   சரி, ஒரு க்ளூ தாரேன் ! பிழையானது டைம்லைன் சார்ந்தது !

   Delete
  4. டைம் லைனா...இந்தா வாரேன்

   Delete
  5. // அதுலாம் படைப்பாளிங்க மிஷ்டீக் கணக்குலே தானே சேரணும் ? //

   ஆனாலும் அது தப்புதானுங்க கோபால். ஏதாவது பார்த்து செய்யுங்கள் யுவர் ஆர்னர் :-)

   Delete
 79. பக்கம் 47 இரண்டாவது முறையாக அவன் எய்தது சரியாக இலக்கை குறி வைத்து அடித்து விட்டது என்று உள்ளது. ஆனால் குறி தவறி விட்டது என்பதே சரி

  ReplyDelete
 80. பக்கம் 38 பேனல் 7...

  எட்கர் ஹோலீஸ் அறைக்குள் " காரை " எப்படி காண முடியும்...

  ReplyDelete
  Replies
  1. அந்த கடிதத்தில் பிளேக் தப்பி பிழைக்க மூன்று விநாடிகள் அவகாசம் தரப்பட்டதாக இல்லை...

   Delete
  2. 'அவரை' என்பது 'காரை' ஆகிவிட்டது போல... எழுத்துப்பிழை ஐயா...

   Delete
 81. பக்கம் 45 இல் பிளேக் விமானத்தில் தொங்கும் காட்சியில் பின்னணி தெளிவாக உள்ளது...பனிபொலிவுடன் இருந்து இருக்க வேண்டும்

  ReplyDelete
 82. பக்கம் 45 இல் விமானம் என் G 13 TF என்று உள்ளது அதே விமானம் எண் பக்கம் 46 இல் G AT என்று உள்ளது

  ReplyDelete
 83. ஆசிரியரே விடையை அறிவிக்கிறிங்களா இல்லை ஸ்டீல பாட்டு பாடி தூண்டி விடவா அப்புறம் தாங்க மாட்டிங்க

  ReplyDelete
  Replies
  1. சரி, ஒரு க்ளூ தாரேன் ! பிழையானது டைம்லைன் சார்ந்தது !

   Delete
 84. My FFS Order #9104.
  RCVD books, but my photo not printed.
  Disappointed sir

  ReplyDelete
  Replies
  1. ஆர்டர் தேதி என்ன சார் ?

   Delete
  2. Photo sent date 23/11/21. Mahesh.celluloid@gmail.com

   Even I got a call from office confirming the photo mail rcvd

   Delete
  3. Thanks for the prompt response sir. நன்றிகள் பல. ஆங்கில new year வாழ்த்துக்கள்

   Delete
 85. This comment has been removed by the author.

  ReplyDelete
 86. கதை 1929 தொடங்குகிறது... எட்கர் ஹோலிஸ் கடந்த 20 ஆண்டுகளில் 400 புத்தகங்கள் என்று கூறி தம்மிடம் பணிபுரியும் பினாமி எழுத்தாளர்கள் முதலாம் உலக யுத்தத்தில் இருந்து பணிபுரிவதாக கூறுகிறார். ஆனால் first world ஆரம்பம் 1914 என்று இணையம் கூறுகிறது. அப்படியெனில் அவர்கள் 15 வருடமாகத்தான் ஹோலிஸிடம் உள்ளார்கள் என கருதலாம்.

  ReplyDelete
 87. காலையிலும் மாலையிலும் சரியாக 9 மணிக்கு பீரங்கியை முழக்குவதாக கூறுவது கதையின் ஓட்டத்தில் முரணாக உள்ளது தானே சார???

  ReplyDelete
  Replies
  1. ஸிட்னி கோல்ட் கொலையை தானே நேரில் பார்த்ததாக (அரைமணி நேரம் முன்பு) என ப்ளேக் கூறுவதா சார்? அவர்கள் பார்த்தது டெலிவிஷனில் தானே நேரில் இல்லையே?

   Delete

 88. Quiz க்கு பதிலை காலையில் lioncomics@yahoo.com க்கு mail அனுப்பி இருந்தேன் Sir!

  சரியா? தவறா? ன்னு தெரிஞ்சா அடுத்த பதிலை யோசிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. இங்க போடுங்க

   Delete
  2. உங்கள் இன்பாக்ஸ் க்கு அனுப்பி இருக்கேன் அண்ணா!

   Delete
 89. அப்போது முதல் உலகப்போராக இருக்க முடியாது. 1908-1909 களில் நிகழ்ந்த போராகத்தான் இருக்க முடியும்.

  ReplyDelete
  Replies
  1. The Bosnian Crisis (1908-1909) இதில் பிரிட்டன் பங்கேற்றதாக Google சொல்கிறது.

   Delete
  2. பக் 48 ல் முதல் உலகப்போரின்போது என வந்திருக்கக்கூடாது.

   Delete
  3. Exactly !!

   நண்பர்களின் பொருட்டு விளக்கிடுங்கள் சார் !

   Delete
  4. வாழ்த்துக்கள் Saravanakumar sir. 💐💐💐

   Delete
  5. 1929 - கதை நடக்கும் காலகட்டம்.
   ஹோலிஸ் தன் லைப்ரரியில் 20 ஆண்டுகள் தனக்காக எழுதிவரும் பினாமி எழுத்தாளர்கள் என்று கூறுகிறார்.

   20 ஆண்டுகளாக பிணையில் உள்ளவர்கள் ஆதலால் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1908-09 நிகழ்வின் போது அவர்கள் சிக்கியிருக்க வேண்டும்.

   1908-09 களில் போஸ்னிய போரில் பிரிட்டன் பங்கேற்றது.அதை அடுத்து 1909 இல் ஐரோப்பா முழுமைக்குமான கடற்படை கொள்கையை வகுத்தது. இதை அமெரிக்க, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

   ....

   Delete
 90. தி கோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷல் -

  ஸ்பைடர் - ஹாலிவுட் படம் அறிமுக காட்சி அமர்க்களமாக இருந்தது. அடுத்த பாகம் எப்போது? Warm welcome back spider.

  மாயாவி - மாயாவி இருக்கிறார் பூச்சுற்றல் இன்னும் அதிகமாக உள்ளது. குறைந்த பக்கத்தில் கதை எழுத வேண்டும் என ஆரம்பித்து எப்படி முடிப்பது என தெரியாமல் நம்மை அப்பா சாமி விடுங்க என சொல்ல வைத்து விட்டார் கதாசிரியர். சாரி மாயாவி.

  செ.பிளேக் - முதன் முறையாக இவரின் கதையை படிக்கிறேன். விறுவிறுப்பான கதை இயல்பான சாகசங்கள். குறை என நினைப்பது நிறைய எழுத்துப்பிழைகள், மார்டின் கதைகளை போன்று சில விஷயங்களை சரிபார்த்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். இவரும் கூட அவ்வப்போது தலைக்காட்டலாம் நமது காமிக்ஸில்.

  ReplyDelete
  Replies
  1. முத்து 50 ஆண்டு லோகோ இந்த அட்டைப்படத்தில் இன்னும் சிறப்பாக தெரிவது போல் செய்து இருக்கலாம்.

   Delete
 91. இது போங்காட்டடம். எனக்கு இன்னும் புக் வரல, அதுக்கு முன்னாடியே குயிஸ் வச்சா எப்படி மாஸ்டர் . நமக்கு எப்ப வரும்னு தெரியலே, ட்ராக்கிங் நம்பர் கேட்டா கூட சைலெண்ட இருக்காங்களே.

  ReplyDelete
  Replies
  1. கவலையே படாதீங்க சார் ; பொங்கல் விடுமுறைகளில் 2 நாட்களுக்கு FFS Quiz காத்துள்ளது !! அதுவும் Live-ல் !!

   Delete