Powered By Blogger

Saturday, September 18, 2021

ஒரு மாதத்தின் பின்னே...

 நண்பர்களே,

"அன்பே ஜெயம்" ! உங்களின் வோட்டுக்களின் கணிசமான பெரும்பான்மை Love All அணிக்கே விழுந்திருக்க, 'தல' புதியதொரு கலர் சாகஸத்தில் தலை காட்டுவது உறுதி என்றாகி விட்டது ! ஆனால் ஒரு twist இல்லாதில்லை - இந்த Save A Child ஸ்பெஷலின் திட்டமிடலில் ! நண்பர்களின் கொடைகள் ; இணையம் வழியாய் இளகிய மனம் கொண்டோரை தொடர்பு கொண்டு நிதி திரட்டும் பணிகள் - என ஒரு பக்கம் முயற்சிகள் நடந்து வர, பாபுவின் குழந்தைக்கு பூரண உதவி கிடைக்கும் வாய்ப்பொன்று இன்னொரு திக்கிலிருந்து எழுந்துள்ளது போலும் ! மாதா அமிர்தானந்தமயி மருத்துவமனையினில் குழந்தையினைப் பரிசீலனைகள் செய்து விட்டு, எல்லாம் ஓ.கே.வெனில், தொகுதி MLA-வின் நிதியிலிருந்து அறுவை சிகிச்சை செய்திட வாய்ப்பெழுந்துள்ளது என்று அறிகிறேன் ! இதன் சாத்தியங்கள் தொடரும் வாரத்தினில் தெரியும் ! குழந்தை பூரண நலம் பெறுவதே நம் அனைவருக்கும் பிரதானம் எனும் போது - அதற்கான வழி எங்கிருந்து பிறந்தாலென்ன ? So பாபு இந்த வாய்ப்பின் சாத்தியங்களைப் பின்தொடரும் வேளைதனில், இதர முயற்சிகள் திட்டமிட்டபடியே தொடர்ந்திடும் ! In case நமது பங்களிப்புகள் இல்லாமலேயே சிகிச்சை வெற்றி காணும் பட்சத்தில், நண்பர்களின் இதுவரையிலான நன்கொடைத் தொகைகள் பத்திரமாய்த் திரும்ப அனுப்பிடப்படும் ! 

ஆனால் ...ஆனால்...நாம தான் முன் வைச்ச காலை குரல்வளைக்குள் திணித்தாலும் திணிப்போமே தவிர்த்து, பின்னுக்கு வைக்க மாட்டோமல்லவா ? So திட்டமிட்ட நமது இந்த ஸ்பெஷல் இதழானது - நிச்சயம் வெளி வந்திடும் - "LOVE ALL ஸ்பெஷல்" என்ற பெயருடன் ! விலையோ ; வடிவமைப்போ இன்னமும் இறுதி கண்டிருக்கவில்லை என்பதால் - பாபுவின் தேவைகளுக்கோ ; தேவையின்மைகளுக்கோ ஏற்ப நமது திட்டமிடல்கள் அமைந்திடும் ! இப்போதைக்கு இதழின் இத்தாலிய மொழி to இங்கிலீஷ் மொழிபெயர்ப்புப் பணிகள் துவங்கியுள்ளன ! அந்தப் பணி நிறைவுறும்  பொழுதுக்குள் பாபுவுக்குமே ஒரு தெளிவு பிறந்திருக்கும் என்பதால், அதற்கேற்ப நாம் தீர்மானித்துக் கொள்வோம் ! So தல அதிரடிகள் + பின்புலத்தினில் ஒரு காதல் கச்சேரி என்ற இந்த இதழையும் நமது குறுகிய காலத்து ரேடாருக்குள் கொணர்ந்தாச்சு ; அதன் போக்கினை ; பிரயோஜனத்தினை இனி இறைவன் தீர்மானிக்கட்டும் !

இக்கட ஒரு கொசுறு நியூஸ் சொல்லாங்காட்டி எனக்கு மண்டை பணலாகிப் போகும் ! 'தல' பராக்குப் பார்க்க, புல்வெளியினில் லவ்ஸ் அரங்கேறுவது ஒரு பக்கமெனில், தலயே அந்த லவ்சினில் ஐக்கியமாகிடும் சேதி தெரியுமோ ? சமீபப் பதிவினில் நான் குறிப்பிட்டிருந்த அந்த டெக்ஸ் கிராபிக் நாவலான "ஸ்னேக்மேன்" இதழினிலிருந்து இது : 

Snakeman - Tex graphic novel

இங்கும் கதாசிரியர் மௌரோ போசெல்லி தான் ; மனுஷன் ஓசையின்றி கதாப்பாத்திரங்களுக்கு கூடுதலாய் layer-களை உருவாக்கி வருகிறாரென்றே எனக்குத் தோன்றுகிறது ! 

Moving on, செப்டெம்பர் இதழ்களின் உங்கள் அலசல்கள் தொடர்ந்திட வேண்டிய வேளை இது ! திடு திடுப்பென 'தல' இடையில் புக வேண்டிய அவசியம் நேராது போயிருப்பின், டிரெண்ட் பத்தியும், மேக் & ஜாக் பத்தியும் ; டெட்வுட் தம்பி பற்றியும் பேசிக் கொண்டிருந்திருப்போம் ! Anyways - இந்த கூடுதல் அவகாசத்தினில் இதழ்கள் நான்கையும் கொஞ்சமேனும் புரட்ட உங்களுக்கு அவகாசம் கிட்டியிருக்குமென்ற நம்பிக்கையினில், இந்த இதழ்களின் behind the scenes பக்கமாய் வண்டியை விடுகிறேன் !

டிரெண்ட் தான் துவக்கப் புள்ளி ! பொதுவாய் கொஞ்சம் அழுகாச்சி சாயல்கள் ; கொஞ்சம் தனிமைச் சாயல்கள் கொண்ட கதைகளென்றால் எனக்கு மண்டைக்குள் பல்ப் பிரகாசமாகிடுவதுண்டு !  இது போன்ற ஆல்பங்களில் கதாசிரியர்கள் பிழிந்திருக்கும் சோக ரசத்தை, பேனா பிடிக்கும் வேளைகளில் ஒண்ணு, ரெண்டு தக்காளிகளைக் கூடுதலாகப் போட்டு, நம்ம பங்குக்குப் பிழியோ, பிழி என்று பிழிந்து தள்ளலாமே என்ற எதிர்பார்ப்பு தான் அதன் பின்னணி ! And டிரெண்ட் அதற்கென்றே அளவெடுத்துச் செய்த பார்ட்டி எனும் போது, இந்த சிகப்புச் சட்டை மனுஷனைக் கண்டாலே எனக்கு குஷியாகிப் போகும் ! வாசிக்கும் உங்களுக்கும் அதே குஷியா ? இல்லே கிலியா ? என்பது வேறொரு கதை ! Anyways - இன்னமும் இரண்டே கதைகளே இத்தொடரினில் பாக்கி என்ற போது - இதனை கமான்சே பாணியிலான தொங்கலில் கிடத்திடலாகாதே - என்ற பயமே எனக்கு ! ஆனால் "பகலறியா பூமி" கதையினை சினிபுக்கில் வாசித்த போதே இந்த ஆல்பம் கூரையைப் பிய்க்கும் வெற்றியை ஈட்டாவிட்டாலும், நிச்சயம் குழிக்குள் ஆழ்த்தாதென்று புரிந்தது ! நமக்கு கொஞ்சமே கொஞ்சமாய்ப் பணியாற்றிய புது மொழிபெயர்ப்புப் பெண்மணியிடம் இதனை எழுத ஒப்படைத்திருந்தேன் ; and அவர் எழுதி அனுப்பிய  ஸ்கிரிப்ட் வழக்கம் போல் டைப்செட் செய்யப்பட்டு என்னை வந்து சேர்ந்தது ! குருவி தலையில் பெரும் சுமையை ஏற்றியிருந்ததை "புத்தம் புது பூமி வேண்டும்" ஆல்பத்தினில் உணர்ந்திருந்தேன் ; and இங்கும் அதே எண்ணமே மேலோங்கியது ! சகோதரிக்கு இன்னும் கணிசமாய்ப் பயிற்சி தேவை என்பது புரிந்ததால், சத்தமே போடாமல் பேனாவைத் தூக்கிக் கொண்டு 5 நாட்களைச் செலவிட்டேன் - முழுசையும் redo செய்திட ! எனது அவசரத்தில் புளியும், தக்காளியும் சித்தே கூடுதலாகிப் போச்சோ ? என்ற பயம் மேலோங்காமல் இருக்கவில்லை தான் ; ஆனால் இன்னும் நிறுத்தி, நிதானித்துப் பணியாற்ற நேரம் நஹி எனும் போது, நீங்கள் அஜீஸ் பன்ணிப்பீங்க - என்ற நம்பிக்கையில் பணிமுடித்தோம் ! And yes - அந்தச் சித்திர + கலரிங் ஜாலங்கள் எனது பிசகுகளைப் பூசி மெழுகி விடுமென்ற நம்பிக்கை கணிசமே ! இதுவரைக்குமான உங்களின் அலசல்களைப் பார்க்கும் போது - தப்பித்தது டிரெண்டின் தலை மட்டுமல்ல ; என்னதுமே என்று தென்படுகிறது ! But of course இன்னும் கணிசமான நண்பர்களின் அலசல்கள் காத்துள்ளன எனும் போது - இப்போவே பீப்பீ smurf ஆகிடல் சுகப்படாது தான் ! However உங்களின் இனி வரக்கூடிய விமர்சனங்கள் எவ்விதம் இருப்பினுமே, ஒரு விஷயம் ஊர்ஜிதம் கண்டுவிட்டுள்ளது - and அது தான் டிரெண்டின் (நம் மத்தியிலான) எதிர்காலம் ! 

சொல்லப் போனால் இந்த மாதத்தினில் 3 பேர்களது தலைவிதிகள் were on the line !! இந்த ஆல்பம் மட்டும் சொதப்பி இருப்பின், சிகப்புச் சட்டைக்காரர் ஆக்னெஸைக் கரம் பிடிக்கும் வைபவம் நிச்சயமாய் 2022-ல் நிகழ்ந்திராது - நம் மத்தியினிலாவது ! அட்டவணையினை அச்சுக்குக் கொண்டு செல்லாது நிறுத்தி வைத்திருந்ததன் முதல் காரணம் இவரே ! இப்போது உறுதியாகி விட்டாச்சு - 2022 எக்ஸ்பிரஸினில் ஒரு கண்ணால ஆல்பம் உண்டென்று !!

(மைண்ட் வாய்ஸ் : கார்சனுக்கு கபி கபி ; டெக்ஸுக்கு இக்ளியூண்டு ; அடுத்து டிரெண்டுக்கு கண்ணாலம், காட்சி - இன்னா நடக்குதுங்கோ இங்கே ? போற போக்கிலே நம்ம ஷெரீபுக்குக் கூட ஒரு நல்லது நடந்திடுமோ ? ஹோல்டான்...ஹோல்டான்....நான் குறிப்பிடுவது நம்ம ஷெரீப் டாக்புல்லை !! தப்பிதமா அர்த்தம் பண்ணிக்கிட்டு எங்கயாச்சும், யாராச்சும் குஷியில் கூரை வரைக்கும் குதிச்சுக் கூப்பாடு போட்டு கபாலத்துக்கு சேதம்  வரவழைச்சுக்கிட்டா அதுக்குக் கம்பெனி பொறுப்பேற்காது ! )

டெட்வுட் டிக் ! கொஞ்சம் நிறையவே பேசியாச்சு இந்த கெட்ட பையன் + நல்ல பையன் அவதார் பற்றி ! Oh yes - இங்கே கதாசிரியர் ரொம்பவே யதார்த்தமாய் கதையை நகர்த்தி இருந்தாலும், பார்க்க செம கெட்ட பயலாட்டம் தெரிந்த அந்த ஹீரோ ஒரு தெனாவட்டான டியுரங்கோவாய் இருப்பான் என்பதே கதைத்தேர்வின் போதான எனது அபிப்பிராயமாய் இருந்தது ! And இங்கே எனக்கு நேர்ந்த சிறு தயக்கமே - சொல்லிக் கொள்ளும் விதமாய் ஆக்ஷன் படலம் ஏதுமில்லையே என்பது தான் !  பயபுள்ளை யதார்த்தமாய் ஊரை விட்டு ஓடுறான் ; யதார்த்தமாய் புதர் மறைவில் குத்த வைச்சு மணம் பரப்பி வரும் சகக் கருப்பினனைப் பாக்குறான் ; கைகுலுக்கிக்காம சேர்ந்தே போறாங்க - அவ்வப்போது தத்துவமா பேசிண்டு ; போய்ப் பட்டாளத்தில் சேருறாங்க ; திங்குறாங்க ; ரோந்து போறாங்க ; செவ்விந்தியனுங்க கிட்டே சிக்கி சிதைஞ்சு போன பட்டாளத்தில் இவனுங்க மட்டுமே மிஞ்சுறாங்க, அப்புறமா சுபம்னு திரையைப் போடுறாங்க ! இதை நீங்கள் எவ்விதம் எடுத்துக் கொள்வீர்களோ ? என்ற சின்ன சந்தேகம் எனக்குள் புகுந்த போது - இந்தக் கதையின் பாணிக்கென பேனா பிடிப்பதுமே மூச்சுத் திணறச் செய்து கொண்டிருந்தது ! முத்து ஆண்டுமலரின் 2 வெவ்வேறு கதைகளுக்கென ஒரு பக்கம் ரெகுலர் பாணியினில் வேலைகள் ; அப்புறம் டெட்வுட் டிக் இன்னொரு பக்கம் இந்த கரடு முரடு தொனியினில்  - எனும் போது ஒரு ஸ்டைலிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிக் கொண்டே இருப்பது இல்லாத கேசத்தையும் கொட்டச் செய்து கொண்டிருந்தது ! So இந்த புது வரவினை நீங்கள் ஏற்றுக் கொள்வது குறித்த லேசான யோசனை எழுந்த முதல் நொடியிலே...."ஆமா...மா.. கேட்டுட்டு தான் தொடரணும் ; ரெண்டாவது அத்தியாய கதையை இன்னொரு புக்கா போட்டுக்கலாம் ; அட்டையில் ஸ்டிக்கரைப் போடுங்கப்பா !!" என்று கரடு முரடுக்கான பேனாவை மூடி வைத்து விட்டு ஜூட் விட்டேன் ! Maybe பணிகளின் அழுத்தம் இத்தனை இல்லாது ; சாவகாசமாய் இருக்க சாத்தியப்பட்டிருப்பின், டெட்வுட்டின் அத்தியாயம் இரண்டுமே இந்நேரம்  உங்களிடம் கரை சேர்ந்திருக்கக்கூடும் ! பெரிதாய் அதிரடிகள் செய்யாவிடினுமே இந்த நாயகனோடு ஒன்றிட நமக்குப் பெரிதாய் சிரமங்கள் இராதென்று நம்பினேன் தான் ; but still - லொட லொடவென பேசித் திரியும் இந்த ஆசாமிக்கு முறையான (வாசக) அங்கீகாரம் இருப்பின், much better & safer என்று தோன்றியது ! தவிர, செப்டெம்பரின் அத்தனை இதழ்களும் தற்செயலாய் என் பணிகளாகவே அமைந்து போக, கொஞ்சமாய் டர்ராகிப் போனது - எல்ல நாயகர்களின் பின்னேயும் எனது குரலாகவே ஒலிப்பது என்ன மாதிரியாய் இருக்குமோவென்று ! டெட்வுட்டின் கதையும் வாகாக 2 தனித்தனி அத்தியாயங்களாய் அமைந்து போக, கேக்கை நடுப்பாதியாய் அறுத்து, வேலையை சுலபமாக்கிக் கொண்டேன் ! Of course - இந்தப் புது வரவுக்கும் 2022-ல் இடமிருக்கும் - உங்களின் ஏகோபித்த thumbs up காரணமாய் ! Maybe ..just maybe - நீங்கள் இந்த ஆல்பத்தை மொத்தியிருந்தால், 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக" ஆன்லைன் புக் பேர் ரிலீஸ் என்ற ரூட்டில் போயிருக்க வேண்டி இருந்திருக்கும் ! இப்போது அவ்வித நோவுகள் நஹி !!

இம்மாதத்து "கழுத்துக்கு மேலே கத்தி # 3" கேஸ் - நமது மேக் & ஜாக் தான் ! ஏனோ தெரியலை ; கார்ட்டூன்களில் மட்டும்  உங்களின் நாடித் துடிப்புகளை என்னால் கணித்திட முடிய மாட்டேன்கிறது ! என் கண்ணுக்கு ரகளையான படைப்பாய்த் தென்பட்ட மதியில்லா மந்திரியை துபாய்க்கு தாண்டி ஒட்டகம் மேய்க்க அனுப்பிட நேர்ந்தது   ; ஆசை ஆசையாய் தேடிப் பிடிச்சாந்த Smurfs பசங்களை கள்ளத்தோணியிலே ஏத்தி ஜார்கண்ட் பக்கமா அனுப்ப வேண்டிப் போனது ; சுட்டிப் பொடியன் பென்னியும், சோன்பப்டி தாடித் தாத்தா லியனார்டோவும் வந்த ரயிலிலேயே ஊரைப் பார்த்துக் கிளம்ப டிக்கெட் போட்டுக் கொடுத்து விட்டோம் ! And  சிகாகோவில் வித்தியாசமான டிடெக்டிவ்களாய் சுற்றி வந்த இந்த மேக் & ஜாக் ஜோடியையுமே அரைபாடி லாரியில் ஏத்தி அரேபியா அனுப்புவது தான் திட்டமாக இருந்தது !! இம்மாதத்தினில் நீங்கள் 'பளிச்' என்று மார்க் போட்டிருப்பதால் அரைபாடி வண்டி டிரைவரை ஒரு டீ குடிச்சிட்டு வரச் சொல்லி வைத்துள்ளோம் ! மீத நண்பர்களும் 'thumbs up' தந்திடும் பட்சத்தில், இந்த நெட்டை + குட்டை ஜோடியினை லாரியிலிருந்து இறக்கி, நமது எக்ஸ்பிரஸில் ஏற்றிக்கலாம் ! Last call folks !! இதனில் பணியைப் பொறுத்தவரையிலும் no சிக்கல்ஸ் or விக்கல்ஸ் !! நேர்கோட்டுக் கதை ; ஆதர்ஷ கார்ட்டூன் ; and மாறுபட்ட பின்புலம் எனும் போது சிரமங்களுக்கு முகாந்திரங்களே இருக்கவில்லை ! ஆனால் போன 2 ஆல்பங்களின் அளவுக்கு இதனில் ஹ்யூமர் இல்லியே என்பது மட்டும் லைட்டாய் நெருடியது ; உங்களின் விமர்சனங்கள் எல்லாமே பாசிட்டிவாக அமைந்திட, கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொண்டேன் ! 

ஜம்போ : "சித்திரமும் கொலைப் பழக்கம்" : 

உங்களின் அலசல்கள் 'சூப்பர்' என்றும் ; 'சொதப்பல்' என்றும் ஊசலாடுவதில் நிஜமாக எனக்கு ஆச்சர்யங்கள் இல்லை தான் ! இந்த ஆல்பத்தின் ப்ரிவியூ பார்த்தல் ; இதன் இன்டர்நெட் அலசல்கள் என்றெல்லாம் நான் செய்த சமயத்தில், இது ஒருவித dark க்ரைம் த்ரில்லர் என்பதாகவே எனக்குத் தோன்றியது ! அந்த நம்பிக்கையில் தான் இதனை ஜம்போவினில் ஸ்லாட் செய்திருந்தேன் ; இல்லாவிடின் இது லயன் கிராபிக் நாவலுக்குள் புகுந்திருக்கும் ! அந்த கதை சொல்லும் voice over பாணி சிலருக்குப் புதுசாகவும், சிலருக்கு மொக்கையாகவும் தென்படும் என்பது எழுதும் போதே புரிந்தது தான் ! தவிர, டப்பிக்குள் ஒரேயொரு பீட்சாவை வைத்தே பாரிஸ் போலீசுக்கு தண்ணி காட்டுவதை ; லாலா கடைகளிலும், இருட்டுக் கடைகளிலும் கலர் கலரான அல்வாக்கள் பல பார்த்த நாமெல்லாம் எவ்விதம் எடுத்துக் கொள்வோமோ ? என்ற கேள்விக்குறி எழாதில்லை தான் ! தவிர, கதையை இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்து, இன்னுமொரு 20 பக்கங்கள் குறைவாய் உருவாக்கியிருப்பின் maybe இன்னமும் வீரியமாய் இருந்திருக்குமோ ? என்ற எண்ணமும் தலைதூக்கியது ! But still - அந்த intense களம் ; அந்தச் சித்திர பாணி ; புது யுக கலரிங் பாணி ; பாரிஸின் பின்புலம் என ரசிக்க விஷயங்கள் நிறைய தென்பட்டதால், கி.நா.பாணிகளின் ரசிகர்கள் நிச்சயமாய் இங்கே இதனைத் தாங்கிப் பிடிப்பார்கள் என்ற எனது நம்பிக்கை பொய்க்கவில்லை !! 

So நிறைய விதங்களில் விடைகள் பல தெரிந்து கொள்ள வழி ஏற்படுத்திய  செப்டெம்பரின் இதழ்கள் என்னளவிற்கு திருப்தியானவைகளே ! Doubtless - இதனில் மாற்றுக் கருத்துக்கள் இராது போகாது தான் ; but ரசனை சார்ந்த விஷயங்களின் பிரத்யேகமே அந்த பன்முகத்தன்மைகள் தானே ? Carry on with the அலசல்ஸ் folks !! அக்டொபரின் "கண்ணே கொலைமானே" அழைக்கின்றது என்னை ! Bye for now !! See you around !!

P.S : பழைய டெக்ஸுக்கு கொடி பிடித்திருந்த OLD IS GOLD அணியினரே - 'ஆணியே பிடுங்க வேணாம் !' என ஓட்டெடுப்பு சொல்லியதில் மனம் தளர வேணாம் ; குழந்தைக்கு சிகிச்சை நடந்து அவன் நலம் பெறட்டும் ; அதனைக் கொண்டாட ஒரு கலர் டெக்ஸ் மறுபதிப்பினை ரகளையாய் ரெடி பண்ணிடலாம் !! ஒரு நல்ல விஷயத்துக்கு மனமுவந்து உதவிட முன் வந்த நீங்கள் ஒவ்வொருவரும் நம் ஆதர்ஷங்களுக்கு உரியோரே ; so உங்கள் ரசனைகளுக்கும் மதிப்பின்றிப் போகாது ! Cheers !!

266 comments:

  1. நல்ல விஷயம் சார்.

    ReplyDelete
  2. Wow நிஜமாலுமே பர்ஸ்ட்

    ReplyDelete
  3. Replies
    1. என்னாது ஷெரீப்புக்கு லவ்ஸா...

      பேஷ்
      பேஷ்
      நெம்ப நன்னாருக்கு...

      யாரூப்பா ...

      ஒரு டிரங்கால் போடுங்க..‌

      Delete
    2. வீட்டு கூரையை ஒடச்சு தட்டீ மண்டக்கீ கட்டு போட்ருக்காப்டீ

      Delete
    3. ஒடச்சது வேற யாரூ...

      Delete
    4. அண்ணே. நம்ம பொழப்பு அடி வாங்காம ஓடறது உங்களுக்கு பிடிக்கலையா?

      Delete
  4. படிச்சுட்டு வாரேன்

    ReplyDelete
  5. இரவு வணக்கம் நண்பர்கள் அனைவருக்கும்.

    ReplyDelete
  6. மைண்ட் வாய்ஸ் : கார்சனுக்கு கபி கபி ; டெக்ஸுக்கு இக்ளியூண்டு ; அடுத்து டிரெண்டுக்கு கண்ணாலம், காட்சி - இன்னா நடக்குதுங்கோ இங்கே ? போற போக்கிலே நம்ம ஷெரீபுக்குக் கூட ஒரு நல்லது நடந்திடுமோ ? ஹோல்டான்...ஹோல்டான்....நான் குறிப்பிடுவது நம்ம ஷெரீப் டாக்புல்லை !! தப்பிதமா அர்த்தம் பண்ணிக்கிட்டு எங்கயாச்சும், யாராச்சும் குஷியில் கூரை வரைக்கும் குதிச்சுக் கூப்பாடு போட்டு கபாலத்துக்கு சேதம் வரவழைச்சுக்கிட்டா அதுக்குக் கம்பெனி பொறுப்பேற்காது


    🤣🤣🤣🤣

    ReplyDelete
    Replies
    1. அப்ப வட போச்சா? ஷெரீப்புக்கு நல்லது நடக்கற வரை கி. ஆ. க்கும் நல்லது நடக்க முடியாது. அது போதும்.

      Delete
    2. இப்படி ஒரு ஆசை வேற மனசுல இருக்கா.... பூரிகட்டை பறக்கபோகிறது.

      Delete
  7. ஹைய்யா..பத்துக்குப் பத்து.

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  9. டெட்வூட் டிக் - 9/10 

    அமர்க்களமான ஆரம்பம். யதார்த்த நடை. மேலும் எதிர்பார்க்கிறேன் - Deadwood Dick is here to entertain !
    ட்ரெண்ட் - பகலரியா பூமி  - 8/10

    இதை ஒரு கதை என்று ஏற்றிட முடியவில்லை. அனால் ஒரு பயணக்கட்டுரையாய் ஓகே.
    சித்திரங்கள் மற்றும் கலரிங் அபாரம் என்பதால் கூடுதல் மதிப்பெண்கள் 

    சித்திரமும் கொலைப் பழக்கம் - no marks !!

    இக்கதைக்களம் நமக்கானதல்ல. வித்யாசமான கதைக்களங்களை நான் வரவேற்பவன்தான். ஆனாலும் அந்த கடைசீ பக்க திருப்பத்திற்கு பின் - felt precious time wasted. நேர விரயம் என்றுணர்கிறேன். அமெரிக்க tabloidகளின் முதல் பக்க செய்திக்குரிய இந்த விஷயத்தை ஒரு முழு நீள கிராபிக் நாவலாக ஏற்க இயலவில்லை !

    ReplyDelete
  10. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  11. சூப்பர்..சூப்பர்..Edi ji...
    Love all னு ரிசல்ட் சொல்லிபுட்டீங்கோ..
    அப்படியே Old Gold வரும்னு பாலை வார்த்து போட்டீங்கோ..ரொம்ப டாங்ஸ்.

    ReplyDelete
  12. என்னளவில்இம்மாதம் முதலிடம் மேக் & ஜாக் இரண்டாமிடம் ட்ரெண்ட் மூன்றாவது டெட்வுட் டிக் நான்காவதாக.சித்திரமும் கொலைப்பழக்கம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  13. சார் ஒரிஜினல் எப்படியிருந்தாலும் எடிட்டிங்கில் நம்ம தலய கொஞ்சம்டீஜண்டாக்காட்டுங்க. ப்ளீஸ். அவரு நல்லவராவே தொடரட்டும். கொஞ்சம் சிரமம்னா ஸ்கிப் பண்ணிடலாம்சார்

    ReplyDelete
  14. வந்துட்டேன். கொஞ்சம் லேட்டா

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. // பாபுவின் குழந்தைக்கு பூரண உதவி கிடைக்கும் வாய்ப்பொன்று இன்னொரு திக்கிலிருந்து எழுந்துள்ளது போலும் ! //

    சிறப்பான தகவல் சார்.....

    ReplyDelete
  17. பகலறியா பூமி:
    பனிபடர்ந்த பூமியின் இருள் ஆட்சி,வாட்டும் குளிர்,நீடிக்கும் மெளனத்தில் குப்பை கொட்டவே ஒரு தில் வேணும்தான்,ட்ரெண்டின் சிந்தனைகள் தறிகெட்டு அலைபாய்வதில் வியப்பேது...

    "ஆயிரத்துச் சொச்சமாவது தடவையாக ! பிச்சைக்காரனின் அங்கியிலிருக்கக் கூடிய பொத்தலைப் போல அந்தக் கருவானில் எங்கேனும் சிறு துவாரமிருந்து அதன் வழியே வெளிச்சக் கீற்றுக்கள் தென்படாதா ?!"
    -வர்ணனைகள் சிறப்பு...

    குட்டி தேவதை லிட்டில் மூனுக்காக பயணிக்கும் ட்ரெண்ட் நெஞ்சை கவர்ந்து விட்டார்...
    நேசமும்,பாசமுமான ஒரு கதை...
    இறுதிக் காட்சி மனதை சற்றே அசைத்துதான் பார்த்து விட்டது...
    அழகிய காட்சிகளும்,நிறைவான ஓவியங்களும்,ட்ரெண்டின் மனிதமுமாய் இருக்கும் இந்த பனி பூமி நம்மை கவரா விட்டால் தான் வியப்பு...

    ஏனோ மிகவும் பிடித்த களமாகி விட்டது பகலறியா பூமி...

    மழைத் துளியின் முதல் முத்தத்தில் எழும் மண் மணத்தைப் நாசியில் நுகரும் பொழுது ஒரு சிலிர்ப்பு எழுமே அப்படி ஒரு நிறைவை தந்த வாசிப்பு...

    பகலறியா பூமி-அழகிய கவிதை...

    எமது மதிப்பெண்கள்-9/10...

    ReplyDelete
    Replies
    1. // குட்டி தேவதை லிட்டில் மூனுக்காக பயணிக்கும் ட்ரெண்ட் நெஞ்சை கவர்ந்து விட்டார்... // சத்தியம் அண்ணா.

      Delete
  18. நரகத்திற்கு நடுவழியே:

    நக்கலும்,நையாண்டியுமாய் Monologue பாணியில் டிக் கதை சொல்லும் உத்தியே அசத்தல் தான்...

    தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்வதெல்லாம் வேற இரகம்...

    "ரெண்டு வாட்டி தூக்கிலே போடறதுனாலே பெருசா எந்த வித்தியாசமும் இருக்கப் போறதில்லீங்களே ?!"

    "ஒரு கருவாயன் இங்கே இன்னமும் கருவாயனே ! இழிந்த நீக்ரோவே !"

    ராவாக கதை சொல்லும் இந்த பாணி பிடித்தே உள்ளது...

    டிக் கதாபாத்திரம் கிட்டத்தட்ட ட்யூராங்கோ பாணியை போன்றதுதான்...

    இராமன் ஆண்டாலும்,இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல என்று நினைக்கும் தன்மையே இவர்கள் ஸ்பெஷல்...
    என்ன பிரச்சனைன்னா ட்யூராங்கோ பாணியில் போகப்போக அந்த பாணியை சற்றே மாற்றி ஹீரோயிச பாணியில் அந்த பாத்திர வடிவமைப்பை சற்றே மாற்றியதுதான்,அந்த பிரச்சினை டிக் கதாபாத்திரத்திற்கும் வராமல் இருந்தால் நலம்...

    வன்மேற்கில் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள டிக் போன்ற முரட்டு குணங்களும்,கடின சிந்தனைகளும் அவசியம்தானோ என்ற வாசிப்பினிடையே எழத்தான் செய்கிறது...
    நகைமுரண் என்னவெனில்,டிக்கின் செயல்பாடுகள் சார்ந்த சம்பவங்கள் துர்சொப்பனங்களாய் விடாது கறுப்பாய் டிக்கை துரத்துவதுதான்...

    மற்றொரு கோணத்தில் யோசித்துப் பார்த்தால் டிக்கின் செயல்பாடுகள் முழு விருப்பத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படுவதில்லை,அந்த குற்ற உணர்ச்சியோ,மன உறுத்தல்களோ கூட டிக்கின் துர் சொப்பனங்களுக்கு காரணமாய் இருக்கலாம்...

    அதனால்தானோ என்னவோ நண்பன் கல்லெனிடம் கூட இறுதிவரை டிக்கால் வெளிப்படையாக இருக்க இயலவில்லை,சொல்லப்படும் சம்பவங்களையும் சற்று மறைத்தே டிக் சொல்கிறான்...

    எது எப்படியோ வாசிக்க ஒரு வித்தியாசமான களம்,சற்றே சிந்திக்கவும் தான்...

    சிறு குறை யாதெனில்,சில பக்கங்களில் எழுத்துக்கள் 3 D எபெக்டில் இருந்ததுதான்...

    எமது மதிப்பெண்கள்-9/10.

    ReplyDelete
    Replies
    1. // குற்ற உணர்ச்சியோ,மன உறுத்தல்களோ கூட டிக்கின் துர் சொப்பனங்களுக்கு காரணமாய் இருக்கலாம்... // நானும் இப்படித்தான் நினைத்தேன்.

      Delete
  19. பாவை மிரண்டால் பார் கொள்ளாது:

    கதையும்,காமெடியுமாய் செம ஜாலியான வாசிப்பு தான்...

    பாவைகள் வரவைக் கண்டு மின்னல் வேகத்தில் ஜாக் தயாராகும் காட்சிகள் Jim Carry யின் The Mask படக் காட்சிகளை நினைவூட்டியது...

    அல் கபோனை வெச்சி செய்யும் காட்சிகள் செம,சின்ன ட்விஸ்டில் மேக் & ஜாக் வாங்கும் பல்பு குபீர் இரகம்...

    எலியட்டும்,அல் கபோனும் கிளைமேக்ஸில் செய்யும் சேட்டையும் செம...

    மொத்தத்தில் சிரிப்புக்கு கியாரண்டி மேக் & ஜாக்...

    2022 இல் ஒரு ஸ்லாட்டை மேக் & ஜாக்கிற்கு தாரளமாக ஒதுக்கலாம்...

    சிறுகுறை யாதெனில் ஆங்காங்கே தடுக்கிய எழுத்துப் பிழைகள்
    தான்...

    எமது மதிப்பெண்கள்-8/10...

    ReplyDelete
    Replies
    1. // மொத்தத்தில் சிரிப்புக்கு கியாரண்டி மேக் & ஜாக்...

      2022 இல் ஒரு ஸ்லாட்டை மேக் & ஜாக்கிற்கு தாரளமாக ஒதுக்கலாம் // வரிக்கு வரி வழி மொழிகிறேன்

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. சித்திரமும் கொலைப் பழக்கம்:
    கதை நாயகன் தொடக்கம் முதல் இறுதி வரை ஒருவிதமான ஊசலாட்ட மனநிலையிலேயே இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது...

    தெளிவான சித்திரங்களும்,
    காட்சியமைப்புகளும் ஆர்வத்தை கூட்டுகின்றன...
    எனினும் கதையின் போக்கு தனது தடத்தை அழுத்தமாக பதிக்கவில்லையோ என்று எண்ண வைக்கிறது...
    கேரலின் தந்தையாக கருதப்படும் நபர் செய்யும் தொடர் சம்பவங்களுக்கான காரணங்கள் வலுவாக காட்சிபடுத்தப்படவில்லை...
    தொடர்ந்து குற்றவாளிகளை வரைவதால் மட்டுமே ஒருவர் பிறழ் மனத் தன்மையை அடைய முடியுமா என்ன ?!
    படம் வரைபவருக்கே இந்த நிலை எனில்,இந்த கடும் குற்றவாளிகளுடன் பயணிக்க மற்றவர்களின் கதி என்ன என்ற கேள்வி இயல்பாகவே நமக்கு எழுகிறது ???!!!
    கதையின் முடிவில் வரும் காட்சியை வாசிப்பினிடையே சற்றே ஊன்றி கவனித்துப் படித்தாலே யூகித்து விடலாம்...

    கி.நா வின் ஸ்பெஷலே நம்மிடையே சிந்தனையை தூண்டுவதும்,பல கேள்விகளை முன் வைப்பதும்,அதற்கு பலவிதமான விடைகளை ஒவ்வொரு பார்வையில் முன்வைப்பதும்,அந்த யூகங்கள் பெரும்பாலானவை சரியாகப் பொருந்திப் போவதும்தான்...

    அந்த தாக்கத்தை சி.கொ.ப ஏற்படுத்தாததால் பல கதைகளைப் போல பத்தோடு பதினொன்றாய் சென்று விடுகிறது...

    எமது மதிப்பெண்கள்-7/10.

    ReplyDelete
    Replies
    1. // அந்த தாக்கத்தை சி.கொ.ப ஏற்படுத்தாததால் பல கதைகளைப் போல பத்தோடு பதினொன்றாய் சென்று விடுகிறது... // +100

      Delete
    2. விமர்சனப் புயலின் மீள் வருகை. அருமை அண்ணா அருமை. எழுந்து நின்று கை தட்டும் படங்கள் 100

      Delete
    3. செம விமர்சனம் அறிவரசு அவர்களே!

      Delete
  22. மேக் அன்ட் ஜாக் மற்றும் டிரெண்ட் இரண்டு கதைகளையும் படித்து முடித்து விட்டேன். அருமையான கதைகள் இரண்டும்.

    இன்று சித்திரமும் கொலைப் பழக்கம் கதையை படிக்க ஆரம்பித்து உள்ளேன். 15 பக்கங்கள் படித்து விட்டேன் இதுவரை நன்றாக உள்ளது அடுத்து என்ன என்ற ஆர்வத்தைக் கண்டுப்படுத்த முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. //அடுத்து என்ன என்ற ஆர்வத்தைக் கண்டுப்படுத்த முடியவில்லை//

      ஆச்சர்யம்! அது சி.கொ.பழக்கம் கதைதானா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்!!

      Delete
    2. செனா அனா ஆனாலும் குறும்பு சார் உங்களுக்கு. ;)

      Delete
    3. கதையை ஒரு வழியாக படித்து விட்டேன். முடியல...

      செல்வம் அபிராமி நீங்க கேட்ட கேள்வியின் அர்த்தம் அடுத்த பத்து பக்கங்களில் புரிந்து விட்டது :-)

      Delete
  23. "LOVE ALL ஸ்பெஷல்"

    "LOVE ALL ஸ்பெஷல்"

    "LOVE ALL ஸ்பெஷல்"

    Superu.....💕💞😍🤩🤩🤩🤩🤩

    ReplyDelete
  24. கடந்த ஒரு மாத காலமாக வேலை பளு காரணமாக தளத்திற்கு வர இயலவில்லை!

    பதிவுகளை படிக்கக் கூட சாத்தியப்படவில்லை!

    ஆனாலும் ட்ரெண்ட் தவிர மூன்றும் படிச்சாச்சு!

    டெக்ஸ் இல்லா மாதம்! நாலு விதமான கதைகளும் நன்றாகவே இருந்தது!

    Deadwood dick, மேக் & ஜாக் சூப்பர்!!!

    ReplyDelete
    Replies
    1. இதற்கை அருளால் அரை கோடி முதலீட்டை தொழில் துவங்கி வெறும் 8 மாதத்தில் ஈர்த்தாகி விட்டது!!!

      அடுத்த 3 ஆண்டுகள் தாக்குப் பிடித்தால் நம்ம வண்டியும் கரை சேர்ந்துவிடும்!

      வாழ்த்தி உற்சாகப் படுத்திய, பெருந் தொடர்பு ஏதுமில்லா, மெய்யன்பு நண்பர்களுக்கு நன்றி! நன்றி!!

      Delete
    2. அருமை மிதுனரே.... கலக்குங்கள்...💐💐💐💐💐

      Delete
    3. கேட்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது மிதுன்! வாழ்வில் மென்மேலும் உயர என் வாழ்த்துகளும்!!💐💐💐💐

      Delete
    4. வாழ்த்துகள் மிதுன்.

      Delete
    5. வாழ்த்துக்கள் மிதுன். இன்னும் நீங்கள் உயரம் தொட வாழ்த்துக்கள்.

      Delete
    6. சூப்பர் மிதுன். மேலும் உயர வாழ்த்துக்கள்.

      Delete
    7. ///மேலும் உயர வாழ்த்துக்கள்.///

      ஏற்கனவே உயரமாத்தான் இருக்கார்! 'வாழ்க்கையில் உயர'ன்னு தெளிவாச் சொல்லுங்க! :P

      Delete
    8. வாழ்த்துகள் மிதுன் ஜி...!!!

      Delete
  25. ///கொண்டாட ஒரு கலர் டெக்ஸ் மறுபதிப்பினை ரகளையாய் ரெடி பண்ணிடலாம் !! ///

    ----ஆஹா 2வது லட்டு🤩🤩🤩🤩🤩

    ReplyDelete
    Replies
    1. அட அப்ப ரெண்டு லட்டும் கன்பார்மா...
      சூப்பரு,நான் சரியா பார்க்கலை போல...!!!

      Delete
    2. இப்போ ஒரு லட்டு. பிறகு ஒரு லட்டு.

      Delete
    3. எப்படியோ லட்டு கிடைச்சா சரி...

      Delete
  26. //பழைய டெக்ஸுக்கு கொடி பிடித்திருந்த OLD IS GOLD அணியினரே... so உங்கள் ரசனைகளுக்கும் மதிப்பின்றிப் போகாது ! Cheers !!//

    Thank you for your concern Sir.
    ஆனாலும் நீங்கள் வெளியிட போகும் புதிய டெக்ஸ் கதை மறுபதிப்பு கேட்கும் வண்ணம் அற்புதமான ஒரு கதைகளத்தோடு வெளியிட ஆவண செய்யும்படி கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  27. மேக் அன்ட் ஜாக் - 9/10

    simply breezy, racy and very humorous ! அடுத்த வருட இன்னிங்க்ஸுக்கு தயாராகிவிட்டார்கள் - இதுவரை வந்த மேக் அண்ட் ஜாக் கதைகளில் இதுவே என்னை மிகவும் கவர்ந்தது.

    ReplyDelete
    Replies
    1. ///இதுவரை வந்த மேக் அண்ட் ஜாக் கதைகளில் இதுவே என்னை மிகவும் கவர்ந்தது.///

      அடடே!! சீக்கிரமே படிக்கிறேன்!

      Delete
    2. கிருஷ்ணா வும் இதே கருத்து தான் சொன்னார். பெஸ்ட் ஆஃப் மேக் அண்ட் ஜாக்.

      Delete
  28. ///'தல' பராக்குப் பார்க்க, புல்வெளியினில் லவ்ஸ் அரங்கேறுவது ஒரு பக்கமெனில், தலயே அந்த லவ்சினில் ஐக்கியமாகிடும் சேதி தெரியுமோ///

    சார்.. அந்த ப்ரிவியூ பக்கம் எனக்குள் எந்தவொரு அதிர்வலையையும் ஏற்படுத்தவில்லை! டெக்ஸ் குதிரையில் ஏறும்வரை கூட அவரது மஞ்சச்சட்டையின் மடிப்புக்கூட கலையவில்லையே?!! அப்படியிருக்க, அவர் ஐக்கியமான செய்தியை தெரிஞ்சா என்ன.. தெரியாட்டி என்ன!!😤😤

    பேசாம நானும் 'ஓல்டு கோல்டு'க்கே ஓட்டுப் போட்டிருக்கலாம் போல!!😤😤

    ReplyDelete
    Replies
    1. This looks to be a different story EV. LOVE ALL SPECIAL might be different.

      Delete
    2. அப்படியா சொல்றீங்க, ராக் ஜி? சரி பார்ப்போம்!

      Delete
  29. பகலறியா பூமி!

    மென்மையான கதை!

    கதை நிகழிடம் ஆர்க்டிக் வட்டத்துக்குள்ளே அல்லது அதன் மிக அருகாமையில் என்பதால் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் சங்கடப்படுத்துகின்றன..

    கனட அல்லது ரஷ்ய குளிர்காலமொன்றில் என நினைக்கிறேன்.. எடிட்டர் சார் ஒரு சம்பவத்தை தனது பயண அனுபவங்களில் விவரித்து இருப்பார்..கனடாவின் அல்லது ரஷ்யாவின் மையப்பகுதி அது என நினைக்கிறேன்

    அங்கேயே அப்படியென்றால் போர்ட் சர்ச்சிலிலிருந்து நூறு மைல்களுக்கு அப்பால் வடக்கே எப்படியிருக்கும்?

    கேம்ப் சைட்டிலிருந்து சூரியன் உதிக்கும் காலத்தே பத்து மைல்களுக்கு அப்பால் உள்ள ஓல்ட் வோல்ஃப் பகுதியை நடந்து கும்மிருட்டில் பனி விளக்குகள் துணையின்றி பனிக்காற்று வீசுகையில் போவதெல்லாம் நடக்க கூடிய காரியமா எனத்தெரியவில்லை ..

    இதுவே இப்படியெனில் போர்ட் சர்ச்சிலை நோக்கிய பயணம் சாத்தியமா எனத் தெரியவில்லை..

    பக்கம் 18 -ல் காட்டப்படும் அரோரா போரியாலிஸ்( Aurora Borealis) திரைப்படங்களில் காட்டப்படும்போதே மனம் மயங்கும்.

    நேரில் பார்ப்போர் தம் வாழ்நாளில் மறக்கவியலாது..

    சூரிய புயலின்போது வெளிப்படும் மின்னூட்டம் பெற்ற காஸ்மிக் துகள்கள் ( பெரும்பாலும் எலக்ட்ரான் ,புரோட்டான்) புவியின் வளிமண்டல ஆக்ஸிஜன் ,நைட்ரஜன் வாயுக்களோடு மோதுவதால் விளைவது..

    வாயுக்கள் சூடாவதால் வண்ணங்கள் உருவாகின்றன..

    ஆர்க்டிக் பிராந்திய சீதோஷ்ண நிலை தரவுகளை கதை தன் வசம் கொள்ளாததால்

    பிரபல எழுத்தாளர் மைக்கேல் ப்ரேய்ன் ஆர்க்டிக் தட்பவெப்பநிலையை மையக்கருவாய் வைத்து ( கிரீன்லாந்து ) அலிஸ்டர் மெக்லீன் எழுதிய NIGHT WITHOUT END நாவல் பற்றி கூறிய வார்த்தைகளை இரவல் வாங்கி கொஞ்சம் மாறுபடுத்தி பகலறியா பூமி பற்றி இங்கே சொல்லலாம்..

    Clumsily written

    Absurdly implausible

    Thoroughly enjoyable

    ReplyDelete
    Replies
    1. ///பக்கம் 18 -ல் காட்டப்படும் அரோரா போரியாலிஸ்( Aurora Borealis) திரைப்படங்களில் காட்டப்படும்போதே மனம் மயங்கும்.

      நேரில் பார்ப்போர் தம் வாழ்நாளில் மறக்கவியலாது.////

      வாழ்க்கையில் ஒரு தபாவாவது இதையெல்லாம் நேரில் பார்த்துப் பரவசப்படணுமுங்க செனா அனா! சமீபத்தில் கூட ஏதோவொரு ஆங்கிலப்படத்தில் (skull island??) இப்படியான காட்சியை காட்டியிருந்தார்கள்!! படத்தில் பார்க்கும்போது பிரம்மிப்பாக இருந்தது!

      Delete
  30. அன்பு ஆசிரியருக்கு 🙏,
    காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு 🙏,

    உங்களின் இந்த வார பதிவும், ஒரு வாசகனின் நலனுக்காக என்பதை படிக்கும் போது, மீண்டும் உங்களின் முயற்சிக்கு நன்றிகள் சார்.

    மிகச் சிரமமான இந்த கொர்னா காலத்திலும், குழந்தையின் நலனில் அக்கறை கொண்டு நிதியுதவி அளித்து வரும், காமிக்ஸ் வாட்சப் குழுக்களின் அன்புள்ளங்களுக்கும், மற்றும் அயல் தேசத்தில் இருந்து உதவும் காமிக்ஸ் நண்பர்களுக்கும், இவைகளுக்கு சிகரம் வைத்தாற்போல், முழுமூச்சாக தயாராகிய லயன் காமிக்ஸ் விஜயன் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

    குழந்தையின் நலனுக்காக நாம் ஒருபக்கம் உதவ அனைவரும் முழு மனதோடு தயாராகும் வேளையில்,
    இன்னொரு பக்கம் இறைவன் கருணையால் இன்னொரு உதவி.
    இது நம் அனைவரின் முழு மனதையும் குழந்தையின் மீது செலுத்திய அன்பின் பலன் என நினைக்கிறேன்.

    குழந்தையின் நலனுக்காக நாம் போராடும் அதே வேளையில், அடுத்த இதழ் எதுவாக இருக்கும் என கேள்வி இந்த ஒருவாரம் மனதை துளைக்காமல் இல்லை.
    புதிய இதழா சந்தோஷம்.

    பாம்பு மனிதன் கதையில், டெக்ஸின் காதல் ரசம் சொட்டும் காட்சிகளை "சென்சார்" செய்யாமல், தமிழ் இதழில் கொண்டு வந்தால் பலர் ஜென்ம விமோசனம் அடைவார்கள் என்பது உறுதி.

    OLD IS GOLD கேட்ட வாசகர்கள் மனதில் பாலையும்,கூடவே பாயாசத்தையும் வார்த்து விட்டீர்கள். தயவுசெய்து, தயவுசெய்து மறுபதிப்பான கதையையே மீண்டும் மறுபதிப்பு தராமல், உங்களின் அன்பு வாசகர்களின் தேர்வை கருத்தில் கொண்டு, வராத கதையை மறுபதிப்பு செய்தால் நலம்.
    அதை இரண்டு கதைகளாக கொடுத்தாலும் மிக மிக மகிழ்ச்சியே.

    நல்ல வேளை இந்த வாரம் சிவராத்திரி ஆகாமல், நேரமே பதிவு போட்டு விட்டீர்கள். இதே போல் தொடர்ந்தால், நாங்களும் நேரங்காலமே அலசி விட்டு தூங்க போகலாம்.
    நன்றி...

    மீண்டும் அடுத்த பதிவில் 🌹...

    ReplyDelete
    Replies
    1. ///குழந்தையின் நலனுக்காக நாம் ஒருபக்கம் உதவ அனைவரும் முழு மனதோடு தயாராகும் வேளையில்,
      இன்னொரு பக்கம் இறைவன் கருணையால் இன்னொரு உதவி.
      இது நம் அனைவரின் முழு மனதையும் குழந்தையின் மீது செலுத்திய அன்பின் பலன் என நினைக்கிறேன்.///

      அருமையா சொன்னீங்க சிவா சார்!

      Delete
  31. டியர் எடி,

    டெட்வுட் டிக்... அட்டகாசமான அறிமுகம். ஓட்டநடை கொண்ட நேர்த்தியான சித்திரங்கள் ஊடே ஒரு திருப்திகறமான அறிமுகம். முதல் பாகம் கொஞ்சம் வளாளா சொந்த கதை சோக கதை என்று அமைந்தாலும் 'ஞானபழ' நீக்ரோ பட்லர் வந்து சேர்ந்தவுடன், டெக்ஸ் கார்சன் போல சம்பாஷனை சூடுபிடிக்கிறது. இரண்டாம் பாகம் செவ்விந்திய தாக்குதல் என்று ரணகளமாக மாறுவது நல்ல ஒரு வேகம். அம்மணமாக ஒருவன் தோன்றும் காட்சியை தவிற நாராசம் இல்லாத வகையில் பலூன்கள் இடம்பிடிப்பதால்... டிக் தேறிட்டார். மீதம் எஞ்சிய 5 பாகங்களையும் அணிகட்டுங்கள் தாராளமாக. Rating 3.5/5


    சித்திரங்களும் கொலைபழக்கம் அக்மார்க் மொக்கை. ஆரம்பத்தில் ஏதோ கொலை பழிவாங்கல் என்று சுவாரசியம் கூட்ட முயன்றாலும், யாருமே கண்டுக்காத ஹெல்மட் தலையன் ஒரு பக்கம் என்றால், யாருமே காணாத பைக் மறுபக்கம், இதன் நடுவே பீட்சா வாங்கி காவல் அலுவலகம் என்ட்ரீ, ஜன்னல் குதித்து எஸ்கேப், நடுவே காமராவே இல்லாத சிறைச்சாலை வாசல், என்று படுமொக்கையாக கதை நகர்கிறது. இதனூடே கதாநாயகனின் குறட்டை புலம்பல்கள் எப்படியோ பொறுத்து முடிவுக்கு வந்தால், கிளைமாக்ஸ் ட்விஸ்ட் - 'ஆணியே புடுங்க வேண்டாம்' என்ற கதி. படு ஆவரேஜான கிராபிக் நாவல் தேர்வு. Rating 2/5

    அடுத்த இரண்டு கதைகளை படித்துவிட்டு சீக்கிரம் கருத்திடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //ஞானபழ' நீக்ரோ பட்லர் வந்து சேர்ந்தவுடன், டெக்ஸ் கார்சன் போல சம்பாஷனை சூடுபிடிக்கிறது//

      நிஜமே சார் ; போனெல்லியின் ஆதர்ஷ template ஆச்சே - இந்த இருவர் இணைந்த பயணிப்பது !

      Delete
  32. வணக்கம் நண்பர்களே.🙏🙏🙏

    ReplyDelete
  33. அருமை சார்...நண்பர்களே...நண்பரின் பாரம் குறைந்ததில் சந்தோசம்...கூடிய விரைவில் குழந்தை பூரண நலம் பெறட்டும்...
    சார் இந்த டெக்ச அடுத்த மாதமே கண்ல காட்டுவியளா

    ReplyDelete
  34. அறிவரசு ரவி சார். விமர்சனம் செம. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  35. ///போர்ட் சர்ச்சிலை நோக்கிய பயணம் சாத்தியமா? ///செனா.அனா ஜீ. ட்ரெண்டால் முடியும். ஏன்னா அவர்தான் இந்தகதையின்ஹீரோ. விடுங்க. தமிழ்படகனவுகாட்சி பாடல் களில் ஹீரோ கோட் சூட், தொப்பியுடன் டான்ஸ்ஆடாமல் நடந்து கொண்டிருக்க, அந்தநடுக்கும் குளிரில் ஈரோயின் தம்மாதுண்டுதுணியுடன் நேர்த்தியாக, டான்ஸ் ஆட மெய்மறந்து ரசிக்கிறோம். இது எப்படி சாத்தியம் என்றுயோசித்துக் கொண்டிராமல் சகஜமாக தாண்டிப் போகிறோம். பழகிவிட்டதல்லவா. ட்ரெண்டையும் பனியிலேயே காலம் காலமாகவாழும் ஒரு நபர். அவருக்கு பழகிவிட்டதுஎன்று ஏற்றுக்கொள்வோம். மேக்&ஜாக் பற்றிய உங்கள்கருத்துக்களேவிமர்சனங்களை முழுமைப்படுத்தும்.சீக்கிரம் விமர்சியுங்கள். அண்டர்கிரவுண்ட் வேர்ல்ட் ,நல்லவர்கள் கூட சுலபமாகமாறுவதைபோகிறபோக்கில் பகடி செய்துள்ளதுஅருமை. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. // அந்தநடுக்கும் குளிரில் ஈரோயின் தம்மாதுண்டுதுணியுடன் நேர்த்தியாக, டான்ஸ் ஆட மெய்மறந்து ரசிக்கிறோம். //
      ஆமா இராஜசேகர் கரெக்டா சொன்னிங்க,அதுவும் தெலுங்குப் படமெல்லாம் சொல்லவே வேண்டாம்,துணி பஞ்சம் ரொம்ப தலை விரிச்சாடும்...

      Delete
    2. ராஜசேகர் back to full form :-)

      Delete
    3. ///ராஜசேகர் back to full form ///

      யெஸ்! நானும் அதையே சொல்ல நினைத்தேன்!!

      ரொம்ப மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்!

      Delete
    4. ராஜசேகரன் சாரின் ஷார்ப்னஸ் என்றைக்குமே குறைந்து தென்பட்டதே இல்லை ! Rocking always !

      Delete
  36. // பாபுவின் குழந்தைக்கு பூரண உதவி கிடைக்கும் வாய்ப்பொன்று இன்னொரு திக்கிலிருந்து எழுந்துள்ளது போலும் ! //

    மகிழ்ச்சியான செய்தி.

    ReplyDelete
  37. படிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமான நண்பர்களின் விமர்சனம் நன்றாகவே இருக்கு!!
    ஆனால் இங்கு (ஸ்ரீலங்காவில்) நிலவரமே வேற
    "லொக்! லொக்! என்று நிறைய பேர் இருமினதால் இங்கு லொக்டவுன்"
    விரைவில் நிலமை சீராகணும் புக்ஸ் கையில் கிடைக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் பயணித்த சமாச்சாரம் தானே நண்பரே ! சீக்கிரமே நிலவரம் சீராகிடும் !

      Delete
  38. 1.பாவை மிரண்டால் பார் கொள்ளாது:
    ஒரு ஜாலியான வாசிப்பு .. IMO AFTER LUCKY AND CHICK BILL .. BLUECOATS , MAK AND JACK R GOOD IN CARTOON GENRE .. 8.5/10..

    2.பகலறியா பூமி(TRENT):
    வழக்கமான நேர் கோட்டு கதை .. சித்திரங்கள், மொழிபெயர்ப்பு பலம் .. COMMANCHE AND JEREMIAH இதை விட நன்றாக இருந்தது என் அளவிலாவது .. 8/10..

    3.சித்திரங்களும் கொலைபழக்கம் :

    ஒரு சாதாரண கதையை கி.நா பாணியில் சொல்லி இருக்குறார்கள் .. ஆனால் கதையில் ஒரு கோர்வை இல்லை .. CLIMAX TWIST திணித்தது போல் உள்ளது .. சித்திரங்கள், மொழிபெயர்ப்பு பலம் .. 7/10 ..

    4.டெட்வுட் டிக்

    அமர்க்களமான ஆரம்பம் .. வசனங்கள் கதைக்கு பலம் .. இன்னும் ரெண்டு பாகம் கூட சேர்த்து போட்டு இருக்கலாம் .. 9/10 ..

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் தம்பி அருமையான விமர்சனங்கள். சரியான மதிப்பெண்கள். டெட்வுட் டிக் உண்மையாகவே அட்டகாசமான துவக்கம். எனது பார்வையில் இந்த மாதத்தின் டாப் இதழ் இதுவே. 4 பாகமாக வந்து இருந்தால் இந்த வருடத்தின் டாப் 3 இல் கட்டாயமாக இடம் பிடித்து இருக்கும்.

      Delete
    2. சூப்பர் விமர்சனம் sriram!

      Delete
    3. //COMMANCHE AND JEREMIAH இதை விட நன்றாக இருந்தது என் அளவிலாவது //

      Oops...உங்க கட்சி மைனாரிட்டியில் உள்ளது சார் !

      Delete
  39. பகலறியா பூமி!

    இந்த மாத கதைகளில் முதலில் படித்தது ட்ரெண்ட்-ன் பகலறியா பூமி!

    பூமியின் தென் கோளார்த்தத்தில் வசித்து வரும் நாமெல்லாம், நினைத்துக் கூட பார்க்க இயலாதவொரு கனடிய கதைக்களம். படிக்கத் துவங்கிய உடனேயே, இந்த கதைக்களம் நூற்றுக்கு நூறு மார்க் போட வைத்து விட்டது!

    இது ஒரு கதையல்ல! ஒரு சாமானிய போலீஸ்காரர், நெஞ்சுறுதியுடன் இயற்கையின் போக்கில் எதிர்ப்பட்ட தடைகளை சாதாரண மனிதராகவே தகர்த்து ஒரு பச்சைக் குழந்தையை காப்பாற்றுகிறார்! மனிதம் இழையோடும் இந்த ஒன்லைன் மற்றுமொரு நூற்றுக்கு நூறு மார்க்கை அள்ளிக் கொடுக்கிறது!

    கதை மட்டுமே ஹீரோவாக வரும் இந்த கதையில் சாதாரண போலீஸ்காரராக ஆக்னஸின் நினைவுகளுடன் வலம் வரும் ட்ரெண்ட் மட்டுமல்லாமல் மற்ற சில கதை மாந்தர்களும் மனதை விட்டு அகல மறுக்கிறார்கள்.

    குறிப்பாக,

    தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாத பச்சிளம் குழந்தை!

    தன்னுடைய மனைவி இறந்து விட்டாள் என பனியோடு தீக்கனவில் உயிர் தொலைந்து போகும் கணவர் டென்வுட்!

    தன்னுடைய சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களின் நலனுக்காக வெள்ளையர்களுடன் மோதும் செவ்விந்திய தலைவர்!

    கண்டதும் கணவரை காதல் கொள்ளும் டென்வுட்-ன் மனைவி!

    இவர்கள் எல்லோருக்கும் மேலாக, இருளே என் துணைவன் என்று இருக்கும் ட்ரெண்டுடன் இருக்கும் அந்த நாய்!

    ஓவியங்கள் மற்றும் வண்ணச் சேர்க்கையைப் பற்றியெல்லாம் எழுதுமளவிற்கு பெரிய ஆளல்ல நான்! ஆனால், அந்த சூரியன் உதிக்கும் காட்சியும், அதைக் கொண்டாடும் ட்ரெண்டும் ஓஹோ ரகம்! குழந்தையை தூக்கிப் போட்டு பிடிக்கும் அந்த இறுதி பக்க ஓவியம் நெஞ்சை அள்ளும் ரகம்! இருள் சூழ்ந்த பனியில், ஒளிக்கீற்றுகளின் நடனத்தை காட்டியிருக்கும் அந்த இடமும் அடடே!

    ட்ரெண்டுக்கு இன்னமும் 2 கதைகளே என்பது கொடுமையான செய்தி! மேலும் கதைகள் உருவானால் நலம்!

    இப்படியானதொரு கதையை எங்களுக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான விமர்சனம் பூபதி. சூப்பரா எழுதி இருக்கீங்க.

      Delete
    2. தரமான விமர்சனம்!!

      தரமான படைப்புகளுக்கு தரமான விமர்சனங்களை கொண்டுவரும் சக்தியும் உண்டென்பது புரிகிறது!

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. //ட்ரெண்டுக்கு இன்னமும் 2 கதைகளே என்பது கொடுமையான செய்தி! மேலும் கதைகள் உருவானால் நலம்!//


      அதற்கு வாய்ப்புகள் கிடையாது சார் ; தொடருக்கு அவர்கள் மங்களம் பாடி வருஷங்கள் 21 ஒடி விட்டன ! தற்போதைய நமது "பகல் அறியா பூமி" ஒரிஜினலாய் வெளியானது 1998-ல் !

      படைப்பாளிகள் have moved on !

      Delete
    5. சூப்பர் பூபதி அட்டகாசமான விமர்சனம். 100/100 உங்கள் விமர்சனத்துக்கு

      Delete
    6. // குழந்தையை தூக்கிப் போட்டு பிடிக்கும் அந்த இறுதி பக்க ஓவியம் நெஞ்சை அள்ளும் ரகம் //
      உண்மை மனதிற்கு நெருக்கமான காட்சிகள்...

      Delete
    7. அந்த குழந்தை ட்ரெண்ட் ஐ அப்பா என்றும் ஃபிலிப் என்றும் அழைப்பது எல்லாம் ரொம்பவே நன்றாக இருந்தது.

      Delete
    8. பலே பூபதி...

      இருளே என் துணைவன் என்று இருக்கும் ட்ரெண்ட்...
      Very nice line

      Delete
    9. ///அந்த குழந்தை ட்ரெண்ட் ஐ அப்பா என்றும் ஃபிலிப் என்றும் அழைப்பது எல்லாம் ரொம்பவே நன்றாக இருந்தது.///

      அந்த குழந்தை நம்ம ட்ரெண்டை டாடி'ன்னு கூப்பிட்டது அவங்க அம்மாவுக்கும் நன்றாக இருந்தது! கடைசி பக்கத்தில் அந்த செவ்விந்தியப் பெண் நம்ம ட்ரெண்ட்டை ஒரு லுக்கு விடுவா பாருங்க.. ப்பா அந்தக் கண்களில் ஒருவித ஏக்கம், சோகம், மெல்லிய காதல், எதிர்பார்ப்பு, தவிப்பு, நன்றிக்கடன் - என்று ஓராயிரம் ஜாலங்கள் காட்டும்! ஓவியர் தன் ஒட்டுமொத்தத் திறமையையும் அந்த ஒற்றை ஃபிரேமில் வடித்திருக்கிறார்!

      ஆனால் ஆக்னெஸை மட்டுமே தன் வாழ்நாள் வீக்னெஸாகக் கொண்டிருக்கும் நம்ம ஃப்ரெண்டு ட்ரெண்ட்டு எந்தக் கண்களின் கணைகளுக்கும் வீழ்வதாய் இல்லை!

      உன்னியவே நெனச்சு உசிர வச்சிக்கிட்டிருக்கான் - ஏமாத்திடாதேம்மா ஆக்னெஸு!

      Delete
    10. // குழந்தை நம்ம ட்ரெண்டை டாடி'ன்னு கூப்பிட்டது அவங்க அம்மாவுக்கும் நன்றாக இருந்தது! கடைசி பக்கத்தில் அந்த செவ்விந்தியப் பெண் நம்ம ட்ரெண்ட்டை ஒரு லுக்கு விடுவா பாருங்க.. ப்பா அந்தக் கண்களில் ஒருவித ஏக்கம், சோகம், மெல்லிய காதல், எதிர்பார்ப்பு, தவிப்பு, நன்றிக்கடன் - என்று ஓராயிரம் ஜாலங்கள் காட்டும்! ஓவியர் தன் ஒட்டுமொத்தத் திறமையையும் அந்த ஒற்றை ஃபிரேமில் வடித்திருக்கிறார்! //

      மிகவும் ரசித்த இடம். என் மனதில் உள்ளதை அப்படியே எழுதிவிட்டீங்க விஜய்.

      Delete
  40. இதோ ஆகஸ்ட் மாதம் வரையிலான கவுன்டவுன் எனது ரசனையின் அடிப்படையில் சற்று தாமதமாக,

    01. புத்தம் புது பூமி வேண்டும் + பனியில் ஒரு புது நேசம் - 9.25/10

    தல, கலர், குண்டு புக், அதிரடியான துவக்கம், பின்பு 35 ஆம் பக்கத்தில் விட்ட குத்தும், பார் சண்டையும் துள்ளிகுதித்து விசில் போட வைக்க, வெற்றி அங்கேயே உறுதியாகிவிட்டது. இது போன்ற நீண்ட கதைகளை படிப்பதே தனி சுகம். இம்முறை அதிரடி மட்டும் இல்லாமல், திட்டமிடல்களும் தெளிவாக இருக்க நம்மையும் கலிபோர்னியாவுக்கு அழைத்து செல்கிறது டெக்ஸ் டீம். கதாசிரியர் நினைத்திருந்தால் இன்னும் 50, 60 பக்கங்கள் கூட்டியிருக்க முடியும். டெக்ஸ் கதைவரிசைகளில் இனி முக்கிய இடம் பு.பு.பூமிக்கு உண்டு. ப.ஒ.பு.நேசம் - கொள்ளை அழகு, அருமை.

    02. சூ மந்திரகாளி - 9.25/10

    மறுபதிப்பே என்றாலும் சளைக்காமல் முட்டி மோதி முந்தியிருக்கிறது இக்கதை. சிறை சாவி கிடைத்தும் அதை வைத்து குகை பாதை தோண்ட நினைக்கும் ஆவ்ரெல், பட்டர் பிங்கருக்காக வரிந்து கட்டிகொண்டு வரும் பெண்கள் அணி, அது பொருக்காமல் புலம்பும் கணவன் மார்கள், கேரட் கொடுக்கும் போது பற்கள் பத்திரம் என ஜாலியும், இது என்னுடையது என்று எழும்பு துண்டை கவ்விக்கொண்டு முறைத்து பார்த்து கொண்டே செல்லும் ரின்டின்கேனும் என கதை முழுதும் துணை கதாபாத்திரங்களும் ஸ்கோர் செய்வது தனி அழகு.

    03. சிகப்பாய் ஒரு சிலுவை - 9/10

    கதை முழுதும் அசுர வேகம், அதுவும் முதல் 100 பக்கங்கள் அதிரடி மழை. ஆர்ட் பேப்பரில் கலரிங் மிளிர்கிறது. இது போன்ற தரத்தில் வில்லரை எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம். டெக்ஸ், கார்ஸன் உரையாடல்கள் இம்முறை கூடுதல் சுவாரஸ்யம்.தலயின் ஆளுமை தொடர்வது மகிழ்ச்சி.

    04. லயன் ஜாலி ஆண்டு மலர் - 9/10

    05. இனியெல்லாம் சுகமே - 9/10

    06. கழுகு வேட்டை - 9/10

    07. அசுர பூமியில் தோர்கல் - 9/10

    45 பக்கத்தில் இத்தனை விசயங்களை புகுத்த வான் ஹாமினால் மட்டுமே சாத்தியம். தோர்கலுக்கு அதிகம் வேலை இல்லை, கடவுளர்களின் ஆசிர்வாதத்தங்களே கேடயமாக பல சமயங்களில் காப்பாற்றி விடுகிறது. மிக விரைவாக படித்து முடித்த கதை என்றாலும் தரத்திற்கும், விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லை. இன்னும் கூடுதல் பாகங்களுடன் வந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

    08. ஒரு பிரளயப்பயணம் - 9/10

    09. காற்றில் கரைந்த கலைஞன் - 9/10

    10. நெஞ்சே எழு - 8.5/10

    11. ரௌத்திரம் கைவிடேல் - 8.5/10

    12. ஒரு தோழனின் கதை - 8.5/10

    13. நித்தமும் உந்தன் நிழலில் - 8/10

    14. ஒரு தலைவனின் கதை - 8/10

    15. நீரின்றி அமையாது உலகு - 8/10

    16. B & B Special - 7/10
    i). வெனிஸில் ஒரு வேங்கை - 8/10
    ii) ஹாட் ஷாட் - 6/10

    கொரில்லா சாம்ராஜ்யம் - மாயாவிக்கு மார்க் போட முடியாதே.

    அடுத்த மாதம் எந்த கதைகள் எந்த இடத்தை பிடிக்கிறது என பார்ப்போம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இந்த மாத புத்தகங்களை நீங்கள் படிக்கவில்லை போலவே திரு. படித்தால் இந்த வரிசையில் நிச்சயம் மாற்றம் இருக்கும்.

      Delete
    2. அருமையாக வரிசைப் படுத்தி உள்ளீர்கள் திருநாவுக்கரசு. நன்று.

      Delete
  41. இன்று "சித்திரமும் கொலைப்பழக்கம்" கதையிலிருந்து ஆரம்பிக்கிறேன் ஜி

    ReplyDelete
  42. பாபுவின் செல்வனுக்கு மருத்துவ உதவி கிடைக்கும் தகவல் அறிந்து மகிழ்ந்தேன். நல்ல நலம் பெற்று செல்வன் இல்லம் திரும்பிட இறையருளை வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  43. ஸ்லிப் கேஸ் மாடல்ஸ் பிளான் என்னாச்சி சார் ???!!!

    ReplyDelete
  44. இந்த மாசத்து மூனு கதைகளை படிச்சாச்சி..
    ட்ரென்ட் வழக்கம் போலவே ஏமாற்றமில்லை.. சித்திரங்களும் வர்ண சேர்க்கைகளும் பிரமாதம்.. என்ன தான் கதை சம்பவங்கள் டாக்டரின் அறுவை சிகிச்சைக்கு ஆளானாலும் ஒன்றி படிக்கவே முடிகிறது. இருபது வருடங்களுக்கு முந்தைய கதையானலும் புராதன நெடி இல்லை..மறு வாசிப்புக்கு தகுதியான கதை தான்..

    ReplyDelete
    Replies
    1. டிரெண்ட் எப்போதுமே above average தான். இந்த முறை distinction

      Delete
  45. மேக் & ஜாக்..
    புலவர் முத்து விசயானரின் பெயர் வைக்கும் மேதவிலாசத்துக்கு கட்டியம் கூறும் கதை.. ஓவியருக்கு இதில் வேலை கொஞ்சம் சுளுவு.. நிறைய பேணல்களில் சிறிய மாற்றங்களே தெரிகிறது.. அல் கபொனுக்கே டப் கொடுக்கும் அம்மணிகள் தெரிக்க விடுகிறார்கள்.. என்ன இருந்தாலும் கதையின் அடி நாதத்தை முற்றிலுமாக வெறுக்கிறேன் ஒரு இந்திய குடிமகனாக..ரேட்டிங் -11/10

    ReplyDelete
    Replies
    1. // என்ன இருந்தாலும் கதையின் அடி நாதத்தை முற்றிலுமாக வெறுக்கிறேன் ஒரு இந்திய குடிமகனாக //

      ROFL :-)

      Sema review Rummi!

      Delete
    2. // என்ன இருந்தாலும் கதையின் அடி நாதத்தை முற்றிலுமாக வெறுக்கிறேன் ஒரு இந்திய குடிமகனாக //

      😂😂😂😂

      Delete
    3. அடி நாதம் ஒழிப்பதல்ல கை மாற்றுதலே, கவலை வேண்டாம் உங்க ஆதரவை கொடுங்கள்

      Delete
  46. தீபாவளிக்கு ஆன்லைன் திருவிழா உண்டா சார் ?!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த நல்ல கேள்வி. தீபாவளிக்கு இல்லை என்றாலும் அதற்கு முன்பு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை நாட்கள் இருக்கிறதே? அப்போது ஒரு ஆன்லைன் புக் போட்டாலும் மதி

      Delete
    2. நல்ல கேள்வியாக இருந்தாலும் பதிலும் நல்லதாக இருக்க வேண்டுமே குமார்...!!!

      Delete
    3. அது எப்படி இப்படி அண்ணன் தம்பி பேசிட்டு வந்து ஒரேமாதிரி கமெண்ட் போடுறீங்க :-)

      Delete
    4. அதாம்லே தெரியல...

      Delete
    5. அதான் ரெண்டு பேரும் பேசிட்டு வந்து கமெண்ட் போடுறிங்க என சொல்லிட்டோம்ல.. அதுக்கப்புறம் அது என்ன தெரியல :-)

      Delete
    6. அண்ணன் தம்பி சேர்ந்துட்டாங்களா!!!😜

      அடுத்த டார்கெட் தீபாவளி மலரா😉

      Delete
  47. // மாதா அமிர்தானந்தமயி மருத்துவமனையினில் குழந்தையினைப் பரிசீலனைகள் செய்து விட்டு, எல்லாம் ஓ.கே.வெனில், தொகுதி MLA-வின் நிதியிலிருந்து அறுவை சிகிச்சை செய்திட வாய்ப்பெழுந்துள்ளது என்று அறிகிறேன் ! இதன் சாத்தியங்கள் தொடரும் வாரத்தினில் தெரியும் ! குழந்தை பூரண நலம் பெறுவதே நம் அனைவருக்கும் பிரதானம் எனும் போது - அதற்கான வழி எங்கிருந்து பிறந்தாலென்ன //

    அருமையான செய்தி சார்
    எல்லாம் வல்ல இறைவன் துணையிருக்கட்டும் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
    Replies
    1. நல்ல செய்தி. இந்த வாரத்தில் தெரிந்து விடும்.

      Delete
  48. // (மைண்ட் வாய்ஸ் : கார்சனுக்கு கபி கபி ; டெக்ஸுக்கு இக்ளியூண்டு ; அடுத்து டிரெண்டுக்கு கண்ணாலம், காட்சி - இன்னா நடக்குதுங்கோ இங்கே ? போற போக்கிலே நம்ம ஷெரீபுக்குக் கூட ஒரு நல்லது நடந்திடுமோ ? ஹோல்டான்...ஹோல்டான்....நான் குறிப்பிடுவது நம்ம ஷெரீப் டாக்புல்லை !! தப்பிதமா அர்த்தம் பண்ணிக்கிட்டு எங்கயாச்சும், யாராச்சும் குஷியில் கூரை வரைக்கும் குதிச்சுக் கூப்பாடு போட்டு கபாலத்துக்கு சேதம் வரவழைச்சுக்கிட்டா அதுக்குக் கம்பெனி பொறுப்பேற்காது ! ) //

    இப்படியொரு எண்ணம் மனசுல வரவே வராதுன்னு சொல்லுற அளவுக்கு சிறப்பா ஒரு ஏற்பாடு பண்ணிட்டா போகுது சார் 😇🙏🏼

    ஆனாக்கா கபாலத்துல சேதாரம் வந்தது நீங்க சொன்ன காரணத்துக்கா இருக்காது என்பதை
    மட்டும் உறுதிபட கூறிக்கொள்கிறேன் சார் 🙏🏼😇
    .


    ReplyDelete
  49. Editor Sir - two suggestions:

    1) ட்ரெண்ட் - மீதம் உள்ள இரு ஆல்பங்களையும் இணைத்து வெளியிடுங்கள் சார் !

    2) தோர்கல் - Van Hamme-வின் மீதம் உள்ள 9 ஆல்பங்களையையுமே இரண்டு தொகுதிகளாக வெளியிட முயற்சியுங்கள் சார். கதைகள் அமர்க்களமாக சென்று கொண்டிருக்கிறது - எனினும் 3-4 வருடங்கள் என்பது இத்தொடர் முடிய இன்னும் மிக நீண்ட கால அவகாசமே என்பதனால் இக்கோரிக்கை. Vol 30-39 Van Hamme அல்லாதது வேண்டுமானால் அவ்வப்போது வெளியிட்டுக் கொள்ளலாம் சார்.

    ReplyDelete
    Replies
    1. இரண்டுக்குமே ஆயிரம் ப்ளஸ். இரண்டாவதுக்கு பத்தாயிரம் ப்ளஸ்.

      Delete
    2. அவ்விதமே வெளிவர என் ஆதரவையும் தருகின்றேன்.

      Delete
    3. இரண்டு ஐடியாவுக்குமே என்னுடைய பலத்த ஆதரவும்!!

      Delete
    4. அருமையான ஐடியாக்கள் சார். தோர்கல் இரண்டு பெரிய இதழ்களாக அட்டகாசமான ஐடியா.

      Delete
    5. அருமையான யோசனைகள், வெற்றி பெற வாய்ப்பு அதிகம்.

      ஆனால் ஏற்கனவே அடுத்த வருட அட்டைவனை முடித்திருப்பார், சேர்க்க முடியுமா தெரியவில்லை

      Delete
  50. ஈரோடு விஜய் -

    உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி - அதாவது .. Kris of Valnor வந்து நம்ம Thorgalக்கு ---------------------------------கோய் :-) இப்போ மீதம் உள்ள எல்லா கதைகளையும் நாளைக்கே படிக்கணும்னு தோணுமே :-)

    ReplyDelete
    Replies
    1. 😂😂😂😂 ராக் ஜி. வொய் நாட்? வொய் டுமாரோ? வொய் நாட் டுடே? ;)

      Delete
  51. My opinion
    1. Dick - refreshing, endearing 9/10
    2. Trent - touching 8/10
    3. Mack and jack- smiling 7/10
    4. Chithiram...- tiring 5/10 roll of the mill, can avoid psychos for near future

    ReplyDelete
  52. We miss leonardo, benny, smurfs, Rin tin can

    ReplyDelete
    Replies
    1. இதுல பென்னியும், ரின்டின்னும் எனக்கு நெம்ப பிடிக்கும்.

      Delete
    2. நமக்கு ரின்டின் ரொம்ப பிடிக்கும்!

      Delete
  53. சித்திரமும் கொல்லுதடி:
    கதையின் நாயகன் கோர்ட்டில் குற்றவாளியின் படங்களை வரைபவர். முதல் சில பக்கங்களில் அவரின் குறிக்கோள் என்ன அடுத்து என்ன செய்ய போகிறார் என தெரிந்து விடுகிறது. இவர் சிலரை கொல்கிறார் ஏன் கொல்கிறார் என்பது முதல் 20 பக்கங்களில் தெரிந்து விடுகிறது. சரி அப்ப ஏன் இந்த கதையை முழுவதும் படித்தாய் என கேட்கலாம், சரி ஏதாவது சுவாரசியமாக இருக்கும் என பக்கங்களை கடந்தேன்; கடைசி பக்கத்தில் மட்டும் ஒரு சின்ன டிவிஸ்ட் ஆனால் அது பெரிய அதிர்வை ஏற்படுத்தவில்லை ஏன்னா கதாசிரியர் பெரிய மனோ வியாதிகாரர் என நினைக்கிறேன் அய்யா என்ன குழப்பம் இவரின் குழப்பத்தை படிக்கும் நமது தலையில் கதையின் நாயகன் பேசும் படி வைத்து போதும்டா சாமி என நோகடித்து விட்டார்.

    கடந்த ஜனவரி முதல் அலுவலகம் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு குடும்பத்துடன் நான்கு சுவற்றுக்குள் சுற்றி வந்த எனக்கு கொஞ்சம் வடிகாலாக இருந்தது நமது காமிக்ஸ். வார இறுதி என்றால் குதுகாலிக்கும் மனது கடந்த இரண்டு வருடங்களாக பெரிய சந்தோசத்தை தரவில்லை எங்கும் செல்ல முடியாத நிலை குழந்தைகளால் வெளியே சென்று நண்பர்களுடன் விளையாட முடியாத சூழ்நிலை; தெரியாதனமாக இந்த கதையை படித்து விட்டேன் மிகவும் ஒரு சுமாரான கதை அதை கூட ஏற்று கொள்கிறது மனம் ஆனால் ஒரு இருக்கமான கதையோட்டம் பெரிய திருப்பம் ஆக்சன் போன்ற எதுவும் இல்லாத இந்த கதை படித்து முடித்த உடன் தலைவலியை கொடுத்தது தான் மிச்சம்.

    இந்த கதையை குறைந்த பக்கங்களில் சொல்லி இருந்தால் கூட கொஞ்சம் ரசித்து இருக்கலாம். ஆனால் 80 பக்கங்களுக்கு மேல் ஜவ்மிட்டாயக இழுத்து படிக்கும் என்னை போன்றவர்களின் பொறுமையை சோதித்து விட்டார்.

    கதையில் ப்ளஸ் என சொல்ல வேண்டும் என்றால் சித்திரங்கள் மற்றும் வசனங்கள்.

    சாரி விஜயன் சார்.

    ReplyDelete
    Replies
    1. கதையில் நாயகன் கொலை செய்கிறான் ஆனால் பாருங்கள் யாரும் அவரை கவனிக்க வில்லை, ஜெயில் இருந்து வெளியேறும் போது கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை அறிந்து அங்கே காவலை பலப்படுத்தலாம் ஆனால் இது எதுவுமே இல்லை .... இந்த கொலையுடன் நிறுத்தி கொள்ளலாம் என முடிவு அதன் பிறகு தனக்கு தானே நியாயம் கற்பித்து கொண்டு அடுத்த கொலை ... அதுவும் போலீஸ் அலுவலகத்தில் நுழைந்து ஒரு கொலை முயற்சி அங்கு சிசி டிவி எல்லாம் கிடையாது போல :-) கதைதான் என்றாலும் கதாசிரியர் கற்பனை தறிகெட்டு ஓடுகிறது :-)

      Delete
    2. இதெல்லாம் கூட ஓகே ஜீ - ஆனா - ஆனால் ... அந்த கடைசீ பக்கத்த படிச்சப்பறம் படிச்சுன்னிக்கி நைட்டு 1 மணிக்கு என் தலைல அடிச்சிக்கிட்டேன் பாருங்க ... ஐயகோ !!

      Delete
    3. விஜயன் சார், ஜம்போவில் நீண்ட கதையாக இனிவரும் காலங்களில் வரும் என்றால் அவை விறுவிறுப்பாக (வேட்டையாடு விளையாடு போன்ற கதை) செல்லும் வித்தியாசமான கதைகளை கொடுங்கள். தயவு செய்து இந்த கதை மற்றும் நீருண்டு நிலமில்லை போன்ற கதைகள் வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.

      Delete
    4. ராகவன் @ நல்லவேளை நான் பகல் வேளையில் படித்தேன். தப்பிச்சேன்டா சாமி.

      Delete
    5. // கடைசீ பக்கத்த படிச்சப்பறம் படிச்சுன்னிக்கி நைட்டு 1 மணிக்கு என் தலைல அடிச்சிக்கிட்டேன் //

      ராகவன் @ நல்லா தெரியுமா தலையில் தான் அடிச்சிங்களா அல்லது சுவற்றில் போய் தலையை முட்டுனீங்களா ;-)

      Delete
    6. // கதையில் ப்ளஸ் என சொல்ல வேண்டும் என்றால் சித்திரங்கள் மற்றும் வசனங்கள். //
      அதே,அதே...

      Delete
    7. @ PFT, Banged my head with the book itself :) :)

      Delete
    8. // 80 பக்கங்களுக்கு மேல் ஜவ்மிட்டாயக இழுத்து //
      ரொம்ப சிம்பிள் PFB கதையில் அடர்த்தி இல்லை,உள்ளடக்கம் இல்லை...!!!

      Delete
    9. பாருங்க ராகவன் நீங்கள் எங்கே எப்படி முட்டுனிங்க என்பது தெரியாத அளவுக்கு இந்த கதை உங்களை அந்த அளவுக்கு குழப்பி உள்ளது :-) அதான் கதாசிரியர் திறமை :-)

      Delete
    10. அறிவரசு @ மிகவும் சரி.

      Delete
  54. பத்மநாபன் சார்@ வணக்கம் 🙏

    உடல்நலம் இப்ப பரவாயில்லையா?

    ReplyDelete
  55. ***** சித்திரமும் கொலைப் பழக்கம் ****

    அடுத்தவர் எழுதும் விமர்சனங்களை அப்படியே நம்பிவிடுபவனல்ல நான்! எனவே, கதையைப் படித்தேன்! விடாமல் படித்தேன்! கருத்தூன்றிப் படிக்க என்னாலான அத்தனை முயற்சிகளிலும் ஈடுபட்டேன். அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டேன்!

    யாரோ ஒரு மனநலம் பாதித்தவனின் டைரிக்குறிப்புகளைப் படித்ததுபோல எனக்குள் எழுந்த சலிப்பும், ஒரு ஓவியர் வீணடிக்கப்ட்டிருக்கிறாரே என்ற ஆற்றாமையும் ஒன்று சேர்ந்து எனக்குள் ஒரு பதட்டதை உருவாக்கின! நான் கதையில் வரும் ஓவியரைப் பற்றிச் சொல்லவில்லை.. இந்தக் கதைக்கு ஓவியம் வரைந்தவரைப் பற்றிச் சொல்கிறேன்! பாவம் - அவர் என்ன செய்வார்? கதாசிரியர் எழுதிக் கொடுத்ததை வரைந்திருக்கிறார் - ஒரு குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற்றுக்கொண்டாவது! அந்த வகையில் ஒரு சிறு நிம்மதி எனக்குள்!

    கதையில் சில திருப்பங்கள் இல்லாதில்லை தான்! கொலைகாரனின் காதலி ஒரு போலீஸ்!
    தொடர்கொலைக்கு காரணமாகிக் கொண்டிருக்கும் குற்றவாளி யாரென்பதை முதலில் புலனாய்வு செய்து கண்டறிவது - விடுதலை செய்யப்பட்ட ஒரு கைதி - இப்படி!

    ஆனால் க்ளைமாக்ஸ் அளவுக்கு ஒரு திருப்பம் வேறெந்தப் பக்கங்களிலும் இல்லை! இதுபோல ஒரு க்ளைமாக்ஸை இனி இந்தக் காமிக்ஸ் உலகம் காணப்போவதுமில்லை!

    எனக்கு முன்பு இக்கதையைப் படித்து சுவர்களிலும், மரங்களிலும் முட்டிக் கொண்ட நண்பர்களின் முகங்கள் நிழல்போல என் மனதுக்குள் வந்து போவதை உணர்ந்தேன்!

    எதுவோ ஒன்று சொல்லப்படாமல் மீதமிருப்பதை உணர்ந்தேன். எஞ்சியிருக்கும் மூளைப் பகுதியை சூடேற்றிச் சிந்தித்தேன்! பளீர் மின்னல் - வானத்திலும் - என் மனதிலும்!!!

    யெஸ்! யெஸ்!!! யெஸ்!!! இ..இ..இது ஒரு காமெடிக் கதை! சைக்கோ த்ரில்லர் எனும் போர்வையில் வந்திருக்கும் காமெடிக் கதை என்பதையே என் அகத்திலும் புறத்திலும் ஒருசேர வெளிச்சத்தை உருவாக்கிய அந்த மின்னல் எனக்கு உணர்த்தியது!

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹை!! (இந்தியில் சிரித்ததால் இறுதியில் ஹை போட்டிருக்கிறேன்)

    இனி உங்களிடம் விளக்கிக்கொண்டிருக்க என்னிடம் ஏதுமில்லை. மீண்டும் சந்திப்போம். என் ருக்கு எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள்!

    6/10

    ReplyDelete
    Replies
    1. // ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹை!! //

      விஜய் நீங்க இப்படி சிரிக்கிறத பார்த்தால் காதல் படத்தில் இறுதி காட்சியில் பரத் நடுரோட்டில் நின்று கொண்டு விழிக்கும் காட்சி ஞாபகத்திற்கு வருகிறது! :-) கொஞ்சம் கோவிலில் போய் பூசாரியை உங்களுக்கு வேப்பிலையால் மந்திரித்து விட சொல்லுங்கள் :-)

      அப்புறம் நான் எனது விமர்சனம் எழுதுவதற்கு முன்னால் உங்கள் விமர்சனத்தை படிக்கவில்லை :-)

      Delete
    2. எனக்கு முன்பு இக்கதையைப் படித்து சுவர்களிலும், மரங்களிலும் முட்டிக் கொண்ட நண்பர்களின் முகங்கள் நிழல்போல என் மனதுக்குள் வந்து போவதை உணர்ந்தேன்!//

      கண்டிப்பாக என் முகம் தான் முதலில் வந்திருக்கும் ☺️

      Delete
    3. ருக்கு மணி..ருக்கு மணி..
      அக்கம்பக்கம் என்ன சத்தம்..
      காது ரெண்டும் கூசுதடி..
      கண்டுபிடி என்ன சத்தம்..
      ருக்கு: அது ஒண்ணுமில்லீங்கோ..
      என்ன்ற மாமா ஈவி வாய்விட்டு
      சிரிக்கறாப்ல..
      வாய் விட்டு சிரிச்சா நோய்
      விட்டுப் போகுமாமே. அதான்.

      Delete
    4. ///கண்டிப்பாக என் முகம் தான் முதலில் வந்திருக்கும் ///

      மண்டையில் வீக்கம்லாம் இப்ப பரவாயில்லீங்களா கிருஷ்ணா? :D

      Delete
    5. ///அப்புறம் நான் எனது விமர்சனம் எழுதுவதற்கு முன்னால் உங்கள் விமர்சனத்தை படிக்கவில்லை///

      படிச்சிருந்தா நீங்களும் காதல் பரத் தான்! ;)

      Delete
    6. EV ஹிஹிஹி nice review. இனிமேல் psycho திரில்லர் என்றாலே இந்த கதை நம்ம கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா????

      Delete
    7. /* எதுவோ ஒன்று சொல்லப்படாமல் மீதமிருப்பதை உணர்ந்தேன். எஞ்சியிருக்கும் மூளைப் பகுதியை சூடேற்றிச் சிந்தித்தேன்! பளீர் மின்னல் - வானத்திலும் - என் மனதிலும்!!!

      யெஸ்! யெஸ்!!! யெஸ்!!! இ..இ..இது ஒரு காமெடிக் கதை! சைக்கோ த்ரில்லர் எனும் போர்வையில் வந்திருக்கும் காமெடிக் கதை என்பதையே என் அகத்திலும் புறத்திலும் ஒருசேர வெளிச்சத்தை உருவாக்கிய அந்த மின்னல் எனக்கு உணர்த்தியது!

      ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹை!! (இந்தியில் சிரித்ததால் இறுதியில் ஹை போட்டிருக்கிறேன்)

      இனி உங்களிடம் விளக்கிக்கொண்டிருக்க என்னிடம் ஏதுமில்லை. மீண்டும் சந்திப்போம். என் ருக்கு எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள்! */

      Your review is a Laugh Riot EV !! Still laughing from morning for this particular section !!!!

      :-D :-D :-D

      Delete
  56. /* ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா */

    Oru kadhai padichadhukkE neenga 'THE JOKER'-aa maaritteengalE :-) :D

    ReplyDelete
    Replies
    1. சூ.ஹீ.சூ.ஸ் படிச்சப்போவே அப்படி மாறியாச்சுங்க ராக் ஜி! ;)

      Delete
  57. "பகலறியா பூமி"
    8/10 -ட்ரெண்ட் குழந்தையை காத்தவிதம் மனதினை நெகிழ்ச்சி அடைய செய்து விட்டது
    டெட்வுட் டிக்
    9/10 - எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை ஒரு நிஜ மனிதனை கதா நாயகனாக கொண்ட கதை கதைக்களம் சிறப்பாக புனையப்பட்டுள்ளது , நல்ல ஒரு கதையை படித்த திருப்தி ஆனால் இன்னும் இரண்டு பாகங்களை சேர்த்து இருந்தால் சிறப்பாகவே இருந்து இருக்கும்
    மேக் & ஜாக்
    9.5/10 - நல்ல மொழிபெயர்ப்பு சார் கிளைமாக்ஸ்லஇன்னும் கொஞ்சம் வசனங்களை சேர்த்து இருக்கலாம் என்று எனக்கு தோன்றியது இந்த மாதிரி கார்ட்டூன் தொடரலாம் இவர்களுக்கு அடுத்த வருடமும் ஒரு வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
    "சித்திரமும் கொலைப் பழக்கம்"
    7.5/10 - ஒரு மன நலம் பிறழ்ந்த மனிதனை பற்றிய கதைப்போலவே தோன்றியது கிளைமாக்ஸ் கொஞ்சம் வன்முறை அதிகமே

    ReplyDelete
  58. சித்திரமும் கொலைப்பழக்கம்:

    சித்திரம் வரைவது தொழில். அதிலும் கோர்ட்டில் அமர்ந்து கொண்டு கொலையாளிகளை வரைவது என்று ஸ்பெஷலைசேஷன் வேறு! ஒண்டிக்கட்டை, தனி வீடு, உயிருக்குயிரான கரோலின் (ஆட்டத்தின் மையம் இவளே)! இது போதாதா ஒரு சைக்கோ கொலைகாரன் உருவாக...

    பணம், பதவி, வசதி என எது இருந்தாலும் மனம் சோர்ந்தால் வாழ்க்கை தடம் மாறும். சின்ன வயதில் நாம் சிலரை பார்த்து விட்டு, அவர்களைப் போலவே நடந்து கொள்ள முயற்சிப்போம். இந்த டூப்ளிகேஷன் தான் கதையின் அச்சாணி! கொலைகாரர்களைப் பார்த்து, பார்த்து... கொலைகாரனாகவே மாறி...

    நாம் எதையாவது தவறாக செய்து விட்டு, அதற்கு காரணம் இதுதான் என சொல்லுவோம்! சில நேரங்களில் காரணங்களுக்காகவே தவறுகளையும் செய்வோம்! அது தான் கரோலின்!

    காதலியாக வரும் போலீஸம்மா என்னைப் பொறுத்த வரையில் இடைச்செருகல் தான்! சினிமாவாக எடுத்திருந்தால் அந்தம்மா வரும் காட்சிகளில் விசில் பறந்திருக்கலாம்!

    ஒரு சிறப்பான சைக்கோ திரில்லர் கதையை, இரத்தம் சொட்டச் சொட்ட படையல் போட்டு வைத்தமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான விமர்சனம். சூப்பர் பூபதி.

      Delete
    2. வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து உள்ளீர்கள் பூபதி.

      வாழ்கையில் போரடிப்பவன் தனது வாழ்க்கையை சுவாரசியமாக மாற்ற இது போன்ற செயல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த கதையை படிக்கும் போது எனக்கு ஆல் நியூ ஸ்பெஷல் கதைகள் (மனதில் மிருகம் வேண்டும்) மனதில் வந்து போனது.

      Delete
    3. /* வாழ்கையில் போரடிப்பவன் தனது வாழ்க்கையை சுவாரசியமாக மாற்ற இது போன்ற செயல்களில் ஈடுபடுவதுண்டு. */

      பரணி ஐயா, நீங்க கதாநாயகனை சொல்றீங்களா இல்லை கதை படித்த பூபதி சாரை சொல்றீங்களா :-) எனக்கென்னமோ பூடகமா இருக்கே !

      Delete
    4. Raghavan @ பரட்டை பத்தவச்சிடீயே :-)

      Delete
    5. ////பரணி ஐயா, நீங்க கதாநாயகனை சொல்றீங்களா இல்லை கதை படித்த பூபதி சாரை சொல்றீங்களா :-) எனக்கென்னமோ பூடகமா இருக்கே !////

      🤣🤣🤣🤣🤣🤣🤣 அட்டிமேட் ராக் ஜி!!

      Delete
  59. திரை உலகில் என்றும் சூப்பர் ஸ்டார் நம்ப ரஜினி காந்த் என்பது அனைவரும் அறிந்தது தான் .அது போல நம்ம காமிக்ஸ் ஸ்டார்களில் எவர் சூப்பர் ஸ்டார் என பல மணி நேர யோசனை தான் இந்த பதிவிற்கு காரணம் .எனது காமிக்ஸ் வாழ்க்கை பல ஸ்டார்களோடு இணைந்து இருந்தாலும் அன்று முதல் இன்று வரை சலிக்காத ஹீரோ யார் என யோசித்தேன் .காமிக்ஸ் உலகில் SPIDER ,மாயாவி,ஆர்ச்சி கூட சூப்பர் ஸ்டார் ஆக இருந்த காலம் உண்டு .(சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் படிக்கும் வரை கூட எனலாம் )ஆனால் அன்று முதல் இன்று வரை எனும் போது .....?                                                                       என்று டெக்ஸ் வில்லர் இன் "பழி வாங்கும் பாவை "படித்தேனோ அன்று முதல் டெக்ஸ் என் மன வானில் சூப்பர் ஸ்டார் ஆக தான் தோன்றுகிறார் .அது முதல் டெக்ஸ் கதை படிக்கும் போதல்லாம் எனக்கு ரஜினி நினைவு வருவது தவிர்க்க முடியவில்லை .அதுவும் பழி வாங்கும் பாவை கதையில் கர்னல் அர் லிங்க்டன் முதல் முறை சந்திக்கும் போது  தெனாவெட்டாக வத்தி குச்சி இருக்குமா ?என வினவுவதும் ,நீ மட்டும் UNIFORM  இல் இல்லாமல் இருந்தால் முகரை பெயர்த்து இருப்பேன் என்பதும் ,அது போலவே இரவில் அதை நடைமுறையில் செயல் படுத்து வதும் அக்மார்க் ரஜினி ஸ்டைல் .அதன் பிறகு வந்த ட்ராகன் நகரம் ,கழுகு வேட்டை ,பழிக்கு பழி ,ரத்த நகரம் ,ரத்த வெறியர்கள் என வந்த அனைத்து கதைகளும் ஒரு ரஜினி படத்தை பார்த்த அனுபவத்தை கொண்டு வந்தது என்றால் அது மிகை அல்ல .சில டெக்ஸ் கதைகள் சோடை போனாலும் ( துயிலெழுந்த பிசாசு போல..),(ரஜினி இன் பாபா போல இருந்தாலும் மீண்டும் ரஜினி படத்தை எதிர் பார்ப்பது போல )காமிக்ஸ் ரசிகர்கள் டெக்ஸ் ன் கதையை எதிர் பார்த்து கொண்டே தான் இருகிறார்கள் என்பது நிதர்சனம் .                                                                           சினிமா உலகில் சில இளைய தலைமுறை நடிகர்கள் நுழைந்து நான்  தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என போட்டியிட்டு வந்தாலும் அன்றிலிருந்து இன்று வரை அந்த நாற்காலியில் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் அமர்ந்து உள்ளார்..அது போலவே நமது காமிக்ஸ் உலகிலும் சில அதிரடி நாயகர்கள் அறிமுக மானார் கள் .அதில் நமது சூப்பர் ஸ்டார் டெக்ஸ் க்கு போட்டி யாக வருபவர்களை குறிப்பிட வேண்டுமெனில் முதலில் வருவது *டைகர்*,.டைகர் கதைய எடுத்தால் ,அவரின் தங்க கல்லறை ,ரத்த கோட்டை ,மின்னும் மரணம் ஆகியவை அவரை சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு அருகே கொண்டு வந்தது உண்மை....ஆனால் அடுத்து வந்த சில கதை களும் ,அதன் முடிவுறா நிலையும் அவரை பின்னுக்கு தள்ளி விட்டது ..வந்த இறுதி பாகங்களும் தங்க கல்லறை போல,..மின்னும் மரணம் போல மனதில் ஆழமான நேசிப்பை கொண்டு வரவில்லை....இளம் டைகரோ ஆரம்பித்திலியே கண்ணை கட்டுகிறது..( சில தீவிர டைகர் ரசிகர்களை தவிர்த்து..நம்மை பொறுத்தவரை நன்றாக இருந்தால் நன்று...இல்லையெனில் இல்லை அம்பூட்டு தானே ஒழிய டைகர் மேல் பொறாமை எல்லாம் இல்லை ..என்பதை நண்பர்கள் உணர வேண்டும்..).அடுத்து வரும் நாயகராக 2கே நாயகராக லார்கோ .

    என் பெயர் லார்கோ வில் அதிரடி யாக நுழைந்து அவர் தான் இனி சூப்பர் ஸ்டார் என பலரை எண்ண வைத்தார்.. .ஆனால் அடுத்து வந்த NBS இல் (என்னை பொறுத்த வரை )A க்ளாஸ் ரசிகர்களை ரசிக்க வைத்தாலும் ,வேயின் ஷெல்டன் இடமே தோற்று விட்டார் எனலாம..ஆனாலும் பின்னர் லார்கோ தொடர்ந்து அட்டாகாச படுத்தி வந்தாலும் லார்கோ தொடரே முடிந்து போனது ..( இறுதி லார்கோ மண்டையை சொறிய வைத்தது வேறு விஷயம்..)

    இப்படி லார்கோ தொடரே மங்களம் பாடிய பின்னர் டெக்ஸ் முன் லார்கோ எம்மாத்திரம் என்று தாராளமாக சொல்லலாம் தான்....ஒரு நாயகனுக்கு திடீர் வெற்றியும் ,திடீர் தோல்வியும் வருவது இயல்பான ஒன்றே..ஆனால் தலைவாங்கி குரங்கில் இருந்து இன்று பிரளய பயணம் வரை ஏன் இன்னமும் வெற்றிக்குதிரையில் தொடரக்கூடிய ஒரே நாயகர் யார் என கேட்டால் நமது ரம்மி கூட அடித்து சொல்வாரே காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் டெக்ஸ் தான் என்று....


     பல வருடங்களுக்கு பிறகு ரஜினி படம் வந்தாலும் அனைவரும் வழி விட்டு ஒதுங்க" இன்றும் தனி காட்டு ராஜா "வாக ரஜினி படம் வருவது போல நமது சூப்பர் ஸ்டார் "ரஜினி வில்லர் " சாரி டெக்ஸ் காந்த் ஐயோ சாரி "டெக்ஸ் வில்லர் அவர்களும் அதே பாணியில் வெற்றி நடை போடுவது நாம் அறிந்து தானே வருகிறோம்..

    இதற்கு பின்னரும் காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் யார் என தீர்ப்பும் சொல்லத்தான் வேண்டுமா என்ன...?!





                                                                     

    ReplyDelete
    Replies
    1. மேலும் மாதம் ஓர் டெக்ஸ் ...என்பது ஓவர் டோஸாகி விடும்...எனவே மாதம் ஒரு டெக்ஸ் வேண்டாம் என்போரின் கூற்றை கண்டிப்பாக அழி ரப்பரை கொண்டு அழித்து விடுங்கள் ப்ளீஸ்...( முக்கியமாய் செயலர் கையில் ரப்பரை கொடுக்கவும் )..அதெல்லாம் மனப்பிராந்தி என ரம்மியே கூறி விடுவார்...ஓவர் டோஸாகி விட தினசரி நாள் போல் நாங்கள் டெக்ஸை கேட்க வில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்..

      எனவே அடுத்த வருட சந்தாவில் மாதம் ஓர் டெக்ஸ் இடம் பெற்றால் ..( அது மினியோ ,நீளமோ..கருப்பு வெள்ளையோ..வண்ணமோ..எதுவாக இருப்பினும்..) அதன் பலன் நமக்கு மட்டுமல்ல...

      காமிக்ஸ் உலகிற்கும் தான்..என சொல்லிக் கொண்டு..


      இறுதியாக..

      " மாதம் ஓர் டெக்ஸ் வெளயிடும் ஆசிரியரும்..

      மாதந்தோறும் அனைத்து காமிக்ஸ் இதழ்களையும் படிப்போருமே ..

      வாழ்க்கையில் சந்தோசமா இருப்பாங்க...ன்னு சரித்திரம் ம சொல்லும்...

      நன்றி.

      Delete
    2. ///மாதம் ஓர் டெக்ஸ் ...என்பது ஓவர் டோஸாகி விடும்...எனவே மாதம் ஒரு டெக்ஸ் வேண்டாம் என்போரின் கூற்றை கண்டிப்பாக அழி ரப்பரை கொண்டு அழித்து விடுங்கள் ப்ளீஸ்...( முக்கியமாய் செயலர் கையில் ரப்பரை கொடுக்கவும் ///

      தலீவரே! 'டெக்ஸ் ஓவர் டோஸ் ஆகிடும்'னு நான் எப்போ தலீவரே சொன்னேன்?

      நான் சொல்லவந்தது கொஞ்சம் வேறு மாதிரி! மாதாமாதம் கண்டிப்பா டெக்ஸ் வரும்னு ஆகிப்போச்சுன்னா அதுமேல இருக்கும் க்ரேஸ் கொஞ்சம் குறைஞ்சுடும்னு தான் சொல்றேன்!

      'இந்த மாசம் ஏன் டெக்ஸ் வரலை?'ன்னு நண்பர்களை, முகவர்களை ஏங்க வைக்கணும்! டெக்ஸ் வர்ற மாசங்கள் எல்லாம் அவங்களை உற்சாகமா உணர வைக்கணும்!!

      அப்புறம் சிலவருடங்களுக்கு முன்பு 'மாசம் ஒரு டெக்ஸ்'னு வந்ததே.. அது ஏன் கன்ட்டினியூ ஆகலைன்னு யோசிங்க!

      Delete
    3. No no no - EV !

      மாதம் ஒரு Tex வந்தால் நாம் 10 வருடங்களில் பார்க்க போவது 120 சிங்கள் ஆல்பமோ அல்லது 120 (2*112 page) டபுள் ஆல்பம். இந்த பத்து வருடத்தில் அங்கே இத்தாலியில் கும்மி இருப்பார்கள் கும்மி. அதனால் Tex overdose இல்லை என்பது என் கருத்து.

      அட இன்னும் 20 ஸ்பெஷல் இதழ்கள் வைத்துக்கொண்டாலும் நம்மால் அவர்களை நெருங்க முடியாதே !

      Delete
    4. அதெல்லாம் சரிதானுங்க ராக் ஜி! பர்சனலாக எனக்குமே கூட வாரம் ஒரு டெக்ஸுன்னு வந்தாலும் படிப்பேன் தான்! ஏன்னா நான் ஒரு டெக்ஸ் வெறியன்! டெக்ஸ் தீவிரவாதி!

      இத்தாலியில் டெக்ஸ் படத்தை அட்டையில் போட்டு எதை கொடுத்தாலும் அடித்துப் பிடித்து வாங்குவார்கள்! இங்கே நிலைமை அப்படியில்லையே?!! கொஞ்சமாச்சும் கதையம்சம் இல்லையென்றால் என்ன சேதியென்று கேட்டுவிடுவார்களே?

      சற்றே குறைந்த அளவிலான வெளியீடுகள் தரமான கதைகளுக்கு வழிவகுத்திடும்! தலயின் கீர்த்தி தமிழிலும் தொடர்ந்து காக்கப்படும்!

      டெக்ஸ் - ஒரு தங்க முட்டையிடும் சூப்பர் ஸ்டார் வாத்து!!

      Delete
  60. //தலீவரே! 'டெக்ஸ் ஓவர் டோஸ் ஆகிடும்'னு நான் எப்போ தலீவரே சொன்னேன்?//


    அது நான் சொன்னேன் தலீவரே! :)

    ReplyDelete
  61. சித்திரமும் கொலை பழக்கம்:
    என்னாலே பாதிக்கு மேல படிக்க முடியலை.. மொதப் பாதியுமே ஏண்டா படிச்சும்ன்னு ஆயிடுச்சு.. ரொம்பவுமே டார்க்கான கதை.. நம்ம பிஞ்சு மனசுக்கு செட் ஆகலை.. இது போன்ற கதைகளை தவிர்த்தல் நலம்..

    ReplyDelete
    Replies
    1. இரண்டாம் பாதியில தான் யூகிக்க முடியாத பலப்பல ட்விஸ்ட் இருக்குங்க ரம்மி! மிஸ் பண்ணிடாதீக... அதுவும் அந்த க்ளைமாக்ஸ் இருக்கே... அதை நிச்சயமா வேற்றுக்கிரகவாசி தான் யாராவது யோசிச்சிருக்கணும்!

      Delete