Powered By Blogger

Friday, November 26, 2021

லயன் லட்டு லைப்ரரி...!

 நன்பர்களே,

வணக்கம். டிசம்பர் ஆல்பங்களின் பணிகளெல்லாம் நிறைவுற்றிருக்க, FFS இதழ்களின் finishing touches-ல் செம பிசி - கடந்த வாரமாய் ! கொட்டித் தள்ளும் மழை டிசம்பரிலும் இது போல ஏதேனும் அதிரடிகளைக் காட்டும் உத்தேசத்தில் இருப்பின், நாம் முன்ஜாக்கிரதையாய் முந்திக் கொண்டாகணும் அல்லவா ? So தட தடத்து வருகிறோம் ஒன்றல்ல, இரண்டல்ல,மூன்றல்ல - நான்கு இதழ்களின் பணிகளுடன் ! 

And FFS புக்களுக்கான அட்டைப்படங்களுமே நிறையவே trial & error சகிதம் ஓட்டமெடுத்து வர, நமது டிசைனர்கள் அத்தினி பேரும் - வானிலை அறிக்கையைக் கேட்கும் சென்னைவாசிகளைப் போல தெறித்தடித்து ஓடி வருகின்றனர் ! ஜனவரியில் இதழ்(கள்) வெளியான பின்னே, அவற்றின் making பற்றி எழுதிடும் வேளையில் - இன்றைய இந்த அட்டைப்படக் கூத்துக்களை நிச்சயம் பகிர்ந்திடுவேன் ! And அந்தப் பதிவுக்கு பெயர் கூட ரெடி -  "சலோ ஜார்கண்ட் !!" என்று ! எது எப்படியோ - ஒரு மைல்கல் தருணத்தின் பொருட்டு அரங்கேறி வரும் இந்த அட்ராசிட்டிக்கள் - உங்களின் புத்தாண்டின் பொழுதுகளை 'பளிச்' ஆக்கிடும் பட்சத்தில் - நிச்சயம் ஒட்டு மொத்தமாய் மகிழ்வோம் ! Fingers crossed - with a prayer on the lips too !!

டிசம்பரின் இதழ்கள் நவம்பர் 29-ல் கிளம்பிடுமா ? அல்லது 30-லா ? என்பது வர்ண பகவானின் கைகளில் உள்ளதால் - இப்போதைக்கு நான் வாயை விடத் தயாரில்லை ! 3 புக்ஸ் ஏற்கனவே பைண்டிங் முடிந்து காத்திருக்க, 320 பக்க குண்டுப்பையனான "இளம் டெக்ஸ்" தான் ரெடியாகிடணும் ! படிக்கும் போது 'தல' ரம்யம் தருகிறார் தான் - ஆனால் பணியாற்றும் போதோ, அந்த sheer number of pages பெண்டைக் கழற்றிட தவறுவதே இல்லை ! அதிலும் இம்முறை 62 பக்கங்கள் வீதம் 5 அத்தியாயங்கள் எனும் போது - பக்கங்களும், பணியும் முடிஞ்சா பாடில்லை ! ஒரிஜினல் வரிசையின்படி - நாமிப்போது வாசிக்கக் காத்துள்ளவை ஆல்பம்ஸ் 5 to 9 வரையிலான இதழ்களை ! 'சின்னவருக்கு' இன்னமும் ஒரு பின்னணி ; ஒரு கள உருவாக்கல் நிலையிலேயே நாமிருக்கிறோம் என்பதால் - பெரியவர் பாணியில், சலூனுக்குள் புகுந்தோமா ? முரட்டு பீஸ்களாய்ப் பார்த்து மூக்கோடேயே குத்தினோமா ? என்ற பாணிகள் இன்னமும் இங்கு உட்புகுந்திருக்கவில்லை ! Maybe பெருசுக்கும், சிறுசுக்கும் மத்தியினில் கதாசிரியர் போசெல்லி அவர்கள் காட்ட விரும்பிடும் நூலிழை வேற்றுமைகளின் ஒரு அங்கமாகக் கூட இது இருந்திடலாம் ! எனது ஆதங்கம் என்னவெனில், முரட்டு & மொக்க பீஸ்களுக்கு சுளுக்கெடுக்கும் படலங்கள் அரங்கேறிடும் வேளைகளில் வசனம் அதிகம் அவசியமாகிடாதென்பதே ! தெறிக்க விடும் பன்ச் ஏதாச்சும் சிக்கினாலே ஒரு எட்டுப்பத்துப் பக்கங்களை ஜிலோவென்று தாண்டி விட இயலும் எனக்கு ! ஆனால் இங்கே still very much a hero in progress என்பதால் டயலாக்ஸ் ஏகம் ! So நமது தமிழாசிரியர் அவர்கள் proof reading செய்து தர, நான் இறுதி எடிட்டிங்கை நிறைவுறச் செய்திட - என ஒன்றிரண்டு நாட்கள் கூடுதலாய் இழுத்து விட்டது ! இதற்கு முந்தைய அத்தனை ஆல்பங்களிலும் 'சின்னவர்' அடித்துள்ள சூப்பர் ஹிட்ஸ், இம்முறையும் தொடருமென்ற நம்பிக்கை எனக்குள் கணிசம் ! அடுத்த சில நாட்களில் பார்த்து விடலாமே !!

ரைட்டு...டிசம்பர் பிரிவியூஸ் ஆச்சு ; அவற்றைப் பற்றி மேலோட்டமாய்ப் பேசவும் செய்ஞ்சாச்சு ; இணைத்தடத்தில் FFS கதைகள் பற்றி சலசலக்கவும் செஞ்சாச்சு ! இந்தப் பதிவில் what next ? என்று யோசித்தேன் ! போன வாரத்து பாணியினில் அடுத்த புது வரவை அறிமுகம் செய்து வைக்கலாம் என்று தோன்றியது ! 'அதுவும் செர்தான் ; டேங்கோ தம்பியினை சபைக்கு அறிமுகம் செய்து வைக்கலாம் !' என்று தீர்மானித்த போது தான், இனிப்பு லட்டு, புளிப்பு லட்டு என்று உங்களை உசுப்பி விட்ட ஞாபகம் எழுந்தது ! மகளின் திருமணத்துக்கு பத்திரிகை தர வந்த நண்பன், கையோடு கொண்டு வந்திருந்த ஒரு டப்பி லட்டுக்கள் அதற்கு உதவியும் இருக்கலாம் தான் ! So ஒரு இனிப்பு லட்டு first ; டேங்கோ அறிமுகம் next !

ஒரு ருசியானது - தித்திப்பா ? அல்லது திகட்டலா ? என்பது அவரவர் நாவிற்கேற்ப மாறிடும் என்பதைப் புரிந்திடுவது பெரும் கஷ்டமே அல்ல தான் ; so தொடரவுள்ள அறிவிப்பானது அவரவரது ரசனைகளுக்கேற்பவே,  impact ஏற்படுத்திடும் என்பதை நான் நினைவில் இருத்தியாச்சு ! "திகட்டுது" அணியினராய் யாரெல்லாம் இருப்பர் ? என்பதைக் கூட யூகமும் பண்ணியாச்சு ! And அவர்களுக்கு ஒற்றை வேண்டுகோள் மாத்திரமே : ரொம்ப காலமாய் ; ரொம்ப ரொம்ப காலமாய் நண்பர்களின் ஒரு அணி (சிறுசோ - பெருசோ ; doesnt really make a difference !!) கோரி வருவதை நடைமுறை செய்திடும் வாய்ப்பாய் இதனைப் பார்த்துள்ளேன் ; so உங்களுக்குத் திகட்டலாய்த் தென்பட்டாலுமே, அந்த நண்பர்களின் மகிழ்வுக்கோசரம் சற்றே பொறுமை காத்திடக் கோரிடுவேன் ப்ளீஸ் ! "ஷப்பா....பீடிகையே கண்ணை கட்டுதே....மிடிலே !!" என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் அடுத்து ஏதாச்சும் bad words பக்கமாய்த் தாவிடும் முன்பாய் மேட்டருக்கு வந்து விடட்டுமா ? 

இமய மலையையே ABT பார்சல் சர்வீஸில் அடைத்து உங்களிடம் ஒப்படைத்தால் கூட, "ஹ்ம்ம்...பரவால்லே....ஆனா நான் ஒன்பதாப்பு படிக்கிறச்சே பரணிலே குந்தியபடிக்கே பஜ்ஜி சாப்டுட்டே படிச்ச அந்த கதை மெரி வருமா ?" என்று நண்பர்கள் அவ்வப்போது நோஸ்டால்ஜியா பயணங்களில் கிளம்பிடுவதில் இரகசியங்கள் கிடையாதே ? ஆனால் கொஞ்ச காலத்திற்குள் அவற்றுள் பெரும்பான்மை done & dusted என்பேன் ! 

  • "இரத்தப் படலம்" - துவையோ, துவையென்று துவைத்துத் தொங்கப் போட்டாச்சு !
  • "மும்மூர்த்திகள்" - அதே நிலவரமே !! புத்தக விழா audience நீங்கலாய் இவர்களுக்கென கொடிபிடிக்க நமது ஆக்டிவ் வாசகர்களின் மத்தியில் ஆட்கள் சொற்பம் !
  • "ஆர்ச்சி" - நீங்கள் ரெடியெனும் போதெல்லாம் ஞானும் ரெடி !
  • "ஸ்பைடர்" - நீங்க சொன்னா மட்டும் போதும் !!
  • "வேதாளன்" - இதோ ஜனவரியில் !!
  • "ரிப் கிர்பி" - இதோ ஏப்ரலில் !!
  • "மாண்ட்ரேக்" - இதோ ஜூலையில் !!
  • "காரிகன்" - இதோ அக்டொபரில் !!
  • "க்ளாஸிக் டெக்ஸ் கதைகள் / கலரில்" - இதோ புத்தாண்டினில் !

இதுவே நிலவரம் எனும் போது - "விங் கமாண்டர் ஜார்ஜ்  நஹியா ?" ; "சார்லீ நஹியா ?" ; இரட்டை வேட்டையர் இல்லியா ?" என்ற ரீதியிலான random வினவல்கள் மட்டுமே எஞ்சி இருக்கக்கூடும் ! 

ஆனால்...ஆனால்...ரொம்ப காலமாய் ; ரொம்பவே ரொம்ப காலமாய், தொங்கலில் இருந்து வருமொரு request - நமது கார்ட்டூன் ஜானர் சார்ந்தது ! "இன்றைய கார்ட்டூன் வறட்சிக்கான அருமருந்து ; இன்றைய  கொரோனாக் காலத்திலும் குஷி கொள்ளச் செய்யும் அதிசயம் !" என்றெல்லாம் ஒரு தொடர் அதன் அபிமானிகளால் சிலாகிக்கப்படுவது வழக்கம். இத்தனைக்கும் நாம் அந்தத் தொடரிலிருந்து வெறும் மூன்றே இதழ்களை வெளியிட்டுள்ளோம் ; அதுவும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னே ! சில மாதங்களுக்கு முன்பான நமது அரட்டைக் கச்சேரிகளில் கூட இந்தக் குட்டிப் பையன் + சுட்டிப் பெண் ஜோடி பற்றிய பேச்சு எழுந்திருந்தது & ஒரு குறிப்பிடும் அளவிலான நண்பர்கள் "முயற்சிக்கலாமே ?" என்று கோரிக்கை வைத்திருந்ததும்  நினைவுள்ளது ! FFS பணிகளின் அழுத்தம் கருதி பாக்கி  சமாச்சாரங்களைக் கொஞ்சமாய்ப் பின்சீட்டில் அமர்த்தியிருந்தேன் தான் ; ஆனால் மண்டைக்குள்ளிருந்து எவையுமே விலகியிருந்திருக்கவில்லை ! So நண்பர்களின் அந்த தொங்கல் கோரிக்கையினை நிஜமாக்கிப் பார்த்திடும் முனைப்பில் கொஞ்ச காலம் முன்னே மெது மெதுவாய்ப் பணிகளைத் துவக்கினேன் ! And அதன் பலனே நான் குறிப்பிட்ட இனிப்பு லட்டு # 1 !!

To cut a longish story short, நண்பர்களின் அபிமான "சுஸ்கி & விஸ்கி" மறுக்கா நம் மத்தியினில் வலம் வரவுள்ளனர் - 2022 முதலாய் !! And அவர்களது முதல் இதழாய் காத்திருப்பது ஒரு டபுள் ஆல்பம் ! And அந்த டபுள் ஆல்பத்தில் காத்திருப்பதோ - நீங்கள் பஜ்ஜி சாப்பிட்டபடியே படித்த 2 இதழ்கள் ! And அவற்றிற்கு  "பயங்கரப் பயணம்" & "ராஜா ராணி..ஜாக்கி...!!" என்று அந்நாட்களில் பெயர் ! 



Yes dudes - சேகரிப்பாளர்கள் மத்தியில் செம டிமாண்டான  நமது அந்நாட்களது இந்த மினி-லயன் இதழ்கள் - முழு வண்ணத்தில் ; ஆர்ட் பேப்பரில் ; லக்கி லூக் சைசில் ; ஹார்ட் கவர் ஆல்பமாய், செம ஸ்டைலிஷாக வந்திடவுள்ளன - 2022-ன் வாகான பொழுதினில் ! எப்போது ? என்ன விலையில் ? என்பதையெல்லாம் ஒரு சாவகாசப் புத்தாண்டின் பொழுதினில் சொல்கிறேனே ? 

இவை மறுபதிப்புகளாய் இருந்தாலுமே, நண்பர்களின் பெரும்பான்மை இதனை வாசித்திருக்க வாய்ப்புகள் சொற்பம் என்பதே எனது யூகம் ! நம்மிடமே ஒரேயொரு பிரதி பீரோவுக்குள் அடியில் உறங்கிக் கிடப்பதால், hardcore சேகரிப்பாளர்கள் நீங்கலாய் பாக்கிப் பேரிடம் இவை இருக்கும் வாய்ப்புகள் குறைச்சலே என்றே நினைக்கிறேன் ! Anyways அந்நாட்களில் சாணித் தாளில், சின்ன சைசில், இரு வண்ணத்தில் வாசித்ததை இன்றைக்கு உயர் தரத்தில், முழுவண்ணத்தில் வாசிப்பதென்பது முற்றிலும் வேறொரு லெவல் அனுபவமாய் இருக்கக் கூடும் என்பதால் - ஏற்கனவே வாசித்துள்ளோருக்குமே காத்திருக்கும் இந்த "லயன் லைப்ரரி" பதிப்பு ரசிக்காது போகாதென்பேன் ! Fingers crossed again !

உரிமைகளுக்கெனப் பேசிய போது - "எக்கச்சக்கக் கதைகள் கொண்ட தொடரிது  - so புது யுகக் கதைகளாய்த் தேர்வு செய்திடலாமே ? தொடரின் துவக்க காலத்து ஆல்பங்களாய்த் தேர்வு செய்வானேன் ?" என்று படைப்பாளிகள் வினவினர் ! ஆனால் நாம் என்ன மாதிரியான நோஸ்டால்ஜியா பிரியர்கள் என்பதை விளக்கிச் சொல்லி விட்டு, "to start with - பெட்ரோமேக்ஸ் லைட்டே குடுங்க ப்ளீஸ் ; போகப் போக LED ; போகஸ் லைட் என்றெல்லாம் வாங்கிக்கொள்கிறோம் !" என்று சொன்னேன் ! இவை முழுக்கவே கார்ட்டூன் ; ஜாலி கதை ஜானர் எனும் போது தொடரினில் முன்னுள்ள கதைகளுக்கும், பின்னுள்ளவைக்கும் பெரிதாய் content-ல் மாற்றம் இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை ! And பல ஐரோப்பியப் படைப்புகளில், அந்நாட்களின் ஒரிஜினல் பிதாமகர்களின் படைப்புத் திறனை இன்றைய யுகக் கதாசிரியர்கள் எட்டிப் பிடிக்கத் தடுமாறுவதைப் பார்த்துள்ளோம் ! So கார்ட்டூன்களில், old is a golden option என்று தீர்மானித்தேன் ! எது எப்படியோ - பரிச்சயமான இந்த ஆல்பங்களைப் பார்த்து, ரசித்த பிற்பாடு, தொடரின் புதுக் கதைகள் பக்கமாய் நுழைய நீங்கள் இசைவு சொல்லின் சூப்பர் ! இப்போதைக்கு பந்து உங்களின் தரப்பினில் கார்ட்டூன் காதலர்களே ! So பார்த்து கரை சேர்த்து விடுங்கோ ப்ளீஸ் ! 

And லயன் லைப்ரரியின் லேபிலில் வரவுள்ள இந்த இதழுக்கும் முன்பதிவெல்லாம் அவசியமாகிடாது ! ஏதேனுமொரு புத்தக விழாவின் போதோ - நமது ஆன்லைன் புத்தக விழாவிலோ வெளியாகிடும் & வேண்டுவோர், நிதானமாய் வாங்கிக் கொள்ளலாம் ! என்ன - கார்ட்டூன் ஜானர் எனும் போது ஒரு டெக்ஸ் வில்லர் அளவுக்கோ ; ஒரு ஆக்ஷன் கதையின் அளவுக்கோ நமது பிரிண்ட்ரன் இருந்திடாது தான் ; but கார்ட்டூன் ரசிகர்கள் திடீரென ஆவேசப்பட்டாலொழிய, ஸ்டாக் டப்பென்று காலியாகிடாது தான் ! So ஆராம் சே !

ஆச்சு ! பெரிய லட்டு என்னவென்பதைச் சொல்லியாச்சு ! And குட்டி லட்டு என்னவென்பதைத் தொடரும் பதிவிலோ ; உபபதிவிலோ பார்த்துக் கொள்ளலாம் ! So FFS இதழின் புதியவர்களுள் ஒருவரான டேங்கோ பக்கமாய்ப் பார்வைகளை ஓட விடுவோமா இனி ?

TANGO !! நான்கு ஆண்டுகளுக்கு முன்பாய் உருவாக்கப்பட்டு, இப்போதும் தொடர்ந்து வரும் இந்த ஆக்ஷன் தொடரின் நாயகர் ஒரு போலீஸ்காரரோ ; டிடெக்டிவோ ; சீக்ரெட் ஏஜெண்டோ கிடையாது !  யார் கண்ணிலும் படாது ஓரமாய் ; தூரமாய் விலகி வாழ நினைத்திடும் ஒரு வித்தியாசமான மனுஷன் ! பதுங்கிட அவர் தேர்வு செய்வதோ தென்னமெரிக்காவில் பொலிவியாவில் எனும் போது - மூச்சிரைக்கச் செய்யும் அந்த தேசத்தின் பாலைப்பரப்புகளின் நடுவே ஒரு அனல் பறக்கும் ஆக்ஷன் மேளா அரங்கேறுகிறது ! செம ஓட்டமெடுக்கும் கதையின் மத்தியில் - ஓவியரும், கலரிங் ஆர்டிஸ்ட்டுமே ரவுண்டு கட்டி அடித்துள்ளனர் ! So சம அளவு  சிலாகிப்புக்கு அவர்களும் உரியோர்களே ! இதுவரையிலும் நாம் பார்த்திரா ஒரு புது மண்ணில் ஓடுமிந்தக் கதையின் நிறைய பகுதிகளில், நாயகர் தானாகவே மனசுக்குள் பேசிக்கொள்ளும் விதமாய் வரிகளை அமைத்துள்ளார் கதாசிரியர் ! So அவையெல்லாம் நான் போட்ட எக்ஸ்டரா நம்பர்களோ ? என்ற சந்தேகங்களின்றி படிக்கலாம் ! And சமீபத்தில் செய்த பணிகளுள் ரொம்பவே சுவாரஸ்யத்தை உருவாக்கிய ஆல்பம் இது என்பதால் - உங்களின் வாசிப்பு அனுபவங்கள் பற்றியறிய ஜனவரியில் காத்திருப்பேன் ! 

உட்பக்க பிரிவியூ நாளை பகலில் upload செய்கிறேன் !

கிளம்பும் முன்பாய், FFS முன்பதிவு / சந்தாக்கள் பற்றிய நினைவூட்டல் guys !! And "சந்தா செலுத்தியாச்சு ; ஆனால் இன்னமும் போட்டோ அனுப்ப நேரமில்லை !" நண்பர்களுமே - ஜல்தி ப்ளீஸ் !! டிசம்பரின் முதல் வாரத்துக்குள் எல்லா அச்சுப் பணிகளையும் நிறைவு செய்திருப்போம் ; so அழகுக்கு அழகு சேர்க்க உங்களின் "வதனப் படங்களை" விரைந்து அனுப்புங்கள் all !! 

ப்ளூகோட் பட்டாளத்துடன் லூட்டி செய்ய இப்போது கிளம்புகிறேன் ; see you around all ! Bye for now !!

P.S : வாரயிறுதிக்குக் கொஞ்சம் வேலைகள் காத்திருப்பதால் - பதிவு ஒரு நாள் முன்பாகவே !! 

339 comments:

  1. மீ the first டீ ஆத்திங் !!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா.. சுஸ்கி விஸ்கி சூப்பரான அறிவிப்பு சார். ஹேப்பி..

      Delete
    2. Edi Sir..இது போங்கு ஆட்டம்..
      நீங்களே me first போடறது..

      ஒருவேளை சுஸ்கி&விஸ்கி வர்றாங்க அப்படின்ன உடனே ஆர்வத்துல me first போட்டுட்டிங்களோ..

      Delete
  2. சுஸ்கி விஸ்கி மறுபதிப்பு தகவலைக் கேட்டதில் மிகுந்த ஆனந்தமாக உள்ளது👍👍👍👍👍

    ReplyDelete
  3. வாசகர்களின் ஆவலை இயன்ற பொழுதெல்லாம் நிறைவேற்றும், இப்படியொரு ஆசிரியர் எங்களுக்குக் கிடைத்துருப்பது நாங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  4. அப்படியே ஜான் மாஸ்டரையும் மைண்ட்ல வச்சுக்குங்க சார். நேரம் வரும்பொழுதுமறுபடி கூட்டிவாருங்கள்.கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  5. ஹைய்யா புதிய பதிவு!!!

    ReplyDelete
  6. முதன்முறையாக பத்துக்குள்ளே

    ReplyDelete
  7. சுஸ்கி விஸ்கி கு காத்திருக்கிறேன்

    ReplyDelete
  8. அட...

    சுஸ்கி -விஸ்கியா.?

    ஆச்சர்யக்குறி.!

    ReplyDelete
  9. மிக மிக நன்றிகள் ஆசிரியரே சுஸ்கி & விஸ்கி யை திரும்ப கொண்டு வந்ததற்க்கு எனக்கென்னவோ காமிக்ஸ் பொற்காலம் மீண்டும் வந்து விட்டதாக தோன்றுகிறது உங்களை பாரட்ட வார்த்தைகளே இல்லை ஆசிரியரே என்னை போன்ற பழைமை விரும்பிகளையும் திருப்திப்படுத்த உங்களால் ஆன எல்லா முயற்ச்சிகளும் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் காமிக்ஸ் கடவுள் நீங்கள்

    ReplyDelete
  10. Welcome சுஸ்கி விஸ்கி

    ReplyDelete
    Replies
    1. நன்றி எடிட்டர் சார்

      Delete
    2. ரெம்ப நாளாச்சு படிச்சு...

      இருக்கா இல்லையான்னே தெரியாத நாஸ்டால்ஜியா

      Delete
  11. சார் இந்த லட்டை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை .. நீங்கள் சரியாக கூறியது போல படித்ததும் இல்லை கையில் புத்தகமும் இல்லை. செம் டிமெண்ட் ஆன புத்தகம் வேறு.

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சி .. எப்பொழுது வரும் என்ற ஆவலுடன் காத்திருப்பு தொடர்கிறது

    ReplyDelete
  12. ஒன்றுக்கு இரண்டு கார லட்டுகளின் அறிவிப்பு எப்போது சார். அப்படியே கிராபிக் நாவல்களை புத்தக விழாக்களிலோ, ஸ்பெசல் வெளியீடுகளாகவோ 2022ல் வலம் வர செய்வதாக கூறியதையும் நினைவூட்டுகிறேன் சார்.

    ReplyDelete
  13. ஆஹா .. சுஸ்கி..விஸ்கி.. நான் படித்த முதல் காமிக்ஸே பேரிக்காய் தோட்டம் தான். அதுவும் ஒரு நாளில் மறுபதிப்பாக வரும் என்ற நினைப்பே ஜாலியாக இருக்கிறது.

    ReplyDelete
  14. ஆஹா அட்டகாசமான அறிவிப்பு. 2022 ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதே.

    ReplyDelete
  15. // நாம் என்ன மாதிரியான நோஸ்டால்ஜியா பிரியர்கள் என்பதை விளக்கிச் சொல்லி விட்டு, "to start with - பெட்ரோமேக்ஸ் லைட்டே குடுங்க ப்ளீஸ் ; போகப் போக LED ; போகஸ் லைட் என்றெல்லாம் வாங்கிக்கொள்கிறோம் !" //

    ஹா ஹா செம சிரிப்பு சிரிப்பை வரவளைப்பதாக உள்ளது. :-)

    ReplyDelete
  16. சுஸ்கி-விஸ்கி பயங்கர பயணம் படித்ததாக ஞாபகம் உள்ளது. வரவேற்கிறேன் இந்த கார்டூன் தொடரை. மகிழ்ச்சி.

    ReplyDelete
  17. புக்ஸ் மட்டுமல்ல ப்லோக் கூட ஒரு நாள் முன்னதாக வந்துட்டு

    ReplyDelete
  18. சுஸ்கி & விஸ்கி" மறுக்கா நம் மத்தியினில் வலம் வரவுள்ளனர் - 2022 வருக!வருக!

    ReplyDelete
  19. வரட்டும் வரட்டும்....

    ReplyDelete
  20. // "சுஸ்கி & விஸ்கி" மறுக்கா நம் மத்தியினில் வலம் வரவுள்ளனர் - 2022 முதலாய் !! And அவர்களது முதல் இதழாய் காத்திருப்பது ஒரு டபுள் ஆல்பம் ! And அந்த டபுள் ஆல்பத்தில் காத்திருப்பதோ - நீங்கள் பஜ்ஜி சாப்பிட்டபடியே படித்த 2 இதழ்கள் ! And அவற்றிற்கு "பயங்கரப் பயணம்" & "ராஜா ராணி..ஜாக்கி...!!" என்று அந்நாட்களில் பெயர் !///

    ---யாஹீ..ஹீ...ஹீ... என்நெடுநாள் கனவு இதழ்களான சுஸ்கிவிஸ்கி வருவது இன்ப அதிர்ச்சி😍😍😍😍

    நிஜமாகவே 50 வது ஆண்டு லட்டுகளுடனான பயணந்தான்....

    இன்னும் என்னென்ன லட்டுஸ் வெயிட்டிங்கோ?????

    2வது புக்கில பேரிக்காய் போராட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சார்!!!!!

    ReplyDelete
  21. /// நண்பர்களின் அபிமான "சுஸ்கி & விஸ்கி" மறுக்கா நம் மத்தியினில் வலம் வரவுள்ளனர் - 2022 முதலாய் !! And அவர்களது முதல் இதழாய் காத்திருப்பது ஒரு டபுள் ஆல்பம் ! And அந்த டபுள் ஆல்பத்தில் காத்திருப்பதோ - நீங்கள் பஜ்ஜி சாப்பிட்டபடியே படித்த 2 இதழ்கள் ! And அவற்றிற்கு "பயங்கரப் பயணம்" & "ராஜா ராணி..ஜாக்கி...!!" என்று அந்நாட்களில் பெயர் ! ///

    ReplyDelete
    Replies
    1. அடுத்து பேரிக்காய் போராட்டம்

      Delete
    2. இத்தோட சேர்த்து மொத்தம் கார்ட்டூன் எவ்ளோ kok ? 2022க்கு ?

      எடிட்டர் சார்

      கார்ட்டூன் என்பதற்காகவே வாங்குவேன் சார் - அந்நாளைய favourite-ம் கூட !

      Delete
  22. அப்படியே சார்ஜண்ட் தாமஸ் கதைகள் கூட ஓரு பிட்டு ஓட்டலாங் சார்...!!!

    வேல்டு வார் கதைகள்ல ரொம்பவே டாப்பிளாஸ் தாமஸ்வருபவை...!!!

    ReplyDelete
  23. சுஸ்கி விஸ்கி

    என் ஆதர்ஸ நாயகர்கள் என் சிறுவயதில்
    வர வேற்கிறேன் ..

    அப்படியே அந்த பேரிக்காய் தலையர்களும் .. சிறு வ.யதில் டிவி இல்லாத அந்தகாலகட்டங்களில்

    பெருவாரியான விருப்பம் இந்த மினிலயனின் பேரிக்காய் போராட்டக்கதயே ..

    விரைவில் எதிர்பார்க்கிறேன் டியர் எடி .. 😍😍

    ReplyDelete
  24. 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀 எடிட்டர் சார் வாய்ப்பே இல்லை என்று சொன்னால் கண்டிப்பாக அந்த புக் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது🤣

    ஆனால் மிக மிக மகிழ்ச்சியான செய்தி,

    அருமையான கருத்துக்களை நகைச்சுவையுடன் கூறும் தரமான காமிக்ஸ் மேலும் புதிய கதைகள் நிறைய உள்ளன, எனவே கார்ட்டூன் பிரளயத்தை எதிர்பார்க்கலாம் 👌👌👌💐💐💐💐💐💐💐

    இத்தளத்தில் நான் நீண்ட நாள் கேட்ட மற்றும் எதிர்பார்த்த செய்தி,

    நிச்சயம் இத்தேர்விற்காக சந்தோசப்படுவீர்கள் Sir, காமிக்ஸ் வாசகர்கள் மட்டுமல்ல அவரவர் வீட்டு குழந்தைகளும் படிக்க தரமான அருமையான Cartoon தொடர் ரெடி

    கேட்டது சிறிய குழுவே என்றாலும் அதை நினைவில் கொண்டு முயற்சி செய்து வெளியிட முயற்சி எடுத்த ஆசிரியருக்கு கோடி நன்றிகள்.

    Thank you very much sir

    ReplyDelete
    Replies
    1. ///எடிட்டர் சார் வாய்ப்பே இல்லை என்று சொன்னால் கண்டிப்பாக அந்த புக் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது///

      அப்படியே 'அங்கிள் ஸ்க்ரூஜ்', 'ஆஸ்ட்டிக்ஸ் & ஓப்லிக்ஸ்', 'டின்டின்' - இதுக்கெல்லாம் கூட சுத்தமா வாய்ப்பே இல்லாமப் போகணும்! 'வாய்ப்பே இல்லை'ன்னு எடிட்டர் வாயால் சொல்லிக் கேட்கணும்!

      Delete
    2. விஜய் @ எடிட்டர் கார்டூன் ஸ்பெஷல் வாய்ப்பே இல்லை என சொன்னதாக ஞாபகம் :-)

      Delete
    3. வாய்ப்பே இல்ல ராஜா !!

      Delete
    4. அப்ப கன்பார்ம் :-)

      Delete
  25. கொஞ்ச நேரம் முன்பு தான் என்னுடைய ஆதங்கத்தை வாட்சப்பில் பதிவு செய்தேன்... உண்மையாகவே இது எனக்கு இன்ப அதிர்ச்சி தான் சார். 2022 முத்து லயன் காமிக்ஸ் கொண்டாட்ட வருஷம்... நமது காமிக்ஸ் மணம் பரப்ப எங்களால் முடிந்த வரை முயற்சி செய்வோம். We love you Vijayan Sir... Great news of the year...

    ReplyDelete
    Replies
    1. இப்ப இதுபோன்ற சர்ப்ரைஸ் அறிவிப்புகள்லாம் சந்தாவில் சேர்த்து வர இயலாது அல்லவா நண்பரே...

      வருட ஆரம்பத்திலயே எல்லாத்தையும் அறிவித்துடனும்; நடுவே எதுவும் சேர்த்த கூடாதுனா??? இதெல்லாம் எப்படி பார்க்க!!!!

      நமக்கு பிடிச்சதும் வரணும்னா சில ரூல்ஸ்லாம் பாலோ பண்ணமுடியாது என்பதே நிதர்சனம்....!!!

      இத்தனை புக்தான் வரணும்; இத்தனை காசுக்குதான் காமிக்ஸ் பட்ஜெட் இருக்கணும் என்பதெலாம் நடைமுறையில் சாத்தியமற்றது...!!!

      Delete
    2. ///கொஞ்ச நேரம் முன்பு தான் என்னுடைய ஆதங்கத்தை வாட்சப்பில் பதிவு செய்தேன்... உண்மையாகவே இது எனக்கு இன்ப அதிர்ச்சி தான் சார்.///

      அடிக்கடி பதிவு பண்ணுங்க ப்ரோ!

      Delete
    3. நீங்கள் பதிவிட்ட ஆதங்கம் என்னவென்று தெரியாது நண்பரே ; ஆனால் STV -ன் அடுத்த பின்னூட்டத்திலிருந்து ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது !

      சிம்பிளாக இப்படிப் பாருங்களேன் : ஒரு பதிப்பகமானது ஆண்டினில் எத்தனை இதழ்களை வெளியிடுவதென்ற வரைமுறையினை எங்கேனும் கொண்டுள்ளதா ? அல்லது வாசகர்கள் தான் அவற்றிற்கு வரைமுறைகள் விதித்திடுவார்களா ? சென்னைப் புத்தகத் திருவிழாவில் நாம் தான் பார்க்கிறோமே - ஒவ்வொரு பிரசுரமும் எத்தனை நூறு வெளியீடுகளைத் தாங்கி அமர்ந்திருக்கின்றனவென்பதை ? ஐம்பதாண்டுகளைத் தொடவுள்ள நம்மையும் அவர்களுள் ஒருவராய்ப் பாருங்களேன் - சிக்கல் தீர்ந்து விடும் !

      Delete
    4. //நீங்கள் பதிவிட்ட ஆதங்கம் என்னவென்று தெரியாது நண்பரே ; ஆனால் STV -ன் அடுத்த பின்னூட்டத்திலிருந்து ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது !//

      மற்றவர்களின் புறம்கூறும் கூற்றை வைத்து என் கருத்தினை தவறாக எண்ணிடல் வேண்டாம் சார். நீங்கள் சொல்லாத...உங்கள் இடத்தினில் இருந்து சக வாசகர்களை "முடிந்தால், இஷ்டமிருந்தால் காமிக்ஸ் வாங்கிக்கோ" என்று தரும் கொடுக்காத அதிகாரத்தை ஒருவர் எடுத்துகொண்டு சொல்லும் போது அதனை நீங்கள் சொல்ல வேண்டாம், ஆசிரியர் சொல்லட்டும் என்பதனை எவ்வளவு நாகரீமாக விளக்க சொல்ல முடியுமோ அப்படி சொன்னேன். அதற்கு தான் போலி ஐடியில் வந்தவர் இந்த அக்கப்போர் செய்கிறார் .

      மேலும் நாம் சுஸ்கி விஸ்கி கேட்டது நடக்க இன்னும் 3, 4 வருஷம் ஆகும் போல என்று குறிப்பிட்டேன்.
      அதனை மட்டுமே இங்கே சொன்னேன். வாட்சப் குரூப்களில் யார் என்னை புறம்பேசி என்னை காமிக்ஸ் விரோதியாக சித்திரத்தாலும் எனக்கு கவலையில்லை சார்... நான் உங்களிடத்தில் எப்படி நடந்து கொண்டுள்ளேன் என்று உங்களுக்கு என்னை தெரியும் என்ற நம்பிக்கையில் தான் நான் இருக்கிறேன்.

      சந்தாவை பற்றிய என் Straight Forward கருத்து இது தான் சார்,

      இருக்குறவரைக்கும் எல்லோருக்கும் என்பதல்ல சமத்துவம்.
      இருக்கிறது எல்லோருக்கும் என்பதே சமத்துவம்.
      காமிக்ஸ் பற்றி சிலர் தவறாக புரிதல் கொடுள்ளனர்.
      எல்லாருக்கும் காமிக்ஸ் என்கிற வகையில் சந்தா இருத்தல் அவசியம். இன்றைக்கும் காமிக்ஸ் பால் அதீத நேசம் வைக்கும் மக்களுக்கு காமிக்ஸ் போய் சேராவிடில் என்ன பயன்? காசிருந்தா காமிக்ஸ் வாங்கு, இலேன்னா உன்னால முடிஞ்ச காமிக்ஸ் மட்டும் வாங்கிக்கோ என்று சில வாசகர்கள் சொல்வது அபத்தமாகப் படுகிறது.
      எல்லாருக்கும் எட்டிடாத வகையில் வருட சந்தா Rs.8000+ வருத்தம் அளிக்கிறது.
      தமிழ் காமிக்ஸ் வட்டத்தில் கண்டிப்பா சமத்துவம் பார்த்து தான் ஆக வேண்டும், அப்பறம் ஏன் blog, ஹாட் லைன், பேமிலி போன்ற வட்டம் என்றே எல்லாம்?

      I meant this for our family attached Comic books

      #comicsforall

      பின்குறிப்பு: And by the way இன்றிரவு சுஸ்கி விஸ்கி அறிவிப்பு என்ன பட்ஜெட் ஆனாலும் என்ன? என்று தான்
      மகிழ்ச்சி பொங்க வைத்துள்ளது..."

      "லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வாசகர் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆசிரியருக்கு நிகர் ஆசிரியரே💐" இதனையும் வாட்ஸப்பில் நேற்றிரவு பதிவு செய்தேன்... அதெல்லாம் உங்கள் பார்வைக்கு கொண் டு வராதவர்கள் தான் ஏதேனும் சில மாற்று கருத்து சொல்லும் போது உங்களுடைய WELL WISHERS ஐ அவதூறு செய்து தங்களுக்கு நல்ல பேர் உண்டாக்கி கொள்ள நினைக்கிறார்கள். அதற்கு பிறகு எல்லாம் உங்கள் விருப்பம்.

      Delete
    5. நண்பர் உதய் 

      எடிட்டர் விஜயனின் பணி கம்பி மேல் நடப்பது போன்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். எல்லோருக்கும் காமிக்ஸ் சென்றடையவேண்டும் என்றளவில் பட்ஜெட் இருக்கவென்றும் என்றால் ஒரு பேச்சுக்கு 4000 என்று வைத்துக்கொள்வோம். வாசிக்கின்ற 1000-1500 பேர் சந்தா செலுத்தினால் அவருக்கு உகப்பாய் இருக்கும். நமது இதழ்கள் முன்பு (golden 80s) போல 15000-20000 என்றெல்லாம் விற்றால் இந்த சந்தா சார்ந்த வரவு மட்டுமே அவருக்கு போதுமான இருந்திருக்கும்.

      * 550+ தாண்டி சந்தாக்கள் செல்வதில்லையே?
      * அப்போது மற்றொரு சாரார் சந்தவினில் இல்லாதோர் இந்தப் புத்தகத்தை மட்டும் தான் வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாதே அவரால்?

      மற்றபடி அவரும் அவர் சார்ந்த அச்சக நண்பர்களுக்காக லாபம் காண வேண்டுமே? லயன் லைப்ரரி, மாயாவி, மாண்ட்ரேக் முயற்சிகள் அல்லாமல் அவரால் எப்படி குறைந்த பட்ச லாபம் ஈட்ட முடியும் என்று சிந்தியுங்களேன் - அதுவும் அவரது பிரதான தொழிலான printing machine இறக்குமதி வகை சார்ந்த வியாபாரம் இந்த pandemic காலத்தில் எப்படி இருக்கக்கூடும் என்று உணர முடியும்தானே?

      இத்தனைக்கும் 700 முதல் 1000 ரூபாய்க்கு ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் விற்கும் Franco-belgian ஆல்பங்களை அவர் 800-1000 பேருக்காக 90 ரூபாய் விலையினில் பதிப்பிக்கும் பின் உள்ள மெனக்கெடலே முடிந்தவரை அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற வேட்கையிலேயே நண்பரே!

      நம்மால் முடிந்த ஒரு உதவியாய் சில நண்பர்களுக்கும் சில நூலகங்களுக்கு ஒரு சந்தாவோ சில குறிப்பிட்ட புத்தகங்கள் அளிக்க முடிந்தால் ஓரளவு அனைவரையும் சென்றடையும் முயற்சியினில் அணிற்பிள்ளை போல ஒரு சிறு பங்கு ஆற்றியிருப்போம் !

      Delete
    6. எனக்கொரு விஷயம் மட்டும் புரியலை நண்பரே ! 'சமத்துவம்' ; "கட்டுப்படியாகும் பட்ஜெட்" ; "இது போடலாம் - போடலாகாது" என்பனவற்றை நிர்ணயம் செய்யக்கூடியது யாராக இருந்திட இயலும் ?

      ஆப்ஷன்ஸ் தருகிறேனே :

      A.வங்கியில் ஏழிலக்கங்களில் கடன் வாங்கி விட்டு அதற்குப் பதிலும் பொறுப்புமாய் இருக்க வேண்டியவன் ?

      B.ஒன்றுக்கு இரண்டாய்க் கிட்டங்கிகள்; அவற்றினில் கணிசமோ கணிசமாய் ஸ்டாக் வைத்திருப்பவன் ?

      C.ஒரு தினத்தின் 18 மணி நேரங்களை இந்த பொம்ம புக்குகளோடே செலவிடுபவன் ?

      D.ஓட உடம்பிலும் மனதிலும் தெம்பிருக்கும் வரைக்கும் இயன்றதைச் செய்திட எண்ணுபவன் ?

      E.நினைவு தெரிந்த நாள் முதலாய் இதனில் பொழுதுகளை நகர்த்தியவன் ?

      F.குறைந்தபட்ச நிர்வாகச் செலவுகள் என்ன ? எவ்வளவு வியாபாரம் நடந்தால் அவை ஓடி அடையும் ? கொரோனா காலங்களில் மட்டுப்பட்டுள்ள விற்பனை என்ன ? எகிறியுள்ள செலவினங்கள் என்ன ? அவற்றினை சமாளிக்க என்ன அவசியம் ? என்பனவற்றை அறிந்திருப்பவன் ?

      G.இவர்களுள் அல்லாதோர் ?

      Don't think it's going to be a toughie to answer !!

      *கதைகளை விமர்சிக்கிறீர்களா ? Sure...! *கதைத் தேர்வுகளை விமர்சிக்கிறீர்களா ? தாராளமாய் !
      *விலைகளை கூடுதல் என்கிறீர்களா ? Why not ?!

      ஆனால் எனது வியாபார மாடல் என்னதாக இருந்து விட்டுப் போகட்டுமே ?


      Delete
  26. Replies
    1. நண்பர்களே! இன்னும் கொரோனா ஓய்ந்தபாடில்லை! என் உறவினர் ஒருவருக்கு உடல் சரியில்லை என கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனைக்கு போயிருந்தேன்! இன்னமுமே கொரானா நோயாளிகள் கணிசமாகவே இருக்கின்றனர்! எனக்குமே லேசான அறிகுறிகள் தெரிகின்றன! 4 நாட்களாய் ஓய்வில் இருக்கிறேன்!

      இது இப்போதைக்கு ஓயாது போலும்!

      அஜாக்கிரதை வேண்டாம்! கவனமாய் இருங்கள் நண்பர்களே!!

      Delete
    2. அட டா... டேக்கேர் மிதுனரே!

      Delete
    3. கவனமாக இருங்கள் மிதுன்.

      Delete
    4. கவனமாக இருங்கள் நண்பரே! விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.

      Delete
    5. get well soon Mithun! பாஸிட்டிவ் எண்ணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதுன்னு ஆராய்ச்சில கண்டு பிடிச்சிருக்காங்க. அப்படியாப்பட்ட பாஸிடிவ் எண்ணங்களை ஏகத்துக்கும் எகிறச் செய்ய 'அதிகாரியின்' சாகஸங்களைப் படியுங்கள்! :)

      Delete
    6. //அஜாக்கிரதை வேண்டாம்! கவனமாய் இருங்கள் நண்பர்களே!!//

      Very true !

      ஐரோப்பா வாங்கி வரும் தர்ம அடிகளே அதற்கு சாட்சி ! ஜெர்மனியில் மட்டுமே நாளொன்றுக்கு 78000 கேஸ்கள் !! இத்தனைக்கும் அவர்கள் கிட்டத்தட்ட 75 % தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் !! And புதுசாய் தென்னாப்பிரிக்காவில் இன்னொரு பூதம் கிளம்பியுள்ளதாய்ப் புளியை கரைக்கிறார்கள் !! கவனம் guys !!

      Delete
    7. விரைவில் நலம் பெற இறையருளை வேண்டுகின்றேன் மிதுன் ப்ரோ.

      Delete
    8. மீண்டு வாருங்கள் மிதுன்..

      என்னுடைய வேண்டுதல்களும்...

      Delete
  27. 1.ஜான் மாஸ்டர்

    2.ஜார்ஜ்& ட்ரேக்

    3.நார்மன்

    4.ஹெர்குலஸ்

    5.அயர்ன் ஸ்டெட்-சாகஸ்தலைவி நாயகி

    6.சாம்ஸன்-மந்திர ராணி ஹீரோ


    அடுத்து இவர்களில் யாருக்கு லக் அடிக்கும்??????

    ReplyDelete
    Replies
    1. விங் கமாண்டர் ஜார்ஜ், சார்லி இவர்கள் இரண்டு பேரும் King Features இடமே இருக்கிறார்கள். எனவே எனது ஓட்டு இவர்களுக்கு தான். இப்போது இவர்களிடம் இருந்து தான் நாம் Smashing 70's வாங்கி இருக்கிறோம்.

      Delete
    2. தெய்வம்ஸ்.....பழம் ஆராய்ச்சிகளுக்குள் முழு மூச்சாய் இறங்கிடாதீங்கோ ப்ளீஸ் ! பயணம் முன்செல்வதாகவே இருக்கட்டும் ; ஏதேனும் ஒரு தோப்பில் வண்டியை நிறுத்திப் புளிசாதத்தையும், தயிர்சாதத்தையும் உள்ளே தள்ளும் வேளைகளில் தொட்டுக்க ஊறுகாய்களாய் அந்த நோஸ்டால்ஜியா நாயக / நாயகியரைப் பயன்படுத்திக் கொள்வோம் !

      Delete
    3. // பயணம் முன்செல்வதாகவே இருக்கட்டும் ; ஏதேனும் ஒரு தோப்பில் வண்டியை நிறுத்திப் புளிசாதத்தையும், தயிர்சாதத்தையும் உள்ளே தள்ளும் வேளைகளில் தொட்டுக்க ஊறுகாய்களாய் அந்த நோஸ்டால்ஜியா நாயக / நாயகியரைப் பயன்படுத்திக் கொள்வோம் ! //

      Agreed. +1

      Delete
  28. ஸ்பைடர் வருகை அடுத்த லட்டு எல்லாவற்றிலும் டாப். சுஸ்கி விஸ்கி வெற்றி பெற்று தடையில்லாமல் தொடர வாழ்த்துகிறோம் சார்.

    ReplyDelete
  29. அன்பு ஆசிரியருக்கு...
    அருமை ஸ்நேகங்களுக்கு...

    என்ன சார், பதிவுக்கு பதிவு சும்மா ஜிவ்வுனு பறக்க வைக்கறீங்க?.
    அதிலும் இந்த பதிவு 85க்கே கொண்டு போய்ட்டீங்க அந்த பேரா முடியும் வரை,
    "சுஸ்கி விஸ்கி" திரும்ப வராதா என தவம் கிடந்தவர்கள் ஏராளம்.
    அந்த குறையை போக்கிட்டீங்க.
    அருமை.லயன் லைப்ரரி அமரக்களப்படப் போகிறது. தொடர்ந்து அனைத்து மினி லயன் & ஜூனியர் லயன்களில் வந்த கதைகளையும் வெளியிட்டால் கூடுதல் மகிழ்வே.

    மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹

    ReplyDelete
    Replies
    1. ///"சுஸ்கி விஸ்கி" திரும்ப வராதா என தவம் கிடந்தவர்கள் ஏராளம்.
      அந்த குறையை போக்கிட்டீங்க.
      அருமை.லயன் லைப்ரரி அமரக்களப்படப் போகிறது.////

      உண்மை!

      Delete
    2. //லயன் லைப்ரரி அமரக்களப்படப் போகிறது//

      சாருக்கு ஒரு கிலோ சர்க்கரை பார்சல்லல்லல்ல !!

      Delete
    3. நீங்க தந்த அறிவிப்பு மகிழ்ச்சியில்,
      ஒன்று சொல்ல மறந்து விட்டது சார்.

      கடந்த 22 ம்தேதியில், 30 வது ஆண்டில் அடியெடுத்து வைத்த உங்களின் திருமண வாழ்க்கைக்கு காமிக்ஸ் வாசகர்கள் சார்பாக, மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் சார்.

      வாழ்த்த வயது உண்டா என தெரியவில்லை. இருப்பினும்,
      நீண்ட காலமாக எங்களை மகிழ்விக்கும் உங்களின் இல்லறம் மேன்மேலும் சிறந்து,
      நீண்ட காலம் நீங்களும்,உங்கள் குடும்பத்தாரும் நலமுடனும்,வளமுடனும் வாழ வேண்டுகிறேன்.
      💐💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐💐🌹💐🌹🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐💐🌹💐🌹💐🌹💐🌹🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐
      உங்களின் திருமண அழைப்பிதழை
      நண்பர் சேலம் டெக்ஸ் விஜயராகவரின் மூலமாக "கழுகு வேட்டை" என்ற இதழில் கண்டபோது, "அடடா இந்த தருணத்தில் நாம் காமிக்ஸ் விட்டு விலகி வந்ததை" நினைத்து சற்று பெருமூச்சு விட்டாலும்,
      வாழ்த்தி பதிவிட்டது மகிழ்வே.
      அதும் எங்க "கோவை மாப்பிள்ளை நீங்க" எனும்போது கூடுதல் மகிழ்வே.

      இந்த வாழ்த்தை பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
      நேற்று இருந்த சந்தோஷத்தில்
      இதை சற்று கவனத்தில் கொள்ளவில்லை.
      நன்றி 🙏.

      Delete
    4. :-) :-)

      நன்றிகள் நண்பரே !!

      Delete
  30. சுஸ்கி விஸ்கி முழுவண்ண கார்ட்டூனுக்கு ஜே!

    ReplyDelete
  31. ஆனால் சார் அந்த 4 வது லட்டு+ காரலட்டு பற்றிய அறிவிப்புகளை இந்த பதிவில் எதிர் பார்த்தேன்.அந்த சஸ்பென்ஸை நீட்டிக்கொண்டே போய்,ஆவலை எகிற வைக்கிறீர்கள்.ப்ளீஸ் நாளையாவது சொல்லுங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. இனிப்பின் சுவை நாவில் கொஞ்ச காலம் தங்கியிருக்கட்டும் நண்பரே ; அப்பாலிக்கா காரம் பக்கமாய்ப் போகலாம் !

      Delete
  32. மீண்டும் 80 களின் வசந்த காலம்..வருக.. வருகவே...

    ReplyDelete
  33. அருமையான அறிவிப்பு சார். அடுத்த தலைமுறை கார்ட்டூன் கதைகளை ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நிறைய வெளிவந்து வெற்றியடைய வாழ்த்துகள்..

    ஒரு கோரிக்கை/விண்ணப்பம் சார்... இதுவரை வந்த மூன்று சுஸ்கி விஸ்கி கதைகளை ஒன்றாக வெளியிட்டு விட்டு பின்னர் புது கதைகளை முயற்சிக்கலாமே..

    எது எப்படியாயினும் சுஸ்கி விஸ்கி மீண்டும் தமிழ் பேசுவது பேரானந்தம்.. மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ///ஒரு கோரிக்கை/விண்ணப்பம் சார்... இதுவரை வந்த மூன்று சுஸ்கி விஸ்கி கதைகளை ஒன்றாக வெளியிட்டு விட்டு பின்னர் புது கதைகளை முயற்சிக்கலாமே..///

      +11111

      Delete
    2. இந்த டபுள் ஆல்பம் வரட்டும் நண்பரே ; மற்ற திட்டமிடல்களை அதன் பின்பாய் வைத்துக் கொள்ளலாமே ?!

      Delete
  34. சுஸ்கி-விஸ்கி மீண்டும் வலம்வர இருப்பது ஒரு கார்ட்டூன் ரசிகனென்ற வகையில் எனக்கு குதூகலமான செய்தியே!
    ஆனால் இங்கே நண்பர்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது அந்த குதூகலம் பன்மடங்காகிறது என்பதே உண்மை!

    அருமையான லட்டு! அசத்தறீங்க எடிட்டர் சார்!!

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் சார் ; அவை முத்துவின் பொன்விழா ஆண்டினோடு இணைந்திடுவதில் எனக்கும் மகிழ்ச்சியே !!

      Delete
    2. // சுஸ்கி-விஸ்கி மீண்டும் வலம்வர இருப்பது ஒரு கார்ட்டூன் ரசிகனென்ற வகையில் எனக்கு குதூகலமான செய்தியே! //

      மீ டு happy :-)

      Delete
  35. மிக மகிழ்ச்சியான (லட்டு) செய்தி தான் சுஸ்கி & விஸ்கி, இந்த கதைகளை எல்லாம் நான் கேட்டது தான் உண்டு முதன் முறையாக படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது மிக்க மகிழ்ச்சி.
    ஆவலுடன் காத்திருப்போம்.
    அதுவும் இல்லாமல் கார்ட்டூன்ல ஒரு வெற்றிடம் உருவாகி உள்ளது போல் தென்படுகிறது. இந்த வெளியீடுகள் அதை நிவர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.
    உண்மையிலேயே அனைவருக்கும் மகிழ்ச்சியான / யாரும் யூகிக்க முடியாத / எதிர்பார்க்காத செய்தி தான்.
    தங்களின் முயற்சிக்கு அனைவரின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ///இல்லாமல் கார்ட்டூன்ல ஒரு வெற்றிடம் உருவாகி உள்ளது போல் தென்படுகிறது. இந்த வெளியீடுகள் அதை நிவர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.///

      யெஸ்! அருமையா சொன்னீங்க!

      Delete
    2. கார்ட்டூன் வறட்சி யார் பெயரைச் சொல்லி நீங்கினாலுமே நான் ரெம்போ ஹேப்பி அண்ணாச்சி !

      Delete
  36. அட்டகாச பதிவாசிரியரே....மகனை தூங்க வைக்க போராடயில் இங்க கிளிக்க சுஸ்கிவிஸ்கியாருக்குமோன்னு பாக்காம விலக...வந்தா அதேதான்...அருமை ஆசிரியரே....ஒரே எகிறும் கொண்டாட்டங்கள்...லயனுக்கு கொஞ்சம் விட்டு வைங்கன்னு சொல்ல ஆசைதான்...காலம் போதாதே...என் மகனுக்காக...நான் ஏழு அல்லது எட்டு படிக்கயில் ராஜாராணிஜாக்கி அட்டய ஓவிய நோட்டில் தத்ரூபமாய் வரைந்து ஓவிய ஆசிரியரிடம் பாராட்டு பெற்றதுநினைவில்....இரு வருடம் முன் மகன் கருவறையில் இருக்கும் போது மருத்துவமனை செல்லயில் ராஜா புக் ஹவுசில் கிடைக்க துள்ளி பறக்க வைத்த இதழ் பயங்கரம் பயணம்...இருக்கே எனத் தாண்டினால்...ராஜா ராணி ஜாக்கி....அடி போடுன்னு கொண்டாடுனா...இன்றைக்கும் மருத்துவ மனைக்கு அதே காரணத்துக்கு செல்ல...ராஜா புக் ஹவுசில் ஏதும் கிடைக்காம திரும்புனா இரண்டாவது வரவுக்காய் இரண்டாமிதழ் இங்கு...ஆச்சரியமான ஒற்றுமைகள் சார்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பரே 🤝🤝🤝🤝

      Delete
    2. ரெண்டுவாட்டிப் படிச்சும் ஸ்டீல் என்ன சொல்லவரார்னு புரிஞ்சுக்க முடியல. ஏதோ சந்தோசப்பட்டிருக்கார்னு மட்டும் புரியுது!
      யாராவது ட்ரான்ஸ்லேட் பண்ணிச் சொன்னா பரவாயில்ல. :)

      Delete
    3. பையனுக்கு டயப்பர் மாத்துற கேப்பிலே தன்னோட சுஸ்கி & விஸ்கி flashback கடா வெட்டுறாப்படி !! அதானே மக்கா ?

      Delete
    4. விஜயன் சார் :-) பையன தூங்கவைக்கிற நேரத்தில் :-) அதிலும் சிறுவயதில் நம்ப மக்கா சுஸ்கி விஸ்கி படம் எல்லாம் வரைந்து பரிசு வேற வாங்கி இருக்கிறாராம் :-)

      Delete
    5. "அந்த தெய்வமே கலங்கி நின்னா அதுக்கு யாரால ஆறுதல் சொல்லமுடியும்."
      தங்கப்பதக்கம் Song மாடுலேஷன்..

      Delete
    6. Erode Vijay :-) I am with you too. ரெண்டுவாட்டிப் படிச்சும் ஸ்டீல் என்ன சொல்லவரார்னு புரிஞ்சுக்க முடியல.

      Delete
    7. இரண்டு வருடங்கள் முன்னால் அவர் பையன் உருவாகி இருந்த நேரம் ஆஸ்பத்திரிக்கு துணைவியாரும் செல்லும் போது இவருக்கு இந்த புத்தகம் ராஜா புத்தககடையில் கிடைக்க துள்ளி குதித்தாராம் :-)

      சோடா போன்ஜ் ப்ளீஸ் :-)

      Delete
  37. பொறுத்தார் காமிக்சாள்வார்ன்ன உங்க வார்த்தைகளுக்குத்தான் எனனா பவர்

    ReplyDelete
  38. சுஸ்கி விஸ்கி அட்டைப்படம் நம்ம ஓவியரின் அட்டைப் படத்துக்கு பக்கத்ல கூட நிக்க முடியாது போல

    ReplyDelete
  39. கொஞ்ச நாட்களுக்கு முன்பாக, ஸ்பைடர் படை குழுவில் ஒரு போட்டி நடந்தது. அந்த போட்டியின் சாராம்சமே எப்படியாவது சுஸ்கி-விஸ்கிக்கு இருக்கும் ஆதரவை வெளிப்படுத்துவதே...


    தொடர்ச்சியாக நமது தளத்திலும் ஓட்டெடுப்பு நடந்ததாக நினைவு!

    அந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது என்பதற்கும், பாசமிகு ஆசிரியர் விஜயன் சார் மனது வைத்தால் இதுவும் நடக்கும் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் இது!

    மிக்க நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😍😍😍

    ReplyDelete
    Replies
    1. ////கொஞ்ச நாட்களுக்கு முன்பாக, ஸ்பைடர் படை குழுவில் ஒரு போட்டி நடந்தது. அந்த போட்டியின் சாராம்சமே எப்படியாவது சுஸ்கி-விஸ்கிக்கு இருக்கும் ஆதரவை வெளிப்படுத்துவதே...///

      அருமை!! முயற்சி வெற்றியடைந்ததற்கு வாழ்த்துகள்!

      Delete
    2. நன்றிகளெல்லாம் அவசியமா நண்பரே ? எனது கடமைகளின் ஒரு பகுதி தானே உங்களின் ஆசைகளை நிஜமாக்கிட முயற்சிப்பதுமே ?

      Delete
    3. // எனது கடமைகளின் ஒரு பகுதி தானே உங்களின் ஆசைகளை நிஜமாக்கிட முயற்சிப்பதுமே ? //

      இப்போது எல்லாம் எங்களின் ஆசைகளை நிறைவேற்றுவதே உங்களின் தலையாய கடமையாக நீங்கள் செயலாற்றுகிறீர்கள் சார். நன்றி :-)

      Delete
    4. @Boopathy 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😍😍😍

      Delete
  40. பழிக்கு பழி காம்போ, உயிரைத் தேடி. சுஸ்கி விஸ்கி, இன்னும் 3 லட்டு , +2 டெக்ஸ்,& கார லட்டு. 2022 உண்மையாலுமே பட்டய கிளப்பப் போகுது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ .2022 முழுக்க காமிக்ஸ் தீபாவளி தான் போங்கள்.கொண்டாட்டங்களுக்குப பஞ்சமே இல்லாத ஆண்டாக அமையப் போகிறது.

      Delete
    2. ஜாகோர் சேர்த்துக் கொள்ளுங்கள் ஷெரீஃப். நீங்கள் சொன்ன 3 புத்தகங்கள், 2 டெக்ஸ், Zagor. இது மட்டுமே 6 புத்தகங்கள். சும்மா கிழி.

      Delete
    3. ///2022 உண்மையாலுமே பட்டய கிளப்பப் போகுது.///

      கன்ஃபார்முடு!

      Delete
    4. புனித மனிடோ உடனிருந்தால் எல்லாம் சாத்தியமே நண்பர்களே !!

      Delete
    5. இப்படியே வரிசையா அறிவிப்பு செஞ்ச புக்கெல்லாம் வாங்கறதுக்கு, நான் வளர்க்கிற ஒரு தக்காளி செடிகூட சேர்த்து இன்னொரு தக்காளிச் செடிதான் வைக்கனும்..

      Delete
  41. வாழ்க ஆசிரியர் சார் அவர்கள் !!!!


    வளர்க அவர்கள் காமிக்ஸ் தொண்டு !!!!

    ReplyDelete
  42. சுஸ்கி-விஸ்கி .


    கேட்டுப் போராடினோம்.

    அன்பின் ஆசிரியரும் தந்துவிட்டார்.

    இனி விற்பனையில் தெறிக்கவிட்டு சு -வி யை வெற்றி பெறச் செய்வது நம் கைகளில் தான் உள்ளது.


    நீங்கள் செய்வீர்களா ?!

    நண்பர்களே நீங்கள் செய்வீர்களா ?!

    ReplyDelete
  43. // ப்ளூகோட் பட்டாளத்துடன் லூட்டி ///

    அப்ப ஜனவரியில் ப்ளூகோட் வருது. புத்தாண்டை காமெடி கதையுடன் கொண்டாட வேண்டியதுதான். :-)

    ReplyDelete
    Replies
    1. நான் பணியாற்றுவது பிப்ரவரிக்கென சார் !

      Delete
    2. அடேங்கப்பா என்ன வேகம் என்னா பிளானிங். அப்படி என்றால் ஜனவரியில் வரும் கார்டூன் கதை எது சார்.?

      Delete
    3. ராகவன் @ என்னாது ஜனவரியில் டெக்ஸ் காமெடி ரோல் செய்ய போகிறாரா :-) ரம்மி ஜனவரியில் டெக்ஸூக்கு பாயாசம் காய்ச்சும் வேலையை ராகவனுக்கு விட்டு கொடுங்கள் :-)

      Delete
    4. ஜனவரியில் டெக்ஸ் காமெடி ரோல் செய்ய போகிறாரா :-)

      Delete

  44. எடிட்டர் சார்,

    சூப்பர் நியூஸ் !

    ReplyDelete
  45. Edi Sir..2022 ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அதிரடி ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டிங்க.இன்னும்..இன்னும்..நம்ப Edi Sir என்ன தரப்போறாருன்னு I am ஆவலுடன் waiting.

    ReplyDelete
  46. ஆனந்தக் கூத்து ஆட்டம் போடும் அறிவிப்பு சார். அசத்தலான இனிப்பு லட்டு என்பதில் சந்தேகம் இல்லை. மிக்க நன்றிகள் சார். சுஸ்கி - விஸ்கி நம்மை மகிழ்விக்க வாறாக. பார்போமே அவர்களின் வரவின் பின்பாக என்றாலும் கார்டூன் வரட்சி சற்று குறைகிறதா என்று. கார லட்டு - என்ன??? ஒரு வேளை ….. கறுப்பு கிழவியின்்கதைகளாக இருக்குமோ?????

    ReplyDelete
    Replies
    1. கையிருப்பில் உள்ள கருப்பு கிழவிக்காக பலர் இங்கு காத்திருப்பு...

      Delete
    2. கருப்பு கிழவியாக இருந்தால் உங்களுக்கு எனது ட்ரீட் சார்.

      Delete
    3. குமார் @ பிரான்ஸில் போய் அவருக்கு நீங்கள் ட்ரீட் கொடுக்கனும் :-) டீலா ;-)

      Delete
    4. கருப்பு ஆயா வந்தால்... காரம் இன்னும் தூக்கலாகவே இருக்கும்...

      ஆனால், இந்த கதைகள் எல்லாமுமே போட்டு விட்டதாக ஒருமுறை சொல்லி இருந்தார்.

      Delete
  47. சுஸ்கி விஸ்கி மறுபதிப்பு வரவேற்கிறோம்

    ReplyDelete
  48. Replies
    1. In 2022 Friend - may be if Chennai book fair is there or later for some other occassion but surely in 2022.

      Delete
  49. வாவ்...வாவ்...துள்ளி குதிக்க செய்கிறது சார் இந்த அறிவிப்பு...சுஸ்கி விஸ்கி மீண்டும் வருகிறார்கள் எனும் பொழுது ஏற்பட்ட ஆனந்தம் முதலில் வருவது நாம் படித்த அதே பயங்கர பயணமும் ,ராஜா ராணி ஜாக்கி என்ற இதழுமே என்றவுடன் அந்த ஆனந்தமும் ,மகிழ்வும் நூறு மடங்கு அதிகமாகியது..என்பது சத்தியமான உண்மை.நான் மிகப்பெரிய காரட்டூன் ரசிகன் எல்லாம் இல்லை தான் ..ஆனால் இந்த அறிவிப்பு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் நூறு சதவீதம் உறுதி சார்...சில மாதங்களுக்கு ஒரு நண்பரின் தயவால் ராஜா ராணி ஜாக்கி இதழை காணும் பாக்யம் கிடைத்தது.இதழை ரசிக்க முடிந்தது..ஆனால் எழுத்துருக்கள் சிறிய அளவில் இருந்த காரணத்தால் மீண்டும் ஈடுபாட்டோடு படிக்க இயலவில்லை..அப்பொழுது ஏற்பட்ட வருத்தம் இப்பொழுது உங்கள் அறிவிப்பால் நீங்கியது சார்..மிக மிக மகிழ்ச்சி..


    இது சமயம் ஒரு வேண்டுகோள் சார் ..இது ஆசையின் வேண்டுகோள் மட்டுமே ..இந்த இதழை இப்பொழுது வரும் பெரிய அளவு கார்ட்டூன் இதழாக இல்லாமல் அன்று வந்த மினிலயன் அளவிலியே அதாவது இன்றைய டெக்ஸ் புத்தக அளவிலியே வெளிவர முடியுமா சார்..அந்த அளவிலியே வரும்பொழுது அந்த அளவு அந்த கால நாஸ்டாலிஜியை மீண்டும் கொண்டு வருவதோடு அப்படி இருக்கும் பொழுது பக்கங்களின் கனமும் இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது என் எண்ணம்..ஆசை....முடிந்தால் ( மட்டும் ) இதனை நிறைவேற்ற முடியுமா என பாருங்கள் சார்..

    ஆனால் ஒன்று ..நீங்கள் எப்படி வெளியிட்டாலும் இந்த சுஸ்கி விஸ்கி இதழ் விற்பனையில் சாதிக்க போவது 100 சதவீதம் உறுதி சார்..

    மீண்டும் மீண்டும் நீங்கள் அளிக்கும் லட்டின் சுவை திருப்பதி லட்டின் சுவையை ஏற்படுத்துகிறது..அந்த லட்டு நாக்கிற்கு நீங்கள் அளிக்கும் சுவை மனதிற்கு..


    மிக்க மிக்க நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. தலீவரே...முந்தின பத்தியில் பழைய புக்கில் சின்ன எழுத்துக்களை படிக்க முடியலை என்று எழுதிய கையோடு அடுத்த பத்தியில், பெரிய சைசில் புக் வேணாம் ; சின்ன சைசில் வேணும் என்றால் க்யா லாஜிக் ? சின்ன சைசுக்கு சுகப்படா ஆக்கமிது !

      Delete
    2. சந்தோஷத்தில் லைட்டா குழம்பிப் போய்விட்டார் :-)

      Delete
    3. :-)

      ஆமா சார் குழம்பி தான் போயிட்டேன் போல...

      ********

      சின்ன சைசுக்கு சுகப்படா ஆக்கமிது

      #####


      ஓகே சார்..நோ ப்ராப்ளம்..:-)

      Delete
  50. எது எப்படியோ 2022 காமிக்ஸ் ரசிகர்களுக்கு "முத்தான" ஆண்டு என்பது அப்பொழுது மட்டுமல்ல வருங்காலங்களிலும் ஆவணப்படுத்தப்படும் என்பதும் அக்மார்க் நிஜம் சார்...:-)

    ReplyDelete
    Replies
    1. அது என்ன எது எப்படியோ :-) இனிமேல் இப்படி தான் குதிரைப் பாய்ச்சல் மட்டுமே :-)

      Delete
    2. :-))))


      மன்னி்ச்சூ....:-)))

      Delete
  51. டியர் எடி,

    ரொம்ப வருடங்களாக காத்திருந்த அறிவிப்பு வந்தே விட்டது. ராஜா ராணி புகழ் சுஸ்கி விஸ்கி மீண்டும் தமிழில் களம் காண போகிறார்கள், அதுவும் நாம் சிலாகித்த அதே கிளாசிக் ஆல்பங்களுடன் என்னும் ஆனந்த்தத்தை எவ்விதம் விளக்குவது என்று தெரியவில்லை. வாசகர்களும் விற்பனையை அமர்க்களபடுத்தினால், 50+ கதைகளை கொண்ட இந்த தொடர் நமது கார்டூன் ஜானருக்கு ஒரு நெடுங்கால நண்பனாக தொடரலாம்... பார்ப்போம் அதையும்.

    டேங்கோ அறிமுகம் வழக்கம் போலவே சூப்பர்.... இதுவரை, இணையத்தில் இவருடைய கதைகளை வாசித்ததில்லை என்பதால், ஆவலுடன் வெயிட்டிங்.

    ReplyDelete
    Replies
    1. ஒரே கரெக்‌ஷன்.... 350+ ஆல்பங்கள் கொண்டது சுஸ்கி விஸ்கி தொடர்

      Delete
    2. //ராஜா ராணி புகழ் சுஸ்கி விஸ்கி//

      அட, இது கூட நல்லாயிருக்கே சார் !!

      Delete
  52. Suske & Wiske - really an enjoyable read for children sir.

    ReplyDelete
  53. Superb Announcement sir. This is one of the books I have been expecting from a Long long time.

    ReplyDelete
  54. நல்ல நல்ல அறிவிப்புகள்.
    வாசகர்களின் மனசை மேலும் மேலும் சந்தோசப்பட வெக்கறீங்க.
    பழய வாசகர்களுக்கு இன்னும் ஹேப்பிதான்.

    ஒரே ஒரு வேண்டுகோள் சார்.
    எந்த கதை வேணாலும் கொடுங்க.
    எத்தனை வேணாலும் கொடுங்க.
    வாங்க நாங்க தயார்.

    ஆனா ஹார்ட் பவுண்ட் வேண்டாமே ப்ளீஸ்.
    சாதாரண கண்ணே கொலைமானே அட்டையே போதும் சார்.
    ஹார்ட் பவுண்ட் என்கிறபோது விலை சற்று கூடுதலே.
    பாதுகாப்பு இருந்தாலும்,
    150 பக்க காமிக்ஸ்க்கு சாதாரண அட்டையே போதுமானது. 300 க்கு மேல் இருந்தால் ஹார்ட் பவுண்ட் போடலாமே.

    சாதாரண அட்டையானால் 100 ரூபாய் விலை குறையுமே?. இது என் கருத்தல்ல முகநூலிலும், வாட்சப் தளங்களில் பகிரும் பலருடைய எண்ணங்களே.

    இந்த 100 ரூபாய் குறையும்போது பலருக்கும் இந்த காமிக்ஸ் போய் சேரும் என்பது உறுதி.
    மேலும் கருப்பு வெள்ளை பதிவுகளில் வந்தாலும் சரியே.

    முடிந்த வரை சின்ன சின்ன விசியங்களில் சலுகை தந்து, லயன் காமிக்ஸ் அனைவருக்கும் போய் சேருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. ஹார்ட்பவுண்ட் அட்டைக்கென நூறு ரூபாயா ? இது யார் அள்ளி விட்டது நண்பரே ?

      மூன்று பாகங்கள் கொண்ட ட்யுராங்கோ ஹார்ட் கவர் இதழ்களை ரூ.300-க்கு வெளியிடுகிறோம் ! அவையே தனித்தனியாய் சிங்கிள் ஆல்பங்களாய் வெளிவரும் பட்சத்தில் ரூ.90 x 3 = ரூ.270 என்றிருக்கும் ! So இப்போது சொல்லுங்களேன் - இரண்டுக்கும் மத்தியிலான வேறுபாடான அந்த ஹார்ட்கவரின் பொருட்டான செலவு என்னவென்று ?

      முப்பது ரூபாய் வித்தியாசமே ரெகுலருக்கும், ஹார்ட் கவருக்கும் ! And ஒரு பிரீமியம் finish அவசியப்படும் இடங்களில் மட்டுமே அவற்றைக் களமிறக்குகிறோம் !

      முகநூலில் உலா வரும் சகலத்தையும் நிஜமென்று எடுத்துக் கொள்ள தேவையில்லையே - at least எழுதுவோர்க்கு பரிச்சயம் இல்லாத சமாச்சாரங்களிலாவது ! Hardcover பைண்டிங்கின் நிஜக் கிரயங்கள் என்னவென்பதையோ ; அந்தச் செலவினங்களை கட்டுக்குள் வைத்திட இத்துறையினில் காலமாய் கால்பதித்து நிற்கும் நாங்கள் கையாளும் யுக்திகளையோ, எங்கெங்கோ இருக்கும் நண்பர்கள் அறிந்திருக்க வாய்ப்பேது சார் ?

      Delete
    2. Slip Case தான் குடலை அறுக்கும் கிரயங்கள் நண்பரே ; யாரேனும் அதைக் குறிப்பிட்டிருப்பர் ; தப்பிதமாய் hardcover என்ற புரிதலில் சுற்றி வந்திருக்கும் !

      Delete
    3. இந்த முப்பது ரூவா ஹார்ட் கவர் விஷயத்தை மறக்க மாட்டேன் எடிட்டர் சார் - மறக்க மாட்டேன் - லக்கி 75 கொண்டாட்டத்தில் அண்ணனுக்கு ஹார்ட் கவர் ஆல்பம் 4 கதைகளுடன் வந்தால் நன்று !

      Delete
    4. // இந்த முப்பது ரூவா ஹார்ட் கவர் விஷயத்தை மறக்க மாட்டேன் எடிட்டர் சார் - மறக்க மாட்டேன் - //

      எடிட்டர் மைண்ட் வாய்ஸ் என்னவா இருக்கும்..!!?? 🤣🤣🤣🤣

      Delete
  55. அட அட அட... அட்டகாசம் சார். அருமை.‌‌ மினிலயன் வெள்ளை பிசாசு, மாயத் தீவில் அலிபாபா, டொனால்ட் டக் ஒரு நாணயம் போராட்டம், திகிலில் வந்த சிஐடி மார்ஷலின் மிரட்டல் கதைகள் பிசாசு குரங்கு, மர்ம ஏரி, ரோஜர் பில் கதை தவளை மனிதனின் முத்திரை, முதலை படையின் அப்பல்லோ படலம்... இன்னும் பல பல லட்டுக்கள் நிறையவே இருப்பில் உள்ளது சாரே 🤗😇😁... லட்டுகள் கழிக்க ஈ மக்கள் வெயிட்டிங் 😬😌😉

    ReplyDelete
    Replies
    1. ரோஜரையும், ப்ரூனோ பிரேசிலையும் இப்போதெல்லாம் நம்மாட்கள் வெளுக்கின்ற வெளு என்னவென்று தெரிந்தும் அவற்றை லட்டு லிஸ்ட்டில் இணைக்கிறீர்களா சார் ? திட மனசு தான் போங்க !

      Delete
    2. அந்த கதைகளின் impact அப்படி சார்... அந்த காலத்தில் அவைகளின் தாக்கம் நிரம்பவே இருந்தது சார்...

      Delete
    3. /* ரோஜரையும், ப்ரூனோ பிரேசிலையும் இப்போதெல்லாம் நம்மாட்கள் வெளுக்கின்ற வெளு */ Haha yes sir - mudeelE :-)

      Delete
  56. நாளையே நடக்க போவதில்லை ஆனால் என்றாவது ஒருநாள் இரட்டை வேட்டையர்களை திரும்ப பார்ப்பேனென்று மனசு சொல்கிறது (கனவே கலையாதே)

    ReplyDelete
  57. சுஸ்கி விஸ்கி.. நான் இதுவரை படித்திராத கதைகள். எனவே பச்சைக்கொடி பிடித்து, சிவப்புக் கம்பளம் விரித்து, மஞ்சள் மலர் தூவி, வரவேற்கிறேன்.

    ReplyDelete
  58. // "சுஸ்கி & விஸ்கி" மறுக்கா நம் மத்தியினில் வலம் வரவுள்ளனர் - 2022 முதலாய் //
    2021 கடைசி மூன்று மாதங்கள் மழை சீஸன்...
    2022 இல் 12 மாதங்களும் காமிக்ஸ் மழை சீஸன்...
    மகிழ்ச்சி சார்...!!!

    ReplyDelete
  59. // டிசம்பரின் முதல் வாரத்துக்குள் எல்லா அச்சுப் பணிகளையும் நிறைவு செய்திருப்போம் ; //
    அட்வான்ஸா ஓடிக் கொண்டிருப்போம் போல, அருமை சார்...!!!

    ReplyDelete
  60. // P.S : வாரயிறுதிக்குக் கொஞ்சம் வேலைகள் காத்திருப்பதால் - பதிவு ஒரு நாள் முன்பாகவே !! //
    சனிக்கிழமை ராவுக்கு பதிவு வரலேன்னா பலபேருக்கு தூக்கமே வராதே...
    அப்ப தம்பி குமாரோட வழக்கமான டயலாக்கிற்கு இன்று விடுப்பா...

    ReplyDelete
  61. டேங்கோ அறிமுகம் ஆவலைத் தூண்டுகிறது.

    ReplyDelete
  62. // காத்திருக்கும் இந்த "லயன் லைப்ரரி" பதிப்பு ரசிக்காது போகாதென்பேன் ! Fingers crossed again ! //
    புதிதாய் அவாதாரமெடுக்கும் லயன் லைப்ரரியும் கலக்கலாய் அமையட்டும்...!!!

    ReplyDelete
  63. // ஆச்சு ! பெரிய லட்டு என்னவென்பதைச் சொல்லியாச்சு ! And குட்டி லட்டு என்னவென்பதைத் தொடரும் பதிவிலோ ; உபபதிவிலோ பார்த்துக் கொள்ளலாம் ! //

    2022 சந்தாவுக்கு எந்தெந்த லட்டு ப்ரீ,சர்ப்ரைஸ் லட்டு எத்தனை என்பதை ஒட்டுமொத்தமாய் ஒரு மினி பதிவில் போடலாம்,அதை அனைத்து வழி இணையத் தொடர்பு தளங்களில் பகிரலாம்...தளத் தொடர்பில் அப்பால் உள்ள நண்பர்களுக்காக வரவிருக்கும் இதழ்களில் பின்னிருக்கும் காலிப் பக்கங்களில் எழுத்து வடிவ விவரங்களாகவும் கொடுத்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது...
    2022 காமிக்ஸ் மழைப் பொழியப் போகிறது,காமிக்ஸின் மைல் கல் தருணமாகவும்,பொற்காலமாகவும் 2022 திகழப் போவது உறுதி,எனவே தெளிவான விவரங்கள் அனைத்து தரப்பினரையும் போய் சென்றடைந்தால் இன்னும் கொஞ்சம் சந்தா எக்ஸ்பிரஸ் சூடு பிடிக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன்...

      Delete
    2. முத்து 50 ன்னா சும்மாவா....எல்லா பரிசும் அடுத்த வருடமே...இன்னுமுண்டோ அதகளங்கள்

      Delete
  64. // டிசம்பரின் இதழ்கள் நவம்பர் 29-ல் கிளம்பிடுமா ? அல்லது 30-லா ? என்பது வர்ண பகவானின் கைகளில் உள்ளதால் - இப்போதைக்கு நான் வாயை விடத் தயாரில்லை ! //
    முடிஞ்ச வரைக்கும் 29 ஆம் தேதியே அனுப்பிடுங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. ஐய்யா எங்கள் ஊரில் மழை பெய்து இரண்டு நாட்களாக வெளியே வரமுடியாத நிலையில் உள்ளோம். புத்தகங்கள் பைண்டிங் காய தேவையான வெயில் தேவை. ஆசிரியர் நிதானமாக அனுப்பட்டும் இது புத்தகங்கள் நல்ல கண்டிஷனில் வர உதவும் :-) டிசம்பரில் டிசம்பர் என்பதே எனது நிலைப்பாடு அறிவரசு.

      Delete
    2. அய்யா எங்களூரில் மழை...அனுப்பி வச்சா நாங்களே காயவச்சுக்குவம்...நவம்பரில் டிசம்பர்

      Delete
  65. This comment has been removed by the author.

    ReplyDelete
  66. டிசம்பரில் ஹார்டு கவர் புக் எதுவும் இல்லை என நினைக்கிறேன். இருப்பினும் டிசம்பரில் டிசம்பர் என்றாலும் ok தான்.

    ReplyDelete
  67. /* "இரத்தப் படலம்" - துவையோ, துவையென்று துவைத்துத் தொங்கப் போட்டாச்சு ! */

    Sir,

    Aanaakaa - that BW Hard bound with 3D cover - single album sir? :-)

    Enna idhu Erode Vijay - indha anyaayathai Kekkuradhilliyaa?

    ReplyDelete
  68. *LLL* வெளியீடுகள் கலக்கல் 🎉🎊🎉🎊... அதாங்க Lion Laddu Library 😌😌😌

    ReplyDelete
  69. நம்ம லயன் லைப்ரரிக்கு அட்டகாச அமர்க்கள அறிமுகம்... இது சிறுவர்க கலக்குனாலும் நிச்சயமா அவர்களுக்கு மட்டுமேயான கதையல்ல

    ReplyDelete
  70. செந்தில் சத்யாஜீ. சார் முயற்சிப்போம் என்ற ரிப்கிர்பி ஒன்று வந்துவிட்டது. அடுத்து ஒரு குண்டுபுத்தகமும் வரப்போகிறது. சான்ஸே இல்லை என்ற மண்ட்ரேக், காரிகன். இதோ குண்டுபுத்தகம் கைக்கெட்டும்தூரத்தில். எல்லாம் நமக்காக. உங்கள் இரட்டை வேட்டையர் கனவை மட்டும்விட்டுவுடுவாரா நேரம் வரும்போது நிச்சயம் இரட்டை வேட்டையர் உண்டு. . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  71. விஸ்கி வரட்டும் ஆசான்....

    ReplyDelete
  72. பாலைவன கதைகள் வரட்டும்.....ஆசான்..

    ReplyDelete