Powered By Blogger

Wednesday, September 15, 2021

அவசரமாயொரு தேர் இழுப்போமா ?

 நண்பர்களே,

வணக்கம். செப்டெம்பரின் வண்டி "பெரிய தலக்கட்டு" இல்லாமலும் தடதடத்து வருவதைப் பார்க்கக் குஷியாக உள்ளது ! அமைதியாய் ஸ்கோர் செய்யும் டிரெண்ட் ஒருபக்கமெனில், பேசியே ஆளைக் கவிழ்க்க புதுவரவு டெட்வுட் டிக் இன்னொரு பக்கம் ! And சிகாகோவின் நெட்டை-குட்டை ஜோடியுமே இந்த தபா தேறி விடுவார்கள் என்ற நம்பிக்கை பிறக்கச் செய்கிறது உங்களின் இம்மாத மேக் & ஜாக் இதழுக்கான initial ரியாக்ஷன்ஸ் ! Of course - the jury's still out on "சித்திரமும் கொலைப் பழக்கம் ! " காத்திருப்போம் - தொடரும் நாட்களில் உங்களின் அலசல்கள் அக்கட சொல்லவுள்ள சேதி என்னவென்பதை !! எது எப்படியோ - ஒரு ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான உளவாளியோ, சைரன் அலறும் கார்களில் பறக்கும் டிடெக்டிவோ, மொட்டைப் பாலைவனத்தில் அதகளம் செய்யும் குதிரைக்கார நீதிக்காவலர்களோ இல்லாமலுமே கரை சேர மார்க்கம் இருப்பதை இம்மாதம் சுட்டிக் காட்டியிருப்பது நிச்சயமாய் எனக்கொரு highlight தான் !

"கரை சேரலைப்" பற்றிய தலைப்பினில் இருக்கும் போது, ஒரு மெய்யான, மகத்தான கரைசேரலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒரு குடும்பத்தையும், இந்த நொடியில் அவர்கள் பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ரணங்களையும் எண்ணித் தடுமாறாது இருக்க இயலவில்லை ! தனது 3 வயதுப் பையன் மொஹமத் ஷஹாபானின் இருதய சிகிச்சைகளுக்கென அல்லாடிக் கொண்டிருக்கும் நமது பிளைசி பாபுவின் சிரமங்களைப் பற்றியே குறிப்பிடுகிறேன் என்பது புரிந்திருக்கும் ! தனது சுகவீனம் பற்றித் துளியும் அறிந்திருக்காமல், சராசரிக் குழந்தையாய் விளையாடிக்கொண்டிருக்கும் அந்தப் பிஞ்சைக் காப்பாற்றிட, இரண்டு கட்டங்களாய் நடந்திட வேண்டிய இதய சிகிச்சைகளுக்கென லட்சங்களில் பணம் அவசியமாகிறது ! இயன்ற மார்க்கங்களிலெல்லாம் பணம் திரட்ட நண்பர் பாபு முயற்சித்து வருவதும் ; இதன் பொருட்டு ஏற்கனவே crowdfunding மூலமாய் பணம் ஏற்பாடு செய்ய அமெரிக்காவிலிருக்கும் மஹிஜி முயற்சித்து வருவதும், வாட்சப் க்ரூப்களில் உள்ள அனைவருக்குமே தெரிந்திருக்கும் தான் ! அதே பாணியிலான crowd funding முயற்சியினை இங்கே இந்தியாவிலும் செய்திடச் சொல்லி வலியுறுத்தியிருந்தேன் என்றாலும், அத்தோடு ஒதுங்கி கொள்ள மனசு கேட்கவில்லை ! 

"ஒரே வாசகக் குடும்பம்" என்று ஒரு நூறு தடவை பீற்றிக் கொண்டு விட்டு, அந்தக் குடும்பத்தின் ஒரு அங்கம் இன்றைக்கு ஒரு மெய்யான நெருக்கடியில் அல்லாடித் தவிப்பதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க ஒரு எடிட்டராகவும் முடியவில்லை ;  தகப்பனாயும் முடியவில்லை !  So நம் பங்குக்கு ஏதாச்சும் செய்தாக வேண்டுமே என்ற குடைச்சல் எனக்குள் ! 

And நமக்குத் தெரிந்த ஒரே விஷயம் இந்த 'பொம்ம புக்' தான் எனும் போது - பாபுவுக்கு உதவிட அதனைத் தவிர்த்து நமக்கேது வழி ? நீட்டி முழக்க  இது நேரமல்ல எனும் போது - நேரடியாய் விஷயத்துக்கு வருகிறேனே ? 

  • நம் பங்களிப்பாய் பாபுவின் குழந்தையின் சிகிச்சைக்கென ஒரு லட்சம்  ஏற்பாடு செய்வது நமது குறைந்த பட்ச இலக்கு ! 
  • And இதற்கென நன்கொடைகள் தந்திருக்கும் / தந்து வரும் நண்பர்களை இங்கும் நாம் உண்டியல் குலுக்கிச் சிரமங்களுக்கு ஆளாக்கிடப் போவதில்லை !
  • மாறாக - "Save A Child ஸ்பெஷல்" என்ற பெயரினில் தடாலடியாய்,  ஒரு ஸ்பெஷல் இதழினை முழு வண்ணத்தில், வழக்கத்தை விடவும் சற்றே கூடுதலான பிரிண்ட் ரன்னில் - அடுத்த சில வாரங்களுக்குள்ளாக களமிறக்கவுள்ளோம் !! 
  • முன்பதிவோ ; பின்பதிவோ அவசியமே இராது இதன் பொருட்டு ! இதழ் வெளியாகும் வேளையில் ஆன்லைன் லிஸ்டிங் செய்திடுவோம் !இயன்றோர் ஒரு பிரதியும், இன்னும் சற்றே கூடுதல் திறன் கொண்டோர் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளையும் வாங்கி ஆதரித்தாலே போதும் தான் !! கூடுதல் பிரிண்ட்ரன் எனும் போது அதனை விரைவாய் விற்றிட உங்களின் multiple copies கொள்முதல் பெரிதும் உதவிடும் என்பதில் ரகசியம் ஏது ?
  • "கென்யா" ; "உயிரைத் தேடி" ; லக்கி லுக்  ; சில பல கிராபிக் நாவல்கள் ; சில மறுபதிப்புகள் - என கைவசம், கதைகளின் இருப்பு கணிசமாய் உள்ளது தான் !  ஆனால் "விற்பனை" என்று வரும் வேளையில், ஆயிரம் பாயசங்கள் கண்ட அசாத்தியன் டெக்ஸைத் தாண்டி சாதிக்கும் ஆற்றல் வேறு யாருக்குண்டு ? So இந்த முயற்சிக்கு டெக்ஸையே தேர்வு செய்வதே சாலச் சிறந்தது என்று எனக்குப்பட்டது ! And இது குறித்து ரொம்பவே ஸ்ட்ராங்காய் பரிந்துரை செய்திட்ட நண்பர் ராகவனின் அபிப்பிராயமும் அதுவே ! கலரில் - ஒரு டெக்ஸ் அதிரடி எனில் தெறிக்க விடாதா ? என்று அவர் முன்வைத்த வாதத்துக்கு பதிலில்லை என்னிடம் ! What  say guys ?
  • உங்களுக்கு நினைவிருக்கலாம் - மே மாதத்தின் லாக்டௌனின் போது நித்தமும் ஒரு பதிவிட்டு கூத்தடித்து வந்த நாட்களில் - டெக்சின் தொடரில் கலரில் ஒரு லவ்ஸ் இழையோடும் ஆக்ஷன் மேளா இருப்பதைப் பற்றிச் சொல்லியிருந்தேன் ! And அந்தக் கதையினை ஏற்கனவே வாங்கவும் செஞ்சாச்சு ! So இதனையே இங்கே நமது தேர்வாக்கிடலாம் ! 
  • அல்லது ஏதேனும் க்ளாஸிக் டெக்ஸ் மறுபதிப்பு தான் இதற்கு சுகப்படும்  எனில் - போனெல்லியின் கதவுகளை கோப்புகளுக்கென அவசரம் அவசரமாய்த் தட்ட வேண்டி வரும் ! In fact அந்தக் காரியம் ஏற்கனவே துவங்கவும் செய்து விட்டது ! மறுபதிப்பெனில் என் புஜங்களுக்கு கொஞ்சம் ஒய்வு கிட்டும் ; புதுசெனில் - "ஜெய் பாஹுபலி" தான் அடுத்த ஒரு வாரத்துக்காச்சும் !
  • கதைத் தேர்வை இறுதி செய்த கையோடு, பாக்கி வேலைகளை ஓரம் கட்டிவிட்டு இதனுள் புகுந்திட வேண்டி வரும் ! So ஒற்றை நாளின் அவகாசமே நமக்கு - புதுசா ? பழசா ? என்று  தீர்மானித்திட ! நாளை நள்ளிரவுக்குள் தீர்மானம் செய்றோம் ; இந்த ஸ்பெஷல் தேரை உடனே இழுக்க வடம் பிடிக்கிறோம் ! 
  • பழசே உங்கள் தேர்வெனில், "OLD GOLD" என்று மட்டும் பதிவிட்டால் போதும் - கதைத் தேர்வுகளை விலைகளுக்கேற்ப நான் பார்த்துக் கொள்வேன் ! புதுசே ஓகே ; லவ்ஸ் ஓகே எனில் - "LOVE ALL" என்று பின்னூட்டமிடுங்கள் ... போதும் !!
  • நிலவரத்தின் அவசரத்தினைக் கருத்தில் கொண்டும், இந்த ஸ்பெஷல் இதழ்  விற்பனை முனைகளில் பிசிறின்றிச் சாதிக்க வேண்டி வரும் என்பதை மனதில் கொண்டும் "மஞ்ச கலரே எனக்கு ஆகாது !!" என்று அபிப்ராயப்படுவோருமே இந்த ஒருமுறை கரம் கோர்க்கக் கோருகிறேன் guys ! உங்களின் தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளை இந்த ஒற்றைமுறை ஓரம் கட்டிவிட்டு, ஒரு மனதாய் இந்த முயற்சிக்கு உறுதுணை நிற்க வேண்டி வரும் என்பதே இங்கே பிரதானம் ! 
  • இதன் நோக்கமே பணம் பண்ணுவது தான் எனும் போது, ஹார்ட் கவர் ; லொட்டு லொசுக்கென்ற ஆடம்பரங்கள் இராது & "நிலவொளியில் நரபலி" வந்த compact size-ல் இந்த ஒற்றை இதழ் மட்டும் இருந்திடும். Of course in art paper as usual ! ஆனால் இதழின் விலையோ நார்மலான டெக்ஸ் விலையினில் இருந்திடும் ! So இங்கே கிட்டக்கூடிய லாபமாய் ஒரு பாதியும், நமது பங்களிப்பு + சீனியர் எடிட்டரின் தனிப்பட்ட பங்களிப்பு - என ஒன்றிணைந்து லட்சத்துக்கு குறையாது  குழந்தைக்கென சென்றிடும் என்பதே திட்டமிடல் ! So இந்த ஒற்றை தபா மாத்திரம் உங்களின் அளவுகோல்களை சற்றே lenient ஆக்கிடக் கோருவேன் ! அதற்காக இந்த இதழ் எவ்விதத்திலும் சோடையாய் இராது guys ; அது எனது உத்திரவாதம்  !
  • இதழினை அறிவித்த கையோடு நாம் பிராமிஸ் செய்திருக்கும் தொகையினில் பாதியை (Rs.50,000) குழந்தையின் சிகிச்சைக்கென மருத்துவமனையின் பெயரில் D.D எடுத்து தயாராக வைத்திருப்போம் ! இதழ் வெளியாகிடும் வரைக்கும் வெறும் வாயால் வடை சுட்டுக் கொண்டிருக்க வேண்டாமே என ஜூனியர் எடிட்டர் அபிப்பிராயப்பட்டது எனக்கும் சரியெனப்பட்டது ! And மீதமுமே இம்மாத இறுதிக்குள் தயாராகிடும்  - ஜூனியரின் மேற்பார்வையினில் ! இப்போதெல்லாம் நமது வரவு-செலவுகளைப் பார்த்துக் கொள்வது ஜூனியரே என்பது இங்கே உபரித்தகவல் !
  • And of course இந்த இதழ் விற்றாலும், விற்காது முட்டை இட்டாலும், முழுத் தொகைக்கும் நாம் பொறுப்பு ! So "ஒரு லட்சம் இங்கே தயாரென்ற" நம்பிக்கையில் பாக்கிப் பணங்களை புரட்ட பாபுவும், நண்பர்களும்  முயற்சிகளைத் துரிதப்படுத்தலாம் !
இந்த சோதனையான நேரத்தில் நண்பர் பாபு தனித்தில்லை என்பதை அவருக்கு நினைவூட்டிடுவோம் ! And "கனவிலோ, கற்பனையிலோ எண்ணியிருப்பதை விடவும் ஜாஸ்தி விஷயங்கள்  பிரார்த்தனைகளின் பலனில், இந்த பூமியில் அரங்கேறி வருகின்றன !" என்ற வாசகத்தை இங்கே நமக்கு நாமேவும், பாபுவுக்கும் நினைவூட்டிக் கொள்வோம் guys !! நம்புவோம் ; பிரார்த்திப்போம் ; நிச்சயம் நல்லதே நடக்கும் ! God be with the child !! 


Bye for now ! See you around !

260 comments:

  1. Me the ஆளில்லாத கடையிலே டீ ஆத்திங்...ஓவர் ..ஓவர் ..ஓவர் !

    ReplyDelete
    Replies
    1. அடுத்த நாளின் துவக்க நேரத்தில் எழுதுகிறேன் பேர்வழி என்று, கடிகார முள் 12ஐ தொடும்போது, பேய்களும் உறங்கும்
      நடுநிசியில் கடையை திறந்து வைத்து ஆள் வரலைன்னா எப்படி சார்?
      இதை "காலை 6 மணியை தொடும் போது" என மாற்றினால், வரவேற்பு மிக அருமையாக இருக்கும். உங்களுக்கு பதிலளிப்பதே வாசகர்களின் முதல் வேலையாக இருக்கும்.என் கருத்து இது.

      Delete
  2. Old Gold...

    For me old gold tex stories are eligible for color print. If possible kindly do so, Sir.

    And this is an nice initiative. Even this year comics budget is going vera level, Gudos to you, Sir.

    ReplyDelete
  3. கனிவான வார்த்தைகளுக்கு,செயலுக்கு பணிவான நன்றிகள்,வணக்கங்கள்.நானும் காமிக்ஸ் குடும்பத்தில் ஒருவன் என்பதில் பெருமை கொள்கின்றேன்.நன்றி.

    ReplyDelete
  4. வாசகரின் துயர் தீர்க்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நீங்கள் ஆசிரியர் அல்ல எங்களின் மூத்த அண்ணன் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்து விட்டீர்கள் நன்றிகள் ஆசிரியரே பாபு இந்த இடர்களிலிருந்து மீண்டு குழந்தை சுகம் பெற ஆண்டவனை வேண்டுவோம் நண்பர்களே

    ReplyDelete
  5. இது போன்று சில எக்ஸ்ட்ரா பதிப்புகள் வருடம்தோறும் வெளியிட்டு இது போன்ற இக்கட்டுகளில் தவிப்போருக்கு கொஞ்சம் கை கொடுக்கலாம் சார்... இந்த நள்ளிரவு வேளையில் பதிவாய் உதித்த உங்களின் இந்த யோசனை போற்றுதற்குரியது சார்.

    ReplyDelete
  6. சில மறுபதிப்பு suggestions

    பழிக்குப்பழி (112 பக்கங்கள்)
    இரத்த முத்திரை (150+ பக்கங்கள்)
    எமனோடு ஒரு யுத்தம் (96 பக்கங்கள்)
    இரத்த வெறியர்கள் (112(?) பக்கங்கள்)

    ReplyDelete
    Replies
    1. நல்ல தேர்வுகள்.விஜயன் சார் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் 🙏.

      Delete
    2. Old is Gold.அருமையான கதை தேர்வுகள்.

      Delete
    3. ஹார்ட் பௌண்ட் இந்த இதழில் கிடையாது என்பதால் பழைய புத்தகங்கள் வேண்டாமே புதிதாக கேட்போம் பழைய புத்தகங்கள் கெட்டி அட்டையில் வந்தால் மட்டுமே மிகச் சிறப்பாக இருக்கும்

      Delete
    4. நன்றிகள் சகோஸ்

      Delete
  7. அன்பு ஆசிரியருக்கும், காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு...🙏.
    ஒரு அற்புதமான விசியத்தை முன்னெடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் சார்.
    எங்கேயோ இருக்கும் ஒரு வாசகன் என நினைக்காமல், எந்த வாசகனும் நம் குடும்பமே என நினைக்கும் உங்களின் "நல்லுள்ளம்" வாழ்க வளர்க🙏👏🙏.

    எத்தனையோ விசியங்கள் முகநூலிலும், பகிரி தளங்களிலும் நண்பர்கள் பல விவாதங்களை பகிர்ந்தாலும், இந்த "குழந்தையின் நிலை" அனைவருக்கும் ஒரு நெருடலாகவே இருந்தது/இருக்கிறது.
    எப்படி? என்ன? யாரை கேட்பது, எப்படி சமாளிப்பார், எத்தனை கொடுப்பது, என பல நட்புக்களும் சற்று சலனமடைந்துள்ளனர்.
    சில நல் உள்ளங்கள் விருப்பு,வெறுப்பு பாராமல் தங்களால் இயன்ற அளவு உதவியும் உள்ளனர். சிலர் அவர்களது சூழ்நிலை காரணமாக உதவ முடியாமலும் உள்ளனர்.

    இந்த குழந்தைக்காக, ஒரு அமைப்பை ஏற்படுத்தி, குறுகிய நேரத்தில், ஒரு கணிசமான தொகையை ஏற்பாடு செய்து,
    இந்த முயற்சியை "முதலில்" முன்னெடுத்த,
    அயல்நாட்டு முகமறியா உள்ளம், அழகான நட்பாளார் @மகேந்திரன் பரமசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    இவர் மூலம் பலர் தங்களால் முடிந்த சிறு தொகையை இன்றுவரை குழந்தைக்காக அனுப்பிக் கொண்டு உள்ளனர்.
    நல் உள்ளம் 🙏👏🙏.

    ஆனால் நீங்கள் செய்ய முன்னெடுத்த இந்த முயற்சியில் அனைவரது பங்களிப்பும் இருக்கும் என்பதில் பெருமைப்படுகிறேன்.
    ஒரு வாசகனின் நிலமையை மதித்து,அவனுக்காக
    ஒரு நிறுவனம் ஸ்பெஷல் இதழை வெளியிடுவது எனக்கு தெரிந்து இதுதான் முதல் முறை என நினைக்கிறேன்.

    காசு உள்ளவனுக்கு உதவி,அதை பெருமையடித்து, அதன் மூலம் தன் லாபத்தை உயர்த்தி,காசு சம்பாதிக்கும் பல ஸ்தாபனங்களுக்கு மத்தியில், உங்களின் இந்த முடிவு சரியான நெத்தியடி.
    காசு இருப்பவனுக்கு உதவுவது பெரிதல்ல.
    காசு இல்லாதவனுக்கு, உங்களைப் போன்ற ஸ்தாபனங்கள் உதவுவதே பெருமை.

    இது லயன் வாசகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
    தொகை சிறிதோ,பெரிதோ, உதவ பிடிக்கும்,பிடிக்காது, இவருக்கு கொடுக்கலாமா, வேண்டாமா, என இப்படி சிந்திக்கும் அனைத்து உள்ளங்களும்,
    இந்த விசியத்தில் ஒதுங்கவே முடியாதவாறு, இந்த நல்ல காரியத்திற்கு உதவும்படி ஏற்பாடு செய்து விட்டீர்கள்.
    இதில் அனைவரது பங்களிப்பும் கட்டாயம் இருக்கும் சகோ.
    மீண்டும் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றிகள் ❤️.

    எந்த இதழை வெளியிடுவது என வாசகர்களிடமே பொறுப்பை தள்ளி விட்டீர்கள்.
    இதுவரை வராத பழைய பதிப்பு,மறுபதிப்பாக வருமெனில், என் ஓட்டு-"OLD GOLD".
    இல்லை ஏற்கனவே மறுபதிப்பு வந்ததே மீண்டும் மறுபதிப்பு எனில்,
    "LOVE ALL" என்பதே என் ஓட்டு.
    "புதிதானாலும்,மறுபதிப்பானாலும்" எது தருவதாக இருந்தாலும்,
    இரண்டு கதைகள் கொண்ட இதழாக இருந்தால் கூடுதல் மகிழ்ச்சியே.
    குழந்தைகளுக்கு 2 கமர்கட் தருவது மாதிரி.

    ஒரு குழந்தைக்கு உதவுவது உங்களுக்கு பெருமையாகவும், வாசகனுக்கு உதவ, உங்களுடன் கை கோர்ப்பது எங்களுக்கு பெருமையாகவும் உள்ளது.

    மீண்டும் அடுத்த பதிவில் 🌹...

    ReplyDelete
    Replies
    1. //தொகை சிறிதோ,பெரிதோ, உதவ பிடிக்கும்,பிடிக்காது, இவருக்கு கொடுக்கலாமா, வேண்டாமா, என இப்படி சிந்திக்கும் அனைத்து உள்ளங்களும்,
      இந்த விசியத்தில் ஒதுங்கவே முடியாதவாறு, இந்த நல்ல காரியத்திற்கு உதவும்படி ஏற்பாடு செய்து விட்டீர்கள்.//
      ரொம்பவும் சரியாக சொன்னீர்கள்

      Delete
  8. Love All, we already have reprints, a new books would help.

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே!

    அருமை சார்! தங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்! குடும்பத்தைப் பேணும் தந்தையாக தங்கள் முன்னெடுப்பு நிச்சயம் பெரும் பலனைத் தரும்!

    நோக்கம் இத்தனை மதிப்பு வாய்ந்ததாக இருக்கையில் இதழ் எதுவானாலும் பரவாயில்லை! விரைவாக முடிக்க எது சாத்தியமோ அதுவே என்னுடைய விருப்பம் சார்!

    மிக்க நன்றிகள் ஓர் ஒப்பற்ற முன்னெடுப்புக்கு...!!

    ReplyDelete
  10. என்னுடைய பங்களிப்பு தொகை ரூ.1000 அனுப்பியுள்ளேன் சார்...இன்று எங்களது 10வது வருட திருமண நாள்..so கொண்டாட்டம் cut பாபுவின் பையனுக்கு அந்த செலவு உதவட்டுமே..புத்தகம் வரும்போது அதையும் வாங்கிக்கொள்ளலாம்..

    ReplyDelete
  11. எதுவும் ஒகே, குறைந்து 2 copy வாங்குவேன்

    ReplyDelete
  12. பாதிக்கிணறு தாண்டியிருந்த விசயத்தை எடிட்டரின் பதிவு ஒரே நிமிடத்தில்முக்கால் கிணறு தாண்ட வைத்து விட்டது. முதல்கட்ட சிகிச்சைக்கான 4 லட்சங்களில் எடிட்டரின் உறுதித் தொகையும் சேர்த்து 3 லட்சங்கள் ஆயாச்சு.

    இன்னும் ஒரு லட்சம் தேற்றி விட்டால் முதல் கட்ட அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணிடலாம்.


    Babu
    ICICI bank
    account number 001601550631
    IFSC code ICIC0000016

    GPAY : 9345758702

    வெளிநாடு வாழ் நண்பர்கள் கீழே இருக்கும் GOFUND ME லிங்கை உபயோகிக்கலாம்.

    https://www.gofundme.com/f/help-mohamad-shaharbans-surgery?utm_source=customer&utm_medium=copy_link&utm_campaign=p_cf+share-flow-1

    நீங்கள் அளிப்பதுமில்லாமல் பலருக்கு எடுத்து செல்லுங்கள். உங்கள் முகநூல் பக்கங்களிலும் வாட்சப் குரூப்களிலும் பரப்புங்கள். சிறுதுளி பெரு வெள்ளம். கருணை வெள்ளம் பொங்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. Gofundmeல் தற்போதுவரை சேர்ந்துள்ள தொகை 90,000ஐ நெருங்கியிருப்பது மகிழ்சியளிக்கிறது!

      ஹாஸ்பிடலிலிருந்து கிடைக்க வேண்டிய ஒரு ரிப்போர்ட் கிடைத்த பின்னே நாளை இந்திய crowdfunding தொடங்கப்படும். அதற்கான ஆரம்பகட்ட வேலையை நமது PfT செய்துவருகிறார்.

      எடிட்டர் மற்றும் நண்பர்களின் ஆதரவோடு வெகுவிரைவிலேயே ஆப்பரேஷனுக்கான முழுத் தொகையும் எட்டப்பட்டுவிடும்!!

      Delete
    2. This gpay not working

      When getting donations, it's always better to have multiple options like upi I'd, phone pe I'd and qr codes

      Delete
  13. ஊர்கூடித் தேர் இழுத்தால் வந்துசேரும். உங்கள தன்னலமற்ற முயற்சிக்கு பாராட்டுக்கள். முயற்சிகளை முன்னெடுக்கும் நண்பர் மகேந்திரனுக்கும் எனது பாராட்டுதல்கள்.
    எனது Choice LOVE ALL.
    நண்பர் பாபுவின் செல்வன பூரண நலம் பெற்று வீடு திரும்ப ஆண்டவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இதில் நான் மட்டும் இல்லீங்க சார். ஈவி, கண்ணன் ரவி, செனாவின் வழிகாட்டுதல்னு நம்ம லயன் வாசகர்கள் நிறைய பேர் உதவிட்டிருக்காங்க. எடிட்டர் சொன்ன மாதிரி ஊர் கூடி இழுக்கும் தேர் இது. அந்த ஊரில் குடும்பத்தில் நானும் ஒருவன் 🙏🙏🙏

      Delete
  14. டெக்ஸ் புது கதை அதிரடியான கதையை தேர்ந்தெடுத்து கொடுங்கள் சார்.
    LOVE ALL

    இந்த முயற்சிக்கு எங்களின் முழு ஆதரவு உண்டு.

    ReplyDelete
  15. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  16. புது டெக்ஸ் கதைகள் அதிரடியும் காதலுமாகப் பின்னிப் பெடலெடுப்பதே என் விருப்பம். தம்பி பாபுவின் மழலை மீண்டுவர பிரார்த்தனைகளுடன்..

    ReplyDelete
  17. பழசே போதுங்க.. வேலை மிச்சமாகும்.. சீக்கிரமா ரெடியும் ஆயிடும்..

    ReplyDelete
    Replies
    1. பழைய பாயாசமேதான் வேண்டுமாங்கன்னா :-) உங்களுக்கு புதிய பாயாசம் போட நேரமில்லையாங்கன்னா :-)

      Delete
    2. // பழசே போதுங்க.. வேலை மிச்சமாகும்.. சீக்கிரமா ரெடியும் ஆயிடும்.. //

      வீட்டில் காலை டிபன் வேண்டாம் ஏன சொல்வது போல் உள்ளது :-) பழகிடுச்சு :-)

      Delete
  18. Love all or old is gold

    மீண்டும் நமது குடும்பம் சிறிதாக இருந்தாலும் மனது பெரிது என்று நிரூபணம் செய்கிறோம் சார். நன்றிகள் பல உங்களுக்கும் உதவும் அனைத்து நண்பர்களுக்கும்.

    கனிடிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட இதழ்கள் ஆர்டர் செய்வேன் சார் 🙏🏼

    ஒரே ஒரு வேண்டுகோள் சைஸ் சிகப்பாய் ஒரு சிலுவை அளவில் இருந்தால் நன்றாக இருக்கும்.

    நிலவொளியில் ஒரு நரபலி சைஸ் மிகவும் சிறியது சார். சாத்தியப்பட்டால் மட்டும் மாற்றுங்கள்.

    ReplyDelete
  19. Old is gold, நிலவெளியில் நரபலி மிகவும் சிறிய எழுத்துக்கள், கொஞ்சம் பெரிதாக இருந்தால் பரவாயில்ல சார்

    ReplyDelete
  20. சார்...

    லயன் முத்துவின் வாசகன் நான் என நினைக்கும்போதே மிகவும் கர்வம் கொள்கிறேன்... இந்த அற்புத குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக இருப்பதை மிகப் பெருமையாக கருதுகின்றேன்... ஒரு வாசகரின் துயரைத் துடைக்க இந்த அளவு முயற்சிகள் மேற்கொள்ளும் தங்களது நிறுவனத்திற்கு எனது கோடானு கோடி நன்றிகள்... அன்பு நண்பர் பாபுவின் மழலைச் செல்வம் இந்த அன்பு வெள்ளத்தில் கண்டிப்பாக நலம் பெற்று கரை சேர்ந்திடுவார் என நம்பிக்கை உள்ளது.. உங்களது அனைத்து முயற்சிகளுக்கும் எனது பரிபூரண ஆதரவுண்டு.. நன்றி... நன்றி... நன்றி..

    ReplyDelete
  21. மீண்டும் மீண்டும் நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதை மெய்ப்பிக்கும் செயல்பாடு இது...

    இத்தனை பேரின் உதவிகளும், பிரார்த்தனைகளும் பாபுவின் குழந்தையை நல்லபடியாக நலம்பெறச்செய்யும்...🙏🙏🙏🙏

    ReplyDelete
  22. கூடிய விரைவில் பிரதி ரெடியாக வேண்டிய காரணத்தினால் மறுபதிப்பே இச்சூழலுக்கு பொருத்தமாய் இருக்கும்.

    OLD is GOLD

    மறுபதிப்போ, புதியதோ எதுவாயினும் தயவுகூர்ந்து நார்மல் டெக்ஸ் சைஸிலேயே வெளியிடவும். "நி.ஒ.நரபலி சைஸ் வேண்டாம் சார்".

    நண்பரின் குழந்தை நலம் பெற உதவும் தொகையில் எங்களின் பங்கும் இருப்பது அவசியம்.

    ReplyDelete
  23. // ஓகே எனில் - "LOVE ALL" என்று பின்னூட்டமிடுங்கள் ... போதும் !! //

    LOVE ALL...

    ReplyDelete
  24. // ஆனால் "விற்பனை" என்று வரும் வேளையில், ஆயிரம் பாயசங்கள் கண்ட அசாத்தியன் டெக்ஸைத் தாண்டி சாதிக்கும் ஆற்றல் வேறு யாருக்குண்டு ? //
    உண்மை சார்...

    ReplyDelete
  25. // ஏதேனும் க்ளாஸிக் டெக்ஸ் மறுபதிப்பு தான் இதற்கு சுகப்படும் எனில் //
    இரண்டு லட்டுமே கிடைக்கும் எனில் எனக்கு ஓகேதான்...

    ReplyDelete
  26. // இதழ் வெளியாகிடும் வரைக்கும் வெறும் வாயால் வடை சுட்டுக் கொண்டிருக்க வேண்டாமே என ஜூனியர் எடிட்டர் அபிப்பிராயப்பட்டது எனக்கும் சரியெனப்பட்டது ! //
    மிகச் சரியான முடிவு சார்...

    ReplyDelete
  27. தங்களது சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று சார்...

    ReplyDelete
  28. எந்த புத்தகம் போட்டாலும் சரியே.தங்கள் முயற்சி வெற்றி பெறவும் குழந்தை நலம் பெறவும் வேண்டுகிறேன்

    ReplyDelete
  29. OLD Gold & Love All ..இரண்டுமே வேண்டுமே எடி Sir..இரண்டு லட்டுமே திங்க ஆசை..

    ReplyDelete
  30. நல்லதொரு நோக்கத்துக்காக முன்னெடுக்கும் எடி சாருக்கும், மஹி சாருக்கும், இன்னும் பல முகமறியா சகோதர, சகோதரிகளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ..

    ReplyDelete
  31. சார். நண்பருக்கான இந்த முயற்சியில் உங்களுக்கும் அலுவலுக்குமெம் ஏற்ற கதையை நீங்களே தேர்ந்தெடுங்கள் சார். எதுவாயினும் தோள் கொடுக்கநாங்கள் ரெடி. நான்வாயிலேயே வடை சுட்டுக்கிட்டு இருக்கனே என்ற எண்ணம் என்னை படுத்தி எடுக்கிறது . ஓரம் நின்று வேடிக்கைமட்டுமேபார்க்கமுடிகிறது என்னால். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. வருந்த வேண்டாம் இராஜசேகர் ஜி,தலைப்பை இன்னொரு முறை படியுங்கள்,உதவி செய்ய ஆசிரியர் தான் நமக்கு ஓர் சிறந்த வாய்ப்பை நல்கியுள்ளாரே...
      எல்லோரும் உதவ அறிய வாய்ப்பு...
      அனில் போலவாவது சேவை புரிவோம்...

      Delete
    2. பணம் தேவை என்றாலும் பிரார்த்தனை அதை விட அதிகத் தேவைங்க சார். அதைக் குடுங்க. அது போதும்.

      Delete
  32. வாசகர்களை குடும்பத்தினர் ஒருவராய் நேசிக்கும் தங்களுக்கு மனம் கனிந்த பாராட்டுகள் சார்..வாசகருக்காக வெளியிடும் இந்த டெக்ஸ் இதழ் எதுவாக இருந்தாலும் ,எவ்வளவு விலை இருப்பினும் வாங்க தயார் சார்..அறிவிப்பை மட்டும் உடனடியாக வெளியிடுங்கள் சார்...

    ReplyDelete
    Replies
    1. // வாசகர்களை குடும்பத்தினர் ஒருவராய் நேசிக்கும் தங்களுக்கு மனம் கனிந்த பாராட்டுகள் சார்.. // உண்மை

      Delete
  33. //வாசகரின் துயர் தீர்க்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நீங்கள் ஆசிரியர் அல்ல எங்களின் மூத்த அண்ணன் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்து விட்டீர்கள் நன்றிகள் ஆசிரியரே பாபு இந்த இடர்களிலிருந்து மீண்டு குழந்தை சுகம் பெற ஆண்டவனை வேண்டுவோம் நண்பர்களே//

    Yes. We support you ����

    ReplyDelete
  34. // தங்களது சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று சார் // . லயன் காமிக்ஸ் வாசகன் என்று சொல்லிக் கொள்வதில் எப்போதுமே பெருமை தான். இந்த பதிவு அதை மேலும் உயர்த்தி விட்டது. இது வெறும் பெயருக்கு காமிக்ஸ் குடும்பம் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டம் அல்ல நண்பர்களுக்கு ஏதேனும் உதவி தேவையெனில் உடனடியாக உதவவும் இங்கே அனைவரும் தயாராக இருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளனர்.

    ReplyDelete
  35. நான் மூன்று புத்தகங்கள் வாங்குவேன் நண்பர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் வாங்கினால் நலம்

    ReplyDelete
  36. /// ஓரம் நின்று வேடிக்கைமட்டுமேபார்க்கமுடிகிறது ///
    வருந்தாதீர்கள் ராஜசேகரன் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி ஒடுவதில்லை.மாற்றங்களும், ஏற்றங்களும் நிச்சயம் வரும். நம்பிக்கையோடு இருங்கள்.
    " நல்லவர் லட்சியம்..
    வெல்வது நிசசயம் "
    " நாளை நமதே..
    இந்த நாளும் நமதே "
    எனும் புரட்சித் தலைவரின் பாடல் வரிகளுடன்..

    ReplyDelete
  37. எடிட்டர் சார்,

    நீங்கள் முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சி காமிக்ஸ் மட்டுமல்லாது பதிப்பகத்துறைக்கே பெருமை சேர்க்கக்கூடியது! உங்களது இந்த முயற்சியின் பின்னே ஜூனியர் எடிட்டரும், சீனியர் எடிட்டரும் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது! அவர்களுக்கு அகில உலக தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் சார்பாக நன்றிகளும், பாராட்டுகளும்!
    சிறு துளி பெருவெள்ளமாகிடும் உங்களது இந்த சீரிய முயற்சிக்கு எங்களால் முடிந்தமட்டுக்கு என்றென்றும் துணையிருப்போம் சார்!

    BTW, LOVE ALL!!

    ReplyDelete
    Replies
    1. உண்மையாலுமே லயன் காமிக்ஸ் படிப்பதில் பெருமிதமாக உள்ளது

      Delete
  38. Gofundmeல் தற்போதுவரை சேர்ந்துள்ள தொகை 90,000ஐ நெருங்கியிருப்பது மகிழ்சியளிக்கிறது!

    ஹாஸ்பிடலிலிருந்து கிடைக்க வேண்டிய ஒரு ரிப்போர்ட் கிடைத்த பின்னே நாளை இந்திய crowdfunding தொடங்கப்படும். அதற்கான ஆரம்பகட்ட வேலையை நமது PfT செய்துவருகிறார்.

    எடிட்டர் மற்றும் நண்பர்களின் ஆதரவோடு வெகுவிரைவிலேயே ஆப்பரேஷனுக்கான முழுத் தொகையும் எட்டப்பட்டுவிடும்!!

    ReplyDelete
  39. நல்ல முயற்சி சார். வாழ்த்துக்கள்.
    நண்பர் பாபுவின் குழந்தை நலமாய் மீண்டுவர இறைவனை பிரார்த்திப்போம்.🙏🙏🙏

    ReplyDelete
  40. நண்பர் பாபுவின் குழந்தை வெகு விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல கடவுளை வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  41. LOVE ALL - I am taking 5 copies !

    PS: Free lens needed to read comics in that size sir !

    ReplyDelete
  42. வாசகக் குடும்பம் என்பதை Editor வாய் வார்த்தையாக சொல்லவில்லை, மனதிலிருந்து சொல்லியிருக்கிறார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்

    ReplyDelete
  43. நரகத்திற்கு நடுவழியே :-

    இதுவரை கறுப்பின நபர்களை கதைகளில் பெரும்பாலும் துணை கதாப்பாத்திரங்களாக பயண்படுத்தி இருப்பதைத்தான் பார்த்திருக்கிறோம்.!

    முதல்முறையாக கதாநாயகனாக ஒரு கறுப்பின ஆசாமியை பார்ப்பது புதுவித அனுபவமாக இருந்தது.. (அதான் கண்ணாடியில தினம் பாக்குறியே.. பிறகென்ன புது அனுபவம்னு நீங்க கேக்குறது இங்க கேக்குது).!

    நாரப் பிழைப்பு பிழைத்துக்கொண்டிருக்கையிலும் நக்கலுக்கும் 'கலாரசனைக்கும்' கொஞ்சமும் குறைச்சலில்லை நம்ம டிக் பயலுக்கு.!

    அடிமைத்தனத்தை சகித்துக்கொள்ள முடியாத ரைஸ்.. அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டு அதையே பெருமையாக கருதும் கல்லென்.. இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் இருந்துகொண்டு, தத்துவங்களையும் செவ்விந்தியர்களின் தரப்பு நியாயத்தையும் பேசும் பில்.. இரண்டு கறுப்பர்கள் ஒரு ரொட்டித்துண்டுக்காக அடித்துக்கொண்டிருக்கையில் பஞ்சாயத்து பண்ணுகிறேன் பேர்வழி என்று ரொட்டியை பிடுங்கித் தின்றுவிட்டு சென்றாலும் அவ்வபோது தன்னை உயர்வாய் எண்ணிக்கொள்ளும் கர்னல் ஹேட்ச்..

    வித்தியாசமான கதை மாந்தர்கள்.!

    ராணுவம் கோட்டை குதிரைப்படைன்னு எத்தனையோ கதைகள் படித்திருந்தாலும் முழுக்க முழுக்க கறுப்பர்களின் குதிரைப்படை.. அதற்கு பொறுப்பதிகாரி வெள்ளையின கர்னல் என்று படிப்பது இதுவே முதல்முறை.!

    இந்தக் கதையின் மிகப்பெரிய பலம் தமிழ் மொழிபெயர்ப்பு.! தூய தமிழில் வசனங்களை அமைத்திருந்தால் டெட்வுட் டிக்கின் பார்வையில் செல்லும் கதையில் நம்மால் ஒன்றியிருக்க முடியாது..!
    தொப்பித்தூக்கல் எடிட்டர் சார்..!!

    அடுத்த ஐந்து அத்தியாங்களையும் ஒன்றாக போட்டுவிடுங்கள் சார்.!

    ரேட்டிங் 9/10

    அப்புறம்..

    ஒரு கறுப்பின அடிமையை கதாநாயகனாக கொண்டு.. அவருடைய பார்வையில் இருந்து கதையை நகர்த்திச் செல்லும் தொடரை முதல்முறையாக படிக்கிறோம்.. அருமை..!!

    அதேபோல ஒரு செவ்விந்தியரை கதாநாயகனாக (துணைப் பாத்திரமாக அல்லாமல் பிரதான பாத்திரமாக) கொண்டு அமைக்கப்பட்ட கதைத்தொடர் ஏதாவது இருக்கிறதா சார்..?! அப்படி ஏதாவது இருந்தால் தயவுசெய்து தமிழுக்கு கொண்டுவாங்க சார்.. என்னோட நீண்டநாள் ஆசை இது..!

    ReplyDelete
    Replies
    1. அதான் கண்ணாடியில தினம் பாக்குறியே.. //

      கரீக்டு. ஆனா கதாநாயகனா அப்படிங்க வார்த்தை யை மறந்துட்டியே மச்சான்

      Delete
    2. செம விமர்சனம் kok!!

      ///அதேபோல ஒரு செவ்விந்தியரை கதாநாயகனாக (துணைப் பாத்திரமாக அல்லாமல் பிரதான பாத்திரமாக) கொண்டு அமைக்கப்பட்ட கதைத்தொடர் ஏதாவது இருக்கிறதா சார்..?!///

      ஏற்கனவே நம்ம 'மேஜிக் விண்டு' ஒரு செவ்விந்திய ஈரோ தானே? ஒருவேளை கலப்பின செவ்விந்தியரோ?!!

      Delete
    3. மரண சாத்து வாங்கிய மேஜிக் விண்ட் ஒரு 2 இன் 1 பார்ட்டி சார் ; முன்னாள் வெள்ளையன், பின்னாள் செவ்விந்திய மாந்த்ரீகன் ! அவரை கிவரை மறுக்கா கூட்டியார சொல்றீங்களா ?

      Delete
    4. ///முன்னாள் வெள்ளையன், பின்னாள் செவ்விந்திய மாந்த்ரீகன் ///

      ஆங்! இப்போ ஞாபகம் வந்துடுச்சுங்க சார்!! நம்ம XIII மாதிரியே இவரும் சொந்தப் பெயரையே மறந்த பார்ட்டியாச்சே!!

      ///அவரை கிவரை மறுக்கா கூட்டியார சொல்றீங்களா ?///

      பூமியைப் பிளந்துகிட்டு பெரிய சைஸ் புழு வராப்லயெல்லாம் ஓவரா காதுல பூ சுத்தாம நல்ல கதையா இருந்தா வெல்கம் சார்!

      Delete
    5. ///ஓவரா காதுல பூ சுத்தாம நல்ல கதையா இருந்தா வெல்கம் சார்!///

      குடோன் ஷ்பெசல்னு பெயர் வெச்சி.. மரண சாத்து வாங்கிய மந்திர காத்து அப்படின்னு தலைப்பு வெச்சி.. ஒரு இருநூறு காப்பி பிரின்ட் பண்ணி குருநாயருக்கு மாத்திரம் அனுப்பிவெச்சிடுங்க சார்.! மொத்த செலவையும் அவரே ஏத்துக்குவார்.! :-)

      Delete
    6. உங்களுக்குப் பிடிக்கலைன்னா 'பிடிக்கலை.. வாணாம் சார்'னு சொல்ல வேண்டியதுதானே? அதென்னா 'குர்நாயர் செலவை ஏத்துக்கிடுவார்'? கிர்ர்ர்..

      Delete
    7. ஏன்னா..

      நீங்க நல்லவரு வல்லவரு நாலும் தெரிஞ்சவரு..!

      மேஜிக் காத்து மேல ஏகப்பட்ட லவ் வெச்சிருக்கிறவரு..!

      🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃

      Delete
    8. ///ஜெரோனிமோ///

      அது ஸ்பின் ஆஃப் மாதிரி சிங்கள் கதைதானே பத்து சார்.!
      நான் ஏதாவது தொடர் கிடைக்காதா அல்லது டெட்வுட் டிக் மாதிரி ஒரு ஏழு பாக கதையாவது கிடைக்காதான்னு ஆசைப்பட்டேன்.!

      Delete
    9. ///கரீக்டு. ஆனா கதாநாயகனா அப்படிங்க வார்த்தை யை மறந்துட்டியே மச்சான்///

      அப்ச்சலூட்டீலீ

      Delete
    10. // ஜெரோனிமோ //

      நான் 15 பக்கங்களுக்கு மேல் படிக்க வில்லை. ஹலோ ஆப்ரிக்காவுக்கு அடுத்த டிரெயின் எப்போ :-)

      Delete
  44. எடிட்டர் சார்..

    Love All & old is gold ரெண்டுமே கிட்டத்தட்ட சரிசமமான வாக்குகளை வாங்கிவருகின்றன..!

    எனவே டெக்ஸ் வில்லரின் தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக ஒரு மறுபதிப்பு ஒரு புதுக்கதைன்னு ஒண்ணா இணைச்சி போட்ருங்க சார்.!

    கண்டிப்பாக வாசக சொந்தங்களின் ஒத்துழைப்போடு இதழ் வெற்றிபெறும்.!

    நல்லதே நடக்கும்.!

    ReplyDelete
    Replies
    1. ///எனவே டெக்ஸ் வில்லரின் தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக ஒரு மறுபதிப்பு ஒரு புதுக்கதைன்னு ஒண்ணா இணைச்சி போட்ருங்க சார்.!///

      வாவ்!! இது செம ஐடியாவா இருக்கே!! எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு!

      Delete
    2. இந்த ஐடியா எனக்கும் ஒகே தான், அனால் மறுபதிப்பு வண்ணத்திலும் புது டெக்ஸ் கதை கருப்பு வெள்ளையில் இருந்தால் நல்லது.

      Delete
    3. செம ஐடியா .


      இது நடந்தால் இன்னும் சிறப்பு...

      Delete
  45. Love All

    குழந்தை குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்...

    ReplyDelete
  46. ரத்த முத்திரை
    பழிக்கு பழி
    ரத்த வெறியர்கள்
    எமனோடு ஒரு யுத்தம்
    இதில் ஏதாவது இரண்டு கதைகள் வந்தால்
    நன்றாக இருக்கும்

    ReplyDelete
  47. 7.30 நிலவரப்படி....

    Love All=42

    Old Gold=21

    This or that=5+

    So.... "Love All"--- has heavy leading.......

    ReplyDelete
    Replies
    1. // So.... "Love All"--- has heavy leading..... //
      பிஞ்சுக் குழந்தையின் நெஞ்சைக் காக்க எல்லோரும் "Love All தான்"...!!!
      அதில் ஏது வியப்பு...!!!

      Delete
  48. ஒரு வாசகராய் நாங்கள் வாங்க மட்டும் தான் சார் முடியும் - அது 500 அல்லது 1000 எதுவோ - அந்த இலக்கம் வரை ஒரு பொருளை விற்கும் வரம் ஒரு சிலருக்கே அமையும். அதனிலும் ஒரு குழுமத்தின் வாசகர்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்து அவர்களின் பணங்களையும் பகிரும் அமைப்பு இன்னும் ஒரு சிறிய வட்டத்திற்கே சாத்தியப்படும். இவ்வட்டத்தில் இருப்பது பெருமை சார்.

    சிறு வயது முதலே லயன் காமிக்ஸ் என்பது ஒரு ஸ்பெஷல் attraction எனக்கு - அதற்கு இன்னும் வலு சேர்க்கிறது இவ்வாறான முயற்சிகள். இன்றைய இம்முயற்சியில் ஆணிவேர் துவங்கி 50 வருடங்கள் ஆகப்போகிறது என்பதுவும் பெருமைக்குரிய விஷயமே - இதனில் சீனியர் எடிட்டர் சிறப்புப் பங்கு வகிப்பதுமே !

    Kudos to all sir ! 

    சிறுவன் Mohammad Shaharban விரைவில் குணமயடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக !

    ReplyDelete
  49. Good effort sir
    We are always with you

    LOVE ALL

    ReplyDelete
  50. LOVE ALL

    இந்த முயற்சியில் உங்களுக்கு தோள் கொடுப்பதில் ம்கிழ்ச்சி. இப்போவே கன்ஃப்பர்ம் செய்கிறேன்.. எனக்கு 3 இதழ்கள்.

    பையனை பார்க்க என் குழந்தை போலவே இருக்கிறான்.. பேங்க் அக்கவுண்ட் / ஜி பே விவரங்களையும் போட்டு விடுங்க.

    ReplyDelete
  51. போன பதிவில் இருக்கிறது சார்.

    Babu
    ICICI bank
    account number 001601550631
    IFSC code ICIC0000016

    ReplyDelete
  52. மரண சாத்து வாங்கிய மேஜிக் விண்ட் ஒரு 2 இன் 1 பார்ட்டி சார் ; முன்னாள் வெள்ளையன், பின்னாள் செவ்விந்திய மாந்த்ரீகன் ! அவரை கிவரை மறுக்கா கூட்டியார சொல்றீங்களா

    #####₹

    கண்டிப்பாக ...


    வேண்டாம் சார்...:-)

    ReplyDelete
  53. Babu
    ICICI bank
    account number 001601550631
    IFSC code ICIC0000016

    GPAY : 9345758702

    ReplyDelete
  54. ஏதோ எல்லையிலியோ எங்கியோ ஒரு யுத்தமாமா.. அதைப் போட சொல்லி கேட்கிறாங்க ஜனங்க.. பார்த்து பண்ணுங்க..

    ReplyDelete
    Replies
    1. அதற்கு old gold செயிக்கனுமே....

      Delete
    2. ஏஞ்சாமி ரம்மி..!

      எவ்வளவு கஷ்டப்பட்டு நீ டைகர் ஃபேனுன்னு ஃபார்ம் பண்ணி வெச்சிருக்கோம்..! ஆனா நீயா வந்து அப்பப்போ இப்படி உளறிக்கொட்டி காட்டிக்குடுத்துக்கிறியேப்பா.!?

      ஸ்லீப்பர்செல்லுன்னா நெம்ப கவனமா நடந்துக்கோணும் அப்பு.!

      Delete
  55. Sir, gpay not detecting. Pls confirm again.

    ReplyDelete
  56. சிறுவன் ஷாஹார்பன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இம்முயற்சியை முன்னெடுக்கும் நண்பர்களுக்கும், ஆசிரியருக்கும் மனமார்ந்த நன்றிகள். கேட்டதும் உதவுவது வேறு, கேட்காமலேயே உதவ முன் வருவது வேறு! இந்த மனமும், குணமும் அனைவருக்கும் அமைவதில்லை.

    அத்தியாவசியங்களுக்கே வருமானம் போதாத நிலையில் இருப்பவர்களுக்கு, உயிர் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் ஆடம்பரமாகத் தோன்றக் கூடும் தான். இதற்கு நேரெதிராய், ஒன்றுக்கு இரண்டாக மருத்துவக் காப்பீடு மற்றும் பலதரப்பட்ட சேமிப்புகளை வைத்திருந்தும், மேற்சிகிச்சைக்குப் பணம் போதாமல் தவித்தவர்கள் பலரையும் பார்த்திருக்கிறேன். நிலைமை இப்படி இருக்கையில், இதுவரை எவ்விதமான காப்பீடும் இல்லாத நண்பர்கள், ஒரு சிறு தொகையினையாவது அதற்காக ஒதுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுகிறேன். 100% இல்லையென்றாலும், சிரமமான தருணங்களில் அது சிறிதளவேனும் கைகொடுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ///எவ்விதமான காப்பீடும் இல்லாத நண்பர்கள், ஒரு சிறு தொகையினையாவது அதற்காக ஒதுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுகிறேன். 100% இல்லையென்றாலும், சிரமமான தருணங்களில் அது சிறிதளவேனும் கைகொடுக்கும்.////

      மிக மிக அவசியமான ஆலோசனை!

      4 பேர் கொண்ட அளவானதொரு குடும்பத்திற்கான மருத்துவக் காப்பீட்டிற்கு தோராயமாக 15,000/year செலவாகிடும்! ஆனால் நிம்மதியாய் இருக்கலாம்! பெரும்பாலான காப்பீடு நிறுவனங்கள் கொரோனாவுக்கான ட்ரீட்மென்ட் செலவையும் கவர் செய்கின்றன!

      கார்த்திக்கின் ஆலோசனையை நண்பர்கள் பரிசீலிக்க வேண்டிக்கொள்கிறேன்!

      பி.கு : நான் எனது குடும்பத்திற்கு மருத்துவக்காப்பீடு செய்திருக்கிறேன்.

      Delete
    2. //இதுவரை எவ்விதமான காப்பீடும் இல்லாத நண்பர்கள், ஒரு சிறு தொகையினையாவது அதற்காக ஒதுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுகிறேன். 100% இல்லையென்றாலும், சிரமமான தருணங்களில் அது சிறிதளவேனும் கைகொடுக்கும்.//

      வேறு லெவல் practical ஆலோசனை, நண்பரே

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  57. Sir please use bank transfer option from gpay using the above account. And ifsc details. You no need to add as payee in the bank application.

    For some reason his gpay number is not getting detected

    ReplyDelete
  58. கடவுள் அருளால் சிறுவன் சிறப்பாக மீண்டு வருவான் !!!

    ReplyDelete
  59. பகலறியா பூமி :-

    ஆறு மாதங்களாக பகலே இல்லாத பனிப்பிரதேசத்தில் ஒற்றையில் ட்ரெண்ட் இருக்கும்போது நமக்கே கொஞ்சம் கிலியாகத்தான் இருக்கிறது.!

    குழந்தை மேரியுடன் அந்த சூரியன் எட்டிப்பார்க்காத இருண்ட பிரதேசத்தில் இருந்து ட்ரெண்ட் பயணிக்கும்போதும் பதைபதைப்பாகத்தான் இருக்கிறது..

    லேசாக சூரியஒளி தொடுவானத்தில் தெரியும்போது நம் உள்ளத்திலும் மகிழ்ச்சி பூக்க ஆரம்பிக்கிறது..

    இன்னும் பயணித்து ஒரு நாள் தூங்கியெழுந்ததும் சூரியனை தொடுவானில் காணும்போது ட்ரெண்டோடு சேர்ந்து நம் உள்ளமும் பூத்துக் குலுங்குகிறது..!

    இது அத்தனை உணர்வுகளுக்கும் காரணம் உயிரோட்டமுள்ள அந்த ஓவியங்கள்.. வணங்குகிறேன் படைப்பாளி தெய்வங்களே..!

    அட்டைப்படமும் அருமையாக வந்திருக்கிறது.. நம்மூர் ஓவியருக்கும் நவ்வாழ்த்துகள்.!

    பகலறியா பூமி - சித்திர மாயம்

    ரேட்டிங் 9/10

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான விமர்சனம்.

      Delete
    2. ஏன் டார்ச் எடுத்துட்டு போகச் சொன்னிங்கன்னு இப்போ புரியுது பரணி..!

      Delete
  60. 9345758702@apl என்ற ஐடி சரியாக வேலை செய்கிறது என்னு கூறினார். பாபுவிடம் இதில் ஒரு டெஸ்ட் ட்ரான்ஸ்பர் செய்துவிட்டு கன்பர்ம் பண்ணுகிறேன்.

    ReplyDelete
  61. சற்றே மகிழ்ச்சியான செய்தி!
    ஷெரீப் தொடங்கிய crowdfunding சற்றுமுன்பு 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது நண்பர்களே!

    விரல்விட்டு எண்ணிவிடும் நாட்களுக்குளாகவே முதல்கட்ட ஆப்பரேசனுக்கான தொகையை எட்டிவிடலாம் என்ற நம்பிக்கை இன்னும் அதிகரிக்கிறது!

    பங்களித்துவரும் நண்பர்களுக்கு நன்றிகள் பல!

    ReplyDelete
  62. கார்ட்டூன் குழந்தைகள் சமாச்சாரம்என்று ஒதுங்கும்அனைவரும் படித்துரசிக்கவேண்டியகதை மேக்&ஜாக் கி கின் பாவை மிரண்டால் பார் கொள்ளாது. கிராபிக் நாவல் போல இது ஒரு ஹை_டெக் கிராபிக் கார்ட்டூன் நாவல் . ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் கதை முழுக்க. மூன்று பெண்கள் மற்றும் மேக்&ஜாக் இணைந்து அல்கபோனின் பார்களை அடித்து உடைக்கின்றனர். ஆமாம் தாதா அல்கபோனின் பார்களைதான் அடுத்ததிருப்பமாக ஜாக், கபோனுடன் இணைகிறார்பணத்திற்காக. அடுத்து
    . பிரபலபோலீஸ் எலியட் நெஸ் கபோனுடன் இணைய ஆட்டம்களைகட்டுகிறது. மனம்திருந்தும் ஜாக் கபோனின் பார்களை மீண்டும்துவம்சம் பண்ண ஆரம்பிப்பதெனகதை செம விறுவிறுப்பு .

    ReplyDelete
  63. சிறுவன் சிறப்பாக மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.

    LOVE ALL

    ReplyDelete
  64. Vijayan sir,
    Your kind gesture is very much appreciatable.
    Old is gold.
    Please increase the price of the book also (10% to 30%), we will happily buy few copies of the book.
    Done some help from myside through gpay to Babu M's UPI 9345758702@apl.
    Regards,
    Mahesh kumar Selvaraj

    ReplyDelete
  65. Please transfer using UPI 9345758702@apl.
    It fetches the name Babu M.
    I too tried using his mobile # in last weekend somehow it was not working.

    ReplyDelete

  66. Dear Vijayan sir,

    I think Love All is the apt choice at this situation.

    If time permits please hava a Old is Gold too (Only Mr. Willer).
    Thanks.
    Regards,
    Mahesh

    ReplyDelete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. காலை 9மணி நிலவரப்படி....

    Love All=58

    Old Gold=26

    This or that=5+

    So.... "Love All"--- fly way high....

    ReplyDelete